கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2000.12

Page 1

ஸ்க்கியச் சஞ்சிகை
டிசம்பர்
15/-

Page 2
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் محرابر .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܠ
நம்மவருக்குத் தமிழக அரசின் விருது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு தமிழக அரசு திரு.வி.க. நினைவுப் பரிசினை வழங்கிக் கெளரவித்துள்ளது. தமிழுக்குப் பெரும் பணியாற்றிய அறிஞர்களுக்கு வழங்கப்படும் இந்த உயரிய விருது இவ்வருடம் நம்மவரான பேராசிரியருக்கு வழங்கப்படுவதையிட்டு நாமெல்லோரும் பெருமைப்படலாம். ஒரு இலட்சம் இந்திய ரூபாவும் தங்கப் பதக்கமும் விருதும் டிசம்பர் 24 ஆம் திகதியன்று தமிழகத்தில் பேராசிரியருக்கு வழங்கப்படவிருக்கிறது.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, கல்லூரி ஆசிரியராக இருந்து பின்னர் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாள ராகச் சிலகாலம் தொழில் புரிந்து அதன்பின்னர் வித்தியோதயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பின்னர் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தாம்ஸனின் வழிகாட்டலில் Drama in ancient tamil Society என்ற ஆய்வினை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் உப்சலா பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா, பெர்க்கிலி, விஸ்கான்சியன், ஹாவாட் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று பணியாற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும், அதன் பின்னர் அங்கு நுண்கலைப்பீடத் தலைவராகவும் பணியாற்றியவர். கடைசியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அறுபதுகளின் ஆரம்பத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையாக அமைந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மரபு பற்றிய விவாதங்கள், நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றில் பேராசிரியரின் பங்கு கணிசமானது. மார்க்சிய ஒளியில் தமது விமர்சனப் பார்வையை செலுத்தும் பேராசிரியர், தமிழ் விமர்சனத்துறையில் பல புதிய கோணங்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர். பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை தமது பார்வையின் வீச்சைப் பதிவு செய்துவரும் பேராசிரியர் தமிழ் கூறு நல்லுலகில் தமக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். இவர் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழாராய்ச்சி மாநாடுகள் உலகில் எப்பகுதியில் நடந்தாலும். அங்கு பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பங்களிப்பும் இருக்கும்.
பேராசிரியருக்குக் கிடைத்த இந்த உயர் கெளரவம் ஈழத்தமிழ் இலக்கிய முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு பெரும் கெளரவமாகும். - ஆசிரியர்
O2
 

பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் ரசுரமாகும் படைப்புகளி
ருத்துகட்கு அவற்றை எழுதி
சிரியர்களே பொறுப்புடை Guri ser.
டர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை விதி, asaulig. Carr.ou. - 08-234755
077-306506 o'nx - 08-2347SS
مستق تمام محمجھے سر
[ဲို -
E-Mail - gnanangaltnettk
சிறுகதைகள் ஆலகால விஷமா அமிர்தமா - 04 யோகா பாலச்சந்திரன் காதல் ஊனமாவதில்லை - 20 கனகசபை தேவகடாட்சம் கட்டுரைகள் தமிழ் சினிமா ரசனையும் சிங்கள சினிமாவின் வீழ்ச்சியும் - 09 கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் நான் பேச நினைப்பதெல்லாம் - 13 கலாநிதி துரை மனோகரன் ரூபராணி ஜோசப் - 18 ந.பார்த்திபன் மானுடத்தை நேசித்த முற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியர் - 23 சின்னத்தம்பி குருபரன் கவிதைகள்
DTG) - 08
குறிஞ்சி தென்னவன் நானும் குருவிகளும் - 16 சோலைக்கிளி
கோவணமே! - 17 ஏ. இக்பால் 01. Gurtuses
02. பேச்சு - 22
யெவ்Gெனி மேய்ப்பர்கள்! - 31 கல்வயல் வே.குமாரசாமி நூல் மதிப்புரை-திஞானசேகரன் - 26 புதிய நூலகம் - அந்தனிஜீவா 29 வாசகர் பேசுகிறார். 27 அட்டைப்படம்-நன்றி இன்னுமொரு காலடி (சித்திரை - 1998)
03

Page 3
யோகா பாலச்சந்திரன்)
"ஒரே கணவரோடு இருபது, முப்பது வருடங்கள் வாழ்வதா? அப்பாடி! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எவ்வளவு அருமையான சாப்பாடானாலும் கூட தினமுமா சாப் பிட முடியும்? வாழ்க்கை போரடிக் காதா? உங்களிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதே இல்லையா?" - தாள முடியாத ஆச்சரியத் தாலி அதிர்ந்து போகிறாள் இருபத்தைந்து வயதான கனேடிய மங்கை லிண்டா சிம்ஸன்.
யூத் சென்டரில் (இளைஞர் நிலையம்) குழுமி இருந்த பல்லின பெண்கள் மத்தியில் திருமதி. மனோகரி மகாதேவனின் பேச்சு ஒரு சிறு பூகம்பத்தையே உருவாக்கி விட்ட தெனலாம்.
"உண்மையாகச் சொல் லுங்கள் மேடம், கணவரோடு வாழ்ந்த காலத்தில் ஒருமுறைகூட அவரிட மிருந்து ஓடிப்போக வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு எழவே இல்லையா? ஒரே விதமான வாழ்க்கை, உறவுமுறை உங்களுக்குள் ஒரு போதும் சலிப்பைத் தரவில்லையா?” இப் படிக் கேட் டவள் கறுப் பின அமெரிக்க கட்டழகி ஜுலியா.
“உங்களால் சத்தியமாய்ச் சொல்ல முடியுமா மிஸிஸ். மனோ, உங்கள் கணவரோடு வாழ்ந்த முப்பத் தைந்து வருடங்களில், ஒரு நிமிடந் தானும் உங்கள் மனம் வேறு எவரை யும் நாடவேயில்லை என்று?" பூங்
கொடி போன்ற தன் பொன்னுடலை, பம்பரமாய்க் குலுக்கி, ஆச்சரியத்தால் விக்கி நிற்கிறாள் டொரண்டோ அந்தணி ஆஸானா ரிச் . இப்படி உண்மையைத் தேடும் கேள்விகள் பல திக்கிலுமிருந்து சுடுபானங்களாய் மனோகரியைத் தைத்தன.
கேள்விகள் அனைத்தையும் கிரகித்து உள்வாங்கிய மனோகரி பதில் இறுக்கிறாள். - "எங்களது தாம் பத்தியத்திலும் நிறையவே பிரச்சனை கள், புயல், சூறாவளி எல்லாமே இருந் தன. ஆனால் பிரச்சனைகள் எப்படி யேனும் தீர்த்து வாழ்ந்தாக வேண்டும் என்பதே எமது பாரம்பரிய குடும்ப குறிக் கோளாக அமைந்ததாலி , சங்கடங்களைக் கண்டதும், கழன்று ஓடவேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லை. கடைசிவரை ஒன்றுகூடியே வாழவேண்டும் என்பது இலக்கு, இலட்சணம் எல்லாமே என்று மனதார நம்பினோம். இப்போதும் அப்படித்தான் நம்புகிறேன். அதனால்தான், கணவரை விலக்கி விடவேண்டும், குடும்பத்தை விட்டு ஓடலாம் என்ற நினைப்புகள் எமக்கு எழவில்லை. நாங்கள் தொட் டால் சுருங்கிகள் அல்ல!
போரடிக் காதா எண் று நீங்கள் கேட்பது, பொதுவாக "செக்ஸ்’ - பாலியல் உறவு? - அப்படித்தானே?" அங்கிருந்த அனைத் து தலைகளும் அமோகமாய் ஆமாம் என ஆடின.
மனோ ஒருவித நமட்டுச்
 

சிரிப்போடு சொல்கிறாள். "பாலியல் உறவு என்பது எங்களைப் பொறுத்த மட்டில், வாழ்வின் ஒரு அங்கமே தவிர, அதுவே முழுவாழ்வுமல்ல. ஆனால் அதன், செக்ஸின் முழுச்சுவையையும் நாம் அநுபவிக்கத் தெரியாதவர்கள் என்று மட்டும் நீங்கள் தப்புக் கணக்குப் போடவேண்டாம். உலகப் பிரசித்தி பெற்ற 'காமசூத்திரம்’ எங்கள் பாரம் பரிய செல்வங்களில் ஒன்று. செக்ஸை நாங்கள் கரும்பு தின்பதைப் போல அணுவணுவாய் அநுபவிப்போம். நாட் செல்லச் செல்ல எங்கள் தாம்பத்திய உறவு மென்மேலும் சுவையும் உரமும் பெறும். பொதுவாக, அன்றாட வாழ் வில் ஏற்படும் எத்தகைய கொடுர அனர்த்தங்களையும் குணமாக்கும் சஞ்சீவி மருந்து போன்றது "செக்ஸ்.
"குடும் பத்தில் சச்சரவுகள் ஏற்படும் போதும். ၇၇ பள்ளி செல்லும் மாணவி சுட்டிப் பெண் மொனிக்கா சந்தேகத்தில் வார்த்தை களை இழுக்கிறாள்.
மனோ - "சண்டை சச்சரவு வேறு குடும்ப உறவு வேறு. ஒன்றோ டொன்று கலக்க வேண்டிய அவசியம் arassa?”
சணி டை
"கோபித்து வெறுக்கும்
நபரோடு உறவு கொள்வதெப்படி?” . பிஞ்சு மொனிக்காவிற்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது.
"சுவீட்டி (இனியவளே), குடும்பத்தில் தம்பதிகளுக்கிடையே கோபம் சந்தோஷம் என்பன எங்கள் நாட்டின் கோடையும் குளிரும் (சம்மர், விண்டர்) போல! எங்களுக்கு பகலில் விண்டர்! இரவில் சம்மர்! அடுத்து, நாம் கோபிப்பது, ஏதேனும் ஒரு விடயம், அல்லது செயல்மீதுதான். நபர் மீதல்ல. செய்த காரியம் பிழை. செய்த வரைத் திருத்த முயலவேண்டும்.”
"சமூகத்திற்குப் பயந்து தானே நீங்கள் இப்படி ஒரு பூரண சுதந்திரமில்லாத வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? உங்கள் நாடுகளில் பெண் சுதந்திரம் என்பதெல்லாம் ஓரளவு ஹம்பக் மாயை தானே? வாக்களிப்பது, தேர்தலில் நிற்பது, படிப்பது, தொழில் பார்ப்பது மட்டும் தான் பெண் சுதந்திரம் என்று நினைக்கிறீர்களா?" - மத்திம வயதுக் குடுப்பப் பெண் டொரிஸ் விளக்கம் கோரினாள்.
"இல்லை, நிச்சயமாக இல்லை" - மனோவின் குரலில் சூடு தெரிகிறது. "சுதந்திரமென்பதை வனாந்திரத்தில் மிருகங்களுக்கிடையில் நிலவும் கண்டதே காட்சி, கொண்டதே கோலமாக்க எங்களாலும் முடியும். அப்படி நினைப்போரும் எங்களிடையில் உள்ளனர். சொல்ல முடியாதளவு கொடுரமான கல்யாணங்களிலிருந்து இப்போது எங்களால் நிச்சயம் வெளி யேற முடியும். பிடிக்காத பந்தங்களை உடைத்தெறியவும் எமக்கு சுதந்திர முண்டு. ஆனால் முடிந்தளவு ஆழ மறிந்து காலை விடவும், காலை விட்ட பின் கடைசிவரை நீந்திக் கரையேற வுமே மனிதர்களாகிய நாம் முயற்சிக்க வேண்டுமென்பது, எமது பாரம்பரிய மதங்களும் கலாசாரமும் காட்டிய தர்க் கானுகூலமான வழி. இதனால்தான்

Page 4
21ம் நூற்றாண்டின் தலைவாயிலில் நின்று கொண்டும் கூட, எமது பிள்ளை களில் பலர் பெரியோரை, பெற்றோரை இன்றும் கூட ஓரளவேனும் மதிக் கிறார்கள். விடுதலையோடும், உரிமை களோடும் பொறுப்புணர்வும் சேர்ந்து இரண்டறக் கலந்தது என்பதை நாம் இன்னமும் மறக்கவில்லை.” மனோவின் உணர்ச்சி தோய் நீத பதிலாலி அங்கிருந்த பெண்கள் குழாம் சில நிமிடங்கள் மெளனத்தில் மூழ்கி எழுந்தன.
சற்று வயதான செரலா (Serala) ஸ்மித் "இந்த மாதிரியான குடும்பக் கட்டுக்கோப்பை தொடர்ந்தும் காப்பாற்ற முடியும் என்று நம்புகி றிர்களா மனோ? உங்கள் பேரப் பிள்ளைகளும் குடும்பம், வாழ்க்கையில் ஒரே துணை என்ற விடயங்களுக்கு எதிர்காலத்தில் மதிப்பளிப்பார்களா?” சிரசை மேலே உயர்த்தி சில கணங்கள் சிந்திப்பது போல பாவனை பண்ணிய மனோகரி சொல்கிறாள், *உலகளாவி இப்போது பரந்து செறிந்து வாழும் எமது இன மக்களி டையே, எந்தளவிற்கு எமது பாரம் பரியக் கருத்துக்கள் தொடர்ந்தும் பேணப்படும் என்று சொல்வது கடினம். ஆனாலும் எய்ட்ஸ் பற்றி அறிந்தவர்கள் சுதந்திரமான பாலியல் மேய்ச்சலுக்கு இனிப்போகப் பயப்பிடலாம். எமது நாட்டிலும் குடும்பக் கட்டமைப்பு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளதை மறைப்பதில் பயனில்லை. முதியோரின் நிலையும் சற்று மாறி “மதர்ஸ் டே, Lungsfroii) (3L (3urtG (Mothers Day - Fathers Day) sistiá 6GC3LDm 616irg பயப்படுகிறேன். புதிய மிலேனியச் சிந்தனை எப்படி அமையப் போகிற தென்பதைப் பொறுத்தே, இன்று நாகரிகம், சுதந்திரம், தனிமனித ஆளுமை வளர்ச்சி, தனித்துவம் என்று சொல்லப்படும் விடயங்களில் மனி தருக்கு உருப்படியான தெளிவு விளக் கம் ஏற்படலாம். மனிதனது வாழ்வை
மேலும் ஆத்மீக உணர்வியல் ரீதியிலும் சேர்த்து மேல்நிலைப் படுத்துவதுதான் அபிவிருத்தி, நாகரிக வளர்ச்சி என்பதன் அர்த்தம் சரி என்றால் நாம் எப்படி வாழவேண்டும் என்பது குறித்து தீர்மானம் வகுப்பதில் சிரமம் பெரிதும் இருக்காது.”
மனோகரியின் முத்தாய்ப்பை அடுத்து, இதுவரை பேசாமலே இருந்த ஒரு வெள்ளைக்கார யுவதி, நல்ல உயரம், கவர்ச்சியும், இளமை கிளு கிளுப்பும் உடலெல்லாம் கொப்பளிக்க மேடைக்கு அருகே வந்தாள். எவரும் சற்று எதிர்பாராத வகையில் மனோ கரியை கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தாள். சபை ஏகமாய் கரகோ வழித்தது. பின் தன்னை சுதாகரித்த படியே நன்றி உரைக்கிறாள்.
* பிரண்ட்ஸ் (நண்பர்களே) இன்று இங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதை விட எனக்கு இலவசமான சுவையான டின்னர் இராப்போசனம் கிடைக்குமே என்று நினைத்துத்தான் வந்தேன். உண்மையைச் சொன்னால் நான் நினைத்து இருந்ததை விட அதிகமாக வாழ்க்கை, குறிப்பாக குடும்ப வாழ்க்கை, தாம்பத்தியம் சுவையானது, பெறுமதி மிக்கது என்று
 

