கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.02

Page 1


Page 2
நூற்றாண்டுகள் பிடித்தது என் உடலையும் என் சூரியனையும் அவர்கள் துண்டுதுண்டாய் வெட்டுகிறார்கள் அவர்கள் அவற்றைத் துண்டுதுண்டாய் வெட்டுகிறார்கள்
நீ வெள்ளையாய் இருப்பாய்
ந நீ கறுப்பாய் இருப்பாய் Luf7 சோற்பம் அல்ஜீரியக் கவிஞர் முயற்சியின்மை மலிகா ஒலலுற்செனின் என்னை ஒரு காட்டுமிராண்டியாக்க 2 கவிதைகள் ஒரு நூறாண்டுகள் பிடித்தது
T "ே': பிரத்தது. பரஞக மூலத்திலிருந்து
ஆங்கிலம் வழி தமிழில்
அவர்கள் எல்லாவற்றையும் எம்.ஏ.நு.மான். துண்டுதுண்டாப் வெட்டுகிறார்கள்
திணைக்களங்கள் மாவட்டங்கள்
முள்ளுக்கம்பி எல்லையுடன் கூடிய படங்களை வெட்டி எடுக்கிறார்கள் அவர்கள் என் உடலைத் துண்டுதுண்டாய் வெட்டுகிறார்கள் அதை ஒரு வரலாறாக ஆக்குவதற்கு
இறந்தவர்கள் நிமிர்ந்தார்கள்
எனது நாடு ஒரு புகலிடம் * ۔ --سمیہ " ヘ இங்கு பைத்தியக்காரர்கள் தம் கண்களால் பேசுகின்றனர் تن=" . ت؟
f ஏனெனில் அவர்களுக்கு நாக்கு இல்லை الجيب. '. கறுப்பு இரவில நான் இங்கு நடந்திருக்கிறேன்
في A3 புதைகுழியை நோக்கி நீண்டதூரம் நடந்திருக்கிறேன் காடுகள் பேசுவதை ”۔۔ குளிர்ந்த விளக்குகளுடன் நகரங்களை | /ށދ / ́ t நடைபாதைகளில் கார்களை "... நான் கண்டிருக்கிறேன்
கரென்பர் கடல் என் சூரியனை முச்சுத்திணறவைக்கிறது கவனம்
கடல் என் குரலை முடுகிறது
மலிகா ஒலலுற்சென் 1930ல் அல்ஜீரியாவில் பிறந்தவர். அல்ஜீரியாவின் முக்கிய பெனர் கவிஞர்களுள்
இன்று பைத்தியக்காரிகள் பாறைகளுடன் பேசுகிறார்கள் மலைகளுக்குக் கதை சொல்கிறார்கள்
இறந்துபோன நம்மவர்கள் நிமிர்ந்து வெளியே சென்றிருக்கிறார்கள் இறந்துபோன நம்மவர்கள் நடந்து சென்றிருக்கிறார்கள்.
 
 
 
 
 
 
 

பரதா ஆசிரியர் : தி. ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞா எனப் சஞ் சனகள் f? r r" #, i r Tr i"gay, I fi i J -*6J ! . Li I f&&eri”74~7í கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர் ஈளே பொறுப்புடை
'il f' li li TT
தொடர்புகளுக்கு.
தி. ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி, தொ.பே. - 08-234753
(-),
F: x - []8-3ች ,1`W55
E-M:ı il - gı: Hızılırslı ile, ilk
சிறுகதை ரொபி. - 04 דו #, דןLrigörji ({FT - #/t8:F
கட்டுரைகள் நான் பேச நினைப்பதெல்லாம் = 10 கலாநிதி துரை மனோகரன் எண்பதுகளில் தமிழில் நவீன நாடகம்- 13
எஸ். TேகTளந்தண்
பியதாச சிரிசேனவின் "ஜயதினம் எபவும் றொஸ்லினும் சிங்கள பெளத்த இன எழுச்சியும் - 18 ாள்ாநிதி. எம்.எஸ்.எம்.: ஸ் எஸ்.எதிர்மன்னசிங்கம் - 27 ந.பார்த்திபன்
கவிதைகள் நூற்றாண்டுகள் பிடித்தது இறந்தவர்கள் நிமிர்ந்தார்கள் - 02
பலீகா ஒவதற்செனன் இரண்டு கவிதைகள் - 16
சித்தாந்தனர்
ԲԱԵ եւIITIգ - 31
இக்பால் அலி
புதிய நூலகம் - அந்தன ஜீவா 29
வாசகர் பேசுகிறார் - 24
அட்டைப்படம் - தT. ஆனந்தனர்

Page 3
வெள்ளிக் கிழமைக்குரிய நிம்மதி யும் ஆறுதலும் மனதில் குடிகொண்டிருந் தாலும் அந்த நிம்மதியையும் மீறிய ஒரு வேதனைக் கீற்று உணர்வில் கலந்து உறுத்திக் கொண்டிருந்தது.
சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் தொடர்ந்து விடுமுறை வருவதால் வெள் ளிக்கிழமை என்பது வேலைக்குப்போகும் எவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிற ஒரு நாள்தான்.
மக்கள் இருவரும் தமது செல்ல நாய் ரொமியுடன் கொட்டமடித்துக் கொண்டிருந்தார்கள்.
வெண்மையும் சாம்பலும் கலந்த ஓர் அபூர்வநிறத்தில் அப்பாவித்தனமான முகத்தோற்றமும் கம்பீரமான உடல் வாகும் கொண்ட இந்த ரொமி வீட்டுக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு அது தான் விளையாட்டுத் தோழன்.
ரொமியுடன் பாய்ந்து பாய்ந்து அவர்கள் இருவரும் குதூகலித்துக்
கொண்டு இருந்தபோதும் என் மனம்
அவர்களது மகிழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்தது.
இரவு கண்ட அந்தக் கனவின் பயங் கரம் இன்னும் மனதை விட்டு அகலா மல் பயமுறுத்திக் கொண்டிருந்தது. காலையில் எழுந்ததிலிருந்து வேலைக் குப்போய்த் திரும்பிவந்து இத்தனை நேரமாகியும் அந்தக் கனவு ஏற்படுத் திய தாக்கம் சற்றும் குறையாமல். அடிமனதில் இருக்கிற சில நினைவுகள் கனவுகளாக வெளிப்படும்
04
எண் பார்கள். எந்தப் பெண்ணுமே மனதால் நினைத்துப் பார்க்கவும் அஞ்சு கின்ற அந்த நினைவு என் அடிமனதில் மட்டும் ஏன் வரப்போகின்றது?
வெறும் கனவுதானே என்று விட்டுவிட முடியாதபடி அதன் தாக்கம் உள்ளத்தைப் பீதியிலேயே அமுக்கிக் கொண்டிருப்பதால் எனது புலன்கள் வேறெதிலும் பதிய மறுத்தன. அலுவல கத்திலும் வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாத தடுமாற்றம். இரண்டு தடவைக்குமேல் மேலதிகாரி கூடக் குறைப் பட்டுக் கொண்டபோது ஒரு கனவுக்காக நான் ஏன் இவ்வளவு தூரம் குழம்பிக் கொண்டிருக்கிறேன் என்று அறிவு விழித்துக்கொண்டாலும் அந்த அறிவையும் மீறிய ஏதோ ஒன்று என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
சிலவேளைகளில் நான் காணும் கனவுகள் பலிப்பதும் என் மனச் சஞ்சலத்துக்கு ஒரு காரணமாயிருக் கலாம்.
"அம்மா, பின்னேரம் கோயிலுக்குப் போகச் சொல்லிப் போட்டுப் போனவர் அப்பா." ரொமியுடன் விளையாடிக் கொண்டிருந்த மூத்தமகள் திடிரென அப்பாவின் வார்த்தைகள் ஞாபகம் வர என்னருகே ஓடிவந்தாள்.
‘என்ன இது, என்னுடைய மன உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள் போல இவர்கள்.
"நீங்கள் வாறதா அம்மா?" என்னால் அன்று கோயிலுக்குப்
 
 

போகமுடியாதென்பதை இவர்களுக்கு எப்படி உணர்த்துவது?
"நான் வரல்ல மகள், தங்கச்சி யையும் கூட்டிக்கொண்டு போங்க. மாமாவையும் கூட அனுப்புறன். அர்ச் சனைக்குக் காசு தாறன். அப்பாட பேருக்கு நவக்கிரகங்களுக்குப் போட வேண்டும். கெதியா வெளிக்கிடுங்க." "ஏனம்மா அப்பாக்கு மட்டும்?” "அப்பாக்கு மட்டுமில்ல எல்லாருக் கும்தான். அப்பாக்கு மட்டும் நவக்கிரகங் களுக்கும் போடச் சொல்லுங்க."
களைப்பையே அவரிடம் காணமுடியாது. உடுப்பை மாற்றித் தேநீர் குடித்தால் ஏதாவதொரு வேலையை தேடிப்பிடித்துக் கொண்டு செய்யத் தொடங்கிவிடுவார். கோஸ்பைப்பைத் தூக்கிக் கொண்டு பூமரங்களுக்குத் தண்ணீர் அடிப்பது, தென்னங்கன்றுகளுக்குப் பாத்தி பிடித்து உரம் போடுவது, மோட்டார் சைக் கிளைக் கழுவுவது, ரி.வி அன்டெனா வைச் சரியாக்குவது. இப்படி ஏதாவ தொரு வேலையைத் தேடிப்பிடித்துச் செய்யத் தொடங்கிவிடுவார்.
அந்தப் பொல்லாத கனவு பலித்து விடக் கூடாதென்று இறைவன் ஒருவனிடம் தானே
கேட்கமுடியும், தாயிடம் வதைக்க
காலையில் எழுந் ததும் இந்தக் கனவின் பயங்கரம் என்னை ‘கடவுளே,
அன்றும் பாடமறுத்த றேடியோ வைத் தூக்கி வைத்துக்கொண்டு ஏதோ ஆராய்ச்சி பணிணத் தொடங்கினார். ரொமி
முறையிடும் குழந்தை யைப்போல மனக் கஷ்
இதென்ன துர்க்கனவு, அவருக்கு எதுவும்
அவரருகிலி போய் ச் சுருண்டு கொண்டது. ,
டங்கள் ನಿ॰ ஆகிவிடக்கூடாதே." (3 "சீ தள் ಖ್ವ: லாமஇறைவனிடமதான் என்று நான் தவித் த வேலை செய்யப் போனாப் ஒடுகிறோம். *|பக்கத்தில் வந்து சுருள்றது
மக்கள் புறப்பட்டுக்
தான் உன்ர பழக்கம்."
கொண்டிருக்கும் போதே வேலைக்குச் சென்ற கணவர் திரும்பி வந்துவிட்டார்.
"கோயிலுக்குப் போகச் சொல்லிப் போட்டுப் போனனான். இன்னும் போகல்லப் போல கிடக்குது. அங்க பூசை தொடங்கப் போகுது.” வந்ததும் வராததுமாகக் கணவரின் முணு முணுப்பு.
“போகத்தான் வெளிக்கிடுறாங்க, பக்கத்திலதானே கோயில் ரெண்டு நிமிசத்தில போயிரலாம்.”
பிளாஸ் க் கிலிருந்த தேநீரை ஊற்றிக்கொடுக்க, குடித்துவிட்டு அவர் தன்னுடைய அலுவல்களைக் கவனிக்கத் தயாராகிறார். அவர் எப்போதுமே இப்படித்தான். பதினைந்து கிலோமீட்டர் மோட் டார் சைக் கிள் ஓடிவந்த
0S
அவர் ரொமியைத் துரத்தினார்.
சற்றுமுன்னர் அது மக்களுடன் விளையாடிய விளையாட்டை நினைத் துக்கொண்டேன். அவர்கள் பந்தைத் தூர வீசிவிட அது பாய்ந்து சென்று பந்தை எடுத்துவந்து கொடுக்கும். திரும்பவும் உடனே பந்தை விசாமல் பந்தை மேலே தூக்கிப் போட்டுப் போட்டுப் பிடிப்பார்கள். ரொமி பாய்ந்து அவர்களுடைய தோள்களில் முன்னங் கால்களைத் தூக்கிப்போட்டுப் பந்தை வீசச் சொல்லுமாப் போலக் குரைத்து ஏதோ சொல்லும். மக்கள் சற்றுநேரம் ஏமாற்றிவிட்டு வீசுவார்கள். ஒடிப்போய் பந்தை எடுத்துவரும்.
மக்கள் இருவரும் இந்த ரொமியில் வைத்திருக்கிற பாசம் பார்ப்பவர் களுக்கு வியப்பைத் தரும்.

Page 4
கோயிலில் மணிச்சத்தம் கேட்கத் தொடங்கியது. அவசர அவசரமாகப் புறப்பட்ட மக்கள் கேற்றடிக்குப் போவ தற்கிடையில் ரொமி அவர்களை முந்திக் கொண்டது.
"அம்மா, ரொமி வரப்போகுது கூப் பிடுங்க.." லாவண்யா சத்தம் போட நான் அதைக் கூப்பிட்டுக்கொண்டே கேற்றடி வரை சென்றேன். அது என்னையும் மக்களையும் முந்திக் கொண்டது.
மக்கள் இயன்றவரையும் துரத்திப் பார்த்தனர். அதற்குப் புரிந்துவிட்டது - எங்கோ போகப்போகிறார்கள் என்பது. அதன் வழக்கமே இதுதான். வீட்டி லிருந்து நாங்கள் யாராவது வெளியில் போகப் புறப்பட்டால் எங்களையும் முந்திக்கொண்டு கேற்றடிக்குப் போய் விடும். கேற்றால் போக முடியாமல் மறித்தால் மதிலுக்கு மேலாகப் பாய்ந்து ஓடிவிடும். இப்படி அது ஆறடி மதிலுக்கு மேலாகப் பாய்வதை விட்டுக்கு வரு வோரும் வீதியால் போவோரும் வேடிக்கையாகப் பார்த்து நிற்பார்கள்.
அன்று மதில் பாயவேண்டிய அவசியமே அதற்கு இருக்கவில்லை. திறந்திருந்த கேற்றைத் தாண்டி வெளி யில் போய் மக்களைக் காத்து நின்றது. இளைய மகள் சிலவேளைகளில் அதைக் கட்டிப்பிடித்துத் தூக்கிவந்து
உள்ளே விடுவாள். அவர்கள் போய் மறையும் வரையில் நான் அதற்குக் காவல் நிற்பேன்.
அன்றும் அவள் தூக்கிவந்து விடுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவளுடைய சிந்தனை வேறுவிதமாக இருந்தது. கோயிலுக்குப் போகும் போது நாயைத் தூக்குகிறாள். என்று மகளு டைய புனிதத்தன்மை குறைந்துவிட்ட தாக நினைத்து அப்பா சத்தம் போடு வார் என்ற பயம் அவளுக்கு.
பூசைக்குப் பிந்தினால் அர்ச்சனை பண்ண முடியாமற் போய்விடும் என்ற அங்கலாய்ப்பு எனக்கு.
"அது வந்தால் வரட்டும், பூசை தொடங்கப்போகுது. கெதியாப்போங்க." நான் அவசரப்படுத்தினேன். கூடவே எனது தம்பியும் மருமக்களுக்குக் காவ லாய்ப் புறப்பட்டான்.
ரொமி அவர்களை முந்திவிட்டது. கோயிலுக்குப் போய் என்ன கூத்துக் காட்டப் போகிறதோ என்ற வருத்தத் துடன் கடைசிமுறையாய் "ரொமி, வா இஞ்ச.” என்று அதட்டினேன். திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ஓடிப்போய் விட்டது.
கணவர் தன் வேலையில் மும்முர மானார். 'கடவுளே, அந்தக் கனவு வெறும் கனவாகப் போய்விட வேணும். இவருக்கு ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது. நான் மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.
“லாவணி யாதான் அதற்குச் செல்லம் குடுத்துக் கெடுத்து வைச்சிருக் கிறாள். எங்க போனாலும் பின்னால தானே போகுது." அவர் ரொமியின் நினைவிலேயே மூழ்கியிருந்திருக்கிறார். அவர் சொல்வதும் சரிதான். ரொமி என்றாலே அவளுக்கு உயிர். அதுவும் அப்படித்தான்.
சிலவேளைகளில் அது செய்கின்ற
06
 

