கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.04

Page 1
சுய சித்திரப்பிரதிை
 

് GOD
கியச் சஞ்சிகை
ம - பிரேமிள்

Page 2
ஒளிருங் காலைப்பொழுது
குளத்தின் மேலாக இளம் விலோ மரங்கள்; விலோகட்குக் கீழே ஒரு நீண்ட ஒதுக்கிடம்; ஒதுக்கிடத்தில் அமர்ந்தபடி என் மகனும் நானும், குளத்தில் சூரியனதும் முகில்களதும் நிழல் விழும். சேவற்கூவல், பறவை ஒலி, கிளிக்கத்தல்
பளிங்கு நீரோடைபோற் பாயும்; வண்ணத்துப் பூச்சிகள் இங்குமங்கும் சிறகடிக்கும், தூக்கனாங் குருவி இங்குமங்கும் பாயும். மரித்த இலைகள் தடுமாறி விழுந்தபடி EGII மோஜோ (Guo Mojo) குளத்திற்குள் மிதந்து இறங்கும்; (1920 அளவில் எழுதப்பட்டது) காற்றில் அலையும் பசும் இலைகள் எங்கட்கு மேலே வெள்ளிச் சொலிப்பைச் சொரியும்.
ஒரு வெண் பறவை தமிழில்:- குளத்தின் நடுவே ஆடியபடி இறங்கும்: சி. சிவசேகரம் ஆ ஒரு சிராய்த்த பச்சைமணிக்கல் ஏரி,
அதற்கு அப்பால் முடிவற்ற நானற்புதர் அடுக்கு.
விலொ(willow) காற்றாடி மரவகை
எழுந்துவா தோழி! . . .
ஒ வரிச்சுகளை அடுப்பிலிட்டு, உனக்குள்ளி (IEEE (ԿյԼD
உறுதிதான்
(ሠj இம்மலைகளின் நிமிர்வுகள்,
ரீ
இத்தனை மிடுக்காய்.
வாளெடுத்து, வாசலுடைத்துவா.
நம் வேட்டையில்
வீழ்த்த வேண்டியது விடுதலை
வால் பிடித்துப் பெறுவதல்ல,
FI இனவாதத்தையல்ல,
: (பத்தனையூர்N வாள பிடித்துப் பெறுவது! கவிம் வேதினகரன்' . தாமதிக்காதே! கா|தின்ே பலருக்குப் குருதியைக் கொதிக்கவைத்து,
புறப்படு. д Что- கட்டவேண்டியிருக்கிறது. போர்க்கோலத்தில். எரி ನಿಜ್ಜೈ. என்ன இது வாசனை.? ர்ை இனி - ஈனக் குப்பையள்ளப் பூ மனமே!
பயன்படட்டும். எங்கிருந்து வருகிறாய் கொங்கானி கிழித்து இத்தனை ஆயுதங்களோடு.? இடைக்கயிறவிழ்த்து, " T கொடிகட்டு - * சிர் த்தின் STLLUIIIDSF FIDIDSBS'Sr UவுU வெற்றிக் கொடிகட்டு கல்லறையிலிருந்து.!
அதிலுன் முகம்பதி. மலையுச்சியில் நாட்டு

உள்ளே.
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளினர் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
| ITA
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. Одјп.(аш. -08-478570 (Оflice)
08-234.755 (Res.) O77-30556
FX - 08-23.4755
E-Mail - gnan angsltnetlk
ސ..................................................................\
சிறுகதை அவள் என்ன செய்வாள் - 04
சரபு
பிறந்த மண் - 23 ராணி சீதரன்
நேர்கானல் - 14 கே.எஸ்.சிவகுமாரன் கட்டுரைகள் நான் பேச நினைப்பதெல்லாம் - 07 கலாநிதி துரை மனோகரன் இலக்கியப் பணியில் இவர். - 10
ந. பார்த்திபன் நினைவில் நிற்கும் தர்மு சிவராமு - 21 இராஜ தர்மராஜா
கவிதைகள் ஒளிருங் காலைப்பொழுது - 02 Gோ மோஜோ ஒரு மீசைக்காரனின் கனவு - 02 வேதினகரன் பூனைகள் படுத்துறங்கட்டும் - 09 புரட்சிபாலன் செல்லாத காசல்ல நாம்! - 09 வரணி வேலணை வேனியன் இயற்கையின் முன். - 11 வாகரைவாணன் எழுத்துப் பல்லக்கு - 31 பிரசாந்தன்
வரலாறு - 32
த.ஜெயசீலன் நூல் மதிப்புரை - 12 ஏ.இக்பால்
வாசகர் பேசுகிறார் - 27
புதிய நூலகம் -அந்தனிஜீவா 29
அட்டைப்படம் - நன்றி - 93ல் கலை இலக்கிய ஆய்வு(தொகுப்பு)
O3

Page 3
அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. கண்ணம்மா எரியும் நெருப்பையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் வைக்கப் பட்டிருந்த பானையில் உள்ள நீர்கூட அந்தச் சிறைக்குள்ளே இருக்கப் பொறுக்கமாட்டாது ஆவியாகிக் கொண்டிருந்தது. “யம்மோவ் பசிக்கு தம்மா" இளைய மகளின் ஈனஸ்வரம் அவளைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. "கடைக்குப்போன மனுஷன இன்னும் காணோமே. இந்தச் சனியன் எந்தக் கடைக்குப்போணிச்சோ" - சொல்லிக்கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள் கண்ணம் மா. அங்கே தொட்டுக்கொள்ளும் அளவுக்கு இருள் பரவியிருந்தது.
கண்ணம்மா உயிருள்ள ஒரு ஐடம். அடுப்பங்கரையையும் அரை டசின் பிள்ளைகளையும் புருஷன் என்ற பெயரில் உலா வரும் கல்(ள்)லான கணவனையும் மேட்டு லயத்தையும் பணியலயத்தையும் கொழுந்தெடுக்கும் மலையையும் தவிர பிறவற்றை அறிந்திராத பேதை. ஆனாலி , புருஷனுக்குச் சமமாக உழைக்கும் அவள் ஒரு மனிதயந்திரம்.
"ஏ.யம் மா. ulf Lost (36. T பசிக்குதும்மா சோறு ஆக்கிட்டியா யம்மா" என்று மீண்டும் இளைய மகளின் குரல் கேட்கவே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள் கண்ணம்மா. "கண்ணு இல்ல கொஞ்சம் பொறுத்துக்க தாயி. அப்பா இப்ப வந்திடும். வந்ததும்
04
ஒடனே சமைச் சித் தாரேன் . ஒனக்குத்தான் மொதச் சாப்பாடு” வழமையாகவே சொல்லும் வார்த்தைகள் தான் இவை. எனவே, வார்த்தைகள் சரளமாக வெளிவந்தன. குசினிக்குள் இருந்து கொண்டே வீட்டுக்குள் எட்டிப்பார்த்தாள். அங்கே பசியால் வாடிய நிலையில் ஏனைய ஐந்து குழந்தைகளும் சாக்கைக்கூட விரித்துக் கொள்ளாமல் மண்தரையில் நிமிர்ந்தும், சுருண்டும் அமர்ந்த நிலையிலும் உறங்கிக் கொண்டிருந்தன. வழமை யான செயல்தான். அண்மையில் பெரிய பிள்யைான ரஞ்சினி மட்டும் கொஞ்சம் ஒழுங்காக ஓர் ஓரத்தில் முடங்கிக் கிடநீ தாள். கணிணம் மாவிற்கு ரஞ்சினியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இவளுடைய வயதையொத்த பிள்ளைகளெல்லாம் தோட்டத்து ஸ்டைலில் வலம் வர, இவள் மட்டும் உடம்பில் ஒரு பொட்டுத் தங்கமோ, உடுத்துவதற்கு நல்ல துணிமணியோ இன்றி, வயதாகியும் பெண் ஷன் கொடுக்காததனால் ஆங்காங்கே தன் எதிர்ப்பைக் காட்டிக் கிழிந்து தொங்கிக் கொணி டிருக்கும் பாவாடையும் சட்டையுமாகப் படுத்துக் கிடந்தாள். எல்லோரையும் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. அவளே பரிதா பத்துக்குரியவள் என்பது மட்டும் அவளுக்கு விளங்கவில்லை.
"இந்த மனுஷன கடைக் கி அனுப்புனதுக்கு நானே போயிருக்கலாம். உண்டியலை ஒடச்சி அரிசி வாங்கச்
 

சொல்லிக் குடுத்த காசுல இந்த மனுஷன் அரிசி வாங்கிச்சோ, இல்லாட்டி குடிச்சுப்புட்டு எங்கேயாவது வுழுந்து கெடக்குதோ, இல்லாட்டி எவனோட யாவது சண்டகிண்ட போட்டுக்கிட்டு கெடக்குதோ” என்று தனக்குள்ளே பலவாறு எண்ணிக்கொண்டே சாக்கை விரித்து பிள்ளைகளை ஒழுங்காகப் படுக்கவைத்தாள். மிகுந்த போராட்டத் தின் பின் ஓய்வு பெற்றுக்கொண்ட
தன்னுடைய சேலைக்கு இப்போது பகுதி
நேர வேலை கொடுக்க நினைத்து, அதனை எடுத்து அனைவருக்குமாகப் போர்த்துவிட்டாள். இப்பொழுதும் அடுப்பு எரிந்து கொணர் டிருந்தது அவள் மனம்போல,
“நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம். இன் னைக்கு ராத்திரிக்கு தூங்கவேணும் ஊத்திக் கிறேன் கொஞ்சம்” என்னவோ தன்னை TM.செளந்தரராஜன் என்று நினைத்துப் பாடிக்கொண்டு ஓர் உருவம் தூரத்தில் வருவதைக் கண்டதுமே அது தன் 'உத்தம புருஷன்' தான் என்பதை ஊகித்துவிட்டாளர் . பதினைந்து வருடங்களாக அவனோடு குப்பை கொட்டியதன் பயன் இதுதான்.
"இன்னைக்கு வரட்டும் பார்த்துக் கிறேன்” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தவள் கணவனின் கோலத்தைக் கண்டு ஒரு கணம் ஆடிப்போய்விட்டாள். வழமையாகப் பார்க்கும் கோலம்தான் என்றாலும், கணவன் என்ற உணர்வோ, அல்லது ஏதோ ஒன்று அவளை அவன்பால் கவலை கொள்ளவைத்தது. அருகிலே ஓடிச் சென்றவளுக்கு, சாரத்தை முழங்காலுக்கு மேலே தூக்கிப்பிடித்தபடி, மற்றொரு கையிலே சாராயப் போத்தலுமாக வாயில் எச்சில் வழிய தள்ளாடியபடி - விட்டுக்கு வரும்போது
தான் 'கம்பீரமாக நடந்து வரவேண்டும் என்பதற்காக மேலும் தள்ளாடியபடி - நடந்து வந்து கொண்டிருந்த அவனைக் கண்டவளுக்கு வேதாளம் மீண்டும் முருங் கை மரத்தில் ஏறியது. "பாவிமனுஷா வாய வயித்தக்கட்டி சேத்து வைச்ச பணத்த அதுவும் சாமி உண்டியல்ல போட்டு வச்ச பனத்த எடுத்து, புள்ள குட்டிக பட்டினியா கெடக்கேனுட்டு அரிசி சாமான் வாங்கியாரச் சொல்லி குடுத்தா இப்புடி குடிச்சுப்புட்டு வந்து நிக்கிறியே நீ நல்லா இருப்பியா? நாசமாப்போக” அடிமனதின் ஆத்திரம் வார்த்தைகளாக வெளிப்பட்டது அவளிடமிருந்து.
“ஏ. பொட்டக்கழுத வாயமூடுடி. ஒன்னோட பெரிய எலவாப் போச்சி. வீட்டுக் குள் ள நொழைஞ் சா மனுஷனுக்கு நிம்மதியில்ல. காலயில இருந்து ராவு மட்டும் மாடா ஒழச்சிட்டு வார மனுஷனுக்கு கொஞ்சமாவது நிம்மதி வேணாமா? சே.
“போதும் நிப்பாட்டையா. ஒழச்சிட்டு வார மனுஷனுக்கு நிம்மதியாம் நிம்மதி. பெரிய நிம்மதி. நிதான் ஒழைக்கிற பணத்தைக் குடிச்சே அழிக்கிறியே.
ബ
5.

Page 4
யோவ் ஒனக்கு கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? வயசுக்கு வந்த பொட்டப்புள்ள ஒன்னையும் வச்சிக்கிட்டு இப்புடிக் குடிச்சுப்புட்டு வாரியே அதுக்கு ஒரு கலியாணம் காட்சி பண்ண வேணா மா? அதவுடு ஒருவே ள சாப்பாடாவது ஒழுங்கா குடுக்க வேணாமா? குடிக்கிறதே கூழு அதக்கூட ஒழுங்கா குடிக்கவிடமாட்டேங்கிறியே."
"சீ வாய மூடு டி. பெரிய புள்ளைகளாம் புள்ளைக. பெத்த புள்ளைக, பெத்த புள்ளைகன்னு
மூச்சுக்கு முந்நூறுவாட்டி சொல்லியே. நா கூப்பிட்ட நேரம் நீ வந்து படுக்காட்டி இத்தன புள்ளைகளும் பொறந்திருக் காது. மனுஷன் நிம்மதியா இருந்திருக் கலாம்."
இதனைக் கேட்டவுடன் வானம் இடிந்து தலையில் விழுவதுபோல் இருந்தது கண்ணம்மாவுக்கு. இவ்வளவு நாளும் அவன் இப்படிப் பேசியதில்லை. இன்று போதை தலைக்கேறி விட்டது என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. “சே. நீயெல்லாம் ஒரு மனுஷனா? புருஷன் பொண்டாட்டி ஒறவையே கேவலமா பேசிறியே. ஒன்னோட எனக் கென்ன பேச்சு? எக்கேடு கெட்டாவது போ” என்று சொல்லிவிட்டு பானையில் இருந்த தணிணிரில் இரணர்டு கோப்பையை எடுத்து மடக்மடக்கென்று குடித்தாள். "நாளைக்கு லயத்துப் பைப்பில் தண்ணி வராவிட்டால்." என்ற எண்ணம் அவளை மேலும் குடிக்க விடாமல் தடுத்தது - அவள் தண்ணிர் குடித்தது தாகத்துக்கு மட்டுமல்ல - தன் தலைவிதியை நொந்து கொண்டு வெளியே வந்து கதவைச் சாத்தி பக்கத்திலிருந்த பெரியதொரு கட்டையை எடுத்து கதவுக்கு முட்டுக்கொடுத்துவிட்டு, குப்பி விளக்கை குறைத்து அளவாக எரியவைத்துவிட்டுப் படுத்தாள் -
ஆனால், உறங்கவில்லை. சற்றைக் கெல்லாம் கந்தையாவும் ஏதோ ஒரு இடத்தில் படுத்துக் கொண்டான். இப்பொழுதும் அடுப்பு எரிந்து கொண் டிருந்தது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சென்றிருக்கும். “ஜய்யையோ அம்மா எழும்பும்மா. சுருக்கா ஏழும்பும்மா. இந்த அப்பாவப் பாரு" மூத்த மகள் போட்ட கூச்சலிலே திடுக்கிட்டு எழுந்த கண் ணம்மா அங்கே. அங்கே. அவள் கண்ட காட்சி. அங்கே. அங்கே. தன் சொந்த மகளையே.
தந்தை என்னும் பெயர் தாங்கிய அந்தக் காமுகன். ஒரு கணம் இரத்தத்தை உறையச்செய்தது அக் காட்சி மறுகணம் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட கண்ணம்மா, "வுடுடா எம் புள்ளைய நீயெல்லாம் மனுஷனா இல்லாட்டி மிருகமா து.." என்று சொல்லிக்கொண்டே அவனிடமிருந்து தன் பிள்ளையைப் பிரிக்கப் போன அவளை, கண்களில் காமவெறிமின்ன எட்டி உதைத் தான். உதைபட்ட வேகத்தில் கதவருகே போய் விழுந்தாள் கண்ணம்மா. அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அதுவரை காலமும் அடக்கி அடக்கி வைத்திருந்த கோபமெலி லாம் ஆதி திரமாக விஸ்வரூபமெடுத்தது. அந்தக் கணத்தில் அவளுடைய தோற்றம் மகிடாசுர மர்த்தனியை வென்றது - அப்பொழுது கதவுக்கு முட்டுக்கொடுத்து வைத்திருந்த அந்தப் பெரிய உருட்டுக்கட்டை அவள் கண்ணில் பட்டது. "ஐயோ அம்மா அப்பாவ கொன்னுட்டியே” மகள் போட்ட கூச்சலில் அந்தத் தோட்டமே விழித்துக் கொண்டது - தூக்கத்தில் இருந்து மட்டும்.
இப்பொழுது அடுப்பு அணைந்து விட்டிருந்தது சாம்பல் மட்டுமே நிறைந்திருந்தது.
06

