கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.07

Page 1
|
 


Page 2
* മറ്റ്' 6.4% *葵 2R ஞானம்
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் ك= .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
பவளவிழா நாயகன் மல்லிகை ஜீவா ழெத்து இதழியல் வரலாற்றில் இமாலயச் சாதனை ஏற்படுத்தி கடந்த 30ஆண்டுகள்- இதுவரை 279இதழ்கள் வெளிக்கொணர்ந்த மல்லிகை ஜீவா இன்று பவளவிழாக் கண்ட நாயகனாகத் திகழ்கிறார்.
1966ஆகஸ்டில் மல்லிகையை ஆரம்பித்து, முற்போக்குச் சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதற்கான உழைப்பை நல்கியவர் டொமினிக் ஜீவா. ஆரம்பத்தில் வீதி வீதியாக, நடை நடையாகச் சென்று மல்லிகையை விற்று கஷ்டங்களின் மத்தியில் அதனை வளர்த்தெடுத்துபூத்துக்குலுங்கும் பந்தலாக்கி யவர் டொமினிக் ஜீவா.
ஆரோக்கியமான ஓர் இலக்கிய செல்நெறி ஈழத்திலே உருவாகுவதற்கு உறுதுணையாக, உந்துசக்தியாக இதழியல் பணிமூலம் பங்களித்த டொமினிக் ஜீவாவிற்கு ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடமுண்டு.
புதிய தரமான எழுத்தாளர்களை உருவாக்க, சோம்பிக்கிடந்த மூத்த எழுத்தாளர்களைத் தட்டியெழுப்பி தரமான படைப்புகளை வெளிக்கொணர, புதிய இலக்கிய சிந்தனையை உருவாக்க, ஆரோக்கியமான வாசகர் பரம்பரையை வளர்த்தெடுக்க டொமினிக் ஜீவா மல்லிகையைக் களமாக்கிக் கொண்டார்.
இன, மத, மொழி பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து மல்லிகையில் விசேட மலர்கள், சிறப்புமலர்கள், வெளிநாட்டுமலர்கள் எனப் பல மலர்களை மலரவைத்து மணம்வீசச் செய்த சிறப்பு அவருக்குரியது. அவர் பெற்ற அநுபவங்கள், அவரது பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள் எமக்கெல்லாம் வழிகாட்டியாக அமைகின்றன.
இதழாசிரியராக, பதிப்பாளராக, வெளியீட்டாளராக, விநியோகஸ்த ராகப் பன்முகப் பணியாற்றிய அவரது முயற்சியும், வெற்றியும் நீண்ட பயணிப்பும் எமக்கெல்லாம் முன்னுதாரணமாக விளங்குகின்றன.
அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை.
மல்லிகை ஜீவா பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து, ஈழத்து இலக்கிய உலகிற்குத் தமது பணியினை மென்மேலும் நல்கவேண்டுமென “ஞானம்’ மனப்பூர்வமாக வாழ்த்துகிறது.
- ஆசிரியர்
 
 

ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர்* ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்: நா. ஆனந்தன்
கணனி அமைப்பு: கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு e ༄། தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. GIT.(Su. -08-478570 (Office)
08-234755 (Res) Fax - 08-234755 E-MailVignan am_magazine@yahoo.com/
உள்ளே.
சிறுகதை மனிதனோடு மட்டுமே of Tsas Sofia.................... 04 யோகா பாலச்சந்திரன்
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள்.08 தரை. மனோகரன்
இலக்கியத்தில் பின்நவீனத்தவம் .11 ஏ.யதீந்திரா
"கம்பவாரிதி இ.ஜெயராஜ்
எம்.எச்.எம். ஷம்ஸ்
கவிதைகள் கேட்டவரங்கள் .07 த.ஜெயசீலன் topué6 (D65f............... 33 மாவை வரோதயன் estudió + Lopá5.41 மறீ பிரசாந்தன்
விழிப்பினி நாமெய்தல் வேண்டும். 44 தவ சஜிதரன்
திரும்பிப் பார்க்கிறேன் . 34
வாசகர் பேசுகிறார் . 42

Page 3
TD63566). IOS . TDUL (ISIĞIND
வாழ்வேன்
யோகா பாலச்சந்திரள்
(கனடாவிகிருந்து)
முற்றத்தில் பொன்னிலா பாலாய் பொழிந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்தவர்களின் மனங்களிலோ அமாவாசை. வாசல்படியில் அமர்ந்த படி வானை வெறிக்கப் பார்த்துக் கொண்டு துயரில் மண்டிப்போய்க் கிடந்தாள் இருபத்தேழு வயதான சித்ரா. அவளருகே அமர்ந்தபடி கண்ணிரால் கரைந்து போயிருக் கிறாள் அம்மா ராஜேஸ். விறாந்தை யில் சாய்மனைக்கதிரையில் அப்பா சிவசம்பு எண்சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகியதுபோல் குமைந்து கிடக்கிறார். கதவடியில் பவித்ரா சித்ரா வின் இருபத்து மூன்று வயதுத் தங்கை நடந்தவற்றைக் கிரகித்துக்கொள்ள முடியாமல் திகைத்துப் போயிருக் கிறாள்.
"இனி என்ன செய்யிறது சித்ரா?” - அம்மா மூக்கைச் சிந்தியபடி கேட் கிறாள். “வாழ்க்கை, குடும்பம் எண் டால் அப்பிடித்தான் மேனை. நாங்கள் பெம்பிளையஸ் பொறுத்துச் சமாளிக்க வேணும்"
"அவன் தம்பி நாலு வருச மாய் படாதபாடுபட்டு சவூதியிலையும் ஜேர்மனியிலையும் உழைச்ச காசெல் லாம் போச்சுது. இப்ப முதலும்போய் வட்டியும் போனதுபோல. நீயும் கலி யாணம் கட்டி மூன்று மாதத்தில வந்து நிண்டால் எப்பிடி? இனி ஊருலகத்தில என்ன எண்டு முழிக்கிறது?. அப்பா சிவசம்புவுக்கு இருபது இலட்சங்
களைக்கொட்டி சீதனம் கொடுத்து கலியாணம் செய்து கனடாவுக்கு மாப்பிள்ளையோடு அனுப்பிய மகள் திரும்பிவந்து “அம்போ’ என்று நிற் கிறாளே என்ற கவலையைவிட, ஊர்ச்சனம் சிரிக்குமே, குடும்ப கெளரவம் பாழாய்ப் போச்சுதே, இனி இளையவளை என்ன செய்யுறது என்ற துயரங்கள்.
மூன்றாம் சாமம் தாண்டியும் வீட்டில் எவருமே சாப்பிடவில்லை. கொழும்பு கட்டுநாயகாவில், டொரண் டோவிலிருந்து வந்து இறங்கி தெகி வளையில் மாமா வீட்டில் மூன்று தினங்கள் தங்கி இன்று காலை சித்ரா ஒரு மாதிரி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததிலையிருந்து, தகவல் சேகரிக்க வந்த இனசனங்களை சமாளிப்பதே அவர்களுக்குப் பெரும் பாடாயிற்று. 21ம் நூற்றாண்டு பிறந் தென்ன, அதிதொழில்நுட்பஹைடெக் யுகம் மலர்ந்தென்ன, எங்கடை சனம் ஊர் விடுப்பு பர்க்கிறதிலை, பிறர் விஷயங்களைத்தேடி அலசி ஆராய் வதில், வம்பு பேசுவதில் உள்ள பண்பின்மையை, இங்கிதக் குறைவை இன்னும்கூட உணர்ந்தபாடாயில்லை. இந்த நடுச்சாமப் பொழுதில்தான் ஒரு வாறு அவர்களுக்கு தமது அந்தரங்க மனக்கிடக்கைகளை வெளியிடக்கூடிய சூழ்நிலை கிடைத்துள்ளது.
“சித்ரா என்ன மகள்? என்ன நடந்தது? உள்ளதைச் சொல் சித்ரா. புருசன் புதிசு, ஊரும் புதிசு , சனமும் புதிசு. விட்டுக்கும் பள்ளிக்குமாக குடும்பத்துக்குள்ளை கட்டுச்செட்டாக வளர்ந்த உனக்கு அங்கை திடீரென்று போனவுடன கஷ்டமாகத்தான் இருந் திருக்கும். போகப்போக எல்லாம் சரி யாய் போயிடும். மாப்பிள்ளைக்கும் அனுபவம் வர அன்பாய் பார்ப்பார் தானே?". மகளின் மனதை அறிய ராஜேஸ் மிண்டும் முயல்கிறார்.
"கலியாணம் கட்டின உடனே

உப்பிடி சின்னச் சின்ன பிரச்சினையள் எல்லாருக்கும் வாறதுதான். அதுக்காக கலியாணம் கட்டிப்போட்ட பிறகு, ஒடிப் போறதெண்டால் சரியில்லை சித்ரா, என்ன நடந்தது? உள்ளதைச் சொல்லு பிள்ளை. நீ படிச்சனி” அப்பா சிந்திய பாலுக்காக கவலைப்படுகிறார்.
சித்ராவின் கலைந்த கேசங்களை சீராய் ஒதுக்கியபடி “நீ அவசரப்பட்டு ஏதும் இசக்குப் பிசிக்காய் செய்து போட் டாலும் என்று பயந்துதான், அண்ணா உடனே ஆரிட்டையோ கடன்பட்டு, நீ இலங்கை வர விமான டிக்கட் அனுப்பினவன். பாவம்! அவனுக்கும் தான் எவ்வளவு துக்கம். போனது போகட்டும் மகள் . உள்ளதைச் சொல்லு கொஞ்ச நாளையில சமா தானமாகிப் போகலாம்தானே கனடா வுக்கு?" - தாயுள்ளத்தின் நப்பாசை இது.
இத்தனை நேரமும் வான் வெளியை வெறித்துப்பார்த்தபடி சிலை யாய் உறைந்து கிடந்த சித்ரா, படா ரென உயிர்பெற்றது போல் பெற் றோரை நோக்கித் திரும்பினாள். அவள் கண்களில் இதுவரை அவர்கள் கண்டதெல்லாம் மானின் மருட்சியும், அப் பாவிக் குழந்தைத் தனமும் மட்டுமே. இப்போ அந்தக்கருவிழிகள் கக்கியது தீப்பிழம்புகளை. அப்பா அம்மா பேச்சுக்கு அடங்கியே பழகிய சித்ராவின் முகமும் தோற்றமும் வெடிக்கும் எரிமலைபோல."அப்பா, அம்மா! உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறன், தயவுசெய்து, இனி அந்தக் கதையைப் பேசாதேங்கோ. என்னை உயிரோடு வாழவிடுங்கோ. தற்கொலை செய்ய விரும்பாமல்தான் போராடி இஞ்சை ஓடிவந்தனான். ஆராரோ செய்த பாவங்களுக்கு நான் ஏன் வீணாகச் சாக வேணும்? அது ஒரு கலியாணமே?? அவன் ஒரு மனுசனே? அப்பிடி ஒரு மனுசன்
இருப்பான் எண்டு நான் கனவிலை கூட. சீ. நினைக்க இல்லை. வெளி நாட்டிலை இருக்கினம் எண்டதுக் காக. ஏதோ பெரிய ஆக்கள் எண்டு நினைச்சு.” கைகளால் தலையி லடித்தபடியே “அசிங்கம். அசிங்கம்” - சித்ராவின் குமுறலும் அழுகையும் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன.
பெற்றோர் மனங்களில் பயங்கர கற்பனைகள் பேயாட்டம் போட்டன.
இந்த வயதிலும் குமரிக் குழந்தை யாய் கொஞ்சலும் சிரிப்புமாய், மழலை சிந்தும் செல்லப் பேச்சும் பாட்டுமாய் இருக்கும் சித்ராவா இப்படி உக்கிர மாய் பொழிந்து பொருமினாள் என் பதை சீரணிக்க முடியாமல் தத்தளித் தனர் பெற்றோர். தன்னை ஒருவாறு ஆசுவாசப் படுத்தியபின் சித்ரா தொடர் கிறாள். . "தொழிலென்று ஒன்றும் இல்லையெண்டாலும் கூட பரவா யில்லை. அந்த கேடுகெட்ட குடியைக் கூட திருத்த முயற்சி செய்யலாம். ஆனால் அந்த கெட்டகுணம். முரட்டு மொக்குத்தனம். மரியாதை கெட்ட
மாட்டுத்தனம், ஐயோ! என்னால ஏலாது அம்மா!, ஏலாது அந்த மனிசனோடை. ஒரு ஏழையெண்
டாலும் மனுசத்தனமான ஒருத்த னோடைதான் நான் வாழலாம். இப்படி அங் கையுமில்லாமல், இஞ்சையு மில்லால் இரண்டுங்கெட்டான் மிருகத் தோடை வாழ ஏலாது அம்மா" - குலுங்கி குலுங்கி அழுதாள் சித்ரா. பெற்றோரின் சொல்லுக்கு மறுசொல் பேசத்தெரியாத, விட்டுக் குள்ளேயே கூணி டுக் கிளியாயப் வளர்ந்த இந்தப் பெண்ணுக்குள் இத் தனை உக்கிரமும் வீறாப்பான சிந்தனை வீச்சம் கிளர்ந்தது எப்படி? மண்புழுவின் கதைதான். மண்புழுவும் ஒருநாள் நிமிரலாம்தானே?
அங்கு நிலவிய உடல், உள்ளச் சூட்டை வரட்சியை தணிக்கக் கருதி

Page 4
தங்கை பவித்ரா, அப்பா, அம்மா, அக்கா மூவருக்கும் பரிமாறிய கோப்பியை அவர்கள் பருகியவாறு "இனி என்ன பகவானே?” என்பதுபோல தலை வாசலில் தொங்கிய பழனி யாண்டவரின் படத்தைப் பார்க்கின் றனர். அனைத்துக் கண்களிலும் கங்கை.
"அம்மா இந்த வெளிநாட்டுக் கதையள் உண்மையில இஞ்ச நாங்கள் நினைக்கிறமாதிரி இல்லை. அதிலையும் சாதாரணமாயர் , அவ்வளவு ஒழுங்கான வளர்ப்பு படிப்பு இல்லாமல் கிட்டடியில அள்ளுப்பட்டுப் போனதில ஒரு சிலது மட்டும் மனிச ராய் இருக்குதுகள் போல. பெரும் பாலும் மனுசர் இல்லை, பழக்க வழக்கம் சரியில்லை. இந்த மனுசனும் முரட்டு முட்டாள்தான்.
நீங்கள் எங்கள் ஆறுபேரையும் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவச்சு, அருமையாய், மரியாதையாய் வளத்த னிங்கள். அப்பா, கமமும் வியாபார மும் செய்தாலும், எங்கடை குடும்பத் திலை ஒரு கெளரவம், மரியாதை இருந்தது. எதிலையும் ஒழுங்கு, கட்டுப் பாடு எங்களுக்குப் பழக்கம். கெட்ட சொல்கூட வீட்டில நாங்கள் கேட்ட தில்லை. அங்கை.?” இருகைகளா லும் தலையைப் பிடித்துக்கொண்டு கதறி அழுகிறாள் சித்ரா, "பெம் பிளையளைக் கண்டால் தெருநாய் களைப்போல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு. கெட்ட குப்பைப் படங்களையும் பாத்திட்டு, மிருகங் களைப்போல. அந்த மிருகத்தோடை ஒரு நிமிசம்கூட வாழ ஏலாது. தயவு செய்து அந்தக்கதையை இண் டோடை விட்டுப் போடுங்கோ’. சித்ரா தீர்மானமாய் முத்தாய்ப்பு வைத்து விட்டாள்.
டெலிபோன் மணி கிணுகினுக் கிறது. "அக்கா! அண்ணா பேசுறார்"
பவித்ரா கூற மூவரும் எழுந்து உள்ளே போகின்றனர்.
சித்ரா - "அண்ணா! என்னை மன்னிச்சுடு அண்ணா! உன் உழைப் பெல்லாம் வீணாய்ப்போச்சுதுதான். ஆனால் உன் தங்கச் சி நான் சாகாமல் உயிரோடை வந்து சேர்ந் திட்டன். உன்ர காசுக்காய் சிவிய மெல்லாம் உனக்கு ஊழியம் செய்ய நான் தயார் அண்ணா. ஆனால் அந்த பணப்பிசாசுகளோடு நரக வாழ்க்கை மட்டும் வேண்டாம் அண்ணா. எதிர் காலம் பற்றி எனக்குப் பயமில்ல அண்ணா. ஏ.லெவல் படிச்ச நான், ஏதேனும் தொழில் செய்து உழைக்க லாம். இஞ்ச இருந்து கூலித்தொழில் செய்து வாழ்ந்தாலும் நிம் மதி அண்ணா. அந்த ஆளிலை பண்பு, படிப்பு நல்ல பழக்கம் ஒண்டுமே இல்லை அண்ணா! இந்த பிரச் சினையை தீர்த்துப்போட்டு, கடவுள் காட்டின வழியிலை நான் போகலாம். எனக்கு மனுஷியாய் வாழவேணும் அண்ணா! இஞ்ச ஒரு மரியாதையான கமக்காரனை, கூலிக்காரனை கட்டி னாலும் சந்தோசமாய் இருப்பன் அண்ணா! பெயருக்கு ஒரு புருஷனாய் எந்த ஆம்பிளையும் போதும் எண்டு நான் நினைக்க இல்லை." - தன் முடிவை தெளிவாக்கினாள் சித்ரா.
அடுத்தடுத்து அம்மா ராஜேஸ்வரி யும் அப்பா சிவசம்புவும் தம்பாட்டுக்கு டெலிபோனில் மகனோடு துயரம் பரிமாறி ஓய்ந்தனர்.
ஓராண்டு காலம் ஓடிப்பறந்தது. அந்தப் பொருந்தா விவாகம் இழுபறிப் பட்டு இரத்தாகியது. அதே மாப் பிளைக்கு ஊரில் மற்றோர் மணப் பெண் கிடைத்தாள். ஆயிரம் பொய் கள் பரிமாறி பணத்தோடு ஒருத்தி அவனுக்குக் கழுத்தை நீட்டினாள், வேறு வழியற்ற ஒரு அப்பாவிப்பெண். சித்ராவுக்கு மட்டும்தான் இலட்சியக்

கனவுகளும், அறிவியல் பூர்வமாய் அடிப்படையில் மனுஷத்தன மாய் வாழவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறதென்பதல்ல. அவளிடம் அரி தாக உள்ள தைரியம் அனைத்து பெண்களுக்கும் வர, அடுத்த நூற் றாணர் டு பிறக் கவேணி டுமோ என்னவோ!
பிந்திக்கிடைத்த செய்தி:
பிள்ளைகளுக்கு டியூசன், வீட்டுத் தோட்டம், சமூகசேவை என்று பரபரப் பாக இயங்கிக் கொண்டிருந்த சித்ரா, தன் உறவுப்பையனான ரமேஸை
மணம் செய்துகொண்டாள். ரமேஸ் சிறுபுடவைக்கடை வைத்திருந்தான். அத்தோடு நல்ல உழைப்பாளி. மொத் தத்தில் கண்ணியமான மனிதன். சித்ராவின் குடும்பவாழ்வில் டாம்பீகம் இல்லை. அமைதியுண்டு, போலித்தன மில்லை. பண்புண்டு - இப்படித் தெரிவிக்கிறாள் சித்ராவின் தங்கை பவித்ரா. போனமாதம்தான் உள்ளுரில் ஒரு பள்ளி ஆசிரியரை பவித்ரா கரம்பிடித் தாளாம்.
(யாவும் கற்பனையல்ல)
வானேறி வந்து வரமருளும் தேவதைகாள்
நீரூற்றி இங்கே
வானேறி வந்து
O
i
நீண்டு எரிந்திருந்த நெருப்பை அணையுங்கள். நீறிய வயல்களிலே விரைவில் பசுமை விளைந்துவர வாழ்த்துங்கள். மார்பினிலே குண்டேற்றும்
மானக் கிறுக்கோடு காவல் புரிகின்ற கற்பக தருக்களிலே புதுத்துளிர்கள் சூட்டுங்கள்! புண்பட்ட மண்மடிக்கு புதுமெருகு ஊட்டுங்கள். புயல்களினைத் தடுத்தாண்டு தென்றலாக்கி எங்கள் தெருவில்விட்ட பனைகளுக்கு அந்திரட்டி செய்தாரே. அவை மீண்டும் மறுபிறவி
கொள்ள வரமருள்க!
குலைந்த குடில்களுக்கும், பள்ளி தலங்களுக்கும் பால்காய்ச்ச வந்திடுக!
வரமருளும் தேவதைகாள். நாற்திசையும் இருந்தெம்மைப் பாலிக்குந் தேவர்களே. எம்முகத்தை இழந்துவிட்டு நாம்சிரிக்கக் கூடாது. இந்தநிலம் இனிமேலும் இழவிலூறலாகாது.
வானேறி வந்தெமக்கு வாழ்வுதரும் தேவதைகாள். நீரூற்றி. நேற்றுவரை நீண்டு எரிந்திருந்த நெருப்பை அணையுங்கள் நீறிய வயல்களிலே.

