கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.01

Page 1


Page 2
T 画 O கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயினர்.
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே.
வணக்கர்,
ஞானம் வாசகர்கள், படைப்பாளிகள், நலனிவிரும்பிகள் யாவருக்கும் எமது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. மலர்ந்துள்ள புத்தாணி டில் எமது நாட்டில் சர்நீதியும் சமாதானமும் சுட்ரிட்சமும் நிலவவேண்டும்.
சகலரும் தமது செயற்பாடுகளை எவ்வித பயமூரினி ரி மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படவேண்டும். படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலைமை தோன்ற வேண்டும். .
இனப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு ஏற்படும் வரை இந்நாட்டில் அமைதி நிலவப்போவதில்லை. இதுவரை காலமும் இனப் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அரசியற் செயற்பாடுகளில் மக்கள் சவிப்படைந்து போயிருக்கிறார்கள்.
நடந்துமுடிந்த தேர்தலினி பின்னர் முனர்னெடுக்கப்படும் அரசியற் செயற்பாடுகள் நம்பிக்கை ஒளியைத் தருகின்றன. இம்முறை இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிட்டாவிடில், சமீபகாலத்தில் தீர்வு கிட்டப் போவதில்லை; அழிவுகள்தானி மிஞ்சும். மக்கள் மனதில் தற்போது ஏற்பட்டுள்ள நம்பிக்கை வீண்போகாமல் இருக்கவேண்ச்டும். இப்புதிய ஆண்டில் ஞானம் சஞ்சிகையின் தரத்தை மேலும் மேம்படுத்த, புதியபல அம்சங்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். ஆரம்ப எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தெடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துவோம்.
வாசகர்கள், படைப்பாளிகள் தொடர்ந்தும் தமது ஆதரவை
நல்கவேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.
- ஆசிரியர்.
 

உள் ளே.
Uasi ass6si மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இனை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன் ஓவியர்: நா. ஆனந்தன் கணனி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை விதி, கனன்டி. GabП.(5u. -08-478570 (Office)
08-234755 (Res.) FክX - 08-234755
E-Miigannagazineghtail.co
آ
சிறுகை
அடையாளம் . ... O A தாமரைச்செல்வி எதிர்நீச்சல் . 13 ச.கவிதா
புழுதி "r":"i" 2 சுதர்மமகாராஜன்
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் பா. கலாநிதி துரை. மனோகரன் இலக்கியப் பணியில் இவர். 19 ந. பார்த்திபன்
கவிதைகள் இலக்கியத் தராசு .ா 08 முல்லைமணி மயானக் கடத்தாr 09 கந்தையா கணேஷமூர்த்தி உலகம் சிறுக்கிறது கூா. I
எஸ். ஆறுமுகம் நானும் உன் கண்ணிரும். அன்சார்.எம்.வழியாம் 5ffåMIỗ ẩujíổ,... செல்வி ஜெனபீமா ஹமீட்
工. 2
... 25
மலைகளிடை உலகம் .பா. 28 வே,தினகரன் மரம் மதம் மனம் LLLL L L L L L LLLLL LLLL LL LL LLLLLLL L LLLLLLLLLL
மாவை.வரோதயன் செப்ற்றெம்பர் நான்காம் நாள் . ஹோர்ஹே ஸல்காடோ ரோச்சா p51,55s (6................. iii. எம்.வை.எம்.மீஆத்
32
திரும்பிய் பார்க்கிறேன். 18
அந்தனிஜீவா
நெற் றிக் &ât L 莺击
நக்கீரன்
வாசகப் பேசுகிறார் .டி28
O3

Page 3
62ormulu'r awtio
(தாமரைச்செல்வி A. கிளிநொச்சி)
இன்றைய பொழுது மிகவும் கவலையான மனநிலையுடன் ஆரம்பித் ததில் எனக்கும் வருத்தம் தான். என்றைக்கு காவல் பணிமனையினுள் நீலச்சீருடையுடன் ஒரு பணியாளனாய் நுழைந்தேனோ அன்றையிலிருந்தே என் மன உணர்வுகளை சமனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் இனி றைய பொழுது போலவே பலபொழுதுகளில் அந்த சமப்படுத்தல் எனக்குள் நிகழாமலே போய்விடுகிறது.
மேஜை மீது விரிக்கப்பட்ட வெள் ளைத்துணியின் மீது அந்த எலும்புக்கூடு வைக்கப்பட்டிருந்தது. பழுப்பு நிறத்தில் வினோதமான ஒருகோணத்தில் கை கால் வெவ்வேறாக கிடந்த அதைப் பார்க்கும்போது நெஞ்சுக் கூட்டுக்குள் குளிர்பரவியது போல் இருந்தது. நெஞ் செலும்பின் ஒரு பகுதி நொறுங்கிக் கிடந் தது. இது யாருக்குச் சொந்தமான எச்சம்.
கிளிநொச்சி நகரத்தை மீட்டெடுத்த இந்த ஒரு வருடகாலமாக இப்படி எத்தனை எலும்புக்கூடுகளைக் கண்டு எடுத்தாயிற்று. வாய்க்கால் கரைகளில். பற்றைகள் மூடிக்கிடந்த கொல்லைப் புறங்களில். மலசலகூடங்களின் குழி களில். கிணறுகளின் அடியில். அது வும் நகரத்திற்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில். அதிகமாகவே கண்டு பிடிக்கப்படுகிறது. தங்கள் காணிகளை துப்புரவு செய்யும் போதும் கிணறுகளை இறைக் ஆவெனத் திறந்து கிடக்கும் மலசலக்குழிகளைப் பார்க்கும் போதும் எலும்புக்கூடுகளைப் பார்த்து
கும் போதும்
04
விட்டு அலறியடித்துக் கொண்டு மக்கள் எங்களிடம்தான் ஓடி வருகிறார்கள். யாரோ எவரோ என்ற பதைபதைப்புடன் செய்தி எங்கும் பரவிவிடும். நாங்கள் எலும்புக்கூட்டை எடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்ப, வைத்தியர் தன் பகுப்பாய்வு அறிக்கையுடன் எமது பணிமனைக்கு அனுப்பிவைப்பார். அங்கும் இங்குமாய் சனங்கள் அடையாளம் காண அலை யும்.
இப்படி வெள்ளைத்துணி விரிப்பில் மூக்கை லேசாய் நெருடும் மணத்துடன் கிடக்கும் ஒவ்வொரு எலும்புக் கூடு களைப் பார்க்கும்போதும் மனதுக்குள் சொல்லமுடியாத துயரம் பொங்கும். அந்த வரிசையில் இது இன்னொரு எலும்புக்கூடு.
சிறிது காலம் முன்புவரை ரத்தமும் சதையுமாக இருந்த உடல். பத்து நாட்களுக்கு முன்பு வந்த தகவலைக் கொண்டுதான் இந்த எலும்புக்கூட்டைப் போய்ப் பார்த்தோம். வேலி பாய்ந்து ஒட முற்பட்ட அந்தக் கணத்தில் சுடப் பட்டு வேலிமேலேயே தொங்கிக் கொண் டிருந்த அதே நிலையிலேயே எலும்புக் கூடாகப் போயிருந்த மனிதன். இது அவனுடைய காணியாக இருக்கலாம். அல்லது ஓடிவந்த பாதையாக இருக் கலாம். உயிர்தப்பும் ஆசையில் ஒடி வந்து வேலிபாய்ந்த அந்தக் கடைசித் தருணத்தில் நிகழ்ந்த மரணம். தொங்கிய நிலையிலேயே மழையும் வெயிலும் பட்டு தசையும் இரத்தமும் காய்ந்து கரைந்து காணாமல் போயிருந்த தேகம் . நெஞ்சின் பக்க எலும்பும் காற்பகுதியும் நொறுங்கிக் கிடந்த கோலம். வேலி ஏறிப் பாய்கின்ற அந்தக் கடைசி
 

வினாடியில் கூட எப்படியும் தப்பிவிடு வோம் என்ற நம்பிக்கையோடு இருந் திருப்பான்; பாவம்.
மிதிவெடிகள் இருக்குமா என்று கவனமாக ஆராய்ந்து பற்றைகள் கடந்து அந்த வேலியை அடையப்பட்டபாடு. கிட்டத்தட்ட மூன்று நான்கு வருடங் களாக இந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன் றியது.
எதற்காக இங்கு வந்திருப்பான். இடம்பெயர்ந்து ஓடிப்போன இடங் களில் பசி பட்டினி தாளாமல் தனது வீட்டுப் பொருட்களை எடுக்கவோ அல்லது தனது காணியுள் உள்ள தேங் காய்களைப் பிடுங்கி வரவோ அவன் வந்திருக்கக்கூடும். ஓவென்று வெறிச் சிட்டுக் கிடந்த ஊரில் இராணுவத்தைக் கண்டுவிட்டு அவன் ஒடித்தப்ப முயற்சித் திருக்கிறான்.
சூடு விழுந்த அந்தக் கடைசி வினாடியில் இவன் என்ன நினைத்திருப் பான். தன்னை எதிர்பார்த்துக் காத்திருக் கும் மனைவி பிள்ளைகளை நினைத் திருப்பானோ.
அய்யோ. யாருக்கும் தெரியா மலே செத்துப்போய் விடுவேனோ என்று பதைபதைத்திருப்பானோ.
இப்படி வருஷக்கணக்கில் இதே வேலியிலேயே தொங்கிக் கொண்டிருப் போம் என்று இவன் கனவுகூட கண்டிருக்கமாட்டான்.
நெஞ்சுக்குள் பாரமாய் கனத்தது. நான் அந்த அறையை விட்டு முன் பக்கம் வந்து மேஜையில் அமர்ந்தேன். நேர் எதிரே வீதி.
வீதியில் நிறைய சனங்களின் நட LDst LLtd.
முட்டை முடிச்சுக்களை ஏற்றிக் கொண்டு ஆடிஅசைந்து கொண்டு ஒரு மாட்டு வண்டி கடந்து போனது.
அழிந்து போன நகரத்துக்கு திரும் பிக் கொண்டிருக்கும் மக்கள். எதிர்ப்புறம்
05
தரைமட்டமாய்ப்போன கட்டடக்கற்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாய் மண்சுவர் எழுப்பி தடைகள் கட்டிக் கொண்டிருந் தார்கள்.
அடையாளம் காணப்படுவதற்காக இங்கே எலும்புக் கூடு வைக்கப்பட் டிருக்கும் செய்தி இன்றைய பத்திரிகை யில் வந்திருந்தது. பார்த்துவிட்டு வரிசை யாய் வரப்போகிறார்கள்.
வைத்தியரின் அறிக்கைப்படி இது முப்பத்திரண்டிலிருந்து முப்பத்தியைந்து வயது வரையுள்ள ஆணின் எலும்புக் கூடு. தலையிலும் இடது மார்பிலும் சூடுபட்டதால் நிகழ்ந்த மரணம்.
இளவயது மனிதன். இவனுடைய பெயர் பரமுவாகவோ பாலச்சந்திரனா கவோ இருக்கலாம். இவனுக்கு ஒரு இளம்மனைவி இருக்கக்கூடும். இரண்டோ மூன்றோ குழந்தைகளும் கூட. மூன்றோ நான்கோ வருஷங்களாய் இவனைக் காணாமல் அவர்கள் எவ் வளவு தவித்துப் போயிருப்பார்கள்.
இந்த எலும்புக்கூட்டின் கழுத்தில் நீளமான தகடுகோர்த்த வெள்ளிச் சங்கிலி இருந்தது. வெள்ளியின் பள பளப்பு மறைந்து கறுப்பு படர்ந்திருந்த அந்த சங்கிலியையும் நைந்து போய் நிறம் மாறியிருந்த சாரத்தின் துண்டு களையும் சேகரித்து வைத்திருக்கிறோம். இவைகளைப் பார்த்துத்தான் யாரோ ஒரு பெண் வந்து அடையாளம் காட்டப் போகிறாள்.
யாராவது வந்து இது என் கணவர் தான். இது என் பிள்ளைதான். இது என் உறவுதான் என்று சொல்லும் அந்த நிமிடத்துக்காகத்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
யாரும் வந்து அடையாளம் காட் டாத எலும்புக்கூடுகளை பின் அறைக் குள் பெட்டிகளில் அடுக்கி வைத்திருக் கிறோம். எத்தனை பெரிய துயரம் இது. நகரத்தை இராணுவம் பிடித்த பின் னால் இப்பிரதேசத்தில் இருநூற்றி