வேலைகளைப் பார்த்தால் பகுத்தறி வில்லாத ஒரு சீவன் செய்கிற வேலை யாகத் தெரியாது.
நாங்கள் எங்கேயாவது போவ தற்குப் புறப்பட்டால் எங்களுக்கு முன் னால் போய் வீதியில் நின்றுகொண்டு எந்த வழியால் போகிறோம் என்பதை அவதானிக்கும், நாங்கள் வழக்கமாய்ப் போகும் இடங்கள், வழக்கமான பாதைகள் எல்லாம் அதற்குத் தெரியும். நாங்கள் போகும் வழியை அவதானித்து விட்டு நாங்கள் போக வேண்டிய வீட்டுக் கேற்றடியில் முன்னாலேயே ஓடிப்போய்க் காத்துநிற்கும்.
ஒரு தடவை பிறந்தநாள் விழா ஒன்றுக்குப் போயிருந்தோம். ரொமியும் பின்னாலேயே வந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் அதனைத் துரத்த முடிய வில்லை. "நிற்கட்டும் பாவம்" என்ற வீட்டுக்காரர்களின் பரிந்துரையால் பேசாமல் விட்டுவிட்டு நாங்கள் உள்ளே போய்விட்டோம். பார்ட்டி எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்காக எமது செருப்புகளை அணிந்து கொள் ளத்தேடியபோது எனது செருப்புகள் இரண்டும் காணாமற் போயிருந்தன.
“இவ்வளவு பேர் வந்துபோன இடத்தில் என்னுடைய செருப்புத்தான் தொலைய வேண்டுமா?” எங்கெல் லாமோ தேடிக் களைத்து வெறுங் காலுடன் வீடு திரும்பினோம். அங்கே எமக்கோர் அதிசயமே காத்திருந்தது. எனது செருப்புக்கள் இரண்டையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமி அலட்சியமாகப் படுத்திருந்தது.
என்னால் நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருந்த பலருடைய செருப்புகளுக்கு மத்தியில் இது என்னுடைய செருப்புகளை எப்படி இனங்கண்டு தூக்கி வந்தது? இந்த
அறிவு இதற்கு எங்கிருந்து வந்தது?
இப்படி ஒரு தடவையல்ல, பல தடவைகள் நடந்திருக்கிறது. சிலவேளை களில் ஒவ்வொருவருடைய ஒற்றைச் செருப்பையும் தூக்கி வந்துவிடும். செருப் பைக் காணவில்லை என்றால் அது ரொமியின் வேலையாகத்தான் இருக்கும் என்று துணிந்து சொல்லுமளவுக்கு அதனுடைய செயற்பாடு அமைந்து விட்டது.
எங்கேயாவது தூர இடங்களுக்குப் போவதற்கு பளல் சுக்காகக் காத்து நின்றால் நாங்கள் பஸ் ஏறும் வரையில் எங்கள் காலடியிலேயே நிற்கும். பஸ் ஏறிப்போன பின்தான் ரொமியும் அந்த இடத்தை விட்டுப் போகும்.
ஏன் இந்தப் பிறவி எங்கள் குடும்பத்தின் மீது இத்தனை அக்கறை காட்டுகின்றது என்பதை நினைக்கும் போது எனக்குப் பெரும் புதிராகவே தென்படும். மறுபிறவி என்பது உண்மை யாக இருந்து, எம்மிடத்தில் இருந்து பிரிந்து சென்ற எமது அன்புக்குரிய வர்கள் யாராவது இப்படி ரொமியாகப் பிறந்து வந்து எங்களைக் காக்கிறார் களோ என்று நினைப்பேன்.
கோயிலில் பூசைக்கான மணி ஒலிக்கத்தொடங்கியது. “கடவுளே, நான் கண்ட அந்தப் பொல்லாத கனவு கனவா கப் போய்விடவேண்டும். அது நனவாக மாறாமலிருக்க நீதான் அருள் செய்ய வேணும்.” நான் மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.
"பூசை தொடங்கப்போகுது. இந்த ரொமி இன்னும் திரும்பி வரவில்லையே, பிள்ளையஞக்குப் பின்னாலை கோயி லுக்குள்ளையும் போயிருக்கும். சனங் கள் சத்தம் போடப் போகுதுகள்.” கண வர் சலித்துக் கொண்டார்.
"அதுகளும் பாசம் காட்டத்தான்
O7

Page 5
ரொமியும் இப்பிடி ஒட்டிக்கொண்டு திரி யுது. குழந்தையள வளர்க்கிற மாதிரித் தானே ரெண்டு பேரும் சேர்ந்து வளர்த் ததுகள்."
சின்னக் குட்டியாய் ரோட்டில் கிடந்து கத்திக் கொண்டிருந்த ரொமியை அப்பாவிடம் கெஞ்சி, சம்மதம் பெற்றுத் தூக்கிவந்ததும், துணியில் தொட்டில் கட்டி அதற்குள் படுக்கவைத்ததும். அடிக்கடி பால் கரைத்துக் கொடுத்ததும், நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற் குள் இந்த ரொமி என்னமாய் வளர்ந்து விட்டது.
கால்களை நீட்டிப் போட்டுக் கொண்டு முன்னங்கால்களில் முகத்தை வைத்துக் கொண்டு அது படுத்துவிட்டால் போதும். அருகில் குந்திக் கொண்டு அதன் பட்டுமேனியைத் தடவித் தடவி ஒரு குழந்தையைத் தூங்க வைப்பது போல அதனைத் துங்க வைத்துவிட்டுத் தான் எழும்புவார்கள்.
விளையாட்டுச் சிற்றுண்டிகள் செய்து அதற்குப் பிறந்தநாள் கொண் டாடுவதும் கேக் வெட்டுவதும் விளை யாட்டுப் பழக்குவதுமாய் வீடே அமர்க் களப்படும். அது வீட்டுக்கு வந்து ஒரு வாரம் வரைக்கும் "குட்டிக்கு என்ன பேரம்மா வைக்கலாம்?” என்று கேட்டுக் கேட்டு என்னைத் துளைத்து எடுத்தபின் அவர்களாகவே ரொமி என்ற பெயரைத் தெரிந்தெடுத்திருந்தார்கள்.
“ரொமி, வாடா" என்று மக்கள் குரல் கொடுத்தால் போதும். எங்கிருந் தாலும் பாய்ந்து வந்து அவர்களருகில் நிற்கும். தன்னுடைய முன்னங்காலைத் தூக்கி அவர்களில் ஒருவருடைய கால் களின் மேல் வைத்துக் கொண்டு நிற்கும். காலை இழுத்தெடுத்தால் தேடித் தேடித் தன் காலைத் தூக்கி வைக்கும்.
08.
அப்படி அது நிற்பதைப் பார்த்தால் ஏதோ ஒர் உணர்வை அவர்களுடன்
பகிர்ந்து கொள்வதைப் போலிருக்கும்.
கோயிலில் மணிச்சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டிருந்தது. பூசை முடிந்து அர்ச்சனை முடிய இன்னும் நேரம் எடுக்கும்.
மெல்ல மெல்ல இருள் சூழத் தொடங்கியது. இரவுச் சமையலுக்கான வேலைகளைத் தொடங்கலாம் என்று ஆயத்தமாகும் வேளையில் மக்களுடன் கோயிலுக்குப் போயிருந்த தம்பி அவசரம் அவசரமாக வந்து நின்றான். முகத்தில் கலவரம். "என்ன இடையில் வந்து நிக்கிறாய்? பிள்ளையஸ் எங்கே?" அவன் எதையோ சொல்ல முயன்று முடியாது தவித்தான். "என்னடா தம்பி, ஏன் தயங்கிறாய், பிள்ளையஸ் எங்க?" நான் பதறினேன்.
"அக்கா, பிள்ளையஸ் கோயிலுக் குள்ள நிக்குதுகள், ரொமி.”
“ரொமிக்கென்ன?” "அது கோயிலுக்குள்ள வந்து பூசைநேரம் கோயிலைச் சுத்தி வந்தது. வெளியில இருந்தவங்க நாயொண்டு கோயிலுக்குள்ள நிக்குதெண்டு துரத்தி யிருக்கிறாங்க, அது விட்ட வாறதுக்கு ஓடிவந்து ரோட்டக் கடந்திருக்குது.
2seG
2t2gst
炊。リタ殊
22.3%
 
 
 
 
 
 
 
 
 

கோயில் வாசல்லையே வேன் ஒன்று அடிச்சுப் போட்டுது."
"கடவுளே இதுக்குத்தான் கூப்பிடக்
கூப்பிட வராமல் அது பாஞ்சு ஓடிச்
சுதா?”
“அடி உரமா? எவடத்தில பட்டிருக்
குது?" நான் பதறினேன்.
"ஒரேயடியாகத் தலையில பட்டிருக்'
குது. ரோட்டில இரத்த வெள்ளத்துக் குள்ள கிடக்குது. அது கிடக்கிற கோலத்தைப் பிள்ளையஸ் கண்டாத் தாங்காதுகள்"
அவன் சொல்லச் சொல்ல எனக் குள்ளே ஒரு பொறி கிளர்ந்தது.
வெள்ளிக்கிழமை, பூசைநேரத்தில் ஆலய தரிசனமும் செய்துவிட்டுக் கோயில் வாசலிலேயே அது ஏன் தன்னு டைய உயிரைக் கொடுக்கவேண்டும்? வாய்விட்டுச் சொல்லமுடியாத ஏதோ ஓர் உணர்வு ஏதோ ஓர் உண்மை என்னுள் ஒளிக்கீற்றாய். ܀
நடக்கவிருந்த ஒரு விபரீதம் கன வாய் உணர்த்தப்பட்டு, பிரார்த்தனை யால் தடம் மாறி.
தாலிக்கொடி கழன்று விழவோ,
உடையவோ கனவு கண்டால் கணவ.
னுக்கு ஆபத்தென்று சொல்வார்கள்.
நான் கண்ட அந்தக் கனவு? கழுத் தில் கிடந்த என் தாலிக்கொடி கழன்று என் மடியில் விழுகிறது. என்ன இது என்று அதிர்ச்சியுடன் அதைக் கையில் எடுக்க இரண்டு துண்டுகளாக முறிந்து போகிறது.
காலையில் எழுந்ததும் இந்தக் கனவின் பயங்கரம் என்னை வதைக்க ‘கடவுளே, இதென்ன துர்க் கனவு, அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே. என்று நான் தவித்த தவிப்பு.
நடக்கவிருந்த விபரீதத்தை அந்த வாயில்லாப் பிராணி தன் தலையில்
09
போட்டுக்கொண்டதா? இல்லையென்று யார் கண்டார்கள்?
பொங்கி வந்த விழி நீரை அடக்கிக் கொண்டு கணவரைப் பார்த்தேன். அவர் கண்களிலும் சோகம் அப்பிக் கொண்
-35.
மக்கள் கோயிலால் புறப்பட்டு வருவதற்கிடையில் ரொமியின் உடலை அப்புறப்படுத்திப் புதைத்து வீதியில் பரவிய இரத்தத்தை மண் போட்டு மறைத்துவிட்டு மக்களை அழைத்து வந்தான் தம்பி.
வரும்போதே அவர்கள் முகத்தில் கலவரம்.
“ரொமி எங்கம்மா? நான் என்ன பதில் சொல்வேன்.
“ரொமியை வேன் அடிச்சுப் போட்டு தாம், மெய்யாம்மா?” இருவர் விழிகளும் கொட்டுவதற்குத் தயாராய் அங்கே புயல் ஒன்று வீசிக்கொண்டிருந்தது. "கோயில்ல இருந்த ஆக்கள் வரக்குள்ள கதைக்கிறாங்க.அது நம்மட ரொமி தானாம்மா?"
அதற்குமேலும் என்னால் உண் மையை மறைக்க முடியவில்லை. என் விழி நீர் அவர்களுக்கு உண்மையைப் புலப்படுத்த
“எனக்கு ரொமி வேணும் அம்மா, என்ர ரொமி வேணும்." சின்னமகள் போட்ட கூச்சலைத் தொடர்ந்து பெரிய வளும் விம்ம அவர்களை அணைத்துக் கொண்டு நானும் அழ, அந்த மாலை வேளையில் வீடே சோகத்தில் ஆழ்ந்தது.
来 本 米 米 米
米米 米
水

