கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.03

Page 1
醚
TT
فه
e سداك طاقة
 
 
 
 
 
 

இலக்கியச் சஞ்சிகை
鬱 聽 Dss 65 চািঙ্ক : x : xஆ
O

Page 2
அதிகாலைக் குளிரை ஒரு தேநீர்க் கோப்பையினால் தனித்துவிட முடியாது இருள் மெள்ளமெள்ள உதிர்ந்து ஒளிப் பொடிகள் தூவப்பட்டு
நிலம் பல்விளக்கிப் பார்க்கும்போது விடியலும் ஒரு பரவசமான உலகம்
என் முன் விரிகிறது நீ விடியல்
என்னைப் பொறுத்தவரை ஒரு விக்கல் குடல் நிமிராத தலைசீவுவதும் சொற்ப ஆகாரம் உண்டவனின்
பம்மாத்து
என்றெல்லாம் நான் நினைத்திருந்த காலத்தில் என்னை நானே ஏமாற்றியிருக்கிறேன்
இப்போது அதற்காக
பெரும் துக்கத்தோடு என் மனதைக் கொண்டுவந்து குவித்திருக்கிறேன், அதைத்தான் ஊரவர் மலை என்கின்றனர்
இதைப்போன்ற ஒவ்வொரு விடியலிலும் ஒவ்வொரு வெளிப்பாடுகளிலும் ஏதோ இருக்கிறது என்பதை நான் தேடத் தேட இன்னும் பல விடியல்கள் அவசியப்படுகின்றன
நீ இன்னுமொரு விடியல் என் நெஞ்சில் நீ
கொட்டுகின்ற அத்தனை பிரியங்களுக்குள்ளும் எழும்பி நிற்பது இந்த இடுப்பு முறியாத மாளிகையின்
கோபுரமே Nکسی که الكه
ஆக, பல விடியல்களால் ஈர்க்கப்பட்டவனாக كمحاسبي كما நான் இப்போது இருக்கிறேன் கும்மிருட்டையும் கிளைத்துப் பார்க்கிறேன் அப்போதுதான் விடியலின்
உண்மையான இனிமை கிடைக்கிறது
விடியல் விடியலேதான்
அதை யாரும் இங்கிருந்து விரட்டவே முடியாது சோலைக்கிளி இந்த மாளிகையின் ஜன்னலால்
நி தலைசீவிக் கொள்ளுவது
பலருக்கும் தெரியவரும்
 

உள்ளே. si in in in
பகிர்தலி
மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
குானம்
பிரதம ஆசிரியர் : தி. ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் சிரசுரமாகும் படைப் புதினரின் Fருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
|TFT,
தொடர்புகளுக்கு.
தி. ஞானசேகரன் 19/7, பேராதனை வீதி, கண்டி. தொ.பே. - 08-234755
UTT-ՅՈճ5D5 Fa O8-34755
சிறுகதை படர் கம்பு - 04 ്', '16' வீ.என். சந்திர காந்தி குளக்கோட்டன் - 23 வ. அ. இராச த்தினம் வாஞ்சை - 13 4. ବାଂt.c( 4, at:<tt&d!
கட்டுரைகள் நான் பேச நினைப்பதெல்லாம் - 10 ஈ1 நிதி துரை மனோகரள் வன்னிபர்க் கவிராயர் - 17 முல்: ranf பேராசிரியர் சிவத்தம்பியின் பன்முக ஆய்வு 19 முகம்மது சமீம்
கவிதைகள் விடியலும் நீ தலைசீவுவதும் - 02 சோலைக்கிளி அரும்பு உதிர்ந்தது - 09
தமிழேTப்பை தாயக நினைவுகளுடன் - 12 தே. சங்கீத" திக்குச்சிகளும் தீர்மானங்களும் - 30 மடபr அன் #1 எம்.பிறியTம் ஒடுங்கி ஒதுங்கும்! - 31 கவிஞர் ஏ. இக்பால் எனது கிராமத்துக்குத் திரும்பல். - 32
| If t୍}}ସ୍ଥy, al/{#|Tit #}}}}ଳn
நூல் மதிப்புரை - திருT) சேகரன் 15
வாசகர் பேசுகிறார் 25
புதிய நூலகம் - அந்தனிஜிவா 29
E-MJuil - En AnnmarxII niet.Ik
அட்டைப்படம் - நன்றி - தாமரை

Page 3
(திருமலை ܘ[ என்.சந்திரகாந்தி)
அதிகாலையிலேயே தலையில் நீர் ஊற்றுவது ஒரு சுகம்தான். மனப் போராட்டங்களுக்கு மத்தியில் இரவு பூராகவும் கண்ணிர் சிந்தி கலங்கியதால் விடிவிழந்த முகத்தை எவருமறியாமல் கழுவியதுமாகுது. நேரகாலத்துடன் கடமைகளைத் தொடங்கியதுமாகுது.
இவருக்கு வாழ்க்கைப் பட்டு இன்றைய தினம் சரியாக இருபத்தைந்து வருடங்கள் பூர்த்தி. எனக்கும் நாற்பத்தி யிரண்டு வயதாகிவிட்டது.
பிள்ளைகள் இரண்டும் எங்களுடன் ஒற்றுமையாக இருந்து பெற்றோரின் மணவாழ்க்கையின் வெள்ளி விழாவைக் கொண்டாடி "எந்தையும் தாயும் தெய் வங்கள் என்று போற்றி எமது மனதைக் குளிரப்பண்ணவேண்டும்.
நான் அதிக செல்லம் கொடுத்து வளர்த்த எனது மகன்தான் குறுக்கால் இழுத்தான் என்றால் கலாசாரங்களை யும் கல்வியறிவையும் ஊட்டி வளர்த்த எனது மகள் எங்களைத் தூக்கி எறிவாள் என்று நான் சிறிய அளவில் கூட நினைக்கவில்லை.
இன்று வெய்யிலும் கொஞ்சம் கடுமையாகத் தான் இருக்கும்போல் தெரிகின்றது.
காலையில் துயில் எழுந்தவர், வீட்டுக் கொல்லையில் உள்ள பயிர் களுக்கு நிலத்தைச் சொகுசு பண்ணிக் கொடுத்து, பயிற்றங் கன்றுகளுக்குப் படர் கம்பு நாட்டி நீர் பாய்ச்சும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
பிள்ளைகளுக்கு நல்ல தொழில்
04
வாய்ப்புக் கிடைக்கும்வரை ஏழெட்டு வருடங்களாயினும் அரச தொழிலைத் தொடர்வதென இருந்தவர், இப்போ. இரண்டு வருடத்தில் ஓய்வூதியம் எழுதி விட்டு வந்துவிடுவேன் என முடிவாகச் சொல்லிவிட்டார்.
கவலையாகத் தான் இருக் கின்றது.
"நேரம் ஏழு மணியா குது.
குளித்துவிட்டு வாங்கோவன், ஒரு சுடு
தண்ணியை ஆவது குடிக்க"
நான் வேறெதனைச் சொல்வது? எங்களுடைய பிள்ளைகள் எங் களுக்கு விட்டு வைத்துவிட்டுப்போன மனச் சந்தோசத்தில்.
‘இன்றைக்கு நாங்கள் வெள்ளி விழா கொண்டாட வேண்டிய நாள். வாங்கோ கணவன் மனைவியாக கோயி லுக்குப் போய் விட்டு வருவோம் என்று கேட்பதா?
"தலை ஈரத்தை நன்றாகத் துவட்டி விட்டு இந்தக் கோப்பியை குடியுங்கோ. 'கொலஸ்ரோல் அது இது என்று மற்றவையெல்லாம் விழுந்தடிக்கினம். நீங்களும் ஒரு தடவை போய் "செக் பண்ணுங்கோ என்றால், ‘என்னை வருத்தம் நெருங்குமா?. எழுபது வயது தாண்டினாலும் சுகதேகியாக வாழ்ந்து காட்டுகிறேன் பார்" என்று தட்டிக் கழிக்கிறியள்"
வேலைப் பராக்கிலும் கதைப் பராக்கிலும் கவனிக்கத் தவறிவிட்டேன். அப்போதுதான் கவனித்தேன். 96).J. விழிகளில் நிறைந்த நீர் கன்னம் வழியே
 
 

தாரை தாரையாக வழிந்தது.
“பிள்ளைகள் என்னை ஏமாற்றி முடிந்தது. இப்போ நீயும் என்னை ஏமாற்ற ஆயத்தமோ? அவரது சொற் கள் தழம்பின.
அதிகாலையில் நான் துயிலெ ழுந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கியதிலிருந்து, முழு கிம் பொட்டிட்டு இறைஅஞ்சலி செலுத்தும் வரையிலும் என்னை அவர் கண்காணித் தமையைப் பின்புதான் நான் புரிந்து கொண்டேன்.
அவரது மடியில் விழுந்து ஓவென்று குரல் வைத்து அழவேண்டும் போல இருந்தது. அந்த எண்ணத்தை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன். நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நாட்கள் நேற்றோ முந்திய தினமோ என்பதுபோல உள்ளது. அதற்குள்ளாகவே.
எனக்கொரு விவாகம். குடும்ப வாழ்க்கை. மழலைபேசக் குழந்தை கள்.
எல்லாம் ஒரு கனவுபோல நடந்து முடிந்து விட்டன!
நான் விவாகமாகி அவரது வீடு புகுந்தபோது அங்கு சிலர் என்னை எச்சரித்தார்கள்.
"உன்னுடைய புருஷன் கோபக் காரன், கவனமாக நடந்துகொள்" - அவரது பெரியதாய்,
"சொந்த மச்சாளை வைத்துக் கொண்டும் நாங்கள் ஏன் உவனுக்குப் பெண் கொடுக்கவில்லை. பொல்லாத கோபக்காரன்” - தனது மகளை மணம் முடிக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவரது மாமியாரின் அண்டல்.
அவரது கோபம் எப்படிப் பட்ட தென்பதை நான் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கவில்லை.
அவரது சகோதர சகோதரிகளை சிறு விடயங்களுக்குக் கூட சத்தமிட்டு அவர் அதட்டுவதைக் காணநேர்ந்த
05
போதே நான் ஒன்றைக் கவனித்தேன். அவர் தன் மீது வைத்திருக்கும் அக்கறையையும் கவனத்தையும் விட பன்மடங்கு அன்பும் பரிவும் தன்னைச் சார்ந்தவர்கள்மேல் வைத்திருந்தார். அந்தப் பரிந்துணர்வு அவரிடம் மேம்பட்டு இருந்ததால் தான் மற்றவர்களை எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டிருந் தாரே அன்றி, கோபம் என்ற பலவீனம் அவரிடம் இருக்கவில்லை.
இந்த உண்மையை நாம் அன்புடன் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த எமது செல் வங்களே புரிந்து கொள்ள மாட்டாமல் போய் விட்டதுதான் பெரிய துன்பமாகப் போய்விட்டது.
அன்று எனது மகள் அப்படி எதிர்வார்த்தை பேசி சவால் விடுவாள் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை.
*நீங்கள் அணி னாவையும் என்னையும் வீட்டிற்குள் பூட்டிப் பூட்டி வைத்த இலட்சணம்தான் எங்களுக்குப் படிப்பில் நல்ல "ரிசல்ட் எடுக்க முடியா மல் போனது. அதுமட்டுமல்லாமல் இன்று நாங்கள் வெளியில் காரிய மாற்றக் கூடிய திராணி இல்லாமல் இருக்கின்றோம்”
முகத்தில் அரும்பிய வியர்வையை துவாயால் அழுத்தி ஒற்றியபடியே அவர் கூறினார்.
"பிள்ளை. உங்களை நாங்கள்

Page 4
எப்படி வளர்த்திருக்கவேண்டும் என்று நீ நினைக்கிறாய்?. எங்களுடைய கலாசாரம் எங்களுடைய பண்பாடுதான் எங்களுக்கு முக்கியம். அதன்பிறகுதான் கல்வி அறிவோ தொழில் வாய்ப்போ எதுவும்.”
இப்போது மகள் முற்றத்தில் நின்று நீண்டதான தனது முடியை சீப்பினால் வாரிக் கொண்டே.
"அப்பாவுக்கு எங்களுடைய முன் னேற்றத்திலும் அக்கறை இல்லை. இன்னாருடைய மகள் இன்னாருடைய மகனுடன் ஊர் சுற்றுகிறாள் என்று கதை வராமல் இருக்கவேண்டும். மற்றப் படி நாங்கள் எதிர்காலத்தில் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை."
நான் அதட்டினேன். “பிள்ளை. அப்பாவோடு கதைக்கின்ற கதை மட்டு மரியாதையோடு இருக்கவேண்டும்.”
இப்போ தலையை வேகமாகச் சுழற்றி முன்னே இருந்த தனது நீளமான முடியைத் தோளுக்கு மேலால் பின்தள்ளி விட்டு சீப்பில் சிக்குண்டிருந்த மயிர்களைப் பிடுங்கி எடுக்கத் தொடங் கினாள்.
அவருடைய முகம் அவமானத் தால் மிகவும் தொய்ந்து போயிருந்தது. "நீ கைக்குழந்தையாக இருந்த போது உனது கழிவுகளையும் அரியண் டங்களையும் மனம் கோணாமல் தாங்கிக் கொண்டது உனது அப்பா தான். உனக்கு நெஞ்சில் சளி அடைத்து முச்சு விடத் திணறிய சந்தர்ப்பங்களில் உனது வாயில் வாய்பதித்து அந்தச் சளியை உறிஞ்சி எடுத்து அகற்றி சுவாசம் தந்ததும் இந்த அப்பாதான். இதையெல்லாம் நாங்கள் செய்தது உங்கள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம்தான் என்பதையும் நீங்கள் இன்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்தான்."
அவருடைய குரல் கவலையில் தோய்ந்து தழம்பியது.
06
குற்ற உணர்வு அவளை உறுத் தியது. ஆனால் தனது முடிவில் உறு தியாக இருந்தாள். குரல் மட்டும் தாழ்ந்து ஒலித்தது.
"நாண் என்ன தனியாகவா வெளிநாடு போகிறேன்? என்னுடன் மேலும் நான்கு பெண்கள். நாங்கள் இடையில் தங்கும் இடங்களில் “சப் ஏஜனி சி இருக்கிறான் . உரிய இடத்துக்குப் போய்ச்சேரும்வரையும் *ஏஜண் சியோடு எங்களுக் குதி தொலைபேசித் தொடர்பு இருக்கும். வெளிநாட்டுக்கு ‘கோல்’ போட்டு அண்ணனோடும் கதைத்து விட்டேன். அண்ணன் ஓ.கே பண்ணி விட்டார்.
அதன் பின்னர் அவர் பேசவில்லை. விதியென்று கூறிவிட்டு சில காரியங்களை மறந்துவிடலாம். ஆனால் திட்டமிட்டு காரியங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பேசிப் பயன் கிட்டப்போவதில்லை.
யாரோ ஒரு கூத்துக் காரி "ஸ்பொன்சர் செய்கிறாள் என்று கூறி, எங்கள் விருப்பத்துக்கு மாறாக மகன் வெளிநாடு சென்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை எந்தத் தொடர்பும் இல் லை. இப்போ அவனுடைய வழி நடாத்துதலில் இவள் சென்றால் என்ன ஆகும் என்பதனை ஊகிக்க முடியாத அளவிற்கு நாங்கள் விளக்கம் கெட்டிருக்கவில்லை.
சலாசாரங்களைக் கைப்பிடிக்க வேண்டிய இளைய தலைமுறையினர் அவற்றைத் தூக்கி எறிந்து விடலாம். ஆனால் கலாசாரங்களைப் பாதுகாக்க வேண்டிய பெற்றோர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலக முடியாது.
எல்லாம் முடிந்துதான் இப்போ ஒரு வருட காலமுமாகிவிட்டதே
நினைவுச் சுழியிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வந்தேன்.
கோப்பியைப் பருகிமுடிந்து சில்வர் பாத்திரத்தை நீட்டியபடியே கூறினார்.

