கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.11

Page 1
கலை இல்
 

ஸ்க்கியச் சஞ்சிகை

Page 2
=سيمې
எழுதியவர்: மகாலப் பாக்கிஸ்தானியக் கவிஞர் ஹரினம் .ܘܣ[ 'S (ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை) ޗ
31 ஆண்டுகளின் பினர்
அம்மா திருத்த முடியாத உண்மகன் உன் ஆன்மாவின் துணி உலர்த்துங் கயிற்றில் பாட்டுக்களுடனும் கதைப்புத்தகங்களுடனும் கழுத்தாடையுடனும் கஞ்சிக் கிண்ணத்துடனும் தொங்குகிறான்
கல்லறை வாசகங்கள்
கோபக்கார இளைஞர்கள் நமது திரள் பிணக்குழிகளின் கல்லறை வாசகங்களைச் சுவர்களிற் சுலோகங்களாக எழுதுகின்றனர்.
நாம் ஒருவரை ஒருவர் காண இயலும்
யதார்த்தக் கடலுக்கு அப்பால் பழங்கதை ஒன்றன் விளிம்பில் அவள் வாழ்கிறாள். அலைகளோ கொடியன, தாண்ட இயலாதன. தூரத்துத் தொங்கவிவிருந்து அவளை நோக்கிக் கையசைக்கிறேனர்
நம்பிக்கை
பொழுது சாய்வதற்குச் சற்று முன்னம் சூரியன் களைத்து, ஓய்ந்து, அணுகக் கூடியதாக நாம் உற்று நோக்குவதைச் சட்டை செய்யாதிருக்கையில் ஒரு நடுத்தர் வயது விவசாயி தன் இரு மகன்களுடனும் ஒரு மகளுடனும் புல்வயல்களை ஊடறுத்து நேராகச் சூரியனிடம் செல்லும் தெருவிற் தோன்றுகிறான். ஏற்றிச் செல்லும்படி கோரிக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் கையசைக்கிறான்.
(தமிழில்: சி.சிவசேகரம்)

உள்ளே.
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன் ஓவியர்: நா. ஆனந்தன்
ஞானம் #g; சி ைகரிப் பிரசுரமாகும் படைப்புகளினர்
கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை யவர்கள்.
தொடர்புகளுக்கு.
தி. ஞானசேகரன் 197, பேராதனை
கண்டி, G5IT.u. -08-47857O (Office)
08-23.4755 (Res.) O77-3055)
Fax - DB-234755
E-Mail-gmanama}sltnet. Ik
u Luigi
சிறுகதை r = erيتي
961) Tıp GüFpı "..." 04
ஓ.கே.குணநாதன்
புதிய வெள்ளிப் பாதசரம். L5 திருமலை வீ.என்.சந்திரகாந்தி
கட்டுரைகள்
எழுதத் தாண்டும் எண்ணங்கள் . L கலாநிதி தரை. மனோகரன் இலக்கியப் பணியில் இவர். . . . . . It ந. பார்த்திபன்
கவிதைகள்
31 ஆண்டுகளின் பிண் . ... O 2. ஹரினப் க்ஹலிக் இத்தனை நாளும் உயிரோடுதான்!. 20 சுழிபுரம் த.பிரபாகரன் வெள்ளை நாலின் கதறல் கேளுங்க . 21 கந்தளாய் ஏ-தரீக் (86).50i (bif! 6053ă (bif! ................... () கலைஞர் கே.நாகேந்திரன் ஜீவா - உங்களை மன்னிப்பாராக. 31 பெனி யே.ச. தேசமும் தேர்தலும் . வாகரைவாண்ண்
과
நூல் மதிப்புரை . 22 ஏ.இக்பாஸ்
வாசகர் பேசுகிறார் . 2
O3

Page 3
ஒரு பிர்டி சோறு
ஓ. கே. குணநாதன்
(கனடா தமிழர் செந்தாமரை பத்திரிகை சர்வதேச ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்றுக்கொண்ட சிறுகதை)
ன்ெனிப் பெருநிலம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந் šk
துப்பாக்கி வேட்டுக்குப் பயந்து பங்கர்களிலும் பதுங்கு குழிகளிலும் வாழ்வதனைவிட அண்மைக் கால நிவாரண வெட்டு அந்த மக்களுக்கு துன்பச் சுமையாக மாறியிருந்தது.
உணவு - மருந்து - எரிபொருள். பொருட்களின் தடைவிதிப்பு மக்களை நோக்கிய கனரக ஆயுதங்களாக மாறி யிருந்தன.
குண்டு வீச்சுக்கும் - செல்லடிக்கும் - துப்பாக்கி வேட்டுக்கும் தப்பித்து வாழப் பழகிக்கொண்ட மக்களுக்குப் பசிக்குத் தப்ப முடியவில்லை. பசிக் கொடுமையில் அங்கு வாழும் பல்லாயிரம் வயிறுகளும் ஓயாது அழுது கொண்டேயிருந்தன.
அந்தப் பசிக் கொடுமைக்கு சண்முகத்தின் குடும்பமும் விதிவிலக் கல்ல.
அதிகாலையில் எழுந்து ஏதாவது உணவு கிடைக்காதா என்று நப் பாசையுடன் வெளியே சென்ற சண்முகம் இன்னும் விடு திருப்பவில்லை.
அவன் ஏதாவது கொண்டு வரமாட் டானா என்ற ஏக்கத்துடன் தெருவைப் பார்த்தபடி வாசலிலேயே குந்தியிருக்கி றாள் கனகம்,
அவல வாழ்வை எண்ணி எண்ணி இரவு முழுவதும் அழுதிருக்கவேண்டும். கண்கள் சிவந்து வீங்கிப்போயிருந்தன.
அதைவிட - நேற்று முழுவதும் குடலினுள் ஒன்றும் இறங்காததால் ஏற்பட்ட பட்டினி யால் இரவு முழுவதும் தூக்கம் வர மறுத்தது.
பிள்ளைகள் இரண்டு பேரும் மருத மரம் ஒன்றின் கீழே நின்று கெற்றப் போலினால் குருவிகளை இலக்கு வைத்து அடித்துக் கொண்டிருந்தனர்.
மூத்தவன் சங்கருக்கு ஆறு வயது. இளையவன் கமலனுக்கு நாலு வயது. ஆனால் வயதைத் தாண்டிய வளர்ச்சி. பிள்ளைகளைப் பார்க்கப் பாரிதாப மாக இருந்தது.
ஒரு நேரச் சாப்பாட்டிற்கே வழி யில்லை! திண்டாட்டம்!
நேற்று மதியம் குடித்த குறுனல் அரிசிக் கஞ்சித் தண்ணிர். பாவம், பிஞ்சுக் குடல்கள்! வெறும் வயிறு
வாழும் வளரும் பிள்ளைகளுக்கு ஒரு பிடிசோறு ஒழுங்காகக் கொடுக்க
முடியவில்லையே! தமிழனின் தலை விதியை நினைத்து மனம் அழுதது.
இதனைவிட.
கல்விக் கூடங்கள் விமானக் குண்டு வீச்சுக்கு இரையானதால் பிள்ளைகளின் படிப்பு ஆணிவேர் அறுக் கப்பட்ட இளங்கன்றாக மாறியிருந்தது.
இந்த நிலை தொடர்ந்தால்.
இன்று கெற்றப் போலால் குருவிகளுக்கு இலக்கு வைக்கும் பிள்ளைகள் நாளை.
04
 

மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே திரும்பிப்போய் விடலாம் என்று கூட நினைத்தாள்.
மனித வேள்வியின் ஒலங்கள்! செம்மணிப் புதைகுழிகள்! உயிருடன் எரியும் உடமைகள்! வதந்திகள்!
நொடிப் பொழுதில் அந்த எண் ணமே கருகிப்போனது.
அவர்களுடைய குடும்பம் வறுமை யானது அல்ல. போரும் இடப்பெயர் வுகளும் அவர்களை வறுமையாக்கியது - வறுமையாக்கப்பட்டார்கள்.
அவளுக்கும் பசி குடலைப் பிய்த் தது. சிறுகுடலைப் பெருங்குடல் விழுங் குவது போல உணர்வு.
இன்னும் சில மாதங்களில் யுத்த பூமியை எட்டிப் பார்க்க வயிற்றுக்குள் இருக்கும் பிஞ்சுக்காவது சாப்பிட்டே ஆகவேண்டும்.
குசினிக்குள் ஏதாவது சாப்பாட்டுச் சாமான்கள் இருக்காதா என்ற நப்பாசை யில் எழுந்தாள். எழும்ப முடியவில்லை. பசிக்களை உடல் தள்ளாடியது.
மெதுவாக எழுந்து குசினிக்குள் சென்றாள். அவளுடைய கண்கள் குசினியை மேய்ந்தன.
எங்கும் வெறுமை தேநீர் குடிப்பதற்காகவாவது ஒரு சர்க்கரைத்துண்டு கிடைக்காதா? கண் கள் அணு அணுவாகத் துளாவின.
ஏமாற்றமே கிடைத்தது. "அம்மா பசிக்குது." கூரிய அம்பாக மூத்த மகனுடைய வார்த்தைகள் பாய்ந்தன.
திரும்பினாள் அருகே இளையவன் "அம்மா பசிக்குது. அதே வார்த்தைகள். அவளால் வாய்திறந்து பேச முடிய வில்லை. வார்த்தைகள் தொண்டைக்குள்
சிக்கி நின்றன. பெருமூச்சுகள் காற்றோடு கலந்தன.
“என்னம்மா. பசிக்குது.” இது இளைய மகனின் துயரக்குரல். "அச்சாக்குஞ்சுகள். கொஞ்சம் பொறுங்கோ. அப்பா இப்ப வந்திடு வார்."
இந்த வார்த்தைகளை மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.
"சாப் பாடு கொணர் டு வாராம்மா."
“ஓம், கொண்டு வருவார். வெளி
6) (b.
* யில போய்க் கொஞ்ச நேரம் விளை
யாடுங்கோ.”
நம்பிக் கையுடன் இருவரும் தலையை ஆட்டியபடி வெளியே போகி றார்கள்.
எத்தனை நாட்களுக்கு. எத்தனை தடவைகள். இதே சொற்கள். வேதனை களை ஜீரணிக்க முடியவில்லை.
கண் களில் வடிந்த நீரைப் புறங்கையினால் துடைத்தபடி மீண்டும் வாசலிலே குந்திக்கொண்டாள்.
அவளுடைய பார் வைகள் தெருவை வெறித்துக் கொண்டிருந்தன. நேரம் பத்து மணியைத் தாண்டி விட்டது.
இன்னும் சண்முகம் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல இன் றைக்கு எப்படியாவது உணவு லொறி வரும். நிவாரண அரிசி கிடைக்கும்.
கிடைக்கும் அந்தக் கொஞ்ச அரிசி
யைக் கொண்டு ஆற்றாப் பசிக்கொடு மைக்கு ஒரு கஞ்சித் தண்ணியாவது குடிக்கலாம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்
5.
இன்று உணவு லொறி வராமல் விட்டால். மூளை ‘புகாரா விமானத்தின் வேகத்தில் செயற்பட்டது.
அரசாங்கங்களின் தலைவிதியை
0S

Page 4
நிர்ணயிக்கும் ஒரு கிலோ கோதுமை மா நாற்பது ரூபா. ஒரு இறாத்தல் பாண் பதினைந்து ரூபா. இது -
வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழும் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக் கும் பொருளாதாரச் சுமை.
பொருளாதாரச்சுமை அழுத்திக் கொண்டு கனத்துப் போய்க் கிடக்கும் பொழுது அவளால் என்னதான் செய்யமுடியும்.
தொலைவில் சண்முகம் வருவது தெளிவாகத் தெரிகிறது.
தூரத்தில் வரும்பொழுதே அவனை அவளுடைய கண்கள் ஆராய்கின்றன. தோள்களின் வெறுமையையும் கைகளின் சோர்வையும் தளர்ந்த நடையிலிருந்தே புரிந்து கொள்கிறாள். நம்பிக்கை சிதைந்து. இதயம் அறுந்து நரம்பில் தொங்குவது போல உணர்வு.
எத்தனை நாளைக்குத்தான் இந்த அவல வாழ்க்கை. யுத்தமும் - இடம் பெயர்வும் - அகதி நிலையும்.
அகதிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாட்டில் பிறந்தது அவர்களின் தலைவிதி.
அவனோ அவளோ எதுவுமே பேச வில்லை. சோர்வினால் அவனும் வாச லிலே குந்திக்கொண்டான்.
இருவருடைய கண்களும் இமைக்க மறந்துபோய் நின்றன. சிவந்த விழிக்குள் வந்த கண்ணிர் எட்ட நின்று பார்த்தது. வேதனைகளால் உதடுகள் துடித்தன.
அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கண்களில் மட்டும் உயிரை வைத்துக் கொண்டு எலும்புக்கூடாய் மாறி யிருந்தன.
அவனுந்தான் என்ன செய்வான். அவனுடைய இரைப்பையிலும் வெறுமை யின் வெக்கை.
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும்
அவனை இந்த அவல நிலைக்குத் தள்ளிவிட்டது.
அரவணைக்க அழகான மனைவி. அன்பான இரு குழந்தைகள். சொந்தங் கள். உறவுகள். சுதந்திர பூமி. பழகிய மண். யாழ்ப்பாணத்தில் எவ் வளவு சந்தோசமாக இருந்தான்.
ஒரு நாள். அதிகாலைப் பொழுதில் திடீரென வானில் முளைத்த விமானங்கள் குண்டு களைப் பீச்சின. ஹெலிகள் பறந்து பறந்து துப்பாக்கி ரவைகளைக் கக்கின. கவச வாகனங்களின் இரும்புக் குழிகளிலிருந்து புறப்பட்ட குண்டுகள் சீறிப் பாய்ந்தன. எங்கும் மரண ஒலம். நகரம் நிறைந்த புகைமண்டலம். சுதந்திர பூமி மரணங்கள் மலிந்த பூமி யாக மாறிக் கிடக்கிற நகருக்குள் ஆமிக் காரண் புகுந்து விட்டான் என்று கூறிக் கொண்டு கொலைக் களத்தி லிருந்து தப்பிய மாடுகள் கதறி ஓடுவது போல உடமைகளை எடுத்தது பாதி எடுக்காதது பாதியாக. சொத்து சுகங் களை இழந்து சனங்கள் சிதறியடித்து ஓடிக்கொண்டிருந்தனர்.
சணி முகம் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றான்.
தொலைவிலிருந்து வந்த அந்நிய பாஷைகளில் அதட்டல் ஓசைகள் செவிப் பறைகளில் வந்து முட்டி மோதி நிற்கின்றன.
இன்னும் தாமதிப்பதில் னில்லை!
இங்கிருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் மனைவியையும் குழந்தைகளையும் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான்.
உயிர் மட்டும் மிஞ்சியது. அவன் எங்கே ஓடுகிறான் என்று அவனுக்கே தெரியாது. சனங்கள் ஓடும் திசைகளிலே. கால் போன போக்கிலே
L
06