Page 6
நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரை.மனோகரன்)
கலையரசு பற்றிய நினைவுகள்
ஈழத்துத் தமிழ்நாடகத்துறைக்கு அளப்பரிய சேவை புரிந்தவர்களுள் ஒருவரான கலையரசு க.சொர்ணலிங்கம் அவர்கள் இலகுவில் மறந்துவிடக்கூடிய ஒருவரல்லர். அவர் பற்றிய நினைவுகள் இன்றும் என் மனத்திற் பசுமையாக நிறைந்துள்ளன. நான் யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எழுதிய 'பாவையின் பரிசு என்ற நாவலுக்கு முன்னுரை பெறுவதற்காக அவரை முதன்முதலில் அவரது வீட்டில் சந்தித்தேன். நான் வந்த விடயத்தை அவரிடம் தெரிவித்தபோது, அவர் என்னிடம் கேட்ட முதற்கேள்வி, "நீர் ஒரு கொம்மியூனிஸ்டா?” என்பதே. நான் ஆச்சரியத்துடன் “இல்லை” எனப் பதிலளித்தேன். அப்போது உண்மையில் நானும் கம்யூனிஸ்டுகள் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. பின்னர்தான் எனது கருத்து மாறியது. எனது பதிலால் திருப்தியடைந்த பின்னரே கலையரசு சொர்ணலிங்கம் என்னுடன் மனம் விட்டுப் பேசத்தொடங்கினார். அதன் பின்னர் பலதடவைகள் அவரைச் சந்தித்துள்ளேன். அவர்மேல் எனக்கேற்பட்ட முதல் மரியாதை, அவரிடம் காணப்பட்ட குருபக்தி யாகும். தாம் நாடகத்துறையில் தமது குருவாக வரித்துக்கொண்ட பம்மல் சம்பந்த முதலியாரைப்பற்றிப் பேசும் போதெல்லாம் "எனது குரு" என்று மரியாதையாகவே அவரைக் குறிப்பிடுவார். அவரைச் சந்திக்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமது “ஈஸிச் செயரில்" சாய்ந்து கொண்டு, அவரேதான் பேசிக் கொண்டு இருப்பார். தமது பழையகால நாடக நினைவுகளை இரைமீட்டு அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, கேட்டுக்கொண்டிருப்பது என்பது ஒரு சுவையான பொழுதுபோக்காகும். முக்கியமாகத் தாம் கூனியாக, விசுவாமித்திரராக ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகரத்து வணிகன் என்ற நாடகத்தில் இடம் பெறும் ஷைலொக் பாத்திரமாக நடித்தமை பற்றிப் பேசும்போது, வயது சென்று பார்வை சற்றே மழுங்கியிருந்த அவரது கண்களில் மின்னல் பளிச்சிடும். அந்தப்பாத்திரங் களின் இயல்பு பற்றியும், அந்தப் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்கள் பற்றியும், தாம் எவ்வாறு அப்பாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது பற்றியும், தமது நடிப்புத் தொடர்பாக அவையோரின் பிரதிபலிப்புகள் எத்தகையனவாக இருந்தன என்பது பற்றியும், அதில் தாம் எவ்வாறு ஒழுக்கத்தையும், கண்டிப்பையும், மேற்கொண்டார் என்பது பற்றியும் பெருமையோடு குறிப்பிடுவார். ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும்போது, "நடிப்பு என்றால் என்ன?” என்று கேட்டுவிட்டு, தாமே அதற்கான பதிலையும் தெரிவித்தார்.
10
 

"நடிப்பு என்பது, ஒரு நடிகன் தான் எந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கிறானோ, அந்தப் பாத்திரம் பற்றிய சுய பிரக்ஞையுடன் அதன் முழு அம்சங்களையும் வெளிக்கொணர்வது” என்று கூறினார். "நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரமாகவே மாறிவிடுவது நடிப்பல்ல. அப்படிச் செய்வது ஆபத்து” எனவும் குறிப்பிட்டார். ஒருமுறை சிவாஜிகணேசன் பற்றிய பிரஸ்தாபம் உரையாடலில் இடம்பெற்றது. அப்போது கலையரசு சொர்ணலிங்கம், "அவன் என்ன நடிக்கிறானா? கத்துகிறான்” என்று சொன்னார். சிவாஜிகணேசன் பற்றிய அவரது அந்தக் கருத்து எனக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை.
கலையரசு அவர்கள் வாழ்ந்தபோது, ஒரு சுவாரசியமான சம்பவமும் இடம்பெற்றது. தமிழ் நாட்டிலிருந்து பிரபல திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், அவர் மனைவி நடிகை விஜயகுமாரியும் இலங்கை வந்திருந்தனர். யாழ்ப்பாணத் திலிருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘ஈழநாடு பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அவர்களைப் பேட்டிகண்டார். பேட்டியின்போது "கலையரசு சொர்ணலிங்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்பதே அந்தக் கேள்வி. அதற்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் பதில் கூறினார், எஸ்.எஸ்.ராஜேந்திரன் "கலையரசு சொர்ணலிங்கம் ஒரு துடிப்பு மிக்க இளைஞர். அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்பதே அவரது பதில். நடிகர் ராஜேந்திரன் இதைச் சொல்லும் போது, கலையரசு சொர்ணலிங்கம் அவர்களுக்குச் சுமார் எண்பது வயதிருக்கும். அண்மையில் படித்த இரு நாவல்கள்
ஈழத்து எழுத்தாளர் தெணியான் நாடறிந்த ஒரு நாவலாசிரியர். இதுவரை அவரது ஐந்து நூல்கள் வெளிவந்துள்ளன. தெணியான் தமது ஒவ்வொரு நாவலிலும் தமது பார்வையை விலாசப்படுத்தி வந்துள்ளார். விடியலை நோக்கி என்ற நாவல் முதல், அவரது புதிய நாவலான காத்திருப்பு வரை அவரது ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு அனுபவங்களை வாசகருடன் பகிர்ந்துவந்துள்ளது. இறுதியாக வெளியான காத்திருப்பு என்ற நாவல், ஈழத்து நாவல் எதிலும் பேசப்படாத புதிய பொருளைப் பேசுகிறது. வறுமை நிலையில் வாழும் ஓர் இளம் குடும்பப் பெண்ணின் பெண்மை, பொருளாதார வளமுள்ள ஆண்மகன் ஒருவனால் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதையும், அவள் தனது கணவன் இறந்தபின், கணவனின் நினைவுகளிலேயே தனது வாழ்வைக் கழிக்க முற்படுவதையும் நாவல் காட்டுகிறது. விரசமின்றி உளவியல் பாங்கில் நாவலாசிரியர் நாவலை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பாலியல் அடிப்படை கொண்ட இப்புதிய கருவை மிகக் கச்சிதமாகக் கையாண்டதில்தான் நாவலின் வெற்றியே தங்கியுள்ளது. இயல்பான வாழ்நிலைகொண்ட ஈஸ்வரியின் மனம், நந்தகோபாலனின் திட்டமிட்ட முயற்சி களினால் மனோரீதியாகப் பாதிக்கப்படுவதை மிக நுணுக்கமாகவும், நாசூக்காகவும் நாவலாசிரியர் உணர்த்துகின்றார். இந்நாவலின் பாத்திரங்கள் இயல்பாக வார்க்கப் பட்டுள்ளன. தெணியானின் நடை இந்நாவலில் மேலும் பக்குவப்பட்டுள்ளது. இலகுவில் எழுத்தாளர் கையாளத் தயங்கும் ஒரு கருவுக்குத் தமது எழுத்துத் திறத்தால் அமர வாழ்வு நல்கிவிட்டார், நாவலாசிரியர். தெணியானின் பெயரைத் தவிர்த்து, ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு அமைய முடியாது என்றொரு நிலையை
11

Page 7
அவர் ஏற்படுத்திவிட்டார் என்பதே அவரது எழுத்துக்குக் கிடைத்த பெருமை. எழுத்தாளர் எம்.கே.முருகானந்தனின் முன்னுரை, இந்நாவலுக்குக் கிடைத்த அரிய விமர்சனமாக விளங்குகிறது.
அண்மையில் நான் படித்த, என்னைக் கவர்ந்த பிறிதொரு நாவல், கன்னடத்தில் சாரா அபுபக்கர் எழுதிய சந்திரகிரி ஆற்றங்கரையில் என்பதாகும். கன்னடத்தில் சந்திரகிரிய தீரதல்லி என்ற பெயரில் அமைந்த இந்நாவலைத் தமிழ் வாசகர் மனங்கொள்ளுமாறு தி.சு.சதாசிவம் அருமையாக மொழிபெயர்த் துள்ளார். மொழிபெயர்ப்பு நாவல் என்று தோன்றாதவாறு அவர் மொழிபெயர்த் துள்ளமை பாராட்டத்தக்கது. முஸ்லிம்பெண்கள் தொடர்பான முற்றிலும் வித்தியாச மான கருவை யதார்த்த பூர்வமாகக் கையாண்டுள்ளார், நாவலாசிரியை. நாதிரா, ரஷித், மஹமத்கான் உட்படப் பல பாத்திரங்களும், அவற்றுக்குரிய இயல்போடு சாரா அபுபக்கரினால் படைக்கப்பட்டுள்ளன. மருமகன் மீது கொண்ட பகையினால் மகளுடைய வாழ்க்கையையே சீர்குலைத்து, அவளை வாழாவெட்டியாக்கிப் பரிதவிக்கவிட்டு, பின்னர் பரிகாரம் தேட முனையும் தந்தையின் போக்கும், மதத்தின் பெயரால் ஆணாதிக்கத்தைச் செயற்படுத்தும் சமூகத்தின் நிலையும் யதார்த்தபூர்வமாக இந்நாவலிற் சித்தரிக்கப்படுகின்றன. இந்நாவல் பற்றி தோப்பில் முஹமது மீரான் தமது முன்னுரையிற் குறிப்பிடுவன மனங்கொள்ளத்தக்கன. "நான் வாசித்தவரையில் தமிழிலோ மலையாளத்திலோ இதுவரையிலும் யாராலும் கையாளப்படாத ஒரு புதுவிஷயம் இது. இந்தக் கன்னட நாவலின் மொழிபெயர்ப்பு, தமிழ் வாசகர்களுக்கு, முஸ்லிம்பெண்களின் மணவாழ்க்கையில் காணப்படும் பின்னல்களை அப்பட்டமாகவே காட்டுகிறது. இந்தப் பின்னல் கன்னடப் பகுதி முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, எங்கும் உள்ள முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையில் காணப்படும் பின்னல்தான்."
அர்ைபார்ந்த வாசகர்களே. சந்தா விபரம்
ஞானம் சஞ்சிகை தொடர்ந்து 4 /-
கிடைக்க வேண்டுமாயின் 2ங்களது .""
சரியான முகவரியை எமக்குத் (5. s
தெரியப்படுத்துங்கள். தபாற்செலவு eliti Jl.)
இந்த இதழ் பற்றிய கருத்துக் சந்தா காசோலை மூல களையும் சஞ்சிகையின் தரத்தை LDTasG6um D6öflGumLff Ep6oloff மேம்படுத்த உங்களது ஆலோசனை கவோ அனுப்பலாம். களையும் அறியத்தாருங்கள். அனுப்பவேண்டிய பெயர்,
முகவரி ;- ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. T.GNANASEKARAN
உங்களது படைப்புகளின் மூலம் 19/7, PERADENIYA ROAD,
ஞானம் சஞ்சிகையின் இலக்கிய KANDY
தரத்தை மேம்படுத்துங்கள்.
- ஆசிரியர்
12

எண்பதுகளில் தமிழில் நவீன நாடகம் எஸ். யோகானந்தன் (அவுஸ்திரேலிய மெல்பன் நகரில் நடைபெற்ற எழுத்தாளர் விழா 2001 கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை) ஏறக்குறைய 20 ஆண்டுகள் கடந்து ஈழத்தின் அரசியலும் அதனோடு பின்னிப் பிணைந்துள்ள தமிழர் சமூக வாழ்வும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைத் தாண்டி வந்துள்ள இன்றைய நிலையில், 80களில் தமிழ் நவீன நாடகங்கள் பற்றி இங்கிருந்து எழுதுவது, நினைவுகளை அசைபோடுவது போன்ற உணர் வையே ஏற்படுத்துகிறது. ஒரு தசாப்தத்தின் நாடக வரலாற்றை பதிவு செய்ய எழுதப்பட்ட ஆழமான கட்டுரை அல்ல இது. நான் பார்த்ததும், அறிந்ததும் பங்கு கொண்டதுமான அநுபவங்களின் தொகுப்பே இக்கட்டுரை.
இனி 80களில் தமிழ் நாடகம் என்றால் அதற்கு முந்தைய தமிழ் நாடகம் என்ன? அதற்கும் 80களில் தமிழ் நாடகப்போக்கிற்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டால், 80களில் தமிழ் நாடகத்தைப் பாதித்தது தேசிய இனப்பிரச்சினை தான் என்று எவரும் துணிந்து கூறலாம். 70களில் சாதிப்பிரச்சினை வர்க்கப்பிரச்சினை குறித்து எழுந்த நாடகப்படைப்புகளின் தொடர்ச்சியாக, 77இலும் 83இலும் ஏற்பட்ட இனக்கலவரங்கள், அதன் வழிவந்த இளைஞர் போராட்ட எழுச்சி தமிழ் நாடகங் களைப் பாதித்ததுடன் குறிப்பாக நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்தது. இந்தக் காலப்பகுதியில்தான் நாடகம் பொழுதுபோக்கு சாதனம் அல்ல என்றும், அது மக்களுக்கு செய்திகளைச் சொல்லவேண்டும் என்றும், இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் மக்களை அரசியல்மயப்படுத்த நாடகம் பயன் படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துப்போக்கும் ஓங்கியிருந்தது.
நவீன நாடகம் என்று மேடைப்படைப்புகளை வகைப்படுத்துவதிலேயே பெருஞ் சிக்கல் உள்ளது. நவீன நாடகம் என்பதன் வரைவிலக்கணம் ஆளுக்காள் வேறுபடலாம். ஒருவருக்கும் விளங்காத நாடகம் எதுவோ அதுவே நவீன நாடகம் என்று நையாண்டி செய்த ஒரு காலம் இருந்தது. நவீன நாடகம் தமிழ் மக்களுக்குப் புதிதல்ல என்பதும், எழுபதுகளிலேயே பல நவீன நாடகங்கள் தமிழில் மேடை யேற்றப்பட்டு ஆதரவைப் பெற்றவை என்பதும் உண்மையாயினும், யதார்த்த நாடகங்களைப் பார்த்துப் பழகிய சாதாரண மக்களுக்கு இந்தப் பாவனை செய்தல் (miming) குறியீடுகள் என்பன குழப்பமாக இருந்ததாலோ என்னவோ மேற்சொன்ன விமர்சனம் அவ்வப்போது எழுதப்பட்டே வருகிறது. தென்னிந்தியாவிலே நடிகர் மனோகர் யதார்த்த நாடகங்களை நடத்தி வந்தார். நாடகக் காட்சியில் யானை வருகிறது என்றால் நிஜ யானையையே மேடையில் ஏற்றிவிடுவார் என்று சொல் வார்கள். ஆனால் இந்த நவீன நாடகங்களிலோ, ஒரு நடிகர், ஒரு காட்சியில் சுருட்டுப்புகைத்தால் கூட சுருட்டுக் கையில் இருப்பதில்லை. அந்தளவுக்கு மேடை யில் பொருட்களை பயன்படுத்தாமல், நடிகரின் உடல், அசைவு, நடிப்புடன் மேடையையும் பார்வையாளரையும் நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப தயாரிக்கப்படுபவையே இந்த நாடகங்கள்.
நவீன நாடகங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் பிரதிநிதித்துவப் படுத்தம் உட்பொருட்கள் பற்றிய குழப்பமும் காலாதிகாலமாக இருந்து வருகிறது. இதன் காரணத்தால் உரைஞர்கள் தோன்றுகின்றனர். இவர்கள் விளங்காத விடயங்களை எளிதில் மக்களுக்குப் புரியும் வண்ணம் நாடகத்தின் இடையிடையே
13

