கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.11

Page 1
エ
 

Gib
இலக்கியச் சஞ்சிகை

Page 2
புண்ணான அடிமைநிலைச
எந்நாளும் ஏற்பேனோ?
எங்கெல்லாம் அநீதி எங்கெல்லாம் அடிமைநிலை எங்கெல்லாம் பொய்யின்பூ பூக்கின்ற வேளைகளில் எண்குருதி கொதிக்கட்டும் எனைக் குமுறவைக்கட்டும் என் பேனாப் பீரங்கி இடிஎழுப்பி முழங்கட்டும்
உலகம் சமுத்திரமாய் உதைத்தெறிய வந்தாலும் உளவலிமை மலையின்மேல் உட்கார்ந்து உதைத்தெறிவேன் வந்தென்னிற் தாக்கியதன் வலியிழந்து ஒடட்டும்
தாக்கும்போதெல்லாம் நான் தவவலிமை பெறுகின்றேன் தூற்றும் போதெல்லாம் நான் துறவுநிலை அடைகின்றேன்.
புல்லைக் காற்றுதைக்கும் புண்மைநிலை கண்டாலும் புலியாக மாறிப் பொங்கிடுமே என் உள்ளம் புண்ணான அடிமைநிலை எந்நாளு மேற்பேனோ? ஏற்பவரை என் அறிவால் எரிக்காது விடுவேனோ?
உலகத்தில் அடிமைநிலை உண்பவரைக் கண்டாலென் உள்ளத்தாற் பொங்கி
ദ്യ
S1&M
அடிமை செய எண்ணி அகங்காரத்தோடுதினம் நிமிர்கின்ற தலைகளையே நிட்டூரமாய் அறிவின் வாளெடுத்து வீசி வானத்தில் உருட்டிடுவேன்.
விதிவடிவில் வெல்ல எனை அடிமையது வந்தாலும் கவியெழுதும் பேனாவால் கண்டதனை மாய்த்திடுவேன் கவியரசாய் நிலைத்திடுவேன்
செல்.சுதர்சன் தமிழ் விசேடதறை பேராதனைப் பல்கலைக்கழகம்
உருக்குலைபோல் நான் கொதிப்பேன்
 
 
 
 

ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர்: ஞா.பாலச்சந்திரன்
ஒவியர்* நா. ஆனந்தன்
கணனி அமைப்பு: கெ.சர்வேஸ்வரன் தொடர்புகளுக்கு so a
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. Qg5m.Gu. -08-478570 (Office)
08-234755 (Res.)
Fax - 08-23.4755
E-Mail
gnanam magazinesayahoo.com
உள்ளே. சிறுகதை
4iaisn tö p7niö.sosissa.05 எஸ்.செல்வகுமார்
வெண்புறாவும் வேதனையைச் சொன்னால் . 27 பா. ரத்நஸ்பாபதி அய்யர்
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . I தரை. மனோகரன் கனடாப் பயணக்கட்டுரை . 4 பேராசிரியர் அ.சிவராஜா எனத எழுத்தலகம் .SpVggeggae 20 ரூபராணி ஜோசப்
கவிதைகள் புண்ணான அடிமைநிலை எந்நாளும் ஏற்பேனோ? . O2 செல். சுதர்சன் ஈழத் தாயே! தவ. சஜிதரன் மனச்சாட்சியன் உறத்தல் . 4 Gb பொற்கோ சமாதான விரோதிகளே! திருந்ததுக!. 4. கவிஞர் எம்.வை.எம்.மீஆத் ஏன் இந்த முரண்பாடு?. 47 முல்லைமணி தப்பாக்கி தாக்காத போராளி. 48 தானா விஷ்ணு
நூல் விமர்சனம்.17 நெற்றிக் கண்.34 திரும்பிப் பார்க்கிறேன்.37 தஞ்சைக் கடிதம் . 39 afairso Daol...........sessesses. 40 வாசகர் பேசுகிறார்.43
புதிய srooabib eeeeeeeeeeeeeeeeeeeeee 43
3.
இரங்காயோ??!! . 19

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் .ெரூக் கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். گرس
மானுடத்தினர் தமிழ் செய்வோம் வ
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் நிதர்சனம் நிறுவனத்துடனும், தமிழ்த்தாய் வெளியீட்டகத்துடனும் இணைந்து நடத்திய “மானுடத்தின் தமிழ்க் கூடல் 2002” யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அக்டோபர் 19முதல் நான்கு நாட்கள் மிகவும் சிறந்த முறையில் நடந்தேறியுள்ளது. இந்த மாநாட்டிலே தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று மூவினமக்களும் கலந்துகொண்டு தமது உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்திலிருந்து, தெண்னிலங்கையிலிருந்து, மலையகத்திலிருந்து, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, வடக்குக் கிழக்கின் சகல பிரதேசங்களி லிருந்தும் ஏறக்குறைய மூவாயிரம் பேராளர்கள் இந்த மாநாட்டிலே கலந்து கொண்டனர். இவர்கள் யாபேரும் மானுடம் தழுவிய ஒரு விடுதலையை நோக்கி ஒன்றிணைந்து நின்றார்கள்.
இந்த மாநாடு 'மானுட விடுதலை நோக்கிய திசையில் ஈழத்தமிழர் உரிமைப்போராட்டமும் கலை, இலக்கிய, ஊடகங்களின் வகிபாகமும்’ என்னும் மையப்பொருள் பற்றி நடைபெற்றது. தொடக்கவுரை நிகழ்த்திய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார் :-
"தமிழரின் விடுதலைப் போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமென சில ஊடகங்களே தவறாகச் சித்திரித்துக்காட்டின. தமிழர் போராட்டத்தின் நியாயத்தன்மையை சிங்கள மக்களிடம் தெளிவாக எடுத்துக்கூற ஊடகத்துறை முன்வரவேண்டும்.
ஈழத்தமிழர்களுடைய உரிமைப்போரானது மானிட விடுதலை நோக்கிய திசையில் வந்தது, வருவது, வரப்போவது என்பதாகும். இது ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கான ஒரு போராட்டமும், தேடுதலுமே தவிர, இந்த உரிமைப் போராட்டத்தினுடைய - அது எடுக்கும் வடிவங்களை வைத்துக்கொண்டு அதற்கு எதிராகக் கூறப்படுவதை வைத்துக்கொண்டு இந்த உரிமைப்போராட்டத்தை மதிப்பிடக்கூடாது என்பது மிக முக்கியமானது.
மானுடத்தின் குரல் என்பது தனியே தமிழ் மக்களுக்குரியதல்ல. அது šбуӑe50 6).м. னது அடக் எங்கு ஓங்குகிறதோ அங்கெல்லாம்
4
 
 
 
 
 
 
 

மானுடத்தின் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் நசுக்கப்படும்போது மானுடத்தினி குரல் ஒலிக்கும். அது மொழியால் வேறுபடுவதல்ல. மானுடத்தின் குரலானது எப்பொழுதும் தனது கருத்தியலை, தனது வடிவத்தன்மையை வெளிப்படுத்தவேண்டும். அது தன்னுடைய ஆத்மார்த் தமான மனித உணர்வுகளை வெளிக்காட்டவேண்டும். அவை எப்பொழுது செயற்படுகின்றதோ அப்பொழுதுதான் மானுடத்தின் குரலாகிறது.
அந்த மானுடக் குரலானது மனித உணர்வுகளை மதிக்கின்ற, மனிதனை மனிதனாக மதிக்கின்ற இயல்புகளுடன் பொருந்திக் காணப்படவேண்டும். மானுடத்தின் உணர்வுகளை நசுக்கும்போது போராட்டம் தோற்றம் பெறுகிறது. போராட்டம் என்பது வெறுமனே போரைக் குறிப்பதல்ல. போராட்டம் என்பது பல்வேறு வகையிலானது. உரிமைப்போர் என்பது "War" அல்ல; அது "Fight’ 566). 916) 'Struggle' 96tb. 9.5/1665) 'Struggle for human liberation' 676crussiestb. 1920இலிருந்து அரசியல் வடிவில் தமிழர்களின் உரிமைகளைப் பற்றி எடுத்துக் கூறுகின்ற குரல் ஒன்று காணப்படுகின்றது. அதிலிருந்து தமிழ் மக்களுடைய குரல், குறிப்பாக ஈழத்தமிழருடைய குரல் நடைபோடத்தொடங்கியது. இளைஞர்களுடைய வருகையும் போரினுடைய உக்கிரமும் இந்தப்போராட்டத்தில் ஒரு மானுடப்போராகிவிட்டது. ஒரு போராட்டம் வரலாற்றில் எப்போதும் அழியாது இருக்கவேண்டும். அப்போதுதான் அது தர்மப்போர். மனித உணர்வுகள் நசுங்கும்போது விடுதலை வேண்டி எழும் போராட்டமாக இருக்கும். எமது தமிழ் மக்களின் போர் அந்த வகையானதுதான். இந்தப்போர் பல வழிகளில் நிகழ்ந்து வந்துள்ளது. அகிம்சை வழியிலானது, ஆயுதம் ஏந்திய போர்வழியிலானது, எழுத்து வடிவிலானது எனப் பல்வேறு பரிமாணங்களில் இது நிகழ்ந்து வந்துள்ளது.
ஈழப்போர் மானுட விடுதலைக்கான போர். இந்தக் கட்டுக்கோப்பிலிருந்து விடுபடக்கூடாது.
தமிழ் மரபில் இதுவரை இல்லாத புதிய இலக்கியங்கள் கடந்த இருபத்தைந்து வருட காலமாக ஈழத்தில் எழுந்துகொண்டிருக்கின்றன. அனுபவங்களின் ஆழத்தை, உறவுகளின் மென்மையை, சோகத்தை தெளிவாக வெளிப்படுத்துபவை காத்திரமான இலக்கியங்களே! இலக்கியங்கள் மொழி கடந்தாலும் மதிப்பிறக்கம் அடைவதில்லை. தமிழர் உரிமைப்போரின் அதிர்வுகள் கலை இலக்கியங்களில் தக்க சான்றுகளாக வெளிப்படுத்தப்படவேண்டும்.
இன்று தமிழ் ஊடகங்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு உள்ளது. அதாவது இந்தப்போராட்டம் மானுட விடுதலையின் அடிப்படையில் வருவது என்பது பற்றிச் சொல்லும் அந்த மையக் கருத்தை மக்களிடையே கொண்டுசெல்வதும், மக்களிடையே பேணுவதும் மிக முக்கியமான ஒரு விடயமாகும்" பேராசிரியரின் இக்கருத்து இன்றைய சூழலில் மிக முக்கியமானது. 1974இல் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இதே வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது நடந்த அராஜகங்கள், மனித உயிரழிவுகள் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தது. இப்போது 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே மண்டபத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் படைப்பாளிகளை மனித விடுதலைக்காக பேனா ஏந்தும் தேவையினை மிக அழுத்தமாக
உணர்த்தியுள்ளது. a aS
S

Page 4
அவனும் நானும்
எஸ்.செல்வகுமார் திருகோணமலை
அலாரம் அடித்து ஓய்ந்தபோது எனக்குப் புரிந்துபோனது, இப்பொழுது மணி அதிகாலை நான்கு என்பது. அப்பப்பா. இது சுமார் முப்பது வருடப் பழக்கமாயிற்றே?
இனி இந்த நேரத்திலிருந்து இந்த வீட்டில் வாழும் எல்லோருமே இயந்திரங்கள்தான்.
படுக்கையைவிட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழவேண்டும். குளிர்ந்த கிணற்றுநீரில் தலைக்குத் தோய்ந்து, பூஜை அறைக்குள் நுழைந் தால் எங்களுர் முருகன் கோயில் தோற்றதுபோங்கள். அத்தனை அமர்க் களமாய் சுவாமிக்குப் பூஜை நடக்கும். வெள்ளி, செவ்வாயானால் இன்னும் ஒருபடி விசேடமாய் நடக்கும். கந்த சஷ்டி கவசம் ஊர்முழுக்கக் கேட்கும் படி பெரிய சத்தமாகப் போடுவார்கள். இன்றும் வெள்ளிக்கிழமை. "சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டர்க்குதவும் செங்கதிர்வேலோன் பாதமிரண்டில் பன்மணிச்சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட."
ஆரம்பத்தில் எனக்கு இந்தச் சாத்திர, சம்பிரதாயங்கள் மனதில் ஒட்டவில்லைத்தான். ஆனால் போகப் போகப் பழக்கமாயிற்று. முப்பது வருஷமாச்சே?
இப்போ எல்லாம் இந்த ஆர
வாரங்கள் இல்லாமல் என்னால் இருக்கமுடிவதில்லை. இந்தச் சாத்திர, சம்பிரதாயங்கள் ரசிக்கத்தக்கவை தான். சில சமயங்களில் என்னை வீட்டில் விட்டுவிட்டு, அனைவருமே உறவுக்காரர் திருமணம், நண்பர் வீட்டில் சீமந்தம், மாமன் பெண்ணுக் குச் சடங்கு என்று செல்வதுண்டு. அந்தச் சமயங்களில்தான் இந்த ஆரவாரங்களின் அருமை தெரியும். ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.
எனக்குத் தெரியும், பூஜையை முடித்துவிட்டு அவன் இன்றும் நேராக என்னிடம்தான் வருவான். அவன்.
இந்த வீட்டின் கடைசிவாரிசு. பெயர் இளங்கோவன். நானும் அவன் வரவுக்காகத்தான் காத்துக்கிடப்பேன். எனது நிலைமை மிகவும் கவலைக் கிடமானது. எழுந்து. நடமாடி. எல்லோருடனும் கதைத்துப் பேசிச் சிரித்து மகிழ முடியவில்லையே என்ற கவலையிருந்தாலும் கூடவே,. ஒருவருக்கும் பாரமில்லாமல் ஒரு மூலையில் . துக் கி வைத்த இடத்தில். காலம் பூராவும் இருப்பதில் ஒரு நிம்மதி. ஆனாலும், ஒரே இடத்தில் அனாதரவாகக் கிடப்பத னால் அழுக்காகி விடுகிறேன். சுத்த மில்லாமல். பார்ப்பவர்களின் பார் வைக்கு அருவருப்பாக. சில சமயங் களில் உடம்பு கூசும். அந்த வேளை களிலெல்லாம். இளங்கோவன்தான் ஓடிவருவான். என்னைச் சுத்தப்படுத்து வான்.
இவன் இப்படி ஓடிவருவதெல் லாம் இப்போ கொஞ்சக்காலமாகத் தான். அதற்குமுன். எல்லோரையும் போலத்தான் இவனுக்கும் என்னைக் கண்டால் பிடிக்காது. வாயில் வந்தபடி எல்லாம் திட்டுவான். நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இவன்
 

எனக்குத் தொண்டு செய்ய நேரும் என்று. இவன் அன்பை நானும், என் அன்பை இவனும் பெற, ஈடுசெய்ய முடியாத ஒருவரை நீாங் களர் இருவருமே இழந்தோம். அவர். அவர் மணிகண்டசாஸ்திரிகள். இந்த நல்ல மனிதரை என் வாழ்நாளில் சந்திக் காமல் போயிருந்தால் என்றோ நான் அழிந்து போயிருப்பேன்.
அவரால் தான் நான் இந்த வீட்டினுள் நுழைந்து, எனக்கென்று ஒரு இடத்தைப் பிடிக்கமுடிந்தது. அவர் உயிருடன் இருக்கும்போதே, சரியாக என்னைப் புரிந்துகொள்ளாத அவர் மக்களும், மருமக்களும், பேரன், பேர்த்திகளும் என்மனம் நோகும்படி தானி பேசுவார்கள் . அநீதச் சமயங்களிலெல்லாம் மணிகண்ட சாஸ்திரிகளின் இதமான அரவணைப் பொன்றுதான் எனக்கு ஆறுதல்தரும்
அருமருந்து.
*அபிராமி எவர் உன்னை வெறுத்தாலும், நான் உன்னைக்
கைவிடமாட்டேன். நான் இருக்கும் வரைக்கும் இந்த வீட்டில் உனக்கும் இடம் இருக்கும்." என்று அடிக்கடி ஆறுதல் சொல்லுவார்.
இவருடைய இளைய மகன்
இளங்கோவன் தன் தந்தையின் அளவு
கடந்த பாசத்தைப் புரிந்து கொள்ளா தவன். என்னை எப்படி அவனுக்கும் புரியப்போகிறது? எப்பொழுதும் அவன் என்னைக் கரிசனை இல்லாமல்தான் பார்ப்பான்.
எவன் வந்து கேட்டாலும், மணி கண்ட சாஸ்திரிகளிடம் கேளாமலும் என்னுடைய சம்மதம் இல்லாமலும், ஒரு விலைமகளைப் போல் எண்ணி, என்னைத் தூக்கித் தந்து விடுவான். அப்படியான சமயங்களிலெல்லாம் நான் அனுபவிக்கும் வேதனைகள்
வெளியே சொல்லமுடியாதவை மணிகண்ட சாஸ்திரிகள் ஒருவருக்கு மட்டுமே நான் சொந்தமாக இருப் பதையே விரும்பினேன். பாவியான எனக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை. நினைத்து நினைத்து உள்ளுக்குள் வருநீததி தான் முடிகிறது.
இதையெல்லாம் பொறுக்க மாட்டாமல் மணிகண்ட சாஸ்திரிகள் ஒரு நாள் புலம்பினார்.
*அபிராமி. என் சொத்து. யாருக்கும் தரமாட்டேன். இளங்கோ. டேய் நீ என் பிள்ளையாடா? எனக் கென்று வந்து பிறந்திருக்கிறியே? எந்த ஜென்மனத்தில செய்த பாவமோ?. இந்த ஜென்மத்தில. இந்த வீட்டில கிடந்து அனுபவிக்கிறேன். எல்லாருக் கும் சொல்றன் கடைசியாக. என் அனுமதி இல்லாமல் யாருடைய விரல் நகமும் எண் அபிராமி மேல படக்கூடாது. அக்கறை இல்லாத வங்க அந்த அறைக்குள் இனிப் போகவேணாம்.
"நீங்களும் உங்களுடைய அபிராமியும் எக்கேடாவது கெட்டுப் போங்கள்." என்று ஆத்திரத்தோடு பதிலளித்துவிட்டு இளங்கோ எரிச்சலுடன் என்னைப் பார்த்தது எனக்குக் கவலையாக இருந்தது.
நான் மணிகண்டசாஸ்திரி களின் மறைவுக்குமுன், இந்த விட்டில் நடந்து முடிந்த பழைய சம்பவங்களை அசை போட ஆரம்பித்தேன். "இளங்கோ.” "இல் லணி னா. பக்கத் து வீட்டுக்கு எங்காவது போயிருக் கானா?
"அம்மா. கல்யாணத்துக்குப் போயிருக்கா. அம்மாவோட. அணிணியும் அக் காளும் கூடப்

Page 5
போயிருக்காங்க."
“என்ன திமிர் அவளுக்கு? நான் போகப்படாதுன்னு. எவ்வளவோ சொல்லியும் கேளாமல் போயப் விட்டார்களா எல்லோரும்? அவளோட அண்ணனாயிருக்கலாம். அன்றைக்கு வசதி வந்த திமிர்ல. தூக்கி எறிஞ்சி பேசினானே..? என்னை மதிக்காதவன் வீட்டு வாசலை இவளும் மிதிக்கப் படாது. அதுதான் பெண்டாட்டிக்கு அழகு."
"அப்பா. புரியாமப் பேசாதீங்க அப்பா. எண்ணைக்கோ நடந்த சின்னப் பிரச்சனையை ஏன் இன்னும் பாராட்டுறிங் கன்னு புரியலை. ஆயிரந்தானிருந்தாலும் சொந்தம் விட்டுப் போகுமாப்பா? அதுதான் மாமாவே நேர்ல வந்து மன்னிப்புக் கேட்டிட்டு பத்திரிகை வைச்சாரே?" “டேயப் பேசறதெல்லாம் பேசிட்டு மன்னிப்புக் கேட்டிட்டா எல்லாம் சரியாயிடுமா? கல்லால அடிச்ச காயம் ஆறிடும்டா. ஆறாதடா. ஆறாது. இப்ப உனக்கு இது புரியாது. நீ என் இடத்தில் இருந்து கத்தது சரியா? தப்பான்னு." "அப்பா. நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்."
ஈஸிசேரில் சாய்ந்து அமர்ந் திருந்த மணிகண்ட சாஸ்திரிகள் என்னைப் பார்த்தார். விரித்துப் போடப் பட்டிருந்த அன்றைய வீரகேசரிப் பத்திரிகை அவர் மடியின் மீது கிடந்தது.
"அப்பா. நான் நம் ம வீட்டுக்குப் பின்னால இருக்கிற பழைய வீட்டை வித்துடலாம்னு இருக்கேன்." "தோலை உரிச்சிப் போடுவன் ராஸ்கல். அது உன் தாத்தா கட்டின வீடு. அவர் உயிரோட இல்ல. அந்த வீடுதான் அவரை நினைவுபடுத்திட்டு
சொல்லால அடிச்சா
இருக்கு. என்ன தைரியம் இருந்தா அதை விப்பேன்னு சொல்லுவே.?” "பணம் தேவைப்பா. இருந்த படிப்பையெல்லாம் படிச்சி முடிச்சிட் டேன். ஆனா என்ன புண்ணியம்? வேலையா கிடைச்சுது? அதான் அந்த வீட்டை வித்துக் கிடைக்கிற பணத்தில் "பிஸ்னஸ் ஏதும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்."
"இளங்கோ. இதோ பார். பிற் காலத்தில இநீத வீட்டை வைச்சிருப்பியோ அல்லது வித்துத் தொலைப்பியோ எனக்குத் தெரியாது. ஆனா. எங்க அப்பா வாழ்ந்த. அதான் உங்க தாத்தா வாழ்ந்த வீட்டை விற்க, ஒருக்காலும் நான் சம்மதிக்கமாட்டன். படிச்சும் வேலை இல்லைன்னா என்ன? நம்ம நிலம் இருக்கே. இறங்கி வேலை செய்.” இளங்கோ வண் அவரை ஆத்திரத்துடன் பார்த்தான்.
"அம்மா!. நான் கொஞ்சம் ‘லை.ப்ரறி வரைக்கும் போயிட்டு வந்திடறேன்." இளங்கோ அம்மாமுன் வந்து நின்றான்.
"இளங்கோ. உங்கப்பாக்கிட்ட சொல் லிட்டுப் போடா. அந்த மனுஷன் படற வேதனை உனக்குப் புரியாது. சொல்லிட்டுப் போடா..."
"அவர் அபிராமிகூட இருக்கார். நான் போக்லை. நீயே சொல்லிக்க, வர வர அந்த மனுஷனால எல்லா ரோட சுதந்திரமும் பாதிக்கப்படுது. நாங்களும் தலைக்குமேல வளர்ந் தாச்சி. வெளியில கிளம்பினா ஆயிரம் வேலையிருக்கும். வர்றத்துக்குக் கொஞ்சம் முன்ன. பின்ன ஆனா என்னவாம். சாப்பிட்டு நிம்மதியாத் தூங்க வேண்டியதுதானே? அவருக்கு எங்க சுதந்திரத்திலையும், எதிர்காலத் திலையுந்தான் அக்கறை இல்லை.