Page 5
எழுதத் தூண்டும் எண்ணங்கள்) OC)
(கலாநிதி தரை.மனோகரன்) இசைத்தம்பதி
பின்னணிப் பாடகர்களில் ரி.எம்.செளந்தர ராஜனுக்கு அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்தவர், ஏ.எம்.ராஜா. அவரது இனிமையும், மென்மையும் கலந்த குரல் செவிகளை ஊடுருவும்போது, மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராஜா, தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகரா கவும், இசையமைப்பாளராகவும் விளங்கினார். இந்திய மொழிகளில் மட்டுமன்றி, சிங்களத் திரைப்படங்களிலும் அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
சம்சாரம் (1951) என்ற திரைப்படத்தில் இடம்பெறும் “சம்சாரம் சம்சாரம் சகல தரும சாரம் ஜக ஜீவன ஆதாரம்” என்ற பாடலே தமிழ்த் திரைப்படத்தில் அவர் பாடிய முதல் பாடல். அத்திரைப்படத்தில் ஜிக்கி குழுவினருடன் அவர் சேர்ந்து பாடிய "கடகட லொடலொட வண்டி மாடு ரண்டும் சண்டி - ஒ! வண்டிக்காரன் நொண்டி” என்ற பாடலும் மிகப் பிரபலமானது. சம்சாரம் திரைப்படமும், அதில் இடம்பெற்ற பாடல்களும் ஏ.எம். ராஜாவைத் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் செய்துவைத்தன. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். போன்ற பலருக்கு அவர் குரல் கொடுத்திருந்தாலும் ஜெமினி கணேசனுக்கு அவரது குரல் மிகப்பொருத்தமாக அமைந்துவிட்டது. (ஜெமினி கணேசனுக்குப் பொருந்தக்கூடிய குரலையுடைய இன்னொருவர் பி.பி.ழரீநிவாஸ்).
பூரீதரின் கல்யாணப்பரிசு (1959) என்ற திரைப்படம் மூலம் ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். கணிசமான திரைப்படங்களுக்கு இசை யமைத்த அவரின் இசை தனித்துவமானது. மேற்கத்தைய இசைப்பாணியைத் தமிழ்ச்செவிகளுக்கு ஏற்ப மெல்லிசையாக இசைவாக்கம் செய்துவழங்கும் திறமையை அவர் பெற்றிருந்தார். கர்நாடக இசைப்பின்னணியிலும் சில பாடல் களை அற்புதமாக அவர் உருவாக்கியுள்ளார். தேன்நிலவு திரைப்படத்தில் எஸ்.ஜானகியுடன் அவர் இணைந்து பாடிய "காலையும் நீயே மாலையும் நீயே" என்ற பாடலை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஏ.எம்.ராஜாவின் இசையில் புல்லாங்குழல் வாத்தியமும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதுண்டு. ராஜா இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படம் கல்யாணப்பரிசு என்றாலும் அதற்கு முன்னரே தமிழ்த்திரைப்படம் ஒன்றுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. ஆயினும், தமது நண்பரான எம்.எஸ்.விஸ்வநாதனின் வேண்டு கோளுக்கு ஏற்ப, அவருக்கு ராஜா அந்த வாய்ப்பினை வழங்கி, அத்திரைப் படத்தில் பின்னணிப்பாடகராகப் பங்களிப்புச் செய்தார். காலப்போக்கில் விஸ்வ நாதன், தாம் இசையமைப்பாளராக வருவதற்குக் காரணமாக இருந்த ஏ.எம்.ராஜாவை ஒதுக்கி, பி.பி.ழரீநிவாஸைப் பயன்படுத்தி கொண்டார். ராஜாவைத் தமது நண்பரெனக் கூறிக்கொள்ளும் விஸ்வநாதன், உண்மையில் நன்றி
 

மறந்தே செயற்பட்டார். தேன்நிலவு திரைப்படத்திற்குப்பின் இயக்குநர் பூரீதரோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகத் திரைப்படத் துறையிலிருந்து ஒதுங்கவேண்டிய நிலை ராஜாவுக்கு ஏற்பட்டது. இடையிடையே சில திரைப் படங்களுக்கு இசையமைத்தும், பாடியும் வந்திருந்தாலும், பழைய ஏ.எம்.ராஜாவை அவற்றில் காணமுடியவில்லை.
ஏ.எம்.ராஜா பிரபல பின்னணிப்பாடகி ஜிக்கியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஜி.கிருஷ்ணவேணி என்ற இயற்பெயரைக் கொண்ட அப்பாடகி, நெருக்கமானவர்களால் ஜி.கி. என அழைக்கப்பட்டு, ஜிக்கி எனப் பெயர்பெற்றார். ஜிக்கியும் வித்தியாசமான, இனிமையான குரல்வளம் கொண்ட பாடகி. கிராமபோனைத் தமது குருவெனக் கூறிக்கொள்ளும் ஜிக்கி, எத்தகைய பாடல்களையும் பாடக்கூடிய திறமைவாய்ந்தவர். காதல் பாடல்களை இனிமை யாகப் பாடுபவராக மாத்திரமன்றி, நகைச்சுவைப்பாடல்களையும் வில்லி பாத்திரத்திற்கேற்ற பாடல்களையும் பாடுவதிலும் வல்லவர். அவரும் இந்திய மொழிகளில் மாத்திரமன்றி, சிங்களத் திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.
கருத்தொருமித்த இசைத்தம்பதியாக வாழ்ந்த ஏ.எம்.ராஜா - ஜிக்கியை, 1988இல் ராஜாவுக்கு ஏற்பட்ட அகால மரணம் பிரித்துவிட்டது. இசை நிகழ்ச்சி யொன்றில் பங்குபற்றுவதற்காக, ஒடத்தொடங்கிய ரயிலில் ஏறிய ராஜா தவறி விழுந்து மரணத்தைத் தழுவிக்கொண்டார். திறமையான பாடகியான ஜிக்கியும் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். காலமான ஏ.எம்.ராஜாவும், காலனுடன் போராடும் ஜிக்கியும் காலத்தால் அழியாத இனிமையான பாடல் களை வழங்கியுள்ளனர்.
ஞானம் - ஈராண்டு அவதானிப்பு
சிறு சஞ்சிகைகள் இலட்சிய நோக்குடன் வெளிவருபவை. தனிமனித முயற்சிகளே அவற்றில் மேலோங்கியிருக்கும்(சிறு குழு முயற்சிகளும் இடம் பெறுவதுண்டு). அவற்றின் அட்டைப்படங்களும், அவை வியாபார நோக்கில் வெளிவருபவை அல்ல என்பதை இனங்காட்டிக்கொள்ளும். ஞானம் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஞானத்தின் பலமுள்ள அம்சங்களாக மூன்றினைக் குறிப்பிடலாம். 1. 2000ஆம் ஆண்டு யூன்முதல், மாதம் தவறாமல் வெளிவருவது. 2. அடக்கமான முறையில் கனதியான பரிமாணத்தைக் கொண்டு விளங்குவது.
3. காலந்தோறும் புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவது. ஞானம் தொடங்கிய காலத்திலிருந்து அதன் அடிப்படை அம்சங்களாக கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தியெழுத்து, அறிமுகம், நேர்காணல் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுடன் புதிய அம்சங்களாக நக்கீரனின் நெற்றிக்கண்', அந்தனிஜீவாவின் திரும்பிப் பார்க்கிறேன், பல்வேறு எழுத்தாளர்களின் "எனது எழுத்துலகம், வ.மகேஸ்வரனின் தஞ்சைக்கடிதம் என்பனவும் இணைந்துள்ளன.
ஞானத்தின் கவிதைப் பக்கங்களில் ஏறத்தாழ ஐம்பத்தெட்டுக் கவிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். ஏற்கனவே கவிதைத்துறையில் அறிமுகமானவர் களும், புதியவர்களும் எழுதியுள்ளனர். பழமையும், புதுமையும், நாட்டார்

Page 6
இலக்கியப் பாணியும் கொண்ட கவிதைகள் ஞானத்தில் பிரசுரமாகியுள்ளன. சி.சிவசேகரம், எம்.ஏ.நு.மான், ஏ.பி.வி.கோமீஸ், வை.எம்.மீஆத் ஆகியோர் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வழங்கியுள்ளனர். புதுக்கவிதைக்காரர்களில் சிலரைத்தவிர, பெரும்பாலானோர் புதுக்கவிதை என்ற பெயரில் வசனங்களைத் தாராளமாக வழங்கியுள்ளனர். இவர்களது செயலைச் சட்டம் போட்டுத் திருத்த முடியாது. புதுக்கவிதைக்காரர்கள் தாமாகவே திருந்தவேண்டும். சிறுகதைத் துறையில் ஏறத்தாழ முப்பத்தாறு எழுத்தாளரின் படைப்புகள் ஞானத்தில் வெளியாகியுள்ளன. அவர்களுள் ஏற்கனவே இத்துறையில் தடம்பதித்தவர்களும் அடங்குவர்; புதிய தலைமுறையினரும் அடங்குவர். புதியவர்களுள் சுதர்ம மகாராஜன், சரயு உட்படச் சிலர் தமது திறமையைப் புலப்படுத்தியுள்ளனர். சுதர்மமகாராஜன் தொடர்ந்து எழுதினால், எதிர்காலத்தில் இலங்கையின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக விளங்குவார் என்பது நிச்சயம்.
கட்டுரைகளைப் பொறுத்தவரையில், இருபது கட்டுரையாளர்கள் ஞானத் தில் பங்களிப்புச் செய்துள்ளனர். கட்டுரைகள் குறைவாக இருப்பினும், சில கனதியானவை. விமர்சனம் தொடர்பாகப் பத்துப்பேர் ஞானத்தில் எழுதியுள்ளனர். அனைவரின் பங்களிப்புகளும் நூல் விமர்சனங்களாக அமைந்துள்ளன. இவ்விமர்சனங்கள் தரமானவை. ஞானத்தில் இடம்பெறும் நெற்றிக்கண் பகுதி, தரமான விமர்சனத்துக்கு இச்சஞ்சிகை வழங்கும் பொருத்தமான களம் என் பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இச்சஞ்சிகையில் இடம்பெறும் நேர்காணல், எனது எழுத்துலகம், இலக்கியப்பணியில் இவர். ஆகியவை இலக்கிய வாதிகளை முதன்மைப் படுத்துபவை. ஞானத்தில் பதின்மூன்று நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. எஸ்.பொ. முதல் பேராசிரியர் சிதில்லைநாதன் வரை சிலர் நேர்காணப் பட்டுள்ளனர். இத்தகைய நேர்காணல்கள் பயனுள்ளவை. அவர்கள் நேர்காணப் பட்ட முறை பாரட்டத்தக்கது. சில நேர்காணல்கள் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. தனிமனிதத் தாக்குதல்கள் அல்லாத சர்ச்சைகள் கருத்துத் தெளிவுக்கு அவசிய
DT666.
“எனது எழுத்துலகம் பகுதியில் இதுவரை ஐந்துபேர் எழுதியுள்ளனர். இவர்களுள் தி.ஞானசேகரன் தமது வாய்ப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்தி யுள்ளார். இலக்கியப் பணியில் இவர். என்ற பகுதியில் நா.பார்த்திபன், சித்தி அமரசிங்கம் முதல் புலோலியூர் க.சதாசிவம் வரை இதுவரை பத்தொன்பது பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். சிலவேளைகளில் அவரது அறிமுகப்படுத்தல் களில் சற்று மிகைத்தன்மை காணப்படினும், அவரின் முயற்சி வரவேற்கத்தக்கது. அந்தனி ஜீவாவின் திரும்பிப் பார்க்கிறேன் என்ற பத்தி, பழைய நிகழ்வுகளையும், இலக்கியவாதிகள், கலைஞர்களையும் மீட்டுப்பார்க்கும் ஒரு நல்ல முயற்சி. வ.மகேஸ்வரனின் தஞ்சைக்கடிதம் என்ற பகுதி, தமிழ்நாட்டுக் கலை - இலக்கியச் செய்திகளைச் சுவாரஸ்யமாகத் தருகிறது.
எழுதத் தூண்டும் எண்ணங்கள் என்ற எனது பத்தி, சுதந்திரமான முறையில் எனது சிந்தனைகளை பதிவு செய்வதற்குக் கிடைத்த நல்ல களம். ஞானம் இப்போது மட்டுமன்றி, எதிர்காலத்திலும் பேசப்படும் சஞ்சிகை யாகவும், பேணப்படும் சஞ்சிகையாகவும் விளங்கும்.
()

இலக்கியத்தில் பின்நவீனத்துவம்
சில அவதானக் குறிப்புகள்
இ.யதிந்திரா, திருகோணமலை
பழைய உலகம் அற்பவாதிகளுக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது
- கார்ல் மார்க்ஸ் தமிழ் சூழலில் பல்வேறு வகையான கலை இலக்கிய அரசியல் போக்குகள் பற்றி விவாதிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் நீட்சியாக இன்று பின்நவீனத்துவம்(Post - Modernism) தொடர்பான கருத்தாடல்கள். தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப் பொறுத்தவரையில் இவ்வாறான சிந்தனைகள் சமூக நோக்கில் மேலெழுவதும் உண்டு. தமது இருப்பை பறைசாற்றிக் கொள்வதற்கு வேறு வழியில்லாதவர்கள் மத்தியிலிருந்து மேலெழுவதும் உண்டு. அதனால் ஈழத்தில் இதுபற்றிய கருத்தாடல்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லவேண்டும். இனவாத ஒடுக்குமுறை, சிங்கள மேலாதிக்கம் என்பவற்றால் ஆதங்கப்படும் எமது படைப்பாளிகளுக்கு இதுபற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நேரமேது. அவர் களின் தேடல்கள் எரியும் பிரச்சினைகளைப் பற்றியது என்று ஒருவர் கூறின் அதில் நியாயமிருக்கிறது. ஆனால் எமக்கு முன் நிகழும் மாறுதல்களை நாம் ஆராயாமலும், கருத்தில் கொண்டு சிந்திக்காமலும் இருக்கமுடிsiாது.
தமிழ் இலக்கிய சூழலில் சமீப காலமாக தாக்கத்தை ஏற்படுத்திவரும் பின்நவீனத்துவம் இன்று கலை இலக்கிய எல்லைகளைத் தாண்டி அரசியல், அறிவியல், சமூகவியல் என்ற பல துறைகளிலும் விகCக்கத் தொடங்கி யிருக்கிறது. முழு உலகு தழுவி கட்டியெழுப்பப்படும் அனைத்துக் கோட்பாடு களும், சிந்தனைகளும் அதிகாரத்துவ போக்கிற்கே வழிவகுக்கின்றன. அவைகள் விளிம்புநிலை தனித்துவங்களை மறுதலிக்கிக்கின்றன. அழித்தொழிக்க முற்படு கின்றன என்பதே! பின்நவீனத்துவத்தின் உரத்தகுரல். மாறாக துண்டு துண் டானவை, தொடர்பற்றவை, நிலையற்றவை, நேர்கோட்டுத்தனமற்றவை பின் நவீனத்துவத்தால் சிலாகிக்கப்படுகின்றன.
அதிகாரம் என்பதை எல்லா இடங்களுக்கும் எல்லாத் தளங்களுக்கும் துண்டுதுண்டாக விரிவாக்கிவிட்ட பிற்பாடு, அதிகாரம் பெருமளவில் ஏகபோக மாகவும், வன்முறையாகவும், உலக மயமாக்கலின் நிழலில் மறைந்திருக்கின்ற நவகாலனித்துவமாகவும் இருக்கின்றதென்ற நடைமுறை உண்மையை பின் நவீனத்துவவாதிகள் மறைத்துவிடுகின்றனர் என்ற கவனத்தில் கொள்ள வேண்டிய விமர்சனமும் பின்நவீனத்துவம் குறித்துண்டு.
பின்நவீனத்துவம் உள்ளிட்ட இவ்வாறான மாற்றுச் சிந்தனைகள் தோன்றிய காலப்பகுதியியாக 1960களின் பிற்பகுதி குறிப்பிடப்படுகின்றது. உலகெங்கிலும் வியட்நாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள்; இலத்தீன் அமெரிக்க நாட்டுப் புரட்சிகள், ரஷிய மேலாண்
1

Page 7
மைக்கு எதிராக ஐரோப்பாவில் தோன்றிய எதிர்ப்புகள் என்பன ஒவ்வொரு துறையிலும் மாற்றுச் சிந்தனைகளை முன்னிலைப்படுத்தியதாகவும், இவ்வாறான மாற்றுச்சிந்தனைகள் மார்க்சியத்திலிருந்து பல விடயங்களை உள்வாங்கிக் கொண்டு அறியப்பட்ட மார்க்சிய அணுகல் முறையிலிருந்து விலகி பிறிதொரு வகையான அணுகல் முறையை கையாண்டதாகவும் கூறப்படுகின்றது. தமிழ் இலக்கியச் சூழலை (தமிழ்நாட்டுச் சூழல்) பொறுத்தவரையில் பின்நவீனத்துவம் 1990களில் அறிமுகமானது. ஆரம்பத்திலேயே தமிழ் பின்நவீனத்துவவாதிகள் விளிம்புநிலை மக்களின் தேடல்கள், சிந்தனைகளை கரிசனையுடன் அணுகினர். இது பலருடைய கவனத்தை ஈர்த்தது. எனினும் தமிழ் சூழலில் பின்நவீனத்துவம் ஒரு பரந்த சமூகமாற்றத்திற்கான சிந்தனையாக இன்னும் வேர்கொள்ளவில்லை யென்றே கூறத்தோன்றுகிறது.
இலக்கியம் தொடர்பாக (தமிழ் பின்நவீனத்துவாதிகளின் கூற்றின்படி) சில பின்நவீனத்துவ புரிதல்கள்.
0 கலையின் சுயேச்சைத்தன்மையையும் மேட்டிமைப்போக்கையும் பின்நவீனத்துவம் கேள்விக்குள்ளாக்கியது. மேலைச் சூழலில் இடது/வலது என்கிற எல்லைக்கோடுகளெல்லாம் ரொம்பவும் கலகலத்துப்போய் எல்லாமே அதிகார மையங்களாகிப் போன நிலையில், விளிம்புகளை நோக்கிக் கரிசனங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தன்னை அடையாளம் காட்டியது பின்நவீனத்துவ கலை, இலக்கிய வெளிப்பாடுகள். விளையாட்டுத் தனமும், கட்டவிழ்ப்பும், மரபு மறப்பும், புனிதக்கவிழ்ப்பும், எதார்த்த வாதத்தி லிருந்து விலகலும், மீண்டும் விளிம்பு மக்களின் வடிவங்களை நோக்கித் திரும்புதலும் பின்நவீனத்துவத்தின் முக்கிய பண்புகளாயின. 1960களில் நவீனத் துவ உயர் கலை முயற்சிகளுக்கு மாற்றாக பின்நவீனத்துவ வடிவங்கள் தோன்றின. உயர்கலைக்கும் வெகுசனக் கலைக்கும் (Pop culture) இடையிலான எல்லைக் கோடுகளை பின்நவீனத்துவம் அழித்தது - (பின்நவீனத்தும் அரசியல், இலக்கியம் பக்.63, 64 - அ.மார்க்ஸ்).
0 ஆசிரியன் செத்துவிட்டான்' என்ற அடிப்படையில் இலக்கியப் பிரதியை அணுகுதல்(வாசித்தல்) அதாவது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வாசிப்பு முறையுடன் பிரதியை அணுகும்போது பிரதியின் பல்வேறு அர்த்த சாத்தியங்கள் நசுக்கப்படுகின்றன, ஒடுக்கப்படுகின்றன. "ஆசிரியன் செத்து விட்டான்' என்று கூறுவது வாசகனின் பிறப்பைக் கட்டியம் கூறுகிறது. வாசகன் என்ற தன்னிலை உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றது. தன்னிலை என்றாலே மேல்சாதி, நடுத்தர வர்க்கம், பிரபுத்துவ ஆண் என்கிற ஏகபோகம் சிதைந்து தலித்துக்கள், கருப்பர்கள் உள்ளிட்ட அடித்தள மக்கள், அலிகள், பெண்கள் முதலான எண்ணற்ற பல தன்னிலைகளை உறுதி செய்கின்றது. இதன்மூலம் இது மிக முக்கியமான அரசியல் கருத்தாக்கமாக மாறியது. - (கலாசாரத்தின் வன்முறை பக். 150, 172 - மார்க்ஸ்) இங்கு பின்நவீனத்துவவாதிகளால் முதன்மைப்படுத்தப்படும் உயர்கலைக்கும் வெகுசன கலைக்கும் இடையிலுள்ள எல்லைக்கோடுகளை அழித்தல் என்பது இரண்டாந்தர படைப்புகளாகக் கருதப்படுகின்ற விஞ்ஞானக்கதைகள், சாகசக்கதைகள், பாலியல் கதைகள், (எ.கா: லேனா தமிழ்வாணனின் கதைகள்) சாதாரண கதைகள் (எ.கா.:-
J2.