Page 4
முப் பத்திநாலு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். கிருஷ்ணபுரத்திலும் அம்பாள் குளத்திலுமாக எட்டுப் பேரை சடலமாக மீட்க முடிந்தது. செஞ்சிலு வைச் சங்கம் மூலமாக நாற்பத்திரண்டு பேர் உயிருடன் இருப்பதாக அறியமுடிந் தது. இத்துடன் அறுபத்திரெண்டு எலும்புக்கூடு எடுத்தாயிற்று. மிகுதிப் பேருக்கு என்ன நடந்தது என்று தெரிய வில்லை. எங்கே புதைந்து கிடக்கின் றார்களோ.
இவர்கள் எப்போது மீட்கப்படப் போகின்றார்களோ.
ஒன்பது மணிக்கு முதலாவதாக ஒரு பெண், இளம்பெண் வந்தாள். அழுகை பரவிய முகத்துடன் தயக்கத் துடன் படி ஏறி உள்ளே வந்தாள். கூட வந்த முதியவர் வாசலுக்கு வெளியே நின்றுவிட்டார்.
இந்தப்பெண் முன்பும் எலும்புக் கூடுகள் வைக்கப்படும் நேரங்களில் அடையாளம் காண வந்திருக்கிறாள்.
போன தடவை இந்தப் பெண் ணுடன் எட்டுவயதுப் பையனும் வந்திருந் தான். எலும்புக்கூட்டைக் கண்டுவிட்டு அவன் பயந்து அலறிய அலறலில் கட்ட டமே ஆடிப்போய்விட்டது. இன்றைக்கு அவனைக் கூட்டிவராமல் முதியவரோடு வந்திருந்தாள்.
பக்கத்து அறைக்குள் நானும் சிவ ரூபனும் அவளைக் கூட்டிப் போனோம். எலும்புக்கூட்டை மிரட்சியுடன் பார்த்தாள். வெள்ளிச்சங்கிலியையும் சாரத்துண்டு களையும் பரிதவிப்புடன் பார்த்து விட்டு கண் கலங்க இல்லை என்று தலை யசைத்தாள். சோர்ந்து போய் வெளியே வந்து அந்த முதியவரிடம் ஏதோ சொல் லியபடி நடக்க அவர் தளர்ந்த நடை யுடன் பின்தொடர்ந்தார். மிகவும் கவலை யாக இருந்தது.
இந்தத் தடவை வெள்ளிச்சங்கிலி யும் சாரத்துண்டுகளும் அடையாளம் காண உதவியாகக் கிடைத்திருக்
06
கின்றன. அநேகமான எலும்புக்கூடு களுக்கு எந்தத் தடயமும் கிடைப்ப தில்லை. நாயும் நரியும் தசைகளைப் பிய்த்து இழுத்துக் கொண்டு போய்விடு வதில் எலும்புகளும் சிதறிச் சிதைந்து போய்விடும். அங்கும் இங்குமாய் தேடி சிலவேளைகளில் கூட்டி அள்ளி துண்டு துண்டாய்த்தான் எலும்புக்கூடுகளை எடுத்து வந்து வைப்போம். அவைகளை அடையாளம் காணமுடியாமல் சனம் பரி தவிப்போடு அலையும் காட்சி நெஞ்சை உருக்கும். அப்படியான சந்தர்ப்பங்களில் என் மனதைத் தேற்ற முடியாமல் நானே நொறுங்கிப் போவ துண்டு. இதென்ன கொடுமை என்ற பதைப்பில் கண்ணில் நீர் கூட வந்துவிடும்.
இப்படி அடையாளம் காணப்படாத பல எலும்புக்கூடுகள் பெட்டிகளில் பத்திர மாக இருக்கின்றன. காலம் முழுவதுமே யார் என்று அறியப்படாதவர்களாகவே அவர்கள் இருக்கப்போகிறார்கள்.
நீண்ட பெருமூச்சு எழுந்து அடங் கியது.
பத்து மணிக்கு மேலே தனியா கவும் கூட்டமாகவும் பலபேர் வந்தார்கள். அதிகம் பேர் பெண்கள்.
இவர்கள் ஒவ்வொருவரிடமும் எத் தனை சோகக்கதைகள் இருக்கக்கூடும். இந்தப் பணிமனையின் வாசலில் அமர்ந்து பெருங்குரலில் அழுதவர்களும் இருக்கிறார்கள்.
தமது கணவர் களை தமது பிள்ளைகளை எப்போதோ ஒரு நாளைக்கு எலும் புக் கூடாகவேனும் மீட்டுத் தரப்போகின்ற ரட்சகர்களாக எங்களை நினைத்துத் தங்களது துயரக் கதைகளைக் கொட்டித் தீர்ப்பவர்களும் இருக்கிறார்கள். காணாமற் போன தங்கள் உறவுகள் உயிரோடு இருக் கிறார்களா அல்லது இறந்துவிட்டார்கள என்ற இரு கேள்விகளுக்குமிடையே ஊச லாடிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். மூன்று மணிக்கு மேல் ஆட்கள்

வருவது குறைந்துவிட்டது. மதியம் சாப்பிடமுடியவில்லை. வெய்யிலின் சூடு கனல் பறக்க வெளியே பரவியிருந்தது. அந்த வெம்மை மனதுக்குள்ளும் ஊடுரு வியது.
இந்த வெள்ளிச் சங்கிலியை இவன் எங்கே வாங்கியிருப்பான்? ஏதாவது ஒரு கோவில் திருவிழாவில்..? அல்லது தெருவோர மணிக் கடையில்..?
மிக ஏழ்மையான மனிதனாகத்தான் இருக்கவேண்டும். முப்பது வயதுக் காலத்திலேயே மரணித்துப்போனானே. இவன் வாழ்க்கையில் அனுபவிக்க எத்தனை சந்தோஷங்கள் இருந்திருக் கும்.
தன் குழந்தையின் பிஞ்சுக் கால் நெஞ்சில் உதைக்கும் போதெல்லாம் ரசித்துச் சிரித்திருப்பானே. சிரிக்கின்ற அந்த அப்பா எங்கே போனார் என்று இன்றைக்கு அந்தக் குழந்தை எவ்வளவு ஏங்கிப்போயிருக்கும். எங்கோ காட்டுக் கரையில் உள்ள ஒரு குடிசையில் இவன் மனைவி இப்போது அழுது அழுதே தன்னைக் கரைத்துக் கொண்டிருப்பாள். வீடு பார்க்க என்றோ வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க என்றோ போன கனவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பரிதவித்துக் கொண் டிருப்பாள். பத்திரிகைச் செய்தியைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைத்திருக்குமா..?
தனது கணவனை எலும்புக் கூடாக வாவது கடைசியாய் ஒரு தடவை பார்க்க அவளுக்கு வாய்ப்புக் கிட்டுமா..?
நாலரை மணிக்கு இரண்டு பெண்கள் தயங்கித் தயங்கி வந்தார்கள். தூசு படிந்து போயிருந்த முகங்கள். மிக ஏழ்மையான தோற்றம். முன்னால் வந்த பெண் "ஐயா என்ர மனிசனை நாலு காணேலை. எங் கட காணிக்க தேங்காய் பிடுங்கி வரப்போன வர்.” என்று சொல்லி இரு கைகளையும்
வருஷ!nா !!!
07
ஏந்தி நின்று கண்கலங்கி அழுதாள். "ஒவ்வொரு முறையும் வாறனான் ஐயா, அடையாளம் தெரியுதில்லை. gy சேலைத் தலைப் பால் கண் ணிரைத் துடைத்தாள்.
இவர்கள் ஒவ்வொரு முறையும் வருபவர்கள் என்பது நினைவுக்கு வந்தது.
"அழாதேங்கோம்மா. இந்த தம்பி யோட போய் பக்கத்து அறையில பாருங்கோ. அடையாளம் தெரியுதோ எண்டு.”
அறைக்குள் போனவர்கள் ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்தார்கள். "இது இவர் இல்லை. இவரிட்ட இப்பிடி ஒரு சங்கிலி இல்லை. எனக்கெண்டால் அவர் ஒரு நாளைக்குத் திரும்பி வருவார் எண்டுதான் மனம் சொல்லுது. சாத்திரம் கேட்டனான். எங்கயோ இருக்கிறாராம். கட்டாயம் வருவாராம்."
அவள் மற்றப் பெண்ணிடம் சொல்லிக்கொண்டு போவது என் காதி லும் விழுந்தது. அடுத்த எலும்புக்கூடு கண்டுபிடிக் கப்படும் வரை அவள் இதையேதான் சொல்லிக்கொண்டிருப் usT6ir.
இவர்கள் வாசல் கடக்கையில் மஞ்சள் சேலை கட்டிய பெண் உள்ளே வந்தாள்.
அலுக்காமல் சலிக்காமல் திரும்பத் திரும்ப பரிதவிப்போடு வரும் பெண்கள். இவள் வெகு துரத்திலிருந்து நடந்து வருபவள்போல களைப்புடன் வந்தாள். இந்தப்பெண்ணை எனக்கு மிக நன்றாகத் தெரியும். பெயர் கூட நினை வில் இருக்கிறது.
பரிமளா. ஒவ்வொரு தடவையும் எலும்புக் கூடுகள் எடுக்கப்படும்போதும் தவறாமல் வருவாள். கோணாவில் பக்கம்தான் எங்கோ இருக்கிறாள். அங்கிருந்து நடந்துதான் வந்திருக்கவேண்டும். தலை கலைந்து துTசு படிநீ திருந்தது.

Page 5
இவளுக்கு மூன்று குழந்தைகள். கடை சிக் குழந்தை வயிற்றில் இருந்தபோது தான் இவள் கணவன் காணாமல் போயிருக்கிறான்.
இந்தப் பெண்ணின் கண்களில் நிரந்தர அழுகை இருக்கிறது. சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டே உள்ளே வந்தாள்.
"ஐயா.” தயங்கி நின்றாள்.
"எலும்புக்கூடு அடையாளம் காண வைச்சிருக்கு எண்டு பேப்பரில வந்த தாம். மத்தியானம்தான் பக்கத்துவிட்டுப் பிள்ளை சொல்லுது. உடனுக்கும் நான் ஓடி வாறன்."
"அங்க இருக்கு. போய் பாருங் Gæstubudst "
அவள் பக்கத்து அறைக்கு நடந்து போனாள்.
நான் எதிரே வீதியைப் பார்த்தேன்.
இதென்ன துன்பமான. மனதை வதைக்கும் உணர்வு. ஐந்து நிமிடம் கடந்து விட்ட அந்த வினாடி.
"அய்யோ என்ர அவர்தான். இது என்ர அவர்தான். என்ர கடவுளே." அந்தப்பெண்ணின் ஓவென்ற அலறல் சுவரெங்கும் மோதி மோதி அறைந்து ஒலித்தது.
இலக்கியத்தராசு ?
அமரகாவியம் -
கனகசபைப் புலவர் இதயத்தில் எத்தனையோ ஆண்டுகளாய் அடைகாத்து பொரித்திட்ட காவியக்குஞ்சு மேடையமைத்து "மைக்பூட்டி
சோடாவும் கொடுத்தால் பேசத்தெரியாதவரும் பேசுவார்தானே கம்பனுக்குப்பின் கனகசபை என்றார்கள் சபையில் இருந்து சோடாக் குடித்த இருபது பேரும் உரக்கத் தட்டினர் கையை ஐந்து புத்தகம் விலைப்பட்டாலும் புகழ்த் திரையால் கிறங்கிப் போனார் புலவர் இலவசம் போக எஞ்சியதைக் கட்டிச் சுமந்தார் பலசரக்குக் கடைக்காரன் பாலிய நண்பன் நூறு ரூபா கொடுத்து ஒன்றையேனும் வாங்குவான் என்றொரு நப்பாசை கொடுத்த காவியத்தைத் தராசில் இட்டானி அவன் இருநூறுகிறாம் - கிலோ பதினைந்து ரூபா விலையில் மூன்று ரூபாவைப் புலவர் கையில் திணித்தான் அவன் கடையில் இருந்தது என்ன இலக்கியத் தராசா?
08

கதவடைத்து வாய்பொத்தி O ஆடுவோம் பாடுவோம் நானும் நீயும் (DOOU()T60`645 கூதது மயானக்கூத்து
தெருவில் நமக்கென்ன வேலை வீட்டுக்குள் போடுவோம் உனக்கும் எனக்கும் - வீதிகள் - அதில் உனதும் எனதும் வண்டிகள் ஒடட்டும். பின் எரியட்டும் குப்பைத் தொட்டிக்குள் கிடந்து அழுது கொண்டும் சிரித்துக்கொண்டும் யார் யாரோ தின்று வீசும்
மகுடஞ்சூட்டி வரவேற்போம்!
நீர்க்குமிழ்களாய் எழும் துணை வர்ணங்கள் கூட எம் மூலவர்ணங்களை சிதைத்துச் சிரிப்பதனை - நாம் . அதிக காலம் மறந்தாலும்
காளியையும் இயமனையும்
குலதெய்வங்களாய்க் கொள்வோம் நதியும் மலையும் கிறிது ம்ே சிந்திப்போம் தென்றலும் அயலும்
எப்போதோ நம் எதிரிகளாயின என்பதை மறந்திடாமல் இனியேனும் நாம் மலையகம் விட்டிறங்கி பாலைக்கு வருவோம்
சத்தியமாய் பஞ்சம் இல்லை அங்கு!
எணர் சுவரைச்
உணர் கூரையை
எரிக்கவென்று நானுமாய்
எழுகின்ற உன் செயலும்
என் செயலும் சேர்ந்து
நமக்குள்ளே வன்செயல். எனதும் உனதும் குட்டிச்சுவரும், ஒட்டைக்கூரையும் என்பதை மறந்து
வெட்டுக்கள், குத்துக்கள்,
சுரண்டல், ஏமாறுதல், வறுமை, பட்டினி ހިހަޗަކަރކާރ)ހهރ காடடிக b)காடுததல், வேடடி தி'ருடல் - 彭 பூசாரி பார்த்தல், சூனியஞ்செய்தல் الانج ș* எட்டிப்பார் _r్యనో తో “ރީ இவைதாம் நம் வரலாறு كم s? ހފހި فهf
6f(3t Anth இனியேனும் . . . . 夕 。 کسمبر ‘‘لازمہ
- e. Ú°576ð67Úf6ಕ್ರ
ம் முருகனையும் AVN777 கைவிட்டு 4ంగ

