கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.05

Page 1

- - - -----

Page 2
காற்றின் காலடியோசை
உள்ளத்துச் சிறையில்
எப்போது அறிவாய்.? 甄
நீயொரு ്വ~~ ஆயுள்கைதி /Ý kalY ^ யாருக்குமே s உன்னை பிணைதரமறுக்கும் γ. இந்த நீதியே Sn உன்னில் சிறைபடத்துடிப்பதை آسم
பூக்களின் புணர்னகை சிதறலில் பாதையோரத்து சிறு நதியின் சலசலப்பில் விரிவுரையறையின் நிசப்தத்தில் நானுன் நேசத்தை ஆழமாய் உணர்கிறேன்.
சிறிதொரு பூவின் உதிர்வுக்கு பின்னேனும் புயல்காற்றில் தலைவிரித்துப் புலம்பும்
மரங்களின் மரண ஒலங்களிலேனும் சரி
நீ இவள்ை * நினைத்துப் பார்த்திருக்கிறாயா..??
காற்றெனர்னை கடந்து போகையிலும் நிழலெனினை 赛、 தொடர்ந்து வருகையிலும் செல்வி ஜெஸீமாஹமீட் அதன் பேராதனைப் #_ಪ್ತಿಳೆ காலடியோசை உன்னுடையதோவென திடுக்கிட்டுத் திரும்புகிறேன்.
గ్
ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி
www.geocities.com\gnanam magazine
N
آي
 
 

பகிர்தலின் மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன் ஓவியர் நா. ஆனந்தன் கணனி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி, GIT.G. -08-478570 (Office)
08-234.755 (Res) Fax - G3-234.755 E-Mail
gnanam magazineQyahoo.com)
உள் Gor
சிறுகதை காலம் மாறும் பகய பாலா.சங்குப்பின்னை GL-Ď SCSaiPassit rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr-------- செல்வி ச. குமுதினி
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . CB கல்ாநிதி துரை. மனோகரன் விதி சித்திவிக் காடிகாகாகவr சாரல் நாடன்
தமிழ் அறிவுத்தேடல் ஒரு பார்வை I III ஒயதீந்திரர
சிறுவர் duó ". 4 ச.அருளானந்தம்
கவிதைகள் காற்றின் காலடியோசை.r C} 고 செல்வி ஜெஸீமாஹமீட்
சிறகுருவி வீணைவேந்தன் ஹைக்கூக்கள்.ாr o மடவளை அன்சார் எம். ஷியாம் கவிே)தைக்கு ஒரு ககு . 4 அலெக்ஸ்பரந்தாமன் சமாதானப் புன்முறுவல் r His 2 கவிஞர் எம்.வை.எம்.மீஆத் 35 d'os) areasuranians........ 30 எம்.எச்.எம்.ஷம்ளப்
9 திக்கவயல் தர்மு சிறகு விரிப்போம் வாரீர் பr A. O. கந்தளாய் ஏதாரீக் திரும்பிப் பார்க்கிறேன் .
அந்தனி ஜீவா நெற்றிக்கண்.28 நக்கீரன்
வாசகர் பேசுகிறார் 37
புதிய நூலகம்.38

Page 3
காலம் மாறும்
பாலா.சங்குப்பிள்ளை
சரவணனுக்கு மிளகாயைக் கடித் ததைப் போல ‘கர்ரென கோபம் வந்தது. அவன் சினத்துடன் தன் தந்தை முருகேசு வைப் பார்த்தான்.
"என்னப்பா நீங்க செய்யப் போற வேலை. உங்களுக்கே பிழையாப் படலையா. பச்சோந்தி மாதிரி சந்தர்ப் பத்துக்குத் தகுந்த மாதிரி நிறத்தை மாத்திக்கிட்டு உழைக்கிறவங்களோட ரத்தத்தைக் குடிச்சி ஏப்பம் விடுற அவனை நம்புறீங்க. பெத்தமகன் என்னை நம்பமாட்டேன்னுறீங்களே."
முருகேசு - கேலியுடன் அவனைப் பார்த்தார்.
"நீ பேசுவேடா. நல்லா பேசுவே. உங்களையெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வச்சதுக்கு இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே. உன் தம்பியை என் தகுதிக்கு மீறி யூனிவர்சிட்டிவரை படிக்க வச்சேன். ஆனா. என்ன ஆச்சி. யாழ்ப்பாண பொடியன்மாரோட சிநேகம் வச்சான்னு றதுக்காக அவங்களோட சேர்த்து இவனையும் கைது பண்ணிக் களுத்துறை சிறையில் அடைச்சிட்டாங்க. இப்போ ரெண்டு வருஷமாவுது. எதுவுமே நடக் கலை. கையில, மடியில உள்ளது பாத் திரம், பண்டம் அண்டா குண்டா லொட்டு லொசக்குன்னு எல்லாத்தையும் வித்து செலவழிச் சாச்சி. ஆனா ஒண்ணும் சரிவரலை. கடைசியா உன் அம்மாவோட ரெண்டு பவுண் தாலிதான் மிச்சம். அதையும் வித்து நம்ம கட்சி தலைவர் நல்லசிவத்தை பார்க்க போகலாம்னு நினைச்சா. நீ குறுக்கே வந்து உபதேசம் பண்ணுறே.”
"அப்பா. நான் உபதேசம் பண்ண வரலை. உதவிதான் செய்ய நினைக்
கிறேன். நல்லசிவம் மனுசனேயில்ல. நல்லபாம்பு. நம்மளமாதிரி ஏமாந்தவங்க அகப்பட்டா அப்புடியே புடிச்சி சக்க கையா புழிஞ்சிடுவான். அவனுக்கு பணம் மட்டும்தான் தேவை. அது கண் ணுல பட்டுட்டா கையில வர்றவரைக்கும் கண்ணயரமாட்டான். நம்மளமாதிரி தோட்டத்தொழிலாளிங்களுக்கு நல்லது செய்யிறதா வெறும் வாய்ப்பந்தல் போட்டுக்கிட்டு வாய்ப்பு கிடைக்கிறப்பல் லாம் நம்மளயே சுரண்டி மாடிமேல மாடி கட்டிக்கிட்டிருக்கான். அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சுமா அவனையே தேடிப் போகப் போறிங்க."
"இங்க பாருடா. நீ மேற்கொண்டு எதுவுமே பேச வேணாம். உன் அம்மா அவன் மேல உயிரையே வச்சிருந்தா. அவன் எப்போ ஜெயிலுக் குப் போனானோ அப்போதே அவ பாதி செத் துட்டா. இப்போ வெறும் உணர்ச்சி யில் லா பதுமையா நடமாடிக் கிட் டிருக்கா. நானும் யார் யாரையெல் லாமோ பார்த்துட்டேன் - எல்லாரும் கையை விரிச்சிட்டாங்க. போனவாரம் நல்லசிவத்தைப் பார்த்தேன். அவர்தான் சொன்னாரு. கொழும்புல அவருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களாம் . நிச்சயமா அவனை வெளியில எடுக்க முடியுமாம். எனக்கு காசு பெரிசில்லை. மகன் வெளியிலை வரணும். அது மட்டும் போதும்."
முருகேசு மேற்கொண்டு எதுவும் பேசாமல் அந்த இடத்தைவிட்டு விருட் டென செல்ல சரவணன் பெருமூச்சுடன் பாடசாலைக்குப் புறப்பட ஆயத்தமா னான். அவன் ஒரு ஆசிரியனாகப் பணி புரிகிறான். தன் தம்பி சிறையில் இருப்பது
 

அவனுக்கும் வேதனைதான் . ஆனால் சோதனையான இந்த சமயத்தில் தன் தந்தை தெரிந்தும் சேற்றிலே இறங்க நினைப் பதுதான் அவனுக்கு வேதனையாக வெறுப்பாக இருந்தது.
இரண்டு வாரங்கள் சென்றன. முருகேசு நல்லசிவத்திடம் பணத்தைக் கொடுத்தபோது எப்படியும் அவர் மகனை வெளியே எடுத்து விடுவதாகவும் அவ்வாறு முடியாவிட்டால் பணத்தைத் திரும்ப தந்து விடுவதாகவும் கூறியிருந் தார். ஆனால் பணத்தை எப்போது வாங் கினாரோ அன்றிலிருந்து அவரைப் பார்ப்பது மிகவும் அரிதாகவே இருந்தது. கேட்டால் கொழும்பு போயிருப்பதாக வீட்டில் கூறினார்கள். மேலும் இரண்டு வாரங்கள் சென்றன. நல்லசிவத்தைப் பார்க்கவே முடியவில்லை. முருகேசு களைத்துப் போய்விட்டார். மகன் சரவணன் சொன்னதைக் கேட்காமல் பணத்தை நல்லசிவத்திடம் கொடுத்தது தவறோவென அவர் யோசிக்கத் தொடங்கினார்.
எப்படியும் மகனை வெளியில் கொண்டு வந்து விடவெண்டும் என்ற வெறியில அவர் அவசரப்பட்டுவிட்டார். இனி என்னசெய்வது? காலங்காலமாகக் காப்பாற்றி வந்த மனைவியின் தாலியும் போய்விட்டது. நிம்மதியும் அழிந்து விட்டது. தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலியாக இருப்பதாக நீலிக்கண்ணிர் வடித்துக்கொண்டு அவர்களைக் கசக்கிப் பிழிந்து ஜாலியாக இருக்கும் இப்படி கேட்பதற்கு யாருமே இல்லையா. இது எப்போதுமே தொடர்கதைதானா..!
மேலும் இரண்டு வாரங்கள் சென் றன. கடந்த ஒருவாரமாக சரவணனின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. எந்நேரமும் தனிமையில் இருந்தான். அடிக்கடி வெளியில் சென்
- Tg I i r r i கேள்வி V4 i i AFM:s * & * * b & AA VMW við I A 线、廖及廖静弱 氨易级毽
றான் இரவில் வெகுநேரம் கழித்து வந் தான். ஆனால் இரண்டு நாட்களாக ஆளையே காணவில்லை. வீட்டில் சொல்லவும் இல்லை. எங்கே போயிருப் பான். என்ன ஆனான். அவனும் ஏதாவது சிக்கலில் மாட்டியிருப்பானா. அவருக்கு கலக்கமாக இருந்தது. ஏன் தான் அவர்களுக்கு மட்டும் அடுத்தடுத்து பிரச்சினைகள் வருகின்றதோ தெரிய வில்லை. பட்டகாலிலேயே பட்டு விட்ட குறை தொட்ட குறையாக துன்பங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக் கின்றன. இதற்கெல்லாம் முடிவேயில் 60sount?
அன்றிரவு அவருக்கு தூக்கம் வர வில்லை. இரவு ஒன்பது மணியிருக்கும். அப்போது அந்த லயம் அமைந்திருந்த இடத்திலிருந்து புள்ளத்தில் இருந்த மண் பாதையில் வாகனம் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது. சற்றுநேரத்தில் காம்பறாவின் கதவை யாரோ பலமாகத் தட்டவே முருகேசு மெதுவாக எழுந்து வந்து கதவைத்திறந்தார். வெளியே -
நல்லசிவம் நாலைந்து பேருடன் நின்றிருந்தார்.
“உள்ளே வாங்கய்யா." "நான் உள்ளே வந்து இருந்து விருந்து சாப்பிட்டுப்போக வரல்ல. உன் மகன் என்ன செய்திருக்கான் தெரி யுமா..?" முருகேசு எதுவும் புரியாமல் பார்த்தார்.
"என்ன எதுவுமே தெரியாதமாதிரி பார்க்கிறே. அப்போதே சொன்னேன்
யெல்லாம் வேணாம்னு அவதான் சேவை அதுயிதுன்னு பிடிவாதமா இருந்தா. நல்லா இருந்த என் மகளை மயக்கி உன் மகன் கூட்டிட்டு ஓடிட்டான் மரியாதையா சொல்லுறேன். ஒழுங்கா என் மகளை கொண்டு வந்து என்கிட்ட ஒப்படைச்சிட சொல்லு. நான் ரொம்பப் பொல்லாதவன். லயத்துல இருக்கிற
8A K SE RYK -
for tery wA *3žkoi i Požko-f

Page 4
உங்களுக்கெல்லாம் பெரிய எடத்து சம்பந்தம் தேவைப்படுதா. ஆடுகட்ட இடமில்ல. ஆனைவாங்க நினைக்கிறீங் களா. கூண்டோட கைலாசம் அனுப்பிடு வேன். விடியுறதுக்குள்ள என் மகளை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க."
முருகேசுக்கு கொஞ்சம் கொஞ்ச மாக விஷயம் விளங்கத் தொடங்கியது. அவருக்குத் தன் மகன் சரவணன் மேல் கோபம் ஏற்படவில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் உண்டானது. அவர் எந்த விதப் பயமும் இல்லாமல் கேலி நிறைந்த பார்வையுடன் நல்லசிவத்தைப் பார்த்தார்.
"இதோ பாருங்க நல்லசிவம். முதல்ல உங்களோட அதிகாரம் மிரட் டல் இதெல்லாத்தையும் விட்டுடுங்க. முள்ளுமேல சேலை விழுந்திருக்கு. அதைப் பக்குவமா எடுக்க வேண்டியது உங்கவேலை. இது குப் பையில முளைத்த கொடிதான். இப்ப கூரையில ஏறியிருக்கு. இதுவரைக்கும் நீங்க எங் களை அநியாயமா ஏமாத்திக்கிட்டிருந் தீங்க. இப்போ இந்த விஷயத்துல நியாயமா நீங்க நடந்துக்காட்டி அவ மானம் எங்களுக்கில்லை. உங்க அப்பா, தாத்தா, பாட்டன் எல்லாமே லயத்துல பொறந்து வளர்ந்துவந்தவங்கதான். நீங்க மட்டும் அதிசயமா வானத்துல இருந்து குதிக்கல்ல. எங்களோட சந்தாப் பணத்தை சத்தமில்லாம சாப்பிட்டுக் கிட்டு வண்டி வசதியோட இருக்கிற நீங்க இப்ப வேணும்னா பழையதை மறந்துட்டு கோபுரத்துல இருக்கலாம். ஆனா நாங்க எப்பவுமே இப்படியே இருப் போம்னு நினைக்காதீங்க. உங்க மகளை என் மகன் கூட்டிட்டுப் போயிட் டான்னு ஓடிவாரீங்களே. உங்கள மாதிரி பெரிய மனுசங்களோட மகன்மார் எங்கவீட்டு கொமரிகளை ஏமாத்தி கூட் டிட்டுப் போய்ப் பாழ்ப்படுத்துறான்களே அதையெல்லாம் உங்களால தட்டிக்
கேட்கமுடியதா? இல்லையே. என் மகன் உங்க மகளை கூட்டிட்டு போயிருக் கலாம். ஆனா அவன் நிச்சயமா அந்தப் புள்ளையை கைவிடமாட்டான். அந்த கெட்ட புத்தி என் மகனுக்கு இல்லை. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக் கொருத்தர் விரும்பித்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பாங்க. எங்களுக்கு ஆடு கட்ட இடமில்லைத்தான். ஆனா அதுக்காக பானை சோத்துக்கு பிச்சை யெடுக்கமாட்டோம். எங்களுக்கும், மானம், மரியாதை எல்லாம் இருக்கு. எங்களை ஏமாத்தி வயிறு வளர்க்கிற உங்களுக்குத் தான் அதெல்லாம் இல்லை. இன்னைக்கி பதவியில இருக் கிறதுனால உங்களைச் சுத்தி காக்கா கூட்டம் இருக்கலாம். ஆனா உயிர் போனா நீங்க மட்டும் தனியாத்தான் போகணும்னுறதை மறக்காதீங்க. உங்க ளோட அதிகாரம், ஆணவத்துனால எங்களை என்ன வேணும்னாலும் செய்ய
லாம். ஆனா அதெல்லாம் உங்களை
விட்டுப் போனா உங்களோட கூட இருக் கிற சம்சாரம்கூட உங்களை மதிக்க மாட்டான்னுறதை ஞாபகத்துல வச்சிக் கங்க. உங்களால ஆனதைப்பாருங்க. என்னைப் பொறுத்தவரை என் மகன் எந்த குத்தமும் செய்யலை. அவங்க ரெண்டு பேரையும் வாழ்த்தி வரவேற்க நான் தயாராகவே இருக்கேன்."
முருகேசு - சொல்லிவிட்டு படா ரெனக் கதவை அடைத்து விட்டு உள்ளே செல்ல தலைகுனிந்தவாறு தன்
S^z)^-\ F z.\ -i- z.
محی ۔ محبہ لمحے محی برھاغی
பரிவாரங்களுடன் த லLததை
ة قدم مــة قوه عت قمعت ققة விட்டு நடக்கத்தொடங்கினார். தூரத்தில் இவ்வளவு நேரமும் மேகத்தினால் மறைக் கப்பட்டிருந்த முழுநிலவு இப்போது சிறிது சிறிதாக வெளியே வந்து ஒளிவீசி பிரகாசிக்கத் தொடங் கியது.
(அனைத்தும் கற்பனை)

சிறுகுருவி கூட்டில் வளர்ந்து
வெளியே வந்திச்சாம்.
சிறகடித்து பறந்து திரிந்து உணவைத் தேடிச்சாம்
தனக்குத் துணையை தனது விருப்பில்
தானே தேடிச்சாம்
கூடிக்குலாவி கொஞ்சிமகிழ்ந்து
ஆடிப் பாடிச்சாம்
ஜோடிசேர்ந்து கூடுகட்டி
முட்டை இட்டிச்சாம்.
கூட்டிலடை காத்துக் குஞ்சை
தானே பொரிச்சிச்சாம்
சிறகுமுளைச்சுக் குஞ்சு கூட்டை விட்டுப் பறந்திச்சாம்
வளர்ந்து குஞ்சு ஜோடி சேர்ந்து
கூடு கட்டிச்சாம்
மறந்தும் தாயின் தயவில்வாழ
நினைத்த தில்லையாம்
- வீணைவேந்தன் -
Y- ཡོད ஹைக்கூக்கள்!
அடிமேல் அடிபட்டும் சுமைகள் தாங்கும் சுவரில் ஆணி 1 A A “வெள்ளை'யென்று பெருமையடிக்கும் காகங்கள் தன் கழிவு! لے لب لبہ பேய்மழை பெய்தும் நனையவில்லை. இலையின் அடிப்பாகம்! 人人人 விலகும் இருள் மெழுகுவத்தி சொந்தக்காலில்! لے لے لے இருட்டு வழி தனித்த பயணம் அங்காப்கே மின்மினிகள்! خالص حالیہ اللہ முழுத்திரை தீண்டவியலாமல் காற்று ஒளிரும் சிம்னி 人人人 விடியாதே இரவே - இன்னும் கொஞ்சம் உலாத்தட்டும் வெளவால்கள்! خفیہ فلم لر எறும்புக்கு புதைகுழி சீனி போத்தல் لهم لهم لهم காடு புல் முளைக்காமல் 660). Usió95
மடவளை அன்சார் எம்.ஷியாம்
ノ ܢܠ