ரமணி சந்திரன் கதைகள்) என்பவற்றிலிருந்து சில கூறுகளை உள்வாங்கிக் கொண்டு ஒருவகையான சனரஞ்சக எதிர்கலை வடிவங்களை (Anti artistic) உருவாக்கு தலைக் குறிக்கும். இவ்வாறான எதிர்கலை வடிவங்களை புனைபவரே பின்நவீனத்துவ படைப்பாளியாகக் கருதப்படுவார். ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் பின் நவீனத் துவப் படைப் பாளிகளாகக் கருதப்படுகின்றவர்களிடம் இத்தகைய தன்மையான படைப்பாற்றலைக் காண்பது அரிது. பெரும்பாலும் மக்களுக்கு விளங்காத எழுத்துக்களே வெளிவருகின்றன. இது ஓர் முரண் நகையாகும். ஆனால் இவ்வாறான எதிர்கலை வடிவங்கள் சாதாரண சனரஞ்சக எழுத்து வாசகர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தக்கூடியவை என்பதை மறுப்பதற் கில்லை. (பின்நவீனத்துவத்தின் பெயரால் எழுதும் சாருநிவேதிதா, பிரேம் - ரமேஸ் ஆகியோரது எழுத்துக்களை எதிர்கலை வடிவங்களாகக் கருதவேண்டிய தில்லை). எப்பொழுதுமே சாதாரண வாசகர்கள் தங்களால் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய படைப்புகளையே விரும்புகின்றனர். வணிக நோக்கில் எழுதப்படும் ரமணி சந்திரன், பாலகுமாரன் ஆகியோரது படைப்புகளைச் சாதாரண வாசகர்கள் அதிகம் விரும்புவதற்கு அப்படைப்புகளில் கையாளப் பட்டிருக்கும் இலகுவான மொழிநடையும் ஒரு முக்கியமான காரணம் எனலாம். ஆனால் ஒரு ரமணி சந்திரனையோ, பாலகுமாரனையோ இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்த சாதாரண வாசகரால் ஓர் அசோகமித் திரனை (உதாரணம்) இலகுவாகப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. இங்கு ஒரு காத்திரமான இலக்கிய வாதியான அசோகமித்திரனுக்கும் சாதாரண வாசகனுக்கும் இடையில் இடை வெளியை ஏற்படுத்துவது கடினமான மொழிநடை. இவ்விடத்திலேயே எதிர்கலை வடிவங்களின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. அதாவது ஒரு காத்திரமான இலக்கியவாதி பாலகுமாரன் போன்ற இரண்டாந்தர எழுத்தாளர்களிடமிருந்து எழுத்து நடையை உள்வாங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. இதேபோன்று பாலியல் கதைகள், சாகசக்கதைகள் என்பவற்றிலும் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய சில கூறுகள் இருக்கின்றன. தவிர எதிர்கலை வடிவங்கள் பின்நவீனத் துவம் முதன்மைப்படுத்தும் ஒரு முக்கிய இலக்கிய புரிதலாக இருந்த போதும் இது முற்றிலும் புதுமையான இலக்கிய புரிதல் அல்ல.
ஏற்கனவே மார்க்சியரான "அந்தோனியோ கிராம்ஷி இதுபற்றி பேசி யிருக்கின்றார். அவர் கூறுவார், "சனரஞ்சக இலக்கியங்களைப் புறக்கணிக்காமல் அவற்றைப் படிக்கும் வாசகர்கள் மத்தியில் புதிய பண்பாட்டுக்கான வித்துக்களை விதைக்கவேண்டும். சனரஞ்சக இலக்கியங்களில் படிக்கின்றவர்கள் நகரத்து சிறு முதலாளியக் கும்பல், மற்றும் பெண்கள், இவர்களுடைய வாழ்க்கை புளித்துப்போன ஒன்றாக இருப்பதால் ஏதும் கிலுகிலுப்பூட்டக்கூடிய விஷயங்களைத்தேடி இலயித்துப் போகின்றனர். சாகசக்கதைகளில் தங்களையே அந்த மனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு சில மணிநேர மாவது சாகசம் நிறைந்த செயற்கை உலகம் அவர்களை வாழவைக்கின்றது. இந்த சனரஞ்சக இலக்கியத்திலிருந்துதான் புதிய விமர்சனங்களை உருவாக்க வேண்டும். தாங்கள் அநீதி இழைக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை பெறுபவர் களாக வேண்டும்".
பின்நவீனத்துவம் பிரஸ்தாபிக்கும் பிறிதொரு முக்கிய இலக்கிய புரிதல்
ר 1

Page 8
ஆசிரியன் செத்துவிட்டான் என்ற அடிப்படையிலான பிரதி ஆய்வு முறை. இதுகாறும் தன்னிலை மறுக்கப்பட்ட பெண்கள், தலித்துகள் ஆகியோர் எழுதும் போது "ஆசிரியன் செத்துவிட்டான்' என்ற கருத்தாக்கத்தை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடாதென்றும் பின்நவீனத்துவவாதிகள் கூறுவர். ஆசிரியன் செத்துவிட்டான் என்ற அடிப்படையிலான பிரதிவாசிப்பு முறை இனம், மதம், சாதியம் என்பவற்றுக்கு அப்பால் ஒரு பிரதியை அணுகும் முறையை முன்வைக்கின்றது. இது ஒரு சிறந்த ஆய்வு முறைதான். ஆனால், எல்லாச்சந்தர்ப்பங்களிலும் இவ்வணுகுமுறை சாத்தியப்படக்கூடியதல்ல. அதாவது ஒரு குறிப்பிட்ட நூலாசிரியர் பற்றி ஏற்கனவே வாசகர் அறிந்திருப்பின் அவ் முன்கூட்டிய ஆசிரியர் பற்றிய அறிதல் படைப்பின் கருத்துநிலையை ஒட்டி செல்வாக்குச் செலுத்தவே செய்யும். அது தவிர்க்கமுடியாதது. தவிர, இவ் ஆய்வுமுறை மோசமான நபர்களை நியாயப்படுத்தும் கருத்தாக்கமாக மாறக்கூடிய சந்தர்ப்பங்களும் கருத்தில் கொள்ளப்படவேண்டியவை. உதாரண மாக கிட்லர் எழுதிய என்னுடைய போராட்டம் (Mine Kamp) என்ற நூலை பின்நவீனத்துவவாதிகள் கூறுவதுபோன்று (கிட்லர்) 'ஆசிரியன் செத்துவிட்டான்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அணுகும்போது இங்கு கிட்லர் என்ற ஆசிரியர் மட்டும் இறந்துவிடவில்லை. கிட்லர் ஒரு பாஸிஸ் அரசியல்வாதி, பலலட்சக்கணக்கான யூதர்களின் கொலைக்குக் காரணமானவன் என்ற உண்மைகளும் சேர்ந்தே இறந்துவிடுகின்றன. ஆகவே ஆசிரியன் செத்துவிட்டான் என்ற அடிப்படையிலான பிரதி வாசிப்பு முறை ஒரு பன்முகத்தன்மையான ஆய்வு முறைக்கு வித்திட்டபோதும், சில பாதகமான புரிதல்களுக்கும் வழி வகுக்கக் கூடியதாகவே இருக்கின்றது.
இவ்விடத்தில் பிறிதொரு விடயத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக் கிறது. அதாவது ஆசிரியரைத் தவிர்த்து படைப்பினை நோக்கும் ஆய்வுமுறை ஏற்கனவே மார்க்சிய மூலவர்களிடமிருந்திருக்கிறது. உதாரணமாக 'பால்ஷாக் என்னும் எழுத்தாளன் புரட்சிக்கு எதிரானவராக இருந்தபோதும் அவருடைய எழுத்துக்களின் புரட்சிகரமான உள்ளடக்கத்திற்காக மார்க்சிய மூலவர்களான மார்க்சும் எங்கல்சும் பால்ஷாக்கைப் புகழ்ந்துரைத்திருக்கின்றனர். இதேபோன்று ரஷ்ய எழுத்தாளரான "டால்ல்ஸ்டாய் அகநிலையில் (மார்க்சியத்திற்கு எதிரான) பிற்போக்குவாதியாக இருந்தபோதும் அவருடைய படைப்புகளுக்காக "ரஷ்ய புரட்சியின் நிலைக்கண்ணாடி என லெனினால் வர்ணிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் இவ்வாறான பிரதிநோக்குமுறை "ஆசிரியன் செத்துவிட்டான்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலான பார்வையல்ல. மாறாகப் படைப்பின் சமூகநோக்கினையும், புரட்சிகரமான அரசியல் நோக்கினையும் கருத்தில் கொள்ளும் ஆய்வுமுறை.
பின்நவீனத்துவவாதிகளால் பிரஸ்தாபிக்கப்படும் ஆசிரியன் செத்து விட்டான் என்ற கருத்தாக்கத்தின் பின்னணி பற்றியும் இவ்விடத்தில் சில விடயங்களை இணைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகின் றேன். 'ஆசிரியன் செத்துவிட்டான்' என்ற கருத்தாக்கம் "கடவுள் செத்துவிட்டான் என்ற நீட்சேயின் புகழ்பெற்ற வாசகத்தை அடியொற்றியே எழுந்தது. இதனையே 1968களில் "றோலான் பார்த்’ என்ற விமர்சகர் இலக்கியப் பிரதிகளுக்கு பொருத்தி புதிய ஆய்வுமுறையொன்றை முன்வைத்ததாக கூறப்படுகின்றது.
14

இன்று பின்நவீனத்துவவாதிகளால் அதிகம் முதன்மைப்படுத்தும் ஒரு சிந்தனையாளர் நீட்சே விளிம்புநிலை மக்களின் தனித்துவங்கள் பற்றியும், அவர்களின் விடுதலைத் தேவைகள் பற்றியும் பேசிவரும் பின்நவீனத்துவாதிகள் அதிமனிதவாத சிந்தனைப்போக்குடைய நீட்சேயை முதன்மைப்படுத்துவது சில சந்தேகங்களை எழுப்புகின்றது. ஏனெனில் ஜேர்மன் தத்துவஞானியான நீட்சே பாஸிஸ தத்துவவியலாளர், அதிமனிதவாதி, கிட்லரின் குருநாதர், தீவிர ஆணாதிக்கவாதி என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர். மார்க்சியத்தைக் கிறிஸ்தவ மற்றும் யூத ஆதிக்கக் கருத்தியலின் தொடர்ச்சியாகக் காணும் நீட்சே, சோஷலிசத்தின் அடிப்படையான மனித சமத்துவத்தை நிராகரித்து, மனித சமத்துவம் என்பதுவெறும் கற்பனை, சோஷலிஸம் மனித உரிமைகளை வழங் காது என்று கூறியதோடு, மனித உரிமைகள் சாத்தியப்படாதவை என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திற்கு ஒரு விரிவான கோட்பாட்டையும் உருவாக்கிக் கொடுத்தார். நீட்சேயின் "கடவுள் செத்துவிட்டான் என்ற கருத்தாக்கம் கூட ஒட்டுமொத்த மனித குல விடுதலையை மையப்படுத்தி மேலெழுந்த சிந்தனையல்ல. மாறாக ஜேர்மனிய பெருந்தேசிய வாதத்தைக் கட்டமைக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட சிந்தனை. ஜேர்மனிய மரபுக் கடவுள்களைத் தேடி முன்னிறுத்தும் நோக்கில் யூத, கிறிஸ்தவ கடவுள்களை நிராகரிக்கின்றார். இங்கு நீட்சேயின் கடவுள் செத்துவிட்டான் என்ற வாசகத்தின் பின்னணி. ஆனால் பின்நவீனத்துவவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து வருகின்றனர். தவிர நீட்சே பெண்களைப் பற்றியும் மிகமோசமான கருத்துப் போக்குடையவராக இருந்திருக்கின்றார். "நீ பெண்களிடம் செல்லும்போது சவுக்கை எடுத்துச்செல்ல மறந்துவிடாதே. பெண்கள் எங்கள் எதிரி. பெண்கள் பாசாங்குக் கலையில் நிகரற்றவர்கள், ஆண் போராட்டத்திற்கும் பெண் தாய்மைக்கும் தகுதியானவள், குழந்தை பெறுவது மட்டுமே பெண்களின் வேலை” இவைகள் பெண்களைப் பற்றிய நீட்சேயின் புகழுரைகளில் சில. பின்நவீனத்துவவாதிகள் இத்தகையதொரு சிந்தனையாளரை முதன்மைப் படுத்திக்கொண்டு பெண்கள் விடுதலைபற்றிப் பேசுவது ஒரு வேடிக்கையான முரண்பாடு.
எவ்வாறாயினும் பின்நவீனத்துவத்தில் உள்ள நல்ல விடயங்களை நாம் ஏற்கத்தான் வேண்டும். மேலைத்தேசத்தில் பின்நவீனத்துவவாதிகளின் சிந்தனைப்போக்குகள் எவ்வாறிருக்கின்றன?, அதன் சமூகத் தாக்கம் என்ன? என்ற கேள்விகள் எமக்கு முக்கியமல்ல. ஆனால் தமிழ்ச் சூழலில் தம்மை பின்நவீனத்துவவாதிகளாக அடையாளப்படுத்தி இருப்பவர்களின் சமூகம் பற்றிய புரிதல்கள் எத்தகையவை என்பது எமக்கு முக்கியம். விளிம்புநிலை சிந்தனைகள் தொடர்பான தேடல், விளிம்புநிலை கலை இலக்கிய வடிவங்கள் (எதிர்கலை வடிவங்கள்) மீதான கரிசனை ஆகியவற்றை தமிழ் சூழலில் பின்நவீனத்துவ தாக்கங்களாக நாம் வரையறுக்கலாம். தமிழ்ச் சூழலில் பிறிதொரு முக்கிய பின்நவீனத்துவ தாக்கமும் உண்டு. அதுதான் சோர்வுற்றிருந்த தமிழ் மார்க்சியர்களின் விழிப்பு நிலை.

Page 9
O O O கிளக்கள் புத்தி
“தம்மவாரிதி” இ . சிஜயராஜ் அந்த வீட்டின் வரவேற்பறையில், கைநிறையச் சாதகக் கட்டுகளுடன் அமர்ந்திருக்கிறார் புறோக்கர் கந்தப்பு. பரீட்சைத்தாள் காணும் மாணவனின் பரபரப்புடன், அவர் முன்னால் கிளாக்கள் சுந்தர மூர்த்தியர் அமர்ந்திருக்கிறார். “பிள்ளைக்குச் சாதகங்கள் ஏதாவது பொருந்தியிருக்காமே?” "கேர்ட்டின்” சீலைக்குப் பின்னால் நிற்கும் சுந்தரத்தாரின் மனைவியின் வினா, சத்தமாய் மட்டும் வெளிவருகிறது. "ஓம் ஓம் இரண்டு, மூன்று சாதகம் பொருந்தியிருக்குது” மனைவியின் கேள்விக்குச் சுந்தரத்தாரின் முகத்தைப்பார்த்துப் பதில் சொல்கிறார் புறோக்கள். “இது புன்னாலைக்கட்டுவன் மாப்பிள, ஆள் வலுசிவப்பு, டாக்குத்தர் உத்தியோகம். இது இன்னொரு உரும்பிராய் மாப்பிள, கொஞ்சம் கறுவல் எண்டாலும், நெடு நெடு என்று பார்க்கச் சினிமாக் கதாநாயகன் போல இருப்பான், ஆள் லெக்சரர். இந்த மூன்றாவது சாதகம் ஒரு அளவட்டி மாப்பிள, ஆள் பெரிய வடிவெண்டு சொல்லமுடியாது, கிளாக்கள் உத்தியோகம்தான். ஆனால், நல்லசாதிமான்.” குமரைக் கரையேற்றவேண்டும் எனும் பெற்றோரின் பயத்தைத் தன்பலமாக்கி, ஆயுள் முடியப்போகும் நிலையிலும், சிறிது பளபளக்கும் பட்டுச்சால்வை கழுத்திற் தொங்க, ஒரு ஜமீன்தார் போல் கால்மேற் கால் போட்டுக் கதிரையிற் சாய்ந்தபடி, சாதகக் குறிப்புகளை மேசையில் விட்டெறிந்து மிடுக்குக் காட்டுகிறார் புறோக்கள். "இனி உங்கட முடிவு, ஆரப்பாக்கவேணும் என்கிறியளோ அதை முடிச்சுத்தர்றது என்ர பொறுப்பு" புறோக்கர் பேசி ஒய, சுந்தரத்தாரின் முகத்திற் குழப்பம். யாரைத் தேர்ந்தெடுப்பது? என்றுமே தனித்துச் சிந்தித்துப்பழக்கப்படாத அவர், தன் மனைவி மறைந்து நிற்கும் “கேர்ட்டின்” சீலையைப் பார்க்கிறார். “க்க்க்உஉம்” உள்ளே நிற்கும் அவர் சக்தியிடம் இருந்து வெளிப்பட்ட செருமற் சத்தம், “உள்ளே வா” என்று அவரை அழைக்கிறது. “கோப்பியைக் குடியுங்கோ, இப்ப வந்திர்றன்" புறோக்கரிடம் அனுமதி பெற்று அவசரமாய் அறைக்குள் நுழைகிறார் சுந்தரத்தார்.
本本来来来来本
ஐயா வாசகரே! இந்த இடத்தில் நான் குறுக்கே நுழைவதற்கு முதலில் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
"இவரும் கதை எழுதத் தொடங்கிற்றாராக்கும்" முணுமுணுப்பதோடு நீங்கள் வாசிக்கத்தொடங்குவது கேட்கிறது.

