கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2002.12

Page 1

خانه GOT
சிை ல шдF சஞ
画 சி
2

Page 2
Uso)éessaf U6).j6nd
U6b63do u6u6mb படுசுட்டிப் பெண்தான் அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் பால் விநியோகம் எட்டுமணிவரை இடைவேளை இன்றித் தொடரும்.
மாடிவீட்டு மாணிக்கச் சீமாட்டி வாசல்தொட்டு மார்க்கண்டுவின் பெட்டிக்கடைவரை போத்தல்கள் கைமாறும்.
“பால்மட்டம் குறைஞ்சிருக்கு?” “கட்டவிழ்த்து கன்று குடிச்சிட்டுது”
“தண்ணிர் கலந்ததோ
தடிப்புக் குறைஞ்சிருக்கு?”
“குடிக்கிற தணிணிரை குறைச்சுக் குடியுங்கோ”
வைரமுத்த சுந்தரேசன் ஆங்கிலத்தறை
தாமதமாய வநதால யாழ். பல்கலைக்கழகம்
கந்தோர் போவதில்லையோ?”
“லீவெல்லாம் முடிஞ்சுதோ”
இளந்தளிரின் நெஞ்சில்
வாயாடிப் பெண்ணாச்சே! ஈட்டியாய் குத்தும். வாடிக்கையாளர் இவளுக்கு வெறிதாய் கிடக்கிறது வகைசொல்ல முடியாது. பள்ளியில் இன்று
பவளத்தின் ஆசனம் பம்பரமாய்ச் சுற்றி பால்வியாபாரம் நிறைந்து வீதி மதகடியில் சிறுமியின் பிஞ்சுக் கால்கள் மயங்கி விழுந்தாளாம். பள்ளிக்கு விரையும்.
நல்லிரத்தம் போதாதாம்
பள்ளி வளவுக்குள் மருத்துவமனையில்
சிறுவரின் பரிகாச வார்த்தைகள், வைத்தியர் சொல்கிறார். “பீத்தல் பாவாடை” பால்க்காரி பவளத்திற்கு “மாட்டுச் சாணாகம்” நல்லிரத்தம் போதாதாம்!
“புல்லுக்கடகம்” வைத்தியர் சொல்கிறார்.
 
 
 
 
 

ஆசிரியர் : தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர்: ஞா.பாலச்சந்திரன்
ஒவியர்* நா. ஆனந்தன்
கணனி அமைப்பு: கெ.சர்வேஸ்வரன் தொடர்புகளுக்கு a
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி.
|தொ.பே. -08-478570 (Office)
08-234755 (Res) Fax - 08-234755 E-Mail
gnanam magazine(ayahoo.comوا
உள்ளே.
நேர்காணல்.32
சிறுகதை
இருபத்தேழாம் இரவு.eeeeeeeeeeeeeeee" 60 திக்குவல்லை கமால்
கட்டுரைகள் ஈழத்த நவீன இலக்கிய எழுச்சியில் கே.கணேஷின் பங்கு .06 பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கே.கணேஷ் என்ற இலக்கிய மானுடளை உலகத் தமிழுக்குத் தந்து வான்புகழ் 66Tai i g. 106060иљi: ..............................................- I o புலோலியூர் க.சதாசிவம் முதபெரும் எழுத்தாளர் கே.கணேஷ் .12 தி.ஞானசேகரன் மணிக்கொடிதொகுப்பில் கணேஷின் கதை.caso 5 சாரல் நாடன் கே.கணேஷர்-ஒரு இலக்கியச் சுரங்கம் .52 தெளிவத்தை ஜோசப் எழுதத் தாண்டும் எண்ணங்கள். தரை. மனோகரன்
28
கவிதைகள் U.65 diós f (16 GTi assessessssssssssssssssss-02 வைரமுத்த சுந்தரேசன் ༧#fff f5 -- ༠ ཐ་མ་ཐ་མ་མ་མས་ས་བབ་མཐས་མ་ཁ་བཅས་བ་མ་མཁས་བ་ག་ད་བ་ས་བསམ་ས་അം 64 கவிஞர் செ.குணரத்தினம் 6666 footsi's GDA)!...................soos S“) கலைவாதி கலீல்
சமாதானத் தீபங்களும் தமிழகத்து சூறாவளியும்.68 பெனி யே.ச
திரும்பிப் பார்க்கிறேன்.58
வாசகர் பேகசிறார்.6
3.

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
ஈழத்து முற்போக்கு இலக்கியச் சிந்தனையின் முன்னோடி முதுபெரும் உலக எழுத்தாளர் கே.கணேஷ்
ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்கும் பணியும் முக்கியமானவை. முதுபெரும் எழுத்தாளரான கே.கணேஷ் அவர்கள் ஆரம்பகாலந்தொட்டே முற்போக்குச் சிந்தனையில் ஈடுபாடு கொணி டவர். முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.
தீவிர இடதுசாரிக்கொள்கையில் பிடிப்புள்ள கே.கணேஷ், 1940இல் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் இலங்கைக்கு வந்தபோது, அவர் முன்னிலையில் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்.
1946இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை கே.ராமநாதனுடன் இணைந்து உருவாக்கியவர். பின்னாளில் பேராசிரியராக விளங்கிய சரத் சந்திரவும் கே.கணேஷoம் இச்சங்கத்தினர் ஆரம்பகால இணைச் செயலாளர்களாக விளங்கினர்.
1946இல் தந்தைவழியாகத் தனக்குக் கிடைத்த தோட்ட நிலத்தை விற்று, அதனை மூலதனமாகக் கொண்டு தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகையான ‘பாரதி”யை கே.ராம நாதனுடன் இணைந்து வெளியிட்டவர்.
பாரதத்தில் வெளிவந்த தலித் இலக்கியத்தின் முதல் நாவலாகக் கருதப்படும் முல்க்ராஜ் ஆனந்தின் Untouchables என்ற நாவலை முதன் முதலாக மொழிபெயர்த்து தமிழுக்கு
4
 
 
 

அறிமுகப்படுத்தியவர்.
கணேஷின் எழுத்து முயற்சிகளில் மிக முக்கியமானது சிறந்த பிறநாட்டு இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்ததாகும். கணேஷ் ஒரு முற்போக்கு எழுத்தாளர் எனிறவகையரில் அவரது எழுத்துக்களில் காணப்படும் பொதுப்பணிபுகளாக சமதர்ம நாடுகள் எனக்கொள்ளப்பட்ட நாடுகளின் விடுதலை உணர்ச்சி, மனித விடுதலை உணர்ச்சிப் போராட்டங்கள், விடுதலை உரிமை உணர்வு, மானுட நேயம் என்பனவும், எல்லோருக்கும் யாவும் பொது என்ற அடிப்படையும், எதிர்காலம் மீது கொணிட நம்பிக்கைகள், விருப்புகள், எதிர்பார்ப்புகள் ஆகியனவும் அடங்கியிருக்கும். அத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களின் துயரப் பெருமூச்சுகள், சோகம், அடிமை வாழ்க்கை ஆகிய பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அவை அமைந்திருக்கும்.
திரு. கணேஷ் அவர்கள் சிறந்த உலக இலக்கியங் களின் மொழிபெயர்ப்புகளாக 22நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார். அத்தோடு சுய ஆக்கங்களாகச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் தனது பங்களிப்பை நல்கியுள்ளார்.
1958இல் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த தினத்தை ஒட்டி அகில உலக ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் வெற்றிபெற்று ஜப்பானிய சக்கரவர்த்தியின் அரசவைக் கவிஞர்களது பாராட்டு விருதினைப் பெற்றவர்.
உக்ரேன், பல்கேரிய நாடுகளில் நடைபெற்ற உலக மொழிபெயர்ப்பாளர்கள் மாநாடுகளில் 1984இலும் பின்னரும் இருதடவைகள் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர். திரு கணேஷ் அவர்கள் உலகத்தின் பல பாகங்களிலு முள்ள எழுத்தாளர்களுடனும் இலக்கிய அமைப்புகளினுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.
உலக எழுத்தாளர் வரிசையில் வைத்து மதிக்கக் கூடிய தகைமை கொண்ட எழுத்தாளர் கே.கணேஷ், தனது 82ஆவது அகவை நிறைவின் பின்னரும் இலக்கியமே மூச்சாக இயங்கி வருகிறார். அவரது இலக்கியப் பணியினைக் கெளரவிக்குை வகையில் இந்த “ஞானம்’ இதழ் எழுத்தாளர் கேகணேஷ் சிறப்பு மலராக வெளிவருகிறது.
(ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி
www.geocities.com\gnanam magazine

Page 4
ஈழத்து நவீன இலக்கிய எழுச்சியில்
கே.கணேஷின் பங்கு
பேராசிரியர், கார்த்திகேசு சிவத்தம்பி
இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதத்தில் வரும் சில பாத்திரங்கள் மகாபாரதத்துக்குரிய நெருக்கடிகள், மோதல்கள் ஆகியனவற்றிற்கு அப்பாலே நின்று ஞானநிலை வழிகாட்டிகளாகக் கொள்ளப்பட்டு போற்றப் படுகின்ற ஒரு இயல்பினை நாம் காணலாம். அத்தகைய பாத்திரங்களினூடாகத் தான் மகாபாரதத்து மோதுகைகளில் முக்கிய இடம் பெறும் பாத்திரங்கள் தங்கள் இயங்கு முறைமைகளை பெற்றுக்கொண்டார்கள். பீஷ்மர், துரோணர், விதுரன் போன்றவர்களை நாம் இந்தப் பட்டியலுள் சேர்க்கலாம்.
நண்பர் கே.கணேஷைப்பற்றிச் சிந்திக்கும்பொழுது பீஷ்மர், துரோணர் போன்றவர்களுடைய - குறிப்பாகத் துரோணர் போன்ற ஒருவருடைய படிமம்தான் என் மனதினுள் சுற்றிச் சுற்றி வருகின்றது. இன்று நம்மிடையே வாழுகின்ற எழுத்தாளர்களுள் வயதால்(82வயது), அனுபவத்தால் சிரேஷ்டராக உள்ளவர் என்பது மாத்திரமல்லாமல் இன்று நாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான சில அம்சங்கள் என வளர்த்து எடுத்துக்கொண்டுள்ள சில பண்புகளினது ரிஷிமூலம் நதிமூலமாகவும் அவர் விளங்குகிறார் என்பது ஒரு முக்கிய உண்மை யாகும். அதாவது நண்பர் கணேஷ் அவர்களை முதிர்ச்சியடைந்த ஓர் எழுத்தாளர் என்பதிலும்பார்க்க ஈழத்து இலக்கியத்தின் தடத்தை, அதன் காத்திர மான செல்நெறியை உருவாக்கியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதும், தன்னுடைய அந்த முக்கியத்துவத்தைத் தானே பறைசாற்றிக் கொள்ளாதவரும் என்பதுந்தான் கணேஷினுடைய மிகப்பெரிய ஆத்ம பலமாகும்.
கணேஷோடு பழகியவற்றையும், பேசியவற்றையும் அவ்வுரையாடல் களின் மூலமாகப் பெற்றுக்கொண்டனவற்றையும் ஒருங்குசேர நினைவுறுத்திக் கொள்ளும்பொழுது கணேஷினுடைய ஆளுமை முகில்களுக்கு மேலே கூர்மைப் பட்டுச் செல்லும் மலை உச்சியின் படிமம்தான் எனது நெஞ்சில் திரழ்கிறது. அந்த முகில்களுக்கு மேலே நிற்கும் அந்த மலையுச்சியில் சூரியனின் நிரந்தர மான ஒளியைக் காணலாம். முகில் மட்டத்துக்குக் கீழேயுள்ள இடிகள், மின்னல்கள், திடீர் வெள்ளங்கள், வரட்சிகள் இவை எதுவுமே அவரது கருத்து நிலை ஸ்திரத்தைப் பாதிப்பவையல்ல.
உண்மையில் கணேஷை முழு இலங்கையினதும் மூத்த எழுத்தாளர் என்றே போற்றுதல் வேண்டும். 1930களில் இங்கிலாந்தில் பயின்ற சமதர்ம/ பொதுவுடமை வாத மாணவர்கள் மூலமாகத்தான் முற்போக்கு இலக்கியவாதமும் மக்கள் அரங்கு முறைமையும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டன. சோவியத் யூனியனை மாதிரியமாகக்கொண்டு, ஸ்பானிஷ் போரை போராட்ட உதாரண மாகக் கொண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு காலனித்துவ எதிர்ப்புப்போராட்டத்தை இந்தியாவுக்குள் ஒரு கலை, புலமை பயில்வாக கொண்டு வந்தவர்கள் பட்டியலில் க.ஐ.அகமட் அப்பாஸ், சஜ்ஜத் ஸ்கீர், பைஸ் அகமட் பைஸ் 6