Page 6
o C0م 1عه
எழுதத் தூண்டும் எண்ணங்கள் ce
(கலாநிதி தரை.மனோகரன்) நல்லாட்சி மலருமா?
பல்வேறு வன்முறைகளுக்கும், ஜனநாயக விரோதச் செயல்களுக்கும் மத்தியில் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்று, புதிய ஆட்சியும் அமைந் திருக்கிறது. முன்னொரு காலத்தில், நாட்டை இரட் சிக்க வந்த தேவர்கள், தேவதைகள் என்று கருதப் பட்டவர்கள் எல்லாம் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் ஊழல் பேர்வழிகள், உதவாக்கரைகள், போர் வெறியர் கள் என்று தெரிந்தபின்னர், மக்களிற் பெரும்பாலானோர் அவர்களை உதறித் தள்ளிவிட்டனர். பொது மக்களை விடத் தாங்களே புத்திசாலிகள் என்று கருதியவர்கள் எல்லாம், அதே மக்களிடம் அரசியல் பாடம் கற்கவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர். திரும்பத் திரும்ப ஒரே விதமான பொய்களைச் சொன்னால் மக்கள் நம்பி ஏமாறிவிடுவார்கள் என்று அரசியல் வாதிகள் நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. நாட்டின் எசமானர்கள், அரசியல்வாதிகள் அல்லர், தாமே என்பதைத் திடசங்கற்பத்துடன் மக்கள் நிரூபித்துவிட்டனர்.
கீறல் விழுந்த இசைத்தட்டை போன்று, சில அரசியல் வாதிகள் கடந்த சில ஆண்டுகளாக ஒரே விசயத்தையே மக்களின் செவிகள் புளித்துப்போகும் அளவுக்குத் திரும்பத் திரும்ப ஒப்பித்துவந்தனர். உள்ளத்தில் தந்திரமும், உதட்டில் சிரிப்புமாக அவர்கள் ஊரையும், உலகையும் ஏமாற்றி மகிழ்ந்தனர். வீட்டு உடைக ளோடு மேடைகளில் தோன்றிச் சிலர் கோமாளித்தனம் செய்து பார்த்தனர். சாதாரணமாக நடப்பதற்கே கஷ்டப்படும் சில அரசியல்வாதிகள், எதிரிகளை ஒடஒட விரட்டுவோம் என்று வீரசபதம் இயற்றினர். கர்ணன் உடலில் கவச குண்டலங்கள் ஒட்டியிருந்ததைப் போன்று, தமது உடலிலிருந்து பிரிக்கமுடியாத முறையில் கோட்டுச் சூட்டுடன் திரியும் சில அரசியல்வாதிகள், இரத்த உறவையே மறந்து, செஞ்சோற்றுக் கடனுக்காக உலகமெலாம் உலா வந்தனர். ஆயினும், மக்கள் தாங்கள் ஏமாளிகள் அல்லர் என்பதை அத்தகைய அரசியல்வாதிகளுக்கு உணர்த்திவிட்டனர்.
தேர்தல் என்பது நாட்டு மக்களின் ஜனநாயகத் திருநாள். அந்த நன்னா ளிலேயே நாட்டின் ஒரு பகுதி மக்களை வாக்களிக்க அனுமதிக்காத கொடுர அனுபவத்தை, ஜனநாயகத்தை ஓரளவாயினும் மதிக்கும் நாடுகளிற் காண்பதற்கு இல்லை. ஜனநாயகத்தை மறந்த நாடுகளில் மட்டுமே இத்தகைய படுபாதகச் செயலைக் காணமுடியும்.
நடந்துமுடிந்த தேர்தலில் மிகவும் திருப்திக்குரிய ஒரு விடயம், பேரினவாதம் பேசிப் பெரும்பான்மையின மக்களைத் திசைதிருப்ப முயன்ற சில்லறைக் கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டமையாகும். எல்லாப் பொருட்களும் கிடைக்கக்கூடிய ‘சுப்பர் மார்க்கெற்றுகள் இருக்கும்போது, சில்லறைச் சாமான்களை விற்கும் பெட்டிக்கடைகளைப் பெரும்பாலும் மக்கள் நாடுவார்களா? தேசியப் பூச்சுப் பூசிய இரண்டு பெரிய பேரினவாதக் கட்சிகளும், சிவப்புச் சாயம் பூசிய பேரினவாதக்
10
 

கட்சியும் நாட்டில் இருக்கும்போது, சில்லறைப் பேரினவாதக் கட்சிகளைப் பெரும் பான்மை மக்கள் தேடவேண்டிய அவசியம் என்ன? M கடந்த தேர்தல் எல்லோரையும் விட, முன்னாள் இராசவிசுவாசிகளைத்தான் மிகவும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது. ஆளுக்கொரு வாகனமும், நாளுக்கொரு பதவியும் பெற்றிருந்த இவர்களின் கனவுகள் கானல்நீராகி விட்டன. "அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ?" அநியாயங்களுக்கு எதிரான மக்களின் எழுச்சிகளையும் ஜனநாயக வரம்புக்கு உட்பட்ட அவர்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்துவதையே தங்களது பொழுது போக்காகக் கொண்டிருந்த இவர் களுக்கு, தமது விசுவாசத்துக்குரியவர்கள் செய்த வன்முறைகள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள் என்பவை எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. அவைகள் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை தற்செயல் நிகழ்வுகளே. “சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடீ" என்று பாரதி பாடியது நூறுவீதம் இவர்களுக்கே பொருந்தும். புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், இவர்களில் ஒருசாரார் புதிய இராசவிசுவாசிகளாக வேடந்தாங்குவர். இன்னொரு சாரார் தமது விதியை நொந்துகொள்வர்.
புதிய ஆட்சி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்களிடம் ஒருவகை நிம்மதிப் பெருமூச்சுக் காணப்படுகின்றது. ஆனால், இந்தப் புதிய ஆட்சி முள்ளுள்ள ரோஜாவா, அல்லது மணம் பரப்பும் மல்லிகையா என்பது காலப்போக்கில்தான் தெரியும். 1977 இலும், 1994இலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோது, பெரும்பாலான மக்கள் இப்படித்தான் மனம் மகிழ்ந்தனர். தொடக் கத்தில் புதிய ஆட்சி தொடர்பான சில நல்ல அறிகுறிகள் தென்படுவது மகிழ்ச்சிக் குரியதே. ஆயினும், எதிர்காலத்தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும், அதனோடு தொடர்பான பொருளாதார சுபிட்சத்தை ஏற்படுத்துவதிலும்தான் புதிய ஆட்சியின் திறமை தங்கியிருக்கிறது. சமாதானக் காவலர்கள் போன்று தோன்றி, இறுதியில் போர் வெறியர்களாக அரசியல்வாதிகள் மாறியமைதான் இலங்கையின் அண்மைக் கால அரசியல் வரலாறு. இத்தகைய கறை படிந்த அரசியல் வரலாற்றை மாற்றும் முறையில் நல்லாட்சி மலருமா? அனைவரதும் எதிர்பார்ப்பு இதுவே.
Φ . 國語 f委議夭龍if區 'ने கவனிப்பைப் பெற்ற
ARMSL 3 phầšESIMES, GER
w நெஞ்சை நிமிர்த்திற்று ஆசைகள் அழுதத அழுதத; வெறும் பதராய்;. விசாலித்த மனவட்டத்தின் ஆரை சிறுத்தொடுங்கி
பூரிப்பில் லயித்த
பெரும்புள்ளியானது; பெரும்புள்ளி ஈாபபால;
ഞ്ഞ பார்த்திருந்த மனவட்டங்களும் இதுகாறும் சிறுத்து சிறுத்து; காணாக்கிடந்த பெரும்புள்ளிகளாக. உலகின் கண்ணுக்கு - மானுடம் செத்த
չ9:ՕԿ5Օհ` சுனியமாயிற்று பிரபஞ்சம்; பெரும்புள்ளி தெரிந்தது; தணயமறறு மரபகு பெரும் புள்ளிகளைத்தானே நலனதத"ல
உலகம் சுருங்கித்தான்
8 afayab, அதற்குத் தெரியும் போயிற்று; சத்தியமாய்..!
(எஸ். ஆறுமுகம் - பரந்தன்)

Page 7
உணர் கணிணி ரும் நின்றிருந்ததற்காகவும்.
நீதான் அழுவாய்!
பக்கத்து வீட்டு நானும். பாத்திமாத் தங்கச்சி
சிரித்ததற்காகவும் அழுதிருக்கிறாய்!
நான் グ。 உன்னை அடித்தாலும் நீ என்னை அடித்தாலும் ܓܰܐܚ3 .கடைசியில் نہجہچ
அழுகையில் உனக்கு
*தம் r. அப்படியொரு நம்பிக்கை: € நம்
காதலின் பிரச்சினைகளுக்கு எப்படியோ என்னையுன் கண்ணிரின் சபையில்
೫೮ மண்டியிடச் செய்வாய்! நம் காலையை இது உனக்குப் w உன் கண்ணிரால் பழகிப் போயிற்று. வரவேற்பாய்! இனியென் நம் அந்தியை செய்வேன் நான் - உன் கண்ணிரால் 60 வழியனுப்புவாய்! எல்லாப் பிரச்சினைகளுக்குமான நான் oತ್ಸೆ' CS தாமதித்து வருவதாக :#er ற அழுதிருக்கிறாய். محم நான் இப்போதெல்லாம் எனக்கு
a e மற்றெல்லாவற்றையும் விட
2:03- பெரும் பிரச்சினையாகியிருப்பது. *சீரியஸா’க்கிச் o; தானர்! சிணுங்கியிருக்கிறாய்! உணர் , ' ' ( ! f
čo-ekА*A* و رسوم برہمارا علم Via ల్గొండితగతడే இப்போதெல்லாம். முன்புபோலல்ல - நிஜமாகவே வலித்ததாக :38 விசும்பியிருக்கிறாய்! அழுதுகொள்கிறேனர்!
திரும்பிப் பார்த்தபோது -
எவளோ மடவளை
ஒருத்தி அன்சார்.எம்.ஷியாம்
12
 

O
SCSLS தா "நான் சொல்லுவதைக் கேட் டுக்கோ ஜெயந்தி. நான் உனக்கு அக் காமாதிரிச் சொல்லுகிறேன். புருஷனைத்தொலைச்சிட்டு தனிமரமா, பார்க்கிறதுக்கும் லட்சணமாக இருக் கிறாய். கண்டவனுகளையெல்லாம் வீட்டிற்குள் சேர்க்காதே!. இந்த ஊரு வேற கெட்டுக்கிடக்கிறது. அதனால.” சொல்லிக்கொண்டுபோன பாக்கியமக்கா வின் பேச்சை இடைமறித்தாள் ஜெயந்தி,
“என்னக்கா சொல்றீங்க?" "இல்லை, புருஷனில்லாம ஒரு பொண்ணு தனியா வாழ்ந்தா, இந்த ஊருலகம் நாலு விதமாத்தான் பேசும். அதுவும் வேற்று ஆம்படையான் ஒருவன் வந்தால் போதும். கண், காது, முக்கு வச்சி ஒரு படமே தயாரிச்சிடும். நான் உன்னுடைய நல்லதுக்குத்தாண்டியம்மா சொல் லுகிறேன் . உலை வாயை மூடலாம். ஊர்வாயை மூடேலுமோ?"
ஜெயந்தியின் மனசுக்குள் கலக்க ரெயில் தடதடத்தது. பாக்கியமக்கா ஏதோ விபரீதமாக சொல்லப்போவது புரிந்தமாதிரியும், புரியாதமாதிரியும் இருக்க, தலை வலிக்கத்தொடங்கியது. "அக்கா! எதற்காக இப்படியெல் லாம் பேசுகிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!”
“ஏண்டியம்மா? நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இங்கே அடிக்கடி வாறானே மோகன், அவனுக்கும் உனக் கும் என்ன உறவு?” நமுட்டுச் சிரிப்புடன் கேட்டாள் பாக்கியமக்கா.
வானம் இடிந்து தலையில் வீழ்ந்ததுபோல் துடித்துப் போனாள் ஜெயந்தி. செல்லடிபட்டால் கூட இவ் வளவு வலிக்குமா? அவளின் சொல்லடி
ਭੰਥ6o
13
தம்பலகமம் நெஞ்சை இருகூறாக்கியது.
"ஏ. ஏன். அ.வரு." தொண்டை வரண்டு, சொற்கள் வெளிவரமுடியாமல் சிக்கித் திணறியது.
பாக்கியமக்கா மீண்டும் தொடர்ந் தாள். "இதை நான் கேக்கவில்லை. ஊர்ல பலரும் அரசல்புரசலா பேசிக் கிறாங்க. அதை உன்காதுபட சொல் லிட்டுப் போகலாமென்றுதான் வந்த னான்.” கூறியவள், கோணிப்பையி லிருந்த வெற்றிலையை கடைவாய்ப் பற் களுக்குள் திணித்துக்கொண்டு, "நான் போயிட்டு வாறன். ஜாக்கிரதையா இருந் துக்கோ சரியா?” சொல்லம்புகளை நாசூக்காக ஏவிவிட்ட திருப்தியில் தனது பெருத்த உடலை அசைத்தபடி விடை பெற்றாள்.
அவளது பேச்சால் நிலைகுலைந்த வளானாள் ஜெயந்தி. அவளது பெற் றோரின் அருமை இப்போது புரிய கண் ணோரங்களில் நீர் கசிந்தது. தாயோ, தந்தையோ உடனிருந்தால் இத்தகைய பழிச்சொல்லுக்கு ஆளாக முடியுமா? எப்படித்தான் பதிவிரதையாக இருந் தாலும், ஒரு துணையில்லாத பெண் னின் வாழ்க்கை எடுப்பார் கைப்பிள்ளை என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந் தாள்.
“எனக்கும் அந்த மோகனுக்கும் எதுவித உறவுமில்லை. எந்தத் தொடர்பு மில்லை. அவர் எனது வறுமையைப் போக்க வழிகாட்டிய தெய்வம். தயவு செய்து யாரும் தப்பாகப் பேசாதீர்கள்." ந்த ஊருக்கே கேட்கும்படி கத்த வேண்டும் போலிருந்தது.
அன்று அவள் போராடிப்பெற்ற வாழ்வு, இன்று அவளையே பாதாளத்
இ

