கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.08

Page 1
· · · · · · · ·*: : :曬》 - :::::|×| ... , , , , :|×± * ¿.
¿sae.::::::
·|- ... ...-
|- - |-- |- , ، ، ، ، -----
¿, !
-
· · · · · · · ·:·o·:·—
· · · · ·----*** --------|-
· · · · · · · · ·,≤)
-
· · · · · · · · · ·,≤) -¿- : ( ) |-,,,,,,,,,,,,,,: - :|-¿. : : : : : : , ,|×...
- - -| , ، ، ، ، ، ، ، ، ، ، ، ، --------------------------: : : -: : : : |-|------------------------------------
 
 
 
 

----------------- ( ) & & &シ ------|×----
· · · · ·----|- , !·|× | · · · ·, ,! |-----|×|- , , ········· ---- ----|- :)\ ,
· · · · ·|× ----|×|------ \しッ----3.3% -------------...F ------------------- :::::::, ,)!,|-*量
· · · · ·』, !|-.ae院事%;:;* ** , , , , , , , , ))!±§§§!¿? - ( ) :----! ------------------清爽----慈鬣:|-§§*- |-----.----------- , ,, ,|-¿:::::::::::繆|-纜密 , ( ) ,シシ! , , , , , , , ,溶%* :! ±鬆赣) - 富)シ&****------* **:----- | , ، ، : :,|- |-·-----』 『지科學高電되z』km-- ---- : : : : : : : : : : : : %|- |- -*玖 , :- |-----*********** --------------~シ :¿|-: :) .· · · · · · · · ·, ,----------------·------------|-*% (, , ,::----¿¿.* - - -------|×|×: : : : : : , , , , , , , !--------------------- -------------------------------------------------- !|- , ! !, , , ,
· · · -|× ≤ ≥ ≠ ≠ ≠ , ! : : : : : : : ····················. , ,· · · - :|- )|-¿----: |-|-|×

Page 2
LIш66) cfОНЦ!
- கவிஞர் ஏ.இக்பால் -
பொழியும் மழையில்
துளியேது புகழும் நாக்கில் அழகேது அழிவில் ஆக்கம் பிறக்காது அளந்து போடு அறிவோடு
காணும் அளவே கண்கொள்ளும் தேடும் பொருளே திறைகொள்ளும் நாடும் அளவே நமைபண்டும் ஆடும் ஆட்டம் அறிவாகா!
2 உன்னைத் திருத்து உலகேது கண்ணை விழித்துக் கவிபாடு பண்ணும் செயற்கு பEபதுண்டு இன்னும் இடர்கள் நமக்கேனோ!
உண்ணா நோனர்பு உடலுக்காம் 25).J. F _ _JEŠIMTŲ LĖJO நிறைவாகா திர்ைனாத் தேடல் தெளிவாகா இன்னும் நமக்கு இடர்தானா!
வா நீ உலகில் வாழ்வோமே நான் நீ பாடும் சுவைவேறு ஏன் நீ என்னை வெறுக்கின்றாகப் நான் நீ பேதம் எதற்காமோ!
வேதம் பார்த்தால் உலகின்று சேதம் ஏனோ நமைபண்டு ஒதும் இவர்கள் பிழையாமோ ஒதா திருத்தல் ஒழுங்காமோ!
யாரை பார்தான் பிழைகாண்பார் யாரும் பிழைக்கும் வழிகாண்பார் வேரும் விழுதும் ČEgip T 47,7 சேரும் பயன்தான் சிறப்பாகும்!
 
 

ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர் நா. ஆனந்தன்
கணனி அமைப்பு கெ.சர்வேஸ்வரன் தொடர்புகளுக்கு
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி, Gigi T.G.I. -08-478570 (Office)
08-234755 (Res) Fax - 08-23.4755 E-Mail
NT
gn an in IIIa ஐவர்ாeyahoo.com)
உள்ளே.
சிறுகதை தொழில் ப. O மா.பாலசிங்கம்
ஓர் ஆசிரியர் கெளரவிக்கப்படுகிறார். 27
செ. தமிழ்ச்செல்வன்
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் .11 தரை. மனோகரன் ெேவருடங்களுக்கு முந்திய ஒரு சிற்றேடு கிராமஊழியன் .14 தெளிவத்தை ஜோசப்
எனது எழுத்துலகம் . ... I தெணியான் தஞ்சைக் கடிதம் ப. B வ.மகேளப்வரன்
ஞானம் மூன்றாவது ஆண்டுமலர் சில எண்ணக்கருத்துக்கள் .32 செல்வி திருச்சந்திரன்
கவிதைகள் பயனே சிறப்பு. கவிஞர் ஏ.இக்பால் பூமாலைக் கனவு. 2g, &!!!!!!!!!!!!!!!!!!!!its hills]] இருளுக்கு ஒளியுண்டு. 43
வெதமுல்லையூர் கனேஷமூர்த்தி தேசத்தக்குள் ஒரு தெருச்சண்டை . 44 கேசவன்
திரும்பிப் பார்க்கிறேன்.25 வாசகர் பேசுகிறார் . 35 நெற் றிக் கண் HH 3)
புதிய நூலகம். 42

Page 3
tail IailIIM கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
இலக்கியப் பரிவர்த்தனை மூலம் புரிந்துணர்வு
இன்று நமது நாட்டில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு எப்போதும் இல்லாத அளவுக்கு உணரப்படுகிறது. யுத்தபூமியில் அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்த நாம் இனப் புரிந்துணர்வுடன் செயற்படும் காலகட்டமிது. தமிழிலும் சிங்களத்திலும் மலர்ந்துள்ள சமகால ஆக்க இலக்கியப் படைப்பு களில் - தரமான பலவற்றில் பகைப்புலமாக போரின் தாக்கம், அது ஏற்படுத்திய அனர்த்தம் ஆகியவை உருவாக்கிய நெஞ்சை அள்ளும் நிகழ்வுகள் கருப்பொருளாய் அமைந்துள்ளன. இவற்றை நாம் பரஸ்பரம் மொழிப்பரிவர்த்னை செய்ய வேண்டும். புனைகதை இலக்கியத்திலுள்ள பாத்திரங்களுடன் பரிச்சயமாவதன் மூலம் மனித நடத்தையை நுனித்து நோக்கவும், ஆழமாகப் புரிந்து கொள்ளவும் வாசகர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பாத்திரங்களின் குணசித்திரங்களையும் சூழலையும் அறிந்து கொள்வதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் இயக்கப்பாட்டை உணர்ந்துகொள்கிறோம். பாத்திரங்களுக்கு ஏற்படும் இன்ப துன்ப அநுபவங்கள் எம்மையும் பாதிக்கின்றன. சிந்தனையைத் தூண்டி செய லூக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
அரிச்சந்திர புராணம்தான் காந்தியை மகாத்மா ஆக்கியது. எமது போர்க்கால இலக்கியம் இளைஞ - இளைஞரிகளின் தியாக உணர்வுடன் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்ட வரலாற்றையும் எதிர்கொண்ட அனர்த்தங்களையும் கூறுகின்றன. சோதர இன இலக்கியம் வயிற்றுப் பிழைப்புக்காக சிங்களக் குக்கிராமங்களிலிருந்து இராணுவத்தில் சேர்ந்து உயிரை இழந்த, ஊனமான சோகக் கதைகளைப் பேசுகின்றன. பரஸ்பரம் இரு இன மக்களும் இவற்றைப் படித்தால் புரிந்துணர்வு இயல்பாகவே ஏற்பட இடமுண்டு. காலஞ் சென்ற இலக்கியவாதி - நாடறிந்த எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் இப்பணியைச் செவ்வனே செய்த முன்னுதாரண புருஷனாக விளங்குகிறார்.
ஒருவழிப்பாதையாக அமையாது இருமொழிவாரியான, இனங்களுக் கிடையே ஏற்படும் ஆக்க இலக்கியப் பரிவர்த்தனை, நம்நாட்டில் புரிந்துணர்வு உருவாக வழிவகுக்கும். இரு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள், இத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள் இப் பணியை முனினெடுத்துச் செல்லவேண்டுமென வேண்டு கிறோம். - ஆசிரியர்
4.
 
 

சிதாழில்
மா. பாலசிங்கம்
"வட் இஸ் யுவர் பாதர்." இரவு பூராவும் மகள் அருண்டு - புரண்டு கொண்டு பிசத் தியது குணேசுவின் காதுகளுக்குள் மணி இலையான் கிணுகினுப்பது போல் அலை மோதிக் கொண்டிருந் 55.
“என்ன உதயா, உனக்கு நித் திரையிலும் படிப்பின் ரை யோசி னையா?” விடிந்ததும் முதல் கேள்வி யாக மகளிடம் ஆத்திரத்தோடு விசாரித்தாள். வழக்கத்திற்கும் மாறாக எரிந்தும் விழுந்தாள் குணேசு.
"ராத்திரி நான் நல்ல நித்திரை தானே." படித்துக் கொண்டிருந்த கொப்பியை மடித்து, மூடிக்கொண்டு உதயா எதையும் அறியாதவளாகத் தாயைப் பார்த்தாள்.
"அருளுற போதெல்லாம் நீ ஏதோ இங்கிலீசு கதைச்ச. கேட்டுக் கேட்டு எனக்குப் பாடமாப் போச்சு.” "இதென்ன கதை அம்மா . இங்கிலிசில என்ன சொன்னனான்." தட்டுத் தடுமாறி தாய் சொல் லும் இங்கிலீஸ். வார்த்தைகளைக் கேட்டு உதயா கெக்கலி கொட்டிச் சிரிப்பதுண்டு. அப்படியானதொரு நாட கத்தைத் தாயைக் கொண்டு ஆட வைத்து வேடிக்கைபார்க்க அவள் எத்தனித்தாள்.
"வட்." தலைமுடிக் குள் விரலை ஒட்டி குணேசு சொறிந்தாள். ஏறிட்டுப்பார்த்தபடி உதயா இருந்தாள்.
"என்னவோ. பாதர்.” மன சின் பிடிக்குள் இருந்து தப்பித்துவிட்ட தென்ற ஏமாற்றம்! தலைப்பையும் அடியையும் வைத்துக் கொண்டு தாய்
குழம்புவது உதயாவுக்குப் புரிந்து விட்டது.
* சேர் படிப்பிச்சதை பிசத்தி இருக்கிறனாக்கும். ரியூசன் வகுப்பில் நடந்தவைகள் உதயாவின் மனசில் விரிந்தன. முகமும் கவிந்தது.
"நீங்களெல்லாம் படிச்சிருந்தா எங்களுக்கென்னத்துக்கு இந்தப்பாடு” மடித்த கொப்பியைத் திரும்பவும் விரித்து, தாயின் விசாரணைக்குத் தனது வாய் முறைப்பாட்டைக் கொடுக் காமல் குறையில் நிறுத்தினாள்.
"ஒ. இவ அறப்படிச்சு டொக்ட ராகப் போறா.” மகளின் பேச்சில் திருப்தி காணாதவளாக குணேசு புறு புறுத்தாள்.
ஆசறுதியாக நித் திரை கொண்டதாக மகள் சொன்னது குணேசுவின் மனதில் பெருத்த பர பரப்பை ஏற்படுத்திவிட்டது.
"அவள் விசரி. இப்புடித்தான் கிழட்டுக் கதை கதைப்பாள்."
"ஏதாகிலும் வருத்தம்போல.” என நினைத்து இரவு மகளின் நெஞ்சுச் சட்டைக்குள் கையை நுழைத்து அடிக் கொருதரம் தொட்டுப் பார்த்தாள். குளத்தில் தெறித்துத் துள்ளும் மீன் குஞ்சுபோல உதயா கூச்சத்தில் துடித் துப் பதைத்து விழித்துத் திரும்பிப் படுத் துக் கொண்டாள்.
"இந்த முளையானுக்கு இப்ப இப்புடியெண்டா, குமரானா எப்புடி இருக்கும்." மகளின் பெண்சார் பண் புகளில் குணேசுவின் மனம் தோய்ந் 莎gj。
சன் னியிலதான் உதயா பிசத்துகிறாளென்பது குணேசுவின் கெட்டித்த முடிவு இருந்தும் உதயா

Page 4
வின் தேகம் குளிர்ந்து கொண்டிருந் தது அவளது முடிவைச் சற்றுச் சலனப்படுத்தியது.
"அப்ப." இப்படியான குறுக்கு விசாரணைகளில் அன்றைய இரவுப் பொழுது கரைந்து கொண்டிருந்தது. சன்னதியை அருட்டி விஷயத்தைச் சொன்ன பொழுது, "வைரவ சுவாமிக் குக் கன நாளா எண்ணை வாங்கிக் குடுக்கேல்ல. மறந்திடாம விடிய வாங்கிக் குடுத்துப் போடு” எனப் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்துவிட்டுத் திரும்பிப் படுத்துக் குறட்டை எழுப்பி னான். இதற்குப் பின்னரும் உதயா சொன்னதையே சொல்லிப் பிசத்தி னாள். சன்னதியை எழுப்பிப் பிரயோ
சனம் இல்லையென்ற ஆதங்கத்தோடு
படுத்த படுக்கையில் கிடந்தபடி பலபல பரிகாரங்களைச் சிந்தனைக்கெடுத் தாள். சாமக் கோழியின் கூவல் கேட்டு வழக்கம் போல எழுந்து சன்னதி குளத்திற்குச் சென்றுவிட்டான். இரவுக் குழப்பத்தால் குணேசுவுக்குக் கையும் ஒடேல்ல காலும் ஒடேல்ல மகளின் நினைப்புத்தான்!
"ரியூசனுக்குப் போறதில் லையா.” கோடிப் பக்கமிருந்து திரும் பிய குணேசு படித்துக் கொண்டிருந்த உதயாவைக் குழப்பினாள். "ரியூசனுக் குப் போகமாட்டன்.” மகள் அழுத்த மாகச் சொன்னது தாயின் கபாலத்தில் ஆணி அடித்தது போலிருந்தது.
ஏற்கனவே மனதில் குவிந்திருந்த ஐய
வினாக்கள் ‘கிலு முலு"வெனக் கிளர்ந்தன.
“என்னத்துக்கு." ஆத்திரத்தில் குணேசுவின் பற்கள் உராய்ந்தன. “GBL um ab om L6ő” “ஏனெண்டு சொல்லன்.” கடுப் பைக் குறைத்து கெஞ்சுவது போல் குணேசு கேட்டாள்.
“என்னை அதுகள் படிக்க விடாது. என்ர படிப்பும் மண்ணாகப்
போகும்.”
"நீதானே ரியூசனெணி டு நாண்டுகொண்டு நிண்ட நீ. நெஞ்சு நோக அடி, அடியெண்டு அந்தாள் உழைச்ச காசு. பாலப் பழம் போல நூறு ரூவா அச்சவாரமும் கட்டின னாங்கள். எல்லாத்துக்கும் அந்தாள் வரட்டும்.” கலக்கமுற்ற மனத்தோடு குணேசு கிணற்றடியை நோக்கி நடந்தாள்.
உதயா சற்று உரத்துத் தாய்க்குக் கேட்கும் படியாக படித்துக் கொண்டிருந்தாள்.
தொடர்ந்து வகுப்பை நடத்தக் கூடிய மனச்சமநிலை தவசீலனுக்கு இருக்கவில்லை. மிகவும் பிரபலமான ரியூசன் வாத்தியார். சென்ற ஆண்டிலும் அதற்கு முந்திய ஆண்டிலும் நடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் அவரது மாணவரே சிறப்புச் சித்தியைப் பெற் றனர். அதிக எண்ணிக்கையானோருக் குப் பிரபல கல்லூரிகளில் அனுமதியும் கிடைத்தது. பயிற்சிப் புத்தகங்களைத் தானே தயாரித்து வெளியிட்டிருக் கிறார். நாடு பூராவுமுள்ள புத்தக சாலைகளில் இவை வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. புலமைப் பரிசில் பரீட்சை எழுதப் போகும் சகல மாணவரது கைகளிலும் தவசீலனின் உதவி நூல்கள்தான்! இருந்தும் இவருக்குக் "குட்டி வாத்தி என்ற திருநாமத்தைச் சூட்டியிருக்கின் றது அந்தவுர்ச்சனம். இவரொரு நிரந் தரப்பாடசாலை ஆசிரியரல்ல! பேர் புகழிருந்தும் அந்தத் "தொப்பி"யை அணியாததே சனத்தின் நாக்குவளைப் பிற்குத் தீனியாகிவிட்டது. கண்டால் மாஸ்ரர், சேர் எனக் குழைவார்கள். காணாவிட்டால் குட்டி வாத்தி எனக் குத்துவார்கள்! “சொன்னாச் சொல் லட்டும் தோலுக்கையா பூரப்போகுது”

தவசீலன் நிறைகுடம் தளம்பமாட்டடர்; பொறுத்துக் கொள் வார். இந்த விலாசங்களைக் கேட்டு நாவூறித்தான் குணேசு மகளை ரியூசனுக்கு அனுப்பினவள்.
வளையம் போலச் சுருண்ட கன்னங்கரிய முடி உதயாவுக்கு! கோலி ஒரு நூறு கிறாம் புளியின் கணியத்தில் கூடக் கொண்டைபோடக் காணாது. பின்னுவதைச் சொப்பனத் தில்கூட நினைக்க ஏலாது. தாய் என்ற வகையில் மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் குறைபாடு குணேசுவுக்கு ஆறாத்துயரந்தான். சாமத்தியப்பட்டால் மகளுக்கும் பின்னிக் கட்டி சோடனை போட்டு புட்டுக் கழி சுத்த முடியுமா! இதையெல்லாம் சன்னதி கணக் கெடுக்காதவன்.
* எடி பேச்சி. இந்தக் காலத்தில உதுக்கெல்லாம் ஆரடி யோசிக்கினம். வாழும் வளருற காலத் தில எத்தினை பொடியன்களும் பொடிச்சியளும் கை இல்லாம காலில் லாம இப்ப திரியுதுகள் உதுகளென்ன கலியாணம் கட்டாதுகளா? புள்ளைப் பெறாதுகளா?அறமிஞ்சிப் போனா அண்ணாவியாரிட்டைக் கிடக்கு டோப். இரவலா வாங் கித் தாறன் ." கொடுப்புக்குள் நன்னிக் கொண்டி ருக்கும் புகையிலைக் காம்பைக் குதப்பியபடி சன்னதி பெண்சாதியோடு குதர்க்கம் பேசுவான். அவனுடைய போக்கைச் சுருதி சுத்தமாக வடித்து வைத்திருக்கும் குணேசு தனக்குள் குமைவாள். நன்மை தீமைக்கும் போக வேண்டி வந்தால் இப்பவும் குணேசு முடிமயிர் இல்லாமல்தான் கொண்டை கட்டுவாள்.!
“உது ஆற்ற வம் சமோ, வாயைச் சும்மா வைச்சிருக்கத் தெரி யாமல் குணேசு சில நேரங்களில் அலம்பிவிடுவாள்.
"ஆரோ உங்கட ஆக்கள் சண்டைக்கு வந்த காப்பிலிக்குப் பிறந்
திருக்கினம். அதுதான் உதயாவின்ரை தலைமயிர்.” நுள்ளி விடுவான் சன்னதி, மனிசிக்காரியின் கதை கேட் பதில் அவனுக்குக் கொள்ளை ஆசை.! "ஆ.உதெல்லாம் எங்கட வமிசத்தில கிடையாது. உங்கட ஆக்கள்தான் வந்தான் வரத்தானுக்குப் புள்ளைப் பெறுகிறவை.” குணேசு கணவன் வீசிய வலைக்குள் மாட்டிக் கொண்டு சன்னதியின் இனசனத்துக்கு விலை வைப்பாள்; வசை பாடுவாள். "சொன்னன் தானே அண்ணா வியார் இருக்கிறேரெண்டு. கூத்தில அவற்ர வைப்பாட்டிக்கு வைக்கிற டோப் சோக், கேக்கமுன்னம் மனிசன் தரும். அற மிஞ்சினாச் சோடினைகார னையும் அனுப்பும்."
அது சரி. நீயுமென்ன அண்ணாவியாரைச் சும்மாவா விடுகிற நீ. நீ இடைசுகம் குடுக்கிற உடுப்பு களைத்தானே போட்டுக் கொண்டு ஆடுறவை."
“எடி அறுந்து போனவளே. என்னத்துக்கு உதையெல்லாம் கொண்டு வாறா. ஊரில அறிஞ்சா தொழிலும் தராதுகள்” என்ன ஏதெண்டு விளப்பமில்லாம கதைக்கிறவளோட கதைகுடுத்தா கையைக் காலைத்தான் நீட்ட வரும்." பிசங்கிப் போகும் சன்னதி குடுகுடுவென ஒடித் தண்ணிர்த் தொட்டியை அடைவான். உடுப்புகளை அலம்புவான்.
ஊடலற்ற இந்தத் தனகல் அவர்களது பொழுது போக்கு
உதயா ரியூசனுக்கு வந்து மாதமொன்று கூட ஆகவில்லை. அந்தக் குறுகிய காலத்துள் தவசீலன் நெஞ்சில் சிறந்த மாணவியென்ற கணிப்பீட்டைப் பெற்றுவிட்டாள், படிப் பில் அவள் காட்டிய அபரிமிதமான திறமைதான் இந்த நெருக்கத்தைத் தேறவைத்தது.
பிறிதொரு காலத்தில் உதயா தன்னையும் மிஞ்சுவளென்ற கிலேசம்