Page 5
எழுதத் தூண்டும் எண்ணங்கள்) co (கலாநிதி துரை.மனோகரன்) g vu
தொழிலாளியாக வாழ்ந்த இலக்கியவாதி
மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி யாக வாழ்ந்துகொண்டே இலக்கியம் படைக்க முடியும் என்பதனைச் சாதனையாக்கிக் காட்டியவர், குறிஞ்சித் தென்னவன். ஐந்தாம் வகுப்பு வரையுமே கற்ற அவர், தமது பதினோராவது வயதிலிருந்து தோட்டத் தொழி லாளியானார். ஐம்பதுகளில் தமது இருபதாவது جی حمع ۔ வயதிலிருந்து கவிதைகள் ஆக்கத்தொடங்கிய அவரின் سمی / ஆதர்ச கவிஞர்களாகப் பாரதியும், பாரதிதாசனும் விளங் கினர் எனலாம். பாரதிவழிவந்த நவீனகவிதைகளைப் படைத்த குறிஞ்சித் தென்னவன், கணிசமான குறும்பாக்களையும், சில புதுக்கவிதைகளையும் எழுதி யுள்ளார். குறிஞ்சித்தென்னவன் கவிதைகள் என்ற அவரின் கவிதைத் தொகுதி இரு பதிப்புகளாக (ஜனவரி 1987 மார்ச் 1987) வெளிவந்துள்ளது. குறிப்பிடத்தக்க நவீன கவிதைகளையும், குறும்பாக்களையும் ஆக்கிய அவர், புதுக்கவிதைத் துறையில் வெற்றி பெறவில்லை. அவரது கவிதைகளில் பெருந்தோட்டத் தொழி லாளரின் சோகம் கலந்த வாழ்வியல் அம்சங்கள் முதலிடம் பெற்றுள்ளன. வேதனைகளுக்கு மத்தியில் அவர் வாழ்ந்த இலக்கிய வாழ்வு, இன்றும் அவரை நினைவுகூரச் செய்கிறது. அவரது குறும்பாக்களும் எதிர்காலத்தில் நூல் வடிவம் பெறவேண்டும்.
தொழிலாளியாக வாழ்ந்த இவ் இலக்கியவாதியின் நினைவாக, அண்மையிற் கண்டியில் ஒர் இலட்ச ரூபாய் நிதிக்கான காசோலை, அவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வு இலக்கிய நெஞ்சங்களை மகிழச்செய்தது. இந்நிகழ்வு தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் நானும் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். குறிஞ்சித்தென்னவன் வாழ்ந்த காலத்தில் அந்த ஏழை இலக்கியவாதிக்கு நிதிசேகரித்து பொற்கிழி வழங்கப்பட வேண்டும் என்று என் உள்ளத்தில் தோன்றிய எண்ணக்கருவைச் செயற்படுத்த விரும்பி, 1992 இல் எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அவர் அக்கடிதத்தை அவ்வாண்டில் தினகரனில் தாம் எழுதிவந்த பத்தியில் வெளிப்படுத்தியிருந்தார் அதைத் தொடர்ந்து அந்தனிஜீவா, நாவலப்பிட்டியைச் சேர்ந்த பொன்னுத்துரை, வைத்தியலிங்கம் ஆகியோர் அதற்கான முன்முயற்சியைத் தொடங்கினர். குறிப்பிட்ட தொகை மாத்திரமே சேர்ந்த அளவில் நிதி சேகரிப்பில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. இடையில் குறிஞ்சித்தென்னவனும் காலமாகிவிட்டார். பின்னர், தினகரன் உதவி ஆசிரியர் அருள் சத்தியநாதன், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் இரா.அ.இராமன், பேராதனைப் பல்கலைக்கழக உதவி நூலகர் மகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியால் குறிஞ்சித்தென்னவனுக்கான நிதி ஒர் இலட்சம் ரூபாவாக நிரப்பப்பட்டு, அவரின் மனைவியிடம் அண்மையில் கையளிக்க பட்டது. தினகரன் பத்திரிகையின் ஒத்துழைப்பும் இவ்விடயத்தில் பெரிதும்
8
 

பயன்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் (1992) என் உள்ளத்தில் தோன்றிய ஒர் எண்ணக்கரு, இவ்வாண்டில் (2002) என் கண்களுக்கு முன்னாலேயே நிறைவேறி யமை கண்டு, நான் மிகவும் மனநிறைவு கொள்கிறேன். இதனோடு சம்பந்தப்பட்ட அனைவரும் மதிப்பார்ந்த பாராட்டுதல்களுக்கு உரியவர்கள். யுத்தமின்றி ரத்தமின்றி.
எமது நாட்டில் அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள், இயல்பாகவே மனதில் இனம்புரியாத மகிழ்வை ஏற்படுத்துவனவாக உள்ளன. இதே விடயங்கள் முன்னரே நிகழ்ந்திருப்பின், எத்தனையோ உயிரிழப்புகளையும், அவலங்களையும் தவிர்த்திருக்கலாம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு, மிக அண்மைக் காலம் வரையில் தமிழருக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சிகள் வெவ்வேறு முறையிலும், அளவுகளிலும் நிகழ்ந்துவந்துள்ளன. ஆனால், இவ்வாண்டிலிருந்து தமிழ்மக்கள் மட்டுமன்றி, அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. யாழ்ப்பாணம் - கண்டி வீதியைத் திறப்பதற்காக முன்னைய ஆட்சியாளர்கள் விவேகமின்றி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, இவ்வாண்டில் யுத்தமின்றி, ரத்தமின்றி மகிழ்ச்சி கரமான சூழலில் இவ்வீதி திறக்கப்பட்டுள்ளது. முரண்பட்ட இருசாராரும் இராஜ தந்திரரீதியிலான விவேகத்துடன் இம்முயற்சியில் வெற்றிபெற்றுள்ளனர். தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தைக் கவர்ந்த, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் ஊடகவியலாளர் மாநாடு, தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மலையகக் கட்சிகள் ஆகியவற்றுடனான அவரது சந்திப்புகள் முதலியவை நாட்டில் நல்லது நடக்கும் என்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு நல்லவை நடந்துகொண்டிருக்கும்போது, அரசதரப்பைச் சேர்ந்த பொறுப்புவாய்ந்த சிலர் ஒற்றையாட்சி, டொனமூர் அரசியல் திட்டம் எனபன போன்ற காலாவதியான கருத்துகளைப் பற்றி பேசுவதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. பல்லின மக்கள் வாழும் நாட்டுக்கு ஒற்றையாட்சி அமைப்புப் பொருந்தாது. டொனமூர் அரசியல் திட்டம் இந்த நாட்டிற்குப் பொருத்தமில்லை என்பதனாலேயே பின்னர் சோல்பரி அரசியல் திட்டம் கொண்டுவரப்பட்டது எனபதையும் மறந்து, அது பற்றிச் சிலர் பேசுவது மிகவும் வேடிக்கையானது.
வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பிரிந்துகிடந்த இலங்கைவாழ் தமிழ் மக்களை முதன்முதலாக எஸ் ஜே. வி. செல்வநாயகம் ஒன்றிணைக்க முயன்றார். அதனைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்குத் தமிழ்மக்களின் உணர்வுகள் ஒன்றுபடத் தொடங்கின. காலப்போக்கில் இவை மேலும் வலுப்பெற்றன. இவ்வாண்டில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்கள் மேலும் ஒருமித்த உணர்வுடன் இணையத் தொடங்கியமை மிகவும் வரவேற்கத் தக்கது. இதேபோன்று, தமிழ், - முஸ்லிம் ஒற்றுமையுணர்வும் பலப்பட்டிருப்பது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தும் விடயமாகும். "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" அல்லவா?
வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒன்றிணையும் வரலாற்றுப் பெருமை மிக்க இச் சந்தர்ப்பத்தில், பேரினவாதிகள் படும் வேதனை சொல்லும் தரமன்று. ஒரே மொழி பேசும் தமிழ் மக்களையும்,
9

Page 6
முஸ்லிம் மக்களையும் பிரித்துவைத்து வேடிக்கை பார்க்க விரும்பிய தமது பேராசை பிசுபிசுத்து விட்டதை எண்ணி அவர்கள் ஆற்றொணாத் துயரில் அவதிப்படுகின்றனர். இத்தகைய பேரினவாதிகளின் துயரைத் தீர்ப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்போல் விளங்குகிறார், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி(?) ஜெயலலிதா அம்மையார். வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைத்தே தீருவேன் என்று சபதம் எடுத்தவரைப் போன்று, அவர் நடந்து கொள்கிறார். எந்தவிதத் தேவையுமின்றி ஆக்ரோசமாகக் குரலெழுப்பியதோடு, திருப்தியடை யாமல், தமிழ்நாடு சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றித் திருப்தி கண்டுள்ளார், ஜெயலலிதா. இலங்கையில் நாளாந்தம் சமாதான முயற்சிகள் நகர்ந்து கொண்டிருக் கும் இவ்வேளையில், நடைபெறும் ஜெயலலிதாவின் அடாவடித்தனமான நடவடிக் கைகள், யாரையோ திருப்திப்படுத்துவதற்கான உள்நோக்கம் கொண்டவை என்பது சர்வ நிச்சயம். முன்னொரு காலத்தில் கோட்டுச் சூட்டுக் கழற்றாமல் உலகம் சுற்றிய சில இலங்கை அரசியல்வாதிகளும், அவர்களது பரமார்த்த குருவும் ஜெயலலிதா தங்களுக்காக ஆற்றும் சேவைகளைக் கண்டு, இப்போது மனங் குளிர்ந்திருப்பர். எப்போதோ பேசி வைத்தது, இப்போது சமயத்தில் உதவுகிறதே என்று திருப்தியடைந்திருப்பர்.
உலகம் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் நாட்டைப் பற்றிக் கொண் டிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் வலிந்து பாடுபட்டுக் கெடுத்திருக்கிறார் ஜெயலலிதா. நோயாளிக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு இந்தியா தடையாக இருக்கப் போவதில்லை என்ற இந்தியப் பிரதமரின் மனிதாபிமானக் கண்ணோட்' டத்தைக் கூடக் கண்டிக்குமளவிற்குத் தாம் மன இரக்கமற்ற அரக்கத்தன்மை கொண்டவர் என்பதை அவர் மிகச் சிறப்பாக இனங்காட்டியுள்ளார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய இராமலிங்க வள்ளலார் பிறந்த தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதாவும் ஆட்சி செய்கிறார் என்பது வேதனை தருகிறது.
இந்த இலட்சணத்தில், அண்மையில் இலங்யிைல் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழாக்கள் சிலவற்றில், மகளிர் உரிமை பற்றிப் பேசிய சில பெண் மணிகள், மகளிர் எழுச்சிக்கு ஜெயலலிதாவை முன்னுதாரணம் காட்டிப் பேசியிருப் பதைப் பற்றிப் பத்திரிகைகளில் படிக்க நேர்ந்தது. மனிதாபிமானமற்ற, அராஜகத் தன்மை கொண்ட, ஊழல்பேர்வழியான ஜெயலலிதாவையா இத்தகைய சில பெண்மணிகள் தமது ஆதர்சத் தலைவியாகக் கொள்ளப் போகின்றனர்?
இப்போதெல்லாம் "உலகத்தமிழர் தலைவர்” கருணாநிதி தடம்புரளும் காட்சிகள் அதிகமாகவே இடம் பெறுகின்றன. இலங்கை வாழ் தமிழர் தொடர்பான பிரச்சினைகள் எதிலும் பட்டுக்கொள்ளாமல், தாம் கையாளும் நழுவல் போக்குக்கு நடுநிலைமை என்றொரு பெயர் வைத்துள்ளார், கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைவிடச் சோனியா காந்தியின் நட்புப் பெரிது என்று அவர் கருதுவதே இதற்கான காரணம். கருணாநிதி இப்போது காற்றில் பறக்கும் சருகாகி விட்டார். தமிழ் நாடு இலங்கைக்கு வழிகாட்டிய ஒரு காலமும் இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் இலங்கைதான் தமிழ் நாட்டுக்கு வழிகாட்டப்போகிறது.
壕 盛 登
0

தமிழ் சூழலில் அறிவுத்தேடல் ஒரு பார்வை ஏ. யதீந்திரா - திருகோணமலை
அண்மையில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்கமுடிந்தது. அவர் ஒரு மாக்சியவாதியுமாவார். இருவரும் பின்நவீனத்துவம் குறித்தும் சில எழுத்தாளர்கள் குறித்தும் பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். பின்நவீனத்துவம் (POST - MODERNISM) கருத்துமுதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட தெனக்கூறி அவர் அதனை முழுமையாக மறுதலித்தார். பின்நவீனத்துவம் குறித்து எல்லா மாக்சியவாதிகளும் கூறிவரும் கருத்தே அவரிடமிருந்தும் வெளிப்பட்டதால் நானும் அதுபற்றி அலட்டிக்கொள்ள விரும்பால் கருத்தாடலை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோரது எழுத்துக்கள் பற்றியும் எமக்கிடையில் கருத்துக்கள் மோதிக்கொண்டன. ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்) மாக்சியத்திற்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம். எனினும் அதுபற்றி ஏன் மாக்சியர்கள் தரப்பிலிருந்து காத்திரமான விமர்சனங்கள் முன்வைக் கப்படவில்லை? என்றேன் நான். ஜெயமோகன் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். சாரு நிவேதிதா ஒரு ஆபாச எழுத்தாளர். தவிர அவர்களுடைய எழுத்துக்கள் பெரும்பாலான மக்களைச் சென்றடைவதில்லை. மக்களைச் சென்றடையாத எழுத்துக்கள் பற்றி நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும் என்றார் அந்த எழுத்தாளர்.
நான் அவதானித்தவரையில் தான் சார்ந்திருக்கும் கோட்பாட்டினையும் தனது கருத்துக்களையும் எப்பாடுபட்டேனும் நியாயப்படுத்திக்கொள்ளவேண்டு மென்ற முனைப்பே அவரிடம் காணப்பட்டது. இன்று தமிழ் சூழலில் இலக்கிய வாதிகள், சிந்தனையாளர்களென (விதிவிலக்காக ஒருசிலர் உண்டு). அறியப் பட்டவர்களுடைய நிலைப்பாடும் இதுவேதான். அதாவது தான் சார்ந்திருக்கிற கோட்பாட்டினை நியாயப்படுத்திக்கொள்வதிலும் மற்றவர்களுடைய தேடல்களை மறுதலிப்பதிலும் அதற்கான ஆதாரங்களைப் பட்டியலிடுவதிலுமே பெரும் பாலானவர்களின் புலமைசார் உழைப்புகள் வீணாகிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஈழத்து தமிழ் சூழலில் பலராலும் அறியப்பட்ட ‘மு.பொ. வினையும் சிவசேகரத்தையும் எடுத்துக்கொள்வோம். மு.பொ.விற்கு சிவசேகரமும், சிவசேகரத் திற்கு மு.பொ.வும் மறுப்பெழுதுவதிலேயே மூன்றாவது மனிதனின் பல பக்கங்கள் வீணாக்கிக்கொண்டிருக்கின்றன. இருவருமே வேறுபட்ட நோக்கில் சமூக மாற்றத்தை முதன்மைப்படுத்துபவர்கள். ஆனால் தமது கருத்துக்களை பரந்த
Nf Y Barce WW சமூகத்தளத்திற்கு கொண்டுசெல்வதற்காக இவர்கள் ஆற்றிய பணியென்னவென்று
கேள்வியெழுப்பினால் நாம் பூச்சியத்தையே விழிக்கவேண்டிவரும். மு.பொ. பிரஸ் தாபித்துவரும் தளையசிங்கத்தின் மெய்முதல்வாதத்தை எடுத்துக்கொண்டால் இன்று மாக்சியத்திற்கு ஈடாக மெய்முதல் வாதத்தைக் குறிப்பிடும் மு.பொ. மெய்முதல் வாத சிந்தனையை ஒரு பரந்த சமூகத்தளத்திற்கு கொண்டுசெல்லவோ புதிய தலைமுறையினர் மத்தியில் அதுபற்றிய கருத்தாடல்களை ஏற்படுத்தவோ ஏதாவது செய்திருக்கின்றாரா? வெறுமனே தளையசிங்கம்' கூறியதையே சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோன்று கூறிவருவது எவ்வாறு ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இன்று பல இளம் படைப்பாளிகளுக்குத் தளைய
11

