கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.05

Page 1

லக்கியச் சஞ்சிகை

Page 2
ܐܠܐ
முகவரிகளைத் தொலைப்பதற்கு முன்னுரை எழுதுவோர்
முகவரிகளைத் தொலைப்பதற்கு முன்னுரை எழுதுவோர் தமது எதிர்காலம் தெரியாமல் இறும்பூது எய்துகிறார்கள்! புலம் பெயர் இலக்கியம் கடல்கடந்த தமிழ்ப்பணி என்பதெல்லாம் இன்று கவர்ச்சியாகத் தெரிகின்றன நாளை என்னாகும்? இன்றைய தலைமுறை எடுத்த பணியை நாளைய சந்ததி தொடருமா? இன்றைய பெற்றோரின் பிள்ளைகள் இப்போதே அந்நியமாகின்றனர் அரைகுறைத் தமிழ், அந்நியகலாசாரம் அது தவிர்க்க முடியாததே! வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுவது மனிதர்களின் இயல்பே ஆக, இன்று தோன்றும் மாயை நாளை மறைந்து விடலாம் கடலில் கரைத்த புளியாக கனலில் விழுந்த மலராக இவர்கள் மறைந்து போவதை தடுத்து நிறுத்துவதற்கு ஏதாவது வழியுண்டா?
அருள்மணி
மட்டக்களப்பு
 

உள் ளே.
பிரதம ஆசிரியர் தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையின் சிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை ப3ர்கள்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி,
5600TEg. Gg.(L. -08-478570(Office)
08-23.4755 (Res) DT7-3055DE
FX - OE-34755
E-Mail - gısalışarmığrı) sltnet.Ilk
ސ......................................................بN
சிறுகதை அச்சானிகள் தேடும் சக்கரங்கள் . 04 4*607 saysay F_y KŠYSG277 || 7 || F. F)
ஜிக்கிஷ்னிஜிவி க"ல் ஆணிமை தவறேன்.
மான்:- ஆரோதயன கட்டுரைகள் நான் பேச நினைப்பதெல்லாம் ... 07 கலாநிதி துரை மனோகரன் தமிழில் சிறுவர் நாடகங்கள் . 10 கலாநிதி ந்ேதனார் இளங்கே? இலக்கியப் பணியில் இவர். . 19 ந. Tர்த்தின்
ஆனந்தனின் சமுக இலக்கியக் பணிகள். இரா சிவலிங்கிம்
தவிதைகள் முகவரிகளைத் தொலைப்பதற்கு முன்னுரை எழுதுவோர் . ஆதுர்ட்ரிவினரி அச்சொட்டா .
آ2 ====
........... 6 கவிஞர் திக்:ள் வரப்பிரசாதங்கள். சி. குமாரலிங்கம் இரவுக்காய் ஏங்கும் இவன் . வி. மைக்கள் கொவின்
அ, ஆனந்திஜி" வெள்ளாவி. 31 = = = = = = = = + + + + ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ இக்பாள் ஆவி நூல் மதிப்புரை . ஆ.இரத்தினவேலோன்
வாசகர் பேசுகிறார் .
.......... 15
... 3
27۔۔۔۔
லகம் - அத் தனிஜிتJ//7"+++++++++29
O3

Page 3
கனகச:ை தேவ ஆடாட்சமி) மல்லிகைத்தீவு
சுருட்டை மெதுமெதுவாக உருட்டி உருட்டிச் சப்பிக் கொள்வது மட்டுமல்ல, அடிக்கடி தன் உதட்டையும் உரித்துக் கொள்வதும்கூட நினைவில்லாது செய்து கொண்டிருந்தார் விஸ்வலிங்க ஆசிரியர். அந்த அளவிற்கு மலைபெயர்ந்த யோசனை.
"இன்னும் என்ன? வாற வருஷத் தோட பென்சன். அதற்குப் பிறகு நாயும் தேடாது. அதுக்குள்ள பென்சன் “பைல் வேலைகள் முடித்திடவேணும். இப்ப தொடங்கினால்தான் 'ஆழியில போனது, ஊழியில போனதெல்லாம் தேடிக்கண்டு பிடித்து 'பைல்ல போடலாம்!
நகர்ப்புறத்தை எட்டிப்பார்க்காமல் தன் கிராமத்து சூழல் பாடசாலைகளுக் குள்ளே தன்னை முடக்கிக்கொண்ட ஆசிரியர். இப்பேர்ப்பட்ட ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அநுபவங்களை அறிந்து பயந்து கொண்டிருந்தார்.
எதிர்காலத்தில் தனியே “பெண் சனை' மட்டும் நம்பிவாழப் போகும் ஆசிரியர் அவர் . இப்போது மிக அதிகமாக புகையை உள்ளே இழுத்து விட்டுக்கொண்டிருந்தார், இன்னும் வேறுபக்க சிந்தனையுடன்.
எப்படியாவது இந்த வருஷத்துக் குள்ளே வண் செயலிலி அழிந்த வீட்டிற்கான நட்டஈட்டைப் பெற்றுவிட வேண்டும்!
அவர் மனம் குறுகுறுவென வேலை செய்துகொண்டிருந்தது. எடுக்கின்ற தொகையில் இருபத்தைந்து வீதம் கொடுத்தால், ஒரு கிழமையில் பணம்
வரும் யாரோ ஒரு இலஞ்ச வழிகாட்டி யின் ஆலோசனை நினைவிற்கு வந்தது. ஒன்றும் அழியாமல் இருப்ப வனுக்குக் கிடைத்தது இலாபம் . உண்மையாக அழிபட்ட எனது வீட்டிற்கு ஒரு சதமும் கொடுக்கமாட்டேன் என்ற அவரின் கொள்கை பன்னிரணர்டு வருடங்களுக்கு மேலாகத் தாக்குப் பிடிக்க நியாயமில்லைதான். 'அழித்த அரசுதான் அந்த நட்டத்தையும் தருகிறது. இடையில் இருக்கும் இவனுக் கேன் நான் கொடுக்கவேண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார் விஸ்வலிங்கம் ஆசிரியர். கொழும்பு சென்று தன்னுடன் படிப்பித்த நண்பர் வேலாயுதத்தைக் கண்டு இந்த விடயத்தை முடிக்கவேண்டும்.
நடந்து சென்ற வன்செயகளில் அந்த 90ம் ஆண்டு அனர்த்தம் தான் வேலாயுதம் ஆசிரியரின் குடும்பத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
வெறிகொண்டு வருகின்ற காடைத் தனக் காவலர்களிடம் தனது புனித ஆசிரியத்தைக் காட்டி தப்பித்துக் கொள்ள முயன்று தோற்றுப் போனவர் வேலாயுதம்.
தனது மூன்று பிள்ளைகளுடன் ஓடி ஒளித்துக்கொள்ள முடிந்த அவரால், நோய் வாய்ப்பட்டுப் படுத்திருந்த அவர் மனைவி கனகத்தைக் காப்பாற்ற இயல வில்லை. இவர்களின் கண் முன்னாலே அவர் மனைவி - அப்பிள்ளைகளின் தாய், உயிருடன் கொளுத்தப்பட்டு, வீடும் தீக்கிரை யாக்கப்பட்டது. இரவு
04
 
 

முழுவதும் கணி ணோடு கணி மூடவில்லை விஸ்வலிங்க ஆசிரியர்.
றெயினில் செல்லும் தமிழ்ப் பிரயாணிகளிடம் வழிப்பறிசெய்வதையும், இம்சிக்கப்படுவதையும் அவர் அறிந் திருந்தார். மெதுவாக யன்னல் ஊடாகத் தலையை கெளித்து பார்வையை விட்டார்.
'மருதானை வந்துவிட்டது. அடுத்த ஸ்ரேசன் கொழும்பு.
மனதினுள்ளே சிறு மகிழ்வுடன்
‘வற வறவென தலையைச் சீப்பால்
வாரிக்கொண்டார்.
மேலேயிருந்த தனது பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு திறந்து , அதனுள் இருக்கும் அந்தக் கடிதத் துண்டை மீண்டும் ஒரு தரம் பார்த்துக்கொண்டார்.
தற்செயலாக தான்வரும் செய்தி நண்பர் வேலாயுதத்திற்குக் கிடையா விடினும் அந்த அவரின் விலாசத்தின் பிரகாரம் வீட்டைக் கண்டு பிடித்து விடலாம்.
மீண்டும் அந்த விலாசத்துண்டை பத்திரமாகப் பையினுள் வைத்து மூடவும், றெயின் கொழும்பில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. தன் வரவிற்காகக் காத்துநின்ற வேலாயு தத்தைக் கண்டவுடன் விஸ்வலிங்கத் தாரின் அடைபட்டிருந்த பழைய நினைவுகள் பொங்கி மடைதிறந்தது.
ஸ் ரேசனில் நின்றிருநீத ஜனங்களைப் பற்றி அவர் சிலாக்கியப் பட்டுக்கொள்ளவில்லை.
ஓடிச் சென்று கட்டிப்பிடித்துக் கண்ணிர் மல்கத் தொடங்கிவிட்டார் விஸ் வலிங்கம் ஆசிரியர். எந்த உணர்வுகளுக்கும் தனி னைப் பலியாக்கிக் கொள்ளாத வேலாயுதத் தார், நண்பனின் முதுகில் தட்டிக் கொண்டு "என்ன குழந்தைப் பிள்ள G8 u fir 6.)” எனக் அழைத்துக்கொண்டு ஸ்ரேசனுக்கு வெளியே சென்றார்.
கூறியவாறு
“எனது இந்த நடவடிக்கைகள் இவனுக்குப் பிடித்துக் கொள்ள வில்லையோ? மனதில் எண்ணிக் கொண்ட விஸ் வலிங்கத்தாருக்கு வெட்கமும் வேதனையுமாக இருந்தது. வெளியே நிறுத்தியிருநீத வேலாயுதத்தாரின் காரில் இருவரும் ஏறிக்கொண்டனர். பழையவற்றைப் பேசுவதற்கு இருவருக்கும் இஷடமிருக்க வில்லை. காரை ஒருதரம் உள்ளிருந்த வாறே நோட்டம் விட்டார் விஸ்வலிங் கத்தார்.
உன்னிப்பாகப் பார்த்தார் வேலா யுதத்தாரை? கழுத்தில் தேடா போல சங்கிலி? முதுமையிலும் ஓர் செல்வந்த 96T60LD?
பெரியதொரு வீட்டின் முன்னால் கார் போய் தரித்தது. "இந்தக் கார் உன்ரதானா?”
எண்ணங்களை மீறி அவரை அறியாமலே விஸ்வலிங்க ஆசிரியரின் வாயால் வந்துவிட்டது.
'ஓம்' என்பதற் கடையாளமாக தலையை ஆட்டிவிட்டு "சரி குளிச்சிட்டு வா1ஆறுதலாகப் பேசுவம்” என முத்தாய்ப்பு வைத்தார் வேலாயுதம்.
“பெண்சாதி செத்தவன் போலவா இருக்கிறான் இவன் தான் எண்ணிய திற்கு மாறாக வேலாயுதத்தின் வாழ்க் கை அமைந்திருந்தமை விஸ்வலிங்கத் தாருக்கு ஓர் நெருடலான ஆதங்கத்தை ஏற்படுத்தியது.
குளித்து மாற்றுடை தரித்துவந்த விஸ் வலிங்கத்தாரைக் கண்டதும் அன்றைய தினசரியில் மூழ்கியிருந்த வேலாயுதம் அதை மடித்துவைத்துவிட்டு அளவளாவ ஆயத்தமானார்.
“உள்ர பிள்ளைகளின்ர பாடு என்ன?" பேச்சை விஸ்வலிங்கத்தாரே
வீடெல் லாம்
ஆரம்பித்தார்.
“என்ர ரெண்டு ஆண்பிள்ளைகளும் கனடாவில. அவனுகள் தந்த
சொத்துக்கள் தான் இவைகள்! அது
05

Page 4
சரி உன் ர பிள்ளைகள் எப்படி? பதிலுக்குக் காத்திருந்தார் வேலாயுதம்,
இந்த வண் செயலிகள் எம் போன்றவர்களுக்கு சதி செய்கிறது. சிலரை செளகரிக வாழ்க்கைக்கு அதிபதியாக்குகின்றது மனதிற்குள்
எணி னியவாறே (3a5 LT if விஸ்வலிங்கத்தார்,
"உன்ர கடைசிப் பெட்டை என்ன செய்கிறாள்"
கடுகடுப்பாகிய வேலாயுதத்தின் முகம் சுருங்கவும், மேல் அறையிலிருந்து "வீர்” எனப் பெண்குரல் அலறவும் சரியாக இருந்தது. அதைத்தொடர்ந்து பொருட்கள் உடைக்கப்படும் ஓசையும் ஒலித்துக்கொண்டிருந்தது. கண்களால் வழிந்து கொண்டிருந்த நீரை ஆட்காட்டி விரலால் சுண்டிவிட்டபடி கூறினார் வேலாயுத்தார்.
"நீ கேட்ட கடைசிப் பெட்டைதான் பைத்தியமாய் இருக்கிறாள். எப்ப அவளின்ர அம்மா நெருப்பில எரியிறத நேரில கண்டாளோ, அண்டையில இருந்து இண்டு வரை." அவரால் பேசமுடியவில்லை.
மிக விரைவாக எழும் பிக் கொண்டார் விஸ்விங்க ஆசிரியர். வேகமாக உள்ளே சென்ற அவர் வேகமாகவே தனது பைகளுடன் வெளியே வந்தார்.
இஞ்சை! வேலாயுதம். எனக்கொரு உதவிசெய். தயவுசெய்து என்னை உடனடியாய் வீட்டை போக வழி செய். இந்த அளவும் ஊரில என்ன நடக்குதோ தெரியாது. சாகிறதெண்டாலும் புள்ள குட் டி குடும் பதிதோட ஒணி டா செத்திரவேணும்"
இந்த யதார்தத்திற்கு முன்னால் அவரது பென்சன் பைலும், நஷ்டஈட்டுப் பணமும் எதிர்கொள்ள முடியாமல் சுக்குநூறாக கிழிந்து அண்டவெளியில் பறந்து கொண்டிருக்கிறது.
女女女
06
அச்சொட்டா
பல்லுக்கு நடுவே நாக்கிருந்தாலும் நாக்கோடு பல்லுகள் gut-st
உமிக்கு நடுவே பதர் இருந்தாலும் இரண்டும் ஒன்றாக ஒட்டா! நாக்கினால் மூக்கினை தொடமுயன்றாலும் நாக்கோடு மூக்கு ஒட்டா.
நகமும் சதையும் அருகிருந்தாலும் இரண்டுமே ஒன்றாக
ஒட்டா.
கண்ணோடு கண்கள் பேசிய பின்பு வாய்ச்சொற்கள் வந்து ஒன்றுடன் ஒன்றொட்டா. பாலும் நீரும்
ஒன்றானாலும் அன்னத்தின் வாயில் அது ஒட்டா! ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையில் கெட்டான் எனச் சொன்னானே; வள்ளுவன் - அச்சொட்டா.

நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரைமனோகரன்)
தமிழகம் தலைவணங்கும் பேராசிரியர்
இலங்கைத் தமிழ் அறிஞர் சிலருக்குக் காலந்தோறும் தமிழகம் தலைதாழ்த்தித் தனது வணக்கத்தைத் தெரிவித்துள்ளது. ஆறுமுகநாவலர், சி.வை.தமோதரம்பிள்ளை, சுவாமி விபுலானந்தர், தனிநாயகம் அடிகள், பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் எம்.எம். உவைஸ் ஆகியோர் வரிசையில் தற்போது பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்குத் தமிழகம் தனது வணக்கத்தைத் தெரிவித்துள்ளது. பேராசிரியர் அவர்களுக்குக் கிடைத்த திரு.வி.க.விருது, தமிழகம் அவர்மீது காட்டும் மரியாதைக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. தமது உடல் அசெளகரிய நிலையிலும் தம் பணிகளைச் செய்துவரும் சிவத்தம்பி அவர்களைப் பற்றி நான் பல தடவை எனக்குள் வியந்துள்ளேன். மார்க்சிய அடித்தளத்தில் நின்று, சமூகவியற் பார்வையுடனும், வரலாற்று உணர்வுடனும் தமிழர் பண்பாடு, இலக்கியம், கலைகள் முதலியவை பற்றிய கூர்த்தநோக்கும், புலமைசார் அறிவும் கொண்ட தமிழ்க் கல்விமானாகப் பேராசிரியர் கா.சிவத்தம்பி விளங்குகிறார். பேராசிரியர் கைலாசபதியை அடுத்து, தமக்கே உரித்தான தனிப்பாணியில் தமது புலமைசார் பங்களிப்பினை அவர் நல்கி வருகின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது நூல்களும், கட்டுரைகளும், கருத்துரைகளும் காலத்தால் அழியாச் சொத்துக்களாக விளங்குகின்றன. நான் தமிழ் நாட்டில் நேரில் கவனித்த அம்சம் ஒன்றையும் குறிப்பிடவேண்டும். கருத்தரங்குகள் உரையாடல்கள் முதலியவற்றில் பல்வேறு கல்விமான்களும் பிறரும் தத்தமது கருத்துக்களைத் தெரிவித்துச் சர்ச்சைகள் புரிந்துகொண்டிருப்பர். ஆனால், பேராசிரியர் சிவத்தம்பி ஒரு கருத்தைக் கூற ஆரம்பிக்கின்றார் என்றதும், அத்தனைபேரும் அவரது கருத்துக்குச் செவிசாய்த்து மதிக்கின்ற போக்கைக் கண்டிருக்கிறேன். சிவத்தம்பி அவர்களுடன் சிறிதுநேரம் பேசிவிட்டுத் திரும்பினாலும், ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு வருவதுபோன்ற மனநிறைவு ஏற்படுவதுண்டு. இந்த அம்சத்தை நான் சைலாசபதியிடத்திலும் அவதானித்துள்ளேன். நான் முன்னர் ஞானத்தில் எழுதியதுபோல, அவர் இலங்கையின் இலக்கியப் பலமாக விளங்குகின்றார். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் சேவை, மேலும் தமிழுக்குத் தேவை. சுவாரசியமான சர்ச்சைகள்
அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் தடம்பதித்த கிழக்கிலங்கையர்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. கிழக்கிலங்கையில் பிறந்தவர்களும், அங்கு சென்று வாழ்ந்தவர்களும், அங்கிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர்களுமான கலை இலக்கியவாதிகளும், அறிஞர்களுமான பத்தொன்பது பேர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். கருத்தரங்கிற் பங்குபற்றவேண்டிய சிலர் வருகைதர முடியாமற்போனமையால் பதினாறு பேர் பற்றிக் கருத்துரைகள் வழங்கப்பட்டன. கிழக்கிலங்கையிற் சுவடு பதித்த எப்.எக்ஸ்.ஸி. நடராசா, எஸ்.டி.சிவநாயகம்,
07

Page 5
இரா.பத்மநாதன், ஆனந்தன் முதலியோர் பற்றியும் கருத்துரைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்துகளும் கருத்தரங்கிற் பரிமாறப்பட்டன. இக்கருத்தரங்கில் திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா பற்றியும் நோக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். நமது பல்கலைக்கழகங்கள் திறந்த நோக்கோடு செயற்படத் தொடங்கியுள்ளன என்பதன் ஆரம்ப அறிகுறியாக அது விளங்கியது. இந்த நல்ல முயற்சிக்கான ஆலோசகராகச் செயற்பட்ட கலாநிதி எம்.ஏ.நு.'மானும், தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையைச் சார்ந்த றமிஸ் அப்துல்லா, இரகுபரன், அஷ்ரப் உட்பட அப்பல்கலைக்கழகச் சமூகத்தினரும் பாராட்டுக் குரியவர்கள். இக்கருத்தரங்கிற் பங்குபற்றிய அனைவரும் தத்தமது பாணியில் இயன்றவரை நன்றாகவே கருத்துரைகளைச் சமர்ப்பித்தனர். அதேவேளை, சுவாரசியமான சில சர்ச்சைகளும் இதில் இடம்பெற்றன. மனிதன்' என்ற சிறுகதையைப் புரட்சிக்கமால் எழுதினாரா, அண்ணல் எழுதினாரா என்ற சர்ச்சை எழுப்பப்பட்டபோது, கலாநிதி செ.யோகராசா, அச்சிறுகதையைப் புரட்சிக்கமால்தான் எழுதியிருக்கவேண்டுமென்றும், எனினும், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். அண்ணலே அதனை எழுதினார் என அன்பு முகையதின், கே.எம்.எச். காலிதீன், மருதூர்க்கொத்தன், எம்.ஏ.நுட்மான் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். இந்தக் கருத்தரங்கில் மிகச் சுவாரசியமான அம்சமாக விளங்கியது, எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை பற்றிய பல்வேறு விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டமையாகும். இத்தகைய சுவாரசியமான சர்ச்சைக்கு வித்திட்டவர், கவிஞர் ஏ.இக்பால். அவர் எஸ். பொன்னுத்துரையின் பல்வேறு முரண்பட்ட போக்குகளைத் தமது கருத்துரையில் எடுத்துக்காட்டினார். எஸ்.பொ.வின் உருவகக்கதைகள் எம்.ஏ.ரஹற்மானின் பெயரில் மரபு என்ற தொகுதியாக வெளிவந்தமை உட்படப் பல விடயங்களை இக்பால் உத்தியோகபூர்வமாகப் பகிரங்கப்படுத்தினார். புலம்பெயர்ந்தபின் எஸ்.பொ.வின் எழுத்துக்களில் ஓரளவு நிதானம் ஏற்படத் தொடங்கியுள்ளது என்றும், கைலாசபதியையும், சிவத்தம்பியையும் திட்டும் அவரது அநாகரிக இலக்கியப்போக்கு இன்னமும் மாறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கருத்தரங்கின் இறுதிநாளில் மருதூர்க்கொத்தன் தவிர்க்கவியலாத முறையில் எஸ்.பொ. பற்றிய இலக்கியரீதியிலான சில விபரங்களை வெளியிட்டார். எஸ்.பொ.வின் பெயரில் வெளியான “இத்தா' என்ற சிறுகதையின் கரு எஸ்.பொ.வினுடையது என்பதும், அதற்குச் சிறுகதை வடிவம் கொடுத்தது தாமே என்பதும், அவரால் பகிரங்கப்படுத்தப்பட்டன. பந்தநூல் மூலமும் நச்சாதார்க்கு உரையும் என்ற நூலின் பெரும்பாலான பகுதிகள் மரபுவழி இலக்கிய இலக்கணப் புலமை மிக்க முஸ்லிம் அறிஞர் ஒருவரால் எழுதப்பட்டன என்றும், அதில் எஸ்.பொ.வின் கைவண்ணமும் இடையிடையே இணைந்துள்ளது எனவும் மருதூர்க்கொத்தன் குறிப்பிட்டார். எஸ்.பொ. பற்றிய மேலும் சில 'இலக்கியச் செய்திகளும் மருதூர்க்கொத்தனால் தெரிவிக்கப்பட்டன. எஸ்.பொ.ஒர் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் என்பதிற் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. ஆயினும், அவரது இலக்கிய மோசடிகள் அவரது ஆளுமையைப் பாதிக்கவே செய்கின்றன என்பதைக் கருத்தரங்குச் சர்ச்சைகள் வெளிப்படுத்தின. ஒருநாள் கூத்து
மே மாதம் முதலாம் திகதியான மேதினம் உலகத் தொழிலாளரை ஒன்றுபடுத்தும் தினமாகும். இது உலகளாவிய ரீதியில் மதிப்பைப் பெற்ற ஒரு நாளாக விளங்குகின்றது. ஆனால் மார்க்சியத்தை உதடுகளால் மாத்திரம் 08

உச்சரிப்பவர்களும், அதனைத் தமது மேதாவிலாசத்தை மேன்மையாக்கிக் காட்டுவதற்குப் பயன்படுத்துவோரும், அரசியல் இலாபத்திற்காக அதை மேற்சட்டையாக அணிந்து கொள்வோரும், தொழிலாளருக்கு வாயையும், முதலாளிகளுக்கு மனத்தையும் காட்டி மகிழ்வோரும், வாயால் சோசலிஸம் பேசி, மனத்தால் பேரினவாதத்தை வளர்ப்போரும் ஆண்டுக்கொருமுறை தமது சிவப்புச் சட்டைகளைத் தூசிதட்டி அணிந்துகொண்டு ஆர்ப்பாட்ட்மாகச் சுலோகம் எழுப்பிச்செல்லும் ஒருநாள் கூத்தாகவே மே தினம் அமைந்துவிட்டது. வருடத்தில் முந்நூற்று அறுபத்திநான்கு நாட்களும் தொழிலாளரை உய்யவிடாமல் உறிஞ்சிப் பிழிந்துவிட்டு, ஒருநாள் மாத்திரம் "நீதான் ராஜா” என்று அவர்களை ஏமாற்றுவதில்தான் பல நாடுகளின் முதலாளித்துவ சக்திகள் அன்றைய தினத்தில ஒன்று திரள்கின்றன. மார்க்சியம் பேசும் பெரும்பாலான இடதுசாரிகளும் மார்க்சியக் கொள்கைகளைத் தாம் தூர எறிந்துவிட்டதற்கான பிராயச்சித்தமாக மேதினத்தன்று மாத்திரம் தொழிலாளருக்காக உருகி நெகிழ்கின்றனர். இந்தியாவில் இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்று மார்க்சியம் பேசும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியும் கச்சைகட்டிக் கொண்டு சர்வதேசப் புகழ்பெற்ற ஊழல்பேர்வழியான ஜெயலலிதாவை ஆதரிப்பதற்குப் போட்டி போடுகின்றன. இலங்கையில் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளும், பேரினவாதத்தை அடிப்படை யாகக் கொண்டு, உதட்டளவில் சோசலிஸம் பேசும் கட்சியொன்றும் இந்நாட்டின் இனப்பிரச்சினை விடயத்தில் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பது உலகம் அறிந்த விடயம். இந்நாட்டின் இடதுசாரிகள் நேர்மையான மார்க்சியவாதிகளாக இருந்திருப்பின், இலங்கையின் இனப்பிரச்சனை என்றோ தீர்ந்திருக்க வழியேற்பட்டிருக்கும். இவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் ஒருநாள் கூத்தாகவே மேதினம் அமைந்துவிட்டது. விதிவிலக்காக ஓரிரு இடதுசாரிக் கட்சிகள் இலங்கையில் இருக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றின் குரல் கிணற்றுக்குள் ஒலிப்பது போலவே உள்ளது.
தோட்டத் தொழிலாளி கூட்டு வீட்டை
எட்டி உள்ளே பார்க்க பலநாள்
の கூடாத ஆசை கூடிற்று ஒருநாள்
கொட்டகலை தெருவில் போனபோது நடந்தது
O ஆசிரியர் அன்புடன் அழைத்தார் வீட்டுக்கு
ცj? பேசி மகிழ்ந்தேன் வாழ்க்கைப் பிரச்சினைகளை
கூசாமல் சொன்னார் தொழிலாளி மகன்
の ஆசானாக பட்ட துன்பத்தை விரிவாக
FMT ஆடம்பரப் பொருட்கள் கண்டேன் அங்கு
கூடவே ரி.வி, டெக் எல்லாம் நல்லூர்
த கூடம் முழுவதும் இருக்கக் கண்ைடேன்
கேட்டேன் ஏது இவ்வளவு காசு f அப்பாவின் சேமலாபநிதி எல்லாம் கிடைத்தது 65 தப்பாமல் வாங்கினோம் எல்லாம் என்றார்
தப்பாமல் அத்திட்டம் புகுத்தியவரை கேட்டால் மி தப்பாமல் பதில் தர பலரால் முடியவில்லை.
09

