கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.06

Page 1
T
|
〔
*、 SE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
நா
தா
தா
சொ
CSU(T
༡
கேள் பேரனே! முன்னம் ஒரு காலத்திலே ஓர் அராஜக அரசனி ஆட்சி செய்தான் பென்னம் பெரிய ஆட்சிக்காரன் நான்தான் எண்துே ஆணவத் தாண்டவமாடியேபடியே
ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் இத்யாதி ஆபரணங்களுடன், வான் தொடும் கட்டிடங்களுடனும் விசை ஒன்றினை தான் அழுத்தினாலே உலக அசைவாக்கம் தன்வசம் எனும் உக்கிரமான வக்கிரத்துடனும்;
வழுக்கையான, தலைப்பாகையுடனுமான தாடிக்காரர்களை அழிக்க வல்ல உலக கேடி நானே எனும் வெறியுடனும், ஆயுத வியாபாரத்தால் கஜானா நிறைத்தும் மனுஷ் உயிர்களை புசிக்கும் கழுகுகளை செல்லப் பிராணியாப் வளர்த்தும் முன்னம் ஒரு காலத்திலே ஓர் அராஜக அரசன்ஆட்சி செய்தான் பென்னம் பெரிய ஆட்சிக்காரன் நான்தானர் என்றே ஆணவத் தாண்டவமாடியேபடியே அந்தோ பார் பேரனே! சென்ற நூற்றாண்டினர் செப்டம்பர் பதினொன்றில் அராஜகஆட்சி செய்து அந்த அரசனின் நாடு உலக உருண்டையிலிருந்து காணாமலேயே போனது அதோ பார்! பேரனே! அந்த அராஜக அரசன் வாழ்ந்த அழிவு யுகத்தின் சின்னமாப் பெரும் கட்டிடமொன்று தன் வெண்தன்மைதனை இழந்து துரு பிடித்த நிலையில் நூதனச்சாலையாய் நிற்கிறது போப்ப் பார் பேரனே!
மேமனிதவி

2ళీ &፳!!!!ሽ፱)ኾኑ ଝୁଣ୍ଟି FK995 |}
ஆசிரியர் : தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள் : புலோலியூர் க.சதாசிவம்
அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்
ஆனந்தன்
கண் விரி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
|ԵII
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை விதி, கண்டி. GJIT. CEL I. --08-478570 (Office)
08-234.755 (Res.) Fax - 08-23.4755
E-Mail| клапап пара, пеayahoo.com .
உள்ளே.
BETEGN TG10 பேராசிரியர் விதில்லைநாதன் .
சிறுகதை finally surnal.... tյի செங்கை ஆழியான் வாப்பா வளர்த்த பனைமரம். 48 தேர்மமஹாராஜன்
BYGDOM IIIgs &FTAfri ...........rrrrrr தெணியான்
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள். moeslot|Jas' fyöpfwF
அரை - வாய்மொழிப் பாடல் பாரம்பரியம் டி. 15 கப்ாநிதி செ.யோகராசா நமது சிறவர் இலக்கியத்துறை
ன்.இராசையா
: Այ
I
எனது எழுத்துலகம். பு: தி தி.ஆானசேகரன்
பேச்சுத்தமிழ்ப் பிதாமகள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை டி.
புலோவியுர் க.சதாசிவம்
W፧ அயலகத் தமிழ்ச் இலக்கியம் IեTելիiti த்த சிந்தனைகளும் ப ÉE} சாரல் நாடன் deborură a-ţii-r--r--r--r--r--r--
3.ாசேஸ்வரன்
கவிதைகள் நாளைய தாத்தா சொல்லப் போதும் கதை . யேமன் கவி
சொல்லிடுங்கேரி - திக்கவயல் தன்மு . ஒப்பு கவிஞர் ஏஇக்ால் ப.
தோழிக்கு - கவிஞர் புரட்சிபாலன் . கனவினத உயிர்முகம் - சீத்தாந்தள் . #4 புதிய உதயத்தில் புவனத்தில் உயர்ந்திடுவார்.36 தமிழோவியன் வாழ வழி சமைப்போம் - ஏ.பி.வி.கோமளப் பு" 65 souffaï fl'TáígioTV - ........... TH முல்லை அமுதன் படிச்சத போதம் - குயராணி. பேச்சுவார்த்தை - வாகரைவாணன் படி H
திரும்பிய் பார்க்கிறேன். 72 நெற்றிக்கண்
வாசகள் பேசுகிறார் H

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களே,
வணக்கம்.
ஞானம் சஞ்சிகை தனது மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. ஓர் இலக்கிய சஞ்சிகையானது இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு குழுவினரது இலக்கிய இதயமாகத் திகழவேண்டும். அந்நிலையை எய்துவதற்கு ஒரு கூட்டுமுயற்சி தேவை. வெளியீட்டாளர், ஆசிரியர் குழு, படைப்பாளிகள், வாசகர்கள் ஆகியோரது கூட்டு முயற்சியிலேயே இந்நிலையை எய்த முடியும்.
எமது நாட்டில் சென்ற நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் இத்தகைய கூட்டு முயற்சிக்குச் சாதகமான ஒரு நிலைமை இருந்தது. அக்காலப்பகுதியில் தோன்றிய முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம், மரபு பற்றிய சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்ட காலகட்டம் அது. அக்காலகட்டத்திலே தோன்றிய சிறு சஞ்சிகைகள் - மறுமலர்ச்சி, கலைச்செல்வி, மல்லிகை, குமரன், இளம்பிறை, சிரித்திரன், விவேகி, மரகதம், தேனருவி, மலர், மலைமுரசு, நதி, அலை, தீர்த்தக்கரை, அஞ்சலி, கொழுந்து, நந்தலாலா போன்றவையும் வேறும் சில சஞ்சிகைகளும் இலக்கியப்பணி புரிந்தன. படைப்பாளிகள் மிகுந்த ஆர்வமுடன் இச் சஞ்சிகைகளுக்குத் தமது பங்களிப்பை நல்கினர்.
அத்தகைய சூழ்நிலை இன்றில்லை. எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக நமது படைப்பாளிகள் பலர் நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்தனர்; பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். வாழ்க்கைப்பிரச்சினைகள் பலவாகின. சுதந்திரமாக இயங்கமுடியாத நிலை; கருத்துக்களைப் பயமின்றி வெளியிடமுடியாத சங்கடம், இவை யாவும் நமது படைப்பாளிகளின் படைப்புச் செயற்பாட்டில் பின் னடைவை ஏற்படுத்தின. வாசகர்களிடமும் ஆர்வங்குறைந்த நிலை ஏற்பட்டது. வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையினரிடம் அருகத் தொடங்கியது.
ஆனாலும் இலக்கியச் செயற்பாடுகள் காலத்துக்குக்காலம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியது அவசியமானது. இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேதானி நாம் இப் பணியில் ஈடு
ஞானம் 4 மூன்றாவது ஆண்டுமலர்
 

பட்டுள்ளோம். முன்னைய ஈழத்து இலக்கியச் சஞ்சிகைகள் செய்த இலக்கியப்பணியின் தொடர்சங்கிலியை நாம் பேணி அடுத்த கட்டத் துக்கு எடுத்துச் செல்லவேண்டிய நிலையில் உள்ளோம் என்ற உணர் வுடன் செயற்படுவது இன்றைய இன்றியமையாத தேவையாகிறது.
இந்தப்பணியில் முக்கியமாகப் படைப்பாளிகளின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. பலருடன் நாம் தொடர்புகொண்டு படைப்பு களை அனுப்பும்படி கேட்டபோதும் ஒருசிலர்ே மீண்டும் மீண்டும் நமது வேண்டுகோளை நிறைவேற்றி வருகின்றனர். இலக்கிய சஞ்சிகை ஒன்றினர் தரத்தைப் பேணுவதில் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பதை வலியுறுத்திக்கூற விரும்பு கிறோம். இன்றைய சூழ்நிலையில் படைப்பாளிகளின் பொறுப்பு அதிக முள்ளது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஞானம் சஞ்சிகை ஒன்றே இன்று ஈழத்தில் மாதாமாதம் ஒழுங்காக வெளிவரும் சஞ்சிகையாக இருக்கிறது. படைப்பாளிகளே, ஊக்கமுடன் செயற்படுங்கள், உங்களது படைப்புகளை ஞானம் சஞ்சிகைக்கு அனுப்பி வையுங்கள் என வினயமுடன் வேண்டுகிறோம்.
இந்த மூன்றாவது ஆண்டு மலரிலிருந்து அட்டைப்படம் புதுப் பொலிவுடன் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை படைப்பாளி களுக்கும், வாசகர்களுக்கும் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இதழிலிருந்து தஞ்சைக் கடிதம்’ என்ற புதிய பகுதி ஆரம்பமா கிறது. தமிழகத்திலிருந்து திரு வ.மகேஸ்வரன் தொடர்ச்சியாக கலை இலக்கியத் தகவல்களைத் தரவுள்ளார். இதேபோன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறும் கலை இலக்கியச் செய்திகளையும் பெற்றுத்தர ஒழுங்குகள் செய்துள்ளோம்.
எமது துணை ஆசிரியர் ந.பார்த்திபன் வவுனியா தேசிய கல்விக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றமையால் துணையாசிரியர் பணியினை செவ்வனே செய்யமுடியாதிருப்பதாகக் கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் அவ்வப்போது ஞானம் சஞ்சிகையில் அவரது படைப்புகள் இடம்பெறும் என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈழத்தின் சிறந்த இலக்கிய கர்த்தாக்களான புலோலியூர் க. சதாசிவம் அவர்களும், அந்தனி ஜீவா அவர்களும் இந்த இதழிலிருந்து ஞானத்தின் துணையாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர் களது அநுபவம் நிறைந்த இலக்கியப் பணி ஞானம் சஞ்சிகையை மேலும் வலுப்படுத்தும் என நம்பலாம்.
ஞானத்தின் பக்கங்கள் அதிகரிப்பும் அட்டைப்படத் தரமுயர்வும் அச்சுச்செலவினை அதிகரித்துள்ளன. அதேவேளை சஞ்சிகை அனுப்பு வதற்குரிய தபால் செலவும் கூடியுள்ளது. இந்நிலையில் தனிப்பிரதியின் விலையை ரூபா 30/= ஆக அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தை வாசகர்கள் ஏற்று எமக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.
அடுத்துவரும் காலப்பகுதியில் மேலும் புதிய அம்சங்களுடன் ஞானம் வெளிவரும் என உறுதி கூறுகிறோம்.
வணக்கம்
- ஆசிரியர்
மூன்றாவிது ஆண்டுமலர் 5 ஞானம்

Page 4
ר zגַ2gziz
செங்தை ஆழியானி الصر ܢܠ
"அன்னாசி என்றால் என் னப்பா?” என்று என் பன்னிரண்டு வயது மகன் என்னைக் கேட்டபோது நான் என்னை அறியாமல் உறைந்து போனேன். அவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். வீட்டையும் ஐயனார் கோயில் ஒழுங்கையையும் பாட சாலையையும் தவிர அவனுக்கு வேறொன்றும் தெரிந்திருக்க நியாய மில்லை. மாம்பழத்தையும் பலாப் பழத்தையும் வாழைப்பழத்தையும் பற்றி அவன் அறிந்திருக்கிறான். பொம்பர்கள், ஏ.கே.47, ஹெலிக் கொப்டர், இன்னும் எனக்கே தெரி யாத நவீன ஆயுதங்கள் பற்றித் தெரிந்திருக்கிறான். கோழி குஞ்சு களைச் செட்டைக்குள் பொத்திப் பொத்தி வளர்த்ததுபோல அவனை வெளியுலகம் தெரியாமல் வளர்த்து விட்டோம். நான் மாத்திரமா? என் னைப்போல யாழ்ப்பாணத்தின் பல பெற்றோர்கள் அப்படித்தான் வளர்த் துள்ளார்கள். எங்கள் பிள்ளைகளுக் குக் கூடிக்குறைந்தால் முற்றவெளி யும் அதில் எரியுண்டுகிடக்கும் பொது நூலகமும் தந்தை செல்வநாயகம் தூபியும் தெரிந்திருக்கும். பண்ணைக்
கடற்கரையோ கீரிமலைக் கடலோ அவர்களுக்குப் பரிச்சயமில்லாதவை. "அப்பா, சாட்டி வெள்ளைக் கடற்கரைக்குப் போகலாமாம். ஒரு நாளைக்குப் போவமா?” என்று ஒரு நாள் அவன் கேட்டான்
நான் பதறிப்போனேன். “ஆமி சென்றிகள் இருக் குது. செக்கிங் அது இதுவெண்டு பிரச்சினை."
ஒவ்வொருமுறையும் தட்டிக் கழித்திருக்கிறேன். அதைவிட வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரிய வில்லை. யாழ்ப்பாணம் முழுவதும் முப்பதினாயிரம் இராணுவம், மூவா யிரம் வீதிச் சாவடிகள். காலையில் வெளியில் சென்றால் பின்னேரம் வீடு திரும்பினால்தான் பாதுகாப்பு வீதி யில் சந்திக்கின்ற அவமானங்களுக் குப் பயந்து அல்லது அவற்றைத் தவிர்க்க விரும்பி விட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்ற பலரை எனக் குத் தெரியும். என் இளமைக்காலத் தில் நான் பார்க்காத ஊர்களா, பொருட்களா?
எம்பிள்ளைகள் இன்னமும் றெயிலில் பயணம் செய்தறிய வில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டிற் குள்ளேயே முடங்கி விட்டார்கள். வெளியுலகம் அவர்களுக்குத் தெரி u Tiġbil
வெளிநாடுகளில் ஓடி வாழ் கின்ற பிள்ளைகளைப்பற்றி நான் கூற வில்லை. எண்பத்திநாலிலிருந்து இக் குடாநாட்டிற்குள்ளேயே முடங்கிவிட்ட மக்களைத்தான் குறிப்பிடுகின்றேன். தொன்னூற்றி ஆறுக்கு முதல் பல பிள்ளைகளுக்கு ஹொர்லிக்ஸ், மைலோ என்றால் என்ன வென்று
ஞானம்
மூன்றாவது ஆண்ருமலர்

தெரிந்திருக்கவில்லை. சமாதானம் ஏற்பட்டு யாழ்ப்பாணத்திற்கான தரைப் பாதை நீண்ட பதினேழு வருடங் களுக்குப் பின்னர் திறக்கப்பட்டதன் பின்னர் எம்பிள்ளைகள் காணாத பல பொருட்கள் யாழ்ப்பாணச் சந்தையில் மெதுவாக வரத்தொடங்கிவிட்டன. என் மகனின் கேள்வி அவ்வரவின் எதிரொலிதான்.
"அன்னாசி என்றால் சாப்பிடு கிற ஒரு பழம்.”
"அது எனக்குத் தெரியும் அப்பா. படத்தில் பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்கவேணும். சாப்பிட்டுப் பார்க்கவேணும்.”
"அதுகள் இப்ப சரியான விலை. கொழும்பில இருபது ரூபா வென்றால் இங்க நூறு ரூபாவாம்.” என்று முன்னெச்சரிக்கையாக அடுக் களைக்குள் இருந்து மனைவி குரல் தந்து எச்சரித்தாள். அவள் சொல் வதும் சரிதான். அன்னாசி யாழ்ப் பாணத்தில் பணக்காரருக்குரிய பண்ட மாகிவிட்டது. இருநூறு ரூபா உழைக் கிற கூலியால் அன்னாசிக்காக ஐம்பது சதவீதத்தைச் செலவிடுவது சாதாரணகாரியமல்ல.
யாழ்ப்பாணத்துக்கான ஏ9 தரைப்பாதை திறந்தாலும் இன்னமும் முழுப்பரிமாணத்துடன் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. வன்னிப் பகுதிக்குள் பஸ்போக்குவரத்து யாழ் பாணத்திலிருந்தோ கொழும்பி லிருந்தோ நேரடியாக இன்னமும் நிகழவில்லை. லொறிகள் பொருட் களுடன் முழுஅளவில் வந்து சேர வில்லை. தனிப்பட்ட சிலர் மினிவான் களில் தென்னிலங்கையியிருந்து யாழ்ப்பாணம் பார்க்கவருகிறார்கள்.
அவர்கள் யாழ்ப்பாணத்தில் அரிதான பொருட்களையும் தம்முடன் எடுத்து வருகிறார்கள்.
அவை நான்கு மடங்கு விலை யில் யாழ்ப்பாணத்தில் விற்பனையா கின்றன. அவர்கள் திரும்பிப்போகும் போது இங்கு மலிவாக வாங்கும் வாழைப்பழங்கள், கருவாடு, பனம்
பொருட்கள் என்பனவற்றோடு அங்கு
செல்கிறார்கள்.
“தம்பி கொஞ்சம் பொறு. சாமான்கள் இனித்தான் வரத்தொடங் கும். அப்ப மலிவாக வாங்கலாம். வாங்கித்தாறன்.” என்று மகனைச் சமாதானப்படுத்தினேன். மனம் என் பதிலால் எனக்கே வருத்தத்தைத் தந்தது. அவன் என்ன பெரிதாகக் கேட்டுவிட்டான்? பார்க்கவேண்டும். இயலுமாயின் சுவைக்க வேண்டும். "வா, ரவுனுக்குப் போவம்.” அவன் முகம் மலர்ந்தது. அதில் ஆயிரம் பூக்கள் சிந்தின.
*கணி டது கடியதுகளை வாங்கிக் காசைக் கரியாக்கிவிடாதை யுங்கோ” என்று மீண்டும் மனைவி எச்சரித்தாள்.
யாழ்ப்பாணப் பட்டினம், சும்மா சொல்லக்கூடாது எக்காலத்திலும் ஒரு சின்னச் சிங்கப்பூர்தான். கொழும் பில் இருக்கிற அத்தனை பொருட் களும், உணவுப் பொருட்கள் அல்ல, இங்கு எப்படியோ வந்து விடுகின்றன. ரேடியோ, ரெலிவிசன், மிக்சிகள், கிரைன்டர்கள், சீடிக்கள். அப்பப்பா அனைத்தும் இங்குள்ள கடைகளி லுள்ளன. பென்ரோச் பற்றறிகள் கொழும் பிலிருந்து பயணத்தில் கொண்டுவரக் கூடாதாம் . உங் களுக்கு எவ்வளவு பென்ரோச்
மூன்றாவது ஆண்டுமலர்
7
ஞானம்

Page 5
பற்றறிகள் தேவை? விதம்விதமான பற்றறிகள் யாழ்ப்பாணக் கடைகளில் விற்பனைக்கிருக்கின்றன. யாழ்பாணக் கடைத்தெருக்களில் நடந்து செல்வது ஒரு காணிவலில் நடந்து செல்வது போன்றது. கடை முட்டிய நவீன மோட்டார் சயிக்களும், இயந்திரவி யல் சாதனங்களும். கடையின் முன் வெளியில்கூட அடுக்கி வைத்திருக் கிறார்கள். "கொழும் பிலிருந்து கொண்டு வருவதிலும் இங்கு வாங்கு கிறது உண்மையில் லாபம்” எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வியப்போடு தெருவைப் பார்த் தபடி என் மகன் என்னுடன் வந்தான். பளல்நிலையத்தின் பின்பக்க வீதியோரத்தில் அன்னாசிகள் குவிந்து கிடந்தன. பருமனுக்கு ஏற்பத் தரம் பிரித்து அடுக்கிவைத்திருந்தனர். என் மகன் ஆசையோடு அவற்றைப் பார்த்தான்.
“இதுதான் அன்னாசி"
Lib.” "மலிவுதான் வாங்குங்கோ. “எவ்வளவு?” "நூறு விக்கிறம். தொண்ணுற் றைந்து போடலாம்.”
"ஏன் இப்படி அநியாய விலை விக்கிறியள்?”
வியாபாரி என்னைக் கோபத் துடன் பார்த்தான்.
"ஓமந்தையில் இதுகளுக்கும் "ரக்ஸ் கட்டித்தான் கொண்டுவரு கினம். உங்களுக்கு கொழும்பு விலையிலை தருவினமோ?”
எதுவும் பேசாமல் ஒரு பழத்தை வாங்கி மகனிடம் கொடுத் தேன்.
அவ்விடத்தைவிட்டு நகரும் போது மனம் நிதானமாக யோசித்தது.
éé
99
எங்களுக்காகத் தொடங்கிய போராட் டம். இருபதினாயிரம் ஆளணியினரை வைத்துப் பராமரிக்கத்தான் வேண் டும். அதற்கு இதுவும் ஒருவழிதான். தப்பில்லைப் போலப்படுகிறது.
பஸ்நிலையத்தின் இன்னொரு பக்கத்தில் றம்புட்டான் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் கொழும்பில் சாப்பிட்ட மல்வானைப் பழங்கள், சற்றுப் புளிப்பழங்கள் பத்து ரூபாப்படி விற்பனை நடந்து கொண் டிருந்தது. ஐந்து பழங்களை விலை கேட்காமல் வாங்கி மகனிடம் கொடுத் தேன்.
மகிழ்வோடு வாயில் அதக் கிக் கொண்டான். யாழ்ப்பாணத்தில் பல கடைகளிலும் புதிதாக இல வசமாக மாட்டிவிடப்பட்ட கொழும்பு பானம் ஒன்றின் விளம்பரப் பலகை கள் கண்களை உறுத்தின. யாழ்ப் பாணத்தின் அழகையே நாசமாக்கி விட்டன போலப்பட்டது. ஒன்றிரண்டு என்றால் சகிக்கலாம். அழகாயும் இருக்கும். ஒவ்வொரு கடை வரிசை யிலும் முக்காற்பங்கு கடைகளில் பெரியளவிலான அப்பானத்தின் விளம்பரப் பலகைகள், ஒசியில் கிடைத்தால் எல்லாக்கடைக்காரரும்
ஞானம்
8
மூன்றாவது ஆண்டுமலர்
 

மாட்டவிட்டுவிடுவார்கள். அவர்களின் கடைப்பெயர்கள் அந்த விளம்பரப் பலகையின் ஒரு மூலையில் சின்ன எழுத்துக்களில் துலங்கின. மாநகர சபை இவற்றினைப் பார்த்துக் கொண்டு என்னசெய்கிறது? ஒரு விளம்பரப்பலகைக்கு ஒரு மாதத் திற்கு முந்நூறு ரூபா வாடகை வரி விதிக்கலாம்.
யாழ்ப்பாணம் தென்னிலங் கைப் பொருட்களின் சந்தையாகப் போகிறது.
யாழ்ப்பாணத்தில் சுரண்டல் சுவீப் விற்பனை ஓரிடத்தில் நடந்து கொண்டிருப்பதைக் கண்டேன். திடீ ரென வெடிச்சத்தமொன்று கேட்டது. பயந்து போனோம். "அது சீனவெடி" என்று ஒருவர் அபயம் தந்தார்.
மின் சாரநிலைய வீதியில் ஏறியபோது ஓரிடத்தில் பட்டாசுகள் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. அதிசயமான காட்சி. ஈழயுத்தம் தொடங்கிய பிறகு யாழ்பாணத்திற்கு பட்டாசுகள் வந்ததே கிடையாது. தடைசெய்யப்பட்ட பொருளாக அது விளங்கியது. எங்கள் பண்டிகைகள் சீன வெடிகளின் சத்தமின்றியே கழிந் தன. தைப்பொங்கல் நாளில் யாழ்ப் பாணத்தில் மூலைமுடுக்கெல்லாம் வெடிகள் ஓய்வின்றி வெடித்துக் கொண்டிருக்கும். குண்டுகள் வெடிக் கத்தொடங்கியதும் அவை காணாமல் போய்விட்டன.
இப்பொழுது மீண்டும் வந் திருக்கின்றன.
பலர் குறிப்பாக இளைஞர்கள் அவற்றினை வாங்கிக் கொண்டிருந் தார்கள். ஒரு வெடி இருபத்தைந்து ரூபாவிலிருந்து பத்து ரூபாவரை
விலை போனது. அவர்கள் மிக்க ஆவலுடன் வாங்கிக் கொண்டார்கள். தூரத்தில் சிலர் பட்டாசு களைக் கொழுத்தி வெடிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். இனி எங்கும் வெடிகள் சத்தம் கேட்கப் போகிறது. பட்டாசுகள் எனத் தெரியாதவர்கள் மீண்டும் வெடிச் சத்தம் தொடங்கிவிட்டது, யுத்தம் ஆரம்பமாகிவிட்டதோ என்று பயப் பிராந்தி கொள்ளப்போகிறார்கள்.
இனி கொஞ்ச நாட்களுக்குப் பிரச்சினைதான்.
வீடு திரும்பும்போது மாலை யாகிவிட்டது.
நாவலர் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தோம். சந்தியில் பல இளைஞர்கள் வெடிகளைக் கொழுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் வம்புத்தனமாகச் சைக்கிளில் செல்பவர்கள்முன் வீசி வெடிக்கச் செய்தனர். அச்செயல் சிறிது நேரத் தில் விபரீதமாகமாறியது. சயிக்கிளில் வந்த பெண்கள்மீது வீசத்தொடங் கினர். சிரிப்பும் கும்மாளமும் அவ் விடத்தில் நிலவியது.
மனதுக்குச் சங்கடமாகவிருக் கிறது. சுதந்திரம் என்பது மற்றவன் மூக்குவரை செல்லக்கூடாது. சயிக் கிளின் முன் வெடிச்சத்தம் கேட்டதும் வெருட்சியடைந்த ஒருசிறுமி வேலி யுடன் மோதி நிலத்தில் சரிந்தாள்.
யாரோ தூக்கிவிட்டார்கள். சந்தியில் கொட்டமடித்த இளைஞர் களைச் சிலர் பேசித்துரத்தியும் விட்ட னர். அவர்கள் அவ்விடத்தினைவிட்டு மெதுவாக நகர்ந்து சென்றனர்.
நான் என்மகனைக் கை பற்றி அழைத்துக்கொண்டு நடந்தேன்.
மூன்றாவது ஆண்டுமலர்
ஞானம்

Page 6
“LITr”
இருந்தாற்போல எங்கள் காலடியில் ஒரு வெடி வெடித்தது. என் மகன் "ஐயோ..” என்றலறினான். வெடியை வீசிய பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவீட்டின் படலையடியில் நின்று பயத்துடன் எங் களைப் பார்க்கிறான். எங்கள் திடுக் காட்டம் அவனுக்கு வேடிக்கையாக விருந்ததோ?
என் மகனின் கரத்தைவிட்டு விட்டு ஓடிப்போய் அச்சிறுவனைப் பற்றி பளார் என அவன் கன்னத்தில்
அறைந்தேன். அவன் பயந்து
"எளிய பழக்கம். வெடி
கொழுத்திறது என்றால் உன் வீட்டிற் குள்ள கொளுத்தவேணும். றோட்டும் ஆக்களுமோ உமக்குக் கிடைச் சினம்." என்று கத்தியபடி மீண்டும் அறையக் கையை உயர்த்தினேன். "ஐயோ எனக்குச் சீன வெடி தெரியாது. அது இப்பிடி வெடிக்கும் என்றும் தெரியாது. தெரியாமல் செய்து போட்டன்." அவன் விழிகள் நீரைச் சொரிந்தன. பதினைந்து வயதுச் சிறுவனுக்குச் சீனவெடி தெரிந்திருக்கவில்லை.
"அன்னாசியைப் பார்க்க வேணும் ஒருக்காச் சாப்பிடவேணும்” என்று கோரிக்கை விடுத்த என் மகனுக்கும் அச் சிறுவனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. −
மனம் பச்சாதாபப்பட்டது. "இனி இப்படிச் செய்யாதை." "செயப் யமாட் டன். உங் களுக்கு ஏதாவது காயமா?” என்று அச்சிறுவன் வினாவினான். “இல்லை. நீ போ." அன்னாசிப்பழம் என்றால்
என்ன என்ற என் பையனையும் நான் அறைந்திருக்க வேண்டும்.
எங்கள் பிள்ளைகள் எவ் வளவை இழந்துவிட்டார்கள்.
வீட்டிற்குத் திரும்பிவந்து வெகுநேரமாக மனம் கனத்துக் கொண்டிருந்தது.
சொல் விடுங் கோ?
இஸ்லாத்தைச் சேர்ந்த இன் ஒளிச் சோதரனே. இந்துவாக வாழ்ந்துவரும் எம்மினிய சோதரனே கிறிஸ்தவனாய் சேவிக்கும் அன்பினிய சோதரனே! எங்கள் மதங்களெல்லாம் கோடி, கோடி மக்களினால் கோர்த்திருக்கும் மாலை எல்லோ?
எல்லாப் போதனையிலும் அவரவர் மதங்களிலே வல்லவரும், நல்லவரும் நாங்களே ஐயமில்லை! ஆனாலும் போதனையில் ஒரு பக்கம் விளங்கவில்லை. ஒற்றுமையாய் வாழ்வதற்கு மார்க்க நூல்களிலே எந்த ஒரு இடமும் எவ்விடத்தும் இல்லையாமோ? மொலுக்காஸ் தீவினிலே அயர்லாந்து நாட்டினிலே தீவில்லாக் குஜராத்தில் வடிகின்ற இரத்தமதில் எந்தமதம் குழைந்திருக்கோ மூடர்களே சொல்லிடுங்கோ!!!
திச்சவயலி தரிமு
ஞானம் 10
மூன்றாவது ஆண்டுமலர்

| எழுதத் தூண்டும் எண்ணங்கள் oC
(கலாநிதி தரைமனோகரன் )
எழுத்தும் கலையும் கைவந்தவர்
இலக்கியத்துறையிலும் கலைத்துறையிலும் ஒலிபரப்புத்துறையிலும் ஒரே சமயத்தில் சிறந்து விளங்கக்கூடியவர் மிகச் சிலரே. அவர்களுள் முதன்மையானவர் ஜோர்ஜ் சந்திரசேகரன். இம் மூன்று துறைகளிலும் ஈடுபாடு கொண்டு உழைத் தவர் அவர். சிறுகதை எழுத்தாளராக, நாவலாசிரிய ராக, நாடக, தொலைக்காட்சி நாடக ஆசிரியராக அவர் எழுத்துப்பணி புரிந்து வந்துள்ளார். நாடக, தொலைக்காட்சி நடிகராக, இயக்குனராகக் கலைப் பணியும் ஆற்றியவர். செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்ற வகையில் சிறந்த ஒலிபரப்பாளராகவும் ஜோர்ஜ் சந்திரசேகரன் திகழ்ந்தார்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் இடம்பெறத்தக்க சிறுகதை எழுத்தாளருள் ஒருவர் ஜோர்ஜ் சந்திரசேகரன். ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள் (1994) என்ற இவரது சிறுகதைத்தொகுதி வெளிவந்துள்ளது. 60களில் அவர் செய்தி என்ற பத்திரிகையில் எழுதிவந்த பொம்மலாட்டம் என்ற நாவலை விமர்சகர்கள் சிலாகித்துக் கூறுவர். அது நூல் வடிவம் பெறுமாயின் வரவேற்கத்தக்கது.
ஜோர்ஜ் சந்திரசேகரன் நடிப்புத்துறையிலும் கைதேர்ந்தவர். அவர் காலஞ்சென்ற பகுத்தறிவுவாதி ஏபிரகாம் கோவூராகப் பாத்திரமேற்று நடித்த நம்பிக்கை என்ற நாடகம் தொலைக்காட்சி நாடகமாகவும் ஒலிபரப்பப்பட்டது. இயல்பாகவே ஏபிரகாம் கோவூர்மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு. அவர் பற்றிய கட்டுரைத் தொடர் இலங்கைப் பத்திரிகையொன்றில் தொடராக முன்னர் வெளிவந்தபோது, அப்போது மாணவனாக இருந்த நான், அதனை விரும்பி வாசித்ததுண்டு. ஏபிரகாம் கோவூர் வாழும்போதே அவர் போன்று ஜோர்ஜ் சந்திரசேகரன் பாத்திரமேற்று அவர் முன்னிலையிலேயே நடித்தார். அந்த நாடகம் தொலைக்காட்சி நாடகமாக ஒளிபரப்பானபோது அவரது தத்ரூபமான நடிப்பைப் பார்த்து மிகவும் இரசித்தேன். அவரது நடிப்புத்திறன் இப்போதும் என் மனக்கண்முன் நிற்கிறது.
ஒலிபரப்பாளர் என்ற வகையில் வானொலியில் அர்ப்ப்ணிப்புணர்வுடன் சேவையாற்றியவர் ஜோர்ஜ் சந்திரசேகரன். தொண்ணுறுகளில் அவர் தயாரித்தளித்த கலைப்பூங்கா நிகழ்ச்சிகள் மிகவும் தரம் வாய்ந்தவையாக விளங்கின. அவர் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல தடவைகள் அந்நிகழ்ச்சியிற் பங்குபற்றியுள்ளேன். கலைப்பூங்காவில் சில முழுநேர நிகழ்ச்சிகளை நான் செய்வதற்கும் ஜோர்ஜ் வாய்ப்பளித்தார்.
மூன்றாவது ஆண்டுமலர் 11 ஞானம்

Page 7
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகியோர் பற்றியும் திரையிசையில் நாட்டார் இலக்கியம் பற்றியும் முழுமையான நிகழ்ச்சிகளைக் கலைப்பூங்காவில் செய்யக்கிடைத்தமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்தியது. அத்தனை நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைவதற்குப் பின்பலமாக நின்றவர் அவரே. கலைப்பூங்கா நிகழ்ச்சிகளில் ஜோர்ஜ் சந்திரசேகரனுக்குப் பக்கபலமாக விளங்கியவர் வி.என்.எஸ்.உதயசந்திரன். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அவர் திகழ்ந்தார். கலைப்பூங்கா நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் ஜோர்ஜ் சந்திரசேகரனால் உதயசந்திரனும் உதயசந்திரனால் ஜோர்ஜ் சந்திரசேகரனும் புகழ் பெற்றனர். அவர்களது கலைப் பூங்கா அறுவடையாகக் கலைக்குரல்கள்(1999) என்ற நூல் விளங்குகிறது.
ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைத் தொகுதி மாத்திரமன்றி, அவரது வேறு இரு நூல்களும் வெளிவந்துள்ளன. ஒரு சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் (1995), வானொலியும் நானும் (1997) ஆகியவையே அந்நூல்கள். இவை இரண்டும் ஒரே நூலின் இரு பாகங்களாக விளங்குகின்றன. இந்நூல்களில் தமது வானொலி, கலையுலக அநுபவங்களை உண்மைக்குப் புறம்போகாத முறையிலும் சுவையாகவும் அவர் தந்துள்ளார்.
எழுத்தையும் கலையையும் மனதார நேசிக்கும் ஜோர்ஜ் சந்திரசேகரனின் பங்களிப்புகள், இவ்விரு துறைகளுக்கும் வளம் சேர்த்துள்ளன. சுருதி பேதம்
நமது நாட்டில் சமாதானம் என்பது நீண்ட காலமாக எட்டாக் கனி யாகவே இருந்துவந்துள்ளது. ஆனால், வழமைக்கு மாறாக அண்மைக் காலத்தில் அந்த எட்டாக்கனியை எட்டிப் பறித்துவிடலாம் என்ற எண்ணம் மக்களுக்கு இயல்பாகத் தோன்றியிருந்தது. எனினும், மீண்டும் சமாதானம் எட்டாக்கனியாகவும், கனவாகவும், கற்பனையாகவும் கழிந்துவிடுமோ என்ற ஏக்கம், நாட்டு மக்களிடம் - குறிப்பாகத் தமிழ் மக்களிடம் ஏற்படத் தொடங்கியுள்ளது. சமாதானம் தொடர்பான முன்னிருந்த வேகம் ஆளுந்தரப்பில் சற்றுத் தணிந்து காணப்படுகிறது. நாளொரு கதையும் பொழுதொரு செயலுமாக அவர்களது நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது. அவர்களது பேச்சிலும் செயலிலும் சுருதிபேதம் தெரிகிறது. சமாதான இராகங்கள் தாளம் தப்பி ஒலிக்கத் தொடங்குகின்றன. முற்காலத்தில் போர்மூலம் சமாதானம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை ஒருசாரார் அரங் கேற்ற முனைந்தமை போன்று, தற்போது நிபந்தனை மூலம் சமாதானம் என்ற புதிய நிகழ்ச்சியை இன்னொரு சாரார் மேடையேற்ற முயல்கின்றனர். இதேவேளை, பெரும்பாலானவர்களால் பொருட்படுத்தப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ள சில அரசியல்வாதிகள், தமது இருப்பைப் புலப்படுத்தும் முறையில் புதியவர்கள் செய்யும் புதுக்காரியங்களைப் பற்றிப்
ஞானம் 12 மூன்றாவது ஆண்டுமலர்

