கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.06

Page 1
கலை இல்
 

N
ug: சஞ்சிகை

Page 2
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாமரினர்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
வணக்கம் "ஞானம்' சஞ்சிகை ஒருவருடத்தை நிறைவு செய்து இப்போது இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த ஓராண்டு காலப் பகுதியில் ஞானத்தை வளர்த்தெடுப்பதில் இலக்கியகர்த்தாக்கள், கல்வி யியலாளர்கள், தமிழறிஞர்கள், வாசகர்கள் எனப் பலரும் தம்மாலான பங்களிப் பினை வழங்கியுள்ளார்கள். பத்திரிகைகள், ஒலி ஒளி ஊடகங்கள், சகோதர சஞ்சிகைகள் ஞானம் பற்றிய கருத்துரைகளை அவ்வப்போது வழங்கி எம்மை ஊக்கப்படுத்தி வந்துள்ளன. இவர்கள் யாபேருக்கும் முதற்கண் எமது பணிவன்பான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்து வந்த காலத்தை திருப்பிப்பார்க்கும்போது எமக்குப் பெரிதும் உற்சாகமும் மனநிறைவும் ஏற்படுகின்றன. ஞானம் முதல் ஐந்து இதழ்களிலும் தொடர்ச்சியாக நேர்காணல்கள் இடம்பெற்றன. இந்த நேர்காணல்கள் வாசகர் களுக்கும் இலக்கியகர்த்தாக்களுக்கும் மிகவும் பயனுடைவையாக அமைந் தன. தொடர்ந்தும் ஒவ்வொரு இதழிலும் நேர்காணல் இடம்பெற வேண்டு மெனப் பலர் விருப்பம் தெரிவித்தனர். நேர்காணல்கள் ஞானத்தின் அதிக பக்கங்களை நிரப்பிவிடுவதால், இலக்கியம் சார்ந்த ஏனைய விடயங்களுக்கு இடமளிக்க முடியாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக நேர்காணல்களை இடவசதிக்கு அமைய அவ்வப்போது பிரசுரித்து வந்துள்ளோம்.
நாட்டின் சகல பகுதிகளி லிருந்தும் படைப்பாளிகள் தமது ஆக்கங் களை ஞானத்திற்கு வழங்கியுள்ளனர். புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும் ஞானத்தில் வெளிவந்துள்ளன. இலக்கிய உலகில் பல்வேறு கோட்பாடுகளை உடையவர்களும் சுதந்திரமாக தமது கருத்துக்களை ஞானத்தில் வெளியிடு எதற்கு இடமளித்துள்ளோம். சகலரையும் அரவனைத்து, இலக்கியகர்த் தாக்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற உணர்வு மோலோங்கச் செயலாற்றி வந்துள்ளோம். தொடர்ந்து வரும் காலப்பகுதியிலும் எமது பணியைச் சிறப்புற ஆற்றுவதற்கும், ஞானத்தின் தரத்தினைப் பேணுவதற்கும் யாவரது ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம்.
- ஆசிரியர்
 
 
 
 
 
 
 

உள்ளே.
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் சிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
Tr".
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை விதி, கண்டி.
Gift.G. -08-478570 (Office)
08-23.4755 (Res.) O77-306505
FHlx – 08-234755
E-Mail-gılauannûsltı etlk
ސ.......................................\
gూt = |
GPir 5Terret .36
சிறுகதைகள்
dr filj i ............................ . . . . . . . . 04 தெளிவத்தை ஜோசப் காட்டுப் பூனைகளும்
பச்சைக் கிளிகளும். L திரூானசேகரன்
செ.யோகநாதன்
கட்டுரைகள்
எழுதத் தாண்டும் எண்ணங்கள் . 11 கலாநிதி தரை. மனோகரன் கைலாசபதியின் "வீரபுகப்பாடல்கள்"
L]]]ỉÎlLI +lử01!......... I 8 அ. முகம்மத சமீம் இலக்கியப் பணியில் இவர். 29 ந. பார்த்திபன்
கவிதைகள்
ՔÏã Ժն ....................... ... . . . . . . . . . . . . . . . ஸ்ேதாவ் கர்க்லெச்
சோ. பத்மநாதன் எழுதவியலாத கவிதை . 30 சித்தாந்தண்
ஏ. இக்ாள் காரணங்கள் . 48 பெனி
வாசகப் பேசுகிறார் . 44
புதிய நூலகம் :- அந்தனிஜீவா . 4 to
அட்டைப்படம் :- நா. ஆனந்தன்
டு

Page 3
தெளிவத்தை ஜோசப்
இனவிவகார நல்லிணக்க அமைச்சு நிலையான இன ஒற்றுமையை வலி 1றுத்தல் என்னும் தொனியில் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற சிறுகதை,
ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு இனவிவகார நல் லிணக்க அமைச்சு வெளியிட்டுள்ள 'ஒரு தாய் மக்கள் என்னும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது! வீட்டில் இருந்த எங்கள் எல்லோரது மனதுக்குள்ளும் தூண்டிலில் செருகிய புழுவாய் நெளிந்து கொண்டிருந்தது இந்த ஒரே கேள்விதான்.
இந்த நேரம் யார். இப்படித் தட்டுவது! போலீஸ் றிப்போர்ட், அடையாள அட்டை இத்தியாதிகளை மனம் நினைவு படுத்திக் கொள்கின்றது.
இரவு பத்துப் பதினொரு மணிக்கு மேல், இப்படி ஒரு அதிகாரத்துடன் கேட் ஆட்டப்படுகிறது என்றால் யாராக இருக் &(լpւգալք.
ஆர்மியாக இருக்கும். அல்லது போலீசாக இருக்கும். அல்லது ஆர் மியும் போலீசுமாக இணைந்து வந்திருக் (35LD.
நாங்கள் தயாராகவேதான் இருக்கின் றோம்.
இரவு என்றில்லை, பகல் என்றில்லை. இப்படி வந்து வந்து எங்களை சோதனை செய்வோர் அத்தனை பேருக்கும் அடையாள அட்டைகளையும் போலீசில் பதிந்த துண்டுகளையும் காட்டிக் காட்டியே நாங்கள் களைத்துப் போய் விட்டோம். அலுத்தும் போய்விட்டோம். பஸ் லேட் அல்லது ட்ரெயின் லேட் என்று யாராவது உறவினர்கள் அல்லது நண்பர்கள் இப்படி நேரம் கெட்ட நேரத் தில் வந்து கேட்டைத் தட்டினாலும் முதலில் இந்தக் கடதாசிகளைத் தேடி
(02)
வைத்துக்கொண்டு பிறகுதான் கதவைத் திறந்து எட்டிப் பார்ப்போம்.
தமிழர் தம் குடும்பவாழ்வில் இது ஒரு பண்பாட்டு அம்சமாகிவிட்டது, இன்று.
நட்பென்றும் உறவென்றும் இப்போ தெல்லாம் யார் வருகிறார்கள் நம்மைத் தேடி. அதுவும் இருட்டிவிட்ட பிறகு.
வந்து சேரும்வரை அவர்களுக்குத் தொல்லை றோட்டில்!
வந்து சேர்ந்தபின் நமக்குத் தொல்லை வீட்டில்!
தோலிருக்கவே சுளை விழுங்குதல் போல் நாசுக்காக நாங்கள் இப்படித் தனிமைப்படுத்தப்படுவதும் அவர் களுக்கு ஒரு தனியான குஷிதான். முன் கதவைத் திறக் கின்றேன். வெட்டவெளிபோல் இருக்கின்றது. பக்கத்து வீட்டுச் சுவர் மூலையில் சாரத் தைச் சுருட்டித் தூக்கிக் கொண்டு இருட் டுக்குள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பையன் கதவு திறந்த அரவம் கேட்டதும் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
பூனை கண்ணை மூடிக் கொள் வதைப்போல.
எனக்கு மிகவும் அசெளகர்யமாக இருக்கிறது.
நல்லவேளை எப்போதும் போல், இதுபோன்ற வேளைகளில் நான் முன் கதவைத் திறக்கும் போது எனது தோளுக்கு மேலாக எட்டிப்பார்க்கும் மனைவி என் அருகே இருக்கவில்லை.
ஞானமி
 

இருந்திருந்தால் "இந்த எளவையெல் லாம் பாக்கணும்னு தலை எழுத்து. செவத்தைக் கட்டுங்க. செவத்தைக் கட்டுங்கன்னு எத்தனை வாட்டி தலை யால அடிச்சுக்கிட்டேன். அதுக்குவக் கில்லை." என்று எனது பொருளாதார பலவீனப் புண்ணை வார்த்தையால் கீறிக்கிளறியிருப்பாள்.
முன்பெல்லாம் கதவைத் திறந்ததும் பக்கத்து வீட்டுக் கூரை மாத்திரமே தெரியும். இப்படியான அடிவிஷயங்கள் ஒன்றும் கண்களில் படாது.
இரண்டு வீடுகளுக்கும் மத்தியில் ஆறடி உயரத்தில் கம்பீரமாக எழுந்து சீனப்பெருஞ்சுவர்போல் நின்ற மதில் மூன்று மாதமாகப் பெய்த தொடர் மழையில் போன மாதம் உடைந்து விழுந்துவிட்டது.
யானை இறந்த கதைதான். உடைந்து கொட்டிய மதிலை அள்ளிக்குவித்து அப்புறப்படுத்தி இடத் தை துப்புரவு செய்யவே ஆயிரத்துக்கு மேல் போய்விட்டது.
போதாதற்கு பக்கத்து வீட்டுக்கார னின் பைசிக்கிள் வேறு சுவருடைந்த இடிபாட்டில் சிக்கி வளைந்து கிடந்தது. வீட்டுப்பெண்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் "இது உங்களுக்குத் தேவை யில்லாத வேலை" என்னும் வீட்டுச் சொந்தக்காரரின் கேலிக்கு மத்தியில் சைக்கிளையும் சரிக்கட்டிக் கொடுத் தேன். அதற்கொரு எண்ணுறுக்கு மேல் ஆயிற்று. என்ன செய்வது.
தென்னைக்குத் தண்ணிர் ஊற்றி யதாக எண்ணிக் கொண்டேன். அதற்குப் பிறகு இப்படித்தான். .
முன்கதவைத் திறந்தால் பக்கத்து வீட்டுச் சில்லறைச் சமாச்சாரங்கள் ஏதா வதொன்று நேராக முகத்தில் அடிக்கும். ஓவென்று திறந்து விடப்பட்ட மைதானம் மாதிரி!
அந்தரங்கம் பறிபோய்விட்ட ஒரு அசெளகரியம் எங்களை உலுப்பி எடுக் கின்றது. ஒட்டுக்குள்ளேயே சுருங்கிவிடும் ஊரிகள் போல் வேலிகளுக்குள்ளேயே வாழ்ந்து பழகிவிட்ட அந்தப் பண்பு.
இழக்கக் கூடாத ஏதோவொன்றைப்
ஜுன் - 2001
பெரிதாக இழந்து விட்டதைப்போல. றோட்டில் திரியும் நாய் ஒன்று பக்கத்து வீட்டுக்குள்ளாக வந்து உடைந்த மதில் வழியாக எங்கள் தோட் டத்துக்குள் நுழைந்து சமையலறைப் பக்கமாக எதையாவது தேடித்தின்று, கதவு திறபடும் சத்தம் கேட்டதும் காதைத் தூக்கியபடி விறைத்து நின்று பார்த்து உறுமிவிட்டுப் பிறகு ஓடிவிடும். தெருவில் திரியும் நாய் கூட உள்ளே வந்து உறுமுகிறதே என்னும் தாழ்வுச் சிக்கல்.
எதையும் எதிர்கொள்ள மனமின்றி ஒதுங்கியே இருந்துவிட்ட பழக்கம். பக்கத்துவீடு சிங்களம். அன்றாடம் காய்ச்சிகள் வேறு. எங்கே சுவர் உடைந்துவிட்ட சுகத்தில் அத்துமீறி உள்நுழைந்து உறவுகொண்டாட வந்து விடுவார்களோ என்னும் அச்சம் வேறு. இருந்த மதில் அவர்களை பிரித்தும் வைத்திருந்தது! மறைத்தும் வைத்தி ருந்தது!
பாஸ் ஒருவனைக கூட டிவநது பார்க்கச் சொன்னேன். அளந்தான், நின் றான், நிமிர்ந்தான். "அடுகான பதினெட் டாவது முடியும்” என்றான். கப்சிப் என்றாகி விட்டேன்.
பதினெட்டாயிரத்துக்கு நான் எங்கே (3t its
வீட்டுக்காரரோ இப்போது எங்கே இருக்கிறது அவ்வளவு பெரிய தொகை" நீங்கள் வேண்டுமானால் கட்டிக் கொள்ளுங்கள். வாடகையில் கழித்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
பக்கத்துவிட்டுச் சுவர் மூலையில் சாரத்தை உயர்த்தியபடி இருட்டுக்குள் நின்றவனை பார்க்காததுபோல் பாவனை செய்துகொண்டு முன்பக்கம் திரும்பி கேட்டை நோக்கினேன்.
கேட்டுக்கு மேலாக இருட்டுக்குள் ஏழெட்டு இரும்புத் தொப்பிகள் அந்தரத் தில் மிதந்து கொண்டிருந்தன.
எனக்குத் திடீரென்று ஒரு ஞானோ தயம் பிறந்தது.
நூல் விற்கவரும் ஒரு பதுளைக்காரர் முன்தினம் கூடக் கூறினார்.
"ஐயா ஜாக்கிறதையாய் இருங்கள்
டு

Page 4
யாராவது கதவைத் தட்டினால் தொறந் துறாதீங்கள். உள்ளுக்கு வந்தப்பறம் உங்களுக்கே வேலையைக் குடுத்துறு வானுக. போன கிழமை இப்படித்தான் எங்க வீட்டுப்பக்கம் ஒரு வீட்டில கேட்டத் தட்டி போலீஸ்ன்னு கூறி உள்ளே நொழைஞ்சிருக்கானுக. வீட்டுல இருந்த அத்தனை பேரையும் கட்டிப்போட்டுட்டு ஒன்னுவிடாம கொள்ளையடிச்சிட்டா னுக. வீட்டுக்காரரூட்டு வேன்லேயே அத் தனை சாமான்களையும் ஏத்திக்கிட்டு வீட்டுக்காரரையே ஒட்டவும் சொல்லி வசதியான ஒரு இடத்தில் எறங்கிக்கிட்டு வேனைத்திருப்பி அனுப்பி இருக்கானுக. அவராலை என்ன செய்ய முடியும், நம்ம நெலமை அப்படி. அதுனால அய்யாவு கவனமா இருங்க."
கேட்டுக்கு வெளியே இருட்டுக்குள் மிதந்த தொப்பிகள் தாங்கள் பட்டாளத் துக்காரர்கள் தான் என்பதை சத்தியம் செய்துகொண்டிருந்தன. "நீங்கள்."
“பார்த்தால் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் விட்டால் ஐடென் டிட்டி கார்ட் கேட்பாய் போலிருக்கிறதே. ம்.ம். கேட்டைத்திற.” என்று தடித்த குரலில் கடித்தான் ஒருவன். இவர்களிடம் எப்படி "நீங்கள் நிஜப்போலிஸா இல்லை போலிப்போலிஸா என்று கேட்பது! பார்த்தால் ஆர்மிக்காரர்கள் போலவும் இருக்கிறது. ஜீப் வேறு நிற்கிறது. மிகவும் குழம்பிக் கொள்கிறேன்.
* திறக்கப் போகின்றாயா அல்லது நாங்களே பலவந்தமாக உள்ளே வரவா" என்று அதட்டினான் ஒருவன்.
“உள்ளே ஏதோ நடக்கிறது போல் இருக்கிறது. அதுதான் அவன் நம்மை கேட்டுக்கு வெளியே தாமதப் படுத்து கின்றான்” என்று யூகம் சொன்னான் இன்னொருவன்.
"இருக்கும் இருக்கும், ஒளித்து வைத் திருக்கும் கொட்டிகளை பின்பக்கமாக அப்புறப்படுத்திவிட்டு அப்புறமாகத் திறக்கலாம் என்றிருப்பார்கள். அப்பி பணிமு.” என்று கூறியபடி சுவரில் தாவ முயல்கின்றான் ஒருவன். நானாகவே கேட்டைத் திறக்காவிட்டாலும் அவர் களாகவே சுவரேறிக் குதித்து உள்ளே
(06)
நிலையான இனநல்லிணக்கம் நிலைபெற நிறையச் சுவர்கள் உடைபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இக்கதை"
வந்துவிடுவார்கள் போல் இருந்தது. அப்படி ஏதும் நடக்க விட்டுவிட்டால் உள்ளே வந்ததும் மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொள்வார்கள். ஆகவே நானாகவே கேட்டைத்திறந்து அவர்களை உள்ளே எடுப்பதே உசித மானது என்று எண்ணியபடி "நே.நே. ஏம மொக்குத் நே. கெளத கியல அப்பித் தெனகண்ட ஒன நே." என்று எனக்குச் சிங்களமும் நன்றாகப் பேச வரும் என்பதையும் சுட்டிக்காட்டி கொஞ் சம் போல் அவர்களுடைய அனுதாபத் தைப் பெற்றுக் கொள்ளும் உத்தியுடன் பூட்டைத்திறக்கின்றேன்.
திறந்து முடிப்பதற்குள் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த அவர்களது காட்டுமிராண்டித்தனம் என்னுடைய சிங்களம் அவர்களுடைய அனுதாபத் தைப் பெறத் தவறிவிட்டது என்பதைக் காட்டியது.
உள்ளே நுழைந்தவர்கள் இரண்டு மூன்றாகப் பிரிந்து வீட்டைச்சுற்றி ஓடி னார்கள். பிறகு உள்ளே நுழைந்து ஒவ் வொரு அறையாக நுழைந்து நுழைந்து வெளியே வந்தார்கள்.
“எத்தனைபேர் இருக்கின்றீர்கள். சொந்த ஊர் எது. அடையாள அட்டை இருக்கிறதா. போலீஸில் பதிந்த துண்டு இருக்கிறதா.” போன்ற வழமையான கேள்விகளைக் காணவில்லை. சாப் பாட்டு மேசையைச் சுற்றி இருந்த கதிரைகளில் எங்களை ஒவ்வொருவராக வந்து அமரச் சொன்னார்கள். V
நீட்டிய துப்பாக்கிகளுடன் இருவர் மேசையிடம் காவல் நின்றனர். மற்ற வர்கள் அறைக்குள் நுழைந்தனர்.
எதையோ தேடினார்கள். பிறகு திரும்பிவந்து "வேறு ஆட்கள் யாரும் இல்லையா. கட்டிலினடியில் அலுமாரி களுக்குள். யாரையாவது ஒளித்து வைத்திருக்கிறீர்களா.."
ஞானமீ

இங்கே புலிகள் வந்திருப்பதாகவும் நீங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஏதோ சதித்திட்டம் போடு வதாகவும் எங்களுக்கு கம்பிளேய்ண்ட் வந்திருக்கிறது.
இரவுகளில் சந்தேகத்துக்கிடமான விதத்தில் ஏதேதோ நடப்பதாக இங்குள்ள மக்களே எழுதியிருக்கின் றார்கள்.
“கோப்றல் அற சார்ஜ் ஷிட்டெக்க கேண்ட” என்று ஒருவனிடம் பணித்தபடி கேட்டான். நீங்கள் இத்தனை பேர் தானா. வேறு யாரும் இல்லையே."
நடு இரவில் இப்படிவந்து தமிழர் வீடு களை சோதனை இடும்போது எங்கோ ஒரு வீட்டில் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்ட அச்சம் அவனுடைய வினா வின் உச்சமாக இருந்தது.
“வேறு யாரும் இல்லை. நாங்கள் ஆறுபேர் மட்டும் தான்" என்றேன் எரிச் சலுடன்.
"வெரிகுட். நீங்களும் ஆறுபேர். நாங்களும் ஆறுபேர். ஆனால் ஒரு வித்தியாசம். நாங்கள் எல்லோரும் ஆண்கள். இங்கே ஐந்துபேர் பெண்கள். ஆறுபேருக்கு ஐந்து பெண்கள் போதாது தான்.”
அவனுடைய பேச்சின் திசை என் னைக் கோபம் கொள்ளச் செய்தது.
"நீ என்ன பேசுகின்றாய்.” என்றபடி கோபமாக எழுந்தேன்.
"ஆணின் பாஷையில்தான் பேசுகின் றேன்! எங்கள் ஆறுபேருக்கு இந்த ஐந்து பெண்கள் போதாது என்று. ஆனால் உன்னைப் பிடித்துக் கொள்ள ஒருவன் வேண்டும் என்பதால் ஐவருக்கு ஐவர்தான்." என்றபடி எனது கைகளைப் பின்புறமாகத் திருகிப் பிடித்துக் கொண் டான்.
கறுத்த அவனது கைத்துப்பாக்கி எனது கழுத்தில் அழுத்திக் கொண்டி ருந்தது.
இதைச் சற்றும் எதிர் பார்க்காத பெண்கள் விருட் விருட்டென்று எழுந்து நின்றனர்.
மேசையைச் சுற்றி நின்ற இருவரில் ஒருவன் எனது மனைவியின் பின்னால்
ஜூன் - 2001
நின்று கொண்டிருந்தான். விருட்டென எழுந்த அவளது தோளைப் பிடித்து அழுத்தி கதிரையில் அமர்த்தியபடி மற்றப் பெண்களையும் அமரச்சொன் னான்.
அவன் கையிலிருந்த துப்பாக்கி முனை மனைவியின் மார்பில் தடவிக் கொண்டிருந்தது.
எனது துடிப்பின் ஆக்ரோஷம் அவன் பிடிக்குள் இருந்த எனது கரங்களின் திமிர்ச்சியில் தெரிந்திருக்கவேண்டும்.
கைத்துப்பாக்கி சற்றே ஆழமாகக் கழுத்தில் அழுத்தியது.
“எல்லாரும் ஜாக் கிறதையாக இருங்கள். யாராவது கத்த முயன்றால் இவன் தொலைந்தான். தெரிகிறதா." என்றான்.
கம்பிளேய்ண்ட் ரிப்போர்ட் எடுத்து வரச் சென்றவன் ஒரு கயிற்றுக் கட்டுடன் உள்ளே வந்தான். முன்கதவை மூடிப் பூட்டினான். ஒருவரும் மூச்சுவிடக்கூடாது. அமைதியாக இருந்து ஒத்துழைத்தால் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. என்றபடி நேராக மேசையிடம் வந்து அம்மாவின் பின்னால் நின்று கொண்டான்.
அவன் ஏன் அப்படி அவ்வளவு நெருங்கி நிற்கவேண்டும்.
அம்மாவுக்கு எத்தனை வயதா கின்றது! ஐம்பதுக்கும் மேலல்லவா. ஆனால் தோற்றம் அப்படியா தெரிகிறது. இன்னும் ஒரு வாலிபப் பெண்ணைப் போல! எனது மகளுடன் பாதையில் நடக்கும் போது பார்க்கிறவர்கள் பாட்டி யும் பேத்தியும் என்றா நினைப்பார்கள். அம்மாவும் பிள்ளையும் என்றுதான் நினைப்பார்கள். அப்படி ஒரு உடல் வாகு, அப்படி ஒரு அழகு.
எங்கள் பெண்களுக்கு இது ஒரு கொடையா! அல்லது கொடுமையா! அவன் அம்மாவை உரசியபடி நிற்கின் றான். அம்மா நெளிகின்றார்கள்.
முறுக்கிப் பிடித்துள்ள எனது கைகள் துடிக்கின்றன. கழுத்தில் துப்பாக்கி அழுத்திக் குத்துகிறது.
ஆண்டவனே எங்களைக் காப்பாற்று என்று மனதால் கத்தியதும் புராணங்

