கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.09

Page 1

ზავნანახატა -
6 in
2002

Page 2
கட்டைக் களைந் துவிடு கண்ணே!
பெண்ணே உன்னைக் கண்ணென்று கூறிடுவார் பெருமைகள் பல கூறி பெருமிக்கச் செய்திடுவார் ஏட்டினிலே அது இருக்க நாட்டினிலே கலங்குகிறாய் ஏணிப்படியதிலே ஏறிடுவாய் துயர்துடைக்க
விலங்கிட்டு உன்னை இருளதிலே போட்டது யார்? விழித்தெழுந்திடுவாய் அறுத்திடுவோம் விலங்கதனை குடும்பம் என்று கூறி குகைக்குள் உனை அடைத்தது யார் குதர்க்கம் பேசி உனை குட்டைக்குள் போட்டது யார்?
கற்பென்று கூறி கதிகலங்க வைத்தது யார்? கலைத்திடுவாய் போலிகளை கலக்கம் தெளிந்திடுவாய் வன்செயல்கள் உன்னை வதைத்திட்ட போதும் இனி வழி இருக்கு எமக்கிங்கே விழி கொண்டு பார்த்திடுவாய்
பொறுமைக்கு எல்லை என்று போலிப்போர்வை போர்த்திடுவார் பொங்கி எழுந்திடுவாய் போர்வைகளை அகற்றிடுவாய் திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சென்றாய் திக்கெட்டும் உனது சேவை அது தின்கிறதே உனதுடலை
வீதியிலே சோதனைகள் உன் விழிகளிலோ கண்ணிரோ வீட்டினிலே இரவதிலே “நைட்டியுடன் கைதுகளோ நாட்டினிலே போர் உன்னை நாராய்க் கிழித்ததுவோ நாணங்கள் களையட்டும் நியாயங்கள் கேட்டிடுவோம்
சமாதான ஒளி பிறந்து உன் சங்கடங்கள் தீர்க்கட்டும் சவாலாக நீ இருந்து சாகசங்கள் செய்திடுவாய் பாவை உனைப்பார்த்து பாரே வியக்கட்டும் பாடுபட்டு உழைத்திடுவாய் பாவையரை வாழவைப்பாய்.
மல்லிகா, மனோகரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர்: ஞா.பாலச்சந்திரன்
ஒவியர்: நா. ஆனந்தன்
கணனி அமைப்பு: கெ.சர்வேஸ்வரன்
P
தி.ஞானசேகரன் 19/7, பேராதனை வீதி, கண்டி. kag|T.Cu. -08478570 (Office)
08-234755 (Res.) 08-234.755
N
Fax -
E-Mail
gnanam magazinesayahoo.com
உள்ளே.
G|5Ír öITorob ...................... 23 'ഖ ரதர்' சிறுகதை
5Tió (UTñ? ••••••••••••••••••••••••••••••••••••••••••••• use... O 5 முல்லையூரான் அத உடைந்தவிடக்கூடாத . 9
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
O O JBL Qb GOD UTötö GIT எழுதத் தாண்டும் எண்ணங்கள் . II. Ο தரை. மனோகரன் இன்றைய இலங்கைத் தமிழ்க் கவிதையின் நவீனப் போக்குகள் . 3 ஏ.இக்பால் இலக்கியப் பணியில் இவர் . 34 ந.பார்த்திபன் நிலாந்தனின் படைப்பாக்க முயற்சி. 37
ஏ.யதீந்திரா
கவிதைகள்
கட்டைக் களைந்தவிடு 3,605 (3600): ..................................... O2 மல்லிகா. மனோகரன் காயஞ் சுமந்த காற்று . 33 த.ஜெயசீலன் சீதனச் சந்தையிலே . 41 கண.மகேஸ்வரன் 398,160T 6), su65 ..................................... 47 கந்தளாய் ஏ-தாரிக் இரண்டு அம்மணிகள் . 48 அருள்மணி
திரும்பிப் பார்க்கிறேன் .17 நூல் விமர்சனம் . 40 நெற்றிக் கண் .42 வாசகப் பேசுகிறார். 44
தஞ்சைக் கழதம் .36

Page 3
(XXზებშ.
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். . الر
இனங்களிடையே புரிந்துணர்வும் நாட்டில் சமாதானமும்
ஈழப்போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்கள் - உயிரழிவுகள், பொருட்சேதங்கள், எதிர்கொண்ட தலைக்குனிவுகள், ஏற்பட்ட மானபங்கங்கள், மனவடுக்கள் ஏராளம்.
இவற்றையெல்லாம் கண்டு தளர்ந்து விடாமல் எதிர்நீச்சல் அடித்தவர்கள் தமிழர்கள். அவர்களது வீரமும் தளரா உறுதியும் இன்று அவர்களைத் தலைநிமிர வைத்துள்ளன.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வை ஏற்படுத்த வகைசெய்துள்ளது. வடபுலத்தை நோக்கி மக்கள் பெருந்திரளாகச் செல்லத் தொடங்கியிருக் கிறார்கள். தென்புலத்திலிருந்து சாதாரண மக்கள், அரசியல்வாதிகள், பள்ளிச்சிறுவர்கள், மதவாதிகள் எனப் பலதரப்பட்ட மக்களும் வடபுலம் சென்று அங்கு நடந்த அனர்த்தங்களின் உண்மை நிலையை அறிந்துகொள்கிறார்கள். அங்குள்ள மக்கள் அவர்களை இனி முகத்துடனர் வரவேற்கிறார்கள்; உபசரிக்கிறார்கள். இதன் காரணமாக இருசாராருக்குமிடையே புரிந்துணர்வு ஏற்படுகிறது.
முஸ்லிம் சகோதரர்கள், தாம் இழந்த மண்ணைச் சென்று தரிசித்து அங்கு வேர்பதிக்க ஆயத்தமாகிறார்கள். வடபுலத்தில் சீரழிந்து போயிருந்த மக்களின் வாழ்வும் துளிர்விடத் தொடங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் புனருத்தாரண வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்நாட்டு மக்கள் யாவரும் தமது சொந்த நாட்டில் பயமின்றி, சுதந்திரமாக உலாவத் தொடங்கியிருக்கிறார்கள்.
இவையெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் ஏற்பட்ட நன்மைகள். புலிகளின் தடை நீங்கி, சமாதானப் பேச்சுகள் ஆரம்பமாகின்றன. இந்நிலையில் குட்டை குழப்பும் இனவாதிகள், அரசியல்வாதிகள் வழக்கம்போல் இனவாத விஷத்தைக் கக்கத்தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் இனவாதிகளுக்கே வெற்றி கிடைத்திருக்கிறது. இம்முறை அவ்வாறு இனவாதிகள் வெற்றியடைந்துவிடக்கூடாது. நல்ல முடிவு ஏற்படவேண்டும். இதற்குப் புரிந்துணர்வு மேலும் பலப்படுத்தப்படுதல் வேண்டும். புரிந்துணர்வால் ஏற்படுகின்ற, இனவாதிகளுக்கெதிரான மக்கள் சக்தியால்தான் அந்த நல்ல முடிவை ஏற்படுத்த முடியும். – 96forfouá
4.
 
 
 
 

நாம் Mariñr?
క్లబ్లీ
அது ஒரு அகதி முகாம். டென் மார்க்கின் ஒரு கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் அமைந்திருந்தது. அந்தப் பெரிய கட்டடம் முன்னொரு காலத்தில் ஒரு இராணுவமுகாமாக இருந்ததாம். இராணுவத்தினர் குடிமனைகளை அண்டிவாழ்வதற்கோ பயிற்சிகளில் ஈடுபடுவதற்கோ டென்மார்க் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. அதேபோல வெளி நாட்டார்களுக்காக அமைக்கப்படும் அகதி முகாம்களும் குடிமனைகளை அண்டி அமைந்திருப்பதை சாதாரண டனிஸ் மக்கள் விரும்புவதில்லை. இப்போதுதான் தளிர்த்து ஆகாயத்தை வியாபிக்கும் கரிய பெரிய மரக்காடுகள் சூழ ஒருமைல் தூரத்தில் அமைந் திருக்கும் ஒரு சிறிய புகையிரத நிலை யத்தை இணைக்கும் ஒரு சிறிய தார் வீதியில் நடந்து செல்வதே அமைதி நிறைந்து கிடக்கும்.
இந்த அகதிமுகாமில் தான் நாங்கள் ஈழத்துத் தமிழர்களும் எங் களது அகதி விண்ணப்பம் முடிவுக்கு வரும் வரை வாழ்ந்து வந்தோம். இந்த முகாமில் லெபனான், பாலஸ்தீனர்கள், குருட்டிஸ்தான், ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று 500க்கும் மேற் பட்டவர்கள் வாழ்ந்துவந்தோம் . ஆனாலும் தமிழர்களே பெரும்பான்மை யானவர்களாக வசித்துவந்தார்கள். இதனால் அடிக்கடி தேவையற்ற ாரணங்களுக்காக வெவ்வேறு இனத் தவர்களுடன் சின்னச்சின்ன அடிபாடு களும் இடம்பெறுவதுண்டு.
முல்லையுரான், டென்மார்க்.
இந்த முகாமிலி எங்கள் எல்லோருடனும் சேர்ந்து ஒரு சிங்கள இளைஞனும் வாழ்ந்துவந்தான். அந்த முகாமில் பல அறைகள் உள்ளன. ஓர் அறையில் நாலுபேர் வீதம் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அந்தச் சிங்கள இளைஞனோ தானே விரும்பிக்கேட்டு தமிழர்களோடு சேர்ந்து வாழாமல் வேறு சில ஈராக் இளைஞர் களோடு வாழ்ந்துவந்தான்.
அந்த முகாமில் பல வசதிகள் இருந்தன. பொதுவான சாப்பாட்டு அறை, பொதுவான பெரிய குளிய லறைகள், பொதுவான உள் ளக விளையாட்டறைகள் என்று ஏராளமான வசதிகள் இருந்தன. இதில் ஒரு பெரிய திரையரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் திரையரங்கில் இன்று மிகப் பிரபல்யமான உதைபந்தாட்ட நிகழ்ச்சி யொன்று தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட இருந்தது. இந்தத் திரையரங் கினுள்ளோ அன்றேல் மற்றும் பொது வான இடங்களிலோ அந்தச் சிங்கள இளைஞனைக் காணமுடிவதில்லை. தானாகவே ஒதுங்கி வாழ்வதையும், அண்மையில் சூழ்ந்துள்ள் காடுகளில் உலாச்சென்று வருவதையும் பலமுறை கண்டிருக்கிறோம். அவனைப் பற்றிய கிசுகிசுக்கள் பல அந்த முகாமில் உலாவந்தன. “அவன் ஒரு ஜே.வி.பி.க் காரன், வலு கவனமாகப் பழகவேண் டும்” என்பதை விடவும் அடுத்த வதந்தி மிகவும் அச்சம் தருவதாக இருந்தது. அதாவது அவன் நல்லாகவே ஆங்
5

Page 4
கிலம் பேசுகின்றான் என்றும் அதனால் டென்மார்க் முகாமில் கடமை புரியும் டனிஸ்காரருடன் பேசித் திரிகின்றான் என்றும் இங்கு வாழும் தமிழ் அகதிகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி அரசாங்கத்திற்கு அனுப்புவதற்காகவே வந்திருக்கின்றான் என்றும் அதனால் ஒரு நாளைக்கு “நைற் அடி” போட் டால் தான் நல்லது என்றும் பல தமிழர்கள் பேசிக்கொண்டனர்.
எங்களுடன் வாழ்ந்துவந்த யாழ்ப்பாணத்துச் சந்தை வியாபாரி ஏகாம்பரம் அண்ணர் கொச்சிக்காய்த் துளை கணிகளில் செய்தியாக எறிந்தார். அதாவது "அந்தச் சிங்கள வன் சாடையாய் தமிழும் கதைப்பா னாம், உவன் கொழும்பில வேலை செய்த கொக்குவில் தமிழ்ப் பொம் பிளை ஒண்டை கலியாணம் செய்திருக் கிறானாம். அதால கொக்குவிலிலும் தாங்கள் இரண்டு பேரும் குடியிருக்க ஏலாதென்றும், சிங்களப் பகுதியிலை யும் தாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாதென்றும் இதைவைச்சுத் தான் அகதி அந்தஸ்த்துக் கேட்டு வழக்கைச் சோடிச்சிருக்கிறானாம்” என்றும் சொல்லி அனைவரது கடன் களையும் உயரவைத்தார்.
"உவங்களைக் காதலிக்கிற எங்கடை பெட்டையளை சந்தியில வைச்சுச் சுடவேணும்.
எங்கட சனம் இன்னும் திருந் தேல்ல.” என்பது கூடவிருந்த திருவண்ணரின் விமர்சனம்.
என்னதான் இருந்தாலும் அந்தச் சிங்கள இளைஞனும் எங்களுடனேயே சேர்ந்தும் சேராமலும் கண்டால் மட்டும் ஒரு சிரிப்புடன் வாழ்ந்துவந்தான்.
இந்த முகாமில் வாழ்ந்து வந்த பல ஈழத்துத் தமிழர்களில் சிலர் இந்தக்
கால கட்டத்தில் நேரடியாகவே தாயகத்திலிருந்து பல்வேறு காவல் தடைகளையும் விசாக் கெடுபிடிகளை யும் தாண்டி வெற்றிகரமாக வந்து சேர்ந்தவர்கள். மற்றும் பலர் இந்தியத் தமிழகத்திலிருந்து பம்பாய் ஏஜெண்டு கள் மூலமாக வந்தவர்கள். இன்னும் சிலர் ஏற்கனவே ஜேர்மன், பிரான்ஸ், போன்ற ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். தத்தமது நாடுகளிலுள்ள பொருளாதார வசதி களை விடவும் டென்மார்க்கில் வசதி கள் அதிகம் தரப்படுவதாக அறிந்து இரவோடு இரவாக பொலிசாரின் கண் களில் மண்ணைத் தூவிவிட்டு எல்லை களைக் கடந்து வந்தவர்களும் இருந் தனர். இவர்களில் பலரும் ஜேர்மனியி லிருந்து வந்தவர்கள். இவர்களை “யேர்மன் காய்கள்” என்று முகாமில் அழைப்பதுண்டு. பல ஆண்டுகளாக வதிவிட உரிமை பெறாது வாழ்ந்தவர் களும், டென்மார்க்கிற்குள் வந்துவிட் டால் தத் தமது குடும் பத்தினரை தம்முடன் அழைத்துக்கொள்வதிலுள்ள இலகுநிலை கருதியும் டென்மார்க் நாட்டுக்குள் வந்தவர்கள்.
இப்போது அந்த முகாமில் உள்ள அகதிகள் எல்லோரும் அந்தத் திரை அரங்கத்தினுள் கூட ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் இன்று விசேட ஆட்டம் என்பதனாலும் டென்மார்க்கும் ஜேர்மனியும் எதிரெதிராக ஆடுவதனா லும் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு கூடியிருந்தது. ஆதலால் அந்த முகாமிலுள்ள அனைத்து நாட்டு அகதிகளுமே கூடிவிட்டனர்.
இப்போதெல்லாம் எந்த நாடு வெற்றிபெறும் என்பது பற்றியும், எந்த நாடு தோற்கவேண்டும் என்பது பற்றியும் தத்தமக்குள் கதைத்துக்

கொள்கின்றனர். எங்களது நாட்டைச் சேர்ந்த அந்தச் சிங்கள இளைஞனும் வந்து ஓர் ஓரமாக அமைதியாக அமர்ந்திருந்தான்.
ஆட்டம் ஆரம்பித்தது. டென்மார்க் நாட்டு விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்யப்படும் போது பலத்த கரகோஷத்துடனும், விசில் அடிப்புகளுடனும் அரங்கம் நிறைந்தது.
அதன் பின்னர், ஜேர்மனிய அணியின் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை விடவும் பலத்த ஆரவாரத்தில் அரங்கமும் அதிர்ந்தது. இந்த ஜேர்மன் நாட்டு அணிக்காக ஆரவாரித்தவர்ளில் மிகப் பலரும் தமிழர்களாகவே இருந்தார்கள். அவர்கள்தான் “யேர்மன் காய்கள்” என்று முகாமில் அழைக்கப் படும் ஜேர்மனியிலிருந்து டென்மார்க் கிற்குவந்து அகதிப்புகலிடம் கோரிய ஈழத்துத் தமிழர்களாவர். ஆட்டம் விறுவிறுப்பாகவே நடந்து கொண்டிருந் ჭნჭნl.
இந்த விடயத்தில் தமிழர்களே மிகவும் உற்சாகமாக இருந்தனர். இந்தப் போட்டி நிகழ்ச்சிகள் ஒரு போதைதரும் விடயமாகும். அந்தப் போட்டி நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொள்பவர் களைவிடவும் அதைப்பார்த்துக் கொண்டிருப்பவர் களே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். அதிலும் இந்த உதைபந்தாட் டம் என்பது இருக்கிறதே ஓர் இனப் போதையை ஏற்படுத்தும் ஆட்டமாகும். ஆசிய நாடுகளில், பொதுவாக இலங்கையில் இடம்பெறும் பாடசாலை உள்ளக இல் ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது எத்தனை மாணவர்கள் தமக் குள் தாமே
7
அடிபட்டுக்கொள்வதும் வாய்த்தர்க்கத் தில் ஈடுபடுவதும், தத்தமது இல்லங் களுக்காக அயராது உழைப்பதும் ஒருவருடைய பச்சை இல் லத்தை அடுத்த சிவப்பு இல்லத்தினர் நெருப்பு வைத்துக் கொழுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அதுவும் நாடுகளுக்கிடையே இத்தகைய உதைபந்தாட்ட இனக்குழு விளையாட்டு இடம் பெறும் போது கொலை, தற்கொலைகளில் கூட முடிவடைவதுண்டு.
“ஐரோப்பிய நாடுகளில் அந்த சமுதாய மக்களுடைய இன ஒன்று கூடலுக்காக இத்தகைய உதைபந் தாட்டப் போட்டிகளே துணை செய் கின்றன. வேறு எந்தவிடயங்களும் ஐரோப்பிய மக்களை இவ்வளவு தூரத் திற்கு ஒன்றிணைக்க உதவுவதில்லை” என்று ஓர் உளவியலாளர் கூறுகின்றார். இப்போது, ஆட்டத்தில் டென் மார்க் ஒரு கோலைப் போட்டுவிட்டது. ஒரே கரகோஷம்.
இப்போது கூட்டத்தில் சற்று அமைதி.

Page 5
எங்கே ஜேர்மனி தோற்றுப்போய் விடுமோ? என்ற ஆதங்கத்தில் ஏற்பட்ட அமைதியாகவும் அது இருக்கலாம்.
மேலும் உதைபந்தாட்டம் பற்றி யும் இது ரசிகர்களிடையே ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த விடயங்கள் பற்றியும் அந்த உளவியலாளர் குறிப்பிடும்போது.
"ஓர் குழுவை ஆதரிப்பவர்கள் ஏதோ ஒருவகையில் அந்தக் குழு வினரையோ அல்லது அந்த நாட்டை தெரிந்தவராகவோ, விரும்புபவராக வோதான் இருப்பார். அத்தகையவர் அந்நாட்டுக்குழுவை ஆதரிப்பார்.
அல்லது எதிர்மாறாக சம்பந்தப் பட்ட அந்த நாட்டைப்பற்றி ஏதும் தெரியாவிட்டாலும் அதற்கு எதிராக ஆடும் நாட்டைப்பற்றி ஏதாவது ஒரு விதத்தில் எரிச்சல் கொண்டவராக இருப் பார் . ஆகவே அவர் கள் அந்நாட்டுக்கு எதிரான ஆதரவைக் கொண்டிருப்பார்கள். இதுபோலவே தாங்கள் ஆதரிக்கும் அணியில் ஓர் கறுப்பர் விளையாடுவாரேயானால் அதனையும் வெள்ளையின ரசிகர்கள் பெரிதும் விரும்புவதில்லை. ஆனாலும் அந்தக் கறுப்பர் அவரது நாட்டுக்காக விளையாடுபவராக இருப்பார்.
இவ்வாறு இது சிக்கல் நிறைந்த உளவியல் காரணகாரியங்களைக் கொண்டிருக்கின்றது.
ஆனாலும் நாடு, இனம், நிறம், அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் சார்ந்தோ தமது ஆதரவை தெரிவிப் பவர்கள் ஒரு பொதுவான குழுவைச் சார்ந்தவர்கள். இவர்கள் மிகவும் ஆபத்தான ரசிகர்கள்.
மேற் குறிப் பிட் ட எதிலும் ஒன்றிலாவது இணைந்திருக்காதவர்கள் தனித்து விளையாட்டையும், விளை
யாட்டு வீரர்களின் திறமைகளையும் விரும் பிப் பார்த்து ஒரு குழுவை ஆதரித்துக்கொள்வார்கள். இத்தகைய குழுவினர்கள் மிகக் குறைவானவர் களே. இவர்கள் ஆபத்தில் லாத ரசிகர்கள்” என்று அந்த உளவிய லாளர் கூறியிருக்கிறார்.
அதோ! என்ன ஆச்சரியம். இப்போது மண்டபம் அதிர்ந்தது. அதுதான் ! ஜேர்மனி ஒரு கோலைப்போட்டுவிட்டது. ஒரு தமிழர் எழுந்து தான் அமர்ந்திருந்த நாற் காலியைத் தரையில் அடித் து உடைத்தார்.
டென்மார்க் கைத் துTசணை வார்த்தைகளால் ஏசிவிட்டு தரையி லேயே உட் கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்போதும் அவர் ஜேர்மன் மொழியில் ஏதோ சொல்லித்திட்டிய படியே இருந்தார்.
இப்போது அந்த உளவியலாளர் மீண்டும் ஞாபகத்தில் வந்தார். “ஒரு விளையாட்டு ரசிகர் ஒருபோதும் அந்த நாட்டினத்தவராகவோ, அந்த மொழி யைக் கொண்டிராதவரோ அல்லது அவர்களது நிறத்தை கொண்டிராத வரோ அந்த நாட்டுக்குழுவினருக்காக பயங்கரமான ரசிகராக இருப்பதில்லை. சாதாரணமாக அவர் ஒரு விளையாட்டு ரசிகராகவே இருப்பார். அத்துடன் போட்டி நிகழும்போதோ அல்லது போட்டி முடிந்தபின்போ அவர் ஒரு சாதாரண குணநலங்களை உடைய வராக இருப்பார்".
இப்படிப்பார்த்தால் சற்றுமுன்னர் அந்தத் தமிழர் ஏன் தான் அமர்ந்திருந்த கதிரையை உடைத்து ஆர்ப்பரித்தார்?
ஒன்றுமே விளங்கவில்லை.