புறுபுறுத்தும் தொணதொணத்தும் தமது ஆற்றாமையைப் பல்வேறு முறைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உலகத்துக்கு ஒன்றும் உள்நாட்டுக்கு வேறொன்றுமாகக் காட்டக்கூடியதாகத் தமக்குப் பல்வேறு முகங்கள் உண்டு என்பதையும் தாம் சிறந்த நடிப்புத்திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் வேண்டியபோதெல்லாம் அவர்கள் நிரூபித்து வருகின்றனர்.
தர்மத்தை உலகுக்கு உபதேசித்து, அதன்படி வாழ்ந்துகாட்டிய மகானின் பெயரைச் சொல்லிக்கொண்டு, குருக்கள்மார் சமாதானத்துக்கு எதிராக அவதிப்படுகின்றனர். சிவப்புச் சட்டை அணிவதன் மூலம் சோஷலிஸத்தின் பக்கத்து வீட்டுக்காரர் போல வேடம் போடும் பூர்வீக மனிதர்கள் பேரினவாதக் காற்றை மூச்சிழுத்து வெளிவிடுகின்றனர். மெத்தப் படித்த பல்கலைக்கழகத்து டாக்குத்தர்மார் சிலர், எப்படியும் சமாதானம் இந்த நாட்டுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து பத்திரிகைகளில் எழுதிக்குவிக்கின்றனர்.
இவற்றோடு, எங்கிருந்தோ வந்து தெய்வங்கள் குடியிருக்கும் தெய்வீக உறைவிடங்களிலும், சரஸ்வதி தேவி வீற்றிருக்கவேண்டிய வெள்ளைத் தாமரைகளிலும் மக்கள் தமது மனநிறைவுக்காக அமைத்த கூடுகளிலும் வில்லும் அம்பும் ஏந்தி வேட்டையாட மட்டும் பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்தும் வாசம் செய்யும் நிலை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கிடையே வெளிநாடுகளின் யுத்தக் கப்பல்கள் இடையிடையே இலங்கைக்குத் தலயாத்திரை மேற்கொண்டு வருகின்றன. நமது நாட்டு அரசியல்வாதிகளும் உலகத்தின் பல்வேறு மூலைமுடுக்குகளுக்கும் திக் விஜயம் செய்து வருகின்றனர். இலங்கையின் சமாதானத்தில் துளியளவுகூட அக்கறை காட்டாத நாடுகளுக்கெல்லாம் பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. பெரும்பெரும் சாத்தான்கள் வேதம் ஓதிக் கொண்டு இந்நாட்டில் தமது கால்களை அகலப் பதிப்பதற்கு இடங்கொடுக்கப் படுகிறது. இவையனைத்தும் சிறுபிள்ளைகளை மிரட்டுவதற்கு பெற்றோர் பேய் பிசாசுக் கதைகளைச் சொல்லிப் "பேய்க்காட்டும்” போக்கிலேயே அமைந்துள்ளன. இலங்கை சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் தம்மைத் தந்திரசாலிகள் என்று கருதிச் செயற்பட்டமையே இனப்பிரச்சினை இவ்வளவுதூரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முக்கிய காரணம்.
ஆனால், வானொலி மாத்திரம் நல்லதொரு தர்ம காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறது. அவ்வப்போது தம்மபதத்தில் இருந்து நல்ல பல கருத்துக்களை அது சொல்லி வருகின்றது. உண்மையில், தர்மத்தை மறந்து போர்வெறியைக் கக்கும் குருக்கள்மாருக்குத்தான் தம்மபதக் கருத்துக்கள் அவசியம் தேவையானவை. குருக்கள்மாருக்குத் தர்மம் தொடர் பாகப் பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்படுமாயின், அது ஒரு புண்ணியமான காரியமாக இருக்கும்.
இவை ஒருபுறம் இருக்க, தமிழ் அரசியல்வாதிகள் பக்கம் திரும்பிப் மூன்றாவது ஆண்டுமலர் 1 R ஞானம்

Page 8
பார்த்தால் மிக வேடிக்கையான காட்சிகளைக் காணலாம். நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக என்ன நாசங்கள் நடந்தாலும், "நமக்கு ஒன்றும் இல்லை" என்ற “ஞானம்” பெற்றவர்களாக அவர்கள் விளங்கின்றனர். ஓடும் செம்பொனும் ஒப்ப மதிப்பவர்களாகவும் தாமரையிலைத் தண்ணிர் போன்றவர்களாகவும் இருப்பதற்கு அவர்களை மிஞ்ச யாரும் இல்லை. எதையும் பணிவுடன் முறையீடு செய்வதிலும் அறிக்கைகளை அள்ளி அள்ளி வீசுவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களேதான். இந்த இலட் சணத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக எதிர்ப்பலைகள் எவையும் எழாமற் பார்த்துக்கொள்வதிலும் அவர்களுட் சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தமது தமிழ்நாட்டு யாத்திரைகளுக்கு எத்தகைய தடங்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே அவர்களின் முக்கிய இலட்சியம். தமிழ் அரசியல்வாதிகள் முதுகெலும்பைத் தொலைத்து நீண்டகாலமாகிவிட்டது.
இலங்கையிலே உண்மையில் சமாதானம் மலரவேண்டுமாயின் ஆட்சியாளர்களிடம் கபடத்தனம் இல்லாத துணிச்சல் ஏற்படவேண்டும். போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் தாம் துணிந்து நிற்பர் என்ற மனவுறுதி ஆட்சித் தரப்பினரிடம் ஏற்படுமாயின், இந்நாட்டில் சமாதானம் துளிர்க்கும் என்பது நிச்சயம். சுற்றிவரத் தமக்குச் சார்பான வெளிநாடுகளின் அணியைத் திரட்டிக்கொண்டு அரசியல்வாதிகள் சமாதானத்தைத் தேடினால், அது தூரத் தொலைந்துவிடும். இப்போதுள்ள நிலையில், சமாதானம் ஏற்பட்டால் அது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. சமாதானம் தொலைந்தால், ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், பெரும்பாலான மக்கள் விரும்புவது சமாதானத்தையே.
தி.ஞானசேகரனின் ཡོད༽ தலென பகட குருதிமலை நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு)
மலையக மண்ணிலிருந்து அதன் மக்களை வெளியேற்ற எடுத்த பேரினவாத அரசியற் கெடுபிடிகளை எதிர்த்து கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவல்
கிடைக்குமிடம் : கொடகே பப்ளிகேஷன்
மருதானை
\s விலை : ebusT 250
өБлтөдгүй) 14 pairgr).T6135) ஆண்டுமலர்

மலையகப் பிரதேச அரை - வாய்மொழிய் பாடல் பாரம்பரியம்
savaff 676.4'üJmagaraft
பொதுவாக தமிழ் இலக்கிய ஆய்வாளர்களாலும் குறிப்பாக, வாய்மொழி இலக்கிய ஆய்வாளர்களாலும் இன்றுவரை கவனிக்கப்படாத வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் ஒன்றுள்ளது. தெளிவும் வசதியும் கருதி இவ்வாய்மொழிப் பாடல் பாரம்பரியத்தை அரை வாய்மொழிப்பாடல் பாரம் uffulb (Tradition of semi-Oral Songs) 6T6irgi g60plugs. QUT(b55LDIT60T தென்று கருதுகின்றேன். இவ் அரை மொழிப்பாடல் பாரம்பரியத்தை, நாம் நன்கறிந்த வாய்மொழிப்பாடல் பாரம்பரியத்திலிருந்து வேறுபடுத்தி இனங் காணக்கூடிய அம்சங்களாக, பின்வருவனவற்றைக் கருதமுடியும்; (அ) பாடியவர் (அதாவது இயற்றியவர்) பெயரை அறிய முடிகின்றமை, (ஆ) பாடியவர்களுள் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறாதவராக இருத்தல் (இ) இத்தகைய வாய்மொழிப் பாடல்களுள் கணிசமானவை பொதுமக்களை நோக்கிப் பாடப்படுதல். (ஈ) பாடல்வகைகள், பாடல்வடிவங்கள், ஏலவே அறிந்துள்ள வாய்மொழிப் பாடல்களிலிருந்து வேறுபட்டிருத்தல், (உ) அச்சு வசதி காரணமாக இன்றுள்ள இத்தகைய புலவர்கள் பலரது பாடல்கள் நூலுருப்பெறுதல் (இத்தகைய பாடலாசிரியரை தற்சமயம் புலவர் என்று அழைப்போம்) (ஊ) இன்று சமகால விடயங்கள் பாடற் பொருளாதல்.
மேற்குறித்த பாரம்பரியத்தை ஈழத்தின் பல பிரதேசங்களிலும் இனங் காணலாம். இவ்விதத்தில் காலத்தினால் முற்பட்ட புலவராக அக்கரைப்பற்று மொட்டை மேலாப் போடியார் (1804 - 1880) (இன்றுவரையான எனது ஆய்வின்படி) விளங்குகின்றார். எனவே, 19ம் நூற்றாண்டிலிருந்து நாமறியக் கூடிய இத்தகைய புலவர்கள், மலையகத்தைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 1930களிலிருந்தே அறியப்படுகிறார்கள். இவ்விதத்தில், வி.எஸ். கோவிந்தசாமி தேவர், எ.எம்.ராமையா தேவர், கே.கே.ஜில், ஆர்.எஸ்.பெரியாம்பிள்ளை, கா.சி.ரெங்கநாதன், எம்.பி.வேல்சாமிதாசன் ஆகியோர் கவனத்திற்குரியவர்களா கின்றனர் (இவர்களது நூல்களே எனக்குக் கிடைத்துள்ளன)
மேற்குறித்த புலவர்கள் பாடியவற்றுள் ஒரு வகையின, பக்திப் பாடல் களாகும். இத்தகைய பாடல்கள், இருவகைப்படுகின்றன. பிரபலமான கோயில் கள்மீது பாடப்படுவன, ஒரு வகை. (எடுத்துக்காட்டு: ஹிர் கோணேஸ்வரம், றி நகுலேஸ்வரம், பூரீ திருக்கோயில்) மற்றொருவகை, முருகன், வள்ளி ஆகியோரின் காதல் லீலைகளைப் பாடுபவை. இவ்வாறான பாடல்களைப் பாடியோருள் ஆர்.எஸ்.பெரியாம்பிள்ளை குறிப்பிடத்தக்கவர். திருப் புகழ் பாடல் வடிவம் இவரால் பெருமளவு கையாளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்புலவர்கள் மேற்கூறியவாறு, பக்திப்பாடல்களைப் பாடியதோடுமட்டும் அடங்கிவிடவில்லை. அவ்வாறெனில் எமது கவனத்துக்குரியவராகமாட்டார்கள். இத்தகைய பாரம்பரியம் பற்றிய தேடல் அவசியமுமாகாது.
மூன்றாவது ஆண்டுமலர் 15 ஞானம்

Page 9
மேற்கூறிய புலவர்கள் பலரும் சமூகப்பிரச்சினைகளை - சமூகக் குறைபாடுகள் - பாடற்பொருளாகக் கொண்டுள்ளனர். இதுவே எமது ஆழ்ந்த அக்கறைக்குரியது. குறிப்பாக, மலையகத்தைப் பொறுத்தளவில், தொழிலாளர் மத்தியிலுள்ள குடிப்பிரச்சினை, வதிவிடப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை, ஒற்றுமையின்மை முதலான விடயங்கள் இவர்களது பாடுபொருள்களாயின. இத்தியாதி விடயங்கள் பிற பிரதேச அரை வாய்மொழிப்புலவர்களிடம் நேரடியான - போதனை வடிவில் வெளிப்பட, மலையகப் புலவர்களிடம் கதையூடாக வெளிப்படுகின்றது. எஸ்.கோவிந்தசாமி தேவர் பாடிய "குடிகாரனின் பரிதாபம் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது. இந்நெடும்பாடல், ஏனைய பல பாடல்கள் போன்று மெட்டினை அடிப்படையாகக் கொண்டமை வது மட்டுமன்றி, வசனம் இடையிட்ட கதைப் பாடலாக அமைவதும் குறிப்பிடத் தக்கது. ஏனெனில் பிற பிரதேசப் புலவர்களது பாடல்களில் இத்தன்மை காணப்படுவதில்லை. எஸ்.கோவிந்தசாமிதேவர் தொழிலாளர்களுடன் தொடர்பு பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் திறம்படப் பாடியவரென்றவிதத்திலும் கவனத்துக்குரிவர். அவரது பாடலொன்றில் இடம்பெறும் பின்வரும் பகுதி தொழிலாளரது வதிவிடப்பிரச்சினைபற்றி அழகாக விவரிக்கின்றது.
“தாயும் தகப்பனும் அதுக்குள்ளே - மேஜர் ஆகிய தலைப்பெண்ணும் அதுக்குள்ளே மாமனும் மாமியும் அதுக்குள்ளே - சொந்த மருமகன் மகளுமே அதுக்குள்ளே அக்காளும் தம்பியும் அதுக்குள்ளே - பெரிய அண்ணன் பெண்டாட்டியும் அதுக்குள்ளே விருந்தாடி வந்தவர் அதுக்குள்ளே - இனும் வீரப்பன் குடும்பமும் அதுக்குள்ளே சடங்குகள் ஆவதும் அதுக்குள்ளே - பச்ச குடிசைகள் அமைப்பது மதுக்குள்ளே தாலிகட்டுவதும் அதுக்குள்ளே - சதா கொஞ்சி மகிழ்வதும் அதுக்குள்ளே அடுப்புகள் இருப்பதும் அதுக்குள்ளே - தோசை ஆப்பங்கள் சுடுவதும் அதுக்குள்ளே மண்டுகள் வைப்பதும் அதுக்குள்ளே - மாடன் மருளாகிக் குதிப்பதும் அதுக்குள்ளே சங்கம் பேசுவதும் அதுக்குள்ளே - நாமள் சாமி கும்பிடுவதும் அதுக்குள்ளே செஞ்சேவல் வெண்கோழி அதுக்குள்ளே - பூனை செம்பரை நாய்க்குட்டி அதுக்குள்ளே விம்மலும் பொருமலும் அதுக்குள்ளே - சதா விசனப்பட்டிருப்பதும் அதுக்குள்ளே தும்மலும் துரத்தலும் அதுக்குள்ளே - எச்சி தாம்பூலக் குவளையும் அதுக்குள்ளே!” இவ்வாறே, மலையகத் தொழிலாளரது கடந்தகால வரலாறும்
ஞானம் 6 மூன்றாவது ஆண்டுமலர்

சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது. தமிழ்மணி முரசு (முதலாம் பாகம்) தமிழ் மணிமுரசு (இரண்டாம் பாகம்) என்றாவது, வி.எஸ்.கோவிந்தசாமி பாடிய “காவியங்கள் இவ்விதத்தில் முக்கியமானவை.
"தோட்டத்து மக்களே பாட்டையும் படிக்கிறேன்
போட்டியும் பெரிசாச்சு தொல்லையும் துயரமும் வரவர இலங்கையில்
சட்டமும் விரிவாச்சு நாட்டுக்குச் சுதந்திரங் கொடுத்திட்ட வெள்ளையர்
கூட்டியும் வந்தாங்க நன்னகரிந்திய நாட்டுத்தரகர் பலர் காட்டியுந் தந்தாங்க என ஆரம்பிக்கும் இக்காவியம் தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர் இங்கு வந்தது தொடக்கம் அனுபவித்துவரும் எண்ணற்ற அல்லல்களை ஒருபுறம் மன உருக்கத்தையும் மறுபுறம் மனக்குமுறலையும் ஏற்படுத்தும் வண்ணம் நுணுக்கமாக எடுத்துரைக்கின்றது. மேலே "தோட்டத்து மக்களே பாட்டையும் படிக்கிறேன் என்று பாடல் ஆரம்பிப்பது பாடலுக்குரிய மரபினைப் பின்பற்றவன்று. இத்தகையபாடல் பொதுமக்கள் முன்னிலையில் - பொது மக்களுக்கு - பாடப்பட்டது என்பதையே அது உணர்த்தி நிற்கின்றது.
இவ்வாறே, தொழிலாளர் தினந்தோறும் அனுபவித்துவரும் பல்வேறு துன்பங்களையும் இவ் அரைவாய்மொழிப் புலவர்கள் பாடிவந்துள்ளனர்.
தொழிலாளர் உரிமைகளும் தொழிலாளர் ஒற்றுமைகளும் இவர்களால் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன.
இதுமட்டுமன்று மலையக அரசியல் விவகாரங்கள் மலையக அரசியல் கட்சிகளின் ஒற்றுமை, என்பனவும் இத்தகைய புலவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஏனைய பிரதேசங்களைவிட, மலையகத்தில் தொழிலாளர்களுக் கும் அரசியல் கட்சிகளுக்குமிடையிலான ஊடாட்டம் கூடுதலாக இருப்பதால் இது தவிர்க்க இயலாததுமாகின்றது. கே.கே.எஸ். ஜில் என்பவரது "இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் போட்டிவிடுதலை என்ற பாடல்தொகுப்பு இத்தகைய புலவர்களது அரசியல் விவகாரம் சார்ந்த பாடல்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். மேலும் இத்தகைய பாடல்களுள் கணிசமானவை, சினிமாப்பாடல் மெட்டு களைப் பின்பற்றிப் பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரண மாக, 'மணப்பார மாடுகட்டி என்ற மெட்டிலமைகின்ற பாடலொன்றின் ஒருபகுதி இங்கு தரப்படுகின்றது.
“காங்கிரஸ் போட்டியினால் கண்டபடி
ஜனங்களெல்லாம் மண்டையுமே உடைந்ததுமே - சின்னத்தம்பி இன்று மறுபடியும் சேர்ந்துட்டாங்க - நல்லதம்பி நாலைந்து வருஷமாக நல்லதொரு சங்கம்விட்டு பிரிந்து மேதான் வாழ்ந்ததெல்லாம் - சின்னத்தம்பி இன்று அறிந்துமேதான் சேத்துவிட்டார் சின்னத்தம்பி"
மூன்றாவது ஆண்டுமலர் 17 ஞானம்

Page 10
இவ் அரைவாய் மொழிப் பாடல் பெரருள் மரபு மேற்கூறியவாறாக, பாடல் வடிவ/வகை மரபுபற்றி சற்றுக் கவனிப்பதும் அவசியமானது. இவ்விதத்தில் பெரும்பாலும் சிந்துப்பாடல் வடிவம், கும்மி வடிவம் திருப்புகழ் பாடல் வடிவம் என்பன இவர்களால் கையாளப்பட்டுள்ளமை நினைவிற்கு வருகின்றது. அதே வேளையில் ஏனைய பிரதேச புலவர்கள் கையாளாத தாலாட்டு ஒப்பாரி வகைப் பாடல்கள் இவர்களால் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றது. இவ்விதத்தில் கவிஞர். கா.சி.ரெங்கநாதனின் பாடல்கள் முக்கிய மானவை. (இவர் மதுரையைச் சேர்ந்தவர்) மேலும், ஏனைய பிரதேசப் புலவர்கள் போலன்றி இவர்கள் (முன்னர் குறிப்பிட்டது போன்று) கதைப் பாடல்கள், வசனம் இடையிட்ட பாடல்கள் என்பனவற்றையும் பாடியுள்ளனர். அனைத்தையும்விட, இத்தகைய அரைவாய் மொழிப் பாடல் மரபின் சமூகப் பயன்பாடுபற்றி ஆழ்ந்து சிந்திக்கவேண்டியுள்ளது. இத்தகைய வாய்மொழிப் பாடல்களுள் பெரும்பாலானவை இசைத்தன்மை வாய்ந்தவை; மெட்டுக்களைப் பின்பற்றியவை. இத்தகையவை பொதுமக்கள் முன்னிலையில் பொதுமக்களை நோக்கிப் பாடப்படுவதனால் பொதுமக்களை எளிதாகக் கவரக்கூடிய வலுவான ஊடகமாக அமைந்திருந்தன. இத்தகைய நிலையில் 1. அறிவினைப் பரப்பவும், 2.சமூகச் சீர்திருத்தச் செயற்பாடுகளை ஏற்படுத் தவும் 3. பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்கவும் 4.(இவ்விதங்களில்) சமூக, அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படவும் இத்தகைய பாடல்கள் பயன் பட்டிருக்கின்றன என்று ஊகிப்பதில் தவறில்லை. மேலும், சமூக எதிர்ப்புணர் வின் ஊடகமாகவும் இவை விளங்கியுள்ளன. (தோட்டங்களில் பெண்கள் இம்சைக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் பட்டியகாமம் வேல்சாமிதாசன் அது பற்றி உடனுக்குடன் பாடலியற்றி, ஏனையோருக்குத் தெரியப்படுத்திவிடுவார் என்று கங்குலன் பக்கத்தில் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளமை இங்கு நினைவிற்கு வருகின்றது)
இறுதியாக, இவ் அரைவாய்மொழிப் பாடல் பாரம்பரியம் பற்றிய தேடலின் பேணுதலின் அவசியம் பற்றியும் குறிப்பிடுவதவசியம். ஈழத்தின் ஏனைய பிரதேசங்களைப் பொறுத்தவரையில், 19ம் நூற்றாண்டு தொடக்கம் இன்றுவரையுள்ள எழுத்து மரபுவழிப்பட்ட ஈழத்துப் புலவர் பரம்பரையினர் சமயம், அறம் முதலியன பற்றிப் பாடிய இலக்கியச் சூழலில் இவ் அரைவாய் மொழிப்பாடல் பாரம்பரியப் புலவர்களே சமூகச் சார்ந்த விடயங்களில் அக்கறைகாட்டி வந்துள்ளனர். இவ்வாறே, 20ம் நூற்றாண்டின் ஈழத்து நவீனகவிஞர்கள் அக்கறை செலுத்தாத - அக்கறை செலுத்தத் தயங்கிய விடயங்களிலும் இவர்களே ஈடுபாடு காட்டியுள்ளனர். மலையகக் கவிதைப் பாரம்பரியத்ததைப் பொறுத்தளவில், நிலைமை வேறு. நவீன கவிஞர்கள் மலையகத்தில் உருவாகாத சென்ற நூற்றாண்டின் நடுச்சகாப்தம் வரையும் இப்புலவர்களே அவர்தம் கடமையையும் ஆற்றியுள்ளனர். மலையகத்தில் ஐம்பது, அறுபதுகளில் நவீன கவிஞர் குழாம் உருவான பின்னரும்கூட 'நிலைமையில் பெருமாற்றமேற்படவில்லை. இவர்களது பாடல்களின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை.
வரலாறு பற்றிய - வரலாறெழுதியல்' பற்றிய புதியகண்ணோட்டம்
ஞானம் 8 மூன்றாவது ஆண்டுமலர்

உருவாகியுள்ள நிலையில், சாதாரண மக்களது கடந்தகால வாழ்வியலை பண்பாட்டினை - நம்பிக்கைகளை - அறிந்துகொள்ள இதுபற்றிய தேடல் இன்று பொதுவாக அவசியமாகவுள்ள நிலையில், மலையகத்தைப் பொறுத்த வரையில் மலையக மக்களது கடந்தகாலச் சமூக வரலாற்று ஆவணமாகவும் இவை (எடுத்துக்காட்டு: தமிழ்மணி முரசு) அமைந்துவிடுகின்றமை மனங் கொள்ளத்தக்கது.
எல்லாவற்றையும்விட, மலையகத்தின் இன்றைய நவீன கவிஞர் குழாம் இத்தகைய பாடல்களின் உத்திமுறைகள், புலவர்களின் செயற்பாட்டு முறைகள் (எடுத்துகாட்டு : பொதுமக்கள் முன்னிலையில் பாடுதல்) முதலான வற்றைப் பின்பற்றுவதனூடாக நவீன கவிதையை இன்னொரு மட்டத்திற்கு அதாவது பொதுமக்களிடம் கொண்டு செல்லமுடியும். நவீன கவிதையின் பிதாமகனான பாரதியார், “பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு என்றும் 'இரண்டொரு வருஷத்து நூற்பழக்கமுள்ள பொதுமக்களுக்காக எழுதுவது என்றும் கூறியதன் தாற்பரியம் இதுதான்.
ஆக, இத்தகைய பாரம்பரியம்பற்றித் தேடுவதும் பேணுவதும் மலையக ஆய்வாளரது உடனடித்தேவையாகின்றன!
(ஆட்டம் முடிந்து அவரவர்க்குத்
தேட்டமிட வழியே யில்லாதபோது ஆடியவர் கூடியதே
அக்கூட்டம்! அகந்தை அவரவரின் பலத்தினையே மிகவும் அளந்த அளவையிவர் ஒருபோதும் ஏற்காத அகமுடையோர்! பலவீனம் அறிந்தபலம் இருவருக்கும் பலம் மக்கள்கூட்டந்தான் என்று நிலம் முழுதும் கூவுகின்ற முகமுடையோர்!
g
Ü
()
ஆட அரங்கிற்கு அணிகலனுட னிருவர் வேடம் தரித்து வந்துவிட்டார் கூடித்தீர்ப்புக் கூறுகின்ற தீர்ப்புக்கு முன்னிற்கும் தீரரிவர் கூட்டாளியோடுதான்! 2. 府 44 தாயம்
போர்தொடுக்காப் புவியினிலே
பொருள் பெறுவார்!
A. ப்வொருவர் வாழ்வுக்கள் புகக்கரிற்கம் கவிஞர் ஏஇக்பாலி ஜ:ஜகும்
ஒவ்வாதிங் கிருப்பதையும்
الم !ஒப்புதலேநன்று ܓܠ
மூன்றாவது ஆண்டுமலர் எகானம்

Page 11
(Li്തു6)
rே
சிதில்லைநாதன்
சந்திப்பு: திஞானசேகரன்
அ, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர்; தமிழ்ப்பேராசிரியர்
பூ இலங்கை அரசினால் கலாகிர்த்திப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்
6T. ஆ. இலங்கைக் கலைக்கழக உறுப்பினராகவும், தலைவராகவும், தமிழ்க் கலைச் சொற்களுக்கான உச்சக்குழு உறுப்பினராகவும், தேசியக் கல்வி நிறுவக ஆட்சிச்சபை உறுப்பினராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனப் பணிப்பாளர்சபை உறுப்பினராகவும், இலங்கைப் பத்திரிகைச் சபையின் உறுப்பினராகவும், அரசகரும மொழிகள் ஆணைக்குழு உறுப் பினராகவும் பணியாற்றியவர்.
لم தி.ஞா. : நீங்கள் இன்று பேராசிரியராக இருக்கிறீர்கள். இந்நிலையை நீங்கள் எய்துவதற்கு உங்களது மாணவப் பருவத்தில் யாழ்ப்பாணத்துக் கல்விச் சூழல் எவ்வாறு சாதகமாக அமைந்தது? சி.தி. இவ்வினாவை நீங்கள் கேட்கிறபோது, எனக்குத் தமிழ் எழுதப் பழக்கிய ஆசிரியை முதற்கொண்டு சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாசாலையிலும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கற்பித்த பல நல்லாசிரியர்கள் என் மனக்கண்முன் தோன்றுகின்றனர். அவர்கள் எளிமையாக வாழ்ந்த மகோன்னத மனிதர்கள். பாடசாலை தங்களுடையது, மாணவர்கள் தங்களுடைய பிள்ளைகள் என்ற உணர்வுடன் கல்வியூட்டும் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அவர்களுக்குச் சமூகத்தில் தக்க மதிப்பும் இருந்தது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களைப் பாடசாலை விட்டபின் மறித்து அல்லது தங்கள் வீட்டுக்கு அழைத்துப் பிரதி உபகாரம் எதுவும் பெறாது கல்வி கற்பித்தனர். இந்நிலையினை நான் எய்துவதற்குப் பெரிதும் உபகாரமாக அமைந்தது அன்று எனக்கு வாய்த்த கல்விச் சூழல் என்றே நம்புகிறேன்.
தி.ஞா. : யாழ்ப்பாணக் கல்வி வளர்ச்சியில் ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் பங்களிப்பு எத்தகையது?
சி.தி. : ஒறேற்றர் சி .சுப்பிரமணியம் சிந்தனையிலும் செயலிலும் முற்போக்கானவர்; துணிவு மிக்கவர்; யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் உற்சாகமாக உழைத்தவர். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்
ஞானம் 20 மூன்றாவது ஆண்டுமலர்
 

கல்லூரி அதிபர் பதவி கிடைத்தபோது, முகாமையாளருடன் நல்லுறவைப் பேணித் தன் நிலையினை ஸ்திரப் படுத்திக் கொள்ளவோ உயர்நிலை எய்தவோ அவர் எண்ணவில்லை. கல்வியை வளர்க்கத் தனக்குக் கிடைத்த வாய்ப்பினை "பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவிகொள்ள" வைப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற வேட்கையினால் அவர் உந்தப்பட்டார். திறமைமிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுத்துப் பரீட்சைகளில் உயர்ந்த பேறுகளைப் பெற்றுக்காட்டிப் பெருமைப் படுவதில் அவர் அதிக அக்கறை காட்டவில்லை. இயலுமானளவு பேர்களுக்குச் சீவனோபாயத்தைத் தேடிக்கொள்ள உதவுவதில் அவர் பெருமளவு அக்கறை கொண்டவர். வயது சற்றுக் கூடிவிட்டதாலும், திறமை குறைந்தவர்கள் எனக் கண்டதாலும், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்ற காரணத்தினாலும் ஏனைய பல கல்லூரிகளினால் அனுமதி மறுக்கப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்விக் கூடத்தின் கதவுகளைத் திறந்துவிட்டவள் ஒறேற்றர். அதனால் பின்தங்கிய நிலையிலிருந்த பலர் கல்வியின்மூலம் முன்னேறும் வாய்ப்பினைப் பெற்றனர். முற்போக்கான சிந்தனைகளைச் சபைகளில் வெளியிட்ட அதிபர்கள் பலர் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்குத் தங்கள் பாடசாலைகளில் அனுமதி வழங்க அஞ்சிய சூழ்நிலையில், அவ்விடயத்தில் மிகுந்த துணிவுடன் செயற்பட்டவர் ஒறேற்றர். கல்வி வசதி குன்றிய மலையகத்துப் பிள்ளைகள் தன் கல்லூரியில் வந்து கற்க அவர் விசேட வசதிகள் செய்துகொடுத்தார்.
எனது பல்கலைக்கழகத் தேர்வுக்கு முன்னர் அரசாங்க எழுது வினைஞர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து, சேனைத் தலைநிலையத்தில் வேலை பெற்றதும், போதுமென்று மகிழ்ந்த என் தந்தையார் அவ்வேலை யைக் கவனமாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதில் ஆர்வம் கொண்டவரானார். நான் பல்கலைக்கழகப்புகுமுகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமென்று கண்டிப்பாகக் கருதிய ஒறேற்றர் அதற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்வதில் மும்முரமாக இயங்கினார். கந்தரோடையில் இருந்த சிறியதொரு பள்ளிக்கூடத்தை இலங்கையின் ஒர் அதியுயர்தரக் கல்லூரியாகக் கட்டியெழுப்பிய ஒறேற்றர் சுப்பிரமணியம் கல்வி வளர்ச்சிக்குமட்டுமன்றி, சமூக முன்னேற்றத்துக்கும் அன்றைய இளைஞர்களின் உலகப் பார்வை விசாலமடைவதற்கும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்துள்ளார். தி.ஞா. : பேராசிரியர் மு. வரதராசனார் தங்களது ஆசிரியர் என அறிகிறேன். அவருடன் தங்களுககு இருந்த தொடர்புகள் பற்றிய நினைவுகளைக் கூறுங்கள். சி.தி. பட்டமேற்படிப்புக்காக நான் சென்னை செல்லவிருந்த வேளையிலே பலரால் பலவிதமாக எச்சரிக்கப்பட்டேன். தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இங்குபோலச் சுதந்திரமாக உலவ முடியாதென்றும், மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுவது இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்லுமென்றும் சிலர் கூறினர். நேரத்தோடு துறைக்குச்சென்று பேராசிரியர் வரும்போது பவ்யமாக எழுந்துநின்று சிரந்தாழ்த்தி வணக்கம் தெரிவிக்க
மூன்றாவது ஆண்டுமலர் 11 ஞானம்

Page 12
வேண்டும், அவர் வேலை முடிந்து செல்லும்வரை கடுமையாக உழைப்ப தாகக் காட்டிக்கொள்ள வேண்டும், அவரது கருணையினாலன்றி எந்தக் கருத்தோ சிந்தனையோ விளக்கமோ எமக்கு வாய்க்காது என்று அவர் நம்பும் வகையில் நடந்துகொள்ள வேண்டும், அவரது கருத்துக்களோடு எக்காரணங்கொண்டும் மாறுபடக்கூடாது - இப்படியாகப் பின்பற்றுவதற்கு எனக்குச் சற்றேனும் சாத்தியமற்ற அறிவுறுத்தல்கள் பல வழங்கப்பட்டன. ஆனால், மு.வ. அப்படிப்பட்டவரல்ல; மனிதாபிமானமும் பரந்த பார்வையும் முற்போக்கான சிந்தனையும் கொண்டவர் என்று அவரை அறிந்திருந்த என் நல்ல நண்பர் செ. கணேசலிங்கன் சொன்னார்.
ஆரம்பத்தில் மு.வ. மிகச் சம்பிரதாயபூர்வமாக இலக்கணச் சுத்தமான தமிழில் பேசிய போது எனக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஓரிரு முறை கண்டு பழகிய பின்னே அந்த ஒப்புக்களெல்லாம் மறைந்து விட்டன. சுருக்க மாகச் சொல்வதானால், என்னைப் போன்ற ஒருவனுக்கு மு.வ. போன்ற ஓர் ஆசிரியர் தமிழ் நாட்டிலே கிடைத்தது பெரியதொரு பேறேயாகும். எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி என்னை இயங்கவிட்ட மு.வ. என் ஆய்வு சம்பந்தமாகக் கலந்துரையாட விரும்பிய போதெல்லாம் மிகுந்த பொறுமை யுடன் கலந்துரையாடினார். ஆலோசனைகள் கேட்டபோதெல்லாம் அன்புட னும் நேர்மையுடனும் அவற்றை வழங்கினார். சிக்கல்களையும் சர்ச்சை களையும் மிகச் சாதுர்யமாகச் சமாளிக்க வல்லவரான மு.வ. விவாதங் களுக்கு இடமளித்துக் கருத்து மாறுபாடுகளை மதித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
என்னையும் சோவியத் நாட்டிலிருந்து தமிழ் கற்க வந்திருந்த ஒரு மாணவரையும் வேறு சிலரையும் இடைக்கிடை வீட்டுக்கழைத்து விருந்தோம்பிய அவரது சீலம் என்றும் மறக்கற்பாலதன்று. பழந்தமிழ் இலக்கியம், மொழியியல், புனைகதை இலக்கியம் ஆகிய துறைகளில் அவருக்கிருந்த புலமையினையும் ஆற்றலையும் அவர் வெளியிட்டுள்ள ஏராளமான நூல்களின் வாயிலாகப் பலரும் அறிவர். சென்னையில் இசைவிழா நடைபெற்ற காலங்களில் அண்ணாமலை மன்றத்தில் காலை வேளைகளில் இடம்பெற்ற தேவாரப் பண் ஆராய்ச்சிகளில் மு.வ. ஆர்வத்தோடு கலந்து கொண்டார். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் ஓதுவார்களும் இசைப்பேராசிரியர் எம். எம். தண்டபாணி தேசிகர் போன்றவர்களும் பங்கேற்ற அக் கலந்துரையாடல்களின்போது மு.வ.வின் தமிழிசைப் புலமையைக் கண்டு வியப்புற்றேன். இலங்கை திரும்பிய பின்னரும் அவருடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டேன். மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த காலத்திலேதானும் எந்தக் கடிதத்துக்கும் அவர் பதில் எழுதாமல் விட்டதில்லை. பழுகுவதற்கினிய அவரைப்பற்றிய நினைவுகள் பசுமையாகவே உள்ளன. தி.ஞா. நீங்கள் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் சுமுக ஊறவு நிலவியதால் மாணவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக
ஞானம் 22 மூன்றாவது ஆண்டுமண்