நான் பேச நினைப்பதெல்லாம். (கலாநிதி துரை.மனோகரன்)
சாகாவரம் பெற்றவர்
இலங்கையின் எழுத்துத்துறைச் சாதனையாளர்கள் பற்றிச் சிந்திக்கும்போது, முதல் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர்களுள் ஒருவராக விளங்குபவர், வ.அ.இராசரத்தினம் அவர்கள். எழுத்தையே மூச்சாகக் கொண்டு இயங்கி வந்த அவரால், இறுதிவரை எழுதாமல் இருக்கமுடியவில்லை. இலங்கைக்குப் பெருமைதரும் எழுத்தாளராக அவர் விளங்கி வந்துள்ளார். நான் பலமுறை படித்து அனுபவித்த, தரமான சிறுகதைகளில் ஒன்று, அவரது “தோணி, உலகதரத்தில் l གང་བརྗོད། வைத்து எண்ணப்படக்கூடிய சிறுகதைப் படைப்புகளில் அதுவும் ஒன்று என்று கூறப்படுவது வெறும் புனைந்துரையன்று. இராசரத்தினத்தின் கொழுகொம்பு என்ற நாவல் என்னைக் கவரவில்லை. ஆனால், அவர் பின்னர் எழுதிய நாவல்கள் குறிப்பிடக்கூடியவையாக விளங்குகின்றன. எழுத்தின் பல்வேறு துறைகளிலும் முயற்சி செய்துபார்த்த வ.அ.இராசரத்தினம், உலக ரீதியான இலக்கியப் பார்வையும், பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவர். இத்தகைய எழுத்தாளர்களைக் காண்பது மிகவும் அரிது. ஒரேயொரு சந்தர்ப்பத்திலேயே அவரைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. ஆழமும், நிதானமும், கனதியும் மிக்க ஒரு படைப்பாளராக அவர் விளங்கினார். ‘முற்போக்கு வரையறைக்குள் அவரைப் பிறர் அடக்காதுவிடினும், அவர் தம்மளவில் ஒரு முற்போக்கு எழுத்தாளராகவே விளங்கினார். வ.அ.இராசரத்தினம் சாகாவரம் பெற்ற படைப்பாளி. அவரது எழுத்துக்கள் அவரைத் தொடர்ந்து வாழவைத்துக்கொண்டே இருக்கும். “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை." ஆபத்தான அடிப்படைவாதம்
எல்லா மதங்களும் கொள்கையளவில் நல்லனவற்றையே கொண்டிருக் கின்றன; நல்ல விடயங்களையே போதிக்கின்றன. ஆயினும், நடைமுறையில் மதரீதியான அடிப்படைவாதம் மேலோங்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. மதங்கள் ஓயாமல் போதிக்கும் உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள்கள் அனைத்தும் அவ்வவ் மதங்களின் அடிப்படைவாதத்தால் அடிபட்டுப்போகின்றன. இந்தியாவின் இந்து அடிப்படைவாதம் பாபர் மசூதியை இடிப்பதில் உச்சநிலை எய்தியது. இலங்கையில் பெளத்த அடிப்படைவாதம் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதற்குத் தடையாக இருந்துவருகிறது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ அடிப்படைவாதம் பல்வேறு கட்டங்களில் மனித நாகரிகத்துக்குச் சவாலாக விளங்கியுள்ளது. இவைபோன்று, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளரின் இஸ்லாமிய அடிப்படைவாதம் கலைப்பொக்கிஷங்களைக் கண்மூடித்தனமாக அழிப்பதில் வளர்ச்சி பெற்றுத்திகழ்கிறது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களாயினும், அடிப்படைவாதிகளிடத்தில் மதவெறியே உச்சம் பெற்றுள்ளது. மனித உரிமைகளை மதிக்காத போக்கும், மனித முன்னேற்றத்தைத் தடுக்கும் நிலையும், அழகியலுணர்வுகளுக்கு இடமளிக்காத தன்மையுமே சகல மதங்களைச் சார்ந்த அடிப்படைவாதி களிடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளன. இவ்வகையில்
O7

Page 5
பார்க்கும்போது, மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் கூறியதை அசட்டை செய்ய முடியாமல்தான் இருக்கிறது. எந்த மதச் சார்புடையதாயினும், அடிப்படை வாதம் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இல்லையேல், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையைப்பொறுத்தவரையில் வேடிக்கை என்னவெனில் ஆப்கானிஸ்தானத்துச் சிலைகளின் அழிவுக்காகப் பதறித்துடிக்கும் கோட்டுச் சூட்டுக் கழற்றாத அரசியல்வாதிகளும், குருக்கள்மாரும், பிறரும் இந்நாட்டில் மனித உரிமைகள் மதிப்பிழந்து வருவதையிட்டுக் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்வதில்லை. ܀ விழாக்களும் விபரீதங்களும்
பல்வேறு கலை இலக்கிய விழாக்கள் அவ்வப்போது பல இடங்களிலும் நடைபெறுவது வழக்கம். பொதுவாகவே மக்களுக்குப் பயனையும், சுவையையும் அளிப்பனவாக இவை அமைவதுண்டு. ஆயினும், சில வேளைகளில் சில விபரீதங்களும் விழாக்களில் இடம்பெறுவதுண்டு. நடனத்தைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் நடன நிகழ்ச்சிகளுக்கு முக்கிய பிரமுகர்களாக அழைக்கப்படுவதுண்டு. வாழ்நாளில் ஒரு நாடகத்தையேனும் ஆறஅமர இருந்து பார்த்தறியாதவர்கள் நாடக நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்குவதுண்டு. சுட்டுப் போட்டாலும் சங்கீத ரசனை இல்லாதவர்கள் தலையாட்டத் தெரிந்த காரணத்தினாலும், மற்றவர்களைப் பார்த்துக் கைதட்டக் பழகியிருப்பதனாலும் இசை நிகழ்ச்சிகளில் முக்கிய கெளரவம் பெற்றுக் காட்சியளிப்பதுண்டு. ஏதாவது விழாக்களில் அரசியல் வாதிகள் கலந்து கொள்வதாக இருந்தால், பார்வையாளர்கள் படும் துன்பம் சொல்லும் தரத்ததன்று. அரசியல்வாதிகள் தங்களது பல்வேறு சோலிகளையும் முடித்துக் கொண்டு, “போகிற வழிக்குப் புண்ணியம் கிடைக்கட்டும்” என்ற பாங்கில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். அவர்கள் வருகிற நேரம் வரட்டும் விழாவைத் தொடங்கி நடத்தலாம் என்ற துணிவு விழா ஏற்பாட்டாளர் பலருக்கு இருப்பதில்லை. விழாக்களிற் கலந்து கொள்ளும் பேச்சாளர்களும் பல ரகத்தினராக இருப்பர். சிலர் பழைய இலக்கியங்களில் இருந்து சில பாடல்களை நிரந்தரமாகவே தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு எங்கு போனாலும் அவற்றையே ஒப்புவித்து, சில வேடிக்கைக் கதைகளையும் கூறி, நேரத்தைப் பற்றி எவ்வித அக்கறையுமில்லாதவர்களாகப் பேசிக்கொண்டிருப்பர். வேறு சிலர் தங்களது பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும் என்று கருதியவர்களைப்போலச் சினிமாப் பாடல்கள் உட்படச் சில பாடல்களைப் பாடமாக்கி வைத்துக்கொண்டு தங்கள் சங்கீத ஞானத்தைப் பார்வையாளர் முன் அவிழ்த்துவிடுவார்கள். சிலர் மேடைகளில் தங்களின் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்களைக் கூறி, பார்வையாளருக்குத் தம்மைப் பற்றிப் புரியவைப்பர். வெளிநாடுகளுக்குப் போய்வந்த சிலர், எங்கே தாம் வெளி நாட்டுக்குப் போய்வந்த விடயம் பார்வையாளருக்குத் தெரியாமல் இருந்து விடப்போகிறதோ என்ற கவலையில், நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லாத முறையில் தமது வெளிநாட்டு அநுபவங்களை வெளியிடுவர். இன்னும் சிலர் மூன்று மொழிகளிலும் தமக்குள்ள பரிச்சயத்தைச் சபையறிந்து பாராட்டவேண்டும் என்ற நோக்கில், மேலும் இரு பேச்சாளர்களின் நேரத்தையும் தாம் விழுங்கிக் கொண்டு, ஒரே விடயத்தையே மும்மொழிகளிலும் பேசுவர். இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு ஒரு முக்கிய காரணம், சபையில் வீற்றிருக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தங்களது மேலதிகாரிகள் ஓரிருவருக்காகவே என்பது பின்னர் விளங்கும். மேலும் சிலர் எந்த மேடையில் பேசினாலும் ஒரே விடயத்தையே
OS

திரும்பத் திரும்பப் பேசிப் பார்வையாளரை அலுப்படையச் செய்வர். ஒருசிலர் பிறரை நொட்டை சொல்லி நோகப்பண்ணுவதையே மேடைத்தொழிலாகக் கொண்டுள்ளனர். இத்தகைய பலரகமான பேச்சாளர்கள் மைக்கைக் கையில் எடுத்துக்கொண்டால், அவர்களிடமிருந்து அதனைத் திரும்பப் பெறுவது கடினமான காரியம். அதேவேளை, தூர இடங்களிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கிடையே விருப்புடன் விழாக்களில் பங்குபற்ற வரும் பேச்சாளர் சிலருக்குரிய நேரம் விழா ஏற்பாட்டாளர்களால் கடைசி நேரத்தில் சுருக்கப்படுவதும் துன்பகரமான செயலாகும். விழாக்களில் அவ்வப்போது தலைமைதாங்குபவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. விழாக்களில் இன்னுமொரு விபரீதமும் நடைபெறுவதுண்டு. குறிப்பிட்ட ஒருவரைக் கெளரவிப்பதற்காக நடத்தப்படும் விழாக்களை, சிலர் தங்களது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு.
a s a கவிஞர்.புரட்சிபாலன் பூனைகள் படுத்துறங்கட்டும்
அடிக்கடி பூனைகள் ஊதி ஊதி - எங்கள் - படுத்துறங்கும் - கரியமில வாயுவை வீட்டினுள் வாசனை எங்கள் வீட்டு விலக்கி - கமழும், அடுப்புகளிலும் - அடுப்பை எரிய வைப்பாள். சோற்றுக்காக ஏங்கிய நிரந்தரமாய் வருங்காலத்தில்அன்று - எங்கள் - என்றோ ஒருநாள் அவள் முகவானத்தில் சோர்ந்த வயிறுகள் புதுப்பானை சட்டிகள் கோடிச் சூரியர்கள் சோம்பல் முறித்து கொலுவிருக்கும். குடியிருப்பார்கள் எழுந்து கொள்ளும். அந்நாளிலிருந்து அவள் - அந்தநாள் - புகைமண்டலத்தால் எங்கள் அனுமதியில்லாமலே, வரும்வரைக்கும் முச்சுத் திணறும். சாதமும் சாம்பாரும் எங்கள் வீட்டு அம்மா அடுப்பை அவியலும் பொரியலும் அடுப்புகளில் பூனைகள் ஊதுகுழலால் கூட்டும் குழம்புமாய் படுத்துறங்கட்டும்!
செல்லாத காசல்ல நாம்!
வரணி வேலணை வேணியன்
வெந்தெரியும் வீட்டுக்கோ தீயுமூட்டி மேலும் எண்ணையூற்றி! இந்தவுலகம் மகிழ்ச்சி கொள்வதென்றால் வெட்கம் வெட்கம்! செந்தணல் அதனில் அகப்பட்ட புழுவதுபோல் துடிக்கின்ற7ர்! பைந்தமிழ் இனப் பாவிகளாம் கொடும் போரதனில் சிக்கியன்றோ! எங்குதான் நீதிநிலையில்லா வாழ்வோ இன்னும் தொடருமென! செங்குருதிவழிந்தோடத் தேம்பியழுது நிற்கும் எமது மக்கள்! பொங்கிவடிக்கும் கண்ணிரும் ஓயாதோ ஒழியாதோ இறைவா! சிங்கமெனக் கிளர்ந்தெழுந்து நிற்கும் இனவெறிப்போர் வேண்டாம்! பல்லாயிரக் கணக்கில் டபிறந்த மண்ணில் அகதிகளான இனமானோம்! பொல்லாத போர்தந்த பரிசதுவாம் போதும் போதும் தலைவா! செல்லாத காசல்ல நாம் மரஞ்செடிகொடிகளல்ல வந்தேறுகுடிகளல்ல! நல்லதீர்வொன்றைக் காணத்துடிக்கும் இந்நாட்டுமைந்தர்தாம்!
09