Page 5
களில் வருவதுபோல் விரல் நுனியில் சுழலும் தர்மசக்கரத்துடனும் ஓங்கிய வாளுடனும் ஓடிவந்து காப்பாற்ற தேவ தூதர்களா இருக்கின்றார்கள்.
நாங்கள்தான் ஆண்டவர்கள்! நாங் களே எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
சமையல் அறைக்குள் தடாபுடா என்று ஏதோ உருளும் சத்தம் கேட்கிறது. அது வானதூதன அலல எனபது எங்களுக்குத் தெரியும்.
புகைபோக்கி வழியாக உள்ளே குதிக்கும் பக்கத்து வீட்டு கொழுத்த பூனை அது! ஆனால் அவர்கள் உசாரா னார்கள். உள்ளே யாரோ இருப்பதாகப் பதட்டப்படுகின்றார்கள்.
"மியாவி" என்ற சத்தத்துடன் சமையல் அறையின் உள்ளிருந்து ஓடி வந்த பூனை ஒரு விநாடி திகைத்து நின்றது. மறுவிநாடி கதறிக்கொண்டு எகிறி விழுந்து, ஒருமுறை சுருண்டு விரிந்து பிறகு செத்து விரைத்தது.
விலகிய துப்பாக்கியை மறுபடியும் கழுத்தில் அழுத்தியபடி "வெடிச்சத்தம் ஏதாவது கேட்டதா. பார்த்தீர்கள்தானே. அப்படித்தான் சத்தமே கேட்காது. ஆனால் இவன் சுருண்டு விழுந்து விடுவான் அந்தப் பூனை மாதிரி. ஆகவே ஜாக்கிறதையாக இருங்கள். சத்தம் காட்டாமல் அமர்ந்திருங்கள்." என்றான் அவன்.
அமர்ந்திருக்கும் அவர்களைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. அம்மா, மனைவி, மகள், தங்கை, மனைவியின்
சகோதரி என்று அத்தனை பேரும் பெண்
கள். திமிரி நிற்கும் கூந்தலும், சீப்புமாக, பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்ட நடுவில் நிற்கும் பெண்களைப்போல - துப்பாக் கியும் தாங்களுமாகத் திமிர்விட்டுக் கொண்டு நிற்கும் இத்துட்டர்கள் மத்தியில் இவர்கள் -பூந்தோட்டத்து மலர் களைப்போல
எப்போது பறிப்பேன் எப்போது சூடுவேன் என்னும் அதே நினைவுடன் இத்துட்டர்கள்!
எனக்கென்றால் பயமே இல்லை. என்னை என்ன செய்துவிட முடியும்
08
இவர்களால்
கொன்று விடமுடியும்; அவ்வளவு தானே!
ஆனால் நான் பயப்படுவதெல்லாம் இவர்களுக்காகத்தான். இந்தப் பெண் களுக்காகத்தான். இழந்துவிட இவர் களிடம் உயிர் மட்டுமா இருக்கிறது!
பேப்பர்களில் தீவிரமாக பெண்ணியம் பேசுகிறவர்கள் வேண்டுமென்றால் 'இழப் பதற்கு இவர்களிடமும் உயிர் மட்டும் தான் இருக்கிறது என்று எண்ணலாம். என்னால் அப்படி எண்ண முடியவில்லை. கைகளில், காதுகளில், கழுத்தில், கிடக்கும் நகைகளை வேண்டுமானால் இழக்கட்டும். ஆனால். 'கடவுளே கருணை காட்டு. என்று மன்றாடுகிறேன். நாங்களே ஆண்டவர்கள். நாங்களே எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியது எத்தனை மடத்தனமானது.
நாங்கள் ஆண்டவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல. ஆளுகிறவர்கள் கூட இல்லைத்தான்.
மூக்கை விட்டு, ஐந்து பெண்களின் அதரங்களிலும் வாயை மறைத்து வெள்ளையாகப் பிளாஸ்டர்களை ஒட்டு கிறார்கள். கதிரையுடன் சேர்த்துக் கட்டி வைக்கிறார்கள்.
ஒன்றுமே செய்ய முடியாத ஒரு கொடுமைக்குள் நான் சித்திரவதைப் படுகின்றேன்.
‘ம் ம். என்னுடன் வா' என்று என்னை உள்ளே அழைத்துப் போகின்றான் அவன். f
அல்மாரியைத் திறக்கச் சொன்னான். கூடவே வந்த இன்னொருவன் உள்ளே இருப்பவற்றை இழுத்திழுத்து வீசுகின்றான். கிண்டிக்கிளறி உதறு கின்றான். என்னைப் பிடித்திருப்பவனோ
கழுத்தில் அழுத்திய துப்பாக்கியை எடுப்
பதாக இல்லை.
“என்ன தேடுகிறீர்கள்” என்று கேட் டேன்.
"போலீஸ் ரிப்போர்ட் என்று நினைத் தாயா! பொக்கிஷத்தைத் தேடுகின் றோம். பணத்தை. காசை.” என்றான். “காசு இல்லாவிட்டால் என்ன செய்
ஞானமி

வீர்கள்” என்றேன்.
"அந்தப் பூனையைப் போல்தான் ஆவீர்கள். மரியாதையாக இருப்ப வற்றைக் கொடுத்துவிட்டால் பேசாமல் போய்விடுவோம். உயிருடன் இருந்தால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம்." அவன் சொல்வதிலும் ஓரளவு நியா யம் இருக்கவே செய்கிறது!
லொக்கரைத் திறந்தேன். காட்டி னேன். எடுத்துக் கொள்ளச் சொன்னேன். அப்படியே வழித்து ஒரு பையில் கொட்டிக் கொண்டான். நூல் விற்க வந்த கிழவரே என் மனக்கண்முன் வந்துவந்து
8_Tef.
நகைகள் என்றான். "என்னுடன் வா." என்றவாறு அம்மா
வும் மற்றவர்களும் படுக்கும் அறைக்குச்
சென்றேன்.
கூடத்தைக் கடந்து செல்கையில் உட்கார வைத்திருக்கும் பெண்களையும் காவல் நிற்கும் துஷ்டர்களையும் கவனித்துக் கொண்டேன். பட்டப்பகலில் கூட பஸ்களில் நிற்பதுபோல பெண் கள்ை நெருக்கிக்கொண்டு யாரும் நிற்க வில்லை.
கருமமே கண்ணாக நின்ற அவர் களின் நிலை எனக்குத் திருப்தி தந்தது. அல்மாரியைத் திறந்து காட்டினேன். அப்படியே வழித்துப் போட்டுக் கொண் டார்கள்.
கண்களுக்குள் மின்னலடிக்கும் நாலைந்து பட்டுச் சேலைகளையும் உருவிச் சுருட்டிப் போட்டுக் கொண்டார் கள். சேலைகள் பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. விலை மதிப்புள்ளவைகளையே சுருட்டி எடுத்துக் கொண்டனர். என்னையும் இழுத்துக் கொண்டு மறுபடியும் ஹோலுக்கு வந் தார்கள்.
ஏதோ கண்களால் பேசிக் கொண் LITiras6i.
எனக்குப் பயமாக இருந்தது. என் கண்முன்னாலேயே துரியோதன துச்சாதன செயல்களில் இறங்கி விட்டார் கள் என்றால். மிகவும் சங்கடப் பட்டேன். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. பெண்களின் கழுத்தில்,
ஜூன்-2001
www.www.w8 = »z]
கையில் இருந்தவைகள் பற்றித்தான் அந்தச் சமிக்ஞைகள்.
“நானே கழட்டித் தருகின்றேன்" என்றேன்.
"ஏன் உங்கள் பெண்கள் மேல் எங்கள் கைகள் பட்டுவிடக்கூடாதோ. கழுத்தில் மட்டுமில்லை ஒய்.” என்று பேசத் தொடங்கியவனை உதட்டின் மேல் விரல்வைத்து "வாயை மூடிக் கொண்டு இரு" என்று சாடை காட்டி னான் என்னருகே நின்றவன். என்னைப் பார்த்துத் தலையை ஆட்டினான்.
அம்மாவின் கழுத்திலிருந்து, கையி லிருந்து, காதிலிருந்து கழற்றிக் கழற்றி நீட்டினேன்.
அம்மாவை நகையுரிந்துவிட்டு பிறகு தங்கை, மைத்துணி, மகள் என்று மனைவியிடம் நின்றேன்.
எல்லா நகைகளையும் நான் ஒவ் வொன்றாகக் கழற்றி அவர்களிடம் நீட்டியபோது ஒரு கற்சிலைபோல் இருந் தவள் கழுத்தில் கை வைத்ததும் கண்ணிர் நிறைந்த கண்களுடன் என் னைக் கெஞ்சினாள்.
“தாலிக்கொடியை மட்டும் விட்டு விடவா." என்று அவனிடம் வினவி னேன்.
"நோ. நோ. அதுதான் முக்கியம் என்றான்.
"தமிழ்ப் பெண்களிடம் நாங்கள் எதிர் பார்ப்பதே அதைத்தானே" என்றான்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. “ஐந்து பவுண், ஏழு பவுண்; ஒன்பது 6609 - 61601g) &n Lig.6 &nlig5 &Lig.85
டு

Page 6
கொள்ளும் உங்ளுக்கு இது வேண்டும்." என்று எரிச்சல் பட்டுக்கொண்டேன்.
கொடி கைமாறியது! செக்கிங் முடிகிறது. என்னையும் ஒரு கதிரையில் அமரச் செய்தான் வாயில் பிளாஸ்டரை ஒட்டி னான். கைகளைப் பின்புறமாகச் சேர்த்து நாற்காலியுடன் கட்டினான்.
"நாங்கள் போனபிறகு மெது மெது வாகக் கட்டவிழ்த்துக் கொள்ளுங்கள். என்றபடி கிளம்பினார்கள்.
சப்தம் கேட்காத துப்பாக்கியால் முடித்துவிட்டுப் போகாமல் உயிருடன் விட்டுவிட்டுப் போகிறார்களே என்று நான் மகிழ்ந்து கொள்ளும்போது எனது தங்கையை முத்தமிட முயற்சிக்கின்றான் ஒருவன்.
முகத்தை அங்குமிங்கும் திருப்பி அவள் திமிற அவன் முயற்சிக்க அந்தப் போராட்டத்தில் கதிரை புரண்டு கீழே விழ முன்னால் நடந்து கொண்டிருந் தவன் திரும்பிவந்து "வறேம் பாங்.." என்று அவனை இழுத்துக் கொண்டு போனான்.
"மு கேனு பிஸ்ஸெக்.” என்று கோபப் பட்டான் இன்னொருவன்.
மூட்டையும் முடிச்சுமாக அவர்கள் பூட்டிக்கிடந்த முன்கதவைத் திறந்தது தான் தாமதம். சினிமாத் தியேட்டரில் இருட்டுக்குள் திரைநோக்கி ஒளி வெள் ளம் பாய்வதுபோல் கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம் டக்கெனப் பாய்ந் தது.
பிரமாண்டமான ஒளிக்கற்றை திடீ ரெனப் பாய்ந்ததால் திடுக்கிட்டு திக்கு முக்காடியபோன போலி ஆமிக்காரர் களைச் சுற்றி வளைத்துக் கொண்டது போலீஸ் கூட்டம். எங்களை நோக்கி பரிதாபத்துடன் ஓடிவந்த பக் கத்துவிட்டு சுதுமாத்தியா எனது கட்டுக் களை அவிழ்த்து விட்டபடி
“உள்ளே ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட நான் மெதுவாக இந்தப் பக்கம் வந்தேன். சுவரும் இல் லைத்தானே. தாண்டிவர லேசாக இருந் š·
வந்திருப்பவர்கள் திருடர்கள் என்பது தெரிந்து விட்டது. கதவைத் தட்டினால் உங்கள் உயிர்களுக்கு ஏதும் ஆபத்து வரலாம் என்ற பயத்தில் முன்வீட்டு றோ யையும் அடுத்தவிட்டு சுனிலையும் எழுப் பிக் கூட்டிவந்து எனது மனைவியையும் உசார்படுத்தி இருட்டுக்குள் நிறுத்தி விட்டு போலிசுக்கு ஓடினேன். நல்ல வேளை எனது சைக்கிளையும் சரிபண் ணிக் கொடுத்தீர்கள்." என்று பேசிய வாறு எனது வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டரைக் கழற்றினான்.
இடுப்பில் தொங்கும் குழந்தையுடன் மெதுவாகத் தயங்கித் தயங்கி பெண் களை நோக்கி வருகின்றாள் அவன் மனைவி.
பிளாஸ்டர் கழற்றப்பட்ட பிறகும் எனக்குப் பேச நா எழவில்லை. பேசு
வதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. 米 米 米
SS SS SSLSLSS LSLSLSLSLS S LS LSSS SS SS SS SS SS S SSSTSTS LSS SS LS SS S SS S SS LS S LS LSL S SSLSS
அன்பார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை பற்றிய கருத்துக்களைக்களையும் சஞ்சிகை யின் தரத்தை மேம்படுத்த உங்க ளது ஆலோசனைகளையும் அறி யத் தாருங்கள். V−
ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. உங்களது படைப்புகளினி
மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக்
கிய தரத்தை மேம்படுத்துங்கள்.
மு)
சந்தா விபரம்
தனிப்பிரதி: ரூபா 15/- வருடச்சந்தா: ரூபா 180/- (தபாற்செலவு உட்பட)
சந்தா காசோலை மூல மாகவோ மனியோடர் மூலமாக வோ அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய பெயர், முகவரி ;- T.GNANASEKARAN 19/7, PERADENIYA ROAD,
KANDY.
ஞானமி

எழுதத் தூண்டும் எண்ணங்கள்
(கலாநிதி துரை.மனோகரன்)
மணிவிழாக் காணும் எழுத்தாளர்
ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதை ஆசிரி யராக, நாவலாசிரியராக, விவரண எழுத்தாளராக, புவியியலாளராக, வரலாற்றாய்வாளராக, பதிப்பாசிரிய ராகப் பல பாத்திரங்களை ஏற்று விளங்குபவர் எழுத் தாளர் செங்கை ஆழியான். அவரை ஓர் எழுத்தாளராக நான் அறிந்து கொள்வதற்கு முன், ஒரு நாடக நடிகரா கவே தெரிந்து கொள்ளமுடிந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் சில ஆண்டுகள் இடைநிலை வகுப்பு களில் படித்துக் கொண்டிருந்த போது, அவர் உயர்வகுப்பிற் கற்றுக் கற்றுக்கொண்டிருந்தார். அக்கால கட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த இ.மகாதேவா(தேவன் - யாழ்ப்பாணம்) எழுதி, இயக்கி மேடையேற்றிய கூடப்பிறந்த குற்றம் என்ற நாடகத்தில் கதாநாயகன் செல்லப்பனாகச் செங்கை ஆழியான் நடித்ததாக எனக்கு ஒரு ஞாபகம். பின்னர், உரும்பராய் இந்துக்கல்லூரியில் நான் உயர்வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒரே மனிதரின் இருவேறு ஆளுமைகளான எழுத்தாளர் செங்கை ஆழியானையும், புவியியலாளர் குணராசாவையும் ஒரே சமயத்தில் விரும்பியிருந்தேன். எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த என்னைச் செங்கை ஆழியான் கவர்ந்தார். புவியியலை உயர்வகுப்புப் பாடங்களுள் ஒன்றாக எடுத்திருந்த என்னைக் குணராசா ஈர்த்தார்.
இன்றைய ஈழத்து இலக்கிய உலகிலே செங்கை ஆழியானைத் தவிர்த்துவிட்டு இலக்கிய வரலாற்றை நிரப்ப முடியாத அளவுக்கு அவர் தமது சுவடுகளை ஆழமாகவும், அகலமாகவும் பதித்துள்ளார். சிறுகதை எழுத்தாளராக முகிழ்த்து, அத்துறையிலும் தம்மைச் சிறப்பாக இனங்காட்டிக்கொண்ட அவர், இலங்கையின் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராகவும் திகழ்கிறார். வரலாற்று நாவல்கள், சமூக நாவலகள், அரசியல் நாவல்கள், நகைச்சுவை நாவல்கள், நியோ ஜெர்னலிஸம் எனத்தக்க விபர விளக்க நாவல்கள் எனப் பன்முகப்பட்ட நாவல்ளை அவர் எழுதியுள்ளார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளோடு, இலங் கையிற் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினை பற்றியும் மிகத் துணிச்சலாக நாவல்களை எழுதியுள்ள செங்கை ஆழியானின் நெஞ்சுரம் வியக்கத்தக்கது. அவரது நாவல்களைப் படிப்பதில் ஏற்படும் சுவை போலவே, அவர் ள்முதிய நானும் எனது நாவல்களும் என்னும் நூலைப் படிப்பதும் சுவாரசியமான் அனுபவமாகும். 'ஈழத்தவர் வரலாறு என்ற நூலும் அவரது பன்முகப்பட்ட ஆளுமை யின் ஒரு பகுதியாக விளங்குகிறது. செங்கை ஆழியான் ஓர் எழுத்தாளராக மட்டுமன்றி, தரமான தொகுப்பாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் விளங்குவது மகிழ்ச்சிக்குரியது. அவரது முயற்சியினால் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சுதந்திரன் சிறுகதைகளையும் தொகுத்து வெளியிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தம்மை மட்டுமன்றி, பிற எழுத்தாளரையும் மதிக்கின்ற அவரது பண்பு மிகவும் போற்றத்தக்கது. அரசசேவையிலிருந்து அவர் ஓய்வு பெற்றுள்ள போதிலும், எழுத்துத்துறையிலிருந்து அவருக்கு ஓய்வு கிடைக்கப்போவதில்லை. செங்கை ஆழியானிடமிருந்து ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறது.
ஜூன் - 2001 (1)

Page 7
தடம் புரளும் தமிழ்நாடு - புதிய தேர்தலை முடித்து, புதிய ஆரவாரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுத்து முடித்திருக்கிறது, தமிழ்நாடு. தமிழ் நாட்டு மக்கள் ஊழல்பேர்வழிகளைத் தண்டித்து, பின்னர் மன்னிக்கும் பண்பு கொண்டவர்கள். தமிழ் நாட்டில் ஊழலைப் பரவலாக அறிமுகம் செய்த கருணா நிதியைத் தண்டித்து, பின்னர் மன்னித்தார்கள். இப்போது ஜெயலலிதாவுக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதியே பாடம் கேட்கும் அளவுக்கு ஊழலை விரிவுபடுத்தி, தமது ஆட்சியில் அதற்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத் தியவர், ஜெயலலிதா. அவரையும் தமிழ்நாட்டு மக்கள் முன்னர் தண்டித்து, பின்னர் மன்னித்துள்ளார்கள். தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றி ஓரளவு எதிர் பார்க்கப்பட்டதுதான். ஆனால், கருணாநிதியின் படுதோல்வி பலரையும் ஆச்சரி யத்தில் மூழ்கவைத்துவிட்டது. கருணாநிதியின் தோல்விக்கு வேறு யாரும் காரண மல்ல. கருணாநிதியேதான் காரணம். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பல வகைகளிலும் முன்னேறியது என்பது உண்மையே. ஆயினும், தமிழ்நாட்டின் விவசாயிகள், நெசவாளர்களின் பிரச்சினைகளைக் கவனத்திற் கொள்ள அவர் தவறிவிட்டார். மக்களது இத்தகைய அதிருப்திகள் ஒருபுறமிருக்க, தமது மகன் ஸ்டாலினை எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக முடிசூட்டிப் பார்க்க வேண்டு மென்ற கருணாநிதியின் பேராசையும் அவரது கட்சியின் படுதோல்விக்குக் காரண மாக அமைந்துவிட்டது. தமது மகன் முதல்வராக வருவதற்கான பாதுகாப்பு அரணைப் பலப்படுத்தும் நோக்கில், அவர் படிப்படியாகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸையும், மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபாலசாமியையும் ஓரங்கட்டத்தொடங்கினார். கருணாநிதியின் கூட்டணியிலிருந்து வெளியேறிய ராமதாஸ் தம்மை மெழுகாக்கி, ஜெயலலிதாவின் வெற்றிக்கு உதவினார். வை.கோ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிப்பதில் வெற்றி கண்டார். ராமதாஸ், வை.கோ. ஆகியோரின் வளர்ச்சிகளை வேரறுக்கும் தீவிர முயற்சியில் ஈடுபாடு காட்டிய கருணாநிதி, இறுதியில் வீரமும் செங்கோட்டையில் போட்டு, வெறுங்கையோடு வீடு புகுந்தார். சமதர்மச் சமுதாயம் பற்றிப் பேசும் அவர், தேவையற்ற முறையில், சாதித்தர்மம் பேசும் கட்சிகளைச் சேர்த்து மணல் வீடு கட்டினார். பெரியாரின் கொள்கைகளில் தமக்கு ஈடுபாடு ஏற்படாமல் இருந்திருந்தால், தாம் ஒரு கம்யூனிஸ்டாக மாறியிருப்பேன் என்று கூறும் அவர், பெரியார், அண்ணாத்துரை கொள்கைகளை மாத்திரமன்றி, தமது கொள்கைகளையே காற்றில் பறக்கவிட்டுவிட்டார். 'உலகத் தமிழர் தலைவன்’ என்றிருந்த "இமேஜையும் வாஜ்பாய் அரசுக்காகப் பறிகொடுத்துவிட்டார். எதிர் காலத்தில் ஜெயலலிதா போடும் வழக்குக் கணக்குகளுக்காக நீதிமன்றப் படிகளில் ஏறியிறங்கப் போகிறார்.
மறுபுறத்தில், மீண்டும் தமிழ்நாட்டு முதல்வராக முடிசூடிக்கொண்டுள்ள ஜெயலலிதா அம்மையார் அரசியல் நாகரிகம் கொண்ட ஒரு தலைவியும் அல்லர். அதிகார மமதையும், ஆணவமும், ஊழல் செயற்பாடுகளும் கொண்ட ஓர் அரசியல் வாதி. ஆயினும், துணிச்சலும், தன்னம்பிக்கையும், நிர்வாகத் திறமையும் கொண்ட ஒருவர். அவர் தமது நல்ல பக்கங்களைப் பலப்படுத்துவாராயின் தமிழ்நாட்டுக்கு நல்லது. வழக்கம் போலத் தமது பலவீனமான பக்கங்களையே மேலும் வளர்த்துக் கொள்வாராயின், நாட்டுக்குச் சாபக்கேடு. அவரது தெரிவில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. சோ போன்ற அரசியல் பித்தலாட்டக்காரர்களுக்கு ஜெயலலிதா முதல்வரானது ஒரு வெற்றியே. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மூப்பனார் போன்ற கொள்கை எதுவும் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியே. எதிர் காலத்தில் ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிரியாக விளங்கப்போகின்றவர் கருணா நிதி அல்ல. சுப்பிரமணிய சுவாமியே எதிர்காலத்தில் அந்தப் பாத்திரத்தை ஏற்று, ஜெயலலிதாவுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கப்போகின்றார்.
(2) ஞானமி

காட்டுப் பூனைகளும் স্থ
பச்சைக் கிளிகளும்.
அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர் கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான் நசுங்கிச் சாகப் போகிறேன்.
தலை சுற்றுகிறது. நெஞ்சு விம்மித் தணிகிறது. இதயம் படபடக் கிறது. தேகம் குப்பென்று வியர்க்கிறது. கைகளால் கண்களைப் பொத்திக் கொண்டு நான் வீரிட்டு அலறுகிறேன்.
சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மணிக்கூட்டில் நேரம் காலை எட்டு மணி. அதன் டிக் டிக் சத்தம் பெரிது பெரிதாகிக் கொண்டே வருகிறது. எண்னை நெருங்கி நெருங்கி வருகிறது. ஏ. கே.
47ன் சத்தம்போல் என் காதைப் பிளாக்
கிறது.
“சும்மா சத்தம் போடாதையடி பிள்ளை." அம்மா அடுப்படியிலிருந்து பலமாகக் கத்துகிறா.
கண்களைப் பொத்தியிருந்த கைவிரல்களைச் சிறிது விரித்து, நீக்க லினுடாகப் பார்க்கிறேன். இப்போது சுவர்கள் பின்புறமாக நகரத்தொடங்கு கின்றன. சிறிது நேரத்தில் மீண்டும் தமது இடத்தில் பொருந்திக்கொள்கின்றன.
நேரம் எட்டு ஐந்து. ரியூசன் வகுப்புக்கு நேரமா கிறது. வசந்தி, கவிதா, பூரணி, நான் எல்லோரும் சேர்ந்துதான் சைக்கிளில் ரியூற்ரறிக்குப் போவோம். இண்டைக்குக் “கெமிஸ்றி கிளாஸ் ஸேர் ஒன்பது மணிக் கெல்லாம் வந்துவிடுவார்.
"அம்மா, அம்மா. கதவைத் திறவுங்கோ.நேரமாச்சு. நான் ரியூசனுக் குப் போகவேனும்”
நான் கதவைப் பட படவெனப்
ஜூன் - 2001
பலமாகத் தட்டுகிறேன்.
** இவளோடை பெரிய கரச்சல். ரியூசனுக்குப்போற நேரம் வந்திட்டால் அலட்டத் தொடங்கி விடுவள்” அம்மா முணுமுணுக்கிறா.
கினிங். கினிங்.." தெருவிலை நிண்டு வசந்தி பெல் அடிக்கிறாள். என்னைக் கூட்டிக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறாள். “அம்மா கதவைத் திறவுங் கோ. ஏன் பூட்டி வைச்சிருக்கிறியள்? வசந்தி என்னை விட்டிட்டுப் போகப் போறாள்.”
அவள் என்னை விட்டிட்டுப் போனா, நான் தனியாகத்தான் போக வேணும். இனிமேல் நான் அந்தப் பக்கம் தனியாகப் போகமாட்டன். எனக்குப் பயமா இருக்கு. தனியாக அவங்கடை சென்றியைத் தாண்டிப் போற தெண்டா. வசந்தி கூடவந்தாப் பயமில் 66),
“அது வசந்தியில் லைப் பிள்ளை, வேறையாரோ தெருவிலை பெல் அடிச்சுக்கொண்டு போகினம். நீ சும்மா சத்தம் போடாமல் இரு."
அம்மா பொய் சொல்லுறா. வசந்தியின் பெல் சத்தம் எனக்குத் தெரியும். போறது வசந்திதான். கத வைத் தட்டித் தட்டி அம்மாவைக் கெஞ் சிக் கெஞ்சி நான் சோர்ந்து போகிறேன். கதவைத் தட்டிய கைகள் வலிக்கின்றன. வசந்தி போயிருப்பாள். ரியூசன் தொடங்கிற நேரமாச்சு. அவள் தனியாகத்தான் போனாளோ. அல்லது கவிதா பூரணி எல்லாரும் சேர்ந்து போயிருப்பினமோ..? எப்பிடிப் போனாலும்
(3)