வெளியிடக்கூடிய நிலைமை இருந்ததா? சி.தி. : எனது தமிழ் ஆசிரியர்களும் சரி, வரலாறு, பொருளாதாரம், அரசறிவியல் ஆகியவற்றைக் கற்பித்தவர்களும் சரி மாணவர்களிடத்துச் சுதந்திர சிந்தனைகளையும் வியாக்கியானங்களையும் உற்சாகத்தோடு ஊக்குவித்தனர் என்றே கருதுகிறேன். முதலாண்டில் கற்றபோது, தமிழ்ப் பாடக் கட்டுரை வகுப்புகளை நடத்திய கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களுட னும், அரசறிவியல் கட்டுரை வகுப்புகளை எடுத்த கலாநிதி ஜெயரத்தினம் வில்சனுடனும் பலவிடயங்கள் குறித்து நாங்கள் விவாதித்துப் பலன் பெற் றோம். அன்று நாங்கள் நிறைய வாசித்தோம். பல்கலைக்கழகத்தினுள்ளும் வெளியேயும் நடந்த கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டோம். அனேகமானவர்களுக்கு இலக்கியம், அரசியல் முதலானவற்றில் ஓரளவு நிலைப்பாடுகளும் உருவாகியிருந்தன. தன்னம் பிக்கையும், அறிவுத் தெளிவும், விசாலமான உலகப் பார்வையும் பெற்றிருந்த பேராசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுடன் சுமுக உறவை வளர்த் திருந்தனர். அவ்வப்போது விடுதிகளில் நடைபெற்ற தேநீர் விருந்துகளின் போதும் சுற்றுலாக்களின்போதும் கலை நிகழ்ச்சிகளின்போதும் ஆசிரியர் களுடன் அளவளாவும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன.
சிங்களம் மட்டும் சட்டம் வேண்டிச் சத்தியாக்கிரகம் செய்த கலாநிதி எப். ஆர். ஜயசூரிய, ஒருநாள் பரீட்சைக்குப் பிந்திவிட்டதால் குழம்பிநின்ற என்னைத் தோள்மீது கைபோட்டு அழைத்துச் சென்று பரீட்சை மண்டபத்தில் இருத்தியதையும், சிறியதொரு குழப்படிக்காக ஒருநாள் பேராசிரியர் கணபதிப் பிள்ளை அவருக்கேயுரிய பேச்சுத் தமிழில் ஏசியதையும், இன்னொரு தவறுக் காகக் கலாநிதி சு. வித்தியானந்தனிடம் நன்றாக ஏச்சு வாங்கியதையும் இப்போது நினைத்துப் பாாக்கும்போது எவ்வளவோ சுகமாக இருக்கிறது.
தி.ஞா. : நீங்கள் ஒரு முற்போக்கான சிந்தனையாளர். உங்களது காலகட்டத்திலேதான் இலக்கியத்தில் மரபு, முற்போக்கு, நற்போக்கு போராட்டங்கள் நிகழ்ந்தன. இன்று இந்தப் போராட்டங்களை நீங்கள் மீளச் சிந்திக்கும்போது உங்களது மனதிலே எத்தகைய எண்ணங்கள் தோன்றுகின்றன?
சி.தி. : "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே" என்று பவணந்தி முனிவரும், "மாறுதல் இந்த யுகத்தின் முதலாவது விதி" என்று மகாகவி பாரதியும் கூறியதை விளங்கிக் கொண்டவர்களுக்கு முற்போக்கு என்றால் என்னவென்பதை விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்க நியாயமில்லை. எங்கள் காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பேணவேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்கக் கூடாதென்றும் சொல்வது பிற்போக்காகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் ஆலயங்களுக்குள் அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கொள்வது முற்போக்காகும். ஏட்டைப் பெண்கள் தொடுவது ஆகாதென்பது பிற்போக்கு. "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்” என்பது முற்போக்கு.
மூன்றாவது ஆண்டுமலர் y R ஞானம்

Page 13
மாட்டுவண்டியிலன்றி வேறெந்த வாகனத்திலும் ஏறேன் என்பது பிற்போக்கு. "நடையும் பறப்புமுனர் வண்டிகள் செய்வோம், ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்” என்பது முற்போக்கு.
இலக்கியத் துறையில் மட்டுமன்றி சமூகத்தின் ஏனைய பல துறை களிலும் பழையனவற்றில் ஊன்றிய நலன் கண்டுகொண்டவர்களுக்கும் மாறுதல்களையும் புதுமைகளையும் வரவேற்றவர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் உலகெங்கணும் நடந்தே வந்துள்ளன. காலகதியில் நிலைக் கத்தக்கவை நிலைத்தும் மாற்றப்படவேண்டியவை மாற்றப்பட்டும் ஏற்கப்பட வேண்டியவை ஏற்கப்பட்டும் வந்துள்ளன.
இலக்கிய மரபு பற்றி எங்கள் நாட்டில் நடைபெற்ற சாச்சைகளைப் பற்றி மீளச்சிந்திக்கும்போது, அவற்றால் இலக்கியத்தின் பண்பும் பயனும் குறித்த விளக்கங்களும் தமிழிலக்கியத்தின்பால் ஆர்வமும் குறிப்பிடத் தக்களவு பெருகியமை மகிழ்ச்சி தருவதாகும். நற்போக்கு என்ற பிரயோகம் எதிர்ப்புக்கிடமற்ற ஒன்றாகத் தோற்றுகின்றது. ஆனால், அக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள் பழையனவற்றுள் உதவாதனவற்றை ஒழிப்பதில் ஆர்வம் கொண்டனரா அல்லது புதிய மாறுதல்களை முறையாக முன்னெடுக்க விழைந்தனரா அல்லது பிற்போக்குக்கும் முற்போக்குக்குமிடையில் சமரசம் காண முயன்றனரா என்பது தெளிவாகவில்லை.
பழைய நிலையில் சுகம் கணடவர்கள் மாறுதல்களை எதிர்க்கவே செய்வர். மகாகவி பாரதியின் கவிதைகளில் சொற்குற்றம், பொருட்குற்றம், யாப்புக் குற்றம் எல்லாம் கண்டு அவருக்குத் தமிழோ தமிழிலக்கிய மரபோ தெரியாது என்று நிறுவ எத்தனித்தவர்களை அறிவோம். பாரதிமீது அவர்கள் கொண்ட சீற்றத்திற்கு முதற்காரணமானது தமழ்க் கவிதை மரபின்மீது அவர்கள் கொண்டிருந்த பற்றல்ல; பாரதியின் செயல்களிலும் கருத்துக் களிலும் அவர்கள் கொண்ட வெறுப்பேயாகும்.
நாவல்களும் சிறுகதைகளும் இளைஞர்களை நாசமாக்கிவிடும், அவற்றைப் படிப்பது பாவம் என்று கருதிய தமிழ்ப் பெரியார்களைப்பற்றி டாக்டர் மு.வ.விடம் நிறையக் கேட்டறிந்துள்ளேன். இழிசனர் எனப்பட்டவர் களின் மொழி வழக்குகளும் அம்மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளும் இலக்கியங்களில் இடம்பெற்ற போதும், அவர்களுக்குள் இருந்து எழுத்தாளர் களும் கவிஞர்களும் உதயமானபோதும் இலக்கிய உலகை ஆண்ட பரம்பரையினருக்கு அது அருவருப்பாகவே இருந்தது.
பல்கலைக் கழகத்தில் தமிழ் ஒரு பாடமானபோதுகூட பழைய தமிழ்ப் பண்டிதர்கள் அங்கலாய்த்தனர். "கால்சட்டை போட்டுக்கொண்டு தமிழ் வளர்க்கப் போகிறார்கள்” என்று நையாண்டி செய்தனர். ஆனால், தங்களோடு சம்பந்தமில்லாத ஆங்கிலமும் அம்மொழிமூலமாக விஞ்ஞான, சமூகவியற் பாடங்களும் கற்பிக்கப் பட்டது குறித்து அவர்கள் கலக்கமடையவில்லை. தங்கள் பிள்ளைகளையும் எதிர்கால உயர்வு கருதி அவற்றையே படிக்குமாறு ஊக்கினர்.
இவ்வாறே என் மனதில் தோன்றும் எண்ணங்களை நீட்டிக்கொண்டு.
ஞானம் 24 மூன்றாவது ஆண்டுமலர்

தி.ஞா. : டாக்டர் ஆ. சதாசிவம் அவர்கள் அக்காலத்தில் மரபுப் போராட் டத்தை முன்னெடுத்துச் சென்றதாக அறிகிறோம். அக்காலகட்டத்தில் தாங்கள் தினகரனில் பணிசெய்தீர்கள். டாக்டர் சதாசிவம் அவர்களின் கருத்துக்களுக்கு தினகரன் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்ததாகவும் அறிகிறோம். மரபுப் போராட்டம் பின்னர் வீழ்ச்சியுற்றமைக்குக் காரணம் எதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்? சி.தி. : இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒரு விடயத்தைக் கூறிவைக்க விரும்புகிறேன். அதாவது, என் அன்புக்குப் பாத்திரமான ஆசிரியர் கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களை நான் அறிந்த காலம்முதல் சண்டையும் சமாதானமுமாகத் தொடர்ந்த எங்கள் உறவு இறுதிவரை அன்னியோன்னிய மானதாகவே இருந்தது. கலாநிதி சதாசிவம் காலஞ்சென்ற ஓராண்டின்பின் ஒருநாள், பாடவிதானங்கள், பரீட்சைகள் தொடர்பாக நாங்கள் பலதடவைகள் வாதிட்டதை அவதானித்தவரான முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் திரு. ஆர்தர் வெதமுல்ல, "நான் சொல்வதை நீ நம்பு, உன்னைப் பற்றி அவர் ஒருபோதும் குறைவாகப் பேசியதில்லை.” என்று வலியுறுத்திக் கூறினார்.
ஆனால், கலாநிதி சதாசிவம் அவர்களின் வரலாற்றுப் பார்வை என்றும் எனக்கு உடன்பாடானதாய் இருக்கவில்லை. மரபெனப்படுவது மாறுத லடையாத ஒன்று, அதை மீற முயல்வது சாலாது, தொல்காப்பியர் வகுத்ததே தமிழுக்கு என்றும் உரிய இலக்கணமாகும், பேச்சுவழக்கு இலக்கியத்தில் இடம்பெறல் ஏற்றதல்ல, இன்றைய சிறுகதையைத் தமிழிலக்கிய வடிவமென்று கொள்ள முடியாது - இப்படியான அவரது கருத்துக்கள் பல வாதப் பிரதி வாதங்களைத் தூண்டவல்லன என்பதாலும், அத்தகைய கருத்துப் பரிமாறல்கள் தமிழிலக்கியத்தின்பால் பலசாராரினதும் கவனத்தை ஈர்ப்பதோடு புதிய பல சிந்தனைகளுக்கும் விளக்கங்களுக்கும் வழிகோலக்கூடும் என்ப தாலும் அவை தினகரனில் வெளியிடப்பட்டன.
"காலத்துக்கேற்ற வகைகள், அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கமும் நூலும்” என்ற மகாகவி பாரதிக்கு இருந்தது போன்ற கால உணர்வு கலாநிதி சதாசிவம் அவர்களுக்கும் இருந்ததென்று கூறவியலாது. மரபு பற்றிய அவரது விளக்கம் வரலாற்று ரீதியானதாகவோ விஞ்ஞான பூர்வமானதாகவோ அமையவில்லை என்பது எனது அபிப்பிராயம். அத்தகைய ஒன்றை நிலை நிறுத்த முயலுவது பெருக்கெடுத்தோடும் பேராற்றைக் கரங்களைக்கொண்டு கட்டுப்படுத்த முயல்வதை ஒக்கும். அவ்வாறான எத்தனங்களின் வீழ்ச்சி ஒரு வரலாற்று நியதியாகும்.
தி.ஞா. டானியலின் பஞ்சமர் நாவலுக்கு முன்னரை எழுதியுள்ளீர்கள். டானியலின் நாவல்கள் ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன?
சி.தி. : சாதிக்கொடுமைகள் ஒழிக்கப்படவேண்டியவை என்பது என் நிலைப்பாடாகும். இலங்கையைப் பொறுத்தவரை சாதியத்துக்கெதிரான போராட்டத்தில் கே. டானியலின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண
மூன்றாவது ஆன்ருமலர் 25 ஞானம்

Page 14
மண்ணில் வேர்விட்டுப் பரவியிருக்கும் சாதிக் கொடுமைகளையும் அடிமை குடிமைகளாய் நடத்தப்பட்ட பஞ்சமர்களின் அவலங்களையும் போராட்ட உணர்வுகளையும் சித்திரித்தபடியால் டானியலின் படைப்புக்கள் பஞ்சம சாதியினர் மத்தியிலும் முற்போக்குச் சிந்தனை படைத்த ஏனையோர் மத்தி யிலும் பெருஞ் செல்வாக்குப் பெற்றது உண்மை.
அதேவேளை உயர்சாதி மக்களைப் பழிவாங்கும் நோக்கோடு அவர்களது குடும்பப் பெண்களைக் கீழ்த்தரமாக டானியல் சித்திரித்துள்ளார் என்ற விமர்சகர்களின் குற்றச்சாட்டும் பரிசீலனைக்குரியதே.
டானியலின் நாவல்கள் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் பெரிதா கவும் தோன்றுகிறது. தி.ஞா. நல்ல படைப்புகள் கவனிக்கப்படாமல் போவதும் மோசமான படைப்புகள் கொண்டாடப்படுவதுமான ஒரு நிலைமை ஈழத்து இலக்கிய மரபில் இருந்து வந்ததாகக் குற்றச்சாட்டு நிலவுகிறதே! சி.தி. : இதனை எமது இலக்கிய மரபில் இருந்துவரும் ஒன்று என்று கூறிச் சலிப்படைவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. இப்படியான குற்றச் சாட்டு எங்கள் காலத்துக்கோ நாட்டுக்கோ மட்டும் உரியதென்றும் கூறமுடி யாது. பொதுவாக இது படைப்பாளர்களும் வாசகர்கள் அல்லது நுகர்வோரும் சம்பந்தப்பட்ட விடயம். எல்லோருக்கும் பரிச்சயமான திரைப்படத் துறையை எடுத்துப்பாருங்கள். மோசமான படங்களும் மோசமான நடிகர்களும் கொண் டாடப்படுவதையும் இலாபத்தைக் குவிப்பதையும் பார்க்கவில்லையா? வெகுஜன ஊடக உறவுகளைக் கெட்டித்தனமாக வளர்த்துக்கொண்டும் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்தும் சுளுவாக உடனடிப் பிரசித்தியையும் இலாபத்தினையும் சம்பாதிக்கும் எழுத்தாளர்கள் இல்லை என்று நான் கூறவில்லை. ஆக்கப்பணியில் ஆர்வம் நிலைத்தவர்களுக்கு அப்படியான காரியங்களுக்கான அவகாசம் இருக்காதென்றே நினைக்கிறேன். சந்தைப் பொருளாதாரம் பின்பற்றப்படும் இன்றைய காலத்தில், ஒருவனுக்குத் தன் திறமையை விற்றுப் பிழைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படு கிறது. அது எவ்வாறாயினும் நல்ல படைப்புகள் காலப் போக்கில் நிலைக்கும் என்றும் மோசமானவை புறந்தள்ளப்படும் என்றும் நம்புகிறோம். அவ்வாறு நடைபெறாவிட்டால் அது பொது நாகரிகத்தின் சீரழிவேயாகும். கம்பன், பாரதி போன்றவர்களை ஒரங்கட்டும் எத்தனங்கள் தோல்விகளையே தழுவின. படைப்பொன்று நிலைபெறுவது சுயமாகவன்றி முண்டுகளால் அல்ல.
தி.ஞா. : பல்கலைக்கழகழங்களில் மாணவர்களுக்குத் திறமைச்சித்திகள் வழங்கப்படும்போது, அவற்றை வழங்குபவர்கள் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாணவர்களிடையே பாராபட்சம் காட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை இதனை வாலி வதைக்கு ஒப்பிடுகிறார். தங்களது பல்கலைக்கழக மாணவப் பருவத் திலும், பின்னரும் இத்தகைய வதைகள் நடந்துள்ளனவா?
ஞானம் 26 மூன்றாவது ஆண்டுமலர்

சி.தி. : பரீட்சைகள் போட்டிகள் என்று வரும்போது இவ்விதமான குற்றச்சாட்டுக்கள் தவிர்க்க முடியாதவை போலத் தோன்றுகின்றன. திறமைச் சித்திகள் பெறாதவர்கள் அதற்குத் தங்கள் திறமைக் குறைவே காரணம் என்று ஒத்துக் கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பேராசிரியர் வேலுப்பிள்ளை எதனைவைத்து இதைச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. வாலிவதை குறித்த அவரது விளக்கமும் எனக்குப் பிடிபட வில்லை.
என்னைப் பொறுத்தவரையில் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பாரிய பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதென்ற உணர்வுடன் பரீட்சகர்கள் பாராபட்சமின்றிப் பணியாற்ற வேண்டும். தவறுகள் நேராதவாறு தடுப்பதற்கான ஏற்பாடுகளும் பல்கலைக்கழகங்களில் உள்ளன. இன்னொன்றையும் கூறலாம். பரீட்சையில் திறமைச் சித்தி பெறத் தவறு கிறவர்கள் பின்னர் தங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அவ்வாறு சிலராவது நிரூபிக்குமிடத்துச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்கிடமாகலாம்.
ஏலக்கூடியளவு புள்ளிகள் உங்களுக்கு வழங்க எங்களாலான முயற்சி களை எடுப்போம், மிகுதி உங்கள் ஒத்துழைப்பைப் பொறுத்தது என்று மாணவர்களை நோக்கிப் போராசிரியர் தவத்திரு தனிநாயகம் அடிகளார் கூறுவதுண்டு. அதையே நான் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு.
தி.ஞா. : இன்றைய ஈழத்துக் கவிதைப் போக்கு சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்ட கவிதைப் போக்கிலிருந்து வேறுபடுமாற்றைக் கூறுங்கள். சி.தி. : காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. முன்னெக்காலத்திலும் இல்லாதளவு அதிகமாகவும் வேகமாகவும் இன்று மாறுதல்கள் நிகழ்கின்றன. கவிதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. உலகமயப்படுத்தல், நுகர்வு மயப்படுத்தல், திறந்த பொருளா தாரம், திறந்த சமூகம், வெகுஜன ஊடக ஆதிக்கம், சிறிதுகால உபயோகத்தின்பின் ஒதுக்கிவிடும் பண்பாடு, அகதிநிலை, புலப் பெயர்ச்சி, பெண்ணியம், தலித் இலக்கியம், இனவன்முறை, அரசவன்முறை முதலானவை குறித்து இன்று பேசப் படுவனவற்றை அவதானிப்பவர்களுக்கு கவிஞர்களின் இக்கால அனுபவம் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த அனுபவத்தை ஒத்ததாய் இருக்கமுடியாதென்பது புலனாகும். பேரப்பிள்ளைகளும் பூட்டப் பிள்ளைகளும் அனுபவிப்பதற்கென்று சொத்துச் சேகரித்த குடும்பங்கள் தம் பாதுகாப்புக் குறித்தும், எதிர்காலம் குறித்தும் குடும்பப் பெயரைக்காக்கும் விதத்தில் சந்ததி தொடருமா என்பது குறித்தும் மனவியாகூலம் மிகுந்திருக்கும் காலம் இது. வாழ்க்கைக்கும் வினைகளுக்கும் புதிய புதிய அர்த்தங்கள் கற்பிக்கப்படுவதையும் காணலாம். இன்றைய பல பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்களையும் போலி வேடங்களையும் மோசடிகளையும் சுரண்டல்களையும் அதிகாரத் துர்ப்பிரயோகங்களையும் கூர்ந்து அவதானிக்கக் கூடிய கவிஞர்கள் புதிய விளக்கங்களையும் வினாக்களையும் வெளியிடடுள்ளனர். அதீத
மூன்றாவது ஆண்ருமலர் 27 ஞானம்

Page 15
நம்பிக்கையோடு இலட்சியக் கோட்டைகளைக் கட்டி அவற்றின்பால் பிறர் கவனத்தை ஈர்ப்பதற்கான அவகாசம் அவர்க்ளுக்கு இருப்பதாகத் தோன்ற வில்லை. பலவிடயங்களையும் அனுபவங்களையும் குறித்து வெளிப்படை யாகத் தெளிவு தரும் வகையில் கூறமுடியாமல் இருப்பதற்கு விளக்கக் குறைவு காரணமாகலாம். அல்லது அஞ்சுவது அஞ்சும் நிலைகாரணமா 856)Tib.
அனுபவங்களைப் பரிமாறும் ஆவல், புதிய பரிசோதனைகளில் மோகம், பெயரை அச்சில்காணும் ஆவல், கட்டுக்களை மீறும் ஆர்வம், படிமங் களையும் குறியீடுகளையும் கையாளும் விருப்பம் முதலானவை இன்று கூடியளவு பேர்களுக்கு இருப்பதாகவும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் கூடுதலான அளவுக்குக் கிடைப்பதாகவும் தோன்றுகிறது.
இன்று ஏராளமான பேர்கள் கவிதைகள் என்று எழுதுவனவற்றைப் பார்க்கும்போது, கவிதை இயற்றுவது மிகச் சுளுவான வேலை என்று அவர்கள் கருதுவதாகத் தோன்றுகிறது. உயிரிலாச் செய்திகளுக்கு உயிர் மிகக் கொடுக்கும் கவிதை வெளிப்பாடு என்பது அவ்வளவு அற்பமான ஒன்றல்ல. தி.ஞா. : ஈழத்து விமர்சகர்களில் தீவிர மார்க்சியவாதியாக இருந்து ஆன்மீகத்துக்குள் தனது தலையைப் புதைத்துக்கொண்டவர் மு.தளைய சிங்கம் என அவர்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இவரது விமர்சன நோக்குப்பற்றிய தங்களது பார்வை என்ன? சி.தி. தளையசிங்கம் ஒளிவுமறைவற்ற உள்ளங்கொண்ட நல்லதோர் நண்பன். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் தமிழரசுக் கட்சியிலும் சுதந்திரன் பத்திரிகையிலும் அபிமானம் கொண்டிருந்ததை அறிவேன். இறுதியாண்டு முதல். அரவிந்த கோஷின் எழுத்துக்களில் திளைத்திருந்தார். தீவிர மார்ச்சியவாதியாக அவர் இருந்ததை நான் அறியவில்லை.
மார்க்சியத்திற்கு மேம்பட்டதென்று சர்வோதய தத்துவத்தை முன் வைத்த தளையசிங்கம், கலை இலக்கியங்கள் ஆத்மார்த்த அனுபவங்களைச் சார்ந்தனவாய் இருந்தால் மட்டுமே காலங்கடந்த நிலைபேற்றினை எய்த வியலும் என்றும், வருங்காலத்துப் புதுயுகத்தின் கலைப்பார்வையாக ஆத் மார்த்தமே விளங்கும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.
"நெடிய உலகம் இது, உள்ளங்கையிலே பொத்த முடியுமா?” என்று கவிஞர் முருகையன் கேட்டிருப்பது நினைவில் எழுகிறது. அது எவ்வாறா யினும், எதிரேயுள்ள உலகக் கருமங்களுக்கு முகம் கொடுக்கவே நேரம் பற்றாத நிலையில், இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட விடயங்களைப்பற்றிப் பார்வை செலுத்த என்னால் இயலாது.
தி.ஞா. : இன்று ஈழத்து விமர்சனத்துறை தேக்கம் அடைந்துள்ளதா?
சி.தி. : பொதுவாகப் பார்க்கிறபோது, ஒருபுறத்தில் பல நவீன இலக்கியக் கோட்பாடுகள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வியலாத விதமாக நடைபெறுகின்றன. இன்னொரு புறத்தில் புகழுரைகளும் பாராட்டுரைகளும் சகட்டுமேனிக்குத் தாரளமாகப் பரிமாறப்படுகின்றன. ஓர்
ஞானம் 28 மூன்றாவது ஆண்டுமலர்

ஆசிரியன் என்ற முறையில், மிகப் பெரும்பாலான மாணவர்கள் இலக்கியத் தையோ அதன் வரலாற்றையோ பற்றிய அடிப்படை அறிவற்றவர்களாய் புரியாத விடயங்களைப்பற்றி உருப்போட்டுக் குழம்பும் நிலைகண்டு விசன ம ைகிறேன்
அரசியல், வியாபாரம், சமயம், கல்வி, இலக்கியம் எந்தத்துறையை எடுத்தாலும் அதிக பயற்சியின்றிக் குறுக்கு வழியில் உடனடியாக முன்னுக்கு வரும் பிரயத்தனங்கள் கூடிவருகின்றன. பல வெகுசன ஊடகங்களும் சுயவிளம்பரம்தேடும் எத்தனங்களுக்கு விட்டுக் கொடுப்பனவாகவும், விடயங் கள் குறித்த அபிப்பிராயம் கூறுவதற்குரிய விற்பன்னர்களைத் தமக்கிசைவான முறையில் தயாரித்துப் பிரபல்யப்படுத்துவனவாகவும் உள்ளன.
தி.ஞா. : இன்றைய போர்க்கால இலக்கியங்கள் சூழல் மாற்றம் அடையும்போது எத்தகைய கணிப்பைப் பெறும்? சி.தி. : இலக்கியங்கள் அவை எழுகின்ற காலத்து அனுபவங்களையே பொதுவாகப் பிரதிபலிப்பனவாகும். எங்கள் காலத்து இலக்கியங்கள்தான் எங்கள் அபிலாசைகளையும் நாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும், மேற்கொள்ளும் போராட்டங்களையும் எதிர்காலத்துக்கு எடுத்துச் சொல்வன வாகும். போர்கள் நிகழ்ந்த சூழலில் பட்டுணர்ந்த அனுபவங்களை வெளியிட்ட சங்க இலக்கியங்கள் இன்று படிக்கப்படுவதில்லையா?
மனித வாழ்க்கை அனுபவங்களை உன்னிப்பாக அவதானித்து, தெளிவுற விளங்கிக்கொண்டு, நயம்பட வெளியிடும் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் நிலைக்கக் கூடியன. இன்று இலக்கிய முயற்சிகளில் ஏராளமானவர்கள் இறங்கியுள்ளனர். பல்வகைப் பிரயத்தனங்களை மேற் கொண்டு வெளியிடப்படுவனவும் பிரசித்தப்படுத்தப்படுவனவும் இருக்கலாம். அத்தகைய பிரயத்தனப்பாடுகள் அற்றுவிட்டபின்னர்தான் இலக்கியங்கள் அவற்றுக்குரிய கணிப்பினைப் பெறும்.
தி.ஞா. இன்று ஊடகத்துறை பெருவளர்ச்சி கண்டுள்ளது. இது தமிழ்ப் பண்பாட்டு சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் என்ன? சி.தி. : இன்று உலகக் கிராமத்துக்குள் இழுபட்டுக் கொண்டிருக்கும் நான் பிறந்து வளர்ந்தது உண்மையான ஒரு கிராமத்தில். எனது மாமனார் ஒருவருடைய மகள் முறைதவறி மணமுடித்துக்கொண்டதற்காகக் குடும்பத்தி னின்றும் முற்றாக ஒதுக்கப்பட்டார். அவர்களும் எங்கள் கிராமத்திலேதான் வசித்தார்கள். என்னைவிட இரண்டு மூன்று வயது குறைந்த அவர்களுடைய மகன் நான்படித்த கல்லூரியிலேயே படித்துப் பட்டதாரியாகிவிட்டார்.இந்த விபரங்கள் எல்லாம் எனக்குச் சுமார் இருபத்துநான்கு வயதானபோதுதான் தெரியவந்தன. அந்த மாமனாருக்குப் பிள்ளையில்லையென்றுதான் அதுவரை நம்பியிருந்தேன்.
அன்று பிள்ளைகளிடமிருந்து பல விடயங்களை - தவறுகளை, பகைமைகளை, முறைகேடுகளை மறைத்து வைத்திருந்தார்கள். ஊடகத் துறை வளர்ச்சியின் விளைவான திறந்த சமூகத்தைப் பிள்ளைகளற்ற ஒன் றென்று வர்ணிக்கிறார் ஊடகத்துறை விற்பன்னரான பேராசிரியர் மாக்
மூன்றாவது ஆண்டுமலர் 29 ஞானம்

Page 16
லூகன் (McLUHAN). இன்று பெருவளர்ச்சி கண்டுள்ள ஊடகத்துறையானது மக்களின் நடை, உடை, பாவனை அனைத்திலும் பாரிய செல்வாக்குச் செலத்துகின்றது. நாம் அதனைப் புறந்தள்ளிவிட்டுப் பழைய கிராமப்புற எளிமைக்குத் திரும்புவதென்பது சாத்தியமில்லை. “உலகத்தோடு ஒட்டி ஒழுக” உகந்தவகையில் மனோபாவங்களை மாற்றிக்கொள்ளத் தெரிய வேண்டும். ஊடகங்கள் வெகு சனங்களின் பலவீனங்களைச் சுரண்டிப் பிழைக்க முயல்கின்றனவா அல்லது அப்பலவீனங்களை அகற்றப் பயன்படு கின்றனவா என்ற கேள்வி எழாமலில்லை.
புதிய தொழில்நுட்ப அபிவிருத்திகளின் அனுகூலங்களையும் பிரதி கூலங்களையும் சீர்தூக்கிப்பார்த்து, சமூகத்தின் மேம்பாட்டுக்கு உகந்த வகையில் அவற்றைக் கையாள்வதிலேயே பண்பாட்டு வளர்ச்சி தங்கியிருக் கிறதென்று எண்ணுகிறேன். அந்த வல்லமை எங்களுக்கு வாய்க்கவேண்டும் என்பது எனது வேணவா.
தி.ஞா. : சாகித்திய பரிசுக்குழுத் தலைவராகவும் உறுப்பினராகவும் கடமையாற்றி வந்துள்ளீர்கள். பரிசுத்தேர்வில் குழறுபடிகள் நடப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதனால் சாகித்திய பரிசின் மகத்துவம் குறைந்துவிட இடமுண்டு. இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? சி.தி. : சாகித்திய விருதுக்கான தமிழ்நூல்களைத் தெரிவு செய்யும் பணியோடு எனக்கு மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. நான் சம்பந்தப்பட்டவகையில், ஒவ்வொரு துறையிலும் தகுதி வாய்ந்தவர்கள் என்று கருதப்படும் மூன்று நடுவர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் பரிசுக்குரிய நூல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. தேர்வுக்கு நூல்களை அனுப்பு வோரிடம் கேட்டு, அவர்கள் விரும்புவோரை நடுவர்களாக நியமிக்கும் அல்லது விரும்பாதோரைத் தவிர்க்கும் வழக்கம் இல்லை.
குற்றச்சாட்டுகள் பக்கச் சார்பற்ற ஆய்வாளர்களாலோ சம்பந்தப்பட்ட துறைகளில் புலமையுடையவர்களாலோ கூறப்பட்டால் அவை கவனத்துக் குரியனவாகும். பரிசு கிடைக்கவில்லை என்ற மன விரக்தியினால், நிதானம் தவறிய நிலையிலோ அல்லது தனிப்பட்டவர்களை அநாகரிகமாக அவமானப் படுத்தும் விதத்திலோ முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளால் பரிசின் மகத்துவம் குறைந்துவிட இடமுண்டாகும் என்று நான் கருதவில்லை.
ஞானம் 30 மூன்றாவது ஆண்டுமலர்

நமது சிறுவர் இலக்கியத்துறை ஓர் அவதானிப்பு
- J, 697060Ausf
சிறுவர் இலக்கியம் இன்று உலகில் செழித்து வளர்ந்து வருகின்ற ஓர் இலக்கியத்துறை. புதிய சிந்தனைகள், புதிய இலக்குகள், உளவியற் பாற்பட்ட செல்நெறிகள், நவமான வடிவங்கள் என இந்த இலக்கியத்துறை விரிவடைந்து வருகின்றது. இந்த எழுச்சியும் வளர்ச்சியும் ஒரு சிலநாடுகளிலே ஒரு சில மொழிகளிலேயே ஏற்படுகின்றன என்பதும் உலகமுழுவதும் பரவலாக, ஒரே சீராக ஏற்படவில்லை என்பதும் உண்மையே. ஆயினும், இந்த மாற்றத்தை - இலக்கிய வளத்தை ஏதோ ஒரு நாட்டுக்கோ மொழிக்கோ உரியன என்று யாரும் கருதுதல் கூடாது. அவ்வாறு நோக்குவதற்குரிய துறை அல்ல, சிறுவர் இலக்கியம்.
மனித குலம் ஒன்றே என்னும் சிந்தனை ஏற்கப்பட்டும் வலுப்படுத்தப் பட்டும் வருகின்ற இன்றைய சூழ்நிலையில், சிறுவர் இலக்கியம் உலகப் பொதுமையைத் தளமாகக்கொண்டு விரிவடைய வேண்டிய ஒரு படைப்புத் துறையாக இருக்கின்றது. அத்துடன் இந்தப் பொதுமையில் வேரூன்றி, பல்வேறு இனங்களுக்கும் உரிய சிறப்புப்பண்புகளாகிய மொழி, கலை, பண்பாடு முதலிய தனித்துவங்களையும் பேணி நிற்கவேண்டிய குறிக்கோளும் இதற்கு இருக்கின்றது. இது இந்த இலக்கியத் துறைக்கு அமையவேண்டிய தனித்துவமான - இன்றியமையாத பண்பு ஆகும்.
இத்தகைய புதியதொரு சிந்தனைத்தளத்தில் நிலைகொண்டு வளர வேண்டிய, வளர்ந்து வருகின்ற சிறுவர் இலக்கியத்துறை நமது நாட்டில் தமிழிலே எந்த நிலையில் இருக்கின்றது; இந்த இலக்கியத்துறையில் நமக்குள்ள அக்கறை எப்படியானது என்பவற்றையெல்லாம் நோக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. ஏனெனில், நாம் இவ்விடயத்தில் வளர்ச்சியுற்ற நாடுகளிலும் பார்க்க பின்தங்கியிருக்கிறோம்.
இதன் தேவை உணரப்படவில்லை
நமது புனைகதைத்துறை அதற்குரிய சரியான தடத்தில் நெறிப்படுத்தப் பட்டிருக்கின்றது. அது இந்த மண்ணுக்கு உரிய செழுமையுடன் உறுதியாக இப்பொழுது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சிறுவர் இலக்கியம் இங்கே அவ்வாறு இல்லை. இந்த இலக்கியம் பற்றிய சிந்தனையில் நமது என்றாவது ஆண்டுமலர் 31 ஞானம்