Page 8
விளக்கமளிக்கும் வழக்கம் ஏற்படுகிறது. இது பாரம்பரிய நாட்டுக் கூத்தில் கட்டியக்காரனின் தொழிலை ஒத்தது என்று கூறுவர்.
அவைக்காற்றுக் கழகத்தினரின் நவீன நாடகங்களின் முடிவில் இடம்பெறும் கலந்துரையாடலில் பார்வையாளர், பங்காளர் இருவர்க்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெறுவது வழக்கம். பலதரப்பட்ட கேள்விகளுக்கும், அபிப்பிராயங்களுக்கும் களமமைக்கும் இந்தக்கலந்துரையாடல் ஒன்று யுகதர்மம் நாடகமுடிவில் இடம்பெற்றபோது கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.
80களில் எழுந்த படைப்புகள் நவீன நாடக உத்திகளைப் பயன்படுத்தினாலும் அவை பாமர மக்களைச் சென்றடைய உத்வேகம் காரணமாக, இப்படைப்புகளில் சில தந்திரோபாயங்கள் கையாளப்பட்டன. மக்களுக்கு நன்கு தெரிந்த வடிவங்களைப் பயன்படுத்தி, தெரியாத கருத்துக்களைப் புலப்படுத்துவதில் ஆர்வம் காட்டப்பட்டது. உதாரணமாக பல்வேறு வகையான கூத்து ஆட்ட வடி வங்கள் நவீன நாடகங்களில் பயன்பட்டுள்ளன. பலருக்கும் பரிச்சயமான நாட்டார் பாடல்கள், மெட்டுக்கள் மேடைக்கு வந்தன. இத்தகைய உபாயங்கள் 70களிலேயே தோன்றிவிட்டதெனினும், 80 களில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன எனலாம். இது வடிவங்களில் சில மீள உயிர்ப்பிக்கப்பட ஏதுவாயிற்று.
இதைவிட சமய, புராண இதிகாசங்களிலிருந்து மக்களுக்கு நன்கு தெரிந்த கருப்பொருட்களை காட்சிப்படுத்தி ஒத்த அரசியல், சமூக கருத்துக்களை மறைமுகமாக சொல்லும் போக்கு வளர்ந்தது. இவ்வகை நாடகங்கள் பிரச்சார, வாடையைத் தவிர்த்ததுடன் கலைத்துவம் கொண்ட படைப்புகளாக வெளிவந்தன. இத்தகைய உபாயத்திற்கு பாதுகாப்புக் காரணங்களும் தூண்டுதலாக அமைந்தன. உதாரணத்திற்கு யாழ் பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவினரின் ‘மண் சுமந்த மேனியர் நாடகத்தில் வரும் ஒரு முதிய பாத்திரம், இராமாயணத்தில் இராவணன் களத்தில் தோற்றுப்போய்த் திரும்பும் காட்சியைச் சித்தரிக்கும். 'வாரணம் பொருத மார்பும். என்று தொடங்கும் பாடலின் கடைசி வரிகளான ‘. தாரணி மெளலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே விட்டு வெறுங் கையோடு இலங்கை புக்கான்!
என்று பாடி முடிந்ததும், அங்கு தோன்றும் உரைஞர் ‘சங்கரன் கொடுத்த வாள் இலங்கை அரசின் ஆயுதக் கொள்வனவுடன் ஒப்புநோக்கி, ‘இலங்கை வேந்தர் அன்றும் இரவல் ஆயுதத்தால்தான் வீரம் புரிந்தனர் என்று மிக நாசூக்காக நையாண்டி செய்வது பழையதைச் சொல்லிப் புதியதை விளங்கப்படுத்துதல் என்பதற்கு ஒரு எளிமைப்பட்ட உதாரணமாகும். யாழ் பல்கலைக்கழக கலாசாரக் குழு மாணவர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தபோதும் நாடக அரங்கக் கல்லூரி உறுப்பினரின் ஆதரவுடன் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதைவிட பாரம்பரிய கூத்துவடிவங்களை அப்படியே மீள உயிர்ப்பிக்கும் முயற்சியிலிடுபட்ட யாழ் பல்கலைக்கழக தமிழ் மன்றம் கலாநிதி பலாசுந்தரம், அவர்களின் அண்ணாவியத்தில் 'காத்தவராயன் நாடகத்தை மேடையேற்றி வந்தது. 80களின் நடுப்பகுதியில் நாடகமும், அரங்கியலும் யாழ் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்கு தெரிவுசெய்யப்பட்டமை ஈழத்தமிழ் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம், கலைத்துறை ஒன்று கல்வித்துறையாகிறது என்று அப்போது பல்கலைக்கழக நுண்கலைப்பீட தலைவராயிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி இதனைக் குறிப்பிட்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது.
1987ல் யாழ் நுண்கலைப்பீடமும், யாழ் செயலகமும் இணைந்து நவீன
14

நாடகப் பட்டறை ஒன்றை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முழுநாள் நிகழ்வாக நடத்தி வந்தன.
இனி யாழ் பல்கலைக்கழக வட்டத்திற்கு வெளியே இடம்பெற்ற நவீன நாடக முயற்சிகளை நோக்கினால், மறைந்த நாடகக் கலைஞர் VM.குகராஜாவின் முயற்சிகளைக் குறிப்பிடலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் சில நவீன நாடகங் களில் இவரது பங்களிப்பு இருந்தது. அத்துடன் சுன்னாகம் நாகம்ஸ்" தியேட்டரில் இவரது நாடகப்பட்டறை வகுப்புகளும் நடைபெற்று வந்தன.
இதனைவிட இக்காலப்பகுதியில் அரசியல் தேவைகருதி பல்வேறு அமைப்புகளும் நாடகக் குழுக்களும் வீதி நாடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கின. இலகுவில் எடுத்துச் செல்லப்படக்கூடிய இந்த நாடக வடிவம் குடாநாட்டிலும் வன்னிப்பகுதியிலும் பல பாகங்களைத் தொட்டதென்றால் அது மிகையல்ல. 80களின் ஆரம்பத்தில் வெளிவந்த திருவிழா என்னும் நாடகம் அக்காலப் பராளுமன்ற அரசியலை நையாண்டி செய்யும் வகையில் தயாரிக்கப் பட்டுப் பலபாகங்களில் வீதி நாடகமாகவும் நடிக்கப்பட்டது. 80களின் நடுப்பகுதியில் பல்வேறு விடுதலை இயக்கங்களும், யாழ் பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவும் வீதி நாடகங்களை நிகழ்த்தினர். இவற்றிலெல்லாம் போராட்ட அரசியல் கருத்துக்களே முக்கிய இடம் பெற்றிருந்தன. இதில் குறிப்பிடவேண்டிய அம்சம் யாதெனில் வீதி நாடகங்கள் சிலவற்றில் மக்கள் பங்குபற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டமையாகும். மக்கள் கேள்விகள் கேட்கும்படி தூண்டப்பட்டனர். பாடல்களை சேர்ந்து பாடும்படி அழைக்கப்பட்டனர். மொத்தத்தில் நடிகர், பார்வை யாளர்க்கான இடைவெளி குறைந்தது. இந்த நாட்களில் கிராமிய உழைப்பாளர் சங்கம் எனும் அமைப்பு ‘சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் எனும் மேடை நாடகங்களை கிராமங்கள் தோறும் அரங்கேற்றி வந்தது. வர்க்க அரசியலை கருப்பொருளாகக் கொண்ட இந்நாடகம் இடதுசாரிப்போக்குடைய இவ்வமைப்பினால் தயாரிக்கப்பட்டிருந்தது.
இக்காலத்தில் மேடையேறிய பாடசாலை நாடகங்களிலும் நவீன நாடகத்தின் பாதிப்பு பெருமளவில் இருந்தது, குறிப்பிடத்தக்கதாகும். தேசிய இனப் பிரச்சினையுடன் ஒத்தோடக்கூடிய கருத்துக்களைப் பெண்ணிலைவாதம், கல்விச்சீர்திருத்தம், சாதிப்பிரச்சினை என்பவற்றை மையமாகக் கொண்ட நவீன நாடகங்களான 'மாதொரு பாகம், “சத்தியசோதனை, புழுவாய் மரமாகி, தாயுமாய் நாயுமானவர் என்பன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
மொத்தத்தில் இக்காலகட்டம் தமிழ் நவீன நாடகத்திற்கு ஒரு செழிப்பான காலகட்டம் என்றால் அது மிகையல்ல. புதிய பல மேடைப்பரிசோதனைகள், விதி நாடகங்கள் என்பன இந்தத் தசாப்தத்தின் கலை இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியன. இதில் நவீன நாடகம் எழுச்சியுற்றதற்கு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் இருந்ததைக் கவனத்திலெடுப்பது அவசியமாகும். அண்ணாவியார் இளைய பத்மநாதன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுவதுபோல ஒவ்வொரு காலகட்டத்திலும் நாடகம் இப்படியாக அமைய வேண்டும் என்ற எண்ணம், அதுவேதான் நாடகம் என்ற முடிவாக அமைந்து விடுவதை காணமுடிகிறது. நாடகத்தில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும் என்னென்னவகையில் தோன்றினாலும் அத்தனையும் நாடகங்கள்தான். இதனை மனதில் கொண்டால் “பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற இயங்கியலை ஏற்றுக்கொள்வதில் அதிக கஷ்டம் இராது.
15

Page 9
இரண்டு கவிதைகள்
1.
புலன்களிலிருந்து தவறிப்போய்விடுகிறது காலம்
காற்றால் ஏற்றப்படுகிற கடுதாசிகள் முழுவதிலும் காலம் பற்றிய ஏராளம் கவிதைகள் உலர்ந்து கிடக்கின்றன.
நூற்றாண்டுத் துருவேறிய ஒரு காலத்தின் பிடி உக்கிய வாளை புதர் காட்டிலிருந்து மிட்டெடுத்திருக்கிறேன்.
குருதி மணம் இன்னும் வீச்சமடித்தபடியிருக்கிறது. ஆயிரமாயிரம் குரல்வளைகள் அறுந்த ஒலம் கேட்டபடியிருக்கிறது. வாளின் பின்னால் அதன் ஒளி எப்படி வற்றிப்போனது. A
2.
காக்கைகளின் சொண்டுகளிலிருந்து கனமேறிய ஆவிகளின் வெறிநடனத்தின் ஒலி எல்லாப்பொழுதுகளிலும் அலைவதாய் அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
நள்ளிரவில் பிரபஞ்ச வெளி முழுவதிலும்
16
 
 

பிண மலைகள் முளைத்தெழுவதாய் ஒவ்வொரு காலையிலும் எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்.
கண்களுக்குத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருந்த காவல் கோட்டைகளில் எனது பாட்டனின் எழும்புகளும் துருத்திக் கொண்டிருந்ததாய் பாட்டியின் அவலக்குரலை ஒரு முறை கேட்டேன். எல்லாத் திசைகளின் அடியிலும் துளிர்காலத்தில் எரிக்கப்பட்ட காடுகளின் சாம்பல் பெருக்கெடுக்கிறது.
சாம்பலிருந்து நான் கண்டெடுத்தேன் எனது கடவுளின் புகைபடிந்த தங்க விக்கிரகத்தை.
சூழவும் ஏராளம் வாள்கள் கிடந்தன. வீச்சொலிகள் அதிரும்படியாக அவைகளின் பின்னால் ஒலியலைகள் பீறிட்டுக் கொண்டேயிருந்தன.
நான் தொடங்கப்போகிறேன்
எனது காலத்தின் ஒளி நிரம்பிய கவிதையை,
17

Page 10
பியதாச சிரிசேனவின்
‘ஐயதிளப்ஸவும் றொளப்லினும்’ சிங்கள பெளத்த இன எழுச்சியும்
கலாநிதி.எம்.எஸ்.எம் அனஸ்
அநகாரிக்க தர்மபாலவின் நெருங்கிய சகாவான பியதாச சிரிசேன எழுதிய 'அதிர்ஷ்டமிக்க விவாகம் அல்லது ஐயதிஸ்ஸவும் றொளில்லினும் என்ற நாவல் சிங்கள நவீன இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் தரப்படும் நாவல்களில் ஒன்றாகும். இது 1906ல் வெளிவந்தது. பல பதிப்புக்களைக் கண்டதோடு 25000 பிரதிகள் விற்பனை வாய்ப்பும் அதற்குக் கிடைத்தது.
சிங்கள பெளத்த இன எழுச்சிச் சித்தாந்தங்கள் இந்நாவலின் மையப் பொருளாகும். நாவல் என்ற நவீன கதைக்கட்டமைப்பினூடாகத் தங்கு தடையின்றிச் சிங்கள பெளத்த இன எழுச்சிப் பிரச்சாரத்தையும் கொள்கைகளையும் அது முன்வைக்கிறது. ஆசிரியர் பியதாச சிரிசேனவின் முன்னுரைக் கூற்றுப்படி தேசபக்தியை(ஜாத்தியாலயவை)த் தூண்டும் நோக்கத்திற்காகவே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. தேசபக்தி என்ற பொதுச் சொல்லை ஆசிரியர் பயன்படுத்தியிருந்தாலும் சிங்கள பெளத்த இனத்திற்கான தேசிய உணர்வையே அது நேரடியாகப் பிரதிபலித்தது.
1860 களிலிருந்து ஐரோப்பியருக்கும் அவர்களின் கிறிஸ்தவ மதமாற்றத் திட்டங்களுக்கும் எதிராகப் போராடிய சிங்கள பெளத்த இன எழுச்சியின் பிதாமகர்களான மிகட்டுவத்தை குணானந்த தேரர் போன்ற பிக்குகளின் பிறசமய எதிர்ப்புப் போராட்ட உணர்வுகளையும் பின்னர் இவ்வியக்கத்துக்குத் தலைமைத்துவம் வழங்கிய அநகாரிக்க தர்மபாலவின் இனத்துவக்கோட்பாடுகளையும் கொண்டதாக ‘ஐயதிஸ்ஸவும் றொஸ்லினும் எழுதப்பட்டுள்ளது. .
கொழும்பு ‘சிங்கள ஜாத்திய (பத்திரிகை) கந்தோரிலிருந்து 1916ல் வெளிவந்த மறுபதிப்பிற்கு எழுதியுள்ள முன்னுரையில் பியதாச பின்வருமாறு கூறுகிறார். “இதுவரை 25000ம் பிரதிகள் அச்சிடப்பட்டதன் மூலம் இந்நூல் சிங்களவர்களால் எவ்வளவு தூரம் பற்றார்வத்துடன் வாசிக்கப்படுகிறது என்பதை யாவரும் அறிந்து கொள்ளலாம். ஆங்கில நாவல்களை வாசித்த பின்னர்தான் நாம் நாவல்களைப் பற்றி அறிந்துள்ளோம். தேசிய வாதத்தை ஐரோப்பியர் அறிந்து 400 வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் சிங்களவர் முதலான ஏனைய கீழ்நாட்டவர்கள் தேசிய வாதத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்தே அறிவர்" சிரிசேன அநகாரிக்க தர்மபாலவின் கருத்துக்களினால் மிகவும் கவரப்பட்டிருந்தார். சிரிசேன வாழ்ந்த கொழும்பு - காலி வீதியில் அமைந்திருந்த தென்பகுதிக் கிராமத்தில் கராவ, சலாகம சாதியினர் செறிவாக வாழ்ந்தனர். அவர் செல்வாக்கு மிக்க 'கொய்கம சாதியைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த பகுதியில் அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனறியினர் தீவிரமான மதமாற்றப் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
19036) drf(3sF6OT * Friassm grifur (The sinhala nation) 66igo பத்திரிகையை ஆரம்பித்தார். இது அநகாரிக்க தர்மபாலவின் கருத்துக்களை
18