Page 5
கூட தவசீலனுள் எழுந்தது. ஆனால் அவர் ஒரு புளியமரம் அல்ல! தனக்குக் கீழ் தன்னைப் போன்ற திறமைசாலிகள் உருவாக வேண்டுமெனவே அவர் எதிர்பார்த்தார். அதுவே அவரது அசுர உழைப்பின் இலக்கு. தனக்குக் கற்றுக்கொடுத்தது தவசிலன் மாஸ்ரர் என்ற வார்த்தைகள் உதயாவின் நாவிலிருந்து பிறக்குமாகில் அதற்குக் காத்திரமான பெறுமதி சுவறுமெனவும் கணக்கிட்டார். அந்த அளவிற்கு உதயாவின் திறமையில் நம்பிக்கை! அப்படிப்பட்டவள் தனது வருகையை இடையில் நிறுத்திக் கொண்டது அவருக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அவளை உடனே பார்க்க வேண்டுமென்ற தவனம் நெஞ்சில் குபிரென்று பெருக் கெடுத்தது. S00 S SS SS SSLSS
*உதயா என் னத் துக் கு வாறத்தில்லை.” அடக்கமுடியாமல் வெளியே கொப்பளித்தார். நோட்ஸ் குடுத் துக் கொணி டிருந் தவர் . இடைத்தடங்கள் செய்தது மாணவர் சிலருக்கு உவப்பாக இருக்கவில்லை. "அந்தக் காப் பிலிப் பெட்டையா சேர்?.” நக்கலான பாவனையோடு மாணவன் ஒருவன் கேட்டான். சக மாணவர்கள் அட்டகாச மாகச் சிரித்தனர்.
"அப்புடிச் சொல்ல வேணா மெண்டு எத்தினை தரம் சொன்னான்". கையிலிருந்த மொனிற்றேர்ஸ் கொப்பியைத் தவசீலன் மேசையில் எறிந்தார். மயான அமைதி வகுப்பில் குவிந்தது.
"உதயாவை, உதயாவெண்டு தான் சொல்லவேணும். புதுப் பெய ரொண்டும் தேவையில்லை”. தவசீல னின் முகபாவம் மாறிவிட்டது. ரெளத்திரபாவம் தேங்கி நின்றது.
“உங்களால தான் அவள் நிண்டுபோட்டாள்" எனக் குற்றமும்
சாட்டினார். கொதியைக் கிளப்பி விட்டதை உணர்ந்த மாணவர்கள் ஆதங்கித்தனர்.
"இனி அந்த மனிசன்
நோட்ஸ"ம் தராது". படிப்பில் கரிசனை
கொணர் டவர் களர் மனதுக் குள் நொந்தனர்.
"என்னத்துக்கு வாறத்தில்லை யெண்டு தெரியாது சேர்" தவசீலனைத் தொடர்ந்து நோட்ஸ் சொல்ல வைப் பதற்கான உத்தியொன்றை மாணவ னொருவன் நயமாகப் பிரயோகித்தான். "அவ இந்தக் காட்டு வைரவர் கோயில் பக்கமிருந்துதான் வாறவ சேர்.” குருவின் சீற்றத்தை சீட னொருவன் தணித்தான்.
தவசீலனின் முகத்தில் மீண்டும் சந்தோஷவரிகள் படர்ந்தன. தொடர்ந்தும் கிளாஸை நடத்த நோட்ஸைத் தூக்கினார்.
தவசீலனினி சைக் கிள் இலந்தைக்காட்டு வைரவர் கோயிலை நெருங்கவும் அவரிடம் ரியூசனுக்குப் போன மாணவ வட்டனொருவன் கட்டைக்கழிசானோடு மேலங்கியற்றவ னாக "சேர்” என அழைத்தபடி வரவும் "குண்டளவும் பிசகாதிருந்தது.
“ஸ்கொலர் வழிப் பாஸ் சேர்”. அவனும் புலமைப்பரிசில் பரீட்சைக்கா கவே அவரிடம் ரியூசனுக் குப் போனவன். அடையாளம் வைத்திருந் தான். உதயாவின் வீட்டைக்கேட்ட தவசீலனுக்கு சுட்டுவிரலை நிமிர்த்தி நீட்டி அடையாளங்காட்டினான். தூரம் குறுகியதாக இருந்ததால் சைக்கிளை உருட்டியபடி தவசீலன் நடந்தார். நாய்கள் குரைத்தன. ஒவ்வொன்றாக இணைந்து ஊர் வலக் கோஷம் எழுப்பின. உதவிக்கு நின்ற மாணவன் ஒழுங்கைக் கற்களைப் பொறுக்கி எறிந்து நாய்களைக் கலைத்தான்.

உதயா குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் அடக்கப்பட்டதென்பதை தெருப் படலையே அடையாளமிட்டது. முப்பின் அரிப்பால் அங்குமிங்குமாகக் கோணல் மாணலாகி பனைமட்டைகள் தெரிந் தன. நவீன ஓவியமொனி றை ஞாபகப்படுத்தின. ஒப்புக்குத்தான் படலை திறந்தபடிதான் இருந்தது.
சைக்கிள் பெல்லை தவசீலன் ஒலித்தார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் எவரும் தென்படவில்லை.
"குட்டி வாத்தியார்” வீட்டு விறாந்தையில் இருந்தபடியே தட்டி ஒட்டையினுாடாகக் குணேசு கண்டு விட்டாள்.
"உதயா. “என்னம்மா." முற்றத்துக்கு வந்துவிட்ட தாயை உரசியபடி உதயா நின்றாள். அவள் அடிவீட்டிற்குள் ளிருந்து ஓடிவந்தவள்.
"அங்க பார்த்தியே." சைக் கிளைத் தூக்கியும் உருட்டியும் தவசீலன் படலையைத் தாண்டிக்கொண்டிருந்தார்.
"இஞ்சேருங்கோ." உடுப்பு களுக்குப் பெட்டி போட்டுக் கொண்டு நின்ற சன்னதியை ஆரவாரத்தோடு குணேசு அழைத்தாள். ஈர்க்குக் கீறல் கள் முற்றத்தில் கோலமிட்டிருந்தன. வேப்பமரம் பழங்களை விழுத்தி இருந் தது. வெள்ளைக்கோழியில் கறுப்புப் புள்ளியிருந்ததுபோல் காகம் முற்றத் திற்கு எச்சத்தால் பொட்டிட்டிருந்தது. "வாருங்க, வாருங்க” இனந்தெரியாத தெளிவின்மை மனதில் மையம் கொண்டிருந்தும் சன்னதி தவசீலனை சங்கையாக வரவேற்றான். கைகால் பாரிச வாதத்துக் குட்பட்ட மனப் பிரமை குணேசுவுக்கு. தாயின் காலை உதயா வறுகிப் பிடித்துக்கொண்டாள்.
"கதிரையைத் துக் கிக் கொண்டுவா. என்ன மாஸ்டர் இஞ் சாலை”. தவசீலன் வீடு தேடி
yng
என்னத்துக்கு ஏதுக்கு வந்தவரென்ற அந்தரம் சன்னதிக்கு. தவசீலன் பகுதிக்குள் என்னத்துக்கும் சன்னதி போனதில்லை. தவசீலன் "பெருந் தன்மை காட்டியதால் அவைக்குத் தொழில் செய்ய மறுத்ததால் தன்னைக் கூட்டிக்கொண்டு போக வந்தவராக்கு மென நினைத்து சன்னதி குழைந்தான். பிரம்பு, பனம்நார், சணல் இத்தியாதிகளால் பின்னப்பட்ட கதிரையும் கையுமாகக் குணேசு ஓடிவந்தாள். விறாந்தைக்குள் கதிரை வைக்கப்பட்டது. மூவரினதும் கண்கள் தவசீலனில் குவிந்தன.
"உதயா ஸ்கொலவழிப்புக்குப் படிச்சது போதுமோ?"
தாய் உடுத்தியிருந்த சேலைச் சுருக்கை விரித்து அதனால் முகத்தை மறைத் து நின்ற உதயா விண் கையைப்பிடித்து இழுத்தபடி தவசீலன் தான் வந்த சங்கதியை உடைத்தார். சன்னதியும் பெண்சாதியும் ஆளையாள் முகத்தைப் பார்த்தனர்.
"மாட்டனெணி டு ஒத்தக் காலிலை நிக்கிறா. என்ன நடந்தது. இத விசாரிக்கத்தான் வந்தனியளா.." இப்படிச் சன்னதி சடாரெனக் கேட்டது தவசீலனுக்கு வியப்பாக இருந்தது. இதை விசாரிக்க, தகப்பனாகிய அவன்தான் தன்னிடம் வந்திருக்க வேண்டும்! சன்னதியின் பெலவீனம் மனதில் அப்பியது.
“ஓம் அதுக்குத்தான், நானில் லாத நேரத்திலை காப்பிலிச்சி எண் டவங்களா?” உதயா வைத் தவசீலன் கேட்டார். - அவள் எதையும் பேசவில்லை. “ஓடிப்போய் சோடா வாங்கிக் கொண்டுவா குணேசு".
காற் றாடியின் ஸ் விச் விழுந்ததுபோல் குணேசு சுழன்றாள். "நீங்கள் ஏதோ இங்கிலீசு கேட்டணியளாம்." சன்னதி அடக்கமாகச் சொன்னான். யோசித்தார் தவசீலன்.

Page 6
"வட் ஸ் யுவர் பாதர்?" - தான் இப் படிக் கேட்டதும் உதயா விறைத் தபடி நின்றதும் அவரது மனதில் மெகாத் தொடராக விரிந்தது. கழுவிப் போட்டிருந்த பல வர்ண உடைகள் காணியின் தெற்குப் பக்கக் கொடியில் காய்ந்துகொண்டிருந்தன. மகள் ரியூசனுக் கப் போகாத காரணத்தைக் கக்கவைக்க முடியாமல் குணேசு அந்தரிப்பதை உணர்ந்த சன்னதி, அன்று வீட்டுக்கு வரும் பொழுது மங்குப்பான் வடையோடு வந்தான். தனக்கேதும் 'கள்ளத்தீன் வந்திருக்குமென்ற எதிர்பார்ப்போடு உதயா ஒடிப்போய் சன்னதி கையி லெடுத்த சரையைப் பறித்தாள். கமகமவென்ற வாசனை மூக்கைப் பிய்த்தது. விறாந்தையில் இருவரும் உட்கார்ந்தனர். வடையைப் பிரித்துச் சன்னதி மகளுக்குத் தின்னக்குடுத்துக் கொண்டிருந்தான்.
"ஏனடா ரியூசனுக்குப் போகாம விட்டனி; சொல்லடா." பாசம் மேலிடும் சமயங்களில் இப்படித்தான் சன்னதி ‘டா’ போட்டு மகளை ஆணாக்குவான்.
"பொடியன்கள் புலுட்டைச்சி எண்டவங்களே.”
"வட் ஸ் யுவர் பாதர்” எண்டு சேர் உங்கடை தொழிலைக் கேட் கிறார். என்னெண்டு சொல்லிறது. மற்றவை கமமாம். ரீச்சராம். கிளாக் கராம். என்டெல்லாம் சொன்னவை." உதயாவின் கண்களிலிருந்து விழுந்த நீர் சன்னதியின் தொடையை நனைத்தது. செந்தளிப்பாக இருந்த மகளின் முகம் கறுத்து உருமாறியது அவன் நெஞ்சை வருடியது. மகளை அவன் மேற்கொண்டும் தொந்தரவு படுத்தவில்லை. மகள் ரியூசனைத் துறந்ததற்கான காரணம் கிடைத்து விட்டது.
"இதுக் காகத் தான் அவ நிண்டவ சேர். கரகரத்த குரலில் சொன்னான்.
ம் ...” “தவசீலன் . . . . . قا பெருமூச்சுவிட்டார். கொண்டுவந்த சோடாப் போத்தலை குணேசு நீட்டி னாள்.
“கி.ௗா.சு.” மனைவியைப் பார்த்தபடி சன்னதி இழுத்தான். தன் வீட்டுக் கிளாசில் தவசீலன் வாய் வைப் பாரா என்ற ஐயப்பாடு!
“கொண்டு வாருங்க கிளாசை” தனது சமத் துவ நோக்கத்தை தவசீலன் ஆற்றுப்படுத்தினார்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் தவசீலன் ஊர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாள ராக இருந்தவர். வாழ்க்கைச் செலவின் நெரிப்போடு, இடப்பெயர்ச்சியும் சோடி கட்டியதால் வெளிநாடு சென்றார். சில்லறை வேலைகளைச் செய்து இரு பக்கச் (தனதும் குடும்பத்தினதும்) செலவுகளையும் தாங்கமுடியாமல் லோன்றியொன்றில் சேர்ந்தார். வருமானமும் திருப்தியாக இருந்தது. மனமும் குளிர்ந்தது. தனக்கேற்பட்ட திருப்பம் ஞாபகத்தில் பட்டது.
"நானும் வெளிநாட்டிலை உங்கடை வேலையைத்தான் செய்த னான். அங்க உள்ள எங் கட ஆக்களும் பாத்திட்டுப் பாத்திட்டுத்தான் போனவை."
சன்னதி விக்கித்துக் கேட்டுக் கொண்டுநின்றான்.
"நீங்களும் புத் தி சொல்லாமலோ வைச்சிருந்தனியள். உதயா கெட்டிக்காரி. அவளின்ர காலத்திலை அவளை நாலுபேர் மதிப் பினம். கெட்டிக்காரி.” முளையைப் பார்த்தே விளைவைச் சொன்னது சன்னதிக்கும் பெண்சாதிக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
வீட்டுக் கொடியில் கிடந்த வெள்ளைக் கவுணை ஒடிப்போய் எடுத்து உதயா உடுத்தினாள்!

Ada
எழுதத் தூண்டும் எண்ணங்கள்
குலாநிதி தரை.மனோகரன்)
பேசப்படவேண்டிய இருவர்
எம்.எச்.எம்.ஷம்ஸ் அண்மையில் காலமான செய்தி, கலை - இலக்கிய உள்ளங்களை அப்படியே அதிரவைக்கும் ஒன்றாக அமைந்துவிட்டது. புனைகதை, கவிதை, கட்டுரை, நாடகம், இசை, உட்படப் பல்துறை ஈடுபாடுகொண்ட ஒருவராகப் பரிணமித்தவர் அவர். அவரது கலை - இலக்கியப் பங்களிப்புகள் விதந்து குறிப்பிடத்தக்கவை. மார்க்சியராக அவர் தம்மை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் தம்மளவில் ஒரு முற்போக்காளராகவே அவர் வாழ்ந்து மறைந்தார். அவரது முற்போக்கு எழுத்தின் சிறந்த அறுவடையாகக் “கிராமத்துக்கனவுகள்’ என்ற நாவல் விளங்குகிறது. என்னை மிகவும் கவர்ந்த ஈழத்துத் தமிழ் நாவல்களில் அதுவும் ஒன்று. முற்போக்காளரின் பலத்த வரவேற்பையும், அவரது சமூகத்தைச் சார்ந்த அடிப்டைவாதிகளின் கடும் கண்டனத்தையும் அது பெற்றது. அந்நாவலுக்கு எதிராக அடிப்படை வாதிகள் குய்யோ முறையோ என்று கூக்குரல் எழுப்பினாலும், அது ஷம்ஸின் பெயரைத் தொடர்ந்து வாழவைக்கும் என்பது நிச்சயம். இதேபோன்று அவர் எழுதிய "வெள்ளைச் சிறகடிக்கும் வெண்புறாவே' என்ற சமாதானப் பாடலும் அவர் பெயரைப் பரந்த அளவிற்குப் பரப்பியிருக்கிறது. எம்.எச்.எம்.ஷம்ஸ் என்ற பெயர் ஈழத்து இலக்கிய உலகில் நிரந்தரமாகப் பதிவாகிவிட்டது.
பேசப்படவேண்டிய இன்னொருவர் புதிய இந்திய ஜனாதிபதியான அப்துல்கலாம் அவர்கள். இந்தியாவின் புகழ்பெற்ற அணுவிஞ்ஞானி என்பதைவிட அவரது தாய்மொழிப் பற்றும் தாய்நாட்டுப் பற்றுமே என்னை மிகவும் கவர்ந்தன. விஞ்ஞானத்துறை சார்ந்த ஆய்வுகளில் அவர் ஈடுபட்டிருந்த போதிலும் தமது சமய நூல்களோடு தமிழ் இலக்கியம், கர்நாடக இசை, பகவத் கீதை முதலியவற்றில் நல்ல பரிச்சயம் உடையவராக இருப்பதும் அவரது மேதாவிலாசத்தைக் காட்டுகின்றது. திருக்குறள் மீது மிகுந்த மதிப்புக் கொண்ட அப்துல்கலாம், தமது பதவியேற்பு வைபவத்திலும் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசியமை, தமிழினதும், தமிழ் இலக்கியத்தினதும் பெருமையை உலகறியச் செய்தது. அவரது தாய்மொழிப் பற்றுப் போலவே தாய்நாட்டுப்பற்றும் பெருமதிப்புக்குரியது. இனரீதியான உயர்வுகளுக்கு ஆட்படாமல் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து உயரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு பணியாற்றும் பெருமகன் அவர். ஆயினும் இந்து முஸ்லிம் அடிப்படைவாதிகள் அவரை ஒரக்கண்ணாலேயே பார்க்கின்றனர்.

