கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.10

Page 1

% GOD
லக்கியச் சஞ்சிகை
ஒக்டோபர் 2002

Page 2
நூலில் இல்லா நாவல்!
இயல் இசை நாடகம் முன்றும் இயலுமாய் வாழும் மக்கள் கலைஞன் புயல் எனப் புறப்பட்டான் காண் புதிய தோர் சாதைனை படைத்திடத்தான்; சோக்கல்லோ!
செயலும் சொல்லும் வேறாய்த் திரியும் சுரனை யற்றோர் வாழும் புவியில் - தன் செயலைச் சொல்லி ஏழரை மணியுள் சுயத்தை ஆய்ந்து சோதனை செய்தான் சோக்கல்லோ!
பச்சைப் பாலனாய் ஏழாலை ஊரினில் பனங்களித் துணியும் இடைதனி லணிந்து கொச்சைத் தமிழைப் பேசிய முதலாய் மண்ணின் மைந்தனென் றறியும் படிமுறை உரைத்தான்: சோக்கல்லோ!
இன்னல் பட்ட அழுதுயர் வாழ்வும் இழையும் நகையால் கதம்ப உரையால் "கின்னஸ் ஏட்டில் தமிழ்ப் பெயர் பொறிக்க கிளர்ந்தான் நானும் தமிழும் எனவே: சோக்கல்லோ!
சோக்கல் லோக் கென்ன தமிழா தெரியும் செத்தால் ஆர்தான் பொறுப்பும் என்று சிலர் நக்கல் அடித்தோர் நளினம் புரிந்தோர் நெற்றி சுருங்கி கறுக்கச் செய்தான்; சோக்கல்லோ!
தேசிய கலை இலக்கியப் பேரவை யோடும் தோள்தரு புரவலர் நண்பர்க ளோடும் பேசிடும் கலையில் அருந்தல் அற்று - பிரதி பார்த்திடல் இன்றியே பேச்சினைத் தொடர்ந்தான்; சோக்கல்லோ!
நூலினில் இல்லா நாவல் ஒன்றை நயந்திடச் செவிக்கு நல்குமோர் ஆவணம்! நாளினிற் தந்த சண்முக நாதனாம் நமதுயிர்க் கலைஞன் வெல்க, வாழிய பல்லாண்டு.
2009.2002 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனுசரணையில் கொ பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில் மக்கள் கலைஞர் சோக்கல்லோ சண்முகம் (தா.சண்முகநாதன்) ஏற்படுத்திய பேசும் கலையில் புதிய உலக சாதனைக்கான 7 1/2 மணி நேர தொடர் உரையைப் பாராட்டி எழுந்த கவிதை

ஆசிரியர் : தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
ஞா.பாலச்சந்திரன்
ஓவியர் நா. ஆனந்தன்
கனரிை அ1ைாப்பு கெ.சர் வேளப்வரன் தொடர்புகளுக்கு
தி.ஞானசேகரன் 19/7, பேராதனை வீதி, கண்டி. (air (Bu. -08-178570 (Office)
O8-23.4755 (Res.)
O8-23.4755
F:1N
E-ili
இண்ைபம் பதிப்பு -তৃণু","nT" யார்:
on 1:1m_mog೩7ine@yah00.com
உள்ளே சிறுகதை d'si:Të Agrard. Si .............................05 a.என்.சந்திரகாந்தி தொலையும் பொக்கிசங்கள் .? 5 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . 15 துரை, ஐனோகரன் ஈழத்தினர் நால்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டுக்களின் பங்களிப்பு . 17 47. 14.ມ 11:T
slash எழுத்துலகம் ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . லெ.முருகபூபதி
கவிதைகள் நாலில் இல்லா நாவல். ?ே ம13:3.வரோதயன் Girl as '................................................ 18 கவிசூர் ஏ.இக்பால்
u Tă 35J i hii ........ . . . . . . . . . . . . . . . -- - - - - - - - - - 1 *** த.ஜெயசீலன் இப்போதெல்லாம் முடிவதில்லை. 42 தேசங்கீதா தோற்றுவிடுவார்கள் . 46 விடில்டன் சி.சாரதாம்பாள் துணிவினைத் துதித்திடுவோம் . 47 தமிழோவியன் Ibiñ 'añiginak, 6 itur7 (3b....... ........................... 48 5.ÜTUTiJği
நூல் விமர்சனம் . 12
திரும்பிய் பார்க்கிறேன் . 고 வாசகர் பேசுகிறார். 43 தஞ்சைக் கடிதம் .38
afal Tg5d ID61DL....................... 39 IuLI BII Goatsib ...................... 46
நன்றி - அட்டைப்படம் ନୀfig...)

Page 3
ஞானம்
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
.விழிபெற்றுப் பதவி கொள்வார்  ܼܲܢܠ
அரச இலக்கிய விருதுகள் கலைஞர்கள் கெளரவிக்கப்படும்போது அது ஊக்குவிப்பாக, பணி தொடர உந்துசக்தியாக அமைவதோடு அவர்தம் ஆற்றலை வெளியுலகிற்கு அடையாளம் காண வழி சமைக்கிறது. இன்று கலை இலக்கிய உலகில் விருதுகள் பட்டங்கள் வழங்கப் படுவதும் கலை இலக்கியவாதிகள் கெளரவிக்கப்படுவதும், பொன்னாடை போர்த்தப்படு வதும் மலினப்படுத்தப்பட்டு, வெறும் கேலிக் கூத்தாகிவிட்டது.
அரசும் கலை இலக்கியவாதிகளைப் பல வழிகளில் கெளரவிக்கிறது. நமது நாட்டில் கலை இலக்கிய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சாகித்திய அக்கடமியாக கலை இலக்கியக் குழுக்களை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் வெளிவரும் நூல்களில் தலையாய ஒன்றினைத் தெரிவுசெய்து சாகித்திய விருது வழங்கி ஆக்கியோனைக் கெளரவிக்கிறது. இவ்விருது நாடளாவிய மொழிவாரியான அங்கீகாரமாக நன்மதிப்பைப் பெறுகிறது. ஆனால் கடந்த காலங்களில் இத்தேர்வில் பல கசப்பான விவகாரங்கள் நடைபெற்றதாக இலக்கிய உலகில் சுட்டிக் காட்டப்பட்டது. இவ்விருது நல்ல தரமான சில நூல்களுக்குக் கிடைக்கவில்லை எனவும் பின் கதவுகள் மூலம் தரம் குறைந்தவை தட்டிச்சென்றதாகவும், பட்டம் பதவியால் இலக்கிய உலகில் மேலாதிக்கம் செலுத்துபவர்களின் சிபார்சாலும், அரசியல் பிரமுகர்களின் தலையீடு களாலும் சில நூல்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆதிக்க மையத்தி லிருந்து ஒதுங்கி ஆரவாரமின்றி இயங்கிய தரமான சில இலக்கியவாதிகள் ஒரம்கட்டப் பட்டதும் தலைசிறந்த எழுத்தாளர்கள் சிலர் ஒரு தடவையாவது சாகித்திய விருது பெறாததும் உண்மையே. இன்னும் எத்தனையோ குளறுபடிகள்!, முறை கேடுகள்!. மறுபக்கத்தில் சோதர எழுத்தாளர்கள் வெட்கித் தலை குனியும்வண்ணம் சில எழுத் தாளர்கள் முறைகேடான வழியில் பரிசு பெறமுயன்றதும் சிலர் வெற்றியடைந்ததும் காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆகவே அரசு மேலிடம் சாகித்திய மண்டலத்திற்கு உறுப்பினர்களை நியமனம் செய்யும்போதும் இலக்கியக் குழுவினர் பரிசுக்குரிய நூலினைத் தெரிவுசெய்ய நடுவர் களை தெரிவுசெய்யும்போதும், பரிசுத் தெரிவில் நடுவர்களின் பரிந்துரைக்கேற்ப இறுதித் தீர்மானம் எடுக்கும்போதும் சம்பந்தப்பட்டவர்கள் இதய சுத்தியுடன் இயங்க வேண்டுமென “ஞானம் வலியுறுத்துகிறது. ‘உன்னை யறிந்தோ தமிழையோதினேன்" எனத் திறமையான இலக்கிய கர்த்தாக்கள் மானசீகமாக மனம் வெதும்ப நாம் இடமளிக்கமாட்டோமென இனி ஒரு விதிசெய்வோம், அதை என்னாளும் காப்போம்! இவ்வாண்டு சாகித்திய விருதுபெற்ற இலக்கிய கர்த்தாக்களை ஞானம் மனமாரப் பாராட்டி, அவர்களது இலக்கியப் பணி சிறப்புற வாழ்த்துகிறது.
- ஆசிரியர்
4
 
 
 

சீழ்த் 5.
சின்னஞ் சிறுசுகள்
ഖ്. ஃநீேகாந்தி
ஒரு இளைஞனாக இருக்கும் போதே விவாகம் செய்து விட வேண்டுமென்ற என்னைச் சார்ந்த உறவினர்களின் நியாயப் படுத்தலுக்கு உடன்பட்டு நான் விடுமுறையில் வீடு வந்து விட்டேன். மாரி காலத்தில் நடாத்தப்படவேண்டிய நிகழ்வொன்று அட்டமி அமாவாசை கனத்தநாள் என்றெல்லாம் கருத்துக்கெடுக்கப்பட்டு தடங்கலாவதுபோல எனது கலியாண வைபவத்துக்கான திகதியைக் குறிப்ப திலும் தடையொன்று வந்து எனது உறவினர் அனைவர் முகத்திலும் அசடு வழியுமாறு செய்துவிட்டது!
எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் போடப்பட்டிருந்த சுமாரான செற்றி ஒன்றில் சாய்ந்திருந்தேன். அங்கிருந்து பார்க்கும்போது எங்கள் வீட்டின் நீண்ட அகன்ற முற்றமும் எதிரே குறுக் கறுத்தோடும் சிறிய ஒழுங்கையும் மறுபுறம் எனது பெரிய தாயாரின் இல்லமும் பூமரங்களினா லான தடை நீங்கலாக துலாம்பர மாகத் தெரியும்.
எனது அணி னையான வளர் தன்னிலை மறந்து ஓட்டமும் நடையு மாக அடிக்கடி அங்கு ஓடுவதும் சோர்ந்து துவண்டு வருவதுமாகக் கவலையுடன் அலைந்து கொண்டிருந் தாள்.
அவளது மூத்த சகோதரி எனது பெரிய தாயார் "கோமா நிலையில் நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தாள்.
"அக்காவுக்கு இப்போதைக்கு ஒண்டும் நடக்காது தம்பி." சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாக தீர்மானம் செய்தபடி யதார்த்தம் பற்றி கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாத மக்கள் கூட்டத்தினரிடையே எனது தாயார் முதன்மை ஸ்தானத்தில் நிற்பவள்.
நான் அமைதி காத்தேன்.
எனது மூத்த உடன்பிறப்புகள் நால்வர், பெரியதாயாரின் பிள்ளைகள் இருவர் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் தலைநகரில் சுகவாசம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
எனது விவாகம் முந்துமா. பெரியதாயாரின் பரலோகப் பிரவேசம் முந்துமா என்பதைத் தீர்மானிக்க இயலாத திரிசங்கு சுவர்க்க நிலை
அவர்களுக்கு.
வரவேற்பு அறையின் சுவர் ஒன்றில் தொங்கியபடி இருந்த கடிகாரத்தின் "டிக்.டிக். ஒலி எனது இதயத்தின் தாளத்துக்கு சுருதி சேர்க்கின்றது.
எனக்கு. உடனேயே விவாகம் செய்துவிட வேண்டும் என்கின்ற அவசரம் கிஞ்சித்தும் கிடையாது. நான் விவாகம் செய்ய முன்வந்தது ஒரு பெண்ணை முகர வேண்டும் என்கிற மனவியல் பலவீனம் காரண மாக அன்று.
எனக் கு ஒரு குழந்தை வேண்டும். இது ஒரு அவாவாகவோ அல்லது என்னை அறியாமல் ஒரு பிடிவாதமாகவோ எனது இதயத்தின் அடித்தளத்தில் வேரூன்றி நிலைத்து விட்டது. எனக்கு ஒரு இளைய சகோதரம் இருந்திருந்தால் நானும் ஒரு குழந்தையாக மாறி அதனுடன் இணைந்து விளையாடி எனது தாகத்தைத் தணித்திருக்க முடிந்

Page 4
திருக்கும். ஆனால் சிறுவயதிலிருந்தே மூத்தவர்களின் அடக்கு முறைகளை மட்டுமே அனுபவித்தவன் நான்.
தன்னாதிக்கம். மேலாண்மை ஆகியவற்றின் ஒடுக்கு முறைகளை சரித்திரம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை; ஒரு குடும்பத்தில் இளைய பிள்ளையாக இருந்தாலே தெரிந்து கொண்டு விடலாம்!
என்மீதான நெருக்குதல்கள் நிர்ப்பந்தங்கள் அதிகரித்தபோது நான் அம்மாவின் மடியில் விழுந்து அழுது சண்டையிட்டதும் மூத்தவர்கள்தானே என்று அம்மா சமாதானத் தை முன்வைத்ததும் அந்நேர அரவணைப் பில் என்னால் மறக்கப்பட்டவையாக போயினும் எனது இதயம் சின்னஞ் சிறார்களைத் தேடுவதில் அதிக ஆர்வம் காட்டியது.
பத்திரிகைகளிலும் வானொலி யிலும் பிரசாரம் செய்வதுபோல எனது தாய் தந்தையரும் நான் பிறந்ததனை தொடர்ந்து குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை பின் பற்றியிருக்கக்கூடும். நான் பிறந்ததுகூட அவர்கள் எதிர் பாராத. அவர்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய. அவர்களை கவலைக் குள்ளாக்கியிருக்கக் . கூடிய ஒரு நிகழ்வாக இருந்திருக்குமோ என்று எண்ணி நான் கவலைகொண்டதுண்டு. எக்காரணம் கொண்டோ நான் இந்த உலகில் எனக்கு இளைய உறவுகள் இன்றித் தனியே விடப்
பட்டமையால் உருவான வெப்பிசாரம், என்றும் எனது நெஞ் சறையில் தகித்துக்கொண்டே இருக்கின்றது.
அம்மா சிற்றுண்டியுடன் தேநீர் பரிமாறினாள். பின் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள்.
"தம்பி பெரியம் மாவின் ரை நிலைமையைப் பார்த்தால் இண் டைக்கு நாளைக்கு ஒண்டும் நடக் கிறமாதிரி இல்லை. வாற நல்ல நாளுக்குக் கலியாணத்தை வைப் LJ(ჭup?”
அம்மாவின் வினாவுக்கு என்ன பதிலைக் கூறுவதென்று எனக்குப் புரியவில்லை.
"நீங்கள் யோசிச் சு செயப் யுங்கோ.”
அம்மாவுக்குப் பதிலிறுத்தபடி எழுந்து பெரியதாயாரைப் பார்க்கச் சென்றேன். அவளுடைய முகம் துயில் வதுபோல பிரகாசமாக இருந்தது. கடந்த காலத்தில் அவள் என்மேல் காட்டிய பரிவும் பாசமும் எனது நினை வுத் திரையில் காட்சிகளை விரித்தன. எனக்குத் தொழில் வாய்ப்புக் கிடைத்து முதன் முதலாக நான் தலைநகருக்குச் சென்ற சமயம், அவளது சிபார்சின்பேரில் அவளு டைய கணவனின் சகோதரர் (எனது பெரிய தந்தையின் தம்பியார்) இல்லத் தில் தங்கினேன். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் . மூவருமே எனக்கு இளையவர்கள். தாகத்தில் அலைந்தவனுக்குத் தாகசாந்தி நிலையம் எதிர்பட்டதுபோல எனது உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளர்ந் தது. எனது கிராமத்து பண்பாட்டினை அனுசரித்து ஒரு மரியாதைக்காக பொதுவில் மூவரையும் 'அக்கா என்று விளித்து மதிப்புக் கொடுத்து நடந் தேன்.
 

ராஜேஸ் அக்கா மூத்தவள்; குஞ்சு அக்கா நடுவிலாள்; தனேஷ் அக்கா இளையவள். அன்று வரை யிலான எனது வாழ்நாளில் இல்லாத படி என்னுள் மனத்தில் மண்டிக்கிடந்த இயற்கைச் சுபாவங்களை வெளிப் படுத்தி நான் மகிழ்ந்திருக்க எனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாக அந்த வாய்ப்பு அமைந்தது.
இளமையின் மிடுக்கில் வெள் ளரிப்பழம்போல மூவருமே அழகில் திரண்டிருந்தார்கள். எங்கு போனாலும் என்னை அழைத்துச் சென்றார்கள். விதம் விதமாக எனக்கு சுவையூட்டும் தின்பண்டங்கள் பெற்றுத் தந்தார்கள். ஒளிவு மறைவின்றி தங்கள் மனதை எனக்குத் திறந்து காட்டினார்கள்.
குஞ்சு அக்கா என்னுடன் அதிக நேரம் பேசினாள். எனது மனக்குறை களை நானும் அவளுக்கு எடுத்துரைத் தேன். கணி கலங்கி அழுதாள். முன்னரைக் காட்டிலும் என்மேல் அதிக பரிவு காட்டினாள். அந்தப் பரிவுணர்ச்சி விருட்சமாகி வளர்ந்தது. ஒருநாள் நீண்டநேரம் என்னு டன் தயங்கி தயங்கி எதையோ மனதில் மறைத்து இருத்தி பேசிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு கவலை யில் அவள் திளைத்திருப்பது எனக்குப் புரிந்தது. நான் அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். அவளுடைய தலை தாழ்ந்திருந்தது. ஆழ்மனத்திலிருந்து வெளிக்கிளம்பிய விம்மலையும் குமுறலையும் அடக்கிய படி கேட்டாள்.
"ரஞ்சன். உங்களுக்காக நான் ஒரு குழந்தையைப் பெற்றுத்தர சம்மதிப்பீர்களா?”
பெரியதாயாரின் வீட்டு முற்றத் தில் அவளுக்காக நான் முன்னர் அமைத்துக் கொடுத்த மல்லிகைப்
பந்தலின்கீழ் உலாவியபடி இருந்த என்னை அம்மாவின் அழைப்புக் குரல் திசை திருப்பியது.
பெண் வீட்டார்கள் வந்திருக் கிறார்கள்!
அம்மாவுடன் பேசிக் கொண் டார்கள். விவாக எழுத்தை உடனே முடித்துவிட்டால் பின்னர் நிலை மையை அனுசரித்து விவாகத்தை முந்தியோ பிந்தியோ செய்யலாமென முடிவு செய்தார்கள்.
ஊழ் என்பதனைக் காட்டி எத்தனை எத்தனை காப்பியங்கள் படைக்கப்பட்டு விட்டன! எனது வாழ்வும் ஒரு காப்பியமாகக் கூடும். குஞ்சு அக்கா கேட்ட கேள்வி யால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எத்தனை நாட்கள் நான் அவளுடன் கட்டிலில் படுத்த வண்ணம் கதைகள் பேசி மகிழ்ந்திருக்கின்றேன். அவளைப் பொறுத்தவரையில் அது சகோதரத்தின்பாற்பட்டதில்லையா? சகோதரன் என எண்ணி என்னை நெருங்கி அன்னியோன்னியமாகப் பழகும் மற்றிரு சகோதரிகளும் தூர விலகிச் சென்று விடுவார்களே. எனக்கு இளையவர்கள் என நெருங்கி அன்பு பாராட்டக் கிடைத்த சந்தர்ப்பம் பறிபோகின்றதே என எண் ணி எண்ணிக் கலங்கினேன்.
குஞ்சு அக்காவை சமாதானம் செய்து திசை திருப்ப என்னாலான முயற்சிகளையும் வாக்குச் சாதுர்யங் களையும் பிரயோகித்தேன்.
"குஞ்சு அக்கா, நாங்கள் சகோதரர்கள். மற்றவை எங்களைப் பகிடி பண்ணுவினையெல்லே?" எனது சமாதானங்களை அவள் ஏற்க வில்லை.
"இல்லை ரஞ்சன், உங்களு டைய பெரியம்மாவின் பிள்ளைகள்