"சரி. சந்தோசமாக இருந்த காலங்கள் முடிந்துவிட்டன. இன்னும் பதினைந்தோ, இருபது வருடங்களோ காலம்தள்ளவேண்டி ஏற்படலாம். எமது பிள்ளைகள் அந்திம காலத்தில் எங்களைப் பார்க்கும் என்ற நிலைதான் இல்லாமல் போனாலும் அப்படியொரு நம்பிக்கையோடு வாழக்கூட நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. அதுதான் எனக்குப் பெரிய கவலை."
இப்படி மனம் வெதும்பி அவர் துயருற்ற சம்பவங்கள் எதுவும் எனக்கு நினைவு தெரிந்து இல்லை.
எனது இதயக் குமுறலும் வேதனையும் அவர்முன் பிரவாகித்து விடாதபடி அணைபோட்டபடியே.
"உதெல்லாம் விட்டுவிட்டு வாங்கோ., கோயிலுக்கும் போய் உங்களுடைய மூத்த அணி ணன் சுகபீனத்தில் இருக்கிறாராம் அவரையும் பார்த்துவிட்டு வருவோம்."
அவருக்கு ஆறுதல் தரும் இடங் கள் இவையிரண்டும்தான் என்பதைத் தெரிந்து கொண்டு கூறினேன்.
இவரது மூத்த தமையனுக்கு இப்போ அறுபத்திநான்கு வயது இருக் கும். மனைவிக்கும் அவருக்குமிடையே ஒரு ஏழு வயது வித்தியாசமிருக்கும். காலம் கடந்துதான் விவாகம் நடந்தது.
பதினான்கு வயதில் ஒரு மகன் இருக் கிறானென்றால் பார்க்க வேண்டியது தான்.
எங்கள் வீட்டிலிருந்து கோயில் ஒரு நடைதூரம் என்றால் கோயிலி லிருந்து அவரது அண்ணர் வீடு மற்றொரு நடைதூரம்.
தம்பியாரைக் கண்டதில் தனது சுகயினத்தையும் மறந்து உற்சாகமாகக் கதைக்கத் தொடங்கினார். அடிக்கடி இருமல் வந்து உதைத்தது. அப்போ தெல்லாம் அவருடைய மகன் அவர் அருகிலிருந்து மார்பைத் தடவி விட்ட தோடு அவருக்குச் சிகிச்சை செய்யும் வைத்தியர் யார், கொடுக்கப்படும் மருந்து வகைகள் என்ன, சாப்பிடவெண்டிய ஆகார வகை என்ன, இரவில் தூக்கம் வராவிட்டால் கொடுக்க வேண்டிய மருந்துவகை என்ன என்பவற்றை யெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டு விபரித்தான்.
அவருடைய மனைவி மிகவும் பரிவுடன் என்னை உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். எனது கவன்மெல் லாம் தனது தந்தை மீது பாசத்தைச் சொரிந்து பணிவிடை புரியும் அந்தச் சிறுவனையே எடைபோட்டது.
விவாகமுமில்லை பிள்ளை குட்டிகளுமில்லை என்று இருந்த இந்த மனுசனுக்குக் கடைசிக் காலத்தில் பணி விடைசெய்ய இறைவன் ஒரு அன்பான பிள்ளையைக் கொடுத்து விட்டான்.
இளம்வயதில் விவாகம் செய்த நானும் அவரும் கண்டதென்ன? அந்திம காலத்தில் நாங்கள் இருவரும் அநாதைகள்.
பிள்ளைகளுக்காக நாங்கள் பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் பலன் இல்லாமல் போய்விட்டது.
மனைவியைக் கண்டதும் பெற் றோரை மறந்துவிட்ட ஆண்பிள்ளை. இருபத்தி நான்கு மணிநேரமும் எனது பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும்
07

Page 5
வளர்ந்துவிட்டு இப்போ விடிவு தேடிப் புறப்பட்ட பெண்பிள்ளை.
“தம்பி. நான் சொல்லுகிறேன் என்று தனியாக முடிவெடுக்க வேண் டாம். உன்னுடைய மனைவியையும் கலந்தாலோசித்துச் செய். எங்கள் இளைய தம்பிக்கு ஏற்கனவே ஐந்து பிள்ளைகள். இப்போ இரட்டைக் குழந்தை பிறந்ததில் அவன் அதிர்ந்து போயிருக்கின்றான். அவனுக்கும் ஆறுத லாக இருக்கும். உனக்கும் பின்னடிக்கு ஒரு துணையாக இருக்கும். ஒரு பிள்ளையைக் கேட்டுவாங்கி வளர்த் தெடு”
பேச்சுவாக்கிலும் அவரது அண்ண னுடைய அந்தக் கூற்றை எனது காது கிரகிக்கத் தவறவில்லை!
இவர் கேட்டால் நான் மறுப்ப தில்லை என முடிவெடுத்துக் கொண்டு
மீண்டும் பேச்சில் கலந்து கொண்டேன்.
வெயிலின் தகிப்பு குறையத் தொடங்கிய போதுதான் பொழுது நன்கு போய்விட்டமையை உணர்ந்த அவர் தமையனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
இப்போ மனம் தெளிவுற்ற நிலை யில் எனக்கு ஆறுதல் கூறினார்.
"அண்ணை விவாகம் செய்த காலகட்டம்தான் சரி. பதினான்கு வயதுச் சிறுவனை இந்தச் சமூகம் கெடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதுதாணி அவருக்கு ஆறுதல் . தோளுக்கு மேல் அந்தப் பிள்ளை வளருவதற்கு முன்னராக அண்ணரது இறுதிக்காலம் முடிந்து விடும். அவர் தனது பிள்ளையின் அரவணைப்பில் இறுதி மூச்சை விடுவார்”
எனது கணவனின் அங்கலாய்ப்பு என்னை உலுப்பியது. தன்னலம் கருதாத. நன்நடத்தையின் சிகரமான. கண்ணியம் மிக்க ஒரு குடும்பத் தலை வனின் நியாயபூர்வமான அங்கலாய்ப்பு அது. அவர் மறந்தும் கூட தனது தம்பி யின் பிள்ளையொன்றைத் தத்தெடுக்கும் யோசனையை என்னிடம் முன்வைக்க
08
வில்லை.
* எனக் காக குழந்தைகள் இருவரைச் சுமந்து பெற்றாள். அவர்களுக்காக தூக்கத்தை மறந்தாள். சுகங்களைத் துறந்தாள். உதிரத்தை ஈய்ந்தாள். இன்று போய் அவளிடம் மற்றொருத்தி பெற்ற குழந்தையைப் பாரம் எடு என்று எப்படிக் கேட்பது? - இப்படித்தான் அவர் சிந்தித்திருப்பார்!
வாழ்க்கையில் சில தவறுகளை விட்டால் அவற்றைத் திருத்தவே வாய்ப்பில்லை!
வாழ்ந்து நொந்துபட்ட அனுபவங் களை ஆதாரமாக வைத்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ முடிந்தால் நிச்சயம் அது வெற்றிகரமான மகிழ்ச்சி யான வாழ்க்கையாகத்தான் இருக்கும்! எனது அறையை தாழ் பாள் போட்டுக் கொண்டேன்.
எனது இருபத்தைந்து வருடகால விவாக வாழ்க்கையை என் மனக் கண் முன்னால் நிறுத்தினேன். பிள்ளை களுக்காகப்பட்ட துன்ப துயரங்கள்தான் எத்தனை, எத்தனை, எத்தனை!. தந்தையின் பராமரிப்பும் தாயின் அரவணைப்பும் தேவைப் படும் வரைக்கும்தான் இது குடும்பம்; வீடு அவர்களுக்கென உணர்வுகளும் அவசியங்களும் ஏற்படும் போது பெற்றோரில் பிழைகளைக் கண்டு பிடிப்பதுடன் அவர்களை உதாசீனம் செய்து. தமக்கெனத் துணைகளைத் தேடிப் பறந்து விடுகிறார்கள். இதுதான் உண்மை! இதுதான் உலகம்! ད་
இனம் புரியாத உத்வேகத்துடன் கட்டிலிலிருந்து பாய்ந்து எழுந்தேன். கன்னங்கள் வழியாகப் பெருக்கெடுத்த கண்ணிரை அழுத்தித் துடைத்துக் கொண்டேன்.
நாற்பத்தியிரண்டு வயது பெரிய வயதல்ல. இவருடைய அண்ணிக்கு விவாகமாகியதே இதே வயதில்தான்!
இந்தக் குடும்ப நன்மைக்காகவே உழைத்துச் சோர்ந்த எனது கணவனின்

அருமை பெருமைகளையெல்லாம் எனது
பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் போக
ஆனால் எனக்கு வாழ்வு தந்த
தெய்வம் அவர். நான் இல்லாத காலம் ஒன்று இருந்தால் அப்போது அவர் அந்தரிக்கக் கூடாது.
அலுமாரியின் காகித விரிப்பின் இடுக்கினுள் மிகமிக அவசியம் என
இதுவரை மறைத்து. பத்திரப்படுத்தி. பயன்படுத்திய அந்தக் கடதாசிப் பொட்டலத்தை கசக்கி விசினேன்.
வாழ்ந்து நொந்துபட்ட அனுபவங் களை ஆதாரமாக வைத்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ்வேன்.
நிச்சயம் அது வெற்றிகரமான மகிழ்ச்சியான வாழ்க்கையாகத்தான் இருக்கும்!
அரும்பு உதிர்ந்தது!
தோட்டத்துப் பாடசாலை! தொழிலாளரின் செல்வங்கள் ஏட்டைச் சுமந்தபடி எப்போதும் போல மர்ந்தனர்! ஆனாவைக் காட்டும் அரிச்சுவடி தொடக்கம், தானாக வாசிக்கமுயலும் தமிழைந்தாம் ஆண்டுவரை: ஆசிரியரும் மனைவியும், அப்பள்ளியிலே வேலை.
"பேசுவதை நிறுத்துங்கள்!
பிள்ளைகளே படிங்க”ளென்பார்!
கூட்டல் - கழித்தலையும் பெருக்கல் - பிரித்தலையும் காட்டுதற்கு கிழமையிலே கணக்காக இருநாட்கள் ஒதுக்கி விளக்கிடுவார்! ஒதுக தேவாரமென்பார்! சுத்தம் சோறிடுமென சுகாதாரமும் போதிப்பார்!
பச்சைப் பிள்ளைகளை பன்னிரண்டு மணியானதும், “மிச்சம் களைத்துவிட்டீர்கள், வீட்டுக்கு ஒடுகr-என்பார். வழக்கமாய் தேயிலைப்பூவை வாயிற்போட்டு நீர்பருகிய
தமிழோவியன்
பழக்கம் அச்சிறார்களுக்கு பயமின்றிச் செய்தார்கள்! களைக் கொல்லி மருந்தை கண்டபடி தெளித்து மலையில் களைகள் அனைத்தும் கருகிக் கிடந்தன.
தேயிலைப் பூவிலும் தெறிபட்ட அம்மருந்து, வாயினுள் போனவிதம் வாந்தி எடுத்தபின்னே வகையாகத் தானறிவார்!
வாட்டமுற்று மயங்கி வகையறியாது சாய்ந்திட்ட வளரும் அரும்பும் வாடிக் கிடந்ததம்மா!
துரக்கிக் கொண்டோடி தோட்டத்து வைத்தியரிடம் பார்க்கச் சொன்னார்கள். கைப்பிடித்து பார்த்தவரும் கையை விரித்திட்டார். ஐயோ தெய்வமென அலறித்துடித்தார்கள். அரும்பு உதிர்ந்ததென அழுது புரண்டாாகள. வருமோ மீண்டும் வாடிப் பிரிந்த உயிர்.
09

