கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.03

Page 1


Page 2
பூசாத செங்கல் செங்கட்டி பேசியது
நாணி சிரிக்கவில்லை சின்னக் காற்றுக்கும் பல்விழித்து தன்னுடைய தலையைக் குழப்புகின்ற தென்னைமரம்போல இங்கு நடக்கின்ற அனைத்திலுமே மயங்கி வியப்படைந்து ஆர்வத்தோடு பொய்வானம் ஒன்றில் கப்பல் விட இப்போது விருப்பமில்லை அது - முன்னர் - சேற்று நீர் ஓடி இழகி என் வடிவங்கள் பச்சைக் கழியாக சிலர் காவில் பட்டு அவர்கள் தேய்த்துக் கழுவுகையில் பெரும் சூளை நெருப்பு கிட முரே
இப்போது நான் தெறித்தால் "சிண்ணென்று" பேசுகிறேன் இந்தச் சிணுசிணுப்பு சிறு துப்பல் போன்றவற்றில் நனைந்து குளித்தவனாப் தலைதுவட்ட என் கை உயரப் போவதில்லை காலுக்குச் சக்கரங்கள்
எனது கனவெல்லாம் ஒரு மாடம் அது மிக்கப் பெரும் வீடு சிலர் மட்டும் குடியிருக்கும் இங்குள்ள வீட்டைப்போல் அல்ல நூறுபேர் கண்ணுறங்க பலர் கனவு கண்டு நடக்க
பூசாத செங்கல்லாப் நானிருப்பேன் முகட்டுக்குள் பத்திட்டி
 

விரிவும் ஆழமும் பெறுவது
g Crs.
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன் ஓவியர் நா. ஆனந்தன் கணனி அமைப்பு கெ.சர்வேனம்வரன்
ஞானம் சஞ்சிகையரில் பிரசுர மாகும் படைப் புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
TEŞET தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி, ags.(SLI. -08-478570 (Office)
08-23.4755 (Res.) FX - 08-34755
E-Mai -
ஒட்டுமா
g anaமagazineஇhotா ail.com
உள்ளே.
சிறுகதை அழிக்கும் தெய்வங்கள் யா ாசு 04 செகுணரத்தினம்
ராணி சீதரன்
கட்டுரைகள்
எழுதத் தாண்டும் எண்ணங்கள். 7ם கலாநிதி தரை. மனோகரன் 6780īgil TugšsisGoðdó -r--r--r--r--r--r--r--r--r--r-- முல்லைமணி ஈழத்தப் பூராடனாரின் இலக்கியப் பணிகள்
கபாஸ்கரன்
கவிதைகள்
பூசாத செங்கல் LLL LL LL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL சோலைக்கிளி
Z D
losófasG&a fló! ------------------------------- ... II நா.ஆனந்தன் விடிவு மலரவேண்டும் . 2: 1 கரவையூரான்
26 off assists. II வாகரைவாணன் ஆளுக்கொரு கட்சிா HHHHHHH I கவிஞர் ஏ.இக்பால் Iosif (b6f.....a...animals. ... 32.
கவிஞர் எம்.வை.எம்.மீஆத்
திரும்பிப் பார்க்கிறேன்.10
அந்தனி ஜீவா
நெற் றிக் கண் 芷f
நக்கீரன்
வாசகர் பேசுகிறார்.28
3

Page 3
அழிக்கும் தெய்வங்கள்
செகுணரத்தினம், மட்டக்களப்பு- ಪ್ಲೆ'
பிரதேச செயலாளர் பீதாம்பரத் துக்கு இருப்புக்கொள்ள முடியவில்லை. விழா மண்டபத்திற்குள் குறுக்கும் நெடுக் கும் நடந்தார். மேடையின் பின்பக்கம் போய் எட்டிப்பார்த்தார். பின்பு வெளியே வந்தார். ஆத்திரமாத்திரமாக வந்தது.
“விழாக் கொமிற்றியைச் சேர்ந்த ஒரு நாயைக் கூடக் காணவில்லையே!” என்று தனக்குள்ளேயே திட்டிக் கொண்ட படி மீண்டும் விழா மண்டபத்திற்குள் வந்து இருக்கையில் அமர்ந்து கொண் டார். அவர்மனம் கட்டுக்கடங்க முடியா மல் தவித்தது.
கைகளைக் கசக்கியபடி கதிரை யின் பின்பக்கம் சாய்ந்து எரிச்சலோடு மேடையைப் பார்த்தார்.
"முத்தமிழ்விழா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்ட பட்டுச்சேலை மேடையின் பின்பக்கச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது.
உடனடியாக ஒரே பாய்ச்சலில் மேடையிலேறி அந்தச் சேலையை அறுத்துக்கிழித்து குத்துவிளக்கை ஏற்றி அந்த ஒளிச்சுடரில் அதை எரித்துச் சாம் பலாக்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது.
சட்டென வாலாமணியை ஒதுக்கி, கைக்கடிகாரத்தைப் பார்த்தார். காலை பத்துமணி.
வெளியே சலங்கைச் சத்தம் கேட்டது.
எங்கேயோ வைத்து, ஒப்பனை செய்துகொண்ட பஞ்சபாண்டவர்களும், கிருஷ்ண பரமாத்மாவும் பொடி நடை யில் வந்துகொண்டிருந்தார்கள். பரத நாட்டியம் ஆடும் ஒரு சிறுமி ஆடை யலங்காரத்துடன் மேடையில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாள். ஒன்ப தரைக்குத் தொடங்க வேண்டிய இந்த
முத்தமிழ் விழா பத்துமணிக்கு மேலா கியும் இன்னும் ’ஸ்பீக்கர்’ காரப் பையனைக் கூடக் காணவில்லை.
விழாமண்டபத்துள் பின்பக்கமாகத் திரும்பிப்பார்கவே கூடாது என்று விரதம் பூண்டிருந்த செயலாளர் தம்மை மறந்த நிலையில் "ஸ்லோமோசனில் தலை யைப் பின்பக்கம் திருப்பினார்.
முத்தமிழ்விழாவில் கெளரவிக்கப் படவுள்ள மூன்று கலைஞர்களும் “கலர்புல் சால்வை, சேட், வேட்டி சகிதம் கம்பீரமாக வீற்றிருந்தார்கள். அவர் களுக்கும் சற்று அப்பால் கவியரங்கில் பங்குபெறப்போகின்ற கவிஞர்கள் நால் வரும் கொஞ்சம் மதுபோதை போல் தெரிந்தது, படிக்கப்போகும் கவிதை களை ஆள்மாறியாள் கைமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
“பேசாமல் வீட்டுக்குப் போய் விடுவோமா?” என்று எண் ணத் தோன்றியபோத்ே அவசரஅவசரமாக ஒட்டோவில் வந்திறங்கினான் ஸ்பீக்கள் காரப்பையன்.
முத்தமிழ்விழாச் செயலுறுப்பினர் ஒருத்தரைத்தானும் இன்னும் காண வில்லை.
ஒரு தமிழ்ப்பகுதியில் நடைபெறப் போகின்ற முத்தமிழ் விழாவைக் கண்டு களிக்க அட்லிஸ்ற் ஒரு முப்பதுபேராவது 6hly(3660, ITLDIT?
தமிழ் வளர்க்கிறோம். இலக்கியம் வளர்க்கிறோம். என்று தம்பட்டம் அடிக்கும் புத்திஜீவிகளிலாவது ஒரு ஐந்தாறு பேர் வந்திருக்கலாம்தானே! பேசும்படி அழைத்தால்தான் அவர்கள் வருவார்கள். பார்வையாளர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு, அவசரமாக இன்னுமொரு கூட்டத்திற்குப்
 

போகவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.
திணைக்களத் தலைவர்கள், கல்லூரி அதிபர்கள், பிரபல்யமான கவிஞர், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் என்று கிட்டத்தட்ட ஒரு நூறு பேருக்கு மேல் அழைப்புக் கொடுத்திருந்தும் ஒருத்தன் கூடவரவில்லை.
*விழா இன்றுதானா?” செய லாளருக்கே சந்தேகம் வந்துவிட்டது. சேட் பக்கட்டினுள் மடித்து வைத்திருந்த விழா நோட்டிசை எடுத்து நிமிர்த்தி திகதியைப் பார்த்தார்.
"இன்றுதான் விழா” நிட்சயமானது. அவ்வேளை இடம்மாறி வந்த வரோ என்னவோ தெரியவில்லை ஒருவர் மண்டபத்திற்குள் வந்தார்.
கையில் பாரமான கூடை இருந்தது. பொன்னாங்காணி, லீக்ஸ், உருளைக்கிழங்கு, இறைச்சி, இன்னும் ஏதோவெல்லாம் அதற்குள் இருக்க வேண்டும். பொன்னாங்காணி மாத்திரமே மேலே தெரிந்தது.
மார்க்கட்டுக்குப் போய் வந்திருக் கிறார்.
நின்ற நிலையிலேயே செய லாளர் பீதாம்பரத்தைப்போலவே மேடை யைப் பார்த்தார். மண்டபத்தைப் பார்த் தார். கையில் கட்டியிருந்த கடிகாரத் தைப் பார்த்தார். அடுத்த படியாக அவர் கையிலிருந்த கூடையைப் பார்த்தார்.
பொன்னாங்காணி தொட்டாச் சிணுங்கிச் செடியைப் போல சுருங்கி யிருந்தது. கூடையைச் சுற்றி இலை யான்கள் பறந்தன. அவ்வளவுதான் வந்த வேகத்திலேயே வெளியேறிப் போய்விட்டார்.
’கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு.
ஸ்பீக்கரில் சினிமாப்பாடல் கதறியது.
செயலாளரின் காரியாலயத்தில் பணியாற்றும் இருவர் வந்தார்கள். செயலாளரின் பார்வை தங்கள் மீது படட்டும் என்று நினைத்துக் கொண்டவர்
களாக அவர்முன்னால் நடந்து சென்று ஒரமாகப் போய் அமர்ந்து கொண்டார் கள்.
செயலாளர்" பீதாம்பரம் தலை யைத் தொங்கப்போட்டுக்கொண்டார். நேரம் பத்தரைக்கும்மேல் தாண்டி விட்டது.
ஒர் இனத்தின் பெருமையை மாத்திரமல்ல அந்த இனத்தின் இருப் பைத் தக்கவைத்துக்கொள்ள பக்கபல மாக இருப்பது கலைஇலக்கியம், கலா சாரம் இவைகள்தான். இன்னும் ஒரு சிலவருடங்களில் இந்தமண்ணில் எப்போ தும் போல சோழர்கால, பல்லவர்கால சமாச்சாரங்களைக் கூட எவருக்குமே சொல்லமுடியாது.
யாருக்குச் சொல்வது? செயலாளர் பீதாம்பரம் சுற்றறிக் கையின்படி கண்டிப்பாக முத்தமிழ் விழாவை நடத்தியே ஆகவேண்டும் என்று இருந்தாலும்கூட அவருக்குத் தமிழ்மேல் - தமிழ்க்கலைகளின் மீது தீராத வெறி இருந்தது.
புதிதாகச் செயலாளராக நியமிக் கப்பட்டவர். சென்ற வருடம் அதற்கு முந்திய வருடங்களெல்லாம் மற்றமற்றச் செயலாளர்கள் நடாத்திய விழாக்களைப் பற்றியெல்லாம் நன்கு கேட்டறிந்து வைத்திருந்தார். விழாக்களில் வெளி யிட்டுவைத்த மலர்களையெல்லாம் படித்துப் பார்த்திருக்கிறார்.
இவற்றையெல்லாம்விட மகோன் னதமாக இந்த முத்தமிழ் விழாவை நடாத்திக்காட்ட வேண்டும். தமிழ்ச்சனங் களுக்கு இந்த விழாவின் மூலமாக ஒரு பொங்குதமிழ் எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் சிறப்பான தொரு நிருவாகக்குழுவை நியமித்துச் செயல்படுத்திக்கொண்டிருந்தார்.
கலைஞர் கெளரவம், மலர் வெளியீடு, கவிதைஅரங்கு, நாட்டுக் கூத்து, பரதநாட்டியம், விவாதஅரங்கு, கும்மிகோலாட்டம் என்று தமிழின் பாரம் பரிய கலைகளை வெகுசிறப்பாக மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும். போரின் தாக்கங்களினாலி

Page 4
ரணமாகிப்போயிருக்கும் மக்களின் இதயங்களுக்கு இவைகளின் மூலம் ஒத்தடம்போட்டு, கொஞ்சமாவது அவர் களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும் என்றெல்லாம் அயராது உழைத்த செயலாளரின் இதயமே இப்போது ரண மாகிக் கொண்டிருந்தது.
மிருகங்களைப்போல சாப்பிடு வதும், தூங்குவதும், குட்டிகளைப் போடுவதுமாகத்தானா இந்த மனித ஜென்மங்களும் காலங்காலமாகச் செய்துகொண்டிருக்கின்றன?
பகுத்தறியும் சிந்தனையை ஏன் இவர்களால் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. இவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்!
இப்படியெல்லாம் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்த செயலாளரின் முன்னால் விழாமலர் தயாரிக்கப் போட் டிருந்த மூன்று அங்கத்தவர்களும் வந்து நின்று தலையைச் சொறிந்தார்கள்.
கடலில் நீண்ட நேரம் நீச்சலடித்த வனின் கண்களைப் போல செயலாளரின் கண்கள் இரத்தக்குண்டாக மாறின.
வாலாமணியைச் சுருக்கி மீண்டும் நேரத்தைப் பார்த்துவிட்டு, முன் னால் நின்றவர்களை இமைவெட்டாமல் பார்த்தார்.
(38Fi ..... மலர் வேலைகள் இன்னும் முழுமையாக முடிவுபெற வில்லை. "பிறஸ்காரன் சுத்தமோசம். வேண்டுமானால் சாட்டுக்கு ஒரு இருபத் தைந்து நூல்களைக்கொண்டு வந்திருக் கிறோம். மிகுதியை எப்படியும் விழா முடிவடைவதற்குள் பிறஸ்காரனே இங்கு கொணி டு வந்து தருவதாகச் சொன்னான்."
மலையைக் கல்லி எலியைப் பிடித்த கதையாக வந்தவர்கள் சொன் னார்கள்.
செயலாளர் பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாரே தவிர எதுவும் பேசவேயில்லை.
"இருபத்தைந்து விழாமலர்கள். விழாவிற்கு இப்போது வந்திருப்பவர்கள் பதினைந்துபேர். போதும் பிறஸ்காரனும்
இந்த ஊரவன்தானே! அவனுக்கு இப்படியான விழாக்களைப் பற்றியெல் லாம் தண்ணிர்ப்பாடம்.” என்று நினைத் துக்கொண்டே செயலாளர் பீதாம்பரம் சவம்போல எழுந்துநின்றார்.
"ஹலோ. ரெஸ்ற். வண், ரூத் திறி!...”
செயலாளர் எழுந்துநிற்பதைக் கண்டதும் விழா ஆரம்பமாகப் போகிறது என்பதை ஊகித்துக் கொண்ட ஸ்பீக்கர் காரப்பையன் மைக்கைச் சரிசெய்து கொண்டிருந்தான்.
அப்போது இன்னுமொரு 'ஆட்டோ வந்து நின்றது.
விழாவின் அங்கத்தவரொருவர் செயலாளர் பக்கம் வந்தார்.
"சேர். தமிழ் வாழ்த்துப்பாட ஒழுங்கு செய்திருந்த சங்கீத பூஷணத் துக்கு வயிற்றுப்போக்காம். வரமுடியாது என்று சொல்லிவிட்டார்."
நக்கீரனைச் சிவனார் எப்படிப் பார்த்தார்? அது நமக்குத் தெரியாது. ஆனால் செயலாளர் பீதாம்பரம் பார்த்த பார்வை சிவனார் இப்படித்தான் பார்த் திருப்பார் என்று எண்ணத்தோன்றியது. "தமிழ்வாழ்த்து, தலைமையுரை, மலர் வெளியீட்டுரை, நன்றியுரை, எல்லா வற்றையுமே என்னால் செய்ய முடியும். அடுத் தடுத்த காலங்களில் வெறும் உணர்ச்சியற்ற மரக்கட்டைத் தமிழர்கள்தான் இங்கே இருக்கப் போகிறார்கள். சைக்! தமிழர்களே அழிக்கும் தெய்வங்களாக அவர்களின் கலை, கலாசாரங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். மூத்தகுடி என் றும், ஆண்ட பரம்பரைகள் என்றும்.” கடுகடுத்தபடி செயலாளர் பீதாம் பரம் மேடைக்கு ஏறினார்.
அப்போதும் ஸ்பீக்கர் காரப் பையன்,
"ஹலோ! ரெஸ்ட் வண் ரூத், திறி" என்று மைக்கைச் சரிபார்த்துக் கொண்டு நின்றான்.
懿 壕 盛