விரிவாகப் பிரசாரப்படுத்தியது. சிங்கள தேசியவாதத்தை வளர்ப்பதற்கு ஆதரவான விடயங்களை அது வெளியிட்டு வந்தது. 1906ல் அநகாரிகர் ‘சிங்கள பெளத்தயா, (Sinhala Buddhies)வை ஆரம்பித்தபோது சிரிசேன அதன் ஆசிரியரானார். சிங்களப் புத்திஜீவிகளையும் மத்தியதர, வர்த்தக வகுப்பாரையும் சிங்களபெளத்த உணர்வுகளின் அடிப்படையில் தட்டியெழுப்பியதில் இப்பத்திரிகைக்கு முக்கிய பங்கிருந்தது. கிறிஸ்தவ எதிர்ப்புப் பிரசாரம், மது ஒழிப்பு ஆகியவற்றையும் அது செய்தது.
புத்தபிக்குகள் இதுவரை வழிநடத்திய சிங்கள பெளத்த பிரசார, ஒழுங்கமைப்பை அநகாரிகரும் சிரிசேனவும் சாதாரண மக்களின் கைகளுக்குக் கொண்டு வந்தனர். புத்திஜீவிகளுக்கு அவர்கள் புத்திஜீவிகளின் பாஷையில் பேசினர். நவீன ஊடகங்களான பத்திரிகை, நாவல், இலக்கிய இதழ்கள் போன்றவற்றை அவர்கள் இதற்காகப் பயன்படுத்தினர். பிக்குகளின் பிரசாரத்தைவிட இது பெருவாரியான மக்கள் கூட்டத்தை விரைவாகச் சென்றடைந்தது இப்பின்னணியில்தான் 'ஜயதிஸ்ஸவும் றொஸ்லினும் நாவல் 1906ல் வெளிவருகிறது. நாவல் அதன் பெயரிற்கேற்ப ஒரு காதல் கதை. ஐயதிஸ்ஸவும் றொஸ்லினும் வெவ்வேறிடங்களில் கல்வி கற்கின்றனர். ஒரு நாள் தற்செயலாகச் சந்திக்க நேரிடும்போது காதல் வயப்படுகின்றனர். ஐயதிஸ்ஸ பெளத்தசமயத்தைச் சேர்ந்தவர். றொஸ்லின் றோமன் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுபவள். இருவரினதும் காதலுக்குச் சமயம் தடையாகிறது. றொஸ்லினைப் பெற்றோர், முன்னர் தீர்மானித்தபடி வின்சன் என்ற டொக்டருக்கு மணமுடிக்க ஏற்பாடுகளைச் செய்கின்றனர். றொஸ்லின் தனக்குக் கிடைக்காமற் போகக்கூடும் என்ற பயத்தில், வின்சன் அவளை அவள் விருப்பத்துக்கு மாறாகக் கடத்திச்செல்கிறான். சில இன்னல்களுக்குப் பின்னர் ஜயதிஸ்ஸ றொஸ்லினை மணம்முடித்துக்கொள்கிறான். எனினும் கதையின் முக்கிய அம்சம் றொஸ்லினும் அவளது பெற்றோர்களும் ஐயதிஸ்ஸ வின் பிரசாரத்தினாலும் முயற்சியினாலும் மனந்திருந்தி பெளத்தசமயத்தை ஏற்றுக்கொள்வதுதான்.
ஏற்கனவே, பெளத்தர்களை றோமன்கத்தோலிக்கராக மாற்றுவதில் வெற்றி பெறுவதுபற்றிக் கத்தோலிக்கவட்டத்தாரிடத்திலிருந்து நாவல்கள் எழுதப்பட்டுவந்தன. சிரிசேனவின் 'ஜயதிஸ்ஸவும் றொஸ்லினும் நாவல் மூலம் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் என்று உறுதியாக நம்பமுடியும்.
180 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலில் கதைக்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள் 50க்கும் குறைவானதாகும். சிங்கள பெளத்த இலட்சியங்களையும், கிறிஸ்தவ எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதற்காக இக்கதையை சிரிசேன பயன்படுத்தியுள்ளார்.
காதலின் மோதற்பகுதி சமயப் பிரச்சினையில் இருந்து ஆரம்பிக்கின்றது. சமய வேறுபாடு தெரியாத நிலையிலேயே காதல் வளர்கிறது. சில மாதங்களின் பின்னரே ஐயதிஸ்ஸ, றொஸ்லின் ஒரு கிறிஸ்தவப்பெண் என்பதை அறிகிறான். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் பின்வருமாறு அவளுக்கு ஒரு காகிதம் எழுதுகிறான். "நான் உன்மீது ஆழமான காதல் கொண்டுள்ளேன். நீ கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்தவள் என்பதை இன்றுதான் அறிந்தேன். அது எனக்குக் கவலையாக உள்ளது. நான் உனக்களித்துள்ள வாக்குறிதிப்படி நான் வேறு
19

Page 11
பெண்ணை மணக்காது திருமணமின்றி வாழ்வேன் ஒழிய நீ கத்தோலிக்கப் பெண்ணாயிருக்கும்வரை நான் உன்னை மணக்கமாட்டேன். ஏனெனில் நான் கூறுவது தவறானதாயின் அல்லது நீ பின்பற்றும் மதம் உண்மையானதாயின் நான் கிறிஸ்தவனாக மதம்மாறி உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன். அன்றி கிறிஸ்தவ சமயம் பொய்யானதாயின் நீ பெளத்தமதத்தைத் தழுவுவது உன் மீது கடமை."
கருத்துக்களை வெளிப்படுத்தக் கடிதம் இந்நாவலின் முக்கிய உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஐயதிஸ் ஸ்வின் கடிதங்களும் இக்கடிதங்களுக்கான றொஸ்லினின் பதில் கடிதங்களும் தாம் நாவலின் மையப் பிரச்சினையை முதலில் அலசுகின்றன. றொஸ்லினின் முதல் பதில் இவ்வாறு கூறுகிறது: "உங்கள்மீது நான் கொண்டுள்ள அன்பை விளக்க வார்த்தைகள் கிடையாது. இன்றுதான் நீங்கள் ஒரு பெளத்தர் என்பதை நான் அறிந்தேன். இதை நான் ஏற்கனவே அறிந்திருந்தாலி நான் இக் காதலைச் சம்மதித்திருக்கமாட்டேன். இப்போதே எனது வாழ்வை நாசம் செய்து கொள்வதைவிடப் புனித ஏசுபாலனை மறந்து ஒரு கணமும் என்னால் இருக்கமுடியாது. என்மீது நீங்கள் உண்மையான அன்பு வைத்திருப்பீர்களாயின் நீங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்வீர்கள். இன்று உலகில் முன்னேறியிருப்பவர்களும் சக்தி பெற்றிருப்பவர்களும் கிறிஸ்தவர்களே. நிறையப்படித்த நீங்கள் ஏன் கிறிஸ்தவத்தை வெறுக்கிறீர்கள்?
காதலைவிட இருவரும் சமயத்தைப் பெரிய பிரச்சினையாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை இவ்விருவருடைய கடிதவாசகங்களும் உறுதிபகர்கின்றன. இங்கிருந்துதான் சிரிசேன, ஜயதிஸ்ஸ ஊடாக இனரீதியான, சமயரீதியான சர்ச்சைகளை ஆரம்பிக்கிறார். 1860களில் இருந்து சிங்கள பெளத்த உணர்வுகள் தேசியமாகவும், சமய எதிர்ப்பாகவும், மது ஒழிப்பு நடவடிக்கையாகவும் சமய அரங்கிலிருந்து சமூகத்தளத்திற்கும் பரிமாற்றம் பெறுவதை அவதானிக் கமுடியும் . சிங் களப் பெளத்தர் களுக்கும் சிங் களக் கிறிஸ்தவர்களுக்குமிடையில் இக்காலத்தில், நடந்த சமய மோதல்களில் "சொற்போர்கள்(விவாதப்போர்) மிகப் பிரபல்யம் பெற்றிருந்தன. உண்மையான சமயம் பெளத்தமா அல்லது கிறிஸ்தவமா என்று பிக்குகளும் பாதிரிகளும் வழக்காடினர்.
உண்மையான போதனை புத்தருடையதா கிறிஸ்துவுடையதா? பைபிள் நம்பக்கூடிய வேதநூல் என்பதை நிரூபிக்கமுடியுமா? பகுத்தறிவுக்கு ஏற்றமதம் கிறிஸ்தவமா பெளத்தமா? என்ற பிரச்சினைகள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. விவாதப்போர்களைப் பார்க்க மக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடினர்.
பெளத்த மறுமலர்ச்சிவாதிகளின் நோக்கில் இவ்விவாதப்போர்களின் இறுதியில் பெளத்தர்களே வெற்றிபெற்றுத் தமது சமயமே உண்மையான சமயம் என நிறுவினர். இது எவ்வாறாயினும் சிங் களப் பெளத் தமக்கள் இவ்விவாதப்போர்களால் பெரிதும் கவரப்பட்டதோடு தமது சமயம், இனம் பற்றி முன்வைக்கப்பட்ட ஆவேசமான கருத்துக்களால் பெரிதும் தூண்டப்பெற்றனர். விவாதப்போர்களில் ஈடுபட்ட பிக்குகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கும் வளர்ந்தது.
2O

‘ஐயதிஸ்ஸவும் றொஸ்லினும் நாவலில் முன்வைக்கப்பட்டுள்ள சமய கண்டனங்களிலும் பெளத்த ஆதரவுக்கருத்துக்களிலும் ‘விவாதப் போர்களில் பயன்பட்ட அதேகருத்துக்களும் கொள்கைகளுமே முன்வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் தனது காதலியிடம் ஐயதிஸ்ஸ பின்வருமாறு கூறுகிறான். "காதலியே நான் றோமன் கத்தோலிக்கனாக இல்லாவிட்டாலும் கிறிஸ்தவம் சம்பந்தமான எல்லா நூல்களையும் படித்துள்ளேன். பைபிளில் காணப்படும் பெரும்பான்மையான கருத்துகள் பேய் பிசாசுகளுக்கன்றி மனிதனுக்குரியனவல்ல. சில கருத்துக்கள் அறிவிலிகளுக்குரியவை. நல்ல கருத்துக்கள் மிகச்சொற்ப அளவில்தான் அதில் காணப்படுகின்றன. பைபிளைவிட இராமாயணமும் அறபுநாட்டு ஆயிரத்தொரு இரவுக்கதைகளும் சுவை மிகுந்தவையாகும். பைபிளில் கூறப்பட்டுள்ள யெஹோவா தெய்வத்தின் இலட்சணங்கள் எல்லா மனிதரிடமும் காணப்படும் பொது இலட்சணங்களாகவே உள்ளன. சாதாரண மனிதரில் இருப்பதைவிட வேறு எந்த உயர்ந்த பண்பும் அவரிடம் இல்லையே”
ஐயதிஸ்ஸ கிறிஸ்தவத்தை மோசமான சமயம் என்றும் பொய்யான சமயம் என்றும் நிரூபிப்பதற்கே பெரிதும் முயன்றான். றொஸ்லினுக்கு எழுதிய கடிதமொன்றில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தான். 'உனது கடிதம் கண்டேன். உன் மீது எனக்கு வெறுப்பேதும் இல்லை. எனக்குள்ள கவலையெல்லாம் நீயொரு மோசமான சமயத்தைப் பின்பற்றுகிறாய் என்பதில்தான் உள்ளது. நீ வணங்கும் தெய்வம் மனிதனைவிட உயர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் மனிதனைப்போல் அதற்கு ஆசை, துவேஷம், கோபம் என்பன இருப்பதாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஒரு விசயத்தைச் செய்யும்போது அதன் பின்விளைவு எவ்வாறு இருக்கும் என்று உனது தெய்வம் ஒன்றையும் அறிந்திருக்கவில்லை. பைபிள் ஆதியாகமத்தில் உள்ள கருத்துக்களைப் பார், உலகில் சீவராசிகளைப் படைத்துவிட்டு அவை தமக்குப் பணிந்து நடக்கவில்லை என்று கடவுள் வேதனைப்படுவதை நீ காண்பாய். அவற்றின் மீது அது கோபம் கொள்கிறது. பின்னர் அவற்றை அழிக்கிறது. இது ஒரு அறிவற்ற மூடச் செயலாகும். யெஹோவா எல்லாமறிந்த கடவுளாயின் அவரே படைத்த சீவராசிகள் எப்படி நடந்துகொள்ளும் என்பதை அவரே அறியாதிருப்பது எப்படி?
றொஸ்லினுடன் மட்டுமல்ல றொஸ்லினின் தந்தை அப்புஹாமி, அவர்களின் குடும்ப பாதிரியாருடனும் ஐயதிஸ்ஸ விவாதித்து பெளத்தமே உண்மையான, அறிவுக்குப் பொருத்தமான சமயமாக நிலைநிறுத்த*முயன்றான். ஆசை, கோபம், துவேஷம் கொண்ட பொருள் ஒன்று இருக்குமாயின் அது ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறான ஒன்று அழியாத்தன்மையுடையது அல்ல என்று வாதிட்டான். பைபிளில் கூறும் ஆன்மாவையும் அவன் நிராகரித்தான். ஆன்மாவென்பது பொய் என்றும் உடலும் அதன் சேர்க்கைகளான பஞ்சபூதங்களின் விளைவான உயிர்தான் உள்ளதென்றும் அவன் வாதிட்டான். கிறிஸ்துவின் புனித பிறப்பை நிராகரித்ததோடு விஞ்ஞான உண்மைகளின்படி ஆண் துணையின்றிக் கன்னியொருத்தி கருத்தரிக்க முடியாது என்றும் கூறினான்.
ஆசிரியர் சிரிசேன, ஜயதிஸ்ஸ மூலம் முன்வைத்துள்ள இத்தகைய விவாதங்களும் சர்ச்சைகளும் அன்று பிக்குகளால் கிறிஸ்தவத்திற்கு எதிராகப்
21