Page 6
,િ
繆 --- -- காவியமாமணி, தமிழ்மணி, கவிமாமணி
அகளங்கன்
கணிதப் புள்ளிவிபரவியல் பட்டதாரியாகி, கணித ஆசிரியராய்த் திகழும் திரு.நா.தர்மராஜா எனும் இலக்கியவாதி, "அகளங்கன் என்னும் புனைபெயரில் அளப்பெரும் இலக்கியப்பணியைப் புரிந்து வருகிறார். தனது 17வது வயதில் கவிதை எழுத ஆரம்பித்து கட்டுரை, பேச்சு, சிறுகதை, நாடகம் எனப் பல்வேறு துறைகளில் ஆழமாக அகலமாக தன்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார். யாழ் பல்கலைக்கழகத் தமிழ்மன்றத் தலைவராகவும், வவுனியா இலக்கிய வட்டத் தலைவராகவும் பணிபுரிந்து தற்போது வவுனியா பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவராகத் திகழ்கிறார். தன்னுடைய கணித ஆசிரியப் பணியைச் சிறப்புறப் புரிந்துவரும் அதேவேளையில் இலக்கியப் பணியினையும் செவ்வனே புரிந்து 20ற்கு மேற்பட்ட இலக்கிய நூல்களைத் தமிழன்னைக்கு வழங்கி பெருமை சேர்க்கின்றார்.
1977ல் "செல் ‘வா’ என்று ஆணையிட்டாய், 1982ல் "சேரர் வழியில் வீரர் காவியம், 1985ல் ‘சமாவளி மலைகள் (கவிஞர் முரளிதரனுடன் இணைந்து), 1993ல் "தென்றலும் தெம்மாங்கும்,1996ல் ‘அகளங்கன் கவிதைகள் ஆகிய 5 கவிதை நூல்களையும், 1987ல் 'வாலி, 1988ல் 'இலக்கியத் தேறல், 1989ல் நளவெண்பா, 1992ல் ‘இலக்கியச் சிமிழ்', 'முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர், 1994இல் 'மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள், 1995ல் 'ஆத்திசூடி விளக்கவுரை, 1996இல் "கொன்றை வேந்தன் விளக்கவுரை, 1997ல் நாமறிந்த நாவலர்', 'வாக்குண்டாம் விளக்கவுரை, “சிவபுராணம் விளக்கவுரை ஆகிய கட்டுரை நூல்களையும், 1992ல் ‘அன்றில் பறவைகள், 1994ல் “இலக்கிய நாடகங்கள் ஆகிய நாடக நூல்களையும் தந்துள்ள அகளங்கன் அசுர எழுத்தாளர் என்று புகழப்படுவது மிகையற்ற கூற்று.
வெறும் எண்ணிக்கைக்காக எழுதிக்குவிக்காது பல பரிசுகளையும் இவ் ஆக்கங்களுக்காக அகளங்கன் பெற்றுள்ளார் என்பதை நோக்குமிடத்து இவருடைய எழுத்தின் தரத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். இவரது "உருகி எரியும் கற்பூரங்கள் என்ற நாடகம் 1992 ஆசிரியர் தினத்தினதும், 'அன்றில் பறவைகள் என்ற நாடகத் தொகுப்பு நூல் 1992 தேசிய சாகித்திய மண்டலப் பரிசினையும், "இலக்கிய நாடகங்கள் தொகுப்பு நூல் 1994 வடகிழக்கு மாகாண சாகித்திய பரிசினையும், கொழும்புத் தமிழ்ச்சங்கப் பரிசினையும் பெற்றுக் கொண்டன. மேலும் தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை என்னும் கட்டுரை 1995 மட்டக்களப்பு எழுத்தாளர்சங்கப் பரிசினையும், மகாகவி பாரதியார் காட்டும் வாழ்வியல் முறை என்னும் கட்டுரை 1996 கொழும்புத் தமிழ்ச்சங்கப் பரிசினையும் பெற்றுத் தந்து ஆசிரியரது புகழை பறைசாற்றுகின்றது.
கவிதைகளைப் பொறுத்தவரையில் ஒற்றுமைப்பாட்டு 1996 மாத்தறை மக்கள்
10
 
 
 

TLCTTTT TTTTT TTTTTT TTTtTTTAS E SLLLLL LSL LLL LLL LLLLLLLLiiL 'நாவற்குழியூர் நடராசன் நினைவுக்கவிதை 1996 சந்தா விபரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பரிசினையும் தனிப்பிரதி ரூபா 15/- தேசிய ரீதியில் பெற்றுக் கொடுத்துள்ளன. மேலும் வருடச்சந்தா: eburr 180/- ‘சிந்தனை செய் தமிழா' என்ற கவிதை 1996ல் தேபாற்செலவு உட்பட) அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கப் பரிசினையும் பெற்று சந்தா காசோலை சர்வதேசமட்ட அங்கீகாரத்தை அளித்ததோடு, மூல மாகவோ மனியோடர் உலகத் தமிழ்க் கவிதைத் தொகுப்பு மூலமாகவோ அனுப்பலாம்.
“செம்மாங்கனியில் இவரது கவிதையும் இடம்பெற்று ಇಂಡಿಯಾರು பெயர்,
வாைச் சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுச் ம் முகவரி :
தே தி y டுத்தியு TIGNANASEKARAN எத்துறையிலும் எனது திறமையைக் 2.*PPNYARPAP
காட்டுவேன் என்ற துணிச்சலுடன் சிறுகதைத் 1 -- "2"2؟؟
துறையிலும் பல பரிசுகளைப் பெற்றுத் தன்னை இனங்காட்டியுள்ளார் அகளங்கன். மீண்டும் ஒரு குருஷேத்திரம் 1985ல் ஈழமுரசு பத்திரிகையினதும், யாழ்தேவி 1995ல் கலாசார அமைச்சினதும், ‘துருவ நட்சத்திரம் 1996ல் ஆசிரியர் தினத்தினதும், மனித தெய்வங்கள் 1997ல் ஆசிரியர் தினத்தினதும் பரிசுகளை அகில இலங்கை ரீதியில் பெற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் சிறுகதை அபிமானிகள் இவரிடமிருந்து சிறந்த சிறுகதைத் தொகுப்பொன்றை எதிர்பார்ப்பது தவறல்ல. பல துறைகளில் ஈடுபடுபவர்கள் ஒரு துறையிலும் முன்னணியில் திகழ மாட்டார்கள் என்ற கருத்தைப் பொய்யாக்கி, தான் முயற்சிக்கும் பல துறைகளிலும் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துள்ளார் அகளங்கன்.
இயற்கையின் முன்.
பொறுமை இழந்துவிட்டதா இதுவரை உன்
பூமி? சாதனைதான் என்ன? அதனால்தானே இத்தனை நாகரிகத்தால் உலகம் பூகம்பங்கள்? நாறுகின்றதே அதுவா? வெறுமையாகிவிட்ட எத்தனை சமயங்களும், LD60fg5sT. g. 66f நம்பிக்கைகளும் வெறியாட்டங்களால் தானே இருந்தென்ன? அதற்கு இத்தனை வெறுப்பு மனச் சுத்தம் இல்லாத
மனிதா -
புயல் வீச்சுக்கும்
சும்மா கிட
வெள்ளம் பொங்கலுக்கும்
உன் புண்ணியச் விஞ்ஞானமாம் விஞ்ஞானம் செயல்கள் தானே காரணம்! வெட்கக் கேடு இயல்பு நிலையிலிருந்து இயற்கையின் முன் இறங்கிவிட்டமனிதா அந்த
எங்கே. இறைவனே - இவற்றை அடக்கிக் காட்டு கைகட்டிக் கொண்டு பார்க்கலாம்.? நிற்கின்றான்.
11

Page 7
“மணநதியினர் சிறு அலைகள்”
நாவல்
கே.விஜயன்
தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள், காதல் உணர்வுகள், விரக்தியான வாழ்க்கை, பாசமிக்க உறவுகள், சில்லறைத்தனமான சச்சரவுகள், மத சம்பிரதர்யங்கள் நிறைந்த பல்லின மக்கள் இணைந்து வாழும் ஒரு தொழிலாளர் சரணாலயம் ஒன்றைப் பின்னணியாக வைத்துப் புனையப்பட்ட அற்புதமான கலைநுட்பம் நிறைந்த நாவலை கே.விஜயன் நமக்களித்திருக்கிறார்.
இது தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமுள்ள காலப்பகுதியில் எழுந்த நாவலாகும்.
“சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சகல இன மக்களும் நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒன்று படுவதும், ஒரு தொழிற் சங்கத்தின் தலைமையில் ஒன்றிணைவதும் எமது போராட்டத்தின் பிரதான இலட்சியமாகும்.” எனத் தொழிற் சங்கத் தலைவன் மைக்கல் பேசுவதைக் கொண்டு 1945க்குப்பின், இலங்கையின் ஒரு தொழிற்சங்கத்தின் ஆரம்பம் உதயமாவதை மூலக்கருப்(plot) பொருளாகக் கொண்டதே இந்நாவல். ஆனால், இதன் உட்பொருள்(theme) இத்தொழிலாளர் களது வாழ்க்கையைக் காட்டுவதாக அமைகின்றது.
ஒரே தொழிலாளர் சரணாலயத்தில் வாழும் மனிதர்களது குண, சமய வேறுபாடுகளை அடக்கிய கலாசார வாழ்க்கையும், தொழிலாளர்களது புரட்சி வாழ்க்கையும் இணைந்து நடப்பதை இந்நாவல் காட்டுகின்றது.
கே.விஜயன், இந்நாவலில் கதை மாந்தர்களில் முக்கிய பாத்திரங்களான அனிஸா, பிரபா, மும்தாஸ் மூவரது மூலமாக மூன்று பகுதிகளாக கலைத்து வத்துடன் நடத்திச் சென்றிருக்கிறார்.
ஆசிரியரது தனிக்குரல், படர்க்கை உத்தி என்பன வாசகரிடம் சலிப்பைச் சில நேரங்களில் ஏற்படுத்தும். அதைத் தவிர்ப்பதற்காக இவ்வுத்தியைப் பயன்படுத்தினாரோ என்னவோ, இவ்வுத்தி நடப்பியலுக்குRealism மிகவும் அனுசரணையானது. ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. கதையோட்டத்தின் விறுவிறுப்பைத் தடை செய்யாமல் கதை நடப்பதற்கு உதவுகின்றது.
சுரண்டிக்கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியை அசைத்துப் போராடும் தைர்யமுடைய முற்போக்கு நாவலொன்றை பின் நவீனத்துவமும், இருண்மையும் இலக்கியத்துள் புகுந்துள்ள இக்காலத்தில் விஞ்ஞான ரீதியாக விளக்கி மனிதனின் மேம்பாட்டிற்கு உரத்த குரல் கொடுக்கும் இலக்கியம் என இந்நாவலைத் துணியலாம்.
போராட்ட வீச்சோடு செல்லும் இந்நாவலின் காதல் நிகழ்ச்சிகள் கிளர்ச்சியூட்டுவதானதாகத் தோன்றவில்லை. இரக்கமூட்டுவதாகவே இருக்கின்றன.
12.
 

எளிய இனிய உணர்ச்சிகரமான, அற்புதமான தமிழ் நடை இந்நாவலில் பிரதிபலிக்கின்றது. தொழிலாளர்களின் போராட்ட எழுச்சி இந்நாவலில் வெற்றி பெறவில்லை. ஆனால், போராட்டத்திற்கான தீர்க்கமான அத்திவாரமிடப்படுகின்றது. ஆணவம், ஆத்திரம், அவநம்பிக்கை, துர்ப்போதனை இவைகளில் இரையாகியுள்ளோர் நாவலில் விழ்ச்சியுற்றபோதும், சுரண்டும் சக்திகள் எழாமலிருக்க வேண்டிய அரசியலை ஆக்கும் திறம் பற்றியும் இந்நாவல் பேசுகின்றது. ܗܝ
நாவலுக்குரிய சிறந்த கட்டுக்கோப்பும், கறாரான பாத்திரப்படைப்பும் நாவலை நிமிர்ந்த நடையில் எடுத்துச் செல்கின்றன. உண்மையில் பாத்திரங்கள் செதுக்கப்பட்ட சிலை வடிவங்கள்தான்.
பண்பாட்டுச் சிக்கல்கள் பிரபா, அனிஸா குடும்பத்தாருக்குண்டு. அதீதமாக அனிஸா குடும்பத்தை நோக்கும் ஆசிரியர் சமயத்திலும் பார்க்கச் சடங்குகளையே காண்கின்றார். அழகிய குரலில் அனிஸா மெளலூத் ஒதுதல் போன்றது. 104ஆம் பக்கம் கணவன் சொல்வதுதான் சமயம் என்பதை நோக்குதல் அவசியம். 166ம் பக்கம் பிரபா சொல்வது அவனறிந்த அவனது சமயம். இங்கே சமயத்தைவிட, போலி சமய அந்தஸ்தே பிரிவினையை உண்டாக்கியிருக்கின்றது. சமயம் சார்கிறார்களே தவிர இவர்கள் சமயவாதிகளாக இல்லை. -
பாத்திரப்படைப்பும், கதை சொல்லும் வேகமும் நிகழ்ச்சிப்பின்னலின் தொடர் அறுந்துவிடாது, தொய்வு ஏற்படாது நீண்டு செல்வதை அவதானிக்கலாம். முழுமையான பாத்திரச் சித்திரிப்பினால் இது ஒரு நாவல்தான் என்பதை அசைக்க முடியாமல் இனங்காட்டுவதைக் கலை அறிந்தோர் உணர்வர்.
இந்நாவலில் மிகச் சிக்கலான பகுதி, அனீஸாவின் கணவன் நஸ்றுல் அஸ்லம், அனிஸா, பிரபா உறவை அறியக்கூடாதென்பதுதான். இந்துமதி கொலையால் வாசகர்கள் மிகக்கலங்கி நிற்பதை உணரமுடியும். பாத்திரங்களைக் காட்டும் முறையினால் வாசகர்கள் மிகவும் கலங்கியே நிற்கின்றனர். இச்சிக்கலான பயங்கரமான செய்தியை அனிஸாவின் கணவருக்கு அனிஸாவின் தந்தையார் அறிவித்தே திருமணம் செய்த சங்கதி கதையின் இறுதிக்கட்டத்தில்தான் தெரிகின்றது. அதன் உச்சம் அவிழ்ந்த நிலையில் இந்நாவல் முற்றுப்பெறுவது கலைத்துவ மேன்மைக்குரியது. அதேவேளை கதை சொல்லும் பாங்கின் உச்சமாகின்றது. W . :
இலங்கையின் 50வருட இடதுசாரி வரலாற்றின் முக்கிய அடையாளமான வெள்ளவத்தை நெசவாலை ஒரு நாவலுக்குரிய தளமானதில் முற்போக்குச் சிந்தனையாளர்கள், நடப்பியல் வாதிகள் மகிழ்ச்சியடையலாம்.
கலைத்துவம் என்பது கதைப்போக்கு, கதைப்பின்னல், பாத்திர வார்ப்பு என்பவற்றில் வெளிவரும். தெரிந்ததைக்கூறித் தெரியாததை விளங்கவைப்பதிலும், தெரியாததைக்கூறி தெரிந்ததற்கு புதிய அர்த்தம் கொள்ளச் செய்வதிலும் கலைத்துவம் நிகழும். கருத்துச் செறிவுகளும், புதுவிதக் கருத்து நுட்பங்களும் கலைத்துவமாக மேலெழும். கலைநயம் கூடியதாக மொழியைக் கையாளும் வித்தையை இந்நாவல் கொண்டிருப்பதால் கலைத்துவம் இங்கே சிறப்பிடம் பெற்றுள்ளதை உணரமுடியும்.
来 来 棗
13