போன்றவர்கள் மிகப் பிரபலமானவர்கள். பொதுவுடமைவாதம் என்ற பெயரைப் பட்டவர்த்தனமாகக் கூறாது (பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப் பதப்பிரயோகத்தை எதிர்த்தது) அதன் சாரத்தை உள்வாங்கி இயங்கிய தர்க்கத்துக்கு இயைய முற்போக்கு இலக்கியம் (Progressive Literature) என இந்தியாவுக்குள் இவர்கள் புதிய எழுத்து முறையினைப் பரப்பினர். இதனோடுவந்த அரங்க முறைமை வங்காளத்திலும் ஆந்திரத்திலும் முக்கியமான இடம் குடிகொண்டன. இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஹிந்தி, உருது மொழிகளில் இவ்வியக்கம் பெரும் சாதனைகளைச் செய்தது. தமிழ் நாட்டிலும் இதன் தாக்கம் காணப்பட்டது. அக்காலகட்டத்தில் அந்தப் புதிய எழுச்சியினை உள்வாங்கி இலங்கை யின் சிங்கள, தமிழ் மக்களுக்கான ஒரு புதிய இலக்கிய நிறுவனமாக ஒரு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. பின்னர் பேராசிரியரான ஈ.ஆர்.சரத் சந்திர வும், கே.கணேஷ"மே இச்சங்கத்தின் செயலாளர்களாக இருந்தனர். உண்மை யில் இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் தொடக்கமாக இச்சங்க நிறுவுகையைக் கொள்ளல் வேண்டும்.
கணேஷ் அக்காலத்தில் இடதுசாரி இயக்கத்தில் முக்கியமான ஒருவ ராக இருந்தார். லங்கா சமசமாஜக் கட்சி என்ற பொதுநிலையிலிருந்து பொதுவுடமைக்கட்சி என்கின்ற தனித்துவ வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் பொது வுடமைக் கட்சியின் ஆரம்பகால முக்கியஸ்தர்களிலும் பார்க்க - செயலூக்கத் தொழிற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்தார் என்பதே பொருத்தமாகும். பொ.கந்தையா, வைத்தியலிங்கம் போன்றோர் கணேஷ் பற்றிய அக்காலத்து நினைவுகளை எங்களுடன் மீட்டமை இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது. கணேஷ் பொருள்வசதிமிக்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் இவரது மைத்துனரான பி.தேவராஜும் ஆரம்பகாலத்தில் பொதுவுடமை இயக்கத் தொழிற்பாடுகளில் ஈடுபட்டவர்கள். தேவராஜ் அவர்கள் இங்கிலாந்து சென்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கத்தவராகவும் இருந்தார் என்று நினைக்கிறேன். அவருடைய செயற்பாடுகள் அரசியல் மயப்பட்டனவாகவே இருந்தன. கணேஷோ இலக்கியத்தையே தமது ஆர்வ ஈடுபாட்டுக் களமாகக் கொண்டார். இந்திய எழுத்தாளர்கள் பலருடன் அவர் உறவு இருந்தது. கட்சி நிலையில் பொன். கந்தையா, பீற்றர் கெனமன், கணேஷ் ஆகியோர் கலை இலக்கிய ஈடுபாடுகொண்டவர்களாகத் திகழ்ந்தவர்கள். பீற்றர் கெனமள் திரைப்பட விமர்சகராகவே தனது எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்தார். அக்கலாத்தில் இப் பொதுவுடமைக் குழும இளைஞர்கள் ஒரே இடத்தில் ஒரு குழும வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். கொம்யூன் முறைமை (COாmune) அக்காலத்தில் மிகப் பிரசித்தமாக இருந்தது. நவீன தமிழ் இலக்கியத் தைப் பொறுத்தவரையில் இது ஏறத்தாழ மணிக்கொடிக் காலமாகும். மணிக் கொடிக் குழுவினருடன் இவருக்குத் தொடர்பு இருந்தது. தமிழகத்தில், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் பின்னர் ராஜா காலேஜ் என்ற நிறுவனத்திலும் படித்ததாகத் தெரியவருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக இவரது தமிழகப் படிப்பு குழம்பியது எனலாம்.
மணிக்கொடி நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். பாரதியுடன் தொடங்குகின்ற நவீன தமிழ் இலக்கிய காலம் உரைநடை 7

Page 5
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் பொருளும் வடிவும் இன்றியமையாமையும் பெற்ற காலகட்டம் மணிக்கொடிக் காலமாகும். உரைநடை தமிழின் இயல்பான படைப்பிலக்கிய வெளிப்பாட்டுக்கான வாகனமாக அமைவது இக்காலத்திலே தான். புனைகதை புதுக்கவிதை ஆகிய இரண்டு வடிவங்களும் தமிழோடு தமிழாக இணையத் தொடங்கிய காலமிது. இந்தத் தமிழ்ப் படுத்துகை நடந்து கொண்டிருந்தாலும் இந்த இலக்கியச் செல்நெறிக்கான மூலம் - தளம் ஐரோப்பிய அல்லது மேல்நாட்டு இலக்கிய முறைமையாகும். ஆங்கிலம் வழியாக வந்தாலும் பிரெஞ்சு, ரஷ்ய, ஜெர்மன் ஆக்கங்கள் தமிழுக்குள் வந்து தமிழ் படைப்பிலக்கியத் தின் விஸ்தீரணத்தை அகலப்படுத்தத் தொடங்கிய காலம் இந்தக்காலம். மணிக்கொடி காலத்தின் முக்கிய எழுத்தாளர்கள் எல்லோருமே தமிழின் நவீன இலக்கியத்துக்கான இந்த ஊற்றுப் பாய்ச்சலை அறிந்திருந்தனர். புதுமைப் பித்தனிடத்தில் இது மிகச் சிறப்பாகக் காணப்பட்டது. படைப்பு இலக்கிய மொழிபெயர்ப்புகள் முக்கியமாகின. புதுமைப்பித்தன, ஆர். பூரீதேசிகன் போன்றோர் மேல்நாட்டு மொழிபெயர்ப்புகளில் ஈடுபட, த.ந.குமாரசாமி போன்றோர் வடஇந்திய - குறிப்பாக வங்காள மொழிபெயர்ப்புகளைச் செய்தனர். இந்தச் சூழலில் முற்போக்கு இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த கே.கணேஷ் அவர்கள் அப்பாரம்பரியத்தைச் சார்ந்த எழுத்தாளர்களைத் தமிழினுட் கொண்டு வரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். முல்க்ராஜ் ஆனந்த் அவர்களின் Untouchables என்ற நாவல், கே.அப்பாஸ் எழுதிய பல சிறுகதைகள் ஆகியவற்றை அவர் அக்காலத்தில் தமிழினுள் கொண்டுவந்தார்.
கணேஷ் அவர்கள் சிறுகதைகள், கவிதைகள் சிலவற்றை எழுதியுள்ளார். எனினும் இவரது இலக்கியத் தனித்துவத்தை அடையாளப்படுத்தி நிற்பது இவரது இலக்கிய மொழிபெயர்ப்புகளே ஆகும்.
ஏற்கனவே பார்த்தபடி இவை உலகின் பல்வேறு பாகங்களிலுமுள்ள சமூக/அரசியல் இலக்கிய முக்கியத்துவமுடைய மேதைகளையும் பெரும் எழுத்தாளர்களையும் தமிழுக்குக் கொண்டுவரும் பணியை இவர் செய்துள்ளார். ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது சிந்தனைகளை மாத்திரமல்லாது உணர்வு முறைகளையும் இன்னொரு மொழிக்குள் கொண்டுவருகின்ற ஒரு பெரும் வித்தையாகும். கணேஷ் இந்த இலக்கியப் பணிமூலம் தமிழ் வாசகர் களின் சமூக அரசியல் பார்வைகளின் விஸ்தரிப்புக்குப் பெரிதும் உதவியுள்ளார். நூல்கள் பெரும்பாலும் சிறிய அளவினதாகவே இருந்தனவெனினும் இவற்றின் செல்வாக்கு மிகப்பெரியது.
எந்த மொழியிலும் நவீன இலக்கியம் பற்றிப் பேசும்போது ஓர் உண்மையை மனதில் இருத்துதல் அவசியம். அதாவது நவீன இலக்கியம் என்பது மொழிப்பாரம்பரியம் ஒன்றிற்கு மாத்திரம் உரியதல்ல. அது உலகப் பொதுவானது. நவீன இலக்கியத்தின் வடிவங்கள் உலகப்பொதுவான இலக்கிய வடிவங்கள். அந்த வடிவங்களைச் செழுமைப்படுத்தியோர் ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு கண்டத்துக்கோ உரியவர்கள் அல்ல. உண்மையில் தமிழில் நவீன இலக்கியம் என்று சொல்லவேண்டுமே தவிர, தமிழ் நவீன இலக்கியம் என்று சொல்லக்கூடாது. கணேஷினுடைய இலக்கியப்பார்வை அந்த அகண்ட மனித நிலையைத் தழுவியது. பிரதேசங்களின் தனித்துவங்களி 8

னுாடாகக் கிளம்பும் உலகப்பொதுமை அவரது இலக்கிய மூச்சின் உயிர்நாடியா கிறது. கணேஷினுடைய இலக்கிய பலம் இதுதான். இத்தகைய பார்வை அகற்சியும் உலகப் படைப்பிலக்கியத் தாடனமும் கொண்டவர்கள் நம்மிடையே மிகமிகச் சிலரே. அந்தச் சிலருள்ளும் கணேஷ் நிமிர்ந்து உயர்ந்து நிழல்பரப்பி நிற்பதற்குக் காரணம் அவருடைய அடக்கமுடமையும் அறிவாழமுமாகும்.
நண்பர் கணேஷ் தன்னை என்றுமே முன்னிலைப்படுத்தியதுமில்லை, முனைப்புறுத்தியதுமில்லை. அவருடன் உரையாடும்பொழுது ஒர் உண்மை தெரியவரும் - நான் என்னும் சொல் அவரிடம் மிக மிக அருகியே காணப்படும். இது பலருக்குப் பாடமாக அமையவேண்டிய ஒரு பண்பு.
நான் நான் எனப் பேசிக்கொள்ளாத ஒருவரைத் தமிழ் தானாகவே இனங்கண்டு ஒரு நல்ல விருதினை அவருக்கு வழங்குகின்ற இந்த வேளையின் அவரது நீண்ட நாளைய அபிமானியும் நண்பனும் ஆகிய எனது வாழ்த்துக்களை, வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கணேஷ் ஒரு மலை விளக்கு. அதன் ஒளி பல இடங்களுக்குத் தெரியும். பல பாதைகளைச் சுட்டும். அவர் வாழ்வு மேலும் சிறப்பதாக அவரது பணிகள் போற்றப்படல் அவசியம்.
பி.கு. நண்பர் கணேஷ் அவர்களுடைய ஆக்கங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முழு நூலாக வெளியிடவேண்டியது அவசியம். இது அவரது உறவினர்கள், நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் தவறாது செய்யவேண்டிய ஒரு பணியாகும்.
η "ஞானம்’ தொகுப்பு/(1-24)
ஞானம் சஞ்சிகையின் 1 முதல் 24 வரையிலான - இரணர்டு வருடங்களில் வெளிவந்த இதழ்கள், சிறந்த முறையில் "பைன்ட் செய் யப்பட்டு விற்பனைக்குள்ளன.
இதில் எஸ்.பொ., டொமினிக் ஜீவா, எம்.ஏ.நுஃமானர். செ.யோகநாதன், வ.அ.இராசரத்தினம், அருண் விஜயராணி, கேஎஸ். சிவகுமாரன், பொன். பூலோகசிங்கம், கவிஞர் அம்பி, த.கலாமணி லெ.முருகபூபதி ஆகியோரின் 11 நேர்காணல்கள் அடங்கியுள்ளன.
அத்தோடு 86 கவிஞர்களின் 152 கவிதைகளும், 33 எழுத்தாளர் களின் 43 சிறுகதைகளும், ஒரு குறுநாவலும், 19 இலக்கியப் பணி புரிவோரினர் விபரங்களும், 26 நூல்களின் விமர்சனங்களும், 29 இலக்கியக் கட்டுரைகளும், தெளிவத்தை ஜோசப், முல்லைமணி, அன்புமணி, சாரல் நாடன் ஆகியோரின் "எனது எழுத்துலகம்" கட்டுரைகளும், பத்தி எழுத்துக்கள், வாசகர் பேசுகிறர், புதிய நூலகம் ஆகியனவும் அடங்கியுள்ளன.
115 வெவ்றுே படைப்பாளிகளின் ஆக்கங்களைக் கொணர்ட இத்தொகுப்பு 800 பக்கங்களைக் கொணர்டது. இந்தத் தொகுப்பினர் விலை ரூபா 500/- (பைன்டிங்" தபாற் செலவு உட்பட)
மனியோடர் அல்லது காசோலை அனுப் பரிப் பெற்றுக் கொள்ளலாம்.

Page 6
கே.கணேஷ் என்ற இலக்கிய மானுடனை
உலகத் தமிழுக்குத் தந்து வாண்புகழ் கொண்டது மலையகம்!
டுலோலியூர் க.சதாசிவம்)
ஏகாதிபத்திய குடியேற்ற நாடுகளில் தேசிய உணர்வு இலக்கிய வடிவம் பெற்ற வரலாறு, பங்களிப்புச் செய்த பான்மை இன்று - பூகோளமயமாக்கலின் தாக்கம் இலக்கியத்தைப் பாதித்துள்ள கால கட்டத்தில் - அன்று தொட்டு இன்றுவரை இலக்கியம் படைத்து எம்முடன் வாழ்ந்து வருபவருமான கே. கணேஷ் அவர்களின் ஆய்வு பயனுடையது மட்டுமல்ல பல உண்மைகளை வெளியுலகத்துக்குக், கொண்டுவரவும் வல்லது.
இவரது இலக்கிய ஆளுமை பன்முகப்பட்டது. தமிழ்ச் சிறுகதை இலக்கியத் திற்கு வடிவம் கொடுத்த மணிக்கொடியில் - தமிழச் சிறுகதை மன்னர்களான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மெளனி ஆகியோர் எழுதிய ஏட்டில் சிறுகதை எழுதியதிலிருந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர் உணர்வுகளை வடித்தெடுத்த வியட்நாம் சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தவரை, “பாரதி முற்போக்குச் சஞ்சிகையை ஆரம்பித்து, சுதந்திரன் தேசாபிமானி ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகக் கடமை ஆற்றியவரை, வடஇந்திய எழுத்தாளர்களை இணைத்து அகில இந்திய முற்போக்கு இயக்கத்தை ஆரம்பித்ததிலிருந்து இலங்கையில் தேசிய ரீதியாக முற்போக்கு இயக்கத்தை ஆரம்பித்தவரை, தானே கவிதை படைத்து உலகத்தரமான இவன் பிரங்கோ கவிதைகளை தமிழுக்குத் தந்தவரை, சீனச் சிறுவர் இலக்கியத்தைத் தந்து தமிழ்ச் சிறுவர் இலக்கியத்திற்கு மெருகூட்டியதிலிருந்து தரமான இலக்கியம் படைத்து இந்திய இலக்கிய கர்த்தாக்களான முல்க்ராஜ் ஆனந்த், கே. அப்பாஸ் போன்றோரின் படைப்புக்களை தமிழுக்குத் தந்து தமிழ் இலக்கியத்திற்கு செழுமையூட்டியவரை, உலகப் பிரசித்திபெற்ற முல்க்ராஜ் ஆனந்திலிருந்து தமிழ் இலக்கியத்தில் முற்போக்குக் கருத்திற்கு வித்திட்ட ப.ஜீவானந்தம்வரை பல இலக்கிய வாதிகளுடன் தொடர்புகொண்டு, நெருங்கிப்பழகி, கருத்துப் பரிமாறி. ஈழத்தில் வேறு எந்த எழுத்தாளருக்குமில்லாத தகைமையுடைவர் கே. கணேஷ். இன்னும் எத்தனையோ சாதனைகள் படைத்தவர் இந்த இலக்கிய மாமனிதர்.
காணி நிலத்தை விற்று முற்போக்குச் சஞ்சிகையான பாரதியை ஆரம்பித்தார்; உறவினர்களின் பிழைக்கத் தெரியாதவன் என்ற நகைப்புக்கு உள்ளானார். ஆனால் இன்றுவரை தனது இலட்சியத்திலிருந்து அவர் இம்மியளவேனும் அசையவில்லை. இலக்கியத்தை நேர்மையுடன் நேசிப்பவர், இலக்கியவாதிகளை மதிப்பவர். தமிழ் இலக்கிய ஆழத்தை அறிந்தவர். பாரதியார், திரு வி.க., தேசிகவிநாயகம்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களின் ஆக்கங்களைச் சுவைத்துப் படித்தவர். இலக்கியத்தைப் புகழ்தேடும் ஊடகமாகச் சிலர் கருதுவர். கே.கணேஷ் ஆரவாரமற்று அமைதியாக இலக்கியப்பணி
O