Page 8
அவங்கள் சும்மா விடமாட்டங்கள். சென்றியிலை சோதிச்சுத்தான் அனுப்பு வாங்கள். ஐ.சி.யைத் திருப்பித் திருப்பிப் பார்த்து. ஸ்கூல் பாய்க்குகளைக் கொட்டிக் கிளறி, கேள்வியள் கேட்டு. சின்னராசு கார் ஒட்டிவரும் சத்தம் கேட்கிறது. யன்னல் பக்கம் சென்று வெளியே பார்க்கிறேன். யன்னலின் ஒரு பக்கக் கதவு உடைஞ்சு தொங்குது, இழுத்துப் பூட்ட ஏலாது.
“அடே சின்னராசு, இங்கை வாடா. அச்சாப் பிள்ளையெல்லே. இந்த அறைக்கதவைத் திறந்து விடடா" அவனுக்கு நான் சொல் லிறது கேட்கேல்லை. விர்ரென்று வேக மாய் அவன் கார் ஒட்டும்போது வாயி லிருந்து எச்சில் பறக்கிறது. தூவான மாய்த் தெறிக்கிறது. கால் இடறி விழப் போகும் நேரத்தில சமாளித்துக்கொண்டு கியரை மாற்றுகிறான்.
ரிவேர்ஸ் கியர் - பின்புறமாக வேகமாய் ஒட்டிவந்து விறாந்தையின் முன் நிற்பாட்டுகிறான்.
அவன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் விறாந்தையில் தொங்கும் கிளிக்கூண்டின் பக்கம் போவான். “ரிவிரஸ்' இராணுவ நடவடிக் கையின்போது நாங்கள் ஊரைவிட்டு ஓடி வன்னிக்குப் போயிருந்த காலத் திலை ஒரு கிளி பிடிச்சனாங்கள். திரும்பி வரேக்கை அதையும் கொண்டுவந்திட் டம். அது என்ரை செல்லக்கிளி.
சின்னராசு தினமும் கிளி சாப் பிடுகிறதுக்கு ஏதாவது கொண்டுவந்து கொடுப்பான். அது சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்பான். வெகு நேரமாய்க் கிளியுடன் பேசுவான். அவனைக் கண்டு விட்டால் கிளிக்கும் குதூகலம் பிறந்து விடும், ஏதேதோ பேசும்.
யன்னலினுாடாக வீட்டின் முன்புறத்தைப் பார்க்க முடியாது. அத னாலை சின்னராசு என்ன செய்யிறான் எண்டு என்னால் பார்க்க முடியவில்லை. சின்னராசு மீண்டும் காரை ஸ்ராட் செய்கிறான்.
(4)
“அடே என்ரை ராசாவெல் லே. கதவைத் திறந்துவிடடா. நான்
மீண்டும் அவனிடம் கெஞ்சுகிறேன்.
*முடியாதக்கா. திறந்து 6LITrsò LDT só 6660)6STÜ Guð6Nur” என்று சொல்லிக்கொண்டே கார் ஒட்டிய வண்ணம் அவன் விரைகிறான்.
எனக்கு மீண்டும் தலை சுத்து கிறது. திடீரெண்டு நாலு பக்கச் சுவர் களும் கைகோத்துக்கொண்டு என்னைச் சுற்றி வட்டமாய்ச் சுழல்கின்றன. “ஐயோ. ஐயோ.” நான் கண்களை மூடிக்கொண்டு வீரிட்டு அலறுகிறேன். நெஞ்சு படபடக்கிறது. தேகம் வியர்வை யில் நனைகிறது. மயக்கம் வருகிறது. நான் நிலத்திலே சாய்கிறேன். எவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்தேனோ எனக்கே தெரியாது.
விழித்தெழுந்தபோது உடம் பெல்லாம் வலியெடுக்கிறது, சோர்வாக இருக்கிறது.
இப்ப ரியூசன் முடிஞ்சிருக்கும். முந்தி வடக்குச் சந்தியிலை ‘சென்றி இருந்தபொழுது எங்களுக்கு எந்தக் கரச் சலும் இல்லை. பனை வடலியஞக்குப் பின்னாலிருந்து எழும்பி வருகிற சூரி யனை ரசித்தபடி நாங்கள் ரியூசன் வகுப்
 

புகளுக்குப் போறனாங்கள். சென்றிப் பக்கம் போகாமலே ரியூற்றறிக்குப் போக லாம். இப்ப இடத்தை மாத்திப் போட் டாங்கள். எங்கடை வீட்டிலை இருந்து நாலு வளவு தள்ளி சென்றி போட்டிருக் கிறாங்கள்.
போன மாசத்திலை ஒரு நாள் மைமல் பொழுது. “றக் ஒண்டிலை வந்து அந்தப் பெரிய விட்டுக்கு முன் னாலை இறங்கினாங்கள். வீட்டையும் வளவையும் சுத்திச் சுத்திப் பாத்தாங்கள். ஆடுத்த நாள் மரங்கள் தறிச்சு விழுத்து கிற சத்தங்கள் கேட்டுது. பனையளைத் தான் தறிச்சவங்கள். பனை யாழ்ப்பாணத் தின் சின்னம், கற்பகதரு எண்டு எங்கடை ஆக்கள் சொல்லிறவை. இவையஞக்குப் பனையளைத் தறிச்சாத்தான் பாது காப்பாம்!
தெருவிலை மண்மூடையள். மரக்குத்தியள். தகரங்கள். பெயின்ற் அடிச்ச தார்ப் பீப்பாக்கள். துவக்கோடை நிக்கிற இளவட்டங்கள். கொச்சைத் தமிழ் மிரட்டல்கள். வெறித்த பார் வைகள். சிலவேளைகளில் கொஞ் சல்கள். காவல் அரண் ஒன்று புதிதாய் முளைத்தது.
அங்கு ஒரு நெட்டையன். பெயர் சறத். எந்த நாளும் சொட்டைக் கதைதான் கதைப்பான். அவனுக்குத் தமிழ் எழுத வாசிக்கவும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
** சிங் களமி பேசதி தெரியுமா?’ எண்டுதான் முதலில் கேட் பான். இல்லையென்று சொன்னால் கொச்சைத் தமிழிலே கதைப்பான்.
“தமிழ்ப் பெட்டையள் நல்ல வடிவாம். இங்கை பெம்பிளைப் பிள்ளை யள் எல்லாருக்கும் சைக்கிள் ஓடத் தெரி யுமாம். உங்கடை அம்மாமாருக்கும் சைக்கிள் ஒடத்தெரியுமோ எண்டு ஒரு நாள் கேட்டான். எங்கடை ‘ஐ. சி.யை வாங்கிவச்சுக்கொண்டு கனநேரமாய்த் தராமல் கதைச்சுக்கொண்டே இருந்தான். வசந்திக்குக் கோபம் வந்திட் டுது. “ரியூசனுக்கு நேரமாச்சு, ஐ.சி.
ஜூன் - 2001
யைத் தாருங்கோ. தராட்டில் பெரிய வனிட்டை நிப்போட் பண்ணுவம்” என்று LILLIL-g55ft 6ft.
"நான்தான் இங்கே பெரிய வன்” எண்டு சொல்லிச் சிரித்தான் அவன்.
அந்தச் சென்றியைக் கடந்து போறதெண்டா எல்லாருக்கும் சங்கடம் தான். வண்டில்களில், சைக்கிள்களில், தலைச்சுமைகளில் கஷ்டப்பட்டுக் கட்டி யேத்திக் கொண்டுபோற சாமான்களை செக் பண்ணிறதெண்டு கொட்டிச் சிந்து வாங்கள். சைக்கிள் செயின்கவர்களைக் கழட்டிச் செக்பண்ணிப்போட்டு நிலத் திலை போடுவாங்கள், நாங்கள்தான் அதைப் பூட்டவேணும். கொழுப்பு.
அண்டைக்கு எங்களைச் செக் பண்ணிற நேரத்திலை வேறையொருத் தரையும் செக்பண்ணாமல் போகவிட் டாங்கள். எல்லாரும் எங்களைத் திரும் பித் திரும்பிப் பாத்துக்கொண்டே போச் சினம். சந்தேகக் கண்கள். எங்களுக் குக் கூச்சமாய் இருந்துது.
கொஞ்ச நாளில் ரியூசன் வகுப்பிலை எங்களைப்பற்றிக் கிசு கிசுப்பு. நாங்கள்தான் வலிய வலியப் போய் சென்றியிலை நிண்டு சிரிச்சுச் சிரிச்சுக் கதைக்கிறமாம்.
பின் வாங்கிலை இருக்கிற சிவராசன் சொன்னான், “எங்கடை ஊர்ப்பெட்டையள், தெரிஞ்சதுகள் எண்டு ஆசையாய் நாங்கள் ஏதும் பகிடி கதைச் சால் எங்களை முறைச்சுப் பாக்கிறா ளவை. அவங்களோடை இளிச்சு இளிச்சு நளினம் பேசிறாளவை."
“அதுமட்டுமில்லையடா, எங் களைப்பற்றி அவங்களிட்டை றிப்போட் பண்ணுறாளவை, என்றான் பக்கத்தில் இருந்த வேல்முருகு.
அப்போது வசந்தி என்னுடைய காதுக்குள்ளை சொன்னாள், “உவை யளுக்கு எங்கடை நிலைமை எங்கை தெரியப்போகுது? அவங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமோ? அவங்களோடை சிரிச்சுக்
(15)

Page 9
கதைச்சா செக்கிங் குறையும், பிரச் சினை இருக்காது. நாங்கள் மனசுக் குள்ளை எரிஞ்சுகொண்டுதான் வெளி யிலை சிரிக்கிறம் எண்டது உவைய ளுக்குத் தெரியாது.”
கொஞ்ச நாட்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. சென்றியில் எங்க ளுக்குப் பெரிதாய் செக்கிங் ஏதும் இருப்பதில்லை. தனியாய்ப் போகும் போதும் பயமிருக்காது. அதனால் ரியூற் ரறிக்குப் போகும்போது சேர்ந்து போக வேண்டுமென்ற நிலைமையும் இல்லை. இப்போது அங்கு ஐ.சி.யை எங்களிடம் கேட்க மாட்டார்கள். ஆனாலும் அந்த இடத்தில் சைக்கிளை ஒட்டிச் செல் வதற்கு எவருக்கும் அநுமதியில்லை. இறங்கி உருட்டிக்கொண்டுதான் போக வேணும்.
வசந்தி ஒருநாள் என்னிடம் கேட்டாள், “சென்றியிலை நிக்கிற சறத் தைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?"
“நல்ல ஆள்மாதிரித்தான் தெரியுது” என்றேன்.
"அவனோடை நீர் அடிக்கடி கதைக்கிறீராம். அவன் உமக்கு லெட்டர் குடுத்தவனாம், போய்ஸ் கதைக்கினம்
** இல்லவே இல்லை.; போய்ஸ் சும்மா கதைகட்டுகினம். உப்பிடித்தான் உவையள் எல்லாரையும் சும்மா கேவலப்படுத்திறவை.”
* சறத் உமக்கு லெட்டர் குடுத்ததை சிவராசன் கண்ணாலை கண்டவராம்.”
நான் திகைத்துப் போனேன். “என்ன வசந்தி நீரும் அதை நம்புறீரே?” லெட்டர் எனக்குக் குடுக் கேல்லை. போறவழியிலை போஸ்ற் ஓபி ஸிலை போஸ்ற் பண்ணச் சொல்லித் தான் தந்தவர். சத்தியமாய் வேறை யொண்டும் இல்லை.” நான் அழுது விட்டேன்.
சின்னராசு யன்னல் பக்கம்
பரபரப்புடன் ஓடிவருகிறான். யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி தாழ்ந்த குரலில் கிசுகிசுக்கிறான். அக்கா, அக்கா
(16)
ஆமிக்காறங்கள் தெருவிலை நிக்கி
றாங்கள். விடுவிடாய் செக் பண்ணப்போ
றாங்களாம். எனக்குத் தெருப்பக்கம் போகப் பயமாய் இருக்கு அதுதான் இங்கை ஓடிவந்தனான்.”
எனக்குத் தலைக்குள் ஏதோ செய்கிறது. சுவர் ஒரமாய் மறைந்து நின்று தெருப்பக்கம் பார்க்கிறேன். சறத் தின் தலை தட்டிப் படலைக்குமேலால் தெரிகிறது. அவனருகே நிற்பவன் சுமதி
பாலா. அவர்கள் என்னைத்தான் நோட்
டம் விடுகிறார்கள். சறத் என்னைக் கண் டிட்டான். தலையில் அணிந்திருக்கும் தொப்பியை முன்புறமாகச் சரித்து தன்னு டைய முகத்தை மறைக்க முயற்சிக் கிறான். என்னைக் கூர்ந்து பார்க்கிறான். அவனது கையில் ரி.56 இருக்கிறது. துவக்கின் விசையில் அவனது சுட்டு விரல் பதிவது நன்றாகத் தெரிகிறது.
எங்கோ இருந்து வந்த காட்டுப் பூனையொன்று முன்விறாந்தைப் பக்கம் போகிறது.
“மியாவ், மியாவ்”
“எடே சின்னராசு, கிளிக்குச் சாப்பாடு போட்டனியே? கிளிக்கூடு திறந்தபடியே கிடக்கு. பூனை உலா
வுதடா கவனம்”
சின்னராசு என்னை விநோ தமாய்ப் பார்க்கிறான். “ என்னக்கா மறந்து போனியளே? இப்ப கிளி அங்கை இல்லை. போன கிழமை அது செத்துப்போச்சு.”
ஞானமி
 

ஓ. ஓமோம், எனக்கு நினை வுக்கு வருகிறது. கொஞ்சம் கொஞ் சமாய் புகை மூட்டதுக்குள் தெரிவது போல் நினைவு வருகிறது. நான் விம்மி விம்மி அழுகிறேன்.
அண்டைக்கு நான் தனியாத் தான் போனனான். சென்றியிலை சறத்தும் சுமதிபாலாவும்தான் நிண்ட வங்கள். என்ரை சைக்கிளைப் பறிச்சு உள்ளுக்குக் கொண்டுபோய் வச்சிட் டாங்கள். சைக்கிளைத் தரச்சொல்லி நான் கெஞ்சி மன்றாடினன். உள்ளுக் குப் போய் எடுக்கச் சொன்னாங்கள்.
நான் தயங்கித் தயங்கி. பயந்து பயந்து. ஐயோ எனக்கு மயக் கம் வருகுது. தேகம் நடுங்குது, வேர்க் குது. நெஞ்சு படபடக்குது.
ஓ, அதுக்குப் பிறகு. அதுக் குப் பிறகு. உச்சந் தலைக்குள் ஏதோ கிழிந்து சிதறி. எழும்ப முடியாமல். எழும்பி, நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி, சைக்கிளை உருட்டிக் கொண்டுதான் வீட்டுக்கு வந்தனான்.
விறாந்தையிலை சைக்கி ளைச் சாத்தினபோது அம்மா கவலை
யோடு சொன்னா, “உவன் சின்னராசு வந்து கிளிக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தவன். கிளிக்கூட்டுக் கத வைப் பூட்ட மறந்திட்டான். காட்டுப் பூனையொண்டு திரிஞ்சது. கிளியைக் கடிச்சுக் குதறிப் போட்டுது பிள்ளை.” எனக்கு நெஞ்சு விறைச்சுப்
(3LT85.
அம்மா என்ன சொல்லிறா. ஒருவேளை. ஒருவேளை?
என்னுடைய தேகம் நடுங்
கிளி இரத்த வெள்ளத்தில் குற்றுயிராய்க் கிடக்கிறது. அதன் அடி வயிற்றின்கீழ் காட்டுப் பூனை பதித்த கோரச்சுவடுகள்.
மயங்கி நிலத்திலே சாய் கிறேன்.
என்னைச் சுற்றியிருக்கும் கவர்கள் சுழல்கின்றன, என்னை நெரிப் பதற்கு மெது மெதுவாய் நெருங்கி வரு கின்றன.
“g8ur. g8ur”
(யாவும் கற்பனையல்ல)
ஆச்சிதும்
வானம் இறந்து விட்டது. புள் ஏதும் பறக்கவில்லை அறுவடைப் பாடல்களின் எதிரோலி கேட்கவில்லை
முதிர்ந்த சோளங் கதிர்களை ஒரு அரிவாளும் வெட்டவில்லை. சூரியன் மறைந்து விட்டது. ஒரு குரலேனும் காற்றைக் கிழிக்கவில்லை.
ஒளி மங்குகிறது. எல்லா ஒலிகளும் மங்குகின்றன. சுற்றியுள்ள பாதைகள் மீது ஒரு பனித்திரை படர்கிறது. ஈரம் வற்றிய மரம் நிலை பெறவில்லை. புல் காய்ந்து கிடக்கிறது. அந்திக் கருக்கலின் ஒளியூடு எங்கும் அமைதியும் அச்சமும் தவழ்கின்றன.
அந்நிய வயல்வெளிகளுடு வெற்றிகரமாக அணிவகுத்துச்
சவாரி வருகிறவன் நிழல்கட்கு அஞ்சுகிறான்.
G"ஸ்தாவி கர்க்லெச்
க்ரோவேஷிய கவிஞர், பிறப்பு ~ 1899.
gూ6t = 2001

Page 10
கைலாசபதியின்
"வீரயுகப்பாடல்கள்” பற்றிய ஆய்வு
அ. முகம்மத சமீம் மார்க்சீயத் தத்துவத்தில் ஊறித்திளைத்திருந்த பேராசிரியர் கைலாசபதி, பண்டைய தமிழிலக்கியத்தை மார்க்சீயக் கண்கொண்டே பார்த்தார். பண்டைய தமிழர்களின் வாழ்வையும், அவர்களது வாழ்வைப் பிரதிபலித்த அவர்களுடைய இலக்கியங்களையும், மரபுவழி முறையில் பார்க்காமல், விஞ்ஞான முறைப்படி பார்த்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர்தான் கைலாசபதி, சமூகச் சூழ்நிலை யிலிருந்து மனிதனைப் பிரித்துவிடமுடியாது. ஒரு சமூகத்தின் சூழ்நிலையிலிருந்து தோன்றும் மனிதன், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால் பாதிக்கப்படுகிறான். ஒரு சிந்தனையாளன் அச்சமூகத்தின் இதயத்தைப் பிரதிபலிக்கிறான். ஒரு சிந்தனை யாளன் எவ்வளவு தூரம் சமூகத்தின் சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறானோ, அவ்வளவு தூரம் அவனுடைய சிந்தனைகள் அச்சமூகத்தின் சிந்தனைகளை மாற்றியமைத்து, அதனை வழிநடத்திச்செல்கிறது. இச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்தான் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குக் காரணமாயமைகின்றன. அப்படி யொரு சிந்தனையாளர்தான் பேராசிரியர் கைலாசபதி.
கைலாசபதி, 1933ம் ஆண்டுக்கும், 1982ம் ஆண்டுக்குமிடையில் வாழ்ந்த ஒரு மனிதன். 'சமூக சூழ்நிலைகளும் மாற்றங்களும்தான் ஒரு மனிதனை உருவாக் குகிறது என்ற தத்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டால், கைலாசபதியும் இக்கால கட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்ளினால் பாதிப்படைகிறார். சமூகமாற்றங்கள் ஏற்படு வதற்கு அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு பெரும் காரணமாயமைகின்றன. இலங்கை அரசியலிலும், உலக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட &lr6ðasLLtd ggil.
1933ம் ஆண்டில் சர்வஜனவாக்குரிமையையும், டொனமூர் அரசியல் திட்டத் தையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் இலங்கையில் அமுல் நடத்தினர். சுருங்கச் சொன்னால், இலங்கை மக்களுக்கு உள்நாட்டு விவகாரத்தில் ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டதோடு, பொதுசன வாக்குமூலம் தமக்கு வேண்டியவர்களைத் தெரிவு செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது.
சர்வதேச மட்டத்தில் மார்க்சீய சித்தாந்தத்தின் அடிப்படையில் சோஷலிச அரசாங்கமொன்று சோவியத் யூனியனில் ஸ்தாபிக்கப்பட்டது. சோவியத் யூனியனை மையமாக வைத்து சர்வதேச கம்யூனிச இயக்கம் உலகெங்கும் பரவியது. இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையிலும் சோஷலிசக் கருத்துக்களை மையமாக வைத்து இடதுசாரிக்கட்சிகள் தோன்றின. இக்கட்சிகள் அரசியலிலும் காலடி வைத்தன. உலக மகாயுத்தம் முடிவடைந்ததோடு, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் காலனித்துவ ஆட்சி முடிவடைந்தது. ஆங்கில ஆட்சியாளருக்குச் சேவகம் செய்த ஒரு வர்க்கத்தினர், சுதந்திர இலங்கையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றனர். இதேவேளையில் இவ்வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளின் சோஷலிச கருத்துக்கள் பரவின. இடதுசாரிக் கட்சிகளின் கருத்துக்கள், மத்தியதர வர்க்கத்தினர் மத்தியிலும், குறிப்பாக மாணவர் மத்தியிலும் பரவியது. பெரும்பாலும், மாணவர் இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களாகவே செயற்பட்டன. குறிப்பாக சர்வகலாசாலை மாண வர்கள் மத்தியில் இவ்வியக்கங்களின் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றன.
ஞானமீ

1956ம் ஆண்டில் இடதுசாரி இயக்கங்களைச் சார்ந்த, தேசிய பூர்ஷாவா வர்க்கத் தினர் ஆட்சியை அமைத்தனர். மார்க்சீயக் கருத்துக்கள், அரசியல், கலாசாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் பரவின.
இதே காலகட்டத்தில் இந்தியாவிலும் மார்க்சீய கருத்துக்கள் இலக்கியத்தில் செல் வாக்குப் பெற்றன. பாரதி ஒரு தேசிய, புதுமைக் கவிஞனாக இனங்காணப்பட்டார். நாற்பதுகளில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம் காரணமாக இலக்கியத்தில் ஒரு புதிய உத்வேகம் தோன்றி யது. புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, பி.எஸ்.ராமையா போன்றவர்கள், சிறுகதை இலக் கியத்திற்கு புதுமெருகூட்டி ஒரு புதிய மரபை உருவாக்கினார்கள். ப.ஜீவானந்தம், எஸ்.இராம கிருஷ்ணன், பாலதண்டாயுதம், சிதம்பர ரகு நாதன், போன்றவர்கள் மார்க்சீயக் கண்ணோட் டத்துடன் இலக்கியத்தை அணுகினார்கள். இதே காலகட்டத்தில், கல்லூரி மாணவனாகவும், சர்வகலாசாலை மாணவ னாகவும் இருந்த கைலாசபதி, இவ்விடதுசாரி இயக்கங்களின் சோஷலிச கருத்துக் களாலும், தென்னிந்திய மார்க்சீய இலக்கியவாதிகளின் சிந்தனைகளாலும் பாதிக்கப் பட்டார். கைலாசபதியின் ஆரம்பகால எழுத்துக்களில், சோஷலிச கருத்துக்கள் இருப்பதைக் காணலாம். இலங்கையில் முற்போக்கு இலக்கியம் வளர்வதற்குக் கைலாசபதி ஒரு ஊன்றுகோலாக அமைந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தைத் தோற்றுவித்து அதன் தலைமைக் குழுவில் ஒருவராகவும் கைலாசபதி செயல்பட்டார். -
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலங்கை இலக்கிய வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இலவசக் கல்வி காரணமாக, இலங்கையில் எழுதவும், வாசிக்கவும் கூடிய ஒரு இளம் சமுதாயத்தினர் தோன்றலாயினர். தென்னிந்திய தமிழிலக்கியங்களின் பாதிப்புக்குள்ளாகியிருந்த இவர்களின் பார்வை யை இலங்கையின் பக்கம் திருப்பிவிட்டனர் இம்முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர். தமிழ்நாட்டு சூழலை வைத்து, தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகளைப் படைத்த வைத்திலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்றவர்களின் படைப்புக்கள் இப்புதிய தலைமுறையினரின் மத்தியில் செல் வாக்கிழந்தன. இலங்கை மண்ணையும் இலங்கை மக்களின் பண்பையும் பிரதி பலிக்கின்ற கதைகளை இலங்கை எழுத்தாளர்கள் படைக்கத் தொடங்கினர்,
முதலாளித்துவ சமுதாயத்திற்கும், தொழிலாளர் சமுதாயத்திற்கும் இடையே தோன்றிய முரண்பாடு இலக்கியத்திலும் பிரதிபலித்தது. பண்டித வகுப்பினருக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையே முரண்பாடு வளர்ந்தது. மரபு, ஆத்மீகம் என்று கூறிக்கொண்டு, மக்களின் உணர்ச்சிகளைச் சிறுமைப்படுத்தியது இவ்வர்க்கம். இலக்கியம், மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தவேண்டும், அவர்களுடைய பொழுதுபோக்காக அமையவேண்டும், என்று வாதாடிய இம்மரபினர், பாமர மக்களின் மொழியை இழிசனர் வழக்கென்றும், இம்மொழியை இலக்கியத்தில் புகுத்தப்படல் கூடாதென்றும், இதனால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்றெல் லாம் கூறி முற்போக்கு எழுத்தாளரைச் சாடினர். இதற்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாம், மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, மக்களின் வளர்ச்
ஜூன் 2001 (19)