Page 8
நே
கே.எஸ்.சிவகுமாரன்
T
6 சந்திப்பு:
ல் திஞானசேகரன்
(* கடந்த அரைநூற்றாண்டு காலமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவருமி இவர், திறனாய்வுத்துறை, மதிப்புரைத்துறை, பத்தி எழுத்துத் துறை, ஆக்க இலக்கியத் துறை எனப் பல தளங்களில் ஈழத்து இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்து வருகிறார். * வானொலி/தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலமும் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். வானொலியில் வர்த்தக/தேசிய சேவைகளில் பகுதிநேர அறிவிப்பாளர் (தமிழ்/ஆங்கிலம்), வானொலி செய்திப் பிரிவில் தமிழ் செய்தி ஆசிரியர்/செய்தி வாசிப்பாளர், ஆங்கில செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் செய்தி பிரதித் தொகுப்பாளர், "ஊர்க்கோலம்'முதலாவது அளிக்கையாளர் (Presenter), ஆங்கில சேவையில் (வானொலி) The Arts Magazine என்ற வாராந்த நிகழ்ச்சியைத் தொகுத்துத் தாயாரித்து அளித்த முதலாவது தமிழர் இவர்.
8 Saif stopgu gifts assi: Thamil writing in Sri Lanka, Aspects of Culture in Sri Lanka, சிவகுமாரன் கதைகள், கலை/இலக்கியத் திறனாய்வு (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், இது வாசிப்புத் துணை நூல்), கைலாசபதியும் நானும், திறனாய்வுப் பார்வைகள், ஈழத்து இலக்கியம்(நூல்களின் அறிமுகம்), இருமை (சிறுகதைத் தொகுப்பு), ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் (திறனாய்வு), அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் (திறனாய்வு), மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள், ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (திறனாய்வு), மரபு வழித்திறனாய்வும் ஈழத்து இலக்கியமும். கேள்வி- "ஞானம்" வாசகர்கள், உங்கள் பங்களிப்புகளை முழுமையாக அறிய விரும்புகிறார்கள். தமிழ் மொழி மூலம் உங்கள் பங்களிப்புகள் தெரிந்தவைதான். ஆங்கிலத்தில்..? பதில்:- இவ்வாறு நீங்கள் கேட்டமைக்கு நன்றி. நம்மில் பலர் ஆங்கிலப் புதினத்தாள்களையோ, ஏடுகளையோ படிப்பது குறைவு. எனவேதான் சில விபரங்கள்: "தி ஐலண்ட் ஆங்கிலச் செய்தித் தாளில் நான் முழுநேர பத்திரிகையாளனாகப் பணிபுரிந்தபோது, அப்பத்திரிகையில் ஞாயிறு/தினசரி இதழ்களின் சிறப்புச் சித்திராம்ச (Featues Deputy Editor)ப் பகுதிக்குப் பொறுப்பாளனாக இருந்தேன். தமிழன் ஒருவனுக்கு அந்தப் பதவியைத் தந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் நாளிதழில் “Culture" என்ற பக்கத்தினர்
14
 

பொறுப்பாசிரியனாக இருந்து ஆங்கில/சிங்கள/தமிழ் பண்பாட்டு தொடர்பான விசயங்களைப் பிரசுரித்து வந்தேன். ஆங்கில வாசகர்களிடையே மிகவும் செல்வாக்குடையதாக இந்தப் பக்கம் இருந்தது. அப்பத்திரிகையில் “Gleanings" என்ற பத்தியையும் எழுதி வந்தேன். இதுவும் பிரபல்யம் பெற்றது. “Gleanings” பத்தியை பின்னர் "சண்டே லீடர்”, “டைம்ஸ் ஒப் ஒமான்” பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தபின்னர் இப்பொழுது "டெயிலி மிரர்’ பத்திரிகையில் பிரதி வெள்ளிக்கிழமையும் “கிளினிங்ஸ்’ பத்தி தொடர்கிறது. 1960களின் மத்தியிலிருந்தே தமிழ் இலக்கியம்/ கலைகள் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதி வந்துள்ளேன் - (அது முழுநேரப் பத்திரிகையாளனாக அல்லாமல்) இளங்கீரன் தொடக்கம் கே.விஜயன்/சாந்தன் வரை பல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தொடர்பான மதிப்பீடுகளை எழுதி வந்துள்ளேன். இது தொடரும். ஆயினும், மதிப்புரைக்கும் அறிமுகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடியாத நமது தமிழ் வாசகர்களிற் பலர், என்னை ஆங்கிலத்தில் அறிமுகஞ் செய்பவர் என்று மாத்திரமே இலகுவாகக் குறிப்பிட்டு விடுவார்கள். மாறாக ஆங்கில இலக்கியத்தைப் படிப்பவர்கள் தமிழ் உட்பட பல இலக்கியங்களை ஆங்கிலத்தில் திறனாய்வு செய்பவன் என்றே கருதுகிறார்கள் எனத் தெரிகிறது. இதனாலேயே உலக இலக்கிக் களஞ்சியங்களில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதும்படி எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது போலும். Encyclopedia of World Literature in the 20th Century - Volume (iv) 95pgi spagsnya ILib. ஆங்கில இலக்கியத்தில் ஒரு திறனாய்வாளனாக நான் கருதப் படுவதனாலேயே (எனது பி.ஏ பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கிமும் ஒரு பாடமாகும்) மாலைதீவு, ஓமான் ஆகிய கல்லூரிகளில் ஆங்கில/ஆங்கில இலக்கியம் கற்பிக்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதென நினைக்கிறேன். இதழியல் தொடர்பான ஆங்கில விரிவுரையாளனாகவும் தொழிற்பட எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதனாற் போலும், எனவே தமிழ் இலக்கியம் உட்பட உலக இலக்கியங்கள், கலைகள் தொடர்பாக ஆங்கில மொழியில் செய்யப்பட்ட எனது எழுத்துக்களும் ஒலிபரப்புக்களும் பதிவு செய்யப்படவேண்டும் என்று நான் விரும்பியமை ஞானம் மூலம் நிறைவேறுகிறது. ஆங்கிலத்தில் எழுதப்படும் ஈழத்து இலக்கிய மதிப்பீட்டாளர்களில் ஒருவனாக நானும் கருதப்படுவது எனக்கும் பெருமையாக இருக்கிறது. கேள்வி- நீங்கள் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தாலும், கடந்த அரை நூற்றாண்டில் திறனாய்வுத் துறைமூலமே பிரபல்யம் பெற்றிருக்கிறீர்கள். திறனாய்வுத் துறையில் உங்களுக்கு நாட்டம் எப்படி ஏற்பட்டது? பதில்:- அத்துறை சம்பந்தமான நூல்களை இளவயதிலிருந்தே படித்துப் புரிந்துகொள்ள முற்பட்டேன். நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாசித்தேன். தமிழில் திறனாய்வு செய்யும்படி தூண்டியவர் மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி, அவர் தந்த ஊக்கத்தினால், இத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டேன். கேள்வி:- கைலாசபதி அவர்களே இலங்கைக்குரிய மணிவாசனை சமூகப்போக்குகள் பண்பாட்டுக்கோலங்கள் போன்றவை ஈழத்து இலக்கியத்திலே முனைப்புப் பெறுவதற்கு முன்னோடியாக நின்றார் என்ற கூற்று பொருத்தமுடையதா?
15

Page 9
பதில்:- முழுமையாக அப்படிக் கூறமுடியாது. அவரது காலத்துக்கு முன்னரே இத்தகைய உணர்வுகள் ஈழத்து எழுத்தாளர்கள் சிலரிடையே இருக்கவே செய்தன. கைலாசபதியினுடைய வருகை ஈழத்து இலக்கியப்போக்கின் வளர்ச்சியை ஒரு வித நிறுவன ரீதியான முறையில் இட்டுச்சென்றது என்று கூறலாம். கேள்வி நிறுவன ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களே பெருமளவு அவதானத்தையும் ஆதரவையும் பெற்றுவந்தனர். இத்தகைய ஒரு நிலைமை ஈழத்து இலக்கியத்தில் ஒர் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளது என நீங்கள் கருதுகிறீர்களா? பதில் - வடபிரதேசத்தில் நிலவும் சாதி, வர்க்கப்போராட்டங்கள் பற்றி ஒரு விதமான வாய்பாட்டு ரீதியில் முற்போக்கு எழுத்தாளார்கள் எழுதிவந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இது காலத்தின் தேவையாக இருந்தது. அதனால் அத்தகைய எழுத்துக்கள் வரவேற்கப்பட்டதில் எவ்வித தவறுமில்லை என நினைக்கிறேன். ஆனாலும் ஆக்கப்படைப்பாளிகள் பலரது படைப்பாற்றல் முழுமையாக பல்வேறு தளங்களில் வளர்ச்சிபெற ஒரு வாய்ப்பில்லாத நிலைமையும் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. இது கவலைக்குரிய ஒரு விடயமே. கேள்வி - திறனாய்வாளர்கள் மலையகம், கிழக்குமாகாணம், வவுனியா, மன்னார், புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து எழுதும் எழுத்தாளர்களது படைப்புகளில் தமது பார்வையை அதிகம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றதே அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்? பதில்:- யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் இருந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புக்களே அதிகமாக விமர்சகர்களின் கவனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது உண்மையே. எனவே இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு நியாயமிருப்பதாகத்தான் தோன்றுகிறது. கேள்வி - உங்களுடைய நூல்களில் தன்னைப்பற்றி நீங்கள் ஒன்றுமே கூறவில்லையென்று, சமீபத்தில் மறைந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதுபெரும் எழுத்தாளர் வ.அ. "ஞானம் நேர்காணலில் கூறியிருக்கின்றார். அதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்.? பதில் - அவருடைய கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அவருடைய பவளவிழா மலரிலும் அவருடைய தோணி பற்றிய எனது பகுப்பாய்வு மறுபிரசுரமாக வெளிவந்துள்ளது. திருகோணமலையில் அவருக்கு நடத்தப்பட்ட பவள விழாவுக்குத் தலைமை தாங்கியபோதும், அவர் என்னைப் பற்றித் தவறாகக் கூறும் விஷயம் சரியானதல்ல என அவர் முன்னிலையிலேயே கூறினேன். அப்பொழுதும் அவர் வாளாவிருந்தார். பின்னர் தினகரனிலும் அவ்விழாவில் நான் ஆற்றிய தலைமை உரையில் ஒரு பகுதி வெளியாகியிருந்தது. அவருடைய எழுத்துத்திறனை 40 வருடங்களுக்கு முன் மெச்சி நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்த அபிப்பிராயத்தையே இன்றும் கொண்டுள்ளேன். மறைந்த வ.அ. ஒரு தலைசிறந்த எழுத்தாளர். அத்துடன் அண்மையில் எம்.ஏ.ரகுமான் நூலொன்றுக்கு வ.அ. எழுதிய முன்னுரையைப் படித்தபின் வ.அ. மீதான எனது அபிமானம் மேலும் கூடிற்று. கேள்வி - உங்களுடைய திறனாய்வுப் பார்வைகளில் ஆழமற்ற தன்மை இருப்பதாகவும், நீங்கள் எல்லோரையும் புகழ்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றனவே?
16

பதில் :- இந்தக் குற்றச் சாட்டுக்கள் யார் யாரிடமிருந்து வருகின்றன என்று அறிய நான் விரும்பவில்லை. இந்தக்குற்றச் சாட்டுக்கள் சரியாகவும் இருக்கலாம். நான் எனது சிற்றறிவு, எல்லைக் கட்டுக்கள் ஆகியவற்றிற்கிணங்கவே எழுத முடியும், ஆழமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். எளிமையாக எழுதுவதனால் "ஆழம் இல்லை என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. விஸ்தாரமாக, புத்தாக்கச் சிந்தனை இல்லாமல், அடிக்குறிப்பு களுடன் வழவழா என்று அரசியல் சித்தாந்தங்களைப் பொதிந்து எழுதினால்தான் "ஆழம் வரும் என்று சிலர் நினைக்கக்கூடும். திருக்குறளில் ஆழமில்லை என்று சொல்லலாமோ? சமாத்காரமாக, எளிமையான முறையில் ஆழமாகச் சில விஷயங்களைக் கூற முடியும். அதனை நான் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தவிதமான குற்றச் சாட்டுக்களை எனது ஆங்கில எழுத்துக்கள் தொடர்பாக ஆங்கிலத் திறனாய்வாளர்கள் கூற நான் கேட்டதில்லை. ஆங்கில இலக்கிய மதிப்பீட்டுக்குழுவில் என்னையும் நியமித்து இருக்கிறார்கள்.
அடுத்ததாக, இந்த புகழ்கிற விஷயம். நான் எதிலும் முதலில் நல்ல அம்சங்களைப் பார்ப்பவன். திறனாய்வு ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும் என்று விரும்புபவன். எழுதியவனை ஊக்குவிக்க வேண்டும், குறைகளை பக்குவமான முறையில் சுட்டிக்காட்டவேண்டும் என்று நம்புபவன்.
ஒரு படைப்பு சுத்த மோசமானது என்றால், நான் அதனைப் பற்றிய அபிப்பிராயத்தைப் பகிரங்கப்படுத்துவதில்லை "விமர்சனம்' என்றால் கண்டித்து தமது வித்துவ மேலாண்மையைக் காட்ட விரும்புபவர்களும், "விமர்சனம்' என்ற பெயரில் நக்கல், நையாண்டி செய்பவர்களையும் நான் திறனாய்வாளர்களாகக் கருதுவதில்லை. அவர்கள் அகராதி அர்த்தத்தில் "criticism (விமர்சனம்) என்ற சொல்லைப் பயன் படுத்துபவர்கள். நான் நயங்காணலுடன் திறனாய்வுச் சாயலில் 'பத்திகளை எழுதுபவன். எனவே, அவரவர் பார்வையைப் பொறுத்தே அவரவர் முடிவுகள். கேள்வி- பத்தி எழுத்துக்கள் பற்றிய அடிப்படை அம்சங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்று கூறுங்கள்? பதில்:- பத்தி எழுத்தாளர்கள் காலந்தோறும் கலை, இலக்கியம் தொடர்பான பத்திகளையும், மதிப்புரைகளையும் எழுதி வருகிறார்கள். மேலோட்டமான திறனாய்வுக்குறிப்புகள், தகவல்கள், அறிமுகம், மதிப்புரைகள் இப்பத்திகளில் அடங்குகின்றன. இடவசதியின்மை, ஜனரஞ்சகம், கண்டனத்தவிர்ப்பு, திட்டவட்டமான முடிவுரைகளை வழங்காமை, பொருளைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறல், கவர்ச்சித் தலைப்பு, இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப அழுத்தங்கள் மாறுபடல் போன்றவை பத்தி எழுத்துக்களுக்குப் பொதுவான அடிப்படை அம்சங்கள். எனது நூல்களில் திறனாய்வு, மதிப்புரை, பத்தி எழுத்து போன்றவை பற்றி விளக்கியிருக்கிறேன். கேள்வி- நீங்கள் எழுதிய பத்திகள் சிலவற்றின் மகுடங்கள் எவை? பதில்:- சருகுகள்(செய்தி), அக்கரைச் சீமையிலே (புதினம்), தினகரன் வார மஞ்சரியில் கனப்பரிமாணம், சித்திர தர்ஷணி, மனத்திரை, இலக்கிய வினாவிடை, கேள்வியும் பதிலும், மேலைக் கலைப்புலம், வீரகேசரி நாளிதழ்/ வார வெளியீட்டில்
17

