கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.04

Page 1


Page 2
வெள்ளத்தினர் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயினர்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். レ
அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே. வETக்கர்,
ஞானம் வாசகர்களுக்கு முதற்கண் எமது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இதழிலிருந்து தொடர்ந்து அதிக பக்கங்களுடனி ஞானம் வெளிவரும் என்று மகிழ்ச்சியான செப்தியையும் அறியத்தருகிறோம். ஞானத்தினர் தரத்தை மேம்படுத்து வதற்கு பக்கங்களை அதிகரித்தல் தவிர்க்க முடியாததாகிறது. வெகு விரைவில் முனர் அட்டையின் தரத்தை மேம்படுத்தவும் ஆவன செப் வோர்.
ஞானம் இதழ்களைப் பலருக்குத் தொடர்ந்தும் இனாமாகவே அனுப்பிவருகிறோம். தொடர்ந்தும் இவ்வாறு அனுப்புவது சாத்திய மில்லை. சில வாசகர்கள் சந்தாவைப் புதுப்பிப்பதில் தாமதம் காட்டு கிறார்கள். சந்தாவைச் செலுத்துவதன்மூலம் எம்முடன் ஒத்துழைக்கு மாறு அன்புடனர் வேண்டுகிறோம்.
ஞானம் கஞ்சிகை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் வாசிப் பதற்கு ஏற்று வகையில் இணையத்தில் வெளிவருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிப்பதோடு அடுத்து வரும் இதழ்கள் மேலும் பல புதிய அம்சங்களுடனர் வெளிவரும் என்ற செய்தியையும் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர் (ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி _×೪ecite.comಳ್ತAnan_more...
 
 
 

பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன் ஓவியர் நா.ஆனந்தன் கனணி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துக்ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி, G5II.(Su. -08-47.8570 (Office)
08-23.4755 (Res.) Fax - 08-23.4755 E-Mail
திருமலை வீ.என்.சந்
ஜாவாவா ாagazineடுbotmail.com
உள்ளே.
நேர்காணல் லெமுருகபூபதி ப. 24 சிறுகதை காதலே மெளனமானால். r 04
காந்தி இவ்ர்கள் போல இன்னும். 34
இஎல்லாமியச் செல்வி
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள். 10
கல்ாநிதி துரை. மனோகரன்
எனத ஏழத்துலகம் LLLLLL LLLLLL LL LLL LLLLLLLLLLL LL LLLLLLLL இல கியப் பணியில் இவர்
ந.பார்த்திபன்
கவிதைகள் மச்சானைக் கானல்லியே. s. I ரூபராணி 678 gpdódh urrursuuruuuuuuuuu.............rrrrrrrrrrrr. I யோ.அன்ரனி
பழங் கவிதை LLLLLLLLLLL LLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLL I
யாரோ ஒருவர்
மன் னித்ததுவிடு! மன்னிப் )Fab60(8 !טפ
வேதினகரன்
குருட்டுக்கணிகளும்
செவிட்டுக்காதுகளும்.
பெனி யே.சு.
õõõTä õTõ0...
J. ஆயராஜ் தேவதாசன் திரும்பிப் பார்க்கிறேன்.14 அந்தனி ஜீவா நெற்றிக்கண் . 30 நக்கீரன் வாசகர் பேசுகிறார். 36
39
AO
புதிய நூலகம் . 37
3

Page 3
காதலே மெளனமானால்.
திருமலை வீ.என்.சந்திரகாந்தி
தலைநகரிலிருந்து இருநூறு கிலோமீற்றர்களுக்கு சற்று அதிகமாக உள்ள தனது இலக்கை நோக்கிப் புறப் பட இருந்த அந்த அதிகாலை கடுகதி இரயிலில் மூலை ஆசனம் ஒன்றினைப் பிடித்து வசதியாக அமர்ந்துகொண்டேன்.
சனநெரிசல் இல்லை.
எதிரிலே என்னைக்காட்டிலும் ஓரிரு வயது அதிகம் மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் சிறிது பதட்டத்துடன் "பிளாட் பாரத்தையும் தனது கைக் கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். சாதாரண ஆடை யில் அவன் இருந்தாலும் அவனது இறுக்கமானதும் நன்கு "பொலிஷ் செய்யப்பட்டதுமான பாதணி அவனை ஒரு "பொலிஸ்காரன் என இனங்காட்டி யது.
எனது வாயைக் கட்டிக்கொண் டேன். பிரயாணத் துணைக்கு இப்படி ஒரு பாதுகாப்பு தேடினாலும் கிடைக்காது என்று மனதை நானோ என்னை மனமோ தேற்றிச் சமாதானம் செய்துகொண்டு சாந்தமாகினேன்.
இதமான பனிக்காலக் காற்றுக்கு ஈடுகொடுத்து உடல் சூடாகிக் கொண்டி ருந்தது. விழிகளை இறுக முடி தியான சுகத்தின் பேரின்பத்தை ஒத்திகை பார்த் தேன்.
இரயில் நிலையத்தின் பேரிரைச் சல் என்னை உலுப்பவும் விழிகளைத் திறந்தேன். என்ன ஆச்சரியம். என் எதிரே பளிங்குச் சிலைபோல ஒருத்தி அமர்ந்திருந்தாள். புகைவண்டி நகரத் தொடங்கியிருந்தது. அந்த "பொலிஸ்
கொடுத்து பிளாட்பாரத்தில் நடந்தபடியே அவளுக்கு இறுதிக்கட்ட அறிவுறுத்தல் களை வழங்கிக் கொண்டிருந்தான்.
4
அவன் அவளது அண்ணன் என்பது மட்டும் புரிந்தது.
இறைவன் அழகென்ற சமாச் சாரத்தை உலகெங்குமே அள்ளிச் சொரிந்திருக்கிறான். மலர்களிலும். பறவைகளிலும். மிருகங்களிலும். மீனினங்களிலும். இயற்கையிலும் மருளாத உள்ளமும் உண்டோ?
ஆனால் அவையாவற்றிலும் பரிணமித்துள்ள அழகனைத்தையும் ஒன்று குவித்த மையம் பெண்ணே u6)6O6rt
பெண்களில் அழகிகள் உண்டு. பேரழகிகள் உண்டு. ஆனால் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்’ என்று மனம் ஏங்கும் பெண் அழகிகள் இருக்
கிறார்களே. அப்படிப்பட்டவர்களை வாழ்க்கையில் அபூர்வமாகவே சந்திக்க (Մ)tջեւյtb!
எனது வாழ்க்கையில் அப்படி நான் சந்தித்த இரண்டாவது பெண் இவள்!
"பிளாட்பாரத்தில் ஒடிக்கொண் டிருந்த அந்த இளைஞனைப் பின் தள்ளி. அந்த அழகுச் சிலையை என் முன்னிருத்தி புகையிரதம் வேகமாக ஒடத்தொடங்கியிருந்தது.
அவள் தனது பார்வையை ஒடும் காட்சிகளில் இலயிக்க விட்டிருந்தாள். எப்பேர்ப்பட்ட அழகான தோற்ற
கூடிய எனது ஆண் மைக்கு முகம் கொடுக்க அவள் தயங்கினாள் போலும். ஆனால் எனது வாழ்க்கையில் நான் சந்தித்து அபரிமிதமான ஆசை கொண்ட அந்தத் தங்கச் சிலைய்ை. ரஞ சியை..... எனது தயக் கமி காரணமாகவே நான் இழந்தேன்!
முதல் காதலையும் முதல்
 

முத்தத்தையும் மறக்கமுடியாது என்பார் கள். ரஞ்சியுடனான எனது உறவு மறக்கமுடியாதது என்பதல்ல பிரச்சினை. ரஞ்சியை நான் இழந்துவிட்டமையால் எனது இதயத்தை இறுகப் பிழிவது போன்ற ஒரு வேதனை எனது ஆழ் மனத்தின் தளத்தில் என்றுமே சிரஞ்சீவி யாக நிலைத்துவிட்டது.
எனது அழகு. கல்வி. பதவி எல்லாமே அவளைக் கவர்ந்திருந்தன. அவளை என்பக்கம் திருப்புவதற்காக நான் எதுவுமே செய்யவேண்டியிருக்க வில்லை.
ஆனால் அந்தப் பேரழகியின் முன் நான் எனது தகுதிகள் அனைத் தையும் அற்புதமாகக் கருதிவிட்டேன் போலும்!
நான் உங்களைக் காதலிக்கவில் லையே' என்று ரஞ்சி மறுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படக்கூடாதென நான் அஞ்சினேன். அதைத் தாங்கிக்கொள் ளும் தைரியம் என்னிடம் சிறிதளவேனும் இருக்கவில்லை. எனவே. நான் உன்னைக் காதலிக்கின் றேன்" என்று அவளிடம் கூறிவிட வேண்டிய அந்த மாபெரும் உண் மையை எனது இதய அறைகளில் வைத் துப் பூட்டிக்கொண்டேன்.
காதலிக்காமலே இருந்துவிடுவது சற்றும் சிரமமல்ல. ஆனால் காதலித்துக் கொண்டே அதை வெளிப்படுத்தத் தவறு வதால் ஏற்படும் இழப்பு நிமித்தமான கவலை இருக்கிறதே. அதை எந்த ஒருவனாலும். எந்த ஒருத்தியாலும் a rare - re- முடியாது எனற பாடததை நான் எனது வாழ்விலேயே படிக்க நேர்ந் திருக்காவிட்டால் எல்லாமே நன்றாக
அதனால் எவ்வளவு நேரம்தான் எதிர்காற்றுக்கு முகம் கொடுத்தபடி காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்.
எனது பக்கமாக முகத்தைத்
S
திருப்பிக் கொள்வதும். பின்னர் நாணி தலையைத் தாழ்த்திக் கொள்வதுமாக அவளது பெண்மை பிரகாசித்துக் கொண் டிருந்தது.
பிரயாணத்தின்போது உதவிகள் ஏதாவது கேட்க நேரிட்டாலும் என்ற முன்யோசனையில் அச்சாரமாக ஒரு புன்முறுவலை அவள் உதிர்த்தாள். அந்நாட்களில் ரஞ்சி பிடிவாத மாக என்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பாள். அச்சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் ஏனோ தலையைத் தாழ்த்திக் கொண்டிருந்திருக்கிறேன்.
அவளது விழி வீச்சுக்குப் பதிலாக நான் அவள் மீது ஒரு பார்வையை வீசியிருந்தால் அவள் புன்னகையைப் பரிசாக அள்ளித் தந்திருப்பாள். அப்போ தும் கூட நான் தலையைத் தாழ்த்திக் கொண்டிருப்பேன் என்பதில் ஐயமில்லை. அந்தத் தவறை இப்போதாவது நான் திருத்திக்கொள்ளவேண்டும் என்ற உறுத்தல் என்னில் மேலோங்க. மெது வாகப் புன்னகைத்தபடியே. "உங்கள் பெயர்?” என்று வினவினேன்.
நான் ஒரு பெண்ணைப் பார்த்து முறுவலித்தேன் என்றோ அவளது பெயரை வினவினேன் என்றோ என்னால் என்னை நம்பவே முடியவில்லை.
ரசிகா - முத்து உதிர்ந்தது. சலீர் என்றது. அள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
மறுகணமே தனது பெண்மைக்கே யுரிய நாணம் மேலிட பார்வையை வெளியே திருப்பிக் கொண்டாள்.
என் ரஞ்சியின் அதே சிரிப்பு! ரஞ்சி அவளது நண்பிகளுடன் பேசிச் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் நான் அவளைக் களவாகப் பார்ப்பேன். என்னைக் கண்டுவிட்டால் அவளது உற்சாகம் அதிகரிக்கும். அதை நான்
நான்தான் தைரியமற்றிருந்தேன்.
ஒருவேளை அவள் துணிந்து நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று
مجمہ ۔ - - تص۔ بس۔ 86.
مشتبہ یہ جیسسہ گا۔ -- حش உனாததனாள.

Page 4
என்னிடம் கூறியிருந்தால் எல்லாமே சரியாகியிருக்கும் அவள் துணியவு மில்லை. அது அவள் குற்றமில்லை.
ஒரு வருடகாலமாக அவள் என்னில் மருண்டு இலயித்திருந்தாள். எனக்காகக் காத்திருந்தாள். அவளது இளமைப் பொழுதுகள் என் நினைவுடன் கழிந்தன. தனது கற்பை எனக்குக் காணிக்கையாக்க முடிவெடுத்திருந்தாள். இவற்றையெல்லாம் உணர்ந்தும் உணராமல் நான்தான் இருந்துவிட்டேன். அவள் மேலான எனது காதலை வெளிப்படுத்தும் திராணியற்றவனாக என்னைப் படைத்தாயே இறைவா என ஒவ்வோர் கணமும் வருந்துவேன்.
புகைவண்டி தனது போக்கில் ஆடியும் அசைந்தும் மோதியும் போய்க் கொண்டிருந்தது. சிற்றுண்டி வியாபாரி களினதும் பிரயாணிகளினதும் பேரம் பேசுதல் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மற்றொரு "கொம்பார்ட்மென்ரி லிருந்து "புட்பே நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு ரசிகாவைத் தெரிந்திருந்தது.
"எங்கை போறியள்?” இளைஞன்.
“ஊருக்குத்தான்” "உத்தியோகம் பார்க்கிறியளோ?” "இன்னமும் இல்லை" "அண்ணையை விசாரித்ததாய்ச் சொல்லுங்கோ"
"ஓம். ஓம். ரஞ்சி மனத்தைக் கவர்ந்திருந்த காலம்தான் எனது வாழ்வின் பொற்
mr r M A. Ara
P. Pulla as a
நான் அவளுடன் வாழாதிருந் திருக்கலாம்; ஒரு வார்த்தை பேசாதிருக் கலாம். ஆனாலும் ஒரு நேயம் எம்மைக் கட்டி வைத்திருந்தது.
மானசீகமாக ஒருவரை ஒருவர் நினைத்து வாழ்ந்திருந்த அந்தத் தூய பாதையில் ஒரு இளைஞன் குறுக்கிட் டான். அவனுக்கு என்னைக்காட்டிலும்
அந்த
மேலான பதவி இருந்தது. இருப்பினும் என்னிடம் இருந்த வசீகரம் அவனிடம் இருக்கவில்லை.
ஆனால் அவன் தைரியத்துடன் ரஞ்சியை நெருங்கினான்.
அவனது தீவிரம் அதிகரிக்க நான் கவலையில் துவண்டேன். அவனது மனத் தைரியத்தில் ஒரு சிறிதளவேனும் எனக்கிருந்தால் ரஞ்சி எளிதாக எனது இல்லத்தரசியாகியிருப்பாள். என் எதிரே அவளை அமரவைத்து அணுஅணுவாக பார்த்து இரசித்திருப்பேன்.
பிறைபோன்ற நுதலும்,. 6TGS பான முக்கும். முத்துப் பல் வரிசை யும். மாதுளை முத்தில் அமைந் திருக்கும் சிவந்த நிறமும். கருநாகம் போன்ற அடர் நீ த மிக நீண்ட சிகையும். உடுக்கின் இடை அழகும். பாதங்களின் தூய வெண் மையும் எனக்கே எனக்கு என்று எண்ணி மகிழ்ந் திருப்பேன்.
"புட்பே நோக்கி சென்று கொண் டிருந்த அந்த இளைஞனுடன் ரசிகா பேச்சை வளர்க்கவில்லை. இலாவகமாக வெட்டிவைத்தாள். அவனும் விலகிச் சென்றான்.
புறத் தூய்மையான பெண்கள் தங்கள் அகத் தூய்மையையும் பேணும் போது அவர்கள் தெய்வத்துக்கு சமமாகி விடுகின்றார்கள்.
ரஞ்சியினி விசயத் திலும் அப்படியே நடந்தது. எந்த ஒரு ஆண் களாலும் களங்கப்படக்கூடாத தெய் வீகத்தை நான் ரஞ்சியில் கண்டேன். அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்று
ஒரு நாள் அவள் ஒரு ஆடவனுக்குத் தனது அழகையும் இதயத்தையும் திறந்து வைக்கப்போகிறாள் என்பதை நான் பிடிவாதமாக உணர மறுத்தேன். ஆனால் புதிதாக ரஞ் சிமீது காதல் கொண்ட அந்த இளைஞன் அவளை விவாகத்திற்காக நெருக்குவதா கவும் ரஞ்சி ஏதோ சாட்டுப்போக்கு கூறு
-Y-vs.-r v i Vrvb Vuviji

