கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.07

Page 1

N
லக்கியச் சஞ்சிகை

Page 2
பிழையாக ஆடும்
திரைச்சீலை
எல்லாவற்றிற்கும் எனர் வாயால் பதிவை எதிர்பார்த்தல் நமக்கு அழகில்லை
நீ நான்தான்
அதற்காக இந்தத் திரைச்சீலை கிழிந்தால் தை என்று நான் சொல்லல் தேவையா
நான் பறக்கச் சொன்னாலும் தெத்துகிறாய்
த
தைத்துக் கொள்ளடி உன் தையலுக்குள் கடகடக்கும் என்னுடைய நெஞ்சும் நீ
கறள் ஏறி
இரும்பாகி
எண்ணெய்விடு கொஞ்சம்
சத்தம் குறைபட்டும் என் எலும்புகளை எண்ணுதல் போல் மெஷின்
ஒரு எலும்பு அது
நீ துளிர்த்து நிற்கின்ற
உயிர்
அது முறியாமல் இருக்கவேண்டும் முகப் பருவை உடைத்து நீ ஊசி கோர்ப்பதுபோல் எல்லோரும் கோர்ப்பார்கள் ஆனால் ஒரு சிறப்பு
உன் கட்டைவிரல் நான்தான்
திே நம் திரைச்சீலை கதவில்தான் ஆடட்டும் வேறெங்கும் தொங்காமல்

உள்ளே.
விரிவும் ஆழமும்
பெறுவது
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இனை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் சிரசுரமாகும் படைப்புகளின்
கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை பவர்கள்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. G5IT.G.L. -08-478570 (Office)
08-23.4755 (Res) O77-3C550
FHK - OE-34755
E-Mail - gnana Inglisltnet.lk
一ノ ܢܠ
சிறுகதை கலாசாரப் புயல் . திருமலை வீண்.Fந்திரகாந்தி முடிவு என்னவோ?. ரூபராணி ஜே"ப்
கட் DI கள்
எழுதத் தூண்டும் எண்ணங்கள் . அலாநிதிதரை மனே"கிTவிர் இலக்கியப் பணியில் இவர். . 23 ந. பார்த்தின் ஈழத்துச் சிறுகதைகள் . கே.எப்.சிவது "பின்
الله مع عه -------
கவிகைகள் பிழையாக ஆடும் திரைச் சீலை.
சீசரr:ர்ஆனி PTFT (To ............... கரிஞர் 'திக்கவியல் மரங்கொத்தி . sa for Gai : { ντε είαf
D-LLPå SFTs ------------------------------- ஆ"கண்"ெணீர் "உன் வரவுக்காக". 5ו கவிஞர் ரட்சிபாலனர் சாயம் கரைந்த சாத்தான்கள். "எப். ஆறுமுகம் விட்டு விடு . 3. மார்ரடி. "ேதணி தீவின் வசியம். வெர்ைடி ஆட் போர் காலம் பதில் சொல்லும் . :
ஆனந்தகுமார்
= = = = = ------- T 2
3.
3.
நூல் மதிப்புரை . .......... 13
வெனரின் மதிவானம்
வாசகர் பேசுகிறார் .
அட்டைப்படம்:- நா.ஆனந்தன்
3.

Page 3
வீ.என். சந்திரகாந்
ಫ್ಲೆಕ್ಷ್ಣ್
“பொன்னைப் பாதுகாக்கலாம் பாருங்கோ. ஆனால் பெண்ணைப் பாது காப்பதுதான் பெரிய பொறுப்பு!”
புருஷன்காரன் இல்லாமலே தனது ஒரே மகளின் பூப்புனித நீராட்டு விழாவை மிகமிக ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் ஒப்பேற்றிவிட்ட பெரு மிதத்தில் தலைகால் புரியாமல் இருந்த ரஞ்சிதாவின் மீது, இளம் வயதினஞம் பக்கத்துவிட்டில் புதிதாகக் குடும்பம் நடத்துபவளுமான "மிஸிஸ் ஆரோக்கிய நாதன் சொல் எறிகணை ஒன்றை நாசூக்காக ஏவி வைத்தாள்.
இதனைக் கேட்ட ரஞ்சிதாவின் மனம் திடீரென்று சிதறி உற்சாகம் இழந்து துணுக்குற்றது.
ரஞ்சிதாவின் கணவன் மனோகர் தனக்கொரு பெண்குழந்தை பிறந்தது குறித்து மிகவும் மனம் மகிழ்ந்ததுடன் நின்று விடாது. அவளை நல்லதொரு நிலைக்கு கொணர்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆர்வ மேலிட்டால். பெரும் பணம் சம்பாதிக்க வெளிநாடு போய் இப்போ மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
தனது மகள் ருதுவான செய்தி அறிந்தும் தான் சார்ந்த மத கலாசாரத் துக்கு அமைவாக பூப்புனித நீராட்டு விழா சிறப்பாக நடாத்தப்படவேண்டும் என்று ரஞ்சிதாவுக்கு அவன் அறிவுறுத்தி யிருந்தான்.
அதுவரையில் வெற்றிகரமாகக் காரியங்களைப் பூர்த்தி செய்துவிட்ட திருப்தியில் திளைத்திருந்த ரஞ்சிதாவின் முன் இப்போ புதியதொரு பொறுப்பு பூதா
காரமாக உருவெடுத்து வந்தது!
என்றாலும் தன்னை சுதாகரித்துக் கொண்ட ரஞ்சிதா..! என்னுடைய மகள் மீனா சின்னப்பிள்ளை பாருங்கோ. எவருக்கும் கண்ணுக்குள் குத்துகின்ற மாதிரி தோற்றம் பெறவில்லை. அவள் உருப்பட்டு வருவதற்கு முன்னர் வெளி நாட்டில் இருக்கின்ற எனது கணவர் எங்களுடன் வந்து இணைந்து விடுவார்! இந்த நியாயம் மிஸிஸ் ஆரோக்கிய நாதனுக்கு ஓரளவு சரி என்றுதான் பட்டது. ஆனாலும் அவளுக்கு அவளு டைய குடும்ப வாழ்வில் கணவன் நிமித்தமாக அனுபவிக்க நேர்ந்த சில துரோகங்கள் நம்பிக்கையினங்களாக மாறி அவளது பேச்சிலும் நடத்தையிலும் அவை பிரதிபலிக்கச் செய்தன.
"என்றாலும் மிஸிஸ் மனோகர். நான் சொல்வதை உங்களுடைய மன திற்குள் வைத்துக் கொள்ளுங்கோ. அப்படியும் நடக்குமா என்றும் கேளாதை யுங்கோ. என்னுடைய சிநேகிதி ஒருத்தி புதிதாக மணமாகி தனிக்குடித்தனம் போனவள், குமராகிற பராயத்தை நெருங்கிவிட்ட பக்கத்து வீட்டுப் பெடிச்சி
ஒரு நாள் அவளிடம் கூறினாளாம்.
உங்களுடைய அவர் அன்ரி மிகவும் நல்லவர். நீங்கள் இல்லாத நேரம் என்னையும் கொஞ்சுறவர்’ என்று.
இது எப்படி "மோட்டார் செல் என்று கேட்கின்ற மாதிரியான சொற்பிரயோ கத்தை வீசிய திருப்தியுடன் மிஸிஸ் ஆராக்கியநாதன் விடைபெற்றுச் செல்லவும். ரஞ்சிதா எவருமே நம்ப
04
 
 

மறுக்கும் பேயையோ பிசாசினையோ நேரில் காணநேர்ந்தது போல திடுக் குற்றுச் செயலிழந்தாள்!
"அன்னை மேரியே. அநாதரவ்ான எனக்கு நீர் தாண் அருள் பாலிக்க வேண்டும். என்று பிரார்த்தித்தபடியே தனது நாளாந்த வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள் ரஞ்சிதா.
அவளது கணவன் வெளிநாடு போனமை காரணமாகவே அக்குடும்பத் தின் வாழ்க்கைத்தரம் ஒரு நடுத்தர அளவுக்காயினும் உயர்ந்தது.
பெற்றோருடன் தனது கிராமத்தில் தான் வாழ்ந்த காலம் இன்னமும் அவள் மனதில் பசுமையாக இருந்தது. குமரான அவளை பெற்றோரின் மதிப்பும் கெளர வமும் உயர் சமூக மட்டத்திலான தொடர்புகளும்தான் பாதுகாத்து வந்தன. எவருமே அவளை நெருங்கமுடியாது! அந்த மனத்தைரியமும் வாழ்க்கை முறையும் தந்த மேலான அனுபவம்தான் இன்றும் அவளை ஒரு பதிவிரதை என்று ஊரார் குறிப்பிட்டு கதைக்குமளவிற்கு உயர்த்தி வைத்திருக்கின்றது.
பாடசாலை சென்றுவிட்ட மகள் மீனா பற்றியே இன்று அவளது நினைவுகள் சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. மிஸிஸ் ஆரோக் கியநாதனி கூறுவதை எந்த அளவில் அசட்டை செய்ய முடியும்?. பாடசாலை போகின்ற வழியில் பெண் பிள்ளைகளுக்கு இருக்கின்ற இடையூறுகள் பற்றியும் மற்றவர்கள் பேசத்தான் செய்கிறார்கள். நாளைக் கு ஒரு அவமானம் நேர்ந்துவிட்டால் தூரதேசம் சென்று தனது மகளுக்காகவே கஷ்டப்படும் தந்தைக்கு கூறக்கூடிய சமாதானம் தான் என்ன?
எதற்கும் கொஞ்சம் முன்னெச் சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று சிந்தித்து தீர்மானித்தவளாக
தூரத்து வழியில் அவளுக்கு அக்கா முறையானவளும் அயல்வாசியுமான அபிராமி அம்மா வீட்டிற்குச் சென்றாள். பல பேச்சுகளுக்கும் மத்தியில் மெதுவாக கதையைத் தொடக்கினாள். அக்கா. மீனா இப்ப பெரிசாகிவிட்ட பிறகு எனக்கு அவளைப் பாடசாலைக்கு அனுப்புவது விருப்பமில்லாமல் இருக் குது. என்னுடைய கணவனுக்கு இவ்விட நிலைமைகள் விளங்காது. நீங்கள் என்ன அக்கா சொல்லுறியள்?
அபிராமி அம்மா ஞானப் பழம்! அவளையும் அவளது அனுபவத்தையும் உச்சிவிட்டு எதுவும் நடந்து விட முடியாது. எனவேதான் கணவனுக்கு கடிதம் எழுதி கேட்டு எடுக்கின்ற முடிவை அபிராமி அம்மாவைக் கேட்டு தெரிந்து கொண்டால் சரி என்கின்ற எண்ணத் துடன் ரஞ்சிதா அங்கு வந்திருந்தாள். "நீ என்ன ரஞ்சிதா விசர் கதை கதைக்கிறாய். இந்த நாளையிலை ஒரு பெண்பிள்ளை படிக்காவிட்டால் அது எவ்வளவு அவமானம் தெரியுமே..? அவள் கெட்டிக்காரி, படிப்பை விடக் கூடாது. என்னுடைய மகன் குமாரும் பக்கத்து பாடசாலையில்தான் படிக் கிறான். மீனாவை பார்த்துக்கொள்ளு மாறு நான் அவனிடம் சொல்லி வைப் பேன். பாடசாலைக்கு இரண்டு பேருமே *சைக்கிளில் போவதால் மீனாவை முன்னுக்குப் போகவிட்டு தம்பி பின்னால் போவான். நீ ஏன் பயப்படுகிறாய்?
"அபிராமி அக்கா எப்படியான மனத் தைரியசாலி!” என்று வியப்புற்ற ரஞ்சிதாவுக்கு பெரிய மனப்பாரம் இறங் கியதாய் போய்விட்டது.
அவள் வீடு வந்து சேரவும் மீனாவும் பாடசாலையால் வந்து விட்டிருந்தாள்.
இப்போ மகளைப் பார்க்க தாய்க்கே கணிபட்டுவிடும் போல
05

Page 4
இருந்தது. ஏதோ ஒரு வித்தியாசம். பருவக் கவர்ச்சி மீனாவில் பளிச்சிட்டது. தலையை தாழ்த்திக் கொண்ட ரஞ்சிதா. “பிள்ளை. உடுப்பை மாற்றிப் போட்டு சாப்பிட வா” என அன்புடன் அழைத்ததுடன் உணவையும் ஊட்டத் தொடங்கினாள்.
“பிள்ளை. இனிமேல் நீ மாலையில் தேவாலயத்துக்கு போகவேண்டாம். நீ வீடு வந்துசேர இருட்டிவிடுவதால் எனக்குப் பயமாக இருக்கின்றது"
ஒரு கவளம் சோற்றை மென்று விழுங்கிய மீனா. "அம்மா. “பிரேயர்' முடிந்து வருவதற்கு எனக்கு காலதாமத மாகாது. ஆனால் அங்கு “மியூசிக் பிரக்ரிஸ் இருக்கின்ற நாட்களில்தான் இருட்டிவிடுகின்றது. நீங்கள் ஒருக்கால் பார்தருடன் கதையுங்கோ.”
தனது மகள் தேவாலயத்தில் அனைவர் முன்னிலையிலும் "ஸ்ரேஜில் பாடுவது ரஞ்சிதத்திற்கு பெரும் மன மகிழ்ச்சியைத் தருவதுண்டு.
மறுநாளே தேவாலயம் சென்று "பார்தருடன் கதைத்தபோது அவரும் மீனாவின் பிரச்சினையைப் பெரிதுபடுத்த வில்லை. அவளைச் சின்னப் பிள்ளையா கவே அவர் பார்த்தார்.
"நீங்கள் பயப்படவேண்டாம் மிஸிஸ் மனோகரன். பிள்ளை புறப்படு வதற்கு காலதாமதமானால் நான் தகுந்த துணையுடன் அவளை அனுப்பி வைப் பேன்." என்று உறுதி கூறினார்.
அவளது பெற்றமனம் இப்போது பெரிதும் ஆறுதலடைந்தது. 'கணவன் நல்ல நிலையில் இருக்கும் போதே ஒரு குமரை வைத்துக்கொண்டு இத்தனை பாடு என்றால் புருஷனை ஏதோ ஒரு வகையில் இழந்த பெண்கள் நிலை எப்படி இருக்கக் கூடும்? என்று எண்ணிக் கலங்கினாள்.
இப்பதான் எல்லாம் சரியாகி
06
போய்விட்டதே என்று நினைத்தபோது ரஞ்சிதா பூரண சந்தோஷம் அடைந்தாள். நீண்ட நாட்களாக மிஸிஸ் ஆரோக்கிய நாதனும் வீட்டுப்பக்கம் வரவோ எதிர்ப் படவோ இல்லை.
அன்று மீனா பாடசாலை சென்று விட்டாள். பல நாட்கள் பார்த்திருந்து ஏமாந்தது போல் அல்லாமல் அன்று மனோகரின் எயர் மெயில் வந்தது.
மகளின் பூப்புனித நீராட்டுவிழா படங்கள் கிடைக்கப்பெற்றகையுடன் எழுதப்பட்ட கடிதம் அது. ஆவலுடன் படித்தான்.
"..என்றாலும் எனதருமை ரஞ்சிதா. வெளிநாட்டுக் கலாசாரங்கள் அச்ச மூட்டுவனவாகவே இருக்கின்றன. இளைய சமுதாயம் கெட்டுவிடக்கூடிய வகையில் பல வாய்ப்புகள் வாயைப் பிளந்து கொண்டு இருக்கின்றன. பிள்ளைகளைப் பெற்றோர் கட்டுப்படுத்த முடிவதில்லை. மிக மிக இளவயது பெண்கள் சுயாதீனமாக சுற்றித் திரிகின் றார்கள். இலகுவில் தவறியும் விடுகின் றார்கள். வைத்தியர்களும் பழியை பெற்றோர் மேலேயே போடுகின்றார்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போதிக் காததுதான் அவர்கள் தவறியமைக்கான காரணம்’ என்று கூறுகின்றார்கள். மீனாவை கவனமாகப் பார்த்துக்கொள். எனது மகளுக்கு ஒரு பழிச்சொல் வருமாயின் என்னை நீ உயிருடன் பார்க்கமுடியாது.
ரஞ்சிதா தான் அடியுண்டு வீழ்ந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக அருகி லிருந்த "ரீ போயிலி கையூன்றி நிலத்தில் சரிந்து கொண்டாள்.
பல கணவன்மார் வெளிநாட்டில் இருந்து கொண்டு தமது இளவயது மனைவியைப் பற்றிதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மறுபக்கம் தாங்கள்