உன்மேலயாவது அக்கறையா இருக் கிறாரா என்ன? எப்பபார்த்தாலும். அபிராமி கூடவே."
"ஆமாம் மா. இளங்கோ சொல்றது ரொம்பக் கரெக்ட்'. இந்த மனுஷன் எல்லாரையும் பழமைக்கு இழுத்துண்டுபோறார். காலையில் நாலுமணிக்கு எந்திரிக்கணும். குளிக் கணும். சாமி அறையில் விடியிற வரைக்கும் அவர் பண்ற பூஜையில் கலந்துக்கணும். என்னம்மா இதெல் லாம்? அப்பா பண்ற த்ொல்லை தாங்கலை. இது இருபத்தியோராம் நூற்றாண்டென்று அவருக்கு ஏன் புரியலை? ஆசையா ஒரு ட்றெஸ் போடவிடுறாரா? சதா. சாரியே கட்றதுக்கு நான் என்ன கிழவியா அம்மா? வீட் ல இருக்கிற ஒரு சாமானைத் தொட முடியல்ல. குடை யை எடுத்தா அதை அவர் மட்டும்தான் பாவிக்கனுமாம், வீட்டுக்கு ஒரு 'ப்ரெண்ட்' வந்தா சத்தமா பேசக்கூடச் சுதந்திரமில்ல. றேடியோல ஒரு பாட்டுக் கேட்க முடியாது. ஒரு புத்தகத்தை வாசிக்க யாருக்கும் கொடுக் க முடியலை. அதைத் தொடாத. இதைத் தொடாதன்னு." அவள் தலையில் அடித்துக்கொண் LTsñ.
"நம்ம. பழைய வீட்டை வித் திட்டு. வியாபாரம் பண்ணலாம்னு கேட்டேன். திட்டியே தீர்த்திட்டார். எங்களுக்கென்ன பணங்காசா சேர்த்து வைச்சிருக்காரு?. இத்தனை படிச்ச பின்னாடி வயல்ல இறங்கி வேலை செய்ய முடியுமா என்ன? ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் பாரேன். நான் அந்த வீட்டை விக்கத்தான் போறேன்.
அவர் பழமை. பழமை. என்று ஒழியட்டும்."
“டேயப். இளங்கோ. அக்
காளும் தம்பியுமா என்ன பேச்சடா பேசுறீங்க?"
*பின்னே. ஒரு நாள். திடீரென அம்மா தலையடித்துக் கொண்டு அழுதாள். எல்லோரும் அப்பாவின் அறைக்குள் ஒடிச்சென்று பார்க்க ஈஸிசேரில் சாய்ந்தபடி அப்பா. மணிகண்டசாஸ்திரிகள் இறுதித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் திறந்த மார்பின் மீது கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு புத்தகம். அவருக்கு அருகே இருந்த சின்ன ஸ்டுலின் மீது ஒரு கடிதம். இறுதிக் கடிதம். இளங்கோ வேதனையோடு அதை எடுத்துப் படித்தான்.
‘என் உயிரினும் மேலான மனைவி, மக்களுக்கு, என்னைப் பாடாய்ப்படுத்தும் இந்த நெஞ்சுவலி இன்று அளவுக்கதிகமாகவே வேதனை தருகிறது. எனக் குத் தெரியும். இன்றுடன் என் விதி முடியப்போகிற தென்று. ஒருவருக்கும் தொந்தரவு தராமல் போய்ச் சேரவே விரும்பு கிறேன். எனக்காக யாரும் அழவேண் டாம். பிறந்த யாவருமே ஒரு நாள் சாகத்தானே வேண்டும்?
என் இனிய குழந்தைகளே! இந்த அப்பா சாகும் வரையிலும், ஏன் இந்த அப்பாவைப் புரிந்து கொள்ளத் தவறினீர்கள்? நான் உங்கள் மீது காட்டிய பாசம் ஏன் உங்களுக்குப் புரியவில்லை? உங்கள் நன்மைக் காகத்தானே எல்லாம் செய்தேன். என் குழந்தைகளே! நான் உங்கள்மீது கொண்ட பிரியம் உங்களுக்குப் புரியா மல் போனாலும் அந்தக் கடவுளுக்குப் புரியும். நான் உங்களுக்குச் சொல்லி வைத்த சாஸ்திர, சம்பிரதாயங்கள், வேதங்கள், ஆகமங்கள், தேவார, திருவாசகங்கள், சுலோகங்கள்,
என்னம்மா..?”

Page 6
கிரியைகள் எல்லாமே "இறைவன்" என்ற பரம்பொருளின் மகிமையை உங்களுக்குப் புரிய வைப்பதற்காகத் தான். அந்தப் பரம்பொருளை நீங்கள் பற்றிநின்றால் தானே நீங்கள் பக்குவப்படுவீர்கள்? பழமைவாதி யென்று என்னைப் பரிகசித்தீர்கள். பழமையில்தானே பெருமையிருக் கிறது? பழமையில்தானே அமைதி யிருக்கிறது. இன்றைய நாகரீக உலகத்திலே நீங்கள் சிக்கி, அமைதி யைத் தொலைத்துவிட்டு அதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
இளங்கோ. உன் அப்பாவின் நேர்மையையும், கடின உழைப் பையும், பண்பான. ஒழுக்கமான நடத்தையையும் கருத்தில் கொண்டு நான் வேலை பார்த்த அலுவலகத்தில் உனக்கு ஒரு நல்ல உத்தியோகம் தர முடிவு செய்திருக்கிறார்கள். என் செல்வங்களே! நான் உங்களுக்குச் சொத்துக்களைச் சேர்த்து வைக்க வில்லை. ஆனாலும் உங்களிடம் நல்ல பண்புகளையும் பழக்கவழக்கங் களையும் சேர்த்து வைத்துவிட்டுத் தான் போகிறேன். அவை உங்களுக்கு மேன்மையைத் தரும். இளங்கோ என் மறைவிற்குப் பிறகு நீ எதை வேண்டு மானாலும் செய், வீட்டை விற்பது உட்பட. வேறு என்ன? போகிறேன்.
இப்படிக்கு, உங்கள் அன்புள்ள அப்பா மணிகண்ட சாஸ்திரிகள. இளங்கோவின் கையிலிருந்த கடிதம் கைநழுவியது. கண்ணிர் மடை
திறந்த வெள்ளமாய். அவன் அழ ஆரம்பித்தான்.
"அப்பா. அப்பா. என்னை
மன்னிச்சிருங்க அப்பா. உங்களைப் புரிஞ் சிக்காத இந்தப் பாவிய மன்னிச்சிடுங்கப்பா. நா. நான்
O
வீட்டை விற்கமாட்டேன், ஒருக்காலும் விற்கமாட்டேன். உயிரோட நீங்க இருக்கிறப்போ. நான் ஒரு நல்ல மகனா நடந்துக்கலை. இனியும் நான் அப்படி நடக்கலைன்னா. நான் ஒரு மனுஷனே இல்லப்பா."
என்று அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுத அவன், வேதனை தாளாமல் அழுதுகொண்டிருந்த தன் உடன் பிறப்புகளைப் பார்த்துச் சொன்னான்.
"எல்லாருக்கும் சொல்றன். அப்பா சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் யாரும் தொடக்கூடாது. அவையெல்லாம் நினைவுச்சின்னங் கள் . ரொம் பப் புனிதமாகப் பாதுகாக்கணும். இனிமேலும் இந்த வீட்டில், அப்பா உயிரோடு இருந்த போது நடந்தமாதிரி எல்லாக் காரியங் களும் தொடர்ந்து நடக்கும்."
கதறிக் கண்ணிர் சிந்தியபடியே தன் தந்தையின் மார்பின்மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து ஆசையோடும் பாசத்தோடும் வருடி னான்.
அந்த வருடலில் அவன் தன் தந்தையின் தூய பரிவையும் , பாசத்தையும் உணர்ந்தான்.
நான் பழைய சம்பவங்களி லிருந்து விடுபட்டேன்.
இளங்கோவன் நடந்துவரும் காலடியோசை எனக்குத் துல்லித மாகக் கேட்டது. அவன் என்னருகில் வந்து என்னைப் பாசத்தோடு பார்த் தான். தொட்டுத்துக்கி ஆசையோடு வருடினான். மார்போடு அணைத்தான். "அபிராமி அந்தாதி” என்று வாஞ்சை யோடு என் பெயரை முணுமுணுத் தான். அப்பாவின் ஈஸிசேரில் அமர்ந்து தாபத்தோடு என்னைத் திறந்தான்.
(முற்றும்)

எழுதத் தூண்டும் எண்ணங்கள்
(கலாநிதி தரை.மனோகரன்)
பெருமை பெறும் பேராசிரியர்.
பல்கலைக்கழகங்களிற் பல்வேறு கல்விமான் கள் பணியாற்றி வருகின்றனர். ஆயினும் அவர்களுள் ஒருசிலரே கடுமையாக உட்ழைத்து, ஆக்கபூர்வமான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய ஒருசிலருள் ஒருவராகத் தமது ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்தோங்கி நிற்பவர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள். இலங்கையின் மிகச்சிறந்த வரலாற்றுப் பேராசரியர்களுள் ஒருவராக அவர் திகழ் கிறார். இயல்பாகவே ஒயாது உழைக்கும் திறன் கொண்ட பேராசிரியர் பல தரமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அவரது The kingdom ofJaffna (1978), யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு நூலாக விளங்குகின்றது. வன்னியர் (1970) என்ற நூல், வன்னியரின் தோற்றம் பற்றியும், தென்னகத்து வன்னிமைகள் பற்றியும், ஈழத்து வன்னிமைகள் பற்றியும் ஆய்வுபூர்வமானதாக எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் இந்து கலாசாரம்(2000) என்ற பிறிதொரு நூலில், இலங்கையில் அநுராதபுரக் காலத்திலும், சோழராட்சிக் காலத்திலும், பொலநறுவைக் காலத்திலும் இந்துக் கலாசாரத்தின் வளர்ச்சி பற்றிய பல்வேறு விடயங்கள் ஆய்வு பூர்வமாக நோக்கப்பட்டுள்ளன. இறுதியாக வெளிவந்த இலங்கைத் தமிழர் தேசவழமை களும் சமூக வழமைகளும் (2001) என்னும் நூல், தேசவழமைச் சட்டம், புத்தளம் - கற்பிட்டி வழமைகள், திருகோணமலைத் தமிழரின் வழமைகள், முக்குவர், இஸ்லாமியர் ஆகியோரின் சட்டங்கள் பற்றியும், பரதவர் சாதிவழமை பற்றியும் விசாலமான ஆய்வுப்பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. இவற்றோடு, பேராசிரியர் பொ.பூலோகசிங்கத்துக்குப் பின்னர், இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இந்துக் கலைக்களஞ்சியத்தின் பிரதம பதிப்பாசிரியராகவும் பத்மநாதன் பணிபுரிந்து வந்துள்ளார். யாழ்ப்பாண மன்னர்கள் காலத்தில் (ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்) தோன்றிய தசஷிண கைலாச புராணம் என்ற நூலை 1995இல் இரு பகுதிகளாக வெளிக்கொணர் வதில் அவர் அரும்பாடுபட்டுள்ளார். இந்நூலுக்கு அவர் வெளியீட்டுரை என்ற தலைப்பில் எழுதிய ஆராய்ச்சி முன்னுரை குறிப்பிடத்தக்கதாகும். இந்துசமய பண்பாட்டுத் திணைக்களம் மூலமாக வெளிவந்துகொண்டிருக்கும் பல்வேறு தரமான நூல்களினதும் பின்னணியில் பேராசிரியர் பத்மநாதன் இருக்கின்றார் என்பதும் மகிழ்ச்சியோடு குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.
வரலாற்று ஆய்வுகளிற் தமது பொழுதைச் செலவிடுகின்ற பேராசிரியர் பத்மநாதன், பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுவைபட வரலாற்றைப்
1.

Page 7
போதிப்பதிலும் திறமை மிகுந்தவர். பல்கலைக்கழகத்தில் எனது ஆசிரியராகவும் அவர் விளங்கியுள்ளார். அவரது இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூல், 2001இல் வெளிவந்த சிறந்த ஆய்வுநூலுக்கான இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுள்ளது. யாழ். இலக்கியப் பேரவையின் ‘சம்பந்தன் விருது இவ்வாண்டில் (2002) பேராசிரியர் பத்மநாதனுக்கு வழங்கப்படுவதும் பெருமைக்குரியது. பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் பணிகள் மென்மேலும் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தேவை. அவரின் பணிகளே அவரை அணிசெய்கின்றன.
ஒரு சின்னத் தேவதை
இலங்கையின் மிகச்சிறந்த குழந்தை நட்சத்திரங்களுள் ஒருவராக விளங்குபவர், சரோஜா, புஞ்சி சுரங்கனாவி (சின்னத்தேவதை) ஆகிய இரு சிங்களத் திரைப்படங்களில் நடித்த நித்தியவாணி கந்தசாமி ஆவர். சரோஜா திரைப்படத்தில் தம்முடன் இணைந்து நடித்த மற்றைய குழந்தை நட்சத்திரத்துடன் சேர்ந்து, அத்திரைப்படத்தைப் பார்த்தோரின் கண்களைக் கசியச்செய்த நித்தியவாணி, புஞ்சி சுரங்கனாவி திரைப்படத்தில் இன்னொரு குழந்தை நட்சத்திரத்தோடு இணைந்து, நடிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். அந்தச் சிறுவனுக்கு "அப்பிள் அப்பிள்” என்று உச்சரிப்பைச் சொல்லிக்கொடுக்கும் கட்டம் உட்பட, ஒவ்வொரு கட்டத்திலும் பத்துவயதான நித்தியவாணி, தாம் ஒரு சிறந்த குட்டி நடிகை என்பதை நிருபித்துவிடுகிறார்.
சரோஜா திரைப்படத்தில் சிறந்த நடிப்புக்கான விருதை பெற்றவர், அவர். புஞ்சி சுரங்கனாவி திரைப்படத்தில் சிறந்த நடிப்புக்கான விருதை, ஈரானில் இடம்பெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் அவர் பெற்றுள்ளார். புஞ்சி சுரங்கணாவி எகிப்தில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்படவுள்ளது.
சர்வதேச புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமாக மின்னத் தொடங்கியுள்ள நித்தியவாணி, தமது கல்விக்குப் பாதிப்பு ஏற்படாத முறையில் கலைத்துறையில் ஒளிவீச வாழ்த்துகிறோம்.
"நடந்தாய் வாழி காவேரி"
"உழவ ரோதை மத கோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி" என்று க்ாவிரி நதியின் பெருமை சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் ஊற்றெடுத்து, தமிழ்நாட்டின் வழியாக கடலிற் சங்கமிக்கும் இந்த நதியின் பெருமை பல்வேறு இலக்கியங்களிலும், புராணக்கதைகளிலும் இடம்பெற்றுள்ளது. இப்போதோ, காவிரியின் பெருமை பேசப்படுவதற்குப் பதிலாக, அந்நதி தொடர்பாகச் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் பெரியளவில் எழுந்துள்ளன. அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்துக்கும், திரைப்பட நடிகர்களின் நடிப்புத்திறனுக்கும் காவிரி போதிய வாய்ப்பளித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை
2

இருப்பதுபோல, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர்ப் பிரச்சினை இருக்கிறது. இப்பிரச்சினையில், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்குப் பணிவாகக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி; துணிச்சலாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார், ஜெயலலிதா. பல விடயங்களில் ஜெயலலிதா மீது எனக்கு விமர்சனம் இருந்தபோதிலும், காவிரி நீர்ப்பிரச்சினை விடயத்தில் ஜெயலலிதாவின் முயற்சிகள் பாராட்டத்தக்கன. இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை துச்சமாக மதித்தும், காவிரி நீர் ஆணையத்தின் முடிவைப் புறக்கணித்தும் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா (பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலும்) வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவர். நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காத ஒருவர் முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பது இந்தியாவின் அரசியல் நாகரிகத்துக்கு (அப்படியொன்று இருந்தால்) ஒரு சாபக்கேடு. இதனைத் தட்டிக்கேட்கும் திராணியிருந்தும், எதிலும் நழுவல் போக்கைக் கையாளும் இந்திய மத்திய அரசும் ஏனோதானோ என்ற ரீதியில் நடந்துகொள்கிறது. நதிகளை தேசியமயமாக்குவது ஒன்றே இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழி.
காவிரிநதிநீர்ப் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகளின் வேடிக்கை விநோதங்கள் ஒருபுறமிருக்க, திரைப்பட நடிகர்களின் கோமாளித்தனம் வேறோரு வகையாக இருக்கிறது. சும்மா கிட்ந்த சங்கை ஊதிக்கெடுப்பதுபோல, கன்னடத் திரைப்பட நடிகர் ராஜ்குமார், தேவையின்றி கன்னடநடிகர் நடிகைகளைத் திரட்டி, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிடக்கூடாது என ஊர்வலம் நடத்தினார். தமிழக நடிகர் நடிகைகளும் நடிகர் விஜயகாந்த் தலைமையில் நெய்வேலியில் ஊர்வலம் நடத்தி, ஆளுக்கொருவிதமாக எதையெதையோ பேசி, கண்டனங்களையும், மறுப்புகளையும் வெளியிட்டு, ஓய்ந்துபோய் இருக்கிறார்கள்.
இவற்றுக்கு மத்தியில், தமிழ்நாட்டுப் பாமரச் சிந்தனையின் விளைவாக *சுப்பர் ஸ்ரார் ஆகிவிட்ட திருவாளர் ரஜனிகாந்த், தமது முழு நடிப்புத்திறனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். நடிகர் ராஜ்குமார், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடக்கூடாது என்று கர்நாடகத்தில் ஊர்வலம் நடத்தியபோது, அதனைக் கண்டிக்க விரும்பாத "பெருமனம்" படைத்த ரஜனிகாந்த், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிடவேண்டும் என்று தமிழ்நாட்டுத் திரையுலகத்தினர் போராட்டம் நிகழ்த்த முனைந்தபோது மட்டும், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்தார். அவருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழுந்தபோது ஓர் உண்ணாவிரத நாடகத்தையும் நடத்துமுடித்து இழந்த செல்வாக்கைச் சரிசெய்துகொண்டார். அது மாத்திரமின்றி இந்திய நதிகளை இணைப்பதற்காக ஒரு கோடி ரூபா வழங்கப்போவதாகவும் தெரிவித்தார். (குடிகாரன் மட்டுமல்ல) நடிகனின் பேச்சும் விடிஞ்சால் போச்சு என்பதை உணராத அவரது ரசிகப் பெருமக்களும் மீண்டும் அவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக ரஜனிகாந்த் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
c o
13

Page 8
கனடாப் பயணக் கட்டுரை பேராசிரியர் அ.சிவராஜா
அரசியல் விஞ்ஞானத் துறை பேராதனைய் பல்கலைக்கழகம்
(1)அறிமுகம்
2002ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 2002ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை சுமார் இரண்டரை மாதம் வரை கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தின் தலைநகரமான ரொரன்ரோ மாநகரில் குறிப்பாக இலங்கைத்தமிழர்கள் அடர்த்தியாக வாழும் ஸ்காபரோ நகரில் தங்கி நிற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அக்காலப்பகுதியில் நான் கண்ட அனுபவித்த காட்சிகளை அனுபவங்களை ஞானம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இக்கட்டுரையை எழுதுகிறேன். (II) ஸ்காபரோ நகரில் நான் கண்டவையும் பார்த்து இரசித்தவையும் கேட்டவையும்
ஸ்காபரோ நகரிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் உதாரணம்: றிச்மண்ட் நகர், மிசிசாக்கா நகர், மொன்றியோல் நகர் என்பவற்றில் பல இந்துக்கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் இந்து ஆசாரப்படி முறையாகப் பூசைகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. எனக்கு மே மாதம் 21ம் திகதியே நிச்மண்ட் நகரின் விநாயகர் கோயில் தேர்த்திருவிழாவில் கலந்து விநாயகப் பெருமானைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அங்கு ரொரன்றோ வின் பல பகுதிகளிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான இந்து/சைவ தமிழ் அடியார்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர். இவ்வடியார்கள் காவடி, முள்ளுக்காவடி, பெண்கள் அடியளித்தல் போன்று தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதைக் காணமுடிந்தது. இவை மேளதாளத்துடனும் தேவார இசைப் பாராயணத்துடனும் இடம்பெற்றன. விநாயகரின் தேரைப் பெண்கள் உட்பட அடியார்கள் இழுத்து வீதி வலம் வந்தபோது எனக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவும் கண்டி செல்வவிநாயகர் கோயில் திருவிழாவும் மனக்கண்முன் வந்தன. உண்மையில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் ஆகாயப்படை கெலிக்கொப்ரர்கள் கோயில் வீதிகள் மீது பூமாரி பொழிந்தன. மேலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குழந்தைகளும் பெரியவர்களும் இதிற் கலந்து கொண்டபோதும் மிகவும் ஒழுங்கான முறையில் திருவிழா நடந்து முடிந்தமை என்னை மிகவும் கவர்ந்தது. தேர்த்திருவிழாவின் பின் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேற்சொன்ன தேர்த்திருவிழா முடிந்து ஒரு வார காலத்திற்குள் ஸ்காபரோ நகரில் அமைக்கவிருக்கும் ஐயப்பன் கோயிலைக் கட்டுவதற்கான அத்திவாரம் இடும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. பல்லாயிரக் கணக்கான கனேடிய டாலர்களைச் செலவளித்து சாஸ்திர முறைப்படி கட்ட 14