செஞ்சோற்றுக்கடனா? அப்படி யும் இல்லை இது.
ஆணி டானை அடிபணிந்து வாழ்ந்ததன் விளைவா? ஆம் இருக்க 6оптub.
இப்போதுதான் அது நடந்தது. ஜேர்மன் அணியினர் அடுத்த கோலையும் போட்டுவிட்டனர்.
இப்போது பல தமிழர்கள் எழுந் தார்கள். கத்தினார்கள். கூக்குரலிட் டனர். மண்டபம் கிழிந்தது. இன்னும் சில தமிழர்களும் தமது கதிரைகளோடு எழுந்தனர்.
ஒரே கலவரம். மற்ற நாட்டு அகதிகள் திரையரங்கத்தைவிட்டுத் தலைதெறிக்க ஓடினர்.
வெளியே இருள் சூழ்ந்திருந்தது. தொலைக்காட்சி உடைக்கப் பட்டது.
இப்போது தமிழர்களிடையே யான கலவரம் வெளியே நடந்து கொண்டிருந்தது.
உள்ளே கதிரைகள் முறிந்து கிடந்தன.
அம்புலன்ஸ் விரைந்து வந்தது. படுகாயமுற்ற சில தமிழர்கள் அதில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
எஞ்சியவர்கள் கொஞ்சப்பேர் இருட்டிடை நின்றோம்.
இப்போதெல்லாம் அமையாதியா யிற்று. தனது இரத்தத்தை துடைத்தபடி கிருபா வந்தான்.
"உனக்கேனடா அடிச்சவங்கள்? உனக்கு ஏற்கனவே யாழ்ப்பாணத்தில வைச்சு ஆமி அடிச்சு நெஞ்சுநோவுக்கு மருந்தெல்ல எடுக்கிறாய். இதுக்குள்ள நீ ஏன் போனாய்?” இப்படிக் கேட்டான்
LjTL.
“என்ர மாமா, மாமி ஆக்கள் ஜேர்மனியில கனகாலமாய் இருக்கினம்.
அதுதான் நான் ஜேர்மனிய ஆதரிச்சன் அடிச்சுப்போட்டாங்கள்” என்ற கிருபா வின் பதிலைக் கேட்டு நாங்கள் அதிர்ந்துபோனோம்.
இப்போதுதான் அந்த இருட்டி னுள் காடு சூழ்ந்திருப்பது இருளோடு இருளாகத் தெரிந்தது.
அந்தக் காட்டுமரங்களைத் தவிர அவைகளிலுள்ள அழகிய மலர் களோ அதன்மேலுள்ள நீலவானமோ தெரியவில்லை. எல்லாமே இருட்டாகநாங்களும் நமது நாடும் எங்கள் இனமும்தான்.
"இங்கிட்ட வந்தும் ஏன் மச்சான் தங்களக்குள்ளய சண்டைய போடு றிங்க” இப்படிக்கேட்ட கொஞ்சுதமிழ் குரலுக்குரியவன் அந்த சிங்கள இளைஞன்தான்.
தொடர்ந்து கேட்டான். "ஏங்க மச்சான் இண்டைக்கு பூரீலங்காவும் டென்மார்க்கும் விளை யாடி இருந்தா யாரை ஆதரிப்பீங்க? யாரை அடிச்சிருப்பீங்க? என்னையா?.” என்றபடி அந்த சிங்கள இளைஞன் இருளில் மறைந்தான்.
கேள்வி பலமாக நெஞ்சுள் விரிந்தது.
இப்போதுதான் அந்த டனிஸ் உளவியலாளர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
"உதைபந்தாட்ட ரசிகர்கள் பலவகைப்பட்டாலும் ஒருபோதும் ஒருவரும் தனது நாட்டிற்கு எதிராக இருப்பதில்லை” என்பதுவே அது.
அவ்வாறெனில். நாம் யார்? நமது நாடெது?
நாம் பூரிலங்கா சேர்ந்தவர்களா?
இருளில் கலந்தோம் இருளாக. மழை தூறத் தொடங்கியது.
நாட்டைச்

Page 6
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
(கலாநிதி துரை.மனோகரன்)
முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர்
இன்றைய நிலையில் முதுபெரும் இலக்கிய வாதியாக எண்பது வயதைக் கடந்து விளங்குபவர், கே.கணேஷ் அவர்கள். பல வகைகளில் ஈழத்து இலக் கிய முன்னோடிகளில் ஒருவராக அவர் திகழ்கிறார். முற்போக்கு இலக்கிய சிந்தனையை இலங்கையில் விதைத்தமையில் கணேஷ் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கிய அவர், தம்மைப் போன்ற இன்னோர் உறுப்பினரான கே.ராமநாதனுடன் இணைந்து 1946இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினர். இதே போன்று, இவ்விருவரும் சேர்ந்து 'பாரதி (1946 - 1948) என்னும் முற்போக்கு இதழையும் வெளியிட்டனர். "தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் முற்போக்குக் கொள்கைப் பிரசாரத்திற்கென வெளிவந்த முதல் முற்போக்குச் சஞ்சிகை என்னும் பெருமை பாரதிக்கே உரியது" என்று தெளிவத்தை ஜோசப் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் பாரதிக்கும் தனியிடமுண்டு.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களில், கணேஷின் இலக்கியத் தொடர்புகள் பரந்துபட்டனவாக விளங்கின. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, முதலான தமிழக எழுத்தாளர்களுடனும், முல்க்ராஜ் ஆனந்த், பிரேம்சந்த், கே.ஏ.அப்பாஸ் போன்ற பிற இந்திய எழுத்தாளர்களுடனும் பழகி, தமது இலக்கிய உலகை விசாலப்படுத்தி வைத்திருந்தவர், அவர்.
சிறுகதை எழுத்தாளராகவும் இனங்காணத்தக்க கணேஷ், 1930 - 1950 காலகட்டத்தில் ஆறு சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றுள் இரு சிறுகதைகள், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மறைக்கமுடியாத இடத்தினை வகித்த மணிக்கொடியில் பிரசுரமாகின என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்ற சிறுகதையைத் தலைசிறந்த அங்கதச் சிறுகதைகளுள் ஒன்றாகப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். ஆயினும், அவரது ‘சத்தியபோதி மரம்' என்ற சிறுகதை மட்டுமே இப்போது வாசகருக்குக் கிடைக்கிறது.
சிறுகதைத்துறையைவிடவும் மொழிபெயர்ப்புத்துறையிலேயே கணேஷின் பங்களிப்பு மிகக் காத்திரமானதாக அமைந்துள்ளது என்று கூறவேண்டும். முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், ஹோசிமின், அல்தாய் முகம்மத்தோவ், லூ சுன், பார்பரா, குப்ரியானோவ், சண்டோர் பெட்டோவ்பி, தாராஸ் ஷெவ்சென்கோ உட்பட உலகளாவிய ரீதியில் பல இலக்கியவாதிகளின்
10
 

படைப்புகளை அவர் தமிழாக்கம் செய்துள்ளார்.
மலையகச் சிறுகதை வரலாறு எழுதிய தெளிவத்தை ஜோசப், தமது நூலில் பதினெட்டுப் பக்கங்களை கணேஷ"க்காகச் செலவிட்டதன் மூலம் அவருக்குச் சிறந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார். முதுபெரும் எழுத்தாளர் கே.கணேஷ் அவர்கள் மேலும் பல்லாண்டுகள் எழுத்துலகில் இணைந்திருக்க வேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் பேரவா.
‘மண்ணில் தெரியுது வானம்’
இலங்கையில் சமாதான முயற்சிகள் இழுபறிப்பட்ட நிலையிலும் ஒரளவு ஒப்பேறி வருவது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சமாதானப் பாதையிலிருந்து தொலைதுாரம் விலகிப்போய்க்கொண்டிருந்த நமது நாட்டை, அப்போக்கிலிருந்து விடுவித்துவிட முயற்சிக்கும் சமாதானவிரும்பிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். உலகத்தின் மிகப்பெரிய அறமாகக் கொள்ளத்தக்கது, நாடுகளில் சமாதானத்தை ஏற்படுத்துவதே ஆகும்.
இந்நாட்டில் சமாதான முயற்சிகள் முளைக்கும்போதெல்லாம் வழமை போன்று சோசலிஸப் போர்வையால் தமது இனவாதத்தை மூடி மறைக்கும் சிவப்புச் சட்டைக்காரர்களும், வில்லும் அம்பும் கொண்டு இனவாத விளையாட்டு விளையாடும் பூர்வீககால மனிதர்களும், தர்மம், மனிதாபிமானம் என்பவற்றை வசதியாக எங்கோ தொலைத்துவிட்டு, அறிவு வறுமை கொண்டிருக்கும் குருக்கள்மாரும், தாம்பெற்ற கல்வியை இனவாதப் பயிருக்கு உரமாகப் பயன் படுத்தும் கல்விமான்களும், சமாதான முயற்சிகளை ஊடறுப்பதையே தமது பணியாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளர்களும் சமாதானத்தின் வில்லர் களாக வலம் வருகின்றனர். இவர்களோடு, உலகத்திலுள்ள இரண்டு பெண் பைத்தியங்களும் சமாதானத்திற்கெதிராகச் சன்னதம் ஆடுகின்றன. இலங்கையில் சமாதானம் ஏற்படுவதைப்பார்க்க விரும்பாததுபோல அவ்வப்போது இந்தியா முகத்தைத் திருப்பிக்கொள்கிறது. சென்னை ஹிந்து பத்திரிகையோ, எங்கே இலங்கையில் சமாதானம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் அங்கலாய்க்கிறது.
சமாதான முயற்சிகளுக்கு இடையே இலங்கையில் இன்னொரு வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சும்மா இருந்து சுகங்கண்டு பழகிய சில அரசியல்வாதிகள், சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சமாதானம் என்பது முழுநாட்டு மக்களுக்கும் உரியது. சமாதானத்தால் பயனடையப்போவது தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் எல்லோரும்தான். ஆனால், சமாதான முயற்சிகள் தமிழருக்கு மட்டுந்தான் வரப்பிரசாதமாக அமையப்போகின்றன என்று தப்புக் கணக்குப்போட்டுச் செயற்படும் சில அரசியல்வாதிகள், நாளொரு கதையும் பொழுதொரு அறிக்கையும் விட்டுக்கொண்டிருக்கின்றனர். பொழுதுக்கும் சும்மா இருந்துவிட்டு, பிறர் பாடுபட்டுத் தேடும் சமாதானத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
இவ்வாறு, வெவ்வேறு முறைகளில் விபரீத நிலைப்பாடுகள்

Page 7
வெளிப்பட்டு வருகின்ற போதிலும், சமாதானத்தின் ஒளி தூரத்தில் தெரிவதும், சமாதானப் புறா சற்றுத் தாழப்பறக்க முயல்வதும் வரவேற்கவேண்டிய விடயங் களே. இலங்கை மக்கள் ஓரளவு சமாதானத்தின் சுவையை நுகரத்தொடங்கி விட்டனர். முழுமையான சமாதானம் தமக்கு முழுச்சுதந்திரத்தையும், முழு ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதையும் அவர்கள் உணரத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அரைவேக்காட்டு அறிக்கைகளும், முயற்சிகளும் மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் எடுபடப்போவதில்லை. இவ்வேளையில், மகாகவி பாரதியின் கவிதைவரிகள்தான் என் ஞாபகத்துக்கு வருகின்றன:
"கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ? - அட மண்ணில் தெரியுது வானம் அதுநம் வசப்பட லாகாதோ?”
யார் கட்டிய கோயில்?
1983இல் முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது நடைபெற்ற சம்பவமிது. ஆய்வுநோக்கில் தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தபோது, தஞ்சைநகர் மத்தியில் உயர்ந்து ஓங்கிக் கம்பீரமாகக் காட்சிதரும் தஞ்சைப்பெரியகோயிலைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. முதலாம் இராஜராஜசோழன் கட்டிய அந்தக் கோயிலின் அழகும், சிறப்பும் என்னைக் கவர்ந்திழுக்க, ஒரு ஞாயிற்றுக்கிழமை முதன்முதலாக அக்கோயிலினுள் பிரவேசித்தேன். அப்போது, தஞ்சாவூருக்கு வெளியில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினர் முன்னால் சென்று கொண்டிருந்தனர். குதூகலமாக அவர்கள் கோயிலைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, அக்குடும்பத்தில் அண்ணன் போல விளங்கியவன் பதினைந்து வயது மதிக்கத்தக்க தனது தங்கையைப் பார்த்துக்கேட்டான்: "இந்தக் கோயிலை யார் கட்டியதென்று உனக்குத் தெரியுமா?” தங்கை எந்தவிதத் தயக்கமும் இன்றி, உடனடியாகப் பின்வருமாறு பதிலளித்தாள்: "ஒ, தெரியுமே. இது சிவாஜி கணேசன் கட்டிய கோயில்”.
இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்தப் பெண் சிவாஜி கணேசன் நடித்த இராஜராஜசோழன் திரைப் படத்தைப் பார்த்திருக்கிறாள். சிவாஜி கணேசனுக்கும், இராஜராஜசோழனுக்கும் வித்தியாசம் தெரியாத அவள், தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது சிவாஜி கணேசனே என்று நம்பிவிட்டாள். இதன் விபரீத விளைவே அவளது பதில். தமிழ்நாட்டில் சினிமாவே அரசியலாகவும், அரசியலே சினிமாவாகவும் ஆகிவிட்ட நிலையில், பள்ளி மாணவர்களிடமிருந்து இத்தகைய பதில்கள்தான் வரும். எதிர்காலத்தில் இலங்கையிலும் இத்தகைய நிலைவராது என்பதற்கு என்ன
உத்தரவாதம்?
d s? *ޗޮރޮހީ>
12

இன்றைய இலங்கைத் தமிழ்க் கவிதையின்
(ஏ. இக்பால்)
பொதுவாக இன்று இலக்கியத்தின் எந்த வடிவமும் உலக இலக்கியங் களுடன் இணைந்து மரபு மாற்றம் பெற்றுள்ளதையும், பெறுவதையும் நாமறிகி றோம். தமிழ்க் கவிதையின் போக்கும் இந்த வீதியில் நடைபோட்டு மாற்றம் பெற்றிருப்பதையும் மேலோட்டமாக மட்டுமல்ல ஆழமாகவும் ஆய்ந்துணர முடியும். தமிழில் சங்க இலக்கியத்திலிருந்து கவி வடிவம் எவ்விதம் துவங்கிய தென்பதையும் மரபு ரீதியாகப் பா வடிவங்கள் எப்படி மாறியதென்பதையும் பொருள் வேறுபட்டு வளர்ந்த முறையையும் வரலாறு நமக்கு அறிவிக்கின்றது. தமிழ்க் கவிதைகளின் போக்கு பொருள்மாறியபோதும் யாப்பில் அடக்கத்துடன் வளர்ந்து வந்ததை மகாகவி பாரதி வரை அறிகின்றோம். மகாகவி பாரதியும் யாப்பு அணியிலிருந்து முற்றாக மாறியதாகத் தெரிய வில்லை.
ஒரு விடயத்தை விளக்குவதற்கெனக் கையாளும் வசன நடையை, உணர்ந்து ஊகித்துப் பன்முகக் கருத்துப் பெறுமளவில் கவிதைக்குப் பயன் படுத்திய வல்லமை பாரதிக்குண்டு. தமிழ்க் கவிதைப்போக்கை உலகக் கவிதைப் போக்குடன் இணைத்து நின்றதிலிருந்து, தமிழ்க் கவிதைப்போக்கே மாறுபடு வதையும் உலகக் கவிதை வரலாறு எமக்கு எடுத்துக் கூறும். பாரதியின் வசன நடை கவிதையின் இறுக்கம் அழுத்தமான தொனி என்பவற்றை இணைத்து றிற்பதைக் காணச்செய்யும். பாரதி நவீனக் கவிதைப் போக்கின் ஆரம்பப் புள்ளி என்பதை யாரும் மறுத்திடமாட்டார்.
இத்தொடர்ச்சியில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், நவீனத்தமிழ்க் கவிதைப் போக்கில் எவ்வித பாதிப்புமற்று பழைய கவிதை மரபின் தூவானமா கவே அநேக கவிஞர்கள் இன்றுவரைக் கவிதை படைக்கின்றனர்.
சி.சு.செல்லப்பாவின் "எழுத்து” புதிய கவிதை மரபொன்றை மேல் நாட்டிலக்கியத் தாக்கத்தால் ஏற்படுத்தியது. அது வசன கவிதை முயற்சிக்குக் காலாகியது. உண்மையில் வசனகவிதைப் பரம்பரை ஒன்றை "எழுத்து" தோற்று வித்ததால், தமிழ்க் கவிதைப் போக்கு வேறொரு திசையில் வீறுநடை போட் டதை நாமறிவோம். இக்கவிதைகள் யாவும் அகத்துண்டலை நம்பியே இயங்கி நின்றன. இக்கவிதைகள் ஜனரஞ்சகமாகாமல் போவதற்கு இதுவே காரணம். வசனகவிதையை இலேசாக்கித் தன்னுணர்ச்சிப் பாடல்களாக வானம்பாடிகள் பாடி மகிழ்ந்தனர்.
அகத்தூண்டலையும் தன்னுணர்ச்சியையும் தனிமனிதப் போராட்டத் தையும் பொருளாகக் கொண்டு புதுக்கவிதைகள் எழுந்ததால், மனிதன், சமூகம், வாழ்க்கை என்பன மறக்கப்படுகின்றதே எனும் உணர்வு மேலெழுந்தது. இப்படி யான புதுக்கவிதைப் போக்கை க.கைலாசபதி, வானமாமலை போன்ற முற்போக்காளர்கள் எதிர்த்தனர்.
இவர்களின் எதிர்ப்பின் பயன், புதுக்கவிதை சமுதாயம், இயக்கம், உழைப்பு பற்றிய பொருள்களில் பாட எத்தனித்தது. அதன்பின், க.கைலாசபதி,
நவீனப் போக்குகள்
13

