கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.02

Page 1

(Za
லக்கியச் சஞ்சிகை

Page 2
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். الري
அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே.
நிதி
இந்த இதழில் 'எனது எழுத்துலகம்’ என்ற புதிய பகுதி ஆரம்பமா கிறது. இதில் ஈழத்து இலக்கியத்திற்குக் கணிசமான பங்களிப்பினைச் செய்த சமகால எழுத்தாளர்கள் பலர் தமது எழுத்துலக அநுபவங்களை எழுதவிருக்கிறார்கள். தமக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த பின்னணி தமது படைப்புகள் பற்றிய விபரங்கள், தமது இலக்கியக் கொள்கைகள், எழுத்துலகிலே தாம் எதிர்கொண்ட சவால்கள். தமக்கு ஏற்பட்ட சுவையான அநுபவங்கள், மறக்க முடியாது சம்பவங்கள் போன்ற விடயங்களையெல்லாம் எழுத்தாளர்கள் இப்பகுதி யிலே எழுதவிருக்கிறார்கள்.
இந்த இதழில் ஈழத்தின் பிரபல எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் தனது எழுத்துலக அநுபவங்களை எழுதியுள்ளார்.
"எனது எழுத்துலகம் பகுதி சமகால எழுத்தாளர்களது பணிகளை ஆவணப்படுத்துவதோடு வாசகர்களுக்கும் மற்றைய எழுத்தாளர்களுக்கும் புதிதாக எழுதத் தொடங்குபவர்களுக்கும் ப்யனுள்ள நல்ல பல தகவல் களைத் தருவதாக அமையும்.
இத்தொடரைப் பின்னர் ஒரு தொகுப்பாக நூல்வடிவில் "ஞானம் வெளியீடாக வெளிக்கொணர்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த இரண்டு இதழ்களில் அறிமுகமாகிய நக்கீரனர் எழுதும் "நெற்றிக்கண்' நூல்விமர்சனப் பகுதியைப் பாராட்டிப் பலரும் கடிதங்கள் எழுதியுள்ளார்கள். காய்தல் உவத்தலின்றி, தரமான விமர்சனங்களை இப்பகுதியிலே காணக்கூடியதாக இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித் துள்ளனர். பலர் தமது நூல்களை விமர்சனத்திற்காக அனுப்பியுமுள்ளனர். அடுத்துவரும் இதழ்க்ளில் மேலும் பல புதிய அம்சங்களை வெளிக்கொணரத் திட்டமிட்டுள்ளோம்.
ஞானம் சஞ்சிகையை இணையம் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் வாசிக்கக்கூடிய ஏற்பாட்டினை இந்த இதழிலிருந்து ஏற்படுத்தவுள்ளோம். பெப்ரவரி 15ம் திகதியிலிருந்து இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இதுதொடர்பான விபரங்களை அடுத்த இதழில் வாசகர்களுக்கு அறியத்தருவோம்.
-ஆசிரியர்
 
 
 
 
 
 

விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன் ஓவியர்: நா. ஆனந்தன் கனணி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை பவர்கள். தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. தொ.பே. -08478570(orce)
08-23.4755 (Res) Fax - 08-23.4755
E-Mail
ஜாaாaாாa gazinesahotmail.com
உள்ளே.
சிறுகதை I007öö:SOHO murrun................................ 04 திக்குவல்லை கமால் அந்தக் குயிலோசைாப 2. I லரீனா ஏ.ஹக்.
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . O8 கலாநிதி தரை. மனோகரன் எனது எழுத்துலகம் . 13 தெளிவத்தை ஜோசப் இலக்கியப் பணியில் இவர். I9 ந.பார்த்தீபன்
கவிதைகள் கவிதையும் கவிஞனும் . 23 கவிஞர் புரட்சிபாலன் இந்தியாவும் பாகிஸ்தானும் . C) வாகரைவாணன் ஒரு குழந்தை இறந்துவிட்டது. 3卫 சி.சிவசேகரம் Perusiai pig-lay ................................... 3.
ஆதிலட்சுமி சிவகுமார்
திரும்பிப் பார்க்கிறேன். 11
அந்தனி ஜீவா
வாசகர் பேகசிறார்.
புதிய நூலகம். O
03

Page 3
Dorööioo
திக்குவல்லை கமால்
நோன் பின் குதூகலம் இப் பொழுதே ஆரம்பித்துவிட்டது. அதற் கான முன்னேற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் எவருமே இல்லை. நாளை பிறை பார்க்கும் நாள். அப்துல் கரீம் ஆலிம்ஸாஹிப் என்றால் எவருக்குமே தெரியாது. ஆன்ஸேமாமா என்றால்தான் தெரியும். ஆமாம், அவருக்கு இருப்புக் கொள்ள வில்லை. எழுந்து புறப்பட்டுவிட்டார்.
எழுபத்திரண்டு வயது. எந்தவித மனத்தளர்ச்சியுமில்லை. தைரியமான நடை. வெள்ளைத் தொப்பி. வெள்ளை உடுப்பு. வெள்ளைத்தாடி. மெலிந்த S) (b6 Jub.
ஸாலி ஹாஜியார் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார். இனிமேலும் பொறுக்க முடியாத வரவுதான் அது. எப்போது தனக்கு அழைப்பு வருமென்று எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோய்விட் LMI.
"ஆ. ஆன்ஸே மாமா வாங்கொ வாங்கொ. மிச்சம் காலத்துக்குப் பொறகு" - வாய்நிறைய வரவேற்றார்; நோக்கத்தைப் புரிந்துகொண்டே.
"தாக்கல் வருமெண்டு பாத்துப் பாத்து நின் ட. அதுதான் சும் ம விசாரிச்சிட்டு பொகவென்டு" - சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வந்தார் ஆன்ஸேமாமா.
ஸாலிஹாஜியாருக்கு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமலென்று சொல்வார்களே. அப்படித்தான்.
"இல்ல ஆன்ஸேமாமா வயஸ" போன காலத்தில ஓங்கள கஷ்டப்படுத்
04
தப்படாதென்டுதான்."
"சரிசரி. புதிய புதிய ஆள்கள் இப்ப வேண்டிய மட்டுமீக்கிதானே. எதுக்கும் கேட்டுப்பாத்துக்கொண்டா மனசி துப்பரவேன்.” பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் சிரித்துச் சிரித்தே சொன்னார்.
கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களாக ஸாலிஹாஜியார் வீட்டில் பெண்களுக்காக தராவீஹற் தொழுகை நடாத்துவது வழக்கம். நோன்புகால விசேட தொழுகை என்பதால் பெண்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்வார்கள். ஆன்ஸேமாமாதான் அதனை இவ்வளவு காலமும் நடாத்திவந்தார்.
"இரீங்கொ ஆன்ஸேமாமா கோப்பி ஊத்திய”
“வயஸ" பெய்த்தேன். நான் கோப்பி தேத்தண்ணி அவளவு குடிக்கி யல்ல. வாரனே"
ஸாலிஹாஜியாரின் நெஞ்சில் ஓங்கிக் குத்துவதுபோல் அந்த வார்த்தை கள் உதிர்ந்தன.
ஒருபெரிய தோல்வியும் போதாமை யும் அவரை வெகுவாக வாட்டியது. இனி எப்படி இம் முறை நோன் பு சந்தோஷமாக அமையப்போகிறது!
அஸர் தொழுதுவிட்டு சாய்ப்புட்டு வத்தில் அமர்ந்துகொண்டிருந்தார் ஆன்ஸ்ேமாமா. பழக்கதோசத்தில் விரலகள் தஸ்பை மணிகளை உருட்டிக் கொண்டிருந்தன.
இன்று மூன்றாவது நோன்பு.
 

இரண்டு நாட்களாக நிலவிய மப்பும் மந்தாரமும் அகன்று, இன்று சூரியன் தைரியமாக எழுந்து நகர்ந்துகொண் டிருந்தான்.
"ஆன்ஸேமாமா. எனத்தியன் செய்தி?” - என்றவாறு அஸிதாத்தா வந்து புகுந்தாள்.
"ஆ. வாவா. இதெனத்தியன் கீரக் கட்டோட." அவருக்கும் நேரத்தை நகர்த்த ஒருவர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. "கஞ்சிக்கி வெல் லாடியெலக் கட்டொன்டு எடுத்தேன்.”
"ஆ. அஸிதாத்தவா. பேச்சிக் கொரல் கேட்டுவந்த பாக்க” உள்ளே யிருந்து ஆன்ஸேமாமாவின் மனைவி மர்ஹமாத்தா வந்துசேர்ந்தாள்.
"நோம்பில சும்ம ஏறீட்டுப் பொக வென்டு வந்தேன்”
"சரிசரி இரீங்கொளே இனி" எதிர்ப்புற நீட்டுவாங்கில் இருவரும் அமர்ந்து கொண்டனர். அஸிதாத் தாவுடன் கதைப்பதென்றால் எவருக் குமே ஒரு குஷிதான். ஆள் ஒரு பெரிய மீடியா இல்லையா?
"கேட்டா.. ஸாலிஹாஜியா ரூட்டுக்கு நான் கராபியா தொழப்போ னேன். போதுமாப் பெய்த்து" அஸி தாத்தா ஆரம்பித்தாள்.
இருவருமே உசாராகிவிட்டனர். "அதெனா அப்பிடி?”. ஆன்ஸே LDTuom dongsomst.
"நீங்க தொழுவிக்கியென்டு நெனச் சிக் கொண்டேன் போன. ஆன்ஸேமாம தொழுவிக்கியென்டா எவளவு சந்தோச மன்.ம்.”
“இப்பதாரன் தொழுவிக்கிய" மர்ஹ மாத்தாவும் விட்டுவிடவில்லை.
"பேசிவேலில் ல. கொமருக் குட்டியொன்டு. ஹாஜியாரட தாத்தட மகள்"
"பொம்புள தொழுவிச்சி சரிவாரா.
05
எல்லம்போலதான் அதும்” மர்ஹமாத்தா தொடர்ந்தாள்.
“எனேத் தெரியாத ஜாதியா. செல்லேம் வெக்கம். அவள் பொடிய னொன்டோட போட்ட கூத்து. ஊட்டில வெச்சிக் கொளேலாப் பெய்த்து. எங்கியோ கொணுபெய்த்து கிதாபோத உட்டம். இப்ப நல்லபுள்ளமாதிரி "பர்தா போட்டுக்கொண்டு தொழுவிக்கேம் ஹதீது செல்லேம் வந்தீக்கி. எனக் கென்டா தொழவே புரியமில்ல". அஸி தாத்தா முகத்தைச் சுழித்து தனது வெறுப்பை முழுமையாகக் கக்கிக் கொண்டாள்.
ஆன்ஸேமாமா பெருமூச்சு விட்டார். “ஆகிரஸ்ஸமான் காலமென்டியது இதுதான். ஆகுமான மனிசரில்லாட்டி குத்தமில்ல. ஒவ்வொத்தன் நெனச்ச நெனச்ச ஜாதியெல்லம் செய்தானியள். பள்ளிலேம் இதே கூத்துத்தான். தலபா கெட்டிக்கொண்டு வந்தா எல்லம் தெரீமென்ட நெனப்பு.”
மர் ஹமாத தாவின் மனதிலும் கோபம் கனன்றுகொண்டிருப்பது அஸி தாத்தாவுக்கு விளங்கிவிட்டது.
"சரிசரி முன்னந்திக்கி ஆக்கோ ஒனும், ெ ரய்த்திட்டு இெைமாரு நேத்தக்கி
*F5■v■ v■■ صحہ سے وججsء ، صمسع vر
99
ஆன்ஸேமாமாவின் நெஞ்சில் மெல்லிய ஆறுதல் இழையோடியது.

Page 4
大 六 六
பள்ளிவாசலில் தரா வீஹர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளிச் சாலையிலும் இரண்டு மூன்று ஸப்பு அளவுக்குச் சனம். ஆரம்ப நாட்களில் ஒரே நெருக்கடிதான்.
"அல்லாஹ" அக்பர்” பின்வரிசையில் இணைந்திருந்த ஆன்ஸேமாமா தொழுவிப்பது யார் என்றறிய எடுத்த முயற்சி எதுவுமே கைகூடவில்லை. குரல் ஒரு பதினெட்டு வயது வாலிபனையே உணர்த்தியது.
'ஊருக்கூர் மதரஸா வரப்பெய்த்து. ஆறுமாஸம் ஒரு மாஸம் ஒதீட்டு கண்டநினி டவனெனல் லம் தலபா கெட்டீட்டானியள். ஆலிம் உலமா வென்டு மருவாரி இல்லாப் பெய்த்து ஆன்ஸேமாமாவின் மனதில் தொழுகை ஒருபக்கமும் யோசனை இன்னொரு பக்கமுமாக ஓடிக்கொண்டிருந்தது.
இதே பள்ளியில் இருபது வருடத் துக்கு மேலேக பேஷ்இமாமாக வேலை செய்தவர்தான்.
ஒருமுறை குத் பா நாளன்று காலையில் அவருக்கு நெஞ்சிவருத்தம் வந்துவிட்டது. என்னசெய்வது ஜும்மா நடந்தாகவேண்டும்.
எட்டுமணியிலிருந்து ஒடித்திரிந்து வெலிகமையிலிருந்து ஒரு மெளலவி யைக் கூட்டிக் கொண்டுவந்தார்கள். இன்று எந்த வீட்டுக் கதவைத் தட்டினா லும் அங்கிருந்து ஒரு குட்டி மெளலவி எட்டிப் பார்க்கும் நிலை.
கடந்த மூன்று வருட ரமழானிலும் ஆன்ஸேமாமா பதில்கடமை செய்து வந்தார். தராவீஹற் நீண்ட தொழுகை என்பதால், கொஞ்சம் ஒய்வுக்காக சில ரக் அத்துக் களை ஆனி ஸேமாமா இடையில் தொழுவிப்பார்.
முடிந்ததும் ஸாலி ஹாஜியார் வீட்டில் தொழுகை நடாத்த ஓட்டமெடுப்பார்.
இரண்டு இடங்களிலுமே பெருநாள் தொழுகை முடிந்ததும் கைநிறையக் காசுதான். இருபத்தேழாம் நாளிலிருந்தே விசேட அன்பளிப்புக்கள் தொப்பி, ஸாரம், சேட்டென்று அப்பப்பா. 905 வருடத்துக்கு எதுவும் வாங்கவேண்டிய தில்லை. '
*ஆன்ஸேமாம தொழவந்தா?” தொழுகை முடிந்ததும் பலபேர் நெருங்கிவந்து விசாரித்தனர்.
*ரமழான் மாஸ்தே தொழுக எவளவு ஏத்தமன். என்ன கஷ்டமீந்தாலும் தொழோணுமேன்" - அவர் சமாளித்துக் கொண்டார்.
"இந்த வருஷம்தான் ஆன்ஸேமாம தொழுவிக்காதது"
"அப்பிடித்தான் காலம் பொகப் பொக” - என்றவாறே வீதிக்கிறங்கினார்
SelsöGomouDMuDT.
'ஒரேயடியா எல்லாப் பொக்கத் தாலேம் தள்ளிட்டானியள். - அவர் மனம் அழுது கொண்டது.
இருபத்தேழாம் நாள் பெரும் கொண்டாட்டமாக இருந்தது.
பள்ளிவாசலில் விசேட ஏற்பாடுகள் மேற்க்ொள்ளப்பட்டிருந்தன. ஒலிபெருக்கி யில் பெரிதாக நிகழ்ச்சி நடைபெற்றது. "சும்ம சத்தம் போடிய. ம். இப்பிடியா பயான் பண்ணிய. குர்ஆனில அப்படிச் செல்லிக்கி இப்பிடிச்செல்லிக்கி. அத ஒதிக்காட்டத் தெரிய"
முன் வாசலில் அமர்ந்திருந்த ஆண் ஸே மாமாவுக் கு பொறுக் க முடியவில்லை. ஒருவித அந்தரிப்பான நிலை அவருக்கு.
"ம். போன வருஷம் இந்தமட்டுக்கு
பள்ளிவாசலில் தொழுகை எத்தின ஸாரம் சட்ட கெடச்சன். எத்தின
06