Page 7
தமிழ்நாட்டின் சாபக்கேடு w
எம்.ஜி.ஆர். தற்போது உயிரோடு இருந்திருந்தால், தாம் செய்த மகத்தான தவறுக்காக மனம் உடைந்து வேதனைப் பட்டிருப்பார். காலத்துக்குக் காலம் தமிழ்நாட்டில் வெவ்வேறு கொள்கைகள் கொண்ட வெவ்வேறு தலைவர்கள் ஆட்சிசெய்து வந்துள்ளனர். நிறைகளும், குறைகளும் கொண்டவர்களாகவும் அவர்கள் விளங்கியுள்ளனர். ஆனால், இன்றைய தமிழ்நாட்டின் தலைவி(தி) போன்று, முன்னர் ஒருபோதும் இடம்பெற்றதில்லை. தமிழ்நாட்டின் சாபக்கேட்டின் பயனாக ஜெயலலிதா அம்மாநிலத்தின் தலைவி ஆகிவிட்டார்.
"இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்று புரட்சிக்கு முந்திய ரஷ்யாவின் நிலையைப் பாரதி குறிப்பிடுகிறார். ஆனால், அன்று அவர் பாடியது இன்று தமிழ்நாட்டுக்கே பொருத்தமாக அமையும் என்பதை அவர் கற்பனைகூடச் செய்திருக்கமாட்டார். “பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்களுண்டு உண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு” என்று அதே மகாகவி ரஷ்யாவின் முன்னைய நிலையைப் பாடியதை இன்றைய தமிழ்நாட்டில் நிதர்சனமாகக் காணமுடிகிறது. இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை தண்டிப்பதற்காக இந்திய அரசாற் கொண்டுவரப்பட்ட "பொடா சட்டத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசும் இந்திய அரசியல் வாதிகள் மீது பிரயோகிக்கின்றார் ஜெயலலிதா. இலங்கையிலேயே தமிழர்கள் பல்வேறு ஆட்சியாளர்களால் அல்லலுற்று ஆற்றாது அழுது வேதனைப்படும் செய்திகள் எவையும் அந்த அம்மையாரின் இரக்கமற்ற இயல்பை எவ்வகையிலும், அசைக்கவில்லை. தமிழ்நாட்டை ஆள்பவர் தமிழுணர்வு கொண்டவராக இருப்பின் அவரது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் இலங்கைவாழ் தமிழர் பற்றிய அனுதாப உணர்வு கொஞ்சமாவது இருந்திருக்கும். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவராக இருந்தால் இதுதான் நடக்கும். நடிப்பதற்காக வந்த ஜெயலலிதா தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்.
தமிழ்நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதிப்பற்றாக் குறை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டு. இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் அலட்டிக்கொள்ளாத ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுபவர்களைத் தேடித்தேடிச் சிறையில் அடைத்து வருகிறார். கொடுமையான "பொடா சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு அவர் அதனைப் பிரயோகித்து வருகின்றார். இலங்கைவாழ் தமிழர்கள் இப்போது கருணாநிதியை ஒரு பொருட்டாக மதிப்ப தில்லை. ஆனால் வை.கோபாலசாமி, பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கு உளரீதியாக மரியாதை செலுத்துகின்றனர். இலங்கையில் தமிழர்படும் துன்பங் களை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிவரும் இவர்களைக் கைது செய்தமை, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோன்று அமைந்துள்ளது. தமிழகத்துக்கு வெளியே வேறு நாடுகளைச்சேர்ந்த நடிப்புத்துதிறன் வாய்ந்த அரசியல் வாதிகளுக்கும், அவர்களது பரம சீடர்களுக்கும் ஜெயலலிதாவின் இச்செயல்கள்
2

மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்திருக்கும். இலங்கையில் பேரினவாதம் பேசும் பெருந்தகைகளுக்கோ ஜெயலலிதா ஆதர்ச அரசியல் தலைவியாக விளங்குகிறார். ஜெயலலிதாவின் இத்தகைய செயற்பாடுகள் தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை மக்கள் மனத்திலிருந்து மறைப்பதற்காகச் செய்யப்படுகின்றன என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆனால், அவற்றைவிட ஒரு முக்கியமான உள்நோக்கம் அவருக்கு உண்டு என்று கருத இடமுண்டு. இத்தகைய தமது அடாவடித்தனங்கள் மூலமாக வாஜ்பாய் அரசைச் சங்கடத்துக்குள்ளாக்கி சோனியா காந்தியின் ஆதரவைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்புக்கும் மேலாகவே அவரது உள்நோக்கம் அமைந்துள்ளது என்று கூறலாம். இந்தியாவிலுள்ள எந்த அரசியல்வாதியையும் விடத் தாமே உறுதியான நாட்டுப்பற்று மிகுந்தவர் என்று காட்டுவதற்காகவே ஜெயலலிதா இந்த நாடகம் ஆடுகிறார் போலத் தோன்றுகிறது. தாய்நாட்டுப் பற்று மிகுந்தவர் போலப் புதிய வேடம் தாங்கி, எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற நப்பாசையே அவரை இவ்வாறு ஆட்டம்போடச் செய்கிறது எனலாம். அதிகார வெறியும், ஆடம்பரப் போக்கும்கொண்ட ஜெயலலிதா தமிழ்நாட்டோடு திருப்திப்படப்போவதில்லை. அகில இந்தியத் தலைவி என்ற பெயர் எடுக்கவே அவர் இந்தப் பாடுபடுகிறார். ஆனால் இந்தியத் தலைவி என்ற பெயரை எடுக்க எண்ணுவது அவருக்குப் பகற்கனவாகவே இருக்கப்போகிறது. இரும்புத்தலைவி என்ற பெயரையே அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அஞ்சாநெஞ்சம் படைத்த அகில இந்தியத் தலைவியாகத் தம்மை காட்டிக்கொள்ள விரும்பும் ஜெயலலிதாவின் சாதனைகள் அளப்பரியன. உலகின் புகழ்பெற்ற ஊழல்பேர்வழிகளில் ஒருவர் என்ற சாதனை அவருக்கு உண்டு. ஜோதிமயமான நட்சத்திரங்களின் துணைகொண்டு அவருக்குச் சார்பாக நீதி வளைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. நீதி தேவன்களின் மயக்கம் ஜெயலலிதாவின் ஊழல்களை மறைத்துவிட்டது. அதனால், அராஜகத்தின் உச்சக்கட்டத்தில் நின்று அவர் தடுமாறித் தத்தளிக்கிறார். பழந்தமிழ்க் கவிஞர் ஒருவர், "பெண்ணாகி வந்த மாயப்பிசாசு” என்று பாடியது ஒருவருக்கு மட்டும் பொருந்தும்.
r “ஞானம் རྗོད༽
தில் மா ற்றக்கூடியதாக அனுப்ப
புதிய சந்தா விபரம் 3
உள்நாடு அனுப்பவேண்டிய பெயர், தனிப் பிரதி Fea,54. urt 30/= (p35@1rf - அரை ஆண்டுச் சந்தா ரூபா 180/= TGNANASEKARAN ஆண்டுச் சந்தா et5Lur 360/= 19/7, PERADENIYA ROAD. சந்தா காசோலை மூலமாகவோ KANDY மனியோடர் மூலமாகவோ வெளிநாடு
அனுப்பலாம். மனியோடர் அனுப்புபவர்கள் அதனை கணி டி. தபால் நிலையத்
ஆண்டுச் சந்தா 25 USS
(தபால் செலவு உட்பட)
كر
13

Page 8
60 வருடங்களுக்கு முந்திய ஒரு சிற்றேரு கிராமஊழியன்
- தெளிவத்தை ஜோசப்
ஒரு மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகைக்கு கிராமஊழியன்’ என்கிற பெயர் எப்படி வந்தது! இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.
1930களின் கடைசிக்கூறில் நகரதூதன்' என்னும் ஒரு கட்சிப் பிரச்சார ஏட்டை ஜஸ்டிஸ் கட்சி தொடங்கியது.
திருச்சியில் இருந்து வந்த இந்த ஏடு காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ்காரர்களையும் மிகமோசமாகத் தாக்கிக் கொண்டிருந்தது. அரசியல் ஏடான இந்த நகரதூதனுக்குப் போட்டியாக திருச்சிக்கு அருகிலுள்ள துறையூர் என்னும் சிற்றுாரில் இருந்து காங்கிரஸ் அபிமானிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஏடுதான் ‘கிராமஊழியன்.
"ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்குவதற்கும்; நகரதூதனுக்குப் பதில் சொல்வதற்கும்" என்று காங்கிரஸ்காரர்கள் ஆரம்பித்த ஒரு போட்டி அரசியல் ஏடு இந்தக் கிராம ஊழியன்.
முப்பதுகளின் முடிவில் பிரிட்டிஷ் அரசின் பத்திரிகைகள் மீதான கோபமும்; பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப் பட்ட கடுஞ்சட்டங்களும் பத்திரிகைக்காரர்களைக் கண்டனக்குரல் எழுப்ப வைத்தன. இந்தியா நெடுகிலும் பல பத்திரிகைகள் தங்களது பிரசுரத்தை நிறுத்திக் கொண்டதன் மூலம் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. தமிழ் நாட்டிலும் பல தேசியஏடுகள் உட்படப் பெரும்பாலான பத்திரிகைகள் இந்தப் போக்கைக் கடைப்பிடித்தன. அதில் கிராம ஊழியனும் ஒன்று.
நிலைமைகள் சீரடைந்து ஏடுகள் மீண்டும் தங்களது பிரசுரங்களை ஆரம்பித்தபோது கிராம ஊழியன் அப்படியே நின்றது போலவே இருந்துவிட்டது. நாற்பதுகளின் ஆரம்பத்தில் கவிஞர் திருலோக சீத்தாராமும் நண்பர்களும் ஒரு இலக்கியப் பத்திரிகை ஆரம்பிக்கவெண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்தக் காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலவரங்கள் காரணமாக அரசின் பத்திரிகைகள் மீதான கண்காணிப்பு புதிதாகப் பத்திரிகை ஆரம்பிப்பவர்களுக்கு அனுமதி மறுத்துக்கொண்டிருந்தது. இந்த நெருக்கடிச் சூழலில் ஏற்கனவே வந்து பிறகு நின்றுபோன கிராம ஊழியனின் ஆசிரியராகவிருந்த திருலோக சீத்தாராமும்; பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பில் பெரும்பங்கு கொண்டிருந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரும் பெயரில் என்ன இருக்கிறது என்னும் துணிச்சலுடன் அந்தப் பழைய கிராம ஊழியனையே ஒரு மறுமலர்ச்சி இலக்கிய ஏடாக மாற்றிக்கொண்டனர்.
இலக்கிய ஏடாக உயிர்ப்புப் பெற்ற கிராமஊழியன் 15-08-1943லிருந்து மாதம் இருமுறை ஏடாக மலரத் தொடங்கியது. ஆசிரியர் திருலோக சீதாராம். கெளரவ ஆசிரியர் கு.ப.ராஜகோபாலன்.
“பாரதி காட்டிய வழியைப் பணிவுடன் பின்பற்றித் தொண்டு செய்வதை ஒரு சபதமாகக் கொண்டு விட்டான் கிராம ஊழியன்’ என்னும் அறிவிப்புடன்; நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும்
14

சோராதிருத்தல்' என்னும் பாரதி வாக்கைப் பத்திரிகைச் சுலோகமாகவும்கொண்டு வெளிவரத் தொடங்கிய கிராமஊழியன் கவிதை இலக்கியத்துக்கு முக்கியத் துவம் அளித்தே வந்தது.
ந.பிச்சமூர்த்தியின் யாப்பில்லாக் கவிதைகள் கிராம ஊழியனிலேயே வரத் தொடங்கின. அவருக்குக் கவிதை இலக்கணம் தெரியாது. அதனால்தான் இப்படிக் கவிதைகளை எழுதுகின்றார் என்னும் கண்டனக் குரல்கள் எழுந்தன. யாப்புப் பிறழாத கவிதைகளையும் ந.பி.அவர்கள் நிறையவே கிராம ஊழியனில் எழுதி குறைகூறியவர்களை வாயடைக்கச் செய்தார். யாப்பில்லாக் கவிதைகளை யும் தொடர்ந்து எழுதினார். கவிஞர் கலைவாணன் தனது அற்புதமான கவிதை கள் மூலம் கிராம ஊழியனை அழகுபெறச் செய்துவந்தார்.
பாரதிக்குப் பின்வந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் பலரும் சது.சு.யோகியார், சுத்தானந்த பாரதி; பாரதிதாசன்; தேசிக வினாயகம்பிள்ளை; நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, ஆகியோர் கிராம ஊழியனில் எழுதியுள்ளனர். ஈழத்துக் கவிஞர்களான நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் க.இ.சரவண முத்து; மகாகவி ஆகியோரும் கிராம ஊழியனில் கவிதைகள் எழுதியுள்ளனர். வேளுர் வே.கந்தசாமிப்பிள்ளை என்னும் பெயரில் புதுமைப்பித்தன் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஏடும், கூடுதலான அவருடைய கவிதைகள் வந்த ஏடும் கிராம ஊழியனே. “கடவுளுக்குக் கண்ணுண்டு என்னும் புதுமைப்பித்தனின் முதல் கவிதை கிராம ஊழியன் பொங்கல் மலரில் வந்தது என்றும் ‘ஓடாதீர்’ என்னும் இரண்டாவது கவிதை ஆண்டு மலரில் வந்தது என்றும் கூறுகின்றார் ஒரு காலகட்டத்தில் கிராம ஊழியனின் ஆசிரியராகவிருந்த வல்லிக்கண்ணன் அவர்கள்.
‘ஓடாதீர் உலகத்திரே என்று ஆரம்பிக்கும் புதுமைப்பித்தனின் புகழ் பெற்ற கவிதைக்கு ஒரு மறுப்புக்கவிதை கலாமோகினியில் வந்தது. புதுமைப் பித்தன் கவிதை எழுத வைத்துக்கொண்ட பெயர் 'வேளுர் வே.கந்தசாமிப் பிள்ளை’.
‘ஓடாதீர்’ என்னும் தலைப்பில் வெளிவந்த கிராம ஊழியன் கவிதைக்கு ‘ஓடும் ஒய் என்னும் தலைப்பில் மளிகை மாணிக்கம் செட்டியார் கலாமோகினியில் மறுப்பெழுதி இருந்தார்.
"எழுத்துத் தொழிலல்ல; ஏமாற்றம் தருவதது. பசிவெள்ளம் அணைபோட பாட்டிகதை உதவாது. விட்டொழியும் இதை எல்லாம்! உலகில் தொழிலுண்டு; உய்யவழி பலவுண்டு. பசிக்குணவு வேண்டுமென்றால்: பழங்கதையை விட்டு விடும். என்றெல்லாம் செட்டியார் உபதேசம் செய்திருந்தார்.
விடுவாரா புதுமைப்பித்தன். "உருக்கமுள்ள வித்தகரே என்னும் கவிதையை கிராம ஊழியனில் எழுதினார்.
யோக்கியமாய் வாழ இங்கே எந்தத் தொழிலுண்டு. பாரளந்த மாயோன் படியளக்கப் பக்கத்தில் வேறொருவன் வீற்றிருக்கும் மாட்சி தெரியலையோ.
கூடை முறம் பின்னிடலாம்; தேசத்து லெச்சுமியை மானத்தை, கவுரவத்தை, கூட்டிக் கொடுத்திடலாம்.
1名

Page 9
நச்சி வந்த பேருக்கு நாமங்கள் சாத்திடலாம்.
ஒற்றைச் சிதையினிலே உம் எல்லாரையும் ஒருங்கே வைத்து எரித்திட்டாலும்; வயிற்றெரிச்சல் தீராது. என்று கோபமாகச் சபித்திருந்தார். நண்பர்கள் பலரின் கண்டனங்களையும்; முணுமுணுப்புக்களையும் சம்பாதித்துக் கொண்ட கவிதை இது என்றும் குறிக்கின்றார் வல்லிக்கண்ணன். புதுமைப்பித்தனின் இலக்கியக் கோபமும், சண்டைகளும் பிரசித்த மானவை. ரசமட்டம் என்னும் பெயரில் அவர் எழுதிய தினமணிக்கட்டுரைகள் பிரபல்யம் பெற்றவை.
மு.அருணாசலம் என்பவர் எழுதிய ‘இன்றைய தமிழ் வசனநடை (தினமணி வெளியீடு 1945) என்னும் நூலை ரகுநாதன் கொண்டுவந்து காட்டி மதிப்புரை காரமானதாக எழுதவேண்டும் என்று புதுமைப்பித்தனிடம் கூறினாராம். புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரைக் கவிதை வடிவில் வந்திருந்தது.
மூனாவருணாசலமே மூடா: முச்சந்தி கும்மிருட்டில் பேனா குடை பிடித்தேன் பேயாட்டம் போடுகின்றாய்.” என்று ஆரம்பிக்கிறது கவிதை (புதுமைப்பித்தனின் இலக்கியக் கோபத்துக்கு காரண மான இக்கவிதை ஆ.இரா.வேங்கடசலாபதி தொகுத்தளித்துள்ள அன்னை இட்டதீயிலிருந்து)
ஈழத்துச்சிறுகதை முன்னோடிகளான வைத்தியலிங்கம்; சம்பந்தன்; இலங்கையர்கோன் போன்றோரும்; மகாகவி, அம்பிகைபாகன்; க.இ.சரவணமுத்து; நாவற் குழியூர் நடராஜன் போன்றோரும்; சோ.தியாகராஜன், இராஜ அரியரத்தினம் போன்றோரும் கிராம ஊழியனை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்.
ஈழத்துக்கும், தமிழகத்துக்குமான ஒரு இலக்கியப் பாலமாகத் திகழ்ந்த ஒரு முன்னோடிப் பெருமையும் கிராம ஊழியனுக்குண்டு.
இலக்கியத்தரம் வாய்ந்ததான கிராமஊழியன் ஆண்டுமலரில் மணிக் கொடி எழுத்தாளர் பலரும் கதை, கவிதை, கட்டுரை ஆகியவைகளை எழுதி இருந்தனர்.
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி; கலைவாணன்; கம்பதாசன், சி.வைத்திய லிங்கம்; இலங்கையர்கோன்; அம்பிகைபாகன்; இராஜ அரியரத்தினம், சோதியாக ராஜன், பாரதிதாசன்; என்று ஏராளமான இலக்கியத்தரமிக்க எழுத்தாளர்களின் படைப்புக்கள் இடம் பெற்றிருந்த ஆண்டுமலர் இது.
இந்த மலர் பற்றி மலர் தயாரிப்பின் முக்கியஸ்தரான வல்லிக்கண்ணன் 'இது போன்ற ஆண்டு மலர்கள் வெளியிடும்போது சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார்; அல்லது பிரதம மந்திரி; அல்லது அரசியல் பிரமுகர் போன்றோரிடமிருந்தே ஏதாவதொன்றை வாங்கி முதல் பக்கத்தில் வெளியிடும் மரபு அந்த நாட்களில் இருந்தது. இருந்தும் கிராம ஊழியன் ஆண்டுமலர் அந்த மரபை உடைத்துக்கொண்டு ஈழத்து எழுத்தாளரான சோதியாகராஜனின் கட்டுரையைத் தனது முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தது" என்று கூறுகின்றார். கு.ப.ரா. கும்பகோணத்திலிருந்தே கிராமஊழியனுக்கு விஷயங்கள் அனுப்பிக்கொண்டிருந்தார். சிறுகதை, கவிதை, நாடகம்; கட்டுரை; என்று
16

அவர் மிகவும் உற்சாகமாகவும், சோதனை அடிப்படையிலும்; மேற்கொண்ட முயற்சிகள் பலவும் கிராமஊழியனில் பிரசுரமாயின.
ஆண் பெண் உறவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட இனிய அகவயப்பட்ட சிறுகதைகளையே கு.ப.ரா. கூடுதலாக எழுதினார். ஆண், பெண் உறவு சம்பந்தமானவை என்றதும் நிறைய பத்திரிகைகள் கு.ப.ரா.வை ஒதுக்கத்தொடங்கின. சென்னைப் பத்திரிகைகள் அவற்றை வெளியிட மறுத்துவிட்டன. அவை அனைத்தும் கிராம ஊழியனில் பிரசுரம் கொண்டன.
அவருடைய சிறுகதைகளை ஒரு தொகுதியாகப் போடுவதற்கு கிராமஊழியன் முயற்சி செய்தது. ஆனாலும் முடியவில்லை.
1944 ஏப்பிரலில் கு.ப.ரா. காலமானதைத் தொடர்ந்து கிராம ஊழியன் ஆசிரியராக வல்லிக்கண்ணன் பொறுப்பேற்றார்.
எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களை கிராம ஊழியன் மூலமாக அறிமுகப் படுத்தினார் கு.ப.ரா.
தி.ஜானகிராமன்; இ.ரா.கோபாலன் போன்றோர் அதில் முக்கியமான வர்கள். பிற்காலத்தில் "கோபுலு என்று பிரசித்தி பெற்ற ஒவியர் கோபாலன் ஓவியர்களில் முக்கியமானவர். தி.கா.சி. விமர்சகர்களில் முக்கியமானவர்.
கிராமஊழியன் எழுத்தாளர்களுக்கு பூரண சுதந்திரம் அளித்திருந்தது. யாரும் எதைப்பற்றியும் எழுதலாம் ஆனால் எழுதப்படுபவை சுவையாகவும் கலைநயத்தோடும் விளங்கவேண்டும் என்று அறிவித்தது கிராமஊழியன். சினிமா, நாடகம்; சமூக விஷயங்கள்; சிறுகதை விமர்சனம்; புத்தகமதிப்புரை நாடோடிப் பாடல்கள் என்று பலவிதமானவை பற்றியும் ஏராளமான எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர்.
ஆனாலும் பத்திரிகை லாபகரமாக நடைபெறவில்லை. ஆகவே பத்திரிகையின் உரிமையாளர்களாகிய காங்கிரஸ்காரர்கள் பத்திரிகை வெளியிடுவதை விட அச்சுயந்திரங்களை விற்று விடுவதன் மூலம் பெரும் லாபம் பெறலாம் என்னும் எண்ணத்தில் அதற்கான செயற்பாட்டில் தீவிரமாக இறங்கினர்.
1947 மே யில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு சில மாதங்களின் முன் கிராமஊழியன் தனது இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டது.
மூன்றரை ஆண்டு மட்டுமே வெளிவந்த ஒரு ஏடு அறுபதாண்டுகளுக்குப் பிறகும் அதுபற்றிப் பேச, நினைக்க சிலாகிக்க நம்மை வற்புறுத்துகிறதென்பது அதன் வயதைப் பொறுத்ததல்ல; அது மேற்கொண்ட பயணத்தின் வழியைப் பொறுத்தது. அவ்வழியில் அது பதித்துள்ள சுவடுகளைப் பொறுத்தது.
-- * நெற்றிக்கணி” விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கண் பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம்பெற வேண்டுமெனில், நூலின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல்பற்றிய அறிமுகக்குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும்.
- ஆசிரியர்.
7