எழுதத் தூண்டும் எண்ணங்கள் [عco C
(கலாநிதி துரை.மனோகரன்) ܚܝܝܚ
இலங்கைக்குப் புகழ் தேடும் பாடகர்
இலங்கையில் தமிழ் மெல்லிசைத்துறை குறிப் பிடத்தக்க வளர்ச்சி பெற்று வருகின்றது. பற்பல பாடகர் பாடகியரும் புகழ் படைத்த தமிழகக் கலைஞர்களுக்கு இணையாக இத்துறையில் சிறந்து விளங்கிவருகின்றனர். இவர்களுள் ஒருவராக ரகுநாதன் திகழ்கிறார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மலையகத்தைப் புகுந்த இடமாகவும் கொண்ட அவர், மாத்தளை தமிழ்ப் பாடசாலையொன்றில் இசையாசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
தமிழ்நாட்டின் பிரபல பின்னணிப் பாடகரான ரி.எம்.சௌந்தரராஜனை இலங் கையில் நினைவூட்டும் குரலாக ரகுநாதனின் குரல்வளம் விளங்குகிறது. செளந்தர ராஜனின் குரலிற் காணப்படும் அதே கம்பீரம், அதே இனிமை ரகுநாதனின் குரலிலும் காணப்படுகிறது. அதேவேளை, செளந்தரராஜனை அப்படியே பின்பற்றும் கலைஞராக இல்லாமல், தமக்கெனத் தனித்துவத்தினையும் கொண்டிருப்பது இவருக் குப் பெருமையைத் தருகிறது. இலங்கையின் பல மெல்லிசைக் கலைஞர்களின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர்களுள் ரகுநாதனின் குரலை நான் மிகவும் விரும்புவதுண்டு.
ரகுநாதனைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் அவர் பாடிய “மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும் உன்புகழ் பாடுதம்மா - உன்னை எங்கெங்கு காணினும் சக்தியென்றே உமை தத்துவம் பேசுதம்மா” என்ற பாடலே உடன் நினைவுக்கு வரும். மலரன்பன் எழுதி, எம்.எஸ்.செல்வராஜா இசையமைத்த இப்பாடலை ரகுநாதன் அனுபவித்துப் பாடியுள்ளார். இதைப் போன்றே இவரது பல மெல்லிசைப் பாடல்களும் இவரின் குரல்வளத்தால் உள்ளத்தை வருடுகின்றன. ரகுநாதன் இலங்கைக் கலைஞர்களுடன் மாத்திரமல்லாது, புகழ்பெற்ற தமிழகத் திரைப்படக் கலைஞர்களுடனும் இணைந்து பாடியுள்ளார். செளந்தரராஜன் இவரது “மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும்” என்ற பாடலை மிகவும் ரசித் g5 Ty TLD.
இலங்கையின் இசைத்துறைக்கும், தமக்கும் புகழ்தேடித்தரும் கலைஞரான ரகுநாதனின் பாடல்கள் கேட்கச் செவிக்கு இனிமை பயப்பவை. இந்நாட்டின் இசைத்துறைக்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியது. எதிர்காலத்திலும் ரகுநாதன் இசைத்துறைக்கு ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உண்டு. ஒரு பயணத்தின் தொடக்கம்
இலங்கை சுதந்திரம் பெற்ற காலந்தொட்டுப் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளது. இவற்றுள் முக்கியமானது இனப்பிரச்சனையே. இப்பிரச்சினையைப் பூதாகரமாகக் கட்டியெழுப்பி வந்ததில் இந்நாட்டின் பேரின வாதிகளுக்குப் பெரும் பங்குண்டு. இனப்பிரச்சினையினால் இந்நாடு அனுபவித்த சோகங்கள் மிக அதிகம். இந்நிலையிலேயே அண்மையில் போரோடு தொடர்புபட்ட இருதரப்பினருக்கும் இடையே நோர்வேயின் அனுசரனையுடன் போர் நிறுத்த
7

Page 5
உடன்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி இந்நாட்டின் வரலாற்றில் வரவேற்கத்தக்க சிறந்த ஒரு பதிவு ஆகும். நிகழ்காலத்தில் இவ்வாறு ஒரு நிகழ்வு இடம்பெறும் என்பது, பலராலும் கற்பனை செய்யப்படாததொன்று. நிரந்தரப் போர் நிறுத்த உடன்பாட்டில் இருசாரும் கையெழுத்திட்டுள்ளமை மனந்திறந்து பாராட்டப்படவேண்டிய விடயம். இந்நாட்டின் பெரும்பாலான மக்களுடன் உலக நாடுகளும் இதனை மனமார வரவேற்றுள்ளன. ஆயினும், போர் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்ற வக்கிரபுத்தி கொண்டோரின் கூக்குரல்கள் ஒருபுறமும், போர்மூலம் சமாதானம் என்ற உலகப் புகழ்பெற்ற நகைச்சுவையை வழங்குவோர் இன்னொரு புறமும் நேரடியாகவும், மறைமுகமாகவும், இந்த நற்செயலுக்குக் களங்கம் கற்பிக்க முயல்கின்றனர். கிணற்றுத்தவளைகளான இவர்களின் குரல்களை யாரும் மதிக்கப் போவதில்லை எனினும், இவர்களின் கூக்குரல்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்ததும், பல ஆண்டுகளாகச் சமாதானத்தை நோக்கி இம்மியளவும் நகர முயலாத, நகரத் தெரியாத அரசியல்வாதிகள், தங்களால் முடியாததை இன்னொரு சாரார் சாதிக்க முயல்வதைக் கண்டு, துடித்துப் பதைபதைத்து நிற்கின்றனர். சாத்தான்கள் தம் கைவரிசையைக் காட்டுவதும், வேதாளங்கள் முருங்கை மரத்தில் ஏறுவதும் இயல்பான நிகழ்ச்சிகளே. இவ்வளவு காலமும் அரசியலில் முகமூடி அணிந்து செயற்பட்டவர்கள், இப்போது தம்மை மறந்து, தம் நாமம் கெட்டு, தமது சுயரூபத்தைப் பகிரங்கமாக உலகுக்குக் காட்டத் தொடங்கியுள்ளனர். முகமூடி அணிந்திருந்த இவர்களை வழிபட்டுவந்த விசுவாசி கள் இனி என்ன சொல்லப்போகிறார்களோ? என்ன செய்யப்போகிறார்களோ?
முரண்பாடு கொண்ட இரு சாராருக்கும் இடையே கைச்சாத்தான உடன் படிக்கை ஒரு பயணத்தின் தொடக்கம் மாத்திரமே. முடிவு எல்லையை அடைவதற்கு இன்னும் நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டும். இடையூறுகளும், வழிதவறல் களும் பயணத்தின் இடையில் இடம்பெறவே செய்யும். அவற்றைப் பொருட்படுத்தாது பயணத்தை மேற்கொள்வதில்தான் நாட்டின் தலைவிதியே தங்கியுள்ளது. தென்றலின் பக்கம்.
இலங்கை வானொலிக்கு நீண்டகாலத் தொன்மையும், பெருமையும் உண்டு. இதன் வர்த்தகசேவை தமிழ்நாட்டிலும் புகழ் பெற்று விளங்கியது. "தென்றல் என்ற புதிய பெயரில் தற்போது இயங்கும் வர்த்தகசேவை புதிய மாற்றங்களுடனும், புதுப்பொலிவுடனும் திகழ்கிறது. ஆயினும், திருத்தப்படவேண்டிய சில விடயங்களும் தென்றலில் உண்டு.
நீண்டகால வரலாறும், புகழும் கொண்ட தென்றலில், அண்மைக்காலத்தில் கிரிக்கட் வீரர் ஒருவரின் அரைகுறைத் தமிழ் உச்சரிப்புடன் அமைந்த விளம்பரம் ஒன்று ஒலிபரப்பாகி வருகிறது. தென்றல் பற்றிய அவரது அரைகுறைத் தமிழ் விளம்பரத்தைக் கேட்டுத்தான் இவ் ஒலிபரப்பைச் செவிமடுக்கவேண்டும் என்ற விதி தமிழ்பேசும் வானொலி நேயர் எவருக்கும் கிடையாது. அவருடைய "உபதே சத்தைக் கேட்டுத்தான் தென்றலை மக்கள் சுவைக்கிறார்களா, என்ன? இத்தகைய தொரு விளம்பரத்தை ஒலிபரப்பவேண்டும் என்ற “கற்பனை" எந்த வானொலி அதிகாரியின் மூளையில் உதித்ததோ தெரியவில்லை. தமிழ்பேசும் வானொலி நேயர்களை இவ்வளவு மட்டரகமாகத் தமிழ்நிகழ்ச்சி அதிகாரிகள் மதித்துவிட்டனரா? அறிவிப்பாளர் மயில்வாகனம் காலம் முதல் தனக்கெனத் தனித்துவத்துடன் திகழ்ந்து வரும் இலங்கை வானொலி வர்த்தகசேவைக்கு இப்படியோர் இழுக்கை ஏற்படுத்தி
விட்டனர், தமிழ் நிகழ்ச்சி அதிகாரிகள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் “பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி அரட்டையும், அறுவையுமாக நாள்தோறும் நிகழ்ந்துவந்தது. வெவ்வேறு இரு அறிவிப்பாளர்கள் இணைந்து, அந்த நிகழ்ச்சி மீதே சலிப்பு ஏற்படுமாறு கடுமையாக உழைத்து வந்தனர். ஒரு சில ஆண்டுகளாக இத்தகைய அறுவை இல்லாமல் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி நிகழ்ந்துவந்தது. அண்மைக்காலத்தில் மீண்டும் அறுவை முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. அளவுக்கு மீறிய அரட்டைகள், அறிவிப்பாளர்களின் அறியாமையையும் அவ்வப்போது வெளிப்படுத்திவிடுகின்றன. பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியிற் கலந்துகொள்ளும் மூத்த ஆண் அறிவிப்பாளர் ஒருவர், தாம் கலந்து கொள்ளும் அந்நிகழ்ச்சி களைகட்டும் என்பதைக் சந்தர்ப்பம் கிடைக்கும்போது தம் வாயினாலேயே கூறி மகிழ்ச்சியடைவதுண்டு. சாட்டாகத் தம்மோடு அப்போது கடமையாற்றும் அறிவிப்பாளரையும் சேர்த்துக்கொள்வார். சுயபுகழ்ச்சி ஒருபோதும் வரவேற்கத்தக்கது அல்ல. தம்மைப்புகழாமலேயே வானொலியில் சிறந்த சேவை யாற்றி வருபவர்கள் எத்தனையோபேர் இருக்கின்றனர். வானொலி நேயர்களும், விமர்சகர்களுமே அறிவிப்பாளரின் திறமைபற்றிக் கூறத் தகுதி படைத்தவர்கள். பொங்கும் பூம்புனலில் கடமையாற்றும் அறிவிப்பாளர்கள் அனைவரும் பத்திரிகை கள், சஞ்சிகைகளில் வெளிவரும் பல்வேறு தகவல்களைச் சேகரித்து, தமது சொந்தக் கண்டுபிடிப்புப்போலச் சொல்லி வருகின்றனர். தாம் தகவல்களை எங் கிருந்து பெற்றார்கள் என்பதைத் தெரிவிப்பதே நியாயமும், நாகரிகமும் ஆகும். பெரும்பாலும் இந்நிகழ்ச்சியில் மூன்றாம் தரமான புதிய பாடல்களையே ஒலிபரப்பி, அறிவிப்பாளர்கள் மகிழ்வடைகின்றனர். தரமான புதியபாடல்கள் இடம்பெறுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது.
இரவில் ஒலிபரப்பாகும் “இரவின் மடியில் வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால், அதை நடத்தும் அறிவிப்பாளர் சிலர், அந்நிகழ்ச்சியின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல், அதை ஒரு சோக நிகழ்ச்சியாக மாற்றிவிடுகின்றனர். இரவில் மக்கள் தூங்கப்போகும் வேளையில் ஒலிபரப்பாகும் அந்நிகழ்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டியது அவசியம். இந்தச் சாதாரண உளவியலைக்கூடப் புரிந்து கொள்ளாதவர்களாகச் சில அறிவிப்பாளர்கள், தமக்குப்பிடித்த சோகப்பாடல்களை எல்லாம் இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்பி, மக்களின் நிம்மதியை கெடுக்கின்றனர். அண்மையில் ஹஜ் பெருநாளின்போதும் இரவின் மடியில் நிகழ்ச்சியிற் கடமை யாற்றிய ஓர் அறிவிப்பாளர், அன்று முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய நாள் என்பதையும் மறந்து, தமக்கு விருப்பமான சோகப்பாடல்களை ஒலிபரப்பி, தாம் மட்டும் மகிழ்ந்துகொண்டார்.
தென்றலில் கடமையாற்றும் இளம் ஆண் அறிவிப்பாளர் ஒருவர், போதிய பயிற்சி இல்லாமலே அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் போலத் தெரிகிறது. அவரை நம்பி, அதிகாரிகள் நிகழ்ச்சிகளை ஒப்படைத்திருக்கின்றனர். அவசர அவசரமாக அறிவிப்புச் செய்வதும், சொற்களைத் தெளிவின்றி உச்சரிப்பதும் அவரது பாணி. "பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் சக அறிவிப்பாளருடன் எதை யாவது பேசிவிட்டு, அடிக்கடி “சரியா, சரியா?” என்று கேட்பதும் அவரின் வழக்கம். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் (குறிப்பாகப் பொங்கும் பூம்புனல்) அருமை யான அறுவைக்குச் சிறந்த எழுத்துக்காட்டுகள். தென்றலின் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் ஆரம்பகாலத்தில் இருந்தே தம்மைச் சிறப்பாக வளர்த்துக் கொண்டவர்கள். ஆனால், இந்த இளம் அறிவிப்பாளர் இதற்கு விதிவிலக்காகவே விளங்குகிறார். தமது குறைகளை அவர் திருத்திக்கொண்டால், அவர் எதிர்காலத்திற் பிரகாசிக்க வாய்ப்புண்டு.
9