Page 7
சிங்கத்தை யாரென்றே தெரியாத துர்ப்பாக்கிய நிலைமை. இதற்கு இடையில் தளையசிங்கத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டதான அங்கலாய்ப்புகள் வேறு. உண்மையில் தளையசிங்கத்தை இருட்டடிப்புச் செய்தவர்கள் வேறு யாருமல்லர். அவரைக் குருநாதராகப் பறைசாற்றிக்கொள்ளும் மு.பொ. போன்றவர்கள்தான். ஏனெனில் தளையசிங்கத்தின் சிந்தனைகளை (ஆத்மார்த்த) இவர்கள் தமது படைப்புகளில்கூட போதியளவு வெளிப்படுத்தவில்லை. வெறுமனே தமது தத்து வார்த்த மோதல்களுக்கு தளையசிங்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதேபோன்று கைலாசபதியையும், மகாகவியையும் வைத்துக் கொண்டு தமது பண்டிதத்தனங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் இலக்கியவாதி களும் பாரதியாரின் மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்ற கூற்றை வைத்துக்கொண்டு ஒருவருடம் விவாதிக்கும் சிந்தனையாளர்களும் நம் தமிழ் சூழலில் அதிகம். இதன் மூலம் இவர்கள் சாதித்ததென்ன? சாதிக்கப்போவதென்ன?
தமிழ்ச் சூழலில் குறுந்தேடல் மனோபாவத்திற்குப் பிறிதொரு நல்ல உதாரணம் பின்நவீனத்துவம் (Post Modernism) தொடர்பான சர்ச்சைகள். தமிழ்ச் சூழலில் அதிக தாக்கம் செலுத்திவரும் சமீபத்திய சிந்தனை பின்நவீனத்துவம். எனினும் இது தொடர்பான சர்ச்சைகளும் எதிர்வாதங்களும் இன்னும் ஓயவில்லை. எல்லாவற்றுக்குமான பேருண்மை, பெருநீதி, என்பவற்றை பின்நவீனத்துவம் வன்மையாக எதிர்க்கின்றது. அதாவது ஒற்றைக்கோட்பாடுகளிலிருந்து தொடங்கி உலகம் தழுவிய அளவுக்கு வளர்க்கப்படும் எல்லாவகையான கருத்தியல்களையும் அது ஏற்க மறுக்கின்றது. அவ்வகைக் கொள்கைகளைப் பின்நவீனத்துவம் ஒட்டு மொத்தப் படுத்துபவை (Totalising) மேலதிகப்பண்பு கொண்டவை. (Hegmonising) என்று மதிப்பிடுகின்றது. இறைவன், தனிமனிதன், பிரக்ஞை, அறிவு, சமூகம், மானிட விடுதலை என்பதுபோன்ற புள்ளிகளை மையமாகக் கொண்டு மொத்த உலகு நோக்கி கட்டி எழுப்பப்படுவதை அது மறுதலிக்கின்றது. துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, பன்மியப்பாங்கு கொண்டவை, ஆகியவற்றை பின்நவீனத்துவம் பாராட்டுகின்றது. (பேராசிரியர் ந.முத்துமோகன் . ஐரோப்பிய தத்துவங்கள்)
இதனடிப்படையில் பின்நவீனத்துவவாதிகள் மாக்கிசியத்தின் போதாமை குறித்தும் அதன் குறைபாடுகள் குறித்தும் பேசி வருகின்றனர். எனினும் மாக் சியர்கள் பின்நவீனத்துவம் கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட தென்றும், அது முதலாளித்துவவாதிகளால் மாக்சியத்தைப் பலவீனப்படுத்துவதற் காகக் கட்டவிழ்த்துவிடப்பட்டதொரு மனோபாவம் என்றும் கூறி தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றனர். மாக்சியம் பல எல்லைகளைத் தொட்ட சிந்தனை என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. மார்க்சியம் நடை முறைப் பயன்பாடுகளுடாக உண்மையை அறியும் வழியைத் திறந்துவிடும் ஒரு கோட்பாடே அன்றி எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளைத் தயாராக வைத் திருக்கும் ஒரு கோட்பாடல்ல. எனவே மாக்சியம் ஒரு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனையல்ல. அவ்வாறு ஒரு மாக்சியர் கூறின் அவருக்கும் "குள் ஆனை முதன்மைப்படுத்தும் ஒரு மெளலவிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்க மாட்டாது. உதாரணமாக மாக்சியம் சாதியம் பற்றி பேசவில்லை, மாக்சித்தின் பெண்ணியப் பார்வையின் போதமை குறித்து விமர்சனங்கள் மேலெழுந்து வரு கின்றன. இதனடிப்படையில் ஒரு தலித் மாக்சியத்தின் போதாமை பற்றிப் பேசும்போது அதனை நாம் எவ்வாறு நிராகரிக்கமுடியும். இந்த வகையில் பின்நவீனத்துவ
2

வாதிகள் மாக்சியத்தின் குறைபாடுகள் பற்றிப் பேசும்போது அதனை ஆழமாகப் பரிசீலிக்கவேண்டிய கடப்பாடு மாக்சியர்களுக்குண்டு. அவ்வாறில்லாது வெறுமனே பின்நவீனத்துவம் கருத்துமுதல் வாதத்தை அடிபப்டையாகக் கொண்டதெனக்கூறி நிராகரிப்பது ஆரோக்கியான அறிவுத்தேடல்களுக்கு வழிவகுக்கப்போவதில்லை. ஒருவேளை மாக்சியர்கள் கூறுவதைபோன்றே பின்நவீனத்துவம் பிற்போக்கான சிந்தனையாக இருப்பின் வெறுமனே நிராகரிப்பதன் மூலம் அதனை அம்பலப் படுத்தவும் முடியாது. தவிர ஒரு சிந்தனை கருத்து முதல் வாதத்தை அடிப்படை யாகக் கொண்டிருப்பதை மட்டும் முதன்மைப்படுத்தி அச்சிந்தனையை நிராகரிப்பது சரியானதா? அது ஒரு சிறந்த விமர்சன நோக்காக அமையுமா? இல்லையென்று கூறுகின்றார் ஒரு மாக்சிய மூலவர். அவர் பெயர் "ஏங்கல்ஸ்' என்பதாக நினைவு. பிழையென்று சொல்வதால்மட்டும் ஒரு தத்துவத்தை ஒதுக்கிவிடமுடியாது. அதுவும் தேசத்தின் அறிவுவளர்ச்சியில் அத்தனை பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்த ஹெகலின் (கருத்துமுதல்வாத) தத்துவம் போன்ற ஒன்றைச் சும்மா புறக்கணித்தல் மூலம் ஒதுக்கிவிடமுடியாது. திறனாய்வு மூலம் புதிய உள்ளடக்கத்தைப் பேணியவாறு அதன் உருவத்தை அழிப்பதன் மூலமே அது சொல்லப்படவேண்டும் - ஏங்கல்ஸ். பின்நவீனத்துவவாதிகள் மாக்சியத்தின் குறைபாடுகள் பற்றிப் பேசியபோதும் பின்நவீனத்துவமும் மாக்சியமும் இணைந்து பயணிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றியும் கூறப்படுகின்றது.
இன்று பின்நவீனத்துவம் முதன்மைப்படுத்தும் பல விடயங்கள் ஏற்கனவே மாக்சியத்தால் முன்வைக்கப்பட்டவையே. இந்தவகையில் மாக்சியமும், பின்நவீனத்து வமும் ஏராளமான விசயங்களில் தம்மை பரஸ்பர்ம் தகவமைத்துக்கொள்ளமுடியும் என்று கூறுகின்றார் மாக்சிய அறிஞரான "பிரட்டெரிக் ஜேம்சனி என்பவர். எனினும் பின்நவீனத்துவத்தின் வருகையின் பின் தமிழ் சூழலில் குறிப்பாகக் கலை இலக்கியங்களில் கணிசமான தாக்கங்கள் ஏற்பட்டிருப்பது உண்மையாயினும் பின்நவீனத்துவத்தினை ஒரு பரந்த சமூகத்தளத்தில் வேர்கொண்டிருக்கும் சிந்தனை யாகக் கருதமுடியாது. எனவே ஒட்டு மொத்தமாக நோக்கும்போது தமிழ் சூழலில் அறிவுத்தேடல் என்பது குறுகிய வட்டத்தினுள் சுழல்வதாகவே தெரிகின்றது. எதையும் எழுந்தமானமாக நிராகரிப்பதும் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்க மறுப்பதும் ஆராக்கியமான சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுக்கமாட்டாது. தற்போதைய தமிழ்ச் சூழலில் அறிவுத்தேடல் பற்றி சிறுகுறிப்பே இக்கட்டுரை. இது மேலும் ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் முன்னெடுக்கப்படவேண்டும்.
அன்பார்ந்த வாசகர்களே. சந்தா விபரம் ஞானம் சஞ்சிகை பற்றிய தனிப்பிரதி; ரூபா 15/-
வருடச்சந்தா: ரூபா 180/-
யின் தரத்தை மேம்படுத்த உங்க (தப்ாற்செலவு உட்பட)
ளது ஆலோசனைகளையும் அறி சந்தா காசோலை மூலமாகவோ
கருத்துக்களைக்களையும் சஞ்சில்க
யத் தாருங்கள், மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. அனுப்வேன்டிய பெயர்
முகவரி ;-
உங் களது LJ 60) 1– Li புகளினர் TGNANASEKARAN மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் 19/7, PERADENIYA ROAD, கிய தரத்தை மேம்படுத்துங்கள். KANDY.
13

Page 8
க(வி)தைக்கு ஒரு கரு
எதிர்பாராத சந்திப்பு
அது.
ஒருவரை ஒருவர்கண்டதும்
பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி
சுகநலம் விசாரித்துக் கொண்டோம். 露
வட்டிக்கடைபோட்டு &3දී> 〉།-ཀ་
வாழ்க்கையில் முன்னேறியதாகக் கூறியவர் இ; 李《 3- }్య
マ تحجی
என்னைப் பற்றி விசாரித்தார். d
நான் E. جادهم :x என்னைப் பற்றி எதைச்சொல்வது? - عمر * இருந்தாலும் ^ 驚名
எடுத்துரைத்தேன் சிலவார்த்தைகளை, இணுவில் பகுதியில் இளையதம்பியின் அரிசிஆலையில் எண்பதுருபாவுக்கு வேலை செய்வதாகக் கூறியபோது சுருங்கியது அவரது நெற்றிப்பொட்டு. “நீ. என்னடாப்பா
ஏதோ கதை, கவிதை எழுதுவதாகக் கேள்விப்பட்டன். கூலிவேலையா செய்கின்றாய்?
சீச். சீ.!
அதுசரி
கதை, கவிதை எழுதினா காசேதும் குடுப்பாங்களா..?” எழுந்துகொண்ட எரிச்சலை; எனக்குள் இயலுமானவரை அடக்கிக் கொண்டேன். வட்டிக்கடைப்புத்தி தனது வக்கிரத்தன்மையோடு எனது இலக்கியம்பற்றி ஏதோதோகூற
எழுந்துகொண்டது எனக்குள் க(வி)தைக்கு ஒரு கரு அலெக்ஸ் U仍历J06可 அவர் மூலமாக.
* நெற்றிக் கண்‘ விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கண் பகுதியில் உங்கள ால் விமர்சனம் இடம்பெற
@ தி டு & staci ()
ro qq SqA AASA SAiSi iSMSM MMAAA AAAASS AASAAAS 0SLSLi AqAASS SC qS S AAT SAA A AAS AAA AAAAS . . . . . ۔ ۔ - - ۔ ۔ -- سمیت۔ ۔ ”سی۔ {ர்வண்டுtoiமனiல, துர்லiன இரு பரதகளை அனுட பி விையுங்கள். g'b
மட்டுமே அனுப்பினால், நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு
.L{ யில் இடம்பொறும் מ6Ug5L ח Ei குதியில் இ [D] -ஆசிரியர்.
14
 

இதுஎழுத்துலக
சாரல் நாடன்
Yi. 1983 வன்செயலுக்குப் பின்னர் என் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையில், இந்தியாவில் தொழில் தேடிக்கொண்டு போவதற்கு ஆயத்தம் செய்தபோது ‘இந்தியா நமக்கு சரிப்படாது என்று என்னுடைய இருபத்தாறாம் வயதில் திரும்பி வந்துவிட்டேன். நீ உன்னுடைய முப்பத்தொன்பதாம் வயதில் இந்தியாவிற்கு போகிறேன் என்கிறாய், உனக்குச் சரி என்று பட்டால் எனக்கும் சரி என்றார் என் தந்தை.
ஒரு மாதம் இந்தியாவில் தங்கி இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு குடும்பத்தோடு இலங்கைக்கே திரும்பி வந்துவிட்டேன். வீட்டில் நானொருவனே ஆண்பிள்ளை. மற்றய ஐந்துபேரும் சகோதரிகள். நான்குபேர் எனக்கு மூத்தவர்கள். என்னைக் கீழே விடவே மாட்டார்கள். ஒருவர் மாறி ஒருவர் என்று தூக்கி வைத்துக்கொள்வார்கள்.
நான் வளர்ந்ததும், வாழ்ந்ததும், தோட்டத்துப் பாடசாலையில் நான்காம் வகுப்புவரை படித்ததும் என் சகோதரிகளுடன்தான். தோட்டப்புற நாட்டுப் பாடல்களின் சுவையையும், பெரிய எழுத்து கதைப் புத்தகங்களை வாசிக்கக் கேட்ட அறிவையும் பத்து வயதில் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்குப் போவதற்கு முன்பே நானறிந்து கொண்டதற்கு என் சகோதரிகளே காரணமாயினர்.
என் அப்பா தமிழில் நன்கு அறிவுடையவள். வளநாடு, மலைநாடு, நவஜீவன், வீரகேசரி என்ற பத்திரிகைகளை விலை கொடுத்து வாங்குவார். விளங்குகின்றதோ இல்லையோ சிறுவயதிலேயே இவைகளை நான் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். என் அம்மாவுக்கு கல்வி ஞானம் இல்லை. ஆனால் இராமாயணத்தையும், மகா பாரதத்தையும் அவர்களைப்போல சொல்லிக் கொடுத்தது வேறுயாருமில்லை.
இள வயதிலேயே என்னையறியாமலேயே இலக்கிய உணர்வு என்னில் விதைக்கப்பட்டுவிட்டது. அதை விருட்சமாக வளர்த்தெடுப்பதில் ஹைலன்ஸ் கல்லூரியின் விடுதிவாழ்க்கை உதவியது. அது இருமொழிக் கல்லூரி. சிங்கள ஆசிரியர்களையும் சேர்த்து எல்லாமாக இருபது ஆசிரியர்கள் பணியாற்றினர்.
its pass, (35f 6.
4
அந்தக் கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகப் புகுமுகத் தேர் எழுதிய பெருமை எனக்கே உரியது.
கல்லூரியின் வாசிகசாலை என் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் நூல்கள் இருந்தன. அத்தனை புத்தகங்களையும் நான் வாசித்திருந்தேன். வாசிப்பது என்னுடய நாளாந்த கடமைகளில் ஒன்றாகி விட்டதற்கு இதுதான் காரணம்.
இர.சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், ந.அ.தியாகராசன், நயினாதீவு வே. குலசேகரம், நவாலியூர் நா.செல்லத்துரை, செல்வி சிற்றம்பலம், செல்வி மாணிக்கவாசகம், திருமதி ஜெயசிங் என்று எனக்கு கிடைத்த ஆசிரியர்களை
15

Page 9
இன்றும் நன்றியுடன் என்னால் நினைவுகூர முடியும். அதிலும் சிறப்பாக இர. சிவலிங்கம் கல்லூரியில் என்னுடைய அண்ணனாக விளங்கினார்.
அப்போது நடக்கும் பேச்சுப் போட்டிகளில் நாங்கள் கலந்து கொள்ளும்போது சிவலிங்கம் எழுதிக்கொடுக்கும் பேச்சைத்தான் மனனம் செய்து போட்டிகளில் கலந்து கொள்வது. இரண்டு முறைக்குமேல் அவர் எழுதிக் கொடுக்கவில்லை. மற்ற எல்லா மாணாக்கர்களுக்கும் எழுதிக் கொடுப்பார். எனக்கு மட்டும் கொடுக்க மாட்டார். நீயாக யோசி, எழுது, பேசு என்பார். அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் முதற்பரிசைத் தட்டிச் செல்கையில், முகம் பூரித்து அவர் என்னைப் பாராட்டியது, இப்போதுதான் விளங்குகிறது. சுயமாக என்னை எழுதத்தூண்டுவதற்காக அவர்கையாண்ட மார்க்கம் என்று.
அந்த மார்க்கத்தால் கல்லூரியிலும் மற்றக்கல்லூரிகள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும், மத்தியமாகாணத்திலும், 1960ல் தினகரன் நடாத்திய தமிழ் விழாவிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன.
1960ம் ஆண்டு ஒருநாள் வகுப்பறைக்குள் நுழைந்தவர் ஒரு சிறுகதையை வாசித்துக்காண்பித்து எங்களின் அபிப்பிராயத்தைக் கேட்டார். அபிப்பிராயம் கூறுவதற்கு ஒன்றும் தோன்றாமல் “வாய்பிளந்து கிடந்தோம். அப்படி அவர் எங்களிடம் வாசித்துக் காண்பித்தது கல்கியில் திருச்செந்தூரன் எழுதியிருந்த ‘உரிமை எங்கே என்ற சிறுகதை.
பின் அவரே அந்தக் கதையின் குறை நிறைகளைச் சொல்லி, சிறுகதை எழுதவேண்டிய முறைகளையும் சொல்லித்தந்தார். o
கல்லூரில் என்னுடன் படித்த ஒரு சாலை மாணவர்களான பலரும் எழுத்துத் துறைக்கு ஈர்க்கப்பட்டது இதனால்தான். கல்லூரியில் பரீட்சை எழுதிவிட்டு "ரிசல்ட் வரும் வரைக்கும் கண்டி அசோகா மாணவர் விடுதியில் விடுதி மேற்பார்வை யாளனாக பத்து மாதம் இருந்தேன்.
கண்டியில் அப்பொழுது துடிப்புடன் விளங்கிய மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் செயற்பாட்டாளர்களின் நட்புக் கிடைத்தது. நாள்தோறும் ஈழக்குமாரும் சிவமும் மாலையில் சந்தித்துப் பேசுவோம். மலைமுரசில் என்னுடைய கதைகள் வெளிவரத் தொடங்கின. ஜில்லாக்கடிதம், மனநிறைவு, படைப்பு ரகசியம் என்பன அவைகளுள் சில. நிறைய கட்டுரைகளையும் மொழிபெயர்ப்புகளையும் மலைமுரசுக்காகச் செய்திருக்கிறேன்.
அப்போது கலைச்செல்விப் பத்திரிகையில் நடந்த யாழ் . இளம் எழுத்தாளர் சங்கம் நடாத்திய இலக்கியம் ஏன்? கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசில் பெற்றேன். எனக்கு அடுத்த பரிசினைப் பெற்றவர் பின்னாட்களில் இந்துசமயப் பண்பாட்டு அமைச்சின் பணிப்பாளராக வந்த சண்முகலிங்கம் அவர்கள். இந்தச் சமயத்தில்தான் தொழில்தேடி தோட்டத்துக்கு வரவேண்டியவனானேன். என் தந்தை தொழிலிலிருந்து ஓய்வுபெறும் சமயம் வந்துவிட்டதால் தோட்டத்தில் தொழில் புரிந்தால் தொழிலோடு வீடும் கிடைக்கும் என்பதால் தொழிற்சாலையில் உதவி டீ மேக்கராகப் பயில ஆரம்பித்தேன். நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலைசெய்வதென்பது, இலகுவானதாயிருக்க வில்லை. ஆனால், இருப்பதற்கு ஒரு வீடு வேண்டுமே என்பதற்காக ஏற்றுக்கொண்ட
16