Page 10
女 哀 Sn தஞஇஇஇஇஇத' வ.மகேஸ்வரன், தஞ்சாவூர். தஞ்சைப் பெருங்கோயிலும் தென்னகப் பண்பாட்டு மைய்யமும்
சோழமன்னன் முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்டது தஞ்சையில் உள்ள ராஜராஜேஸ்வரம். தற்போது அது பிரகதீஸ்வரம் என அழைக்கப்பட்ட போதும் "தஞ்சாவூரில் நாம் எடுப்பிச்சருளின திருக்கற்றளி ரீராஜராஜேஸ்வர முடையார்” என இராஜராஜனது கல்வெட்டுக் குறிப்பிடுவதால், ராஜராஜேஸ் வரமே அதனது மூலப்பெயராகும். எனினும் "பெருங்கோயில் என்ற பதமே இன்று பெருவழக்கிலுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சோழர்களது கோயில்கள் பல இருப்பினும் இதுவே திராவிடக் கட்டடக்கலையின் உன்னதத்தை வெளிப் படுத்தும் கோயிலாக உள்ள்து. தஞ்சாவூர் நகரத்தின் மத்தியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் ஆலயம் இந்தியத் தொல்பொருட்துறையினதும், தஞ்சையை இறுதியாக ஆண்ட மராட்டியூர் மன்னர்களது வாரிசுகளினதும் பொறுப்பில் உள்ளது. ஐ.நா.ஸ்தானத்தால், "உலக மரபுச் சின்னங்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது.iழிபடுதல்ம் என்ற அம்சத்துக்கு அப்பால் சுற்றுலாத்
தலமாகவும் விளங்குகின்றது:
மேற்படி ஆலுத்தில் திென்னகப் பண்பாட்டுமைய்யம் ஒவ்வொரு மாதத் விக்கிழன் மயிலும், 4வது வெள்ளிக்கிழமையிலும் இசை, ழ்ங்கு சிெங்கின்றது. (இந்த மைய்யம் மத்திய அரசு நிறுவனம்) தமிழகத்தி பிரபுல் கர்நீரிடக, தமிழிசைப் பாடகர்களும், நடனமணி களும் மாதந் தற்ா pல் அரங்கேறுகிறார்கள். பெரிய கோயிலின் முன்மேடை யிலே, கம்பீரமாதிஅம்ர்ந்திருக்கும்ந்ந்திதேவரைப் பின்புலமாகக் கொண்ட ஆபெறும். பார்வையாளர்கள் அங்கு வரும்
மேடையில்தான்நிகழ்ச் கள் - அடியார்களே:ஆர்க்ள் ஆங்காங்கே புற்றரையிலும் செங்கற்தரையிலும்
அமர்ந்து நிகழ்ச்சிை பிற்மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி நாட்டினரும்.இவர்களுள் அபு சூழ்ம் கூடுகிறதோ இல்லையோ மாலை
6.3) தொகிநி3
ந்தி:நிக்
சி-சேல்லுந் հեքմlԼքIII:Elլլի է:
|}ଥି,
Treft: ஐ. リ."リ மாதர்கள்ை நிமித்திருந்தான்;
குடியிருப்புகள்ைாழ்த்ற்படுத்தினரின்:
ஐத FIFT - 11. 1+ ۔۔۔۔۔۔+ "?-- என அழைக்கப்பட்டினர்:நக்கீன் என்ற்;ழன் ஒட்டுடன்அவர்கள்ெ கல்வெட்டுகளில் பொறித்தப்பட்டுள்ள்ன்:த்லைக்கிேரஸ் எல்ஜிருது பெற்றவர் களும் அவர்களுள் அடக்கம்:பெரியூகேர்பிலின் முற்றத்திலே:கம்பீரமாக
எழுந்து நிற்கும்"விமானம், நீந்தி:ங்ழிைவயிற் கோபுரங்கள்இேவ்ற்றின் பின்னணியிலே, ஆடம்பரமில்லரீதிநிய்ான்விளக்குகள் ஒளிப்ாய்ச்ச், திறந்த வெளிமேடையிலே, நடனமும், இசையும் நடந்தேறும்போது - சென்றகாலத்துப் பழுதிலாத்திறன். என் மனக்கண்முன் தோன்றி மறையும். (வரும்.)
18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಜಿಲ್ಲ எழுத்துலக
அப்பொழுது பண்டாரவளை அட்டம்பிட்டிய மகாவித்தியாலயத்தில் நான் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 1964 ஆகஸ்ட் இரண்டாவது தவணை விடுமுறைக்காகப் பாடசாலை மூடப்பட்டபின் நான் வீடு வந்து சேர்ந்த அன்று காலை, அந்தமாத 'விவேகி தபாலில் வந்து எனது கையில் கிடைத்தது. மிகுந்த ஆவலுடன் அந்த விவேகியை விரித்துப் பார்த்தேன் என்ன ஆச்சரியம்! என் கனன்களையே என்னால் நம்பமுடியவில்லை. நான் விவேகிக்கு அனுப்பி வைத்து ஒரு மாத காலங்கூட ஆகவில்லை. எனது முதற்சிறுகதை "பிணைப்பு அந்த இதழிற் பிரசுரமாகி இருந்தது.
அச்சில் பார்த்த எனது முதற் சிறுகதையை எத்தனை தடவைகள் நான் படித்திருப்பேன் என்று உறுதியாகச் சொல்லமுடியாது எந்தவிதச் சலிப்புமில்லாது நான் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்த ஓர் இலக்கியம் எது என்றால் அது எனது முதற்சிறுகதைதான்.
திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர் தா.பி.சுப்பிரமணியம் அவர்கள் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் எனக்கு ஓராண்டு மூத்த மாணவர். அவர் பண்டாரவளை சென்மேரிஸ் கல்லூரியில் அப்பொழுது ஆசிரியராக இருந்தார். ஆசிரிய கலாசாலை வாழ்வில் ஓராண்டு காலம் என்னை நன்றாக அறிந்து வைத்திருந்த அவர், பத்திரிகைகளுக்கு எழுதும் வண்ணம் உற்சாகப்படுத்திக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். சுப்பிரமணியம் அவர்களின் தூண்டுதலினால் அட்டம்பிட்டியில் நான் தங்கி இருந்த சிலைக்கடையின் மேல்மாடியில், அமர்ந்திருந்து எழுதுவதற்கு மேசை கதிரை வசதிதானும் இல்லாத நிலையில், கட்டிலில் அமர்ந்து மடிமீது தலையணையை வைத்து, அதன்மேல் "பயில் ஒன்றைவைத்து நான் எழுதிய முதற்சிறுகதைதான் இந்தப் பிணைப்பு. தமிழ் இலக்கியத்துடன் எனக்கு நீங்காத நிரந்தரமான "பிணைப்பு உருவாக்கிய படைப்பு அது.
தா.பி.சு. அவர்கள் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையை "பிணைப்புவின் மூலம் நான் உறுதிப்படுத்தினேன். கலாசாலை வாழ்வில் நெஞ்சிற்பட்ட காயங்களினால் உள்ளே குமுறிக்கொண்டிருந்த நான் பேனா வைக் கையில் எடுக்கும் தீர்மானத்துடன்தான் கலாசாலையை விட்டு வெளியே வந்தேன்.
கலாசாலைத் தமிழ்ப்பணடிதர் என்னை “இனங்கண்டு சந்தர்ப்பம் வாய்த்த போதில் எல்லாம் நெஞ்சைக் காயப்படுத்திக் கொண்டிருந்தார். நான் கலாசாலையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் டொமினிக் ஜீவா அவர்களுக்கு தண்ணிரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதிக்கான சாகித்திய

Page 11
மண்டலப் பரிசு கிடைத்தது. அதனைக் கண்டு மனம் பொறுக்கி இயலாத அந்தப் பண்டிதர் இராசையா என்பவர் "இந்த ஆண்டு ஒரு நாவிதனுக்குச் சாகித்திய மண்டலப்பரிசு கிடைத்திருக்கிறது" என வகுப்பிலே சொல்லி ஏளனமாகச் சிரித்தார். சாதியின் பெயரால் அவர் செய்த ஏளனம் என்னை மிகவும் பாதித்தது. கலாசாலைச் சஞ்சிகை வெளியீட்டு முயற்சியிலும் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டேன். இவைகள் யாவும் "எழுது எழுது என என்னைத் தூண்டிக் கொண்டிருந்தன. எனக்குள்ளே ஒரு சபதத்துடன்தான் அப்பொழுது ஆசிரிய கலாசாலையில் இருந்து வெளியே வந்தேன். வெளியே வந்த அதே ஆண்டு (1964) எழுதுவதற்கு ஆரம்பித்தேன்.
கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் நான் பெற்ற அநுபவங் களினால் எனக்குள்ளே பற்றிக் கனன்றுகொண்டிருந்த தீயை ஊதி எரிய வைத்த பெருமை எழுத்தாளர் தா.பி.சுப்பிரமணியம் அவர்களையே சாரும்.
எனது முதற்சிறுகதையை எழுதுவதற்கு முன்னரும் நான் கதை எழுதியிருக்கின்றேன்.
நான் பிறந்த பொலிகண்டிக் கிராமத்தில் கடற்கரைப் பிரதேசத்தை அண்டி ஒரு பாட்டி இருந்தாள்.
சில தினங்களில் காலைப்பொழுது புலர்ந்து மாலையில் பொழுது கருகி மையிருள் சூழும்வரை அந்தப் பாட்டி ஓயாமல் ஒப்பாரி சொல்லி அழுது கொண்டிருப்பாள். அவளுக்குக் கணவன் இல்லை. ஆண்பிள்ளைகள் இருவரும் அவளோடு இல்லை. எனது தந்தையாரிடம் அவள் கதையைக் கேட்டறிந்த நான், அவள் கண்ணிரினால் உள்ளம் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அப்பொழுது பத்துவயது நிரம்பிய என்னால் அவளுக்கு எப்படி உதவி செய்யமுடியும்? இறுதியில் அவள் கதையை எழுதுவோம் எனத்தீர்மானித்து எழுதி முடித்தேன். அந்தப் பாட்டியின் அச்சேறாக் கதைதான் உண்மையில் என் முதற்கதை என்று சொல்லலாம்.
எனது எழுத்து முதன் முதல் அச்சேறிய வேறுகதை ஒன்றுமுண்டு. நான் எட்டாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் தினகரன் வாசகர் கடிதப்பகுதியில் எனது கடிதமொன்று பிரசுரமாகி, எனது பெயரை அச்சேற்றி ങ്ങഖഴ്ച.
சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சை எழுதியபின் (S.S.C.) ஒய்வாக இருந்தசமயம் சிறுகதைகள் சில எழுதினேன். பின்னர் அக்கதைகள் என் கவனத்துக்கு வராமல் அப்படியே விடுபட்டுப் போய்விட்டன.
சிறுவயதுமுதல் வாசிப்பதில் எனக்கு இருந்து வந்த நாட்டம், பின்னர் இலக்கியம் படைக்கும் ஆர்வம் எனக்கு உண்டானதற்கான அடிப்படைக் காரணமாக இருந்திருக்க வேண்டும். நான் ஏழாவது வகுப்புப் படிக்கும் காலத்திலேயே தினமும் தினகரன்' பத்திரிகை படிக்க ஆரம்பித்து விட்டேன். எனது தந்தையார் எனக்காகவே தினமும் தினகரன் வாங்கி கொண்டிருந்தார். அடுத்த ஆண்டு நான் படித்துக்கொண்டிருந்த தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடைமுறைப்படுத்தப் பெற்ற சுற்று வாசிப்பு மூலம் வருடந்தோறும் முப்பத்தைந்து நூல்களுக்குக் குறையாமல் வாசிக்கும் வாய்ப்புக்கிட்டியது. இந்தக் காலகட்டத்தில் தீவிர வாசகனாக மாறி, அறிவுப்பசி எடுத்து அலைய ஆரம்பித்த எனக்கு தி.மு.க. புத்தகங்கள் சஞ்சிகைகள், பத்திரிகைகள் தீனியாகக் கிடைத்தன. அண்ணாத்துரை மீது இருந்து வந்த அதீத பற்றுதலினால் "அண்ணாதாசன்” என ஒரு புனைபெயரை எனக்கு நானே சூட்டிக்கொண்டேன்.
20

கருணாநிதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த 'முத்தாரம் இலக்கியச் சஞ்சிகை என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒவியர் மாதவனின் கருத்தும் கவர்ச்சியுமுள்ள ஓவியங்களை அட்டைப்படமாகத் தாங்கி வெளிவந்த அச்சஞ்சிகை பற்றி முறையான மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை என்பது எனது கருத்து. . . .
இக்காலகட்டத்தில், ஒருநாள் மாலைவேளை பருத்தித்துறை சென்ற சமயம் புத்தகக்கடை ஒன்றில் சுந்தரம் பிள்ளையின் ‘மனோன்மணியம்’ நாடக நூல் இருக்கக்கண்டு அதனை உடனே வாங்கிக் கொண்டேன். பின்னர் பஸ் ஏறி வீடுவந்து சேருவதற்குத் தேவையான பணமில்லாத காரணத்தினால் புத்தகத்தைக் கையில் தூக்கிக் கொண்டு மாலை வேளை ஐந்து கிலோமீற்றர் தூரம் நடந்தே வந்தேன்.
ஒரு தினம் சொல்லின் செல்வர் செ.இராசதுரை எங்கள் கல்லூரிக்கு வருகைதந்து பாரதிதாசன் பாடலைச் சுவைபட விளக்கி இலக்கியச் சொற் பொழிவு ஒன்றினைச் "சிறப்பாக ஆற்றினார். மறுநாள் இருபத்தைந்து கிலோ மீற்றர் தூரம் பிரயாணம் செய்து யாழ்ப்பாணம் சென்று பூபாலசிங்கம் புத்தக சாலையில் பாரதிதாசன் கவிதைத்தொகுதி ஒன்றினை வாங்கிக் கெர்ண்டேன். பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையா அவர்களின் வருகையுடன் கருத்து நிலையில் எனக்குள்ளே மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அத்துடன் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தொடர்பு, இடதுசாரிகளின் நெருக்கமான உறவு என்பனவும் என்னைச் சரியான வழியில் திசை திருப்பிவிட்டன. சைவமும் காந்தியமுந்தான் சமுகவிடுதலைக்கான ஒரே மார்க்கமென்று கருதிக் கொண்டிருந்த தேவரை யாளிச் சமூக முன்னோடிகளின் வாரிசாக வளர்ந்து வந்தவன் நான். அவர்களது கருத்து நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு நான் மார்க்சிசக் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.
அதன் பின்னர் நான் விரும்பிப் படிக்கும் நூல்களிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சிறந்த இலக்கியங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டவைகளைத் தேடித்தேடி வாசித்தேன்.
பெரியவர்களின் ஆதரவும் ஆசியும் ஓர் இளம் எழுத்தாளனை உற்சாகப்படுத்தும் என்பதை அனுபவித்து உணர்ந்தவன் நான். “கலைச் செல்விக்கு என்று நான் அனுப்பிவைத்த முதற்சிறுகதை கிடைத்தும் அதன் ஆசிரியர் சிற்பி அவர்கள் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய அஞ்சல் அட்டை என்னை உற்சாகப்படுத்தியது. சிந்தாமணி ஆசிரியர் இராஜ அரியரத்தினம் அவர்கள் தமது கைப்படப் பாராட்டிக் கடிதமொன்றினை எழுதியதுடன் தொடர்ந்து எனது படைப்புக்களைப் பிரசுரித்து வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். ‘வீரகேசரி இராஜகோபால் அவர்களையும் நான் மறந்துவிடமுடியாது.
1968ம் ஆண்டு ஒருதினம் பண்டாரவளையில் இருந்து புறப்பட்டு வந்து, கண்டியில் பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாரதி பற்றிப் பேசினேன். மறுநாட்காலை கண்டியில் இருந்து புறப்பட்டு மாத்தளை சென்று கவுடிப்பலல வித்தியாலயத் தமிழ் விழாவில சிறுகதை இலக்கியம்’ பற்றிப்பேசினேன். அந்த விழாவில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையுடன் இரா.சிவலிங்கம், பண்டிதர் தினகரிப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர் அளித்த மதிய உணவின்போது புலவர்மணி அவர்களுக்கு அருகே நான் அமர்ந்திருந்தேன். அப்பொழுது புலவர் மணி அவர்கள் தமது
2

Page 12
கரத்தினால் எனது தோளைத் தடவித் தடவி, "தம்பி எங்களுட்ைய காலம் முடியுது. இனி உங்களுடைய கையிலேதான் தமிழ். தமிழை வளர்க்க வேண்டும்" என மெல்லக் கூறினார்கள். ஒரு தந்தையைப் போலப் புலவர்மணி அவர்கள் என்னை மெல்லத் தடவியதும், அவர் கூறிய வார்த்தைகளும் எனக்கு வழங்கிய நல்லாசியாகவே இன்றும் நான் நினைவு கூருகின்றேன்.
மாத்தளையில் நடைபெற்ற இந்த விழாவிலே முன்னரே என்னுடன் கடிதத்தொடர்பு வைத்திருந்த எனது நண்பர் மலரன்பன் அவர்களைச் சந்தித்தேன்.
விவேகியில் ஆரம்பித்து கலைவாணி, கலைச்செல்வி, மல்லிகை, சிந்தாமணி, வீரகேசரி, ஈழநாடு, செய்தி, தாமரை, அஞ்சலி, புதுயுகம், தினகரன், ஈழமுரசு, முரசொலி, நான்காவது பரிமாணம் ஆகிய சஞ்சிகைகள், பத்திரிகை களில் எல்லாம் இதுவரை எழுதி வந்திருக்கின்றேன். நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், பலகட்டுரைகள், கவிதைகள், நூல்மதிப்பீடுகள், ஒரு சில வானொலி நாடகங்கள் என்பவை எனது ஆக்கங்களாக இதுவரை வெளிவந்திருக்கின்றன. "டொமினிக்ஜீவாவின் ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரலினைத் தொகுத்ததுடன், ஜீவாவின் மணிவிழாவின்போது வெளியிடப்பெற்ற 'மல்லிகை ஜீவா என்னும் நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராகவும் செயற்பட்டிருக்கின்றேன். எங்கள் கல்லூரிச் சஞ்சிகை தேவரையாளி இந்துவின் ஆசிரியராக இருதடவைகள் இருந்து அதனை வெளியிட்டிருக்கின்றேன். ஈழத்து இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த இரண்டு விவாதங்களை மல்லிகைகளில் ஆரம்பித்து, பின்னர் முடித்து வைத்திருக்கின்றேன். அந்த விவாதங்களுள் ஒன்று பின்னர் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் நூலாகவும் வெளிவந்திருக்கின்றது.
எனது படைப்புகள் ‘விடிவைநோக்கி, "கழுகுகள்", "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்', "மரக்கொக்கு, ‘காத்திருப்பு ஆகிய ஐந்து நாவல்கள் இதுவரை நூலுருப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் "பொற்சிறையில் வாடும் புனிதர்கள், ஈழத்துப் பிராமணர்கள் பற்றி வெளிவந்த முதல்நாவல் என்ற பெருமைக்குரியது. ஆனால் அந்தநாவல் பத்திரிகையில் பிரசுரமாகிக் கொண்டிருந்தவேளையில் பத்திரிகை ஆசிரியரால் அதன் ஒரு அத்தியாயம் நீக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியவராத ஒரு சங்கதி. எனது இரண்டு நாவல்களைப் பதிப்பித்து நூலாக வெளியிட்டு வைத்திருக்கும் பூபாலசிங்கம் ழரீதரசிங் அவர்களால் மிக விரைவில் 'கானலில் மான் என்னும் புதிய நாவல் ஒன்றினை வெளியிடுவதற்கான பதிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனைவிட குறுநாவல்தொகுதி ஒன்று வெளிவருவதற் கான முயற்சியும் மேற்கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சிறுகதைகளைப் பொறுத்தவரையில் "சொத்து", "மாத்துவேட்டி” ஆகிய இரண்டு தொகுதிகள் நூலுருப் பெற்றிருக்கின்றன. இன்னும் சில தொகுதிகள் நூலாக வெளிவந்திருக்குமேயானால், எனது சிறுகதைகள் பற்றிய முறையான மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கும். தற்பொழுது குணேசேன நிறுவனத்தின் வெளியீடாக “மனசோடு பேசு' என்னும் சிறுகதைத்தொகுதியினை வெளியிட்டு வைக்கும் முயற்சியில் நண்பர் செ.யோகநாதன் அவர்கள் இறங்கி இருப்பது எனது மனக்குறையை ஓரளவு தீர்த்து வைக்குமென்று நம்பலாம். சமூகவியல் நோக்கில் கந்தையா நடேசன் என்ற எனது பெயரில் நான்
22