உணர மனோவின் கருத்துக்கள் பயன்பட்டன. நான் அறிவறிந்த காலம் தொட்டு பல சங்கட்ங்களைச் சந்தித் தவள். என் தாயார் எனக்கு மூன்று வயதாக இருக்கும் போதே, என் உயிரியல் ரீதியான தந்தையை (Biological father) 6f 6m. T 35 g gjö g5 Lú பண் ணிவிட்டு, இன்னொருவரை மணந்து கொண்டார். எனக்கும் ரிச்சட் டுக்கும் (அம்மாவின் இரண்டாவது கணவர்) பொருந்தவே இல்லை. குடும் பத்தில் கிடைக்காத அன்பை, ஆதர வைத் தேடி வெளியே அலைந்ததில்,
பன்னிரெண்டு வயதிலிருந்து பலரால்
என் உடல் தவறாகப் பாவிக்கப்பட்டது. வீட்டைவிட்டு வெளியேறுகையில் எனக்கு வயது பதினைந்து. இந்த இருபதுக்கிடையில் நான் நால்வரை நண்பர்களாகச் சந்தித்தேன். எவரை யுமே கணவராகத் தெரிவு செய்ய முடியாமலிருந்தது. சில சமயங்களில் மனவிரக்தியை, தனிமையைப் போக்க போதைவஸ்து, கும்பல்கோஷ்டி, மது எனக்கு உதவின. ஆனாலும் வாழ்க்கை பற்றி ஒரு நல்ல முடிவெடுக்க முடியா மலிருந்தேன். உங்கள் கருத்துக்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனம் பெரிதும் தெளிவடைந்துள்ளது. மிக்க நன்றி.” மனோகரியை மறுபடியும் கட்டிப் பிடித்து கொஞ்சிவிட்டு தனது நாற் காலியில் போயமர்ந்தாள்.
அடுத்து சபையின் பின் கோடியிலமர்ந்திருந்த ஒரு பேரிளம் பெண் ஜம்பதைத் தாண்டியவள் கறுப்பின மங்கை முன்னால் வந்து "நான் ஒரு அபலை, அனாதை. சிங்கிள் மதர். எனக்கு இளம் வயதில் சற்றுப் பொறுமை இல்லாதபடியால்
கணவர், குடும்பம் எனற விடயங்களில்
நம்பிக்கை இருக்கவில்லை. எங்கெங் கோ சுற்றி ஐந்து பேரோடு வாழ்ந்து பார்த்தேன். மகிழ்ச்சி, நிம்மதி, ஒருவரிட முயிலி லை. உடல் தாகம் தர தன்னினச் சேர்க்கையை இறுதியில் நாடினேன். இப்போது என்னுடலில்
எச்.ஐ.வி. வைரஸ் குடிகொண்டுவிட்டன. விரைவில் எயிட்ஸ் நோய் என்னை முற்றாக அழித்துவிடும். மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. எப்படியும் எல்லோருக்கும் சாவு நிச்சயம். ஆனால் அருமையான வாழ்நாளை வீணாக்கி விட்டேனே என்றுதான் கவலைப்படுகிறேன். எனது முன்னாள் கணவர்களில், ஜோன் மிக நல்லவர். பரமசாது, மதப் பற்று மிக் கவர். அவரிடம் துடிப்பு, இளமைச் சாகஸம் போதாது என்று அப்போது கருதி, அவரை விலக்கினேன்.” கொஞ்ச நேரம் அழுகிறாள். மீளவும் பொங்கும் கண்ணிரைத் துடைத்த படியே, "இனி யொரு பிறப்பு புனர்ஜென்மம் என்று இருக்குமேயானால், உங்கள் நாட்டில் பிறக்க ஆவலாக உள்ளேன். கடவுள் எங்கள் பிள்ளைகளைக் காப்பாற் றட்டும். மிஸிஸ் மனோ! உங்கள் பண்பும், பொறுமையும், கலாசார வாழ் வியலும், எங்கள் நாட்டு அறிவியலும் விஞ்ஞானமும் சேர்ந்து ‘புதியதோர் உன்னத உலகம் பிறக்கட்டும். நாம் எல்லோரும் அந்த அர்த்தமுள்ள புது யுகத்திற்காய் பிரார்த்திப்போமாக" லோராவின் (Laura) பிரார்த்தனையில் அத்தனை பேரும் ஆத்மார்த்தமாகவே பங்கேற்றனர்.
ஆலயமணி ஆசுவாசமாய் ஒலித்தது. சுடச்சுட இடியப்பமும், சொதியும், கிழங்குப் பிரட்டலும், சோக்கான சம்பலுமாயப் உணவு பரிமாறத் தொடங்குகிறார்கள் அம்மன் கோவில் அறநெறிப் பள்ளியைச் சேர்ந்தோர். கனேடிய குளிருக்கு அந்த உணவுகள் எத் துணை இதமும் சுகமுமாய் இருந்தன!
(வெறும் கற்பனையல்ல)

Page 5
: لی
“வீடுகள் (முன்னர் பிரசுரமாகாத கவிதை) சொந்தம்"
எனும்
கானலை நம்பிய
LDT6ót an Lub
கம்பனிகளின் மோசக் கருத்தை பாசக்கரமென பல்லவி பாடிய பம்மாத்துக் காரரின் ஆசை வலையில் சிக்கி நாசத்தைத் தேடும் அநாதைகள்
பெளர்ணமி நிலவுக்கு காத்திருந்து geldT66F இருளில் அகப்பட்டுக் கொண்டவர்கள்
கர்ப்பக் கிரகத்துக்கு செல்ல ஆசைப்பட்டு காராக்ரகத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள் ஏன்? ஏன்? ஏன்? சொந்தக் குழந்தை தெருவில் நிர்வாணத்தில்
அமரர் குறிஞ்சி தென்னவன்
அயல் குழந்தைக்கு -e!6DLقگی அணிவித்து அழகு பார்க்கும் sig566OTLDIT
ஒட்டு போட்டுவிட்டு தங்கள் வீட்டுக் கூரைகளை எண்ணுவோர்
ஒட்டுகளைப் பெற்று ஹோட்டல்களை திறப்போருக்கு மாலை போட்டு மகிழ்வர்
தங்களைப்
பற்றி
உலக நாடுகளில்
ஒப்பாரிவைத்து நீலிக் கண்ணிர் வடித்து
வாங்கிய பணங்கள்
காணிகளாகவும் பங்களாவாகவும் கார்களாகவும் மாறும்
எனினும் இவர்களின் நிலை?
ஏ. மலையகமே
என்றுதான்
உனக்கு விடிவு?
 
 

தமிழ் சினிமா ரசனையும் சிங்கள சினிமாவின் வீழ்ச்சியும்
(தமிழ் சினிமா கருத்தரங்கு உரைகள்) கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்
சிந்தாமணி, சந்திரலேக்கா, மங்கம்மா சபதம், வேலைக்காரி முதலிய புகழ்பெற்ற பழம் சினிமாப் படக்காட்சி கண்டி றீகல் படமாளிகையில் 10ம் மாதம் நடைபெற்றபோது பழந்தமிழ் சினிமாப் படங்கள் பற்றிய கருத்தரங்கு பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
திரைப்பட ஆய்வாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரன்தேர்கை (இந்தியா), படத்தயாரிப்பாளர், நெறியாளர் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் திஸ்ஸ அபேசேக்கர, நெறியாளர் தர்மசேன பத்திராஜ, பல்கலைக்கழக நுண்கலைப்பீடத் தலைவர் கலாநிதி. மைக்கல் பெர்னான்டோ ஆகியோர் கருத்தரங்கில் பங்குபற்றினர்.
ரன்தேர்கை சிந்தாமணிகால தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் கலைத்தாக்கங்களையும் விரிவாகப் பேசினார்:
சினிமா தன்னளவில் ஒரு மொழியாகும். திரையில் சென்று கொண்டிருக்கும் ஒரு கதைக்கு ஒரு மொழி அவசியமில்லை. அதனால்தான் சினிமா இன, மொழி, புவியியல் எல்லைகளைக் கடந்து வெற்றி பெறுகிறது. சினிமா அதன் தொடக்க காலத்திலிருந்தே பல்வேறு கலாசாரங்களினதும் கலைகளினதும் கலவையாகவே உருவாகி வளர்ந்துள்ளது. கலாசாரக் கலவைகள் அதற்கு சிறந்த ஊன்றுகோலாகவே அமைந்திருந்ததை சினிமா வரலாறு காட்டுகிறது.
தமிழ் சினிமாவானது ஹொலிவூட், உள்நாட்டு நாடகக் கலை, நடனக் கலை, கிராமியக் கதைக் கலை உட்பட ஏனைய கலைகளையும் பயன்படுத்திக் கொண்டுதான் மக்களை வந்து சேர்ந்தது. சுத்தமான சங்கீத ஞானம் அன்றைய நடிகனுக்குத் தேவையாக இருந்தது. முகவசீகரம் போல குரல்வளமும் பாடும் திறனும் நடிக நடிகையருக்கு அவசியமாக இருந்தன.
தமிழ் சினிமாவில் நாடகத்தின் பாதிப்பு அதிகம். இன்றும் அதன் பாதிப்புக்கள் விலகவில்லை. உதாரணமாக பாத்திரங்கள் இரண்டோ பலவோ உரையாடும்போது சபையோரை நோக்கியே உரையாடுகின்றன.
சிங்கள சினிமாவின் தோற்றத்திற்குத் தமிழ் சினிமாதான் காரணமாக இருந்துள்ளது. சிங்கள சினிமாவின் பிறப்பு இந்தியாவில்தான் நிகழ்ந்தது. சிங்கள சினிமாத் தயாரிப்பிற்காகத் தமிழ் நாட்டில் தங்கி நின்று செயற்பட்ட பல தமிழ் சினிமாக்காரர்களின் பெயர்களையும் பங்களிப்புக்களையும் ரன்தேர்கை விளக்கமாகக் கூறினார்.
திஸ்ஸ அபேயசேக்கர பேசும்போது: சிங்கள சினிமா ஒரு கைத் தொழில் துறையாக இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. புகழ்பெற்ற சினிமாச்சாலைகள் மூடுவிழாவிற்குத் தயாராகி வருகின்றன. மக்கள் திரையரங்குகளுக்கு இன்று செல்வது பெருமளவு குறைந்து விட்டது. தொலைக்காட்சியின் செல்வாக்கே இதற்குக் காரணம் என்ற கொள்கை O9