வதாகவும் கதைகள் அடிபட்டன.
ரஞ்சிக்கும் எனக்குமிடையேயான பனிக் காதலுக்கு சோதனை ஏற்பட்ட தாக எண்ணி என் நெஞ்சு வேதனையில் துடி துடித்தது.
புகைவண்டி ஒரு நிலையத்தில் தரிக்கவும் நான் ரசிகாவுக்காகக் குடிநீர் பிடித்துக்கொடுத்தேன். அவள் ஆதர வுடன் என்னை அணுகுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
"நீங்கள் பட்டதாரியோ?” நான் வினவினேன்.
"இல்லை. சீமா "ஸ்ரேச் திறீ இப்போதுதான் எழுதிவிட்டு வருகிறேன். நீங்கள்?’ வினவினாள்.
"நான் ஒரு சிவில் இன்ஜினியர்” அத்துடன் அமைதி. ஓடும் காட்சிகளில் இலயிப்பு.
நான் விடவில்லை. "உத்தி யோகம் பார்ப்பீர்களா, வெளிநாடு போவீர்களா?” வினாவினேன்.
"வெளிநாடு போக விரும்ப வில்லை” சிரித்தாள்.
"எங்களுடைய கலாசாரத்தை நீங்கள் போற்றுபவர் போலும்”
உதடுகளை நாக்கினால் தடவி ஈரலிப்பை ஏற்படுத்தினாள். உதடுகள் பிரகாசித்தன. குறும்புடன் பார்த்தாள். சிரித்தாள். பின் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவளுடைய அறிவு பேச்சிலும் துலங்கியது. மெளனத்திலும் சுடர்விட்டது.
வேகமாக ஓடிக்கொண்டிருந்த புகையிரதம் ஒரு குலுங்கலுடன் நின்றது. எட்டிப்பார்த்தேன். அவள் வினாக்குறி
முகத்தைப் Kr "யாரோ செயினை இழுத்து விட்டார்களாம்" நான் கூறினேன்.
"எந்தச் செயினை?” சிரித்தபடி கேட்டாள்.
“முதலில் கழுத்துச் செயின் பின்னர் அபாய அறிவிப்புச் "செயின்” இரசித்துச் சிரித்தாள். பின்னர் மெதுவாக நகரத் தொடங்கும் காட்சிகள்
چیمہ میچ š※曼 &莎臀 线浊岳旁
i rrr di terrar * * * * * * * !!!–೬ -اه
மீது பார்வை.
எனது பார்வை சுதந்திரமாக அவள் மீது மேய அவள் சந்தர்ப்பம் தந்தாள்போலும்.
எடுப்பான நாசி. துடிக்கும் அதரங்கள். சங்குக் கழுத்து. முந் தானை விலகல். பளிச்சிடும் இடை. பாதக் கமலங்கள்.
ரஞ்சி என்னை மனததில் இருத் தியே அந்த இளைஞனுக்கு சாட்டுப் போக்குக் கூறியிருப்பாள்.
அவனது நிர்ப்பந்தங்களுக்கு அவள் இறங்கிப் போகமாட்டாள். அவனை விரட்டி விடுவாள் என்று நான் பெரிதும் நம்பியிருந்தேன்.
மற்றவர்கள் அப்படி கதைக்க வில்லை. அந்த இளைஞன் அவளது முடிவைக் கோரி மூன்று நாட்கள் தவணை கொடுத்திருப்பதாகக் கூறினார் கள்.
என் மீது ரஞ்சிக்கு உள்ள உண்மையான ஆசை காரணமாக அவள் தனது நிலைப்பாட்டில் உறுதி யாக இருப்பாள் என்று நம்பினேன். மூன்று தினங்கள் கழித்தும் ரஞ்சி தனது மறுப்பினைத் தெரிவிப்பாள். அவன் விலகிச் செல்வான். அப்போது நான் ரஞ்சியைச் சந்தித்து எனது தீராக் காதலை வெளிப்படுத்துவேன் என முடிவு செய்து கொண்டேன்.
எனது பலவீனத்திற்கு அதைத் தவிர வேறு முடிவினை எடுத்திருக்க முடியாதென்பதை இப்போ உணர்
கின்றேன். .
புகையிரதம் பல நிலையங் களைக் கடந்தும் தரித்தும் சென்று
கொண்டிருந்தது. ஒரு நிலையத்தில் இளம் தாயொருத்தி துடுக்கான பெண் குழந்தையுடன் ஏறினாள். பின் வெற்றிட மாக இருந்த எங்கள் ஆசனத்தில் வந்து அமர்ந்தாள்.
ரசிகாவுக்கு அந்தக் குழந்தையை நன்கு பிடித்துவிட்டது. தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சினாள். கேள்விகள்

Page 5
பல கேட்டாள். குழந்தை சிரித்தது. தாய் பதில் கூறினாள்.
“உங்களுக்குக் குழந்தைகள் என்றால் உயிரோ?" நான் வெறுமனே சந்தர்ப்பத்தை முன்னிறுத்திக் கேட்டேன். "ஏன். உயிர் என்றால் பெற்றுத் தருவீர்களோ?" என்று அவள் துடுக்காகக் கேட்டாள். பின் நாக்கைக் கடித்துக் கொண்டாள். சிரித்தாள். இமைகளைத் திரும்பத் திரும்ப வெட்டினாள். 'சாறி பிளிற்சை தொடையில் வைத்து நீவிச் சீர்ப்படுத்தினாள்.
பல் லாயிரம் மின்னலைகள் என்னுள் பாய்ந்தன. இவள் என்ன கூறுகிறாள்? ஒரு பெண்ணுக்கு குழந்தை கிடைப்பது ஆண்மகனால்தானே. அதற் கிடையில் உள்ள அன்பு. பாசம். நெருக்கம். பரித்தியாகம் எல்லா வற்றையும் அந்த ஒரு கேள்வியால் உணர்த்திவிட்டாளே. நான் தலையைத் தாழ்த்திக்கொண்டேன்.
ரஞ்சியின் விசயத்திலும் நான் இப்படித்தான் அவளைத் தயக்கத்துடன் நெருங்கியுள்ளேன்.
அவளது ஒரு விழி வீச்சு பல்லாயிரம் மின்னல்களை என்னுள் பாய்ச்சியிருக்கிறது. நான் விளக்க மற்றிருந்தேன்.
ஒரு முடிவுக்கும் வராமல் அவள் வாழாவெட்டியாக இருந்திருந்தால் நானும் அவளை எட்ட இருந்தபடியே இரசித்துக் கொண்டு காலத்தை ஒட்டியிருக்கக்கூடும்.
அப்படி நடக்கவில்லை. அந்த
இளைஞனை திருமணம் செய்து கொள்
f
தற்குத் தனது மேலான சம்மதத்தை
ஆயிரம் சம்மட்டிகள் எனது தலை மீது விழுந்தன. நானும் ஒரு ஆணா என்று எனது மனமே என்னைக் கேலி செய்தது. பல பெண்களுக்குப் பின்னால் அலைந்து "ஐலவ் யூ” சொல்லும் இளவட்டங்களின் தைரியம். மனத் துணிவு என்னிடம் இல்லாமல் போனதே!
ரஞ்சி எனது கோழைத் தனத்தை நன்கு புரிந்துகொண்ட பின்னர்தான் அந்த முடிவுக்கு வந்திருக்கக்கூடும் என்று எண்ணி மறுகினேன்.
அவள் என்னை மனதார நேசித் தாள். நாளும் பொழுதும் என்னை நினைத்திருந்தாள். எனக்காக அலங் கரித்தான். என்னை நினைந்து நிலைக் கண்ணாடி முன்பாக அதிக நேரத்தைச் செலவு செய்தாள். என்னை எதிர் பார்த்துத் தனது வீட்டு வாயில் கதவைத் திறந்து வைத்துப் பார்த்திருந்தாள். என்னை எண்ணி கட்டிலில் கனவுகள் பல கண்டாள். மானசீகமாக என்னுடன் தாம்பத்திய சுகம் கண்டாள்.
ரஞ்சி. என்னை மன்னித்துவிடு. உன்னை நான் சுமக்காவிட்டாலும் இருக்கும் வரையில் உன் மேலான நினைவை நான் சுமப்பேன். இது உறுதி. உறுதியின் மேல் உறுதி.
எனது கண்களிலிருந்து நீர் பெரு கியது.
"என்ன கண்ணுக்கை தூசி ஏதும் விழுந்திட்டுதோ?” ரசிகா வினயத்துடன் கைக்குட்டையையும் நீட்டினாள்.
நான் சகஜநிலைக்குத் திரும்பி னேன். சமாளித்தேன்.
பொழுது செல்லச் செல்ல குழந்தை ரசிகாவில் நன்றாக இடம் கண்டு கொண்டது. மடியில் இருந்து குதித்தது. சேலைத் தலைப்பை இழுத்து "ஆன்ரி. ஆன்ரி"என்று அழைத்தும் முத்தம் கொடுத்தும் எப்படி அந்தக் குழநீ தை அவள் மீதான தனது அன்பைத் தெரிவிக்கின்றது.
நன்கு கவர்ந்தபின் குழந்தை எனது பக்கம் தாவியது. "அங்கிள். அங்கிள்." என்று அழைத்து எனது கை விரல் களை இழுத்து ரசிகாவின் கைவிரல்களுடன் இணைக்க முயன்றது.
அதனது பார்வையில் நானும் ரசிகாவும் கணவனும் மனைவியும். அந்த இளம் தாய்கூட அப்படித்தான் நினைத்து
r rret 2", YA
به که تخت تحت تست ه . سحیح : نسیه و

வினவினாள்.
"ஏன் உங்களுக்கு குழந்தைகள் இல்லையோ?”
நான் ரசிகாவைப் பார்த்தேன். சில சமயங்களில் விளக்கங்கள் கூறுவதைக் காட்டிலும் பேசாமல் இருந்துவிடுவதே உசிதமானதாக இருக்கும். அவளும் மெளனத்தையே தெரிந்தெடுத்தாள்.
அடுத்த நிலையத்தில் வண்டி நிற்கவும் தாய் மகளுடன் இறங்கிக் கொண்டாள்.
ரசிகாவின் கண்கள் பிரிவினால் கலங்கின. அந்த நேரத்தில் அக்குழந் தையால் அவளது அன்பைப் பெற்றுவிட முடிந்தது. உயிரினங்கள் எல்லாமே அன்பைச் சொரியவும் அதைப் பெற்றுக் கொள்வும் தெரிந்திருக்கின்றன. நான்? நான்?.
ரசிகா நீர் திரையிட்ட விழிகளால் என்னைப் பார்த்தாள். இமைகளை மீண்டும் மீண்டும் வெட்டினாள். எனக்கு ஆயிரம் கதைகள் புரிந்தன.
அந்தத் தாயும் குழந்தையும் அவளை என்னுடன் சோடி சேர்த்து வைத்துப் பார்த்தமை அவள் மனத்தில் இனம் புரியாத கிளர்ச்சியொன்றினை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
அவர்கள் இருக்கும் வரை இல்லாத கூச்சமும், அச்சமும் அவளது மருளும் விழிகளில் பட்டெனத் தெரிந் தன.
எதுவோ சம்பவித்துவிடும் என்றும் அவள் பயந்தாள்.
எதுவோ நடந்துவிடவேண்டும் என்றும் அவள் விரும்பினாள்.
அந்தக் குழந்தை காட்டிய கரிசனையை நானும் வெளிப் படுத்த வேண்டும் என்று அவள் பரிதவித் தாளோ..?
அவளது விழியோரம் அரும்பும் நீர் எப்போதும் கரைதட்டிவிடலாம்.
நான் இறங் கிக் கொள்ள வேண்டிய நிலையமும் இதோ அண்மித் துக் கொண்டிருக்கின்றது. அவளும்
سے بھی بہت سے --rS 2 vj bvi i ou
அதனைப் புரிந்துகொண்டு என்னையே நோக்குகின்றாள். அந்தப் பார்வை என்னிடம் அன்பை யாசிக்கின்றது.
எனது அதைரியம். எனது கோழைத்தனங்கள். எனது இயலாமை கள். அத்தனையும் ஒரு கணம் செயலிழந்துபோக கூறுகின்றேன்.
"ரசிகா. நான் உங்களை நேசிக்கின்றேன்”
அக்கணம் அவளது விழிநீர் கரைபுரண்டோடுகின்றது. நன்றியுடன் என்னைப் பார்க்கின்றாள்.
இதோ. நான் இறங்கவேண்டிய
நிலையம்.
பிரயாணப் பையை எடுத்துக் கொள்கின்றேன். விடைபெறுகின்
றேன். ரசிகா எனது முகத்திற்கு நேரே தனது வலது கரத்தை நீட்டுகின்றாள். அவளது புறங்கையில் அன்பு முத்தம் பதிக்கின்றேன்.
“மீண்டும்.?" வினவுகின்றாள். "சந்திப்போம்" முடித்து வைக்கின் றேன்.
வண்டியின் நடைபாதையால் வாசலுக்குத் திரும்பி அவளைப் பார்க் கின்றேன். முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்திருக்கின்றாள்.
என் வாழ்க்கை பூராகவும் என் அடி மனத்தில் பதிந்திருந்த துன்பச்சுமை விலகுகின்றது.
என்னாலும் அன்பு செலுத்த முடியும். என்னாலும் ஒரு பெண்ணைக் கவரமுடியும். என்னாலும் எனதன்பை வெளிக்காட்டமுடியும்.!
மனதில் குதூகலம் குமுறி எழுகின்றது. ஆயிரம் உணர்வுகள் என் மனத்தில் சிலிர்த்துப் பூக்கின்றன.
வண்டியிலிருந்து மேடைக்கு ஒரே தாவலாகத் துள்ளிப் பாய்கின்றேன்.
எனது மனைவி பிள்ளைகளுக் காக நான் வாங்கிச் சேகரித்த பரிசுப் பொருட்கள் உள்ளடங்கிய பிரயாணப் பை மட்டும் தோள்களை "அழுத்து கின்றன!

Page 6
卷 O O எழுதத் தூண்டும் எண்ணங்கள்) o C)
(கலாநிதி துரை.மனோகரன்) காலத்தால் அழியாத கலைஞன்
தத்தமது கலை ஆற்றல்களால் இலங்கைக்குப் புகழ் தேடித்தந்துள்ள பல கலைஞர்கள் இந்நாட்டில் வாழ்ந்துவந்துள்ளனர். அவர்களுள், தமது நடிப்பாற்ற லால் நம் அனைவரையும் கவர்ந்தவர்களுள் ஒருவர், நடிகமணி கே.ஏ.ஜவாஹர். பின்னாளில் அபுநானா என்ற பாத்திரத்தில் நடித்தமையால், அப்பெயரினாலேயே அடையாளம் காணப்பட்ட அவர், உண்மையில் அற்புதமான ஒரு குணசித்திர நடிகர் ஆவார். ”ہے
ஜவாஹரின் பல வானொலி நாடகங்களை முன்னர் முஸ்லிம் சேவையில் கேட்டுச் சுவைத்துள்ளேன்.
ஒரு காலத்தில் கே.ஏ.ஜவாஹர், எஸ்.எம்.ஏ.ஜப்பார், எம்.தாலிப், ஆரிபா ஞெய்ரஹீம் ஷஹீத் போன்றோர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நாடகங்களிற் கொடிகட்டிப் பறந்தனர். மேடை நாடகங்களிலும் ஜவாஹர் தமது நடிப்புத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். சுஹைர் ஹமீட், லடீஸ் வீரமணி, ஹ"ஸைன் பாரூக், கலைச்செல்வன், அந்தனிஜீவா, போன்றோரின் மேடை நாடகங்கள், அவரின் நடிப்புத்திறனை மேலும் துலங்கச் செய்தன. இத்தகைய தரமான கலைஞரை இலங்கைத் தமிழ்த் திரையுலகமும் அரவணைத்துக்கொண்டது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட கோமாளிகள், புதிய காற்று, நான் உங்கள் தோழன், தென்றலும் புயலும், வாடைக்காற்று முதலான பல திரைப்படங்களில் வெவ்வேறு வகையான குணசித்திரப் பாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர், அவர். தொலைக்காட்சி நாடகங்களும் அவரது நடிப்பாற்றலைப் பயன்படுத்திக் கொண்டன.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் 2001 ஆம் ஆண்டு, கிழக்குப் பல்கலைக்கழகம் நடத்திய உலக நாடக விழாவில் கே.ஏ.ஜவாஹர் தலைக்கோல் என்ற விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட நிகழ்வு அமைந்தது.
இலங்கையின் தமிழ் நாடகத்துறை வரலாற்றில் கே.ஏ.ஜவாஹருக்கு ஒரு நிரந்தர இடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். காலத்தால் அழியாத கலைஞராக அவர் எப்போதும் விளங்குவார். இத்தகைய கலைஞரை இழந்து தவிக்கும் ஈழத்துக் கலையுலகில் எவரும் பெருமைப்படத்தக்க ஒரு நிகழ்வும் நடந்திருக்கிறது. காலமான இக்கலைஞரின் நினைவாக உடனடியாகச் செயற்பட்டு, ஓர் இலட்சம் ரூபா சேகரித்து, அவரது குடும்பத்தினரிடம் கையளித்த நிகழ்ச்சி மனந்திறந்து பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். கலைகளை வாழவைக்கும் கலைஞர்களின் குடும்பங்களை வாழவைக்கவேண்டும் என்ற மனப்பக்குவம் எமது நாட்டில் உண்டு என்பதை, நிதியுதவியிற் பங்குகொண்ட அனைவரும் நிரூபித்துவிட்டனர். நடிகமணி கே.ஏ.ஜவாஹரின் நினைவாகக் கொழும்பில் நாடகக் கலையை வளர்ப்பதற்கேற்ற முறையில் ஒரு மண்டபம் அமைக்கப்படுமாயின், அது பெருமைக்குரியதாகவும், வரலாற்றுப் புகழைத் தரக்கூடியதாகவும் விளங்கும்.
10
 

இன்றைய பாரதம்
"பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு” என்று தமது நாட்டின் பெருமையைப் பரவசத்துடன் பாடி மகிழ்ந்தார், மகாகவி பாரதி. ஆனால், இன்றைய பாரதமோ இந்து . முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் சின்னாபின்னமாகிச் சிதறுண்டு கிடக்கிறது. அயோத்தியில் இருந்ததாகக் கூறப்படும் இராமரின் கோயில் 16ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டு, பாபர் மசூதி கட்டப்பட, 1992இல் அதை அழித்து மீண்டும் இராமர் கோயில் கட்ட முயற்சிக்க, ஏட்டிக்குப்போட்டியதப் பிரச்சினை வளர்ந்து, அநியாயமாகப் பல உயிர்களும் இழக்கப்பட்டுவிட்டன."அயோத்தியில் இருந்த இராமர் கோயில் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி ஒன்று கட்டப்பட்டதாயின், அது தவறுதான். ஆயினும், அதைப் போன்ற ஒரு தவறை மீண்டும் செய்யவேண்டிய அவசியம் என்ன? பாபர் மசூதியை அழிக்காமலே அயோத்தியிலே இராமர் கோயிலைக் கட்டியிருக்கலாம். ஆனால், எந்த மத அடிப்படைவாதிகளும் பிறவற்றின் அழிவிலேதான் தமது ஆக்கத்தைக் காண விரும்புகின்றனர். ஆலயம் கட்டித் தமது மதாபிமானத்தைக் காட்ட விரும்பும் இவர்கள், ஏன் ஓர் அறிவாலயத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கக்கூடாது? சமுதாயத்தின் மத்தியில் அறிவைப் பரப்பும் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இத்தகைய முயற்சிகள் செலவிடப்படுமாயின், இந்திய மக்களுக்கு அது பெருமையைத் தேடித் தரும்.
அயோத்தி விவகாரத்தில் மிக வேடிக்கையான நிகழ்வு, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தமது கையில் அதிகாரமிருந்தும், அதைப் பயன்படுத்தி, அந்த அழிவைத்தடுக்க முயலாத, தடுக்க இயலாத காங்கிரஸ்காரர்கள் இப்போது முதலைக்கண்ணிர் வடிப்பதுதான்.
தமிழ்நாட்டின் பக்கம் கண்களைத் திருப்பினால், மேலும் வேடிக்கை நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. கும்பிட்டு வாழ்வதையே முதற்கடமையாகக் கொண்டிருந்த முதல்வர், தமது அரியாசனத்தை விட்டு இறங்கி, தேர்தலில் வெற்றி பெற்ற “அன்னைக்கு" அதில் அமர இடங்கொடுத்ததும், பக்திப் பரவசத்தில் அன்னை பக்தர் ஒருவர் தமது நாக்கையே அறுத்துத் தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். "தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வந்தால் சரி” என்று ஒரு பழமொழி உண்டு. இப்போது, தமக்கு நாக்குப் போனாலும் "அன்னைக்குப்" பதவி கிடைத்தால் சரி என்று ஒரு புது வழக்காற்றை எற்படுத்தியிருக்கிறார், அந்தப் "பக்தர்"
கோயில் கட்ட முனையும் பக்தசிரோன்மணிகளும், நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்தும் அடியார் கூட்டமும் அரசியல் ரீதியாக விரைவில் ஒன்றிணையக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. கண்டியைக் கவர்ந்த இசைவிழா
கண்டி கலை இலக்கிய வளம் கொண்ட பிரதேசமாக வளர்ந்து வருகின்றது. அண்மையில் கண்டியில் நடைபெற்ற இசைவிழா இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. கண்டி இசை நடனக்கலாமன்றம் மத்தியமாகாண இந்துக் கலாசார அமைச்சுடன் இணைந்து வழங்கிய இசைவிழா பார்வையாளர் அனைவரையும் கவர்ந்த ஒரு நிகழ்வாக அமைந்தது. முற்றுமுழுதாக ஓர் இசைவிழா வெற்றிகரமான முறையில் கண்டியில் நடைபெற்றது இதுவே முதற்தடவை என்று கூறலாம்.
கண்டி இசை நடன கலாமன்றத்தின் நிர்வாகியான செல்வி கலைவாணி
11