எழுதிய அரிய கட்டுரைகள் பல இன்னும் நூலுருப் பெறாது இருந்து வருகின்றன. நான் எழுதுவதற்கு ஆரம்பித்தபோது "தெனியான் என்ற பெயரிலேயே எனது முதற் சிறுகதையை எழுதினேன். “தெணியான்" என்பது எனது புனைபெயரன்று, குடும்பப்பெயர். "தெணி எங்கள் வீட்டுப்பெயர். எங்களைத் ‘தெனியார்’ என்றே எமது பகுதியில் எல்லோரும் அழைப்பார்கள். அந்தப் பெயரையே எழுத்துலகப் புனைபெயராக நான் சூட்டிக்கொண்டேன். இப்பொழுது எனது பெற்றோர் சூட்டிய நடேசு என்னும் பெயர் பலருக்குத் தெரியவராது. எனது பாடசாலை மாணவர்களுள் பெரும்பாலானோர் அதை அறியமாட்டார்கள். கவிதைகளை நிருத்தன்' என்னும் புனைபெயரில் எழுதி வந்திருக்கின்றேன். இன்னும் சில புனைபெயர்கள் எனக்குண்டு. ஒருவருட காலம் முரசொலியில் வெளிவந்த சிறுகதைகளை மாதாமாதம் 'அம்பலத்தரசன்’ என்னும் புனைபெயரில் மதிப்பீடு செய்து வந்திருக்கின்றேன்.
நான் எழுதுவதற்கு ஆரம்பித்து இரண்டாவது ஆண்டில் யாழ் இளைஞர் இலக்கிய மன்றம் நடத்திய போட்டியில் "பெண்பாவை’ என்னும் எனது சிறுகதை முதற்பரிசைப் பெற்றுக்கொண்டது. அதன்பின்னர் நடைபெற்ற ஓர் இலக்கியப் போட்டியில் பரிசு பெறத் தவறிய 'எல்லாம் மண்தான்’ (மாத்துவேட்டி) என்னும் சிறுகதை மல்லிகையில் பிரசுரமானது. அக்கதை பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் பாராட்டைப் பெற்றது. போட்டிக்கு அனுப்பி வைத்து பரிசுபெறத் தவறிய படைப்பு என்பதை பேராசிரியருக்கு நான் எடுத்துச் சொன்னேன். அப்பொழுது சில உண்மைகளை எடுத்து விளக்கி, போட்டிகளுக்கு இனி எழுதவேண்டாமெனப் பேராசிரியர் ஆலோசனை கூறினார். அதனை ஏற்றுப் போட்டிகளுக்கு எழுதுவதைத் தவிர்த்து வந்திருக்கின்றேன். ஒரு காலத்தில் பட்டிமன்றப் பேச்சாளனாக இருந்திருக்கின்றேன். அதனையும் பேராசிரியரும் டானியலும் தடுத்தார்கள். பலவருடங்களின் பின்னர் எனது மகளின் வேண்டுகோளுக்கிணங்கி சுபமங்களா' நடத்திய குறுநாவல் போட்டியில் எனது முடிவை மாற்றிக் கலந்துகொண்டேன். தகவம்' மாதம் தோறும் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்து பரிசளிக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது எனது குருகுலம் சிறுகதைக்கே முதல் முதலாகப் பரிசில் வழங்கியது. அதன் பின்னரும் தகவம் பரிசிலை எனது சிறுகதைகள் பல பெற்றுக்கொண்டன. 1994ல் "மரக்கொக்கு நாவல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு, வடக்கு - கிழக்கு மாகாண அமைச்சின்பரிசு, யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசு, என்பவற்றைப் பெற்றுக்கொண்டது. 1999ம் ஆண்டுக்கான வடக்கு - கிழக்கு மாகாண அமைச்சின் சிறந்த நாவலுக்குரிய பரிசு ‘காத்திருப்பு நாவலுக்குக் கிடைத்தது.
எனது எழுத்துலக வாழ்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் டானியல், ஜீவா, பேராசிரியர் கா.சிவத்தம்பி இந்த மூவரும் என்னை நேசித்தவர்கள். யாழ்ப்பாணத்து மல்லிகை எனது எழுத்துக்களுக்குரிய களமாக அக்காலத்தில் அமைந்திருந்தது. இதுவரை வெளிவந்திருக்கும் எனது சிறுகதைகளில் ஐம்பது வீதமானவை மல்லிகையில் வெளிவந்தவைதான். நான் யாழ்ப்பாணத்து மல்லிகையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன். மல்லிகை என்னைப் பயன்படுத்திக் கொண்டது. நான் மல்லிகை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். "மல்லிகை எனது படத்தினை அட்டையாகப் பொறித்து என்னைக் கெளரவித்தது.
அடிப்படையில் எனது எழுத்துக்களுக்கு ஒரு நோக்கமுண்டு. நான்
23

Page 13
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவன். அந்தச் சங்கத்தின் யாழ்கிளைச் செயலாளராக இருந்தவன். சமூக மாற்றத்திற்கான உந்து சக்திகளாக இலக்கியம் அமையவேண்டுமெனக் கருதுகின்றவன். கடும்பசியோடு இருப்பவன் ருசியைப் பற்றிப் பார்ப்பதில்லை. பசிவேகம் தணிந்தபின்னரே ருசியை எதிர்பார்ப்பான். ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் ருசியுடன் படைக்கப்பட வேண்டிய காலம் இது. ஆனால் ருசிமாத்திரம் உணவாகிவிடமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இலக்கிய நண்பர்களுடன் தொடர்ந்து கடிதத் தொடர்புகள் வைத்துக்கொள்ளாது விடுவதால் இலக்கிய நண்பர்கள் இல்லையென்றாகி விடாது. இலக்கியநண்பர்கள் பலர் எனக்குண்டு. இங்கு பருத்தித்துறையில் அறிவோர்கூடல் இலக்கியச் சந்திப்பு மாதந்தோறும் டொக்ரர் எம்.கே. முருகானந்தன் இல்லத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்தச் சந்திப்பின் மூலம் நான் அடைந்த பயன் பல நண்பர்களைப் பெற்றுக் கொண்டதுதான்.
எனது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை நான். எனக்கடுத்தவன் க.நவம், "உள்ளும் புறமும்' (சிறுகதைத்தொகுதி), 'உண்மையின் மெளன ஊர்வலங்கள்’ (கட்டுரைத் தொகுதி) என்பவை நூலுருப்பெற்ற அவனது படைப்புக்கள். நான்காவது பரிமாணம்' சஞ்சிகையை இரண்டாண்டுகாலம் கனடாவில் இருந்து வெளியிட்டு வந்தான்.
இந்தச் சமூகத்தில் ஒருவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு எனது எழுத்துக்களுக்கான கரு இந்தச் சமூகத்தில் இருந்தே கிடைக்கின்றது. துன்பப்படும் மக்களின் வாழ்வின் கண்ணிரை இலக்கியமாக்க வேண்டும். அந்தத் துயரங்களுக்கு விடிவுகிட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதனால் யாழ்ப்பாணத்து அடிநிலைமக்களின்- ஒடுக்கப்பட்டமக்களின் வாழ்வின் அவலங்களை இலக்கியமாக்குகின்றேன். இவர்களது துயரங்களைப்பற்றி எழுதுவது ஒன்றுதான் எனது எழுத்தின் ஒரே நோக்கமல்ல. துயரப்படும் மக்கள் எவராக இருப்பினும் அவர்கள் பக்கம் சார்ந்து நிற்பவன் நான். ஈழத்துப் பிராமணர்கள் கண்டு வேதனையுறறு அவர்கள் பற்றியும் எழுதியிருப்பவன் நான.
ஒரு படைப்பிலக்கியத்தை நான் உருவாக்க முன்னர் ஏன் எழுதப் போகின்றேன்? எதனை எழுதப் போகின்றேன? எப்படி எழுதப் போகின்றேன்? என்ற வினாக்களுக்கு என்னுள்ளே விடைகண்ட பின்னரே எழுத ஆரம்பிக் கின்றேன். இந்த வினாக்களுக்கான விடைகளைக் காண்பதன்மூலம் இலக்கு, உள்ளடக்கம், உருவம் என்பவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்கின்றேன். இதுவே ஒரு சிருஷ்டியை நான் செய்யும்போது முதலில் எனக்குள் செய்துமுடிக்கும் ஆரம்பப்பணி.
இந்த ஆகஸ்ட் மாதம் ஆறாந்திகதி எனது பணியில் இருந்து நான் ஓய்வு பெறுகின்றேன். ஒய்வுகாலத்தில் நிறைய வாசிக்கவும், சிலவற்றை எழுதவும் திட்டமிட்டிருக்கின்றேன். ஐம்பதாண்டு காலச் சமூக மாற்றங்களைச் சித்திரிக்கும் நாவல் ஒன்று எழுதவேண்டும் என்பது எனது எண்ணம். இலக்கிய முயற்சிகளோடு, எனது பேரப்பிள்ளைகளுடன் ஒய்வுகாலம் பயனுள்ள இனிமை யைத்தர வேண்டுமென நான் விரும்புகின்றேன்.


Page 14
அப்பொழுது தோழமை மிகுந்த "தோழர் என்ற சொல்லின் வலிமை எனக்குத் தெரியவில்லை. ஆனால் அங்கு பணியாற்றிய காலங்களில் அநுபவம்முலம் அறிந்துகொண்டேன்
அரசியல் கட்சியின் தலைவராக இருந்த கலாநிதி என்னம்.பெரேராவே தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்தார். அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
எமது தொழிற்சங்க வங்கியின் காசோலைக்கு அவரது கையெழுத்தைப் பெறுவதற்காக அவரது பொரளை இல்லத்திற்கு அடிக்கடி போலேன். அவரிடம் ஒரு விசேட குணமுண்டு. அவர் வாய்விட்டுச் சிரிப்பார். அது அனைவரையும் கவர்ந்துவிடும்,
ஒருதடவை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபடவிருந்தனர். அது சம்பந்தமான கடிதங்களை தலைவர் என்.எம்.பெரேராவின் கையெழுத்துடன் கண்டி, நாவலப்பிட்டி, அட்டன், பதுளை போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். தொழிற்சங்க அலுவகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வேலைநிறுத்த பிரசார வேலைகள் சம்பந்தமாக வெளிமாவட்டங்களில் இருந்தார்கள். அந்தக் கடிதங்களை நானே எடுத்துச் சென்று கொடுத்துவிடுகிறேன் என்று கலாநிதி என்.எம்.பெரேராவிடம் கூறினேன். அந்தக் கடிதங்களை எடுத்துச் செல்லும் நாள் டிசம்பர் கிறிஸ்மஸ் தினம். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால், "உனது குடும்பத்தவருடன் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட வேண்டுமல்லவா” என்றார்.
“கிறிஸ்மஸ் திருநாளைவிட இந்தக் கடமை மிக முக்கியமானது தோழரே!” என்றேன்.
"நல்லது தோழரே!” என்ற வழக்கமான அவரது அட்டகாசமான சிரிப்பை உதிர்த்துவிட்டு அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பிவந்தார். அவர் கையில் அழகான வெளிநாட்டு சேர்ட்டும் ஒரு தொப்பியும் இருந்தன. "தோழரே! இது எனது கிறிஸ்மஸ் அன்பளிப்பு” எனக் கூறியவாறு அவற்றை என்னிடம் தந்து, மனிப்பர்சில் இருந்து சிறிது பணத்தையும் எடுத்துத் தந்தார். அந்தச் சம்பவம் இன்றும் இனியும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கும்.
கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவின் சிபாரிசின் பேரில் கட்சியின் வாலிபர் கமிட்டியின் செயற்குழுவிற்கு என்னைத் தெரிவு செய்தார்கள். அது ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாலை வேளை கூடும் விசேட செயற்குழுக் கூட்டம். அந்த குழுவிற்குத் தலைவர் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா. செயலாளர் அதாவுட செனிவிரத்ன. தோழியர் விவியன் குணவர்த்தனா, சட்டத்தரணிகளான வாசுதேவ நாணயக்கார, விமலநாத இன்னும் ஒரிருவர் இடம் பெற்றிருந்தனர். அந்த இளம் வயதில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக அப்பதவி எனக்குத் தோற்றியது.
அந்த அரசியல் அமைப்பைச் சார்ந்த என்னைவிட வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள் என்னையும் ஒரு சக தோழராக மதித்துப் பழகினார்கள்.
தோழமை என்ற சொல் எத்தகைய வலிமை மிகுந்தது எனப் புரிந்துகொண்டேன்.
26

of Adifass
சிகளரவிக்கப்பருகிறார்
கம்பீரம் நிறைந்த மண்டபத் திற்குள் நுழையும்போதே எனக்குப் பெருமையாக இருந்தது. நவம்பர் 21ம் திகதியுடன் ஒய்வுபெறப்போகும் எனக்கு ஆசிரியர் பதவியிலிருந்து சந்திக்கும் இறுதி 'ஆசிரியர் தினம்’ இன்று. 60வயதை அண்மித்து இருந்தாலும் ஆசிரியர்களுக்குரிய தினத்தில், அவர்களுடன் சேர்ந்திருப்பது மகிழ் வான விடயம்தானே?. மண்டபம் எங்கும் ஆசிரியர்களை வாழ்த்தியும், போற்றியும் வாழ்த்து அட்டைகள், சுவரோவியங்கள், சுவரொட்டிகள்.
"மாணவர்களின் கலங்கரை விளக்கம் ஆசிரியனே"
"அறிவின் ஏணி ஆசான்" "கல்வியின் உயிர் நாடியே வாழ்க’
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”
வாசிக்கும்போதே மனதை வருடும் வார்த்தைகள். பலதரப்பட்ட வயதினரான ஆசிரியர்கள் மண்டபம் நிறைந்து காணப்பட்டனர். புத்தாடை அணிந்தும், புதுமெருகு கொண்டும் ஆசிரியைகள் தங்களுக்கே உரிய கல
கலப்பான உரையாடலில் கலந்து
இருந்தனர். மடிப்புக்கலையாத முழுக் கைச் சட்டை காற்சட்டையுடன் கழுத் துப்பட்டி அணிந்து ஆண் ஆசிரியர்கள் அணி அணியாக நின்றனர். அவர் களுள் பலர் என்னுடைய மாணவர்கள். என்னைக் கண்டு பலரும் மரியாதை செய்தனர், முகமன் கூறினர், பெருமை யாக இருந்தது எனக்கு. நான் ‘அந்தக் காலத்து வாத்தி என்ற நிலையில் வேட்டி. சட்டை, சால்வையுடன் சபை யில் ஆசிரியர்களுடன் ஒர் ஆசிரிய
1
603.35Lafigè63656auei, ugarreSaara. னாய் சென்று அமர்ந்தேன்.
விழா ஆரம்பமாகியது. குத்து விளக்கேற்றல், ஆசிரியர் கீதம், அதிதிகள் உரை, கலை அரங்கம் என விழா களை கட்டியது. அதிகமான பங்களிப்புக்கள் எனது மாணவர் களுடையதாகவே இருந்தன. சற்று நேரத்தில் மேடையிலுள்ளோர் தங்களுக்குள்ளேயே கெளரவிக்கப் பட்டு, மாறிமாறிப் பொன்னாடைகள் போர்த்திக் கொண்டனர். இன்று கெளரவம் பொன்னாடைகளால்தானே பறைசாற்றப்படுகிறது?.
சிறப்பான சேவைகள் செய்த ஆசிரியர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு ஆரம்பமானது. பல ஆசிரியர் கள் பதக்கம் அணிவித்துக் கெளர விக்கப்பட்டனர்.
என்னை அறியாமலே இப்படி ஓர் ஆசை. வயது முதிர்ந்த என்னை யும் மேடைக்கு அழைத்து கெளரவிப் பார்களா.. என் காதுகள் ஒலிபெருக் கியை நோக்கியிருந்தன. என்னைக் கெளரவித்து பதக்கம் அணிவிக்கும் போது இங்கு குழுமியிருக்கும் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் என் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து விழா மண்டபமே அதிரக் கரகோஷம் செய் வார்களா? - நான் விரும்பிப் படிக்கும் பகவத்கீதையின் அந்த வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் நிலைத்துநிற்க மறுக்கின்றன.
குறைந்த விடுமுறைபெற்ற ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர். ஆரம்பக்காலங்களில் தோட்டப் பிரதே சத்தில் நான் ஆசிரியனாக இருந்த போது லீவு என்பதே அறியாதவன். சனி, ஞாயிறு நாட்களையும் பாட

Page 15
சாலை நாட்களாக எண்ணி கடமை புரிந்தவர்கள் நாங்கள். ஆனால் அன்று அதையாரும் பெரிதுபடுத்தியதில்லை. கெளரவித்தது கிடையாது. நாமும் அதை எதிர்பார்த்ததில்லை. எம் கடமை
யைச் செய்தோம். இன்றைய கெளர
விப்பு எனக்குப் புதிதாக இருந்தது. தொடர்ந்து சிறந்த பெறுபேறுகளுக் காகக் கெளரவிக்கப்பட்டனர். எங்கள் கடமையே மாணவர்களைச் சிறந்த பெறுபேறுகள் பெறவைப்பதுதானே?. கீதை என் மனக்கண்முன் தலைகாட்டு கிறது. மாணவர்கள் சிறந்த பெறுபேறு பெறுவதே எமக்குக் கிடைக்கும் பெரிய கெளரவம், அதற்குப் பாராட்டு வேறா! நான் ஆரம்பப் பிரிவு பயிற்சிபெற்ற ஆசிரியன். தற்போது பெரிய பாட சாலையொன்றின் பகுதித் தலைவர். எனவே பதக்கம் கிடைக்க வாய்ப் பில்லை.
தொடர்ந்து சமூகசேவை, மாணவர்களுக்கான சேவைசெய்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப் பட்டன. 1983ம் ஆண்டு ஆடிக்கலவரத் தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அரவணைத்துப் பாடசாலையில் தங்க வைத்து பல நிறுவனங்களுடாகவும், அரசியற் தலைவர்களுடாகவும் உதவிகள் பெற்றுக்கொடுத்த காலங் கள் மறக்கமுடியாதவை.
பல தோட்டங்களில் பல இளைஞர் மன்றங்களை உருவாக்கி அதனூடாகத் தோட்ட இளைஞர் களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி யதை நினைத்துப்பார்க்கிறேன். பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், அடையாள அட்டை இல்லாமல் தோட்ட மக்கள் கஸ்டப்பட்டபோது அவர்களை உரிய திணைக்களங்களுக்கு அழைத்துச் சென்று அவற்றைப் பெற்றுக்கொடுத் ததையுைம் எண்ணிப்பார்க்கிறேன். இதனைச் சமூகசேவை என்றும் , மாணவர் சேவையென்றும் தரம்பிரித்து செய்யவில்லை. என் கடமையாக நினைத்துச் செய்தேன். ஆனால் இன்று
28
அவசரத்திற்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தாலே சமூகசேவையாளன் என்ற பட்டமும் கெளரவமும் எதிர் பார்க்கப்படுகிறது.
அந்த நிகழ்விலும் என் பெயர் வாசிக்கப்படவில்லை. எனது வயது முதுர்ச்சி காரணமாகவும், உடல் தள்ளாமையாலும் கடந்த ஓரிரு வருடங்களாக மற்றவர் புகழும்படி, பார்க்கும்படி ஒடியாடி எதுவும் செய்தது கிடையாது.
அரசியற் பிரமுகர்களுடன் நான் அதிகம் பழகுவதில்லை. இன்று கெளரவிக்கப்படுபவர்களைத் தெரிவு செய்த குழுவினரின் விவரத்தை அறிந்து அவர்களை வீடுதேடிச் சென்று வந்தவர்கள், மேடையில் வீற் றிருந்த சில பிரமுகர்களை முன் வணங்கி, பின் பிரதம அதிதியிடம் சான்றிதழ்களும் பதக்கங்களும் பெறு கின்றனர். இறுதியாக மூத்த ஆசிரியர் என்ற வகையில் நான் கெளரவிக்கப் UL6)mb.
பலருக்கு கெளரவ சான்றிதழ் கள், பதக்கங்கள் தொடர்ந்து வழங்கப் பட்டன. அடுத்தது என் பெயரா - இல்லை. 60 வயதிலும் இறுதியாகவா வது என் பெயர் வருமா?
அறிவிப்பாளரின் குரல் "நன்றியுரையைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் ஆசிரியர் தின விழா நிறைவுபெறும் என அறிவித்தது"
எனக்குத் தலைசுற்றியது. என்னை நானே கடிந்துகொண்டேன். இதுவரை எவ்வித எதிர்பார்ப்புமின்றி கடமை புரிந்த நான், சொந்தப் பணத்தில் என் மாணவர்களுக்கு உதவிய நான் தடமாறிவிட்டேனா?. மீண்டும் அந்த கீதை வரிகள் மனதில் ஒடி நிலைத்து நிற்க முயல்கின்றன.
இப்போது ஏனோ தளர்வும், சோர் வுமாக மண்டபத்தைவிட்டு வெளியேறுகிறேன். மற்றவர்கள் கையில் பதக்கங்கள் சான்றிதழ் களுடன் உற்சாகமாக வெளியேறிக்