"யார் யாரோ எதை எதையோவெல்லாம் எழுதி,
கதை என்றும் கவிதை என்றும் தாங்களே பேர் வைத்து, புத்தகம் கூடப்போடும் இக்காலத்தில், நான் மட்டும் கதை எழுதினால் என்னவாம்? சரி சரி. வீணாக “டென்சன்” ஆகாதீர்கள். சத்தியமாக நான் கதை எழுதத்தொடங்கவில்லை. அப்படியானால் மேலே எழுதியது என்ன என்று கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை ஐயா,
நான் எழுதப்போகும் கட்டுரைக்கு, யதார்த்த பூர்வமாக ஒரு முன்னுரை வரைந்தாலென்ன என்று தோன்றியது. அந்த முன்னுரையை சற்றுப் புதுமையாய்ச் செய்ய முயன்றிருக்கிறேன். அவ்வளவுதான் விஷயம். இஷ்ரப்படி எல்லோரும் இலக்கியத்திற் புது முயற்சி செய்யும் போது, எனக்கு மட்டும் செய்ய உரிமை இல்லையா என்ன? உங்கள் புருவம் உயர்வது தெரிகிறது. “கதை எழுதத் தொடங்கிப்போட்டு அதை முன்னுரை என்கிறான். இவன் சரியான லூசன்தான்."
உங்கள் முணுமுணுப்பும் கேட்கிறது.
ஏன் அவசரப்படுகிறீர்கள். நான் இன்னும் என் முன்னுரையை முடிக்கவில்லையே. அவசரப்படாமற் தொடர்ந்து படியுங்கள். சரி மீண்டும் நான் விட்ட இடத்திற்குப் போவோமா? கொஞ்சம் பொறுங்கள். விசயத்தைத் தொடரமுன், நான் விட்ட இடத்தில் முதலில் உங்களிடம் ஒரு கேள்வி. நவீன கல்விமுறையில் கேள்விகேட்டு மாணவரிடமிருந்துதான் விடையை எடுக்கவேண்டுமாம். விடைகள் தெரியாத ஆசிரியர்களுக்கு வாய்ப்பான கல்விமுறை. “பிறகும் சொறியத் தொடங்கிற்றான்.”
உங்கள் கோபப்பார்வை தெரிகிறது. நான் எதைச் சொன்னாலும் உங்களுக்குக் குற்றம்தான். சரி அதைவிடலாம்.
கேள்விக்கு வருவோம்.
மேற்சொன்ன கதையில், புறோக்கராற் சொல்லப்பட்ட மாப்பிள்ளைகளில் எந்த மாப்பிள்ளை தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார்?
இந்த அலட்சியச் சிரிப்புத்தானே வேண்டாமென்பது. இது ஒரு கேள்வியா? டாக்ரர் அல்லது லெக்சரர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். அலட்சியமாய் நீங்கள் பதில் சொல்வது கேட்கிறது. எல்லாம் தெரியும் என்று காட்டுவதுதானே உங்கள் வழக்கம். நீங்கள் சொன்ன பதில் பிழை என்றால் உங்களுக்கு மீண்டும் கோபம் வரப்போகிறது.
நான் என்ன செய்ய, பிழை என்பதுதான் உண்மை. எந்த மாப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்? ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

Page 10
உண்மை தெரிய வேண்டுமா? என்னோடு சத்தம்போடாமல் வாருங்கள், நாங்களும் “கேர்ட்டின்” சீலையை விலத்தி அறைக்குள் சுந்தரத்தாரோடு நுழைவோம்.
水冰米水水本米 புறோக்களின் முன் கம்பீரமாய் நடந்த சுந்தரத்தார், அறைக்குள் நுழைந்ததும், மனைவியின் முன் குழைகிறார். “என்னப்பா! கேட்டனிரெல்லே, ஆரைப்பார்ப்பம், டாக்குத்தர் பறவாயில்லையே? மனைவியின் பார்வையில் அலட்சியம். “உங்களுக்கென்ன விசரே! டாக்குத்தர் மாப்பிள்ளை உதவான். அவங்கள் இராப்பகலா வேலை வேலை எண்டு திரிவாங்கள். வேலை செய்யிறாங்களோ? "நேர்ஸ்" மாரோட பல்லிளிக்கிறாங்களோ ஆருக்குத் தெரியும்? உவனை முடிச்சால் எங்கடைபெட்டையிடை நிம்மதி கெட்டுப்போம்.” பெருமையோடு பிரேரித்த சுந்தரத்தார் கொஞ்சம் அசடு வழிய, “அப்ப “லெக்சரர்” மாப்பிளையைப் பார்ப்பமே?” மீண்டும் மனைவியைப் பார்க்கிறார். “என்ன விழல்கதை கதைக்கிறியள், அவங்கள் அங்க "யூனிவேர்சிட்டியில பெட்டை, பெடியளெண்டு எல்லோருக்குமெல்லே படிப்பிப்பாங்கள். என்ன நாசத்தைப் படிப்பிக்கிறாங்கள் எண்டு ஆருக்குத் தெரியும். அங்க கூட்டம், இங்க "எக்ஸ்ரா கிளாஸ்” எண்டு கேட்டுக்கேள்வியில்லாமல் திரிவாங்கள். இவங்களைக் காவல்காத்துக் கொண்டிருக்கவே நான் எண்ட பிள்ளையை பொத்தி, பொத்தி வளர்த்தனான்." சுந்தரத்தாரின் முகத்தில் பெருங்குழப்பம். "அப்ப கிளாக்கரையே செய்யப்போறே?" சுந்தரத்தாரின் கேள்வியிலேயே சலிப்புத் தொனிக்கிறது. அது பற்றிக் கவலையில்லாமல் திருமதியார் தொடர்கிறார், "ஏனாம், கிளாக்கள் எண்டாற் குறைவே. அந்த உத்தியோகத்திலதான் கனக்கவேலை செய்யத்தேவையில்லை, சேர்ந்த நாள் தொடக்கம் பென்சன் எடுக்கும் வரைக்கும் ஒரே வேலைதான். புதுசு புதுசா யோசிச்சு மூளை களைக்காது, மணியடிச்சாப்போய் மணியடிச்சா வீட்டுக்கு வரலாம், “பிறமோஷன்” தானாய் வரும், பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டி வராது, பெரிய புரட்சியோ புதுமையோ செய்யத்தேவையில்லாத கரைச்சல் இல்லாத உத்தியோகம், வீட்டு வேலைகளும் பார்க்க நேரம் இருக்கும், எண்டபடியால் எங்கட பெட்டைக்கு கிளாக்கள் மாப்பிள்ளை தானப்பா நல்லது. அந்த மாப்பிள்ளையைத் தான் பார்ப்பம்" சுந்தரத்தாரின் முகத்தில் சிரிப்பு. கிளாக்கள் உத்தியோகத்துக்குள்ள இவ்வளவு விசயம் இருக்குதா?
ஒ

தன் கிளாக்கள் பதவியை நினைந்தும், மனைவியின் அறிவை நினைந்தும் சந்தோஷப்படுகிறார்.
"நீ சொல்லுறது சரிதானப்பா, நீயேன் அந்தக்காலத்திலை என்னைத்தான் முடிக்கப்போறன் எண்டு ஒற்றைக்காலிலை நிண்டனி எண்டு இப்பதான் விளங்குது. அப்ப பிள்ளைக்கும் கிளாக்கள் மாப்பிளையையே பார்ப்பம்." “கேர்ட்டின் சீலையை விலத்தி மீண்டும் கம்பீரமாய் புறோக்கள்முன் வந்து உட்காருகிறார். "அது பாரும் புறோக்கர், கிளாக்கர் மாப்பிளைதான் எங்களுக்குப் பிடிக்குது. ஏனெண்டாப்பாரும்.” மாணவரின் ஆராய்ச்சி முடிவை தம் முடிவாய் அரங்குகளில் அறிவிக்கும் சில பேராசிரியர்களைப் போல, சுந்தரத்தார் மனைவியின் முடிவைத் தன்முடிவாய் ஒலிபரப்பத் தொடங்குகிறார்.
米米冰水冰水来
ஐயா, வாசகரே!
ரொம்பச் சுவாரசியமாய்க் கதையை வாசிக்கிறீகள் போல, வசதிப்பட்டால் இன்னொரு முறை இந்தக்கதையைத் தொடர்ந்து எழுதுகிறேன். இப்போதைக்கு,
இந்த அளவில் அந்தச் சம்பவத்தை விடுவோம். முன்னுரைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்கிறீர்களா? வேறொன்றும் இல்லை.
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல், எவ்வித புரட்சியும் புதுமையும் செய்யாமல், உள்ளதை அனுபவித்தாற் போதும் எனும் சுந்தரத்தார் குடும்பத்தின் இந்தக்குணந்தான்,
எங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களின் பொதுவான குணம், இதைத்தான் மேற்சொன்ன சம்பவத்தினூடு வெளிப்படுத்தினேன். “தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு எங்களையும் பேயனாக்கிறான்.” உங்கள் முணுமுணுப்பு கேட்கிறது.
ஒரு காலத்தில், இலக்கியங்களுக்குக் கலைத்தன்மை அவசியமில்லை என்று சொன்ன முற்போக்கு விமர்சகர்களே, சொல்லப்படும் செய்திகளில் செய்தி மட்டும் இருந்தாற் போதாது, அதை கலைத்தன்மையோடும் சொல்ல வேண்டும் என்று, இப்போது சொல்லத் தொடங்கியிருக்கும்போது, நான் மட்டும் கலைத்தன்மைக்காக முன்னுரையை இப்படி எழுதக்கூடாதாக்கும். நீங்கள் எதையும் சொல்லிவிட்டுப்போங்கள். வாசகர்களாகிய உங்களைப் பற்றி எனக்கென்ன கவலை? நீங்கள் வாசித்தாலென்ன? வாசிக்காவிட்டாலென்ன? ஒரு விமர்சகன் என் கட்டுரையைப்பற்றி நாலுவரி எழுதினாலோ, பேசினாலோ போதாதா?
எனக்குப் பெருமை தானாக வந்துவிட்டுப் போகிறது. சரி, சரி அதற்காகப் பாதியிற் கட்டுரையை மூடாமல்

Page 11
தொடர்ந்து வாசியும் ஐயா வாசியும்.! புதுமையும் புரட்சியும் செய்யாமல் ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்யும் குணத்தை
யாழ்ப்பாணத் தமிழரின் பொதுக்குணம் என்றேன் அல்லவா! கொஞ்சம் திருத்திச் சொன்னால், அது நடுத்தரக் குடும்பங்களின் தலைக்குணம் என்றும் சொல்லலாம். பிரச்சினைகளை சந்திக்கவிரும்பாமல் நழுவி, ஏதேனும் புதுமைசெய்து பேரெடுக்கவேண்டும் என்ற விருப்பம் சிறிதும் இன்றி, வளைந்து நெளிந்து முன்னேற நினைக்கும் இந்தப் புத்திக்கு, "கிளாக்கர்ப்புத்தி” என்று நான் பெயர் வைத்திருக்கிறேன். இந்தக் "கிளாக்கள்ப்புத்தியை” சற்று விரிவாய் ஆராய்வதும் யாழ்ப்பாணத்தாரின் இந்தக் “கிளாக்கர்ப்புத்தி", எங்கள் அறிவுலகத்தையும் பாதித்த விதத்தைச் சொல்வதும், இந்த "கிளாக்கர்ப்புத்தி’யினால் இன்றுவரை உலக அரங்கில் நம்மை நாம் அடையாளப்படுத்தாமல் இருக்கும் வருத்தத்தை,
உங்களோடு பகிர்ந்து கொள்வதும்தான்,
இந்தக் கட்டுரையின் நோக்கம்.
என்ன?
முகத்தை உம் என்று நீட்டிப் பிடிக்காதீர்கள். நீங்கள் என்னதான் முகத்தை நீட்டினாலும், என் புதுமையான முன்னுரையைப் படித்தபின்பு, தீடீரென நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்ததிலிருந்தே, கட்டுரை முழுவதையும் நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள் என்பது தெரிந்துவிட்டது. இதுதான் ஐயா கலைத்தன்மையின் வெற்றி. இனியென்ன பயமில்லாமற் தொடர்கிறேன்.
米水冰冰字来米 யாழ்ப்பாணத்தை, கல்வியின் இருப்பிடம் என்றும், இலங்கையின் அறிவுக்கண்கள் என்றும், இலங்கையின் மூளை என்றும், என்னென்னமோ சொல்கிறார்கள். அங்குள்ளவர்கள் எல்லாம் பெரிய மூளைசாலிகளும், கெட்டிக்காரர்களுமாம். எனக்கென்னமோ இக்கருத்திற் பெரிய உடன்பாடில்லை. ஒருகாலத்தில் அப்படியிருந்தார்களோ என்னவோ? எனக்குத் தெரியாது. என் அறிவுக்கெட்டிய காலந்தொட்டு, இன்றுவரை இதோபார்! என வியந்து, உலகம் மூக்கில் விரல்வைக்குமாற்போல், பெரிதாய் புரட்சியும், புதுமையும் செய்த பேரறிஞர்கள் எந்தத் துறையிலும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாய் தெரியவில்லை. என்காலத்தில் அத்தகு பேரறிஞர்களை நான் சந்திக்கவுமில்லை. என்ன, சட்டையை மடித்து முஷ்டியைக் குவிக்கிறீர்கள்,

இதுதானே வேண்டாமென்பது. வாயாலேயே பேசிக்கொள்வோம். இதைப்படித்துவிட்டு என்னோடு நீங்கள் சண்டைக்கு வருவீர்கள். அல்லது புனைபெயர்களில் கண்டனங்கள் எழுதுவீர்கள். அப்படியும் இல்லாவிட்டால்,
இதோபார் எங்களிடம் இருக்கும் அறிஞர் வரிசையை என்று, பட்டங்களையும், பரிசுகளையும் அறிவின் தராசுகளாய் இனம் காட் ஒ' பட்டியலிடுவீர்கள்.
நீங்கள் என்னதான் சொன்னாலும், ஜீரணிக்க சற்றுக்கடினமாக இருந்தாலும்,
நான் சொல்வதுதான் உண்மை.
来来米米率华本
சான்று தராமற் பேசுகிறேன் என்கிறீர்களா? மற்றத்துறைகளைப் பற்றி நான் எப்படிச் சொல்ல. அப்படிச் சொன்னாலும் நீங்கள் ஏற்கவா போகிறீர்கள்? அதனால், ஓரளவு எனக்குத் தெரிந்த தமிழ் இலக்கியத் துறையிலிருந்து, சான்றுகளோடு என் முடிவை நிரூபித்துக் காட்டுகிறேன். சரி என்றால் ஒத்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்களேன். இதுநாள்வரை எமக்கிருந்த கருத்தை மறுத்துச் சொல்ல இவன் ஆர்? இவன் சொல்வது எல்லாவற்றையும் மறுக்கவேண்டும் என்ற தேவையில்லாத பிடிவாதங்களை விட்டுவிட்டு, திறந்த மனதோடு என் கருத்தைச் சிந்திக்கத் தயாராகுங்கள்.
本米米来率率水 எங்கிருந்து தொடங்கலாம். சங்ககாலத்திலிருந்தே தொடங்குவோம். ஐயா! யாழ்ப்பாணப்பேரறிஞரே! ஈழத்தவராய்ச் சொல்லப்படும் சங்கப்புலவர் ஈழத்துப் பூதந்தேவEார் முதல் இன்றைய அறிஞர்வரையும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். நன்றாக சிந்தித்துவிட்டு மனச்சாட்சியிற் கைவைத்துப் பதில் சொல்லுங்கள். மேற்சொன்னவர்களுள் யாராவது ஒருவர், தமிழ் உலகிற்கு இதுவரை ஒரு புதுப்பாதையை வகுத்துத்தந்துள்ளாரா? அது என்ன புதுப்பாதை என்கிறீர்களா? பெரிதாய் ஒன்றுமில்லை. வள்ளுவனைப்போல், இளங்கோவைப்போல், கம்பனைப்போல் காலத்தால் அழியாத, புதுமைமிகுந்த, தமிழுலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும், ஒரு மூல நூல் தரும் முயற்சியில் வெற்றி பெறுதல், அல்லது, இலக்கிய மரபில், பாரதியைப்போல் ஒரு புதுநெறி அமைக்கும் புரட்சியில் வெற்றிபெறுதல். இவற்றைத்தான் புதுப்பாதை என்கிறேன். இப்போது நான் சொல்லும் புதுங்பாதை என்வென்று புரிகிறதா?