இருக்கும் இவ்விழா மிகவும் கோலாகலமாகவும் பக்தி பரவசத்துடனும் இடம்பெற்றது.
இவ்விழாவிலும் இடம்பெற்ற கர்நாடக இசைக் கச்சேரியையும் கேட்கமுடிந்தது. மேலும் ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த இன்னிசைக்குழுவினர் வழங்கிய கச்சேரியிலும் கலந்துகொண்டு தமிழிசையை அனுபவிக்கமுடிந்தது. இவ்விரு கோயில்களிலும் பல இலங்கைத் தமிழ் நண்பர்களை, சுற்றத்தவர்களை, மாணவர்களைக்கண்டு அளவளாவ முடிந்தது. மேலும் ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் கோயிலுக்கும் கனடா கந்தசுவாமி கோயிலுக்கும் அடிக்கடி சென்று வழிபடும் வாய்ப்பும் கிடைத்தது. (III) ஸ்காபரோ நகரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்
ஸ்காபரோ நகரில் தமிழில் மட்டும் ஒளிபரப்பும் TVI. ரீ.வி.ஐ. என்னும் தமிழ்ச் சனல் நிலையம் என்னை அழைத்துப் பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ்.யெயராயுடன் இலங்கையின் சமாதான வழிமுறைபற்றி பேட்டி கண்டது. இவ் ஒளிபரப்பு ஐரோப்பிய ஸ்கன்டிநேவிய நாடுகளிலும், வடஅமெரிக்கா முழுவதற்கானதுமாகும். இப்பேட்டி நடந்து கொண்டிருந்தபோதும் அதனைத் தொடர்ந்தும் கனடாவில் வாழும் எனது நண்பர்கள், மாணவர்கள், உறவினர்கள், ஊரவர்கள் எல்லோரும் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு என்னைத் தம் இருப்பிடங்களுக்கும் உணவுவிடுதிகளுக்கும் அழைத்து விருந்து வழங்கி பேசி மகிழ்ந்தனர்.
அடுத்துக் கனடாவில் இருபத்து நாலு மணிநேரம் சேவையாற்றும் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னை அழைத்து முதலில் "இலங்கையில் சமாதான முயற்சிகளின் தற்போதைய நிலை” பற்றியும் பின்னர் "இலங்கை - அமெரிக்க தொடர்புகளும் திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும்” என இருபேட்டிகளை நடத்தினர். இப்பேட்டிகள் நடந்துமுடிந்தவுடன் ஸ்காபரோ நகரில் இருந்த நண்பர்கள், மாணவர்கள், உறவினர்கள், ஊரவர்கள் மாத்திரமல்ல கனடா முழுவதிலுமுள்ள நண்பர்கள், மாணவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலன் விசாரித்து அளவளாவினர்.
ரொரன்றோ நகரில் நான் அவதானித்த இன்னொரு வியப்பான விடயம், அங்கு தமிழ்ப் பத்திரிகைகளை அச்சிட்டு இலவசமாக வழங்குவதாகும். உதாரணமாக உதயன், முழக்கம், நம்நாடு என்பன வெள்ளிக்கிழமைகளில் அங்குள்ள தமிழ் வர்த்தக நிலையங்களில் இலவசமாகக் கிடைக்கின்றன. மேலும் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பல்வேறு தேவை களையும் மிக இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘தமிழன் வழிகாட்டி என்ற நூல் ஒவ்வொரு வருடமுய வெளியிடப்பட்டு வருகிறது. கனடாவில் அரசியல் அந்தஸ்து பெறுவது, அகதி அனுமதிப்பத்திரம் பெறுவது, மற்றும் வைத்திய, சமூக சேவைத்தொடர்புகள் பற்றிய தகவல்களை இது திரட்டித் தருகிறது.
ஸ்காபரோ நகரில் இயங்கும் உயர் தொழில் புரிவோரின் அமைப்பு திரு பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் தலைமையில் என்னை அழைத்து "சமஷ்டி
5

Page 9
முறையும் கூட்டுச் சமஷ்டி முறையும் : ஒரு விளக்கம்" என்ற பொருளில் ஒரு சொற்பொழிவு நடத்துமாறு வேண்டிக்கொண்டது. அச்சொற்பொழிவின் பின்பு சுமார் ஒண்டரை மணிநேரம் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. இச்சொற்பொழிவிலும் கலந்துரையாடலிலும் சுமார் நூறு பேர் வரை உற்சாகமாகக் கலந்துகொண்டனர். அத்தோடு உலகத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்திய கலைவிழாவில் என்னை அழைத்து "தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்னும் பொருளில் உரையாற்றுமாறு வேண்டிக்கொண்டனர். அதில் சுமார் முந்நூறு பேர் கலந்து"ெண்டனர்.
மேலும் புலம்பெயர் இலககியம் என்பதன் கீழ் "இலங்கையின் மலையக இந்திய வம்சாவழித் தமிழர்களின் இலக்கியம்” என்பது பற்றியும் ஒரு விரிவுரை நடத்தும் வாய்ப்பும் கிட்டியது. இதில் உயர்கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ரொரன்றோ மாநகரில் உள்ள சிறு நகரங்களில் உள்ள பொது நூல்நிலையங்களில் தமிழ் நூல்கள், (சிறுகதை, நாவல், கவிதை) தமிழ்நாட்டு எழுத்தாளர்களினதும், இலங்கை எழுத்தாளர்களினதும் கிடைக்கின்றன. வீரகேசரியும் தமிழ்நாட்டின் பல சஞ்சிகைகளும் இங்கு கிடைக்கின்றன.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் அங்கு கல்வி கற்று நல்ல தொழில்களில் அமர்ந்திருப்பதோடு முறைசார் கல்வி கற்காதவர்களும் பல தொழிற்சாலைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரசாங்க உத்தியோகங்களிலும் வேலைபார்த்து சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அதாவது சொந்தமாக வீடு வாங்கி வாகனங்களின் சொந்தக்காரர்களாகவும் வர்த்தக நிலையச் சொந்தக்காரர்களாகவும் உள்ளனர்.
இவற்றுக்கு மத்தியிலும் இளந்தலைமுறையினர் தமிழ்க் கலாசாரத்தை பேணி நடப்பதும் தமது அடையாளத்தை விடாது காப்பதும் தமிழ்மொழியில் பேசி கல்விகற்பதும் மகிழ்ச்சிக்குரியதாகும். ஆனால் இத்தலைமுறை வேற்றுக் கலாசார தாக்கங்களுக்குட்பட்டு சீரழியாது இருக்கவேண்டும் என்பதுதான் பிரதானமானதாகும்.
“ஞானம்’ அதனை கண்டி தபால் நிலையத்N புதிய சந்தா விபரம் தில் மாற்றக்கூடியதாக அனுப்ப
வேண்டும்.
உள்நாடு தனிப்பிரதி Lunt 30/= அனுப்பவேண்டிய பெயர்,
SLS S S SSS SSL முகவரி;- 19* சநதா . TIGNANASEKARAN ೮un ೫೦- | 1917, PERADENIYA ROAD, ஆண்டுச் சந்தா ரூபா KANDY. சந்தா காசோலை மூலமாகவே மனியோடர் மூலமாகவோ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ வெளிநாடு அனுப்பலாம். ஆண்டுச் சந்தா 25 USS மனியோடர் அனுப்புபவர்கள் (தபால் செலவு உட்பட) محمدبر
 

முருகபூபதியின்
6 O 9 பறவைகள ஒர் அறிமுகமும் சில அவதானிப்புகளும்
புலோலியூர் க.சதாசிவம்
"ஈழத்து இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவரும் கடந்த முப்பது ஆண்டுகளாக சிறுகதையாக்கம், பத்தி எழுத்து, இலக்கிய ஆய்வு ஆகியவற்றுக்கு இடையறாது பங்களித்து வருபவரும் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழுபவருமான லெ.முருகபூபதியின் அண்மைக்கால அறுவடையாக, நாவல்துறையில் அவரது கன்னி முயற்சியாக "பறவைகள் எமக்குக் கிடைத்துள்ளது.
ஆக்க இலக்கியத்துறையில் மக்கள் விரும்பிப் படிக்கும் நாவல் என்ற இலக்கியவடிவத்தின் வெற்றிக்கும், பொதுமக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்படுவதற்கும் அடிப்படை கதையம்சமே என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. பறவைகளில் விதந்துரைக்கக்கூடிய கதையம்சம் இல்லை என்றாலும் அதன் கதை சுவாரஸ்யமானது. யாழ் மாவட்டத்தில் அரியாலை ஊரில் வாழ்ந்த தேவகி நாட்டின் நிலைமை காரணமாக தலைமைத் தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற மாமன் சிற்றம்பலத்துடன் நீர்கொழும்புக்கு இடம்பெயர்கிறாள். நோய்வாய்ப்பட்ட மாமனைக் கவனிக்கும் பொறுப்பையும் அபலையான அவள் சுமக்கிறார். தேவகி ஊரிலிருந்தபோது மாமன் சிற்றம்பலத்தின் மகன் குமாரைக் காதலித்தாள். ஆனால் மாமன் தன் மகனை சாதிப்பிறழ்வு வழிவந்த தேவகிக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பாது, திட்டமிட்டு அவனை அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர வைத்து வேறு ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். சிற்றம்பலத்தின் ஏனைய பிள்ளைகளும் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்கிறார்கள். வீட்டுச் செலவுக்குப் பணம் அனுப்புவதுடன் தொலைபேசி உறவும் தொடர்கிறது. அனாதை நிலைக்குத் தள்ளப்பட்டு மாமனுடன் தங்கி அவரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இக்கட்டத்தில் குமார் குடும்பத்துடன் தந்தையைப் பார்க்க வருகிறான். இதற்குமுன் ஜேர்மனியில் இருந்து பெண்ணிலைவாத சிந்தனையும் செயற்பாடும் கொண்டவளும் கணவனைப் பிரிந்து வாழும் சமூக நிலையில் உள்ளவளுமான சிற்றம்பலத்தின் மகள் சுமதி தந்தையைப் பார்க்க வந்துவிடுகிறாள். குமார் வந்து சில நாட்களுக்குள் சிற்றம்பலம் மாரடைப்பு வந்து இறந்துவிடுகிறார். யாருமே துணையற்ற நிலையில் இருக்கும் தேவகிக்கு வாக்குறுதிகள், நம்பிக்கை வார்த்தைகள் கூறிவிட்டு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் திரும்பிவிடுகிறார்கள். இதுதான் கதை. நாவலில் கதை நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்ததும் வாசகனிடம் ஒரு நிறைவற்ற உணர்வு தெரிகிறது. "தேவகியின் எதிர்காலத் தீர்வு கூறப்பட வில்லையே. நட்டாற்றில் விடப்பட்டுவிட்டாளே அவள். அப்பாத்திரத்தில் எமக்குப் பரிவு ஏற்படுகிறது. இயற்பண்பியலில் சித்திரித்துச் சமுதாயத்தின் மேல் ஆசிரியர்
17

Page 10
பழியைச் சுமத்தலாம். ஆனால் பெண்ணிலைவாதத்தின் முன் ஆசிரியர் தகுந்த பதில் கூறமுடியுமா? பெண்ணிலைவாதிகள் வழக்குரைத்தால் குற்றவாளிக் கூண்டில் தலைகுனியச் செய்து விடுவார்கள். நாவலின் கதைகள் ஒரு கருத்திலிருந்தோ, நினைவிலிருந்தோ மனப்படிமத்திலிருந்தோதான் பிறக்கிறது என்பது வில்லியம் பாக்னஸ் என்ற மேனாட்டு நாவலாசிரியரின் கருத்து. இந்நாவலில் ஆசிரியர் "பறவைகள் என்னதான் ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தாலும் ஆகாரத்துக்குத் தரைக்கு வந்துதான் ஆகவேண்டும்' என அவரது அம்மா கூறிய கருத்தொன்றினைக் கூறுகிறார். ஆனால் நாவல் காட்டும் பறவைகள் தரைக்கு வரும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு நாவலுக்கு சமுதாயப் பின்னணி மிக முக்கியமானதாகும். அரசியல் பொருளாதாரப் போக்கு, சமுதாய விழுமியங்களிள் நிலைப்பாடுகள் இவற்றைக் கூர்ந்துநோக்கி நாவலாசிரியர் பின்னணியை அமைக்கவேண்டும். இந்த நாவலில் இலங்கையில் பேரின தேசியவாதம் தலைதூக்கிய காலத்து அரசியல் வரலாறு கோடி காட்டப்படுகிறது. சமுதாய இயக்க நிலைக்கு அதன் பங்கு காட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து தமிழ்த்தேசிய உணர்வு கொண்ட கருத்தோட்டத்தை சிற்றம்பலம் பாத்திரத்தில் காண்கிறோம். பிற்பட்ட காலத்து அரசியல் மாற்றம் கதைமாந்தரின் செயற்பாட்டில், உரையாடலில் காட்டப்படு கிறது. சமகால வரலாற்று ஆவணங்களாக சில நிகழ்வுகள் அமைந்துள்ளன. Livinghistory ofthe day என ஏங்கல்ஸ் குறிப்பிட்டதுபோல சமுதாய இயக்கப் பாட்டுடன் சமுதாயச் சூழலுக்கேற்ப பாத்திரக் குணவியல்புகள் அமைந்துள்ளன. நாவலின் பாத்திரங்களெல்லாம் நூல்களைக் கையில் வைத்து ஆட்டியசைக்கும் பொம்மலாட்டக்காரன் போலல்லாது அவற்றின் இயல்புக்கேற்ப இயங்க விடுகிறார் நாவலாசிரியர். கதாபாத்திரம் எல்லாமே செய்யும் தொழிலுக்கும், சமூக நிலைக்கும் சுற்றுச் சார்ப்புக்கும் ஏற்பவே உரையாடும் சொற் பிரயோகங்கள் நாவலின் சிறப்பம்சமாக அமைகிறது. தேவகி மனத்தில் நிலைத்து நிற்கும் பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறாள். சிற்றம்பலம், சுமதி, செல்லம் ஆச்சி, முஸம்மில் ஆகியோர் நினைவில் நிற்கும் பாத்திரங்களாகும். கதை நிகழ் களம் நீர்கொழும்பு. அந்த ஊர் மைந்தன் முருகபூபதி. நீர்கொழும்புப் பிரதேச மண்ணின் வாசனையை இலக்கிய உலகுக்கு அறிமுகமாக்கியவன் எனப் பெருமைப்படுபவர் முருகபூபதி (ஞானம் 29- எனது எழுத்துலகம்). ஆகவே உயிர்த்துடிப்புடன் கதை நிகழ்களம் மெய்மைத் தன்மை மிளிர்ந்து நாவலுக்கு மெருகூட்டுகிறது. அகநோக்கு நிலையினைத் தீட்டி சுற்றுப்புறச் சூழலை அமைக்கும்போது அவ்வர்ணனையைச் சில இடங்களில் குறியீடாகக் காட்டியுள்ளமை நாவலுக்குச் சோபை சேர்க்கிறது முதிர்ந்த எழுத்தின் கைவண்ணமாக, உணர்வுகளின் சிகரமான காதல் உணர்வின் புனிதத்தை அதன் விளைவான விட்டுக்கொடுப்பு தியாகசிந்தனை இவற்றை பெண்ணிலை வாதத்தின் கடும்கோட்பாட்டுடன் மோதவிட்டு, பெண்ணிலைவாத சிந்தனை வாதியும் செயலாளியுமான சுமதிக்கு அன்பு, பாசம், அக்கறை, காதல் ஆகிய உணர்வுகளை மின்சாரமாகப் பாயவிட்டு ஏற்படுத்தும் "ஷொக் - மின்னதிர்வு, உணர்வுகளின் மென்மையை உணர்த்தும் கதாசிரியரின் ஆக்கத்திறமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.
18

இன்றைய சமூகத்தின் சில முரண்பாடுகளை அழகாகக் கோடிகாட்டி வாசகன் தனது முன் உணர்வுத் திறமையை இனங்கண்டு சிந்திக்க வைத்துள்ளமையையும், சில விடயங்களைச் சொல்லாமற்சொல்வதும், குறியீடுகள் மூலம் உணர்த்துவதும் நாவலுக்குத் தரம்சேர்க்கிறது.
முருகபூபதி யதார்த்தப்பண்பு நாவலின் அச்சாணிப்பண்பு என்பதை உணர்ந்து கட்டுக்கோப்புடன் விறுவிறுப்பாக நாவலை நகர்த்திச் செல்கிறார். நாவலாக்கியப்பண்பு(Novelity) பறவைகளில் கணிசமான அளவு அமைந்து அவரது முயற்சிக்கு வெற்றியைக் கொடுக்கிறது. இவ்வாண்டு ஈழத்தில் வெளிவந்த சிறந்த நாவலுக்கான சாகித்தியப் பரிசினைப் பெற்றுள்ளமை நாவலின் தரத்தைக் கணிப்பிட்டு நிற்கிறது.
நாவல் துறையில் முதல் முயற்சியில் கைத்திறனைக் காட்டிய முருகபூபதி, கைப்பழக்கம் சேர் இன்னும் தரமான நாவல்களைப் படைக்கமுடியும். அவரது தேடல் முயற்சி, இலக்கிய நெஞ்சம், அனுபவம் நிறைந்த வாழ்க்கை, ஆக்கத்திறன் ஆகியவை இதற்குத் துணைநிற்கும் என இலக்கிய உலகம் திடமாக நம்புகிறது. ஈழத்து நாவல் இலக்கியம் வனாந்தரமாக வரண்டுபோக விடாது சிறு பசும்புற்றரையைக் காட்டி நிற்கிறது "பறவைகள்.
Y
(ஈழத் தாயே! இரங்காயோ ??!!
ஈழத் திருநாடே எங்களுக் குரிமையென் றிங்குதமிழ் மாந்தர்நாம் வாழத் தலைப்பட்ட வாறெமக் கேவழி வாய்க்கவரந் தாராயோ? நீளக் கடல்சூழ நின்றிலங் கிப்புலர் நின்புதல்வர் சிரங்கிழே தாழக் கண்டும்நீ தவித்திடா தமைந்திடுந் தருணமுமித் தருணமோ?
நாட்பல போயின! நாயகி நின்றன் நனிநிலத் துறைபவர் ஆட்பல வலியொடு வாட்பல வலியும் அறிந்தனர் அன்றிசெங் கோற்பல வலியினைக் கொண்டநற் கோன்மை ஒச்சுத லறிகிலார்! மீட்பினி யிவ்விடம் மீளவும் மேவ வேண்டுதலுறாயோ?
விடுதலை எய்திவாழ் வேட்கை யாற்றமிழ் வீரர்க ளிந்நாள் அடுகள மேகிமாள் அவலம் நின்னுளத் தறியாயோ? அன்னாப் கெடுதலைத் தாழ்தலை இங்கே கிளர்ந்தினி மாய்க்காது போயின் தொடுதலின் உணர்விழந் திட்ட மரத்தகைத் துட்டர்நா மலவோ?
ஞாலப் பேறுடை நல்லவர் வாழ்தமிழ் நானிலம் நினதெனுஞ் சீலத் திருமொழி திளைத்தகஞ் செவித்திடும் விருப்புனக் கில்லையோ? சாலத் தகுந்தினித் தமியனென் வாய்மொழி தாயளே! ஏற்பையேல் கோலத் தமிட்கவி யாலுனைத் கொண்டகம் வாழ்த்துவன்! வாழிதி
தவ சஜிதரன். மாத்தளுை - ܢܠ
9