பேரு வந்து வந்து கைல பொத்தினன். நன்டில்லாத மனிசரு" - மர்ஹமாத்தா பொரிந்து தள்ளினார்.
"எனக்கு இவனியள் ஒண்டும் தரத்தேவில்ல. ஏன்ட புள்ளகுட்டி நல்ல மாதிரி நிக்கிய, அல்லா எனக்கொரு கொறேம் வெக்கல்ல."
"அப்பிடியல்ல நான் செல்லிய. நீங்களும் இவளவு காலமும் ஊர் ஊரெண்டுதானே கஷ்டப்பட்ட, எத்தின ஊரியலால காருபோட்டு கூப்பிட்டு கூப் பிட்டு வந்தன். நீங்கபோனா. கட்டிப் புடிச்சிக் கொண்டு நின்ட, ம். இன்டக்கி நாய்க்கும் கணக்கில்ல". மனைவியும் விட்டுக்கொடுக்கவில்லை.
"இன்டக்கி பாருங்கோ. எஷாவி லீந்து ஸொபஹ" வரங்காட்டீம் நிகழ்ச்சி. ஒரு துவா ஒதியத்துக்காலும் என்னக் கூப்பிடல்லேன். ரெஸ்டிமாரு ஒத்தனா
வது. ஸஹருக்கு சாப்பாட்டுக்கு வாங்கொ ஆன்ஸேமாமா. என்டு செல்லல்லேன்”
"சரிசரி இதியள நெனச்சி நெனச்சி நீங்க மனச அசடாக்கிக்கொள வாண. வந்து சோத்தத் தின்னுங்கொ"
மனைவி உள்ளே போனபோதும் அவருக்கு போக மனம் வரவில்லை.
சென்ற வருடம்கூட நோன்பு துறந் ததும் ஒரு கோப்பைக் கஞ்சி அப்படியே குடித்தவர்தான். இப்பொழுது காக்கோப் பைகூட அவரால் குடிக்க இயலவில்லை.
தராவீஹற் தொழுதுவிட்டு வந்தால் ஒரு பீங்கான் சாப்பிட்டுவிட்டுத்தான் அடுத்த வேலை. இப்பொழுது சாட்டுக்கு இரண்டு பிடியோடு சரி. ஸஹர் வேளையில் இனிப்போடு கொஞ்சம் சாப் பிட்டு விட்டு நிய்யத்து வைத்துவிடுவார்.
"இந் தாங்கொ சோறுதின்னச் சொணங்கியென்டா தெம்பிலித் தண்ணி கொஞ்சம்” மர்ஹமாத்த ஜோகை நீட்டினாள்.
07
"அதென்டா நல்லந்தான்" என்ற வாறு எடுத்துக்கொண்டார்.
இடையிடையே நெஞ்சுக்குள் வந்து ஏதோ அடைப்பது போன்ற உணர்வு அவருக்கு. நோன்பு தொடங்கியதி லிருந்தே அவருக்கு ஒரே யோசனை தான். தன்னை எல்லோரும் ஒதுக்கி விட் டார்களே என்ற வேதனை ஒருபக்கம். சின்னதுகளெல்லாம் ஓதல் - தொழுகையென்று நடாத்தவந்துவிட் டார்களேயென்ற போதாமை மறுபக்கம். “மர்ஹமா எனக்கு சோறென்டா தின்னேல. சுடச்சுட பச்செஞ்சி போட்டு கோப்பி கொஞ்சம் ஊத்தித் தந்தா நல்லம்" - என்றவாறு மனைவியைப் பார்த்தார்.
“அடுப்பில கேத்தல வெச்சீக்கி" ஒருநாளும் இந்த நேரத்தில் கோப்பி கேட்பதில்லையே என்ற வியப்பு அவளுக்கு.
ko k;
“ஹாதி ஹாதி. எங்கியனிது பிச்சிக்கொண்டு புடுங்கிக்கொண்டு ஒடிய?”
"ஊட்டுக்கெட்ட நின்டுக்கொண்டு ஒனக்கொன்டும் தெரியவாடா மஜீது." "தெரியாமத்தானே கேக்கிய. செல்லே”
"ஆன்ஸேமாமக்கு." "ஆ. ஆன்ஸேமாமக்கி ஏத்தியன்" "செரியான வருத்தமாம். ஸகராத்து ஹால் போலீக்கி"
"மெய்யா. சும்மீந்த மனிசன். நில் லு நில் லு நானும் வாரன் மொகத்தில முழுச்சிக்கொள”
இருபத்தொன்பதாம் நோன்பின் இறுதிக்கட்டம். சிலவேளை நாளை பெருநாளும்கூட.
德 登 登

Page 5
ASD O 歌 象 Ο U எழுதத் தூண்டும் எண்ணங்கள் co
(கலாநிதி துரை.மனோகரன்)
சிந்தை கவரும் சிம்மக்குரலோன்
ஐம்பதுகள் முதல் எண்பதுகளின் தொடக்கம் வரை வானொலியைத் திருப்பினால், செவிகளை நிறைக்கும் கம்பீரமும், இனிமையும் கொண்ட குரலொன்று அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும். இப்போதுங்கூட இடை யிடையே அந்தக் குரல் வானொலியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தக்குரலை நான் மிகவும் விரும்பி இரசிப்பது உண்டு. அந்தக் குரலுக்குரிய திரைப்படப் பின்னணிப்பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன். மூன்று தசாப்தங்களாகப் பின்னணிப் பாடல் துறையில் முன்னணியில் திகழ்ந்தவர். எந்தப் பாடலையும் உச்சரிப்புச் சுத்தத்தோடும், பாவத்தோடும், காட்சிக்கும் பாடகருக்கும் ஏற்றமுறையிலும் பாடுவது அவரது இயல்பு. செளராஷ்டிர மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட செளந்தரராஜனின் தமிழ்மொழிப் பற்று விதந்து குறிப்பிடத்தக்கது.
நடிகர்களுக்கு ஏற்றமுறையிற் குரலை மாற்றிப் பாடுவது அவருக்குக் கைவந்த திறமை. சிவாஜி கணேசனுக்குக் குரல் வழங்கும்போது, செளந்தரராஜன் வயிற்றிலிருந்து காற்றை எழுப்பிப் பாடுவார். எம்.ஜி.ஆருக்குக் குரல் கொடுக்கும்போது, மூக்கிலிருந்து காற்றை எழுப்பிப் பாடுவது அவரது வழக்கம். பிற நடிகர்களுக்கு ஏற்றமுறையிலும் தமது குரலை மாற்றிப் பாடும் திறமை அவருக்கு உண்டு. ஆயினும், ஜெமினிகணேசன் போன்றோருக்கு அவரது குரல் அவ்வளவு ஒத்துவருவதில்லை. சிவாஜிகணேசனுக்காகப் பாடும்போதுதான் செளந்தரராஜனின் முழுத்திறமையும் வெளிப்படுவதுண்டு. சிவாஜிகணேசனின் முதல் திரைப்படமான பராசக்தியிலிருந்து அவரது ஆரம்பகாலத்திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் அவருக்குப் பெரும்பாலும் சிதம்பரம் ஜெயராமனே குரல் கொடுத்துவந்தார். தூக்குத்துக்கி (1954) என்ற திரைப்படத்திலும் சிதம்பரம் ஜெயராமனையே சிவாஜிகணேசன் தமக்காகப் பயன்படுத்த விரும்பியிருந்தார். ஆனால், அந்தத் திரைப்படத்தோடு சம்பந்தப்பட்ட சிலர், ஒரு பாடலையாவது அந்தப்படத்தில் சிவாஜிக்காகச் செளந்தரராஜன் பாடவேண்டுமென விரும்பினர். அவர்களது வேண்டுகோளுக்காக அந்தத் திரைப்படத்தில் இடம்பெறவிருந்த ஒரு பாடலைப் பாடிக்காட்டுமாறு சிவாஜிகணேசன் செளந்தரராஜனைக் கேட்டுக்கொள்ள, அவரும் பாடினார். அவர் பாடலைக் கேட்டு மகிழ்ந்த கணேசன், அந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் சகல பாடல்களையும் செளந்தரராஜனையே பாடுமாறு தெரிவித்தார். தூக்குத்தூக்கி திரைப்படம் செளந்தரராஜனை ஒரே தூக்காகத் தூக்கி, உயரத்தில் நிறுத்திவைத்தது. அந்தத் திரைப்படத்திலிருந்து சிவாஜிகணேசனின் வெற்றிக்கு ஒருவகையில் செளந்தரராஜனும், செளந்தரராஜனின் உயர்ச்சிக்கு ஒருவகையில் சிவாஜிகணேசனும் காரணமாயினர். சிவாஜிக்காக ரி.எம்.எஸ். பாடும்போது, சிவாஜியே பாடுவதுபோல இருக்கும். இதுபற்றிச் செளந்தரராஜனே குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செளந்தரராஜன் கெளரவிக்கப்பட்டபோது, ஒரு மாபெரும் கலைஞனுக்காகத் தாம் பாடியதையிட்டுத் தாம் மிகவும் பெருமைப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
சாந்தி (1965) என்ற திரைப்படத்துக்காகச் செளந்தரராஜன் பாடிய "யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?” என்ற பாடலுக்கான காட்சியில் நடிக்கவேண்டிய 08
 
 

சிவாஜிகணேசன் வழமைக்கு மாறாகச் சிலதினங்கள் படப்பிடிப்பை, ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தார். இயக்குநர் அதற்கான காரணத்தை அவரிடம் வினவியபோது, ரி.எம்.எஸ். அந்தப் பாடலை மிகவும் பிரயத்தனம் எடுத்துச் சிறப்பாகப் பாடியுள்ளார். அதற்கேற்றவாறு தாம் கற்பனை செய்து நடிக்கவேண்டும். அதற்காகத்தான் படப்பிடிப்பைத் தாம் ஒத்திவைக்கச் செய்ததாகச் சிவாஜி குறிப்பிட்டாராம். இதே சிவாஜிகணேசன் காலப்போக்கில் (எண்பதுகளிலிருந்து) செளந்தரராஜனைப் பயன்படுதாமலே விட்டுவிட்டார்.
செளந்தரராஜன் மிகவும் முயற்சியெடுத்துத் திறமையாகப் பாடிய பாடல்களில் ஒன்று, உயர்ந்த மனிதன் (1968) திரைப்படத்தில் இடம்பெறும் “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!” என்ற பாடல். விளையாட்டுத் திடலில் விளையாடிய களைப்போடு சிவாஜிகணேசனும், மேஜர் சுந்தரராஜனும் தமது நட்பை வெளிப்படுத்திப் பாடுவதாக அமைந்த அக்காட்சியில், இரு நடிகர்களின் குரல்களுக்கும் ஏற்றமுறையில் வெவ்வேறு விதமாகக் குரலை மாற்றிப் பாடியிருக்கிறார், செளந்தரராஜன். மூச்சு வாங்கிப் பாடவேண்டிய அப்பாடல் தத்ருபமாக அமையவேண்டும் என்பதற்காகப் பாடல் ஒலிப்பதிவுக்குச் சற்று முன்னதாக ஸ்ரூடியோவைச் சுற்றி ஒருமுறை ஓடிவந்த நிலையில் அந்தப் பாடலை அவர் பாடினார் என்று கூறப்படுகிறது.
திரையுலகில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வரவு, செளந்தரராஜனை மிகவும் பாதித்துவிட்டது. அவருக்கு அதிக சந்தர்பங்களை இளையராஜா வழங்காவிடினும், எண்பதுகளின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில், செளந்தரராஜன் பற்றிப் பெருமையாக அவர் குறிப்பிட்டிருந்தார். செளந்தரராஜனின் திறமைக்கு ஏற்றமுறையில் தம்மால் பாடல்களை வழங்க முடியவில்லை என்று இளையாராஜா கூறியிருந்தார்.
தமிழ்த் திரையிசைத்துறையில் செளந்தரராஜனின் சாதனை மிகப்பெரியது. இந்தியாவின் மிக அற்புதமான பின்னணிப்பாடகர் அவர். அவரது குரல்வளம் தனித்துவமானது. மலேசியா வாசுதேவனிடம் அவரின் குரலின் பிரதி காணப்படுகிறது. ஆனால், செளந்தரராஜனின் குரலில் இழைந்தோடும் அந்த இனிமை வாசுதேவனிடம் இல்லை. திறமையும், சற்றுத் தற்பெருமையும் கொண்ட செளந்தரராஜனின் பாடல்கள் கேட்கக் கேட்கக் தெவிட்டாதவையாக விளங்குகின்றன. சமாதானத்தின் வில்லன்
இலங்கைக்கு இன்று மிக இன்றியமையாத தேவை சமாதானமே என்பதை நாடும், உலகும் நன்கு அறியும். புதிய ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டபின், சமாதானத்தை நோக்கிய சிறு நகர்வுகள் ஏற்படத் தொடங்கியுள்ளமை மனத்துக்குச் சற்று ஆறுதலைத் தருகின்றது. சமாதான நகர்வுகளின்போது, வழக்கம்போலக் குருக்கள்மாரும், பேரினவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் குதித்துக் கூத்தாடுவர் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆயினும், இத்தகையவர்களைப் புறங்கண்டு, சமாதானத்தை நாடும் தனது நோக்கில் அரசு உறுதியுடன் இருந்தால், பல சிரமங்களுக்கு மத்தியில், மிகத் தூரத்தில் இருக்கும் சமாதானத்துக்குச் சமீபமாக ஓரளவாயினும் செல்லமுடியும்.
உலகநாடுகள் இலங்கைக்கான தமது ஆயுத வியாபாரத்துக்கு மத்தியிலும் சமாதான விரும்பிகளாக, ஒரளவு காட்சிதருகின்றன. நோர்வே இலங்கையின் சமாதானத்தோடு நேரடிப் பங்கு கொண்ட நாடாக மீண்டும் செயற்படுவதற்கேற்ற முறையில் இப்போது திரை விலகியுள்ளது. ஆனால், இலங்கையின் "நல்லது கெட்டதுகளில்” நேரடிப் பங்குகொள்ள வேண்டிய இந்தியா, தூரத்துப் பார்வையாளனாக ஒதுங்கியுள்ளது. ஒதுங்குவது மாத்திரமன்றி, சமாதானத்துக்கு
09