Page 7
மாணிக்கத்தின் மாணவ, மாணவியர் பங்குபற்றிய இவ்விழாவில், இசையாசிரியை பயினதும், அவரது மாணவரதும் முழுத்திறமையும் நன்கு புலப்படுத்தப்பட்டது. கர்நாடக இசைப்பாடல்கள், ஸ்வரக்கோவைகள், நாட்டார் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், கர்நாடக இசைகலந்த திரைப்படப்பாடல்கள் எனப் பலதரப்பட்ட பாடல்களும் இணைந்து அமைந்த நிகழ்வாக இசைவிழா விளங்கியது. கலைவாணியின் மாணவ, மாணவியர் சளைக்காமல் இசைநிகழ்ச்சிகளில், தமது ஆர்வத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இசைவிழாவில் அருமையான இசை உருப்படிகளைக்கேட்டு இரசிக்க முடிந்தது. நாட்டைக்குறிஞ்சி இராகத்தில் அமைந்த வர்ணம், தேஷ், மதுவந்தி இராகங்களில் அமைந்த பதங்கள், கல்யான வசந்தம் இராகத்தில் உருவான ஆஞ்சநேயர் துதி, தர்மவதி இராகத்தில் அமைந்த "ஒடோடி வந்தேன் கன்னா" என்ற கீர்த்தனை, ஹம்சத்வனியில் அமைந்த "வாதாபி கணபதே" என்னும் கீர்த்தனை முதலியவை சிறப்பாகப் பாடப்பட்டன. ரேவதி இராகத்தில் இடம்பெற்ற "சம்போ சிவசம்போ சுயம்போ" என்ற பாடல், காபி இராகத்தில் அமைந்த ஸ்வரக்கோவை, ஆங்கில Notati01 ஐச் சங்கராபரணத்தில் தந்த முறைமை, தில்லானா முதலியவை எவரையும் கவரக்கூடியவையாக விளங்கின. நிகழ்ச்சியில் இடம்பெற்ற நாட்டார் பாடல்களும் சிறப்பாக அமைந்தன. மகாநதி திரைப்படத்தில் இடம்பெற்ற "ரீரங்க ரங்கநாதனின்.", பாரதி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாரதியின் "நிற்பதுவே நடப்பதுவே" ஆகிய பாடல்களையும் சபையைக் கவரும் முறையில் கலைவாணியின் மாணவர்கள் பாடினர். வீரமணி ஐயர், காசி ஆனந்தன், துரை.மனோகரன் ஆகியோரின் மெல்லிசைப்பாடல்களும் இசைவிழாவில் இடம் பெற்று இரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. r
ஒரு சிறந்த இசைவிழாவைக் கண்டியில் கண்டு களித்த மனத்திருப்பூதி இசைரசிகர்களுக்கு ஏற்பட்டது. விழாவோடு தொடர்புபட்ட அனைவரும் பாராட்டுதல் களுக்கு உரியவர்கள். எதிர்காலத்தில் இலங்கையில் ஜொலிக்கப்போகும் இளங்கலைஞர்களை இனங்காணத்தக்கதாகவும் இவ் இசைவிழா அமைந்தமை குறிப்பிடத்தக்கது. நல்ல முயற்சிகள்
மலையகத்தில் இருந்து புத்தம் புது முயற்சி ஒன்று இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து தொடக்கம் பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆண்டு தோறும் இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மலையக வெளியீட்டகம் பெண் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும் தனது நன்நோக்கத்தைச் செயற் படுத்தி வருகின்றது. இதுவரையில் குறிஞ்சிமலர்கள் (2000), சாந்தாராஜின் சிறு கதைகள் (2001), குறிஞ்சிக்குயில்கள் (2002) ஆகிய நூல்கள் மலையக வெளியிட்ட கத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
குறிஞ்சிமலர்கள் எனும் சிறுகதைத்தொகுதியில் பன்னிரு மலையகப் பெனன் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. சாந்தாராஜின் சிறுகதைகள் என்ற நூலில் பத்துச்சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. இறுதியாக வெளிவந்த குறிஞ்சிக்குயில்கள் என்னும் கவிதைத்தொகுதியில் 21 மலையகப் பெண் கவிஞர் களின் கவிதைகள் காணப்படுகின்றன. மலையகப் பெண் எழுத்தாளர் துளின் படைப்புகளை ஆண்டுதோறும் வெளிக்கொணரும் மலையக வெளியீட்டகத்தின் பணிகள் பாராட்டுக்குரியவை.

மச்சானைக் காணல்லியே.
கச்சான் அடித்தது கா கடலும் இரிைபுது கா மச்சானைக் காணலியே மனங்கிடந்து பதைக்குதுகா
பார்த்த கணினும் பூத்துப் பகலுமோ இரவாச்சி
வார்த்தை சொல்லிப் போனமச்சான்
வந்து சேரக்காணலியே f^
வச்சசோறு ஆறிப்போச்சி
வழுதலங்கா வாடிப்போச்சு பச்சடிப்பும் புளிச்சுப்போச்சி பாவிமனம் சலிச்சுப்போச்சு
சள்ளமின் ஆணம் வச்சணி சாதிப்பூ தலையில் வச்சணி கொள்ளை ஆச நெஞ்சில் வச்சன் கெதியாவந்து சேருமச்சான்
மங்கம்மா மாரியம்மா முழிதிறந்து பாருங்கம்மா. பொங்கல் பாணவச்சித்தாறனர் போனமச்சான் திரும்பிவந்தா.
குயராணி - கண்டி
எண் முகம்.
- யோ. அன்ரனி ~ பேராதனைப் பல்கலைக்கழகம்
முகம் காட்டும் ஆடிக்குத் தனியே முகமில்லை தரித்து நகரும் முகங்கள் எல்லாம் அப்போதைக்கு ஆடியின் முகமே
13
ஒரு நாள் எனக்கேயெனக்கென்று
உரித்தாகும் வேகத்தில் கவனம் கைநழுவத் தரை தொட்டுச் சிதறிற்று மூகங்காட்டும் ஆடிப்பும் அதனுள் என் முகமும் சிதறிப்போன சில்லுகள் தேடி ஓரங்கள் பொருத்தி ஒட்டவைத்தாலும் ஒட்டவே மாட்டாமல் பிரிந்து மிதக்கிறது இப்போதுள்ள எண்முகவிம்பம்.
الهـ

Page 8
Töö56 ダー - 5 خير ه° .^ރށ.
அந்தனிஜீவா- , * , அரங்கியலைப் போதித்த ஆசான் )نسس
இலங்கைத் தமிழ் நாடகத்துறை வளர்ச்சிக்கு என்னாலியன்ற பங்களிப்பை நான் செய்துள்ளேன்.
இதற்கு முக்கிய காரணம் யார் எனத் திரும்பிப் பார்க்கிறேன். எழுபதுகளிலேதான் எனது நாடக முயற்சிகளைத் தொடங்கினேன். எனது முதல் நாடகம் முள்ளில் ரோஜா. எனது முதல் நாடகமே நாடக உலகில் பேசப்பட்டது, விமர்சிக்கப்பட்டது.
நாடக உலகில் ஒரு புதிய முயற்சி என வீரகேசரிப் பத்திரிகை விமர்சித் திருந்தது.
"அந்தனி ஜீவாவின் முதல் முயற்சியே நம்பிக்கை ஊட்டுகிறது” என நாடகக் கலைஞன் கே.எம்.வாசகம் இலங்கை வானொலியின் கலைக்கோலம் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
எனது முதல் நாடகமே என்னைச் சிறப்பாக அறிமுகப்படுத்துவதற்கு யார் காரணகர்த்தா என்பதை இப்பொழுது திரும்பிப் பார்க்கிறேன்.
அவர்தான் சிங்கள நாடக மேடையில் புகழ் பூத்த கலைஞரான தயானந்த குணவர்த்தன.
அறுபதுகளில் இவர் மேடையேற்றிய நரிமருமகன் ("நரிபேனா") என்னைப் பெரிதும் கவர்ந்தது.
இந்த நாடகத்தை நான் பல தடவைகள் பார்த்தேன். அதன் பின்னர் அவ ரோடு தொடர்பு கொண்டேன்.
அவர் சிங்கள நாடகக் கலைஞர்களுக்கு அளித்த பயிற்சியில் நானும் பங்குபற்றினேன். அதுவே எனது நாடக முயற்சிகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது.
அவரது அடிச்சுவட்டினைப் பின்பற்றியே எனது நாடகப் பங்களிப்பு அமைந்தது.
இன்று நம்மிடையே அந்த மாபெரும் கலைஞர் இல்லை. அவரது நரிமருமகன்’ நாடகத்தில் நரியாக நடித்த கலாநிதி சொலமன் பொன்சேகாகூடக் காலமாகிவிட்டார்.
ஆனால், அவரது மாணவர்கள் நரிபேனாவை மீண்டும் அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.
மேடை நாடகக்கலைஞராக நன்கு அறியப்பட்ட தயானந்த குணவர்த்தன பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. சிங்கள நாடகத் தந்தை எனப் போற்றப் படும் சரத்சந்திராவின் மாணவர்களில் ஒருவர்.
இலங்கை வானொலியில் சிங்கள சேவையிலும், ஆங்கில சேவையிலும் பணி புரிந்துள்ளார்.
சிங்கள நாடக உலகில் மாற்றத்தை ஏற்படுத்த சரத்சந்திராவின் "மனமே"
14
 
 

நாடகத்தைப்போன்று "சுவர்ணதிலக" என்ற நாடகத்தை இவர் முதன்முதலில் மேடை ஏற்றினார்.
ஆனாலும், இவரது ‘நரிபேனா நாடகமே நாடக உலகில் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது.
இவர் நாடக நெறியாளர் மட்டுமல்ல, நடிகரும்கூட. சிங்களத்திரைப்படம் ஒன்றிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நான் நாடக முயற்சிகளில் ஈடுபட்டிருந்த எழுபதுகளில், நான் மேடையேற்றிய அக்கினிப்பூக்கள் நாடகத்தைப் பார்க்க இவரை அழைக்க வானொலி நிலையம் சென்றிருந்தபொழுது.
அங்கு வானொலியில் பணியாற்றிய சிங்கள அறிவிப்பாளரை அழைத்து என்னை அறிமுகப்படுத்தியதுடன், சிங்களத்தில் ஒலிபரப்பாகும் “கலைச்செய்தி” என்ற நிகழ்ச்சியில் அரைமணித்தியாலம் சிங்களத்தில் என்னைப் பேட்டி காண வைத்தார். என்னைப் பேட்டிகண்டவர் சிங்கள நாடகக்கலைஞரான தயா வைமன். எனது பேட்டி ஒலிப்பதிவு செய்யப்படுவதைப் பார்த்த, வானொலியில் பணியாற்றிய மதியழகன் என்னை அவர் தயாரித்த நிகழ்ச்சியிலும் பேட்டிகண்டார். சிங்களக் கலைஞர்கள் என்னை இனங்கண்ட பிறகுதான் தமிழ் சகோதரர்கள் என்னை இனங்கண்டனர்.
கலைஞர் தயானந்த குணவர்த்தன அவர்களால்தான் நாடகத்துறையிலீடு பாடு கொண்டிருந்தவரும், முன்னாள் அரசின் கலாசார அமைச்சருமான திரு லஷமன் ஜெயக்கொடி அவர்களின் அறிமுகம் கிடைத்தது.
அவரும் கலாசார அமைச்சராக இருந்தபொழுது எனது கலை முயற்சிக்கு உதவியுள்ளார். இந்தியா சென்றுவர சிங்களக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியதுபோல் எனக்கும் வாய்ப்பளித்தார்.
இதற்கெல்லாம் காரணமான கலைஞர் தயானந்த குணவர்த்தனவை நினைத்துப்பார்க்கிறேன்.
அவரை நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன். அதனால்தான் எனது அக்கினிப்பூக்கள் நாடக நூலில் "அரங்கியலில் அரிச்சுவடியைப் போதித்த ஆசான் தயானந்த குணவர்தன." எனச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.
இன்னும் வரும்.
அன்பார்ந்த வாசகர்களே. சந்தா விபரம்
(எகானம் சளிக் சிகை பற்ாரி - ಲೈ¶. தனிப்பிரதி ரூபா 15/. -/180 வருடசசந்தா: ரூபா کا مکاں ، ست ریت سست بہت کم ستمہ ہو۔ میں مکم ۔ سے مباریک யின் தரத்தை மேம்படுத்த உங்க (தபாற்செலவு உட்பட)
ளது ஆலோசனைகளையும் அறி சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
لر
މިންނަ
யத் தாருங்கள். ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. ಇಂತು Gւյաft,
- g2.5 களது படைப் புகளில் T.GNANASEKARAN மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் 19/7, PERADENIYA ROAD, கிய தரத்தை மேம்படுத்துங்கள். KANDY.
15

Page 9
முதற் கதை சிறுவயது முதல் வாசிப்புப் பழக்கம் என் இரத்தத்தோடு ஊறியிருந்தது. எங்கள் ஊரில் இருந்த ஒரு சனசமூக நிலையத்திற்கு அடிக்கடி சென்று அங்கு வரும் சகல சஞ்சிகைகளையும் வாசிப்பேன். Reading make the a fullman (வாசிப்பு ஒருவனை முழுமனிதனாக்குகிறது) என்பார்கள். அப்படி நான் ஆகாவிட்டாலும், கண்டது கற்கப் பண்டிதனாகும் நிலை எனக்கு ஏற்பட்டதெனலாம்.
தமிழக சஞ்சிகைகளான கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள், கலைக்கதிர், அமுதசுரபி, சக்தி, என ஏராளமான சஞ்சிகைகள் என் பசிக்குத் தீனியாகின. அவை என்னுள் அடங்கியிருந்த ஒரு சக்தியை வெளிக்கொணர்ந்தன. நாமும் இதைப்போல எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 18 வயதில் எனக்கு மட்டக்களப்புக் கல்வித் திணைக்களத்தில் இலிகிதர் வேலை கிடைத்தது. அக்காலத்தில் (1952) பொருட்கள் மிகவும் மலிவு, ரூபா 2.50க்கு இரண்டரை றாத்தல் நெஸ்பிறே, ரூபா 4.50க்கு மல்வேஷ்டி, =/50 சதத்துக்கு சாப்பாடு, டீ 10 சதம், பிளெயின்டீ 5 சதம்.
சொந்தமாகவே, கல்கி ஆனந்தவிகடன், கலைமகள், கலைக்கதிர் எனப்பல சஞ்சிகைகளை வாங்குவேன். 'கல்கி ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி அப்போது எழுத்துலகச் சக்கரவர்த்தியாக இருந்தார். நாவல், சிறுகதை, விமர்சனம். அரசியல் தலையங்கம், சமூகப்பணிகள் எனப் பன்முகப்பணிகளில் அவர் அப்போது ஈடுபட்டிருந்தார். கல்கி. டி.கே.சி, ராஜாஜி அக்காலத்து மும்மூர்த்திகள்.
அந்தக் கல்கியில் ஒரு கதை எழுதவேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். எனது முதற் கதை “கிராமபோன் காதல்" கல்கியில் 1954ல் வெளிவந்தது. அலுவலகத்தில் பலருக்கும் அதைக்காட்டினேன். அசந்து போனார்கள். பாராட்டினார்கள். அதனால் எனக்கு ஒரு தனிமதிப்பு ஏற்பட்டது.
எஸ்.டி.எஸ். காட்டிய பாதை இனிமேல் தைரியமாக எழுதலாம் என்னும் துணிவு ஏற்பட்டது. சுதந்திரன், தினகரன், வீரகேசரி எல்லாவற்றிலும் என் கதைகள் பிரசுரமாகின. அவ்வப்போது தமிழகப் பத்திரிகைகளுக்கும் எழுதுவேன்.
கல்கி, கலைக்கதிர், புதுமை, முதலிய சஞ்சிகைகளில் எனது கதைகள் வெளிவந்தன. 'கல்கியில் "கிராமப்போன் காதல்" கதையைத் தொடர்ந்து "காதல் தந்த செல்வம்”, “விளையும் பயிர்” முதலிய பல கதைகள் வெளிவந்தன. ஆனால் இவை தூரத்துக் கொன்றாகவே வெளிவந்ததால் எனக்கு மனத்திருப்தி ஏற்படவேயில்லை. அதனால் இலங்கைப் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் எழுதினேன்.
என் எழுத்தை மதித்து அவ்வப்போது கடிதம் எழுதிக் கதைகோரியவர் "கலைச்செல்வி" ஆசிரியர் சிற்பி (சரவணபவன்) அவரை மறக்கமுடியாது. அவ்வாறு
16
 