கொண்டிருந்தனர். அனைவரும் ஒன் றாக பஸ்ஸ"க்காகக் காத்து நின் றோம். பஸ் வரவில்லை.
அப்போது என்னருகில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர் "சேர், நீங்க ரம்பொட தோட்டத்தில் இருந்தபோது உங்ககிட்ட 5ம் வகுப்புவரை படித்தேன். அந்த ஆரம்பப் படிப்புத்தான் என்னை ஒரு டொக்டர் ஆக்கியது. 83 கல வரத்தில் நீங்க எங்களை ஸ்கூலில் தங்கவைத்து செய்த உதவிகளை மறக்க முடியாது. அந்தப் பிரச்சினை யோட வவுனியா பக்கம் போய் கஸ்டப் பட்டுப் படிச்சு எப்படியோ முன்னேறி விட்டேன். போனகிழமைதான் இந்த ஊர் கொஸ்பிட்டலுக்கு டீ.எம்.ஓ. ஆக மாற்றலாகி வந்தேன். எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்." எனக்கூறியபடி என் காலைத்தொட்டு வணங்கினார். எனக்கு மெய் சிலிர்த்தது.
“உங்களைக் கண்டதுல பெரிய சந்தோசம் சேர். வாங்க உங் களை வீட்டில கொண்டுபோய் விடுகி றேன்” என்றபடி கார் கதவைத் திறந்து விட்டு என்னை அமரச்செய்தார்.
அனைவரும் என்னையும் என் மாணவனான டொக்டரையும் வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
கெளரவம் பெற்றவர்கள் கையிலிருக்கும் சான்றிதழ்கள் வெறும் கடுதாசிகளாக, பதக்கங்கள் வெறும் பொம்மைகளாக எனக்குத் தெரிகிறது. விழா ஆரம்பத்தில் பிரதம அதிதியான கல்விப்பணிப்பாளர் அந்த மலையகக் கல்விமான் கூறிய வார்த் தைகள் என் காதுகளில் ஓங்காரமாக ஒலித்தன. "ஆசிரியர்களான நீங்கள் உங்கள் கடமையை சரிவர என்றும் செய்வீர்களேயானால் ஆசிரியர் தினத் தில் மட்டுல்ல சமூகத்தால் தினமும் கெளரவிக்கப்படுவீர்கள்”
யாவும் கற்பனை
=E==E>
29
பூமாலைக் கனவு
அறஞ் செய்யும் நிதி தோண்டி ஆழத்தில் புதைத்தாலும் அறம் வந்து விடை கேட்கும் உரித்திரரே! ஆளறுப்பில் மறைவதில்லை உரித்திரரே!
ஆட்காட்டிக்கூட்டத்தில் ஆளென்று ஆனதெல்லாம் சூக்காட்டிக் கிடைத் உரித்திரரே சோற்றுக்கு நாவிழந்தீர் உரித்திரரே! يوس கர்விலென்று ஊரூர்ாய்க்
t டிகட்டிப் பறந்தாலும் சாவிலொன்றும்
ón. والهيم င္ကို சொந்தமனை சீர ಶ್ರೀ?
உருத்திரரே ^*:جرعة
ιο *ம்ாலை கண்டத்தில் மர்ப்பூச்சும் நெற்றிழிலே
பிணலன் பேர்த்கிடுமோ
f நக்குகின்றுநீர்ய்வாழ்வும் நலமென்று ஆனபின்பு செக் என்ன சிவமென்ன உரித்திரரே! சேர்ந்திட்ட பொருளென்ன உரித்திரரே!
() O O 56 sease
(மகா இறம்பைக்குளம் - لر safur ܢܠ

Page 16
6 O O O . 《།ཁོ་མོ་
நறறககன நக்கீரன் ミニギイ O O நால் விமர்சனம் நூல் வீணை வாணி அருள்வேண்டி அம்மானை எழுதியவர் : அ.த.பஞ்சாட்சரன்
அம்மானை என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகை விளையாட்டு. தலைவியொருத்தியைத் தோழிகள் சூழ்ந்துகொண்டு அம்மானை ஆடும்படி கூறிப் பாடும் முறையில் அமைந்த இலக்கிய வடிவமாக இது விளங்குகிறது. அம்மானை சிலப்பதிகார காலம் முதல் தமிழில் வழங்கிவரும் பா வடிவம். அதனைத் தொடர்ந்து பல்லவர் காலத்தில் தோன்றிய கலம்பகம் என்ற சிற்றிலக்கியத்திலும் அம்மானை ஓர் அம்சமாக அமைந்தது. மாணிக்கவாசகள் திருவம்மானை பாடியுள்ளார். சோழர்காலத்தின் பின்னர் அம்மானை தனி இலக்கிய வடிவமாக வளர்ச்சிபெறத் தொடங்கியது. இலங்கையைப் பொறுத்தவரையில், அர்ச் யாகப்பர் அம்மானை (சந்தோகுமையூர் அம்மானை), திருச்செல்வர் அம்மானை, கஞ்சன் அம்மானை முதலான அம்மானை இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இவ்வகையில் அ.த.பஞ்சாட்சரனின் வீணை வாணி அருள்வேண்டி அம்மானை (2001) எனும் அங்கத நூல் வெளிவந்துள்ளது.
இலங்கையில் 19ம்நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க அங்கத நூல்கள் தோன்றியுள்ளன. சமூகத்தில் காணப்படும் சீர்கேடுகளை விமர்சனம் செய்வதற்கு அங்கதச் சுவையை சில கவிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். சுப்பையனார் பாடிய கனகி புராணம், அச்சுவேலி நீ.காசிநாதப் புலவர் எழுதிய தலபுராணம், கோப்பாய் வே.இராமலிங்கம் இயற்றிய கோட்டுப்புராணம் முதலியவை அங்கதச் சுவை மிகுந்த நூல்களாக அமைந்தன. 20ம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தகுந்த அங்கத நூலாக அப்துல்காதர் லெவ்வையின் செயினம்பு நாச்சியார் மான்மியம் விளங்குகிறது. 21ம் நூற்றாண்டில் பிரசுரமான அங்கத நூல் வீணை வாணி அருள்வேண்டி அம்மானையாகும்.
இந்நூல் இலங்கை வானொலி தமிழ்ச்சேவை பற்றிய விமர்சன நூலாக விளங்குகிறது. இலங்கை வானொலி பற்றிப் பல்வேறு கட்டுரைகள் விமர்சனங்கள் முதலியன வெளிவந்துள்ளபோதிலும், கவிதை வடிவில் இதுவே முதலாவது விமர்சன நூல் எனக்கூறலாம். இந்நூலில் அம்மானை என்ற இலக்கிய வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு, வானொலியோடு தொடர்புடைய சிலர் பாராட்டப்பட்டுள்ளனர்; சிலர் விமர்சிக்கப்பட்டுள்ளனர். மறைமுகமான முறையில் பாராட்டுதலையும், விமர்சனத்தினையும் செய்துள்ளார், நூலாசிரியர். இந்நூலை அவர் எழுதுவதற்குச் சொந்தப்பாதிப்புகள் ஏதாவது காரணமாக இருந்திருத்தலும் கூடும். கவிஞரின் கவித்துவம் நூலை அங்கதச் சுவை கொண்டதாக ஆக்கியிருக்கிறது.
இந்நூலின் மிகச் சிறந்த அங்கதம் என்னவெனில் இலங்கைவானொலி தமிழ்ச்சேவை பற்றிய விமர்சன நூலுக்கு அதன் பணிப்பாளரே படாடோபமாக ஆசியுரை வழங்கியிருப்பதுதான். அவரது ஆசியுரையிலிருந்து சில வரிகள்: "அரிதாய் யாரும் இப்பணி செய்ய முனைவர். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர். அதுபோல கவிஞர் பஞ்சாட்சரன் தன் அம்மானைப் பிரபந்தத்தில் லோகாயத சம்பந்தம் அப்பட்டமாகப் படம்பிடித்துக்காட்டப்படுகிறது. காலத்தே செய்யும் செயல் ஞாலத்தே 30

பெரிது அல்லவா?. இவர் பணி செம்மைசீர் இவ்வேடைப் போல் இன்னும்பலவும், பெருமளவில் அம்மானைப் புகழ் பாடும் அருங்கலையை சீராகப் பாடிடவே பொருள் செய்யவேண்டிடுவோம் அம்மானை. , வளர்க இவர்தம் பணி. வாழ்க தமிழ்த்தொண்டு. நன்றிகள்.” நூலைப் படிக்காமலே ஆசியுரை வழங்குவதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணம் வேண்டுமோ? இலங்கை வானொலி தமிழ்ச்சேவை பற்றிய அங்கத நூலுக்கு அதன் பணிப்பாளரையே ஆசியுரை வழங்கவைத்த நூலாசிரியரின் சாதுர்யம் வியக்கத்தக்கது.
இருபத்துநான்கு பக்கங்களைக் கொண்ட இச்சிறிய நூலின் அட்டையமைப்பில் நூலாசிரியர் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள விடயங்கள் நூலாசிரியரைப் பொறுத்தவை. ஆனால், நூலில் அங்கதச் சுவை இழையோடுவது உண்மை.
நூல் : வசந்தகாலக் கோலங்கள். எழுதியவர் : புரட்சிபாலன்
திருகோணமலை வளர்த்தெடுத்த எழுத்தாளர்களுள் ஒருவர் புரட்சிபாலன் (கந்தசாமி சண்முகபாலன்). உமையாள்புரத்து உமா (1976) என்ற அவரது முதல் நாவல் வீரகேசரிப்பிரசுரமாக வெளிவந்துள்ளது. அதன் பின்னர் 1986ல் மித்திரன் வாரமலரில் தொடராகப் பிரசுரமாகி, நூல்வடிவில் வெளிவந்த நாவல், வசந்தகாலக் கோலங்கள் (2001). இந்நாவல் திருகோணமலைப் பிரதேசத்தைச் சார்ந்த திருக்கடலூர்ப் பகுதியைச் சார்ந்த மீனவர் வாழ்வியலைச் சித்திரிக்கிறது.
மீனவர் குடும்பம் ஒன்றின் சோகச் சித்திரத்தை நாவலாக வடித்துள்ளார், புரட்சிபாலன். தாம்தேர்ந்தெடுத்த கரு, கதைக்களம், கதையம்சம், பாத்திர வார்ப்பு, கதைகூறும் திறன் முதலியவற்றில் புரட்சிபாலன் தாம் ஒரு தரமான நாவலாசிரியர் என்பதை இனங்காட்டிக் கொள்கிறார். குடும்பத்துக்காகவே இரவுபகலாக உழைத்து, தன்வாழ்வையே அதற்காக அர்ப்பணிக்கும் கமலா, பல்வேறு ஆசாபாசங்களுடன் வாழும் அவளது சகோதர, சகோதரிகள், மனைவிமார் இறந்தபின்னர் தொழிலும், குடியுமாகக் காலங்கழிக்கும் தந்தை குமாரசாமி, கமலாவை விரும்பி அவளின் தங்கை யேரகாவைத் திருமணம் செய்யும் நிலையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட குணராசா, சமூகச் செல்வாக்குடன் அநியாயங்களைச் செய்யும் மாணிக்கம் சம்மாட்டியார், அவரைப் பழிவாங்குவதற்காக வில்லுக்கத்தியும், நஞ்சுச்சரையுமாகக் திரியும் துரைசாமி, மற்றும் கிளி அக்கா, மாக்கிரட் மாமி, ருக்குமணி, எனப் பல பாத்திரங்களை உலவவிட்ட நாவலாசிரியர், அவற்றைத் தத்ரூபமாகப் படைப்பதிலும் அக்கறை செலுத்தியுள்ளார். மீனவர் குடும்பங்களின் வாழ்வியல் அம்சங்கள் இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஆயினும், இயல்பாகச் செல்லும் நாவலின் இறுதிப்பகுதியில் சற்றுச் சினிமாத்தனம் இடம்பிடித்துவிட்டது. நாவலின் பாத்திரங்களின் உரையாடல்களில் போதிய கவனம் செலுத்தியுள்ளார், நாவலாசிரியர். எனினும் இடையிடையே திருகோண மலைப் பேச்சுவழக்கும், மலையகப் பேச்சுவழக்கும் கலந்து வந்துள்ளன. மண் வாசனைக்குப் பொருந்தாத முறையில் உரையாடல்கள் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன. சில குறைகள் இருந்தபோதிலும், புரட்சிபாலனின் வசந்தகாலக் கோலங்கள் திருகோணமலைவாழ் மீனவர் வாழ்வியலின் ஒரு வெட்டுமுகத் தோற்றம் போல் விளங்குகிறது. அவர் முயன்றால், எதிர்காலத்திலும் சில தரமான நாவல்களை அவரால் தரமுடியும்.
31

Page 17
"ஞானம் மூன்றாவது ஆண்ரு மலர் சில எண்ணக்கருத்துக்கள்
- செல்வி திருச்சந்திரன், கொழும்பு.
ஞானத்தின் மூன்றாவது ஆண்டு மலர் கிடைத்தது. அதை வாசித்து முடித்தவுடன் சில எண்ணக்கருத்துக்கள் மனதில் பதிவாகின. அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற சிந்தனையின் முடிவே இச்சிறு கட்டுரை.
முதலாவதாக, தொடர்ச்சியாக மூன்றாண்டு வெளிவரும் ஞானத்தைப் பாராட்டவேண்டும். தொடர்ந்து அது வெளிவரவேண்டும் என்று எனது வாழ்த்துக்கள். இம்முயற்சி விதந்துரைக்கத்தக்கது.
செங்கை ஆழியானின் சீனவெடி, சுதர்மமகாராஜனின் வாப்பா வளர்த்த பனைமரம், தெணியானின் அணையாத சோகம் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டிருந்தாலும் கச்சிதமான வடிவமைப்புகள் அமைகின்றன. முன்னைய இரண்டும் தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத போர்ப்பொருளைக் கொண்டிருக்கின்றன. தெணியான் மணவாழ்க்கையின் மீறல்களை யதார்த்த பூர்வமாக வாக்குமூலமொன்றை அம்மீறலுக்குக் கொடுக்காமல் பிரச்சினையைக் கூறாமல் கூறுகிறார். எனக்குச் செங்கை ஆழியானின் சீனவெடிக் கதையில் ஒரு சிறு நெருடல் தெரிகிறது. அது நாவலர் வீதிச் சம்பவத்தை ஒட்டியது. சைக்கிளில் வந்த பெண்கள் மீது வீசத்தொடங்கினர்(சீனவெடிகளை சிரிப்பும் கும்மாளமும் அவ்விடத்தில் நிலவியது மனதுக்குச் சங்கடம்) ஆனால் கதாநாயகன் சங்கடப்படுவதோடு நிறுத்திவிட்டுத் தன்மகனைக் கைப்பற்றி அழைத்துக்கொண்டு நடந்தார். அப்பெண்ணுக்கு அவர் ஒன்றும் செய்ய முயலவில்லை. யாரையும் கேள்வி கேட்க, அதைச் செய்தவனைத் தண்டிக்க முன்வரவில்லை. ஆனால் தன் மகனுக்குச் சீனவெடி எறிந்தவனை "பளார்” என்று கன்னத்தில் அறைகிறான். "எளிய பழக்கம்” என்று வெடிக்கிறார். இந்தக் கோபமும் கரிசனையும் அந்தப் பெண்கள் மீது சீனவெடி போட்டு வேலியோடு சரியவைத்த பெண்ணுக்காக வரவில்லை. இது ஒரு சராசரி மனிதனின் குணநலம் என்று ஆசிரியர் கூறவருகின்றாரா? சிங்கள "ஆமி சென்றிகள்" தந்த துன்பங்களை ஓயாமல் கூறி வருந்தும் -நாம் எங்களது உள் வக்கிரங்களை உருவகிக்க உணர முன்வருவதில்லை. இதற்கு இச்சிறுகதையின் அப்பா ஓர் உதாரணம். செங்கை ஆழியான் இந்த அவல யதார்த்தத்தைச் சித்தரிக்க முன்வந்தாரா? அவரின் மனோபாவப் பதிவுகளின்படி தகப்பன் பாசம் அப்படித்தான் வெளிப்படும். வெளிப்படவேண்டும் என்று கருதுகிறாரா என்பதைக் கேள்வியாகவே விட்டுவிடுகிறேன்.
அடுத்ததாக செ.யோகராசாவின் கட்டுரை எனது கவனத்தைக் கவர்ந்தது. அவரது கட்டுரைகள் பெரும்பாலும் ஆய்வுகளை உட்படுத்தியே எழுதப்படும். சிலசமயங்களில் சமூகவியல் சாயல் அக்கட்டுரைகளில் தென்படும்.
32

என்றாலும் இக்கட்டுரைச் செய்திகள் சிலவற்றில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. பொதுவாக இலக்கியங்களுக்கு இலக்கணமாக சில பொதுப்பண்புகள் இனங்காட்டப்படுவதுண்டு. இலக்கியம் தோன்றியபின்பே அந்த இலக்கணங்களை வைத்து இலக்கியங்களுக்கு நாமகரணம் செய்யப்படும். afgas 605, BT su6), 56.60gs, glds 356,605 Free Verse Sonnet 676trusT உதாரணங்கள். ஆனாலும் இலக்கண விதிகள் மீறப்படுவதுமுண்டு. கால் பங்கு, அரைப்பங்கு, ஒன்று கூறும்பொழுது அது திட்டவட்டமாக அரையாகவோ, காலாகவோ இருக்கவேண்டும். இந்த ரீதியில் யோகராசா தனது தலைப்பில் அரைவாய்மொழிப்பாடல்கள் என்று கூறியதின் பொருள் விளங்கவில்லை. Semi - என்பதை அரையாக்கியுள்ளார். அரைவாசி அரை என்பது பெரும்பாலும் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளும். அதுதான் மரபு. ஆய்வுகளில் பெரும்பாலும் அரை, முக்கால், கால் என்று கூறுவது மரபல்ல.
இந்நிலையில் ஒரு இலக்கியக் கூறை அரை என்று பிரிப்பது அழகல்ல. பாரம்பரியம் என்று அதைக் கூறுவதும் பொருந்தாது. பாரம்பரியத் தொடக்கத்திலேயே அவை அரைவாசியாகிவிட்டனவா என்ற கேள்வியும் எழுகிறது. இலக்கியம் தோன்றியபின்தான் இலக்கணம் வந்தது. இலக்கணத்தை வைத்துக்கொண்டு இலக்கியம் சமைக்கப்படவில்லை. ஆகவே அவர்கூறும் பண்புகள் மலையகப் பிரதேச தற்போதைய வாய்மொழி இலக்கியங்களில் காணப்படவில்லை என்றபடியால் அவை அரைவாசியாகிப்போய்விடா. பொதுவாக நாட்டுப்பாடல்களை வாய்மொழி இலக்கியம் என்று அழைத்தனர். பழமொழிகள், நொடிகள், தாலாட்டு, ஒப்பாரி போன்றவையும் சாதாரண கல்வியறிவில்லாத மக்களால் இயற்றப்பட்ட வாய்மொழி இலக்கியங்கள்தான். இவற்றை ஆங்கிலத்தில் Verbal Art என்றும் அழைப்பர். அவை பழமையாகவும் இருக்கும். புதுமையான கருத்துக்களையும் உள்ளடக்கும். இப்பாடல்களை பாடினவர்கள் காலவோட்டத்தில் புதுமைச் சிறப்புப்பெற்ற பாடுபொருட்களையும் தேடிக்கொள்வர். காலவோட்டத்தில் பல மீறல்கள் தோன்றும், அதற்காக அவற்றை அரை, கால் என்று வகுப்பது தவறு போலத் தெரிகிறது.
காலத்தால் பிந்திப் பாடப்பெற்றவை யாரால் பாடப்பட்டன என்பதைப் பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது. போக்குவரத்து வசதியுடன் கல்வி, கேள்வி அறிவையும் சேர்த்துக்கொள்ள யாரால் பாடப்பட்டது என்பது ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்குக் கேள்விச் சாதனம் மூலம் பரவியது. அவை வாய்மொழியாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் நூல் உருப்பெறவும் தொடங்கின. ஆனாலும் அதன் முக்கிய அம்சங்கள் நாட்டார் பாடல் இயல்பை முற்றிலும் தொலைத்துவிடவில்லை. இயற்றியவர் யார் என்பதும் நூலுருப்பெற்றுவிட்டது என்பதாலும் அதை நாம் அரை வாய்மொழிப்பாடல் என்று அழைக்கலாமா? அவை வாய்மொழித் தொடர்ச்சியை இழந்துவிட்டன அவ்வளவே. இது காலவோட்டத்தில் தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்கள். அவை பொதுப்பண்புகள் என்று கருதக்கூடியவை சிலவற்றை நாம் இனங்காணலாம். மொழிநடை, எளிமை, இலக்கணவிதிகள் மீறப்படல், ஒருவித ஒசைநயம் கல்வியறிவு சிறிதேனும் உள்ளவர்களும் சிறிதளவு கல்வியறிவு உள்ளவர்களும் பாடுதல் என வகைப்படுத்தலாம். பாடற்பொருளாக எதனையும் தேர்ந்தெடுக்
33