செய்யக்கூடாத திருகுதாளங்களையெல் லாம் ஒழுங்காக நிறைவேற்றவும் தவற மாட்டார்கள்!
மீனாவின் தந்தை நேர் எதிர் மாறானவர். புனிதன்! ஒரு வார்த்தை சொன்னால் அதிலிருந்து மாறமாட்டார்! ரஞ்சிதா தன்னை ஆசுவாசப்
படுத்திக் கொண்டு எழும்பவும் மீனாவும்
பாடசாலையால் வந்தாள். உடுப்பு மாற்றுவதிலிருந்து கைகால் அலம்புவது உணவு ஊட்டுவது வரை அனைத்து கடமைகளையும் முடித்துவிட்ட ரஞ்சிதா மகளைத் தனது மடியில் சாய்த்துக் கொண்டாள்.
பெற்ற மனம். கணவனை ஒரு கரையாகவும் மகளை மறுகரையாகவும் இணைத்து தொங்கு பாலம் போல் هه ه - هاوالالا:ارگ
"பிள்ளை. நான் எப்போதாவது உன்னை ஏசி இருக்கின்றேனா?”
"இல்லை” எப்போதாவது அடித்திருக்கி றேனா?”
“இல்லை” "அப்ப நான் கேட்கின்ற கேள்வி களுக்கு பிள்ளை பயப்படாமல் உண்மை சொல்லவேண்டும்.
"நான் அம்மாவுக்குப் பொய் சொல்வதில்லையே."
ரஞ்சிதாவிற்கு விசாரணை செய் யத் தெரியாது. அவளையும் எவரும் விசாரணை செய்ததில்லை. எனவே மகளிடமாயினும் விசாரணை செய்யும் தோரணையில் ஒரு கேள்வியை கேட்க அவள் மனம் கூசியது.
"பிள்ளையோடு யாராவது பகிடி. கைச்சேட்டை விடுகிறவர்களா..?”
மீனா தாயை விநோதமாக பார்த் தாள். அவளது பால் வடியும் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
தனது இடது கைவிரல்களை மீனா
முகத்தின் முன்னர் விரித்துப் பிடித்துக் கொண்டாள். இப்போ வலது கையால் ஒவ்வொரு விரலாக மடித்துக் கொண்டே கூறத் தொடங்கினாள்.
"எனக்கு ஆங்கிலம் புகட்டும் ஆரோக்கியநாதன் அங்கிள். பாட சாலைக்கு எனக்கு துணையாக வரும் குமார். இருட்டிவிட்டால் எனக்கு துணை யாக பார்தர் அனுப்பும் தேவாலய பணியாள். அவ்வளவுதான்" என்று மீனா கூறி முடிக்கவும் ரஞ்சிதாவுக்கு ஆத்திர மும் அழுகையும் பொத்துக் கொண்டு வந்தது.
எவர் எவரை நம்பி அவள் மகளுக் குக் காவல் வைத்தாளோ அவர்களே வேலி பயிரை மேய்ந்த கதையாக துரோ கம் செய்து விட்டமையை நினைக்க அவளது உடல் பதறியது.
"அப்ப ஏன் பிள்ளை இதையெல் லாம் நீ எனக்கு சொல்லவில்லை?”
ரஞ்சிதா மகள் மீது குமிறி விழுந்த துடன் தனது மடியிலிருந்து அவளது தலையையும் விலக்கி விட்டாள்.
தாய் ஏன் தன்மீது சினந்து விழு கின்றாள் என்பது மீனாவுக்குப் புரிய வில்லை. என்றுமே கோபிக்காத அம்மா ஏன் அதட்டுகிறாள் என்பதும் விளங்க வில்லை. ஆனால் அவளில் நிதானம் இருந்தது.
07

Page 5
எழுந்து நின்று தனது அடர்த்தியான தலையை இறுகப் பின்னியவாறே. "அம்மாவுக்கு முறைப்பட வேண்டிய தேவை ஏற்படாததாலதானி நான் சொல்லவில்லை” என்று பணிவுடன் கூறினாள்.
ரஞ்சிதாவின் கோபம் எல்லை மீறியது. கைகள் பதறின. மீனாவின் தலைமயிரை பிடித்து இழுத்து. நிலத்தில தளஸ். அவளுடைய பிஞ்சு முதுகில் ‘கும் கும்" என்று குத்தி. "நல்ல நடத்தையுள்ள தாய் தகப் பனுக்கு பிறந்த உனக்கு எதுசரி எது பிழை என்பது கூட தெரியாமல் போய் விட்டதே?” என்று கேட்டு இன்னும் இரண்டு கன்னத்திலும் சாத்தி.
இப்படியெல்லாம் அவளது எண்ண அலைகள் விரிந்தாலும் எல்லை மீறிய கோபம் காரணமான பதற்றத்திலிருந்து இன்னமும் அவளால் விடுபடமுடிய வில்லை! செயலிழந்தே இருந்தாள். மீனா தொடர்ந்து விளக்கினாள். "நீங்கள் ஏனம்மா பயப்படுகிறியள் ஆரோக்கியநாதன் அங்கிளும் சரி, குமாரும் சரி, பார்தரின் பணியாளும் சரி என்னுடன் பழகும் போது எந்தெந்த சந்தர்ப்பத்தில் எல்லை மீறினார்களோ அவ்வப்போதே நான் அவர்களை எச்சரித்துவிட்டேன். அவர்களும் பயந்து போய் எனக்கு மரியாதை தந்து பழகிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ரஞ்சிதாவுக்கு காதில் தேவகானம் பாய்ந்ததுபோல இருந்தது. அப்படியே மகளை வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தாள்.
"ஏன் பிள்ளை. அம்மாவிடம் சொல்லுவன் என்றோ, அப்பாவுக்கு கடிதம் எழுதுவன் என்றோ அந்த கெட்ட
வங்களை நீ பயப்படுத்தினாயா?.
ரஞ்சிதா இப்போ குழந்தையாக மாறி புத்தி சாதுர்யத்தில் உயர்ந்து நிற்கும்
மகளிடம் வினவினாள்.
"இல்லையம்மா. நான் அப்படிச் சொன்னால் தனித்து இருக்கின்ற உங்களுக்கோ தூரதேசத்தில் இருக்கும் அப்பாவுக்கோ அவர்கள் பய்படமாட்டார் கள். ஆரோக்கியநாதன் அங்கிள் அவருடைய மனைவிக்கும், குமார் தனது தாய்க்கும், பணியாள் பார்தருக் கும்தான் பயப்படுவார்கள்."
தனது மகளுக்கு இவ்வளவு புத்தி சாலித்தனம் எப்படி வந்ததென்பது ரஞ்சிதத்திற்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அதேசமயம் வெளிநாட்டுக் கலாசாரச் சீர்கேடுகளை எண்ணி கலங்கி. அப்படி தனது மகளுக்கும் நேரின் தனது உயிரையும் மாய்க்க துணிந்து கடிதம் எழுதிய கணவனுக்காக பச்சாதாபப்பட்டாள்.
“என்னுடைய செல்வம். இப்படி யெல்லாம் நடப்பதற்கு பாடசாலையில் சொல்லித் தந்தவையே? - ரஞ்சிதா அப்பாவித்தனமாக வினவினாள்.
"S6) 666)ujib lost... என்னுடைய சாமத்திய விட்டின்போது நான் "மேக் அப் முடிந்து அறையில் தனியே இருந் தேன். அப்போ அங்கு வந்த அபிராமி அம்மா. நான் பருவமடைந்ததைப் பற்றிய விளக்கத்தையும். ஆண்க ளோடு இனி எவ்வளவு தூரம் பழகலாம் என்பது பற்றியும். எல்லை மீறும் ஆணகள் மீது எடுக்க வேணடிய நடவடிக்கைகள் பற்றியும். தவறும் பட்சத்தில் ஒரு பெண்ணின் வாழ்க் கையில் ஏற்படக்கூடிய சீரழிவுகள் பற்றியும் இன்னும் பல புத்திமதிகளையும் கூறினா. என்னை ஆலாத்தி மாலையிட்டு எல்லோரும் கெளரவிக்கின்ற அந்த நேரத்தில் கூறப்பட்டதால் அந்த அறி வுரைகள் எல்லாம் எனது மனதில் நன்கு பதிந்தும்விட்டன.
"எங்களுடைய கலாசாரத்தை நீ
08

இந்தத் தினத்திலிருந்து முன் எடுத்துச் செல்' என்று அவா மந்திரம் போல கூறிய வார்த்தைகள் எனக்கு ஆபத்தான நேரங்களில் மன உறுதியையும் தைரியத்தையும் அளிக்கின்றது.” மீனா பெரிய விரிவுரையே செய்தாள்.
ரஞ்சிதாவுக்கு இப்போ அனைத் துமே தெளிவானது.
சிறுமி ஒருத்தி ஏமாற்றப்படுவ தனைத் தடுபபதற்கு முக்கியததுவம் கொடுப்பதைவிடுத்து. முன் எச்சரிக்கை
நடவடிக்கை என்ற பெயரில் தவறான வழிகாட்டும் வெளிநாட்டுக் கலாசாரத் திற்கு அப்பால்.
ஏமாற்றப்பட்டு விட்டபின்னர் தற் கொலையை தெரிவு செய்யும் எமது நாட்டு பெண்கள் சிலரின் ஏமாளித்தனம் ஒரு விதிவிலக்காக.
தெளிவும் உறுதியுமானதொரு கலாசாரப் புயல் எங்கு மையம் கொள் கிணறதென்பதை ரஞ்சிதா இபபோ மான சீகமாகக் காண்கின்றாள்!
ஊரோடு ஒட்டோடு!
நடு இரவு
என்ன, அங்கு, சத்தமது? ஓ அதுவா? நம்ம நாட்டுப் பூனை சுகம் காணச் கம்மா இராமல் கதியாகக் கத்துகிது!
ஒரு காலை என்ன அது பெரும் இழவு? ஓ அதுவா? பக்கிள் ஒன்று கத்துகிது! வயோதிப விடுதலைக்காய் முறுவலிப்பாய்க் கத்துகிது!
ஒரு புலர்பொழுது. என்ன அங்கு சத்தமது? நம்ம நாட்டுப் பறட்டைநாய்கள் ஒவ்வொன்றாய் ஒடுகுது; ஏன் பிறந்தோம் என்பதுபோல்!
ஒரு நடு இரவு! என்ன அது கூவுகிது? நேரம் தெரியா விடிகாலைச் சேவலது முழு நிலவில் கூவுகிது!
என்ன இழவு இது?
குஜராத்தில் பூகம்பம்! பலி இலட்சம்! வீடிழப்பு: பேரிழப்பு; அயல்நாட்டில் உயிர்துடிப்பு! அமெரிக்காவும் அனுதாபம்! சரி படு. நாளை விடியும் நமக்கு!
விடிகாலை ஏழுமணி. என்ன இரைச்சல் அது! ஒடண்ணே. ஒடண்ணே நில்லாது ஒடண்ணே. வந்து சேர்ந்தது கொழும்புக் 'ஹெலி’ ஊரெல்லாம் ஒடுகுது. நியோடு எண்னோடு உலகோடு ஒட்டோடு.
: | مس - حصیص به 号 ح****عجیبہ V アつ . ،،،،، ... :- ཏུ་ས་ tf به جه هسس. هم>
குவிஞர் “திக்கவயல்
மத்தியான நேரமதில் மனதினைக் குழப்புகிறாய்?
09