Page 12
பேசப்பட்ட விவாதப்போர்களையே பிரதிபலித்தன. மீகெட்டுவத்த குணானந்த தேரர் 1865ல் வராகொட விவாதப்போரிலும், பின்னர் பாணந்துறை விவாதப்போரிலும் பயன்படுத்திய அதே விவாதக் கருத்துக்கள் ஐயதிஸ்ஸவினால் மீண்டும் மொழியப்பட்டன. வராகொட விவாதப்போரில் குணானந்ததேரர் பின்வருமாறு பேசியிருந்தார். “கடவுள் விண்ணையும் மண்ணையும் படைத்தார் என்று பைபிள் கூறுகிறது. விண்ணையும் மண்ணையும் அவர் படைத்தாராயின் அவற்றைப் படைப்பதற்கு முன்னர் அவர் எங்கே இருந்தார். அவர் உயிர் நீரில் அசைந்தாடியது என்றால் படைப்பாளன் நீரின் மேல் இருந்துள்ளான். அப்படியானால் நீரைப் படைத்தவர் யார்? என்று அவ்விவாதம் நீண்டு செல்கிறது.
ஐயதிஸ் ஸ்வின் வாதங்களிளாலும் முயற்சியாலும் பெளத்தமே உண்மையான மதமென றொஸ்லின் ஏற்றுக்கொள்கிறாள். பெளத்தத்தின் சிறப்புகளைப் பெற்றோருக்கும் எடுத்துக்கூறுகிறாள். ஐயதிஸ்ஸவுடன் றொஸ்லின் பெற்றோரும் சமய சம்பாஷனையில் ஈடுபட்டு அறிவுக்குப் பொருத்தமான சமயம் எது என்ற உண்மையை ஐயதிஸ்ஸவிடம் கேட்டறிகின்றனர். கிறிஸ்தவம் ஒரு போலியான சமயம் என்று ஐயதிஸ்ஸ அவர்களை நம்பச்செய்கிறான். மேலும் சிங்களப் பாரம்பரியம், சொந்தநாடு பற்றிய உணர்வு, கிறிஸ்தவர்களிடம் காணப்படும் குடிப்பழக்கம் போன்றவற்றையும் அவர்களுடன் அவன் விவாதிக்கின்றான். இறுதியில் றொஸ்லினின் தந்தை அப்புகாமி, தான் பெரிதாக மதித்துவந்த பாதிரிகளின் போதனைகளையும் கிறிஸ்தவ முறைமைகளையும் கண்டிக்கமுற்பட்டார்.
ஒரு முறை அப்புஹாமி, பாதிரியாருடன் பின்வருமாறு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார்:
பாதிரியார்: அப்புஹாமி நீ பெளத்தன் ஒருவனால் ஏமாற்றப்பட்டுப் பரிசுத்தசபைக்கு எதிராகச் செயற்படுவதாகக் கேள்விப்பட்டேன். அது உண்மையாயின் இன்றே இறைவனிடம் மன்னிப்புப் பிரார்த்தனை செய்துகொள். அப்புஹாமி. நான் இன்னும் உங்களது பரிசுத்தசபைக்கு எதிராகச் செயற்படத் தொடங்கவில்லை. என்னைப் போன்ற பலவீனர்கள் அதற்கு எதிராக என்ன செய்யமுடியும். நான் செய்யக் கூடியதெல்லாம் அதிலிருந்து விலகிக்கொள்வதுதான்.
பாதிரியார்: அப்புஹாமி உனக்கு விசாரணை உண்டு. பிசாசுகளின் மாயையில் விழவேண்டாம். நரகத்திற்குப்போக வழி தேடாதே.
அப்புஹாமி மிகவும் நன்றி. நாங்கள் நரகத்துக்குப்போவது பற்றி நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்.
பாதிரியார்: உங்களுக்குப் பேய் பிடித்துள்ளது. இதை நான் பிஷப்பிடம் முறைப்பாடு செய்யப்போகிறேன். இருந்துபார், உனக்கு சரியான சவக்கிடங்கு கூடக் கிடைக்காது.
அப்புஹாமி: முறை கெட்டவிதமாக என்னை வா, போ என்று ஏக வசனத்தில் அழைக்கவேண்டாம். உன்னுடைய நாட்டில் உள்ள சவக்கிடங்குகள் பற்றி எமக்குக் கவலையில்லை. எமது நாட்டில் சவக்கிடங்கு தோண்டுவதற்கு நாங்கள் உன்னிடம் அனுமதி பெறத் தேவையில்லை. உன்னைப் போன்றவர்கள் எம்மை அவமதித்துப் பன்றிகளையும் நாய்களையும் போல் எம்மைக் கூப்பிட்டு;
22

எமது பணத்தில் கோழிகளைக் கொன்றுதின்று ஜின், பிராந்திகளைக் குடித்துக்கொண்டு நீண்டகாலம் இங்கிருக்கலாம் என்று நினைக்கவேண்டாம். உனது பரிசுத்தசபை எனக்குத் தேவையில்லை. ஏசுகிறிஸ்து மூடபூதர்களுக்குக் கடற்கரைகளில் உபதேசித்துத் திரிந்த காலங்களில் எமது சிங்களவர் செய்த அற்புதங்களை அனுராதபுரம் போன்ற இடங்களுக்குச் சென்றால் காணமுடியும். 2000ம் வருடங்களுக்கு மேற்பட்ட சிங்களஇனத்தின் நாகரிக மேன்மையையும் ஆரியவம்சத்தின் வீரபிரதாபங்களும் நாவலில் பிரதான கருத்துக்களாகப் பேசப்படுகின்றது. சிங்களக் கலாசாரம் மேன்மை பெற்றிருந்த காலத்தில் ஐரோப்பிய கலாசாரம் மோசமான நிலையில் இருந்ததாகவும் அத்தகைய தாழ்ந்த கலாசாரத்தினர்தான் கிறிஸ்தவத்தை ஏற்றனர் என்றும் ஐயதிஸ்ஸ மக்கள் மன்றங்களில் பேசினான். ஆரிய இனத்தவரான சிங்களவர் மெல், சில்வா, பெரேரா என்று தமது பெயர்களை மாற்றிக்கொள்வது வெட்கக்கேடான செயல் என்றும், ஆங்கில உடைகளுக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஆளாக்கியதன் மூலம் சிங்களவரின் தூயகலாசாரத்தை ஐரோப்பியரும் கிறிஸ்தவரும் நாசஞ்செய்தனர் என்றும் ஜெயதிஸ்ஸ பொதுமக்களுக்கு விளக்கமளித்தான்.
1860களில் இருந்து 1906வரை சிங்களமக்களின் தேசியம், சமயம், இனவெழுச்சி சார்ந்த எண்ணங்களையும் நெருக்கடிகளையும் இந்நாவல் பிரதிபலிக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் சிரிசேன நாவலுடாகக் கூறும் வாதங்கள் தூயதேசிய உணர்வையும் பகுத்தறிவுப் பார்வையையும் வெளிப்படுத்துவதாகக் காணப்பட்டாலும் சிரிசேனவின் பொதுவானதும் முடிவானதுமான இலட்சியம் சிங்களப் பெளத்த இன மேன்மையையும் தனித்துவத்தையும் கூறுவதும் எல்லாச் சமயங்களுக்கும் எதிராக முன்வைக்கப்படக்கூடிய சமய எதிர்ப்பு வாதங்களை பெரும்பாலும் இது மேனாட்டு நூல் வாசிப்பிலிருந்து பெற்றதாயிருக்கலாம் - கிறிஸ்தவத்தையும் ஏனைய சமயங்களையும் நிராகரிப்பதற்கும் குறைகாண்பதற்குமே பயன்படுத்தப்படுகிறது. பெளத்தமதம் சகல சாஸ்த்திரங்களையும் நன்கறிந்த சிங்களவர் போன்ற பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சதாகாலத்திற்கும் ஏற்ற நிர்மலமான உண்மைச் சமயமாகும் என்றும் இன்னும் வெவ்வேறு வர்ணனைகள் மூலமும் அதுவே சத்தியசமயம் என்பதை சிரிசேன நாவல் முழுக்க வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் சரித்திர வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தேசியவாழ்விலும் பங்காற்றிய இந்நாட்டார் பாரம்பரிய சமயப்பிரிவினரான ஹிந்துக்கள், முஸ்லீம்கள் பற்றி அந்நாவல் எதுவுமே பேசவில்லை.
இந்நாவலில் ஆசிரியர் சிரிசேன தமிழ், முஸ்லீம் சார்பாக அதிக எதிர்ப்புணர்வைக் காட்டவில்லை என்பது உண்மையாயினும் அவரது பொதுவான தேசியக்கோட்பாடும் அவர் தலைமைவகித்து நடத்திய பத்திரிகைகள் மூலமாக உருவாக்கிய பெளத்த ஆரிய சிங்களக் கோஷமும் மேற்குறித்த இரு சமூகப்பிரிவினரையும் விமர்சனத்துக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. சிங்கள மத்தியதர, குட்டிபூர்ஷ்வாப் பிரிவினரிடையே வளர்ந்து கொண்டிருந்த இக்குறுகிய இனத்தேசியவாதத்தைச் சாதாரண மக்கள் வரை பிரசாரப்படுத்த சிரிசேன இந்நாவலையும் பயன்படுத்தினார் எனக் கூறலாம்.
ze ze ik je ze
23

Page 13
பேசுகிறார்.
யார் அந்த மஹாலட்சுமி? முருகையன்
'மஹாலட்சுமி யாருடைய புனைபெயர்? சில்லையூர் செல்வராசனு டையதா, “மஹாகவி'யுடையதா? இதுபற்றி வாதப்பிரதி வாதங்கள் கிளம்பியுள்ளன. இது தொடர்பில் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லி வைப்பது நல்லது. நடந்தது இதுதான். -
அது 1954. நான் பல்கலைக் பழகப் படிப்பின் பொருட்டுக் கொழும்பில் தங்கியிருந்த காலம், மஹாகவி” ஆகிய துருத்திரமூர்த்தி அவர்கள் திறைசேரியில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீரகேசரியில் உதவி ஆசிரியர்களில் ஒருவராக, சில்லையூர் செல்வராசன் இருந்தார். "வருவதாகச் சொன்ன கவிஞன் என்ற தலைப்பில், வீரகேசரியில் “மஹாகவி”யின் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. அந்தக் கவிதை என் கவனத்தை ஈர்த்தது. அது பற்றி ஒரு பாராட்டைப் பாட்டு வடிவில் எழுதி அதை வீரகேசரி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். அப்பாராட்டைச் சில்லையூர் செல்வராசன் “மஹாகவி”யிடம் சேர்ப்பித்தார். பின்னர், “மஹாகவி” என்னுடன் முதலிலே கடித மூலமும் பின்னர் நேரிலும் தொடர்பு கொண்டார். இந்நிகழ்ச்சியின் பிறகு, நம் மூவருக்குமிடையில் நேரடியாகவும் தொலைபேசி மூலமும் ஓரளவு நெருக்கமான நட்புறவு உருவா யிற்று.
அப்பொழுது செல்வராசன் வீரகேசரியில் மாதர் பக்கமொன்றை நடத்தி வந்தார். அப்பகுதியில் ஒரு சர்ச்சையை இடம்பெறச் செய்யும் நோக்குடன் அவர் "மஹாகவி'யிடம் கவிதை ஒன்றைப் பெற்றுப் பிரசுரித்தார். 'பெண்ணுக்கு வீடு சிறையா? என்பது அதன் தலைப்பு.
பெண்ணுக்கு வீடு சிறையாகும் எனும் இப் பேச்சே விழலடி, நம் பேதை மனிதர்க்கு எண்ணம் குழம்பிவிட்டது என்பதுண்மை தான். உன் கண்ணுக்குட் சிக்கிய என் நெஞ்சம் உனது கையாற் சமைத்ததுண்ண விழைகிறது மண்ணுக்குள்ளே இருக்குச் சொர்க்கம்; அதுவும் மனைக்குள் இருக்குதென்று சொல்கிறவன் நான்' என்பது அந்தக் கவிதையின் முதற் பகுதி. இல்லறக் கடமைகளை நிறைவேற்றுவதுதான் பெண்களுக்குச் சிறப்பாக உரியது என்ற கருத்து, அக்கவிதையில் அழுத்தம் பெற்றது. இதன் பின்னர் என்னிடமிருந்து ஒரு கவிதை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என் வழமையான சோம்பலினால், உரிய காலத்தில் நான் கவிதையை அனுப்பவில்லை. அப்பொழுது செல்வராசனின் ஆலோசனைப்படி 'மஹாலட்சுமி என்ற புனைப்பெயரில் "மஹாகவி” அவர்களே "ஐயா மஹாகவி” என்று தொடங்கும் கவிதையை எழுதினார். திருமதி ருத்திர மூர்த்தியின் பெயர் பத்மாசனி என்பது. செந்தாமரையில் அமரும் திருமகள் 'மஹாலட்சுமி. இந்த
24
 