Page 6
நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரை.மனோகரன்) தெளிந்த சிந்தை கொண்ட தேரர்.
எமது நாட்டைச் சமாதான பூமியாக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினாலும், அதனை மயான பூமியாக்கிக் காட்டுவோமெனச் சபதமெடுத்தவர்களைப்போலப் பல குருக்கள்மார் நடந்து கொள்கின்றனர். தருமத்தைக் காற்றில் எறிந்து, யுத்த வாசகங்களைக் கொள்வனவு செய்து, நாட்டைக் குட்டிச்சுவராக்குவதில் மூர்க்கத்தனமாக முயன்றுகொண்டிருக்கும் குருக்கள்மார் பலர், ஆயினும், அவர்களுக்கிடையிலே விரல்விட்டு எண்ணக்கூடிய தெளிந்த அறிவுள்ள சில தேரர்களும் இருக்கின்றனர் என்பது, சமாதான விரும்பிகளுக்கு இலேசான ஆறுதலை அளிக்கும் ஓர் அம்சமாகும். அண்மையில், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா மலரைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வெள்ளவத்தை சுவிசுத்தாராமய விகாராதிபதியான ஞானாபிவன்ச நாயக்கஸ்தவிர தேரரின் ஆசிச் செய்தி என் கண்ணிற் பட்டது. அவர் தமிழர்கள் பற்றிய தெளிந்த உணர்வுடன் அவ் ஆசிச்செய்தியை எழுதியிருந்தமை மனத்திற்குத் திருப்தியைத் தந்தது. அவரது செய்தியின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்; “சிங்களவர்களிற்கும் தமிழர்களுக்குமிடையில் நீண்ட காலமாக் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களில் காணப்படும் தொடர்புகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது. நண்பர்களாகவும் பகைவர்களாகவும் செயற்பட்டு வந்துள்ளனர். சிங்கள மொழியிலும் கலாசாரத்திலும் பழக்கவழக்கங்களிலும் தமிழ்மொழியின் செல்வாக்கைக் காணக்கூடியதாக இருக்கிறது. சிங்கள அரசர்களின் போர்ச்சேனையிலும் மந்திரி சபையிலும் சேவை புரிந்துள்ளனர். ஒரு காலத்தில் பெளத்தர்களின் புனிதத் தலமான தலதாமாளிகையின் பாதுகாப்புப் பொறுப்பை தமிழ்ப் பாதுகாப்புப் படை ஒன்றிடம் ஒப்படைக்குமளவிற்கு தமிழர்கள் மிகவும் விசுவாசத்திற்குரியவர்களாக செயற்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்த விரும்புகிறேன்." இத்தகைய தேரர்கள் பெருகுவது நாட்டுக்கு மிகவும் நலலது. ஆனாலும், பெரும்பாலான குருக்கள் மார் யுத்த சன்னத்தவராகவே விளங்குகின்றனர். இலங்கையின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
இலங்கையில் ஐந்து தொலைக்காட்சி நிலையங்களில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஆயினும், தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் நியாயமான நேரத்தை ஒதுக்குவதில் சக்தி தொலைக்காட்சியைத் தவிர, மற்றவை அதிக அக்கறை செலுத்துவதில்லை. ரூபவாஹினியில் இரு அலைவரிசைகள் இருந்தபோதிலும், அதன் தமிழ்ச்சேவை மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. அதன் இரண்டாவது அலைவரிசை தமிழ் நிகழ்ச்சிகளுக்காகவும், விளையாட்டு
10
 

நிகழ்ச்சிகளுக்காகவுமே தொடங்கப்பட்டது. ஆனால், தெய்வம் வரங்கொடுத்தாலும் பூசாரி வரங்கொடாத நிலையே காணப்படுகிறது. தமிழ் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் ரூபவாஹினி மேலும் வழங்குவதற்கு இடமுண்டு. ஆனால் அதற்கு மனமில்லை. அதன் உயர்மட்ட அதிகாரிகளிடம் பேரினவாதம் குடிபுகுந்துள்ளது. தான் வழங்கக்கூடிய தமிழ் நிகழ்ச்சிகளை ரூபவாஹினி வழங்குவதில்லையாயினும், அது வழங்கிவரும் நிகழ்ச்சிகள் தரமாகவே உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ரூபவாஹினியில் தமிழ்ச் செய்திகளுக்குப் பின் ஒலிபரப்பாகும் "எதிரொலி என்ற நிகழ்ச்சி இதற்கு முற்றிலும் விதிவிலக்காகும். அருமையாகச் சிலவேளைகளில் அரிய தகவல்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அது விளங்கினாலும், பெரும்பாலும் அதன் பிரதியை எழுதுபவரின் அல்லது எழுதுபவர்களின் எல்லை மீறிய இராச விசுவாசத்தையே அது எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும். வாரநாட்களில் ரூபவாஹினியின் இரண்டாவது அலைவரிசையில் இடம்பெறும் மனையாள் மண்டபம் நிகழ்ச்சியில் நேர்காணலில் ஈடுபடும் பெண்மணிகள் எதிர்காலத்திலாவது கொஞ்சம் உலக அறிவையும், கலை இலக்கிய அநுபவத்தையும், வாசிப்புப் பழக்கத்தையும் மேற்கொள்வது நல்லது. இல்லையேல், பேட்டியளிக்க வந்திருப்போரிடம் குழந்தைப்பிள்ளைத் தனமான கேள்விகளையே கேட்டுக்கேட்டுத் தமது அறியாமையை மேலும் மேலும் இனங்காட்டவேண்டி ஏற்படும்.
ஐ.ரி.என். தமிழ் நிகழ்ச்சிகள் விடயத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை" என்ற பாணியில் நடந்து கொள்கிறது. நாள்தோறும் மாலை ஆறுமணிமுதல் ஆறு பதினைந்துவரை தமிழ் நிகழ்ச்சிகளை அது முன்னர் ஒலிபரப்பி வந்தது. இப்போது, அவை நிறுத்தப்பட்டு, வெள்ளிக் கிழமையில் முஸ்லீம் நிகழ்ச்சி மாத்திரம் ‘மாலை ஆறு பதினைந்து முதல் ஆறு முப்பது வரை ஒளிபரப்பாகிறது. ஐ.ரி.என். இன் தமிழ்பேசும் பணிப்பாளர்(கள்) அந்த நிகழ்ச்சியைக் காப்பாற்றுவதில் மட்டும்தான் கவனஞ் செலுத்தியிருக்கிறார்கள். மற்றைய நிகழ்ச்சிகள் காணாமல் போனதையிட்டு அவர்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை; அக்கறையுமில்லை. சனி, ஞாயிறு, நாட்களில் மாத்திரம் "தமிழ்த்தொண்டு" செய்தால் போதும் என்று ஐ.ரி.என். கருதுகின்றது போலும்!
ரி.என்.எல். செவ்வாய்க் கிழமைகளைத் தவிர, பிற தினங்களில் தமிழுக்குத் தொண்டு செய்வதில்லை என்று ‘விரதம் அனுட்டிப்பதுபோல் தோன்றுகிறது. சுவர்ணவாஹினி வாரநாட்களில் மூன்று தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்பி, இதற்கு மேலும் தமிழுக்குத் தொண்டு செய்வது தவறு என்பது போல் நடந்து கொள்கிறது.
சக்தி ரி.வி. மாத்திரமே தமிழ்பேசும் மக்களுடன் ஒட்டி உறவாடுகிறது. தரமான சில நிகழ்ச்சிகள் சக்தி ரி.வி.யில் இடம்பெறுகின்றன. ஆயினும் பெரும்பாலும் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புவதிலேயே அது கண்ணும் கருத்துமாக இருக்கிறது. பெரும்பாலான தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் வளவளா என்று வசனம்பேசும் நாடகங்களாக விளங்குகின்றனவே தவிர, தொலைக்காட்சி நாடகங்களுக்குரிய பண்புகளைப் பெரிதும் கொண்டவையாக அவை திகழவில்லை. சக்தி ரி.வி.யில் இலங்கை சார்ந்த தமிழ் நிகழ்ச்சிகளாக ஒருசிலவே இடம் பெறுகின்றன. இலங்கை தொடர்பான புதிய கலை இலக்கிய
11

Page 7
நிகழ்ச்சிகளுக்கும் சக்தி களம் அமைத்துக் கொடுக்கவேண்டும். சக்தி ரி.வி.யில் செய்தி வாசிக்கும் சில பெண்மணிகள் தமிழ்நாட்டுச் செய்தி வாசிப்பாளர்களைப் போல் குரலைச் செயற்கையாக மாற்றித் தமது குரல் இனிமையையும், தமிழின் சொல்லின்பத்தையும் கெடுத்தவிடுகிறார்கள். வேறு சிலர் (ஆண்களும் பெண்களும்) பாடசாலை மாணவர் ஆசிரியருக்கு முன்னால் வாசிப்பு நிகழ்த்துவதுபோல் செய்தி வாசிக்கிறார்கள். சக்தி ரி.வி.யில் செய்தி வாசிப்பவர்கள் போதிய பயிற்சியளிக்கப்படாமலே செய்தி வாசிப்பதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்களோ என்று சந்தேகப்படவேண்டியுள்ளது. செய்தி வாசிப்பதில் அநுபவம் உள்ளவர்களைச் சக்தி ரி.வி. தத்தெடுத்துக் கொள்வது நல்லது. சில விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தும் ஓரிரு ஆண் அறிவிப்பாளர்கள் தமிழைக் கடித்துக் குதறித் துப்புவதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அவர்களிடத்தில் தமிழ் படும் பாட்டை நோக்கும்போது, ‘தமிழுக்கு இதுவொரு தலைவிதியா? என்று எண்ணத் தோன்றுகிறது.
தாயக நினைவுகளுடன்.
பனி போர்த்திக்கொண்டிருக்கும் அழகிய அல்ப்ஸ் மலையின் அடிச்சாரலில் பூக்கள் பூத்துச் சொரியும் அப்பிள் மரங்கள் நிறைந்த ரம்மியமானதோர் சூழலில் நான்.
சோகங்களில் மூழ்கிய சொந்தங்களை அர்ச்சிப்பதற்கு மலைசூழ்ந்த மணித்திரு நாட்டின் நாளை பூக்கவிருக்கும் சுதந்திர வாசம் பரப்பும் சமாதானப் பூவில் இன்றே தேனருந்தும் என கனவுகள
இளந்தென்றலின் மெல்லிய தோள்களில் ஏறி என் காதில் வந்து விழும் தமிழ்த்தாயின் மைந்தர்களின் ஒலக்குரலில் மான நரம்புகளை உடைக்கும் என் உணர்வுகள்
தே.சங்கீதா, புத்தளம்.
பாதை மாறி பயணிக்கும் எம்மவரின் இரத்தோட்டங்டகள் சொல்லும் சோகக் கதைகளை கேட்டு அழுவதற்கும் உமிழ் நீரை உணவாக்கியபடி பற்றியெரியும் பசித்த வயிறுடன் ஒவ்வொரு இரவும் பகலும் உறங்கி உறங்கி விழிக்கும் என் உறவுகளின் உயிர்த்துடிப்பில் கலப்பதற்கும் என் நுரையீரலின் பிடியிலிருந்து விடுபட்டு பறந்து விட்டது என் சுவாசம்
என்றாலும் உயிர் விறைக்கும் குளிரில் விண்தொடும் சோலைகளினூடு மண்தொட்டு ஓடிவரும் ஜீரா நதிக்கரையோர அகதிகள் விடுதி ஒன்றில் இன்னும் உரிமைப்பதிவு செய்யப்படாத மனிதனாக
நான்.
12

வாஞ்சை கண.மகேஸ்வரன்
மட்டக்களப்பு
s
99
ராசு. டேய் ராசு. எழும்படா ஒருக்கால். அம்மா தட்டி எழுப்பியதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தான் ராசதுரை.
நித்திரை மயக்கம் இன்னும் தெளியவில்லை. கண்களில் எரிச்சல். கசக்கிக்கொண்டு சோம்பல் முறித்தான். இன்னும் விடியவில்லை; இருள் கவிந்தேயிருந்தது.
"என்னம்மா. ஏன் என்னை எழுப்பினனி?” "நேற்றுப் பின்னேரம் நாங்கள் தண்ணியள்ளிக்கொண்டு வரேக்கை கதிரவேலுமாமா நிறைவெறியில குளத்தில குளிச்சவரெல்லே.”
". ஓ, அதுக்கிப்ப என்ன?” "ஆள் குளத்துக்குள்ள மாண்டுகிண்டு போச்சுதோ என்னவோ? விடியக்காலம் நான் விறகு பொறுக்க எங்கட காணியுக்கை போனாப்போல கவனிச்சன். ஒரு குச்சு ரோச் வெளிச்சத்தில் குளத்தங்கரையெல்லாம் சுத்திச்சுத்திப் பார்த்தவை"
மூச்சு விடாமல் அம்மா பாடம் ஒப்புவிக்கவும் ராசதுரை உசாரானான். தூக்கம் முற்றாகவே முறிந்து ஆவல் துளிர்விடக்கேட்டான் -
"நான் ஒருக்கால் குளத்தடியில போய்ப் பார்த்துவரட்டேயம்மா? நல்லா விடிஞ்சாப்போல ஒருக்கால் சுழியோடிப் பார்ப்பம்"
"போடா விசரா, உன்னைச் சுழியோடித் தேடச் சொல்லியே சொன்னனான்? நீ ஒருக்கால் ஓடிப்போய் ஒருத்தருக்கும் தெரியாமல் அங்கை ஏதும் பரபரப்பிருக்குதோ எண்டு ஒரு அசுப்புமில்லாமப் பார்த்துவாறியே?”
அம்மாவின் பெர்மிசனோடு குளத்தில ஒரு றவுண்ட் நீச்சலடிக்கலாமென்று பரபரத்தவன், உற்சாகம் வடிந்தவனாய் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வெளியேறினான்.
அம்மா அவன் வரவைப் பார்த்துக் காத்திருந்தாள்.
o o o o o ராசதுரை மெல்லச் சைக்கிளில் ஊர்ந்தவாறு வேலிக்கு மேலால் தலையை எட்டிப் பார்த்தான்.
அவ்வளவுதான் - சின்னம்மா மாமியின் கழுகுக் கண்கள் அதனை அவதானித்து விட்டன. "ஆரது. இஞ்ச விடுப்புப் பார்க்கிறது?" ராசதுரை மெல்லத் தலையைத் தாழ்த்திக் கொண்டு பெடலை ஊன்றி மிதித்தான். கேள்வி கேட்ட தொனியிலிருந்து மாமி தன்னை இனங்காண வில்லையெனப் புரிந்துகொண்டான்.
மெயின் ரோட்டில் ஏறி நண்பன் மகேந்திரனின் வீட்டுக் கேற்றடியில்
13