Page 11
இதுஎழுத்துலக;
- ருபராணி ஜோசப் -
சிறு வயதில் இருந்தே எனக்குப் பேச்சிலும் எழுத்திலும் இயற்கையான ஒரு ஆர்வம் இருந்தது. வாசிப்பதும் யோசிப்பதும் என் பொழுதுபோக்கு இப்பழக்கத்தை என்னுள் வளர்த்தவர் என் அருந்தந்தையே.
எனக்கு விளங்கினாலும் விளங்காவிட்டாலும் கண்டதையெல்லாம் வாசிப் பேன். அதை எழுதியவர்களின் பெயர்களை உன்னிப்பாகக் கவனிப்பேன். நானும் எழுதினால் என்பெயரும் வருமே என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசையி னால் எழுத்துலகில் அடியெடுத்து வைத்தேன்.
வார இதழ்களின் பாலர் பகுதியில் எழுத ஆரம்பித்தேன். என்பாட்டி, என்பாடசாலை, என் குட்டிநாய், என் அன்னை என்றின்னோரன்ன சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி எழுதினேன். வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை நான் எமுதியவை பிரசுரமாகிவிடும். நான் எழுதியதைப் பலமுறை வாசித்துப் பரவசமடைந்தேன். என் பெற்றோரும் என் ஆசிரியைகளும் என்னைப் பாராட்டினார்கள். என் சின்னவயது இலட்சியம் அதுவாகவே இருந்தது.
காலப்போக்கில், என் குழந்தைத்தனம் கரைந்து நல்ல விசயங்களை நிறைய எழுதவேண்டும். அது நன்மைதர வல்லது என்ற நினைவு என்னுள் ஓயாத அலையாக மோதியது. சுறுசுறுப்புள்ள நான் நேரத்தை வீணடிக்காத ஒரு சிறுமியாக மாறினேன். பள்ளிப்படிப்போடு, கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வமுடையவளானேன். என்னை மொழிவழ வழிநடத்தியவர், என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய முந்நாள் ஆசிரியை திருமதி பராசக்தி நவரட்ணம் அவர்களே. வீரகேசரியில் நான் எழுதிய முதற்கவிதை ‘பள்ளிக்குப் போ மகளே - பொன்னம்மா பாடம் படித்திடுவாயி என்று தொடங்கும் கவிதை என்று நினைக்கிறேன். கையெழுத்துப் பத்திரிகைகளுக்கும் எழுதினேன். கையெழுத்துப் பத்திரிகைகளின் முக்கிய பங்காளியாக நான் இருந்தேன் என்றால் மிகையாகாது. மட்டுநகரைச் சார்ந்த தின்னாமுனை எப்.ஜி.ஜெயசிங்கம் (அப்போது இளையவர்) என்பவரும் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்துவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு உழைத்தவர். எனது கவிதைகள் கட்டுரைகள் அனேகமாக வெளிவந்தன. இதன் மூலம் என் ஆக்கத்திறனில் வளர்ச்சி ஏற்பட்டதை நான் மறுப்பதற்கில்லை. வாசல் தேடி வந்த வாய்ப்புக்களை நான் நழுவவிடவில்லை. என்பெயர், நான் வாழும் எல்லை கடந்து அறிமுக
20
 

மாகியது. எனவே ஆங்காங்கு வெளியாகும் சஞ்சிகைகளுக்கு ஆக்கங்கள் கேட்டு பலர் என்னோடு கடிதமூலம் தொடர்பு கொண்டனர். மிகுந்த ஆர்வமுடன் அவற்றுக்கெல்லாம் தவறாது எழுதுவேன். விடயங்கள் நினைவில்லை.
சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் செழியன் பேரின்பநாயகம் அவர்கள் தனது மரணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதனுள் பழுப்பேறி சிதிலமடைந்த நிலையில் இருந்த பத்திரிகைத்துண்டை விரித்தேன். அது மண்டுரில் வெளியான பாரதி சஞ்சிகைக்கு நான் எழுதிய சிந்தனைக் கட்டுரை. பன்னிரெண்டு வயதில் நான் எழுதியைப் பத்திரப்படுத்தி அனுப்பியதை எண்ணியதும் என் கண்களில் ஈரம் கசிந்தது.
ஆரம்பத்தில் நான் தவழ்ந்து விளையாடிய பத்திரிகை வீரகேசரியே. அதன் வார இதழில் வெளியாகும் பெண்கள் பகுதி (பூவையர் பூம்பொழில்) என் கவனத்தைக் கவர்ந்தது. அதற்கும் எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனது தளராத முயற்சியும், என் தமிழாசிரியை எனக்களித்த ஊக்கமும் உற்சாகம் ஊட்டியது. பூவையர் பூம்பொழிலில் ஆர்வத்துடன் எழுத ஆரம்பித் தேன், பெண்களைப்பற்றிய பல்வேறு விஷயங்கள் பற்றி. "ஆண்மனம்' என்ற தலைப்பில் எழுதுமாறு பூவையர் பூம்பொழில் ஆசிரியர் (நெல்லை நித்தியா) கேட்டிருந்தார். இதை நான் அறியாத வயதில் எப்படி எழுதினேன் என்பது எனக்கே ஆச்சரியம்? பாராட்டுக்களும், திட்டுக்களும் வந்து குவிந்தன. இதைப் பற்றியெல்லாம் நான் "அலட்டிக்கொள்ளவில்லை. வாரம் ஒருமுறை கட்டுரை வெளி வரவேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தேன். எழுதுவது எனக்கு உற்சாக மாக இருந்தது. எனது வாசிப்பும் சிந்திப்பும் எனக்கு எழுதுவதற்குத் துணை என்று நம்புகின்றேன். என் படுக்கையில் என்னைச் சுற்றியிருக்கும் நூல்களை நான் பெரிதும் நேசித்தேன். ஏதோ ஒன்றை வாசிக்காமல் நான் தூங்கிய நாட்கள் குறைவு.
என்னுடைய ஆக்கங்கள் பூம்பொழில் ஆசிரியரை வெகுவாகக் கவர்ந்த தினால் அவர் என்னையும் எனக்குத் தமிழ் சொல்லும் ஆசிரியையும் பார்க்க, சொல்லாமல் கொள்ளாமல் நான் படிக்கும் பாடசாலைக்கே வந்துவிட்டார். நித்யா' என்றால் பெண்தானே என்று எண்ணியிருந்தேன். என்முன் ஆணாக வந்து நின்றதும் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்துபோனேன். அருகில் நின்ற என் ஆசிரியை உரையாடத் தொடங்கியதும் மகிழ்ச்சியில் மிதந்தேன். அவர் என்னையும் என் ஆசிரியையையும் பாராட்டினார். “பரிசு தந்து, படம் எடுத்துச்சென்றது இன்று வரை மறக்கமுடியாத ஒரு இனிய நிகழ்வே. "ஆண் மனம்" கட்டுரைக்கு வீரகேசரி காரியாலயத்தில் எனக்கு வந்த பதின்மூன்று கண்டனக் கடிதங்களையும் புன்முறுவலுடன் தந்துவிட்டுச் சென்றதையும் நான் மறந்துவிடவில்லை.
பூவையர் பூம்பொழிலில் சித்தி ஸர்தா பீபி (பேராதனை சர்புநிஸா) முத்து லட்சுமி கதிரேசன், உலப்பனை செல்வம் ஆகியோரும் எழுதினார்கள். நாங்கள் எல்லோரும் பேனா நண்பிகளானதும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே. கட்டுரைகள் எழுதுவதில் கவனம் செலுத்திவந்த நான் கதைகள் எழுதுவதிலிலும் ஆர்வம் உடையவளாக மாறினேன். எதிர்பாராத சந்திப்பு என்னும் கதையே வீரகேசரியில் வெளியான என் முதற் கதையாகும். நான் அடைந்த 2

Page 12
சந்தோஷத்துக்கு அளவில்லை. மேலும்மேலும் எழுதவேண்டும் என்ற ஆவல் என்னுள் விருட்சமாகக் கிளைபரப்பியது. பத்துக்கதைகள் தொடர்ந்து எழுதினேன். செல்வி, ஜோசப், தெரேசா, ஜலஜா, ரூபா, நீரஜா, வதனி ஆகிய பேர்களிலும் என் ஆக்கங்கள் வெளியாகின. வீரகேசரியின் சிறுவர் பகுதியில் ‘தெரிந்து கொள்ளவேண்டாமா? என்ற தலைப்பில் ஜப்பான், சீனா, தாய்லாந்து போன்ற பல நாடுகள் பற்றி எழுதிவந்துள்ளேன். அரசியல் கட்டுரைகள் மங்கையர் பகுதிகளில் குடும்ப சம்பந்தமான விஷயங்களையும் எழுதியுள்ளேன்.
பாடசாலைப் படிப்போடு தமிழரசுக்கட்சியின் கூட்டங்களில் தீவிர ஈடுபாட்டுடன் பேசியதனாலோ என்னவோ சுதந்திரன் பத்திரிகையின்பால் என்கவனம் திரும்பியது. மொழிப்பற்று, மொழியுரிமை, உரிமைப் போராட்டத்தில் மகளிர் பங்கு போன்ற அரசியற் கட்டுரைகளும், சங்க இலக்கியங்கள், மலையகப் பெண்கள் பற்றியும் எழுதினேன். இதற்கு வாசகர்களிடமிருந்து நிறைய வரவேற்புக் கடிதங்கள் வரப்பெற்றன. தினகரனிலும் இடையிடையே என் ஆக்கங்கள் வெளிவந்தன.
பாடசாலை வாழ்வு கடந்து கல்லூரியில் கால்வைத்தபின் நாடகங்கள் எழுத ஆரம்பித்தேன். இதற்குக் காரணம் நாடகங்களை நாங்களே தயாரித்து நடிக்கவேண்டிய நிர்ப்பந்தமே. தமிழ்ச்சங்கங்கள், பகிரங்க நாடக விழாக்கள் எனக்கு எழுதவும், நடிக்கவும் ஒரு பயிற்சிக் களமாக இருந்தது. பல நாடகங்கள் எழுதியபோதும் அவற்றை நூலாக்கவேண்டும் என்ற எண்ணத்தை அப்போது யாரும் என்னுள் விதைக்கவில்லை. நாடகப்பிரதிகளைப் பாதுகாத்து வைக்கும் பக்குவமும் எனக்கிருக்கவில்லை. "இரேணுவுக்கு" என்ற தலைப்பில் சமூக சம்பந்தமான பல விஷயங்களைக் கையெழுத்து நூலாகக் கடித வடிவில் எழுதினேன். இது கல்லூரியில் மிகுந்த பாராட்டையும் உயர்புள்ளியையும் பெற்றது. எனினும் எனது ஆக்கங்கள் பேணப்படாத நிலையில் வெள்ளப் பெருக்கில் (மட்டுநகர்) அள்ளுண்டு போனது துரதிஷ்டமே என்று இப்போது நான் வருந்துகிறேன். என்னால் எழுதப்பட்டு நெறியாள்கை செய்த நாடகங்களி சில :- சிலையின் கண்ணிர், மெளனத்தின் விலை, பதவியா பாசமா, பாண்டியன் பரிசு, பொன்னியின் செல்வன், சிந்துஜா நீ சிரி, மாமியும் மருமகளும், தரகர் குப்புசாமி, திப்பிலி, முத்தா இரத்தினமா, சகுந்தலை, ரூபாவதி.
நான் பாடசாலை மாணவியாக இருந்துகொண்டே சிறுவயதுமுதல் என்னால் எப்படி எழுதமுடிகிறது? என்று ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மட்டுநகரின் முதல் குட்டிப்பெண் எழுத்தாளி என்று என்னைத் தட்டிக் கொடுத் தார்கள். மாணவி என்ற நிலைமாறி நான் ஆசிரியை ஆனேன். நான் ஒரு இலட்சியவாதியாக, இலக்கியவாதியாக, புடம்போடப்பட்டவளாக ஆசிரியப்பணிக் குக் கண்டியில் கால்வைத்தபோது, பல திருப்புமுனைகளைச் சந்தித்தேன். கல்விப்பணியில் முழுக்கவனத்தையும் வைத்திருந்தாலும், எனது ஓய்வு நேரங் களைத் தோட்டத்தொழிலாளர்களின் கூட்டங்களில் பேசுவதற்காகச் செலவிட்ட தாலும் சிலகாலம் என் எழுத்து வேகம் ஸ்தம்பிதம் அடைந்தது.
பின்னர் மீண்டும் என்னுள் ஒளிந்திருந்த எழுத்தார்வம் மிகுந்த துடிப்புடன் வெளியேறத் தயாரானது. நான் கேட்பவை, காண்பவை, பழகும் மனிதர்கள், வாழும் சூழல், பாவனைப்பொருட்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டின. எனக்குள் 22

ஊமையாகிப்போன உண்மைகள், உணர்வுகள், உறுத்தல்கள், ஆத்திரங்கள், அநியாயங்கள், நியாயங்கள், கதைகளாய் கதாபாத்திரங்களாய் மாறின. சமூக மேம்பாட்டை என்கதைகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற பேராவல் என்மனதைப் பெரிதும் பாதித்தது.
சிறுவர்களுக்கும் வளர்ந்தோர்களுக்கும் பயனளிக்கக்கூடிய முப்பது உருவகக் கதைகளை எழுதினேன். இவை முற்றுமுழுக்க என் சிந்தனையில் விளைந்த கருத்துக்களே. இவற்றை நுாலாக்கும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. ஒரு சமயம் பேராதனைப்பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரன் அவர்களைச் சந்தித்தபோது என் கதைகளை அவர் படிக்க நேர்ந்தது. அவர் அவ் ஆக்கங்களை வெகுவாகப் பாராட்டி இதை நூலாக வெளியிட்டால் பயனுள்ளதாய் இருக்கும் என்றார்.
என் அடிமனதில் உறங்கிக்கிடந்த ஆசைகள் வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடித்து உயரப்பறந்தன. மறுகணமே நான் செயலிலும் இறங்கிவிட்டேன். எனக்கு அறிமுகமான ஒருவர் குறைந்த செலவில் அச்சிட்டுத் தருவதாயும் கதைகளுக்கான சித்திரங்களை இனாமாக வரைந்து தருவதாகவும் கூறி ரூபாய் பத்தாயிரத்தையும் கதைப்பிரதிகளையும் பெற்றுச்சென்றார். அவர் ஒரு ஆசிரியராய் இருந்தபடியால் அவரை நம்பினேன். ஆண்டொன்று கடந்தும் புத்தகம் வெளிவரவில்லை. இதுபற்றிய முடிவடையாத கடிதத் தொடர்புகளே நடந்தன. பின்னர் அதுவும் ஓய்ந்து விட்டது.
மனமுடைந்த நிலையில் புத்தகம் வேண்டாம் என்று எண்ணினேன். அநியாயமாக என் காலம் விரயமாகிவிட்டதை எண்ணி, விரக்தியுடன் வாளாவிருந்தேன். மனம் போனபோக்கில் கதைகளை எழுத ஆரம்பித்தபோது, மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் திரு. இராமன் அவர்கள் முதன்முறையாக வீடு தேடி வந்து என்னைச் சநதித்தார். என்னிடம் ஏதும் ஆக்கங்கள் இருந்தால் அவற்றைப் பிரசுரம் செய்து நூலாக்கினால் நன்மை என்று உபதேசம் செய்தார். எனக்கு அவர்மீது எரிச்சலாக வந்தது, சூடு பட்ட பூனையல்லவா நான்?. நான் அவர் கூறியதைத் தட்டிக்கழித்துவிட்டேன். ஆயினும் அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் வந்து என்னை விட்டபாடில்லை.
முடிவில் அவர் என் இணக்கத்தைப் பெற்று ஆகவேண்டியதை அவரே கரிசனையுடன் பொறுப்பெடுத்துச் செயல்பட்டார். முப்பத்தேழாயிரம் ரூபாய் செலவில் ஐந்நூறு நூல்கள். ‘ஏணியும் தோணியும்’ என்ற பெயரில் தயாராகிவிட்டன. கலாநிதி துரை மனோகரன் அவர்களும் திரு. இராமன் அவர்களும் என் நன்றிக்குரியவர்கள். என் மகிழ்ச்சி சிறகு முளைத்து எங்கோ பறந்தது. என் நிறைவேறாத ஆசை நிறைவேறியதுடன் அதுவே தேசிய சாகித்திய பரிசையும் பெற்றுத்தந்தது. பலபாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து, நான் எழுதிய குட்டிக் கதைகள் சில தினமுரசில் வெளியாகின. தொடர்ந்து எண்பத்தைந்து கதைகள் எழுதினேன். எனக்கென்று அபிமானிகளும் (விசிறி)வாசகர் வட்டமும் உண்டென்று நான் அறிந்தபோது சந்தோஷம் அடைந்தேன். "ஆயிரம் ஆயிரம் வாசகர் நெஞ்சங்கள் தெரிவித்த பாராட்டுக் களே ரூபராணிக்கு உற்சாக மாத்திரைகள்" என்று காலம் சென்ற தினமுரசு ஆசிரியர் அற்புதராஜா அவர்கள் வாழ்த்துரையில் கூறியதை நினைவு 23

Page 13
கூருகிறேன். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள சில தமிழர்களிடமிருந்து என் சிறுகதைகளுக்கு வரவேற்பும் பாராட்டும் கிடைத்தன. எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தந்துள்ளன என்ற உண்மையை நான் மறைப்பதற்கில்லை. நேரச் சுருக்கமும் படிப்பினையும் அவர்கள் என் கதைகளை விரும்பிப்படிக்கும் காரணங்கள் என்று அவர்கள் தெரிவித்த கருத்தை நான் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டேன்.
தினமுரசுக் கதைகளும் நூலாகவேண்டும் எனற ஆவல் பேராவலாகி என் தூக்கத்தைத் தொலைத்தது. பணத்திற்கு எங்கே போவது? எனக்குள் கேள்வி கவலையாகி என்னை வண்டாகக் குடைந்தது. இப்போது திரு.இராமனைத்தான் பிடிக்க வேண்டுமென்று எண்ணினேன். அவரைச் சந்தித்தேன். அவரின் ஒன்றியத்தின் கன்னி வெளியீடான என் ஏணியும்தோணியும் சாகித்திய பரிசு பெற்றதில் அவர் உற்சாகமாய்க் காணப்பட்டார். என் ஆவலை வெளியிட்டேன் அவரிடம்.
தலைநகரில் திருமணம் ஒன்றில் திரு இராமனைச் சந்தித்தபோது என் ஆவலைத் தெரியப்படுத்தினேன். அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் என்னைக் காலஞ் சென்ற என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய துரை விஸ்வநாதன் அவர் களிடம் அழைத்துச் சென்றார். அவர் கையில் ஏணியும்தோணியும் நூல். என்னைக்கண்ட அவர் புன்முறுவலுடன் வரவேற்றார் அன்புடன். இராமன் என்னை அறிமுகம் செய்தபோது ஆனந்தம் அடைந்து என் கதைகளின் யதார்த்தத்தைப் பாரட்டினார்.
நான் அவற்றை நூலாக்க முடியாத என் இயலாமையை தயங்கியவாறு எடுத்துரைத்தேன். "தினமுரசுக் கதைகளில் முப்பதை தயார் பண்ணுங்கள் நான் பொறுப்பேற்கிறேன்" என்று சென்னாரே பார்க்கலாம், அவருடைய மனிதநேயம் கண்டு நெகிழ்ந்து போனேன். கனவா நனவா என்று அறியாத நிலையில் விடைபெற்றுச் சென்றோம்.
இது நடந்து சிலமாதங்கள் கூட ஆகவில்லை. அவரே கண்டிக்கு வந்து என் கதைகளின் பிரதிகளை எடுத்துச்சென்றார். வர்த்தகர் ஒருவர் புத்தகப்பிரியராய், இலக்கியவாதியாய் இருப்பதை எண்ணி வியப்பில் ஆழ்ந்து போனேன். என் கதைகள் துரித கதியில் ஒரு “வித்தியாசமான விளம்பரம்' என்னும் பெயரோடு, உலா வந்தது. இச் சிறுகதைத்தொகுதியும் மத்தியமாகாண சாகித்திய விருதைப் பெற்றது. துரைவி என்னும் மனிதநேய மாமனிதருக்கு நன்றிக்கடனாக நான் கண்ட துரைவி எனும் சிறுநூலை அவர் இறக்கு முன்னே அவருக்குக் காணிக்கையாக்கி நிறைவடைந்தேன்.
என் கதைகளைப் படித்துப் பாராட்டுக் கடிதங்களை எழுதியவர் பலர். அதில் ஒருகடிதம் மட்டும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. திவசம்' என்னும் சிறுகதையைப் படித்தபின் தன் கணவர் அவருடைய தாயை உயிருள்ளபோதே அன்புகாட்டிக் கடமை செய்யவேண்டுமென்று மனம் மாறினார். (முன்பு அப்படி யல்ல) இப்படிக் கம்பளையைச் சோந்த ஒரு பெண் எழுதியிருந்தார்.
ஒரு இரவு பதினொரு மணிக்குத் தொலைபேசி அலறியது. ஊர்பேர் சொல்லாத ஒருவர் அந்தநேரம் என்னைத் திட்டுதிட்டென்று திட்டினார். அவருக்கு ஆத்திரத்தில் மூச்சு வாங்குவது தெளிவாகத் தெரிந்தது. நான் ஒன்றும் 24