Page 12
இங்ங்னமாய் எங்களவருள் புதுமை செய்தார் எத்தனைபேர்? ம், சொல்லத் தொடங்குங்கள்! நான் விரல் மடிக்கிறேன். இதுவரை காலமும் நீங்கள் வியந்த யாழ்ப்பாண அறிஞர் வரிசையை அடக்க கைவிரல் போதாவிட்டால் கால்விரல்களையும் மடித்துக் கொண்டாற் போயிற்று. ம், ஒன்று. விரல் மடித்தாயிற்று முதற்பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம். என்ன சத்தத்தைக் காணோம். சிந்திக்கிறீர்கள் போலும். சிந்திப்பது நல்லதுதான். எனினும். சிந்தனைக்கு முடிவு வேண்டாமா? இவ்வளவு நேரம் சிந்தித்து தேடத்தக்கதாகத்தான், இதுநாள்வரை அளவிறந்து நீங்கள் புகழ்ந்த, நம் சிந்தனையாளர்களின் வரிசை இருக்கிறதா? ஏதோ பெரிதாய்க் கைமடித்து அடிக்க வந்தீர்களே! இப்போதுமட்டும் என்ன தாமதம். என்ன? ஆகாயம் பார்க்கிறீர்கள். ஐயா! அறிஞரே, நீங்கள் எவ்வளவு நேரம் சிந்தித்தாலும், உங்களால் என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழுலகில், நான் சொன்னாற்போல் புதுப்பாதை அமைத்த, அப்படியொரு புரட்சியாளர் எங்களவருள் இல்லை என்பதுதான் உண்மை.
米本泳米冰求冰 "ஈழத்தமிழுலகில்..” என்று தொடங்கப் போகிறீர்களாக்கும், ஈழத்தமிழ் என்கின்ற கதையை விடுங்கள். தமிழுலகு என்ற விரிவிற்குள் வாருங்கள். தொல்காப்பியன், வள்ளுவன், இளங்கோ, கம்பன், ஒளவை, பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன். இந்த வரிசையில், தமிழ் உலகம் ஒப்பும் வகையில் நம்மவர் பெயர் ஒன்றுதானும் இல்லை என்று ஒத்துக்கொள்கிறீர்களா? அதைத்தான் விடுங்கள். கவிதையை இரண்டடியாக்கி அதற்குள் எல்லையற்ற அறத்தை வரைவு செய்து புதுமை செய்த வள்ளுவன், பெண்ணாய் இருந்தும் பெண்மையைத் தாண்டி அறிவுலகைத் தொட்ட ஒளவை, ஆண்டவனையும் அரசரையும் பாடிய காலத்தில் ஒரு சாதாரண குடிப்பெண்ணை காதாநாயகியாக்கிப் பாடிய இளங்கோ, ஆண்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த சமுதாயத்தில் ஆண்கற்பை வலியுறுத்தி புதுமை செய்த கம்பன், பக்திக்குமுன் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை எடுத்தெறிந்த சேக்கிழார், மண்ணின் பிரச்சினையைக் கவிதைக் கருவாக்கிய பாரதி, ஐரோப்பிய வடிவான சிறுகதை வடிவை, தன் குளத்தங்கரை அரசமரம் மூலம்
22

தமிழில் சாத்தியப்படுத்திய, வ.வே.சு.ஐயர், நாவலுக்கு ஓரளவு முழுவடிவம் கொடுத்த ராஜம் ஐயர், ஐரோப்பிய இலக்கிய வடிவங்களை கருப்பொருளாலும் நிமிர்த்திய, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோர், புதுக்கவிதை வடிவை தமிழில் நிறுத்திய பிச்சமூர்த்தி, 3üUıç, ஏன் நம்மவர் யாரும் தமிழ் உலகைப் பொறுத்தவரை, புரட்சியோ புதுமையோ செய்யவில்லை? இதுதான் என் கேள்வி. அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார் என்று உடனே தொடங்குவீர்கள், தயவுசெய்து அதை நிறுத்துங்கள். இவை எல்லாம் நீங்களே உங்களைப்பற்றிச் சொல்லிக்கொள்ளும் பெருமைகள். நீங்கள் சொல்லும் பெயர்களை முழுத்தமிழுலகும் ஒத்துக்கொண்டிருக்கிறதா? மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதாற் பயன் ஒன்று இல்லை. அதுமட்டுமல்லாமல், நீங்கள் சொல்லும் பெயர்க்குரியவர்கள் எல்லாம் மற்றவர் செய்த புதுமையைப் பின்பற்றி வியப்பேற்படுத்தியிருப்பார்களே அன்றி, தமிழுலகே அதிரும் வண்ணம் புரட்சியும் புதுமையும் செய்தவர்களாக, நிச்சயம் இருக்க மாட்டார்கள். கசப்பாய் இருந்தாலும் இவ்வுண்மையை மறுக்கமுடியாது.
岑水来来米冰岑 ஏதோ சொல்ல வருகிறீர்கள் போல, நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். தமிழகம் நம் பெயர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டது என்கிறீர்களாக்கும். குழந்தைத்தனமான பதில். இதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். உண்மைஆற்றலை யாராலும் மறைக்கமுடியாது. வீரியமுள்ள ஆற்றல் எப்படியோ இனங்காணப்படும். அறிவிப்பாளர் அப்துல் ஹமீத்தை, தமிழகத்தில் சாதாரண மனிதனுக்கும் தெரிந்திருக்கிறது. தவில் வித்துவான் கணேசபிள்ளைக்கு தமிழக அரசின் "கலைமாமணி” விருது கிடைத்திருக்கிறது. அண்மையில் நமது பேராசிரியர் சிவத்தம்பிக்கு தமிழக அரசின் "திரு.வி.க."விருது கிடைத்திருக்கிறது. இப்படித் தமிழகம் நம்மை அங்கீகரித்தமைக்குச் சான்றுகள் பல இருக்கின்றன. இவர்கள் எல்லோரும் இந்த இருட்டடிப்பைத் தாண்டியது எப்படி? வீணாகச் சாட்டுகள் தேடாதீர்கள். ஊரிற் சொல்லுமாற்போல், "ஓம் என்றவனுக்கு ஒரு காரணம் ஏலாது என்றவனுக்கு இருநூறு காரணம்" நீங்கள் சொல்வதும் உங்கள் ஏலாமைக்கான காரணங்கள்தான். என்ன திடீரென உங்கள் முகத்தில் மலர்ச்சி.

Page 13
“நன்றாக மாட்டிக்கொண்டாய்” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்காதீர்கள். நீங்கள் நினைப்பது புரிகிறது. மேற்சொன்னவர்களை தமிழகமே கெளரவித்திருக்கும்போது, நம்மிடம் ஆள் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? என்கிறீர்களாக்கும். என்னை அடக்கிவிட்டதாய் அளவுக்கு அதிகமாய்ச் சந்தோஷப்படாதீர்கள். உங்களிடம் அவ்வளவு இலேசில் அகப்படமாட்டேன். மேற்சொன்ன தமிழகப் பட்டங்களும், பாராட்டுக்களும், குறித்த ஓர் துறையில், திறமைசாலிகள் வரிசையில், நம்மவரும் இனங்காட்டப்பட்டதை உறுதி செய்ய வழங்கப்பட்டதே அன்றி, நான் சொன்ன புதுப்பாதை அமைத்ததற்காக வழங்கப்படவில்லை. அதை முதலிற் தெரிந்து கொள்ளுங்கள். என் கேள்வி வேறு. தப்ப நினைப்பதை விட்டுவிட்டு, தெளிவாகச் சிந்தித்தால், எங்களிடம்தான் ஏதோ பிழையிருக்கவேண்டும் என்பது தெளிவாய்த் தெரியவரும். எம்மை நாம் ஆராய்வதில் என்ன தவறு? என் அறிவுக்கு எட்டியவரையில், நான் ஆராய்ந்து பார்த்ததில், தமிழுலகில் நமக்கு ஒர் பதிவில்லாமற் போனதற்கு, புதுமையோ புரட்சியோ செய்யாமல், வேறுயாரும் செய்த புதுமையில் நடைபோட்டு, சும்மா இருந்து சுகம்பெற நினைக்கும், நமக்கே உரித்தான "கிளாக்கர்ப்புத்தி” தான், காரணம் என்று தெரிகிறது. இதைச் சொல்லத்தான் ஐயா இந்தக் கட்டுரை.
本本本来来本来 உங்கள் கண்கள் சிவப்பது புரிகிறது. கோடரிக் காம்பெனக் கூவி நீங்கள் எழுவதும் தெரிகிறது. என்னை இனத்துரோகியென பஞ்சாயத்துக்கூடி பறையறிவிக்க நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் கோபத்தில் வலுவில்லை. காரணம், நான் பொய் சொல்வதாய் நினைத்து உங்களுக்குக் கோபம் வரலில்லை. உண்மை உங்களை காயப்படுத்துவதாற்தான் கோபம் வருகிறது. "உண்மை சுடும்” என்றான் ஜெயகாந்தன். சுடும் என்பதற்காக உண்மையைத் தரிசிக்காமலே இருக்கமுடியுமா? அங்ங்ணம் தரிசிக்காதுவிடின், என்றுதான் நம் இனம் ஒளியும், உயர்வும் காண்பது? பொய்மையாக நமக்குள்ளே பெருமை பேசி, ஒருவர் முதுகை ஒருவர் தட்டிக் கொடுக்க ஒப்பந்தம் செய்து, அறிவுலகை முடமாக்கும் அசட்டுச் செயல்களை, புரட்சியால் விளையப்போகும் புதுமண்ணிலும் விதைக்க வேண்டாம். விளலுக்கு நீர் இறைக்க வீணே முயலவேண்டாம்.
24

冰冰米米冰冰求 என்ன தீடீரென மீண்டும் உங்கள் முகத்தில் ஒளி? ஒரு சில பெயர்கள் உங்கள் நினைவுக்கு வந்துவிட்டனபோலும். சரி சொல்லுங்கள் பார்க்கலாம்! நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, கணேசையர், கைலாசபதி, சிவத்தம்பி. உங்கள் பட்டியலைச் சற்று நிறுத்துங்கள். நீங்கள் சொன்ன இந்தப் பெரியவர்களை எல்லாம் நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் அறிவாளிகள் என்பதிலும் எனக்கு எந்த ஐயமுமில்லை. இவர்கள் செய்த தமிழ்த்தொண்டு பெரிது என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நான் கேட்பது வேறு விஷயம். நீங்கள் சொன்ன இத்தனைபேரும் தமிழுலகில் சாதித்தது என்ன? உள்ளதைப் பதிப்பித்தது, உள்ளதிற்கு உரை செய்தது, உள்ளதை விளங்கப்படுத்தியது, உள்ளதை கொண்டு வேறு உரைத்தது, உள்ளதை ஆய்வு செய்தது. இவ்வளவுந்தானே இவர்களது அறிவு முயற்சி. தமிழுலகில் இவர்கள் புரட்சியால் விளைந்த புதிய ஆக்கமோ, தமிழுலகுக்கு இவர்கள் காட்டிய புதிய பாதையோ ஏதுமில்லையே. ஏன் என்பதுதான் என் கேள்வி? டானியல், ஜிவா என்று சொல்லத்தொடங்குவீர்களாக்கும். தயவு செய்து நான் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களது புரட்சிகளும் மற்றவர்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டதே அன்றி, இவர்களாகவே அமைத்துக்கொண்ட புதுப்பாதை அல்ல. கோபத்தில் உங்கள் மீசை துடிப்பது தெரிந்தாலும், பயமின்றிச் சொல்கிறேன். நீங்கள் சொன்னவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், தாமே சிந்தித்து, புரட்சிசெய்து, ஒரு புதிய பாதை அமைத்து, காலத்தால் அழியாவண்ணம் நம் யாழ்ப்பாணத்தை, தமிழுலகில் இவர்களும் பதிக்கத்தவறிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இவ்வளவு ஆற்றல் இருந்தும் புதிதாக இவர்கள் ஏதும் ஆக்கவில்லை. செய்ததெல்லாம் உள்ளதை வைத்து ஒப்பேற்றும், அல்லது, ஒடிய பாதையில் ஒடும் கிளாக்கள் வேலைதான். இந்தக் "கிளாக்கர்ப்புத்தி"யாற்றான், தமிழுலகிற்கு நம்மைத் தனித்து இனங்காட்டத் தவறிவிட்டோம் என்கிறேன்.
本来米米水水水 என்ன? உங்கள் கண்களில் கோபம் குறைந்து குழப்பம் வெளிப்படுகிறதே? சிந்திக்கிறீர்கள் போலும், இப்படிச்சிந்தித்திருந்தால் எப்போதோ முன்னேறியிருப்போம். இப்போதாவது சிந்திக்கத் தலைப்பட்டீர்களே,

Page 14
அதற்கு நன்றி.
உலகளாவி நம் பெயர் நிலைக்கமுடியாமல், நம் சமூகத்தை இந்தக் "கிளாக்கர்ப்புத்தி" பீடிக்கக்காரணம் என்ன? பலவீனத்தின் மூலத்தை அறிந்தாற்றான் அதன் வேரறுக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியவில்லை. நான் நினைப்பதைச் சொல்லுகிறேன். கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்.
米伞米米率率冰
எப்போதும் ஒரு சமூகம்,
மேல்வர்க்கம், நடுத்தரவர்க்கம், கீழ்வர்க்கம் என, மூன்றாய்ப் பிரிந்து கிடக்கும். அனைவரையும் சுரண்டி, அனைத்து வசதிகளையும் பெற்று, அவ்வசதிகளை தமது அடுத்த தலைமுறைக்கும் உறுதிசெய்ய முயன்று நிற்பது, மேல்வர்க்கத்தின் இயல்பு.
அடிப்படை வசதியும் இன்றி, அதைத்தேடும் திறனும், தம் தாழ்நிலை மாற்றும் தேடலும் இல்லாமல், மற்றவர்களால் ஏய்க்கப்பட்டு, எப்போதும் யாரிடமும் கையேந்தி, இலட்சியமற்று வெறுமனே உயிர்வாழும் வாழ்க்கை, கீழ்வர்க்கத்தினது இயல்பு. இவ்விரண்டு வர்க்கத்திற்கும் இடையில் அகப்பட்டு, மேல் வர்க்கத்திடம் பணிந்துவிடாமலும், கீழ்வர்க்கம் தன்னைவிட நிமிர்ந்து விடாமலும் இருப்பற்காக, எப்போதும் முயன்று,
தனக்கெனத் தனித்தகுதிகளை வரையறை செய்யாமல், மற்றவர்களின் தொடர்பு பற்றியே தமது தகுதியை இனங்காட்ட முயல்வது, நடுத்தரவர்க்க இயல்பு. பெரும்பாலும் இம்மூன்று வர்க்கங்களிலும் மேல்வர்க்கம் அல்லது கீழ்வர்க்கமே சமூகப்புரட்சிகளை முன்னின்று நடத்தும். இயல்பாகவே அடிமட்டத்தில் இருப்பதால் இதைவிட விழப்போவதில்லை என்னும் துணிவு
கீழ்வர்க்கத்தைப் புரட்சி செய்யத் தூண்டும். சமூகத்தின் தலைமை கொண்டு வாழ்ந்த பழக்கம் தந்த ஆளுமையால், மேல்வர்க்கமும் புதுமை காணவும் புரட்சி செய்யவும் விளையும். இந்த மூன்று வர்க்கத்திலும் நடுத்தரவர்க்கமே பரிதாபகரமான்து. இந்த நடுத்தரவர்க்கம் மற்றைய இரு வர்க்கங்களிலிருந்தும் தன்னைப் பிரித்துக்காட்டும் முயற்சியிலேயே தன் காலம் முழுவதையும் கழித்து விடுகிறது. பொய்மையான தம் இருப்பைப் பேணக் காலம் முழுவதையும் கழிப்பதால், புதுமை செய்யவோ புரட்சி செய்யவோ இவர்களுக்கு என்றும் நேரம் கிடைத்தில்லை. புதுமை செய்வதிலும், புரட்சி செய்வதிலும் இருக்கக்கூடிய வெற்றியின் நிச்சயமின்மையை,

சந்திக்கும் ஆளுமையும், துணிவும் இந்த வர்க்கத்திற்கு என்றுமே வந்ததில்லை. மாற்றங்கள், சமூதாயத்திற் தங்கள் இருப்பைத் தாழ்த்திவிடலாம் எனும் பயத்தால், இவர்கள், தாங்கள் புரட்சி செய்ய விரும்பாததோடு, மற்றவர்கள் புரட்சிசெய்வதையும் விரும்பமாட்டார்கள். புரட்சி செய்பவர்களுக்கு எதிரான புரட்சி செய்வதில் இவர்கள் மன்னர்கள். புரட்சி செய்பவர்களை வீழ்த்த இவர்கள் கையாளும் வழிகள் இரண்டு. புரட்சி செய்யும் போராளியைழுதலில் நசுக்கப்பார்ப்பார்கள். முடியாது போனால் அப்போராளியை வீழ்த்த மற்றொரு குறுக்குவழியைக் கையாள்வார்கள். மிகக்கெட்டித்தனமாக, போராட்டத்தை அங்கீகரிக்காமல், போராளியை மட்டும் அங்கீகரித்து, தமக்கு கிடைத்த அங்கீகாரம் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என போராளியை நினைக்கச் செய்து, அவனின் போராட்டத்தைக் கைவிடச் செய்து விடுவார்கள். இவர்களின் இரண்டாவது தந்திரத்தால் வீழ்ந்த புரட்சியாளர் தொகை அதிகம். நம் மண்ணில் சாதிப்போராட்டத்தில் வீரியத்தோடு ஈடுபட்ட, இலக்கியப் புரட்சியாளர்கள் பலரும், நடுத்தர வர்க்கத்தின் இவ் ஆயுதத்தால் ஓரளவு வீழ்ந்தனர் என்பதே என் მნ(ყჭნჭ5$5l. இவர்களின் இவ்விரு ஆயுதத்தாலும் வீழாதவர்கள் எவரும் இல்லை என்று கூடச் சொல்லலாம். இவ்விரு ஆயுதத்தையும் மீறி ஒருவன் செயற்பட நினைத்தால், எல்லோருமாகச் சேர்ந்து அவனைப் பைத்தியக்காரனாக்கி நாடுகடத்தி விடுவார்கள். 水冰冰冰冰来米 "ஏன்? இவர்களிடமிருந்து தப்பி தேச விடுதலையில், இளைஞர் குழுக்கள் புரட்சி செய்து வெற்றி பெறவில்லையா?” என்பீர்கள், அந்தக்கதை வேறு. இவ் இளைஞர்களின் புரட்சியை கிளாக்கர்ப்புத்திக்காரர்கள், ஊன்றிக் கவனித்து உசாராகி எதிர்ப்பதற்கு முன், அவர்களின் விஸ்வரூபம் திடீரென நிகழ்ந்துவிட்டது. இவர்கள் கவனிக்கும் முன்பே, தென்கிழக்காசிய அரசியற் சூழலால், வல்லரசுகளின் கரங்கள் உட்புக, அவ் இளைஞர்களுக்குப் பெரும் பலம் சேர்ந்துவிட்டது. உலக அங்கீகாரத்தால் அவர்களைத் தாமும் அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இவர்களுக்கு. அங்கீகரிக்கத் தவறின் தாம் தனித்துவிடுவோம் என்ற பயத்தாலும், அவர்களின் புரட்சியால் தமக்கும் இலாபம் உண்டு என்ற காரணத்தினாலும் அவர்களின் புரட்சியை இவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Page 15
அவ் ஏற்பின் உண்மைத் தன்மையையும் காலம்தான் நிர்ணயிக்கவேண்டும் என்பது வேறு கதை.
இன்றும், கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தம் பாதுகாப்பான இருக்கையை உறுதி செய்துகொண்டு,
இவர்கள் காட்டும் கடுமையான தேசப்பற்று, கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
அத்தனையும் நடுத்தரவர்க்கக் குணம். நல்லகாலம் அவ் இளைஞர்கள் மட்டுமாவது, இந்த நடுத் தரவர்க்கத்தின் கைக்குள் அகப்படாமல் தனித்திருந்து தப்பிக்கொண்டனர்.
அரசியல் நமக்கு எதற்கு? அதை விடுவோம்.
冰冰米米本来米
மேலே நான் சொன்ன இந்த நடுத்தர வர்க்க இயல்பான "கிளாக்கர்ப்புத்தி” தான்
நம் தமிழ் அறிவுலகையும் பாதித்தது என்பது என் அபிப்பிராயம். ஏன்? யாழ்ப்பாணத்திலும், மேல் வர்க்கமும், கீழ்வர்க்கமும் இருந்ததே. அவர்கள் புரட்சி செய்திருக்கக் கூடாதா? என்று கேட்பீர்கள். கேள்வி நியாயமானதுதான்.
ஆனால் அதற்கும் பதில் உண்டு.
யாழ்ப்பாணச் சமூகத்தின் "கொன்றோல்” இந்த நடுத்தரவர்க்கத்தின் கையிலிருந்ததுதான் நம் துரதிஷ்டம். சாதியால் மேல்வர்க்கம் என்று தம்மைச் சொல்லிக்கொண்ட பிராமணர்கள் கூட இந்த நடுத்தர வர்க்கத்தின் கையை நம்பியே வாழவேண்டியிருந்தது. அது மட்டுமல்லாமல் அறிவுத்துறையிலும், தமிழ்நாட்டுப் பிராமணர்கள் போல் எங்கள் பிராமணர்கள் வலிமை பெற்றிருக்கவில்லை. பிராமண நிந்தை செய்வதாய் தயவு செய்து என்னைக் கோபிக்காதீர்கள். நிஜத்தை நிதர்சனமாகச் சொல்வதானால், யாழ்ப்பான சமூக வாழ்க்கையில், பிராமணர்களும் வேளாளரின் குடிமக்கள் போல்தான் பெரும்பாலும் வாழ்ந்தனர். விதிவிலக்காய் சிலர் இருந்தது உண்மையே. நான் சொல்லும் செய்தி பெரும்பான்மை பற்றியது. இவர்கள்பாடு இப்படியென்றால், செல்வத்தால் மேல்வர்க்கமாக இருந்தோர் பிரச்சினை வேறு, எண்ணிக்கையில் மிகக்குறைந்த அளவிலேயே அவர்கள் இருந்தனர். அப்படி இருந்தவர்களும் தனித்தனிச் செல்வர்களாக இருந்தனரே தவிர, “செல்வர்கள் சமூகம்” என்ற ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்திற் பெரும்பாலும் இருக்கவில்லை.
அங்கிருந்த செல்வர்களும், நடுத்தரவர்க்கத்தினரைவிட உயர்ந்திருந்தனரே தவிர, வேறு சில நாடுகளைப்போல, ஒரு சமூகத்தையே கட்டுப்படுத்தும் மிகப்பெரும் கோடீஸ்வரர்களாய் இருக்கவில்லை.