Page 8
காலூன்றி நின்றான்.
வேப்பங்குச்சால் பல்துலக்கியவாறே நின் நாகேந்திரன் இவனைக் கண்டதும் வாயிலுறிய உமிழ் நீரைக் காறி உமிழ்ந்து துப்பிவிட்டு, "மச்சான் உனக்கொரு புதினம் தெரியுமே..?” என்று நிறுத்தினான்.இ
‘என்ன? என்பதுபோல் அவன் முகத்தை இவன் ஏறிட்டான்.
"உண்ர மாமா கதிரவேலர் ராத்திரி கோவணத்துண்டோட வீட்டுக்கு வந்தாராம். இஞ்ச எல்லாரும் ஒரே சிரிப்புத்தான்” என்றான்.
இவன் வெட்கித்துப்போனான். இருந்தாலும் தேடிவந்த விசயத்திற்கு விடை கண்ட திருப்தி. ---. வந்த வழியே திரும்பிப் போனால் மாமி அடையாளம் கண்டு விடுவ என்ற பயம் நெஞ்சை அரித்தது. எனவே, சுற்றுப்பாதையால் வீடு திரும்புவது எனத் தீர்மானித்தான். அதற்குள் நாகேந்திரனின் மனம் புண்படாமல் ஏதாவது பேசியும் ஆகவேண்டும் என்று பட்டது.
“ஓம் மச்சான், அவர் தண்ணியப் போட்டாரெண்டால் கண் மண் தெரியாது. நேற்றுப் பின்னேரம் மாணிக்கவளuயில குளிச்சுக் கொண்டிருக்கக் கண்டனான். ஆள் குளத்துக்கால வெளிக்கிட இருண்டு போயிருக்கும். அப்பிடியே போயிருப்பார். ஆள் உயிரோட இருக்கிறாரோ எண்டு அறியத்தான் நான் வந்தனான். பிறகு ஆறுதலாய்க் கதைப்பம் மச்சான். அங்க அம்மா காத்திருப்பா. நான் வரட்டே..?”
பெடலை மிதித்தான்.
§ බි: අැද ඡී අාද இவன் வரவிற்காய்க் காத்திருந்த அம்மா, பொறுக்கமுடியாமல் குளக்கரைக்கே வந்து விட்டிருந்தா. அம்மாவைத் தேடி இவன் வந்தபோது, மாமாவின் சாரனைப் பார்த்துக் கொண்டே அம்மா குழம்பிப் போயிருந்தாள்.
அம்மாவுக்கு கதிரவேலுமாமா ஒன்றுவிட்ட அண்ணன்தான். ஆனால் ஒரு தாய் பிள்ளைகள்போல் வளர்ந்தவர்கள். குடும்பப் பகை காரணமாக நீண்ட நாட்களாகவே உறவுகள் அறுந்து விட்டிருந்தது. என்றாலும் பாசப்பிணைப்புகள் என்னமாய் மனிதரை ஆட்டிப் படைக்கின்றன. அம்மாவின் கலக்கத்தில் அது நன்றாகவே புரிந்தது.
"அம்மா! ஆள் அங்க சுகமாய்ப் படுத்திருக்கிறாராம். நீங்கள் ஏதேதோ கற்பனையோட இங்க காத்திருங்கோ!"
கலக்கம் தெளிந்து இப்போதுதான் அம்மா நிதானமாக மூச்சுவிட்டாள்.
LL S MLSSL S SLLLLSS S0LSS S0S LS LSLSSYSS L0LS0SYS SLL SSSS0LS0LS S 00S LLLL S S0LL LLLLL LLLS LLL LLLL SLS S L S L S S SLLLLSS S LL S LS S L S L L S L SLS SLLLL SS L SS 0LS0S S L S L LSL S SL S L S L S L S L SLLLSL SL S L LSL S L S L SLLLSLS S L S L
அடுத்த இதழில்
நேர்காணல்
14
 
 
 
 
 

நீங்கள் 56). DITéls......... (மருத்துவ அறிவியற் கட்டுரைத் தொகுப்பு) டொக்டர் எம்.கே. முருகானந்தன்
(எம்.பி.பி.எஸ். இலங்கை)
பதிப்பு: மீரா பதிப்பகம்
191/23, ஹைலெவல் வீதி, கொழும்பு -06
666): 200/- தி.ஞானசேகரன்
தமிழில் மருத்துவ அறிவியல் துறையிலே நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்நிலையில் டொக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் இத்துறைசார்ந்த நூல்களை எழுதிவருவது வரவேற்கத் தக்கது. அவரது நீங்கள் நலமாக. ’ என்ற மருத்துவ வழிகாட்டி நூல் மிகவும் பயனுடைய ஒரு நூலாக அமைந்திருக்கிறது. கேள்வி பதில் முறையிலே அமைந்த இந்த நூலில் உள்ள மருத்துவக் கட்டுரைகள் எளிய நடையிலே, சகலருக்கும் விளங்கக் கூடிய வகையிலே எழுதப்பட்டிருப்பது இந்த நூலின் விசேட அம்சமாகும். டொக்டர் முருகானந்தன் குடும்ப மருத்துவத்திலும், தமிழில் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதிலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட அநுபவம் பெற்றவர். இவரின் வைத்திய அநுபவத்தையும் நவீன அறிவையும் இந்நூல் பிரதிபலிக்கிறது. இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்தபோது அது மருத்துவத் துறை அறிஞர்களினதும் பொதுமக்களினதும் பெரும் பாராட்டைப் பெற்றதோடு 1998இல் அறிவியல் துறைக்கான இலங்கைச் சாகித்திய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் உள்ள கட்டுரைகள் அத்தனையும் ஆழமாகப் படித்தறியப்பட வேண்டியவை.
இந்நூலின் இராண்டாவது பதிப்பிற்கான ‘என்னுரையில் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ". தொடர்பு சாதனங்களுடாக உங்கள் கேள்விகளுக்கு நான் கொடுத்த விடைகளின் ஒரு பகுதியின் தொகுப்புத்தான் இந்நூல். இவற்றின் பெரும்பாலானவை, கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கை வானொலியில் தேசிய சேவையில் பிரதி ஞாயிறு தோறும் மாலை ஐந்து நாற்பைத்தைந்து மணிக்கு ஒலிபரப்பாகும் நலமாக வாழ்வோம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானவை. இவைதவிர ரூபவாஹினியில் சுகவாழ்வு, தினகரனில் வானவில், வீரகேசரி, தினக்குரல் ஆகியவற்றில் ஞாயிறு வெளியீடுகளை களமாகக் கொண்டவையும் இணைந்துள்ளன.
"....... இந்நூலின் இரண்டாம் பதிப்பில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவசர கருத்தடை, முதுமையைப் புரிதல், முதியவர்களுக்கான உதவிக்குறிப்புகள், பரசிற்றமோல் பாதுகாப்பானதா? போன்ற புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர கட்டுரைகளின் உள்ளடக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன."
15

Page 9
வைத்தியர்களை நாடிவரும் தாய்மார்களில் அநேகமானோர் தமது குழந்தைகள் எதிர்நோக்கும் வைத்தியப் பிரச்சினைகள் குறித்து அதிக அக்கறை உடையவர்களாக இருப்பதைக் காணலாம். இந்நூலில், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் பிரச்சினைகள் பற்றிய விடயங்கள் பல கூறப்பட்டுள்ளன. காய்ச்சல் வலிப்பு - வலிப்பு வந்தால் என்னசெய்யவேண்டும் அதனைத் தடுப்பது எப்படி, பாலகர்களின் உணவு - அவற்றை எந்தெந்த வயதிலே ஆரம்பிக்கவேண்டும் - எவ்வகையான உணவுகளைக் கொடுக்கவேண்டும், பசியில்லாக் குழந்தைக்கு எவ்வாறு உணவூட்டவேண்டும், பேசாத குழந்தை, தூங்காத குழந்தை, மூக்கிலிருந்து வடியும் குழந்தை, குழந்தைகளின் தோற்கிரந்தி, குழந்தைகளின் பற்சொத்தை, போன்றவற்றிற்கான ஆலோசனைகள் இந்நூலிலே அடங்கியுள்ளன. அத்தோடு சிறுவர்களுக்கும் வயதுவந்தவர்களுக்கும் ஏற்படும் பேன் தொல்லை, நகங்கடித்தல், தூக்கத்தில் நடை, கொப்பளிப்பானுக்கு மருந்தும் தடுப்பூசியும் இன்புழுவன்சாக் காச்சல், செங்கண்மாரியும் ஈரல் புற்றுநோயும், முகப்பருக்கள், அழகுதேமல், யானைத்தடிப்பான், எக்சிமா, எலிக்கடியும் வெண்தோல் நோயும், எலிக்கடியும் நீர்விறைய்யு நோயும் போன்ற விடயங்களுக்கு, நோயின் காரணம் - சிகிச்சை முறைகள் - ஆலோசனைகள் போன்றவை மிகவும் சிறந்த முறையிலே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றைவிட மணம்முடித்த தம்பதியினர் எதிர்நோக்கும் குழந்தையின்மை, கருத்தடைமுறைகள், அவசரக் கருத்தடை போன்றவற்றிற்கும் இந்நூலில் பொருத்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு பெண்களுக் கேற்படுகின்ற மார்புப் புற்றுநோய், வெள்ளையடுதல் ஆகிய நோய்களுக்கும் ஆலோசனைகளும் சிகிச்சை முறைகளும் கூறப்பட்டுள்ளன.
இன்று மருத்துவர்களைத் தேடிவரும் வயதுவந்த நோயாளர்களில் அனேகம்பேர் நீரிழிவு, பிறசர்நோய் போன்றவற்றால் அவதிப்படுவதைக் காணலாம். இந்த நோயாளர்கள் தெரிந்துகொள்வேண்டிய பல விடயங்கள் - அவர்கள் பின்பற்றவேண்டிய உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் போன்றவையும் இந்நூலிலே மிகவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
கோபமும் மாரடைப்பும், கண்நோய், சைனஸ் நோய், குறட்டைத் தொல்லை, தலைவலி, தைரொயிட் சுரப்பிவிக்கம், வாய்ப்புண்கள், முரசிலிருந்து இரத்தம் வடிதல், எரிச்சலடையும் குடல், வாய்வுத்தொல்லை, மூலநோய், இறுகிய தோள் மூட்டு, மூட்டு வாதம், நாரிப்பிடிப்பு, முழங்கால் வலி, முதுமையைப்புரிதல், முதுமையில் மனச்சோர்வு ஆகிய தலைப்புகளிலும் விரிவான விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
டொக்டர் எம்.ஏ.முருகானந்தன் அவர்கள் இந்நூலில், குறிப்பிட்ட நோய்களுக்குப் பாவிக்கப்படும் மருந்துகளின் பெயர்களையும் தந்துள்ளார்.
மொத்தத்தில், இந்நூல் வைத்தியத் துறையில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுடையது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்நூல் ஒவ்வொரு வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய நூலாகும், இந்நூல் வீட்டில் இருப்பது, ஆலோசனை வழங்கக்கூடிய வைத்தியர் ஒருவர் உடனிருப்பதற்கு இணையானதாகும்.
1f

வன்னியூர்க் கவிராயர்
வன்னியூர்க் கவிராயர் மறைந்து இருபத்துமூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. அண்மையில் அவரது நினைவுநாள் நிகழ்வு செட்டிகுளத்தில் இடம் பெற்றது. இந்தச் சந்தர்ப்பத்திலே வன்னிப் பிரதேசத்தின் நவீன கவிதை முன்னோடியாகத் திகழ்ந்த கவிஞரை நினைவு கூர்வது பொருத்தமானதே
ད་...་ மனை மக்கள் பிணமென் றென்னை எறிந்த பின்பும் சேர்த்தனைத்து உறவாடப் போகும் மண்னே" என்று பிறந்த மண்ணுக்கு அஞ்சலி செலுத்துகிறார் அடங்காப்பற்றைச் சேர்ந்த கவிஞர் ஒருவர். அவர்தான் வன்னியூர்க் கவிராயர்.
இவரது இயற்பெயர் எஸ்.எல், சவுந்தரநாயகம். பிறந்த மண்ணிலுள்ள அளவற்ற பாசத்தினாற் போலும் மிகத் துணிச்சலுடன் இப்புனை பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறார். இவர் வெங்கலச் செட்டிக்குளம் இலுப்பைக்குளம் கிழக்கில் 44-1921இல் பிறந்தார். இவர் தந்தையார் சந்தியோகுப்பிள்ளை அவர்களும் ஒரு கவிஞராகத் திகழ்ந்தவரே.
மன்னார் நல்லாயன் கலாசாலையில் கல்விபயின்ற இவர் உயர் கல்வியைத் தொடரமுடியாத நிலையில் முன்னோர் எட்டுத் தலைமுறையாக மேற்கொண்டுவந்த சித்த வைத்தியத் தொழிலையே தானும் செய்தார். பள்ளிப் படிப்பை நிறுத்தியபோதும் தமிழ்மீதுள்ள அளவற்ற காதலால் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைத் தன் சொந்த முயற்சியால் கற்றுக்கொண்டார். குலவித்தை கல்லாமல் பாதிபெறும் என்னும் முதிமொழிக்கினங்கத் தந்தையாரின் வைத்தியத் தொழில் மாத்திரமன்றி அவரது கவித்துவமும் இவரைப் பற்றிக் கொண்டது. இக்காலக் கவிஞர்கள் கண்டும் கேட்டும் அறியாத நாகபந்தம், சக்ரபந்தம், தேர்ப்பந்தம் நீரோட்டம் ஆகிய சித்திரக்கவிகளை அநாயாசமாக இயற்றும் திறன்படைத்தவராகத் திகழ்ந்தார்.
குன்றாத நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சிறுமைகண்டு சீறும் பண்பு, சமூக சீர்திருத்தம் ஆகிய பண்புகளை இவரது கவிதை வெளிப்படுத்துகின்றன. வன்னியூர்க் கவிராயர், எஸ்.எல்.சவுந்தரநாயகம், வன்னியூர் நாயகம், மனோகரி, எஸ்.எல்.எஸ், பாவேந்தன் ஆகிய பல பெயர்களில் இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, கலைச் செல்வி முதலான இதழ்களில் வெளியாகியுள்ளன.
நூற்றுக் கணக்கான கவிதைகளை இயற்றிய போதும் இவரது கவிதைத்தொகுதி ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லை. பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளை ஒட்டுப்புத்தகமாகத் தயாரித்து வைத்திருந்தார். அவர் மறைவுக்குப்பின்னர் ஏற்பட்ட இடப்பெயர்வினால் அவைகூடக் கறையான் வாய்ப்பட்டு அழிந்துவிட்டன. அவற்றை மீள்கண்டுபிடிப்புச் செய்து கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிடும் முயற்சியொன்று நடைபெறுவதாக அறிகிறேன். கவிராயர் சீவந்தராய் இருக்கும்போது 'அமுத கங்கை ’ எனும் தலைப்பில் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட எண்ணியிருந்தார்.
கவிராயர் ஈழத்தின் பலபாகங்களிலும் இடம்பெற்ற கவியரங்குகளில் தோன்றி தன் கவிதைகளை அரங்கேற்றியுள்ளார். இரசிகமணி.கனக.செந்திநாதன் அவர்கள் 1964இல் வெளியிட்ட 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் நூலில்
17