Page 6
தமிழில் சிறுவர் நாடகங்கள் - ஒரு தேடல் - கலாநிதி வேந்தனார் இளங்கோ - முன்னோட்டம்
இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் அமைந்தது தமிழ். "நாடகத் தமிழ் என்ற ஒரு பிரிவு தமிழ்மொழியில் இருப்பதுபோல உலகிலுள்ள மற்றெந்த மொழிகளிலும் நாடகப் பிரிவு என்பது இல்லை. ஆகவே, நாடகத் தமிழ் என்பது தமிழ்மொழி ஒன்றிற்கே உரிய சிறந்த செல்வமாகும்" தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாடகம் இருந்திருக்கிறது என்பதற்கு நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் எனத் தொல்காப்பியத்தில் வரும் தொடர்கொண்டு அறியமுடிகின்றது. தமிழில் நாடகம் நன்கு வளர்ந்திருந்தது என்பதற்கு சிலப்பதிகாரத்தில் பல சான்றுகள் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இசைநுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரதசேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் முதலிய நூல்கள் முற்காலத்தில் வழக்கில் இருந்து பின்னர் அழிந்துள்ளன என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இடைக்காலத்தில் பெளத்த சமண தலையீட்டால் வளர்ச்சி குன்றிய தமிழ் நாடகம் பின்னர் ராஜராஜசோழன் காலத்தில் மீண்டும் வளர்ச்சிபெற்றது என்றும் அறியப்படுகின்றது.
19ம் நூற்றாண்டின் கடைசியில் தமிழ் நாடகத்தில் திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வருகையால் புதிய திருப்பம் ஏற்பட்டது எனலாம், அவர் பழைய நாடகங்களை ஒழுங்குபடுத்தியும், புதிய நாடகங்களை எழுதியும் தமிழ் நாடகத் துறைக்கு புத்துணர்வினை ஏற்படுத்தினார். அபிமன்யு, சுந்தரி, சீமாந்தினி, பவளக்கொடி, பிரகலாதன், சிறுத்தொண்டர், சத்தியவான் சாவித்திரி, சதி சுலோசனா, வள்ளி திருமணம் போன்ற சுமார் நாற்பது நாடகங்களை இவர் எழுதினார்.
தமிழுக்கும் நாடகம் புதிதல்ல. தமிழருக்கும் நாடகம் புதிதல்ல. எனவே இன்றைய தேடலின் அவசியம் என்ன என்ற வினா எழுகின்றது. இருப்பதை தேடுவதில்லை. இல்லாததைத் தேடுவதுண்டு. இன்றேல் முன்னர் இருந்து தொலைந்ததைத் தேடுவதுண்டு. தமிழில் நாடகம் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்பது உண்மை. எனவே இன்றைய தேடல் முன்னர் இருந்து பின்னர் இடைக்காலத்தில் இல்லாமல் போய்விட்டத்தைத் தேடும் தேடலாகத்தான் இருக்கமுடியும். நாடகம் என்றால் என்ன?
ஒரு கதையை, ஒரு நிகழ்வை நடிப்பதன் மூலம் காட்டும் கலை வடிவம் நாடகம் எனலாம். "அமையும் பாணிகளால் நாடகத்தின் வகைகள் வேறுபடலாம். ஆனால், அவற்றின் குறைந்த பட்ச பொதுத்தன்மை அவை யாவற்றையும் நாடகம் என்ற வடிவத்துக்குள் அடக்கும். நாடகம், நடிப்பை ஊடகமாகக் கொண்டு அவைக்கு ஆற்றும் கலை. இங்கு நடிப்பு, அவை ஆகிய இரண்டும் குறைந்த பட்சக் கூறுகளாக அமைவதைக் காணலாம். அதாவது - நடிகர் பார்வையாளர் இவை இரண்டுமே நாடகத்தின் பிரிக்கமுடியாத, ஆனால் அதேவேளை வேறு வேறான இரு கூறுகள். இவ் இருசாராருக்கும் உள்ள நேரடித் தொடர்பே நாடகம் என்கிற அரங்கக் கலை வடிவத்தின் அடித்தளம்" என்கிறார் திரு இளைய பத்மநாதன்.
நாடகம் என்பது பார்வையாளர்களுக்காக நடித்துக் காட்டப்படும் கலைவடிவம் என்று கொள்ளலாம். அப்படியாயின் பார்வையாளர்களின் வேறுபட்ட
10

இயல்புகளுக்கமைய நாடகங்கள் பிரிக்கப்படலாமா என்ற வினா எழுகின்றது. பார்வையாளர்கள் சிறுவர்களாக இருந்தால் அவர்களுக்காக நடித்துக் காட்டப்படும் நாடகங்கள் “சிறுவர் நாடகங்கள் (Children's Drama) எனக் கணிக்கப்படலாம். அதேபோல பார்வையாளர்கள் இளையோராக இருக்குமிடத்து அவர்களுக்காக நடித்துக்காட்டப்படும் நாடகங்கள் "இளைஞர் நாடகங்கள் (Youth’s Drama) எனவும் கருதப்படலாம். குழந்தைகளுக்காக எழுதப்படும் கவிதைகள் குழந்தைக் கவிதைகள் ஆகின்றன. சிறுவர்காக எழுதப்படும் கதைகள் சிறுவர் கதைகள் ஆகின்றன. இவற்றைப்போலவே நாடகங்களும். எனவே தமிழில் சிறுவர் நாடகங்கள் இல்லையா என்ற வினாவிற்கு பதில்காண விரும்பின், சிறு பிள்ளைகளைப் பார்வையாளராகக் கருதி அவர்களுக்காக நாடகங்கள் நடித்துக் காட்டப் பட்டுள்ளனவா என்ற வினாவிற்கு நாம் விடையளிக்க வேண்டும். பாடசாலைகள் தயாரித்த பல நாடகங்கள் சிறுவர்களைப் பார்வையாளராகக் கருத்தில் கொண்டே படைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைச் சிறுவர் நாடகங்கள் எனக் கருதலாம். சிறுவர் கதைகள், குழந்தைக் கவிதைகள் என்பவற்றிற்கும் சிறுவர் நாடகங்கள் என நான் மேற்குறிப்பிட்டவற்றிற்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட வித்தியாசம் இருக்கின்றது. சிறுவர்களுக்காக கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவோர் பொதுவாக வயது வந்தவர்கள். அவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள். அவர்கள் சில சமயங்களில் குழந்தைகளுக்காகவும் எழுதுவார்கள். பெரியவர்களுக்காகவும் எழுதுவார்கள். அதாவது குழந்தைக் கவிதைகள், சிறுவர் கதைகள் என்பன பொதுவாக பெரியவர்களால் சிறுவர்களுக்காகப் படைக்கப்படுவன. எனவே இந்த அணுகுமுறையைக் கையாண்டால், சிறுவர்களுக்காகப் பெரியவர்கள் நடித்துக்காட்டும் நாடகங்களே சிறுவர் நாடகங்கள் என்று முடிவாகின்றது. அப்படியாயின் சிறுவர்களைப் பார்வையாளர்களாகக் கருதி சிறுவர்கள் நடித்துக் காட்டும் நாடகங்களை எவ்வகையில் சேர்ப்பது என்ற வினா எழுகின்றது. இங்கு தமிழ்ப் பாடசாலைகள் மேடையேற்றிய நாடகங்கள் பலவும் சிறுவர்களாலும், இளைஞர்களாலும் நடித்துக்காட்டப்பட்டனவே. இவை சிறுவர் நாடகங்கள் 86ö6o6ujT? சிறுவர் நாடகங்கள்
"Children's Drama means all forms of theatre by and for children. It includes those phenomena described as creative dramatics', 'children's theatre’ and recreational theatre’’ சிறுவர்களாலும், சிறுவர்களுக்காகவும் நடிக்கப்படும் அனைத்துக் கலைவடிவமும் சிறுவர் நாடகங்கள் என்று கருதப்படுகின்றன. சிறுவர் நாடகங்களை நடிப்பவர்கள் சிறுவர்களா அல்லது பெரியவர்களா என்பதற்கமைய பொதுவாக வேறுபடுவது குறைவு. எனினும் சில மேற்கத்தைய நாடக ஆய்வலர்கள் அவற்றைத் தெளிவு நோக்கி வேறுபடுத்த முயல்கிறார்கள்.
creative dramatics' என்பது சிறுவர்களை சிருஷ்டிகரமான நாடகப்பாணியில் தமது கருத்துக்களைக் கூற வழிகாட்டுவதாகும். இதன் நோக்கம் நாடகத்தை நடித்துக்காட்டுவதல்ல. மாறாக கலை வடிவமொன்றினூடாக சிறுவர்கள் தங்கள் சிருஷ்டிகரமான கற்பனை வளத்தைத் தெரியப்படுத்த இடம் கொடுத்தலேயாகும். இதனால் சிறுவர்களின் சிந்தனை வளர்ச்சியடையும் என ஆய்வலர்கள் கருதுகிறார்கள். "creative dramatics' என்பது சிறுவர்களை ஒரு செய்முறை ஒழுங்கில் (Process) ஈடுபடுத்துகின்றது. இந்த ஈடுபாடு நாடகத்தை நடித்துக் காட்டுவதற்கு உதவலாம்.
‘children's theatre’என்பது முறைமையான நாடக அனுபவத்தைக்
11

Page 7
குறிக்கின்றது. இங்கு சிறுவர்களைப் பார்வையாளராகக் கொண்ட ஓர் அவையில் ஒரு நாடகம் நடித்துக் காட்டப்படுகின்றது. இங்கு நடித்துக் காட்டுபவர்கள் பொதுவாகப் பெரியவர்கள். சிறு பிள்ளைக்குரிய பாத்திரத்தை சிறுபிள்ளை செய்வதுண்டு. இதன் நோக்கம் பார்வையாளர்களின் நாடக அனுபவ எதிர்பார்ப்பை ஈடுசெய்தலாகும். நடிப்பவர்களின் சிந்தனை வளர்ச்சியோ, அபிவிருத்தியோ இங்கு முன்னிடம் பெறவில்லை. அவையில் இருப்போர் இளைஞராக இருப்பின் அது ‘youth's theatre ஆகின்றது. இங்கு செய்முறை ஒழுங்கிற்கு தனியான இடம் கொடுக்கப்படவில்லை. செய்கையே (Performance) முன்னிடம் பெறுகின்றது.
Recreationaldrama'என்பது சிறுவர்கள் சிறுவர்களுக்காக நடித்துக்காட்டும் முறைமையான நாடகத்தைக் குறிக்கும். இங்கு பார்வையாளர்களின் ரசிகத்தன்மை எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ அந்த அளவிற்கு அல்லது அதிலும் கூடிய அளவிற்கு நடிப்பவர்களின் அனுபவமும், வளர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த நாடகங்களில் செய்முறை ஒழுங்கும், செய்கையும் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. பாடசாலை மாணவர்கள் நடித்து மேடையேறும் நாடகங்கள் பொதுவாக இவ் அணியில் சேர்கின்றன. இந்நாடகங்களின் வெற்றி தோல்வி பார்வையாளர்களால் தெரிவிக்கப்படும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியாவிட்டால் அது நடித்த சிறுவர்களின் வளர்ச்சியைப் பாதிக்க இடமுண்டு. எனவே இந்நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றுபவர்கள் பொருத்தமான பாத்திரங்களைப் பொருத்தமான பிள்ளைகளுக்குக் கொடுக்கும் திறமை கொண்டவர்களாக இருத்தல் அவசியம். சிறுவர்கள் தமது நண்பர்களையும் பெற்றோர்களையும், உறவினர்களையும் வெற்றிகரமான நாடகமொன்றில் பங்குபற்றுவதன்மூலம் திருப்திப்படுத்துகிறார்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை வளரும்.
சிறுவர்கள் தொடர்பாக நாடகங்களை மேடையேற்றுபவர்கள் பொதுவாக பாடசாலையினரே. அவர்களின் நாடகங்கள் பொதுவான நோக்கில் சிறுவர் நாடகங்கள் எனக் கருதப்படலாம். எனினும் அவற்றை recreationaldrama என்ற நாடகங்களாகக் கருதலே சிறப்புடைத்து. நாடகங்களை அவை கையாளும் கதையின் அடிப்படையில் மட்டும் வகைப்படுத்தி, அதன் விளைவாக கையாளப்பட்ட கதை சிறுவர் நாடகத்திற்குப் பொருத்தமில்லை எனக் கருதி அந்நாடகங்களை சிறுவர் நாடகம் இல்லை எனக் கருதுவது ஏற்புடையதன்று. ஒரு கதையை பார்க்கும் கோணத்தைப் பொறுத்து அதன் கருப்பொருள் மாறலாம். ஒரே கருப்பொருளை சிறுவர்க்குக் கூறுவதற்கு ஒரு கதையும் பெரியவர்களுக்குக் கூறுவதற்கு மற்றொரு கதையும் இருப்பதுபோல், பார்வையாளரின் வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப தென்படும் கருப்பொருளும் வேறுபட இடமுண்டு. முடிவுரை
தமிழில் சிறுவர் நாடகங்கள் என்ற தேடலுக்கு கிடைத்த பதில் தமிழில் பல சிறுவர் நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. இன்றும் மேடையேற்றப் படுகின்றன என்பதே. தமிழில் சிறுவர் நாடகங்கள் இல்லை என்ற கூற்றுத் தவறானது. பார்வையாளர்களின் ரசனைக்கு முன்னிடம் கொடுத்து மேடை யேற்றப்படும் முறைமையான சிறுவர் நாடகங்கள் (Childtheatre) பல இதுவரை மேடையேற்றப்படவில்லை. எனினும் அவை விரையில் மேடையேறும் என எண்ண இடமுண்டு.
(அவுஸ்திரேலிய மெல்பன் நகரில் நடைபெற்ற எழுத்தாளர் விழா 2001 கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
12