Page 10
- நாற்சாரம், சாளரக் காட்சிகள், எண்திசைக்கோலங்கள் இன்னுஞ்சில (நினைவிற்கு வரவில்லை). ரேவதி, சித்திரகுப்தன், ஈஸ்வர புத்ரா, விலோன்சனி போன்ற புனைபெயர்களிலும் சிலவற்றை எழுதியுள்ளேன். கேள்வி. திறனாய்வாளர், மதிப்புரையாளர் எத்தகைய பணியினைச் செய்கின்றனர்? பதில்:- இந்தக் கேள்விக்கு Ohver Prescot என்பவரின் கூற்றை இங்கு தருவது பொருத்தமென நினைக்கிறேன். “திறனாய்வாளர் பொதுவாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அல்லது விரிவுரையாளராக இருப்பார். உயர்தர கலை, இலக்கிய ஏடுகளுக்கு எழுதுபவராய் இருப்பர். இடையிடையே ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் தமது திறனாய்வுக் கருத்துக்களை தெரிவிப்பவராக இருப்பார். திறனாய்வுக்கு எனத் தமக்குக் கொடுக்கப்பட்ட புத்தகத்தை அல்லது தமது விமர்சன ஆய்வுக்கு உகந்ததெனக் கருதும் நூலை அவர் தமது ஓய்வு வேளைகளில் ஆறஅமர இருந்து படித்து திறனாய்வு செய்பவராக இருப்பார். தமது வாழ்நாள் முழுவதுமே ஆராய்ந்து பின்பற்றிக் கொண்ட ஓர் இலக்கியக் கொள்கை, திறனாய்வுக் கொள்கை ஆகியவற்றுக்கிணங்க உலக இலக்கியப்பின்னணியில் இலக்கிய உத்திகளைப் பகுத்து ஆராய்ந்து மதிப்பீடு செய்பவர் இலக்கியத் திறனாய்வாளராக இருப்பார். திறனாய்வாளர் பெரும்பாலும் நூலின் ஆசிரியருடன் பேசுபவராகவே எழுதுவார். ஆனால், மதிப்புரையாளர் குறிப்பாக ஒரு பத்திரிகையில் மதிப்புரை எழுதுபவர் பணியோ வேறானது. புத்தக மதிப்புரையாளர் தனது பத்தி வாசகருடன் பேசுவதாக எழுதுவார். வாசகருக்கு ஒரு வழிகாட்டியாக அவர் எழுதவேண்டும். பதர்களை பொறுக்கி எடுக்கும் அரிதட்டுப்போல அவர் இருப்பார். புத்தகங்கள் பற்றிய செய்திகளை அவர் தருவார். நூலாசிரியர் எப்படிக் கூறுகிறார், ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதை மதிப்புரையாளர் சுருக்கமாக விளக்குவார்.” கேள்வி- சினிமா பற்றி தமிழில் கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள். இத்துறையில் தங்களுக்கு ஆர்வமேற்படக் காரணமென்ன? பதில் - தமிழில் மாத்திரமல்ல, ஆங்கிலத்திலும் நிறைய எழுதியுள்ளேன். சினிமா மாத்திரமல்ல, நாடகம் பற்றியும் இரு மொழிகளிலும் எழுதியுள்ளேன். நான் பல்துறைசார்ந்த அணுகுமுறைகளை எனது திறனாய்வு சார்ந்த பத்திகளில் எழுதுவதனால், இலக்கியத்துடன் சம்பத்தப்படும் சகல துறைகளிலும் ஆர்வங் கொண்டுள்ளேன். அதுதான் காரணம். திரைப்படத் திறனாய்வு தொடர்பாக பூனேயில் பயிற்சி பெற்றேன். இந்தியாவில் அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அவைபற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறேன். கேள்வி- பின்நவீனத்துவம்" போன்றவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில் இவை பற்றி எனக்குப் போதிய விளக்கம் இல்லை. பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது எழுத்துக்களில் இந்த மேலைக்கோட்பாடுகளை நன்கு விளக்கியிருக்கிறார். நீங்களும் உங்கள் பேட்டி ஒன்றில் சிறிது விளக்கம் தந்துள்ளிர்கள். நான் மரபு வழித்திறனாய்வாளன். இறக்குமதி செய்யப்படும் இந்த பம்மாத்துகளில் எனக்கு நம்பிக்கையும், உடன்பாடும் கிடையாது. இந்த “வாசிப்புகள் கையாலாகாதவை மாத்திரமல்ல, எழுத்தாளனைச் சிறுமைப்படுத்தவும் செய்கின்றன என்பது எனது
18

தற்போதைய அபிப்பிராயம், கேள்வி :-இன்றைய புதுக்கவிதைகள் பற்றி உங்களது கருத்தென்ன? பதில் : "புதுக்கவிதை' என்ற பிரயோகம் காலாவதியாகிவிட்டது. இது பற்றிய ஒரு அபிப்பிராயத்தை “ஞானம் 5ல் குறிப்பிட்டிருந்தேன். "அண்மைக்காலக் கவிதைகள்” என்றால் ஏராளமான நல்ல கவிதைகள் தமிழில் உலகெங்கும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ஆங்கிலம் போன்ற மொழிகளில் பெயர்த்தால் உலக இலக்கிய வரலாற்றாசிரியர் கருத்திற் கொள்வர். ஆனால், இவற்றை ஆங்கிலமாக்குவது இலகுவானதல்ல. பல காரணங்கள் உள்ளன. இருந்தும் சிலவற்றை நான் ஆங்கிலத்தில் தந்துள்ளேன். தொடர்ந்தும் செய்ய உத்தேசம், கேள்வி - நமது நாட்டில் சாகித்திய பரிசுக்குரிய நூல்கள் தேர்வில் குளறுபடிகள் நடப்பதாக பேசப்படுகிறதே. அது பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் :- இதுவரை எனது நூல்கள் ஒன்றுக்கும் சாகித்திய பரிசு கிடைக்கவில்லை. இந்தக் குளறுபடிகள் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. தகைமையுடையோரே தேர்வுக் குழுவில் இருப்பார்கள். எனவே அவர்கள் கணிப்பில் எனது நூல்கள் பரிசுக்குரியவையாக கருதப்படாமலிருந்திருக்கக் கூடும் என்று அமைதி காண்பேன். வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு முறை எனது திறனாய்வுப்பார்வைகள் நூலுக்கு பரிசு அளித்ததை நான் மறக்கவில்லை. அரசியல் கலப்பதனால் குளறுபடிகள் இடம்பெறுகின்றன என்று ஒரு காரணத்தையும் கூறிக் கொள்ளலாம். மேடைகளில் "விமர்சனம் செய்பவர்கள் சிலரின் பேச்சுக்களைக் கேட்கும்போது, இவர்கள் உண்மையிலேயே நூல்களைப் படித்துவிட்டுத்தான் பேச முன்வருகிறார்களா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இவர்கள் எடுத்துக்கொண்ட பொருளைவிட்டு ஏதேதோ உளறுவதை நான் அவதானித்துள்ளேன், இத்தகையவர்கள் இந்த மதிப்பீட்டுக்குழுக்களிலும் இடம்பெறுகிறார்களோ தெரியவில்லை. கேள்வி: இளைய பரம்பரையினர் மேற்கொள்ளும் "விமர்சனங்கள் தொடர்பாக. இலக்கிய வரலாற்றுப் பின்னணியில் எதனையும் அணுகாமல், தேடலை மேற்கொள்ளாமல், போதிய வாசிப்புமின்றி, பல மாணவர்கள் (விமர்சனம்) செய்ய முன்வருவது விசனிக்கத்தக்கதொன்று. பல்துறைசார்ந்த அறிவும், புலமையும் திறனாய்வாளருக்கு வேண்டியவை. கைலாசபதி, சிவத்தம்பி, முருகையன், க.சண்முகலிங்கம், சோ.சந்திரசேகரன், சி.சிவசேகரம், சில்லையூர் செல்வராசன் போன்றோர் (ஓரளவுக்கு நானும்) Mat - Discipinary - பல்துறை சார்ந்த அறிவுப்பின்னணியில் திறனாய்வை மேற்கொண்டுள்ளனர். இதனாலேயே இவர்களுக்கு மதிப்பு இருந்து வருகிறது என நினைக்கிறேன். கேள்வி- அப்படியானால் நமது நாட்டில் திறனாய்வாளர்களே இல்லை என்றா கருதுகிறீர்கள்? அப்படியில்லை. சுவாமி விபுலானந்தர், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய மூவரும் ஆய்வறிவாளர்கள் (helectuals), ஆய்வாளர்கள் (Researchers) இலக்கிய வரலாற்றாசிரியர்கள் (Historians ofterature). இவர்கள் திறனாய்வும்
19

Page 11
செய்துள்ளார்கள். மதிப்புரைகளும் செய்துள்ளார்கள், அறிமுகங்களும் செய்துள்ளார்கள். மூவரும் ஆங்கிலம்/தமிழ் ஆகிய மொழிகளில் நிறைய எழுதியிருக்கிறார்கள். எனது கணிப்பில் இம்மூவரும் மாமேதைகள். திறனாய்வாளர்கள் என்று எடுத்துக்கொண்டால், பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னணியில் நிற்கின்றார்கள். கணபதிப்பிள்ளை முதல் வலன்ரீனா வரை பலர் பங்களித்து இருக்கிறார்கள். பட்டியல் மிக நீளமானது இவர்களுள் சி.சிவசேகரம் (எனக்குச் சில அம்சங்கள் தொடர்பாக அபிப்பிராய பேதம் இருந்தாலும்) குறிப்பிடத்தகுந்தவர். பல்கலைக்கழகங்களுக்கு வெளியே நிறைய ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் திறனாய்வு, மதிப்புரை, பத்தி எழுத்துப்போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுள் இந்தத் தசாப்தத்தில் குறிப்பிடத்தக்கவர்கள் செ.யோகநாதன், செங்கை ஆழியான் ஆகிய இருவருமே. அதற்கு முன்னரே பெயர் பெற்றவர்கள் பலர். அவர்களுள் முருகையன், சொக்கன், மு.தளையசிங்கம், சில்லையூர் செல்வராசன், சண்முகம் சிவலிங்கன், எஸ்.பொன்னுத்துரை(ஒரு சில மட்டும்), உமா மகேஸ்வரன், சோ. பத்மநாதன், மயிலங்கூடலூர் நடராசன், அகளங்கன், ஈழத்துச் சோமு, சிற்பி சிவ சரவணபவன், காவலூர் ராசதுரை, தெளிவத்தை ஜோசப், மு.பொன்னம்பலம், கே.எஸ்.சிவகுமாரன், சாரல் நாடன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆக்க இலக்கியத்தில் அதிகம் ஈடுபடாத ஏ.ஜே.கனகரட்னா, வ.இராசையா ஆகியோர் திறனாய்வு, மதிப்புரை இரண்டிலும் நன்மதிப்பைப் பெற்றவர்கவர்கள். பத்தி எழுத்தாளர்கள் என்று எடுத்துக்கொண்டால், கே.எஸ்.சிவகுமாரன் உட்படப் பலர் நிறையப் பங்களித்துள்ளனர். தெளிவத்தை ஜோசப், எஸ்.திருச்செல்வம், சோமகாந்தன், அ.யேசு ராசா, லெ.முருகபூபதி, சடகோபன், ரஞ்சகுமார், கே.விஜயன், அந்தனி ஜீவா, அன்னலட்சுமி ராஜதுரை(லசஷ்மி), யோகா பாலச்சந்திரன் கலைவாதி கலீல், உமா வரதராஜன், புலோலியூர் அ.இரத்தினவேலோன், தேவகெளரி, சூரியகுமாரி, பெளஸர் இன்னும் சிலர் அடங்குவர். இவர்களை விட, சோ.தேவராஜா, கோபால கிருஷ்ணன் (செங்கதிரோன்) சித்திரஞ்சன், கணபதிப்பிள்ளை (றோயல் கல்லூரி), காண்டீபன், திருமதி காணர்டீபன் ஆகியோர் மேடைகளில் நல்ல மதிப்புரைகளை வழங்கியுள்ளனர். பல்கலைக்கழகத் திறனாய்வாளர்களுள் எஸ்.தில்லைநாதன், எம்.ஏ.நுட்மான், கா.அருணாசலம், துரை மனோகரன், மகேஸ்வரன், வலன்ரீனா, நதிரா, சி.மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, அனஸ் போன்றோரின் மதிப்புரைகளும் திறனாய்வுகளும், வரலாறுகளும் எனக்குத் திருப்தி அளிக்கின்றன. இவர்கள், நூல்களைப் படித்துவிட்டுத்தான் திறனாய்வு செய்கிறார்கள். ஆயினும் "விமர்சகர்கள்” என்று கூறிக்கொண்டு வேறுசிலர் மேடைகளில் பேசும்பொழுது, திறனாய்வு என்றால் என்ன என்று இவர்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று நான் வெட்கப்படுவதும் உண்டு. W ஈழத்துத் திறனாய்வு வரலாறு ஒன்று ஆவனரீதியாக எழுதப்படல்வேண்டும் என நினைக்கிறேன்.
2O