ஓடினான். காடுகளையும் முட்புதர்களை யும் கடந்து ஓடினான். இறுதியில் வள்ளத்தில் ஏறி. கடலலையுடன் போராடி. கிளாலிக் கடலைத்தாண்டி. மரணத்தால் துரத்தப்பட்ட மனிதனாக கிளிநொச்சியை அடைந்தான். “என்னவாம் அப்பா” அமைதியைக் கலைப்பதற்காக கனகமே கேட்டாள்.
“பிச்சை போடுறது போல போடுற நாலு அரிசிக்கு நாயாக அலையிறத விட. நாலு பேரும் நஞ்சைக் குடிச் சிற்றுச் செத்துப்போயிடலாம். எத்தின
நாளைக்குத்தான் இப்படிப் பேயா
s
அலையிறது.
விரக்தியின் விளிம்பிலிருந்து அவ னுடைய வார்த்தைகள் வெளிவந்தன.
“இந்த எச்சில் கஞ்சியைக் குடிக் கிறதவிட நஞ்சைக் குடிக்கலாம்தான். ஆனா. பிள்ளைகள். அவர்களுக் காவது வாழ்ந்துதான் ஆக வேண்டும்!” “கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்கோவன்"
"வன்னிக்குச் சாமான் அனுப்பக் கூடாது என்று ஒடராம். இனிச் சாமானே வராதாம்."
கணவனின் மனநிலை அவளுக்குப் புரிந்தது.
"ஆரைக் குறைசொல்லி என்ன பிரயோசனம்!”
தந்தையின் குரல் கேட்ட பிள்ளை கள் இரண்டு பேரும், "அப்பா வந்திட் டார். அப்பா வந்திட்டார்.” என்று கூறியபடி ஒருவரையொருவர் முந்தி யடித்து ஓடி வந்து தந்தையின் கழுத் தைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
அவர்கள் போட்டி போட்டு ஓடிக் கொண்டு வந்த வேகம். அப்பாவின் மீது கொண்ட பாச உணர்வைவிட. வயிற்றில் உள்ள பசி உணர்வே.! சாப்பாடு ஏதாவது கொண்டு வந்திருப்
07
பாரா என்ற ஆவல்.
“சாப்பாடு ஒன்றும் கொண்டு வர வில்லையா அப்பா”
முத்தமகன் கேட்கிறான். அவர் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.
"அப்பா. பசிக்குதே.!" இளையவன் தந்தையின் நாடியைத் தடவியபடி கேட்கிறான்.
"நேற்று மத்தியானம் சாப்பிட்ட கஞ்சிக்குப் பிறகு ஒன்றும் சாப்பிட வில்லையப்பா."
“சாப்பிடுறத்திற்கு ஒண்டுமில்லை யப்பா.”
பிள்ளைகளின் வார்த்தைகள் நெஞ்சில் செல்லடியை விடப் பேரிடியுாக இருந்தன.
இடம் பெயர்ந்தவர்களுக்கான அகதி நிவாரணம் இனிக் கிடைக்காது என்பதனை இந்தக் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்ல முடியும். சொன்னாலும் இந்தப் பச்சைக் குழந்தைகளுக்குப் புரியுமா என்ன..!
இலங்கையின் இதயம் போல இருக்கும் மக்கள் மீது இதயம் இல்லா தவர்களுக்குக் கோபம் என்று சொன்னால் இந்தப் பிஞ்சுக் குழந்தை களுக்குப் புரியுமா..!

Page 5
யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத் தக் கூடாது என்று தடை செய்திருப்பது சிறுவர்களின் எதிர்காலம் பாழடிக்கப் படாமல் இருக்கத்தான். அப்படியானால் சிறுவர்களுக்கான நிவாரணமும் போகக் கூடாது என்று தடை செய்து சிறுவர் களைப் பட்டினி போட்டுக் கொல்வது எந்த வகையில் நியாயமானது.!
56இல் ஓடிய இரத்தக் கறை இன்னும் காய்ந்து விடாமல் தொடர்ந்து கசிந்து கொண்டேயிருப்பது போல பெற்றோர்களின் கண்களிலிருந்து கண்ணிர் கசிந்ததேயொழிய பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
தன்னம்பிக்கையும் துணிவுந்தானே ஏழைகளின் ஆயுதம்,
ஒரு இறாத்தல் பாண் பதினைந்து ரூபா. ஒரு கோழி முட்டை பதினைந்து ரூபா. முந்தநாள் முட்டை போட்ட கோழி இண்டைக்கு கட்டாயம் முட்டை போடும். அந்த முட்டை டொக்டரின் வீட்டில கொடுத்து காசு வாங்கினால் ஒரு இறாத்தல் பாண் வாங்கலாம். ஒரு இறாத்தல் பாண் வாங்கி ஒருவாறு இன்றைய சாப்பாட்டைச் சமாளிக்கலாம். நாகமணி வாத்தியார் நாலாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த மனக் கணக்குப் பாடம் இப்பொழுதுதான் கனகத்திற்குப் பிரயோசனப்பட்டது.
"கொஞ்சம் பொறுங்கோ. இப்ப ஒரு கோழி முட்டை போடும். அந்த முட்டையை வித்துப் போட்டுப் பாண் வாங்கித் தாரன்."
"இண்டைக்கு எந்தக் கோழி முட்டை போடுமம்மா!"
"கறுப்புப் புள்ளிக் கோழி" "உண்மையா இண்டைக்குப் போடு GLDuibLDIT...”
நம்பிக்கை இழந்தவர்களாக இரு வரும் கேட்கின்றனர்.
“ஓம், கட்டாயம் போடும்."
08
“gff” தலையை அசைத்தபடி இருவரும் போகிறார்கள்.
"அண்ணா, அந்தப் புள்ளிக் கோழி எங்க போயிருக்கும்."
"அது குப்பை மேட்டிலதான் நிற்கும். வா போய்ப் பாப்பம்.!
"அந்தா நிக்குதண்ணா அந்தப் புள்ளிக் கோழி”
குப்பை மேட்டில் கோழி குப்பை யைக் கிளறிக் கொண்டு நிற்கின்றது.
இருவரும் குப்பை மேட்டிற்கு அருகில் நின்று கோழியையே பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இம். நேரம் போனதேயொழிய கோழி முட்டை போடு வதாக இல்லை. குப்பை மேட்டில் மேய்ந்து கொண்டேயிருந்தது.
"அண்ணா இண்டைக்குக் கோழி முட்டை போடாது போல கிடக்குது" அலுத்துக் கொண்ட இளையவன்.
"அம்மாட்டப் போய்ச் சொல் லுவம். "
இருவரும் அம்மாவிடம் புறப்படு கிறார்கள்.
"அண்ணா நீ வராத, நான் அம் மாட்டப் போய்ச் சொல்லுறன். நீ இதில நில்லு. நாம அங்கால போக. கோழி எங்கயும் போய் முட்டையைப் போட் டிரும். "
இளையவன் தாயிடம் ஓடுகின்றான். "அம்மா, இன்னும் கோழி முட்டை போடயில்லையே. இண்டைக்கு முட்டை போடாது போல கிடக்குது."
"இண்டைக்கு கட்டாயம் முட்டை போடும்."
மீண்டும் சந்தோசத்துடன் துள்ளிக் குதித்துக் கொண்டு அண்ணனிடம் ஒடுகின்றான்.
கோழி நிற்கிறது.
“இண்டைக்குக் கட்டாயம் போடு
குப்பை மேட் டிலேயே

LDTib SSWör6001ff."
இருவரும் பார்த்துக் கொண்டே
நிற்கின்றார்கள்.
இருவருக்கும் கால் கடுக்க அதி லேயே இருவரும் குந்திக் கொண் டார்கள்.
குப்பை மேட்டில் மேய்ந்து கொண் டிருந்த கோழி மெல்ல மெல்லக் கேரிய படி நகர ஆரம்பித்தது.
கோழி நகர நகர இருவரும் கோழிக்குப் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார்கள்.
கோழி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்களும் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.
இருவரும் கோழிக்குப் பின்னா லேயே திரிவதைக் கண்ட தாய் “டேய், கோழியைத் துரத்தாதங்கடா. கோழி யைத் துரத்தினால் முட்டை போடாது." சத்தம் போட்டாள்.
அவ்வார்த்தைகளை அவர்கள் கேட்பதாக இல்லை. அது போகுமிட மெல்லாம் போனார்கள்.
அங்கும் இங்கும் தத்தித் தத்திப் பாய்ந்து திரிந்து இறுதியில் முட்டை போடுவதற்கென வைக்கப்பட்டிருந்த 'பக்கீஸ்' பெட்டியின் மேலே பாய்ந்தது. இருவரும் அடைந்த சந்தோசத் திற்கு அளவேயில்லை.
“முட்ட போடப்போகுது. முட்ட போடப் போகுது.” இருவரும் துள்ளிக் குதித்தார்கள்.
கோழி பக்கீஸ் பெட்டியினுள் படுத்துக் கொண்டது.
இருவரும் அடிக்கடி பெட்டியை எட்டிப் பார்த்தார்கள். கோழி அப்படியே படுத்துக் கிடந்தது.
"அண்ணா. முட்டை போட்டுட்டா எண்டு பாக்கட்டா பொறுமையிழந்தவ னாக கோழியின் வாலில் பிடித்துத் தூக்கிப் பார்த்தான்.
siu wwas was ".
09
இன்னும் முட்டை போடவில்லை. ஆள்மாறி ஆள் அடிக்கொரு தடவை கோழியின் வாலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்துக் கொண்டேயிருந் தார்கள்.
முட்டை போடவில்லை. கோழி படுத்துக் கொண்டேயிருந்தது.
நீண்ட நேரத்தின் பின்பு - கோழி மெதுவாக எழுந்து நின்றது. சந்தோசத்தின் உச்சிக்கே போய் விட்டார்கள்.
முட்ட போடாதா... முட்ட போடாதா. இருவரும் கண்ணிமைக் காமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள். “போடப் போகுது. போடப் போகுது." இருவரும் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார்கள்.
கோழி முக்கி. முனக. முட்டை வெளியே வந்து வீழ்ந்தது.
முட்டை வழுவழுப்பான ஈரம் காயாமல் உமி ஒட்டிப்போய்க் கிடந்தது. முட்டையைக் கண்ட சந்தோசத்தில் "அம்மா முட்டை போட்டிட்டு. அம்மா முட்டை போட்டிட்டு.” என்று முட்டை யைத் தூக்கியபடி இளையவன் தாயிடம் ஓடினான்.
"தாடா. தாடா.." என்றபடி பறிப்பதற்காக மூத்தவன் பின்னால் ஓடினான்.
முட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைக் கண்ட தாய், "கவன மடா. கவனமடா." என்று கத்தினாள்.
அதற்கிடையில் - கையிலிருந்து முட்டை நழுவியது.
நேர்காணல்
oI/Aaia (G)arrfDah

Page 6
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
குலாநிதி தரை.மனோகரனி)
மறக்கமுடியாத அறிவிப்பாளர்
எனது சிறுவயதிலிருந்து என்னை அறியாமலே என் மனதைக் கவர்ந்தவர்கள் முக்கியமாக மூவர். ஒருவர் சிவாஜிகணேசன். மற்றவர் ரி.எம்.சௌந்தரராஜன். இன்னொருவர் அறிவிப்பாளர் மயில்வாகனம். வானொலி யில் மயில்வாகனத்தின் குரல் ஒலிக்கும் வேளை யெல்லாம் மகிழ்ச்சிகரமான நேரமாகவே எனக்குத் தோன் றும். அவரது வித்தியாசமான குரல்வளமும், தனித்துவ மான அறிவுப்புப் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தவை.*
இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையை ஒரு காலத்தில் முழுமையாகத் தமது ஆதிக்கத்திற் கொண்டிருந்தவர், மயில் வாகனம். அச்சேவையை இலங்கைக்கு வெளியிலும் பிரபலப்படுத்தி வைத்தவரும் அவரே. பல்வேறு நிகழ்ச்சிகளை வர்த்தகசேவையில் தொடக்கிவைத்து, அந்நிகழ்ச்சி களுக்குப் பெரும்மதிப்பை மக்கள் மத்தியில் அவர் ஏற்படுத்தினார். எந்நிகழ்ச்சியை அவர் நடத்தும்போதும், தமது விமர்சனப்பாங்கான கருத்துக்களைத் துணிச்சலாக வானொலி மூலமே தெரிவிப்பது அவர் வழக்கமாக இருந்தது. நிகழ்ச்சிகளைச் சுவாரசியமாக ஒலிபரப்புவதிலும் அவர் கைதேர்ந்தவராக விளங்கினார்.
மயில்வாகனத்தின் புகழுக்குச் சான்றாக, ஒரு தமிழ்த் திரைப்படக் காட்சி யொன்றில் அவரது பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வும் சுவாரசியமானது. ஒருமுறை இசையமைப் பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நிகழ்ச்சியொன்றில் மயில்வாகனமும் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அந்நிகழ்ச்சியிற் பங்குபற்றிய பிறரையெல்லாம் ரசிகர் களுக்கு அறிமுகப்படுத்திய விஸ்வநாதன், ஒரு வித்தியாசத்துக்காக, மயில் வாகனத்தின் பெயரைக் குறிப்பிடாமலே அவரை மேடைக்கு அழைத்தார். யார் பேசப்போகிறார் என்று அறியாத நிலையில் இருந்த ரசிகர்கள் மத்தியில் மயில் வாகனம் வந்துநின்று மைக்கின் முன்னால் "வணக்கம்” என்ற ஒரு சொல்லைக் கூறிய மாத்திரத்திலேயே அவர்கள் அனைவரும் "மயில்வாகனம் மயில்வாகனம்" என்று ஆரவாரம் செய்தார்களாம்.
மயில்வாகனம் வானொலி அறிவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், எழுபதுகளின் பிற்பகுதியில் (1977, 78 ஆக இருக்கலாம்) யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு பத்திரிகையின் ஞாயிறு இதழ்களில் தமது வானொலி, கலையுலக அனுபவங்களைத் தொடராக, சுவாரசியமான முறையில் எழுதிவந்தார். அவர் எழுதிவந்த அந்தக் கட்டுரைத்தொடரை அப்போது நான் விரும்பி வாசித்ததுண்டு. பலர் அறிந்திராத பல சுவையான தகவல்கள் அந்தத் தொடரில் வெளிவந்தன. அந்தக் கட்டுரைத்தொடர் நூலாக வெளிவந்திருப்பின், மயில்வாகனம் காலத்து இலங்கைவானொலி, தமிழ்க் கலையுலகம் தொடர்பான
10
 