Page 5
உங்களுக்கு ஒன்றுவிட்ட சகோதரர் கள் தான். அதற்குக் காரணம் பெரியம்மாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற இரத்த உறவு. ஆனால் என்னுடைய அப்பாவும் அம்மாவும் உங்களுக்கு இரத்த உறவு இல்லாத வர்கள். எனவே பெயரளவில்தான் எனக்கும் உங்களுக்கும் சகோதர உறவு வருகின்றதே தவிர நாங்கள் இரத்த உறவு அற்றவர்கள்!"
குஞ்சு அக்கா தலைநகரி லேயே பிறந்து வளர்ந்தவள். எனவே தனது கருத்துக்களை உறுதியாகத் தீர்மானித்துப் பேசினாள்.
எனக்கோ சிகரத்திலிருந்து பாதாளத்துக்கு வீழ்ந்துவிட்டவனின் நிலை. மீண்டும் மெல்ல மெல்ல நடைப் பிணமானேன்! என் னில் மாற்றத்தை அவதானித்த ராஜேஸ் அக்காவும் தனேஷ் அக் காவும் என்னைக் கேள்விகளால் குடைந் தார்கள். என்னுடன் அதிகநேரம் கதை பேசும் நடுவிலாள்மேல் அவர்கள் கோபம் திரும்பியது.
ஆனால் குஞ்சு அக் கா என்னை நன்கு படித்து தெரிந்து வைத் திருக்கின்றவள். அடுத்த வீட்டிலிருந்த அழகான கைக்குழந்தை ஒன்றைத் தூக்கி வந்து எனது ஆசைகளுக்குத் தூபம்போட்டு வளர்த்தாள்.
எனக் கென்று குழந்தைகள் வேண்டும் என்கின்ற ஆசை மிக மிக உயரத்தில் தனது 'சிறகுகளை விரித் துப் பறக்க முற்பட்டது!
வரவேற்பறையில் சுவர்க்கடி காரத்தின் குருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது. அதனைத் தொடர்ந்து மணி பத்து அடித்தது. அம்மா சமையல் வேலையில் தீவிரமாக இருந்தவள், தனது கவனத்தை எனது பக்கம் திருப்பி.
"நீ. மகன் யோசிச்சு யோசிச்சு கவலைப்பட்டுக் கொண்டிருந்து ஒண்டும் செய்ய ஏலாது. அண்ணைய வைக்கும் அக்காவுக்கும் உடனை புறப்பட்டு வரச் சொல்லி என் ரை பேரைப்போட்டு தந்தி அடி. மற்றதை யெல்லாம் நான் பார்க்கிறன்"
அம் மாவின் பேச்சுக் கு மறுபேச்சு இன்றி மேற்சட்டையை மாற்றிக்கொண்டு துவிச்சக்கர வண்டி யில் எனது மாணவப் பருவ கால நண்பன் ரமேஷ் வீட்டுக்குச் சென் றேன்.
"எப்படி மச்சான் உன்னுடைய பெரியம்மா பாடு?". ரமேஷ் வினா வினான்.
எனக்கு அந்தக் கேள்வி கோபத்தை உண்டு பண்ணியது.
"உனக் கும் எனினுடைய அம்மாவுக்கும் வித்தியாசம் இல்லை யெடாப்பா. நீங்கள் எல்லாரும் என்னையொரு போடுதடியெண் டு நினைக்கிறியளேயல்லாமல் நானும் உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுசன் எண்டு நினைக்கிறேல்லை"
ரமேஷ் அமைதி காத்தான். பின் வினாவினான், “ஏன் மச்சான் குஞ்சு அக்காவைப் பற்றி இப்பவும் நீ நினைச்சுக் கொண்டு இருக்கிறியா?” வாழ்க்கைப் பாதையின் ஒரு சந்தியில் நான் நின்று கொண்டிருப் பதை எனது மனம் நன்கு புரிந்து வைத்துக் கொண்டு என்னை வதைத் தது. யாருடனாவது மனம் விட்டுப் பேசினாலாவது சிலசமயம் நல்ல முடிவு எய்தப்படக்கூடும் என எண்ணி னேன்.
"மச்சான் குஞ்சு என்னை விரும் பின சம்பவம் நடந்து ஆறு வருடங்கள் ஒடிவிட்டது. வீட்டிலை நடந்த பிரச்ச னையும் உனக்குத் தெரியும். நான்

ஊரிலை இல்லாததாலை அதன் பின்னர் என்ன நடந்த தெண்டு உனக்குத் தெரியாது."
“எனக்கு ரஞ்சன் உன்னிலை நம்பிக்கை இருக்கு. ஆனபடியால் நீ உன்னுடைய குடும் பத் தோடை அனுசரித்துப் போவாய் என்ற நினைப் பில் அச்சம்பவத்தைப் பற்றி அறிய வேண்டும் என்கின்ற மனத் தூண்டுதல் எனக்கு இருக்கேல்லை."
ரமேஷின் சுபாவமே அதுதான்! நான் மனம்விட்டு அவனுடன் பேசு வதற்கும் அவனுடைய அநீத இயல்பால் நான் கவரப்பட்டிருந்ததே காரணமாகும்.
“இப்ப சொல்லுறன், கேட்டுக்
கொள். குஞ்சு என்னை விரும்புவ
தோடு நின்று விட்டிருந்தால் நிச்சயம் எனக்கும் அவளுக்கும் விவாகம் நடந்திருக்கும். எனது கஷ்டகாலம் விடவில்லை. ஊர் உலகத்திலை நடக்காத புதினமாக எனது காதலியின் சகோதரிகள் இருவரும் உள்ளுரத் தாங்களும் என்னைக் காதலித்துக் கொண்டிருந்ததை அப்போ நான் அறியவில் லை. குஞ்சு தனது காதலை வெளிப்படுத்திய உடனே சகோதரிகள் மூவருக்கும் இடையில் சண்டை மூண்டது. எவரும் என்னை விட்டுக் கொடுத்து தங்களுக்குள் ஒரு மாப்பிள்ளையாக என்னை எடுக்கும் முடிவுக்கு வரமுடியாமல் போனார் கள்".
ரமேஷ் உரத்துச் சிரித்தான். நான் ஏன் என்கின்ற வினாக்குறியுடன் அவனைப் பார்த்தேன்.
"எனக்கு பழைய கொலை வழக்கொன்று ஞாபகம் வருகுது மச்சான். இரட்டைக் கொலை. மூன்று பேர் குற்றவாளிகளாக நீதிபதியால் காணப்படும் நிலை. உண்மையாகவும்
மூவரும்தான் கொலைக்குக் காரணம்.
வக் கீல் கேட்கிறார். "ஒராள் கொலையை ஒத்துக் கொள்ளுங்கோ. நானி மற்ற இருவரையும் விடுவிக்கிறன் எண்டு. எல்லாருக்கும் தான் தான் தப்பவேணும் எண்டு ஆசை. ஆர் கொலையை ஒத்துக் கொள்வது? மூண்டு பேருமே தூக் கிலை தொங்கினதுதான்!”
அந்தக் கவலையான நிலை யிலும் நானும் சிரித்தேன். பின் தொடர்ந்து கூறினேன்.
"சகோதரிகளுக்கிடையே ஏற் பட்ட சண்டை எங்கள் வீட்டுக் காரருக்கு இவர்கள்மேல் இருந்த அன்பு பாசம் அபிமானம் எல்லாவற் றையுமே அடியோடு நீக்கி விட்டது. .தலை நகரில் அவர்கள் வீட்டிலிருந்து என்னை வேறு தனி அறைக்கு மாற்றினார்கள். நானும் மனம் சோர்ந்துவிட்டேன். எனது வீட்டுக்காரர் அவர்கள் பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு என்னால் எதுவும் அறிய முடியவில்லை. தடைகளும் பலமாகவே இருந்தன. எனது வீட்டில் எனது பழைய நினைவுகளை தூண்டாதபடி கதை களை மட்டுப்படுத்திக் கொண்டார்கள் எப்படியோ எனது விலாசத்தை தேடிப்

Page 6
பெற்று ராஜேஸ், தனேஷ் இருவரும் தமது காதல், கலியான விபரங்கள் பற்றி எழுதி எனக்கு சூடேற்றப் பார்த்தார்கள். நான் மசியவில்லை. குஞ்சு மட்டும் எதுவுமே எழுதவில்லை. அவளே என்னை உயிருக்குயிராய் நேசிப்பவள் என்பதை அது ஒன்றே நிருபித்தது!”
எனது கண்களால் நீர் பெரு கியது. ரமேஷ் எனது தோளைத் தட்டினான். அவனது கையைத் தட்டி விட்டு நான் வினாவினேன்.
"மச்சான். நான் இப்பவெண் டாலும் குஞ்சுவை விவாகம் செய்தால் என்ன?”
ரமேஷ் மீண்டும் உரத்துச் சிரித்தான். பின்னர் கூறினான். "மச்சான் தூக்குத் தண்டனையிலை மூண்டு பேருந்தான் செத்தவங்கள். அதிலை எப்படி மாற்றம் செய்யிறது?" எனக்குப் பாதி புரிந்தது; மீதி புரியவில்லை. ரமேஷம் தொற்றிக் கொள்ள எனது துவிச்சக்கரவண்டி தபால் அலுவலகத்தை நோக்கி விரைந்தது. விவாகப்பதிவுக்கு உடனே புறப்பட்டு வரும்படி உறவினர்களுக்கு தந்தி அனுப்பப்பட்டது. சகோதரர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். அதன் பின்னர் எனது அபிப்பிராயங்களுக்கு இடமேது?
எனது தாயாரின் பிரார்த் தனைகள் பெரியம்மாவின் முடிவைத் தள்ளிப் போட்டது போலும். விவாகத் தையே முடித்து விடுவது எனத் தீர்மானமாயிற்று.
மலர் மஞ்சத்தில் நான். எனது மனைவி என்முன்னால் நிற்கின்றாள். எனக்காக ஒரு குழந் தையை சுமக்கப் போகின்றவள். அவளை அமரவைத்து பேசி சகஜ நிலைக்கு கொண்டு வருகின்றேன்.
10
"அம்மா சொன்னவா, இரண்டு வருசத்துக்கெண்டாலும் பிள்ளை பெறக்கூடாது எண்டு”
நான் அதிர்ச்சி அடைகின் றேன். "ஏன்?" ஒரேசொல்லில் வினாவு கின்றேன்.
அதற்கு அவள், '"நாங்கள் சின்னஞ் சிறுசுகளாம், உடனேயே பிள்ளை பிறந்தால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதாம்"
எனக்குப் பேரதிர்ச்சி. "கடவுள் தந்தால் நாங்கள் வேண்டாமென்று சொல்லுறதே?”
அவள் அலுமாரியைத் திறந்து எதையோ தூக்கி காண்பிக்கின்றாள். "இதைப் பாவிச்சால் சரி எண்டு அம்மா சொன்னவா”
என்தலைமீது இடி விழுகின்றது. குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டு எனக்கு இளைய சகோதர பாக்கியத்தை இல்லாமல் செய்த எனது பெற்றோர்.
இளைய உடன் பிறப்புக்களாக எண்ணி மகிழ்வுற்றிருந்த என்னை தூக்கியெறிந்த பெண்கள் மூவர்.
குழந்தை ஒன்றிற்காகவே விவாகம் செய்து கொண்ட எனக்கு வந்தமைந்த குழந்தை பெற மறுக்கும்
D6D6165.
என்னைப் புரிந்து கொண்டவள் குஞ்சு ஒருத்தியே..!
அயல் வீட்டுக் குழந்தையை அனைத்தெடுத்து வருவதும் . என் னைத் தனது கணவனாக பாவனை செய்வதும். குழந்தையைக் கொஞ்சுவதும். எனது முத்தத்தை பெற்றுக்கொடுப்பதற்காக குழந்தையை என்முன்பாக நீட்டுவதும். நான் முத்தம் கொடுத்ததும் தானே என்னிடம் முத்தத்தை பெற்றுக்கொண்டதுபோல முகம் சிவந்து நாணித் தலை

குனிவதும். என்பதையும் பொருட்படுத்தாமல் எல்லாமே பாவனையாக போய் அவர்களுடனும் மோதிக் கொண்டு
விட்டது. ! விழுந்து விழுந்து எழுகின்றார்கள்.
இதோ.. எனது வீட்டிற்கு அவர்களுக்கு மத்தியில் ஐந்தே
புதுமணத் தம்பதிகளாக கால்மாறிவரு வயது நிரம்பி இருக்கக்கூடிய அழ
கின்றோம். கான பெண்குழந்தை ஒன்று அகப்
எனது சகோதரங்கள் ஓடிஓடி பட்டுக் கொள்கின்றது. பெரிய விருந்தினர்களை உபசரிக்கின்றார் குழந்தைகளுடன் மோதி இதோ. கள். அம்மா மிகவும் மகிழ்வடைந்து இதோ விழுந்துவிடப் போகின்றது என காணப்படுகிறாள். எண்ணிய நான் ஒரேபாய்ச்சலாகச்
அம்மாவை சைகை காட்டி சென்று குழந்தையைத் தூக்கி எனது அழைக்கின்றேன். "பெரியம்மாவின்ரை மனைவியின் மடியில் அமர்த்து சுகம் எப்படி?” கவலையுடன் வினா கின்றேன்.
வுகின்றேன். அம்மா சிரித்தபடி கூறுகின்றா.
"கொஞ்சம் கடுமை. மற்ற மற்ற "குஞ்சு அக்காவின் மகள்!" சொந்தக்காரரும் வந்து விட்டினம்.” பெரியதாயாரின் வீடு அமைந்
குழந்தைகள் பந்தலின் நடுவே திருந்த திசையிலிருந்து எழுந்த "ஓ." தாறுமாறாகவும் அவசரம் காட்டியும் என்ற ஒலத்தின் சோகம் எனது ஓடி விளையாடுகின்றார்கள். குதூகலம் இதயத்தை பிழிவதுபோல சூழ்ந்து தாங்கவொண்ணாமல் பெரியவர்கள் கவிந்துகொள்ளுகின்றது!
s '65zavai” 625ag5úgy(1-24)
།
ஞானம் சஞ்சிகையின் 1 முதல் 24 வரையிலான - இரணர்டு வருடங்களில் வெளிவந்த இதழ்கள், சிறந்த முறையில் "பைன்ட் செய் யப்பட்டு விற்பனைக்குள்ளன.
இதில் எஸ்.பொ., டொமினிக் ஜீவா, எம்.ஏ.நுஃமானி , செ.யோகநாதன், வ.அ.இராசரத்தினம், அருண் விஜயராணி, கே.எஸ். சிவகுமாரன், பொன். பூலோகசிங்கம், கவிஞர் அம்பி, த.கலாமணி, லெமுருகபூபதி ஆகியோரின் 11 நேர்காணல்கள் அடங்கியுள்ளன.
அத்தோடு 66 கவிஞர்களின் 152 கவிதைகளும், 33 எழுத்தாளர் களின் 43 சிறுகதைகளும், ஒரு குறுநாவலும், 19 இலக்கியப் பணி புரிவோரின் விபரங்களும், 26 நூல்களின் விமர்சனங்களும், 29 இலக்கியக் கட்டுரைகளும், தெளிவத்தை ஜோசப், முல்லைமணி, அன்புமணி, சாரல் நாடனி ஆகியோரின் "எனது எழுத்துலகம்" கட்டுரைகளும், பத்தி எழுத்துக்கள், வாசகர் பேசுகிறர், புதிய நூலகம் ஆகியனவும் அடங்கியுள்ளன.
115 வெவ்றுே படைப்பாளிகளின் ஆக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பு 800 பக்கங்களைக் கொணர்டது. இந்தத் தொகுப்பரின் விலை ரூபா 500/- (பைன்டிங்" தபாற் செலவு உட்பட)
மனியோடர் அல்லது காசோலை அனுப் பரிப் பெற்றுக் கொள்ளலாம். ノ

Page 7
புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின்
'நிலாக்காலம்’
வ.இராசையா
ஆ. இரத்தினவேலோன் எழுதி வெளியிட்டிருக்கும் புதிய சிறுகதைத் தொகுப்பு நிலாக்காலம். முன்னர் இவரது "புதிய பயணம்', 'விடியட்டும் பார்ப்போம்' என்னும் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இது மூன்றாவது தொகுதி. நமது மூத்த எழுத்தாளருள் ஒருவராகிய தெளிவத்தை யோசப் இந்த நூலுக்கு முகவுரை தந்திருக்கிறார். வேலோனுடைய படைப்பிலக்கியத் தளத்தை நமக்கு நன்கு காட்டி, இந்த நூலினுள் புகுவதற்கு வழிதிறந்து விடுகிறது, இந்த முகவுரை.
இந்த நூலிலே ஏழு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை 1980 தொடக்கம் இன்றுவரை வேலோன் எழுதிய கதைகள். இருபத்திரண்டு ஆண்டுகளில் ஏழு கதைகள்! ஒரு வகையில் இக்கதைகளும் குறிஞ்சிமலர்கள் போலும்!
“மாறுதல்கள், "சிதறும் வியூகங்கள் என்பன இந்தத் தொகுதியில் உள்ள முதல் இரண்டு கதைகள் ஆகும். இவற்றிலே வாழ்வுக்குப் புத்தொளி தேடுதல் என்பது தளமாக இருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து வெவ்வேறு வகையான இரண்டு வாழ்வுநிலைகள் முகிழ்த்து வருகின்றன. சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பேதம் இருப்பதை விரும்பாத அவனுக்கும் பேதம் இருப்பதை ஏற்றுக்கொள்ளுகிற அவளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை - சாதிபேதம் என்னும் தடையை முதன்மைப்படுத்துகிறது, முதற்கதை.
"பெண்ணுக்கு ஒருவனைக் சுட்டி வைத்தால் சரி; பொருத்தமற்ற மாப்பிள்ளையாகவிருந்தாலும் பரவாயில்லை என்னும் நமது பாரம்பரியச் சிந்தனைகளில் ஒன்று ‘சிதறும் வியூகங்கள் என்னும் கதையிலே சிதறடிக்கப் படுவதைக் காண்கிறோம். இங்கே மன ஒற்றுமை வலுப்பெற்று, புத்தொளியைத் தருகிறது; சாதிபேதம் வலுவிழந்து போகிறது. இவ்வகையில் இந்த முதலிரண்டு கதைகளும் ஒரு நாணயத்தினது இரண்டு பக்கங்களைப் போல அமைந்திருக்கின்றன. மாறிவரும் சமுதாயத்தில் சாதியத்தின் இரு வேறு நிலைகள்ை இவற்றிலே காணமுடிகிறது. காதல், கல்யாணம் என்னும் மணவாழ்க்கை சார்ந்த இவ்விடயங்களை இக்கதைகளிலே ஒரு புதியவகையில் நோக்கியிருக்கிறார், வேலோன்.
விடலைப் பருவம் மனிதனது உடல் உள வளர்ச்சிகளின் திருப்பு முனையாகும். இந்தப் பருவத்தில் மாணவர்கள் திசை தடுமாறக்கூடிய அபாயம் உண்டு. இந்தத் தடுமாற்றத்தை "திக்கற்றவர்கள் என்னும் கதை காட்டுகிறது. இளவட்டங்களின் கலகலப்புப் போலத்தோன்றுகின்ற இந்தக் கதையினுள்ளே அவர்களுக்குத் திசைகாட்டியும் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த
12
 

