கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.01

Page 1
S S S S S S SL SLSS S S ---------------
--
 
 


Page 2
என் சித்திரவதைஞனி லெப்டினனிற் டிக்காக
நீ என் முகத்தில் அறைந்தாய்
- யாரும் என்னை அறைந்ததில்லை அதுவரை -
மின்சார அதிர்ச்சி
பின் உனது கைமுஷ்டி அல்ஜீரியக் கவிஞர்
உன் ஊத்தை வசவுகள் GOGOGOTT ஜபாலி
நான் அதிக இரத்தம் சிந்தினேன்
முகம் சிவக்க இயலும்வரை பிரஞ்சு மூலத்திலிருந்து ஆங்கிலம் வழி தமிழில்
இரவு முழுவதும் எம்.ஏ.நு.மான்
என் அடிவயிற்றில் ஓர் உருளும் இயந்திரம் என் கனன் எதிரே வானவில்கள் என் வாயை நானே தின்பதுபோல என் கண்கள் நீருள் மூழ்குவதுபோல என் உடல் முழுவதும் கைகள் சிரிப்பதுபோல் உணர்ந்தேன்
பின் ஒரு காலைநேரம் ஒரு வித்தியாசமான படைவீரன் வந்தான் நீ இரண்டுதுளி இரத்தம்போல் ஆனாய்
லெப்டினன்ற், உன் மனைவி அவள் உன் கோப்பையில் சினியைக் கலந்தாளா?
நீ நன்றாய் இருக்கிறாய் என்று சொல்லும் துணிச்சல் உன் தாய்க்கு இருந்ததா?
உன் குழந்தைகளின் தலைமுடியை
நீ உன் விரல்களால் கோதிவிட்டாயா?
(லைலா ஜபாலி அல்ஜீரிய நாட்டவர். 1933ல் பிறந்த இவர் பிரஞ்சுக் காலனித்துவத்துக்கு எதிராகப் போராடிச் சிறைசென்ற இளம் அல்ஜீரிய ஆய்வறி வாளர்களுள் ஒருவர். இக்கவிதை அவரது சிறை அநுபவத்தின் வெளிப்பாடு)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
படைப்பாளிகள், வாசகர்கள், அபிமானிகள்
அனைவருக்கும் "ஞானம் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது!
 
 
 

பிரதம ஆசிரியர்: தி. ஞானசேகரன் இணை ஆசிரியர்கள் : ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையின் Lசிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகீட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
3ர்கள்.
தொடர்புகளுக்கு.
தி. ஞானசேகரன் 19/7, பேராதனை வீதி, கண்டி, தொ.பே. - 08-234755
O77-3065 O6 Hнx
சிறுகதை பெண்னென்று பூமிதனில். - 04 கே. விஜயன்
நேர்காணல்
கட்டுரைகள்
நான் பேச நினைப்பதெல்லாம் - 08 கலாநிதி துரை மனோகரன் தமிழ்மணி க.ப.சிவம் - 19 ந. பார்த்திபன் சில்லையூர் செல்வராசன்: ஈழத்துத் தமிழ் திரைப்படத்துறைத் திறனாய்வு முன்னோடி - 21 கே. எஸ். சிவகுமாரன்
கவிதைகள் என் சித்திரவதைஞன் லெப்டினன்ற் டிக்காக - 02 லைலா ஜபாலி எண் மண்ணில். - 07 வே. தினகரனர் முற்றத்து வேலியை - 25 தே. சங்கீதா காப்புறுதி = 31 குறிஞ்சி நாடன் ஜிவிதத்தில் எரியும் தீ - 32
த. ெ ஜயசீலன்
புதிய நூலகம் -அந்தனிஜீவா 29
வாசகர் பேசுகிறார் - 26
- (}{-234755 E
Mail-gmann II Moesltnet. Ik
அட்டைப்படம் - நா. ஆனந்தன்

Page 3
கொழும்பை நோக்கி. ஹட்டன் எக்ஸ்பிரசின் மின்ன லோட்டம்.
பஸ்ஸினுள் சூறாவளியென உட் புகும் காற்றில் குமாரின் தலைக்கேசம் விசுவிசுவென பிய்த்துக் கொள்கிறது.
ஜன்னலருகில் உட்கார்ந்திருக் கிறான். கையில் ஒரு புத்தகம், செக்ஸ் வழிந்தோடும் கிளுகிளுப்பூட்டும் ஒரு பாமரத்தன்மையான ஜனரஞ்சக நாவல். செக்ஸ் கதைகளில் ஐம்புலனும் ஒன்றிப்போகும் ஞானி குமார்.
கண்களின் பரபரப்பான மேய்ச்சலி னுடே நாவலின் பக்கங்கள் சரசரவென விழுங்கப்படுகின்றன.
'பெண்ணென்று பூமிதனில் ...!" கவிதை வரியொன்றின் நாமத்தைச் சூடிக்கொண்டிருக்கும் கீழ்த்தரமான சேஷ்டைகளின் ஆவணம் கண்வழிப் புகுந்து நெஞ்சினில் உறைந்துபோகும் பாலியல் சேஷ்டைகளின் நெஞ்சைப் பிடுங்கும் வருணனைகள்.
அட, என்ன மாதுரி எழுதுராண் டாப்பா, ஐயா அநுபவத்துலே பலே கில்லாடியாயிருப்பான் போலிருக்கே.
பிரமிப்பில் ஆழ்ந்துபோகும் மனம் லாகிரி மதமதப்பில் குதிபோடுகிறது. வாசிப்பில் புயலின் வேகம். கொழும்பை பஸ் சென்றடை வதற்கு முன்னரே கடகடவென முடித்து விடவேண்டும். இப்படியும் ஓர் ஆதங்கம் உலுப்பிக் கொண்டிருக்கிறது.
அடடா அப்பத்தான் இன்னொரு
g கே.விஜயன்
0LL SLLLSL S L SLLLLS S SLS SLS0S SLLLLLS SL00S S LL S L SL S SLS SLS0S SLLLL S0S S0S S S0 S S0 S 0 SLL SL SLSLS SLL S L S SL0 SSSS0S S SLS S 0L S L SLSLS0 SSLSLS SLS S 0LSL SSLSL SLLL S0S
முறை எழுத்துக்கள் தரும் உணர்வைப் பிடுங்கும் சதைச் சம்பவங்களை சப்பிச் சப்பி விழுங்கலாம்.
மனத்தின் லாகிரி அபிலாஷை எருமையாக அசை போடுகிறது. இத் தனைக்கும்.
அமைச்சு காரியாலயத்தை அடைந்து முண்டியடிப்புடன் மினிஷ் டரைச் சந்தித்து "டிரான்ஸ்பருக்கான கையெழுத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இது இதயத்துடிப்பின் பிரார்த்தனை. இந்த சங்கல்பத்துடன்தான் கொழும்பை நோக்கிய விடியல் பஸ் யாத்திரை.
புனித யாத்திரைதான். எத்தகைய அருவருப்பான தவக் கோலம். குமார் அப்படித்தான். ஊறிய மட்டைகளாக இச்சா உணர்வுகளைச் சுமப்பவன்.
பெண்களைப் பற்றிய கெளரவ மான உணர்வுகள் எதுவும் அவனுக்குக் கிடையாது. அவர்கள் போதைமயமான வர்கள் மட்டுமல்ல. போதைப் பொருட் கள்கூட என்றுதான் வாதாடுவான்.
* மே யக்காட்ட சீத்த கேல்லாக்வத் பெண்ணன்ட பே'
அலுவலகநண்பர்களின் நையாண்டி, சிங்கள நண்பர்கள் இப்படித்தான் செல்லமாக முதுகில் தட்டுவார்கள்.
கிண்டலின் அர்த்தம் - சீத்தைத் துணிகூட அவன் கண்களில் படக்
கூடாதாம்.
aje *
04
 
 
 

கொழும்பு. ஜே ஜே வென சன நெரிசல். ஆ ஊ வென்ற அல்லோலங்களின் மத்தியில் கடுகதி சறேலென நிற்கிறது. குமாரின் கண்கள் பரபரக்கின்றன. அமைச்சு காரியாலயத்தை ஜன்னல் வழியாகத் தேடுகிறான். அடடா அது யார் தேடிய கண்களுக்கு சர்வாணி யொன்று அகப்பட்டது.
ஒரு பெண் மஞ்சள் சர்வாணியுடன் காலை இளம் வெய்யிலில் பொன்மய மாகப் பிரகாசிக்கிறாள்.
பஸ்ஸைவிட்டு இறங்கி அவளைக் கடந்து விரைவாக நடந்த போது நான்கு விழிகளும் ஆலிங்கனம் செய்து கொள் கின்றன.
மாந்தளிர் மேனி. பெரிய நட்சத்திர விழிகள்
புல்லரிப்பு. புல்லரிப்பு.குமாரின் உடலெங்கும் புல்லரிப்பு.
பொன் வெய்யிலில் வீதிக்குளியல் நடந்து கொண்டிருக்கிறது.
வேட்கை உணர்வுகள் கிளை விரித்து சடைத்தெழுந்து பரவியபோதும் குமார் தனது டிரான்ஸ்பர் விசயத்தில் கவனமாகவிருந்தான்.
அமைச்சரிடம் கையெழுத்து பெற் றுக்கொள்ளும்வரை சர்வாணி நடமாடிக் கொண்டிருக்க ைேண்டுமே!
கொக்கொன்று இடையிலே தோன்றி இரையை கொத்திக்கொண்டு போய் விட்டால்?
பெட்ரோலில் தீக்குச்சி எரிந்து விழுந்தாப்போல் மனத்தில் திகிர் என்கிறது.
முதலமைச்சு அலுவலகம். மக்கள் சந்திப்பு நாள். எக்கச்சக்கமான சனம். அலுவலகப் பியோன் கெடுபிடிக் காரன்.
கியூவில் வரவேண்டும் என மிரட் டல் வேறு. 'டாஸ், பூஸ்' என கத்தல் ஒருபக்கம்.
'சம்திங்காக நாலு பணம் பாக் கெட்டை நிறைக்க இதுதானே சந்தர்ப் பம். கைநழுவ விடலாமா?
குமாருக்கு அங்கலாய்ப்பாகவிருந் தது. தெரிந்த அலுவலக முகங்கள் ஒன்றையும் காணவில்லை. மனத்தில் தளர்ச்சி ஏற்படுகிறது. மினிஷ்டர் வருவ தற்கு முன்பே சர்வாணியுடன் ஓர் உடன் படிக்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று பார்த்தால் 'உம்கும் நிலைமை சாதகமாக இல்லையே.
உம். பாதுகாப்பு உத்தியோகஸ்த் தர்களை நெருங்கிப் பார்ப்போம். வாச லுக்கு வந்தபோது ஆ! அதோ மஞ்சள் சர்வாணி காத்திருக்கிறது.
‘கடவுளே, கடவுளே! பட்சி காத் திருக்கிறது: மனத்தில் வேட்கைப் புலம் பலின் அலறல்.
பொலிஸ் காரனைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்.
பின்னர். வேகமாக அவளை நோக்கிச் சென்றான்
“ஹலோ!" திகைப்புடன் திரும்பிப் பார்த்தவள், “ஹலோ” எனப் பதிலளித்துவிட்டு பர பரப்புடன் வீதியைக் கடந்து போய் விடுகிறாள்.
எங்கே போய்விட்டாள்? குமார் விரைந்தான். தெருவுக்கு வந்து வெயிலுக்கு முகத்தை மறைத்து கண்களைச் சுழல விட்டான். பஸ் நிலையத்தில் கூட்டத்துடன் இரண்டறக் கலந்தவளாக அவள் தரிசனம் கிடைக் கிறது.
மனத்தில் மகிழ்ச்சியின் துள்ளல். அவன் பிஞ்சல்லவே. இந்தச் சைகை யைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை
05

Page 4
அவன் என்றோ பெற்றுக்கொண்டு விட் டான். இப்படியும் அவனுக்கொரு பீத்தல் மனம். ஆனால், பொலிஸ்காரனின் கழுகுக் கண்கள் நோட்டமிடுவதை அவன் அவதானிக்கவில்லை.
牢 米 sk
அமைச்சு அலுவலகம். அனைவரின் முகத்திலும் சோக நிழலின் படிவு. நேரஞ் செல்லச் செல்ல நிழல் நீள்கிறது. விரக்தி, வெறுப்பு.
வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் கோரிக்கைகள் என ஊர்வலமாகும் அபி லாஷைகளின் விஜயம் நிராசைகளாகி 65(6LDs
பாம்புகளின் செதிள்களாக பொறு மையின் உதிர்வு.
"மினிஷ்டர் இன்று வரமாட்டார்” பொலிஸ்காரன் சிங்களத்தில் சொல் கிறான்.
"அடக் கடவுளே!” நம்பிக்கைகள் இடிந்து விடுகின்றன. குமாரின் தலை, கைகளில் சாய்ந்து விடுகின்றது.
ச்சா மீண்டும் ஒரு நாள் வரவேண் டுமே! மனத்தில் அங்கலாய்ப்பின் நெரு டல். வெளி வாசலை நோக்கித் தளர்ந்த நடை.
மஞ்சள் சர்வாணியின் நினைவு வந்தது. அடடா அவளை மறந்துவிட் டேனே! மீண்டும் உற்சாக வெள்ளம் சுழியெழுப்ப பரபரப்புடன் கண்களைச் சுழல விட்டான்.
குமார் பரபரப்புடன் அங்குமிங்கும் தேடுதல் நடத்திக் கொண்டிருந்தபோது பழம் நழுவிப் பாலில் விழுந்தாப்போல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
மஞ்சள் சர்வாணி விசுக்கெனப் பறந்து வந்து குமாரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
"வாங்க, இந்தப் பக்கமாகப் போவோம்" அவள் பரபரப்புடன் முணு
(ypogoģöBT6ñ.. JEÐjš6ð GFJ GFLDT LJUULDT என்னதான் கொட்டிக்கிடக்கிறது?
உடல் புல் லாரித் துப் போன அவனால் உதறியெறிய முடியவில்லை. ஈ, காகம் கூடத் தென்படாதவொரு வீதிக்கு அவனை ஒட்டமும், நடையுமாக இழுத்துச் செல்கிறாள்.
பிரதான வீதியிலிருந்து தனியாக நீண்டுசெல்லும் சந்து வழி. இருபுறமும் பெரிய பெரிய பங்களாக்கள் வரிசை யாக அமைதியில் ஆழ்ந்துள்ள தனிமை நிறைந்த நிர்ச்சலனமான இடம்.
மனிதர்களின் தலைக்கறுப்பையே காணமுடியவில்லை.
குமாருக்குப் பயப் பிராந்தி பிடரியில் அறைந்தது. அடக் கடவுளே! என்னதான் காமக் கூத்தென்றாலும் இப்படி பளா ரெனத் தெரிகின்ற வெளிச்சத்தில் அரங் கேற்ற முடியுமா?
ஒரு மரத்தடியில் அவனை நிறுத் தினாள். மறைவான இடம். செடியும் கொடியுமாக இருக்கும் இடத்தில் குனி யும்படியாக அழுத்தினாள். அப்பப்பா ‘டைனோசர் பிடி.
இதென்னடா சங்கடம் என குமார் நெஞ்சு பதறினான். ஐயோ அம்மாவென அலறாத குறைதான்.
எங்கே? எந்த நேரத்தில் என்றாலும் வேட்கை விளையாட்டிற்குத் தயாராக
06
 