Page 10
இவர்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.
"வன்னியூர்க் கவிராயர் வன்னி நாட்டுக்குப் புகழ்தேடித் தந்த கவிஞராவர். அடங்காப்பற்றில் வாழ்ந்தாலும் பல கவியரங்குகளிலே அடக்கமான பாடல்களை அரங்கேற்றியுள்ளார். வன்னி நாட்டிலே இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டும் என்று உழைத்துவரும் அவர், ஒரு சுதேச வைத்தியராவர். எஸ்.எல்.சவுந்தரநாயகம் என்னும் தமது சொந்தப் பெயரில் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.”
29-01-1978வரை உயிருடனிருந்து யாத்த கவிதைகள் பற்றிய சுருக்கமான மதிப்பீட்டினை திரு.க.நவசோதி அவர்கள் வன்னிப்பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாட்டில்(1983)வாசித்த ஆய்வுக்கட்டுரையில் காணலாம்.
இவரது கவிதையில் பெரும்பாலனவையும் பிறந்தமணி னிலி அவர்கொண்டிருந்த அடங்காப்பற்றைக் காட்டும். சாதி, மதம், இனம், மொழி, மாவட்டம், பிரதேசம் போன்ற பிரிவுகளால் உயர்வு தாழ்வு பாராட்டப்படாத சமூக அமைப்பு, தொழில்விருத்தி, பொருளாதார வளம், லெளகீக ஆத்மீகத் துறைகளிலே மறுமலர்ச்சி, சமதர்மக் கோட்பாடு என்பவற்றை இவரது கவிதைகளில் காணலாம்.
கவிராயர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற உழவர் விழாவில் இடம்பெற்ற கவியரங்கில் நிகழ்த்திய தலைமைக் கவிதை இவரின் தமிழ்ப்பற்றுக்கும் நாட்டுப்பற்றுக்கும் தக்க சான்றாகும்.
நன்னயமார் வாழ்வு தந்தும்
நானிவ் உடலை விட்ட பின்னும் புகழுடம்பில்
பெருமைதரும் நற்றமிழே எனத் தமிழைப் போற்றுகின்றார் கவிராயர். நாட்டுப் பற்றுடன் பாடிய கவிஞர் நாட்டுவளத்தினைப் பாடத் தவறவில்லை. மட்டுநகர் சம்பா நெல் மணியையும், வன்னிக் காட்டுத்தேனையும், வெண்பாவில் விதந்தோதும் கவிஞர் முத்தையும், வேழத்தையும், நெல்லையும் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பண்டைச் சிறப்பினை 1969 ஆம் ஆண்டு வருகை தந்த புத்தாண்டினை வரவேற்றுப்பாடும் போது குறிப்பிடுகின்றார்.
"ஈழத்துக் காவிய தீபகம்’ என்னும் இவரது சிறுகதைத் தொகுதியை 1973ஆம் ஆண்டு வெளியிட்டார். நூலின் ஆரம்பத்தில் நாகபந்தம், சக்கரபந்தம் பாணியில் இரு கவிதைகளைச் சேர்த்துள்ளார்.
சிறுகதை, உருவகக் கதை, கட்டுரை ஆகிய பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பினைச் செய்துள்ளார். 'தூண்டுகோல்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொகுதியொன்றை வெளியிடும் எண்ணம் கொண்டிருந்தார்.
இவரது வெள்ளிதிசை, விளைநிலம் ஆகிய கதைகள் ஆழமான சமுகப்பார்வையுடையவை. கர்வத்தின் முடிவு சிறந்த உருவகக் கதையாகும். போடிமாரின் சுரண்டலிலிருந்து விடுபட்டுத் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் முன்னேறலாம் என்பதுதான் 'வெள்ளிதிசை என்னும் கதையின் தொனிப் பொருள். ஆண்குழந்தை பிறந்ததும் வெள்ளிதிசையில் குழந்தை பிறந்திருக்கிறது எனச் சாத்திரியார் கூறியது சுப்பையாவுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அவர் முன்னேறுகிறார். உண்மையில் குழந்தை வெள்ளிதிசையில் பிறக்கவில்லை என்பது சாத்திரியாருக்கு மட்டும் தெரியும். இன்னொரு தொகுதிக்குப் போதுமான அளவு சிறுகதைகளும் உண்டு.
கவிராயரின் ஏனைய கதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் தொகுத்து நூலுருவில் வெளியிட்டால்தான் அவரின் இலக்கிய ஆளுமையின் பரிமாணத்தை உள்ளபடி உணரமுடியும்.
18

பேராசிரியர் சிவத் தம்பியின் பன்முக ஆய்வு
1. பண்டைய தமிழர் பற்றிய ஆய்வு
(1) குழுநிலையிலிருந்த தமிழர் சமூகம் எப்படி விவசாய சமுதாயமாக மாறியது? தாம் வாழ்ந்த நிலப்பரப்பை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களாகப் பிரித்து அவ்வந்நிலங்களுக்குரிய பண்பாட்டு விதிகளையும், வாழ்க்கை முறைகளையும், தமது இலக்கியங்களில் படைத்தார்கள். இவ் விலக்கியங்கள் மூலம் அம்மக்களது வாழ்க்கை நியதிகளை எடுத்துக்காட்டுகிறார் பேராசிரியர் சிவத்தம்பி மேலும், அச்சமூகங்களின் பரிணாம வளர்ச்சியையும் மார்க்சியக் கண்கொண்டு ஆராய்கிறார். பண்டைய தமிழரின் பொருளாதார, சமூக வாழ்வை அறிவதற்கு இத்திணை பற்றிய கருத்து நிலைதான் அடிநாதமாக அமைகிறது என்பது சிவத்தம்பியின் கருத்தாகும். பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்த ஏனைய ஆய்வாளர்களைப் போலி , இவ்விலக்கியங்களிலுள்ள பொருளையும், அக்கவிதைகளில் உள்ள நயத்தையும் பற்றி சிவத்தம்பி எழுதவில்லை. அக்கவிதைகளின் மூலம், அன்றைய சமுதாயத்தைப் பற்றியும், அச்சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப்பற்றியும் எழுதினார். தமிழர் சமுதாயம், அதன் பரிணாம வளர்ச்சியில், வேட்டையாடும் சமூகமாகவிருந்து, மந்தை மேய்ப்போராகவும், விவசாய சமூகமாகவும், கப்பற்பிரயாணம் செய்யும் சமூகமாகவும் மாறியது படிப்படியாக நிகழ்ந்த வரலாறு என்ற ஏனைய அறிஞர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத சிவத்தம்பி, இம்மாற்றங்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாக மாறிவந்தன என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்.
குழுநிலையிலிருந்த சமுதாயம், நிலமான்யமுறை சமுதாயமாக மாறி, பின்னர் முதலாளித்துவ சமுதாயகமாக மாறிவந்தது என்ற மார்க்சியக்கருத்து, தமிழர் சமுதாயத்திற்குப் பொருந்தாது என்பது சிவத்தம்பியின் கருத்து. சர்வவல்லமை பொருந்திய எதேச்சாதிகார அரசனின் ஆட்சியில், எல்லா நிலங்களும் அவனுக்கே சொந்தம். ஆகையால், அச்சமூகத்தின் எல்லா செயற்பாடுகளும் அவனுடைய அதிகாரத்திலேயே இருந்த காரணத்தினாலும் சமூக மாற்றத்தினைக் கொண்டுவரும் ஒரு சமுகவர்க்கம் இல்லாதிருந்த காரணத்தினாலும், இக்கருத்தை ஏற்க முடியாது என்பது சிவத்தம்பியின் நிலைப்பாடாகும், வேடுவத்தொழிலைச் செய்த தமிழர்சமுதாயம், விவசாயத் தொழில் செய்யும் சமுதாயமாக மாறிவந்தபோது, அச்சமுதாயத்தில் வெவ்வேறு தொழிலைச் செய்யும் மக்களிடையே சாதி அமைப்பு முறை தோன்றியது என்பது சிவத்தம்பியின் கருத்து.
ஆதி மனித சமுதாயத்தில் அரசியல் அமைப்புமுறை என்றொன்றிருக்க வில்லை. அப்படியென்றால், எப்போது, எப்படி அரசு முறை தோன்றியது? இவ்வரசு முறையை ஆராய்வதில் தமிழர் கலாசார பாரம்பரியத்தை எப்படி அறியலாம்? இப்படி ஆராய்வதற்குரிய ஆவணங்கள் யாவை? இந்தக் கேள்விகளுக்கு விடை காண்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி
19

Page 11
இப்பிரதேசங்களில் தனித்தனியே வாழ்ந்த தமிழர்களின் சமூக வாழ்க்கையில், வடக்கிலிருந்து பிராமணர்களின் வருகையால், சாதி அமைப்பு தோன்றியது என்பது சிவத்தம்பியின் கருத்து வரலாற்றில் ஆரம்பகால சமூகங்களில் ஆட்சிமுறை என்றொன்றிருக்கவில்லை. குழுநிலையில் வாழ்ந்த இச்சமூகங்கள், சமூகக்கோட்பாடுகளுக்கமைய தமது சமூக வாழ்வை மேற்கொண்டனர். பாதுகாப்புக் காரணமாக இக்குழுக்களின் மத்தியில் ஒரு தலைவன் தோன்றுகிறான். இவன் குழுத்தலைவனாக மட்டுமே இருந்தான். இக்குழுத்தலைவன் எப்படி சர்வ அதிகாரம் கொண்ட ஒரு அரசனாகவும், சர்வாதிகாரியாகவும் மாறினான் என்பதற்குப் பல வரலாற்றாய்வாளர்களும், தத்துவஞானிகளும், பலதரப்பட்ட கருத்துக்களைக் கூறினர். ஹொப்ஸ், ரூசோ போன்றவர்கள், இத்தலைவனுக்கும் சமூகங்களுக்கு மிடையே ஒரு சமூக ஒப்பந்தம் ஏற்பட்டது என்று, "சமூக ஒப்பந்தம் (Social Contract Theory) என்ற ஒரு தத்துவத்தை முன்வைத்தார்கள். குடும்பத்தின் ஆரம்பம், தனியுடைமை, அரசு' என்ற தலைப்பின் கீழ் சமூக வரலாற்றை ஆராய்ந்த பிரெடெரிக் ஏஞ்சல்ஸ், காலகதியில் இம்மக்களிடையே தோன்றிய சகல் வசதிகளையும் பெற்ற ஒரு வர்க்கம்தான் ஆட்சியுரிமையையும் அபகரித்தது; குடும்பத்தையும் தனியுடைமையையும் பாதுகாக்க அரசு தோன்றியது என்பது இவரது கருத்தாகும். தமிழர் சமுதாயத்தின் வரலாற்றில் அரசு தோன்றிய விதத்தைப் பல இந்திய அறிஞர்கள் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்தார்கள். இவ்வறிஞர்களின் கருத்துக்களை ஆராய்ந்த சிவத்தம்பி, தன்னுடைய கருத்தை உருவாக்கினார். தன்னுடைய கருத்துக்குத் திருக்குறளை ஆதாரமாகக் கொள்கிறார். கெளடில்யவின் அர்த்த சாஸ்திரத்தோடு, திருக்குறளை ஒப்பிட்ட சிவத்தம்பி, வெறும் அரசுமுறையைப் பற்றியும், 'சுவாமி அல்லது அரசன், என்பவனின் தோற்றத்தைப் பற்றியும் கூறும் அர்த்தசாஸ்திரத்திலிருந்தும் திருக்குறள் வேறுபடுகிறது. திருக்குறள், அரசுரிமையின் பிரதிபிம்பமாக அரசனைக் காண்கிறது என்பது சிவத்தம்பியின் கருத்தாகும். வள்ளுவன் காலத்துத் தமிழர் சமுதாயத்தை அறிவதற்கு இக்கருத்து மிக முக்கியமானது என்பது அவரது நிலைப்பாடு. இக்குறு நிலங்களில் வாழ்ந்த சமூகங்களின் தலைவனாக, அவர்களுக்குப் பாதுகாப்பளித்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவனாக இருந்தான் 'அரசன் என்பவன். இவனை சிலசமயம் "மன்னன்’ என்றும் கூறினர். ஆனால் முழு அரசுரிமையைப் பெற்றவனாக, மக்களின் மேல் ஆட்சியை நடத்தியவனாக, வளர்ந்தவன்தான் வேந்தன் என்பவன். குறுநில மன்னர்களினின்றும் வேறுபட்டவன்தான் வேந்தன் என்பவன். தமிழ் நாட்டின் மூவேந்தர்களையும், இவ்வகையில் சேர்க்கிறார் சிவத்தம்பி
சங்க இலக்கியங்களை ஆராய்ந்த சிவத்தம்பி, தமிழர் சமுதாயத்தில் உயர்வகுப்பினர் தோன்றிய வரலாற்றையும் கூறுகிறார். சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு இக்கால இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.
பேராசிரியர் சிவத்தம்பியின் பன்முக ஆய்வில் இன்னொரு அம்சம்தான், அவர் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து. "இலக்கிய வழி வரலாற்றுக்கும், இலக்கியத்தின் வரலாற்றுக்குமிடையே வேறுபாட்டைக் காண்கிறார் சிவத்தம்பி அவர் "இலக்கியத்தின் வரலாறு' என்பது, சமூகத்தில் இலக்கியம் அதற்குரிய பண்புகளோடு வளர்ந்த முறையை எடுத்தக் கூறுவது”
1.