ஒற்றுமை உள்வட்ட நண்பர்களாலே நயப்புடன் அவதானிக்கப்பட்டது. பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடவாமல் வெளியுலகிலும் இயங்கவேண்டும் என்ற எண்ணம் அக்கவிதையில் முனைப்புப் பெற்றது. அதனைத் தொடர்ந்துதான் எனது பங்களிப்பு விரகேசரியில் இடம்பெற்றது. என் கவிதையின் தலைப்பு போகிறவர் போய்வரட்டும் என்பது.
புரட்சி செலும் பாதையிலே போகிறவர் நாமென்று, போகும் வழியறியார் போகின்றார்; போகட்டும் இதுதான் என் பாட்டின் தொடக்கம்.
இதற்குப் பின் அழகேஸ்வரி என்னும் பெயரில் எழுதியவர் நீலவாணன் (அழகேஸ்வரன் என்பதன் தனித் தமிழாக்கமான 'எழில்வேந்தன்” என்னும் பெயரும் நீலவாணன் தம்பதியருக்குப் பிரியமானது என்பதை நாம் அறிவோம்).
தொடர்ந்து எழுதிய 'பரிமளா இராசதுரை வேறுயாரும் அல்ல; விறவுண் கிறேகறி இராசதுரை ஆகிய வி.கி.இராசதுரை தான். அவரே ராஜபாரதி என்பதும் பலருக்கும் தெரிந்த சங்கதிதான்.
இந்தக் கவிதைச் சர்ச்சையைத் தொடக்கி நெறியாண்டவர் சில்லையூர் செல்வராசன் என்பது கவனிக்கத்தக்கது. அந்தக் காலத்திலேயே, கவிதைக் கலையினை வெறும் தன்னுணர்ச்சிப் புனைகனவுகளின் வெளிப்பாட்டுக் கருவியாக மாத்திரம் முடக்கி வைக்காமல், அதில் நாடகப் பாங்கும் உரையாடற் கோலமும் பாவனை நவிற்சியும் இருக்குமாறு கையாள வேண்டும் என்ற நாட்டம் செல்வராசனிடம் இருந்தது. இதே நாட்டத்தின் வளர்ச்சியினை, பின்னொரு காலத்திலே தினகரனில் இடம்பெற்ற 'பாரதி கவிதைச் சமர் இன் சம்பவிப்பிலும் நாம் தரிசிக்கலாம்.
எனவே, வீரகேசரியில் இடம்பெற்ற 'மாதர் பக்க விவாதத்தில், பெண்ணியம் தொடர்பான வித்துகள் சிலவற்றைச் சிலர் காண முயலலாமாயினும், பிரதானமாக இது ஒரு கலைத்துறை விளையாட்டு என்றே சொல்வேண்டும். மஹாகவியே மஹாகவிக்கு எதிராக எழுதுவதும், இராசதுரையே இராசதுரையை மறுத்து எழுதுவதும் சிலருக்கு வேடிக்கையாகத் தோன்றலாம். கலைத்துறை ஆக்கங்களில், நான் என்று பேசும் குரல், குறிப்பிட்ட கலைஞர் படைத்த பாத்திரம் ஒன்றின் குரலாகவே பெரும்பாலும் அமைகிறது. இதனைக் கணக்கில் எடுக்காமல் விட்டால் ஒரு கலைஞரின் நிலைப்பாடுகளிற் சுயமுரண் இருப்பதாக நாம் பிழைபட விளங்கிக் கொள்ள நேரலாம்.
இனி, (மஹாகவி, முருகையன் ஆகிய) நம் இருவரையும் செல்வராசன் மாத்திரம்தான் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்று யாரும் சொல் முற்பட்டால், அது நூற்றுக்கு நூறு சரியானதல்ல. இந்திய எழுத்தாளர்களின் முற்றாதிக்கத்தின் உள்ளே அக்காலத்துப் பெரும் பத்திரிகைகள் பலவும் அமிழ்ந்து கிடந்தன. இதனை நன்கு உணர்ந்து விழிப்புப் பெற்ற செல்வராசன் வீரகேசரியில் தமக்குக் கிடைத்த தருணத்தைச் சரியாகப் பயன்படுத்தி, உள்நாட்டுப் படைப்பாளிகளை ஊக்கி நின்றார் என்பதை மறுப்பதற்கில்லை. 'பெருமக்கள் சார்பான கலை வட்டத்தின் விளிம்புகளுக்கு வெளியே நின்ற உள்நாட்டுப் படைப்பாளிகளைக் கை தூக்கிவிட்ட பெருமை செல்வராசன், கைலாசபதி, சிவநாயகம், இராஜ அரியரத்தினம் போன்ற பத்திரிகைப் பிரமுகர்களுக்கு மட்டுமல் லாமல், ஒரு காலத்தில் இங்கு பேராற்றலுடன் எழுந்த இலக்கிய இயக்கங்களுக்கும் அவை நடத்திய கலை வெளிப்பாட்டுக் களங்களுக்கும், இலங்கை வானொலிக்கும் கூட உண்டு என்பதை மறுப்பது சரியாகாது.
25

Page 14
இனி கமலினி அவர்களும் செல்வராசனின் ஆவண அறையிற் குவிந்து கிடக்கும் ஒட்டுப் புத்தகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, 'மஹாலட்சுமி என்பதும் தான்தோன்றியின் பல புனைபெயர்களில் ஒன்றுதான் என்று நினைத் திருக்கலாம். இச்சம்பவங்கள் நடந்த காலத்தில், அவர் மிகவும் சிறிய பிள்ளையாக இருந்திருப்பார். அவர் நேரடியாக - செல்வராசனின் வாய்மொழியாக இதுபற்றி அறியவில்லை என்றே நம்புகிறேன். அப்படிப்பட்ட நிலையில், பல பிறவி எடுக்கும் கவிஞராகிய தம் கணவரே மஹாலட்சுமியும் என்று கமலினி அவர்கள் நம்பியிருந்தால், அதுபற்றி முணுமுணுப்பதோ குறைகாண்பதோ இங்கிதமாகாது. முற்றுமுழுதான நல்லெண்ணத்தின் பாற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையாகத்தான், செல்வராசனின் கவிதைத் தொகுதியில், பொருளியற் முனைந்து விட்டோம்" என்ற பாட்டுச் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆகவே, இதுபற்றி முடிவற்ற சர்ச்சையொன்றை நடத்துவதோ எம்.ஏ.நு."மான் மீது கரி பூசுவதோ தேவையில்லாத காரியங்கள். இவ்வளவும் சொன்ன பிறகும் யாருக்கும் ஐயங்கள் மாறாமல் நீடிக்குமானால், ஸ்ற்றயிலிஸ்ற்றிக்ஸ்" எனப்படும் நடையியல் வழிப்பட்ட முறைகளாற் கூட ஒரு பரிசீலனையை நடத்தி இதற்கு முடிவு காணலாம்.
ஆனால், இந்தச் சின்ன விசயத்துக்கு இவ்வளவு தடயுடலான மற்போர்களில் நம்மவர்கள் ஈடுபடுவது சிரிப்புக்கிடமானது.
本 承 米 来。米
ஆசிரியர் ஞானம்
அன்புடையீர்
இக்பாலின் கோவணம்" என்ற படைப்பு பலமுறை கூறப்பட்டுள்ள ஒரு குட்டிக்கதையின் மாற்றுவடிவம். மூலக்கதையில் ஒரு சாமியாரிடம் இருந்த கோவணத்தைக் கழுவிப்போட்டால் அதை எலி கொண்டுபோய் ஒளித்துவிடுவதால் ஒரு பூனை வளர்க்கப் போய் பூனைக்குப் பால் வேண்டிப் பசு வளர்க்கப்போய் பசுவைப் பராமரிக்க ஆள் வைக்கப்போய் ஆளை நிர்வாகம் பண்ணக் கல்யாணம் பண்ணிக் குடும்பஸ்தரானதாகக் கூறப்பட்டுள்ளது. தர்க்கரீதியான ஒழுங்குடன், பற்று என்பது எவ்வாறு பரவிப் படர்ந்து ஆக்கிரமிக்கிறது என்ற கருத்து அங்கு கூறப்பபட்டுள்ளது. ராமகிருஷ்ணரும் இக் கதையைக் கையாண்டதாக நினைவு. இக்பாலின் எழுத்து வடிவில் மூலக்கதையின் தர்க்கரீதியான செம்மை இல்லை. கதையைச் சொன்ன முறையில் மரபுச் செய்யுளின் ஒசைவடிவமும் இல்லை. கவித்துவமான பண்பும் குறையாடாக உள்ளது.
மேற்சொன்னவை ஒரு புறமிருக்க, மூலக்கதை பற்றிய ஒரு குறிப்பையும் தந்திருப்பின் பயனுள்ளதாக இருந்திருக்கும். பிற்காலத்தில், இக்பாலிடம் கேட்டுத்தான் ராமகிருஷ்ணர் சொன்னாரா என்று வீண் விவாதம் எழாமலிருக்க, அது உதவக் கூடுமல்லவா. -
யோகநாதன் நுட்மான் மீது தொடுத்துள்ள தனிப்பட்ட தாக்குதல்கள் யோகநாதனையே பலவீனப்படுத்துவன. நுஃமானின் தகுதி - தகுதியினம் என்பன ஒரு புறமிருக்க, யோகநாதனின் நூலில் வரும் வரலாற்று நிகழ்வுகட்கான சான்றாதாரங்களை அவர் வழங்கியிருப்பின் அவரது நூல் மீதான விமர்சனத்துக்கு அது தகுந்த பதிலாக இருந்திருக்காதா?
திறனாய்வுகள், எவ்வளவு சீரியனவாயினும், அபிப்பிராயங்களேயன்றி முடிந்த முடிவுகளல்ல. எனவே, அவற்றை நிதானமாயும் பணிபுடனும் எதிர்கொள்வதன் மூலமே உண்மைகளைக் கண்டறிய வழியுண்டு.
அன்புடன் - சிவசேகரம்.
26

ళ్ల్యూగ్గాళాఖ్య
锡
எஸ். எதிர்மன்னசிங்கம்
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமைபுரிவது கலை - இலக்கியத் துறைக்குப் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு மட்டுமல்லாமல் மனதிற்கு நிறைவினை அளிப்பதாகவும் உள்ளது எனக் கூறி பல காத்திரமான பணிகளைச் செய்பவர் திரு எஸ். எதிர்மன்னசிங்கம். வடகிழக்கு மாகாண கலாசார உத்தியோகத்தராக 20வருடங்களும், உதவிக் பணிப்பாளராக 10வருடங்கள் கடைமையாற்றும் இவர் கலை - இலக்கியப் பணி மனதிற்கு நிறைவினை அளிப்பதனாற்றான் வெறுமனே கடமையை நிறைவேற்றும் (எப்படியோ சம்பளம்) செயற்பாட்டுடன் மட்டுமின்றி பல்துறை ஆற்றலுடன் தன் ஆளுமையை நிலைநாட்டி வருகிறார். பதிப்புத் துறையோ, எழுத்துத்துறையோ, நடிப்புத்துறையோ, நிர்வாகச் செயற்திறனோ, பேச்சாற்றலோ, எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோ, கலைஞர்களைக் கெளர விப்பதோ, விழாக்களை சிறப்புற நடத்துவதோ. எதுவாயினும் சகலகலா வல்ல வனாக தன்னை இனங்காட்டி வருகிறார்.
பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்றுவரை ஓயாது எழுதிக்கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பவர் இவர். வீரகேசரி, தினபதி, தினகரன், ஈழநாடு முதலிய பத்திரிகைகளிலும் இந்துதர்மம், இளங்கதிர், தொண்டன், படித்தேன், வித்தியா போன்ற சஞ்சிகைகளிலும் பல்வேறுபட்ட பரந்த தலைப்புகளில் இவருடைய ஆய்வுபூர்வமான எழுத்தை நாம் படித்தோம். இன்றும் படித்துவருகிறோம். பேராசிரியர்கள் வி.செல்வநாயகம், சு.வித்தியானந்தன், ஆசிரியர்கள் எஸ்.வேலுப்பிள்ளை, ரூபசிங்கம், க.தியாகராசா போன்றோரிடம் தான் பெற்ற கல்வியும், அநுபவங்களும் தனது எழுத்துக்கு ஆணிவேராகத் திகழ்கின்றன என்று கூறும் இவர் தன்னுடைய பன்முகப்பட்ட செயற்பாட்டுக்கு பேராசிரியர் வித்தி ஐயா தந்த ஊக்குவிப்பு சிறப்பானதென நன்றியுடன் நினைவு கூர்கிறார். மேலும் மகாவித்துவான RX.C.நடராசா, புலவர் மணி. ஏ.பெரியதம்பிப்பிள்ளை போன்ற அறிஞர்களது நட்பும், தொடர்பும் தனது இலக்கிய ஆளுமைக்கு உறுதுணை என்று கூறுவதில் பெருமையடைகிறார்.
1976ம் ஆண்டு அகில உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பிராந்திய மாநாட்டிலே மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகள், 1997ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலே நடந்த 6வது உலகச் சைவமாநாட்டில் கலையும் பண்பாடும் என்ற அமர்வில் அருங்கலைகளின் சிறப்பியல்புகள், 1999ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற 7வது உலகச் சைவமாநாட்டுச் சிறப்பு மலரிலே ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததோடு, பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பல கட்டுரைகளை எழுதியும் வருகிறார். மேலும் இலங்கை வானொலியின் கலைக்கோலம் நிகழ்ச்சியில் பாரம்பரியக் கலைகள் பற்றியும், கிராமிய சஞ்சிகை நிகழ்ச்சியில் பல பேச்சுக்களையும் நிகழ்த்தியுள்ளார்.
ஆரம்பகாலத்தில் ஆக்க இலக்கியங்களும் பின்னர் அரிதான நூல்களும் - ஆய்வு நூல்களும் என 18ற்கு மேற்பட்ட நூல்களை அமைச்சில் பதவியேற்ற பின்னர் அச்சுருவாக்கியதோடு, பதிப்புத்துறையில் ஜோர்ஜ் றெட்ணே என்பவரது Books on Batticoloa (மட்டக்களப்பு பற்றி அறிந்து கொள்வதற்கான தகவல்கள்
27

Page 15
அடங்கியது) ஈழத்துப் பூராடனார் க.செல்வராஜ கோபாலுடன் இணைந்து மட்டக் களப்பு மாநில உபகதைகள் தொகுப்பு, மகாவித்துவான் FXCநடராசா தொகுத்த மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை வாழ்க்கை வளம் என்னும் நூல்கள் போன்றன அடங்கும். பிறருடைய நூல்களைப் பதிப்பித்தபோதும் தன்னிடம் உள்ள இரு நூல்கள் உருவாக்கப்போதுமான கட்டுரைகள் கைவசம் வைத்திருக்கும் இவர் நிதி வசதி ஏற்படுமிடத்துப் பதிப்பிக்கலாம் எனக் காத்திருப்பது கவலைக்குரியதே.
சிலர் குறிப்பிட்ட துறைகளில் மட்டும் தங்களது திறமையைக் காட்டுவர். எங்காவது ஒருசிலர் பலதுறைகளில் தங்களது திறமைகளைக் காட்டுவதுண்டு. அந்த ஒரு சிலரில் எஸ். எதிர்மன்னசிங்கமும் அடங்குவர். குறிப்பாக கூத்துக்கலை, பாரம்பரியக் கலைகள் என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட சிலர் யார் இந்த விஜயன்? என்ற நாடகத்தில் விஜயனாக நடித்ததன்மூலம் யாரிந்த எதிர்மன்னசிங்கம் எனக்கேட்கப்பட்டவர். பள்ளி நாட்களிலிருந்தே நடிப்புத்துறையில் சிறந்த நடிகனாகத் திகழ்ந்தார். பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்தளித்த நொண்டி நாடகத்தில் சொக்கன் பாத்திரமேற்று நடித்தார். மேலும் இராவணேசன் கூத்தில் பக்கப்பாட்டுப் பாடியதோடு கூத்தின் வாத்தியக் கருவியான கல்லரி வாத்தியத்தையும் இசைத்துள்ளார். இன்று நாடகத்துறையில் பேசப்படும் பேராசிரியர் சி.மெளனகுருவுடன் நடித்த காலத்தை மகிழ்வுடன் நினைவு கூர்கிறார்.
பண்பாட்டலுவல்கள் துறையில் எமது முதாதையர்களால் உபயோகிக்கப் பட்ட பாரம்பரியக் கலைத்துவமான பொருட்களைச் சேகரித்து ஆவணப்படுத்துவ தோடு அரும்பொருட்களஞ்சியம் ஒன்றையும் உருவாக்குவதற்கு கலாசார உத்தி யோகத்தர்களது உதவியுடன் முயற்சிக்கும் இவர் கிராமியக் கலைகளை வளர்ப் பதில் ஊக்கம் கொடுப்பதுடன், நாட்டார் பாடல்கள் சேகரிப்பு, ஆவணப்படுத்தல், கூத்துக்கலையை வளர்ப்பதற்கான முயற்சியும் - ஆவணப்படுத்தலும், வட-தென் மோடி கூத்துகளை வீடியோ நாடாக்களில் ஒளிப்பதிவு செய்வதும் எழுத்தாளர்களது நூல்களைக் கொள்வனவு செய்வதும், வெளியீடு செய்வதும், வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு மாதாந்த நிதி உதவி, பிரபல்யம் வாய்ந்த கலைஞர்களுக்கு கெளரவிப்பு எனப் பல பணிகளைப் புரிந்து வருகிறார்.
சமய வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி உதவி, சிற்ப, ஓவியக் கண்காட் சிகள், இசைவிழாக்கள், தமிழ் இலக்கிய விழாக்கள், கூத்துவிழாக்கள், ஆய்வரங் குகள் எனப் பல்வேறு விடயங்களில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டுவரும் இவர் எமது தமிழ் மக்களுக்கென்று ஒரு தனித்துவமான கலைப் பொக்கிஷம் உள்ளது. அது தான் கூத்துவடிவம் அதனைப் பல வழிகளிலும் அபிவிருத்தியடையச் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இதன் மூலம் நமக்கென ஒரு தனியான நடனம் வெளிக்கொணரப்படும் என நம்பிக்கையுடன் கூறிக்கொள்கிறார். இவருடைய கூத்துக்கலை ஈடுபாட்டுக்கு ‘அர்ச்சுனன் செல்லத்தம்பி என்று விசேடித்து அழைக்கப்படும் தனது தந்தையின் ஈடுபாடும் - திறமையும் தான் முதற்காரணமென நெஞ்சம் நிறைய நினைக்கிறார்.
கடந்த ஆண்டு (2000) இலங்கை தென்கிழக்கு ஆய்வு மையம் இவரது சேவையை மதித்து தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரப் பீடாதிபதி கலாநிதி K.MH காலிதீன் அவர்களைக் கொண்டு பாராட்டி பொன்னாடைப் போர்த்தி கெளரவித்து மேலும் இவ்வாண்டு இவருக்கான மணிவிழாக் கொண்டாடும் முயற்சிகள் நடைபெறுவதை அறியும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது.
28