உள்ளவள். s
ஐயோ சாமி, நல்ல இடத்தில் ? மண்ணில்.
மாட்டிக் கொண்டோம். களுத்துறை, வெலிக்கடையைத்
மரநிழலில் அவன் மீது ஏறுவது துரத்தி பரிந்துனுவேவ வரை
போல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அனைத்துமே கழுவமுடியாத
செடி கொடிகள் மீதாக எம்பி எம்பி பார்க் குருதிக்கறைகளாக
கிறாள். கும்மிருளுள் கும்மாளமிடும்
எதிர்பாராத விதமாக நடந்தேறு அழுக்குகள்.
கின்ற இந்த நாடகத்தினால் வெல
வெலத்துப் போய்விட்டிருந்த குமாரின் இனவாதம் கருவேறிய
கண்கள் இறுக மூடப்பட்டிருந்தன. காலத்தை
நிமிடங்கள் கரைசலாகின்றன. : اع முளைவிடும் அரும்புகளேந்தும் மரஞ் செடி கொடிகளை ஊடறுத்த நாற்பத்தியெட்டுக்களும் வண்ணம் அவள் விழிகள் தொலைவில் ஐம்பத்தாறுகளும்
தெரியும் வாகன வீதியை வெறித்தவா றிருக்கின்றன.
வாகன வீதியில் . | ہے a «» வெணர்புறாக்கள் இருவர் அங்குமிங்கும் வேட்டை 46 நாய்களாக பரபரப்புடன் தேடுதல் நடத்து தோலுரிந்து
மினர்கம்டரி வெளவாலாகத்
ஞாபகமூட்டி நிற்கினர்றன.
கின்றனர்.
9 தலைகீழாய் தொங்குகின்றன.
ரகசியமாகக் கேட்கிறான். * . “பொலிஸ்காரர்கள்” விந் தைதான ob፡ எதுவித சுரத்துமின்றி மெதுவாகச் விடாக்கனி-அம்
சொன்னாள். கொடாக்கணர்டனும்
“ஏன் பயப்படவேண்டும் ஏதாவது இருட்டுக்குள் கயிறிழுப்பு
ஹோட்டலுக்குப் போகலாமே” நாடாத்துவது
"வாயை மூடடா நாயே!” árL /f Lóléy
அந்த கர்ஜனையில் அவன் வெல விடிவுக்காகவா? வெலத்துப் போனான். உடல் வியர்க்க திகிலில் மிரட்சியுண்ட குமாரின் கண்கள் : அஹரிம்சையாலும் மஞ்சள் சர்வாணியின் நெஞ்சில் தெரி அணுவாயுதத்தாலும் கின்ற உள்ளங்கியை கண்டுவிடுகின்றன. பெறமுடியா இவ்விர
அவள் - விடியலை.
சதைவெடித்து பிண்டம் பிண்டமாக நாளை தோன்றும் வீதியில் சரிந்து சரிய தயாராக எரிமலை நிச்சயம்
e!! Φع மயக்க ஆழியில் குமார் தலை I பததனையூா கீழாக விரைந்து கொண்டிருக்கிறான். வே.தினகரன்
米 米 本 米 水
07
யதன்சைட் ஆசிரிய கலாசான்ல

Page 5
நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரைமனோகரன்)
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க முன்னின்று முயன்றவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரே பாரதி பற்றிய படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதுவதாகவும் இருந்தார். ஆனால், பாரதிதாசனின் முயற்சி முடியாமல் போய்விட்டது. கமலஹாசன் பாரதியின் வரலாற்றைத் திரைப்படமாக்க விரும்பி, தாமே eceso o « பாரதியாகவும் நடிப்பதாகவும் இருந்தார். பாலசந்தர் அப்படத்தை இயக்கப் போவதாவும் கூடப் பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் அம்முயற்சியும் பேச்சளவிலேயே நின்றுவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு திரையிடப்பட்ட கப்பலோட்டிய தமிழன் படத்தில் பழம் பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையா சுப்பிரமணிய பாரதியாகத் திறம்பட நடித்தார். அவரது தோற்றமும் நடிப்பும் பாரதியை நேரிற் கண்டதுபோன்ற உணர்வைத் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. கைகொடுத்த தெய்வம் படத்தில் சிவாஜி கணேசன் “சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்ற பாடல் காட்சியில் பாரதியாராகத் தோன்றினார். இத்தகைய முயற்சிகளின் பின்னர், ஆரவாரமில்லாது சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாறு 2000ம் ஆண்டில் ‘பாரதி என்ற பெயரில் வெளிவந்தது. இம்முயற்சி நிச்சயமாகத் தமிழ் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு பதிவாகும்.
கணிசமான காலத்துக்குப்பின் தரமான ஒரு தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்த திருப்தி பாரதி என்ற திரைப்படம் வாயிலாக எனக்கு ஏற்பட்டது. பிறமொழிக் கலைஞரான சாயாஜி ஷிண்டேயின் தோற்றமும் நடிப்பும் பாரதியை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. பாரதியின் மிடுக்கு, கம்பீர நடை, எவர்க்கும் அஞ்சாத நிலைப்பாடு, தேவையற்ற பாரம்பரியங்களைத் தூக்கி எறியும்போக்கு, எவரையும் சரிநிகர் சமானமாக மதிக்கும் பண்பு போன்றவற்றைச் சாயாஜி ஷிண்டே தமது நடிப்பாற்றல்மூலம் வெளிக்கொணர்ந்திருந்தார். ஒவ்வொரு காட்சியிலும் பாரதியை அவர்மூலம் காணக்கூடியதாக இருந்தது. தாம் ஒரு திறமை வாய்ந்த கலைஞர் என்பதை சாயாஜி ஷிண்டே பாரதி படத்தின் வாயிலாக இனங்காட்டிவிட்டார். சிரித்தும், அழுதும், கவர்ச்சிகாட்டியும் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தேவயானி இப்படத்தில் பாரதியின் மனைவி செல்லம்மாவாகப் பாத்திரமேற்று அடக்கமாக நடித்து, தம்முள் ஒளிந்திருந்த திறமை முழுவதையும் அருமையாக வெளிப்படுத்தினார். செல்லம்மா பாத்திரத்திரத்திற்கேற்ற தோற்றப் பொலிவும் அவரிடத்திருந்தது. இத்திரைப்படத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களும் தத்தம் பாத்திரத்தை நன்றாகவே செய்திருந்தனர். திரைப்படத்தில் நகைச்சுவை வேண்டும் என்பதற்காகக் குவளைக்கண்ணன் என்ற பாத்திரத்தை ஒரு நகைச்சுவைப் பாத்திரமாக்கிவிட்டமை ஒரு குறையே.
படத்தின் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தபோதிலும், அவை துண்டு துண்டுகளாக அமைந்திருப்பது போன்ற உணர்வைத் திரைப்பட
08
 

ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. இப்படத்தின் திரைக்கதை அமைப்பிற் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இது இத்திரைப்படத்தின் முக்கிய குறையாக உள்ளது. இத்தக்ைய குறைபாடுகள் இருந்தபோதிலும் மகாகவி பாரதி என்ற கவிஞனின் ஆளுமையை, ஆற்றலை அவனின் மேதாவிலாசத்தைத் திரைப்படம் புலப்படுத்தத் தவறவில்லை. பலகாட்சிகள் பாரதியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைத் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றன. எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியும் மகாத்மாகாந்தியும் சந்திக்கும் காட்சியைக் குறிப்பிடவேண்டும். அதேவேளை சினிமாப்பாணி கலந்த காட்சிகளும் இடம்பெறாமல் இல்லை.
வழக்கமாகத் தமிழ் திரைப்படங்களில் பின்னணி இசை செவிகளைச் செவிடாக்கும் அளவுக்கு அமைந்து விடுவதுமுண்டு. பாத்திர உரையாடல்களைச் செவிமடுக்க இயலாதபடி பல படங்களின் பின்னணி இசை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். பின்னணி இசையை எங்கே எப்போது எப்படி பயன்படுத்துவதென்று உணராமல் இசையமைப்பாளர்களும் அவர்களது உதவியாளர்களும் கண்டபடி அதனைக் கையாள்வது வழக்கம். ஆனால் இப்படத்தின் இசையைக் கையாள்வதில் இளையராஜா கவனமாகச் செயற்பட்டிருக்கிறார். பின்னணி இசை தேவைப்படாத காட்சிகளில் அதனை வலிந்து புகுத்தாமற் செயற்பட்டமை மூலம் அவர் தமது பெயரைக் காப்பாற்றியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. முன்னைய சில தமிழ்ப்படங்களில் இடம்பெற்றமைபோல, இத்திரைப்படத்திலும் பாரதியின் பாடல்களையே முழுமையாகப் பயன்படுத்தியிருக்கலாம். திரைக்கதை இப்படத்தின் பலவீனமாக அமைந்துவிட்டபோதிலும், தமிழ் சினிமாவுக்குரிய சில அம்சங்கள் இப்படத்திலும் இடம்பெற்ற போதிலும், மகாகவி பாரதியை அவனது இயல்புகளுடன் காட்டுவதில் இயக்குனர் ஞான இராஜசேகரன் வெற்றிபெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். பாரதியை நேரில் கண்ட திருப்தி இத்திரைப்படம்மூலம் ஏற்படுகிறது. சமாதானமும் சண்டித்தனங்களும்.
எமது நாட்டில் தேடிக்கண்டுபிடிப்பதற்கு மிகவும் அரிய பொருளாக விளங்குவது சமாதானம். உண்மையில் சமாதானம் நமது காலடியில்தான் கிடக்கிறது. ஆனால் அதனைக் கையில் எடுக்கத் தெரியாமல் திண்டாடிக்கொண் டிருக்கிறது எமது நாடு. கையில் வைத்துக்கொள்ளக்கூடிய சமாதானப் புறாவைத் தூரப்பறக்க விட்டுவிட்டு ஏங்கி அலைகின்றனர் நமது அரசியல்வாதிகள். சமாதானத் திற்கான சமிக்ஞையைச் சிலர் காட்டினாலும், தாம் சண்டை பிடித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி நிற்கின்றனர், பேரினவாதிகள். இது அப்பட்டமான சண்டித் தனமேயாகும். சமாதானம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிப்பார்ப்பதில் என்ன தவறு? தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வும் சமாதானமும் ஒன்றுதான். நமது பேரினவாதிகளுக்கும் இது தெரியும். அதனால் சமாதானம் ஏற்படுவதை எப்படியாவது தடுத்துவிடவேண்டுமென்பதில் மிக அக்கறையாக அவர்கள் செயற்படுகின்றனர். சமாதானம் ஏற்பட்டால் இந் நாட்டில் சில கட்சிகளின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். அவர்களது பிரசாரங் களுக்கு அர்த்தம் இல்லாமற் போய்விடும். சமாதானத்தை விரும்பாத அவர்கள் யுத்தத்தைத் தொடரவே மனதார விரும்புகிறார்கள். தர்மம் பேசவேண்டிய நாக்குகள் சாத்தான் மொழியில் பேசுகின்றன. நல்லறிவுச் சுடர் கொளுத்தவேண்டிய கல்வி மான்கள் சிலர் பேரினவாதப் பெருந்தீயை மூட்டிவிடுகின்றனர். பக்கம் சாராமல் 09

Page 6
எழுதவேண்டிய பத்திரிகையாளர்கள் யுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதுபற்றிப் போதனை செய்கின்றனர். நாட்டுக்கு நன்மை தேடவேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள் சமாதானத்திற்கு எதிராக மேடைகளில் குரைப்பதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துவிட்டு, வீட்டு வளர்ப்பு நாய்கள்கூடப் பயப்படுகின்றன. இன்று இந்நாட்டில் சமாதானத்தை வரவேற்க வேண்டியவர்கள் வெறும் சண்டித்தனங்களையே அவிழ்த்து விடுகின்றனர். வசதியாக யாரையாவது எப்போதும் குறை கூறிக் கொண்டே சமாதானத்திற்கு எதிரான தமது சண்டித்தனங்களைப் பேரினவாதிகள் காட்டிவருகின்றனர். தங்களால் முடியாத ஒருகாரியத்தை வெளிநாடுகளாவது செய்ய முன்வந்தாலும், அவற்றைக்கூட அநுமதிப்பதற்குப் பேரினவாதச் சண்டியர்கள் தடையாக உள்ளனர். இதற்கிடையே பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக விளங்கும் இந்தியா, இலங்கையின் இனப்பிரச்சனையில் மேற்கத்தைய நாடுகள் ஈடுபடுவதை வரவேற்பதுபோலக் காட்டிக் கொண்டாலும், தென்னாசியப் பிராந்தி யத்தில் தனது வல்லமைக்குப் பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில், சமாதான முயற்சிகளைச் சீர்குலைக்கும் முறையிற் புதிய சண்டித்தனத்தை வெளிக்காட்ட முயல்கிறது. உண்மையில் இன்று எமது நாட்டில் நடைபெற்று வருவது சமாதானத்துக்கும் சண்டித்தனத்திற்கும் இடையிலான போராட்டமே. கருத்தைக் கவரும் கார்ட்டுன்கள்
அரசியல் கிண்டல்களையும், சமுதாய விமர்சனங்களையும் ஓவிய வடிவில் வெளிக்காட்ட வல்லன கார்ட்டுன்கள். இலங்கையைப் பொறுத்த வரையில் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளைக் கொச்சைப்படுத்தும் முறையில் கார்ட்டுன்கள் இடம்பெறுவதுண்டு. தமிழ் பத்திரிகைகளில் வீரகேசரியும், தினக்குரலும் நாள்தோறும் கார்ட்டுன்களைப் பிரசுரிக்கின்றன. வீரகேசரியில் ஜே.பி. யும், தினக்குரலில் சாணக்கியன், மூர்த்தி ஆகியோரும் கார்ட்டூன்களை வரைகின்றனர். இம்மூவரதும் கார்ட்டூன்களுக்குத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பெரும் மதிப்புண்டு. நான் நாள்தோறும் இப்பத்திரி கைகளில் முதலில் பார்ப்பது, இவற்றில் இடம்பெறும் கார்ட்டூன்களைத்தான். மிகத்துணிச்சலான முறையில் இம்மூவரும் செயற்படுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்க ஒரு விடயம். தமிழ் பேசும் மக்களின் துயரங்கள், அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மைகள், நாடு அடைந்து வரும் சீர்கேடு போன்றவற்றைத் தமது கார்ட்டூன்கள் மூலம் இவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரது கார்ட்டுனும் ஒவ்வொரு பாணியில் அமைந்திருப்பதும் வரவேற்புக்குரியது. இக்கார்ட்டுன்கள் இராச விசுவாசிகளுக்குப் பெருங்கவலையை அளிப்பது இயல்பானதே. + k + k + k + k + k + k + k + k + k + k + k + k + k + k + k + k is k + k + k + k is SIGUIN சந்தா விபரம்
தனிப்பிரதி ரூபா 15/, வருடச்சந்தா: ரூபா 180/- (தபாற்செலவு உட்பட)
சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய பெயர், முகவரி ;- T.GNANASEKARAN 19/7, PERADENTYAROAD, KANDY.
O

அருண் விஜயராணி
சந்திப்பு:
நே f
S
6. V−
ல் தி.ஞானசேகரன்
( இலங்கையிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்து தற்போதுN
அவுஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறார்.
"கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை வழங்கிய இவர், "மரபு வழிநின்று பெண் சமத்துவத்தை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்.
தரமான நாடக எழுத்தாளர். இலங்கை வானொலியில் 25 வாரங்கள் தொடர்ந்து விசாலாட்சிப் பாட்டி பேசுகிறார் என்ற ஹாஸ்யத் தொடரை வழங்கியவர்.
'அவுஸ்திரேலிய முரசு’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.
விக்டோரியா மாநில் வானொலியில் கதை, கட்டுரை, இலக்கியச் \சுவை என்பவற்றை வழங்கி வருகிறார்.
தி.ஞா -
இலங்கையிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறீர்கள். இம்மூன்று நாடுகளிலும் தங்கள் வாழ்வு அநுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில் எவ்வாறு அமைந்துள்ளன? அ.வி. :-
இலங்கை "விஜயராணியே நான் ரசிக்கும் எழுத்தாளர். கன்னிப் பெண்ணாக இருந்து படைத்த படைப்புகள் தைரியமானவை. போலித்தனம் இல்லாதவை. யாருக்கும் பயப்படாமல் எழுதிய எழுத்துக்கள். திரும்பிய பக்கம் எல்லாம் இலக்கியம் பேச மனிதர்கள் இருந்தார்கள். கருத்துச் சுதந்திரம் இருந்தது. (சில அரசாங்கக் கட்டுப்பாடுகளைத் தவிர) மாற்றுக் கருத்துக்கள் பலவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும், அவற்றை முன்வைக்க மாறுபட்ட கருத்துடைய பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்று அங்கு ஒர் இலக்கிய உலகமே இருந்தது. எனவே நாம் சுழல விரும்பாத உலகத்தை ஒதுக்கி விட்டு இலக்கிய உலகில் மூழ்கித் திளைக்க அது வசதியாக அமைந்தது. என் துணிச்சலான எழுத்துக்களைத் தட்டிக் கொடுத்து வளர்த்தவர். என்றுமே என் நன்றிக்குரிய மறைந்து விட்ட வீரகேசரி, தினக்குரல் ஆசிரியர் திருராஜகோபால் அவர்கள். அவருடன் என் எழுத்துக்களை ரசித்துக் களம் அமைத்துக் கொடுத்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மல்லிகை ஜீவா போன்ற ஆசிரியர்களும் என் எழுத்து தைரியமாக வெளிவர உதவி செய்தவர்கள்.
11 .