மாணவர்களின் முதிராநிலை "திக்கற்றவர் கதையிலே நன்கு காட்டப்படுகிறது. மூன்று டிக்கெட்டுகளும் கிழிக்கப்படுகின்றன. இருளின் உள்ளே மூவரும் வேகமாக நுழைகிறார்கள்’ என்னும் கதை முத்தாய்ப்பில் அர்த்தம் இருக்கிறது. மேலே குறிப்பிட்ட மூன்று கதைகளும் ஏறக்குறைய ஒத்த தரமுடையன வாய் இருக்கின்றன. அடுத்துவரும் நான்கு கதைகளும் இவற்றிலும் பார்க்க வித்தியாசமானவையாக தரத்திலும் மேம்பட்டவையாக உள்ளன.
இங்கேயுள்ள “விழித்தெழு என்பது கடித வடிவில் அமைந்த ஒரு கதை. இந்த இளம்பெண் லண்டனில் இருக்கும் தனது கணவனுக்கு இவனைப்பற்றி ஏற்பட்டிருக்கும் மிகக் கொடுமையான சில தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்காகக் கடிதம் எழுதுகிறாள். படித்த பெண் ஒருத்தியுடைய புத்திசாதுரி யத்தையும் மனத்திட்பத்தையும் கலைத்துவம் மிளிரக் காட்டுகிறது இந்தக்கதை. அவளுடைய ஆழமான சிந்தனை, அதில் உள்ள நிதானம், பதறாத சிதறாத விளக்கம், அந்நியோன்னியமான கருத்து வெளிப்பாடு, இவற்றுக்கிடையே கலந்துநிற்கும் அவளுடைய மனவேதனை -ஆ! எவ்வளவு பண்பாகத் தன்னை வெளிக்காட்டுகிறாள் அவள்! கணவனுடைய அட்டுழியங்களைக் கண்டு கலங்கிப் போகும் சாதாரண தமிழ்ப் பெண்களிடையே ஒரு புதுமைப் பெண் . அந்த ஆர்த்தி, கடிதம் ஒன்றின் ஊடாக ஓர் இளம் தம்பதியிடையே தோன்றி யுள்ள தப்பான எண்ணத்தை அந்தச் சிக்கலின் முடிச்சுகளைக் காட்டி, அவற்றை ஆசிரியர் சிக்கெடுக்கும் பாங்கினை- அதில் காணப்படும் பதமையைப் படித்து வியந்து மகிழலாம்! இந்தக் கதையிலே கதாசிரியர் தலை காட்டவில்லை என்பது இதில் உள்ள தனிச் சிறப்பு. “விழித்தெழு என்னும் தலைப்பிலே ஒரு கோஷத்தின் முரட்டுத்தனம் இருக்கிறது. அதை மழுங்கடித்திருக்க வேண்டும். *வேட்டை என்னும் கதையில் ஆசிரியர் பெண்மையின் மற்றொரு மூர்த்தத்தைக் காட்டுகிறார். இவள் தங்கப் பவுண் என்னும் சிபார்சுடன் வந்த மாப்பிள்ளை இவளுக்குத் திருகுவலியாகிவிடுகிறான். “பெண்ணின் உரிமைகளை உணர்வுகளைப் புரியாத, அடிப்படை நாகரிகமும் அற்ற அந்த ஆளோடை ஒத்துப்போய் என்னைத் தொலைக்க வேண்டிய அவசியம் எனக் கில்லை" - என்று, இந்தப் பெண் மனோன்மணி அவனை விட்டுப் பிரிந்து இருக்கிறாள். பிரச்சினையை நிதானமாக ஆராயவேண்டிய ஆண்மகன், சுழலில் அகப்பட்ட சருகுபோலத் தடுமாறுகிறான். கணவனது திடுதிப் என்ற முடிவுகளால் கலங்கவேண்டிய இவளோ உறுதியாக, நிதானமாக நிற்கிறாள். இங்கே ஒரு புதுமையான நங்கையைக் காண்கிறோம்.
விழித்தெழுவில் வரும் ஆர்த்தியைப், போலவே இந்த மனோன்மணியும் நமது சமூகத்துக்கு வேண்டியவளே எனக் காட்டியிருக்கிறார், ஆசிரியர்
சொந்த ஊரில் ஆண்டு தோறும் நடக்கும் வேட்டைத் திருவிழாவுடன் மனோன்மணியின் கதையை இழையவைத்துச் சொல்லியிருக்கும் பாங்கு நயக்கத்தக்கது. கதையின் வளர்ச்சியில் மனோன்மணி தனக்குப் பிடிக்காத கணவனை நிராகரிக்கும் கட்டமும், அப்பாற் தீமைகளை வேட்டையாடப் புகும் நிகழ்வும் பொருந்தி வருவது கதைப் புனைவுக்கு வலுவூட்டுகிறது.
'நிலாக்காலம் கதை, 'திக்கற்றவர்கள் கதையைப் போல பாடசாலை வாழ்க்கையைக் களமாகக் கொண்டதே. ஆயினும், கதையின் தரத்தில் இது மேம்பட்டுநிற்கிறது. இனிய பழங்களுக்கு உள்ளே புழுக்கள் இருப்பதுபோல
13

Page 8
நமது புனிதமான கல்விச் சூழலிலும் சின்னத்தனங்கள் மறைந்து கிடப்பதை இந்தக் கதையிலே தொட்டுக் காட்டியிருக்கிறார், வேலோன். இந்தத் தொகுப் பில் உள்ள கலைத்துவம் மிளிரும் அதிசிறந்த கதை இது. நிலாக்காலம் என்னும் இதன் பெயரை இந்நூலுக்கு மகுடமாகச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமே!
இந்த நாட்டிலே இனவேறி மூட்டிய போரினால் விளைந்த எண்ணில் அடங்காத காயங்களில் மாறாத புண்களில் ஒன்றைச் சித்திரிக்கிறது "வடுக்கள் என்னும் கதை. இது A9 பாதை திறக்கப்பட்ட பின்பு கண்ணிற்பட்ட ஒரு புண்! வேலோன் என்னும் இந்தப் படைப்பாளியினது கண்கள் சமூகத்தை எவ்வாறு நோக்குகின்றன என்பதற்கு இது ஒரு தக்க எடுத்துக்காட்டு. உடல் ஊனம், உளப் பாதிப்பு, உயிரிழப்பு, ஊர்அழிவு என்னும் இழப்புகளின் பயங்கரமான சங்கமத்தைக் காட்டுகிறார் வேலோன் இந்தக் கதையிலே.
இந்த நூலிலே உள்ள கதைகள் 1980 - 2002 என்னும் ஒரு நீண்ட காலப் பகுதியில் எழுதப்பட்டவை. இந்த 22 ஆண்டுகளில் வேலோன் படைத்தவை சிலவே, ஆயினும், இவற்றிடையே இவரது படைப்பாற்றல் வியத்தகு வகையில் வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்த வளர்ச்சி முக்கியமாக கலைத்துவம் கொண்ட இவரது சித்திரிப்பில் பளிச்சிடுகிறது. மொழிநடையும் அதில் காணப்படும் சீரான சிந்தனையோட்டமும் மனதைக் கவருகின்றன. முக்கியமாக வடமராட்சி மொழிவழக்கின் உயிர்ப்பினை இவரது கதைகளில் நயக்கலாம்.
வேலோன் படைப்பிலக்கியத்துறையில் துரிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்! இந்த வளர்ச்சி தொடரவேண்டும். வளர்ச்சிக்கு எல்லை என்பது இல்லை.
LSLLLLL LSLGSGSSL LSLSLSL LSS LSLSL LSL LS LLSLSL LSL LS LSL SLS LSLSLSLS LSLS LSLSL SGS LSLSLSLSL LSLS LSLSLS LLLS LSLSLS LLLS LSL
வாழ்த்துகிறோம் Y சாகித்திய விழா 2002 இல் பின்வருவோர் தமிழ்மொழி மூலம் பரிசு பெற்றுள்ளனர்.
ADDI
பிரபல மூத்த தமிழ் எழுத்தாளர் வரதர் 'சாகித்திய இரத்தினம்’ சிறப்புவிருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
ரீ.எல்.ஜப் பார்க்கான் (கவிதை - மெளனதேசம் ) எ.எல்.அஷ"மத் (சிறுகதை :- வெள்ளைமரம்) லெ.முருகபூபதி (நாவல் - பறவைகள்) சிறிகணேசனர் (நாடகம் :- நிதர்சனத்தின் புத்திரர்கள்)
எஸ்.பத்மநாதன் (மொழிபெயர்ப்பு - ஆபிரிக்க கவிதைகள்) எஸ். அருளானந்தம் (சிறுவர் இலக்கியம் :- மனதுக் கினிய u Tu B)
பேராசிரியர் எஸ்.பத்மநாதன் (ஆராய்ச்சி :- இலங் கைத்தமிழர் தேசவழமைகளும் சமூகவிழுமியங்களும்)
சாகித்திய பரிசு பெற்றோரை ஞானம் மனதாரப் பாராட்டி
N வாழ்த்துகிறது. محمے
14

எழுதத் துரண்டும் எண்ணங்கள்
குலாநிதி தரை.மனோகரன்)
உயர் விருது பெறும் இலக்கியவாதி
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மறைக்க முடியாத, மறக்கமுடியாத பெயர்களுள் ஒன்று, வரதர் என்பது. இப் புனைபெயரில் எழுதிவந்துள்ள தியாகர் சண்முகம் வரதராசன் (தி.ச.வரதராசன்) இளம் வயதி லிருந்தே வாசிப்பிலும், எழுத்திலும் ஈடுபாடு கொண்டு, படிப்படியாக உயர்ந்து, இன்று இலங்கையின் மூத்த இலக்கியவாதிகளுள் ஒருவராக விளங்குகின்றார்.
வரதர் சிறுகதை, குறுநாவல், நாவல், புதுக்கவிதை முதலான பல்துறை இலக்கிய முயற்சிகளிலும், ஒவியத்துறையிலும் ஈடுபட்டவர். சிறுகதைத்துறையில் தமக்கென முத்திரையை அவர் பதித்துக் கொண்டுள்ளார். இலங்கையின் புதுக்கவிதை பற்றிப் பேசும் எவரும், அதன் முன்னோடிகளுள் ஒருவராக வரதர் விளங்கியுள்ளார் என்பதை இலகுவில் மறந்துவிட முடியாது.
இதழியல் துறையிலும் வரதரின் பணிகள் விதந்து குறிப்பிடத்தக்கன. ஆனந்தன், தேன்மொழி, வெள்ளி, புதினம், அறிவுக்களஞ்சியம் ஆகிய சஞ்சிகைகளை அவர் வெளியிட்டுள்ளார். இவற்றுள் வெள்ளியை மாத சஞ்சிகை என்று கலாநிதி குணராசா (ஈழத்துச் சிறுகதை வரலாறு) குறிப்பிடுவது தவறு என்றே நினைக்கிறேன். வெள்ளி மாதம் இருமுறை வெளிவந்ததாகவே எனது ஞாபகம். அச்சஞ்சிகை வெளிவந்தபோது நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அதனை இயன்றவரை தவறாமல் விரும்பிப் படித்து வந்திருக்கிறேன். அச்சஞ்சிகையில் அப்போது கைலாசபதியும், கனக. செந்திநாதனும் மாறி மாறிப் பத்தி எழுத்துக்களை எழுதிவந்தனர். "மண்ணுலகத்து ஒசைகள்' என்ற தலைப்பில் கைலாசபதி எழுதிவந்த பத்தி எழுத்துக்கள் பயனும், சுவையும் கொண்டவையாக விளங்கின. வெள்ளியைப் பிரித்தவுடன் நான் முதலில் படிப்பது கைலாசபதியின் "மண்ணுலகத்து ஓசைகள்' என்ற பத்தி எழுத்துக்களையே. பொதுவாகப் பத்தி எழுத்துக்கள் பற்றியும், பத்தி எழுத்தாளர்கள் பற்றியும் எழுதுபவர்கள் கைலாசபதியையும், கனக. செந்திநாதனையும் வசதியாக மறந்து விடுவதுண்டு. கைலாசபதி வெள்ளியில் எழுதிவந்த பத்தி எழுத்துக்கள் மிகச்சிறப்பாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒருமுறை கைலாசபதி பிரபல கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தியைப் பற்றித் தமது பத்தியில் எழுதியிருந்தார். அவரது பத்தி எழுத்தின் மூலமாகவே, அப்போது மாணவனாக இருந்த நான் அனந்தமூர்த்தியைப் பற்றி அறிந்து கொண்டேன். இவ்வாண்டு(2002) தேசிய சாகித்திய விழாவில் அனந்தமூர்த்தியே பிரதம விருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்துறை ஆற்றல் வாய்ந்த வரதர், இலங்கையின் தேசிய சாகித்திய
oc. ل
15

Page 9
விழாவில் 'சாகித்திய இரத்தினம்" என்னும் விருதும் ஐம்பதினாயிரம் ரூபா பணமும் வழங்கிக் கெளரவிக்கப்படுவது ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கும் செய்தியாகும். முதிர்ந்த வயதிலும் தளரா உறுதியும், செயலாற்றலும் மிக்க அவரது பணிகள் நாட்டுக்கு என்றும் தேவை. வரதர் அவர்களை வாழ்த்துவதில் இயல்பாகவே உள்ளம் பூரிப்படை கிறது.
ஒரு சோக்கான செய்தி
சோக்கல்வோ சண்முகநாதனைத் தெரியாதவர்கள் ஈழத்துக் கலை - இலக்கிய உலகில் இலர் என்றே கூறவேண்டும். மேடைப் பேச்சாளர், நாடக, தொலைக்காட்சி நாடகக் கலைஞர் என்ற தகுதிகளைத் தம்மோடு வளர்த்துக் கொண்டிருப்பவர், அவர். அண்மையில் அவர் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியிருப்பது, இலங்கைக்கும், உலகத் தமிழருக்கும் பெருமைதரும் விடயமாகும்.
1960இல் கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ 4 மணி 29 நிமிடம் தொடர்ந்து உரையாற்றி நிகழ்த்திய உலக சாதனையை, 2002இல் சோக்கல்லோ சண்முகநாதன் 7 மணி 40 நிமிடங்கள் தொடர்ந்து உரை நிகழ்த்தி முறியடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இத்தகைய சாதனையைப் புரிந்த ஒரு திறமைசாலியை இலங்கையும், உலகத் தமிழரும் முன்விழுந்து பாராட்டியிருக்க வேண்டும். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளுள் ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் தங்களுக்கும் இதற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதைப் போன்று நடந்து கொள்கின்றனர். இதே சாதனையை இந்நாட்டில் ஒரு சிங்களவர் செய்திருந்தால், இந்த நாடு அவரைத் தலையில் தூக்கிக் கூத்தாடியிருக்கும். ஆனால் சாதனை நிகழ்த்தியவர் தமிழர் அல்லவா? தமிழர்களே கண்களை மூடிக்கொண்டு வாய் திறக்காமல் இருக்கும்போது மற்றவர்கள் எப்படி வாயார மனமார வாழ்த்துவதற்கு முன்வருவார்கள்?
சோக்கல்லோ சண்முகநாதன் உலக சாதனையொன்றை நிகழ்த்தி யிருப்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கது. அவரது சாதனை உண்மையில் ஒரு சோக்கான செய்தி. ஏன் இந்தத் தவறுகள்?
இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை பற்றிச் சிந்திக்கும்போது, சிலவேளைகளில் பெருமையாக இருக்கிறது; சில வேளைகளில் பெருமூச்சு வருகிறது. இதன் தேசிய சேவையின் முன்னாள் பங்களிப்புகள் விதந்து குறிப்பிடத்தக்கவை. ஆனால், இன்று அதன் தரம் சற்றுக் குன்றிப்போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முன்னர் இலங்கை வானொலியின் செய்தி வாசிப்பாளர்கள் மிகத் தரம் வாய்ந்தவர்களாக விளங்கினர். அவர்கள் செய்தி வாசிக்கும் முறை மிகச் சிறப்பானதாக இருந்தது. ஆனால், இன்று ஒரு சிலரைத்தவிர, பெரும்பாலானோர் தமது விருப்பத்துக் கேற்பச் செய்திகளை வாசித்து விட்டுப் போகிறார்கள். செய்தி வாசிப்பு என்பது ஒரு கலை. அதைத் திறம்படச் செய்வதற்குத் திறமை வேண்டும். ஏனோதானோ என்று செய்தி
16

வாசிப்பவர்கள் பலர் இன்று இலங்கை வானொலியில் செய்தி வாசித்துத் தொலைக்கிறார்கள். இவர்கள் செய்தி வாசிப்பதற்கு எத்தகைய தகுதியும் இல்லாதவர்கள் என்பதை, அவர்கள் செய்தி வாசிக்கும் முறையிலிருந்து நேயர்கள் புரிந்துகொள்வர். இத்தகையவர்கள் செய்தி வாசிப்பதற்கு எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது உலக அதிசயங்களில் ஒன்று.
இலங்கை வானொலியின் தேசியசேவை இன்னொரு கைங்கரியத்தையும் இப்போது செய்து வருகிறது. இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும் வானொலியில் "சிரமதானம் செய்ய வைக்க அது முனைகிறது. அவர்கள் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டும். ஆனால், சன்மானத்தை எதிர்பார்க்கக் கூடாது என்று இலங்கை வானொலி தமிழ்ச்சேவை விரும்புகின்றது. இது சாப்பாடு இல்லாத கல்யாணம் போன்றது. மணமக்களை வந்து மனமார வாழ்த்துங்கள். ஆனால், உங்களுக்குச் சாப்பாடு இல்லை என்று சொல்லாமற் சொல்வதுபோல வானொலியின் செயற்பாடு அமைந்துள்ளது. முன்னரைப் போன்று சன்மானம் வழங்க முன்வந்தால், இலங்கை வானொலியின் தன்மானம் குறைந்து விடவா போகிறது? சன்மானம் வழங்காமல் இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும் நிகழ்ச்சிகளிற் பயன்படுத்த முனைவது ஒருவகை உழைப்புச் சுரண்டல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இலங்கை வானொலி தேசிய சேவைக்குப் புகழ் சேர்த்துவந்த நிகழ்ச்சிகளுள் ஒன்று, "கலைப்பூங்கா. காலப்போக்கில் அதன் நிகழ்ச்சி நேரம் கால்மணி நேரமாகக் குறைக்கப்பட்டு விட்டது. அந்நிகழ்ச்சி முன்னரைப்போன்று அரைமணி நேரமாக ஒலிபரப்பப்படும் போதுதான் அதன் முழுமையான பயனை அனுபவிக்க முடியும். இதேபோன்று, மலையகத் தமிழ்ச் சேவையின் நேரமும் குறைக்கப்பட்டமை கடும் கண்டனத்துக்கு உரியது. மலையக அரசியல் வாதிகளுக்கு இவை பற்றி எதுவும் கவலையில்லை. ஆளுக்காள் மல்லுக்கட்டவே அவர்களுக்கு நேரம் போதாது. இந்த இலட்சணத்தில் மலையகத் தமிழ்ச் சேவைபற்றி நினைத்துப் பார்ப்பதற்கு அவர்களுக்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது? தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் இதனைக் கவனத்திற் கொண்டால் உண்டு.
வானொலியில் சில வேளைகளில் சில நிகழ்ச்சிகள் அவற்றுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாதவர்களிடத்துச் சென்று விடுகிறது. இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக விளங்கியது. 'கவிதைக் கலசம் என்ற நிகழ்ச்சி. அதை நடத்தி வந்தவர், அதனை ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி போலவே ஆக்கிவிட்டார். அவர் வெளியிட்ட நகைச்சுவைகளுள் ஒன்று, சிலப்பதிகாரத்தைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டமை ஆகும். கவிதைகளை எப்படி வாசிப்பது என்று தெரியாமலே அவர் அந்த நிகழ்ச்சியை நடத்திவந்தார். 'கவிதைக் கலசத்தை எப்படி எப்படியெல்லாம் போட்டு உடைக்க முடியுமோ, அப்படி அப்படிச் செயற்பட்டுள்ளார், அவர். இது உண்மையில் அவரின் தவறன்று. நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லாதவர்களைத் "தேர்ந்தெடுக்கும்" இலங்கை வானொலியின் தவறு.
7

Page 10
(LU)() உங்கள் பாதச் சுவடு இங்கே இருந்ததுதான்!
ഖ്ട്.--റ് ഉ
திறை Ch~ சின் ை లిం) 34/ob 49ጧ6õቻ
அதைச் சுட்டுப் பொசுக்கிற்று. அன்றொருநாள் வந்தகாற்று அதை மூடி மறைத்துவிட பின்பொருநாள் பெய்தமழை அதைக்கழுவிப் போயிற்று. அந்நியர்கள் வந்தச் சுவடுகளை தேடினார்கள். முற்றாய் மறைந்ததென்று முழங்கினார்கள். சுவடெல்லாம்
6
6) (6 எங்கள் இதயச் சுவர்களிலே
«35
நித்தம் எரித்தவெயில் த
அழியாத சித்திரமாய் இருப்பதனை அறியாதோர் சிரிக்கிறார்கள். 6 த.ஜெயசீலன், நல்லூ/
SS S SS SS SSS SLSSS SS SSS SSS SSS SSS S LSS LSS S LSS S LSSLS S SSS SSS SSS SSS SSS SSSLSSS SSS

ஈழத்தின் நூல்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டுக்களின் பங்களிப்பு
என்.செல்வராஜா (லண்டன்)
கல்வெட்டுக்கள் என்பன அரசர் முதலானோர் பெற்ற வெற்றி, அளித்த கொடை முதலியவற்றைக் குறித்துப் பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகங்களாகும். இங்கு நாம் குறிப்பிட முனைவது, ஒருவர் இறந்த முப்பத்தொன்றாம் நாள் சமயச் சடங்காக இடம்பெறும் அந்தியேட்டிக் கிரியைகள் முடிந்து சபிண்டீகரணம் நடைபெறும்போது சபையோர் கேட்கப் பாடப்படும் சரமகவி என்ற இரங்கற்பாவைத் தாங்கி வரும் சிறு நூல்களையாகும்.
சரமகவிப் பாரம்பரியம் சங்கப்பாடல்களிலிருந்தே ஊற்றெடுத்தது என்று கருதலாம். இறந்தவரின் பெயரும் பிடும் பொறித்த கல்வெட்டுப்பாரம்பரியம் (Epitaph) இலக்கிய வடிவமாக முகிழ்க்கும்போது சரமகவியாகிவிட்டது. தன்னுணர்ச்சிப்பாடல்களின் அடியாகத் தோன்றிய சரமகவிப்பாரம்பரியம் இன்று கல்வெட்டு என்ற பெயரிலே தொடர்கின்றது.
ஈழத்தின் புகழ்பூத்த கல்விமான்கள் பலர் அன்று சரமகவி பாடியுள் ளனர். தம்முடன் நெருங்கிய தொடர்புடையோரின் பிரிவுத் துயர் தாங்காது அவர்கள் பாடிய இரங்கற்பாக்கள் இன்றும் நினைவுகூரப்பட்டு வருகின்றன.
ஆறுமுக நாவலர் இறந்தபோது உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், சி வை. தாமோதரம்பிள்ளை இருவரும் பாடிய சரமகவி, ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை தன்மனைவி ஆச்சிக் குட்டிப்பிள்ளையின் பிரிவில் பாடிய "நாயபிரலாபம்", அதே ஆச்சிக்குட்டிப் பிள்ளையின் பேரில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை ஆகியோர் பாடிய இரங்கற்பாக்கள், பேராசிரி யர் கா. சிவத்தம்பியின் தந்தையார் த.பொ.கார்த்திகேசு பேரிலும் வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர் சைவப்பெரியார் கா. சூரன் பேரிலும் நாடக கவிமணி எம். வீ.கிருஷ்ணாழ்வார் (கரவெட்டி ஆழ்வார்ப்பிள்ளை) பாடிய சரமகவிகள் போன்றவையும் குறிப்பிடத்தகுந்த சிலவாகும். உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், கரவெட்டி கிருஷ்ணாழ்வார் போன்றோர் அக்காலத்தில் பிரபல சரமகவிகளாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பது அக்காலகட்டத்தில் வெளிவந்த கல்வெட்டுக்களின் இலக்கிய நயத்திலிருந்து புலனாகும்.
சரமகவிகள் ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக்கியிருக்கும். வழிபாடு, கடவுள் துதியோடு தொடங்கும் சரமகவியில் இறந்தவரின் கிராமப்பின்னணி, முன்னோர்கள், குடும்பநிலை, சமூக அந்தஸ்த்து, உறவினரின் பெயர், தொழில், சிறப்புத் தகைமைகள் முதலானவை கவிஞரின் இலக்கியப் புலமைக்கேற்பவும் கிராமத்துடனும் குடும்பத்துடனுமான அவரது தொடர்பின் ஆழத்திற்கேற்பவும் வெண்பாவரியில் காணப்படும்.
அடுத்த பகுதியான திதி நிர்ணய வெண்பாவில் இறந்த ஆண்டு, மாதம், திதி, முதலான அம்சங்கள் வாய்ப்பாட்டுத் தன்மைகொண்டமையக்
19