என்னை ஊக்கிய இன்னொருவர் அமரர் எஸ்.டி.சிவநாயகம். சுதந்திரன், வீரகேசரி, தனபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரியராக அவர் இருந்தபோதெல்லாம் கடிதம் எழுதி ஊக்குவிப்பார். அந்த வகையில் “சுதந்திரன்"பண்ணையில் வளர்ந்த ஒரு எழுத்தாளராகவே என்னை நான் இன்றும் கணிக்கிறேன்.
*தினபதி சிந்தாமணி” பத்திரிகை ஆரம்பித்த காலத்தில் மாஸ்ரர் சிவலிங்கத்தின் “வில்லுப்பாட்டு” ஒன்றை அதன் ஆரம்பவிழாவில் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அந்த வில்லுப்பாட்டுக்குழுவில் அடியேனும் ஒருவன். அங்கு எங்களுக்கு இராஜமரியாதை கிடைத்தது. (இதற்கும் எனது எழுத்துக்கும் சம்பந்தமில்லை) ஆனாலும் எஸ்.டி.எஸ் அன்று எங்களுக்கு அளித்த மதிப்பு மறக்கமுடியாது.
மட். தமிழ் எழுத்தாளர் சங்கம் 1961ம் ஆண்டு ஜுன் மாதம் "மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கம் உருவாகியது. மட்டக்களப்பில் தோன்றிய முதலாவது எழுத்தாளர் சங்கம் இதுதான். அதைத் தோற்றுவித்தவர் திரு.எப்.ஜி.ஜெயசிங்கம் (இப்போதும் அவர் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்) எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக திரு.ரீ.பாக்கியநாயகம் இருந்தார். -
அப்போது என்னிடம் ஒரு போர்ட் கார் இருந்தது(EN 4003) அதனாலும் அச்சங்கத்தில் எனக்கு முக்கிய இடம் கிடைத்தது. நிதி சேகரிப்பது நிகழச்சிகள் ஏற்பாடுகள் போன்றவற்றில் இக்கார் பெரிதும் பயன்பட்டது. அப்போது பெட்ரோல் ரூபா 2.50 மட்டுமே. ஒரு இலிகிதராக இருந்துகொண்டு எப்படி ஒரு கார் வைத்துக்கொள்ள முடிந்தது என்று திகைக்கிறீர்களா?
உண்மையில் அந்தக்கார் எனது தம்பியார் இரா.நல்லையாவுக்கு என வாங்கப்பட்டது (வாடகைக் கார் தொழிலுக்காக) ஆனால் எனக் குத் தேவைப்படும்போதெல்லாம் அக்கார் என்கைக்கு வந்துவிடும்.
மட். தமிழ் எழுத்தாளர் சங்கத்தில், அப்போது மட்டக்களப்பில் பிரபலமாக இருந்த அத்தனை எழுத்தாளர்களும் இடம் பெற்றிருந்தனர். ரீ.பா, நவம், திமிலைத்துமிலன், நடமாடி (பிரபல நாடக ஆசிரியர், தயாரிப்பாளர்), திமிலை மகாலிங்கம், திமிலைக்கண்ணன், தங்கன், ஆ.பொன்னுத்துரை (எஸ்.பொ. அல்ல. அப்போது அவர் எங்களது வில்லன்) பாலு மாஸ்ரர், மாஸ்ரர் சிவலிங்கம், ம.த.லோறன்ஸ், அமுதக்குமரன் (அமிர்தகழி பாலசுப்பிரமணியம்) செ.குணரத்தினம், ராஜபாரதி, கண்ணகி (திரு.பெர்னாண்டோ) தேனாடன் (என்.எஸ்.அருள்ராஜா) மண்டுர் அசோகா, எனப்பலர் நினைவுக்கு வருகின்றனர். (சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம்)
எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகள் எனது எழுத்துலகில் மட்-தமிழ் எழுத்தாளர் சங்கக் காலம் ஒரு பொற்காலமாகும். 1961க்குப் பின் பலவருடங்கள் அடியேன் செயலாளராகவும் ரீ.பா. (f.பாக்கியநாயகம்) தலைவராகவும் நடமாடி (கே.வி.இராசரெத்தினம்) பொருளாளராகவும் செயற்பட்டோம். அப்போது நடமாடியின் வீட்டிலேயே, பெரும்பாலும் எங்கள் செயற்குழுக்கூட்டம் நடைபெறும், எப்படியோ மாதம் ஒரு நிகழ்வு நடத்துவோம்,
محتی
. Fr "-v. a * r.-- r'-M ' */ er - d" " | A-v அதில் எழுத்துல்கல LL0 S S L00 S000LLLS LL0LL S SLLLSL 4.
பத்திரிகைகளில் வெளிவந்த, எமது சங்க உறுப்பினர்களின் ஆக்கங்கள் பற்றி விமர்சிப்பார். அது கூட ஒரு இலக்கியக் கருத்தரங்காக, கருத்துப்பரிமாறலாக
17

Page 10
காத்திரமான, நிகழ்ச்சியாக அமைந்துவிடும்.
எமது உறுப்பினர்கள் வெவ்வேறு மன்றங்களின் பொறுப்பாளராகவும் இருந்தனர். அந்தவகையில் திமிலைத்துமிலன் (திமிலை நளின கலாமன்றம்), திமிலை மகாலிங்கம் (தேனமுத இலக்கியமன்றம்) அடியேன் (ஆரையம்பதி கவின்கலை மன்றம்) ஆரையூர் இளவல் (மட்.இளங்கதிர் நாடகமன்றம்) இவற்றின் மூலம் நாடக, அரங்கேற்றம், சிறப்புமலர் வெளியீடு முதலியவை மேற்கொள்ளப்பட்டன.
எங்களுடைய கலை இலக்கிய செயற்பாடுகள் இலங்கை முழுவதும் பிரசித்தி பெற்றிருந்தன. இச்சந்தர்ப்பத்தில் எஸ்.பொ. மட்.மெதடித்த கல்லூரியில் ஆசிரியா ராகக் கடமையாற்றி வந்தார். அவர் "வெள்ளங்காடு வியாகேச தேசிகர்” என்ற புனைபெயரில், மட். எழுத்தாளர்களைக் கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருந்தார். அக்கட்டுரைகள் ‘வீரகேசரியில் வெளிவந்தன. ரீ.பா., நவம், திமிலைத்துமிலன், தங்கன், ஆ.பொன்னுத்துரை முதலிய பலரும் அவரது தாக்குதல்களுக்கு ஆளா னார்கள். ஆனால் யாரும் தளர்ந்துவிடவில்லை. ஈற்றில் அவரே "கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம்" நிறுவி காப்பியப் பெருவிழா (Sநாள்) வந்தாறுமூலை ம.ம.வி.யில் நடாத்தினார்.
"மலர்" சஞ்சிகை மிக நீண்ட காலமாக, தரமான ஒரு இலக்கியச் சஞ்சிகையை நடாத்தவேண்டும் என்ற எண்ணம் என் நெஞ்சில் கனலாகக் கனன்று கொண்டிருந்தது. நா.பார்த்தசாரதியின் "தீபம்" சஞ்சிகையைப் பார்த்ததும்; அந்தக் கனல் இன்னும் அதிகமாகியது.
பலமாதங்களாகக் கருக்கூட்டி, பலவித ஏற்பாடுகள் செய்து ஆக்கங்கள் பெறுதல், அச்சிடுதல், விநியோகித்தல், விளம்பரம் சேகரித்தல், பதிவேடுகள் பேணுதல், காசுப்புத்தகம், பற்றுச்சீட்டுப்புத்தகம் கடிதத்தலைப்பு, சஞ்சிகையின் அட்டை அமைப்பு முதலியவற்றை ஏற்பாடு செய்து, டம்மி ஒன்று தயாரித்துக்கொண்டு, கல்வி அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த சேதுகாவலர் கணபதிப்பிள்ளை ஹ"சைன், என்.விவேகானந்தன் ஆகிய நால்வரையும் சேர்த்து ஐவராகி, "மலர்” சஞ்சிகையை வெளியிட்டேன்.
மலர் வெளியீட்டுவிழா நடைபெறவிருந்த 3.1.1970 அன்று கடும் மழை - அசையவே முடியவில்லை. விழா ஒத்திப்போடப்பட்டு 24.1.1970ல் வெளியீட்டு விழா மட்டகக்ளப்பு நகர மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கவிஞர் 'மஹாகவி, எம்.சமீம், ரீ.பா. முதலிய இலக்கியப்பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள். கிரெளண் 1/4 அளவில் மலர்கள் நிறைந்த அட்டையுடன், கனதியான ஆக்கங்களுடன் "மலர்” முதல் இதழ் வெளிவந்தது. (4வது இதழ் முதல் டிமை 1/8 அளவாகியது) எல்லா மாவட்டங்களிலும் (கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, பதுளை, கல்முனை உட்பட) மலர் நன்கு வரவேற்கப்பட்டது. பாராட்டுக் கடிதங்கள் நிறைய வந்தன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் "மலர்” அறிமுகவிழா நடாத்தவேண்டும் என்ற எனது திட்டத்தின் அடிப்படையில் முதலில் யாழ்ப்பாணத்தில், திறந்தவெளி அரங்கில் விழா நடைபெற்றது. நல்லை அமிழ்தன் இந்த விழாவை ஏற்பாடு செய்தார். "சொக்கன்” தலைமையில் விழா நடைபெற்றது.
மறுநாள் சந்தா சேகரிப்பு. அது ஒரு தனிக் கதை. தனியாக எழுதப்படவேண்டியது.
18

மலர்” அனுபவங்கள் "மலர்” அனுப்வங்கள் பற்றி ஒரு நீண்ட தொடரே எழுதலாம் எழுதவேண்டும். ஆனாலும் முடிந்த வரை மிகச் சுருக்கமாகச் சில விடயங்களைக் கூறுகிறேன்.
ஈழத்தில், அரசியல் கலப்பின்றி, கோஷ்டி மனோபாவம் இன்றி, பிரதேச வேறுபாடு இன்றி, இனமத வேற்றுமையின்றி அனைவரையும் அணைத்துக்கொண்டு வெளிவந்த ஒரே சஞ்சிகை "மலர்” எனலாம். ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் எல்லாம் அதில் எழுதினர். அ.ஸ, வ.அ., அருள் செல்வநாயகம், எஸ்.பொ., மஹாகவி, அண்ணல், திமிலைத்துமிலன், யூ.எல்.தாவூத், தெணியான், வை.அஹமத், கு.ராமசந்திரன், சேகுஇஸ்ஸதீன் (வேதாந்தி) நிதானி, அருள் சுப்பிரமணியம், மொ.பெனடிக்ற் பாலன், கவிதா, செ.யோகநாதன். கரவையூர்க்கிழார், செங்கை ஆழியான், அன்புமுகைதீன், எம்.ஏ.ரஹற்மான் முதலிய எழுத்தாளர்கள் பலர் இதில் அடங்குவர்.(சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்)
"மலர்” சங்சிகையின் சில சிறப்பம்சங்கள் வருமாறு முதிர்ந்த எழுத்தாளர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் அது இடமளித்தது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பிரபலமாக்கியது. (உதாரணம் கவிதா, அருள் சுப்பிரமணியம், வேதாந்தி)
ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்கு இலவசவிளம்பரம் வெளியிட்டது. ஈழத்துரத்தினங்கள் முதலியன வெளிவந்தன.
ஒவ்வொரு ஆக்கத்துடனும் அதை எழுதியவரின் படமும் குறிப்புகளும் வெளியிடப்பட்டன.
வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் "மாதாந்த விமர்சனம்” “ஓர் அனுபவம்”, “எனக்குப் பிடித்த பாத்திரம்” முதலிய அம்சங்கள் இடம்பெற்றன. வெற்றிபெற்றோருக்கு ஈழத்து நூல்கள் அனுப்பினோம்.
சினிமா விஷயங்கள் தவிர்க்கப்பட்டன.("குத்துவிளக்கு" தவிர) அரசியல் முற்றாகத் தவிர்க்கப்பட்டது. அது ஒரு தனிநபர் முயற்சி எனது எழுத்துலகில் "மலர்” வெளியீடு ஒரு மைல் கல் - ஒரு முக்கியதிருப்பம் - அது ஒரு தனிநபர் முயற்சி. ஒவ்வொரு மாதமும் ஆணித்தரமான தலையங்கங்கள் அதில் எழுதப்பட்டன. அட்டைப்படம் மற்றும் உள்ளே சில படங்கள் முதலியவற்றை நானே வரைந்தேன். ஏனையவற்றை ரமணி, கிருஷ்ணா (திமிலைத்துமிலன்) செள முதலியோர் வரைந்தனர்.
ஒவ்வொரு மாதமும், கொழும்பு சென்று புளொக்" செய்தல், விளம்பரம் சேகரித்தல் என்பன எனது தனித்துவ முயற்சிகள் ஆகின. "மலர் வெளிவந்த காலத்தில், அஞ்சலி, தமிழமுது, கற்பகம், செம்பருத்தி முதலிய பல ஈழத்து இலக்கிய ஏடுகள் வெளிவந்தன. எவ்வித பொறாமையும் இல்லாமல், அவற்றின் ஆசிரியர்கள் நட்புறவுடன் "மலரை” அணுகினர். பரஸ்பரம் நல்லுறவு வளர்ந்தது. 1970ல், சோஷலிஸ் நோக்குடைய ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஈழத்து சஞ்சிகைகள் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்தன. ஆனால் அமைச்சர் குமார சூரியர் தலைமையில் கொழும்பில், சஞ்சிகையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது. "சஞ்சிகையாளர் ஒன்றியம்” என்று ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என எஸ்.பொ. ஒரு ஆலோசனை தெரிவித்தார். அத்துடன் அந்த அத்தியாயம் முற்றுப்பெற்றது.

Page 11
ஆனால் இந்தக் கூட்டத்துக்குச் சென்றதால் பல எழுத்தாளர்களையும், இதழாசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் மத்தியில் "மலர்” ஏற்படுத்திய பாதிப்பை அறியமுடிந்தது.
முற்போக்கு, பிற்போக்கு அணியினருக்கு மத்தியில் "மலர்" நடுநிலை வகித்து, ஏறுநடைபோட்டு, 1970 - 1971 முடிய 10 இதழ்களுடன் அமரத்தவம் அடைந்தது.
நாடகம் எனது எழுத்துலகின் மற்றொரு அங்கம், நாடகமாகும். வானொலி நாடகம், மேடைநாடகம் முதலியவற்றை எழுதியதுடன் மேடை நாடகங்களில் நடித்து நெறியாள்கை செய்ததும் எனது முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
அவ்வாறு மேடையேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்றான "திரைகடல் தீபம்" நாடகம் 1972ல், இலங்கைக்கலைக்கழகம், நடாத்திய நாடகப்பிரதிப்போட்டியில் முதற்பரிசைப் பெற்றது.(பரிசு ரூபா 500)
"நமது பாதை"என்ற முழு நீளநாடகம் இலங்கை வானொலியில் 1967 தைமுதல் 3 மாதங்களுக்குத் தொடர் நாடகமாக ஒலிபரப்பாகியது. வேறு பல நாடகங்களும் வானொலியில் ஒலிபரப்பாகின.
"நமது பாதை” “சூழ்ச்சி வலை" "மனோகரா" "குகைக்கோயில்" "கலை உள்ளம்" போன்ற பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இவற்றை அடியேனே தயாரித்து நடித்து நெறியாள்கை செய்தேன்.
நாடகப்போட்டிகள் பலவற்றில், நடுவராகக் கடமையாற்றியதும், கொழும்பில் நடைபெற்ற சில கருத்தரங்குகளில் பங்களிப்புச் செய்ததும், இங்கு குறிப்பிடத்தக்கது. எனது வானொலி நாடகங்களில் ஒன்றான "ஆத்ம திருப்தி” கண்டியில் "தியாக தீபம்” என்ற தலைப்பில் முழு நாடகமாக்கப்பட்டு மேடையேற்றப்பட்டதும், அதன் முதல் மேடையேற்றத்தில் அடியேன் அங்கு அழைத்துக் கெளரவிக்கப்பட்டதும் எனது நாடகங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம். இந்நாடகத்தில் கதாநாயக்னாக நடித்தவர் தற்போதைய மட்டக்களப்பு முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் திரு. த.தங்கவடிவேல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நூல் வெளியீடு எனது எழுத்துலகின் மற்றொரு அங்கம் நூல் வெளியீடு ஆகும். "மலர்” சஞ்சிகை நடாத்திய காலத்தில் "ஒளி நமக்கு வேண்டும்” (செ.யோகநாதன்) அவர்களுக்கு வயது வந்துவிட்டது (அருள் சுப்பிரமணியம்) அரசிகள் அழுவதில்லை (முல்லைமணி) "மலர்” வெளியீடாக வெளிவந்தன.
பின்னர் 1984 - 1987 காலப்பகுதியில், நான் கழுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகப் பதவி வகித்த காலத்தில் "மண்டுர் முருகன் பிள்ளைத்தமிழ்” (சைவமாமணி எஸ்.விசுவலிங்கம்) "சந்ததிச்சுவடுகள்” (றிஸ்கந்தராசா) ஆரையூர்க் கோவை (ஆரையூர் நல்.அழகேச முதலியார்) முதலிய நூல்கள் வெளியிடப்பட்டன. 1987 1991 காலப்பகுதியில் திரு.சிவதாசன் "உதயம்" என்ற பெயரில் உள்ளூர் எடுத்தாளர்களின் நூல்களை வெளியிட முன்வந்தார். அவருக்கு அனுசரணையாக நான் செயற்பட்டேன். சுமார் 12 நூல்கள் "உதயம்” வெளியீடாக
TqLLTLtLLGGS TLOLT S LLLLtLttTttHtLT SSTLLtttLLTTTLTuLLtttS SLgCtL LLLLLLL kuLGGLSLDGSTuOuGLS SttLL வெளிவந்தன. அவற்றுள் "தெய்வதரிசனம்” (செ.குணரத்தினம்) "மஞ்சு நீ மழை SA A A ASAA LSq S AAAAA A AAAq qAqSS AAAA AAAAS ATAAAS qqq A Sqq qA AAq Aq AASAA AAAASS SM MMAM SSAAAAAAAAqAAAqS 0AALSAS MSAqSSSSqL LAqASAAqS SS MS AAAAASAS AAAAAAAASSS முகில் அல்ல" (திமிலைத்துமிலன்) ஒரு வானவில் ரோஜாவாகிறது (ரவிப்பிரியா)
முதலியன குறிப்பிடத்தக்கன.
எனது நாவல் ஒன்று "உதயம்" வெளியீடாக வெளிவரவேண்டும் எனத்
20