Page 7
எனவே குடும்பச் சுமைகள் அற்ற கன்னிப் பருவத்தில் கதை, கட்டுரை, நாடக விமர்சனம் எனப் பலவற்றைப் படைக்கக் கூடியதாக இருந்தது. நேர்மையான விமர்சனங்களைச் சந்தித்தபோது மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. லண்டனில் வசிக்கும் பொழுது நிலைமை ஒரு குடும்பத் தலைவியாக உருமாறியிருந்தது. கடமைகளின் சுமையோடு இயந்திரமயமான அந்த நாட்டில் இயந்திரமாக நாமும் மாற வேண்டிய துர்ப்பாக்கியம். இலக்கியம் பேச யாராவது கிடைக்க மாட்டார்கள என நானும், கணவரும் ஏங்குவோம். 1983களில் அங்கு இலக்கியம் என்பது இல்லை என்பதுபோல, பணம் சேர்ப்பது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்பது போன்று எல்லோரும் பறப்பதுபோல் எனக்குப்பட்டது. நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு வந்துவிட்டமையால் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்கள் அப்படிப் பறப்பதும் நியாயமாகக் கூறப்பட்டது. எனவே வாழ்க்கையின் உயிர்த் துடிப்பான சிலிர்ப்புக்களைத் தரும் இலக்கியத்தை எந்த ரூபத்தில் காணவும் மனமில்லாத, நேரத்தை ஒதுக்க அக்கறைப் படாத ஒரு தன்மை அங்குள்ளவர் மத்தியில் பரவியிருந்தது. இருந்தும் சிறிது காலத்தின் பின் நவசோதி அவர்களின் முயற்சியினால் ‘சிந்து என்றொரு சஞ்சிகை மூலம் லண்டனில் இலக்கிய வளம் சேர்க்க முனைந்தோம். ஆயின் சினிமாவைப் பற்றி எடுத்துரைக்கும் சஞ்சிகைகளையும் மலிவுப் பதிப்புகளையும் கொண்டுதிரிந்த நம் நாட்டார் நம் இலக்கியம் குறித்துக் காட்டிய அலட்சியம் நவசோதியின் மனதை நோகவைத்தது. இதில் வியப்பென்னவென்றால், அலட்சியம் செய்தவர்களில் பலர் லண்டன் தமிழ் பாடசாலையில் நம் சிறார்களுக்கு தமிழ் படிப்பித்தவர்கள். ஈழப் பெருமை பேசுபவர்கள். நவசோதியின் மறைவுடன் சிந்துவும் வெளிவருவது நின்று விட்டது. நம்மவரின் போலித் தமிழ் பற்றும் நாட்டின் செளகரியங்களையும் சட்ட திட்டங்களையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் தந்திரங்களும் மனதை நோகவைக்க, சில சிறுகதைகள் என் பேனாவில் மலர்ந்து இலங்கைப் பத்திரிகையில் பிரசுரமாகின. அவற்றில் அனைவராலும் பாராட்டப்பட்டது 'அவசரம் எனக்கொரு மனைவி வேண்டும்" என்ற சிறுகதை. பல மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் அதைக் குறுநாவல் ஆக்கும்படி என்னை அன்புடன் பணித்துள்ளார்கள். இப்போது நிலைமை அங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளதை அண்மையில் லண்டன் சென்றபோது புரிந்து கொண்டேன். பல பத்திரிகைகள் சஞ்சிகைகள். பார்க்கப் பரவசமாக இருந்தது. நகைகள், சேலைகள், கார், வீடு என்ற வட்டத்தில் ஒரு பகுதியினர் இன்னமும் சுழன்றாலும் இன்னொரு சாரார் இலக்கிய உலகை நன்கு சமைத்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்கு சான்று பகர்கிறது திருபத்பநாப ஐயர் பதிப்பாசிரியராக இருந்து வெளிவந்திருக்கும் "இன்னுமொரு காலடி என்ற மலரும் அதன் பின்னர் தொடர்ந்துவந்த LDSujabelib.
1989ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் எனும் நகரில் குடியேறினேன். அந்த நேரம் கோயில்களோ, அன்றில் இலக்கிய மன்றங்களோ இல்லாதது மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தந்தது. எனினும் ஒரு மணித்தியாலத் தமிழ் வானொலி சேவையில் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ஏற்கனவே இலங்கை வானொலிக்கு நிகழ்ச்சிகளைப் படைத்த காரணமாக, இங்கும் கதை, கட்டுரை, இலக்கியச் சுவை என்பனவற்றைத்
நான் வதியும் மெல்போர்ன் நகரில் இலக்கியத்தை விட உரிமைப் போராட்டமே முக்கிய இடத்தை வகிக்கின்றது. மாகாத்மா காந்தி எனது முன்னோடி அவரது அகிம்சை வழியே நான் மதிக்கும் வழி. எனவே உயிர்க் கொலைகளை எந்த விதத்திலும் என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, தனித்துவமாக நிற்கவேண்டிய ஒரு நிலை. வெறும் அரசியல் சங்கம் கொண்ட நகரில் சில இலக்கிய நண்பர்களின் துணையுடன் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம்' என்ற அமைப்பை நிறுவி இலக்கியம் பரப்பினோம்.
12

முத்தமிழ் விழா, ஏடு தொடங்கல், மனனப் பேச்சுப் போட்டிகள், நாடகவிழாக்கள், கலை விழாக்கள், இலக்கியக் கண்காட்சிகள் என்பவற்றை அங்கு நடைபெறச் செய்தோம். அவுஸ்திரேலிய முரசு எனும் பத்திரிகையை வெளிக் கொணர்ந்தோம். அதன் ஆசிரியராக நான் பணிபுரிந்தேன். மக்கள் மத்தியில் தமிழ் மணம் கமழ ஆரம்பித்த பொழுது எங்கே தம் அரசியல் செல்வாக்கு மங்கி விடுமோ, நேர்மையான விமர்சனங்கள் வெளிவந்து தவறுகளைச் சுட்டிக்காட்டும் பத்திரிகையாக இருப்பதனால் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ என்ற ஆதங்கத்தில் பலர் தம் எண்ணிக்கையின் பலத்தினால் மக்களைச் சென்றடையும் பல தொடர்பு சாதனங்களை தம் வசமாக்கி தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். அத்துடன் நம் பக்கத்திலும் சில இலக்கிய நண்பர்கள் சோர்ந்து விட்டமையினால் பல இலக்கியத் தொண்டுகளை ஆற்ற எண்ணியும் முடியாமல் போய்விட்டது.
முகஸ்துதி விமர்சனங்களும் தவறுகளை நியாயப் படுத்துவதும் சிறு வயதில் இருந்தே எனக்குப் பிடிக்காதன. சில நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களில் ஒருவராகப் பணிபுரிய என்னை அழைத்துவிட்டு அமைப்பாளர்கள் நடுநிலைமையின்றி நடந்து கொள்ளும்போது என் மனச்சாட்சி டும்பாடு அந்த ஆண்டவன் மட்டுமே அறிவான். புகழுக்காக பேனா பிடிப்பவள் அல்ல நான். எனவே இவை பல நல்ல விஷயங்ளைச் சாதிப்பதுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றதே தவிர என் எழுத்தைப் பாதிக்கவில்லை. தமிழ் இலக்கியத்துக்கு என்னால் இயன்றளவு பங்களிப்பை இங்கு செய்துகொண்டு இருக்கிறேன். எழுத்துச் சுதந்திரம் கொண்ட நாட்டில் வாழ்ந்தும் சுதந்திரமாக எழுத முடியாமல் இருப்பது எவ்வளவு துக்கம் என்பதை அந்த நிலையில் உள்ளவர்களால்தான் புரிந்து கொள்ளமுடியும். எனினும் பெண்களுக்கான சில நல்ல விடயங்களைச் செய்யும் எண்ணம் உண்டு. பிள்ளையார் அருளில் காலப்போக்கில் அது நிஜமாகலாம். தி.ஞா -
வழக்கமாக இலக்கியப் படைப்பாளிகள் தமது நூல்களை பெற்றோருக்கு, சகோதரர்களுக்கு, நண்பர்களுக்கு, சக படைப்பாளிகளுக்கு அர்ப்பணம் செய்வது வழக்கம் ஆனால் உங்களுடைய முதலாவது சிறுகதைத் தொகு தியான "கன்னிகாதானங்களை'பிள்ளையாருக்குச் சமர்ப்பித்திருக்கிறீர்கள் இது குறித்து உங்கள் விளக்கம் என்ன? அ.வி ;-
அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். நான் அந்தக் கூற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவள், பிள்ளையார் பால் நிறைந்த பக்தி கொண்டவள். பாரதியார் கண்ணன் பாடலில் கண்ணனை நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் என்று பாடிச் செல்வதுபோல் பிள்ளையார் என் வாழ்வின் எல்லாமாக இருப்பவர். என் வாழ்க்கையில் எந்த ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்தாலும் மனம் முதலில் நன்றி கூறிக்கொள்வது பிள்ளையாருக்கே, அதேபோல் துக்கம் ஏற்பட்டால், கோபம் கொள்வதும் அவரிடம்தான். சிறு வயது தொட்டு என் வாழ்க்கை கொழும்பில் கழிந்தாலும் விடுமுறையில் உரும்பிராய் செல்லும்போது அங்குள்ள கற்பகப் பிள்ளையார் கோயிலில் மெய்சிலிர்த்துப் பலமணிநேரம் நின்றதுண்டு. என் பெற்றோர்கள் அக்கோயில் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டு எம்மையும் ஈடுபட வைத்தார்கள். கற்பகப்பிள்ளையார் கோயிலை மிகவும் சிறப்படையச் செய்ய வேண்டுமென மனதில் விதம் விதமாக ஆசைகள். ஆயின் சூழ்நிலை என் வாழ்வை வெளி நாட்டில் கொண்டுவந்து முடித்திருக்கிறது. என்வாழ்வின் எல்லா மாக விளங்கும் கற்பகப் பிள்ளையாருக்கே என் முதல் சிறுகதைத் தொகுதி சமர்ப்பணமாகி அதன் லாபமும் கோயிலுக்கே சேரவேண்டுமென ஆசைப்பட்டேன். அத்துடன் பெற்றோர் களே உலகம் என வலம் வந்த விநாயகருக்கு என் தொகுதியினை சமர்ப்பித்தது, என்
13

Page 8
ஐர்களுக்கும் சேர்த்து அர்ப்பணம் செய்த நிறைவினைத்தான் எனக்குத் தருகின்றது.
.ஞா -
பெண் விடுதலை, பெண்நிலை வாதம், பெண்ணியம் என்று பெண்களின் உரிமைப் பிரச்சனைக்கு பல உருவங்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து உங்களது பார்வை என்ன? அ.வி :-
பெண் விடுதலை,பெண் நிலைவாதம் பெண்ணியம் என்ற எல்லாமே பெண்களுக்கு முன்னேற்றத்தையும் உரிமைகளையும் பெற்றுத்தர முனையும் விடயங்கள் தாம். சூழ்நிலைகள், சமூக அமைப்புக்கள், தேவையற்ற கட்டுப்பாடுகள், பொருளாதாரம் இப்படிப் பெண்ணை அடிமைகளாக வைத்திருக்கப் பல காரணங்கள். தன் சுயமான அறிவில், சிந்தனைத் திறனில் இயங்கித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு தன்மை கொண்ட வளாகப் பெண்ணைப் பலப்படுத்தாமையே இதற்கு முக்கிய காரணம்.
‘ஒரு பெண் குழந்தையைப் படிப்பித்தலே ஒரு நாடு செய்யக்கூடிய சிறந்த மூலதனம் SIGölfprij LDĵ6ò Gymrå (MARIS OIROVIRKE-DIRECTOR OF EDUCATION FORTHE WORLDBANK) என்பவர். அத்துடன் அது அவளை மட்டுமல்ல அவளது கல்வியறிவு ஒரு சமூகத்தையே மாற்றி யமைக்க உதவுகின்றது என்கிறார். எத்தனை பேர் இதுபற்றிச் சிந்தித்துப் பெண்குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்ட எண்ணுகிறோம். பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் சிறு வயதிலேயே சமைக்கவும் தம்பிப் பாப்பாக்களைப் பராமரிக்கவும் அல்லவா 60 விதம் குழந்தைகள் பிரயோசனப்படுத்தப்படுகிறார்கள கூடுதலான ஆசிய நாடுகளில். ஒரு பெண்ணின் நிலை குறித்துத் தான் ஒரு தேசத்தின் பெருமை பேசப்படுகிறது. ஆயின் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பல பெண் பிரதம மந்திரிகள் பல பெண் உயர் அதிகாரிகள் பதவிகளில் இருந்தபோதும்கூட மற்றைய நாடுகளை விட பெண்ணின் நிலை மிகவும் தாழ்ந்திருப்பதும் இங்குதான் என அறியும் பொழுது எவ்வளவு வேதனையும் வெட்கமும். நாட்டுக்கு நாடு மகளிர் அமைப்புக்கள் பல இருந்தும்கூட, பெண்கள் பொறுப்பான பெரிய பதவிகளில் இருந்த போதும்கூட, பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை அல்லது அத்தியாவசியக் கல்வியை அவர்கள் பெறும் சட்டங்களை அமுலில் கொண்டு வர முயற்சிக்காதது வருத்தத்துக்குரியது. கடுமையான சில தண்டனைகள் கொண்ட சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தால் பெண் கல்வியறிவு அற்று விட்டில் வைத்திருக்கும் நிலைமை மாறியிருக்கலாம். "ஐயோ என்னை விட்டுட்டுப் போட்டிங்களே, பிள்ளைகளை என்ன செய்யப் போகிறேன் இப்படியான ஒப்பாரிகளைத்தான் நம்நாட்டில் கேட்கக் கூடியதாக இருக்கிறது. அதை விடுத்து கணவனது நினைவுகளை அசைபோட்டு அழும் பெண்ணை விரல் விட்டு எண்ணிவிடலாம். காரணம் பொருளாதாரத் தேவை முழுவதுக்கும் ஒரு பெண் ஆணைச் சார்ந்து நிற்கக் கூடிய தன்மையை நம் சமூக அமைப்புக்கள் வைத்திருந் தமை. அது மட்டுமல்ல ஆணைப் படிப்பித்தால் போதும் பெண்ணுக்கு உயர்படிப்பு எதற்கு என்ற குறுகிய மனப்பான்மைகள். கணவன் எவ்வளவு கொடுமையானவனாக இருந்தாலும் பணிந்து போகச் சொல்லும் போதனைகள். நியாயமான விவாகரத்தில் தனித்து வாழும் பெண்ணை இன்னமும் கீழான பார்வை பார்க்கும் நம் சமூக அமைப்புக்கள். சீதனம் கொடுத்து ஒரு பெண் ஒருவனுக்கு மனைவியாக வேண்டிய துர்ப்பாக்கியம் இப்படிப்பல.
இவற்றில் பல வெளிநாட்டில் புலம் பெயர்ந்த நம்மவரிடையே முன்னேற்றம் கண்டுள்ளன என்றாலும் நம் ஆசிய நாடுகளில் பெண் அடிமைத்தனம் 90 வீதம் அப்படியே இருப்பது பரிதாபத்துக்குரியது. பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக சீதனம் தராத மருமகளை அகால மரணமடைய வைக்கும் மாமிமார்கள், வாழாவெட்டியாக்கும் மாமிமார்கள், நம் இலங்கை இந்திய நாடுகளில் தானே ஏராளம். விபச்சார வடுதிகள் நடத்துபவர்கள்கூட
14