ஆற்றியுள்ளார். புகழைத்தேடி அவர் என்றுமே சென்றதில்லை. ஆனால் அவரைத்தேடிப் புகழ் வந்தது. ‘இலக்கியச் செம்மல், ‘கலாபூஷணம்' ஆகிய அரசு இலக்கிய விருதுகள் கிடைத்துள்ளன.
மலையக மக்களின் வாழ்வியலுக்கு கே. கணேஷ் அவர்கள் இலக்கிய வடிவம் கொடுக்க வில்லையே என எல்லோரும் ஆதங்கப் படுகிறார்கள். அதற்கு அவர் கூறும் காரணம் மிகவும் அர்த்தமுடையது. அவர் கூறுகிறார், "வெறும் கற்பனைக் கதைகள் கவிதைகள் புனைய விரும்பி, ஓர் ஓட்டம் பார்த்துவந்து உள்ளாத்மாவை உணர்ந்துவிட்டதாகப் பம்மாத்துப் புரிபவர்கள் போல இலக்கியம் படைக்க நான் விரும்பவில்லை”. அவர் கூறியது முற்றிலும் உண்மையே. மலையக வாழ்வியலைச் சரிவர அறியாது, புரியாது, உணராது மலையகத்தில் வழங்கும் சில பெயர்களையும் பாத்திரங்களையும் மலையக இயற்கைக் காட்சிகளையும் பின்னணியாகக்கொண்டு ஏதோ நானும் மலையகக் கதை எழுதியுள்ளேன் என்று கூறுபவர்களும், மலையக மண்ணின்மைந்தன் என்ற முத்திரையுடன் மலையகத்தை விட்டு ஒதுங்கி இன்றைய சமூகவியலை அறியாது பழைய நினைவுகளை மீட்டு மலையக இலக்கியம் படைக்க எம்மால் தான் முடியும் எனக் கூறுபவர்களும், அவர் கூறுவதுபோல பம்மாத்துப் புரிபவர் களே.
கணேஷ் அவர்களை மலையகம் உரிய முறையில் அறியாமல் இருப்பது, அந்நியப்படுத்தப்பட்டிருப்பது துர்ப்பாக்கியமே. காரணம் என்ன? மலையக அரசியல் மேலாதிக்கித்தின் அமுக்கமா? பேசப்படாத, இலக்கிய நீரோட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட, அசட்டை செய்யப்பட்ட இலக்கியமாக மலையக இலக்கியம் ஒருகாலத்தில் ஒதுக்கப்பட்ட காரணத்தால், அம்மண்ணின் மைந்தனைக் கண்டும் காணாது கணக்கில் எடுக்காத இலக்கிய மேலாதிக்கவாதிகளின் அமுக்கமா? இவரைப் பிரபல்யப்படுத்திவிட்டால் தங்கள் புகழும் பேரும் ஒப்பீட்டளவில் பிரகாசிக்காது மங்கிவிடும், முதன்மைப் படுத்தப்படாது என்ற இவர்களது பிற்போக்குச் சிந்தனையின் அமுக்கமா? - இலக்கிய உலகம் சிந்திக்க வேண்டும்!
கே. கணேஷ் அவர்களின் பணிகளை, படைப்புகளை நுண்ணியதாக ஆய்வுசெய்து அவர் எங்கெங்கே எப்போது எழுதினார் என்பதைத் தேடுதல் செய்ய வேண்டும். சாரல்நாடன் கோ. நடேசையரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுபோல, மலையக இலக்கியத்தை நேர்மையுடன் நேசிக்கும் தேளிவத்தை ஜேசப் அவர்கள், தனது ‘மலையகச் சிறுகதை வரலாறு' என்ற நூலில் கணேஷின் பணிபற்றி அருமையான ஆய்வு செய்துள்ளார். “ஞானம் கணேஷைக் கெளரவிக்கும்முகமாக ஒரு சிறப்புமலர் வெளியிடுகிறது.
இலக்கிய மாமனிதன் கே. கணேஷை ஆழமாக ஆய்வு செய்யும்போது, “உலகத் தமிழியலுக்கு இவரைத்தந்து வான்புகழ் கொள்கிறது மலையகம் என்ற உண்மை புலனாகும். இதற்கு மேலாக அகில உலக இலக்கியப் பரிச்சயமும் படைப்பாளிகள் தொடர்பும் பரந்துபட்ட இலக்கியச் சிந்தனையும் இன்னும் தனிப்பெரும் தகைமைகளும் கொண்ட, தமிழில் மானுடத் தமிழ் படைத்த தலைமகன் - மானுடத்தின் மைந்தன் கே. கணேஷ் என்பதனையிட்டு உலகத் தமிழியல் பெருமை கொள்ளவேண்டும்.
11

Page 7
முதுபெரும் எழுத்தாளர்
O கே. கணேஷ்
- தி.ஞானசேகரன்
இலங்கையில் மலையகப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை தொடங்கி ஏறத்தாழ நூறு வருடங்களின் பின்னரே மலையக ஆக்க இலக்கிய முயற்சிகள் ஆரம்பமாகின. 1920இன் பின்னர், தேசபக்தன் கோ.நடேசையர், அப்புதுல் காதிறுப் புலவர் ஆகியோர் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டனர். இவர்களே மலையக எழுத்துலகின் முதற்பரம்பரையினர்.
இவர்களையடுத்து 1930களில் எழுதத் தொடங்கிய சி.வி.வேலுப் பிள்ளை, கே.கணேஷ் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் இரண்டாம் தலைமுறையினர். இவர்களது எழுத்துப்பணியுடன் மலையக இலக்கியம் மறுமலர்ச்சியும் உத்வேகமும் பெறத்தொடங்கியது.
கே.கணேஷ் அவர்கள் கண்டியை அடுத்துள்ள அம்பிட்டிய என்னும் இடத்தில் உள்ள தலைப்பின்னாவ என்னும் தோட்டத்தில் திரு.கருப்பண்ண பிள்ளை அவர்களுக்கும் வேளுரம்மாளுக்கும் ஏகபுத்திரனாக 02-03-1920இல் பிறந்தார். இவரது பெற்றோரும் மூதாதையரும் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தத்தமங்கலம் என்ற சிற்றுாரில் இருந்து இலங்கைக்கு வந்து தலாத்துஒயவில் குடியேறியவர்கள். கணேஷ் அவர்களுக்குத் தாய் தந்தையர் இட்டபெயர் சித்திவிநாயகம். ஆனாலும் வீட்டுப் பெயராகிய 'கணேசன் என்பதே எழுத்துலகில் கணேஷ் ஆகி நிலைகொண்டுவிட்டது.
கணேஷ் தனது ஆரம்பக்கல்வியை தோட்டத்து எல்லையிலிருந்த பெண்கள் பாடசாலை ஒன்றில் சிங்கள மொழியிலே கற்றார். அதேவேளை அவரது தாயார் தமிழ் மொழியை வீட்டிலே சிறந்த முறையில் கற்பித்தார். தேவார திருவாசகங்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைக் கற்பித்ததோடு தமிழகத்திலிருந்தும் அஞ்சல் வழியாக பல நூல்களைப் பெற்றுப் படிக்கக்கொடுத்தார். இதன் காரணமாக சிறுவயதிலேயே கணேஷ் அவர்களுக்குத் தமிழ்மீது ஒரு தனிப்பற்று ஏற்பட்டது.
கணேஷ் தனது இடைநிலைக் கல்வியை கண்டியிலுள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் (St Anthony's college) ஆங்கில மொழியில் பெற்றார். பள்ளியில் தமிழ் வகுப்புகளே இருக்கவில்லை. தாய்மொழியில் பேசினாலும் தண்டனை என்ற நிலைமை இருந்தது. அக்காலத்தில், முப்பதுகளில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும் பரவியிருந்தது. இந்திய விடுதலை வீரர் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் பெயரில் கண்டியில் அமைந்திருந்த "போஸ் சங்கத்தின் தொடர்பு கணேஷ"க்கு ஏற்பட்டது. அங்குள்ள வாசிகசாலையில், இந்தியாவில் இருந்துவந்த தமிழ்ச் சஞ்சிகைகளும், இந்திய விடுதலை இயக்கம் குறித்த சஞ்சிகைகளும் இவருக்கு 12
 

வாசிக்கக் கிடைத்தன. இவற்றைத் தொடர்ச்சியாக வாசித்ததினால் அந்நிய ஆட்சியில் ஒரு வெறுப்பு கணேஷ"க்கு ஏற்பட்டதோடு இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய ஆர்வமும், நாட்டு விடுதலை இயக்க உணர்வும் ஏற்பட்டன. ஆங்கில மொழிமீது பற்றுக்குறைந்து தமிழ்மொழிமீது பற்று அதிகமாகியது. போஸ் சங்கத்தில் தமிழ் ஆர்வலர்களின் நட்பும் இளைஞனான கணேஷ”வுக்குக் கிடைத்தது.
போஸ் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்தவரும் மகாத்மா காந்திக் கல்லூரியிலும் (தற்போதைய Hindu senior School) தனியார் ஒருவர் நடத்திய மத்திய கல்லூரியிலும் (Central College) ஆசானாக இருந்த வருமாகிய திரு முத்துராமலிங்கம் என்பவர், கணேஷ் அவர்களின் தமிழ் ஆர்வத்தைக் கண்ணுற்று, அவரைத் தமிழகம் சென்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்விகற்கும்படி ஆலோசனை கூறினார். அத்தோடு அதற் கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தார். 1934ஆம் ஆண்டு தமிழகத்துக்குக் கல்வி கற்கச் சென்ற கணேஷ், தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்விகற்ற வேளையில், அவருக்கு இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டன. தற்போது, இந்திய அரசின் தியாகச்சின்னம் - தாமிரவிருது பெற்றவரும், திருநெல்வேலி சதிவழக்கொன்றில் ஆயுள்தண்டனை பெற்று சிறைவாசமிருந்து விடுதலையாகியவருமாகிய இ.மாயாண்டி பாரதியின் நட்புக் கிடைத்தது. அவரோடு அவரது இல்லத்தில் தங்கியிருந்து தமிழ்ச்சங்கக் கல்லூரி யில் பாடம் ஏற்று வந்தார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சிக் கருத்துகளைக் கொண்ட இடதுசாரிக் கொள்கைகளும், காந்தியக் கொள்கை களும் வலுப்பெற்றிருந்தன. தமிழ் நாட்டில் திரு வி.க., ம.சிங்காரவேலு செட்டியார், பெரியார் ஈவேரா, ப.ஜீவானந்தம், கே.முருகேசன் ஆகியோர் இயக்கங்கள் அமைத்துப் போராடிய காலமது. உலகில் உள்ள துன்ப துயரங் கள் யாவும் தீர்வதற்கு “கம்யூனிஸம் ஒன்றே ஒரேவழி என இவர்கள் எடுத்துரைத் தனா.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ‘அபேதவாதம் ஏன்? (Why Socialism?), ஜவர்ஹர்லால் நேரு எழுதிய 'இந்தியா எங்கு செல்கிறது? (Whither India), அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய ‘சாம்ய வாதம்’ ஆகிய நூல்களை வாசித்ததனால் கணேஷ் அவர்களுக்கு இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு அதிகரித்தது.
இதன்காரணமாக ஆக்ராவில் இருந்த அபேதவாதக் கட்சியின் ராமண்ண சாஸ்திரியுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. இதனையறிந்த இந்திய இரகசியப் பொலிசார் இவரைப் பற்றி விசாரிக்கத் தமிழ்ச்சங்கக் கல்லூரித் தலைமை ஆசிரியரை நாடினர். இதன் விளைவாக இவர் தமிழ்ச்சங்கக் கல்லூரியில் இருந்து விலக நேரிட்டது.
அதன்பின்னர் கணேஷ் திருவையாறு அரச கல்லூரியில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.
தமிழகத்துக்குத் தமிழ் கற்கச் சென்ற கே.கணேஷ் அங்கு கம்யூனிஸ் சித்தாந்த அறிவையும் இந்திய சுதந்திரவீரர்களின் தொடர்பையும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நட்பையும் பெற்று 1938இல் இலங்கை 13