Page 6
தவறானதாகும். தொலைக்காட்சியுடன் போட்டியிடும் சினிமாத் துறையுள்ள நாடுகள் உலகில் இருக்கின்றன.
சிங்கள சினிமாவின் வீழ்ச்சி, சினிமாத்துறையினாலும் தேசிய சினிமா என்ற பெயரில் எழுச்சி பெற்ற இனவிரோத சினிமாக் கொள்கையினாலுமே இது நிகழ்ந்தது என்று திஸ்ஸ அபேயசேக்கர விளக்குகிறார்.
தமிழ்ச் சினிமாவின் பண்புகளை சிங்கள சினிமா புறக்கணித்தது இதில் நிகழ்ந்த மோசமான விளைவாகும். 1956ற்குப் பின்னர் இந்தியத் தமிழ்ச் சினிமாவை சிங்களத் திரைப்பட விமர்சகர்கள் மோசமாகக் கண்டித்து எழுதினர். திரைப்படத் துறையில் சம்பந்தப்பட்ட ஏனையோரும் தமிழ் சினிமாவுக்கு எதிரான கருத்துக்களைப் பிரசாரப்படுத்தி வந்தனர். இலங்கையின் முதல்தர சினிமா விமர்சகர்களும் இப்பணியில் இறங்கினர்.
இவர்கள் 1956ற்கு முற்பட்ட சிங்கள சினிமாவை மோசமாகத் தாக்கினர். அது தமிழ்ச் சினிமாவின் தாக்கத்திற்குட்பட்டிருந்ததென்பதே அக்கண்டனத்தின் உண்மையான கருத்தாகும். தமிழ்ச்சினிமா சிங்கள சினிமாவைச் சீரழித்து உள்ளதாக அவர்கள் எழுதினர். 1956ற்கு முன்னர் இலங்கையில் ஒன்றுமே வரவில்லை, நாடகம் இல்லை, இசையில்லை என்று ஒருசாரார் கூக்குரலிட்டனர். உண்மையில் நடைமுறையில் காலாகாலமாக இருந்துவந்த கலைகளையும், பொதுமக்களும் தொழிலாளர்களும் விரும்பி இரசித்து வந்த 1956ற்கு முற்பட்ட நாடக மற்றும் சினிமாக் கலைகளின் இரசனைப் பாங்குகளையும் இவர்கள் நிந்தித்தனர். கிராமிய நாடக, நடன, கலைமரபுகள், பாடல்கள் என சாதாரண மக்களின் ரசனைக்கு ஆதாரமாய் இருந்த கலையம்சங்கள் பல தமிழ் சினிமாக்களில் சம்பந்தப்படுத்தப்பட்டன. அவைதான் தமிழ் சினிமாவை மக்களுக்கு அருகில் கொண்டுவந்த பிரதான அம்சங்கள். ஆரம்ப சிங்கள சினிமாக்காரரும் இந்த வழியையே பின்பற்றினர். எனினும் இது தமிழ்ப்பாணி என்று ஒதுக்கப்பட்டும் கண்டிக்கப்பட்டும் வந்தது. சிங்கள விமர்சகர் இவற்றை வெறுக்கக் கற்றுக் கொடுத்தனர்.
பெரிய விமர்சகரான ரெஜிசிறீவர்த்தன தமிழ் சினிமாவுக்கும் டவர்ஹோல் நாடக மரபிற்கும் முறைகேடாகப் பிறந்த குழந்தையே சிங்கள சினிமா என்று கூறியபோது அதை நாங்கள் சிறந்த விமர்சனமாக ரசித்தோம். தமிழ் சினிமா சிங்கள எழுத்துக்களில் மோசமாகக் கண்டிக்கப்பட்டது. தமிழ் சினிமாவை மோசமாகக் கண்டித்து எழுதுவதன் மூலமாக ஒரு சினிமாவிமர்சனம் கலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (தமிழில் மறுபுறமாக சிங்களசினிமாவை உயர்த்திப் பேசினால் அது தரமான விமர்சனமாக மதிக்கப்பட்டது. - கட்டுரை ஆசிரியர்)
உருவாகியிருந்த பொதுமக்கள் ரசனை வடிவம் புறக்கணிக்கப்பட்டது. பொதுமக்கள் ரசனைக்கு மாறான சினிமா மரபு 1956ல் லெஸ்ட்டர் ஜேம்ஸ் பீரிஸினால் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேக்காவ, கம்பெரலிய போன்ற மாறுபட்ட கலை இரசனை கொண்ட படங்கள் வெளிவந்தன. இயல்பான பேச்சு மொழி சாதாரண வாழ்க்கைச் சம்பவங்கள் தர்க்கரீதியான கதை என்ற அம்சங்களை இப்படங்கள் மையப்படுத்தின. யதார்த்தவாத சினிமாவை இது ஆரம்பித்து வைத்தது. ஆயினும் இப்புதுமரபுச் சினிமாவிலும் ஆடல்பாடல் போன்ற தமிழ்ப்பட “வாய்ப்பாடுகள் (வட்டோருவ) புகுத்தப்பட்டிருந்தன. அவை படத்தின் ஓட்டத்திற்கு
10

பொருந்தி நின்றதாகக் கூற முடியாது. ஆனாலும் ரேக்காவ படத்தில் (காதலனும் காதலியும்) வாவியில் படகில் ஜோடியாகப் பாடிச் செல்கின்றனர். லெஸ்டரும் இந்த "வாய்ப்பாட்டு தமிழ் ரசனையிலிருந்து மீட்சி பெற முடியாதிருந்தார். படத்தின் மக்கள் கவர்ச்சிக்கு இப்பகுதிகள் தேவை என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் அந்தக் கலவை சரியாகச் செய்யப்படவில்லை. மக்களின் ரசனைக்கு இடமளிக்க வேண்டும் என்று அவர் மனதிலிருந்த கருத்தினை அது வெளிப்படுத்தியது. அவருடைய படங்களிலும் அதுபோன்ற படங்களிலும் இடம்பெற்ற மக்கள் ரசனைக்கென அவர்கள் புகுத்திய பகுதிகள் சரியாகப் பொருந்தாததனால் அவை மக்களின் ஈர்ப்பைப் பெறத் தவறின.
யதார்த்தவாத சினிமா உயர்குழாத்தினருக்கு அல்லது உயர்மட்ட ரசிகர்களுக்கு வழங்கிய திருப்தியை பொது ரசிகர்களுக்கு வழங்கவில்லை. சினிமாவுக்காகக் காத்திருந்த தொழிலாளரும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் சினிமாவிலிருந்து விலகிச் செல்லலாயினர்.
மறுபுறத்தில் வணிகப் படங்களும் தயாராகி வந்தன. யதார்த்தவாத சினிமாவை வணிகப் படங்கள் தழுவத்தொடங்கின. வணிகப்படக்காரரும் உயர்மட்ட அறிவுவாத ரசிகர்களைக் கவர்வதற்காக யதார்த்தவாதத்தைத் தமது படங்களில் புகுத்தினர். அதனால் மக்கள் வணிகப் படங்களையும் புறக்கணித்தனர். இப்போது வணிகப்படங்களும் பொதுமக்களின் ரசனைக்கு அப்பால் செல்லத்தொடங்கின. அதாவது பொதுமக்கள் யதார்த்தப் படங்களைப் பார்ப்பதற்கும் திரையரங்குகளுக்கு வரவில்லை. வணிகப்படங்களைப் பார்ப்பதற்கும் திரையரங்குகளுக்கு வரவில்லை. மக்கள் இரசனைக்குச் சாதகமாக இருந்த ஒரு மரபு மறுக்கப்பட்டதால் சினிமாப் பார்வையாளர்களை சிங்கள சினிமா இழந்தது. அதனால் சினிமாக் கைத்தொழில் வீழ்ச்சியுற்றது.
1956ற்கு முந்திய படங்களின் இரசனை மரபை யதார்த்தவாதிகள் புறக்கணித்தனர். மக்கள் ரசனைக்கான அம்சங்கள் பல தமிழ் சினிமாவில் இருந்தன. 1948ற்கு முன்னர் இருந்த சிங்கள மக்கள் தமிழ் சினிமாவிலும் தமிழ் சினிமா ரசனை மரபிலும் பேரார்வம் உடையவர்களாக இருந்துள்ளனர். 'மங்கம்மா சபதம் போன்ற படங்களை சிங்கள மக்கள் ஆயிரக்கணக்கில் சென்று பார்த்தது மட்டுமல்ல அவற்றை மிண்டும் மீண்டும் பார்த்தனர்.
1956ற்கு முற்பட்ட சிங்கள சினிமா ரசனையை தமிழ், ஹிந்தி, சினிமா ரசனைதான் வடிவமைத்திருந்தது. இது ஒரு சாதகமான அம்சமாகும். மக்கள் சார்ந்த இசை, கதை, ஆடல்பாடல்களை மக்கள் நன்கு பழகி அநுபவித்தவை களாகும். இந்திய சினிமா இவற்றை நன்கு பயன்படுத்தத் தெரிந்திருந்தது. அது படத்தின் முரண்பாடான விடயமல்ல. மக்கள் ரசனை சார்ந்த சாதாரண இயல்பான சாதனங்கள். அதைத்தான் தமிழ் சினிமா செய்தது. "வாய்ப்பாடு என்று அது இகழப்படக்கூடாது. சாதாரண மக்களை திரைச்சாலைகளுக்குச் செல்ல அவைதான் தூண்டின. பாடல்கள் அவர்களைக் கவர்ந்தன. மீண்டும் மீண்டும் அவர்கள் திரையரங்குகளுக்குச் சென்றார்கள்.
இன்று ‘சிந்தாமணி படத்தில் 60 பாடல்கள் பாடப்பட்டதை நான் பார்த்தேன். அது எனக்கு எந்த அலுப்பையோ சோர்வையோ தரவில்லை. முரட்டுத்தனமாகப் புகுத்தப்பட்ட பாடல் காட்சிகளாகவும் எனக்குத் தெரியவில்லை.
1.

Page 7
கதை, கதாபாத்திரங்களின் இயக்கம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து இயல்பாக அந்தப் பாடல்கள் வந்து கொண்டிருந்தன. அவை ரசிக்கக் கூடிய பாடல்களாக இருந்தன. இந்த ரசனையை 1956 கால சிங்கள சினிமா புறக்கணித்துள்ளது.
1956ற்கு முற்பட்ட சிங்கள சினிமாவில் தமிழர்களே முக்கிய இடத்தைத் பெற்றிருந்தனர். படத்தயாரிப்பாளர்களாகவும் தொழிநுட்பவியலாளர்களாகவும் அவர்கள் விளங்கினர். இந்தியா சென்று சிங்களப் படத் தயாரிப்பில் முதலில் ஈடுபட்டவர்களும் அவர்களே. சினிமா அரங்குகள், சினிமா கலைக்கூடங்கள், சினிமா இரசாயன சாலைகள் முதலியவற்றை இலங்கையில் உருவாக்கிய ஆரம்ப கர்த்தாக்களும் அவர்களே. சிங்கள சினிமாவின் வளர்ச்சியின் எல்லா மட்டங்களிலும் தமிழர்கள் இருந்துள்ளார்கள்.
1956ல் இருந்து உருவான தமிழ் சினிமா வெறுப்பும், பிரசாரங்களும், இனவாதப் போக்குகளும் சினிமாவின் படிப்படியான வீழ்ச்சியும் தமிழர்களை இத்தொழிலிலிருந்து அப்புறப்படுத்தியது. 1983 கலவரத்திலும் இது வெளிப்பட்டது.
தர்மசேன பத்திராஜா பேசும்போது: தேசிய சினிமா என்ற கோஷம் ஒரு பக்கச் சார்பானதாக இருந்தது. தமிழ் சினிமா இதில் அடங்கவில்லை. இலங்கையில் நான் நெறிப்படுத்திய 'பொன்மணி படம் தோல்வியடைந்தது. தமிழ் சினிமா ரசனை என்ற மகாமரபைக் கைவிட்டு யதார்த்தமுறையை அதில் கையாண்டிருந்தேன். நான் விளங்கிக் கொண்ட விதத்தில் யாழ்ப்பாண வாழ்வைக் கூற முயன்ற போதும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்த சினிமா ரசனை மரபை நான் பொன்மணியில் சங்கமிக்கச் செய்யாதது தவறு எனறு உணர்கிறேன். பொன்மணியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதில் பயன்படுத்திய சினிமா மொழி வெற்றியடையவில்லை. தமிழில் பல்வேறு பேச்சுவழக்குகள் உள்ளன. தமிழ் சினிமா ஒருவகைப் பொதுவான பேச்சுமுறையைத் தந்துள்ளது. சினிமாவின் மொழி முக்கியமானதாகும். மக்களின் ரசனைக்கும் மரபுக்கும் பேச்சு மொழி பொருந்தாது போனதை பொன்மணியில் கண்டேன். ஏனெனில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு சினிமா பேச்சு மொழி ஸ்தாபிதமாகியிருந்தது.
"தோட்டக்காரி படமும் சரியான அடித்தளத்தைத் தரவில்லை. தமிழ்ப்படங்கள் இலங்கைத் தயாரிப்பாக வெளிவருவது பெரும் தோல்வியாகியது. அதனால் தேசிய சினிமாவிலி தமிழ் சினிமா வெண்பது பெரும் இடைவெளிக்குள்ளாகியது.
1956ற்குப் பின்னர் ஏற்பட்டு வந்த இனவாத தூபங்கள் சினிமாத் துறையையும் பாதித்தன. சிங்கள சினிமாவின் அச்சாணிகள் போல் விளங்கிய தமிழ் சினிமாக்காரர்கள் இத்தொழிலிலிருந்து விலகினர். 1960களில் விஸ்வரூபம் எடுத்த தமிழ் சினிமா வெறுப்புவாதம் அவர்களை இத்துறையிலிருந்து விலக்கியது. இது சிங்கள சினிமாவிற்கு விழுந்த பாரிய அடியாகும்.
இலங்கை சிங்கள சினிமா ரசிகர்கள் சாதாரண மக்கள், தொழிலாளர் பிரிவினர். அவர்களின் ரசனை மறுக்கப்பட்டது. அவ்வாறு மறுக்கப்பட்டதில் உயர் ரசனைக்கான கலை விழுந்தது மட்டுமல்ல வேறுபல விடயங்களும் இருந்தன. இறுதியில் அது சிங்கள சினிமாவையே நகர முடியாத நிலைக்கு இன்று தள்ளியுள்ளது.
2

நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரை.மனோகரன்)
தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவச் செய்தவர் இலங்கையில் பிறந்து வளர்ந்து, இலக்கிய வாதியாகவும், விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும், ஒலிபரப்பாளராகவும் உயர்ந்து, தமிழ் நாட்டிலும் வாழ்ந்து இலக்கியப் பணி புரிந்து, லண்டனில் அண்மையில் காலமாகியவர், சோ.சிவபாதசுந்தரம் அவர்கள். இலங்கையின் சிறுகதை வளர்ச்சியில் தமது பங்களிப்பையும் இணைத்தவர், அவர். காஞ்சனை என்ற அவரின் சிறுகதை தமிழ் நாட்டுச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத் தக்கது. ஆக்க இலக்கியத் துறைக்கு அப்பால் பிரயாணக்கட்டுரைகளையும், விமர்சனங்களையும் அவர் எழுதியுள்ளார். 1930ல் யாழ்ப்பாணத்தில் வெளிவரத் தொடங்கிய ஈழகேசரி பத்திரிகையை 1938ல் தாம் ஆசிரியராகிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து நவீன இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொள்ள வைத்த பெருமை சோ.சிவபாதசுந்தரத்தையே சாரும். இலங்கைத் தமிழ் சிறுகதையின் வளர்ச்சியில் ஈழகேசரியின் பங்கும் குறிப்பிடத்தக்கது. அப்பத்திரிகை வாயிலாக புதிய இளைஞர் குழாமொன்றை எழுத்துலகிற்குப் பிரவேசிக்க அவர் வழிவகுத்தார். ஒலிபரப்புக் கலை, புத்தர் அடிச்சுவட்டில், மானிக்கவாசகர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில் முதலான நூல்களை எழுதிய சிவபாதசுந்தரம், பெ.கோ. சுந்தரராஜனோடு (சிட்டி) இணைந்து, தமிழ்ச் சிறுகதை, நாவல் பற்றிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாளராகவும் அவர் விளங்கியுள்ளார். இன்றும் லண்டனிலிருந்து நாள்தோறும் வழங்கிக் கொண்டிருக்கும் லண்டன் பி.பி.சி யின் தமிழ்ச் சேவைக்குத் தமிழோசை என்ற இனிய பெயரைச் ஆட்டியவரும் சோ.சிவபாதசுந்தரம் அவர்களே. தேமதுரத் தமிழோசை முழங்கும் இடமெல்லாம் சிவபாத சுந்தரத்தின் நாமமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். நல்ல நகைச்சுவைக்கு
நகைச்சுவையுணர்வு உடல், உள ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இயல்பாகவே எல்லோரிடத்திலும் நகைச்சுவையுணர்வு இருப்பதுண்டு. அதேவேளை, முன்னாள் இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்மராவைப் போன்ற “சிரிக்காத மேதைகள் சிலரும் இருக்கவே செய்வர். நல்ல நகைச்சுவையை அநுபவிப்பதற்கு உண்மையில் இலங்கை பொருத்தமான நாடு. நாள்தோறும் பத்திரிகை படிப்பவர்களுக்கும், தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கும் நல்ல நகைச்சுவை இலவசமாகக் கிடைத்து வருகிறது. இலங்கையில் பேரினவாதிகளே நல்ல நகைச்சுவையை வழங்குவதில் வல்லவர்களாக விளங்குகின்றனர். பேரினவாதத்தை தமது உயிர் மூச்சாகக்
13

Page 8
கொண்டிருக்கும் குருக்கள்மார், அரசியல்வாதிகள், கல்விமான்கள், பத்திரிகை யாளர்கள், பிற ஊடகவியலாளர்கள் அருமையான நகைச்சுவையை அவ்வப்போது வாரி வழங்கி வருகிறார்கள். "யுத்தத்தின் மூலம் சமாதானம்” என்ற கோஷமே ரசிக்கத்தக்க நல்ல நகைச்சுவையாகும். நாடளுமன்றத்தில்கூட ஒருமுறை சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நாமெல்லாம் பார்த்து நகைத்தோம். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சிறுமுயற்சிகளைக்கூட பொறுக்கமுடியாமல் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசைகளில் தட்டியும், கடதாசிகளை எறிந்தும், நெருப்புக் கொளுத்தியும் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்றிருந்தனர். தாம் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டது மக்களுக்கு வேடிக்கை காட்டவே என்பதை அவர்கள் மிகச் சிறப்பாகவே ஒருமுறை உணர்த்தினார்கள். பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சில அரசியல் கோமாளிகள் தமது உயர்ந்த நிலையைக் கூட மறந்து, மேடைகளில் கத்தி, குழறித் தமது நகைச்சுவைப் பாத்திரத்தை நன்கு செய்கின்றனர். பேரினவாதிகள் சிலர் நகைச்சுவைக்கும் தமக்கும் இடையிலுள்ள நெருக்கமான உறவினால், சமாதானம் பேசவந்த நோர்வே நாட்டுப் பிரதிநிதியைக்கூட நாடு கடத்த வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். சோஷலிசம் பேசும் பேரினவாதிளும் நகைச்சுவையை வெளிப்படுத்துவதில் தாமும் மற்றவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் என்பதை அடிக்கடி உணர்த்தி வருகின்றனர். தமது இராச விசுவாசத்தைப் போட்டி போட்டுக்கொண்டு புலப்படுத்தத் துடிக்கும் தமிழ்பேசும் அரசியல்வாதிகளும் நல்ல நகைச்சுவையைப் புலப்படுத்து வதில் தனித்துவம் மிக்கவர்களாகவே விளங்குகின்றனர்.
உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் கூச்சநாச்சமில்லாமல் அற்புதமான நகைச்சுவையை நமது அரசியல் வாதிகளும், குருமாரும், பேராசிரியர்களும் சிலவேளைகளில் நமது நாட்டின் தூதுவர்களும் வழங்கி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் சுவீடனில் நடைபெற்ற இலங்கையின் இனநெருக்கடி தொடர்பான கூட்டமொன்றில் சுவைக்கத்தக்க நக்ைசசுவை இலங்கையர் சிலரால் பரிமாறப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் குருக்கள் ஒருவர் உரையாற்றியபோது, இலங்கையின் இனப்பிரச்சினைக்குக் காரணமானவர்கள் கிறிஸ்தவ தமிழர்களே என்று தமது நகைச்சுவையுணர்வின் ஒரு பகுதியை வெளிக்காட்டினார். ம்ேலும் எல்லாள மன்னன் சோழன். அதனால் அவன் தமிழன் அல்லன் என்ற தமது அறியாமையில் விளைந்த "புதிய கண்டுபிடிப்பையும்" குருக்கள் வெளியிட்டு மகிழ்ந்தார். கி.பி. 15ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் இலங்கைக்கு வந்தனர் என்ற தமது இன்னொரு 'கண்டுபிடிப்பையும் வெளியிட்டு, தமக்கு நல்ல நகைச்சுவையுணர்வு உண்டென்பதை அவர் உலகறியச் செய்தார். இலங்கையின் பேரினவாதக் குருக்கள்மாருக்குத்தான் வரலாற்றுக் குருட்டுணர்வு உள்ளதென்றால், வரலாற்றுப் பேராசிரியர்கள் சிலருக்குக்கூட அந்த நோய் உண்டென்பதை இலங்கையிலிருந்து விமானமேறிச் சென்ற ஒரு ‘வரலாற்றுப் பேராசிரியர் இனங்காட்டி விட்டார். யாழ்ப்பாண இராச்சியமே இருந்ததில்லை எனவும் ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழர்களே அல்லர் என்றும் கூறி தமக்குக்கூட வரலாற்றுக் குருட்டுணர்வும், நல்ல நகைச்சுவையுணர்வும் உண்டென்பதை வெளிநாடுகளுக்கும் வெளிக்காட்டினார்.
இலங்கையிலும், சில இலங்கையரால் வெளிநாடுகளிலும் இலவசமாகக்
14

கிடைக்கக்கூடிய நகைச்சுவை போதாது என்று தமிழ்நாட்டிலும் நகைச்சுவையை வாயார வழங்குவதற்கென்றே சில அரசியல்வாதிகள் பிறந்திருக்கின்றனர். இலங்கையின் இனப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ரசிக்கத்தக்க நகைச்சுவையை வழங்குவதில் ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி, வாழப்பாடி ராமமூர்த்தி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தற்போதைய காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் போன்றோர் தலைசிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பங்களும் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளும் ஒரு பொருட்டன்று. தங்களுக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப்பிழை ஏற்படவேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. ஜெயலலிதாவிற்கு கருணாநிதியை எதிர்ப்பதும், இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையாள்வதும் ஒரே விடயம்தான். அதனால் அவர் சிந்தும் நகைச்சுவைகள் ஏராளம். சுப்பிரமணிய சுவாமி இந்தியாவின் தலைசிறந்த அரசியல் கோமாளியாக விளங்குபவர். அதன் விளைவாக, இயல்பாகவே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகச் சுவைக்கத்தக்க நகைச்சுவையைச் சந்தர்ப்பம் ஏற்படும்தோறும் வழங்கி வருகிறார். ஜெயலலிதாவிற்கு கருணாநிதிபோல், ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு முதல் அரசியல் எதிரியாக விளங்குபவர், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ். வாழப்பாடிக்கு ராமதாஸ"ம் இலங்கைத் தமிழர் பிரச்சினையும் ஒன்றுதான். அதன் காரணமாக வாழப்பாடி ராமமூர்த்தி சிந்தும் கருத்துகள் சிறந்த நகைச்சுவைக்கு உதாரணங்களாக விளங்குகின்றன. குமரி அனந்தனும், இளங்கோவனும் சோனியா காந்தி மீதான எல்லையற்ற விசுவாசத்தினால், இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி அவ்வப்போது மக்கள் நயக்கத்தக்க நகைச்சுவையை அள்ளி வீசி வருகின்றனர். இவர்களது நகைச்சுவை போதாதென்று இடையிடையே கருணாநிதியும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு, தாமும் நகைச்சுவையை வழங்குவதில் தகுதி வாய்ந்தவரே என்பதை இனங்காட்டுவதுண்டு.
உணர்மையில் இலங்கைவாழி தமிழ் மக்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். தமது துன்பங்களை அவ்வப்போது அவர்கள் மறந்து சிரிக்க, நல்ல நகைச் சுவையாளர்களை இலங்கையும் தமிழ்நாடும் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றன.
LLL LLL S L LLLL LL LL SL LLLLL LLL LLL L S 0S LLLLL S LLL LL LLL LLL LLL LLL LLLL SLLLSS LLLLLS LLL LL LLL LLLL SZS LLLLL S LLLLS SLLLL LL LLL LLL LLLLL S LLLL S SLLLLS LL SLLL L S L SLL SLLLL LL LLL LLL LLL LLL LLL LLLLLL
நேர்காணல்
அடுத்த இதழில்
15

Page 9
நானும் குருவிகளும்
காற்றடிக்கும் பக்கமெல்லாம் தானாகத் தலையாட்டி கழுத்து முறியாத பொம்மை
எனக்கும் பல தடவை
கை அசைத்துக் கொண்டது ஒரு வேட்பாளன் போல
மீசை வெறும் தும்பு
காற்று வருகிறது இப்போதும் பொம்மை ஆடுகிறது கழுத்தில் இருக்கும் மணி கிலுங்க
நானும் இந்தக்
குருவிகளும் கோமாளிச் சாமியாரை ரசிக்க
தனது பின் முதுகு எவனுக்கும் தெரிவதில்லை இந்த வீரனுக்கும் அதே நிலைதான் ஒரு கடுகுக் கறுப்பு
அலகில் பலம் கொண்டு கொத்தி வேஷத்தைக்
கிழித்துக் கிழித்து உள்ளிருக்கும் வைக்கோலை இழுத்து இழுத்து
இவர் யாரென்று காட்ட
ஒரு பட்டாளம் சிறகடிக்கும், பழைய - மரபு உடைந்ததென்ற அடையாளம் அதுதானே
இன்னும் காற்று வரும் அப்போது இது போக மீண்டும் புது பொம்மை முளைத்திருக்கும் கை காட்ட வயல் நியதி இதுதான்
நானும் குருவிகளும்
தொடர்ந்து ரசிகர்தான்.
- சோலைக்கிளி
20.10.2000
6
 

காட்டின் நடுவே நிர்வாணக் கோலத்தில் மேட்டிமையுடன் தியான அநுஷ்டானம் கூட்டியே அமர்ந்திருந்த ஞானியை வேட்டைக்குச் சென்ற கூட்டம் , கண்டது!
ஐயோ பாவம் யாருமற்ற காட்டில் ஊனுடையின்றி வாழுமிஞ்ஞானியை மெய்யாகப் பலவிதத் தாளங்கள் காட்டிக் கையோடு ஊர் எல்லைவரைக் கூட்டிக் கோவண மொன்றைக் கொடுத்து நிர்வாணக் கோலத்தைக் குறைத்தனர்!
ஒவ்வொரு குடும்பமும் ஒருதியாலம் உணவு கொடுக்கும் முறையொன்றை ஊரில் உண்டாக்கி உதவினர்! உண்டு மிஞ்சிய உணவு குவியச் சில நாட்பின் பூனையொன்றையும் புதிதாய் வைத்தனர்!
உணவு கொடுத் தலுத்தவர்கள் ஒன்று கூடி ஒரு பெண்ணை அழைத்து ஒழுங்காக உணவு கொடுக்கும் ஏற்பாடு செய்தனர்!
இச்செயலும் நாட்களால் அலுத்தது ஞானியை அணுகி உணவுடை வீடு உடன் நாம் தருவோம் பரிபாலிக்க ஒரு பெண்ணையும் பார்த்துமே தருவோம் ஒப்புங்கள் என்று உரைத்தனர்!
முற்றும் துறந்த முனிவன்
கச்சையினால் வந்த
கடும் வினையை உணர்ந்து
கோவனமே என்னைக் குலைத்தாய் கவிஞர் எனவருந்திக் கோவணம் களைந்து 6.இ க்பால் தூரம் எறிந்து கானகமேகிக் கடுந்தவ மிருந்தார்!
17