Page 11
சிக்காக, என்று வாதாடி மக்களின் உணர்ச்சிகளுக்கும் அவர்களின் அபிலாஷை களுக்கும், அவர்களின் எண்ணங்களுக்கும் இலக்கியத்தில் இடங்கொடுக்க வேண்டும் என்றும் கூறினர். பாமரமக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்போது, அவர்கள் பேசும் மொழி, இலக்கியப் படைப்புகளில் இருந்தால்தான், அதில் யதார்த்தம் இருக்கும், உண்மை வெளிப்படும் என்ற கருத்தை முற்போக்கு வாதிகள் முன் வைத்தனர். இம்முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் தோன்றுகிறார் கைலாசபதி, முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் முக்கிய பங் கெடுக்கிறார். ஒரு தினசரி பத்திரிகையின் தலைமை ஆசிரியராகக் கடைமையேற்ற இவர், அதன் வார இதழில் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். பின்னர் சர்வகலாசாலையில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகப் பதவியேற்றபின் முற்போக்கு எண்ணங்களை மாணவர் மத்தியில் பரப்பினார். தேசிய இலக்கியம், மண்வாசனை என்ற புதிய கருத்தோட்டங்களுக்கு விளக்கம் அளித்தார். மார்க்சீயத்தில் ஈடுபாடுடைய கைலாசபதி மார்க்சீயக் கண்ணோட்டத்தில் தமிழிலக்கியத்தை ஆராய முற்பட்டார். தன்னுடைய திறனாய் வில் புதிய பரிமாணத்தைப் புகுத்துகிறார். தன்னுடைய அளவுகோல் மூலம் தற் கால இலக்கியத்தை ஆராய்ந்த அவர், பண்டைய தமிழிலக்கியத்தையும் ஆராய்ந் தார். தன்னுடைய ஆய்வின் சிகரமாக அமைந்ததுதான் அவருடைய வீரயுகப் பாடல்கள் பற்றிய ஆய்வு. இவ்வாய்வில் ஒரு புதிய சிந்தனையைப் புகுத்துகிறார். ஏனைய அறிஞர்கள் காணாத புதுமைகளை இவ்வாய்வில் காண்கிறார். பண்டைய தமிழிலக்கியம் பற்றிய ஆய்வுக்கு ஒரு புதிய திருப்பத்தைக் கொடுக்கிறார். சங்க கால இலக்கியங்களை ஆராய்ந்த பல அறிஞர்கள், அதன் தொன்மையைப் பற் றியும், மொழிநடையைப் பற்றியும், அவைகளிலிருந்த பொருளைப்பற்றியுமே கூறி னார்கள். மார்க்சீயக் கண்ணோட்டத்தில் சங்க இலக்கித்தை ஆராய்ந்த கைலாசபதி, பண்டைய தமிழ்மக்களின் வாழ்வை நுணுக்கமாக ஆராய்கிறார். மார்க்சீயக் கண்ணோட்டம் என்றால் என்ன?
மார்க்சீயத் தத்துவத்தின் அடிப்படையிலேயே மார்க்சீயக் கண்ணோட்டம் தோன்றியது. மார்க்சீயத் தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுத் தேவையே காரணம். பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்ட காரணத்தினால், அன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப சமூகம் மாறவேண்டியிருந்தது. பொருள் களை உற்பத்தி செய்வதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் தேவை ஏற்பட்டது. இதற்கு நிலவுடைமை அமைப்புத் தடையாக இருந்தது. இந்நிலவுடைமை சமுதா யத்தை மாற்றியது 1789ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சி. முதலாளித்துவ சமு தாயம் தோன்றியது. இச்சமுதாயத்தில் முதலாளி - தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடு தோன்றியது. தொழிலாள வர்க்கம் தனக்கென்ற ஒரு அரசியல் திட்டத் தை வகுக்க முற்பட்டது. இத் தொழிலாளவர்க்கத்தின் எழுச்சிக்குத் தத்துவவிளக்கம் அளிக்கிறார் கார்ல் மார்க்ஸ். மார்க்சீயத்தத்துவம் என்ற பெயர் பெற்ற இவரின் தத்துவம் மனித சமுதாயத்தின் எல்லாத் துறைகளையும் பாதித்தது. இவருடைய கருத்துக்களைப் பொருள் முதல் வாதம் என்று பொதுவாகக் கூறுவர். இத்தத்துவம், அரசியலை மட்டுமல்ல, வரலாற்றுத் தத்துவத்தையும் பாதித்தது. இதை ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்று கூறினர். வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களை சமுதாய அடிப்படையில் ஆதி பொதுவுடமைச் சமுதாயம், அடிமைச்சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், பொதுவுடமைச் சமுதாயம் என்று வரையறுத்தனர். சமூக வாழ்வு உற்பத்தியினால் ஏற்படும் உறவு முறைகளில் தங்கியிருக்கிறது. சமூகவாழ்வுதான் ஒரு சமூகத்தின் கருத்து நிலையை நிர்ண யிக்கிறது. இலக்கியம் ஒரு சமூகத்தின் கருத்துநிலையைப் பிரதிநிதிப்படுத்துகிற
இ0) ஞானமி

தென்றால், இலக்கியம் அச்சமூகத்தின் சமூகவாழ்வில் தங்கியிருக்கிறது. இந்நிலை யில்தான் இலக்கியத்தை ஆராயவேண்டும் என்று மார்க்சீயவாதிகள் கூறுகின்றனர். எனவே, கைலாசபதியும் மார்க்சீயக் கண்கொண்டு, சங்ககால இலக்கியத்தை அதன் சமூகப்பின்னணியில் ஆராய்ந்தார்.
கைலாசபதிக்கு முன் பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்தவர்கள், அதன் அழகியலை வைத்து ஆராய்ந்தார்கள். அவ்விலக்கியங்களிலுள்ள கலாரசனையை ரசித்தார்கள். டாக்டர் வரதராசன் போன்றவர்கள், இவ்விலக்கியங்களின் காலத் தைக் கணிப்பிட்டார்கள். இவைகளில் கூறப்பட்ட தமிழரின் பண்பாட்டை ஆராய்ந் தார்கள். ஆனால் கைலாசபதிதான், முதன் முறையாக, இவ்விலக்கியங்கள் எப்படி அன்றைய சமூக வாழ்வைப் பிரதிபலிக்கின்றன, வர்க்கவேறுபாடுகள் இவைகளில் எப்படித் தொனிக்கின்றன, சமூக பொருளாதார அடிப்படை எப்படி இவ்விலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமாயமைந்தது என்ற ஒரு புதிய கருத்தைத் தமிழ் சமூகம் முன், வைத்தார்.
கைலாசபதியின் திறனாய்வு நோக்கத்திற்கும், இன்றைய சில மார்க்சிஸ்டு களின் திறனாய்வுக்கும் வேறுபாடு இருக்கிறது. மார்க்சீய திறனாய்வாளர்கள், தனிமனிதவாதக் கொள்கையை எதிர்ப்பதில் தீவிர எதிர்மறைப் போக்கைக் கடைப் பிடிக்கிறார்கள். இன்றைய நுகர்வோர் சமூகத்திற்குத் தீனி போடும் நோக்கில் இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தி, ஜனரஞ்சக இலக்கியம் படைப்பவர்களுக் கெதிராகத் தாம் படைக்கும் எழுத்துக்களுக்கு முற்போக்கு இலக்கியம் என்ற முத்திரை பதித்து, சமூகப் பிரச்சினைகளை ஆராயும் எழுத்துக்களைப் படைக் கின்றனர் மார்க்சிஸ்டுகள். வியாபார நோக்கில், படைக்கப்படும் எழுத்துக்களை எதிர்க்கும்நோக்கில், மார்க்சீய நிலைப்பாடுடைய எழுத்துக்கள்தான் சிறந்தவை என்று கம்யூனிஸ்ட் கட்சிசார்ந்த திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கே நாம் மார்க்சீய அடிப்படையில் விமர்சிக்கும் விமர்சனையில் இரு போக்குகளைக் காணலாம். ஒன்று மார்க்சீயத்தை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக்கி, கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையில் தொழிலாளவர்க்க இலக்கியம் சோஷலிச யதார்த்தவாதம் என்ற பதங்களைக் கையாள்கின்றனர். இலக்கியத்தை அரசியல் ஆயுதமாக மட்டுமே எண்ணுவதால் உள்ளடக்கம் மூலமே இலக்கியத் தரத்தை நிர்ணயிக்க லாம் என்று கூறுகின்றனர்.
இங்கே இலக்கியம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரசாரக் கருவியாகிறது. இவர்களது கொள்கைகள், கதைகளிலும், யாப்பற்ற கவிதைகளிலும் சொல்லப் பட்டவுடன் நல்ல முற்போக்கு இலக்கியம் என்ற பாராட்டுதலைப் பெறுகின்றன. உண்மையில் முற்போக்கு இலக்கியம் என்பது, பாமர மக்களின், தொழி லாள வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிப்பதுடன், அவர்களுடைய போராட்டங்களை, அபிலாஷைகளை எண்ணங்களைக் கதைத் தன்மை கொண்ட ஆக்கங்களில் பிரதிபலிப்பதுதான் முற்போக்கு இலக்கியம்.
தனிமனிதனுக்குள்ளே தேடுகிற மாதிரி இலக்கியத்திற்குள்ளேயே தேடிக் கொண்டிருக்கிற குறைக்கு எதிர்த்துருவமாக இலக்கியத்தை மறந்துவிட்டு இதன் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலிலேயே தேடிக்கொண்டிருக்கிற குறையைக் கொண்டுள்ளது வரட்டு மார்க்சிய விமர்சனம். இவ்விரு தளங்களிலும் காலூன்றிப் படைக்கிற படைப்பாளனை, படைப்பை, வாசகனை உறவுகளின் வழியாக விளக்க முனைந்துள்ளது சரியான மார்க்சிய விமர்சனம்.
இந்தத் தளங்களிலிருந்துதான் பேராசிரியர் கைலாசபதி இலக்கியத்தை அணுகினார். இதுகாலவரையும் இருந்து வந்த சங்ககால இலக்கிய ஆய்வுக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். "வீரயுகப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆய்வை
ஜுன் -2001 · (20).

Page 12
நடத்திய கைலாசபதி தன்னுடைய நோக்கத்தை இந்நூலின் முகவுரையிலேயே கூறுகிறார். முதலாவதாக, சங்ககால இலக்கியங்களை ஆராயும்போது வேற்று நாட்டு இலக்கியங்கள், இதே காலத்தில் எப்படி அமைந்திருந்தன என்று ஒப்பிட்டுப் பார்த்தலின்மூலம் சில உண்மைகளை அறியலாம் என்றும் இரண்டாவதாக, தமிழ்க்கவிதைகளை கிரேக்கநாட்டு ஹோமரின் கவிதைகளுடன் ஒப்பிடும்போது அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூக - பொருளாதார நிலை இக்கவிதை களில் எப்படிப் பிரதிபலிக்கிறது என்றும் ஆராய்வதன்மூலம் சில உண்மைகள் பெறப்படலாம் என்றும் கூறினார். சங்ககாலத்துக்கு முன்தோன்றிய இப்பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழிப் பாடல்களாகவே இருந்திருக்கவேண்டும் என்ற ஒரு புதிய கருத்தையும் இலக்கியவாதிகள் முன் வைத்தார் கைலாசபதி. இவ்வாய்மொழிப் பாடல்கள் இசையோடு கலந்திருந்தனவென்பதும் அவருடைய கோட்பாடு. தமிழ் இலக்கிய ஆய்வுக்கு ஒரு திருப்பத்தைக் கைலாசபதி கொடுத்தார் என்பது எல்லோரி னாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து. கைலாசபதியின் மேதாவிலாசத்தை நாம் அறிய வேண்டுமானால் அவர் காலம்வரை தமிழிலக்கிய ஆய்வு எப்படி இருந்தது என்பதை நாம் ஆராய வேண்டும்.
பண்டைய இலக்கியங்களைப் பலர் பல கோணங்களிலிருந்து ஆராய்ந் தார்கள். பெரும்பாலும் இவ்வாய்வாளர்கள் காலத்தை வைத்தே இப்பாடல்களைக் கணித்தார்கள். இலக்கிய வரலாற்றை பேராசிரியர் செல்வநாயகம் போன்றவர்கள் சங்ககாலம், சங்கமருவிய காலம், பல்லவர்காலம், சோழர்காலம், நாயக்கர்காலம், ஐரோப்பியர் காலம் என்று ஆட்சி செய்தவர்களை அடிப்படையாகக் கொண்டே இலக்கிய வரலாற்றை கால அடிப்படையில் பிரித்தார்கள். கே.என்.சிவராஜபிள்ளை என்பவர் தமிழிலக்கியப் பரப்பை, இயற்கைநெறிக் காலம், அறநெறிக்காலம், சமயநெறிக்காலம், எனப் பண்பாட்டுக் கருத்தியல்களின் அடிப்படையில் வகைப் படுத்தலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இந்தக் கருத்துக்கு விளக்கம் கொடுத் தார் ஆ.வேலுப்பிள்ளை - தனது தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற நூலில். மக்களின் பொருளாதார, சமூகச் சூழ்நிலையிலிருந்துதான் சம்பவங்கள் தோன்றுகின்றன என்பது மார்க்சீயவாதம் - இதற்கு இலக்கியம் விதிவிலக்கல்ல. மார்க்சீய தத்துவத்தில் திளைத்திருந்த கைலாசபதி, மார்க்சீய அடிப்படையில் இப்பகுப்பு முறையை மேற்கொண்டார். தொன்மையான இனக்குழு, பழம்பொதுமைக் குழு, அடிமைச்சமூகம், நிலவுடைமைச்சமூகம், முதலாளியச் சமூகம் என்று வகுத் தார். மார்க்சீய வரலாற்றாசிரியர்களும் இதே பகுப்பைத்தான் செய்தார்கள். கிரேக்க - உரோம நாகரிங்கள் “ஜனநாயக சமுதாயத்தில் தோன்றியவை என்ற முன்னைய கருத்தை, ஹோர்வாட் பாஸ்ட் (Howard Fast) நாவலாசிரியர் இவை அடிமை சமுதாயத்தின் மேல் எழுப்பப்பட்டவை என்று தனது, "ஸ்பார்ட்டக்கஸ் என்ற நாவலின் மூலம் எடுத்துக்காட்டினார். இந்த அடிமைச் சமுதாயத்தின் உற் பத்தியின் சக்தியில் எழுந்தவைதான் கிரேக்க - உரோம சாம்ராஜ்யங்கள். இவ் வடிமை சமுதாயம் மாறுபட்டு, நிலவுடைமைச் சமுதாயம் தோன்றுவதற்கு உரோம சாம்ராஜ்யத்தின் மேல் படையெடுத்த ஜெர்மானிய குழுக்கள் காரணமாயமைந்தன. இந்நிலவுடைமைச் சமுதாயம் வளர்ந்து தொழிற் துறைகளின் வளர்ச்சியினால் வாணிபம் வளர்ச்சி பெற்றபோது, ஏற்பட்ட பொருளாதார சமூக பிரச்சினைகளுக்கு ஈடு கொடுக்க முடியாத கட்டத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றுகிறது. இம் முதலாளித்துவ சமுதாயத்தின் ஒரு பரிமாணம்தான் காலனித்தவ ஆட்சி. பண்டைத்தமிழர் சமுதாயத்திலும் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன என்பது கோசாம்பி, சட்டோபாத்யாயர் போன்ற வரலாற்றாசிரியர்களின் கருத்து.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் - சங்ககாலத்துக்கு முன் - தமிழர்
(22) ஞானம்

சமுதாயம் ஒரு பொதுவுடமைச் சமுதாயமாக இருந்தது. இச்சமூகங்கள் எப்படி மாற்றம் பெற்றன என்பதை ராகுலசாங்கிருத்தியாயன் தன்னுடைய “வால்காவிலி ருந்து கங்கைவரை என்ற நூலில் அழகாக எடுத்துக்காட்டுகிறார்.
குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில நாகரிகங்கள் காலகதியில் மருத நில நாகரிகத்தின் வளர்ச்சியால் குன்றிப் போகின்றன. சங்காலத்துக்கு முன்பிருந்த சமுதாயத்தில் வாழ்க்கை குறிஞ்சிக்குள் அல்லது முல்லைக்குள் அல்லது நெய்த லுக்குள் பெரும்பகுதி அடங்கி விடுகிறது. பிறநிலங்களுடன் கொண்ட தொடர்பு, மிகச் சிறிய அளவினதாகவே உள்ளது. அந்நிலையில் மருதநில நாகரிகம் வளர்ந்து மேலோங்கி வரும்போது, பிற நாகரிகங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த வரலாற்று உண்மையை சங்க இலக்கியங்களின் மூலம் விளக்குகிறார் கைலாசபதி,
நால்வகைப் படைகளின் இறுமாந்த தோற்றத்தோடும், மருத நில விளைச் சலின் ஆற்றலோடும் வந்து மோதிய வேந்தர்களுக்கு முன் இயற்கைப் பொருளா தாரத்தையும், தம்மையும் மட்டுமே நம்பி வாழ்ந்த பாரி முதலிய குறுநிலத்தலைவர் கள் நிற்க இயலாமல் அழிந்ததில் வியப்பில்லை. இயற்கையின் விளைவை முழுமையாகத் தமக்குள் பங்கிட்டுத்துய்த்து வாழ்ந்த குறுநிலத்தலைவர்கள், நகரங்களையும், நால்வகைப் படைகளையும் தொகுத்துக்கொண்ட வேந்தர்கள் முன், நிற்க இயலாது அழிந்தனர். சங்ககாலப் பாடல்கள் இதற்குச் சான்று பகர் கின்றன.
முன்னைய சமுதாயத்தின் உற்பத்தியில் அந்தச் சமுதாயத்தை இன்புறுத் பவர், ஊக்கப்படுத்துபவர் என்ற வகையில் பாணர்கள், விறலியர், கூத்தர்கள் ஆகிய கலைஞர்கள் பெற்ற நியாயமான உரிமையான பங்கு உடைமைப்பற்று பெருகிவரும் சமுதாயத்தில் மறுக்கப்பட்டதன் விளைவாகத்தான் அவர்கள் தமது வேரை இழந்து தம்மை ஆதரிக்கும் குறு நிலத்தலைவர்கள், மன்னர்களைத் தேடி பழுத்த மரங்களைத்தேடி அலையும் பறவைகள் போல நாடு முழுவதும் அலைந்து திரிந்தார்கள். இந்தப் பழஞ்சமுதாயம் மறைந்து விட்டதைத்தான் ஒளவை, "இனி பாடு நரும் இல்லை, பாடு நர்க் கென்று ஈகுநருமில்லை" என் றார். வேந்தர்களை எதிர்த்து நின்று தமக்கே சொந்தமாகியிருந்த அந்தச் சமுதாயத் தைக் காக்கும் முறையில் வாழ்வைத் துச்சமாகக் கருதி, வீரத்தையே ஆயுதமாகக் கொண்டு போரிட்ட அந்த வீரர்களின் யுகம் மறைந்து புதிய சமுதாயம் நிலைபெற லாயிற்று. வீரயுகம் மறைந்தது.
சங்ககாலம் என்று கூறப்படும், ஏறக்குறைய இருநூறு ஆண்டுகால வரலாறு இது. இந்தக் காலத்தில் குறுநிலத்தலைவர்களுக்கிடையில் குறுநிலத்தலைவர்களுக் கும், வேந்தர்களுக்குமிடையில் நடைபெற்ற போர்கள் மிகப்பல. இப்போர்களில் நகரங்கள் எரிக்கப்பட்டன. விளைநிலங்கள் பாழாக்கப்பட்டன. ஏரி குளங்கள் தூர்க்கப்பட்டன. எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டனர். இவற்றின் விளைவாக சங்ககாலத்தின் இறுதியிலும் சங்கப் பிற்காலமாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்திலும் தமிழகத்தில் பெருகி இருந்த வறுமைக் கொடுமையை நாம் பார்க் கிறோம். திருக்குறள் முதலிய அறநூல்களில் வறுமையின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்கிறோம்.
ஒரு சமுதாயம் மாறி இன்னொரு வகைச் சமுதாயம் உருவாகும்போது தவிர்க்க இயலாமல் ஏற்படும் அவலங்களுள் இவை சேர்கின்றன. முன்னைய சமுதாயத்தின் கர்ப்பப்பையிலிருந்துதான் பின்னைய சமுதாயம் தோன்றுகிறது, என்பது மார்க்சிய வாதம் முன்னைய சமுதாயத்தின் பண்புகள் அழிவதில்லை.
முன்னைய சமுதாயத்தில் வாழ்க்கை, குறிஞ்சிக்குள் அல்லது முல்லைக்கள்
ஜுன் - 2001 (23)

Page 13
அல்லது நெய்தலுக்குள் பெரும்பகுதி அடங்கிவிடுகிறது. பிற நிலங்களுடன் கொண்ட தொடர்பு மிகச் சில அளவினதாகவே உள்ளது. அந்நிலையில் மருதநில நாகரிகம் வளர்ந்து மேலோங்கி வரும்போது இக்குறுநில நாகரிகங்களை இது பாதிக்கவே செய்கிறது.
பெருகிவரும் உற்பத்தியை விற்பதற்காக, மருதநில நாகரிகம் தன் எல்லை யை விரிவாக்க வேண்டியிருக்கிறது. இதற்காக ஏனைய நாகரிகங்களுடன் உறவு கொள்கிறது. இவ்வுறவு சில சமயங்களில் போராக மாறி ஏனைய நிலங்களைத் தமதாக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பழைய சமு தாயம் மறைந்து புதிய சமுதாயம் தோன்றிவிடுகிறது. இந்தச் சமுதாயத்தில் புதிய தொழில்கள், புதிய பொருட்கள், புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. இருப்பதைத் தின்று தீர்க்கும் முறைமாறி, இருப்பதை வைத்து வளத்தைப் பெருக்கி அனுபவிக்கும் முறை ஏற்படுகிறது.
முன்னைய சமுதாயத்தில் ஓரிடத்தில் மட்டும் குறுகிக் கிடந்த மக்கள் அந்தச் சமுதாயத்தின் வேர்கள் பிடுங்கப்பட்டுவிட்டதால் இருந்த இடத்தைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு வெவ்வேறு தொழில்களை நாடிச் செல்ல வேண்டியவர் களாகி விட்டனர். முன்னைய சமுதாயம் பொதுமைச் சமுதாயம், இது தனி உடைமைச் சமுதாயம். இச் சமுதாயம் உடைமையை ஆராதிக்கும். போட்டி, பொறாமை, தற்பெருமை முதலிய பண்புகளை வளர்க்கும் சமுதாயம். குறுகிய முன்னைய நிலளல்லைகளைக் கடந்து உருவாகிவரும் இந்த விரிந்த சமுதாயத்தில் தனது ஊர் என்று, உறவினர் என்று எவரும் இல்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகின்றனர்.
இப்புதிய சமுதாயம் வேளாண்மை, தொழில்வளர்ச்சியைப் பெருக்கி, நகரங் கள், நாகரிகம், கல்வி முதலியவற்றை ஊக்குவித்தல் மூலம், முன்னைய சமுதாயத் தைவிட வளர்ச்சிபெற்ற சமுதாயமாகிறது.
மக்களிடையே இருந்த உறவுமுறைகளும் மாறுகின்றன. தொழிலுக்கேற்ப மக்கள் பிரிக்கப்படுகின்றனர். பரத்தைகள் நகரவாழ்வின் செல்வச் செழிப்பின் ஒரு பகுதியாகிவிட்டனர். சங்ககாலத்திற்கு முற்பட்ட காலத்தில் வரையற்ற புணர்ச்சி முறை இருந்திருக்கக்கூடும். கைக்கிளை, பெருந்திணை என்று கூறப்படும் உறவு முறைகள் சங்ககாலத்தில் இயல்பான உறவுமுறைகளாக இருந்திருக்கமுடியும். நாளடைவில் புலவர்கள், சான்றோர்கள் நோக்கில் இவை தவறாகி விடுகின்றன. தொல்காப்பியர் இதனை,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்று மணமுறை வந்த விதத்தைக் கூறுகிறார். தனிஉடைமை தன் ஆதிக் கத்தை நிலை நிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றவுடன் காதல் புதைக்கப்பட்டது. சான்றோர்கள் ஐந்திணைப் பாடல்கள் பாடும் வழக்கத்தைக் கைவிட்டனர். முன் னைய சமுதாயத்திற்கும் புதிய சமுதாயத்திற்கும் ஏற்பட்ட மோதலில் பிறந்தது சங்க இலக்கியம். மோதல் வளர்ந்து பெருகி வெடித்து முடிந்தவுடன் சங்க இலக் கியமும் முடிந்துவிடுகிறது. இயற்கையை மாற்றியமைப்பதன் மூலம், வாழ்க்கையை மாற்றியமைக்கும் முறை வந்துவிட்டது.
குறுநில மன்னர்களைப் புகழ்ந்து, பாடி வாழ்ந்த பாணர்களும் புலவர்களும் பாதுகாப்பு இல்லாமல் பரத்தையர் வீடுகளில் சேவகம் செய்யத் தொடங்கினர். இவர்கள் மறு உலகத்தைத்தான் நம்பியாக வேண்டும். இவர்களைக் காப்பாற்ற இனி கடவுள்தான் வரவேண்டும். இனி அவர்கள் ஆன்மாவைத்தேடிப் பெற்றாக வேண்டும். இனி இவர்களுக்குத் தேவை நீதிகள், சமயங்கள்.
(22) ஞானமி