Page 8
திரும்பினார். இலங்கை திரும்பிய பின்னரும் தமிழக எழுத்தாளர்களுடனும் கதந்திரப் போராட்ட இயக்கங்களுடனும் தமது தொடர்பினைப் பேணிவந்தார்.
ஆரம்பகால முயற்சிகள் கணேஷ் அவர்களின் ஆரம்பகால எழுத்து முயற்சிகள் 1932இல் மாணவப் பருவத்தில் அவரது பன்னிரண்டாவது வயதிலேயே ஆரம்பமாகின. தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கிய சஞ்சிகையான 'ஆனந்த போதினியில் 'அறம் செய்ய விரும்பு என்ற சிறுவர் கட்டுரையை எழுதியதன்மூலம் கணேஷ் எழுத்துலகில் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் வரதராஜ நாயுடு அவர்களது ‘தமிழ்நாடு வார சஞ்சிகையிலும் இவரது ஆக்கம் பிரசுரமாகியது. 1935ஆம் ஆண்டுமுதல் 'மாதர் மறுமணம்’ என்ற சஞ்சிகையில் இவரது கவிதைகள், கட்டுரைகள் பிரசுரமாகின.
1939இல் கே.ராமநாதன், இ.மாயாண்டிபாரதி, சக்திதாசன் சுப்பிரமணியம் ஆகியோர் சென்னையில் இளைஞர் காங்கிரஸ்' என்ற அமைப்பினை உருவாக் கினர். இந்த அமைப்பினரால், சுபாஷ்சந்திரபோஸின் கொள்கை அருட்டுணர் வுடன் "லோக சக்தி என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. சென்னையில் முற்போக்குக் கருத்துக்களை வெளியிட்ட முதல் சஞ்சிகையாக இது திகழ்ந்தது. லோகசக்தி ஐந்தாவது இதழில் (1939 செப்டெம்பர் பேரிகை 1, ஒலி 5) தத்தமங்கலம் க.கணேசன் என்ற இவரது பெயரில் ‘மாணவர் பேரிகை என்ற கவிதை வெளியானது.
கணேஷ் அவர்களின் நண்பரான இ.மாயாண்டிபாரதி பின்னர் ஜனசக்தி ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஜனசக்தியின் ஆசிரியரான ப.ஜீவானந்தம் தன் எழுத்துக்கள் மூலம் நண்பராகிக் கொண்டார். இதன் காரணமாக கணேஷ் தனது சொந்த ஆக்கங்கங்களையும் மொழிபெயர்ப்புகளையும் ஜனசக்தியிலும் Gauf.
கவிஞர் தமிழ்ஒளி, கவிஞர் குயிலன் ஆகியோர் சேர்ந்து நடத்திய தென்றல் பத்திரிகையிலும் கணேஷ் சிலகாலம் பணியாற்றினார்.
1935-1938களில் ‘மணிக்கொடி’ பத்திரிகை மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. அப்போது பி.எஸ்.ராமையா அதன் ஆசிரியராக இருந்தார். ககப்பிரமணியம், புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, சிட்டி போன்றோர் இதில் சேர்ந்து இயங்கினர். கணேஷின் இலக்கிய ஆக்கங்களுக்கு உற்சாகம் அளித்தும் நல்வழி காட்டியும் ஊக்குவித்தார் பி.எஸ்.ராமையா. பரா. என்ற பா.ராமசாமி அவர்களும் மணிக்கொடியில் கணேஷின் ஆக்கங்கள் இடம்பெற உற்சாகமளித்தார். மணிக்கொடியில் இவரது ‘ஆசாபாசம்' என்ற சிறுகதையும் இவரது முதலாவது மொழிபெயர்ப்பு முயற்சியான 'அதிஷ்டசாலி என்ற ஹங்கேரியச் சிறுகதையும் வெளிவந்தன. கலைஞன் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள மணிக்கொடித்தொகுப்பில் 'அதிஷ்டசாலி சிறுகதை, தத்தமங்கலம் க.கணேசன் என்ற பெயருடன் இடம்பெற்றுள்ளது.
*ராஜகோபாலனை ஆசிரியராகக் கொண்ட 'கலாமோகினி", குயரா.வையும் பின்னாளில் வல்லிக்கண்ணனையும் ஆசிரியராகக் கொண்ட "கிராம ஊழியன், திரிலோக சீத்தாராமை ஆசிரியராகக் கொண்ட 'சிவாஜி, 14

தி.ஜ.ராவை ஆசிரியராகக் கொண்ட 'சக்தி, ஹனுமான்', 'ஹிந்துஸ்தான்' ஆகிய பத்திரிகைகளிலும் கணேஷின் ஆக்கங்கள் வெளிவந்தன".
எழுத்துப்பணிகள்
கணேஷ் அவர்கள் தமது சொந்தப் பெயரிலும் ‘சித்தார்த்தன்', கலாநேசன்', 'கே.ஜி, "மலைமகன்', 'கணேசு ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
அவரது எழுத்து முயற்சிகளில் மிக முக்கியமானது, சிறந்த பிறநாட்டு இலக்கியங்களை தமிழ்மொழியில் பெயர்த்ததாகும். அத்தோடு சுய ஆக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் கணேஷ் தனது பங்களிப்பை நல்கியுள்ளார்.
கணேஷின் எழுத்துக்களில் காணப்படும் பொதுப்பண்புகளாக, சமதர்ம நாடுகள் எனக் கொள்ளப்பட்ட நாடுகளின் விடுதலை உணர்ச்சி, மனித விடுதலை உணர்ச்சிப் போராட்டங்கள், விடுதலை உரிமை உணர்வு, மானிட நேயம் என்பனவும் எல்லோருக்கும் யாவும் பொது என்ற அடிப்படையும், எதிர்காலம் மீது கொண்ட நம்பிக்கைகள், விருப்புகள், எதிர்பார்ப்புகள் ஆகியனவும் அடங்கியிருக்கும். அத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களின் துயரப் பெருமூச்சுகள், சோகம், அடிமைவாழ்க்கை ஆகிய பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அவை அமைந்திருக்கும்.
கணேஷ் ஒரு முற்போக்கு எழுத்தாளர். அந்த வகையில் அவர் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த நூல்களும் மார்க்சியப் பார்வை கொண்டவையாக அமைந்தன. “மார்க்சிய எழுத்தாளர்களின் பார்வையில் குறிப்பாக அவதானிக்கவேண்டிய பண்பு, மானுடம் தழுவிய பார்வை. மார்க்சிய அரசியலுடன் இந்தப் பார்வை பின்னிப்பிணைந்துள்ளது. துன்பங்கள் துயரங்கள் வாழ்வின் முடிவல்ல. உண்மைச் சமதர்மமும் விடுதலையுமே இறுதிப்படிகள். அதற்கான போராட்டத் தீர்வுகள், வழிமுறைகள் என்பவற்றைச் சித்திரிப்பதற் காக, அதற்கென மனிதனை வழிநடத்துவதாக, குறிப்பாக சமுதாய யதார்த்தமாக அந்தப்பார்வையை மார்க்சிய படைப்பாளிகள் கொள்வர்”. கணேஷ் மொழி பெயர்த்த இலக்கியங்களிலும் இந்தப் பண்புகள் அமைந்துள்ளன.
கணேஷின் மொழிபெயர்ப்பாக நாவல், குறுநாவல்கள், கவிதைகள் இடம்பெற்றன.
நாவல்
தீண்டாதான் (Untouchables) (1947) : உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் எழுதிய இந்த நாவல், கணேஷ் அவர்கள் மொழிபெயர்த்த ஒரேயொரு நாவலாக விளங்குகிறது.
இந்தியாவில் ஏறத்தாழ பத்துக்கோடி மக்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரம் கிடைத்தபோது அவர்களுக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டன. ஆனால் நிதர்சன சமூக வாழ்வில் அவர்கள் இன்னமும் ஹரிஜனங்களாகவே மதிக்கப்படுகின்றனர். மனிதப்பிறவிக்குள்ள இயல்புகள், மனோநிலை, ஆசாபாசங்கள், உணர்ச்சிகள் எல்லாம் தீண்டாதாரின் ஒதுக்கப்பட்ட வாழ்வில் நசுக்கப்பட்டன. அவர்களும் மனிதர்களே. மனிதருக்குரிய
15

Page 9
உர்ைச்சி மனோநிலை அவர்களுக்கும் இருக்கின்றன என்பதை தீண்டாதான் நாவலில் ஆசிரியர் அழகுற எடுத்துக்காட்டுகிறார். தலித் இலக்கியத்தின் முதல்நாவலாக பாரதத்தில் வெளிவந்தது இந்நாவல் எனக் கருதப்படுகிறது.
குறுநாவல்கள் : ஐந்து குறுநாவல்கள் கே.கணேஷ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலுருப்பெற்றுள்ளன.
*அஜந்தா (1964) : கே.ஏ.அப்பாளல் எழுதிய இந்தக் குறுநாவலில் ஒரு பெரிய தத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறார் ஆசிரியர். முற்றுப் பெறாத குகையில் ஒலித்துக் கொண்டிருக்கும் புத்த பிக்குவின் உளியோசை, பரிபூரணத்தை நோக்கி மனிதன் பாடுபடவேண்டும், அவன் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைப் போதிக்கிறது. இந்த அஜந்தா என்னும் ஒவியத்தின் மூம்ை பல வரலாற்று நிகழ்வுகளும், இனப்போராட்டங்களும் எடுத்துக்காட்டப் LGGGIGN.
*அந்தகானம்’ (1974) : அல் தாய் முஹம்மதோவ் எழுதிய இக்குறுநாவலில், அஸர்பைஜானியநாட்டின் பாரம்பரிய உணர்வுகள் சித்திரித்துக் காட்டப்படுகிறது. நாட்டில் என்னதான் புரட்சி நடைபெற்று பாட்டாளி அரசு தோன்றினாலும் அந்நாட்டுக்குரிய பாரம்பரியம் காரணமாகவும், வரலாற்றுப் பண்பு காரணமாகவும், சமூகத்தில் பல ஆண்டுகாலமாக நிலவிவந்த பழமையான சமுதாயக் கருத்துக்கள் இடம்பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. இதை உணர்த்துகின்றது இக்குறுநாவல்.
“இளைஞன் எர்கையின் திருமணம்’ (1990) : என்ற குறுநாவல் சீன நாட்டின் பாரம்பரியத்தைச் சித்திரிக்கின்றது. அன்றைய சூழலில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடியின் நிகழ்விலிருந்து உதிக்கிறது இக்கதை. பழமையில் ஊறியிருந்த சமூகத்தினர் காதலனைக் கொலை செய்தனர். இந்நிகழ்வை 'ஜெகசூலி என்னும் நாட்டுப்புறக் கதைகளுக்கு ஏற்ப எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்னும் மகிழ்வுதரும் முடிவில் அமைத்துள்ளார் ஆசிரியர்.
*கூற்ை பிறை (1990 : முப்பதுகளில் ஏற்பட்டிருந்த சீனத்து வறுமையை பம்பிடித்துக் காட்டுகிறது இந்தக் குறுநாவல். வறுமையினால் வாடிய குடும்பம், குடும்பத்தலைவனின் மறைவினால் மேலும் கொடிய வறுமைக்கு ஆளாகின்றது. அக்கொடிய வறுமையினால் குடும்பத்தில் ஏற்படும் துன்ப துயரங்களை இந்நாவல் சித்திரிக்கின்றது. சீனத்து வறுமை நிலை அக்காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதையும் அதனால் அச்சமூகம் எவ்வாறு பாதிப்படைந்தது என்பதையும் இக்குறுநாவல் படம் பிடித்துக்காட்டுகிறது.
"உடலும் உணர்வும்" (1992) : “ஒரு மந்தையோட்டியின் கதை, "ஒரு பாரப் பேருந்து ஒட்டுனரின் கதை ஆகிய இரு குறுநாவல்களின் தொகுப்பு இது 1936 நான்ஜிங்கில் பிறந்த ஷாங் சியான் லியாங் என்ற சீன எழுத்தாளரின் பாடப்புகள் இவை. இவர் சீன பண்பாட்டுப் புரட்சியால் பாதிக்கப்பட்டவர். 1957இல் மக்கள் நாளேடு இவருடைய படைப்புகளை அலசி, காமாலைக் கணக்கொண்டு பார்த்து அரசியல் நோக்கம் கற்பித்து, இவரை வலதுசாரி பூர்ஷாவா எனக் குற்றஞ்சாட்டியது. இதன்விளைவாக பத்தாண்டுகள் பண்ணைத் தொழிலாளியாகப் பணிபுரியவேண்டும் என்ற உழைப்புத் தண்டனை 16

விதிக்கப்பட்டதுடன் எழுதும் உரிமையும் பறிக்கப்பட்டது. 1979 முதல் இவர் மீண்டும் சுதந்திரமாக எழுதத் தொடங்கினார். இவரது ஐந்து கதைகள் திரைப்படமாகின. இவரது ஒரு மந்தையோட்டியின் கதை என்ற பிரபலமான படைப்பு உடலும் உணர்வும் என்ற பெயரிலேயே வெளியானது. இந்தப்படைப்பு பின்னர் திரைப்படமாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1983இல் அனைத்துலகத் திரைப்பட விருதினைப் பெற்றது. சிறந்த திரைப்படத்துக்கான சீன விருதினையும் பெற்றது. இக்கதை வீரகேசரியில் 1986இல் தொடராக வெளியாகியது.
“மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் : கணேஷ் அவர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
‘குங்குமப் பூ (1956, 1963) : வடஇந்திய எழுத்தாளரும், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவருமான கே.ஏ.அப்பாஸ் எழுதிய பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி இது. கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த இச்சிறுகதைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ‘குங்குமப்பூ என்ற மகுடத்தில் வெளியாகியது. இந்நூலுக்கு பிரபல எழுத்தாளரான தி.ஜ.ர. முன்னுரை எழுதியுள்ளார்.
காஷ்மீர் கிளர்ச்சி, ஜேப்படித் திருட்டு, குருவிகளின் தீரம், சமய வெறியின் குருட்டுத்தனம், கடமை உணர்ச்சி, வறுமையின் கொடுமையறியாத் தேசபக்தி, ஆசை காட்டும் காமுகர் இயல்பு, தாளாத தரித்திரத்திலும் தாய்மை அன்பு, உண்மைக் காதலை அறிய முடியாமல் செய்த “கலைக் கொடுமை, பசித்தவனின் திருட்டு ஆகிய விடயங்கள் முறையான உணர்ச்சிகளுடன் இக்கதைகளில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.
‘போர்க்குரல்’ (1981) : "லூசுன் எனும் சீன எழுத்தாளர் நவசீன இலக்கியத்தின் பிதா' என மதிக்கப்படுகிறார். சீன மக்களது வாழ்க்கையையும் அவர்களது இன்ப துன்பங்களையும் நம்பிக்கைகளையும் பழங்கால பழக்க வழக்கங்களையும் பிரதிபலிக்கும் கதைகளை அவர் எழுதியுள்ளார். புராதன சீனாவில், புதிய சிந்தனைகளும், வாழ்க்கை முறைகளும் வேரூன்றத் தொடங்கிய காலகட்டத்தில் சீன மக்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை அவரது கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. லூசுன் கதைகளை இலங்கை கே.கணேஷ் நன்கு தமிழாக்கியுள்ளார்” (-வல்லிக்கண்ணன், தினமணி27-5-89) இத்தொகுப்பிலுள்ள அருமருந்து ஒரு குறுநாவலாகும். பாய்ஹ"வா என்ற புதுமை இலக்கிய காலத்தில் தோன்றிய படைப்புகளில் லூசுன் எழுதிய இக்குறுநாவல் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சி சீனாவில் 1911ஆம் ஆண்டுவரை நிலவிய சிங் வம்சத்தினரின் முடியாட்சிக் காலத்தில் தோன்றியதாகும். முடியாட்சி நிறுவப் போரிட்ட வீரன் படுகொலை செய்யப்படுவதையும், சுகாதார வசதியற்ற மக்கள் குருட்டு நம்பிக்கைகளில் சிகிச்சைவழி காண்பதையும் இக்குறுநாவல் சித்திரிக்கிறது. மனித இரத்தத்தை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் காசம் போன்ற நோய்கள் தீர்ந்துவிடும் என்ற மூட நம்பிக்கை நிலவிய நாட்கள் அவை. இக்குறுநாவல் தினகரனில் 22.7.73முதல் தொடராக வெளிவந்தது. இத்தொகுப்பில் ஒன்பது கதைகள் 17