Page 6
i^ת, மக்கள் கவிமணி சி.வி. ○イ
என் மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய மனித நேயமிக் கவர் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை.
சி.வி. என்ற இரண்டெழுத்துக்களில் நண்பர்களிடை யேயும், தொழிற்சங்க வட்டாரத்திலும், இலக்கிய உலகிலும், ஆங்கிலம் கற்ற வாசகர் வட்டத்திலும் தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர் மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையாகும்.
சி.வி. அவர்களை சந்தித்ததையும், அவரோடு பேசியதை யும், பழகியதையும் என் வாழ்வில் மறக்கமுடியாது.
சி.வி. அவர்களின் சந்திப்பு. மலையக இலக்கியம் சம்பந்தமாகச் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிய செயற்பாடுகளை எடுத்துக் கூறியது.
அறுபதுகளின் இறுதியில், எழுபதுகளின் ஆரம்பத்தில்தான் சி.வி.யை சந்திக்கின்ற வாய்ப்புக் கிட்டியது. அது அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது. இலங்கை வானொலியில் மலையகத்திற்காக “குன்றின் குரல்" என்ற அரைமணிநேர நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பாகியது. அதனைத் தொடக்கி வைத்து வழங்கியவர் மலையக இலக்கிய முன்னோடியான இர.சிவலிங்கம்.
இர.சிவலிங்கத்திற்குப் பின்னர் பதுளையைச் சேர்ந்த மு.நித்தியானந்தன் தொகுத்துவழங்கியபொழுது, "மலையக நாடகங்கள்” என்ற கட்டுரையை என்னையே வாசிக்கும்படி அழைத்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற வானொலி நிலையம் சென்றபொழுது, அங்கே சி.வி.யும் வந்திருந்தார்.
என்னைக் கண்டதும் புன்னகை தவழும் பார்வையுடன் என்னை அருகில் வரும்படி அழைத்தார். என்னைப் பற்றி மிகவும் அக்கறையுடன் விசாரித்தார்.
பின்னர் என் கரத்திலிருந்த "மலையக நாடகங்கள்” என்ற கட்டுரையை வாங்கிப்படித்துப் பார்த்தார்.
“உங்களுடன் மலையக இலக்கியம் சம்பந்தமாகப் பேசவேண்டும். வசதியிருக்கும்பொழுது எனது தொழிற்சங்கக் காரியாலத்தில் வந்து சந்திக்க முடியுமா?" என்றார்.
"உங்களைச் சந்தித்துப் பேச எனக்கும் ஆசை, நிச்சயமாக வருகிறேன். என்றேன்.
அதன் பின்னர் அவருடனான சந்திப்புத் தொடர்ந்தது. ஒரு நாள் அவரோடு பேசிக் கொண்டிருந்தபொழுது, மலையக மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்த பத்துப் பேரையாவது விருப்பு வெறுப்பின்றித் தெரிவு செய்து அவர்களைப்பற்றிய நூல் ஒன்றினை வெளியிடவேண்டும், அதனை
10
 
 

நீங்கள்தான் செய்ய வேண்டும்” என்றார்.
சி.வி.என்ற மனித நேயமிக்க கவிஞனின் நெஞ்சத்தில் பலவித ஆசைகள் புதைந்திருந்தன. மலையக மக்களைப் பற்றிய வரலாறு, மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த பெரியார்களைப் பற்றிய வரலாறு, மலையக எழுத்தாளர்களின் படைப்புகள் நூலுருவில் வரவேண்டும், தரமான சஞ்சிகை ஒன்றினைத் தொடர்ந்து வெளியிடவேண்டும், இப்படிப் பலவித ஆசைகள்.
சி.வி. அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் மலையக சம்பந்தமான கருத்துக்களை என்னுள் விதைத்தார். மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தேசபக்தன் கோ.நடேசய்யர் பற்றிய பல விடயங்களைக் கூறுவார். அவரின் ஆளுமைகளையும் ஆற்றலையும் எடுத்துச்சொல்வார்.
பேராசிரியர் கைலாசபதி, சி.வி. மீது பெருமதிப்பு வைத்திருந்தார். அதேபோல பேராசிரியர் மீது சி.வி. பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, "மலைநாட்டு எழுத்தாளர்களை ஊக்குவித்துப் புது இலக்கியம் வளர்க்க சாதனம் அளித்தார். எங்கள் இலக்கிய சரித்திரம் எழுதும்பொழுது இதைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது" என்றார்.
மலையக நாட்டார் பாடல் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் சி.வி.யே. அவர் சேகரித்து வைத்திருந்த பாடல்களை அச்சில் வெளிவருமுன்னர் பாடிக் காட்டி அதற்குரிய விளக்கத்தையும் அளிப்பார்.
தோட்டத்துக்குள் வாய்மொழியாக முடங்கிக்கிடந்த நாட்டார் பாடல்களை வெளி உலகுக்குத் தெரிய வைத்த பெருமை சி.வி.யினுடையது என்பதை மறுப்பதற்கில்லை.
பின்னர் இந்தப் பாடல்கள் பேராசிரியர் கைலாசபதியின் முன்னுரையுடன் "மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற தலைப்பில் தமிழகத்து கலைஞன் பதிப்பகம் மூலம் நூலுருவில் வெளிவந்தது. இது நூலாக வருவதற்கு நானும் துணை நின்றேன் என்பதை இப்பொழுது திரும்பிப் பார்க்கிறேன்.
சி.வி. என்ற மாபெரும் இலக்கிய கர்த்தா வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம், அவரோடு பழகினோம், அவரது அரிய ஆலோசனைகளைப் பெற்றோம், அவர் வாழும் பொழுதே நானே முன்னின்று மலையக கலை இலக்கியப் பேரவையின் மூலம் அவருக்கு விழா எடுத்து மகிழ்ந்தது என்பவற்றைத் திரும்பிப் பார்க்கிறேன்.
- இன்னும்வரும்.
Y C) Y
மாற்றிவிடுவோம்! வெண்புறாவே! வெண்புறாவே! நீதான் சமாதானத்தின் சின்னமாம் என்பது மறந்துபோச்சு நீயோ பம்மாத்துக் காட்டி கனதுரம் பறந்து செல்கின்றாய் மாற்றிவிடுவோம் உண்னை, காக்கையை சின்னமாய் ஏற்றிடுவோம்! O ஒற்றுமையாவது மிஞ்சட்டுமே! நா. ஆனந்தன், யாழ்ப்பாணி ノ
11

Page 7
W
இதுஎழுத்துல; இ
“ - முல்லைமணி - 臀期 ہ۔ Nצ
நாகரிகத்தின் வாடையேவிசாத, பலவிதத்திலும் பின்தங்கிய கிராம மொன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். எனது பதினைந்தாவது வயதுவரை செய்தித்தாள் எதனையும் வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. 1948ஆம் ஆண்டுதான் முதன் முதலில் ஈழகேசரி வார இதழை வாசிக்கத் தொடங்கினேன். வாசித்தேன் என்று சொல்வதைவிட எழுத்தெண்ணிப் படித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
நூற்கணம் என்று கூறக்கூடிய அளவுக்கு ஏராளமான புத்தகங்களோ, சஞ்சிகைகளோ இல்லாத நிலையில் பாடப் புத்தகங்களும் பெரிய எழுத்து மதனகாமராசன் கதை, அல்லி அரசாணிமாலை இராசாதேசிங்கு கதை, காசி நாதன் நேசமலர், விநோதரசமஞ்சரி போன்ற ஒருசில நூல்களே என் தோழர் களாயின.
அந்தக் காலத்தில் படிப்பென்றால் பாடமாக்குவது தான். செய்யுள்களை மட்டுமன்றி உரைநடைப்பகுதிகளையும் பாடமாக்கிவிடுவேன்.
ஒரு செய்யுளை வாசித்தவுடன் அதேபோன்ற ஒரு செய்யுளை மட்டுமன்றி உரைநடைப்பகுதிகளையும் பாடமாக்கிவிடுவேன்.
ஒரு செய்யுளை வாசித்தவுடன் அதேபோன்ற ஒரு செய்யுளை இயற்ற வேண்டும் என்று எண்ணத் தோன்றும். ஒரு கதையையோ கட்டுரையையோ வாசித்தவுடன் அதைப்போல ஒன்றை நானும் எழுதினால் என்று நினைக்கத் தோன்றும். எழுது, எழுது என்று ஏதோ ஒரு குரல் என்னை இடைத்துரைப்பதுபோல இருக்கும்.
1951இல் ஈழகேசரியில் எனது கிராமம் என்னும் 15 வரிக் கட்டுரை வெளி யானது. இதனை எனது எழுத்துலகப் பிரவேசமாகக் கொள்ளலாமா? அதே ஆண்டில் Mulliyawalai என்னும் ஆங்கிலக்கட்டுரை சாவகச்சேரி இந்துக்கல்லூரி சஞ்சிகையில் வெளியானது. Village inthe Jungle பாணியில் இது அமைந்திருப்பதாக அதிபர் ஏ.எஸ்.கனகரத்தினம் பாராட்டினார். எனது ஊரில் எனக்குப் பலத்த 6 girl. Until very recently Village barber was our News Paper(s)|60ir sodLDisassroob வரை கிராமநாவிதனே எமது செய்தித்தாளாக விளங்கினான்) என்று எழுதிப் பிறந்த கிராமத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.
1949 தொடக்கம் 1952 வரை யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அகன்ற வாசிப்புக்கான வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆங்கிலத்திலும் தமிழிலும் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வாசித்ததும் எனது இயற்கையான நாட்டமும் என்னை எழுத்துலகில் பிரவேசிக்கச் செய்திருக்கலாம்.
ஒவ்வொரு மனிதனிலும் ஏதோ ஒன்றைச் செய்து தனது இருப்பை வெளிக்
12
 
 
 
 

காட்ட வேண்டும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று நினைப்பு ஏற்படுத்துவதுண்டு. இது ஒரு உளவியல் தேவை. இதுவும் என்னை எழுதத் தூண்டியிருக்கலாம்.
ஒரு சிறு கட்டுரையை மாணவர் பகுதியில் வெளியிட்ட ஈழகேசரி எனது சிறுகதையையும் வெளியிடும் என்று நம்பிச் சிறுகதையொன்றை அனுப்பினேன். அது கிணற்றில் போட்ட கல்லாயிற்று. தினகரன், வீரகேசரி பத்திரிகைகளுக்கு அனுப்பிய கதைகளின் கதியும் அதுதான்.
என்றாலும் எழுதுவதை நிறுத்தவில்லை. என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதி எழுதி திருப்தி தராத ஆக்கங்களைக் கிழித்துக் குப்பையில் போட்டுக் கொண்டிருந்தேன். பத்திரிகைக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டேன்.
திருநெல்வேலி பண்டித கலாசாலையில் வித்துவான் க.வேந்தனாரிடமும் மகரகம ஆங்கில ஆசிரிய கலாசாலையில் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அர்களிட மும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்திருந்தேன். பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்கள் எனது உறவினர். என்றாலும் அவருக்குக் கிட்டப்போகவோ இலக்கியம் பற்றிப் பேசவோ அச்சம். பத்திரிகைகளில் வெளியான அவருடைய கட்டுரைகளைக் கருத்துன்றி வாசித்தேன். எனது தமையனார் சி.பொன்னம்பலம் அவர்கள் பண்டிதமணியின் அபிமானத்துக்குரிய மாணாக்கள். பண்டிதமணியின் பத்திரிகைக் கட்டுரையை நறுக்கு வைத்துக் காப்பாற்றி எனக்கும் படிக்கத் தருவார் கி.வா.ஜகந்நாதன், ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசன் போன் றோரின் புத்தகங்களையும் வாசிப்பதற்குத் தருவார். பண்டிதமணியின் இலக்கிய இரசனையையும், சிந்தனை முத்துக்களையும் சிறுகச் சிறுக முகர்ந்து கொண்டிருந் தேன்.
1957இல் செல்லையா குமாரசாமி என்பவர் "அல்லி என்னும் சஞ்சிகையைப் புதிதாகத் தொடங்கியிருந்தார். என்னுடன் உடன்பயின்ற பொ.சுப்பையா அல்லிக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அனுப்பிய ‘கரு வண்டும் கலைமானும் என்னும் இலக்கியக் கட்டுரை அல்லியில் வெளியாகியது. எழுத்தாளன் ஒருவனுக்குத் தனது எழுத்தை அச்சில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அது தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயின் குதுகலத்திலும் மேலானதுதான்.
1959இல் வீரகேசரி நிருபராக நியமிக்கப்பட்டேன். பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் எனது செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
அறுபதுகளில் வன்னிப் பிரதேசத்தில் புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. புதிய அரசியல் தலைமை இதற்குக் காரணமாக அமைந்தது.
வன்னிமண் பற்றியும் அதன் காவலர்கள் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்திக்கும் சூழ்நிலை உருவாகியது.
சமுதாய அமைப்பிலும் மனித உறவிலும் மாற்றங்கள் தோன்றி வளர்ந்து வரும் காலகட்டத்தில் வாழும் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வினைத் தாக்குவது புதிய சூழ்நிலையில் தோன்றும் மனித இன்னல். இதுவே கவிதைக்கும் புனைகதைக் கும் கருவாக அமைகின்றது.
என்னைச்சுற்றி இடம்பெறும் நிகழ்வுகள் என் உணர்வுகளைத் தாக்குகின்றன. அதன் வெளிப்பாடாகவே எனது கதைகள் திகழ்கின்றன.
13