ஒரு பதிவேடாக அது அமைந்திருக்கும்.
படத்தின் பெயரையும், பாடுபவர்களின் பெயர்களையும் மாத்திரம் கூறத் தெரிந்த சில வர்த்தகசேவை அறிவிப்பாளர்களைப் போலன்றி ஆளுமை பொருந் திய அறிவிப்பாளராக அவர் திகழ்ந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு. இலங்கை வானொலியின் வர்த்தகசேவை பற்றிச் சிந்திக்கும் எவரும் மயில்வாகனத்தை இலகுவில் மறந்துவிடமுடியாது. தமிழ்த்தினப்போட்டிகளில் நாடகம்.
நாடகம் சமூகத்தின் பலதரத்தினரையும் கவரும் சிறந்ததொரு கலையாக விளங்குகிறது. நாடகத்தோடு சம்பந்தப்படுவதும், நாடகத்தை ரசிப்பதும் மன நிறைவைத் தருபவை. ஆனால், இலங்கையின் தமிழ்த் தினப்போட்டிகளில் நாடகம் படும் பாடு சொல்லுந்தரமன்று.
முன்னொரு காலத்தில் (1990களின் தொடக்கத்தில்) தமிழ்த் தினப்போட்டி யொன்றில் இடம்பெற்ற சமூக நாடகமெர்ன்று மாகாண மட்டத்திலும், தேசியமட்டத் திலும் நடுவர்களால் முதலாம் இடத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மலையகத் தின் சமகாலப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டதாக அந்நாடகம் அமைந் திருந்தது. ஆனால், மலையகத்தின் விதிகளில் தேனும் பாலும் ஓடுவதாகக் கலை இலக்கியங்களில் காட்டப்படவேண்டும் என விரும்பிய அரசியல்வாதி யொருவர் அந்நாடகத்துக்கு முதற்பரிசு வழங்குவதற்குத் தமது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தார். நடுவர்களின் முடிவுகளை அவர் கருத்திற் கொள்ள விரும்பவில்லை. அரசியல்வாதிகளின் முகங்களை மாத்திரமே பார்த்துப் பழகிய சில கல்வியதிகாரிகள், அதற்குப்பின் பல ஆண்டுகளாகத் தமிழ்த்தினப்போட்டிகளில் சமூகநாடகத்தின் மேடையேற்றத்தையே தடுத்துவிட்டிருந்தனர். சந்திரமதியின் புலம்பல், தமயந்தியின் அழுகை, சீதையின் துயரம், பாஞ்சாலியின் பரிதாபநிலை, போன்றவை இருக்கத்தக்கதாகச் சமூகநாடகக் கருக்கள் எதற்கு என்று கல்வி அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர் போலும்!
பின்னர், நீண்ட காலத்தின் பின் தீடீரென ஏற்பட்ட ஞானோதயத்தால், கல்வி அதிகாரிகள் இவ்வாண்டில்(2001) மீண்டும் சமூகநாடகத்துக்குப் "புத்துயிர்” அளிக்க முன்வந்தனர். ஆனால், தமிழ்த்தினப்போட்டியில் நாடகத்துக்காகக் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறை நல்ல நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ". இவற்றுள் ஒன்றினைத் தெரிந்து அப்பாடற் பொருளுக்கு இசைவாகச் சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பாங்கில் நாடகம் ஒன்றினைத் தயாரித்து நடித்தல். இது சமூக நாடகமாக அமையும். ஆயினும் உரையாடல் மொழிப்பிரயோகம் நிபு:மத் தமிழில் அமைதல் வேண்டும்” என்று போட்டி விதி முறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக நாடகத்தின் உரையாடல்கள் நியமத் தமிழில் அமையவேண்டு மாயின், சமூக நாடகம் என்று அதற்குப் பெயரிட்டு அழைப்பதில் என்ன பயன்? சமூக நாடகம் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். சமூகத்தைப் பிரதிபலிக்கவேண்டிய அம்சங்களில் ஒன்று, பாத்திரங்களின் உரையாடல் பேச்சுவழக் கில் அமைவது. உரையாடல்கள் செயற்கையாக இடம்பெறக்கூடாது. இலங்கையின் தமிழ் நாடகத்துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை அவர்கள் நாடகம் பற்றித் தெரிவித்த கருத்தினை இங்கு நினைவு 11

Page 7
கூர்வது பொருத்தமானது. "நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது. ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவார் பேசல் வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், தமிழ்த்தினப்போட்டிக்குப் பொறுப்பாகவுள்ள தமிழ்க் கல்வி அதிகாரிகளுக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை. "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்ற முறையில், தமது மனத்துக்குப் பட்டவற்றையே போட்டிவிதிகளாக ஆக்கி, நாடகம் பற்றிய தமது அறியாமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திவிட்டனர். ஆனால், அவர்களது தேவையற்ற விதிகளுக்குள் சிக்கித் தவித்த மாணவர்களும், ஆசிரியர்களும் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்! எழுத்துப்பிழைகளும் அச்சுப்பிழைகளும்
இலங்கையில் தமிழ் நூல் வெளியீடு என்பது மிகவும் புனிதமான பணியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து கருதப்பட்டுவந்தது. ஆறுமுகநாவலர் பதிப்பு என்றால், அது சுத்தப்பதிப்பு என்று தமிழ் நாட்டிலேயே அங்கீக்ாரம் பெற்றிருந்தது. இலங்கையிலிருந்து வெளிவந்த நூல்களில் எழுத்துப்பிழைகள், அச்சுப்பிழைகள் இருக்கமாட்டா என்ற கருத்து தமிழ்நாட்டிலும் நிலவி வந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
கண்களைப் பறிக்கும் அழகிய அட்டைகளுடனும், பளபளப்பான தாள் களுடனும் இலங்கையிலிருந்து வெளிவரும் நூல்களிற் கணிசமானவை, எழுதிய வர்கள் விடுகின்ற எழுத்துப்பிழைகளுடனும், அச்சுப்பதிப்போர் விடுகின்ற அச்சுப் பிழைகளுடனும் வெளிவருகின்றன. (தமிழ் நாட்டுக்கும் இது பொருந்தும்) ஆனால், இத்தகைய நூல்களுக்குக் குறிக்கப்படும் விலைகளே வானத்தை முட்டத்தக்கவை. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போன்று ஒரு சம்பவம் நமது நாட்டில் நடந்துள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணசபை 2000 ஆண்டுக்கான சாகித்தியத் தேர்வுப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிறுகதைத் துறைக்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்களுள் ஒன்றாக அங்கையன் கயிலாசநாதனின் "அங்கையன் கதைகள் விளங்குகிறது. அங்கையன் கயிலாசநாதன் இந்நாட்டின் சிறந்த எழுத்தாளருள் ஒருவர் என்பது பற்றிக் கருத்துவேறுபாட்டுக்கு இடமில்லை. அவரது கடற்காற்று என்னை மிகவும் கவர்ந்த நாவல்களுள் ஒன்று. அவரின் அங்கையன் கதைகள் என்ற சிறுகதைத்தொகுதியும் சென்ற ஆண்டில் வெளிவந்த குறிப்பிடத்தக்க தொகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆயினும், 105 பக்கங் களைக் கொண்ட இந்நூலில், ஏறத்தாழ 73 இடங்களில் அச்சுப்பிழைகள் நிறைந் துள்ளன. இவற்விைட, இந்நூலின் 54ம் பக்கத்தில் சில வரிகள் தவறவிடப் பட்டுள்ளன. ஆங்காங்கு ஒருசில இடங்களில் தவறுதலாக அச்சுப்பிழைகள் இடம்பெற்றிருப்பின், அவற்றைப் பெரிதுபடுத்தாமல் விடுவதில் நியாயமுண்டு. ஆனால், ஒரு மாகாணசபையினால் சாகித்தியப் பரிசுக்கென நூல்கள் தேர்ந் தெடுக்கப்படும்போது, அவை இயன்றவரையிற் குற்றங்குறைகள் அற்றவையாக இருக்கவேண்டும். ஆனால், வடக்கு - கிழக்கு மாகாணசபை, அச்சுப்பிழைகள் மலிந்த நூல்களாக இருப்பினும், எழுத்தாளர் பிரபலமானவராக இருப்பின், அவற்றுக் குப் பரிசளித்துக் கெளரவிக்கத் தயங்கவேமாட்டாது என்பதை நிரூபித்துக் காட்டி யுள்ளது. நூல்களை வாசிக்காமலே தேர்வுகள் நடைபெறுகின்றனவா என்ற நியாய மான சந்தேகமும் ஏற்படுகிறது.
12

தாமரைச் செல்வி
ந.பார்த்திபன்
தாமரைச் செல்வி என்ற புனையெரில் எழுதிக்கொண்டிருக்கும் திருமதி ரதிதேவி கந்தசாமி 1973ஆம் ஆண்டிலிருந்து வானொலிக்குச் சிறுகதைகள் எழுதிய போதும் 'ஒரு கோபுரம் சரிகிறது என்ற சிறுகதை வீரகேசரிப் பத்திரிகையில் 1974ஆம் ஆண்டில் பிரசுரமானதுடன்தான் எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமாகியது. சுடர், மல்லிகை, சிரித்திரன், மாணிக்கம், அமிர்தகங்கை, கலாவல்லி, தாரகை, களம், வெளிச்சம், நர்ற்று, நெம்பு, ஆதாரம், பெண்ணின் குரல் ஆகிய சஞ்சிகை களிலும் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினக்குரல், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, ஈழநாதம் ஆகிய பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவற்றைவிட இவரது எழுத்தின் சிறப்புக்கு தமிழக சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசுகிறது, மங்கை என்பனவும் களங்கொடுத்துப் பிரசுரம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், "அவர்கள் தேவர்களின் வாரிசுகள், "வீதியெல்லாம் தோரணங்கள், வேள்வித் தி, ஆகிய மூன்று குறுநாவல் களும், "சுமைகள், “விண்ணில் அல்ல விடிவெள்ளி, தாகம், 'உயிருள்ளவரைஆகிய நான்கு நாவல்களும் எழுதியுள்ள தாமரைச் செல்வி கடந்த முப்பதாண்டுகளாக எழுதி வருகிறார் என்பது மனங்கொள்ளத்தக்கது. இதுவரையில் 'சுமைகள் என்ற நாவல் 1978ல் வீரகேசரிப் பிரசுரமாகவும், “விண்ணில் அல்ல விடிவெள்ளி என்ற நாவல் 1992ல் மீரா வெளியீடாகவும், தாகம் என்ற நாவல் 1993ல் மீரா வெளியீடாகவும், 'வேள்வித் தீ என்ற குறுநாவல் 1994ல் மீரா வெளியீடாகவும், ‘ஒரு மழைக்கால இரவு என்ற சிறுகதைத் தொகுப்பு 1998ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.
நான் எழுத ஆரம்பித்த நாட்களில் வேறு எழுத்தாளர்களினுடைய அறிமுகமோ, நேரடி வழிகாட்டலோ, எனக்குக் கிடைத்ததில்லை எனக் கூறும் இவர், நேரடி முன்னோடிகள் இல்லாதபோதும் பல்வேறு எழுத்தாளர்களினது எழுத்துக்களை வாசித்ததன் காரணமாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். ஏகலைவத்துவமாக எழுத முற்பட்டபோதும் ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் கணிப்புக்கு உரியவராய்த் திகழ்கின்றார் என்பது தமிழ் இலக்கிய உலகு ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். மேலும் முற்போக்கு, நற்போக்கு, என்றோ இன்னும் பல இஸங்கள் என்றோ எவற்றிலும் பெயர் பதியாமல் தன்னை இனங்காட்டியுள்ளார் என்றும் குறிப்பிடலாம். 'என் கண் முன்னால் விரிந்து கிடக்கும் அவலங்களை எழுதி, மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்வதில் எனக்குத் திருப்தி கிடைக்கிறது என்றும், ‘என்னுடைய ஒவ்வொரு படைப்புகளையும் மிக விருப்புடனும், ஈடுபாட்டுடனுமே எழுதுகிறேன்" என்றும், நான் என்னுடைய பிரதேசம் பற்றியும் இங்கு வாழ்கின்ற மக்கள் பற்றியும் அவர்களின் பிரச்சினைகளின் தன்மைகளுடே என் படைப்புகளில் பதிவு செய்கிறேன்' என்றும் குறிப்பிடும் இவர், கலைத்துவத்துடனும் - எழுதுகிறார் என்பது விமர்சகர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றே. இவரது எழுத்துக்கள் வாசகரிடத்தும் பெரும் வரவேற்பைப் பெற இதுவும் 13

Page 8
ஒரு காரணம் எனலாம்.
எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வீரகேசரி பிரசுர வெளியீட்டுப் பொறுப்பாளர் திரு எஸ்.பாலச்சந்திரன் கதைகள் எழுதுவது பற்றிப் பல ஆலோசனைகளை வழங்கியதுதான் என் எழுத்தைத் தொடர்ந்து வந்த காலங்களில் வளமாக்க உதவியிருக்கின்றன என நன்றியுடன் குறிப்பிடும் இவர், தனது கதைகளை ஏற்று பிரசுரித்து ஆதரவு தந்து வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற பத்திரிகைகள் - சஞ்சிகைகளை மறவாது குறிப்பிடுகிறார். மேலும் எழுதவேண்டும் என்று நான் எழுத ஆரம்பித்தபோது இலக்கியத்தில் எந்தவிதமான பரிச்சயமோ - தொடர்போ இல்லாது இருந்தபோதும் என் பெற்றோர் தந்த ஆதரவும், இவரது கணவர்(சி.கந்தசாமியும் தமிழ்நேசன் என்ற பெயரில் கவிதைகளும், வரணியூர் சி.கந்தசாமி என்ற பெயரில் 1970களின் ஆரம்பத்தில் வீரகேசரியில் சிறுகதைகளும் எழுதியவர்) காட்டிய ஊக்கமும், ஆதரவும் தொடர்ந்து எழுதச் செய்துள்ளன என்று மகிழ்வுடன் தெரிவிக்கின்றார். முதலில் தன் எழுத்துக்களை விமர்சித்த உடன் பிறப்புக்களும் பெரும் உந்து சக்தியாக அமைந்தது இவருடைய இலக்கியப் பணிக்கு உறுதுணையாயிருந்துள்ளன.
தாமரைச்செல்வியின் எழுத்துக்களில் காணப்படும் வீரியம்; எரியும் பிரச்சினைகளை அவை தாங்கி வருகின்றன என்பதாலேயே. எங்கேயோ கேட்ட குரல் போல் இல்லாது சூழலுக்குள் நின்று தானும் பல கஷ்டங்களையும் - துன்பங்களையும் அனுபவித்து எழுதும் எழுத்து தனித்துவமானதல்லவா. குறிப்பாக 'வன்னியில் வாழும் மக்களின் இழப்புக்களையும், துயரங்களையும் வேறு இடங் களில் வாழும் பிற மக்களும் உணர்ந்து கொள்ள என் படைப்புகள் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதும் இவர் பல பரிசுகளையும் - பாராட்டு களையும் பெற்றுக்கொள்வதில் வியப்பில்லையே.
இவர் எழுதிய 18சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளதோடு, கலாவல்லி சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் அவர்கள் தேவர்களின் வாரிசுகள், வீரகேசரியும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடாத்திய கனக செந்திநாதன் நினைவுதின குறுநாவல் போட்டியில் ‘வீதியெல்லாம் தோரணங்கள், முரசொலி பத்திரிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “வேள்வித் தீ, யாழ் இலக்கியப் பேரவையின் நாவல் போட்டியில் “விண்ணில் அல்ல விடிவெள்ளி, யாழ் இலக்கிய பேரவையின் நாவல் போட்டியிலும், சுதந்திர இலக்கிய அமைப்பின் நாவல் போட்டியிலும் தாகம், வட- கிழக்கு மாகாண அமைச்சின் (சிறுகதைத்தெரிவில்) சாகித்தியப் பரிசு (1998) ஒரு மழைக்கால இரவு எனப் பல பரிசுகள் பங்கு பற்றிய துறைகளிலெல்லாம் கிடைத்துள்ளன. எண்ணிக்கையில் அதிகமான ஆக்கங் களைப் படைத்தபோதும் அவை தரமானதாயும் இருப்பது தாமரைச் செல்வியின் சிறப்புக்குக் கட்டியம் கூறும்.
தாமரைச் செல்வி நல்லதோர் ஓவியராகவும் திகழ்வது இவருடைய திறமைக்கு சான்றாகின்றது. தன்னுடைய சிறுகதைகள் பலவற்றிற்குத் தான் வரைந்த ஓவியங்களையே பிரசுரிப்பது மிகப்பெரிய உதவியாக இருக்கும். இவரு டைய ஓவியங்கள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுடர், குங்குமம் போன்றவற்றில் பிரசுரமாகியிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது இவருடைய இன்னொரு பரிமாணமாகவும் உணரக்கூடியதாயிருக்கிறது. ஈழத்து இலக்கிய முயற்சிகளில் தாமரைச் செல்வியின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாதது மட்டுமல்ல, நல்லதோர் ஆய்வுக்கான தலைப்பாகவும் இருக்குமெனத் துணிந்து கூறலாம். இவ்வருடம் வட கிழக்கு மாகாண அமைச்சின் ஆளுனர் விருது பெறும் தாமரைச் செல்வியின் எழுத்துக்கள் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம்.
14