இவ்வாறு சங்ககாலமும், சங்க இலக்கியமும் இனித் தொடர்ந்து வாழ்வதற்கு தேவையில்லாமல் சமயத்திற்கு இடங்கொடுத்து மறைகின்றன. சமய சார்புள்ள இலக்கியங்கள் தோன்றுகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங் கள் தனிமனிதனைப் பற்றிப் பாடாது நாடு, நகரம், நீர், நிலை, அரசு, மக்கள், என்று எல்லாவற்றையும் அடங்கிய பொருளை மையமாக வைத்துத் தொடர்செய்யு ளாக மாறுகின்றன. இப்புதிய சமுதாயத்தில் வணிக வர்க்கத்தின் எழுச்சியை நாம் காண்கிறோம். சங்ககால இலக்கியங்களிலும், அதற்கு முற்பட்டகால இலக் கியங்களை மேலோட்டமாகப் பார்க்காமல் சமுதாய மாற்றத்தின் பிரதிபலிப்பாக இவைகளைப் பார்க்கிறார் கைலாசபதி.
கைலாசபதிக்கு முன், தமிழிலக்கியத்தை ஆராய்ந்தவர்கள் பெரும்பாலும் இலக்கியத்தை ஒரு கலையாக்கம் என்ற வகையில் கண்டு அதன் அழகியற் கூறுகள், அவை வாசகர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தும் அனுபவம், உணர்ச்சி, என்பவற்றைப்பற்றிய கருத்தையே கொண்டிருந்தனர். கவிதையில், கற்பனை, உத்தி, நடை, கட்டமைப்பு, இலக்கியவகைமைகள் என்பன பற்றிப் பேசுவதே திறனாய்வின் செயற்பாடு என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
தமிழ்த் திறனாய்வில், அழகியலுக்கு நிகராக அரசியலுக்கு, உள்ளடக் கத்திற்கு முக்கியம் வழங்கப்படல் வேண்டும் என்ற கருத்தை முற்போக்காளர்கள் கொண்டிருந்தனர். கலை இலக்கியம் என்பவற்றை அழகியல் வெளிப்பாடுகள் என்ற வகையில் மட்டும் நோக்காது, சமுதாயப்பிரச்சினைகளின் பதிவுகளாகவும், அவ்வகையில் சமூகவர்க்கங்களின் குரல்களாகவும் நோக்குதல் வேண்டும் என்பது இவர்களது கொள்கை.
இந்தக் கொள்கையில் ஊறிப்போயிருந்த கைலாசபதி பண்டைய இலக்கியங் களையும் சமுதாய வரலாற்றுப் பகைப்புலத்தில் பொருத்திப் பார்க்க முற்பட்டார். அன்றைய திறனாய்வாளர்கள் அந்நியர் ஆட்சியின் எதிர்ப்பு சூழ்நிலை காரணமாக தமிழின் தொன்மையையும், பழம்பெருமையையும், இந்தியப் பண்பாட்டின் மேன்மை யையும் தமிழர்கள் மத்தியில் பரப்பும் நோக்கில் பண்டைய இலக்கியங்களை அணுகினார்கள். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி, தமிழ்க்குடி” என்றெல்லாம் தமிழரின் பெருமையைப் பற்றி எழுதினார்கள். உலகின் முதல்மொழி தமிழ்மொழியே என்றும், தமிழர் பண்பாட்டில் சங்க இலக்கியகாலம் பொற்காலம் என்றெல்லாம் எழுதினார்கள். விடுதலைப் போராட்டத்தில் மூழ்கியிருந்த மக்களின் அபிலாஷைகளுக்கேற்ப கருத்துக்களை வழங்கினார்கள். இவை எவ்வித ஆய்வுமில்லாமல் கொள்ளப்பட்ட கருத்து. இக்கருத்து அன்றைய தேவையைப் பூர்த்திசெய்தது. ஆனால் தமிழிலக்கியத்திற்கும் சமூகத்திற்குமுள்ள உறவை விஞ்ஞான ரீதியாக, தர்க்கரீதியாக ஆய்வு செய்தவர்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறார் கைலாசபதி, கலை இலக்கியம் என்பவற்றின் சமுதாய உறவுநின்ல, சமுதாய வரலாற்றியக்கத்தில் அவற்றின் பங்கு, படைப்பாளிகளின் வரலாற்றுப் பாத்திரம், என்பன தொடர்பாக அவர் ஆழமாகச் சிந்திப்பதற்கு அவருடைய மார்க்சீய தளம்தான் காரணம்.
இலக்கியத்தைத் தனிமைப் படுத்திப் பார்ப்பதில் பல தவறுகள் ஏற்படலாம்; என்ற கருத்தைக் கொண்ட கைலாசபதி மனிதப் பண்பியல் துறைகளான மானிட வியல், சமூகவியல், உளவியல், அரசியல், மொழியியல் முதலியவற்றுடன் சமூக விஞ்ஞானத் துறைகளான பொருளியல், மக்கள் பண்பாட்டியல் என்பனவும் இலக்கிய ஆய்வுக்கு இன்றியமையாதன, என்ற கருத்தைக் கொண்டதுடன் தனித்தும், சார்ந் தும் இயங்கும் இப்பண்பே நவீன இலக்கியத் திறனாய்வை முற்கால இலக்கிய ஆய்வுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, என்ற எண்ணத்தில் அசையாத
ஜூன் - 2001 (25)

Page 14
நம்பிக்கை வைத்திருந்தார்.
இலக்கியத்துடன் மிக நெருக்கமான தொடர்புடையதுதான் சமூகவியல். தனிமனிதனுடைய நடத்தை, அவர் சமூகத்துடன் கொள்ளும் உறவுவநிலை என்பன பற்றி ஆராய்வதன் மூலம் அது கலை இலக்கியம் என்பவற்றுடன் நெருங் கிய தொடர்பு பெறுகிறது. கலையும் இலக்கியமும் சமூக மாந்தரின் அனுபவங்களில் ஊற்றெடுப்பவை. ஆகவேதான் சமூகவியல் சார்ந்த அணுகுமுறை முக்கியம் பெறுகிறது.
சமூகத்தின் கோணத்திலிருந்து ஆராய்ந்த கைலாசபதி, ஒப்பியல் மூலம் தனது கருத்தை வலியுறுத்தினார். ஒப்பியல் என்பது, வேறுபட்ட பல பொருள் களிடையிற் காணப்படும் பொதுமைக்கூறுகளை இனங்காணும் ஒரு ஆய்வு நெறி யாக வளர்ந்து வந்துள்ளது. நாடு, இனம், மொழி, காலம் முதலியவற்றில் வேறு பட்ட சூழல்களில் உருவாகும் கலை இலக்கியம் ஆகியவற்றில் காணப்படக்கூடிய பொதுமைக் கூறுகளை இனங்கண்டு, அவ்வாறான பொதுமைக்குரிய காரணிகளை ஆராய்ந்தறியும் செயற்பாங்காக இது திகழ்கிறது. ஒன்றோடொன்று ஒப்பிடும் முறைமையால் ‘ஒப்பியல் எனப் பெயர் பெறுகிறது. கிரேக்க, அயர்லாந்து போன்ற நாடுகளின் வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடுகிறார்.
கைலாசபதி தமிழரின் சங்க இலக்கியக் காலப்பகுதியை பழம்பொதுமை நிலையிலிருந்து உடைமை நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் காலகட்டமாகவும், அவ்வகையில், அதனை ஒரு ‘வீரயுகம், ஆகவும் கண்டார். திருக்குறள், சிலப்பதிகா ரம் என்பன எழுந்த வரலாற்றுச் சூழலை வணிக வர்க்கத்தின் எழுச்சிக் காலமாகக் கண்டார். பக்தி இலக்கியச் சூழலையும், சோழப்பெருமன்னர் ஆட்சிக்காலத்தையும் நிலவுடைமைகள் வேளாளவர்க்கத்தின் எழுச்சிக் காலமாக இனங்காட்டினார். ஐரோப்பியர் காலத்தை நிலவுடைமை வர்க்கம் தளர்வடைந்து முதலாளியம் உருப்பெறத் தொடங்கிய காலமாக விளக்கினார்.
அவருடைய சாதனைகளில் சிகரமாக விளங்குவதுதான் "Tamil Heroic Poetry - தமிழிலக்கியத்தில் விரயுகப் பாடல்கள் - என்ற ஆங்கில நூல். சங்கப்பாடல்களைப் பண்டைய கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்புநோக்கியுள்ளார். இந்த ஒப்பு நோக்கின் ஊடாக சங்கப் பாடல்கள் எழுந்த காலப் பகுதியைத் தமிழரின் வீரயுகம் என்றும், அப்பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக உருவான வை என்றும் முடிவு செய்தார்.
‘வீரயுகம் என்பது சமுதாய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் குறிப்பது. சமுதாய நிலையிலும் இலக்கியப்பாடு பொருள் நிலையிலும், உடல் வீரம் தனிக்கணிப்பைப் பெறும் காலகட்டம் இது. பண்டைய பழம் பொதுமை நிலையிலிருந்து உடைமையுணர்வை நோக்கிய வரலாற்றில் தனிமனிதக் கொள்கை, 'அரசு நிறுவனம் என்பன உருவாகும் சூழலில் இவ்வாறு உடல்வீரம் தனிக்கணிப் பைப் பெறும் சமூக வரலாற்றை மேல் நாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர் இக்கருத்துக்களினால் பாதிக்கப்பட்ட கைலாசபதி, தமிழின் பண்டைய இலக்கியப் பரப்பை பார்வையிடுவதற்கு இவ்வுத்தியைக் கையாண்டார்.
இதைக் கைலாசபதி, "அநாகரிக நிலையிலிருந்து, நாகரிக நிலைக்குச் சமுதாயம் மாறும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குழுக்களாகவும். குலங்களாகவும், இருந்த வாழ்க்கை அமைப்பைத் தனிமனிதக் கொள்கை உடைத் தெறிந்து, வலுக்கொள்கையின் அடிப் படையில் அரசுகளை நிறுவும் சண்டைகள் நிறைந்த வரலாற்று நிலையை விரயுகம் என்றழைப்பர்” என்றார்.
டு . ஞானமி

தமிழரின் சங்கப் பாடல்கள் காலசமுதாயத்தை இத்தகு ஒரு வரலாற்றுக் கட்டமாகவே கைலாசபதி காண்கிறார்.
"புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள் அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருந்திய நிலையிலே அளவு மாறுபாடு குண மாறுபாடாக மாறியதே சங்ககால அரசியல் நிறுவனமாகும்.”
எனச் சங்கப் பாடற்கால சமூக - அரசியல் பகைப் புலத்தை அவர் இனங் காட்டுகிறார்.
இப்பாடல்கள் முதலில் வாய்மொழிப் பாடல்களாகவே உருவாகின என்று கூறுகிறார். இன்று நாம் கூறும் நாட்டார் பாடல்களைப் போன்று இவ்வாய்மொழி இலக்கியம் குறித்த ஒரு காலகட்டத்தில் குறித்த புலவராற் படைக்கப்படாதது. மக்களின் அனுபவங்களினடியாக உருவாகிச் செவிவழியாகப் பேணப்படுவது. குறித்த சிலவகை அடிக்கருத்துக்கள் (Themes) சூழ்நிலை சார்ந்த கூறுகள், வாக்கியத் தொடர்கள், திரும்பத் திரும்ப இப்பாடல்களில் வருவதனால் இவை வாய்மொழிப் பாடல்களாக இருக்கலாம் என்பது அவரது கருத்து. பாணர், கூத்தர், பொருநர், விறலி முதலியவர்கள் தலைவன் புகழை வாய்மொழியாகப் புகழ்ந் தேத்தும் இயல்பினையுடையதால் வாய்மொழிப் பாடல்கள் பெரும்பாலும் இசையுடன் பாடுவதுதான் வழக்கம். ஆனால் பின்னர் வந்த புலவர்கள் அறம், ஒழுக்கம், சமயஉணர்வு என்பவற்றினடிப்படையில் சிந்தித்து இலக்கியம் படைப்பவர்கள். பாணர் முதலியோர் வீரயுகத்திற்கும் புலவர்கள் பிற்பகுதிக்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றனர். சங்கப்பாடல்கள் என்பன புலவர்களாலேயே இயற்றப்பட்டன. புலவர்கள், பாணர்களாக, கூத்தர்களாக, செய்யுள்களைப்பாடி மகிழ்வித்திருக்க வேண்டும். எனவே சங்க இலக்கியச் செய்யுட்கள் வாய்மொழிப் பாடல்கள் அல்ல வென்பது கைலாசபதியின் கருத்தாக இருக்கலாம்.
“இவ்வீரயுகப் பாடல்கள் மூலம் கைலாசபதி திறனாய்வுத் துறைக்கு அளித்த பங்களிப்பை நாம் சுருக்கமாகக் கூறுவதானால்:-
1. எந்தவொரு காலகட்டத்திலும், தோன்றும் இலக்கியங்கள், அவ்வக் காலத்திய மக்களின் பொருளாதார - சமூக சூழ்நிலையைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன. இவ்விலக்கியங்கள் மூலம் சமூக மாற்றங்களை நாம் காணலாம். இப்பாடல்களைப் பார்த்து வெறும் இரசனையில் ஈடுபட்டிருந்த இலக்கியத் திறனாய் வாளருக்கு கைலாசபதியின் கருத்து ஒரு புதிய பாதையைக் காட்டியது.
2. வரலாற்றில் ஏற்படும் எந்தவொரு சம்பவமும் மக்களின் பொருளாதார சமூகவாழ்க்கையில் ஏற்படும் கொந்தளிப்பின் பிரதிபலிப்பே என்பதுதான் மார்க்சீய வாதிகளின் கருத்து. w
3. ஒரு சமூகத்தில் இருக்கும் பழக்க வழக்ககங்களும், நம்பிக்கைகளும், அச்சமுகத்தின் அமைப்பையும், சூழ்நிலையையும் பொறுத்தது.
4. மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுதான் இலக்கியங்கள். 5. தமிழர் வரலாற்றில் ‘வீரயுகம், ஆரம்பகால சமுதாயத்தைப் பிரதிபலிக்கி றது. அன்றைய தமிழ்ச் சமுதாயம் குல மரபுக் குழுக்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. இக்குழுக்கள் கூட்டு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தன. சமத்துவமும் ஒற்றுமையும் நிலவின. வீரயுகத்தில், வீரத்திற்கும், புகழுக்கும், முக்கிய இடம் அளிக்கப்பட்டது. புகழுக்காக உயிரை இழப்பது ஒரு பண்பு போரிலே வீழ்ந்து பட்டவரை வணங்கும் வழக்கம் காலகதியில் சிறுதெய்வ வணக்கமாக மாறியது. இது சமுதாய மாற்றத்தை அடிநிலையாகக் கொண்டது என்பதும், உலகம் என்பது
ஜூன் -2001 (2)

Page 15
உயர்ந்தோர் மாட்டே என்னும் கொள்கைக்கு ஏற்ப தெய்வ உலகமும் மாறியது, என்பது பெறப்படும்.
6. வீரயுகத்தின் ஆரம்பகாலப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாகவே இருந்தன. தலைவனை விழித்துப் பாடியவை, அத்தோடு அவை இசையோடு
FT fil u_62 s.
7. வீரயுகத்தின் கடைக் காலத்தைப் பிரதிபலிக்கும் பத்துப்பாட்டின் மூலம் நகரங்களின் வணிக வர்க்கத்தின் எழுச்சியை நாம் அறிகிறோம். நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையே இருந்த இடைவெளி பெருகியது. -
தனிநிலைச் செய்யுள் தொடர்நிலைச் செய்யுளாக மாறியது. சிலப்பதிகாரம், தனிமனிதனையோ வாழ்க்கையையோ கூறவில்லை. அதற்கு நேர்மாறாக பட்டினப் பாலையும், பொருநராற்றுப்படையும் கரிகாலன் புழைப்பாடின.
வணிக சமுதாயத்தின் எழுச்சி, ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவ தூம் என்று ஆட்சியாளருக்கு மறைமுகமாக எச்சரித்தது. வணிக சமுதாயத்தின் செல்வாக்கு அரசியலைப் பாதிக்கத் தொடங்கியது. 'ஊழ்வினைக் கருத்து மக்கள் மத்தியில் புகுத்தப்படுத்தியதன் மூலம் மக்களின் தன்னம்பிக்கையையும், சிந்தனை யையும், செயலையும், மழுங்கச் செய்தது. இதன் அடிப்படை நோக்கம், வர்க்கப்பாகு பாட்டை ஏற்படுத்தவதே.
கைலாசபதியின் இக்கருத்துக்கள், அவர் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய உலகம் இவ்வாய் வுக்கு அவருக்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கும், என்பதையும் வலியுறுத்து கிறது.
இடிந்த மனையும் பிரிந்த உறவும்
இழந்த உயிரும் உடைமையும் நடந்த தெருவும் அலைந்த தொலைவும் مح%ڑکے
தொடர்ந்த பிணியும் அவலமும் நினைந்து மனசு கலங்கி வறுமை 6ᎣᎠ g4? உழன்று விழிகள் நிறையவும்
குனிந்த தலையும் தளர்ந்த உடலும்
குழிந்த வயிறும் உடையநீ o எழுந்து வருக முடிந்த கதையை U மறந்து வருக இனிவரும்
வசந்தம் எனநெஞ் சுவந்து வருக
வருந்தல் ஒழிக அனைவரும் Կ துணிந்து வருக திரண்டு வருக
சுழன்று பணிகள் புரியவும் தொடங்கி யவைகள் தடங்கல் விலகச்
"சுயங்கள் மிளிர வருகவே!
டு ஞானமீ
சோ. பத்மநாதன்
பூ கொக்குவில்
 

தமிழ்மாமணி, தமிழ் ஒளி நா.சோமகாந்தன்
மாணவப் பருவத்திலேயே, சிங்கக் கொடியைத் தேசியக்,~
கொடியாக்கியபோது தனது எதிர்ப்புக் குரலை கவிதையாக ீார்த்தின்) எழுதி எழுத்துப் பணியை ஆரம்பித்தவர் சோமகாந்தன். சோம சுந்தரன், கலாமதி என்ற புனைபெயர்களில் ஆரம்பகாலத்தில் எழுதி, பின்னர் ஈழத்துச் சோமு என்ற புனைபெயருடன் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இவர். சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், விமர்சனக் கட்டுரைகள் என்ற வகையில் இவரது இலக்கிய ஆக்கங்களைப் பார்க்கிறோம். 'ஆகுதி, சிறுகதைத்தொகுதி, ‘விடிவெள்ளி பூத்தது நாவல், தத்துவச்சித்திரம். ஒழுக்க விழுமியங்கள் பற்றிய கட்டுரைகள், "ஈழத்து இலக்கியம் - பல்துறை ஆய்வும், அறிமுகமும் - கட்டுரைகள், நிலவோ நெருப்போ" சிறுகதைத்தொகுதி, 'பொய்கை மலர் - ஆன்மீகப் பண்பாட்டியல் நாவல் என இதுவரை தன் ஆக்கங்களை நூலுருவாக்கி தமிழ் இலக்கிய நெஞ்சங்கள் பயன்பெறச் செய்துள்ளார்.
’துணிவு நிறை விமர்சகராய் தூய தமிழ் பரப்பி நிதம்
அணி செய்தாய் தமிழை நீ, ஆண்டாண்டாய்ப் புகழ் வாழும்"
என்று அருட்கவி வேலணை வேணியன் கூறியது சோமகாந்தனுக்கு மிகப் பொருந்தும். இலக்கியப் பணி என்பது எண்ணிக்கை நோக்கில் நூல்களை எழுதிக் குவிப்பது மட்டுமல்ல இலக்கிய விழாக்களை ஒழுங்குபடுத்தி, சிறப்புற நிகழ்த்தி, உரியவர்களைக் கொண்டு ஆக்கங்கள் படைத்து, பெறுமதியான மலர் உருவாக்கி. எனப் பலவாறு செயற்படுவதைக் குறிக்கும். அவ்வாறாயின் விழா நாயகன் சோமகாந்தன் என்பதில் கருத்துவேறுபாடு யாருக்கும் இல்லை. நாவலர் சிலை நாட்டு விழா, நாவலர் மகாநாடு, நாவலர் தேசபவனி என 1969ல் தொடங்கி இன்றுவரை இவரின் பணி தொடர்கிறது. சோமசுந்தரப் புலவர் விழா, பாரதியாரின் ஞானகுரு அருளம்பலம் சுவாமிகள் நினைவுச்சின்னம் திறப்புவிழா - 3 நாள் இலக்கிய விழா, சிங்கள தமிழ் எழுத்தாளர் மகாநாடு, பாரதி நூற்றாண்டு விழா, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கவிழா, இன்றைய மூத்த எழுத்தாளர்களுக்கு மணி விழா என எங்கும் - எதிலும் நிறைந்து நின்று தன் இலக்கியப் பணியினை இன்னொரு கோணத்தில் காட்டி வருகின்றார். இதனை உணர்ந்தோர் அன்றே 1964ல் இருந்தே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக இவரைத் தெரிந்து பயன் பெற்றார்கள்.
விழாக் குழுக்களின் அமைப்புச் செயலாளர், பிரதிச் செயலாளர், பொதுச்
செயலாளர், தேசிய அமைப்பாளர் எனப் பல்வேறு பதவிகளைப் பொறுப்பேற்றுத் திறம்பட நடாத்தியதுடன் சிறப்பு மலர்கள் தொகுப்பு ஏடுகள் என்பவற்றின் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இலக்கியப் பணி பெரும்பயன் கொண்டது . எனலாம். சமூகத் தொண்டனின் வெள்ளிவிழா மலர் 1960, இலங்கை அரசின் கலாசாரப் பேரவையின் இலக்கிய விழா மலர் 1964, ஆறுமுக நாவலர் மகாநாட்டு மலர் - 1969, ஆறுமுக நாவலர் 150வது ஜெயந்தி விழா மலர் 1972, வரதரின் பல்குறிப்பு - 1970/1971, சிங்கள - தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுப் புதுமை
ஜூன் -2001 இ9

Page 16
இலக்கிய மலர் 1975, பாரதி நூற்றாண்டு விழா புதுமை இலக்கிய மலர் 1980, நந்தி மணிவிழா மலர் 1987, இலக்கியப் பேரரங்கு புதுமை இலக்கிய மலர்1996, சுவாமி சின்மயானந்தா மலர் (ஆங்கிலம்) 1993, சுவாமி சந்தானந்தா மணிவிழா மலர் (ஆங்கிலம்) 1996 என மலர்களை வெளியிட்டு இலங்கை இந்திய எழுத்தாளர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பிரசுரித்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு இலக்கிய விருந்து அளித்தவர் சோமகாந்தன்.
“ஆற்றல் மிக்க படைப்பாளி, திறமைமிகு அமைப்பாளர் என்று பிரேம்ஜி ஞானசுந்தரனும், மறக்கமுடியா நினைவுகள், மறுக்கமுடியாச் சாதனைகள் என்று பேராசிரியர் கா. சிவத்தம்பியும், 'பல்துறை ஆற்றலாளன்’ என்று பொன்னிலனும் சிறப்பித்து நிற்கின்றனர். இவருடைய ஆக்கங்களைப் பற்றித் தனித்துவமான புதுமையான நாவல் ‘விடிவெள்ளி பூத்தது என்று செ. கணேசலிங்கனும், 'கதையை வளர்க்கும் கலைத்திறமை கொண்டவர் என நிலவோ நெருப்போ சிறுகதைத்தொகுதிக்கு வல்லிக்கண்ணனும், பழைமையிலிருந்து பொங்கும் புதுமை என்று பொய்கை மலர் ஆன்மீகப் பண்பாட்டியல் நாவலுக்கு குமாரசுவாமி சோமசுந்தரமும் விதந்துரைப்பதையும் படிக்கும்போது சோமகாந்தனின் எழுத்துக்களின் வீரியம் புரிந்துகொள்ளக் கூடியதே. எனினும் சோமுவின் எழுத்துத் திறனை மறைக்கும் அளவுக்கு அவரது சமூக ஆளுமை இன்று வளர்ந்துள்ளது என பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறுவதிலிருந்து சமூக ஆளுமை கொண்ட விழாக்களைக் குறைத்து எழுத்துத் திறனைக் காட்டும் தமிழ் இலக்கிய ஈடுபாடு அவசியமானதும், ஈழத்து இலக்கிய ஆர்வலர்களுக்கு பிரயோசனமானதும் என்பதை திரு சோமகாந்தன் கவனத்திற் கொள்ளவேண்டும்.
எழுதவியலாத கவிதை.(சித்தாந்தனி)
முதலில் அலைகளாகி சாபங்களாலாகிய தேவதையை பிறகு குமிழிகளாகி கனவு கண்டபடியிருந்திருப்பேன். தண்ணிரில் உடைந்து நொருங்கியதாக சொல்கிறார்கள் உனது உயிர். உனது மூச்சின் கடைசி நொடியில்
நதியின் அலைகளின் அசைவுகளில் காற்றுறைந்த அந்தக் கணத்தில் தேய்ந்தவண்ணமிருந்திருக்கும் நிலவு. நான் ஒரு கவிதையை எழுதிக்கொண்டிருந்திருப்பேன். நிலவை மோகித்து நீ எழுதிய
எந்தக் கவிதையிலும் மிருகங்கள் குறித்த பிதியும் அது தேய்ந்து போனதாயில்லை.
மலைகளுக்கப்பாலான வெளியில் அந்தரத்தில் நீந்திக்கொண்டேயிருக்கும் ஜேம்ஸ், எனது காலக்குரல் பற்றிய பிரக்ஞையும் குருவிகளின் குரல்களினடியிலும்
அதில் இருந்திருக்கும் தீராத காற்றின் உணர்முனைகளிலும் அல்லது நீ வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய் ஒரு வனத்தின் வலிய இருளில் நான் எக்காலத்திலுமே என்னை தனித்துவிட்டுப்போன எழுதமுடியாத உயிர்புற்ற கவிதையாய்.
இ0 ஞானமி