Page 17
படைப்பாளிகளிடம் இன்னும் போதிய விளக்கம் ஏற்படவில்லை. பொது மக்களிடமும், குறிப்பாகப் பெற்றோரிடம் இதன் அவசியம் பற்றிய உணர்வு ஏற்படவில்லை.
இந்த நாட்டில் புனைகதைத்துறை தமிழில் வளர்வதற்கு ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகிய பத்திரிகைகள் அத்திபாரமிட்டன; மு.பொ.எ.சங்கம் முதலிய அமைப்புகள் தத்துவார்த்த பலம் தந்தன. அதன்பின் தோன்றிய சமுதாய எழுச்சிகள் அதன் வளர்ச்சிக்கு வலுவூட்டின. மல்லிகை முதலிய சஞ்சிகைகள் தோள் கொடுத்தன. இவற்றின் பயனாக நமது புனைகதை இலக்கியம் இன்று நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், சிறுவர் இலக்கியத்துக்கு இப்படியான ஊக்கங்கள் எதுவும் தரப்படவில்லை. சிறுவர் இலக்கியத்திற்குக் கால்கோள்
சென்ற நூற்றாண்டில் முப்பதுகளின் கடைசிப் பகுதியில் ஈழகேசரி, பள்ளிச் சிறுவர்களுக்கென கல்வி அனுபந்தம் ஒன்றை ஒவ்வோர் இதழுடனும் இணைத்து வெளியிட்டது. அது தூரநோக்குடைய ஒரு செயற்பாடு; சிறுவர் களிடம் இலக்கிய ஆர்வத்தை வளர்த்து, அவர்களை எழுத்துத்துறையில் ஈடுபடுத்திய ஓர் அரியபணி. அதன்பயனாகச் சிறந்த படைப்பாளிகள் சிலரை நமது இலக்கியத்துறை பெற்றுக் கொண்டது. ஆயினும், ஈழகேசரியின் அந்தப் பணியை சிறுவர் இலக்கியத்துறையை மையமாகக்கொண்ட ஒர் இயக்கம் எனக் கொள்ளமுடியாது. அது சிறுவர் இலக்கியத்தின் ஓர் அங்கம் மாத்திரமே.
அக்காலப் பகுதியில் பாலர் பாட்டுகள் புனைவதற்குரிய ஒரு முயற்சி நடைபெற்றது. பள்ளிக்கூடங்களில் அபிநயப்பாட்டு என்னும் ஒரு பாடம் சிறாருக்குக் கற்பிக்கப்பட்டதால் இத்தகைய பாடல்கள் அப்போது தேவைப் பட்டன. அன்று கல்விப் பணிப்பாளராகவிருந்த க.அருள்நந்தி அவர்கள் பாலர் பாடல்கள் புனைவதற்குப் போட்டியொன்று நடத்தினார். அதன் விளைவாக பாலர்பாடல் நூல் ஒன்று தொகுக்கப்பட்டது. அந்த நூலின் வருகை நமது சிறுவர் இலக்கியத்துக்கு கால்கோளாக அமைந்தது எனலாம். இந்தப் பாடல்நூல் அக்காலத்திலிருந்த எழுத்தாளர்களுக்கும் பாவலர் களுக்கும், ஒரு தவறான விளக்கத்தைக் கொடுத்திருக்கவேண்டும். இந்த நூலைத் தொடர்ந்து சிறுவர் இலக்கியம் என்னும் பெயரில் பாடல்களையே அவர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பண்டுதொட்டுப் பேணிவந்த கவிதை மரபும், அதன் வழிவந்த நமது எண்ணங்களும் இவ்வாறு கவிதை யிலேயே சிறுவர் இலக்கியம் தோன்றுவதற்குக் காரணிகளாக அமைந்தன போலும். சிறுவர் பாடல்களே சிறுவர் இலக்கியம் என்னும் இந்த எண்ணக்கரு அண்மைக்காலத்தில் ஓரளவு வலுவிழந்து வருகின்றது. சிறுவரது உடல் உள வளர்ச்சிகள்
நமது சிறுவர் இலக்கியத்துறை நன்கு புரியப்படாத, அதற்குரிய அவசியம் நன்கு உணரப்படாத, அதனை வளர்ப்பதற்குரிய அவசியம் நன்கு உணரப்படாத, அதனை வளர்ப்பதற்குரிய முனைப்பான செயற்பாடுகள்
ஞானம் 32 மூன்றாவது ஆண்டுமலர்

மேற்கொள்ளப்படாத ஓர் இலக்கியத்துறையாகவே கடந்த ஆறு தசாப்தங் களாக இருந்து வருகின்றது. சிறுவர் இலக்கியம் என்பதன் அர்த்தம், அதன் பண்புகள், வியாபகம் என்பனபற்றி நமக்குள்ள விளக்கம் போதியது அல்ல. அது மேலும் விரிவடைதல் வேண்டும்.
சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கு சிறுவர்களது வயதுபற்றிய கணிப்பு இருப்பது அவசியமாகும். வயது என்பது காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவே. ஆயினும், சிறுவர் இலக்கியப் படைப்பாளி இந்த அளவை சிறுவர்களது உளவளர்ச்சி, ரசனைத் திறம், இலக்கிய நாட்டம் முதலியவற்றைக் கணிப்பிடும் ஓர் அளவு அலகாகப் பயன்படுத்துகிறான். பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள். இந்த வயதெல்லை பதினான்கு என வரையறுக்கப்படுவதும் உண்டு. சிறுவர்களில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் பாலர்கள் ஆவர். ஐந்து வயதைக் கடந்ததும் இவர்கள் வளர்நிலையின் அடுத்த கட்டத்துக்கு வந்து விட்டதாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், அப்படியான ஒரு திடீர் பாய்ச்சல் குழந்தை களின் வளர்ச்சியில் ஏற்படுவது இல்லை. அவர்களது உடல் வளர்ச்சியும் உளவளர்ச்சியும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அது ஒரு அதிசயமான, சூட்சுமமான மாற்றம். பிள்ளையினது வளர்ச்சியை அவதானித்து வருகின்ற தாய்தந்தையர் இதனை நன்கு கண்டுகொள்ளுதல் முடியும். இந்த வளர்ச்சியைச் சிறுவர் இலக்கியப் படைப்பாளியும் மனதிற் கொள்ளுதல் வேண்டும். இந்த விளக்கத்தின் தளத்தில் நோக்கும்போது சிறுவர் இலக்கியத்துக்குரிய வயது எல்லை நெகிழ்வானது; பருமட்டானது என்பது புலனாகும். யாருக்கு, எதை, எப்படிச் சொல்வது?
சிறுவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது, அவர்களுக்கு உள்ள சொல்லாட்சி. பாலர்களுக்கும் பத்து வயதுச் சிறுவர் களுக்கும் உள்ள சொல்லறிவு, விடய அறிவு என்பன ஒரே அளவின அல்லவே. இன்னும் சிறுவர்களது ரசனையில் ஏற்பட்டுவருகின்ற மாற்றமும் நோக்கப்படவேண்டியதாகும். சிறுவர்களது உலகம் கணந்தோறும் விரிந்து கொண்டேயிருக்கிறது!
பாலர் வகுப்பில் பயிலும்போது, "நிலா! நிலா! வா, வா!” என்று பாடி மகிழ்ந்த பிள்ளையே இன்னொரு பருவத்தில், சந்திரனுக்கு மனிதன் போய்வந்த சாதனையை விஞ்ஞான அடிப்படையில் படித்து வியக்கிறான்! சிறுவர் என்னும் வயது எல்லைக்குள் நிற்கும்போதே அவர்களது நாட்டத்திலும் ரசனையிலும் ஏற்படும் மாற்றங்களைக் கணித்துக்கொள்ளுதல் வேண்டும். விலங்குகள் பற்றியவை, அதிசய நிகழ்வுபற்றியவை, வீரதீரச் செயல்கள் பற்றியவை, துணிகரச் செயல்பற்றியவை, அறிவியல் சார்ந்தவை என சிறுவர் விரும்பும் கதைகளின் தன்மைகள் வயதுக்கு வயது மாறுகின்றன அல்லவா! இவற்றையெல்லாம் மனதிற் கொண்டால், சிறுவர்களில் யாருக்கு, எதை, எப்படிச் சொல்லவேண்டும் என்னும் தெளிவு உண்டாகும்.
«мені ұрпыртқы ஆண்டுமலர் 33 ஞானம்

Page 18
சில சிறுவர் கவிதைகளை எழுதிவிட்டு அவற்றைக் குழந்தைப்பாடல் எனவோ, சிறுவர் பாடல் எனவோ பெயரிட்டு வெளியிடுவதைக் காண்கிறோம். ஏதோ சில கதைகளைப் புனைந்துவிட்டு அவற்றைச் சிறுவர் இலக்கியம் என வெளியிடும் நிலைமை இன்றும் நம்மிடம் இருக்கின்றது. சிறுவர்க்கு எனப் படைக்கும் இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் அது எந்த வயதினர்க்கு உரியது என்பது பொறிக்கப்படல்வேண்டும். இது, பெற்றோர் தங்கள் பிள்ளை களது வயதுக்கு ஏற்ற தூல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும்.
சிறுவர் இலக்கியப் படைப்பு விடயத்திலே படைப்பாளி கருத்திற் கொள்ளவேண்டிய உளவியல் சார்ந்த விடயங்கள் பல உள்ளன. அவற்றைப் பற்றிய தேடல் நமக்கு அவசியம். கவிதை - உரைநடை வடிவங்கள்
நாங்கள் கடந்த 60வருட முயற்சியின் பயனாக சிறுவர் இலக்கியத் துறையில் எங்கு வந்திருக்கிறோம்? கவிதை வடிவிலும், உரைநடைவடிவிலும் இங்கே நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றைப்பற்றிய வகை தொகை விபரங்கள் முழுமையாகத் திரட்டப்படவில்லை. இது நமது பல்கலைக் கழகங்களில் ஒன்று செய்யவேண்டிய பணி.
நமது சிறுவர்கவிதைகள் ஆரம்பகாலம் தொடக்கம் பெரும்பாலும் உதிரிப் பாடல்களாகவே வெளிவந்தன. அவற்றில் பல ஆசைகொண்டு அறையலுற்ற படைப்புகள். அவை பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. சோமசுந்தரப்புலவர், பண்டிதர் நல்லதம்பி, வேந்தனார் ஆகியவர்களுடைய கவிதைகள் நூல் வடிவம் பெற்றனவாயினும் அத்தொகுப்புகள் சிறுவர்க்கேயுரிய தனித்துவம் உடையனவாக அமைய வில்லை.
இப்பொழுது சிறுவர் கவிதைத்தொகுப்புமுறை சீரடைந்து வருகின்றது. அறுபதுகளிலிருந்து சிறுவர் கவிதைகள் உரிய முறையில் தொகுக்கப் பெறுவதைக் காண்கிறோம். கவிஞர் பா.சத்தியசீலன், கவிஞர் அம்பிகைபாகன் முதலிய சிலர் இந்த மாற்றத்தின் முன்னோடிகள் ஆவர். கதைகளுடன் கவிதைகளையும் இழைத்து அண்மைக்காலத்தில் சிறுவர் இலக்கியம் எழுதப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு புதிய உத்தி உரைநடை நூல்கள் வேண்டும்
உரைநடை நூல்களே சிறுவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை. பயன்மிக்கவை. நாங்கள் ஒளவையாரது ஆத்திசூடிப் பாரம்பரியத்தில் வந்தவர்கள். அதனாற்போலும் சிறுவர் இலக்கியம் என்றால் கவிதைதான் என்ற ஒரு சிந்தனையில் "சிக்கியிருக்கிறோம். சிறுவர்களுக்கு எத்தனை துறைகளில் எத்தனை நூல்கள் பிறநாடுகளில் வெளிவந்துகொண்டிருக் கின்றன! அப்படியான இலக்கியம் படைக்கவேண்டுமாயின் நமது படைப்பாளி கள் உரைநடைக்குத் தாவுதல்வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தங்களாக சிறுவர்களுக்கு உரிய உரைநடை நூல்களின் வருகை படிப்படியாக அதிகரித்திருக்கிறது. சபா. ஜெயராஜாவின்
ஞானம் 34 மூன்றாவது ஆண்டுமலர்

பாலர் கதைகள், செ.யோகநாதனது தங்கத்தாமரை, சுந்தரியும் தேவதை களும், சுதாராஜின் காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்குள் வந்தகதை முதலிய நூல்கள் சிறிய கதைகள் என்னும் வகையில் குறிப்பிடத்தக்கவை. நெடுங்கதைகள் என வெளிவந்தனவற்றில் அநு. வை. நாகராஜனது காட்டில் ஒருவாரம், ச.அருளானந்தம் எழுதிய ‘காட்டில் கலவரம், பயப்படலாகாது பாப்பா' என்பன பாராட்டுக்குரிய புதிய வரவுகள்.
சிறுவர் நாடகத்துறைக்கு, கலாநிதி மெளனகுருவின் தப்பி வந்த தாடி ஆடு, முயலார் முயல்கிறார்’ என்னும் நூல்களும், பேராசிரியர் சிவசேகரத்தின் பாட்டும் கூத்தும் என்னும் நூலும், மறைமுதல்வன், உதயச் சந்திரம் ஆகியவர்கள் எழுதிய வானொலிச்சிறுவர் நாடக நூல்கள் இரண்டும் உள்ளன. இவற்றுள் ‘பாட்டும் கூத்தும் நாடகநூல் நமது சிறுவர் இலக்கியத் துறைக்கு பெருமைதரும் ஒரு படைப்பு ஆகும். கோகிலா மகேந்திரன் அண்மையில் எழுதி வெளியிட்ட ‘விஞ்ஞானக்கதைகள் நமது சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு புதிய இலக்கைக் காட்டி நிற்கிறது.
சிறுவர்கள் ஆர்வத்துடன் படிப்பது சித்திரக்கதை. அது நமது புலத்தில் வளரவில்லை. கடந்த காலத்தில் இங்கு சித்திரக்கதைச் சஞ்சிகைகள் இரண்டு தோன்றின; ஆயினும், அவை முளையிலேயே கருகிவிட்டன. சித்திரக் கதை நூல்கள் மாத்திரமல்ல. எங்களுக்கெனச் சிறுவர் சஞ்சிகையும் இல்லை.
நமது சிறுவர் இலக்கியம் அண்மைக்காலத்தில் நூல்வடிவம் என்னும் எல்லைக்கு அப்பால் அடியெடுத்து வைத்திருப்பதைக் காண்கிறோம். பாலர் பாட்டுக்கள் அடங்கிய ஒலிப்பேழை ஒன்றை இ.ஒ.கூ.தா. வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னரும் ஒரு யாழ்.பாடசாலை ஒலிப்பேழையொன்றை வெளி யிட்டிருந்தது. இது தொடரவேண்டிய பயனுள்ள பணியாகும்.
எங்களது இலக்கியப் படைப்பாளிகளுக்கு நூற்பிரசுரம் சம்பந்தமாக உள்ள சிரமத்திலும் பார்க்க அதிக சிரமம் சிறுவர் இலக்கியப் படைப்பாளி களுக்கு உண்டு. சிறுவர் இலக்கிய நூல்களுக்குப் படங்கள் சேர்க்க வேண்டும். இதுகர்ரணமாக அவற்றின் உற்பத்திச்செலவு அதிகரிக்கின்றது. ஆகவே, புத்தகங்களின் பக்கங்களுக்கு வர்ணம் பூசுவதோடு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.
நமது சிறுவர் இலக்கியத்துறையின் ஆறு தசாப்தகால வளர்ச்சியில் இந்த இலக்கியத்துக்கு ஒரு தளம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தளம் நாங்கள் காலூன்றி நின்று இந்த இலக்கியம் பற்றி மேலும் சிந்திக்கவும் செயற்படவும் பயன்படும் என்பது உறுதி.
ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி :
WWW.geocities.com Vgnanam magazine
முன்றாவது ஆண்டுமலர் 35 ஞானம்

Page 19
புதிய உதயத்தில்
புவனத்தில் உயர்ந்திடுவார்
காலிலே செருப்பணிந்து,
கையிலே “பை” ஏந்தி, காலை வெயிலின் ஒளி
மேனியினைத் தழுவி வர, பத்துமணி தேத்தண்ணிக்குப் பாதி ரொட்டியையும் சுத்தி எடுத்துக் கொண்டு,
சொகுசாக நடக்கின்றார்! பொட்டு வைத்த மலையக -
மாதர் - புன்னகை சிந்தியபடி, மட்டக்கம்பை ஏந்தியவராய்
மலைக்கு நடக்கின்றார்! விடியும்முன்னே எழுந்து
வெய்யோன் உதிக்கும்முன்னம், படிக்கச் செல்லும் சிறாரை,
பாங்கோடு தயார்செய்து; உண்டும் உண்ணாமலும்
ஒடிக் கொழுந் தெடுத்ததெல்லாம், பண்டைய அடிமைத்தனம்!
பழைய கதைகளாச்சு! இன்றோ..? செங்கதிரோன் பனித்துளியை
தங்க நிறமாக்க; மங்கையர்கள் கொழுந்து கிள்ளி
“6)un696un 6Dur6úP!” 6r60iunfo சோலைமலை கங்காணியும்
“6)U(F650Gauss! 6)uas 65?!” 6 T6öfuori! வேலை மிக வேகமாகும்
விரல்களோ எந்திரமாகும்! \ f / ஒன்பதுமணி கொழுந்தை -ས་ལ།《་ /下之一
முத்திலை பொறுக்கி நிறுத்தவுடன், தண்பாட்டுக்கு மரநிழலை ހހަރަ --། 《 N
நாடி அமர்ந்திடுவார்!
ஞானம் 36 மூன்றாவது ஆண்டுமலர்
 

இருப்பவர் இல்லாதவருக்கு
6ாடுத்து நீட்டியுண்டு;
விருப்போடு தேநீர் பருகி -
வேலையைத் தொடங்கிருவார்!
பகல் பன்னிரண்டுக்கு
கொழுந்து நிறுத்தபின்னே,
மிகுந்த பசியாற்ற A : ஓடிடுவார் தமிழோவியனி நின்றநிலையில்; வீட்டில் -
இருப்பதை தின்றுவிட்டு, ஒன்றரை மணிக்குள்ளாக,
மீண்டும் ஓடிடுவார் மலையிறுக்கே..! காலத்தையும் ஞாலத்தையும்
கண்டறிந்த பெண்குலத்தார்; ஆளை ஏமாற்றுகின்ற
அற்பர்களை நன்கறிவார்! தேயிலைக் கொழுந்தை
குறைக்கின்ற “பம்மாத்து”செயலை தயங்காது பிடித்துக்காட்டி,
தர்க்கமாடி வென்றிடுவார்! இவர்களை. முக்காடு போட்டபடி
முதுகிலே கூடையை மாட்டி திக்கெல்லாம் படமெடுத்து
காட்டுவதும் சரிதானோ? இருபத்தொராம் நூற்றாண்டில்;
எங்கள் பெருந்தோட்டத்தார்; பெருவிழிப்படைந் துள்ளார்;
பெரும் புரட்சி செய்திடுவார்! புதிய உதயத்தில் தவழும்
மலையகத்தார் - விரையில் புதிய விதிசெய்தே
புவனத்தில் உயர்ந்திடுவார்!
மூன்றாவது ஆண்டுமலர் 37

Page 20
52 DITU DEN DITU
U匣卫町n匹m血
சுதர்மமகாராஜனி
المسـ வாப்பாவின் சுருங்கிய, மஞ்
ܓ
சளடைந்த கண்களைப் பார்க்க இயலாமல் தவித்த என் மனது கண் களை நிலம் பார்க்கவைத்தது. வாப்பாவின் மங்கிய கண்களில் சொல்லவியலாத ஏதோ ஒரு ஏக்கம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல், கண்கள் அடிக்கடி இமைக்கப் பட்டுக்கொண்டே இருந்தன.
இரண்டு மூன்று நாட்களாக அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். வெறும் தண்ணிரும் பாலும் மட்டும் தான். அவைகூட அவ்வளவாய் இறங்குவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பால்கூட சந்தேகம்தான். வயிறு ஒட்டிப்போய், விலா எலும்புகள் முன்தள்ளி, முதுகு கூன் விழுந்து இருக்கும் வாப்பாவைப் பார்க்கும்போது, மனம் சொல்லஇய லாத ஒரு வேதனைக்குள்ளாகிறது. சாரம்கூட இடுப்பில் ஒழுங் காய் நிற்பதில்லை. இடுப்பே இல்லாத மாதிரி, பக்கவாட்டில் சுருண்டு படுத் திருக்கும் வாப்பாவை நினைக்கும்
போது, ஒரு வகையில் ஆச்சரியமா கவும் இருக்கிறது. ஆறு மாதங் களுககு முன நனறாய நடமாடிக கொண்டிருந்த வாப்பா, எப்படி, இப்படி பலஹினமாய் போனார்?
"ஹாஜா நானா. ஹாஜா நானா. ஹாஜிதோட்டத்துல வாப்பா மயங்கி விழுந்திட்டாரு” என்று, ஹாஜி வீட்டு சமையற்காரன் வந்து வீட்டில் சொல்லும் போதெல்லாம், வாப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் நிற்பாட்டியிருந்தார்கள். நாங்கள் வாட்டுக்குப் போகும்போது, வாப்பா அரை மயக்கத்தில் முனங் கிக் கொண்டிருந்தார்.
அன்றைக்கே வாப்பா சரி யென்றுதான் எல்லோரும் சொன் னார்கள். ஆனால் டொக்டர், அவ ரால் இனி ஒன்றுமே பண்ண முடியா தென்று கூறி வீட்டுக்கு கொண்டு போகச்சொல்லிவிட்டார். அன்றைக்கு படுத்தபடுக்கையான வாப்பாதான். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிறது. ஆரம்பத்தில் ஒன்றுக் கிருக்கவும், மலம் கழிக்கவும் வாப்பா வைக் கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்று சுத்தப்படுத் தினோம். ஆனால் போகப்போக வாப்பாவின் உடற் பலஹினமும், இயலாமையும் அவருக்கு படுக்கை யிலேயே அவற்றை முடிக்கவேண்டிய தாயிற்று. சிலநேரம் அவரை அறி யாமலேயே சாரம் நனைந்திருக்கும். மலம்கூட சிலநேரம் சாரத்தோடு போயிருக்கும்.
வாப்பாவின் சகல தேவை களையும் முகம் சுழிக்காமல் செய் யக்கூடிய ஒரு மனதை அல்லாஹற் எனக்கு கொடுத்ததற்கு அவருக்கு
ஞானம்
38
மூன்றாவது ஆண்டுமலர்

நன்றி கூறவேண்டும். அத்தோடு இதற்கெல்லாம், முகம் சுழிக்காது உறுதுணைபுரியும் என் மனைவி தாஹாவை நினைக் கும் போது பெருமையாகவும், அவள்மீது ஒரு மரியாதையும் ஏற்படுகிறது.
மூன்று பிள்ளைகளோடு, நாமிருவரும் வாப்பாவையும் வைத் துக்கொண்டு, இந்தச் சிறிய வீட்டில், இருப்பதுதான் சற்றுக் கடினமான விடயம். முன்விறாந்தாவும், ஒரு ரூமும், ஒலையால் மறைக்கப்பட்ட சிறிய குசினியும் வாப்பா எமக்கு இந்த ஊரில் தேடித்தந்த சொத்து.
ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுவந்த முதல் இரு கிழமை கள் வாப்பாவை எமக்கிருந்த அந்த ரூமுக்குள்தான், சாக்குக் கட்டிலில் படுக்கவைத்திருந்தோம். பிள்ளை களை அவரோடு ரூமில் படுக்க வைத்து, நானும் தாஹாவும் விறாந் தையில் படுத்துக்கொள்வோம்.
வாப்பா எப்போதும் கஷ்டமறிந் தவர், யாருக்கும் கஷ்டம் கொடுக்கா தவர். அதனால்தான் என்னவோ வாப்பா இரு கிழமைகளிலேயே விறாந்தையைத் தன் இருப்பிடமாக் கிக்கொண்டார்.
விறாந்தை என்றால், அப் படியே முன்பக்கம் திறந்தமயம். களப்புக் காற்று வெக் கையோடு பிசுபிசுப்பாய் உடம்பைத் தாக்கும். ஆரம்பத்தில் வாப்பாவை விறாந் தைக்கு இடம்மாற்ற நான் பிரியப்பட வில்லை. இருந்தாலும் வாப்பாவின் பிடிவாதம் என்னை மெளனமாக் கியது. ஒருவகையில் வாப்பாவைக் கழுவிச் சுத்தம் செய்ய வசதியென்று பேசாமல் அவர் இஷ்டப்படியே விறாந்
தைக்கு அவரை இடமாற்றம் செய் தேன்.
வாப்பா, விறாந்தைக்கு இடம் மாறியதற்கு எம்வீட்டின் இடவசதி யின்மை ஒரு காரணம். அதைவிட முக்கியமான காரணம், அவர் பத்து வருடங்களாக வீட்டு முற்றத்தில் வளர்க்கும் பனைமரம்.
வாப்பாவுக்கு பனைமரம்னா உசுரு. நாம் ஊரில் வாழ்ந்த காலத் தில் எம் வீட்டு வளவு வேலியைச் சுற்றி பத்தடிக்கு, பத்தடி பனைமரங் கள்தான் இருக்கும். வாப்பா அவர் கண் கானிப் பிலேயே வளர்ந்த மரங்கள்.
எங்கள் ஊரு பனை மரங் களுக்குப் பெயர்போன ஊரு. அந்த மண் ணுக்கும் பனைக் குமுள்ள தொடர்பு முடிவில்லாதது. எத்தனை யுத்தங்கள், அழிவுகள் வந்தாலும், அந்த மண்ணில் பனைகள் நிமிர்ந்து நிற்கும். வாப்பா சொல்வார். அந்த மண்ணின் அழியாத, மாறாத வளத்திற்கு காரணமே இந்த பனைகள் தானென்று.
ஒவ்வொரு காலையும் மாலை யும் மெல்லிய சூரிய வெளிச்சத்தில் பனை மரங்களின் கம்பீரம் பார்ப்ப தென்றால் வாப்பாவுக்கு கொள்ளைப் பிரியம். பனங்கிழங்கு, பனங்கஞ்சி, பனம் பணியாரம் என்று அவர் தின்னும் சாப்பாடுகள்கூட பனையால் ஆனவையாக இருந்தால், அவருக்கு அந்த ஒன்றேபோதும்.
அவர் சொல்வார். பனை நம் ஊரின் தனிச்சொத்து, அதன் கம்பீரமே ஒவ்வொரு பொழுதையும் உற்சாகமாய்க் கழிக்க உதவுமென் | Tsr.
மூன்றாவது ஆண்டுமலர்
39
ஞானம்

Page 21
என் சிறுவயதில் பனை பற்றிய கதைகள் எவ்வளவு கூறியிருக்கிறார். வாப்பா பனைமீதும் அம்மண்மீதும் கொண்டிருந்த பற்றும், உறவும் என்னை அந்தக் காலத்திலேயே ஆச்சரியப்படவைத்திருக்கிறது.
வாப்பா ஊரில் நடத்திய சிறு சில்லறைக் கடைதான் நம் குடும் பத்து வருமானம். அவ்வருமானம் எமக்கு போதுமாயும், குடும்பத்தைச் சந்தோஷமாயும் வைத்திருந்தது.
நான், வாப்பா, உம்மா, பெரிய தாதா பேகம், சின்னதாதா பாத்திமா என்று எவ்வளவு நிம்மதியாயும், சந்தோஷமாயும் வாழ்ந்த காலமது. நினைக்கும்போது இப்போது பெருமூச்சு மட்டும்தான் மிச்சமாய் இருக்கிறது.
ஊரிலிருந்த வாப்பாவின் நண்பர்களில் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் வில்வரத்னம் மாமா. அவரது சாந்த குணமும் அறிவும் வாப்பாவைப் போலவே, என்னையும் அவருடன் நெருக்க மாக்கியது. எமது குடும்பமும் அவரது குடும்பமும் நெருங்கிய உறவுகள். வில்வரத்தினம் மாமாவின் மகன் அகிலன் என் நெருங்கிய தோழன். இருவரும் ஒரே பாடசாலையில்தான் கல்வி கற்றோம்.
அகிலனை நினைத்தாலே எம்மிருவரது பாலப்பருவகளியாட்டங் கள்தான் ஞாபகத்தில் நிற்கின்றது. அவன் இப்போது கனடாவில் இருப்ப தாக அன்று வாப்பாவைப் பார்க்க வந்த வேளை வில்வரத்தினம்மாமா கூறினார்.
இரண்டு மாதங்களுக்குமுன் வாப்பாவைப் பார்க்க வந்தவர்,
Dovjouetoovo Up Llvaboliquiö துயரப்பட்டார். சரியாகப் பதினொரு வருடங்களின் பின் கொழும்பு வந் தவர், எம் இருப்பிடம் தேடி அலைந்து வந்ததே எவ்வளவு பெரிய காரியம். பழைய உறவுகள் எம்மைக் கைவிட வில்லை என்ற ஒரு ஆறுதல்.
வந்தவர், வாப்பாவின் நிலை கண்டு துயரப்பாட்டாலும் அந்தத் துயரத்திலும் ஆச்சரியப்பட்ட ஒரு விடயம், வாப்பா முற்றத்தில் வளர்த் திருந்த பனை மரத்தைப் பார்த்துத் தான். பனையின் மீதுள்ள வாப்பா வின் விருப்பு அவருக்குத் தெரியும். அந்த மண்ணின் மீது வாப்பா வைத்திருந்த அன்பும், மரியாதையும் அவரைப் பலமுறை ஆச்சரியப்பட வைத்திருக்கின்றன.
ஒரு நோன்புப் பெருநாள் நாளில் அவர்களது குடும்பத்தார் அனைவரையும் பகல் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தோம். அன்று வாப்பா கூறிய ஒரு வார்த்தை எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.
"வில்வா (வாப்பா அவரை அப் படித்தான் அழைப்பார்) எங்களுக் கும் உங்களுக்குமிடையிலான
to 100
ஞானம் 40
மூன்றாவது ஆண்டுமலர்
 

உறவு. இந்த மண்ணுக்கும், பனைக்கும் இருக்கிற உறவுமாதிரி எப்பவுமே பிரிக்க முடியாதது.”
இந்த வார்த்தைகளைக் கேட்ட மாமா உணர்ச்சிவயப்பட்டு, வாப்பாவை அப்படியே அணைத்துக் கொண்டார்.
சொந்த மண்ணில், உறவுக ளோடும் அயலாரோடும், இருப்பதைத் தின்று, துயரங்களில் பங்கெடுத்து நிம்மதியாய் வாழ்ந்த அந்தக்காலம் ஒளிமயமானது. ஒளியிலிருந்து இருட்டுக்குள் தள்ளப்பட்டவர்கள் போல் நாம் திடீரென்று இப்படி ஒரு அகதியான வாழ்க்கைக்கு கட்டாய மாக் கப் பட்டது அலசலாவின் சோதனையா? வாப்பா சொல்வார். "மவன் இது நம்ம மண் னில்ல, இது அல்லாவின் சோதனை, நம்ம மண்ணு வேற, அதுக்கு எப்ப சரி திரும் பியும் போகத் தான் போறோ.”
வாப்பா கடந்த பதினொரு வருடங்களாய் கூறிக்கொண்டிருக்கும் வார்த்தைகள். மண்ணின் மணமும், உணர்வுகளும் மறக்காதிருக்கத்தான் வாப்பா பனைமரம் வளக்கிறார் போலும்.
சரியாய் பகல் பதினொரு மணியளவில்தான், அந்தத் துண்டுப் பிரசுரமும், செய்தியும் எம்மை எட்டி யது. அப்போது எனக்கு பதினைந்து, பதினாறு வயதிருக்கும். வீட்டின் கடைக்குட்டி. பத்தாம் வகுப்புச் சோதனை நெருங்கிக் கொண்டிருந்த (ET6) b.
அவர் களது விடுதலைப் போராட்டத்திற்காக பல பாடசாலை இளைஞர், யுவதிகள் இணைந்து
கொணி டிருந்த காலமும் கூட. போராட்டத்தில் சில முஸ்லிம் இளைஞர்களும்கூட இணைந்திருந் தார்கள். வெடிச்சத்தம், குண்டு வெடிப்புகள், உயிரிழப்புகள் என்று எம்மூர் மாறிக்கொண்டிருந்த ஒரு நாளில், ஒரு பொழுதில்தான் யார் செய்த குற்றத்தினாலோ, எவர்செய்த துரோகத்தினாலோ இணைந்திருந்த இரு சமூகங்களில் ஒரு சமூகத்தைக் கட்டாயமாய்ப் பிரித்தெறியும் அந்தச் செய்தி துண்டுப்பிரசுரங்களாய் வந்தது.
"யாழி ப் பாணத் திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் இன்னும் 24 மணி நேரத்துக்குள், எவரு மிருக்காது வெளியேற வேண்டும்"
என்ற செய்தியோடு வாப்பா, கடைத்தெருவில் இருந்து ஓடோடி வந்தார்.
ஆரம்பத்தில் சற்று அலட்சியப் படுத்தியவர்களுக்கு, அதன் பின் நடந்த சில அசம்பாவிதங்கள், அதன் தீவிரத்தை அவர்களுக்கு உணர்த் தியது. வெளியேற்றப்பட்டோம். உடுத் தியிருந்த உடுப்புகளோடு எங்கள் உடமைகள்கூட எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாமல் துரத்தப்பட் (3LTlib.
வில்வாமாமாவும், குடும்பத் தாரும் ஓடோடி வந்தார்கள். அவர் களால் என்ன செய்யமுடியும். துக்கப் படமட்டும்தான் முடியும்.
வாப்பா, அன்று வாய்விட்டுக் கதறி அழுதார். அந்த மண்ணி லிருந்து அவர் வந்திருக்கமாட்டார். அங்கேயே சிலநேரம் உயிர்விட்டிருப் பார். ஆனால் எம்மைக் காக்க வேண்டிய கடமை அவரை வெளி
புள்)ாவது ஆண்டுமலர் 41
ஞானம்

Page 22
யேற வைத்தது.
அன்று வாப்பா, எம்மோடு அம்மண்ணிலிருந்து கொண்டுவந்த உடமைகள், நம்வளவுப் பனை மரங் களிலிருந்து விழுந்திருந்த இரண்டு u60TLD upshison.
இரண்டு பனம்பழங்களோடு அகதிகளாய் இங்கு கொண்டுவந்து குடியமர்த்தப்பட்டோம். இடையிலே எத்தனை துயரங்கள், எத்தனை அவலங்கள். அவை இன்னும் கண் முன் நிழலாடுகின்றன. அது எம் இருண்ட யுகத்தின் ஆரம்ப நாட்கள். அந்நாட்களில் வாப்பா பட்ட கவர் டங்கள். இரண்டு கொமர் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு வாப்பாவும், உம்மாவும் எம்மைப் பாதுகாக்கப்பட்ட சிரமங்கள், நினைத் தாலே மனம் வெடித்துவிடும் போலிருக்கிறது.
வாப்பா கொண்டு வந்திருந்த பனம்பழங்களை ஒன்றுமே செய்யாது ஒரு ஞாபகச்சின்னமாய் வைத்துப் பாதுகாத்தார். பின் ஒரு நாளில் காய்ந்து போயிருந்த அவற்றுள் ஒன்றை முற்றத்தில் நட்டார். அப் போது எம்முடைய இவ்வீடு ஒலை யால் மறைக்கப்பட்ட சிறுகுடிசை,
வாப்பா கூலிவேலை முடிந்து வரும் ஒவ்வொரு மாலையும் முற்றத்தில் நட்ட பனம் விதைக்குத் தவறாது நீர் ஊற்றினார். இங்கு இலகுவில் அகதிகளை நம்பிக் கொடுத்த ஒரே வேலை கூலிவேலை தான். ஒவ்வொரு நாள் காலைத் தொழுகையின் பின்னும் வாப்பா முற்றத்திற்கு சென்று விதை நட்ட இடத்தை நோட்டமிடுவார், துளிர்த் திருக்கிறதாவென்று!
,போகப்போக அகதி நிவார ணம் தடைப்பட்டது. ஆரம்பத்தில் நம்மைப் பற்றி அக்கறை கொண் டோர் சிறுகச் சிறுக எம்மை மறந்து போனார்கள். சொந்த மண்ணுக்குச் செல்லும் நாளைப் பற்றிய எதிர்பார்ப் பும் இப்போது நாமிருக்கும் இடமும் மட்டும்தான் மிச்சமானது. குடும்பக் கஷடம் கூடியது. வாப்பாவோடு நானும் கூலிவேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
ஆனால், வாப்பா அன்றாடம் கவனித்த பனம் விதை மட்டும் வெளியே தலைகாட்டவில்லை. உப்பு நீரும், மணல் மண்ணும் அதற்கு ஒத்துவரவில்லை.
வாப்பா மீண்டும் சளைக்காது, அடுத்த பனம்பழத்தை முற்றத்தில் சற்றுத்தள்ளி நட்டார். நடுமுன் மணல் மண்ணோடு எங்கிருந்தோ கொண்டு வந்த மாட்டெருவையும் கலந்து குழிக் குள் இட்டு, அதனுள் விதையை நட்டார்.
ஒவ்வொரு நாளும் மறக்காது அவற்றுக்கு நீர்வார்த்து, இரண்டு விதைகள் நட்ட இடத்தையும் ஒரு அவதானத்தோடு கவனிக்கத்தொடங் கினார். சரியாக தின்னாது உறங்காது வாப்பாவின் நினைவெல்லாம் பனை யில்தான் இருந்தது.
சரியாக நான்கைந்து மாதங் களின் பின் ஒருநாள் காலை, வாப்பா தொழுகைமுடிந்து முற்றத்தைப் பார்த்தபோது இரண்டாவதாய் நாட் டிய விதை சிறிதாய்த் துளிர்விட்டிருந் தது. பனைமீது வாப் பாவின் நம்பிக்கை இருமடங்காகியது.
இன்றோடு வாப்பாவின் பனை மரத்துக்குக் கிட்டத்தட்ட பத்து
ஞானம் 42
மூன்றாவது ஆண்டுமலர்