‘புதிய வெள்ளிப் LJTg5gyi
- திருமலை வீ.என்.சந்திரகாந்தி - 發
சிவன் ஆலயத்தில் பூர நட்சத்திர மும் சித்தயோகமும் கூடிய சுப முகூர்த்த வேளையில் தாலி கட்டி ‘நித்திய மங்கள கல்யாண மண்டபத்தில் மதிய போசன விருந்துக்கும் ஏற்பாடாகியிருந்த விவாக வைபவம் அது.
வெளிநாட்டு மாப்பிளையாதலால் எதிலுமே குறை என்று இல்லாமல் எல்லாக் காரியங்களுமே கனகச்சிதமாக நடந்தேறிக் கொண்டிருந்தன.
மாப்பிள்ளையும் மணமகளும் மண வறையில் அமர்ந்திருக்க. புரோகிதரின் மந்திர உச்சாடனத்துடன் தவில் ஓசை யும் நாதஸ்வர இசையும் கலந்துவர. ஓம குண்டல நெய் வாசனையும் பந்தி மணமும் காற்றில் பரவி வர. எல்லாமே தேவலோக காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தன.
புரோகிதருக்கு அடுத்தபடியாக விவாகம் போன்ற மங்கள கருமங்களின் விதி முறைகளை நன்கு தெரிந்து வைத் திருப்பவரும். அது பிழை. இப்படிச் செய்யுங்கோ’ என்று கூறி அதிகாரம் செய்யுமளவுக்கு வளர்ந்து வருபவரு மான 'வீடியோக்காரர் தனது கருமத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
அவ்வூர் பிரமுகர்களில் ஒருவரான செல்லையரும் தனக்கு விடுக்கப்பட்ட இரு சாரார் அழைப்பை ஏற்று பாரியார் சகிதம் வந்த இடத்தில் தனது பால்ய நண்பன் ராஜசேகரத்தையும் மனைவி யையும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டதில் அகமிக மகிழ்ந்து அவர் களை தனது மனைவிக்கு அறிமுகம்
செய்து வைத்தார்.
செல்லையர் பிடிவாதக்காரர். மனைவி பிள்ளையில் பாசம் மிகக் கொண்டவர். நாட்டுப் பற்றும் அதிகம். “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தும் இந்நாடே. என்று இளம் சமுதாயம் நினைந்துருக வாழ்ந்து காட்டி
வருபவா.
ராஜசேகர் பெரும் தனவான். அமைதியான போக்கைக் கடைப் பிடிப் பவர். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். செல்லையரின் எளிமை, உணர்ச்சி பூர்வமான செயற்பாடுகளால் கவரப் பட்டவர். குசேலருடனான கண்ணபகவா னின் நட்புக்கு இருவரும் எடுத்துக் காட் டானவர்கள்!
‘ஊரிலை இருந்த காலத்திலை ஒரு பொங்கல். தீபாவளி. கோயில் திருவிழா என்று சந்தித்து நட்பையும் உறவையும் வளர்த்தம். அதெல்லாம் பழைய கதை. இப்போ எவர் எவருக்கோ நடக்கின்ற கலியாணவீடு அல்லது எவரோ ஒருத்தருடைய மகளின் சாமத் தியவிடு என்று வரும்போதுதான் எதிர் பாராதவிதமாக சந்திக்கக்கூடியதாக இருக்கின்றது. செல்லையர் குறைப் பட்டுக் கொண்டார்.
"அதைவிடும் செல்லர். பிள்ளை குட்டிகளைப் பற்றி சொல்லும், நாங்கள் ஒரே சமூகம், ஒரே ஊரைச் சேர்ந்த னாங்கள். இண்டைக்கு தேசாந்தரம் அலைந்து திரிந்தாலும் உறவு கொண் டாட வேண்டியவர்கள்.” ராஜசேகர் செல்லையருடனான பால்ய கால நட்பை அவ்விதம் கூறி நினைவு கூரவும்
15

Page 9
செல்லையர் பதில் கூறினார்.
"எனக்கு ஒரே பையன். பதினெட்டு
வயதிலை இலண்டன் போனவன்.
இப்போ இருபத்தியெட்டு வயது"
"கலியாணம் முடித்து விட்டாரோ?”
சேகரின் மனைவி உரையாடலில் கலந்து கொள்வதற்கு அக்கேள்வி உதவியதாயினும் அவளுடைய உள்ளக் கிடக்கையிலிருந்து அவ்வினா எகிறித் தான் குதித்துவிட்டது! பெண்ணைப் பெற்றவர்களுக்குத்தான் எத்தனை மனங்கள்!
“என்ன அப்படிக் கேட்டுப் போட் டியள். அவர் சின்னப் பிள்ளை. மற்றது நாங்கள்தான் இனிமேல் பார்த்து இங்கிருந்து ஒரு பெண்ணை அனுப்பி வைக்கவேணும். அவராக ஒரு முடிவு எடுக்கின்ற மாதிரி நாங்கள் அவரை வளர்க்கவில்லை."
நல்ல குணசாலியும் உயர் தொழில் புரிபவனுமான ஒரு மாப் பிள்ளையை தயார் நிலையில் வைத் திருக்கும் பெற்றோர்களுக்குரிய 'செட் டுடன் செல்லையரின் மனைவியிட மிருந்து பதில் வந்தது.
மணவறைக் கருமங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு ஒழுங்கு முறையில் மந்திர உச்சாடனமும் மணி ஓசையும் தவிலுடன் நாதஸ்வர இசையும் மாறி மாறியும் ஒன்றிணைந்தும் ஒலித் தன. ஐயரின் தலை அசைப்புக்களை கவனத்துடன் அவதானித்து ஒவ்வொரு தேங்காயையும் மிக மிகப் பக்குவமாக உடைத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். தான் நன்றாகத் தேங்காய் உடைப்பதில்தான் புதுமணத் தம்பதி களின் எதிர்கால இல்லற வாழ்க்கை தங்கியுள்ளதாக அவர் நம்பினார்.
செல்லையர் அங்கு நடப்பன அனைத்தையும் அக்கறையுடன் அவ தானித்துக் கொண்டிருந்தார். ஆனாலும்
16
அவருக்கு ஒரு விடயம் மட்டும் நெருஞ்சியாக மனதில் தைத்தது. அதை வெளிப்படையாகவே சேகருக்குக் கூறினார்.
"மாப்பிள்ளைக்கு நாற்பத்தியாறு வயது. மணமகளுக்கு நாற்பத்தியைந்து வயது. இந்தக் கலியாணம் இருபது வருடங்கள் முன்னராக நடந்திருக்க வேண்டிய சிறப்பை மறைப்பதற்காக இங்கு என்னென்னவோ தேவையில்லாத விடயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுபோல் உள்ளது."
அனைவர்க்கும் குளிர்பானம் பரிமாறப்படுகின்றது. அந்த நேர தாகத்திற்கு அவசியமாகத்தான் தெரி கின்றது. ஆனால் உபவாசம் இருந்து வழிபாடு இயற்றும் கோயில். வரு மானம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டால் விட்டுக் கொடுப்பனவுகளையும் மேற்கொள்ளவேண்டும் போலும்!
செல்லையர் சுட்டிக் காட்டிய விடயம் சேகரின் நெஞ்சையும் பிழிந்தது. குறுகிய எதிர்காலம் கண்முன்னால் தெரிகிறது.
இளவயது மணமக்களுக்கு மண வறையில் இருக்கக்கூடிய படபடப்பு. ஆர்வம். கவர்ச்சி. வேகம். எதனை யும் காணமுடியவில்லை. ஐயரின் செயற் பாடுகள் கூட சிலசமயங்களில் ஏனொ தானோ என்றிருக்கின்றது. முகூர்த்த நேரம் தப்பிப்போய்க் கொண்டிருப்பது கூட எவருக்கும் பெரிதாகத் தெரிய வில்லை.
புதிய கூறை மாற்ற மணமகள் எழுந்து செல்கின்றாள். மணவறை செயற்பாடுகள் ஸ்தம்பிக்கின்றன.
சேகர் கூறினார். "லேட் மறிச் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். உரிய வயது கடந்து விவாகம் செய்தல். வாழ்க்கையை மனம் போன போக்கில் அனுபவித்து முடித்துவிட்டு இறுதிக்

காலத்தில் நிரந்தர துணைதேடும் வெளிநாட்டுக் கலாசாரம் எங்களுடைய சமுதாயத்தில் பிள்ளைகளுக்கு விவாகம் தாமதமாவதற்கு காரணங்கள் வேறு. ஒரு ஆண் தனது சகோதரி களைக் கரைசேர்ப்பதற்காக காலம் பூரா கவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றான். ஒரு பெண் உரிய மாப்பிள்ளைக்கு வேண்டிய வரதட்சணையை பெற்றோ ரும் உடன் பிறப்புகளும் தேடும்வரை பொறுமையுடன் காவலிருக்கின்றாள். எமது கலாசாரம் எமது குழந்தைகள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இவை"
"உண்மைதான்!” செல்லையர் தலையை வேகமாக ஆட் டியபடி தொடர்ந்தார். “ஒரு ஆணும் பெண்ணும் மனதால் இணைவதற்கு அவர்களுடைய இளமையும் ஆரோக்கியமும்தான் பிரதா னம்! பச்சைப்படியான சில உண்மை களைத்தான் எம்முன்னோர் ‘காலத் திலை பயிர் செய் என்று சுருக்கமாகவும் கெளரவமாகவும் கூறியிருக்கிறார்கள்” “ஓம் ஓம்’ செல்லையர் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே கூறினார். “இந்தத் தவறை நாங்களும் எமது பிள்ளைகளுக்கு இழைத்துவிடு வோமோ என்பதுதான் எனது இப் போதைய பயமாக இருக்கின்றது.”
இப்போ செல்லையரின் மனைவி குறுக்கிட்டாள். “ஏன் உங்களுக்கு எத்தனை பிள்ளையஸ்?"
சேகரின் மனைவி இப்படியான தொரு கேள்வியை வெகுநேரமாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந் தாளர் . எனவே உடனே பதிலி கூறினாள். “எங்களுக்கு ஒரே மகள் தான். “கம்பஸ் ஸில் இறுதிவருட பரீட்சை எழுதிக் கொண்டிருக்கின்றா. நாங்கள் மூச்சுவிடு என்று சொன்னால் தான் மூச்சு விடுவா. அப்படி வளர்த் திருக்கிறம்.”
விலை உயர்ந்த புதிய கூறை அணிந்து மணமகள் வரவும் வீடியோ உட்பட அங்கு தயார் நிலையில் இருந்த தவில்காரரும் நாதஸ்வரகாரரும் தமது பங்கை செயலில் காட்ட தொடங் கினார்கள். மணவறை செயற்பாடுகள் சூடு பிடித்தன.
"கம்பஸ்ஸில் இறுதி வருட பரீட்சை
எழுதுகின்ற பிள்ளைக்கு இருபத்தி
நான்கு வயதென்றாலும் வரும். எங்களு டைய மகனுக்கு பொருத்தமான பிள்ளையாகத்தான் இருப்பாள் என்ற எண்ண்ம் செல்லையரின் மனைவிக்கு ஏற்பட்ட அதேசமயம். . .
‘எங்களுடைய கலாசாரப்படி நாலு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப் பட்ட வயது வித்தியாசம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கவேணும். வெளி நாட்டு மாப்பிளை கிடைச்சிருக்கா. எப்படியெண்டாலும் இந்த இடத்தை விட்டு விடக்கூடாது. இப்படித் தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள் சேகரின் துணைவியார்.
பிள்ளைகளுக்கு விரைவில் விவாகம் செய்து வைத்துவிடவேண்டும் என்ற தவிப்பும் பொறுப்பும் தாய்மாருக் குத்தான் அதிகம். கலியாணவிடயத்தில் காதல் கத்தரிக்காய் என்று தனது பிள்ளை போனாலும் தாய்மார் இரகசிய மாக 'சப்போர்ட் பண்ணிவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி இருந்துவிடுவினம்!
எங்களுடைய கலாசாரத்தினுடைய அழகே தனியானதுதான்! வெளிநாட் டிலை பெண்கள் நாளொரு கணவன் பொழுதொரு தோழன் என்று சுற்றுமாற் போலவா..?
எங்களுடைய பெடிச்சிகள் ஒரு வாலிபனிலை கண்வச்சிட்டாளவையென் றால் பார்வையாலேயே அவனைக் கட்டிப் போட்டு விடுவாளவையல் லவா..? தம்பியர் பின்னால் போக
17