Page 10
அடங்கியுள்ளன. இக்கதைகளில் அனேகமானவை தமிழக சஞ்சிகைகளான தாமரை, செம்மலர் ஆகியவற்றில் ஏற்கனவே பிரசுரமாகின.
“சீன எழுத்தாளர் லூசுன் சிறுகதைகள்’ (1988) ; போர்க்குரல் தொகுதி யில் இடம்பெறாத ஒன்பது சிறுகதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
“சீன அறிஞர் லூசுன் சிறுகதைத் தொகுப்பு (1995) : "போர்க்குரல்" தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளுடன் சீன எழுத்தாளர் லூசுன் சிறுகதை கள் தொகுதியில் உள்ள ஒன்பது கதைகளும் சேர்ந்த மொத்தம் பதினெட்டுக் கதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. சீரழிந்த சமூகத்தில் உள்ள மிக துரதிஷ்டசாலிகளைப் பாத்திரங்களாக எடுத்துக்கொண்டு சமூக அமைப் பிலுள்ள தீமைகளையும் கொடுமைகளையும் அம்பலப்படுத்தி, அத்தீமைகளுக் கும் துன்பங்களுக்கும் முடிவுகட்டும் நோக்குடன் இக்கதைகள் அமைந்துள்ளன. “மூங்கிற் பள்ளம் (வியத்நாமியச் சிறுகதைகள் 1992) : முன்னர் சஞ்சிகைகளில் வெளியான ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் முடியாத ஒவியம் (தாமரை), மூங்கிற் பள்ளம் (தாமரை -ஜனவரி 1973), கிழத்தம்பதிகள் (கார்க்கி -ஜனவரி 1973), அரிசிமுனை (தாமரை - 1973), மலைத்தடம் (தாமரை) ஆகிய கதைகள் அடங்கியுள்ளன. இந்த மொழிபெயர்ப்புக் கதைகளை வாசிக்கும்போது எமது சொந்த மண்ணின் கதையைப் படிக்கும் அநுபவத்தை தருகிறது. கணேஷ் சிறந்த முறையிலே இக்கதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
தொகுப்புகளில் அடங்காத கணேஷின் மொழிபெயர்ப்புக் கதைகள் சிலவும் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. லூசுன் எழுதிய ‘ஒரு அறிஞனும் முட்டாளும் அடிமையும் (சிரித்திரன் ஆகஸ்ட் 73), ஒரு நிகழ்ச்சி (சிரித்திரன் அக்டோபர் 73, வீரகேசரி 4.10.81), ‘நாயின் எதிர்வாதம் (சிரித்திரன் டிசம்பர் 73), கெர்த்தா வெய்னர்ட் எழுதிய ஜேர்மன் சிறுகதை ‘குழந்தைகள்' (சிரித்திரன்), நீலச்சட்டை (தாமரை டிசம்பர் 73), இவான் ஃப்ராங்கோ எழுதிய நரியை ஏமாற்றிய நண்டு (சிறுவர் இலக்கியம், வீரகேசரி 13-12-81), முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய 'கைதியின் பேட்டி (மஞ்சரி கார்த்திகை 47)ஆகியவை இவற்றுட் சிலவாகும்.
மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஒரு படைப்பாளியின் அக்கறையும் ஈர்ப்பும் வேகமும் எந்தப் பண்புகளில் அழுத்தி நிற்கிறதோ அவற்றையே அவன் இலக்காகக் கொண்டு இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவான். கணேஷ் அவர்கள் மொழிபெயர்ப்புக்காக கவிதை களைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் இக்கவிதைகளிலே காணப்படும் பண்புகள் அவருக்கு உடன்பாடானது என்பதுதான். மனுக்குல விடுதலை பற்றிய உணர்வுகளே கணேஷ் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்புக் கவிதைகளில் ஓங்கிநிற்கின்றன.
கணேஷ் அவர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய ஏழு நூல்கள் வெளியாகியுள்ளன.
"ஹொசிமின் சிறைக்குறிப்புகள்’ (1973,1985) : நூலின் மூல ஆசிரியரான ஹொசிமின் வியட்நாம் தேசத்திலும் சீன நாடுகள் அனைத்திலும் தேச 18

விடுதலைக்காகத் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்தவர். 1942ம் ஆண்டில் ‘சியாங்கை ஷேக், ஆட்சியாளரால் கைது செய்யப்பட்டு தென்சீனாவில் பலமுறை சிறைகளில் வைக்கப்பட்டவர். அவர் சிறையில் இருந்த காலத்திலே சிறைக்குறிப்புகளாக அவ்வப்போது எழுதிய கவிதைகள் பின்னர் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆசிய நாட்டு விடுதலைக் கிளர்ச்சி வரலாற்றில் வழிகாட்டி நூல்களில் ஒன்றாகத் திகழ்வது ஹொசிமின் சிறைக்குறிப்புகள். பல நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல இலட்சப் படிவங்களில் பரவியவை. “சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப்போய் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள ஹொசிமின் சிறைக்குறிப்புகள், நயக்கத்தக்க சிறந்த கவிதைகளாகவே தமிழிலும் திகழ்கின்றன. மூலத்திலுள்ள மொழிபெயர்க்கத் தகுந்த கூறுகள் குறைவேதுமின்றி தமிழுக்கு வந்து சேர்ந்துள்ளன எனவே கருதத்தோன்றுகிறது. அத்துடன் சிறையின் தனிமையையும் கொடுமையையும் நன்கு வெளிக்கொணரத்தக்க தமிழோசையும் கணேஷின் மொழியாக்கத்தில் வந்து வாய்த்துள்ளது. இதனால் நாம் படிக்கும் ஹொசிமின் கவிதைகள், நமக்கேற்ற தமிழுருவத்துடன் நிறைவான அனுபவத்துளிகளை வழங்குகின்றன" (. முருகையன், வீரகேசரி 16-12-73)
“பல்கேரியக் கவிதைகள்’ (1984) : பதின்மூன்று பல்கேரியக் கவிஞர்களின் கூட்டுத்தொகுதியாக இது அமைந்துள்ளது. இத்தொகுப்பில் 31 கவிதைகள் அடங்கியுள்ளன. இக்கவிதைகள் பாஸிஸ் எதிர்ப்பு இலக்கியமாகத் திகழ்கின்றன.
‘ஒரு சோவியத் கவிஞரின் புதுக்கவிதைகள்’ (1989) : இந்த மொழி பெயர்ப்புக் கவிதைநூல் கவிஞர் வி.குப்றியனோவ் என்பவரை மூல ஆசிரியராகக் கொண்டது. எதுகை மோனைக்கு உட்படாத கட்டுக்கோப்பற்ற புதிய பாணியில் ஆக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. வி.குப்றியனோவின் கவிதைகள் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி கீழைத்தேய நாடுகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவற்றை அழகிய முறையிலே மொழிபெயர்த்துள்ளார் கணேஷ். இத்தொகுப்பில் 23 கவிதைகள் அமைந்துள்ளன.
“எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே’ (1988): சண்டோர் பெட்டோ.வ்பி என்ற ஹங்கேரியக் கவிஞனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இக்கவிஞன் தனது நாடு அந்நிய ஆட்சிக்கு உட் பட்டு அவதியுற்ற காலத்தில், பேனா ஏந்திய தன் கையாலேயே வாளும் ஏந்திப் போரிட்டு இளம்வயதிலேயே உயிர் நீத்தான். இவன் தனது நாட்டில் அந்நியர் ஆட்சியை அகற்றவும் நாட்டிலே குடியரசை நிலைநாட்டவும் பாடுபட்ட போர்வீரன். இவனது கவிதைகள் இன்று விடுதலை வேட்கைகொண்ட பல நாட்டினரதும் உள்ளக்கனலைத் தூண்டும் போர்க்கவிதைகளாக விளங்கு கின்றன.
“பாரதி பக்தன் பார்பரா கவிதைகள்’ (1989) ; மஹாகவி பாரதிமேல் கொண்ட மெய்க்காதலுடன் அவரைப் பற்றிப் பாடிய பார்பரா என்ற கவிஞனின் இதய தாகங்களை உள்ளடக்கியது இக்கவிதைகள். இதனைத் தமிழ் மக்களுக்கும் அறிமுகஞ் செய்து வைப்பதற்காகவே கணேஷ் இவரது கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இதில் "இந்திய நன்னாட்டுக்கு, 19

Page 11
"கப்பிரமணிய பாரதிக்கு ஆகிய கவிதைகள் உட்படப் பன்னிரண்டு கவிதைகள் அபங்கியுள்ளன.
“உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சேன்கோ கவிதைகள்’ (1993) : இத்தொகுப்பில் 33கவிதைகள் அடங்கியுள்ளன. தராஸ் ஒரு சிறந்த ஓவியரும் கவிஞருமாவார். இவரது கவிதைகள், எளியவர்களின் துயர்மிக்க வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு அவர்தம் துயர்போக்கும் வழிவகுத்து, அந்நாளின் மாமன்னன் ஜாரை எதிர்க்கும் உணர்வை இலக்கியத்திலே புகுத்தி மக்களிடையே ஒரு எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் தோற்றுவித்தன. இலக்கியத்தில், சமூக எண்ணப்போக்கில், அரசியல் உணர்வில் ஒரு புரட்சியையே தோற்றுவித்தது.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதெரீனா ஒரு கவிதைக்காவியம். கிராமத்து ஏழைப்பெண் ஒருத்தி பட்ட துன்ப துயரங்களை இக்காவியம் கூறுகிறது. இத்துடன் தராஷ் செவ்செங்கோவின் வாழ்க்கையில் நிகழ்ந்த பிரதான சம்பவங்கைளையும் முற்போக்கு அணியுடன் அவர் கொண்டிருந்த உணர்வுகளையும் இக்காவியம் பிரதிபலிக்கிறது. 1974இல் தராசின் நூற்று அறுபதாவது ஆண்டு நினைவாக தாமரையில், "இறுதி வேண்டுகோள், "கதெரீனா ஆகியவை வெளியாகின. பின்னர் 1986ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை தினகரன் வாரமஞ்சரியில் தொடர்ச்சியாக கதெரீனா வெளிவந்தது. "இறுதிவேண்டுகோள் தமிழில் வெளிவந்த தராசின் முதற் கவிதையாகும்.
"உக்ரேனிய அறிஞர் இவன் ஃபிராங்கோ கவிதைகள்’ (1994) : பிராங்கோ, வவிங் பல்கலைக்கழகத்தில் பயின்றவராயினும் அவரது அரசியல் காரணமாக பல்கலைக்கழகத்து மேலிடத்தினர் அவருக்குக் கலாநிதி யட்பமளிக்கத் தயங்கினர். ஆசிரியர் தொழில்கூட மறுக்கப்பட்டது. எனினும், வியன்னா பல்கலைக்கழகம் அவருக்குத் தத்துவக் கலாநிதி பட்டமளித்துச் சிறப்பித்தது. மற்றும் பிட்டர்ஸ் பேர்க் பிரஹா விஞ்ஞானக்கழகங்கள் விருதுகள் அளித்தன. ருஷ்யாவின் கார்க்கோவ் பல்கலைக்கழகமும் பட்டமளித்தது. இவரது படைப்புகள் ஐம்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. கணேஷ் இவரது கவிதைகள் சிலவற்றை இத்தொகுதியில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
தொகுப்புக்களில் வெளிவந்த கவிதைகளைவிட சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் கணேஷால் மொழிபெயர்க்கப்பட்ட பல கவிதைகள் வெளியாகியுள்ளன. ஹொசிமின் எழுதிய சதுரங்கம்’ (தினகரன், 9.9.73), “யள்ைடித நேருவுக்கு ஹொசிமின்’ (வீரகேசரி, 27-12-81), இளவேனில்’ தேசாபிமானி, 1471), “நெல்குத்தும் ஓசை, சந்திக்காலம், 'பாதை திருத்துவோர் (தமிழமுது 1972), தராஷ் செவ்சென்கோவின் ‘ஆண்டுகள் பதின்மூன்று அப்போது சோவியத்நாடு, இல3, 1990), கல்மிக் கவிஞர் டேவிட் குகுல்தினோவ் (1977), நல்லுள்ளம்', 'இளவேனில் (தேசாபிமானி, 1-4-71), சோவியத் கவிஞர் அனதோலி பார்பராவின் ‘சுப்பிரமணிய பாரதிக்கு (வீரகேசரி), கவிதைத்தேவி, "புகழ், "ஜார்கள் (சோவியத் நாடு), எதிர்ப்புணர்ச்சி, ‘சவாரி செய்யும் உலகின் எழுகடலின் அலையதற்கு மேலே', 'அமைதியுற்றது ஐரோப்பா’ (தாமரை) ஆகியவை அவற்றுட் சில.
20