புரியாமல் குழம்பினேன். பின்னர்தான் தெரிந்தது, "ஜெனரேற்றர் கதை, அவரைப் பாதித்திருக்கிறதென்று. தன்னைப் பற்றியே அது எழுதப்பட்டதென்று அவர் எண்ணினார். நான் எழுதியது கதை என்று எவ்வளவோ சொல்லியும் அவர் ஏற்கவில்லை. இதையறிந்த என் வீட்டாரும் ஏச்சு. வேறு யாருக்குமல்ல எனக்கேதான், கதை எழுதியதற்கு. எனக்குச் சிரிப்பான சிரிப்பு. ஒரு உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்தேன். கதைகள் பாதிப்பை உண்டுபண்ணவல்லன என்பதுதான்.
எனது தினமுரசுக் கதைகளைப் படிக்கும் பலர் அவ்வப்போது தங்கள் விமர்சனங்களைத் தொலைபேசியிலும், நேரிலும் தெரிவிப்பதுமுண்டு. அந்த விமர்சனங்கள் எனக்குப் பெரிதும் உதவின. "தினமுரசைத் திறந்தால் முதலில் உங்கள் கதை வந்திருக்கா என்றுதான் பார்ப்போம்" என்று கூறியவர்களும் உண்டு. தினமுரசில் வெளியான "மறதி என்னும் கதை ஏழாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடநூலில் வெளியானது. இதனால் பல பாடசாலை மாணவர்கள் என்னை இனங்கண்டு கொண்டார்கள். சமீபத்தில் மாத்தளை ஆமினா தேசிய பாடசாலை ஆசிரியை ஆயிஷா ஹமீட் அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். "மறதி பாடத்தை நான் அங்கு வந்து படிப்பிக்க வேண்டுமென்றும் கதை ஆசிரியையைக் காண மாணவிகள் ஆவலாய் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன்படி நான் மாத்தளை சென்று ஏறக்குறைய அறுபது மாணவிகளுக்கு "மறதி கதையைப் படிப்பித்தேன். கால் முளைத்த மல்லிகைப் பூக்களாய் கண்களில் ஆவல் தெறிக்க அம்மாணவிகள் கதைகேட்ட விதம். பாடம் முடிந்ததும் என் எழுத்துகள் பற்றிப் பரபப்புடன் கேள்விமேல் கேள்வி கேட்டதும் பயனுள்ள ஓர் அனுபவமாய் இருந்தது. ஆசிரியர்கள் பலர் அக்கறையுடன் என் கதைகள் பற்றிக் கலந்துரையாடினார்கள். கதைகள் படிப்பினையாய், பயன் தருவதாய் எழுதப்படவேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலும் வலுவடைந்தது. இதையே வாசகர்கள் வரவேற்கிறார்கள் என்பதில் எள்ளளவேனும் சந்தேகமில்லை.
நான் நடக்கும்போது, பயணம் செய்யும்போது, காய்கறிகள் வாங்கும் போது, சமையல் பண்ணும்போது, விசேஷமாக மற்றவர்கள் கதைப்பதைச் செவிமடுக்கும்போது கதைக்கான கரு உருவாகிவிடும். இதற்கென்று தனியாக உட்கார்ந்து சிந்திக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. இரவில் தூங்க தலையணையில் தலை வைத்தவுடன் பகலில் உருவான கரு என் மனதில் கதையாக ஒடும். அதைக் காலையில் நினைவுபடுத்தி கிடைக்கும் நேரத்தில் எழுதிவிடுவேன்.
இதையடுத்து, நாடகத்தொகுதி ஒன்றை வெளியிட வேண்டுமென்ற ஆவல் என்னுள் அவசரமாகப் புகுந்தது. மாணவர்கள்பால் நான் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் இதற்கு ஒரு காரணம். கல்வித் திணைக்களப் போட்டி, விழாக்களுக்காக, நாடகங்கள் கேட்டு என்னிடம் வருவபவர்கள் மற்றொரு காரணம். பெயர் குறிப்பிட விரும்பாத ஆன்மீகவாதி ஒருவர் என்னையும், என் எழுத்துப் பணிகளையும் அறிந்து உதவ முன் வந்தது தேவாதினமே. "இல்லை இல்லை" என்ற பெயர் சூடி எனது நாடகத்தொகுதி மூன்றாவது நூலாக வெளிவந்து வட கிழக்கு சாகித்திய விருதையும் பெற்றுக்கொண்டது.
25

Page 14
கட்டுரை, சிறுகதை, நாடகம் எழுதி வந்த நான் ஏன் ஒரு நாவலை எழுதக்கூடாதென்று இலக்கிய அன்பர்கள் சிலர் ஆதங்கப்பட்டனர். நானோ ஒரு குறுநாவலை எழுதுவதில் குறியாக இருந்தேன். இன்றைய சூழ்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினையை மையப் பொருளாகக் கொண்டு ஒரு கலப்புத் திருமணத்தின் மூலம் குறுநாவல் ஒன்றை நகர்த்திச்சென்றேன். இது நூலாக மாற என் வேண்டுகோளுக்கிணங்கி என்னுடன் இணைந்து பங்களிப்புச் செய்த பெருந்தகைகள் மூவர். கண்டி கலாசாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கமல்.பி.திஸாநாயக்கா, யூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி நகர அமைப்பாளர் அல்ஹாஜ் முகமத் நஸார், தொழிலதிபர் சேகரன் சோமபாலன் ஆகியோரே.
நான்காவது நூலாகிய இக் குறுநாவல் ‘ஒரு தாயின் மடியில்' என்ற
பெயரோடு மத்திய மாகாண சாகித்திய விருதைப் பெற்றது. நான் கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் எழுதுவதை நிறுத்திவிடவில்லை. வாசகர்களின் அபிமானம், அவர்களுடனான தொடர்புகள் ஒரு எழுத்தாளனுக்கு மகிழ்வூட்டவல்லன. இந்த வகையில் என் எழுத்துகள் தந்த உறவுகள் பல. இவர்களில் குறிப்பிடக்கூடிய ஒருவர் மடவளை வஜிகா. இந்த முஸ்லிம் பெண் என்னுடைய சிறுகதைகளை அழகிய அல்பமாகத் தயாரித்து சிற்றுண்டி சகிதம் என்னை நேரில்காணும் ஆர்வத்துடன் என் முகவரி தேடிவந்து என்னைச் சந்தித்து சல்லாபித்தது மறக்க முடியாதது. முன்பின் தெரியாதவர்களை எழுத் துலகம் இணைக்கும் ஆற்றல் கொண்டது.
சிறுவயது முதற்கொண்டு பல விருதுகள், பரிசுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் பெற்றதுண்டு. நோர்வே (ஒஸ்லோ) இளைஞர் ஒன்றியம் நடத்திய சர்வதேசச் சிறுகதைப் போட்டியில் இடம்பெயர்வு என்னும் கதை முதற்பரிசு. சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் (ஐரோப்பிய ஆணைக்குழு ஒன்றியம்) "கல்வியில் சமவாய்ப்பு என்ற தலைப்பில் நடத்திய அகில இலங்கைக்கான கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசும் சான்றிதழும். ஜம்பதாண்டு இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி கொழும்பு நகரசபை நடாத்திய அகில இலங்கைக் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைக்கான சான்றிதழ், அகில இலங்கைக் கத்தோலிக்க சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு, ரத்னதீபவிருது, மலையகக் கலை இலக்கியப் பேரவை விருது.
கெளரவமும் பட்டங்களும் :- சர்வதேச தமிழ் ஒளிபரப்பு நிறுவனம் (IBC) கலை, இலக்கிய செய்திப் பரிமாற்றத்திற்கான கெளரவப்பட்டம் ‘கலாரூபி. இது தவிர ‘இலக்கியச்செல்வி, 'கலைச்செல்வி, 'சொல்லின்செல்வி, ‘கலை அரசி, நடிப்பரசி, சுவாமி சித்பவானந்தா, குன்றக்குடி அடிகளார், நாஞ்சில் மனோகரன், அப்துல்கழர் ஆகிய தமிழக அறிஞர்களின் பாராட்டு, கல்கி பத்திரிகையில் பாராட்டு, இவையனைத்தும் என்னை மேலும் ஊக்குவிப்பதற்கான உற்சாக மாத்திரைகளே தவிர வேறில்லை. எல்லாப்புகழும் என்னைப் படைத் தோனுக்கே உரியது.
என் எழுத்துலகம் அழகானது, அமைதியானது, சுவையானது, சுவாரஸ்ய மானதுங்கூட!
26

Y.
, : "معین
۔۔۔ م جھیل خيمر ra-re-maraea
வெண்புறாவும்
வேதனையைச் சொன்னால்.
பா. ரத்நஸபாபதி அய்யர்
இன்று சுதந்திர நாள். சுதந்திர தின சொற்பொழிவுக்காக அலங்கார மான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் வலதுபக்க முன்மூலையில் தனி மேசையொன்று போடப்பட்டிருந் ჭნჭ5!-
அந்தத் தனி மேசையில் தங்க முலாம் பூசிய ஒரு கூடு. 12 x 12 X 12 கூட்டின் மேற்பக்கம் ஏதோ ஒன்றின் வடிவத்தை ஞாபகத்துக்குக் கொண்டு வரக்கூடிய விதத்தில் அமைந்து இருந்தது.
அந்தத் தங்கக் கூட்டுக்குள் ஒரு சுத்தமான பால் வண்ண புறா. சொண்டு சிவப்பு, கால்களும் சிவப்பு, கண்ணும் சிவப்பு. நோய்க்கிருமிகள் இல்லாதவாறு மருந்தடித்துத் தொற்று நீக்கிப் புனிதப்படுத்தப்பட்டதாக இருந்தது அந்த வெண்புறா.
தங்கக் கூட்டை இரண்டு அங்குல அகலமான வர்ண றிபன்' ஒன்றினால் சுற்றி அழகான முடிச்சுப் போட்டு இருந்தது. தங்கமோ என்று எண்ணக் கூடிய ஒரு பூட்டு கூட்டில் இருக்கும் சிறிய "கேட்டுக்கு போடப் பட்டிருந்தது. சுபவேளை வந்து கொண்டிருந்தது. மங்கள வாத்தியங் கள் முழங்கத் தொடங்கின. ஆசீர்வாத மந்திர கோசங்கள் பல மொழிகளில் ஒதப்பட்டன. சுதந்திரம், சமாதானம், சுபீட்சம், நட்புறவு. அந்நியோன்னியம், சமாதான சகஜீவியம், ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கை ஆகியவை
27
அனைத்தும் ஏற்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்து மந்திரங்கள் பிரித் தோதப்பட்டன.
விழாவின் தலைவர் அதியுயர் பாதுகாப்புடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். முதல் நிகழ்ச்சியாக புறாக்கள் பறக்கவிடுதல் அல்லது சுதந்திரத்தை மையப்படுத்தி புறாக் களை சுதந்திரமாக பறக்கவிடுதல் அமையவிருந்தது. ஆகவே விழாவின் தலைவர் கூண்டு வைத்திருந்த மேசைக்கு அருகில் அழைத்து வரப்பட்
LIII.
சுப வேளை கிட்ட வந்துகொண் டிருந்தது.
விழாவின் தலைவர் தங்கக் கூண்டின் “றிபனை சுருக்கென்று சுருக்கவிழ்த்துவிட்டார். பின்பு தங்கத் தட்டில் வைத்து நீட்டப்பட்ட தங்கத் திறப்பை எடுத்து கூண்டில் தொங்கிய பூட்டைத் திறந்தார். சிறிய கேட்டை சிறிது திறந்து கொண்டு கையைவிட்டு வெண்புறாவை பக்கென்று அமத்திப் பிடித்தார். பிடித்தபிடி கொஞ்சம் தொண்டங்குழி பிடிதான். புறா திமிறியது; மிரண்டது; விழிபிதுங்கியது. கையை இளக் கினால் புறா தானாகவே பறந்து தப்பித்துவிடும். ஆகவே கவனமாக இறுக்கிப் பிடித்த படி கூண்டிலிருந்து வெளியே எடுத் தார். அமெரிக்க சுதந்திரதேவியின் சிலைபோல் புறாவுடன் சேர்ந்த கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு

Page 15
நின்றார்.
சுபவேளை வர இன்னும் சில வினாடிகள் இருந்தன.
தலைவர் புறாவைப் பறக்க விடும்போது, சேர்ந்து பறக்க விடுவதற் காக சுமார் ஆயிரம் புறாக்களைப் பல கூண்டுகளில் அடைத்து ஆயத்த மாக மேசையின் கீழ் வைத்திருந்தார் கள். முதற் புறாவை விட்டதும் மற்றவர்கள் ஆயிரம் புறாக்களையும் பறக்க விடுவதற்காகக் கூட்டைத் திறந்து ஆயத்தமாக இருந்தார்கள்.
சுப வேளையும் வந்தது. தலைவர் புறாவைப் பிடித்திருந்த பிடியைக் கொஞ்சம் இளக்கினார். முழுவதும் இளக்கியும் விட்டார். புறா பறக்க சில "செக்கன்கள் சென்று விட்டன. தொணி டாங் குழிப் பிடி கொஞ்சம் ஓவர். தலைவர் விட்ட புறா ஒரு மாதிரி மயக்க நிலையிலும் சிறகடித்துப் பறந்துவிட்டது. எல்லாக் கூண்டுகளும் திறந்து விடப்பட்டன. புறாக்கள் பறந்தன. பறக்க முடியாத வைகளும் கலைத்து விடப்பட்டன.
பறந்த புறாக்கள் தப்பினோம் பிழைத்தோம் தம்பிரான் புண்ணியம்’ என்று எண்ணிக்கொண்டு வானில் எழுந்து சுழன்று சுழன்று வளைந்து பறந்து தங்களின் எண்ணம்போல் "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமே" என்று சொல்லிக்கொண்டும் பாடிக் கொண்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
"இருபத்தி ஒரு மரியாதைப் பீரங்கிக் குண்டுகளின் முதற்குண்டின் சத்தத்தில் "ஆனந்தச் சுதந்திரம் அடைந்து, ஆனந்தப்பட்டவர்கள்” எங்கோ சிதறிப்பறந்து ஓடிப்போய் விட்டனர்.
இருபத்தி ஓராவது குண்டும் தீர்க்கப்பட்டு மரியாதை செய்யப்
28
பட்டது. ஆனந்த சுதந்திரம் அடைந்த புறாக்களில் ஒன்று எங்கோ இருந்து கரணமடித்துப் பறந்து, வட்டம் ஒன்று அடித்துக்கொண்டு தலைவர் இருந்த மேசையில் அவரின் கைக்கு எட்டி எட்டாத தூரத்தில் திட்டமிட்டமாதிரி வந்து இறங்கியது.
விழாவுக்கு விசேட அதிதியாக வந்திருந்த மேல்நாட்டு "வெள்ளையர்" ஒருவர் வியந்தவண்ணம் "வொண்டர் புல் லாண்டிங்" என்று வியந்தார்.
மேடையில் ஒரே பரபரப்பு. வெண்புறா சமாதானத்தின் தூதுவர். தலைவரின் மேசையில் மெய்ப்பாது காவலர்கள் வெண்புறாவை அப்புறப் படுத்த முயன்றபோது கண்ணசை வினால் தடுத்து நிறுத்தினார் தலைவர். வெண்புறா சமாதானப் பேர்வழி தான். அகிம்சாமூர்த்தியாக இருந் தாலும் வந்து சேர்ந்த விதம் அவ்வளவு சிறப்பானது அல்ல என்பதே பாதுகாப்பு வட்டாரங்களின் கருத்து.
"விடுதலை அளித்தாலும் வெண்புறாக்கள் திரும்பவும் தன்னை விடுவித்த தலைவரின் கரங்களுக்கே வந்துவிட்டன” என்றோ அன்றேல் "அன்பு நெஞ்சங்களை விட்டு விலகி அகல நாம் விரும்பவில்லை" என்றா வது தலைப்பிட்டு ஒரு படம் போட லாம் என்ற எண்ணத்துடன் பல பத்திரிகைக் கமராக்கள் "கிளிக்” மின்னின.
புறா பறக்கவிட்ட படத்தையும், பறக்கவிட்ட புறா திரும்பிவந்த படத்தையும் எதிரும் புதிருமாகப் போடலாம். தலைவர்கள் பிரசித்தமாக எதைச் செய்தாலும் பத்திரிகைகள் ’கிளிக் செய்துகொள்ளும். இது ஒரு சம்பிரதாயம்.
மேடையில் மேசையினி

அருகில் இருந்த தலைவருக்கும், வட்டமடித்து வந்து இறங்கிய வெண் புறாவுக்கும் - விடுதலை செய்யப்பட்ட தனால் வானில் பறந்து தூய காற்றைச் சுவாசித்துவிட்டு வந்த - இடையில் ஒரு பேச்சுவார்த்தை தொடங்கியது. தூதுவருக்கு ஒரு சம்பிரதாய முறையைப் பின்பற்ற எண்ணம் வந்தது.
*நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையன்றி ஏதும் உரையேன்” தலைவரும் புறாவும் கதைப்பது எந்தமொழியில்? தமிழா! சிங் களமா! ஆங்கிலமா! இம் மும்மொழிகளில் எம்மொழியில்?
மும் மொழிகளில் எநீத மொழியையும் தெரிவு செய்யவில்லை. புறா தன் மொழியிலேயே கதைக்கத் தொடங்கியது.
அது என்ன மொழி! அதுதான் புறாமொழி.
புறாமொழி தலைவருக்குத் தெரியுமோ? சொந்த நாட்டிலுள்ள மொழிகளை அறியாமல், தெரியாமல் விட்டாலும் வேற்றுநாட்டு மொழி தெரிந்தவர்களுக்குப் புறாமொழியும் ஒருவேளை தெரிந்திருக்கலாம்.
"நீங்கள் இந்த சுதந்திர தினத்தில் என்னையும் என்போன்ற ஆயிரம் பேரையும் பறக்கவிட்டீர்கள். அதுதான் கூண்டில் அடைத்து வைத் திருந்த எங்களைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டீர்கள். ஏதோ எங்களுக்குச் ‘சுதந்திர வாழ்வு அளிப்பதாகச் சொல்லிக்கொண்டு விட்டீர்கள். எங்களைப் பார்த்துச் சுதந்திரப் புறாவே, சமாதானப் புறாவேயென்றும் அழகுபட வர்ணித்துவிட்டீர்கள். நாங்கள் உண்மையிலேயே அகிம்சா வாதிகள். கூச்சமான சுபாவமும் பெண்ணின் மென்மையும் கொண்ட
29
ஒரு தனி இனம்.
நாங்கள் எவரையும் குத்தவும் இல் லை கிழிக்கவும் இல்லை. விறாண்டித் துளைக்கவும் இல்லை. ஆகவேதான் எங்களுக்கு சமாதானி கள் என்று பட்டம் கட்டிவிட்டார்கள். um ri கட்டினது எண் று தெரியுமோ? நவீனபாணி ஓவியர் பிகாசோ. அவர்தான் ‘ஒலிவ் இலை ஒன்றை சொண்டினால் கவ்விப் பிடித்த படி பறப்பதுபோன்று ஒரு படம் வரைந்து விட்டவர்.
தெரிந்தோ தெரியாமலோ அந்தப்படம் உலகத்துக்குப் பிடித்து விட்டது. பிரசித்தமாய்ப் போய்விட்டது. பிரசித்தம் வந்த கையோடை போச் சுது எங்கடை சுதந்திரம். அதன் பிறகு தான் இந்தக் கூண்டு அடைப்பும் நாள் பார்த்து விடுதலையும்.
தலைவரவர்களே எங்களுக்கு விடுதலையளித்து சுதந்திரம் கொடுப் பதாக பத்திரிகைகளும் படம்போட்டு எழுதும். சொற்பொழிவுக்காரரும் பொழிந்து தள்ளுவார்கள். கவிஞர் களோ கவிதைகளை நதியாய் வடிப் பார்கள்.
உங்களுக்கு ஒன்று சொல்லு கிறேன். நாங்கள் என்றுமே சுதந்திர மானவர்கள் தான். படைப் பவன் படைத்த நாளிலிருந்து இன்றுவரை ஏன், என்றும் சுதந்திரமானவர்கள்தான். முதற் குரங்கின் காலத்திலிருந்து நாங்கள் சுதந்திரமானவர்கள்தான். நாங்கள் சுதந்திரமாக வாழ்ந்த இனம் தான்.
எங்களை உங்களின் ஆட்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக் கிலும் பிடித்துக் கூண்டுகளில் அடைத்து வைக்கிறீர்கள்.
தலைவர்கள் பறக் கவிட புறாக்கள் வேணும் என்றவுடன்

Page 16
எவரெடியாக வைத்திருக்கிறார்கள். எங்களைப் பிடித்து சிறையிலிட்டு விடுதலைக்காகப் பராமரிக்கிறார்கள்; வளர்க்கிறார்கள்".
“என்ன? அப்படியா?, தெரி யாதே நான் உங்களைப் பறக்க விடுகிறேன். அவ்வளவுந்தானே. நீங்கள் எல்லாம் எப்படி வந்தீர்கள் என்று நான் அறியேன்".
"இப் படித்தான் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் அனைவரும் கதை சொல்கிறவர்கள்".
"அது வேறு சிலராக, பலராக இருக்கலாம். நான் அவ்வாறானவன் இல்லை".
"நீங்கள் எதையும் மறுக்கலாம். அல்லது மறைக்கலாம். அது உங் களின் சுதந்திரம்”.
"நாண் ஒர் அப்பா வி. அபாண்டம். அபாண்டம்".
"நீங்கள் எதையும் ஓம் என்று ஒத்துக்கொள்வதில்லையே. அதுபோகட்டும் நீங்கள் எங்களின் வாழ்வு, வாழ்க்கைத் தர்மங்கள், நியா யங்கள் எதையும் அறியவும் மாட்டீர் கள். அறிந்து கொள்ளவும் மாட்டிர் கள். ஆகவே எங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங் கள்.
நாங்கள் இயற்கையுடன் இசைந்த வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கையான சூழலில் பறந்து திரிந்து, உண்டு மகிழ்ந்து, உறங்கி விழித்து, இன்பங்கண்டு இனம்பெருக்கி வாழ்ந்தவர்கள்.
இப்படியெல்லாம் ஆனந்தமாக வாழ்வு வாழ்ந்த எங்களைக் கூண்டில் அடைத்து வைத்திருப்பதை நீங்கள் அறிந்தும் அறியாமல் ‘யாமறியோம்' என்று சொல்கிறீர்கள்.
எங்களுக்கு விடுதலை
30
கிடைக்க வேணுமென்றால் உங் களுக்கு உங்களைப் போன்றவர் களுக்கு பிறந்ததினம் வரவேண்டும். அல்லது நாட்டுக்குச் சுதந்திர தினம் வரவேண்டும். சமாதான தினங்கள் வரவேண்டும். சமய அனுஷ்டான தினங்கள் வரவேண்டும். அப்பொழுது தான் கூவியழைத்துக் கொக்கரித்து எங்களை விடுதலை செய்வீர்கள்.
சுதந்திரமாக வாழ் நீத எங்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதாக கூறித் தந்திரமாக வைத்திருந்து பறக்க விடுகிறீர்கள்.
எங்களில் சிலரோ கோழித்தீனி யையும் குளோரின் நீரையும் பழக்க மாக்கிக்கொண்டு பறக்கவிட்டாலும் பறந்துவிட்டு மறுபடியும் கூண்டுக்குள் வந்து புகுந்துகொண்டு கொண்டைக் கடலையைத் தின்னத் தொடங்கி விடுவார்கள். பழகின தோசம் என்ன செய்வது?
தலைவரே எங்களின் இந்தக் கதையெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ?"
"மனம் வருந்துகிறேன் மாண்பு மிகு புறாவே, மனம் வருந்துகிறேன் மனங் கவர் வெண்புறாவே.
இவையொன்றும் எனக்குத்
 