Page 8
வானமாமலை போன்ற முற்போக்காளர்கள் புதுக்கவிதை உருவத்தை ஆதரித்தனர்.
தேசிய இயக்க வழியில் "ழரீ” எதிர்ப்புப் போராட்டத்தை “சுதந்திரன்" ஆரம்பித்த காலத்தில் இ.முருகையன், அ.ந.கந்தசாமி போன்றவர்களே மக்களுக்கு விளங்கும் மொழியில் கவிதை படித்தனர். அ.ந.கந்தசாமியின் "கடவுள் என் சோர நாயகன்", "மீனினத்து வீதியெல்லாம்.” எனத் தொடங்கும் கவிதைகள் கொடிகட்டிப் பறந்தன. புதுவை ரத்தினம், சாருமதி போன்றோர் இந்த வழியில் நின்றிலங்கினர்.
"இ.முருகையன், தான்தோன்றிக் கவிராயர், மகாகவி, கந்தவனம், இ.நாகராஜன், கே.சி.எஸ்.அருணாசலம், பாட்டாளிப்பாவலன் இரத்தினசிங்கம், நீலாவணன், பசுபதி, ஏ.இக்பால், பண்ணாமத்துக்கவிராயர், புதுவை ரத்தினம் இன்னும் பலர் இன்றைய பிரச்சினைகளை விளங்க வைக்கும் கவிதைப் போக்கைக் கைப்பற்றினர்” என அனந்த சுப்பிரமணியம் 06/11/1993 இல் வீரகேசரியில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
புதுமையான புனைவுதான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட இலக்கியத் தன்மையை வெளிப்படுத்தும். இவ்விதச் சிந்தனையை கவிதைப் போக்குக்குத் திருப்பிவிட்ட பெருமையை 1969களில் வெளியான எம்.ஏ.நு."மானின் “கவிஞன்” ஏடுதான் ஏற்படுத்தியது.
கவிதைப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை சண்முகம்சிவலிங்கம், எம்.ஏ.நு.மானின் கவிதைகள் கூறுகின்றன.
சாதாரணமாக அநுபவித்தறிந்தபோது, ஏற்பட்ட அசாதாரண படைப்புக்கள் எம்.ஏ.நு.மானின் “கவிஞன்” கவிதை ஏட்டுக்குப் பின்தான் இலங்கையில் எழுந்தன எனலாம்.
வளம் நிறைந்த புலமைப் போக்கை வலிந்த மொழியில் சேர்க்காது, இயல்பாகப் பேசும் மொழியில் அப்புலமைப் போக்கு கவிதையாக எழத் தொடங்கியது. படைப்பாற்றலுக்கு உதவும் சூழல், காரணிகள் எளிதாகக் கவிதைகளை வெளியாக்கி நின்றன.
இந்தப்போக்கு மரபு ரீதியான இலக்கணத்தை ஏற்காததினால் எதிர்ப்பு களும் கிளம்பின. புலவர் ஜின்னா ஷரிபுதீன் போன்றோர் "மரபு வழிதொடர்வோம்” எனப் பிரசாரம் செய்தபோதும், புதிய போக்கின் தீவிர வளர்ச்சி தடைப்பட வில்லை.
இலகு தமிழில் பேசுவதுபோல் எழுதும் கவிதைப்போக்கு மிகவும் விசாலமாகப் பரவியது.
உலகத்தில் நடந்த பல போராட்டங்களின் பின்விளைவுகள் பேசுவது போல் எழுதும் கவிதை மரபுக்கு உறுதுணை செய்ததெனலாம். 1917இல் நடந்த ருஷ்யப்புரட்சி, அதனால் வெளிவந்த விளாடிமிர் மாயாகோஸ்க்கியின் கவிதைகளின் தாக்கம், ஜப்பானிய ஹிரோசிமா அணுகுண்டுத் தாக்கத்திற்கு முன், பின் எழுந்த கவிதைகளின் தாக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் விளைந்த கவிதைகளின் தாக்கம், பாலஸ்தீனப் போராட்டத்தில் விளைந்த கவிதைகளின் தாக்கம் யாவும் தமிழ்க்கவிதை உலகையும் தாக்கி நின்றது. போர் மீது போர் தொடுத்த கவிதைகளின் போக்கு இலங்கைத் தமிழ்க்கவிதை யின் போக்கையும் மாற்றி நின்றதெனலாம்.
14

இந்தவழியில் இலங்கையில் ஜெயபாலன், சண்முகம்சிவலிங்கம், சேரன், எம்.ஏ.நு."மான், ரஸ்மி, இளைய அப்துல்லாஹற், திருமாவளவன், ஷகீப், விஜயேந்திரன், சோலைக்கிளி, அஷ்வக்கோஸ், என்.ஆத்மா, சிவசேகரம், வில்வரத்தினம், மு.பொன்னம்பலம் போன்று இன்னும் பலர் இதேபோக்கில் எழுதும் கவிஞர்களாகப் புதிய போக்கினில் செல்கின்றனர்.
இலங்கையில் 1.போராட்டப் பிரதேசங்கள் 2. வெளியேயுள்ள பிரதேசங்கள், 3.புலம்பெயர்ந்தோர் வாழும் பிரதேசங்கள் யாவும் புதுமையான, சுதந்திரமான, இயல்பான கவிதைகளைத் தமிழில் கொட்டின. இந்தக் கவிதைக் குவியலைத் தெரிந்து கொள்வதினால், இன்றைய கவிதைப்போக்கைக் கணக் கெடுக்கலாம். இந்தப் புதிய போக்கினையுடைய கவிதைக்குவியலுக்குரியவர்கள் நான் முன்கூறிய கவிஞர்கள்தான் என்பதை அடையாளங்கூறுதல் அவசியம். இன்னுமொரு முக்கிய விஷயம் இலங்கைக் கவிதைப்போக்கில் புதுமையையும் சுதந்திரப் பார்வையையும் செலுத்தியோர் பலருள் இ.முருகையன், இ.சிவானந்தன், சிவசேகரம், வில்வரத்தினம், சேரன், சண்முகம்சிவலிங்கம், ரஸ்மி, என்.ஆத்மா, ஷகீப், இளைய அப்துல்லாஹற் போன்றோர் விஞ்ஞானக் கல்வித்தேர்ச்சி பெற்றோர். இவர்களது கவிதைப்போக்கு முற்றிலும் புதுமையும் வளமுமுள்ள அறிவுசார்ந்த போக்கென்பது எனது அபிப்பிராயம்.
இன்றைய தமிழ்க் கவிதைகளில் வாழ்வின் தரிசனங்கள், வாழ்வின் இயல்புகள், கதை நாடகங்கள், உவமை உருவகங்களை உதறிக்கொள்ளும் தன்மைகள், தன்னை மறைத்து நம்மைத் திகைக்க வைக்கும் அதிர்ச்சியும், ஒன்றைச் சொல்லி இன்னொன்றை உணர்த்தும் தன்மைகள், ஒருங்கிணைந்து ஒன்றாய்க் காட்சி தரும் புலப்பாடுகள், பேசாதன பேசும் பான்மைகள் யாவற்றையும் சொற்களைக் கடந்து செல்லும் இயல்பையுடைய போக்கைக் காணலாம்.
போராட்டப் பிரதேசங்களின் தலைமை வன்னிக்கேயுரியது. வன்னியில் அண்மையில் வெளியான “ஆனைஇறவு” கவிதை நூல், போராட்டத்தின் கெடுபிடியையும், மக்களின் அவஸ்தையையும் எடுத்துக்காட்டுகின்றது. போராட்டம் பற்றிய கவிதைகள் யாவற்றையும் கவிஞர்கள் பார்வையாளர்களாக நின்றும் பங்கு கொள்ளும் மனப்பான்மையுடனும் எழுதியிருக்கின்றனர். மொழியை வீசியெறிந்து சுதந்திரமாகப் பேசும் கவிதைகள் இவை. இதுதான் இன்றைய தமிழ்க் கவிதைகளின் போக்கு. வெளியேயுள்ள போர்ப்பிரதேசமற்ற பகுதியில் கவிதைகள் முற்றிலும் பார்வையாளர்களாக நின்று எழுதப்பட்டவைதாம். புலம் பெயர்ந்தோர் அநுபவம் சட்டியில் இருந்து அடுப்பில் விழாமல் அடுப்புக்கல்லில் விழுந்த கதை போன்றது. இந்தச் சட்டி, அடுப்பு, அடுப்புக்கல் மூன்றின் விவரணமும் இவர்களின் கவிதைகளில் தொனிக்கின்றன.
இன்றைய கவிதைப் போக்கைச் சிற்றேடுகளும், வீடியோ, ஒடியோ நாடாக்களும், கவிதைத்தொகுதிகளுமே புட்டுக்காட்டுகின்றன. சிற்றேடுகள் கலை சார்ந்த அணுகுமுறைகளையும், இலக்கிய அர்ப்பணிப்புகளுக்கான செயற்பாடுகளையும், உலக இலக்கியத்தைப் புரியச் செய்வதையும், உயர்ந்த இலக்கியத்தை உருவாக்குவதையும் பிரக்ஞை பூர்வமாகத் தளமமைத்துச் செயற்படுகின்றன.
தேசிய ஊடகங்களெனக் கூறப்படும் தேசியப்பத்திரிகைகள், வானொலி,
a

Page 9
தொலைக்காட்சிகள் இன்றைய கவிதைப் போக்கை முற்றிலும் அறியாக் குருட்டுத்தன்மையுடன்தான் நிற்கின்றன. இவ்வூடகங்களை மீறி, இன்றைய கவிதைப் போக்கு தொலை தூரம்வரை பரந்து விரிந்துவிட்டது. ஊடகங்கள் பாமர மட்டத்தை உயர்த்தும் இலக்கியப் பணியினைச் செய்வதேயில்லை.
இன்றைய கவிதைப்போக்கின் எடுபிடிதான் பெண்ணியவாதம் சார்ந்த கவிதைகள் எனலாம். இதுவும் ஒரு போராட்டந்தான். ஆழியாள், சங்கரி எனும் சித்திரலேகா, ஸ"ல்பிகா, ஒளவை போன்றோர் மிகச் சுதந்திரமாக வீச்சும், பேச்சும் நிறைந்த தமிழில் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். இவர்களது கவிதைகள் ஏதோ ஒரு போர்ச்சூழலில் நின்று பாடுவதுபோல் தோன்றுகின்றன. இன்றைய கவிதைப்போக்கு இவ்விதம்தான் செல்வதையும் நாம் உணரலாம்.
அ. சு.வில்வரத்தினத்தின் “குமரி நமஸ்காரம்' எனும் கவிதை ஆ. திருமாவளவனின் புதிர் எனும் கவிதை இ. சி.சிவசேகரத்தின் "யாதும் ஊரே எனும் கவிதை ஈ. சேரனின் சிம்மாசனமும் சவப்பெட்டியும்' எனும் கவிதை உ. வ.ஐ.ச. ஜெயபாலனின் எட்டாவது பேய்" எனும் கவிதை ஊ. எம்.ஏ.நுட்மானின் புத்தரின் படுகொலை எனும் கவிதை எ. என். ஆத்மாவின் ‘ஆணலைகள்' எனும் கவிதை ஏ. ஏ.இக்பாலின் போதும் என்ற மனமே போதும்' எனும் கவிதை ஐ. சுல்பிகாவின் “பெண்’ எனும் கவிதை ஒ. ஒளவையின் “விடுதிரும்பிய என் மகன்’ எனும் கவிதை ஒ. சோலைக்கிளின் 'எனது உள்ளங்கையில் நான்’ எனும் கவிதை ஒள. சண்முகம்சிவலிங்கத்தின் அவள் நினைவு எனும் கவிதை இன்றைய தமிழ் கவிதைப் போக்கிற்கு உதாரணங்களாகக் கூறலாம். இவ்விதம் எத்தனையோ கவிதைகளையும் கவிஞர்களையும் தரமுடியும். விரிவஞ்சி விடவேண்டியுள்ளது.
நவீன காலநோக்கில் ஆற்றல் மிக்கக் கூறுகளை ஆக்கக்கூறுகளாக்கி வாழ்வுக்குப் பொருத்தமாக்கும் உயர் கவிதைகளை தமிழ் மொழியை வாலாயமாக்கியவர்கள் சுதந்திரமாகவே ஆக்கியுள்ளனர். ஆனால், மொழிவளச் செல்வாக்கினால் ஒரு கவிதை உருவத்தை உயர் நிலைக்கு ஆக்குவதில் மொழி அதிகமறிந்தோர் தம்மையும் மறந்து செய்துவிடுவர். அப்படிச் செய்தாலும் சுதந்திரக் கவிதைப் போக்கு அதில் தொனிக்கும். இந்தப் போக்கு இன்றைய தமிழ்க் கவிதையில் நிலைத்து நிற்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எங்கள் கவிதையில் எந்த வடிவமுமில்லை என்று கூறுவோரது கவிதைகளில் ஒரு வடிவம் இருப்பதைத் தானாகவே மறந்துவிடுகின்றார்கள். ஒரு மிகப்பழைய இலக்கணவாதி தற்காலக் கவிதை யாவற்றிலும் இலக்கணமுண்டு என்று கூறியதை நான் கேட்டிருக்கின்றேன்.
யார் எதைத்தான் கூறியபோதும், இன்றைய தமிழ்க் கவிதையின் போக்கு புதுமை நிறைந்ததே. சுதந்திரமான பார்வையுடையதே. அநுபவத்தின் கீறுகளும், அதிர்ச்சியான இயற்கைப் புனைவுகளும் அடங்கியவையாகப் பார்வை புதுக்கிப் பறந்து செல்கின்றதெனலாம். இது வளர்ச்சியின் கூறுதான். காலந்தான் இதைக் கட்டிக்காத்துச் சொல்லும்.

அந்தனிஜீவா
ஒரு நாள் கழிந்தது தலைநகரான கொழும்பில் மேடை நாடகங்களை அரங்கேற்றிய காலங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்.
எழுபதுகளில் நான் எழுதிய நாடகங்களை மேடைக்குக் கொண்டு வருவதில் அதிக அக்கறையுடன் ஈடுபட்டேன்.
நாடகத்தை மேடையேற்றுவது என்பது, நாங்களே பாதையை வெட்டி பயணம் போக வேண்டிய நிலைமை போன்றது. அவற்றையெல்லாம் மீண்டும் திரும்பிப் பார்க்கையில் சுவையான சுகானுபவங்கள்.
முதலில் நாடகப் பிரதியை எழுதியதன் பின்னர் நாடக அரங்கேற்றத் திற்காக மண்டபத்தை ஒழுங்கு செய்து விடுவோம்.
பின்னர் நாடக ஒத்திகை ஆரம்பித்து நுழைவுச் சீட்டுகளையும் நாடகம் பற்றிய விளம்பரத் துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டுவிடுவோம்.
எனது நாடக ஒத்திகை எப்பொழுதும் பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்திற்கு முன்னால் உள்ள "சுதர்ஸி மண்டபத்தில்தான் நடத்துவது வழக்கம்.
இந்த சுதர்ஸி மண்டபம் சிங்கள கலாசார நிலையத்திற்குச் சொந்தமானது. நாடக மேதையான தயானந்த குணவர்த்தன இதன் செயலாளராக இருந்தார்.
நாடக அரங்கேற்றத்திற்கு இரண்டு, மூன்று வாரங்கள் இருக்கும் பொழுது, தினமும் நாடக ஒத்திகை நடத்துவது வழக்கம்.
தினசரி எமது செலவுகளுக்கு பணம் தேவை. வேறு வருவாய் இல்லாத நிலையில் நாடக டிக்கட்டுகளை விற்றே பணம் தேடவேண்டும்.
அதனால் நாடகத்தில் நடிக்கும் ஓரிரு நடிகர்களுடன், அல்லது நாடகத் துறையில் ஈடுபாடுள்ள சிலருடன் டிக்கட்டுகளை விற்பனை செய்ய அலைந்து திரிவது வழக்கமாகும்.
நாடக ஒத்திகைச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தை டிக்கட்டுக்களை விற்பனை செய்வதன்மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நாடக டிக்கட்டுக்களை விற்பனை செய்வதற்கு நாடக அபிமானிகளான வர்த்தகர்களைத் தேடிச் செல்லவேண்டும்.
காலையில் செல்வது நல்லதல்ல. பகல் வேளையில் அல்லது மாலை மூன்று மணிக்குப் பிறகு செல்வதே உசிதமானது.
எப்படியாவது நூறு ரூபா டிக்கட் இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு மேலும் விற்பனை செய்து விடவேண்டும்.
பகல் வேளையில் ஒன்று அல்லது இரண்டு டிக்கட்டுகளை விற்றுவிடுவோம்.
பிறகு பசி வந்துவிடும். கையிலிருக்கும் காசுக்கு ஏற்ப வசதியான சாப்பாடு - பின்னர் நண்பர் ஒருவரின் வீட்டில் சிறிது ஓய்வு. பட்டினியாக
17

Page 10
வாழ்த்துகிறோம்.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத் தாளர் தெணியான் அவர்களின் அகவை 60 நிறைவை முன்னிட்டு சென்ற இதழில் அவர் எழுதிய “எனது எழுத்துலகம்’ கட்டுரையைப் பிரசுரித்திருந்தோம்.
தெணியானின் மணிவிழா யாழ்ப் பாணத்திலுள்ள அவரது கிராமத்திலும் பின்னர் கொழும்பிலும் இலக்கியவாதிகளால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1964இல் 'விவேகி' இதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ என்ற சிறுகதையுடன் ஆரம்பமாகிய அவரது எழுத்துப்பணி, நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், பல கட்டுரைகள், கவிதைகள், நூல்மதிப்பீடுகள், வானொலி நாட கங்கள், தொகுப்பு நூல்கள் என விரிந்துள்ளது.
1994இல் இவரது நாவலான "மரக்கொக்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது.
யாழ்ப்பாணத்து அடிநிலை மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை இலக்கியமாக்கி, அம்மக்களது துயரங்களுக்கு விடிவுகிட்டவேண்டும் என்ற நோக்குடன் இலக்கியம் படைக்கும் தெணியான், முற்போக்கு அணியில் வலுவாகக் காலூன்றி நான்கு தசாப்தங்களாக இலக்கியப் பணிபுரிந்து வருபவர்.
மணிவிழாக் காணும் தெணியான் பல்லாண்டு வாழ்க! அவரது இலக்கியப்பணி சிறந்தோங்குக! என ஞானம் வாழ்த்துகிறது.
இருந்த பகல் வேளைகளுமுண்டு.
மாலை ஐந்து மணிக்கு முன்னர் சில டிக்கட்டுகளை விற்பனை செய்துவிட்டு நாடக ஒத்திகைக்காக மண்டபத்திற்கு வருவோம்.
நாடக ஒத்திகை மாலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணிவரை நடைபெறும்.
நாடக ஒத்திகையின் போது தேநீர் சிற்றுண்டிச் செலவுகளையும் கவனிக்கவேண்டும்.
ஒத்திகை முடிந்த பின்னர் டிக்கட் விற்பனைக்காக வந்த நண்பர்களுக்கு சிறிய விருந்து வைக்கவேண்டும்.
விருந்து என்றால் சாப்பாடு அல்ல, சுவைபானம். அதை சுவைத்தவாறு பலதும் பத்தும் அலசப்படும்.
மறுநாள் எங்கே டிக்கட் விற்கச் செல்வது, அதிக டிக்கட்களை விற்றால் மண்டப வாடகையைச் செலுத்திவிடலாம், என முடிவு செய்வது போன்ற பல திட்டங்கள், சுவைபானம் உள்ளே சென்றதும் உருவாகும்.
பின்னர் நாங்கள் எங்கள் கூடுகளை நோக்கி கலைந்து விடுவோம். இப்படித்தான் எங்கள் ஒரு நாள் வாழ்வு கழிந்தது.
18
 

அது உடைந்துவிடக்கூடாது
4မွို
C
இருள் கண்மூட, ஒளி கண் திறக்கும் இனிய காலைதானென் றாலும், இருளினது ஆட்சியின் பிடி தளராததால் இயற்கையை இயல்பாக இரசிக்க முடியாத நிலையில் அந்த வானின் கண்ணாடியின் வழியே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த அந்த வாகனம், வவுனி யாவை எட்டிப்பிடிப்பதற்காக விரைந்து கொண்டிருக்கிறது.
பச்சைப் பசேலென்ற காடு, இருள் குவிந்து கிடப்பதுபோல இருமருங்கும் தெரிகிறது, வீதி வெளிச்சம் இடையிடையே தலை காட்டும்போது மட்டும் பசுமையாகச் சிரித்துத் தலையாட்டியது.
கண்டி வீதி - ஏ9 பாதை வாகனத்தின் ஒளியில் எதிரே நீண்டு தெரிந்தது. w
“சமாதானத்தின் பாதை" கொழும்பு போகும்போது, ஒரு பலகையில் பொதிக்கப்பட்டிருந்த வாசகம், மனதுள் பளிச்சிட்டது.
பாதை சீராக இருந்ததால் வாகனம் உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.
மடியிலிருந்த பொதியை என் கைகள் கவனமாக இறுகப் பற்றிக் கொண்டன.
அது உடைந்துவிடக்கூடாது. "இந்த வேகத்தில் செல்லும் வாகனம் தீடீரென வேகத்தைத் தடைப் படுத்தினால், பொதி எதிலாவது மோதி, உள்ளே இருக்கும் சிலை உடைந்துவிடலாமோ!' என்ற அச்சம்
யோகேஸ்வரி சிவப்பிரகாசம், யாழ்ப்பாணம்.
19
மனதினுள் எழுந்து கைகளை இயங்க வைத்திருக்க வேண்டும்.
ஒரு நீண்டகால ஆசை நிறை வேறும் நேரத்தில் அது நொருங்கி விட்டால்.
மனதிற்கு அது புரிந்ததால் பொதியைக் கைகள் இறுக்கி அணைத் துக் கொள்கின்றன.
அது நான் சிறுமியாக இருந்த காலம். ஐம்பதுகளில் ஓர் ஆண்டு.
எனது நண்பியின் வீட்டு முகப்பில் அன்னை மேரியின் சிலையொன்றை அமைத்தார்கள். வீட்டினுள் புகும் போதும், வெளியேறும்போதும் அந்த அன்புருவம் மனத்திற்குச் சாந்தி தருவது போல நான் உணர்வேன்.
அப்படி ஒரு சிலையை எனது வீட்டு முகப்பிலும் வைக்க வேண்டு மென்று எனக்குக் கொள்ளை ஆசை. அப்பாவிடம் எனது ஆசையை மெல்ல வெளியிட்டேன். மகளின் ஆசையை நிறைவேற்ற அவருக்கும் ஆசை இருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பணவசதி வேண்டுமே.
காலம் ஓடியது. மனதுள் ஆசை மட்டும் அப்படியே கிடந்தது.
நான் படித்துப் பட்டம் பெற்று ஒரு வங்கி உத்தியோகத்தரானேன்.
கை நிறையச் சம்பளம் கிடைத் தது. மனதினுள் கிடந்த ஆசை இடை விடாது தன்னை நினைவூட்டிக் கொண்டிருந்தது.
ஆனால் நாட்டு நிலைவரம் அதனை ஸ்தாபிப்பதைத் தடுத்தது.
ஷெல் வீச்சும் குண்டுவீச்சுக்களு மாகக் கிடந்த யுத்த பூமியில், வீடு