வயதாகிறது. அவரது அன்றாட, அன்பான கவனிப்பால் அது வளர வளர நம்குடும்பத்தில் பல மாற்றங்
கல்யாணங்கட்டி இதே முகாமில் வசித்துவருகிறார்கள். நான் கட்டி இரண்டு பிள்ளைகள். உம்மா மெளத் தாகி மூன்று வருடங்களுக்கு மேலா கிறது. இன்று வாப்பா படுத்த படுக்கையாய். இந்த மாற்றங்களுக் கிடையே பனைமரம் நான்கடிக்கு மேல் வளர்ந்து கம்பீரமாய் நிற்கிறது.
வாப்பா விறாந்தைக்கு வந்த முக்கிய காரணமே இந்தப் பனைமரம் தான். விறாந்தையில் இருந்து பார்க்க, பனைமரத்தின் முழுத்தோற்ற மும் நன்றாகத் தெரியும். சாக்குக் கட்டிலில் படுத்தபடியே வாப்பா பனை மரத்தைக் கண் ணிமைக் காது பார்த்துக்கொண்டிருப்பார். அந்தப் பார்வையில் இருக்கும் ஏக்கம் வாப்பாவுக்கே தனித்துவமானது. அது பல நினைவுகளை அவருக்கு ஞாபகமூட்டுவதுபோல், அவரது கண்கள் பிரகாசமாகி, மங்கும். பக்க வாட்டில் படுத்தபடியே அவரது கண்கள், பனை மரத்தோடு பழைய கதைகள் பேசுவதாயப் அடிக்கடி திறந்துமூடும்.
மூன்று நாட்களாக அன்ன ஆகாரமின்றிப் படுத்துக்கிடக்கும் வாப் பாவைப் பார்க்கப் பயமாக இருக் கிறது. பள்ளி அஷரத் இன்னும் ஓரிரு நாட்கள் தானென்று சொல்லிவிட்டார்.
பக்கத்தார், உறவுகளென அனை வருமே வாப்பாவின் மையத்தை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக் கிறார்கள்.
வாப்பாவின் அசைவற்ற உடம்பு லாம்பு வெளிச்சத்தில் அமைதியாய் இருந்தது. கண்கள் மட்டும் திறந்தபடி வாசலையே கவனித்துக்கொண்ருந்தன. வாப்பா வின் வாய்வார்த்தைகேட்டு எத்தனை நாட்கள்? வாப்பாவினருகே மெது வாய்ச் சென்றேன். தலைமாட்டில் அமர்ந்து "வாப்பா” என்றேன். தாஹா என்னருகில் நின்று கொண்டாள். மீண்டும் “வாப்பா” என்றேன்.
வாப்பாவின் நெஞ்சுக்குழியை தடவிக்கொடுத்தேன். வாப்பா மூச்சு விட அவஸ்த்தைப் படுவது தெரிந் தது. என் நெஞ்சுக்குழி இறுகியது. அதனுள் ஏற்படும் வேதனை கண் களால் கண்ணிராய் வெளிப்படத் தொடங்கியது.
"வாப்பா” குரல் தடுமாற அழைத்தேன். அவரது பார்வை முற்றத்தில் பதிந்திருந்தது. பனை மரத்தை நோக்கினேன். அது நிசப்த மாக சலனமற்று கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது.
அண்றைய இரவு பசிக்க வில்லை. வாப்பாவின் நினைவும், அவரது நிலையும் என்னை வாட்டி யது. அந்த வாட்டம் அப்படியே நித்திரையாகி உறங்கிப்போனேன்.
பள்ளியில் பாங்குச் சத்தம் கனவில் கேட்பதுபோல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தேன். காலை பள்ளியில் பாங்கொலி நிஜத்திலும் ஒலித்துக்கொண்டிருந்தது. பக்கத் திலே தாஹா உறங்கிக் கொண்டிருந் தாள். இளைய மகளின் கால் அவள் நெஞ்சில் கிடந்தது. அந்தச் சிறிய காலை தாஹாவின் நெஞ்சில் இருந்து அகற்றிவிட்டேன். பாய்க்கு
மூன்றாவது ஆண்டுமலர் 43
ஞானம்

Page 23
வெளியே நிலத்தில் சுருண் டு படுத்திருந்த மூத்தவளை பாயில் தூக்கி வைத்து போர்த்திவிட்டு ரூம் கதவைத் திறந்து விறாந்தைக்கு வந்தேன்.
விறாந்தைக்கு வந்தவுடன் வாப்பாவின் ஞாபகம் வந்தது. முற்றத்
யையும் வியாபித்திருந்தது. உப்பு கலந்த குளிர் காற்று முகத்தை அறைந்தது.
வாப்பாவின் கட்டிலைப் பார்த் தேன். மனம் திகிரென்றது. கட்டில் வெறுமையாய் இருந்தது. வாப்பா. அருகில் போய் கட்டிலைத் தடவி னேன் . அது வெறுமையாயப் க் கிடந்தது.
நெஞ்சு பயத்தாலும், அதிர்ச்சி யாலும் வெடவெடத்தது. கீழே ஏதும் விழுந்துவிட்டாரோ என்று, கட்டிலைச்
சுற்றி ஒரு சுற்று சுற்றினேன். அவரது போர்த்தி மட்டும் முற்றம் வரை இழு பட்டுக்கிடந்தது. போர்த்தியை எடுத்து கட்டிலில் போட்டுவிட்டு முற்றத்திற்கு வந்தேன். முற்றத்தில் ஏதோ ஒன்று கிடந்தது. குனிந்து கையில் எடுத் தேன். மூத்திர மணம் வீசியது. வாப்பாவின் சாரம்,
எனக்கு உடனடியாக பனை மரத்தின் ஞாபகம் வந்தது. பனை மரத்தைப் பார்த்தேன். களப்புக் காற்றுக்குச் சலனமற்று கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. அதனடியில் ஏதோ ஒன்று சுருண்டு கிடந்தது.
ஓடிச் சென்று பனைமரத்தி னடியை பார்த்தேன். அல்லாஹற். வாப்பா உடம்பில் துணியற்று நிர்வாணமாய்ச் சுருண்டு கிடந்தார். அவரது மூச்சு நின்று போயிருந்தது.
கனவினர்
அந்தக் கனவில் நீயும் நானும் பேசினோம். எமக்கென்ற நிலம்
6)წ06) நிலவின் ஒளிபடர்ந்த முற்றம் எல்லாமே இருந்தன
கனவினது
உயிர்முகம்
சித்தாந்தனி
(திரும்பியே வராத ஒரு இரவினது
குழம்பொலியை கேட்கநேர்கிறது.
மனிதர்களின் புன்னகை சுடர்ந்த
N ഗ്
)5 .cA ܬ݂ܶܐ
مکرر
காலத்தின் வலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிற அந்த அழகிய கனவில்தான் நீயும் நானும் ஒவியங்களாக வாழமுடிந்தது.
தசையும் ரணமும் குருதியும் இல்லாத கனவின் உணர் ஒரங்களில் யுத்தம் பொய்த்துப்போனதென்பது விஷித்திரமானதுதான். لر
ஞானம்
44
மூன்றாவது ஆண்டுமலர்

663 fuనికి
නි. භුf(ගrරිරි රිච්Dör
கால தரிசனம்' என்ற எனது முதலாவது சிறுகதைத் தொகுதியை 1973ல் வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொண்டபோது, எனது பெரும் மதிப்புக்குரிய பேராசிரியர் க. கைலாசபதி அவர்களிடம் முன்னுரை வாங்க விரும்பினேன். ஆனாலும் அப்போது பேராசிரியருடன் எனக்குத் தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை. அவரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பமும் ஏற்பட்டதில்லை. இந்நிலையில் எனது விருப்பத்தை அக்காலப்பகுதியில் வித்தியாதிபதியாக இருந்த திரு கி. லசஷ்மண ஐயர் அவர்களிடம் தெரிவித் தேன். ஐயரவர்கள் பேராசிரியரின் ஆசிரியராக இருந்தவர். எனது படைப்புக் களையும் அவ்வப்போது வாசித்து அபிப்பிராயங்கள் கூறுபவர். எனவே ஐயரவர்கள் என்னைப் பேராசிரியருக்கு அறிமுகஞ் செய்துவைப்பாரென நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் உடனே "கைலாசபதியிடமா முன்னுரை வாங்க விரும்புகிறீர். அவர் கண்டபடி எழுதிவிடுவார்; கவனம்” என என்னை எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை நான் பெரிதுபடுத்தவில்லை.
பேராசிரியர் கைலாசபதியின் இலக்கியம் பற்றிய கருத்துக்களால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். அவரது கட்டுரைகள், நூல்களை வாசித்ததால் நவீன இலக்கியக் கொள்கைகளை நான் அறிய முடிந்தது. பேராசிரியர் இலங்கையிலும் தமிழகத்திலும் இலக்கியவாதிகளின் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார். அவரிடம் எனது சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை பெற்றால் மதிப்பாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு அப்போது மேலோங்கியிருந்தது.
பேராசிரியர் எனக்கு எழுதித் தந்த முன்னுரையைப் பார்த்ததும்
நான் திடுக்குற்றேன். அவரது முன்னுரையில் காணப்பட்ட சில வசனங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன. “முகப்பரிச்சயம் இல்லாமையே ஒரு வகையில் இசைவானது. என்ற தீர்மானத்துடன் முன்னுரை எழுதுவதற்குச் சம்மதித்தேன். முகத்தாட்சணியத்துக்காகப் பூசி மெழுகாமல் மனதில் தோன்றியவாறே கருத்துக்கூற இது வாய்பளிக்குமல்லவா?" என்ற குறிப்புடன் தொடர்ந்து பின்வருமாறு எழுதினார்.
1. வறுமையில் ஒரு பெண் தன் உடலை விற்றுப் பிழைக்க முற்படும் அடிக்கருத்தை மையமாகக்கொண்டது பிழைப்பு என்னும் கதை. புதுமைப் பித்தனது கதையைப் படித்த அருட்டுணர்வினால் ஆசிரியர் இக்கதையை
மூன்றானது ஆண்டுபாலர் 45 ஞானம்

Page 24
எழுதியிருத்தல் கூடும்.
2. ஒரு சின்னப்பையன் அப்பாவாகிறான் - இக்கதையைப் படித்த பொழுது என்னையறியாமலே இலங்கையர்கோனின் மச்சாள், கு.அழகிரிசாமி யின் அன்பளிப்பு, அ.முத்துலிங்கத்தின் அக்கா என்பவற்றை மீண்டும் நினைத்துப்பார்த்தேன்.
3. முட்டுப்பட்ட குடும்பங்களிலுள்ள குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் படும் துன்ப துயரங்களை அடிக்கருத்தாகக் கொண்டு பல கதைகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. விசிறி (அழகு சுப்பிரமணியம்), வாத்தியார் அழுதார் (வரதர்), கரும்பலகை (டொமினிக் ஜீவா), கல்வி (காவலூர் இராசதுரை), ஒரு கிராமத்துப்பையன் கல்லூரிக்குச் செல்கிறான் (செ.கதிர்காமநாதன்) என்பன சிலருக்கு நினைவுக்கு வரலாம் - காலதரிசனம் இவ்வகையில் வருவது.
போராசிரியரின் முன்னுரையை வாசிக்கும் ஒருவருக்கு, ஞானசேகரன் பிறர் கதைகளை வாசித்துவிட்டு அவற்றைப் பின்பற்றி எழுதுகிறார். அல்லது அவற்றை மாற்று உருவில் தருகிறார் என்ற எண்ணம் ஏற்படும்வகையில் அந்த முன்னுரை அமைந்திருந்தது.
உண்மையில் பேராசிரியர் குறிப்பிட்ட கதைகளில் இலங்கையர் கோனின் கதையை மட்டுமே அக்காலப்பகுதியில் நான் வாசித்திருந்தேன். அக்கதைக்கும் எனது கதைக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் குறிப்பிட்ட ஏனைய கதைகளை நான் அப்போது வாசித்திருக்கவில்லை.
என் உற்சாகம் குன்றிப் போய்விட்டது. செய்யாத குற்றத்திற்குத் தண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு என்னை ஆட்கொண்டது.
எனது முதலாவது நூலை நான் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் எவரிடமும் கொடுக்கமுடியாத ஒரு தயக்கத்தை அந்த முன்னுரை ஏற்படுத்தியிருந்தது.
அதன்பின்னர் என்னுள் ஏற்பட்ட விரக்தி என்னைச் சிறுகதைகள் எழுதுவதில் தயக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியாகத்தான் எனது எழுத்துல கத்தின் ஆரம்பகாலம் பின்னடைவுடன் தொடங்கியது.
ஆயினும், என்னுள்ளே இருந்த இலக்கிய நெஞ்சம் அனலாய், தழலாய் கனன்றுகொண்டே இருந்தது. கருக்கள் கிடைக்கும்போது அவை கதைகளாக என் நெஞ்சிலே விரிந்தவண்ணம் இருந்தன.
என்னுள்ளே ஓர் இலக்கிய நெஞ்சம் உருவாகுவதற்கு எனது இளமைப்பருவத்திலே நான் வாழ்ந்த சூழல்தான் காரணமாய் அமைந்தது. எனக்கு ஒரு பாரம்பரியம் இருந்தது. வித்துவ சிரோமணி சி.கணேசையர் எனது பூட்டன். இவர் அக்காலத்தில் தமிழகத்திலிருந்துவரும் ‘செந்தமிழ்' சஞ்சிகையில் இலக்கியச் சர்ச்சைகள் புரிந்தவர்; கட்டுரைகள் எமுதியவர், தொல்காப்பிய உரை எழுதியவர், பல்நூலாசிரியர்.
நல்லை நகரில் முதன்முதலாக ஆதீனம் அமைத்து அதன்
ஞானம் 46 மூன்றாவது ஆண்டுமலர்

முதல்வராக விளங்கிய ரீலழரீ சுவாமிநாதத்தம்பிரான் சுவாமிகள் - சி.எஸ்.எஸ். மணிபாகவதர் எனது தாய்மாமன். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கதாப்பிரசங்கங்கள் நிகழ்த்திப் புகழ்பெற்றவர். இவர்களோடு என்னைச் சுற்றியிருந்த உறவினர்கள் பலர் பழந்தமிழ் இலக்கியங்களில் துறை தோய்ந்தவர்களாக இருந்தனர். வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் இவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து ஒத்த சந்தர்ப்பங்களை எடுத்து விளக்கி, பாடல்களைச் சுவைபடப் பாடிக்காட்டுவார்கள். கம்பராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், கந்தபுராணம் போன்ற இலக்கியங்களின் பரிச்சயம் எனக்குச் சிறுவயதிலேயே ஏற்பட்டுவிட்டது.
நான் எழுத்தெண்ணி வாசிக்கத் தொடங்கிய காலத்திலேயே கையில் கிடைத்தவற்றையெல்லாம் வாசிக்கத் தொடங்கினேன். இதனைக் கவனித்த எனது தாயார் ‘கண்ணன் சிறுவர் சஞ்சிகையை மாதாமாதம் தமிழகத்தி லிருந்து தருவித்துக் கொடுத்தார். சிறுவயதிலேயே எனது வாசிப்புப் பழக் கத்தை வளர்த்தெடுப்பதில் பெருமுயற்சி எடுத்தவர் எனது தாயார்தான். இந்த வாசிப்புப் பழக்கம் இன்றுவரை என்னிடம் தொடர்ந்துகொண்டேயிருக் கிறது.
உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நான் மாணவனாக இருந்தபோது எனக்குச் சிறந்த ஆசிரியர்கள் கிடைத்தார்கள். கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டிகள், விவாதங்கள், கல்லூரி விழாக்களில் நடாத்தப்படும் உரைகள் ஆகியவற்றில் நான் பங்குபற்றி எனது ஆளுமையை வளர்த்தெடுக்க ஊக்கியவர் திரு சபாநாயகம் ஆசிரியர். தமிழைச் சிறப்பாக எழுதக் கற்றுத் தந்தவர் த. வடிவேலன் ஆசிரியர். திரு பொன்னம்பலம், திரு ஞானசுந்தரம், தவமணி ரீச்சர், ஞானாம்பாள் ரீச்சர் ஆகியோரும் எனது திறமைகளை வளர்த்தெடுக்க உதவியவர்கள்.
எனது கல்லூரி நாட்கள் பற்றி கலாநிதி துரை.மனோகரன் எனது புதிய சுவடுகள் நாவலின் இரண்டாவது பதிப்பின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "எழுத்தாளர் தி.ஞானசேகரன் அவர்களும் நானும் ஒரே கல்லூரியிற் படித்தவர்கள். யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் இந்துக்கல்லூரியில் அவர் பயின்றுகொண்டிருந்தபோது, நான் இடைநிலைக்கல்வி பயிலும் மாணவனாக இருந்தேன். அவர் மாணவராக இருந்தபோது, மாணவர் தலைவராகவும், எழுத்து ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். கல்லூரி மாணவராக அவர் இருந்த காலத்திலேயே நாடகங்கள் எழுதி, தாமும் பாத்திரமேற்று, நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார். எழுத்தாற்றலோடு நடிப்பாற்றலையும் அவர் கொண்டிருந்தார். அவர் எழுதி நடித்த "பொலிடோல் பொன்னர்’ என்ற நகைச்சுவை நாடகம் இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. அதில் பொன்னர் என்ற பாத்திரமேற்று நடித்து, தமது நகைச்சுவை உரையாடல்களாலும், நடிப்பாற்றலாலும், சபையோர் அனைவரையும் ஞானசேகரன் கவர்ந்தார். "ஒசியெண்டால் பொன்னன் பொலிடோலும்
மூன்றாவது ஆண்டுமலர் 47 ஞானம்

Page 25
குடிப்பான்” என்று அந்த நாடகத்தில் இடம்பெறும் ஒரு வசனம் இன்றும் என் நினைவில் உள்ளது".
கலாநிதி துரைமனோகரன் நான் மறுந்துபோன அந்த நாடக வசனத்தை, இன்றும் ஞாபகத்தில்வைத்து எழுதியிருப்பது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. அத்தோடு, எனது பள்ளிப் பருவத்தின் பின் நாடகத்துறையில் எனக்கிருந்த ஈடுபாட்டை தொடர்ந்து வளர்த்தெடுக்காமல் விட்டுவிட்டேனே என்ற ஆதங்கமும் ஏற்பட்டது.
1962ல் இலங்கை மருத்துவக் கல்லூரியில் உதவி மருத்துவர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்திலேயே நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன்.
அக்காலப்பகுதியிலேதான் “கலைச்செல்வி சஞ்சிகை வெளியாகிக் கொண்டிருந்தது. அச்சஞ்சிகை உயரிய இலக்கிய தரத்தைப் பேணியதோடு பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தெடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தது. ஒரு விடுமுறையில் நான் ஊருக்குச் சென்றபோது, 'பிழைப்பு என்ற சிறுகதையுடன், கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி ஐயாவைச் சென்று பார்த்தேன். அவர் அக்கதையை உடனே வாசித்ததோடு, அக்கதையின் தரத்தை விதந்து பாராட்டி அடுத்த இதழிலேயே அதனைப் பிரசுரிப்பதாகவும் கூறினார். அக்காலத்தில் சகல இலக்கியவாதிகளாலும் ஆர்வலர்களாலும் ஆர்வமுடன் வாசிக்கப்பட்டுவந்த கலைச்செல்வியில் எனது கதை பிரசுரமான போது, நான் இலக்கிய உலகில் கணிப்புக்கு ஆளானேன். அதன்பின்னர் எனது கதைகள் ஈழத்தின் சகல பத்திரிகைகளிலும் தமிழகச் சஞ்சிகையான "கலைமகளிலும் பிரசுரமாகின.
புதுமைப்பித்தன், இலங்கையர்கோன் ஆகியோரது சிறுகதைகள் சில எனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஜெயகாந்தனின் சிறுகதைகளும் நந்தியின் சிறுகதைகளும் எனக்குச் சிறுகதையின் கலாநுட்பங்களைக் கற்றுத்தந்திருக்கின்றன.
எனது எழுத்துலக வாழ்வில் முக்கியமான நண்பர் புலோலியூர் க.சதாசிவம். நான் மருத்துவக் கல்லூரியில் பயின்றவேளையில் அவரும் பயிற்சி பெற்றார். நாங்கள் கதைகளை எழுதியதும் பரஸ்பரம் எமது படைப்புகளை அலசி ஆராய்ந்து திருத்தங்கள் மேற்கொள்வோம். இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் புரிவோம். கருத்துக்கள் பரிமாறுவோம். எனது ஆக்கங்கள்பற்றி அவரைப்போலக் காரசாரமாக விமர்சனம் செய்தவர் வேறு யாராகவும் இருக்கமுடியாது. நிச்சயமாக அவரது நட்புரிமையுடனான விமர்சனங்கள் எனது எழுத்துக்களைச் செழுமைப்படுத்தின. நாங்கள் இருவரும் பிறமாநிலத்திலிருந்து மலையத்திற்கு வந்து, அங்கு வைத்தியத் தொழில் புரிந்ததோடு மலையக இலக்கியத்திற்கு இருவரும் ஆற்றிய கணிசமான பங்களிப்பு எம்மை எழுத்துலக இரட்டையர்களாகக் கணிக்க வைத்தது.
எனது எழுத்துலக வாழ்வில் மறக்கமுடியாத மற்றொருவர் ஞானம் 48 மூன்றாவது ஆண்டுமலர்

கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை. எனது மாணவப் பருவத்தில் சிறிதுகாலம் உரும்பிராய் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் இருந்தவர். எனது இலக்கிய ஆர்வத்தை, ஈடுபாட்டை மாணவப்பருவம்தொட்டே நன்கறிந்தவர். இவரே எனது காலதரிசனம் சிறுகதைத் தொகுதி வெளிவர முன்னின்று உழைத்தவர். எனது படைப்புகளை அவ்வப்போது வாசித்து ஊக்கம் தருபவர். எனது நூல்கள் சிலவற்றிற்கு தனது கிராமமாகிய குரும்பசிட்டியில், ஈழகேசரி பொன்னையா உருவாக்கிய சன்மார்க்கசபையில் அறிமுகவிழாக்கள் நிகழ்த்திப் பெருமைப்படுத்தியவர்.
கண்டியில் எனக்குக் கிடைத்த நண்பர் இரா.அ.இராமன். இலக்கிய ஆர்வலரான இவர் எனது இல்லத்திற்கு அடிக்கடி வருகைதந்து உரையாடு வார். எனது படைப்புகளைப் பிரபல்யப்படுத்துவதில் மிகவும் ஆர்வமுடன் செயற்படுபவர். எனது நூல்களுக்கு அவரது தலைமையில் இயங்கும் "மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் மூலம் வெளியீட்டுவிழாக்கள், அறிமுகவிழாக்கள் நடத்திச் சிறப்பிப்பவர்.
வீரகேசரி பிரசுரம் ஐம்பதாவது நூல்வெளியீட்டை முன்னிட்டு நாவல் போட்டியொன்றை நடத்துவதாக விளம்பரம் செய்தபோது எனது இலக்கிய உள்ளம் விழித்துக்கொண்டது. அந்த நாவல்போட்டியில் பங்குபற்றுவதென முடிவு செய்தேன். எனது கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வொன்றைப் பின்னணியாக வைத்து "புதிய சுவடுகள்’ நாவலை எழுதினேன். சாதிப்பிரச்சினையை மையமாகக் கொண்டது அந்த நாவல். உயர்சாதிப் பெண்ணொருத்தி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனைக் காதலிக்கிறாள். இருவரும் ஊரைவிட்டு ஓடுகின்றனர். சாதித்திமிர் பிடித்த ஊரவர்கள் அவர்களைத் தேடிப்பிடித்து, அவனை அடித்து உதைத்துக் காயப்படுத்தி, அவளை அவனிடமிருந்து பிரித்து வருகின்றனர். சிறிதுகாலத்தின் பின்னர், காதலன் இறந்துவிட்டதாக அவளை நம்பவைத்து, மனநலன் குறைந்த ஒருவனை அவளுக்குத் திருமணம் செய்து வைக் கின்றனர். ஆனாலும் அவள் தனது காதலனின் நினைவாகவே வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு, காதலனால் தனக்கு அளிக்கப்பட்ட குழந்தையைப் பிரசவித்து இறந்து போகிறாள். அக்குழந்தை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனுக்குப் பிறந்த குழந்தை என்று தெரிந்த பின்னரும் சமூகம் அதனை ஏற்றுக் கொள்கிறது. அவளை அவனது காதலனுடனேயே வாழ விட்டிருக்கலாம் எனப் பச்சாதாபங் கொள்கிறது.
இந்த நாவல், போட்டியில் பரிசு பெறாவிட்டாலும் வீரகேசரிப் பிரசுரத் திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் நாவலின் முடிவு மாற்றப்பட வேண்டும் என என்னிடம் கோரிக்கை விடப்பட்டது. அக்காலத்தில் வெளிவந்த சாதிப்பிரச்சினை தொடர்பான படைப்புகள் பல, சாதிப்பிரச்சினை ஒரு வர்க்கச்சார்புடைய பிரச்சினை எனவும், அதனைக் கிளர்ந்தெழும் மக்கட் போராட்டம் மூலமே தீர்க்கலாம் என்றும் கருத்தினை வெளிப்படுத்தின. அத்தகைய படைப்புகளே விமர்சகர்களால் கண்டுகொள்ளப்பட்டன.
மூன்றாவது ஆண்டுமலர் 49 ஞானம்

Page 26
முற்போக்குப் படைப்புகளாகக் கருதப்பட்டன. எனது நாவலையும் ஒரு முற்போக்குத் தன்மையுடையதாக மாற்றவேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. அதற்கு நான் மறுத்துவிட்டேன்.
புதிய சுவடுகள் எனது கிராமத்தின் கதை. எனது மக்களின் கதை. அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள், கனவுகள், கவலைகள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சடங்குகள், சமூக இயக்கம் பற்றிய அவர்களது பார்வை, அவர்கள் வாழ்ந்த சூழல் இவையாவும் எப்படி இருந்ததோ அப்படியே அவற்றை என் நாவலில் பதிவு செய்திருக்கிறேன். எனது கிராமத்தின் உயிர்மூச்சை கோட்பாட்டு ஆயுதம் கொண்டு சத்திர சிகிச்சை செய்ய நான் விரும்பவில்லை.
இன்று எனது கிராமம் போர்ச்சூழலால் சீரழிந்துவிட்டது. ஆனாலும் அதன் கன்னிமைகுன்றாத பேரழகை - கம்பீரத்தை நான் இன்றும் அந்நாவலில் தரிசித்துக் கொண்டிருக்கிறேன்.
போராட்டங்களினால் சாதியம் ஒழிந்துவிடப் போவதில்லை. போராட்டத்தினால் உரிமைகள் வெல்லப்படலாம். தேநீர்க்கடைப்பிரவேசம், ஆலயப்பிரவேசம் போன்ற உரிமைகள் வெல்லப்படலாம். ஆனால் மனித மனங்கள் வெல்லப்படுவதில்லை. சாதியத்துக்கெதிராகக் கோட்பாட்டு இலக்கியம் படைத்தவர்கள், பேசியவர்களாலேயே தமது மனங்களை வெல்ல முடியவில்லை. பிரபல நாவலாசிரியர் ஒருவர், குடிமகனாகத் தன்னை ஏற்று திருமணவீடொன்றில் உணவு படைக்கச் சொன்னதை நாம் அறிவோம். சாதிக்குள் சாதி பார்க்கும் இவர், சாதிச் சடங்கு முறைகளையும் பேணிப் பாதுகாத்து வந்துள்ளமையையும் பலர் அறிவர். இலக்கியத் தத்துவாசிரியர் ஒருவர் வீட்டுக்கு வந்த எழுத்தாளர்களையே வாசற்படிக்கு உள்ளே எடுக்காமல் நிலவிலே பேசியது இலக்கிய உலகில் பிரசித்தம். முற்போக்குச் சங்கத்தின் பிரமுகர் ஒருவர் தனது வீட்டில் நடந்த திருமணத்திற்கு சாதிபார்த்து சில எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுக்காததும் பிரசித்தம். தனது சகோதர எழுத்தாளனை நேசிக்கத் தெரியாத ஒருவனால் எப்படி ஒரு சமூகத்தை நேசிக்க முடியும்? என்னைப் பொறுத்தவரை சக எழுத்தாளர்களை நான் நேசிக்கிறேன்; கெளரவிக்கிறேன். மனித மேம்பாட்டுக்கான எல்லா வகையான படைப்புகளையும் வரவேற்கிறேன்; மதிக்கிறேன். எழுத்தாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; இருக்கும். எனினும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இலக்கியம் வளர்க்க வேண்டும். கருத்துகள் வேறுபடினும் பல்வேறு தளங்களிலும் இலக்கியம் வளரவேண்டும். இதுவே எனது கொள்கையாக ஆரம்பகாலம் முதல் இருந்து வருகிறது.
கோட்பாட்டுக்காகக் கதை எழுதுவதுவேறு, வாழ்க்கை வேறு என்ற நிலைமையில் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்வதில்லை.
எனது புதிய சுவடுகள் நாவலும் அக்காலத்தில் எழுதிய சில சிறுகதைகளும் சாதிப்பாகுபாட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன. சமூக ஞானம் 50 மூன்றாவது ஆண்டுமலர்

விமர்சன நோக்கில், நடைமுறைச் செயற்பாட்டின் அடிப்படையில் அப்படைப்புகள் அமைந்தன. உயர்சாதியினரிடம் நிகழ்ந்துவரும் மனமாற்றங் களையும், இயல்பாக சமுதாயம் மாறிவரும் நிலையையும், சாதிக்கட்டுப் பாடுகள் தளர்ந்து வருவதையும் என் படைப்புகள் பேசுகின்றன. காலப் போக்கில் சாதியம் ஒழிந்துவிடும் எனக்காட்டுகின்றன.
பேராசிரியர் சிதில்லைநாதன் எனது அயற் கிராமத்தவர். எனது கிராமத்தின் வாழ்வை நன்கு அறிந்தவர். அவர் இந்த நாவலை ஒரு பிரதேசப் பண்புவாய்ந்ந நாவலாக வகுத்து, “புதிய சுவடுகள் நாவலில், ஞானசேகரன் புன்னாலைக்கட்டுவன் கிராமத்தின் வாழ்க்கையைச் ágg)íflggj6ir6'IIrsr" 616ölá, GötuúnGálgolist. (Puthiya suvadukal (1977) by T.Gnanasekaran depicted life in punnalaikkadduvan a village in jaffna. - FACTS OF DEVELOPMENT OF SRI LANKA SINCE INDEPENCE : SOCIO - POLITICAL, ECOMIC, SCIENTIFIC AND CULTURAL - PUBLISHED BY THE UNIVERSITY OF QUEENSLAND AUSTRALIA). Boust 5gs good J.LD660TT576i இந்நாவல் பற்றிக் குறிப்பிடுகையில், “இந்நாவலுக்குப் பின்னர் ஞானசேகரன் எழுதிய குருதிமலை பலராலும் மிகவும் சிலாகித்துக் கூறப்படும் நாவலாகும். ஆயினும், மண்வாசனை, கலைத்துவம் போன்ற அம்சங்களில் புதிய சுவடுகள் குருதிமலையை விஞ்சிநிற்கிறது என்பதே எனது அபிப்பிராயம்” என்கிறார். இந்நாவலுக்கு அந்த ஆண்டின் அரச சாகித்திய பரிசு கிடைத்தது.
மலையகத்தில் நியூ பீக்கொக் பெருந்தோட்டத்தில் நான் வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்த காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிப்போயிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்தேன். சமூக நல வேலைகள் பலவற்றில் ஈடுபட்டிருந்தேன். இதன் காரணமாக படித்த மலையக இளைஞர்கள் பலர் என்னிடம் தொடர்புகொண்டிருந்தனர். சிலர் எனது பங்களாவிலேயே தங்கியிருந்து எனது வேலைத்திட்டங்களுக்கு உதவி புரிந்தனர். இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வி முன்னேற்றத்துக்கு உதவுதல், சமூக பொருளாதார முன்னேற்ற நடவடிக்கை களுக்கு வழிகாட்டல் போன்ற பணிகளில் நான் ஈடுபட்டிருந்தேன். இந்த இளைஞர்களில் சிலர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாகவும் விளங்கினர். இவர்கள் எனது மலையகப் படைப்புகளுக்கு வேண்டிய தகவல்களைச் சேகரிப்பதற்கு உதவினர். எனது படைப்புகளில் மலையகப் பேச்சுமொழியை செம்மையாகக் கையாள்வதற்கும் இவர்கள் உதவினர்.
குருதிமலை எனது முதலாவது மலையக நாவல். மலையகத் தேயிலைத் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டபோது சில அரசியல்வாதிகள் பேரினவாதச் சிந்தனையோடு, மலையகத் தமிழர்களைப் பெருந்தோட்டங் களில் இருந்து விரட்டியடிக்க எடுத்த முயற்சிகளும், அதனால் மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், இந்த முயற்சியை எதிர்த்து நடைபெற்ற மலையக மக்களின் போராட்டங்களும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறன.
மூன்றாவது ஆண்டுமலர் A1 ஞானம்