கூடுதலாகப் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, பெண் தாய்மையுற்றவுடன் சில மாதங்களில் ருடவசயளழரனெ மூலம் என்ன குழந்தை எனத்தெரிந்து பெண் குழந்தையானால் கருவிலே சிதைத்துவிடும் கணவன் மார்கள் வெளிநாட்டில் கூட இருக்கிறார்கள் என்பது கேவலத்துக் குரியது. லண்டனில் இரண்டாவது குழந்தைப் பேற்றுக்காக றோஸ்கலர் உடுப்புக்களுடனும் வியாபினி என்ற பெண் குழந்தையின் பெயரை மனதில் கொண்டும் நான் செல்ல, எனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதை வைத்தியர்கள் கடைசிவரை சொல்ல மறுத்து விட்டார்கள். பெண் குழந்தை எனத் தெரிந்ததும் ஒரு இந்தியப் பெண் அதனை அழிக்க முயன்றதே இதற்குக் காரணம். ஆயின் எமது வேண்டுதலையும் மீறி, எமக்கு ஆண் குழந்தையும், ஆண் குழந்தை வேண்டுமென்ற ஓர் இந்தியப் பெண்மணிக்கு பெண் குழந்தையும் ஒரே நாளில் பிறந்தன. அந்த இந்தியப் பெண்மணி தனக்குப் பிறந்தது மூன்றாவதும் பெண்குழந்தையே என அறிந்ததும் தாய்ப்பால் கூட கொடுக்காது இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததாகவும் தான் அவள் அருகிலேயே இருந்து ஆறுதல் சொன்னதாகவும் நேர்ஸ் கூறி, ஏன் பெண் பிள்ளை என்றால் இப்படி வெறுக்கிறீர்கள்? என என்னைக் கேட்ட போது, பெண் விடுதலையின் முதல் எதிரி யார் என்ற சந்தேகம் என் மனதில், பெண் குழந்தை என்றால் பாதுகாக்க வேண்டும், சீதனம் கொடுக்க வேண்டும், கணவனின் வெறுப்புக்கு உள்ளாகி வாழாவெட்டியாகி விட்டால், மீண்டும் தாமே பராமரிக்க வேண்டும் என்ற தவறான எண்ணங்கள்தான் இன்னமும் பெண்ணை கீழ் நிலைக்குத் தள்ளுகின்றன. பெண்கள் மனதில் கூட. இல்லையாயின் மதத்தின் பேரால் கொடுமை செய்யப்படும் பெண்களின் வாழ்வுக்காகப் போராடி, பெண் உரிமைக் குரல் எழுப்பிய தஸ்லிமா நஸ்ருதின் என்பவளின் மரணம் முன் மொழியப்பட்ட போது, பங்களாதேஷ் ஜனாதிபதியாகவும் எதிர்க்கட்சித் தலைவியாகவும் இரு பெண்கள் தானே பதவி வகித்தார்கள். அது மட்டும் அல்ல பெண்ணின் கன்னித் தன்மையையும் புனிதத் தன்மையையும் உறுதிப்படுத்த இன்னமும் சில இடங்களில் மதத்தின் பேரால் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்குத் தாய் ஸ்தானத்தில் இருந்து பெண்ணே உடந்தையாகவும் இருக்கிறாள். பெண்ணே பெண்ணை உயர்வாக எண்ணும் மாற்றம் மனதில் மலர வேண்டும். தனக்குப் பிறக்கப்போவது பெண் குழந்தை எனத் தெரிந்து கணவன் கருச்சிதைவு செய்ய நினைத்தால் அதை எதிர்த்து நிற்கும் தைரியம், அதை வெளி உலகிற்கு கொண்டுவரும் தைரியம், வளர்க்கக் கூடிய தைரியம் இவை பென் மனதில் ஏற்பட வேண்டும்.
திருமணம் என்பது ஓர் ஆணையோ பெண்ணையோ முழுமையடையச் செய்யும் ஓர் அநுபவம். சந்ததி தழைக்க நம்மவர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கோப்பான உறவுமுறை. இளமையிலும் முதுமையிலும் தனித்து நிற்காமல் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் சாதனம் என்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதுவே உலக மாக அதை விடுத்து உலகில் ஒன்றுமேயில்லை என்பது போல பெண் நினைக்கத் தலைப்படுவதும் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்து கொள்வதும்தான் கூடிய அடிமைத்தனத்துக்கு வழிகோலுகின்றது.
எனவே கல்வியறிவும், தானே தன் காலில் நிற்கக் கூடிய தைரியமுமே பெண் விடுதலையின் ஆரம்பக்கட்டங்கள் என்று நான் கருதுகிறேன். தி.ஞா :-
உங்களது படைப்புகளின் ஊடாக பெண்களின் விவகாரங்களை எவ்வாறு அணுகுகின்றீர்கள்? அ.வி ;-
ஒரு பெண்ணாக இருப்பதினால் பெண்ணினது உணர்வுகளை அவர்களது செயல்களை கூடுதலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சில பெண்கள் தாமே முன் வந்து தம் துயரை
15

Page 9
என்னுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆறுதல் அடைகிறார்கள். பல பெண்களோடு பழகுவதன் மூலம் அவர்களது பிரச்சனை தெரிகிறது; தெளிவாகிறது. அப்பிரச்சனைகள் கதைகளாகவோ, அன்றில் கட்டுரைகளாகவோ கற்பனை வடிவத்தில் வெளிவந்து ijë களை மற்றவர் க்கு இனம் காட்டுகின்றது. நான் என் தொகுதியில் குறிப்பிட்டது போல, என் ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஒவ்வொரு உண்மையான கதை உண்டு. அவை பெண்ணைப் பற்றியதாக இருக்கும் பட்சத்தில் சில சமயம் அவளது துயரை அப்படியே முன் வைக்கின்றேன். சில சமயங்களில் என்னை அந்தப் பெண்ணின் ஸ்தானத்தில் நிலை நிறுத்தி நான் ஆகும் பட்சத்தில் எப்படி அந்தப் பிரச்சினையைக் கையாண்டிருப்பேன் என்று கோடு காட்டுகின்றேன். என் கதைகளில் உலவும் 'வித்யா என்ற பெண்பாத்திரம் நான் காண விரும்பும் புதுமைப் பெண்ணின் விம்பம்.
‘விவகாரங்கள் என்ற உங்கள் பதத்தை எடுத்துக் கொள்ளும்போது பெண் செய்வது எல்லாமே சரி எனத் தலையாட்டி விடுபவள் அல்ல நான். அளவுக்கதிகமான சுதந்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தலைகுனியும் படியான பல காரியங்களை நம் பெண்கள் வெளி நாடுகளில் செய்வதையும், அதற்குப் பெண் விடுதலையைச் சாக்காகக் கொண்டு நியாயப்படுத்துவதையும் பார்க்கும் பொழுது வேதனையாகவும், அவமானமாகவும் இருக்கின்றது. இவைகளைக் கண்டித்து எழுதுவதற்கும் தயங்குவதில்லை. ஆயின் ஒரு பெண்ணுக்குரிய அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுத்துள்ள வெளி நாட்டில் வாழ்ந்தும்கூட ஓரிரண்டு பெண்கள் மெல்போர் னில் தற்கொலை செய்து கொண்டுள்ளர்கள். காரணம் குடும்பப்பிரச்சனை. கணவனது அன்பு வேறு பெண்பால் திரும்பி விட்டமை. சிந்தித்துப் பார்த்தால் எவ்வளவு அற்ப விடயங்கள். இப்படி ஆண்கள்தாம் தமது பலம் எனப் பெண்கள் நிரூபிப்பது தான் பெண்ணின்நிலை இன்னமும் தாழ்ந்து கொண்டிருப்பதுக்குக் காரணம். ஜேர்மன், கனடா, ஸ்விஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நம் பெண்களின் நிலை பற்றிக் கேட்கவே வேண்டாம். நஞ்சருந்துதல் புகையிரத வண்டிக்குள் தலையைக் கொடுத்தல், தூங்கிச் சாதல். ஆசிய நாடுகளில் இருந்து வரும் பல பெண் களுக்கு வெளிநாட்டில் பெண்களுக்காக அமைந்துள்ள அடிப்படை வசதிகள் புரிவதில்லை. எனவே மகளிருக்கான அமைப்புக்கள் எழுதுவதோடு நேரடியாக அவர்களிடையே செல்லமுடியுமாயின் அவர்களது பிரச்சனையைக் கேட்டறிந்து அதற்கான தீர்வைக் காணலாம். இப்படியான தற்கொலைகளைத் தடுக்கலாம். என் வரையில் எனக்குத் தெரிந்த பெண்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் கூடிய வரையில் தலையிட்டு அவற்றைத் தீர்க்க முயல்கின்றேன். இந்த நேர்காணலைப் படித்துவிட்டு, வெளி நாட்டுப் பெண்கள் தமது பிரச்சனையை என்னிடம் சொல்ல விரும்பினாலோ அல்லது எழுத்து வடிவத்தில் தர விரும்பினாலோ, என்னோடு தொடர்பு கொள்ளலாம். தி.ஞா :-
வேறு எந்த வகையில் பெண்களுக்கான பிரச்சனைகளை அணுகலாம் என நினைக்கிறீர்கள? அ.வி :-
ரிருக்கான Liss6 G (3 ங்கள் சந்தித்துக் கொள்வதினால் பெரிய
நன்மைகள் நடைபெற்றுவிட முடியாது. ஜேர்மனியில் இருந்து அண்மையில் மெல்போர்ன் வந்த "தேவா என்பவர் தாம் பெண்களுக்கான அமைப்பை தம் நாட்டில் நடாத்தியும் ஏராளமான தற்கொலைகள் எனக் கவலைப்பட்டார். இதற்கான முக்கிய காரணமே, அவை தெளிவாக விளம்பரப்படுத்தப்படாமை. இரண்டாவது இவர்கள் நேரடியாகப் பிரச்சனைக்குரியவர்களிடம் செல்ல முடியாமை.
அடுத்து COUNSELLING என்ற அமைப்புகள் இங்கு கூடுதலாக உண்டு. இந்த அமைப்பில் பலதரப்பட்ட பிரச்சனைகளைக் கையாள வேண்டிய பக்குவத்தை
16

அறிவுபூர்வமாகச் சொல்லித்தரப் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் (ஊழுருளுேநுடுடுழுசு) இங்கு அங்கம் வகிப்பார்கள். இவ்வமைப்பு நம்நாட்டு மக்களுக்கான தீர்வுகளை சொல்லித் தருவது மிகவும் கஷ்டம் என நினைக்கிறேன். காரணம் நம் வாழ்க்கை முறை முற்றிலும் அவர்களிடமிருந்து வேறுபட்டது. எனவே நம் நாட்டுப் பெண்கள் (இதயசுத்தி, மனித நேயம், இரகசியத்தை காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள் மட்டும்) இப்படியான பயிற்சிகளைக் கைக் கொண்டு அப்படியான உத்தியோகத்தர்களாகப் பணியாற்றினால் பல பெண்கள் உறவினர்களிடம் சொல்ல முடியாத பல பிரச்சனைகளை இவர்களிடம் கூறி ஆலோசனை பெற்று தம் வாழ்வை இனிதே நடாத்திச் செல்லலாம். இப்படிப்பட்ட உத்தியோகத்தர்களாகப் பயிற்றப்பட்ட பெண்கள் மகளிருக்கான அமைப்புக்களில் அங்கம் வகிப்பதும் நன்று. பெண்களுக்கு மட்டுமல்லாது, எல்லாத் தரப்பினருக்கும் இவ் அமைப்புக்கள் நன்மை பயக்கும். நம் இலங்கை நாட்டில் கூட இப்படியான அமைப்புக்கள் அமைக்கப்படுவது வரவேற்பதற்குரியது. நன்மை பயக்கும் என்றே நான் கருதுகின்றேன். தி.ஞா :-
இன்று உலகம் வேகமாகப் பல துறைகளிலும் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மரபு வாதியாக வாழ விரும்பும் தாங்கள் இந்த மாற்றங்களை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறீர்கள்? அ.வி :-
பாலையும் நீரையும் பிரித்து உண்ணும் அன்னப்பட்சி நம் வாழ்க்கையைக் கொண்டு நடாத்த ஒரு நல்ல வழிகாட்டி. எதிலுமே எங்குமே நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றைத் தள்ளி விட்டோமேயானால் கவலையில்லை. அந்த விதத்தில் பார்க்கப் போனால் நம் மரபில் கூட ஒரு சிலதான் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற பதத்தினுள் அடைபடுகின்றன.
அமைதியான காலை நேர்த்துக் கடவுள் வணக்கம் மனதுக்கு நிம்மதியைத் தர மறுக்குமா? அன்றில் முற்றத்து மாக்கோலம் நெஞ்சை நிறைப்பதை இல்லையென்று சொல்லி விட முடியுமா? அழகான மாக்கோலம் நெஞ்சை நிறைப் பதோடு, அரிசிமா பூச்சி புழுக்களுக்கு உணவாகவும் அமைகின்றது. இங்கு அழகும் ஈகையும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இப்படியாகக் காலை எழுந்தது முதல் கண் அயரும் வரை நாம் கைக்கொள்ள வேண்டிய கடமைகளை, அன்றில் பண்டிகைகளை, சமயத் திருவிழாக்களை, உறவினர் வீட்டு விசேஷங்களை, சடங்குகளை, எவற்றையுமே ஓர் உள்ளார்ந்த அர்த்தத்துடன்தான் நம் மரபு சொல்கிறது. அமைதியான காலை நேரத்துச் சின்னச் சந்தோஷம் பல சந்தோஷங்களை நம் மனதில் ஏற்படுத்த வழி வகுக்கின்றது எனச் சொல்லித்தரும் நம்மரபு நமக்குத் தெரிவதில்லை. ஆயின் 'அமைதியின்மை உன் வாழ்க்கையினைப் பாழாக்கிவிடும். தியானத்தில் சில மணி நேரம் இருந்து மனதை ஒரு நிலைப் படுத்து. யோகப் பயிற்சிகள் உடம்புக்கு நன்று. சொந்தவீடுகளில் வாய்விட்டுக் கதறி அழுவதன் மூலம் மனநிலை பாதிக்கபடாமல் தவிர்த்துக்கொள்’ என்பது போன்ற நம் மரபு விடயங்களை வெளிநாட்டவர் பயின்று அதன் உயர்வை விஞ்ஞான பூர்வமாக எடுத்துரைக்கும் பொழுது அதனை அவர்களிடமிருந்து நம்மவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் வியப்பாக இருக்கின்றது. முற்றத்து மல்லிகையான நம் மரபில் பல அரிய விடயங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில வேண்டத் தகாதவற்றைக் கண்டுவிட்டு எல்லாமே ஒதுக்கப்பட வேண்டியவை என்ற தவறான கண்ணோட்டம் நன்மை பயக்காது.
திருமணத்திற்குப் பின் கூடி வாழ்வதைத்தான் நம் மரபு வலியுறுத்துகின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய சுகாதாரமான கட்டுக்கோப்பான உறவு முறையைச் சொல்லித்
17