Page 11
எப்போது துகளாகுமோ? என்ற நிலை. வீட்டை விட்டே இடம் பெயர்ந்து அலையும் நிலை. எல்லாமே அந்த எண்ணத்தை அமுக்கி மேலெழ விடாது வைத்திருந்தன.
இந்த சமாதானத்தை எதிர்நோக் கும் சூழலில் இப்போது கொழும்பிற்கு வந்திருக்கும் இவ்வேளையில் கடை யிலே அந்த அன்னை மேரியின் சிலை யைக் கண்டதும் மனம் “அந்தச் சிலையை வாங்கு” என்று அடம் பிடித்து கால்களை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டது.
முன்பென்றால் விமானத்திலோ கப்பலிலோ பொருட்களை யாழ்ப் LJ T 6001 ud கொணர் டு செல் ல எத்தனையோ தடைகள் - கெடுபிடிகள். இப்போது சமாதான உடன் படிக்கையின் பயனாகத் திறக்கப்பட்ட பாதையு,டாக அச் சிலை யைக் கொண்டு செல்லலாமென்ற துணிவில் அதனை வாங்கிவிட்டேன்.
அதே உடன்படிக்கை எம்நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவருமென்று நாமனைவரும் நம்புகிறோம்.
இந்தச் சிலை எங்கள் வீட்டில் நிறுவப்பட்டு எந்தப் பாதிப்புமின்றி நீண்டகாலமிருக்குமென்று நானும் நம்புகிறேன்.
ஆனால் அதனைக் கவனமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு பாரியதாக அமைந்துவிட்டது. எனது கையில் தூக்கக்கூடிய சிலைதான்.
ஆனால் நீண்டதூரம் கொண்டு செல்லவேண்டுமே!
இந்தச் சிலை உடைந்துவிடக் கூடாது.
3Fins Ej.
அப்படி உடைந்துவிட்டால். அதைத் தாங்க முடியாது.
நிச்சயமாக உடைந்துவிடக்
20
அதனால் அதைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, சுற்றிவர றெஜிபோம் வைத்து, நல்ல கனதியான பெட்டியுள் பொதிசெய்தபின் அது ஒரு பெரிய பொதியாகிவிட்டது.
ஒருவகையாகச் சிலரின் உதவி யுடன் இதனை இம்முறை எப்படியாவது கொண்டுசென்று வீட்டில் நிறுவிவிடலா மென்ற நம்பிக்கை என்னுள் வேரூன் றிக் கிடக்கிறது.
இம்முறை சமாதானம் எப்படியும் வந்துவிடும். சிலை என் வீட்டில் நீடித்திருக்கும்.
அந்தக்காலத்தில் எவ்வளவு சுலப மாக இந்தச் சமாதானத்தை ஏற்படுத்தி யிருக்கலாம். இப்போது அதை ஏற்படுத்த எவ்வளவு முயற்சிகளும் உதவிகளும் தேவைப் படுகிறது! நோர்வேயின் உதவியுடன் அது எப்படி யும் கிடைத்துவிடும்.
ஆனாலும் அது சாத்தியமாகாது என்று எவ்வளவு பேர் கருதுகிறார்கள்? ஏன் சமாதானம் ஏற்படுத்துவேனென்ற ஜனாதிபதியே..?
அப்பப்பா! இந்தச் சிலையை வாகனத்தில் ஏற்றப்பட்டபாடு?
வாகனத்தின் உள்ளேயிருந்த பலரும் இதை வாகனத்தின் உள்ளே ஏற்ற முடியாதென்று கூறிவிட்டனர். வேறு இடத்தில் வைத் தாலும் உடைந்துவிடும்.
இரண்டு பேரின் ஆசனங்களுக் குரிய பணத்தைத் தந்தால் யாழ்ப் பாணத்திற்கு அதனைக் கொண்டு போய்ச் சேர்ப்பேனென உறுதியளித்த வாகனச் சொந்தக்காரரே அதனை ஏற்றமுற்பட்டதும் அதைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமென்றுவிட்டார்.
நண்பர்கள் சிலர் உதவமுன்வந்த தால் எப்படியும் அதனைக் கொண்டு போயே சேர்ப்பதென்று ஏற்றி எங்கள் மடியிலே வைத்துக்கொண்டோம்.

வவுனியா நகரம் விடிகாலைப்
பொழுதில் உயிர்த்துக்கொண்டிருக்
கிறது.
வான் நிறுத்தப்படுகிறது. உள்ளே இருந்தவர்கள் இறங்கிச் சென்று, அருகிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் தேநீரருந்தி, சிரமபரிகாரம் செய்து மீள்கின்றனர். நானும் நண்பர்களும் சிலையை மெதுவாக இருக்கையில் வைத்துவிட்டு இறங்கிச் சென்று தேநீரருந்தி மீள்கின்றோம். பயணம் தொடர்கிறது. சிறிது தூரம் சென்றதும் நீண்ட வரிசையில் நின்ற வாகன வரிசையின்
இறுதியில் எமது வாகனமும் இணைந்துகொள்கிறது.
வாகனச் சாரதி சென்று ஏதோ பதிகிறார்.
சுமார் எட்டுமணிக்கு வாகனங்
கள் பயணத் தைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.
சிறிதுநேரம் சென்றதும் மீண்டும் நடை.
வாகனச் சாரதி வாகனத்திற்கான பதிவு, காப்புறுதி முதலான பத்திரங் களின் நிழற்படப் பிரதிகளுடன் சென்று அவற்றைக் கையளித்து அனுமதிப் பத்திரம் பெறுகிறார்.
நிழற்படப்பிரதிகள் தேவைப்படு மெனத் தெரியாதவர்கள் அவற்றைப் பெறவும் முடியாத இடத்தில் தவித்துக் கொண்டு நிற்கிறார்கள்.
பயணிகளின் பொருட்கள் பரிசோதிக்கப்படுகின்றன. என் மடியி
லிருந்த பொதியும் பரிசோதனைக்குத்
தப்பவில்லை.
“என்ன சிலை? எதற்காகக் கொண்டு செல்கிறேன்?" இத்தியாதி வினாக்கள் சிங்களத்திலும் ஆங்கிலத் திலுமாகக் கேட்கப்பட்டு அனுமதி தரப்படுகிறது.
வாகனங்களின் கீழ்பகுதி முதல்
2.
ابن حسی *
۷۔
a ,"م•۔ ,
mm.
*
t
ノ
முழுபகுதிகளும் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படும்போது நாம் எங்கு எத்தகைய நிலையிலிருக்கிறோமென மனம் அலசத் தொடங்குகிறது.
சிறிது தூர இடைவெளியில் பல தடைமுகாங்கள்.
விசாரணைகள், பதிவுகள். ஏன் பரிசோதிக்கிறார்கள் ஏன் பதிகிறார்கள்? எதுவுமே புரியவில்.ை யார் பரிசோதிக்கிறார்கள்? அவர்கள் வாய்திறந்து பேசும் வரை அதுவும் புரியவில்லை.
இரண்டு பக்கங்களிலும் எரிந்து கருகிக் கிடக்கும் பூமியும் இடிந்து கிடக்கும் கட்டடங்களும் போல் எம் மனங்களும்.
அந்த அன்னையின் சிலையை அணைத்துக் கொள்கிறேன்.
அது உடைந்துவிடக்கூடாது. மீண்டும் பொதி பிரித்துப்பார்க்கப் பட்டு அதே விசாரணைகள். ஆனால் தமிழில்.
"விலை என்ன?” “பற்றுச்சீட்டு இருக்கிறதா?" வரை நீண்ட வினாக் கள். “இந்த சிலைக்கு வரி செலுத்த வேண்டும் என்ற பல்வியமான வேண்டு கோளில் வந்து நிற்கிறது.
"எங்கள் வீட்டிலே வைக்கத்தான்
f
a.
Դ.,
Yእዃ
கொண் டுபோகிறோம். அதற்கு
6urfauum?ʼ
எண் மனம் ஒப்பவில்லை.
சிலிர்த்துக்கொள்கிறது.
மனதிலிருந்தது சிறிது சூடாகவே நாவிற்கு வந்து வெளியே வந்து

Page 12
குதித்தது.
சில கணங்கள் வாதாடிய என்னை, அதன் பொறுப்பாளரிடம் செல்லுமாறு அவ்வலுவலர் கூறிவிட் LITT.
LD 601 Lỏ அலையெறிந்து கொணி டிருந்தது. நிதானமாகச் சிந்திக்கமுடியவில்லை.
எதிர்பாராத ஒன்றில் இடறிய வேதனை.
"தமிழர் உரிமைக்காகப் போரா டும் போராளிகளைப் பராமரிக்க வரி சேர்க்கப்படுவது நியாயமானதுதான்” என விளக்கம் தந்தார் பக்கத்திலே நின்ற வயோதிபப் பயணியொருவர்.
உதவிக்கு இரு நண்பர்களை அழைத்துக்கொண்டு பொறுப்பாளரிடம் போய்ச் சேர்ந்தேன்.
என் கடைக்குட்டி மகள் போன்ற ஒருத்தி. ஒட்ட வெட்டிய முடி. சீருடை யில் அச்சிறுமி மிக அமைதியாகவும் ஆளுமையுடனும் உட்கார்ந்திருந்தாள். “வீட்டுப் பாவனைப்பொருட்கள் எவையெவைக்கு வரிவிலக்கு உண் டென்று நிரலிட்டிருக் கிறோம் . அவற்றைத் தவிர்ந்த அனைத்திற்கும் நீங்கள் வரி செலுத்தித்தானாக வேண்டும்” என்று ஆணித்தரமாக அறிவித்தாள்.
"கடவுள் சிலைக்கும் வரியா?” மீண்டும் கேட்டேன்.
"நிரலிலில் லாத பொருட்கள் அனைத்திற்கும்”
“கோவிலுக்குக் கொண்டு சென் றாலுமா?”
"அப்படியென்றாலுந்தான்" நீண்ட கால இடைவெளியின் பின் யாழ் நாகவிகாரைக்கு வந்து நிஷடையிலிருந்த புத்தபகவான் என் நினைவினுள் எட்டி மென்முறுவல் செய்தார்.
அமைதியாக, பணிவாக,
22
உணர்ச்சிகளுக்கு வயப்படாமல் அழுத்தமாகப் பதிலளித்துக் கொண் டிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்த போது எல்லாவற்றையும் மீறிக் கொண்டு "இந்தப் பெண் நூறுவருட ஆயுளுடன் சிறந்த நிர்வாகியாகப் பரிணமிக்கவேண்டும்” என்று என் அறிவு வாழ்த்தியது.
உரிய இடத்தில் பணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு மீண்டேன்.
வான் புறப்பட்டது. ஆடி, அசைந்து, குண்டுங்குழியு மான அப்பாதையில் செம்மண்ணை வாரிப் படரவிட்டுக் கொண்டு அது செல்கிறது.
‘சமாதானத்தின் பாதை பலகையில் எழுதப்பட்ட அந்த வாசகம் நினைவிற்கு வருகிறது.
இருமருங்கும் எரிந்துபோய் பசுமையைத் தொலைத்துவிட்டுப் பரந்து கிடக்கும் பூமி.
ஷெல்லுக்கும் பதுங்கு குழி களுக்குமாக தலைகளையும் உடல் களையும் பறிகொடுத்துவிட்டு, முண்டங்களாக ஆங்காங்கு அடிமரங் கள் மட்டும் காணப்படும் தென்னங் காணிகள்.
இவையெல் லாம் மறைந்து பசுமையும் புதுமையுமாக, இந்தப் பூமி காட்சி தர, சமாதானம் இங்கு ஏற்பட்டேயாகவேண்டும்.
மாதாவின் முன் என் மனம் மண்டியிடுகிறது.
சாந்தமும் அமைதியும் தவழும் அந்தத்திருவுரு இப்பாதை வழியே பத்திரமாக எடுத்துச்செல்லப்பட்டு, என் வீட்டில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.
என் மனம் மன்றாடுகிறது.

நேர்காணல் மூதறிஞர் 6 வரதர் (தி.ச.வரதராசன்)
சந்திப்பு : தி.ஞானசேகரன் ஈழத்து நவீன இலக்கிய முயற்சிகளுடன் ஆறு தசாப்தங்களாகத் தொடர்புகொண்ட மூத்ததலைமுறை எழுத்தாளர் "வரதர். அவரது நீண்டகால எழுத்துப்பணியைக் கெளரவிக்கும் முகமாக இலங்கைக் கலைக்கழகம் அவருக்கு "சாஹித்திய இரத்தினம்" என்ற பட்டத்தை, இம்மாதம் முப்பதாம் திகதி நடைபெறவிருக்கும் சாகித்திய விழாவில் வழங்கிக் கெளரவிக்க இருக்கிறது. முதன் முதலாகத் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படும் இந்த உயர் விருதினைப் பெறும் வரதர் அவர்களைப் பாராட்டி அவரது நேர்காணலை வெளியிடுவதில் “ஞானம் பெருமையடைகிறது.
தி.ஞா. : தங்களுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த இளமைப்பருவம் பற்றிக் கூறுங்கள். தி.ச.வ. ; எனக்கு இலக்கிய ஆர்வத்தைத் தோற்றுவித்ததும் அதைத் தூண்டி வளர்த்ததும் என்னுடைய வாசிப்புப் பழக்கந்தான். ஐந்தாம் வகுப்பில் (எனக்கு அப்போது வயது பத்து) சிறிதே வாசிக்கப் பழகிக் கொண்டதும் எனக்கு வாசிப்பில் பயித்தியமே பிடித்துவிட்டது! - கைக்குக் கிடைத்த சஞ்சிகைகள், புத்தகங்கள், யாவற்றையுமே படித்தேன். அந்தக்காலத்தில் - 1935ஆம் ஆண்டளவில் சஞ்சிகைகள், பத்திரிகைகள், நூல்கள் மிக மிகக் குறைவாகவே வெளிவந்தன. அவையும் யாழ்ப்பாணத்தில் ஒதுக்குப்புறமாகப் பின்தங்கியிருந்த ஒரு கிராமத்தில் வாழ்ந்த எனக்கு மிக அரிதாகவே கிடைத்தன. இருந்தாலும், தேடித் தேடிப் படித்தேன்- கதைகளைப் படித்தேன். அப்போது எனக்குக் கிடைத்தவை பாரதம், இராமாயணம், காத்தவராயன் கதை, மயில் இராவணன் கதை, ஜகதலப் பிரதாபன் கதை, விக்கிரமாதித்தன் கதை - இந்த மாதிரியான கதைப் புத்தகங்கள்தாம். பிறகு, வீரகேசரி வாரப்பதிப்பில் வந்த கதைகள், ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன் போன்ற சில பத்திரிகைகளில் வந்த கதைகளைப் படித்தேன். பிரசண்ட விகடனில் நாரண. துரைக்கண்ணன் என்பவர் சற்றே புதிய வடிவத்தில் கதைகளை எழுதினார்.
ஈழத்திலும் இந்து சாதனம்' பத்திரிகையில் அதன் ஆசிரியராக இருந்த ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை ஓம் நான் சொல்லுகிறேன் என்ற புதுமையான தலைப்போடு எழுதிய தொடர்கதையை ரசித்து வாசித்தது நினைவிருக்கிறது. பின்னால் 'ஆனந்த விகடன்', 'கலைமகள்' சஞ்சிகைகளை வாசிக்கத் தொடங்கினேன். இந்த இரண்டு சஞ்சிகைகளிலும் பல சிறந்த எழுத்தாளர்கள்
23

Page 13
எழுதினார்கள். அவர்களுடைய எழுத்துக்கள் எனது தமிழ் அறிவையும், இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் வளர்த்தன என்பதை நன்றியோடு சொல்லவேண்டும். பிறகு தமிழில் பல சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அகப்பட்ட எல்லாவற்றையும் படித்தேன்.
இந்தக் காலத்தில் நல்ல கதைப் புத்தகங்களும் நிறைய வரத்தொடங்கி விட்டன. கிடைத்தவை எல்லாவற்றையும் வாசித்தேன். எத்தனை எழுத்தாளர்கள்! நல்ல எழுத்தாளர்கள் நிறையவே தமிழில் தோன்றியிருந்தார்கள். என்னுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவர்கள் என்னுடைய தமிழ் அறிவையும், கருத்து நிலையையும், எழுத்துத் திறனையும் வளர்த்தவர்கள் பலராயினும் அவர்களில் மூன்று பேரைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். முதலில் கல்கி. அதன்பின்னர், புதுமைப்பித்தனும், வி.ச.காண்டேகரும்.
இப்படி என்னுடைய இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியதும் எழுத் தாற்றலை வளர்த்ததும் என்னுடைய வாசிப்புப் பழக்கந்தான். பத்தாவது வயதில் வாசிக்கத் தொடங்கிய நான், இன்று எழுபத்தெட்டு வயது நிரம்பிய நிலையிலும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
தி.ஞா. : தங்களை எழுத்துலகில் காலடி பதிக்கவைத்த ஆரம்பப் படைப்புகள், அவை வெளிவந்த சஞ்சிகைகள், வெளிவந்த ஆண்டுகள் முதலியவற்றைக் கூறுங்கள். தி.ச.வ. என்னை எழுத்துலகில் காலடி எடுத்து வைக்க உதவியது ஈழகேசரி. சரியாகச் சொன்னால் ஈழகேசரியோடு இணைந்து வாராவாரம் வெளிவந்த கல்வி அனுபந்தம் தான். என்னுடைய எழுத்துத் துறையின் முதற்படி, கல்வி அனுபந்தத்தில் ஈழகேசரி இளைஞர் சங்கம்' என்று ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பில் நானும் ஓர் உறுப்பினனாகச் சேர்ந்தேன். உறுப்பினர்கள் கல்வி அனுபந்தத்தில் சிறுசிறு கட்டுரைகள் எழுதுவோம். அந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த சிலர் பின்னால் பிரபலமான எழுத்தாளர்களாக வளர்ந்தார்கள். அவர்களை அப்படி வளர்த்து எடுத்தவர் சங்கத்தை நடத்திய “தாத்தார். அந்தத் தாத்தா என்ற புனைபெயருள் இருந்தவர் ஈழகேசரியின் ஆசிரியராக - அப்போது இளைஞராக இருந்த சோ.சிவபாதசுந்தரம் என்பதையும் பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்.
என்னுடைய எழுத்து வெறி மிக மிக வேகமாக - நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வர, நான் எழுதிய சிறுகதை ஒன்று "ஈழகேசரியில் (கல்வி அனுபந்தம் அல்ல) - அதுவும் ஆண்டு மலரில் வெளிவந்துவிட்டது. கதையின் பெயர் 'கல்யாணியின் காதல் ( அந்தக் கதையின் பெயரும் எழுதிய காலமும் என் நினைவிலிருந்து எழுதியவையல்ல. செங்கை ஆழியான் எழுதிய ஒரு வரலாற்று நூலிலிருந்து பெறப்பட்டன.)
தி.ஞா. : தங்களை எழுத்துலகில் பிரபல்யப்படுத்திய சிறுகதை எது? அது தோன்றிய பின்னணி பற்றிக் கூறுங்கள்.
தி.ச.வ. எழுத்துலகில் என்னைப் பிரபலப்படுத்திய சிறுகதை என்று என்னால் எதையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. என்னுடைய ஒவ்வொரு சிறுகதையும் என்னை மெல்ல மெல்ல உயர்த்திப் பிரபல்யமாக்கியுள்ளன. ஆய்வாளர்கள் பலர் என்னுடைய சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லும் கதை ‘கற்பு.
24