அவர்களைப் பொறுத்தளவில், நடுத்தரவர்க்கத்தின் மதிப்புக்குரியவர்கள் தாங்கள் என்ற தகுதியே பெருமையாய்க் கருதப்பட்டது.
அதனால் செல்வத்தால் மேல்தட்டிலிருந்தோரும் ஓரளவு, நடுத்தரவர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர் எனலாம். இனி கீழ் வர்க்கத்தினரை நோக்கினால்,
அவர்களின் பொருளாதாரம், பெரும்பான்மை பெற்றிருந்த நடுத்தரவர்க்கத்தின் கையையே நம்பியிருந்தது. அதனால் அவர்கள் நடுத்தரவர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே பெரும்பாலும் சீவிக்கவேண்டிய சூழ்நிலை.
ஒப்பீட்டில் மேல் வர்க்கத்தைவிட நடுத்தரவர்க்கம் செய்த அலட்சியம் பெரிதாய்ப்படாமையாலும் சமூக அமைப்பில் நடுத்தரவர்க்கம் ஓரளவேனும் தம்மோடு உறவு பேணியதாலும், இக்கீழ்வர்க்கம்,
ஓரளவு மனமொப்பிய நிலையில், முழுக்கமுழுக்க நடுத்தரவர்க்கத்தினரிடம் தம் அடிமைவாழ்வை ஒப்புக்கொடுத் திருந்தது.
இப்படியாக நம்விதியின் தீவினைப்பயனால்
யாழ்ப்பாணச் சமூகம் நடுத்தரவர்க்கத்தின் ஆளுமைக்கு முழுமையாக உட்பட்டதால், அந்த வர்க்கத்தின் இயல்பே பெரும்பாலும் யாழ்ப்பாணத்தின் இயல்பாயிற்று. அந்த இயல்பு தமிழர் அறிவுலகையும் பற்றிக்கொள்ள, வரலாறு படைக்கும் வலிமையற்றுப் போயினர் நம் அறிஞர்.
率率米米幸本冰
எங்கள் அறிவுலகை, நடுத்தரவர்க்கத்திற்கே உரிய வரட்டுக் கெளரவம் பற்றிக்கொண்டதுதான், அதைவிடப்பெரிய சோகம். அந்நடுத்தர வர்க்கத்தினரைப் போலவே நம் அறிவுலகத்தாரும், தாம் சாதனை படைக்கவில்லை என்னும் தோல்வியை இதுவரை வெளிப்படுத் தாமல்,
போலியாய்ப் பொய்மை பேசி,
தாமும் பெரிதாய்ச் சாதித்தவர் போலும், தமக்கு நிகரானார் யாரும் இலர் என்பது போலும், நாணமின்றித் தம்மைத்தாம் புகழ்ந்து, நம்மை எல்லாம் ஏமாற்றி நாடகமாடி வருகின்றனர்.
இவ்வியல்பு,
அன்றைய மரபறிஞர்களிடமும் இருந்தது. இன்றைய நவீன அறிஞர்களிடமும் இருக்கிறது. அக்காலத்தில் நாவலரைப் புகழ்வோர், தமிழகத்தில் அறிவே இருக்கவில்லை என்பது போலும், யாழ்ப்பாணத்தாரிடம் இருந்துதான் அவர்கள் அனைத்ததையும் கற்றுக்கொண்டனர் என்பது போலும்,

Page 16
நாவலர்தான் தமிழகத்தையே திருத்தினார் என்றாற்போலும் பேசிக்கொள்வர். பின்னர் மேற்சொன்ன கூற்றுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், தமிழகம் கொடுத்த நாவலர் பட்டத்தைத்தான் தலையாய பட்டமாய்ப்போற்றி மகிழ்ந்து நிற்பர்.
அதுமட்டுமல்லாமல்,
இம்மரபுக்காரர்கள்,
தமிழகம் தரும் சிறு கெளரவத்தையும், தமக்குக் கிடைத்த பெரும் பேறாய் உச்சிமேற்கொண்டு உவப்பர். இந்த அநியாயம் ஒருபக்கம் நடக்க, இவர்களைப் பழைமைவாதிகள் என்று தூற்றிய நவீன இலக்கியவாதிகளோ, இந்த விடயத்தில் பழைமை வாதிகளைவிட ஒருபடி மேலேயே போய்விட்டனர். இங்குள்ள எழுத்தாளர் பலர் எழுதும்போதும், மேடைகளிற் பேசும்போதும், தமிழக எழுத்தாளர்களை எழுத்துவியாபாரிகள் என்றும், தமிழக சஞ்சிகைகளை வியாபார சஞ்சிகைகள் என்றும், அங்குள்ளவர்கள் வெறும் விளம்பரப்பிரியர்கள் என்றும், பெரிதாய் அடித்து முழங்குவர்.
இவர்கள் பேசுவதைக் கேட்டால், இவர்கள் எல்லாம் பொருட்பற்றோ, புகழ்ப்பற்றோ சிறிதும் இல்லாதவர்கள் என்றும்,
இலட்சியத்திற்காக உயிரைக்கூடக் கொடுத்துவிடுவார்கள் என்றும், சிறிதும் விளம்பரப்பற்று இல்லாதவர்கள் என்றும் எண்ணத்தோன்றும். ஆனால் உண்மை நிலையோ, “சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்” என்ற கதைதான். இப்படி ஆவேசமாய் தூய்மைவாதம் பேசும் இந்நவீன எழுத்தாளர்கள், தமிழகத்திலிருந்து ஒரு சஞ்சிகை ஆசிரியரோ, எழுத்தாளரோ, இங்கு வந்துவிட்டாற் படும் பாடிருக்கிறதே,
அது நாய்படாப்பாடு போங்கள்!
வந்தவரைச் சுற்றிச் சுற்றித்திரிவதும், அவரோடு புகைப்படம் எடுப்பதை ஒரு பேறாய்க் கருதுவதும், தங்கள் ஆக்கங்களை அவர்கள் கேட்காமலேயே போட்டிபோட்டு அவர்கள் கையிற் திணிப்பதுமாக, இவர்கள் அடிக்கும் கூத்திருக்கிறதே அது பெருங்கூத்து. இவர்களின் பரபரப்பை பார்த்து, அங்கிருந்து வருகிற ஒரு சாதாரண இலக்கிய கர்த்தா கூட, இவர்கள் மனநிலையறிந்து, "அங்கு உங்களுக்கு அதுசெய்து தருகிறேன், இது செய்து தருகிறேன்” என்று, வாக்குறுதிகளை அள்ளி வீசி வரம் தரத்தொடங்கிவிடுவார். அவற்றை நம்பி விருந்துகளும் பரிசுகளும் கொடுத்து, “ஏஜன்சி"காரரிடம் ஏமாறும் நம் இளைஞர்களைப்போல, இவர்கள் ஏமாறுவதைப் பார்த்தால்,
வயிறு எரியும்! ஐயா, வயிறு எரியும்! ஒருமுறை தமிழகத்திலிருந்து வந்த ஒரு சஞ்சிகையாசிரியர், இவர்களின் அவாவைத் தெரிந்துகொண்டு,

அங்குபோனதும், தன் சஞ்சிகையில் அட்டைப்படத்தில், சிறிது சிறிதாக அத்தனைபேர் முகங்களையும் பதிப்பித்தார். அட்டைப்படத்தில் தம்முகம் கண்டு இவர்கள் பட்ட பாட்டைப் பார்க்கவேண்டுமே! அந்தப் புத்தகத்தைத்துக்கிக் கொண்டு இவர்களில் பலர் ஒடித்திரிந்தார்கள். அவரது படம் பெரிதாக வந்திருக்கிறது, இவர் படத்தை ஓரத்தில் போட்டுவிட்டார், என்ற காரணங்களைக் காட்டி, தமிழகத்தில் தம் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற முயன்ற, பரிதாபம் வேறு நடந்தது. இவர்களைத்தான் விடுங்கள். இங்கு பெரிய அளவில் இலட்சியம் பேசி , குமுதமா விகடனா? சீ சீ அவை வெறும் மஞ்சள் பத்திரிகைகள், என எள்ளிநகையாடிய இலட்சிய மனிதர்கள் சிலர்கூட, நாளடைவில் தமிழகம் சென்று அப்பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்ததும், அப்பத்திரிகைளில் பேட்டி வந்தது பற்றிப் பெருமைப் பட்டுக்கொண்டதுமான அநியாயம் வேறு நடந்தது, நடக்கிறது.
米岑米本来米来 மேற்சொன்ன விடயங்களைச் சுட்டிக்காட்டி, இவர்களைக் குறைகாண்பதல்ல என் நோக்கம். இந்தப் பொய்மைகளுக்கான காரணத்தை விளக்க மட்டுமே நான் முற்படுகிறேன். என்னைக்கேட்டால், இவர்களின் இந்தப் பொய்மைகளுக்குக் காரணம், யாழ்ப்பாண அறிவுலகை பிடித்திருந்த, நடுத்தரவர்க்கத்திற்கே உரித்தான, போலி கெளரவத்தையே பெருவுடமையாகக் கொண்ட, "கிளாக்கர்ப்புத்தி"தான் என்று அடித்துச் சொல்வேன்.
来来米水来水米
“சரி, பெரிய உண்மையைக் கண்டுபிடித்துவிட்டீராக்கும்” என்று நீங்கள் முறைப்பது தெரிகிறது.” நம்மை நாம் இழிவு செய்வதில் பெருமை இல்லை என்பதை நானும் உணர்வேன். பின் ஏன் இக்கட்டுரை என்கிறீர்களா? காரணத்தோடுதான் எழுதியிருக்கிறேன். அக்காரணத்தைச் சொல்கிறேன் தயவுசெய்து கேளுங்கள். தாய்மண் உரிமை வேண்டித் தொடங்கிய போரால், நம் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. போருக்குப் பயந்து எல்லா வர்க்கத்தினரும் உலகம் முழுவதும் ஓடிக் குடிபுகுந்தனர். அதனால், நமது யாழ்ப்பாணச் சமூதாயத்தின் அடிப்படை அமைப்பே மாறிவிட்டது. நம் சமூகத்தைப் பற்றியிருந்த நடுத்தரவர்க்கத்தின் வலிய இரும்புப்பிடி, மெல்ல மெல்ல தளர்ந்து போயிற்று. கீழ்வர்க்கத்தார், பொருளாதாரத்தில் இன்று யார் கையையும் நம்பவேண்டாத

Page 17
நிலை. சொற்பமாய் இருந்த மேல் வர்க்கமும் உடைந்து உலர்ந்த நிலையில் இன்று. எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ என்ற பயத்தில், யாரும் யாரையும் ஆளநினைக்காத செயற்கைப் பக்குவமடைந்துள்ளனர். இதனால் நெருக்குதல் அற்ற ஒரு சமநிலைச் சமுதாயம், தற்காலிகமாய்த் தோன்றியிருக்கிறது. ஒருவரில் ஒருவர் தங்கியிராத நிலைமை தோன்றியிருப்பதால், பொய்முகம் காட்டும் போலித்தனம் நம் சமூகத்திடம் குறைந்திருக்கிறது. இந்த நேரத்தில் புரட்சியும் புதுமையும் விளைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்தப் புரட்சியும் புதுமையும், சமூகத்தில் விளைகிறதோ இல்லையோ? அறிவுலகில் விளையவேண்டும் என்பது என் பேரவா. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தியேனும் புத்துணர்ச்சி பெற்று, நம் அறிவுலகம், தமிழுலகில் நமக்கென ஓர் தனி அடையாளம் காட்ட முயலாதா? இதுதான் ஐயா என் ஏக்கம். நாம் செய்யாததை, நம் இளைய தலைமுறையேனும் செய்யட்டும் எனும் விருப்பாற்தான், என்னையும் உட்படுத்தி நம்குறைகளை ஆராய்ந்திருக்கிறேன். நீங்கள் ஏற்றாற்தான் இளைய தலைமுறை ஏற்கும். அவர்கள் முயற்சியாலாவது தமிழுலகில் நம்பெயரும், தனித்துப் பொறிக்கப்படட்டும்.
率米率事率本率 என்ன உங்கள் முகத்தில் ஈயாடக் காணோம். என்னை மறுக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதும், மறுக்கமுடியாமல் உங்கள் மனம் தடுமாறுவதும் எனக்கு நன்கு தெரிகிறது. சிறுவயதில் படித்த ஒரு கதை, ஒரு பொய்யன் அரச சபைக்கு வந்தானாம். அறிஞர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய உடை கொணர்ந்ததாய்ச் சொல்லிய
و 6946hd66 வெறுங்கையில் உடை இருப்பதுபோல பொய்மையாய்ப் பாவனை பண்ண, தம் கண்ணுக்குத்தெரியாவிட்டாலும், தெரியவில்லை என்று சொன்னால், தம்மை முட்டாள் என்று மற்றவர்கள் நினைத்துவிடுவாரோ? ள்னும் பயத்தால், அரசனுட்பட அத்தனைபேரும் இல்லாத அவ்வுடையை பாராட்டினராம். ஏமாந்த அரசன், அவ்வுடையை அணிவதாய்க் கூறி நிர்வாணமாய் ஊர்வலம் சென்றானாம். அரசனின் நிர்வாணம் தெரிந்தும், மற்றவர் பேசாமல் இருக்க, நாம் மட்டும் ஏன் உண்மைபேசி முட்டாள் ஆகவேண்டும் என நினைந்து, அத்தனை பேரும் வாய்மூடிப் பொய்மை பேண, அறிவில்லாத, ஆடுமேய்த்த ஒரு சிறுவன் மட்டும்,
32

பெரியமனிதர்களின் இந்தப் பொய்மை ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ளாமல், "இஞ்சாற்றா ராசா உரிஞ்சிட்டுப் போறார்” என்று கத்த, உண்மை உணர்ந்து அனைவரும் நாணினராம். அந்த ஆடுமேய்க்கும் சிறுவனாய் நான் வாய்திறந்திருக்கிறேன்.
தை பிறந்ததுமே சாத்திரியார் சொன்னார்,
"உமக்கு இப்ப அட்டமத்துச்சனியும், அட்டமத்து வியாழனும் கொஞ்சம் கவனமாய் இருக்கிறது நல்லது" என்று,
சனியும், வியாழனும்தான்
இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டினரோ? யாரறிவார்.
முடிவாக ஒரு வார்த்தை. நான் இவ்வளவு சொன்னபின்னும்
இவர் ஆர் இதைச் சொல்ல என்று தடியெடுக்கத் தயாராகுறிர்களா?
உங்கள்மேல் கொஞ்சமும் பிழையில்லை.
ஏனென்றால் அதுதான் ஐயா நான் இவ்வளவு நேரமும் சொன்ன,
புரட்சியும் புதுமையும் செய்ய விரும்பாத,
செய்பவனையும் விரும்பாத, “ஒறிஜினல் கிளாக்கர்ப்புத்தி".
மறுபக்க மனிதம்
நீ என்னைச் சந்தேகி, என் நீளக்கை மடிப்பிலும் காற் சட்டை பையிலும் உனது வாழ்வின் விதி எழுதப் பட்டிருக்கும் என்று நீ என்னைச் சந்தேகி
நீ என் அண்மையை விரும்பாதே ! வீதி நெரிசலில் கூட என்னுடன் நெருங்காதே! சனத்தைப் பொதுக்கிய பஸ்ஸிலும் என்னுடன் உரசாதே எனது பொதியை சுட்டிக் காட்டிப் பேதமை பேசு! என் வியர்வை நாற்றமல்ல என் பிறப்பு பற்றிய உனது சந்தேகத்திற்காக!
என் ஆவணங்கள் ஒவ்வொன்றையும் பரிசோதித்துப் பார்! படிக்கப் புரியாவிட்டால் கோபப்படு; கிழித்துப்போடு!
எட்ட நின்று என்னை நிர்வாணப் படுத்தியும் பார்! அப்போதும், அதன்பின்பும் உன் சந்தேகம் என்னை விட்டும் நீங்கியிராது!
உன் தீண்டாமைப் பிரசாரத்தை பிரசங்கமாக்கு, என்னைக் கைதுசெய்து கூண்டில் அடைக்கக் கூவு கையில் அகப்பட்ட வீரத்தால் என்னைத் தாக்கி ஒடுக்கு
அப்படியும்
என் மொழியால் என் இனத்தால்
என் பெயரால் நீ அகாலமாக நேரிட்டாலும் உன் முகவரியிலும் என் உடல் ஆராதனைகளுடன் அடக்கம் செய்யப்படலாம்.

Page 18
அந்தனிஜீவா
தீக்குள் விரலை வைத்தால்
தீக்குள் விரலை வைத்தால் - நந்தலாலா தீண்டுமின்பம் தோன்றுதடா - என்றான் மாகவிஞன் பாரதி. அவனது இந்தக் கவிதா வரிகளை நினைக்கும் பொழுதெல்லாம் எனது பத்திரிகைத்துறை அநுபவங்களையே திரும்பிப்பார்க்கத் தூண்டும்.
சஞ்சிகை நடத்தி கையைச் சுட்டுக்கொண்டவர்களில் நானும் ஒருவன். அந்த அநுபவங்களை மீண்டும் - திரும்பிப்பார்க்கிறேன்.
அப்பப்பா. அவை எத்தகைய இனிமையானவை. எனது இளமைப்பருவம் மிகவும் இனிமையானது. நான் மிகவும் சுதந்திர மாக வளர்க்கப்பட்டேன். எனது பாடசாலைக்காலத்திலே பாடநூல்களைவிட கதைப்புத்தகங்களை, சஞ்சிகைகளைத் தேடிப்படிக்கும் ஆர்வமே எனக்கிருந்தது. அந்தக்காலத்தில் தமிழகத்திலிருந்து வந்த கரும்பு, கண்ணன், கல்கண்டு, பாப்பா, அனில் என ஆர்வத்துடன் வாங்கிப்படிப்பேன். அதை நண்பர்களுக்கும் வாசிக்கக் கொடுப்பேன்.
எனக்கும் இதைப்போன்ற சஞ்சிகைகள் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அப்போதே ஏற்பட்டது.
இத்தகைய எண்ணங்கள் எனது இரண்டு நண்பர்களுக்கும் இருந்தன. அந்த இரு நண்பர்களும் எனது வீட்டின் அருகில் வாழ்ந்தனர். அந்த இருவரில் ஒருவர் மிக இளம் வயதிலேயே அச்சகம் ஒன்றில் பணியாற்றினார்.
மூவரும் ஒன்றிணைந்து கரும்பு என்ற பெயரில் சஞ்சிகை ஒன்றினை அச்சில் வெளியிடுவது என முடிவுசெய்தோம்.
அந்தக் காலகட்டத்தில் இது ஒரு துணிச்சலான முயற்சி. இது சாத்திய மானதற்குக் காரணம், அச்சக விடுமுறை நாட்களில் எங்கள் சஞ்சிகையை அச்சிட உதவினார் அச்சக உரிமையாளர்.
கரும்பு இரண்டே இதழ்கள்தான் வெளிவந்தன. அதன்பிறகு வீரகேசரி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு ஆகியவற்றின் மாணவர்பகுதியில் நிறைய எழுதினேன். ஆனால், என்றாவது ஒருநாள் சஞ்சிகை வெளியிடவேண்டும் என்ற அவா நெஞ்சில் நீறுபூத்த நெருப்பாக இருந்தது.
1962ல் நண்பர் கலைத்தாசன் என்பவருடன் இணைந்து “தேசபக்தன்' என்ற பத்திரிகையை வெளியிட்டேன். கலை, இலக்கியம், அரசியல் ஆகிய பல விடயங்களையும் அது தாங்கிவந்தது.
ஆறு இதழ்களுடன் தனது பயணத்தை இச்சஞ்சிகை முடித்துக் கொண்டது. ஆனாலும் இதன்மூலம் பலரின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது.
34
 