Page 10
தருகின்றது. ஆயின் அவற்றைப் பத்தாம் பசலித்தனம் எனக் கூறிக் கொண்டு பலருடன் திரிந்து சிலருடன் கூடி வாழ்ந்து திருமணத்தை அமைப்பதன் மூலம் எத்தனை அனாதைக் குழந்தைகள் பாசமற்ற நிலையில் வலது குறைந்த நிலையில் எத்தனை பேர் கடுமையான நோய் உற்ற நிலையில். 'உன் மனைவியை நேசி எயிட்ஸ் வருமா யோசி இப்படியான வாசகங்கள் இந்தியச் சுவரொட்டிகளில். இப்படியான மரபு மாற்றம் தேவைதானா?
கூட்டுக் குடித்தனங்கள் பல நன்மைகளைச் செய்தன. வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட மனித வட்டத்தினுள் மனிதன் சுழன்றதால் மற்றவனது கருத்தை மதிக்கக் கற்றுக் கொண்டான். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டான். பகிர்ந்து உண்ணும் பண்பை வளர்த்துக் கொண்டான். குடும்பத்தில் எழும் பல பிரச்சனைகள் அங்குள்ள முதியவர்கள் அநுபவம் வாய்ந்தவர்களால் தீர்த்து வைக்கப்பட்டன. "சத்திரம் என ஒதுக்கி தனித்து வாழும்பட்சத்தில் பல பிளவுகள். நாம் என்ற தன்மை போய் நாண் என்ற சுயநலம் அங்கு உருவாகி விட்டது.
உறவினர் வீட்டு விசேஷங்கள் என்றால் கூட அங்கு வேற்றுமையுற்றவர் மனம்மாறக்கூட ஒரு சந்தர்ப்பமாக. இப்படியாக நம் மரபு பற்றிய விளக்கங்கள் பல.
மரபில் உள்ளவை நல்லதாக மாறும் பொழுது மனது சந்தோஷமடைகின்றது. தீயதாகத் திரும்பும் பொழுது வேதனையாக இருக்கிறது. ஆயின் எங்கு வாழ்ந்த போதும் எனது வாழ்க்கை மரபை ஒட்டியதாகத்தான் செல்கின்றது என்பது மனதுக்கு நிறைவினைத் தருகின்றது. இலங்கையில் வாழ்ந்த போதும் ஜெட்டா, லண்டன், அவுஸ்திரேலியா எனப் பறந்த போதும் கலாசாரத்தில் மாற்றமில்லை. ஜெட்டா எனும் நகரில் (சவூதி அரேபியா) என் கணவருடன் இருந்தபோது, அங்குள்ள நம் பெண்கள் வெளியில் சேலை அணிந்து கொண்டோ பொட்டு வைத்துக்கொண்டோ திரியமாட்டார்கள் என அறிந்த பொழுது வியப்பாக இருந்தது. அங்கு இருக்கும் வரை சேலை அணிந்து கொண்டும் நெற்றி நிறையக் குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டும் என் கணவருடன் வீதியிலும் பல இடங்களிலும் வலம் வந்தேன். என் கணவர் பூட்டிய அலுமாரிக்குள் வைத்துக் கும்பிட்ட சாமிப்படங்கள் எல்லாம் வெளியே வந்து அருள் பாலிக்கும் நிலைக்கு உள்ளாகின. பொங்கலோ சித்திரை வருடப்பிறப்போ நாட்களில் என் வாசலை லண்டனிலும் இங்கும் நிறைத்த மாக்கோலம் அயல்வீட்டு வெள்ளைக்காரர்கள் "லவ்லி எனத்தான் சொல்ல வைத்தது. இவற்றை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் மற்றவர்களைப் புண்படுத்தாத வகையில் இடைஞ்சலாக இல்லாத வகையில் நம் மரபைக் கொண்டு செல்லும் தைரியம் நம்மவர்களின் மனதில் ஏற்பட வேண்டும். நம் மரபு பற்றி நமக்கே ஒரு பெருமை இருக்க வேண்டும். அது என் மனதில் நிறையவே இருக்கின்றது. அதனைப் பின்பற்றி வாழ்வதால் வாழ்வு நிறைவாகவும் இருக்கின்றது. மாற்றங்களை விரும்பாதவள் அல்ல நான்.
நியாயமான மறுமணத்தையும் விதவா விவாகத்தையும் சந்தோஷமாக உள்வாங்கிக் கொள்கிறேன் - மரபின் பாரிய மாற்றமாக. ஆயின் என் வாழ்க்கையை ‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற ரீதியில் அமைக்க வேண்டும் என்பதில் நிறைவு கொள்கிறேன் மரபு வழியில் இந்த வழியில்தான் மரபு என் வாழ்வில் இடம் பெறுகின்றது. எனினும் இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் இடம் பெயர்ந்து வாழும் நானும் கணவரும் மரபை ஒட்டி வாழ்வது வியப்புக்குரியது அல்ல. ஆயின் வெளிநாட்டில் பிறந்த எம் குழந்தைகள் மரபைப் பின்பற்றி அதன்படி வாழ்ந்தால் அதுதான் பாராட்டுக்குரியது என நினைக்கிறேன்.
米 米 率率 半
米 米 来
来源
18

தமிழ்மணி 3 க.ப.சிவம்
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வீரகேசரி பத்திரிகை நிருபராகப் பணியாற்றி வருபவர் கருப்பண்ணபிள்ளை பரமசிவம். காட்சிக்கு எளியவராகவும் பழகுவதற்கு இனியவராகவும் தோன்றும் இவர் தன் பெயரையும் சுருக்கி க.ப.சிவம் எனத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறியப்பட்டவர். இளைய தலைமுறையினரை மலையகத்தில் ஒளிச்சுடர்களாக்கிய பெருமைக்குரியவர் என்றும், மலையக எழுத்தாளர்களின் உந்து சக்தியாகத் திகழ்பவர் என்றும், மலையக எழுத்துலக முன்னோடிகளில் ஒருவர் என்றும், மலையக இலக்கிய வரலாற்றில் இரண்டு தலைமுறைகளிடையே பணியாற்றியவர் என்றும், மலையகத்தின் விடிவெள்ளி என்றும் இலக்கிய நெஞ்சங்களினால் இதய சுத்தியுடன் நேசிக்கப்படுபவர் சிவ மண்ணர், பாடசாலை மாணவராக இருந்த காலந் தொடக்கம் சிறந்த பேச் சாளராகவும் காத்திரமான கட்டுரையாளராகவும் தன்னை இனங்காட்டிக் கொண்டவர்.
க.ப.சிவத்தின் இலக்கியப் பணிகளில் விதந்துரைக்கப்படுவது, பல பேச்சா ளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கிவிட்டதே. மத்திய மாகாணத்தின் சிறந்த பேச்சாளர்கள் பலர் தங்கள் பேச்சாற்றலுக்கு க.ப.சிவம் எழுதித் தந்த விடயங்களும், பயிற்சியும் முக்கியமான காரணங்கள்ென நன்றியுடன் குறிப்பிடு வதைக் கேட்கிறோம். அதேபோல் மலையகத்தின் இன்றைய முன்னணி எழுத்தாளர் களும் க.ப.சிவத்தின் ஆதரவும் - களமும் தங்கள் எழுத்துலகப் பிரவேசத்திற்கும், பிரபல்லியத்திற்கும் காரணங்களென மன நிறைவுடன் குறிப்பிடுவதைப் படிக் கின்றோம்.
1949 களில் இலங்கைத் திராவிட முன்னேற்ற ஈடுபாடு கொண்டு சமூகத்துக்கு அரும்பெரும் - அளப்பெரும் பணியாற்றியவர் க.ப.சிவம். தன்னுடைய பேச்சாற்றலுக்கு, இலக்கிய ஆர்வத்துக்கு தான் கல்வி கற்ற புனித சில்வெஸ்டர் கல்லூரித் தமிழ் ஆசிரியர் பி.டி இராஜனே காரணம் என அக்கால நினைவுகளை செழுமை யாக நினைவு கூர்கிறார். 1958ல் காலஞ்சென்ற கவிஞர் எஸ்.எஸ் நாதனின் பகுத்தறிவு என்ற ஏட்டில் மலையக மக்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையுடன் எழுத்துப் பணியை ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் சில கையெழுத்துச் சஞ்சிகைகளில் எழுதித் தன் எழுத்தின் ஆழுமையை வளர்த்துக் கொண்டார். மேலும் மு.வே.பெ.சாமியின் ‘நாமி, ‘சமூக முன்னேற்றமி ஆகிய பத்திரிகைகளிலும் வி.எஸ் முருகனின் ‘உரிமைக்குரல் பத்திரிகையிலும் கட்டுரை களை எழுதி இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே தன் எழுத்து வன் மையை நிலை நாட்டினார் க.ப.சிவம்.
1959 ல் பி.டி. இராஜனின் உந்துதலின் விளைவாக "மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் உதயமாகியபோது அதன் கண்டிக் கிளைச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இக்காலப் பகுதியிலேயே முத்தமிழ் மன்றச் செயலாளராகவும் பணியாற்றியதால் பேராசிரியர் க. வித்தியானந்தன் தலைமையில்
19

Page 11
முத்தமிழ் விழாவினை நடத்தி சிறந்த விழா ஒழுங்கமைப்பாளராகவும் தன்னை இனங்காட்டிக்கொண்டார். மலையக வரலாற்றில் முதன் முறையாக மலையக எழுத்தாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து வெற்றிகண்டவர். இந்நிலையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் தோற்றம் பெற்றது. இன்றுகூட கலை இலக்கிய நிகழ்வுகளில் குறித்த நேரத்திற்குப் பிரசன்னமாகும் ஒருவர் என்றால் அது க.ப.சிவம் தான். மலையகம் பற்றிய உணர்வு இவரின் உள்ளத்திலும், உதட்டிலும் மட்டுமன்றி நாடி நரம்புகளிலும் ஊறிவிட்டது என்றே கூறவேண்டும்.
1994ல் பிரியநிலா சஞ்சிகை, தனது அட்டைப் படத்தில் க.ப.சிவத்தின் படத்தைப் போட்டுத் தன்னை அலங்கரித்துக் கொண்டதுடன் தமிழ் இலக்கிய உலகமும் க.ப.சிவத்தின் இலக்கியப் பணியை நன்கு அறிய வாய்ப்பளித்தது.
கவிஞர் ஈழக்குமாரையும் இணைத்துக்கொண்டு ‘முத்தமிழ் முழக்கம் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி மலையக முன்னேற்றம, மலையகத்தில் இருக்கும் பிளவு என்பன பற்றி காத்திரமாக எழுதி வந்தார். இவரது கட்டுரைகள் இனவுணர்வு மிகுந்த கருத்துகளைத் தாங்கி வருகின்றன எனக்கருதி முத்தமிழ் முழக்கத்தைத் தடைசெய்து க.ப.சிவத்தின் முழக்கத்தைத் தடுக்க முற்பட்டபோது, மலைமுரசு என்ற சஞ்சிகையை ஆரம்பித்துத் தன் பணியைத் தொடர்ந்து முழங்கினார். "மலையக இலக்கியத்தினை வளர்த்தெடுக்க அறுபதுகளில் வந்த ஓர் ஆர்வமிக்க பரம்பரையின் முன்னணி வரிசையில் இருந்த மலையக எழுத்தாளர்களின் உந்து சக்தி” என இவரைப் பற்றி அந்தனி ஜீவா குறிப்பிடுகிறார். மலைமுரசு பத்திரிகையில் அதிக தீவிரத்துடன் எழுதிக் குவித்தார். சிறுகதை, கவிதை, நாடக, கட்டுரைப் போட்டிகளை முதல் முறையாக மலைமுரசு பத்திரிகையினூடாக நடத்தி ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட படைப்பாளிகள் உருவாகுவதற்குக் காரணகர்த்தாவானார்.
1963ல் கண்டியில் ‘சிவகலா’ என்ற மன்றத்தை ஆரம்பித்து பலரது நாடகங்களை மேடையேற்றினார் க.ப.சிவம். குறிப்பாக மருத்துவப்பேராசிரியர், எழுத்தாளர் நந்தியின் குரங்குகள் என்ற நாடகத்தை கண்டியில் மேடையேற்றியது சிறப்பான நிகழ்வாகி நாடகப் பிரியர்களின் மனதில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியது. 1986ல் கொழும்பில் இந்து கலாசார அமைச்சு 'பத்திரிகை முன்னோடி என்ற பட்டத்தை வழங்கியதோடு, பொற்கிழியும் கொடுத்துக் கெளரவித்தது. 1992ல் தேசிய சாகித்திய விழாவில் தமிழ்மணி என்ற பட்டமும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். ஆக்கிரோசமாகப் பேசும், ஆழமாகக் கருத்துரைக்கும், காத்திரமாக விமர்சிக்கும் இவர், நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரருக்கும், நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற நாவுக்கரசருக்கும் சளைத்தவரல்ல என்றே கூறவேண்டும். இலக்கிய நிகழ்வுகளின்போது தயவு தாட்சணியமின்றி கருத்துக் கூறும் இவர் முன்வரிசையில் அமர்ந்திருக்கும்போது எந்த விமர்சகருக்கும் பேச்சாளருக்கும் பயமும் கலக்கமும் இருக்குமென்றே சொல்லுதல் பொருந்தும். அதேவேளை சில வளரும் எழுத்தாளர்களது நூல்களைக் கடுமையாக விமர்சனம் செய்யும்போது, தத்திநடைபோடும் குழந்தையின் நடையில் குறை கண்டுபிடிக்கும் போக்குச் சரியில்லை என்று வக்காலத்து வாங்குவதையும் பார்க்கின்றோம். வெளியீட்டு விழாக்களில், நூல்விமர்சனம் என்ற பெயரில் காட்டமாகத் தாக்குவது தவறு என்றும், அதற்கென ஈடுபாடுள்ளவர்களை அழைத்து எப்படியும் குறைகளைக் கூறலாம் என்றும் விமர்சன அரங்கு என்றொரு புதிய நிகழ்வு தோன்ற வேண்டுமென்றும் வலியுறுத்துபவராக விளங்குகிறார்.
20