வேலை. இந்திய வம்சாவழித்தமிழர்களின் இருண்ட வாழ்வில் அவ்வப்போது ஏற்படுகின்ற ஒளிக்கீற்றுக்களெல்லாம் இல்லாமல் செய்கிற ஒரு சாபக்கேடு.
எழுத்தில் எனக்கேற்பட்ட பிரேமையினால் அந்த வேலையை விட்டு விலகுவதென்று நினைத்த சமயத்தில், "இயந்திரந்திரச் சிந்தனையும், இயந்திர உழைப்பும் இந்த நாட்டுக்கு இன்றுதேவை. நீர் செய்யும் தொழிலில் உயர்ந்த பதவியை அடைய முயற்சிக்கவும்” என்று நந்தி எனக்கு அறிவுரை செய்து கடிதம் எழுதி இருந்தார். அதனால் கருகாமல் தப்பித்தவன் நான். நான் தொழில் பயின்ற இடத்தில் 1965ஜுன் வரையிலும், கதைகளுக்கான கரு நிறையக் கிடைத்தன.
இளமைக் கனவுகளுடனும் இலட்சிய வெறியுடனும் கல்வியைத் தொடர முடியாத கவலையுடனும் கட்டுரை, கவிதை, சிறுகதைகள் என்று எழுத ஆரம்பித்தேன். அங்கிருந்த இரண்டு ஆண்டுகளுக்குள்தான் சாரல்நாடன்' என்ற பெயரில் இலக்கிய உலகில் அடி எடுத்து வைத்தேன். அது வரையிலும் நயா, வளவன், இந்திரஜித், தோழன் என்ற புனைபெயர்களிலேயே எழுதினேன். மு.க.நல்லையா என்ற சொந்தப் பெயரிலும் நிறைய எழுதினேன். என்னுடைய வீரகேசரி சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற கதையும் சொந்தப் பெயரிலேயே எழுதப்பட்டிருந்தது.
சாரல் நாடன் என்றபெயர் 'குறுந்தொகையில் நான் லயித்திருந்த அந்த நாட்களில் என்பெயராயிற்று. அந்தப்பெயரில் முதன்முறையாக நான் ஒரு கட்டுரை யைத் தினகரனுக்கு எழுதினேன். மலையகத்தில் வழங்கிவரும் பழந்தமிழ்ச் சொற்கள் என்ற தலைப்பில் எப்.எக்ஸ்.சி. நடராஜாவுடனும், பேராசிரியர் தனஞ்சியராச சிங்கத்துடனும் சேர்ந்து நான் கருத்துத் தெரிவிருந்தது, சாரல்நாடன் என்ற பெயரையும் இலக்கிய உலகில் முன்னணிக்குக் கொண்டுவரக் காரணமாயிற்று. அந்தக்கட்டுரை வெளியான சமயத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ்விழா நடந்தது. இர.சிவலிங்கத்தின் புனைபெயர்தான் சாரல்நாடன் என்று எண்ணிக் கொண்டு தனஞ்சியராசசிங்கம் புகழ்ந்ததாகவும், அதை ஏற்காது தன்னுடைய மாணக்கர்களில் ஒருவரது புனைபெயர்தான் அது என்று தான் கூறியதாகவும் கூறிய சிவா அது என்னுடைய பெயர்தான் என்பதை 'அட்டன் இலக்கிய வட்டம் கூட்டம் ஒன்றில் நிச்சயப்படுத்திக் கொண்டார்.
'அட்டன் இலக்கிய வட்டம்' என்னுடைய அடங்காத இலக்கிய உணர்வுகளின் செயற்பாடுகளில் ஒன்று. நாங்கள் நடர்த்திய இலக்கிய விழாவுக்காகத்தான் முதன்முதலாக மலையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் பேராசிரியர் சிதில்லைநாதன்.
மலையம் நாளை சிறக்கும், எங்கள்
மகிழ்ச்சியின் வாசல் திறக்கும் என்ற, என்னுடைய கவிதை வரிகளுடன்தான் அன்று அவர் தன்னுடைய பேச்சை முடித்தார். 65 ஜூனுக்குள்ளாக என்னுடைய பிரேத ஊர்வலம், சுயகெளரவம், வெறுப்பின் எல்லையில், கடுக்கன், எவளோ ஒருத்தி என்ற கதைகள் தினகரனில் பிரசுரமாகியிருந்தன. கைலாசபதியும், நந்தியும் என்னுடைய எவளோ ஒருத்தியை விஷேடமாகப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்கள். இங்கிருக்கும்போதுதான் மலையக வாய்மொழி இலக்கியம் சம்பந்தமாகவும் - இதுவரைக்கும் வெளியாகியுள்ள ஒரே ‘கதைப்பாட்டையும் சேகரித்து வெளியிடமுடிந்தது.
17

Page 10
தொழில் நிமித்தம் பூண்டுலோயாவில் டன்சினேன் தோட்டத்தில் என்னுடைய வாழ்க்கை 65 ஜூலையில் ஆரம்பமாயிற்று. 12க்கும் மேலான என்னுடைய சிறுகதைகள், 5 நூல்கள் இப்போதுதான் வெளியாகின. 94 ஜனவரி வரைக்கும் அந்த வாழ்க்கை நீடித்தது.
கண்டியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த செய்தி யில் மலையகத் தமிழர் எனும் தலைப்பில் வரலாற்றுக்குறிப்புகள் அடங்கிய கட்டுரைத்தொடர் ஒன்றை எட்டுவாரங்களுக்கு எழுதினேன். தேசிய இலக்கியம் குறித்து வீரகேசரியிலும் மலையக இலக்கிய கணிப்புக் குறித்து செய்தியிலும் வெளியான என்கட்டுரைகள் கைலாசபதியிடமிருந்தும், ஸி.வி.வேலுப்பிள்ளையிடமிருந்தும் பதில் கட்டுரைகளை வெளிவரச்செய்தன. என். எம்.எஸ். இராமையாவுடன் எனக்குக் கடிதத்தொடர்பு மாத்திரமே இருந்தது. தெளிவத்தை ஜோசப்புடன் கடிதத்தொடர்போடு நேரடி அறிமுகமும் இருந்தது. ஒருமுறை சாமிமலை என்ற நகரில் வே.முக்கப்பிள்ளை நடாத்திய வீரகேசரிப் பத்திரிகையின் முதல் மலைநாட்டுச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றவர்களைப் பாராட்டி - விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஜோசப் விழா முடிந்ததன்பின் என்னுடன் குயில்வத்தை தோட்டத்தின் தொழிற்சாலைக்கருகில் அமைந்திருந்த என்னுடைய இல்லத்திற்கு வந்திருந்தார். பலி என்ற ஒரு குறுநாவல் - எங்களுக்குள் எவ்வித முன்னேற்பாடுமின்றி எங்கள் மூவரின் கூட்டு முயற்சியாக வெளிவந்ததும் இந்தக்காலப்பகுதியிலேயே. அட்டன் இலக்கிய வட்டம் போன்ற ஓர் அமைப்பை என்னால் பூண்டுலோ யாவில் ஏற்படுத்தமுடியாவிட்டாலும், முழுத்தீவிரமாக தொழிற்சங்க நடவடிக்கை களில் ஈடுபட முடிந்தது. தோட்ட உத்தியோகஸ்தர்கள் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் என்ற அமைப்பிலிருந்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ"க்கும் சேவையாளர் சங்கத்துக்கும் எப்போதும் சுமுகமான உறவு இருந்ததில்லை. தோட்ட உத்தியோகஸ்தர்களை பழிவாங்க நினைக்கும் தோட்டத் துரை, தொழிலாளர்களைக்கொண்டு இலகுவில் காரியத்தைச் சாதித்துவிடுவார். பல தோட்டங்களில் மலை உத்தியோகஸ்தர்கள் கொலை செய்யப் பட்டதற்கும், தோட்டத்திலிருந்து மாற்றப்பட்டதற்கும் அதுவே காரணம். பலமுறை தோட்டச் சேவையாளர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் முறியடிக்கப்பட்டதற்கும் அதுவே காரணம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் சகோதர அங்கமாக இலங்கைத் தோட்டச்சேவையாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பொதுச் செயலாளராக நான் தெரிந்தெடுக்கப்பட்டேன். சிங்கள மேலாதிக்கத்துக்குட்பட்ட ஜனவசம, அரச பெருந்தோட்டம் ஆகிய நிறுவனங்களுடன் போராடுவதற்கு தமிழர்களாகிய எங்களுக்கு வேறு மார்க்கம் தென்படவில்லை.
1983ல் தமிழகம் சென்று வந்த என்னை நிர்வாகம் பழிவாங்கத் தொடங்கியது. அதை எதிர்த்து பலவழிகளில், பல மட்டங்களில் நான் போராடினேன். கெளரவ அமைச்சர் தொண்டமானினதும், திரு செல்லச்சாமியினதும் அறிமுகம் கிடைத்தது. பெரி சுந்தரத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இ.தொ.காவின் கலை, கலாசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாய் இருந்த திரு தேவராஜின் அறிமுகமும் கிடைத்தது. அது நடாத்திய ஒரு கருத்தரங்கில் ‘மலையகச்சிறுகதைளைப் பற்றிப் பேசினேன்.
1973க்குப் பிறகு எழுத்துலகில் இருந்து விலகியிருந்தாலும், என்னுடைய வாசிப்பு குறைந்திருக்கிவில்லை. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அட்டனின் நடந்த
18

கருத்தரங்கில் சி.வி.வேலுப்பிள்ளையின் ஆங்கில எழுத்துக்கள் பற்றிப்பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.
‘எழுத்து என்பது நெருப்பைப்போல, அது எந்நேரமும் ஜுவாலைவிட்டு எரியாவிட்டாலும் அனலாய், கனலாய், தழலாய்த் தொடர்ந்து நீறுபூத்து நிற்கும் தன்மையுடையது என்று சி.வி.சிந்தனைகள் முன்னுரையில் எழுதியிருக்கிறேன். எழுத்து என்னை மீண்டும் கெளவ ஆரம்பித்தது அந்தனிஜீவா உருவத்தில். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். கடிதத்தொடர்பையும் வைத்துக்கொண்டோம். மலையக இலக்கியம் குறித்துக் கதைத்துக்கொண்டோம். மலையக எழுத்தாளர்களின் ஒன்று கூடலை 86ம் ஆண்டு இறுதியில் கண்டியில் வைப்பதென்று முடிவு செய்திருந்தார், அந்தனி ஜீவா. ஏ.வி.பி.கோமஸ், க.ப.சிவம் என்பவர்களின் துணையோடு மலையக கலை இலக்கியப் பேரவையை அவர் செயல்படுத்தி கொண்டிருந்த சமயம் அது. விழாவிற்கு அமைச்சர் இராசதுரையை அழைத்திருந்தோம். அன்றையவிழா, காற்றோடு காற்றாகப்போய்விடக் கூடாது என்று கவலைப்பட்டார் ஜீவா. முரளிதரன் அப்போது பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார். அவரை நான் அறிந்துகொண்டது அதற்குப் பின்னரே. முரளிதரனுடைய தியாக யந்திரங்கள்’ கவிதைத் தொகுதியையும் என்னுடைய சி.வி.சிலசிந்தனைகள் நூலையும் அன்றைய எழுத்தாளர் மாநாட்டில் வெளியிட்டு வைப்பதென்று தீர்மானித்துச் செயல்படத்தொடங்கினோம். கண்டியில் நூலை அச்சுக்குக் கொடுத்துவிட்டு வேனில் (என்னிடம் அப்போது டெலிக்கா வேன் இருந்தது) வீடு திரும்பிய என் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது. என் தந்தை காலமாகிவிட்டிருந்தார். அன்றுவரை உணராத தனிமையை அதன் பின்னர் உணர ஆரம்பித்தேன். “தனியாக வாழ்வதென்றே நாங்கள் வரம் வாங்கி வந்திருக்கிறோம்” என்று அம்மா அடித்துக்கொண்டார். அவரது குடும்பத்தில் என்தாத்தா ஒருவர்தான் ஆண்பிள்ளை. என் அப்பாவும் அப்படி, நானும் அப்படி, எனக்கும் ஒரு மகன்தான். எனக்கு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். சுமண பண்டார மாரப்பன என்ற சிங்களத்தோழன் டன்சினேனில் இருந்த காலத்தில் என் உயிருக்குயிராய் இருந்தவன். எங்களின் நூல்கள் எங்கள் செலவிலேயே அச்சானாலும் ஒரு பதிப்பகத்தின் அவசியத்தை உணர்ந்து மலைய வெளியீட்டகம் என்ற பெயரில் நண்பர் அந்தனிஜிவாவின் முகவரியில் இயங்க ஒத்துக்கொண்டோம். மலையகக் கலை இலக்கியப் பேரவையின் தலைவராக என்னைத் தெரிந்தெடுத்ததன் பின்னால் அதன் செயற்பாடுகளில் இருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை. அது கண்டியிலும் கொழும்பிலும் அக்கரைப் பத்தனையிலும், அப்புத்தளையிலும் நடாத்திய பல விழாக்களில் நான்கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். இயக்கமாக செயற்படுவதற்கு ஒத்துவராத மலைய எழுத்தாளர்களின் படைப்புகள், இவ்விதம் இயங்குகிற பதிப்பகத்தின் மூலம் வெளிவருவதற்கு நாங்கள் செய்த முயற்சி நல்ல பயனைத்தர ஆரம்பித்திருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மலையக வெளியீட்டகத் தின் மூலம் இதுவரை என்னுடைய மூன்று நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதில் இரண்டுக்கு - தேசபக்தன் கோ.நடேசய்யர், பத்திரிகையாளர் நடேசய்யர் - இலங்கை சாகித்ய விருது கிடைத்திருக்கிறது. ‘இலக்கிய வித்தகர் பட்டம் கிடைத்தது.
அமைச்சர் இராசதுரை தன்னுடைய பிரதேச அபிவிருத்தி அமைச்சின்
19

Page 11
மூலம் கெளரவம் பெற்றவர்கள் பலர். அதனை நூல் வெளியீட்டுக்குப் பயன்படுத்திவர்கள் சாரல்நாடனும் அந்தனிஜீவாவும் தாம். கவிஞர் தென்னவனின தொகுதி சிறியது என்ற குறை உள்ளது. எங்களுக்கு அந்தக்காலப்பகுதியில் கிடைத்த பணத்தில் அவ்வளவுதான் செய்யமுடிந்தது.
இன்று சாரல் வெளியீட்டகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றேன். கொட்டகலை கலை இலக்கிய வட்டம் ஒன்றையும் நிறுவி இருக்கிறோம். ஒன்றுக்கொன்று துணையாக இயங்குகின்றன. மலையகப் படைப்புகள் நூல் வடிவம் பெறவேண்டியது அவசியம். இந்தக்காலத்தில் இதைச் செய்யாது போனால் வரலாற்றின் இருட்டடிப்புக்கு நாமே துணைபோனவர்களாவோம். மல்லிகை சி குமார், மொழிவரதன், முரளிதரன், சி.வி.வேலுப்பிள்ளை என்ற ஒரு சிலரின் படைப்புகளை இதுவரையிலும் அச்சில் கொண்டுவந்திருக்கிறோம். மற்றும் பலரது நூல்களும் வெளிவருவதற்கு இருக்கிறது.
என்னுடையது இதுவரையிலும் பத்து நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் மலையகத் தமிழர் (செய்தியில் வெளிவந்த தொடர் கட்டுரை) மலைக்கொழுந்தி (பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள்), மலையகம் வளர்த்த தமிழ் (வானொலிப் பேச்சு, கருத்தரங்கத் தலைமையுரை, நினைவுப்பேருரை, ஆதியன) என்பவற்றைத் தவிர்த்த ஏனையவைகள் புத்தகங்களாகவே எழுதப் பட்டிவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியது நடேசய்யர் பற்றிய நூல்கள். நடேசய்யரை மீளவும் மலையகத்தில் அறிமுகம் செய்தது ஒரு சாதனை என்பார் இர.சிவலிங்கம். அது குறித்து Exodus சஞ்சிகையில், வழமைக்கும் மாறாக நீண்ட ஒரு கட்டுரையையும் அவர் எழுதியிருந்தார். கொழும்பில் சுவடிகள் திணைக்களத்தின் பயன்பாட்டை நான் அறிந்துகொண்டதும் அதனால்தான்.
என்னுடைய எழுத்துலகத் தொடர்பில் பலரை நான் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக ஒருவரைச் சொல்லவேண்டுமானால் அது சோமகாந்தன் அவர்கள்தான். சி.வி. சிலசிந்தனைகளுக்கு ஓர் அறிமுகத்தை மல்லிகையில் செய்திருந்தார். அதன்பின் பல வாய்ப்புக்களை எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். அதில் என்னால் மறக்கமுடியாதது 'சின்மயா மிஷனுக்காக நான் எழுதிய ஆங்கில கட்டுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் என்னையும் கலந்துகொள்ளச் செய்து, விழாவிலும் பங்கெடுக்கச் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடைய சிறுகதைத் தொகுதியை ஏற்பட்ட தடைகளை மீறி இந்தியாவில் பதிப்பித்ததில் அவர்தான் முன்நின்றார்.
மல்லிகை சஞ்சிகையில் என் அட்டை படத்தை போட்டு கெளரவம் செய்தார் டொமினிக் ஜீவா அவர்கள்.
என்னுடைய "புசல்லாவ வாழ்க்கைமிகக் குறுகிய ஒன்று. வெறும் பத்துமாத வாழ்க்கை. ஆனால் எழுத்துலகில் அது எனக்குப் பெரிய வெற்றியாக அமைந்தது. ஞானசேகரனுடன் நெருங்கிப் பழகிட அது வாய்ப்பளித்தது. தினந்தோறும் மாலையில் ஒன்றாக இருந்து இலக்கியம் பற்றிப் பேசிய அனுபவம் அதற்கு முன்பும் சரி, அதற்குப் பின்னாலும் சரி எனக்குக் கிடைக்கவில்லை.
துரை விஸ்வநாதன் என்னுடைய நூல் ஒன்றை வெளியிட்டு உதவினார். ஒரு வெளியீட்டாளரை நம்பி என்னுடைய கட்டுரைகளைக் கொடுத்தேன். ஆண்டுகள் இரண்டாகியும் பதிலொன்றுமில்லை. துரை விஸ்வநாதன் என்னிடமிருந்து பதிப்பகத்தாருக்கு கடிதம் ஒன்றுதான் கேட்டார். இரண்டு மாத இடைவெளியில்
20