Page 8
தில் தள்ளுகிறது. அவளது நினைவுகள் பின்னோக்கி நகர்கிறது.
ஜெயந்தி. அழகிய பச்சைப்பசே லென்று வயல்வெளிகளால் சூழப்பட்ட தம்பலகமம் என்னும் அழகிய கிராமத் தில் பிறந்து வளர்ந்தவள். கோணேசர் பூமியான அந்நிலத்தில் பஞ்சம் என்பதே இருக்கவில்லை.
கோணேசர் ஆலயத்தின் கணக்கப் பிள்ளை சபாபதி. அவரது மூன்றாவது மகள்தான் ஜெயந்தி. மூத்தவள் சாந்தி. அடுத்தது ஜெகதீஸ் , நான்காவது சுஜந்தி, அழகான குடும்பம் அவர் களுடையது. அந்தக் குடும்பத்தில் அழகானவள் ஜெயந்தி. பார்த்தால், மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் பேரழகு.
பருவச் சிட்டாக பள்ளி வாழ்க்கை யில் ஈடுபட்டபோது, அவள் அக்கா சாந்திக்கு மாப்பிள்ளை பார்த்தார் அப்பா. “கமலம். அந்தப் பையனுக்கு அம்மா அப்பா இல்லையாம். நல்ல பையனாம். சரிவந்தா முடிச்சிடலாம் என்ன?” குரலில் குதூகலம் தெரிய தன் மனைவியிடம் கூறுகிறார். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடி, சங்கள் பெண் பார்க்க வந்தான். அவனுக்கு சாந்தியை விட ஜெயந்தியின் அழகும், அடக்கமும் பிடித்துவிட, தயங்கியபடி தன் விருப் பத்தைக் கூறினான்.
ஆடிப்போனார் சபாபதி. அதிர்ந்து போனார்கள் மற்றவர்கள். "டேய், எழுந் திருடா. மூத்த பொண்ணைப்பார்க்க 6.155t (B S6006mu} Gust 605 60960M um கேட்கிறாயப் ? வெளியில போடா நாயே!...” தன்னிலை மறந்து பெருங் குரலில் கர்ஜித்தார். என் மூத்த பொண்ணுக்கு உன்னைவிட நல்ல பையனப் பார்க்கிறேன். கூறியபடி விரைவிலேயே சாந்தியின் திருமணத்தை நடத்திவைத்தார்.
ஜெயந்தி உயர்தரம் கற்பதற்காகத்
14
திருகோணமலைக் குச் சென்றாள். அப்போதுதான் மீண்டும் சங்கரைச் சந்தித்தாள்.
“ஜெயந்தி எப்படியிருக்கிறீங்க?" சட்டென்று அடையாளங் கண்டு கொண்டாள் அவள். அவனைச் சந்திக்க சங்கோஜமாயிருந்தது. "ந. நல்லாருக் Garub"
“உங்களுக்கு என்மேல் கோபமா யிருக்கும். எனக்குப் புரியுது. அதுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிப்பீர் களா என்னை?” இறைஞ்சும் பாவனை யில் கேட்பவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
அவனை நோக்கிப் புன்னகைத் தாள்.
அவளது புன்னகை அவனை மகிழ் வித்தது. அடிக்கடி இருவரும் சந்தித்தனர். மனம்விட்டுப் பழகினர். அவளையறியா மலே சங்கள்மேல் காதல் கொண்டாள் ஜெயந்தி.
ஜெயந்தியின் பெற்றோருக்கு தெரிந்துவிட்டதோ? தந்தை புயலாய் நுழைந்து, இடியாய் இடித்தார். அவள் காதலித்தாள் என்பதைவிட சங்கரைக் காதலித்தது கொலைக்குற்றமாகியது. படிப்பு பாதியில் நிறுத்தப்பட, சொந்த வீட்டில் சிறைவைக்கப்பட்டாள்.
ஆரம்பத்தில் பயந்துபோய் வீட்டுச் சிறையிலிருந்த ஜெயந்தி, காலப் போக்கில் துணிந்து, வீட்டைவிட்டு வெளி யேறி, சங்கரைக் கைப் பற்றியது அப்பாவுக்கும், குடும்பத்தவர்களுக்கும் பேரிடியானது.
பெற்றவர்களை மனம் நோகச் செய்துவிட்டு, தன் வாழ்வை இன்ப மாக்கிய ஜெயந்திக்குத் தன் வாழ்வில், விதி விளையாடப்போவது தெரிந்திருந் தால்?.
திருகோணமலையைவிட்டுத் தன் சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்குக் கூட்டிச்சென்றான் சங்கர்.

நான்கு வருடங்கள். இல்லறத் தின் இலக்கணத்தைக் கற்பித்தான். இனிமையான வாழ்வின் அம்சமாய் மூன்று வயது தினேஷ். தந்தையின்
வசந்தம் வீசிய வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. ஆம். யாழ்ப்பாணம் போர்க்களமாகியது. எங்கும் செல்லடி. யுத்தகளம் ரத்தகளமாகியது. எந்த இடத்தில் யாருக்கு என்னாகுமோ என்ற அச்சம். வேலைக்குப் போன சங்கள் வீடு திரும்பவில்லை. எந்தத் தகவலு மில்லை. தகவல் சொல்லும் நிலையிலும் யாருமில்லை. ஊரெல்லாம் மரண ஒலம்.
சங்கருடன் வாழ்ந்த வசந்தமான வாழ்வை நினைவுகளாக்கி, அன்பு மகனுடன் ஐந்து வருடங்களைக் கடந்து விட்டாள். தன் உயிரையும், மகனு யிரையுமாவது காப்பாற்ற, கப்பலேறி மீண்டும் திருகோணமலை வந்தவளுக்கு அதிர்ச்சி. தம்பலகமம் - போர்க்காலத்தில் ஏற்பட்ட காயங்களைக் கொண்டிருந்தது. தந்தையும், தாயும் மரணமான செய்தி மனதை உலுக்கியது. சகோதரங்கள் வாழுமிடம் கூட தெரியாமல் துடித்த போதுதான் அவனைக் கண்டாள். வறுமையில் வாடி நார்போல் காட்சி தந்த ஜெயந்திக்காகப் பரிதாபப்பட்டான் மோகன்.
(3LDT as 6i 69 (5 சமுர் தீ தி உத்தியோகத்தர். அவளது நிலையை அறிந்து, சுயதொழில்மூலம் வருமான
மீட்டும் வழியை சமூர்த்தி மூலம் பெற்றுக் கொடுத்தவன். வீட்டிலேயே கோழி, ஆடு என்று வளர்த்து வருமானம் பெறத் தொடங்கினாள் ஜெயந்தி.
உழைத் து முன்னேறுபவர் களையும், பிறருக்கு உதவுபவர்களையும் ஏனோ. இந்த உலகம் நல்லவிதமாக ஏற்பதில்லை. அவளது நடந்ததும் அதுதானே! வறுமையில் துடிக்கும்போது உதவாத “ஊர், இன்று
ES, 1 nr 3 f, an ano مهمه " معه س م ) ، مع سب
5
Y).
வளமாக வாழும்போது தூற்றுகிறதே!
நல்ல மனதுடன் உதவிபுரியும் மோகனையும் தன்னையும் இணைத்துப் பேசுவது எவ்வளவு துரோகம்? இந்த நல்ல உறவை யாருமே புரியமாட்டார் களா? மனதுள் பல எண்ணங்கள் வெளிவர, கண்ணோரங்களில் கண்ணிர் கோடிட்டது.
"அம்மா! அம்மோவ். பசிக்கு தும் மா. ஏம்மா இப்படியிருக்கே? எழுந்திரும்மா..!" அவளின் தோள் பட்டையைப் பிடித்து உலுக்கினான் தினேஷ்.
திடுக்குற்று நிமிர்ந்தபோது, அவ ஸ்ரின் கண்ணிரைத் தன் தளிர்விரல் களால் துடைத்துவிட்டான்.
"ஏம்மா, அழறீங்க? யாராச்சும் ஏசினாங்களா? யாரும்மா ஏசினது?" கவலையோடு கேட்கும் மகனை இறுக அனைத்துக்கொண்டாள். “இல் லடா கண்ணா, அம்மாவுக்கு தலை வலிக்கு துப்பா.”
"அம்மா, நான் தைலம் தேச்சு விடறேன்.” கூறிக்கொண்டு தைலம் எடுக்கப்போகும் மகனை அன்பு ததும்பப் பார்த்தாள். "தம்பி! என்னை எல்லாரும் தப்பாப் பேசுறாங்கப்பா. நான் நல்ல
- గ^ * 2 + + -- ہم نہم تہہ تک ti-ii . குடும்பத்தில பிறந்தவடா.
: '\' Lu Wu Vu Vv WS-y Vy
ஒருகாலமும் தப்புப்பண்ணமாட்டேன்டா. உங்கப்பாவைத் தவிர வேறுயாரையுமே

Page 9
மனசாலசுட நினைச்சதில்லையப்பா. நான் சாகும் வரைக்கும் அவரோட நினைவுகளோடவே வாழ ஆசைப்படு கிறேனடா, புரியுமா உனக் கு?
நாளைக்கு நீமட்டும் என்னைப் புரிவா
யென்ற நம்பிக்கையில வாழ்கிறேண்டா" மனதிற்குள் புலம்பினாள்.
*தம்பி வாப்பா! சாப்பிடுவம் தைலம் தடவும் மகனை அழைத்துக் கொண்டு எழுந்தாள். சோறும் குழம்பும் பிசைந்து மகனுக்கு ஊட்டினாள். பாடசாலையில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்தபடி சாப்பிட்டான் தினேஷ்.
"நானும் சாப்பிட வரலாமா?" கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த மோகனைக்கண்டு அதிர்ந்தாள். அக்கம் பக்கத்து மனிதர்கள் ஏளனம் செய்வது போல் தோன்ற உடல் சிலிர்த்தாள்.
"என் ன ஜெயந் தி? எதுவும் பேசாமல், உள்ளே கூப்பிடாமல் பயந்து போய் நிக்கிறீங்க? புன்னகைத்துக் கேட்டான்.
பயம்தான்; இந்த ஊருலகுக்குப் பயம். பதிவிரதையான என்னைத் தூற்று கிறதே என்ற பயம். கூறமுடியவில்லை அவளால். “இருங்க.." மகனின் வாயைக் கழுவிவிட்டாள்.
அவளின் நடவடிக்கை முரண்பட்ட தாகத் தெரிய மீண்டும் கேட்டான் மோகன். "ஏன் ஜெயா ஒரு மாதிரி இருக் கிறீங்க?" குரலில் கனிவு பிறந்திருந்தது, வார்த்தைகளில் அன்பு தெறித்தது.
உள்ளத்தில் அடிபட்டாள். "ஒ. ஒண்ணுமில்லை"
"இல்லை ஜெயா, ஏதோ இருக்கு. மறைக்கிறீர்கள் என்னிடம் . அது என்ன?.”
அவள் மனது துடித்தது. என்ன சொல் வது? இத்தனை எத்தனை உதவிகள் புரிந்தவர்? கடனாக இல்லை. ஆனால் கடமைப்பட்டவள்
öf 6)(jpit
தானே. இவரிடம் எப்படித்தான் கூறுவது? ஆனால் கூறாமல் விடவும் முடியாதே நாளை என்வாழ்வு மட்டுமல்ல. என் மகனின் வாழ்வும் சீரழிஞ்சிடும். அதனால் அவர் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. துணிந்துவிட்டாள்.
"அம்மா, நான் விளையாடிட்டு வாறன்." கூறிய மகனை “இல்லை, விளையாடப் போகவேண்டாம். புத்த கத்தை எடுத்துப்படி.." என அதட்டினாள். அதட்டிய அன்னையை வியப்புடன் பார்த்த தினேஷ் புத்தகத்தோடு அமர்ந் தான.
"மோகன், நான் ஒன்று சொன் னால் தப்பாக நினைக்க மாட்டீர்களே?” uuuggjL66 (35(LT6ir.
ஒருகணம் மோகனின் கண்கள் பிரகாசித்து மறைந்தது. "என்ன விஷயம்?” ஆவலோடு கேட்டான்.
"நீங்க இங்கே வந்துபோவதை ஊரில தப்பா பேசறாங்க. மத்தியானம் கூட பாக்கியமக்கா வந்து விசாரிச்சிட்டுப் போனவ." அவமானத்தில் முகம் சிவக்க, தட்டுத்தடுமாறிக் கூறிமுடித்தாள்.
சற்றுநேரம் அமைதி நிலவியது. ஜெயந்திதான் கலைந்தாள்.
*அதனால்.” "அதனால.?” "நீங்க. இங்க." "வரவேண்டாமென்று சொல்கிறீர் களா?" பளிச்சென்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஏன் ஜெயந்தி, அவங்க பேசுறது உண்மையாக இருக்கக்கூடாது?” சர்வ சாதாரணமாகக் கேட்டான்.
“என்ன சொல்றீங்க?" வில்லை அவளுக்கு.
"நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறேன்.” கண்கள் بجلسہ حسی۔بی۔سی کی . سب کی ہی۔یہ ٹی۔بیگ = LAOU OU GEJ only Oui OU
மின்சாரத்தை மிதித்தாள் ஜெயந்தி. "ஜெயா, நாம கல்யாணம் செய்து
ւկflա
16