രീ പീ
செ.யோகநாதன்
ஐராங்கனி கமலா சொன்னதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள். எந்த வித சலனமும் இல்லாமல் தான் சொன் னதைக் கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு ராஜசேகரனால் எப்படி அவ்வளவு பொறு மையாக தனக்கு புத்திமதியும் சொல்ல முடிந்தது என்பதை நினைத்தபோது அவளுக்கு விநோதமாகவும் இருந்தது. மனத்தினுள்ளே தன்மீதே எரிச்சலும் ஊர்வதினை அவள் உணர்ந்தாள். தொலைபேசி மணி அடித்தது. எடுத்த போது எந்தத் தொடர்புமில்லாமல் ஒருவன் அடிக்குரலில் பேசினான். இன்னும் எரிச்சல் மிளகாய்த் தூளாய் நெஞ்செங்கும் கொட்டிற்று. கோபத் தோடு தொலைபேசியை வைத்தாள். மீண்டும் தொலைபேசி நாகரிகமாக அனுங்கிற்று. கோபம் நாக்கு நுனியில் வார்த்தைகளால் சவுக்கைக் கட்டி விசிறிட முனைப்புற்றபோது மறுமுனை யில் ராஜசேகரனின் கம்பீரமான குரல் அதிகாரமும் கனிவும் இழைந்திட்ட அழைப்பு.
"எனது அறைக்கு வரவும்." ஐராங்கனி எழுந்து பம்பரமானாள். “எனக்கு எல்லா வேலையிலும் ஒழுங்குதான் முக்கியம். நிர்வாகப் பணி சம்பந்தமான எல்லாப் பொறுப்புமே எனது கைகளுக்குத்தான் தரப்பட்டுள் ளது. இங்கே கோப்பு முறைகள் ஒழுங் காயில்லை. இவற்றை ஒழுங்குபடுத்திக் கொம்ப்யூட்டருக்குக் கொண்டு வரவேண் டும். உங்களுக்குக் கொம்ப்யூட்டர் அறிவு.?”
அவளது கண்களினூடாக அந்தக் கேள்வியை அவன் கேட்டபோது மன ஆழத்தில் குமிழிகளாய் பரவிற்று எரிச்சல், சட்டென்று சொன்னாள்;
"நான் முறைப்படி படித்தவள்.” வார்த்தைகளிலே கமழ்ந்தது; புன்
ஜுன் - 2001
65.
“நல்லது. எப்படி?”
படித்த கொன்வெனரின் பெயரைச் சொன்னாள்.
*இலங்கையிலேயே சிறநீத ஆங்கிலக் கல்வி அங்கேதான் கற்பிக்கப் படுகிறது என்பதை நான் அறிவேன். இதையிட்டு நான் மிகுந்த ஆனந்த மடைகிறேன்."
மிகவும் செம்மையான அவனது ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. அவளை அறியாமலே, எரிச்சலை முகத்திலிருந்து முற்றிலுமாய் உரித்தெடுத்துவிட்டு மெளனமாய் சலனமற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு புதிய சில கோப்புகள்ை எடுத் தான்.
"ஒவ்வொரு கோப்பிற்கும் முதல் இரண்டு எழுத்தும் கம்பனியின் அடை பாள எழுத்து, பிறகு குத்தாக ஒரு கோடு, அடுத்து என்ன பொருள் என்பது பற்றிய அடையாள எண், கடைசியில் ஆங்கில ஒற்றை எழுத்தில் அதற்கு இடப்பட்ட தொடர் எண்.”
ஐராங்கனிக்கு எரிச்சல், நேற்றைய மழைபோல அடித்துப் பெய்தது. இது அரிச்சுவடிப் பாடம். எப்பவோ நாம் கற்றுக் கொண்டது என்ற சொற்கள் எகிறியே பாய்ந்து கரைந்து போயின மனதினுள்ளே.
"அதெல்லாவற்றையும் விட சிங்கள முட்பட நான்கு பாஷைகள் எனக்கு நன்றாகத் தெரியும். நேற்று என்னைப் பற்றி நீங்கள் சிங்களத்தில் முணு முணுத்த கேலியை உடனே நான் விளங் கிக் கொண்டேன். இனிமேல் அப்படிச் செய்யவே வேண்டாம். எதுவானாலும் நேருக்கு நேராகப்பேசிக் கொள்ள
(3)
உங்கள் ஆங்கிலம்

Page 17
வேண்டும் சரியா?”
தன்னை அறியாமலே தலையைக் குனிந்து கொண்டாள் ஐராங்கனி, மனங் குழம்பிப் போயிற்று.
"சரி. இனி நீங்கள் போகலாம்." அவனது முகத்தைப் பார்க்கவே சங்கடமாய் இருந்தது என்றாலும் அவளை அறியாத எரிச்சலும் கோபமும் அவன்மீது அறுகம்புல்லினைப்போலக் கெளவிப் படர்ந்தன. நேற்று சூழலையே அதிர்ந்து பதறிக் கலங்கிட வைக்கும் வெறித்தனத்தோடு மழை பெய்தது. இடியும் மின்னலும் மழையிடை எகிறிக் குதித்தன. அலுவலகத்தின் ஒரு ஜன்னல் பூட்டப்படாதிருந்ததால், மழை குடம் குட மாய் உள்ளே தண்ணிரை எற்றி எற்றிக் கொட்டிற்று. பல கோப்புகள் நனைந்து தண்ணீரில் மைக் கறைகள் மிதந்தன. இதையிட்டுத்தான் நிர்வாக இயக்குநராக அங்கு சென்றவாரம் நியமனம் பெற்று வந்திருந்த ராஜசேகரன் ஐராங்கனியிடம் விசாரித்தான். அப்போது அங்கே கமலா வும் நின்றாள்.
அவன் கேட்டு முடிந்து கணப் பொழுது கரைந்துபோகமுன்,
"வடக்கிலையிருந்து வந்து ஏழு நாளாக முதல் இவர் என்ன அதட்டு அதட்டுகிறார். நான் என்ன மழை பெய்தால் இந்தப் பைல்களுக்குப் பக்கத் திலை வந்துநின்று குடைபிடிக்க வேணு மென்றா இவர் நினைக்கிறார்?" என்று சிங்களத்தில் கமலாவைப் பார்த்துச் சொன்னாள் ஐராங்கனி.
அந்த வார்த்தைகள் கமலாவின் முகத்தில் அச்சத்தைக் கீறின. மெளனத் தில் வார்த்தைகள் பொறிகளாகத் தெறித்தன. வெளியே வந்த கணங் களில் மெளனம் நொருங்கிட பரபரப் போடு கேட்டாள் கமலா;
"ஈ.டிக்கு முன்னாலே கொஞ்சமும் யோசினையில்லாமல் இப்படி நீ பேசியது
Frfflu T?”
புன்னகையோடு அவளைப் பார்த் தாள் ஐராங்கனி.
"நான் உனக்கு சிங்களத்தில்தானே சொன்னேன்.”
கமலா ஏளனமாக அவளைப் பார்த்
(32)
தாள்.
"ஈ.டிக்கு சிங்களம் தெரியுமென்று முந்தநாள் சோபனா எனக்குச் சொன் னாள்."
தன்னை அறியாமலே, "அப்படியா?” என்று அதிர்ந்தாள் ஐராங்கனி. மறு கணமே சமாளித்துக் கொண்டாள்.
“என்னால் இதைச் சமாளிக்க முடியும். இதைப்பற்றி ஈ.டியால் என்னை என்ன செய்யமுடியுமென்று பார்க்க லாமே."
கமலா தனக்குள் சிரித்தக் கொண் டாள்.
2 தனது இருக்கையில் உட்கார்ந்து கோப்பொன்றைப் படிப்பதுபோலப் பாவனை செய்தவாறே ஐராங்கனியைக் கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா.
ஐராங்கனி யோசனையிலே ஆழ்ந்து போயிருந்தாள். அடிக்கடி தன்னை யறியாமலே விரல்களால் நெற்றியை அடித்துவிட்டு, கோப்புகளை அடுக்க முயன்று முடியாமல் வெறுமையாக எதிரே பார்வையினைச் செலுத்தினாள். கமலா நேரத்தைப் பார்த்தாள். ஒரு மணியாகப் பத்து நிமிஷங்களே இருந் தன.
விமலாவும் ஜானகியும் சாப்பாட்டுப் பெட்டியுடன் சாப்பிடும் அறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து வேறுசிலர்.
கமலா எழுந்து ஐராங்கனி இருந்த பக்கமாகச் சென்றாள். இப்போதும் ஐராங் கனி யோசனையில் தனித்திருந்தாள். அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது கமலாவுக்கு. “ஐரா." கமலாவின் மென்மையான குரல் ஐராங்கனியின் தோளைத் தொட்டு அவள் பக்கமாகத் திருப்பிற்று, நிமிர்ந் தாள். கனிவும் பரிவுமாய்த் தொட்ட கண்களால் இதமடைந்தாள். மெல்லிய பெருமூச்சு இரகசியமாய் உதிர்ந்து கரைந்தது.
"என்ன ஒரே யோசனை.
ஞானமி

கமலாவின் கேள்வி, சட்டென்று ஐராங்கனியின் முகத்திலே மாறுதலைக் கொண்டுவந்தது. எரிச்சலும் கோபமு மாகக் கண்கள் சிவந்தன.
"யோசினை ஒன்றும் இல்லை. தலை வலி. தலையைப் பிளக்கிற மோசமான வலி. விடிய விடிய நித்திரையே இல்லை.”
நெற்றிப் பொருத்துகளை, இரண்டு கைகளின் ஆட்காட்டி விரல்களாலும் இறுக்கி அழுத்தினாள் ஐராங்கனி. கண் களிலே நோவின் வலி துள்ளிக் குதித் தது. மூக்கை உறிஞ்சியவளின் இயல் பின்மை அழுகையாய் பிரவகிக்கும் தன்மையை எட்டிற்று. கமலா பரிவு மேலோங்க
ஐராங்கனியின் தோளைத் தொட் டாள், கனிவோடு, "ஏதாவது தைலம் அல்லது மாத்திரை வாங்கித் தரட்டுமா?" என்றாள்.
மூக்கை உறிஞ்சியவாறுே "வேண் டாம்.” என்றாள் ஐராங்கனி கரகரத்த குரலில், பிறகு தானே தொடர்ந்தாள்: “எங்களின்ரை வீட்டுக்கு எதிரிலை ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. அதில் பிள்ளைகள் விளை யாடுகிறது வருஷத்திலை ஐந்து நாட் களும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிக் கூட்டங்கள் கிட்டத்தட்ட ஒவ் வொரு நாளுமே நடைபெறும். சில கூட்டங்கள் விடியவிடிய நடக்கும். இந்த ஒரு கிழமையாக அதுதான் நடக்குது. நித்திரையே கொள்ளமுடியேல்லை. திட்டு. விடிய விடியத்திட்டு.”
கமலா புன்னகையோடு அவளைப் பார்த்தாள். پیشہ
“காதுக்குள்ளை பஞ்சை அடைத்துக் கொண்டு நித்திரை கொள்ள வேண்டி யதுதானே. எங்களின்ரை பக்கத்திலை கூட்டம் நடந்தால் நாங்கள் அதைத் தான் செய்வோம்.”
ஐராங்கனி நெற்றியைத் தடவிக் தொன்ைடாள்.
“என்ன தலைவலி இருந்தாலும் அவர் கள் சொல்லுறதிலை சில நியாயங் களும் இருப்பதாக எனக்குப் படுகிறது." கமலாவின் வட்ட முகத்தில் வினாக்
6 - 21
கள் வடிவமிட்டன. ஐராங்கனியை உற்றுப் பார்த்தாள்.
“என்ன நியாயம்?" “இலங்கைப் பிரச்சினை சகல வற்றுக்குமே தமிழர்தான் காரணம் என்று போன கிழமை பல்கலைக்கழகப் பேரா சிரியர் ஒருவர் பேசினார். சிங்கள இனம் உலகத்தில், இலங்கையிலை மட்டுந் தான் இருக்குது. அது சுதந்திரமாக பிரச்சினை ஏதும் இல்லாமல் இருக்க விரும்புகிறதிலை என்ன பிழை என்று அவர் கேட்டார். அதோடு இன்னொரு சம்பவத்தையும் அவர் சொன்னார். துட்டகைமுனு இளம் பராயத்தலை இருக்கிறபோது ஒருநாள் கைகால்களை முடக்கிக் கொண்டு கிடந்தானாம். ஏன் அப்படி அவஸ்தைப்பட்டுக் கிடக்கிறாய் என்று யாரோ கேட்டபோது, ஒருபக்கத் தில் தமிழர், மற்றப்பக்கத்தில் சமுத்திரம். இந்த நிலையில் என்னால் எப்படி நீட்டி நிமிர்ந்து படுக்கமுடியும் என்றானாம். இது இன்றைக்கும் அப்படியே பொருந்தி
நிற்கிறதல்லவா? என்று அந்தப் பேரா
சிரியர் கேட்டகேள்வி எனது ஞாபகத்துள் நிற்கிறது. அது சரியாகவும் படுகிறது" கமலா மெளனமாக இருந்தாள். “என்ன நான் சொன்னது சரிதானே.” தயக்கமாக ஐராங்கனியை ஏறிட்டாள் 56.
"அப்படியானால் இங்குள்ள தமிழர் களை என்ன செய்வது?"
ஐராங்கனி அந்தக் கேள்விக்கு எந்தப் பதிலையுமே சொல்லாமல் விறுக் கென்று எழுந்தாள்: "சரி. நாங்கள் இனிச் சாப்பிடப் போகலாம்"
சாப்பாட்டு அறையில் ஒருவரை ஒருவர் வியப்பாகவும், வேடிக்கையா கவும், மனநிறைவோடும் பார்த்த வாறே சென்றனர். கைகழுவுவதற் காக குழாயடிக்குச் சென்றவள், குழாய்க்கு மேலே சிங்களத்தில் எழுதிமாட்டப்பட்டிருந்த அட்டை
யைக் கண்டதும் தன்னையறியாத
எரிச்சலுக்கு உள்ளானாள், கோபம்
தியெனத் தகித்தது கண்களிலி. அறிக்கையின் கீழே ராஜசேகரன் ஒப்பமிட்டிருந்தான்.

Page 18
“என்ன இந்த ஆள், எல்லாவற்றி லுமே அதிகாரம் பண்ணுகிறான். சாப் பிட்டு விட்டு இதே குழாயில்தானே கை கழுவி வாய் கொப்பளிப்போம். இனிமேல் இந்தக் குழாய்த் தொட்டியில் வாய் கொப்பளித்துத் துப்பக்கூடாதென்று கட் டளை போட்டிருக்கிறானே. இப்படியாக எங்களை அடிமை போல நடத்துகிற துணிவை எங்களினுடைய ஆட்கள் தானே இவனுக்கு கொடுத்திருக்கிறார் கள்." படபடவென்று பொரிந்து தள்ளி னாள் ஐராங்கனி.
அவளருகே நினிற சாதனா, அடைத்த குரலிலே சட்டென்று சொன் 6T6:
"தண்ணிர் எடுத்துக் குடிக்கிற குழாய்த் தொட்டியில் தட்டு அலம்புவதும் வாய் கொப்பளித்துத் துப்புவதும் அரு வருப்பாகவும் சுகாதாரக் கேடாகவும் இருக்கிறதென்றுதான் சொல்லிக் கொண் டிருந்தோம். யாருமே கேட்கவில்லை. அது இப்போது நடந்திருப்பது சந்தோ ஷந்தானே. ஆனால் ஐரா, நீ இப்படிப்
பேசுவது ஆச்சரியமாய் இருக்கிறது.”
கமலா சாதனாவை மரியாதையும் பெருமையும் கலந்திடப் பார்த்தாள். இத ழோரத்தைப் புன்னகை செழுமையாகத் தொட்டிருந்தது.
ஐராங் கனி கையை உதறிக் கொண்டாள். பிறகு அலட்சியமும் சீற்ற மும் தொனிக்க அவர்களைப் பார்த்தாள்: "நீங்கள் ஏன் அந்தாளுக்காக இப்படி
வால் பிடிக்கிறீங்கள்? உங்களுக்கு இது வெட்கமாக இல்லையோ?.”
கமலாவும் சாதனாவும் எதையும் பேச விரும்பவில்லை. அப்படிப் பேசினால் அது எங்கே போய் முடியுமென்பதை அவர்கள் மிகத் தெளிவாகவே அறிந்தி ருந்தார்கள். எதிரே ஒன்றோடொன்று துள்ளி விளையாடிக்கொண்டிருந்த அணிற் பிள்ளைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா.
தன் அருகே பதறியவாறு ஓடி வந்த ஐராங்கனியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து போய்விட்டாள் கமலா. எதற்கும் கலங்கித் துவண்டி டாத ஐராங்கனியின் முகம் இப்படி சிதைந்து போனது கமலாவின் மன துள் அக்கினித்திரவத்தை விசிற்று.
“ஐரா. என்ன. என்னது?" கமலாவின் கைகளைப் பற்றியவாறு குலுங்கிக் குலுங்கி அழுதாள் ஐராங் கனி. நெஞ்சைச் சுரண்டி நொந்திடச் செய்தது அந்த விம்மல்.
அவளது கண்களைத் துடைத்தாள் கமலா. மென்மையாக முதுகை வருடி னாள். கைகளில் ஐராங்கனியின் நெஞ்சத்துடிப்பு அடையாளம் காட்டிற்று.
"என்னடா என்ன நடந்தது?" வார்த்தைகள் சட்டென்று கொட்டின: "அம்மா செத்துப் போயிட்டா." “என்ன?” பிடரியில் யாரோ ஓங்கி அடித்தாற் போல அதிர்ந்து சில்லுச் சில்லாக உடைந்துபோனாள் கமலா, ஐராங்கனி யின் ஒரே ஆதாரம் அவளது அன்னை குசுமலதா. மகளைப் பற்றி எண்ணற்ற கனவுகளை நெஞ்சினுள்ளே குவியல் குவியலாக நிறைத்து வைத்திருந்த தாய். அன்பு நிறைந்த தாய். பல சந்தர்ப் பங்களில் ஐராங்கனியை குசுமலதா தேடிவந்தபோது அவளோடு கதைத் திருக்கிறாள் கமலா. ஆரோக்கியம் நிறைந்த அந்தத் தாய்க்கு எப்படிச் சம்ப வித்தது இந்த அகால மரணம்.
திகைத்துப்போய் பேச்சற்று நின்றாள் 5D6).
அவர்களை இப்போது பல யுவதி கள் சூழ்ந்து நின்றனர். கவலையும் கண்
எநான்மி
 
 

னிரும் பரபரப்புமாய் முகங்கள்.
ராஜசேகரனின் முகம் தெரிந்தது. குழுமி நின்றவர்கள் மெல்லமெல்ல அங் கிருந்து நழுவத்தொடங்கினர்.
கமலாவை நோக்கினான் ராஜசே கரன், சிங்களத்தில் கேட்டான்:
“என்ன?.” இரக்கம் கனிந்திருந்தது குரலில், கமலா சொன்னாள். சொல்லிமுடியமுன் ராஜசேகரன் கூறினான்:
“ஐராங்கனியை கம்பெனி வாகனம் ஒன்றில் உடனே வீட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள். உங்களால் முடியுந் தானே.” சில கணங்கள் பேசாமல் நின்று விட்டு அவன், “தாயை இழப்ப தென்பது பெரிய துயரம். ஐராங் கனி, எமது அனுதாபங்கள். காலம்தான் இத்தகைய வேதனைகளைத் தீர்த்து
se
வைக்கக்கூடியது. ளத்தில்.
கமலா ஐராங்கனியைப் பார்த்தாள். விம்மி விம்மி அழுதாள் ஐராங்கனி, ராஜசேகரன் அங்கிருந்து விறுவிறு வென்று உள்ளே போய்க் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தான்.
*கமலா, ஐராங்கனியின் வீட்டு மரணச் செலவுக்காக “எக்கவுண்டன்ற் ஐந்தாயிரம் ரூபா தருவார். வாங்குங் கள். அதோ வாகனமும் வருகிறது. புறப்படுங்கள்."
வாகனத்தில் ஐராங்கனி எதை யுமே பாராமல் யோசனையில் இருந் தாள். அவளைப் பார்த்த கமலா வின் மனதில் இரக்கம் உண்டா யிற்று. தன்னையறியாது பெருமூச் செறிந்தாள். பிறகு வெளியே பார் வையை விட்டாள் அவள்.
என்றான் சிங்க
LS L LLLL LL LL LL LL L L L L L L L L L LL L 0 0 M
"அன்பார்ந்த வாசகர்களே!
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச்
வேண்டுகின்றோம். டைக்கும் இடங்கள்:
சேர்ந்து கொள்ளும்ப ஞானம் சஞ்சிகை 嵩
கொழும்பு
u Tr Tsab .
திருகோணமலை
மட்டக்களப்பு
முல்லைத்தீவு
முல்லைத்தீவு வவுனியா சந்திரபோஸ் சுதாகர் - 87,
g
கனடி
கொட்டக்கலை
சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை.
சு பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி 蠶 வசந்தம்- S - 44,3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11.
பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை.
வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை. திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோமலை.
சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு. எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் விதி, மட்டக்களப்பு.
கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு,
வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா.
கலைவாணி புத்தகசாலை - 231, டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி.
கொழும்பு 11. வெள்ளவத்தை,
o a o a o O o oro o a o o o O o O o e O o O o O o O o O O e O o O o e O o O o
ஜுனி - 2001
(3S)

Page 19
பேராசிரியர் டாக்டர் பொனர். பூலோகசிங்கம்
சந் திப் தி. ஞானசேகரன்
so கொழும்பு, களனி, பேராதனை பல்கலைக்கழகங்களில் முப்பது ஆண்டுகளுக்கு
மேலாகப் பணியாற்றியவர்.
9 ஒக்ஸ்போர்ட், எடின்பறோ பல்கலைக்கழகங்களில் மொழியியல் ஆய்வுகள் மேற்
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின் பெருமுயற்சிகள் நூலுக்கு 1970இல் சாகித்திய விருது பெற்றவர். .
இலங்கை அரசின் "கலாகீர்த்தி ப்ட்டம் பெற்றவர்.
ஈேழத்து இலக்கிய முயற்சிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்பவர்.
ஈழந்தந்த நாவலர், இந்துக்கலைக்களஞ்சியம் முதலானவை இவரது ஏனைய நூல்கள
திஞா:- மரபுப் போராட்டம்" என்றொரு நிகழ்ச்சி தங்கள் மாணவர் கட்டத்திலே பரபரப்பாய் இருந்ததே? பொ.பூ- ஆமாம். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் ஆரம்பத்திலே பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் (1903-1968) இடத்திற்குச் சாகித்திய மண்டலத்திலே டாக்டர் ஆ.சதாசிவம் (1926-1988) நியமனம் பெற்றார். அவர் தனது பிரதிநிதித்துவத்தினைப் பிரகடனப்படுத்தும் முகமாக, அவ்வப்போது வழங்கிய கருத்துரைகளும் பேட்டிகளும் மரபுப் போராட்டமாக முடிந்தது. டாக்டர் சதாசிவம் தயங்காது கருத்துரைத்து இறும்பூதெய்திய காலமது. அதனை அப்போது தினகரனில் பணி செய்த பேராசிரியர் சிதில்லைநாதன் நன்கு பயன்படுத்திக் கொண்டார். "எழுத்தாளர் மரபுப்படி எழுதவேண்டும்; அந்த மரபு உயர்ந்ததோர் வழிவந்தது; அல்லாதது இழிசனர் வழக்கு." இச்சாராம்சத்திற்கு எழுந்த விளக்கங்களும் வியாக்கியானங்களும் விறுவிறுப்பு மிக்க தலைப்புகளிலே பெட்டிகட்டி சதாசிவம் கருத்துகளாகத் தில்லைநாதனால் வெளியிடப்பெற்றன. அவற்றிலே ஆவேசத்திற்கு இட்டுச்சென்றது "இழிசனர் வழக்கு" இழிசனர் வழக்கு வியாக்கியானத்திற்கு மூலகர்த்தா யார் என்று ஆராய்வது சுவைதரும் பயிற்சி பொதுவாகக் கூறின், அன்று ஆரம்பத்திலே பண்டித வர்க்கத்தினர் சிலர் ஒரு கன்னையிலும் நவீன எழுத்தாளர் பலர் ஏனைய கன்னையிலும் நின்றனர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 1962ம் ஆண்டு மாநாட்டிலிருந்து பிரிந்து சென்றவரும் பண்டிதவர்க்கம் தலைமை வகித்த கன்னையில் ஐக்கியமாகிக் கொண்டனர் எனல்வேண்டும். மரபுப் போராட்டத்தின் இறுதி யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய விழா. அந்த விழா முட்டை அபிஷேகத்திலே போய் முடிந்தது. அக்காடைத்தனம் மரபுப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியுமாக முடிந்தது. மரபிலே நம்பிக்கை வைத்திருந்த பலர் சதாசிவம் பேரால் வந்த வியாக்கியானங்களை அடுத்து, அவரை ஆதரிக்காது ஒதுங்கிவிட்டனர். யாழ்ப்பாணத்திலே 1963இலே நடந்த அடாவடித்தனம்
(36) ஞானமீ
 