நினைவில் நிற்கும்
தர்மு சிவராமு
- இராஜ. தர்மராஜா
ஈழத்திலும் தமிழகத்திலும் வாழ்ந்த பிரபல இலக்கியவாதியான தருமு சிவராமு அவர்களது பிறந்ததினம் 20.04.1939ஆகும். அவரை நினைவுகூரும் முகமாக அவருடன் பழகிய இராஜ. தர்மராஜா அவர்களின் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது. இவ்விதழின் அட்டைப்படம்: தர்மு சிவராமு (பிரேமிள்) வரைந்த சுய சித்திரப்பிரதிமை
சிறுகதையின் திருமூலர் என விபரிக்கப்பட்ட மெளனியின் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியதன் மூலம் பெரிதும் வெளித்தெரிந்தவர்தான் தர்மு. சிவராமு எனப்படும் சிவராமலிங்கம்.
சிவராமலிங்கம் என்ற பெயரையுடைய தர்மு சிவராமுவிற்கு பல புனைபெயர்கள் உண்டு. பானு, அரூப் சிவராம், அஜித் ராம், பிரேமிள் என அனேக பெயர்களில் காலத்துக்குக் காலம் எழுதி வந்துள்ளார் சிவராம், எத்தனையோ பெயர்களில் எழுதி வந்தாலும் தர்மு சிவராமு என்ற பெயரே அவருடன் நிலைத்து நின்றது எனலாம். 20/04/1939ல் பிறந்த தர்மு சிவராமு 06/01/1997ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவ்வுலகில் அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி எட்டு ஆண்டுகள் மட்டுமே.
சி.சு.செல்லப்பாவின் எழுத்து சஞ்சிகையில் தனது இருபதாவது வயதில் எழுத ஆரம்பித்ததன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்றார். சிறுசஞ்சிகைகளி லேயே பெரிதும் எழுதி பலரின் கவனத்தை பெற்றார். கவிதையே பெரும்பாலும் இவரின் படைப்புலகமாக இருந்தாலும் விமர்சனம், நாடகம், சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களிலும் இவரது ஆற்றல் விரிந்து காணப்பட்டதுடன், நுண்கலைகளான சிற்பம், ஓவியம், பெயின்டிங் ஆகிய கலைகளிலும் தனது திறமையை காட்டி வந்துள்ளார்.
புதுக்கவிதைத் துறையில் இவர் படிமக் கவிஞர் ஆகப் புகழ் பெற்றார். கவித்துவம் பெற்ற இவர் கவிதைகள், பலரின் ஆன்மாவை விழித்தெழ வைத்தன. இதற்குக் காரணம் இவரின் ஆன்மீக வாழ்வு ஆகும். தர்மு சிவராமுவின் ஆன்மீக ஞானத்தை தட்டி யெழுப்பி விட்டவர்களாக சாது அப்பாத்துரை செட்டியாரும். திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தியும் விளங்கினர். தர்மு சிவராமுவின் ஆன்மீக வாழ்வு அவரது கவிதைகளிலும் பிரதிபலித்தது, இவர் ஆன்மீகக் கவிஞர் என்ற பெயரையும் பெறக் காரணமாயிற்று.
தர்மு சிவராமுவின் விமர்சன எழுத்துக்கள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்து வனவாகும். முகம் பார்த்து விமர்சனம் செய்வது என்பது இவரிடம் கிஞ்சித்தும் கிடையாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நக்கீரத்தனமான விமர்சனமே இவரின் விமர்சனமாகக் காணப்பட்டது. இதனால் இவரது நண்பர்களே இவரின் எதிரிகளாகவும் மாறிவிடுவதுண்டு. ஆனால், அது பற்றிக் கவலைப்படாமல் தயவு தாட்சண்யம் பாராது மிகவும் நேர்மையாகவும், நறுக்காவும் தொடர்ந்து விமர்சனம்.
21.

Page 12
எழுதி வந்தார்.
1968ம் ஆண்டு நகுலனால் தொகுத்து வெளியிடப்பட்ட "குருஷேத்ரம்" தொகுதியில் தர்மு சிவராமுவை, புகழ் பெற்ற மலையாள விமர்சகர் பி.கே.பாலகிருஷ்ணனுடன் ஒப்பிடுகிறார் நகுலன்.
மேலும் அவர், தர்மு சிவராமு எழுத்து சஞ்சிகை மூலம் நமக்குக் கிடைத்த விமர்சகர் என்கிறார். "அவரது நடை சிந்தனைத் துடிப்பு மிக்கது; நுணுக்கமும் ஆழமும் உடையது. அவர் எழுத்து மேல் நாட்டு இலக்கியப் பரிச்சயத்தால் வளம் பெற்றது” என்கிறார்.
"இன்றைய தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி விமர்சன பூர்வமாக நிர்ணயிக்கும் முதல் கட்டுரை மெளனியின் கதைக்கு சிவராமு எழுதிய முன்னுரை என்கிறார் நகுலன். - (குருஷேத்திரம் - 1968 - மே)
இவரின் வாழ்வு ஒரு கலைஞனின் வாழ்வாகவே விளங்கியது. எழுத்தே - கலையே தொழில் ஆக இறுதிவரை வாழ்ந்து மடிந்தவர்தான் தர்மு சிவராமு. இவருக்கு சோதிடம், கைரேகை சாஸ்திரம், எண்சோதிடம் என்பன தெரிந்திருந்தும் தொழில் ரீதியாக அவற்றைப் பயன் படுத்தியவர் அல்லர். ஒவியம், பெயின்டிங், சிற்பம், எழுத்து, வாசிப்பு என்பனதான் அவரின் ஜீவித நித்திய வாழ்வு! வயிற்றுப்பாட்டுக்காக வேறு உத்தியோகம் என்பது அவரால் நினைத்தும் பார்க்க முடியாதது. இதனால் வறுமை என்பது அவரின் சொந்தம் ஆகிவிட்டதில் வியப்பு இல்லை! வெறும் தண்ணிருடன் கூட நாட்களைக் கடத்திவிடும் ஆன்மீக ஞானம் கொண்டவராக விளங்கினார். பிற்காலத்தில் யோகி ராம் சுரத் குமார் உடனும் பழகிவந்தார்.
இவர் எழுதிய நாடகங்களுள் நட்சத்திரவாசி இலங்கையிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு புகழ் பெற்றது. பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் மாணவர்களால் தமிழ் சங்க தமிழ் சங்க விழாவின்போது மேடையேற்றப்பட்டது என நினைக்கின்றேன். பின்பு அவைக்காற்றுக் கழகத்தினரால் திரு. பாலேந்திராவினாலும் நடித்து இயக்கப் பெற்றதாக ஞாபகம்.
பிரான்ஸ் நாட்டில் போய் வாழ வேண்டும் என்று வெளிக்கிட்ட் தர்மு சிவராமுவின் வாழ்க்கை இலங்கையிலும், தமிழ் நாட்டிலுமாகவே கழிந்து விட்டது. தமிழ் நாட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்து விட்டதனால் இவரை, தமிழக எழுத்தாளராகவே கணித்து விடுகின்றனர். ஆங்கிலத்திலும் இவர் எழுதி வந்தாலும் தமிழ் எழுத்துலகில்தான் இவர் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்து வந்துள்ளார். தமிழகத்தில் சில விருதுகளையும் பெற்று இருந்தாலும் பரிசு, புகழ், பாராட்டுகள் என்பன இவரைப் பாதிப்பதில்லை. தொடர்ந்தும் தன் இயல்பு நிலையிலேயே வாழ்ந்து காட்டியவர்தான் தர்மு சிவராமு! . .
பிற்காலத்தில் வாழ்வு அவருக்கு சில சங்கடங்களைக் கொடுத்தாலும், ஆன்மீகம் அவருக்கு வலிமையைக் கொடுத்து வந்தது. இறுதியாக வேலூர் அருகிலுள்ள கரடிக் குடியில் 06/01/1997ல் இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்தார். என்றபோதிலும், தர்மு சிவராமுவின் கவிதைகள் அவருக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
崇 崇
22

பிறந்தமண்
இடம்பெயர்ந்து வீட்டை விட்டுப் போய்ப் பத்து வருடங்களின் பின் சொந்த வீட்டிற்குக் காலடி எடுத்து வைக்கும் சந்தோசத்தில் சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினாள் பாக்கியம். சுற்றிவர அடைத்திருக்கும் பனை யோலை வேலியும் தகரப் படலையும் இருந்த இடத்திற்கான அடையாளமே இல் லை. முற் றத் தில் பரந்து விசாலமாய்க் கிளைபரப்பி நிற்கும் கறுத்தக் கொழும்பான் மாமரத்தில் பூவும் பிஞ்சும் பிடித்திருந்தது. எங்கோ குழவி கூடு கட்டியிருக்க வேண்டும் . தலைக்குமேலால் குழவியொன்று பறந்து பறந்து பாக்கியத்தை எச்சரித்தது. கோழிக் கூடு மாட்டுக் கொட்டில் தலைவாசல் எல்லாம் எலும்புக்கூடுகள் போலக் காட்சி யளித்தன.
பாக்கியத்திற்கு வீட்டைப் பார்த்ததும் கதறியழவேண்டும் போல இருந்தது. வளவு நிறையக் கண்டு காலிகள் உண்டாக்கிப் பிள்ளைகளைப் போல அவற்றைத் தடவித் தடவி வளர்த்த பொன்னம்பலத்தார் "பாக்கியம் பாக்கியம்" என்று கூப்பிடுவதுபோல இருந்தது. தலைவாசலுக்குப் பக்கத் திலிருந்த தென்னை மரதி தை அண்ணாந்து பார்த்தாள். காற்றிலே அசைந்த தென்னோலை, பொன்னம்
பலத்தார் அவளைப் பார்த்துத் தலை
அசைத்துச் சிரிப்பதுபோலவும், அடி மனதில் ஏதோ ஒருவலி உண்டானதைப் போலவும் உணர்ந்தாள்.
“இந்தத் தென்னம் பிள்ளையும் எங்கட ஒரு பிள்ள மாதிரித்தான்."
பொன்னம்பலத்தார் சொன்ன
23
போது, பாக்கியம் வாய்விட்டுச் சிரித்தது ஞாபகத்திற்கு வந்தது. பெற்ற பிள்ளைகள் கூட ஆளுக்கு ஒரு திக்காகப் பிரிந்து போய்விட, இந்தத் தென்னம்பிள்ளை மட்டும் அப்படியே நிற்பதைப் பார்க்க. வீடு சூழல் எல்லாமே வறண்டு வெறிச்சோடிப் போனபோதும் பசுமைகுறையாது பயன்தரக் காத்து நிற்கும் இந்தத் தென்னைமரம் பிள்ளைகளை விட ஒருபடி மேலாகத் தெரிகிறது. குடும்பம் உறவு பண்பாடு எல்லாமே ஒரு இறுக்கமான பிடிக்குள் இருந்தபோது இருந்த நிம் மதியான அந்த வாழ்க்கையை இனி எப்போது காண்பது? "அப்பு நீ நித்தம் நடந்தவழி இங்கு நெருஞ்சி படருதனை பொழுதோ பொழுது துணை இங்கு பொழுதுபட்டால் யாற்ற துணை?”
தன்னை மறந்து விக்கி விக்கி அழுத பாக்கியத்திற்கு மனப்பாரம் குறைந்ததுபோல இருந்தது.
"பாக்கியம்மாமி வந்ததும் வராதது மாய் ஏனணை அழுகிறாய்?"
செல்லம்மா கிட்ட வந்து கண் ணிரைத் துடைத்தவிட்டு,
"மேளோட தகராறே? கவலைப் படாதயணை, நாங்கள் பாப்பம்."
காதுக்குள் குரலைத் தாழ்த்தி மெதுவாகச் சொல்லுகிறாள்.
"எவ்வளவு கலகலப்பாய் இருந்த வீடு! இப்ப பாரடி பிள்ள காடு பறக்குது." சொல்லிக்கொண்டே தொங்கல் சீலையால் முகத்தைத் துடைத்தாள்
பாக்கியம். "இது உனக்கு மட்டுமேணை?
ஊரோட ஒத்ததுதான். சரி எழும்பு.

Page 13
குளிச்சு முழுகிக் களைப் பாறிச் சாப்பிடணை. பிறகு மற்றதப் பாப்பம்." "பாக்கியம் பெரியாச்சி ஒருமாதிரி வந்து சேந்திட்டியே? நல்ல வெள்ளையா வந்திருக்கிறாய்! திருகோணமலைத் தணி னி நலி லாயப் ஒத் துப் போகுதுபோல!”
"கட்டயில பொறனானுக்கு கறுப் பென்ன வெள்ளையென்ன?” பாக்கியம் சிரித்துக்கொண்டே,
"வாடா!, குணம் வா!! என்ர பெறாமேன் என்னைத் தேடி வந்திட்டான். நாளைக்கு எனக்கு நீதானே கொள்ளி வைக்கிறது.”
“பெரியாச்சி இப்ப கொள்ளி வைப்பும் குடம் உடைப்பும் எங்க நடக்குது? தினம் தினம்தானே சாகிறம்." "குணராசு எப்படி சுகமாக இருக்கிறியோ?”
பாக்கியம் வேறு கதையைத் தொடங்கினாள்.
"என்ர மூத்த பெடியன வெளியில அனுப்புவம் எண்டு காசைக் கட்டிப் போட்டு, ஒடித்திரிஞ்சு ஒருமாதிரி அனுப்பிப்போட்டன். அவன் ஏதாவது தொழிலைச் செய்து அனுப்பினால்தான் கடன் தனி கொடுக்கலாம். அதுசரி எங்களை நினைத்து என்ன கொண்டு வந்தனி?”
* 8; id. LD IT தருவன்தானே.”
பாக்கியம் ஒரு மாதத்துக்கு முதலே மகளுடன், "நான் ஊருக்குப் போகப் போறன் கப்பலுக்குப் பதி பிள்ள.” என்று ஒரே பிடியாய் நின்ற நாளிலிருந்தே போகும்போதும், வரும்போதும் என்று சாமான்களை வாங்கிச் சேர்க்கத் தொடங்கிவிட்டாள்.
"அம்மா உனக் கெனி ன விசரேணை? நாட்டு நடப்புத் தெரியாமல் அங்க போய் என்ன செய்யப்போறாய்? மகள் வைச்சுப் பார்க்கவில்லை எண்டு
வருவனே? இரணி
ர்ைபார்ந்த வாசகர்களே. -ཛོད་༽
ஞானம் சஞ்சிகை தொடர்ந்து கிடைக்க வண்டுமாயின் உங்களது சரியான ரியை எமக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த இதழ் பற்றிய கருத்துக் களையும் ஞ்சிகையின் தரத்தை மேம்படுத்த ங்களது ஆலோசனை களையும்
க்க இலக்சிய கர்த்தாக்களே.
உங்களது படைப்புகளின் மூலம்| ானம் சஞ்சிகையின் இலக்கிய தரத்ை
ம்படுக்கங்கள். - அசிரியர் மூம்படுத்துங்கள் ஆ ク சனம் நினைக்கப் போகுதுகள். சும்மா இதுவழிய கிடவணை.”
*நீ எதையாவது சொல் லு நான்போறது போறதுதான்."
பிடிவாதமாய் நின்றது மட்டுமல்ல. “எனக்கென்னவோ அந்த மனுசன் என்னைக் கூப்பிடுகிற மாதிரி இருக்கு அவரின் ர இடத்தில போய் வீடு வாசலைப் பார்க்க வேண்டும் போல இருக்கு."
ரெலிபோனில் பாக்கியம் பிள்ளை களிடம் உருக்கமாகச் சொன்ன போது, "அக்கா அம்மா என்னவெல்லாமோ கதைக்கிறா நாளைக் கு ஏதாவது நடந்தாலும் . வயசு போனகாலத்தில ஏக்கத்தோட இருக்காமல் அனுப்பிவிடு.” பிள்ளைகள் எலலோரினதும் விருப்பத்துடன்தான் கமலா கப்பலுக்குப் பதிந்து, போவதற்குத் துணையும் தேடிப் பிடித்து அனுப்பிவிட்டாள். தன்னைப் பார்க்க வருபவர்களுக்கெண் றே ஒவ்வொரு பொருள் வாங் கி வைத்திருந்தாள் பாக்கியம். மாமி, பெரியாச்சி, குஞ்சியாச்சி, மச்சாள் என்று வீடு கொள்ளாத சனம் அவளைக் குசலம் விசாரிக்க வந்தது. பாக்கியத்திற்கு சாப்பாடு கொடுப்பதற்கு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு முன் வந்தார்கள். பாக்கியத்தின்
24
 