Page 27
இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தபோது வாசகர்களிட மிருந்து எனக்கு ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்தன. எனது படைப்பு களில் அதிகளவு பாராட்டினைப் பெற்றதும், எனக்குப் பிரபல்யத் தினைத் தேடித்தந்ததும் குருதிமலை நாவல்தான்.
இந்த நாவல் அந்த ஆண்டிற்கான சாகித்தியப் பரிசிற்குத் தெரிவான போது, மலையக எழுத்தாளர் ஒருவர் அதனை எதிர்த்தாராம். “குருதிமலை மலையகத்தினைப் பகைப்புலமாகக் கொண்ட படைப்பு. ஞானசேகரன் மலையக எழுத்தாளர் அல்லர். அவர் பிறமாநிலத்தைச் சேர்ந்தவர். மலையகத்தில் பிறந்த ஒருவராலேயே மலையகத்தின் பிரச்சினைகளைச் சிறப்பாகப் படம்பிடிக்க முடியும்” என்பது அவரது வாதமாக இருந்தது. இத்தகைய கருத்து மலையக எழுத்தாளர் பலரிடம் நிலவிவருவதை நான் அவதானித்திருக்கிறேன். மலையக இலக்கியம் பற்றிப்பேசும்போதும் எழுதும் போதும் அவர்கள் மலையகத்தில் பிறக்காத எழுத்தாளர்களைத் தவிர்த்தே வருகின்றனர். இவர்கள் ஏன் தமது வட்டத்தைக் குறுக்கிக்கொள்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. மலையக நாவல் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்கள் பிறமாநில எழுத்தாளர்கள்தான் என்பதை எவரும் மறுக்க (Լptջեւ III&l.
1992இல் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் செ. போத்திரெட்டி எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். "குருதிமலை என் உள்ளத்தைப் பிணித்த உன்னதப் படைப்பு. அந்நாவலை ‘அக்கரைத்தமிழ்' எனும் முதுகலை தாள் ஒன்றிற்கு பாடநூலாக வைக்க முடிவு செய்துள் ளோம்” என அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக மலையக எழுத்தாளரும், எனது நண்பருமான அந்தனி ஜீவா அவர்களுக்கும் பேராசிரியர் போத்திரெட்டி கடிதமெழுதி, குருதிமலை நாவலின் பிரதிகள் சிலவற்றை அனுப்பிவைக்கும்படியும் வேண்டியிருந்தார். நண்பர் அந்தனி ஜீவா என்னிடம் இருந்த சில பிரதிகளைப்பெற்று பேராசிரியருக்கு அனுப்பி வைத்தார். அதனையடுத்து குருதிமலை தமிழகத்தில் இரண்டாம் பதிப்பினைப் பெற்று, எனக்கு ஏராளமான தமிழக வாசகர்களைத் தேடித்தந்தது.
பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர் எனது படைப்புகளை வாசித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை எழுதியவர். எனது எழுத்துலக முன்னேற்றத் திற்கு உந்துகோலாக விளங்கியவர். அவரே குருதிமலை நாவலின் இரண்டாவது பதிப்புக்கு ஒரு சிறந்த முன்னுரையையும் எழுதிச் சிறப்பித்தார்.
1995ல் மலையகத்தின் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சாரல் நாடன் நான் தொழில் புரிந்த மலையகத் தோட்டத்திற்கு மாற்றலாகி வந்தார். தினமும் மாலை வேளைகளில் அவரது இல்லத்தில் நானும் அவரும் சந்தித்து இலக்கியம் பற்றிக் கலந்துரையாடி மகிழ்வோம்; அநுபவங் களைப் பகிர்ந்துகொள்வோம். மலையக நாவலொன்று எழுதும்படி அவர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனை நிறைவேற்ற நான் எழுதிய நாவல்தான் "லயத்துச் சிறைகள்.
ஞானம் 52 மூன்றாவது ஆண்டுமலர்

இந்நாவலின் இரண்டாம் பதிப்பு 1998இல் வெளிவந்தபோது, அதற்கு முன்னுரை வழங்கிய சாரல்நாடன், “இந்த லயத்துச்சிறைகள் நாவலில, வரலாற்றுத்திருப்புமுனையாகக் கொள்ளப்படும் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதிலிருந்து திரும்பவும் கம்பனி நிர்வாகத்துக்குக் கைமாறும் காலவரையில் உள்ள இருபதாண்டு காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் பேசப்படுகின்றன.
4 a o குருதிமலையில் வரலாற்று நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டப்பட்டன என்றால், லயத்துச்சிறைகளில் வரலாறு ஒன்று உருவாகிக் கொண்டு இருப்பதை சம்பவங்கள் மூலம் ஞானசேகரன் நமக்குக் காட்டியுள்ளார் எனலாம்.
4 « «» ஞானசேகரன் இந்த மக்களின் விடிவுக்கு தாம் அறிந்து வைத்திருக்கும் முப்பதாண்டுகால அநுபவத்துக்கூடாகக் கூறும் வழிமுறையின் சரிபிழையைக் காலம் கூறும். இந்நாவலின் முக்கியத்துவம் அப்போது இன்னும் அதிகமாகவே உணரப்படும்” என்கிறார்.
தமிழக சுபமங்களா சஞ்சிகை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து ஈழக் குறுநாவல் போட்டி ஒன்றினை நடத்தியது. அதில் பரிசுபெறும் குறுநாவல்களுள் ஒன்றாவது மலையகத்தைப் பின்னணியாகக் கொண்டிருக்கவேண்டும் என விரும்பி எனக்கும் மலையக எழுத்தாளர்கள் அறுவருக்கும் போட்டி விதிகளைப் பிரதியெடுத்து அனுப்பிவைத்து, போட்டியில் கலந்துகொள்ளும்படி வேண்டுதல் செய்தார் சாரல்நாடன். அந்தப் போட்டியிலே பரிசுபெற்ற குறுநாவல்தான் "கவ்வாத்து. மலையக வெளியீட்டகத்தின் வெளியீடாக வெளிவந்த இந்த நாவலை தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் பொன்னிலன், மலையக வெளியீட்டகத்தின் பதினைந்தாவது ஆண்டுவிழாவில் விமர்சன உரை நிகழ்த்தி வெளியிட்டு வைத்தார். இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பி, "திரு ஞானசேகரனின் இந்தக் குறுநாவல் மலையகப் பெருந்தோட்டத் தமிழர் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை நோக்குகிறது. அது, தொழிற்சங்கங்களின் பயன்பாடு என்பதாகும். எந்தத் தொழிற்சங்க இயக்கம் அவர்கள் சமூக - பொருளாதார தனித்துவங்களை உணர்ந்து அவர்களின் "நல்"வாழ்க்கைக்கு போராடிற்றோ, இன்று அதே அந்த மக்களின் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் சமூக கருவியாக மாறியுள்ள நிலைமையை இந்தக் குறுநாவலிலே காண்கின்றோம். இந்தப் பிரச்சினையின் ஒரு வெட்டுமுகத்தை, ஒரு வன்மையான முனைப்புடன், இந்தப் படைப்புத் தருகின்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்குறுநாவல் அவ்வாண்டின் விபவி தங்கச் சங்கு பரிசினையும், பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டது.
சாரல் நாடன் என்னுடன் இருந்தது பத்துமாத காலம்தான். இக்குறுகிய காலத்தில் அவரது தூண்டுதலாலேயே நான் இரு நாவல்களைப் படைத்தேன்.
1997 இல் முற்போக்கு எழுத்தாளர் மாநாடு ஒன்றிற்கு நான் கொழும்பு மூன்றாவது ஆண்டுமலர் 53 ஞானம்

Page 28
சென்றிருந்தேன். அங்கு முன்னாள் ஞாயிறு வீரகேசரியின் பொறுப்பாளர் திரு இராஜகோபால் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர், நான் சிறுகதைகள் எழுதிய காலத்தில் நான் அனுப்பிய எல்லாச் சிறுகதைகளையும் பிரசுரஞ்செய்து எனக்கு ஒரு பரந்த வாசகர் வட்டத்தை ஏற்படுத்தித் தந்தவர். எனது சிறுகதைகளை அவ்வப்போது விமர்சித்து ஊக்குவித்தவர். அன்று அவர் என்னைச் சந்தித்தபோது, “ஏன் சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்?, எழுதி அனுப்புங்கள் நான் பிரசுரஞ் செய்கிறேன்” என்றார். என்னிடம் அளவளாவிப் பிரியும்போதும் மீண்டும் தனது வேண்டுகோளை வற்புறுத்திக் கூறினார். அவரது வேண்டுகோளுக் கிணங்க நான் எழுதிய சிறுகதைதான் "அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும். தமிழரது அரசியல் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட அந்தச் சிறுகதை வாசகரிடம் பெரும் பாராட்டைப் பெற்றது. அது தந்த உற்சாகத்தில் நான் மீண்டும் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.
திரு டொமினிக் ஜீவா அவர்கள் எனது அபிமானத்துக்குரிவர். எனது நீண்டகால நண்பர். யாழ்ப்பாணம் செல்லும்போதெல்லாம் மல்லிகைக் காரியாலயத்தில் அவரைச் சென்று பார்ப்பேன். மல்லிகை கொழும்புக்கு வந்தபின்பும் அவரைச் சென்று பார்க்கத் தவறுவதில்லை. அதேபோன்று டொமினிக் ஜீவா அவர்களும் கண்டிக்கு வருகைதரும்போதெல்லாம் எனது இல்லத்துக்கு வருவதற்கும் தவறுவதில்லை. ஒரு குடும்ப நண்பராக அவர் என்னுடன் பழகுவார். எனது பிள்ளைகளின் திருமணவிழாக்களுக்கும் வருகைதந்து என்னை மகிழ்வித்தார். அத்தகைய நெருக்கம் நீண்ட காலமாக எங்களுக்குள் இருந்து வருகிறது.
நான் ஒரு தடவை கொழும்பில் மல்லிகை காரியாலயத்திற்குச் சென்றபோது அவர், "அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் சிறுகதையை வாசித்தேன்; நல்ல கதை. உங்களது சிறுகதைகளைத் தொகுத்துத் தாருங்கள் நான் மல்லிகைப்பந்தல் மூலம் வெளியிட விரும்புகிறேன்" என்றார்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் ஒரு தயக்கம். எனது சிறுகதைகள் எதுவும் மல்லிகையில் வெளிவந்ததில்லை. ஆரம்பகாலத்தில் சில கதைகளை மல்லிகைக்கு அனுப்பியிருந்தேன். அவை பிரசுரம்பெற வில்லை. இடைப்பட்ட காலத்தில் ஆண்டு மலர்களுக்குச் சிறுகதை கேட்டு எழுதியிருந்தார் திரு டொமினிக்ஜீவா. அப்போது நான் சிறுகதைகள் எழுதாமல் இருந்த காலகட்டம். மல்லிகையில் ஒரு கதைதானும் பிரசுரமா காமல் மல்லிகைப்பந்தல் ஊடாக எனது சிறுகதைத் தொகுதி வருவது முறையில்லை என நான் தயங்கினேன். இதேபோன்ற தயக்கம் அவர் என்னிடம் எனது புகைப்படத்தை மல்லிகையின் அட்டையில் வெளியிட விரும்பிக் கேட்டபோதும் எனக்கிருந்தது. எனது தயக்கத்துக்குரிய காரணத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனாலும் அவர் பெருமனதுடன் எனது சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார்.
எகானம் 54 மூன்றாவது ஆண்டுமலர்

மல்லிகைப் பந்தல் மூலம் எனது சிறுகதைத் தொகுதி "அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் வெளிவந்த அதேகாலப்பகுதியில் மல்லிகையில் எனது படம் அட்டைப்படமாகவும் வெளிவந்தது.
2000ஆம் ஆண்டில் ரூபவாஹினி உதயதரிசனம் நிகழ்ச்சியில் திருமதி கமலினி செல்வராஜன் என்னைப் பேட்டி கண்டார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, "சிறுகதை, நாவல், கட்டுரை, நேர்காணல், பயணக் கட்டுரை என இலக்கியத்தின் பல பரிமாணங்களைத் தொட்டிருக்கிறீர்கள். இவற்றில் உங்களுக்கு வாலாயமானது அல்லது அதிகமாகப் பிடித்த துறை எது?” என்பதாகும்.
இதற்கு நான் பதிலளித்தபோது, "எனது நான்கு நாவல்கள் வெளியாகி யுள்ளன. இந்த நான்கும் அரச விருதுகளைப் பெற்றுள்ளன; நாவல் துறையே எனக்கு வெற்றியளித்துள்ளது என நினைக்கிறேன்” என்று கூறினேன்.
எனது பதிலை திருமதி கமலினி செல்வராஜன் மறுத்துரைத்தார். சிறுகதைத்துறையே எனக்கு வெற்றியளித்துள்ளதாகக் கூறி அதற்கான காரணத்தையும் "அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் தொகுதியிலிருந்து சில கதைகளை உதாரணங் காட்டி விளக்கினார். 'உங்களது நாவல்களை விட சில சிறுகதைகள் ஆழமாகவும், மிகத் துணிச்சலுடனும் எழுதப்பட்டிருக் கின்றன எனக் கூறினார்
எனது இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் க.அருணாசலம் "தி.ஞானசேகரன் அவர்கள் கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவவமைதியிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளமை அநேகமாக எல்லாக் கதைகளிலுமே காணமுடிகிறது. உள்ளடக்கங்களுக் கேற்ப மிகப்பொருத்தமான தலைப்புகள், உயிர்த்துடிப்பு மிக்க நடை, மிகப் பொருத்தமான கதைத்திருப்பங்கள், சிந்தனையைத் தூண்டும் முடிவுகள், பண்புநலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள், கச்சிதமான வருணனைகள் முதலியன அவரது கதைகளுக்கு தனிச் சோபையை அளிக்கின்றன” என்கிறார்.
எனது "சீட்டரிசி மலையகச் சிறுகதைத் தொகுதியான 'உழைக்கப் பிறந்தவர்கள்’ எனும் தொகுப்பில் வெளிவந்து பலரது பாராட்டைப் பெற்றது. இக்கதையை நான் தெளிவத்தை ஜோசப் அவர்களின் வேண்டுகோளுக் கமைய எழுதினேன். அக்கதை தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும் நன்கு பிடித்துக்கொண்டது. மலையகத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தா ளரான அவர் அக்கதையைப் பற்றி மேடைகளில் சிலாகித்துப்பேசியதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
லண்டனில் இருந்து பத்மநாப ஐயர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுகதையொன்று எழுதியனுப்பும்படி வேண்டினார். “காட்டுப்பூனை களும் பச்சைக்கிளிகளும்' என்ற கதையை எழுதியனுப்பினேன். சமீபத்தில் வெளியாகிய "கண்ணில் தெரியுது வானம்' என்ற தொகுப்பில் அக்கதை முதலாவது கதையாக இடம்பெற்றுள்ளது. இப்படியாக நண்பர்களின்
மூன்றாவது ஆண்டுமலர் 55 ஞானம்

Page 29
தூண்டுதல்களுக்கும் வேண்டுதல்களுக்கு என்னால் எழுதப்படும் ஆக்கங்கள் அனேகமானவை சிறந்ததரத்தில் அமைந்துவிடுகின்றன.
1997இல் ஞானம் பதிப்பகத்தை ஆரம்பித்தேன். இதன்மூலம் சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்களை நூலுருவில் வெளிக்கொணரவும், முன்னர் ஒருபோதும் நூல்வெளியிடாத படைப்பாளிகளின் ஆக்கங்களை நூலுருவில் வெளிக்கொணரவும் முயற்சிகள் செய்தேன். இதுவரை ஏழு நூல்கள் ஞானம் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன. இதில் 'அக்கினிப் பூக்கள்’ என்ற அந்தனி ஜீவாவின் நாடக நூல் அரச சாகித்திய பரிசினைப் பெற்றது. மலையகக் கவிஞர் திரு கே.வெள்ளைச்சாமி அவர்களின் குறிஞ்சி நாடன் கவிதைகள் மத்திய மாகாண சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. ஞானம் ஞானசேகரனின் "இந்துமதம் என்ன சொல்கிறது என்ற நூல் இந்து கலாசார அமைச்சின் பரிசினைப் பெற்றது.
ஞானம் சஞ்சிகையில் வெளிவரும் நேர்காணல்கள், சிறந்த சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து எதிர்காலத்தில் நூல்களாக ஞானம் பதிப்பகத்தின் மூலம் வெளிக்கொணரத் திட்டமிட்டுள் ளேன்.
எனது எழுத்துலகின் பிறிதொரு பரிமாணம் 1999இல் எனது அவுஸ்திரேலியப் பயணத்துடன் ஆரம்பமாகியது. அங்கு சென்றிருந்தபொழுது புலம்பெயர்ந்து வாழும் கலை இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் ஒழுங்குசெய்த கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் பங்குபற்றும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அங்குள்ள இன்பத் தமிழ் வானொலியில் அதன் இயக்குனர் பாலசிங்கம் பிரபாகரன் என்னைப் பேட்டி கண்டார். அரச இலாகாவின் கீழ் இயங்கும் தமிழ் முழக்கம் வானொலி சார்பாக பேராசிரியர் ஆசி.கந்தராஜா பேட்டிகண்டார். தமிழ் கற்பிக்கப்படும் பாடசாலைகள், தமிழர் ஒன்றியங்கள் ஆகியவற்றுக்கும் நான் விஜயம் செய்து கருத்துப் பரிமாறல்கள் செய்தேன். தமது மண்ணிலிருந்து வந்திருக்கும் ஓர் எழுத்தாளன் என்ற காரணத்தால் - நம்மவர் என்ற உரிமையோடு அங்குள்ளவர்கள் என்னை அழைத்து எனது கருத்துக்களைக் கேட்டறிந்து அவற்றை ஏனையோரிடமும் பகிர்ந்துகொண்டனர். நண்பர் முருகபூபதியின் சந்திப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எனது அவுஸ்திரேலியப் பயணத்தைக் கட்டுரை யாக எழுதும் எண்ணத்தை அவருக்குத் தெரிவித்தபோது, அவுஸ்திரேலியா பற்றிய பல தகவல்களையும் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை முறைபற்றியும் அவர் எனக்கு நிறையத் தகவல்களைத் தந்துதவினார்.
எனது அவுஸ்திரேலியப் பயணக்கதை தினக்குரலில் தொடராக வெளிவந்தபோது அத்தொடரை இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மட்டுமல்லாது சமயவாதிகள், சாமானியர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் ஆர்வமுடன் வாசித்தனர். ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்தன. பலர் நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டினர். எனது குருதிமலை நாவலுக்கு அடுத்ததாக அதிக பாராட்டுதல்களைப் பெற்றது இந்த ஞானம் 56 மூன்றாவது ஆண்டுமலர்

அவுஸ்திரேலியப் பயணக்கதைதான்.
அவுஸ்திரேலியப் பயணத்தின்போது நான் அங்குவாழும் கலைஞர்கள் எழுத்தாளர்களைப் பேட்டி கண்டேன். அந்தப்பேட்டிகள் வீரகேசரி வார வெளியீட்டில் தொடராக வெளிவந்தன. பின்னர் ‘புரிதலும் பகிர்தலும்' என்ற தலைப்பில் அவை நூலுருவம் பெற்றன.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய வீரகேசரி பிரதம ஆசிரியர் வி.தேவராஜ் எனது நேர்காணல்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "நேர்காணல் என்பது ஒரு கலை. வெறுமனே கேள்விகளும் பதில்களும் நேர்காணல் ஆகிவிடாது. நேர்காணல் காணப்படுபவர் பற்றிய பின்னணியும், அவரது துறைசார்ந்த அறிவும், அவரிடம் இருந்து எவற்றைப் பெற்றுச் சுவைஞர்களுக்குத் தரவேண்டும் என்ற தெளிவும் கேள்விகளைத் தொடுப்பவருக்கு இருக்கவேண்டும். அதேவேளையில் அவரிடமிருந்து வெளிக் கொணரப்படும் விடயங்கள் வெறுமனே கருத்துக்கோவையாக மட்டும் இருந்து விடாது அவரது மன உணர்வுகளை வெளிக்கொணரும்வண்ணம் கேள்விகள் தொடுக்கப்படவேண்டும். எதிர்வாதங்களை முன்வைத்தல், ஐயங்களைக் கிளப்புதல், உணர்வுகளைச் சீண்டுதல் போன்றவற்றினூடாக நேர்காணல் காணப்படுபவரின் அகத் தரிசனத்தைத் துல்லியமாக வெளிக்கொணர்ந்து அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் சுவைஞர்களுக்குக் கொடுக்கவேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கேள்வி தொடுப்பவர் தனது கருத்தை முன்னிலைப்படுத்தாது கவனமாகச் செயற்படல் வேண்டும். திரு தி.ஞானசேகரனின் புரிதலும் பகிர்தலும் என்ற இந்தத் தொகுதியை வாசிக்கும் போது நேர்காணல்பற்றிய பூரணமான தெளிவுடன் அவர் செயற்பட்டிருக்கிறார் என்பது புலனாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடத்திலும் நான் அவுஸ்திரேலியா சென்றிருந்தேன். எனது அவுஸ்திரேலியப் பயணக்கதை, புரிதலும் பகிர்தலும் ஆகிய நூல்களும், எனது மனைவி ஞானம் ஞானசேகரன் எழுதிய இந்துமதம் என்ன சொல்கிறது? எனும் நூலும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் வெளியீடு செய்யப்பட்டன. புலம்பெயர்ந்தோர் மத்தியில் எமது நூல்களை வெளியிட்டபோது, அவர்கள் காட்டிய ஆர்வமும் ஆதரவும் எம்மைப் பிரமிக்கவைத்தன. எமது நூல்வெளியீட்டில் கிடைத்த பணம் முழுவதையும் அங்குள்ள "ஈழத்து அநாதைச் சிறுவர்கள் கல்வி நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்தோம்.
அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் 2001ம் ஆண்டில் எழுத்தாளர் மாநாடு ஒன்று பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இதில் என்னையும், என் மனைவியையும் கலந்து கொள்ளும்படி அதன் அமைப்பாளர் முருகபூபதி அழைப்பு விடுத்திருந்தார். இந்த எழுத்தாளர் மாநாட்டில் 24 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நாடக அரங்கு, கவியரங்கு எனப் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. புலம்
மூன்றாவது ஆண்டுமலர் 57 ஞானம்

Page 30
பெயர்ந்தோர் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு நான் தலைமைதாங்கினேன். எனது மனைவி ஞானம் ஞானசேகரன் பெண்ணியம் சம்பந்தமான ஆய்வரங்கில் ‘சங்ககாலம் முதல் சங்கமருவியகாலம் வரை பெண்களின் நிலை என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசித்தார். இந்த மாநாட்டில் பெருந்தொகையான புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை சந்தித்து அளவளா வியதும், அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதும் எமக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
ஜூன் 2000ஆம் ஆண்டில் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தேன். முதுபெரும் எழுத்தாளர்கள், புதிய எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், பேராசிரியர்கள், கலாநிதிகள், அரசியல் வாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் ஞானம் சஞ்சிகைக்குத் தமது பங்களிப்பை நல்கினர்; சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவினர்.
ஞானம் சஞ்சிகை இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த இரண்டு வருட காலத்தில் எனது குறிக்கோளுக்கேற்ப இந்தச் சஞ்சிகைமூலம் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த் தெடுக்கக் கூடியதாக இருந்தது. அது எனக்குப் பெரும் மன நிறைவைத் தருகிறது.
நான் மேற்கொண்ட நேர்காணல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. பல சுவைமிகுந்தவையாகவும், பல புதிய அநுபவங் களைத் தருபவையாகவும் அமைந்தன. இது தொடர்பான பல இலக்கிய சர்ச்சைகள் ஞானம் சஞ்சிகையில் நிகழ்த்தப்பட்டன.
எனது எழுத்துலகம் பற்றி நான் இப்போது பெருமையடைகிறேன். எனது நாவல் குருதிமலை தமிழகத்தில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்புக்கு பாடநூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நாவல் யாழ் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளரான விமல் சுவாமிநாதன் அவர்களால் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, தலென யகட' என்ற மகுடத்தில் வெளிவந்து, சிங்கள வாசகர்களிடையே என்னைப் பிரபலப் படுத்தியது. எமது நாட்டின் உயர்கல்விப்பீடங்களில் ஒன்றான சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டப்படிப்புக்கு எனது சிறுகதைத் தொகுதி "அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் பாடநூலாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இவற்றின் மூலம் அப்பழுக்கற்ற ஓர் அங்கீகாரம் என் எழுத்துக்குக் கிடைத்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
ஞானம் 58 மூன்றாவது ஆண்டுமலர்
 

ஈழத்து ஆக்க இலக்கிய மண்வாசனைய் பண்பு உருவாக்கத்தில் பேச்சுத்தமிழ் பிதாமகள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை.
(புலோலியூர் கசதாசிவம்
தகவல் தொழில் நுட்பத்தில் மொழி வெறும் பரிமாற்றச் சாதனமாகத் தோற்றமளித்தாலும் வாழ்வியலுடன் அத்தியந்தத் தொடர்புடைய இலக்கியத்தில் முதன்மையானதும் முக்கியமானதுமாக அமைகிறது. இலக்கியம் மொழியாலானது. இலக்கிய ஆக்கத்திற்கு மொழி கருவியாகி ஆக்க இலக்கியப் பண்புருவாக்கத்திலும் வளத்திலும் வளர்ச்சியிலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. நவீன இலக்கிய வடிவங்களாகிய புனைகதை தமிழில் தோன்றுவதற்கு சமூக, அரசியல், பொருளாதார காரணங்கள் அமைந்தது போல மொழியும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. தமிழ் எழுத்துநடையில் ஏற்பட்ட பாரிய மாற்றம், புதுமை, புதுநோக்கு, புத்துணர்வு செய்யுளால் அமைந்த இலக்கிய வடிவத்தைவிட வசனநடை உகந்த நடையாகி புனை கதை வடிவத்தின் உயிர்நாடியாகியது.
ஆரம்பகாலத்தில் எமது உரைநடை தமிழ்நாட்டு ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் போக்கையே ஒட்டியிருந்தது. பாத்திரங்கள் இலக்கணத் தமிழையே பேசின. உட்பொருளில் நமது வாழ்வியல் ஓரளவு பிரதிபலித்தாலும் மொழிநடையில் தனித்துவம் காணப்படவில்லை. பேச்சுவழக்கு மொழியின் உள்ளார்ந்த பண்பு உணரப்படவில்லை. பேச்சுவழக்கு இழிசனர்வழக்காகக் கொள்ளப்பட்டது. மனித உள்ளத்திலிருந்து இயற்கை ஊற்றாகச் சுரந்து மனித எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள், திட்டங்கள் ஆகியவற்றை மொழிவடிவாக வெளிக்கொணர்வது - மனித மனத்திலிருந்து இயல்பாக வெளிவருவது - பேச்சுவழக்குமொழி என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்து உணர்வுபூர்வமாக அதனை ஈழத்து இலக்கியத்தில் புகுத்தியவர் ஈழத்தின் முதலாவது தமிழ்க்கலாநிதி என்ற சிறப்புக்குரியவரும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளுக்கு அடுத்ததாகத் தமிழ்ப் பேராசிரியராகவும், கலைப் பீடாதிபதியாகவும் இருந்த பேராசிரியர் அ.கணபதிப்பிள்ளை ஆவார்.
பேராசிரியரின் ஊடகம் நாடகமாக இருந்தபோதும் இன்றைய ஈழத்து
மூன்றாவது ஆண்டுமலர் AZATA arroorin

Page 31
ஆக்க இலக்கிய தனித்துவ உரைநடைப்பண்புக்கு அவரது மொழிநடை வித்திட்டது எனலாம். இரசிகமணி கனக செந்திநாதன் இவரைப்பற்றி தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலில் குறிப்பிடும்போது “கிராமியக் கொச்சையை நாடகங்களில் துணிந்து புகுத்தினார்” எனக் குறிப்பிடுகிறார். இழிசனர் வழக்கு என்று பண்டிதர்களாலும், கிராமியக் கொச்சை என சில இலக்கிய ஆர்வலர்களாலும் கொள்ளப்பட்டது பேச்சுவழக்கு. இதனை உடைத்தெறிந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினைப் பிரதிபலித்து ஆக்க இலக்கியம் படைக்கும்போது அந்தச் சமூகத்தின் வாழ்க்கைக் கூறுகளையும், கருத்துத்தொடர்பின் ஊடகமான மொழியின் நிலையையும் நன்றாக அறிந்து, அந்த சமூகத்தின் எண்ணக்கருக்களை இயல்பாக வெளிப்படுத்தும் பேச்சு மொழியை உணர்ந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து பேச்சு வழக்கின் உள்ளார்ந்த உயரிய பண்பினை உணர்ந்து பிரக்ஞை பூர்வமாக தனது நாடகங்களில் துணிந்து புகுத்தினார் பேராசிரியர். பல்கலைக் கழகத்தில் மாணக்கர்களுக்குத் தனது கருத்தினைத் தெளிவுடன் போதித்தார். அன்னாரின் நன்மாணாக்கர்களான சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ் இன்னும் பலர் அவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்கள். இவர்களது புதிய இலக்கிய சிந்தனைகளின் ஆசானாக பேராசிரியர் விளங்கினார். அவரின் வழிகாட்டலால் தங்கள் அறிவினையும், ஆய்வுத்திறனையும் விசாலித்துக்கொண்டனர். வாழையடி வாழையாக மாணவர் பரம்பரைக்கு பேராசிரியரின் கருத்துப் பரவியது.
ஈழத்து நாடக வளர்ச்சியின் பங்களிப்பில் மைற்கல்லாக, நவீன நாடகப் பண்புருவாக்கத்தின் முன்னோடியாக விளங்கிய பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் அரங்கு வடிவத்துக்கிசைய எழுதப்பட்ட இவரது சமூக நாடகங்கள் மேடையேற்றப்பட்டபோது இலக்கிய உலகில் பேச்சு வழக்குப் பிரயோகத்தின் பண்பும் பயனும் பெரிதும் உணரப்பட்டு இரசிகர்களிடமும் ஆக்க இலக்கிய கர்த்தாக்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரிச்சந்திரன் நாடகம் எவ்வாறு மகாத்மா காந்திக்கு சத்திய வேள்விக்கான தத்துவத்துக்கு வித்திட்டதோ அவ்வாறே பேராசிரியரின் நாடகங்கள் நவீன உரைநடை செல்நெறிப்போக்குக்கு வித்திட்டதெனலாம்.
சென்ற நூற்றாண்டு நடுப்பகுதியில் ஈழத்தில் ஏற்பட்ட - அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பாக, ஈழத்து எழுத்தாளர்கள் சமுதாய நோக்குடன் பொருள், மொழிநடை ஆகியவற்றின் தனித்தன்மையுடனும், சிறப்பியல்பு களுடனும் இயங்கத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் ஆக்க இலக்கியம் படைத்த எழுத்தாளர்கள் பேச்சுவழக்கு மொழியைத் தங்கள் ஆக்கத்தில் அர்த்தத்துடன் கையாண்ட்னர். தனித்துவமான ஈழத்தின் புதிய உரை நடைப்பண்பில் பேச்சு வழக்குப்பிரயோகம் தொனித்தது. இழிசனர் வழக் கென்று கூறியவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். கிராமியக் கொச்சையென்று பேச்சு மொழியைக் கூறியவர்கள் அறிவுத் தெளிவு பெற்று பேச்சுமொழியின் முக்கியத்துவத்தை உணரத்தலைப்பட்டனர். தங்களது புதிய ஆக்கங்களில் அதனைக் கையாண்டு கணிசமான வெற்றியும் பெற்றனர்.
ஞானம் 60 மூன்றாவது ஆண்டுமலர்

அறுபதுகளில் தேசிய இலக்கியத்தில் மண்வாசனைப்பண்பு புதிய செல்நெறியாகியது. மண்வாசனைப் பண்புருவாக்கத்தில் வாழ்வியலை நுணுக்கமாக, உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்தும் சிறப்பு அம்சங்களுடன் பேச்சுவழக்கு மொழிநடையும் பெரும்பங்களித்தது. இதற்கு கால்கோளிட்டவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளையாவர். அன்னார் வடமராட்சிப் பேச்சுத்தமிழை உயிர்த்துடிப்புடனும் அர்த்த புஷ்டியுடனும் ஆக்கஇலக்கியத்தில் - நாடகப் பிரதியாக்கத்தில் கையாண்டார். அதன் தாக்கம் ஏனைய பிரதேசங்களிலும் எதிரொலித்தது. எமது ஆக்க இலக்கியப் படைப்புகள் மட்டக்களப்பு, மலையகம் ஆகிய பிரதேசப் பண்புடன் மலர்ந்தது. அந்தந்த சமூக - மாவட்ட மக்களின் மொழியில் துலங்கும் சிறப்புச் சொற்பொருளமைப்பினை வெளிக்கொணர்ந்த சிறுகதைகள், நாவல்கள், தோன்றியுள்ளன. எமது இலக்கியத்தின் பிரதேசப்பண்பு தமிழக இலக்கிய உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பேராசிரியர் புலமைப் பாரம்பரியமுடைய புலோலியில் வாழ்ந்தவர். இளம்வயதில் சிவசம்புப் புலவரின் மாணக்கரான முத்துக்குமாரசாமிக் குருக்களிடம் மரபு வழியாகத் தமிழ், சமஸ்கிருதக் கல்வியைப் பெற்றவர். பன்மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். மரபுவழிக்கவிதை ஆக்குவதில் வல்லுனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றவர். இலண்டன் பல்கலைக்கழகத்து School of Oriented an african Studies ஆய்வுப்பள்ளியில் பயின்றவர். ஈழத்து சாசனவியலின் முன்னோடி. ஆய்வறிஞர். இந்தப்பின்னணியிலேதான் பேச்சுவழக்குத்தமிழில் உள்ள நற்பண்புகளை நன்குணர்ந்து மாணவர்களுக்கும் இலக்கிய உலகத்துக்கும் உணர்த்தினார். ஆங்கிலத்தில் யாழ் பேச்சு மொழிபற்றி, Jaffna dialect of tamil words in the dialect oftamil Salu u SÐICb60dLDuJT60T a5'066Oog&B56ñ 6T(g தினார். மேனாட்டு ஆய்வறிஞர்கள் யாழ்ப்பாணப்பேச்சுவழக்கைப் பதிவுசெய் வதற்கு இவரது நாடகத்தையே பயன்படுத்தினர். இவர் மொழியைப் பதிவு செய்த முறைமையை மேல்நாட்டு நல்லறிஞர்கள் விதந்து பாராட்டினர்.
பன்முக இலக்கிய ஆளுமைகொண்ட இவரை தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை கலையருவி எனப் பாராட்டினார். இவரை உரிய முறையில் எமது இலக்கிய உலகம் அறியவில்லை, அறியப்படுத்தவில்லை. ‘அணிகள் முதன்மைப்படுத்தப்பட்டதால் இவர் பிரபல்யப்படுத்தப் படவில்லை. இவரைப்பற்றிய கட்டுரைகள் சில இவரது விசுவாசமான நன்மாணாக்கர்களால் உதிரியாக எழுதப்பட்டிருக்கிறது. "கலையருவி கணபதிப்பிள்ளை சில நினைவுகள்’ என்ற நூலை திரு த.சண்முகசுந்தரமவர்கள் எழுதியுள்ளார். இந்நூல் அவரது நினைவுகள் பற்றியதாகும். ஆசானான பேராசிரியரின் மேல் நேர்மையான குருபக்தி கொண்ட பேராசிரியர் கா.சிவத்தம்பியின் "பேராசிரியர் கணபதிப்பிள்ளை - அவரது புலமைப்பாரம்பரியம் பற்றிய ஓர் அறிமுக ஆய்வு நினைவுப் பேருரை நூலாக வந்துள்ளது. உண்மையில் இலக்கிய மாமனிதன் பேராசிரியரின் வரலாறு வரன்முறையில் எழுதப்பட வேண்டும். அன்னாரின் அத்தியந்த மாணவனாக . அந்தரங்கச் செயலாளர்
மூன்றாவது ஆண்டுமலர் 6 ஞானம்