Page 10
கலையரசி, இலக்கியச் செல்வி M"იჯი, சொல்லின் செல்வி, கலைச்செல்வி ரூபராணி ஜோசப்
கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழுக்குப் பணிபுரிந்து வருபவர் செல்வி ரூபராணி ஜோசப் பாடசாலையில் கற்கும் காலத்திலேயே எழுத்தார்வம், மேடைப் பேச்சு, நாடக ஈடுபாடு எனப் பல்வேறு துறைகளிலும் தன்னை இனங்காட்டிக் கொண்டவர் இவர். “பாடசாலை வாழ்க்கை எனது ஆற்றல்களை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகளைத் தந்தது. என்னைப் புடம் போட்டவர்கள் ஆசிரியர்களே" என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் ரூபராணி. பாடசாலை நாட்களிலேயே கையெழுத்துப் பத்திரிகையில் எழுதியவர் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது மனங்கொள்ளத்தக்கது. இன்று நாடறிந்த எழுத்தாளராக, விமர்சகராக, பேச்சாளராக, யார் இந்த ரூபராணி? என அங்கலாய்க்க வைக்கும் பெயருக்குரியவராகத் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.
திருமதி பராசக்தி நவரட்ணம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, காலஞ்சென்ற பண்டிதர் பூபாலபிள்ளை, அதிபர் பிலிப்பு சவரிமுத்து போன்ற பிரபல்யமான ஆசிரியர்களது ஆற்றலும், அக்கறையும் செல்வி ரூபராணியின் கலை இலக்கிய முயற்சிகளுக்கும் பணிகளுக்கும் உந்துசக்தியென்று குறிப்பிடும் இவர், அன்று அவர்கள் காட்டிய வாசிப்பு, சிந்திப்பு, எழுத்து என்பவற்றை இன்றும் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆங்கில - தமிழ் மொழிகளில் படிக்க எழுத நன்கு முடியும் என்கிற சிறப்பியல்பு இவரை நன்கு மிளிரச் செய்கிறது. எஃப். ஜி. ஜெயசிங்கம் என்பவரது கையெழுத்துப் பத்திரிகையின் வரவும், அன்றைய காலத்தில் மாணவியாக இருந்து இவர் எழுத ஆரம்பித்த நிகழ்வும் தமிழிலக்கிய அபிமானிகளுக்கு ரூபராணி ஜோசப் என்கிற எழுத்தாளரை அறிமுகப்படுத்தியது.
ஆரம்பகாலத்திலேயே சின்னஞ்சிறு கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை வீரகேசரி பத்திரிகையின் பாலர்பகுதிக்கு எழுதித் தன்னை இனங்காட்டிக் கொண்டவர் இவர். பின்னர் வீரகேசரியில் மாதர் பகுதி, பூவையர் பூம்பொழில் என்பவற்றுக்கு எழுதித் தனது எழுத்து வன்மையை நிலைநாட்டிக் கொண்டார். பூவையர் பூம்பொழிலில் இவர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்த அதன் ஆசிரியர் நெல்லை நித்தியா என்பவர் இவரது பாடசாலைக்கு வந்து இவரைப் பாராட்டியதுடன், இவரது தமிழ் ஆசிரியையான திருமதி பராசக்தி நவரட்ணம் அவர்களையும் பாராட்டியதோடு பரிசொன்றை வழங்கி இவரை மகிழ்வித்ததும், இவரோடு நின்று நிழற்படம் எடுத்துச் சென்றதையும் தன்னால் மறக்க முடியாது என்று பசுமையுடன் நினைவுகூருகிறார் ரூபராணி ஜோசப். காலப்போக்கில் சிறுகதை, கட்டுரை, கவிதை எனப் பல துறைகளிலும் இடைவிடாது எழுதிக் கொண்டிருக்கிறார். சுதந்திரன், வீரகேசரி, தினகரன், தினமுரசு, சுமண
18
 
 

(சிங்களம்) பத்திரிகைகளிலும், சுட்டும் சுடரொளி (நோர்வே) போன்ற சஞ்சிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். m
பாரதி, செல்வி, நீரஜா, ரூபா, ராணி, தெரேஸ் ஆகிய புனைபெயர் களிலும் எழுதிக் கொண்டிருக்கும் இவர், ‘ஏணியும் தோணியும்' (உருவகக் கதைகள்), ஒரு வித்தியாசமான விளம்பரம் (சிறுகதைகள்), நான் கண்ட துரைவி (கட்டுரை), “இல்லை இல்லை (நாடகம்) ஆகிய நூல்களையும் இதுவரை தமிழ் வாசகர்களுக்குத் தந்துள்ளார். அண்மைக் காலங்களில் இலங்கையிலும் சர்வதேச தமிழர் வாழும் நாடுகளிலும் அதிகளவு விற்பனையாகும் தினமுரசு வார இதழில் இவரது கதைகள் வராத இதழே இல்லை என்னும் அளவிற்குத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் ரூபராணி தனது முதலாவது சிறுகதையான "எதிர்பாராத சந்திப்பு என்ற சிறுகதையை வீரகேசரி வாரமலரில் பிரசுரித்ததை மகிழ்ச்சிக்குரிய - மறக்க முடியாத - பெருமைக்குரிய நிகழ்வாகக் குறிப்பிடுகிறார். இன்று நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளின் சொந்தக்காரியான ரூபராணி, நாவல் எனும் இலக்கிய வடிவத்தில் ஏனோ கவனம் செலுத்தவில்லை.
1996ம் ஆண்டு உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘இடம்பெயர்வு என்ற சிறுகதை முதலாம் பரிசைப் பெற்றுக் கொண்டது. மேலும் அகில இலங்கை கத்தோலிக்க சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாம் பரிசினைப் பெற்றது. இவருடைய ‘ஏணியும் தோணியும் என்ற நூல் 1996ம் ஆண்டு தேசிய சாகித்தியப் பரிசினையும், "ஒரு வித்தியாசமான விளம்பரம் என்ற நூல் 1999ம் ஆண்டு மத்திய மாகாண சாகித்தியப் பரிசினையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இன்னும், கண்டி கலை இலக்கிய மன்றம் (இரத்தின தீப விருது), கண்டி மலையக கலை இலக்கியப் பேரவை, கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளினால் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ளார். தமிழக அறிஞர்களான குன்றக்குடி அடிகளார், சுவாமி சிற்பவானந்தர், அப்துல் கபூர், நாஞ்சில் மனோகரன், நா.பார்த்தசாரதி போன்றவர்களும் இவரைப் பாராட்டியுள்ளனர்.
கட்டுரை இலக்கியத்திலும் ரூபராணி தனது ஆற்றலை பல தடவை வெளிப்படுத்தியுள்ளார். அகில இலங்கை சட்ட ஆக்குனர் அமைப்பு நடாத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசினையும் கொழும்பு மாநகர சபை நடாத்திய பொன்விழாக் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசினையும் பெற்றுள்ளார். பேச்சுத் துறையில் சிறந்து விளங்கும் ரூபராணி கல்கி நினைவு விழாவில் பேசிய பேச்சைப் பாராட்டி கல்கிப் பத்திரிகையில் இவருக்கு புகழாரம் ஆட்டிக் கெளரவத்துள்ளர்கள். அடுத்து நாடகத் துறையில் பிரதி எழுதுபவராக, நடிகராக, நெறியாளராக பல்வேறு பணிகளைப் புரிந்துள்ளார். இவர் ரூபாவதி நாடகத்தில் நடித்துச் சிறந்த நடிகைக்கான பரிசைத் தட்டிக்கொண்டார். வீரத்தாய், பொன்னி யின் செல்வி, சிற்பியின் கண்ணிர், பாண்டியன் பரிசு, பதவியா பாசமா, சத்தியம் வெல்லும், மாமியும் மருமகளும், தரகர் குப்புசாமி, காணாமல் போனவள், குறிஞ்சிக் கொழுந்து, பெண், ரூபாவதி எனப் பல நாடகங்களை எழுதி நெறிப் படுத்தி, நடித்து நாடகத்துறைக்கு பங்களிப்பு ஆற்றி வருகிறார். தன்னுடைய அநுபவங்களை ஆதாரமாகக் கொண்டு தற்போது நாடகப் பயிற்சியை கண்டிநகர் பாடசாலைகளுக்கு வழங்கி கலைப்பணியும் புரிந்து வருகிறார் என்பது போற்றற் குரியதே.
19

Page 11
(கனகசபை தேவகடாட்சம்)
கண்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் அந்த வயல் வெளியோ, மேலே வட்டமிட்டுப் பறந்து செல்லும் தினைக் குருவிகளோ கன்னையாவின் கண்களுக்குப் புலப்படவில்லை.
வயலிலே விதைப்புப் பணியில் மூழ்கியிருக்கும் தந்தைக்கும் தமைய னுக்கும் மதியவுணவு சுமந்துவரும் பொன்னம்மாவை மட்டுந்தான் விழிகள் காத்துக் கிடந்தன. தாயை இழந்த பொன்னம்மாவை அவன் மனதாரக் காத லித்து வருகிறான். தாயின் பொறுப்புகள் அனைத்தையும் சலிப்பின்றி சுமக்கும் அவளுக்கு காதல் உணர்வுகள் மரித்து விடவில்லை. கன்னையாவின் உடல், உள அழகில் மயங்காமலும் இல்லை! காதலை கல்யாணம் வரை நகர்த்த இருவரின் குடும்ப நிலையும் சற்று இடைஞ்சல் தந்தாலும், எதிர்வரும் சித்திரைக்குப் பின் திருமணம் பற்றி மெதுவாக பெற்றோரிடம் கூற வேண்டு மென இருவரும் முடிவெடுத்து விட்டனர். அகல விரிந்த கன்னையாவின் கண்கள் இப்போ ஆனந்தத்தால் பொங்கிக் கரை புரண்டது. அதோ உணவுப் பெட்டி தலையில் இருக்க, நாட்டியமென நடை பயின்று வந்து கொண்டிருந்தாள் பொன்னம்மா.
அக்கம் பக்கம் பார்த்த கன்னையா, அருகில் வந்த பொன்னம்
2)
மாவின் வலது கரத்தைப் பற்றினான். கையை விடுவித்த பொன்னம்மா நாணி ஒதுங்கி நின்றாள். மெதுவாக பேசினான் கன்னையா.
"இஞ்ச பார் பொன்னம்மா, தம்பலகாமப் பகுதியில் வேளாண்மை வெட்டு நடக்குது. நாங்கள் கொஞ்சப் பேர் வெட்டு வேலைக்குப் போறம். வர ஒரு மாதமாகும். உழைக்கிற காலத்தில தான் உழைக் கணும் அதுதான் உன்னைக் கண்டு சொல்லிட்டுப் போக லாமெண்டு. ”
பொன்னம்மாவின் கண்களால் "பொல பொல வென விழிநீர் புரண்டது. எதிர்கால கணவன் நல்ல உழைப்பாளி மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். சுடுசோற்றின் வெப்பமும் புரியவில்லை, விழநீரைத் துடைக்காது வழி அனுப்பி னாள் பொன்னம்மா.
米 米 米 米 来
வயல்வெளிகள் தம்பலகாமத் தில் பரந்து கிடந்தன. பாதுகாப்புக் காரணங்களால் செய்கை பண்ணப் படாது பெரும்பகுதி வயல்நிலங்கள் காய்ந்து கிடந்தன.
தொழிலாளர்கள் கூட்டங் கூட்ட மாக 'நான் முந்தி நீ முந்தி என்று
வெட்டு வேலைகளுக்கு முண்டியடித்து
முந்திக் கொள்கிறார்கள்.
ஏதோ, துரத்தில் இருந்து வந்த
 

கண்னையா கூட்டத்திற்கு வெட்டு
வேலைகள் கிடைத்து விட்டன.
வறுமை நிமித்தம் நீண்ட வருடங்களுக்குப் பின் பிற இடங்களுக்கு தொழில் தேடி வந்தவர்கள் இவர்கள். புதிய இடங்களைப் பார்க்க ஆவல் கொண்ட கன்னையா, மறுநாள் மாலை நேரம் வேலை முடிந்ததும் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான்.
வரண்டு கிடந்த வயல் நிலங் களின் விலைகளை மனதிலி எண்ணியவாறு அந்தப் புதர் கொண்ட வயல் வரப்பில் காலை வைத்தான் கன்னையா.
பாரிய முழக்கத்துடன் வெடித்
ததுதான் அவனுக்குத் தெரியும்.
மறுநாள் வைத்தியசாலையில் நினைவு வந்தபோது அவனது வலது காலை அவன் காணவில்லை. துண்டிக் கப்பட்டுவிட்டது.
65 இன்று இரண்டு மாதங்களுக்குப் 65f,
அதே வயல் வெளியின் ஒரத் திலே, கமக்கட்டுக்குள் இடுக்கிய இரு கம்புகளுடன் ஒரு கால் இல்லாத நொண்டியாக கன்னையா காத்து நின் றான் பொன்னம்மாவிற்காக!
பழைய நினைவுகளும் உணர்வு களும் தளர்ந்திருந்தன. பொன்னம்
2.
மாவின் எதிர்கால நல்வாழ்வு மட்டுமே அவன் மனதில் விரிந்து கிடந்தது.
இப்போது அவள் அவனருகே வந்துவிட்டாள். பொன்னம்மா முகத்தில் சோகத்தைவிட ஏக்கந்தான் அதிகம்.
பெரிய மாறுதல்கள் எதவும் முகத்தில் தென்படவில்லை. சற்றே தள்ளி நின்ற கன்னையா கலக்கத்துடன் பொன்னம்மாவிடம் திடமாகக் கூறினான். "இப்போ நான் ஒரு நொண்டி. என்னைத் திருமணம் செய்து நீ சுகமாக வாழமுடியாது. உன்ர வாழ்வு நல்வாழ் வாய் அமைய வேண்டுமெனில் என்னை மறந்துவிட்டு, உனக்குரிய வாழ்வை நீ அமைத்துக் கொள்வதுதான் நல்லது." அவளுக்கு அதறி குமேல் பொறுமை கொள்ள முடியவில்லை. கண்கள் சிவப்பேற, முகங்கள் வீங்கிப் புடைக்க, தாவி அவன் கையைப் பிடித்த பொன்னம்மா "கால்தான் ஊனம். உண்மைக் காதல் என்றுமே ஊனமாவ தில்லை" என்றாள்.
இருவரின் கண்ணிரும் இணைந் திருந்த அவ்ர்களின் கரங்களை நனைத் துக் கொண்டிருந்தது. இருவருக்கும் அருகால் சலசலத்துப் பாய்ந்து கொண் டிருக்கும் மகாவலி கங்கையாள், எதிர் கால ஊனமற்ற தம்பதிகளை வாழ்த்திக்
கொண்டிருந்தாள்.
米 水 米 水 事
- ר SIWIIm சந்தா விபரம்
தனிப்பிரதி: ரூபா 15/- வருடச்சந்தா: ரூபா 180/- (5LirpGafs)6 D LIL)
சந்தா காசோலை மூல மாகவோ மணியோடர் மூலமா கவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய பெயர், முகவரி ;- TGNANASEKARAN 19/7, PERADENIYA ROAD,
KANDY. -ل