சிறுவர் இலக்கியம் கணேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பில் நான்கு சிறுவர் இலக்கிய நூல்கள், சீன அயல்மொழிப் பதிப்பகத்து வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. ‘இன்றைய எனது கடமைகள்’ (1990); சீனமொழியில் ஜங்கையா லியங்கி எழுதியது.
'மகிழ்ச்சிமிகு குழந்தைகள்’ (1986) : ஜூஸ்கின் எழுதியது. "சொந்த வேலையில் சுகம்"(1990) : சீனமொழியில் ஜாங்கி எழுதியது. “வழிகானும் நத்தையும்’ (1991) : சீனமொழியில் ஒ எழுதியது. இதில் வழிகானும் நத்தையும் சீன நாடோடிக்கதை. ஒரு இளம் உழவன் கரையேறும் சாகக்கிடந்த நத்தை ஒன்றைக் காண்கிறான். அதனைத் தண்ணிர் தொட்டியில் போட, அது உரம்பெற்று கட்டிளம் பெண்ணாக உருமாறுகிறது. இருவரும் காதல் கொள்கின்றனர். மணம் புரிகின்றனர். துரதிர்ஷ்டவசமாக நடுவன் அறிகிறான் இவர்களைப்பற்றி. நத்தையை வைப்பாகப் பெற முயல்கிறான். பெற்றோரும் குழந்தைகளும் தப்பிவிடுகின்றனர். விஜயாங் ஆற்றில் குதித்து விசித்திரப் பாறைகளாக மாறி இன்றைக்கும் காட்சி தருகின்றனர்.
கற்பனை விருத்திக்காக இதுபோன்ற படைப்புகளை நமது சிறார்கள் படித்துப் பார்க்கலாமல்லவா? அறிஞர் கே.கணேஷ் பராட்டுக்குரியவர். (கே.எஸ்.சிவகுமாரன் - தினகரன் வாரமஞ்சரி 18 ஜூன் 1995).
கணேஷின் சுய ஆக்கங்கள்
கணேஷ் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள், சிறுவர் ஆக்கங்கள், உரைச்சித்திரங்கள் எனப் பல சொந்தப் படைப்புகளைத் தந்துள்ளார்.
சிறுகதை :
கணேஷ் அவர்கள் மொத்தம் ஏழு சிறுகதைகளை எழுதியுள்ளார் என அறியப்படுகிறது. இவரது "ஆசாபாசம் மணிக்கொடியிலும், “சட்டமும் சந்தர்ப்பமும் என்ற கதை யுகம் சஞ்சிகையிலும், “பால்க்காரப் பழனி, "ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம்’, ‘சத்தியபோதி மரம் (டிசம்பர் 1949), என்ற கதைகள் வீரகேசரியிலும் வெளிவந்தன. இவற்றுள் சத்தியபோதிமரம் மலையகச் சிறுகதைகள் தொகுப்பிலும், முன்னோடிச் சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. இக்கதைகள் யாவும் சமுதாயச் சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக அமைந்துள்ளன. டைரக்ரர் வெங்கு (1949), 'காலச்சக்கரம்’ (1949) ஆகிய இரு கதைகள் சமீபத்தில் சாரல் நாடனின் தேடலில் கிடைத்துள்ளன.
கவிதைகள் :
1941இல் கொழும்புத் துறைமுகத்தில் பெரியதொரு வேலை நிறுத்தம் ஏற்பட்டது. வேலைநிறுத்தத்தின்போது தொழிலாளருடன் இணைந்து தீவிரமாகச் செயலாற்றினார் கணேஷ். அக்காலகட்டதில் கணேஷ் அவர்கள் எழுதிய கவிதை ‘ஹார்பரிலே தொழிலாளி என்னும் கவிதையாகும். இக்கவிதை கப்பலில்
21

Page 12
வேலைசெய்கின்ற தொழிலாளர்களின் பேச்சுவழக்கில் அவர்களின் இன்னல்களையும் ஒலக்குரல்களையும் மிக நயமாக வெளிப்படுத்தும் கவிதையாகும். இக்கவிதையிலே கவிஞர், தொழிலாளர்களில் தாமும் ஒருவராக நின்று குரல் கொடுக்கின்றார். இக்கவிதை கே.ராமநாதனை ஆசிரியராகக் கொண்ட நவசக்தி 21-09-41 இதழில் வெளியானது.
அடுத்து, கலாநேசன் என்ற புனைபெயரில் அவர் எழுதிய ‘உழவன் வாழ்க்கை என்ற கவிதையும் முக்கியமானது. இக்கவிதையும் நவசக்தியிலேயே 1943இல் வெளியானது. மாடுபோல உழைத்தும் முன்னேற்றத்தைக் காணாத ஏழை உழவனது வாழ்க்கையின் இருள் சூழ்ந்த அவலத்தை இந்தக் கவிதையிலே காட்டியுள்ளார் கவிஞர்.
கணேஷ் அவர்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். கவிமணியின் கவிதைகளில் உள்ள கருத்துக்கள் கணேஷின் கவிதைக் கருத்துக் களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் நினைவாக ஒரு கவிதையை ஆக்கியுள்ளார் கணேஷ். 'தேவியின் நாமம் தினம் வாழ்க’ என்ற கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை நினைவஞ்சலிப்பாடல் 4-10-59 வீரகேசரியில் வெளியானது.
"அசோகமாலா' என்னும் நெடும்பா சாதி அகம்பாவத்திற்கெதிரான சாட்டையடியாக அமைந்துள்ளது. நாடகப் பண்புடன் கூடிய இந்த நெடும்பாவில் ஒசையொழுங்கு, எதுகை மோனை அமைப்பு, சொல்லாட்சி, வர்ணனைப் பண்பு, பொருத்தமான கற்பனைகள் எல்லாம் சிறப்புடன் அமைந்துள்ளன. துட்டகெமுனு மன்னனின் மகனான சாலியகுமாரன் கல்விகேள்விகளில் சிறந்தவனாகவும் பக்திமானாகவும் திகழ்ந்தான். அவன் சண்டாள இனத்தைச் சேர்ந்த அசோக மாலாவைக் காதலித்து மணந்தான். இக்காரணத்தால் அவனுக்கு அரசுரிமை இல்லாது போயிற்று. இக்கதையையே கவிஞர் கணேஷ் கவிதையில் வடித்துள்ளார். அசோகமாலா முதலில் வீரகேசரி வாரமஞ்சரியில் தொடராக வெளிவந்தது. பின்னர் பூரீலங்கா இதழில் 1963இல் மறுபிரசுரம் பெற்றது.
இக்காலகட்டத்தில் ‘என்ன சொல்லுவது? (வீரகேசரி 3-5-1959) என்ற குழந்தைப்பாடல் ஒன்றையும் கவிஞர் கணேஷ் பாடியுள்ளார்.
1970களில் கணேஷ் பல கவிதைகளை எழுதியுள்ளார். இவற்றுள் “பொங்குக நல் பொங்கல் (வீரகேசரி 12-1-71), “விண்ணும் மண்ணும் (மல்லிகை ஜனவரி-1971), 'ஆடி அமர்ந்தேன் (சிரித்திரன் மார்ச் 71), “எல்லாம் இதற்காகத் தான் (அஞ்சலி மே-1971), ‘உள்ளும் புறமுமி (சிரித்திரன் ஆவணி 70), "கலைப் பூசாரிகள் (செய்தி 7-7-71), "வேண்டுகோள், 'மானுட அநீதி, காலங்கள், ‘நாங்கள் குழந்தைகள்’ (வீரகேசரி 15-5-85), “எங்கள் இலங்கை', 'ஈழத்தமிழர் சிறப்பு (ஈழநாடு 2-5-59), “வழிப்போக்கன்’ (நோக்கு 1970), ஆகியவை முக்கியமானவை. இக் கவிதைகள் யாவும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டே பாடப்பட்டவை.
கட்டுரைகள் கணேஷ் அவர்களின் கட்டுரைகள் எடுத்துக்கொண்ட விடயத்தை
22

அழகாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுப்பதுடன் படிப்பவரிடத்து சிந்தனையையும் அறிவையும் தூண்டுவனவாக அமைந்துள்ளன. இவர் தத்தமங்கலம் கணேசன் என்ற பெயரில் எழுதிய ‘மகாசக்தி என்ற கட்டுரை மணிக்கொடியில் (கொடி 7 - மணி 7) வெளியானது. தினகரன் பத்திரிகையில் வெளிவந்த 'தொழில் விஞ்ஞானி - ஜி.டி.நாயுடு, “அகில இந்திய எழுத்தாளர் தில்லை மாநாடு', 'பழுப்பு நிலக்கரி பரந்து கிடக்கும் நெய்வேலி (9-4-54), “அருணகிரி வழிவந்த அருட்கவி சேதுராமன் (1958), “கண்டி நடனம் (19-1249 வீரகேசரி, பூரீலங்கா நவம்பர் 1959), “பாரதத்தில் மின்னல் வேகத்தில் முன்னேறிவரும் எவரெஸ்ட் சாதனை" (வீரகேசரி), பஞ்சத்தில் தோன்றிய இயக்கம் (தினகரன் 7-11-1968) ஆகிய கட்டுரைகள் முக்கியமானவை.
ஈழநாடு பத்திரிகையில் சித்தார்த்தன் என்ற புனைபெயரில் வெளிவந்த 'அறத்தின் அடிப்படையில் ஆட்சி வேண்டும், குங்குமம் சஞ்சிகை ஜூன் 1969இல் வெளிவந்த தமிழியல், சித்தார்த்தன் என்ற புனைபெயரில் ஈழநாடு பத்திரிகையில் எழுதிய ‘புரட்சிமிக்க தலைவரின் வாழ்க்கை - ஜெயப்பிரகாஷ் நாராயணன்', செளமியம் சஞ்சிகையில் வெளிவந்த "30களில் கண்டி, அகிலம் இதழில் சித்தார்த்தன் என்ற புனைபெயரில் எழுதிய கண்டி வளர்த்த தமிழ், யுகம் ஆவணி இதழில் வெளிவந்த "சட்டமும் சந்தர்ப்பமும், ரீலங்கா சஞ்சிகையில் வெளிவந்த கண்டி நடனம் (1959), ‘அருட்கவி சேதுராமன் (1958), சிரித்திரன் ஆவணி (1970) இதழில் வெளிவந்த 'உள்ளும் புறமும், ‘வரலாறு படைத்திடும் வையகம் தழுவிய சஞ்சிகைகள் ஆகியவை சிறந்த கட்டுரைகள்.
இவற்றைவிட 1953 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை "பட்டிமன்றம்' என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் பத்தி எழுத்துக்களையும் எழுதியுள்ளார் கணேஷ். 'குடும்பவாழ்வில் கணவன் மனைவியின் பங்கு, திரைப்பட உலகம், ‘யாப்பிலக்கணத்துக்கு கட்டுப்படாத நாட்டுப்பாடல்கள்', ‘நாட்டு மொழிவளர்ச்சிக் குச் செய்தித்தாள்கள் நல்ல அளவுகோல்கள்’ என்ற தலைப்புகளில் நாட்டு நடப்புகள், சமூக விடயங்கள் இதில் அலசப்பட்டுள்ளன.
‘உலகம் பலவிதம்' என்னும் நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த பத்தி எழுத்துக்கள், 'கணேசு என்ற பெயரில் 1953ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை வீரகேசரியில் வெளியாகின. ‘சிங்கபுரம், "சினிமா பார்க்கும் சுவை, ‘மிஸ்டர் எதிர்காலம்', 'பிரேம சாகர், “பண்டிதர் மதியழகனார்', 'டுப்பிளிகேட் சந்த், "மிஸ்டர் ஜென்கிஸ்' என்பவை சமூக விடயங்களை ஆராய்கின்றன.
தென்னாலிராமன் கதைகளைப்போன்ற பல்கேரிய விகடன் பீட்டர் கதைகளை சிரித்திரன் டிசம்பர் 1971, ஜனவரி 1972, பெப்பிரவரி 1972, ஜூன் 1972, ஜூலை 1972 இதழ்களில் எழுதியுள்ளார்.
பல்கேரிய காப்ரோவியரின் சிக்கனம் குறித்த வேடிக்கைக் கதைகளையும் தமிழில் தந்துள்ளார் கணேஷ்.
உலகப் பெருந்தலைவர்கள், எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளையும் கணேஷ் எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கியத்திற்கு எப்படி ஒரு பாரதியோ அதே போன்று சோவியத் இலக்கியத்திற்கு தராஸ் ஷெவ்சேன்கோ முக்கியமானவர். கே.கணேஷ் அவர்கள் 23

Page 13
முதன் முதலில் தமிழில் அவரைப்பற்றிய அறிமுகத்தைச் செய்துள்ளார். தமிழகத்தின் பிரபல முற்போக்கு இதழான தாமரையில் அக்கவிஞரின் ‘சாஸனம்' என்ற கதையின் தமிழாக்கமும் அவரின் சுருக்கமான வரலாறும் கணேஷினால் எழுதப்பட்டது.
“முன்னணி (நவம்பர் 1948)என்ற சென்னையிலிருந்து வெளியான முற்போக்கு அரசியல் இலக்கிய வாரப்பத்திரிகையில் “பிரச்சார இலக்கிய மேதை மாயாக் வாஸ்க்கி - ரஷ்யகவிஞர் பற்றிய அறிமுகத்தை கணேஷ் எழுதியுள்ளார். முற்போக்குக் கலையிலக்கியவாதி கே.ஏ.அப்பாஸ் பற்றியும், “டிட்டோ, “மாசே துங், கதிஸ்த்ரோ போன்ற உலகப் போராட்ட தலைவர்களின் வரலாற்றையும் கணேஷ் எழுதியுள்ளார். உள்ளக் குமுறலை உணர்ச்சியுடன் பாடிய உலகமகாகவி பெட்டோவ்.பி அவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரையையும் எழுதியுள்ளார்.
சிறந்த அமைப்பாளர் கே.கணேஷ், தமிழகத்தில் இருந்த காலத்தில் சென்னையில் 'இளைஞர் காங்கிரஸ்' என்ற அமைப்பு உருவாகியது. சக்திதாசன் சுப்பிரமணியம், கே.இராமநாதன், இ.மாயாண்டி பாரதி ஆகியோருடன் இணைந்து இந்த அமைப்பை உருவாக்குவதில் கே.கணேஷ் அவர்கள் பின்னணியில் நின்று உழைத்தார்.
1940இல் டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் இலங்கைக்கு வந்தபோது, "அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை முதன்முதலில் உருவாக்க முயற்சி எடுத்தவர்களில் கே.கணேஷ் முன்னின்று உழைத்தவர். தமிழ் சிங்கள எழுத்தாளர்களை முதன்முதலில் இணைத்து உருவாக்கிய சங்கம் இது. கொம்பனித்தெருவிலுள்ள பொல்ஸ்கி (POLSKl HOTEL) ஹோட்டலில்(தற்போதைய NIPPONHOTEL) இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமி விபுலானந்த அடிகள் தலைவராகவும், மார்ட்டின் விக்கிரமசிங்கா உபதலைவராகவும், டாக்டர் சரத் சந்திர, கே.கணேஷ் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும், பி.கந்தையா அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவரான வடஇந்திய எழுத்தாளரான கே.ஏ.அப்பாஸ் அவர்கள் 1945இல் சென்னையில் நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார். அப்போது கணேஷ் அவர்களும், திகாசி, தமிழ்ஒளி, குயிலன், சக்திதாசன் சுப்பிரமணியம், ஆர்.வி. போன்றோரும் சேர்ந்து தமிழ் நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதற் கான செயற்பாடுகளைச் செய்தனர். மயிலாப்பூர் TUTORIAL COLLEGEஇல் ஏ.ஜி.வெங்கடாச்சாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதன் முதலில் அமைக்கப்பட்டது.
"இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1946இல் தோற்றுவதற்குக் காரணமாய் இருந்தோர் அக்காலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த கே.ராம்நாதன், கே.கணேஷ் ஆகியோரே. 24