தெரியவே தெரியாது. இந்தப் புறா பறக்கவிடும் விடயத்தில் இவ்வளவு துன்பமும் துயரமும் கண்ணிரும் விம்ம லும் பொருமலும் சோகக் கதைகளும் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் ‘இது பற்றி அதிகம் யோசிக்கவில்லை.
வெண் புறாவே இது பற்றி விசாரிக்க ஒரு விசாரணைக் கொமிசன் நியமிக்கப்படும். அவர்கள் மூன்று மாத காலத்தினுள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும். புறாவே ஒன்று சொல்லுகிறேன். புறா பறக்கவிடுதல்’ என்று ஒரு நிகழ்ச்சி - அவ்வளவுந்தான் எனக்குத் தெரியும்; வேறு ஒன்றும் நான் அறியேன். மன்னிக்கவேண்டுகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் வெண்புறாவே" தலைவர் கரங்கூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
வெண்புறாவுக்கு மன்னிக்கவும் என்ற வார்த்தைகளை இரந்து கேட்ட படியாலும், விசாரணைக் கமிசன் அமைத்தல் பற்றிச் சொன்னபடியா லும், எதிரி வலு இழப்பதை அறிந்த வீரன் உசாராகத் தாக்க முற்படுவது போல உரத்த குரலில், "சுதந்திரமாக இருந்த எங்களைப் பிடித்து அடைத்து பின் விடுதலை செய்தால் அந்தச் செயலை புனிதமான செயல் புண்ணிய கருமம், ஜீவகாருணியம் என்று எல்லாம் நினைக்கிறீர்கள், சொல்கிறீர் கள், அறிக்கையும் விடுகிறீர்கள். நீங்கள் செய்யும் செயல் அப்படிப்பட்ட புண்ணிய செயல் என்று வைத்துக் கொண்டு பார்த்தால், மிருகக் காட்சிச் சாலையில் எத்தனையோ பறவை இனங்கள், அவர்களும் எங்களைப் போன்றவர்கள், மயில்கள், குயில்கள், கிளிகள், வானம்பாடிகள், ஆந்தை கள், வல்லூறுகள், சிட்டுக்குருவிகள்,
3.
தூக்கணாங்குருவிகள், அன்னங்கள், காகங்கள், கழுகுகள், கருடன்கள் இப்படியே சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஏன் உலகில் உள்ள பறவையினங்கள் அனைத்தையும் அடைத்து வைத் திருக்கிறீர்கள். அத்துடன் உலகில் உள்ள அத்தனை மிருகங்களையும் அங்கே அடைத்து வைத்திருக்கிறீர்கள். கூண்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் 'இதுதான் எல்லாமி என்று எண்ணிக்கொண்டு கிணற்றுத்தவளைகளாக, கண்ணாடித் தொட்டி மீன்களாகக் காலந் தள்ள லாம். சுதந்திரம் என்ற சொல்லை அறியாமலே பறத் தல என்ற செயலைப் புரியாமலே தாவல் தெத்தல் என்பவைகளைச் செய்து கொணர் டு கூணி டுக் குள்ளேயே வாழ்ந்து குடும்பம் நடத்தி - இப்படியே எத்தனையோ தலைமுறைகளைக் கண்டு விட்டார்கள் எமது மிருகக் காட்சிச்சாலைச் சகோதரர்கள்.
சுதந்திரம் அவர்களுக்கும் வேண்டும். கட்டாயம் வேண்டும்.
நீங்கள் சொல்லலாம். அங்கு உள்ள அனைத்தும் தாராளமாக ஊர்ந்தும் உலாவியும் பறந்தும் தங்களின் வாழ்வை மகிழ்ச்சியாகக் களிக்கின்றன என்று. ஏன் யானைகள் கூட மாலையில் மைதானத்திற்கு ஓடி யாடி விளையாடி நடனமாடி நர்த் தனம் புரிநது எல்லோரையும் மகிழ் வித்துத் தாங்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்லலாம்.
ஏன்? தந்திரமாக அந்தக் கூண்டுவாழ் விலங்குகளுக்கும் நீங்கள் கூறலாம் ‘நண்பர்களே, நீங்கள் இந்தக் கூண்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டீர்கள். வனவாச வாழ்வு கஷ்டம் நிறைந்தது என்று சொல்லி அவைகளைக் கூண்டுக்குள்ளேயே

Page 17
தங்க வைத்துவிடுவீர்கள்.
அவைகள் புரட்சி செய்தால், பூட்டு உடைப்போம் என்று கோஷமிட் டால் குசுகுசு என்று கதைத்தால், உண்ணாவிரதமென்று ஏதும் ஆரம்பித் தால் உடனே உங்களுக்குச் சுதந்திர மான சலுகைகள் தருகிறோம் , உரிமைகள் கேட்க நீங்கள் உரிமை யற்றவர்கள், சலுகைகள் கேட்கவே சால்பு உடையவர்கள் நீங்கள் என்று கூறலாம்.
அவர்களுக்காக நீங்கள் கூண்டுகளைப் பெரிதாக்குவீர்கள். நீளத்தாலும் உயரத்தாலும் அகலத் தாலும் விரியும். இரும்புக் கம்பிகளுக் குப் பதிலாக தண்டவாளங்கள் பாவித்து உறுதியான கூண்டுகள் அமைப்பீர்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் அதற்குள் ஆடலாம், பாட லாம், ஒடியாடி விளையாடலாம். துள்ளியும் குதிக்கலாம். ஒன்றும் ஆகாது. பெரிய ஒலிம்பிக் மைதானம் மாதிரி ஆக்கித் தருவோம்' என்றும் சொல்லலாம். சும்மா சொல்லக்கூடாது கூண்டுகள் பெரிதானால் பூட்டுக்களும் பெரிதாகலாம்.
நீங்கள் எல்லாம் பெரிய பொய்யர்கள். ஏதோ எங்களைப் பறக்க விட்டு ஜீவகாருண்ய பிரசங்கம் செய்ய வேண்டாம். மிருகக் காட்சிச்சாலையில் இருக்கும் பறவையினங்கள் அனைத் தையும் திறந்து பறக்க விடமுடியுமா? முடியாதே. உங்கள் மனோபாவம் எப்படிப்பட்டது என்று சொல்லுகிறேன். பஞ்சவர்ண கிளி இருக்கிறதே அதுபோன்று பஞ்சவர்ண புறா ஒன்று இருப்பதாக அறிந்தால் காடுமுழுக்க வலைவீசி தேடிப்பிடித்து கூண்டிலடைத் துக் கொண்டுவந்து மிருகக்காட்சிச் சாலையில் உள்ள கூண்டில் விட்டு விடுவீர்கள். பத்திரிகைக் காரர்களும்
32
ஒலிக்கூட்டத்தாரும் ஒளிக்கூட்டத் தாரும் சும் மா இருப்பார்களா? பஞ்சவர்ண புராணங்கள் கூறத் தொடங்கிவிடுவார்கள்".
வந்து விழுந்த புறாவும் ஒரே மூச்சில் நல்லது கெட்டது, சம்மந்த முள்ளது இல்லாதது, சொல்லக் கூடியது சொல்லக்கூடாதது எல்லா வற்றையும் சொல்லித் தள்ளிவிட்டது. இருபத்தியொரு குண்டு போட்டதில் மூளை கலங்கிவிட்டதோ தெரிய வில்லை.
தலைவர்களின் பாணியில் பேசித்தள்ளிய புறாவைப் பார்த்தார் தலைவர்; யோசித்தார். இந்தப் புறா புரட்சி செய்யும்போல் இருக்கிறது. தெகிவளைப் பக்கம்போய் வகுப்புகள் நடத்தி வில்பத்து யாளை போன்ற தேசிய வனங்களுக்கும் போய் பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசங் களைப் பிரித்துக்காட்டி, பாடம் புகட்டி பிரச்சினை உருவாக்கும் போல் உள்ளது. ஆகவே அதற்குமுன் இதற்குச் சலுகைகள் கொடுத்து, ஆளை ஒருமாதிரி மடக்கி எடுக்க வேணும்; தலையிலே ஐஸ் வைக்க வேணும் என்று எண்ணிக்கொண்டு, தலைவர் புறாவிடம் சொல் லத் தொடங்கினார்.
"வெணி புறாவே இநீத விடயத்தை என்னிடம் சொல்லியது போல் உலக நாடுகளின் மகாநாட்டி லும் கூறவேண்டும். ஐ.நா.விலும் சொல்லவேண்டும். அந்த ஐ.நா.வின் கூட்டத்துக்கு இன்னும் ஐந்து மாதங் கள் இருக்கின்றது. அது மட்டும் எங்களுடன் இருந்தால் நல்லதுதானே. அரசாங்க உபசரிப்பு ஆகா ஒகோ என்று இருக்கும்” என்றார்.
“அடைத்து வைத்திருந்து பின்

சுதந்திரமாகப் பறந்து திரிய விட்ட என்னை மறுபடியும் தந்திரமாகக் கூண்டுக்குள் மடக்கப் பார்க்கிறீர்கள் அப்படித்தானே” என்று சொல்லிக் கொண்டு சட்டெனச் சிறகடித்துக் கொண்டு பறக்க முற்பட்ட புறாவைத் தலைவர் பக்கென்று பொத்தி மேசை யுடன் அமத்திப் பிடித்தார்.
இந்தப் பரபரப்பில் மேசையில் இருந்த மென்பானப்போத்தில் கீழே விழுந்தது. விழுந்ததோ தலைவரின் காலில். தலைவர் உடனே ஐயோ என்று மெதுவாகக் கத்தினார். வேதனை முகத்தில் தெரிந்தது. இந்தக் குழப் பத்திலும் புறா வைக் கைவிடவில்லை. புறாவை இறுக்கிப் பிடித்தார். விடுதலை வேண்டி நின்ற புறா கையில் கொத்தியது. காலால் விறாண்டியது. பக்கத்தில் நின்ற பாதுகாப்பாளன் பட்டன் பொல்லால் "சண்டித்தனம்’ விட்ட புறாவுக்கு மெல்லிதாக ஒரு தட்டுத்தட்டினார். வெண்புறாவோ மெல்லிய தட்டிலும்
பார்க்க மெல்லியது; மென்மையானது.
தட்டுக் கொஞ்சம் ஒவர். தட்டிய தட்டில் புறாவின் இரத்தம் தலைவரின் தேசிய உடையில் சீறிப்படிந்தது. வாகன விபத்தில் சிறுகாயங்களுடன் தப்பியவரின் உடைபோல் தலைவரின் உடையும் இருந்தது.
படப்பிடிப்பாளர்கள் சும்மாவா இருப்பார்கள். புறாவை மடக்கிப் பிடிக்கப்போனதையும் "கிளிக், மடக்கிப் பிடித்த புறாவுடன் கடுகடுத்த முகத்துட னும் "கிளிக், தடியடி நடந்தபோது "கிளிக், தேசிய உடையில் இரத்தக் கறையுடன் தலைவர் நின்றபோதும் "கிளிக். பத்திரிகைக் காரர்களுக்கு அம்பிட்டதெல்லாம் "கிளிக்".
தலைவருக்குத் தன்னைத்தான் பார்க்கவே வெட்கமாக இருந்தது.
33
தடியடியாரை கடுவல் பார் வை யொன்று பார்த்தார். அதனையும் கிளிக். தடியடி வேதனையுடன் கிடந்த வெண் புறா வை தடியடிக் காரரே அப்புறப்படுத்தினார்.
நடந்தது எதுவும் மக்களுக்குத் தெரியாது. மேடையின் விளிம்பி லிருந்து ஐம்பதுயார் தூரத்தில்தான் மக்கள் இருந்தார்கள். மக்கள் தலைவர்களை நெருங்க விரும்புவதை தலைவர்கள் விரும்பவில்லை . மேடை யின் உயரமோ பத்தடி இருக்கும்போது இங்கு நடந்தவை எதுவுமே மக்களுக் குத் தெரியாது என்று மனத்துள் சொல்லிக் கொண்டார் தலைவர். எனினும் இந்தப் பத்திரிகைக்காரர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். இந்தப் படங்களைப் போட்டு ஏதும் எழுதி னால்? அகிம்சா தத்துவம், பஞ்சசீல தத்துவம், சமாதான தத்துவம், வெண்புறா தத்துவம் எல்லாம் தவிடு பொடியாகிவிடும். மனம் வெதும்பிக் கொண்டிருந்தார்.
விழா இனிதே பல நிகழ்ச்சிகள் நடந்து கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. சகல பத்திரிகைக் காரியாலயங்களுக்கும் தலைவரின் காரியாலயத்திலிருந்து பாக்ஸ் செய்தி அனுப்பப்பட்டது. செய்தியில்,
"வெண்புறா பறக்கவிட்ட படம் மட்டுமே போடவேண்டும். வேறு எது வும் போடவேண்டாம். இது தலைவரின் தாழ் மையான ஆணை. இநீத ஆணையை எவரும் மீற முற்படவேண் LTLň'.
பத்திலை வியாழன் வரும். அப்பொழுது இந்தப் படங்கள் போட லாம் என்று பத்திரிகையாசிரியர்கள் தீர்மானித்துக்கொண்டார்கள்.
மறுநாள் பாக்ஸ்' செய்திக்கு ஏற்ப பத்திரிகைகள் வெளிவந்தன.

Page 18
நெற்றிக்கண்
நால் விமர்சனம்
நூல் : பாற்காவடி எழுதியவர் : சு.வே.
சு.வே. (சு.வேலுப்பிள்ளை) என்ற பெயர், ஈழத்து இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. சிறுகதை, உருவகக்கதை, நாடகம், சிறுவர் இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டு உழைத்தவர், அவர். 1943 முதல் சிறுகதைத்துறையில் ஈடுபட்டு வந்துள்ள சு.வே.யின் சிறுகதைகளின் முதல் தொகுதி (1972) வெளிவந்து முப்பது ஆண்டு களின் பின்னர், முன் வெளிவந்த சிறுகதைகளையும் உள்ளடக்கி, இருபது சிறுகதைகளைக் கொண்ட தொகுதியாகப் பாற்காவடி (2002) என்னும் நூல் வெளிவந்துள்ளது.
இருபது சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதியில் சில படைப்புகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. மண்வாசனை, பூ, அக்கினி, புகை, பெரியம்மா ஆகிய சிறுகதைகள் நேர்த்தியான படைப்பு களாக விளங்குகின்றன. பாற்காவடி, கிடைக்காத பலன், ஸ்ரைக், தோழன், காலத்தின் தண்டனை, தகிப்பு, அன்புக் கறை, பாரிசவாதம் முதலியன குறிப் பிடத்தக்க சிறுகதைகளாக அமைந் துள்ளன.
சு.வே. இயல்பாகவே படைப் பாற்றல் மிக்க எழுத்தாளர். அவரின் சிறுகதைகளில புத் தம் புது உவமைகள் பொருத்தமான முறையில் இடம் பெற்றுள்ளன. மண்வாசனை துலங்க எழுதுவதில்
34
அவர் கைதேர்ந்தவர். கலையழகுடன் கதை சொல்வதிலும் அவர் வல்லவர். ஆயினும், ஓரிரு சிறுகதைகளைத் தவிர, அவரது பெரும் பாலான படைப்புகளில் இடம்பெறும் பாத்திர உரையாடல் களில் , அவ்வப் பாத்திரத்துக் கு Զ - fflա பேச்சுவழக்கைப் பயன்படுத்த அவர் தவறிவிட்டார். பேச்சுவழக்கைச் சிறுகதை தோறும் பாத்திர உரை யாடல்களில் பயன்படுத்தியிருப்பாரா யின், அவரது படைப்புகள் மேன் மேலும் மேன்மை பெற்று விளங்கி யிருக்கும்; யாதார்த்தபூர்வமானவையா கவும் அவை அமைந்திருக்கும். சு.வேயின் பல சிறுகதைகளில் பாத்திர வார்ப்புச் சிறப்பாக அமைந்திருந்த போதிலும், பாத்திர உரையாடல்கள் செந்தமிழில் செயற்கையாக விளங்கு கின்றன. பேச்சுவழக்கைச் செம்மை யாகப் பயன்படுத்தத்தக்கவர் அவர் எண் பதை, அவரது ஒரு சில படைப்புகள் இனங் காட்டுகின்றன.
அச்சுப்பிழைகளே இல்லாமல் நூலொன்றும் வெளிவரமாட்டாதா என்று ஏங்குகின்ற நெஞ்சங்களை மேலும் ஏங்கவைக்கும் முறையில் ஆங்காங்கே சில அச்சுப்பிழைகள்
நூலில் இருப்பிடம் தேடிக் கொண்டுள்ளன. இவற்றைத் தவிர்த் திருக்கலாம்.
பாற் காவடி என்னும் இத் தொகுதி, சு.வே. என்னும் படைப்பாளி சிறுகதைத்துறையில் இன்னும் சாதித் திருக்கலாம் என்னும் அங்கலாய்ப்பை

ஏற்படுத்துகிறது எனினும், இந்நூலின் வரவு வரவேற்கத்தக்கது.
நூல் : கேணிப்பித்தன் கவிதைகள் எழுதியவர் : ச.அருளானந்தம
மரபுக்கவிதை, புதுக்கவிதை என்று கவிதைகளின் காதைப் பிடித்துத் திருகுவது தேவையற்றதே. ஆயினும், மரபுக்கவிதை என்ற அடையாளத்தில் ஓசை ஒழுங்கை மட்டுமே கவனத்திற் கொண்ட கவிதைகளும், புதுக்கவிதை என்ற பெயரில் வரிசை வரிசையாக எழுதப்பட்ட வசனங்களுமே பெரும் பாலும் உலா வருகின்றன. இரு சாராரும் ஏதோவொன்றைப் பற்றிக் கொண்டு, அதுவே கவிதை என மயங்குகின்றனர். ஆனால், தரமான கவிதை இவர்களுக்கு எட்டாத மிகத் தொலைவில் வசதியாக ஒளிந்து கொள்கிறது.
கேணிப்பித்தன் என்ற புனை பெயரில் எழுதிவரும் ச.அருளானந்தத் தின் கேணிப்பித்தன் கவிதைகள் (2002) என்ற நூல் இவ்வாண்டில் வெளிவந்த கவிதைத்தொகுதிகளுள் ஒன்றாக விளங்குகின்றது. மரபு முறையில் எழுதிய முப்பது கவிதைகள் இந் நுாலிலி இடம் பெற்றுள் ளன. இத்தொகுதியில் காதல், சமுதாயம், அங்கதம், தத்துவம் தொடர்பான படைப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் பேனே புகல்வாய், வா வா நண்பனே, தொடரவிடலாமா ஆகிய மூன்று கவிதைகளும் அருளானந்தத்தின் கவிதா ஆற்றலை இனங்காட்டும் படைப்புகளாக மிளிர் கின்றன. வேறு சில கவிதைகள் குறிப் பிடத்தக்கவையாக விளங்குகின்றன. ஒற்றுமையாய் வாழ்வோமே என்ற படைப்பு சிறுவர் பாடல் வகையுள்
3S
சேர்க்கத்தக்கது.
இந்நூலிலுள்ள பெரும்பாலான கவிதைகள் மரபுக் கவிதைக்குரிய ஒசையொழுங்கைப் பேணுவதிலேயே, கண்ணுங்கருத்துமாக இருந்துள்ளன. ஓசையை ஒழுங்காகப் பாதுகாப்பது மட்டுமே கவிதைக்குப் போதுமான தன்று. பாரதி, பாரதிதாசனுக்குப் பின்னர் சிந்து யாப்பு முக்கியத்துவம் இழந்துவிட்டது. அவர் களது. கரங்களில் கோலோச்சிய அந்த யாப்பு, பின்வந்த பல கவிஞர்களால் கனதியற்று ஒசைக்காகப் பயன்படுத் தும் யாப்பாகத் தடம் புரண்டுவிட்டது. இத்தொகுதியில் உள்ள கணிசமான கவிதைகளும் சிந்து யாப்பில் அமைந்தவையே. அவற்றுட் பல உயிரற்ற வெற்றுடல்களாகக் காணப் படுகின்றன. உருவமும், உள்ளடக் கமும் ஒத்தியங்கும்போதே சிறந்த இலக்கியம் பிறக்கமுடியும். அதற்கு இலக் கியவாதியின் ஆற்றலும் , ஆளுமையும் மேம்படவேண்டும். ஒரு விடயத்தை ஒரு வடிவத்திற் சொல்வ தால் மாத்திரமே அது இலக்கியமாகி விடாது. கேணிப்பித்தனின் கவிதைகள் விடயத்திலும் இத்தகைய குறைபாடு கள் உள்ளன.
அழகான அட்டையையும் , தெளிவான அச்சையும் கொண்ட கேணிப்பித்தன் கவிதைகள் என்ற இந்நூல், கவிதைக் கனதியாலும் உயர்வடைந்திருக்கலாம் ஆயினும், கவிஞரினி கவிதா ஆர்வம் வரவேற்கத்தக்கது.
நூல்: அருளாளர் அந்தோனியார்
எழுதியவர் : வாகரைவாணன்.
வாகரைவாணன் பன்னூல்
ஆசிரியர்; தமிழ் இலக்கிய உலகுக்கு