அந்தக் கதையைப்போல பல நல்ல கதைகளை நான் எழுதியிருக்கிறேன். எப்போதோ, யாரோ ஒரு பெரியவர் - பேராசிரியர் சிவத்தம்பியாக இருக்கலாம் - ஒரு நல்ல கூட்டத்தில் அந்தக் கதையைப் புகழ்ந்து பாராட்டிப் பேசியுள்ளார். அதன் பிறகு என்னைப்பற்றி - என்னுடைய கதைகளைப் பற்றி பேசுகிறவர்கள் அந்தக் கற்பையே தூக்கி எடுத்துச் சொல்கிறார்கள். - இது உலகவழக்கம்.
தி.ஞா. : தங்களது இலக்கிய நோக்குப் பற்றிக் கூறுங்கள். தி.ச.வ. : நான் எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் - ஈழகேசரிக் காலத்தில், என்னுடைய எழுத்தின் நோக்கமே நான் எழுதுவதை அச்சில் பார்ப்பதாக மட்டுமே இருந்தது. அநேகமாகப் பல எழுத்தாளர்களுடைய தொடக்க கால நோக்கம் இப்படித்தான் இருந்திருக்கும். பின்னால் என்னுடைய அதிக வாசிப்பின் பயனாகச் சற்றே அறிவு முதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, என்னுடைய எழுத்தைப் படிப்பதனால் யாரோ ஒரு சிலருக்காவது என்னுடைய கருத்துக்கள் பலன் தரவேண்டுமென்பது எனது நோக்கமாக இருந்தது. இப்போதும் அதுவே எனது நோக்கம். என்னுடைய கருத்துக்கள் பகுத்தறிவு, மனிதநேயம், அறவழி, சமூகத்தில் காணப்படும் அநியாயங்களுக்கான எதிர்ப்பு, தாழ்வுற்று நலிவுற்ற வருக்கான குரல், - இந்தமாதிரியாக இருக்கும். தி.ஞா. : இலங்கையின் முதலாவது எழுத்தாளர் சங்கத்தை 1943இல் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்’ என்ற பெயரில் நிறுவிய பிதாமகர் தாங்கள் என அறிகிறோம். அதற்கான எண்ணக்கரு தங்களுக்கு ஏற்பட்ட பின்னணி, ஏனையோரின் ஆதரவு போன்றவற்றைக் கூறுங்கள். தி.ச.வ. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவன் நான்தான் என்பதை இன்றைக்கும் நினைத்துப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
ஈழகேசரியில் எழுதத்தொடங்கியதும் என்னுள் நானும் ஒரு எழுத் தாளன், இலக்கியவாதி என்ற எண்ணம் தலைதூக்கியது. என்னொத்த இலக்கிய வாதிகளுடன் அளவளாவிக் கலந்துரையாடவேண்டுமென்ற ஆவல் உண்டா யிற்று. ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த அ.செ.முரு கானந்தன், அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன் போன்ற சிலருடன் கடிதத் தொடர்பு கொண்டேன். எங்களுக்குள் ஓர் இலக்கிய சங்கத்தை ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைத்தேன். நல்ல வரவேற்பிருந்தது. நண்பர்களின் சந்திப்புக்காக காலமும் இடமும் குறிப்பிட்டு சில நண்பர்களுக்கு அறிவித்தேன். அவர்களும் தமக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவித்தார்கள்.
13.06.1943 யாழ் நகரில் கன்னாதிட்டியிலிருந்த ரேவதி குப்புச்சாமி என்ற சிற்பக் கலைஞரின் வீட்டு விறாந்தையில் 15 - 20 பேர் கூடினோம்.
இப்படித்தான் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் தொடங்கப்பட்டது. இந்தச் சங்கத்துக்கு புதுமைப் பித்தர்கள் சங்கம் என்று பெயர் வைப்பதென்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால் அன்றைய கூட்டத்துக்கு வந்த பெரும்பான்மை யினரால் அந்தப்பெயர் நிராகரிக்கப்பட்டுவிட்டது. தி.ஞா. : 1946இல் வெளிவந்த 'மறுமலர்ச்சி சஞ்சிகை ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் புதியதொரு உத்வேகம் அளித்ததாக அறிகிறோம். மறுமலர்ச்சி
25

Page 14
சஞ்சிகையின் தோற்றம் அதன் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள். தி.ச.வ. : ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு மறுமலர்ச்சி மிகச் சிறப்பான பணியாற்றியிருக்கிறது. அப்போது ஈழத்தில் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்த நல்ல நல்ல எழுத்தாளர்கள் பலரும் மறுமலர்ச்சியில் கதை களைப் படைத்திருக்கிறார்கள். இவர்களைவிட புதிய எழுத்தாளர்கள் சிலரை யும் மறுமலர்ச்சி கண்டெடுத்துள்ளது. செங்கை ஆழியான் தொகுத்து, கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பெற்ற 'மறுமலர்ச்சிச் சிறுகதைகள் நூல் இதை நன்கு தெளிவு செய்யும். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்திலேயே மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பத்திரிகை தயாரிப்பதென்று தீர்மானித்தோம். அதற்கும் நான்தான் ஆசிரியராக இருந்தேன். கையினால் சில இதழ்களைக் கையெழுத்துப் பத்திரிகையாகத் தயாரித்தோம். எங்களுக்குள் ளேயே மாறிமாறி வாசித்து மகிழ்ந்தோம். மறுமலர்ச்சியை அச்சுப் பத்திரிகையாக வெளியிடவேண்டுமென்ற கனவு என் மனத்தில் படரத்தொடங்கிற்று.
எத்தனையோ சிந்தனைகள், நண்பர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றபிறகு 1945இல் அந்தக் கனவு நனவாயிற்று. மறுமலர்ச்சிச் சங்கத்தி லிருந்த ஆர்வமுள்ள ஐந்து நண்பர்கள் சேர்ந்து சிறு முதல் போட்டு மறுமலர்ச் சியை வெளியிட்டோம். நான், எனது ஊர் நண்பரான க.கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சர சர்மா, க.இ.சரவணமுத்து (சாரதா) இந்த ஐந்து பேரும் தான் மறுமலர்ச்சியின் முதலாளிகள்! நண்பர் அ.செ.முருகானந்தனையும் கெளரவ உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டோம். தொழில் அறிவோ அநுபவமோ இல்லாத நாங்கள் அந்த நேரம் இப்படி ஒரு சஞ்சிகையைத் துணிந்து வெளியிட்டதை நினைத்தால், இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.
வாசிப்பு அநுபவமும், கற்பனையும், அளவு கடந்த ஆர்வமும்தான் எங்களுடைய பெரிய மூலதனங்களாக இருந்தன. அந்தக் காலத்தில் இலக்கியம் என்றால் கவிதை உருவில் வந்த கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவை கள்தான் என்றும், புதிய நாவல்கள் சிறுகதைகள் எல்லாம் வெறும் பொழுது போக்குச் சரக்குகள் என்றும்தான் கற்றறிந்தோரிடம் கருத்து இருந்தது. இந்தக் கருத்தை மாற்றி இன்றைய எழுத்தாளர்கள் - நாங்கள் எழுதுகிற நாவல்கள், சிறுகதைகள், புதிய கவிதைகளும் இலக்கியம்தான் என்பதை நிலைநிறுத்தவேண்டும் என்பதே எமது பெருநோக்காக இருந்தது. காலப் போக்கில் மாறிவந்த இந்தக் கருத்துக்கு நாங்களும் ஏதோ சிறு உதவி செய்தோம்.
ஆயினும் மூன்று ஆண்டுகளில் இருபத்தைந்து இதழ்களை வெளியிட்டு விட்டு மறுமலர்ச்சி படுத்துவிட்டது. தி.ஞா. : 1943இல் ஈழகேசரியில் தாங்கள் எழுதிய ‘ஓர் இரவிலே’ என்ற முதற்கவிதையே, ஈழத்தின் முதலாவது நவீன புதுக்கவிதை எனக் கூறப் படுகிறது. புதுக்கவிதை எழுதுவதற்கான எண்ணக்கரு எவ்வாறு ஏற்பட்டது. புதுக்கவிதைக்கு அக்காலத்தில் எத்தகைய வரவேற்பு இருந்தது? தி.ச.வ. அந்தக்காலத்தில் நா.பிச்சமூர்த்தியும் வேறு சிலரும் வசனகவிதை என்று சில கவிதைகளை எழுதியதை நான் பார்த்தேன். அதற்கு முன்பே
26

பாரதியாரும் வசன கவிதைகள் எழுதியிருந்தது எனக்குப் பின்னால்தான் தெரியும். பிச்சமூர்த்தியின் "வசனகவிதை என்ற இலக்கிய வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது. எதையாவது புதுமையாகக் கண்டால் நானும் அந்த மாதிரி ஏதும் செய்து பார்க்கவேண்டுமென்று முயல்வது எனது இயல்பு. நானும் வசனகவிதை எழுதிப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதன் விளைவுதான் ‘ஓர் இரவிலே என்ற எனது வசனகவிதை, வசன கவிதை என்பதுதான் இப்போது புதுக்கவிதை என்ற பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. அந்தக் கவிதை ஈழகேசரியில் வெளிவந்தபோது அதற்கான எதிரொலி எப்படியிருந்ததென்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் தமிழிலக்கிய மறுமலர்ச்சியை விரும்பிய நண்பர்கள் எல்லாரும் அதை நிச்சயம் வரவேற்றிருப்பார்கள்.
தி.ஞா. : 'ஆனந்தன்' என்ற சஞ்சிகையை 1952இல் வெளியிட்டீர்கள். அதன் பணிபற்றிக் கூறுங்கள். தி.ச.வ. மறுமலர்ச்சியை நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பிறகு, ஏதாவது சஞ்சிகை வெளியிடவேண்டுமென்ற ஆவல் மனதுக்குள் இடித்துக்கொண்டே இருந்தது. அச்சகம் கைவசம் இருந்தது. ஆனாலும் மாத சஞ்சிகையை வெளி யிடத் துணிவு வரவில்லை. அன்றைய பொருளாதார நிலைக்கேற்ப ஆண்டுக்கு ஒரு மலராவது வெளியிடலாமென்று துணிந்து "வரதர் புது வருஷ மலர்' என்ற பெயரில் ஒரு மலரை வெளியிட்டேன். கிரவுன் 1/4 அளவில் சுமார் 80 பக்கங்கள் இருக்கும். அப்போது ஈழத்திலிருந்த சிறந்த எழுத்தாளர்கள் எல்லாரும் அதில் கதை, கட்டுரை, கவிதை என்பவற்றை எழுதியிருந்தார்கள். நவாலியூர் சோமசுந்தரப்புலவர், எஸ்.டி.சிவநாயகம், மஹாகவி போன்ற பிரபல மான எழுத்தாளர்கள் பலரும் எழுதியிருந்தார்கள். கணிப்புக்குரிய ஒரு மலர் என்று அதனைப் பலரும் பாராட்டினார்கள். இதன் பிறகு 1952ஆம் ஆண்டு எனது இப்போதைய ஆனந்தா அச்சகத்தின் முகாமைத்துவ பங்காளராகி விட்டேன். சொந்தமான புதிய அச்சகத்தின் வளர்ச்சிக்காக நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அந்தநேரத்திலும் சஞ்சிகை வெளியிடவேண்டுமென்ற ஆவல் நெஞ்சுக்குள் ஒரு மூலையில் குறுகுறுத்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் சிந்தித்த பிறகு அச்சகத்தின் பெயரான 'ஆனந்தன்' என்ற பெயரிலேயே ஒரு சஞ்சிகையை ஆரம்பித்தேன். அப்போது அச்சகப் பங்காளர்களில் ஒருவராக இருந்த கவிஞர் யாழ்ப்பாணனை இணை ஆசிரியராகச் சேர்த்துக்கொண்டேன். யாழ்ப்பாணன் அச்சகப் பங்கிலிருந்து விலகிச் சென்றபின், ‘புதுமை லோலன் என்ற ஆர்வமுள்ள இளைஞர் ஆனந்தனின் இணை ஆசிரியரானார். ஒரு இலக்கிய இதழாகவே ஆனந்தன் வெளிவந்தது. நல்ல எழுத்தாளர்கள் பலர் எழுதினார்கள். புதியவர்கள் சிலரையும் ஆனந்தன் அறிமுகப்படுத்தியது. தி.ஞா. : 1955 இல் கவிதைக்காக ‘தேன்மொழி என்ற மாத இதழை வெளிக்கொணர்ந்தீர்கள். இதுவே ஈழத்தின் முதலாவது கவிதை இதழ் எனக் கூறப்படுகிறது. அந்த இதழின் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள். தி.ச.வ. : பொருளாதாரக் காரணங்களிலாலேயே ஆனந்தனையும் நிறுத்த வேண்டியதாயிற்று. சில காலம் செல்ல, கையில் சிறிது வசதி ஏற்பட, மீண்டும் சஞ்சிகை வெளியிடும் எண்ணம் தலைதூக்கிற்று. இம்முறை சற்றே வித்தியாச
27

Page 15
மாக ஒரு கவிதைச் சஞ்சிகையை வெளியிடுவதென்று தீர்மானித்தேன். பதினாறு பக்கங்கள். உற்பத்திசெலவு சொற்பமாக இருக்கும். நட்டம் ஏற்பட்டாலும் விடாமல் தொடர்ந்து நடத்தலாம் என்ற துணிவு உற்சாகம் தந்தது.
அப்போதிருந்த முக்கியமான பல கவிஞர்கள் எனது இனிய நண்பர்கள். நாவற்குழியூர் நடராசன், சாரதா, மஹாகவி, அ.ந.கந்தசாமி, யாழ்ப்பாணன், சில்லையூர் செல்வராசன், தில்லைச்சிவன், காசி ஆனந்தன் - இப்படிச் சிலர். இவர்களைவிட நவாலியூர் சோமசுந்தரப் புலவரிடம் எனக்கு மிகுந்த அபிமானம் இருந்தது.
மதிப்புக்குரிய நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுச் சின்னமா கவும் ‘தேன்மொழி கவிதை சஞ்சிகையை வெளியிடத் தீர்மானித்தேன். கவிதைச் சஞ்சிகையொன்று வெளியிட எண்ணியிருப்பதைப்பற்றி நண்பர் மஹாகவிக்கு எழுதி அவரையே இணையாசிரியராக இருக்கும்படியும் எழுதினேன். மஹாகவி என்னுடைய நல்ல நண்பர். அவர் மிகுந்த உற்சாகத்துடன் எனது கருத்தை ஒப்புக் கொண்டார். பதினாறே பக்கங்களில் ‘தேன்மொழி மிக அழகாக வெளிவந்தது. அப்போது பிரபலமாக இருந்த ஈழத்துக் கவிஞர்கள் எல்லாருமே தேன் மொழியில் எழுதினார்கள். பின்னால் பிரபலமாகிவிட்ட சில புதுக்கவிஞர்களும் எழுதினார்கள்.
கவிஞர்களிடையே தேன்மொழி மிகவும் பாராட்டிப் பேசப்பட்டது. ஆயினும் ஆறே ஆறு இதழ்களுடன் தேன்மொழி நின்றுவிட்டது. அதை நிறுத்தியதற்கு என்ன காரணம் என்பது இப்போது நினைவில் இல்லை. ஆனால் நிச்சயமாகப் பொருளாதாரக் காரணமாக இருந்திருக்காது.
தி.ஞா. தாங்கள் வெளியிட்ட "வெள்ளி, "புதினம்’ ஆகிய சஞ்சிகைகளின் பணிகளைக் கூறுங்கள். தி.த.வ. தமிழ்வாணனின் கல்கண்டு என்னை மிகவும் கவர்ந்த சஞ்சிகை. பலர் அதைச் சிறுவர்களுக்கான சஞ்சிகை என்று நினைத்தார்கள், அப்படியின்றி அது எல்லோருக்கும் மிக உபயோகமான சஞ்சிகையாக விளங்கிற்று. கல்கண்டு மாதிரி எமது நாட்டுக்கு ஏற்றதான சில மாற்றங்களுடன் ஒரு சஞ்சிகையை வெளியிட விரும்பினேன். அதுதான் "வெள்ளி.
புதினம்' - வார இதழாக வெளிவந்தது. செய்திகளும் இலக்கிய அம்சங்களும் கலந்து வெளிவந்த பல்சுவை இதழ் அது. மாதம் ஒரு இதழ் வெளியிட்டது போன்ற பொழுது போக்கான வேலை அல்ல இது. இதற்காக முன்னேற்பாடாகப் பல ஏற்பாடுகளைச் செய்தேன். சிறந்த எழுத்தாளரும், பத்திரிகை சம்பந்தமாக முன் அனுபவம் உள்ளவருமான தாளையடி சபாரத் தினம் புதினத்தின் இணையாசிரியராக வந்தார். அப்போது வீரகேசரி நாளிதழில் நடைபெற்ற வேலை நிறுத்தம் காரணமாக வேலையின்றி அவர் அப்பொழுது இருந்தார். அவரது நண்பரான 'தாஸ்' என்பவரும் துணை ஆசிரியராக வந்தார். இவர்களைவிட ஒரு எழுதுநரும் புதினம் அலுவலகத்தில் வேலைசெய்தார்.
தாளையடி சபாரத்தினமே இதழுக்கு வேண்டிய எல்லாவிடயங்களையும் சேகரித்துக்கொண்டு என்னிடம் கொண்டுவந்து காட்டுவார். அனேகமாக அவையெல்லாம் திருப்தியாகவே இருக்கும். எப்போதாவதுதான் நான் மிக அருமையாக அவைகளில் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
28

பத்திரிகையின் பக்கத்தை நிரப்புவதற்கு ஏதாவது குறிப்பிட்ட விடயம் தேவை யாக இருந்தால் தாளையடி சபாரத்தினம் அடுத்த ஒருமணி நேரத்துக்குள் அந்த விடயத்தைத் தாமே எழுதி கொண்டுவந்து காட்டுவார். அசகாய சூரன் அவர்!
புதினம் சனிக்கிழமைகளில் வெளிவரும். வெள்ளிக்கிழமை மாலை யிலேயே வெளியூருக்கு அனுப்பவேண்டிய பிரதிகள் பார்சல் கட்டித் தயாராகி விடும். நான் தாளையடியிடம் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. "இது மாத சஞ்சிகையல்ல; வாரப்பத்திரிகை. ஒரு நாள்கூட பிந்தக்கூடாது. வெள்ளைப் பக்கங்களுடனாவது வெளியூர்ப் பார்சல்களை வெள்ளிக்கிழமை மாலையிலேயே அனுப்பிவிடவேண்டும்!”
நான் சொன்னது மாதிரியே ஒவ்வொரு வாரமும் தவறாமல் புதினம் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. "வெள்ளியைப்போல புதினத்துக்கும் நிறைய வாசகர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தார்கள். நல்ல வரவேற் பிருந்தது. ஆயினும் எதிர்பார்த்த விளம்பரங்கள் சேகரிக்க இயலவில்லை. மற்றதெல்லாம் திட்டமிட்டபடி நிறைவேறியபோதும், விளம்பரம் சேகரிப்பது மட்டும் நடக்காமல் போனதால், பெரிய நட்டம். இரண்டு ஆண்டுகளின் முடிவில் ஒரு கணிசமான தொகை இழப்பாயிற்று. “நிறுத்துகிறோம் என்று அறிவித்து விட்டே கடைசி இதழை வெளியிட்டோம்”
தி.ஞா. : மாணவர்களுக்காக தங்களால் வெளியிடப்பட்ட ‘அறிவுக்களஞ்சியம்’ சஞ்சிகை பற்றிக் கூறுங்கள். தி.ச.வ. : நான் நடத்திய சஞ்சிகைகளில் அறிவுக்களஞ்சியம் தனித்துவமானது. இலக்கியம் மட்டுமே எங்கள் அறிவு வாழ்க்கையில் நிறைவாகாது. இலக்கிய வாதிகள் பலர் பரந்துபட்ட பொது அறிவு இல்லாமல் இருப்பதை நான் அறிவேன். முக்கியமாகப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பாடப்புத்தகங்களுக்கு வெளியே அறிவைத் தேட முயல்வ தில்லை. முக்கியமாக இந்த இளைஞர்களின் பொது அறிவை வளர்ப்பதற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று விரும்பினேன். என்னுடைய இளமைத்துடிப்புகள் ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிய பிறகு, என்னுடைய முதிய வயதில் என்னுள் ஏற்பட்ட சிந்தனை மிகவும் பயனுள்ளதாகவும், மன நிறைவு தருவதாகவும் அமைந்தது. அறிவுக்களஞ்சியம் முதலாம் இதழ் வெளிவந்த உடனேயே கல்வி உலகம் அதை மிகவும் விரும்பி வரவேற்றது.
நியூஸ் பிரின்ட் கடதாசி கூடக் கிடைக்காத அந்த நேரத்தில் அப்பியாசக் கொப்பிகளைப் பிரித்து அந்தக் கடதாசியில் கூட சில இதழ்களை அச்சிட்டோம்: ஆரம்பத்திலிருந்து செங்கை ஆழியான் அறிவுக்களஞ்சியத்தில் இணை ஆசிரியராக இருந்தே மிக மிக உதவியாக இருந்தார். புத்தொளி, கல்வயல் குமாரசாமி ஆகியோரும் பின்னால் உதவி ஆசிரியர்களாக இருந்து உதவினார்கள். அறிவுக்களஞ்சியத்தை இலாப நோக்கின்றியே நடத்தினேன். இலாபம் வந்தபோது அதையும் அறிவுக்களஞ்சியத்தைச் சிறப்புச் செய்வதற் காகவே செலவிட்டேன். மறுமலர்ச்சியை வெளியிட்டபோது 500 பிரதிகள் அச்சிட்டோம். ஆனந்தன் 1000; தேன்மொழி 500; வெள்ளி 1500; புதினம் 2000; - இவை எல்லாவற்றையும் விஞ்சி சாதனை படைத்தது அறிவுக் களஞ்சியம்.
29