 
 
 
 

கிணற்றடி வேலியைத்தாண்டினால் அவளின் தங்கையின் மகள் சாந்தியின் வீடு. வேலியும் இல்லாமல் எல்லையும் இல்லாமல் வெட்ட வெளியாக இருந்தது. “பெரியாச்சி இரவில எங்கட வீட்டை வந்து படனணை."
"சாந்தி நான் அங்க இருந்து ஒரே தவனமாய் வீட்டை வந்து சேர்ந்தனான். நாலு நாளைக்கு என்ரை இடத்தில நீட்டி நிமிந்து படுப்பம்."
"பெத்தாச்சி எத்தனை நாளைக்குப் படுப்பாவென்று பாப்பம் இரண்டு நாளாலை நான் போறன் போறன் என்று ஒடப் போறா"
*சா நீ தி இவளர் а» — 60і Ј கடைசியெல்லே முந்தநாள் மூக்கால வடிய திரிஞ்சது. பெரிய ஆளாயிட்டுது. இப்ப கதையப்பாரன்."
பாக்கியம் கிணற்றடிப் பக்கமாக நடந்தாள். வளவு நிறையச் சருகுகள் குவிந்து கிடந்தன. பக்கத்துவிட்டு ஆறுமுகத்துக்கும் கிணற்றில் பங்கு இருந்தது. எல்லையாகப் போட்ட முள்முருக்கு, “உச்சியில் இரண்டு மயிர் ஒரமெல்லாம் தான் வழுக் கை" என்பதுபோல ஒன்றிரண்டு இலையுடன் ஓங்கி வளர்ந்திருந்தது.
"அந்த அநியாயப்படுவான் இந்த எல்லைத்தடியை எத்தனை தரம் இழுத்து நட்டிருப்பானி வேலிச் சருகு கூட்டியதற்குப் பொலிசிட்டையும் போனவன். இப்ப கூட்டுவாரில்லாமல் கிடக்குது.”
"பெரியாச்சி ஆறுமுகத்திற்குச்
சலரோகம் என்று ஒரு காலும்
எடுத்தாச் செல்லே. பிள்ளையஞம் கவனிக்கிறேல்ல. பாவம் மூலையில சுருணி டு போய்க் கிடக்கிறார் . எப்பிடியெல்லாம் காலம் மாறிப்போச்சு, இந்தச் சின்னக் கண்ணுக்குள்ள எத்தனை காட்சியைக் கண்டாச்சு."
இரணிடுமூன்று காய் நீத
25
கம்புகளைச் சேர்த்து ஒரு பக்கமாகச் சருகுகளைச் சேர்த்த பாக்கியம்,
"ஒருக்கால் இப்படித்தான் அம்மன் கோயில் திருவிழா நடந்தபோது வைரமுத்துவின்ர அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் நடந்தது. சனம் எல்லாம் நாடகம் பார்க்கப் போய் விட்டுதுகள். குறுக்கால போன இள வட்டங்கள் ஆறுமுகத் தாரிணி ர தகரப்படலையைக் கழத்திக் கொண்டு போயப் வேலாயுதத்தின் ர கிடுகுப் படலையை மாத்தி கட்டிப் போட்டானு கள்.”
அலம்பிய துணிகளைத் திரும்பவும் அலசி இறுக்கிப் பிழிந்து கொடியில் போட்டுக் கொண்டே,
"பிறகு.? ஆவலுடன் கேட்டாள் சாந்தி. "படுபாவி ஆறுமுகம் எங்களைப் படுக்க விட்டவனே. கோயிலால வந்தது பாதி வராதது பாதியாக பேசத் தொடங்கியவன் தான்."
"ஏனனை?” "ஏனோ! நாங்கள் படலையை எடுத்துப் போட்டம் எண்டுதான்."
*பிறகு விடியப் பார்த்தாலி

Page 14
ஆறுமுகத்தாரின்ர வாசலில இரண்டு படலை கட்டி விட்டிருக்கு. அவனுக்கு எங்களில் தான் சந்தேகம். இப்ப அவருக்கு இந்தக் கதையைச் சொல்ல வேணும்."
*சொல்லி என்னனை செய்ய? மனுசனுக்கு ஆணவமும் இரத்தமும் செய்யிற வேலை. வளவு முழுக்கத் தென்னையும், மாவும், முருக்கும எவ்வளவு வரும்படி? எல்லாத்தையும் விட்டுப் போட்டு சனங்கள் குழி நிலத்துக்கு லட்சம் கொடுத்து வாங்கி, மூச்சு விட முடியாமல் அடைபட்டுக் கிடக்கிறதை சந்தோசமாய் நினைக் கேல்லயே?."
ஒவ்வொரு மரத் தையும் , இலையையும் பாக்கியம் ஆசையாய்த் தடவிக் கொடுத்தாள்.
“என்ன இருந்தாலும் பிறந்த மண்ணில கிடந்து உருண்டாலும் தகும். பச்சைத் தண்ணியைக் குடிச்சாலும் மரியாதையோட இருக்கலாம்."
இடம் பெயர் நீ த அனுபவம் இப்படிப்பேச வைக்கிறது என சாந்தி நினைத்தாள்.
கனகம்மா குழற் புட்டு அவித்து இறால் வறை வறுத்துக் கொண்டு வந்து பாக்கியத்துக்குக் கொடுத்தாள்.
"கன காலத்துக்குப் பிறகு எனக்கு விருப்பமான புட்டும் இறால் வறையும் கொண்டு வந்திருக்கிறாய்!"
பாக்கியத்திற்கு வாயில் நீர் ஊறியது.
"சாப்பிடணை. இரவில் என்ன சத்தம் கேட்டாலும் வெளியில வராதையணை.”
"சாமம் சாமமாய் வயலுக்குப் போய், பாத்திகட்டி, தண்ணி இறைச்சு, எரு வைச்சு.”
பாக்கியத்திடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. புதினங்கள் பல
பரிமாறப்பட்டன. இடையில் கனகம்மா வின் பேச்சுத் தடைப்பட்டதும் அவள் நித் திரை என்பதை ஊகித்துக் கொண்டாள் பாக்கியம். தூரத்தில் நாய்கள் குரைத்தன. வெடிச்சத்தமும் கேட்டது. நித்திரை கண்களைத் தழுவ மறுத்தது. அவளின் கட்டில் நினைவில் நிழலாடியது. எழுந்துபோய் வீட்டுக்குப் பின்புறத்தில், ஒருகால் முறிந்தபடி, பழைய சமான்களுடன் போடப்பட்டிருந்த கட்டிலைத் தடவிப் பார்த்தாள். நினைவுகள் தொடர அருகில் இருந்த செவ்வரத்தை மரத்தடியில் குந்தி இருந்தாள் பாக்கியம். கொப்புகளிற் கிடையில் தலை நீட்டிய பூரணச் சந்திரனின் ஒளியில் பூமி பொன்மயமான பொலிவு பெற்றுத் திகழ்ந்தது.
நிலாக்காலங்களில் பொன்னம் பலத்தாரும் பாக்கியமும் இதே பூமரத்தின் கீழே இருந்து எத்தனை எத்தனையோ இன் பக்கதைகள் ..., எதிர்காலத் திட்டங்கள். ஊடல் கூடல். அனைத் திற்கும் பொருத்தமாய் அமைந்த அந்த இடத்தில் தன்னை மறந்திருந்தபோது. பின்பக்கத்தில் யாரோ திடும் திடும் என ஓடி வரும் சத்தம் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தபோது, டுமீல் "டுமீல். துப்பாக்கி வேட்டுக்கள் பாக்கியத்தின் உடலைச் சல்லடை ஆக்கியது. ஒருகணம் துடித்த உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட, உடல் நிலத்தில் சாய்ந்தது. செவ்வரத்தையடியில் அநாதையாகக் கிடந்த பாக்கியத்தின் பிணத்தருகே எவரும் வரவில்லை. பிறந்த மண்ணில் இறந்து கிடப்பதும் சுகமே என்பதுபோல ஒரு திருப்தியும் நிறைவும் உயிரற்ற உடலிற்குப் புதுப் பொலிவைக் கொடுத்தது.
崇姿崇
26

nЈmoför பேசுகிறார்.
எனக்கு ஒழுங்காகக் கவிதை எழுதத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். அதை எல்லாருக்கும் சொன்ன இக்பாலுக்கு என் நன்றி. அதுமட்டுமன்றி கவித்துவம் பற்றிப் பேசத் தகுதியற்ற அடியேனைத் தனது ‘கவிதை நூலை விமர்சித்துப் பேசும்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னை அழைத்து விருந்து பரிமாறியதையும் நன்றியுடன் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. தகுதி இல்லாததால்தான் அழைக்கப்பட்டேன் என்பதை இப்போது தான் விளங்கிக் கொள்கிறேன்.
இக்பால் எழுதியது பற்றுப் பற்றியதா சலனம் பற்றியதா வேறு எதுவும் பற்றியதா என்பதல்ல பிரச்சினை. கட்டுக்கோப்பின்மையே பிரச்சினை. அது போகட்டும்.
இக்பாலின்(மகாகவி இக்பால் அல்ல) காட்டில் மூன்றுகால் முயல்களே நடமாடுகின்றாற் போல தெரிகிறது. இனி மேல் சில்லையூரார் மீண்டு வந்து தானெழுதவில்லை என்று சொன்னாற்கூட ஐயா(இல்லை பெரியையா?) வைத்தது தான் சட்டம், வழங்கினதுதான் தீர்ப்பு. ஆளை விடுங்கள்.
துரை மனோகரனுக்கு மனையாள் மண்டபம் பார்க்கவும் நேரம் அகப்படுகிறதா? கொடுத்து வைத்தவர். சக்தி, இல்லை ஷக்தி டி.வியில் செய்தி வாசிக்கிற பெண்கள் தான் மோசமாக வாசிக்கிறார்களா? ஆண்கள் என்ன திறமா? செய்தி மடலை எழுதுகிறவர்கட்கே தமிழ் தெரியாது. வாசிக்கிறவர்களுக்கு எதை வாசிக்கிறோம் என்று தெரியாது. ஒரே பேரை மூன்று வேறு விதங்களில் (ஒவ்வொன்றும் தவறாக) ஒரு நிமிட இடைவெளிக்குள் வாசித்துச் சாதனை படைக்கிறார்களே!
“ஷக்தி” தமிழைக் கொலை செய்வது போதாமல் கலை இலக்கியங்களையும் கொலை செய்யவேண்டும் என்று ஏன் மனோகரன் ஆசைப்படுகிறார்? கொலைகள் பற்றிச் சொல்லும் போது - செய்தியே பொழுது போக்காகி விட்டது. எனவே கொலைகள் எல்லாம் குரூரமான நுணுக்கங்களுடன் 'சக்தி செய்தியில் நீண்ட நேரத்துக்குத் தரப்படுகின்றன. நமக்கு ஏற்ற அரசியல்வாதிகள்! நமக்கு ஏற்ற ஊடகங்கள்! சி.சிவசேகரம் ஞானத்தின் வருகை இன்று ஒன்பதாவது இதழையும் கடந்து விரிகிறது. எடுத்த எடுப்பிலேயே இலக்கிய ஏட்டின் உச்சத்தை எட்ட நினைத்து அதனை சாதித்தும் காட்டி இருக்கிறது ஞானம், உருவத்தில் கைக்கடங்கி உட்கிடக்கையில் நீட்சியுடையதாய் மிளிரும் இதன் இருப்பு இலக்கிய உலகு தொலைத்துவிட முடியாத பொக்கிஷம். ஞானத்தின் ஒவ்வொரு இதழின் அட்டைப்படங்களும் சற்றுவித்தியாசமான கோணத்தில் தான் காட்சி தருகின்றன. இதழை விரிக்கு முன்னமே அட்டைப்படத்துயர் மனதைக் கவ்வுகிறது! இதழ் தாங்கிநிற்கும் கனதியான ஆக்கங்களும் அதனை அணி செய்கின்றன. பாலைநகர் ஜி.ப்ரி
27