Page 6
எதிரான வில்லன் பாத்திரத்தை ஏற்பதற்கும் தயங்கமாட்டாது என்ற நிலைப்பாட்டை மறைமுகமாக எடுத்துள்ளது.
உண்மையில் இலங்கையின் சமாதான நகர்வுகளுக்குப் பச்சைக்கொடி காட்டவேண்டிய தார்மீக உரிமை இந்தியாவுக்கு உண்டு.
ஆயினும், இந்திரா காந்தியைத் தவிர, பிற இந்திய ஆட்சியாளர் எவரும் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிப் பூரணமாகப் புரிந்துகொண்டவர்களும் அல்லர்; புரிய முற்பட்டவர்களும் அல்லர். அவ்வப்போது ஒரு பேச்சுக்காக இலங்கையில் சமாதானம் மலரவேண்டும் என்று இந்தியா திருவாய்மலர்ந்து கொண்டிருப்பதைத் தவிர, உருப்படியான எந்தக்காரியத்தையும் அது செய்யவில்லை. பதிலாக, தன்னையறியாமல் இலங்கையின் பேரினவாதிகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையுமே அது அளித்துவந்துள்ளது.
தமிழ்நாட்டின் நிலையோ மிகப் பரிதாபகரமானது. வேதம் நிறைந்த தென்றும், உயர் வீரம் செறிந்த தென்றும், புகழ் மண்டிக்கிடப்பதென்றும், கல்வியிற் சிறந்ததென்றும், நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுவதென்றும், வான்புகழ் கொண்டதென்றும், கலைஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக நன்று வளர்ந்ததென்றும் மகாகவி பாரதியாற் புகழப்பட்ட தமிழ்நாடு இன்று நாறிப்போய்க்கிடக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எவ்வித அக்கறையும் இல்லாத படுபிற்போக்குவாதிகளான பத்திரிகையாளர் சோ, அரசியல்வாதிகளான ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, வாழப்பாடி ராமமூர்த்தி, ஒருபக்கம் சார்ந்து எழுதும் "ஹிந்து பத்திரிகை போன்ற புதர்கள் மண்டிக்கிடக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இன்று காட்சிதருகின்றது. இவையெல்லாம் போதாதென்று, ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை போன்றோர் வீற்றிருந்த அரியாசனத்தில் சரியாசனம் பெற்றிருக்கும் ஒரு "முதலமைச்சரை"யும் தமிழ்நாடு இப்போது சுமந்துகொண்டிருக்கிறது. “கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்” என்று தனது காவியத்தில் இடம்பெற்ற பாத்திரமான கும்பகர்ணனைப் பேசவைத்தவனும் , “மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ? உன்னையறிந்தோ தமிழை ஒதினேன்?" என அரச அதிகாரத்தையே எதிர்த்தவனுமாகிய கம்பன் பிறந்த தமிழ்நாட்டில், கும்பிட்டு வாழ்தலையும், கூனிக் குறுகித் தலைசாய்ப்பதையும் தொழிலாகக் கொண்ட முதலமைச்சர் ஒருவர் அரசோச்சும்போது, தமிழ்நாட்டிலிருந்து எத்தகைய மதிப்பார்ந்த உணர்வுகளை இலங்கைவாழ் தமிழ் மக்கள் எதிர்பார்க்கமுடியும்? உலகத்தமிழர்களின் தலைமகன் என்று தம்மைக் கருதிக்கொள்பவரும், பிறரால் அவ்வாறு கருதப்படுபவருமான கருணாநிதி அவ்வப்போது சந்தர்பத்துக்கு ஏற்றமாதிரி எதையாவது சொல்லித் தொணதொணத்துக்கொண்டிருப்பார்.
இந்த இலட்சணத்தில், இந்தியாவிடமிருந்து சமாதானத்துக்கான சமிக்ஞைகளை எதிர்பார்ப்பதைவிட இலங்கை அரசிடமிருந்து எதையாவது நல்லதாக எதிர்பார்ப்பது பரவாயில்லை என்றே தோன்றுகிறது. முற்று முழுதாக நம்பமுடியாவிடினும், இப்போதைய நிலையில் இனப்பிரச்சினைவிடயத்தில் இந்தியாவின், போக்கைவிட இலங்கை அரசின் சில செயற்பாடுகள் ஓரளவுக்காயினும் தூரத்து வெளிச்சத்தைக் காட்டுகின்றன. (அதேவேளை, பழைய வேதாளங்கள் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறும் காட்சிகளும் பேரினவாத இலங்கை அரசியலில் அரங்கேறவே செய்கின்றன). இலங்கையின்
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்றே இந்தியாவைப் பார்த்துக் கூறத் தோன்றுகின்றது. இந்தியா இனப்பிரச்சினைவிடயத்தில் ஒன்றும் செய்யவேண்டாம். வில்லத்தனம் செய்யாமல் இருந்தாலே போதும்.
10

அறிவுலக மேதை அ.ந.க.
எனது வழிகாட்டியான அறிவுலக மேதை அ.ந.கந்தசாமியைப் பற்றிய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கிறேன்.
என்னுடைய இன்றைய கலை இலக்கிய முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக, முன்னோடியாக உதவியவர் அறிஞர் அ.ந.க. என்பது சத்தியமான உண்மையாகும். இன்று நான் நாடக உலகில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவனாக இருப்பதற்குக் காரணம் அறிஞர் அ.ந.க. அவர்களே.
அறிவுலக மேதையான அ.ந.க. மறைந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன.
நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்திலேதான் அறிஞர் அ.ந.க. வைச் சந்தித்தேன். அவர் அப்பொழுது தகவல் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் கவிஞர் சில்லையூர் செல்வராசன் ஷெல் கம்பனியில் விளம்பரப்பிரிவில் உயர் உத்தியோகத்தராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
ஆரம்ப காலத்தில் அரசாங்க உத்தியோகத்திலிருந்த அ.ந.க. பொதுவுடமை புரட்சிக் கருத்துக்களால் உந்தப்பட்டு, உத்தியோகத்தை உதறித்தள்ளி கம்யூனிஸ்கட்சியின் வார இதழான ‘தேசாபிமானியில் பணியாற்றினார். பின்னர் ‘சுதந்திரன்', 'வீரகேசரி பத்திரிகைகளில் பணியாற்றினார். பின்னர் அரசாங்கத் தகவல் பகுதியில் வெளியிடப்பட்ட "பூரிலங்கா’ என்ற இதழில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
அந்தக் காலகட்டத்திலேதான் அறிஞர் அ.ந.க.வைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் மூலமாக இலக்கிய உலகின் ஒரு சகாப்தத்தின் பிரதிநிதிகளான படைப்பாளிகளையும், விமர்சகர்களையும், கல்விமான்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
பேராசிரியர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி, பிரேம்ஜி, செ.கணேச லிங்கன், கே.டானியல், எச்.எம்.பி.முஹைதீன், இளங்கீரன், என்.கே.ரகுநாதன், டொமினிக்ஜீவா, கவிஞர் சில்லையூர் செல்வராசன், தமிழறிஞர் லஷ்மண ஐயர், ஈழத்து சோமு, டைம்ஸ் கே.பாலச்சந்திரன், எஸ்.பொ. இப்படிப் பலரையும் சந்திக் கவும் அவர்களோடு பழகவும் வாய்ப்புக் கிட்டியது.
அப்பொழுது பேராசிரியர் கா.சிவத்தம்பி வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்திருக்கும் நத்ரா மாவத்தையில் தங்கியிருந்தார். அங்கதச் சுவையுடன் பேசுவதில் வல்லவர். அவரைச் சந்தித்து உரையாடுவதே ஒரு சுகானுபவமாக இருக்கும்.
நான் நாடக உலகில் பிரகாசிப்பதற்குக் காரணம் அவரது அறிவுரைகளே. உலகப்புகழ் பெற்ற நாடகாசிரியர்களான பெர்னாட்ஷாவையும், இப்சனையும்,
11

Page 7
பெக்காட்டையும், பேர்டல் பிரட்ஜையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர்.
தமிழ் நாடக மேடை நலிவுற்றுக்கிடக்கிறது. அதனால் நாடகத் துறையில் அதிக அக்கறை காட்டவேண்டும் என எனக்கு ஊக்கமூட்டியவர்.
ஓர் எழுத்தாளன் எப்படி எழுதவேண்டும். அவன் எதற்காக எழுதவேண்டும். இதற்கு, தனக்கு முன்னோடியாக இருந்தவர்களைப் பற்றி ஒரு முறை அறிஞர் அ.ந.க. குறிப்பிட்டது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது.
"பிரஞ்சுப் புரட்சி கண்ட ரூஸோ, வோல்டயர் தொடக்கம் மெக்ஸிம் கோர்க்கி, எஹற்ரென் பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களைப் பற்றியும் அவர் எனக்குக் கூறினார்.
பெர்னாட்ஷாவின் எழுத்துக்களுக்கும், பேட்ரன்டரஸல் எழுத்துக்களும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்புக் காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை.
"வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க்கவிஞர் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தில் உடனடிப்பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்கு தமது பேனாக்களை அர்ப்பணம் செய்யமறக்கவில்லை.” இவ்வாறு தன்னை நெறிப்படுத்திய எழுத்தாளர்களைப் பற்றி அறிஞர் அ.ந.க. பெருமையுடன் குறிப்பிடுவார்.
அறிஞர் அ.ந.க. ஒர் அபூர்வமான மனிதர். மற்ற எழுத்தாளர்களை விட அவர் வித்தியாசமானவர். எழுதுவது மாத்திரமின்றி அது போல வாழ்ந்து காட்டியவர். தொழிலாளர் ஏழைகள் பிச்சைக்காரர்கள் விபசாரிகள் மீதெல்லாம் அன்பு காட்டுவார்.
வீதியோரத்து செருப்பு தைக்கும் தொழிலாளர்களுடன் மணிக்கணக்காக அமர்ந்தவாறு உரையாடுவார்.
அவரிடமிருந்து நான் நிறையவே கற்றேன். மனிதர்களை நேசிக்க அவரிடமே தெரிந்து கொண்டேன்.
அதனால், அவரை எனது வழிகாட்டி என்பதிலே பெருமைப்படுகிறேன். அதேநேரத்தில் மலையகத்தையும் மலையக இலக்கியத்தையும் நேசிக்க செய்தவர்களையும் திரும்பிப்பிப்பார்க்கிறேன்.
இன்னும் வரும் (அறிஞர் அ.ந.கந்தசாமி 1968ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமரரானார்)
அன்பார்ந்த வாசகர்களே. சந்தா விபரம் ஞானம் சஞ்சிகை பற்றிய தனிப்பிரதி: ரூபா 15/- கருத்துக்களைக்களையும் சஞ்சிகை வருடச்சந்தா: ரூபா 180/- யின் தரத்தை மேம்படுத்த உங்க (தபாற்செலவு உட்பட) ளது ஆலோசனைகளையும் அறி சந்தா காசோலை மூலமாகவோ
யத்தாருங்கள். மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. அனுப்வேனிடிய பெயர்,
உங் களது படைப்புகளின் FöÑÄNASEK ARAN
மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் 19/7, PERADENIYA ROAD, கிய தரத்தை மேம்படுத்துங்கள். KANDY.
12

※注 盛 ་་ ་་་་་་་་་་་
தெளிவத்தை ஜோசப் کرکےکr
எழுதவேண்டும் என்ற நினைவு அல்லது ஆர்வம் என்னுள் எப்படி எழுந்தது; இயங்கத் தொடங்கியது என்பது பற்றியெல்லாம் என்னால் விபரமாக ஒன்றும் கூறமுடியாதிருக்கிறது. நான் எப்படி ஒரு படைப்பாளியானேன் என்பதுபற்றி நானே ஒரு சில வேளைகளில் முடிவில்லாமல் சிந்திப்பதுண்டு.
என்னுடைய பெற்றோர், குறிப்பாக ஆஞா- அவருடைய கண்டிப்பு உழைப்பு: கண்ணியம்; எங்கள்மேல் காட்டிய அன்பு: பரிவு; என்னுடையவர்கள் என்கின்ற அர்ப்பணிப்பிலான அவருடைய தியாகங்கள் ஆகியவை எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பித்து என்னையறியாமலே எனக்குள் ஒரு கலைஞனை உருவாக்கியிருக்கலாமோ என்று நான் எண்ணுவதுண்டு.
கையில் கிடைத்ததை எல்லாம் விடாமல் ஊன்றி வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்திய உந்துதலும் என்னை எழுதத் தூண்டியிருக்கலாம்.
தென்னிந்திய 'உமா, நம்மூர் கதம்பம் ஆகியவற்றில் அறுபதுகளின் ஆரம்பத்தில் இரண்டொரு கதைகள் எழுதினேன்.
மண் விளங்காத, மனிதர்கள் விளங்காத கதைகளாக அவை அமைந்திருக்கலாம்.
வீரகேசரியின் தோட்ட மஞ்சரி ஆரம்பித்த புதிதில் தோட்டத்து நடப்புக்கள் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதினேன். பிறகு சின்னதாக ஒரு கதை எழுதி தோட்ட மஞ்சரிக்கு அனுப்பிவைத்தேன். கொஞ்சக் காலம் கழிந்து அந்தக் கதை பிரசுரம் பெற்றது.(1963 பெப்ருவரி) படிப்.பூ என்பது கதையின் பெயர்.
தோட்டத்துப் பெரிய கணக்கப்பிள்ளையின் செல்ல மகன் ஒருவன் பதுளைக்குப் படிக்கப்போன கதை அது.
தோட்டத்துக்குள் இருக்கும் மக்களுக்குக் கல்வியின் மேலுள்ள அக்கறையின்மையை இந்தக் கதையின் மூலம் காட்ட முயன்றிருந்தேன்.
பாலாஜி என்கின்ற அந்தக்கால வீரகேசரி ஒவியர் வரைந்த படம் இத்தியாதிகளுடன்தான் படிப்.பூ பிரசுரமாகியிருந்தது என்றாலும் இந்த வாரச் சிறுகதை என்ற அந்தஸ்த்துடன் வேறு ஒரு கதையே அந்தவார ஞாயிறு கேசரியில் வந்திருந்தது. ஒதுக்கிய பக்கமாதலால் தோட்டக்காட்டிலிருந்து யாரோ எழுதியிருக்கின்றார் என்பதுடன் இந்தக் கதை விடுபட்டுப் போயிருக்கலாம். என்னுடைய முதல் மலையகக் கதையே தோட்ட மக்களின் கல்வி சம்பந்தமானதாக இருந்துவிட்டதில் எனக்கும் ஒரு திருப்தியே.
1963 மார்ச்சில் "பாட்டி சொன்ன கதை வெளிவந்தது. வீரகேசரியின் மலைநாட்டுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கதை இது.
1960களில் ஆரம்பத்தில் மலையகம் பற்றிய சிறுகதைகள் அவ்வளவாக இல்லை. மலையகம் என்கின்ற பிரதேசம் ஈழத்து மக்களிடையேகூட அறிமுகம்
13