Page 6
எழுதத் துரண்டும் எண்ணங்கள்) ༼《རྗེ་
زمنَ −T. W ۔۔۔۔
- * (リ (கலாநிகி காை.மனோகானி محســـــــــــہ ܫܬ -ܫ سمجسس حصصحي حدسي
ܚܰ-ܥܠ
உழைப்பால் உயர்ந்தவர்
மனித சாதனைகளுக்கெல்லாம் அடிநாதமாக விளங்குவது, உழைப்பு. உழைப்பின்பால் உறுதி கொண்டோர் என்றும் தோல்வி கண்டதில்லை. இதனைத் தமது உயிர்மூச்சாகக் கொண்டவர்களில் ஒருவர், இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரான டொமினிக் ஜீவா அவர்கள். சாதாரடிை கல்வியைப் பெற்று, யாழ்ப்பாணத்தின் சமூகப் பிரச்சியல்களுக்கெல் (. லாம் முகம் கொடுத்து, எழுத்தாளராகத் தம்மை 爱 − リエ。 உருவாக்கி, சாகித்திய மண்டலப் பரி:ைம் பெற்று, 'மல்லிகையின் ஆசிரியராகப் பரிணமித்த எழுபத்தைந்து வயது "இ.ைtiஞர்" அவர்.
இலங்கையில் தடம் பதித்த சிறுகதை எழுத்தாளருள் ஒருவராக அவர் விளங்கும் அதேவேளை, முப்பத்தாறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் மல்லிகையின் ஆசிரியர் என்ற நியாயமான பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார். இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சியில் மல்ைேகக்கு என்றும் ஒரு நிரந்தர இடமுண்டு. சிறுகதை எழுத்தாளர் டொமினிக்ஜிவா, pல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா ஆகிய இருவரில் யார் சாதனையாளர் என ஒரு பட்டிமன்றமே வைத்து விவாதிக்கும் அளவுக்கு இரு துறைகளிலும் தமது பெயரைப் பதித்தவர், ஜீவா. சிறுகதை ஆசிரியர் டொமினிக்ஜீவாவைவிட, மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா அதிக சக்தி வாய்ந்தவராக எனக்குத் தோன்றுகின்றார். 'மல்லிகைப் பந்தல்' என்னும் பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டுவரும் அவரது பணியும் குறிப்பிடத் தக்கது.
"எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' என்னும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல், அவர் முகம் கொடுத்த பல்வேறு பிரச்சினைகளையும் அவரது தனிப்பட்ட ஆளுமையையும் இனங்காட்டுவதோடு, கடந்த காலத்து யாழ்ப்பாணத்தையும் உணர்த்துகின்றது. மல்லிகையில் அவர் எழுதி வந்துள்ள ஆசிரியர் தலையங்கங்கள் சில தலைபழக்கள் என்ற பெயரில் நூலாக வெளி வந்துள்ளன) என்னை மிகவும் கவர்ந்தவை.
திரு .ெ:மினிக்ஜீவாவை, நான் கல்லூரி மாணவனாக இரு திலிருந்தே அறிவேன். மாணவப் பருவத்திலிருந்து அவ்வப்போது :) எழுதிவந்துள்ளேன். அவரது மஉைறுதியும் உழைப்பும் என்பிக்க்ை கவர்ந்த அம்சங்கள். தமிழ்ச் சிறுகதை உலகிலும் சஞ்சிகைத்துறையிலும் தமது பெயரைப் பலமாகப் பொறித்துள்ள டொமினிக்ஜீவா, இந்த மண்ணின் மைந்தர்களான இலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் மனதார நேசிப்பவர். அவரின் சாதனைகள் மேலும் தொடரவேண்டும் என்பதே அலைவரது எதிர்பார்ப்புமாகும். தொலையத் தொடங்கும் சமாதானம்
இலங்கை வாழ் மக்களுக்குச் சமாதானம் என்பது, ஒரு துரத்து நட்சத்திரம் போலவும் தொடமுடியாத வானம் போன்றும் தொலைவிற் பறக்கும் பறவையை 10
* : حصے
ぎ三* ー ن
 
 
 
 
 
 
 
 
 

ஒத்தும் விளங்குகிறது. இதோ கைப்பிடிக்குள் அகப்படப்போகிறது எனத் துடிக்கும் வேளையில், கண் சிமிட்டிவிட்டுத் தூரத் தொலைந்துவிடுகிறது, சமாதானம். தன்னைப் பேணத் தெரியாத அரசியல்வாதிகளின் கைகளில் அடங்கித் தத்தளிப்பதைவிட, சுதந்திரமாகத் தொலைதூரத்தில் உலா வருவதையே அது விருப்புகிறது. கண்கட்டி வித்தை காட்டும் அரசியல் வாதிகளின் முன்னிலையிலேயே அது மின்னிமறைந்து விடுகின்றது. சமாதானத்தின் கதவுகளைத் திறப்பதும் பூட்டுவதும் தாங்களேதான் என்றும் அதற்குரிய பூட்டும் திறப்பும் தங்களின் கைகளில்தான் எனவும் கருதும் இலங்கை அரசியல்வாதிகளின் இறுமாப்பு ஒயும் வரைக்கும் சமாதானம் ஏற்படக் கூடிய சாத்தியம் ஏற்படுமா என்பது சந்தேகமே, அரசியல் பேசுவோரின் கோட்டுச் சூட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய கைக்குட்டை, அல்ல, சமாதானம். யாரும் விரும்பி வரவேற்காத நிலையில் சமாதானம் தன் சுய கெளரவத்தை விட்டுவிட்டு வரத் தயாரில்லை என்பதையே இந்நாட்டின் நீண்டகால நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. வேண்டும் வேளையில் “வா” என்று அழைப்பதற்கும் வேண்டாப்பொழுதில் “போ” என்று துரத்துவதற்கும் சமாதானம் அப்படியொன்றும் எடுபிடி அல்ல. போருக்கு எதிர்நிலையான சமாதானம், போர்ச்சூழலில் ஒருபோதும் தன்னை இனங்காட்ட மாட்டாது.
கிடைத்தற்கரிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமாதானத்தை வசதியாகத் தொலைத்துவிடும் அரசியல்வாதிகள், யார்மீதாவது பழியைப்போட்டு நழுவி விடுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளின் நிலையோ மிகவும் சுவாரசியமானது. ஒருசாரார் பரம விசுவாசிகளாகவும் இன்னொரு சாரார் விசுவாசம் - விசுவாசமின்மை என்ற இரு நிலைகளுக்கிடையே ஊசலாடுபவர்களாகவும் மறுசாரார் விசுவாசத்துக்கு எதிரானவர்களாகவும் விளங்குகின்றனர். தமிழ் - முஸ்லிம் அரசியல்வாதிகளிற் சிலர் அறிக்கை விடுவதற்கென்றே பூவுலகில் அவதாரம் எடுத்தவர்களைப் போன்று திகழ்கின்றனர். எதற்கு அறிக்கை விடுவது என்ற விவஸ்த்தையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் அறிக்கை அறிக்கையாக வெளியிட்டு, "அறிக்கை மன்னர்கள்” என்ற பெரும் புகழைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால், சமாதானம்தான் ஏற்பட்ட urge)6Opsu.
முன்னொரு காலத்தில் சோசலிசம் பேசி மகிழ்ந்த இடதுசாரிகளில் ஒரு பிரிவினர், தற்காலத்தின் சூழலை மனங்கொண்டு, பரம விசுவாசிகளாகப் புதிய அவதாரம் எடுத்துள்ளனர். சோசலிசம் பேசுவதைவிட விசுவாசத்தினால் கிடைக்கக் கூடிய பயன்கள் அதிகம் என்பதை அவர்கள் அறிவர். இவர்களைப் பொறுத்தவரை, தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தற்செயலானவை. தமிழர்கள் தாங்களா கவே தங்களுக்குத் தேடிக்கொண்ட வினைகள் அவை. நல்லது செய்வதற்கு வானுலகத் தேவர்களும் தேவதைகளும் என்றும் தயாராகவே உள்ளனர். அவர்கள் அருள்வதற்குத் தயாராக இருக்கும் வரங்களைப் பெற்றுக் கடைத்தேறுவதற்குத் தமிழ்ச்சனம் பூர்வபுண்ணியம் செய்யவில்லை என்பதே இவர்களின் மிகப் பெரும் கவலை. அப்பழுக்கற்ற விசுவாசத்தின் உயர் எல்லையிலே நிற்கும் தங்களது உபதேசங்களைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றி நடப்பதில்லை என்பது இவர்களது மாபெரும் மனவேதனை.
"விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக் குரையாயோ?” என்று பாடிய பாரதி இன்றிருந்தால், அதிக விலை கொடுத்துச் சர்க்கரை வாங்கி, அவன் வாயில் போடலாம்.
11

Page 7
எண்ணி எண்ணி மனமிரங்க என்னென்னமோ செஞ்ச மச்சான்! கன்னி கழிச்ச நாள் முதலாய்
கண்ணில் மணிணைப் போட்டதென்ன?
தாங்கையிலே மூங்கில் மரம், தவிக்கையிலே தென்னைமரம்! ஈன்ற பின்னே வாழை மரம் அது கதியோ எந்தனுக்கும்?
தேவன் போல நீ இழுத்தாய் தேர் போலே நான் அசைந்தேன்! கோயில் வந்து சேரு முன்னே குளிக்கக் குளம் வேறு கணிடாய்!
உண்கையிலே இச்சைக் கிளி உண்ட பின்னே எச்சிலிலை! வண்ண மொழிப் பேச்சழகா, விடிந்த பின்னே பொய்க் கனவோ!
என்னை விட்டுப் போன பின்னே எரி நெருப்பைத் திருவிளக்காய், பொன்னுத் தாலி போட்ட தென்ன? புதுக் கோலம் கொண்டதென்ன?
முதலிரவுக் கட்டிலின் கால் முதலையாய்க் கால் கவ்விடிச்சோ?
பதறி ஓடி வந்த தென்ன; பாவி அவள் புள்ளைத் தாச்சி!
ஊரிலுள்ள மரங்களெல்லாம் உல்லாசமாய்க் கொத்தி வந்தாய்; ஈரமுள்ள வாழை மரம் உன்னைக் காவு கொண்டதய்யா!
பாண் பூபாலன
பன்வில
12
(O
உப்புக்குளம்
உப்புக் குளம் ஒன்று தானா? لمسموم 0ق التقي زوك அப்பப்ப தோன்றும் ஆரும் அறிய மாட்டார்கள்.
வெட்கம், துக்கம் அதனால்
U6) வெளியில் தெரிவதில்லை. திக்கற்ற தமிழர்க்கு தெய்வமும் உதவுவதில்லை.
கணி துடைப்பு விசாரணைகள் கணக்கில்லை. என் செய்தும் என்ன ஈழத்தில் பெண்கள் வன்முறைக் காளாதல்
வழக்கமானது.
நாட்டின் தலைவியும் ஒரு நாரிமணி தான் ஆனாலும் நடப்பது காட்டுத்தனம் அட, கடவுளே நீயுமா கண்ணை மூடிவிட்டாய்?
 
 

மலையகத் தமிழ் நாவல்கள் s - ஓர் அறிமுகம்
எழுதியவர் : கலாநிதி க.அருணாசலம்
வெளியீடு : குமரன் புத்தக இல்லம். .கொழும்பு - சென்னை * کشی\
பதிப்பு: 1999 (செப்டம்பர்) ش۔ یعے سے ۔تی
விலை 150(இந்தியவிலை)
சாதாரன பதிப்பு இலக்கியவகையின் தோற்றத்திற்கும், அதன் சமுதாய சக்திகட்கும், வரலாற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. இவ்வகையில் நாவல் இலக்கியம் குறித்து நோக்குகின்ற போது "இயந்திர சாதனங்களினாலும், கைத்தொழில் நாகரிகத்தின் வளர்ச்சியினாலும் பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் தளங்களை உடைத்துக் கொண்டு வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் அன்றைய நியதி வழுவா வாழ்க்கை முறையைத் தகர்த்தது. அதனால் ஸ்திரமான நியமங்களும், ஸ்திரமான சமயதத்துவக் கோட்பாடுகளும் தகர்ந்தன. இன்னது இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் வலுவிழந்தன. ஆகவே இதை இவ்வாறு கூறவேண்டும் என்ற பழைய இலக்கிய மரபில் இருந்து, எதையும் எவ்வாறும் கூறலாம் என்ற புதிய கட்டுப்பாடற்ற இலக்கிய மரபு உதயமாகியது. இவ்வகையில் புதிய வாழ்க்கை முறையில் புதிய சமுதாய உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் பெரிய இலக்கிய வடிவமான நாவல் தோன்றியது. தெய்வாம்சம் பெற்ற காவிய நாயகர்களும், கற்பனை வாழ்வும் மறைந்து அன்றாட நடைமுறை வாழ்வும், அதில் நின்று உழலும் சாதாரண மனிதரும் இலக்கிய அரங்கில் இடம்பெற்றனர். சுருக்கமாகச் சொன்னால் கற்பனை உலகிற்குப் பதிலாக யதார்த்த உலகு இலக்கியத்தில் இடம்பெற்றது. யதார்த்தம் நாவலின் ஓர் அடிப்படை அம்சமாகியது" (எம்.ஏ.நு"மான் : 1977) இப்பின்னணியில் தோன்றிய தமிழ் நாவல் இலக்கியமானது மேனாட்டு சிந்தனை வழியாக எம்மை வந்தடைந்த ஒன்று என்ற போதினும் அவை தமிழ் சமுதாயத்தின் சூழலிற்கும் இயல்பிற்கும் ஏற்ப தனித்துவ அம்சங்களைக் கொண்டு தமிழ் நாவல் இலக்கியமாகத் திகழ்கின்றது எனலாம். இவ்வகையில்தான் இலங்கையின் பிரதேச இலக்கியக் கூறுகளில் ஒன்றாகிய மலையகத் தமிழ் நாவல் இலக்கியமும், நாவல் இலக்கியத்தின் பொதுப் பண்பினையும் அதே சமயம், மலையக பிரதேசத் திற்கு உரித்தான தனித் தன்மையினையும் உள்ளடக்கியதாக விளங்குகின்றது. மலையகத் தமிழ் நாவல் இலக்கியம் தொடர்பிலான அறிமுகக் குறிப்புகளும், கட்டுரைகளும் பலரால் அவ்வப்போது எழுதப்பட்டு வந்திருப்பினும், அதனை விரிவாக விளக்கும் ஆய்வு நூல் ஒன்று இதுவரை தோன்றவில்லை என்பது இவ் விடத்தில் மனங்கொள்ளல் அவசியமானதொன்றாகும். :
இவ்வாறானதோர் சூழலில்தான் கலாநிதி க.அருணாசலம் அவர்கள் நீண்ட தேடுதலின் பின்னர், சிறுசிறு ஆதாரங்களைக் கூட தவறவிடாமல், இந்நூலினை
13