கிட்டா உங்களுக்கும் துணை, தினேஷ"க்கும் அப்பாவா நடந்துப்பன். ஊரவங்க பேசினா, இனி, அவங்க வாய அடைச்சிரலாம்.”
"நோ. ஒ.” அலறினாள். "ப்ளிஸ். மேல பேசாதீங்க. உங்களை ஒரு தெய்வமாகத்தான் நினைக்கிறேன். என் வறுமையைப் போக்கினவர். என் குடும்பம் ஒரு நல்ல நிலைக்கு வர வழியமைச்ச நீங்க ஒரு தெய்வம். அந்த நிலையிலிருந்து தயவு செய்து இறங்கிடாதீங்க. நான் வேற எந்தவிதமான தப்பான எண்ணத் தோடேயும் பழகவேயில்லை. புரிஞ்சுக் கோங்க.." அழுகையுடன் போட்டி போட்டாள்.
“என்ன ஜெயா! நான் தப்பா எதுவும் கேட்கலையே! உங்க கணவன் கூட உதவி செய்வார். அதுக்காக அவரை கடவுளா பூஜிப்பீங்களா? அது மாதிரித்தான் நானும் உதவி செய்தேன். இன்றைக்கு நான் உதவும் போது சேர்த்துப் பேசின ஊர், நாளைக்கு வேறொருவனோட சேர்த்துப் பேசாது என்று என்ன நிச்சயம்?. அதுமட்டு மில்ல. உங்களை எனக்கு ரொம்பப் பிடிச் சிருக்கு. சம்மதிப்பீங்களா ஜெயா?" கெஞ்சினான்.
"ப்ளிஸ்! என் மனசை நோகடிக்கா தீங்க. என்றைக்காவது என்னுடைய கணவர் வருவார். இல்லை வராமல் போனாலும் அவரைத்தவிர என்னால யாரையும் நினைக்க முடியாது. அவரது
நினைவுகளோட, அவரது ரத்தத்தில
பிறந்த என் மகனோட நான் வாழ்ந் திடுவன். ஒரு பொண்ணுக்கு ஒரு முறை தான் தாலி ஏறணும். இன்னும் என்கிட்ட அவரது தாலி இருக்கு. எனக்கு வேற யாருடைய உதவியும் தேவையில்லை” விம் மியழுதபடி உள்ளறைக் குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டாள்.
விக்கித்து நின்றான் மோகன். அவ னால் நம்ப முடியவில்லை. இப்படிப்பட்ட பெண்ணும் இருப்பாளா? படங்களில் தான் பதிவிரதையாக நடிப்பார்கள். ஆனால் ஜெயந்தி?. சீதை வரிசையில் வழிவந்த கற்புக்கரசி அவள். ஊருக்குப் புரியுமா அவளை? தனது விருப்பத்தை அவளிடம் கேட்டதுக்காக வெட்கினான். வேதனைப்பட்டான். வெளியேறியபோது எதிர்வீட்டு மீனாம்பாள் தாடையிலடித்துக் கொண்டு "கர்மம் கர்மம். என்றாள்.
அவளது தூற்றுதல் புரிந்தாலும் உள்ளம் நிறைந்த தீர்மானத்துடன் கால்களை எட்டிவைத்து நடக்கிறான் மோகன். அவனது மனம் இப்போது
இலகுவாயிருந்தது.
ஜெயந்தி. குமிறிக் குமிறி அழுகிறாள். ஏற்பட்ட களங்கங்கள்
எல்லாம் அவளது கண்ணிரில் கரையும் படி அழுகிறாள். அவளது அடிமனதில் ஒரு நிம்மதி பிரவாகமெடுத்தது.
பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது எத்தனை உண்மை? அவளது வாழ்வின் தூற்றுதலுக்கும் பெண்கள் தாமே காரணம். பாக்கியமக்காவின் பேச்சால் அதை உணர்ந்தவள்தானே ஜெயந்தி!
ஒரு பெண் தனித்து வாழ்வதென்பது எத்தனை பெரிய சாகஸச்செயல்.? வாழ்வு முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வாழவேண்டும் என்பது விதி. எத்தனை பெண்கள் நீந்த முடியாமல் அடித்துச் செல்லப்படுகிறார்கள்?
துை ஜெயந் தியைப் போல இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஜெயந்திமேல் எத்தனை களங் கங்கள் சுமத்தப்பட்டாலும் நிச்சயம் ஒரு நாள் அவளை உலகம் புரிந்து கொள்ளும். அதுவரை நீந்திக்கொண்டே யிருப்பாள் அவள்.
a tatar As Izry acar - vivi. vii. viri-Wv savi
17

Page 10
A. அந்தனிஜீவா- 7>
3^ת,
"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது کساسا : y சொற் புதிது சோதிமிக்க நவகவிதை” என்று சொன்ன நெருப்புக்கவிஞன் பாரதியின் கவிதா வரிகளை நினைவு கூர்ந்து,
புதிய ஆண்டில், புதுமைச் சிந்தனையுடன் எனது கலை, இலக்கியப் பணியைத் தொடர்கிறேன்.
புதிய ஆண்டில். நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். கலை இலக்கியத்துறையில், நான் பதித்த காலச்சுவடுகளைத் திருப்பிப் பார்க்கிறேன்.
ஏடு தூக்கிப் பள்ளி செல்லும் காலம் முதல் இலக்கிய ஆர்வம் காரணமாக சஞ்சிகை, நூல்களை தேடிப்பார்க்கும் ஆர்வம். இன்றுவரை தொடர்கிறது.
ஜெயகாந்தனே என்னை முதன் முதலில் ஆகர்ஷித்த படைப்பாளி. அவரின் தேவன் வருவாரோ. சிறுகதைத் தொகுதியை எத்தனையோ தடவை படித்துப் பார்த்திருக்கிறேன்.
அவரின் எழுத்துக்களே எனக்கு புதுமைப்பித்தனையும் பாரதியையும் சிறப்பாக அறிமுகப்படுத்தின.
எழுதவேண்டும் என்கிற ஆர்வம் இளவயதிலே ஏற்பட்டது. பதினைந்து வயதில் எனது படைப்புகள் அச்சில் வலம் வரத் தொடங்கின.
சுதந்திரன் வார இதழில் மாணவர் பக்கத்தில் எனது கவிதை ஒன்று வெளிவந்தது.
பின்னர் வீரகேசரி, தினகரன். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு ஆகியவற்றின் மாணவர்பகுதிகளில் என் எழுத்துக்கள் இடம் பெற்றன.
ஆனால். என் வளர்ச்சியில் அக்கறைகாட்டி, ஆர்வத்தை ஊக்குவித்த அறிவுமேதையை இன்றும் நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன்.
அவரின் நட்பால். பல படைப்பாளிகளின் நட்பும் கிடைத்தது. நான் நாடகத்துறையில் ஈடுபடுவதற்கு அவரே காரணம். அவர் என்னை மாத்திரமல்ல. எத்தனையோ பேரை உருவாக்கியவர். அந்த மேதை...?
(அடுத்த இதழில்.)
 
 
 

தென்னிலங்கைத் தமிழை, குறிப்பாகத் திக்கு வல்லைக் கிராமத்தில் அந்த மக்களால் அன்றாடம் பேசப்படும் தமிழை, இலக்கிய மேடையில் அரங்கேற்றம் செய்த பெருமை கமாலைச் சாரும் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெய்தல் நம்பி என்பவரால் புகழப்பட்டவர் திக்குவல்லைக் கமால். கோடையும் வரம்புகளை உடைக்கும், குருட்டு வெளிச்சம், விடுதலை, புதிய பாதை, வரண்டு போன மேகங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதி களின் சொந்தக்காரரான இவர், ஒளி பரவுகிறது. நச்சுமரமும் நறுமலர்களும், பாதை தெரியாத பயணம் ஆகிய நாவல்களையும் எழுதித் தன்னை சிறுகதை, நாவல் ஆகிய இரு துறைகளிலும் இனங்காட்டிக்கொண்ட பெருமைக்குரியவர். இவை தவிர தினகரனில் மேலும் ஐந்து தொடர்நாவல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடக்கூடியது. ஒளி பரவுகிறது சாகித்தியப் பரிசினைப் பெற்றுள்ளது. புதுக்கவிதை முனைப்பெடுத்துவந்த காலகட்டத்தில், 1973 களில் எலிக்கூடு என்ற பெயரில் இவரது புதுக்கவிதைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு புத்தகமல்லாது பிரசுரமாக வந்ததையும் குறிப்பிடவேண்டும். படிக்கும் காலத்தில் கவிஞர் ஏ.இக்பாலின் வழிகாட்டலில் ’சுவை என்ற தட்டச்சு சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் செயலாற்றியுள்ளார். அழுத்கம ஸாகிறாவில் கவிஞர். ஏ.இக்பால் அவர்களின் நட்பும்(ஆசிரிய - சிஷய உறவு) அவரது ஆதரவும் தனது இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன என்று நன்றியுடன் குறிப்பிடும் இவர், அபூதாலிப் அப்துல் லத்தீ"யின் “இன்ஸான் சிறுகதைகளின் பாதிப்பாலும், அதற்குச் சில கதைகள் எழுதிய அனுபவத்தோடும் எழுத்துப் பணியை ஆரம்பித்ததாகவும் குறிப் பிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் இன்று பல உச்சங்களைத் தொட்டு, தான் காலடி பதித்த துறைகளில் மிளிர்வதைப் பார்க்கிறோம்.
தனது திக்குவல்லைக் கிராமத்தின் வாழ்நிலையை, அங்கு வாழும் மக் களின் பேச்சு மொழியில் - சமய கலாசார பகைப்புலத்தில் எழுதி வெளியிட்ட சிறுகதையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்க திறமை வாய்ந்தவர் இவர். அதனால் தானோ என்னவோ கமாலின் கதைகள் புரிவதில்லை என்ற குரல் யாழ்ப்பாணத் திலும், கொழும்பிலும், ஏன் சென்னையிலும் கூட ஒலித்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, இந்தக் குரல்களையும் தாண்டி இவரது சிறுகதைகள், நாவல்கள் பேசப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை இலக்கிய நெஞ்சங்கள் உணர்வார்கள். இதற்குச் சான்று பகர்வனவாக ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் மாத்திர மல்ல தமிழக சஞ்சிகைகளான தாமரை, செம்மலர், கணையாழி, வானம்பாடி முதலிய சஞ்சிகைகளும் இவரது கவிதை, கதை என்பவற்றைப் பிரசுரித்து இவரது ஆக்கங்கள் ஆழமாகப் படிக்கப்பட வேண்டியவை என்ற உண்மையைப் பறைசாற்றி நிற்கின்றன. s
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் நிரம்பி வாழும் திக்குவல்லைப் பிரதேசத் தில், ஒரு குறிப்பிடக்கூடிய பகுதியில் செறிந்து வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில், தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு கல்வி மொழியாகவும் செயற்படுத்திக்
19

Page 11
கல்வி கற்று ஆசிரியராகப் பதவிபெற்று இன்று கல்வி அதிகாரியாக (வவுனியா தெற்கு வலயத்தில்) உயர்ந்து நிற்கும் எழுத்தாளர் கமால். மனித குலம் எங்கு வாழ்ந்தாலும் அதன் பிரச்சினைகளில் ஒரு பொதுத்தன்மை உண்டு. மனிதாபிமானத் தோடு அதனை இலக்கியமாக்கும் போது அது மொழி, இன, தேச எல்லைகளைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. இந்த உயர் பணியின் பங்காளிகளுள் ஒருவர் கமால் என்று எம்.எச்.எம்.ஷம்ஸ் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். இந்த எல்லைகளைத் தாண்டிய உயர் பண்பினாலேதான், ஒரு தொகுதி போடக்கூடிய அளவுக்கு இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியாகியுள்ளன.
தென்னிலங்கையின் வாழ்வை மண் மணங்கமழ, கவிதையின் வசீகரத் தோடும், மானிடப் பரிவோடும், முற்போக்குத் தளத்தில் நின்று இலக்கியமாக்கி வரும் கமால் அவர்களுக்கு ஈழத்துப் படைப்பிலக்கியத்தில் முன்னணி இடம் எப் போதோ உறுதியாகிவிட்டது என்பதை எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது. மேலும் இவரது கதைகளில் நாம் கண்டு கொள்ளாத எத்தனையோ விடயங்களை அற்புதமாகக் கலையாக்கி விடுகிறார் எனவும், கிராமத்து மக்களின் பேச்சு மொழியை இயன்றளவு இயல்பாக வெகு லாவகமாக பதிவு செய்கிறார் எனவும் பல விமர்சகர்கள் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். இவரது தொடரொன்று தினகரனில் வந்து தற்போது நாவலாகியுள்ளது. உயர்கல்வியில் சரியான பிரிவைத் தெரிவு செய்யாமல் காலத்தையும் திறமையையும் வீணாக்கி ஓரம்போகும் மாணவ சமூகத்தைப் பேசும் இளைஞர்களைப் பற்றிய நாவல் பாதை தெரியாத பயணம். தன் துறைசார்ந்த அனுபவத்தோடும் எழுதியுள்ள சிறந்த நாவலாகும்.
திக்குவல்லை என்ற நாமம் இன்று ஈழத்து இலக்கிய உலகில் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றது. அதற்குக் கமால் போன்றவர்கள் தம்மை இலக்கிய உலகிற்கு அர்ப்பணித்துச் செயலாற்றி வருவதே காரணம் எனக் குறிப்பிட்டு, மல்லிகையில் இவரெழுதிய 50ற்கு மேற்பட்ட சிறுகதைகளுள் 20ஐத் தெரிவு செய்து, தன் மல்லிகைப் பந்தலினுடாக மலரவிட்டுள்ளார் டொமினிக்ஜிவா. முதன்முதலில் மல்லிகையின் சிறுகதைகள் (ஒரே சஞ்சிகையில் மலர்ந்த, ஒரே எழுத்தாளரது சிறுகதைகள்) என்ற பெருமையையும் தட்டிக் கொண்டவர், கமால். மல்லிகையில் 50ற்கு மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளனவா! என்ற ஆச்சரியத்திற்கும் உரியவராகத் திகழ்கிறார் கமால் என்றால் அது மிகையல்ல. இவை தவிர வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் புகையில் கருகிய பூ என்ற நாடகம் நூலுருப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் முற்போக்குத் தளத்தில் நிற்பவர் இவர் என்பதை, இவரது நூலில் சமர்ப்பணமாகக் கொடுத்திருக்கும் விடயமொன்று சான்று பகரும் என நம்பலாம். “என் கதைப் பூக்களை, மல்லிகைப் பூக்களாக்கி, அச்சுக்கோர்த்த மணிக்கரம், திரு கா.சந்திரசேகரன் அவர்களுக்கு சமர்ப்பனம்" எனக் குறிப்பிடுகிறார். அந்தத் தொழிலாளியின் உழைப்பை நன்றியுடன் நினைவுகூரும் இவர், தீர்க்கமும் தீர்மானமும் பிடிவாதமும் கொண்ட சித்தாந்தச் செறிவுடன் தொடர்ந்தும் தெளிவாய் எழுதுகிறார். பல இலக்கிய விமர்சகர்களது பல்வேறுபட்ட குறிப்புகளிலிருந்து இவரது எழுத்தின் ஆளுமையை யாரும் புரிந்து கொள்ளலாம். இவ்வாறான ஆற்றல்கொண்ட எழுத்தாளரிடமிருந்து, அடக்கமாகக் காரியமாற்றுபவரிடமிருந்து இன்னுமின்னும் இலக்கிய முயற்சிகளை இலக்கிய உலகம் எதிர்பார்ப்பதில் வியப்பில்லைத்தானே.
20