அறிஞர் அ.ந.க., சில்லையூர் செல்வராசன், எஸ்.பொ., முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் எனப் பல்வேறு எழுத்தாளர்களின் தொடர்பு கிடைத்தது. இதே காலகட்டத்தில் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தொழிற் சங்கத்தில் முழுநேர ஊழியனாகச் செயற்பட்ட பொழுது, அங்கு வெளியிடப் பட்ட "ஜனசக்தி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினேன். இது சில ஆண்டுகள் வெளிவந்தது. இதன்மூலம் பல அநுபவங்களைப் பெற்றேன்.
அதன்பின்னர் பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் எஸ்.டி.சிவநாய கத்தின் கீழ் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் பணியாற்றினேன்.
1978 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பின்னர், “ஜெயகாந்தனைகக் கண்டேன்’ என்ற தலைப்பில் ஞாயிறு தினகரனில் ஒரு தொடர் கட்டுரை எழுதினேன். அன்றுமுதல் இன்றுவரை தினகரன் பத்திரிகையுடனான தொடர்பு தொடர்கிறது.
மலையக இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்ட எனக்கு ஒரு காத்திரமான சஞ்சிகை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தது. "கொழுந்து என்ற பெயரில் ஓர் இலக்கிய சஞ்சிகையை 1988இல் வெளியிட்டேன். முதல் இதழிலேயே பல காத்திரமான படைப்புகள் இடம்பெற்றன. கொழுந்து இதழில் இடம்பெற்ற பல படைப்புகள் புலம் பெயர்ந்த வர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டன.
பத்திரிகை சஞ்சிகை சம்பந்தமான எனது பங்களிப்பை திரும்பிப் பார்க்கையில் எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது.
"கொழுந்து சஞ்சிகை பதின்மூன்று இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டது. மீண்டும் அது தன் பயணத்தைத் தொடர வாய்ப்புண்டு. மலையக சஞ்சிகை வரலாற்றில் கொழுந்து நிச்சயமாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இப்பொழுது ஞானத்துடன் எனது தொடர்பு தொடர்கிறது. தீக்குள் விரலை வைத்தால் ஏற்படும் இன்பம் எத்தகையது என்ற இனிமையான நினைவுகளைத் திரும்பிப்பார்க்கிற பொழுது கசப்பும், இனிப்பும் நிறைந்த சுவையான பல அநுபவங்கள் எனக்குக் கிடைத்துள்ளன.
Z= 6 9 N r ஞானம தில் மாற்றக்கூடியதாக அனுப்ெ
புதிய சந்தா விபரம் டுே
உள்நாடு அனுப்பவேண்டிய பெயர், தனிப்பிரதி et5um" 30/= முகவரி :- அரை ஆண்டுச் சந்தா ரூபா 180/= TGNANASEKARAN ஆண்டுச் சந்தா :e5Lurr 360/.. || 19/7, PERADENIYA ROAD, சந்தா காசோலை மூலமாகவோ KANDY | p6Of G3 uLu Turf eup anol Dif I 35G3a) i fT வெளிநாடு அனுப்பலாம். r(èżir ser fi மனியோடர் அனுப்புபவர்கள் ஆணடுச சநதா 25 US$
- - (தபால் செலவு உட்பட) \త్రాత్రం)37 கனடி தபால நிலையத் محر

Page 19
gig Giges:
O
i lá 6D.66.6VD.22d6S
பிரபல எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் 16.07.2002 காலமாகிவிட்டாரி
என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தோம்.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை, இசைத்துறை,
எனப் பலதுறைகளிலும் தனது ஆளுமையை வெளிக்காட்டி ஈழத்து இலக்கிய
உலகில் சாதனைபுரிந்த ஷம்ஸ், தமிழ் - சிங்கள இலக்கியப் பாலமாகவும்
திகழ்ந்தவர். அவரது இழப்பு ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
"ஞானம் சார்பாக அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓயாது எழுதிக்கொண்டிருந்த அவரது பேனா சிந்திய மை, ஞானம்|
வாசகர்களுக்கு அவர் எழுதிய “எனது எழுத்துலகத்துடன் வற்றிவிட்டது
என்பதனை அறிந்தபோது உள்ளம் சிலிர்க்கிறது. அன்னாரது பன்முகப்பட்ட பணியைக் கெளரவிக்கும்முகமாக இங்கு அவரது கட்டுரை பிரசுரமாகிறது.
ஆசிரியர்)
அன்பின் ஞானசேகரன்,
ஞானம் கிடைத்தது. “சிறுகக் கட்டிப் பெருகவாழ்” என்ற முதுமொழியை ஞானம் மெய்ப்பித்து வருவது கண்டு அளவற்ற மகிழ்ச்சி. சிற்றிதழாகத் துளிர்விட்ட ஞானம் ஒரு சுபமங்களாவாக விருட்சிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
"எனது எழுத்துலகத்துக்கு நானும் பங்காளியாகவேண்டும் என்று அறிவிப்பு அனுப்பி பல நாட்கள். எனக்குத் துறைகள் (Fields) பல. இதனால் உங்கள் வினாக்கொத்தைத் தளமாகக்கொண்டு சுருக்கமாக எழுத மிகச் சிரமப்பட்டு - இறுதியில் பல விடயங்களைத் தவிர்த்து -
நான் வாழும் சநாதன சூழல்பற்றியும், அதில் அடிக்கின்ற எதிர் நீச்சல் பற்றியும் ஞானம் வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் அத்தகைய அம்சங்களுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு சுய விபரத்தை அனுப்பியுள்ளேன். அன்புடன், எம்.எச்.எம்.ஷம்ஸ்.
சின்னவயதில் எனக்குள் எழுத்தார்வம் என்ற ஒன்று இருந்ததா என்பது பற்றி இன்று நினைத்துப் பார்த்தால். அந்தப் பதிவுகள் மிக மங்கலாய்த்தான் தெரிகின்றது. இசையிலும் நாடகத்திலும் நிறைய ஆர்வம் இருந்தது.
தற்போது கனடாவில் வசிக்கும் ஈழத்துப் பூராடனார் கலாநிதி
36
 
 

க.தா.செல்வராஜகோபால் சேர் எங்கள் திக்குவல்லைப் பாடசாலைக்கு முதல் நியமனம் பெற்றுவந்தார். அப்போது நான் 5ஆம் வகுப்பு மாணவன். அவரது வழிகாட்டல் என் கலைவாழ்வின் திறவுகோலாய் அமைந்தது. அவர் எழுதிப் பழக்கிய நாடகங்களில் பாடி ஆடி நடித்தேன்.
1950களில் எமது தலைமையாசிரியர் ஏ.எச்.எஸ்.முஹம்மது அவர்கள் ‘தென்மதி - பாடசாலைக் கையெழுத்து சஞ்சிகையை ஆரம்பித்து எமது எழுத்துக்கு ஊக்கம் தந்தார். கோபால் சேரினதும் தமிழாசிரியர் எஸ்.சின்னத்துரை சேரினதும் வழிகாட்டலில் இச்சஞ்சிகை வெளிவந்தது. நான் அதில் எழுதினேன். ஒவியங்களும் வரைந்தேன்.
1956 இல் மேலை ஏகாதிபத்தியங்களோடு எகிப்திய ஜனாதிபதி நாஸர் மோதிய கட்டம். எமக்கெல்லாம் அது பெரிய கவர்ச்சியைக் கொடுத்தது. தென்மதியில் நாஸரின் படத்தைப் போட்டு கவிதையும் எழுதினேன். இக்காலத்தில், கள்ளத்தோணி எம்.ஏ.அப்பாஸின் துரோகி, திருச்சி ரசூலின் "குல்ஹமீத் போன்ற படைப்புகள் என்னைக் கவர்ந்தன.
1957 இல் ஆசிரியரானேன். மாணவர்களுக்கு இஸ்லாமிய கீதம், மணமங்கள கீதம், நாடகம் போன்றவற்றை இயற்றிக் கொடுத்தேன். இக்காலத்தில் தொடர்ந்து வாசித்த சஞ்சிகை கல்கி. தி.மு.க. இலக்கியங்களில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. அக்காலத்தில் பத்திரிகைகளில் படைப்பொன்றை வெளிவரச்செய்வது இலகுவல்ல. அதுவும் சிங்களப் பகுதியில் வாழும் எமக்கு தமிழ் தெரியுமா என்று கேட்கும் நிலையிலேயே பத்திரிகைகள் இருந்தன.
எனது முதற்கவிதை ‘இனிமை சேர் தமிழ்’ (17.08.1959) தினகரனில் வெளிவந்தபோது அடைந்த பூரிப்பை எழுத்தில் வடிக்க முடியாது. அப்போது அட்டாளைச்சேனை பயிற்சிக் கலாசாலையில் இருந்தேன். கற்பித்தலுக்காக இயற்றிய பாலர் கவிதைகள் தினகரனிலும் வீரகேசரியிலும் வெளிவந்தன. ஏ.இக்பால், பஸில் காரியப்பர், காத்தான்குடி ஹமிது (மருதமைந்தன்) ஆகியோர் கலாசாலையில் என்னோடு இருந்த கவிஞர்கள். பண்டிதர் க.கணபதிப்பிள்ளை, திரு இம்மானுவேல் ஆகியோரிடம் தமிழ் கற்றேன். (கொழும்பு பல்கலைக் கழகத்தில் எனது தமிழாசான்கள் கலாநிதிகளான க.சதாசிவமும் பொ.பூலோக சிங்கமும் ஆவர்) வெண்பாவில் கேலிக்கவிதைகள் எழுதுவது அப்போது சுவாரஸ்யமான விஷயம். ‘சுதந்திரன் வெண்பா போட்டியிலும் பங்குபற்றினேன். எழுத்து ஒரு சீரியஸான விடயம் என்பது அப்போதெல்லாம் புரிய வில்லை. 1960களின் நடுப்பகுதியாகும்போது காலஞ்சென்ற ஏ.ஏ.லத்தீட்பின் ‘இன்ஸான் வாரப் பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவத்தின் கோரமும் சநாதன மத ஒடுக்குதலும் தலைவிரித்தாடிய எமதுர்ச் சூழ்நிலையில், அழுத்தப்பட்டவர்களுள் நானும் ஒருவன் என்பது புரிந்து கொள்ளப்பட்ட நேரத்தில், "எதிர்ப்புக்குரலுக்கு ஒரு வடிகாலாக 'இன்ஸான் அமைந்தது.
‘இன்ஸான் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட பத்திரிகை என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்குத் தெரியாது. அந்த அளவுக்கு அது முஸ்லிம் பண்பாட்டு மரபுகளைத் தழுவி வெளிவந்தது. முற்போக்கு எழுத்து எது என்ற தெளிவைத் தந்தது இன்ஸான். அதன் அரசியல் நிலைப்பாடு காரணமாக சில்லையூர் செல்வராசனைப் பின்பற்றி வல்லையூர் செல்வன்' என்ற புனைபெயருள் ஒளிந்துகொண்டேன். இன்ஸானில் சிறுகதைகளும் எழுதி னேன். அதற்கு எனது மனைவி பாஹிறா'வின் பெயரையே புனைபெயராக

Page 20
வரித்துக்கொண்டேன். லத்தீஃப் அடிக்கடி கடிதம் எழுதி எனது எழுத்தை நெறிப்படுத்தினார். அதற்கு முன்பு - 1963, 64 என்று நினைக்கிறேன். ‘புதுமைக் குரலில் எனது சிறுகதைகள் சில வெளிவந்தன.
1960 - 66வரை வீரகேசரியில் நிறைய கவிதைகள் எழுதினேன். ‘முஸ்லிம்சுடர் பக்கத்தைத் தயாரித்த எம்.டி.எம்.அளுஹர்தீன் எனக்குக் களம் தந்தார். ஞாயிறு வீரகேசரியில் கவிதை எழுதத்தூண்டியவர் அதன் ஆசிரியர் காலஞ்சென்ற பொன் ராஜகோபால் அவர்கள். அப்போது மனைவிதேவை என்ற கவிதையை விரகேசரிக்கு அனுப்பினேன். சொந்தப்பெயர் போட கூச்சமாக இருந்ததால் நீள்கரை வெய்யோன் என்ற புனைபெயரை வைத்துக் கொண்டேன் திக்குவல்லை என்பதன் தமிழ்ப் பெயர்ப்பே நீள்கரை.
பொன் ராஜகோபாலின் தூண்டுதலில் வீரகேசரியில் எனது சிறுகதைகள் பல வெளிவந்தன. 1995 இல் நான் தினகரனுக்குச் செல்லும்வரை இது தொடர்ந்தது. 1993, 94இல் அதிக சிறுகதைகள் வீரகேசரியில் வெளிவந்தன. அனைத்தும் "பாஹிறா' என்ற பெயரில்.
இந்த இடத்தில் மல்லிகை ஜீவாவின் அனுசரனை பற்றியும் குறிப்பிட வேண்டும். 1960களிலிருந்து மல்லிகை வாசிக்கலானேன். கவிதை, சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என எழுத ஜீவா வாய்ப்பு தந்தார். இதற்கு 1968இல் உருவாக்கப்பட்ட திக்குவல்லை எழுத்தாளர் சங்கமும் பகைப்புலம் தந்தது. பால்ய காலம்முதலே எனது எழுத்துலக சகாவாக இருந்து பிற்பாடு சம்பந்தியாகிவிட்ட யோனகபுர ஹம்ஸாவும் சேர்ந்து அந்த அமைப்பை உருவாக் கினோம். திக்குவல்லை கமால், காலஞ்சென்ற எஸ்.ஐ.எம்.ஹம்ஸா, செந்தீரன் ஸத்தார், எம்.எச்.எம்.அலி என ஒன்றிணைந்து பயணம் தொடர்ந்தது. அப்போது ஆரம்பித்த சஞ்சிகையே 'பூ'. இதன் இரண்டாம் இதழை கமால் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டார். அப்போது அவர் பலாலி பயிற்சிக் கல்லூரி மாணவன்.
எமது சங்கத்துக்கு ஆரம்பத்திலே ஊக்க மூட்டியவர்கள் ஜீவா, கைலாசபதி, சிவத்தம்பி, லத்தீஃப், பி.ராமநாதன், முருகபூபதி, போன்ற சிவப்பு எழுத்தாளர்களாவர். எமது முதுபெரும் முஸ்லிம் எழுத்தாளர்களது அனுசரணை கிடைக்கவில்லை. மாறாக அவர்கள் எம்மை சிவப்புக் கண்ணாடி கொண்டே பார்த்தனர். கமாலின் "கோடையும் வரம்புகளை உடைக்கும் முதற்சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிட்டேன்.
"திக்குவல்லை எழுத்தாளர்களது சிருஷ்டிகளில் தெரிந்த முற்போக்கு இழைகளை விமர்சகர்கள் இனங்கண்டு சிலாகித்தனர். ஆனால் அவர்களது இலக்கியக் கோட்பாடுகளுக்கு வழிகாட்டிகள் இருக்கவில்லை. தத்துவ விற்பன்னர்களால் மாக்சீய போதம் ஊட்டப்படவில்லை" - இது எனக்கும் பொருந்தும்.
எனது சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிட உத்தேசித்து 15 கதைகளை கலாநிதி எம்.ஏ.நுஃமானிடம் 1994இல் கொடுத்து அணிந்துரை யொன்றைப் பெற்றேன். இன்றுவரை அத்தொகுப்பு வெளிவரவில்லை. ஆனால் இதற்குப் பின்பு எழுதப்பட்ட ‘கிராமத்துக் கனவுகள்’ நாவல்தான் முதலில் வெளிவந்தது.
எனது எழுத்துகள் காரணமாக பலத்த விமர்சனங்களுக்கும் கண்டன களுக்கும் முகம் கொடுத்த சந்தர்ப்பங்கள் பல. ‘இன்ஸான் வெளிவந்த காலத்தில் அரசியல் விமர்சனங்கள் சிலவற்றால் ஊருக்குள் எதிர்ப்பலைகள்
29

எழுந்து தணிந்தன. 1974இல் நான் வெலிகமைக்கு இடம்பெயர்ந்த பின்பு சில கவிதைகளால் சலசலப்பு ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் குறிப்பிட்டுக் கூறத்தக்க பாரிய எதிர்ப்பலை என்னை ஒழித்துக்கட்டும் அளவுக்கு கொந்தளித்தமை ஆழமான விழுப்புண்ணாகும். அப்போது நான் கொழும்பில் பட்டதாரி மாணவ னாக இருந்தேன்.
அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ் பற்றிய நூலொன்றை எச்.எம்.பி.முஹிதீன் வெளியிட்டார். அந்நூல் பற்றி நான் உட்பட ஏ.இக்பால், காலஞ்சென்ற, எம்.எஸ்.எம், இக்பால் கலாநிதி கா.சிவத்தம்பி ஆகியோர் எழுதிய விமர்சனத் தொகுப்பே நூல் விமர்சனம். இதன் முன்னுரை சநாதன முஸ்லிம்கள் மத்தி யிலும் இந்திய வம்சாவளி முஸ்லிம் வர்த்தகர்கள் மத்தியிலும் எதிர்ப்பைக் கிளப்பிவிட்டது. போலி மதத் தலைர்களினதும் ஆஷாடபூதிகளினதும் முத்திரை களை அந்நூலில் கிழித்துள்ளோம். இந்தியாவிலிருந்து இஸ்லாத்தின் பாது காவலர்களாக அடிக்கடி வருகைதரும் போலிகளின் மாய்மாலங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளோம். கண்டன மாநாடுகள், எதிர்ப்புப் பிரசுரங்கள் அடிதடி, நீதிமன்ற வழக்கு என இது நீண்டு சென்று ஓய்ந்தது.
இந்திய (முஸ்லிம்) பணமுதலைகள் சிலர் எமக்கு எதிராக 'இஸ்லாமும் தமிழும்' என்ற எதிர்ப்பு நூலை எழுதுவித்ததும் குறிப்பிடத்தக்க விடயம். “ஏ.இக்பாலும் ஷம்ஸ"ம் தொலைந்தார்கள். இனி இவர்கள் எழுத்துலகில் தலைதூக்க முடியாது” என்று சநாதனிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். நானும் இக்பாலும் முன்னைவிட வீறு கொண்டு எழுத இந்த எதிர்ப்புகள் எமக்கு பசளையாயிற்று.
இதன்பின்பு ஆரம்பிக்கப்பட்டதே "நேர்வழி இஸ்லாமியச் சஞ்சிகை. பிற்போக்கு மதவாதங்களுக்கு எதிராக நிறைய கட்டுரைகள் எழுதினேன். சநாதன மதவாதிகள் புறத்திலிருந்து எனக்கெதிராகச் சிறு கண்டனப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.
‘கிராமத்துக் கனவுகள்’ நாவலுக்கும் சநாதன தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. கண்டனநூலை எழுதியவர் ஒரு மெளலானா. நான் மூதாதையினரை இழிவுபடுத்தி விட்டேனாம். இஸ்லாத்தின் பெருமையைச் சீர்குலைத்து விட்டே னாம். சமூக விஞ்ஞான ரீதியில் அமைந்த யதார்த்த பூர்வமான படைப்புகளுக்கு எதிராக வழக்கமாக முன்வைக்கப்படும் வாதம் இது. நமது மூதாதையினர் அப்பழுக்கற்ற தூயவர்கள் என்றும், அந்தக்கால வாழ்க்கை சர்வமும் சுபமாகவே இருந்ததென்றும் கருதுகின்ற கற்பனாவாதிகளின் இத்தகைய கண்டனங்களை ஆரோக்கியமான விமர்சனங்களாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
கிராமத்துக் கனவுகளுக்கு அணிந்துரை தந்த செங்கை ஆழியான்க.குணராசா திக்குவல்லைக்கு ஒரு முறையேனும் வந்தவரல்ல. எனது எழுத்துகளினுடாக மட்டும் என்னை அறிந்து வைத்திருந்தாரே தவிர, எனது வாழ்வின் பூர்வாங்கம் அவருக்குத் தெரியாது. இந்நிலையில் ஓரிடத்தில் “மத நம்பிக்கை கொண்ட மார்க்சியவாதி ஒருவரின் இந்த நாவல் காலத்தின் தேவை” என்று குறிப்பிட்டிருந்தார். சநாதனிகள் சார்பாக குரலெழுப்ப வந்த மெளலானாமாருக்கு இது ஒரு பிடியாக அமைந்துவிட்டது.
எனக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் எந்த வார்த்தையினையும் அகற்றிவிட செங்கை ஆழியான் அனுமதி தந்திருந்தும் கூட நான் ஓர் எழுத்தை யும் முன்னுரையிலிருந்து நீக்கிவிடவில்லை.