Page 8
படிப்பறிவின் அடிப்படையிலான எழுத்து என்பது எழுத்தாளனின் முதாலாவது நிலை. வாழக்கை அனுபவங்களின் அடிப்படையாகக் கொண்டு எழுதுவது இரண்டா வது நிலை. ஒரு சம்பவம் அதன் அடிப்படையாகத் தோன்றும் மனோநிலை அல்லது உணர்வுநிலை இலக்கிய கர்த்தாவில் உள்ளத்திலே விழுந்து ஆழப் பதிந்து விடுகிறது. இதனை ஏந்தி வளர்க்கக் கூடிய கதை மாந்தரையும் நிகழ்ச்சி களையும் வாழ்க்கைச் சூழ்நிலையிலிருந்தே எழுத்தாளன் தேர்ந்தெடுக்கிறான். கற்பனை அழகுடன் அதனையொரு புனைகதையாக ஆக்கிவிடுகிறான்.
இத்தகைய ஒரு நிலைமையே எனது இலக்கிய நோக்கை நிர்ணயித்தது. நிகழ்காலத்தை மட்டுமன்றி இறந்த காலத்தையும் எண்ணிப் பார்க்கலானேன்.
"கற்சிலை மடுவில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அதில் வன்னிநாட்டின் இறுதிமன்னன் பண்டாரவன்னியன் பற்றிய குறிப்பொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து அம்மன்னன் வீரவரலாற்றை நாடகமாக எழுதலாந்தானே" எனத் திரு பொன்னம்பலம் அவர்கள் கூறினார்கள். கல்வெட்டு வாசகம் ஒரு சிறுபொறி, அதனை ஊதிப் பெருநெருப்பாக்கவேண்டும். அந்த அக்கினிச் சுவாலை யில் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் நாம் குளிர்காய வேண்டும். பண்டாரவன்னியன் வரலாறு விடுதலை வேட்கையின் குறியீடு. இதுவெறும் பொழுதுபோக்கல்ல; ஒரு சமுதாயத்தேவை. எப்படியும் இந்த நாடகத்தை எழுதியேயாக வேண்டும என உறுதிபூண்டேன். நினைத்ததுபோல அது சுலபமாக அமையவில்லை.நிறைய உழைக்கவேண்டியிருந்தது.
நாடகத்தை எழுதத் தொடங்குமுன்பு வன்னி நாடுபற்றியும் பண்டார வன்னியன் பற்றியும் இரண்டு கட்டுரைகளை வீரகேசரியில் எழுதினேன்.
பாடசாலைத் தேவைகட்கும், பொது மேடைகளுக்கும்சில நாடகங்களை எழுதிக் கொடுத்திருந்தேன். சேற்றில் மலர்ந்த செந்தாமரை, இருள் நீங்கியது, மலர்ந்த வாழ்வு, வரப்பிரசாதம் போன்ற நாடகங்கள் ஏற்கனவே மேடையேற்றப் பட்டிருந்தன.
நாடகப்பிரதி எழுத்தாளரும், வானொலி நாடக நடிகரும் தயாரிப்பாளருமான அப்பச்சி மகாலிங்கம் பண்டாரவன்னியன் நாடகப் பிரதியாக்கத்தின்போது உட னிருந்து உதவினார். நாடகத்தை எழுதிமுடிக்கு முன்பே இதுபற்றிய செய்தி பரவிவிட்டது. முல்லைத்தீவு வட்டாரப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற விருக்கும் நாடகப் போட்டிக்கு வித்தியானாந்தாக் கல்லூரியின் சார்பில் இதனைச் சமர்ப்பிக்கு மாறு வட்டாரக்கல்வி அதிகாரி கேட்டுக் கொண்டார். ஒரு வரலாற்று நாடகத்தை பதினைந்து நிமிடத்தில் நிகழ்த்தி வெற்றிபெறுவது சுலபமில்லை. போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் பண்டாரவன்னியன் வரலாற்றில் சிறுபகுதி மக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டதில் திருப்தியடைந்தேன். பின்னர் வவுனியா விலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற போட்டிகளில் முதலாம், இரண் டாம் இடங்களைப் பெற்றதால் எனது நாடகப் பிரதியாக்கத்திலும் தயாரிப்பிலும் நம்பிக்கை ஏற்பட்டது.
இந்த நாடகப் பிரதியை அன்றைய வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணை யாளரான ந.சிவராசா அவர்கள் (பிற்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர்) இலங்கைக் கலைக் கழக நாடகப் பிரதிப் போட்டிக்கு அனுப்புமாறு ஆலோசனை தந்தார். கலாநிதி சு.வித்தியானந்தன் தலைமையில்
14

தமிழ் நாடகக் குழு பண்டார வன்னியன் நாடகத்திற்குப் பரிசளித்துக் கெளரவித்தது. திரு.ந.சிவராசா, கலாநிதி சு.நித்தியான்ந்தன் என்னும் இரு பெருமக்களும் குடத்துள் விளக்காக இருந்த என்னைக் குன்றின்மேல் இட்ட தீபமாக ஒளிரச் செய்தவர்கள். இருவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
சுமார் இருபது நாடகப் பிரதிகளை எழுதியபோதும் அவற்றின் பிரதிகள் எதுவும் என்னிடம் இல்லை. நாடகத் தயாரிப்பாளர்கள் அவற்றைத் திருப்பித் தரவில்லை.
கவிதைத்துறையில் வீரகேசரி வெண்பாப் போட்டியில் பரிசு கிடைத்தது. துறை நீலாவணை இலக்கியப் பேரவை ‘காதலிக்க வேண்டாம்' என்னும் கவிதை யைச் சிறந்த கவிதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தது.
அவ்வப்போது வானொலியிலும், விழாக்களிலும் கவியரங்குகளில் பங்குபற்றி யுள்ளேன். தலைமைக் கவிஞனாக இலங்கை வானொலியிலும் நெடுந்தீவு திருக் குறள் மாநாட்டுக் கவியரங்கிலும் கவிபாடியுள்ளேன். செய்தித்தாள்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிதைகளே வெளிவந்துள்ளன. நோர்வே தமிழ்ச் சங்கச் சஞ்சிகை யில் இரண்டு கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் பாமாலை, நெடுங்கேணி வில்வையடிப் பிள்ளையார் பாமாலை, காத வத்தை நிலகாமம் முத்துமாரியம்மன் திருவூஞ்சல் என்பவை நூலாக வெளிவந் துள்ளன.
“முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்கள் இயற்கையாகவே கவி புனையும் ஆற்றல் அமைந்தவர்.” எனத் தான்தோன்றி ஈஸ்வரர் பாமாலை அணிந் துரையில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வசிட்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்ற மகிழ்ச்சி எனக்கு.
பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் இதுவரை நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது(1970,1972,1999,2000) இலங்கையில் மாத்திரமன்றி அமெரிக்க, ஐரோப் பிய அவுஸ்திரேலிய நாடுகளிலும் மேடையேற்றப்பட்டு வருகிறது.
பண்டார வன்னியன் வரலாற்று நாடகம், மல்லிகை வனம் (சமூகநாவல்), வன்னியர் திலகம் (வரலாற்று நாவல்), கமுகஞ் சோலை (வரலாற்றுச் சமூக நாவல்) என்பன எனக்கு மனநிறைவைத் தந்த படைப்புகளாகும்.
எனது முதல் சிறுகதை துணை 1970ஆம் ஆண்டுதான் வீரகேசரியில் வெளியாகியது. இதுவரை நாற்பது சிறுகதைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் பிரசுரமாகியுள்ளன. இவற்றில் பன்னிரண்டு சிறுகதைகள் "அரசிகள் அழுவதில்லை" என்னும் தொகுப்பாக (1977) வெளிவந்துள்ளது.
"ஏறத்தாழ எல்லாக் கதைகளுமே கிராமப்புறஞ்சார்ந்த அல்லது நாட்டுப்புற மாந்தரை அதுவும் நலிவுற்ற மாந்தரைக் கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளன. மனிதருக்கும் மனிதருக்கும் இயற்கைக்கும் மனிதருக்கும் ஏற்படும் உறவுகளின் அடிப்படையில் உண்டாகும் மனச் சலனங்களை இயற்பண்பு திரியாமல் சித்திரித் துள்ளார் ஆசிரியர். நூலாசிரியருடைய எழுத்தாற்றல் இதிலேயே முனைப்பாகத் தெரிகிறது என்பேன்" எனச் சிறுகதைத் தொகுப்பின் அணிந்துரையில் பேராசிரியர் க.கைலாசபதி குறிப்பிடுகிறார்.
இந்தச் சிறுகதைத் தொகுதி தேசிய சாகித்ய விருதினைப் பெற்றுள்ளது. பிறந்தமண், மல்லிகைவனம், வன்னியர் திலகம், கமுகஞ்சோலை,
15

Page 9
மழைக்கோலம் என்பவை நான் எழுதிய நாவல்கள்.
மல்லிகைவனம் சமூகநாவல் வீரகேசரி நடாத்திய பிரதேச நாவல்போட்டியில் வன்னிப்பிராந்தியாத்திற்கான பரிசினைப் பெற்றது. பரிசு பெற்ற நாவல்கள் வீரகேசரி வெளியீடாகவே நூலுருப் பெறுவது வழக்கம். ஏனைய பிராந்தியப் பரிசு நாவல்கள் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்துள்ளன. போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெறாத ஒரு எழுத்தாளரின் சதியினால் வீரகேசரி இந்த நாவலை வெளியிட முன்வரவில்லை. நாவலில் உணர்வோட்டம் சற்றுக் குறைவாக இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் நாட்டார் வழக்கியலை ஆய்வு செய்யப்புகும் மாணவன் இந்த நாவலைப் படித்துத்தான் ஆகவேண்டும். கதை சொல்வது எனது முக்கிய நோக்கமல்ல மக்கள் வாழ்க்கையைப் படம்பிடிப்பதுதான் நோக்கம். நீல.பத்மநாதனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள் தகளி சிவசங்கரம் பிள்ளையின் செம்மீன் போன்ற அண்மைக்கால நாவல்களின் போக்கு இந்த ரீதியில்தான் அமைந்துள்ளன. என்னைப் பொறுத்த அளவில் இது ஒரு வெற்றிப் படைப்பு.
எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகந்நாதன் இந்த நாவலை இந்திய வளர்மதி வெளியீடாக நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரின் அகால மறைவினால் அது கைகூடவில்லை. நாவல் பிரதி எப்படியோ வெ.ராமையாவிடம் சிக்கிவிட்டது. அவர் எனது அனுமதியின்றி சென்னை சோமு புத்தக நிலைய வெளியீடாகப் புத்தகம் ஆக்கினார். நூல் பிரதி ஒன்று கூட எனக்கு அனுப்பி வைக்கவில்லை. 1985இல் வெளியான இந்த நாவலின் பத்தோ பதினைந்தோ பிரதிகள் யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் விலைப்பட்டதாம். அதில் ஒரு பிரதியை செங்கை ஆழியான் வாங்கி வைத்திருந்தார். அதனை வாங்கியே எனது நாவலை அச்சில் வாசித்தேன். ஈழத்து எழுத்தாளருக்கு இப்படியொரு கதியா? இந்தியாவில் எனது நாவலொன்று வெளியானது எனத் திருப்திப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். 'வன்னியர் திலகம்' என்னும் வரலாற்று நாவலை எழுதி 1998ஆம் ஆண்டு நூலாக்கினேன். இந்த நாவல் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கே.எஸ்.சிவகுமாரன் TIMES FOMAN பத்திரிகையில் விமர்சனம் எழுதியிருந்தார். "இந்த நவீனத்தின் கதையமைப்பு எல்லோராலும் விளங்கிக்கொள்ளும் வகையில் தெளிவாக அமைந்துள்ளது. வன்னிப்பிரதேசமும் அதன் வரலாறும் சம்பந்தமான பல தகவல்கள் அநேக சந்தர்ப்பங்களில் உரையாடல்கள் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. முக்கிய விபரங்கள் பலவற்றை வெளிக் கொணர்வதற்கும் புதிர்களை விடுவிப்பதற்கும் நாடகப் பாணியில் அமைந்த உரையாடல்களை ஆசிரியர் லாவகமாகக் கையாண்டுள்ளார். வீரமும் தன்மானமும் சுதந்திர உணர்வும் அநீதியை எதிர்க்கும் உறுதியும் கொண்ட தலைவனாக கயிலைவன்னியன் விளங்குகின்றார். ஆட்சியாளர் மத்தியிலான உட்பகைகளும் சதிகளும் வீரதீர சாகசங்களும் ஆங்காங்கு கதைக்கு விறுவிறுப்பளிக்கின்றன" எனப் பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். வன்னியர் திலகம் தேசிய அரச சாகித்திய விருதையும் வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசையும் ஒருங்கே பெற்றுள்ளது.
கமுகஞ்சோலை என்னும் நாவல் 2000ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. முல்லைத்தீவுப் பிரதேசத்தில் உலவும் நாட்டார் கதைப்பாடல் ஒன்றை
16

அடியொற்றியது. ஆங்கில நிர்வாகத்திற் கெதிராகப் போர்க்கொடி உயர்த்திய தண்ணிருற்று மக்களையும் அவர்களது இயற்கையோடொட்டிய எளிமையான வாழ்க்கை முறைகளையும், தொழில் முறைகளையும், உணவுப் பழக்கத்தையும் ஆளும் வர்க்கத்தினது அடக்கு முறைகளையும் சுரண்ட6ம்களையும் இந்த நாவல் சித்திரிக்கின்றது.
கமுகஞ்சண்டை' என்னும் நாட்டார் பாடலை 1979இல் படித்தேன். அதில் இடம்பெறும் நிகழ்ச்சி என் உள்ளத்தில் ஆழப் பதிந்திருக்கவேண்டும். இதனையொரு கட்டுரையாக்கி வெளிச்சம் சஞ்சிகையிலும், கனடா, "கொம்பறை மலரிலும் வெளி யிடச் செய்தேன். அதனை ஒரு பரந்த வாசகள் கூட்டத்தைச் சென்றடையும் நோக்குடன் நாவலாக எழுதினேன். நாட்டார் பாடலில் இடம்பெறும் சம்பவங்களும், பாத்திரங்களும் ஒரு முழுநீள நாவலுக்குப் போதுமானவை அல்ல. எனவே கதைக்கருவை ஏந்தக்கூடிய பொருத்தமான கற்பனைப் பாத்திரங்களை உருவாக் கினேன். அந்தக் கற்பனைப் பாத்திரங்களின் இயக்கம் அக்கால வன்னிப் பிரதேச வாழ்க்கைமுறைக்கு (19ம்நூற்றாண்டு) முரண்படாதவகையில் அமைவதில் கருத்துச் செலுத்தியே நாவலாகப் படைத்து 2000ஆம் ஆண்டில் நாவலாக்கினேன். சுமார் 21 ஆண்டுகள் அந்தக் கதைக்கரு என் நெஞ்சமாகிய நிலத்தில் ஊறிக் கிடந்திருக்கிறது.
"முல்லைமணி. சிறப்பாக வன்னிமண் சார்ந்த பழையனவும் புதியனவுமாகிய செவிவழிச் செய்திகளில் மட்டுமன்றி ஆய்வு பூர்வமான ஆவணங்கள்மீதும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். கமுகஞ்சோலை என்னும் ‘புத்தகமும் மேலே சுட்டிக் காட்டப்பட்ட அக்கறைகளுக்கு மற்றொரு கண்டகாட்சியாகும். எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமல் பிடிவாதமாகப் படித்துமுடித்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்ப்போம் என்ற ஒர்மத்தை வாசகர்பால் மூட்டிவிடுவதுதான் இந்த நூலாசிரியரின் சிறப்பு. நாட்டார் பாடல்களில் இடம்பெறாத கற்பனைப் பாத்திரங்கள் தனியாள். குடும்பம் - சமூகம் - ஊர் - உலகம் என்ற பல்வேறு படித்தரங்களிலும் நிகழும் மனிதச் செயற்பாடுகளையும் கிரகித்துக் கொள்வதற்கான துணைக் களங்களாய் அமைந்து விடுகின்றன எனலாம்” எனக் கவிஞரும் விமர்சகரு மான இ.முருகையன் தினகரன் மதிப்புரையில் கூறுகின்றார். எழுத்தாளர் செ.யோக நாதன் ஆதவன் விமர்சனவரையில் "காலப்பதிவோடு அழகாக இந்த நாவலை எழுதியுள்ளார் முல்லைமணி. பாத்திரங்கள் உயிரோடு உலாவுகின்றார்கள்; நெஞ்சைத் தொடுகின்றார்கள்" எனக் கூறுகின்றார்.
மழைக்கோலம் என்னும் சமூக நாவல் 1945 - 1960 காலப்பகுதியில் வன்னிப்பிரதேச மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கோடிட்டுக்காட்டுகின்றது. இளைஞர் மத்தியில் சமூக மாற்றத்திற்கான வித்துக்கள் தோற்றம் பெற்றதையும், மாற்றத்தை விரும்பாத பழைய தலை முறையினரது மனப்பாங்கையும் முரண்பாடு களையும் தெளிவாக்கும் இந்த நாவல் எம்.டி.குணசேன நிறுவனத்தின் நூல் வெளியீட்டுக் குழுவினால் பிரசுரத்துக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
எனது புனைகதைகள் கருக்கொண்டு உருவாகிய விதம் பற்றி முன்னர் குறிப்பிட்டபோதும் இன்னோர் உதாரணத்தையும் தருகிறேன். ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி என் உணர்வுகளைத் தாக்கும் அந்த உணர்வு பல மாதங்களாக, சில வேளைகளில் வருடங்களாக மனத்திலே தேங்கிநிற்கும்.
17