Page 10
வேண்டியது தான்.
செல்லையர் இன்னும்தான் தனது மன உழைச்சலிலிருந்து மீளாதவராக மணவறையை முறைத்துப் பார்த்தபடி இருந்தார்.
அவரது தலைபோகுமாற் போன்ற கவலையெல்லாமே இந்தப் பெண்ணினு டைய வாழ்க்கை வீணடிக்கப்பட்டு விட்ட தென்பதுதான். இருபதுவயதில் இந்தப் பெண்ணினுடைய கவர்ச்சியும் துடிப்பும் எப்படி இருந்திருக்கும். எத்தனை இளைஞர்கள் இவளுடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் துடிச்சிருப் UTEíjab6ír!
புதுவிருந்து பறிமாறப்பட்ட வாழை யிலை. அப்போதெல்லாம் ருசிப்பதற்கு பலர் தவம் கிடந்தார்கள். இந்த சமூகம் தடுத்துவிட்டது. இப்போ விருந்தெல்லாம் சோடை போய் வாழை இலையை தூக்கி எறிய வேண்டிய நிலையில் பந்திவை என்கிறார்கள். வாழை இலைக்கோ பெரிய கவலை. விருந்து பரிமாற என்னிடம் என்ன இருக் கின்றது?
செல்லையருடைய கண்களில் நீர்த் திவலைகள்.
சேகர் பல வருடகாலமாக செல்லையரை புரிந்து வைத்திருப்பவர். உடல் ரீதியில் வைரக்கட்டை. மனத் தளவில் சின்ன விசயத்திற்கும் கலங்கிப் போகும் சுபாவம் கொண்டவர்.
“என்ன செல்லர். தாலி கட்டு நடக்குது. இப்பபோய் அழுவதா. கண் களைத் துடையும்"
அப்போதுதான் செல்லையர் நனவுலகத்திற்கு வந்தார்.
"மச்சான். நீ எனக்கு ஒரு உதவி
செய்யவேணும். உன்னுடைய பெடிச் சியை என்னுடைய மகனுக்கு மணமக ளாக தரவேணும் ." செல்லையர் நன்றாகத்தான் உணர்ச்சி வசப்பட்டுப்
போனார்.
வெளிநாட்டில் இருக்கும் தனது மகன் வெள்ளைக்காரி ஒருத்தியை இரகசியமாக திருமணம் செய்திருந் தாலும் இவருக்கு தெரியவர நியாய மில்லை! ஆனால் அவருடைய தேகத் தில் அந்த இளமைக் காலத்து உரம் இன்னமும் நிலைத்திருப்பது போல. மனதிலும் உறுதியும் வைராக்கியமும் பளிச்சிடத்தான் செய்தன.
அதே மன உறுதிக்கும் வைராக்கி யத்திற்கும் சோடை போகமலும் தன்னு டைய மகள் 'கம்பளில் எவனுடனாவது தொடுப்பாக இருக்கமாட்டாளா என்ற சந்தேகம் கிஞ்சித்தேனும் இல்லாமல் சேகரும் வாக்குக் கொடுத்தார். "மச்சான். என்னுடைய பெடிச்சிக்கும் உனது மகனுக்கும் இதே விவாக மண்டபத்திலை கலியாணம் நடத்துறம்.” தாய்மார் இருவருக்கும் பெரும் திகைப்பு. ஏதோ அந்தக் காலத்திலை பெற்றோருக்குத் தெரியாமல் வருகிற சனியோ ஞாயிறுதினம் வல்லைவெளி தாண்டி நெல்லியடி போய் "செக்கண்ட் ஷோ படம் பார்க்கிறம் என்று சபதம் எடுத்த மாதிரி இருந்தது அந்தப் பேச்சு
அறுகரிசி போட்டு தம்பதியினரை ஆசீர்வதிக்க தொடங்கியிருந்தார்கள். செல்லையரும் சேகரும் பங்குபற்றினர். “என்னுடைய மனுவிக்கும் உந்தப் பெண்ணுக்கும் பெரிய வயது வித்தி யாசம் என்று இருக்கப் போவதில்லை. இண்ட்ைக்கு நானும் மனுஷியும் தனிமை யிலை எதைக் கதைக் கிறோமோ அதைத்தான் உந்தச்சோடியும் முதலிர விலை கதைக்கப் போகினம்"
செல்லையர் நன்றாகத்தான் மனம் நொந்து போனார். முடியுமென்றால் கேடுகெட்ட இந்தச் சமுதாயத்தை தனது நிமிர்ந்து பரந்த தோளில் தூக்கி சுழற்றி சாக்கடையில் எறியும் அளவிற்கு
18

அவரது கொதிப்பு இருந்தது.
சேகருக்கு நகைச்சுவை உணர்வு வந்துவிட்டது. “அது சரி. உமக்கும் கொஞ்சம் 'பிறசர் குணம் போகாது. அவையஞம் போய் பஞ்சணையில் அமர்ந்தபடி தங்களுக்கு இருக்கிற நோய் நொடிகளைப் பற்றித் தான் அளவளாவப் போகினம். இந்த வயதுக்கு "கொலஸ்ரோல்', 'பிறசர், டயபிற்ரீஸ் என்று எல்லா நோயும் வந்து விடுமே!” செல்லையர் தனக்குள் எழுந்த சிரிப்பை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை.
நித்ய மங்களா விவாக மண்டபத் தில் மதிய போசன விருந்து அமர்க் களமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி இரண்டு தம்பதி யினரும் அவர்களுடன் இணைந்து நின்று ‘வீடியோ’ எடுத்துக் கொண்டமை அப்போ எவருக்கும் வித்தியாசமாகத தெரியவில்லை.
ஆனால் ஒரு மாதகாலம் கூட ஆக முன்னர் அதே சிவன் கோவில் விவாக மண்டபத்தில் அமிர் தயோகமும் ஏகாதசித் திதியும் பூராட நட்சத்திரமும் துலாம் லக்கினமும் கூடிய சுப முகூர்த்த
Sebsites Ez VVVV1 I LLWvV
வேளையில் அவர்களுடைய பிள்ளை
களுக்கு விவாகம் இனிதே நடந்தது.
ஐயர் பயபக்தியுடன் மந்திரம் சொன்னார். விருந்தினர் அமைதியுடன் மணமக்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணப் பெண்ணின் இளமையின் மதமதப்பையும் மணமகனின் வாலிப மிடுக்கையும் ‘வீடியோ படப்பதிவு செய்து கொண் டிருந்தது.
விவாகம் முடிந்து ஓரிரு வாரங் களிலேயே வெருகலம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவம் பெரும் எடுப்பில் நடாத்தப்படவிருந்தது.
கிழக்கின் இரு பிரதேசங்களை இணைத்து நிற்கும் பாரம்பரியம் மிக்க வெருகல் கிராமத்துக்குரிய பெரும்
கடலுடன் சங்கமிப்பதுதான்! அந்நாட் களில் பழமை மிகு வெருகல் ஆலயத்
மகாவலி
திற்கு நேர்த்தி வைத்து தூர இடங்களி
லிருந்து வண்டி கட்டிவரும் பக்தர்கள் கங்கையில் களை தீர்த்து மரநிழல் களில் ஆறி திருவிழா கண்டு திரும்புவர். திருவிழா நாட்களில் பல இடங்களி லிருந்து அங்கு வரும் பல நூறு கடை களில் பொருட்களை வாங்கும் ‘ உள்நோக்கத்துடன் பெற்றோரை அண்டி வரும் சிறுவர்கள். கணவனை அழைத்து வரும் இளநங்கையர்கள் ஏராளம்.! ஏராளம்.! வெருகல் திருவிழா பற்றித்தான் எங்கும் பேச்சு. “என்ன சொல்லுறீங்கள். வெரு
கல் முருகன் கோயில் திருவிழாவை
நான் பார்க்கவேண்டும்." அவள் புதுமண மகளுக்குரிய செல்லத்துடன் கணவ னுடன் அடம்பிடிக்க தொடங்கினாள். செல்லையர் கவனமும் திரும் பியது.
வெருகலுக்கு “லோஞ்சில் போவ தென்றால் பாதாளமலை கடற்பிரதேசம் தாண்டி போகவேண்டும். கடுமையான காற்றுக் காலமானதால் பயங்கர அனுபவங்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். சுமார் எட்டு வருடங் களுக்கு முன்னர் (25.01993ல் பாதாள மலை கடற் பிராந்தியூத்தில் பயணிகள் லோஞ்சு ஒன்று மூழ்கியதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர்.) நடந்த சம்பவத்தையும் மறப்பதற்கில்லை. வெரு கல் ஆற்றில் முதலைக்கு இரையாகிய சாரதி பற்றிய செய்தியை தந்தை கூறக் கேட்டிருக்கின்றான்.(1973 அளவில் மட்டக்களப்பு ‘பஸ்டிப்போ சாரதி ஒருவர் இரவு ‘பஸ்’ நிறுத்துகையின் போது
19

Page 11
ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் AR------ முதலைக்கு இரையானார்.) இத்தனை நாளும
செல்லையர் தனது மகன் தனது உயிரோடுதான்! மருமகளுககு எனன முடிவு கூறப போகின்றான் என்று அறிந்து கொள்வ ஆச்சரியமாயிருக்கின்றது தற்காக காதைத் தீட்டிக் கொண்டார். இத்தனை நாளும் நான் உயிரோடுதான்.
அவன் மிக மிக சாதாரணமாக அதுசரி, நான் எப்போது நானாக
கூறினான். வாம்ங்கேன்?
“சரி. போய்விட்டால் முடிந்தது! ழநதேன
༄
* செத்துப் போவதற்கு செல்லையருடைய கண்களில் is 8 曾 ஊருககுப பயநது உளள பனித்த ஆனந்தக் கண்ணிரை இமைகள் ர்வு தேதும்
இரண்டும் வெட்டி மறைத்தன.
அவர் நல்லம்மாவை கைப்பிடித்த அந்த ஆரம்ப நாட்களில் மாட்டு வண்டி கட்டி அவளைப் பட்டுப் புதுச்சேலை யுடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு அழைத்துச் சென்றமையும் அவர் வாங் 录,够 A. கிக் கொடுத்த வெள்ளிப்பாதசரங்களில் விறைத்துப்போவதும் ஒன்றை அவள் தொலைத்தமையும் சாயமிழந்து நிறம்மாறும் அதற்காக அவர் அவளை ஏசியதும். பச்சோந்தியாய் எநதன அப்படி ஏசியதனால் அவருள் எழுந்த சுயமிழந்து மனப்போராட்டமும். கட்டிளம் காளை தலையில்லா முண்டமாய் யான அவரும் கட்டழகியான அவளும் உயிரில்லாப் பிண்டமாய் அந்த பயங்கரமான வல்லை வெளியை இப்படித்தான் இருந்திருக்கிறேன் நடுச் சாமத்தில் தனித்து தாண்டிய இதுவரை இளமை மிடுக்கும் நேற்று நடந்தவை இன்றைய பின்னேரத்து இறுதியில் போல அவர் மனக்கண்முன் விரிந்தன. இருதயம் இறுகிப்போய் -
நன்றியுடன் நினைவு கூரல்:- துடிப்பினை நிறுத்திக் கொள்ள
இலங்கையர்கோன். என்னுயிர் பிரிய நினைத்த
அந்தக் கணத்தில்தான் -
”பச்சைப்பிராணிகளைக் கண்டு | பயந்து வியர்வைத் துவாரத்தில்கூட
சிறுசீர் கசிந்ததும், தணிக்கை செய்து எழுதப் பழகிக் கொண்ட என்விரல்கள்
சந்தா விபரம் எனககு ஞாபகம் வநதது <> el- இத்தனை நாளும் நான்
தனிப்பிரதி: e5urt 15/- உயிரோடுதான்! வருடச்சந்தா: ரூபா 180/-
(தபாற்செலவு உட்பட) சந்தா காசோலை மூலமாகவோ மனி! யோடர் மூலமாகவோ அனுப்பலாம். |
அனுப்பவேண்டிய பெயர்,
முகவரி ;- O O O KO - O
T.GNANASEKARAN
19/7, PERADENIYA ROAD, ۲ مس (§ R சுழிபுரம் த.பிரபாகரன் - محے
2O
 
 

வெள்ளை நூலின் கதறல் கேளுங்க
- கந்தளாய் ஏதாரிக் -
மாப்புள்ள பாக்க போனோம் மக மனிசங்க ஆஹா நல்லாப்பேசினாங்க வார கிழம வாராங்களாம் நல்லா வடிவாசிரிச்ச மொகத்தோடஇருமா!
என்னாவும்மா எதுக்கு அவசரம் எனக்கென்னா வயசா போயிடிச்சி இப்பதானே இருபது இன்னும்போகட்டுமே இரண்டொருவருடங்களாச்சு
கம்மா கெட புள்ள ஒனக்கி
சூழல் பத்தி ஒண்னும் தெரியாது
கண்டதையெல்லாம் காரசாரமாய்
க்கும் இந்த பொல்லா நாக்குங்க!
ஊர் ஆயிரம் கதைக்கு மும்மா உள்மனசு சுத்தமாகனுமே
பேதை வாழ்வா வாழவேனும்
அப்படிச்சொல்லாத மக ஒண்ட வாப்பா இருந்தா இப்படியெல்லாம்
படம் இருக்குமா? இந்த நெத்தலி
நாட்கள் படுவேகமாய்ப்போனதுங்க நாலு மணியிருக்கும் வந்தாங்க என்னையப்பாத்தாங்க புடிச்சிருக்காம் எத்தன வயசி ரகசியமாய்கேட்டாங்க
சாப்பிட்டு நல்லா வயித்தை நிரப்பினாங்க சீதனப் பேச்சைதுரக்கிவெச்சாங்க எதையெதையோ எப்படியெல்லாம் எழும்பி இருந்து நடந்து பேசினாங்க!
கடைசியா நீங்க எவ்வளவுதாரீங்க உம்மாவுக்கு நல்லாவே தலகத்தியதுங்க ஊமையாககம்மா நின்னுட்டாங்க
21
சம்மந்தி ஏதாவது ஒன்று சொல்லுங்க சீதன மெண்ன பெரிசாவா கேட்டோமுங்க ஒரு லட்சம் ஒன்னும் பெரிசில்லீங்க ஓங்க முடிவயோசிச்சி சொல்லுங்கி
ஊடு வாசல் காணி இருக்குதுங்க ஊனமில்லா மனசும் இருக்குதுங்க இவங்க வாப்பா மெளத்தா பெய்த்தாருங்க இருப்பதெல்லாம் க்கு தானுங்க
பிரசவவலியில துடிச்ச போதுமுங்க பிசாசு மனிசன் வந்து பாக்கில்லீங்க ராத்தா சொல்கேட்டு போனாருங்க ராத்திரிகள் பல ஊட்டுக்கே வரலீங்க!
காத்துக் காத்து இதயம்கடுத்ததுங்க கனிந்த என்மனம் கல்லானதுங்க மாற்றானோடு இட்டுக் காட்டும் இந்த முட்டாள்மனிசனோட வாழ்றது எப்படிங்க
சொற்கள் இலவச மென்று தீதைச் செப்புதல் ?நீங்களே சொல்லுங் வழியே இல்லாமத்தான் உள்ளத்தை மாத்தி தாலியைநானே அறுத்து போட்டேனுங்கி
வெள்ளைநூலின் கதறல் கேளுங்க வெளுத்த தெல்லாம்பாலாய் எண்ணாதீங்க பிச்சைக்காரனென்றாலும் இதயம் பிணமாகவிடில் மனதார ஏத்துக்குங்க