Page 16
3000 பிரதிகள் வரை அச்சிட்டோம். மிகக் குறைந்த விலையான ரூபா 10, 12, 15/-ஆகவே விற்பனைவிலை இருந்தது. பல போட்டிகள் நடத்தினோம். பரிசுகள் கொடுத்தோம். இவை எல்லாவற்றையும் விட எழுதியவர்களுக்கும் சன்மானமும் வழங்கினேன். கொள்கையளவில் அடையாளமாக எழுதியவர் களுக்கெல்லாம் சிறுதொகையை சன்மானமாக வழங்கினேன்.
தி.ஞா. : "வரதர் வெளியீடு பிரசுர முயற்சிகள் பற்றிக் கூறுங்கள் தி.ச.வ. : என்னுடைய பதினைந்தாவது வயதில் ஆறுமுக நாவலரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறு நூலாக எழுதி வெளியிட்டேன். நூலுக்கு நான் வைத்த பெயர் - நாவலர் கோன்’ என்பது. ஈழகேசரி இளைஞர் சங்கத்திலிருந்து எனக்குப் பரிசாக கிடைத்த நூல்களில், த.கைலாசபிள்ளை எழுதிய நாவலர் சரித்திரம்' என்பது ஒன்று. அந்த நூலை வாசித்துவிட்டு சுருக்கோ சுருக்கென்று சுருக்கி நான் எழுதிய நூல்தான் நாவலர்கோன்.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நூலைச் சற்றே திருத்தி - திருப்பி எழுதி, நாவலர் என்ற பெயரில் வெளியிட்டேன்.
இதன்பிறகு சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து யூரீலழரீ ஆறுமுக நாவலர் சபையினர் நாவலரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபோது சிறுவர்களுக்காக நாவலர் வரலாறு ஒன்றை எழுதுவிக்கவேண்டி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடம் போயிருக்கிறார்கள். அவர் ஏற்கனவே வெளிவந்திருந்த நாவலர்' நூலைச் சுட்டிக்காட்டி என்னிடம் போகும்படி சொல்லியிருக்கிறார். வைத்தீஸ்வராக் கல்லூரி அதிபராக இருந்த ச.அம்பிகை பாகனும், அரச அதிபராக இருந்த ழரீகாந்தாவும் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக மூன்றாவது முறையாக நாவலரைத் திருப்பி எழுதி வெளி யிட்டேன். அதற்கு பண்டிதமணியே ஒரு முன்னுரையும் தந்தார். அட்டைப்படம் ரமணி. நாவலர் சபையின் செலவில் நூல் அழகாக வெளிவந்தது.
சரியாகச் சொல்லப்போனால் நாவலர் கோன் தான் வரதர் வெளியீட்டின் முதலாவது நூல்.
தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டேன். ஈழத்தின் முக்கியமான பல எழுத்தாளர்களினதும் அறிஞர்களினதும் நூல்கள் வரதர் வெளியீடாக வெளிவந்தன. பல நூல்கள் பொருள் நட்டத்தையே தந்தபோதும், சில நூல்கள் இலாபத்தையும் தந்திருக்கின்றன.
விற்பனையைப் பொறுத்த மட்டில் இலங்கையிலேயே பெரிய சாதனை செய்த நூல் 24 மணிநேரம். அதைத் தொடர்ந்து “யாழ்ப்பாணம் எரிகிறது. இந்த இரண்டு நூல்களையும் எழுதியவர் இன்று நாடறிந்தவராக விளங்கும் செங்கை ஆழியான். அன்றைய சூழ்நிலை காரணமாக 'மணிவண்ணன் என்ற புதிய புனைபெயரில் அவற்றை எழுதியிருந்தார்.
வரதர் வெளியீட்டின் மூலம் சிறந்த பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டதுடன் வேறு சில சிறப்பான பிரசுரங்களையும் வெளியிட்டிருக்கிறேன். 1950களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து மலிவுப்பதிப்பு நூல்கள் பெருந்தொகையாக வெளிவந்தது பலருக்கு நினைவிருக்கும். அதிக விலையுள்ள நல்ல பெரிய நூல்களெல்லாம் ஒரு ரூபா விலைக்கே கிடைத்தன. அவைகளைப் பார்த்தபோது எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
30

அப்படி ஏதாவது ஒரு மலிவுப்பதிப்பு நூலை நானும் வெளியிடவேண்டுமென்று ஆசைப்பட்டேன். திட்டமிட்டேன். திருக்குறளுக்கு நானே ஒரு பொழிப்புரை எழுதினேன். டெமி 1/16 அளவில் 288 பக்கங்கள். பாத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டேன். அதன் விலை 65 சதங்கள் மட்டுமே! (65ரூபாவல்ல; சதங்கள்!) இது நடந்தது 1958இல். அப்போது நியூஸ் பிரிண்ட் கடதாசியின் விலை ஒரு றிம் ரூபா 18 மட்டுமே. (இப்போது சுமார் ரூபா 1000). கொக்கூர் கிழார் இரத்தினசிங்கம் என்ற எனது மதிப்புக்குரிய அறிஞர் தொகுத்த ஆங்கில - தமிழ் அகரமுதலி ஒன்றை வெளியிட்டேன். பாடசாலை மாணவர்களுக்கு வேண்டிய பல நூல்களையும் வெளியிட்டேன். (மற்ற நூல்கள் போன்றே இவை பெரும்பாலும் இலாபத்தைத் தந்தன).
இவை எல்லாவற்றுக்கும் மேலாக "வரதரின் பலகுறிப்பு என்ற புதுமையான நூலையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினேன். தி.ஞா. : "வரதரின் பலகுறிப்பு" என்ற தமிழ் "டிரெக்டரி யின் பயன்பாடு, அது தொடர்ந்து வராமைக்குரிய காரணங்கள் பற்றிக் கூறுங்கள். தி.ச.வ. ; எதையாவது புதிதாகக் கண்டால் - அது எனக்குப் பிடித்துக்கொண்டால் நானும் அதுமாதிரியேதும் செய்யவேண்டுமென்று முயல்வது எனது இயல்பது என்பதை முன்னரே சொல்லியிருந்தேன். "லேக் ஹவுஸ்" நிறுவனத்தினர் வெளியிட்டு வந்த "பென்குயின் டிரெக்டரி என்ற பெரிய நூலை நான் பார்க்க நேரிட்டபோது எனக்கு அந்த ஆசை வந்தது. அந்த அளவுக்குப் பெரிதாக இல்லாவிட்டாலும் இயன்றவரை அப்படி ஒரு வெளியீட்டைத் தமிழில் கொண்டுவரவேண்டுமென்று திட்டமிடத் தொடங்கினேன். ஈழத்தமிழ் மக்களுக்கு உபயோகப்படக்கூடியதாகப் பலவித விடயங்களையும் தொகுத்து அதற்கு "வரதரின் பலகுறிப்பு என்று பெயரிட்டு வெளியிட்டேன், பாரிய முயற்சி. ஆண்டுக்கு ஒன்றாக நான்கு பதிப்புகள் மட்டுமே வெளிவந்தன. கடைசியாக நான்காவது பதிப்பு 1971இல் வெளிவந்தது. அதன் தொகுப்பாசிரியராக இருந்தவர் "ஈழத்துச்சோமு என்று அறியப்பட்ட பிரபல எழுத்தாளரும், இன்றைய பிரமுகருமான நா.சோமகாந்தன். அந்த பலகுறிப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல உதவியான கைந்நூல் என்றே இப்போதும் கருதுகிறேன். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அந்த வெளியீட்டுக்கு அப்போது போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அதன் பயனைத் தெரிந்தவர்கள் மிகப்பெரிதாகவே பாராட்டினார்கள். ஆனால் பரவலாக அது உபயோகிக்கப்படவில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. யாராவது ஆர்வமுள்ளவர்கள் திறம்பட அதைச்செய்தால் வெற்றி கிடைக்குமென நம்புகிறேன்.
தி.ஞா. : இன்றைய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் செய்தி யாது?
தி.ச.வ. : எழுத்தாளர்கள் ‘நல்ல தமிழில் எழுதவேண்டும்; மற்றவர்கள் வியக்கும்படி தரமான தமிழ் நடையில் எழுதவேண்டும்' என்பவற்றையே முக்கியமானவைகளாக நினைக்காது, நல்ல கருத்துக்களை எழுதவேண்டும்; நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்களோ அவர்களுக்கு நன்கு விளங்கக்கூடிய மொழிநடையில் எழுதவேண்டும். உங்கள் கருத்துக்கள் வாசகரைச் சென்றடையவேண்டும். மொழி என்பது என்ன? - நீங்கள் பேசுவதோ எழுதுவதோ
31

Page 17
மற்றவருக்கு விளங்கவேண்டும். அதை அவர் உணரவேண்டும். மொழியின் தேவை அவ்வளவுதான். கருத்துக்களே முக்கியமானவை.
இன்னுமொன்று, எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல; கற்பவர்கள் அனைவருக்குமே இதைச் சொல்வேன். 'கற்றுணர்ந்தொழுகு - கற்று உணர்ந்து ஒழுகு. நாங்கள் கற்றோம். நல்ல கருத்துக்களை உணர்ந்து, உள்வாங்கி எழுதுகிறோம். ஊருக்காக மட்டும் எழுதுவதால் மட்டும் பயனில்லை. அந்த நல்ல கருத்துக்களை நாங்களும் எங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் கற்றதனாலாய பயன் என் கொல்? நாங்கள் கற்றது எங்கள் வாழ்வுக்குப் பயன் செய்யவில்லையானால், நாங்கள் கற்பிப்பது யாருக்குப் பயன் செய்யப்போகிறது?
- இவையென்னுடைய எண்ணங்கள். எழுத்தாளர்களுக்குப் புத்தி சொல்வது புத்திசாலித்தனமல்ல!
தி.ஞா. : தி.ஞா. : தங்களது 78 வருட வாழ்க்கை எப்படி? எதிர்காலத் திட்டமென்ன? தி.ச.வ. சிறுவயதிலிருந்தே - நான் புத்தகங்களை வாசிக்கத்தொடங்கிய காலத்திலிருந்தே ஒருவித இலட்சியவாதியாகவே நடந்து வந்திருக்கிறேன். வளரவளர நான் தேடிக்கொண்ட அறிவின் துணையாலும் என்னுடைய விடா முயற்சியினாலும் என்னுடைய இலட்சியங்களை ஒரளவுக்கு நிறைவேற்றி வந்திருக்கிறேன்.
‘என்னுடைய உயர்கல்வியை நான் தகுந்த ஆசிரியர்களிடம் - தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொள்ளவில்லையே என்று ஒரு மனக் குறை பிற்காலத்தில் எனக்கு ஏற்பட்டதுண்டு. ஆயினும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு கண்டதையும் கண்டபடி கற்று எனது அறிவை வளர்த்து வருகிறேன். இலக்கிய அன்பர்கள் என்னை மூத்த எழுத்தாளர் என்று சொல்லி கெளரவிக்கிறார்கள். இலங்கைக் கம்பன் கழகம் எனக்கு மூதறிஞர்' என்ற விருதை வழங்கி அறிஞர் வட்டத்துக்குள் என்னைச் சேர்த்திருக்கிறது. ஆனால் உண்மையில் இத்தகைய பாராட்டுக்களுக்காக நான் படிக்கவில்லை. என்னால் "படிக்காமல் இருக்கமுடியாது என்ற காரணத்தினால் நான் படித்துக்கொண்டிருக் கிறேன்.
78 வயது நிரம்பிய நிலையில் எனது உடல் எவ்விதமான பெரு நோய்களுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறது. என் மனமும் எந்தவிதமான அழுக்குகளுமின்றிப் பரிசுத்தமாக இருக்கிறது. நான் யார் மீதும் பகைமை பாராட்டுவதில்லை. அதனால் என்மீதும் யாரும் பகைமை கொள்வதில்லை. என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவு செய்கிறது. எனது தொழிலகத்தில் எனக்குப் பிரச்சினைகள் இல்லை. பொருளையோ புகழையோ அடைவதற்காக நான் ஒரு போதும் தகாத வழிகளைப் பயன்படுத்துவதில்லை.
இவற்றால் நான் மிகமிக நிம்மதியாக இருக்கிறேன். மனநிறைவோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
32

காயஞ் சுமந்த காற்று
எங்களினைச் சுற்றி நிறைந்துள்ள காற்றினிலே எத்தனை காயங்கள்?
எத்தனை சிராய்ப்புகள்? ஒவ்வொரு துவக்கும் உயர்ந்து வெடிக்கையிலே ஒவ்வோர் வெடிப்புக்கும்
நம்காற்றுத் துளைபட்டுக்
காயங்கள் பெற்றதுகாணி.
கப்பல், விண்கப்பல்கள். நீண்ட துராம் சென்று நிலை குலைக்கும் ஆட்லறிகள், வாய்திறந்து கத்த
வதைபட்டுக் கிழிபட்டு காற்றில் மிகப்பெரிய காயங்கள் தோன்றிற்றே! எங்களது காற்றினது காயங்கள்
உம் புனிதக்
கவிதைக்குத் தெரியலியா?
காற்றினது கணிணிரை; கணிகளுக்குத் தெரியாமல் கசிகின்ற காற்றினது இரத்த நெடிலை; இரணம் மாறா வலிகளினை அறியுங்கள் சோதரரே! கண்டறிந்தால் காயங்கள் விரைவில் குணமாக மருந்தோடு வாருங்கள்!
* நெற்றிக் கணி” விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கணி பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம் பெறவேண்டுமெனில், நூலின் இரு பிரதிகளை அனுப்பிவையுங் கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும். - ஆசிரியர்.
11

Page 18
இலக்கிண்ணியில் இவர். தமிழ்மணி, சிறுகதைச் சிற்பி, ந.பாலேஸ்வரி
ந.பார்த்திபன்
சிறுவயதிலேயே தினகரன் சிறுவர் மலரில் கதை, கட்டுரை எழுதிய போதும் 1957ல் ‘வாழ்வளித்த தெய்வம்' என்ற சிறுகதையுடனேயே எழுத்தாளர் என்ற பெயரைப் பொறித்து, இன்றுவரை எழுதிக்கொண்டிருப்பவர் திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம். பாப்பா, ராஜி, நரெசி, ந.பா. என்ற புனைபெயர் களிலும் எழுதி இதுவரை 11 நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கி யுள்ளார். ஆங்கில மொழியில் விசேட தேர்ச்சியை கல்வித்தகைமையில் பெற்றிருந்தபோதும் இவரோர் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியை என்பது குறிப்பிடத் தககது.
ஆசிரியர்த் தொழில் அறிவை வளர்க்கும் தொழிலாக இருந்ததால் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்ததோடு அநுபவங்கள், சம்பவங்கள், மாணவர் களின் திறமைகள், கல்விமான்களின் கூட்டுறவு என்பனவற்றின் பயனாக எழுதத்தொடங்கினேன் என்று குறிப்பிடுகிறார்.
எழுத்துப்பணிக்காக இந்து கலாசார அமைச்சினால் 1992ல் தமிழ்மணி, மட்டுநர் அரசினர் ஆசிரியர் கலாசாலையால் 1996ல் சிறுகதைச்சிற்பி, வடகிழக்கு கல்வி கலாசார அமைச்சினால் 1999ல் ஆளுநர் விருது, திருகோணமலை மகளிர் நலன்புரி மன்றத்தால் தங்கப்பதக்கம் அணிவித்து, பொன்னாடை போர்த்தல், நகராண்மைக்கழகம், தமிழ் எழுத்தாளர் சங்கம் என்பவற்றால் வாழ்த்து மடல் வழங்கல் எனப் பல கெளரவிப்புக்கு உரியவர் இவர்.
சுடர்விளக்கு 1966, பூஜைக்கு வந்த மலர் 1972, சுமைதாங்கி 1973, உறவுக்கப்பால் 1976, கோவும்கோயிலும் 1981, உள்ளக்கோயில் 1984, உள்ளத் தினுள்ளே 1990, தத்தைவிடுதூது 1992, மாது என்னை மன்னித்துவிடு 1992, எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு 1993, தெய்வம் பேசுவதில்லை 2001 என்பன நூலுருவாக வந்தவை. மேலும் நினைவு நீங்காதது 1978, அமலா உனக்காக ஜெபிப்பேன் 1994 இரண்டும் நூலுருப் பெறவில்லை என்ப தோடு சுமைதாங்கி, தெய்வம் பேசுவதில்லை இரண்டும் சிறுகதை நூல்கள் என்பதும் தெரியவருகின்றன.
வீரகேசரிப் பிரசுரமான பூஜைக்கு வந்த மலர் முதற்பதிப்பு இரண்டு மாதங்களில் விற்று முடிந்ததும், 2ம் பதிப்பு வெளியிடப்பட்டதும், பல வாசகர் களின் வேண்டுகோளிற்கிணங்க 20 ஆண்டுகளின் பின்னர் 1994ல் மித்திரன் வாரமலர்த் தொடராக வெளிவந்ததும் பாலேஸ்வரியின் எழுத்தின் வலிமைக்குச் சான்றெனலாம். மேலும் அஞ்சலி சஞ்சியிைன் சிறுகதைப் போட்டி 1997ல் நான் எழுதவே மாட்டேன்’ என்ற சிறுகதை முதற்பரிசு பெற்றுக்கொண்டதும், சுதந்திர சுற்றாடல் பிரிவு தெரிவுசெய்து வெளியிட்ட சிறுகதைத் தொகுதியில் இவரது சிறுகதையும் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் இவரது எழுத்து வன்மைக்கு
34
 
 
 

எடுத்துக்காட்டெனலாம்.
ஈழப்புலவர் வரிசையில் இடம்பெற்றுள்ள தி.த.கனகசுந்தரம்பிள்ளை, ஈழத்து முதல் தமிழ் நாவலாசிரியர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆகியோரின் வழித்தோன்றலாக இருக்கும் இவரது குடும்பப் பின்னணியும் இவரது எழுத்துக்கு உந்துசக்தியாகவும் இருக்கலாம். ஆயினும் ஆசிரியைகளான திருமதி நாகம்மா, பண்டிதை இராஜலட்சுமி ஆகியோர் முன்னோடிகளாக இருந்தமையும், திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் அரவணைப்பு ஊக்குவித்தமையையும் நன்றி யுடன் குறிப்பிடுகிறார்.
சுதந்திரன், தினகரன், அஞ்சலி, தமிழின்பம், கலைச்செல்வி, போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகள் கொடுத்த களமும் உதவின என்று குறிப்பிடுவ தோடு இலங்கையில் வெளிவந்த அனைத்துப் பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் எழுதிய - எழுதிவரும் ஒரு மூத்த பெண் எழுத்தாளரென்றே குறிப்பிட வேண்டும். கல்கி, உமா, பூந்தொட்டி, குங்குமம், ஆகிய தமிழக சஞ்சிகை களிலும், தமிழ்மலர் என்ற மலேசியச் சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் வந்துள்ளன.
“எனக்குச் சகலதுமாக இருந்த, என் கடந்த 30 ஆண்டுகளாக எழுத்துலக முன்னேற்றத்திற்கு காரணமாயிருந்த வாழ்க்கைத் துணை 2000ம் ஆண்டு நடுப்பகுதியில் காலமானதை அடுத்து எழுத்தைத் தொடரத் தயங்கிய போதும் அவரது விருப்பத்திற்காகவும், அவர் பெயரை நிலை நாட்டுவதற்கா கவும் மீண்டும் எழுதுவதே ஒரேவழி எனக் கூறுவது தமிழ் இலக்கிய நெஞ்சங் களுக்கு ஓர் ஆறுதல் என்றே கூறவேண்டும். இந்நிலையில் 1ம் ஆண்டு நினைவுநாளில் ‘தெய்வம் பேசுவதில்லை என்ற சிறுகதை நூலை வெளியிட்டு ஆத்ம திருப்தி கண்டதோடு சிறுகதைப் பிரியர்களுக்கும் ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளார்.
இறுதியாக எழுத்தாளரிடையே முற்போக்கு பிற்போக்கு என்ற பேதம் ஒழிய வேண்டும். ஓர் எழுத்தாளனின் முன்னேற்றத்தில் ஏனைய எழுத்தாளர்கள் தடையாக இருக்கக்கூடாது. ஒருவன் எழுத்துலகில் முன்னேறச் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். எழுத்துலகில் பின்கதவை உபயோகித்தல் கூடாது என்று தன் நீண்டகால எழுத்துலக அனுபவத்தையும் - தர்மத்தையும் கூறி நிற்கிறார். இன்றுள்ள எழுத்தாளர்களுக்கு குறிப்பாக, விமர்சக எழுத்தாளர்களுக்கு இவை புரிய வேண்டுமென்ற ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார் பாலேஸ்வரி. எமது ஈழத்து இலக்கிய உலகம் ஏனைய எழுத்தாளர்களையும் மதிக்கவேண்டும். போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் எழுத்தாளனின் எழுதுகோல் நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். எழுத்தாளர் ஒருவரை ஒருவர் மதிக்கவும், கனம் பண்ணவும் பழகவேண்டும். எழுத்தில் காழ்ப்புணர்ச்சி தேவையில்லை என்ற கொள்கை கொண்டவராகவும் இருக்கிறார் இவர்.
இன்று திருகோணமலை மகளிர் நலன்புரி மன்ற கெளரவ செயலாளரா கவும், திருகோணமலை சபா இசைக்கலாமன்றத்தின் கெளரவ தலைவராகவும், திருகோணமலை ரீ பத்திரகாளி அம்மன் ஆலய சக்தி நிலைய வாசிகசாலை யின் போஷகராகவும் பல சமூகப்பணிகளையும் ஆற்றிக்கொண்டு, எழுத்துலகப் பணியையம் ஆற்றிக்கொண்டு வருபவருமான பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் இன்னும் பல நூல்களைத் தன் அநுபவத்தினாலும், ஆளுமையாலும், ஆற்றலினாலும் தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