H«Ա?
சுதர்மமகாராஜன்
கொங்கல்ல
வெயிலின் கடுரம் தாளாது அதன் வீச்சு கண்களின் ஆழம் தாண்டி நரம்புகளை விர்விர் என இழுக்கச் செய்து, கண்களை மூடச்செய்தது. சற்று கதிரவனின் வீச்சை எதிர்க்கலாமென நினைத்து இலேசாய் கண்களை திறப் பதற்குக்கூட முடியாமல் உடலின் ரணம், உடல் வலுவைக் குறைத்திருந்தது.
அதிகமான இரத்தப் போக்கு உடலை சோர் வாக்கி, அப்படியே விறைத்த கட்டையாய் படுத்துக் கிடக் கிறேன். இல்லை. இல்லை சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.
பாதி உடல் பற்றைக்குள்ளும், மீதியுடல் மணற் பாதையிலுமாய், வீழ்ந்து கிடக்கிறேன். என் சைக்கிளின் முன் சில்லோ, பின்சில்லோ முதுகின் ஒரு பக்கத்தை அழுத்திக் கொண்டிருக் கிறது. விலாவில் பாய்ந்திருக்கும் தோட் டாவின் ரணம் ஒருபுறம், முதுகை அழுத் தும் சில்லின் அழுத்த வேதனை ஒரு புறம், முதுகின் மறுபாதி பாய்ந்த குருதி யினாலோ என்னவோ, தோய்ந்து. நனைந்து கொடுர வெயிலுக்கு இதமாய் சில்லென்று இருக்கிறது. இருந்தும். அந்த உறையும் குருதியின் நெடிதான் மனத்தைக் குமட்டுகிறது. தலையை உயர்த்திப் பார்க்கலாமென்றால் உடல் வலுவில்லை. தலை விண்விண் என்று வலிக்கின்றது. சற்றுக் கண்களைத் திறந்து பார்க்கலாமென்றால், கதிர வனின் கடுர வீச்சு அதற்குத் தடை விதிக்கிறது.
பழக்கப்பட்ட வெயில்தான். எத் தனை உஷணமாக இருந்தாலும் தாங் கக்கூடிய உடல்வலுதான். உலர்ந்த மண்ணோடும், அதன் புழுதியோடும்
21
கடுர வெயிலைக் கூட பொருட்படுத்தாது போராடி உழைக்கும் உடல்தான். இன்று ஒரு தோட்டாவிற்குள் அடங்கி ஓய்ந்து கொண்டிருக்கிறது.
காலையில் வெளியே புறப்படும் போது அம்மாகூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தன.
“டேய் தம்பி. சற்றுப் பொறுத்துப் போ. இன்றைக்கு ஊர் நிலவரம் அவ் வளவு நல்லாயில்லை."
அம்மா கூறியதுபோல் சற்று பொறுத்தே வந்திருக்கலாம். அப்படி வந் திருந்தால், சிலநேரம் இப்படி அநாதை யாக பாதையோரத்தில் செத்துக்கொண் டிருக்க வேண்டிய நிலை ஏற்பட் டிருக்காது.
மனத்தின் ஆழத்திலிருந்து ஏதோ ஒரு உருண்டை மேலெழுந்து மீண்டும் வேகமாய் கீழ்ச்சென்றது. மனம் வேக மாய் திக் திக் என்று அடித்துக்கொள் கிறது. மனதின் இந்தக் கலக்கம் எதன் பொருட்டு? மரணத்தை நினைத்தா? உண்மையில் இந்தக் கலக்கம் மரண பயம்தான். வாழ்வின் இறுதித் தறுவா யில் எந்த மனிதனுக்கும் இது சாதாரண மாய் வரும் பயம்தான். அதுவும் இப்படி ஒரு நிர்க்கதியான மரணம் என்றால், நிச்சயம் எவருக்கும் ஒரு அச்சம் வரத் தான் செய்யும்.
பொதுவாக பொறுப்புகள் அதிக மாய் உள்ள மனிதன் மரணத்தைக் கண்டு பயப்படத்தான் செய்வான். தாயைக் காக்கவேண்டிய பொறுப்பு, தங்கைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு என்று பல பொறுப்பு களைக் கொண்டவன், மரணத்தைக் கண்டு அஞ்சத்தான் செய்வான். நானும்

Page 12
அஞ்சுகிறேன்.
நான் எத்தனை மணி நேரமாய் இப்படி விழுந்து கிடக்கிறேன் என்று யோசித்தப் பார்த்தேன். காலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது ஒன்பது மணியிருக்கும். இப்போது எத்தனை மணியாயிருக்கும்? கைக்கடிகாரத்தின் ஞாபகம் வந்தது. மணி பார்ப்பதற்காக இடது கையைத் தூக்கினேன். ம்ஹ". அது அசைந்து கொடுக்கவில்லை. பதிலாக விறைத்த கட்டையாய் உணர் வற்றுக் கிடந்தது. வெயிலின் கடுரத்தைப் பார்த்தால் நண்பகலைக் கடந்து கொண்டிருக்கிறது போலும். அப்படியா யின் கிட்டத்தட்ட மூன்று, நான்கு மணித்தியாலங்களாக இப்படி விழுந்து கிடந்திருக்கிறேன். வேதனை காரணமாக மயங்கி, பின் சற்றுத் தெளிந்து, மீண்டும் மயங்கி. இப்போது மீண்டும் தெளிந்து இதுதான் என் இறுதித் தெளிவோ? இன்றைய தினம் என்னுடைய இந்நிலை இன்னும் எத்தனை பேருக்கோ.
அதிகாலையில் கேட்ட வெடிச் சத்தமும் அதனால் உணரப்பட்ட ஒரு கலவரத்தின் அறிகுறியும் அதற்கு முன்னே தோட்டத்திற்கு அவசியமான பசளையை வாங்க வேண்டிய என் அவசரமும்., என் அவசரம் கண்ட அம்மாவின் அறிவுரையும், என் நினைவு களில் அடுக்கடுக்காய் வந்துகொண்
டிருக்கின்றன.
இநீ த மாதிரி வெடிச் சத்தங்களும்., துப்பாக்கிச் சண்டை
களும், அதன் பொருட்டு எம்மக்களின் அவசர காரிய முடிவுகளும், பின்னாலான பதுங்குதல்களும் சகஜமானவை.
இராணுவத்திற்கும், இயக்கங் களுக்கும், அல்லது ஒரு இயக்கத்திற்கும் இன்னுமொரு இயக்கத்துக்குமென்று துப்பாக்கிச் சண்டைகள் எம்மூர் மக் களுக்கு அடிக்கடி பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டவைதான். ஆனால் இந்த
22
ஒவ்வொரு சண்டைகளின் முடிவிலும், எம்மூரின் ஏதோ ஓரிரு வீடுகள் மாறி மாறி இழப்புகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு இழப்பின் பின்னும், செத்தவர்களை நினைத்து இருப்பவர்கள் தினம்தினம் செத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். டுமீல்" என்ற துப்பாக்கியின் சத்தமும், அதன் தோட்டாவின் என் தேகத்தோடான இரக்கமற்ற தொடு தலும். அதன் பின்னான என் “அம். .மா” என்ற அலறலும், என் இறுதி நினைவுகளாய் மனக்கண்முன் நிழலாடு கின்றன.
என் விலாவில் பாய்ந்த அந்த ஒரு தோட்டா இப்படி அநாதையாய், ஒரு மிருகத்தைவிட கேவலமாய். என்னைப் புழுதிப் பாதையில் மரிக்கச் செய்து கொண்டிருப்பதை நினைக்கும் போது நம் சமுதாயத்தின் எதிர்கால நிலை கண்முன் தோன்றி மறைகிறது. இப்படி நிர்க்கதியாய் மரித்துக் கொண்டிருக்கும் என்நிலை, இது வரை யிலும் எவர் கணி களிலும் பட வில்லையா? அல்லது பாதை மக்கள் நடமாட்டமின்றி என்னோடு மட்டும் ஓய்ந் திருக்கிறதா? சிலநேரம் கலவரம் காரண மாக, மக்கள் இன்னும் வீடுகளுக் குள்ளேயே பதுங்கியிருக்கிறார்களோ என்னவோ?.
என்னைக் காணாது அம்மாவும் தங்கைகளும் துடித்துக் கொண்டிருப்பார் களே.
நினைவுகளைச் சற்று நிறுத்திச் செவிகளைக் கூர்மையாக்கி கெiள் கிறேன். காலடிச் சத்தங்கள் அல்லது வாகனச் சத்தங்கள் ஏதும் கேட்கிறதா வென்று.
ஏதோ தெளிவற்ற பேச்சுச் சத்தம் செவிகளை வருடுகிறது. ட். ர். ர் என்றொரு சத்தம், திடீரென்று முக்கின் துவாரங்களை ஏதோ ஒன்று அடைத்துக்

கொண்டது. சற்று வேகமாய் மூச்சு விட்டதில் அது அகன்று அந்த மண் வாசனையை உணர்ந்தேன். ஏதோ ஒரு வாகனம் என்னைக் கடந்து சென்றிருக் கிறது. அதனால் ஏற்பட்ட புழுதி.
அப்படியாயின் கலவரம் அடங்கி, நிலைமை சாதாரணத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. மக்களும், வாகனங் களும், என்னைக் கடந்து கொண்டிருக் கின்றன. ஒருவர் கூடவா என்னைக் கவனிக்கவில் லை. இங்கே ஒரு இளைஞன், ஒரு குடும்பத்தைக் காக்க வேண்டிய ஒரு வாலிபன, சிறுகச் சிறுக மரித்துக்கொண்டிருப்பதை எம்மக்கள் ஒருவர் கூடவா கவனிக்கவில்லை. அல்லது கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்களா?
எனக்குத் திடீரென்று இளங்கோ வின் ஞாபகம் வந்தது. சில மாதங் களுக்கு முன் இப்படி ஒரு கலவரத்திலே தான் அவனும் துப்பாக்கிக்கு இரையாகி பாதையில் விழ்ந்திருந்ததை, ஒரு மணி நேரமாய் எம்மக்கள் ஒருவர் கூட அவ னருகே செல்லாது துார விருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார் களாம். அன்று இளங்கோவிற்கு நடந்த அதே நிலைதானா இன்று எனக்கும்? நாக்கு வரண்டு தாகத்தினால் வாய் பிழந்தது. இந்தத் தாகம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுபவிக்காததொன்று.
மெதுவாய் சற்றுக் கண்களைத் திறப்பதற்கு முயல்கிறேன். முதலில் கடினமாய்த்தான் இருந்தது. பாதையின் புழுதி பசையாய் கண்களில் படிந்து புழுதிப்படலத்தை உடைக்கவே ஒரு பிரத்தியேக சக்தி தேவையாயிருந்தது. மிச்சமிருக்கிற உடல் வலுவையெல்லாம் திரட்டிக் கண் களைச் சற்று இலேசாய்த் திறந்தேன். மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. மக்கள் என்னைக் கவனித்து விட்டார் கள் . என்னுடைய இறப்புடனான போராட்டத்தைக் கவனித்து விட்டார்கள்.
கிடக்கிறது. அங்கப் قوة تمتم عميقة محصصحة - ققعت تحمش
23
மறு நிமிடமே அந்தக்கவனிப்பு வெறும் வேடிக்கையாக மட்டுமேதான் என்று நினைக்கும்போது மனதின் அச்சம் அதிகரிக்கின்றது.
ஒரு இளைஞனின் இறப்பு இவர் களுக்கு வேடிக்கையா? என்னருகே வருவதற்கேன் அஞ்சுகிறார்கள். இப்படி ஒதுங்கிப்போதல் அச்சமா? அல்லது அலட்சியமா? அந்தக் கூட்டத்தினரி டையே என் உறவினன் ஒருவனாவது இல்லையா? இல்லையெனின், என்னை அடையாளம் கண்டு அம்மாவிடமாவது சொல்வதற்கு, அறிந்தவன் எவனு மில்லையா..?
ஒருவகையில் அம்மா அறியாத வரைக்கும் நல்லதுதான். நான் திரும்பி வீடு போய்ச்சேராவிட்டால், காணாமல் போனவனாய். எப்போதாவது ஒருநாள் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையி லாவது அம்மாவின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பேன்.
இன்று, காணாமல் போன தன் பிள்ளைகளுக்காக காத்துக்கொண்டிருக் கும் தாய்மார்கள் இந்நாட்டில் எத் தனை. அவர்களுள் ஒருத்தியாய், என் தாயும் உயிரோடாவது இருக்கட்டும்.
இந்த இறுதித் தறுவாயிலும் ஒரு நப்பாசை. வாழவேண்டும், எப்படியாவது உயிர்காக்கவேண்டுமென்று ஒரு நப் பாசை. நான் இறக்கவில்லை. இப்போது தான் சிறுகச் சிறுக இறந்து கொண்டிருக் கிறேன் என்று இங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணர்த்திவிட்டேனென்றால், சிலநேரம் அவர்களில் ஒருவர் எனக்கு உதவ முன் வரக்கூடும்.
அந்த ஆசையை செயற்படுத்த எண்ணி, முதலில் தலையை உயர்த்திக் காட்ட நினைத்தேன். முழு உடல் வலுவையும் தலைக்குக் கொடுத்தேன். முடியவில்லை. தலைக்குள் விண்விண் என்று வலி உயிரை எடுத்தது. பின் மண்டை எதிலோ பலமாய் அடிபட்டிருக்