திரு சிவதாசன் தொடர்ந்து வற்புறுத்தியதால் "ஒரு தந்தையின் கதை" என்ற நாவலை எழுதிக் கொடுத்தேன். இதுவே எனது முதல் நாவலாகும்.
பின்னர் 1992ல் திருகோணமலையில் நான் கடமை ஆற்றியபோது எனது ஆப்த நண்பர் ஏ.கெங்காதரம்பிள்ளை (கணக்காளர்) என்னுடைய சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிடவேண்டும் என வற்புறுத்தி ரூபா 10 000 முற்பணமாகவும் தந்தார். அவரது உதவியால் "இல்லத்தரசி”, “வரலாற்றுச்சுவடுகள்" ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்தன. (திரு கெங்காதரம்பிள்ளை செய்த அந்த உதவியை நான் என்றும் மறக்கமுடியாது)
அன்பு வெளியீடு 1995ல் நான் சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின் நூல் வெளியீடு பற்றித் தீவிரமாகச் சிந்தித்தேன். "அன்புவெளியீடு” என்ற பெயரில் சில நூல்களை வெளியிட்டேன். இதுவரை 12 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் "குளக் கோட்டன் தரிசனம்” (க.தங்கேஸ்வரி) மாகோன் வரலாறு (க.தங்கேஸ்வரி) "100 வருட மட்டுநகர் நினைவுகள்” (எஸ்.பிரான்சிஸ்) "வாழ்க்கைச் சுவடுகள்" (எஸ்.பிரான்சிஸ்) "இலக்கிய நெஞ்சம்” (மூனாக்கானா)(அச்சில்) முதலியவை குறிப்பிடத்தக்கன.
தங்கேஸ்வரியின் “மாகோன் வரலாறு” 1998ல் வடக்கு கிழக்கு மாகாணசபையின் இலக்கியப் போட்டியில் “வரலாற்று ஆய்வு" பிரிவில் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டது.
இவைதவிர, சில பழைய நூல்களைத் தேடி எடுத்து கனடாவில் உள்ள தமிழ் தாத்தா க.தா.செல்வராச கோபால் அவர்களின் "ரிப்ளெக்ஸ்” பதிப்பகம் மூலம் மறுபதிப்புச்செய்ய உதவினேன். அவற்றுள் வித்துவான் சபூபாலபிள்ளை (1856) எழுதிய "சீமந்தினி புராணம்" வித்துவான் அ.சரவணமுத்தன் (1890) எழுதிய "மாமங்கேஸ்வரர் பதிகம்” “சனீஸ்வர தோத்திரம்” முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. க.தா.செவின் நூற்பதிப்புக்குழுவில் இன்றுவரை அடியேன் ஒரு அங்கத்தவனாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சில நூல்கள், சிறப்புமலர்கள் ஆகியவற்றைத் தொகுக்கும் பொறுப்பும் அவ்வப்போது என்னை வந்தடையும். அவற்றுள் “புலவர்மணி கட்டுரைகள்" "ஆரையூர்க்கந்தன்” “புலவர்மணி நூற்றாண்டு மலர்” முதலியன குறிப்பிடத்தக்கன. சில நூல்களைப் பதிப்பிப்பதில் என் பங்களிப்பும் சேர்ந்துள்ளது. எஸ்.எம்.ஹனிபாவின் "மக்கத்துச் சால்வை" ந.பாலேஸ்வரியின் “மாது என்னை மன்னித்துவிடு” “தத்தைவிடுதூது", வை.அகமதுவின் "வாழைச்சேனைவரலாறு" என்பன இப்பிரிவில் அடங்கும். அவ்வப்போது சில நினைவு மலர்களும் என்னால் தயாரிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
பல வெளியூர் நூல்களுக்கு மட்டக்களப்பில் அறிமுகவிழா நடாத்தியதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
இலக்கிய நண்பர்கள் ஏராளமான இலக்கிய நண்பர்கள் எனது எழுத்துலகில் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்களுள் என்னை மிகவும் பாதித்த ஒரு சிலரைப் பற்றியாவது இங்கு குறிப்பிடவேண்டும்.
ஜனாப் எஸ்.எல்.எம்.ஹனிபா. இவர் ஒரு அபூர்வமான இலக்கிய நெஞ்சர். உள்ளம் முழுவதும் இலக்கிய உணர்வு கொண்டவர். தமிழகத்திலிருந்து வெளிவரும் நூல்கள் பலவற்றை உடனுக்குடன் வாங்கித் தந்துவிடுவார். தகுந்த
21

Page 12
முறையில் அவற்றை எனக்கு அறிமுகப்படுத்துவார்.
மற்றொருவர் இலக்கிய கலாநிதி, இலக்கியமணி க.தா.செல்வராசகோபால் (ஈழத்துப் பூராடனார்) ஆவார். இதுவரை சுமார் 200 நூல்கள் வரை அவர் எழுதி யுள்ளார். தான் வெளியிடும் ஒவ்வொரு நூலின் பிரதியையும் உடனுக்குடன் வான்தபால் மூலம் (மிகுந்த செலவில்) எனக்கு அனுப்பிவைத்து விடுவார். (சுண்டக்காய் காற்பணம், சுமைகூலி முக்காப்பணம்)
பேராசிரியர் சி.மெளனகுரு நவீன இலக்கியப் போக்குகளை அவ்வப்போது எடுத்துக்கூறுவார். பின்னோக்கிய ஆய்வும் முன்னோக்கிய பாய்ச்சலும் இவரது தனித்துவம்.
கவிஞர் மூனாக்கானா - அப்பழுக்கில்லாத புனிதர் - இலக்கியம் படைப் பதிலும், இலக்கிய நெஞ்சராக வாழ்வதிலும் அவருக்கிணை அவரேதான். தினமும் சந்தித்து இலக்கிய உரையாடல் நடாத்துவது எங்கள் வழக்கம்.
மற்றும் விஸ்வப் பிரம்மறி காந்தன், நவம், செங்கை ஆழியான், முல்லைமணி, அகளங்கன், கே.எஸ்.சிவகுமாரன், செ.குணரத்தினம், க.தங்கேஸ்வரி, நவநாயகமூர்த்தி, மலர்வேந்தன், அருள் சுப்பிரமணியம், தா.அமரசிங்கம், தேவ மதுரம் முதலியோர், இலக்கியக் கடிதங்கள் மூலமும் எனது எழுத்துலகத்தை வளப்படுத்துகிறார்கள் என்றால் அது மிகையாகாது.
பல நூல்களுக்கு, அணிந்துரைகள், எழுதியதையும், விமர்சனக் கட்டுரைகள் எழுதியதையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். விருதுகளும் கெளரவங்களும் அவ்வப்போது சில விருதுகளும் கெளரவங்களும் எனக்குக் கிடைத்துள்ளன. ஒரு விருந்துவைபவத்தில் விருந்து பரிமாறுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் சாப்பாடு கிடைக்கும் அல்லவா? அந்த நினைவுதான் எனக்கு வருகிறது.
இந்து கலாசார திணைக்களம் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்த முதல்கட்டத்தில் "தமிழ்மணி” விருது (1995), வடக்கு - கிழக்கு மாகாணசபை ஆண்டுதோறும் வழங்கும் ஆளுநர் விருது (2000) இலங்கைக் கலைக்கழகத்தின் நாடகப்பிரதிப் போட்டிப்பரிசு (1972), காத்தான்குடி சமாதான இயக்கம் ஒன்றின் "சமாதான காவலர்” விருது (2000) ஆரையம்பதி மக்களின் 60 வயது பூர்த்தி விழா, சிறப்புமலர்(1995) யாழ் இலக்கியவட்டத்தின் பாராட்டுப்பத்திரம் ("ஒரு தந்தையின் கதை" நாவலுக்காக) முதலியன எனக்குக் கிடைத்த கெளரவங்களாகும். அல்லது இவை எனது எழுத்தாக்கங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனவும் கொள்ளலாம்.
ஒரு இலக்கியவாதிக்கு இத்தகைய விருதுகளைவிட அவனது ஆக்கங்கள் நூல்களாக வெளிவருவதே மிகுந்த ஆத்மதிருப்தியளிக்கும். அந்தவகையில் என்னால் எழுதப்பட்ட ஏராளமான கவிதைகள் (அருள்மணி என்ற பெயரில்) பல இலக்கியக் கட்டுரைகள், முதலியன பைல்களில் முடங்கிக் கிடக்கின்றன. அவை நூல்களாக yெளிவரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன் (டாக்டருக்கும் நோய்வரும் ဌိနှိုး பதுபோல, நூல் வெளியீட்டாளருக்கும் இந்நிலை ஏற்படுகிறது) இந்த உணர்வுகளை வெளியிட வாய்ப்பளித்த “ஞானம்" ஆசிரியருக்கு நன்றி. 6.3.2002ல் எனக்கு 67வயது பூர்த்தியாகிறது (பிறப்பு - 6.3.1935) சிறுகதை ஆசிரியனாக அறிமுகமாகி, கட்டுரையாசிரியனாக எனது எழுத்துலகம் பரிணமித்திருக்கிறது. இதுவரை எழுதியது கைமண்ணளவு. இன்னும் எழுதவேண்டியது உலகளவு என்பதே இன்றும் என் எண்ணமாக இருக்கிறது.
22

அன்பார்ந்த வாசகர்களே! ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
“ஞானம்" சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
கொழும்பு;- பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு- 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை. வசந்தம்- S - 44,3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11. யாழ்ப்பாணம்:- பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. திருகோணமலை:- வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை. திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. கல்முனை:-
சொய்ஸ் பலஸ், கல்முனை.
மட்டக்களப்பு:- சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு. எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு. முல்லைத்தீவு:- கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வவுனியா:- சந்திரபோஸ் சுதாகர் - 87, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா. கண்டிகலைவாணி புத்தகசாலை - 231, டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி, லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி. கொட்டக்கலை:- சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை. புத்தளம்:- சாரா பேப்பர் சென்ரர் - 14, யூ.சி. ஷொப், குருநாகல் றோட், புத்தளம். கண்டி புக்சென்டர் - 20, மெயின் வீதி, புத்தளம்.
மன்னார்:-
ஜோதி புக் சென்ரர், கிரான்ட் பஸார், மன்னார்.
LS L S L S L L L L L L L L L L S S L L SL S L S L L L L L L L L L L L L L L q S S
* நெற்றிக் கணி” விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கண் பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம்பெற வேண்டுமெனில், நூலின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல்பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய
நூலகம் பகுதியில் இடம்பெறும். -ஆசிரியர். J
23

Page 13
நே
爪
经箕
லெ.முருகபூபதி
சந்திப்பு: Av A AP தி.ஞானசேகரன்
Y 1972ல் கனவுகள் ஆயிரம் என்ற சிறுகதை மூலம் மல்லிகையில்) அறிமுகமானவர். Y சிறுகதை, கட்டுரை, செய்தியறிக்கை, இலக்கிய ஆய்வு, புதினம், நாவல் முதலான துறைகளில் எழுதிவரும் லெ. முருகபூபதி எண்பதுகளில் வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றியவர். Y "சுமையின் பங்காளிகள்’ என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு 1975ல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். Y சமாந்திரங்கள், வெளிச்சம், சமதர்மப் பூங்காவில், நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள், பாட்டி சொன்ன கதைகள், சந்திப்பு, இலக்கிய மடல், கடிதங்கள், எங்கள் தேசம், பறவைகள், மல்லிகை ஜீவா நினைவுகள் ஆகியன இவரது ஏனைய நூல்கள். Y அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகம் 'இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ ’அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம்’ முதலிய அமைப்புகள் உருவாவதற்கு முன்னின்று உழைத்தவர். Y அவுஸ்திரேலிய விக்டோரியா மாநில சிறந்த பிரஜைக்கான "அவுஸ்திரேலிய தின விருது பெற்றவர். أص கேள்வி- அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழாவில் சந்தித்த பின்னர் மீண்டும் நாம் தாயகத்தில் சந்திக்கின்றோம். இந்தச் சந்திப்பு உங்களுக்கு எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துகின்றது?
பதில் : நாம் எழுத்தாளர்களாக - வாசகர்களாக - பத்திரிகையாளர்களாக இருக்கலாம். எனினும் - எம்மை நாம் இலக்கியவாதிகள் என்று அழைத்துக் கொள்வதிலேதான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். காரணம் இலக்கியவாதிகள் எப்பொழுதும் இலக்கிய உணர்வுள்ளவர்களாகவே இருப்பர். சக இலக்கிய நண்பர் களைச் சந்திக்க விரும்புவர். இச்சந்திப்புகளுக்கு அன்பு மாத்திரம் காரணம் அல்ல. பரஸ்பரம் இலக்கியத் தேடலும் அடிப்படையாக அமைந்துவிடும். எமது படைப்புகளை நாம் பத்திரிகை, இதழ்கள் வாயிலாக பதிவு செய்து பகிர்ந்து கொண்டாலும் - அதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் எமது படைப்புணர்வை வெளிப் படுத்திக் கொண்டாலும் - நேருக்கு நேர் சந்திக்கும்போது கிட்டும் இன்பம் இருக்கிறதே - அதனை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து தொலைபேசி வாயி லாகப் பேசும்போதும் மின்னஞ்சல் வழிமுறைகளில் தொடர்பு கொள்ளும் போதும்கூட நலம் மிகுந்த பரவசம் அடைகின்றோம்.
குறிப்பாகத் தொலைபேசியில் எனது குரலைக் கேட்டும் இலக்கியவாதிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் இருந்து அவர்கள் எவ்வளவு சந்தோஷப் படுகிறார்கள் என்பதை என்னால் ஊகித்துணர முடிகிறது. அப்படியிருக்க நேருக்கு நேர் சந்திக்கும்போது கிட்டும் உணர்வு, பிரிந்தவர்கள் கூடினால் பேசவும்வேண்டுமா என்பதுபோல் இருக்கும். ஆனால் நாம் பேசுகிறோம். இது அலாதியான இன்பம்.
24
 

அநுபவித்தால்தான் புரியும்.
கேள்வி: அவுஸ்திரேலியாவுக்கு நீங்கள் சென்று பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இக்காலப்பகுதியில் இதுவரையில் மூன்று தடவைகள் நீங்கள் தாயகம் வந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வருகைக்கும் ஏதும் காரணம் இருக்கும். இந்தத் தடவை உங்கள் வரவின் நோக்கம் என்ன?
பதில்: காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பர். நான் ஒரு இலக்கிய யாத்திரிகன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் இலக்கியவாதிகளை தேடிச்செல்பவன். இப்பொழுது நான் அவுஸ்திரேலியாவின் பிரசையாக வாழ்ந்தாலும் . எங்கள் தேசம்தான் எனது தாயகம். அதனால், வேர் இப்பக்கம் வாழ்வு அப்பக்கமாக எனது வாழ்வு படர்ந்திருக்கிறது. எனக்குமட்டுமல்ல - புலம்பெயர்ந்துவாழும் எம்மவர் களில் பெரும்பாலானவர்களின் நிலைமை அப்படித்தான்.
எனது இலக்கிய மடல் நூலின் முன்னுரையில் ஒரு விடயம் குறிப்பிட்டுள் ளேன். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை. நான் புலம்பெயர்ந்ததும் எதிர்பாராத நிகழ்வுதான். புலம்பெயர்ந்த பின்பு நிகழ்ந்தவைகளும் எதிர்பாரதவைகள் தான். இம்முறை எனது தாயகப் பயணமும் எதிர்பாராததுதான். வந்தபின்பு நிகழ்ந் தவையும் எதிர்பாராததுதான். இந்த எதிர்பாராத நிகழ்வுகளில் அதிர்ச்சிகள், தோல்விகள், ஏமாற்றங்கள், வியப்புகள், வேதனைகளைச் சந்தித்திருக்கின்றேன். இம்முறை பயணத்தில் எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. 50வயது பூர்த்தியை முன்னிட்டு நாவல், சிறுகதை, கட்டுரை, கடித இலக்கியம் என்று ஐந்து நூல்களையும் - எனது படைப்புகளின் விமர்சனத்தொகுப்பு நூல் ஒன்றினையும் வெளியிட்டிருக்கிறேன்.
இதனையெல்லாம் செய்து முடிக்கப் பக்கத்துணையாக இருந்தது ஆத்மபலம் மாத்திரமே.
இந்தப்பயணத்தில் - என்தாயகத்தில் எனக்கு ஒரு வாழ்க்கைத்துணை கிடைத்துள்ளது. இதுவும் எதிர்பாராத நிகழ்வு - இங்கு நான் இன்ப அதிர்ச்சியைச் சந்தித்தேன். எனக்குக் கிடைத்துள்ள துணைவி ஒரு தமிழ் ஆசிரியை. இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டவர் . இவரது தம்பியும் ஒரு கவிஞர் - தங்கையும் ஒரு பத்திரிகையாளர். எனவே - இலக்கிய, பத்திரிகைக் குடும்பத்தில் நான் இணைந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
கேள்வி அப்படியென்றால் - உங்களுக்கு மற்றொரு ‘விருது' கிடைத்துள்ளது என்று சொல்லுங்கள்.
பதில்: ஆமாம். கேள்வி அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 26ம்திகதி தங்களுக்கு சிறந்த பிரஜைக்கான விருது கிடைத்திருப்பதாகப் பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். இந்த விருது குறித்து எமது வாசகர்களுக்கு சற்று விளக்குவீர்களா?
பதில்: அவுஸ்திரேலியா மிகப்பெரிய கண்டம். பிரித்தானியாவில் இருந்து கப்பல் மார்க்கமாகப் பயணித்த மாலுமி குக் என்பவரினால் இருநூற்றுப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அத்தினம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ம் ஆம்திகதி கொண்டாடப்படுகிறது. இதனை அங்கே பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர். நான் 1987ஆம் ஆண்டு அங்கு புலம் பெயர்ந்தபோது அந்நாட்டு மக்கள் 200ஆவது தினத்தைக் கொண்டாடினார்கள். இத்தினம் அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்தத்தினம் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே - இந்நாட்டின் மாநில்ங்களின்
25