Page 8
எழுதியுள்ளார். நூலின் பொருளடக்கம் பின்வருமாறு காணப்படுகின்றது. 1.தோற்றுவாய், 2. மலையகத் தோட்டத்தொழிலாளர் வருகையும் அதனையடுத்த காலகட்டமும், 3.பிரஜா உரிமைப் பிரச்சினையும் தொழிலாளர் தாயகம் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தமும், 4. தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொழிலாளர்களின் விழிப்புணர்வும், எழுச்சியும். 5. தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டமையும், தொழிலாளர்ளின் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றல்களும் 6. தோட்டத்து அதிகாரிகளின் கொடுமைகளும், தொழிலாளர்களுக்கு எதிரான வன்செயல்களும், விளைவுகளும். 7. 1983 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டகால நிலைமைகள் என ஏழு இயல்களாக வகுத்து, அவற்றில் மேற்குறித்த மலையக சமூகப் பொருளாதார, அரசியல் நிலைமாற்றங்களினூடாக, இம்மக்களின் வாழ்வு, பண்பாடு, ஏக்கங்கள் என்பன எவ்விதமான மாற்றங்களுக்கு உள்ளாயின, அவை எவ்வாறு படைப்பாளிகளுக்கு ஆக்கங்களை உருவாக்கிட அடி இழையாகின என்பதை மிகுந்த நுண்நயத்துடன் ஆசிரியர் காட்ட முனைகின்றார்.
மேலும் நூலின் இறுதியில் அவர் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதிய "தேச பக்தன் கோ.நடேசய்யர் - நூல் மதிப்பீடு, பத்தாண்டுகளிற் குன்றின் குரல் - ஒரு நோக்கு ஆகிய கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பு - 2 இல் மலையக நாவல்கள் பற்றிய நூற்பட்டியல் தரப்படுகின்றது.
மிகுந்த பொறுப்புணர்வுடனும், கடும் உழைப்புடனும் வெளிவந்துள்ள இந்த நூல் தன்னகத்தே பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மலையக நாவல்களைப் போலவே, அந்நாவலாசிரியர்களின் விபரம், அவர்கள் எழுதிய நூல்கள், அடங்கிய சஞ்சிகைகள், அவர்கள் பற்றிய மேலதிக தகவல்கள் என்பவற்றை மிகக் கவனத்துடன் சேர்த்து வைத்திருக்கும் ஆசிரியர் அவற்றினை ஆய்வு நூல் வடிவில் தரமுற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதோர் முயற்சியாகும். அவ்வகையில், மு.வெ.பெ.சாமியின் யார் கொலைகாரன் (குறுநாவல் - 1952) தொடக்கம் இறுதியாக வெளிவந்த நாவலான மாத்தளை ரோகினியின் இதயத்தில் இணைந்த இருமலர்கள்(1997) வரையில் இங்கு அறிமுகம் செய்யப் படுகின்றது. தவிரவும் நூல் வடிவம் பெறாத மலையக நாவல்கள் தொடர்பான விபரப்பட்டியலையும் பின்னிணைப்பாகத் தந்துள்ளார். அவ்வகையில் மலையக நாவல் பற்றிய சுவடியகம் என இந்நூலினைக் கூறின் அது மிகையாகாது.
இந்நூலின் பிறிதொரு சிறப்பு யாதெனில் மலையக நாவல்கள் பற்றிய விபரம், ஆய்வு என்பன எவ்விதமான காய்தல் உவத்தல் அற்ற நிலையில் நின்று எழுதப்பட்டதாகும். கலை இலக்கிய உலகில் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்ற தலைகுனிய வேண்டிய தனிமனித சண்டைகளாலும், எழுத்தாளனை தனிமைப்படுத்தி தாழ்நிலைக்குக் கொண்டுசெல்லும் குழு மனப் பாங்கும் இன்று மலையக இலக்கியத்தினையும் பாதிக்கவே செய்துள்ளது எனலாம். அவ்வகையில் மலையக நாவலின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்ட எழுத்தாளர்களை எவ்விதமான குழு மனப்பாங்கிற்கும், அப்பாற்பட்டு, அவர்களை இந்நூலில் பதிவு செய்துள்ளமை தனித்துவமான சிறப்பாகும்.
மலையக நாவலின் வரலாற்றினை எவர் எழுத முனைந்தாலும், முதலில் இந்நூலினையே படிக்கவேண்டிவரும் என்றளவிற்கு, மலையக நாவல்கள் பற்றிய
14

தகவல்கள், விளக்கங்கள் இதில் அடங்கியுள்ளன.
மலையக நாவல்கள் பற்றிய ஆய்வு குறித்துக் கூறுவதாயின், ஒவ்வொரு காலத்து இயக்கங்களுக்கும், மலையக நாவல்களுக்கும் உள்ள தொடர்பையும், உறவையும், பன்முகப்பாட்டின் அடிப்படையில் தெளிதல் வேண்டும். மலையக மக்களின் வாழ்வியலையும், அம்மக்களின் ஜீவனோபாயத்துக்கான போராட்டத் தினையும், பிரதிபலித்து நிற்கவேண்டிய நாவல் இனிமேல்தான் தோன்ற வேண்டி யுள்ளது. மலையக நாவல்கள் குறித்த ஆழமான நுட்பமான மார்க்ஸிய ஆய்வுகளின் பயனாகவே அவ்வாறானதொரு நாவலை வெளிக்கொணரலாம்.
கலாநிதி க.அருணாசலம் அவர்கள் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவது போன்று இந்நூல் மலையக நாவல்கள் குறித்த ஓர் அறிமுகமே என்பதுடன், மேற்குறித்த அடிப்படையிலான ஆய்வு நூல் ஒன்று தோன்றுவதற்கு, அது குறித்த தேடலை மேற்கொள்வதற்கும் இந்த நூல் கூடுதலான பயனை விளைவிக்கும் என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. எமது யாசிப்பு இன்னும் இந்த நூலாசிரியர் இது போன்ற காத்திரமான நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அளிக்கவேண்டும் என்பதாகும்.
“உன் வரவுக்காக”
VN
ஒ. சமாதானப்புறாவே உனது வரவுக்காகத்தான்
தினமும் - வழிமேல் விழிவைத்துக்
த்திே b. t3 d
றாம ಹಿನ್ಹಿ புரட்சிபாலன் விரைந்து நெருங்கி குகோணமலை வருவதுபோல்
பல ஆண்டுகளாய்
பாசாங்குதான் செய்கிறாய்; வானத்தில் - அலையும் மேகங்கள் கரைக்குக் - கண்ணாமூச்சி காட்டும் அலைகள் இவைகளைப்போலத்தானி நீயும். பாசாங்கை விட்டுவிடு. நேசக்கரம் நீட்டும் எம்மிடம் - நெருங்கிவர அச்சமேன்? வானத்து மேகங்கள்
15
அவையட்டும். - ஆனந்தமாய். கடல் அலைகள் கண்ணா மூச்சி காட்டட்டும் கரைக்கு. ஆனால் நீமட்டும் ஆசைகாட்டி மறையாமல் வந்துவிடு எம் கைகளிலே . சமாதானப்புறாவே! உனது வரவுக்காகத்தான் தினமும் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறோம்.

Page 9
ரூபராணி ஜோசப் கனடி
பாக்கியமும் ஜமுனாவும் தாயும் மகளுமானாலும் நனி பிகளைப் போலவே பழகுவார்கள். அப்பா இல்லா மல் வளர்ந்தவளென்று பாக்கியம் அளவுக்கதிகமாகச் செல்லங்கொடுத்து ஜமுனாவை வளர்த்திருந்தாள். அப்பா இல்லாத குறையை ஜமுனா உணர்ந்த தில்லை. ஆனால் பாக்கியம் தன் மகளுக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்திருந்தாள். அதுதான் "நீ எதைச் செய்யிறதென்றாலும் என்னைக் கேட் டிட்டுச் செய்" என்பது.
சித்திரை மாதத்து வெயிலின் உக்கிரம் மனிதர்களை மட்டுமல்ல மிருகங்கள் மரஞ்செடி கொடிகளென்று அனைத்தையும் வாட்டி எடுத்தது. பாக்கி யம் படலைக்கும் முற்றத்துக்குமாகப் பலதடவை நடந்து களைத்து விட்டாள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் வேலை தேடிக் கல்வி அமைச்சுக்குச் சென்ற ஜமுனா இன்னும் வீடு திரும்பவில்லை. பாக்கியத்தின் மனசு படபடத்தது. எதை யெதையோ எண்ணிப் பெருமூச்சு விட்டாள். ஜமுனா வளர்க்கும் செல்லப் பிராணி, டெய்சி நாய் பாக்கியத்தின் காலை நக்கிவிட்டு ஜமுனாவுக்காகப் படலையடியில் வந்து படுத்துக் கொண் டது. ஒரு நாயின் பாசம் கூட சில மனிதருக்கு இருப்பதில்லை என்று எண்ணிய பாக்கியத்தின் நினைவில் அவள் கணவன் கார்த்திகேசு வந்து போனான்.
பிள்ளையார் கோயில் மணி ஓங்கி ஒலித்ததும் மணி மூன்று என்று முணு
முணுத்தாள் பாக்கியம். படலை சரசரக்க ஜமுனா பைலும் கையுமாக உள்ளே வந்தாள். அவள் முகத்திலும் கழுத் திலும் அருவியாய் வியர்வை வழிந்தது. அவள் அணிந்திருந்த மணி னிற பிளவுஸ் ஈரத்தில் தோய்ந்து மேலோடு ஒட்டிப் போயிருந்தது. பாக்கியம் “என்ன இவ்வளவு நேரம், பொண்ணாப் பொறந் தவள் சட்டுப்புட்டெண்டு அலுவல முடிச் சிற்று சீக்கிரமா வீடு திரும்ப வேணாமா? நா ஒருத்தி இஞ்ச வயித்தில நெருப்பக் கட்டிக் கொண்டு நிக்கிற நினைப்பாவது உனக்கில்ல" என்று செல்லமாகக் கடிந்துவிட்டுத் தன் முந்தானையால் ஜமுனாவின் வியர்வையை ஒற்றித் துடைத்தாள்.
“ஆகா உங்க மகளுக்கெண்டு தனியா, ஸ்பெஷலா பஸ்ல இடந்தா றான். கல்வி அமைச்சில நம்ம மாமன் மச்சான் வேலை பாக்கிறான். போன போக்கில என் பயில பாத்து வாடி கண்ணு நாளைக்கே உனக்கு வேல றெடி எண்டு சொல்லிச் சீக்கிரமா வழி யனுப்பி வைக்க. சும்மா போம்மா” ஜமுனா சிணுங்கினாள்.
"தெரியாமக் கேட்டிட்டன் தாயே, நீ போய் உடுப்ப மாத்திற்று வந்து சாப் பிடு” பாக்கியத்தின் கொடுப்புக்குள் சிரிப்பு விளையாடியது.
அறைக்குள் போக அடியெடுத்து வைத்த ஜமுனா, "அம்மா நான் பிரசாந் தைக் கலியாணம் செய்யலாமா? என்று சத்தமாகக் கேட்டுவிட்டு குழந்தையைப் போல் சிரித்தாள்.
16
 
 

பாக்கியம் ஆடிப் போனாள். "உனக்கு என்ன பைத்தியமா?"
“எனக்குப் பைத்தியம் இல்லம்மா. நீதானே சொன்னா எதைச் செய்யிற தெண்டாலும் கேட்டிட்டுச் செய் எண்டு. அதாம்மா கேட்டன்” என்றாள் ஜமுனா அப்பாவிபோல்.
"நல்ல பொண்ணுடி நீ, நெசமாத் தான் சொல்றியா இல்ல வெளயாடி றியா?" பாக்கியம் சீரியசாகக் கேட்டாள்.
“வெளயாட இதிலென்னம்மா
இருக்கு நான் அப்பா இல்லாதவ. எனக்கு எல்லாமே நிதான். நம்ம குடும்ப நிலவரம் எனக்குத் தெரியாதா? நான் பி.ஏ. படிச்சி என்ன பயன். வேலை கேட்டு நாயா அலையிறன். கலியானம் எண்டு வர்ரப்போ பட்டமா சீதனமா முக்கியம். அம்மா உன் விருப்பமில்லாம நான் எதையும் பண்ணமாட்டன்" சொல்லிய வேகத்தில் அறைக்குள் சென்று விட் டாள் ஜமுனா. அவள் பேச்சைக்கேட்ட பாக்கியம் ஆடாது அசையாது மெய் மறந்து நின்றாள். தன் மகளின் புத்தி சாலித்தனத்தை தனக்குள்ளே மெச்சிய படி கூடத்தில் உட்கார்ந்து பனை யோலை விசிறியால் விசிறினாள்.
ஜமுனா உடைமாற்றி முகம் கை கால் கழுவிப் பளிச்சென்றிருந்தாள். பசிக்கிதம்மா என்ற குரல் கேட்டுப் பாக்கியம் குசினிப்பக்கம் விரைந்தாள். தட்டை எடுத்துச் சாதம் பருப்பு, சுறாவறை, தக்காளி ரசம் பரிமாறினாள். ஜமுனா, ஆவலுடன் பரபரவென்று உண்ணுவதைப் பார்த்த பாக்கியம் காலையில் ஜமுனா சாப்பிடாமற்
போனதை நினைவு படுத்திக் கொண்
LT6.
"சுறாவற நல்லாருக்கம்மா” "இன்னம் கொஞ்சம் போடட்டுமா?" *வேணர் டாம் மா" கோளாத் தண்ணிரை அண்ணாந்து மடமடவென்று
17
குடித்துவிட்டுத் தட்டை வெளியில் சென்று கழுவ வைத்து விட்டுத் தன் தாயைப் பார்த்தாள் ஜமுனா.
"யாரடி அவன் பேர் தெரியிது. ஊர்?” பாக்கியம் கேட்டுவிட்டு மேசை யில் கிடந்த கதலி வாழைப் பழத்தை உரித்து மகளிடம் நீட்டினாள்.
ஜமுனா மேசை மீது உட்கார்ந் தாள். "நான் சாதாரணமாகத்தான் கேட் டன். அதப் பெரிசா எடுத்திட்டியே” ஜமுனா சிரித்தாள்.
"அம்மா, பிரசாந்த் நம்ம ஊர்தான் எனக்கு சீனியாரா கெம்பஸ்ல படிச்சவன். கொழும்பில வேலை பாக்கிறதாகச் சொன்னான். படிக்கும்போது தெரியும். அதுக்கு மேல ஒண்ணும் தெரியாது. நல்லவன் அவ்வளவுதான்."
“கலியாணம் பண்ணிக்கலாமா? என்று நீ எப்பிடிக் கேட்டாய்?” பாக்கியம் தன் மகளைக் கேள்வியால் மடக்கி னாள்.
“கல்வியமைச்சுக்குப் போன இடத் தில் பிரசாந்தைக் கண்டன். கெம்பஸ்ல இருக்கிறபோதே என்னில் அவனுக்கு ஒரு பிடிப்பாம். நான் விரும்பினாக் கலியா ணம் செய்வானாம். சீதனம் கேட்கமாட் டானாம் இதெல்லாம் அவனாகச் சொன் னதுதான். அடுத்த தெருவில இருக்கிற