"அந்த ஆவணி ஆறு”
ச.அருளானந்தம்
இ.இரத்தினவேலோன்
திருமலை மாவட்டத்தில் ஐம்பதிற்குப் பின்னரே சிறுகதைத் துறையானது அடையாளம் காணப்படுகிறது. இந்த வகையில் வ.அ.இராசரத்தினத்தின் வருகைக்கும் அவரது தோணி கதைக்கும் முக்கிய இடமுண்டு. சிறுகதையின் உருவத்திலும் உரைநடையிலும் அதிக கவனஞ் செலுத்தி பிரதேச வாழ்நிலை வெளிப்பாடுகளாக புனைகதைளைச் சித்திரிப்பவராக வ.அ தன்னை இனங் காட்டியதே அவர் பெறும் முக்கியத்துவத்திற்குக் காரணமாக அமைகின்றது. தருமு சிவராமு, தா.பி.சுப்பிரமணியம், தி.அரியநாயகம், அருள் சுப்பிரமணியம், ந.பாலேஸ்வரி, போன்றோர் வ.அ.வின் வழியாக திருமலையில் நவீன சிறுகதைப்போக்கில் தடம் பதித்தார்கள்.
பிரதேசங்களிடையே காணப்படும் வேறுபட்ட வாழ்க்கைக் கோலங்களை, கல்வி, கலாசாரப் பாரம்பரியங்களை, பேச்சு வழக்கினை ஆவணப்படுத்தத்தக்க, பிரதேச ரீதியான இலக்கியங்களில்; திருகோணமலை மாவட்ட நிலைப்பட்டதாக, திருமலை சுந்தா, புரட்சிபாலன் எனும் புனைபெயரில் எழுதும் சண்முகபாலன், இராஜ தர்மராஜா, முராஜ்கபூர், சித்திரா நாகநாதன், புல்மோட்டை எம்.எஸ்.ஏகாதர், மலைமதிச் சந்திரசேகரன், கனகசபை தேவகடாட்சம், என்.சித்திரவேல், எளில் அருளானந்தம் போன்றவர்கள் முன்னைய தலைமுறையின் புதிய தொடர்ச்சியாகத் தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.
அண்மைக் காலங்களில் மூதூர் மல்லிகைத்தீவு மக்களின் வாழ்வியலை *குமுறல்கள், ‘குருதிமண், போன்ற நூல்களினூடாக கனகசபை தேவகடாட்சம் சித்திரித்ததுபோல கேணிப்பித்தன் என்ற புனைபெயரில் எழுதும் ச.அருளானந்தம் ஆலங்கேணிப் பிரதேசத்தின் மிகச் சிறந்த காலப்பதிவாக "அந்த ஆவணி ஆறு எனும் சிறுகதைத் தொகுதியினை வெளிக்கொணர்ந்துள்ளார். திருமலையில் சிறுவர் இலக்கியப் பரிமாண விஸ்தரிப்புக்குத் துணை போவதாக அமையும், வீணைவேந்தன் (சித்திஅமரசிங்கம்), மனோ பற்குணம், ராணி சீதரன் போன்றோரின் முயற்சிக்கு அடித்தளமிட்டு, அத்துறையில் அதிக தடம் பதித்திருப்பவர் ச. அருளானந்தம். சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள் மற்றும் நாவல்கள் என பத்திற்கும் மேற்பட்ட நூல்களை ஏற்கனவே இத்துறையில் இவர் அறுவடைசெய்துள்ளார்.
சிறுகதைப் பரிமாணத்தில் அருளானந்தத்தின் கன்னி முயற்சியாக அமையும் இந்நூல் அவ்வப்போது இவர் எழுதிய ஒன்பது கதைகளை உள்ளடக்கியுள்ளது. இச்சிறுகதைகள் யாவும் கேணிப்பித்தனின் உணர்வுகளை உந்திவிட்ட வாழ்வின் சத்திய நிகழ்வுகளாக விளங்கி வெவ்வேறு வகையான மனித நடத்தைக் கோலங்களை, உள எழுச்சிகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. இவற்றுள்
13t

Page 8
மூன்று படைப்புகள் போர்க்கால சூழலினை அடித்தளமாகக் கொண்டன.
'அந்த ஆவணி ஆறு என்கிற இந்தத் தொகுதியில் உள்ள சிறந்த கதை தொண்ணுறில் கிண்ணியா ஆலங்கேணிப்பகுதியில் நடைபெற்ற அடக்குமுறைக் கலவரம் பற்றிப் பேசுகிறது.
இக்கதையானது அது சொல்லப்பட்ட விதத்திலும், உணர்த்திய நெறியிலேயுமே பலம் பெற்று விளங்குகின்றது. “தொலைவான்கள். கண்முன்னாலேயே உடைச்சிக் கொண்டு போறானுவளே. எவ்வளவு கஸ்டப்பட்டம். அந்த வீடு கட்ட", போன்ற அருளானந்தத்தின் உரையாடல்கள் திருமலை மாவட்டத்திற்கே சொந்தமான வழக்குச் சொற்கள், வார்த்தைகள் யாவுமே இயல்பானதாக அமைந்து கதைக்கு ஒரு பிரதேசத் தன்மையினைத் தந்து விடுகின்றன. . . . h
பாவிகள் நாங்கள். துப்பாக்கிகள் எங்களைக் குறிபார்த்தபடி, கையாலாகாத கபோதிகளாக நாங்கள்.
கண்ணிர் விட்டுக் கதறுவதைத் தவிர எங்களால் என்ன செய்ய முடியும்? அந்தச் சனங்கள் வைத்த ஒப்பாரி. w வாகனங்களில் ஏற்றப்பட்ட அந்த அப்பாவி இளைஞர்களுக்கு என்ன நடந்தது? எந்தக் குழியில் போடப்பட்டார்களோ? ஐயோ. கடவுளே இதற்காகவா எங்களினத்தைப் படைத்தாய்?
அடக்குமுறைக் கலவரத்தினை அருளானந்தம் இலக்கியமாக்கிய முறைமை அவரின் மொழியில் கூறுவதானால். மனதைப்பிழிந்து உதிரத்தைச் சொட்டுச் சொட்டாக உதிரச் செய்கிறது.
நாடிழந்து, வீடிழந்து ஆதரவிற்காக அகதி முகாமில் தஞ்சமடையும் நிலை. ஆனால் அந்த அகதி முகாமுக்குள் இருந்தே அகதிகள் வகை தொகையின்றி கைதாகிப் பின்னர் படுகொலை செய்யப்பட்டு படுகுழிகளில் தாக்கப்படுகிறார்கள். எம் மண்ணில் வேரூன்றியுள்ள இத்தகைய கலாசாரத்தினையும் அதன் வழியாகத் தோன்றும் தமிழ் மக்களின் அநாதரவான நிலைமையினையும் இக்கதையினுடாக அருளானந்தம் அழகாகச் சித்திரித்துள்ளார்.
"டேய் கிண்ணியாக்காரன் உண்மையான முஸ்லிம் சகோதரன்டா. இங்க வந்திருப்பவர்களில் ஒருதரும் கிண்ணியாக்காரன் இல்லை. இந்த மண்ணுல பிறக்காதவன் நீ!” என்ற கூற்று அம்மண்ணில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களினிடையே நிலவும் அந்நியோன்னியமான அன்புப் பிணைப்பினை சுட்டுவதாக அமைகின்றது.
"அப்பி ஒக்கொம மேறட்டே மினிசு. ஐ ஆம் சொறி” என நடந்த கலவரத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு ஜீப்பில் மறைகின்றார் படை அதிகாரி.
இதயச்சுமை சற்று இறங்கியது போல் உணர்வு. நான் இப்போதும் அகதி முகாமில். எனக் கதையினை ஆசிரியர் முடித்திருப்பது; எங்கோ ஒரு மூலையில் சமாதானத்தின் ஒளிக்கீற்று தோன்றுவது போல மனிதம் முற்றாகவே இறந்து தோன்றுவது போல மனிதம் முற்றாகவே இறந்துவிடவில்லை என்பதனை உணர்த்தி ஒரு நம்பிக்கை தருவதாக உள்ளது. ஆசிரியராக, அதிபராக, கல்விப்பிணிப்பாளராக அருளானந்தம் பல்வேறு
14

படிநிலைகளிலும் இருந்து பெற்ற அனுபவங்கள்; “வெற்றியின் கதவுகள், மனச்சுமை போன்ற படைப்புகளில் ஊடுருவி நிற்க, சாதக, பாதக அமிசங்களால் பெண்நிலை வாதிகளின் கவனத்தை ஈர்க்கும் கதைகளாக ‘பரிமளம்', ‘ஒரு பெண்ணின் குரல் போன்றன விளங்குகின்றன.
அனைத்துக் கதைகளையும் ஒரு சேரப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளபோது கேணிப்பித்தனின் பலத்துடன் பலவீனமும் வெளிப்படுகின்றது என்ற கலாநிதி செ.யோகராசாவின் (கருணையோகன்) கூற்று அருளானந்தத்திடம் காணப்படும் சமூக நோக்கும், கூரிய அவதானிப்பும், உளவியல் சார்ந்த பார்வையும் எதிர்காலத்தில் சீர்மையெய்தி சிறப்புற்று மேலும் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளை நல்க வைக்கும் என்பதனைக் கட்டியங் கூறுவதாக அந்த ஆவணி ஆறு' எனும் இந்நூல் விளங்குகின்றது என்பது விவாதமற்ற கூற்றாகவே அமையவல்லது.
in
இரவுக்காய் ஏங்கும் இவன்
ஒவ்வொரு நாளும் எப்போது வருவார்கள்
நடு நிசிப் பொழுது எங்கே ஓடலாம்
நட்சத்திரங்களை என்ற கனவுகள்
எண்ணியபடி அடிக்கடி வந்து
உறங்கப் போவேன். முழிப்பு தரும்.
தூரத்தே குரைக்கும் கருக்கல் பொழுதின் நாய்களின் அலறல் விடியல் வானில் பறக்கும் மனசுக்கு தெம்பு தரும் சாக்குருவியின் ஒலத்தில் கண்கள் கசக்கி மனசதிரும். மூளை பிழிந்து வீட்டில் மட்டுமென்ன எழுந்து அமருகையில் றோட்டில் கூட கண்கள் மட்டும் எல்லோரும் உறங்கிய பின்பும் இரவுக்காய் ஏங்கும். என் விழித்தல்
நிமிடங்களை எண்ணியபடி,
15

Page 9
தொப்பி
திக்குவல்லை கமாலி
தொழுது முடிந்து எழுந்தபோது தான் கவனித்தேன். இம்தியாஸ் ஏன் இடுப்பில் கைகுத்தியபடி என்னையே பார்த்து இப்படிச் சிரித்துக் கொண்டிருக் கிறான்? வேறொரு இடமாகவிருந்தால் "ஓஹோ” வென்று கத்தியிருப்பான்.
"பெரிய புதினமாயிக் கி. வெள்ளத் தொப்பி போட்டுக்கொண்டு தொழுத."
எனக் கு இப் பொழுதுதான் விஷயமே புரிந்தது. கேட்டுக் கொண்டிருப்பார்கள்! என்ன பதில்
சொல்வதென்று எனக்குப் புரியவில்லை.
"சொகப்புத் தொப்பி. இல்லாட்டி மொட்டத்தல. இன்டக்கி."
தொடர்ந்தும் தனது ஆச்சரியத்தை முன் வைத்தான் இம்தியாஸ்.
“எதிர்பாக்காம நடந்த விஷயமப்பா இது"
நாண் சொன்னதை அவள் ஏற்காமலிருக்க நியாயமில்லை. அவசரக் குடுக்கைகளதும் ஞாபகமறதிக்காரர் களதும் பயன்பாட்டுக்காக, பெட்டி யொன்றில் போட்டு வைக்கப் பட்டுள்ள பிளாஸ்திக் தொப்பிகளில் ஒன்றுதான் அது என்பது எல்லோருக்கும் வெளிச்சம். "சரிசரி எப்பீடிந்தாலும் நல்ல விஷயம். இனி வெள்ளத்தொப்பி போட்டுத் தொழுதாச் சரி”
எனக் குள் ஒரு குணர் டைப் போட்டவிட்டுப்போனான் அவன்.
ஒரு சின் ன விஷயந்தான். இருந்தும் என் மனசுக்குள் அது பெரிதாகச் சுழன்றடித்தது.
பள்ளிவாசலி வெளிப் புறப்
படிக் கட்டிலி அப்படி அமர் நீ து கொண்டேன். வீட்டில் போய் பிடுங்க என்னதானிருக்கிறது. நல்ல காற் றோட்டம் வேறு.
எங்கள் வாப்பா ஒரு கடுமையான பேர்வழி. சின்ன வயதில்கூட ஐந்து நேரமும் பள்ளிக்குப் போகாவிட்டால் இனித் தப்பவே முடியாது. நான் பள்ளிக்குப் போகிறேனா இல்லையா என்பதைக் கவனிக்க ஸிஅய்டீ வேறு போட்டிருந்தார். அந்த ஸிஅய்டிமார்க ளெல்லாம் எனது சமகால நண்பர்கள். அதுதான் வேடிக்கை.
அவர்கள் எனது நண்பர்களாக இருந்தாலும் கூட வாப்பா எனக்குத் தரும் தண்டனைகளைப் பார்த்து ரசிப்பதில் அவர்களுக்குப் பேரானந்தம். மாலையில் எமக் கெல் லாம் விளையாட்டுத்தான். ம.ரிபுக்கு பாங்கு சொன்னாலும் எமக்க விளங்காது. விளையாட்டை முடித்துக்கொண்டு நேரே பள்ளிக்குத்தான் ஓடுவோம்.
கட்டைக் களிசான் பொக்கற்றில் தொப்பியிருக்கும். விளையாட வரும்போதே ஸாரத்தையும் வேறு கொண் டுவருவோம் . இடையில் வீட்டுக்குப் போகத் தேவையில்லை. களிசானுக்க மேலால் ஸாரத்தைக் கட்டிக்கொண்டால் சரி.
ஒரு நாள் தொழுதுகொண்டிருக்கும் போது படாரென்று என் தலையில் ஒரு குட்டு விழுந்தது. திடுக் கிட்டு தொழுகையை விட்டுவிட்டு திரும்பிப் பார்த்தேன்.
*எநர் கியென் டா தொப் பரி?
16
 