Page 10
இவற்றை ஏந்திக் கதை சமைக்கக்கூடிய பாத்திரங்களும், கற்பனை நிகழ்ச்சி களும் நிஜவாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படும். கதையாக உருவாக்கப்படும் போது திரும்பத் திரும்ப வெட்டித் திருத்தி மீண்டும் மீண்டும் எழுதுவேன். எனது வார்த்தையில் அகப்படாமல் அடம்பிடிக்கும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை. ஒரளவு திருப்தியளிக்கும் படைப்புகளே பிரசுரிக்கப்படும்.
மாவிட்டபுரத்தில் குருக்கள் ஒருவரிடம் சமஸ்கிருதம் படிக்கச் சென்றேன். குருக்களுக்கும் அவர் மகனுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மனதில் பதிந்துவிட்டது. குருக்கள் மிகவும் வைதிகப் போக்குடையவர்; தனது மகன் தொடர்ந்து குடுமி வைத்திருக்கவேண்டும் ஆசார அனுட்டானங்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என் அவர் கண்டிப்புடன் கூறிவந்தார். மகனோ தனது குடுமியை வெட்டிய சிகையை தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் இறப்பில் சொருகி வைத்து 'ஐயா, இதுதான் நீங்கள் நேசிக்கும் குடுமி என்று எழுதிவிட்டுச் சென்றுவிட்டான். இது 1960ஆம் ஆண்டு நிகழ்ந்தது. 1975இல் ‘காத்திருக்கவேண்டும்' என்னும் சிறுகதையாக உருப்பெற்றது. பிராமண இளைஞன் கிறிஸ்தவப் பெண்ணைக் கதலிப்பதாகவும் தனது குடுமியை வெட்டி அழகான முடிமயிராக்கிக் காதலியின் பிறந்தநாள் பரிசாகக் கொடுப்பதாகவும் கதை அமைகிறது. இதுபோன்ற நிஜமான மயிராலான இன்னொரு முடிமயிர் வேண்டும் என்று காதலி கேட்கிறாள். நடந்ததைக்கூறி இன்னொரு முடிமயிர் வேண்டுமானால் இரண்டு மூன்று ஆண்டுகளேனும் காத்திருக்வேண்டும் என்றான் அவன். இக்கதை ஓ ஹென்றியின் சிறுகதை யொன்றைப் படித்த அருட்டுணர்வால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கைலாசபதி அவர்கள் கருதுகிறார்கள். உண்மையில் நான் ஓ ஹென்றியின் கதையை வாசித்திருக்கவில்லை.
பண்டிதமணி, புலவர்மணி ஆகியோருடனான தொடர்பு இலக்கிய இரசனை யிலும் கவிதையிலும் ஈடுபாடு கொள்ளச் செய்தது. முருகையன், அன்புமணி இரா.நாகலிங்கம் என்போரின் பரிச்சயம் இலக்கிய விமர்சனத் துறையில் புதிய வெளிச்சத்தைத் தந்தன. பேராசிரியர் சு.வித்தியானந்தன், அப்பச்சி மகாலிங்கம், சிவனேசன் வே.கந்தையா என்போர் நாடகப்பிரதி எழுதுவதற்கு ஊக்கம் தந்தனர். பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, ஆகியோரின் கட்டுரைகளும் நூல்களும் எனது இலக்கிய விமர்சன நோக்கினை விசாலித்தன.
டாக்டர் மு.வரதராசன், கல்கி, அகிலன், ஜெயகாந்தன், லசஷ்மி, அநுராதா ரமணன், நீலபத்மநாதன், தகளி சிவசங்கரம்பிள்ளை, பாலகுமாரன் என்போரின் நாவல்கள் எனது நாவல் இலக்கியப் படைப்புக்கு முன்னுதாரணங்களாக அமைந்தன.
இலங்கையர்கோன் சிறுகதைகள் எனது நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. ‘அரசிகள் அழுவதில்லை' என்னும் சிறுகதைத் தலைப்பே அவரின் "மச்சாள் சிறுகதையிலிருந்து எடுத்ததுதான்.
செ.கணேசலிங்கன், எஸ். பொன்னுத்துரை, வ.அ.இராசரத்தினம், அருள் சுப்பிரமணியம், தி.ஞானசேகரன், சொக்கன், எஸ்.எல்.சௌந்தரநாயகம், அன்புமணி, புலோலியூர் க.சதாசிவம் ஆகியோரின் புனைகதைகளின் வாசிப்பு நிச்சயமாக எனது ஆக்கங்களைச் செழுமைப்படுத்தியுள்ளன.
இலக்கிய ரசனை, இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு புதுக்கவிதையும்
18

மரபுக்கவிதையும், இலக்கணவரம்பு, தமிழில் உரைநடை, தமிழர் கூத்துமரபு, மஹாகவியின் கோடை, கணிதரீதியில் குறள்விளக்கம் முதலான பதின்மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இலக்கியப் பார்வை என்னும் நூல் 1999இல் வெளி யானது. நான் பெற்ற இலக்கண இலக்கிய அறிவின் வெளிப்பாடாகவும், சிந்தனை யின் பெறுபேறாகவும் இவை தோன்றின.
இலக்கியம், வரலாறு, சமயம், தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை சஞ்சிகைகளிலும், சிறப்பு மலர்களிலும் வெளியிட்டுள்ளேன்.
நாட்டார் வழக்கியலில் எனக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக நாட்டார் பாடல்களையும், கதைகளையும் சேகரிப்பதிலும் அவற்றைப் பத்திரிகை மூலமும், வானொலி மூலமும் அறிமுகப்படுத்துவதிலும் ஈடுபட்டுவந்துள்ளேன். இவை தொடர்பாக மக்கள் கலைகள் என்னும் தலைப்பில் இலங்கை வானொலி மஞ்சரியில் வெளியாகின. முல்லை மாவட்ட நாட்டார் இலக்கியம் என்னும் ஆய்வுக்கட்டுரை வடகிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழாக்கருத்தரங்கில்(2000) வாசிக்கப்பட்டது. ஈழம் வாழ் பழந்தமிழ் அறிஞர்களையும் தற்கால எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதிய ஐம்பத்திரண்டு கட்டுரைகள் மதியும் பிறையும் என்னும் பொதுத் தலைப்பில் ஈழமுரசு பத்திரிகையில் (198485) தொடராக வெளிவந்துள்ளன.
வன்னியின் ஆட்சித்தலைவர்கள், இலக்கியம், கலைகள் என்பன முதலிய வற்றை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொகுப்பு "வன்னியியல் சிந்தனை' என்னும் தலைப்பில் அச்சில் உள்ளது.
இலக்கியப் படைப்புக்கள் தனிமனிதனையும் சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும்; சமகாலத் தேவையான விடுதலை வேட்கைக்கு உந்துவிசையாக இருக்கவேண்டும் என்பனவே எனது இலக்கியப் படைப்பின் நோக்கமாகும்.
குறிப்பிட்ட எந்த இலக்கிய அணியையும் சார்ந்து நிற்காது நடுநிலையில் நின்றே இலக்கியம் படைக்கிறேன். தம்முள் முரண்பட்டுக்கொள்ளும் இலக்கியக் கொள்கைகளில் நல்ல அம்சங்களை உள்வாங்குவேன். ஒரு இலக்கிய ஆக்கம் மனிதனை மேம்படுத்த ஏதுவாக அமையுமானால் அதுவே முற்போக்கு இலக்கியம் என்பது எனது கருத்து.
தமிழ்மணி, கலாபூஷணம், கலைஞர்திலகம், தமிழ் ஆறிஞர் என்னும் பட்டங்கள் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டுள்ளேன். எனது ஆக்க இலக்கியங்கள் அனைத்துமே பரிசு பெற்றிருக்கின்றன. வடகிழக்கு மாகாண ஆளுநர் விருதினைப் பெற்றுள்ளேன். பலமுறை பொன்னாடை போர்த்தியும் பொற்கிழி வழங்கியும் கெளரவிக்கப்பட்டுள்ளேன்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ளேன். உலகத்தரம் வாய்ந்த இலக்கியம் படைக்க வேண்டும் என்ற பேராசையில்லை. எனது படைப்புகள் என்றும் நிலைத்துவாழும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வன்னிப்பிரதேசத்தின் அரசியல், பொருளியல், சமூகவியல், மானுடவியல், அனைத்தையும் உள்ளடக்கிய பெருநூல் எழுதுவது, இடம்பெயர் வாழ்க்கையின் அவலங்களை சித்திரிக்கும் நாவல் எழுதுவது - இவையே எதிர்காலத்திட்டங்கள்.
盛 登 盛
19

Page 11
ஈழத்துய் பூராடனாரின் இலக்கியய் பணிகள் க.பாஸ்கரன் 2ம் வருடம், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
பல்வேறு காலகட்டங்களில் பல பெரியார்கள் தோற்றம் பெற்று தமிழுக்கும் இலக்கியத்திற்கும் பல்வேறு படைப்புக்களைப் படைத்து மறைந்துள்ளார்கள். அந்த வகையில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பல பணிகளைச் செய்துகொண்டிருக்கும் பேரறிஞர் ஈழத்துப் பூராடனார் என்னும் பெருந்தகையின் வாழ்வு தமிழர்களால் அறியப்படவேண்டியதாகும். இவர்தம் வாழ்வும் பணியும் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளமட்டும் நினைக்கத்தக்க பெருமையினை உடையன. இவர் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க தமிழ்ப் பணியினை கனடா நாட்டில் வாழ்ந்துகொண்டு அமைதியாகச் செய்து வருகின்றார். தமிழர்கள் ஈழத்துப் பூராடனாரைப் பற்றி அறியும் முன்னர், கனடாவில் வாழும் கிரேக்கப் பெருங்குடி மக்கள் தமது இலக்கியப் பண்பாட்டுக்கழகத்தின் வாயிலாக அவரைப் பாராட்டி உள்ளனர். காரணம், முதன்முதலில் ஆசிய மொழிகளில் ஒன்றான தமிழில் கிரேக்க இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டமையாகும். கிரேக்க மக்கள் தங்கள் பொன்விழா நாளில் இவருக்கு விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை தமிழர்களுக்கு பெருமை தரத்தக்க ஒன்றாகும்.
பூராடனார் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் 13/12/1928ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் செல்வராஜகோபால். இவரது தொடக்கக் கல்வியை குருக்கள் மடம் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும், மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும் பயின்றவர். இவர் "பாலபண்டிதம் சித்திர ஆசிரியர் பத்திரம் பெற்றவர். தனது ஆசிரியப் பணியினை 35 ஆண்டுகள் செய்து 1983ல் ஓய்வு பெற்றவர்.
ஈழத்துப் பூராடனார் ஓவியம், தட்டெழுத்து, சுருக்கெழுத்து, மருத்துவம் (ஹோமியோபதி), அச்சுக்கலை முதலானவற்றில் உயர்கல்விச் சான்றுபெற்றவர். இவர் தமிழ்மொழியில் புலமையும், சிங்கள ஆங்கில மொழிகளில் தேர்ச்சியும் பெற்றவர். இவரின் தழிழறிவுக்குக் காரணமாக இருந்தவர்கள் இ.வ.கணபதிப்பிள்ளை, பெரியதந்தை வரகவி சின்னப் புலவர், ஏ.பெரியதம்பிப்பிள்ளை பண்டிதர் ஆவர். மூன்று தலைமுறைகளாக அச்சுப்பணியில் ஆர்வம் கொண்ட இவர்தம் குடும்பத்தினர், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப கணனிப் பொறியில் தமிழ் எழுத்துக் 86006IT 5)Ji96)J60)LDög5 19866Ö Gl 1ög566vä5ib ab6olbL16lb (Computer Image printer)
நூலினை வெளியிட்டனர். கனடாவில் ‘ரிப்ளெக்ஸ் (Reflex) என்னும் அச்சகத்தையும் ஜீவா பதிப்பகத்தையும் நிறுவி, நிழல் என்னும் இதழினையும் வெளியிட்டு கடல் கடந்த நாட்டிலிருந்து பணிபுரிகின்றமை தக்க சான்றாகும்.
ஈழத்துப்பூராடனார் தமிழகம், இலங்கை முதலான நாடுகளில் வெளிவரும் வாராந்த, மாத இதழ்களில், நினைவு மலர்களில், கவிதை, கதை ஆய்வுக்கட்டுரை களை வரைந்தவர். "கதிர்வள்ளிச் செல்வன்” என்னும் புனைபெயரில் ஆக்கங்களை வெளியிட்டவர். இவர் இலங்கையில் வாழ்ந்தபோது மனோகரா அச்சகத்தில் பல அரிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். தாம் பல நூல்களை எழுதியதோடு
20