Page 11
குறிப்பிடப்படும்.
மூன்றாம் பகுதி மரபு கிளர்த்தல் எனப்படும். இது கழிநெடிலடி ஆசிரியர் விருத்தத்திலேயே பாடப்படும். சிலசமயங்களில் கவிஞரின் கவியாற்றலுக்கேற்ப அறுசீர், எண்சீர் விருத்தங்களிலும் பாடப்படுவதுண்டு. பெயர்ப்பட்டியலாக அமையும் இப்பகுதியில் கவித்துவ ஆற்றலை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாகும்.
நான்காவது பகுதியான புலம்பல் அல்லது பிரலாபத்தில் இறந்தவரின் வயது, தகுதி, பொறுப்புகள், பெருமை, இறப்பு நிகழ்ந்த முறைமை முதலான வற்றை உள்வாங்கிப் புலம்பலை அமைத்துக் கொள்வர். மனைவி புலம்பல், மக்கள் புலம்பல் என்று உறவுமுறைவாரியாக இது நீண்டு செல்லும்.
சரமகவியின் இறுதிப்பகுதி தேற்றம் எனப்படும். துயரைத் தொடராது ஆறுதல்பெறும் வகையில் வாழ்க்கையின் நிலையாமையை வலியுறுத்தி ஆன்மீக வழிமுறையில் உற்றார் உறவினருக்குத் தேறுதல் வழங்கும் அம்சமான இப்பகுதி விருத்தப்பாங்கில் அமைகின்றது.
கல்வெட்டியலின் இப்பாரம்பரிய படிமுறைமாற்றத்தின் இன்னொரு கட்டமாக அமைந்தது மறைந்தவரின் நினைவாக நூலொன்றை வெளியிடுவ தாகும். பாரம்பரிய சமரகவிமுறையிலிருந்து விலகி, முற்றிலும் மாறுபட்ட சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக அமையும் இம்முயற்சி ஈழத்து வெளியீட்டுத் தளத்துக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. இவ்வகையில் தமது விருப்புக்குரியவர் பற்றிய நினைவுகளின் பதிவுகளாகவோ, அவரது விருப்பத்துக் குரிய ஒரு துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாகவோ, சிறுவர் இலக்கிய மாகவோ, சமய இலக்கியமாகவோ அந்த மலர் வெளியாகத் தலைப்பட்டது. ‘என் அப்பாவின் கதை என்ற என்.சண்முகலிங்கன் அவர்களது நூலின் (தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1988. 40 பக்கம்). முன்னுரையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தெரிவித்துள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.
"தன் அப்பாவின் (அமரர் க.நாகலிங்கம்) கதையை இலக்கிய மாக்கும் மகன் சண்முகலிங்கனின் இந்த நூல் அவர் தந்தையாரின் 31ம் நாள் நினைவுடன் வெளியாகின்றது. கல்வெட்டு மரபினின்றும் விலகி ஆக்க இலக்கியங்களையும் பயனான பிரசுரங்களையும் தரத் தொடங்கியுள்ள புதிய மரபினிடை சண்முகலிங்கனின் ‘என் அப்பாவின் கதையும் ஒரு புதிய தொடக்கம்".
இந்தப் புதிய கல்வெட்டு மரபினைத் தீவிரமாகப் பின்பற்றியவர்களில் மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஒருவராவார். அவரின் முயற்சியினால் பல அரிய நூல்கள் கல்வெட்டுக்களாக மலர்ந்துளள்மை கவனிக்கத்தக்கது.
கல்வெட்டுப் பாரம்பரியத்தினூடாகப் பயன்பெற்ற மற்றுமொரு துறை மீள்பதிப்புக்களாகும்.
முத்துராச கவிராசரின் கைலாயமாலை மயிலங்கூடலூர் பி.நடராஜனை பதிப்பாசிரியராகக் கொண்டும் இராஜராஜேஸ்வரி கணேசலிங்கம் அவர்களை உரையாசிரியராகக் கொண்டும் யாழ்ப்பாணம்: சுழிபுரம் வள்ளியம்மை முத்து வேலு ஞாபகார்த்த வெளியீடாக 60 பக்கங்களுடன் 1987இல் வெளிவந்தது. முத்தராசர் கவிராசர் இயற்றிய கைலாயமாலை முதன்முதலாக 1906ம் ஆண்டு
2O

த.கயிலாசப்பிள்ளையால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. கைலாயமாலைக் குப் புதிய ஒளி என்ற தலைப்பில் பதிப்பாசிரியரின் முன்னுரையும் பின்னிணைப் பாக கையிலாயமாலையில் கூறப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் பண்டிதை திருமதி இ.கணேசலிங்கம் அவர்களின் குறிப்புரையும் கைலாயமாலையின் ஆங்கில மொழிபெயர்ப்பாக திரு.அ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கட்டுரை யும் அதில் இடம்பெற்றுள்ளன.
மாவை சின்னக்குட்டிப் புலவரின் தண்டிகை கனகராயன் பள்ளு, காங்கேசன்துறை தமிழ் மன்றம், மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத் தினூடாக நவம்பர் 1983 இல் வெளியிடப்பெற்றது. 81 பக்கங்களுடன் கல்லூரியின் ஆசிரியர் ஆ.ஞானசுந்தரம் அவர்களின் நினைவு வெளியீடாக வந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் வலிகாமப்பகுதியில் அதிகார முதலியாகத் தெல்லிப்பழையில் இருந்த கண்டிகைக் கனகராய முதலியாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு அவரால் ஆதரிக்கப்பட்டவரான மாவை சின்னக்குட்டிப் புலவரால் இயற்றப்பட்டதே தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந்தமாகும். கி.பி. 1792 ஆண்டளவில் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 1932இல் தெல்லிப்பழை வ.குமாரசாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. முன்னைய பதிப்பிலுள்ளது போன்று நாற்று நடுகை வரையிலான 153 பாடல்களே இப்பதிப்பிலும் காணப்பட்டன.
ஒரு மனிதனின் நினைவை அவனது வாழ்வை அவனது பிரிவை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம், அவனது வம்ச விருட்சத்தினூடாக அவனது பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் வாய்ப்பு இத்தகைய கல்வெட்டுக்களின் வாயிலாக வெளிக்கொணர முடிந்தது. காலக்கிரமத்தில் கல்வெட்டு வெளியிடுவது பரம்பரைக் கெளரவத்தைப் பேணும் ஒரு அம்சமாக எமது சமூகத்தில் உணரப்பட்டது. இன்று ஈழத்திலும், இங்கு புலம்பெயர்ந்த மண்ணிலும் இத்தகைய புலமைமிக்க சரமகவிஞர்கள் இல்லாத நிலையில் நினைவஞ்சலி என்ற பெயரில் தேவார திருவாசகங்களுடனும் அனுதாபச் செய்திகளுடனும் இரண்டு தலைமுறை வம்சாவளியுடனும் சிறுநூலுருவில் வெளியிடும் நடைமுறை காணப்படுகின்றது. சில கல்வெட்டுக்கள் மேற்கூறிய ஐந்து அம்சங்களில் ஒரு சிலவற்றை மாத்திரம் தாங்கியும் வெளிவருவதுண்டு. தன்னுணர்ச்சிப்பாடல்களாக அல்லாது அஞ்சலியுரைகள் மாத்திரம் சில மலர்களில் காணப்படுகின்றன.
அண்மையில் லண்டனில் வெளிவந்த "அர்ச்சனை மலர்கள் என்ற வெளியீடு அமரர் தம்பாப்பிள்ளை சிவசம்பு ஞாபகார்த்த மலராக ஏப்ரல் 2000g6) Transnews International, P.O. Box 895, Harrow, Middx, HA2 OYU என்ற முகவரியிலிருந்து 64 பக்கங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது. யாழ் சுதுமலை, அமரர் தம்பாப்பிள்ளையின் ஞாபகார்த்தமாக வெளியான இந்த நினைவு மலர் புலம்பெயர் தமிழரின் பன்முகப்பார்வையின் பதிவுகளான ப்லவினக்கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
கல்வெட்டாக வெளிவந்த மலர்களில் பெரும்பாலானவை, அன்றாடம் சமய அனுட்டானங்களுக்குத் துணையாக அமையும் வழிபாடுகளையும் தகவல் களையும் தாங்கிய பிரசுரங்களாகவே காணப்படுகின்றன. அபிராமி அந்தாதி என்ற பிரசுரம் இதற்கு உதாரணமாகும். சைவசமயத்தில், உமாதேவியாரின்
21

Page 12
வேறோர் வடிவமான அன்னை அபிராமியைத் தொழுது வணங்கி, அபிராமிப் பட்டர் அருளிய இந்தச் சமய இலக்கியம் காரைநகர் திருமதி நாகேஸ்வரி ஜெகநாதன் நினைவு அஞ்சலி மலராக வெளிவந்தது. (1987, 20 பக்கம்)
கல்வெட்டுப்பாரம்பரியத்தின் மற்றுமொரு வளர்ச்சிப்படியாகவே ஞாப கார்த்த மலர்களையும் நாம் கொள்ள வேண்டும். சமயக்கருத்துக்களை வெளிக்கொணரும் பிரசுரங்களாக அல்லாது, முற்று முழுதாக ஒருவரின் வாழ்வின் குறுக்குவெட்டுமுகத்தைப் பிரதிபலிக்கத் தக்கதான இத்தகைய வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகள் காலம் கடந்து நினைவில் நிற்பவையாகும். அமரத்துவம் அடைந்த ஒருவர் பற்றிய மனப்பதிவுகளைத் தாங்கி வெளிவரும் இத்தகைய மலர்களில் கல்வெட்டு இலக்கியத்தின் இடைக்கால சரமகவிப் பாரம்பரிய இலக்கியப் பண்புகள் காணப்படாத போதும், அதன் அடிப்படை நோக்கம் இத்தகைய நினைவுமலர்களின் வாயிலாகப் பதியப்பெறுகின்றது. கல்வெட்டுக்களாக மலர்ந்த ஒரு பாரம்பரியம், சரமகவியாகத் தழைத்து, காலப்போக்கில் இன்று நினைவஞ்சலி மலர்களாக மாறி நிற்பதைக்கண்டோம். இன்று புலம்பெயர் நாடுகளில் இயந்திரகதியில் இயங்கும் வாழ்க்கைமுறைகளில் சிக்குண்ட கல்வெட்டுப்பாரம்பரியத்தின் பின்பற்றல்கள் சரமகவிப்புலமையின் மையால் அதன் பாரம்பரிய நெறிகளிலிருந்து வழுவி பெரும்பாலும் உள்ளுர் அச்சகங்களின் உதவியுடன் அவசர அவசரமாக உருவாகி சபிண்டீகரண நிகழ்வில் விநியோகிக்கப்பட்டு ஒரு நாளில் மறைந்தொழிந்துவிடும் நிலைமையே காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டுக்களை முறையாகத் தொகுத்து வெளி யிடும்போது அது தாங்கிய செய்தி காலம் கடந்தும் பாதுகாக்கப்பட்டு வாழும் நிலை ஏற்படும்.
கல்வெட்டுப் பாரம்பரியம் தாயகத்தில் மற்றொரு படிநிலைக்கு ஏற்கனவே மாற்றிக் கொண்டுவிட்டது. அம்முறையை எதிர்வரும் காலத்தில் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர் பின்பற்றி, இன்று அச்சு வாகனம் ஏறக் காத்திருக்கும் எத்தனையோ ஆக்க இலக்கியங்களுக்கு உயிர் கொடுக்க முன்வரவேண்டும். கல்வெட்டுக்களை, நினைவஞ்சலி மலர்களை வெளியிடு வதைத் தம் தொழிலாகக் கொண்ட அச்சகங்கள் இந்த மாற்றத்துக்குத் துணைபோக முன்வரும் பட்சத்தில் இது எளிதாகும்.
"ஞானம்" தில் மாற்றக்கூ
ge புடயதாக அனுபப புதிய சந்தா விபரம் வேண்டும்.
உள்நாடு அனுப்பவேண்டிய பெயர்,
தனிப்பிரதி ensurr 30/- முகவரி :- அரை ஆண்டுச் சந்தா ரூபா 180/- TGNANASEKARAN ஆண்டுச் சந்தா erbourt 360/- 19/7, PERADENIYA ROAD, சந்தா காசோலை மூலமாகவோ KANDY. peofhG3u rtlrif மூலமாகவோ வெளிநாடு அனுப்பலாம். e mo e மனியோடர் அனுப்புபவர்கள் ஆண்டுச் சநதர as USS
(தபால் செலவு உட்பட) அதனை கண்டி தபால் நிலையத்
22

தாயிருக்கும் காரணத்தால்.
நான் என் வாழ்க்கையில் பல்வேறு இழப்புக் களைச் சந்தித்திருக்கிறேன்.
ஒருகதவு மூடும்போது இன்னொரு கதவு எனக் காகத் திறந்திருக்கிறது. Ag:KYAY
எப்பொழுது எதை இழந்தாலும் நான் ஜீ கவலைப்படவில்லை. (rኻ
எனது தந்தையாரின் மரணம் கூட எனக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால்.
என் தாயாரின் மரணம்தான் என்னைப் பெரிதும் பாதித்தது.
கடந்த அக்டோபர் 25இல் என்தாயார் காலமானார்.
இந்த ஓராண்டும் என் தாயாரை நினைக்காத நாளில்லை.
காலை எழுந்ததும் அவர் முகத்தில்தான் முழிக்கின்றேன்.
நான் வீட்டைவிட்டு வெளியேறும் பொழுது தாயாரின் நிழற்படத்தைப் பார்த்து மானசீகமாக ஆசி பெற்ற பின்புதான் வெளியேறுகிறேன்.
என் தாயாருக்குக் கல்வியறிவு கிடையாது. எதையும் வாசிக்க முடியாது.
ஆனால் அவர் சகோதர மொழியான சிங்கள மொழியைப் பேசுவதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.
அது மாத்திரமல்ல. தாலாட்டு முதல் ஒப்பாரிவரை அற்புதமாகப் பாடுவார். என் தம்பியை அல்லது தங்கையை தொட்டிலிலிட்டு அவர் தாலாட்டுப் பாடும்பொழுது
"முத்தே பவளமே!
முக்கனியே சர்க்கரையே!
கொத்து மருக் கொழுந்தே!
கோமளமே கண்வளராய்!"
இந்த வரிகளில் என்னையே மறந்து விடுவேன்.
எழுத்தறியா என் தாயார் இந்த வார்த்தைகளை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார்.
இப்படி அவர் பாடிய இன்னொரு தாலாட்டின் சில வரிகள்.
“சதுரகிரி மலையேறிச்
சாதிலிங்கக் கட்டை வெட்டி
ஈழத்துக் கப்பலிலே ஏற்றிவரும் தேக்கு மரம்
எழத்தச்சன் ஆசாரி
இழைப்பு இழைக்கும் கம்மாளர்
23

Page 13
சேர்த்துப் பணிப்படுத்திச்
சித்திரத்தால் ஒப்பமிட்டு."
வார்த்தைகளை மிக அற்புதமாக உச்சரித்துப் பாடுவார்.
மலையகத்துத் தாலாட்டுப் பாடல்களைப் படிக்கும் பொழுதெல்லாம் என் தாயாரின் நினைவு வரும். என் தாயார் வானொலி கேட்பதில் ஆர்வமுள்ளவர். தவறாமல் செய்தி கேட்பார்.
இவர் வானொலியில் முஸ்லிம் சேவை, செவ்வாய்க் கிழமைகளில் நாடகங்கள் இவற்றைத் தவறாமல் கேட்பார். அவருக்குப் பிடித்த நடிகர் கே. ஏ. ஜவாகர். அடுத்த நடிகர் என். தாலிப்.
ஒருநாள் நடிகர் கே.ஏ. ஜவாகர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார்.
நடிகர் ஜவாகரை அம்மாவிற்கு அறிமுகப்படுத்தினேன்.
"அவர் பெரிய நடிகர் இங்கே எப்படி வருவார்?" எனக் கேட்டார்.
உடனே ஜவாகர், தான் நடித்த நாடகங்களின் வசனங்களை பேசிக்காட்டினார்.
பின்னர்தான் நம்பினார்.
பாடகர் முத்தழகுமீது அன்பு பாராட்டுவார். அவர் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
அவர் என் பள்ளித் தோழன்; குடும்ப நண்பரும் கூட. வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
அம்மாவுடன் நிறையப் பேசுவார்.
நான் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கண்டியை வாழ்விடமாகக் கொண்டுவிட்டதால், வாரம் ஒரு தடவையாவது அம்மாவைப் பார்க்க ஓடிவருவேன்.
இறுதிக் காலத்தில் அவருடனேயே இருப்பதை விரும்புவார்.
அம்மா எண்பது வயது வரை திடமாக இருந்தார்.
எனக்குப் பகுத்தறிவு தெரிந்த நாள்முதல் நான் கோயிலுக்குப் போவதில்லை
அதனால் வாலியின் வைர வரிகள் எனக்குப் பிடித்தமானவை.
"தாயிருக்கும் காரணத்தால்
கோயிலுக்குப் போனதில்லை."
அக்டோபர் மாதம் எனக்கு மிகவும் சோதனையும் வேதனையும் ஏற்படுத்தும் மாதம்.
என்தாயார் என்றும் என் நினைவில் வாழ்கிறார்.
நெற்றிக்கண்‘விமர்சனம்
எழுத்தாளர்களே, நெற்றிக்கணி பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம் பெற வேண்டுமெனில், நூலின் இருபிரதிகளை அனுப்பிவையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல்பற்றிய அறிமுகக்குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும்.
- ஆசிரியர்.
24
 
 

தொலையும் பொக்கிசங்கள்
வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
தன் மனத்தைப் போலவே உச்சிச் சூரியன் உமிழும் வெயில் தகித்துக் கொண்டிருக்க, முகமெல் லாம் கருமை போர்த்தி, மனம் சோர்ந்து விறாந்தையில் போடப்பட்ட சாய்மனைக் கட்டிலில் வீழ்ந்தார் தம்பியண்ணை. மல்ரி பெரல்களாய் இதயம் வெடிப்பது போன்ற உணர்வு. மனத்திலே பல்லாயிரம் ஆணிகளால் அறைந்த தவிப்பு. உள்ளத்துப் புழுக்கம் உடலெல்லாம் வியர்வை யாகி "சேட்"டோடு ஒட்டி உடல் நசநசத்துவர எல்லாமே வெறுத்தது போன்ற உணர்வு. அலுத்துக் கொண்டார்.
காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளிக்கிட்டவர் . ஒருமணி யாகிவிட்டது இப்போது தான் வருகின்றார். அவரது நிலைமையை என்னால் ஓரளவு உணரமுடிந்தது.
"பிள்ளை. மாமாவுக்கு குடிக்க எதாவது கொண்டு வாணை. நடு வெயிலுக்காலை வாறார். குளிர எதாவது குடெணை".
எனது மூத்தவளுக்கு கூறிய வாறே தம்பியண்ணைக்கு முன்னிருந்த கதிரையிலே அமர்ந்து கொள்கிறேன். "என்ன தம்பியண்ணை கொஞ்சம் வேளைக்கு வரக்கூடாதே - வெயில் ஏறேக்கு முன்னம் - இந்த உச்சி வெய்யிலுக்காலை வாறியள்."
25
தம்பியணிணையை வருடும் வகையில் எதாவது கேட்கவேண்டும் என்பதற்காக ஒப்புக்குக் கேட்டுவைத் தேன்.
அவர் தன்னை சுதாகரித்துக் கொள்கின்றார். எனினும் உள்ளுர அவருக்கிருந்த பதகளிப்பு இன்னும் ஆறியபாடில்லை.
தம் பித் துரை அணி னை என்பதுதான் 'தம்பியண்ணையின்’ விரிந்த வடிவம் என்பது பலரும் அறியாதபோதிலும் அவரை 'தம்பி யண்ணை’ என்றே அழைப்பது வழக்க மாயிற்று.
தம்பியண்ணை என்னுடைய தந்தையின் மூத்தசகோதரி - பெரிய மாமியின் - மகன், அத்தான். வயதிலே மூத்த மைத்துனர்களை அத்தான் என்பதுதான் வழமை. எனக்கு நேரே இரு வயதுகள் மூத்தவர் என்பதனால் எமக்கிடையே வயதினால் உண்டான வேறுபாடுகள் எவையும் இல்லை. அத்தான் என்றாலும் ஒருவித நெருக்கம் கருதி 'அண்ணை’ என்று சொல்லிவரும் பழக்கம் என்னிடம் சிறுவயதிலிருந்தே முறைவழுவமைதி யாக வந்து சேர்ந்துவிட்டது.
எங்களுடைய குடும்பத்தில்
முதல்பிறந்தவர் என்பதால் எனக்கு இளைய சகோதரிகள் அவரை ‘மூத்தத்தான்’ என்றுதான் அழைப் பார்கள். என்னுடைய கடைசித் தங்கையின் உறவுமுறை இன்னும் வித்தியாசமானது. அவள் அவரை தம்பியன்ைணை அத்தான்' என்றுதான் அழைத்து வருகிறாள்.
அந்தளவிற்கு எல்லோருக்கும் தம்பியண்ணை ஆகிவிட்டார் அவர்.
நீண்டகாலம் 'தம்பியண்ணை' ஊரிலே இல்லை. நேற்றுக் காலையில் தான் பயணத்தால் வந்திருந்தார்.