தொப்பில்லாமலயா தொழுகிய. வாப்போட செல்லுவன்"
அபுஸாலி காக்கா கோபத்தோடு கேட்டார். வாப்பாவோடும் மிக நெருக்க மான பேர்வழி அவர்.
நான் டக்கென்று தலையைத் தொட்டுப் பார்த்தேன். தலையிலே தொப்பி இல்லாத சங்கதி அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அவசர கோலத்தில் வந்து தொழுதிருக்கிறேன். உள்ளே களிசான் பொக்கற்றுக்கள் தொப்பி அப்படியே கிடந்தது.
“நெனவில்லாப் பெய்த்த ஸாலி
காக்கா. நான் நெனச்ச போட்டிக் கென்டு. இது" என்றவாறே தொப்பியை வெளியெடுத்தபோது அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது.
"சின்னப் புள்ளயஞக்கு இப்பிடி நெனவில்லாப் போறாமா. தொழு”
"வாப்போட மட்டும் செல்லவாண
ஸாலி காக்கா"
வாப்பாவிடம் அடி கிடைத்துவிடுமே என்ற பயம் எனக்கு.
"நான் செல்லியல்ல. தொழ வராம மட்டும் கூத்தாடிக்கொண்டு திரியாதே" அன்று முதல் பள்ளிக்கு காலடி வைக்கும் போதே தொப்பி ஞாபகம் வந்துவிடும்.
அந்நாட்களிளெல்லாம் பெரு நாளைக்கு உடுப்புத்தைக்கும் போதே, தொப்பியும் சேர்த்தே வாப்பா தைத்துத் தருவார் . நடுவில் ஒரு அளவுக்கொரு குறுவட்டம். நெற்றியைச் சுற்றி பெருவட்ட அமைப்பில் தொப்பி
தயாராகிவிடும். எல்லோருமே இப்படித் தொப்பிதான் போடுவார்கள். அதுவும்
வெள்ளைத்தொப்பி.
காலப்போக்கில் தொப்பி ஃபெஷன் வேகவேகமாக மாறத் தொடங்கியது. இந்திய வியாபாரிகளும் ஹஜ்ஜுக்குப் போவோரும் விதவிதமான தொப்பிகளை
17
சதம்
அறிமுகப்படுத்தினார்கள். வற்றையும்போல தொப்பி பழசுபடு முன்பே இன்னொரு ஃபெஷன் வந்து சேர்ந்துவிடும்.
ஒரு கட்டத்தில் எங்கு பார்த்தாலும் சிவப்புத்தொப்பிகள். ஜும்ஆ தொழு
கையின்போது பார்த்தால், பள்ளி வாசலுக்குள் ஒரு ரோஜாவனம் மலர்ந் ததுபோல.
சிவப்புத் தொப்பியென்றாலே சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. "நாயகமாங்க வெறுத்த கலர்” என்றெல் லாம் பயான் பண்ண ஆரம்பித்து விட்டார் கள். அதற்காக அதையாரும் விட்டு விடவில்லை. அதேநேரத்தில் பச்சை யென்றால் "அது முஸ்லிம்கடை கலர்" என்று சொல்லவும் தவறவில்லை.
எப்படியோ அடுத்த ஃபெஷன் வந்ததும் தான் வந்தது, சிவப்புத் தொப்பிகள் ஓரம்போய்விட்டன.
நானென்னவோ பிடித்த பிடியை
விடவேயில்லை. ஒன்றுக்கு மூன்று
தொப்பிகளைக் கைவசம் வைத்திருந்தேன். எங்காவது சிவப்புத் தொப்பியொன்றைக் கண்டால் அது நான்தான் என்ற நிலை உருவாகி விட்டது.
காலப்போக்கில் தொப்பி கட்டாய மானதல்ல என்பதை பகுத்தறிவு காட்டிக் கொடுத்துவிட்டது. இப்பொழுதெல்லாம் ஜும்ஆ தொழுகையில்கூட தொப்பி யில்லாத் தலைகள் ஏராளம்.
வேலைவிட்டு வரும்போதே நேரம் பிந்திவிட்டது. இமாம் ஜமாஅத் கிடைத்தால் மனசுக்கு மகிழ்ச்சி.
சுணங்கி வந்துவிட்டு ஜமாஅத்தை எப்படி எதிர்பார்ப்பது? சிலநேரம் அஸனா லெப்பை போன்ற லேட் கோச்சிகளும் வருவதுண்டுதானே! அந்த நப்பாசையில் எட்டியெட்டிப்பார்த்தேன் கிட்டவில்லை. வுழு செய்துகொண்டு உள்ளே
எல்லா

Page 10
கைலாசபதியின்
"வீரயுகப்பாடல்கள்” பற்றிய ஆய்வு
அ. முகம்மது சமீம் மார்க்சீயத் தத்துவத்தில் ஊறித்திளைத்திருந்த பேராசிரியர் கைலாசபதி, பண்டைய தமிழிலக்கியத்தை மார்க்சீயக் கண்கொண்டே பார்த்தார். பண்டைய தமிழர்களின் வாழ்வையும், அவர்களது வாழ்வைப் பிரதிபலித்த அவர்களுடைய இலக்கியங்களையும், மரபுவழி முறையில் பார்க்காமல், விஞ்ஞான முறைப்படி பார்த்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர்தான் கைலாசபதி, சமூகச் சூழ்நிலை யிலிருந்து மனிதனைப் பிரித்துவிடமுடியாது. ஒரு சமூகத்தின் சூழ்நிலையிலிருந்து தோன்றும் மனிதன், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால் பாதிக்கப்படுகிறான். ஒரு சிந்தனையாளன் அச்சமூகத்தின் இதயத்தைப் பிரதிபலிக்கிறான். ஒரு சிந்தனை யாளன் எவ்வளவு தூரம் சமூகத்தின் சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறானோ, அவ்வளவு தூரம் அவனுடைய சிந்தனைகள் அச்சமூகத்தின் சிந்தனைகளை மாற்றியமைத்து, அதனை வழிநடத்திச்செல்கிறது. இச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்தான் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குக் காரணமாயமைகின்றன. அப்படி யொரு சிந்தனையாளர்தான் பேராசிரியர் கைலாசபதி.
கைலாசபதி, 1933ம் ஆண்டுக்கும், 1982ம் ஆண்டுக்குமிடையில் வாழ்ந்த ஒரு மனிதன். 'சமூக சூழ்நிலைகளும் மாற்றங்களும்தான் ஒரு மனிதனை உருவாக் குகிறது என்ற தத்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டால், கைலாசபதியும் இக்கால கட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்ளினால் பாதிப்படைகிறார். சமூகமாற்றங்கள் ஏற்படு வதற்கு அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு பெரும் காரணமாயமைகின்றன. இலங்கை அரசியலிலும், உலக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட காலகட்டம் இது.
1933ம் ஆண்டில் சர்வஜனவாக்குரிமையையும், டொனமூர் அரசியல் திட்டத் தையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் இலங்கையில் அமூல் நடத்தினர். சுருங்கச் சொன்னால், இலங்கை மக்களுக்கு உள்நாட்டு விவகாரத்தில் ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டதோடு, பொதுசன வாக்குமூலம் தமக்கு வேண்டியவர்களைத் தெரிவு செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது.
சர்வதேச மட்டத்தில் மார்க்சீய சித்தாந்தத்தின் அடிப்படையில் சோஷலிச அரசாங்கமொன்று சோவியத் யூனியனில் ஸ்தாபிக்கப்பட்டது. சோவியத் யூனியனை மையமாக வைத்து சர்வதேச கம்யூனிச இயக்கம் உலகெங்கும் பரவியது. இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையிலும் சோஷலிசக் கருத்துக்களை மையமாக வைத்து இடதுசாரிக்கட்சிகள் தோன்றின. இக்கட்சிகள் அரசியலிலும் காலடி வைத்தன. உலக மகாயுத்தம் முடிவடைந்ததோடு, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் காலனித்துவ ஆட்சி முடிவடைந்தது. ஆங்கில ஆட்சியாளருக்குச் சேவகம் செய்த ஒரு வர்க்கத்தினர், சுதந்திர இலங்கையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றனர். இதேவேளையில் இவ்வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளின் சோஷலிச கருத்துக்கள் பரவின. இடதுசாரிக் கட்சிகளின் கருத்துக்கள், மத்தியதர வர்க்கத்தினர் மத்தியிலும், குறிப்பாக மாணவர் மத்தியிலும் பரவியது. பெரும்பாலும், மாணவர் இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களாகவே செயற்பட்டன. குறிப்பாக சர்வகலாசாலை மாண வர்கள் மத்தியில் இவ்வியக்கங்களின் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றன.
(18) ஞானமி

1956ம் ஆண்டில் இடதுசாரி இயக்கங்களைச் சார்ந்த, தேசிய பூர்ஷாவா வர்க்கத் தினர் ஆட்சியை அமைத்தனர். மார்க்சீயக் கருத்துக்கள், அரசியல், கலாசாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் பரவின.
இதே காலகட்டத்தில் இந்தியாவிலும் மார்க்சீய கருத்துக்கள் இலக்கியத்தில் செல் வாக்குப் பெற்றன. பாரதி ஒரு தேசிய, புதுமைக் கவிஞனாக இனங்காணப்பட்டார். நாற்பதுகளில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம் காரணமாக இலக்கியத்தில் ஒரு புதிய உத்வேகம் தோன்றி யது. புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, பி.எஸ்.ராமையா போன்றவர்கள், சிறுகதை இலக் கியத்திற்கு புதுமெருகூட்டி ஒரு புதிய மரபை உருவாக்கினார்கள். ப.ஜீவானந்தம், எஸ்.இராம கிருஷ்ணன், பாலதண்டாயுதம், சிதம்பர ரகு நாதன், போன்றவர்கள் மார்க்சீயக் கண்ணோட் டத்துடன் இலக்கியத்தை அணுகினார்கள். இதே காலகட்டத்தில், கல்லூரி மாணவனாகவும், சர்வகலாசாலை மாணவ னாகவும் இருந்த கைலாசபதி, இவ்விடதுசாரி இயக்கங்களின் சோஷலிச கருத்துக் களாலும், தென்னிந்திய மார்க்சீய இலக்கியவாதிகளின் சிந்தனைகளாலும் பாதிக்கப் பட்டார். கைலாசபதியின் ஆரம்பகால எழுத்துக்களில், சோஷலிச கருத்துக்கள் இருப்பதைக் காணலாம். இலங்கையில் முற்போக்கு இலக்கியம் வளர்வதற்குக் கைலாசபதி ஒரு ஊன்றுகோலாக அமைந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தைத் தோற்றுவித்து அதன் தலைமைக் குழுவில் ஒருவராகவும் கைலாசபதி செயல்பட்டார். 、.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலங்கை இலக்கிய வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இலவசக் கல்வி காரணமாக, இலங்கையில் எழுதவும், வாசிக்கவும் கூடிய ஒரு இளம் சமுதாயத்தினர் தோன்றலாயினர். தென்னிந்திய தமிழிலக்கியங்களின் பாதிப்புக்குள்ளாகியிருந்த இவர்களின் பார்வை யை இலங்கையின் பக்கம் திருப்பிவிட்டனர் இம்முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர். தமிழ்நாட்டு சூழலை வைத்து, தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகளைப் படைத்த வைத்திலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்றவர்களின் படைப்புக்கள் இப்புதிய தலைமுறையினரின் மத்தியில் செல் வாக்கிழந்தன. இலங்கை மண்ணையும் இலங்கை மக்களின் பண்பையும் பிரதி பலிக்கின்ற கதைகளை இலங்கை எழுத்தாளர்கள் படைக்கத் தொடங்கினர்.
முதலாளித்துவ சமுதாயத்திற்கும், தொழிலாளர் சமுதாயத்திற்கும் இடையே தோன்றிய முரண்பாடு இலக்கியத்திலும் பிரதிபலித்தது. பண்டித வகுப்பினருக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையே முரண்பாடு வளர்ந்தது. மரபு, ஆத்மீகம் என்று கூறிக்கொண்டு, மக்களின் உணர்ச்சிகளைச் சிறுமைப்படுத்தியது இவ்வர்க்கம். இலக்கியம், மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தவேண்டும், அவர்களுடைய பொழுதுபோக்காக அமையவேண்டும், என்று வாதாடிய இம்மரபினர், பாமர மக்களின் மொழியை இழிசனர் வழக்கென்றும், இம்மொழியை இலக்கியத்தில் புகுத்தப்படல் கூடாதென்றும், இதனால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்றெல் லாம் கூறி முற்போக்கு எழுத்தாளரைச் சாடினர். இதற்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாம், மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, மக்களின் வளர்ச்
ஜூன் -2001 டு

Page 11
கல்வித்துறை நிபுணத்துவ ஆலோசகராகக் கடமையாற்றுகிறார். இவருடைய பதவிகளும் பொறுப்புணர்வும் தமிழ் இலக்கிய உலகிற்கு பயனுள்ள பல ஆக்கங்கள் கிடைக்க வழிகோலியுள்ளன என்றால் அது மிகையல்ல.
கல்வி அமைச்சின் சைவசமயக் கல்வி ஆலோசகராகக் குழுவின் உறுப்பினராகவும், இலத்திரனியல் ஊடகங்களின்(வானொலி, தொலைக்காட்சி) சைவசமய நிகழ்ச்சி ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சைவநெறி, கல்வித் தத்துவம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு கொண்டு ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதி, சொற்பொழிவாற்றி சிரத்தை காட்டி வருகிறார். சைவ நற்சிந்தனை தொடர்பான இவரது வானொலி உரைகள் சிறப்பிடம் பெறுகின்றன. நாவலர் பெருமான் வழிநின்று சைவமும் - தமிழும் தழைத்தோங்கபாடுபட்டு வந்தோர்களுள் திரு குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இன்று அகிலஇலங்கை சமாதான நீதவானாகவும் உள்ளார் என்பது அர்த்த புஷ்டியானது.
"நன்கு சிந்தித்துத் தெளிந்தபின்னரே எழுத்தில் வடிக்கவேண்டும். அதன் பின் ஒரு முறை எழுதியதை திருப்பி அழித்து எழுதுதல் தனக்கு உடன் பாடற்றதெனக்" கருத்துரைக்கும் இவர் விமர்சனம் பற்றிய கருத்துக்களில் சற்று வித்தியாசமான போக்குகளைக் கொண்டவர். நாவலாசிரியர் மு.வரதராசரின் நாவல்களைப் படித்துத் தமிழ் கற்றோம் நாங்கள். ஆனால் இன்றைய சில விமர்சககள் மு.வரதராசன் இதுவரை எழுதிய எவையும் நாவலில்லை என்று குறிப்பிடும்பொழுது இக்கருத்தை என்னால் ஏற்கமுடியாதுள்ளது என்றும், பாரதியை இன்று தாக்கி எழுதுபவர்கள், அன்றைய சூழ்நிலையில் பாரதி எழுதியதை அக்காலத்தை அடிப்படையாக வைத்து பார்க்கத் தவறுகிறார்கள் என்றெல்லாம் குறிப்பிடுவது புதிய சிந்தனை என்றே குறிப்பிடவேண்டும்.
"புதுமை வரவேற்கப்படவேண்டியது. இல்லாததிலிருந்து எதுவும் தோன்றமுடியாது. உள்ளது சிறத்தல் தான் புதுமை. அந்த வகையில் பழமையிலிருந்துதான் புதுமை தோன்றவேண்டும்; தோன்றவும் முடியும். இன்றைய புதுமை நாளைய பழமை. நாளைக்கு முகிழ்க்கும் புதுமைக்கு அந்தப் பழமைதான் அடித்தளம் ஆகும்; பழையன காலத்திற்கு ஒவ்வாததாயிருந்தால், அது கழிந்தே தீரும். ஆனால் நாம் வலோற்காரமாகக் கழிப்பது, இயற்கைக்கு விரோதம். நாம் இன்று அதிக அளவு தூரத்திற்குப் பார்க்க முடிகிறதென்றால், நம் முன்னோர்களின் தோள்களில் நின்று பார்த்தாலே அது இயலுகிறது. தோள்களிலிருந்து கீழே இறங்கிப் பார்த்தால், குறைந்தளவு தூரத்தையே பார்க்கக் கூடியதாக இருக்கும். நம் முன்னோர்களின் தோள்கள் என்பன, வழிவழி வந்த சமூக மரபு ஆகும். சமூக மரபு என்பது பழமைதான சூரியனும், சந்திரனும், ஏன் இந்தப் பூமியும் பழயனதான். அவற்றை வேண்டாமென்று விலக்கிடமுடியுமா? பழமை என்பது பின்னோக்கு - பிற்போக்கு அல்ல. நாம் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தால்தான் பின்னோக்கு. அதைச்செய்யாமல் எவரும் முற்போக்காளராக முடியாது. அப்படிச் செய்தால் அது பாசாங்கு" என்ற கருத்தை முன்வைக்கும் இவரிடமருந்து தமிழ் இலக்கிய உலகம் காத்திரமான - கனதியான பல இலக்கியங்களை வேண்டி நிற்கிறது.
இவரது 'மனித மேம்பாட்டுச் சிந்தனைகள் என்ற நூல் இவ்வருட முடிவிற்குள் வரும் என்ற தகவலை அறியும்போதும், இன்னும் பல சீரிய கருத்துக்களை நவீன இலக்கியத்திற்குத் தந்து, தமிழ் இலக்கிய களத்தை சிறப்பாக்க வேண்டும் என வாசகர்கள் ஆதங்கப்படுவது அவசியமான ஒன்றே.
20