Page 32
போலச் செயற்பட்ட பேராசிரியர் சு.வித்தியானந்தன் இந்தப்பணியைச் செய் திருக்கவேண்டும். ஏனோ அதனை அவர் செய்யவில்லை. அவரது நன் மாணாக்கனான பேராசிரியர் க.கைலாசபதி தனது நூல் ஒன்றினை அவருக் குக் காணிக்கையாக சமர்ப்பித்தாரே தவிர பேராசிரியர் பற்றி ஒரு நூலும் எழுதவில்லை. நவயுக புருஷரான பேராசிரியர் கணபதிப்பிள்ளையை குருவாகப் பெற்ற பேற்றினைக்கொண்டு இன்று சமூகவிஞ்ஞானியாகவும் தமிழ் விமர்சனத்துக்குப் புதிய செல்நெறியை வகுத்தவருமான பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பேருரை நூலில் சில அருமையான தகவல்கள் இருப்பினும், வேண்டுகோளை நிவர்த்தி செய்ய, அவசரமாக அரைவேக் காட்டுடன் எடுத்த கைங்கரியமாகவே இருக்கிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை அன்னாரைப்பற்றி நூல் எழுத முயலவில்லை. பேராசிரியர்களான சிதில்லை நாதன், அ.சண்முகதாஸ் ஆகியோர் கட்டுரையாக்கம் மூலம் சில தகவல் களைத் தரமுயன்றது குறிப்பிட்டுக் கூறவேண்டியது. −
(3uy Tafflugoy upg) 'macro, micro level studies' GaujuuuL வேண்டும். ஈழத்துப் பேச்சுவழக்குமொழி ஆக்க இலக்கியத்தின் பயன்பாட்டு உபயோகம்பற்றி நுண்ணாய்வு செய்யும்போது இப்பண்புருவாக்கத்தின் பிதாமகர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்பது புலனாகும். இவரது பன்முக ஆளுமை நுண்ணாய்வு செய்யப்படும்போது இவரால் உருவான பேராசிரியர் கள் அவர்தம் மாணாக்கர்கள், தேர்ந்தெடுத்த துறைகளில் பெயருடனும், புகழுடனும் துலங்குவதற்குப் பேராசிரியர்தான் ரிஷிமூலம் என்பது தெரிய வரும். தகவல் பதுக்கல் எத்துணை சமூக விரோதமானது என்பதும் தங்களது பெயரும் புகழும் முதன்மைப்படுத்தப்படாமல் போய்விடும் என்ற எண்ணக் கருத்தும் வெளிச்சத்துக்கு வரும். பேராசிரியரின் பன்முகப்பட்ட பணிகள், திறமைகள் முன்னோடி முயற்சிகள் மீளாய்வு செய்யப்படவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
தமது புகழுக்கும் பெயருக்கும் வித்திட்ட ஆசானை மறந்து உறங்கும் பேராசிரியர்களும், வாழையடி வாழையாகப் பெருகியுள்ள மாணக்கர்களும் துயில் எழுவார்களாக! ன்ெபார்ந்த வாசகர்களே,
ஞானம் சஞ்சிகையின் அச்சுச்செலவு, அனுப்பும் தபாற்செலவு
ஆகியன அதிகரித்திருப்பதனால், சஞ்சிகையை எவருக்கும் இனிமேல் இனாமாக அனுப்பமுடியாத நிலையில் உள்ளோம். சந்தாதாரர்களுக்கு | மட்டுமே சஞ்சிகை தபாலில் அனுப்பிவைக்கப்படும். ஞானம் சஞ்சிகை யைத் தொடராகப் பெறவிரும்புபவர்கள் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளுங்கள். தற்போது சந்தாதாரர்களாக இருப்பவர்கள், புதிய சந்தாவுக்கு ஏற்ப, உங்களின் சந்தாக்காலம் முடிந்திருப்பின் புதுப் பித்துக்கொள்ளுங்கள்.
N ۔۔ـــــــــــــــــــــــــ۔ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔ ஆசிரியர்)
ஞானம் 62 மூன்றாவது ஆண்டுமலர்

சிறுகதை
fiju ili 圈缅
தெணியானி الم. -ܠ
புறப்படும்போது அவளைச் சந்திக்கும் ஆவல் மனதில் பெரிதாக இருக்கவில்லை என்று சொல்லலாம் போலத்தான் தோன்றுகிறது.
உண்மையில் சொல்வதா னால் பொய்மையற்ற சத்தியம் இதில் இருப்பதாக இப்பொழுது நான் கருத வில்லை. அவளுக்காக, அவளைத் தேடி, அவள் வீடுவரைபோக இருக் கிறேன். அவளை எப்படிச் சந்திக் காமல் இருக்கமுடியும்! நிச்சயம் அவளை இன்று நான் சந்திக்கப் போகிறேன். இந்த மனதுக்கு அது தெரிந்திருக்கிறது. அதனால்தான் மறு தலையாக இப்படி ஒரு எண்ணம். ஒருவேளை அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வந்து வாய்க்காது இருந் தால், அவளை ஒருதடவை பார்க்க
வேண்டுமென இந்த மனம் ஏங்கி இருக்கக்கூடும்.
நான் அவள் வீடு வந்து சேரு கிறேன். முற்றத்துத்தகரப் பந்தலின் கீழ் சிலர் கூடி இருக்கின்றார்கள். நான் வருவேன் என அவள் எதிர் பார்த்துக் காத்திருந்தவள்போல, என் னைக் கண்டு “வாங்க” எனச்சொல்லி உபசரித்து எழுந்து நிற்கிறாள்.
பின்னர் அவள் கணவன் எழுந்து, "வாருங்கோ" என முகமன் கூறுகின்றார்.
நான் நேரே அவர் முன் வந்து நின்று, இருகரங்களையும் விரித்து நீட்டி அவர் கரங்களை மெல்லப்பற்றி எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனுதாபம், பாராட்டு, நன்றி இவைகள் யாவும் காலம் தாழ்த்தாது தெரிவித்துவிட வேண்டும். காலங்கடந்தால் அவை காற்றுப் போனபந்துதான். இப்பொழுது விடு முறை காலமானாலும், ஆசிரியர் களுடன் சேர்ந்து அன்றையதினம் வந்து போயிருந்தால் இந்தச் சங்கடங்கள் ஒன்றும் இருக்காது.
இரண்டு கைகளிலும் மெல்லத் தொட்டு இப்படித் துக்கம் கொண் டாடுவது யாருடைய கலாசாரம்? ஒரு கையைப் பற்றிப் பிடித்துக் குலுக்கு வது மேற்கத்திய கலாசாரம் . தீண்டாமை போற்றும் தமிழர்களின் கலாசாரமாக இது இருக்கமுடியாது என எண்ணிக் கொண்டு அவள் கணவன் அருகில் கதிரை ஒன்றின் மேல் மெல்ல அமருகிறேன்.
அவள் மெல்ல எழுந்து வெற்றிலைத் தட்டத்தைக் கையில் எடுத்துவந்து எனக்கு முன்னே வைத்துவிட்டு, மீண்டும் போய்
மூன்றாவது ஆண்டுமலர்
63
ஞானம்

Page 33
"எதிரில் அமர்கிறாள்.
அவள் அருகே ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களுமாக மூவர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களும் என்னைப் போலக் காலந்தாழ்த்தி வந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கொரு திருப்தி.
எனது வருகையுடன் சில கணங்கள் மெளனமாகக் கழிகிறது. இங்கு நிகழ்ந்துவிட்ட மரணம் விளைவித்த சோகம் இப்பொழுதும் முற்றாகக் கலையாது உறைந்து கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இப்பொழுது என்ன பேசுவது எப்படித் துக்கம் விசாரிப்பது!
அவளோடு பேச வேண்டும். நாலுபேர் மத்தியில் மெளனம் என்பது ஒரு சோதனைதான்.
நான் தலையைத் தூக்கி மேலே பார்க்கிறேன்.
அவள் கணவண் நாணி பந்தலை அவதானிப்பதாகக் கருது கின்றார்.
"கிடுகாலே பந்தல் போடுறது சிரமம். அதுதான் தகரப்பந்தல்.”
வீட்டு வாசலை ஒட்டி சிறிய ஒரு முற்றம். முற்றத்தைச் சுற்றி வகைவகையான குழுகுழுக்கும் அழகிய குறோட்டன்கள், குறோட்டன் களுக்கு மத்தியில் முற்றத்தில் ஒரு தகரபபநதல.
எனக்கும் பேசுவதற்கு ஒரு துருப்புக் கிடைத்ததுவிட்ட திருப்தி. "அப்ப கதிரை எடுத்திருப் பியள்!" என்றேன்.
“ஓம் மாஸ்ரர் ! ஐந்நூறு கதிரை அதுவும் போதாமல் போச்சு. சனமெண் டால் தேர்த்திருவிழா மாதிரித்தான். ரீச்சேஸ் ஒருபக்கம்.
என்ரை கந்தோர் ஆக்கள். என்ரை பிறன்ஸ். ஏ.ஜி.ஏ மையம் எடுக்கும் வரை இருந்து சுடலை வரைக்கும் வந்துதான் போனவர்.”
“ஒ. அப்பிடியே!” "இரண்டாம் நாள் கதிரையள் அனுப்பிப்போட்டன். பந்தல், சொந்தக் காரப் பொடியன் ரை. நாளைக்கு எட்டுச்செலவு முடியும்வரை விட்டிருக் கிறான்.”
அவர் பேச்சு அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. குறிப்பாக ஒரு தடவை அவளை வெறித்துப் பார்க்கிறாள். அவர் மெல்ல அடங்கிப் போகிறார். அவர் தலை மெல்லத் தாழ்ந்து போகிறது.
கணவன் மனைவி விட்டுக் கொடுத்து இணங்கிப்போகவேண்டும் என்பதை உணர்ந்த மனிதன். அவளைக் காதலித்துக் கைப்பிடித்த கணவன்.
நான் அவளை அவதானித்த தாகக் காட்டிக் கொள்ளாமல், "பந் தல் அமைப்பு இப்ப மாறிப் போச்சு” என்றேன்.
“ęọGSDT(b”
ஞானம் 64
மூன்றாவது ஆண்டுபலப்
 

அவள் எச்சரிக்கையை மீறி அவர் அதிகம் பேசப்போவதில்லை. உணர்ந்துகொண்டு, "நன்மைக் காரியங்களுக்குத்தான் முகடு வைத் துப் பந்தல்போடுகிறது” என மீண்டும் கூறுகின்றேன்.
செத்த வீட்டுக்குப் பரவு பந்தல்தான்” உரையாடலில் அவள் அருகில் இருக்கும் ஒருவர் மெல்லக் கலந்து கொள்கிறார்.
“இப்பெல்லாம் தலைகீழாக மாறிப் போச்சு” அவருக்கு ஆதரவாக அருகில் இருக்கும் அந்தப் பெண் பேசுகின்றாள். அவள், அவர் மனைவியாக இருக்கலாம்.
“என்னத்தைச் சொல்லுறது! செத்த வீட்டுக் கதிரையளும் பந்தலுந்தான் கலியான வீட்டுக்கும் போகுது. எல்லாம் கழுவிச் சுத்தப் படுத்தியே கொண்டுபோகினம்"
கதை நீண் டுபோவதை விரும்பாத அந்தப் பெண் குறுக் கிட்டுச் சொல்லுகிறாள்:
“சரி. சரி வெளிக்கிடும். பிள்ளையஸ் ரியூசனாலே வரப் போகுதுகள்."
"அப்ப நாங்கள் வெளிக் கிடுறம்” சொல்லிக் கொண்டு அந்தப் பெண்ணும் கணவனும் உடனே புறப்படுகிறார்கள். அவர்களோடு கூட இருந்தவரும் அவர்களைப் பின் தொடருகின்றார்.
அவள், அவள் கணவன் இரு வரும் எழுந்து நின்று அவர்களை வழி அனுப்புகிறார்கள்.
நான் இப்போது தனித்துப் போனதான ஓர் உணர்வு. இங்கிருந்து விரைவாகப் போய்விடவேண்டும் போல மனதுக்குத் தோன்றுகிறது.
ஆனால் அப்படி நடந்துகொள்வது நாகரிகமல்ல. துக்கம் விசாரிக்க வந்த இடத்தில், அவசரப்பட்டு எழுந்து ஓடிவிடக்கூடாது. இன்னும் சற்று நேரம் தாமதிக்கத்தான் வேண் டும். நான் குழம்பிக்கொண்டு பொறு மையாகத் தரித்திருக்கின்றேன்
"மாஸ்ரர், ஊரிலே இல்லைப் போலே.” அவள் கணவன் மெல்ல விசாரிக்கின்றார்.
"நேற்றுத்தான் வீடு வந்து சேர்ந்தன்"
நான் இங்கில்லாத சமயம் ஊரில் நடந்தவைகள் எல்லாவற்றை யும் இங்கு வந்து சேர்ந்ததும் என் மனைவி வழமைபோல் ஒப்புவித்தாள். ஆனால் இந்த மரணச் செய்தியை மாத்திரம் மிகச் சாவகாசமாக பொழுது கருகி இருள் சூழப்போகும் நேரம் மெல்லச் சொன்னாள். "இண்டைக்கு மூண்டாம் நாள்” என இறுதியில் குறிப்பிட்டு, இனி அங்கு போகவேண்டிய அவசியமில்லை என தன் மனக் கருத்தை வெளிப்படுத் தினாள்.
நான் அவள் மனதைப் புரிந்து கொள்ளாதவன்போல சமூக நாகரி கம் கருதி இன்று புறப்பட்டுவிட்டேன். "போவிட்டு வாறன்" என வழமை போல் அவளுக்குக் குரல் கொடுக் கிறேன். அப்பொழுது "ம்.ம்” என உறுமிக்கொண்டு அவள் என்னைப் பார்த்த அந்தப் பார்வையில், நான் எரிந்து சாம்பலாகிப் போகாமல் தப் பித்துக் கொண்டது எனது அதிஷ்டந்தான்.
ஒருதினம் பாடசாலைவிட்டு என்னோடு சயிக்கிளில் வீடுவந்து சேர்ந்த மகள். தாயிடம் அவசரமாக
மூன்றாவது ஆண்டுமலர் 65
ஞானம்

Page 34
ஓடிப்போய்ச் சொல்கிறாள்:
"அம்மா, அந்த ரீச்சர் அப்பா வைத்தான் நெடுகப் பாக்கிறா"
“S96 u snö i DMT u Tas atégomr” மகளுக்குச் சமாதானம் சொல்லி விட்டு, திரும்பி அவள் என்னைப் பார்த்த பார்வை அந்தப் பார்வையின் தகிப்புத்தான் இன்றும் என் மனைவி யின் விழிகளில்.
என் மனைவி அறியமாட் டாள்.
நான் திரும்பும் திசைகளில் எல்லாம் என்கண்களுக்கு அவள் காட்சியாக வலிய வந்துநிற்கின்றாள். அரைச் சுவர்வைத்த ஆசிரியர் அறையில் ஏதோ தேவையின் பொருட்டு நிற்பதுபோல் என் கண் களில் படவேண்டுமென்று சும்மா எழுந்து நிற்கின்றாள்.
குட்டி யானை ஒன்று மருப்பை நீட்டிக் குற்ற வருவதுபோல திடீரென எதிரில் வருகிறாள். மடிவிட்ட பசு மெல்ல அசைந்து போவதுபோல முன்னே நடந்து போகின்றாள்.
அவள் வாய்திறந்து மாத்திரம் எதுவும் பேசாதிருப்பது அவளுக்கே உரிய சாதுரியம். போதை ஊட்டும் விழிகளும் பூரித்த தன் மேனியும் எல்லாம் பேசுமென அவள் நம்பு கின்றாள்.
இனி, இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான். ஆனால் நிகழ்ந்து விட்ட மரணம் பற்றி சம்பிரதாயத்துக் கேனும் இரண்டு வார்த்தை இன்னும் பேசவில்லையே என்று நினைத்துக் கொண்டு கேட்கிறேன்:
"அம்மாவுக்கு என்ன வயது?” "எழுபது” அவள் குரல் நைந்து மெல்லஒலிக்கிறது.
அவள் முகத்தை இப்பொழுது தான் குறிப்பாகக் கவனிக்கிறேன். அந்த முகம் கறுத்துக் களையிழந்து கிடக்கிறது. அவள் உடல் மிக வாடிச் சோர்ந்துபோனது. இப்படி அவளை இதுவரை நான் பார்த்ததில்லை. அம்மாவையல்லவா அவள் இழந்து போய் இருக்கிறாள். அம்மாவின் இழப்பென்பது பெரிய சோகந்தான். அவளுக்கு என்ன தான் சொல்லி அவள் வேதனையைத் தணிக்க (լքtջեւյլb!
"அம்மா உங்களுக்கு உதவி யாக இருந்திருப்பா?”
"அதுதான் இப்ப பிரச்சினை. இரணர் டுபேரும் காலையிலே வெளிக்கிட்டுப் போவிடுவம். பிள்ளை இரண்டையும் பாக்கிறது அவதான். இனிமேல் என்ன செய்யிறதெண்டு தான்."
அவர் சொல்லி முடிப்பதற்குள் அவள் இடைமறித்து "அப்பா செத்து
ييلي ))
);"|MğA
f 4. Y
)
ஞானம்
66
மூன்றாவது ஆண்டுமலர்

இருபது வருஷம் அம்மாதான் எல் லாம்” என குரல் தளதளக்கக் கூறிக் கொண்டு, வெறுப்போடு அவரை நோக்குகின்றாள்.
அவளுக்கு வேணி டிய ஆறுதல் வார்த்தைகள் கூறுவதற்கு எனக்கு இயலவில்லை. இனி இங் கிருந்து புறப்படலாம் என்று நான் எனக்குள் தீர்மானித்துக் கொள்ளு கின்றேன்.
அப்போது, "கொஞ்சம் இருங் கோவாறன்" என்று சொல்லிக் கொண்டு அவள் எழுந்து உள்ளே போகிறாள்.
"ஏன் இன்னும் இருக்கச் சொல்லுறியள்?” எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் எனக்குள் குழம்பி முழித்துக் கொண்டிருக் கிறேன் . சற்றுநேரம் கழிந்து போயிருக்கும்.
ஒரு "றேயின்மேல் தேநீர்க் *கப் பொன்றை வைத்து, இரு கரங்களினாலும் அதை மெல்லத் தாங்கிய வண்ணம் அவள் வெளியே வருகிறாள்.
எனக்கு அதிசயமாக இருக் கிறது.
அவள் கணவனுக்கும் அப்படி இருந்திருக்க வேண்டும்.
மரண வீட்டில் உறவுக் காரர்கள் அல்லாத மற்றையவர்கள் வாய் நனைப்பது வழக்கமில்லை.
அவள் கணவன் குறிப்பாக ஒரு தடவை அவளை நோக்குகின் றான்.
அவள், அவன் பார்வையைப் புரிந்துகொண்டு, "நீங்கள்தானே அதொண்டும் பாக்கிறதில்லை” என்று சொல்லிக்கொண்டு தேநீரை என்னி
டம் நீட்டுகிறாள்.
நான் மெளனமாகத் தேநீரைக் கையில் எடுத்துக்கொள்கிறேன்.
"பாத்தியளா! உங்களைச் சரி யாகப் புரிந்து வைத்திருக்கிறா” என சொல்லி, அவர் பெரிதாகச் சிரிக் கின்றார்.
அவள் “றே'யைக் கையோடு கொண்டு சென்று தனக் கருகே உள்ள ஒரு "ரீப்போ' மீது வைத்து விட்டு முன்போலக் கதிரையில் அமர்ந்திருக்கின்றாள் நான் சிறிது சிறிதாகத் தேநீரைப் பருகிக்கொண் டிருக்கின்றேன்.
பருகிமுடிந்து அருகில் உள்ள 'றேயில் கப்பை வைப்பதற் காக மெல்ல எழுவதற்கு எத்தனிக் கிறேன். V
அவள் எதிர்பார்த்து இருந் தவள்போல சட்டென்று எழுந்து வரு கின்றாள். நான் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கப்பை தான் வாங்குவதுபோல் அந்தக் கப் போடு சேர்த்து என்கரத்தை மெல்லப் பற்றுகின்ற அவள் விழிகளில அணை யாத சோகம் ததும்பி நிற்கிறது. (யாவும் கற்பனை)
மூன்றாவது ஆண்டுமலர்
67
ஞானம்

Page 35
அயலகத் தமிழ்க்கலை இலக்கியம்
நூலும் அது குறித்த சிந்தனைகளும்
- Amaj ama
தமிழ்மொழி இருபதாம் நூற்றாண்டில் பெற்ற புதிய பரிமாணமாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வளரத் தொடங்கிய தையும் கூறலாம். இந்த வளர்ச்சியில் அந்தந்த நாடுகளுக்கான தனித்துவங் களும், தாய்நாடாக கருதப்படுகின்ற தமிழ் நாட்டுடனான பொது ஊடாட்டங் களும் உண்டு.
இதனைக் கருத்தில் கொண்டு ஓர் ஆய்வு நூலை அயலகத் தமிழ்க் கலை இலக்கியம்' என்ற பொதுத்தலைப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகத் தமிழ் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் ந.கடிகாசலமும், முனைவர். ச.சிவகாமியும் பதிப்பாசிரியர்களாகச் செயற்பட்டு இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் பார்க்கும் எவரும் முதலில் மலைப்பும், பின் மகிழ்ச்சியும் கொள்வதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் உண்மையில் இந்த நூல் அதற்கான தகுதியைக் கொண்டிருக்கின்றதா?
இந்த நூலில், மொத்தமாக இருநூற்றுப்பதினைந்து பக்கங்கள் இலங்கையின் தமிழ்த் தனித்துவங்களையும், தமிழ் நாட்டுடனான ஊடாட்டங் களையும் சொல்வதற்குப் பயன்பட்டிருக்கின்றன. இதில் பன்னிரெண்டு கட்டுரைகளைப் பதினொருவர் எழுதியிருக்கின்றனர். சென்னையில் குடியிருக்கும் தெ.மதுசூதனன் என்பவரின் - எங்களுக்கு நன்கு அறிமுக மானவர் - கட்டுரையைத் தவிர்த்தால் எஞ்சியிருக்கும் கட்டுரைகளை எழுதி யிருப்பவர்கள் இலங்கையின் யாழ்ப்பாண, கிழக்கு, கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நூலைப் பார்த்து, படித்து பின் யோசிக்கையில், இலங்கையில் இருபதாம் நூற்றாண்டு பரிமாணத்தை அறிவதற்கு இந்த மூன்று பல்கலைக் கழகத்தைவிட வெளியில். ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வே எழுகின்றது.
தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சியில் இத்தகைய பதிவும், ஒப்பாய்வும் தேவைதான். ஆனால், வரலாற்றுப் பின்புலம், பொருளாதார முயற்சி, சமூக ஒருங்கமைப்பு, பண்பாட்டுத் தனித்துவங்கள் காரணமாக தனியொரு குழும மாக இயங்கிவருகிற "மலையகத் தமிழரைப் பற்றிய, அவர்தம் கலை
ஞானம் 68 மூன்றாவது ஆண்டுமலர்

இலக்கிய முயற்சிகள் பற்றிய குறிப்புகள் செவ்வனே பதியப்படவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
மலையகத் தமிழர்களை பற்றித் தமிழகத்தில் போதுமான தகவல்கள் இல்லை என்று ஏற்கனவே ஒரு குறைபாடு உண்டு. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் "தாயகம் திரும்பியோர்” முதலணியினர், 1977, 1983 கலவரத்தின் பின் “அகதிகளாக வந்தோர் அடுத்த அணியினர்”. இந்த இரண்டு அணியைச் சார்ந்தவர்களும், "சிலோன்காரர்கள்” என்ற பொதுவான அடைமொழியிட்டு அவலத்துக்குட்பட்டுள்ளனர்.
மலையகத்தின் முன்னோடி எழுத்தாளரான சி.வி. வேலுப்பிள்ளை தன்னுடைய முதல் நாவலைத் தமிழகத்தில் வெளியிட்டபோது "இம்மக்களின் சரிதம் குறித்து தமிழ் நாட்டு மக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க நியாய மில்லை" என்ற குறிப்புரையைச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ். போத்திரெட்டி, தாமரை இதழ் ஆசிரியர் எஸ்.மகேந்திரன், நின்றுபோன சுபமங்களா ஆசிரியர் அமரர் கோமல் சுவாமிநாதன், அறிஞர் பெ.சு.மணி போன்றோர் மலைய கத்தைப் பற்றி தமிழகத்தில் தேவையான அளவுக்கு பிரச்சாரம் செய்துள்ளனர்.
1899இல் ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு' எழுதிய சிட்டியும் சோ.சிவபாதசுந்தரமும் கூட இதே தவறைச் செய்திருக்கின்றனர். ஆனால் 1973 தற்காலத் தமிழ் இலக்கியம்' என்ற இந்திய அரசின் சாகித்திய ஆகாதமிப் பரிசைப் பெற்ற நூலை டாக்டர் இரா.தண்டாயுதம் இந்த மலையக முயற்சிகள் குறித்து எழுதியுள்ளமையையும் கவனத்தில் எடுக்கையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் உரிய முறையில் செய்யப் படவில்லை என்றே எண்ண வைக்கிறது. 63 களிலிருந்தே மலையக இலக்கிய வாதிகள் இது குறித்துக் குரலெழுப்பி இருக்கின்றனர். அதனால் விளைந்த பயன்தான் உருப்படியானதாக இல்லை.
மலையக இலக்கியத்தைப் பற்றி இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களும் பூரணமானதாக ஒரு சமுதாயத்தின் இயக்கத்தைக் குறிப்பதாக இல்லை. மலையக எழுத்துக்கள் நூல் வடிவில் கிடைப்பதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது சொல்லப்படுவதில் அர்த்தமிருக்க முடியாது என்கின்ற அதே நேரத்தில் அப்படிச் சொல்லுவதற்கும் இடம் இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். பல மலையக எழுத்தாளர்களின் எந்த ஒரு படைப்பும் நூல்வடிவில் இல்லை என்ற குறைபாட்டைத் தட்டிக் கழிக்க முடியாது.
ஒரு படைப்பாளி இறந்து முதலிரண்டு ஆண்டுகளின் பின்னர் அவரும் அவரது எழுத்தும் மறக்கப்பட்டு விடுவதைக் காணுகிறோம். மலையக இலக்கியத்தின் "கொடுமுடிகளாக கருதப்படுகின்ற நடேசைய்யரையும், சி.வி.வேலுப்பிள்ளையையும் பூரணமாக அறிந்துகொள்வதற்கு நூல்கள் ஏதேனும் இருக்கின்றதா?. என்.எம்.எஸ்.ராமையா, தமிழ்மாறன், மலைத்தம்பி,
மூன்றாவது ஆண்டுமலர் 69 ஞானம்

Page 36
தென்னவன், மாத்தளை அருணேசர் ஆகியோரின் எழுத்துக்களைப் பற்றிய எந்தவிதமான எழுத்து ஆதாரங்களும் இல்லாத நிலையில் மலையக இலக்கியம் பற்றி தொடர்ந்தும் குரலெழுப்புவதில் அர்த்தம் இருக்கின்றதா? இந்த மக்களின் கடல்கடந்த அவலத்தைச் சொல்லும் வாய்மொழி இலக்கியம் எவற்றையேனும் திரட்டி எழுத்தில் தர முடிந்திருக்கிறதா? வாய்மொழி இலக்கியம் குறித்து ஒரு ஆய்வினை கண்டி நகரில் நடாத்து வதற்கு 1999 டிசம்பரில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட அடித்தளவமைப்பு அமைச்சின் இந்த முயற்சி குறித்து தேசியப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டன. வழிகாட்டல் குழுத்தலைராகப் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களின் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. அதன்பின் அதுசம்பந்தமான எவ்வித அக்கறையும் காட்டப் படவில்லை. மலையக இலக்கியம் இந்த முறையில்தான் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.
மலையத்தில் நிறைய ஆசிரிய வெற்றிடங்கள் இருக்கின்றன. தமிழ கத்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் என்றும், வடபுலத்து ஆசிரியர்களை கொண்டு இதை நிரப்புவோம் என்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பத்திரிகை அறிக்கைகள் விட்டிருக்கின்றனர். மலையகத்தில் அதற்கான தேவை இருக்கிறது என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்துறையில் பயிற்சிகள் மேற்கொள்வதற்கு போதிய மாணவர்கள் இல்லாத தினால் பூரீபாத தேசியக்கல்லூரியிலும் யத்தன்சைட் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் சில துறைகளில் போதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்தக் குறை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நிலவுகிறது. நிலைமை இவ்வாறிருக்கையில் மலையக மாணவருக்கு ஒரு தனியான பல்கலைக்கழகம் வேண்டும் என்று குரல் எழுப்புவது வெறும் அரசியல் பிரபல்யத்திற்காகவேதான் என்ற முடிவுக்குத்தானே வரவேண்டும்.
இவை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பார்த்தோமானால் இன்று ஆயிரம் பட்டதாரிகளைக் கொண்டுள்ள ஒரு சமூகத்தில் ஏதாவது ஒரு பிரதேச சஞ்சிகை வெளியிடப்படுகிறதா என்றால் பெருமையுடன் பதில் தரமுடியாத நிலையிலேயே இருக்கிறோம்.
அறியாமையில் இருந்தது ஒருகாலம். ஆத்திரத்துடன் அந்த அறியாமைக்கு நம்மை ஆட்படுத்தியவர்களை விமர்சனத்துக்குட்படுத்தியது ஒருகாலம். செயற்படக்கூடிய காலத்தில் நாம் வாழாவிருந்தோமானால் உலகத் தமிழாராய்ச்சி போன்ற நிறுவனங்களில் இடம்பெறும் புறக் கணிப்புகளை மாத்திரமல்ல, திட்டமிட்ட வஞ்சனைகளைக்கூட வெளிப் படுத்தும் சக்தியை நாம் இழந்துவிட்டவர்களாகவே கருத நேரிடும். மலைய கத்தில் இன்று வெளியிடப்படும் வெறும் அரசியல் பேச்சுக்கள் இதனையே
கட்டியம் கூறுகின்றது.
ΣΚ ΣΚ ΣΚ
ஞானம் 7s மூன்றாவது ஆண்டுமலர்

சிறிலங்கா நமது நாடு என்று - நாம் சீராகவே பாடிடுவோம் - அதன்
சிறப்புக்காய் உழைக்கும் நல்லோர்க்கு - நாம்
சிந்துதேன் மாலை சூடிடுவோம்
அங்குமிங்கும் போக
பங்கம் வராது உயிர்காத்திடுவோம் - இங்கு
வாழும் வழிதன்னை
நாளை நாட்டின் வாழ்வினுக்காய் - நாம் நித்தம் பணிசெய்யவேண்டும் நம்பி வேளை வரும்பொழுது நம்முழைப்பை - நாம் வேண்டும் அளவு வழங்கிடுவோம்.
சிங்களம், தமிழர் முஸ்லிம் மக்கள் - இங்கு சேர்ந்து வாழ்ந்திடச் செய்திடுவோம் - பொங்கும் வளம் யாவும் நன்கு நிதம் - இங்கு தங்கும் படியாய்ச் செய்திடுவோம் எங்கும் சுதந்திரம் யாரும் பெற்று - இங்கு
வழிசெய்வோம்
வழங்கிடுவோம்
கல்விக்கு உயரிடம் தந்திடுவோம் - மக்கள் கண்களைத் திறந்திடச் செய்திடுவோம்
நல்வழி சென்று நாதன் தாளை - மக்கள்
நாடிடவே வழிவகை
வகுத்திடுவோம்
எவ்வழி நல்வழி அவ்வழி நாம் செல்ல - மக்கள் எல்லாரையும் ஒன்று கூட்டிடுவோம் வெவ்வேறு வழிசெல்லும் விவேகமில்லா - மக்கள்
வாழவழி நாம் சமைத்திடுவோம்
"ஞானம் புதிய சந்தா விபரம்
உள்நாடு தனிப்பிரதி e5l u T 30Il
அரை ஆண்டுச் சந்தா ரூபா 180/=
ஆண்டுச் சந்தா 5 ur T 360/.
சந்தா காசோலை மூலமாகவோ
tn 6ðf Gu "I t.-fr மூலமாகவோ அனுப்பலாம்.
மனியோடர் அனுப்புபவர் சளி அதனை கணி டி தபால் நிலையத் தில் மாற்றக் கூடியதாக அனுப்ப வேண்டும்.
அனுப்பவேண்டிய பெயர், (up55@urf) - TIGNANASEKARAN 19/7, PERADENIYA ROAD,
KANDY.
வெளிநாடு டுச் சந்தா 25 USS ------ (தபால் செலவு உட்பட) J
மூன்றாவது ஆண்டுமலர்
7
ஞானம்

Page 37
Dலையகத்தின் தலைநகரான கண்டியிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக “ஞானம்' என்ற இலக்கிய சஞ்சிகை தொடர்ச்சியாக மாதந்தோறும் வெளிவருகிறது.
மலையகத்தின் ‘இதழியல் பற்றி எழுதுகிறவர்கள் “ஞானம்' பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
நான் ஏடு தூக்கிப் பள்ளி சென்ற காலத்தில் வெளிவந்த மலைமுரசு முதல் இன்று வெளிவரும் “ஞானம்’ வரை திரும்பிப்பார்க்கிறேன்.
மலையக இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதுபவர்கள் மலையகத்தில் வெளி வந்த ஒரு சில இலக்கிய இதழ்களைப் பற்றியே குறிப்பிடுகின்றனர்.
நான் வெளியிட்ட "கொழுந்து சஞ்சிகை 13 இதழ்களுடன் தனது பயணத்தை முடித்து கொண்டது.
"ஞானம் இதுவரை 24 இதழ்கள் வெளிவந்துள்ளது. இந்தச் சஞ்சிகை தொடர்ந்து வெளிவரும் என ஆசிரியரான தி.ஞானசேகரன் உறுதியுடன் கூறியுள்ளார்.
ஞானம் 2000ல் தனது இலக்கிய பயணத்தை ஆரம்பித்தது. நாவலாசிரியரான தி.ஞாசேகரன் “ஞானம் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஆர்வமுடன் செயற்படுகிறார்.
"ஞானம் ஒவ்வொரு இதழும் வெளிவந்ததும் அதைப்பற்றி நாங்கள் கலந்துரையாடத் தவறுவதில்லை.
ஞானம் முதல் இதழ் மலர்ந்த ஜுன் மாதம் 2000. முதல் இதழில் புகழ்பூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் பேட்டி இடம் பெற்றது. முதல் இதழிலிருந்து "புதிய நூலகம்' என்ற தலைப்பில் நம்மவர் ஞானம் 72 மூன்றாவது ஆண்ருமலம்
 
 

களின் நூல்களை அறிமுகப்படுத்தும் பணியினை பொறுப்பேற்றேன்.
"நான் பேசநினைப்பதெல்லாம்.” என்ற தலைப்பில் கலாநிதி துரை.மனோகரன் தொடர்ந்து எழுதிவந்தார்.
இலக்கியப் பணியில் இவர்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ந.பார்த்திபன் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தினார். முதல் இதழில் திருகோணமலை த.சித்தி அமரசிங்கம் இடம்பெற்றிருந்தார்.
ஞானத்தின் ஒவ்வொரு இதழிலிலும் மூத்த படைப்பாளிகளுடன் இளைய தலைமுறையினரும் இடம்பெற்றனர்.
தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், சி.சிவசேகரம், முகம்மது சமீம், ஏ.இக்பால், செ.யோகநாதன், கே.எஸ்.சிவகுமாரன், எம்.வை.எம்.மீஆத், ராணி சீதரன் இப்படி ஒரு பட்டாளமே தொடர்ந்து எழுதியது.
அதேபோல இளந்தலைமுறையைச் சார்ந்த லெனின் மதிவாணம், திருமலை வி.என்.சந்திரகாந்தி, இக்பால் அலி, த.ஜெயசீலன், திக்குவல்லை ரதீமா, வேதினகரன், சித்தாந்தன், மாவை வரோதயன், பிரசாந்தன் போன்றவர் களும் எழுதினார்கள்.
ஞானம் இதழ்களில் காத்திரமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஞானம் இரண்டாவது ஆண்டு மலரிலிருந்து கலாநிதி துரை.மனோகரன் ‘எழுதத் தூண்டும் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் புதிய தொடரை ஆரம்பித்தார்.
இதேபோன்று ஜனவரி 2002 ம் இதழில் 'திரும்பிப்பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு இதழிலிலும் நான் எழுதத்தொடங்கினேன். பெப்ரவரி 2002 இதழில் "எனது எழுத்துலகம்' என்ற புதிய பகுதி ஆரம்பமானது.
முதல் கட்டுரையாக தெளிவத்தை ஜோசப் தனது எழுத்துலக பணி களைப் பற்றி இதுவரை வராத புதிய தகவல்களைத் தந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் முல்லைமணி, அன்புமணி, சாரல் நாடன் என்று தொடர்ந்து எழுதியுள்ளார்கள். இதுவரை எழுத்தாளர்களைப் பற்றி வெளிச்சத்திற்கு வராத புதிய தகவல்களை இளந்தலைமுறையினர் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு. "ஞானம்' இதுவரை 24 இதழ்களைப் பிரசவித்துள்ளது. கூட்டு மொத்தமாகப் பார்க்கும்பொழுது மலையகத்திலிருந்து வெளிவரும் ஞானம் இலங்கை எழுத்தாளர்கள் மத்தியில் ஓர் இலக்கியப் பாலமாக செயற்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
எதிர்காலத்தில் இதழியல் வரலாறு எழுதுபவர்கள் ஞானத்திற்கு தனி அத்தியாயமே எழுதுவார்கள் என்பது யதார்த்த பூர்வமான 2 660ppuurg5b.
மூன்றாவது ஆண்டுலர் 73 ஞானம்