Page 14
பிரதான நகரங்களின் மாநகரசபை - அந்தந்த பிரதேச அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அவுஸ்திரேலிய தின விருதுக்காகப் பெயர்களை சிபார்சு செய்யுமாறு கோரும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் DARABIN மாநகரத்தில் வாழ்ந்து கொண்டிருந் தேன். இங்கே 2001ஆம் ஆண்டு எழுத்தாளர் விழாவை மிகவும் சிறப்பாக அடுத் தடுத்து இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தேன்.
அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் முதற்தடவையாக இப்படியொரு தமிழ் எழுத்தாளர்விழா நடந்தது.
தவிர - அங்குள்ள சமூக சேவையாளரும் - தமிழ் பற்றாளருமான மருத்துவக் கலாநிதி பொன். சத்தியநாதன் அவர்களினால் உருவாக்கப்பட்ட ஒன்றிய தமிழ் தோழமை என்ற அமைப்பின் தமிழ் நூல் நிலையத்தின் செயலாளராகப் பணியாற்று கிறேன். இங்கு இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஐரோப்பிய நாடுகளில் வெளியாகும் நூல்கள், மலர்கள், இதழ்கள் பத்திரிகைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு துறைகளையும் சேர்ந்த சுமார் 5000 நூல்கள் இங்குள்ளன. இந்நூல் நிலையம் சிறப்பாக இயங்குகிறது. அத்துடன் 1989 முதல் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை உருவாக்கி - இலங்கையில் பிறந்த, அழிவுகளினால் பெற்றோரை இழந்து பாதிப்புற்ற நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பல அன்பர்களின் ஆதரவுடன் உதவி வருகின்றேன். இது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்குகின்றது. 5 வருடங்களுக்கு முன்பு விக்டோரியா மாநிலத்தில் டாக்டர் நடேசன் என்பவரால் உருவாக்கப்பட்ட TAMILNEWSPTY LTD என்ற ஸ்தாபனத்தின் மாத வெளியீடான "உதயம் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கின்றேன். இது ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகிறது.
தொடர்ச்சியாக எனது படைப்புகளை நூலாக வெளியிட்டுக் கொண்டிருக் கிறேன்.
இந்தப்பின்னணிகளைக் கவனத்திற் கொண்ட எமது தமிழ் நூல்நிலையத்தின் நிர்வாகக் குழு - எனது பெயரை - DARABIN மாநகரத்துக்கு முன்மொழிந்
திருக்கிறது.
எனது பெயர் - பணிகள் அங்கே ஒரு குழுவினால் பரிசீலனை செய்யப் பட்டிருக்கவேண்டும்.
எதிர்பாராத விதமாக எனக்கு ஒரு கடிதம் வந்தது. எனது பெயர் இந்த விருதுக்காக NOMINATE பண்ணப்பட்டிருப்பதாகவும் - அவுஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில் வந்து கலந்துகொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப் Ljlig (5,555).
எனக்கும் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் போகவில்லை. அனுப்பப்பட்ட அழைப்புக்கு மரியாதை செய்யும் முகமாகவும் . அந்தக் கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ள பல்தேசியக் கலாசார நிகழ்வுகளை இரசிப் பதற்காகவும் போயிருந்தேன்.
விருதுவழங்கும் வேளை வந்தபோது பலரது பெயர்கள் NOMINATE பண்ணப்பட்டிருந்ததாக மேடையில் அறிவித்தார்கள். இறுதியில் நால்வர் இந்த விருதுக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
அதில் ஒருவனாக நானிருந்தேன். ஏனைய மூவரும் பெண்கள்; வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஒருவன் மாத்திரம் தமிழன். ஏன் எனக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்ற விடயத்தை மேடையில் அறிவித்தார்கள்.
முன்பே சொன்னேனே - எதிர்பாராத நிகழ்வுகள் என்வாழ்வில் தொடர்வதாக,
26

அந்தவரிசையில் இந்த விருதும் ஒன்று. இந்தச் செய்தி பின்னர் - அவுஸ்தி ரேலிய, இலங்கைப் பத்திரிகைகளிலும் வெளியானது. அவுஸ்திரேலிய SBS வானொலியிலும் லண்டன் IBC வானொலியிலும் சொல்லப்பட்டது. இப்பொழுது நீங்கள் விபரமாகக் கேட்டறிகிறீர்கள் அவ்வளவுதான்.
கேள்வி: 1975ல் உங்களது முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இங்கே சாகித்திய விருது கிடைத்தது. இதுதவிர அவுஸ்திரேலியாவில் நீங்கள் வேறு விருதுகளும் பெற்றுள்ளீர்களா?
பதில்: ஆம். விக்டோரியாவில் இருக்கும் ஈழத் தமிழ்ச் சங்கத்தினர் தமது 20ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு அங்கு பலருக்கு விருது கொடுத்துப் பாராட்டினர். எனக்கு - இலக்கியப் பணிக்காகக் கிடைத்தது. TAMIL AUSTRALAN FRIENDSHIPSOCIETY என்ற அமைப்பு சமூகப்பணிகள் செய்ததற்காக 2001 ஆண்டு இறுதியில் பலருக்கு விருது கொடுத்தது; அதில் நானுமொருவன். கேள்வி: இந்த விருதுகள், பாராட்டுகள் குறித்து ஒரு இலக்கியவாதி என்ற முறையில் உங்கள் அவதானம் எப்படி?
பதில்: விருதுகள் ஒருவருக்கு ஊக்கமளிப்பதற்கு வழங்கப்படுகிறது. சில சமயங்களில் அவை விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. - பத்திரிகைகளில் - மேடைகளில் கண்டனங்கள் வழங்கப்படும் அளவுக்கும் சிலசமயங்களில் "விருதுகள்” கஷடங்களை எதிர்நோக்குகின்றன. ஆனால் - எனக்கு விருதுகள் - பாராட்டுகள் கிடைக்கும்போது அதற்கு நான் தகுதியானவன்தானா என்பதை முதலில் நான் எனக்குள் சுயவிமர்சனம் செய்துகொள்வேன். அதற்குத் தகுதி யானவன்தான் என்று எனது மனச்சாட்சி ஒத்துக்கொண்டால் மாத்திரமே ஏற்றுக் கொள்வேன். ஏனென்றால் நான் எப்பொழுதும் மனச்சாட்சியின் கைதியாக வாழ் பவன். இதுபற்றி எனது இலக்கியமடலில் ஒரு நேர்காணல் கட்டுரையே உண்டு. கேள்வி: 2001ஜனவரி மாதம் மெல்பர்னில் நீங்கள் ஒழுங்கு செய்திருந்த இரண்டு நாள் எழுத்தாளர் விழாவை நாம் நேரில் கண்டு களித்தோம். அதன்பின்பு - கடந்த ஜனவரியில் 2வது விழா சிட்னியில் நடந்ததாக அறிந் தோம். இதுபற்றி உங்கள் கருத்துக்களை எமது "ஞானம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றேன். W
பதில்: அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ், கலையிலக்கியவாதிகளின் வருடாந்த ஒன்றுகூடல்தான் இந்த எழுத்தாளர் விழா. விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் - இலக்கியத்தேடலுடன் அறிந்ததைப் பகிரவும் - அறியாததை அறிந்து கொள்வதற்குமான ஓர் ஆரோக்கியமான சந்திப்பே இந்த எழுத்தாளர் விழாவின் அடிப்படை நோக்கம். 2001ஆம் ஆண்டு ஜனவரி 6ம்திகதி DARABIN நகரமண்ட பத்தில் முழுநாளும் நடந்தது. தமிழுக்காகப் பணியாற்றி மறைந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் படங்களைக் கண்காட்சியில் இடம்பெறச் செய்தோம். கம்பன், பாரதி வள்ளுவர் உட்பட வீரமாமுனிவர் முதல் - யாழ்ப்பாணத் தில் துப்பாக்கி வேட்டுக்குப்பலியான பத்திரிகையாளர் நிமலராஜன் வரையிலான நூற்றுக்கணக்கான புகைப்படங்களை இக்கண்காட்சியில் வைத்தோம். இவை இளம் - முதிய தலைமுறையினரின் ஒவிய, புகைப்படங்கள். தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் வெளியாகும் நூல்கள், இதழ்கள், மலர்கள், பத்திரிகைகளின் கண்காட்சி களும் இந்த விழாவில் முக்கிய அம்சங்கள்.
காலை பத்துமணிமுதல் மாலை ஆறு மணி வரையும் 8 ஆமர்வுகளில் 24 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட கருத்தரங்கு நடந்தது. சங்ககால இலக்கியம் - போர்க்கால இலக்கியம் வரையில் இக்கட்டுரைகளில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இலங்கையிலிருந்தும் - அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களி
27

Page 15
லிருந்தும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுசன ஊடகங்களைச் சேர்ந் தோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இரவு, வால்மீகி சிறுவர்நாடகம், கலாமணியின் பூதத்தம்பி இசை நாடகம், சிட்னி அரங்கக்கலைகள் சக இலக்கியப் பேரவையின் "ஒரு பொல்லாப்பும் இல்லை நவீனநாடகம் என்பன மேடையேற்றப்பட்டன. மல்லிகை அவுஸ்திரேலியச் சிறப்புமலர் வெளியிடப்பட்டது.
இரண்டாம் நாள் 7ம் திகதி அங்குள்ள பிரபல்யமான பூங்காவில் - திறந்த வெளியில் கவியரங்கு நடத்தினோம். கவிஞர் அம்பி தலைமை வகித்தார். தரையில் அமர்ந்து கலந்துரையாடினோம். எமது பாரம்பரிய உணவுவகையில் ஒன்றான ஒடியல்கூழ் சுவைத்து பரஸ்பரம் எமது மனநிறைவுகளை வெளிப்படுத்திக்கொண் டோம், சுருக்கமாகச் சொல்வதானால் எமது இந்த முதல் முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. மாற்றுக் கருத்தோட்டம் கொண்டவர்களும் ஒரு பொது நோக்கத்தில் ஒன்றுபட்டுச்செயற்பட முடியும் என்பதை இந்த விழா நிரூபித்தது.
இரண்டாவது விழா சிட்னியில் கடந்த 19ம் திகதி கருத்தரங்கு கலந்துரை பாடலுடன் நடந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழர்களின் எதிர்காலம், பிள்ளைகளின் தமிழ் கல்வி தொடர்பாக இந்தக் கருத்தரங்கு மிகுந்த கவனத்தைக் கொண்டிருந்தது. நடந்த விவாதங்களும் தலைமுறை இடைவெளியை தொனிப் பொருளாகக் கொண்டிருந்தன. மூன்றாவது விழா அடுத்த ஆண்டு (2003) ஜனவரி யில் கன்பராவில் நடைபெறும்.
இந்தவிழாவை மூன்று நாட்கள் நடத்த யோசித்திருக்கிறோம். அவுஸ்திரேலியாவில் வதியும் கலை இலக்கியவாதிகள் பற்றிய விபரநூல் எம்மலர் வெளியிடப்படும். அத்துடன் அங்கு வதியும் எழுத்தாளர்களின் தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஒன்றையும் வெளியிட ஆவன செய்துள்ளோம்.
கேள்வி கேட்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. ள்முத்தாளர்கள் என்றாலே "சகோ"வுடன் முரண்பட்டு நிற்பவர்கள் என்பார்கள். அவர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி விழா நடத்துகிறீர்கள். வித்தியாசமான சாதனைதான். இது எப்படிச் சாத்தியமாகிறது?
பதில் கருத்து முரண்பாடுகளினால் ஒருவரின் மேன்மையை இனங்காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது என்ற கொள்கையில் நான் எப்போதும் திடசித்தமானவன். அதனாலேதான் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடமுடிகிறது. இது ஒன்றும் சாதனையல்ல. ஒருவகையில் தேடல் முயற்சி அவ்வளவுதான்.
கேள்வி: உங்களது ஐம்பது வயது நிறைவை முன்னிட்டு சில நூல்கள் வெளியானதாக அறிகிறோம். அவை பற்றிச் சொல்லுங்கள்.
பதில்: 12 சிறுகதைகள் கொண்ட "எங்கள் தேசம்" - கட்டுரைகள் நேர்காணல் களின் தொகுப்பு "இலக்கிய மடல்" - எனது தாயார், எனக்கு எழுத்தறிவித்த ஆசிரியை உட்பட எண்பதுபேர் எனக்கு எழுதிய கடிதங்களும் - நானெழுதிய விரிவான கடிதங்களுமடங்கிய நூல் "கடிதங்கள்", "பறவைகள்" என்ற எனது முதலாவது நாவல், என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும், இப்பொழுது பவளவிழாக் கொண்டாடுபவருமான மல்லிகை ஜீவா குறித்த நிகழ்வுகள் "மல்லிகைஜிவா நிகழ்வுகள்", எனது நூல்களின் விமர்சனங்கள் அடங்கிய "முருகபூபதியின் படைப்புகள்" - இரண்டாவது பாகம் என்பன வெளிஇ. யாகின.
மல்லிகை ஜீவா நினைவுகள், பறவைகள் என்பன விரைவில் இலங்கை வாசகர்களுக்குக் கிடைக்கும். இவை சென்னையில் வெளியாகிவிட்டன. துரிதமாக
28

இவற்றை எனக்கு அச்சிட்டு வழங்கிய எனது அருமை நண்பர் செ.கணேசலிங்கன் அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நான் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். கேள்வி: அடுத்து வெளியாகவுள்ள உங்களது நூல்கள் பற்றிக் கூறுங்கள்?
பதில்: கவிஞர் அம்பி எமக்கு முத்த தலைமுறையைச் சேர்ந்தவர். சிறுவர் இலக்கியத்துக்கும் கவிதைக்கும் வளம் சேர்த்தவர். மருத்துவத்தமிழ் முன்னோடி கிறீனை எமக்கு அறிமுகப் படுத்தியவர். இவர் குறித்த நூல் எழுதுகிறேன் "அம்பி வாழ்வும் பணியும்". கே.கணேஷ் எமது மதிப்புக்கும் அன்புக்குமுரிய முத்தவர். எமக்கெல்லாம் தந்தையாக மிளிர்பவர். இவர் குறித்தும் ஒரு நூல் எழுதவுள்ளேன். இவர் எனக்கு எழுதிய ஏராளமான கடிதங்கள் ஒரு தொகுப்பை வெளிப்படுத்தும். ஒவியர் செல்லத்துரை அவுஸ்திரேலியாவில் மறைந்துவிட்டார். இவர் சிறந்த புகைப்படக் கலைஞராவார். இவர்பற்றியும் ஒரு நூல் எழுதப்படும். "நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்" இரண்டாவது பாகமும் மற்றுமொரு நாவலும் எழுதவுள்ளேன். நாவல் அற்பாயுளில் மறைந்துபோன ஒரு பத்திரிகையாளனின் டயறிக்குறிப்புகளை மையமாகக் கொண்டு எழுதப்படுகிறது. இது ஒரு கற்பனைப் பாத்திரம். ஆனால் குறிப்புகள் நிஜமானவை. காயமுற்ற எங்கள் தேசத்தை இந்த நாவல் இனங்காண்பிக்கும்.
கேள்வி: இப்பொழுது இங்கு யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதானம் தோன்று வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்தவர் என்ற முறையில் - அவுஸ்திரேலியாவில் வதியும் எம்மவர்கள் இதனை எவ்வாறு அவதானிக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?
பதில்: எங்கள் தேசம் காயப்பட்டிருக்கிறது. எங்கள் தேசத்தின் மக்களின் காயங்களை சுகப்படுத்த அந்நிய சக்திகளின் துணை நாடவேண்டிய அளவுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றால் எம்மிடையே புரிந்துணர்வு இல்லை என்பது தான் அர்த்தம். எந்தவொரு போராட்டமும் இறுதியில் பேச்சுவார்த்தையில் தான் முடியுமென்பது வரலாறு. இப்பேச்சுவார்த்தைகளை என்றோ ஆரம்பித்திருப்பின் எத்தனையோ உயிர் அழிவுகளைத் தடுத்திருக்க முடியும், காலம் கடந்தாவது இரண்டு தரப்பினரும் பேசமுன்வந்திருக்கின்றனர் என்றால் அதற்குக் காயங்கள் மட்டுமல்ல சர்வதேச அழுத்தங்களும்தான் காரணம்.
இன்று அவுஸ்திரேலியாவில் வதியும் ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். பல்கலைக்கழகம் செல்கின்றனர். இசை, நடனம் முதலான துறைகளில் தேர்ச்சி பெற்று அரங்கேற்றமும் செய்கின்றனர். இதனைக்கண்டு பெற்றோர்கள் பூரித்துப்போகின்றனர். அங்கு புலம்பெயர்ந்த மக்கள் கனவுகளுடன் வந்தனர். கனவு மெய்ப்பட வேண்டுமென்று கடுமையாக உழைத்தனர். அதேபோல் தாயக மக்களுக்கும் கனவுகள் எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால் இவர்கள் கண்டதே காயங்களும் அவலவாழ்வும்தான். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கண்டு சிந்தை இரங்கவேண்டிய நிலையிலேதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார் கள். இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை அவர்களால் பெரிதும் வரவேறகய படுகிறது.
கிடைக்கும் தீர்ப்பு அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். இலங்கையின் எதிர்காலம் - அரசியல்வாதிகளின் கைகளில் இல்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள் என்ற இந்த ஐம்பெரும் சக்திகளிடம்தான் பெரிதும் தங்கியுள்ளது. இனமத வேறுபாடுகளுக்கப்பால் தேசத்தின் நலன் குறித்து இச்சக்திகள் இணைய வேண்டும். நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்குவோம்.
29