ஆனந்தனின் சமூக இலக்கியப் பணிகள்
ஆனந்தன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆனந்த குமாரசாமி சம்மாந்துறையில் இந்துமத உயர்குடியிற் பிறந்தவர். சாதி மதப் போக்குகளுக்கு அப்பாற்பட்டு நின்று சிந்திப்பவர். சம்மாந்துறை முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற இவர் தனது க.பொ.த பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் திறமைச் சித்தியும் பெற்றிருந்தார். 1960-63 காலப்பகுதிகளில் தமிழரசுக்கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். இது பிற்காலத்தில் அவரது பேச்சுவன்மைக்குத் தூண்டுகோலாக அமைந்தது. அத்தோடு அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்த திராவிட இயக்கச் சஞ்சிகைகளும், கொள்கைகளும் பகுத்தறிவு வாதச் சிந்தனைகளுக்குத் தளமிட்டன. ஒரு காலகட்டத்தில் தீவிர மாக்சிய வாதியாக மாறிய ஆனந்தன் கருணைமிக்க விமரிசகராகவும் காத்திரமான கருத்துக்கள் கொண்டவராகவும் காணப்பட்டார். 1960-65 காலப்பகுதியில் பகுத்தறிவு மன்ற அங்கத்தவராகச் செயற்பட்டார். இவ்வமைப்பினுடாக சமூக சீர்கேடுகளைச் சாடினார். சாதியின் பேராலும் மதத்தின்பேராலும் மேற்கொள்ளப்படும் கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுத்தார். கோயில்களில் பலியிடலுக்கு எதிராக “ஆலயவழிபாடா? அறியாதாரின் வெறியாட்டமா?” என்னும் துண்டுப்பிரசுரம் இவரால் வெளியிடப்பட்டபோது ஏற்பட்ட பல இளைஞர்கள் கத்திக் குத்துக்கு இரையாகினர்.
தனது கருத்துக்களை வெளிப்படுத்தச் சிறந்த ஊடகமாக நாடகத்தைத் தெரிவு செய்து கொண்ட ஆனந்தன் கலைவட்டம் என்ற அமைப்பையும் உருவாக்கினார். இவ்வமைப்பினுடாக பகுத்தறிவுக் கருத்துக்களை மையமாகக் கொண்ட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
1968-69களில் வயல்களில் நெல் அறுவடை செய்யும் தொழிலாளர்கள் போதிய சம்பளமின்றி இன்னலுற்றனர். தட்டிக்கேட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். வெளியிடங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். போடிமார்களின் எதேச்சதிகாரம் அதிகரித்தது. இதன் விளைவாக சம்மாந்துறையில் 1000 தொழிலாளர்களைக் கொண்ட சங்கத்தை அமைத்ததோடு போடிமாருக்கெதிரான கிளர்ச்சியில் வெற்றியும் பெற்றார். இச்சம்பவம் ஆனந்தனுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கையும் மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது.
ஆனந்தனது நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் எப்பொழுதும் படிப்பறிவற்ற சாதாரணமக்கள் மத்தியிலேயே காணப்பட்டன. மக்களது முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியமென்பதை உணர்ந்த ஆனந்தன் சமூகமாற்றத்திற்கான அடித்தளங்களை மிக அற்புதமாகவே இட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த தொழில் உறுதுணையாகவிருந்தது. தபால் சேவகரான ஆனந்தன் வெறுமனே காகிதங்களை மட்டும் காவிச்செல்லவில்லை. இளைஞர்களிடையே சிந்தனைத் தீயை வளர்க்கக்கூடிய பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் எடுத்துச் சென்றார். முற்போக்குச் சிந்தனை மிக்க இளைஞர்களுடன் உரையாடினார். இலவசமாகவே நூல்களை வாசிக்கக் கொடுத்தார். நடமாடும் நூலகமாகத் தொழிற்பட்ட ஆனந்தன் சிறந்த வாசகர் கூட்டமொன்றை உருவாக்கினார். சிறந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் உருவானார்கள். இதன் விளைவாகச் சம்மாந்துறையில் வாசகர் வட்டமொன்றை ஆரம்பித்ததோடு தொழிற்சங்க மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு பத்திரிகையொன்றையும் வெளியிட்டார்.
21

Page 12
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களில் விடுதலைக்காகப் போராடியவர் டாக்டர் அம்பேத்கார். அம்பேத்காரின் சிந்தனைகள் ஆனந்தனை மிகவும் ஈர்த்தது. சம்மாந்துறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கிராமத்தை உருவாக்கினார். அக்கிராமமக்களது அடிப்படைவசதிகள், நலன்களைக் கவனிப்பதில் கூடிய காலத்தைச் செலவு செய்தார். இக்காலகட்டத்தில் உத்தியோக உயர்வு போன்றவற்றை உதறித் தள்ளினார். உத்தியோக உயர்வு மக்களிட மிருந்து தன்னை அந்நியப்படுத்திவிடுமோ என்ற கவலை அவருக்கிருந்தது.
இந்தியாவில் 'மாக்சிய சிந்தனைகளை முதலில் உள்வாங்கிக் கொண்டது கேரளம்தான். மலையாளத்தினூடாகவந்த இலக்கியங்கள் மாக்சிய சிந்தனைகள் செறிந்தவையாகவிருந்தன. சொறிகல்முனையில் வாழ்ந்த 'எல்மோ Fathar மூலம் மலையாள மொழியைக் கற்றுத்தேர்ந்தார். மலையாள இலக்கியங்களை விரும்பிக் கற்றார். தமிழிலே சிறந்த படைப்பாளிகளாக விளங்கும் தோப்பில் முகம்மது மீரான், சுந்தர ராமசாமி, நீலபத்மநாதன், ஆ.மாதவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் போன்றோர் மலையாள எல்லைப்புறக் கிராமங்களில் வாழ்ந்தவர்கள். மலையாளக் காற்றைச் சுவாசித்த இவர்களது படைப்புகளில் மலையாளத்தில் வளர்ச்சிபெற்ற புனைகதை இலக்கியங்கள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆனந்தனும் வைக்கம் முகம்மது பஷிர், தகழி சிவசங்கரன் போன்றோரது படைப்புகளை விரும்பிக்கற்றார்.
ஆனந்தனது காதல் திருமணம் மட்டக்களப்புக்கும் சம்மாந்துறைக்கும் பாலமமைத்தது. மட்டக்களப்பில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் செயற்பட்ட போதும், படித்த இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட வாசகர்வட்டம் காத்திரமான இலக்கிய நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. வாசகர்வட்டம் ஆரம்பகால உறுப்பினர்களாக சிவராம், தேவகாந்தன், கேசவன், திவாகரன், கருணாநிதி என்போரைக் கொண்டு செயற்பட்டது. வாசகர் வட்டத்தின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஆனந்தன். தனது இலக்கியப் பணியை விரிவுபடுத்தும் நோக்குடன் வாசகர் வட்டத்தோடு இணைந்து கொண்டார். ஆனந்தனது அறிவும், ஆற்றலும் வாசக வட்டத்தினரை வெகுவாகக் கவர்ந்தன. தமது 84வது வயதில் வைக்கம் முகம்மது பஷீர் இறந்தபோது ஆனந்தன் அங்கம் வகித்த வாசகர் வட்டமே அவருக்கான முதல் அஞ்சலியைச் செலுத்தியது. வைக்கம் முகம்மது பஷிர் பற்றிப் பேசிய ஆனந்தன் அவரது உள்ளத்திலே ஊறியிருந்த மலையாளம் மீதான பற்றையும் மலையாளப்படைப்புகள் படைப்பாளர்கள் மீது கொண்டிருந்த ஆர்வத்தையும் தெளிவாக்கினார். தகழியின் செம்மீன், இரண்டங்களி(இரண்படிகள்) போன்ற நாவல்களைத் தன்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் படைப்பாளிகளிடம் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார். மலையாள இலக்கியம் பற்றிய உரைகளை பல்கலைக்கழக மட்டத்திலும் சாதாரண வாசகர் மட்டத்திலும் நிகழ்த்தினார். இவ்வாறு மலையாளத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ஆனந்தன் மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்க்க முயன்றது தற்காலிக நிகழ்ச்சியல்ல.
மலையாள எழுத்தாளர்களான ரிஷிஜோன், சிநேகப்பிரியா, அஜித்கெளர், பி.எம்.சுகிற், பி.ஹரிகுமார், ஜோயி(திருமூலபுரம்), கிளிரூர் ராதாகிருஷ்ணன், ரி.என்.பாலச்சந்திரன், சுரேஸ் பாஸ், போளி மணியாட்டு போன்றோரது சிறுகதைகளை மொழிபெயர்த்தார். ஏறக்குறைய பதினெட்டு சிறுகதைகள் வெளிவந்தன. இவரது 19வது சிறுகதை பாதி மொழிபெயர்ப்பின்போது நின்றுபோனது. இவர் மொழிபெயர்த்த கதைகளுள் ஆனந்தராகவனின் அவஸ்தை,
22

திரியும் தீபமும், விடுதலை, கப்பல், அனந்தநாயர், நசரேத்தில் ஒரு பொம்மை, மேரியின் காதலன், ஸ்திரிக்கதை, வெள்ளிக்காசுகள், அலிபாபாவின் மரணம், ஒரு மனோதத்துவப்பிரச்சினை, சினிமா போன்றன சிறப்பான கதைகளாகும்.
மொழிபெயர்ப்பு, சிறுகதை என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாது சிறந்த கவிதைகளையும் படைத்தார். இவரது கவிதைகளில் சமூக ஊழல், யுத்தக்கெடுபிடிகள், பெண்ணுரிமை, போன்றவை பொருளாக அமைகின்றன. இவற்றைத்தொகுத்து ஆனந்தனின் கவிதைகள் என்ற பெயரில் வாசகர் வட்டத்தினர் வெளியிட்டனர். இதேபோல் சிறுகதைகளும் நூலுருப் பெறல் அவசியமாகும்.
நூல்வெளியீடுகள், கருத்தரங்குகள், விமரிசன அரங்குகள், விழாக்கள் போன்றவற்றில் ஆனந்தனது கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன. ஆனந்தனின் கருத்து என்ன என்பதில் எல்லோரது கவனமும் திருப்பப்பட்டிருந்தது. அந்தளவுக்கு காத்திரமான கருத்துக்களை முன்வைத்தவர். மட்டக்களப்பின் படைப்பாளர்களுள் பித்தன், எஸ்.எல்.எம்.ஹனிபா, எஸ்.பொ போன்றோரைத் தவிர்த்துவிட்டுப் பார்ப்பின் காத்திரமற்ற சிறுகதைகளே வெளிவந்துகொண்டிருந்தன. அவை ஆனந்தவிகடன், கல்கிப் பாணியை நினைவூட்டின. இத்தகைய சூழலில் ஆனந்தனது விமரிசனங்கள் காரசாரமாகவிருந்ததில் வியப்பில்லை. நவீன கவிஞர்களாக புரட்சிக்கமால், சாருமதி, வாசுதேவன், எம்.எல்.எம்.அன்சார், என்.ஆத்மா என்போரை அடையாளப்படுத்தினார்.
ஆனந்தன் குறுகிய வட்டமொன்றுக்குள் நின்று செயற்பட்டவரல்ல. அவரது சிந்தனைகள் பரந்து விரிந்திருந்தன. மானிடநேயமும், மனிதாபிமானமும் செயல்களில் மிகுந்திருந்தன. "சத்திய ஜித்திரே" வைக்கல் முகம்மது பஷீர், சுப்பண்ணா, கருணாசேன ஜயலத், என்போரைத் தமிழுலகிற்கு அறிமுகஞ்செய்தார். அத்துடன் வாசகர் வட்டத்துட்ன் இணைந்து, எஸ்.பொ. மணிவிழா, திமிலைத்துமிலன் மணிவிழா, மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழா, நீலவாணன் நினைவுப் பேருரை, பித்தன் சிறுகதைப்போட்டி என்பவற்றோடு, இளம் கலைஞர்களுக்கான சிறுகதைப் பட்டறைகளையும் நடத்தினார். வீதிநாடகங்களை வீதிகளில் உலவவிட்டார். மட்டக்களப்புச் சுடர்மணிகள் என்னும் நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர்கள்பற்றிய பட்டியலொன்றை என்னிடம் காண்பித்தார். மேலும், வ.அ.இராசரத்தினம் எழுதிய தோணி என்ற சிறுகதையைக் குறுந்திரைப்படமாகத் தயாரிப்பதற்கான நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
ஆனந்தனது பணிகளில் மிகவும் வியந்து பாராட்டத்தக்கது நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளாகும். மட்டக்களப்பு, அம்பாறையில் வழங்கும் பட்டப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். நாட்டார் பாடல்களில் இடப்பெயர்கள் பற்றி கள ஆய்வில் ஈடுபட்டார். நாட்டார் மந்திரங்கள் மந்திரச் சடங்குகள், மாடுகளுக்கு இடப்படும் குறிகள் பற்றிக் கள ஆய்வுகளை மேற் கொண்டார். பெரிய தம்பிரான் சடங்குபற்றி கலாநிதி செ.யோகராசா மேற்கொண்ட ஆய்வுகளுக்கு உறுதுணையாக விளங்கினார். வாசகர் வட்டம் நாட்டாரியல் தொடர்பாக நிகழ்த்திய ஆறு கருத்தரங்குகளில் ஆனந்தனின் பங்களிப்பு இன்றியமையாதாக விளங்கியது. அத்தோடு காரைதீவில் நாட்டார் பாடல்கள் பற்றிச் சொற்பொழிவுகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஆற்றல்மிக்க ஒரு கலைஞனை, படைப்பாளியை, விமரிசகனை சமூக சேவையாளனை, சீர்திருத்தவாதியை, முற்போக்குச் சிந்தனையாளனை இலக்கியவுலகம் இழந்தது துரதிஷ்டமானதாகும். ஆனந்தனது கருத்துலகம் பற்றிக் காத்திரமான ஆய்வுகள் வெளிவருதல் மிகவும் அவசியமானதாகும்.
23,