மலையகம் வளர்த்த தமிழ் வெளிவந்தது.
கல்லூரிக்காலத்தில் ஆண்டு பரிசளிப்பு விழாக்கள் நடைபெறுவதுண்டு. ஐந்தாம் வகுப்பில் நான் வாங்கிய முதல் பரிசு நூல் மு.க. எழுதிய ‘கயமை. ஆறாம் வகுப்பில் எனக்குக் கிடைத்தது ஜவகர்லால் நேருவின் ‘உலக சரித்திரம். அதற்குப் பிறகு ஆண்டோவ் செகாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தகழி சிவசங்கரப்பிள்ளையின் "செம்மீன்' என்று அப்போது அவைகளை வாசித்து விளங்கிக்கொள்வதில் சிரமம் இருந்தது.
இந்தப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுப்பது இப்போது உனக்கு விளங்கவேண்டும் என்பதற்காக அல்ல. பிற்காலத்தில் உனக்கு உபயோகமாக
இருக்கும் என்பதற்காக என்று என் ஆசிரியர் கூறினார்.
அதை மறுத்துச் சொல்ல என்னால் முடியாமலிருக்கிறது.
S TMS SSSSSSS LSLSSSS LSLS S SMSSLSSS LSS SLSS LSLS SS S SSSS LSLSSSGLSS LSSSS SBBSBSBBSS SSSSS SSSSSSMSSSkLkLSSLS SSS eeSkBLBBS SSS SBBS SSS SLSSBLSS S SS SLSSCSSSSS LSS S LSSLLSSSSCSSLS SSSS
இந்தச் சனங்கள் எப்படிப்பட்டவர்கள்? சந்தேகம் இல்லை வெறும் சலசலப்புக்காரர்கள்! சிந்தித்தல் இவர்களுக்குப் பெரும் சிரமம் சொந்த புத்தி சூடு சுரணை ஒரு சொட்டும் இல்லை. வார்த்தையிலேயே எப்போதும் வாசம் செய்பவர்கள் அறிவுக்கும் இவர்களுக்கும் ஆறாம் பொருத்தம்! புத்தி இருந்திருந்தால் இங்கே எல்லாரும் புத்தராகியிருப்பார்கள்! ஒரு நாள் ஒசான்னா பாடுவார்கள் மறுநாள் இந்த மனிதனை சிலுவையில் அறையுங்கள் என்பார்கள்.
சீசர்முன் சிரம் தாழ்த்துவார்கள் சிறிது நேரத்தில் Ue85u l604-U புகழ்வார்கள்.
மறுகணம் மார்க் அந்தோனியின் பேச்சில் மயங்கிப் போவார்கள்
உணர்ச்சிதான் இவர்களின் உயிர்நாடி, ஒரு வழியிலேயே ஓடுவார்கள் மறுவழிதெரியாத மாடுகள். தன்னை நம்பாத தலையாட்டிகள். நிஜங்கள் அல்ல வெறும்
நிஜங்கள்!
- வாகரைவாணன்

Page 12
c. * مسح کہہ۔ 、 í ..
آ۲ سے
கலைச்சங்க “பாலா’
கலை, இலக்கியம், பத்திரிகை, நடனம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு 'பாலா’ என்ற பெயர் புகழுக்குரியதாக, நட்புக்குரியதாக திகழ்ந்தது.
இந்த புகழுக்குரியவரின் பின்னால் நிழல்போல் திரிந்தவன் நான். ஒருநாள் இருநாள் அல்ல, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவருடன் தொடர்பு வைத்திருந்தேன்.
"பாலா இன்றோடு நம்மோடு இல்லை. ஆனால் அவரைப் பற்றிய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கிறேன்.
எழுபதுகளில் என்முதல் நாடகமான முள்ளில் ரோஜாவுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தியும் படமும் வெளியிட அவரின் ஆதரவை நாடி டைம்ஸ்' காரியாலயம் சென்றேன். அங்கு உயர் நிர்வாகப் பகுதியில் 'பாலா’ என்றழைக்கப் பட்ட கே. பாலச்சந்திரன் இருந்தார்.
ஒரு சில நிமிடங்களில் எனது வேண்டுகோளை ஏற்று மின்னல். வேகத்தில் தமிழ் ஆங்கில பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டார். படங்களையும், செய்திகளையும் வாங்கி வைத்துக் கொண்டார்.
அடுத்த வாரமே படங்கள் தமிழ் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்தன.
ஊடகத் துறையினருடன் நெருக்கமாக உறவு வைத்திருந்தவர் பாலச்சந்திரன். அவரை ஆர்டிஸ்சேர்கிள் (கலைச் சங்கம்) பாலா என்றால் அனைவருக்கும் தெரியும்.
முதன் முதலில் வாழும் பொழுதே கலைஞர்களை வாழ்த்தி கெளரவித்த பெருமை பாலச்சந்திரனையே சாரும்.
இறந்தபின் ஒருவரின் புகழ் பாடுவதையோ அல்லது நிதி சேர்ப்பதையோ விரும்பாதவர் அவர்.
கலையரசு சொர்ணலிங்கம், வானொலி சானா, நடிகவேள் லடீஸ் வீரமணி போன்ற பல கலைஞர்களை வாழும் பொழுதே கெளரவித்து பெருமைப் படுத்தியவர். இவரின் அருமைத் துணைவியார்தான் எழுத்துலகில் சகல கலா வல்லியாகத் திகழ்ந்த யோகா. பாலச்சந்திரன். மும் மொழிகளிலும் எழுதவும் பேசவும் ஆற்றல் வாய்ந்தவர்.
இவர்கள் இருவரும் எந்தக் கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்லத் தவறமாட்டார்கள்.
ஒருதடவை இவரைப் பார்க்க "டைம்ஸ் பத்திரிகை காரியாலயம் சென்றிருந் தேன். இவரின் முன்னால் ஒரு பெண்மணி அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரை எங்கோ பார்த்ததாக ஞாபகம். பின்னர், அந்தப் பெண்மணியை
22
 

எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர் வேறு யாருமல்ல. சிங்களத் திரையுலகில் புகழ் பெற்ற பெண்மணி ருக்மணி தேவி.
அவரை மிகவும் மரியாதையாக அழைத்துச் சென்று டைம்ஸ் காரியாலயத்தில் முன்னால் நின்ற வாடகைக் காரில் அவரை ஏற்றி வழியனுப்பிவிட்டு வந்தார். அந்தப் புகழ்பெற்ற நடிகைக்கு கடைசிக் காலத்தில் ஒசைப்படாமல் உதவி செய்தவர் கலைச்சங்க செயலாளர் கே. பாலச்சந்திரன்.
கொழும்பில் நடைபெற்ற எனது திருமண வரவேற்பு விழாவை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் முன்நின்று நடத்தி வைத்தவர்கள் இத்தம்பதியினரே.
கலைஞர்களுக்கு உதவுவதில் முன்னணியில் நிற்பவர் கலைச்சங்கச் செயலாளர் கே பாலச்சந்திரன்.
நடிகவேள் லடீஸ் வீரமணியின் கலைமுயற்சிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவியுள்ளார். அவரது மகாகவியின் 'கண்மணியாள் காதை எனும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நாடெங்கும் நடத்தியுள்ளார்.
கலையையும், கலைஞர்களையும் நேசிப்பதில் கலைச்சங்க பாலாவுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது.
நான் கலைத்துறையில் வெற்றி பெறும் போதெல்லாம் பாராட்டுவார். நான் தோல்வியடைந்தால் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவார்.
அரசியலில் கலைச்சங்க பாலா ஈடுபடாவிட்டாலும் ஜனாதிபதி முதல் சமானியர் வரை இவரைத் தெரிந்து வைத்திருந்தனர்.
கலைஞர்களை வாழும் பொழுதில் கெளரவிப்பதில் "பாலாவை மிஞ்ச யாருமில்லை. இன்னும் வரும்.
படைவீரர் கரங்களில் துவக்குகளின் பாரம் குறைந்திட தமிழீழப் போராளிகளின் தாக்குதல் ஓய்ந்திட சமாதானப
வசந்தம் O மலாநதட Կ607 (Փ0)6)J67)
இன வெறிக் கடல் கொந்தளிப்பு
அமைதியுற
குற்றங் குறை களைகள் வேரோடு
பிடுங்கிட பெரும்பாண்மையும் சிறுபான்மையும் சமாதானப் புன்முறுவல் புரிந்துணர்வு இசையில்
பூத்திட இணைந்து உரிமைத் தென்றல் தழுவி அனைத்து மக்களும்
இன்புற தூய நேசம் வளர்த்து
holarish chat that air பல்லாண்டு வாழ்ந்திட
'கவிஞர் எம்.வை.எம்.மீஆத் வாழ்த்துவோம். O தம்புளுவாவை .
* 8 as e a o o e ao s o e o as o o e o e os e o o *
23

Page 13
சிறுவர் இலக்கியம்
ச.அருளானந்தம் - திருகோணமலை
சிறுவர் இலக்கியம் என்னும்போது சிறுவர்கள் யார்? இலக்கியம் என்ப தென்ன? எனும் வினாக்களும் எழுகின்றன. பாலர், குழந்தை, பிள்ளை, சிறுவர் என்னும் சொற்கள் பொதுவாகப் பிள்ளைகளைக் குறித்தாலும், உடல் உள வளர்ச்சியின் அடிப்படையில் சற்று வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் அவதானிக்கலாம்.
கல்வி உளவியலாளர்கள், பிள்ளைகளை உடல், உள வளர்ச்சிக்கிரமத்தின் அடிப்படையில் குழந்தை, பிள்ளை, கட்டிளமைப்பருவம் என வகுத்துள்ளனர். பிறந்ததிலிருந்து ஐந்து வயதுவரை குழந்தைப்பருவம் என்றும், பிள்ளைப்பருவம் ஐந்து தொடக்கம் பன்னிரண்டு வயதுவரை என்றும், பன்னிரண்டு தொடக்கம் பதினெட்டு வயதுவரை கட்டிளமைப்பருவம் எனவும் கூறுவர்.
இவ்வளர்ச்சிக்கிரமத்தில் முதல் ஐந்து ஆண்டுகளில் மனிதமூளை வளர்ச்சி வேகம் வேறு எந்தப் பருவத்தையும் விடவும் துரிதமாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறுவர். குழந்தை தன்னையும், சூழலையும் புரிந்து கொள்ளத் துடிக்கும் காலம் இப்பருவம்தான் என்பது கல்வியியலாளர் ஏற்றுக்கொண்ட விடயமாகும்.
குழந்தை, பிள்ளை ஆகிய பருவங்களில் அவர்களிடம், தன்முனைப்புத் தன்மை, சுதந்திர உணர்வு தூயசிந்தனை, ஆர்வம் உற்றுநோக்கிச் சிந்திக்கும் ஆற்றல், வீர தீரச் செயல்களில் கிரகித்தல், இயற்கை விநோதங்களில் ஈடுபாடு, உள்ளக்கவர்ச்சி, தொட்டு, மணந்து, சுவைத்து அநுபவிக்கத்துடித்தல் எதிலும் புதுமையைக்காணும் ஆர்வம் உள்ளவர்களாய் இருப்பர்.
கட்டிளமைப்பருவத்தில் மேற்கூறியவற்றின் ஆர்வத்தோடு தலைமை தாங்கும் தன்மை, பின்பற்றல், ஆக்கத்திறன் விருத்தி, ஒழுக்கம், சமூக சமய விழுமியங்களை பேணும் முயற்சிகளும் சேர்ந்து கொள்கின்றன.
மனித வாழ்க்கைவட்டம் ஏழு படிமுறைகளைக் கொண்டது என ஆங்கிலப் புலவர் சேக்ஸ்பியர் கருதுவர். அதில் பள்ளிப்பருவத்தை அழகாகத் தமது (Seven ages ofman) கவிதையில் படம் பிடித்துக்காட்டுவர். நம் பைந்தமிழ்ப் புலவர்கள் பத்துப்பருவங்களாக வகுத்துப் பிள்ளைத்தமிழ் பாடினர். ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் உரிமைப் பட்டயம் குழந்தை அல்லது சிறுவர் என 18 வயதுக்குட் பட்டோரையே குறிப்பிடுகிறது. இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும்போது, குழந்தை, பிள்ளை, சிறுவர் எனும் சொற்பதங்கள், பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையிலான குழுவினரைக் குறிக்கும் என்பது புலனாகும். அப்படிக் குறிப்பிடுவதுதான் சாலச்சிறந்ததும் ஆகும். பொதுவாக இக்குழுவினரைச் சிறுவர் என அழைத்தலே பொருந்தும். அதேபோல் அவர்களுக்காக எழுதப்படும் இலக்கியங்களைச் சிறுவர் இலக்கியம் என்பது பொருத்தமுடையதாகும். ஆங்கிலத்தில் சிறுவர் இலக்கியம் Children's Literature என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. தமிழிலும் குழந்தை இலக்கியம் என்ற பதத்தைப் பயன் படுத்தாது பொதுவாகச் சிறுவர் இலக்கியம் என்றே அழைத்தல் நலம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, அறம், பொருள், இன்பம் நிமித்தம் வீடுபேறு என்ற தத்துவத்தைப் பயப்பது இலக்கியம் எனச் சுருக்கமாகக் கூறலாம். சிறுவர்கள் எதிர்காலச் சிற்பிகள். இந்நோக்கத்தை அடைய அவர்களுக்குப் பல
24

தடைகள், பல்வேறு கட்டங்களில் குறுக்கிடலாம். அவற்றை எதிர்கொண்டு வெற்றிகொள்ளும் ஆளுமையைப் பெறுபவன் முழுமனிதனாகின்றான். சான்றோனாக்குவதும், சமுதாயமயமாக்கலும் கல்வியாகி - அதனை நிறைவேற்றும் குறிக்கோள்களைச் சிறுவர் இலக்கியம் கொண்டிருக்கவேண்டும்.
இன்றைய குழந்தையே நாளைய மனிதன். குழந்தையின் சூழல், விருப்பு, வெறுப்பு, வளர்ச்சிநிலை, ஆகியவற்றைக் கருத்திலும், கவனத்திலும் கொண்டு சிறுவர் இலக்கியம் வளர்க்கப்படவேண்டும். நமது மொழியில் சிறுவர் இலக்கியங்கள் ஒப்பீட்டளவில் அரிதாகவே உள்ளன. சிறுவர்களது உள்ளங்கள் நல்ல விளை நிலங்கள். அந்த விளைநிலங்களிலே நல் வித்துக்களை நடவேண்டும். மரங்களில் உள்ள காய்களைப் பார்க்கிறோமே தவிர, விதைகளினுள்ளே ஒழிந்து கொண் டிருக்கும் விருட்சங்களைக் காணத் தவறிவிடுகின்றோம். சிறுவர் இலக்கியங்கள், இலட்சிய வேட்கை கொண்டனவாக, அவர்களது வயது, திறனுக்கேற்றவாறு சிந்தனையைத் தூண்டி, சிருஷ்டி கர்த்தாக்களாக ஆக்கவேண்டும்.
ஆடலும், பாடலும், அபிநயித்தலும், தேடலும், துருவி ஆராய்தலும், கதைகேட்டலும், கற்பனா வளத்தைக் கட்டி எழுப்பலும், இரசித்து மகிழ்தலும், எனச் சிறுவர் உலகம் தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது. இயற்கையில் காணப்படும் பொருட்கள் அனைத்தையும் அர்த்தபுஷ்டியுடன் நோக்கும் தன்மை சிறுவர் உலகத்திற்கே உரியது. மரஞ்செடி, கொடி, ஊர்வன, நடப்பன, பறப்பன, கிடப்பன எனக் காணும் பொருட்கள் எல்லாம் அவர்களைக் கவர்ந்து புதுமை ஊட்டுவன. உவகையுறச் செய்வன.
எந்தப் பொருளைக் காணினும் அந்தப் பொருளைத் தங்களது உடமை யாக்கும் எண்ணம் எழ, உயிருள்ளனவோ, அல்லனவோ அவற்றோடு உறவுபூண்டு கருணையோடு, அன்புகொண்டு அபிநயித்துப் பேசி உறவாடும் விநோதமான உலகம் அவர்களதாகும். கேள்விமேல் கேள்வி கேட்டு அந்தக் கற்பனையில், புலக்காட்சிமூலம் அகக் காட்சியை வளர்த்தெடுக்கும் பண்பு கொண்டவர்கள்.
பாம்பு மகுடிக்கு அடங்குகின்றதோ இல்லையோ ஆனால் பிள்ளை தாயின் அரவணைப்பினோடு தாலாட்டினைக் கேட்டு அடங்கி உறங்குவதைக் காணலாம். தாய் தன் சேயைப் பெற்ற நாட்தொடக்கம் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடி, உறங்கவைப்பதும், நிலாக்காட்டிக், கதை சொல்லி அமுதூட்டி அழகு பார்ப்பதும், வழிவழிவந்த செயற்பாடாகும். இவை யாவும் பிள்ளைகளுக்கு இன்பம் பயப்பனவாகும்.
தாய் குழந்தையைத் தாலாட்டும்போது இசையோடு பாடி, தன் எதிர்பார்ப்புகளையும் உற்றார், உறவினர்கள் பக்கபலமாக இருப்பதையும் ஆசைகள் அனைத்தையும் உணர்வுபூர்வமாக கற்பனையூடே கிராமிய இசையின்மூலம் ஊட்டுவது இன்றும் நழ்நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளாகும். பிள்ளைகளின் வயதுக்கேற்ப, தாலாட்டும் கதைசொல்லலும், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கைவீசம்மா கைவீசு., சாயி சாயி சப்பாணி, போன்றவற்றைப்பாடி மகிழ்விப்பதும் இன்றும் நாம் காண்கின்றோம். இவ்வகைப் பாடல்களும், தாலாட்டுக்ளும் பல கதைகளும் வழிவழி வந்த வாய்மொழி இலக்கியங்களாகவே உள்ளன. தாய்க்குலமே குழந்தை அல்லது சிறுவர் இலக்கியத்தின் முன்னோடிகள் எனலாம். சிறுவர் இலக்கியம் மொழி தோன்றிய காலத்தில் இருந்தே வழிவழியாக வளர்ந்து வந்திருக்க வேண்டும். "ஈன்று புறந்தருதல் என் தலைக்கடன்ே என்று தாய் விட்டிருந்தால் பிள்ளைகளின் கதி என்னவாயிருந்திருக்கும்?