Page 12
சி.வன்னியகுலம் அவர்களின்
புனைகதை இலக்கியம்
வெளியீடு : மீரா பதிப்பகம், கொழும்பு - 06 முதற்பதிப்பு: 23.05.2001
விலை : 150ebury ཐོག་ -டு.இக்பாலி)
இந்நூல் ஐந்து சிறுகதைகளையும், ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும், நான்கு நாவல்களையும், ஒரு குறுநாவலையும் விமர்சனம் செய்கிறது. பொதுவாகச் சொன்னால் தமிழ் புனைகதைகளை விமர்சனம் செய்கிறது.
விமர்சனத்தை விமர்சனம் செய்தல் அல்லது ஆய்வு செய்தல் மிகமிகக் கஷ்டமானதொன்று.
தீர்க்கமான விமர்சனம் நல்ல இலக்கிய வளர்ச்சிக்கு உரமிடும் என்பது வரலாற்றுண்மை. உலகத்தில் பிரான்ஸ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இத்தாலிய இலக்கியம் உலகத்தை கலக்கிய உயர்வுக்கு விமர்சனங்களே காரணம். மாங்காய்களை அடித்தடித்து மாம்பழமாக்கும் பழக்கம் தற்காலத்தில் புனைகதைகளுக்குப் பரிசளிக்கும் பழக்கத்தினால் ஏற்பட்டுள்ளது. இதனால், இலக்கியத் தரமற்ற புனைகதைகள் செல்வாக்குக் காரணமாக உன்னதப் படைப்பென உயர்த்தப்படுகின்றன. இலங்கையில் அமைச்சினால் 2000த்தில் பரிசளிக்கப்பட்ட 99இல் வெளியான புனைகதை நாவல்களின் மத்தியஸ்த்த மதிப்பீடு வெளியாக்கப்பட்டால் குட்டு வெளிப்படும்.
தமிழில் உள்ள விமர்சன வரலாற்றைச் சுருக்கமாக அறிதல் அவசியம். தமிழ் விமர்சன முன்னோடிகளில் ஒருவர் வ.வே.சு.ஐயர். இவரைத் தொடர்ந்து செல்வ கேசவராய முதலியார், மறைமலையடிகள், பாரதி என்போரும் முன்னோடிகள் வரிசையில் இம்பெறுகின்றனர். வ.ரா, பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், கு.ப.ரா., க.நா.சு, சிட்டி, சிதம்பரசுப்பிரமணியன், பி.என்.கண்ணன், டி.கே.சி, ரகுநாதன், சி.சு.செல்லப்பா, சாமி சிதம்பரனார், எஸ்.ராமகிருஷ்ணன், வல்லிக்கண்ணன், நா.வானமாலை, தோதாஸ்த்ரி, தி.க.சி., க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எம்.எம்.மஹற்ரூப், எம்.ஏ.நுட்மான் எனும் வரிசையில் சிவன்னியகுலம் வந்து சேருகிறார். அமைப்பியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம் வாய்ப்பாட்டை வைத்து இன்று விமர்சனம் செய்யும் புதியவர்களும் சேருகின்றனர். இவ்வாய்ப்பாட்டை உடைத்து நவீனபாணியில் விமர்சனம் செய்யும் அ.மார்க்ஸ், ஞானி, தர்மு சிவராமு, சி.சிவசேகரம், கே.எஸ்.சிவகுமாரன், மு.பொ., மனுஷ்யபுத்திரன், ராஜ் கெளதமன், தமிழவன், ஹெப்சிபா ஜேசுதாசன் எனப் புதுமைப் பட்டியல் ஒன்றும் இன்னும் நீளுகிறது. எழுபது வருடங்கள் தமிழில் இலக்கிய விமர்சனத்தை வளர்க்கும் பணியில் பல பத்திரிகைகளும் வெளிவந்தன. வ.விஜயபா ஸ்கரனின் ‘சரஸ்வதி, ரகுநாதனின் 'சாந்தி, விந்தனின் 'மனிதன், நா.வானமாமலையின் ஆராய்ச்சி, ப.ஜீவனந்தனின் தாமரை, தீபம், 'கணையாழி, ‘எழுத்து, "நடை", "சிகரம்', ‘கசடதபற’, ‘அ.க், “ஞானரதம்', 'யாத்ரா", "கொல்லிப்பாவை, மீட்சி, படிகள், சுவடு இன்னும் பல ஏடுகளும் தமிழில் விமர்சனத்தை ஊக்கியும் வளர்த்தும் வந்தன.
சி.வன்னியகுலத்தை நானறிந்தது 'ஈழத்துப் புனைகதைகளில் பேச்சுவழக்கு எனும் நூலின் மூலம்தான். இதில் ஈழத்துத் தமிழ் புனைகதை இலக்கிய வரலாற்றுச் சுருக்கம், நாவல், சிறுகதை இலக்கியங்களைக்கூட சுருக்கமாகத் தருகிறார்.
22
 

உண்மையில் அந்நூலை இந்நூலுடன் ஒப்பிடமுடியாது. அதில் இருக்கும் பாரம் இதில் குறைவுதான்.
'புனைகதை இலக்கிய விமர்சனம் நூலில் உள்ள முதல் ஐந்து கதைகள் க.பொ.த உயர்தர வகுப்பின் தமிழ் மொழிக்குரிய புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவைகள். 1995இல் இருந்து பாடத்திட்டத்தில் அமுலாக்கப்பட்ட இக்கதைகளைப் பலரும் பல கோணங்களில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். அவ்விமர்சனங்கள் அதிகமாகப் பாடசாலை மாணவமட்டத்தை வைத்தே எழுந்தவை எனலாம். அம்மட்டம் விமர்சன அளவுகோலுக்குரியதல்ல. இப்பொழுது புதிய கல்விச் சீர்திருத்தத்தில் மாணவர்கள் Project - ஒப்படை, Assigment - ஆய்வு என்பவற்றைச் சமர்ப்பித்தல் வேண்டும். அதனால் முன்னிலும் மாணவர்கள் அசைவதாலே விமர்சனப்போக்கும் மாறிநிற்பதைக் காணலாம்.
‘ஒரு நாள் கழிந்தது எனும் புதுமைப்பித்தனின் கதையை வாசிக்கும்போது அதில் ஒருநாள் கழிவதும் அதனுள் அமைந்துள்ள விடயங்களும் முற்றுப்பெறுகின்றன. ஒரு விவரணம்போல் அக்கதையைப் படித்து முடித்து விடலாம். உண்மையில் அக்கதையில் அடங்கும் துன்பியல் மிக முக்கியமானது. அதை மிகத்துல்லியமாக சி.வன்னியகுலம் அவர்கள் முன்வைக்கிறார்.
தீப்பெட்டியைக்கூடக் கடனாகவே கடையில் வாங்கும் தரித்திரம்; முன்னையக் கணக்குகள் தீர்க்கப்படாமையால் தீப்பெட்டி தரமுடியாதெனக் கடைக்காரன் குழந்தையை விரட்டும் அவலம்; ஒரு தடவையேனும் ரிக்ஷா வண்டியில் பயணம் செய்து பார்த்துவிட வேண்டுமென்று அக்குழந்தை துடிக்கும் துடிப்பு: சாகாவரம் பெற்ற கதைகள் எழுதும் முருகதாசன் 30ரூபா காசுக்காக பண்ட விற்பனைகளை விளம்பரம் எழுதி வயிறு வளர்க்கும் சோகம்; விளம்பரம் எழுதுவதற்கு கடுதாசி இல்லாமல் முதுகில் எழுத நேர்ந்துவிடுமோ என எழும் அச்சம்; நாவல் எழுதவேண்டுமென்று அவரது தொலைதூரக் கனவு கானல்நீராகிக் கரைந்து போகின்ற ஏக்கம்; வீட்டுக்கு வந்த நண்பரிடம் மூன்று ரூபா கடன் கேட்கும் கையறுநிலை. நண்பரிடமிருந்து கிடைத்த எட்டணாவை வைத்துக்கொண்டு கடைக்காரன் கணக்கை எப்படி அடைப்பதென்ற சோகம்; திங்கட்கிழமை பிரச்சினையைத் திங்களன்று பார்த்துக்கொள்ளலாம். இன்றைய பிரச்சினையை இன்றே தீர்த்துக்கொள்ளுங்கள் என்ற மனைவியின் அங்கலாய்ப்பு இவைதான் இக்குடும்பத்தின் ஏழ்மை.
"வாழ்க்கையில் அர்த்தத்தைச் சொல்வது தத்துவம்; வாழ்க்கையை அதன் இரசனையைச் சொல்வது இலக்கியம்” என்கிறார் புதுமைப்பித்தன்.
பின்நவீனத்துவத்தில் "தகர்ப்பமைப்பு" - Deconstruction என்றொரு முறையுண்டு. இம்முறையைக் கையாள்வதனால் சுருக்கமாகக் கதையைப் புரிந்து விடலாம். மேலே கூறிய பந்தியில் வன்னியகுலம் கதையை மிக இலேசாகப் புரிய வைக்கிறார். இவ்விதமே ஒரு நாள் கழிந்தது, கதையுடன் "வெள்ளிப் பாதசரத்தையும் ஒப்பிடலாம். ஆனால் கனகாம்பரத்துடன்தான் வன்னியகுலம் ஒப்பிடுகிறார். உண்மையில் இலங்கையர்கோனின் அக்கதையை நான் ஒரு விவரணம் என்றே எண்ணியதுண்டு. ஆனால் தகர்ப்பமைப்பு முறையினால், அக்கதையின் உச்சங்களை வன்னியகுலம் தொட்டுச்செல்லும்போது, அக்கதைபற்றிய எனது எண்ணம் தூளாகிறது. காற்சங்கிலியை நல்லம்மா அணிதலுடன் உச்சநிலையடைவதையும், கொள்ளிவாய்ப் பிசாசு என்ற இயற்கை சக்தியின் இடையீட்டால் அவன் அவளை அரவணைப்பதுடன் உச்சநிலையடைவதையும் காட்டி வன்னியகுலம் உச்சமடைகிறார்.
23

Page 13
மொழி அபிவிருத்தியையும் படைப்பாற்றற்றிறமையையும் இக்கதைகளில் உன்னிப்பாக வலியுறுத்துவதைப் பார்க்கும்போது மக்களுடன் கதாசிரியர்கள் எவ்விதம் கலந்துள்ளனர் என்பது புலப்படும். மணிக்கொடி எழுத்தாளர்களுள் புதுமைப்பித்தன் ஒருவழியும், ஏனையோர் பிறிதொரு வழியுமாகப் பிரிவதைக் காணலாம். புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள் எட்டிய உச்சநிலையை ஏனைய தமிழ் மொழி எழுத்தாளர்களின் கதைகள் எட்டவில்லை. இவ்வளவிற்கும் அவரது அனேகமான கதைகள் பத்திரிகைகளில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக எழுதியவைகளே!
‘மணிக்கொடி என்றொரு பத்திரிகை இருந்தது. அதில் பலர் எழுதினர். மணிக்கொடி மகத்தான இலக்கிய சேவை செய்தது. ஆனால் மணிக்கொடிக் குழு என்ற தனித்துவமோ அல்லது மணிக்கொடி பரம்பரை என்ற குழு - சிஷ்யத்துவமோ இருந்ததாக, இருப்பதாகச் சொல்லமுடியாது. பத்திரிகைப் பரம்பரை ஓர் இயக்கமல்ல. வேர்பிடிக்காத சில இலக்கிய இயக்கங்கள் குளியலறை முனகலாகிச் சிதைந்தபோதும் அதைத் தூக்கிப்பிடிக்கும் சில்லறைப் பத்திரிகைகள் வரலாற்றில் அவற்றை நிலைநிறுத்தமுடியாமல் தத்தளிப்பதையும் நாம் காண்கிறோம். இலங்கையர்கோன் அக்கால உன்னத பதவியான டீ.ஆர்.ஒ. ஆக இருந்தபோதும் மக்கள் தொடர்புடன் இருந்தார். அதற்குக் காரணம் அவர் இலக்கியகர்த்தா மட்டுமல்ல மறுமலர்ச்சி இயக்கத்திலும் உள்ளவராக இருந்ததே காரணமெனலாம்.
இலக்கியக் கொள்கைகள் இலக்கியத் திறனாய்வுக்கு அடிப்படை. திறனாய்வு அணுகுமுறை எல்லைகள் இப்போது மிகவும் விரிவடைந்துள்ளன. யதார்த்தவாத அணுகுமுறை, கற்பனாவாத அணுகுமுறை, தத்துவார்த்த அணுகுமுறைகள் மூலம் புதுமைப்பித்தன், கு.ப.ரா.வை வன்னியகுலம் அணுகியுள்ளார். தத்துவார்த்த அணுகுமுறைக்கு மெளனியைக் காட்டுகிறார்.
புதுமைப்பித்தனுக்கு நான்கு வயது மூத்தவரான கு.ப.ராஜகோபாலன் மிக இளமையில் எழுதத் தொடங்கியவர். புனர்ஜென்மம், கனகாம்பரம் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். லூயி கரலின் அரிஸ் இன் வண்டலன்ட் என்ற நூலை 'அலமுவின் அதிசய உலகம்' என மொழிபெயர்த்திருக்கிறார்.
‘கு.ப.ரா.வைப் போல் தமிழ்நாட்டிலும், இலங்கையர்கோனைப்போல ஈழத்திலும் சிறுகதையின் சிகரத்தைத் தொட்டவர்கள் யாருமிலர்’ எனும் கூற்றை ஏற்பது கடினமே! என்றாலும் ஒப்பீட்டில் இலங்கையர் கோனின் வெள்ளிப்பாதரசத்தில் கண்ட உச்சத்தை கனகாம்பரத்திலும் காணமுடியும். உச்சம் என்பதைவிட மலர்ச்சி விகசிப்பு என்றே கூறமுடியும்.
கு.அழகிரிசாமியின் தவப்பயன் இந்திய தத்துவ ஞானத்தின் வழிமுறைதான் என்பதை வன்னியகுலம் புலப்படுத்துகிறார். 'சுவர்க்கமே திருப்தியில்லை; உயிர்த்துவமே உலகில் ஒப்பற்றது எனும் தத்துவத்தை முற்போக்கு எழுத்தாளரான கு.அழகிரிசாமி எப்படி ஏற்றார்? என்பதே பெரும் கேள்வி: "நிர்மலானந்தரும் அணிற்குஞ்சும் வாழ்க்கையின் முரண்பட்ட இரண்டு தத்துவங்களின் குறியீடுகள்" என வன்னியகுலம் முன்வைத்திருக்கும் கருத்து மிக மேலானது. இறுதியில் தத்துவம் அல்லது தவப்பயன் தனிமனித சம்பந்தத்துடன் ஒதுங்கவுங்கூடியது எனும் முடிவுக்கும் வரலாம். மாணவர்கள் “இதில் கதையே இல்லை எனக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். வன்னியகுலத்தின் விமர்சனத்தால் இக்கதையில் அவர்கள் ஒன்றிக்க முடியும்.
சி.வைத்திலிங்கத்தின் ‘பாற்கஞ்சி தகர்ப்பமைப்புக்குள் ஆகுவதை இந்நூலில் காணமுடியும். இக்கதைமூலம் ஆசிரியர் சமூகத்திற்குக் கூறும் செய்தி 24