Page 10
பெரிய மூணு தட்டு மாடி வீடு அவங் கடது. தகப்பன் விஸ்வநாதன் சீப்அக் கெளனிடன்”
ஜமுனா விலாவாரியாகச் சொனன சங்கதிகளைக் கேட்ட பாக்கியம் சத்த மாகச் சிரித்தாள்.
ஜமுனா ஒன்றும் புரியாமல் அம்மா என்று பாக்கியத்தை ஏறெடுத்தாள்.
“சிரிக்காமல் என்ன செய்ய? இடியப் பக்காரியிட மகள் விஸ்வநாதன் சீப் அக்கெளண்டன் மகன் பிரசாந்த் முடிக் கிறத நெனச்சன், சிரிப்பு வந்துது. ஆழ மறிஞ்ச நீ காலவிடல்ல என்று நினைக் கிறன். இதெல்லாம் நமக்கு ஒத்து வராதும்மா, நீபோய் வேலை கெடைக் கிறதுக்கு வழியைப்பாரு”
ஜமுனா புறப்பட்டுப் போனாள். பாக்கியம் தாச்சியில் ஊறப் போட்டிருந்த அரிசியை வடித்து உரலில் போட்டு இடிக்க ஆரம்பித்தாள். அவளு டைய வாழ்க்கையில் நடந்த சம்பவங் களும், அரிசியோடு கலந்து இடிபட்டன. பாக்கியம் சமையற்காரச் சம்புலிங் கத்தின் மகள். மத்திய வீதியில் பிரபல்யம் பெற்ற சாப்பாட்டுக் கடையில் சம்புலிங்கம் வேலை பார்ப்பவன். அவனுக்கு எடுபிடி வேலைகளில் அவனுடைய மனைவி மாரி, உதவி ஒத்தாசை செய்வாள். மகள் பாக்கியம் பார்வைக்கு அழகி, படிப்பிலும் கெட்டிக் காரி. அவளைப் படிப்பித்து ஆளாக்க எண்ணினான் சம்புலிங்கம். ஆனால் மாரி லாரி விபத்தில் மாண்டுவிட்ட காரணத் தால் பாக்கியத்தின் படிப்புப் பாதியிலே நின்றுவிட்டது. மனைவியின் உதவியில் லாமல் சம்புலிங்கம் கஷ்டப்பட்டதைப் பார்த்த பாக்கியம் தன் தகப்பனுக்கு உதவியாகத் தொழிற்பட்டாள். அங்கு மேற்பார்வைக்கென்று இடைக்கிடை வந்து போவான் கடை உரிமையாளரின் மகன் கார்த்திகேசு. அவன் ஒரு பட்டதாரி.
வங்கி ஒன்றில் வேலை பார்ப்பவன். பாக்கியத்தின் அழகில் மயங்கிக் கலியாணம் செய்ய விரும்பினான். சம்புலிங்கம் மறுத்தான். பாக்கியம் அவன் பேச்சை நம்பி அவனுடன் போய்க் கலியாணம் செய்தாள். தன் மகனை மயக்கியது சம்புலிங்கத்தின் மகளென்று எண்ணிய கடைச் சொந்தக்காரன், அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டான். சம்புலிங்கம் மனமொடிந்து கல்லடிப்பாலத்தில் குதித்துத் தன் உயிரை மாய்த்து விட்டான்.
பாக்கியம் இன்பக் கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கினாள். ஜமுனாவை வயிற்றில் சுமந்தபோது கார்த்திகேயனின் போக்கு மாறுவதைக் கண்டு திகிலுற்றாள். அற்ப விஷயங் களுக்கெல்லாம் சமையல்காரன்ர மகள் என்று அடிக்கடி குத்திக் காட்டுவான். உயர்ந்த அந்தஸ்த்திலுள்ள தான் ஒரு சமையற்காரனின் மகளைக் கட்டியது அவமானம் என்று உணரத்தொடங்கி னான். தன் நண்பர்களிடம் மனைவியை சமையல்காரி என்று சொல்லிக் கிண்டல் செய்து மகிழ்வான். ஜமுனா பிறந்து சில மாதங்களுக்குள் கார்த்திகேயன் திடீர் என்று தலைமறைவாகி விட்டான். பாக்கியம் தளர்ந்து விடவில்லை. கைக் குழந்தையுடன், கூலி வேலை சமையல் வேலை என்று செய்து ஜமுனாவை வளர்த்து பீ.ஏ. வரை படிக்க வைத்து விட்டாள். தன்னை வாழ வைத்த சமை யற் கலையை எண்ணியதும் சம்புலிங்கத் தின் ஞாபகம் பாக்கியத்தின் கண்களில் நீராய் வழிந்தது. இப்போது கூலி வேலை சமையல் வேலை எல்லாவற் றையும் விட்டு வாடிக்கையாளருக்கு இடியப்பம் அவித்து விற்பதை நிரந்தரத் தொழிலாக்கிக் கொண்டாள் பாக்கியம். கதவில் யாரோ தட்டும் சத்தம் கேட்டுப் பாக்கியத்தின் நினைவுகள்
18

கலைந்தன. உலக்கையை மூலையில் சாத்திவிட்டு முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்தாள். குரைத்தபடி நின்ற டெய்சி நாயை அடக்கிவிட்டு வாசல் கதவைத் திறந்தாள்.
வாட்ட சாட்டமான ஒருவன். "அம்மா, நான் பிரசாந்த். ஜமுனா வுடன் படிச்சன். உங்களோட தனியாப் பேசவிரும்புகிறன்” பாக்கியத்துக்கு விஷயம் சட்டென்று புரிந்துவிட்டது. உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தாள். w
“என்ன காதலா?” என்றாள் சிரித்த
9.
"அப்படி என்றில்லை. ஜமுனா நல்லபெண். படிக்கிற நாள்ளருந்து அவ மேல ஒரு ஈடுபாடு. அவளக் கலியாணம் பண்ண ஆசைப்படுறன்." பிரசாந்த் பள்ளிச் சிறுவனைப்போல் குனிந்த தலை நிமிராமல் ஒப்புவித்தான்.
"உன் அப்பா அம்மா இதுக்கு சம்மதிப்பாங்களா? அத மொதல்ல சொல்லு" பாக்கியம் சற்றுக் காரமாகக் கேட்டாள்.
அவன் "இல்லை” என்று உறுதி யாகத் தலையசைத்தான்.
"அப்போ எனக்கும் இதில் துளிகூட இஷ்டமில்லை. நீ போகலாம்.” பாக்கியம் பிரசாந்தை வாசல்வரை வந்து வழி யனுப்பிவிட்டு மீண்டும் மாவிடிக்கத் தொடங்கினாள்.
ஜமுனா தொங்கிய முகத்துடன் உள்ளே வந்தாள். "என்ன வேலை காலி இல்லை என்று சொல்லிற்ராங்களா? பாக்கியம் தன் மகளைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தாள்.
"நீ என்னம்மா வீடு தேடிவந்த ஒரு
நல்ல மனுஷன அவமானப்படுத்தி
அனுப்பிற்றியே” ஜமுனா வருத்தப்
ulster.
"உனக்கெப்பிடித் தெரியும்?”
"வழியில் கண்டன், சொன்னான்.” "ஜமுனா, நாங்க அவிக்கிற இடியப் பம் அவங்க வீட்டுக்குப்போகும் ஆனா மருமகளெண்டு நிபோக முடியுமா? இல்ல சம்பந்தி எண்டு நான் போக எலுமா? நீராவிதான் இடியப்பத்துக்குச் சொந்தம். அது நெருப்போட விளையாட முடியுமா? பாக்கியம் ஒரு சட்டத்தரணி போல் கேள் விகளை மகள் மீது வீசினாள்.
ஜமுனா மெளனித்துப் போனாள். பாக்கியம் தொடர்ந்தாள் "இதையும் மீறி நீ அவனக் கலியாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா தராளமா நீ அவனோடு போ. உங்க கலியாணத்தக்குப் பிறகும் p53 FujLDrt slai LDTLD60TTf s 660, LDQ மகளா ஏத்துக்கமாட்டார். நீ என் வீட்ட வந்தாலும் கண்டிப்பா நானும் உங்களச் சேர்க்கமாட்டன்."
ஜமுனாவின் மெளனம் கலைந்து அம்மா என்று அலறினாள்.
துணிவே துணை. பாக்கியத்தின் உதடுகள் அசைந்தன.
ஜமுனா ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினாள். பாக்கியம் தன் முடிவுக் குப் பிழைபோட விரும்பவில்லை:
19

Page 11
ஈழத்துச் சிறுகதைகள் (1983-2000) - சில அவதானிப்புகள்
ஈழத்துச் சிறுகதைப்போக்குகள் கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக வளர்ச்சியும், தேய்வும் கொண்ட ஒர் இலக்கிய வடிவமாக அமைவதை நாம் காணலாம். உண்மையிலேயே இலக்கிய வரலாற்றாசிரியர்களும் திறனாய்வாளர் களுமே இப்போக்கு/ வளர்ச்சி பற்றி உள்ளடக்க ரீதியாகவும், உருவரீதியாகவும் பகுப்பாய்வு செய்து சுட்டிக் காட்டத் தகுதியுடையவர்கள். அவர்கள் அவ்வாறு செய்வதை இன்னமும் தவிர்த்தே வந்துள்ளனர். எனவேதான் திறனாய்வு சார்ந்த பத்திகளைப் பத்திரிகைகளில் எழுதிவரும் நான், அப்பத்திகளின் குணநலனுக்கு அமைய மேலோட்டமாகத் தன்னும் சில குறிப்புகளை இங்கு எழுதத் துணிந்தேன். சிறுகதைகளின் வடிவ அமைப்பு காலத்துக்குக் காலம் மாறிவந்துள்ளதை நாம் அவதானிக்கலாம். எதுவுமே மாற்றத்திற்கு உட்பட்டது என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமாயின் சிறுகதைக் கலையின் வடிவ அமைப்பு மாற்றத் தையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். .
மரபுரீதியாக சிறுகதை என்றால் என்ன என்பதை விளக்கச் சில நூல்கள் எழுந்துள்ளன. ப.கோதண்டராமன் எழுதிய "சிறுகதை ஒரு கலை" என்ற சிறு நூல் முதல் கே.எஸ்.சிவகுமாரன் எழுதிய "ஈழத்துச் சிறுகதைப்போக்குகள் திறனாய்வு" (1998), "அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைகள் : திறனாய்வு" (1999) வரை ஒரு பத்துப்பன்னிரெண்டு நூல்கள் ஈழத்திலும், தமிழிலும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாணவர்கள் இவற்றைத் தேடிப் படித்துப் பார்க்கவேண்டும். புதிதர்க ஆ.இரத்தினவேலோனின் இரு நூல்கள் வெளிவந்துள்ளன.
ஈழத்தில் கடந்த இரு தசாப்தங்களாக வெளிவரும் சிறுகதைகள் சம்பிரதாய மற்ற, மரபுரீதியிலமையாத கதைகளாக வெளிவருவதை நாம் காணலாம். இதற்குக் காரணம், 1983க்குப் பின் தமிழ்பேசும் நமது தமிழர்களினதும், இஸ்லாமியர்களினதும் வாழ்க்கைப்போக்குகளும், வாழ்நிலைகளும் பாரதூரமான மாற்றத்துக்கு உட் பட்டதே. அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, மாற்றங்கள் நமது கலை, இலக்கியங்களிலும் பிரதிபலிப்பதை நாம் எளிதிற் கண்டு கொள்ளலாம்.
கடந்த 17 வருடங்களில் எழுதப்பட்ட சில சிறுகதைகளைத் தன்னிச்சையா கவும், நமது வசதிக்காகவும் தேர்ந்தெடுத்துப் பார்த்தால், உளவியல் ரீதியான கதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளலாம். வர்க்க, சாதி, ஒடுக்குமுறை, சுரண்டல் போன்ற மோதல்கள் முன்னைய தசாப்தக் கதை களாக அமைந்தால், பின்னைய தசாப்தங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல், சமூகம், பொருளாதார நிலை போன்றவை கதைகளின் மையப் பொருள்களாக அமைகின்றன.
தமிழர்களையும், இஸ்லாமியர்களையும், ஏன் சிங்களவர்களையும் பொறுத்த மட்டில், கடந்த 18 ஆண்டுகளாகப் பாதிப்புகளும், சீரழிவுகளும் உயிர்க்கொலை
20