Page 19
நன்கு பரிச்சயமானவர். அவரது அருளாளர் அந்தோனியார் என்ற நுாலி , இரு பதிப் புகளைக் கண்டுள்ளது. இருபத்து மூன்று பக்கங்களைக் கொண்டதாக அதன் SJ 600i LIT Ló பதிப்பு (2001) வெளிவந்துள்ளது. போர்த்துக் கலி லைச் சேர் நீ த புனிதரான அந்தோனியாரின் வாழ்க்கை வரலாற் றையும் , ஆத்மீக நெறி நின்ற அவரின் சிறப்புக்களையும் தெளிவான முறையில் எடுத்தியம்பும் முறையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இந்த நூலைப் புதுக் கவிதையில் படைப்பதாகக் கருதி, வசனத்தில் ஆக்கியுள்ளார், ஆசிரியர். பொதுவாகவே வாகரைவாணனின் "புதுக்கவிதைகள்" அசல் வசனங்களா கவே அமைந்துவிடுவதுண்டு. இந்நூ
லிலும் அதே முறை பின்பற்றப் பட்டுள்ளது. புதுக்கவிதை என்ற பெயரில் வசனங்களை எழுதித் தள்ளும் பெருங் கூட்டத்தினருள் ஒருவராகவே இலக்கிய அநுபவம் வாய்ந்த வாகரை வாணனும் இணைந் துள்ளார் என்பதை இந்நூல் தெளி வாக உணர்த்துகிறது.
இந்நூலை யாழ்ப்பாண இலக் கிய அமைப்பு, ஒன்று காவியம் சார்ந்த சிறந்த நூல்களுள் ஒன்றாகத் கருதிப் பரிசளித்துள்ளது. சிறந்த வசனநூல் என்று கருதி அந்த அமைப்புப் பரிசளித்திருக்குமாயின், மிகப் பொருத்தமான தேர்வாக அமைந் திருக்கும்.
எதிர் காலத்தில் வாகரை வாணனிடமிருந்து தரமான கவிதை நூல்களை எதிர்பார்க்கிறோம்.
"ஞானம் தொகும்மு(4-24)
யப்பட்டு விற்பனைக்குள்ளன.
சிவகுமாரன், பொன்.
ஞானம் சஞ்சிகையின் 1 முதல் 24 வரையிலான - இரண்டு வருடங்களில் வெளிவந்த இதழ்கள், சிறந்த முறையில் "பைன்ட் செய்
இதில் எஸ்.பொ., டொமினிக் ஜீவா, எம்.ஏ.நுஃமான், செ.யோகநாதன், வ.அ.இராசரத்தினம், அருண் விஜயராணி, கே.எஸ். பூலோகசிங்கம், கவிஞர் அம்பி, த.கலாமணி, லெமுருகபூபதி ஆகியோரின் 11 நேர்காணல்கள் அடங்கியுள்ளன.
அத்தோடு 6 கவிஞர்களின் 152 கவிதைகளும், 33 எழுத்தாளர்
களின் 43 சிறுகதைகளும், ஒரு குறுநாவலும், 19 இலக்கியப் பணி புரிவோரினர் விபரங்களும், 26 நூல்களின் விமர்சனங்களும், 29 இலக்கியக் கட்டுரைகளும், தெளிவத்தை ஜோசப், முல்லைமணி, அணி புமணி, சாரல் நாடனி ஆகியோரின் "எனது எழுத்துலகம்" கட்டுரைகளும், பத்தி எழுத்துக்கள், வாசகர் பேசுகிறர், புதிய நூலகம் ஆகியனவும் அடங்கியுள்ளன.
115 வெவ்றுே படைப்பாளிகளின் ஆக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பு 800 பக்கங்களைக் கொண்டது. இந்தத் தொகுப்பின் விலை ரூபா 500/- (பைன்டிங்" தபாற் செலவு உட்பட)
மனியோடர் அல்லது காசோலை அனுப் பரிப் பெற்றுக்
கொள்ளலாம். ܚܠ
36
 
 
 
 
 
 
 
 
 
 

திரும்பிப் ார்க்கிறேண்
அந்தனிஜிவா மீண்டும் உயிர்த்தெழுகிறது! ۔۔۔۔۔ இறந்த சாம்பலிலிருந்து "பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர்த்தெழுவதைப்போல.
மீண்டும் யாழ்நகர் உயிர்த்தெழுவதை நேரிலே கண்டேன். யாழிலில் நடைபெற்ற 'மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வில் கலக்கச் சென்றேன். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ் மண்வில் கால் வைத்தேன். அந்தப் புனித பூமியில் என் காலடியைப் & பதித்தேன். - - - - , ,
வவுனியாவிலிருந்து யாழ் செல்லும்வரை, வீரம் விழைந்த யாழ் மண்ணில் எப்பொழுது கால் பதிப்போம் என்ற ஆவலுடன் விழிகளை விரியத் திறந்தபடி பார்த்துக்கொண்டே சென்றேன்.
எத்தகைய அழிவு. அப்பப்பா நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. மலையகப் பிரதிநிதியாக என்னோடு "ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரனும் வந்திருந்தார்.
காலை ஐந்து மணிக்கு கண்டியிலிருந்து நாங்கள் இருவரும் பயண மானோம். நாங்கள் சென்ற வண்டி முறிகண்டியில் நின்றது. இறங்கி பகலுணவை முடித்துக்கொண்டு திரும்புகையில், என் முன்னால் சென்றுகொண்டிருந்தவரைப் பார்த்து என்னையறியாமலே "இன்குலாப்" என்று கத்திவிட்டேன். எங்கள் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கவிஞர் இன்குலாப். அவருடன் ஒவியர் மருது, எழுத்தாளர் செயப்பிரகாசம். இந்த மூவரையும் எனக்கு ஏற்கனவே தெரியும். தமிழ் இனி ஒன்று கூடலுக்குச் சென்றபோது சந்தித்து உரையாடியுள் ளேன். அந்த மூவரையும் “ஞானம்' ஞானசேகரனுக்கு அறிமுகப்படுத்தினேன். அப்போது மேலும் இருவர் அவர்களோடு வந்து இணைந்து கொண்டார்கள். அவர்களை எங்களுக்கு கவிஞர் இன்குலாப் அறிமுகப்படுத்தினார். அவர்களில் ஒருவர் திருமாவளவன். மற்றவர் "காற்று என்ன வேலி திரைப்பட இயக்குனர் புகழேந்தி.
மானுடத்தின் ஒன்றுகூடலில் சந்திப்பதாகக் கூறி விடைபெற்று எங்கள் வண்டிகளில் ஏறிக்கொண்டோம். வழியில் கிளிநொச்சியில் 'அறிவு அமுது பொத்தகசாலை. எங்களுக்குக் கண்டியில் கிடைக்காத சிறுசஞ்சிகைகளை அங்கு கண்டேன். பின்னர் வழியெங்கும் எரியுண்ட ஊர்களே காட்சியளித்தன. சாவகச்சேரிதான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. செம்மணியையும் பார்த்தோம். வை.எம்.சி.ஏ. விடுதியில் தங்கியபொழுது, இரவெல்லாம் யாழ்ப்பாணத் தைப் பற்றிய நினைவுகள்தான். ஒரேநாட்டில் சொந்தச் சகோதரர்களாக வாழ்ந்த இனம் இப்படி இருகூறாகப் பிரிந்து நிற்கிறதே.
மறுநாள் இனிய பொழுதாக விடிந்தது. என்னுடன் தங்கியிருந்தவர்
37

Page 20
கலைஞர் ஏ.ரி.அரசு. காலையில் ஈழநாடு, உதயன், வலம்புரி ஆகிய யாழ்ப் பாணத்தில் வெளிவரும் தினசரிகளை ஒரு தம்பி கொண்டுவந்து தந்தார். பின்னர் காலை உணவை முடித்துக்கொண்டு விழா நடைபெறும் வீரசிங்கம் மண்டபத்திற்குச் சென்றோம். மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மண்டபத் தின் நுழைவாயில் அருகில் சென்றபோது ஒருவர் ஓடிவந்து பாசத்துடன் தழுவிக்கொண்டார். அவர் வேறுயாருமல்ல, பேராசிரியர் சண்முகதாஸ். அவர் மீது எனக்குப் பெருமதிப்புண்டு. எத்தனைகாலம் சந்திக்காத இனிய இதயங்கள் பலரைக் கண்டேன்.
அங்கிருந்த முக்கியமான ஒருவரிடம் “கவிஞர் புதுவை எங்கே?" எனக்கேட்டேன். என்குரல் கேட்டதும் அருகில் வெண்ணிற முடியுடன் கம்பீரமாக நின்ற ஒருவர் என்னைக் கட்டிப்பிடித்து என்னை அடையாளம் தெரியவில்லையா? என்றவாறு என்னைப் பார்த்தார். அவர்தான் கவிஞர் புதுவை இரத்தினதுரை. கே.டானியலின் ஸ்ரார் கரேஜில் ஒன்றாயிருந்து பலதும் பத்தும் பேசியதும், கவிஞர் சில்லையூர் செல்வராசனின் சில்லாலை வீட்டில் உணவு உண்டு மகிழ்ந்ததும், கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மாஸ்டரை தேடிச்சென்றதையும் இருவருமே நினைவு கூர்ந்தோம்.
‘மானுடத்தின் தமிழ்க்கூடல் 2002 என்ற கலை இலக்கிய பண்பாட்டு விழா மிகச்சிறப்பாக கட்டுக்கோப்பாக நடைபெற்றது. விழாவினை பேராசிரியர் கா.சிவத்தம்பி தொடக்கிவைத்து மிகச்சிறப்பான ஓர் உரையை நிகழ்த்தினார். “எமது தமிழ் மக்களின் போராட்டத்தின் தர்மத் தன்மைகள் உண்மைத் தன்மை களை வெளியுலகுக்கு எடுத்துக்கூறும் ஒரு குரலாக இந்த மானுடத்தின் தமிழ்க் கூடல் அமையும் என நம்புகிறேன்". இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய நிலாந்தனின் உரை என் நெஞ்சைத் தொட்டது. மறுநாள் ஞாயிறுகாலை ஈழநாடு உதயன், வலம்புரி, தினக்குரல் - யாழ்ப்பதிப்பு ஆகியவற்றை வாங்கிக் கொண்டேன். யாழ்மாவட்டத்திலிருந்து 4 தினசரிகள் வருகின்றன. ஒன்று மாத்திரம் கிளிநொச்சியிலிருந்து வருகிறது. அதுதான் ஈழநாதம்.
செம்மணி, ஆனையிறவு சம்பவங்களைக் கவிதைகளாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இவை எல்லாம் வரலாற்று ஆவணங்களாகும்.
கொழும்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கட்டுரை வாசிக்கவேண்டியிருந்ததால், மானுடத்தின் ஒன்று கூடலில் கலந்துவிட்டு மூன்று இரவுகள் யாழநகரில் கழித்தேன்' என்ற இனிய நினைவுகளோடு கண்டி திரும்பினேன்.
எரியுண்ட நகரம் மீண்டும் உயிர்த்தெழுவதை நேரில் காணும் வாய்ப்புக் கிட்டியது. யாழ்நகர் எதிர்காலத்தில் இலங்கையில் மிகச்சிறந்த நகரமாக உயிர்த்தெழும். ܫ
கலை, கலாசாரம் எந்தவித பாதிப்புமின்றி சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. சின்னஞ்சிறிய நகரத்திலிருந்து 4 பத்திரிகைகள் வெளிவருவதே அவர்களின் வளர்ச்சியைக் காட்டுகிறது. அதனால் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் நாம் பிரமிப்பு அடையும் அளவுக்கு யாழ்ப்பாணம் (வடக்கு) ஒரு பேசப்படும் நகராக அமையப்போவது நிதர்சனமாகும்.
3 R

ஞ்சைக் கடிதம்
வமகேஸ்வரன், தஞ்சாவூர்.
தமிழகமெங்கும் விஜயதசமி, ஆயுதபூஜை என ஆரவாரங்கொண்ட ஒரு மாலையில் தென்னகப் பண்பாட்டு மையம் ஒசைப்படாமல் பொம்மலாட்ட நிகழ்ச்சியொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. சிங்கள நாடக மரபில் நிகழ்த்தப்பட்டுவரும் 'ருகொட டான்ஸ"வ பாணியிலேயே இது நிகழ்த்தப்பட்டது. எனினும் சிங்கள நாடக மரபில் பொம்மைகள் ஒற்றைப்படைத்தன்மை கொண்டன. இவை முப்பரிமாணத் தன்மை கொண்டன. சுமார் ஒன்றரை அடியளவே உயரமுள்ள இப்பொம்மைகள் பாத்திரத்திற்கேற்ப அழகாக ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. மேடையிலேயே சிறிய அளவில் திரையும், மேடையும் அமைக்கப்பட்டிருந்தன. பொம்மைகளை இயக்கும் இருவர் காலில் சதங்கைகள் கட்டிக்கொண்டு அவற்றை இயக்குவதற்கான நூல்கள், கம்பிகளுடன் திரைமறைவில் நின்றனர். அவர்களுக்குப் பின்னால் இசை, வாத்தியக் கலைஞர்கள் ஒரு நாடகம் ஆரம்பிக்கும் பாணியில் அட்டகாசமாக ஹார்மோனியமும், தபேலாவும் இசைகூட்ட, கடவுள் வணக்கத்துடன் நாடகம்/ ஆட்டம் ஆரம்பமாகியது. அன்றைய கதை விநாயகர் விஜயம். நம்பியாண்டார் நம்பியின் கதையுடன் தொடர்புபடுத்தியதாக கதை நகர்ந்தது. பிள்ளையார் துதிக்கையை அசைத்துப் பேசினார். கட்டியகாரர்கள் இடையிடை வந்து நகைச்சுவை வெடிகளை உதிர்த்துப் போயினர். கரகாட்டமும், கும்மியும், பொய்க்கால் குதிரையாட்டமும் இடையிடையே தாளக்கட்டுத் தவறாமல் ஆடப்பட்டன. சுமார் இரண்டு மணிநேரம் பார்வையாளரைக் கட்டிப்போட்டு விட்டனர். இந்தவகை ஆட்டத்தில், ஆட்டுவித்தல், இசை, உரையாடல் மூன்றும் கனகச்சிதமாக ஒரேநேரத்தில் ஒத்திசைவதே அதன் வெற்றியாகும். கலைஞர்கள் அனைவரும் திரைமறைவில் இருந்துகொண்டு பொம்மைகளை உயிர்ப்பிப்பது சாதாரணமானதல்ல. பொம்மைகளை ஆட்டுபவரது கவனம் கணநேரம் பிசகினா லும் அபஸ்வரமாகிவிடும். அவ்வளவு கவனத்துடன் இது நடந்தது. உரையாடல் பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும். இரண்டு கலைஞர்கள் (ஆண் + பெண்) உரையாடினர். சரித்திர சம்பவத்துக்கும், புராண சம்பவத்துக்கும், நகைச்சுவைக்கும் ஏற்றாற்போல் மொழியின் தன்மையை வடிவம்ைத்துக்கொண்டு உரையாடினர். பிராமணாள் பாஷையைக்கூட "நன்னா, பேஷா அசத்திட்டா போங்கோ" நமது ரீ.என்.எல்.தொலைக்காட்சி சேவையில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பான அரசியல் எள்ளல் பொம்மலாட்டம் ஒன்றும் என் ஞாபகத்துக்கு வந்து போனது.
39

Page 21
விவாத மேடை
"கிளாக்கர்ப் புத்தி
"உலகம் முக்கில் விரல் வைக்குமாற்போல்,
பெரிதாய் புரட்சியும், புதுமையும் செய்த பேரறிஞர்கள்,
எந்தத்துறையிலும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாய்த் தெரியவில்லை." - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
வேண்டும் :- கோடாத நெஞ்சு "வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று வீரம் பேசக்கூடிய நமது சமூக அறிஞர்கள் இப்படிச் சாதாரண மனிதர்களாக இருப்பார்களென்று நான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. சர்ச்சையாகப் பேசப்பட்ட கம்பவாரிதி இ.ஜெயராஜின் கிளாக்கர்ப்புத்தி கட்டுரைக்கு ஞானம் இதழின் வாசகர் கடிதம் பகுதி மூலம் பதிலளித்த பல அறிஞர்களின் கடிதங்களினை வாசித்ததே இவ் உண்மை எனக்குப் புலப்பட்டது. கிளாக்கர்ப்புத்தி கட்டுரையின் சரி பிழைகளை அலசுவதோ, அல்லது பதில் கடிதம் எழுதியவர்கள் மீது குற்றம் காணுவதோ எனது நோக்கமல்ல. சமூக அறிஞர்கள் என தம்மை இனங்காட்டிவிட்ட பின்பு நாம் எப்படியெல்லாம் நடக்கக்கூடாது எனச் சொல்வதே எனது நோக்கம்.
நாம் சாதாரண மனிதர்களாயிருந்தால் பரவாயில்லை. நாம் தவறுகளும் அறியாமைகளும் நம்மை மட்டுமே பாதிக்கும். ஆனால் நாம் சமூக அறிஞர் களாகிவிட்டோமானால் நம் தவறுகளும் அறியாமைகளும் முழுச் சமூகத்தை யுமே பாதிக்கும். இவ்வுண்மையை முதலில் நாம் அனைவரும் உணரவேண்டும். உண்மையை ஏற்றுக்கொள்ளமை எம்மிடமுள்ள மிகப்பெரிய குறைபாடு. அதைவிட மிகப்பெரிய குறைபாடு உண்மையற்றதை உண்மையாகவும் உண்மையை உண்மையற்றதாகவும் நிரூபிக்க முயல்வது. இதற்கு நாம் வசதியாக அறிவியலைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.
உதாரணமாக ஒரு பையன் சிகரட் வாங்குவதற்காக கடைக்குப் போகிறான். கடையிலிருந்து திரும்பி வரும்போது தந்தை எதிர்ப்படுகின்றார். எங்கே போனாய் எனக் கேட்டபோது கடைக்குப்போனதாகவே சொல்கிறான். எதற்காக எனக் கேட்டபோது 'பேனா வாங்க எனச் சொல்கின்றான். இங்கு காரணம் ஏற்கக் கூடியதாக இருந்ததால் அவன் சொன்னதை தந்தை உண்மை யெனவே நினைக்கின்றார். ஆனால் அவன் சொன்னது பொய். இதே போன்றுதான் இலக்கிய உலகிலும் சில வேளைகளில் நியாயமான உண்மை களை ஏற்க மறுத்து ஏற்கக் கூடிய காரணங்களைச் சொல்லி சில விடயங்களை உண்மையென நிரூபிக்க முயல்கின்றார்கள். ஆனால் ஏற்கக் கூடிய காரணங் களை உடைய விடயங்கள் எல்லாம் உண்மையான விடயங்கள் என்பதற்
40 V

கில்லை. அவை உண்மையில்லாததாகவும் இருக்கலாம். ஒரு விடயத்தின் உண்மைத்தன்மை நடு நிலையோடு அணுகாமை எமது மிகப்பெரிய குறைபாடு. நாம் எப்போதும் ஏதாவதொரு அளவுகோலை வைத்துக்கொண்டே விடயங்களை அணுகப் பழக்கப்பட்டிருக்கிறோம். இதனால் நடுநிலையிலுள்ள உண்மையான விடயங்கள் கூட அளவுகோலுக்குப் பொருந்தாததால் புறக்கணிக்கப்படும் நிலைக் குள்ளாகின்றன. இந்நிலை மாறவேண்டும். மரபு அளவுகோல், நவீன அளவு கோல், மார்க்ஸிய அளவுகோல் இப்படிப் பல்வேறு அளவுகோல்கள் நமது இலக்கிய உலகைப்பாதித்து வருகின்றன. இவற்றிலிருந்து நாம் விடுபடவேண்டும். அப்போதே நம்மால் நேர் நின்று உண்மையைத் தரிசிக்க முடியும்.
"கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி” ச.பாஸ்கரன் மாற்றுக்கருத்துக்களுக்கான மையம், கொழும்பு.
கம்பவாரிதிக்கு ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை? என்ற தலைப்பில் சு.அரவிந்தன் எழுதிய கருத்துக்கள் யாவும் மிகவும் சரியானவையே. தமிழகத் தவரின் இடைவிடாத பிரசாரத்தால் பல பிழையான விடயங்கள் தமிழ்கூறு நல் உலகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லி பிரசாரம் செய்வதற்கும் அவற்றை ஏற்றுக்கொள்வதற்கும் அங்கு பிரசுரகளங்களும் வாசகர்களும் அதிகம் இருப்பதுதான் காரணம். அரவிந்தனின் குறிப்பில் விட்டுப்போன விடயங்கள் சில என்நினைவில் வந்தன. அவற்றை வாசகர்களுக்கு கூறுவதே இக்கடிதத்தின் நோக்கம்.
குழந்தை இலக்கியப் பாடற் தொகுதியொன்று முதன்முதலில் ஈழத்திலேயே வெளிவந்தது. 1918இல் வைத்திய நாதர் என்பவரால் குழந்தைப்பாடல் தொகுதியொன்று வெளியிடப்பட்டது. அதன்பின்னர், க.ச.அருநந்தி என்பவர் தொகுத்த “பிள்ளைப்பாட்டு' எனும் தொகுதி 1935இல் வெளிவந்தது. தமிழில் தோன்றிய குழந்தை இலக்கிய முதல் முயற்சிகளாக இவை அமைந்துள்ளன. குழந்தை இலக்கியம் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்நாட்டிலே குழந்தை இலக்கியத் தொகுதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே குழந்தை இலக்கியத்தைத் தொகுதியாக வெளியிடும் பண்பு ஈழத்திலே தோன்றிவிட்டது. இக் கருத்தை தமிழக குழந்தை இலக்கியக்காரர்களான பூவண்ணன், அழ.வள்ளியப்பா போன்ற குழந்தை இலக்கியக் கலைஞர்கள் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்தது, நாவலிலக்கியம் தொடர்பானது. முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் 1879ஆம் ஆண்டு மாயூரம் ச.வேதநாயகம்பிள்ளை யால் எழுதப்பட்டது என்றும் ஈழத்தின் முதல் நாவல் ‘அசன்பேய் உடைய கதை 1885ஆம் ஆண்டு சித்திலெவ்வை மரைக்கார் என்பவரால் எழுதப்பட்டது என்றும் கூறுவது வழக்காகிவிட்டது. ஆனால் 1856ஆம் ஆண்டிலேயே “காவலப்பன் கதை என்ற ஈழத்து தமிழின் முதல் நாவல் வெளிவந்துவிட்டது எனக்கூறுகிறார் மு.கணபதிப்பிள்ளை. காவலப்பன் கதை Parley The Porter என்ற ஆங்கில நாவலின் தமிழ் வடிவமாகும். இது மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி இராமாயணம் தமிழ் வடிவம்பெற்று கம்பராமாயணமாக வந்து,
41