நின்றுவிடாமல் சிறந்த நூலாசிரியர்களை எழுதத் தூண்டியவர். இவரது பணிகளுள் முதன்மையானது கிரேக்க இலக்கியங்களைப் பாட்டுவடிவில் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்துள்ளமையாகும். இவர்தம் மொழியாக்கம் கிரேக்க காவியங்களின் மூல நூலைத் தழுவி, தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் எழுதப்பட்டுள்ளன. கிரேக்கக் கவிஞன் ஹோமரின் இலியட் காவியத்தினை 2400 வெண்பாக்களாகவும், ஒடிசி காவியத்தினை 2400 விருத்தப்பாவிலும் எழுதியுள்ளார். மேலும் கிரேக்க நாடகங்களை 12 தொகுதிகளாகத் தமிழில் வெளியிட்டுள்ளார். இவற்றுள் சொபிகொலகின் நாடகங்கள், அயிலிசியகின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
ஈழத்துப் பூராடனார் முத்தமிழையும் அறிந்தவர். தாம் அறிந்த, உணர்ந்த தமிழின் சிறப்பினை உலகத்தினர் அறிய வேண்டும் என்னும் நோக்கில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ் எழுத்துக்களின் உறுப்பு இலக்கணம் உணர்த்தும் எழுத்துநூல், தமிழ் எழுத்து சீர்திருத்தச் சிந்தனைகள், மின்கணனித் தமிழும் எழுத்துச் சீர்திருத்தமும், மின்கணனிக்கு எழுத்துச் சீர்திருத்தம் தேவைதானா? என்னும் நூல்களை வெளியிட்டும், சிறந்த இலக்கியப் படைப்புகளைப் படைத்தும் கடல் கடந்த நாடுகளில் தமிழையும் இலக்கியத்தையும் வளர்ப்பதற்கு அரும்பெரும் பங்காற்றியவர் இவர் என்பது கண்கூடு.
விடிவு மலரவேண்டும்
நிரந்தர யுத்தநிறுத்தம் தீர்வதனை நோக்கிய நிலைமாறாக் கொள்கை விளக்கம் தீர்வாம் சமாதானத்தை - அடைய பகிர்ந்திடும் புரிந்துணர் வு தடையினை நீக்கவேண்டும். பலதரப்பும் பரிவு தெரிவிப்பு தமிழருக்கு விடிவு மலரவேண்டும்.
நிலைமையினை விளங்கின நிலைகள் இரண்டு
புரிந்து கொண்டே புரிந்துணர்வில் இட்டனர் கையெழுத்து.
கரவையூரான் கரவெட்டி
------------------------- அன்பார்ந்த வாசகர்களே. சந்தா விபரம்
s * அரி ஞானம சஞ ಐಹ பற்றிய தனிப்பிரதி ரூபா 15/. கருத்துக்களைக்களையும் சஞ்சிகை வருடச்சந்தா: ரூபா 180/- யின் தரத்தை மேம்படுத்த உங்க (தபாற்செலவு உட்பட) ளது ஆலோசனைகளையும் அறி சந்தா காசோலை மூலமாகவோ
யத் தாருங்கள். மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. அனுப்பவேண்டிய பெயர்,
o get but it a. ar anfìa MYM WYN Y YA y A V TY Yo yr A A TA T உங்களது படைப புகள்!ன .GNANASEKARAN
மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் 19/7, PERADENIYA ROAD, கிய தரத்தை மேம்படுத்துங்கள். KANDY.
21

Page 12
O
IT 6 cold - ராணி சீதரன் - திருகோணமலை
கல்லெறிந்து கலங்கிய குட்டை யாய் மனங்குழம்பியிருந்தாள் ஆரணி. அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்பக் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க, மறக்க முயற்சித்தும் முடியாது தோற்ற வளாயப் பாடக்குறிப்பு எழுதுவதில் மனதை ஈடுபடுத்த முனைந்தாள்.
“கல்லொன்று வீழ்ந்து கழுத் தொன்று வெட்டுண்டு
மல்லொன்று நேர்ந்து மனுசர் கொலையுண்டார்”
யாழ்ப்பாணத்தில் வேரோடிப் போயிருந்த சாதியம் பற்றி மகாகவியின் சித்திரிப்பு எவ்வளவு உயிரோட்டமாக உள்ளது என வியந்தாள்.
“டேய் சின்னவன், நாளைக்கு ஒலை வெட்டவேணும் வேலியெல்லாம் விழுந்து போய்க்கிடக்கு. தலைவாசலும் மேயவேணும் வருவியோ, இல்லையோ. சொல்லு?”
அவளின் பேரனின் கேள்விக்கு தோளில் கிடந்த துண்டை உதறிக் கைக்கு மாலையாக்கிக் கொண்டே "வராமல் எங்க போறது பெரியவர்?" எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறு கிப் போய்நிற்கும் சின்னவனைப் பார்க் கும்போது அவளுக்குள் எத்தனையோ கேள்விகள் எழும். பனையோலையில் அழகான பிளா கோலி வைத்திருப்பான்; அம்மா கொடுக்கும் உணவை அதில் வைத்துச் சாப்பிடுவான். நன்றாகக் கழுவி விட்டுத் தண்ணிரையும் அதற்குள் ஊற் றியே குடிப்பான்.
வீட்டு வாசல்படியின் கீழே சின்ன வன் இருப்பான்.
"ஏன் இப்படி மண்ணுக்குள்ள இருக்கிறியள்?, நாங்கள் இருந்தா அம்மா அடிப்பா. நீங்கள் இருக்க
22
உங்கட அம்மா அடிக்கமாட்டாவே வீட்டுக்கு மேல வந்திருங்கோ நிலத்தில இருந்து சாப்பிடக்கூடாது" இப்படிப் பல கதைகள், கேள்விகள் துருவித் துருவிக் கேட்பாள் ஆரணி.
கோடிப்புறத்தில் சின்னவனின் ஒலைப்பிளா தொங்கிக் கொண்டிருக்கும். கண்ணில் தட்டுப்படும் போதெல்லாம் அதையே வெறித்துப்பார்ப்பாள். ஒரு முறை சுற்றும்முற்றும் யாரும் கவனிக் கிறார்களா என்று பார்த்துவிட்டு அதனை எடுத்தாள் ஆரணி. சின்னவன் குந்தி யிருப்பதைப்போல இருந்து கொண்டு அதற்குள் தண்ணிரைவிட்டுக் குடித்தாள். இதில் என்ன சுகம் இருக்கிறது? சின்னவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்ற அவளின் சிந்தனை, முதுகில் படிர் என்று விழுந்த அடியால் தடைப்பட்டது.
"நீ கீழ் சாதியேடி. மாறிவந்து பிறந்திட்டாய் போல”
ஒலைப்பிளா சின்னையா அப்பு வின் காலுக்கடியில் உருமாறிக்கிடக்க பயத்திலே நடுநடுங்கிய ஆரணி, அடக்க முடியாது கால் வழியே ஒடிய சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாதவளாய் அழுதபடி நின்றாள்.
“சின்னப் பிள்ளையை ஏன் இப்படி அடிக்கிறியள், பயந்து காச்சலெல்லே வரப்போகுது?” மாமனாரைக் கடிந்து கொண்ட தாய் ஆரணியை அரவணைத் தாள்.
"ஏன் அம்மா சின்னவன் குடிக்கிற பிளாவில நாங்கள் குடிக்கக்கூடாதே?, அவரும் மனுசன் தானே?"
"அவன் அப்புவுக்கு அதெல்லாம் பிடிக்காது. இனிமேல் அப்படிச் செய்யாதே" அம்மா வின் உபதேசமும் அவளுக்குப் புரிய
 

வில்லை.
எழுபத்தைந்து வயதுசென்ற இந்தக் கிழவனுக்குச் சின்னவனை ஆட்டிப்படைப்பதில் எவ்வளவு இன்பம். இந்த மனுசன் ஏன் இப்படி அடங்கிப் போகிறதோ என யோசிப்பாள் ஆரணி. புதுவருஷப்பிறப்பு, பொங்கல், தீபாவளி, என்றால் சின்னவன் மிகவும் தூய்மையாகக் கோயிலுக்குப்போய் வீயூதி சந்தனம் முகத்திலே பொலிந்து விளங்கப் “பெரியவர்" என்று குரல் கொடுத்துக்கொண்டே, தோளிலிருந்து துண்டை எடுத்து இடுப்பிற் கட்டிக் கொண்டு வாசற்படியில் உட்காருவான். சின்னவனின் வெள்ளைவேட்டி அழுக் காகப் போகுதே என்ற கவலையில் ஆரணி அங்கும் இங்குமாக நடப்பாள். "எங் காலயடா சினி னவன் வாறாய்? பொட்டுப்பிறையோட கோயி லுக்கும் போய்விட்டாய் போல”
“ஓம் பெரியவர், வேறை என்னத் தைச் செய்யிறது?”
"இந்தா முன்னம் முன்னம் வந் திருக்கிறாய் பிடி"
அப்பு கொடுக்கும் காசை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டே "பெரியவரின் கையால வாங்கினால்தான் எனக்குப் பத்தியப்படும்" அசட்டுச் சிரிப்புச் சிரிப்பான் சின்னவன்.
முட்டாள்தனமான அடக்குமுறை களுக்கு அடிபணிந்துபோன மனித வர்க்கங்களின் இதயக்குமுறல் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தபோது இனம்புரியாத வலி இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து உறுத்துவது போல உணர்ந்தாள் ஆரணி.
"தேநீர் கூட ஊத்தத்தெரியாத என்ர பிள்ளையைத் தட்டந்தனியக் கொண்டு போறியள். அணைதுணை யாய் இருந்து கண்கலங்காமல் வைச் சிருங்கோ.”
மகளைப் பிரியும் வருத்தத்தில் ஆரணியின் தாய் மருமகனிற்கு
23
அறிவுரை கூறினாள்.
"தேத்தண்ணி வைக்கத் தெரியாத வவைத் தந்திருக்கிறியள்; வந்துபாருங் கோவன், எப்படிச் சமையற் கலையிலே கரை கண்டிருப்பாவென்று" மருமகன் சவால் விட்டார்.
உற்றார், பெற்றார், உறவு, சூழல் அனைத்தையும் விட்டு, கையில் உடுப்புப் பெட்டியோடு கணவனின் பின்னே வந்தாள் ஆரணி.
கணவனின் தொழில் காரணமாக திருகோணமலையில் உள்ள கிராமம் ஒன்றில் அரசாங்க விடுதியில் புதிய வாழ்க்கை ஆரம்பமாகியது. பிரதான வீதியில் இருந்து ஒருமைல் தூரம் உள்ளே விடுதி அமைந்திருந்தது. சுற்றி வரக் காடு, குரங்குகளின் அட்டகாசத் திற்கெல்லாம் இடம் கொடுத்து ஓங்கி வளர்ந்து கிடந்தது. கடற்கரையை அண்டியிருந்த வீட்டின் சூழல் அமை விடம் எல்லாமே ஆரோக்கியமானதாக இருந்தாலும் எட்டுச் சிங்களக் குடும்பத் தோடு இவர்கள் மட்டும் ஒன்பதாவது தமிழ்க் குடும்பமாக இணைந்திருந் தார்கள். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள மொழிதெரியாத பிரச்சினை ஒருபுறம், இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை மறுபுறமு மாக வருந்தியிருக்கிறாள் ஆரணி.
கால ஓட்டத்தில் அவள் வாழ்க் கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற் பட்டன. குழந்தைகள் கிடைத்து, ஆரணிக்கு ஆசிரியராக வேலை கிடைத்து, பொருள் பண்டம் என்று வசதி களைத் தேடிக்கொண்டனர்.
அவளின் உதவியற்ற வாழ்க் கைக்கும், குழந்தைவளர்ப்புக்கும் பொருத்தமாக அமைந்த அந்தக் கிராமத் துப் பள்ளிக்கூடமும் அதன் அதிபர் சகாதேவனும் என்றும் நன்றியுணர்வோடு நினைவுகூரத்தக்க வகையில் அமைந் தது அவளின் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

Page 13
"அக்கே ஒயா யண்ட, புத்தாவை அப்பி பலன்னங்கோ"
"அனெக்ஸ்"சாக அமைந்திருந்த மறுபுறத்தில் உள்ள வீட்டில் இருந்த கல்யாணி விக்ரமரத்தின தான் அவர் களின் இரண்டாவது குழந்தையை வளர்த்தவள் என்று கூறவேண்டும். தடுப்புச்சுவர் ஒன்றைத்தவிர அவர் களிடையே எவ்வித ஒளிப்பு மறைப்பு மின்றி உணவு தொடக்கம் பொழுது போக்குவரையும் அன்னியோன்னியமாகப் பழகி வந்துள்ளார்கள்.
ஒருமுறை பக்கத்துவிட்டில் இரண் டாவது குழந்தையை விட்டுவிட்டு அவசர அலுவலாக வெளியே போய்விட்டுச் சற்றுத் தாமதமாக வந்திருந்தார்கள். கல்யாணி வீட்டில் உறவினர்களோ, நண்பர்களோ தெரியாது வந்திருந்தனர். ஒரே ஆரவாரமாகக் காணப்பட்டது.
"குழந்தையைக் கூட்டிக்கொண்டு வாங்கோ" கணவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு சென்றாள் ஆரணி அங் குள்ள பிள்ளைகளோடு ஏதோ தகராறு ஏற்பட்டிருக்கவேண்டும். சத்தமிட்டுக் குழந்தை அழும் ஓசை கேட்டது. கூடவே,
"எப்பா புத்தே. புத்தாகே அம்மா அவில்லா” கல்யாணி சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
வயதான பெண், “கெளத துவே கல்யாணியிடம் வினவினாள்.
"அல்லப்பு கெதற அக்காகே புத்தா” கல்யாணி சொன்ன வார்த்தை கள் இன்றுவரையும் ஆரணியின் காது களில் ஒலித்துக் கொண்டுதானிருக் கின்றன.
நேற்றைய தினம் 'ஸ்ராவ்றும்'ல் நடந்த உரையாடலில் வெளிவந்த வார்த்தைப்பிரயோகங்களை ஒப்பிட்டுப் பார்த்தாள். எங்கோ தொலைதுாரத்துக் கப்பால் பலவற்றைத் தொலைத்துவிட்ட வெறுமை அவளை என்னவோ செய்தது. "ஆரணி ரீச்சர் வீடு வாங்கிப்
போட்டியளாம்; எவ்வளவு முடிஞ்சது? "ஓம் சுதா, பத்து முடிஞ்சுது. நிலம் ஒண்டேகால்படி ஐந்து பேர்ச்; வீடும் புதுசாக் கட்டினது அதுதான் பத்துக் கொடுத்தம்"
“ஒரு பேர்ச் ஒண்டேகால் என்று சொல்லுகினம். யாரால இவ்வளவு விலை போனது?; வந்தான் வரத்தான்கள் வந்து, ஊரிலை நிறைஞ்சு, யார் ஆர் என்று தெரியேல்ல. காணி மட்டுமே விலை கூடியிருக்கு" குத்தலாகக் கதை சொன்னாள் கலாரீச்சர்.
"ஏன் கலா அப்படிச் சொல்லி றியள்? அடுத்தவனின் மனம் புண்படும்படி கதைக்கிறது வடிவில்லை” ஆரணி அமைதியாகப் பதில் சொன்னாள்.
“முன்பெல்லாம் காணிவிலை இப் படிப் போனதே? கோயிலுக்குப் போனால் புதிய முகங்கள், மார்க்கெட்டிற்குப் போனால் புதிய முகங்கள். யாரென்றே தெரியவில்லை. மீன்காரன்கூட நான் விலை கேட்டுக்கொண்டு நிற்கிறன். யாரோ வெளிநாட்டால வந்தவர்களிற்கு அப்படியே இங்கே எல்லாமே விலை. யாரால கூடியது? யோசிச்சுப் பாருங்கோ. சும்மா வரு வினம். வீடு வாசல் பொருள் பண்டம்
கொடுக்கிறான்.
V) va? () -- V'L'''
24
 