விளங்காமல் இருந்தது. முருகேசன் குடும்பத்திற்கு இத்தகைய துன்பநிலை வரக் காரணம் தெரியாதிருந்தது. இதற்கெல்லாம் சி.வன்னியகுலத்தின் இந்நூலில் விடைகள் கிடைக்கின்றன. “இந்தச் சிறுகதை முன்வைக்கும் முடிவுதான் என்ன? மிகப்பாதுகாப்பும், அரச அரவணைப்பும் இல்லாத எந்தத் தொழிலுக்கும் எந்த மனிதனுக்கும் முடிவு அவலமானதே! சமூகநிறுவனங்கள் இதற்குப் பாதுகாப்பளிக்கவேண்டும். தொழில் பற்றிய நம்பிக்கை தொழிலாளியின் மனதில் அமையவேண்டும்" கதையில் காணாத ஒன்றை வாசகன் நிலைப்படுத்துகிறான். இக்கதைக்கும் வாசகனுக்குமுள்ள உயர்மதிப்பு இதுதான்.
மரபியல் வாதிக்கு இலக்கியப் படைப்பும் அதன் வாசகனும் செத்துவிடுகிறான். இலக்கியகர்த்தாவே உயிருள்ள பொருளாகத் தென்படுகிறான். அமைப்பியல் வாதிக்கு இலக்கிய ஆசிரியன் இறந்து விடுகிறான். ஆனால் இலக்கியப் பிரதி உயிருடன் காணப்படுகிறது. பின்நவீனத்துவவாதிக்கு ஆசிரியனும் செத்துவிடுகிறான், பிரதியும் செத்துவிடுகிறது. வாசகனே உயிருடன் நடமாடுகிறான். வாசகன் எப்படிப் படிக்கிறானோ அப்படியே அதன் அர்த்தம் உருவாகிறது. இந்த வழிமுறையை வன்னியகுலம் கையாண்டிருப்பதை கதையின் காணாத ஒன்றினால் காண்கிறோம். இதை அவர் அறிந்து செய்தாரோ இல்லையோ, இவ்வழி முறையில் உரசிப்பார்க்க முடிகிறது. இதுதான் ஆய்வு ஆய்வு என்பது வித்தியாசங்களையும் அடையாளங்களையும் கையாள்வதுதான்.
ஐந்து சிறுகதைத் தொகுதிகள் பற்றிய விமர்சனம் இந்நூலில் அடங்குகின்றது. சிவாவின் சிறுகதைகள் மனிதாபிமான உணர்வை மதிப்பிடுபவை. "ஆச்சி பயணம் போகிறாள் எழுதிய கையே சமூகஞ்சார்ந்த சிந்தனைகள், ஏற்படும் சிக்கல்கள் மானிட முரண்பாடுகள், மெல்லிய உணர்வுகள் இச்சிறுகதைகளில் உண்டெனக் கூறும் முற்போக்குவாதம் போற்றற்குரியதே மனிதர்கள் நான்கு வகைப்பட்டவர்கள். 1. நான் மட்டும் வாழுதல் 2.நான்மட்டும் வாழுதல் மற்றவர்கள் வாழக்கூடாது 3.நானும் மற்றவர்களும் வாழவேண்டும். 4.நான் வாழாவிட்டாலும் மற்றவர்கள் வாழவேண்டும். இந்தப் பிரிவுகள் நாஸ்திகன், ஆஸ்திகன, நல்லவர், கெட்டவர் யாவரிடமும் உள்ளன. எனவே, மனிதனை ஒரு சிந்தனைக்குள் ஒற்றுமைப்படுத்தமுடியுமா? என்பது கேள்வியே! அனுபவஅமைவு காலத்தால் உயரும். இதையே வண்ணை சிவராஜாவின் கதைகள் கூறுகின்றன.
இவ்விதமே ஏனைய சிறுகதைத் தொகுதிகளும் உயர்ந்து நிற்கின்றன. தற்காலப் போர்ச்சூழல், அதன் பாதிப்பு அதனாலேற்பட்ட புதிய தலைமுறையின் எழுச்சிக்குரல் என்பனவற்றுடன் இணையும் கதைகள் ஏராளம். "என்னுடைய முதல் துன்பம் மனிதனாகப் பிறந்ததுதான்” என்று தனது பிறந்த நாளைப்பற்றி ரூசோ கூறினான். இதை மறுப்போர் இலக்கியவாதியில் அனேகம் உளர். நானும் இதை ஏற்பதற்கில்லை. ஆனால் இன்றைய சூழலை மனித உரிமை மாறலை நினைக்கும்போது இக்கூற்று சரியாகப் படுகிறதாக எண்ணத்தோன்றுகிறது. பிரச்சினைகள் மலிந்து சமுதாய மதிப்புகள் அச்சுறுத்தப்படும்போதும், காலமாறல்கள் புதிய பாதையைத் தேடும்போதும் சிறந்த இலக்கியங்கள் எழுந்திருப்பதை வரலாற்றில் காண்கிறோம். அந்த வழியையே இச்சிறுகதைத் தொகுதிகள் அடைய முயல்வதை வன்னியகுலம் எடுத்துக்காட்டுகிறார்.
இந்நூலில் நாவல்கள் நான்கு விமர்சிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று க.பொ.த உயர் தர வகுப் புக் குரிய நாகம் மாள்' என்பதாகும் . ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள் பிரபலமான சமுக நாவலல்ல. ஆனால் மிகுந்த இலக்கிய நயமுள்ள நாவல். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 25

Page 14
வெளிவந்த ஒரு “மணிக்கொடி எழுத்தாளரின் படைப்பு. இது ஒரு தத்ரூபமான கிராமிய இலக்கியம். இது முதலாவது மண்வாசனை நாவல், முதலாவது பிரதேச நாவல், முதலாவது யதார்த்த நாவல் என எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டுத் தமிழ் நாவலுக்கு வழிகாட்டி. காதல் நிகழ்ச்சிகளோ, கிளர்ச்சியூட்டும் சம்பவங்களோ இல்லாத இக்கதையை வைத்துக்கொண்டு ஓர் அருமையான நாவலை ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதியிருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதைப்போக்கு. உயிர்த்துடிப்புள்ள பாத்திரப் படைப்பு. தெள்ளத்தெளிந்த சொல்லாட்சி. இவையே இந்நாவலின் சிறப்பியல்புகள்.
நிலவுடமைச் சமுதாயம் இரக்கம் குறைந்த சமுதாயம். 'உயிர் துறக்க நேர்ந்தாலும் நிலத்தைப் பாதுகாத்துக்கொள் என்ற போதனையை நெஞ்சில் நிறுத்தியுள்ள சமுதாயம். இந்நாவலை படிக்கத்தூண்டும் உள்ளடக்கத்தை சி.வன்னியகுலம் மேலெடுக்கிறார். இது மாணவர்களைக் கற்கத் தூண்டும் வழி. கே.டானியலின் "அடிமைகள் அவருக்குரிய பாணியில் எழுந்தது. இந்தக் கதை இரண்டு தலைமுறைகளுக்கு முந்திய யாழ்ப்பான சமூகத்தை நமது கண்முன் நிறுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போதும் யாழ்ப்பாணம் அப்படித்தான். புலம்பெயர்ந்த இடங்களிலும் யாழ்ப்பாணத்தவர் அப்படித்தான். இக்கதையிலுள்ள முக்கியம் வர்க்கங்கள் ஒன்றாவதுதான். சிதம்பர ரகுநாதன், டானியல் சமமான கதாசிரியர்கள். வர்க்க முரண்பாட்டை மிக வலிமையாக நாவலாக்கியவர்கள். டானியலின் திறமை தாழ்ந்த சாதியினரையும் வர்க்க நிலைக்கெடுத்து எழுதியது.
கசின் ஒருகாலத்தில் கொடிகட்டிப்பறந்தவர். மொழிநடையில் சிறந்தவர். 50 ஆண்டுகளுக்கு முந்திய கிராமங்களைக் கண்முன் நிறுத்தியுள்ளமை, வியந்துள்ளமை குறிப்பிடக்கூடியதே!
‘கருக்கொண்ட மேகங்கள் வலியுறுத்துபவை குளக்கட்டுப்பிரதேசத்தைத் திருத்தி வயலாக்குதல். அதனால் சிங்கள முஸ்லிம் கிராமங்கள் ஒற்றுமையாகுதல். அதற்காகப் படித்த இளைஞர்கள் பழையவர்களை ஒன்று கூட்டுதல். சங்கமமைத்தல் 'பிரதேச விவசாய முன்னேற்றச்சங்கம்' என ஆக்குதல். அச்சங்கம் இறுதியில் இலங்கை விவசாய முன்னேற்றச் சங்கமாக விரிவடைதல்.
இக்கதை நிகழ்வு அநுராதபுர நகரத்திலிருந்து பல மைல்கள் கடந்த ஒரு சிறு கிராமத்தில் நடக்கின்றது. தமிழர்கள் அநுராதபுர நகரில்தான் வாழ்ந்தவர்கள்.
இக்கதை தரும் சில தகவல்கள், சரித்திரச் சான்றுகள் கிட்டத்தட்ட இது ஒரு நடந்த கதைதான் என்பதை காட்டுகின்றது. தேசியரீதியில் இந்த நடப்பை விரிவு படுத்தல் மிக முக்கியமாகும். விரிவுபடுத்தல் தற்கால சூழ்நிலையில் சாத்தியமற்றதாகினும், சாத்தியப்படுத்தவேண்டும் என்பதையே இந்நாவல் வலியுறுத்துகின்றது. விமர்சகர்கள் இந்நாவல் பற்றி எழுப்பியுள்ள கேள்விகள் தற்காலச் சூழலால் ஏற்பட்டதே! ஆனால் முஸ்லிம்கள் அநேகமாகச் சிங்களச் சூழலில் அவர்களுடன் ஒன்றித்து வாழ்கிறார்கள். சில வேற்றுமைகள் எழ அரசியல் வாதிகளே காரணமாகும். அதைத் தவிர்த்து இந்நாட்டு மக்கள் யாவரும் "பூமி புத்திரர்’ என்ற இடத்திற்கு வரவேண்டும். அதை முயலும்படி இந்நாவல் வேண்டுகிறதா? எண்ணத்தோன்றுகிறது.
குறுநாவல் வார்ப்புடையது. வளராது. அந்த வார்ப்பை நெல்லை க.பேரன் எவ்விதம் யதார்த்தமாகச் செய்துள்ளார் என்பதை வன்னியகுலம் சிலாகித்துள்ளார். இலக்கிய ஆக்கத்தை அணுகும் முறைகளில் ஒன்று வர்க்கப்பார்வையும், வரலாற்றுப்பொருளியல் அணுகுமுறையும் என்பதை சி.வன்னியகுலம் அவர்கள்
26

அணுகி இந்நூலை எழுதியிருக்கிறார். ஆசிரியன், வாசகன், படைப்பு இம்மூன்றிற்குமுள்ள நோக்கத்தை தெளிவாகக் கண்டிருக்கிறார்.
இலக்கியத்திற்கும், இலக்கியத்திறனாய்வுக்கும் இடையில் தற்பொழுது பிரித்தறிய முடியாத சுபாவ ஒற்றுமை இருப்பது 'புனைகதை இலக்கிய விமர்சனம் எடுத்துக்காட்டுகின்றது. இது ஓர் இலக்கியப் படைப்பே என்றும் முடிவெடுக்கலாம். "ஒரு நேரிய விமர்சகன் தன் விமர்சனச் சட்டத்தை ஒரு கூண்டாக அமைத்துக்கொண்டு தன்னை அதற்குள் சிறைவைத்துக் கொள்ளமாட்டான். வாழ்க்கையின் பன்முகத்தன்மைக்கும் இலக்கியத்தின் பன்முகத்தன்மைக்கும் அவன் முகங்கொடுத்தே ஆகவேண்டும். இது மாக்ஸிய விமர்சகனுக்கும் பொருந்தும். ஆத்மார்த்த விமர்சகனுக்கும் பொருந்தும்” என கலாநிதி எம்.ஏ.நுட்மான் நிலாவணனின் "ஒத்திகை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைப்பாட்டை யதார்த்தமாக சி.வன்னியகுலம் அவர்கள் அடைகிறார் என்பதே எனது துணிவு.
S S S S S S S S S S S S S S S L L S S L S S S L S S S S S S S L S L L S S S S SL S SL S S S S S S S S
* அன்பார்ந்த வாசகர்களே!
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
"ஞானம்" சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
கொழும்புபூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை. வசந்தம்- S - 44,3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11. யாழ்ப்பாணம்:- பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. திருகோணமலை:- வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை. திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. கல்முனை:-
சொய்ஸ் பலனில், கல்முனை.
மட்டக்களப்பு:- சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு. எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு. முல்லைத்தீவுகே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வவுனியா:- சந்திரபோஸ் சுதாகர் - 87, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா. கண்டிகலைவாணி புத்தகசாலை - 231, டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி, லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி. கொட்டக்கலை:- சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை. புத்தளம்:- சாரா பேப்பர் சென்ரர் - 14, யூ.சி. ஷொப், குருநாகல் றோட், புத்தளம். மன்னார்:- . ஜோதி புக் சென்ரர், கிரான்ட் பஸார், மன்னார்.
S LSSLLS S S S S S S S S S S S A S S S S S S S S S 0L 0 0 S q S
27
O