Page 8
கொள்ளாத ஓர் இருண்ட பிரதேசமாகவே இருந்தது.
செந்தூரனின் ‘உரிமை எங்கே, நடுக்கடலில்'; என்.எஸ்.எம்.ராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து, நிறைவு; அ.செ.மு.வின் காளிமுத்துவின் பிரஜாவுரிமை; வ.அ.இராசரத்தினத்தின் அன்னை என ஒரு ஐந்தாறு கதைகளே மலையகம் பற்றிப்பேசும் கதைகளாக அறியப்பட்டிருந்தன. அப்படியானதொரு சூழ்நிலையில், வீரகேசரி போன்றதொரு பிரபலமான பத்திரிகையில், மலையகம் என்னும் கோஷத்துடன் மலையகச் சிறுகதைப்போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை என்னும் அந்தஸ்த்துடன் வெளிவந்த ’பாட்டி சொன்ன கதை எனக்கு ஒரு பிரபல்யத்தையும் கெளரவத்தையும் தேடிக் கொடுத்தது என்பது வியப்பானதல்ல. எங்கள் ஆஞா 1919இல் தன்னந்தனியனாய்க் கடல்தாண்டி கட்டவளைக்கு (தோட்டத்தின் பெயர்) வந்தவர்.
ஆஞா, அம்மா, ஒரு அண்ணன்; ஒரு தங்கை; மூன்று தம்பிகள் என்று எட்டுப்பேர் கொண்ட எங்கள் குடும்பம் அன்றி வேறு உறவுகள் இல்லாதவன் நான்.
தெளிவத்தைக்கு உத்தியோகம் பார்க்க வந்ததன் பிறகு, உடன் உத்தியோகம் பார்த்த மாரியப்பன்; பொன்னுச்சாமி, தில்லன் முத்துச்சாமி என்று நாலைந்து நண்பர்கள் இருந்தனர். பள்ளிக்கூட நட்பென்பதெல்லாம் ரயில் ஸ்நேகம் மாதிரித்தான்; பாடசாலையுடன் சரி.
உறவும் நட்பும் என் உடன் இருந்ததனால் எனக்குக் கடிதம் எழுத யாரும் இருக்கவில்லை. நீலக்கவர் ஏர்மெயில் இருந்திருந்து ஆஞாவுக்கு வரும். சின்னப்பயலான எனக்கு வராது.
தன்பெயருக்குத் தபாலில் ஒரு கடிதம் வருவதில் உள்ள மகிழ்ச்சி எத்தனை புனிதமானது. பாட்டி சொன்ன கதை பிரசுரமானதன் பின் மகிழ்வின் புனிதம் எனக்குத் தெரிய ஆரம்பித்தது. முகமே தெரியாத, முகவரியே தெரியாத எத்தனை எத்தனை பேர் எனக்கு எழுதி இருந்தார்கள். யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் இருந்தெல்லாம் எழுதி இருந்தார்கள்.
உறவே இல்லை, நட்பே இல்லை என்பதெல்லாம் எப்படிப் பொய்யாய்ப் போய்விட்டன. உறவும் நட்பும் எனக்கு ஊரெங்கும் இருக்கின்ற அற்புதம் நடந்தது. அந்த உணர்வின் வலிமையும் கூட எனது எதிர்கால எழுத்துத் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் ஒரு சக்தியாக நின்றிருக்கலாம்.
இளமையின் துடிப்பில் தன்னையறியாமலே தன்னையிழந்து தவறிழைக்க விருந்த தன் பேத்தியை ஒரு கதை சொல்லித் திருத்திவிடும் பாட்டியைப் பிரதான பாத்திரமாகக் கொண்ட கதை அது.
ஏலேலோ பாடுவதன் மூலம் தங்கள
போக்கமுடியும் என்னும் நம்பிக்கையைப் போல, நாட்டார் பாடல்கள் மூலம் ஒரு சமூதாயத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தக் கூடும் என்பதைப்போல, ஒரு கதை சொல்வதன்மூலமும் நாலு பேரைத் திருத்த முடியும் என்னும் நம்பிக்கை எனக்குள் இருந்திருந்திருக்கிறது.
ஆகவேதான் பதினாறு வயதில் பருவத்துடிப்பிற்குப் பலியாகி, கெட்டுப்போய் அவமானப்பட்டு, அப்பனைத் தற்கொலைக்காளாக்கி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சின்னா பின்னப்பட்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றுத் தாயிடம்
14

கொடுத்துவிட்டு வாழவேண்டிய வயதில் ஊத்தைப் பெயருடன் செத்துப்போன ஒரு அம்மாவின் கதையைச் சொல்லி "உங்காயாவுக்கு நடந்த கதி உனக்கும் நடக்கணுமா?” என்று கேள்விக்கணை தொடுத்துத் தன் பேத்தியைத் திசைதிருப்பி விடுவதாக இந்தக் கதையை அமைத்துக்கொண்டேன்.
சிறுகதைத் துறையின் முக்கித்துவத்தின் காரணமாகவோ என்னவோ கதையின் பெயர்கூட ‘பாட்டி சொன்ன கதை' என்றே அமைந்துவிட்டது. O கதையின் உருவ அமைதி அருமை. O பழைய கருதான் என்றாலும் கூறப்பட்ட தன்மையாலும் பின்னோக்கு
உத்தியின் சிறப்பாலும் கதை உயர்வடைகிறது. O ஆண்பெண் உறவுகள் பற்றி அம்மாவும் பிள்ளையும், பாட்டியும் பேத்தியும் உரையாடிக் கொள்ளமுடியாத உறவுத் தடைகளை இந்தப் பின்னோக்கு உத்திமூலம் உடைத்திருக்கின்றார் ஆசிரியர். O கதை அருமையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் சின்னஞ்சிறுசுகளுக்குச்
சொல்லும் கதைதானா இது. என்றெல்லாம் விமர்சனம் சொன்னவர்கள் சிறுகதைகள் மூலமாகவும் ஒரு சமுதாய மாற்றத்தை நிகழ்த்திக்காட்டலாம் என்னும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த எனது நினைவு பற்றிப் பேசாதது ஒரு ஏக்கமாவே இருந்தது.
"இந்தச் சனங்களுக்குப் பண்பாடில்லை; கற்பில்லை; பெண்மையின் மகிமை யில்லை என்றெல்லாம் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மிக மூர்க்மாக மறுதலித்து நிற்கிறது உங்கள் படைப்பு என்று அமரர் பெனடிக்ட் பாலன் கூறியது எனக்குப் பிடித்திருந்தது.
"கொழுந்து நிறுத்து வெகு நேரமாகிவிட்டது. இன்னும் காவேரியைக் காண வில்லை” என்றுதான் பாட்டி சொன்ன கதையை ஆரம்பித்திருந்தேன். மலையகம் என்கிற பிரதேசத்தின் முக்கியத்துவமே கொழுந்தை மையமாகக் கொண்டதுதான். அதனை வேராகக் கொண்டே மற்ற அம்சங்கள் எல்லாம் கிளைபரப்புகின்றன. அந்தப் பிராந்திய முனைப்பு முதல் வரியிலேயே நேரடியாக வெளிக்கிளம்பத் தொடங்கியுள்ளமையும் நடுவர்களை ஆகர்சித்திருக்கலாம் - முதற் பரிசுக்காக! பாட்டி சொன்ன கதை வந்த மறுமாதமே - ஏப்ரல் 1963இல் மலைமுரசு சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற என்னுடைய "நாமிருக்கும் நாடே வெளிவந்தது.
கள்ளத்தனமாகவேனும் காசனுப்பி கடல் போன்ற சீமையில் காணி வாங்கிப் போடுவதில் இம்மக்கள் காட்டும் ஆர்வத்தை, இந்தநாடு எனது நாடு என்று உணர்வதில் காட்டுவதில்லை. இதுதான் உங்கள் நாடு என்னும் உணர்வினைக்கூட காலம் காலமாய் இவர்களை வழிநடத்தும் தலைவர்கள் இந்த மக்களிடம் ஏற்படுத்தவில்லை.
ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்கின்ற நிலைமைகள் வேண்டாம். நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்ட கதை இது.
வீரகேசரியில் ஒரு விரிந்த தளம் இல்லையாயினும் மலையகமெங்கும், எழுத்துடனும் வாசிப்புடனும் மலையகம் என்கின்ற உணர்வுடனும் இயங்கிய சகலர் மத்தியிலும் எனக்கொரு மதிப்பைப் பெற்றுக் கொடுத்த ஏடு மலைமுரக்.
15

Page 9
நான் எழுத ஆரம்பித்த 63ல் மட்டும் பதினைந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு வருடத்தில் பதினைந்து சிறுகதைகள் என்பது மாதத்துக்கு ஒன்று என்னும் விகிதாசச்ாரத்தை விடவும் கூடியதுதான் என்றாலும் படைப்புலகில் நான் சோடைபோய்விடவில்லை. மாறாக தெளிவத்தை ஜோசப் என்னும் பெயர் ஒரே வருடத்தில் கவனமும் அழுத்தமும் கொண்டது.
வைத்திலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்ற ஈழத்து முன்னோடி களின் படைப்புக்களை ஏற்றுப் பிரசுரித்த தமிழக ஏடுகள் பிறகு பிறகு ஈழத்துச் சிறுகதைகள் ஈழத்து மண்ணையும் மக்களையும் பிரதிபலிக்கத் தொடங்கிய பிந்திய 50களின் பின், ஈழத்துப் படைப்புகளுக்குக் களம் கொடுக்கத் தயங்கின. பகீரதன், நா.பார்த்தசாரதி போன்றோரின் ஈழ விஜயமும் இலக்கிய சர்ச்சைகளும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. அப்பேர்ப்பட்டதொரு காலகட்டத்திலேதான் 1963ல் எனது "ஊன்றுகோல்' என்னும் கதை கலைமகளில் பிரசுரம் பெற்றது. என்னால் நம்பவே முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தன்னுடைய "பாற்கஞ்சி ஆனந்த விகடனில் வெளிவந்த போது, தான் கொண்ட பரவசத்திற்கு எல்லையே இல்லை என்று கூறியுள்ளார் சி.வைத்திலிங்கம்.
எல்லா எழுத்தாளர்களுக்குமே இது இயற்கையானதுதான். முதல் கதைவந்த மகிழ்வுடன் கலைமகளுக்கு 'அது' என்றொரு கதையை அனுப்பினேன். 1964 ஆகஸ்டில் அது வெளிவந்தது. என்னுடைய கதை வந்த கலைமகளில் ஒரு பிரதியும் கி.வ.ஐ. விடமிருந்து ஒரு கடிதமும் வந்தன. கலைமகள் திபாவளி மலருக்கு ஒரு கதை அனுப்பும்படி கேட்டிருந்தார் கி.வ.ஜ; எனக்குச் சந்தோசம் தாங்கமுடியவில்லை.
கதை ஒன்று அனுப்புங்கள் என்று கலைமகள் போன்றதொரு பிரசித்தி பெற்ற பத்திரிகை கேட்பதென்றால். அதுவும் திபாவளி மலருக்கு. பாவசங்கீர்த்தனம்’ என்னும் கதையை அனுப்பிவைத்தேன். கலைமகள் ஆசிரியரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. பாவசங்கீர்த்தனம் கிடைத்தது. டிசம்பர் இதழில் பிரசுரிப்போம். திபாவளி மலருக்கு வேறொரு கதை அனுப்புங்கள் என்று எழுதியிருந்தார்.
நினைத்த மாத்திரத்தில் ஒரு கதை எழுதிவிட என்னால் முடியாது என்பது எனக்குத் தெரியும். அதுவும் போக, அனுப்பிய கதை ஏன் டிசம்பர் இதழுக்குப் போக வேண்டும் என்றும் யோசித்தேன்.
பாவசங்கீர்த்தனம் கிறீஸ்துவ மத சம்பந்தமான கதை. தீபாவளியோ இந்து மதப் பண்டிகை. ஆகவேதான் பாவசங்கீர்த்தனம் தீபாவளி மலருக்கு வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார் கலைமகள் ஆசிரியர். மதங்களுக்கும் சிறுகதை களுக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை, பேசாமல் இருந்துவிட்டேன். தீபாவளி மலரில் கதை வரவில்லை. பாவசங்கீர்த்தனம் டிசம்பர் 64ல் வெளிவந்தது. டிசம்பர் கிறிஸ்மஸ் மாதம் அல்லவா! அதன்பிறகு “ஞாயிறு வந்தது என்னும் குறுநாவலும் பயணம் என்னும் சிறுகதையும் கலைமகளில் வெளிவந்தன.
கலைமகள் போன்றதொரு பத்திரிகையில் வெளிவந்த எனது கதைகள்கூட மலையக மக்களின் வாழ்க்கை பற்றியதாகவே அமைந்துவிட்டதில் எனக்குப் பரமதிருப்தியும் மகிழ்வும் உண்டு.
1966ல் சிந்தாமணி உதயமாயிற்று. எழுத்துலகில் மறக்கமுடியாத சம்பவம்
16