Page 16
நெற்றிக்க
60
O
O நூல் விமர்சனம் நெற்றிக்கண் தொந்தரவுபடுத்தாத இயல்பான நடை நூல் : கன்னியாதானம் யும் அவரது சிறுகதைகளில் அமைந்
எழுதியவர் : ராணி சீதரன்
பெண் எழுத்தாளர்கள் அடிப்படை யில் இரு வகையினர். பெரும்பாலும் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் சமு தாயம் பெண்களுக்கு விதித்த விதி முறைகளையே (இன்னொரு வகையில் அவை தண்டனைகளும் ஆகும்) வெவ் வேறு அளவுகளில் தத்தம் புனைகதை கள் மூலம் விநியோகித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் லசஷ்மியும், இலங்கை யில் பாலேஸ்வரியும் இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டுகள். இன்னொரு வகை யினர் பெண்ணியச் சிந்தனையோடு பேனா பிடிப்பவர்கள். இந்தியாவில் ராஜம் கிருஷ்ணன், அம்பை, பூமணி போன்றவர்களும், இலங்கையைச் சேர்ந்த பவானி, ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி போன்றோரும் இவ் வாறு பெண்ணியச் சிந்தனையோடு புனைகதைகள் படைப்பவர்கள். இந்த இரண்டாவது வரிசையில் இணைந்து கொண்டவராக ராணி சீதரன் விளங்கு கின்றார். மாங்கல்யம் தந்து நீயே (1999) என்ற சிறுகதைத் தொகுதிக்குப் பின், கன்னியாதானம் என்னும் அவரது பிறி தொரு தொகுதி வெளிவந்துள்ளது.
இத்தொகுதியில் உள்ளத்தின் கதவுகள் முதல் கன்னியாதானம் வரை ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாகச் சகல சிறுகதைகளும் இயல் பான கருக்களையும், வலிந்து புகுத்தப் படாத சம்பவங்களையும் கொண்டவை யாக விளங்குகின்றன. வாசகரைத்
30
துள்ளது. பெண்ணியச் சிந்தனைகள் பெரும்பாலான படைப்புகளில் இழை யோடுகின்றன.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் பிறந்தமண், மீண்டும் நளாயினி, கன்னியாதானம் முதலான சிறுகதைகள் விதந்து குறிப்பிடத்தக் கவை. பிறந்த மண்ணில் இடம்பெறும் பாக்கியம் போன்ற பாத்திரத்தைச் சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் எங்கும் காணலாம். தமது இறுதிக்காலத்தில் தம் பிறந்தமண்ணிலேயே தமது வாழ்வும், சாவும் அமையவேண்டும் என விரும்பும் ஒரு வயதான பெண்ணின் மன உணர்வு களையும், செயற்பாடுகளையும் யதார்த்த மாகக் கதாசிரியை சித்திரித்துள்ளார்.
மீண்டும் நளாயினி என்ற சிறு கதையை முதலில் வாசிக்கும் எவருக் கும், அது ஒரு சாதாரண கதை போலவே தோன்றும். ஆனால், மீண்டும் வாசிக்கும்போதுதான் கதாசிரியையின் படைப்புத்திறன் புலப்படும். ஆண்பெண் உறவில் ஏற்படும் நுண்ணிய உணர்வு களை எழுத்தாளர் தமது எழுத்திற் கொணர்வதில் போதிய அக்கறை செலுத்தியுள்ளார். வித்தியாசமான பாணியில் அமைந்த ஒரு குறிப்பிடத் தக்க படைப்பு அது.
கன்னியாதானம் எனும் சிறுகதை, மரபுவாதிகளின் மன எரிச்சலை இயல்பா கவே பெற்றுக்கொள்ளக்கூடிய படைப்பு. ஆனால், முற்போக்குச் சிந்தனையாளர் கதாசிரியையின் துணிச்சலைப்பாராட் டவே செய்வர். தன்னை நம்பவைத்து

ஏமாற்றியவனைப் பற்றியே சதா சிந்தித்து, தனது வாழ்வை அழித்துக் கொள்ளாமல், புதிய வாழ்வை ஏற்றுக் கொள்பவளாகச் சிந்துஷா என்ற பாத் திரத்தை வார்த்துள்ளார், எழுத்தாளர். தமது பாத்திரங்களை யதார்த்தமாகச் சிந்திக்கவைப்பதிலும் செயற்பட வைப்ப திலும் ராணி சீதரன் இயல்பான அக் கறை செலுத்துகின்றார்.
ஒரு குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதியாக விளங்கக்கூடிய இந்நூலிற் சில குறைகளும் உண்டு. பேச்சு வழக்கை பாத்திர உரையாடல்களில் ஆர்வத்தோடு கையாளும் கதாசிரியை, பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆங்காங்கே இடறியும் விடுகின்றார். இயல்பான பேச்சுவழக்கை பயன்படுத்தவேண்டிய பாத்திரங்கள், பல வேளைகளிற் செந் தமிழ் பேசுகின்றன. யதார்த்தபூர்வமாகக் கருக்களையும், சம்பவங்களையும் பயன்
படுத்தும் கதாசிரியை, பாத்திரங்களை மாத்திரம் பல சந்தர்ப்பங்களிற் செந்தமிழ் பேச அனுமதிப்பது பொருத்தமாக இல்லை. ஒரு சில சொற்களை எழுத்துப் பிழைகளுடன் பயன்படுத்துவதும் தவிர்க் கப்படவேண்டும். அவளிற்கு, தேனீர், அண்ணார்ந்து போன்றவை எழுத்துப் பிழைகளுடன் அமைந்துள்ளன. இவை முறையே அவளுக்கு, தேநீர் , அண்ணாந்து என்றே அமைந்திருக்க வேண்டும். சிறு எழுத்துப்பிழைகளையா யினும் எழுத்தாளர்கள் விடுவது முறை யற்றது.
இச்சிறுகதைத்தொகுதியை அடிப் படையாகக் கொண்டு நோக்குமிடத்து, ராணி சீதரனிடமிருந்துமேலும் தரமான படைப்புகளை வாசகர்களும், விமர்சகர் களும் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
பழங்கவிதை
பதினைந்து வயதில் நான் பட்டாளத்தில் சேர்ந்தேன் பத்து எட்டு வயதில் நான் வீட்டுக்கு வந்தேன் வழியில் கிராமமிருந்து ஒரு மனிதனைக் கண்டேன் யாருள்ளனர் வீட்டில் என்று அவனிடமும் கேட்டேன்
“அதோ அங்கு உள்ளது அதுவே உங்கள் வீடு யாவும் மரத்தாலும் புதராலும் மூடியுள்ளன” முயல் அங்கே ஒடியிருந்தது நாய்குழிக்குள்ளே உயர்கூரை கம்பிருந்து உளர்குருவி கீழ் பறந்தது
சீனத்தில் யாரோ ஒருவர்
ஆங்கிலத்தில் : ARTHUR WALEY
முற்றத்தில் அங்கு சில வனதானியம் வளர்ந்தன சுற்றிகிணற்றை உள்ளன உண்ணக்கூடிய கீரைவகை தானியத்தை அவித்து நானும் கஞ்சி கொஞ்சம் சமைத்தேன் தாராளமாம் கீரை கொணர்ந்து தரமாய் “ரசம்’* செய்தேன். கஞ்சியும் ரசமும்’ நன்றாய் நானே சமைத்துதானே இருந்தேன் கொஞ்சி அங்கு கூடியுண்ண ஆனால் ஒருவருமில்லை வெளியில் சென்று அங்குநானும் வெற்றாய் கிழக்கை நோக்கினேன் விழியிலிருந்து கண்ணிர் சொரிந்து ஆடையை நனைத்தது.
* J&Lb - Soup
தமிழாக்கம் :
31
ஏ.பி.வி.கோமஸ்

Page 17
இலக் கியச் செம்மல் டாக்டர் க.சதாசிவம்
(ந.பார்த்திபன்)-
1961ம் ஆண்டு மரகதம் மாத சஞ்சிகையின் சிறுகதைப்போட்டியில் தனது 19வது வயதில் பரிசு பெற்றதுடன் இலக்கிய உலகப் பிரவேசத்தைத் தொடங்கியவர் இவர். தன் பிறந்த கிராமத்தின் பெயரையும் சேர்த்து புலோலியூர் க.சதாசிவம் என்று தன்னை அடையாளப்படுத்தி இன்றுவரை இலக்கியப்பணி புரிந்துவருகிறார். யுகப்பிரவேசம் (1973), ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது (1982), ஒரு நாட்பேர் (1995), புதிய பரிமாணம் (1998) ஆகிய சிறுகதைத்தொகுதிகளையும், நாணயம் (1980), மூட்டத்தினுள்ளே (1983) ஆகிய நாவல்களையும் வழங்கி தமிழன்னைக்கு அணிசேர்த்துள்ளார் இவர். இவற்றைவிட கட்டுரையாக்கம், வானொலி நாடகப் பிரதியாக்கம் எனத் தன் இலக்கியப் பணியின் பரிமாணத்தை விரித்தார். வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் இளம்பிறை, மல்லிகை, தீபம், தாமரை போன்ற சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூட்டத்தினுள்ளே என்ற நாவலில் அறிமுகவுரையாக இந்நாவலாசிரியர் ஒர் இலக்கிய சாதனையாளர் என்ற தலைப்புடன் குறிப்பிட்ட விடயங்களைத் தமிழிலக்கிய உலகம் அறிந்து கொள்வது அவசியம் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன். 1961ல் மரகதம் சஞ்சிகைப் பரிசுச் சிறுகதை, 1971ல் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபன முதற்பரிசான தங்கப்பதக்கமும் பெற்ற சிறுகதை, 1972ல் நாவலர் சபை நடாத்திய போட்டியில் முதற்பரிசுச் சிறுகதை, 1983ல் பிரதேச அபிவிருத்தி அமைச்சுப் போட்டியில் முதற்பரிசுச் சிறுகதை, 1993ல் கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுப்போட்டிப் பரிசுச் சிறுகதை, 1995ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் தினகரனும் இணைந்து நடாத்திய போட்டிப் பரிசுச்சிறுகதை எனப் பல பரிசில்களைச் சிறுகதைக்காகப் பெற்ற இவர், 1982ல் வர்த்தக கப்பற் துறை அமைச்சுச் சார்ந்த ஆக்கவுரிமைகள் வியா பாரக் குறிகள் பதிவகம் நடாத்திய இலக்கியப் போட்டியில் அதி உன்னத படைப்பாக ‘ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது என்ற சிறுகதைத்தொகுதி பரிசு பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இனி, நாவல் இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலும் 1978ல் வீரகேசரி நடாத்திய பிரதேச நாவல் போட்டியில் மலையக நாவலுக்கான முதற்பரிசை ‘மூட்டத்தினுள்ளேற்கும், 1981ல் யாழ்பப்ாணப் பிரதேச நாவலான நாணயத்திற்கு சாகித்திய மண்டலப்பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மலையகம் தத்தெடுத்த மைந்தர்கள்-இரட்டையர்கள் (தொழில்ரீதியாகவும் - எழுத்துரீதியாகவும்) என தி.ஞானசேகரனையும் - இவரையும் குறிப்பிடுவதைக்காண்கிறோம். சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற வடபுல நாவல் நாணயம், மலையக நாவல் முட்டத்தினுள்ளே போன்று இன்றைய வரலாற்றுப் பின்னணியில் இரு நாவல்களைப் படைக்கவேண்டு மென்பது என் ஆசை எனக் குறிப்பிடும் இவரது ஆசை நிறைவேறி தமிழ் இலக்கிய உலகம் பயன்பெற வேண்டுமென்று நாமும் ஆசை கொள்வதில் தப்பில்லை எனலாம்.
அர்ப்பணிப்புடன் - ஆற்றலுடன் இவர் செயற்படுவதால் அதற்கேற்ப இவருக்கு
32
 
 
 

கெளரவிப்புகளும், விருதுகளும் அதிகமாகக் கிடைத்துள்ளன. 1972ல் நாவலர் 150வது ஜெயந்தி விழாவில் கெளரவிக்கப்பட்டார். 1991ல் தேசிய தமிழ் சாகித்திய விழாவில் இந்து கலாசார அமைச்சினால் 'இலக்கியவித்தகர்' பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 1991ல் ஊவாமாகாண கலாசார அமைச்சு நடாத்திய சாகித்
‘இலக்கியச் செம்மல்" பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 1996ல் மலையக இலக்கியப் பேரவையால் கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக மலையக இலக்கியத் திற்கு அளித்த பங்களிப்புகளிற்காக விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 1999ல் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் கால் நூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்திற்கு சேவை ஆற்றிய பிறமாவட்டத்தவர் என்ற நிலையில் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் விருப்பத்திற்கிணங்க மத்திய மாகாண கலாசார அமைச்சரால் பொன்னாடை போர்த்தி, விருதும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். எழுத்துக்களும், கெளரவிப்புகளும், விருதுகளும் அதிகரித்த போதும் இலங் கையர்கோனின் “வெள்ளிப்பாதரசம், வ.அ.இராசரத்தினத்தின் தோணி, திருச் செந்தூரனின் ‘உரிமை எங்கே ஆகிய சிறுகதைகள் நான் பல தடவைகள் ரசித் துச் சுவைத்து, கருத்தூன்றிப் படித்தது என் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன என தன் ஏகலைவத்துவத்தைக் குறிப்பிட்டுப் பணிவு கொள்வதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். இதைவிட நான் இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்தில் எனக்கு நேரடி வழிகாட்டியென யாருமே இருக்கவில்லை என்றும், எனது சுயமுயற்சியும் நான் பிறந்து வளர்ந்த இலக்கியச் செழுமைமிக்க புலோலியூரின் பின்னணியும், நான் இளவயதில் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி இழையோடிய வாழ்க்கை நிலையும் என் சிந்தனையில் சமுக முரண்பாடுகள் பற்றி ஏற்படுத்திய தாக்கமும் எழுதத் தூண்டின என்று குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.
அன்று, வடபுலத்தில் துலாவோடி நீர் பாய்ச்சிய புகையிலை, உப உணவுப் பயிர்ச்செய்கை உழைப்பாளிகளின் உதாரண புருஷனாக விளங்கி, நாலுபேரால் நாணயமான மனிதன் என மதிக்கப்பட்ட தனித்துவ ஆளுமைகொண்ட எனது தந்தை, எனது எழுத்து ஆளுமைக்கு வித்திட்டவர். தோன்றாத் துணையாக நின்றவர் என்று தன் தந்தையின் வாழ்க்கையையும், சிறப்பையும் நினைத்து கனக்கும் நெஞ்சுடன் நினைவு கூருகிறார்
புலோலியூர் க.சதாசிவம் நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக மட்டுமன்றி தன்னை இனங்காட்டிய துறைகள் இன்னுமுள. 1976ல் தேசிய தமிழ் சாகித்திய விழா தொடர்பாக இலங்கை கலாசார பேரவை நடாத்திய இலக்கியப்போட்டியில் ஓரங்க நாடகம் எழுத்துப்போட்டியிலும், கட்டுரைப்போட்டியிலும் பரிசுகளைப் பெற்றுள் ளார். இவருடைய ஒரு நாட்பேர் என்னும் சிறுகதை மலையக சிறுகதை நூலில் இடம் பெற்றுள்ளதுடன் ஜேர்மன், பிரான்ஸ், மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக் கது. இனி னும் இவருடைய "அக்கா ஏன் அழுகிறாய் என்ற சிறுகதை சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டதுடன் சிங்கள சிறுகதைத்தொகுதி ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது என்பதும் கவனிப்புக்கும் - கணிப்புக்கும் உரியதே.
ஈழத்துப் புனைகதை இலக்கியத்திற்கு அணியும் வளமும் சேர்க்க வேண்டு மென்பதே இவரது ஆசையாகும் என 1982ல் மூட்டத்தினுள்ளே என்ற வீரகேசரிப் பிரசுரமாக வந்த மலையக நாவல் அறிமுக உரையில் குறிப்பிட்டதற்கேற்பவும், இந்நாவல் ஆசிரியர் ஒர் இலக்கிய சாதனையாளர் எனக் குறிப்பிட்டதற்கேற்பவும் இன்றுவரை இலக்கியப்பணி புரிந்துவரும் இவர் சிறந்த மருத்துவராக இருந்து இன்றுவரை மருத்துவப்பணியும் ஆற்றி வருகிறார் என்பது மனங்கொள்ளத்தக்கது.
33

Page 18
இவர்கள் போல இன்
(இஸ்லாமியச் செல்வி - கண்டி)
"కెన్స్త**
நான் வந்த இடம் சரிதானா..? அல்லது கனவு ஏதும் காண்கிறேனா. கண்களைக் கசக்கிவிட்டுப் பார்க்கிறேன். பார்வை சரியாகத்தான் இருக்கிறது. இடம் சரியானதுதான். ஆனால். ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
என்னை அழைத்து வந்தவர், "இதுதாங்க வீடு” என்கிறார். முற்றத்தில் நடப்பட்ட கம்பத்தில் ஒரு வெள்ளைக் கொடி செய்தியைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. ஆச்சரியத்தால் கண் களை அகல விரித்து சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.
என்னைக் கண்ட சில வெறும் தலைகள் முக்காட்டை இழுத்து முகமுடி ஆக்கிக் கொண்டு ஜன்னல் சல்லடைக் குள்ளால் எட்டி எட்டிப்பார்த்து ஏதோ கிசுகிசுக்கின்றன. தோள்மீது போட் டிருந்த சால்வைகளைக் கரங்களுக்கு மாற்றிக்கொள்கின்றனர். சில சில்லறை கள் முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டிய வேஷ்டிகளை அவிழ்த்துவிடு கின்றன. மரியாதை பலமாகவே கிடைக் கிறது.
நான் வந்த இடம் சரிதானோ என்று மீண்டும் எனக்கொரு சந்தேகம் "அவரு வந்தாச்சு, கொஞ்சம் வெலகி எடத்த வுடுங்க”
ஒரு வெற்றிலை வாய், எச்சிலை விரல்களுக்கிடையே துப்பிக்கொண்டு குரல் கொடுக்கிறது.
வாயிலே பீடி அல்லது சுருட்டு புகை கிளப்ப, லாந்தர் விளக்கின் ஒளியில் இரண்டுபேர் சதுரங்கம் விளை யாடிக்கொண்டிருக்கிறார்கள். குத்து விளக்கு பிரகாசமாக உள்ளே ஒளிர் கிறது. கழட்டப்பட்ட பாதரட்சைகள் வாச
34
லோரத்தில் கிடந்தன. சோகராகமாக உள்ளே இருந்து ஒப்பாரிப்பாடல் ஒலித்துக் காற்றோடு கலந்து வந்தது. எட்டடிக் காம்பராவின் முன் வராந் தாவில் அந்த வீட்டின் தலைமகன் முத்துக்காக்கா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் முத்தலிபு, வெள்ளைப் புடவையால் போர்த்தப்பட்டு சாக்குக் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார். அந்தக் கட்டிலை சுற்றிவர ஒப் பாரிப் பாடகிகளோடு அவர் மனைவி பாத்மாவும், மகள் நாச்சி பீவியும் அமர்ந்து இருந்தனர்.
நான் அந்த இடத்துக் குப் பிரசன்னமாகியதைக் கண்டவுடன்
பாத்தும்மா,
*அஜரத்து, அவுரு நம் மள எல் லாம் தவிக்க உட்டுப் புட்டு
போயாச்சே! இனி நன் என்ன பண்ணு வேன்.?
என்று தலையிலும் மார்பிலும் கையை அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழத்தொடங்கினாள். கூடவே மகள் நாச்சியாவின் ஒப்பாரியும் சேர்ந்து ஒலித்தது.
மரணச் செய்திகேட்டு வந்த ஒரு உறவுக்காரப் பெண்மணியைக் கண்ட
பாத்தும்மா,
"பூத்தம்மா! அவுரு போயிட் டாரே. நாலுநாளு ஆசையா வச்சிப்
பாக்க நோயில படுக்கலியே. மத்தி யானம் நெஞ்சுக்க வலின்னாரு. ஆஸ"ப் பத்திரில உட்டுட்டு வந்தோம் இப்ப மையத்தா பாக்கிறோம். இனி என்னா பண்ணுவேன்.?
அவர்கள் கண்களில் கண்ணிர் சுரந்தோ. இல்லையோ அது வேறு விடயம். ஆனால் ஒப்பாரிப்படலம்
 