Page 15
ஞானத்தில் வெளிவந்துள்ள நீங்கள் நலமாக. நூல் மதிப்புரை, ஒரு நூல் மதிப்புரைக்கு இருக்கவேண்டிய எல்லா அம்சமும் நிறைவாய் இருக்கக் கண்டேன். நானும் அந்நூல் ஒன்று பெறவேண்டும். எனவே, எப்படிப்பெறலாம் என்று அறியத்தரவும். A.P.V. (Basar Losarò, DT5saost. ஞானம் ஒன்பதாவது இதழில் வெளியான மண்டுர் அசோகாவின் "ரொமி” கதை, அற்புதம் என்றே சொல்லவேண்டும். அருமையான நடை. பிசிறு இல்லாத அருமையான படைப்பு, அவருக்கு எனது பாராட்டுக்கள்.
சாளினிக்கு திருமதி யோகாவின் விளக்கம் தெளிவாக உள்ளது. கலாநிதி துரை. மனொகரனின் "நான் பேசநினைப்பதெல்லாம்." பகுதி சுவையாகப் பயன் தருகிறது. தமிழோவியன், பதுளை. இலக்கிய வட்டாரத்தில் “ஞானம்' பற்றிய பேச்சுக்கள் பரவலாக அடிபட்டது. ஆனால் "ஞானம் விநியோக மட்டத்தில் ஒரு பரவலான தளத்தைக் கொண்டிருக்க வில்லை என அறியக்கிடக்கிறது.
"தொனி" சஞ்சிகைக் குழு, வாழைச்சேனை. தொடர் முயற்சியினூடாக ஞானம் இதழை தொடர்ச்சியாக வெளிக் கொணர்வது, எமக்கு மேலும் நம்பிக்கையை தருவதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும், அதன் களம் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்து செல்கின்றது என்பதில் பெரும் உவகையடைகிறேன்.
லெனின் மதிவானம், கொட்டகலை. தங்களது அரிய பணி பாராட்டுக்குரியது. பயன் உள்ளது. பல பிரதேசங்களை ஞானம் இணைக்கிறது. “ஞானஉளற்று மலையகத்தில் இருந்து சுரக்கிறது என்பதை எண்ண மகிழ்ச்சியாய் இருக்கிறது.
ரூபராணி ஜோசப், கண்டி. ஞானம் நன்றாக இருக்கிறது. ஞானம் 10 இதழின் அட்டைப்படம் தாமரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மீள்பிரசுரம் செய்யும் அளவுக்கு அந்த ஒவியத்தில் என்ன இருக்கிறது? எமது நாட்டு ஓவியர்களின் ஓவியங்களை ஞானம் பயன்படுத்திக் கொண்டால் நலம் என்பது என் அபிப்பிராயம்.
மைக்கல் கொலின், மட்டக்களப்பு.
s ஞானம் சஞ்சிகை பற்றிய கலந்துரையாடல் ཛོད་༽ இலங்கை தென்கிழக்கு ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில், 12.03.2001 திங்கட்கிழமை மாலை 4.30மணியளவில் மருதமுனையில் "ஞானம்' சஞ்சிகை முதல் பத்து இதழ்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார். கலாபூஷணம் மருதூர்க் கொத்தன், பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை முதுநிலை விரிவுரையாளர் வி.அமிர்தீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞானத்துறை முதுநிலை விரிவுரையாளர் நசீர் அகமட் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஜே.எம்.வசீல், கவிஞர் விஜிலி உட்பட மூத்த கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து இறப்பித்தனர். தகவல் - கவிஞர் இக்பால் அலி)
28

Gamest @ 6 (காலாண்டிதழ்) வெளியீடு: சுதந்திரக்கலை இலக்கியப்
பேரவை, 9, மாத்தளை வீதி, உக்குவளை. உலகத் தமிழர் குரல் ஒலி 19 - குரல் 16 (அரசியல் கலப்பற்றது)
வெளியீடு: 2- g5. U இயக் க
இலங்கைக்கிளை, யாழ்ப்பாணம். அன்பளிப்பு: ரூபா 20
நந்தலாலா மார்ச். மே (காலாண்டு கலை இலக்கிய சஞ்சிகை) முகவரி: 133-1/1 டிம்புள வீதி அட்டன்.
துரைவி நினைவலைகள் வெளியீடு: துரைவி பதிப்பகம் 85, ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை கொழும்பு - 13 வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள நூல்கள் எந்த அளவு உதவமுடியும் என்பதற்கு நானே உதாரணமாகிவிட்டதனால் நல்ல நூல்கள்பால் ஒரு மதிப்பும் அவைகளை ஆக்கித் தரும் எழுத்தாளர்கள்மேல் ஒரு மரியாதையும் என்னுள் வளர்ந்தன. இந்த மதிப்பும் மரியாதையுமே பிறகு நட்பாக ஈழத்து எழுத்தாளர்களுடனான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. துரை விஸ்வநாதன் என்னுரையில்.
சுவடு தொகுப்பாசிரியர்: எம்.ஆர்.எம்.ரிஸ்வி. வெளியீடு: சிந்தனை வட்டம்,
29
14, உடத்தலவின்னை மடிகே, உடத்தல வின்னை. முதற்பதிப்பு: 01.01.2001 ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் ஒரு புதிய பரிமாணத்தின் சுவடே இது, எனவே “ஓர் இலக்கிய விழா பற்றிய தொகுப்பினை நூலாக்கி வெளியிட்டால் என்ன? என்பது சிந்தனை வட்டப் பணிப்பாளர் என்னிடம் முன்வைத்த வினாவுக்கு விடையாக இச் சுவடுகளை வாசகர்கள் முன் வைக்கிறேன்.” தேட்டம் வெளியீடு: முத்தமிழ் கலா மன்றம் ஆசிரியர் கலாசாலை, யதன்சைட், கொட்டகலை
முதற்பதிப்பு: 24.11.2000 படைப் பாளிகளின் சுதந்திரமான கருத்தாக்கங்களை சுதந்திரப் படைப்பாக வெளிக் கொணர்வதுதான் சுதந்திர படைப்பிலக்கியமாகும். அந்த வகையில் "தேட்டம் ஒவ்வொரு படைப்பாளிகளின் எணர் ணங் களை கவிதையாக, ஓவியங்களாக வெளிவந்து மிளிர்வது ஒரு சிறப்பம்சமாகும். அதிபரின் ஆசிச் செய்தியில்.
என் தேசம் எழுதியவர்: மடவளை அன்சார் எம். வழியாம் வெளியீடு: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், பூரணாவத்தை, கண்டி முதற்பதிப்பு: ஜனவரி 2000 எதிர்காலத்தில் வளரவிருக்கும் தரமான ஒரு கவிஞரை இனங்காட்டத்தக்க வகையில் இக் கவிதைத் தொகுதி அமைந்துள்ளது. அன்சார் எம்.ஷியாமின் கவிதைகளில் பொருட்பரப்பும் நடைச் சிறப்பும் தனித்துவம் வாய்ந்து விளங்குகின்றன. கலாநிதி துரை.மனேகரன்
முன்னுரையில்.
பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறன் எழுதியவர்: சி.பற்குணம்

Page 16
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை கொழும்பு - 11
பற்குணத்தை நினைவூட்டும் இந்நூல் பட்டுக்கோட்டைக் கல்பான சுந்தரத்தை பாரதியின் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பது அடிப்படையில் ஓர் ஒப்பியல் ஆய்வு பற்குனத்தின் அறிவும் மனமும் எந்தத் தளத்தில் இருந்து தொழிற்
படுகின்றன எண் ப ைத இந் நூTஸ் காட்டுகின்றது. கார்த்திகேசு சிவத்தம்பி
அணிந்துரையில்.
லண்டன் முதல் கனடா வரை எழுதியவர்: மாத்தளை சோமு வெளியீடு: தமிழ்க்குரல் பதிப்பகம்,
filběáF, 620 03 முதற்பதிப்பு: நவம்பர் 2000 மனித வாழ்க்கையே ஒரு என்றாலும் இடையே அவன் மேற்கொள் கின்ற பயணம் சம்பந்தமான எழுத்துக் கள் நாவல், சிறுகதை, கவிதை போன்ற இலக்கிய வரிசைகளில் சேருகின்றன.
மாத்தளை சோமு
என்னுரையில்.
பயனம்.
எழு சிறுகதைகள் (பதின் மூன்று படைப் பாளிகளின் சிறுகதைகள்) வெளியீடு: எழு வெளியீட்டகம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2001 விலை: ரூபா 100 எழு கலை இலக்கியப்பேரவை,
2ம் வட்டாரம், புதுக் குடி பயிருப்பு, முல்லைத்திவு. தமிழ் மக்களின் தேசிய இன
விடுதலைப்போராட்டம் முக்கிய திருப்பு முனையொன்றில் நின்று கொண்டிருக் கும் இன்றைய சூழலில், போராட்டத்தின் தளமான வன்னியில் இருந்து தமிழ் மக்களின் மன உணர்வுகளை இளை பிரித்துக் காட்டுவன இக்கதைகள்.
பதிப்புரையில்.
வழிக்வா (முறையீடு கவியரங்கக் கவிதைகள்) வெளியீடு: இலங்கைத் தென்கிழக்கு ஆபப் வு அமைய மதிபபுரைக் குழு, மீவத்துறை, பேராதனை. விலை: ரூபா 125 அல்லாமா இக்பாலின் சிந்தனை மீள் அறிமுகத்தைச் செழுமைப்படுத்து வதற்காக ஷிக்வா என்ற இக்பாவின் புகழ் பெற்ற தலைப் பில் கண் டி ஒறாபிபாஷா கலாசார நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் அரங்கேறிய கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எம்.எச்.எம் வடிம் எல் , ஏ.இக்பால், பண்ணாமத்துக் கவிராயர், மணிப்புலவர் மருதூர்.ஏ.மஜித், கவிஞர் ஜின்னா ஹரிபுதீன், கவிஞர் நிந்ததாசன், சர்மிளா ஏ.ரஹீம், எஸ்.எல்.எம்.கரீம், லறினா அப்புதுல் ஹக், இர்பான், டிக்கோயா எம்.எச்.எம்.ஜன்டர், இக்பால் அலி ஆகிய முதுநிலைக் கவிஞர்களும் இளங் கவிஞர்களும் இக்பாலின் முறையீட்டை உள்வாங்கி கவிதைகள் தந்துள்ளனர்.
பின்னட்டைக்குறிப்பில்.
கலாபூஷனம்
எம்.ஐ.எம்.
பெண்ணுரிமைகள் கனன்னோட்டம் படல் - 1ே (ஓகஸ்ட் 2000), மடல் - 0.2 (ஜனவரி 2001) வெளியீடு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 46/02, பழைய வாடிவிட்டுத் தெரு, மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் சமூகத்தில் பெண்கள் உரிமைகள் மீறப் படுவதை எடுத் துக் காட் டி அதன்மூலம் அவர்களது உரிமைகளின் பாதுகாப்பை வற்புறுத்தவும் சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய உரையாடலைத் தொடங்குவதை நோக்கமாகவும் கொனர் டு பெண்ணுரிமைகள் கண்ணோட்டம்
என்னும் செய்தி மடலை வெளியிடுகிறது.
3)

எழுத்துப் பல்லக்கு
பிரசாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகம்
பேனா மன்னர் முடி திறந்தார், பெரு"மை"யோ?
பிறருக்கான சேறு அல்லவோ தாளில் வழிகிறது. வேறோர் பொருளா? அடடா ஒழுகும் கூழ்முட்டை
தேறார், உலகை நேற்றே திருத்தப் புறப்பட்டார்.
போரை இலக்கியம் ஆக்கிடப் புறப்பட்டோர் இலக்கியத்தை போர்க்களமாக்கி இருக்கின்றார். தலைக் கனத்தை தாம் நூலாகச் செய்தபின்னர் நிலைக்கும் என்று நிச்சயமாக நினைக்கின்றார். பேனா மன்னர் மூடி திறந்தால் பேந்தென்ன! தானே கோன் என்றொள்வொருபேரும் தருக்குற்றார். வானோ மன்னோ எதுவும் எங்கள் வார்த்தைகளால்தானே வாழும் என்றறிவித்தார்,
தமிழ் வித்தார்.
சோம்பல் முறித்து சுடச்சுடப் பேனா தொட்டவரும் ஆம், பிறர் வாழ்வின் அசிங்கம் அன்றோ தருகின்றார். காம்பே முள்ளாய் மாறிய பின்னர் கனிவருமோ?
சாம்பல் சுடுமோ? - சரித்திரமாக எழுதுகிறார்.
31
பேனா மன்னர் முடிதிறந்து, பெரிதாக நானா, நீயா என்பது அன்றி எது செய்தார்? ஆனா(அ) கூடத் தெரியாதாரின்
அன்புள்ளம் ஏனோ இல்லை இவர்க்கு, ஆனாலும்
உலகுக்கெழுதிக் குவிக்கின்றார். போராளி மேனி
வடிக்கும் "வள்ளல்க் குருதி"யிலும், ஏராலே கவிதை எழுதிடுவோனின் வியர்வையிலும், பாரே "எங்கள் மை பெரிதென்று எடுத்தாரே!
து தூ! நன்று அவரின் எழுத்துப் பல்லக்கே,
அடிபடுவதிலே ஆயுள் கரைத்து அம்மாவோ! கொடி குடை தமக்குத் தாமே பிடித்துக் குளிர்கின்றார். வெடி விழுகின்ற வேளையில் இதுவோர் புதுச் சண்டை.! நாமா? வாழப் பழகிவிட்டோம்.
அஞ்சலோட அறிவுடையோர்கள் அணியாகி, தங்கட்குள்ளே தடைகாண் ஓடத் தொடங்குகிறார். மங்கும் பொழுதின் முடிவில் LDLJI, GHLDTTEGJITGIET. எங்கட் கென்ன, இலவசமாகக் காட்சிகளே.

Page 17
வரலாறு
எம்மை என்றும் எரித்து அழித்திடும்
இழவு போன்ற துபர்களைச் சொல்லி விம்மி வெம்பி வெடித்திடல் மட்டுமே விவேகமான செயலன்று உண்மையி எம் துயர்களுக் கென்னதான் காரண என்ற மூலத்தின் "வித்தை தெரிந்து
விம்பத்தைத் தெளிவாகப் புரிகுவோம் விஸ்வரூபத்தைப் பின் எடுத்தாடுவோ
போலிகள், நடிப்பு வெளிவேடங்கள் போய் அரங்கில் புழுகி ஜெயித்தன. காலத்தைத் தங்கள் கைகளாற் கட்ட காலத்தின் கையிற் காலமாகிப் போ சிலம் அடிமையாகி மகிழ்ந்து "சிறப்பு வாழ்விதே" என்று சிலிர்த்தது விழும் எலும்பினுக்கே விலை போன "விழுமியத்தைப் பகட்டுள் மறைத்தன
தானறிந்ததே தருமம் என்றோதியும்
தனக்கு ஏற்றதே அறமெனச் செப்பிய தானே செய்வது சரியென்றுரைத்தும். தனிநலம் காக்கச் சிறுமை வளர்த்து போலி வேசம் கலையாது பார்த்தெது புரட்சித் தி தோன்றின் அணைக்க உ ஆ. அறம், தர்மம், அகிம்சையென் அடக்கி மானத்தை அடைவுக்கு விட்
எது அறம் என இன்று நாம் தேறுவே எது தரம்' என எமை எடைபோடுவே எது சரி என வரலாற்றுப்பாடத்தை
இருந்து கற்றுத் தெளிகுவோம்! துய எது வழி எனத் தெரிவோம்! உயிர்த் எழில் பயிரிட, எது முறை தேறுவோ விதி சமைப்போம்! ஆம் காலம் கடக் வீழுமுன் நம் சுயத்தை நிமிர்த்துவே
- த.ஜெயசீலன் - நல்லூர்
Printed at GREENLFAFPRTN

ཧྥུ་
நம்
உதவியும் றாடிற்று
Lதி:
LIIT.
Th.
TiL
திட,
க்கலை
.
LLLLLLLLS ELYSLLLTLLLLLLL LLLLL S LLTTLTH S S