Page 14
சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே என முந்தையோர் சொல்லி வைத்தனர். ஆகவே சான்றோனாக்க தாய் தந்தை முயன்ற முயற்சிகளின் பயனாக குழந்தை இலக்கியம் வளர்வதற்கு ஊன்றுகோலாயிற்று.
சங்ககால இலக்கியங்களிலே குழந்தை இலக்கியத்திற்குத் தனியே சான்றுகள் இல்லையாயினும் அவை ஆங்காங்கே வித்திட்டிருப்பதைப் பலர் சுட்டிக்காட்டுவர். திருமுருகாற்றுப்படையில் "வெற்றிவெல் போர்க் கொற்றவைச் சிறுவ' என நக்கீரர் விளிப்பதையும், சிலம்பில் குரவைக் கூத்தில் ஆச்சியர் பாடுவதாக அமைந்த அம்பலத் தீங்குழல் கேழாமோ தோழி என இளங்கோ குறிப்பிடுவதையும் இன்னும் பலவற்றையும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.
பக்தி இலக்கிய காலத்தில் சிறுவர் இலக்கியத்திற்கு வித்திட்டவர்களாக பெரியாழ்வாரையும், குலசேகராழ்வாரையும் குறிப்பிடுவர். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக்கிப் பல பருவங்களாக வகுத்து, அருமையான பல பாடல்களை யாத்துள்ளார்.
"மாணிக்கம் கட்டி. எனத் தொடங்கி -
மாணிக்குறளனே தாலேலோ. வையம் அளந்தானே தாலேலோ’ எனத் தாலாட்டிப் பாடுகிறார். குலசேகராழ்வார் இராம அவதாரத்தில் காதல் கொண்டவர். ‘என்னுடைய சின்னமுதே இராகவனே தாலேலோ’ என இராமனைத் தாலாட்டுகிறார். கண்ணனைக் குழந்தையாகப் பாடிய பாடல்கள் பிற்காலக் குழந்தைப்பாடல்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன என டாக்டர் மு.வரதராசன் குறிப்பிடுவர்.
கதைகேட்பது குழந்தைகளுக்கு மிக விருப்பமானது. மகாபாரதம் ஒரு உதாரணம். சுபத்திரை கருவுற்றிருக்கிறாள். கண்ணன் சுபத்திரையின் அண்ணன். தனக்குக் கதை கூறுமாறு கேட்கிறாள். கண்ணன் கதை கூறுகிறான். கதை கூறும்போது 'உம். உம்' எனக் கேட்பவர், தான் கேட்பதை உறுதிப்படுத்துவது இன்றும் வழக்கிலுள்ளது. பாரதத்தில் நடைபெறப்போவதைக் கண்ணன் கதையாகக் கூறுகிறான். “உம் போட்டுக்கொண்டிருந்த சுபத்திரை உறங்கி விடுகிறாள். ஆனால் 'உம்' சத்தம் தொடர்கிறது. கதையும் தொடர்கிறது. இப்போது வரும் 'உம்' சத்தம் சுபத்திரையின் கருவறையில் இருக்கும் குழந்தை அபிமன்யுவின் ஒலி. கதையைக் குறையில் விட்டுத் தங்கை உறங்கிவிட்டாள் எனக் கண்ணன் செல்வதாகக் கதை நீள்கிறது. கருவில் உள்ள குழந்தையே கதை கேட்கிறது. எனப் பாரதம் கூறுகிறது. இது பிள்ளைகளுக்கு கதைகள் மேல் உள்ள ஆர்வத்தை நமக்குக் காட்டுகின்றது. கருவுற்ற தாய்மார் நல்ல நூல்களை வாசிக்கவேண்டும். நல்லவற்றைக் கேட்கவேண்டும். மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி, தூய எண்ணங் களைச் சுமந்து இருப்பதன் அவசியத்தை நமது மூதறிஞர்கள் வற்புறுத்துவ சிறந்த குழந்தைகளின் சிந்தைகளில் பதிந்து - கருவில் திருவுடையார் ஆக்குவதற் காகவேதான்.
நமது பாடாசாலைகளில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநாதர் பாடல்கள், சித்தர் பாடல்கள், நாட்டார் பாடல்கள் ஆகியன பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட்டு வந்தன. மாணவர்களுக்குப் பொருத்தமில்லாதிருந்தும் அவை மனப்பாடம் செய்வதகேற்ற வடிவத்தைப் பெற்றிருந்தமையும், அவை குழந்தை இலக்கியத்திற்கு முன்னோடியாய் அமைந்ததையும் யாவரும் ஏற்றுக்கொள்வர்.
சிறுவர் இலக்கியத்தில் அறக்கருத்துகள், நீதி, ஒழுக்கம், போதனைகள்
26

தேவையில்லை. ஒலி நயமிருந்தால்போதும், சொற்கள் மீண்டும், மீண்டும் வரவேண்டும் எனச் சிலர் வாதிடுவர். குழந்தைகளது வளர்ச்சிக்கிரமத்துக்கேற்ப சிறுவர் இலக்கியம் படைக்கப்பட் வேண்டும். கல்வி உளவியல் எண்ணக்கரு வளர்ச்சி பெற்றபின் சிறுவர் இலக்கியம் சற்றுத் தலைநிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளது. இந்த எண்ணக்கரு வளர்ச்சியடையமுன்னரே நமது சான்றோர்கள் இதனைப் புரிந்துவைத்து குழந்தை இலக்கியம்’ வளர்த்துள்ளதை எண்ணும்போது வியப்பும் பெரிமிதமும் உண்டாகிறது.
குழந்தைகளுக்காகத் தலைமுறை தலைமுறையாக ஊர்களிலும், வீடுகளிலும் பாடப்பட்டுவரும் தாலாட்டுப் பாடல்கள் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. ஒரு குறிப்பிட்ட வயதுப்பிள்ளைகளுக்கேற்ப குறிப்பிட்ட பாடல்கள், பெரியவர்களால் உணர்வுபூர்வமாக, பாடப்பட்டு வளர்ந்துள்ளமைதான் அதுவாகும்.
எனப் பாலரை விளித்துப் பாடல் யாத்தவன். குழந்தைகளுக்காகப் பாப்பாப்பாட்டுப் பாடியவன்.
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' எனச் சீர்திருத்தக் கருத்துக்களை அவனது பாடல்கள் சுமந்து வந்தன.
பாரதியின் பாப்பாப்பாட்டுக்கு முன்னரே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
செல்வம் எனும் பெயரோடும் வெளிவந்து தமிழ்நாடு அரசின் சிறுவர் இலக்கியப் பரிசையும் பெற்றது.
தமிழகத்தில் கா.நமச்சிவாய முதலியார் மணி திரு நாவுக்கரசு, வாணிதாசன், துவன், பாரதிதாசன், கவியோகி சுந்தானந்த பாரதி போன்றோரின் பின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றினார்.
ஈழத்துக்குழந்தை இலக்கியத்தில் பங்குகொண்டு உழைத்தவர்கள், உழைத்து வருபவர்கள் பலர்.
வித்துவான் க.வேந்தனார், மு.செல்லையா, அம்பி, மதுரகவி நாகராஜன், சந்தன நங்கை, யாழ்ப்பாணன், வ.இராசையா, கல்வயல் குமாரசாமி, பா.சத்தியசீலன், உடுவை தில்லை நடராஜா, த.துரைசிங்கம், வாகரைவாணன், அன்பு முகைதீன், தாமரைத்தீவான், திமிலை மகாலிங்கம், சபா.ஜெயராசா, திமிலைத்துமிலன், கே.கோணேஸ்வரன், ஓ.கே.குணநாதன், அகளங்கன், கவிஞர் கன்னையா, மாஸ்டர் சிவலிங்கம், வன்னியூர்க்கவிராயர், எம்.எச்.எம்.சம்ஸ், செ.யோகநாதன், தமிழ்வேள்,
TK arry 4 r-Eulatxoa --Amirrré af fAl rMarrer, ac re நவசோதி, அனுவைநாகராசன், செங்கை ஆழியான், கலாநிதி மெளனகுரு,
பாலசுகுமார், தா.பி.சுப்பிரமணியம், சித்தி அமரசிங்கம், ஜவார், ஜெனிபா, தெளபீக், புரட்சிபாலன், நிலவின்தாசன், குழந்தை சண்முகலிங்கம், சண்முகம் சிவலிங்கம், ஈச்சையூர்த் தவா, கெளரிதாசன், ராஜ்கபூர், ச.அருளானந்தம், மனோன்மணி பற்குணம், ராணி சீதரன் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆக்கங்கள் நூலுருப்பெறாதது
நமது துரதிஷ்டமாகும்.
懿 登 盛
27

Page 15
நெற்றிக்கண்
நால் வி
நூல் : கனவுக்கு வெளியே (UT6 D-6)(35 எழுதியோர் : பன்னிரு பெண் எழுத் தாளர்கள்
இலங்கைத் தமிழ்ச் சிறுகதையின்
வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் எவரும் பெருமூச்சுவிடத் தேவையில் லாத அளவுக்கு அத்துறை வளர்ந்தோங்கி வந்துள்ளது. காலத்துக்குக் காலம் புதிய பரிமாணங்களை அது பெற்றுக் கொள் ளவும் தவறவில்லை. தமிழ்நாட்டுச் சிறு கதை எழுத்தாளர் எவருக்கும் கிடைக் காத புதிய அனுபவச் சூழல்கள் பொது வாகவே இலங்கை எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ளன. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் அனுபவப் பரப்பு தமிழக எழுத்தாளர்களைவிடச் சற்று விசாலமானது என்றே கூறவேண்டும். தமிழக எழுத்தாளர் பலருக்கும் கன விலும் எட்டாத சில அனுபவ வீச்சுக்கள் இலங்கை எழுத்தாளர் சிலருக்குக் கைவசமாகியுள்ளன. இதனை இனங் காட்டும் முறையில் அண்மையில் வெளி வந்துள்ள சிறுகதைத்தொகுதி கனவுக்கு வெளியேயான உலகு (2002) என்பது. முற்றுமுழுதாகப் பெண் எழுத்தாளர் களின் சிறுகதைத்தொகுதியாக விளங் கும் இந்நூல், இவ்வாண்டுச் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளி வந்துள்ளது.
சுமைதாங்கி (சூரியகலா), கைமா றிய இலக்குகள் (அ.சந்திரா), என்றா வது ஒருநாள் (அலையிசை), ரணங்கள் (மண்டைதீவு கலைச்செல்வி), மழை (பூமாதேவி), அம்மா (தாமரைச்செல்வி), மழைக்கால இரவொன்றில் (தமிழினி), யார் உன்னை அழைத்தார் (மலை மகள்), சொல்லிக் கொடுக்க அப்பு
28
fA TA’
ങ്ങi - -
இல்லை (தமிழ்க்கவி), மனைவி என்ற பெண் (ஆதிலட்சுமி சிவகுமார்), பக்கங் கள் இரண்டு (மலரன்னை), தவிப்பு (சிரஞ்சீவி) ஆகிய பண்னிரண்டு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் சுமைதாங்கி, கைமாறிய கைகள், மழைக்கால இர வொன்றில்., யார் உன்னை அழைத் தார் ஆகிய சிறுகதைகள் போர்ப் பகைப் புலத்தை அடிப்டையாகக் கொண்டு எழுதப்பட்டவை. என்றாவது ஒருநாள், ரணங்கள், மழை, அம்மா, சொல்லிக் கொடுக்க அப்பு இல்லை ஆகியவை போராட்டச் சூழலின் தாக்கத்தைப் பிரதி பலிப்பவை. மனைவி என்ற பெண், பக்கங்கள் இரண்டு என்பவை பெண் ணியச் சிந்தனையோடு ஆக்கப்பட்டவை. போராட்டச் சூழ்நிலை, பெண்ணியச் சிந்தனை ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதை யாகத் தவிப்பு விளங்குகிறது.
சிறுகதைத்துறையில் ஏற்கனவே ஈடுபட்ட பெண் எழுத்தாளர் சிலரின் படைப்புகளுடன், பெண் போராளிகள் சிலரின் ஆக்கங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. "சுமை தாங்கி என்ற சிறுகதையில் இடம் பெறும் அம்மா பாத்திரம், தனது மகள் பற்றிய நினைவுகளை மீட்கும்போது கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. "உனது தோழர்களும் தோழிகளும் இப் போது அருமையாக இலக்கியம் எழுது கின்றனர். கீறினால் இரத்தம் வரும் அளவுக்கு உயிர்த்துடிப்புள்ளவையாக அவர்களின் எழுத்துக்கள் சிறப்பாக இருக்கின்றன. அவர்களின் எழுது கோல்கள் செய்கின்ற அறுவை" சிகிச்சைகள் சரியான பலனை

அளிக்கும் என்பது எனது கருத்து" என்று அப்பாத்திரம் பேசுகிறது. போராளிகளிற் சிலர் எழுத்தாற்றலும் உள்ளவர்கள் என் பதை, இத்தொகுதியிலுள்ள சில சிறுகதைகள் உணர்த்துகின்றன.
இத்தொகுதியில் அடங்கியுள்ள சிறுகதைகளிற் கணிசமானவை வாச கருக்குப் புதிய அனுபவத்தைத் தரு கின்றன. இலங்கைத் தமிழ்ச் சிறுகதைத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை இத் தொகுதி ஏற்படுத்துகிறது என நிச்சய மாகக் கூறலாம். இந்நூலில் இடம்பெற் றுள்ள சகல சிறுகதைகளும் குறிப்பிடத் தக்கவையாக விளங்கும் அதேவேளை, சில சிறுகதைகள் மிக உன்னத தரத் தைக் கொண்டு அமைந்துள்ளன. தாமரைச்செல்வியின் 'அம்மா, மலை மகளின் 'யார் உன்னை அழைத்தார்’ ஆகியவை சிறுகதையின் சிகரத்தைத் தொடுகின்றன. மண்டைதீவு கலைச் செல்வியின் ரணங்கள், தமிழினியின் ‘மழைக்கால இரவொன்றில். தமிழ்க் கவியின் 'சொல்லிக்கொடுக்க அப்பு இல்லை, ஆதிலட்சுமி சிவகுமாரின் 'மனைவி என்ற பெண், மலரன்னையின் 'பக்கங்கள் இரண்டு, சிரஞ்சீவியின் தவிப்பு என்னும் சிறுகதைகள் அந்தச் சிகரத்தைத் தொட முயல்கின்றன.
இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கோகிலவாணி தேவராசா, முயன்றால் எதிர்காலத்தில் இலங்கையின் தரமான விமர்சகர்களுள் ஒருவராக விளங்கமுடியும். விமர்சனபூர்வ மான, கனதியான ஒரு முன்னுரையை அவர் நூலுக்கு வழங்கியுள்ளார். நூல் களைப் படிக்காமலே "முன்னுரை' வழங் கும் சம்பிரதாயமும் காணப்படும் நிலை யிலே, அவர் தமது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
எழுத்துப் பிழைகள், அச்சுப் பிழைகள் இடையிடையே தமது இருப்பை வெளிப்படுத்தவே செய் கின்றன. இத்தகைய சிறுகுறைகளைத்
29
தவிர்த்துப் பார்த்தால், எதிர்காலத்தில் இலங்கையின் தரமான தமிழ்ச் சிறு கதைத் தொகுதிகள் பற்றிக் கணக் கெடுக்கும் எவரது கணிப்பிலும் தவறாது இடம்பெறத்தக்க ஒரு நூல், கனவுக்கு வெளியேயான உலகு. நூல் சின்னஞ் சிறுகிளியே எழுதியிவர் : வாகரைவாணன்
இலங்கையும் , தமிழ்நாடும் சிறுவர் இலக்கியத்துறையில் போட்டி போட்டுக் கொண்டு தம் பணியை ஆற்றி வந்துள்ளன. தமிழில் சிறுவர் பாடல் தொகுதியொன்று முதன்முதலில் வெளி வந்தது இலங்கையிலேயே என்பது குறிப் பிடத்தக்கது. 1935இல் பிள்ளைப்பாட்டு என்னும் பெயரில் அத்தொகுதி பிரசுர மானது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர், யாழ்ப்பாணன், அல்வாயூர் மு.செல் லையா, வேந்தனார், செ.கதிரேசர் பிள்ளை, சாரணாகையூம் , எம்.சி. எம்.ஸ"பைர், ச.வே.பஞ்சாட்சரம், அம்பி, பா.சத்தியசீலன், துரைசிங்கம், வாகரை வாணன், ச.அருளானந்தம், ராணி சீதரன், இஸ்லாமியச் செல்வி, இக்பால் அலி உட்படக் கணிசமானோர் இலங் கையில் இத்துறையில் தமது பங்களிப்பு களைச் செய்துவந்துள்ளனர்.
சிறுவர் பாடல்கள் பொதுவாகச் சிறுவர்களின் மனோநிலைக்கு ஏற்ற முறையிலும், அவர்களது விருப்புகள், ஆர்வங்கள், குதூகல உணர்ச்சி, புதுமை நாட்டம் இயற்கையை வியத்தல், ஆடிப்பாடும் மனோபாவம் முதலிய வற்றுக்குப் பொருத்தமான வகையிலும் அமைதல்வேண்டுமென எதிர்பார்க்கப் படுகின்றது. அவர்களது மனோபக்குவத் துக்கு ஏற்ற சொல்லாட்சிகள் இடம் பெறுவதும் முக்கியமானது. ஆயினும், சிறுவர் பாடல்கள் என்ற பெயரில் வெளி வரும் பெரும்பாலான ஆக்கங்களில், சிறுவர்களைப் பயமுறுத்தும் விடயங் களே கூறப்படுகின்றன. இதைச் செய், அதைச் செய்யாதே என்று புத்திமதி

Page 16
புகட்டும் பாடல்களே இத்துறையில் அதிகமாக வெளிவந்துள்ளன. சிறுவர் இலக்கியவாதிகள் சிறுவர் பாடல்களைப் படைக்கின்றனரா, அறக்கருத்துக்களைப் பாடுகின்றனரா என்ற சந்தேகமும் இயல் பாகவே ஏற்படத்தொடங்குகிறது.
இலக்கியத்தின் பல்வேறு துறை களிலும் ஈடுபாடு கொண்ட வாகரை வாணனும் சிறுவர் பாடல்துறையில் கடந்த காலங்களில் தமது கவனத்தைச் செலுத்திவந்துள்ளார். சின்னஞ்சிறு கிளியே என்ற தூல் (2000), அவரது நான்காவது சிறுவர் இலக்கிய முயற்சி யாக விளங்குகிறது. இருபத்தொன்பது சிறுவர் பாடல்களைக் கொண்ட இத்தொகுதியில், சிறுவர் கூற்றாகவும், சிறுவருக்கு அறிவுரை பகர்பனவாகவும், புதிய பொருள்களையும், புதிய விடயங் களையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்துவனவாகவும், இயற்கையழகை அவர்களுக்கு எடுத்துக்காட்டுவனவா கவும், பெரியார்களை அறிமுகப்படுத்து வனவாகவும் இத்தொதியிலுள்ள சிறுவர் பாடல்கள் விளங்குகின்றன.
இந்நூலிலுள்ள கணிசமான பாடல்களில் அற உபதேசமே முக்கியத் துவம் பெற்றுள்ளது. கவிஞரின் அறிவும், கவியாக்கும் திறமையுமே பாடல்களில் வெளிப்படுகின்றன. இது வாகரை வாணனின் தனிப்பட்ட குறையன்று. சிறுவர் இலக்கியவாதிகள் அற உபதே சத்தைச் சிறுவர் இலக்கியத்தின் பொது வான விதி என்று கருதுவதே இதற்குக் காரணம் எனல்வேண்டும்.
ஆயினும், இந்நூலிலுள்ள சில LLLLLL S LLL 000LLL S SSSSY 0LLGaLL ESS SSLLLL LLLLLL L0S இயற்கை பற்றிய பாடல்களில், கவிஞர் "இறங்கிவந்து” சிறுவருக்கு ஏற்பப் பாடு கிறார். வண்ணத்துப் பூச்சி, கடற்கரை யிலே, குருவி, வானவில், மழைத்துளி, தேனிக்கள் போன்ற பாடல்கள் அத்தகை யன. ஊஞ்சல் ஆடுவோம் என்ற பாடலும் குறிப்பிடத்தக்கது. பெரியார்கள்
30
பற்றிய பாடல்களில் ஆறுமுகநாவலர், மகாத்மா காந்தி பற்றிய பாடல்கள் ஓரளவு சிறுவர்க்கு ஏற்றமுறையில் அமைநதுளளன.
சிறுவர் இலக்கியத்துறையில் வாகரைவாணன் தொடர்ச்சியான பங் களிப்புச் செய்துவருவது வரவேற்கத் தக்கது. விடாமுயற்சி கொண்ட அவரின் உழைப்பு, எதிர்காலத்தில் பயனுள்ள
முறையில் இத்துறைக்கு வலுவூட்ட
வேண்டும்.
N தேயிலை
தேய்கின்ற இலை
என்பதனாலா தேயிலை ஆச்சுது?
முந்நூறாண்டாயப் மூன்றே அடிதான்!
தேயிலை முக்காட்டுடன் இந்த மலைகள் வான் நோக்கி நின்று என்னதான் ஆசிக்கின்றன?
பாவம் இவற்றின் தலை தடவும் மேகங்கள் மலைக்க வைத்தே மாறிவிடுகின்றன! ஓவென வழியும் இந்த அருவிகள் தேய் இலைகளின் கண்ணிர் தானா?
சிவப்பாகவே ருசி பார்க்கப்படும் தேயிலைகளின் தேய்வைத் தணிப்பது எப்போது?
U எம.எச.எம.ஷமஸ் )