ஒலித்துக்கொண்டே இருந்தது.
நான் இந்தத் தொழிலுக்கு பழை யவன். ஆனால் இந்தப் பகுதியில் இன்று பார்க்கும் இந்த நிகழ்வு எனக்கோர் புதிய அனுபவம்.
என்னுடைய கொத்துபா பிரசங் கத்தை நான் இங்கும் நடத்த வேண்டிய தாயிற்று.
"ஏ தாய்மார்களே, நீங்க எல்லாம் இப்ப கத்திக்கதறி கூப்பாடு போடக்கூடா தம்மா முனு நாளுக்கு அதிகமா துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது. இதே நிலை நம்ம ஒவ்வொருத் தருக்கும் வரத் தான் போகுது. கவலப்பட்டு என்னா பண்றது. நடக்க வேண்டிய காரியத்த கவனிக் கணும். குர்ஆன் எடுத்து ஒதுங்க. அல்லாஹற் இடத்துல பிரார்த்தியுங்க." முக்காட்டை இழுத்துப் போர்த்திக் கொண்ட பாத்தும்மா துணிவை தோழ மையாக்கிக்கொண்டவளாக,
*அஜரத்து, சின்ன கணக்க புள்ள யிட்ட "அவருட்டு கவ்வாத்துக் கூலி அப் புடியே இருக்குங்க. மையத்துப் பெட்டி வாங்கிற செலவுக்கு எடுத்துக்கலாம்” என்றவள், இராங்குப் பெட்டியைத் திறந்து, ஜரிகைக்கரை போட்ட வேட்டி, சால்வை மேல்சட்டை எல்லாம் எடுத்து. நீட்டியவளாக "குளிப்பாட்டி உடுத்தாட்ட வேண்டுமிலியோ” என்றாள் பாத்தும்மா.
எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. இத்தனைதூரம் நாகரிகம் என்ற போர்வையில் மாற்ற மடைந்துள்ள மனிதர்கள் ஏன் இன்னும் கலாசார விடயத்தில் நாகரிகமடையாது அன்றுபோலவே இன்றும் இருக் கிறார்கள்.?
சினந்துவிடாமல் சிந்தித்தேன். இதை எல்லாம் சிந்திக்கும் நேரமுமல்ல. செய்யவேண்டிய அனுஷ்டானங்களை செய்துவிட்டு, காலையில் மையத்தை அடக்கம் செய்ய ஒழுங்குகள் மேற் கொள்வதாக சொல்லி நகர்கிறேன்.
"வெள்ளனமே தூக்கிடுவீங்களா அஜரத்து?" என்கிறது ஒரு குரல். சிந்தனைகளோடே பொழுது விடிந்தது. சுபஹ”த் தொழுகைக்காகப் பள்ளி வாசலுக்கு வந்த பலரையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் அங்கே செல் கிறேன். நடந்த விடயங்களை விளக்கு கிறேன்.
முஅத்தினார் விளக்குகிறார் “மார்க்க போதனை செய்ய நாம போய் கூப்பிட்டு இருக்கனும், அந்த பகுதியில இப்படி ஒரு குடும்பம் இருக்குன்றதே அந்த மையத்து விழுந்த பிறகுதான் தெரிய வருகுது”
அந்த முத்துக்காக்கா எப்போ தாவது பள்ளிவாசலில் கால் பதித்திருப் பாரோ யானறியேன். இப்போது நாலு பேர் சுமந்த சந்தூக்கில், பள்ளிமைய வாடியில் அடைக்கலம் போவதற்காக மையத் என்ற பெயரில் முத்துக் காக்கா வின் உடல் பள்ளி வாயிலை நோக்கிப் பயணிக்கிறது.
"அஜரத்து நாங்களும் ஒங்க வேதம் தானுங்க" என்று சொல்லிக் கொண்டு இன்னும் சிலர் வருகின் றனர். இவர்கள் போல இன்னும் இருப் பார்கள். இனி ஏனும் தேடுவோமா. எட்டடி வீட்டுக்குள் ஒட்டிப் போனவர் களையும் மீட்டிப்பார்க்கும் நாள் வருகிறதா..?
35

Page 19
** e.r 4 - bUCrab mTT.
ஞானம் என்றாலே தரம் என்று உளம் நினைக்குமளவு தரத்துடன் தங்கள் இதழை வெளிக்கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். எல்லா அம்சங்களுமே நன்றாக இருப்பினும், இதழைப்பிரித்ததும் படிக்க மனம் நாடுவது கலாநிதி துரை மனோகரனின் எழுதத்துண்டும் எண்ணங்களையே. ஏனெனில் நாட்டின், சமூகத்தின் ஒவ்வொரு நடப்பையும், உள்ளது உள்ளபடி கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றன அவரது எழுத்துக்கள். அவை உங்கள் மகுடத்தில் பதிக்கப்படும் வைரக்கற்கள். இலக்கியப் பணியை மட்டுமன்றி வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பாகுபாடின்றி தமிழ் வாழவேண்டும் என்று நினைக்கும் தமிழ் நெஞ்சங்களை இணைக்கும் பாலமாக, சமூகப் பணியையும் ஞானம் மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமன்றி நேற்றைய நம்தேச, நம்மொழி எழுத்தாளர்களை இன்றைய இளம் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் நற்பணியையும் உங்கள் இதழ் செவ்வனே செய்து வருகின்றது.
சினிமா என்ற மாயவலையிலும், அதையே அச்சாணியாகக் கொண்டு சுழலும் அரட்டை வானொலிகளின் மோகத்திலும் மயங்கிக் கிடக்கும் நம்வளரும் சமுதாயத்தை உந்தி எழுப்பும் ஒரு உந்துசக்தியாக ஞானம் திகழட்டும். உங்கள் வளர்ச்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Dr.(Mrs) வாசுகி சித்திரசேனன், கண்டி. தொடர்ந்தும் கனதியான படைப்புகளைத் தாங்கி ஞானம் வெளிவருதில் திருப்தி. ஞானம் கரம் சேர்ந்ததும் முதல் வாசிப்புக்குட்படுத்துவது "வாசகர் பேசுகிறார்”. நல்ல பயனுள்ள இலக்கியச் சர்ச்சைகளைத் தாங்கி வருவது சிறப்பு. (வாசகர் கடிதங்களில் வெட்டுக்குத்துக்கள் இல்லாமல்). மாவை வரோதயன் சிறந்த படைப்பாளி என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கு இடமில்லை. மாவையின் சர்ச்சைக்கு மாவை பொறுப்பாளியல்ல. பிரசுர தாமதமே முழுக்காரணமாகிறது. வாழை இப்னு யூசுப். ஞானம் மார்ச் இதழில் 'எனது எழுத்துலகம் கட்டுரைக்கு எட்டுப்பக்கங்களை ஒதுக்கி என்னைக் கெளரவித்ததற்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர்களை விரிவான முறையில் அறிமுகப் படுத்துவதற்குத் தாங்கள் எடுத்திருக்கும் இம்முயற்சி தொடரட்டும். தலவாக் கொல்லையிலிருந்து டொக்டர் கே.ரி. உமாபதிசிவம் அவர்கள் எனது எழுத்துலகம் கட்டுரையைப் படித்தபின்னர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவர் வன்னிபற்றிய விஷயங்களை அறிவதில் அதிகம் அக்கறை உடையவராக இருக்கிறார். வன்னி - யாழ்ப்பாணத் தொடர்பு பற்றித் தன்னிடம் சில தகவல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் மணிமேகலைப்பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் எனது "வன்னியர் திலகம்' நாவலின் இரண்டாவது பதிப்பை வெளியிட ஆவலுடைய தாக இருப்பதாகக் கடிதம் எழுதியுள்ளார். முல்லைமணி.
36
 
 

مح'
(சஞ்சிகை - அரசியல் கலப்பற்றது) (ஒலி 20 - குரல் 17, மார்கழி 2001) வெளியீடு : உ.த.ப இயக்க இலங்கை
கிளை, யாழ்ப்பாணம். அன்பளிப்பு : ரூபா 20
தொண்டன் (பெப்பிரவரி - 2002, மலர் -34 இதழ் -01) விலை : ரூபா 12 ஆசிரியர் : J.A.G. இரட்ணகுமார் தொடர்புகளுக்கு சமூகத் தொடர்பு நிலையம் , அ.பெ.எண் . - 44, மட்டக்களப்பு.
தொடர்பு 62
(சஞ்சிகை)
(ஜனவரி - பெப்பிரவரி 2002) ஆசிரியர் : தேவதாசன் ஜெயசிங் தொடர்புகளுக்கு : தாசன் வெளியீட்டகம் 90 கண்டி ரோட், கெங்கல்ல.
ப்ரவாகம் (சஞ்சிகை) (இதழ் 8 - 2002) ஆசிரியர் : ஆவழிப் ஏ.புகாரி விலை : e5ust 20 தொடர்புகளுக்கு : இல 09, மாத்தளை வீதி, உக்குவளை. 21 300
போது (பங்குனி - சித்திரை 2002) (போது - 1 இதழ் - 24)
விலை : eust 10 ஆசிரியர் : வாகரைவாணன் தொடர்புகளுக்கு : ஜெஸ்கொம் அச்சகம், இல 1, இயேசு சபை வீதி, மட்டக்களப்பு.
புதிய தொனி (கலை இலக்கிய தமிழ் இதழ்)
(ஜூலை - செப்டம்பர் 2001)
(குரல் - 1 தொ6ரி - 03) ஆசிரியர் : வை.எல்.எம். றிஷவி விலை : ரூபா 25 தொடர்புகளுக்கு இளங் கலை இலக்கியப் பேரவை, வாளைச்சேனை.
வாழும் உரிமையை
உறுதிப்படுத்துவோம் (சிலுவைப் பாதை சிந்தனைகள்) (தவக்காலக் கல்வித்திட்டம் - 2002)
நூலாசிரியர் : அந்தோனிமுத்து விலை (IT 25 வெளியீடு அருட் பணி P.ஜேசு ராஜா, இயக் குனர், மன்னார்.
தெளிவு (இதழ் - 4) (மார்கழி - தை - 2002) விலை : ரூபா 5 தொடர்புகளுக்கு பரி. யாக்கோபு ஆலயம், செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
மலைக்கால்
o Aoy قمة فرة في صيغة (இதழ் - 16) (Dê 2002)
ஆசிரியர் : பெனி யே.ச.
விலை : (IHLJT 10
தொடர்புகளுக்கு மலைக்குரல், 30,
ஸ்ரேசன் வீதி, ஹட்டன்.
密 豪 密
37

Page 20
மன்னித்துவிடு!
மன்னிப்பில்லை! களை கட்டியிருந்தது களம்
அரண்மனை வாழ் ஆணி ஆணிகள் கூர்விழி நிமிர்த்தி நேர் கின்றன. இராஜகுல ரம்மியங்கள் மாதரிடை ரகசியமாகப் பகட்டாப் வெளிப்பட்டன செல்வச் செழிப்புடனெழில் சேர்ந்து சீர்கொண்டது. குலவழி வந்த கொற்றமும் சீற்றமும் அடலேறுகளை யிடுக்குடன் நடைப்படுத்தின
வெண்கேசம் கொண்டவோர் வித்துவச்சிம்மம் வில்வித்தை விளக்கியது. விற்கள் வகைப்பல, பானங்கள் பலப்பல. செப்பும் குறிகள் தப்புவதில்லை! தப்பியும் நடக்காது தப்பு தேசிகன் காட்டும் நேர்த்திமிகு வித்தை ஊசிமுனையைத் துளையிடும் காசினியை விலையிடும்!
வித்தை வேளை விலகலில்
வித்துவச் சிம்மம் தனியாய் நடந்தது. " தலையிலும் தாடையிலும் 三クイエーイ பால்வெள்ளை வண்ணத்தின் வாலிபம் முதுமையினை முரசறைந்தது. சிரசில். சடாமுடி பார்வையில் தீட்சண்யம் விழிகளில் தெளிவு, வதனத்தில் கம்பீரம். அனைத்துமோர் முனிவனை முன்னிறுத்தின. இறுகிப்போன உடற்கட்டு இளமையின் மிடுக்கை முதுமையிலும் சுட்டிநிற்கிறது.
தனுவேந்திய தேசிகனை வழிமறித்தான் ஒருமனிதன் “அடவியெனர் இருப்பிடம் அடியேனோர் வேட்டுவன் காட்டிடை வசிப்பினும் தனுவறிவு தனையறியும் பித்தெனக்கு, யார் ஏகலேவ5ர் - உம் பாதத்தில் சேவை செப்வேன். பயிற்றுவிப்பீர் வித்தை'யென்று விழுந்தான் தாள்களில்,
38
 

"எழுந்து நில்' என்றான் தேசிகனர். ஏக்கங்கள் எக்களிக்க எழுந்தான் பார்த்தான். "விபச்சாரி வீடல்ல வேட்டுவனே வில்வித்தை பூபாவர் பயிலும் ஞானம் புதிது; பெரிது புரவலர்க்கு உரிது இது - கானகம்தனில் மேயும் கீழ்மாந்தர் குலமுடையோனி - நின் குலத்திற்குரிது வேறு - விலகிச்செல், விரைந்து செல்'வென்றானர் சாத்திரங்கள் பலகற்று பழுத்திருந்த சான்றோர்ை. விடை விரவியபோது நெஞ்சில் அனல் பரவியது துடித்துப் போனான் காட்டுச்சிறுவன் ஏற்று நடந்தான் குருமொழி. உலகை நெறியிடும் கீதையுதிர்த்த) மகாபாரதமே! மன்னித்துவிடு உனை என்னால் மன்னிக்க முடியவில்லை. குரு சிவத்ய உறவுக்குள் குலபேதம் சொன்னவன் நீ!
(பத்தனையூர் வேதினகரன்)
குருட்டுக் கண்களும் பாட்டு என்கிறது குயில்
செவிட்டுக் காதுகளும் இர “9 தி鹰 ಙ್ நிழல் என்கிறது மரம் இல்லை என்கிறது இல்லை என்கிறது மெழுகு. திதிரி வானம் பொழிகிறது
நாடு எரிகிறது . ಙ್ಗಣಣ என்கிறது என்கிறார்கள் மக்கள்
இல்லை - என கடல் கொந்தளிக்கிறது மறுத்த அரசு இல்லை என்கிறது இப்போதுதான் திதிரி. ஆமாம் என
ஆரம்பிக்கையில்
மொட்டு மலர்கிறது
இல்லவே இல்லை - என
இல்லை என்கிறது
செடி ಙ್ சொல்கிறது
பேரினவாதம்.
'ஜ.3பெனி யே.ச3 , . ல்லை என்கிறது ଶ୍ରେuଣuଣds] ب+= لیگی...........+==بلی
சிள்ை. அதன் ကြီးပွါး என்கிறது காப்பாற்றிக் கொள்ளும்
" அவசரத்தில் இல்லை என்கிறாள் கணிகளைக் குருடாக்கி.
தாய். காதுகளைச் செவிடாக்கி.ட

Page 21
சுதந்திரக் ی
சோறு வேர்ைடுலா சுதந்திரம் வேண்டுமா! என்று நின்று ثقافتهم تنجي வாக்குக் கேட்ட کي" துரோசிகளுக்குது கற்றுக் கொடுத்தவர்கள் நம்மவர்கள்: எம்மவர் கேட்பது சலுகை அல்ல, །ཚག་சாதனை புரிந்து சரித்திரம் படைத்த
சுதந்திர விடியல்.
தமிழர் GMTEUA प— தாகம் திர, تاينه:#).+ '_ - தாரக மந்திரம் .  ̄
முதிரீக் 蒙 "سية பெற்றாக வேண்டும். '=
தனிமானத்தோடு நாம் ஆ தல்ைதூக்கி நீரிழி தமிழர் தம்தனித் தாயகப் பூமியில் - ஆ. ಶಿಫ್ಟ್ಬಿಟ್ಟಿ: -- ಹಾ :
தரவேண்டும் ஒரு தீர்வுத் திட்டம்.
* சமவுரிமைபெற் * :? ". தரவேண்டும் எக் சுயநிர்ணய உரிஜ், அதிகார வர்க்க * அடக்குமுறை ஒழிய "ஆ அமைதிர்ேப் வாழ அளிக்க வேண்டும் அங்கீகாரம் எமக்கு
தமிழ்த் தேசிய இனம்.
www.geocities.com\g

இ யாகங்களாக து
'யாத்தல் வேன்
папап пmagazine .