Page 14
கனடாவிலே தன்னுடைய மகனின் குடும்பத்தோடு ஆறு வருடமாக இருந்துவிட்டு இப்போதுதான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
"செல்லம், புதிதாக பிறந்த மாதிரிக்கிடக்கடா எங்கடை ஊரிலை திரும்பியும் காலை வைப்பன் எண்டு கனவிலும் நினைக்கவே இல்லையடா. ஒரு மாசமெண்டாலும் நிண்டுதான் போகப்போறன். உன்ரை கடைசிப் பெடியன் கூட என்ரை தோளுக்கு மேலாலை வளர்ந்திட்டான். எல்லா ரையும் நேரை பார்க்க எவ்வளவு சந்தோசமாக் கிடக்குத் தெரியுமே..?” என்று தம்பியண்ணை நேற்று வந்தவுடன் ஆதங்கத்தோடு கூறிய வார்த்தைகள் இதயத்தை வருடி நின்றன.
செல்லத்துரை என்ற எனது பெயரைச் சுருக்கி "செல்வம்' என்று அழைப்பதுதான் அவரின் வாலாயம். “என்னண்ணை என்ன முகமெல் லாம் ஒரு மாதிரிக்கிடக்கு? பேய றஞ்சது மாதிரி. என்ன வெக்கை தாங்க முடியாமல் கிடக்கே...? என்ன ஒரே "ரென்ஷனா இருக்கிற மாதிரிக் கிடக்கு. உங்கை உங்கட மருமேஸ் தேசிக்காய்த் தண்ணி வைச்சிருக் கிறாள் குடியுங்கோ. குடிச்சிட்டுப் பிறகு சாப்பிட்டிட்டு கொஞ்சம் றெஸ்ற் எடுங்கோ. கனகாலத்துக்குப் பிறகு எங்கட வெயில் சுட்டுப்போச்சு."
என்று என் குரலோடு நளினம் சேர்த்து அவரை இயல்புக்குக் கொண்டுவர முனைந்தேன்.
“என்னத்தைக் குடிச் சென்ன சாப்பிட்டென்ன எல்லாம்."
தம்பியண்ணையின் வார்த்தை களில் வெளிப்படுவது ஏமாற்றமா? நம்பிக்கையீனமா? கழிவிரக்கமா? என்னால் பகுத்தறிய முடியவில்லை.
26
"6T66T6060600T.....'. QDT'solunt கவே கேட்டேன்.
"எல்லாம் அழிஞ்சுபோச்சுதடா. வீடும் சரி வாழ்க்கையும் சரி. வாழ வேண்டிய குடியை விட்டிட்டு வெளிக் கிட்டது பிழையாய்ப்போச்சு. எங்கட வாழ்க்கை குலைஞ்சது போல ஆற்ரை வாழ்க்கை குலைஞ்சது..?”
தம்பியண்ணை எங்கள் வீட்டிலே தான் தங்கி நிற்கின்றார். அவருடைய வீடு சென்றவாரம்வரை "ஆமிக்காம்ப் பாகத்தான் இருந்தது. அவருடைய விடும், அதற்கு அருகிலுள்ள நான்கு வீடுகளும் சேர்ந்து இராணுவ முகாங்களாகப் பாவிக்கத் தொடங்கி இப்போது ஏறத்தாழ ஐந்து வருடங் களாகி விட்டன. முக்கியமான இரண்டு சாலைகள் குறுக்கிடும் நாற் சந்தியின் அருகே அமைந்த வீடு என்பதால் அதிலே இராணுவ முகாம் இடுமளவிற்கு முக்கியத்துவம் பெற் றிருந்தது.
இராணுவத்திற்கு மட்டுமல்ல, எங்கள் வாழ்விலும் கண்களும் பார்வையுமாக இணைந்துவிட்ட பெருமை அந்த வீட்டிற்கு உண்டு. எங்கள் குடும்பங்களின் தாய்வீடு அது. என்னுடைய தந்தையும், பெரிய மாமியும், சின்னமாமியும் பிறந்த இடம் அது. எங்களுடைய பேரன் பேர்த்தி உயிரோடு இருந்த காலத்திலே எங்கள் மூன்று குடும்பங்களினதும் கருவறையாக அந்த வீடுதான் விளங் கியது. நானும் என் அடுத்த இரு சகோதரிகளும் அந்த வீட்டிலேதான் பிறந்தோம். சின்னவள்தான் நாம் இப்போது இருந்துவரும் அம்மாவின் சீதன வீட்டில் பிறந்தவள். எங்களைப் போலவே தம்பியண்ணையும், அவரது ஒரு சகோதரியும் அங்குதான் பிறந்தார்கள். சின்னமாமிக்குப்

பிள்ளைகள் இல்லை. அப்பா அம்மா வின் வீட்டிக்கு சென்றதுபோல சின்ன மாமியும் சின்னமாமாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். தம்பியண்ணையின் குடும்பமும், மச்சாள் குடும்பமும் இந்த நாட்டைவிட்டு வெளியேறும் வரை அங்குதான் வாழ்ந்து வந்தனர். நான்கு தலைமுறைகள் நலமாக வாழ்ந்த அந்த நாற்சார் வீட்டிற்கு ஒரு வரலாறு உள்ளதை இந்த ஊரில் இன்று அறிந்தவர் சிலரே.
தம்பியண்ணை கனடாவில் நின்ற காலத்தில் எனக்கு எழுதும் கடிதங் களில் ஒன்றில்கூட அந்த விட்டின் பெருமையை உணர்த்தி அதனை விசாரிக்கத் தவறியதில்லை.
“செல்லம் எங்கட வீடு எங்கட பேரன் பேத்தி, அம்மா ஐயா, நாங்கள், எங்கட பொடி பெட்டை எல்லாம் சீவிச்சு ஒடியாடித் திரிஞ்ச இடம். எங்கட பேரப்பிள்ளையஞம் அந்த முற்றத்தில மிதிக்க வேணுமெடா. எங்களைப்போல விளையாடா வேணு மடா. கவனிச்சுக்கொண்டு இரு. ஒரு காலம் வரும் தானே. அவங்கள் எழும்பின உடனேயே வீட்டை பழைய மாதிரி ஆக்கிப் போடவேணும்."
அந்த வீட்டைப் பற்றி தம்பி யண்ணை எழுதும் வரிகளில் என் மனதில் நீரில் வீழ்ந்த குருனிக்கல் லாயப் புதைந்து நிலைத்துள்ள வரிகளிவை.
தம்பியண்ணை இப்படியெல்லாம் எழுதும் வேளைகளில் என்னுடைய மனத்தினடியிலே ஆழப்புதைந்த அந்த நாட்களின் நினைவுகள் வந்துபோகும். வழமைக்கு மாறாக வடக்கு நோக்கி அமைந்த முகப்பினை கொண்ட நாற்சார் வீடு. முகப்பு முற்றத்தில் இரண்டு அந்தலைகளிலும் இரண்டு பெரிய காய்த்துத் தள்ளும்
27
பலாமரங்கள். இவற்றினிடையே அம்பலவி, கறுத்தக் கொழும்பான் மாமரங்கள் இரண்டு. முகப்புவாயி லின் இருபுறமும் அளந்து வைக்கப் பட்ட பூஞ்செடிகளும் சாடிகளும், சுற்றிவரக் கழுத்துயர மதிற்கவர். பிரதான வெளிவாயிலில் இருந்து முகப்புவரை பொழியப்பட்ட சலவைக் கற்கள் கொண்டு ஆக்கப்பட்ட நடை பாதை என்பவற்றோடு கூடிய அந்த வீட்டின் அழகு வார்த்தைகளில் வசப்படாதவை.
அந்த வீடுதான் இப்போது எழில் குலைந்து சுடுகாடுபோல கிடக்கிறது. நிலை கதவுகள் இடிக்கப்பட்டு, மரங்கள் தறிக்கப்பட்டு, கிடங்குகள் தோண்டப்பட்டு, முள் வளையங்கள் போடப்பட்டு, நெருஞ்சி முள் அப்பி. அந்த வீடு இருக்கும் காணி அந்தக் காலத்தில் ஒரு பெரிய கட்டா நீ தரையாக இருந்ததாம் . அதிலிருந்த மூன்று பனைகள் மாத்திரம்தான் அந்த நிலத்திற்கும் உயிர்ப்பு இருந்ததை உணர்த்தி நின்றன. ஒரு முக்கோணத்தின் மூன்று புள்ளிகளாய் நின்ற அந்தப் பனைகள் தான் அந்தக் காணியிலே வாழ்ந்த எங்கள் பேரன் பேர்த்தியின் குடிசை யைக் கோபுரமாக்கிய சூட்சுமங்கள். வருடாவருடம் பாத்திபோட்டு வரும் பனங்கிழங்கு, ஒடியல், புழுக் கொடியல், ஊமல், பனாட்டு, கங்கு மட்டை விற்ற சேமிப்பில் உருவானது தான் அந்த வீடு என்பதை இன்று யாருமே நம்பிவிடப்போவதில்லை என்றாலும் உண்மை.
"என்ன நீங்கள் உந்தப் பெரிய வீட்டைக் கட்டிப்போட்டு நடுக்காணி யில பனையளை விட்டிருக்கிறியள். மழை காத்துக்கு வீட்டுக்கு மேல சாஞ்சுதேயெண்டால்..?” என்று வீடு

Page 15
கட்டிய வேளையில் நரி முருகேசு வாத்தியார் அப்புவைக் கேட்ட வேளையில்,
"எனக்கு மேல விழுந்து உயிர் போனாலும் பறவாயில்லை. அதுகள் தங்கடபாட்டிலை நிக்கட்டும்". என்று உறுதிபடக் கூறிய பதில் இன்றும் என் செவிகளில் நிறைந் துள்ளது.
நானும் தம்பியணி ணையும் சிறுவர்களாக இருந்த காலத்தில் மாமாவைக்கொண்டு இரண்டு பனை களுக்கு குறுக்காக மரங் கட்டி ஊஞ்சல் கட்டுவித்து ஆடிய நினைவு கள் எண் மனதிலி பசுமையாக உள்ளன. நாங்கள் 'அடிச்சுத்தொட்டு விளையாடும் போதிலெல்லாம் அந்த மூன்று பனைகளையும் சுற்றி ஆளை யாள் துரத்திக்கொண்டு ஓடுவது விறுவிறுப்பைத் தந்தது.
மூன்று பனைகளும் காய்த்துக் குலுங்கும் காலத்தில் வீடு களை கட்டும். அப்பிளுக்கு அவுஸ்திரேலியா என்றால் பனம்பழத்துக்கு யாழ்ப் UT 600Tb.
நாங்கள் ஓரளவு பருவமறிந்த சிறுவர்களாக இருந்த காலத்தில் பனாட்டு பிணைவது அப்புவின் வீட்டில் ஒரு சடங்காகவே நடைபெறும். பனம் பழங்களை பவ் வியமாகச் சேர்த்துவைத்து பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஆளும் பேரு மாகச் சேர்ந்து 'பினாட்டு பிணைவதில் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உயிர்ப்பு. ஆச்சி தன்னுடைய பனையிலேயே சார்வோலை வெட்டு விதி து "பெரும் பனை ஒலைப் பினாட்டுப்பாய்” இழைப்பாள். பிணைந்த பனங்கழியை பனாட்டுப் பாயிலே தடிப்பாக வார்த்து வெயிலிலே காய
வைத் து
*கணி டோஸ்" போன்ற
28
துண்டுகளாய் வெட்டி, மண்பானையில் "கருப்பணி பாணிகாய்ச்சி வார்த்து அரிசிப்பொரியோடு பனாட்டுத் துண்டு களைப் போட்டு, பல நாட்கள் ஊறவிட்டு "பனாட்டு காடி போட்டு வைப்பார்கள். பாகிலே தோய்ந்த அந்தப் பனாட்டுத் துண்டுகளை வாயிலே போட்டு "ரொபியாக' உவிந்த காலம் - இப்போது யாரிதைச் செய்கிறார்கள்?.
பனாட்டு பிழிவதற்கு சேகரித்த பனம் பழங்களில் மிக உயர்ந்த தரமானவற்றைத் தெரிந்து கல்லடுப்பு மூட்டி, அடுப்பு வாயில் பனம்பழத்தை வைத்து தோல் கருகும்வரை எரித்து, சுட்டபின்னர் மூன்று மூன்றாக ‘கொட்டைகளை பிரித்துவைத்து, தோலுரித்து பழப் புளியை கழியாக கரைத்து பனம் பழத்தில் வார்த்து, கைகளினால் தும்பையும், கழியையும் பிசைந்து இறுக கைகளினால் அழுத்தி பெரு விரலையும் ஆட்காட்டி விரலையும் வளையமாக ஒன்று சேர்த்து பிசைந்த பனங்கழி, வளையமான விரலிடுக்கு
 

வழியே பொங்கிவர வாயை வைத்து அந்தக் கழியை உறிஞ்சிக் குடிப்பதில் உள்ள சுகம். ’சொத்தலிக் கொட் டையை தேர்ந்தெடுத்து முழுதாக வாயிலே தள்ளி பபிள்கம் சப்புவது போல நாள் முழுக்க வாய் குதப்பித் திரிந்த சுகம்.
பாத்திகிண்டி படையல் வைத் தல், நெட்டி வெட்டி சீர் செய்து கிழங்கு அவித்தல், மொட்டு வெட்டி பூரான் தின்னுதல், புழுக்கொடியல் காயவிட்டு காவல் காத்தல் - இந்த சுகங்களையெல்லாம் வாழ்க்கையாக தந்தவை அந்த மூன்று பனை மரங் களும்தான். வாழ்வில் ஒவ்வொரு கணங்களும் கூடி வாழ்தல், கொடுத்து உண்ணுதல் போன்றவற்றின் வாளிப்பு கள் - வசீகரங்களைத் - தந்தவை இவை. இவை எல்லாம் மனக்கடலின் அடியிலிருந்து மிதப்பெடுக்கும்போது, இப்போதைய எங்கள் வாழ்வுகள் அர்த்தங்கள் பொய்த்து அந்தரிப்பது போன்ற ஓர் உணர்வு.
இந்தச் சுகங்களை எல்லாம் வாழ்க்கையாகத் தந்தவை அந்த மூன்று பனைமரங்களும்தான்.
“எடே அப்புஅவை, எங்களுக்கு மும்மூர்த்திகளும் இந்த மூண்டு பனையளுந்தானடா" என்று எங்கள் பேரன் - அப்பு - அடிக்கடி சொல்வது இன்றும் நினைவிடை நிறைந்துள்ளது. தம் பியணி ணை வாழ்வே தொலைந்துவிட்டதாக உணர்வது என் இதயத்து துடிப்போடு சேர்ந்து அதிரும் இழப்பின் உணர்வுகளைவிட மேலா னது என்பதை அறிந்தும் என்னால் அவரை ஆறுதல் படுத்த முடிய வில்லை.
*அணி னை எனினணி னை எங்களுக்கு மட்டுமே. எல்லாருக்கும் இஞ்சை உப்பிடி ஒவ்வரு ஏக்கம்தான் வாழ்க்கையாகிப் போய்க்கிடக்குது.
29
நேற்று நீங்கள் வீட்டைப் பார்க்கப் போகப்போறன் எண்டு சொல்லை யுக்கையே சொல்லவேணு மெண்டு தான் நினைச்சன் ஆனால்."
"என்னடா பேக்கதை கதைக் கிறாய் கடிதத்திலை ஒரு சொல்லு எழுதியிருக்க கூடாதே. உதைப் பாக்கவே சந்தோஷமா ஓடி வந்த னான். மெய்யே சொல்லு.”
அண்ணையின் எதிர்பார்ப்பு கள் பொய்த்த மனஉணர்வுகள் வெப்பிசாரமாக வெளிப்பட்டது.
"அண்ணை அவங்கள் அதுக் குளிர் ளை இருக்க நாங்கள் என்னண்ணை செய்யிறது. அறுவாங் கள் பங்கர் போட்டத்தானண்ணை தறிச்சிருப்பாங்கள்".
என் இதயம் உடைப்பெடுத் தது. என்னால் தம்பியண்ணையைத் தேற்ற முடியாததை உணர்த்திற்று.
"நாசமாயப் போவாங்கள். என்ரை வீட்டை அம்மணமாக்கியிருக் கிறாங்கள் பறவாயில்லை கட்டியாதல் போடலாம். அந்த மூண்டையும் அப்பு எவ்வளவு பக்குவமா வளர்த்து பொக்கிசமா எங்களுக்கு விட்டிட்டுப் போனவர். அதை எப்பிடி இனி.秀
அண்ணையின் வார்த்தைகள் தொண்டைக் குழியோடு சிறைப்பட்டன. சற்று நேர மெளனத்தை குலைத்துக் கொண்டு எழுந்தார்.
"செல்லம். எங்கையாதல் நல்ல பனங் கொட்டை பாக்கப் போறன். என்ரை விசா முடிஞ்சாலும் பறவாயில் லை எத்தினை மாச மெண்டாலும் சரி அந்த வளவு முழுக்க விதைக்கப் போறன்."
உறுதியோடு கூறிக்கொண்டு எழுந்து தகிக்கும் வெயிலில் இறங்கி நடந்தார். அவருக்காக வைத்திருந்த ‘தேசிக்காய் தண்ணி அப்படியே கிடந்தது.