Page 19
ಫಿನ್ಲಿನ್ತುಟಿ
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் ஆய்விற்கென்றே உருவாக்கப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களது ஆதரவுடனும் முது முனைவர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்களது புலமை பொருந்திய தூரநோக்கும் இணைந்தே இப்பல்கலைக்கழகம் உருவானது. தமிழியற்புலம், சுவடிப்புலம், கலைப்புலம், வளர்தமிழ்ப்புலம், அறிவியற்புலம் எனும் பீடங்களில் சுமார் இருபத்துமூன்றுக்கும் மேற்பட்ட துறைகள் இயங்குகின்றன. உள்ளுர் மாணவர்களுடன் ஜப்பான், மொறிசியஸ், தென்னாபிரிக்கா, இலங்கை முதலான நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆய்வை மேற்கொள்ளுகிறார்கள். இங்கு புத்தொழில் பயிற்சி வகுப்புகள், கருத் தரங்குகள், நினைவுச் சொற்பொழிவுகள், முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித் தேர்வுகள் என ஏதாவது ஒன்று அடிக்கடி இடம்பெறுவதுண்டு.
வளர்தமிழ்ப் புலத்திலுள்ள "அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை" இரண்டுநாள் கருத்தரங்கொன்றை அண்மையில் ஒழுங்கு செய்தது. மலேசியா வைச் சேர்ந்த முரசு நெடுமாறன் இதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மொழிப் பண்பாட்டு நிறுவனம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலான நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், ஆய்வாளர்களும் இதிற் கலந்துகொண்டார்கள். இக்கருத்தரங்கில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் மிகவும் கவன ஈர்ப்புக்குள்ளாயின. அயல் நாட்டுத் தமிழ் இலக்கியம் பற்றி வாசிக்கப்பட்ட பதினெட்டுக் கட்டுரை களில் ஆறு ஈழத்து இலக்கியம் பற்றியவை. (1) முனைவர் பெ.மாதையன் : யாழ்ப்பாணத் தமிழ்ச் சொல் அகராதியில் அகராதியியல் பங்களிப்பு. s (2) முனைவர் எம்.சுசீலா : பேராசிரியர் நுட்மான் அவர்களது "அடிப்படைத் தமிழ் இலக்கணம்" - ஒரு மதிப்பீடு. (3) முனைவர் இரா.பெ.செயலட்சுமி : “காசி ஆனந்தனின் உருவகக் கதைகள்”. (4) முனைவர் மா.வேதநாதன் : "ஈழத்திற் கோயில் கலை” (5) திரு தெ.வெற்றிச்செல்வன் : "புகலிடக் கவிதைகள்” (6) திரு வ.மகேஸ்வரன் : ஈழத்துத் தமிழ் இலக்கியம் - அண்மைக்காலச் செல்நெறிகள்.
பற்றிக் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தனர். விபரமான கலந்துரையாடல் களும் இடம்பெற்றிருந்தன. ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிகை, தமிழ் நாட்டில் மூத்த அறிஞர்களிடையே நிதானமாகப் பதிந்துள்ள அதே வேளை, இளந்தலைமுறையினர் மிகத் தீவிரமாகவும் நுணுக்கமாகவும் அறிந்து வைத்துள்ளனர் என்பதுதான் இக்கருத்தரங்கின் மூலம் அறியவந்த விடயமாகும். மேற்படி கருத்தரங்கை ஒழுங்கு செய்த துறைத்தலைவர் முனைவர் ஆ.கார்த்தி கேயனும், துணைநின்ற முனைவர் கா.உதயசூரியனும் பாராட்டுக்குரிவர்கள். (மேற்படி துறையில் ஞானம் இதழ்கள் தற்போது பார்வைக்குள்ளன)
36

O O O O O
வடிவங்களை உடைத்து
முன்னேறும் பயணம் ஏ.யதீந்திரா, திருகோணமலை. அண்மையில் வெளிவந்திருக்கும் நிலாந்தனின் வன்னி மான்மியம்’ யாழ்ப்பாணமே ஒ. எனது யாழ்ப்பாணமே ஆகிய இரு படைப்புகளும் பார்வையில் அகப்பட்டன. அவ்விரு படைப்புகள் மீதான வாசிப்பின் இறுதியில் என்னுள் எழுந்த சில எண்ணங்களின் வரிவடிவமே இச்சிறுகுறிப்பு. எம்மில் பெரும்பாலான இலக்கிய கர்த்தாக்கள் இலக்கிய வடிவங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகளை வகுத்து வைத்திருப்பவர்கள். அவ் ஒழுங்கு விதிகளே எக்காலத்திற்கும் பொருந்துமெனச் சிறுபிள்ளைத் தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள். சிறுகதை என்றால் என்ன?, கவிதை என்றால் என்ன?, நாவல் என்றால் என்ன? அவைகள் எப்படி அமைந்திருக்கவேண்டும் என்பவற்றுக்கெல்லாம் இவர்களிடம் வரைவிலக்கணங்களும் வரையறைகளும் உண்டு. மீறல்களும், கட்டுடைப்புகளுமே வளர்ச்சி என்பதை இவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நிலாந்தனின் மேற்படி இரு படைப்புகளும் ஈழத்து இலக்கிய சூழலிற்கு முற்றிலும் புதிய படைப்புகள். ஈழத்து எதிர்கால இலக்கிய முயற்சிகளுக்கு கட்டியம் கூறிநிற்கும் படைப்புக்கள். புதிய தேடல் நோக்குள்ளவர்களுக்கும், நவீன இலக்கிய முயற்சிகளுக்கு ஏற்ப ஈழத்து இலக்கியமும் வளர வேண்டுமென அக்கறைப்படுவோருக்கும் ஆறுதல் அளித்திருக்கும் படைப்புகள்.
அறியப்பட்ட வடிவங்களைக் கட்டுடைத்துக்கொண்டு வெளிவந்திருக் கிறார் நிலாந்தன். தனது மீறல்களுக்கு நிலாந்தன் கூறும் விளக்கமும் சிந்திப்பும், கவனக்குவிப்புக்கு உரியன - யுத்தம் என்னை ஜனங்களுக்குள் இறக்கியது. இருக்கின்ற எந்தவொரு வடிவத்திலும் திருப்திப்படாத, எதையும் இறுதி வடிவமாக ஏற்றுக்கொள்ளாத, எல்லாவற்றையும் ஏதோ ஒரு கட்டத்தில் கடந்து போய்விடத் துடிக்கின்ற ஒருவித வேக மனோநிலையை எனக்குள் அது உருவாக்கியது. இதிலிருந்து வந்தவைகள்தான் எனது இந்தப் பரிசோதனைகள்.
'வன்னி மான்மியம்' - மண்பட்டினங்கள், பாலியம்மன் பற்று அல்லது ஓயாத அலைகள் மூன்று, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்கு போதல் ஆகிய நான்கு புதுமையான படைப்புகளை உள்ளடக்கியிருக்கின்றது. இதில் மண்பட்டினங்கள் ஏனைய மூன்று படைப்புகளிலிருந்தும் மாறுபட்டதும் தனித்துவமானதுமாகும். மண் பட்டினங்கள் படைப்பே கலையிலக்கிய கர்த்தாக்களும் விமர்சகர்களும் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணமாக இருந்தது. மண்பட்டினங்கள் தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு தமிழர்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர் வரலாற்றைச் சித்தரிக்கிறது. தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைபற்றிப் பேசுகிறது. ஆனாலும் தமிழர்கள் வீழ்ந்து விடப்போவதில்லையென்றும் பறைகிறது.
அன்பான பெருங்கடலும் ஆதரித்த பெருங்காடும்
ty

Page 20
இறுமாந்திருக்கும் ஒரு நாளிலே
சில தீர்க்கதரிசிகள் மட்டும்
தெரிந்து வைத்திருக்கும்
ஒரு நாளிலே
யாழ்ப்பாணமே ஒ. யாழ்ப்பாணமே
நீ உனது
தலைநகரிற்குத் திரும்பிச் செல்வாய்
கிளிநொச்சியே. ஒ . மணலாறே
நீ உனது
தலை நகரிற்குத் திரும்பிச் செல்வாய்
பாலியம்மன் பற்று அல்லது ஓயாத அலைகள் மூன்று. வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய மூன்று படைப்புகளும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்திருக்கிறது. இனவாதிகள் அடிக்கடி பிரஸ்தாபிக்கும் விடயம் எல்லாளன் - துட்டகெமுனு மோதல், இதில் எல்லாளன் தோல்வியுற்றதை தமிழர்களின் தோல்வியாகவே இனவாதிகள் சித்திரிக்கின்றனர். நிலாந்தன் எல்லாளனின் தோல்வியை ஆனையிறவின் வீழ்ச்சியோடு இணைக்கிறார். ஒரு நூற்றாண்டுப் பழியைத் தீர்த்த திருப்தியுடன், விரிகிறது கவிவரிகள்.
யாரங்கே
தளபதிகளை மாற்று
அஸ்திரங்களை மாற்று
வியூகங்களை மாற்று
செய் அல்லது செத்துமடி.
ஓரிரவுக்குள்
ஓராயிரம் யானை பலம்
எல்லாளர்களுக்கு
எப்படிக் கிடைத்தது.
வன்னிமான்மியம் வன்னியின் பெருமைகளைப் பேசுவது போன்றே, யாழ்ப்பாணமே ஒ. எனது யாழ்ப்பாணமே என்னும் படைப்பு யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும் யாழ்மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசியிருக்கின்றது. கவிதையாகவும் இடையிடையே விவரண உரைகளாகவும், விளக்கக் குறிப்பு களாகவும் அமைந்திருக்கும் இந்நூல்மூலம் யாழ்ப்பாணம் தொடர்பானதொரு முழுமையான காட்சி எம்முன் விரிகிறது.
கொடுமையிலும் கொடுமை ஒரு இனம் தன் வாழ்விடங்களில் இருந்து வெளியேறுவது (வெளியேற்றப்படுவது). இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த யுத்தத்தினால் தமிழ் மக்களுக்கும் அவ்வாறானதொரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேறினர் எம் மக்கள். இதனால் ஒப்பீட்டளவில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் மக்கள்தான். பலரது கவிதையிலும் பாடுபொருளாயிருக்கும் இக்கொடிய நிகழ்வு நிலாந்தனிடமிருந்து
38

ஏக்கத்துடன் உயிர்பெறுவதைப் பாருங்கள். இதனை ஒரு கண்ணிர் துளியின் சிதறல் என்றும் சொல்லலாம்.
உலகமே எங்களை மறந்து விட்டதா
யாரும் யாருக்கும்
ஆறுதலாயிராத ஒரு நாள் வருமென்று யாராவது நினைத்திருந்தோமா
யாழ்ப்பாணத்தவர்கள் சுயநலப்போக்கும், கருமித்தனமும் கொண்டவர்க ளென பொதுவாகக் கூறப்படுவதுண்டு. குறிப்பாக சாதிக்கட்டமைப்பால் மிகவும் இறுகிப்போனவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள். கந்தபுராண கலாசாரத்தின் பெறுபேறு அது. ஆனால் இவ்வாறான தன்மைகளைத் தன்னகத்தே கொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்களை யுத்தம் ஒரு பெரும் பண்புமாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டதாக நிலாந்தன் கூறுகிறார். இது எனக்கு சற்று மிகைப் படுத்தலாகத் தோன்றுகிறது. இன்று புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தமது சாதியமைப்பினைப் பேணிக்கொள்வதில் யாழ்ப்பாணத்தவர்தான் முனைப் புடன் செயற்படுவதை நிலாந்தன் அறியாமல் இருக்கமுடியாது.
யுத்தம் அவனைச் செதுக்கியது.
சுயநலமியாய் சேமிப்பில் வெறியனாய் இருந்தவனை
வீரனாக்கியது.
இடப்பெயர்வுகள் அவனைப்
பண்பு மாற்றம் பெற வைத்தன.
கந்தபுராண கலாசாரத்திலிருந்து அவனைக் கட்டாயமாக இடம்பெயர வைத்தன. ஒவ்வொரு இடப்பெயர்வும் அவனுக்கு மனப்பெயர்வாய் மாறியது. ஒவ்வொரு படையெடுப்பும் அவனுக்குப் பட்டப்படிப்பாய் மாறியது.
நிலாந்தனின் இவ்விரு படைப்புகளையும் பொதுவாக நாம் கவிதைத் தொகுப்பென்றே சொல்லலாம். ஆனால் வழமையான கவி வெளிப்பாட்டு முறையிலிருந்து நிலாந்தனின் பேசுகை வேறுபட்டதும், புதுமையானதுமாகும். வரலாற்று நிகழ்வுகள், ஐதிகக் கதைகள், மக்களின் சமகால வாழ்வியல் இருப்பு ஆகியவற்றின் இணைவே நிலாந்தனின் படைப்பு. சோலைக்கிளியால் பல கவிஞர்கள் பாதிப்புற்றதுபோல் நிலாந்தனாலும் பலர் பாதிப்படையலாம் இப்பொழுதே சிலர் நிலாந்தனால் தாக்கமுற்றிருப்பதை அவதானிக்கமுடிகிறது. ஈழத்து இலக்கிய உலகில் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் தொடர்பாக இருக்கும் பிரேமைகளை நிலாந்தனின் படைப்பாக்க முயற்சி கேள்விக்குள்ளாகலாம்.
39

Page 21
செங்கை ஆழியான் எழுதிய
"ஈழத்துச் சிறுகதை வரலாறு
தி.ஞானசேகரன் வெளியீடு : வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம் முதற்பதிப்பு: டிசம்பர் 2001 விலை : 5LurT 300/- ஈழத்துச் சிறுகதைகள் சரியான வடிவமைப்பில் எழுதத்தொடங்கிய 1930 களின் பிற்பகுதியிலிருந்து 2001ஆம் ஆண்டுவரை வெளிவந்த சுமார் 274 சிறுகதைத் தொகுதிகளையும் 400 சிறுகதைப் படைப்பாளிகளையும் 8000 வரையிலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளையும் வாசித்து, கணிப்பீடு செய்து ஒரு பாரிய நூலை - ஈழத்துச் சிறுகதை வரலாற்றினைத் தந்துள்ளார் செங்கை ஆழியான்.
“இன்று வரையிலான சிறுகதை வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய கணிப்பீடுகள் சார்புநிலை சார்ந்தவையாகவே விளங்குகின்றன - சமநிலை சார்ந்தவையாக இல்லை. மதிப்பீடு என்பது அவரவர் சுவை சார்ந்த விடயமாயினும், ஒரு துறைக்குத் தம் பங்கினைச் செய்தவர்களை அடையாளங் காணாது விடுவதும் அவர்தம் படைப்புகளைப் பதிவு செய்யாது விடுவதும் இலக்கிய வரலாற்றுத் தவறாகும்” என்ற செங்கை ஆழியானின் நினைவால் எழுந்த இந்த நூல், மூதறிஞர் தி.ச.வரதராசன் (வரதர்) அவர்களின் பவளவிழா நினைவுச்சான்றாக வெளிவந்துள்ளது.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றினை காலவரன்முறையிலும் கருத்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டும் நான்கு காலப் பகுதிகளாக வகுத்துள்ளார் ஆசிரியர். (1) சமுதாயச் சீர்திருத்தக்காலம் 1930-1949, (2) முற்போக்குக் காலம் 1950-1960, (3) புத்தெழுச்சிக்காலம் 1961-1983, (4) தமிழ்த்தேசிய உணர்வுக்காலம் 1983க்குப் பின்னர் என வகுத்து மதிப்பீடு செய்துள்ள ஆசிரியர் அக்காலப்பகுதிகளில் நிலவிய இலக்கியப் போக்குகள் தோன்றிய படைப்பாளிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், படைப்புகள் எதிர்கொண்ட விமர்சனங்கள் ஆகியவற்றை விரிவாகத் தருகிறார். இறுதியில் அக்காலப்பகுதியில் எழுந்த ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை எனச் சில சிறுகதைகளை இனங்கண்டு பட்டியலிட்டுள்ளார்.
இந்நூலுக்கு அணிந்துரையெழுதிய பேராசிரியர் அ.சண்முகதாஸ், "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினை எழுதும் கலாநிதி குணராசா ஒரு வரலாற்றாசிரியன் எப்படி நடுநிலைமை வகித்து எழுதவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து எழுதுவதைக் காணக்கூடியதாக உள்ளது. நூலாசிரியர் பக்கஞ் சாராது தன் கருத்தினைக் கூறியிருப்பது நோக்கற்பாலது. ஈழத்தில் எழுந்த எல்லாச் சிறுகதைகளையும் தேடிக்கண்டு வரலாற்றினை முழுமையாக எழுதவேண்டும் என்னும் ஆசிரியருடைய முயற்சி பாராட்டத்தக்கது. ஈழத்துச் சிறுகதை வரலாற்றைத் தெளிவாகவும், விரிவாகவும் முதன்முறை எழுதி
40

வெளியிட்டவர் என்ற பெருமையினைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொள்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
312 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் இரண்டு பின்னிணைப்புகள் தரப்பட்டுள்ளன. முதலாவதில் இதுவரை வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளின் பெயர்கள் ஆண்டடிப்படையில் தரப்பட்டுள்ளன. இரண்டாவதில் இந்நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களும் முகவரிகளும் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன.
செங்கை ஆழியானின் இந்த முயற்சியால் முன்னர் கண்டு கொள்ளப் படாத பல எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆசிரியர் கூறிச்செல்லும் கருத்துக்களிலும், மதிப்பீடுகளிலும் சில இடங்களில் ஒருசிலர் முரண்படலாம். எனினும் ஈழத்துச் சிறுகதை வரலாறு பற்றியும், சிறுகதை எழுத்தாளர்கள் பற்றியும், அவர்களது ஆக்கங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஓர் அடிப்படைக் கைநூலாக இந்நூல் திகழ்கிறது. அத்தோடு ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மேலும் விரிவாக ஆய்வு செய்ய இந்நூல் அடித்தளமாக அமைகிறது. செங்கை ஆழியானின் இம்முயற்சி பெரும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
கோடியழகு கொட்டிக் கிடந்தாலும் கோதையவள் கற்றுத் தேறி வேலையொன்றில் அமர்ந்தே இருந்தாலும் வீடுவளவு நகைநட்டென்று கூசாமல் கோரி நச்சரிக்கும்
காளைகள் உள்ளவரை சீதனச் சந்தையிலே. பேதையவள் பெரும்பாவி!
ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொட்டி பாயிரம்போலும் பட்டோலை எழுதி சீதனமாக காணிநிலம் வீடுவளவென சீர்வரிசை பலசெய்தும் பேணியதைக் காக்காமல் பெருங்குடியனாகி பேதைதனைக் கொல்லாமல் கொல்லும் ஆணவனோ கொடும்பாவி!
தான்பட்ட துயர் மறந்து தானிபெற்ற மகனுக்காய் தாலிக்குப் பணமும் தமக்குப் பெருநிதியும் சீர்வரிசை வீடு சொத்துடன் பேரழகுப் பெண் கேட்கும் தாயவள் இருப்பாளாயின் தாயல்ல; அவள் பேயே!
41