பற்றி எழுதித்தரும்படி கேட்டிருந்தார் சிந்தாமணி ஆசிரியர் இராஜ அரியரத்தினம். ஆனந்த விகடனில் தனது பாற்கஞ்சி வெளிவந்த மகிழ்வை மறக்கமுடியாத சம்பவமாக எழுதியிருந்தார் சி.வை. என்னுடைய கதைகள் ஏற்படுத்திய தாக்கத்தால் பாதிப்புற்ற சிலர் எழுதுகின்ற, "உனது வலது கையைத் துண்டிப்போம்; டங்கி மொடக்கில் உனது காலை உடைத்து டங்கியில் தூக்கிப்போடுவோம்’ என்று மொட்டைக் கடிதங்கள் எழுதியும் ஆளில்லாத நேரங்களில் கல்லெறிந்து வீட்டுச் சன்னல்களின் கண்ணாடிகளை உடைத்தும் கீழிருந்து கிழம்பிய எதிர்ப்புப் பற்றியும்; எழுதுவதைவிடு அல்லது வேலையை விடு என்று மேலிருந்து வந்த கண்டிப்புக்களையும் தொடர்ந்து 1964ல் தெளிவத்தையை விட்டு வெளியேறிய நினைவுகளை மறக்கமுடியாத சம்பவங்களாக நான் எழுதியிருந்தேன்.
ஈழநாடு இதழில் புது அய்யா என்றொரு கதையை எழுதியிருந்தேன். பழைய கணக்கப்பிள்ளை தோட்டத்தை விட்டு சீ பட்டு வெளியேறும்போது, புது அய்யாவாக சீர் சிறப்புடன் அதே தோட்டத்துக்குள் புதுக்கணக்கப்பிள்ளை வருவது பற்றிய கதை இது. புது அய்யாவைத் தொடர்ந்து சோதனை என்றொரு கதையை ஈழநாட்டுக்கு அனுப்பினேன். திருப்பி அனுப்பிவிட்டார்கள். சோதனைக் கதை தோட்டத்தில் பணியாற்றும் யாழ்ப்பாணத்து வாத்திமார்பற்றியது.
கணக்கப்பிள்ளைகள் பற்றிய கதையைப் போட்டவர்கள் வாத்திமார் பற்றிய கதையைப் போட ஏன் மறுத்தார்கள் என்பது புரியவில்லை.
சிந்தாமணியும் கதை கேட்டிருந்தது. கையிலிருந்த சோதனையைப் பவ்வியமாகக் கொடுத்தனுப்பினேன். அதே பவ்வியத்துடன் கவிஞர் ஈழவாணன் மூலமாகத் திருப்பிக் கொடுத்ததுடன் வேறொரு கதை தரும்படி வினயத்துடன் கேட்டிருந்தார் ஆசிரியர்.
‘லில்லி என்றொரு கதை அனுப்பினேன். நாங்கள் மிகவும் விரும்பி வளர்த்த பசுமாட்டைப் பற்றிய கதை லில்லி. சுந்தரராமசாமியின் புகழ்பெற்ற "கிடாரிக்கு ஈடான கதை என்று அபிப்பிராயம் கூறினார்கள். லில்லி; மீன்கள்; பீலி மேலே போகிறது; என்று மூன்று கதைகள் சிந்தாமணியில் எழுதினேன். சோதனைக்கு ஏடு கிடைக்கவில்லை.
மல்லிகை ஆசிரியர் ஜீவா என்னுடன் அன்பாகப் பழகுவார். அட்டைக்குப் படம் கேட்டிருந்தார். என்னிடம் ஒரு நல்ல படம் இல்லாததால் தாமதப் படுத்தினேன். வெறும் அட்டையில் கட்டம் போட்டு அடியில் தெளிவத்தை என்று போடுவேன் என்று உரிமையுடன் கோபித்தார்.
கொழும்புக்கு வரும்போதெல்லாம் மல்லிகைக்கொரு கதை தரும்படி அன்புடன் கேட்பார். ஒருமுறை கேட்டபோது சோதனையைத் தூக்கிக் கொடுத்துவிட்டேன். 1967 ஜூன் மல்லிகையில் சோதனை வெளிவந்துவிட்டது.
என்னுடைய கதை மாந்தர்கள் எவருமே யதார்த்தத்தில் இருப்பதைவிட மேலான நிலையில் இருப்பவர்களாகச் சித்திரிக்கப்படுவதில்லை. வாழ்வதற்கான அவர்களுடைய போராட்டங்களில் முனைப்புப் பெற்று நிற்கும் துயரங்களையே எனது படைப்புக்கள் முதன்மைப்படுத்திக் காட்டின. மலையக மக்களின் துன்ப துயரங்களை மட்டுமே என்னுடைய கதைகள் காட்டுவதாகவும் அந்த மக்களின் மகிழ்வு, ஆனந்தம், வாழ்க்கையின் வெற்றிகள் போன்ற மறுபக்கத்தை நான் காட்ட மறுப்பதாகவும் குறைபட்டவர்கள் இருந்தனர்.
17

Page 10
இந்த மக்களின் 90 வீதமான துயரங்களைப் புறமொதுக்கிவிட்டு 10வீத மகிழ்வுகளை எனது படைப்புக்கள் மூலம் முன்னிறுத்த நான் முயல்வேனாகில் யதார்த்த நிலைமைகளுக்குக் கற்பனாவாத அலங்காரங்கள் செய்து பார்த்த குற்ற உணர்வுக்கு நானே ஆளாகவேண்டியிருந்திருக்கும். நான் எழுதத்தொடங்கிய ஆரம்பத்தில் எனது நல்ல நண்பரும் எனது வாசகருமான ஒரு நண்பர் கேட்டார், "ஏன் கிழடுகளைப்பற்றியே எழுதுகிறீர்கள்?” என்று.
அவருடைய கேள்விக்குப் பிறகே ஏன் இப்படி அமைந்தது என்று சிந்தித்தேன். பாட்டி சொன்ன கதையில் ஒரு கிழவி. பழம் விழுந்ததுவில் ஒரு கிழவன். பாலாயியில் ஒரு கிழவி. நாமிருக்கும் நாடேயில் ஒரு கிழவன். ஊன்றுகோலில் ஒரு கிழவன், ஒரு கிழவி. இப்படி இன்னும் நிறையக் கூறலாம்.
வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களும் குடும்பப் பாரத்தைச் சுமப்பவர்களுமே எனது பிரதான பாத்திரங்களாக அமைகின்றனர்.
திட்டமிட்டோ தீர்மானித்தோ செய்த காரியமில்லை இது. என்றாலும் அப்படித் தான் அது அமைந்துவிடுகிறது.
வயது முதிர்ந்தவர்களின் வாழ்க்கை அநுபவங்களே மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக அமையமுடியும் என்கின்ற உள்ளுணர்வின் செயற்பாடாகவும் இது இருக்கலாம்.
"நான் கொப்பளித்துத் துப்பிய இளமைதானே இன்று இவள் அநுபவிப்பது.” பேத்தியின் பருவத்தையும் தோற்றத்தையும் கண்டு பாட்டி பயப்படுகின்றாள்.(பாட்டி சொன்ன கதை) கை கால்களில் வலுவிருக்கும்போதே வாழ்க்கைக்கான ஒரு உத்திரவாதம் இல்லாதபோது அவைகளை இழந்த பிறகு எப்படி இருக்கும்.
"கிழவிக்கு மலை ஏறி வேலைசெய்ய முடியவில்லை. துரை வேலை நிறுத்தி விடுகின்றார். வீரமுத்து ஆபிஸை இரண்டாக மட்டுமல்ல மூன்றாகவும் ஆக்கிவிடுகின்றான். கிழவிக்கு யார் சோறு போடுறது. வேலை குடுங்க இல்லேன்னா சுட்டுத் தள்ளிப்புடுங்க.." (பழம் விழுந்தது) தள்ளாத வயதில் நடத்தப்படும் இரண்டு விதமான வாழ்க்கைப் போராட் டங்கள் இவை. என்னையறியாமலே எனது பாத்திரங்கள் வயோதிபர்களாக அமைந்து விடுகின்றனர்.
1934ல் நான் பிறந்திருக்கின்றேன். 1963ல் எழுதத் தொடங்கியிருக்கிறேன். அதுவும் தீவிரமாக எழுதி ஒரு படைப்பாளனாக ஸ்திரம் பெற்றிருக்கிறேன். அப்படியென்றால் முப்பது வயது என்றாகிறது. ஒரு முப்பது வயதுக்காரனின் பொறுப்புணர்வுடனேயே எனது படைப்புக்கள் எழத்தொடங்கியுள்ளன. எனது சிறுகதை உலகம் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். என்மேல் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுக்கள், என்னை எழுதவிடாமல் முடக்கிவிட மேற்கொண்ட முயற்சிகள் மட்டுமே!
தோற்றுப்போனவர்கள் பற்றி இங்கு பேசவேண்டாம் என்று எண்ணுகிறேன்.
18

மக்கள் கலைமணி இரா.அ.இராமன்
கம்பராமாயணத்தில் ஒரு வில்லுப்பூட்டிய இராமன், ! கண்டி மாநகரில் ஒரு சில்லுப்பூட்டிய இராமன் என வர்ணிக்கப்படுபவர் இவர். இலக்கியவாதிகளுக்கும், ሥኛ இலக்கிய அபிமானிகளுக்கும் இடையில் ஒரு பாலம் இந்த இராமன். இரா.அ. இராமன் என்பதற்கு ஒரு தமிழறிஞர், ஆமாம் அவர் இரா(இருக்காத) இராமன்தான் எனக் கூறியதும் நினைவுக்கு வருகிறது. கலாநிதி துரை மனோகரன் அவர்கள் குறிப்பிடுவதுபோல் ஓர் எறும்பின் ஒழுங்கமைப்பும் தேனியின் சுறுசுறுப்பும் ஒருங்கே சேர்ந்த உருவம் இராமன். இன்னும் 'அமுது சஞ்சிகையில் குறிப்பிட்டதுபோல் குழம்பிய தலை, ஆன்ால் குழப்பமில்லாச் சிந்தனை. 1969ல் அம்மா என்ற சஞ்சிகையை ஆரம்பித்து இன்றுவரை இலக்கியத்துக்காக இயங்கிக் கொண்டிருப்பவர் இவர். பின்னர் பூரணி என்றொரு சஞ்சிகையையும் உருவாக்கினார். சிறுசஞ்சிகை களுக்கு - அவை காத்திரமும் கனதியும் கூடக்கூட ஆயுட்காலம் குறைவது ஒரு நியதிபோல அவருடைய சஞசிகைகள் இரண்டும் குறுகிய காலத்தில் அகாலமாகி விட்டன. ஆனாலும் மனஞ்சோராத இராமன் தொடர்ந்து இலக்கியத் தொண்டாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ந.பார்த்திபன்
மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் என்ற அமைப்பினுா ந.பார்த்திபன் டாகக் கண்டி இலக்கியச் செய்தி மடல்’ என்னும் பத்திரிகையை தமிழிலக்கிய உலகிற்கு அளித்துக்கொண்டிருப்பவர் இராமன். துரை விஸ்வநாதனின் இலக்கிய அபிமானத்தையும், எழுத்தாளர்க்கு அவர் உதவும் பாணியையும் கெளரவிக்க நினைத்த இவர், குறிஞ்சித் தேனீக்கள் என ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்க நினைத்துச் செயற்படும்போது, அதனைத் துரைவி இலக்கியச் சிந்தனை வட்டம் எனப் பெயர் கொடுத்து இலக்கிய ஒன்றுகூடல் நிகழ்வாக மாதாமாதம் நினைவு கூரும் நிலைக்கு மாற்றினார். மலையக எழுத்தாளர்களது ஆக்கங்களைத் தேடித் தேடி நூலுருவாக்க வேண்டுமென்ற அவரது அவா துரை விஸ்வநாதன் என்ற இலக்கிய அபிமானியூடாக நிறைவேற, இராமனது பங்களிப்பு மிக முக்கியமானது. கண்டி சிட்டி மிஷன் என்ற இடத்தை விழாக்கள் நடத்திப் பிரபல்யப் படுத்தியவர் இந்த இராமன்.
விழாக்களை நடத்துவதில் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண் ர்ெ இவர். எதையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்து முடிப்பதில் இராமன் தனித்திறமை வாய்ந்தவர் என்று பலர் கூறுவதைக் கேட்கிறோம். இலங்கையிலே இலக்கியத்தின் மீதும் எழுத்தின் மீதும் புத்தகங்கள் மீதும் ஆர்வமும் அக்கறையும் இருக்கும் எவருக்கும் இராமனைத் தெரியாமல் இருக்க நிாயமில்லை என அமுது சஞ்சிகை ஆசிரியர் மனோரஞ்சன் குறிப்பிட்டதையும் பார்க்கிறோம். எழுத்தாளர் அகஸ்தியர் சந்திப்பு, இராமனையும் பல வழிகளில் புடம் போட்டது. புதிய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டு முற்போக்கு இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டு திகழும் இவர், "என் சிந்தனையில் மார்கசிய விதையை ஊன்றிவிட்டவர் அகஸ்தியா"
19

Page 11
எனக் கூறுகிறார்.
எழுத்தாளர் பெனடிக்ட் பாலன் அவர்கள் "உண்மையில் தன் கொள்கையைப் பொறுத்தவரை இராமன் ஒரு ஜாம்பவான்தான் என்று நற்சான்றிதழ் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த அமைச்சரும் கவிஞருமான அஷ்ரப் அவர்களது நான் எனும் நி கவிதை நூல் விழாவைக் கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் அறிமுகம் செய்துவைத்து முஸ்லிம் தமிழ் சமூகத்திற்குத் தான் ஒரு பாலம் எனவும் நிரூபித்தவர் இராமன். அதுபோல தனது மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் செயலாளராக கவிஞர் இக்பால் அலியைத் தெரிவு செய்து முஸ்லிம் தமிழ் ஒற்றுமையைக் கண்டியில் கலை - இலக்கியத்திற்கு செய்து வருகிறார். அதனால்தானோ கிழக்கிலங்கையில் இராமன் கெளரவிக்கப்பட்டார். இலங்கைத் தென்கிழக்கு ஆய்வமையத்தின் ஏற்பாட்டில் இலக்கியக் கெளரவிப்பு கல்முனை ம..மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றபோது கெளரவிக்கப்பட்ட ஐந்து இலக்கிய வாதிகளில் இராமனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக பல நூல்களைப் பிரசுரித்து வெளியிட்டு விழாவையும் நடாத்திக்கொடுத்து எழுத்தாளர்களை பலவழிகளிலும் கெளரவிக்கிறது. இதில் முன்னாள் மட்டுநகர் மேயர் காலஞ்சென்ற செழியன் பேரின்பநாயகம் அவர்களுடைய சீறி வந்த சூறாவழி என்னும் நூலை இராமன் பிரசுரித்து வெளியிட்டு விழா செய்தமையை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இதேபோல் கவிஞர் இக்பால் அலியின் கவிதை நூல்களை - அவர் கிழக்கிலங்கையைப் பிற்பிடமாகக் கொண்டிருந்தபோதும் பிரசுரித்து ஆதரவு கொடுத்தார். எழுத்தாளரது நூல்கள் நூல்வடிவில் வருவதற்கும் வெளியீட்டு விழா செய்வதற்கும் இராமன் எடுக்கும் முயற்சிகள் யாருமே செய்திடாதவை என்றே குறிப்பிடவேண்டும். இராமனின் இந்த அளப்பரிய பணிகளை மதித்த பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்குப் பாராட்டு விழா நடாத்தி 'மக்கள் கலைமணி என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. மேலும் கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் பணப் பரிசிலும் மோதிரமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். நல்ல மனங்கொண்ட இராமன், கலைஞர்களை எழுத்தாளர்களை இனங்கண்டு கெளரவிக்கும் பண்பினால் அவரும் கலை - இலக்கிய வாதிகளால் கெளரவிக்கப் பட்டார். `இரத்தின தீப விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டவர் இராமன். எழுத்தாளர்கள் எழுதிக் கொடுத்தால் போதும்; அதனைப் பிரசுரித்து வெளியிட்டு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்து, இது நம்ம வீட்டுக் கல்யாணம்' என்ற நினைப்பில் இராமன் செயற்படுவதையும் பார்த்தால் எழுத்தாளர்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்களாகவே இருப்பார்கள். வெளியீட்டு விழாக்களில் அழைப்பிதழைத் தயாரிக்கும்போது குறிஞ்சித்தேன்’ எனத் தலைப்பிட்டு அவர் எழுத்தாளர் பற்றி, அவரது ஆக்கங்களைப் பற்றி அறிஞர்கள் சொன்ன விடயங்கள் பற்றி அவருக்குக் கிடைத்த பட்டங்கள் - பரிசுகள் பற்றியெல்லாம் தேடியெடுத்துப் போட்டு அந்தக் குறிஞ்சித்தேனை ஒரு நூல்போல வைத்துப் பாதுகாக்கும்
அளவிற்கு அற்புதமாகக் கொடுப்பார். இவ்வளவும் செய்கின்ற இலக்கியூப் பணிபுரியும்
இராமனுக்குப் பல ஆதங்கங்கங்கள். அதில் ஒன்று காத்திரமான - கனதியான சஞ்சிகை அல்லது பத்திரிகை தொடர்ந்து வெளிக்கொண்டுவர வேண்டுமென்பது. அவரது சேவையைப் பெற்ற பலரும் இதுபற்றிச் சிந்திப்பார்களாக.
20