Page 22
அதனைத் தமிழுலகம் ஏற்றுக்கொண்டுள்ளதுபோல் இந்த காவலப்பன் கதையின் தமிழ் வடிவத்தையும் நாம் ஏற்றுக்கொண்டு இந்நாவலை தமிழின் முதல் நாவலாகக் கொள்ளவேண்டும் என்று செங்கையாழியான் அபிப்பிராயப்படுகிறார். எனவே இப்படியான விடயங்களை ஈழத்தமிழறிஞர்கள் சரியான முறையில் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானதாகும். கம்பவாரிதி போன்ற அறிஞர் களே இப் பணியினைச் செயப் யலாம் . வி.சண்முகலிங்கம், கரவெட்டி.
ஒரு சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை பற்றிய கருத்துக்கள் அதே சஞ்சிகையில் வெளிவருவதுதான் இலக்கிய நியாயம். ஆனால், கேள்வி தூண்டிலில் அல்லவா கேட்கப்படுகிறது. பதில் சொல்வது எனது தார்மீகக் கடமையாகிவிட்டது. கருத்துச் சொல்வது யாருக்குமே ஜனநாயக உரிமை. எதிர்க்கருத்துகள் கூறுவதுகூட அதே ஜனநாயக உரிமைதான். நட்பாகப் புழங்குவது - பழகுவது - மதிப்பது என்பது குறைந்தபட்ச நாகரிகங்களில் ஒன்று. அதற்காகச் சகலவற்றிலும் கருத்தொற்றுமை உண்டு எனக் கருதுவது சரியான வாதமாகப் படவில்லை. ஜெயராஜ் அவர்களது ஞானம் கட்டுரையில் மாத்திரமல்ல, அவரது மேடைக் கருத்துகள் பலவற்றிலும் எனக்கு உடன்பாடில்லை. அதற்காகத் தனிப்பட்ட பகை உணர்வும் இல்லை.
பாரதி, புதுமைப்பித்தன் ஏன் ஜெயகாந்தன்கள் கூட நம் மண்ணில் தோன்றவில்லையே என ஆதங்கப்படுகிறார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தருமு சிவராமு அவர்கள் சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் செய்த இலக்கியச் சாதனைகள் பிரமிப்பூட்டுவன. நமது தளையசிங்கம் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுத்தடம் பதித்து, புதிய தத்துவ தரிசனத்திற்குத் தமிழ்ப் படைப்புமொழியை அழைத்துச் சென்றவர். இவர்களது கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை அல்ல. நான் மதிக்கும் டில்லித் தமிழ் எழுத்தாளர் அம்பை ஒரு நேர்ப்பேச்சில் "டானியல் அவர்களுடன் நான் ஓர் ஐந்து நிமிடம் மனம் விட்டு உரையாடி, அவருடன் தேநீர் அருந்தவில்லையே என்ற கவலை என் நெஞ்சை அரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ‘தலித் இலக்கியத்தின் முன்னோடி என அவர் தமிழக புத்திஜீவிகளால் பாராட்டப்பட்டுள்ளார். உலகத் தரத்திற்கு நம்மிடையே ஒருவரும் இல்லையே என அங்கலாய்ப்பது சரியான பார்வையாகாது. ஏன் மல்லிகையையே எடுத்துக்கொள்ளுங்கள். க.சு, வல்லிக்கண்ணன, ரகுநாதன், செல்லப்பா, விஜயபாஸ்கரன், ஜெகாந்தன் ஆகியோர் நடத்தித் தோல்வி கண்ட சிற்றிலக்கிய ஏடுகளின் வரிசையில் இன்னும், இன்றும், தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் இலக்கிய ஏடு மல்லிகை தானே. நான் சில சமயங்களில் ஆழமாக யோசிப்பதுண்டு. இந்த மண்ணுக்கு சில பிரத்தியேக குணாம்சங்கள் உண்டு. உலகமே நமது ஆற்றலைப் பார்த்து வியந்து பூரித்துப்போய் புளகாங்கிதம் அடைந்து மகிழ்ந்தாலும் நம்மவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்வதில் ஏனோ பின்னிற்கின்றனர். இந்த மண்ணுக்கு இப்படியான மகத்துவமும் உண்டு.
- டொமினிக் ஜீவா (நன்றி - மல்லிகை செப்டம்பர் 2002)
42

ܕܬ*ܐ
өsыптағаныfт ടൂ
யேகசிகிறாள்
NS
நான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளேன். தங்களின் ஞானம் இதழில் வெளிவந்துள்ள சிறுகதைகளை 1-24 இதழை என் ஆய்வுப் பொருளாகத் தேர்வு செய்துள்ளேன். இத்துறையில் பணிபுரியும் முனைவர் சா.உதயசூரியன் அவர்கள் எனக்கு ஆய்வு நெறியாளராக இருந்து வருகிறார். அவரினது அறிவுரையின் பேரில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
மேற்குறிப்பிட்ட 24 இதழ்களையும் எனக்கு அனுப்பிவைத்து என் ஆய்வு சிறக்க உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆய்வு நிறைவடையும்வரை தங்களின் தொடர் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஆய்வு குறித்த சிக்கல்களை அவ்வப்போது தங்களுக்கு எழுதுவேன். சிக்கல்கள் தீர துணைநிற்க வேண்டுகிறேன். என் ஆய்வுத் தலைப்பு "ஞானம் இதழின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு என்பதாகும். இச்செய்தியை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-செல்வி மா.ஷரீலா எம்.ஏ., ஆய்வியல் நிறைஞர் பட்டமாணவி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
ஞானத்தில் வழக்கமான உள்ளடக்க விஷயங்கள்தான் என்றாலும், விவாதமேடை ஆரோக்கியமான அம்சமென நினைக்கிறேன். கருத்துக்களம் மிக அவசியம். கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளும் இலக்கிய மரபை நாம் வளர்க்கவேண்டும், விவாதங்கள் தனிநபர் சாடலாக அல்லாமல் ஆரோக்கியமான கருத்துகளைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.
மிகமுக்கியமாக - ஈழத்தின் நூல்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டு களின் பங்களிப்பு என்ற ஆய்வுக்கட்டுரைமுலம் பலவிசயங்களை அறிந்துகொண் டேன். அண்மையில் சரமகவிக்குள் உள்ளடக்கம் விசயங்கள் பற்றி அறியத்தந்த என்.செல்வராஜா பாராட்டத்தக்கவர். இவ்வாறான சரமகவி பாடும் மரபு முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் ஒப்பாரி வடிவில் இருந்துவருகிறது. பாட்டிமார் காலத்து சாவு வீடுகளில் இது எதிரொலிக்கும். இறந்தவரின் மகிமை, வல்லமை, இழப்பின் துயரம், குடும்பத்தின் பிரிவாண்மை, எனப்பாடி, ஈற்றில் இறைவனிடம் அந்த ஆன்மாவுக்காகப் பிரார்த்தித்து முடியும் ஒப்பாரிப்பாடல்கள் - கிழக்கு மாகாணத்தில் அதிகமாகவும், பிறமாகாணங்களில் ஓரளவும் காணப்படுகின்றன. நாட்டார்பாடல்களில் இது உள்ளடக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்.
- ஓட்டமாவடி அறபாத்
செல்வராஜின் ‘கல்வெட்டுக்கள் சம்பந்தமான ஆக்கம் இன்றைய நிலையில் மிகப் பயனுடையது. எதிர்காலத்தில் கல்வெட்டுக்கள் அனைத்தும் மறைந்துகொண்டுவரும் தொன்மைகளுக்கு முன்னுரிமைகொடுத்து வெளிக் கொணர்வது ஒரு புதிய மரபாகிவிடவேண்டும் என்பது என் அவா.
43

Page 23
மற்றது, லெ.முருகபூபதியின் எனது எழுத்துலகம் - வளரும் எழுத்தாளர் களுக்கான பரீட்சை வழிகாட்டி விவாதமேடையில் வட்டுக்கோட்டை சு.அரவிந் தனின் தகவல்கள் இக்காலத்தின் தேவையாகிறது. திருகோணமலை தி.த.சரவண முத்துப்பிள்ளை பற்றிய செய்திகள் கண்டு பெருமகிழ்வுடன் பெருமையும் கொள்கிறேன். நன்றிகள்! வாழ்த்துக்கள்! மேலும் பயனுள்ள பல தகவல்கள் ஞானத்தினூடாகத் தரவேண்டுமென அவாவுகிறேன். - கனகசபை தேவகடாட்சம், மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை.
ஞானம் 28ஆவது இதழிலில் நான் எழுதிய நிலாந்தனின் படைப்பக்க முயற்சி - வடிவங்களை உடைத்து முன்னேறும் பயணம் என்னும் சிறுகட்டுரை தொடர்பாக ஒரு அன்பர் ஆதங்கப்பட்டிருக்கிறார். யதீந்திரா கந்தபுராண கலாசாரத்தை இழிவுபடுத்திவிட்டார் என்பதே அன்பரின் ஆதங்கத்துக்கான காரணம். கந்தபுராணக் கலாசாரத்தின் தோற்றதிற்கு முன் யாழ்ப்பாணத்தவர் மத்தியில் இப்பலவீனம் (சாதியம்) இருக்கவில்லையா? எனக் கேள்வி எழுப்பி யிருக்கும் அன்பர் கந்தபுராணக் கலாசாரம் சாதியப் பாகுபாட்டுக்கு எதிரானது என கூறியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இக்கூற்று அன்பரின் அறிவுப் புலத்தையும் தெளிவாக கோடிகாட்டுகிறது.
கந்தபுராண கலாசாரத்தின் தோற்றத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தவர் மத்தியில் சாதியப் பாகுபாடு இருந்தது உண்மை. ஆனால் அவ்வாறான சாதியப்பாகுபாட்டை மீளுருவாக்கம் செய்ய நிறுவனமயப்படுத்தியது கந்தபுராண கலாசாரமே. இதனையே நான் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருந்தேன். எப்பொழு துமே நிறுவனமயப்படுத்த கருத்தியல்களே வலுவுடையதாகவும், நீடித்த சமூகச் செல்வாக்குடையதாகவும் இருக்கும். இன்று யாழ்ப்பாணத்தவர்கள் புலம் பெயர்ந்து அந்நியநாடுகளில் (வேறுபட்ட கலாசார சூழலில்) வாழும்போது தமக்கிடையிலான சாதியப்பாகுபாட்டைப் பேணிக்கொள்வதில் காட்டிவரும் தீவிரத்தை நான் மேல் குறிப்பிட்ட விடயத்துடன் இணைத்துப்பார்த்தால் கந்த புராண கலாசாரத்தின் தாக்கம் எத்தகையது என்பதை புரிந்து கொள்வது சிரமமிருக்காது. ஐரோப்பிய ஆதிக்கம் இலங்கையில் உறுதியாக நிலைபெற்ற பின்னர் ஆங்கிலேய கலாசாரத்தின் செல்வாக்கால் சுதேசியின் கலாசாரம் பாதிப்படைவதாகக் கருதிய ஆறுமுகநாவலர் ஆங்கிலேயர் கலாசாரத்திற்கு எதிராக தோற்றுவித்ததே கந்தபுராணக் கலாசாரம். ஆனால் நாவலரின் கலாசாரப் பேணல் சாதியத்தை மீளுருவாக்கம் செய்வதாகவும், ஆணாதிக் கத்தை போற்றுவதாகவுமே அமைந்தன. உண்மையில் நாவலரின் ஆங்கிலேய எதிர்ப்பானது சைவ வேளாளர்களின் ஆதிக்க நலன்களுக்கு சேவை செய்வதா கவே இருந்தது. இதன் காரணமாகவே சாதியப்படிநிலையில் கீழ் மட்டங்களில் இருந்தவர்களும், அடக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களும் நாவலரின் ஆங்கிலேய எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை. மாறாக கடலோடிகள் போன்ற சில பிரிவினர் நாவலரை எதிர்த்தே செயற்பட்டனர்.
கந்தபுராண கலாசாரத்தின் மோசமான சமூகப்பார்வையை அம்பலப் படுத்த கீழ்வரும் நாவலரின் கூற்றைத் தவிர வேறு சான்று தேவையில்லை. பறையும் பஞ்சமரும் பெண்களும் அடிவாங்கப் பிறந்தவர்கள் - இது தமிழ் வளர்த்ததாகக் கூறப்படும் ஆறுமுக நாவலரின் கூற்று. அறினையான பறை மேளத்துடன் பெண்களை ஒப்பிட்டிருப்பது எவ்வளவு மோசமானதொரு
44

பார்வை. பெண்களைக் கட்டுப்படுத்தும் சிந்தனைகளை மனுவிடமிருந்தே நாவலர் உள்வாங்கிக் கொள்கிறார். நாவலருடைய பார்வையும், சைவவேளாளரும் வேளாளருடன் தன்மயமாகிவருகிற சாதிப்பிரிவினரையும் தவிர ஏனையவர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) மனிதர்களாகவே தெரியவில்லை. இதனை நாவலரின் கூற்று தெளிவாக நிரூபிக்கிறது. உண்மையில் நாவலர் தலைமையிலான சைவத்தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் வருகையுடன்தான் நவீன யாழ்ப்பாணக் கலாசாரம் தோற்றம் பெறுகிறது. அதாவது சைவ வேளாளர்களின் கலாசாரமான கந்தபுராண கலாசாரம் பெறுகிறது. சிறு தெய்வ வழிபாட்டினாலும் கிராமியச் சடங்குகளினாலும் அமைப்புற்றிருந்த யாழ்ப்பாணத்துக் கலாசாரத்தை நாவலர் பிராமணியர் தலைமையில் ஆகமமயப்படுத்தினார். புதிய கோயில் கலாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கோயில்களில் பேணப்பட்ட கிராமியக் கலைகள், வாத்தியங்களுக்குப் பதிலாகத் தமிழகத்துக் கலைகளான கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் அதிர்ஷ்ட வசமாக நாவலரின் மேற்படி முயற்சி யாழ்ப்பாணத்திற்கு வெளியில் பெரிதாக செல்வாக் கைப் பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் கிராமியக் கலைகள் வீழ்ச்சியுற்றிருப் பதற்கும் ஒப்பீட்டளவில் மட்டக்களப்பில் கிராமியக் கலைகள் வளர்ச்சியுற்றிருப் பதற்கும் இதுவே காரணம். இந்தவகையில் ஈழத்தமிழர்களின் தனித்துவமான கலைகளை சிதைத்த பெருமையும் ஆறுமுக நாவலரையே சாரும்.
இக்கலாசாரத்தின் ஆக்கம் இன்றுவரை தொடர்கிறது. யுத்தமும் அதன் விளைவுகளும் இக்கலாசார நிலைப்பில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப் பினும் கந்தபுராணக் கலாசாரத்தில் செல்வாக்கு முழுமையாக சமூகத்திலிருந்து அற்றுவிட்டதாக கூறிவிடமுடியாது. அவ்வாறு கூறுதல் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைக்க முயன்ற கதையாகிவிடும். இன்றும் யாழ்ப்பாணத்தில் 48 நடுத்தரக்கோயில்களும் 103 சாதாரண கோயில்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. யாழ்ப் பல்கலைக் கழகத்தில் சைவ வேளாளர் ஆதிக்கத்தின் தாக்கம் பலமானது. பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு துணைவேந்தர் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் பலரும் அறிந்த உண்மை.
இவ்வாறான நீடித்த சமூக ஒடுக்குமுறைக்கு வித்திட்டிருக்கும் கந்தபுராணக் கலாசாரத்தின் உண்மையான முகத்தை தரிசிக்க மறுப்பது, அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் விடுவதும் சிறந்த தமிழ் தேச உருவாக்கத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம். தேசவிடுதலைப்போராட்டம் என்ற மையப்புள்ளியில் பாகுபாடுகள் இன்றி அனைவரது பார்வையும் ஒன்றித்திருப்பதால் தேசத்தின் அகநிலை விடுதலை தேவைகள் பற்றிய சிந்தனைகள் வலுவிழந்திருக்கின்றன. அவ்வாறான விடுதலைத்தேவைகள் பற்றிய சிந்தனைகள் இன முரண்பாட்டுக்கான தீர்வை தொடர்ந்து வலுவாக மேலெழும். சாதியம்,பெண்ணடிமைத்தனம், பிரதேசவாதம் போன்ற தேசத்தின் அகநிலை இடர்களை வெல்வதற்கான போராட்ட மார்க்கங்களை வடிவமைப்பது ஒரு சிறந்த தமிழ்த் தேச உருவாக்கத்தில் அக்கறையுள்ளவர்களின் இன்றியமையாக் கடமை. கந்தபுராணக் கலாசாரத்தின் சாதிப்பாகுபாடு தொடர்பாக வாசகர்களுக்குச் சில புரிதல்களை ஏற்படுத்துவதே இச் சிறுகுறிப்பின் நோக்கம்.
கே.யதீந்திரா, திருகோணமலை. 45

Page 24
மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு ஆசிரியர் : அந்தனி ஜீவா வெளியீடு : மலையக வெளியீட் 7 டகம், த.பெ.இல. 32, கண்டி.
விலை : esburT 50/=
அறிந்ததையும் அநுபவித்ததை யும் அரங்கேற்றம் செய்வதில் அசகாய சூரரான ஜீவாவின் சாதனையில் ஒரு மைல்கல்தான் “உலக இஸ்லாமிய
கூவாத குயில்கள் (வானொலி நாடகங்கள்)
ವಿ?: : : தமிழ் இலக்கிய மாநாடு - 2002"க்குச் வளியீடு : பிரியா பிரசுரம் சமர்ப்பித்துள்ள மலையகத் தமிழ் விலை : ரூபா 150/=
இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர் களின் பங்களிப்பு எனும் ஆய்வுக் கட்டுரை.
YN I கலைஞர் கலைச்செல்வன். இடம்பெற்றுள்ளன. இந்நாடகங் டி -----C -------
கள் யாவும் ஏதோ ஒரு வகை மனச்சாட்சியின் உறுத்தல்)
S SS SS S SS S SS S SS SS SSLSSS SS SS SSSSSSMSSSSSSS LSLS
கூவாத குயில்கள் என்ற இந்த வானொலி நாடக நூலில் நான்கு வானொலி நாடகங்கள்
யில் எமது அன்றாட வாழ்வின் பிரதிபலிப்புக்களாக காலக் என்னால் முடியாததை - கண்ணாடிகளாக விளங்கும் உன்னில் ஏற்படுத்த முனையும் ೧೫ga।
படியே எழுதப்பட்டன. இல்லை.
முன்னுரையிலிருந்து. உன்னில் இருப்பதை நீயே நல்லதொரு பயணம் உணர
(சிறுவர் கதைகள்) | ஊக்குவிக்கும் தொழிலா.
ஆசிரியர் : இக்பால் அலி | பலவற்றை என்னால் செய்யமுடிந்தாலும்! வெளியீடு : மக்கள் கலை I சிலவற்றை நீ என்னை விட இலக்கிய ஒன்றியம், 18/13, 1 சிறப்பாய் செய்கின்றாய். பூரணவதத, கனடி. விலை : ரூபா 35/= நீ சிறப்பாய் செய்யும் இந்நூலில் வரும் அனைத்துக் செயற்பாடுகளை - போற்றுவதா கதைகளும் சிறுவர்களுக்கு இல்லை அவசியம் என்பதோடு அவர்கள் கண்டும் காணாமல் போவதா, அல்லது வாசிக்கின்றபோது புத்துணர்ச் நூற்றுவதா என் தொழில். சியை ஏற்படுத்தக் கூடியவை. ஆக மொத்தத்தில் இந்நூல் சிறுவர் இலக்கிய உலகத்திற்குத் தேவை என சாட்சியம் கூறு கிறது. . ருபராணி ஜோசப் O
முன்னுரையில். \ பொற்கோ - வவுனியா
நான் செய்வதை நீ போற்றுவாய் என எதிர்பார்க்கும் நான் - நீ செய்வதை போற்றுவதற்கு சஞ்சலப்படுவதேன்______ _
 


Page 25
துப்பாக்கி சுமக்கா
துப்பாக்கி சுமக்காத அதன் வில்லை அழுத்திப் பார்க் நானும் ஒரு போராளிதான்
என் எதிரிகளை நான் ஒருபோ தடியால் அடித்ததோ
கத்தியால் வெட்டியதோ இல்ை சொற்களால்தானர் சுட்டிருக்கிே
உண்மையைச் சொன்னால் நான் ஒரு தமிழன் என் துயர்களையும் எனது நாட்டு மக்களின் துயர் தமிழில்தான் யாரிடமாவது சொல்வி ஆறுதலடைவேன்
என் தமிழிடம் அரவணைக்கும் வார்த்தைகளும் உண்டு எதிரியை சுட்டெரிக்கும் எரித வார்த்தைகளும் உணர்டு
என் தமிழ்மொழி ஆரோக்கியம யாருக்கும் அடிபணியாதது
எனது பேனா முனையில் இருந் விழும்போது அது ஆவேசமான
துப்பாக்கி சுமந்து அதனர் வில்லை அழுத்தி எனது மக்களைக் கொன்று குவ விசப் பூச்சிகள் என் மண்ணில் இருக்கும் வரை நானும் ஒரு போராளியாகத்தா
துப்பாக்கி சுமக்காத அதன் வில்லை அழுத்திப் பார்க் நானும் ஒரு போராளிதான்

த போராளி
க்காத
தும்
5. றன்
களையும்
ழல்
1507 g.
விக்கும்
ண் இருப்பேனர்
காத
யின் இணைய முகவரி соп\gпапяпn- magaziпе
རིགས།།
š
謎
y
SLSSSSSLSSSSSSLSLSS SSS SSSSSSSSS SS SS SSSS امې