என்றும் “இலக்கிய வரலாறு' என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் இலக்கியங்களைக் கொண்டு, அதன் இலக்கியங்களின் அடிநாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள், ஆகியன கொண்டு எடுத்துக்கூறுவதாகும்” என்றும் கூறுகிறார். ஆங்கிலத்தில் Literary History' என்ற பதத்துக்கும் History of Literature" என்ற பதத்துக்குமுள்ள வேறுபாட்டினை இலக்கிய வழிவரலாறு என்றும், "இலக்கியத்தின் வரலாறு' என்றும் மொழிபெயர்த்து, வரலாற்றின் கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார். “இலக்கியத்தின் வரலாறு, என்பது சமூகத்தில் இலக்கியம், அதற்குரிய பண்புகளோடு வளர்ந்த முறையை எடுத்துக் கூறுவது. ஆனால் உண்மையான இலக்கிய வரலாறு' என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் இலக்கியங்களைக் கொண்டு அதன் இலக்கியங்கள் அடிநாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக் கூறுவதாகும்.
தமிழில் இலக்கிய வரலாறு’ என்ற நூலை எழுத முற்பட்ட பேராசிரியர், தமது ஆய்வை நான்கு ஆய்வுகளாகப் பிரிக்கிறார். முதலாவது ஆய்வில் இலக்கிய வரலாறு' என்பதற்குரிய வரைவிலக்கணத்தைக் கூறி, சமூக வரலாற்றோடு இணைந்த ஆய்வொழுங்குடைய பயில்துறையான இலக்கிய வரலாற்றின் கற்கைப் பயன்பாடுகள் பற்றிக் கூறுகிறார். இரண்டாவது ஆய்வில், தமிழில் இலக்கிய வரலாற்றாய்வு வளர்ச்சியை எடுத்துக் கூறுகிறார். மூன்றாவது ஆய்வில், இலக்கிய வரலாற்றாய்விற் பிரச்சினை மையங்களாகவுள்ள விடயங்கள் பற்றிக் கூறுகிறார். நான்காவது ஆய்வில், கருத்து மோதல்களுக்கு இடமளிக்கும் கால வகுப்புப் பற்றி ஆராய்கிறார். இவ்வாய்வுகளின் மூலம், பேராசிரியர் சிவத்தம்பி தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஒரு புதிய தத்துவத்தைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்குகிறார்.
தமிழை 'இயல், இசை, நாடகம்' என்று மூன்று வகையாகப் பிரித்தனர் சான்றோர். முத்தமிழை ஆராய்ந்த அறிஞர்கள் பெரும்பாலும் இயலைப் பற்றித்தான் ஆராய்ந்தார்கள். 'இசையும் முக்கியமாக நாடகமும் இவர்களால் ஆராயப்படவில்லை. சூரியநாராயண சாஸ்திரிகள் முதல் மயிலை சீனி வெங்கடசாமி ஈறாக தமிழிலக்கியத்தில் நாடகத்தைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் பெரும்பாலும், சிலப்பதிகாரத்தையே தமது மையப் பொருளாகக் கொண்டனர். பண்டைய தமிழர்களின் நாடக மரபை மிகவும் ஆழமாகவும், நுணுக்கமாகவும் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர்தான் பேராசிரியர் சிவத்தம்பி. இவர் இலக்கியங்களை மட்டும் ஆதாரமாகக் கொள்ளது, தொல்பொருளாய்வு, கலாசாரம், மானிடவியல் போன்ற பல்கலைகளைத் தனது ஆய்வுக்குச் சாதகமாக்கிறார். இரண்டாவதாக, கிரேக்க நாடக மரபோடு ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம் தமிழ் நாடக மரபுக்கு வலுவூட்டினார். மனித வரலாற்றில் மிகவும் தொன்மையானது தான் கிரேக்க நாடக மரபு. கிரேக்க நாடக மரபை ஆராய்ந்ததன் மூலம், தமிழர்களின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்திருந்த நாட்டுக்கூத்து, தமிழ் நாடக மரபுக்கு அடித்தளமாயமைந்த வரலாற்றுண்மையை தமிழுலகுக்கு எடுத்துக் காட்டிய பெருமை சிவத்தம்பிக்கே உரியது.
இங்கிலாந்தில், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பிரபல்யமான பிறகு, நாடகம் என்பது, மேடையில் அரங்கேற்றப்படும் ஒரு கலையாக வளர்ந்தது. “ஒரு நாடகம் எழுதப் படுவதாலோ, பாடப்படுவதாலோ நாடகம் ஆகாது; அது நடிக்கப்படவும்
21

Page 12
வேண்டும். நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப்படுவது. அது நிகழ்த்திக் காட்டப்படும் இடமே அரங்கு. அரங்கின்றி நாடகம் இல்லை.” என்று பேராசிரியர் மெளனகுரு தன்னுடைய 'ஈழத்து தமிழ் நாடக அரங்கு' என்ற நூலில் கூறுகிறார். ஆகவே இன்றிருக்கும் நாடக மரபு பெரும்பாலும் மேலைத்தேய நாடக மரபை ஒட்டியே வளர்ந்திருக்கிறது.
பண்டைய தமிழர் வாழ்வில் இத்தகைய நாடக மரபு இருக்கவில்லை. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணார் நாடகமானது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகக் கூறல்” என்று நாடகம் பற்றிக் கூறுகிறார். சடங்குகளினடியாகத்தான் நாடகங்கள் தோன்றின என்பது மெளனகுருவின் கூற்று.
பொருளியல்வாத கண்ணோட்டத்தில் - HistoricaMaterialism - தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்த பேராசிரியர் சிவத்தம்பி, இந்நாடக மரபையும் அதே கண்ணோட்டத்தில் அணுகினார். பண்டைய தமிழ் இலக்கியங்களில் நாடகத்தைப் பற்றிய குறிப்பு, அதிகமாக இல்லாதிருந்தமையின் காரணமாக, கிரேக்க நாடக மரபை ஆராய்வதன் மூலம், தமிழ் நாடகத்தை அறிவதற்குரிய மூல ஆதாரங்களை அறியலாம், என்ற கருத்தில் தான் சிவத்தம்பி கிரேக்க நாடக மரபை ஆராய்கிறார். தமிழ் மக்களின் சமுதாய வரலாற்றை அறிவதற்கு, இலக்கியங்கள் மட்டுமல்ல, இலக்கியம் அல்லாத ஆதாரங்களையும் தனது ஆய்வுக்கு உட்படுத்துகிறார் சிவத்தம்பி. தமிழரின் சமுதாய வரலாற்றை ஆராயப் புகுந்த சிவத்தம்பி, இவ்வரலாற்றை மூன்று பாகங்களாகப் பிரிக்கிறார். வீரயுகம், நிலமான்ய முறைக்காலம், வாணிபகாலம் என்று பண்டைய தமிழரின் சமூக வரலாற்றைப் பிரிக்கிறார். இதன் பின்னர், நாடக மரபிற்கு உறுதுணையாயிருந்த சமூகக் காரணிகளை விரிவாக ஆராய்கிறார். இம்மூன்று காலப் பிரிவுகளில் வளர்ந்த நாடக மரபை ஆராய்வதில் ஈடுபட்ட சிவத்தம்பி, இந்நாடக மரபிற்கும் நாட்டுக்கூத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருக்கிறதைக் காண்கிறார். சங்ககாலத் தமிழ் மக்களிடையே இருந்த நாடக மரபைப் பற்றிய பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வு, இனிவரும் ஆய்வாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக 9/60)ириций.
அர்ைபார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை தொடர்ந்து e
கிடைக்க வேண்டுமாயின் உங்களது O சநதா விபரம்
சரியான முகவரியை எமக்குத் தனிப்பிரதி; ரூபா 15/-
தெரியப்படுத்துங்கள். வருடச்சந்தா: ரூபா 180/-
இந்த இதழ் பற்றிய கருத்துக் (தபாற்செலவு உட்பட) களையும் சஞ்சிகையின் தரத்தை சந்தா காசோலை மூல மேம்படுத்த உங்களது ஆலோசனை மாகவோ மனியோடர் மூலமா களையும் அறியத்தாருங்கள். கவோ அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய பெயர், ஆக்க இலக்சிய கர்த்தாக்களே. முகவரி ;-
உங்களது படைப்புகளின் மூலம் T.GNANASEKARAN ஞானம் சஞ்சிகையின் இலக்கிய 19/7, PERADENTYAROAD, தரத்தை மேம்படுத்துங்கள். KANDY
- ஆசிரியர்
22

வ.அ.இராசரத்தினம்
s ஈழத்தின் முதுபெரும் எழுத்ாளர் வ.அ.இராசரத்தினம் 22.02.2001 இல் காலமானார். அவரது மறைவு ஈழத்து இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் கிழக்கிலங்கை மண்ணின் வனப்பையும், வளத்தையும் நேசித்து அந்த மண்ணின் மக்களை இலக்கியமாக்குவதில் 53வருடங்கள் தொடர்ந்து எழுதிவந்த அவர், சிறுகதை, நாவல், கவிதை, வானொலி நாடகம், மேடைநாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய துறைகளில் தமது ஆளுமையை வெளிப்படுத்தினார். இவரது தோணி (சிறுகதைத்தொகுதி), மண்ணிற் சமைந்த மனிதர்கள்(நாவல்) ஆகியன அகில இலங்கைச் சாகித்திய பரிசினைப் பெற்றன. தோணி என்ற இவரது உலக தரத்திற்கு ஒப்பான சிறுகதை, பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஈழத்து இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தது.
இவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் "ஞானம் சஞ்சிகைக்கென எழுதியனுப்பிய ‘குளக்கோட்டன்’ என்ற சிறுகதையை இங்கு பிரசுரித்து அவருக்கு \அஞ்சலி செலுத்துகிறோம். - ஆசிரியர்
நாட்டிலே பஞ்சம். குடி படைகளைத் தாபரிக்க முடியாமல் மன்னர் திண்டாடினார். குடி படைகள் ஒரு புறமிருக்கட்டும். எப்படியோ அவர்களைச் சமாளித்துவிடலாம். ஆனால் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு மன்னரிடம் அடிமை குடிமைகளாகப் பணிபுரிந்த பூதப் படைகளைச் சமாளிப்பது சிரம சாத்தியமாக இருந்தது. எது எப்படிப்போனாலும் அவைகளுக்குக் கூழ் வேண்டும். உணவு இல்லாமல் அவர்களை வைத்துக் கொண்டிருப்பது மன்னருக்குப் பெரிய தலையிடியாக இருந்தது!
அவ்வேளை, மேல் மழை பெய்ததால் மகாவலி கங்கையில் வெள்ளம் வந்தது. அது சுபீட்சம் பிறப்பதற்கான அறிகுறியாக இருந்தது. பெருகிய கங்கை நீர் கரை தகர்ந்த இடங்களில் பாய்ந்து ஆற்றங்கரைப் பள்ளங்களை நிரப்பியது. மேலும் அப்பள்ளத் தரையைச் சமன் செய்து பயிர் செய்யலாம் என்ற எண்ணம் மன்னருக்குத் தோன்றியது.
தம் பூதப் படைகளை அழைத்தார். தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளப்
23

Page 13
பகுதிகளைக் காட்டி "இவற்றை இன்ன்மும் கொஞ்சம் விசாலித்துச் சமன் செய்தால் நெல் பயிரிடலாம். உங்கள் பஞ்சமும் தீரும்” என்றார் மன்னர்.
பூத கணங்கள் வேலையைத் தொடங்கின. அன்றே அப்பள்ளக் காணியை கண்ணுக்கெட்டிய தூரம்வரை விசாலித்து ஒப்புரவு செய்து கழனியாக்கின. வேலை முடிந்ததும் கேட்டன. “அரசே! நம் கழனிகளுக்குத் தண்ணிர் எங்கிருந்து கிடைக்கும்?"
"தண்ணீரா? இந்த ‘வாணையில் கங்கைத் தண்ணிர் ஏறியிருக்கின்றதே. இத்தண்ணிரில் ஏற்றுப் பூட்டி இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சலாம்” என்றார். மன்னர்.
பஞ்சத்திலடிப்பட்ட பூத கணங்கள் மன்னர் கேட்டுக் கொண்டதுபோல மாவலியின் ஒறுவாய் வழியாகப் பாய்ந்து பள்ளத்தில் கிடந்த தண்ணிரை ஏற்றுக் கொண்டு இறைக்கலாயின.
சிறிது நேரத்தில் 'வாணை வற்றிவிட்டது. அதிலிருந்து தண்ணிர் வெளியேறின வேகத்திற்கு ஆற்றிலிருந்து நீர் வரவில்லை. மெதுவாகவே வந்துகொண்டிருந்தது. எனவே வாணை நிரம்பும்வரை பூத கணங்கள் காத்திருந்து, நிரம்பியதும் மீண்டும் இறைத்தனர்.
நாள் முழுவதும் இப்படி விட்டு விட்டு இறைத்தும் புதிய கமத்தில் காற்பங்கு கூட நனையவில்லை. ஆனாலும் பூதகணங்கள் விடாமல் அவ் வேலையைச் செய்துகொண்டேயிருந்தன.
இதற்குள் கங்கையில் நீர் வற்றியது. ‘வாணையிற் தண்ணிர் ஏறவில்லை. பூத கணங்கள் சோர்ந்துபோயின
ஆனாலும் சில நாட்களில் கங்கை மீண்டும் பெருகியபோது அவை மீண்டும் நீரிறைத்தன. எப்படியோ அந்தப் போகத்தை விளைவித்துக் கொண்டனர். ஆனாலும் பூதகணங்களுக்குத் திருப்தியாயில்லை!
அறுவடை முடிந்த சில நாட்களில் மன்னர் கேட்டார். "ஏன் சோம்பியிருக் கிறீர்கள் மீண்டும் விதைக்க வேண்டாமா?”
பூதகணங்கள் மீண்டும் அந்த வாணையில் விதைக்க ஆயத்தமாக வில்லை. ஆற்றிலே போற தண்ணிரைக் குளத்திற்குப் பாய்ச்சித் தேங்க வைத்து வயல்களுக்குப் பாய்ச்சாமல், ஏற்றுப் பூட்டிக் கொஞ்சங்கொஞ்சமாக இறைத்து. சீ! நாய்க்கு நடுச்சமுத்திரத்திலும் நக்குத் தண்ணிர்தானா?
பூத கணங்கள் மீண்டும் அந்தச் செய்கையை விரும்பவேயில்லை. பூதகணங்களின் தலைவனை மன்னன் வற்புறுத்தியபோது ஆக்ரோஷத்துடன் சொன்னான். “சோத்தால கெட்டுச் சுனையழிந்தாலும் ஏத்தாலைச் சோறு இனி வேணாம் ராசாவே"
தன்னுள் மறுகிய மன்னன் அப்பூதகணங்களைக் கொண்டே குளத்தைக் கட்டிக் குளக்கோட்ட மன்னன் எனப் பேர்பெற்றான்.
(கொட்டியார்ப்பற்று நாடோடிக்கதை ஒன்றைத் தழுவியது)
炎烧录辞$
24