Page 13
கிறது.
அடுத்ததாக கைகள். 6(5 கையை உயர்த்திக்காட்ட எண்ணி, முதலில் வலது கைக்கு வலுக்கொடுத் தேன். ஆரம்பத்தில் மறுத்தது. பின் இலேசாய் அசைந்து கொடுத்தது. ஆனால் மேலெழவில்லை. அந்த அசைவு வேடிக்கை மனிதர்களுக்கு விளங்கியதோ என்னவோ..?
எப்படி இவர்களெல்லாம் இரக்க மற்ற மனிதர்களாய் மாறிப்போனார்கள்? யோசிக்கிறேன். அவர்கள் மாற வில்லை. அவர்களது இதயங்கள் இரக்க மற்றவையாய் மாற்றப்பட்டிருக்கின்றன. எமது சமூக நிகழ்வுகள் அவர்களைச் சிறுகச் சிறுக இரக்கமற்றவர்களாய் மாற்றிவிட்டது.
இன்று, நானும் அவர்களுக்கு ஒரு சர்வசாதாரணம். போகப்போக, தாக்குதல்கள், கொலைகள், இம்சைகள் என் பன அவர் களது அணி றாட வாழ்க்கைப் போராட்டத்தின் ஓர் அம்ச மாகவிருக்கும்.
ட்ரும். சரா. க். அந்த ப்ரேக் சத்தம் இறுதித் தறுவாயில் என் செவிகளை இடிக்கிறது. இந்த இறுதித் தறுவாயிலும் வாழவேண்டு மென்ற எண் ஆசை காரணமாக என்னைச் சுற்றிய நிகழ்வறிய வேண்டு மென்ற ஆர்வம் கூடுகிறது.
தட. தட. பூட்ஸ் காலடி யோசைகள். உடல் வலுவையெல்லாம் திரட்டிச் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.
யார் இவர்கள். என் உயிர் காப் பாற்ற வந்தவர்களா..?
நான் உயிரோடு இருப்பதை என் உயிரின் இறுதிச் சொச்சம் என்னுள் ஊசலாடிக் கொண்டிருப்பதை, அவர் களுக்கு அறியப்படுத்த வேண்டுமே. மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது.
24
“d-6mơUTẾ.... D-6mOUŘI.....” (gräsgab... தூக்கு)
யாரோ கதைக்கும் சத்தம். அது சிங்கள மொழி. சிங்களச் சகோதரர்கள். ஏனென்று தெரியவில்லை, சிறுவயதில் ஒன்றாய் விளையாடி, ஒன்றாய் உண்டு படுத்த சிறிசேனாவின் ஞாபகம் வந்து மறைந்தது.
திடீரென்று உடலின் ரணம் அதி கரித்தது. காயத்தின் வலி மூளைவரை வந்து உயிரை எடுத்தது. யாருடையதோ பூட்ஸ் அணிந்த கால் என் காயத்தைப் பதம் பார்த்தது.
"மு மரிலா. உஸ்பா, தாபாங் ட்ரக் எகட.” (இவன் செத்துவிட்டான். தூக்கிப்போடு, ட்ரக்குக்குள்)
எத்தியவனின் குரல்போலும். அவனுடைய அந்த வார்த்தைகளில் உடல் பதறியது.
“இல்லை, நான் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறேன்” முனகி னேன், "நே மங் தாம மருன்னே" மொழி மாறிய என் முனகல் அவர்களின் செவி களை எட்டியிருக்குமா?
இருவர், என்னைத் தூக்கியெடுத் தார்கள். பின் அவர்கள் வந்த ட்ரக்குக் குள் வீசினார்கள். ஒரு கனம் காற்றில் மிதந்து. தொப்பென்று விழுந்தேன்.
வெந்த புண்ணில் வேல் பாய்வது போல் மீண்டும் தோட்டா இறங்கிய காய முள்ள விலாப்பக்கம் ஏதோ ஒரு குவிய லில் மோதி வலியை இரட்டிப்பாக்கியது. அந்த வலி உயிரின் முறிவு.
குருதித் தடாகத்தில் வீழ்ந்தவன் போல். அந்த ட்ரக்குக்குள் இருந்த உறைந்த குருதியின் நெடி என் மூக்கை அடைத்தது. இறுதியாய் ஒரு முறை முழு உடற் சக்தியெல்லாம் சேர்த்து, புழுதி படிந்த கண்களை மெதுவாய்த் திறந்து ஒரு பார்வை விட்டேன்.
ஆ. ஹோ. எத்தனை மனித உடல்கள்...!

நானும் நீயும்
தெருப்பிச்சைக்காரனின் வார்த்தைகளாய் - உனதும்
காலடிகளின் (இஇ வேலியோரத்திலேயே. வலிகளைக் கடந்து 緩 ஆனால் உனை நாடியே எதிர்பார்ப்புகளை வருகின்றேனர் வரி விதைத்துக்கொண்டேயிருக்கும் ஏனர் இந்த ஏழை விவசாயி ஒரே நிமிடத்தில் செத்துவிடப்போகிறான் உடைத்து போகின்றாய்.? ஜெ முடியாத சோகங்களுக்குள் உயிருக்குள்ளும் 6mf இவளது இந்தக்குரல் அறுவடையும் மூழ்கிவிட்டதால் ஓடிவரவேண்டுமென்று « AMMY « நாடி வந்ததே நீதானே.? மொத்தத்தில் t_Yმ6ზf ஹ இவளை ஏன் என்னை t மத்திமமாகவேனும் நாடோடியாக்கினாய்..!? புரிந்துகொண்டது
?..................шJлтй رثا எதிர்பார்ப்புக்களெல்லாம் ஆக எங்கேயோ போய்விட இணைந்து விடாமலே கேளாமலே வந்து கிடைக்கின்றன முடிந்துவிடப்போகும் வரங்களல்ல இரு சமாந்தரக் கோடுகளா நான் சரியில்லையென்ற நாம்.?!
சாபங்கள்.!
ஒரு கணமேனும் நினைத்துப்பார்த்தாயா - இந்த உயிர் உருகி கண்ணிர்க் கால்வாய்களில் கவலைகளுக்கு வடிகால் தேடுவதை.? நிலவு வரும்வரை நட்சத்திரங்களையே எண்ணிக்கொண்டிருக்கும் இந்தப் பெண்ணிலவை.? ஒவ்வொரு தடவையும் மலரத்துடித்தே கருகிப்போகும் இந்தக் கன்னியை..? முடியாது - உன்னால் ஒருபோதும் முடியாது இன்னும் நீ - என்
மனககதவுகளைததாண்டி
உள்ளே வரவேயில்லையே. யாசகம் கேட்கும்
.ர்ைபார்ந்த வாசகர்களே ک/
ஞானம் சஞ்சிகை பற்றிய கருத்துக்களைக்களையும் சஞ்சிகை யின் தரத்தை மேம்படுத்த உங்க ளது ஆலோசனைகளையும் அறி பத்தாருங்கள்.
i சந்தா விபரம் தனிப்பிரதி : ரூபா 15வருடச்சந்தா : ரூபா 180/-
(தபாற்செலவு உட்பட)
சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ அனுப்ப லாம். அனுப்பவேண்டிய பெயர்,
முகவரி :
T.G.NANASEKARAN i 9/7, PERADENİYA
NKANDY.
ROAD, لر
25

Page 14
நெற்றிக்கன்
நால் விமர்சனம்
நூல் * கனவுகளின் எல்லை எழுதியவர்: த.ஜெயசீலன்
அண்மைக்காலங்களில் தமது கவிதைகள் வாயிலாகத் தம்மை இனங் காட்டி வருகின்ற கவிஞர்களுள் ஒருவர், த.ஜெயசீலன். அவரது கனவுகளின் எல்லை (2001) என்ற கவிதைத்தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது. புதுக் கவிதை என்ற பெயரில் பெரும்பாலும் வசனங்களையே பார்த்துச் சலித்துவிட்ட கண்களுக்கும், மனத்துக்கும் (புதுக் கவிதைக்கு நான் வில்லன் அல்லன்) இத்தொகுதி சற்று வித்தியாசமாகத் தெரி கின்றது.
கவிதைகள் அடிப்டையில் இரு வகைப்பட்டவை. ஓசையை அடிப்படை யாகக் கொண்டவை, ஒருவகை. ஒத் திசையை ஆதாரமாகக் கொண்டவை, இன்னொருவகை, கவிதைகள் ஓசை யையோ, அல்லது ஒத்திசையையோ அடிநிலையாகக் கொண்டிருக்கலாம். ஆனால் , அவை கவிதைகளாக விளங்குமாறு பார்த்துக்கொள்வது கவிஞர்களின் பொறுப்பு.
இவ்வகையில், ஓசைவழிப்பட்ட கவிதையை இலங்கையில் மஹாகவி, முருகையன், நீலாவணன், எம்.ஏ.நு. மான், சில்லையூர் செல்வராசன், புதுவை இரத்தினதுரை உட்படக் கணிச மானோர் வளர்த்து வந்துள்ளனர். இத்தகைய பரம்பரையில் ஒருவராகவும், தன்னம்பிக்கையும், திறமையும் கொண்ட கவிஞராகவும் வளர்ந்து வருபவர், ஜெய சிலன். இத்தொகுதியிலுள்ள அவரது கவிதைகள் அவரின் ஊர், அவரது கவிதை, போர்ச் சூழல் , காதல் ,
26
இயற்கை, இறையுணர்வு, மனிதத்துவம், தத்துவ விசாரம் எனப் பல்வேறுபட்ட கருப்பொருள்களை உள்ளடக்கியுள்
66.
கவிதைத்துறையில் ஜெயசீலனின் வளர்ச்சிக்குக் காரணமாகவிருப்பது, கவிதைப்பொருளோடு உணர்வொன்றிக் கலைத்துவத்தோடு அதனை அவர் வெளிப்படுத்துவது தான். பொதுவாகவே அவரது சகல கவிதைகளிலும் இத் தன்மையைக் காணலாம். அவரின் கவிதைகள் இயல்பாகவே தன்னுணர்ச்சி வெளிப்பாடுகளாக விளங்குகின்றன. கவிதைப்பொருளோடு அந்நியப்பட்டு, பட்டியல் போட்டு ஒப்புக்குக் கவிதை சொல்லும் போக்கு இக் கவிஞரிடம் காணப்படவில்லை என்பது சிறப்பித்துக் கூறத்தக்கது. இவரது கவிதைகள் வாச கரை இயல்பாகவே வசீகரிக்கத்தக் கவை. ஜெயசீலனின் கவித்துவம், அவர் கையாளும் மொழி, அவரது நடைச் சிறப்பு அனைத்தும் அவரை ஒரு தேர்ந்த கவிஞராக இனங்காட்டுகின்றன.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலக்குறிப்பை யும் கவிதைகளின்கீழ் தந்திருந்தால், கவிஞரின் வளர்ச்சியை எடைபோட வசதியாக இருந்திருக்கும்.
தரமான நூலுக்கு ஒரு அடையாளம், மீண்டும் மீண்டும் வாச கரைப் படிக்கத்துண்டுவதாக அமையும் தன்மை. ஜெயசீலனின் கனவுகளின் எல்லை என்ற இக்கவிதைதொகுதியும் வாசகரை மீண்டும் மீண்டும் படிக்கத்
தூண்டும்.
;hگم ختم ہو
(53.

நூல் r இங்கிருந்து. எழுதியவர்கள் :- பன்னிரு
எழுத்தாளர்கள்
பண்டை நாள் தொட்டு இன்று வரை, இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சிகளும், தொகுப்பித்தல் முயற்சி களும் நடைபெற்றுவந்துள்ளன. ஏதாவது குறிப்பிட்ட ஓர் அம்சத்தின் அடிப்படை யில் இத்தகைய இலக்கியத்தொகுப்பு முயற்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. இவ்வகையில், யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆண்டில் (2001) வெளி வந்த இங்கிருந்து. என்ற சிறுகதைத் தொகு தியும் குறிப்பிடத்தக்கது.
பன்னிரண்டு சிறுகதை எழுத்தாளர் களின் சிறுகதைகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது. 1956முதல் 1981 வரையில் பிறந்தவர்களின் படைப்புகள் இதிற் காணப்படுகின்றன. இவர்களிற் பெரும்பாலோர் 1970களில் பூவுலகத் துக்கு வந்தவர்கள். ஆயினும், சிறுகதை படைக்கும் அடிப்படைத் திறமை இத் தொகுதியில் எழுதியுள்ள அனைவர்க் கும் கைவந்துள்ளது. தாட்சாயணி (மழை), இயல் வாணன் (முடவன் நடை), கோகுலராகவன் (ஆனந்தம்), சிவாணி (இரவு), ந.சத்தியபாலன் (நிற மிழக்கும் கனவுகள்), ச.இராகவன் (மாறிப்போன அடையாளம்), ச.சாரங்கா (வானம் மட்டுமல்ல. தேசமும்), த.பிரபாகரன் (ஆலமரம்), ஆ.இரவீந் திரன் (மின்), ச.குமுதினி (அமாவாசை இரவுகள்), சி.கதிர்காமநாதன் (கொன்று போ டா தையுங் கோ), உடுவில் அரவிந்தன் (உறவுப்பாலம்) ஆகியோர் இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளை எழுதியுள்ளனர்.
இந்நூலின் பெரும்பாலான சிறு கதைகள், இலங்கையின் வடபுலத்தின் போர்ச்சூழலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. மற்றயவை பிற வாழ் வியற் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலும் இளம் படைப் பாளிகளின் ஆக்கங்களை
27
வெளிக்கொணர்ந்த இத்தொகுதி, பிரச் சினைகளைப் படைப்பிலக்கிய அடிப் படையில் ஒவ்வொருவரும் எவ்வாறு நோக்குகின்றனர் என்பதைத் தெளிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இத்தொகுதியிலுள்ள சில சிறு கதைகள் ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு வளம் சேர்ப்பனவாக விளங்குகின்றன. அவற்றுள் முக்கியமானது, தாட்சாயணி யின் ‘மழை என்ற சிறுகதை. இராணு வத்தை மழையாகக் குறியீடு செய்து, ஓர் இளம்பெண்ணின் துயரம் தோய்ந்த அனுபவத்தைச் சிறந்த படைப்பாக்கியுள் ளார், ஆசிரியர். ஏறத்தாழ இருபத் தைந்தே வயது நிரம்பிய ஒரு படைப் பாளியின் சிறுகதை இது என்னும்போது, அவரின் திறமை உண்மையில் வியக்க வைக்கிறது. தாட்சாயணி தொடர்ந்து எழுதிவந்தால், சிறுகதையின் சிகரத் தைத் தொடமுடியும். எழுதியவர்களின் படைப்புத்தரத்தை இனங்காட்டக்கூடிய பிற சிறுகதைகளாக த.பிரபாகரனின் 'ஆலமரம்', சி.கதிர் காமநாதனின் "கொன்றுபோடாதையுங்கோ ஆகியவை விளங்குகின்றன.
ச.குமுதினி தரமான சிறுகதை யொன்றை எழுதத்தொடங்கிவிட்டு, கதையின் இறுதிப்பகுதியில் கதை கூறும் பெண்பாத்திரத்தை மனத்துக்குள் நீண்ட "வசனங்கள்” பேசச்செய்து, தாமே தம் படைப்புக்குச் சிறிய கரும்புள்ளியை இட்டுவிட்டார். ஆ.இரவீந்திரனின் 'மின்’ என்ற படைப்பை, சிறுகதை என்று கரு தாமல் நகைச்சுவை நடைச்சித்திரம் என்று கருதி வாசித்தால் ஏமாற்றம் ஏற்பட மாட்டாது. ச.சாரங்காவின் வானம் மட்டு மல்ல. தேசமும்’ என்ற சிறுகதையில் இடம்பெறும் பாட்டி இடையிடையே திடீர் திடீரென்று செந்தமிழ் வசனங்களைப் பேசித்தீர்க்கிறார். பாட்டிக்கு எப்படித்தான் இத்திறமை வாய்த்ததோ?
இங்கிருந்து. என்ற சிறுகதைத் தொகுதி சிறுகதைத்துறையில் வளர்ந் தவர்களையும், வளரப்போகின்றவர் களையும் இனங்காட்டுகின்றது.