Page 38
தோழிக்கு!
வேலியே பயிரைமேயும் விந்தைகண்டேன் தோழி
வெந்தபுண்ணில் வேல்பாயும் கொடுமை கண்டேன்; கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கண்டேன்; வீணில்
கூடிப்பிதற்றிடுவோர் குணமும் கண்டேன்; பொன் தாலியை மதிக்காத பெண்டிர் கண்டேன்; பெற்ற
தாயினைத் தூற்றுகின்ற தனயர் கண்டேன்; பெண்ணை ஜாலிக்குக் காதலிக்கும் இளைஞர்கண்டேன்; தோழி ஜகத்தினிலே விந்தைகளோ பலவும் கண்டேன்!
பொய்யுடையோர் வாழ்க்கையிலே ஜெயிக்கக் கண்டேன்;
பொறுமையைக் கைக்கொண்டோர் தோற்கக் கண்டேன்; மெய்யெனவே பேர் கொண்ட வுடலழியக் கண்டேன்; மேதினியை அதர்மங்கள் ஆழக்கண்டேன்; நித்தம் வாய்வலிக்கத் தூற்றியவர் வாழ்த்தக் கண்டேன்;
வாய்மையும் வலியிழந்து ஒடக்கண்டேன்; வலிந்து தெய்வத்தைக் குறைகூறுங் கும்பல்கண்டேன்; பிறந்த தேசமே உயிரென்னும் மனிதர் கண்டேன் தோழி!
காற்றுக்கு வேலிகட்டும் திறமை கண்டேன்; தோழி
காதலைக் கருவறுக்கும் நிலையும் கண்டேன்; சோற்றுக் காயுயிர்களையும் கொடுமை கண்டேன்; சொர்க்கமே நரகமாய் மாறக்கண்டேன்; உலகில் தேற்றுவா ரில்லாத வுயிர்கள் கண்டேன் தோழி;
தேடலிலே கிட்டாத பொருளுங் கண்டேன், மண்ணில் நேற்றிருந்தோர்இன் றில்லாநியதி கண்டேன்;
நீள்விகம்பும் மனம்வைத்தால் தாள்பணிதல் கண்டேனர்!
கவிஞர் புரட்சிபாலன்
ஞானம் 74 மூன்றாவது ஆண்டுமலர்

நெற்றிக்கண்
நக்கீரன்
நால் விமர்சனம்
நூல : வம்மிப்பூ எழுதியவர் : ச.அருளானந்தம்
திருகோணமலை யாழ்ப் பாணத் தமிழ் மன்னர் காலத்தி லிருந்தே புகழ்பூத்த ஓர் இலக்கியப் பிரதேசமாக விளங்கிவந்துள்ளது. பல் வேறு இலக்கிய முயற்சிகளின் களமா கவும் தளமாகவும் அது தன்னை ஆக்கிக் கொண்டுள்ளது. சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கும் அது தன்னளவிற் பங்காற்றி வருகின்றது. திருகோணமலையின் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ச.அருளா னந்தம் (சிறுவர் இலக்கிய முயற்சி களில் அதிக அக்கறை செலுத்தி வருபவர்) அந்த ஆவணி ஆறு (2000) என்ற சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டுள்ளார். அத்துறையில் அவரது இரண்டாவது தொகுதியாக வம்மிப்பூ (2001) வெளிவந்துள்ளது. வம்மிப்பூ என்ற சிறுகதைத் தொகுதியில் அருளானந்தத்தின் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள் ளன. ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு அநுபவப் பரப்பினை வாசகருக்குத் தருகிறது. இத்தொகுதி யில் கணிசமான படைப்புகள் போர்ச் சூழலைப் பகைப்புலமாகக் கொண் டுள்ளன. இந்நூலில் உள்ள சில சிறுகதைகள் ஆசிரியரின் எழுத்தாற் றலைப் பறைசாற்றுகின்றன. இரு மனங்கள், அவலங்கள், அநுபவம் புதுமை, மனிதம் ஆகிய படைப்புகள் அத்தகையன. வெளியில் ஆளுக்
காள் பிரச்சினைப்பட்டுக் கொண் டாலும் உள்ளுர ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற ஒரு தம்பதியைக் கதா சிரியர் "இரு மனங்கள்’ என்ற சிறுகதையில் காட்டுகிறார். மணியத் தார், பொன்னம்மா என்ற இரு பாத்திரங்களும் தத்ருபமாக வார்க்கப் பட்டிருக்கின்றன. கதாசிரியரின் பெயரை வாழ வைப்பதற்கு இந்தச் சிறுகதை உதவும். 'அநுபவம் புதுமை என்ற சிறுகதையில் கல்வி அதிகாரி ஒருவரைப் பாத்திரமாக்கி, அதிகாரிகளின் சுயநலப்போக்கு களைக் கதாசிரியர் துலாம்பரமாக இனங்காட்டுகிறார். இத்தகைய அதிகாரிகளினால் கல்வி வளர் கிறதோ இல்லையோ, அவர்களது வயிறும் வாழ்க்கை வசதிகளும் வளர் கிண்றன. கதாசிரியரின் கல வித் துறை அநுபவங்கள் ஆனந்தர் என்ற பாத்திரத்தை உரு வாக்க அவருக்கு உதவியுள்ளன. சுயநலமிக்க சமூகத்தின் மத்தியில் சேவை மனப்பாங்கும் மனிதாபி மானமும் கொண்ட மனிதர்களும் இருக்கின்றனர் என்பதைச் செயற் கைப்பாங்கு இன்றி இயல்பாக உணர்த்தும் படைப்பு, மனிதம். தமது ஆசிரியச் சேவைக்காலம் முழுவதும் கல்வித்துறையில் அயராது உழைத்த சற்குணத்தார் ஓய்வுபெற்ற பின்னர் படும் துன்பங்களை இச்சிறுகதை காட்டுகிறது. சுயநலங்களுக்கு மத்தி யில் மனிதத்துவம் இன்றும்
மூன்றாவது ஆண்டுமலர்
75
ஞானம்

Page 39
உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதை இச்சிறுகதையில் இடம்பெறும் ஒரு பாத்திரம் வாயிலாக ஆசிரியர் இனங் காட்டுகின்றார். "அவலங்கள்’ என்ற சிறுகதை, போரினால் நாட்டில் ஏற்பட்ட அவலங்களின் வெட்டுமுகத் தோற்றம் போல் அமைந்துள்ளது. இக்கதையில் கயாத்து நானா என்ற பாத்திரத்தை உயிரோட்டத்துடன் அருளானந்தம் உருவாக்கியுள்ளார். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தி யிலும் தமிழரும் முஸ்லிம்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி வாழ் வதையும் சுதந்திரத்தை இழந்து அகதிகளாக மக்கள் அல்லல்பட்டு மடிவதையும் இப்படைப்பு எடுத்துக் காட்டுகிறது. இத்தொகுதியிலுள்ள அரசமரம்' என்ற ஆக்கத்தைச் சிறுகதை என்று கூறாது, சிறுவர் இலக்கியம் என்று கொள்வதே பொருத்தம்போல் தோன்றுகிறது. கதையின் கருவும் கதை எழுதப்பட்ட முறையும் சிறுவர் இலக்கியமாகவே அதனைக் காட்டுகின்றது. மற்றை யவை கதைகளாக மாத்திரமே விளங்குகின்றன.
எழுத்தாளர் அருளானந்தம் இரு மனங்கள், அநுபவம் புதுமை, மனிதம், அவலங்கள் ஆகிய சிறுகதைகளிற் செலுத்திய படைப் பாற்றல் அக்கறையை மற்றைய படைப்புகளின்மீது காட்டத் தவறி விட்டார். பாத்திரங்களும் வாய்க்கு வந்தபடி செந்தமிழ் பேசி, வாசகரைச் சலிப்படையச் செய்கின்றன. தரமான சிறுகதைகளைப் படைக்கக்கூடிய ஆற்றல் மிக்க அருளானந்தம், ஏன் சில படைப்புகளிற் சறுக்கிவிடுகிறார் என்பது புரியவில்லை. தமது படைப்பு
களின் ஆவணத்தன்மையைப் பாது காக்க முயன்று, படைப்பாற்றலை அவர் கோட்டைவிட்டு விடுகின்றார். இப்போது வெளியாகும் பல நூல் களிலும் நீக்கமற நிறைந்துள்ள எழுத்துப்பிழைகள், அச்சுப்பிழைகள் இந்நூலிலும் ஆங்காங்கே தலை யைக் காட்டுகின்றன.
அருளானந்தத்தின் எதிர்காலச் சிறுகதைகள் மேலும் தரமாக விளங்கும் என்பதை, வம்மிப்பூ என்னும் இச்சிறுகதைத் தொகுதி கோடிகாட்டி நிற்கிறது. நூல் : இரு நாடகங்கள் எழுதியவர் : சி.விஸ்வலிங்கம்
ஈழத்தில் கவிதை, சிறுகதை, நாவல் என்பனவற்றோடு ஒப்பிடும் போது, நாடக நூல்களின் வெளியீடு மிகக் குறைவாகவே உள்ளது. நாடகம் அடிப்படையில் ஓர் அவைக் காற்றுக்கலையாக விளங்குவதும் இதற்கு ஒரு காரணம் எனல் வேண்டும். எனினும், இடையிடையே நாடக நூல்கள் ஓரளவு வெளி வருவது வரவேற்கத்தக்க அம்சமே. இவ்வகையில், திருகோணமலையின் ஒரு பங்களிப்பாக, அப்பிரதேசத்தில் இருநூறு நாடகங்களுக்கு மேல் எழுதி, அவற்றில் நடித்து, ஒப்பனை யாளராகவும் இயக்குநராகவும் விளங்கிய சி.விஸ்வலிங்கத்தின் இரு நாடகங்கள்(1999) என்ற நாடகத் தொகுதி விளங்குகிறது. எல்லாம் காசுக்காக, சிவபக்தன் இராவணன் ஆகிய இரு நாடகங்கள் இத்தொகுதி யில் இடம் பெற்றுள்ளன.
‘எல்லாம் காசுக்காக என்ற ஓரங்க நாடகம், நகைச்சுவையை வழங்கும் நோக்கில் எழுதப்
ஞானம் 76
மூன்றாவது ஆண்டுமலர்

பட்டுள்ளது. வாழ்க்கையில் விரக்தி யுற்றுத் தற்கொலை செய்ய முயலும் வேலையற்ற நண்பர்களான துரை சிங்கம், ராஜ" ஆகியோர், எதிர் பாராதவிதமாக மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள் ளும் சூழல் ஏற்படுவதே நாடகத்தின் சாரமாகும். நாடகம் முழுவதிலும் நாடகாசிரியரின் நகைச்சுவையுணர்வு வெளிப்படுகின்றது. பொழுதுபோக்கு நாடகமாக இது அமைந்துள்ளது.
'சிவபக்தன் இராவணன் என்ற நாடகம், தனது தாயின் வழிபாட்டுக் காக இராவணன் கோணலிங்கத்தைப் பெயர்த்துவர முயற்சித்தபோது, அவனது தாயின் வேண்டுகோளுக் கேற்ப விஷ்ணு ஒரு சிறுவன் வடிவில் தோன்றி, அவனது முயற்சியைத் தடுப்பதைக் கருவாகக் கொண்டுள் ளது. திருகோணமலையில் உள்ள இராவணன் வெட்டு, கன்னியா நீரூற்றுகள் தொடர்பான புராண, கர்ணபரம்பரைக் கதைகளை அடிப் படையாகக் கொண்டு, விஸ்வலிங்கம் இந்நாடகத்தை ஆக்கியிருக்கிறார். ஒரு குறுநாடகமாக இது அமைந் துள்ளது.
தமது நாடகத்தொகுதியைத் தமது கண்களாற் கண்டு மனநிறைவு பெற முன்னரே நாடகாசிரியர் விஸ்வ லிங்கம் கண்களை மூடிவிட்டார். இத்தொகுதியை வெளியிடுவதில் மிக ஆர்வம் செலுத்தி, விஸ்வலிங்கத்தின் இரு நாடங்களை நூலுருவில் கொணர்ந்த பதிப்பாளர் சித்தி அமர சிங்கம் பாராட்டுக்குரியவர். இத் தகைய சில பதிப்பாளர்கள் இருப்ப தால்தான் நூலாசிரியர் சிலரது கனவுகள் நிறைவேற முடிகின்றது.
சி.விஸ்வலிங்கத்தின் நாடக முயற்சிகளை இனங்காட்டும் பதிவாக இரு நாடகங்கள் என்னும் இத் தொகுதி விளங்குகின்றது.
நூல : நிஜங்களின் நிழல் எழுதியவர் : த.திரேஸ்குமார்
எழுத்தாளர், கவிஞர்களின்
ஆற்றலை வெளிப்படுத்தும் நூல் களும் வெளிவருவதுண்டு. அதே போன்று, அவர்களின் ஆர்வத்தைப் புலப்படுத்தும் நூல்களும் பிரசுரமாவ துண்டு. ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ஒரு நூலாக இளங்கவிஞர் த.திரேஸ் குமாரின் நிஜங்களின் நிழல் (2002) வெளிவந் துள்ளது. ஏற்கனவே இவரது இதுதான் மலையகம் (2001) என்ற கவிதைத்தொகுதியும் பிரசுரமாகி պ6f611Ֆl.
அடுத்தடுத்து இரு கவிதைத் தொகுதிகளை ஒராண்டு இடைவெளி யில் வெளியிட்ட திரேஸ்குமாரின் ஆர்வத்தைப் பாராட்டலாம். ஆனால், அவை கவிதைத் தொகுதிகளாக விளங்குமாறு பார்த்துக்கொள்வது கவிஞரின் பொறுப்பு. ஓராண்டு இடைவெளியில் அவரின் கவிதா வளர்ச்சியை அதிகமாக எதிர்பார்ப்பது பொருத்தமானது அல்ல எனினும், வளர்ச்சியின் போதாமையை நிஜங் களின் நிழல் எனும் தொகுதி இனங் காட்டுகின்றது. கவிஞரின் சமுதாய நோக்கையும் ஈடுபாட்டையும் இத் தொகுதி புலப்படுத்தும் அதேவேளை, அவரின் கவித்துவ வரட்சியையும் அது கோடி காட்டுகிறது. ஒன்றின் கீழ் ஒன்றாக வரிகளை எழுதிவிட் டால், அது கவிதை எனக் கருதும் மயக்கம் இளங்கவிஞர்களிடமிருந்து
மூன்றாவது ஆண்டுமலம்
77
ஞானம்

Page 40
முற்றாக விலகவேண்டும். சிறந்த கவிதைகளைத் தேடி வாசிப்பதன் மூலமும் கவித்துவ ஆற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலமும் கவிதை தொடர்பான விமர்சனங் களைப் படிப்பதன் மூலமும் இந்த
இளங்கவிஞர் தம்மை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
திரேஸ்குமார் எதிர்காலத்தில் தரமான கவிஞராக விளங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு மலரின்
காத்திருக்கை
இன்றைய பூர்த்தலும் - வாசம் பரப்புதலாயப் இருந்திருக்க வேண்டும்.
வெள்ளை மலர் - என்று பெயரிட்டு மகிழ்கிறீர்கள். என் தலைவிதி பற்றி மறந்து போகிறீர்கள்.
வெள்ளை மாளிகை முற்றத்து மலராய் பூர்த்திருக்கலாம். தினமும் சமாதானப் பத்திரிக்கையின் மறுபக்கம் பொஸ்னியாவின் வெடிச்சத்தமும்பூர்ப்பதைத் தடுத்துவிடுகிறது.
சிவன் கோவில் வீதி பூ விற்பவனிடம், வந்தடைந்தேன் மாலையில் சேரலாம் என. அங்கும், விதவிதமான பூக்களுடன் விதவிதமான மண்டையோடுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. தெய்வ சந்நிதியில் பெருமை பெறலாம் என்று சென்றேன்,
“நீ தெய்வத்திற்கு ஆகாதவன்” என்று ஒதுக்கி வைத்து விட்டார் பூசகர்.
சரி. சருகாகும் போதாவது தமிழ் மணந்து சாவோமே என்று தான் இங்கு பூர்த்தேன் “நீ தமிழ்ப் பூ" என்று சிதைத்து புதைத்து விட்டார்கள். உலகில் எங்கு பூர்ப்பது? சிந்தனை தொடர்கிறது. புதை குழியில் இருந்து எப்படி நெருப்பாய் துளிர்ப்பது? சபித்தவர்களை அழித்து வித்துடலாய் என்று நான் மலர்வது..?
முனிலை அமுதனி லணர்டனிலிருந்து.
ஞானம் 78
மூன்றாவது ஆண்டுமலர்
 

5(i5Ná Glgಷಿ
மதிப்பிற்குரிய ஞானம் ஆசிரியருக்கு,
ஞானம் சஞ்சிகை ஆரம்பித்த நாளிலிருந்து நான் அதன் தீவிர வாசகனாகவும், அவதானிப்பாளனாகவும் இருந்து வருகிறேன். சஞ்சிகையின் வளர்ச்சியும் அதற்கான தங்கள் முயற்சியும் பாராட்டுக்குரியவை. கடந்த ஆறுமாதங்களாக ஆய்வின் பொருட்டுத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தங்கியிருப்பதால் உடனடியாக ஞானத்தைப் பெறமுடியவில்லை. சில இதழ்கள் சேர்ந்தே கிடைக்கின்றன. இங்கு நடந்தேறுகின்ற சில கலை இலக்கிய கலாசார நிகழ்வுகள் தொடர்பாக ஞானம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல். நாம் நமது ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ளும் செய்திகளை விடவும் மிகவும் அதிகமான நிகழ்வுகள் இங்கு நாள்தோறும் நடந்தேறுகின்றன. பாரம்பரியமான நிகழ்வுகள், மாற்றுக்கலாசார நிகழ்வுகள், எதிர்க் கலாசார நிகழ்வுகள் எனப் பல இங்கு நடந்தேறுகின்றன
டிசம்பரில் சென்னையில் இசைவிழாக்கள் நிறைவேறிய சூட்டுடன் திருவையாறில் தியாகையர் உற்சவம் கொட்டும் மழையிலும் நடந்தேறியது. நாட்டின் தலைசிறந்த இசைக்கலைஞர்கள் மழைநீர் சொட்டச் சொட்ட பஞ்சரத்தின கீர்த்தனைகளை இசைத்தது கண்ணுக்கும், செவிக்கும் விருந்தாக அமைந்தது. தியாகையர் உற்சவம் முடிந்த அடுத்த தினங்களில் தமிழ் மக்கள் இசைவிழா என்ற வாசகங்கள் சுவர்களை ஆக்கிரமித்துக் கொண்டன. தமிழிசையே முதலிசை, களவாடப்பட்ட இசையே கருநாடக இசை என்ற வாசகங்களுடன் தமிழ்நாடு மக்கள் கலை இலக்கியக் கழகம் இதனைத் தஞ்சையில் பெருவிழாவாகப் பெப்ரவரி 7ம் திகதியில் நடத்தியது. தியாகையர் உற்சவத்திற்கு எதிரான ஒரு விழாவாகவே இது அமைந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. பகல் முழுவதும் கருத்தரங்கு இடம்பெற்றது. நாடகத்துறைப் பேராசிரியர் இராமசாமி முதலிய அறிஞர்கள் நாட்டுப்புற கலைகளின் தேய்வு பற்றியும் தமிழிசையின் தொன்மம் பற்றியும் கருத்து வழங்கினர். மாலையில் ஆரம்பித்த கலை நிகழ்ச்சிகள் விடியவிடிய நிகழ்ந்தன. கிராமியக் கலைகள் அதன் மணம்மாறாமல் அரங்கேறியமை வரவேற்கத் தக்கதாக அமைந்தது. இதன் பார்வையாளர்கள் பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தையும் பிற மாவட்டங்களையும் சேர்ந்த உழுகுடி மக்களாகவே காணப்பட்டனர். தியாகையர் உற்சவத்தையும், த.ம.க.இ.க வின் இசைவிழாவையும் ஒப்பிட்டு நோக்குவோருக்குப் பாரிய இருகலாசார இடைவெளிகள் மிக இலகுவாகப் புரியவரும்.
மூன்றாவது ஆண்ருமலர் 79 ஞானம்

Page 41
தஞ்சைமாவட்டத்தில் மிகப்பெரிய நிலவுடமையாளரான மூப்பனார் குடும்பத்தின் ஆதரவுடன் நடந்தேறிய தியாகையர் உற்சவத்தில் பெரும்பாலும் பஞ்ச கச்சங்களையும், பட்டுச்சேலைகளையுமே காணமுடிந்தது. அதற்கு ஒர் அகில இந்திய அங்கீகாரம் இருந்தது. இந்திய வானொலியும், தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு நேரடி ஒலி/ஒளி பரப்பின. மோட்டார் வண்டிகளின் பவனி திருவையாற்றை இரண்டுபட வைத்தன. சமூகத்தில் மேலடுக்கைச் சார்ந்தவர்களும், மத்திய தர வர்க்கத்தவர்களுமே பெருமளவு குழுமியிருந்தனர். காபி, டியன் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. உயர்குடிக் கலாசார முறைமையை பிரதிபலிக்கும் சகல அம்சங்களையும் அவ்விழா கொண்டிருந்தது.
"புதிய கலாசாரம்' என்ற சஞ்சிகையின் விற்பனைமூலம் கிடைத்த சொற்ப வருமானமே ம.க.இ.க வின் ஆரம்ப ஆதாரமாகவிருந்தது. பொது மக்களிடம் பணம் சேர்க்கப்பட்டது. பஞ்சப்பட்டவர்கள் கூடுகிற விழாவாகவே தமிழ்மக்கள் இசைவிழா காணப்பட்டது. எந்தவித வெளிப்பூச்சுகளற்ற மலிவான நுகர்பொருட்களுக்கு பழக்கப்பட்ட, இமிட்டேஷன் கலாசாரத்தில் தங்கியுள்ள மக்கள் பலர் அங்கு திரண்டனர். தாரை, தப்பட்டை, உறுமி, தப்பு வாத்தியங்கள் அதிர்ந்தன. ஒயிலாட்டம், தேவராட்டம், கரகம், கூத்து எனப் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கிராமியப் பாடல்கள் மகிழ்ச்சியையும், சோகத்தையும் ஒருசேரத் தந்தன. வர - டீ (நம்மூர் பிளேன் டீ) பொட்டலம் (பகோடா, முறுக்கு), பார்சல் சாப்பாட்டு வியாபாரம் கட்டுப்பாட்டு விலையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்கள் அரசுப் பேருந்துகளிலும், லாறிகளிலும், கால்நடையாகவும் கலைந்து சென்றனர். என்னதான் பொதுமை பேசினாலும் தமிழ்நாட்டில் இருவேறு உலகங்கள் இலைமறை காய்மறையாக இருப்பதென்னவோ உண்மையே. கடந்த காலங்களில் பல நிகழ்வுகள் இங்கு நடந்தேறி விட்டன. அவை தொடர்பாக மீண்டும் எழுதுகிறேன்.
வ.மகேஸ்வரன் தஞ்சாவூர்.
N
* நெற்றிக் கணி” விமர்சனம் எழுத்தாளர்களே, . سیسہ۔
நெற்றிக் கணி பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம்பெற வேண்டுமெனில், நூலின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும்.
)snm ஆசிரியர் ܝܢܠ ஞானம் • 80 மூன்றாவது ஆண்டுமலர்

சிறுவர் இலக்கியம் பற்றிய திரு.ச.அருளானந்தம் அவர்களின் கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. குழந்தை, பிள்ளை, சிறுவர் முதலான சொற்கள் ஏறக்குறைய ஒரே பொருளில் தமிழில் பயன்படுத்தப்படுபவை. அருளானந்தம் அவர்கள் சொல்வது போல, "குழந்தை இலக்கியம் என்பதற்கு மாற்றீடாக சிறுவர் இலக்கியம்' எனும் சொற்றொடரைப் பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இருப்பதற்கில்லை. (மழலை மொழியாளரை திருவள்ளுவர் “மக்கள்’ என்று குறிப்பிடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது)
இப்பருவத்தினரே, சிறுவர் இலக்கியத்தின் வாசகர்களாக இருப்பதால், இவர்களை மனதில்கொண்டே சிறுவர் இலக்கியம் படைக்கப்படல் பெரிதும் விரும்பத்தக்கது. எனினும் சிலர் கருதுவது போன்று, சிறுவருக்கு தெரிந்த சொற்கள் மட்டுமே பாடல்களில் மீண்டும் மீண்டும் வருதல் வேண்டும் என்பது எவ்விதத்திலும், ஏற்புடையதல்ல. இக்கோட்பாடு சிறுவர்களின் புதிது தேடல் ஆர்வத்திற்கு ஊறு விளைவிப்பதோடு அவர்களின் துருதுருக்கும் மனப்போக்கிலும் ஒருவித தொய்வை உண்டாக்கி விடுதல் கூடும்.
சிறுவருக்குத் தெரிந்த சொற்கள் கொண்டே பாடல் செய்ய வேண்டுமெனில் பாரதியின் பாப்பா பாடல்களையும் ஒதுக்கிவிட வேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டுவிடலாம்.
சிறுவர்களிடம் இயல்பாகவே இருக்கக்கூடிய தேடல் ஆர்வம், சிந்தனை ஓட்டம் - இவற்றை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமெனில் பாடல்களில் ஆங்காங்கே இரண்டொரு புதிய சொற்கள் - வித்தியாசமான கற்பனை என்பன இடம்பெறல் கட்டாயமாகும். காரணம் - சிறுவர்கள் சிந்திப்பவர்கள்
சும்மா சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் அல்ல!
வாகரைவாணன்
யதீந்திரா என்பவர் யாரோ இடதுசாரி அறிஞர் பின்நவீனத்துவம் பற்றியும் ஜெயமோகனைப் பற்றியும் சாருநிவேதிதாவைப் பற்றியும் மொட்டை யாக ஏதோ சொன்னதாக எழுதியிருந்தார். இவை தமிழ்நாட்டில் சூடாக விவாதிக்கப்பட்ட விடயங்கள். இலங்கையில் இவை பற்றி பரிவாக எவரும் விரிவாக விவாதமோ கருத்தோ முன்வைக்கவில்லை. மறுப்பாக பேராசிரியர் சிவசேகரம், கவிஞர் முருகையன், கலாநிதி நூ."மான், ந.இரவீந்திரன் போன்ற சிலர் விரிவாக விளக்கமாக எழுதியதை வாசித்தே பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று விளங்கியது. எழுத்தாளர் மு.பொன்னம்பலம், பேரா சிரியர் கைலாசபதியை தாக்கி எழுதியதைப் பற்றி பேராசிரியர் சிவசேகரம் மறுப்பு எழுதினால் மூன்றாவது மனிதனின் பக்கங்கள் பாழாகிறது என்று அந்தப் பத்திரிகைக்கு எழுதாமல் ஞானத்துக்கு எழுதி என்ன பயன்? மு.பொன்னம்பலத்துடன் பேராசிரியர் மோதுவது பக்கங்களை வீணாக்குமென்றால் இடதுசாரி அறிஞர் ஜெயமோகனுடனும் சாரு நிவேதிதா
மூன்றாவது ஆண்டுமலர் 81 ஞானம்

Page 42
வுடனும் மோதுவது மட்டும் பக்கங்களை வினாக்காதா? யதீந்திரா அவர்கள் எதைப் பற்றி முறைப் படு கிறாரோ அதே பயனற்ற தனிப் பட்ட தாக்குதல்களையே தானும் செய்கிறார் என்பதை அவர் உணரவேண்டும். ஞானத்தை ஒரு அரட்டைப் பத்திரிகை யாக்கும் விடயங்களை வெளியிடா தீர்கள் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சி.மனோகரன் கொழும்பு - 6. சி.சிவசேகரம் என்பார் ஞானம் ஜூலை 2001 இதழில் "ஆ.சதாசிவம் போன்றோரின் பத்தாம் பசலித்தனத்தையும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ் அமீபா உயிர்களின் பெருமை கூறும் மரபையும் அவர் பிரதிபலிக்கின்றது" என ஆய்வறிஞராகிய பேராசிரியர் ஆசதாசிவம் அவர்களை மனம்போனவாறு சிலேடையாக, வசைத்தாக்கொன் றினை நிகழ்த்தியிருந்தார். இங்கு "பத்தாம் பசலி எனும் மரபுத் தொடருக்கு வழக்காற்றில் "அறிவில் குறைந்தவன்" எனும் பொருளை உணர்த்தும் வகையில், பல பொருள்தரும் சொல்லாக அது வழக்கில் இருந்து வருகிறது. அவற்றை மனங்கொண்டு ஞானம் பெப்ரவரி இதழில் யான் "பேராசிரியர் ஆசதாசிவம் ஒரு பத்தாம் பசலியா?" எனும் தலையங்கத்தில், பேராசிரியரின் கல்விப்புலத்தையும் ஆளுமையையும் வெளிப்படுத்தியிருந்தேன். அதற்கு எதிர்வினையாகச் சி.சிவசேகரம் என்பார் தனது புலமைச்செருக்கோடு நழுவ லாக, ஞானம் மார்ச் 2002 இதழிலில் "நான் சதாசிவத்தின் பத்தாம் பசலித் தனமான கருத்துக்கள் என்று சொன்னது பற்றிப் பின்வரும் விளக்கம் போதுமானது : மு.சண்முகம்பிள்ளை அவர்களது தொகுப்பில் வந்த தமிழ் தமிழ் அகராதியில் பத்தாம் பசலி என்பதன் பொருள் காலத்துக்கு ஒவ்வாத பழஞ்சிந்தனை உடையவர் என்று தரப்பட்டுள்ளது" எனக் குறிப் பிட்டுள்ளார். சி.சிவசேகரம் என்பாரின் மேற்படி கூற்றினை அவதானிக்கும் பொழுது அவர் மிகுந்த சிரமப்பட்டு புதிய வாசிப்பொன்றினைத் தந்துள்ளார். "மு.ஆ.சதாசிவத்தின் பத்தாம் பசலித்தனத்தையும்" எனக் குறிப்பிட்டவர் பின்பு "பத்தாம் பசலித்தனமான கருத்துக்கள்" எனவும் அதன் பொருள் காலத்துக்கு ஒவ்வாத பழஞ்சிந்தனை உடையவர் என அகராதிப் பொருளை உள்வாங்கிக் குறிப்பிடுவதும் அவரது புதிய வாசிப்பினை உணர்த்தும் முன்னையது வசைத்தாக்காகும். பின்னையது நயத்தக்க நாகரிகமாகவும் அமைந்துள்ளது. இவரது புதிய வாசிப்புக்கு எது காரணமாயிற்று. பேராசிரியர் ஆசதாசிவம் ஒரு பத்தாம் பசலியா என்னும் கட்டுரைதானே. அப்படியானால் இக்கட்டுரை பற்றி இரங்கற் சொற்களும் என் எழுத்துக்குத் தொடர்பற்றி விளக்கங்களும் கண்டேன்' என்று எழுதவேண்டும். இக்கட்டுரை தங்களைப் புதிய சிந்தனைக்கும் புதிய வாசிப்புக்கும் தேடுதலுக்கும் நல்ல உளப்பாங்கும் உட்படுத்தியுள்ளமையை மேற்படி கூற்றுக்கள் புலப்படுத்தியுள்ளன. வேண்டுமென்று பொய்சொல்லல் ஆகாது. தமிழ் வழக்காற்றில் ஆடியாத. என வரும் மகாவாக்கியம் பொருள் பொதிந்ததொன்றே. யான் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல “மார்க்சியவாதிகளின் கட்டுரைகளில் தொடர்ச்சித் தன்மை காணும் அளவிற்கு உண்மைத்தன்மையை காண்பது கடினம் என்பதற்கு சி.சிவசேகரத்தின் எதிர்வினை விதிவிலக்கல்ல.
இரா.வை. கனகரத்தினம் ஆநானம் S. மூன்றானது ஆண்டுள்

படிசசது
போதும். கொம்மாட கொடியை அடகுவச்சி P
கொமிஷன்குடுத்து அனுப்பினனே சீமைக்கு
கும்மாளமடிச்சி குமரியோடு திரியிறியாம்
குடியைக் கெடுக்கவந்த கோடரி நீதாண்டா
தங்கக் கிளியரிட்டம் மாமன் மகள்
தனியாக வீட்டில் தாலிக்கு காத்திருக்க
இங்கிலிசுக்காரி உனக்கு உசத்தியாப் போனதா?
இலங்கைக்கு வாடா படிச்சது போதும்.
அரைக்கால்சட்டை இல்லாம அம்மண்மாய்
அவளோடு நீயும் கடலிலே குளிச்சதாம்
மரைக்கார் மகனர் கண்டதாய் சொன்னான்
மறைக்காமல் சொல்லு உண்மையா சங்கதி
பாண்டியன் எணர்டு பெத்தவங்க பேர்வைக்க
பழகித்திரிகிறவள் பாணி'எனர்டு மாத்தினாளாம்
கோனன்டாவில் ஆக்கள் கேலியாப்பேசிறாங்க
கேடுகெட்டபயவே மானம் போகுதடா
வெள்ளைக்காறி காதல் நீண்டு புடியாது
வீணாக நீயும் நாசமாப் போகாத
கொள்ளையாப்பேசி மசக்குவாள் கொஞ்சி
கொஞ்சத்துள் ஆளைப்பும் மாத்துவாள் கவனம்
கடுதாசி கண்டவுடன் மகனே பாண்டியா
காதல் விட்டதாகப் பதில்போடு
முடியாது எண்டாலும் சொல்லு நீ
மூணுமுளக் கயிறுதான் தஞ்சம் இனி
பேராணி - தனிடி

Page 43
பேச்சு வார்
ஆச்சரியம். அதிசயம் பேச்சுவார்த்தை
பிரசவமாகப் போகிறது மூச்சு விடப் போகிறது
முழு இலங்கையும்
ஐம்பது ஆண்டுகளாகத் தமிழர்கள் பட்ட பாட்டிற்குச் சம்பளம் கிடைக்கப் போகிறதா?
விக்கிரமசிங்க வீரர் தானா? புத்தர் தேசம் புதுப் பொலிவு பெறுமா? ($,
கைலாயத்தில் "செல்வமும் "பொன்னும் என்ன கதைப்பார்கள்? பையனர்கள் கெட்டிக்காரர் என்றா? 2 அறத்தை 6) மறம் வென்று விட்டதா?
சமாதானப் புறா தி இந்நாட்டில் 岛 சதா காலமும் பறக்குமா? இல்லை - இடையில் சாகடிக்கப்படுமா? சி
துப்பாக்கிகள் தூங்குமா?
இல்லை மீண்டும் துந்துமி கேட்குமா? Cбля

த்தை
/or
o
நாபல் பரிசு நார்வேக்கா? இல்லை ரபாகரனும் ரணிலும் 'ரித்தெடுப்பார்களா?
ரகமாக இருக்கும் மது நாடு சார்க்கமாகுமா?
தியதொரு வடிவில் மிழரசர் காலம் இங்கே புளிப்பிக்குமா?
ஆண்ட பரம்பரை "ண்டும் ஆளப்போகிறதா? விஞனின் கனவு ரககூடுமா?
ரைவாணனி)