அந்தக் குளிலோசை...
(செல்வி லறினா ஏ.ஹக் - பேராதனைப் பல்கலைக்கழகம்)
வெளியே மழை தூறிக்கொண் டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஒலைக் கூரையின் வழியே வீட்டினுள்ளே மழை நீர் சொட்டுச்சொட்டாய் ஒழுகியது. "டங். பங்.." தப்பாத தாளலயத்தோடு மழைத் துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்து விழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில் கச்சேரி நடத்திக்கொண் t905,55gs.
பழசாகிப்போன கயிற்றுக்கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி இருந்த கந்தசாமி மாஸ்டரின் முகத்தில் முதுமை எழுதிய கவிதை, சுருக்கங்களாகப் படிந்திருந்தன. கண்களைக் கசக்கி விட்டபடி குடிசையை நோட்டமிடுகிறார். குடிசை மூலையில் இருந்த தடுப்புக்கு அப்பாலிருந்து எழுந்த புகை எங்கும் நிறைந்திருந்தது. ஈரவிறகோடு போராடிய படி அடுப்புப் பற்றவைக்க முயன்று கொண்டிருக்கும் மகளை அழைக்க மனமின்றி, மெல்ல எழுந்து ஊன்று கோலின் உதவியுடன் படிக்கத்தைத் தேடியெடுத்தார். புகை வரவழைத்த இருமலோடு வந்த சளியையும் காறியு மிழ்ந்துவிட்டுக் கட்டிலில் அமர்ந்தவரின் தொடையருகில் ஏதோ தட்டுப்பட்டது. ஏதோ என்ன! அது அவருடைய புல்லாங்குழல்தான்.
கீழே தடுக்கி விழுந்துவிட்ட குழந் தையை வாரியணைக்கும் தாயாய் அந்தப் புல்லாங்குழலை நடுங்கும் கரத் தால் வாஞ்சையோடு எடுக்கிறார். மறு கணம் அவரது விரல்ஸ் அதனை மெது வாய் வருடிக்கொடுக்கின்றன. தம்மை யறியாமலேயே குழல் துவாரம்மீது இதழ் பதிக்கிறார்; இசை பிறக்கிறது; அடிமனதில் அடக்கிவைத்த சோகம்
21
பீறிட்டு எழுந்து. பரந்து. எங்கும்
வியாபித்து. சில கணங்களில்
நூலறுந்த பட்டமாகின்றது.
"ஏனப்பு நிறுத்திட்டிங்க?"
o a se sa o » » 98 9 9 9 9
"ஏனப்பு நிறுத்திட்டீங்க?" "பிடிக்கல்ல புள்ள. பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து. மனசெல்லாம்
எரியுறாப்பல. தாங்க முடியல்ல,
அதான்!”
தொடர்ந்து அங்கு மொழிகளற்ற
மெளனம். 'டங். டங். டங். எனும்
ஒசைமட்டும் கேட்கிறது.
தன் மனதைப்போலவே குப்பி லாம்பின் சுடரும் நிலை தடுமாறி நடுங்குவதாக நினைக்கத்தோன்றியது மாஸ் டருக்கு. ‘வெளியே சுடர் விளக்கினைப் போல். பாரதியின் கவிவரி ஞாபகத்தில் தோன்றி மறைந் தது. உயிரின் வேரிலிருந்து உற்பவித்த தான வெப்பம் நிறைந்த நெடுமூச்சு நாசியிலிருந்து கிளம்பியது, "ஹ".ம். கடந்துவந்த காலத்தை நினைக் கிறார்; கண்கள் பனிக்கின்றன. சங்கீத ஆசிரியராய் சொந்த மண்ணில் சேவை யாற்றியபோது வாழ்க்கை எவ்வளவு அமைதியாய். இன்பமாய். ஒரு நீரோட் டம்போல் நகர்ந்தது? உள்ளம் நிம்மதி யால் நிறைந்திருந்ததால் அல்லவோ, தன்னைச் சுற்றியெழும் சின்னச்சின்ன ஓசையிலும் ஸ்வரம் உணர்ந்து ரசிக்க முடிந்தது; குழலுக்குள் சிறைசெய்ய முடிந்தது?
தினசரி காலையில் படுக்கை விட் டெழும்போதே கோயில் கண்டாமணி யோசை. தொடர்ந்து சுப்புலட்சுமியின்

Page 12
கணிர்க் குரலில் சுப்ரபாதம். அதனை விழிமூடி உளம் உருகியபடி கேட்டுக் கொண்டு கிணற்றுக்கட்டருகே நின்ற பொழுதுகள். பக்கத்துவிட்டுப் பார்வதி யம்மாள் துலா இழுக்கும் "கீறிச. கிறீச் ஒலியில். காலைநேரப் புட்களின் குது கலமான இன்னிசையில் மனம் லயித்துப் போன நேரங்கள். வசந்தகால மாலை களில் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் மாந்தோப்பு ஒற்றைக்குயிலின் சோகமும் தவிப்பும் இழைந்த கூவலில் இதயம் தொலைத்த நாட்கள். ஒ! அவை மீண்டும் திரும்பிவரவா போகின்றன?
மனைவி, மகள் கலா, மகன் விசு, அன்னை திலகம் ஆகிய உறவுகளோடு நிறைவான வாழ்க்கை மாஸ்டருக்கு! பாடசாலை விட்டால் தோட்டம், நல்ல நாட்களில் கோயில், குளம், சிநேகிதர் வீடு என்று சலனமின்றி ஓர் ஒழுங்கில் இயங்கியது அவரது பயணம். திடீரென்று ஒருநாள் விசு தலைமறைவாகி விட்ட போதுதான் அவர் களது அழகான குருவிக்கூடு முதன்முதலில் கலவர மடைந்தது.
தன்வாழ்வில் இசையையே சுவா சிக்கும் மென்மையான சுபாவம் கொண்ட கந்தசாமி மாஸ்டரின் வாழ்க்கையும் திசைதப்பிய படகாகிவிட்டது. எல்லாப் பக்கமிருந்தும் குண்டுகளின் இரைச்சல், மனித ஜீவன்களின் அவலமான மரண ஒலங்கள் இடைவிடாது ஒலிக்கலாயின. அவ்வளவு காலமும் ஆத்மார்த்தமாய் நேசித்த சொந்த மண்ணை, வீட்டை, வளவை, தோட்டந்துறவை விட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையின் கடைசியை நோக்கி ஒடு வதான பிரமையில் காடென்றும் மேடென் றும் இரவுபகலாய் ஒடியோடிக் களைத் துப்போன அந்தக் கறுப்பு நாட்களின்
புதிதாய்
sr 593}{5
539 ô, gú (: T Fifi
&Zes ii i Vivo 1 i + i guu 4J-o
வலிக்கிறது - மாஸ்டருக்கு
இடைவழியில் இறந்துவிட்ட அன்
னையின் ஈமக்கடன்களை ஆற்றக்கூட
e ofolk. La
22
அவகாசமின்றி, குண்டு விழுந்து குழியாகிப்போன ஒரு பள்ளத்தில் தள்ளி, அவசரஅவசரமாய் மண்ணை விரவிவிட்டு ஓடிவந்தபோது, "கந்தப்பு, என் ராசா. உன் கையால கொள்ளி வாங்கிட்டு சாகறத்துக்குக்கூட எனக்கு வாய்க்கலையேப்பா" என்று அம்மாவின் ஆன்மா அழுதுபுலம்புவதான பிரமையில் நெஞ்சு பதறிய வினாடிகளின் நினைவில் தடுமாறிப்போகிறார்.
யுத்தத்தின் கோரதாண்டவத்தால் தன் அருமை மகன், அமைதியான வாழ்வு, வாழ்ந்த மண், சொத்து சுகம், ஈமக் கிரியை நிறைவேற்றப்படாமல் உயிர்நீத்த அன்னை, கண்ணிவெடியால் தன் இடதுகால் என்பவற்றோடு இருட் டான கேள்விக்குறியாய் எதிர்காலத்தை யும் சேர்த்தே இழந்துவிட்டு வெறும் நடைப்பிணமாய் பழைய சுகஞாபகங் களின் சுமையால் கனக்கும் இதயத் தைச் சுமந்துகொண்டு கிட்டத்தட்ட மனநோயாளிபோல வெறுமனே இருந்து கொண்டிருப்பது கந்தசாமி மாஸ்டர் மட்டுந்தானா?
தாரைதாரையாக வடித்த விழி நீரைத்துடைக்கவும் தோன்றாது வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த தந்தையை நோக்க கலாவுக் கும் மனதைப் பிசைந்து, கண்கள் கலங்கின. ஆஸ்பத் திரியில் இருக்கும் அம்மா ஞாபகம் போலும்! என்று நினைத்துக்கொள் கிறாள். இரவுணவை வேண்டாவெறுப் பாக உண்டு முடித்துவிட்டு அவர்கள் உறங்க முயன்றனர். இரவு நீண்டு தோன்றியது.
மறுநாள் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப்போட்டுக் கொண்டு தினசரி யைப் பார்த்துக் கொண்டிருந்த மாஸ்டர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். எங்கிருந்தோ
திடிரென்று
ar ؟ جیجی ٹی ۔پم
அநத ஓசை கூ. குக்கு..! நிகழ்காலம் மறந்துபோகிறது மாஸ் டருக்கு. வாடிப்போன வதனத்தில் ஒரு மலர்ச்சி மனதுக்குள் ஒதோ ஈர்ப்பு!!

கால்கள் கின்றன.
தம்மையறியாமல் பரபரக் ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு கெந்திக்கெந்தி குடிசைக்கு வெளியே வந்துவிட்டார்.
மழை இன்னும் துறிக்கொண்டு தான் இருந்தது. அதனைப் பொருட் படுத்தும் நிலையில் அவரில்லை. விழிக ளால் நாலாபுறமும் துழாவுகிறார். 'கூ. குக் கூ. ஓசை வந்த திக் கைப் பார்த்தவுடன் அவரது முகம் மீண்டும் தொங்கிப் போகிறது; உடல் தளர்கிறது; விழிவடித்த நீரை வான்மழை கழுவிச் செல்கிறது. கடந்துபோன அந்த வசந்த காலம் இனி வரவே வராது என்ற யதார்த்தம் புரிந்து, தன் மனப்பிரமையி
லிருந்து மீள முயன்றபடி குடிசை வாசல்வரை வந்துவிட்டார்.
மீண்டும் . 'கூ. குக் கூ.!’ உண்மை நிலையைத் தெரிந்து கொண்டே சமாதானத்துக்கான போலி வாக்குறுதிகளை நம்பி ஒட்டுப்போடும் நமது மக்களைப்போல, உள்ளம் ஓர் அற்ப நப்பாசையில் சலனப்பட்டுவிட வெகு இயல்பாய் தலையைத் திருப்பிப் பார்க்கிறார். தெருவின் பக்கத்தின் மாடி வீட்டுச் சிறுமியின் குயில் பொம்மை அவரைப் பார்த்துக் கேலியாய்ச் சிரிக் கின்றது.
'கூ. குக்கூ.!"
கவிதையும்
கவிஞனும்
கைப்பாரம் தூக்கிநான் நீள்வழி நடக்கும்போதும்;
கைவலிக்கக் காரியாலயக் கடிதங்க ளெழுதும்போதும்;
பைப்பினிலே நீரெடுத்து தாங்கியிலே சேர்க்கும்போதும்;
பையவே கடலோரம் காலாற நடக்கும்போதும்;
ஒப்புக் குண்டுவிட்டு தலைசாய்த்து ஒயும் போதும்;
ஒசியிலே நண்பருடன் படம்பார்க்கச் செல்லும்போதும்;
தப்பாமல் கவிதைவரும் ஆயிரமாய் என்மனதில்;
தடையில்லா ஊற்றெனவே ஊறிவரும் ஊறிவரும்!
கால்நோவச் சுற்றிவளைப்பில்’ நாள்முழுதும் நிற்கும்போதும்;
கருணையிலாக் காவலரால் கைதாகிக் கலங்கும்போதும்; பால்கறக்கப் பக்குவமாய் பசுவின்பால மரும்போதும்;
பாதம்பணிந் திறைவணக்கம் செய்யும்போதும்; மனைவி வால்பிடித்துக் கடைவீதி செல்லும்போதும்; வாசலுக்கு
வட்டிகேட்டுக் கடனிந்தோன் வந்தபோதும் என்மனதில் சொல்லொணா வேகமுடன் கவிதைவரும்; கவிதைவரும்;
‘சோ" வெனவே பெய்கின்ற மழைபோலது பெருகிவரும்!
விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தபோதும்; வீம்புடனே
ل s SN
ܒ
ఫ్రేష్
விளையாடிப் பேத்தியுடன் மகிழும்போதும்; உடல் வருத்தமெனப் படுக்கையிலே கிடந்தபோதும்; உணவை வாய்ருசிக்க உண்பதற்கா யமரும்போதும்; எந்தன்
பருத்த இடலிளைக்கக் கா
ஒலயிலே நடக்கும்போதும்,
arvspa rar .
பாங்குறு வெழில்கொள் மங்கையரைக் காணும்போதும்; கருக்கொண்டே கவிதைவரு மாயிரமாய் என்மனதில்
கரைமீறிய வெள்ளம்போலது பாய்ந்துவரும் பாய்ந்துவரும்!
23