Page 12
7. 6)Usuess
இளையோரிடம் பொய்யுரைப்பது தவறு. அவர்களிடம் பொய்யை மெய்யென நிரூபிப்பது தவறு. கடவுள் தனது சொர்க்கத்தில் உள்ளார் உலகில் எல்லாமே ஒழுங்காக உள்ளது என்பது தவறு. இளையோர் உங்கள் எண்ணத்தை அறிவர். இளையோரும் மாந்தரே. தொல்லைகள் எண்ண இயலாதன என அவர்க்குச் சொல்வீர். நாளை நடப்பதை மட்டுமன்றி இன்றைய நிகழ்வுகளையும் தெளிவுடன் காணச் சொல்வீர். அவர்கள் எதிர்நோக்க வேண்டிய தடைகள் உள்ளன. துன்பம் நிகழும், இடையூறு நேரும் என உரைப்பீர். ஆவது ஆகட்டும். இன்பத்திற்கான விலை தமிழாக்கம்: இன்பமானதல்ல என அறியாதிருந்தோர் u Tr? சி.சிவசேகரம் மனமறிய ஒரு பிழையை மன்னியாதீர் அது மீள நிகழும், பெருகும். அதன்பின்பு நம் மாணவர்கள் நாம் மன்னித்தவற்றிற்காக நம்மை மன்னிக்கமாட்டார். (1952)
Quu6ü QGeserif Qulu6üğ5IQ6ç96ör Gaism" (Yevgeni Yevtushenko) (நன்கு அறியப்பட்ட சோவியத் கவிஞர்)
2. பேச்சு "நீ ஒரு தைரியசாலி” என என்னிடம் சொன்னார்கள். நான் அப்படி இல்லை. தைரியம் எனது பண்பாக இருந்ததில்லை மற்றவர்கள் போல என்னைத் தரந்தாழ்த்திக் கொள்வது தகாதது என மட்டுமே எண்ணினேன். எந்த அத்திவாரமும் நடுங்கவில்லை. எனது குரல் ஆடம்பரமான பொய்மை பற்றிச் சிரித்ததிற்கு அப்பால் எழவில்லை. நான் எழுத்தைவிட எதுவும் செய்யவில்லை, எதையும் பழித்ததில்லை, நான் கருதிய எதையும் ஒதுக்கி வைத்ததில்லை. தகுதியானோருக்கு ஆதரவு தந்தேன், தகைமையற்றோர் மீதும் இறந்த காலத்திற்குரிய படைப்பாளிகள் மீதும் முத்திரை பதித்தேன். (இவை, எவ்வாறோ செய்யப்பட்டிருக்க வேண்டியன.) இப்போது நான் ஒரு தைரியசாலியெனக் கூறுமாறு என்னை வற்புறுத்துகின்றனர் இந்தப் பயங்கரங்கட்குத் தம் இறுதிப் பழியை வாங்கும் போது, வெகு சராசரியான ஓர்மம்கூட தைரியமாகத் தோன்றுகிற ஒரு வினோதமான காலத்தை நினைவுகூர்கையில், நமது குழந்தைகள் எவ்வளவு கடுமையாக வெட்கப்படுவார்கள். (1960)
22
 

மானுடத்தை நேசித்த முற்போக்கு எழுத்தாளர் அகளிப்தியர்
(சின்னத்தம்பி குருபரன்)
டிசம்பர் 8ம் திகதி அகஸ்தியர் நினைவு தினம் அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
மானுடத்தை இதய சுத்தியோடு நேசித்து, அவர்களின் துன்ப துயரங்களை, வாழ்வியல் அம்சங்களைத் தமது எழுத்தாற்றல் மூலம் வெளிக் கொணர்ந்த எந்தவொரு எழுத்தாளனும் இறந்தும் இறவாமல் நின்று நிலைத்திருப்பான். மானுடம் வாழ மானுடத்தின் குறை நிறைகளைத் தக்க இடத்தில், சந்தர்ப்பம் சூழ்நிலையோடு பிரக்ஞைபூர்வமாக வெளிப்படுத்தும் கலைஞனே வாழும் கலைஞனாவான். மகாகவி பாரதி, புதுமைப்பித்தன், காண்டேகர், ம்ார்க்ஸ், கார்க்கி, டால்ஸ்டாய் முதலானோர் மானுடத்தை நேசித்த எழுத்தாளர்களாவர். அவர்களைக் கற்று, அவர்களின் வழியைப் பின்பற்றி மானுடம் பேசிய அசுர எழுத்தாளர்களுள் அகஸ்தியரும் ஒருவராவார். இவர் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் மூட நம்பிக்கைகள், பிற்போக்குச் சிந்தனைகள், சாதியக் கொடுமைகள், பெண் அடக்கு முறைகள், மனித அவலங்கள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதினார்.
தனக்கென வாழாது தான் பிறந்து, வளர்ந்த சமுதாயத்திற்காகவும், நாட்டுக்காகவும், அவற்றையும் கடந்து மானுடத்திற்காகவும் தனது வாழ்க்கையையும், சுகபோகங்களையும் அர்ப்பணித்த உன்னதமான எழுத்தாளரே அகஸ்தியராவார். தான் வாழ்ந்த எழுபது ஆண்டு காலப்பகுதிக்குள் அரை நூற்றாண்டு காலம் ஓய்வு ஒழிச்சலின்றி, சலிப்பற்று தன்னை எழுத்துலகிற்கு அர்ப்பணித்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அணியோடு தன்னை இணைத்துக்கொண்டு ஆக்க இலக்கியத் துறைக்கு கணிசமான பங்களிப்பைச் செய்தார்.
அகஸ்தியர் ஒரு பல்கலை வேந்தனாவார். கவிஞனாக, சிறந்த நாட்டுக்கூத்து நடிகனாக, சிறந்த பாடகனாக, மிருதங்க வித்துவானாக, நாவலாசிரியனாக, சிறுகதை எழுத்தாளனாக, விமர்சகனாக, ஆய்வாளனாக, இசைக்கலைஞனாக வலம் வந்தார். 1944, 1945 ல் கவிதையில் ஆரம்பித்து 350 துக்கு மேற்பட்ட சிறுகதைகள், எழுபது உருவகக் குட்டிக் கதைகள், பத்து குறுநாவல்கள், ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சன ஆய்வுக் கட்டுரைகள், இருபது வானொலி நாடகங்கள், இரண்டு ஹாஸ்ய நாடகங்கள், பிரமுகர் பேட்டி உத்தியில் பதினைந்து சிருஷ்டிகள், ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள் என்ற ஒப்பாய்வுக் கட்டுரை, உணர்வூற்றுச் சித்திரம் எனப் பலவற்றை எழுதிய ஓயாத அசுர எழுத்தாளன் அகஸ்தியர்.
ஈழத்தின் சகல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் தன் பெயரிலும் பல புனைபெயர்களிலும் எழுதினார். ஆலயடியம்மான், காலன், தீட்சண்யன், எஸ்.ஏ, அருளம்பலனார், குறுமுனி, வித்தக பண்டிதர், யாழ்ப்பாணன், ஈழத்துச்
AS AO

Page 13
செல்வன், சத்திய மூர்த்தி, நவமணி, நவஜோதி, ஜெகா, ஜீவா, ஜெகனி, நாவலன், வசந்தன், லெனினிஸ்ட், கலைதாசன், புதுமைப்பிரியன் முதலியன அவரது புனைபெயர்களாகும். இவற்றுள் நவமணி முதல் ஜெகனி வரையான ஐந்து புனைபெயர்களும் அவரது மனைவி பிள்ளைகளுடையவை. இவ்வாறு ஈழத்துப் பத்திரிகை சஞ்சிகைகளில் எழுதியது மட்டுமல்லாது தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் தாமரை, கலைமகள், தீபம், எழுத்து, கண்ணதாசன் ஆகிய சஞ்சிகைகளிலும் ஓசை, பாரீஸ் ஈழநாடு, தமிழன், ஈழமுரசு முதலிய மேலை நாட்டுச் சஞ்சிகைகளிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்தன. அகஸ்தியரின் சிறுகதைகள் சில சிங்களம், மலையாளம், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளமை அவரின் எழுத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். 1970 மே மாதம் தாமரை இதழ் இவரின் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து கெளர வித்தது. 1963, 1964 ஆம் ஆண்டுகளில் வானொலி, இலங்கை எழுத்தாளர் சங்கம், ஈழநாடு ஆகியன நடத்திய சிறுகதை நாவல் போட்டிகளில் முதலாம், இரண்டாம் பரிசுகள் பெற்றார்.
அகஸ்தியர் அரை நூற்றாண்டுக்கு மேல் எழுதியவர். எழுத்தே அவரின் மூச்சு - ஜீவ நாடியாக இருந்தது. போர்க்குணம் நிறைந்த அசுர எழுத்தாளராகக் காணப்பட்டார். தமது கருத்தை ஆற்றொழுக்குப் போல் தங்குதடையின்றி வெளிப் படுத்தினார். இதற்கு அவர் கைக்கொண்ட - பின்பற்றிய மார்க்சியத் தத்துவம் மூலகாரணமாக அமைந்தது. இதற்கு வழிகாட்டியவர் அமரர் எஸ்.இராமசாமி ஐயராவார். இவர் மகாகவி பாரதி, வள்ளுவன், இளங்கோ, மார்க்ஸ், கம்பன், லெனின், ஸ்டாலின், மாஓ, டால்ஸ்டாய், மாஜினி, காண்டேகர், வால்டேயர், எமிலியோலா போன்றோர்களது நூல்களை விரும்பிப் படித்தார். இவர்களது ஆக்கங்கள் யாவும் தன்னை ஆகர்சித்தாக வலியுறுத்தினார்.
எஸ்.எஸ்.ஸி யோடு படிப்பை முடித்து அரச உத்தியோகத்தில் சேர்ந்து கொண்ட இவர், எழுத்தை விளக்க - நிலை நிறுத்த தினமும் கற்றார். தொழில் பார்த்த இடமெல்லாம் மக்களோடு இணைந்தார். அவர்களின் உணர்வுகளோடு கலந்தார். அவர்களது வாழ்க்கை முறையை வாழ்வியல் அம்சங்களை நேசித்தார். ஒருவகையில் அகஸ்தியரின் படைப்புகள் உருவம், உத்தி, உள்ளடக்கம் பெற்று விளங்குவதற்கு அவர் பார்த்த தொழிலும் அடிக்கடி ஏற்பட்ட இடமாற்றங்களும் காரணமாக அமைந்தன எனலாம். மும்மொழி பேசும் மக்களோடு கலந்துறவாடிய உணர்வும் அகஸ்தியரைச் சமூகமயப்படுத்தப்பட்ட இலக்கியம் படைக்கத் தூண்டின.
அகஸ்தியர் ஒரு சமூகவாதி. தமிழ் உலகுக்கோ, தமிழ் சமூகத்திற்கோ உரித்தான படைப்பாளியல்ல. காலதேச வர்த்தமானங்களைக் கடந்த உழைப்பாளி. பிரதேச, இன, மத, மொழி, நாட்டு எல்லைகளைத் தாண்டி அனைத்துலகிற்கும் சொந்தமானவை அவரால் எழுதப்பட்ட சிருஷ்டிகள். அதனால்தான் இவருடைய சிறுகதைகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
அகஸ்தியர் ஓயாத அசுர எழுத்தாளர் என்பதற்கு அவரின் சிருஷ்டிகள் தக்க சான்றாகும். திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், எரிநெருப்பில் இடைபாதை இல்லை ஆகியன இதுவரை வெளிவந்த நாவல்களாகும். இருளினுள்ளே, நரகத்திலிருந்து, மகாகனம்
24