Page 16
இதுஎழுத்துலக; slap 504-uதி
(அவுஸ்திரேலியா)
/ இலங்கை அரச சாகித்திய விழா 2002இல் நாவல் இலக்கியத்திற்)
கான பரிசினை லெ.முருகபூபதி அவர்களின் "பறவைகள் பெற்றுள்ளது. முருகபூபதியைப்பாராட்டி கெளரவிக்கும் முகமாக அவரது “எனது எழுத்துலகம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
0 லெ.முருகபூபதி 1972ல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறுகதை மூலம் மல்லிகையில் அறிமுகமானவர்.
6 சிறுகதை, கட்டுரை, செய்தியறிக்கை, இலக்கிய ஆய்வு, புதினம், நாவல் முதலான துறைகளில் எழுதிவரும் இவர், எண்பதுகளில் வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றியவர்.
0 சுமையின் பங்காளிகள்’ என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு 1975ல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர்.
9 சமாந்திரங்கள், வெளிச்சம், சமதர்மப் பூங்காவில், நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள், பாட்டி சொன்ன கதைகள், சந்திப்பு, இலக்கிய மடல், கடிதங்கள், எங்கள் தேசம், மல்லிகை ஜீவா நினைவுகள் ஆகியன இவரது ஏனைய நூல்கள்.
9 அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகம் இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ ’அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் முதலிய அமைப்புகள் உருவாகுவதற்கு முன்னின்று உழைத்தவர்.
அவுஸ்திரேலிய விக்டோரியா மாநில சிறந்த பிரஜைக்கான Uஅவுஸ்திரேலிய தின விருது பெற்றவர். ノ
இந்து சமுத்திரத் தாயின் அரவணைப்பில் இலங்கையின் மேற்குக் கரைதனில் நீர்கொழும்பு.
இலக்கிய வாசகனுக்கு இந்தப் பிரதேச மொழிவழக்குகளை "மண்வாசனை கமழ அறிமுகப்படுத்த நான் தேர்ந்தெடுத்த சாதனம் சிறுகதை. முதலாவது சிறுகதை 1972ஆம் ஆண்டு ஜுலை மாத மல்லிகை இதழில் வெளிவந்தது. அதன் பெயர் "கனவுகள் ஆயிரம்"
இன்று எனது நூல்கள் ஆயிரம் பிரதிகள் அச்சாகி விநியோகிக்கப்பட்டு, கைவசம் பிரதிகளே இல்லாமல்போகும் ஆரோக்கியமான இலக்கிய வாழ்வுக்கு அத்திவாரம் போட்டது. அந்தக் "கனவுகள் ஆயிரம்.
30
 

சின்னஞ்சிறு வயதில், அருகே ஓயாமல் இரைந்துகொண்டு, "வா. வா. வந்து என்னில் நனைந்து - என் கரைதனில் கால்புதைய நட, ஒடு குழிபறித்து மண்வீடு கட்டு, வளைகளில் புகும் நண்டுகளைப் பிடி, சிப்பிகளையும் சோகிகளையும் அள்ளிப் பொறுக்கு, இயலுமானால் ஆழமில்லாத இடந்தன்னில் நீந்திப் பழகு" என அழைக்கும் அந்த கடல்தாயின் மைந்தர்களே. எனது ஆரம்பகாலக் கதைகளின் மாந்தர்கள்.
பிள்ளைப் பாக்கியம் இல்லாத அந்தத் தம்பதியரின் கனவுகள் ஆயிரம், அவை நனவாகாமல் - கனவாக - கானல் நீராகிப்போன அந்த முதல் கதையை "மல்லிகை வாயிலாகப் படித்தவர்கள் டொமினிக்ஜீவாவைக் கேட்டார் களாம்,
"யார் இந்த முருகபூபதி?” மல்லிகை ஆகஸ்ட் இதழில் என்னை முன்பின் பார்த்தறியாத ரத்னஸபாபதி ஐயர் சிறுவிமர்சனம் எழுதினார். முதல்கதைக்கே அப்படியொரு அங்கீகாரம்.
கொழும்பில், மு.தளையசிங்கத்தின் சிந்தனைகளினால் கவரப்பட்ட ஒருசிலர் உட்பட பலர் கூட்டாக வெளியிட்ட காலாண்டிதழ் பூரணி.
எனது இரண்டாவது கதை "அந்தப்பிறவிகள் பூரணியின் இரண்டாவது இதழில் பிரசுரமானது. இதனையடுத்து 'தரையும் தாரகையும் புதுயுகத்தில் வெளியானது.
இம்மூன்று கதைகளுமே- நீர்கொழும்பு வாழ் மீனவ மக்களின் வாழ்வை அவர்களின் பிரதேசமொழி வழக்கோடு சித்திரித்தவை.
பூரணியில் "அந்தப்பிறவிகள்” வெளியானதும் அதன் ஆசிரியர் குழுவிற்கு ஒரு புகார்க் கடிதம் வந்திருக்கிறது. பூரணியின் இணை ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் எனக்கு ஒரு கடிதம் எழுதி கொழும்பில் கொட்டாஞ் சேனையில் சப்பாத்து வீதியல் இருக்கும் அவரது இல்லத்திற்கு என்னை அழைத்து அந்தப் புகார்க் கடிதத்தைக் காண்பித்து - பதில்தந்தால் - இரண்டையும் பூரணி 3ஆவது இதழில் பிரசுரிக்கப் போவதாகச் சொன்னார்.
அப் புகார்க் கடிதத்தை எழுதியிருந்தவர் அநு. வை. நாகராஜன். இவரையும் எனக்கு முன்பின் தெரியாது. கொழும்பில் றோயல் கல்லூரியில் ஆசிரியர் என்றும் நல்ல இலக்கிய ஆர்வலர் என்றும் தகவல் சொல்லப்பட்டது. "மாஸ்டர்பீஸாகக் கருதப்படும் பிரபல சிங்கள மேடை நாடகமான "முதுபுத்து"வின் அப்பட்டமான தழுவல்தான் அந்தப்பிறவிகள் - என்பது புகாரிட்ட வரின் குற்றச்சாட்டு.
அக்கடிதத்தைப் படித்ததும் எனக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது. “கருத்துக்குப் பதில் சொல்லாம்; கற்பனைக்குப் பதில் சொல்ல முடியுமா?" - எனக் கேட்டேன்.
"இந்தக் கடிதத்தைப் பிரசுரிக்க விரும்புகிறோம். இதற்கு மறுதலிப்பாக ஒரு பதிலைத் தந்தால் அதனையும் பிரசுரிக்கலாம். அப்படியொரு கருத்துப் பரிவர்த்தனையை ஜனநாயக மரபாக நாம் கடைப்பிடிக்கின்றோம்" என்றார் என். கே. மகாலிங்கம்.
அநு.வை நாகராஜன் குறிப்பிடும் "மூதுபுத்து நாடகத்தை அதுவரையில்
31

Page 17
நான் பார்க்கவில்லை. அப்பொழுதுதான் அந்தப் பெயரில் ஒரு நாடகம் பல . இடங்களில் மேடையேறிவருகிறது என்ற தகவலையும் அறிந்தேன்.
நாகராஜன் குறிப்பிட்டிருந்த மூதுபுத்து நாடகக்கதையின் சுருக்கத்தை ஆராய்ந்து பார்த்தபொழுது எனது கதைக்கும் அதற்கும் நிரம்ப வேறுபாடு காணப்பட்டது.
"தனது உடன் பிறந்த தம்பியிடமே சோரம்போன மனைவி வயிற்றில் சுமப்பது தம்பியின் குழந்தையே என அறிந்தும் - அந்தத் துரோகத்தை உள்வாங்கிக் கொண்டும் மனைவியைப் பரிவோடு பராமரிப்பவன் - துரோகச் செயலால் விலக்கிவைக்கப்பட்ட தம்பி . அந்நியன் ஒருவனால் வேறு ஒரு சம்பவத்தில் தாக்கப்படும் செய்தி அறிந்து தம்பியைக் காப்பாற்ற ஒடுகிறான் அந்த மனிதாபிமானக் கணவன்." - இதுவே எனது கதையின் சாராம்சம்.
“முதுபுத்து நாடகத்தில் சோரம்போனவளின் குழந்தை தொட்டிலில் உறங்குகிறது. கணவனோ அதன் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விடுகிறான்.
எனது கதையில் மனிதாபிமானம் சொல்லப்பட்டது. முதுபுத்து கதையில் குருரம்தான் வெளிப்படுகிறது. இந்த விளக்கங்களுடன் எனது பதிலைப் பூரணிக்கு வழங்கினேன்.
இரண்டுபேரின் கடிதங்களும் பூரணி 3ஆவது இதழில் பிரசுரமாகின. இதன்பின்பு பல தடவைகள் அநு.வை. நாகராஜனை நான் சந்திக்க நேர்ந்தது. நீர்கொழும்பில் நாம் நடத்திய நாவன்மைப் போட்டிகளுக்கு அவரை நடுவராகப் பணியாற்ற அழைத்துமிருக்கிறேன்.
ஆனால் - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் அவருடன் அந்தக் கதை தொடர்பாக விவாதிக்கவே இல்லை.
எனது கதையை சரிவரப் புரிந்து கொள்ளாமல் எனக்கு ஒரு திருட்டுப் பட்டம் கட்டி அவதூறு செய்துவிட்டாரே என்பதற்காக அவரிடம் நான் பகைமை பாராட்டவே இல்லை. இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்திலேயே எனது மனப்பாங்கு அப்படித்தான் இருந்தது.
நாகராஜன் குறிப்பிட்ட "முதுபுத்து இனி எங்கேயாவது மீண்டும் மேடையேறினால் ஒடிப்போய் பார்க்க வேண்டும் எனவும் தீர்மானித்துக் கொண்டேன்.
இதற்கிடையில் பூரணி ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்த இமையவன் - என்ற புனை பெயரில் எழுதும் ஜீவகாருண்யன், 'அந்தப் பிறவிகள் கதை யைப் படித்துவிட்டு என்னை மிகவும் விதந்து பாராட்டினார்.
"இளைஞராக இருக்கிறீர், பழிவாங்கும் உணர்வு இல்லாமல் மனித நேயத்தோடு பிரச்சினையை அணுக வேண்டும் என்ற பண்பு இந்த வயதிலேயே உமக்கு இருப்பதை 'அந்தப்பிறவிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது. மஹாகவி உருத்திரமூர்த்தி எழுதிய "புதியதொருவீடு கவிதை நாடகத்தை உமது அந்தப்பிறவிகளுடன் ஒப்பிட்டு சிறு விமர்சனம் எழுத விரும்புகிறேன்" - என்றார்.
பின்னாளில் பூரணியும் நின்றுவிட்டது. ஜீவகாருண்யனுடனான தொடர்புகளும் விடுபட்டுப் போனது.
32

1974 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் சுமார் ஐந்து சிறுகதைகளை எழுதியிருந்தேன். என்னை புதுயுகம் அலுவலகத்தில் சந்தித்து பேசிப்பழகியிருந்த நண்பர் எம். சிறீபதி ஒரு நாள் மதியம் காலிமுகத்திடலில் நான் வேலையில் இருந்தபோது சைக்கிளில் வந்து பார்த்தார்.
TERITORIAL CIVIL ENGINEERING ORGANIZATION(T.C.E.O) இல் நான் சிறிது காலம் ஓவர்சியராகப் பணியாற்றி, வீதி நிர்மாண வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தேன்.
மேற்படி நிறுவனம் அப்பொழுது காலிமுகத்திடலில் பழைய பாராளு மன்றத்திற்கும் கோல்பேஸ் ஹோட்டலுக்கும் இடையே புதிய வீதியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.
நண்பர் சிறீபதி வெள்ளவத்தையில் மேரிஸ் வீதியில் வசித்தார். எதிர்பாராத விதமாக அந்தப்பக்கம் வந்த சிறீபதி எனது கதைகளைக் கேட்டார்.
நானும் அனுப்பிவைத்தேன். 16 - 4 - 1974 திகதியன்று தினகரனில் எழுத்துலக இளம்பங்காளி என்ற தலைப்பில் விரிவான விமர்சனம் எழுதியிருந்தார். (தற்பொழுது சிறீபதி யாழ். ஹாட்லி கல்லூரியின் அதிபர்)
இப்படியொரு விமர்சனத்தை நான் எதிர் பார்க்கவே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் இதற்குமுன்பு “கர்த்தர் காத்தார்’ என்ற ஒரு சிறு கதையைத் தினகரனுக்கு அனுப்பியிருந்தேன். அது பிரசுரமாகவே இல்லை.
ஆனால் - எனது கதைகள் குறித்த விமர்சனம் தினகரனில் வெளி யானது.
இக்காலப்பகுதில் “நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன” - என்ற கதையை எழுதியிருந்தேன். நண்பர் மு.பவரீர் அதனைப் படித்துவிட்டு நல்லதொரு கதை, இதனை வீரகேசரிக்குக் கொடுங்கள் என்றார்.
அச்சமயம் - நான் வீரகேசரியின் நீர்கொழும்பு நிருபராகவும் வேலை செய்து கொண்டிருந்தேன்.
அதனால் அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் செல்லவும் நேர்ந்தது. வீரகேசரி வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன். இராஜ கோபாலிடம் அக்கதையை நேரில் சந்தித்துக் கையளித்தேன்.
ஆனால் அது பிரசுரமாகவே இல்லை. சிலவாரங்கள் கழித்து மீண்டும் அவரைச் சந்தித்தபோது கேட்டேன். "எழுதும் எழுதும். பார்க்கலாம்" - என்றாரேதவிர அந்தக் கதையை அவர் பிரசுரிக்கவே இல்லை.
இது எனக்கு மிகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. சில நாட்கள் கழித்து அதனை மல்லிகைக்கு அனுப்பினேன். மல்லிகையில், நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன பிரசுரமாகியது. நீர்கொழும்பு பிரதேச மொழிவழக்கில் மண்மணம் கமழ்ந்த மேலும் ஒரு சிறுகதை வரவாகியது.
இலங்கை வானொலியில் நணபர் வி. என். மதியழகன் சங்கநாதம்
33

Page 18
என்ற இளைஞர்களுக்கான நிகழ்ச்சியொன்றை வாராந்தம் நடத்திக் கொண்டிருந் தாா.
நீர்கொழும்பு இலக்கிய வட்டம் ஒரு நிகழ்ச்சியில் முழுமையாக சம்பந்தப்பட்டது. அதில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்களைக்கொண்டே 'நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன கதையை வானொலி நாடகமாக்கி நடிக்கச் செய்தேன்.
பலரும் இந்த நாடகத்தைப் பாராட்டினர். நீர்கொழும்பு வாழ் மீனவ மக்களின் பேச்சுத்தமிழ் முதல் தடவையாக வானொலி ஊடகத்தூடாக வான் அலைகளில் மிதந்தது. பிரதேசமொழிவழக்கோடு வானொலிக்கு ஏற்ப நான் நாடகமாக எழுதியிருந்தமையால் எனக்கு 20ருபா சன்மானமும் கிடைத்தது.
எனது எழுத்துக்கு கிடைத்த முதல் சன்மானம்தான் இது. பின்னர் "சுமையின் பங்காளிகள் கதையை நண்பர் கே. எம். வாசகர் வானொலி நாடகமாக எழுதித் தயாரித்து ஒருநாள் ஒலிபரப்பினார்.
ராமதாஸ், செல்வசேகரன் முதலானோர் அதில் நடித்ததாக ஞாபகம். 1976ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான சாகித்திய மண்டலப்பரிசு, பத்துக் கதைகளைக் கொண்ட "சுமையின் பங்காளிகள் - நூலுக்குக் கிடைத்தது.
எனது கதைகளை ஏற்றுப் பிரசுரிக்காத - பிரசுரிக்கத் தயங்கிய கொழும்புப் பத்திரிகைகளில் நான் சாகித்தியப் பரிசுபெற்ற செய்தி படங்களுடன் வெளியாகின.
இச்சம்பவங்களைக் குறிப்பிடும் போது இதனைப் படிக்கும் வாசகர்கள் - எழுத்தாளர்கள் - விமர்சகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் பல உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். w
ஒரு படைப்பாளியின் படைப்பை - ஏற்பது அல்லது ஏற்காது விடுவது என்ற மரபை யார் பின்பற்றுகிறார்கள்? பிரசுரிக்கும் பிரக்ஞை எந்த அடிப்படை யில் உருவாகின்றது?
இங்குதான் நாம் உணவில் ருசிபேதம் காண்பது போன்று இலக்கியப் படைப்புகளிலும் ருசிபேதம் பார்க்கின்றோம்.
ஒருவருக்குப் பிடித்தது இன்னுமொருவருக்குப் பிடிக்காதுபோகலாம். இன்னுமொரு சிக்கலும் உண்டு. அதுதான் பிரதேச மொழி வழக்கு. தேசியப் பத்திரிகைகள் இது விடயத்தில் தயக்கம் காட்டியிருக்கின்றன.
மல்லிகை, பூரணி, புதுயுகம் போன்ற இதழ்களுக்கு இந்தத் தயக்கம் இல்லவே இல்லை.
எந்தவொரு வெகுஜன தேசிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் எழுதாம லேயே - நான் குறுகிய காலத்தில் ஒரு தொகுதியை வெளியிட்டு வாசகர்களிடம், விமர்சகர்களிடம் அங்கீகாரம் பெற வேண்டியிருந்திருக்கிறது என்ற உண்மையை வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கும் - புதிதாக இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் சொல்லவேண்டிய தேவை இருக்கிறது.
மல்லிகை ஆசிரியர் - யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எனது முதல் தொகுதிக்கு அறிமுகவிழா ஒழுங்கு செய்துவிட்டு என்னை அழைத்
34

திருந்தார்.
சு.இராஜநாயகன் விழாவுக்குத் தலைமை. இவரும் என்னை முன் பின் அறியாதவர்.
எனது தொகுதியை ஜிவாவிடம் வாங்கிப் படித்தபின்பு என்னை ஒரு முதியவனாகவே தமது மனக்கண்களில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
அந்தச் சிறிய அறிமுகவிழாக் கூட்டம் நடந்தபோது வெளியே நல்ல ഥങ്ങp.
"இந்த மழை - முருகபூபதியை வரவேற்பதற்கு நல்லதொரு அறிகுறி. நீர்கொழும்பிலிருந்து எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார். இச்சமயம் மழையும் அவரை வரவேற்கிறது - ஆனால் - எனக்குத்தான் பெரிய ஏமாற்றம். முருகபூபதி என்பவரின் எழுத்துக்களைப் பார்த்துவிட்டு அவர் ஒரு முதியவராக இருக்க வேண்டும் எனக் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் இந்தச் சின்னப் பெடியன்தானோ. கனவுகள் ஆயிரமும் அந்தப்பிறவிகளும் எழுதினார் என்பதை நம்பவே முடியவில்லை" என்று தமது தலைமையுரையில் சொன்னார் இராஜ நாயகன்.
இந்தத் தொகுதியில் இருந்த கதைகள் பெரும்பாலும் சோகரசம் கொண்டவை. தோல்விகள், ஏமாற்றங்கள், சோதனைகள்தான் இக்கதைகளில் தொனித்தன.
இதனை அன்றைய கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும் சுட்டிக் காட்டினர். ஆனால் - கதைகள் அனைத்துமே முற்போக்கானவை என்ற கருத் தில் அனைவரும் ஒற்றுமைப்பட்டிருந்தனர்.
நண்பர் மெளனகுரு விமர்சிக்கும்போது “சோஷலிச யதார்த்தப் பார்வையை முருகபூபதியின் கதைகளில் காணமுடியவில்லை" - என்றார்.
"நீர்கொழும்பு மீனவர்களின் வாழ்வுச்சிக்கல்கள், ஏமாற்றங்கள் சித்திரிக்கப்பட்டு யதார்த்தப் பண்புடன் கதைகள் அமைந்திருந்த போதிலும் . முடிவுகள் - மனிதவாழ்வுக்கு நம்பிக்கையூட்டுவனவாக அமையவில்லை. மனித நேயத்தைக் கதைகளினூடாக சொல்லவரும் படைப்பாளியால் மனிதகுலம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகூறும் சோஷலிச யதார்த்தமும் வெளிப் படுத்தப்படவேண்டும்" - என்றார் மெளனகுரு.
எனக்கோ இந்தச் சித்தாந்தப் புடலங்காய் எதுவுமே தெரியாது. இலக்கிய உலகில் பிரவேசித்தது 1972இல், 1975 இல் முதல் தொகுதி வந்துவிட்டது. இடைப்பட்ட குறுகிய காலத்தில் நான் எந்தவொரு இஸமும் கற்றுக்கொள்ள வில்லை.
கற்றிருப்பின் - நான் சிறுகதை எழுத்தாளனாக உருவாகியிருந்திருக்க மாட்டேன் என்பது சத்தியம்.
ஒரு நாள் நீர்கொழும்பில் எமது வீட்டருகே கடற்கரை மணலில் அமர்ந்து என்னுடன் உரையாடிய திக்குவல்லை கமாலும் இந்த சோஷலிச யதார்த்தப் பார்வை குறித்து வலியுறுத்தினார்.
1974 காலப்பகுதியில் மக்கள் அதிகாலையே எழுந்து பாண் பேக்கரி களின வாசலில் பாணுக்காக தவம் இருந்ததைப் பின்னணியாகக் கொண்டு
35