Page 13
நெற்றிக்கன்
நால் விமர்சனம்
நூல் ஆய்தமிழ் எழுதியவர்: வாகரைவாணன்
பன்னூல் ஆசிரியரான வாகரை வாணனின் ஆய்தமிழ் (2001) என்னும் நூல், 'ஒரு புதிய கலைஇலக்கியப் பார்வை என்னும் துணை மகுடத்தோடு வெளிவந்துள்ளது. கலையும் பண்பாடும் என்பது முதல், பாரதிக்குப் பின் கவிதை இலக்கியம் என்பது வரை ஒன்பது கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்ட இந்நூலில் , ஆசிரியரின் பரந்த வாசிப்பும், பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை அவருக்குள்ள பரிச்சயமும் புலப்படு கின்றன.
ஆய்தமிழ் என்னும் பெயரில் வெளி வந்திருக்கும் இந்நூலை ஓர் ஆய்வு நூல் என முத்திரை குத்த முடியா விடினும், பொதுவாசகருக்குப் பயனுள்ள பல செய்திகளை இது விளம்புகின்றது. பல்வேறு இலக்கியவாதிகள், விமர் சகர்கள், அறிஞர்கள் முதலானோரின் கருத்துக்கள் வாகரைவாணனின் கை வண்ணத்தில் வலம் வந்திருக்கின்றன. ஒரே பார்வையில் பல விடயங்களைத் தெரிந்து கொள்ளப் பொதுவாசகனுக்கு இந்நூல் ஓரளவு வசதியளிக்கின்றது. தமிழிலக்கியத்தில் மண்வாசனை’ என்ற கட்டுரையில், தலித் இலக்கியங்கள் பற்றிக் குறிப்பிடும்போது, "இத் தலித் இலக்கியங்கள் நாயக்கர்காலப் பிற்பகுதி யில் தோன்றிய பள்ளு குறவஞ்சி இலக்கியங்களின் தொடர்ச்சி என்பதும் மறுக்கமுடியாத ஒரு வரலாற்றுண்மை யாகும்" என்று வாகரைவானன் குறிப் பிடுவது, சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருத்தாகும்.
24
இதே கட்டுரையில் இன்னோரிடத் தில் சைவசித்தாந்தக் கோட்பாடுகளைச் சோழப்பேரரசர்களின் அரசியலோடு தொடர்புபடுத்திச் சுருக்கமாக நூலா சிரியர் நோக்கும்போது, அதனைத் தமது சொந்தச் சிந்தனைபோல் வாசகருக்குக் காட்ட முனைவது "ஒருமாதிரி” இருக்கிறது. ". சோழவேந்தன் பதியாகவும் - அவனது ஆளுகைக்குட் பட்ட மக்கள் பசுவாகவும் - உயர்ந்த இடத்தில் உட்கார்ந்திருந்த அவ்வர சனை மக்கள் அணுகமுடியாமல் செய்த தடைகள் பாசமாகவும் - உருவகிக்கப் பட்டமை பலரும் அறியாத வரலாற்று உண்மையாகும்" (ப.44) என்று வாகரை வாணன் எழுதிச்செல்கிறார். ஆனால் இது பலரும் அறிந்த வரலாற்று உண்மையாகும். ஏற்கனவே க.கைலாச பதியும், கா.சிவத்தம்பியும் சோழ அரசி யலைச் சைவசித்தாந்தத்தோடு தொடர்பு படுத்தி விலாவாரியாக நோக்கியுள் ണങ്ങi്.
பல மட்டங்களிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் காரணி என்பதாகும். காரணம் என்ற சொல்லுக் குப் பதிலியாக இச்சொல் இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின் றது. வாகரைவாணனும் இச்சொல்லை இந்நூலின் சில இடங்களிற் பயன்படுத்தி யுள்ளார். காரணி என்பதன் பொருள் காரணத்துக்கு உரியவள், அல்லது காரணமாக விளங்குபவள் என்பதாகும். இதனாலேயே இந்துமதத் தெய்வமான ഖg பெயர்களுள் ஒன்றாகக் காரணி என்பதும் வழங்கப்படுகின்றது. காரணம் என்ற சொல்லுக்குப் பதிலாகக் காரணி என்ற
உமாதேவிக் களர் ள பலி
۹۴ مسكي

சொல்லைப் பயன்படுத்துவது (என்ன தான் புதுப்புது வியாக்கியானங் கள் சொல்ல முனைந்தாலும்) தவறான தாகும். இதுபற்றி ஏற்னவே எப்.எக்ஸ். ஸி.நடராசாவும் ஓரிடத்திற் குறிப்பிட்டுள் ளார். கணிதத்தில் பயன்படுத்தப்படும் காரணி என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்பில்லை.
“பாரதிக்குப் பின் கவிதை இலக் கியம்’ என்ற இறுதிக் கட்டுரையில், வாசகர்களின் கருத்தின்பத்திற்காக”ச் சில புதுக்கவிதைகளை எடுத்துக்காட் டாகத் தந்திருக்கிறார், நூலாசிரியர். ஆனால் அவர் எடுத்துக் காட்டுகளாகத் தந்துள்ள "புதுக்கவிதைகளை" வாசிக் கும் எந்தவொரு வாசகனும் எதிர்காலத் திற் புதுக்கவிதைப் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டான். பொருளாழமும், கலைத்தரமும் கொண்ட எத்தனையோ புதுக்கவிதைகள் தமிழில் வெளிவந் துள்ளன. அவற்றுள் சிலவற்றை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருக்கலாம்.
நூலின் அமைப்பில் நூலாசிரியர் போதிய கவனம் செலுத்தியிருக்கலாம். நூலைக்கையில் எடுத்தவுடன் ஒரு சிறுவர் நூல் போன்ற தோற்றத்தை நூலின் அட்டையும், அமைப்பும் தோற்று விக்கின்றன.
சில குறைகள் இருந்தபோதிலும், ஆய்தமிழ் படிக்கக்கூடிய ஒரு நூல்.
நூல் ; நெருப்பு ஊர்வலங்கள் எழுதியவர்: பெனி
எழுத்தார்வமும், சமூகப்பிரக்ஞை யும் கொண்ட ஓர் இளங்கவிஞர், பெனி. சத்திய ஆவேசத்துடன் முன்னேறத் துடிக்கும் முனைப்பும், உழைப்பும் கொண்டவர், அவர். பெனியின் இரண்டா வது கவிதைத்தொகுதியாக நெருப்பு ஊர்வலங்கள் (1999) வெளிவந்துள்ளது. பெனியின் கவிதைகள் மலைய
25
கத்தை மையமாகக் கொண்ட அநுபவ வீச்சுடன் படைக்கப்பட்டுள்ளமையை இத்தொகுதி இனங்காட்டுகின்றது. சில கவிதைகள் வளரப்போகும் கவிஞராக அவரைக் கோடி காட்டுகின்றன. கல் வெட்டு, தாயகப் பிரவேசம், ஆதங்கம், இன்றைக்கும்., வேர்கள், சில மாறு தல்கள், ஒரு சமூகத்தின் வரலாறு, மலையக ஆல்பம், இருந்தாலும் இறந் தாலும், வெய்யில் சிநேகம், பிஞ்சில் நஞ்சு முதலான சில கவிதைகள் அவரது கவிதையுள்ளத்தையும், சமூக அக்கறையையும் புலப்படுத்துகின்றன.
இக்கவிதைத்தொகுதியில் சிற்சில கவிதைகளின் சிற் சில வரிகளில் மின்னல்போலக் கவிதையின் ஒளிக் கீற்றுகள் வந்து படிந்துள்ளன. ஆனால், அவை கவிதைகள் முழுவதிலும் பரவ வில்லையே என்ற ஆதங்கம், அவற் றைப் படிக்கும் போது ஏற்படுகின்றது. கவிஞரிடம் ஆழ்ந்த கவியுள்ளம் காணப்
படுகின்றபோதும், அதனை வெளிப்படுத்
தும்போது பல இடங்களில் வார்த்தைகள் வசனங்களாகவே வந்து விழுகின்றன. தாம் எதிர்பார்த்தவாறே தமது கவி யுள்ளம் தமது எழுத்தில் பதிந்துள்ளதா என்பதில் அக்கறை செலுத்துவதன்மூலம் இக்குறையைத் தவிர்க்கலாம். தரமான புதுக்கவிதைகளைத் தேடிப் படிப்பதும் வளர்ச்சிக்கு உதவும்.
இக்கவிதைத் தொகுதியில் ஆங் காங்கே கவிஞர் கவனக்குறைவால் விட்ட எழுத்துப்பிழைகளும் தமது இருப்பை வெளிப்படுத்தத் தயங்க வில்லை. யார் பிழைவிடினும், கவிஞர் களும், எழுத்தாளர்களும் எழுத்துப் பிழைகளை விடலாமோ?
பெனியின் கவிதைகள் எதிர் காலத்தில் மேலும் சிறந்து விளங்கும் என்பதற்குக் கட்டியம் கூறும் முறையில் நெருப்பு ஊர்வலங்கள் கவிதைத் தொகுதி அமைந்துள்ளது.

Page 14
DJInfefasir S* பேசுகிறார்.
பேராசிரியர் ஆ.சதாசிவம் ஒரு பத்தாம் பசலியா..?
ஞானம் ஜூலை 2001 சஞ்சிகையில் சி.சிவசேகரம் "பூலோ சிங்கத்தின் நேர்காணல் பற்றி எழுதாமல்விட முடியவில்லை." என்று குறிப்பிட்டிருப்பது போல, மேற்படி சி.சிவசேகரத்தின் விமர்சனம் பற்றியும் எழுதாமல் இருக்கமுடியவில்லை. அவ்விமர்சனத்தில் மிகமுக்கியமான விடயம் பற்றியே இங்கு பேசலாம் என்று நினைக்கின்றேன். ஆ.சதாசிவம் பற்றிக் கூறவந்த சி.சிவசேகரம், "ஆ.சதாசிவம் போன்றோரின் பத்தாம் பசலித்னத்தையும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய" தமிழ் அமீபா உயிர்களின் பெருமை கூறும் மரபையும் அவர் பிரதிபலிக்கின்றது ஒருபுறமிருக்க, தமிழ் தேசிய வாதம் ஏன் இன்றைய அவலநிலையை எட்டியிருக்கின்றது என்பதற்கான சான்றுகளும் அவரது கருத்துக்கள் மூலம் புலனாகின்றன." என்பார்.
மேற்படி கூற்றில் இரண்டு முக்கிய விடயங்கள் அவதானிக்க முடிகின்றது. 1.ஆ.சதாசிவம் கையாலாகாதவர். மொழிபற்றிய வரலாற்று நோக்கும், மொழியியல் புலமையும் அற்றவர்.
2. ஆ.சதாசிவம் நடத்திய மரபுப் போராட்டம் தமிழ்த்தேசிய வாதத்தைப் பின்தள்ளிற்று.
சி.சிவசேகரம், ஆ.சதாசிவம் மேற்சுமத்தும் இவ்விரு குற்றச்சாட்டுகளும் அபத்தமானது. போதிய காரண காரியத்தொடர்பு அற்றது. போலியானது. மேற்கூறிய கருத்துக்களுள் நான் இங்கு விமர்சிக்கவருவது சிவசேகரம் முன்வைத்துள்ள ஆ.சதாசிவத்தின் பத்தாம் பசலித்தன்மையும், காலத்தால் முன்தோன்றிய தமிழ் அமீபா பற்றிய கருத்துக்களையேயாம்.
"மரபுப்போராட்டமும் தமிழ்த் தேசியவாதமும்” என்னும் விடயம் பிறிதொரு வகையால் தனித்து நோக்கப்படவேண்டியது. இவ்விடயம் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவேண்டிய தொன்றும். அப்பொழுது அவ்விமர்சனம் ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றுக்கும், தமிழ் மக்கள் வரலாற்றுக்கும் புதிய வருகையாக si60LDub.
ஆ.சதாசிவம் அவர்களைச் சிவசேகரம் "பத்தாம் பசலி" என்று குற்றம் சாட்டுவதற்குச் சிவசேகரத்துக்கு அவரது தகுதிப்பாடு பற்றியோ தமிழ்ப்புலமை பற்றியோ கேட்க விரும்பவில்லை. ஆயினும் சி.சிவசேகரம் சொல்வதில் ஏதும் உண்மை உண்டாவென நோக்குவது பொருத்தம் உடையது.
மரபுப்போராட்டம் பற்றி பொ.பூலோகசிங்கம் விளக்கும்போது:
ük
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் ஆரம்பத்திலே பேராசிரியர்
க.கணபதிப்பிள்ளையின் (1903 - 1968) இடத்திற்குச் சாகித்திய மண்டலத்திலே டாக்டர் ஆ.சதாசிவம் (1926 - 1963) நியமனம் பெற்றார். அவர் தனது
26
 
 

பிரதிநிதித் துவத்தினைப் பிரகடனப்படுத்தும்முகமாக, அவ்வப்போது வழங்கிய கருத்துரைகளும் பேட்டிகளும் மரபுப்போராட்டமாக முடிந்தது. டாக்டர் சதாசிவம் தயங்காது கருத்துரைத்து இறும்பூதெய்திய காலமது. அதனை அப்போது தினகரனில் பணிசெய்த பேராசிரியர் சி. தில்லைநாதன் நன்கு பயன்படுத்திக்கொண்டார். "எழுத்தாளர் மரபுப்படி எழுதவேண்டும்; அந்த மரபு உயர்ந்தோர் வழிவந்தது; அல்லாதது இழிசனர் வழக்கு" இச் சாராம்சத்திற்கு எழுந்த விளக்கங்களும் வியாக்கியானங்களும் விறுவிறுப்பு மிக்க தலைப்புக்களிலே பெட்டிகட்டி சதாசிவம் கருத்துக்களாகத் தில்லைநாதனால் வெளியிடப்பெற்றன. அவற்றிலே ஆவேசத்திற்கு இட்டுச் சென்றது "இழிசனர் வழக்கு." பொதுவாகக்கூறின், அன்று ஆரம்பத்திலே பண்டித வர்க்கத்தினர் சிலர் ஒரு கன்னையிலும் நவீன எழுத்தாளர் பலர் ஏனைய கன்னையிலும் நின்றனர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 1962ம் ஆண்டு மகாநாட்டில் பிரிந்து சென்றவர்களும் பண்டிதவர்க்கம் தலைமை வகித்த கன்னையில் ஐக்கியமாகிக் கொண்டனர் எனல்வேண்டும். மரபுப் போராட்டத்தின் இறுதி யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய விழா. அந்த விழா முட்டை அபிஷேகத்திலே போய் முடிந்தது. அக்காடைத்தனம் மரபுப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியுமாக முடிந்தது.
யாழ்பப்ாணத்திலே 1963இலே நடந்த அடாவடித்தனம் எழுத்தாள ரிடையே ஏற்படுத்திய தாக்கத்தினையும் மறுக்கமுடியாது. 1970இலே சிறிமா பண்டார நாயக்காவின் ஐக்கிய முன்னணி அரசு வந்தபோதுதான, இ.மு.எ.ச. மீண்டும் தலைதுாக்க முடிந்தது. மரபுப்போராட்டத்தினைச் சதாசிவம் அன்று ஒழுங்காக எடுத்துச் சென்றிருந்தால். என்ற நினைவு அன்று சிலருக்கு ஏற்படாமற் போகவில்லை.” எனக் குறிப்பிடுவது இங்கு அவதானிக்கத்தக்கது.
பொ.பூலோகசிங்கம் அவர்களின் மேற்கூறிய கூற்றிலிருந்து ஆ.சதாசிவம் அவர்கள் பற்றி பின்வரும் செய்திகளை அறிய முடிகின்றது.
அ. ஆ.சதாசிவம் அவர்கள் கலாநிதிப் பட்டம் பெற்றவர். ஆ. சாகித்திய மண்டல உறுப்பினர் இ. தமிழ் இலக்கணநூற்புலமை மிக்கவர். ஈ. எழுதுவோர் இலக்கண மரபு பேணி எழுதல் வேண்டும் என்பதில் நம்பிக்கை உடையவர்.
உ. மரபு பிறழின் அது வழுவுடையது - அது இழிசனர் வழக்கு ஊ. ஆ.சதாசிவம் அவர்கள் முன்வைத்த மரபு பற்றிய சிந்தனைகளை இ.மு.எ.சங்கம் தன் இருப்பை இனங்காட்டிக்கொள்ள வாய்ப்பாகப் பயன்படுத்தியது மேற்படி விடயங்களை நோக்கும்போது, ஆ.சதாசிவம் அவர்களிடம் சி.சிவசேகரம் கூறும் பத்தாம் பசலித்தனத்தை எப்படிக் கண்டுகொள்வது என்று புரியவில்லை. இவற்றுக்கு மேலாக அவரது தமிழ்ப் புலமைத்துவத்தில் ஏதும் குறைபாடு கண்டு சி.சிவசேகரம் அவ்வாறு கூறியிருப்பாரோ! எனின் ஆ.சதாசிவம் அவர்களின் புலமைத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
ஆ.சதாசிவம் அவர்கள் (1926 -1988) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்
27