எழுத்தாளரிடையே ஏற்படுத்திய தாக்கத்தினையும் மறுக்கமுடியாது. 1970இலே சிறிமா பண்டாரநாயகாவின் ஐக்கிய முன்னணி அரசு வந்தபோதுதான், இ.மு.எ.ச. மீண்டும் தலை தூக்க முடிந்தது. மரபுப் போராட்டத்தினை டாக்டர் சதாசிவம் அன்று ஒழுங்காக எடுத்துச் சென்றிருந்தால்...! என்ற நினைவு அன்று சிலருக்கு ஏற்படாமற் போகவில்லை.
தி.ஞா- “தேசிய இலக்கியம்" பற்றிய கருத்துகளும் 1960களிலே தாம் தெளிவாக உருப்பெற்றன என்பது பொருந்துமா? பொ.பூ “தேசிய இலக்கியம்” என்ற கோட்பாடு இலங்கையைப் பொறுத்தமட்டிலே விளக்கம் வேண்டிநிற்பது. தமிழருக்குப் ‘புத்திமதி கூறமுற்பட்ட "இளங்கீரன்" (சுல்தான் முஹித்தீன் சுபைர்)
"தமிழ் மக்களிடத்தில் பரந்து காணப்படும் தமிழ் உணர்ச்சியில் தேசியத் தன்மையின் ஒரு தூசி துரும்பையாவது பார்க்கமுடியாது. தமது மொழியின் மேலும் இலக்கியத்தின் மேலும் கலையின் மேலும் உள்ள பற்றும் பிடிப்பும், தாம் பிறந்து வாழும் இந்த ஈழத்திருநாட்டின் மேல் இல்லை. பச்சையாகச் சொன்னால் இந்த மரகத மணித்திருநாடு தான் நமது தாயகமென்ற தேசிய உணர்ச்சி இல்லவே இல்லை" என்று கூறியிருக்கிறார். (தினகரன் தமிழ்விழா சிறப்புமலர், தமிழுணர்ச்சி, 1960, பக்கம்88) தேசியம் என்பது தனித்துவத்தைப் பேணும் ஆவல் கொண்ட ஓரினம், தன்னைமறந்து, தன்னாமம் கெட்டு, இன்னொரு இனத்துடன் சங்கமமாகிக் கரைந்து போவதன்று. பல்வேறு இனங்களும் தம் சுயாதீனத்தை வைத்துக்கொண்டு இணைந்து போதலாதல் வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை வற்புறுத்தப்புறப்பட்ட இ.மு.எ.ச. அதற்குரிய சூழலை அன்று கோட்டை விட்டுவிட்டது; எதேச்சதிகாரத்தோடு உறவு பூண்டு மீட்சி பெறுவதைத் தன்நோக்காகக் கொண்டிருந்தது. அதனாலேயே இ.மு.எ.ச. பிரமுகர் "இளங்கீரன்’ இவ்வாறு கூறினார்.
இலங்கைத் தமிழ் அபிமானம் ரீலறி ஆறுமுகநாவலர் (1822 - 1879) அவர்களின் "நல்லறிவுச்சுடர் கொளுத்தல்" எனும் துண்டுப் பிரசுரத்திலே (1869) உறைக்கின்றது. சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளையிடம் (1871-1907) அவ்வுணர்வு விசப்பரீட்சையாகிறது. மட்டுவில் வேற்பிள்ளை உபாத்தியாயர் (-1930) ஈழமண்டலச்சதகம்(1915) அபிமானப் பெருமையால் எழுந்தது. மானிப்பாய் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் (1858-1917) ஈழமண்டலப்புலவர் (1914), புன்னை மகாவித்தவான் சி.கணேசையர் (1878-1958) ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939) வேர்களைத் தேடிய முயற்சிகள். ஈழகேசரி பத்திரிகை 1930களில் இந்திய இலங்கைப் பாலமாக அமைந்த போதும் சுதேசிய சிந்தனைகளைப் புறக்கணிக்கவில்லை. மறுமலர்ச்சிப் பத்திரிகை 1940களில் அந்நெறியினை முன்னெடுத்தச் சென்றது. மண்வாசனை வீசும் ஆக்கங்களுக்கு அது சிறப்பிடம் அளித்திருக்கிறது.
1950களிலே தனித்துவத்தினை நிலைநிறுத்தும் சிந்தனை, பாரம்பரியங்களை இனங்காண வைக்கிறது. இலங்கை ஒரு தனிநாடு, அங்கு யாழ்ப்பாணம், வன்னி, மன்னார், திருமலை, மட்டக்களப்பு, மலைநாடு முதலாம் பிரதேசங்களிலே தனித்துவங்கள் உண்டு என்ற கருத்து உருவாகிக் கொண்டிருந்தது.
அப்பொழுதான் பகீரதன் (மகாலிங்கம்) 1960 நவம்பரிலே கொழும்பிலே
6 - 2001 (3)

Page 20
வந்திறங்கினார். கல்கி மனேஜர் சதாசிவத்துடன் சண்டைபோட்டுவிட்டு, "கங்கை" சஞ்சிகையை அப்பொழுது "பகீரதன்" வெளியிடத் தொடங்கியிருந்தார். அவர் இலங்கை மார்க்கட்டை நோட்டம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு இலங்கை எழுத்துக்களைப்பற்றி ஒன்றுமே தெரியாது. வழமைபோல கொழும்பு விவேகானந்த சபையில் அவருக்கு விருந்துபசாரம் நடந்தது. அங்கே அவர் இலங்கைச் சிறுகதாசிரியர் தமிழ்நாட்டுச் சிறுகதாசிரியருக்குப் இருபத்தைந்து வருடங்கள் பின்தங்கிவிட்டதாகத் தயங்காமல் கூறினார். பகீரதனைச் சீண்டிவிட்டவர் "எஸ்.பொ" என்றுதான் நினைக்கிறேன். பகீரதன் முன்னிலையிலே "எஸ்.பொ” ஈழத்தவர் இந்தியப் பத்திரிகைகளுக்குக் காவடியெடுப்பதாகக் காரசாரமாகச் சாடினார். பெரிய பூகம்பம். சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தினகரனும் வீரகேசரியும் சர்ச்சைகளுக்குத் தூபமிட்டன. இலங்கையின் நல்ல படைப்புகள் அன்று தேடித்தேடி அறிமுகப்படுத்தப்பட்டன. அக்கைங்கரியத்திலே "வெள்ளங்காடு வியாகேசதேசிகர்" எனும் எஸ்.பொ.வுக்கு முக்கிய பங்குண்டு.
தேசிய இலக்கிய கோஷம் உருவாகிவிட்டது. எஸ்.பொ, அ.ந.கந்தசாமி, க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரத்தினா, தருமு சிவராமு, கா.சிவத்தம்பி, மு.தளையசிங்கம், வை.அ.கயிலாசநாதன் முதலியோர் அதற்கு விளக்கமும் வியாக்கியானமும் தந்தனர். பலகாலமாக, பல்வேறு நபர்களால் வளர்த்து எடுக்கப்பட்ட கோட்பாட்டின் மீது ஒரு குழுவினர் தனியுரிமை கொண்டாட முற்படுவதை "இளங்கீரன்’ நூல்களான தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் (1993), ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்(1994) எனும் தொகுப்புகள் உணர்த்துவன. சத்தியசோதனை செய்யும் கட்டமல்லவா!
தேசிய இலக்கிய கோஷத்திற்கு உரிமைகொண்டாடியபோது நண்பர் டாக்டர் (பேராசிரியர்) க.கைலாசபதி "பரமார்த்தகுரு"வாகத் தினகரன் ஆசிரியராகத் திகழ்ந்து ஈழத்து இலக்கிய வாதிகளுக்கு முக்கியத்துவம் தந்து தேசிய இலக்கியத்திற்கு வழிகாட்டியதும் கூறப்படுவதுண்டு. வி.கே.பி.நாதன் பண்டிதருக்காகவும் கைலாசபதி இ.மு.எ.கூடாரத்திற்கும் தினகரனைக் களமாக மாற்றியமைக்கு இலங்கை அரசு காரணமாகும். மக்கள் ஐக்கியமுன்னணி ஐம்பதுகளின் நடுவிலே ஆட்சிக்கு வந்தபோது "ஏரிவிட்டு” பத்திரிகைகள் வெளிநாட்டவரிடம் இருந்து பெறும் விடயத்திற்குச் சன்மானம் அளிப்பதற்குத் தடைவிதித்தது. ஈழத்தவரின் ஆத்மார்த்தத் தொடர்பினைக் கத்தரிக்கும் உத்திகளில் இதுவும் ஒன்று. எனவேதான் ஈழத்தவருக்கு தினகரனிலே வாய்ப்புகள் மலிந்தன. இவ்வுண்மையை மறைத்துப் பெருமை தேட முயல்வது வருந்தத் தக்கது.
56வடுக்களும் 58 காயங்களும் 61 இரத்தப்பெருக்கும் நித்திய சிந்தனையாக நிலவிய காலத்திலே, தமிழர்தம் உரிமைகளை எல்லாம் இழந்து அனாதரவாக நின்றபொழுது, இடதுசாரிகள் சில அமைப்புகளிலே தொற்றிக் கொண்டு தமிழினத்தின் ஆசாபாசங்களைக் கிஞ்சித்தும் நினையாது, சமதர்மபோதனை பேசப் புறப்பட்டதாகக் கருதி, அச்செயலை ஐந்தாம் படைச்செயலாகத் தமிழர் சமூகம் வாய்விட்டுத் தூற்றியது.
தி.ஞா:- இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழறிஞர் பலரும் தம்மை மார்க்சியவாதிகளாக இனங்காட்ட விரும்பிய காலகட்டத்திலே தாங்கள் அங்கு பணிபுரிந்தீர்கள். மரபுவாதியான தங்களுக்கு அத்தகைய சூழலில் பணியாற்றிய அனுபவம் எத்தகையதாக இருந்தது?
பொ.பூ:- பல்கலைக்கழகத்துக்கு வெளியேதான் மார்க்சீயவாதி என்ற லேபல் உள்ளவர்களால் பிரச்சினைகள் தோன்றின. கலை, இலக்கிய, பொதுசனத்

தொடர்பு சம்பந்தமான பிரிவுகளிலே அவர்கள் இருந்தகாலத்திலே, தம்முடைய நெற்றிப்பட்டம் சூட்டாதவர்களுக்கு எல்லாம் புறக்கணிப்பும் அவமானமும் செய்ய அவர்கள் தயங்கவில்லை. இவற்றிற்கு எல்லாம் தாமே ஏகபோக உரிமையுடையவர்களாக எண்ணிச் செயற்பட்டார்கள். தமிழ் அறிவையோ ஆற்றலையோ பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பரமார்த்தகுருவின் சீடர்களையே அவர்கள் கூட்டி வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சார்பான அரசு பீடத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றின் விளைவுகள்!
தி.ஞா:- மார்க்சீயவாதிகள் தமிழ் இலக்கியத்தில் செலுத்திய தாக்கத்தினை எதிரணி எதுவும் உருவாகி முறியடிக்க முடியாமல் போய்விட்டதே! பொ.பூ:- தமிழ் மார்க்சீயவாதிகள் தமது எழுத்தாளர் சங்கத்தினை, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று பெயர் சூட்டினார்களே அன்றி இலங்கை மார்க்சீய எழுத்தாளர் சங்கம் என்று பெயர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "முற்போக்கு" என்ற மயக்கம் பலரைக் கவர்ந்திழுத்தது. மார்க்சீயவாதி அல்லாதவர்கள் பலரும் கூட இச்சங்கத்திலே சேர்ந்தார்கள். 1962 ஸ்கிராகல்லூரி மாநாட்டிலேதான் அப்போர்வை கிழிந்தது என்று நினைக்கிறேன்.
தமிழர் அரசியல் கட்சிகள், இடதுசாரிகளைப்போன்று, புத்திஜீவிகளைத் தம்பால் ஈர்த்தெடுக்கச் சிந்திக்கவில்லை. "சுதந்திரன்” சாதனையை வைத்துக்கொண்டு பார்த்தால் இவ்வுண்மை தெளிவாகும். தமிழ்ப்பற்றையும் தமிழ் அபிமானத்தையும் பட்டிதோறும் பேசி எழுச்சிகாண வைத்தவர்கள் நல்லதொரு சங்க அமைப்பினை உருவாக்க நினைக்கவில்லை.
1960 களில் "மரபுப்போராட்டம்” தோற்றுவித்த எதிரணி திட்டமிட்டு நெறிப்படுத்தப்படாமல் பொரிந்து போய்விட்டது. 1962 இ.மு.எ.ச. ஸ்கிரா கல்லூரி மாநாட்டின் காரியமாக உருவாகிய "நற்போக்கு இயக்கம்” எஸ்.பொ.வையும் எம்.ஏ.ரஹற்மானையும் நம்பியிருந்தது. W
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சி தோன்றிய பின்பு அக்கட்சியோடு இணைந்து கொண்ட இடதுசாரிகளுக்கு மார்க்சீயவாதிகளின் சங்கங்கள் நல்ல துணை போயின. இதனால் அவற்றிற்கு அரச ஆதரவும் சலுகைகளும் வாய்த்தன. அரசு ஆதரவு அளித்த காலங்களில் உயிர்த்து அவ்வாதரவு இல்லாத காலத்தில் அவை தூங்கி விழுந்தன.
திஞா நல்ல படைப்புகள் கவனிக்கப்படாமல் போவதும் மோசமான படிைப்புகள் கொண்டாடப்படுவதுமான ஒரு நிலைமை ஈழத்தின் இலக்கிய உலகில் இருந்து வந்ததாகக் குற்றச்சாட்டு நிலவுகிறதுதே பொ.பூ:- ஆமாம். 1950கள் முதலாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்திலே அதாப்பியங்கள், இருட்டடிப்புகள், பிறழ்வுகள், தவறான மதிப்பீட்டுத் திணிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. புத்திஜீவித சர்வதிகாரம் தம்முடைய ஆஸ்தான கவிஞனையே ஆஹா! என்று தூக்கிவைத்தது. தம்மவர்கள் எழுதிய சினிமாக் காதல்கதைகளையும் வியபபிசாரங்களையும் நவீன காவியங்கள் என்று போற்றிப் புகழ்ந்தது. திறமையையும் ஆற்றலையும், படைப்பின் தரத்தையும் சிரத்தையில் எடுத்து இலக்கிய விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. படைப்பாளி தம் கூடாரத்தவர் அல்லது பரமார்த்த அநுதாபி என்றால் மட்டுமே அவனுடைய படைப்புகள் சிலாகிக்கப்படலாம் என்றொரு வரையறையுள் அவர்கள் இயங்கியுள்ளார்கள். 1950கள் முதலாகச் சுமார் மூன்று தசாப்தங்கள் ஈழத்தில்
ஜுனி - 2001 இ9

Page 21
இடம்பெற்ற இலக்கிய முயற்சிகள் புனராலோசனை வேண்டி நிற்கின்றன. இலக்கிய விமரிசனத்தை அறுவைச் சிகிச்சையாகப் பயன்படுத்தாது செயற்படின் இலக்கியம் வளம்பெற வாய்ப்புண்டு.
தி.ஞா:- ரீலழறி ஆறுமுகநாவலர் இயக்கத்திலே தங்களது ஈடுபாடு "ஈழம் தந்த நாவலர்" எனும் தங்கள் கட்டுரைத்தொகுப்பு மூலம் தெளிவு. தாங்கள் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அதனை ஆதரித்து அளித்த பத்திரிகை அறிக்கை அக்காலத்தில் நாவலர் வட்டத்தினரால் பெரிதும் பேசப்பட்டு வந்தது. அதுபற்றி சிறிது கூறுங்கள். பொ.பூ:- "நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமுண்டா?” என்ற தலைப்பிலே யாம் வீரகேசரி வார வெளியீட்டிலே 13.10.1985 இலே எழுதிய கட்டுரையைத் தாங்கள் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்திலே 1985 இலே மாபெரும் அநீதி நடந்தபோது பண்டிதமணியவர்கள் வாளாது இருந்ததைக் கண்டு அங்கலாய்ப்புடன், அவர்கள் முன்பு எழுதிய கட்டுரையொன்றின் தலைப்பினைத் தழுவி எழுதப்பெற்றதது. பண்டிதமணியவர்கள் தம் கருத்தினைப் பலரும் அறியவேண்டும் என்ற நோக்குடன் எழுதப்பெற்றது. அவர்களும் 3.11.85 வீரகேசரி வாரவெளியீட்டிலே பதில் தந்திருந்தார். "நாவலர் பெருமானது சிலையை இப்பொழுது உள்ள இடத்தில் இருந்து (நல்லூர் நாவலர் மணி மண்டபத்தில் இருந்து) எடுக்கும்படி சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை" என்ற தம் கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சென்னையிலே 1968 சனவரி முற்பகுதியிலே நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது, தமிழ்த் தொண்டருக்குச் சிலையெடுத்தபோது, இலங்கையிற் பிறந்து வளர்ந்ததற்காக, தமிழ்த் தொண்டாற்றிய ஈழநாட்டுத் தவப்புதல்வர்களைத் தமிழ்நாடு முற்றாகவே புறக்கணித்தது. இக்காரியம் ஈழத்துத் தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை நாடி பிடித்துக்கண்ட ஈழத்துத் தமிழ்ப்பத்திரிகை உலகம் ஆவேசமாக மாற்ற உதவியது. கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்திலே 17.06.1968இலே இலங்கை நடைமுறைத் தமிழ் இயக்கத்தினர் நடாத்திய கூட்டத்திலே அவ்வுணர்வுகளுக்கு உருவளிக்கக் கொழும்பு ரீலறி ஆறுமுகநாவலர் சபை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
நாவலர்பெருமானின் மாதிரிப்படங்களை வைத்து அவருடைய திருவுருவம் உருவாகியது. அப்போது தென்புலோலி மு.கணவதிப்பிள்ளை போன்றோர் நாவலர் படிமத்திற்கு மாதிரியாகக் காட்சி வழங்கியதும் உண்டு. நாவலர்பெருமானின் திருவுருவத்தினை யாழ்ப்பாணத்து நல்லூரிலே நிறுவும் தீர்மானம் எதிர்பார்க்கப்பட்ட வொன்றேயாம். நல்லூரிலேயே அவர் பிறந்து வளர்ந்தவராவர். நல்லூரிலே எந்த இடத்தில் நிறுவுவது என்ற பிரச்சினை எழுந்தபோது, அரசாங்க அதிபர் ம.ழரீகாந்தாவும் உப அரசாங்க அதிபர் தி.முருகேசம்பிள்ளையும் நாவலர் பெருமானுக்குத் தர்மமாக வழங்கப்பெற்றிருந்த காணியைக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அந்தக் காணி நல்லை முருகன் தெற்கு வீதியிலே இருந்தது. நாவலர்பெருமான் மிகவும் நேசித்த புனித தலங்கள் சிதம்பரமும் நல்லூருமாகும். இரண்டிடத்திலும் அவர் மிகவும் வேதனைக்கு ஆளானார். 1870 நிகழ்ச்சிகளுக்குப் பின்பு தமிழ்நாட்டுக்கே நாவலர் பெருமான் செல்லவில்லை. 1874இலே நடந்த காரியங்களுக்குப் பின்பு நல்லை நாவலர் நல்லைக் கந்தன் சந்நிதியை நாடவில்லை. அவருடைய ஆத்ம சாந்திக்காகத் தெற்கு வீதியிலே அவருக்கு உரிமையான காணியிலே அவர்தம் திருவுருவத்தை நிறுவச் சைவமக்கள்
ஞானம்

ஆசைப்பட்டனர். அங்கே மணிமண்டபம் அமைத்து 1969ஜ"ன் 29ஆம் தேதி திருவுருவம் நிறுவப்பெற்றபோது சைவப்பெருமக்கள் ஆறுமுகநாவலர் சபையின் காரிய்த்தை மனமார வாழ்த்திப் போற்றி நன்றி கூறினர்.
1969 இலே நாவலர் பெருமானின் திருவுருவத்தை நல்லைக்கந்தன் தெற்கு வீதியிலே நிறுவிய்தைத் தடுக்க முடியாதவர்கள், நல்லதருணம் நோக்கி நின்றார்கள். அந்தத் தருணம் வரத்தான் செய்தது. பதினாறு வருடம் கழித்து அத்தருணம் வந்தது. யாழ்ப்பாணத்திலே நிலவிய அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நாவலர் பெருமானைப் புறக்காரணிகளால் விரும்பாத கூட்டத்தினரையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, மறைந்து போகாமல் இருந்த ஆறுமுகநாவலர் சபையின் சில பிரமுகர்களின் அனுசரணையுடன் அக்காரியம் நிறைவேறியது.
1985 ஆகஸ்டு 17 ஆம் திகதி பிற்பகல் ஆறுமணிக்கு நாவலர் பெருமானின் திருவுருவம் மணிமண்டபத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு, குப்பை ஏற்றும் "ராக்டரில்" முக்காட்டுடன் கொண்டு செல்லப்பட்டு, பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செல்லையா இராசதுரை நிறுவிய ஆறுமுகநாவலர் கலாசார நிலையத்தின் விறாந்தையிலே வைக்கப்பட்டது.
கொழும்பிலே இருந்து யாழ்ப்பாணம் வரை இராஜ பவனி சென்ற நாவலர் பெருமானின் திருவுருவம் குப்பை வண்டியிலே முக்காடிட்டுக் கூனிக் குறுகிச் சென்றது. நாவலர் பெருமானின் திருவுருவத்தினை நல்லை முருகன் தெற்கு வீதியிலே வைப்பதை விரும்பாதவர்களுடன் கூட்டுச்சேர்ந்து, 1969 இலே ஆறுமுகநாவலர் சபையிலே இருந்த அவர்களுடைய ஆதரவாளர், ஏகோபித்தெடுத்த முடிவினை அன்றே மாற்றியிருந்தால் தமிழினத்தை மாபெரும் துரோகிகளா ஆக்கியிருக்கமாட்டார்கள்!
தி.ஞா:- பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை ஆற்றிய பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக்கோலம்" எனும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நினைவுப் பேருரை அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே சலசலப்பு ஏற்படுத்தியதைத் தாங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்பேருரையிலே அவர் பேராசிரியர் வித்தியானந்தனுக்குப் பல்கலைக்கழகக் கல்விமான்களிலே தமிழ்த்துறை பூலோகசிங்கம், வரலாற்றுத்துறை பத்மநாதன் முதலிய வெகுசிலரே பக்கபலமாக நின்றதாகக் கூறியிருக்கிறாரே. அக்கூற்றுப் பற்றிய கருத்துகள்? பொ.பூ:- பேராசிரியர் வித்தியானந்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலகட்டத்தில் (1957 - 1961) எமக்கு ஏற்படவில்லை. 1972 இலே அனைத்து உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளை முகாமைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற காலம் முதலாகவே அவ்வாய்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது நான் கொழும்பு பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியராக இருந்தேன். கலாநிதி வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் வி.செல்வநாயகத்தினை அடுத்து 1971இலே தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றிருந்தார். அவருடன் பேராசிரியர் சி.தில்லைநாதன் பேராதனைத் தமிழ்த்துறையிலே பணிசெய்துகொண்டிருந்தார். கலாநிதி க.கைலாசபதி (1933 - 19820 களனிப்பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைத் தலைவராகவும் கலாநிதி கா.சிவத்தம்பி வித்தியோதய பல்கலைக்கழகத்திலே தமிழ்த் துறைப் பொறுப்பாசிரியராகவும் திகழ்ந்தார்கள். கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை
ஜுனி - 2001 G)