Page 15
மரம் மதம் மனம் - மாவைவரோதயன் -
ஏப் ஒதிய மரமே! உன் வாழ்வு உச்சத்தின் சரிவுத் தளத்தில் நீ; உன் உள்ளே ஒரு சுய பரிசோதனை நடத்திப்பார்! நீ கிளை பரப்பி விழுது எறியவில்லை பூப்பூத்துக் காய்க்க வில்லை, பழம் பழுத்து விதை ஊன்றவில்லை! வீரமாய் வளர்ந்தாய், வீங்கிப் பெருத்தாய் வானக்குறி நோக்குவதாய் தனியனாய் வளர்ந்தாய்!
வேர் ஓடினாய், வேர் ஓடி மண் ஊடு போப் வீதிகள் கிழித்தாய்! வீடுகள் பெயர்த்தாய்! உன் அடி நிழலில், அண்டை நிலத்தில்
,பூண்டு, செடி, கொடி, மரம் ,ن6l{ எதையுமே நீ முளைத் தெழ அனுமதித்த தில்லை! பதியம் வைத்த உன் கன்றுகளையும் தூர எறிந்து ஓடோட விரட்டினாய்! இன்று நீ தனிமரமாய், உன் வாழ்வின் உச்சத்தில் சரிவுத் தளத்தில் நீ!
பட்டை களற்றவும் தகுதியில்லாத உன் கொட்டு மரத்தில் புற்றுநோய் மரங்கொத்தி கொத்திக் கொத்தி புழுவளர்த்தது. கால மழைக்கும் காற்றுக்கும் உன் அடி சரிய இது நேரம்! ஒரு சுய பரிசோதனை உன்னில் நடத்து! உன்னைப் போல மரங்கள் இந்த மண்ணில் இனி வேர்விட வேண்டாம்!
28
மலைகளிடை
உலகம்
நீக்ரோ வீரனாயப் நிமிர்ந்த மார்புடன் பசுமை போர்த்திய U(1609066i.
இறங்கிவரும் இங்கிலாந்து அழகிகளாக எல்லா இடங்களிலும் நீர் வீழ்ச்சிகள்.
சிதைந்து போன ரஷ்யா ‘பேர்லினைத் தகர்த்த ஜேர்மனியாய். வியப்பு! தலைமைகளின் கூட்டு.
ஐக்கிய அமெரிக்காவாய் ஐயாக்களின் சுரண்டுகைகள்
சம்பல் பள்ளத்தாக்கில் சோமாலியச் சோகங்கள் எம் சமையலறைகள் -
ஹீரோசீமாவாய் இடிந்தவயிறு சுமக்கும் பழைய மாந்தரைக் கரைத்துப் பெருக்கின்றன ‘சிங்கப்பூர்கள்.
உரியவை சரியாய் வரவாகா விடின் - இம் மலைமுகடுகள் ஓர் 'ஆப்கானாய்’ ஆகிடும் காலம் தொலைவிலில்லை.!
பத்தனையூர் வேதினகரின்

Dinsofair
பேசுகிறார் {0, 3 A RA
ஒரு சில பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போல, திரு.த.கலாமணி அவர் களும் சமயச் சடங்குகளில் இருந்தே நாடகம் தோன்றியது என்கிறார். இவ்வனு மானம் எந்த அளவுக்குச் சரியானது என்று எண்ணத் தோன்றுகிறது.
சமயங்களும் அவற்றோடு ஒட்டிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளும், மனிதன் சிந்திக்கவும் ஓரளவாவது, நாகரிகமாக வாழவும் தொடங்கிய பின்பே, அவனது பண்பாட்டின் ஓர் அம்சமாக இடம்பெற்றிருத்தல் வேண்டும். அப்படியாயின் அதற்கு முன்பு அவனது வாழ்வில் கூத்து அல்லது நாடகம் இடம் பெறவேயில்லையா? கூத்து, நாடகம் எனும் சொற்களின் பிறப்பினை நன்கு அறிந்தவர்கள் மேற்படி கருத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், குதி, நட எனும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த மேற்படி இரண்டு சொற்கள் - மனிதன் சமயம் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாழ்ந்த புராதன காலத்தில் எந்தவித வரையறைகளுக்கும் உட்படாத கூத்து அல்லது நாடகம் அல்லது சமயம் சாராத சங்க காலத்தில் வழக்கில் இருந்த வெறியாட்டு போன்றவை, அவன் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருந்தமையை எடுத்துக் காட்டும்.
சமயச் சடங்குகளில் இருந்தே நாடகம் தோன்றியது எனும் கூற்று, மனித னோடு கூடப் பிறந்த நவரசங்களை முற்றாக மறுத்துரைப்பது போன்றதாகும்.
- வாகரைவாணன்.
ஞானம் 19வது இதழ் படித்தேன். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் "நெற்றிக்கண் பகுதி மிகப் பயனுள்ளது. காத்திரமான விமர்சனங்கள் இதில் காணப்படுகின்றன. வாழ்த்துக்கள். - பெனி, லேவல்ல.
இதழ் 18வது கிடைக்கப் பெற்றேன். அனைத்து ஆக்கங்களும் வரவேற்கக் கூடியதாக இருக்கின்றது. ஓ.கே.குணநாதன் எழுதிய ‘ஒரு பிடி சோறு என்ற சிறுகதை உண்மையில் நெஞ்சினை உறைய வைக்கின்றது. வாகரைவாணன் எழுதியுள்ள “தேசமும் தேர்தலும்” என்ற கவிதை, தற்போதைய சூழ்நிலையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்னமும் ஞானம் சஞ்சிகை மேலும் வளர வாழ்த்துகின்றேன். - தானா. விஷ்ணு, வவுனியா.
ஞானம் சஞ்சிகையில் புதிய நூலகம் பற்றி ஒரு ஆலோசனை. வெளியிடப் பட்டிருக்கும் நூல்களைப்பற்றிய தகவல்களை வாசகர்கள் பெறக் கூடியதாக இப்பகுதி அமையவேண்டும். நூலின் பெயர், வெளியிட்ட ஆண்டு. நூலாசிரியர் பெயர், நூலின் வகை. அதன்விலை. நுலைப் பெறக்கூடிய முகவரி என்பவற்றை வெளியிட்டால் பயனுள்ளதாக அமையும். - முல்லைமணி.
29

Page 16
S L L L C L S S
'அன்பார்ந்த வாசகர்களே! '. ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
"ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
கொழும்பு;- பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு- 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி விதி, வெள்ளவத்தை வசந்தம்- 8 - 44,3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11. LILITp LI LITTGARTLID:- பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. திருகோணமலை:- வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் விதி, திருகோணமலை, திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. கல்முனை:-
சொய்ஸ் பலஸ், கல்முனை.
மட்டக்களப்பு:- சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு. முல்லைத்தீவு:- கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
65uUT:- சந்திரபோஸ் சுதாகர் - 87, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா, கண்டிகலைவாணி புத்தகசாலை - 231, டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி. லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி கொட்டக்கலை:- சாரல் என்டர்பிறைஸ் - 7. ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை. புத்தனம்:- சாரா பேப்பர் சென்ரர் - 14, யூ.சி. ஷொப், குருநாகல் றோட், புத்தளம். கண்டி புக்சென்டர் - 20, மெயின் விதி, புத்தளம். மன்னார்:- ". ஜோதி புக் சென்ரர், கிரான்ட் பஸார், மன்னார்.
SYS SYS SS SYSSS SSLLSSSSYSSS SSLLS S S SLSS SLSS SLLSS SLLSS SLSS SLSS SLSSS SLLS SLLS SLSSS SLLS SLLS Y SSSSSSS S LS SYSYSY SYSY SSY SSY SSSSSSS SY SLS SSSSL SSSSSSS SSYSSS SS SLLLS SLLL LS SLS SLS S SL L S L L S L
* நெற்றிக் கணி” விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கண் பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம்பெற வேண்டுமெனில், நாவின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல் பற்றிய அறிமுகக்குறிப்பு புதிய
லகம் பகுதியில் இடம்பெறும்.
-ஆசிரியர்.
30

செப்ற்றெம்பர் நான்காம் நாள்
ஹோர்ஹே ஸல்காடோ ரோச்சா
(Jorge salgado Rocha)
துப்பாக்கிச் சனியனைப் போல நீளமான ஒரு நாள் அது; நமது இறுதி நம்பிக்கையெனும் குடாவில் நங்கூரமிட்ட போர்க்கப்பல் போல் மிரட்டுகிற ஒரு நாள் அது.
மனக்கிலேசங்களும், அச்சமும், ஆயுதங்களும், குருதிப்பெருக்கும், மக்களின் முடிவற்ற பொறுமையின் இடையே பயங்கரமாகக் கவ்வும் சாம்பற்தலைக் கவசங்களும் கொண்ட தெளிவான உலர்வான நாள் அது:
செப்ற்றெம்பர் நான்கு
சனநாயகத்தின் நாள்.
கைப்பற்றுதல்களின், வீதித் தடுப்புக்கள், எதிர்ப்புப் பாடல்களின், வெடியோசைகள், சூடுகள், கைதுகளின் குண்டுகளால் நோவுண்டு அலறும் இளம் உடல்களினர் நாள்.
அன்றிரவு, பசியையும் அமைதியையும் நீதியையும் விடுதலையையும் தாங்கிய பூரண ஆயுதபாணிகளாக, கொடுங்கோலர்கள் "எமது பாசத்துக்குரிய தேசம்’ என அழைக்கும் பொருளற்ற கோமாளித்தனத்தின் மீது கடுந்தாக்குதல் தொடுக்கத் துணிந்திருந்தோம் என்று ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயத்துக்கு ஆளாக எத்தனை பேரின் நித்திரை உலுக்கிக் கலைக்கப்பட்டது?
ஆங்கிலத்தில்:- டைனா லிவிங்ஸ்ான்
(Dinah Livingstone)
தமிழில்:- சி.சிவசேகரம்
(*சிலே நாட்டவர். 1945ல் பிறந்தவர்.
இப்போது லண்டனில் வாழ்கிறார்)

Page 17
...'
நம்நாடு இந்த இலங்கை மண்ணில் பிறந்த ஜீவிகளே! تباہیپھیپی_۔ ; நீங்கள் ஏன் இரத்தம் சிந்துகிறீ
ஆந்நியர் (ன்ே இடையில் புகுந்து 議。 நம் சுதந்திரப் புதையலை উচ্চত্র
சூறையாடிச் செல்ல
விடுவதா?
41_911ܛܪ+1 சிங்கள தமிழ், முளப்லிம் ஆ இனங்கள்
எதிரிகளல்லர் - உறவினர்கள் தானி ஒரே விருட்சத்தின் மூன்று கிளைகள் தான்.
இலங்கை என்ற இந்தக்
கற்பகதருவைக் -- காத்திட
கைகோர்த்திட **(
இனிறே முனையுங்கள்! "
முடிவிலாப் போர் நம்மிடை ஏனர்? பல மில்லியனர்கள் கொட்டி ஆயுதங்கள் விலைக்கு வாங்கி இலங்கைப் புத்திரர்களை அழித்து,
அழிந்து போவதில் STöfør eru saf?
 
 

எம்.வை.எம்.மீஆத் ஹெம்மாதகம
ܢ .
. ܕ ܸ ܒܘ ݂
நம் உதிரம், தி நம் வாழ்வு, மண்ணுக்குள் மறைவதா?
1+11 நாட்டுப்பற்று மீண்டும் பிரகாசித்து இதயங்களை இணைத்து விடாதா?