பொருந்திய, ஆகிய குறுநாவல்களும், மேய்ப்பர்கள், எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் சிறுகதைகள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் பதிவுகள் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும் மானுட தரிசனங்கள் என்னும் மக்களுடனான தொகுப்பு நூலும் இவற்றோடு நீ என்னும் உணர்வூற்றுச் சித்திரமும் நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசெப்பு வரலாறு ஆகியன இன்றுவரை வெளிவந்துள்ள இவரின் படைப்புகளாகும். இன்னும் பல ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியபோதும் நூலுருவில் வெளிவரா திருக்கின்றன.
அகஸ்தியர் தமது படைப்பிலக்கியங்களில் பேச்சு வழக்குத் தமிழை முடிந்தவரை கையாண்டிருக்கின்றார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், முஸ்லிம் பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் பேசப்படும் பேச்சு வழக்குத் தமிழைத் தமது எழுத்துக்களில் கையாண்டார். அத்தோடு மக்களிடையே வழங்கும் உவமைத் தொடர்கள், மரபுத்தொடர்கள், பழமொழிகள் முதலானவற்றை அவர் கையாண் டுள்ள சிறப்பும் கவனத்துக்குரியதாகும்.
முற்போக்குச் சிந்தனையாளரான அகஸ்தியர், கார்த்திகேயன், வைத்திலிங்கம், சண்முகதாஸன், பீட்டர்கெனமன், டானியல், பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி, தில்லைநாதன் ஆகியோர்களுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்களின் நூல்களை வாங்கிப் படித்தார்.
மலையகத்தில் வாழ்ந்தபோது சட்டத்தரணி இரா.சிவலிங்கம், எழுத்தாளர் தலாத்துஒயா கே.கணேஷ், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைஞர்கள், ஆகியோரின் ஆதரவுடன் மலையக கலை இலக்கிய தாகத்தைத் தோற்றுவித்து பதினேழு ஆண்டுகள் பணி செய்தார்.
அகஸ்தியர் வரலாற்றினை யதார்த்த பூர்வமாக நோக்குபவர் என்பதற்கு அவர் நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசெப்பு வாழ்க்கை வரலாறு என்ற நூலுக்குக் கூறிய கருத்து அவரின் சிந்தனைத் திறனை வெளிப்படுத்துவன. "கலை இலக்கிய வரலாறுகள் எழுத்தாளன் கலைப்படைப்புகள் அன்று; அவன் கற்பனைப் படைப்புக்களே வாழ்க்கையினின்று பிறக்கின்றன. கலை இலக்கிய வாதிகளைப் பற்றிய வரலாறுகளில் எழுத்தாளனின் கற்பனைக்கு இடமில்லை. கற்பனைக்கிடமற்ற கலை இலக்கியவாதிகளின் வரலாறுகள் அவன் கற்பனைக்கு வித்திடுகின்றன. பின் ஊக்கப்படுத்துகின்றன. வரலாறு என்பது நிதர்சனத்தின் வெளிப்பாடு, அது கற்பனையின் தரிசனமாக இருப்பதில்லை. கற்பனை தரிசனமாக அது இருக்கவும் முடியாது. கற்பனையின் தரிசனமாக அமையுமாயின் அது வரலாறாக இருக்கவே முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
இத்தகைய சிந்தனைத் தெளிவும், மனோதிடமும், உறுதியும் தளராத முயற்சியும் கொண்ட அசுர எழுத்தாளர் எம்மைவிட்டு மறைந்தாலும் அவரின் புகழ் மறையவில்லை. இவரின் இலக்கியக் கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்த போதிலும் மானுட நேயனாக, சமூக விடுதலையாளனாக, மக்கள் படைப்பாளனாக தமிழ் கூறும் நல்லுலகில் அகஸ்தியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Page 14
இரண்டாவது காலம்
(சிறுகதைகள்) முல்லைக்கோணேஸ்
வெளியீடு: திவ்வி, 4ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு. முதற்பதிப்பு: செப்ரம்பர் 2000
பக்கங்கள்: 86 (8 YA விலை ; ரூபா 100/- தி.ஞானசேகரன்
சமீப காலங்களில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து ஆக்கப் படைப்பாளிகள் சிலரின் படைப்புகள் நூலுருவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏனைய பகுதிகளில் வாழும் படைப்பாளிகளுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளும் தயக்கங்களும் இந்தப் பகுதிகளில் வாழும் படைப்பாளிகளுக்கு இருப்பதில்லை. இதன் காரணமாக இவர்கள் தமது படைப்புகளில் பல விடயங்களை மிகவும் வெளிப்படையாகவும் உணர்வு வீச்சுடனும் கூறமுடிகின்ற ஒரு தன்மையை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் இந்தப் படைப்புகள் இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து வெளிவரும் படைப்பிலக்கியங்களை விட வித்தியாசமானவையாகவும் இனப்பிரச்சனை தொடர்பான இன்றைய காலகட்டத்தின் தேவைகளை உணர்த்துவனவாகவும் அமைகின்றன.
இந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த முல்லைக் கோணேஸின் சிறுகதைத் தொகுதியின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. இத்தொகுதியில் பதினான்கு சிறுகதைகள் அடங்கியுள்ளன. தொண்ணுறுகளில் எழுதத் தொடங்கிய கோணேஸ் வெகு வேகமாகவே வளர்ந்து வருவதை இத்தொகுதியிலுள்ள கதைகள் இனங்காட்டுகின்றன. இக்கதைகளில் ஒரு படைப்பாளிக்குரிய கால உணர்வையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத் முல்லைக் கோணேஸ். இவரது எழுத்துக்கள் பெரிதும் மனிதப் பிரச்சினைகளையே சார்ந்திருக்கின்றன. நிதம் அறுபட்டுத் தொங்கும் மனித வாழ்வின் கதியைக் கண்டு அதிர்கின்றன. மக்கள் படும் வதைகளிலிருந்து மீள்வதற்கான கனவினை மனதில் திட்டுகின்றன.
இந்நூலுக்கு முன்னுரை எழுதிய திரு கருணாகரன் அவர்கள் கோணேஸின் கதைகளில், "இடம் பெயர் வாழ்க்கை, இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேச வாழ்வு, மீட்கப்பட்ட நகரின் இடிபாடுகளுள் வாழ்தல், போராட்டுத்துடன் இணைந்து கொள்ளுதல் என்பவற்றுடன் சிங்களப் பேரினவாதப் பொறியில் சிக்கும் சிங்கள தேச நிலையும் இக்கதைகளில் பேசப்படுகிறது" எனக் குறிப்பிடுகிறார்.
கோணேஸின் கதைமொழி இயல்பை நோக்கி நகர்வது. அது இயல்பினூடாக உண்மையையும் யதார்த்தத்தையும் தழுவ எத்தனிப்பது. ஆகவே யதார்த்தத்திலும் உண்மையிலும் வாழ்வு நிகழவேண்டுமென்றே கதைகள் உள்ளோட்டமாக உணர்த்து கின்றன."
நூலின் தலைப்புக் கதையான இரண்டாவது காலம் சிவம் எனும் சிறுவன் கதை கூறுவதாய் அமைகிறது. இது அச்சிறுவனின் கதை போல அமைந்தாலும் இக்கதையில் ஒரு கிராமத்தின் தொலைந்துபோன முன்னைய கால நினைவுகள் கலாரூபமாகச் சித்திரிக்கப்படுகின்றன. முன்பிருந்த வாழ்வு உருப்படாமல் போனது நெஞ்சுக்குள் வலிக்கிறது - அது ஒரு காலம். சிவத்தின் இரண்டாவது காலம் விரிகின்ற தளம் வாசகனுக்கு ஓர் அதிர்வினைத் தருகிறது. அந்த அதிர்வுடன் வாசகனின் மனது ஒத்திசைகிறது. அங்கே படைப்பாளியின் வெற்றி தெரிகிறது. இவ்வாறே கோணேஸ் தனது கதைகள் பலவற்றில் தொலைந்துபோன காலத்தைப் பற்றிய ஏக்கங்களை வெளிப்படுத்தும் அதே வேளையில் விரிந்து கொண்டிருக்கும் காலத்தைப் பற்றிய ஓர் உறுதியான பார்வையை வாசனுக்குக் கலாநேர்த்தியுடன் காட்டுகிறார்.
26
 

வாசகர் பேசுகிறார்.
ஞானம் சஞ்சிகையின் அமைப்பும் பொருளும் உடனடி வாசிப்பைக் கோருவனவாக உள்ளன. மிக்க சுவாரசியமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறுகின்றன. ஏறத்தாழ முப்பது, நாற்பது வருடகால இலக்கிய வரலாறு மீள்பரிசீலனைக்கு உள்ளாகின்றது. அது நல்லது. ஆனால் இவற்றினூடே புதிய வருகைகள் இனங்காணப்படுவதும் ஊக்குவிக்கப்படுவதும் மிக மிக முக்கியம். இலீக்கிய வரலாற்றில் தொடர்ச்சியான செழுமைக்குப் புதிய வருகைகள் முக்கியம். இதழ்ஜின் விடய வீச்சுக்கள் பன்முகப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
தங்கிள் முயற்சி சிறக்க வேண்டுகிறேன்.
; *. பேராசிரியர் கா.சிவத்தம்பி, கொழும்பு - 06
கலை இலக்கியம் பற்றிய், ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஞான்ழ் சஞ்சிகை படிக்கலாம் என்பது எனது கருத்தாகும். சிறுகதை, கவிதை, கட்டுர்ை;&இலக்கிய இரசனை, நேர்காணல், புதிய நூலகம் என்று இதில் இடம்பெறும் அத்தன்”அம்சங்களுழ் மிக 8 **مي மூதூர் திலீப் ஏ.சமது, தமிழ்” نمایی
நவம்பர் மாத இதழ் கினிடத்தது. குறித்து மகிழ்ச்சி. மஹாலகூழ்மி, என்ற ப்ெயூரில்
ரும்”வகையில் கவிஞர் முருகையின் அவர்கள் ஆதாவது, மஹாகஷ்யே தன் ழி ஆகி எழுதியுள்ளார் என்பது
அதனை முடிவுக்கு வாய்மொழியாக மெளனம் கலைத்துள்ளா கவிதைக்குக் பதில் கவிதையை மஹாலக கவிஞர் முருகையனின் பதில். ۰٫۰۰۰
இது ஐம்பதுகளில், அறுபதுகளில் நம் மூத்த கவிஞர்களிடையே நடந்த சித்து விளையாட்டு. மூவரும் இணையற்ற நண்பர்கள். அகபுற வஞ்சகம் அற்றவர்கள். ஒருவருக்கொருவர் கவிதைகளால் எறிந்து கொள்வர். ஒருவரின் கவிதை மற்றவருக்குப் பிடித்திருந்தால் அதைப் பிரதிசெய்து பத்திரப்படுத்துவர். தன்னுடைய கவிதைகளையும், தடங்களையும் பதிவு செய்யும் வகையில் எதுவும் செய்யாது எழுதிக் குவித்து அப்படியே விட்டுவிட்டுப் போனதுதான் சில்லையூரர் செய்த தவறு. மற்றும் வகையில் அந்தக் கவிஞர்களின் அன்புக்கும் நட்புக்கும் பெயருக்கும் களங்கம் வராமற் காக்க வேண்டியதும் நமது கடன். எனவே இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்தி சஞ்சிகையின் சுவைக்காகவும், வாசகர், படைப்பாளர் விழிப்புக்காகவும் புதிதாக ஏதும் தொடங்கலாமே.
மாவை - வரோதயன் கொழும்பு - 05
27

Page 15
திரு.நுஃமானின் சினமும் நையாண்டியும் தொனித்த
குறிப்புக்கு இது பதில். செ.யோகநாதன்
நான் அறுபதுகளில் படைப்புத்துறைக்கு வந்தவன். எனது ஆக்கங்கள் பற்றி பேராசிரியர்கள் கைலாசபதி, வானமாமலை, வல்லிக்கண்ணன், தமிழகத்துப் படைப்பாளிகள் மதிப்பீடு செய்துள்ளனர். தமிழகத்திலே படைப்பிலக்கியத்திலே எனது பங்களிப்பைப் பற்றி இருட்டடிப்பு இங்கு நடந்தப்பட்டதால் என் வாசகர்களுக் காக நான் பல தகவல்களைச் சொல்லவேண்டி வந்தது. நான் தகுதியான நேர்மையான அறிவாளி என்று தன்னைப் பற்றி சொல்லுகின்ற நுட்மானைப் போன்றவர்களே சுயகாதல் கொண்டவர்கள், அதுவே சுயகாதலின் அர்த்தம்.
இரண்டு ஆண்டுகால உழைப்பு எனது "நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே யாழ்ப்பாண சைவ மக்களின் ஏகாதிபத்திய, சமய திணிப்புக்கு எதிரான போராட்டம், முறையான வரலாற்றுப் பதிவுள்ள எனது கிராமத்தினுடைய கதை. அப்போது 13 வயதானவள் சிறுமி அல்ல; பெண். 11, 12 ஆவது வயதிலே திருமணமாகிற பெண். ஒரு பாத்திரமல்ல நாவலில் வருவது, 80 பேர். ஒரு பாத்திரத்தின் 5 பக்க நடவடிக்கையை 512 பக்க நாவலை மதிப்பீடு செய்து வன்முறை நாவலாகக் கூறும் நுட்மானின் திறனாய்வு, வக்கிரமும் தனிமனிதக் குரோதமும் கொண்டது. இன்னும் சொன்னால் யாழ்ப்பாண சைவ மக்களின் வாழ்வு பழக்க வழக்கங்கள் சொல்லாடல் பற்றி எதுவுமே தெரியாதவர் நுட்மான். இவர் எனது நாவலைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் அற்றவர். இவரது பட்டத்தகுதி, இலக்கியத் திறனாய்வுத் தகுதியைக் கொடுக்காது என்பதை நாவலைப் பற்றிய கணிப்பீடே எடுத்துச் சொல்கிறது. இதைப் பற்றி நாவலின் இரண்டாம் பதிப்பினுடைய முன்னுரையில் விபரமாகக் குறிப்பிடுகிறேன்.
நு'மானுக்கு பதில் கூறாதிருக்க நினைத்தேன். ஆனால், எனது பல வாசகர்களுக்கு இதை நான் சொல்லவேண்டிய தேவை உள்ளது.
நான் சகல ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து எழுதுகிறேன். ஆனால் என்னை வன்முறை எழுத்தாளன் என்கிறார். என் எழுத்தைப் படிக்காமலே திறனாய்வு செய்கின்றவரை நான் மதிக்கமாட்டேன்.
நுட்மானை நான் 'அறிவிலித்தனமான, விடலைத்தனமான என்று குறிக்க வில்லை. அடுத்து வந்த பந்தி இவர் பற்றியதோடு சேர்ந்துகொள்ள சினந்து எகிறி ஆத்திரப்பட்டுள்ளார்.
நுஃமான் என்னை நண்பர் செ.யோ என்று கூறுகிறார். நுஃமான என் நண்பரல்ல. இவற்றை அறியாத வாசகர்களுக்காக:
நு:மான் ஏன் என்னை இப்படி கொச்சைப்படுத்துகிறார். கிரியா அகராதியில் நு:மான் இலங்கைத் தமிழ் வார்த்தைகளை முழுமையாகத் தொகுக்கும் ஆற்றல் உடையவரல்ல என்ற உண்மையான கருத்தைத் தமிழகத்தில் பல இடங்களில் கூறினேன். அன்றிலிருந்து என்னை இருட்டடிப்புச் செய்கிறார் நுட்மான். ஆனால் இது சாத்தியமாகப் போவதில்லை.
*k >k ik ze 3k ze ze
கையடக்கமான அளவு; அறிவின் பெட்டகம்; அழகிய நடை, அமுதத்தமிழ் அனைத்தையும் உள்ளடக்கிய வெளியீடு. ஒவ்வொரு பிரதியையும் வாசித்து பல சுவையான தகவல்களை அறிந்து கொண்டேன் என் போன்றவர்களின் அறிவு முகிழ்ச்சிக்கும் ஞானம் பேருதவியாக அமைகிறது. தங்களின் செயல்திறன் மிகவும் மெச்சத்தக்கது. அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர்.
2S