Page 19
நான் எழுதிய "எதற்காக?" என்ற கதை மல்லிகையில் வெளியானது.
இக்கதையைப் படித்த கே. எஸ். சிவகுமாரன் இவ்வாறு எழுதுகிறார், "கடந்த தசாப்தத்தின் முற்பகுதியிலே இலங்கையில் நிலவிய பொருளாதார நிலைமையைப் பின்னணியாகக் கொண்டு "எதற்காக? " - என்ற கதையை எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளைப் படிப்பது போன்ற உணர்வு எற்படுகிறது. வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு குடும்பத்தலைவன் இரத்ததானம் செய்து பெற்ற பத்து ரூபாவை முடிச்சுமாறி ஒருவனிடம் பறிகொடுத்துத் தெருவில் மயக்கமுறுகிறான். அவன் கொண்டுவரும் பத்து ரூபாவிற்காக அவன் மனைவி வீட்டு வாசலில் காத்து நிற்கிறாள். உண்மை யிலே முற்போக்கான கருத்துக்களை உள்ளடக்கும் கதைகளை முருகபூபதி எழுதியிருக்கிறார் என்பதற்கு இத்தொகுப்பு சான்று." (தினகரன் - 22.5.1983) எனது முதல் தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் முதலாவது கதையான "கனவுகள் ஆயிரம் குறித்து எழுதும் ரத்னஸபாபதி ஐயர், "கதை நடக்கும் களத்தினை முதலில் காட்டி பின்பு கடலில் வைத்து கதையின் நாயகனை அறிமுகம் ஆக்கி கதையினைத் துவக்கி வைத்திருப்பது பாராட்டுக் குரியது. எனினும் பிரபல நாவலான செம்மீனின் ஆரம்பத்தை இது ஒத்திருக்கிறது என்று நினையாமல் கேரளத்தில் ஆலப்புழை கடற்கரை என்றால் என்ன ஈழத்தில் நீர் கொழும்புக் கடற்கரை என்றால் என்ன மீனவ மக்களின் இயல்புகள் அனைத்தும் ஒன்றுதானே” - என மல்லிகை ஆகஸ்ட் 1972 இதழில் பதிவு செய்கிறார்.
“முருகபூபதி நீர்கொழும்பின் படகுகளையும் குடிசைகளின் வாழ்வின் அவலங்களையும் யதார்த்த பூர்வமாகச் சித்திரித்து வெற்றி கண்டுள்ளார்” என்று வாமணன் என்பவர் 1972ல் தினகரனில் எழுதியிருந்தார்.
"ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில் நாவலுக்குப் பின்னர் நான் படித்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட கதைகள் - முருகபூபதியின் சுமையின் பங்காளிகள் தொகுதியில் உள்ளன. இதுபற்றி தாமரையில் - எழுத உள்ளேன்" என்று மல்லிகைக்கு 1979ல் கடிதம் எழுதுகிறார் தமிழகத்தின் பிரபல இலக்கிய விமர்சகர் பேராசிரியர் நா. வானமாமலை.
பல்கலைக்கழக பட்ட ஆய்வுக்காக பலரது படைப்புகளையும் கருத் தூன்றிப் படித்த சி. வன்னியகுலம் நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேச மொழிவழக்குகளை முருகபூபதி இரண்டறக் கலந்து தரும்போது ஒரு பூரணமான மண்வாசனை இலக்கியத்தின் நறுமணத்தினை நாம் நுகர முடிகிறது என்று எழுதுகிறார். (நூல்: ஈழத்து புனைகதைகளிற் பேச்சு வழக்கு - 1986)
இது இவ்விதம் இருக்க - அநு.வை. நாகராஜனின் புகாரின் பின்பு “முதுபுத்துவை நான் தேடிக்கொன்டிருந்தேன் என்று முன்பு குறிப்பிட்டேன் அல்லவா. நான் எதிர்பாராமலே ஒரு நாள் இரவு கலப்பதியின் பிரபல நாடகம் மூதுபுத்து நீர்கொழும்பு நகரமண்டபத்தில் மேடையேறியது.
ஒடிப்போய் பார்த்து ரசித்தேன். நாடகம் முடிந்ததும் கலப்பதியுடன் கலந்துரையாடி எனது கதையைச் சொன்னேன்.
"நீர் வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர். எனது கதையும் உமது
36

கதையும் ஒன்றல்ல. அந்தப் புகார் அர்த்தமற்றது" என்றார்.
எனது எழுத்துலகத்தின் ஆரம்ப காலத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்பொழுது இந்தச் சுவாரசியமான அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
எனது கதைகளைப் படித்தவர்கள் சாதாரண வாசகர்கள், பல்கலைக் கழக விமர்சகர்கள், பத்திரிகை இதழ்களின் ஆசிரியர்கள், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.
இவர்கள் அனைவரிடமும் நான் ருசிபேதம் கண்டேன். சிலர் எனது கதைகளை வேறும் சில படைப்பாளிகளுடன் ஒப்பு நோக்கிப் பார்த்தனர்.
கலப்பத்தியையும், மஹாகவி உருத்திரமூர்த்தியையும், புதுமைப் பித்தனையும், தகழி சிவசங்கரம் பிள்ளையையும், ராஜம்கிருஷ்ணனையும் இந்த விமர்சகர்கள் என் கதைகளைப் படித்தபோது நினைத்திருக்கின்றனர். ஆனால் நான் அவர்களோ - அல்லது அவர்கள்தான் நானோ என்ப தல்ல உண்மை.
பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் கூட எனது ஆரம்பகாலக் கதைகளைப் படித்துவிட்டு நேரில் சந்தித்த சந்தர்ப்பங்களில், நான் கேளாம லேயே தத்தம் கருத்துக்களை என்னிடம் சொல்லி இருக்கின்றனர்.
இவர்களிடமும் "சோஷலிச யதார்த்தப்பார்வை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது” அக்காலத்தில்.
நீர்கொழும்பு மண்ணைவிட்டு நான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பு - "ஒரு மேதையின் ஆளுமை' என்ற சத்திய ஜித்திரே சம்பந்த மான ஒரு நூலைப் படிக்க நேர்ந்தது.
அவர் மறைந்தபின்பு இங்கு வெளியான இதழ் ஒன்றிலும் அந்தத் திரையுலக மேதை குறித்து எழுதியுள்ளேன்.
பூனா திரைப்படக் கல்லூரியில் பாலு மகேந்திரா பயின்ற காலத்தில் சத்திய ஜித்திரே விரிவுரையாற்றிய போது குறிப்பிட்டதாகச் சில கருத்துக்களை எழுதியிருந்தார்.
சத்திய ஜித்ரேயின் அந்தக் கருத்துக்களுடன் இந்த ஆக்கத்தை நிறைவு செய்கிறேன்.
"ஒரு படைப்பாளியும் மனிதனே . இன்னும் சொல்லப்போனால், மற்ற மனிதர்களைவிடச் சற்று முழுமை பெற்ற மனிதன். தனது வாழ்க்கைச் சூழலிலிருந்தும், அத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் அன்றாடக் கருமங் களிலிருந்தும் முழுவதுமாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாதகாரியம். எனவேதான் எந்தவொரு படைப் பிலும் ஏதோ ஒருவகையில் இந்த சமூகப் பிரக்ஞை என்பது இடம்பெற்றே தீரும். ஒரு படைப்பாளி பார்த்துக் கொள்ள வேண்டியதெல்லாம், தான் ஒரு பிரசாரகனாக மாறிவிடக்கூடாது என்பது பற்றித்தான். பிரச்சாரம் படைப்பாளியின் வேலையல்ல.
எந்தவொரு சமூகப் பிரச்சினைக்கும் தீர்மானமான - முடிவான தீர்வு களைக் கொடுக்க எவராலும் இயலாது. சரியா, தப்பா என்று நியாயம் வழங்குவதோ தீர்வு சொல்வதோ ஒரு படைப்பாளியின் வேலையல்ல; அவனுக்கு அது முக்கியமல்ல; கட்டாயமும் அல்ல; சரியும் அல்ல!"
37

Page 20
வ.மகேஸ்வரன், தஞ்சாவூர்.
வழிநடைப் பயணம்
யாழ்ப்பாணத்துக் கோயில்களில் பிரசித்தமான செல்வச் சந்நிதி, வல்லிபுரக் கோயில்களுக்கு நடைப்பயணம் போனது ஒரு காலம். கதிர்காமத்து நடைப்பயணம் பிரசித்தமானது. எனது ஊரிலிருந்து நல்லூருக்கு நடையில் சென்று திரும்பிய நினைவுகள் சுகமானவை. இந்தப் பீடிகை எதுக்கெனில் நடைப்பயணம் என்பதன் சரியான அர்த்தத்தை இங்கு காண நேர்ந்தமைதான்.
அறுபடைவீடுகள்தான் நடைப்பயணத்தின் முக்கியமான தலங்களாக விளங்குகின்றன. மிகவும் தொலைதூரங்களில் இருந்து மக்கள் மேற்குறித்த தலங்களுக்குக் கூட்டங்கூட்டமாகக் கிளம்பி வருகின்றனர். பங்குனி உத்தரத் திற்குப் பழநிக்குக் காவடியும், நீர்க்குடமும் ஏந்தி நீண்ட தூரங்களிலிருந்து கால் நடையாகக் காவடிச் சிந்து பாடிக்கொண்டும், தப்பாட்டத்துடனும், புலிவேஷ ஆட்டத்துடனும் செல்கின்றனர். கிருத்திகைக்கு திருத்தணிக்கு தோளில் புஷ்பக்காவடி ஏந்தி நடைப்பயணம். யூனிலும், ஐப்பசியிலும் திருச்செந்தூருக்கு யாத்திரை. ஏப்ரலில் செட்டிநாடுகளில் இருந்து புள்ளிருக்குவேளுர் (வைத்தீஸ்வரன் கோயில்) நோக்கிய யாத்திரை. இவ்வாறு சில காலங்களில் வழிநடைப் பயணிகளாகவே தமிழகத்து நெடுஞ்சாலைக ளெங்கும் நிறைந்திருக்கிறார்கள். குறித்தீ கோயிலுக்குப் போவதற்கு முன்னரே விரதம் இருக்க ஆரம்பிக்கிறார்கள். காவி உடை, சவரம் செய்யாத முகமும் முடியும், மணி மாலை தாங்கிய கழுத்து, நெற்றி நிறைந்த நீறும் சந்தன குங்குமத்துடன் காட்சி தருகிறார்கள். குறிப்பிட்ட நாளில் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுகிறார்கள். அதிகாலை நீான்கு மணியில் இருந்து முற்பகல் பத்துமணிவரையும், மாலை நான்கு மணிமுதல் இரவு பத்து மணிவரையும் நடை. ஆங்காங்கே மர நிழல்களிலும், சத்திரங்களிலும் இடைப்பட்ட நேரத்தில் ஓய்வு கிடைக்குமிடத்தில் உணவு. இவ்வாறாக ஐம்பது முதல் முந்நூறு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து கோயிலைக் குறிப்பிட்ட தினத்தில் அடைந்தவுடன் காவிச் சென்ற பொருளைக் கொடுத்து அருச்சனை பண்ணி மொட்டை போட்டுக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிடுகிறார்கள். மீண்டும் அவரவரும் தம் சோலிகளில் ஈடுபடுகிறார்கள். இது வருடாந்த நிகழ்வு. இந்தப் பயணத்தில் முக்கிய விடயம் - கிறித்தவ மக்கள் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு காவியுடுத்து, விரதம் அனுஷ்டித்து, வழிநடைச்,சிந்து பாடிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வழிநடைப் பயணம் போவதுதான். சரி, போக்குவரத்து நவீனமாகவும், மலிவானதாகவும் இருக்க இந்தி நடைப்பயணம் செய்பவர்கள் யார்? பழநிக்கும் புள்ளிருக்குவேளுருக்கும் செல்லும் செட்டிநாட்டவரைத் தவிர, ஏனையோர் பெரும்பாலும் தமிழகத்து உழைக்கும் மக்கள்தான்.
38

விவாத மேடை
"கிளாக்கர்ப் புத்தி
“உலகம் முக்கில் விரல் வைக்குமாற்போல்,
பெரிதாய் புரட்சியும், புதுமையும் செய்த பேரறிஞர்கள்
எந்தத்துறையிலும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாய்த் தெரியவில்லை." - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
கம்பவாரிதிக்கு ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை? கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் ஞானம் ஜுலை இதழில் எழுதிய "கிளாக்கர்ப் புத்தி தொடர்பாக சில விளக்கங்கள்.
மிகச் சிறிய பிரதேசமாகிய யாழ்ப்பாண தீபகற்பத்தை பரந்துபட்ட தமிழகத்துடன் ஒப்பிட்டுத் தனது கருத்துக்களை முன்வைக்கிறார் கம்பவாரிதி. இது, ஒரு சிறிய கிணற்றைப் பெருங்கடலுடன் ஒப்பிடுவதற்கு ஒப்பானதாகும். யாழ்ப்பாணத்துச் சனத்தொகையை தமிழகத்துச் சனத்தொகையுடன் ஒப்பிட முடியுமா? தமிழகத்தில் வாசகர் தொகை அதிகம். சஞ்சிகைகள், பத்திரிகைகள் அதிகமாக வெளிவருகின்றன. எழுத்தாளர்களும் அதிகமாக உருவாக இது வாய்ப்பாக அமைகிறது. எழுத்தாளர்களுக்குக் களங்கள், பிரசுர வசதிகள், ! வாசகர்தொகை போன்றவை யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களைவிட அங்கு பன்மடங்கு அதிகமாகவேயுள்ளன. கம்பவாரிதி இத்தகைய கருத்துக்களை வெளியிட முன்பு, புவியியல் ரீதியான காரணிகளையும் சரித்திர ரீதியான காரணிகளையும் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். விரலுக்கேற்ற விக்கந் தானே இருக்கமுடியும்.
யாழ்ப்பாணத்தின் சரித்திரத்தைத் திருப்பிப் பார்த்தால், அங்கு ஒருபோதும் ஐம்பது வருடங்கள் தொடர்ச்சியாக அமைதி நிலவியதில்லை. தமிழக அரசர் களின் படையெடுப்புகள், சிங்கள அரசர்களின் படையெடுப்புகள், போர்த்துக் கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் படையெடுப்புக்களென யுத்தபூமியாகவே யாழ்ப்பாணம் இருந்திருக்கிறது.
இந்நிலையிலும, கம்பவாரிதியார் கூறிய அளவுக்கு யாழ்ப்பாணத்துப் படைப்பாளிகள் பின்தங்கிவிடவில்லை.
இன்று நவீன இலக்கிய வடிவங்கள் பெரும்பாலானவை வசன நடை யையே கொண்டுள்ளன. இந்த வசன நடையை முதலில் தமிழிலே திறம்படக் கையாண்டவர் ஆறுமுக நாவலர்(1822-1879). ‘வசன நடை கைவந்த வல்லாளர் எனத் தமிழகத்தாரால் போற்றப்பட்டவர். ஆறுமுக நாவலரின் வசன நடையை விதந்து கூறாத தமிழறிஞர்கள் இல்லை என்றே கூற வேண்டும்.
தமிழ் வசன நடையில் பொருள் தெளிவுற விளங்கும் வண்ணம் குறியீடு களை முதன்முதலிலே பயன்படுத்தி தமிழகத்து அறிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தவரும் நாவலரே.
39

Page 21
ஏன், கம்பவாரிதி கையாளும் கலைக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவரும் நாவலர்தான் என்பதை அவர் அறியாரா? கம்பவாரிதியார் இன்று சமயச் சொற்பொழிவுகளை, இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றுகிறார். முதன்முத லாகச் சமயச் சொற்பொழிவை(கதா காலேட்சபம் அல்ல) வண்ணை சிவன் கோயிலில் ஒரு வெள்ளிக்கிழமைத் தினத்தில், ஆற்றியவர் ஆறுமுக நாவலர். அதன் பின்னரே சமயச் சொற்பொழிவுகள் ஆற்றும் முறை பலரால் பின்பற்றப் பட்டது என்பதை கம்ப வாரிதியார் அறியாரா?
"நல்லைநக ராறுமுக நாவலர் பிறந்திரரேல் சொல்லுதமி ழேங்கே சுருதியெங்கே - எல்லவரும் ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேபிர சங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை"
- இவ்வாறு நாவலரின் தொண்டினைப் பாராட்டி யுள்ளார் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள்.
தமிழ் நூற்பதிப்புத் துறைக்கு கால்கோள் அமைத்தவர் ஆறுமுக நாவலர். நாவலர்பதிப்பு என்றால் "சுத்தப்பதிப்பு என தமிழ் உலகம் அங்கீகரித்தது. ஏறத்தாழ 50 இலக்கண இலக்கிய சமய நூல்களை ஆறுமுகநாவலர் பதிப்பித்தார்.
நாவலரைத் தொடர்ந்து சி.வை.தாமோதரம்பிள்ளையின் (1832-1901) நூற்பதிப்புப் பணி விதந்துரைக்கப்பட்டது. இவரது பணியினை தமிழக அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்னை விதந்து பாராட்டியுள்ளார் பதிப்புத் துறையில் புகழீட்டிய உ.வே.சாமிநாதையருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை எனலாம்.
கம்பவாரிதி, வ.வே.சு.ஐயரே தமிழ்ச் சிறுகதை மூலவர் என்கிறார். தமிழகத்தவரின் இடைவிடாத பிரசாரத்தால் இது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. இப்படிப் பல பிழையான விடயங்கள் பிரசாரத்தால் தமிழ்கூறு நல்லுலகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லி பிரசாரஞ் செய்வதற்கும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கும் அங்கு பிரசுரகளங்களும் வாசகர்களும் அதிகம். ஆறுமுக நாவலரின் சமகாலத்தவரான ஆனார்ல்ட் சதாசிவம்பிள்ளை(1869) அவர்களே தமிழ்ச் சிறுகதை மூலவர் எனத் தக்க ஆதாரங்களோடு ஈழத்து எழுத்தாளரான சிவபாதசுந்தரமும் தமிழக எழுத் தாளரான சிட்டி அவர்களும் தமது தமிழ்ச் சிறுகதைகள் ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளனர். இவரது சிறுகதைத் தொகுதி நன்னெறிக் கதாசங்கிரகம் என்ற பெயரில் வெளிவந்தது.
ஆனார்ல்ட் சதாசிவம்பிள்ளை ஈழத்தின் முதலாலது பத்திரிகையான 'உதயதாரகையில் 1857 முதல் ஆசிரியராக இருந்தார். ஆறுமுகநாவலர் இவரது பத்திரிகையில் பல கண்டனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கண்டன இலக்கியத்திற்கும் நாவலரே முன்னோடி.
கம்பவாரிதி தமிழ்ப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தை மட்டும் பிரித் தெடுத்துத் தனது வாதத்தை நிலைநிறுத்த முயல்வது எவ்வகையிலும் பொருத்த மானது அல்ல. திருகோணமலையைச் சேர்ந்த தி.த.சரவணமுத்துப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை மாநிலக் கல்லூரியில் பிரதம நூலகராக இருந்தவர். இவர் எழுதிய "மோகனாங்கி
40

என்ற நாவலே தமிழில் எழுந்த முதலாவது வரலாற்று நாவல் என பேராசிரியர் க.கைலாசபதி கூறியுள்ளார். இந்த நாவல் 1895இல் வெளிவந்தது.
இன்று பெண்விடுதலை, பெண்ணியச் சிந்தனைகள் முனைப்புப் பெற்றுள் ளன. இச்சிந்தனைகளை நவீன இலக்கியத் தளத்தில் முதலில் முன்வைத்தவர் பாரதியார் எனப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தி.த.சரவணமுத்துப் பிள்ளை ‘தத்தைவிடு தூது (1892) என்ற மரபுவழிப் பிரபந்த நூலிலே மிகவும் ஆழமாகப் பெண் விடுதலை பற்றிப் பாடியுள்ளார். பெண் அடக்கு முறைக்கு எதிராக முதலில் கிளம்பிய தமிழ்க்குரல் சரவணமுத்துவினுடையது. ஈழத்து இலக்கியச் செல்நெறியில் விதந்து குறிப்பிடக்கூடிய தகுதியை ‘தத்தைவிடு தூது பெறுகிறது.
பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமி என்பதைத்தானும் வாரிதியார் அறியாரா?
தமிழ்க் கவிதை உலகில் மகாகவிக்குத் தனியானதோர் இடமுண்டு. தமிழில் குறும்பா என்ற பாடல்வகையை முதல்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை ஈழத்தவராகிய மகாகவிக்கே உரியது. மேற்கூறிய விடயங்கள் யாவும் சரியான முறையிலே பிரசாரப்படுத்தப்படாததால் இன்று ஈழத்தவர் இலக்கியத்துக் குச் செய்தபணி, புதுமை, புரட்சி ஆகியன மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இப்போது கம்பவாரிதியும் துணைபோகிறார். சும்மா சலசலப்பை ஏற்படுத்துவதற்காக கம்பவாரிதி கிளாக்கர்புத்தி எனச் சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் நையாண்டி செய்கிறார்.
கம்பவாரிதி தனது கட்டுரையில் யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழும் எல்லோரையும் தாக்குகிறார். சிறு தொகையினராகிய பிராமணர்களைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஆனால் வணிகர்களை மாத்திரம்தான் தாக்க வில்லை. இங்கேதான் கம்பவாரிதியின் சுயம் வெளிப்படையாகத் தெரிகிறது. -சு. அரவிந்தன், முளாய் றோட், வட்டுக்கோட்டை.
ஞானம் இதழ் 28 வாசகர் பேசுகிறார் பகுதியில் கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவர்கள் எழுதிய குறிப்பு மிக முக்கியமானது. அவரது கேள்விகள் நியாயமானவை. ஆனால் காரணங்கள்தான் சங்கடமானவை. அதில் என்மனதில் பட்டவற்றைச் சொல்ல விரும்புகின்றேன்.
இலங்கைத்தமிழ் இலக்கிய படைப்புகளின் வரலாற்றுத் தடத்தொடர்ச்சி யில் இடைவெளி காணப்படுவது உண்மையே! இதற்கு ஒய்வு இன்மையால் அல்லது கடின உழைப்பின் காரணமாக இலக்கியங்கள் எழவில்லை என்று சுருங்கச் சொல்லிவிடவும் முடியாது. இந்த இடைவெளிக்கு சமூக அரசியல் காரணங்களே அதிமுக்கியமானவை. இன்றும் அத்தகைய இடையூறுகளின் தொடர்ச்சியைக் காணமுடிகின்றது. • ,
ஒருவர் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபடுவார் எனில் அவரை ஊக்கு வித்து வெளிக்கொணர்வதைவிட எள்ளிநகையாடி மழுங்கடிப்பவர்களே நமது சமூகத்தில் வாழ்கிறார்கள். "இவருக்கு வேற வேலையில்லை, இலக்கியம் சோறு போடுமா? பைத்தியக்காரன்.” என்று சொல்பவர்கள் இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள்.
அடுத்தது அரசியற் காரணம். காலத்துக்குக்காலம் நடைபெறும்
41