Page 22
தென்னிந்தியாவிலே புலமைப்பரிசில் பெற்று ஆய்வு செய்துகொண்டிருந்தார்.
அகில உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் முகாமைக்குழு உறுப்பினராக இருவருடம் (1972 - 1974) இருந்தகட்டம் எம் வாழ்விலே முக்கியமான கட்டமாகும். ஐந்தாம் படையினரும் அடிவருடிகளும் மறைந்து நின்று எதிர்க்கத் தமிழ் மண்ணிலே மாநாடு எடுக்கத்துணிந்து, அதனை வெற்றிகரமாக நடாத்தியும் இறுதியிலே ஏற்பட்ட மனக்கசப்பினாலே திகைத்து நின்ற முகாமைக்குழுவிலே சு.வி.யின் நன்மாணாக்கர் இடம்பெறவில்லை. பேராசிரியா சிதில்லைநாதன் மட்டும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருந்தார். ஏனையோர் அதனைக் கூடச் செய்யவில்லை. இந்நிலையைச் சு.வி. முகாமைக்குழுவுக்குச் சமர்ப்பித்த அறிக்கையிலே மனக்கசப்புடன் பெயர் சுட்டிக் கூறியிருந்தார். ஆயினும் பின்பு நூலாக அச்சிட்டபோது பெயர்களைச் சுட்டுவது நாகரிகம் இல்லை என்று நீக்கிட்டார்.
மாநாட்டு ஒழுங்குகளை ஆரம்பம் முதல் இறுதிவரை சு.வி.யுடன் சேர்ந்து செய்த தமிழ் விரிவுரையாளர் அன்று ஒரே ஒருவர்தான் என்று கூறுவது வெட்கப்பட வேண்டிய கூற்று. இதனால் தான் பேராசிரியர் வேலுப்பிள்ளை துணிந்து அவ்வாறு கூறினார். சு.வி.யுடன் 1972 இலே ஏற்பட்ட நெருக்கம் 1989 இலே அவருக்கு இறுதி வரும் வரை தொடர்ந்தது. கொழும்பிலே அவருடைய பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது எம்மையும் பெரியோருடன் ஒன்றாக வைத்து அஞ்சலியுரை செய்ய அழைத்திருந்தமை மனதைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. தினகரனும் வீரகேசரியும் அன்று நாம் 'வித்தி பற்றி எழுதிய இரங்கல் உரைகளை வெளியிட்டுப் பெருமை செய்தனர். அவர் மனித உள்ளம் நிறைந்த ஒரு மாமனிதர். அவர்தம் நினைவலைகள் அவ்வப்போது தோன்றி அமைதி ஏற்பட உதவுகின்றன.
தி.ஞா:- இனி, உங்கள் அவுஸ்திரேலிய வாழ்க்கையைக் கவனத்திற் கொண்டு சில கேள்விகள். தங்கள் புலம்பெயர்ந்த வாழ்விலே கலை இலக்கிய சமூகப் பணிகள் பற்றிக் கூறமுடியுமா? பொ.பூ:- "பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே" என்பார்கள். நாங்கள் பரதேசிகளாக இங்கு வந்தோம். குளத்திலே மரநிழலிலே கனவுகண்டு கொண்டிருந்த முதலையைப் பிடித்து மண்ணில் வீசி எறிந்தது போல இருக்கிறது. இங்கு குந்திக் கொண்டு அடிவானத்தைப் பார்க்கிறோம். எங்கள் பொழுது பெருமளவில் நினைவலைகளிலே போய்விடுகிறது. அப்பப்போது உயிர்ப்பு ஏற்படும்போது ஏதாவது செய்யவேண்டும் என்ற முனைப்பு ஏற்படும்போது - இலக்கிய உலகத்திலே புகுந்துவிடுகிறோம். கலை, இலக்கிய, அரசியல் தொடர்பான விழாக்கள் அவ்வப்போது இடம்பெறுவன. உடலும் உள்ளமும் இடங்கொடுத்தால் போய்ப் பார்ப்போம். எம்மைத் தெரிந்தவர் வேண்டுகோளை ஏற்று அப்பப்போது கட்டுரைகள் எழுதுவோம். அதிகமான பொழுது வாசிப்பிலும் ஆய்விலும் போகிறது. சில முக்கியமான திட்டங்கள் உண்டு. அவற்றை நோக்கி இவை செலவாகின்றன. சமூகப்பணியில் அதிகம் ஈடுபட உடல்நிலை இப்பொழுது இடம்கொடுக்க மறுக்கிறது.
தி. ஞா:- அவுஸ்திரேலியாவிலே தமிழிக் கலை இலக்கியச்குழலி ஆராக்கியமானதாக இருக்கிறதா?
பொ.பூ:- இலங்கைத் தமிழர் பெருமளவில் இங்கு வந்தது 1980களில் தான். இப் பொழுதுதான் இருபது ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. என்வே ஆரம்பகட்டம்தான். ஆயினும் கலை இலக்கிய பரிச்சயம் உடையவர்கள் பலர் இங்கு வந்திருக்
(62) ஞானமி

கிறார்கள். அவர்களுடைய வழிநடத்தல் முன்னெடுத்துச் செல்ல உதவும். கலை இலக்கியத்தை அரசியல் சூழல் பாதிக்கும் அபாயம் தூரத்திலே தெரிகிறது. அதன் தீமையை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இருந்து வந்தவர்கள் நன்குணர் வார்கள். தெரிந்துகொண்டே தீயினுள் கை வைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். இன்னுமொன்று, ஏனைய பிரதேசங்களுக்கும் பொதுவானது. அரை வேக்காடுகளின் அட்டகாசம். காலம் இவர்களையும் புறக்கணித்துவிடும்! அதுவரைக்கும் தாங்குவது தான் கஷ்டம். சீத்தலைச் சாத்தனார் ஆக மாறாமல் இருக்க இறைவன் கருணை!
திஞா- புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்தாம் எதிர்காலத்தில் தமிழ் இலக்கியத்தைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவார்கள் என்ற கருத்தப் பரவலாக ஒலிக்கிறது. ஆனால் இவர்களுடைய சந்ததியினரிடம் இந்த நம்பிக்கையை எதிர்பார்க்க முடியாமல் இருக்கிறதே! பொ.பூ~ உங்கள் கணிப்பு இங்குள்ள சராசரி நடவடிக்கைகளின் அடிப்படையை மையமாகக் கொண்டது போலத் தெரிகிறது. இங்குள்ள தமிழ்ப் பரம்பரையினர் தாம், தமது வேர்களைத் தேடவேண்டிய சூழல் கட்டாயம் உண்டுபடும். வேர்களைப் போட்டுவிட்ட அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இன்று அவற்றின் முக்கியத்தவத்தை உணர்ந்து தேடும்போது "கல்தோன்றி மண்தோன்றாத காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடி”யில் வந்த தமிழன், இன்றில்லாவிடினும், நாளை கட்டாயம் தன்வேர்களைத் தேடிக்கொள்வான்.
தி.ஞா:- இன்றைய புலம்பெயர்ந்த இலக்கியம் மூலம் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய புலங்கள், புதிய கலாசாரச் சூழல்கள் அறிமுகமாகியுள்ளன. அதேவேளை தமிழ்க்கலாசாரத்திற்கு ஒவ்வாத ஆபாச இலக்கியங்களும் நவீனத்துவம் என்ற பேரில் சிலரால் படைக்கப்படுகின்றன. இது பற்றிய உங்கள் கருத்து? பொ.பூ- காதலைப் பவித்திரமாகப் போற்றியது தமிழ் மரபு. ஒருவருக்குச் சிறிதுவேளை உண்டுபடும் சலனமான கைக்கிளையையும் அளவிறந்த காதலான பெருந்திணையையும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடாத பண்பாடு தமிழர் பண்பாடு. தமிழர் பண்பாடு யாதென்பதை உணராத பலர், தாம் சுதந்திரப் பிறவிகள் என்ற கருத்திலே, தாம் புதிதாகக் காணும் புலங்களையும் தமிழுக்கு அறிமுகஞ்செய்கிறார்கள். அவை தம் பண்பாட்டில் உள்ளனவா - பொதுவான நியதியா என்பதை எல்லாம் யோசிப்பதில்லை. தமிழிலே விறலிவிடுதூது, காதல், மடல் போன்ற காமரசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரபந்தங்கள் நின்று நிலைக்கவில்லை. ஆங்காங்கே தமிழ் ஆர்வலர் சிலரிடமே அவை உலவுகின்றன. நீங்கள் கூறுவனவ்ற்றிக்கும் அவ்வாறே காலம். பதில் தரும்.
திஞா: இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்தால் புலம்பெயர்ந்த தமிழர் தாய்நாடு திரும்புவார்களா? பொ.பூ;- புலம்பெயர்ந்த தமிழர் பல்வேறு தரத்தினர். மூத்தோர் பலர் தாயகம் மீள்வதை ஆவலுடன் எதிர்பார்க்கலாம். நடுவயதினர் சிந்தனைகள் ஒரே விதமாக இருக்க வாய்ப்பில்லை. இங்கு வாழ்வும் வளனும் பெற்றிருப்பவர்கள், அங்கு போய் என்ன செய்வது என்று சிந்திப்பார்கள் அல்லவோ? இளைய சமுதாயம், முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடைபயின்று வளர்ந்ததற்கு - எது தாய்நாடு? தன் தாய் பிறந்த நாடா? தந்தையின் நாடா? அல்லது தான் முக்கியத்துவம் அளிக்கும் நாடா? தங்கள் கருத்து கனவுலகின்பாற்பட்டதாயினும் அவிழ்க்க முடியாத சிக்கலை உடையது.
6 - 1 G3).

Page 23
buкітабmт.
ஆசிரியர் ஞானம், தனிப்பட்ட தாக்குதல்கள் பற்றிப் பலரும் வருத்தம் தெரிவித்திருப்பது நல்லது. தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்க்கப்படவேண்டும். அதேவேளை, இவற்றைத் தவிர்ப்பது பற்றிக் கூறப்படும் கடிதம் ஒன்றில் மெத்தப்படித்தவர்கள், இலக்கியக் காய்ச்சலால்(?) பீடிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் "அரிப்பு" பற்றி எழுதப்பட்டுள்ளது. இக்குறிப்பு எந்தவிதமான "அரிப்பு" என்று எனக்குத் தெரியவில்லை. அதைவிட, விமர்சனம் என்ற போர்வையுள் தனிநபர் மோதல் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஞானத்தில் நேர்காணல்களிலும் சில விவாதங்கள் தொடர்பாகவும் மிக மோசமான தனிப்பட்ட தாக்குதல்கள் வந்துள்ளன. விமர்சனம் எதிலும் தனிப்பட்ட தாக்குதலைக் கண்டதாக நினைவில்லை. இவ்வாறான விடயங்களில் மொட்டையாக எல்லா வற்றையும் பற்றிக் கண்டிப்பதைவிடக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுவது பயனுள்ளது. நம் கவனத்துக்குரியது எது என்றால் இலக்கிய விடயச்சார்பாக விமர்சனம் உள்ளதா இல்லையா என்பதுதான். எங்காவது இந்த எல்லைக்கு வெளியே அது போகும்போது குறிப்பாகச் சுட்டிக்காட்டுவது பொறுப்புள்ள பணி. பொய்களை யும் அவதூறுகளையும் மறுதலிப்பதும் சமூகப் பொறுப்பான செயல்தான். அதே வேளை, மறுதலிக்கிற அத்தகைய விடயத்தின் மட்டத்துக்கு இறங்காமல் செயற்படவேண்டிய தேவை உள்ளது. விமர்சனங்கட்கு அவற்றின் அடிப்படையில் நின்று விடை எழுத முடியாத படைப்பாளிகள் அதற்கும் அப்பாற் சென்று நோக்கம் கற்ப்பிப்பதும் வசையில் இறங்குவதும்தான் கவலை தருவது. பாராட்டு மட்டுமே தேவையானவர்கள் நண்பர்கட்கு மட்டும் தம் நூல்களை விநியோகிப்பது மிகவும் பாதுகாப்பானது.
புதுக்கவிதை என்ற பிரயோகம் புதுக்கவிதை தோன்றி ஐம்பது வருடங்களின் பின்பு பொருத்தமானதா என்ற கேள்வி நியாயமற்றது எனத் தெரியவில்லை. Free Verse என்பதற்கு ஏற்ற தமிழ்ப்பதம் (பாரதியின் "வசனக்கவிதை என்பது ஏற்புடையது அல்ல என்ற காரணத்தால்) இன்னும் உருவாகவில்லை எனலாம். மரபுசாராத, தளையற்ற என்ற சொற்கள் ஒருவேளை பொருந்தலாம். அண்மைக் காலம் என்பது உள்ளடக்க வடிவ அடிப்படையிலான வகைப்படுத்தலாகாது.
மேத்தா, மீரா, வைரமுத்து போன்றோரது கவிதைகள் பற்றி மிகவும் கடுமையான விமர்சனங்கள் விளக்கங்களோடு முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்று நின்ைவு விமர்சனங்கள் பொதுவாகவே ஒருவரது சமூக, இலக்கியப் பார்வை சார்ந்தன.
இலக்கியவாதிகள் சில எழுத்துப் பண்பாட்டு தெளிவுகளைக் கடைப் பிடிக்கலாம். இலக்கியவாதிகள் என்பதாலேயே ஒற்றுமை இயலுமாயின், அரசியல் வாதிகள் முதல் பாதாள உலகக் கும்பல்கள் வரை “தொழில் அடிப்படையிலான ஒற்றுமை இயலுமாக வேண்டும். எழுத்தில் நேர்மையும் கண்ணியமும் தேவை. காகம் திட்டி எருது சாவதில்லை. காழ்ப்பின் அடிப்படையிலான விமர்சனமோ, கண்டனமோ எழுதியவரையே முடிவில் அதிகம் பாதிக்கும்.
சி.சிவசேகரம்:
G2) ஞானம்
 

ஞானம் இதழ் படித்து மகிழ்கிறேன். பயனுள்ள பல தகவல்கள் கிடைக்கின்றன.
- பேராசிரியர் அ.சண்முகதாஸ், பீடாதிபதி யாழ்ப்பல்கலைக்கழகம் ஞானம் சஞ்சிகையின் (12வது) இதழில் கலாநிதி துரை.மனோகரன் எழுதும் "நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற குறிப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கு பற்றிய தகவலில் "மருதூர்க்கொத்தன் தவிர்க்கவியலாத முறையில் எஸ்.பொ. பற்றிய இலக்கிய ரீதியான சில விபரங்களை வெளியிட்டார். எஸ்.பொ.வின் பெயரில் வெளியான “இத்தா” என்ற சிறுகதையின் கரு எஸ்.பொ.வினுடையது என்பதும், அதற்குச் சிறுகதை வடிவம் கொடுத்தது தாமே என்பதும், அவரால் பகிரங்கப்படுத்தப்பட்டன” என்பதை தெரிவித்துள்ளார்.
பன்முக ஆற்றல் கொண்ட படைப்பாளியான எஸ்.பொ. இன்றும் (இலங்கையில் இல்லாவிட்டாலும்) வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஆனால் மருதூர்க்கொத்தன் இவ்வளவு காலம் கழித்து இந்தத் தகவலை வெளியிடுவதற்கு என்ன காரணம்? எஸ்.பொ. இங்கிருந்த பொழுதும், புலம்பெயர்ந்தபின் வெளிநாடுகளில் இருந்து இரண்டு தடவை இங்கு வந்து திரும்பிச் செனறபொழுதும் மெளனம் சாதித்த மருதூாக்கொத்தன் இப்பொழுது யாருடைய தூண்டுதலால் இந்தத் தகவலை வெளியிட்டார்? r
எஸ்.பொ. இலக்கிய உலகில் பிரச்சினைக்குரியவர்தான். தனது பெயரில் பிறருக்குப் படைப்புகளை எழுதிக்கொடுத்தவர். ஆனால் மற்றவர்களின் படைப்புகளைத் தன் பெயரில் பிரசுரித்துக் கொள்ளும் அளவிற்குப் படைப்பாற்றல் குறைந்தவரல்ல. சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் இறந்த பின்னர் அவரது படைப்புகள் திருட்டு எனக் கூறிய "மேதாவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். - அந்தனி ஜீவா. ஞானம் இலக்கிய சஞ்சிகையை காலந்தவறாமல் 12 இதழ்களை ஒழுங்காகவும் இலக்கியத் தரமாகவும் வெளிக்கொணர்ந்த உங்களின் துணிச்சலையும் இலக்கியத் தொண்டினையும் பாராட்டாமல் இருக்க முடியாது. தொடரட்டும் உங்கள் பணி.
- நா. சோமகாந்தன், கொழும்பு. ஞானம் ஓராண்டில் ஈழத்து இலக்கிய உலகிற்குப் பயண் தரப் பணியாற்றியுள்ளது. இலக்கியச் சிற்றேடு ஒன்றினை தொடர்ந்து நடத்தும் சிக்கல்களை தனித்து நின்று எதிர்கொண்டு, 12 ஏடுகளை மலரவைத்த தங்கள் முயற்சியையும் திறமையையும் பாராட்டி இன்னும் பல ஏடுகள் மலர என் வாழ்த்துக்கள்.
- புலோலியூர் க.சதாசிவம். "ஞானம் கிடைத்தது; நன்றி. ஞானம், ஞானம் தருகின்றது. பாராட்டுக்கள். இத்துடன் ‘இலக்கியப் பணியில் இவர் எனும் கட்டுரை தொடர்பாக ஒரு சிறு குறிப்பு. தமிழ் இலக்கிய உலகில் 'விழுமியம்' என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் திரு குமாரசுவாமி சோமசுந்தரம் என எழுதியது தவறாகும், 'விழு” எனும் உரிச்சொல்லின் அடியாகவே விழுப்பம், விழுமம், விழுமியம், விழுப்புண் ஆகிய சொற்கள் பிறந்தன. பழந்தமிழ் இலக்கியங்களிலும் இவை பயின்று வருதல் கண்கூடு. எடுத்துக்காட்டாக,
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். எனும் குறளே சான்று. எச்சப்பொருளிலும் இச்சொல் (விழுமிய) கழகத் தமிழ் அகராதியிலும் (பக்.862) கையாளப்பட்டுள்ளது.
- வாகரைவாணன்.
ஜுனி - 2001

Page 24
எழுதியவர் : சிரித்திரன் "சுந்தர் முதற்பதிப்பு : பெப்ரவரி 2001 வெளியீடு : மல்லிகைப் பந்தல்,
கொழும்பு =13 சிரித்திரன் சுந்தர் தமிழ் சஞ்சிகை உல கிற்கு அளித்த பங்களிப்பு என்றும் நினை
வில் வைத்திருக்கப்படும். ஈழத்தமிழு லகின் கார்ட்டுன் உலகிற்கு அவர் என்றும் முடிசூடா மன்னன். அவரிடத் தினை இன்னமும் எவரும் நிரப்பவில்லை என்பேன்.
செங்கை ஆழியான் முன்னுரையில்.
குழந்தைக் கல்விச் சிந்தனைகள்
எழுதியவர் : கலாநிதி சபா.ஜெயராசா முதற்பதிப்பு: 2001 வெளியீடு : போஸ்கோ வெளியீடு,
நல்லூர் - யாழ்ப்பாணம், கல்விச் செயல் முறையிலும் கருத்திய விலும் விசை கொண்ட மாற்றங்களும் அபிவிருத்திகளும் நிகழ்ந்து வருகின்ற இன்றைய காலகட்டத்திலே இந்நூல் ஒரு பயன்மிக்க புலமைச் செயற்பாடாக அமைந்துள்ளது. பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
அணிந்துரையில்.
கிழக்கிலங்கை கிராமியம்
எழுதியவர் றமீஸ் அப்துல்லாஹற்
முதற்பதிப்பு: மார்ச் 2001
வெளியீடு : மல்லிகைப்பந்தல்
கொழும்பு - 13
நூலாசிரியர் பல கிராமங்களுக்கு நேரடி யாகச் சென்று தாம் திரட்டிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்துக்களை எடுத்துரைக்கின்றார்.
டு
இவரது ஆய்வும் நாட்டார் இலக்கியத் தையே அடிப்படையாகக் கொண்டிருந் தாலும், அவற்றின் ஊடாக வெளிப்படும் பல்வேறு பண்பாட்டு அம்சங்களையும் சிரப்பாக இனங்காட்டுகிறார்.
எம்.ஏ.நுமான் அணிந்துரையில்.
ஒளி ஏற்றிடு எழுதியவர் : கவி.நாகேந்திரன் முதற்பதிப்பு 01 - 09 - 2001 வெளியீடு : கலை இலக்கிய வட்டம்
புத்தளம் வரண்ட பாலைவனத்தில் திடீரென்று பெய்த மழையாக அவரின் வார்த்தைகள் எமக்கு உற்சாகமளித்தன. எனது உட வில் எங்கோ மூலையில் உறைந்து கிடந்த இலக்கிய ஆர்வம் உடனே வெளிக்கிளம்பிற்று. முன்னாள்மேயர் சே.ஏ.பாயில்
மதிப்புரையில்.
யுத்தத்திற்கு என்_நிதியிலிருந்து ஒரு சதமும் கொடுக்க மாட்டேன்
எழுதியவர் : கலாநிதி விக்ரமபாகு
கருணாரத்ன
முதற்பதிப்பு : மே 2001
வெளியீடு : புதிய சமதர்ம வெளியீடு
யுத்தத்தின் கொடுமையால் நாடு பரித வித்துக் கொண்ாரருக்கிறது. தென் இலங் கையில் சிங்கள், பெளத்த பேரினவா தத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டே சகல அரசியல் கட்சிகளும் செயல் படுகின்றன. ஆசிரியர் குழு பதிப்புரையில்.
கடைசிச் சொட்டு உசிரில்
எழுதியவர் எஸ்.நளிம் முதற்பதிப்பு : ஒக்டோபர் 2000 வெளியீடு : யாத்ரா, வாழைச்சேனை
நவீன ஓவியத்தின் ஈடுபாடும், திறமையும் மிக்க நளிமின் நவீன கவிதைகளும் அழகிய ஓவியங்களாகவே காட்சி அளிப் பதன் காரணம் இவரது கவிதைகளில் மேலோங்கி நிற்கும் யதார்த்தமாகத்தான் இருக்கவேண்டும். கவிஞர் அல்.அளU"மத்
பின் அட்டைக்குறிப்பில்.
ஞா தினம்
 

மரத்தின் உச்சியில் ஊஞ்சலாடும் சிறுகனி மணிக்குரல் இசைக்கும் அணில் நிரல் துரத்திக் கணியைக் கொறிக்கும் கனவில் உரத்து மரத்தில் ஏறியோடி விரைந்தது! நரித்தனமாய் மரத்திடை ஒளிந்தது நோட்டமிட்ட காட்டுப் பூனை இக்காட்சி கண்டது பறுகி மரத்தின் அரக்கே வந்த அணிலின் குறி கணியில்தான் இன்னும் கனியில்தான்!
பட்டமரத்தில் பறந்து வந்த மயில் நின்றது பார்த் ததனைத் தன் இருப்பிடமாக்கித் தட்டத்தனியே நின்ற செயல் நமக்கதிர்ச்சிதான்! பட்டுவிட்ட பொழுதின்பின் இருள் பரந்தது! மயில் இட்டப்படி தூங்கி வழிந்தது மரத்தடியில் இருந்து பார்த்த அணுங்கொன்று மெல்ல மெல்ல மரத்தில் ஊர்ந்து மயிலண்டை செல்லக் கிளை உடைந்தது மயில் பறந்தது!
முட்டையிடத் தட்டி நின்ற பெட்டைக் குயில் விட்டிடாது அனைத்துச் சென்ற ஆண் குயில் முட்டைமீது படுத்துறங்கும் காகம் அண்டித் திட்டமுடன் அமைதிகெடச் சச்சரவு செய்தது கூட்டில் அடைகாத்த காகம் வெளிவந்து காட்டில் எங்கும் துரத்திடப் பெண்குயில் கூட்டுள் சென்று முட்டை இட்டுக் காட்டும் சமிக்ஞையாலே குயில் மீண்டது!
பணம் கையிலிருக்கும்போது பயமெது கனம் அவர் மனதில் கனத்து நின்றது தம்பி மகளுக்குடன் பார்த்த மாப்பிளை சீ! தனக் குறைவில் தடைப்படுதல் நேர்ந்தது! பொறியியலாளர் பெரும் சம்பளம் பெறும் இவரை நாம் விட்டுவிடுதல் சுலபமா அறிந்துடன் பணம் நிலம் வாகனம் அளித்துத் தன்மகளுக்கே அணைக்கலாம்!
குறிக்கோளில்லாக் குறிகள் இவைகள் நெறிகளற்று நிகழ்பவைகள் அறிவோ டிவற்றை ஆய்ந்து பார்த்தால் அனைத்தும் இயற்கை பாகிவிடுமா சுயநலத்தால் எழும் இவைகள் சுரண்டலுக்கே அத்திவாரம் பலமாய்க் குறித்துக் காட்டும் இவற்றைப் படித்துணர்தல் பக்குவம்

Page 25
காரணங்கள்
தேசம் எரிவதற்கும் தீய்ந்து போவதற்கும் நீயும் நானும்
காரணம்தான் தோழா
事 கிருஷாந்தி கொலையுண்ட போது "சிக்ஷரிலும் பவுண்ட்ரியிலும் சிலாகித்துக் கிடந்தோம்.
லேவல்
செம்மணியின் அம்மனங்கள் ட கல்லறைக்குள் கல்லறையாய் மூடப்படுகையில் - நாம் அகப்பாடல்களில் ܘܐܢ ܬܐܢܝ மூழ்கிக் கொண்டிருந்தோம்
98. செப்டெம்பர் 7ܬܐ வெவல்வத்தை - அருளப்பொல நெருப்பால் வேகுகையில் மரக்கரி தோட்டத்திற்கு மருந்தடித்துக் கொண்டிருந்தோம்.
பிந்துனோயாவில் F_ மனிதம் மரிக்
:ಸ್ಥ್ಯ புல்லரித்து நின்றோம். * *
தலவாக்கல
லயங்கள் நொறுங்குகையில் "மனையாள் மண்டபம் "ஆ கிருஷ்ணதாசி - " மயங்கிக் கிடந்தோம்.
Printed at GREEN LEAF PRNTHO

சிவமணியும் விஜிகலாவும் தெருவில் நிற்கையில் பாதி என்னிடம் மீதி உன்னிடம் - என இதய ராகங்களிடம் காலத்தைத் தொலைக்கிறோம்.
கிருஷாந்தி கோணேஸ்வரி ரஜனி - சாரதாம்பாள் மோலிட்டா"விஜித்தா சிவமணி விஜிகலா என பட்டியில் நீள்கையில் நாம் உண்மைகளை அடைக்காது மெளனங்களால்
தேசம் எரிவதற்கும் விதீய்ந்து போவதற்கும்
நீயும் நானும் காரணம்தான் தோழா !
JSE, 85WA, Katugastota Rd, Kandy.