மெல்லத் தமிழ் இனி எழுதியவர்: புலோலியூர் செ.கந்தசாமி முதற்பதிப்பு: ஜூன் 1999 வெளியீடு: மீரா வெளியீட்டகம்
முற்போக்குச் சிந்தனைகளை அடி நாதமாகக் கொண்டு எழுச்சி மிக்க படைப்புகள் உருவான அறுபதுகளில் எழுத ஆரம்பித்த புலோலியூர் செகந்த சாமி அவர்களின் பத்து சிறுகதைகளை மெல்லத்தமிழ் இனி உள்ளடக்கியுள்ளது. ஆ.இரத்தினவேலோன் பதிப்புரையில்.
குமாரி இரஞ்சிதம் எழுதியவர்: கசின் முதற்பதிப்பு: செப்டெம்பர் 2000 வெளியீடு: தமிழ் மன்றம், 10, 4ஆவது லேன், கொஸ்வத்தை றோட், ராஜகிரிய. எண்பது வயதை எட்டிப்பிடித்துவிட்ட பழம்பெரும் எழுத்தாளர் க.சிவகுருநாதன் ஐயா அவர்கள் 'கசின் எனும் புனை பெயரில் 1952ம் ஆண்டு ஈழகேசரி வார இதழினூடாக எழுதிவந்த நகைச்சுவை நவீனம் குமாரி இரஞ்சிதம் பின்னட்டைக் குறிப்பிலிருந்து.
குருதிமண் எழுதியவர்: கனகசபை தேவகடாட்சம் முதற்பதிப்பு: ஏப்ரல் 2000 வெளியீடு: மரீ மகராஜி பதிப்பகம், சென்னை - 01
திரு.கனகசபை தேவகடாட்சம் அவர்கள் இலக்கியத்தில் இமயமல்ல. இன்னும் அதிகமாய் வானையும் தொட
29
வளரவும், அவரது எழுத்துக்கள் இந்த சமுதாயத்தை அந்த உயரத்திற்கு அதிகமாய் இட்டுச் செல்வதோடு இந்நூலின் விற்பனையால் பெறப்படும் மொத்த வருவாய் அனைத்தும் ஈழத்தின் திருகோணமலை மாவட்டத் தில் பாதிக்கப்பட்ட மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட விருக்கிறது. எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை.
புதிய தலைமுறை எழுதியவர்: இராகலை பன்னீர் முதற்பதிப்பு: மார்ச் 1999 வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை கொழும்பு - 11
நண்பர் பன்னீர் வளர்ந்து வரும் மக்கள் கவிஞர். அவரது கவிதைகள் மக்களைப் பற்றியன. மலையகத்தில் உறுதியாக வளர்ந்து வருகிற போராட்ட உணர்வின் உரத்த எதி ரொலிகளாகவும், ஒடுக்கப்பட்ட நெஞ் சங்களின் குமுறலின் விடுதலைக் குரலாகவும் இவை ஒலிக்கின்றன. சி.சிவசேகரம் அறிமுகவுரையில்.
இலங்கை முஸ்லிம்களின்
வரலாற்றில்
கலாநிதி கே.எம்.எச்.காலிதீன் எழுதியவர்: இக்பால் அலி முதற்பதிப்பு: டிசம்பர் 1998 வெளியீடு: இலங்கை தென்கிழக்கு ஆய்வு மையம்.
நல்லோர் என்றும் உயர்ந்து நிலைப்பர் என்பது நிச்சயம். அவர் களை நவ தொல்லுலகம் எப்போதும் போற்றும், புகழும், தூய்மை பாராட்டும். எனவே, கலாநிதி காலிதீன் கூட அந்த எழுச்சிப் பாரினில் ஓர் ஒளிவிளக்காய் சிறந்து விளங்குகின்றார் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டாகும். பீ.எம்.ஜமாஹிர் பதிப்புரையில்.

Page 16
கரைதேடும் அலைகள் எழுதியவர்: ஆரபி சிவஞானராஜா முதற்பதிப்பு: புரட்டாதி 2000 வெளியீடு: ஸ்கந்தா தமிழ் மன்றம், கந்தரோடை, சுன்னாகம்.
சமூகத்தின் முரண்பாடுகளுக்கும் பெண்கள் மீதான அடக்கு முறை களுக்கும் எதிரான ஆவேசம். பிறரால் கைவிடப்பட்ட அல்லது அலட்சியப் படுத்தப்பட்ட ஜீவன்களிடம் கருணை சொரியும் மனிதாபிமானம். விஞ் ஞானத்துறைக்கு கல்வியினுTடு பெற்றுக் கொண்ட உளவியல் ரீதியான algo)(35 (p60DD. . . . . தான் காணும் உலகின் ஒவ்வொரு சிறிய அம்சத் தையும் கூர்ந்து நோக்கும் கலைத் துவம் செறிந்த பார்வை. பின்னட்டைக் குறிப்பில் - கவிஞர் ம.பா.மகாலிங்கசிவம்
தேன்சிட்டு எழுதியவர்: ராணி சீதரன் முதற்பதிப்பு: 03.09.2000 வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவலி கிருலப்பனை, கொழும்பு - 06 விலை: ரூபா 55 பக்கம்: 32
வன்முறை, மூடநம்பிக்கை, மாயா ஜாலங்கள் போன்ற சிறுவர்களைப் பாதிக்கக்கூடிய இன்னோரன்ன அம்சங் களைத் தவிர்த்து, தன் பாடல்களை ராணி சீதரன் யாத்திருப்பதும் இந் நூலில் விதந்துரைக்கக்கூடிய மற்று மொரு சிறப்பியல்பாகும்.
புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அணிந்துரையில்.
வீதி,
ஸ்நேகம் எழுதியவர்: முல்லை அமுதன் முதற்பதிப்பு: சித்திரை 1999 வெளியீடு: இ.மகேந்திரன்,
30
6, ஷேக்ஸ்பியர் கிரசன்ட், மனோர் Lurraris, 6AD60ÖTL6öī E126LN.
“எதைப் புதிதாயப் சொல்லிவிடப் போகிறேன். நெட்டுருப் போட்டு எழுதிய நாவல். பல ஆண்டுகளின் பிறகாவது வருவதில் சந்தோஷம்தான் வாசகர் as(6ft.
முல்லை அமுதன் என்னுரையில்.
இரட்டைத் தாயின்
ஒற்றைக் குழந்தைகள் எழுதியவர்கள் : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மஸிதா புன்னியாமீன் முதற்பதிப்பு: ஏப்ரல் 2000 வெளியீடு: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை
கலையுலகில் சங்கமித்த எம் கவிதைகளும் நாமங்களும் நாவுகளால் வாசிக்கப்பட்டவைகள். அதனால் நாம் புதியவர்களல்லர், கவிதா வானில் கொடி கட்டிப் பறப்பவர்களும் அல்லர். ஊற்றெடுக்கும் சுனைபோல் கவியுலக மண்ணில் நாம் கசிவுகளாக இருந்து வருகிறோம்.
ஹிதாயா - மஸினா எம்முரையில்.
காலத்தின் புன்னகை எழுதியவர்: சித்தாந்தன் முதற்பதிப்பு: மே 2000 வெளியீடு: குலன் வெளியீட்டகம், கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம். சித்தாந்தன் கவிதைகளிலுள்ள சொற்களின் அமைவுகள் புதிய படிமங்களை மனதில் நிகழ்த்துகின்றன. புதிய காட்சிகளை விரிக்கின்றன. புதிய உணர்வினை கிளர்த்துகின்றன. இத்தகைய புதிய கவிதை முறைமை 90 களின் பின்னான ஈழத்துக் கவிதை களில் அதிமாகத் தொனிக்கத் தொடங் கியுள்ளன.
கருணாகரன் முன்னுரையில்.

எப்படியோ நீங்களும் எங்களது மேய்ப்பர்
தப்பி விடாமல் தடிகொண்டு சாய்ப்பதிலே மே (MILU CU CU(M) 9567) l இப்போது தாங்கள் அனுப்பிவைத்த உங்களது மேய்ப்பர்கள் எங்களை மேய்ப்பர் அறிவீரோ? இப்போதோ
எங்களுக்கு இங்கே வரு மானம் எப்போதும் இல்லை. எனினும் அவர் மேய்ப்பர். சப்புச் சவர்கள் சரிக்கட்டி விட்டவற்றை
கல்வயல்
வே.குமாரசாமி
உப்புப் புளியின்றி எங்களை மேய்ப்பர் உண்ணத் தொடங்கியதால் விடேது நாடேது இப்போதும் எங்களுக்கு காடுகரம்பையென ஓடோட விட்டுத் துரத்தி இங்கே வரு மானம் இல்லை. அவர் மேய்ப்பர் தடிகொண்டார்; நெஞ்சம்போல் குறிசுடுவர், சாய்ப்பர் எங்க(ள்) மடி தடவி அவர் விருப்பங் கொண்டால் குடி கொண்டு கோல் ஒச்சி மறி கிடாய் என்றில்லை எல்லாம் குடி போக அடிகிண்டி. மனம்வைச்சு விட்டாரோ ஆரார் அழுதாலும் செத்தாலும் பால் கறப்பர், காச்சுவர், ஆடை எடுப்பர்;
குட்டி, பனை, தென்னை கறி வைப்பர், உரிப்பர், சுடுவர் புதைப்பர் மலைபோல கோயில் நினைச்சபடி; மணிக்கூடு, கோபுரங்கள் நிலைகுலைந்து ஆரேனும் கேட்டுவிட்டால் முற்றும் பொடிசாம்பல் ஆனாலும் அப்படியோ என்பர் பின்; எங்களது மேய்ப்பர் பேரெழுதி, ஊரெழுதிப்
பேராயம் உண்டாக்கித் தேடுவர்.
ஆராய்வர் தோண்டி எடுத்துத் துடைத்தும் அடையாளம் காண்டல் எனவும் சடங்கு பல நடத்தி மீண்டும் அதையே தொடர்வர். நினைத்தபடி நாணயம் குத்திச் செடில்பிடிப்பர்.
ஆர் எங்கே என்று ஆரையார் கேட்பர்
ஊர் எங்கை எங்கே நீ போறாய் என உசுப்பிக் காவடி ஆட்டிக் கடும் வெயில் ஆனாலும் நா அடியும் வற்ற நமை மேய்ப்பர். 米 本 本 水 水 半本
ஓர் கண்ணே எங்கள்மேல் உங்க ளது பாசம் ஆர் கண்ணே தான் அறிவார்
31

Page 17
ஆதலினால் எங்கள்மேல் உண்மையிலே ஓர் கண்ணே! உலகம் அறியாது தீரும் ஒருநாள்; ஒர் மாரியிலோ, கோடையிலோ நீரும் அறியாமல் நாமும் புரியாமல் தீரும் ஒருநாள் திகைக்கும் உலகமெலா நாளை நடுத் தெருவில் நாய் கூடத் தேடாமல் ஆளை ஆள் காணாமல் செத்துச் சிதறிக் கிடப்பீர் வருந்தாதீர். பாளை அடி விட்டால் கீழை(ழே) வரத்தானே செய்யும் பகிடி என்ன? நீர், செய் வதை(ச்) செய்யும் சிறு வேரும் கல்பிளக்கும் பொய்யாமோ இந்தப் பொடி
அக்கா அதிகாரம் அண்ணா மதி காரம் தம்பி அதி காரம் தாம் தாம் அதிகாரம் அக்காரம் எல்லாம் அவரவரே அள்ளித் திக்கு முக்காடத் தின்னவைத்தால் நாங்கள் குடல் சுருண்டு வாடிக் குறண்டி அலைகின்றோம். எலி பெருகி எங்கள் இருப்புகளைத் தின் பலிபீடமுன்னாடாய் பட்டியுடன் நிற்கின்றோம். சுக்கா மிளகா சுதந்திரமே தெங்களுக்கு முக்குளிச்சு மூச்சுவிட மாட்டாமல் திண்டாடித் திக்குத் திசைகள் தெரியாமல் கண்கெட்டுப் பக்குவப் பட்டிருக்கப் பரதேசிக் கூட்டங்கள் பொக்குள் அழகாம் பூச்ஆட்டத் தாறோமாம் அக்காவின் பிள்ளைகளாம் தம்பி தலை முறையாம் நம்பிக்கை வைத்தோம் நடுத் தெருவில் நிற்பதற்கும் வெம்பி விழு கின்றோம் விதி
LS0ALSLTALLL SALLLS LLLL LL YYLL L SS KS LLLL LLLLL L

༦ ལོང་ཀྱི་ ཀྱིས།། リ ご" ご 書 ܠ܂ 、3 ܠܐ R صر؟y སྐྱེ་ སྤྱིའི་
ܠD ご
(g)(35 gil.
In ISH R&IA Kathlopastafa Rd Kandiv.