Page 22
படையெடுப்புகள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள், இன அழிப்புகள் போன்ற நிகழ்வுகள் முதலில் அழித்தல் பணியை கலாசார மூலங்களிலேயே மேற்கொள் கின்றன. அண்மைக்கால இரு தசாப்த கால யுத்த நிலவரங்களின் கைங்கரி யங்கள் நமக்குச் சான்றாகும்.
ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர் என்போர் தமது பணியைப் பக்கச் சார்பானதாக மேற்கொள்வதும் மற்றுமொரு காரணமாகும். உதாரணமாக இலங்கையில் இதழியல் வரலாறு பற்றிப் பேசுபவர்கள் ஏனோ கல்லடி வேலுப்பிள்ளையை கெட்டித்தனமாக மறந்துவிடுகின்றனர். ஆனால் பாரதத்தில் சுப்பிரமணியபாரதிபோல் ஈழத்தில் எழுச்சிக் கவிஞனாக, பத்திரிகையாளனாக விளங்கியவர் கல்லடிவேலன். இதுபோல் எத்தனையோ புலவர், பண்டிதர்கள், ஆக்க இலக்கியக்காரர்களின் படைப்புகள் கால ஓட்டத்தில் அடிபட்டுப் போய் இருக்கலாம்.
அவை இன்று இலங்கை வானொலி மட்டத்திலும் நடைபெற்று வருவது கண்கூடு. 75 வருட வளர்ச்சியில் இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட ஒலிவடிவ கலை இலக்கியப் படைப்புக்கள், இசைத்தட்டுக்கள், ஒலிநாடாக்கள் திட்டமிட்ட முறையில் உடைத்து நொருக்கப்பட்டும், அழிக்கப் பட்டும் வருகின்றன. இன்று இலங்கை வானொலி உள்ள நிலையில் இன்னும் பத்து வருடங்களின் பின்- இலங்கை வானொலியில் தமிழில் ஒலிபரப்பு இருந்த தில்லை என்று ஒர் ஆய்வாளன் கூறினால் அதை மறுப்பதற்கு எம்மிடம்
ஆவணம் இல்லை என்பதே நமது யதார்த்தம். - மாவை வரோதயன்.
/ー இப்போதெல்லாம் முடிவதில்லை!
ஆளில்லாக் கடற்கரையில் துள்ளி த்தி β. ந்த எனது அலைகளோடு தோழியாக. வசந்தகாலம நீரில்லாக் கிணற்றுக்குள்ளே pدر لویی سامانه6لی قو நிம்மதியாய் శ్రీesqఉఈ நேற்றோடு @o வேலியில்லா மாமரத்தில் பதினாலு வயதுடன! வாலில்லாக் குரங்காக."
இப்போதெல்லாம் முடிவதில்லை.
பக்கத்துவிட்டுப் பையனோடு பந்தயம்போட்டு
பழம் பறிக்க s கிளிஞ்சல் பொறுக்க 8 வெட்டியாய் ஊர்சுற்றி வேர்த்துக் களைதது ઈ. ώω Q9 ( முடிவதில்லை.
42
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஆழ்ந்திருக்கும். காண்கிலான்” "மொட்டந் தலைக்கும் முழந்தாலுக்கும்முடிச்சு” என்பதன் பொருள் புரியவில்லையா. சென்ற ஞானம் இதழைப் புரட்டுங்கள். ஏ. யதீந்திரா என்பவர் எழுதிய "வடிவங்களை உடைத்து முன்னேறும் பயணம்" கட்டுரையை வாசித்துப் பாருங்கள். உடனே பொருள் புரிந்துவிடும்.
"குறிப்பாக சாதிக்கட்டமைப்பால் மிகவும் இறுகிப் போனவர்கள் யாழ்ப் பாணத்தவர்கள். கந்த புராண கலாசாரத்தின் பெறுபேறு அது.” என்று அவர் திருக்கை மலர்ந்தெழுதியுள்ளார்.
இக்கூற்றில் உண்மையுள்ளதா என்று நோக்க வேண்டும். கட்டுரையாளர் கள் எழுந்தமானங்களிலிருந்து கருத்துக்களைப்பிரசவிக்கக்கூடாது. வேண்டும் உண்மையாதாரங்கள்.
கந்தபுராண கலாசாரத்தின் பெறுபேறுதான் சாதிக்கட்டமைப்பு என்பதை யதீந்திரா நிரூபிக்க முடியுமா? "கந்தபுராண கலாசாரமே யாழ்ப்பாணக் கலாசாரம் என்று சொல்லும் மரபு எப்போது தோன்றியது? அக்கலாசாரந்தான் சாதிக் கட்டமைப்பைத் தோற்றுவித்தது என்றால், இக்கலாசார மரபு தோன்ற முன்பு யாழ்ப்பாணத்தவரிடையே இப்பலவீனம் இருக்கவில்லையா? போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுதல் கூடும்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று வரிசையாய்ப் படையெடுத்து வந்தவர்களால் சுதேசிகளுடைய மதம் ஓரளவு வலுவிழந்து போக, மத அடிப்படையில் கட்டப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கலாசாரமும் ஆட்டங் காண நேர்ந்தது.
இதன்போது, ஓரளவு மதச் சுதந்திரமும் சுதேசிகளுக்கு வாய்க்க, முயற்சியுள்ளோர் கந்தபுராணத்தை ஆலயங்களில் பேணியதன்மூலம் அப்பழைய யாழ்ப்பாணக் கலாசாரம் முற்றாக இறந்து போகாமற் காத்தனர். இவ்வாறு கந்த புராணத்தைப் பிரமாதப் படுத்தியமைக்கு "சூரர் முதலிய பகைவரை சைவக் கடவுள் வென்று அறத்தை மீள நிலைநாட்டிய” கந்த புராண வீரப்பண்பும் முக்கிய காரணமாக விளங்கியது. இத்தகையதோர் பண்பு அக்கால ஈழச் சமுதாயத்துக்கு பெரிதும் வேண்டியிருந்தமையினை நாம் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அழிந்துபடுகிற நிலையிலிருந்த யாழ்ப்பாணக் கலாசாரத்தை கந்தபுராணமே புராண படனங்கள் மூலம் காப்பாற்றியமையாலேதான் "யாழ்ப்பாண கலாசாரத்தை கந்தபுராணக் கலாசாரம்” என்று சொல்லும் மரபு ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி யாழ்ப்பாணக்கலாசாரத்தைத் தோற்றுவித்ததே கந்தபுராணமல்ல. யாழ்ப்பாணத்துக் கலாசாரக் குறைபாடாகிய சாதிப்பாகுபாடு கந்தபுராணச் செல்வாக்கு ஏற்படுவதற்கு முன்பே இருந்தது என்பதைக் கருத்திற்
43

Page 23
கொள்ள வேண்டும்.
மனித மனப் பலவீனங்கள்ை, உயர் நூல்களின் மீதோ, உயர் கலாசாரத்தின் மீதோ சாட்டித் தப்பிவிடுவது நேர்மையாகாது.
உண்மையில் கந்தபுராண அடிப்படையில் தோன்றிய கலாசாரம் சாதிப்பாகுபாட்டை எதிர்க்க வேண்டும். கந்த புராணக்கரு அதையே வலியுறுத்து கின்றது. தேவ குலத்துக்கும் (தெய்வயானை) வேடுவ குலத்துக்கும் (வள்ளி) திருமணம் என்ற பெயரில் சம்பந்தி நடத்திக்காட்டிய கதையுள் "ஆழ்ந்திருக்கும் அற உள்ளத்தை" அனைவரும் தரிசித்தலே அவசியமாகிறது.
- பூரி. பிரசாந்தன்,
விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்.
"ஞானம்' சஞ்சிகை புதுப்பொலிவுடன் கனதியான இலக்கிய அம்சங் களைத் தாங்கிவருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
செப்டம்பர் 2002(28ஆவது இதழ்) இதழில் என்னை வெகுவாகக் கவர்ந்த விஷயம் மூத்த எழுத்தாளர் வரதர் (தி.ச.வரதராசன்) உடனான சந்திப்பாகும். ஈழத்து நவீன இலக்கிய முயற்சிகளுடன் அறுபது ஆண்டுகளாக தொடர்பு கொண்ட எழுத்தாளர் இவர். மறுமலர்ச்சிக் காலம் தொடக்கம் இன்றுவரை அவரின் இலக்கியப் பணியினை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள உதவுகின்றது இந்த நேர்காணல். ஒரு தனிமனிதன் இவ்வளவு சாதனைகளை ஆற்றினாரா என மூக்கின்மேல் கைவைக்கத் தோன்றுகின்றது.
அவர் சொல்லத் தவறிவிட்ட பணியொன்றை நினைவு கூர விரும்பு கிறேன்:
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் நாவலர் பெருமானின் கர்ணபரம்பரையில் வந்தவர். தமிழ் இலக்கிய ரசனையிலும் சித்தாந்த தத்துவ விசாரணையிலும் தம் வாழ்நாள் முழுவதிலும் ஈடுபட்டவர். சிறந்த சிந்தனை யாளர். பத்தரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எண்ணுக்கணக்கில்லாத சமய இலக்கியக் கட்டுரைகளை எழுதியவர். இலங்கை வானொலியிலும், பொது மேடைகளிலும் கேட்டார்ப் பிணிக்கும் தன்மையில் பல சொற்பொழிவுகளை ஆற்றியவர். எனினும் ஒரு நூல்கூட அவர் பெயரால் வெளிவந்திருக்கவில்லை. ‘புத்தகம் என்கின்ற மாயமானுக்குப் பின்னால் நான் போகத் தயாராகவில்லை என்று அவர் கூறுவார்.
இந்த நிலையில்தான் வரதர் அவர்கள் பண்டிதமணி அவர்களின் பெயரால் ஒரு புத்தகத்தையேனும் வெளியிட ஆசைப்பட்டார்.
"இந்தியாவிலிருந்து வரும் அறிஞர்களிடம் பண்டிதமணியைப் பற்றிக் கூறினால் அவர் எழுதிய நூலொன்றைப் பார்க்கலாமா என்று கேட்கிறார்கள். பத்திரிகை நறுக்குகளை அவர்களுக்குக் காட்டுவதா?” என்ற எண்ணத்தினா லேயே நூல் வெளியிட முனைந்தேன்" என்கிறார் வரதர். பண்டிதமணியின் பத்திரிகைக் கட்டுரைகளை ஒட்டி வைத்திருந்தார் இரசிகமணி கனக செந்தி நாதன். அவரிடம் பெற்று வரதர் வெளியீடாக வந்த நூலே 'இலக்கிய வழி என்னும் நூலாகும். இதுவே பண்டிதமணியின் முதல் நூலாகும்.
"இதன் செவிலித்தாய் கனக செந்திநாதன், நல்ல தோழி வரதர்"
44

எனப் பண்டிதமணியே இலக்கிய வழியின் முதற்பதிப்பு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் (இந்த நூல் 1954 அல்லது 1955இல் வெளிவந்திருக்க வேண்டும். ஆண்டு நினைவில்லை)அப்பொழுது பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை தோற்றம் பெறவில்லை.
எமது முதுசொத்தான பண்டிதமணியின் நூலை முதலில் வெளியிட்டு வைத்துச் சாதனை படைத்தவர் வரதர். இதனை அவரே மறந்துவிட்டார்போலும். பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் இதனை க.பொ.த. உயர்தர வகுப்புக்குப் பாடநூலாக்கினார். இதன் பின்பே 1963ஆம் ஆண்டு பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையால் இலக்கிய வழி திருத்தப் பதிப்பு வெளியாகியது. இதுவரை எட்டுப் பதிப்புகள் வெளியாகியுள்ளன.
திருத்தப் பதிப்பினை வெளியிட்ட பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையினர் இலக்கிய வழி யின் முதற்பதிப்பு வரதர் வெளியீடாக வந்தது என்பதைக் கூறாது தவிர்த்துவிட்டனர். முதற்பதிப்புக்குப் பண்டிதமணி எழுதிய முன்னுரையைத் திருத்தப்பதிப்பில் சேர்க்கவில்லை. பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையே "இலக்கிய வழியை முதன்முதலில் வெளியிட்டது என வாசகர் நினைக்கும் வித்திலேயே செயற்பட்டுள்ளனர்.
வரதர் வெளியீடான இலக்கிய வழி 1955 இல் மகரகம ஆசிரிய கலாசாலைப் பயிற்சி ஆசிரியர்களுக்குப் பாடநூலாக ஆக்கப்பட்டது. அப்பொழுது தமிழ் விரிவுரையாளராக இருந்த பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள்தான் இதனைப் பாடநூலாக்கியவர். ‘இலக்கிய வழியை படித்து இரசித்த ஆசிரியப் பயிலுநர்களில் நானும் ஒருவன்.
க.பொ.த. சாதாரணதர வகுப்பிற்கு இதனைப் பாடநூலாக்க முயற்சி எடுக்கப்பட்டபோது இந்நூலில் இலக்கணப்பிழை இருப்பதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கூறினாராம். பண்டிதமணியிடம் இதனைச் சொன்னபோது “பாடசாலைப் பிள்ளைகளுக்கென நான் இதனை எழுதவில்லை; எனக்குத் தோன்றிய விதததில் எழுதினேன். நள்ளிருளில்; நடுயாமம்' என்று எழுதுவேன். இதில் பயனிலை செயப்படுபொருள் இருக்காது" என்று கூறினார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் க.பொ.த. உயர்தர வகுப்புப் பாடநூலாக ஆக்கப்பட்டது.
பண்டிதமணியின் நூல்வெளியீட்டு முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தவர் வரதர் அவர்கள். இதனை அவர் மறந்தாலும் நாம் மறக்க (P9UT5. முல்லைமணி.
பெரியார் வரதர் அவர்கsரின் வெளியீடுகளோடு , அன்றுதொட்டு தொடர்பு கொண்டவன் நான் என்ற முறையில், மனதிற்குள் பழைய நினைவுகள் முட்டி மோதுகின்றன. தமிழில் "வழிகாட்டி" மூலம் 50களில் பெருங் கிளர்ச்சி யையே ஏற்படுத்திய பெருமகன் அவர். அவரை மீண்டும் வாசகர்களிடையே நினைவுபடுத்திய "ஞானம்' வாழ்த்துக்குரியது.
தங்களது பணி தளராமல் தொடரட்டும். தமிழுக்கு அதுவே வளஞ்சேர்க்கட்டும்.
இ.ஆ.தமிழோவியன், பதுளை.
45

Page 24
தமிழர் அறிகையும் பரத நடனமும் ஆசிரியர்:பேராசிரியர் சபா.ஜெயராசா வெளியீடு : போஸ்கோ ஆட்ரோன் பிறிண்டேர்ஸ், நல்லூர், விலை : HLIT 100/“
பரத நடனம் தொடர் பாக முன்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத் திலும், அண்மையில் யாழ்ப்பானப் பல்கலைக்கழகத்திலும் நிகழ்த்திய இரு வேறு சொற் பொழிவுகளை ஆதாரங்களாகக் கொண்டு இந்நூலாக் கம் இடம்பெற்றுள்ளது.
நூலாசிரியர்.
கூடில்லா குருவிகள் (சிறுவர் இலக்கியம்) ஆசிரியர் : ஒலுவில் அமுதன் வெளியீடு ரக்ஷானா வெளியிட் டகம், அக்கரைப்பற்று - 05. விலை : Ibu IT IOCOW =
நாவல் , சிறுகதை, கவிதை போன்றவற்றை வெளியிட்ட நான் தற்போது சிறுவர் இலக்கிய நூலினை வெளியிடுகிறேன். இருபது வருடங் களுக்கு முன்னர் சிந்தாமணி, தினகரன், சூடாமணி போன்ற தேசியப் பத்திரிகைகளில் சிறுவர் எழுதியிருக்கிறேன். தற்போது புதிதாக எழுதி நூலாக்கி சிறுவரின் கரங் களுக்குத் தந்துள்ளேன்.
ஒலுவில் அமுதன்.
马乐D巫
f
தோற்றுவிடுவார்கள்
ஆங்கோர் விளிம்பிவிருந்து இன்னொரு முட்டுக்கு எண் - குருதிப் பசை சுரந்து Jନା) {#<ୋlt;/i&&f!! சுவரெழுப்பி வட்டங்கள் செய்து க்ளைத்து குடி புகுந்து - அந்தக் கணப்பொழுதில் கம்பனி சிம்மாசனம் - என் வீட்டுக் கோடியில். "இன்னயோட ஒனக்கு வேல கெடயாது. போயிடு, பெரிப்ய தொரன்னு நெனப்பு' அதிகாரப் எக்காளமிட்டது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் இதைவிட உன்னால் என்ன செய்துவிட முடியும்?
என் - பழைய ஈனக்குரலை எதிர் பார்த்திருந்தவர்கள் தோற்றுத்தாள் போனார்கள்
உன் வன்வமத்தால் நீான் குச்சு எத்தனை முறை இடிந்து சிதலமடைந்தாலும் வேதாளச் சிவந்தியாகவே ଶtୋt yošč Çfrål).
( மிடில்டன்.சி.சாரதாம்பாள் )
 

3.
ass
് tib
தமிழோவியனர்
பதுனை
பேTTTடும் உணர்வு
பொங் கிஎழும் உள் ாத்தோடு யாருக்கும் அஞ்சாமல்
பTவரும் திரவிகள் டெழுந்தே வீதியிலே அணிவகுத்து
வெற்றிதடை பயின்று: சாதிக்க முனையும் மாதர்
சரித்திரம் படைத்திடுவார்
உழிேப்பதுவும், சமைப்பதுவும்,
உற்றாரைக் காப்பதுமே, தீழைப்பதற்கு வழியென்று
தனித்து ஒதுங்காமல்; ஆண்டுகள் ஆயிரத்திற்குமேல் தrயிருந்த தாயகத்தில் மீண்டும் குடியேறித்
தங்களிடங்களை மீட்டிடுவார்!
முடங்கி ஊருக்குள்ளே
மூவேயிலே கிடக்காமல் அடங்கி நடப்பதனை
அறவே விட்டொழித்து தடங்கள் பதித்து
தலைநிமிர்ந்து நடப்பதற் தி உடனே எல்லோரும்
ஒன்றுபட் டெழுகவென்றார்!
பெற்ற பிள்ளை களையும்
பிரியமுள்ள கணவனையும் சுற்றத்தோடு கூட்டமாக
முற்றாகப் பறிகொடுத்தும் "இனி ஏதுமே இல்லை"
இழப்பதற்கு என்றபடி துணிந்த தாய்க்குலத்தினர்
துணிவினைத் துதித்திடுவோம்!
வெடிகுணர்டு தாக் இதிலுக்கும்
விமானக் குண்டுவீச்சிற்கும் அடிபணியா தமிழ்மாதர்
அஞ்சாத வீரமுடன் கொடிபிடித்து உரிமைகேட்டு
சுக்குர விட்டபடி படைநடத்தி முன்னேறிவரும்
பட்டாளத்தை வரவேற்போம்!

Page 25
நற்பிக்கையோடு.
அத்துவான வெளிமீது கத்தித் தொலைகிறது கரிச்சான் குருவி! காற்றுக்கூட மூச்சுக்காட்டாது முழு மெளனமாக ஓ! மனிதர்களே! என்ன நடந்துவிட்டது உங்களுக்கு? ஆடிப்பாடி என்மேல் கூடிக்குலவிய உங்கள் குரலொலிகள். சிரிப்பலைகள். அழகிய வீடு வாசல்கள். ஆடு, மாடுகள் எல்லாவற்றோடும் என்னையும் தொலைத்துவிட்டு எங்கே போய்விட்டீர்கள்? இப்போதெல்லாம் முட்கம்பிச் சுருள்களும் முகம் தெரியாப் பிசாசுகளும்தான்
L! இன்னும் எனக்குள்
FLÎL'ill:5500'E, வெம்பிப் போய்விடவில்லை வருவீர்கள்: என்றோ ஒருநாள்! உங்கள் கால் தடங்களை காணுவதற்காப் காவலரண்களையும் தாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன்

T. GNJANJA SEKARAN 19/7,
1Ρεγαια εννιναν Rο ακί, Καννιαίαν,