TLjђ
சவரிமுத்துக் கிழவர் தூணில் நன்றாகச் சாய்ந்துகொண்டார். மேற் பூச்சுப் பூசாத தூண் சொரசொரப்பாய் இருந்தாலும் வலிக்கு, தோள் வலிக்கு இதமாக இருந்தது. வலிகளும் வேதனை களும் வாட்டுகிறபோது சாய்ந்துகொள்ள ஒரு ஆதாரம் தேவைதான். மெல்லியல்பு மிக்க பிலோமினா தான் அவரது உயிர்ப் பான வாழ்நாள் அனைத்துக்கும் ஆதார மாக இருந்தாள் இதுவரை.
அவருக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. சாய்ந்திருக்கிற தூணிற்கு எதிராக உள்ள அந்தத் தூணில்தான் யாரோ முதன்முதலாய் "சவரிமுத்து - பிலோமினா” என்று அவர்களை கரி எழுத்தினால் இணைத்து வைத்தார்கள். அது நல்ல வேளையாகத்தான் இருந் திருக்கவேண்டும். கரைவலை இழுத்துக் கொண்டிருந்தவர் கல்மாளிகை கட்ட முடிந்ததற்குப் பிலோமினாவின் அதிஷ்டம்தான் காரணம் என்று எல்லோ ரும் பேசிக்கொண்டது இப்போதுபோல இருக்கிறது.
“யார் கண்பட்டதோ..?” கிழ வருக்கு அடிவயிற்றிலிருந்து ஆழாமான பெருமூச்சு எழுந்தது. தோள் மூட்டில் வலி இன்னமும் தன் இருப்பை ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது. இரவில் தூக்கம் வராமல் நெடுநேரமாய்ச் சாக்குக் கட்டிலில் அமர்ந்திருந்தது காரணமாய் இருக்கலாம். தூக்கமில்லாத மனிதனுக்கு இரவைப்போல எதிரி எதுவுமில்லை. தெருவில் நடந்தும் சைக்கிளிலுமாய்ப் பலர் பிரயாணித்துக்கொண்டிருந்தார்கள். கிழவருள் சைக்கிளில் வருபவர்களில் யாரேனும் இந்த வாசிகசாலைக் கட்டடத்துள் நுளைய மாட்டார்களா
31
குருவிகள்
செல்வி ச.குமுதினி,
யாழ். மருத்துவபீடம்
வென ஏக்கமாய் இருந்தது. நிறையச் செய்திகளை வைத்துக்கொண்டு காற் றில் இதழ்கள் படபடக்கப் புது வாசனை யுடன் பத்திரிகைகள், அது வாசிக சாலை என்பதை உறுதிப்படுத்துவதாய் மேசைமீது காத்திருந்தன. ஆனால் கிழ வருக்கு அவற்றை வாசிக்க முடியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒன்றின் மீதொன் றாய் ஏறி நிற்பதுபோல் தோன்றும் என்ன வியாதி என்று அறியும் ஆர்வமும் இல்லை. அறிந்துதான் அதற்கு என்ன பரிகாரம் தேடும் நிலையிலா அவர் இருக்கிறார்.
அவர் நினைத்ததுபோலச் சின்ன வன் வின்சன் படித்து வந்திருந்தால் ஒரு வேளை அவர் இப்போது கண்ணாடியை மூக்கின்மேல் நிமிர்த்தி எல்லாச் செய்தி களையும் வாசித்துக்கொண்டிருப்பார். வேண்டாம் எல்லாச் செய்தியும் வேண் டாம். அன்ரனைப் பற்றியதாய் ஏதேனும் தகவல் இருக்கிறதா என்றாவது பார்க்க முடிந்திருக்கும்.
இன்றும் அன்ரனைச் சார்ந்த தகவல் ஏதேனும் வந்திருக்கிறதோ தெரியவில்லை. யாராவது வந்தாற் கேட் கலாம். காணாமற் போனவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா வென. கிழவர் கண்களை முடிக்கொண்
rī.
யார் இப்போது வருவார்கள்? இந்த விடிகாலைப் போதின் உற்சாக மான நேரங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தக் கட்டிடத்தில் சோம்ப லாய்ப் பத்திரிகை வாசிப்பதற்கு யார் வரப்போகிறார்கள்? அவருக்குத்தான் இப்போதெல்லாம் காலைவேளைகள் புத்தொளியற்றதாய் இருக்கின்றன.

Page 17
பழைய நாளின் துன்பத்தொடர்ச்சி இரவு முழுவதும் மனவெளிக்குள் அமுங்கி அமுங்கி மறைந்திருந்து விடியலில் முழு விசையுடன் முகம் முன்னே வந்து நிற்ப தாய்த் தோன்றுகிறது.
"என்ன அப்பு விடிசலிலேயே வந்திட்டாப்போல.” குரல் அவனை அவருக்கு இனங்காட்டிற்று.
"ஆர் தம்பி கணேசனே?. "ஓம் அப்பு.” கிழவருக்குச் சின்னச் சந்தோசம் வந்தது. கணேசன் கேட்பவருக்கு ஈர்ப்புத் தரும் விதத்தில் சினக்காமல் வாசிப்பான். "இந்தச் செய்தி இருக்கோ எண்டு பார் தம்பி என்று கேட்டால் எல்லாத்தாள் களும் புரட்டி அச்செய்தியைத் தேடி வாசிப்பான். அன்ரன் பற்றி முன்னர் ஒரு தடவையும் வாசித்துக் காட்டி இருக் கிறான்.
"இண்டைக்கு அன்ரனைப் பற்றி ஏதாவது வந்திருக்கோ எண்டு பாக்கத் தான் தம்பி." பல சம்பவங்களின் நினைவுகள் ஒரு சேர எழுந்தாற்போலக் கிழவரின் குரலில் கனங்கூடியிருந்தது. "நேற்று இதைப் பற்றி ஏதோ கூட்டம் எண்டு சொன்னவங்கள். பெடிச்சிக்குச் சுகமில்லாததாலை அவள் போக யில்லை."
yy
கிழவர் தன் வேண்டுகோளை
நியாயப்படுத்துவதாய் நலிந்த குரலில் சொன்னார்.
"ஓம் அப்பு. பாக்கிறன். இருந் தால் வாசிக்கிறன்.” கணேசன் எல்லாத் தாள்களையும் ஒருமுறை புரட்டினான். பிறகு தவறவிட்டிருப்பேனோ என்ற சந்தேகத்துடன் பார்ப்பவனாய்த் திரும் பவும் எல்லாப் பக்கங்களையும் புரட்டிப் பார்த்தான். நிமிர்ந்து கிழவரைப் பார்த்த போது அந்தக் கண்களின் எதிர்பார்ப்புக் கணேசனுக்குத் துன்பம் தந்தது. சுருக்கம் விழுந்த இமைகள். முக்கால் வாசி விழி களை முடியிருக்கப் பழுப்பேறிய அந்த விழிகளுக்குள் எத்தனை எதிர்பார்ப்பு.
32
LT6
"இல்லை அப்பு. இண்டைக்கு அதைப்பற்றி ஒண்டையும் காணேல்லை. நாளைக்குச் சிலவேளை வரும்.” கிழ வரைப் பார்க்காமலிருக்கப் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது கணேசனுக்கு. எதையோ விழுங்கிக் கொள்வதைப் போல கிழவரின் தொண்டை அசைந் தது. துக்கத்தையா? ஏமாற்றத்தையா..? கணேசன் தலையைக் குனிந்து கொண்
பிறகு அவன் தலைப்புச் செய்தியி லிருந்து எல்லாவற்றையும் உரத்து வாசித்தான். கிழவரையும் தன் வாசிப் பினுள் ஈர்ப்பதாய இடையிடையே ஏதோ கேட்டான். கிழவர் எதனிலும் ஒட்டாமல் தன்னுள் அமிழ்ந்திருப்து புரிந்தது.
"என்னப்பு இண்டைக்கு நான் வாசிக்கிறது சரியில்லையோ?”
"இல்லைத் தம்பி. எனக்கு ஒண்டிலையும் பிடிமானம் இல்லாமற் போச்சு.” கிழவரின் குரல் கரகரத்தது. "ஏனப்பு அப்பிடிச் சொல்லிறி யள்.?” கணேசனின் குரலில் வாஞ்சை இருந்தது.
கிழவர் மெளனமாய் இருந்தார். வார்த்தைகளின் தொடர்பு அறுந்து விட்டதுபோல விழிகள் தொலைவைச் சூனியமாய் வெறுத்தன. காலத்தின் வேதனை வரிகள் அவர் கன்னத்தில் அழுத்தமாய்ப் பதிந்துவிட்டனவோ? எத்தனை சுருக்கங்கள். ஒரு சில வருடங்களுக்கு முன் எப்படித் திடமாய் இருந்த கிழவர்! வாழ்வு கொடுத்த வடுக் களில்தான் அவர் உரம் இப்படிப் பொடிப் பொடியாகிவிட்டது.
நினைவுக்குள் பல காட்சிகள் ஓடுவது அவர் விழிகளில் தெரிந்தது. நிறைய வார்த்தைகள் அவருள் பிறந்து உள்ளுக்குள்ளேயே கரைந்துபோவது தெரிந்தது. கிழவர் நிமிர்ந்து அவனை நோக்கினார்.
"என்ர வீட்டு நிலவரம் உனக்குத் தெரியுந்தானே.”

"இவ்வளவுக்கும் பிறகு என்னத் திலை பிடிப்புவரும் தம்பி.?”
"அப்பிடிச் சொல்லாதையுங்கோ அப்பு.”
"இல்லை. இப்ப எனக்கு ஒரே யொரு ஆசை மட்டுந்தான் இருக்குத் தம்பி.”
"எல்லாத்துக்கும். எல்லாத்துக்
கும் விடை தெரிய வேணும்.அது என்ன விடையெண் டாலும் பரவா யில்லை. ஆனா. விடை. விடை. தெரியவேணும்.”
"அப்படியிருக்குமோ. இப்படி நடந்திருக்குமோ. இனி எப்படி நடக் குமோ எண்டு யோசிச்சு யோசிச்சுக் களைச்சுப்போனன் தம்பி. gu எல்லாத்துக்கும் விடை தெரியவேணும். அது மட்டும்தான்" கிழவருக்கு குரல் எழ மறுத்தது.
கணேசனுக்கு எதுவும் பேச முடிய வில்லை. இது இந்த மண்ணுக்கு அடை யாளமாகிவிட்ட துன்பம். கேள்வி கூட இல்லை. இங்கு. ஏன். எதற்காய். எப்படி என்பதுகூட முக்கியமல்ல இங்கு. துன்பம் தொடருமா முடிந்துவிட்டதா என்பதுமட்டுமே கேள்வியாய் நிலைத் திருக்கிற இந்த நிலை மிக அவல மானது.
"இப் படி மனந் தளர் நீ து போகாதையுங்கோ அப்பு. எல்லாத் துக்கும் ஒரு முடிவு இருக்குத்தானே. துன்பத்துக்கு மட்டுந்தான் இந்த வாழ்வு என்று கடவுள் எங்களைப் படைக் கேல்லை. நல்லது நடக்குமெண்டு நம்புவம் அப்பு."
"ஒருத்தரின்ர துன்பத்தை இன் னொருத்தர் அதே விதமாய் உணர்ந்து கொள்ள முடியாது. ஆனா. எல்லாம் முடிஞ்சுதெண்டு நினைக்காதேயுங்கோ
33
"இல்லைத் தம்பி. எனக்கு இனி
அப்படி நினைக்கேலாது. உனக்குத் தெரியுந்தானே அன்ரனைப்பற்றி ஒண்டும் தெரியாது. மூத்தவனும் ஒவ்வொரு நாளும் வலைவிரிக்கப்போனாத்தான் ஒவ் வொரு நாளும் சோறு பொங்க முடியுது. புஸ்பத்துக்கு மருந்துச் செலவு வேற. சின்னவன். சின்னவன். எந்தக் காட்டுக் கையோ ஒரு செய்திகூட இல்லை.” கிழவரின் குரலில் அழுகை துல்லியமாய்த் தெரிந்தது.
"நீ நம்புநியோ தம்பி. மூத்தவன் கனவு காணுற மாதிரி ஒரு சந்தோஷ மான வாழ்க்கை எங்கட குடும்பத்திலை இனியும் வருமெண்டு. அன்ரன் திரும்பி வந்து புஸ்பத்துக்குச் சந்தோசமான ஒரு வாழ்வைத் தருவானெண்டு. சின்னவன்ர கனவு நிறைவேறுமெண்டு நீ நம்புநியோ தம்பி.”
"நம்புவம். நல்லதை நம்புவம் அப்பு.”
அப்பு
“எனக்கு நம்பிக்கையில்லைத் தம்பி. என்ர மூண்டு பிள்ளையஞமே வெல்லமுடியாத ஏதோ ஒண்டோட போராடிக்கொண்டிருக்கிற மாதிரித்தான் எனக்குத் தெரியுது. ഖgങ്ങഖub சந்தோஷங்களையும் விழுங்கிக் கொண் டிருக்கிற அந்த வலிய சக்தியோடயான யுத்தத்திலை என்ர புள்ளையஸ் வெல் லுங்கள் எண்டு எனக்கு இப்ப நம்பிக்கை யில்லைத்தம்பி"
கிழவர் தலையைக் குனிந்து கொண்டார். விம்மலில் தோள்கள் குலுங் குவது தெரிந்தது. வார்த்தைகள் தேற்றமுடியாத துன்பம். கணேசன் கண்ணில் துளிர்த்த நீரைக் குனிந்தபடி துடைத்தான்.
"அப்பு நான் எங்கையோ ஒரு கதை படிச்சனான்."
கிழவர் அசையாது இருந்தார். எந்தக்கதையும் என் துன்பம் தீர்க்காது என்பதுபோல.

Page 18
"அப்பு உங்கட கவலையை விளங்காமக் கதைக்கிறன் எண்டு நினைக்காதயுங்கோ." .
கிழவர் சற்றே நிமிர்ந்தார். கண்
களில் இன்னமும் ஒரு வெறுமை பூச் சிட்டுக்கொண்டிருந்தது. கணேசன் சொல் லத் தொடங்கினான்.
"ரெண்டு குருவியள். அன்பான வாழ்க்கை. கடலோரமாயுள்ள ஒரு மரத் திலை கூடு கட்டி நாலு முட்டையிட்டுச் சந்தோஷமான வாழ்க்கை. ஒருநாள் குருவி ரெண்டும் இரைதேடிப்போக, பயங்கரமாய் எழும்பின அலை முட்டை யளை அடிச்சுக்கொண்டு போட்டுது. திரும்பி வந்த குருவியள் துக்கம் தாங்க முடியாமல் அழுதழுது கடைசியாய் ஒரு முடிவெடுத்ததுகள். கடலை மற்றப்பக்கம் இறைச்சு முட்டைகளைக் கண்டு பிடிக் கத் தீர்மானிச்சுதுகள். பகல் இரவாய் கடற் தண்ணிரைச் சொண்டாலை கொத்தி மற்றப் பக்கம் கொண்டுபோய்ச் சேர்த்துதுகள்.”
"கணேசண்ணை. " வாசற் பக்கமாய் எழுந்த குரல் அவனை இடை மறித்தது.
“கணேசண்ணை இந்த போமை ஒருக்கா நிரப்பித் தாறியளே." கட்டிட வாசலில் நின்றபடி அந்தப்பையன் - சைக் கிளில் வந்தவன் கேட்டபோது கணேசன் கதைசொல்வதை நிறுத்தினான். தெரிந்த பையன்தான். ஆங்கில விண்ணப்பப் படிவம் போலும் . கணேசனுக்கு ஆங்கிலத்தில் நல்ல பரிச்சயம் உண்டு. "அப்பு கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்ளிறியளே இதை ஒருக்கா நிரப் பிக் குடுத்திட்டு வாறன்.” கணேசன் பையனை அழைத்தான்.
கிழவர் சம்மதமாய்த் தலையாட்டி மெளனமானார். கதை குழம்பிப்போன தில் சின்னதாய் வருத்தம் தோன்றிற்று. மீண்டும் தொலைவை வெறிக்கத்தொடங் கினார். கணேசன் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தான்.
34
"பாவம்! சின்னக் குருவிகள். திரும்பி வந்தபோது எவ்வளவு ஏமாந்
திருக்கும்! அன்ரன் வருவானெண்டு நம்பின புஸ்பம் மாதிரி, சின்னவனை நம்பிக் கொண்டிருந்த பிலோமினா
மாதிரி. வெற்று வலையை இழுத்துக்
கொண்டு வாறா மூத்தவன் மாதிரி. அல்லது இது எல்லாத்தையும் விட அதிகமாய் ஏமாந்திருக்குங்களோ அந்தச் சின்னக்குருவிகள்." கடலை இறைக்கத் தொடங்கேக்கை எந்தளவு உறுதி இருந்திருக்க வேணும். இறகு வலிக்க வலிக்க எவ்வளவு தூரம் பறந் திருக்கும்! "அதுக்கென்ன இன்னும் கொஞ்சந்தான்” என்பதாய் ஒன்றுக் கொன்று ஆறுதல் சொல்லியிருக்குமோ? ஒவ்வொரு தடவையும் நீரை அலகினால் கொத்தும்போது இந்தத் தடவை எங்கள் முட்டைகள் தென்படும் எதிர் பார்த்திருக்குமோ இல்லாமற் போன போது ஏமாற்றத்தில் சோர்ந்திருக் குமோ..?
நினைவில் இரண்டு சின்னக் குருவிகள் தோன்றி மறைந்தன. கடல். எவ்வளவு பெரிய கடல். நீலமாய், பாளம் பாளமாய் அலை வரம்புகளை இட்டுக்கொண்டு. வானத்தின் அடிப்
என்று W* * siji
 