சில்லையூர் செல்வராசன்:
ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறைத் திறனாய்வு முன்னோடி - கே.எஸ்.சிவகுமாரன்
ஈழத்திலே தமிழ் மொழியில் திரைப்படத் திறனாய்வு முன்னோடி என அமரர் சில்லையூர் செல்வராசனைக் குறிப்பிடலாம். 'பல்கலை வேந்தர் என்ற பட்டத்திற்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவரான இந்தத் தான்தோன்றிக் கவிராயர், 'திலோத்தமை திருகோணமலையில் தனது பாலகப் பருவத்தைச் செம்மையாக்க முனைந்தவர்
சில்லையூர் செல்வ (தனியாத தாகம் - சில்லையூர் செல்வராசனி ராசன் அவர்கள் எழுத்துமூலம், இரண்டாம் பதிப்பு (1979 மீரா பதிப்பகம், அளிக்கைகள் மூலம், மற்றும் ( 191/23, ஹைலெவல் வீதி, கொழும்பு - 5. வானொலி / தொலைக்காட்சி போன்ற ஊட்கங்கள் மூலம், விளம்பரங்கள் மூலம் நமது நாட்டு கலை இலக்கிய முயற்சிகளுக்குப் பெரும் பங்களித்து மறைந்த செம்மல்.
எழுத்துத் துறையை மாத்திரம் எடுத்துக்கொண்டாலும் - பத்திரிகையாளன் (வீரகேசரி/ தினகரன் /சுதந்திரன் போன்ற இதழ்களிலே நேரடியாகவும், அல்லாமலும் பங்களித்தமை) கவிஞன் (ஊரடங்குப் பாடல்கள், ஷேக்ஸ்பியர் ஒரு ஜீவநதி ரோமியோ ஜுலியட், தலைவர்கள் வாழ்க மாதோ, சில்லையூர் செல்வராசன் கவிதை நூல்கள் - 1,ஆகிய கவிதைத் தொகுதிகள் சான்று), இலக்கிய வரலாற்றாசிரியன் (ஈழத்துத் தமிழ்நாவல் வளர்ச்சி நூல் சான்று) என்ற தளங்களில் அவர் செயற்பட்டு ஜொலித்தார்.
இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ் மொழி எழுத்தாளர்கள் திரைப்படத் துறையில் ஆர்வங்காட்டியமைக்கான சான்றுகள் என் பார்வைக்கு இன்னும் வரவில்லை. இந்த நிலையிலே, சில்லையூராரே ஈழத்துத் தமிழ்த் திரைப்படத் திறனாய்வு முன்னோடி எனலாம். இதுதொடர்பான சில விபரங்களை ‘தணியாத தாகம் நூலிலே ஆசிரியரே எழுதிய முன்னுரையிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஈழத்துத் தமிழத் திரைப்படத் துறை பற்றியும் நாம் அதிகம் அறியப்படாத பல தரவுகள் தரப்பட்டுள்ளன.
சில்லையூர் செல்வராசனின் துணைவியார் கமலினி அவர்கள் இரண்டாம் பதிப்புக்கு எமுதியமுகவுரையும், ஈழம் தந்த திறனாற்றலுடைய திரைப்பட நெறியாளர் பாலு மகேந்திராவுக்கு சில்லையூரர் எழுதிய ஆங்கில மொழிக் கடிதமும் தொடர்பு படுத்திப் பார்க்கவேண்டியதொன்று.
தமது பதிப்புரையிலே, முன்னணிச் சிறுகதையாளரும், கலைஇலக்கியப் பத்தி எழுத்தாளரும், கலைத்தரமான படங்களைத் தேர்ந்தெடுத்துச் சுவைப்பவருமான ரஞ்சகுமார், இந்த நூலை, "திரைப்படச் சுவடி எழுத விரும்புவோருக்குச் சிறந்ததோர் உசாத்துணை ஆவணமாகத் திகழத்தக்கது" எனக் குறிப்பிட்டிருப்பதும் அவதானிக்கத்தக்கது.
s: 岑 ඡී
‘தணியாத தாகம் நூலினை நாம் திறனாய்வு சார்ந்த அறிமுகத்தைச் செய்யு முன்னர், வரலாற்று நலன் கருதி, திரைப்படத்துறை திறனாய்வு 2.

Page 12
தொடர்பாகத் தமிழில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்துப் பங்களிப்புகள் பற்றியும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.
1950களில், சில்லையூர் செல்வராசன் அவர்கள் திரைப்படத்துறை சம்பந்தமாக, குறிப்பாகத் தமிழ் படங்கள் பற்றித் தமிழ் பத்திரிகைகளில் எழுதிவந்துள்ளார் எனத் தெரியவருகிறது. ஐம்பதுகளின் பிற்பகுதியில், கொழும்பிலிருந்து இரண்டு ஆங்கில வாரப் பத்திரிகைகள் வெளிவந்தன. ஒன்றின் பெயர் "சினியிலிம்ஸ் மற்றையது 'சிலோன் சினிமா. இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ‘தமிழராவர். சினிமாஸ் லிமிட்டட் வெளியிட்ட "சினியிலிம்ஸ்'சின் ஆசிரியர்களாக ஏ.ஆர். ஆசீர்வாதமும், எம்.டி ஜேசுரத்தினமும் விளங்கினார்கள். இவர்கள் பின்னர் நீதித் துறையில் ஜொலித்தனர். 'சிலோன் சினிமா பத்திரிகையின் ஆசிரியராக கே. யோகராஜா விளங்கினார்.
இந்த இரு பத்திரிகைகளிலும், தென்னிந்தியப் பின்னணிப்பாடகர்கள் பற்றியும், தமிழ் படங்கள் பற்றியும் மதிப்புரைகள் எழுதிவந்தேன். அதே சமயத்தில் சென்னையிலிருந்து தமிழ் சினிமா என்றொரு வார இதழ் தமிழில் வெளியாகி வந்தது. அதன் ஆசிரியர் ஏ.கரீம். அந்தப் பத்திரிகையிலும், தமிழ்த் திரைப்படங்களின் மேலைத்தேய இசையின் செல்வாக்குத் தொடர்பான கட்டுரைகளை எழுதிவந்தேன். ஆரம்ப காலத்தில் திரைப்பட இசை, திரைப்படப் பாடல்கள் பற்றியே எழுதி வந்தேன். இக்கட்டுரைகளைப் படித்து வந்த சில்லையூர் செல்வராசன் அவர்களை முதற் தடவையாக நான் சந்தித்த பொழுது இவைபற்றிக் குறிப்பிட்டுத் தனது ரசனையை அவர் வெளிப்படுத்திய போது நான் மெய் சிலிர்த்தேன்.
பின்னர் 1960 களின் மத்தியில், இலங்கை வானொலி தமிழ் சேவையில் இருவாரத்திற்கொரு தடவை தமிழ, ஆங்கிலம், ஹிந்திப் படங்கள் பற்றிய கால்மணிநேரத் திரைப்பட மதிப்பீடுகளை ஒலிபரப்பி வந்தேன். இந்தத் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியில், மாற்று வாரங்களில் கே. முரளிதரன் திரைப்பட மதிப்பீடுகளை ஒலிபரப்பிவந்தார்.
"சினிமா சிக்ஸ்டீன் என்றொரு திறனாய்வுச் சங்கம் அக்காலத்தில் இயங்கி வந்தது. திரு. முரளிதரன் அதன் தலைவர். மறைந்த நீல் ஐ பெரேரா அதன் செயலாளர். இருவரும் உலகத் திரைப்படங்கள், சிங்களப் படங்கள் ஆகியனவற்றில் மிகவும் பரிச்சயமுடையவர்கள். இந்தச் சங்கமும், கலம்பு பிலிம்ஸொஸைட்டி என்ற சங்கமும் அனைத்துலகத் திரைப்படங்களை இரசனை மட்டம் கூடிய பார்வையாளர்களுக்காகத் திரையிட்டு வந்தன.
நீல் ஐ பெரேரா, லொயிட் சில்வா, சாலி பராக்கிரம போன்ற திரைப்படச் சங்க ஆர்வலர்கள் இப்பொழுது மறைந்து விட்டனர்.
திரு. முரளிதரன் திரைப்பட மதிப்புரைகளை இப்பொழுது எழுதுவதில்லை. ஆனால் வணிகத் துறை நிருபராக, ஆங்கிலப் பத்திரிகைகளில் முரளி ஜயதேவா என்ற பெயரில் எழுதிவருகிறார்.
FCAC -இலங்கைத் திரைப்படத் திறனாய்வாளர்கள், பத்திரிகையாளர் சங்கம் 1960,1970 களில் மும்முரமாக இயங்கிவந்த ஒரு நிறுவனம். அனைத்துலகத் திரைப்படங்களை இங்கு தருவித்துத் திரைப்பட விழாக்களை வெற்றிகரமாக நடத்திவந்தது. அந்தச் சங்கத்தின் ஸ்தாபகத் தூண்களில் மறைந்த சில்லையூர் 22

செல்வராசன் அவர்களும் முக்கியமானவர். நானும் ஒரு நிறைவேற்றுக்குழு அங்கத்தவனாக இருந்து வந்தேன். சில்லையூரும் நானும் ஒருங்கு இருந்து அனைத்துலகத் திரைப்படங்களைச் சுவைத்து மகிழ்ந்த அனுபவமே ஓர் அனுபவம். எங்கள் இருவருக்கு மிடையே பெரும்பாலும் ஒத்த அழகியல் மதிப்பீடு இருந்தமை எமது அந்நியோன்யத்திற்கு வழிவகுத்தது.
திரு. சில்லையூர் செல்வராசன் அவர்கள் என்னைப்போல் எட்டநின்று பார்வையாளனாக இருக்கவில்லை. மாறாக சகல மட்டத்தினருடனும், சகல இனத்தவருடனும் ‘வாத்தி என்ற பெயரில் சகஜமாகப் பழகினார். சிங்களத் திரைப்பட ஊழியர்களுடன் பழகியதனாலும், அவர் பரிமாணம் அதிகரித்தது. நான் சிங்கள, ஆங்கில திறனாய்வாளர்களுடன் மாத்திரம் தொடர்பு கொண்டிருந்தேன். எனது இந்த 'பூர்ஷ"வா மனப்பாங்குமாறி நானும் சகலருடனும் பிற்காலத்தில் பழகுவதற்கு என்னை வழிவகுத்தவர்கள் மறைந்த நண்பர்கள் சில்லையூர் செல்வராசனும், எம்.எஸ். எம் இக்பாலும் ஆவர்.
,இனி, ‘தணியாத தாகம் சுவடியாக அமைந்த இந்த நூலுக்கு வருவோம். திரைப்படச் சுவடிகள் படித்து அனுபவதிற்குரிய ஓர் இலக்கிய வகை யல்ல. ஓர் நாடக எழுத்துப் பிரதி உயிர் பெறுவது அதன் மேடையேற்றத்தின்போதே என்பதுபோல, திரைப்படச் சுவடியும் முழுமைபெறுவது அதன் திரைப்பட வடிவத்தினாலாகும்.
தமிழிலே பேசும் படம் போன்ற சினிமா ஏடுகளில் படங்களின் திரைப்பட வசனங்கள் வெளிவந்தமையுண்டு. அவை உண்மையான படப்பிடிப்புக்குத் தேவைப்படும சீனாரியோ முறையிலான காட்சியமைப்பு, படப்பிடிப்பு அமைப்பு, நெறியாள்கைக் குறிப்புகள், நடிகர்களுக்கான அறிவுறுத்தல்கள், ஷொட், ப்ரேம் போன்ற வகையில் பகுப்பு முறைபோன்று சகல அம்சங்களையும் உள்ளடக்கும் எழுத்துப் பிரதியாக, பிலிம் ஸ்கிறிப்ட்டாக அமைந்திருக்கவில்லை. பின்னர் ஜெயகாந்தன் போன்றவர்களின் திரைப்படச் சுவடுகள் வெளிவந்தன. அதற்கு முன்னதாகவே, திரைப்பட பிரதிச் சுவடு என்று ஓரளவு கூறத்தக்க முறையிலே, அமரர் சில்லையூர் செல்வராசனின் ‘தணியாத தாகம் முதற்தடவையாக 19 ஆண்டுகளுக்கு முன்,1971ல் வெளியாயிற்று.
‘தணியாத தாகம்' என்ன கூறுகிறது? கமலினி செல்வராசன் இவ்வாறு கூறுகிறார்:
"நாம் பிறந்த நாடு நமதென்று அறிந்தும், புலம் பெயர்ந்துவிட்ட யாழ் மக்களின் பழமை வாழ்வின் மற்றொரு பதிவு தணியாத தாகம் என்பேன். வானம் பாாத்த பூமி, விவசாயம் மூச்சு, அந்த மக்களின் இறுக்கமான வாழ்வு, பங்குக் கிணறு, துலாமிதித்து நீர் பாய்ச்சல், அவர்களுடைய ஆசாபாசங்கள் சீதனப்பிரச்சினை, மேற்படிப்புப் பிரச்சினை, பல்கலைக்கழக வாழ்வு, குடும்பத்தில் சகோதரிகளுக்காகச் சீதனம் சேர்க்கும் சகோதரர்கள், உணவுப் பழக்கங்கள், சாதிமுறை, பேதங்கள் - இப்படிப் பல விஷயங்கள தணியாத தாகத்தில் பிரிக்கமுடியாத இழைகளாக ஊடுபாவாக நிற்கின்றன."
சில்லையூராரின் துணைவியார் கூற்று அதுவெனில், ஆசிரியர் கூற்றுக்களில் சிலவற்றையும் நாம் கருத்துக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
"கலையறியார் கைபட்டுக் கதைகளும் கலைஞர்களும் இந்நாளில்
23