Page 22
நெற்றிக்கண் நக்கீரன்
நால் விOf 6F60Js) - நூல் ; சத்திய தரிசனம் எழுதியவர் சிற்பி
ஈழத்து இலக்கியவுலகில் விதந்து பெயர் சுட்டப்படும் எழுத்தாளர்களுள் ஒருவர் சிற்பி (சி.சிவசரவணபவன்). கலைச்செல்வி என்ற சஞ்சிகையின் ஆசிரிய ராக விளங்கிய அவரின் முதலாவது சிறுகதைத்தொகுதியான நிலவும் நினைவும் (1958) வெளிவந்து, பல ஆண்டுகளின் பின்னர் சத்திய தரிசனம் (2001) என்ற தொகுதி வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் 1956முதல் 2001 வரையி லான அவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 11 சிறுகதைகளைக் கொண்டுள்ள இத்தொகுதியின் வாயிலாகச் சிற்பியின் சிறுகதைப்பங்களிப்பின் ஒரு பகுதியைத் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
முதுபெரும் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத் தொகுதி என்ற முறையில் இந்நூலை நோக்கும்போது, இதிலுள்ள சில சிறுகதைகள் வாசகருக்கு அவரின் எழுத்தின் மீது மதிப்பை ஏற்படுத்துகின்றன. புரைதீர்ந்த நன்மை, மக்கள் தொண்டு, ஒரு திருட்டின் கதை, மறத்திற்கும் அன்பே துணை, பணத்திற்காக, சொந்தமண் ஆகிய சிறுகதைகள் தரமான படைப்புகளாக விளங்குகின்றன. "சொந்தமண் சிற்பியின் பெயரை வாழவைக்கும் உயர்ந்த படைப்பு. ’சத்திய தரிசனம்' அவரது இலக்கியக் கொள்கைகளின் வெளிப்பாடாக அமைந்த சிறுகதை. இத்தொகுதியில் உள்ள வேறு சில கதைகள் செயற்கைப் பாங் கானவையாகவும், கதாசிரியருக்கு எத்தகைய பெருமையையும் சேர்க்காதவை யாகவும் விளங்குகின்றன. அவற்றில் இடம்பெறும் பாத்திரங்கள் யதார்த்தத்தினின் றும் விலகிநிற்பவையாகவும், உரையாடல்கள் செந்தமிழ் நடையில் அமைந் தவையாகவும் காணப்படுகின்றன. அவற்றை இத்தொகுதியில் சேர்க்காமல் தவிர்த்திருந்தாலும் சிறுகதைத்துறைக்கு எவ்வித நட்டமும் ஏற்படப்போவதில்லை. “சிற்பி எறும் என் குருவுக்கு விந்தனங்கள்” என்பன போன்ற அச்சுப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
சத்திய தரிசனம் என்ற இச்சிறுகதைத்தொகுதி, சிற்பியின் சில சிறுகதை களின் பலத்தால் நிமிர்ந்து நிற்கிறது. நூல் : முதுசொமாக. எழுதியவர் : வதிரி இ.இராஜேஸ்கண்ணன்
அண்மைக்காலத்தில் புதிய இளைய எழுத்தாளர் சிலரிடமிருந்து தரமான படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சிறுகதைத்துறையில் அவர் களுடைய பங்களிப்புகள் விதந்து குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இவ்வாறு, தரமான சிறுகதைப் படைப்புகளை வழங்கும் இளைய தலைமுறை எழுத்தாளருள் ஒருவராக வதிரி இ.இராஜேஸ்கண்ணன் விளங்குகிறார். அவரது முதுசொமாக. (2002) என்ற சிறுகதைத்தொகுதி இதனை இனங்காட்டுகிறது. இத்தொகுதியில் உள்ள பத்துச் சிறுகதைகளையும் படிக்கும்போது உண்மையிலேயே வியப்புணர்வு ஏற்படத்தான் செய்கிறது. இளம் வயதிலேயே ஒரு தேர்ந்த
42

சிறுகதை ஆசிரியரைப்போன்று இராஜேஸ்கண்ணன் இந்தப் படைப்புகளைத் தந்துள்ளார். சிறுகதை பற்றிய புரிந்துணர்வும், ஆழமான சமுதாயப்பார்வையும், இயல்பாகவே கைவந்த எழுத்துத்திறனும் அவரது சிறுகதைகளைத் தரமான படைப்புகளாக ஆக்குகின்றன. கதைக் கருத்தேர்வு, பாத்திர வார்ப்பு, உரை யாடல்கள் என்பவற்றில் மிகுந்த அக்கறையெடுத்துப் படைப்பாற்றலுடன் சிறுகதைகளை எழுதியுள்ளார். இத்தொகுதியிலுள்ள "லீவு போம்” மனதை நெருடச்செய்யும் திறமான படைப்பு. மற்றைய சிறுகதைகளும் எழுத்தாளரின் படைப்புத்திறனை இனங்காட்டுபவையே. சிறந்த எழுத்தாற்றல் கொண்ட இவ் வெழுத்தாளரின் இந்நூலில் ஆங்காங்கே எழுத்துப்பிழைகள், அச்சுப்பிழைகள் தமது இருப்பை இனங்காட்டுகின்றன. இக்குறைகள் தவிர்க்கப்படவேண்டும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகுக்கு முதுசொமாக இத்தொகுதியை வழங்கிய வதிரி இ.இராஜேஸ்கண்ணன் எதிர்காலத்தில் எக்காரணங்கொண்டும் படைப்புத் துறையில் இருந்து விலகிவிடாது, தமது தரமான படைப்புகளை இலக்கிய உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கவேண்டும்.
நூல் ; நெஞ்சில் ஒரு நிறைவு எழுதியவர் : பாரதிபுரம் ந.சித்திரவேல்
திருகோணமலை "ஈழத்து இலக்கியச்சோலையிலிருந்து வெளிவந்தது பாரதிபுரம் ந.சித்திரவேலின் நெஞ்சில் ஒரு நிறைவு (2000) என்ற சிறுகதைத் தொகுதி. 60களின் பிற்பகுதியிலும், 70களிலும் அவர் எழுதிய பத்துச் சிறுகதை களும், ஆண்டு குறிப்பிடப்படாத ஒரு சிறுகதையுமாகப் பதினொரு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் ஆரம்ப எழுத்தாளர் ஒருவரின் அநுபவம் முதிராத படைப்புகள் போன்று அமைந்துவிட்டன. "தெய்வம் ஒரு சாட்சி என்றால் நேரிலே வருவ தில்லை என்ற சிறுகதை ஓரளவுக்குத் தரமான படைப்பு என்ற நிலையை எட்டப் பார்க்கிறது. இந்தச் சிறுகதை, "மணி 7.20. வானொலியில் “பொங்கும் பூம்புனல்’ நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் அறிவிப்பாளரின் கம்பீரக்குரல் தவளகிரி ஹோட்டலில் கேட்கிறது” என்று தொடங்குகிறது. பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி ஒருபோதும் 720க்குத் தொடங்குவதில்லை. சித்திரவேலின் எதிர்காலச் சிறுகதை கள் தரமான படைப்புகளாக விளங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
b a 7 / ஞானம தில் மாற்றக்கூடியதாக அனுப்ெ
புதிய சந்தா விபரம் வேண்டும்.
உள்நாடு அனுப்பவேண்டிய பெயர், தனிப்பிரதி enjust 30/- முகவரி :- அரை ஆண்டுச் சந்தா ரூபா 180/= TGNANASEKARAN ஆண்டுச் சந்தா ரூபா 360/= 19/7, PERADENIYA ROAD, சந்தா காசோலை மூலமாகவோ KANDY. LC60f}(3u sT Lisi மூலமாகவோ வெளிநாடு அனுப்பலாம். -- O KO மனியோடர் அனுப்புபவர்கள் ஆண்டுச் சநதா is USS s . . . A (தபால் செலவு உட்பட) Rஅதனை கணி டி தபால் நிலையத் ޙީ/
43

Page 23
(GSKIEJREGOTICħE NSB.
ஞானம் ஜூலை 2002 இதழில் கம்பவாரிதியின் “கிளாக்கர்ப் புத்தி” என்ற கட்டுரை தரும் செய்தியைப் பற்றி நானும் பலமுறை சிந்தித்தது உண்டு. ஆனாலும் அதற்குள் நுழையுமுன் அவரது முன்னுரை பற்றிய ஒரு யதார்த்த பூர்வமான ஓர் எதிர்வினை. டாக்குத்தரையும் லெக்சரரையும் அந்த மனைவி நிராகரிப்பதற்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சீதனமின்மை காரணமாக இருக்குமேயன்றி அம்மனைவி முன்வைக்கும் காரணங்கள்தான் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அது யதார்த்தமாக இல்லை, தமிழ் மக்களின் மத்தியதரவர்க்கப் புத்தி சீதனமிருந்தால் டாக்குத்தரையும் லெக்சரரையும் மறுத்திருக்காது என்று நான் நினைக்கிறேன். அது யதார்த்தத்திற்கு அப்பாற் பட்டது.
அடுத்து அவர் தரும் செய்தியைப் பற்றியது. இலங்கைப் பெண்களின் இலக்கியத்தைத் திரட்டி ஆய்வு செய்யும் ஒரு முயற்சியில் அவற்றைத் தேடத் தொடங்கிய பொழுது வரலாற்றின் தொடக்க காலம் தொடங்கி, வெளிநாட்டவர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலம்வரை, ஒரு வறுமை தென்பட்டது. பெண் எழுத்தாளர்கள் மட்டுமல்ல இலக்கியகர்த்தாக்கள் இருக்கவில்லை. இந்தியாவில் ஒளவை தொடங்கி காரைக்கால் அம்மையார் வரை பெண்களின் இலக்கிய முயற்சிகளில் ஒரு தொடர்ச்சி நிலை இருந்தது. சிங்கள மக்களிடையே யும் பழம் சிங்களமொழி என்று கூறப்படும் ஹெலபாசையில் பெண் இலக்கிய வாதிகள் இருந்துள்ளார்கள். போர்த்துக்கேயர் காலத்தில் வசித்த கஜமன்நோனா என்ற பெண்மணி ஒரு புரட்சி எழுத்தாளர்.
இலங்கையில் தோன்றிய முதல் இலக்கியம் 1310ம் ஆண்டுக்குரியது. சரசோதிமாலை எனும் சோதிடநூல் தம்பதெனிய இராச்சியத்திலிருந்து வெளிவந்துள்ளது. இதுவே இலங்கைத் தமிழரின் முதற் படைப்பு.
1985ம் ஆண்டு அசன்பே சரித்திரம் என்ற நாவலென்று கூறமுடியாத ஒரு அந்நிய நாட்டுக் கதை இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் இலங்கைத் தமிழரின் முதல் நாவலாகக் கொள்ளப்பட்டுள்ளது s
ஆகவே கிளாக்கர் புத்திக்கும் அப்பால் பல காரணங்கள் உள்ளன. இந்த இலக்கிய வறுமையை அக்காரணங்களின் ஊடாகவே நாம் கண்டறிய முயல வேண்டும்.
அதற்குமுன் இலங்கைத் தமிழர் ஏன் இலக்கியம் படைக்கவில்லை. படைத்தார்களா? அவை அழிந்து விட்டனவா? படைக்கவில்லை என்றால் அதற்குரிய சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்கள் யாவை என்பது போன்ற கேள்விகளை உள்ளடக்கிய ஒரு கேள்விக் கொத்தைச் சில இலக்கியப் பேராசிரியர்களுக்கும் வரலாற்றுப் பேராசிரியர்களுக்கும் நான் அனுப்பிவைத்து எனது ஆய்வுத் தரவுகளைத் தந்துதவுமாறு கேட்டிருந்தேன். ஆனால் ஒருவரும்
44
 
 

விடைகள் தர முயலவில்லை. கடிதம் கிடைத்ததாகவும், முக்கிய கேள்விகள் அவை என்றும் கூறி மெச்சினார்கள். ஆனால் அவற்றிற்குரிய விடைகள் இன்னும் கிடைக்கவில்லை.
வரலாற்றின் தொடக்க காலத்தில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இலங்கையில் இருந்தது என்று நிறுவமுற்படுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால் எந்த இனமாவது இலக்கியம் படைக்காமல் இருந்திருக்குமா? என்ற கேள்வி முக்கியமானது.
Leisure என்ற வேலையின்றிச் சும்மா இருக்கும் நேரம் கிடைத்த பொழுதுதான் வரலாற்றில் மனிதன் கவிதை படிக்கத் தொடங்கினான். அந்த உல்லாச நேரம், கடின வாழ்க்கையின் காரணங்களினால் இலங்கைத் தமிழர் களுக்கு அக்காலகட்டத்தில் கிடைக்கவில்லையா? - சீதோஷ்ண நிலைகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். கம்பவாரிதியின் கொள்கைகள் கருத்தியல் கள் போன்றவற்றுடன் பெரும்பாலும் வேறுபடும் நான் அவரது இக்கட்டுரை தரும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனாலும் இந்த இல்லை என்ற நிலைப்பாட்டை அது இல்லை, இது இல்லை, கம்பன் இல்லை, காளிதாசன் இல்லை, ஒளவை இல்லை, பாரதி இல்லை, என்ற இன்மைத்தன்மையை தனித்துப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அக்கால இக்கால சமூக பொருளாதார அரசியல் காரணிகளுடன் இந்நிலை பின்னிப் பிணைந்துள்ளது. இலக்கியம் எப்பொழுதும் சமூகவியலுள் சமூக நிலைகளுடன் இணைந்தே வெளிப்படும்; அச்சமூகத்தில் சில காரணிகளும் கருத்தாக்கங்களை ஊக்குவிக்கும், தோற்றுவிக்கும், பொலிய வைக்கும். போர் தற்போது கவிதைக்கு, நாவலுக்கு, சிறுகதைக்கு, கருப்பொருளாகியது எப்படி என்று நாம் விளக்கத் தேவையில்லை. பெண்நிலைவாத கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு ஆண்களும் தற்போது இலக்கியம் சமைக்கிறார்கள் மிகச்சுவையாக - ஆகையால் நாம் அக்கால வரலாற்றைத் தெரிந்து கொண்டால் ஒருவேளை அவர் எழுப்பும் கேள்விக்கும் விடை காணலாம்.
என்னுடைய இன்னுமொரு தேடல் முயற்சியில் சில நூல்களை நான் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாரிடமாவது அந்நூல்கள் இருந்தால் தயவுசெய்து என்னுடன் தொடர்புகொள்ளலாம்
963)6 1. தீண்டாமைக்கு சாவுமனி 2. உருத்திர கணிகையர் கதா சரித்திரத் திரட்டு - க. அஞ்சுகம் எழுதியது 3. Incidents in the life of the last king of Kandy
- By Ms. Bawa, Wesley Mission, Batticoloa. 4. அரியமலர் - நாவல் 1938. மங்களநாயகம் தம்பையாவால் எழுதப்பட்டது.
செல்வி திருச்சந்திரன், கொழும்பு.
கம்பவாரிதி ஜெயராஜ், "ஞானம்' (ஜூலை 02) இதழில் எழுதிய கட்டுரைக்காகப் பல எதிர்க்கணைகள் வரும் என்று அவரே எதிர்பார்க்கிறார்
என்பதும் அக்கட்டுரையிலேயே தெரிகிறது. வரலாம், வரட்டும். யாரென்ன
45

Page 24
சொன்னாலும் அந்தக்கட்டுரையின் மூலக்கருத்து எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. பலர் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்த கருத்தை அவர் நேர்மையுடனும் துணிச்சலுடனும் சொல்லியிருப்பதைப் பாராட்டவேண்டும். தமிழுக்குப் புதிதாக ஏதும் செய்தவர்கள் ஈழத்தில் யார்? - புதிதாக வேண்டாம். தமிழ் கூறும் நல்லுலகெங்கும் போற்றிப் புகழத்தக்க ஒரு கல்கியோ, புதுமைப்பித்தனோ, டாக்டர் மு.வரதராசனாரோ, ஏன் ஒரு ஜெயகாந்தன் கூட
- ஈழத்தில் யாருடைய பெயரைச் சொல்லக்கூடும்?
இது எனக்குமுள்ள ஒரு மனக்குறைதான். யாராவது ஒருவர் தமிழ் உலகம் முழுவதும் பேசக்கூடியதாக ஈழத்தில் தோன்றவேண்டும் என்ற ஆசை எனக்குள்ளேயும் உண்டு. அப்படி ஒருவர் இங்கிருந்து முளைப்பதற்குப் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை என்று ஒரு காரணம் சொல்லக்கூடும். - அந்த வசதி வாய்ப்புக் குறைகளையெல்லாம் உடைத்துக்கொண்டு மேலெழும்புகின்ற ஒரு இலக்கிய சாதனையாளர் வரவேண்டுமென்றுதான் நான் ஆசைப்படுகிறேன். அரசியல் உலகில் ஒரு பிரபாகரன் எழுந்து நிமிரவில்லையா? - அதைப்போல! - "வரதர்", யாழ்ப்பாணம்.
ஞானம் இதழ்கள் தரமாக இருக்கின்றன. பல்வேறு கருத்துக்களையும் அறிய முடிகிறது. துரை மனோகரனின் எழுதத் தூண்டும் எண்ணங்கள், அந்தனி ஜீவாவின் திரும்பிப் பார்க்கிறேன், படைப்பாளிகளின் “எனது எழுத்துலகம்” மற்றும் நேர்காணல்கள் யாவும் நாம் அறிந்திராத பல தகவல் களைத் தருகின்றன. தேடல் மனப்பான்மை கொண்ட இலக்கியவாதிகளுக்கும், தேடல் குறித்து புதிய கண்ணோட்டங்களைத் தரிசிப்பவர்களுக்கும் ஞானம் இதழ்கள் பயனுள்ளதாகலாம்.
பிரபல சிங்கள இலக்கியப் படைப்பாளி குணதாஸ அமரசேகர இங்கே வந்துள்ளார். சமீபத்தில் எஸ்.பி.எஸ் சிங்கள வானொலியில் அவர் பேட்டி யளிக்கும்போது ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது - அலெக்ஸாண்டர் சொல்சனிட்சினின் கருத்தை மேற்கோள் காட்டிச் சொன்னார். அலெக்சாண்டர் சொல்சனிட்சின் நோபல் பரிசு பெற்றவர். முன்பு சோவியத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் குடியேறி அந்தவாழ்வும் வெறுத்துப்போய் பின்பு ருஷ்யாவுக்கு வந்தவர். ஒரு நல்ல இலக்கியப் படைப்பாளியுங்கூட.
ஒரு தேசத்துக்குள் வாழும் இன்னுமொரு தேசம் - என்று சொல்சொனிட் சின் சொன்னதாக குணதாஸ அமரசேகர குறிப்பிட்டார்.
பல்வேறு இனங்கள் வாழ்வது ஒரு தேசம் என்றால் இன மத மொழி, வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்திப்பவன் - பல இன மத மக்களுக்காகவும் எழுதுபவன் - அம்மக்களிடையே மனித உரிமைக்கு குரல்கொடுத்து மனித நேயத்தை வளர்ப்பவன் நல்லதொரு படைப்பாளியாகத்தான் இருக்கமுடியும். அத்தகைய படைப்பாளிகளை இனங்கண்டு தேடிப்பிடித்து ஞானத்தில் அவர்களுக்கும் களங்கொடுங்கள். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஞானமும் ஆரோக்கியமான பங்களிப்புகளை வழங்கட்டும்.
லெ.முருகபூபதி, அவுஸ்திரேலியா.
46

இது ஒரு கிறுக்கல் சித்திரம் மனக் கண்களுக்கு மட்டுமே அர்த்தம் புரியும்!
ஒரு ஜூலை கறுப்பானதால் நிறம் மாறியது இந்தப் புன்னகை
இங்கு நிலவுக்கு மட்டுமா அமாவாசை அதோ சூரியனை விழுங்கிவிட்ட புகைப் பூதம்! என் தேசத்திற்கு
எது இரவு?
எது பகல்?
மனிதன் கலர்க் கண்ணாடி போட்டுப் பார்க்கிறான். சில சுவாசங்கள் கூட
வேஷங்கள்!
அந்தப் புன்னகையை நம்பாதீர்கள் உதடுகளில் விஷமிருக்கிறது! மூக்கைக் பொத்த வேண்டாம்
காதை மூடுங்கள்
அவன் நஞ்சைக் கக்குகிறான்! பாருங்கள் அந்த வேட்டி
புத்தம் புதுசு. கிழிந்த பகுதி இரண்டாவது மடிப்புக்குள் அழுக்கான நகத் துண்டுகளை இன்னும் புதைக்காமல் வைத்திருக்கிறார்கள். ஏன்? புடவையே கற்பழித்தால் யார் மானம் காப்பது? ஒன்று மட்டும் உண்மை. இது அழகான வயல்
விளைந்து நிற்கிறது காளான்!

Page 25
இரண்டு அம்மணி
அப்கே ஒரு அம்மணி இங்கே ஒரு அம்மணி அந்த அம்மனியிடம் அடாவடித்தனம், இந்த அம்மணியிடம் அட்டகாசம் - அரியணையில் இருந்து கொண்ே அங்கே குண்டர் படைகொண்டு வீரப்பனர்வேலைகள் நடக்கும்! வேண்டாதவர்களை யெல்லாம் குண்டர்களைக் கொண்டே துவம்சம் செய்வார் அந்த அம்மன இங்கே அதிகாரத்தைக் கொண்டே வேண்டாதவர்களுக்கு வேட்டு வை. இந்த அம்மணி, ஊழல் மன்னர்களெல்லாம் இந்த அம்மணியின் ஒக்கலையில் ஊழல்கள் எல்லாமே அந்த அம்மணியின் கைப்பைக்குள் வாக்களித்தவர்கள் - இளிச்சவாயர்கள் என்றால் என்னதான் செய்யமுடியாது? சர்வாதிகாரிகள் வெளி வெளியாகவே செய்கிறார் இந்த அம்மணிகள் இருவரும் ஜனநாயகப் போர்வை போர்த்திக் கொண்டே சர்வாதிகாரம் செய்கிறார்கள் இந்த அம்மணியை கோர்ட்டுக்கு அழைக்க முடியாது அந்த அம்மணியிடம் கோர்ட்டே சரணாகதி ஆனது நீதியே நீ கேள்!
(ஞானம் சஞ்சிகையில்
WWW.geocities.com

T. GNJANJA SEKARAN 19/7, Perade svívov Road, Kovoudy,
Srí Lawukov
களர்
F
J’’ JTrĩ
©056si 1060's
10ĽLåđ55ĪTŐL,
6.
N
இணைய முகவரி
NE!, Illi T1:ll Till_Ill. El gall Z. i II e
كې.