மரணங்கள் மலிந்த பூமி எழுதியவர்: செங்கை ஆழியான் வெளியீடு: யாழ் இலக்கிய வட்டம் யாழ்ப்பாணம், இலங்கை. முதற்பதிப்பு: ஏப்ரல் 2000 சமகால எரியும் பிரச்சினையின் ஓர் அங்கம் அதன் முழுவடிவில் பலத் தோடுடம் பலவீனத்தோடும் நாவலாக வெளிவருகிறது. நூலுருவில் வெளி வரும் முதல் நாவலிதுவெனக் கருது கிறேன். செங்கை ஆழியான்
முன்னுரையில்.
இல்லை இல்லை எழுதியவர்: ரூபராணி ஜோசப் வெளியீடு: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 18/13 பூரணவத்தை, கண்டி. முதற்பதிப்பு: 1999 சிறுவயது முதல் ருபராணி அவர் களுடன் வளர்ந்து வந்த நாடகக்கலை, "இல்லை இல்லை” என்ற சுவாரசிய மான பெயர் சூடி பிறக்கிறதென்றால் அது அனைவரும் வரவேற்கத்தக்க விஷயம். அம்சமான எட்டு நாடகங்களை உள்ளடக்கி நாடகத்துறைக்குப் பங் களிப்புச் செய்து சமூக விழுமியங் களைக் கட்டிக்காக்கவும், கட்டியெழுப் பவும் வழிவகுத்துள்ளார். , திருமதி நவம் வெள்ளைசாமி
வாழ்த்துரையில்.
29
இலங்கையில் இனக்குழும அரசியல் எழுதியவர்: சி.அ.யோதிலிங்கம்
மூன்றாவது மனிதன் வெளியீடு முதற்பதிப்பு: 15.08.2000 இவருடைய கருத்தாழமும், நோக்கும், உணர்மையும் கொண்ட எழுத்துகள் மூலம் இலங்கையின் யாப்புகள் நிலைப்பட்ட குறைபாடுகளை நாம் நன்கு அறிவோம். இந்நூலில் வரும் கட்டுரைகள் இன்று இலங்கை எதிர் கொள்ளும் இனப்பிரச்சினைகள் பற்றிய தமிழ் நிலைப்பாடுகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரையில்.
செந்தணல் எழுதியவர்; அங்கையன் கயிலாசநாதன் வெளியீடு: அங்கையன் பதிப்பகம், H1/2 அரசாங்கத் தொடர் மாடி, கொழும்பு 04.
முதற்பதிப்பு: மே 2000 "செந்தணல் அங்கையன் கயிலாசநாத னால் 1969 - இல் எழுதப்பட்டது. 'மித் திரன்’ இதழில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது. இது கணி சமான நெடுமை உடையது. இது பற்றி முன்கூட்டியே அதிகம் கருத்துகள் சொல் வதைக்காட்டிலும், நூலின் உள்ளே, எந்த ஒரு முடிவும் இல்லாமல் திறந்த மனதுடன் நுழைந்து உலாவி வருமாறு வாசகர்களுக்கு இடமளிப்பதே நல்லது. முருகையன் அணிந்துரையில்.
தாய் நாட்டு அகதிகள் எழுதியவர்: மாரிமுத்து யோகராஜன் வெளியீடு: விழுதுகள்,
அக்கரைப்பற்று - 08. முதற்பதிப்பு: ஜனவரி 2000. சமகாலப் பிரச்சினைகளுள் குறிப்பாக

Page 16
தொன்ைனூறுகளின் பின்னரான அரசி பல் நெருக்கடி காரணமாக ஏற்பட்ட தமிழி பேசும் மக்களினர் இடம் பெயர்வுகளும் அகதி வாழி விமே முதன்மை பெற்றுள்ளன. கவிதா உணர்வு தீவிரமாகவும், இயல்பாகவும் கவிதைக்குரிய செறிவுடன் வெளிப்படு கின்றன.
செ. யோகராசாவின் அவதானிப்புகள்.
வேர்களைத் தேடி
எழுதியவர்: தீரன் வெளியீடு: மித்ர வெளியீடு, சிட்னி - சென்னை - மட்டக்களப்பு.
கடல்கடந்து அந்நிய தேசங்களில் தம்மை அடைக்கலமாக்கிக் கொண்ட ஈழத்து மைந்தர்கள் தம்மால் முடிந் தளவுக்கு இலக்கியம் படைக்கிறார்கள். கவிதைகள் புனைகிறார்கள். அதை நூலாக அச்சில் கொணர்கிறார்கள். யாபூர் துரை
நினைவலைகளில்.
இலக்கியப் பூந்துனர் (தமிழ் ஒளி வ.அ. இராசரத்தினம் அவர்களின் பவளவிழா மலர்) தொகுப்பாசிரியர்: த. சித்திஅமரசிங்கம் வெளியீடு: திருக்கோணமலை முத்தமிழ் கலைவளர் மன்றம். பதிப்பு 05 - 05 - 2000 தமிழ் ஒளி வ. அ.இராசரத்தினம் அவர்களை அவர்களின் 75ஆவது அகவின் நிறைவை ஒட்டி அவர்க்கு "இலக்கியப் பூந்துணர்" என்ற பவளவிழா மலரைப் படைத்து வாழ்த்திப் பாராட்டிக் கெளரவிக்க இருப்பதில் பெருமை அடைகிறது திருக்கோணமலை முத்தமிழ் கலைவளர் மன்றம், சித்தி அமரசிங்கம்
என்னுரையில்.
3)
பெண் தொகுதி 5, இலக்கம் - 1 வெளியீடு: சூரியா பெண் கள்
அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு காலங்காலமாக பெண்னை நிர்வான மாக்கி கலைகளில் ரசித்த, எழுத்துக் களில் இன்பங்கண்ட, அரசவைகளில் உறுப்புறுப்பாய் சிலேடை சொன்ன, அட்டைகளில் நிர்வானப்படத்தைக் கிறி மூன்றாவது மனிதர்களாக நின்று, "கலை" என்று ரசிக்கும் சமுகம் இது. இந்தச் சமூகத்துக்குப் பெண்ணிலை வாதம் என்பது மயிர்க்கொட்டி பட்ட மாதிரிதான். பெண்கள் தமது பிரச்சினையினை எழுதுவது என்பது குற்றமாக முடியாது. அவர்கள் எழுதுவார்கள் எழுதிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மீது அழுத்தம் பெறும் வன்முறைகளுக்காமப் அவர்கள் கிளர்ந்தெழுவார்கள். - ஆசிரியர்
உங்களுடன் ஒரு நிமிடத்தில்.
கருக்கொண்ட மேகங்கள் எழுதியவர்: ப.ஆப்தீன் வெளியீடு: பேசும்பேனா. முதற்பதிப்பு: நவம்பர் 1999 இந்த நாவல் ஊடாக ஆப்டீன் சொல்ல வரும் செய்தி மிக மிக வலுவானதாக எனக்குப் படுகிறது. ஒரு வகையில் அனுராதபுரத்தின் பகைப் புலத்தில் இலங்கை முழுவதற்குமான செய்தி யைக் குறியீடாகக் கூறியிருக்கிறார். செங்கை ஆழியான்
திறப்புரையில்.
புதிய நூலகத்தில் நீங்கள் எழுதிய நூல்களின் விபரங்களும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரண்டு பிரதிகளை அனுப் பரி வையுங்கள்

இரு
திடுதி யெனப் பெய்யும் போர்மழையில்
நோய் வாய்ப்பட்டு அவனப்தைப் படுவதைவிட
晶L凸 凸鹉 தற்கொலை செய்து கொள்வதே மேலெனக் கருதும் அப்பாவி மனித உயிர்களின் மன எண்ணங்கள் வாழும் உலகை விட்டுப் போவதா? வாடும் நாட்டை விட்டுப் போவதா? நானும் ஊரை விட்டுப் போவதா? #T୍]]
மனக் கொந்தளிப்பில் தற்பாதுகாப்புக்காய் அலை மோதும் போர் ராகத்தின் சரித்திரம் ஓயாத விதியாச்சி
எம் நாட்டுத் தோம்புதர்கள் பிறப்புப் பதிவுகளை வைப்பதைவிட இறப்புப் பதிவுகளை வைத்து கொள்ளை லாபம் அடித்து சிறப்புப் பெறுகின்றார்கள். ஆண்ாலும
இறப்புத் தொகை எவ்வாறு அதிகரித்தாலும் பட்ரனி நோன்பும் சாமானின் விலையேற்றமும்தான் எம் மண்ணில் அனுவர்டிக்கப்படுகிறது.
இந்தக் கொடுர கொடுமைகளுக்கு அஞ்சி வாழும் உயிர்கள்தான் காட்டுக்கு அகதியாய் துறவரம் செல்கின்றன இலைகுலைகளை உண்டு நிம்மதி
வாழ்க்கை நடத்துவதற்காப்!
சட்ட அங்கீகாரத்தோடு பட்ட வெளிச்சத்தில் திட்டம் போட்டு ஆயுத முனையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடத்தும்
6υαζς.
இக்பால் அலி
இன வெறியர்களல்லாமல் நிம்மதியாய் வாழ்வதற்காப் காட்டில் கல்வாடிக்குள் கல்லாக குடியிருக்க துறவரம் பூண்டுள்ளன மனித புனிதத்தைப் பாதுகாப்பதற்காய்
தியாகத்துடன் செயல்படும் இந்த இருப்புக்களில்தான் நவீன கட்டடக் கலையின் சுவர் வடிவங்கள் பல வண்ணசாங்களில் மாளிகைகளாகவும் கோபுரங்களாகவும் உயர்ந்து நிற்கின்றன செங்குருதி கலந்த செங்கல்லினால் கட்டப்பட்ட கட்டடங்களாய்,
இதிலே குடியிருக்கும்
இனவாதக் குடிகாரர்கள்
பேசும் மொழியுடன்
பேசவே வழி விடாச்
சமர் செய்து
உயிரோடு புதைத்து
பின்
செல்லாக் காசாகிப் போன
அந்த மொழியின் ரிதத்தை
தோன்றியெடுத்து
வெளிப்பகட்டுக்காய்
நீதி பேசுவார்கள் நியாயம்தான் என்று
இந்த அநியாயங்களையும் தம் உரிமைகளையும் தட்டிக் கேட்டால் சர்வதேசத்தின் கண்களுக்காப் இங்கே இனப்பிரச்சினை இல்லை இங்கே மொழிப்பிரச்சினை இல்லை இங்கே பயங்கரவாதப்
- பிரச்சினைகள்தான் உள்ளதெனும் வர்ண மையினைப் பூசி Hol} + fg']}h|T அழகுபடுத்தம் அத்திரவாரங்கள்தான் (SLT III (Sis.

Page 17
எந்த வழியிலாவது இந்தப் பொய் நாடகத்தை அரங்கேற்ற அந்த எதிரலையின் விவேகத்தை கூறுபோட்டு மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள்தான் அரசாளும் ஆண்டவர்கள். அதனால்தான் துறவரம் சென்றவர்கள் தங்களுக்குள்ளேயே பலமான தட்டுக்கல் என்றும் பலமற்ற ரன்கல் என்றும்
இரு அச்சுகளாப் பிரிந்து நிற்கிறார்கள்
இதில் தட்டுக்கல் மட்டும்தான் அத்திவாரங்களுக்கு உகந்த அத்திவாரமாப் தம் இலட்சிய வேட்கையில் ஒரு வெடிப்பும் விழாமல் விடுதலைக்கான இலக்கை வீறாப்புடன் வெற்றிவாகை சூட போராட்டம் நடத்துகிறது.
இங்கே ரன்கல்லும் ஒரே அச்சினாஸ் நெய்யப்படும் செங்கல்தான் விடுதலைக்குரிய கல்லாப் - அது விலை போவதில்லை. கட்டோடுவதில்லை - அது அத்திவாரம் போடுமுன்னே மழையில்
கரைந்து விடுகிறது.
இங்கே இம்சைகளை நீரூற்றிச் சார கேள்விகளைப் பிண்ணி பிரயோசனமற்ற கற்களைச் சுடும் கல்வாடிகலல்லாமல் உண்மைக்கு உண்மையாய் தட்டுக்கல்வாடி மட்டும்தான்
செந்நீர் ஊற்றி தரமான களிமண்ணைச் சாடி அழகான முறையில் பிண்ணி
உறுதியான கற்களை
.at டுத் தருகின்றனه|
Printed at GREEN LEAF PRNTH
 

T.GNANA SEKARAN 19/7,
USE,85A, Katugastota Rd, Kandy,