களும், பொருள் சேதங்களும் பெரிய அளவில் இடம்பெற்றுவரும் வேளையில் புனருத்தாரணங்களும் ஏற்பட்டு வருகின்றன. ஒரே சமயத்தில் அழிவும் ஆக்கமும் இடம்பெறுவது ஒரு முரண்படு நிலைதான். தூவானம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. விடிவு பிறந்தேயாகவேண்டும் என்று அனைவருமே எதிர்பார்க்கிறோம். r
இந்தப் பின்னணியில் ஈழத்துச் சிறுகதைகளின் போக்கையும், வளர்ச்சியையும் அல்லது தேய்வையும் ஒரு துரித நோக்கிலாகுதல் நாம் பார்த்தல் அவசியம். இப்படி நாம் பார்த்தாலும் இலக்கிய வரலாறைத் திட்டவட்டமாக குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்குள் அடக்குவது கடினம். அதாவது வசதிக்காக நாம் அவ்வாறு செய்தாலும், அக்காலப்பகுதி ஆரம்பிக்கும் காலத் தொடருக்கு முன்னரும் நாம் சென்று பார்ப்பது அவசியமாகிறது.
ஆதனில்தான் 80களின் மத்தியில் தொடங்கும் சிறுகதை இலக்கியப் பாங்கு 70களின் பிற்பகுதிப் போக்குகளையும் உள்ளடக்குகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இறுதி ஆய்விலே, நமது தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று இன்றும் பகுக்கக் கூடியவைதான். இந்த இரு பெரும் பிரிவுகளுக்குள் இவற்றை நாம் அடக்கிவிடலாம். போரும் காதலும் வெவ்வேறு வடிவங்களில் அடிநாதமாக உலக இலக்கியங்களில் தவழ்ந்து ஒலிப்பதை நாம் கேட்கலாம். தீவிரமாக ஆழமாக நாம் உலக இலக்கியத்தைப் படிக்கும்பொழுது இதனை நாம் உணரலாம்.
நாம் இப்பொழுது எடுத்துக்கொண்ட காலப்பகுதியில் ஆரம்பித்தும், வேறு சிலர் 70களிலும் ஆரம்பித்துத் தொடர்ந்தும் எழுதிவருகின்றனர். இக்காலப்பகுதியில் எழுதும் சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் எழுதுபவை எல்லாமே “சிறுகதைகளா என்பது வேறு விஷயம். இவர்களுடைய சிறுகதைகள் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகளில் வெளிவந்தன. கொழும்பிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் சிலவேளைகளில் வன்னி மட்டக்களப்பு போன்ற இடங்களி லிருந்தும் இப்பத்திரிகைகள் வெளிவந்தன. இவற்றைவிட இந்நாட்டுச் சிற்றேடு களிலும் தமிழ்நாட்டுச் சிற்றேடுகள்/சிறு சஞ்சிகைகளிலும், ஐரோப்பிய/ அமெரிக்க/ கனேடிய/ அவுஸ்திரேலிய நாடுகளின் தமிழ்ச் சிற்றேடுகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்தன.
ஈழத்துச் சிறுகதைப்போக்கு இக்கால கட்டத்திலே, இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் மட்டும் நிர்ணயிக்கப்படவில்லை. பிறநாடுகளில் வசிக்கும் இலங்கையரும் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். இவர்களுடைய எழுத்துக்கள், இங்குள்ள இலக்கியச் சிற்றேடுகளிலும், அந்தந்த நாடுகளில் வெளிவந்த / வெளிவந்து கொண்டிருக்கும் ஏடுகளிலும் பிரசுரமாயின. இப்படி எழுதுபவர்களை இங்குள்ளவர்களும், அங்குள்ளவர்களும் “புலம் பெயர்ந்த எழுத் தாளர்கள்” என்று அழைக்கிறார்கள். “புலம்பெயர்ந்த எழுத்து” என்ற பிரயோகம் சரியானதா என்பது என்னளவில் கேள்விக்குரிய விஷயம்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் அந்தந்த நாட்டுத் தமிழ் மொழி எழுத்தாளர்கள் என்று அழைக்கப் படுவதே பொருத்தமானது என நினைக்கிறேன். இவர்களுடைய எழுத்துக்கள்
2

Page 12
சில "இழி பொருள் இலக்கிய" மாக (Pornography) இருப்பதையும் கண்டுகொள்ள 6Tib.
இது ஒரு புறமிருக்க, 1983 -2000 காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் போக்குகளை இவ்வாறு வகைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
g96006 tu 660.
(அ) சாதிப்பிரச்சினை
(ஆ) வர்க்கநிலை
(இ) சமூக சமத்துவமின்மை
(ஈ) இன நெருக்கடிகள்
(உ) அரச பயங்கரவாதம்/போராளிகள் ஆயுதப் போராட்டப் பயங்கர வாதம்.
(ஊ) இஸ்லாமிய - தமிழர் உறவில் இக்கட்டான நிலை
(எ) மலைநாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுரண்டல், மற்றும் சமூகப் பிரச்சினைகள்
(ஏ) மலையகத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான உறவுகள்
(ஐ) தென்னிலங்கை இஸ்லாமியரின் பிரத்தியேகப் பிரச்சினைகள்
(ஒ) கொழும்புவாழ் தமிழர் இஸ்லாமியர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உறவுகள்
(ஓ) வடமேல் மாகாணத்தினரின் சமூகப்பிரச்சினைகள்
(ஒள) வன்னிமக்களும் அங்கு புலம் பெயர்ந்து வாழும் மக்களும் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்
(.) கிழக்கிலங்கையிலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும் தென்கிழக்கு இலங்கையிலுள்ள மக்களின் பிரச்சினைகள்
இவ்வாறு பகுத்துக்கொண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரலாற்று ரீதியாகவும் பகுப்பாய்வு முறையிலும் ஆய்வுகளையும், திறனாய்வுகளையும் மேற்கொள்ளவேண்டும். மாணவர்களை நெறிப்படுத்தவேண்டும். இவ்வாறு ஏற்கனவே செய்வதை மேலும் விஸ்தரிக்கவேண்டும். அண்மைக்கால இரு தசாப்த காலங்களில் வெளிவந்த கதைகள் தமிழ் பேசும் மக்களின் பண்பாட்டு வேர் களையும், சுய கெளரவத்தையும் மறு பரிசீலனை செய்யும் விதத்தில் அமைந் திருந்தன.
இக்கதைகள் யாவும் யதார்த்தச் சித்திரிப்புகளாகவும், உளவியல் சார்ந்த சித்திரிப்புகளாகவும் அமைந்த வேளையில் யாவுமே இலக்கியத் தரமான படைப்புகள் என்று கூற முடியாது இருக்கிறது. பெரும்பாலான கதைகள் ஆவணச் சித்திரங்களாக அமைந்துள்ளன. .
புதிய எழுத்தாளர்கள் சிலருடைய கதைகள் சிறுகதைகளுக்குரிய எல்லை களைத்தாண்டி வழவழா என்று எழுதப்படுவதையும், வெறும் ஆவணச் சித்திரிப்பு களாக அமைவதையும், கதாமாந்தரை ஊடுருவி உளப்பாங்கைச் சித்திரிக்கும் பாங்கு இல்லாமையையும் புதுப்புனைவு, உத்திநயம் போன்றவை குறைவாக இருப்பதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும். இவை அவர்கள் எழுதளழுத காலக் கிரமத்தில் மறைந்து போய்விடும்.
22

išଛquík
ல்இவர் 866
உடுவை தில்லை நடராஜா "
1963ல் இந்திய எதிர் சீனப் போரின்போது, பாதிப்படைந்தோருக்கு உதவி புரிவோம்' என்ற தலைப்பில் சுதந்திரன் பத்திரிதையில் கட்டுரை எழுதும்படி :ாசகரிடம் கேட்டபோது "இந்தியாவுக்கு உதவுவோம்’ என்ற நிலைப்பாட்டில் கட்டுரை எழுதி: தில்லை நடராஜா மாணவனாகப் பயின்று கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து எழுதும் பணியில் ஈடுபாடு கொண்டு ர்ேத்தி )ெ சிறுவர்க்கான கதையாக "மந்திரக்கண்ணாடி என்ற கதையை * تمدنونه எழுதி எழுத்தாளனாகவும் தன்னை இனங்காட்டிக கொண்டார். தொடர்ந்து ‘கடற்கன்னி என்ற சிறுவர் கதையையும் எழுதி தன் எழுத்தார்வத்தினைக் காட்டிக் கொண்டதோடு, தன்னையும் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளனாக நிலைநாட்டிக் கொண்டார். தொடர்ந்து இன்றுவரை தனது வேலைப்பளுவின் மத்தியிலும் 'கல்யாணம் முடித்துப்பார் என்ற நகைச்சுவைக் குட்டுரைத் தொகுப்பு நூலை 2000ஆண்டிலும் பிரசுரித்துள்ளனர். இவருடைய நிர்வாணம் சிறுகதைத் தொகுதி 1991ல் வெளியீடு செய்யப்பட்டு, 1932ல் தமிழ்நாடு 'வில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசுத்திட்டம் என்ற இலக்கிய அமைப்பின் மூலம் 1992ற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தெரிவு செய்யப்பட்டது. இதுவே முதன்முதலில் இப்பரிசுத் திட்டத்தினால் கெளரவிக்கப்பட்ட இலங்கை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லை என்ற பெயரில் பலரும் எழுதிய காலமது யாரோ எழுதிய ஆக்கங்களுக்கு தான் பாத்திரவாளியாக இருப்பதில் இவரடைந்த சங்கடம்; இது உண்மையில் ஒரு ஆக்கத்தை எழுதியவர் அதற்கான புகழை அடையாது போய் விடுவார் என்ற நல்லெண்ணம் இவரை உடுவை என்ற தனது ஊரின் (உடுப்பிட்டி) பெயரையும் கருக்கி, அழகுற மாற்றி உடுவை தில்லை நடராஜா எனப் புனை பெயரைப் போட வைத்தது. மேலும் எத்தனையோ பட்டங்கள், பதவிகள், பாராட்டுகள் லந்தபோதும் என்றும் மாறாமல் இருப்பது தில்லை நடராஜா தானே என்க் கூறுவதுடன், இன்று பட்டங்கள் பெருகி, ஒருவரைப் பட்டஞ்சூட்டிக் கெளரவிப்பதில் தாமே தம்மைக் கெளரவிக்கும் நிறுவனங்களும், தனிநாட்களும் பல்கிப்பெருகிப், பட்டமும் . கெளரவிப்பும் இன்று கேலிக்குரியதாயும் - கேலித் கூத்தாயும் போப்லிட்ட நிலைலை முன வருத்தத்துடன் குறிப்பிட்டு, இந்தத் தில்லை சள அள்பாக அழைப்பதே மகிழ்வும் E நிறைவுறாக இருக்கிறதெனக் கருதுசிறார் தில்லை நடராஜா.
தன் எழுத்து ஆயற்சிகளுக்கு" என்றும் ஊக்கமளித்தவர் தன் தந்தையே, என் அன்புடன் நினைவு கூகும் இவர், தன் ஆசிரியர்களையும், நன்பர்களையும்
நன்றியுடன் நினைவு கூரவும் தவறுவதில்லை. க.பொ.த (சாத) படிக்கும்போது
மாணவர் சஞ்சிகை ஒன்றைக் தொடர்ந்த' நடாத்தியது.இன் ஆல்வேளை தன்ாது ஆசிரியர்களில் குறிப்பிடக்கூடியவர்கள்ான திரு.சொக்கன், திரு.தேவன்
23

Page 13
என்பவர்களை மனதிலிருத்திக் கொள்கிறார். யாழ் இந்துக் கல்லூரியில் சொக்கன், தேவன் ஆகிய இருவரதும் நாடகப் பற்றும் - ஈடுபாடும் இவரையும் தொற்றிக் கொண்டதால் நாடகத் துறையிலும் தன்னுடைய பங்களிப்பை மாணவப் பருவத்திலிருந்தே செயற்படுத்திக் கொண்டார். திரு.கணேசபிள்ளை, கே.எஸ், பாலச்சந்திரன், ஜேசுரட்ணம் போன்றோரின் தொடர்பினால் வானொலி நாடகங்களிலும், பின் தொலைக்காட்சி நாடகங்களிலும் சிறந்ததொரு நடிகராகப் பரிணமித்துள்ளார். மேலும் 1995ல் புதிய அத்தியாயம் என்ற நாடகத்தைத் தயாரித்து, நடித்து ரூபவாஹினியில் அரங்கேற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வே. இன்னும் மேடை நாடகங்களினூடு பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகராகவும் தன்னை இனங்காட்டிக கொண்டார்.
நல்ல மனப்பாங்கோடு இருப்பின் சந்தர்ப்பங்கள் எல்லாம் தானே எல்லா இடத்திலும் வரும். வந்து சேர்ந்திருக்கிறது என்று கூறும் இவர், தனது பதவி நிலைகளிலெல்லாம் தன்னால் செய்யக்கூடிய இலக்கியப் பணியைச் செய்து வந்துள்ளார். குறிப்பாக களமற்று நிற்கும் எழுத்தாளர்களுக்கு, சொந்தமாக நூலைப் பிரசுரிக்க முடியாமல் இருக்கிற எழுத்தாளர்களுக்கு, நூலை பரவலான வாசகரிடம் சென்றடைய முடியாமல் தத்தளிக்கும் எழுத்தாளர்களுக்கு எனப் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும், ஏன் வாசகர்களுக்குக் கூட இயன்ற வரையில் தன்னாலான உதவிகளைச் செய்து இலக்கியப் பணியில் இடையறாது உதவி வருகிறார். இதற்கு மக்களுக்கு சேவை செய்வதே மகிழ்ச்சி எனக்கூறும் இவர் எழுத்தாளர்கள் வர்த்தக நோக்கைக் கைவிட வேண்டும், எழுத்து - பதிப்பு - விநியோகம் என்பன இலாபநோக்கில் இருக்கக்கூடாது, குறிப்பாக வாசகர்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கவேண்டும் என்ற உரத்த சிந்தனையைக் கொண்டிருக்கிறார். இன்றைய எழுத்துக்களில் காத்திரம் குறைந்து - கனதி குறைந்து வாசகர்கள் மேலோட்டமான வாசிப்புக்கு சென்று விட்டார்கள் - எழுத்தாளர்கள் இலாப நோக்கிற்குச் சென்றுவிட்டார்கள். கோழியா - முட்டையா..? என்ற விவாதம் பயனற்றது. இரு சாராரும் ஒன்றாகி சமூக முன்னேற்றம் கருதி எழுதினால் - வாசித்தால் இந்நிலை தவிர்க்கப்படும் என்பது இவர் கருத்தாய் அமைகிறது.
தொழில் நிமித்தம் திருகோணமலையில் இருந்தபோது எழுத்தாளரது 300 நூல்கள் கொள்வனவு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஊக்கமளித்தார். வவுனியாவில் இலக்கிய விழாவின்போது 10 நூல்களைக் கொள்வனவு செய்து காட்சிப்படுத்தி வாசகர்களுக்கு அறிமுகத்தைச் செய்தார். இந்து கலாசார அமைச்சில் இருந்தபோது மாதமொரு சிறுகதையைத் தெரிவு செய்து (பத்திரிகை - சஞ்சிகையில் வெளிவந்த) 1000ரூபா பரிசளிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார். இதன்மூலம் தன் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்ததாக எழுத்தாளன் உணர்வதுடன், போட்டிக்கென எழுதாது எழுதப்பட்ட கதையொன்று கவனத்திற் கொள்ளப்பட்ட நிலையையும் ஆக்கியோன் அநுபவிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது உயர்கல்வி அமைச்சில் இருப்பதனால் எழுத்தாளனிடமிருந்து 500 பிரதிகள் கொள்வனவு செய்து ஆரோக்கியமான வாசகர்களை உருவாக்க வழிகோலுகிறார். இன்னும் இந்து கலாசார அமைச்சோடு தமிழ் மன்றமும் இணைந்து விழாக்களின்போது பல்வேறு பாகத்து எழுத்தாளர்களது நூல்களை
24