Page 21
இஸ்லாத்தின் பேரில் மூட நம்பிக்கையை, சுரண்டலை, குருத்துவத்தை, மத ஒடுக்குதலை, பெண் அடிமைத்தனத்தை, சமூக ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்த முனையும்போதெல்லாம் நான் கண்டித்து எழுதியுள்ளேனே தவிர, எந்த இடத்திலும் மார்க்சியத்தை ஏற்றுப் போற்றியதில்லை. நான் எந்த மார்க்சியக் கட்சியிலும் இருந்தவனுமல்ல.
இலங்கையில் இளங்கீரன் சுபைர், பித்தன் ஷா, ஏ.ஏ.லத்தீ'ப், எச்.எம்.பி.முஹிதீன் ஆகியோர் செயற்கையான “இஸ்லாமிய வரையறைகளை மீறி யதார்த்தக் கதைகள் படைத்தனர். இக்கதைகளை முஸ்லிம் விமர்சகர்கள் துடக்கு மனப்பான்மையோடே நோக்கினர்.
இந்தப் போலித்தனத்தை ஒழிக்கவும் யதார்த்தப் படைப்பாளிகளின் தடங்கலை நீக்கவும் என்னுள் ஓர் உத்வேகம் பிறந்தது. 1974இல் நான் ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதி காயல் பட்டனத்தில் நடந்த அகில உலக இஸ்லா மியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். கசப்பாக இருப்பினும் வித்தியாசமான அணுகுமுறை என்பதால் அக்கட்டுரை மாநாட்டு மலரில் இடம்பெற்றது.
இன்று - 30 வருடங்களின் பின்பு முற்போக்கு எழுத்தாளர்களது போராட்டம் வெற்றியளித்துள்ளது. வெறும் கற்பனாவாதம் இஸ்லாமிய இலக்கியம் அல்ல என்றும் யதார்த்தபூர்வமான கதைகள் - அவற்றில் ஆபாசம் இடம் பெற்றாலும்கூட - அவை இஸ்லாமிய கதைக்குள் அடங்குவதாகவும் சமயத் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வை.அஹமதின் ‘முக்காடு சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ள ஏ.பி.எம்.இத்ரீஸ் (நளிமி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடத்தில் மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும். சிங்கள, பெளத்த அடிப்படைவாதிகள் சிலர் முஸ்லிம்களுக்கு - இஸ்லாத்துக்கு எதிரான துர்ப்பிரசாரங்கள் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய சநாதனிகள் மெளனம் சாதிக்க நான் அவ்வப்போது சிங் களத்தில் வாயாப்பு கொடுத்துள்ளேன்.
1982 - 1987 வரை "அஷ்ஷ"ரா' (கருத்துமேடை) என்ற பத்திரிகையை நடத்தினேன். இது 1987 - 93ல் "செய்திமடல்’ என்ற ரோனியோ சஞ்சிகையாக மாறியது. சநாதனிகளுக்கு சாட்டையடி கொடுக்க நான் இவற்றைக் காய் களாகப் பயன்படுத்தினேன். இவைதவிர சமூக விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்டு “முஷாவரா (கலந்துரையாடல்) என்ற பிரசுரத்தையும் இடையிடையே வெளியிட்டேன். இதற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர்.எம்.முஸ்தகிம்.
எனது ஆய்வுத்துறை முயற்சிகளுக்காக 1992இல் முஸ்லிம் கலாசார அமைச்சு ‘அறிவுத்தாரகை என்ற பட்டத்தை வழங்கியது. 'மக்கள் சமாதான இலக்கிய அமைப்பு 1996ல் ஒரு சமாதான விருதை வழங்கியது. வானொலி தமிழ்ச்சேவையில் நடத்திய 'கலைச்சாளரம் நிகழ்ச்சிக்காக 1996இல் ‘உண்டா' விருது கிடைத்தது. தமிழ் - சிங்களம் இரு மொழிகளிலும் இன நல்லிணக் கத்துக்கு இலக்கியப் பணி செய்தமைக்காக 1999இல் நூலக அபிவிருத்தி சபையும் கொழும்பு பல்கலைக்கழகச் சட்டபீடமும் இரண்டு விருதுகளை வழங்கின. எனது ‘கிராமத்துக்கனவுகள் நாவலுக்கு இதே ஆண்டு சாகித்திய மண்டல விருது கிடைத்தது.
என்னிடமிருந்த சிறுவர் பாடல்களுக்கு நானே இசையமைத்துப் பார்த்த

பரிசோதனை முயற்சி இறுதியில் ஒரு (கசெட்) ஒலிப்பேளையாக வடிவமையும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் அது 2000ஆம் ஆண்டில் நிஜமாயிற்று. 'வண்ணத்துப் பூச்சி என்ற பெயரில் வெளிவந்தது. 21 பாடல்கள் இதில் அடக்கம்.
சிங்கள - தமிழ்மொழிபெயர்ப்புத் துறை பற்றியும் சுருக்கமாகக் கூற எண்ணம். 1970களிலிருந்து சிறுகதை கவிதைகள் பலவற்றை தமிழில் பெயர்த் துள்ளேன். யாழ்ப்பாணத்தின் மன்றாட்டம்' நூலுருவில் வெளிவந்தது. தெனகம சிரிவர்த்தனவின் நண்பர்கள் நாவல் எம்.டி.குணசேன நிறுவகத்தால் வெளியிடப் படவுள்ளது.
தமிழ் எழுத்தாளர்களை, இலக்கியங்களை சிங்களத்தில் அறிமுகப் படுத்தும் பாலம' பகுதியை தெனகம சிரிவர்த்தனவுடன் "சிலுமின’ பத்திரிகையில் சுமார் ஐந்து வருடங்கள் நடத்தினோம். கடல்கடந்த இலக்கிய உறவு அதிகம் இல்லை. கள்ளத்தோணி எம்.ஏ.அப்பாஸ் 1980களில் இலங்கை வந்து சென்ற பின்பு கடிதத்தொடர்பு இருந்தது. 1975இல் காயல்பட்டனம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு மலருக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தோப்பில் மீரான் பற்றி எதிர்வு கூறி சிலாகித்தபோது அக்கட்டுரையால் தாம் அடைந்த பூரிப்புப் பற்றி எழுதினார்.
எனக்குப் புகழையும் பாராட்டையும் ஈட்டித்தந்த படைப்பு 1994 முதல் ஒலி/ஒளி பரப்பான "வெண்புறாவே" சமாதானப் பாடல். எனக்கு மனநிறைவைத் தந்த படைப்பு கிராமத்துக் கனவுகள் நாவல்.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்வைக்கப்படுகின்ற யதார்த்தத்தை மறந்த கற்பனாவாதப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்ட சநாதனவாதங்களும், தீவிரவாதங்களும் மக்களைப் படுபாதாளத்தில் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. இவற்றுக்கெதிராப் போராடுவது தலையாய கடமை.
எனது சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்பவற்றை நூலுருவாக்க வேண்டிய பொறுப்பும் உண்டு.
இாகUம் + மறதி །།༽
அதெப்படிக் காவலர்களே!
நீங்கள் மறந்துவிட்டீர்கள் பேரணியைக் கலைக்கவென
எம்மீது துப்பாக்கி காட்டி உறையப் பண்ணியபின் கண்ணிர்ப்புகைக் குண்டுகளை எம் காதலியர்க்கு எறிகின்ற போதில் மட்டும் நிர்வாணத்தை உடுத்திவிடுவீர்களே உங்களுக்கு ஞாகபம் வருகிறது கொடிய கரங்களால், - எங்களிடம் கண்கள் இருப்பது? அவ்வேளையில்.
குளறல்கள் முடிவிலிகளாக 制 தெருத்துசி துடைக்கும் கைங்கள்யம் புரிந்து gரீவீரசாந்தள் தம்பியர்களை இழுத்துச் செல்வீர்கள், காலில் விழுந்து கெஞ்சும் தாய்மையை வலிய சப்பாத்துக்கள் வதைக்கும் வேளையிலும். ノ
\உங்களுக்கு மறந்துபோய் விடுகிறது.
4)

Page 22
"ஞானம் தொடர்ந்தும் வெளிவருதல் அறிந்தபோது, உண்மையில் பேருவகைதான் என் நெஞ்சில், தரமாக, ஆரவாரக் கூச்சல் இல்லாமல் நிறைவாய் செய்கிறீர்கள்! பக்கச்சார்பு, கோஷ்டி கோசம், அரசியல் பிரசாரம் இல்லாத நடுநிலை பாராட்டத்தக்கது.
தங்கள் முயற்சி மென்மேலும் சிறந்தோங்கி இலங்கைமண்ணின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரமூட்டுவதாக!
மானுடப் பண்போடு மனிதன் மெருகுபெறுதலே நாகரிக வளர்ச்சி ஆகவேண்டும். - யோகா பாலச்சந்திரன் - கனடா.
நீங்கள் அனுப்பிவைத்த ஞானம் ஆண்டுமலர் கிட்ட மகிழ்ந்தேன். பொலிவிலும், உள்ளடக்கத்திலும் சிறப்புடன் மிளிர்வதைக் காண மகிழ்ந்தேன். பயன்கருதா உங்களது நிஷ்காமியப் பணிக்குத் தமிழகம் மிகவும் கடமைப் பட்டுள்ளது.
எனது கெழுந்தை அன்பர் மறைந்த வி.ஆர்.ராஜகோபாலன் (சாலிவாகனன்) தனது பள்ளிப்படிப்பையும் இடைநிறுத்தி, தனது இல்லத்தையும் திருச்சி சிங்காரத்தோப்பின் தெருவழி இருந்த, தந்தைவழி ஒரே குடியிருப்பையும் விற்று, இலட்சிய வீரராக சஞ்சிகை நடத்தி, தஞ்சையிலுள்ள நஞ்சை புஞ்சைகளை இழந்து வாழ்ந்ததையும் நான் கண்டு துயருற்றிருக்கிறேன். எனினும் அவரது நாட்டுப்பற்று, இலக்கியம், அரசியல் துறைகளில் அயராது கடைப்பிடித்த பண்பும் எம் நெஞ்சில் பதிந்துள்ளன. உடன்கால ஆசிரியர்களான நண்பர்கள் அ.வெ.இரா கிருஷ்ணசாமி ரெட்டியார் (கிராம ஊழியன்), வல்லிக்கண்ணன், சிவாஜி நடத்திய திரிலோக சீதாராமன், திரு வி.க.வின் நவசக்தி நின்றதும் அவரது அனுமதி பெற்று நடத்திய நண்பர் "சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோரது நினைவலைகளும் தோன்றுகின்றன.
- கே.கணேஷ், தலாத்துஒயா,
இரண்டு வருடங்களுக்கு முன் உதயமான (ஜூன் 2000) ஞானம்' இணையப்பதிப்பு, புதிய வடிவமைப்பு எனக் கிளைவிட்டுப் பரந்தது ஒரு பெரிய பாய்ச்சல் என்றே கூறவேண்டும். தலையங்கக் கட்டுரையில், 60,70 களில் வீச்சாக வெளிவந்த சில சஞ்சிகைகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். புலோலியூர் க.சதாசிவம், அந்தனி ஜீவா ஆகியோர் துணையாசிரியர்களாக நியமிக்கப் பட்டிருப்பது நல்ல ஏற்பாடு. ஞானசேகரனின் இலக்கிய உலகம் எத்தனை விசாலமானது, பாராட்டுக்கள். (ஜூன் 2000 இல் ஆரம்பமான ஞானம் ஜூன் 2002இல் இரண்டு வருடங்களைத்தானே பூர்த்தி செய்திருக்க முடியும். ஆனால் அட்டையில் 3வது ஆண்டு மலர் என்று இடம்பெற்றிருக்கிறதே!) மலர் சிறப்பாக அமைந்துள்ளது. அதற்காக இன்னொரு பாராட்டு. ஞானத்தின் பணி தொடரட்டும். இரா.நாகலிங்கம் - (அன்புமணி), மட்டக்களப்பு.
42
 

ஞானம் மூன்றாவது ஆண்டுமலர் கிடைத்து முழுதும் வாசித்தேன். (பக்கம் 58ல்) “எமது நாட்டின் உயர்கல்விப் பீடங்களில் ஒன்றான சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டப்படிப்புக்கு எனது சிறுகதைத் தொகுதி அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் பாடநூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று எழுதப்பட்டுள்ளமை கண்டேன்.
எனது M.A. பட்டத்திற்கான பாராட்டு தெல்லிப்பழையில் மகாஜனாவில் நடந்தபோது, எனது பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணிய ஐயர் சொன்ன கருத்தொன்று, நாகேஸ்வரன் இந்துகலாசாரம் படித்திருக்கவேண்டியவர் என்பது. அது பிறப்பியல் சித்தாந்தம். அதனுடாகத் தமிழைப் படிக்கவும் பார்க்கவும் வளர்க்கவும் தமிழ் செய்யவேண்டியதாயிற்று. முற்றிலும் மாறுபட்ட மார்க்சிய - சோஷலிஸ் விமர்சகர்களான பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கலாநிதி நுட்மான், சித்திரலேகா, அ.சண்முகதாஸ் ஆகியோரிடம் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ஈழத்திலே தேசிய ஐக்கியத்தை வளர்க்கும் பேரூர் நான் பிறந்த நயினை மண். சைவசித்தாந்தக் கோட்பாடே தலைமை பெற்றியங்கும் மண் நயினாதீவு. வெறும் எழுத்தும், வரட்டுச் சித்தாந்தக் கொள்கையும் எம்மில் எடுபடாது. காரணம் யாரையும் வென்று, பேய்க்காட்டி, ஏமாற்றி, அடாத்துப்பண்ணி அடக்கியொடுக்கி, ஆணவத்தின் போக்குடன் வாழவோ, கருமமாற்றவோ வேண்டிய தேவையை எமக்குத் தெய்வம் வழங்கவில்லை. அது பெருஞ்சிறப்பு. பிறரை வயிற்றிலடித்து வாழும் வாழ்வு வாழ்வாகாது. இலக்கியத்துறையும், கல்வித்துறையும் இவற்றின் பிடியிலேயே இன்றுஞ் சுழல்கின்றன.
- கனகசபாபதி நாகேஸ்வரன் (முதுநிலை விரிவுரையாளர்,
மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம்)
இன்று வெளிவரும் ஒரேயொரு தரமான இலக்கிய சஞ்சிகையாக ஞானத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அந்த அளவில் மகிழ்ச்சியே. - திக்கவயல் சி.தர்மகுலசிங்கம்.
ஞானம் மூன்றாவது ஆண்டு மலர் கிடைத்தது. நன்றி. உங்கள் பத்திரிகை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்கவில்லை. எனது எழுத்துலகம் மிகவும் செய்திகள் தருவதாக இருக்கின்றது. உமது ஆக்கங்கள், குறிப்பாக குருதிமலை, மகிழ்ச்சியுடன் படித்தவன் நான். சிறுகதைகளும் சிறப்பாக இருக் கும். ஆனால் சில தொடர்புக்குறிப்புகள் என்னை மகிழ்வித்தன. முன்னம் தெரியாதன. வித்துவ சிரோமணி கணேசையர் எனது சிறிய தகப்பனார் (பேராசிரியர் வி.செல்வநாயகம்) அவரின் மிகவும் நெருங்கிய நண்பர். ரீலழரீ சுவாமிநாத தம்பிரான் எனது அன்புக்கும் பக்திக்கும் உரியவர். எனது வீட்டின் முன் நல்லூரில் இருந்தவர். எனது கொழும்பு கலியாணத்திற்கு யாழிலிருந்து கொழும்பு வந்து வாழ்த்துப்பா எழுதி, பிரேம்போட்டு, பாடியவர். (அப்போ மணிபாகவதர்). நான் அவரைப் பற்றி சிங்கப்பூர் பத்திரிகையில் எழுதினேன். அவருடன் பல கதாப்பிரசங்கங்களில் கலந்து கொண்டவன். அவர் ஒரு LD&sroot.......
நந்தி (பேராசிரியர் - மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்).

Page 23
மெ
வே
ண்
Lb
எங்குங் கண்டதுனன்டோ
ஈனரின் மதிகெட்ட இ பொங்கித் தமிழரினி எழ
புதுமை விளைந்திடா
தங்கம் என்றெண்ணி ஆ
தணலைத் தீண்டுவ இங்கே நடப்பதுண்டு கை இன்னலை இன்பமெ6
சங்கம் வைத்தாய்ந்த தட சாக்கடைக்குள் தள் மங்கும் பிறமொழிகள் த வழமென்று சொல்லி
சாதிமுடத் தனங்க ளேற் தலைமீது வைத்தவர் பீதிகூடத் துரத்தி விட்டா பிணத்தையுந் தின்பே
குனிந்துகை கூப்பித் தாே குடிகளுக்குத் தலை: துணிந்தவர் எண்றெண்ணி துர்க்குனத்துக் கயை
கோபுரங்கள் செய்குவோ
கூடங்கள் கட்டுவோ தீபுரந்த பசிகொண்ட ஏன திரிந்திடிலோ முகந்த கெட்டினிச் செத்தோ மெ கீழ்மையால் உடல்ல பட்டினி கொள்ளக் கண்( "பட்டினிற் சேலைகள்
குட்டிடக் குட்டிடக் குனில் கொட்டிட வாளா தி துட்டரைக் கண்டகம் அ
சுற்றத்தின் குறுமைக
விழிப்பினி நாமெய்தல் ே விலங்கினை அறுத்ெ பழிப்பிணி போக்கியே ய பழம்புகழ் நாட்டோே

இவ்விந்தை? - இந்த இழிசிந்தை! லன்றி - ஒரு து புவிமன்றில்!!
ரும் - எரி துண்டோ? ன்தர்! - இவர் ன் றிருப்பார்!
பிழை - எட்டிச் விவிட நினைப்பார்! ம்மைத் - தமக்கு பர வனைப்பார்!
றுவார்! - பூவிற் றைப் போற்றுவார்! லோ - கெட்ட மென்று சாற்றுவார்!
மே - தமிட் வரென்று செப்புவார்! ரிவிட்டால் - அவர் மைகளைத் துப்புவார்!
மென்பார் - மாட மென்பார்! ழ - முன்னே நிருப்பி உண்பார்!
ன்று - மிடிமைக் பாடி மாந்தர் நிம் - உடுத்தப் ! (SELLurrfr!
uமென்பார்! - தேன் ருப்பமென்பார்! சூசிடுவார்! - இந்தச் ஸ் என்சொல்வேன்!!!
வண்டும். கீழ்மை தறிய வேண்டும்! ாண்டும் - தமிழன் மா மீண்டும்?