Difefashr பேசுகிறார்.
சாளினிக்கு ஒரு விளக்கம்
"ஞானம் - டிசம்பர் 2000 - இதழில் வெளியான எனது சிறுகதை (அமிர்தமா, ஆலகால விஷமா?) தொடர்பாக என்.சாளினி என்ற நேயர் எழுதிய ஆக்ரோஷமான சாடலை -ஜனவரி 2001- இதழில் கண்டு, உண்மையில் சந்தோஷப்பட்டேன். சாளினி குறிப்பிடும் பெண்ணுலகக் கொடுரம் அத்தனையும் உண்மையே என்பதையும், தற்போது உலகில், குறிப்பாக தென்கிழக்காசிய - இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் வாழும் பெண்கள் மத, கலாசார, பண்பாட்டு போர்வைகளின் கீழ் எத்துணை பயங்கரமாக நிர்மூலமாக்கப்படுகிறார்கள் என்பதையும் நன்றாக அறிவேன். சாளினி! உங்கள் உடலில், உள்ளத்தில் எரியும் ஆத்திரக்கனல், என்னுள்ளும் உளது. கடந்த சுமார் நாற்பது வருடங்களாக என்பணியோடு இணைந்தவர்கள் இதனை அறிவர். நான் கொழும்புவாழ் போலி டாம்பீக சிறுகுழுவைச் சார்ந்தவள் அல்ல. வெளிநாட்டு உதவிப்பணம் பெறுவதற்காக, சமூக சீரழிவிற்கு ஒத்துழைக்கும் பொய் சீர்திருத்த வாதியுமல்ல!
எந்த விஷயத்திற்கும் இருபக்கங்கள் உள்ளன என்பதைக் காட்டவே நீங்கள் தாக்கிய சிறுகதை படைக்கப்பட்டது. அதிதீவிரமான முற்போக்கு என்று நம்பிக்கொண்டு தலையால் நடக்கமுயன்ற பலரும், பலசமூகங்களும் இன்று பயங்கரமான பக்கவிளைவுகளை (Side effects) சந்திக்க நேர்ந்துள்ளது. வீரத்தோடு விவேகமும் வேண்டும் என்று கருதுவது பிற்போக்குவாதமோ முட்டாள்தனமோ அல்ல. பாலினசமத்துவம் அவசியம். இன்றியமையாதது. மானிட அடிப்படை உரிமை. மறுப்பில்லை. அதே சமயத்தில் ஆண்-பெண் இருபாலாரிடையேயும் அர்த்தபூர்வமான, ஆக்கரீதியான சிந்தனைப் புரட்சி அவசியம். இப்பணியில் கடந்த நான்கு வருடங்களாக நான் ஒரு திட்டத்தை 25-கிராமங்களில் செயற்படுத்தி பாரிய வெற்றியைக் கண்டிருக்கிறேன். கண்மூடித்தனமான வேகம் சிலவேளைகளில், "அன்னநடை நடக்கப்போன காக்கைக்கு, நாளடைவில் தன் சொந்த நடையும் கெட்டதுபோல” ஆகிவிடக் கூடாதே, என்ற கவலை எனக்கு!
கட்டிய கணவன், மனைவியைக் கடுமையாய் புறக்கணித்தால், மனைவி எனும் இளம்பெண், ஒரு மனுஷி, மனித ஆசாபாசங்கள் உள்ளவள், தடம்புரள (தன்னினச் சேர்க்கையை) நேரிடலாம் என்று சொல்லி, மனைவியின் உணர்வுகளை மதிக்காத ஆடவர்களை உணர்வுபூர்வமாய் தட்டி எழுப்புவதற்குத்தான் பிரபல திரைப்பட இயக்குனர் தீபா மேத்தா (Deepa Mehta) "பயர்(தி) (FIRE) எனும் சினிமாப்படத்தை எடுத்தார். உடனே பகுத்தறிவைப் பயன்படுத்த அறியா மந்தைக் கூட்டம், அதனைக் கண்டித்து, ஆர்ப்பரித்தது. தீபா மேத்தா தன்னினச் சேர்க்கையை (Homo Sexualism) பரப்ப முயல்கிறார் என்பது அபாண்டம். இப்படிப் பல நல்ல விஷயங்கள் இன்று குழப்பியடிக்கப்பட்டு, சமூகம் - “குளிக்கப்போய் சேறு பூசி" 25

Page 14
பிணைந்து நாறிப்போய் நிற்கிறது.
சாளினி என்னுடைய கதை ஒரு அனுபவ வெளிப்பாடுதான். அதில் அணுவளவும் பொய்யில்லை. எதற்கும், எவர்க்கும் வக்காலத்து வாங்க வேண்டிய நிலை எனக்குக் கிடையவே கிடையர்து. மனிதகுல மேம்பாடு மட்டுமே எனது குறிக்கோள் என்று சொல்லும் உரிமையும் அருகதையும் எனக்கு உண்டு. சாளினியின் தார்மீகக் கோபம் என்னுள்ளும் இருப்பதனால், அதனை மதித்து இத்தனை விளக்கமும் தந்தேன். பாரம்பரிய பண்பாடுகளில் நல்லதும் கெட்டதுமுண்டு. அதேபோல நவீனத்திலும்தான் சரி-பிழை நிறையவே உள்ளன. பாரம்பரிய நவீனம் இரண்டிலுமுள்ள அர்த்தபூர்வமானவற்றை, மானுட உயர் வேற்றத்திற்கு உறுதுணையான அறிவியற் கூறுகளை இனங்கண்டு தேர்ந்தெடுத்து புதிதாக ஒரு பகுத்தறிவுக்கேற்ற வாழ்வியல் முறையினை - (மாலையை) நாம் கோர்த்தெடுத்து சூடி மாந்தரெல்லாம் மகிழவேண்டும் என்பதே எனது ஆசை. இதற்கு, ஒரு பக்கப் போக்குவரத்துப்பாங்கு (One way taffic System) சரிவராது என்பது என் தாழ்மையான கருத்து. இதனை விளக்க ஒரு வாய்ப்பளித்த சாளினிக்கு மிக்க நன்றிகள்! “ஞானம் ஆசிரியருக்கும் நன்றிகள் ஆயிரம்! - யோகா பாலச்சந்திரன் sk ze ze ze ik டிசம்பர் மாத “ஞானம்’ இதழில் வெளியான திருமதி யோகா. பாலச்சந்திரன் அவர்களின் ‘ஆலகால விஷமா அமிர்தமா? என்ற சிறுகதைபற்றி ‘ஞானம் ஜனவரி 2001 இதழில் என்.சாளினி முன்வைத்துள்ள கருத்தைப் படித்தேன். இரக்கப்படவே முடிந்தது.
யோகா பாலச்சந்திரனின் சிறுகதை பண்பாட்டுத் தளத்தை மையமாகக் கொண்டது. சாளினியின் ஆவேசம் பெண்மைக் எதிரான அத்துமீறல்களைக் குறிப்படுகின்றது. எனவே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட (ԼpլգԱiTՖl.
சாளினியின் கூற்றின்படி அவரது போராட்டம் தொடரட்டும். அது பெண்ணியம் பற்றியதாக, பெண்ணிலை வாதமாக, பெண்களின் குரலாக ஒலிக்கட்டும். ஒரு விழுமியத்தைச் சுட்டிக்காட்ட முனையும் ஒரு இலக்கியக் கூறை ஆவேசமாகத் தாக்காமல் சாளினியின் நியாயங்கள் வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் வெளிப்படட்டும்.
சாளினி காரசாரமாகத் தாக்கவேண்டியது படைப்பாளிகளை அல்ல. N.G.0 கனவுகளில் AC அறைகளில் இருந்துகொண்டு பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடைபெறும்போது எதிர்த்து ஒரு அறிக்கைகூட வெளியிட விரும்பாத பெண்ணிலை ஆய்வாளர்களுக்கு எதிராக இருந்தால் நன்று. - எஸ்.ஆரணி. கொழும்பு -5
米 米 米 体 米 1. இ.முருகையனின் கடிதம் முதிர்ச்சியுடையது. 1971 - 1976களில் நான் தமிழ்ப் பாடப்புத்தக ஆலோசனைச் சபையிலிருக்கும்போது, வெளியீட்டுத் திணைக்களத்தில் EDTOR ஆசிரியராகப் பணிபுரிந்த முருகையனுக்கும் இன்றைய முருகையனுக்கும் நிறைய வித்தியாசம் காண்கிறேன்.
எம்.ஏ.நுஃமானுக்கு யாரும் சேறு பூச எத்தனிப்பதானால் முதலெதிரியாக
26

இருப்பவன் நான்தான். எனவே, அது இங்கே நடக்கவில்லை. நுஃமான் நிதானமாக இல்லை; அவ்வளவுதான். இப்போது பிரச்சினை கமலினி செல்வராசனில் திரும்பியுள்ளது. வரோதயனும் இப்படித்தான் திருப்பி இருந்தார்.
தனது எழுத்துக்களை(பிரசுரமானவற்றை), அழகாக ஆவணப்படுத்தி பெரும் நூல்போல் செல்வராசனே கட்டி வைத்திருக்கிறார். இம்முறையை அவரிடமே நான் படித்தேன். எனவே ஆவணச் சிதறல்கள் இங்கே ஏற்படவில்லை. செல்வராசன் இக்கவிதை தன்னுடையது என என்னிடம் கூறினார்; அது வளர்ந்த கதையுடன். மகாகவி அக்கவிதை அவருடையதென நுட்மானிடம் கூறியிருக்கிறார். எனவே, முருகையன் கூறியுள்ள "ஸ்ற்றயிலிஸ்ற்றிக்ஸ்’ எனும் நடையியல் முறையில் ஒரு பரிசீலனை செய்வதே சிறந்தது. இலங்கையில் இம்முறை வெற்றியளிப்பது மிகக் கஷ்டம். காரணம்: ஒருவரை ஒருவர் பின்பற்றியே இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
2. நான் படிக்கின்ற காலத்தில் ஆசிரியரை 'ஐயா என்றும், அதிபரை “பெரியையா என்றுமே கூறுவர். இந்த இருவரும் முதிர்ச்சியின் சின்னங்களே! இன்று சிவசேகரம் “பெரியையாவாகப் பார்க்கிறார். அந்த முதிர்ச்சி அவரிடம் இல்லை. திருதி ஞானசேகரன் ஐயர் அறியாத விடயமொன்றை இந்த சிவசேகரம் ஐயா கண்டுபிடித்துள்ளார். கோவணமே - நான் கையாண்டுள்ள கதை வெறும் கிராமியக் கதை. எனது ஊரில் சர்வசாதாரணமாகக் கதைப்பார்கள். நான் ஆண்டுள்ள விடயம் “சலனம் பற்றியது; பற்றுப் பற்றியதல்ல. கவிதையே ஒழுங்காக எழுதமுடியாத சிவசேகரம் அவர்களுக்கு ‘கவித்துவம் பற்றிக் கூற என்ன தகுதியோ தெரியவில்லை. தயவுசெய்து ‘கவித்துவம் பற்றி ஒரு கட்டுரையை அவரிடம் எதிர்பார்க்கிறேன். எப்படியானாலும் இத்தறையில் அவர் “பெரியையா ஆகிவிட (ԼplգԱIII 5l. ஏ.இக்பால். 米 来 米 米 米 "பெண்ணென்று பூமிதனில். சிறுகதை கே.விஜயனின் கைதேர்ந்த அநுபவத்தின் வெளிப்பாடு. தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிரு சொற்களைப் பிரயோகித்தே கதையை வேகமாக நகர்த்தும் பாணி பாராட்டுக்குரியது. ஆயினும் இக்கதை "உயிரே தென்னிந்தியத் திரைப்படத்தின் சிறுகதை வடிவமோ என்று மனம் எண்ணிப்பார்ப்பதனை தவிர்க்க முடியவில்லை. மேலும், ‘ஒரு பெண் மஞ்சள் சர்வாணியுடன் காலையிளம் வெயிலில் பொன் மயமாகப் பிரகாசிக்கின்றாள் என்ற கூற்று பாத்திரத்தின் நிலைப்பாட்டுக்கு எவ்வகையிலும் ஒவ்வாதது. எடுத்த எடுப்பிலேயே அவள் பக்கம் கவனத்தை திசை திருப்பும் படியாகவா அவள் உடுத்தியிருந்திருப்பாள் என்பது சிந்திக்கப்படவேண்டியது. யதார்த்தம் கருவில் மட்டுமல்ல பாத்திரப் படைப்புட்பட ஒவ்வொரு அம்சத்திலும் அவதானிக்கப் படவேண்டியது. ச.சதீஸ்காந்தன், திருகோணமலை.
率 本 冲 * *
ஞானத்தின் ஆறாவது சுடரில் ந.பார்த்திபன் எழுதியுள்ள கட்டுரை
சம்பந்தமாக ஒரு குறிப்பு. இலங்கை வானொலி, இஸ்லாமிய நிகழ்ச்சியின்
"இலக்கிய மஞ்சரி என்னும் நிகழ்ச்சியைப் பற்றிக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார்.
1978 - 1979களில் இலக்கிய மஞ்சரி எனும் சஞ்சிகை நிகழ்ச்சியை நானே 27