Page 15
கல்லூரியில் இடைநிலைக்கல்வியையும் உயர்கல்வியையும் பயின்றவர். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் பாளி, சங்கத ஆகிய மொழிகளை உயர்தரத்தில் பயின்றவர். வட இலங்கை ஆரிய - திராவிட பாஷா சங்கத் தமிழப் பண்டிதர் பரீட்சையிலும் மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதர் பரீட்சையிலும் முதற்தரத்தில் சித்தி பெற்றவர். 1948 முதல் 1952 வரையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைச் சிறப்புப்பாடமாகப் பயின்று முதற்பிரிவில் சித்தி பெற்றவர். 1954ஆம் ஆண்டில் முதுமானிப் பட்டத்தைப் பெற்றவர். 1956ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துக்குச் சென்று கீழைத்தேச மொழிவல்லுனராகவும் திராவிட மொழிகளிலே பயிற்சியும் புலமையும் மிக்க ஆய்வாளராகவும் விளங்கிய பேராசிரியர் தொமஸ் பறோ (Thomas Burrou) அவர்களிடத்தில் மொழியியல் ஆராய்ச்சி முறையியலை நன்கு பயின்று அத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றவர்.
ஆ.சதாசிவம் அவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்றதன் பயனாக ஈழத்துக்கல்வியாளரிடம் ஏற்பட்ட மாற்றம் பற்றி ஆ.வேலுப்பிள்ளை பின்வருமாறு கூறுவது இங்கு அவதானிக்கத்தக்கது.
"பேராதனையிலிருந்த ஒரே இலங்கைப் பல்கலைகழகத்திலும் தமிழ்த்துறை யிலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தினார். மொழியியல் ஆய்வுத்துறையின் முக்கியத்துவத்தைப் பலர் மனதிலும் பதித்தார். சர்வ தேச ஆய்வுக் கருத்தரங்குகளிலும் பங்குபற்றினார். பேராசிரியர் சதாசிவம் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்த்துறை, சங்கதத்துறை, சிங்களத்துறை ஆகியவற்றிலிருந்து பலர் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் பறோவைத் தேடிப்போக வழியமைத்தது. தமிழ்த் துறையில் நானும் பேராசிரியர் பூலோகசிங்கமும் பறோவின் மாணவர்களானோம்"
gags. Tá6 Lib ge6 ft 356ft grid 6.556) The structure of Tamil verb vol I, II, Sumerian A.Dravidian Language, A Disetionary of Ceylon Tamil Usage vol I - V (English - Tamil) An Etimological Disetionary of sumero Dravidian 6T6örgub நூல்களையும், தமிழில் ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (தொகுப்பு 1966), ஞானப்பள்ளு (பதிப்பு) தமிழ்மொழி வரலாறு (1966) ஆய்வுக்கட்டுரை எழுதும் முறை (1963) முதலான நூல்களையும் எழுதியுள்ளார்.
மேற்கூறியவை மாத்திரமன்று அவரது பணிகள் அவர்தம் ஆளுமையையும் புலமைத்துவத்தையும் பயன்படுத்திக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழியில் மொழியியல், இந்துப்பண்பாடு ஆகிய கல்வித்துறைகளை தொடக்கிவைத்தவரும் அவரே. இத்தகைய புலமையாளரைப் பார்த்து சி.சிவசேகரம் "பத்தாம்பசலி" எனக் கூறிப்பிடுவதன் உள்நோக்கம் புலப்படுமாறில்லை. அல்லது தமக்குள்ள தமிழ்ப்புலமைத்துவத்துடன் தமிழ்ப்பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களின் புலமைத்துவத்தை ஒப்பிட்டுப்பார்த்து அவ்வாறு குறிப்பிட்டாரோ? அப்படி அவரால் ஒப்பிட்டுக் கூறமுடியுமா? அப்படியானால் சி.சிவசேகரத்தை எப்படி அழைக்க (Up19uquíb....?
46
ஆய்வறிஞர்கள், எழுத்தாளர்களையும், அறிஞர்களை யும் மரியாதையுடன் அணுக வேண்டும்" - முருகையன்.
இரா.வை.கனகரத்தினம்.
28

1. நெற்றிக்கண் பகுதியில் எனது ஆண்மரம் சிறுகதைத் தொகுதிக்கு விமர்சனம் எழுதிய நக்கீரனுக்குப் பாராட்டுகள். சும்மா முதுகு சொறியாமல், முகத்தாட்சினை பார்க்காமல் எழுதியிருந்தாலும் தொகுதியை முழுமையாகப் படித்த அளவிற்கு நான் வாழும் பிரதேசத்தின் பிரச்சினைகளையும், சவால்களையும் முழுமையாக உணர்ந்திருக்கமாட்டார் என்பது என் கண்ப்பீடு.
எங்கள் சமூகத்திற்கு தேவை ஆரோக்கியமான விமர்சனம். அதுவே இளைய தலைமுறையினரை செப்பனிட உதவும். எனினும் எல்லோரும் பொன்னாடைக்குத் தானே ஆசைப்படுகிறார்கள். நல்லதொரு இலக்கிய விவாதத்திற்கும் வளத்திற்கும் ஞானம் களமாக அமையட்டும்.
*k >k >k
2. மாவை வரோதயனின் மரம், மதம், மனம், கவிதை 2002/1/13 தினகரன் வாரமஞ்சரியிலும் ‘உன்னையே நீ எண்ணிப்பார்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. ஒரு கவிதையை நகலெடுத்து அதையே எல்லாப் பத்திரிகைகளுக்கும் தலைப்பை மாற்றி அனுப்பிவைக்கும் முயற்சியில், அல்லது வறட்சியில் "மாவை"யும் இறங்கியுள்ளாரோ.
இவருடைய கவிதை ஒரு சிறுபான்மை சமூகத்தின் அடையாளம், மற்றும் அதன் அரசியல் குறியீட்டுத்தளம், போன்றவற்றை நிராகரிப்பதுபோலவும், மறுபுறத்தில், மதங்களை உதாசீனப்படுத்துவதுபோலவும் அர்த்தம் கொள்ள வைக்கின்றது. எனினும் கவிதை - தொடர்பான எனது வாசிப்பு ஆழத்தையும் அனுமானத்தையும் விரிவாக இங்கு எழுதவில்லை.
கவிஞர் இவ்வுண்மை யதார்த்தங்களை கவனத்திற் கொள்ளாமல், வெறும் மரத்தை மட்டும் கருவாகக் கொண்டு எழுதியிருக்கலாம். மேற்குறிப்பிட்ட என் அனுமானம் சரியாயின், அக்கவிதை கடும் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உரியது. அதற்கு “ஞானம் இடமொதுக்கும் என நினைக்கின்றேன்.
ஒட்டமாவடி அறபாத்.
ஞானம் இதழ் தொடர்ந்து கிடைத்து வருகிறது. புத்தாண்டு இதழில் பல மாற்றங்கள் தெரிகின்றன. விரும்பிப் படிக்கிறேன்.
எம்.கே.முருகானந்தன். "ஞானம் நல்ல வீச்சாக வெளிவருகிறது. அவ்வப்போது அதில் இடம்பெறும் இலக்கியச் சர்ச்சைகளே அதற்குச் சான்றாகும்.
அன்புமணி, மட்டக்களப்பு.
* நெற்றிக் கணி’ விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கண் பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம்பெற வேண்டுமெனில், நூலின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய
யில் b Go) b. பகுதியில் இடம்பெறும் -ஆசிரியர்.
29

Page 16
இந்தியாவும் பாகிஸ்தானும்
இப்போது மட்டும்தானா இந்தியாவும் பாகிஸ்தானும் இடித்துக் கொள்கின்றன? எப்போதும்
இப்படித்தான். எல்லை ஓரங்களில் இரண்டு பக்கங்களில் இருந்தும் துவக்குகள் நீளுவதும்
சிவர்
துடிதுடித்துச் சாவதும் ஒடு தொடர்கதுை.
இந்தக் கதை எத்தனை பேருக்குத் தெரியும்? பேப்பர்காரர்களுக்கு இது பெரிய விஷயமல்ல. சகஜம் என்று சமாளித்துக் கொள்வார்கள். பாவம், சிப்பாய்கள் சாவதற்கென்றே சாபம் பெற்றவர்கள். கிரிரண்ர் எண்ண்
க்ரீஸ்ரீரா?
இருக்கலாம். ஆனாலும் இது அல்ல உண்மை! அவநம்பிக்கை மேலாதிக்கம்
இந்த இரண்டு எண்ணங்களும் இருக்கும் வரை எந்த நேரத்திலும் போர் எழலாம். அதனால் தான் மூன்று போர்களை முடித்துக்கொண்டவர்கள் அணுப் பலத்தோடு நான்காவது போருக்கு நல்ல நாள்
- வாகரைவாணன் -
30
பார்க்கிறார்கள். J
தமிழர் உளவியலும் கல்வியும்
எழுதியவர் : கலாநிதி சபா ஜெயராஜா
வெளியீடு : கல்வியியல் துறை,
பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்,
விலை : ELIT 100 .
யாழ்ப்பாணக் கிராமங்களில் மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வுகளையும் முதியோரிடத்துப் பெறப்பட்ட தகவல் களையும் சமூக மானுடவியல் ஆதாரங் களையும் இலக்கியங்களையும் அடிப் படையாகக் கொண்டு தமிழரின் சமூக உளவியலையும் கல்விச் செயற்பாடு களையும் கண்டறியும் ஒரு முன்னோடி நடவடிக்யைாக இந்நூல் அமைகின்றது. நூலாசிரியர்
நான் (உளவியல் சஞ்சிகை) மலர் - 26 இதழ் - 6
இருபா 15 போல் நட்சத்திரம் O.M., B.Th. STL தொடர்புகளுக்கு : நான், டி மசனட் குருமடம், கொழும்புத்துறை, யாழ்ப் பானம், இலங்கை.
விலைப்
ஆசிரியர்
மாணவர்க்கான பொ.கைலாசபதி முதற்பதிப்பு: டிசம்பர் 4 2001
வெளியீடு போனதலாரதி
நூற்றாண்டு விழாக்குழு. பதிப்பு பாரதி பதிப்பகம், 430
காங்கேசன்துறை விதி, யாழ்ப்பானம், பொ. கைலாசபதி அவர் களின் வாழ்க்கைக்குறிப்பு அடங்கிய இந்நூல் அன்னாரது 39வது சிரார்த்த தின வெளியீடாக வெளிவந்துள்ளது.
 

ஒரு குழந்தை இறந்துவிட்டது
மிராஃப்ளொறெனப்" என அழைக்கப்படும் மாவட்டத்தில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மிராஃப்ளொறெளவில் ஏழைக்குழந்தைகளே வாழ்கின்றன. பொங்கும் வளம் பற்றிய கனவுகளைக் கொண்டு பசியின் வேதனையை ஒருவர் தனிப்பது போன்று இந்த மாவட்டமும் இங்கு ஒருவரால் குப்பை கூளத்தின் காற்றையே சுவாசிக்கலாம் என்ற மூச்சுத் திணறவைக்கும் சாட்சியத்தைத் தவிர்க்கப் பூக்களின் பேரைக் கொண்டிருக்கிறது. மிராஃப்ளொரெஸிலிருந்து தப்பிச்செல்லும் குழந்தைகள் செத்துப்போன குழந்தைகளே
ாேடியா (Lily Guardia) கொணப்ற்றா றிகா நாட்டுப் பெண் கவிரூர் (*மிராஃப்ளொறெஸ் என்றால் மலர்களை முகர்ந்துபார் என்று
பொருள்படும்)
கதவடைUபு திகிலுக்கு என் கதவை அடைத்தேன் திகில் உள்ளேயே தங்கியிருந்தது
மரியா தெரெஸா குவார்னெரொளம் (Maria Teresa Guarneros) நிக்கராகுவா நாட்டுப் பெண் கவிஞர்
இறந்தோர் போர்வீரனின் ஓங்கிய கரத்தையும் மக்களின் குரலையும் உழவனின் கருவிகளையும் இறந்தோர் தாங்கி நிற்பர்
இறந்தோர்.
இறந்தோரின் கரங்களை எவர் தாங்கி நிற்பர்?
மிஷெல் நஜ்லினம் (Michelle Najlis) நிக்கராகுவா நாட்டுப் பெண் கவிருர்

Page 17
நிலவு சாய்ந்து போன நல்விரவு. உனக்கும் எனக்குமென்றிருந்த உலகுக்கு அப்பாலிருந்து ா ஒரு குரல் உள்நுழைகிறது கைகள் பினர்புறமாகக் கட்டப்பட்டு ஓசை எழாதிருக்க வாய் அடைக்கப்ட் அந்தக்குரல் கேட்டுக் கொண்டிருக்கி பேய்கள் ஒரு பெண்ணுடலைத் திண்னுகின்றன. யணர்னல் கதவுகளை அடித்துச் சாத்து செவிப்பறைகளை மூடிக்கொண்டு மரத்துப்போனதாய்ப் பாவனை காட் முடியவில்லை! வெட்டுணர்ட மண்புழுவின் உடலாய் மனம் துடிக்கிறது. பாலியல் விளையாட்டுப் பொம்மை எத்தனை நாட்களை இழந்துபோவது நேற்றுவரை கண்ணுக்கு மையும் கால்களுக்கு சலங்கையும் பூட்டித்திரி காற்றில் ஏறிப்போய்விட்டாள் உன்னுடைய ஒப்புதலுக்கு அவகாசமி ஒரு முடிவு உறுதியாகிறது. இந்த முடிவு உனக்கு அதிருப்தி அளிக்கக்கூடும். கன்னங்கள் நனைய நனைய
நீ அழுவாய் அதனாலென்ன? தாளம் வலுக்கிறது. ஊழியின் தாண்டவம் உரக்கிற
இனிவானம் வெடித்து பூமி சிவக்கும். இந்த உலகம் T நெருப்புக்குள் இருந்து "ே நீந்தி வெளிவரும்! ஊழி முடிவறும். உன் முகம் சிரிக்கும்.
EK
 

(ஆதிலட்சுமி சிவகுமார்)
றி : எழுதாத உணர்கவிதை
(தமிழீழப் பெண்களின் கவிதைகள்)
T