Page 15
வாசகர்
Né گس، ض محمحمد *Ꮥ2 >>-Ş 6ucidomni1.
பிரதம ஆசிரியர் அவர்கட்கு,
"ஞானம்" ஒக்டோபர் 17 இதழ் கிடைத்தது. முடிசூடா மகாராணியும் முடியிழந்த மகாராஜாவும் கடித எண்ணம் பிரசுரித்தமைக்கும் நன்றி. என்றாலும், சில கருத்தைக் கூறவேண்டியுள்ளது. நான் அனுப்பிய கடித எண்ண விபரத்தில் சில விடயங்கள் நீக்கப்பட்டே பிரசுரிக்கப்பட்டதில் மனவருத்தம் உண்டு.
பித்தலாட்ட அரசியல் வாதிகள் தமக்குப் பிடித்ததை கூறுவதைப்போல், நீங்களும் பிடித்ததைப் பிரசுரித்துவிட்டு, பிடிக்காததை நீக்கி விடுவதை எந்த வகையில் நியாயம் ஆனது என எனக்கு விளங்கவில்லை.!
நான் அனுப்பிய கடிதக் கருத்தில் உள்ள பல விடயங்களை நீக்கி விட்டீர்கள். இறுதியில் பதித்த பாரதி பாடல் கருத்தையும் நீக்கிவிட்டீர்கள் இது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை.
அரை குறையாக பிரசுரிப்பது என்பது ஒரு கருத்தை மாறுபடவைக்கும். அல்லது சாகடித்துவிடும் திருப்திக்காக அங்கொன்றும் இங்கொன்றும் பொறுக்கிப் பிரசுரிப்பது நல்லது இல்லை. அப்படியான தொடர்பும் வேண்டியதில்லை.
இனிமேல் இப்படியான அரைகுறை வேலைகள் செய்யாதீர்கள். ஞானத்தைத் தேட அது நல்ல செயல் இல்லை. - இராஜ. தர்மராஜா.
(முப்பத்திரண்டு பக்கங்களில் ஞானம் இதழ்களை ஒவ்வொரு மாதமும்
வெளிக்கொணரும்போது, கடுகைத் துளைத்து கடலைப் புகுத்தும் நிலைமையே ஏற்படுகிறது. வாசகர்கள் எழுதும் எல்லாக் கடிதங்களையும் முழுமையாகப் பிரசுரிப்பதானால் அதற்கென தனியாகவே ஒரு இதழை வெளியிட வேண்டியிருக்கும். வாசகர் கடிதங்களுக்கு நாம் அதிக பக்கங்களை ஒதுக்கிவிட முடியாது. கடிதங்கள் ‘புல்ஸ்காப் தாளின் அளவில் நான்கு ஐந்து பக்கங்களில் எழுதப்படும்போது, அவற்றை “எடிட் செய்து முக்கிய கருத்துக்களை மட்டும் பிரசுரிக்கும் உரிமையை எடுத்துக்கொள்வது தவிர்க்கவியலாது. - ஆசிரியர்.)
“ஞானம் 17வது இதழ் கிடைத்தது. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். ஈழத்தில் கலை இலக்கிய சஞ்சிகை ஒன்று 17வது இதழ்வரை தாக்குப்பிடித்து போவது பெரும் சாதனைதான். ஞானத்தில் வழக்கம்போல், கலை இலக்கிய அம்சங்கள் நிறைந்துள்ளன. ராணி சீதரனின் ‘எச்சங்கள் சிறுகதை ஒரு கோயில் திருவிழாவுக்கும், தேர் தரிசனத்திற்கும் இத்துணை சிரமப்பட்டு வடபுலம் நோக்கிப் பயணிப்பதுபோல் இருந்தாலும், கதை முடிவில், ஓர் அழுத்தமான சமூகமாற்றமும் சூழல் தாக்கமும் இழையோடி நிற்கின்றது. இத்தகைய மாற்றங்கள், பராமுகங்கள், போரின் கொடுமையினால் ஏற்பட்ட தாக்கங்களே எனில் மிகையல்ல. கவிதைகளில் "நீயும் நானும், "அமைதியை தேடி, "என்னை மணம்புரிய உங்களில் ஒருவன் வருவானா, 'பரீட்சைக்குத் தோற்றுகின்றேன் நிகழ்கால அவலங்களைக் காட்டும்
28
 
 
 
 

கவிதைகள். கவிதைத் தேர்வில் கொஞ்சம் கரிசணை காட்டியிருக்கின்றது ஞானம். ஞானம் சஞ்சிகையில் தானும் எதையாவது எழுதவேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு சிலர் முரண்பிடிப்பது போல் தெரிகிறது. சின்ன சின்ன விஷயங் களையும், மயிர்பிளப்பது போல், ஆராய்ந்து, ஆரூடம் கூறிவருகிறார்கள். "வாசகர் பேசுகிறார்” “உதைபந்தாட்டம் ஆடத் தோதான இடமல்ல. உருப்படியான விவாதங்கள் அதில் தொடரட்டும்.
உங்கள் சக்திக்கும் தேடலுக்கும் தகுந்தாற்போல் ஞானத்தை பத்திரமாகவும், பவ்யமாகவும் கொணர்ந்து ஓர் இலக்கிய தரத்தையும், தடத்தையும் ஸ்திரமாக்க முனைகின்றீர்கள். இது நல்ல முயற்சி; தொடருங்கள்.
- ஓட்டமாவடி, அறபாத்
முடியிழந்தாலும் மகாராஜா முடி சூடினும். முடியிழந்தாலும் கலைஞர் மகாராஜா ஸ்தானத்திற்குரியவரே! அவரது வசனங்களே கவிதைகளாகவும், கவிதைகள் கவிவளம் பொருந்தியனவாகவும் தமிழை அலங்கரித்தன. அவரது நடையால் கவரப்பெற்றதாலேயே, அன்றைய மாணவர்களில் பெரும்பாலானோர் - இலங்கையிலும்கூட தமிழில் பற்றுக்கொண்டு பயின்றனர். அதேபோலவே வினைமுற்று வாக்கியங்களை மட்டுமே அறிந்துகொண்ட மாணவர்கள், அறிஞர் அண்ணாவின் அழகு தமிழால் முற்றுவினை வாக்கியங் களைப் பற்றிக்கொண்டனர். தி.மு.க. வின் ஆதிக்கம் பற்றிப் படர்ந்து ஒரு புதிய மரபையே உருவாக்கிய காலம் கலைஞருடையது.
கலைஞரின் சரிவு எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர் என்கிற தனிமனிதரின் செல்வாக்கை, அண்ணா கழகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டார். கலைஞர் அவரைப் பகைத்தபோதே முதல் தோல்வியைத் தழுவிக்கொண்டார். அங்குதான் கலைஞரின் அரசியல் சாணக்கியம் கைநழுவிப் போயிற்று.
கலைஞரின் தொடர் தோல்விக்குக் காரணம் ஈழத்தமிழர்க்கான ஆதரவு என்பதைவிட, எம்.ஜி.ஆர் பட்டறையிலெழுந்த மாயை நடிகையின் நீலிக்கண்ணிர் ஒரு காரணம்; கழகத் தோழர்களைப் புறந்தள்ளி, குடும்ப ஆக்கிரமிப்பை வளர்த் தெடுக்க நினைத்த சுயநலம் மறு காரணம். கடந்த பொதுத்தேர்தலின்போது ஜெயலலிதாவின் மீது கொண்ட அனுதாபத்தாலோ, அன்றி எம்.ஜி.ஆரின் இரட்டை இலைச் சின்னத்தைக் கொண்ட அ.இ.அ.தி.மு.க மீது கொண்ட பற்றுதலாலோ மக்கள் கலைஞரைப் பறுக்கணித்தார்கள் என்பதைவிட, குடும்ப ஆதிக்கத்தை மேம்படுத்த முனைந்த கலைஞருக்குக் கற்பித்த பாடம் என்றே கொள்ளவேண்டும். எனினும், கதறக் கதறக் கலைஞரைக் காக்கிகள் தாக்கி இழுத்த சம்பவம், தமது ஒரு காலத்தைய முதல்வரையே அவமானப்படுத்திய பிறிதொரு தலைமையை யும், அதன் ஏவற்பிசாசுகளாகச் செயற்பட்ட காவல் துறையின் அட்டகாசத்தையும் தோலுரித்துக்காட்டும் ஒரு பழிவாங்கல் நிகழ்வாகவே "கலைஞர் கைது நோக்கப்படவேண்டும். இதனையே “ஞானம் - இதழ் 16 இல் கலாநிதி துரை மனோகரன் நாகரீகமாகச் சொல்லியிருந்தார். ஜெயலலிதாவை அவர் வர்ணித்த வார்த்தைகளும் நிஜமானவை. அப்படியிருக்க, இராஜதர்மராஜா கலைஞரையும் ஜெயலலிதாவையும் ஒரே தட்டில் போட்டுச் சீர் செய் நினைப்பது அபத்தமானது. அரசியலுக்கு வருபவர்கள் எல்லோருமே மக்களை ஏமாற்றிச் சுரண்டிப்
29

Page 16
பிழைக்கும் எத்தர்கூட்டம்தான் என்பதற்கு எவருமே விலக்கல்ல. ஆனால், விதி விலக்காக காமராஜர், அண்ணா போன்ற அரசியல்வாதிகளும் இருக்கவே செய்கிறார்கள். பெரியாரின் திராவிட கழகத்தின் சீர்திருத்தக் கருத்துக்களும், அன்றைய தி.மு.க. வின் செயற்பாடுகளும்கூட குறைத்து மதிப்பிடக்கூடியனவல்ல. முரசொலி மாறன் மருமகனாக அமைந்ததும், "SUNTV யின் உரிமையான ராக இருந்ததும், கலைஞர் அழைத்தபோதே வீடியோ சாதனங்களுடன் அவர் பிரசன்னமாகியிருந்ததுமே "ஜெயின் அட்டகாசம் வெளியுலகிற்குத் தெரியக் காரணமாயிற்று.
"பழிக்குப் பழி வாங்குவதில் 'ஜெக்கு நிகர் ஜெதான் என்பதை நிரூபித்து விட்ட அம்மணி முடிசூடா மகாராணி மட்டுமல்ல, முடிசூடினும் மகாராணி அந்தஸ் திற்குரியவரல்லர் என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதேவேளை ஒரு காலத்தில் முடிக்குரிய இளவரசராகவும், முடியுடை மன்னராகவும் திகழ்ந்த கலைஞரோ தமிழுக்கும், தமிழர்க்கும்கூட அரசராகக் கோலோச்சியவர் என்பதும் மறந்துவிடக் கூடிய ஒரு விடயமல்ல; மறுக்கவும் முடியாதது. எம்.ஜி.ஆர் தயவில் ஆட்சிபீடமேறிய மகாராணியைவிட, மகாராஜா எவ்வளவோ மேல்!
- கன. மகேஸ்வரன்
சாக்கடை அரசியலை *Տ மனக்கடலில் சாவடித்து ர
பேராசை அலை சந்தனமணம் வீசும் GS) ஒய வேண்டும் புதிய அரசியல்
N A Déé56f 61Jr. 607356. தோன்ற வேண்டும் fë s வேற்றுமை மேகம் பொறாமையை |慧旧 களைந்தோடி தியாக முட்களால் | = S ஒற்றுமைதி: பிய்த்தெறிய வேண்டும் WO உதிக்க வேண்டும்
த்திரி ஏழைகளின் கண்ணிரில் 89 புதத அக யை ஆனந்தப் படகோட்டும் 虑h
சமாதான 蟹ரால அநியாயக்காரர்கள் L அணைகக வண்டும் ஒழிய வேண்டும் |ଞ
| || வறுமையை உடைதது ான் என்று 理 நிம்மதி பிறந்திட ஃதுே | S வழிர்ெ_ நாமென்ற
வேண்டும்! வேண்டும்! நிலைதோன்ற வேண்டும்
궁 அகதி முகாமிகள் பிச்சைக்காரனாய் | | ஆரணிகளாகி கேட்கும் 5ܪܢ S இழந்த சுதந்திரம் இவ்வேண்டுதல்கள் S கிடைக்க வேண்டும் காலத்தட்டில் es நிறைவேறவேண்டும்

ஜீவா -
உங்கஷை ம
artir ay uri பட்டங்கள் அங்கீகரிப்பின் அடையாளம் தான் அவமதிப்பதற்கல்ல,
(ப்ரீவைகள் கெளரவப்படுத்துவதற்குத்தான்; கழுத்தை நெரிப்பதற்கல்வ.
விருதுகள் போற்றுவதற்குத்தான் புறந்தள்ளுவதற்கல்ல.
இந்த
எளிதிராபிள் வரிராஜரட் புரியாது (யாழ்) பல்கலைக் கழகமே எங்கள் ஜீவாவையா அங்கீகரிப்பதாப் அழைப்பு விடுத்தாய்?
நீ
ஆரத்தி எடுப்பதாய் UrF3FTrFJg 3T -r- சூடத்தால் அல்லவா சுட்டெரிக்கிறாய்.
அவர்
வரம்புகளை உடைத்து இலக்கியவாதியானவர்தான் வரம்புகளை மீறி
LJ " LÉ பெற விகரழபவரல்ல.
சுயம் தேடி வாழும் - ஒரு சோஷவிசவாதி (FTT) (EJT6 JT7irr?
அவர் உலகம் விசாலமானது! வானமே கூரை
AT
TTF NFLF
f90 J/rag!
பெனி யே.ச.
பூமியே தரை சக மனிதர்களெல்லாம் நண்பர்கள்
மனிதத்தை நேசிக்கும் - அந்த மானிடனா - உன் கலைமாணிப் பட்டத்தால் கர்வப்படப் போகிறார்?
5ք (5
மல்லிகைக்கு மாலை சூட்ட அரளிப்பூவையல்லவா ஆய்கிறீர்கள்
எழுதப்படாத கவிதைகளையும் வரையப்படாத சித்திரங்களையும் வரைந்த மனிதனுக்கு வஞ்சனை செய்கிறீர்கள்?
புத்தி ஜீவிகள் என பிரகடனப்படுத்திக் கொள்ளும பல்கலைக் கழகத்து ஜாம்பவாணர்களே - எதைக் குத்திக் காட்ட - இந்த "மலிவு" முயற்சி?
எப்படி முடிகிறது ஈழத்து படைப்பாளிகளின் இதயங்களில் வாழும் "இலக்கிய கலாநிதியை’ முது கலைமாணி என முள் முடி சூட்ட.?
ஜீவா -
உங்களை மன்னிப்பாராக,

Page 17
SS
தேசமும் G தர் தலும்
மீண்டும் ஒரு தேர்தலா? ஆண்டவனே! இது அரசியல்வாதிகளின் புண்ணியம்
கோடிக்கணக்கில் பணத்தை வீணாகக் கொட்டவா தேர்தல்?
தெருத் தெருவாகச் சண்டையை ஆரம்பிக்கவா தேர்தல்? .
இருக்கும் சிறு அமைதியையும் இல்லாதொழிக்கவா இந்தத் தேர்தல்?
பதவி, பணத்திற்காகவா இந்தப் பாராளுமன்றத் தேர்தல்?
தேசம் அழிய
இந்தச்
சீமான்கள்தானே காரணம்
கட்சி மாறுகிறார்கள்
காட்டிக் கொடுக்கிறார்கள் பச்சைப் பொய்களைப் பகிரங்கமாகச் சொல்கிறார்கள்
இனவாதத் தீயால் இந்த நாட்டை மீண்டும் மீண்டும் எரிக்கிறார்கள் மன நோயாளிகள் நிதிே
(OGFtKYTTETSLUIT DIT?
(

-
རྩི་
ஒரு கட்சி தோற்குமென்றால் இன்னுமொரு கட்சிக்கு ஒடுகிறார்கள்.
அற்பர்கள் இவர்கள் இதனால்
சொற்ப நேரத்தில் சொன்னதையே மாற்றுகிறார்கள்
விபச்சாரிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஏமாளிகளாப் மக்கள் இருந்தால் ஆண்டுக்கொரு தேர்தல் அரங்கேறவே செய்யும்!
бUT560JбЈ ЛЕОЈ 5