Page 15
தயாரித்து வழங்கினேன். கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதுபோல அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹசன் அல்ல. அப்போது நான் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் படிப்பிற்காக படிப்பு விடுமுறையில் பயின்று கொண்டிருந்தேன். அக்காலை நான் தயாரித்து வழங்கிய ஐம்பது நிகழ்ச்சிகளும்,
"விலக்கிய எல்லாம் விட்டே / விழுமிய கருத்து நல்கும் / இலக்கிய மஞ்சரிய்யை/ இனித்திட வைப்பாய் அல்லாஹற். " என்ற ஆரம்பக் கவிதையோடுதான் மலர்ந்தன. பகிர்தலின்மூலம் விரிவும் ஆழமும் பெற்றுக் கொண்டிருக்கும் ஞானத்தின் வளர்ச்சியில் ‘கண்ணுறு பட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையோடுதான் இந்தக் குறிப்பை அடக்கத்தோடு முன்வைக்கிறேன்; நன்றி. அன்புடன், அல்ஹாஜ்.எம்.வை.முஸ்லிம்JP, கட்டுகாஸ்தோட்டை,
se k je e xe ஞானம் பெப்பிரவரி இதழில் வெளிவந்த மண்டுர் அசோகாவின் சிறுகதை "ரொமி” நெஞ்சை அப்படியே கப்பிப் பிடித்துக் கொண்டது. கதையின் கருப்பொருள் பற்றி யாராவது ‘மூடநம்பிக்கை என விமர்சிக்கலாம். ஆனால் சூக்கும உலகின் உண்மைகளை அறிந்தால் அப்படிக் கூறமாட்டார்கள். இப்படியான ஒரு நாய் எங்கள் வீட்டிலும் இருக்கிறது. ஆகவே இக்கதையை உணர்வு ரீதியாகத் தரிசிக்க வைத்தது.
2. “சித்தாந்தன்” கவிதைகள் புரிகின்றன. குறியீடுகள் விளங்குகின்றன. "சாம்பலில் இருந்து கண்டெடுத்தேன் எனது கடவுளின் புகைபடிந்த தங்க விக்கிரகத்தை.” வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன. ஆனால் - அல்ஜீரியக் கவிஞர் மலிகா ஒலஹற்செனின் கவிதைகள்? கவிதை வரிகளில் ஏதும் புதுமை இருக்கிறதா? புரியவில்லை. சிவசேகரத்தின் கடிதத்தின் கடைசிவரிகள் "திறனாய்வுகள், எவ்வளவு சீரியனவாயினும், அபிப்பிராயங்களே அன்றி முடிந்த முடிபுகளல்ல. எனவே அவற்றை நிதானமாயும், பண்புடனும் எதிர்கொள்வதன் மூலமே உண்மைகளைக் கண்டறிய வழியுண்டு" - யதார்த்த ரீதியான நிதர்சன உண்மை. அத்துடன் "விமர்சகன் என்ற ஒரு தனிமனிதனுடைய அபிப்பிராயம் - எழுத்தில் வெளிவருவதால் - ஆயிரமாயிரம் வாசகர்களுடைய வெளிவராத அபிபப்பிராயங்களை விழுங்கிவிடும் அவலம் மிகவும் துரதிஷ்டமானதே!
அன்புமணி, மட்டக்களப்பு. ze ze ze ze ze ஞானம் 9ல் வெளியான கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களின் கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. சிங்கள நாவல், நாவலாசிரியர் பற்றியும் உள்ளடக்கம் பற்றியும் மிகத் தெளிவாக எழுதியிருந்தார். இருநூற்றாண்டு காலமாக சிங்களப் பிரமுகர் வெவ்வேறு சமூகங்களுக்குக் காட்டி வருகின்ற துவேச மனப்பான்மையை விளக்குவதற்கு, இது போன்ற அகழ்வுகள் அவசியம். தமிழ் அரசோச்சும் பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்த கலாநிதி அனஸ் அவர்கள், சிங்கள மொழியை ஊன்றிப் படித்து, அவர்களின் இலக்கியங்களில் ஆர்வங் காட்டிவருவது, மகிழ்ச்சிக்குரிய அம்சமொன்று. மேலும் பல சிங்கள இலக்கியங்கள் பற்றி அவர் தொடர்ந்தும் எழுதுவார் என இலக்கிய நெஞ்சங்கள் எதிர்பார்க்கின்றன.
- எஸ். எம். ஹனிபா - இராஜகிரிய
28

நிலம் - இதழ் 2 கவிதைகளுக்கான காலாண்டிதழ் ஆசிரியர்: சந்திரபோஸ் சுதாகர் வெளியீடு: நிலம் வெளியீட்டகம், வியாசர் வீதி, தோணிக்கல்.
87,
ப்ரவாகம் - இதழ் 5 ஆசிரியர்: ஆவழிப் ஏ.புஹாரி வெளியீடு: சுதந்திர கலை இலக்கியப் பேரவை, 9, மாத்தளை வீதி, உக்குவளை.
மூன்றாவது மனிதன் - இதழ் 10 ஆசிரியர்: எம்.பெளசர் வெளியீடு: 37/14, வெக்ஸோல் லேன், கொழும்பு - 02.
யாத்ரா - 4 m (முதலாவது ஆண்டுமலர்) ஆசிரியர்: அஷ்ரப் சிஹாப்தீன் தொடர்பு: 37, தன்கனத்த ரோட், மாபோலை, வத்தளை.
கலைமுத்து (கலை இலக்கிய சமூக இதழ்) ஆசிரியர்: எம்.இஸட்.முஹம்மட் நயிம் தொடர்பு: 163/10 மயிந்த மாவத்தை, தெஹிவளை.
குறிஞ்சித்தேன் (லிங்கதாசன் கவிதைகள்) எழுதியவர்: கவிஞர் க.ப.லிங்கதாசன் வெளியீடு: லிங்கன் பதிப்பகம்
167/25 டிம்புல வீதி, அட்டன்.
29
முதற்பதிப்பு: ஏப்ரல் 2000 மலையக மண்ணில் தோன்றிய கவிஞர் அவர்கள், அந்த மண்ணின் மக்களின் எழுச்சிக்காகவும், விடிவுக்காகவும், உரி மைக்காகவும் இன்றுவரையும் அயராது எழுதிவருபவர். தான் தீராத நோயுற்றி ருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியை அவர் நிறுத்தவில்லை. ப. கிருபாகரன், பதிப்புரையில்.
எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு எழுதியவர்: ஏ.பி.வி.கோமஸ் வெளியீடு: ப்ரிய நிலா, 193. உயன்வத்தை, தெவனகலை.
முதற்பதிப்பு: ஜூன் 1999
எழுத்துத்துறையில் நுழைய ஆசைப்படும் இளம் எழுத்தாளர்கள் நலன் கருதி இச்சிறு கைநூலைத் தொகுத்தளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்நூலைப் படித்து இளைய சமூகத்தினர் மத்தியில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே னும் எழுத்தை ஆளும் ஆற்றலைப் பெற்று சமுகத்துக்கு நல்லதைச் சொல் வார்களேயானால் அதுவே ஒரு பெரும் மனநிறைவாகும். உயன்வத்தை ரம்ஜான்
பதிப்புரையில்.
மனங்களிலே நிறங்கள் எழுதியவர்: ஒலுவில் அமுதன் வெளியீடு: ரக்ஷானா வெளியீட்டகம் 67, புதுப்பள்ளி வீதி, அக்கரைப்பற்று 05
முதற்பதிப்பு: பெப்ரவரி 2001 1976ல் இலக்கியப் பணியை ஆரம்பித்த ஒலுவில் அமுதன் அவர்கள் இன்றுவரை இலக்கிய வானில் ஒளிகுன்றா நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக் கிறார். நவீன எழுத்துலகிலி, இவரது முற்போக்கான கருத்துக்கள், ஆழமான
சிந்தனை சமூக சீர்திருத்த உணர்வுகள்
என்பனவற்றினாலி தமிழ் கூறு

Page 16
நல்லுலகம் பெருமைப்பட வேண்டும். எம்.வை.எம்.மீஆத், பொன்னுரையில்.
கிழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள் எழுதியவர்: மானா.மக்கீன் வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் சென்னை - 17
முதற்பதிப்பு: 2000 "கீர்த்திமிகு கீழக் கரை வாசிகளுக்கு முத்துக்குளித்தல் கைவந்த கலை, இரத்தின வணிகம் பரம்பரைத் தொழில். இந்த இரண்டுமே என்னைப் போன்றவர் களுக்கு வராது. இருந்தாலும் எல்லாம் வல்லவனிடம் கையேந்தி நின்றேன். கைகூடி வந்தது. ஆனால் கைகூடி வந்தது இரத்தின வணிகமல்ல; ஆய்வுமுத்து. மானா மக்கீன், ஆய்வுரையில்.
காட்டில் கலவரம் எழுதியவர்: ச.அருளானந்தம் வெளியீடு: அருள் வெளியீட்டகம், 37/7 மத்தியவீதி, உவர்மலை, திருக்கோணமலை. முதற்பதிப்பு: 06.10.1999 சிறுவர்களுக்கான படைப்புகளின் வரி சையில் தற்போது வெளிவருவது 'காட்டில் கலவரம் என்னும் சிறுவர் நாவலாகும். இந்நாவல்மூலம் கல்வி உலகிற்கும், சமுதாயத்திற்கும், பல நல்ல கருத்துக்களைச் சொல்வதற்கு முனைந்துள்ளார். காட்டில் வாழும் மிருகங்களையும் நாட்டில் வாழும் மனிதர்களையும் கொண்டு இச்சிறுவர் நாவல் புனையப்பட்டுள்ளது. எஸ்.எதிர்மன்னசிங்கம், அணிந்துரையில்.
புதிய நூலகத்திலி நீங்கள் எழுதிய நூல்களின் விபரங்களும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரண்டு பிரதிகளை அனுப்பி வையுங்கள்
தீக்குச்சிகளும் .
ாமானங்களும.
066 OG அன்சார்.எம்.ஷியாம் ஒவ்வொரு தீக்குச்சிக்கும் ஒவ்வொரு வாய்ப்பு:
அடுப்பெரித்தன! கூரைகளெரித்தன! ஒளியூட்டின! வழிகாட்டின! இருள் துரத்தின! பொருள் உணர்த்தின! உயிர் கொடுத்தன! சில உயிர் கொளுத்தின! சில "பொசுக் கென்றன! இன்னும் - ‘ஈரத்தில் விழுந்த சிலது மட்டும் எரியவும் மாட்டாமல் எதுவும் செய்யவுமியலாமல் இருந்து தடுமாறின
சில சில કઠo சில έθου சில சில
சில 'ஏன் எரிகிறோம். எதற்கெரிகிறோம். என்றே தெரியாமல் எரிந்து தீர்ந்தன!
3 இருக்கும் பெட்டியில் அடுக்கடுக்காய் இன்னும் இன்னும் தீக்குச்சிகள்!!
‘சாம்பலான பிறகு மட்டும் சஞ்சலப்படவியலாது!" ஏனெனில் - எல்லோருக்குமே வாய்ப்பு ஒரேமுறைதான்!!
ஆனால்., தீர்மானங்கள் மட்டும் \தத்தமதே!!!
30
ཡོད

ஒடுங்கி ஒதுங்கும்
ஒடுக்கியவர்களின் கைதான் இப்போதும் ஓங்கியிருக்கின்றது! ஒடுக்கப்பட்டவர்கள் இப்போதும் ஒடுங்கியவர்கள்தான்!
விதத்தில் மிகக்குறைந்த முதலாளித்துவம் விதத்தில் மிதமிஞ்சியவர்களை இன்னும் விரட்டியே வருகின்றது! மிரட்டியும் வருகின்றது
ஆட்டிப் படைக்கும் அற்புதச்சிந்தனை நாட்டில் நடப்பதை நாமே அறிவோம்! நீட்டி முடக்கி நிலைதடுமாறி ஏற்க வைப்பதை ஏன்தான் அறியோம்!
மொழியையும் இனத்தையும் முழுமுதலாக்கி இழுபறி செய்வது யாருக்கென்பதை விழிபிதுங்காது நுணுக்கமாய் ஆய்ந்து அழிவிலிருந்து ஆதிக்கம் காப்போம்!
இனியும் உலகம் ஏமாறுவதானால் தனிமைப்பட்டே தடுமாறிடுவோம்! கனிவுடன் மனிதக் கணக்கினை எடுத்து கவலை தொலைக்கும் வாழ்வினைக் காண்போம்!
அறிவின் ஆட்சியை அடையவிடாமல் செறிவுடை மனித ஆட்சியில் மிதப்பதால்
குறுகி நிற்கும் குமுறலை உலகம் நிறையப் பெற்று நிலை குலையும்
இதுதான் உலக விதியாம் என்றால் (p சதிதான் நமது சாதனை வெல்லா! கவிஞர் ஏ.இக்பால் அதுவே போதுமென நாம் நினைப்பின் எதுவும் ஏறா ஒடுங்கி ஒதுங்கும்!
31

Page 17
எனது கிராமத்துக்குத்
திரும்பல்.
- மாவை. வரோதயன்
என் வீதிகள் தோறும் கற்பக தருக்களின் குறுகத் தறித்த சடலங்கள்! என் ஊரின் வீடுகள் வேட்டை நாய் குதறிப் போட்ட கோழிக் குஞ்சின் உடல் மிதிகள்! எனது கிராமமோ இன்று கிழித்தெறியப் பட்ட ஓவியம்! தசாப்தங்களில் கணக்குப் பார்க்க முடியுமான கால இடைவெளிக்கு அப்பால் எனது கிராமம் எனக்கு அன்னிய மாகி விட்டது பற்றைக் காடுகள் வளர்ந்து ஒழுங்கைகளை அழித்திருக்கும்! விதைத்தவனைத் தெரியாமல் புதையுண்ட நிலக் கண்ணிகள்! ஒரு சில காப்பரண்களுக்கு எனது கிராமமும் காவலாக்கப் பட்டிருக்கும் விந்தை அகதி வாழ்வை எனக்கு வரமாகத் தந்திருக்கிறது! கோயில், வயல், தோட்ட வெளி, குளம் பட்ட மேற்றும் புகைவண்டிப் பாதை, மு; பள்ளிக் கூடம், பனை வடலிக் காணி, பட்டாளத்துக்குப் புட்டவிக்கும் சீமெந்து கப்பல் வந்து சைரன் அடிக்கும் துறைமு கீரிமலை, சடையம்மா மடம். எல்லாம், எல்லாம் திரும்பிப் போக முடியாத தூரத்தில். இரு இருந்து பார்! மல்ரி பரல்களும், கிபிர்களும், துவக்குக என்னைப் புதைக்கும் தடைகளும், வதை ஒருநாள் ஒதுங்கும்! நான் எனது கிராமத்துக்குத் திரும்புவேல்
Pinted at GREENLEAF PRNTH

s -1
ளும் களும்
新奥
O 甄 W.
S
* U ESA Ofi
K
R
япd