Page 18
கலாம். (அதற்குத் தடைபோட முடியாது) வர்க்க முரண்பாடுகள் தொடக்கம் பாலியல் துன்பம் வரை பாடுபொருளாக வரும் பண்பை நாம் காணலாம். தற்போதைய SubalternStudies என்று அழைக்கப்படும் சமுதாயத்தில் ஓரங்கட்டப் பட்டோரின் சமூகப் பொருளாதாரப் பண்புகளையும் வரலாறுகளையும் கற்க விளையும் ஆய்வறிவாளர்களுக்கு இவ்விலக்கியங்கள் ஒரு வரப்பிரசாதம்.
அடுத்ததாக என்னைக் கவர்ந்தது "பேராசிரியர்" க.கணபதிப்பிள்ளை பற்றிய கட்டுரை. பேச்சுத்தமிழ் பிதாமகர் என்று அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பல விடயங்களின் முன்னோடி, வித்தகர், ஆய்வறிவாளர், பல்துறையறிஞர். அவரைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் சரியாக வெளிவரவில்லை. -
தமிழ்த் துறையில் தமிழைக் கற்பித்தோரில் அவரைப்போல அறிவுபூர்வமாக என்னைக்கவர்ந்தவர் வேறொருவரும் இல்லை. பழமையும் புதுமையும் இணைந்து இரண்டின் முரண்பாடகளையும், ஒப்புமைப் பொதுப் பண்புகளையும் அவர் விளக்குவது அலாதியான ஒரு அறிவுத்தேடலைத்தரும். அவரது ஆய்வுகளும் உரைகளும் ஒரு முற்போக்குக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தன என்பது மறக்கமுடியாத உண்மை. கோட்பாட்டு எல்லைகளுக்கு அப்பாற் சென்ற ஒரு நோக்கு அவருடையது. இதற்குக் காரணம் அவரது பன்மொழிப் பயிற்சி. பாளி, சமஸ்கிருதம், ஆங்கிலம், சிங்களம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றவர் என்ற நிலையில் ஒரு அறிவுப் பக்குவம் அவரிடம் மேலோங்கி இருந்தது. அவரைப்பற்றிய ஒரு ஆழ்ந்த ஆய்வு ஒரு கட்டாய தேவை. பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் அதை முன்னெடுக்க ஆவன செய்யவேண்டும்.
இறுதியாக ஒரு வேண்டுகோளுடன் என் இக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். எம்நாட்டிலும் இந்தியாவிலும் கட்டுரையாசிரியனின் பட்டங்கள் (கலாநிதி)(பேராசிரியர்) போடப்படுவது ஒரு மரபாகி வருகிறது. இவற்றைத் தவிர்ப்பது நல்லது என்பது என் எண்ணம். கட்டுரையின் உள்ளடக்கம் முக்கியமானதன்றி எழுதுவோரின் பட்டங்கள் அல்ல. அறிவு என்பது வளர்ந்து கொண்டே போகும் ஒரு பொக்கிஷம். அதை மட்டுப்படுத்த முடியாது, கரைகாண முடியாது. ஒருவரைக் கலைகளின் நிதி என்றோ ஆசிரியர்களின் பேராசான் என்றோ கூறுவது அர்த்தமில்லை. நிறுவன ரீதியில் இயங்கும்பொழுது பல்கலைக்கழகங்களும் கம்பனிகளும் ஒரு நிறுவன முறை தழுவி உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்காளாக வேண்டியுள்ளன. ஆன்ால் அறிவுசால் கட்டுரைகளும் பேருரைகளும் எழுதும்போதும், நிகழ்த்தும்போதும் இப்பட்டங்கள் தேவையில்லை. ஏனைய நாடுகளில் நூல்களிலும் சஞ்சிகைகளிலும் கலாநிதி, பேராசிரியர் போன்ற தம் பட்டப்பட்டியலை போடமாட்டார்கள். கலாநிதியையும் பேராசிரியர்களையும் வித்துவான்களையும் மிஞ்சிய ஆய்வறிவாளர்கள் பலர் நம்மத்தியிலும் உண்டு என்பதும் ஒரு உண்மை. ஆய்வறிவாளர் தங்களுக்கென தங்கள் பேராற்றலால் ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும். அறிவுசால் உலகம் அவர்களை மதிக்கத் தொடங்கும். பட்டங்களுடன்தான் அவர்களை அறியவேண்டுமென்பதல்ல. ر
34

அன்புள்ள ஆசிரியர் ஞானம் அவர்களுக்கு,
அட்டைப்படப் பொலிவுடன் தோன்றிய ஆண்டுமலரைத்தொடர்ந்து ஜூலை இதழும் மேலாடை அலங்காரத்துடன் 26வது இதழ் கிட்ட மகிழ்ந்தேன். சிற்றிதழ் நடத்தி சூடுபட்ட பூனையாகிய நான், சிற்றிதழ்கள் காணும்போது இவை சிரஞ்சீவியாக வாழவேண்டுமே என்ற ஆதங்கத்தில் இதழுக்கு உயிர் நாடியான விளம்பரங்கள் கணிப்பை நோக்குவேன். அவ்வகையில் அத்தகைய துணையேதும் இன்றி 26 இதழ்களைக் கொணர்ந்துள்ளமை பகிரத சாதனைதான். செய்தொழிலின் வருவாயில் ஒருபகுதியைத் தியாகம் செய்துதான் நடத்தி வருகிறீர்கள் என மதிக்கிறேன்.
இவ்விதழில் ரீ கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஒரு நீண்ட கிண்டற் கட்டுரை நீண்ட காவியமாக மலர்ந்துள்ளது. குளவிக் கூட்டில் கல்லெறிபட குளவிகள் சீற்றமடையத் தொடங்கிவிடும். இதன் விளைவாக நீண்ட இலக்கிய சர்ச்சைகள் தோன்ற வாய்ப்புண்டு. இதற்கு வழிவகுத்துள்ளிர்கள். மருத்துவராகிய நீங்கள் நோயாளியின் புண்ணின் பகுதியையோ வீக்கத்தையோ சிகிச்சைக்காக அழுத்தியதும் நோயாளி சீற்றமடைந்து தன்னையறியாது ஏக வசனத்தில் சொல்மாரிகள் பொழிவதை உணர்ந்திருப்பீர்கள். நோயாளியின் நலன் நாடிச் செயல் புரிவதைப்போல் இக்கட்டுரையை வெளியிட்டமை உங்களுடைய கடமையுணர்வைக் காட்டுகிறது. காய்தல் உவத்தல் அற்ற ஆக்க பூர்வமான சர்ச்சையாக அமைதல் இலக்கியத்திற்கு வளம்தரும். வசை மாரிகளும், தனிநபர் தாக்குதலும் தவிர்த்து தரமான வாதப் பிரதிவாதங்கள் வளம் தரும்.
இத்தகைய நாரதப் பணிகள் நம் மொழிவரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. கே.கணேஷ், தலாத்துஒயா.
ஞானம் ஜூலை 2002 இதழ் கிடைத்தது. ஒரே மூச்சில் ஒருதரம் படித்துப் பார்த்தேன் (அது வழமை). பின் ஆறப்போட்டு 'கிளாக்கர் புத்தி எனும் கட்டுரையைப் படித்தேன். இரண்டு விடயங்கள் மட்டும் மற்றைய வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. மொத்தம் 44 பக்கத்துள் அடங்கி வந்திருந்த ஞானம் ஒரு சிறு சஞ்சிகை. அதில் 17.5 பக்கத்தை ஒரு கட்டுரைக்காக ஒதுக்குவதெனில் அதனை சஞ்சிகா தர்மத்துக்கு விட்டுவிடுவோம்; ஞானத்திற்கே வெளிச்சம், கட்டுரையை எழுதிய கம்பவாரதியார் மேடையில் ஆலாவரணம் பண்ணுதல் போல் எழுத்தில் ஆலாவரணம் பண்ணாது, சஞ்சிகையின் நலன்கருதி சொற்சுருக்கம் பேணி, ஒரு பக்கத்தில் சொல்லவந்ததைத் தெளிவாகச் சொல்லியிருக்கமுடியும்.
2. கம்பவாரதியாரின் சமூகவியல் ஆய்வின் நிலைப்பட்ட வியாக்கியானம் பொருத்தமானதுதான். ஆனால் இருப்பதில் இருந்து உன்னி எழுந்து புதிய எல்லைகளைத் தொடுபவர்கள் எம்மில் இல்லை என்று அடித்துக் கூறிவிட (UPi9uffgöl.

Page 19
ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரே நாம் பாரதியையும் , புதுமைப்பித்தனையும் பேசுகிறோம். பல நூற்றாண்டுகளின் பின்னரே கம்பனைப் பற்றிப் பேசுகிறோம். எமது கவிஞன்/கலைஞன் ஒருவனின் மரண ஊர்வலத்தில் பதினைந்து பேர் வந்தால், அது நூற்றாண்டுகால வெற்றி என்று நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நம்மவர்கள் நடிகர்திலகம் சிவாஜி கணேசனை அழைத்துவந்து பொன்முடி சூடினர். இறந்த பின்னும் மாபெரும் இரங்கல்விழா வைத்தனர். ஆனால் ஒரு வைரமுத்துவை வெறும் நடிகமணியாகவே மரணிக்க விட்டுள்ளோம். வி.வி.வைரமுத்துவும் ஒரு நடிக மாமேதை என்பதை அடித்துக்கூற எம்மில் யாரும் இல்லை. அதைவிட எமது கலை இலக்கியப் பரப்பில் புதிதுபுதிதாகத் தம்மை உற்பவித்துச் சாதனை படைக்க முயல்பவர்கள் எம்மில் பலர் உளர். ஆனால் அவர்களைப் ‘பைத்தியக்காரர்' என்று ஓரங்கட்டும் மேதாவிகளும் உள்ளனர். எனவே கம்பவாரதியார் எதிர்பார்க்கும் உன்னதம் எமது மண்ணில் எழுந்துவரும். அது உடனடி நிகழ்வாக அல்லாமல் காலம் பதில்சொல்லும் கைங்கரியமாகவே வெளிவரும். அதுவரை பொறுத்திருப்போம். அமரர் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களின் எழுத்துலகம் கண்களைப் பனிக்க வைத்தது. எம்மிடம் இன்னும் இருப்பான் என்று இறுமாந்திருக்க ஷம்ஸ் அகாலமாய்ப்போனது என்றும் மனதில் ஆறாத வேதனை.
மாவை.வரோதயன்,
எனது வாழ்க்கையில் ஏறக்குறைய இருபதாண்டுகளை யாழ்ப்பாணத்தில் செலவுசெய்தவன் நான். அதனால் அந்த மண்ணின் மக்களின் மனப்போக்கு களை கம்பவாரிதி பிட்டுப்பிட்டு வைத்திருப்பது கண்டு நான் ஆச்சரியப் படவில்லை.
தமிழ் இலக்கியம் என்ற பெயரில் தமக்கு வேண்டிய எழுத்தாளர்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும், பூமாலை சூட்டுவதும் கூட ஜெயராஜின் கிளாக்கர்ப்புத்திக்குள் அடங்கும் என நினைக்கிறேன்.
உண்மையைப் பகிரங்கமாக போட்டு உடைத்த கம்பவாரிதிக்கு எனது பலத்த கைதட்டல்கள். வாகரைவாணன், மட்டக்களப்பு.
ஞானம் 26ஆவது இதழில் (ஜூலை 2002) கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் கிளாக்கர்ப்புத்தி எனும் தலைப்பில் கதைபோலத் தொடங்கி கட்டுரையாக முடித்த ஆக்கத்தினை கருத்தூன்றிப் படித்தேன். அவர், வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். 46 பக்கத்தில் வெளிவரும் ஞானத்தில் 18 பக்கத்தை (39.13வீதம்) அவரின் படைப்புக்கு ஒதுக்கியுள்ளிர்கள். இதனால் 'இலக்கியப்பணியில் இவர் பேட்டிக் கட்டுரை, "புதிய நூலகம்' போன்ற பயனுள்ள அம்சங்கள் விடுபட்டுப்போய் விட்டன. இதிலிருந்து கம்பவாரிதியின் சிந்தனை முத்துக்களுக்கு அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அவர் கூறியவை அனைத் தும் வேத வாக்காக ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.
உதாரணத்துக்கு இரண்டொன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். "தொல் காப்பியன், வள்ளுவன், இளங்கோ, கம்பன், ஒளவை, பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன். இந்தவரிசையில் தமிழ் உலகம் ஒப்பும்வகையில் நம்மவர்

பெயர் ஒன்றுதானுமில்லை என்று ஒத்துக்கொள்வீர்களா?”
ஜெயராஜ் குறிப்பிடும் பட்டியலில் ஒளவை, ஜெயகாந்தன் தவிர ஏனையோர் இலக்கிய உலகில் புதுவழி சமைத்தவர்கள்; தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில் ஈழத்தவர் எவருமே தமிழ் இலக்கிய உலகில் புதுவழி சமைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.
‘வசனநடை கைவந்த வல்லாளர் என ரீலழரீ ஆறுமுக நாவலரை அழைத்தவர் ஈழத்து அறிஞர் எவருமல்ல. தமிழகத்தைச் சேர்ந்த பேரறிஞர் சூரியநாராயண சாஸ்திரி(பரிதிமாற் கலைஞர்) அவர்களே இவ்வாறு சொன்னார். 19ம் நூற்றாண்டில் வசனநடையில் எழுதிய பலர் தமிழ் நாட்டிலிருந்தும் நாவலரை இங்ங்ணம் அழைக்கக் காரணம் என்ன? ஏனையோருக்கும் முன்மாதிரியாக வசனநடையில் எழுதியவர் என்றுதானே பொருள். நாவலரின் இந்தப் புதுமையை தமிழ் உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறதே. ン
பேராசிரியர் கல்கி அவர்கள் தாம் நாவலரின் உரைநடை நூல்களை முன்மாதிரியாகக் கொண்டே வசனம் எழுதப் பழகியதாகக் கூறுகின்றார். இதனை ஜெயராஜ் அறியார் போலும். இன்று இலக்கிய உலகில் வசனநடை அரசோச்சுகின்றதென்றால் அதற்கு வழிசமைத்தவர் நாவலர்தானே.
பதிப்புத் துறையிலே மகாமகோ உபாத்தியாயர் உ.வே.சாமிநாத் ஐயரவர்களுக்கு முன்னோடியாக, வழிகாட்டியாக அமைந்தவர் எம்மவரான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களே. இதனை ஐயர் அவர்களே மறைமுக மாகத் தெரிவித்திருக்கிறார்.
கவிதைத் துறையை எடுத்துக்கொள்வோம். கவிதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமையைப் புகுத்தியவர் பாரதி.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நம் தாய்மொழிக்குப் புதிய உயிர்தருகிறான" என்பது பாரதியின் மிகப் பிரசித்தமான பிரகடனம். s
இக்கூற்றினைக் கூர்ந்து நோக்கினால், கவிதையில் எளிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு என்னும் தொடர்கள் எம்கவனத்துக்கு வருகின்றன. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றிப் பேசப்படுகின்றது. இசைத்தமிழ் வேறு இயற்றமிழ் வேறு. கவிதை இயற்றமிழின் பாற்படுவது. பாரதி இயலையும் இசையையும் பிரித்து நோக்க முடியாதவராகக் காணப்படுகின்றார்.
ஆனால் ஈழத்துக் கவிஞன் மஹாகவி து.உருத்திரமூர்த்தி கவிதையை இசைத்தமிழிலிருந்து பிரித்துத் தனியே இயங்கவைத்தார். இசையோசைக்குப் பதிலாகப் பேச்சோசையில் கவிதை யாத்துப் புதுவழி சமைத்தார். அன்றாட வழக்குச் சொற்கள், இயல்பான சொற்சேர்க்கை, சிறுவாக்கிய அமைப்பு என்பவற்றைப் பேச்சோசைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்தின்ார். செய்யுள் அடி அமைப்புக்கு ஏற்ப அன்றி, பொருள் அமைப்புக்கேற்ப சீர்பிரித்து வரிகளை அமைத்தார். நவீன கவிதை புதிய பரிணாமத்துடன் வளர்ச்சியடைய வழிசமைத் தவர் மஹாகவி உருத்திரமூர்த்தி.
சிறுகதை உலகில் சக்கரவர்த்தியாக மிளிர்ந்தவர் புதுமைப்பித்தன். ஆனால் ஜெயகாந்தன் அப்படியொன்றும் புதுமை செய்யவில்லை. அப்படிச்சொல்வதானால் உலகத்தரத்திலுள்ள சிறுகதைகளாக வ.அ.இராச
37

Page 20
ரத்தினத்தின் தோணி, இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம் என்பவற்றைக் குறிப்பிடவேண்டும். அழகுசுப்பிரமணியத்தின் “Professional Mourners' என்னும் ஆங்கிலச் சிறுகதை சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
ஜெயராஜ் இவைபற்றிச் சிந்திப்பாராக. எம்மவர் பற்றிய தாழ்வு மனப்பான்மை நீங்குவதாக! முல்லைமணி, வவுனியா.
புதிய ஆடையில் (அட்டையில்) மணப்பெண்போல் காட்சியளிக்கிறாள் ஞானம். வழக்கம்போல் கனதியான விஷயங்களுடன் கம்பவாரிதியின் நகைச்சுவைக் கட்டுரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததுடன், அட! கம்பவாரிதி இப்படிக்கூட எழுதுவார என்று வியக்கவும் வைத்தது. (பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள் வாழ்க). ஆனால் இக்கட்டுரையைக் கவிதைபோல் வரிமுறித்து இடத்தை வீணாக்கியதன் மர்மம் என்னவோ! பக்கங்களும்
கூடிவிட்டதல்லவா?
மனதில் தைத் த வேறு இரண் டொரு விடயங்களையும்
குறிப்பிடவேண்டும்.
1. யோகா பாலச்சந்திரனின் "உண்மைக்கதை - அதன் முடிவு
வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, நமது கலாசார மரபுகளின் தவிர்க்கமுடியாத ஒரு திருப்பமுமாகும்.
2. அந்தனி ஜீவாவின் ‘தீக்குள் விரலை வைத்தால் யதார்த்தமான வார்த்தை. சஞ்சிகை நடாத்திய அனைவருக்கும் அது பொருந்தும்.
3. அமரராகிவிட்ட எம்.எச்.எம்.ஷம்ஸின் எழுத்துலகம். அவருடைய குருநாதர் இலக்கியமணி கதா.செ. எங்கள் தமிழ்த்தாத்தா. அவரது குருபக்தியை கிராமத்துக் கனவுகள்’ நாவலின் சமர்ப்பண உரை, அவருக்கு திக்வயலில் ஏற்பாட செய்த மாபெரும் பாராட்டு விழா ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தி யவர். அண்மையில் அவர் எமக்கு அனுப்பிய ஒலிப்பேளைகளும் கடிதங்களும் அவர் பண்பை எடுத்துச் சொல்கின்றன. அவருடைய இலக்கிய வாழ்வின் முத்தாய்ப்பு ஞானத்தில் இடம்பெற்றது எத்தனை பொருத்தம்.
இரா.நாகலிங்கம்(அன்புமணி), மட்டக்களப்பு.
காலத்தின்தேவை வேறு, தனிநபர் ஆசை வேறு.
கம்பவாரிதியின் கிளாக்கர்ப்புத்தி சிற்றேடொன்றின் இடத்தைப் பறித்துள்ள வெற்றுவேட்டு. அவர் காணும் கிளாக்கள் பழைய நொத்தாரிஸ் கிளாக்கர் போலானவர். தற்காலம், ஒரு கிளாக்கராக வந்த து.உரத்திரமூர்த்தி என்னும் "மஹாகவி 1967இல் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து மாவட்டக் காணியதிகாரியாக மன்னாருக்குச் சென்றார். இதிலிருந்து அவரது உயர்வுகள் அதிகம். தற்கால கிளாக்கர்கள் இப்படித்தான் நிர்வாக சேவையில் மிக உயர்ந்துகொண்டு செல்பவர்கள். கிளாக்கர்கள் பற்றிய கணிப்பு இன்றைய நிலைக்குரியதல்ல.
கம்பவாரிதி எழுதியிருப்பது கதையா? கட்டுரையா? விரவரணமா? கதையுடனிணைந்த விவரணச் சித்திரமா? இது இலக்கிய வடிவமொன்றில் இணைந்திருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பும்.
இலக்கியம் காலத்தின் தேவையாகப் பிறக்கும். அது தனித்துவம்
38