Page 13
திரைப்படங்களில் படும் அவலப்பாடுகளைப‘பார்க்கையில், படமாகியிருந்தால் தந்திருக்கக்கூடியதைவிடப் பன்மடங்கு கூடுதலான ரசனைத்திருப்தியை நூலுருவில் இந்தச் சுவடு தரக்கூடும் என்றே படுகிறது. ‘தணியாத தாகம் என்ற சாதாரண தலைப்பை பாமர ரஞ்சகமான அதன் எளிமைக்காக மட்டுமன்று, எதிலும் என்றும் தணிவு காணாத வடபுலத்துத் தமிழ் மக்களுடைய மன அவசங்களின் குறிப்புணர்த்தக் கருதியும்தான் உபயோகித்திருக்கிறேன். கதையில் வரும் பங்குக் கிணறு அதே மக்களின் தண்ணிர்த் தவிப்புக்கு மட்டுமன்று, அவர்களின் மன வரட்சிக்கும் கிணற்றுத் தவளைப் பாங்கான முழுச் சமூக வாழ்க்கைமுறை வரட்சிகளுக்கும்கூட ஒரு சுட்டுச் சின்னமாக அமைகிறது.
சில்லையூர் செல்வராசன் தொடர்கிறார்: "தீபா என்னும் சிங்களப் பெண், முனியாண்டி என்னும் மலைநாட்டுப் பாட்டாளி, முருகன் என்னும் சீவல் தொழிலாளி, ஊரடிபட்ட பென்சனர் மணியத்தார் என்ற பாத்திரங்கள் மூலமும் லடிஸ் வீரமணியை உண்மைப்பாத்திரமாக்கி, பனைமரச் சிறப்புப்பற்றி வில்லுப்பாட்டு இசைக்கச் செய்யும் உத்தேசம் மூலமும் ஆங்காங்கே என் கோட்பாடுகள் சிலவற்றையும் சோமு என்னும் பாத்திரத்தில் என் இயல்புகள் சிலவற்றையும் இனங்காண முடியலாம். பெரும்பாலும் என் கிராமத்து மக்களின் வாழ்க்கைமுறை இக்கதையினூடே இழையூடவும் காணலாம்” இந்த இடத்திலே கமலினியின் கூற்றும் இங்கு நினைவு கூரத்தக்கது. *கமலி என்ற பாத்திரத்தில் என்இயல்பான குணங்களை அவர் அப்படியே கொண்டுவந்திருக்கிறார்."
இது இவ்வாறிருக்க - "கட்புலனுக்குரிய திரைப்படத்துக்கான இச்சுவடியில் செவிப்புலனுக்கான பேச்சு மிகுந்துள்ளது" என்பது உண்மையே. அதேவேளையில்,
சில்லையூராரின் விளக்கங்கள் சிலவும் நமது கவனத்துக்குரியது. "படமாக்கும் முறையிலும் உத்திகளிற் கவனஞ் செலுத்தியிருக்கிறேன். முதலாவது அங்கம் முடியும்வரை கதைத்தொகுப்பிலிருந்து கமரா வேறிடத்துக்குக் களம் மாறிச் செல்லாமல், கதையின் பிரதான பாத்திரங்களையெல்லாம் நிலைபரமாக அறிமுகப்படுத்திவிடுகிறது.
"சம்பாஷனை தவிர, திரைப்பட நெறிமுறை, ஆக்கமுறைக்கான குறிப்புவிதிகள் அனைத்தும் மூலச்சுவடியில் விவரமாக ஆங்கிலத்தில் உள்ளது. நூலாக அச்சேற்றுகையில் அவற்றில் தேவையானவற்றை மட்டும் தமிழாக்கியிருக்கிறேன். அண்மைக்காட்சி, தொலைக்காட்சி, உறைகாட்சி, மீள் காட்சி போன்ற புரியக்கூடிய கலைநுட்பச் சொற்களை மட்டுமே வாசகர் வசதிக் காகக் கையாண்டிருக்கிறேன்” இன்னுமொன்றையும் நாம் தகவலாய் எடுத்துக்கொள்ளவேண்டும்; "ஈழத்தின் முதலாவது தமிழ்ப் படமான ‘சமுதாயம் முதற்கொண்டு நம்நாட்டுச் சினிமாத்துறையில் சிரத்தை செலுத்திவருகிறார். நிர்மலா, மஞ்சள் குங்குமம் படங்களில் தான்தோன்றிக் கவிராயரான அவரின் பாடல்கள் ஒலித்தன. சிங்களப் படங்கள் இரண்டின் கதைகளில் அவர் பங்குண்டு. ஏறத்தாழ 27 பல்சுவை விவரணத் திரைப்படங்களுக்கும் பிரதி எழுதி குரல் கொடுத்திருக்கிறார்”. இந்த விபரங்களுடன் நானும் ஒன்றைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.
24

தற்போது தேசிய கூட்டுத்தாபனத் தலைவராக விளங்கும், முக்கிய சிங்களத் திரைப்பட நெறியாளரான திஸ்ஸ அபேசகர நெறிப்படுத்திய ‘கமம்" என்ற "டொக்கியுமன்டறி தமிழ்ப் படத்தில் சில்லையூர் செல்வராசனும், கமலினி செல்வராசனும் நடித்தனர். அதுபற்றி டெய்லி நியூஸ்" ஆங்கில நாழிதழில் நான் மதிப்புரை எழுதினேன் 'ஆதர கத்தாவ சிங்களப் படத்திலும், ஸ்டிவன்ஸ்டில்பேர்க் நெறிப்படுத்திய ஆங்கிலப்படத்திலும், பி.பி.சி விவரணப்படத்திலும் சில்லையூர் நடித்திருக்கிறார்.
1960, 1970 காலப்பகுதிக்குரிய யாழ்பாணச் சூழலும், ஏனைய இடங்களிலுள்ள சூழலும் இன்று பெருமாற்றமடைந்துள்ளனஇந்த நிலையிலே, இந்தத் திரைப்படக் கதையை நாம் அது எழுதப்பட்ட காலச் சூழலை மனதில்வைத்தே மதிப்பிடவேண்டும். அந்த வகையிலே இது ஒரு முற்போக்கான கதை எனலாம். யாழ்ப்பாணக் கவினுறு பேச்சு வழக்கு இயல்பாகவும் கவிதா உணர்வுடனும் சேர்க்கப்பட்டுள்ளது. படக்கதை சோகத்தில் முடிந்தாலும், படித்தவன் தன் கையையே நம்பிக் கமத்தொழிலில் ஈடுபட்டு முன்னேறுவது ஒரு துணிகரமான செயல்தான். இது ஓர் இலட்சியச் சாயல்கொண்ட யதார்த்த பூர்வமான கதை எனவும் கூறலாம். திரைப்பட உத்திகள் இன்றுவழமையாக மாறிவிட்ட இந்நாட்களில், அந்நாட்களிலேயே அத்தகைய உத்திகளை சில்லையூர் செல்வராசன் அறிமுகப்படுத்தியமை பாராட்டுக்குரியது. இந்த நூல் திரைப்படத்துறையில் ஈடுபட்டவர்களுக்குப் பெரிதும் உதவும். ஈழத்துத் தமிழ்த் திரைப்படத் திறனாய்வு முயற்சிகளில், மறைந்த சில்லையூர் செல்வராசன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, கே, எஸ் சிவகுமாரன், கே. முரளிதரன் போன்றோருடன் புதிய பரம்ப்ரையினரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை.
முற்றத்து வேலியை.
முந்தநாள் முழுக்க முதுகொடிய கட்டிய முற்றத்து வேலியை முட்டியது பக்கத்து வீட்டு மாடு தயவாய் சொன்னோம் கேட்பதாக இல்லை தட்டிக் கேட்டோம் தலை திருப்பவில்லை. அதனால்தான் முட்டிய மாட்டிற்கு முடிவுகட்ட நினைத்தோம்
இது சட்ட விரோதமா? தே. சங்கீதா
புத்தளம்
25

Page 14
mafiasir 6икfбmт.
அன்புள்ள "ஞானம் ஆசிரியருக்கு, மாவை - வரோதயன் புதிதாக முழுப்பூசணிக்காய் கொண்டு வந்துள்ளார். அவர் கூறியதை முருகையனை எழுதச் சொல்லுங்கள். அதன்பின், எனக்கும் சில்லையூருக்கும் உள்ள தொடர்பு முருகையன் சில சந் தர்ப்பங்களில் உண்மையில் நின்று மாறிய நிகழ்வுகளைப் பிட்டுக் காட்ட முடியும். 5ம் இதழுடன் இதை முடிப்பதாகச் சொன்ன நீங்கள் 6ம் இதழில் எனது கடிதத்தின் ழ்ழ்பகுதியையும் தராது இருட்டடிப்புச் செய்தீர்கள். இன்னுமேன் இழுக்கிறீர்கள். tரும்.வாழப் பிரார்த்திப்போம். - கவிஞர் ஏ.இக்பால்.
(இலீக்கியச் சர்ச்சைகளுடன் தொடர்பில்லாத தனிமனிதத் (Personal) தாக்குதல் கண்ளயும் ஒருவர்மேல் ஒருவர் சேற்றை அள்ளி இறைப்பது போன்ற சொல் லாடில்களையும் நாம் ஞானம் ச்ஞ்சிகையில் அநுமதிப்பதில்லை. படைப்பாளி களிடையே பகைமையை, காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துவனவாய் இலக்கியச்
ர்ச்சைகள் அமையக்கூட்ாது. ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கே கடுத்து மோதல்கள் வழிகோலுவன்வ்ாக 8, ... • ** pi
வணக்கம் ஞானம்' சஞ்சிகைத்தொடர்ந்து இலக்கியப் பணி விட்யங்க உள்ளன. சஞ்சிக்ை வெளி ஆற்ற வாழ்த்துக
செல்கிறார். அமரதாஸின் கவிதை நூலுக்கு முன்னுரை எழுதும் போது அந்த முன்னுரையில் சில பேர்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் குறிப்பிட்ட பேர்களைவிட சிவசேகரம் அவர்கள் குறிப்பிட்டுள்ள முருகையன், நுட்மான் மட்டுமல்ல சிவசேகரம், அயேசுராசா, ஊர்வசி, சோலைக்கிளி, வாசுதேவன், புஸ்பராஜன், சுவாமி என்போரும் இன்னும் சிலரும் அகவுணர்வு சார்ந்த கவிதைகளை எழுதியுள்ளனர். அந்த முன்னுரையில் யார் பெயரையும் விடவேண்டு மென்றோ மறைக்க வேண்டுமென்றோ நான் கருதவில்லை. எனினும் முக்கியமான அந்த கவிஞர்களின் பெயர்களை நிச்சயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்; ஒப்புக்கொள்கிறேன். இந்த இடத்தில் அதைச் சுட்டிக்காட்டிய மதிப்புக்குரிய சி.சிவசேகரம் அவர்களுக்கு என் நன்றி. - கருணாகரன்
26
 
 
 
 
 
 
 
 
 
 

பொய் முகம் (திருமதி யோகா பாலச்சந்திரனின் சிறுகதைக்கு எதிர்வினைக் கட்டுரை) (என்.சாளினி) டிசம்பர் மாதத்தின் "ஞானம்' சஞ்சிகை நண்பர் ஒருவர் மூலமாக என் கரத்திற்கு வந்தது. "ஆலகால விஷமா? அமிர்தமா? என்ற யோகா பாலச் சந்திரனுடைய சிறுகதை (வெறும் கற்பனை அல்ல) அவரின் பொய்முகத்தை வெளி உலகிற்குக் காட்டி நிற்கிறது. இந்தியப் பண்பாட்டின் குட்டைக்குள் இருந்து ஆண் ஆதிக்கத்திற்குக் குடை பிடிக்கும் ஒருவருடைய மனோ வெளிப்பாடே இச்சிறுகதை தவிர இது வேறெதுவும் இல்லை. உண்மையில் அச்சிறுகதையின் பாத்திரமாகிய ‘மனோவிற்கு யோகா பாலச்சந்திரன் நன்றாகவே குடை பிடிக்கிறார். காமசூத்திரத்தையும் தாம்பத்திய உறவையும் தென்னிந்திய மக்கள் புனிதம்போல போற்றுவதாகவும், பின்பற்றுவதாகவும் (பெய்யெனப்பெய்யும் மழைபோல்) பெண்கள் அதனைப் பின்பற்றுவதாகவும், பெண்கள் அதனால் ஆத்மார்ந்த சுகத்தை அநுபவிப்பதாகவும், எனவே சகிப்புத் தன்மையும், அடங்கிப்போகும் பண்பும் இயல்பாகவே பெண்ணினத்தின் நற்குண பண்பாடு என்பதுபோல அவருடைய சிறுகதை அமைந்திருக்கிறது. பெண் அடிமைக்கும் ஆண் ஆதிக்கத்திற்கும் பேர் போயிருக்கிற இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய கலாசாரங்களின் சகதிக்குள் இருந்துகொண்டு இவ்வாறு பிதற்றுவது அப்பொய் முகத்திற்குள் எத்தனையோ கோரமுகங்கள் உறைந்து கிடக்கின்றன என்பதை இங்கு எம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
இதன் விடயம் என்னவென்றால் பெண்ணாக இருந்து கொண்டு எமது பெண்களின் நிலை பற்றி அவருக்கு எதுவும் தெரியாமல் போனதுதான். இந்திய கலாசாரம் என்னவென்றால் ஆண் எழும்ப முன்னே மனைவி தான் எழும்பி கணவனுக்கான பணிவிடை செய்வதுதான். கணவன் குறட்டை விட்டுத் தூங்கும் போது மனைவியானவள் 4 மணிக்கே எழுந்து அடுப்படியில் வெந்து, துன்புறும் எத்தனையோ கோடிக்கணக்கான பெண்கள் எமது தென்ஆசியாவிலேயே நிறைந்து போயிருக்கிறார்கள். வீட்டைக் கூட்டிப் பெருக்கி, பிள்ளைகளை வளர்த்து பள்ளிக்கு அனுப்பி 24 மணிநேரமும் ஓடாய் உழைக்கும் பெண் ஆண்வர்க்கத்தினால் சுரண்டப் படுகிறாள் என்ற உண்மை முகத்தை நாணம் இல்லாமல் எப்படி யோகா பாலச் சந்திரனால் இந்து கலாசாரத்தை எப்படி சாக்கடைக்குள் மறைக்க முடிகிறது. சீதையை இராவணன் சுமந்ததும், இராமன் சீதையை தீக்குளிக்கச் செய்ததும் இந்திய கலாசாரத்தின் வரலாற்று நிகழ்வுகள்தான். இன்று எத்தனையோ ஆயிரக் கணக்கான பெண்கள் ஆண்களால் தீக்குளிப்பதும், படுபாதகமாகக் கொல்லப் படுவதும் இந்திய நாட்டிலேதான் என்பது இவருக்கு எவ்வாறு மறந்துபோனது? அவர் பேசுகிற இலங்கை மண்ணிலேதான் றீட்டா என்ற அப்பாவிப் பெண் படுபாதகமாக கற்பழித்துக் கொல்லப்பட்டாள். அதேமண்ணில்தான் விளையாட்டு வீராங்கனையான "சுசந்திகா ஆண் ஆதிக்கத்தினால் வஞ்சக வலைக்குள் வீழ்த்த முயற்சிக்கப்பட்டாள். உலகிலே ஆகக்கூடிய விபச்சாரம் நடைபெறுகின்ற நாடு யோகா பாலச்சந்திரன் பேசும் மரபுசார் இந்திய புனிதமான மண்தான். உலகிலேயே ஆகக் கூடுதலான சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுகின்ற நாடு இவர் பண்பாடு பற்றிப் பேசுகின்ற இலங்கை மண்தான். எனவே பெண்
27