Page 13
ஆண்மை தவறேல்
அவசரப்படுத்தினான் பஸ் கண்டக்டர். அவனை விட அவசரம் பஸ்ஸின் உள்ளிருந்த பயணிகளுக்கு. பஸ்ஸோ ஆமைவேகத்தில் ஒன்றை ஒன்று முட்டிவிடாத வரிசை நிதானத்தில் நகர்கின்றது. கண்டக்டர் யன்னலூடாக தலையையும் காசு விசிறிக் கையையும் வெளியே விட்டு பழக்க தோசத்தில் குரல் எழுப்பினான். ‘வெலிசற, மாபோல,
வத்தள, பேலியகொட, கொட்டுவ கொட்டுவ.
“மனுசர் இஞ்ச நிக்கவும் இட
மில்லை அவன் இன்னும் ஏத்துறதுக்கு ஆள் கூப்பிடுறான். ஓரிருவர் முணு முணுத்துக் கொண்டனர். யாருக்கும் வாய்திறந்து பேசும் வல்லமை இல்லை. சாக்குக்குள் பனங்கிழங்கு அடுக்குவது போல் சனங்களை அந்தக் கண்டக்டர் பஸ்ஸுக்குள் ஏற்றி யிருந்தான்.
சிவப்புக்கோடு அடிக்கும் முன் அலுவலகம் போய்ச் சேரவெண்டிய அவசரம். ஆனாலும் என்ன செய்வது; தினமும் இதுவே போக்கு வரத்து நிலைமை.
*ச். என்ன இது? ஒருத்தி சலித்துக்கொண்டு நெளிந்தாள். மீண்டும் அருவருப்பு சனியன், இதுக்கு எண்டு பஸ்ஸுக்குள்ள ஏறுதுகள் மீண்டும் நெளிந்து விலத்தி நின்று முறைத்தாள். அஜித் எதையும் உணர்ந்து கொள் ளாதவனாக நின்றான். 'முன்னுக்குப் போங்க, முன்னுக்குப் போங்க. கண்டக்டர் பின்னர் ஏறிய ஆட்களுடன்
உள்ளிருந்தவர்களையும் முன்னேறும்படி
நகர்த்தினான்.
錢 as
R
இப் போது
வேறொருத்தி நெளிந்தாள். அவளிடமும் அதே
அரு வருத்த முறைத்தல் கள் . உமிழ்கிறாள். அவளும் அஜித் மீதே தன் வெறுப்பைக் காறி உமிழ்கிறாள். அஜித் மருளவில்லை. கீழும்மேலும், பக்கமுகமாகப் பார்த்த அவளை முறைத் து விட் டு தனி பதில் முறைத்தலில் வெற்றி கண்டு தன் பார்வையை, எல்லையற்று, ஜன்னலுக்கு வெளியே வீசுகிறான்.
அஜித்துக்கு இது புது விடயம் அல்ல. பேர் ச்சலிங் அலுவலாக கொழும்பு செல்வதானால் அவனுக்கு ஒரே குஷி, ஏறும் பஸ்ஸுக்குள் இப்படி ஏதாவது ஒன்றை சுரண்டி அனுபவித்துக் கொண்டே செல்வான். ஆயினும் அவன் இதுவரை எந்த வில் லங்கத்திலும் மாட்டிக்கொண்டதில்லை. அதற்கேற்ப தன் அணுகுமுறைகளை வைத்துக் கொண்டான்.
காலில் தொடங்கி அவனது இம்சைகள் பஸ்ஸில் வரும் பெண்கள் மீது தொடரும். அவனது சேட்டைகளைத் தாங்க முடியாது பெண்கள் குமுறுவர். அந்தக் குமுறல் கை நீளல் ஆகாத வரைக் கும் அவன் தப் பித்துக் கொள்வான். அப்படி வரும் எதிர்வினை களைக் கூட பஸ்ஸின் சன நெரிசலைக் காரணமாக்கி அஜித் தப்பித்துக் கொள்வான். ஆனாலும் அவன் காணும் சுயஇன்பம் என்னவோ இந்த நெரிசலின் அங்க உரசல்கள்தான்.
அஜித் ஏ.எல் படிக்கும்போது அவனது அப்பா காலமாகிவிட்டார்.
24
 
 

அம்மாவுடன் அக்கா, தங்கை மூன்று பேரைச் சுமக்கின்ற பொறுப்பு அஜித்தின் தலையில் விழுந்தது.
விபரம் தெரிந்த நாளில் இருந்து நீர்கொழும்புதான் அவர்களின் வசிப் பிடம். சில்லறைக் கடை ஒன்றில் சிப்பந்தியாக இருந்த அப்பா எந்தவொரு பொருளாதாரத்தையும் சேர்த்து வைத்த தில்லை. நீர் கொழும்பில் ஒரு கட்டட ஒப்பந்த நிறுவனத்தில் சாதாரண எழுதுவினைஞனாகவே அஜித் சேர்ந் தான். இந்தப் பத்து வருட காலத்துள் அந்த நிறுவனத்தின் “பேர்ச்சனிங் மனேஜர் ஆகிவிட்டிருந்தான்.
அணி மையில் தான் அவனது அக்காவுக்கு திருமணம் நடந்தது. பொருள் பண்டம், சீதனம் ஆதனம் கேட்கும் மாப்பிள்ளைமார் களில் ஒருவனை முப்பத்தைந்து வயது அக்காவுக்கு மாப்பிள்ளையாக வாங்கிக் கொடுத்தான். பின்னால் ஒரு தங்கச்சி இருக்கிறாள். அவளுக்கும் இருபத் தைந்து வயது தாணி டிவிட்டது. பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக் கொண்டு அவளும் வேலை தேடும் படலத்தில் இறங்கியுள்ளாள்.
இந்தக் கால நீடிப்புகளுள் அஜித் தன்னுள் அடக்கி வைத்த ஆசைகள் அதிகம். 'முப்பது வயதாச்சு, இன்னும் கொஞ்ச நாளில கிழவன் ஆகிடுவாய்! பாத்துக் கீத்து ஒரு கல்யாணத்தைக் கட்டன்" நேற்றும் யாரோ அஜித்துக்கு அட்வைஸ் பண்ணினார்கள்.
அவனால் என்ன செய்ய முடியும். சமூகம் அஜித் தை ஒரு நல்ல பிள்ளையாக, குடும்பப் பொறுப்புள்ள ஒரு இளைஞனாக உருவகித்து நடக்க விட்டிருக்கிறது. ஊருக்குள் அவனுக்கு நல்ல டிமான்ட் சிற்றின்ப ஆசைகளில் அவசரப்பட்டு பெயரைக் கெடுத்துவிட அவனுக்கும் விருப்பம் இல்லை.
2S
அம்மாவிடமும் பலர் சொல்லு வார்கள், அஜித்தின் திருமண விடயம் பற்றிப் பேசுவார்கள். அம்மா சொல்வாள் 'அவன் நல்ல உத்தியோ கத்தில் இருக்கிறான், நல்லாய்ச் சம்பாதிக் கிறான். இனி பொம்பிளை ஏற்றதாய் இருக்கவேணும். தங்கச்சி பட்டதாரி. அவளுக்கு வாற வரனுக்கு குடுக்கத் தக்கதாக சீதனம் வாங்க வேணும். இப்ப என்ன அவசரம், நல்ல இடமாய்ப் பார்ப்பம்' என்பாள்.
அடக்கிவைத்திருக்கும் ஆசை களை அவிழ்த்து விட முடியாமல் குறுகிப் போவான் அஜித். அங்க சேட்டைகளில் அவன்காணும் இன்பம் தான் அவனுக்கு வடிகால். அதுவும் இப்படி கொழும்புக்கு பயணப்படும் நாட்களில்தான். யாரையும் அறியாத சுதந்திரம், சுகம் அவனுக்குள் உற வாடும்.
பஸாரில் தேவையான பொருட்கள் தேடிப்பார்த்து, சாம்பிளில் அவற்றை தெரிவு செய்து ஒடர்பண்ணி, சீட்டைப் போட்டு, லொறிக்குப் போட்டு, வேறு தனிப்பட்ட வியாபாரங்களில் பேரம் பேசி, காசு வாங்கி, வந்த அலுவல் முடிக்க மதியம் ஒருமணி தாண்டிவிட்டது. ‘பஸ் ஸைப் பிடித்து வீட்டிற்குப்
之の

Page 14
போவோம்' என்ற முடிவுடன் பண்டார நாயக்க வீதியூடாக வந்து ஆமர் வீதியில் மிதந்தான்.
கொழும்பு அலுவல் முடிந்த திளைப்பில், கையில் பணமும் கொஞ்சம் கிடைத்த மகிழ்ச்சியில் அவனது மனக்குரங்கு துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. ஆமர் வீதி பஸ் தரிப்பு இடங்களில் வணி ண வணிணக் குடைகள் விரிந்து நின்றன.
கீல்ஸ் போட்ட சிலிப்பர், வழுவழுப் பான கால்கள், குட்டையான பாவாடை, தொடை தெரிய வெட்டு, ஜின்ஸ் பிளஸ் ரீ சேட், என்று ஒவ்வொன்றாக குடைக்கு வெளியே தெரிந்தவற்றை ரசித்துக் கொண்டு வந்தான்.
ஏதோ ஒன்று அஜித்தின் குறு குறுப்பைத் தூண்டியது. அவன் எண்ணி முடிக்கும் முன் அந்தப் பிட்டத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு நடந்தான். இந்தச் சேட் டைக்குப் பதிலாக முறைப்போ, காறி உமிழ்தலோ வந்தால் சற்றுத் தூரமாகப்போய் ஏளனமாகப் பார்த்து, நகைத்துச் செல்வது அவனது வழக்கம்.
சீண்டப்பட்டவளின் குரல் இவன் காதில் அறைந்தது. "நாயஸ், அக்கா தங்கச்சியோட பிறக்காததுகள்" அஜித் தன் முகத் தை அந்த ஏளனச் சிரிப்புக்குத் தயாராக்கிக் கொண்டு திரும்பினான்.
கொதித்த விழியின் கனலி
குறையாமல் அவனது உடன் பிறந்த
தங்கை பை(f)லும் குடையுமாகத் தகித்து நின்றாள்.
தரிசனங்களோடு. ...
༽fձԿ ད།* صر
இன்று
இலக்கணத்தைப் பார்த்துச் சிரிக்கிறது
இந்தப்
புதுக்கவிதை
முன்பெல்லாம் இலக்கணத் தளைக்குள் இருந்தது தமிழ், பலருக்கெட்டாமல். ஆசிரியப் பாவையாய் வெண்பாப் பூவாய் வஞ்சிப் பாவாய் வலம் வந்த தமிழுக்கு இலக்கணம் வித விதமான விலங்குகள் கலிகாலப் பாரில்
கதவுடைப்பு இலக்கணச் சிறைச்சாலையிலிருந்து மீசையிலே ஆசைவைத்த மிடில் கிளாஸ் பூசாரி புன்னகையை உதட்டில் வைத்து புதுக்கவிதையை வரவேற்றான். இப்போது இலக்கணத்தைப் பார்த்துச் சிரிக்கிறது இந்தப்
புதுக்கவிதை.
க.ஆனந்தகுமார்
கலைப்பீடம் பேராதனை வளாகம்
26

வாசகள் ఏకస్త్ర பேசுகிறார். .
மார்ச் (10வது) ஞானம் இதழில் "படர்கம்பு" கதையில் வரும் கதாநாயகி, தனது நாற்பத்திரண்டு வயதில், இனி எப்படி மறுபடியும் குழந்தைக்குத் தாயாகப் போகின்றாள். ஊர் திரும்பிய அவளது மகனும், மகளும் எப்படி அவளது செயலை சுதாகரித்து கொள்வர்”
இதற்கு மேல் இனித்தொடரும் கதையை திருமலை வீ.என்.சந்திரகாந்தி எழுதினால், எப்படி முடிப்பார் என்று, சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
தமிழோவியன், பதுளை. தங்களின் “ஞானம் சஞ்சிகை பார்க்கக் கிடைக்கிறது. அதன் அளவைவிட இலக்கிய உலகில் அவை பற்றிய பேச்சு மிகப் பெரிதாக அலசப்படுவது அதன் தரத்தை நிர்ணயிக்கப் போதுமானதாகும்! நன்றி - வாழ்த்துக்கள்!
எஸ்.நளிம், மீராவோடை. ஏற்கனவே மேத்தா, மீரா, அப்துல்ரகுமான் போன்றோரை நல்ல கவிஞர்கள் * அல்ல - என்று பிரகடனம் செய்த, கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் - இப்போது புதுக்கவிதை என்ற பிரயோகம் காலாவதியாகிவிட்டது, என்கிறார். அப்படியானால் அதற்கு (புதுக்கவிதை) அவர் அண்மைக்காலக் கவிதைகள் என்றா பெயர் சூட்ட விரும்புகிறார்?
கவிதைபற்றியும் - கவிஞர்கள் பற்றியும் ‘கண்டவன், நின்றவன் - எல்லாம் கதை அளக்கும் காலம் இது. உதாரணத்துக்கு 12.03.2001 அன்று , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகசேவை - மாலை நிகழ்ச்சி ஒன்றில், வாசுகி சிவப்பிரகாசத்தோடு பணியாற்றிய அறிவிப்பாளர் ஒருவர் கவிஞர்களை இயற்கைக் கவிஞர்கள் - செயற்கைக் கவிஞர்கள் என்று பாகுபாடு செய்து முன்னதற்குக் கண்ணதாசனையும், பின்னதற்கு வைரமுத்துவையும் உதாரணமாகச் சொன்னதைக் கேட்டுத் தமிழ் இலக்கிய உலகம் தலைமேல் கை வைத்துக்
கொண்டது.
இப்படிப்பட்ட தற்குறிகளோடு பிரபல விமர்சகர் சிவகுமாரனும் இணைந்து கொள்ளக்கூடாது என்பதே எனது வேண்டுகோள். வாகரைவாணன்
"ஞானம் 11வது இதழ் கிடைத்தது. கலை இலக்கிய சஞ்சிகையான ஞானத்தின் தொடர்வருகை பெருமகிழ்ச்சி தருகின்றது. ஞானத்தின் சிறுகதைகள் தேர்வு, காலங்காலமாகச் சொல்லப்படும் சேதிகள்தான். எனினும், அடக்குமுறையும், வறுமையும், இயலாமையும், மனித மனத்தின் நசிவுகளும், அக்காலத்துடன் போட்டி போட்டுக் கொண்டு மனிதனை துரத்திக் கொண்டே வருகின்றன. அவற்றின் உத்திகளும், போக்குகளும் மாறிக்கொண்டே வருகின்றன. அவைகள் சிறுகதை, மற்றும் ஆக்க இலக்கியத்தில் புதிய வடிவம் பெறுமானால் அதன் பெறுமானம் உசத்தியாக இருக்கும்.
கவிதைகளின் ‘உயிர்ப்பு நசிவுற்ற நிலையில் தொடர்ந்தும் பேணப்பட்டு
27