காட்சிப்படுத்துதல் செய்யவேண்டுமென்ற கருத்தையும் தெரியப்படுத்தினார். இது இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனங் கொள்ளப்படவேண்டும். செய்தொழில் தெய்வம். மக்கள் சேவையே மகேசன் சேவை. இவை எல்லாம் வெறும் கோஷங்களல்ல. பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட பிறருக்கு உதவும் கைகள் மேலானவை என்பதை தத்துவமாய் மட்டுமல்லாது செயலிலும் காட்டும் சீரிய முயற்சியில் தில்லை நடராஜா ஈடுபடுகின்றார் என்பது மக்களுக்கு மனநிறைவைத் தருகிறது. இலக்கியவாதியாகவும் - மக்களுடன் இரண்டறக் கலந்தும், வாழும் இவர் உழைப்பால் உயர்ந்தவர். மக்களுடன் இரண்டறக் கலந்ததன் விளைவே தனது இலக்கியப் பணியிலும் மக்களுக்கு அது எவ்வகையில் பயன்படும் எனக்கேட்டு அதன்படி செயற்படுத்துகிறார். மககளுடன நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பவர்களில் பலர் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். மக்களுடைய பிரச்சினைகளைக் கண்ணுற்று, அதில் கரிசனை கொண்டு, அதைத் தீர்க்கும் வழிவகை கூறி, இல்லையெனில் அதில் கோபமுற்று. எப்படியோ அதனை எழுத்தில் வடித்திடவேண்டும் என்று அவாக் கொள்கிறார்கள், இந்நிலையில் பலர் எழுத்தில் மட்டும் வடித்துவிட்டு தங்கள் கடமை முடிந்தது என ஒதுங்க, சிலர் மட்டும் தீர்க்க முற்படுகிறார்கள். அந்தச் சிலரில் தில்லை நடராஜாவும் ஒருவர். உண்மையில் இவருடைய பதவி நிலைகளும் இதற்கு உதவுகின்றன என்றே கூறவேண்டும்.
இத்தனை பணிகளுக்கும் மத்தியில் உங்களுக்கு எழுத - இலக்கியக் கூட்டங்களில் பங்குபற்ற, நூலைப் பிரசுரிக்க நேரம் இருக்கிறதா? எனக் கேட்டால். இது பொழுதுபோக்கல்லவே என்ற பதிலுடன், சரி நேரமில்லையென்று சாப்பிடாமல், தூங்காமல். ஏன் அத்தியாவசியக் கடமைகளை முடிக்காமல் இருக்கிறோமா? என்ற வினாவையும் முன்வைக்கிறார். இலக்கியப்பணி என்பது இவரைப் பொறுத்தவரை அத்தியாவசியக் கடமையென்றாகி விட்டது. இதனாற்றான் மக்களுக்குச் சேவை செய்யும் அரசபணியிலும், தான் நேசிக்கும் இலக்கியப் பணியிலும் இவரால் மிளிர முடிகிறது. அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் இலக்கியப் பணியிலிருந்து ஓய்வு பெறமாட்டார் என்பது இலக்கிய அபிமானி களுக்கும் - எழுத்தாளர்களுக்கும் ஆறுதலைத் தரும் விடயம் எனலாம். இவருடைய அரசபணி - இலக்கியப்பணி தொடர வாழ்த்துகிறோம்.
S SS LSLSLLLSGSSS SS SS qSASkSSSSSSS LSS S S S SLSGSGSGSLSS LSLS SLL LBLTeSS SCCSS SCSSSLS S LSLSLS LSLS S LSLSLSS SSLSLSL LSLSLS LSLSL LSLSLSS S SSSCSSSSSSSS LSS
அன்பார்ந்த வாசகர்களே. சந்தா விபரம்
ஞானம் சஞ்சிகை பற்றிய
கருத்துக்களைக்களையும் சஞ்சிகை யின் தரத்தை மேம்படுத்த உங்க ளது ஆலோசனைகளையும் அறி யத்தாருங்கள். ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. உங் களது படைப் புகளினர் மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் கிய தரத்தை மேம்படுத்துங்கள்.
25
தனிப்பிரதி; ரூபா 15/.
வருடச்சந்தா: ரூபா 180/-
(தபாற்செலவு உட்பட)
சந்தா காசோலை மூலமாகவோ
மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய பெயர், முகவரி ;-
GNANASEKARAN 19/7, PERADENTYA ROAD, KANDY.

Page 14
(1) பூலோகசிங்கத்தின் நேர்காணல் பற்றி எழுதாமல் விடமுடியவில்லை. ஆ.சதாசிவம் போன்றோரின் பத்தாம் பசலித்தனத்தையும் "கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய" தமிழ் அமீபா உயிரிகளின் பெருமை கூறும் மரபையும் அவர் பிரதிபலிக்கிறது ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியவாதம் ஏன் இன்றைய அவல நிலையை எட்டியிருக்கிறது என்பதற்கான சான்றுகளும் அவரது கருத்துக்கள் மூலம் புலனாகின்றன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி வேறு, இலங்கையின் கம்யூனிச இயக்கம் வேறு. இவ்வாறே, இ.மு.போ.எ.ச. வேறு, முற்போக்கு இலக்கிய இயக்கம் வேறு. இளங்கீரன் 1960ல் எழுதியபோது, பல்லின இலங்கைத் தேசியம் என்ற நிலைப்பாட்டினின்றே எழுதினார். இன்று தமிழ்த் தேசியவாதிகள் பலரும், புலம் பெயராதவிடத்து, பேரினவாதக் கட்சிகளின் தயவில் அரசியற் கூத்தாடுகிறதுடன் இளங்கீரன் போன்றோரின் நிலைப்பாட்டை ஒப்பிடுவது நியாயமானது. அது போக, இளங்கீரன் என்ற முஸ்லிம் தமிழர்கட்குப் புத்திமதி கூறுவது பற்றியும் பூலோகசிங்கம் சினப்பதாகத் தெரிகிறது.
கைலாசபதியை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் "பரமார்த்தகுரு என்று சொல்கிற பூலோகசிங்கத்தால், கைலாசபதியின் எந்த ஒரு இலக்கியக் கோட்பாட்டையும் மறுதலித்து, ஒரு மாற்றுக் கொள்கையை நிறுவ எங்குமே இயலவில்லை என்பதை நோக்கும்போது, அந்தச் சித்தரிப்பு மெய்யாக யாருக்குப் பொருந்தும் என்பது பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. *丁
ரீ.ல.சு.கட்சியோடு இடதுசாரிகள் எப்போது "இணைந்தார்கள்" என்பது பறறிய தெளிவு கூட இல்லாமல், ஏதோ அரச ஆதரவால்தான் முற்போக்கு இலக்கியம் பிழைத்திருந்தது என்று கூற முற்படுகிற பூலோகசிங்கம், தமிழரசுக் கட்சி யூ.என்.பி.யோடு குலாவிய 1965-70 ஆட்சிக்காலத்திற் கூட, எவ்வாறு தமிழ்த் தேசியவாதிகளால் ஒரு உருப்படியான மாற்று வழியை முன்வைக்க இயலவில்லை என்று விளக்கவில்லை. இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான இனவாதக் கொள்கையைக் கடைப்பிடித்த, 1977க்குப் பின்னான யூ.என்.பி.ஆட்சியின் தயவிலல்லவா நமது தமிழ்த் தேசியவாதப் பெருமக்கள் சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெரிய பதவிகட்கு வரமுடிந்தது. சும்மா மொட்டையாகப், புறக்கணிக்கப்பட்ட நல்ல படைப்புகள் பற்றியும் கொண்டாடப்பட்ட மோசமான படைப்புகள் பற்றியும், கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல பாடுவதை விடக் குறிப்பான உதாரணங்களைக் கவனித்தால் பயனிருக்கும்.
குறுகிய காலத்தில் கைலாசபதியால் தினகரனில் சாதிக்க முடிந்ததை, வீரகேசரியிலோ வேறெந்த ஏடிலோ யாராலும் ஏன் சாதிக்க இயலவில்லை என்பதைக் கவனித்தால், பூலிேர்கசிங்கத்தின் குற்றங்கூறலுக்கான உண்மைக் காரணம் அவராற் கூறப்படாத ஒன்று என்று விளங்கும்.
(11) தமிழகம் ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பாளிகளைக் கணிப்பில்
26
 
 
 
 
 

எடுக்காததையிட்டு, அதிகம் அலட்டிக்கொள்ளாத பூலோகசிங்கம், தமிழகம், பழமைவாதத் "தவப்புதல்வர்களைக்” கணிப்பிலெடுக்காதது பற்றி மட்டும் மிகவும் ஆவேசமடைகிறார்.
ஆறுமுகநாவலரை வழிபாட்டுப் பொருளாக்குகிறவர்களே அவர் பற்றிய ஒரு நிதானமான ஆய்வுக்குத் தடையாக உள்ளனர். விமர்சனமின்மை பற்றி ஒரு இடத்தில் கண்டித்துக் கொண்டு, ஆறுமுகநாவலரை மட்டுமன்றித் தமிழரசுக்கட்சி - யூ.என்.பி. அரசியலில் நீச்சல் போட்ட "அறிஞர் பெருமக்களை விமர்சனமின்றித் தூக்கிப்பிடிக்கிறபோது, பூலோகசிங்கம் தன்னை மிகவும் தெளிவாக அடையாளங் காட்டிக்கொள்கிறார்.
தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வைப்பது என்ற யோசனையே ஒரு அரசியல் நோக்கிலானது. அது தவறானது என்று கருதிய இடதுசாரிகளல்லாத பல தமிழ் அறிஞர்களும் இருந்தனர். மாநாட்டை அரசாங்கம் கையாண்ட விதமும் அதன் தொடர்விளைவான வீண் சாவுகளும் இந்த மாநாட்டுத் தொடர்பான இருண்ட அரசியற் பக்கம் ஒன்றை முறையாக விமர்சிப்பதற்குத் தடையாகவே இருந்து வந்துள்ளன.
வேர்களைப் போட்டு விட்ட அவுஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி எழுதுகிற பூலோகசிங்கம் காணத் தவறுகிற விடயம் ஏதெனில், அவர்கள் போடவில்லை, அவர்களது வேர்கள் வெள்ளைக் குடியேற்றக்காரரால் அறுக்கப்பட்டன. வசதி வேண்டி அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழ்ப் பெருங்குடியினரோ, தாமாகவே அறுத்துக்கொண்டு போனவர்கள். அங்கே அவர்கள் பேணக் கூடியதாக உள்ள நிச வாழ்வு சாராத சடங்கான அடையாளங்கள், தமிழ் அடையாளத்தின் ஒரு பகுதி ஆகா. சமூகப்பிரக்ஞையுடன் செயற்படுகிற சிலரே அவுஸ்திரேலியாவின் தமிழரின் இருப்புடன் சார்ந்த ஒரு அடையாளம் பற்றி ஆழச் சிந்திக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் மரபுவாதிகளல்லர்.
தமிழ் மரபு காதலைப் பவித்திரமாகப் போற்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவேதான் பரத்தமை கூட நமது பண்பாட்டின் ஓர் அம்சமாக அடையாளம் காணப்பட்டதோ, தெரியாது. அதைவிட, ஆண்டாள், மாணிக்கவாசகர் போன்றோர் தம் பக்தியின் ஒரு பகுதியாக வெளிவெளியான பாலியற் சிந்தனைகளை இலக்கிய மாக்கியுள்ளனர். தமிழர் பண்பாடெனக் காலத்தால் மாறாத ஒன்றில்லை. அப்படியா யிருந்திருப்பின், நாம் முதற் குரங்கின் பண்பாட்டையே இன்னமும் பேணிக் கொண்டிருப்போம்.
ஏற்கனவே நான் சில தடவைகள் எழுதியது போல, பல நேர்காணல்கள், காழ்ப்பையும் மன அவசங்களையும் கொட்டித் தீர்ப்பதற்கான வடிகால்களாகி விடுகின்றன. இந்த நேர்காணல் மூலம் பூலோகசிங்கத்தின் ஆளுமை பற்றி எதுவுமே புலனாகியுள்ளதாக எனக்குத் தெரியவில்லை. பூலோகசிங்கம் தான் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதுவது ஒரு விடயம், அரையும் குறையுமாக மொட்டையாக எதையாவது சொல்லிப்போவது வேறு விடயம். இத்தகைய நோகாணலகள் ஒருவரைப் பரிதாபத்துககுரியவராக மாற்றி விடுவதுதான் இவற்றின் கெடுதி.
(2) மாக்ஸியத் திறனாய்வாளர்கள் பற்றி ஒட்டுமொத்தமாகத் திர்ப்பு வழங்குகிற சமீம் தனது குற்றச்சாட்டுக்களைக் குறிப்பான முறையில் தெளிவாக முன்வைப்பது நல்லது. "இவர்களெல்லாம் இப்படித்தான்” என்கிற தோரணையில்
27