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும், ஆற்றுப்படுத்தலையும் அடிக்கல்லாகக் கொண்டு இந்தியாவில் கே.ஏ.அப்பாஸ் முதலியோர் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்போன்று கணேஷ"ம் ராமநாதனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர்". (பேராசிரியர் கா.சிவத்தம்பி - புதுமை இலக்கியம், தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டு மலர், 1975)
பொதுவுடைமைக் கருத்துக்களை ஆதரித்த கே.கணேஷ், இலங்கை இடதுசாரி இயக்கத்தில் முக்கிய செயலுறுப்பினராகவும் இருந்தார். ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கலாசார குழுவுக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு தோழர் எஸ்.நடேசன் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
சிறந்த பத்திரிகையாளர் இந்தியாவில் இருந்த காலத்தில் கவிஞர் தமிழ்ஒளி, கவிஞர் குயிலன் ஆகியோர் சேர்ந்து நடத்திய ‘தென்றல்’ பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றினார்.
கணேஷ் அவர்களின் நண்பரான கே.ராமநாதன், திரு வி.க.வின் ‘நவசக்தி பத்திரிகையில் பணிபுரிந்தவர். பிற்காலத்தில் அவர் இலங்கை வந்து பல தொழிற்சங்கங்களை உருவாக்கினார். கே.ராமநாதனுடன் இணைந்து கொழும்பில் நவசக்தியிலும், “தேசாபிமானியிலும் கணேஷ் சிலகாலம் பணிபுரிந்தார்.
1946இல் தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகையான ‘பாரதி இதழை கே.ராமநாதனுடன் இணைந்து ஆரம்பித்தார். இதற்கு மூலதனம் வேண்டியபோது, இவரது தந்தை இவருக்குக் கொடுத்த தலாத்துஒய இடத்தை விற்று அதனை மூலதனமாகக் கொண்டே இச்சஞ்சிகையை ஆரம்பித்தார். 1946இல் ஜனவரியில் தோன்றிய பாரதி, 1946 ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் ஐந்து இதழ்களை வெளியிட்டுள்ளது. கே.ராமநாதன் இந்தியா சென்றதும் இரண்டு ஆண்டுகளின் பின் 1948ஜனவரியில் அ.ந.கந்தசாமியுடன் இணைந்து ஆறாவது இதழை வெளிக்கொணர்ந்தார் கணேஷ். முற்போக்கு எழுத்தாளர்களை ஓரணியில் திரண்டு பணிபுரிய வைத்தது பாரதி. பாரதியின் கட்டுரைகள், ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த மாறுதல்களை நிகழ்த்தியிருக்கின்றன.
1949இல் வீரகேசரியில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். அச்சமயம் கே.பி.ஹரன் ஆசிரியராகவும், கே.வி.எஸ். வாஸ் செய்தி ஆசிரியராகவும் இவருடன் பணிபுரிந்தனர். அக்காலத்தில் வெளிவந்த இலங்கை சுதந்திர மலரைத் தயாரிப்பதில் கணேஷ் முன்னின்று உழைத்தார்.
1956இல் சுதந்திரன் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது எஸ்.டி.சிவநாயகம் அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். எஸ்.ராஜதுரை, சில்லையூர் செல்வராஜன், அ.ந.கந்தசாமி, எம்.துரைசாமி ஆகியோரும் அக்காலத்தில் அவருடன் பணியாற்றினார்கள்.
25

Page 14
பதவிகள், கெளரவங்கள் திரு கணேஷ் அவர்கள் தமிழ்க் கலாசார பேரவையின் நிறைவேற்று கவுன்சில் உறுப்பினராக 1954 முதல் 1963வரை பணிபுரிந்தார்.
உலகத் தமிழ்க் கலாசாரப் பேரவையின் நிறைவேற்றுக் கவுன்ஸில் உறுப்பினர்.
ஆபிரிக்க- ஆசிய எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்த இலங்கை மக்கள் எழுத்தாளர் முன்னணியின் உபதலைவர்.
1958இல் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த தினத்தையொட்டி அகில உலக ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் "மேகங்கள்’ என்ற கவிதையை எழுதி வெற்றிபெற்று ஜப்பானிய சக்கரவர்த்தி ஹீரோஹிட்டோவினது அரசவைக்கவிஞர்களது பாராட்டு விருதைப் பெற்றார்.
1971இல் மல்லிகை இதழ் கே.கணேஷ் அவர்களின் உருவப்படத்தை அட்டையில் பிரசுரித்துக் கெளரவித்தது. அதன்பின்னர் 1989 மே-ஜுன் கொழுந்து இதழிலும் அவரது உருவப்படம் இடம்பெற்றது.
ஜனதா கமிட்டியின் உறுப்பினராக 1975 முதல் 1977 வரை பணியாற்றினார்.
இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச் சபை - சாகித்திய மண்டல உறுப்பினராக 1975முதல் 1977 வரை பணியாற்றினார்.
(3gpTuu6ð 6J6műSuurTibÓlä GFT60D3FÜņuN6S (ROYAL ASIATIC SOCITY) ஆயுட்கால உறுப்பினர்.
பென் - PEN ஸ்தாபனத்தின் உறுப்பினர். இது கவிஞர்கள், நாடகாசிரியர்கள், பத்திரிகையாசிரியர்கள், நாவலாசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட சர்வதேச ஸ்தாபனமாகும். இதன் கிளைகள் ஐம்பது நாடுகளில் உள்ளன. இந்த ஸ்தாபனம் சிதம்பரத்திலும் சென்னையிலும் மாநாடுகள் நடத்தியபோது அதில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
உக்ரேன், பல கேரியா நாடுகளில் நடைபெற்ற உலக மொழிபெயர்ப்பாளர் மாநாடுகளில் 1984இலும் பின்னரும் இருதடவைகள் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1963இல் சோவியத் ஒன்றியத்தின் பல பகுதிகளையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது.
உக்ரேனிய மகாகவி தராஸ்செவ்செங்கோ கவிதைகள், மூங்கிற் பள்ளம் ஆகிய இரு நூல்களும் சுதந்திர இலக்கிய விழாவில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசினை இவருக்குப் பெற்றுக் கொடுத்தன.
இலங்கை கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் இவரது நீண்டகால இலக்கிய சேவையைப் பாராட்டி 1-7-94இல் 'வசந்தத்தை நோக்கி என்ற கலையிலக்கியக் கலாசார விழாவில் கெளரவித்தது.
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு 1991 இல் ‘இலக்கியச் செம்மல் விருது வழங்கிக் கெளரவித்தது.
இலங்கை அரசினால் 1995இல் ‘கலாபூஷணமி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
26

இலங்கையின் கலை இலக்கியத் துறைக்குப் பெருமை சேர்த்து வருவோரைக் கெளரவித்து பூரீலங்கா தேசிய நூல் அபிவிருத்தி சபையால் 14-8-2001 இல் நடாத்தப்பட்ட விழாவில் ஐம்பதாயிரம் ரூபா பணப்பரிசும் விருதும் வழங்கிக் கெளவிக்கப்பட்டார்.
இவரது ஆக்கங்கள் பற்றிப் பேரதனைப் பல்கலைக்கழகத்தில் ஒர் ஆய்வு நடந்துள்ளது.
வெளிநாட்டு எழுத்தாளர்கள் தொடர்பு வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலரின் நெருங்கிய தொடர்பு கணேஷ் அவர்களுக்கு இருக்கின்றது. தமிழ்ஒளி, பி.எஸ்.ராமையா, கி.வா.ஜ. வல்லிக்கண்ணன் ஆகியோர் எழுதிய கடிதங்கள் இவரிடம் இருக்கின்றன.
ஆனந்தவிகடன் தேவன் ‘ஈழத்தைக் கண்டேன்’ என்னும் தனது பிரயாணக் கட்டுரையில் இவரைப்பற்றி தலாத்துஒய கணேஷ் எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
ஈவேராவுடன் சேர்ந்து கம்யூனிஸ் இயக்கத்தைக் கட்டியெழுப்பிய ப.ஜீவானந்தம் அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ப.ஜீவானந்தம் கம்யூனிஸக் கட்சி தமிழகத்தில் தடைப்பட்ட காலத்தில், இலங்கையில் தலைமறைவாக இருந்தார். அப்போது இலங்கையின் பலபாகங்களுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் சென்று தனது கம்யூனிஸக் கொள்கைப் பிரசாரங்களில் ஈடுபட்டார். ஜீவானந்தம் அவர்களுடன் கணேஷ் பல இடங்களுக்கும் சென்றார். சிலமாதங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து ஜீவானந்தம் அவர்களை இரகசியமாக வல்வெட்டித்துறையூடாகப் படகில் அக்கரைக்குக் கொண்டுசென்று சேர்த்தவரும் திரு கணேஷ் அவர்களே.
திரு கணேஷ் அவர்கள் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள எழுத்தாளர்களுடனும், இலக்கிய அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.
நிறைவுரை இதுவரை 22 நூல்கள் கணேஷினால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒரு தொகுப்பாக வெளியிடக்கூடிய அளவுக்கு கணேஷ் அவர்களின் சுய ஆக்கக் கவிதைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர்தல் சிறந்த பணியாக அமையும்.
மலையகத்தைப் பற்றி மலையக மக்களின் பிரச்சினைகள் வாழ்நிலைகள் பற்றி இவர் அதிகமாக ஒன்றும் எழுதவில்லை என்னும் குறை ஒருசிலரிடையே நிலவுகிறது. இருப்பினும் திரு கணேஷ் அவர்கள் மொழிபெயர்ப்பாளராக, கவிஞராக, கதைஞராக, சஞ்சிகையாளராக, அமைப்பாளராக, திறனாய்வாளராக, பேச்சாளராக பல்துறை ஆளுமையோடு ஆற்றியுள்ள இலக்கியப் பணிகள், இவர் ஊடாக மலைகத்திற்கும், ஈழத்திற்கும் பெருமை சேர்க்கின்றன.
[] [] []
27

Page 15
ad
எழுதத் துரண்டும் எண்ணங்கள்
(கலாநிதி தரை.மனோகரன்) d அசுர சாதனை
ஈழத்துச் சிறுகதைத்துறையில் அண்மைக் காலங்களில் அரிய பெரிய நிகழ்வுகள் நடந்துவரு கின்றன. ஆக்கபூர்வமான பெரும் முயற்சிகள் அவை. ஈழத்தில் முதன்முதலாக ஐம்பதுகளில் சிற்பி பல எழுத் தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ஈழத்துச் சிறுகதைகள் என்னும் தொகுதியாக வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, பல எழுத்தாளர்களின் சிறுகதை களைத் தாங்கிய தொகுதிகள் அவ்வப்போது جیے} வெளிவந்துகொண்டிருக்கின்றன. தேசிய, பிரதேச ரீதியான்” சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருப்பதோடு நிறுவனரீதியான, இலக்கிய அமைப்பு ரீதியான சிறுகதைத்தொகுதிகளும் வெளிவந்துள்ளன. பெண் எழுத்தாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுகதைத்தொகுதிகளும் பிரசுரமாகியுள்ளன.
இவற்றுள், தேசிய ரீதியான சிறுகதைத்தொகுதிகள் அண்மைக்காலத் தில் பிரக்ஞைபூர்வமாக வெளிவரத் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். செ.யோகநாதன், யோ.சுந்தரலட்சுமி ஆகியோர் தொகுத்தளித்த வெள்ளிப்பாதசரம் (1993), ஒரு கூடைக்கொழுந்து (1994) ஆகிய இரு தொகுதி களும் இலங்கைச் சிறுகதைகள் தொடர்பான பாரிய முயற்சிகளாகும். இலங்கை எழுத்தாளர் பலரது சிறுகதைகளையும் ஒருங்கே பார்க்கவைத்த, பாராட்டப்பட வேண்டிய முயற்சி அது.
இத்தகைய சிறுகதைத் தொகுப்பு முயற்சிகளோடு, எழுத்தாளர் செங்கை ஆழியானின் சிறுகதைத்தொகுப்பு முயற்சிகளும் விதந்து குறிப்பிடத்தக்கவை. இதுவரையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள் (1997), ஈழகேசரிச் சிறுகதைகள் (2000), மல்லிகைச் சிறுகதைகள் (2002), சுதந்திரன் சிறுகதைகள் (2002) ஆகிய தொகுதிகளை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார். மறுமலர்ச்சிக்கதைகள் தொகுதியில் 25 சிறுகதைகளும், ஈழகேசரிச் சிறுகதைகள் தொகுதியில் 42 சிறுகதைகளும், மல்லிகைச் சிறுகதை கள் தொகுதியில் 30 சிறுகதைகளும், சுதந்திரன் சிறுகதைகள் தொகுதியில் 109 சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றுள், சுதந்திரன் சிறுகதைகள் 716 பக்கங்களைக்கொண்ட பாரிய சிறுகதைத்தொகுதியாக விளங்குகிறது. இவற்றின் தொகுப்பாசிரியரான செங்கை ஆழியான், தமது சொந்த ஆக்கப்பணி களோடு, தனியொருவராக இத்தொகுதிகளை வெளியிட்டுவந்துள்ளமை ஓர் அசுர சாதனையாகும். இத்தொகுதிகள் அனைத்தும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களை இனங்காட்ட வல்லவை. நாடு நடக்கிற நடப்பிலே.
விடிந்தாலும் பொழுதுபட்டாலும் நமது நாட்டுப் பிரச்சினை பற்றிய சிந்தனையே நம் அனைவரையும் ஆட்கொண்டு வருகிறது. ஒரு புறத்தில் 28
 