என்று வாங்குவினம். பிறகு “பேர்ச்' ஒண்டேகால் என்று என்ன கதைக்கிறது? “கலா, இந்தப் பிரச்சினைக்குப் பிறகு இஞ்ச மாத்திரமல்ல மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு எல்லா இடத்திலும் நிலம் விலையேறிவிட்டதுதான். அதற்கு நீ ஏன் கோவிக்கிறாய்?” மலர் ரீச்சர் கலாவை ஆறுதல் படுத்த முயன்றாள். "கலாரீச்சர் தேவையற்ற கதை களைக் கதைக்காதையுங்கோ; எனக்கும் கதைக்கத்தெரியும்"
"என்ன கதைப்பீர்? என்ர புரு சனைப் பழித்தாலும் பொறுப்பன்: ஆனால் நான் பிறந்த மண்ணைக் குறை சொன்னால் பிடிக்காது. ஒரு கோப்பை யில மனுசனையும் நாயையும் உண்ண வைச்சால் நாய் தன்ர குணத்தைக் காட்டத்தான் செய்யும் அதேபோலத் தான்." அவள் சொல்லி முடிக்க வில்லை.
“கலா. நிறுத்து. தயவுசெய்து கதைக்காத.” ஆரணியின் உடம்பெல் லாம் நடுங்கியது. அந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே சென்றாள்.
அந்த நேரத்தில் இருந்து இன்று வரையும் ஆரணி தனக்குள்ளே பல கேள்விகளை எழுப்பினாள்.
இருபது வருடங்கள் எவ்வளவு நீண்ட காலப்பகுதி. இங்கு வந்து எத் தனை சிறந்த மாணவர்களை உருவாக் கியிருக்கிறாள். வழிகாட்டியாக இருந் திருக்கிறாள். இவையெல்லாம் அர்த்த மற்றவைதானா? அப்படியென்றால் நானும் எனது பிறந்த மண், உறவு என் றெல்லாம் யோசித்திருக்க வேண்டுமா? கிராமப்புறத்தில் காட்டுப்பகுதியில் இருந்த அரசாங்கக் 'குவாட்டஸ்சில் சிங் களக் குடும்பங்களோடு ஏழு வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள். தமிழன் என்ற பேதமே காட்டாது பழகிய அனுலா, நிர்மலா, மாலா, கல்யாணி அனைவரின் முகங்களும் கண்முன்னே மாறி மாறித் தெரிந்தன.
*ஆரணி என்ன ஆழி நீத யோசனையில் இருக்கிறாய்?” மலர் ரீச் சரும் அவள் கணவனும் வந்தார்கள்.
"மலரே வா, வா. என்ன இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு?”
"அடிச்ச காத்தோட அள்ளுப் பட்டுவாறம்; இல்லாட்டி வாறதில்லைத் தானே"
“சரி சண்டைக்கு வராத இரு, இருங்கோ அண்ணன்” கதிரையைக் காட்டினாள் ஆரணி. சிறிது நேரம் மெள னம் நிலவியது. ஆரணியே பேச்சைத் தொடங்கினாள்.
"மலர், நான் றான்ஸ்வர்'க்குப் போடப் போறன். இங்க இருக்கவே விருப்பமில்லாமல் இருக்கு. இவ்வளவு காலமும் நான் பிரிச்சுப் பார்க்கேல்ல. இப்ப யோசிக்க வேண்டியிருக்கு. இரண் டுங்கெட்டான் மாதிரி நிற்கிறதைவிட எங்கட இடங்களில் போய்ச் சேவை செய்தால் நன்றியுணர்வாவது இருக்கும். கலா ரீச்சரின் கதைகளைக் கேட்டபிறகு நிறைய யோசிக்கிறன்".
“யாழ்ப்பாணத்துக்குப் போற பாதையுமெல்லே திறக்கப்போறாங்க. போறதும் சுகம். வீட்டை என்ன செய்யப் போறாய் விற்கப்போறியே அப்ப பழைய படி காணி எல்லாம் விலைகுறையும் தானே. பைத்தியம், கலா ரீச்சர் பொறா மையில தான் அப்படிக் கதைச்சவ சிலரின்ர மனப்பாங்குகளில இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை. பிறகு எப்படி பிள்ளைகளிற்குப் படிப்பிக்க முடியும்? எல்லாம் ஒவ்வொரு அனுபவம் என்று பேசாமலிரு.”
"மலர்! இப்படி எத்தனை அனுப வங்கள் வந்தாலும் நாங்கள் மாறப் போறதே இல்லையடி".
"புத்தருக்குப் போதிமரம் கிடைச்ச மாதிரி உனக்கும் கலா ரீச்சர் கிடைத் திட்டாள்" மலர் சத்தமிட்டுச் சிரிக்கிறாள். அவள் சிரிப்பதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரணி

Page 14
நெற்றிக்கணி
நால் விமர்சனம்
நூல் : தீவகத்து ஊமைகள் எழுதியவர் : சு.முரளிதரன்
மலையகத்தில் 1965 முதல் இடைவெளி விட்டும், தொடர்ந்தும் ஏறத் தாழ இருபதுக்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மலைய கத்துக்கே உரித்தான தனித்துவமான வாழ்வியல் அம்சங்களைப் புலப்படுத்து வதில் வெவ்வேறு முறைகளில் இத் தொகுதிகள் பங்களிப்பினை நல்கி வந்துள்ளன. இவ்வகையில், மலைய கத்தில் பெயர் சுட்டக்கூடிய ஒரு கவிஞ ரான சு.முரளிதரனின் தியாக யந்திரங் கள் (1986), கூடைக்குள் தேசம் (1988) ஆகிய கவிதைத்தொகுதிகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கவிதைத்துறையில் நீண்டகால அஞ்ஞாதவாசத்தின் பின் அவரது தீவகத்து ஊமைகள் (2001) என்ற கவிதைத்தொகுதி வெளிவந்துள் ளது.
இத்தொகுதியில் பத்துக்கவிதை கள் இடம்பெற்றுள்ளன. முதலாவது கவிதையான திரும்பிப் பார்க்கவேண்டிய தியாகங்களும், இறுதிக் கவிதையான தீவகத்து ஊமைகளும் மலையகத்தில் உயிர்நீத்த தியாகிகள் பற்றியும், அவர் களது தியாகங்கள் பற்றியும் திரும்பிப் பார்க்கவைக்கும் கவிதைகளாக விளங்கு கின்றன. பிரியத்தான் வேண்டுமா உரிய பூமியை, கையெழுத்தே தலையெழுத் தாகி, உயிர்க்கும் நாட்களும் மரிக்கும் நாட்களும், மெளனத்துக்கு வயது 160, விரியுமொரு புள்ளி, தோட்டத்து துயில் பொழுது முதலான கவிதைகள் மலை யக வாழ்வியலின் வெட்டுமுகத் தோற்றத் தைக் காட்டுவனவாக விளங்குகின்றன.
வைர இருதயத்துக்குக் கறுப்பு இமயம் என்னும் கவிதை, நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது. சில கவிதைகளில் ஆங்காங்கே கவிஞ ரின் சிறந்த படிமங்களைத் தரிசிக்க முடி கிறது.
இந்நூலின் பிற கவிதைகளோடு ஒப்பிடும்போது, இறுதிக் கவிதையான ‘தீவகத்து ஊமைகள்’ கவித்தரம் குறைந்து காணப்படுகின்றது. மலையகத் தியாகிகள் பற்றிய ஆவணம் என்ற அளவிலே அது தனது பணியை முடித்துக் கொண்டுவிட்டது.
முரளிதரனின் முதல் கவிதைத் தொகுதியான தியாக யந்திரங்கள் என்ற நூலோடு இத்தொகுதியை ஒப்பிடும் போது, முதல் நூல் கவிதைத் தரத் திலும், கனதியிலும் சற்று உயர்ந்தே நிற்கிறது. நீண்டகாலத்தின் பின் வெளி வந்த முரளிதரனின் கவிதைத்தொகுதி என்ற முறையில் நோக்கும்போது, இந் நூலைக் கொண்டு அவரின் வளர்ச் சியை எடைபோட முடியவில்லை.
நூலில் ஆங்காங்கே இடம்பெற் றுள்ள அச்சுப்பிழைகள் வாசகரை முறைத்து முறைத்துப் பார்க்கின்றன.
இதைவிடச் சிறந்தவொரு கவிதைத்தொகுதியை எதிர்காலத்தில் முரளிதரனிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
毒 兽 豪
நூல ; என் தேசம் எழுதியவர்: மடவளை
அன்சார் எம்.ஷியாம் புதிய தலைமுறையினர் பலர்
புதுக்கவிதைத்துறையில் அதிக ஈடுபாட்
26

டோடு உழைத்துவருகின்றனர். அவர் களிற் பலர் புதுக்கவிதைக்கு வெகு தொலைவில் இருந்துகொண்டு "புதுக் கவிதை” எழுதுகின்றனர். சிலரே புதுக் கவிதையின் அருகில் நின்று புதிய படைப்புகளைத் தருகின்றனர். அத் தகைய சிலருள் ஒருவராக மடவளை அன்சார் எம்.ஷியாம் விளங்குகின்றார். அவரின் என் தேசம் (2000) என்ற புதுக் கவிதைத் தொகுதி இதனை உணர்த்து கின்றது.
"என் தேசம்" என்ற உணர்வுடன் தமது கணிசமான கவிதைகளைப் படைத்துள்ள வழியாம், தம்தேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளையும் தம் படைப்புத்திறன் மூலம் இனங்காட்டி யுள்ளார். எமது நாட்டில் சமாதானமும், சமத்துவமும் நிலவவேண்டும் என்பதில் தாம்கொண்ட ஆழ்ந்த அக்கறையைக் கவிதைகள் மூலமாக அவர் புலப்படுத்து கின்றார். ‘என் தேசம்’ என்ற கவிதை, தமது தேசம் பற்றிய உணர்வுகளை கவிதா ஆவேசத்துடன் வெளிப்படுத்தும் ஒரு நல்ல படைப்பு.
மலையகத் தொழிலாளரின் அவலநிலையைக் கவிஞர் "குளிரே. என்ற கவிதையில் புலப்படுத்துகின்றார். “தேர்தல் நாள் என்ற கவிதை, ஜனநாய கத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப் படுவதை அங்கதச் சுவையுடன் சொல் கிறது.
இவை தவிர, சில புதிய விடயங் களையும் தமது கவிதைகளின் பொருட் பரப்பினுள் கொண்டுவர முயற்சித் துள்ளார் கவிஞர். மரணத்தின் வாய் மொழியாக அமைந்த "தோல்வி என்ற கவிதை, கவிஞரின் திறமையை வெளிப் படுத்தும் கவிதைகளுள் ஒன்றாகும். கவிஞரின் கவித்துவத்தை உணர்த்தும் கவிதைகளில் ஒன்றாகக் 'காக்கா" என்பது விளங்குகிறது. வழியாமின்
அழகியல் உணர்வைப் புலப்படுத்து வதாக எல்லாம் எனக்காக அமைந் துள்ளது. இத்தொகுதியில் இடம்பெற் றுள்ள அந்த வெளிச்சம் அருகில்தான், நெஞ்சை மட்டும் கேட்காதே, எளிய தோழா எழுந்து வா, விறகை எடு, நாளாந்த அவஸ்தை, காதல் உறுதி, அன்புடன் நண்பனுக்கு, கவலை, மெழு குவர்த்தி ஆகியவையும் கவனத்தைக் கவரும் தரமான கவிதைகளாக விளங்குகின்றன.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் கவிஞரின் கவித்து வத்தை இனங்காட்டும் முறையிலும், கலா நேர்த்தியுடனும் விளங்குகின்றன. சில கவிதைகள் கலைத்துவமும், கலைத்தரமும் குன்றிக் காண்ப்படு கின்றன. ஆயினும், எதிர்காலத்தில் இந்நாட்டில் பேசப்படும் கவிஞர்களுள்
ஒருவராக மடவளை அணி சார்
நிற்கிறது.
( நெற்றிக்கண்
நெற்றிக்கணர் பகுதியில்
நூலின் இரு பிரதிகளை
பற்றிய அறிமுகக்குறிப்பு புதிய
ரது என்தேசம் தொகுதி கோடி காட்டி
வந்து சேர்ந்திருக்கிறது.
எழுத்தாளர்களே,
இடம்பெற வேணி டுமெனில்,
மட்டுமே அனுப்பினால், நூல்
எம்.ஷியாம் விளங்குவார் என்பதை, அவ
இளம்பிள்ளை வேளாண்மை வீடு
விமர்சனம்
உங்களது நூல் விமர்சனம்
அனுப்பி வையுங்கள்.ஒரு பிரதி
நூலகம் பகுதியில் இடம் இபறும். J