Page 15
என்பவள் தனது சொந்த மண்ணில் சுதந்திரமாக நடமாட முடியாதவளாக ஆண்களின் அடிமைகளாக காலத்திற்கும், பாரம்பரியத்திற்கும் கட்டுண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அடிமையில் வாழுகின்றபோது, இந்த எழுத்தாளர் மனோவிற்குக் குடை பிடிப்பது வேடிக்கையிலும் வேடிக்கையே. தாம்பத்திய உறவும் பெண்களின் கோப தாபங்களும் யோகா பாலச்சந்திரனுக்கு வேண்டுமானால் ‘சம்மர் - வின்டர் போல இருக்கலாம். ஆனால் எங்களைப் போல உழைக்கும் பெண்களுக்கு ஒருபோதும் அது கோடையும் குளிரும் அல்ல. நான் மேற்கத்திய கலாசாரத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் அக்கலாசாரத்திற்கீடாக, அதற்கும்மேலாக எமது நாட்டிலே, எமது மண்ணிலே பெண் அடக்கு ஒடுக்கு முறை இருக்கும்போது பொய் முகங்கள் காட்டி ஏன் எமது உண்மை முகங்களை உலகிற்கு மறைக்கவேண்டும்?
மேலைத்தேய பண்பாட்டு கோலங்களில்தான் அந்நாடுகளில் 'எயிட்ஸ் னுடைய பரவலும் பயமும் அதிகரித்து உள்ளது போல இவர் இந்தச் சிறுகதையில் விளாசுகிறார். ஆனால் உலகிலேயே ஆகக் கூடுதலான எயிட்ஸ் உள்ள நாடு இந்தியாதான். இது எந்தப்பண்பாட்டுக் கோலத்தில் உருவானதென்பதை பாலச்சந்திரன் விளக்குவாரா? யோகா பாலச்சந்திரன் போன்றவர்கள் கொழும்பிலே உயர் குழாமினராக வாழுகின்றபோது சிலசமயம் இந்தியப் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் சுகமாகவும் ஒய்யாரமாகவும் இருக்கலாம். எம்மைப்போன்ற ஆடைத்தொழிற்சாலைகளிலும் பெருந்தோட்டங்களிலும் உழைக்கும் பெண்களுக்கு யோகா பாலச்சந்திரனுடைய பெண்ணினத்தைப் பாதுகாக்கும் பண்பாடுடன் துணைபோக இயலாது. இவ்வாறான வேஷங்களை வேரறுக்கும் போராட்டமே எமது போராட்டமன்றி பொய் முகங்கள் காட்டுவதல்ல.
来 米 米 水 率
ஞானம் ஒவ்வொரு இதழையும் வாசித்து முடித்தபின் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால் வாய்புக் கிடைக்கவில்லை. ஞானம் டிசம்பர் 2000 இதழை வாசித்தபின் எழுதியே ஆகவேண்டும் என்றாகிவிட்டது.
இவ்விதழை முதல்ப்பக்கம் முதல் கடைசிப்பக்கம் வரை ரசித்துப் படித்தேன். ஒவ்வொன்றும் ஆழமான சிந்தனைக்குரிய படைப்புக்கள்.
ஆலகால விஷமா அமிர்தமா? - யோகா பாலச்சந்திரனின் சிறுகதை அருமை யான படைப்பு. சிறுகதைபோல் வடிவமைக்கப்பட்டாலும், இன்றைய நமது பெண் ணினவாதிகள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கருத்து. - அன்புமணி - மட்டக்களப்பு.
ஞானம் நவம்பர் இதழ் கண்டேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன். ஆனால் ஒவ்வொரு இதழிலும் நேர்காணலை வாசித்து, அதனூடாக ஒவ்வொரு வருடைய உண்மைச் சொரூபங்களைக் கண்டு களித்த மனம் இது அது இல்லா ததால் 'சப்பென்று போய்விட்டது. ஞானத்தின் உயிர்நாடி நேர்காணலே. அது மட்டுமன்றி நேர்காணலில் தங்களின் சாதுரியம் பற்றிய கருத்தை நண்பர் வ.இராசையா எடுத்துரைத்திருப்பது சாலவும் பொருத்தமானதே.
எனவே எக்காரணம் கொண்டும் நேர்காணலை நிறுத்தாதீர்கள். இது காலத்தின் தேவையான ஒன்று. ஞானத்தின் நேர்காணல் தொகுப்பு நூலாக வரும்போதுதான் அதன் அருமை விளங்கும். த.சித்திஅமரசிங்கம், திருகோணமலை.
28

201, 1/1 பூரீ கதிரேசன் வீதி,
கடற்காற்று எழுதியவர்: அங்கையன் கயிலாசநாதன் வெளியீடு: குணசேன அன் கம்பனி
கொழும்பு - 11
முதற்பதிப்பு: 1972 மறுபதிப்பு: 2000
கடல்சார்ந்த வாழ்வினைப் பற்றி தமிழில் முதன்முதல் வெளியான நாவல் என்ற பெருமையினைப் பெறுவது எனது கணவரால் எழுதப்பட்ட இந்தக் கடற் காற்று, இது வாசகர்களாலும் விமர்சகர் களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றது. - இராசலட்சுமி கயிலாசநாதன்
இரண்டாம் பதிப்பின் முன்னுரையில்
பாரதி கவிதைச் சமர் தொகுப்பு: கமலினி செல்வராசன் வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன்
சென்னை. முதற்பதிப்பு: ஜூன் 2000.
'பாரதி கவிதைச்சமர் மிகப் பிரபல்யம் பெற்ற ஒன்று. இலக்கிய மேடைகளில் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படுகிற போதெல்லாம் நேரடியாக அவற்றைப் பத்திரிகைகளில் பார்த்தவர்கள் கிறங்கிப் போவதுண்டு. அதில் அப்படி என்னதான் சிறப்பிருந்திருக்கும். அந்தப் புதிரை அறிந்திராத இளைய தலைமுறை யினருக்கு இப்படையல் பெரு விருந்தாக இருக்கும். தேசிய கலை இலக்கியப் பேரவை
- பதிப்புரையில்
நானும் எனது நாவல்களும் எழுதியவர்: செங்கை ஆழியான் வெளியீடு: மல்லிகைப் பந்தல்
கொழும்பு - 13 முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2000.
இந்த நூல் வித்தியாசமான ஒன்று. ஒரு சுய சிருஷர் டியாளனி தனது படைப்புகள் பற்றி இந்த நூலில் பேசு கின்றார், எழுதுகின்றார். ஈழத்தில் மிக அதிகளவில் நாவல்களைப் படைத்தவர் களில் செங்கை ஆழியான் முக்கிய இடத்தை வகிப்பவர். அதிலும் தனது நாவல்கள் பிறந்து, வளர்ந்து எழுத்தில் வடிக்கப்பட்ட வரலாற்றை நூலுருவில் தருபவர் இவராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
- டொமினிக் ஜீவா - பதிப்புரையில்.
மனமும் மனத்தின் பாடலும் எழுதியவர்: முல்லைக் கமல் வெளியீடு: "எழு’ வெளியீட்டகம். புதுக்குடியிருப்பு, முல்லைத் தீவு. முதற்பதிப்பு: நவம்பர் 1999
எனது மனமும் மனத்தின் பாடலும் எனது நிலத்தில் இருக்கிறது. பூகம்பத்தி லிருந்தும் பூக்கத் தெரிந்த எங்களிடம் - யாரும் பூக்குவியலைப் பேசவேண்டாம். தியாகங்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுத்ததுபோல் தியாகம் வேறுயாரிட மும் கற்றதில்லை. நான் எனது மண்ணை ஓர் அழகிய கவிதையாகவே காணு கிறேன்.
முல்லைக் கமல் - முன்னுரையில்.
மனக்கோலங்கள் எழுதியவர்: க. கோணேஸ்வரன் வெளியீடு: கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கம், 34/1 வெலிங்கடன் கடை வீதி, திருக்கோணமலை. முதற்பதிப்பு: நவம்பர் 1999.
29

Page 16
காலத்திற்கு ஏற்ற நல்ல தமிழ் எழுத்துக்கள் என்றே கூற வேண்டும். மிகவும் சிக்கலான பல்வேறு விடயங் களையும் வாசகர்கள் புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதியுள்ளார். மக் களின் மனங்களிலே புரிந்துணர்வும் சகோதர மனப்பாங்கும் தோன்றிட இவரின் எழுத்துக்கள் உதவும்.
ஆர். சிவகுருநாதன், ஆசியுரையில்.
ஓ பலஸ்தீனமே எழுதியவர்: கலைவாதி கலீல் வெளியீடு மன்னார் வாசகர் வட்டம், முர் வீதி, மன்னார். முதற்பதிப்பு: 1999.
கபீலின் கவிதைகள் கருத்தியல் வயமானவை. புதிய சிந்தனைகளும் புரட்சிகர நோக்கும் இழையோடும்! கொடுமை கண்டு கொதித்தெழும் ஆவேசம், ஆக்ரோஷமெல்லாம் கவிதை யின் அடி நாதமாகும். ஆர்ப்பரித்து எழும் அலைகடலின் ஓசை சதா இரைந்து கொண்டேயிருக்கும். - அபூதாலிப் அப்துல் லதீப்
பின்னிணைப்பில்.
ELITLT - süLITL முதற்பதிப்பு: ஐப்பசி 2000 எழுதியவர்: சிவஞானராஜா வெளியீடு: நுண் கலைத்துறை. யாளல்கந்தவரோதயக் கல்லூரி, கந்தரோடை, சுன்னாகம்,
இசை ஆசிரியர் திரு. சிவஞானராஜா பல சிரமங்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுகொண்ட இக்கலைப் பொக்கி சத்தைத் தனது துறை சார்ந்த ஆசிரியர் கள் மாணவர்கள் ஊடாக வெளியிடுவது பெருமை தருகிறது.
க.சிவாஜி, முகவுரையில்.
SO
ஒரு பொழுதுக்கு காத்திருத்தல் (கவிதைகள்) எழுதியவர்: கருனாகரன் வெளியீடு மகிழ், 469 அக்கராயன் குளம்
ਸੰ. முதற்பதிப்பு: ஒக்ரோபர் 1999
இருளும் ஒளியும் புனரும் விடிவில் இருக்கும் ஈழத்தலத்தில் பெருகும் துயரும், துயரின் நிமிரும் புதிரும், விளையும் பொழுதில் கருனா கரனின் மனிதாயுத்தத்தின் கவியும், பணியும், இனியும் பெருகா திருக்க வழியே துளதா? பெருகும் விடியும் வரையும்.
- புதுவை இரத்தினதுரை,
முன்னுரையில்.
புது உலகம் (கவிதைகள்) எழுதியவர்: கவிஞர் பசுபதி வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன். முதற்பதிப்பு: 1965 இரண்டாம்பதிப்பு: ஜூன் 2000
கவிதை உலகில் பல்வேறு முன்னேற் றங்கள். புதுக்கவிதை, ஹைக்க என்று பலவித பாணிகளும் முனைப்புகளும் விரித்துள்ள பின்னணியில், விறுகுன்றாத பாரம்பரியக் கவிதை வார்ப்பின் ஜன நாயக உரிமைகளுக்கான போராட் டங்களை வலியுறுத்தி முப்பது ஆண்டு களுக்கு முன்பே கவிஞர் தம் கருத் துக்களை வெளியிட்டுள்ளார். - தேசியக் கலை இலக்கியப் பேரவை.
புதிய நூலகத்தினம் நீங்கள் எழுதிய நூல்களின் விபரங்களும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரகர் டு பிரதிகளை அனுப்பரி
 
 
 

காப்புறுதி
தொழிலாளர் அனைவரையும் காப்புச் செய்ப
தொழிற்சங்கம் முன்வருதல் வேண்டும் ஐயா
பழியாகும் தொழிலாளர் நிலையை மாற்றி త్తల్లీ
பதைப்பின்றி வாழவழி காட்ட வேண்டும் శ్లో E"ٹینیسیویی
கவ்வாத்துக் காட்டினிலே வெட்டும் போது
கைதவறி கத்தியினால் காபம் பட்டு
செவ்வானம் பிளப்பது போல் தசைபி ழக்க
செவிடர்களாய் குருடர்களாய் இருத்தல் நன்றோ?
தேயிலைபாம் கொழுந்தினையே அரைக்கும் போது
சுற்றுகின்ற இயந்திரத்தில் கைகள் மாட்டி
பாபமோரு இரத்தத்தில் மூழ்கி னாலும்
பதைபதைத்துத் துடிக்காத நெஞ்சம் இங்கே
உச்சிபலை மேலிருந்து உருண்டு கைகால்
உடைந்தாலும் உணர்வில்லை உதவி பற்று
பச்சிலையை பூசியுடல் தேற்றிக் கொண்டு
பசிபகற்ற மீண்டுமலை ஏறிச் செல்வார்
ஆண்களுடன் பெண்களுந்தான் சீராய் வாழ
ஆயுட்காப் புறுதியினைச் செய்ய வேண்டும் மாரன்டாலும் ஊனமுற்றுப் போனா லுமவர் âğF TLIGT
மக்களுந்தான் வளமாக வாழ வேண்டும் குறிஞ்
முதலாளியினை நம்பியிங்கு வாழுங் கூட்டம்
முகம்மலர நாளெல்லாம் உழைத்து வாழ உதவிடுக தொழிலாளரையும் காப்புச் செய்து
உள்ளத்தில் போற்றிடுவார் தெய்வ மாசு.
விமர்சனம் அடிப்பது திறனாய்வுப் பற்றித் தமிழில் கடந்த இருபது முப்பது வருட காலமாக நிரைய எழுதவும் பேசவும் பட்டுள்ளது. விமர்சனம் என்பது கலையா? விஞ்ஞானமா? என்று மிகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானம் என்பது வாய்ப்பாட்டு மட்டைகளும் யாத்திரிகமான விதிகளும் சூத்திரங்களும் என்று யாரும் கருதினால், விமர்சனம் கலையாக இருப்பது நல்லது. முற்றிலும் உணர்வு சார்ந்து எந்தவிதமான பகுப்பாய்வுக்கும் இடமளியாததாக இருப்பதே கலை என்றால், விமர்சனம் விஞ்ஞானமாக இருப்பது நல்லது.
விமர்சனங்கள் நூலின் முன்னுரையில் சி.சிவசேகரம்.
3.

Page 17
ஜிவிதத்தில் எரிய சண்டைத்தீ மூழ்கிறது! தேர்தல் இடைவெளிபோல் ஐந்தாண்டுக் கொருக்கா இடப்பெயர்வி
gyfri:3T GRTL 201LL.j6ïh Gïl'. LTT அன்றே. பறந்து தப்ப எல்லைப் புறத்திருந்து விரட்டுண்டோர் ஒழுங்கான பயணம் உடனென்றால் புலம்பெயர ஒழுங்குகளைச் செய்வோர் ஒருவர் இ போனவாரம் வந்து போய்விட்ட கப்பல் கானவில்லை நித்தம் காணும் பலமுகத்தை "என்செய்வம்" கேள்விக் குறிச்சுருக்கி; "ஊருஞ் சதமல்ல. உற்றார் ச "காகம் பெரிசல்ல. கலையும் ெ "காணி பூமி சொத்தைக் காத்து என்ற துறவுநிை எவரிடத்திலும் என்னோடு அன்றிங்கே இருந்திட்ட நட் இன்றில்லை! இந்தக் கோவிலடி வாசலிலே மாலைஇளைப் பாறும் வயதுபோன சி நானும் ஓரிரண்டு நண்பர்களும்! வழமைபோல். ஐந்தடிக்கப் பூசை, அருள் சுரக்கும் பூசைமணி, 'அர்த்த சாமத்தோடு அகமுறையும் திருநீறு தந்துசெல்லும் ஐயாமார், சிலுசிலென்று பட்டம் விடுங்காற்று, பொலிவிழந்த தெரு கடைகள், வீதிமணற் கோட்டைகட்டும் ஏதும்வி மாலையாகு முன்னே மனங்களிலே பயம்பூசும் ஊரடங்கு; ஓம். எம் உயிர்வட்டம் குறுகியது "ஜீவிதத்தில் எரிகின்ற தீ எனையும் வாழ்வுள் உறுத்தினாலும். மண்வாசம் மயக்கிறது "நாளை"? அது பெரிய கேள்விக்குறியாக நீள்கிறது; என்றிந் நிலம்நிமிரப் போகிறது?
5
intern AfriNr.

yab go
F
等奪還S 宏
". . R ། -- ఫ్రో 윤 조 அலைக்கிறது! s ミ حقیق”
-- -
岔 仁 ت*
பே அங்கெல்லாம்! 그
பே h Sa_ حتعليم ருவரல்ல! பின்பின் 多
ம். ஊசலாடி தமல்ல"
க் கிடந்தென்ன?” հլ:
பொதுவாய்! ԼւկLIճւ)
லரோடு
ஆண்டவனார்,
ாங்காப் பாலகர்கள்,
கருக்கிடுமோ?"
リ - ميام ثم ".
* ܩ
AF, t
OUSE,85fA, Katugastola Rd, Kandy.