Page 15
எழுதுவது வசதியான காரியம். ஆனால் பொறுப்பான காரியமாகாது. அவ்வாறே, விமர்சனங்களை எழுதுவதில் மாக்சியர்களது குற்றங்களைப் பட்டியலிடுகிற சமீம், அவற்றையொத்த குற்றங்கள் இல்லாத விமர்சனங்களை எழுதி மற்றவர்கட்கு வழிகாட்டுவாராயின் சிறப்பாயிருக்கும். கைலாசபதி விமர்சகராக அதிகம் செயற்பட்டதில்லை. ஆய்வாளர் என்ற விதமாகவே அவர் பொதுவான முறையில் விடயங்களை அணுகினார். விமர்சகனின் நிலை வேறு. ஒரு படைப்பின் சமூக நோக்கை அடையாளங் காணுவதைத் தவிர்த்து எழுதுவது, என்னளவில், நேர்மையான விமர்சனமல்ல. இதனால் அழகியலைப் புறக்கணிக்கும் தேவை எனக்கு இல்லை. உண்மையில், கட்டுரைத் தலைப்புக்கும் அதனுள் வலிந்து புகுத்தப்பட்ட சமகால விமர்சனங்கள் பற்றிய கருத்துகட்கும் எதுவிதமான தொடர்பும்
இல்லை என்றே சொல்வேன்.
(3) தயவுசெய்து யாராவது ஜெயலலிதாவை விடக் கருணாநிதி எந்த வகையில் நாகரிகம் குறைந்த அரசியல் பித்தலாட்டக்காரர் என்று சொல்லமுடியுமா? இருவருக்கும் பால் வேறுபாட்டை விட்டால் ஒற்றுமைகளே அதிகம். தமிழ்நாடு எப்போதோ சபிக்கப்பட்டுவிட்ட பூமி, போதாமல், சுப்பிரமணிய சுவாமிதான் இனி ஜெயலலிதாவை ஆட்டிவைக்கப்போகிறார் என்றும் துரை மனோகரன் மிரட்டி யிருக்கிறார். அய்யோ, சுப்பிரமணிய சுவாமியா? தமிழ் நாடு இதுவரைபட்ட தெல்லாம் போதாதா ஏனையா, தமிழ்நாட்டு மக்கள் மீது இவ்வளவு கோபம்? . சி.சிவசேகரம்
கனதியான பயனுள்ள பல தகவல்கள் “ஞானத்தில் இடம்பெறுவது மகிழ்ச்சிக்குரியது. சிறுகதை, கவிதை, நேர்காணல், இலக்கியப்பணியில் இவர், நான் பேச நினைப்பதெல்லாம் - எல்லாமே என்னைக் கவர்ந்தன. தெளிவத்தை ஜோசப்பின் 'சுவர் அருமையான கதை. அதில் ஒரு சிறு சந்தேகம். சுவர் உடைந்தபின்னும் போலி ஆமிக்காரர் கேற்றால்தான் வர முயலவேண்டுமா என்பதுதான் அது, பேராசிரியர் பூலோகசிங்கத்தின் நேர்காணல் மிகவும் பயனுள்ள இலக்கியச் சர்ச்சையை விளக்குகின்றது. அந்தனி ஜீவா குறிப்பிடுவதுபோல் “இத்தா என்னும் சிறுகதையை எஸ்.பொ., மருதூர்க்கொத்தனைக் கொண்டு எழுதுவித்தார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவருடைய ஆக்கங்கள் பிறர் பெயரில் வெளிவந்துள்ளது உண்மை. கனக.செந்திநாதனின் "ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் நூலில் நவீன இலக்கியம் பற்றிய பகுதியை எஸ்.பொ. எழுதினார் எனக் கனக.செந்திநாதனே எனக்குக் கூறியிருக்கிறார். சோ.பத்மநாதனின் அழைப்பு கவிதை அபாரம். “ஞானத்தில் இடம்பெறும் புதுக்கவிதைகளில் இருண்மைதான் மேலோங்கி நிற்கிறது. பேராசிரியர்களும் கலாநிதிகளும் ஞானத்தில் அதிக இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள் போல் தெரிகிறது. ஒரு நூலை வெளியிடுவதே மிகவும் சிரமமான பணி. சஞ்சிகை ஒன்றை தொடர்ந்து பன்னிரெண்டு இதழ்கள் - விளம்பரம் எதுவுமில்லாமல் - வெளியிடுவது எத்தகைய சிக்கலான பணி என்பதை நான் அறிவேன். உங்களின் துணிச்சலைப் பாராட்டுவதோடு ஞானம் தொடர்ந்து மலர எனது வாழ்த்துக்கள். முல்லைமணி.
"சுவர் கதை நன்கு அமைந்துள்ளது. பரிசுக்கு தகுதியான கதையே! “காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்” கதை யதார்த்தமாக இருப்பினும் கதை சொல்லும் பாத்திரத்தை உயிரோட்டமாக படைக்கத் தவறிவிட்டது. "சென்றியிலை சறத்தும் சுமதிபாலாவும் சைக்கிளைப் பறிச்சு உள்ளுக்குக்
28

கொண்டுபோய் வச்சிட்டாங்கள், கதாபாத்திரம் தயங்கித் தயங்கி . பயந்து பயந்து. சைக்கிளை பெரிதாக நினைத்து உள்ளுக்கு போவதற்கு இந்தப் பிள்ளைக்கு என்ன விசரோ என்று எண்ணத் தோன்றும். அதேநேரம் கதை சொல்லும் சீரும் சிந்தனை தெளிவும்.? யாருக்கு விசர்?
ச.சதீஷ்காந்தன், திருகோணமலை. ஞானம் ஜுன் இதழில் மூன்று முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் படித்துப்பார்த்ததில் என்னுள் பல எதிர்வினைகள் எழுந்தன. அவற்றுள் ஒரு கதைபற்றி மாத்திரம் இங்கு பதிவு செய்கிறேன்.
காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் என்ற கதையின் தலைப்பே கதாசம்பவத்தைக் கூறாமல் கூறுகிறது. இந்தப் பண்பை கதை சொல்லப்படும் முறையிலும் காணலாம்.
கலைத்துவம் என்னும் போது கூறாமற் கூறும் பண்பும் அடங்கும். வாசகன் நுண்ணுணர்வை மதித்து, அவன் கற்பனைக்கு இடம் கொடுக்கும் வகையில் எழுதுவது சிறந்த எழுத்தாளர்களிடம் காணப்படும் பண்பாகும்.
கதை சொல்லும் பெண் களங்கம் அடைந்ததை கூண்டுக்கிளியின் கதியும் பிரதேசத்தில் புகுந்து கொடுமை புரியும் பிறத்தியாரைக் காட்டுப் பூனையும் குறியீடாகக் காட்டுகின்றன.
பன்மை ஒருமையில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இயல்பான ஓட்டத்துடன் கதையை ஆசிரியர் தி.ஞானசேகரன் எழுதியுள்ளார். பாராட்டுக்கள்.
கே.எஸ்.சிவகுமாரன், கொழும்பு - 06.
காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் கதை சென்றியில் கிருஷாந்திக்கும், மருதானையில் மலையகப் பெண்ணொருத்திக்கும் நடந்த கதியை நினைவு படுத்துகிறது. கதையில் சறத்தும் சுமதிபாலாவும் சைக்கிளைப் பறித்து சென்றியில் உள்ளே வைத்துவிட்டு எடுக்கச் சொன்னபோது, அப்பெண் உள்ளே சென்றதாகக் காட்டாது அவர்களது உள்நோக்கத்தை அறிந்த அவள் "தயங்கித் தயங்கி. பயந்து பயந்து." மயங்கி விழுவதாக சித்தரித்திருப்பது கதையின் சிகரம். சென்றியில் தனியாக அகப்படும் பெண்களின் பயங்கரமான - தப்பித்துக் கொள்ள முடியாத அநுபவத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. பூனைகள் இருக்கும் பக்கம் தனியாகச் செல்லவேண்டாமென கிளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சமூகப்பயனுள்ள கதை இது. க.சசிதேவி, வைமன்வீதி, நல்லூர்.
"ஞானம், அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வைத்துவிடக்கூடிய சஞ்சிகை அல்ல, மனம் லயித்து நிதானமாகப் படிக்கவேண்டிய இதழ், இதில் தொகுக்கப்படும்
விடயங்களின் பொருட் பரப்பும், கருத்துச் செழுமையும் எனக்கு மனநிறைவைத் தருகின்றன. ஆடம்பரம் இன்றி, பயன்பாட்டு நோக்கில் மேம்பட்டு நிற்கும் "ஞானம், நன்கு வேரூன்றிச் சிறப்புடன் இலக்கிய உலகில் வலம்வரவேண்டும் என விழைகின்றேன். வ.இராசையா, கொழும்பு-6.
ஞானம் சஞ்சிகையில் நேர்காணல், நூல் மதிப்புரை மற்றும் மூத்த படைப்பாளிகள் பற்றிய தகவல்கள், கட்டுரைகள் எல்லாம் எங்களுக்கு மிகவும் பயன் படுபவையாக இருக்கின்றன. எது வந்தபோதும் சலிப்பகற்றி இச்சஞ்சிகையை வெளிக்கொணருமாறு வேண்டுகிறேன். நடராசா சுசீந்திரன், ஜேர்மனி,
29

Page 16
சாயம் கரைந்த
பாட்டாளிகளின் குருதியில் கொழுக்கும் அட்டைகளை நசிப்பதாக எழுந்தாகப் முதல்ை விழுங்கும் முதலைகளைக் கொன்று சமத்துவம் சமைப்பதாகவும் முழங்கினாய்
அதற்காப்
கருவி துரக்கி களப்பலியும் கொடுத்தாய் புல்லரித்துப்போனோம் அசலென்று நீலமும் பச்சையும் ஆடிய வேட்டையில் தென்னிலங்கை ஆறுகள் முண்டங்களால் நிறைந்ததையும் சிங்களத்து தெருக்களில் சிவப்பாறு பாப்ந்ததையும் நாமறிந்து நெகிழ்ந்தோம் கொடுமையென எம் உதடுகள் உச்சரித்துக் கொண்டன.
சிறுத்தஞ்சியோ கதிரைக்கனவிலோ - வெறியர்காலில் பாட்டில் விழுந்தாப் புரட்சி புளித்துப்போப் ஜனநாயக நீரேரிட்டத்தில்
குதித்து சிவப்பு சாயத்தைக் கழுவிக்கொண்டாப் போலும்
ஆட்சி வர்ணங்கள் மாறிமாறி எமைக் குதறிய போது பதறினோம் கைகொடுங்கள் எனக் கதறினோம் உன்விழியோரங்கள் கசியவில்வை எந்த அகமாத்துமின்றி மெளனமாய் ரசித்தாப்
30
சாத்தான்கள்
உன் குரல்வளை நெரித்து சரிகடிதத நீலம் பச்சையோடு இனவாத நிழலில் நீயும் இணைந்து இடதுகோட்பாட்டை எங்கே எறிந்தாய்?
ஏகாதிபத்திய ஏராளம்
கருவிகளை தாராள மனதோடு ஆமோதித்து உலகம்
வெள்ளைக்கொடியோடு விரையும் போதேனர் ஏகாதிபத்திய ஏமாற்று வித்தையென கச்சை கட்டுகிறாய்.
வெள்ள்ைக் கொடியை நாராய் கிழித்து போர்க் கொடிகட்டி தின்னப் பினம் வேணுமென்று திெருவில் அம்மணமஃப் ஆடுகிராப். என்னே உன் புரட்சி.?
பேய் கருப் பெண்பார் திருத்தம் செய்யுங்கள்; ஈழத்தில் நீலம் பச்சை சிவப்பென வண்ர்ண் hள்விப் பேசப்கள் வருகின்றன பினந்தேடி. தப்ரபேன் இனி தவிடுபொடிதான்.
பரந்தன்

ஆங்கிலமூலம்: வெண்டி வட் மோர்
ஒரு புது வசீகரம் என்னை ஆட்கொள்கிறது ஒரு தீவின் வசியம் என்னைப் பற்றிக் கொள்கிறது சொற்கள் வர்ணிக்க இயலாத ஒரு நேசத்தின் நீண்ட கால மந்திரப் பொறியில் மாட்டிக் கொண்டேன்
தூரமான நாடுகள் எனக்குரியதல்ல அலைவதற்கான தாகம் எனக்குரியதல்ல
பசிபிடித்த எனது இதய வீணைத் தந்தி மீட்டல்
எனது தீவு வீட்டின் அழைப்பாகும்.
பச்சைப் பசேலென்ற பெரும் நதிகளில் மூழ்கிறேன் தீவின் பொற்கதிரவன் சூடு என்னைத் தொடுகிறது அதன் ஊதா அந்திப் பொழுது மறையும் பொழுது
அதன் மதியொளி வைன் பானம் பருகுகின்றேன் பல்லாண்டு அதன் நெஞ்சினில் படுத்துள்ளேன்
6)
தாரகை சூழ்வான் என்னைத் திகைப்பூட்டுகிறது. 0گی
MU)
அதன் இன்பத்திலும் சிரிப்பிலும் பங்கெடுத்துள்ளேன்
அதன் சோக கன்னrர்களுடன் இரத்தம் சிந்தியுள்ளேன் O
அதன் மஞ்சள் கடற்கரைகளில் படுத்திருக்கின்றேன்
அங்கு உடைபடும் சோகியிடம் என் காதுகளால் சொல்லிலடங்கா எனது தீவின் வசியம் இனிய தாழ்ந்த குரலில் கேட்கின்றேன்.
விட்டு விடு!
- மாவை வரோதயன்
உன்னால் முடிந்தால் இன்னும் சில நாட்கள் பொறு நான் - என் சிறகுகளை விரித்துவிடுவேன்! என் இறக்கைகள் தறிக்கப் பட்டிருப்பதாய் நீ தற்பெருமை கொள்ளலாம்!
ஆங்கி உள் வளர்ந்து உணர் வொடுங்கி உறுதி படர்ந்துள்ளன
உன் வாசலைத் தாண்டி நான் பறந்து செல்கையில் நீ உன் வெறுங் கூட்டை மூடு இலக்குகளின் ஒளிர்வு இல்லாத கூடு வெறுமையாகவே கிடக்கட்டும்; விட்டுவிடு

Page 17
காலம்
பதில் சொ
இவர்கள் காலக் கண்ணாடிக்கு கல்லெறிந்தவர்கள்.
தூண் போல நிமிர்ந்தவனை துப்பாக்கி நிர்ப்பந்தத்தால் தூளாக்கியவர்கள்.
அடங்கி வாழ மாட்டோம் என்றவனை அடக்கு முறைக்கு ஆகாரமாக்கியவர்கள்.
தானியங்கள் நிறைந்த நம்காணிகளை தவிடு பொடியாக்கியவர்கள்.
காரணம் உரைக்கும் கல்விக் கோட்டைக்கு கனல் குண்டு வீசியவர்கள்.
சூனியப் பிரதேசமாக்கி எம்பிரதேசத்தை சூறையாடியவர்கள்.
நாலு சுவத்துச் சண்டையை திதிரி
நாட்டினோர் சிரிக்க நாற்சந்திக்குக் கொண்டு வந்தவர்
வேண்டாம் என்றாச்சு வினைவரும் தேடவேண்டாம் என்றாச்சு.

Sぐ姿 S は 十 ல்லும்
སྤྱི་སྤྱི་ ܊ ܐ ܢܠ¬.
காலம் பதில் சொல்லும் என்றும் சொல்லியாச்சு விடவில்லை.
காலக் கண்ணாடிக்கும் கல்வெறி பட்டாச்சு ஆனால் உடைந்த துகள்களே உள்ளங் கால்களை குத்தும் எணர்பதை உணரவில்லை. உணர்வார்கள்.
அப்போது கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுவார்கள்.
க.ஆனந்தகுமார்
விடுகைவருடம் பேராதனைப் பல்கலைக்கழகம்)