பரப்பைத் தொட்டுக்கொண்டு பரந்து போய் நிற்கிற கடல். uT6 lb குருவிகள். எவ்வளவு மூடத்தனமாய் முயன்றிருக்கின்றன!
"இந்தக் கதையின் முடிவு என்ன வாய் இருக்கும்?. தங்கள் முயற்சி நிறைவேறாது என்று நினைத்துக் குருவிகள் வேறிடம் சென்றிருக்குமோ. அல்லது சிறகு சோர்ந்து கடலுள் வீழ்ந்து செத்துப்போயிருக்குமோ?" கிழ வருக்கு நெஞ்சில் வருத்தம் தோன்றிற்று. நினைவுகள் கணநேரத்தில் தன்னைச் சார்ந்தன. இப்படித்தானே மனிதர்களும். நான். பிலோமினா. என் பிள்ளைகள். எல்லோருமே இப்படித்தான் நீர் இறைக்கிறோமா?
முத்தவன் - அவனுக்கு கட லன்னை தன்னைக் கைவிடமாட்டாள் என்பதில் நம்பிக்கை. சிலவேளை வலையை இழுக்கும்போது நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட வெற்றுவலை நீரின் மேல்வரும். அப்படியான நாட்களில் வீட்டில் அடுப்புச் சாம்பல் பூத்திருக்கும். அவன் விழிகளில் கண்ணிர் பூக்கும். தினப்படி உழைப்பில் வாழ்கின்ற இந்த நிலை விரைவில் மாறும் என்பதாய் அவன் சொல்லிக்கொண்டிருக்கிறான். எப்படிமாறும் என்பது அவனுக்கே தெரிந் திருக்குமோ என்பதில் கிழவருக்குச் சந்தேகம்.
பிலோமினாவுக்கு இப்போது படுக்கைதான் தஞ்சமாய் இருக்கிறது. வயசுபோன காலத்திலை ஒதுங்கி யிருக்க..? என்று கட்டின வீடு கற்குவிய லாய்க் கிடக்க அவளுக்கு ஒலைக் குடிசையின் கீழே ஒரு நார்க்கட்டில்தான் தஞ்சமாய் இருக்கிறது.
காற்று வெறுமையாய் வீசிற்று. தெருவோரம் யாரோ இருவர் உற்சாக மாய் கதைத்துச் செல்வது தெரிந்தது. "வாழ்க்கை எல்லோருக்கும் வலி கொடுக்குமோ. அல்லது எனக்குத்தான் தாங்கமுடியவில்லையோ..?" வலி
35
இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு போது சவேரியான் வீம்பாய் இவர் பின் மண்டையில் துடுப்பினால் அடித்தபோது இரத்தம் சொட்டச்சொட்ட சவேரியானை யும் நண்பர்களையும் அடித்து நொருக்கி யிருக்கிறார் சவரிமுத்து.
இப்போது முடியவில்லை. மூத்தவ னின் துன்பம் பார்க்கத் தாங்கவில்லை. புஸ்பத்தின் முகத்தை நிமிர்ந்து பாத்து பல நாளாகிவிட்டது. அவள் கண்களின் வெறுமையை இவரால் சந்திக்கமுடியாது. சின்னவன் பற்றிய நினைவே இருப்புக் கொள்ளாமல் தூங்கவிடாமல் அலைக் கிறது. பிலோமினாவைப் பார்க்க நெஞ்சு வலிக்கிறது. அன்ரன் இருக்கும்போது வீட்டின் சுமையில் பாதியை அவனே தாங்கினான். இப்போதுங்கூட அன்ரன் இல்லை என்று சொல்ல முடியாது. எப்படிச் சொல்லமுடியும்? விடியலில் நண்பனைச் சந்தித்து வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் திரும்பி வர வில்லை. அவன் "இல்லை”யென்று யாரால் சொல்லமுடியும்?
வெள்ளை உடையில் பூவாய் நின்ற புஸ்பத்தை அன்ரன் கைப்பிடித்தது கண்களில் இருந்து இன்னமும் மறைய வில்லை. அன்ரனும் கணவனுக்கு இலக் கணமாய்த்தான் இருந்தான். பிலோமினா எத்தனை முறை சொல்லியிருந்தாள், "மகள் அதிஷ்டக்காரியென. இப்போது புஸ்பத்துக்கு கண்ணில் நீரே வற்றி விட்டது. ஒரு நாள் இருநாள் அழுகையா என்ன!
எந்த நிகழ்ச்சி எந்த நிகழ்ச்சிக்குக் காரணமானது என்று யார் சொல்ல முடியும்? எல்லாம் அதனதன் நிர்ணயப் படியே நடக்கிறது என்றே கிழவனுக்குத் தோன்றுகிறது. அன்ரனுக்கு இப்படி நிகழ்ந்த படியால்தான் சின்னவன் வின்சன் தன்பாதையைத் தானே தேர்ந் தெடுத்ததாய் எல்லோரும் கதைத் தார்கள். இப்போதும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Page 19
சின்னவன் இப்போது எந்தப் பெயர் தெரியாத காட்டு மர நிழலில் எந்தக் கடமையின் பொருட்டுக் கூர்மை யாய் கர்த்திருப்பானோ தெரியாது. அவன் முடிவு எத்தனையோ முகம் தெரி யாத புஸ்பாக்களுக்கு ஆதரவானது என்றே மூத்தவனும் சொல்வதுண்டு. கிழவர் தலையை முழங்கால்களில் சாய்த்துக்கொண்டார்.
"நான் நல் லாத் தளர்ந்து போனன்.” சற்றே உரத்துச் சொல்லி விட்டார் போலும்!
“என்ன அப்பு உங்களோடையே கதைக்கிறியள்.?” கணேசனின் குரல் நனவுக்கு இழுத்தது. பையன் போய் விட்டிருந்தான். கிழவனின் கண்களில் திரண்டு நின்ற விருப்பம் கணேசனுக்குப்
புரிந்தது.
"ஆ! அப்ப எதில கதையை விட்டனான். பிராக்கில மறந்தே போச்சுது."
"ஓ! பிறகும் அதுகள் தொடர்ந்து கடலை இறைச்சுதுகள். அப்ப ஒரு நாள் ஒரு ஞானி அதுகளைக் கண்டிட்டு அது களின்ர நோக்கத்தை மனக்கண்ணாலை அறியிறார். அதுகளின்ர முயற்சிக்கு வியந்து தன்ர சக்தியால முட்டைகளை எடுத்துக் கடலோர மண்ணிலை அது களுக்குத் தெரியிற மாதிரி வைக்கிறார்.
அதுகளும் சந்தோசமாய் எடுத்துக் கொண்டு போகுதுகள்."
“ஏனப்பு கதை பிடிக்கேல்லை யோ..."
“இப்பிடியொரு ஞானி எங்கட கஷ்டங்களுக்கும் உதவார் என்று நினைக்கிறியோ தம்பி.”
"இதேமாதிரி ஒரு ஞானி எண் டில்லை அப்பு. எங்கட நம்பிக்கை. எங்கடை நம்பிக்கை. ஒருநாள் வெல் லும். எங்கட முயற்சிகள் எவ்வளவு ஆத்மார்த்தமானதா இருக்கு. அந்த ஆத்மார்த்தத்தின் உன்னதம் எங்களைத் துன்பங்களிலிருந்து விடிவிக்கும் எண்டு நம்புவம். அதுவரைக்கும் அந்த குருவி யளை மாதிரி மனப்பூர்வமா முயற்சி செய்வம்.”
“எப்பவோ ஒரு நாளைக்கு எல்லாம் மாறத்தானே வேணும் அப்பு. எப்பவும் ஒருத்தனுக்கு துன்பம் என்கிற நியதி இல்லைத்தானே. அப்படியான நியதி ஆவது எங்கட முயற்சியளை வெல்லவைக்கும் எண்டு நம்புவம்.” கணேசனின் குரல் கரகரத்திருந்தது.
கிழவருக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. கணேசனின் வார்த்தை களின் கனம் அவரைச் சூழ்ந்துள்ள இருளை விரட்டிவிட்டதாய்த் தோன் றிற்று. மெளனம் நிறைய விடயங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந் 莎@k
கிழவர் தூணிலிருந்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டார். காவியாகிவிட்ட வெள்ளை வேட்டியின் சுருக்கங்களை நீவிக்கொண்டார். தோள் மூட்டில் இப் போது வலிக்கவில்லை என்று தோன் றியது. தலையைத் திருப்பித் தன் இரு தோள்களையும் பார்த்துக்கொண்டார். அங்கிருந்து தனக்கும் சிறகுகள் முளைக் கிறதோவென ஒரு மகிழ்ச்சியான சந்தே கம் வந்தது கிழவருக்கு.
36
 

பேசுகிறார்
ஞானம் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது. 21 இதழ்களைப்
பிரசுரித்துள்ளது சாதனைதான்.
தெளிவத்தை யோசப்பின் எழுத்துலகம் நன்றாக இருந்தது. பிரபல்யமில்லாத
பல சங்கதிகளை அறிந்துகொள்ள இப்பகுதி வழிவகுக்கலாம்.
பகட்டுச்சஞ்சிகைகள் சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில் காத்திரமான
இதழ் ஞானத்தை விடாமுயற்சியுடன் கொண்டுவரும் உங்கள் உறுதியைப் பாராட்டு கிறேன். தொடரட்டும் இலக்கியப் பணி.
எம்.எச்.எம்.ஷம்ஸ்.
இருபத்தி இரண்டாவது ஞானம் கிடைக்கப்பெற்றேன். பல புதிய விடயங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. தங்களின் நேர்காணல் ஒன்றைவிட்டு ஒரு ஞானத்திலாவது தந்து எமது அறிவுப்பசிக்குத் தீனி போடவும்.
ஞானத்தின் முகப்புப் படம் உண்மையான சமாதானமே வந்ததுபோல் நல்ல எடுப்பான வெண்புறா. இதுவே நிரந்தர சமாதானம் என்பதைக் காட்டுகிறது ஞானம். நா.ஆனந்தன், யாழ்ப்பாணம்.
ஞானம் 23 இதழ் கிடைத்தது. ஞானம் எதிர்காலத்தில் புதுப்பொலிவுடன் வெளிவரப்போகும் செய்தி மகிழ்ச்சி தருகின்றது. தொடர்ந்தும் பலருக்கு இனாமாக இதழ்களை அனுப்பிவைத்து தம் 23வது இதழ்வரை நீடித்திருப்பதை ஞானத்தின் சாதனையாகக் கொள்ளலாமா அல்லது 23 இதழ்களையும் தொடர்ந்து இனாமாக பெற்றுப் படிப்பது மட்டுமன்றி அதிலே இலக்கியச் சண்டை புரிபவர்களை சாதனையாளர்களாகக் கொள்ளலாமா?
சஞ்சிகை ஒன்றைத் தொடராக அச்சடித்து விநியோகிப்பது கடலில் மாவைக் கொட்டுதல் போல்தான். திரும்பிவராத பணமாகவே அதை முதலீடு செய்யவேண்டும். இதற்கு நண்பர்கள் இலக்கியவாதிகள் உதவியும், வெளியீட்டாளர்களின் தளரா மனமும் இல்லையெனில் சஞ்சிகைகள் நீடிப்பது அரிதிலும் அரிது.
ஒட்டமாவடி அறபாத்.
ஞானம் பார்த்தேன் படித்தேன் - மகிழ்ச்சி. நான் மிகுந்த ஆர்வத்துடன் படித்தது "எனது எழுத்துலகம். படித்தது மாத்திரமல்ல பாதுகாக்கவேண்டிய கட்டுரை. "எனது எழுத்துலகம்' ஞானம் வெளியீடாக நூலாக வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. உங்களின் எழுத்துப்பணியைப்போல உங்களின்
சஞ்சிகைப்பணி என்றாவது ஒருநாள் கெளரவிக்கப்படும். வரலாறு பதிவாகும்.
அந்தனி ஜீவா.
37

Page 20
(காலாண்டு குவியல் - கவிதைகள்) (ஏப்ரல் 2002)
; சோலைக்கிளி
எச்.எம்.பாருக்
ஆசிரியர்கள்
தொடர்புகளுக்கு 79, பள்ளிவாசல் வீதி, கல்முனைக்குடி - 09, கல்முனை. விலை ருபா 30
சமாதான நோக்கு (குரல் - 02, நோக்கு . 01)
(ஜனவரி - பெப்ரவரி 2002) ஆசிரியர் : பாக்கியநாதன் -
விஜயசாந்தன் வெளியீடு மாற்றுக் கொள்கைகளுக்
கான நிலையம், 32/3 பிளவர் வீதி, கொழும்பு - 07.
நான் மூன்று சக்கரக்காரன்
(சிறுவர் பாடல்கள்) ஆசிரியர் : இக்பால் அலி வெளியீடு : மக்கள் கலை இலக்கிய
ஒன்றியம், 18/13 பூரணவத்த, கண்டி, விலை 1 ரூபா 35
குறிஞ்சிக் குயில்கள் (மலையக கவிதாமணிகளின் கவிதைகள்) தொகுப்பாசிரியர் : அந்தனி ஜீவா தொடர்புகளுக்கு மலையக வெளி யீட்டகம், த.பெ. 32, கன்டி. விலை ரூபா 50
38
தொண்டன் (மார்ச் - ஏப்ரல் 2002) (மலர் 34 - இதழ் 02)
ஆசிரியர் : 1.A.G. இரட்ணகுமார் வெளியீடு சமுகத் தொடர் பு நிலையம், அ.பெ.எண் 44, மட்டக்களப்பு. விலை ருபா 12
இலக்கு (மார்ச் - ஏப்ரல் 2002) (மலர் 34 - இதழ் 02) வெளியீடு கல்குடா இஸ்லாமிய
மாணவர் பேரவை, த.பெ.இல. 03, ஓட்டமாவடி 30 420,
விலை : LUIT 10
ஊடக நோக்கு (ஏப்ரல் 2001) ஆசிரியர்கள் : சுனந்த தேசப்பிரிய
உதித சேனாரத்ன வெளியீடு மாற்றுக் கொள்கை
களுக்கான நிலையம், 32/3 பிளவர் வீதி, கொழும்பு - 07.
பெண் (தொகுதி - 06, இலக்கம் - 1,2,3,4) கெளரவ ஆசிரியை சித்ரலேகா -
மெளனகுரு வெளியீடு : சூரியா பெண்கள்
அபிவிருத்தி நிலையம், இல 20, டயஸ் வீதி, மட்டக்களப்பு. விலை : LIT 30
பெண்கள் செய்தி மடல்
(மடல் 3,4 - டிசம்பர் 2001) வெளியீடு : சூரியா பென கனர் அபிவிருத்தி நிலையம், இல 20, டயஸ் வீதி, மட்டக்களப்பு.
 

பக்கத்து வீட்டில் பதுங்காமல் (Jes கீதது 6იწ06)
சென்று உங்கள் மண்வெட்டி இரவல் தா
என்று கேட்டு நான் நின்றிருந்தேனர்;
அன்று வீட்டுடைமையாளன் மண்வெட்டி தேயுமே
என்று
ஒரு கேள்வி கேட்டுத் தராதொழிந்தான்!
க்கவயல் தர்
பின்னொரு நாள் அயல் வீட்டில் கோடரி
ஒன்று கேட்டு இரவலாகப் புன்னகைத்தேன்; அவர்
மென்னகைத்து உங்கள் வீட்டுத் தேவைக்கு
என்னகத்துக் கோடரியோ? என்றன்று வாயசைத்தான்
காதலித்தேன் ஒரு பெண்ணை
அவ்விடத்து பேதலித்து 2 இலட்சம் இனாமாகப்
பேச்செடுத்து தருமாறு சொன்னேன் காதவி
வீட்டிடத்து, அந்தளவில் காதவி தடுமாறி
உன்னிடத்துத் தங்கையைக் கரைசேர்க்க எண் வீட்டுப்
பண்மதனைச் செலவழிக்கலாமா
எனக்கேட்டுப் பேதலித்தாள் பெருமை உற!
எவ்விடத்தும் இரவலாக இராமாக
எப்பொருளும் எவ்விடத்தும் இவ்வுலகில் பெற்றிடாதீர்
அப்பொருள் புறப்பொருள் ஃ உம்மிடத்தில் உள்ள ஒகப்பொருள் பிணி தீர்க்கும்; ஆமதுவே அகப்பொருள்.

Page 21
4?gთდ9, 6 იწმიfმcსGწUიrtჩ
யுத்தக் கொதிப்பில் கழிந்த ஆக மெலாம் தினமும், ரத்த வெள்ளத்தில் மூழ்கி
ராத்திரி யெலாம் நடு மனதினர் பதறல் போக்கவும் மனிதம் உயிர்த்து நிற் கனப் பொழுதும் சயனம்
காணாது பயணிக்கிறது
அந்நிலை யினி யகண்று
அழகினி உதயம் கண்டு கண்ணிருக்கு விடுதலை யிட்
காயங்கள் பலதும் மா பன்னீர்ப் பூக்கள் போல்
பாச வாசம் வீசி தனி னகத்தைப் பெற்று
தரணியில் வாழ்வோம்
அரசியல் கெடு பிடிகளும்
அமைதி குலைக்கும் ே
நரக மெனவே சிதைந்து
நாகரீகம் தளைத் தோ கரம் சேரா சுதந்திரமும்
காணத் துடிக்கும் சமா விரைந்து வரவே என்றும்
வசந்தம் காண்போம் வ
மனப் போராட்டமும் தீர்ந்து மகிழ்ச்சிப் பூக்கள் நிை பண மோகத்தை விரட்டி
பண்புகள் நலமாப் வள இறந்த காலங்கள் நடாத்திய
இன்னல்களை மறந்து பறக்கும் பட்சிகளாகப் வானில் சிறகு விரிப்போம் வாரி
WWW.geocities.co.

T.GNANASEKARAN|-*sae|-
19/7,__.No* No
sae _|- o----|- |- |×|-!
•k•s.so ’.| osĤ잃, , :|- ) Ș|×*S 鲷,厂心吊
ஒாக
ጨህጠrሐ‛ሕ†!
活 院) 暂 © "J !
ஈப்தி
தானமும்
oso suissoq,
IጠሐFሸ !
ரந்து
ர்த்து
"ի լ
тMgпа nam magazine