Page 15
и ота бr
பேசுகிறார்.
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,
சென்ற ஆண்டு யூலையில் நான் எழுதியதற்கு எதிர்வினை என்ற பேரில் இரா.வை.கனகரத்தினம் என்பார் எழுதியுள்ள பேராசிரியர் சதாசிவம் பற்றிய இரங்கற் சொற்களும் என் எழுத்துக்குத் தொடர்பற்ற விளக்கங்களுங் கண்டேன். நான் சதாசிவத்தின் பத்தாம் பசலித்தனமான கருத்துக்கள் என்று சொன்னது பற்றிப் பின்வரும் விளக்கம் போதுமானது. மு.சண்முகம்பிள்ளை அவர்களது தொகுப்பில் வந்த தமிழ் - தமிழ் அகரமுதலியில் பத்தாம்பசலி என்பதன் பொருள்,
காலத்துக்கொவ்வாத பழஞ்சிந்தனையுடையவர் என்று தரப்பட்டுள்ளது.
சி.சிவசேகரம்.
எனது ‘ஆய்தமிழ் நூலினை ஆய்வு செய்த நக்கீரன் அவர்கள் அதில் காரணம் என்ற சொல்லுக்கு மாற்றீடாக "காரணி எனும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளமை தவறு என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி விளக்கம் தரவேண்டியது எனது கடமை.
காரணம் எனும் சொல்லில் இருந்தே காரணன் (அன்’ விகுதியோடு) எனும் சொல்லும், காரணி (இ விகுதியோடு) எனும் சொல்லும் உருவாக்கப்பட்டன. தமிழ் இலக்கண இலக்கியத்தில் இந்து சமயத்துக்கு இருந்துவரும் செல்வாக்கை உணர்த்த இந்த இரண்டு சொற்களுமே போதுமானவை.
என்னைப் பொறுத்தவரையில் ‘காரணி எனும் சொல் காரணத்தை உடையது எனும் பொருளிலேயே எனது நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘விஞ்ஞான வெளிச்சத்தில் சொல் ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் காரணி எனும் சொல்லுக்கு 'உமை' என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமென்பது எந்தவிதத்தில் பொருத்தமுடையது என்று தெரியவில்லை.
மேலும், காலத்துக்குக்காலம் சொற்கள் தமக்குரிய பொருளை இழப்பதும், வேறு பொருளைக் கொள்வதும் ஒன்றும் புதுமை அல்ல. (உதாரணம் :- கதலி) காரணம், காரணி, ஏது - இவை எல்லாம் ஒத்த கருத்தை உடைய சொற்கள் என்பது எனது அபிப்பிராயம்.
எனது நூலைச் சற்று விரிவாக ஆய்ந்த நக்கீரன் அவர்களுக்கு எனது நன்றி. வாகரைவானன். 21 ஞானத்தின் சிறுகதையில் திக்வல்லை கமாலின் சிறுகதை வழக்கமாக அவரின் தென்னிலங்கை மக்களின் வட்டாரச் சொல்லழகைப் புலப்படுத்தும் கதை. 'தெளிவத்தை ஜோசப்பின் அநுபவங்கள் அற்புதமானவை, ஆழமானவை. அவர் கடந்து வந்த இலக்கியப்பாதை கரடு முரடான லயத்துப்பாதைகள் போலவே, கண்முன் விரிகின்றன.
"ஒரு குழந்தை இறந்துவிட்டது கவிதையை சி.சிவசேகரம் ஏன் மொழி பெயர்த்து, ஞானத்திற்கு அனுப்பினாரோ தெரியாது. சிவசேகரத்தின் அண்மைக்கால
28
 
 

மொழிபெயர்ப்பில் இடறும் கவிதை இறுக்கம், இக்கவிதையிலும் நெருடலாகவே தெரிகிறது. ஓட்டமாவடி அறபாத்.
பெப்பிரவரி 21 ஞானத்தில் 'வாசகர் பேசுகிறார் பகுதியில் ஒட்டமாவடி அறபாத், அவர்களால் கூறப்பட்ட மாவை வரோதயனின் மரம், மதம், மனம் எனும் கவிதை பற்றிய சர்ச்சை, மனதில் நெருடலை உண்டு பண்ணியுள்ளதெனக் கூறித்தானாக வேண்டும். மேற்படி அதே கவிதை 'தினகரன் வாரமஞ்சரியில் தலைப்பு மாற்றி எழுதியதாக மாவைமேல் “மாறாட்டக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எது எப்படியாகிலும் இரு கவிதைகளுக்கும் மாவையே சொந்தக்காரன் - இதில் ஐயப்பட எதுவுமில்லை. இன்றைய இலக்கியத் தளத்தில் எழுத்தாளர்கள் எதிர் நோக்கும் பெரும் பிரச்சினை, பிரசுர தாமதங்களும், பிரசுர தகமைபற்றிய முடிவு களும். குறித்த ஒரு பத்திரிகைக்கோ, சஞ்சிகைக்கோ, தமது ஆக்கங்களை அனுப்பிவிட்டு, நாடியில் கைவைத்து நாள்தோறும் எதிர்பார்த்துக் கிடப்பது சகஜமாகி விட்டது. ஆக்கம், பிரசுரிக்கத் தகுதி பெற்றுள்ளதென அல்லது தகுதியற்றதென எந்தப்பத்திரிகையுமே அந்த எழுத்தாளனுக்கு அறிவிப்பது கிடையாது. தமது பத்திரிகையில் இடம் மிகுதியுறும்போது, அல்லது வேறு ஆக்கங்கள் கிடைக்கப் பெறாதபோதும், அல்லது அதற்குப் பொறுப்பாக இருப்பவருக்கு ‘மூட் வரும்போதும், ஏதோ ஒரு அசமந்தப் போக்குகளுக்குள் சிக்கித்தவித்து, ஆடி அசைந்து தாமதமாகி என்றோ ஒரு நாள், எதிர்பாராத நாளில் வெளியாகும். இதன் மத்தியில் தன் ஆக்கம் வெளிவராது என அனுப்பிய பத்திரிகை சார்பாக தீர்மானம் செய்து கொண்டு வேறொரு பத்திரிகைக்கு அனுப்புவது வழமையானது - தவிர்க்க முடியாதது! இந்தத் துயர அனுபவம் எந்த எழுத்தாளர்களுக்கும் ஏற்படவில்லை யென்றால், என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். இதற்கு ‘மாவையும் விதிவிலக்கல்ல! தன் பிள்ளைக்கு வீட்டில் ஒரு பெயரும், பள்ளியில் ஒரு பெயரும் வழங்குவது போல மாவையும் நடந்திருக்கலாம். அதைவரட்சி என்று அர்த்தங்கொள்ளக்கூடாது. தன் பிரசவத்தை, நாலுபேர் அறியும் அச்சாக வெளிவருவதைவிட வேறு என்ன உவகை உலகில் உண்டு? ஏன்? இம்மாத (பெப்பிரவரி) ஞானத்தில் பலராலும் அறியப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் தெளி வத்தை ஜோசப் அவர்கள் “எனது எழுத்துலகம்' என்ற ஆக்கத்தில் அந்த உவகை பற்றிக் குறித்துள்ளதை முன் கொணர விரும்புகிறேன். இருப்பினும் இவைகள் நீங்கச் செய்வது யார் கரங்களில்? ஆக்கங்கள் கிடைத்ததும் உரிய பத்திரிகைத் துறையினர் குறித்த தினங்களுக்குள் ஆக்கம் பிரசுரிக்கத்தகுதி பெற்றது பற்றி எழுத்தாளனுக்கு அறிவிக்கவேண்டும். இதை மீறி எந்த எழுத்தாளனும் "ஆலை பாய்ந்து ஒடமாட்டான். இந்த மூலங்களை நெறிப்படுத்தாதவரையில் பல 'மாவைகள் உருவாகுவார்கள் என்பது திண்ணம். அதுவரையில், பல பத்திரிகைகளிலும் அவரது காலத்தின் தேவையான கவிதைகள் வெளிவரட்டும். சிறையிடவேண்டாம். கனகசபை - தேவகடாட்சம், திருகோணமலை. (எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை ஞானத்திற்கு அனுப்பும்போது சொந்த முகவரியிட்ட, தபால் முத்திரையுடன் கூடிய தபாலுறையையும் சேர்த்து அனுப்பிவைத்தால், ஆக்கம் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை இருவாரங்களுக்குள் அறியத்தருவோம் - ஆசிரியர்.)
ஒரு கவிதையை நகலெடுத்து தலைப்பை மாற்றி வெவ்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கும் அளவுக்கு கவிதா வறட்சியோ, புகழாசையோ 29

Page 16
இதுவரை எனக்கு ஏற்படவில்லை. 'இம்" என்றாலும் 'அம் என்றாலும் பாட இன்னும் முடியும் என நம்புகிறேன்.
கவிதை - பிரசவம் என்னுடையது. அது எவ்வளவு வேகமாக நிகழ்கிறதோ, அவ்வளவு வேகமான பிரசுரத்தையும் மனம் எதிர்பார்க்கிறது. காலப் பொருத்தம் கருதி தேசிய பத்திரிகைகளில் அதனை எதிர்பார்க்கும்போதே தடுமாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. தலைப்பு மாற்றத்துக்கும் சிலவேளைகளில் பத்திரிகை ஆசிரியர்கள் காரணமாகி விடுகின்றனர்.
அவை இருக்க, அந்தக் கவிதை என்னில் இருந்து வெளிச் செல்லும்போது அதில் தேசிய அரசியல், வர்க்க அரசியல், ஆன்மீக அரசியல் எதுவும் இருக்க வில்லை. அதற்குள் ஒரு தனிமனித அரசியல் மட்டுமே இருந்தது.
இக்கவிதை "ஞானம் ஜனவரி இதழில் வெளிவந்தவுடன் நேரிலும், தொலை பேசியிலும் சில நண்பர்கள் என்னுடன் இக்கவிதை பற்றிப் பேசினர். அவர்களும் தேசிய அரசியலை படிமப் படுத்தியதாகவே கருத்துக் கூறினர்.
ஆனால் ஓட்டமாவடி அறபாத் தொடுத்த கேள்விகள் - என்னை மீள் வாசிப்புக்கு உட்படுத்தியது. அவருக்கு எனது நன்றிகள். அவர் குறிப்பிட்டது போல் இன்னும் பல கல்லெறிகள் இந்தக் கவிதை நோக்கி வரட்டும். நான் இன் ஒனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். மாவை - வரோதயன்.
நீங்கள் வெளியிட விரும்பும் இந்தக் கட்டுரைத் தொடர் (எனது எழுத்துலகம்) எங்கள் இலக்கியக் களத்துக்கு வளம் ஊட்டத்தக்க ஓர் அம்சம். ஓர் எழுத்தாளரை நேர்காணுதல் என்பதற்கு ஈடான ஒரு புதிய இலக்கிய உத்தி எழுத்தாளர்கள் தமது இலக்கிய மூச்சை தடையின்றி வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்பான அரங்காக இது அமையும் என்று நம்புகிறேன். ஞானம் சஞ்சிகை சாதனை படைக்க எனது FUTÞSSI- வ.இராசையா, கொழும்பு - 06. "ஞானம் இப்போ இரண்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆரோக்கியமான குழந்தையின் உடலைப் பார்ப்பது போன்று இருக்கிறது ஞானம் இதழ்களைப் பார்க்கும்போது எனக்கு அதைப்பார்க்கப் பெருமையாகவே இருக்கிறது. அதன் அமைப்பு - அளவு, அட்டையின் அமைப்புமுறை எல்லாமே கச்சிதமாக இருக்கின்றன. ஞானமும் தனக்கென்றொரு வாசகர் வட்டத்தை ஈர்த்துக் கொண் டிருக்கும் என்றே நினைக்கின்றேன்.
த.சித்தி அமரசிங்கம், திருகோணமலை. "ஞானம் பற்றி நான் என்ன சொல்லவேண்டியுள்ளது. இலக்கியவாதிகள் இன்பமாய் வரவேற்பர். புதுமையும் பழமையும் கலந்து விளையாடுகின்றது; மரபு இலக்கியமும் முற்போக்கும் சிலவேளைகளில் மல்லுக்கட்டுகிறது. இவ்வாறு இருந்தால்தான் உண்மை பிறக்கும் - நியாயம் சிறக்கும், சிறந்தமனம் திறக்கும். ஆம்; வளரட்டும் உங்கள் ஞானம் - சிறக்கட்டும் நம் ஞானம்.
ஏ.பி.வி.கோமளம், மாத்தளை. சுதர்மமகாராஜனின் "புழுதி என் மனப்புழுதியைக் கிளப்பிவிட்டது. மரணத் தறுவாயில் உள்ள மனிதனின் மனவுணர்களை திறம்பட எழுதியிருந்தார். இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றது "ஞானம். நன்றிகள் L. ஆனந்தன் (ஓவியர்), யாழ்ப்பாணம்.
兽 豪 密
30

ஆளுக்கொரு கட்சி
கவிஞர் ஏ.இக்பால்
சந்தைக்குள் போனேணி சாரார்கர் சரிபார் விலையில் எந்தெந்த இடத்தில் இருப்பதினை ஏறிட்டு நானறிந்தேன்!
வியாபாரத் தந்திரங்கள் வியாபித்த மூளையுள்ளோர் ஓயாது நின்று பொருள் அள்ளுவதில் கண்ணானார்!
ஆதாயம் உள்ள பொருள்களையும் நாளை யாராரோ தேடிநிற்கத் தோதாக ஒறுக்கும் பொருளையெலாம் ஏராளம் வாங்கி எடுத்துவிட்டேன்!
மொத்தமாப் வாங்கித் தனி உரிமையுடன் ஓர் அரையில் அத்தனையும் அடக்கி நாள்ை சந்தைவிலை நிர்ணயித்தேன்
எண்மீது மற்றுமுள ஏராளம் வியாபாரி எரிந்து விழுந்ததினை எள்ளளவும் நோக்காமல் என்
ஆதாயம் மட்டில் அசையாது கண்வைத்தேன்!
மொத்தமாய் எதிர்த்தவர்கள் ஒத்து நின் றெதிர்க்கவில்லை
அத்தனை பேரும் அவரவர்க்குள் சண்டை அதனால் என்னை வெல்வது எளிதல்ல
போர்த் திறமை குறைவவரில் போராடுவதில் நான் பலுவானர் ஆர்த்தெழுந்து வென்றிடலாம் அவர்களோ ஆளுக்கொரு கட்சியிலே
சகல பாதைகளையும் |திறந்து விடுக
சமாதான தேவதை |உலா வருகின்றாள்!
'புரிந்துணர்வு'
உத்தரவு போடுகிறது
தரிசனத்திற்காகத்
தயம் செய்து மக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறுகின்றனர்.
கணிணி வெடி ஆரில் ஆவதிாற். ಬಿ? கத்துகிறார்கள்.
மண்ணில் |மறைத்து வைக்கப்பட்ட |வெடிகளின் வேர்கள்
வெளியே |கிண்டி எடுக்கப்படுகின்றன |es தொடர்கின்றது. இடையில் ஒருவர் கேட்கின்றார் இது இன்னும் எவ்வளவு காலத்துக்கு?
மக்களின் தற்காலிக மகிழ்ச்சி ஆரவாரத்தில் அந்தக் கேள்வி மறைந்து போகிறது.
சரியான மாடுகள்
சத்தம் போடுகின்றார்.
வாகரைவாணன் N. . . . . . . ... -- الي

Page 17
மனித நேசம்
சமாதானப் புறாவின்
காற்சங்கிலி تاکتريايي
விட்டதனால் கால்களை உதி ஆண்ப் பொதி . ܊ asTari یa#7 جو வானம் இத் முத் மிட` வண்ணத்சிறகு விரித்து "ಜ್ಞ வடிவரி பறக்கின்றது பாரீர் శొ 목록
يوليوتيبات କ୍ଷୋଦ
னைத்திறத் *ప్ళ
位°
ထိုနှီး...။
臀
கரடுமுரயிேருந்த geonT629.
சீராப் ந்து விடவ்ே , அன்பு வாகீேேசீக்குங்ரத்து தடையினிறிஜ்ட்பெறுகிறதே
இந்த சமாதானத்துறல் பொங்கி வழியும் ே
میبینی பெருமழையாகப் *్య நிரந்தரமாகப் பொழிவதெப்போது? என்று ஏங்குகின்றது மனித நேசம்
 
 
 
 

T. GNJANJA SEKARAN
前
எறி.மீஆத்
தம்புளுவாவை
கவிஞ