Page 15
வருவதன் “ஞானம்" எனக்குப் புரியவில்லை, தமிழ் பேரினவாதம், பற்றி எழுதும் கவிதைளை “ஞானம் நிராகரிக்கின்றதோ அலல்து அஞ்சுகின்றதா, என்பதை தெளிவாக முன்வைத்தால் சிறப்பாக இருக்கும்.(நான் எழுதி அனுப்பிய கவிதைகள் பிரசுரம் பெறாததற்கு காரணமும் இதுதானா அல்லது கவிதைகள் கிடைக்க 6isi)6O)6)uT)
சிங்களப் பேரினவாதம் பற்றி எழுதுவது போல் முஸ்லீம் தரப்பில் தமிழ்ப் பேரினவாதம், குறிப்பாக புலிகளின் இனச்சுத்திகரிப்பு, முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறை பற்றியெல்லாம் எழுதுவது எம்போன்றவர்களின் தார்மீக கடமையும் எழுத்துப்போருமாகும்.
"திருப்திப்படுத்தும் இலக்கிய முயற்சிகள், நமது இலக்கிய உலகில் நிறைய நடைபெறுகின்றன. அதில் பத்தோடு ஒன்றாக "ஞானம் வளர்வது தவிர்க்கப்படல் வேண்டும். இப்படி எழுதுவதால் உங்கள் முயற்சியைக் குறைத்து மதிப்பிடவில்லை, இலக்கியத்தைக் பொறுத்தவரை நேர்மையும் தீரமும் தேவை என்பதே என் கருத்து.
கலாநிதி துரை மனோகரனின் பக்கம் சுவாரஸ்யம் மிக்கதுபோல் அறிஞர் அறிமுகம், நூல் நயமும் பிரயோசனம் தருகின்றது.
கே.எஸ்.சிவகுமாரனிடம் எதிர்பார்த்தபடி - விஷயங்கள் இல்லை. கேட்கப்பட்ட வினாக்களுக்கு, அவர் எழுதும் நூல் அறிமுகம்போல் விடைகளும் அமைந்து விட்டன. சிறந்த அனுபவசாலி இளையவர்களுக்கு புத்துக்கம் தரும் வண்ணம் தனது கருத்துக்களை சொல்லியிருக்கலாம்.
தொடர்ந்தும் ஞானத்தில் தனிநபர் மோதல், விமர்சனம் என்ற போர்வையைப் போர்த்தியபடி வந்துகொண்டே இருக்கின்றது.
மெத்தப் படித்தவர்கள், இலக்கியக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தமக்கு ஏற்படும் "அரிப்பை இப்படிச் சிறுசஞ்சிகைகள் மூலம் தீர்த்துக் கொண்டுதானிருக்கின்றனர். இப்படி முதியவர்கள், தமக்குள் நடக்கும் உள்நாட்டுப் போரை சஞ்சிகைகளில் அலையவிடுவது வளர்ந்து வரும் இளையவர்களையும் சஞ்சலப்படுத்துகிறது. எழுதுபவர்கள்தான் இதுபற்றி யோசிக்கவேண்டும். உங்கள் முயற்சியும், எழுத்தும் என்றும் சிறக்கட்டும்! ஓட்டமாவடி - அறபாத். ‘ஞானம் தொடர்ந்து பெற்று வருகிறேன். எங்கள் தேசிய குடும்பத்திலும் இலக்கிய ஆர்வர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினேன். மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். “ஞானத்தில் வரும் கவிதைகள் மிகவும் காத்திரமானவை. கதை, கட்டுரைகளும் அப்படியே. சில வேளைகளில் மொழிபெயர்ப்பு கவிதைகள் சரியாகப் புரிவதில்லை.
மார்ச்சு இதழில் அனைத்துக் கவிதைகளும் குறிப்பாக தீக்குச்சி, சோலைக்கிளியின் கவிதைகள் அபாரம். தொடரட்டும் தங்கள் முயற்சி.
ஞானம் இதழ் மாதாமாதம் புதிய மெருகேறி வருவதை அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஏப்ரல் இதழில் சிவகுமாரனின் பேட்டி அவரைப் பற்றிய பன்முக ஆளுமையை - விசாலமான மனதை அறியக் கூடியதாக இருந்தது. பத்தனையூர் தினகரனின் கவிதை நன்று. அவள் என்ன செய்வாள் சிறுகதை மிகக் கொடுரமாக இருந்தது. அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
பெனி, லேவல்ல.
28

ஐயா "ஞானம் இதழை தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் சிறப்பாக அமைந்து வருகின்றது. அண்மை இதழ்களில் இலக்கிய சர்ச்சைகளை காணமுடிகின்றது. ஆனால் அச் சர்ச்சைகள் தனிப்பட்டவரை வெளிப் படையாகவே தாக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. இவை இலக்கிய உலகின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பது தெளிவு. எனவே அவ்வாறான கருத்துக்களை பிரசுரிக்க வேண்டாம் என மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள் கிறேன். இலக்கியவாதிகளின் ஒற்று மையை சிதறடித்த சஞ்சிகை என "ஞானம் பழிச்சொல் ஏற்க வேண்டாம். "ஞானம் தொடர்ந்தும் சிறப்புடன் வெளிவர வேண்டும் என்பது எனது J96) lff. ம.சுபாஸ்கரன், புன்னாலைக்கட்டுவன். தங்களின் ஞானம் இதழை ஒரு நண்பர் மூலம் இரவல் பெற்றுப் படித்துவருகிறேன். “ஞானம் கடைசி இதழில் புரட்சி பாலன் கவிதை சுவைக் கத்தக்கதாக இருக்கிறது. அத்துடன் சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணலும் மிக நன்றாக உள்ளது. எலி லாவற் றுக் கும் மேலாக "வாசகர் பேசுகிறார்" பகுதியில் சிவசேகரம் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் இக்பாலின் போலித் தன்மைகள் வெளிக்கு வந்துள்ளன.
முகமட் அபார், கல்முனை.
நேர்காணல் அடுத்த
$51,65.....
29
"உருப்பெறும் உணர்வுகள்" எழுதியவர்: சந்திரா தனபாலசிங்கம் முதற்பதிப்பு: ஏப்ரல் 2001 வெளியீடு: சாயி வெளியீடு, சுதுமலை
தெற்கு, மானிப்பாய், சந்திரா தனபாலசிங்கம் தன்னை பெண்ணிய சிந்தனைக்குள் மட்டும் மட்டுப்படுத்தாமல் சமூக ஒடுக்கு முறை யினுள் அதற்கெதிராகப் போராடும் பாத்திரங்களை எம்முன் உலவ விட்டுள் ளார். சோ.தேவராஜா. "எழுத்தும் வாழ்வும்" அரசு பற்றிய மார்க்சிசக்கோட்பாடு எழுதியவர்: நா.சண்முகநாதன் முதற்பதிப்பு: 1973 இரண்டாம் பதிப்பு: 18.02.2001 வெளியீடு: மார்க்சிசக் கற்கைகளுக் கான சண்முகநாதன் நிலையம், 59/3 வைத்தியர் வீதி, தெகிவளை.
சண்முகநாதன் எழுதிய கட்டுரை: களையும் நூல்களையும் நூலுருவில் கொண்டு வருவதை ஒரு பிரதான முற்போக்கு சமூகப் பணியெனர் று நிலையம் கருதுகின்றது. பதிப்புரையிலிருந்து.
காற்றின் சுவடுகள் (மேடை முதல் வானொலி வரை) முதற்பதிப்பு: 16.03.2001 வெளியீடு: பொன்விழாக்குழு 310/2, காலி வீதி, கொழும்பு - 06.
குரலின் வசீகரமும் குணத்தின் செம்மையும் கடமை நேர்மையும் அவரை இன்று இலங்கை வானொலியின் மதிப்புமிக்க மூத்த கலைஞர்களுள் ஒருவராக்கியுள்ளது. கார்த்திக்கேசு சிவத்தம்பி
ஆசியுரையில்.

Page 16
%a== LSLSLSLSLSLSLSLSL W அன்பார்ந்த வாசகர்களே! Y
இந்த இதழுடன் "ஞானம்' சஞ்சிகை ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கிறது. தற்போது அச்சுத்தாளின் விலையேற்றம், அச்சுச் செலவு ஆகியவை அதகரித்துள்ளன. ஆனாலும் "ஞானம் சஞ்சிகையின் விலையை அதிகரிக்கவோ அல்லது விளம்பரங்களைச் சேர்த்து அதிகரித்திருக்கும் செலவினை ஈடுசெய்யவோ நாம் விரும்பவில்லை. இலக்கிய ஆர்வலர்கள் நல்கும் ஆதரவையே எமது பலமாகக்கொள்ள விரும்புகிறோம். இதுவரை காலமும் இலக்கிய ஆர்வலர்கள் பலருக்கு "ஞானம்' சஞ்சிகையைத் தொடர்ந்து இலவசமாக அனுப்பி வந்துள்ளோம். தற்போதுள்ள நிலைமையில் தொடர்ந்தும் இலவசமாக அனுப்புவது சாத்தியமில்லை. எனவே "ஞானம்' சஞ்சிகையைத் தொடர்ந்தும் பெறவிரும்புவோர் சந்தாதாரராக சேர்ந்து கொள்ளும்படி வேண்டு கின்றோம்.
"ஞானம்" சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்: கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு- 11|| பூபாலசிங்கம் புத்தகசாலை = 309A 2/3, காலி விதி, வெள்ளவத்தை. வசந்தம்- 8 - 44.3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11. யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. திருகோணமலை வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் விதி, திருகோணமலை, திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோமலை. மட்டக்களப்பு சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு. | எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் விதி, மட்டக்களப்பு. | முல்லைத்தீவு
கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வவுனியா சந்திரபோஸ் சுதாகர் - 87, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா. கண்டி கலைவாணி புத்தகசாலை - 231, டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி, லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி,
கொட்டக்கலை ། ”༡མ་ என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், هamنuفnaلند
3)
 

கசங்கிய அழுக்குத் துணியைக் கழுவும் ஏகாலியார் செந்நீர் துயர ஓட்டத் தோடுமிதந்து
வியர்வை உறைந்து நறுமணக்கும் கடல்நீரைப் போல உவர்க்கும்
கருவாய்ப் பார்க்கும் பரிதாபத்தை சிந்திக்கும் சக்தி எத்திக்கும்
இல்லா தொன்றே தானுண்டு.
சின்னஞ் சிறுசுப் பருவக்கால
காற்று வாங்க தூண்டில்போடும் மரபாய் நின்ற பாலத்தடி
இராணுவஞ் சோதிக்குஞ் சாவடியாகவே எழுதிய எழுத்தாய் உற்றுபூழிச் சாசனம் தடம் பூண்டதென நிந்தை கொஞ்சும் ஒலமொலிக்கும்
இஸ்திரிப் பெட்டி நூந்துகிடக்கிறது.
வண்ண னார் வெளுக்கும்பாலம் முன்பு செப்பும் அழகியபாதை சோதனைக் காவியப் போர்ப்பாடல்
கல்லிலே யடிக்கும் துணியைப்போல தினங் கேட் டுள்ளமுருகும்
சப்தம் டப் டப்பென்று இன்றுரை அதிரச் செய்திடும்
படை முகாரிக்குள் சிக்கித்தவிக்கிறது. 三ー
மாராப்புச் சேலை தோள்சுமந்து
பத்து ருபாக் காசுதானென
தகைஒப்பவன் நீதி நேர்மைமிக்கதாய் எளிய மக்களுக்காய் இரங்கி நிற்க
தனியுடை மடிப்பால் வண்ணம்பெறும்
வன்னார் பாலம் பெயர்நீங்க
அருகிருந்த கோவில் தைக்காச்சந்தி பெளத்தவழி பாட்டுத் தளமானதோ!
3.

Page 17
முஸ்லிம்கள் ஜும்ஆ நாளெ
புதுமைக்குப் புதுசாய் அழகு இறைவணங்கும் பணி சீர்பெ உறவுக்காய் பசை போட்டு அன்பைக் காய்ச்சி இன்பம்ெ தவறா நுழைக்கும் வெண்ை இட மொன் றில்லாமல் அச்ச புலம் பெயர்ந்து சென்றதோ
*、 வெளுத்த உடையும் மாராப்பு இஸ்திரிப் பெட்டி ஞானமொ பாத்திரம் வண்ண ன்ார்வண்ண கையில் காய்ச்சிய தழும்பா வறுமைத் தீப் பயிற்சியிலே
விதைக்கும் நெல்லு முனை வெள்ளம் வந்து அழிக்கையி இதயம் கொஞ்சம் ஆறிப்ே ="امین நீங்காத் துயர்சேர் ஊத்தைய இயந்திர மனித வாழ்க்கை முறுக்கிப் பிழியும் உடையிை சுருங்கி ஒடுங்கி யேகனாய் தப்பித் துவைக்கும் துணிமணி ஆட்டும் படைக்கோர் எதிரா நன்றாய் கொலைஞர் வீறாப் தூண்டிற் புழுவைப்போல் அ
இன க்ேகியத்திற்கோர் LUTGI வண்ணார் குலப்பெய்ரோங் முஸ்லீம் மினத்தவருறவாடி
புத் தாண்டு புதுயுடைபோல மினுங்கும் உழைப்புத் திறன்
படை சூழ்ந்த முள்வேலிக்கு சிக்கித்துடி துடிக்குங் கண்ணி வெள்ளாவி கொதித் தெழே
இக்பால்
Printed at GREEN LEAFPRINTHC