பெறக் காலமே உறுதுணைசெய்யும். திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமணம் எல்லாம் அப்படித்தான். அவை எழுந்த காலத்தில் வெளியான இலக்கியங்கள் அதிகம். காலம் தேவையாக எடுத்துக்கொண்டவையே தனித்துவம் பெறும். இப்பொழுது வெளிவரும், வந்துகொண்டிருக்கும் இலக்கியங்களை காலம்தான் தெரிவு செய்யும், கம்பவாரிதி இதற்காகக் கஷ்டப்படத்தேவையில்லை.
தற்கால இலக்கிய நிலைமை, உலக இலக்கிய பரப்பு, மிலேனியச் சுருக்கம் என்பன தமிழ் இலக்கியத்தை வேறுவிதமாக விரிவு படுத்தலாம்; விரிவு படுத்துகின்றது. அதற்காக இந்த விரிவுக்குக் காரணமான ஒரு காலகட்ட இமாலய சாதனைகளை மறந்துவிடுதல், திரித்துக்கூறுதல் நன்றிகெட்ட செயலெனலாம். தமிழ் இலக்கிய உலகிற்குக் கம்பவாரிதியின் வரவு நல்லதுதான். அதற்காக அவர் எண்ணுவதெல்லாம் இலக்கியமென மருள வேண்டிய அவசியம் தமிழிலக்கிய உலகிற்கில்லை.
• கவிஞர் ஏ.இக்பால், தர்காநகர்.
ஜூலை மாத 26வது இதழ் என்னை அசத்திவிட்டது. - இரண்டு விடயங்கள். ஒன்று கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் கட்டுரை. படித்து முடிக்குமட்டும் சிந்தனைக்கோவைதான். கிளாக்கர்ப்புத்தி எம்மையெல்லாம் புதுப்பாதையைத்தேடி ஓடச்செய்யும் என்பது நிச்சயம். மற்றது நண்பர் மர்கூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களின் ‘எழுத்துலகக் கடிதம்' காலமும் இடமுமறிந்து காரியமாற்றிவிட்டீர்கள். ஷம்ஸ் அவர்கள் இன்னும் வாழ்ந்து எத்தனையோ செய்திடவேண்டிவர். சமூகங்களின் ஓர் உறவுப்பாலம். இறைவன் சித்தம் அப்படி. எப்படிச் சொன்னாலும் 26வது இதழ் "அப்ளாஸ்" பெற்றுக்கொண்டது நிச்சயம். எனது மனம்நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.
எம்.வை.எம்.முஸ்லிம், முன்னாள் கல்விப்பணிப்பாளர், கட்டுகாஸ்தோட்டை.
ஞானம் 26வது இதழில் கிளாக்கர்ப்புத்தி என்கின்ற தலைப்பிலான சிறுகதையுமல்லாத கட்டுரையுமல்லாத மசாலா ஒன்றை சிறந்த பேச்சாளரும் பக்திமானுமாகிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் வழங்கியுள்ளார்கள். யாழ்ப்பாண திருநகர் மீது அவருக்கு இருக்கின்ற அசூசை நன்கு புலப்பட எழுதியுள்ளார். எப்படியென்றால் யாழ்ப்பாணம் என்ற சின்னஞ்சிறிய பிரதேசத்தை ஈழம் என்கின்ற பிரதேசத்திலிருந்து பிரித்தெடுத்துப் பரந்த நிலப்பரப்பினை உடையதும் பல கோடிமக்களைத் தன்னகத்தே கொண்டதுமான தமிழகத்துடன் ஒப்புநோக்கி மனம் நொந்திருக்கிறார். பேசுவது வேறு, எழுதுவது வேறு. எதுவும் பிரசுரமாகும்போது அது ஆவணப்படுத்தப்பட்டதாகின்றது. ஆவணப் படுத்தப்படும்பொழுது அது தர்க்கரீதியாக இருத்தல் அவசியம். உண்மைக்குப் புறம்பாக இருக்கக்கூடாது.
யாழ்ப்பாணத்தில் கிளாக்கர்மாரைத்தான் மாப்பிள்ளையாகத் தேடி அலைகின்றார்கள் என்பது ஆசிரியரின் முடிந்த முடியா? டாக்குத்தர், லெச்சரர் இருவருக்கும் முறையே "ஆள் வலு சிவப்பு, சினிமாக் கதாநாயகன் போலஎன்ற அடைமொழிகளைக் கொடுத்திருக்கும் ஆசிரியர், கிளாக்கருக்கு நல்லசாதிமான் என்ற அடைமொழியைக் கொடுத்ததன் உள்நோக்கம் என்ன? ஆசிரியர் தனது கருத்துக்கு வலுச்சேர்ப்பவரே அல்லாமல் நடுநிலை நின்று பிரச்சினைகளை
39

Page 21
ஆராய்பவர் அல்ல என்பதற்கு இது தவிர வேறு ஆதாரம் வேண்டா!
இருக்கட்டும். ஆசிரியரின் ஆதங்கங்கந்தான் என்ன? யாழ்ப்பாணத் தவரின் பாரம் பரியங்கள், அவர்களுக்கேயுரிய தனியாற்றல்கள், உலகளாவிய ரீதியில் அவர்கள் அகலக்கால் பதித்துள்ள துறைகள், அவர்களது கல்விமேம் பாடு இவை பற்றியெல்லாம் அவருக்கு ஐயங்கள் ஏதும் அறவே இல்லை!
அவரது கவலையெல்லாம் தொல்காப்பியன், வள்ளுவன், இளங்கோ, கம்பன், ஒளவை, பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் வரிசையில் நம்மவர் எவரும் தமிழ் உலகைப் பொறுத்தவரை புரட்சியோ புதுமையோ செய்யவில்லை என்பதுதான்.
தொல்காப்பியன், வள்ளுவன், ஒளவை ஆகியோரது காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் திட்டவட்டமாக அறியப்படவில்லை. தொன்மையானது. ஆனால் ஆசிரியர் ஒப்புநோக்குதலுக்கு எடுத்துக்கொண்ட காலம் மிக அண்மித்தானது.
இனி இளங்கோவும் கம்பனும் பார்புகழும் கவிஞர்கள். புதுமையைச் செய்யவேண்டும் என்றோ, செய்துகாட்டுகிறேன் பார் என்றோ புறப்பட்டு அவர்கள் நூல்கள் படைக்கவில்லை. அப்படியாக யாரும் எண்ணிச் செய்வதில்லை. பாரதியாரின் பாடல்களை பாடசாலைகளில் புகட்டுவது தடைசெய்யபட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் அவரது பாடல்கள் பின்னர் பாராட்டப் பெற்றது; பாடநூல்கள் ஆக்கப்பட்டன.
புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் நல்ல படைப்பாளிகள். இதுவே ஒரு சாதாரண விமர்சனம். இதையே ஆசிரியர் செய்து காட்டியதுபோல மிகமிக மேம்படுத்தியும் காட்டலாம். அதற்காக ஒரு பிரதேசத்தை, ஒரு சமுதாயத்தைச் சீண்டுவது அனைவராலும் மதிக்கப்படும் ஒரு நிலையில் இருக்கின்ற இக்கட்டுரையின் ஆசிரியருக்கு அழகல்ல.
"கம்பவாரிதி என்ற பட்டத்திற்கு இலக்கான ஆசிரியர் புதுமை புதுமை என்று குறிப்பிட்டுப்பேசும் அளவுக்குக் கம்பர்கூட தானாகத் தனது சுயத்தில் ஒரு காவியம் படைக்கவில்லை என்பதை எப்படி மறந்தார்.
வால்மீகி இராமாயணம் இருக்க மற்றொரு இராமாயணத்தை படைத்ததில் என்ன புதுமையை ஆசிரியர் கண்டார்? உலகமே போற்றும் கம்பனின் கவித்துவத்தை சுட்டிக்காட்டி அவனுக்குப் புகழ்சேர்க்காமல் "ஆண்கற்பை வலியுறுத்தியவன் என்றொரு விதண்டாவாதத்தை எடுப்பது எதற்கு? போகட்டும். "செல்வர்கள் சமூகம் என்றொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை என்று ஓரிடத்திலும், யாழ்ப்பாண அறிவுலகைப் பிடித்திருந்த நடுத்தர வர்க்கத்துக்கே உரித்தான போலிக் கெளரவம் ஒன்று மற்றோர் இடத்திலும் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் இக்காரணிகளே புதுமையும் புரட்சியும் செய்யத் தடையாக இருந்தன என்பதை வற்புறுத்திக் கூறுகின்றார். அது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். ஆசிரியர் சாதிப்பதுபோல அல்லது, அங்கலாய்ப்பதுபோல இலக்கியத்தில் தமிழகம் சாதித்த அளவு யாழ்ப்பாணம் சாதிக்கவில்லை என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும் அதற்குக் காரணம் தமிழகத்தைப்போல யாழ்ப்பாணத்தில் சுயாதீனமான ஆட்சி நீடித்திருந்ததில்லை என்பதே.
இனி ஆசிரியர் அங்கலாய்ப்புடன் கட்டுரையில் சேர்த்துக்கொண்ட விடயங்களைத் தான் எந்தக் காலகட்டத்தில் இருந்து எழுதுகிறார் என்பதை
40

அறவே மறந்துவிட்டார். இது முழுக்க முழுக்க விஞ்ஞான யுகம். இன்ர நெற்றில் தான் செய்திகளைப் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். ஒரு சஞ்சிகையை விற்க முடியவில்லை! அவ்வளவிற்கு வாசிப்பு அடிமட்டத்திற்கு இறங்கிவிட்டது. இலக்கியத்தில் புதுமை படைப்பதாவது
கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா பட்டிமன்றம் நடாத்திக் கொண்டு நாம் இருக்கிறோம். இராமனின் ஏகபத்தினி விரதத்தை மீெச்சிப் பேசுகிறோம். வெளிநாட்டில் எமது பிள்ளைகள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைத் தெரிந்தும் தெரியாதவர்கள்போல் பாசாங்கு செய்கிறோம்!
இந்நிலையில் ஆசிரியர் நாவலர் பற்றிக் கருத்துக்கூற முற்பட்டமை அவரது தகுதியை விஞ்சிய ஒரு விடயம் என்பதுதான் அடியேனின் பணிவான கருத்து. முழு அளவிலான தீட்சைகளைப் பெற்றவரும், விபூதி தரித்து உருத்திராக்கம் அணிந்தவரும் அனைத்து இந்துக்களாலும் பண்டிதர்களாலும் வணங்கப்பட்டவருமான நாவலர் ஆங்கிலத்திலிருந்து பைபிளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்!
இந்த இடத்தில் ஒரு உண்மை மாத்திரம் தெற்றெனப் புரிகின்றது. ஆசிரியரின் கரம் வெறுமனே "சுந்தரத்தார் போன்ற யாழ்ப்பாணத்தின் பாமர மக்களை நோக்கி நீட்டப்பட்டதல்ல. யாழ்ப்பாணம் ஈந்த பண்டிதர்களையும், வித்துவான்களையும் பேராசிரியர்களையும் ஏன் பல்கலைக்கழக சமூகத்தையும் நோக்கி நீட்டப்பட்ட கரம்தான் அது.
வீ.என்.சந்திரகாந்தி, திருகோணமலை
வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் ஞானம் கனதி சேர்க்கிறது. இதழியல் வரலாற்றில் வீர்யம் மிக்க வரலாற்றுச் சுவட்டை ஞானம் ஆழப்பதிக்கும் என்பதை தொடர்ச்சியான ஞானத்தின் வருகை உறுதி செய்கிறது. கம்பவாரிதி இ.ஜெயராஜின் கிளாக்கர்ப்புத்தி உள்ளுணர்வின் வடிகாலாக இலக்கியக் குழுமத்தின்மீது நிதர்சன உண்மையை ஆணித்தரமாக முன்மொழிகிறது. வாழ்த்துக்கள்; அவரின் துணிவிற்கு. மர்கூம் ஷம்ஸின் எனது எழுத்துலகம் பல விடயங்களையும் அவரின் ஆளுமையையும் தரிசிக்க ஞானம் சாளரமாகியது. உக்குவளை அக்ரம்.
ஞானம் மூன்றாவது ஆண்டுமலர் கிடைத்தது. நன்றாக வந்திருக்கிறது. பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் பேட்டி நன்றாகவிருக்கிறது.
இன்னமும் அவரைத் துருவி விசாரித்திருக்கலாம் போலத் தோன்றுகிறது.
வ.மகேஸ்வரன், தஞ்சாவூர்.
ஞானம் மூன்றாவது ஆண்டுமலர் கிடைத்தபொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஞானம் எப்படி அமையவேண்டுமென என் மனத்துள் எண்ணியிருந்தேனோ அதே வடிவமைப்பிலே மூன்றாவது ஆண்டுமலர் கைக்குக் கிடைத்தபொழுது வியப்படைந்தேன்.
ஞானம் இதழின் கலை இலக்கியப் பங்களிப்பு வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மிகச்சிறந்த இதழாக இது விரைவிலே உயர்நிலை அடையும் என நான் எண்ணுகிறேன். ஞானத்துக்கு என் வாழ்த்துக்கள். அ.சண்முகதாஸ்
(பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், யாழ் பல்கலைக்கழகம்)
41

Page 22
- Лу.
பிணந்தின்னும் சாத்திரங்கள்
(குறுநாவல்கள்) ஆசிரியர் : சாரல்நாடன் வெளியீடு சாரல் வெளியீட்டகம், 7,ரொசிட்டா பல்கூட்டுச் சந்தை, கொட்டக்கலை. விலை : LIIT 140/=
புறக்கணிக்கப்பட்டு வந்த மலை பக எழுத்தாளர்களின் ஆற்றலைப் பறைசாற்றி வருபவர்களுள் முக்கிய மான ஓர் ஆய்வாளர் சாரல்நாடன். இவருடைய ஏனைய ஒன்பது நூல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தன
வாக அமைந்தனவோ அவை போலவே இதுவும்.
கே.எஸ்.சிவகுமாரன். வெள்ளைமரம் (சிறுகதைகள்) ஆசிரியர் : அல் அஸ"மத் வெளியீடு 85, இரத்தினஜோதி
சரவணமுத்து மாவத்தை, கொழு-13 விலை : Վեւ IT 150/=
இந்த வெளி ளை மரம் தொகுதிக்குள் அல் அஷ"மத்தின் 12 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கதைக்கான நடை, பாத்திரங்களின் வார்ப்பு, மொழியின் ஆளுகை போன்ற இன்னபிற அம்சங்களில் அளUமத் தனக்கே உரித்தானதுமான ஒரு பண்பைக் கொண்டிருக்கிறார்.
தெளிவத்தை ஜோசப்.
அன்பு பெருக
(சிறுவர் பாடல்கள்) ஆசிரியர் : இக்பால் அலி வெளியீடு : மக்கள் கலை இலக்கிய *ஒன்றியம், 18/13 பூரணவத்த, கண்டி
விலை ரூபா 35"= இக்பால் அலி எந்தப் பொருளையும் விடயத் தையும் யதார் தி த வியலோடுதான் பார்க்க முயல்கிறார். அதுதான் தற்காலத்துத் தேவையும்
LL. - ம."முது தெளபீக் B.A.
எழுதுகோலும் என் வெள்ளைத் தாளும் (களிதைகள்) ஆசிரியர் : ஷல்மானுல் ஹரீஸ் வெளியீடு : புதியதொனி, இளங்
கலை இலக்கியப் பேரவை, வாழைச் சேனை. விலை ; LITT 90/=
ஈழத்து இலக்கியத் துறையில் ஆர்வமும், தைரியமும், முயற்சியும் முதலீடாகியுள்ள இன்றைய சூழலில் நம்பிக்கை தரத்தக்கதாக மலர்ந்துள்ள புதிய அடையாளங்களின் வரிசையில் எழுதுகோலும் என் வெள்ளைத்தாளும் ஒரு குறிப்பிடத்தக்க வரவாகும்.
பின்னட்டைக் குறிப்பிலிருந்து.
விளக்கு (ஜுன் 2002, இதழ் - 04) ஆசிரியர்கள் த.வேலவன், மு.மயூரன் தொடர்புகளுக்கு 157, கடற்படைத் தளவிதி, திருகோணமலை, Gils86) : BUT 20/=
துயரி (ஜூன் 2002, இதழ் - 02) வெளியீடு தமிழ் ச் சங்கம் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில், இலங்கை.
42
 
 

இன்னும்.
அறுநூறு ஆண்டுகளில்
ಕTETತ್ತಿ
பக்கிப்களைப் புரட்டிப்பார்
அதிர்ந்து போவாப்
உாேதான விடைகளைக் கண்டு. இருள் தோபோது இருட்டில் մl Lներ இருவிழிகளையும் இயன்றதே திறந்தே பார்த்தாலும் நாள் கருங்களிப்போப், கரடியாப், மனிதனாப் - இன்னும் பேயாகவுந்தான் தெரிவேன்
நமக்காக விரிக்கப்படவில்லை
இந்த வலைகள்
என்ன செப்ட
இன்னொருவர் வாயினுக்குள்
நுழைகையில்
நாமுந்தான் சிக்கிக்கொள்கிறோம்
ஆதபோல்தான் சொல்கிறேனர்
ಕ್ರೆಟ್ರಿ 6:57:51:5ಣೆ
நமக்காக விரிக்கப்பட்டவை
தக்காக. எனக்காக..!
ஆனால் - நீயோ கால்களையும் தடையையும் வலைக்குள் திணித்தபடி என் - அந்தரங்க அறைக்குள் இழுத்து வருகிறாப் என்னையும் இணைத்துக் கொள்வதற்கு
மஞ்சளும், வெள்ளையுமாப்
நாள் -
வீதிகளில் உலவுரைகயில்
கருப்கல்போப், கரடியாப்த்தான்
துெரிவேனர்
உன் கண்களுக்கு
அப்போது இறுக - முடிக்கொள்கிறாய் உன் கண்களை இருட்டு கடும் இருட்டு எனின.? அதுவேதான் நானாக.
's్న
喃
ཕྱི་

Page 23
தேசத்துக்குள் ஒரு தெருச்சண
தேசத்திற்குள் ஒரு தெருச்சண்ை அசைக்க முடியாது என்கிறார் ஐ அசைப்போம் என்கிறார் அமைச் கைப்பைக்குள் உளவறியும் கருவி என்றார் ஒரு அமைச்சர்! அதைத் திசைதிருப்பி - கைக்குண்டு என் பைக்குள் இல் என்கிறார் ஜனாதிபதி சொகுசு வாகனங்கள் வாங்கியத் ஊழல் எனர்கிறார் அமைச்சர் வாகனங்களை வந்து பாருங்கள் என்கிறார் ஜனாதிபதி இது நல்ல கண்ணாமூச்சி ஆட்ட வட்டுக்கோட்டைக்கு வழிகேட்ட துட்டுக்கு ரெண்டு கொட்டைப் நான் எதுவும் செய்வேன் என்னை கோர்ட்டிலே நிறுத்த என மார்தட்டுகிறார் ஜனாதிபதி தெருச்சண்டை கண்ணுக்குக் குே ஆனால் இந்தத் தெருச்சண்டை கண்ணுக்கும் குளிர்ச்சியாக இல் காதுக்கும் குளிர்ச்சியாக இல்ை அழுக்குத் துணியை பகிரங்கமாகக் கழுவுவதால் அனைவர் முகத்திலும், அழுக்கே

டம்!
Tsiji
பாக்காம்
முடிட்ரீதி
ரிர்த்தி
26.5 L
են,
தெறிக்கிறது.
ன் இணைய முகவரி
ଜୋତ
N
п\gпапапn_magaziпе
ཕྱི་