 

மகிழ்ச்சிகரமான செய்திகளும், மறுபுறத்தில் நெஞ்சை நோகவைக்கும் நிகழ்வு களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் காரணகர்த்தர்களாக விளங்குபவர்கள் அரசியல்வாதிகளே. பழக்கதோஷத்தின் காரணமாகச் சமாதானத்துக்கு எதிராக விஷமப் பிரசாரம் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் ஒருபுறமிருக்க, சமாதானத்தை பலவீனப்படுத்தும் பிறிதோர் அரசியல்வாதிகள் கூட்டமும் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய அரசியல் வாதிகள் நாட்டில் எது நடந்தாலும் பேசாமெளனிகளாக இருப்பர். ஆனால், பிறிதொரு சாரார் கடும் பாடுபட்டு எதையாவது பெறக்கூடிய சூழல் ஏற்படும் போது மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு தமக்கு இலாபம் தேட முயற்சிப்பர். குழந்தையொன்று கருக்கொள்வதற்கு முன்னரே, தமக்கு “முக்கும் முழியுமான" குழந்தைதான் வேண்டும் என்று குழந்தைப்பிள்ளைத்தனமாக இவர்கள் அடம் பிடிப்பர். சந்தர்ப்பவாத அரசியலில் பழகிப்போன இவ் அரசியல்வாதிகள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் அல்லர். எனினும், தம்மையும் அறியாமல் இவர்கள் பேரினவாதிகளுக்குத் தீனி போடுகின்றனர். ஆடு நனைகிறதென்று ஒநாய் அழுத கதையாக, இவர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் போன்று பேரினவாதிகள் நடிக்கின்றனர். சமாதானம் என்பது எல்லோருக்கும் சம நீதியை வழங்குவதாகவே இருக்கமுடியும். ஆனால் இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் அவசரப்பட்டுக் குட்டையைக்குழப்பும் நோக்கிலேயே செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, நாளொரு பேச்சும் பொழுதொரு மறதியுமாக செயற்பட்டு வரும் சில அரசியல் பைத்தியங்கள், நாட்டைக் குட்டிச்சுவராக்குவதற்கென்றே பிறவி எடுத்தவர்கள் போன்று நடந்து கொள்கின்றனர். ஒருபுறம் சமாதானத்தை வரவேற்பதுபோலவும், மறுபுறம் சமாதானத்திற்கு எதிராகவும் குரல்கொடுக்கும் இவர்கள் தாமும் குழம்பி, மக்களையும் குழப்புகின்றனர். இவர்களுக்கு எப்போதும் சாமரை வீசும் சூட்டுக் கோட்டுக் கழற்றாத மெய்யடியார்கள், தம் இனம், தம் மொழி யாவற்றையும் கிடப்பிலே போட்டுவிட்டு, ஆயுள் முழுவதும் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்
படுகின்றனர். o
நமது பக்கத்து நாடோ, இலங்கை நெற்றிக்கண் ༄༽ யில் நடப்பவற்றைப் பார்க்கமாட்டோம், விமர்சனம் அவை பற்றிப் பேசமாட்டோம், கேட்கமாட் எழுத்தாளர்களே, டோம் என்ற தோரணையில் நடந்துகொள் நெற்றிக் கணி பகுதியில் கிறது. திரைப்படங்களில் கதாநாயகியாக உங்களது நூல்விமர்சனம் நடித்திருந்தாலும், இலங்கைப் பிரச்சினை இடம்பெறவேண்டுபிடி விடயத்தில் வில்லி வேடம் தாங்கியிருக்கும் னில், நூலின் இருபிரதி ஜெயலலிதா, இலங்கையில் நல்லது எதுவும் நடக்கக்கூடாது என்ற முறையில் நடந்து 蠶 5n ·ಣ್ಣ கொள்கிறார். கருணாநிதியின் உலகத் அறிமுகக் குறிப்பு புதிய தமிழர் தலைவன் வேடம் இலங்கை நூலகம் பகுதியில் இடம் விடயத்தில் எப்போதோ கலைந்துவிட்டது. \பெறும். ஆசிரியர்.) இந்தியாவின் பிரபல அரசியல் நகைச்சுவை
நடிகர் சுப்பிரமணிய சுவாமி, கோமாளித்தனமான அறிக்கைகளை
29

Page 16
வெளியிட்டுத் தம்மைத் தாமே தேற்றிக்கொண்டிருக்கிறார். சோனியா காந்தியைத் தவிர உலகத்தில் வேறு தெய்வம் இல்லை என்று கருதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர், சோனியா காந்திக்குச் சம்மதம் இல்லாத எதுவும் இலங்கையில் நடக்கக்கூடாது என்று விரதம் காக்கின்றனர். சோனியா காந்தியின் மனம் கோணாதவாறு நடந்துகொண்டால்தான் தமது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று இந்திய மத்திய அரசு விழியைப் பிதுக்கிக்கொண்டிருக் கிறது. அமெரிக்காவோ உலகப் பொலிஸ்காரன் வேலை பார்க்க முனைகிறது.
இத்தனைக்கும் மத்தியில்தான் இலங்கைக்குச் சமாதானம் வந்துசேர வேண்டியிருக்கிறது. சமாதானப்புறா அங்கும் இங்கும் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறது.
/
N சுதந்திரன் கதைகள் நூல் அறிமுகவிழா இரா.அ.இராமன் யாழ் இலக்கிய வட்ட வெளியீடான சுதந்திரன் கதைகள் நூல் அறிமுக விழா 17-11-2002 மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சில் நடைபெற்றது. மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு, மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், ஞானம் இலக்கியச் சஞ்சிகை இணைந்து நடத்திய இவ்விழா, ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது. பிரதம விருந்தினராக கெளரவ துரை மதியுகராஜா(தலைவர், மத்திய மாகாண சபை) அவர்களும் சிறப்பு விருந்தினராக கலாநிதி துரை மனோகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ்விழாவில் வரவேற்புரையை இரா.அ.இராமனும் சிறப்புரையை மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் இணைப்பாளர் வி.சாந்தகுமார் அவர்களும், வாழ்த்துரையை அந்தனி ஜீவா அவர்களும் நிகழ்த்தினர்.
வெளியீட்டுரை, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நூலின் தொகுப்பாசிரியர் செங்கை ஆழியான், எழுத்தாளர்கள் செம்பியன் செல்வன், புத்தொளி ந.சிவபாதம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இவர்கள் நால்வரும், மலையக எழுத்தாளர்களின் சார்பில் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர். சுதந்திரன் பத்திரிகையில் சிறுகதைகள் எழுதிய மலையக எழுத்தாளர் களான சாரல்நாடன், நயிமா சித்திக், எஸ்.வாமதேவன் ஆகியோர் இவ்விழாவில் யாழ் இலக்கிய வட்டத்தினரின் சார்பில் பொன்னாடை போர்த்தி சுதந்திரன் கதைகள் தொகுப்பு வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். தெளிவத்தை ஜோசப், ஏ.பி.வி.ஹோமஸ், சி.பன்னீர்செல்வம் ஆகிய எழுத்தாளர்களின் சார்பில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கெளரவங்களைப் பெற்றனர்.
(சுதந்திரன் சிறுகதைகள் வெளியீட்டுவிழா யாழ்ப்பாணத்தில் நடை பெற்றது. அறிமுகவிழாக்கள் 16-11-2002 கொழும்பிலும், 17-11-2002 கண்டியிலும், 18-11-2002 திருகோணமலையிலும், 19-11-2002 மட்டக்களப்பிலும் நடைபெற்றன. இவ்விழாக்களில் சுதந்திரன் பத்திரிகையில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர் கள் பிரதேசவாரியாகக் கெளரவிக்கப்பட்டனர்.) أر
30

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 2002
சூர்யா
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 2002 கண்டி திரித்துவக் கல்லூரி மண்டபத்தில் நவம்பர் 23,24ஆம் திகதிகளில் மிகவும் கோலாகலமாக
நடந்தேறியது.
இவ்விழாவில் மலையகக் கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் கலைஞர் கெளரவிப்பும், கலாசார ஊர்வலமும் நடைபெற்றன. விழா சிறப்புற அமைய உழைத்த மாண்புமிகு அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், விழாத்தலைவர் துரை. மதியுகராஜா, இணைப்பாளர் வி.சாந்தகுமார் ஆகியோரும் விழாக்குழுவினரும் பாராட்டப்படவேண்டியவர்கள். இவ்விழாவில் அந்தனி ஜீவாவைத் தொகுப்பாசிரியராகக் கொண்ட 'கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் என்னும் நூலும், இரா.அ.இராமன் அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்ட "மத்தியமாகாண தமிழ் சாகித்திய விழா 2002 சிறப்பு மலரும் வெளியிடப்பட்டன.
பின்வருவோர் விழாவில் கெளரவிக்கப்பட்டனர்:- சிறந்த நூல்களுக்கான விருது பெற்ற எழுத்தாளர்கள் :-
கவிதை நாவல்
சிறுகதை ஆய்வுக்கட்டுரை சிறுவர் இலக்கியம் :
மலரன்பன் - "மகாவலியே மாநதியே
: மொழிவரதன் - "ஒரு நாடும் மூன்று நண்பர்களும் : மல்லிகை சி.குமார் - “மனுஷியம் : சு.முரளிதரன் - “மலையக இலக்கிய தளங்கள்
திருமதி ஜே.பி.நேசன் - பாலருக்கேற்ற பன்னிரண்டு சிறுகதைகள்’
சாதனையாளருக்கான விருதுபெற்ற சான்றோர்கள் :-
வைத்தியத்துறை சடடததுறை சிவில் நிர்வாகம் கல்வி விஞ்ஞானம் வானொலி சமூகசேவை வர்த்தகம் பத்திரிகை விளையாட்டு
: டாக்டர் வி.விஜயகுமாரன்
: கே.சாந்தகுமார் : கே.முருகேசு, கே.சுபாஸ் சந்திரபோஸ் : டி.தனராஜ், எம்.வை.எம்.முஸ்லிம்
பேராசிரியர் பிரிட் கென்ட்ரிச் : சி.நடராஜசிவம் : பிதா போல் அந்தனி அலோசியஸ் கெஸ்பஸ் : ஆர். மனோகரன் (ல்க்கிலேண்ட்)
எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் : ஆர். மகேஸ்வரன்.
கலைஞர்களுக்கான விருது பெற்றவர்கள் > எழுத்தாளர் கே.கணேஷ் > ராஜா ஜென்கின்ஸ்
சந்தனம் சத்தியநாதன் > சித்தி பரீதா செய்னா முஹமத்
D > பொன் பூபாலன்
> கலைவாணி மாணிக்கம்
என்.எஸ்.சிவலிங்கம் > நாவாலியூர் நாகன் செல்லத்துரை
31

Page 17
(3 g ir 5Tr Dr6) கே. கணேஷ்
சந்திப்பு : தி.ஞானசேகரன்
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்த முன்னோடு )ک)
தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகையான "பாரதியை வெளியிட் 6.
உலகத் தமிழ்க் கலாசாரப் பேரவையின் நிறைவேற்றுக் கவுன்சில் றுப்பினர்.
1958இல் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த தினத்தையொட்டி அகில உலகரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மேகங்கள்’ என்ற கவிதையை எழுதி வெற்றிபெற்று ஜப்பானிய சக்கரவர்த்தி ஹீரோஹிட் டோவின் அரசவைக் கவிஞர்கள் பாராட்டு விருதைப்பெற்றவர்.
* இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச்சபை - சாகித்திய மண்டல உறுப்பினராக 1975முதல் 1977வரை பணியாற்றியவர்.
றோயல் ஏஸியாற்றிக் சொசைட்டியின் ஆயுட்கால உறுப்பினர். * பென் - PEN ஸ்தாபனத்தின் உறுப்பினர். இது கவிஞர்கள் நாடக ஆசிரியர்கள், பத்திரிகையாசிரியர்கள், நாவலாசிரியர்களைக்கொண்ட சர்வதேச ஸ்தாபனமாகும்.
உக்ரேனிலும் பல்கேரியாவிலும் நடைபெற்ற உலக மொழிபெயர்ப் பாளர் மாநாடுகளில் 1984இலும் பின்னரும் இருதடவைகள் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர்.
இந்து சமய கலாசார அமைச்சின் இலக்கியச் செம்மல் விருது, இலங்கை அரசின் கலாபூஷணம் விருது பெற்றவர்.
உலக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்து 22 மொழிபெயர்ப்பு நூல்களை வெளிக்கொணர்ந்தவர். ノ
தி.ஞா.: முதலில் தங்களது பூர்வீகம் பற்றிக் கூறுங்கள்
கே.கணேஷ் : எனது பெற்றோரும், முதாதையர்களும் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தத்தமங்கலம் என்ற சிற்றுாரில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். எனது தந்தையார் வழி வைணவர்களாக பூரீரங்கம் அரங்கநாதனையும், திருப்பதி வெங்கடாசலபதியையும் குலதெய்வமாக அமைந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். தாது வருஷப்பஞ்சத்தில் அடிபட்டு மன்னார் - மாத்தளை வழிவந்து குடியேறியவர்கள். முன்தலைமுறையினர் கோப்பித் தோட்டங்களில் பணிபுரிந்து படிப்படியாய் செல்வம் அடைந்து
32
 

வாழ்ந்தவர்கள். உழைப்பையே ஊதியமாகக் கொண்டவர்கள். அதிலே நாட்டமுடையவர்களாக இருந்ததால் கல்வியில் நாட்டமில்லாத சமூகத்தினராக இருந்தனர்.
தாய்வழித் தாத்தா மலைநாட்டில் கங்காணியாக இருந்தவர். அவர் தொழில் புரிந்த தோட்டத்துரையான வெள்ளையரின் நன்மதிப்பைப் பெற்றதால், துரை அவரை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த Justice Schneider என்ற பறங்கியருக்கு அறிமுகஞ்செய்து வைத்தார். அவர் களுத்துறை அருகேயுள்ள தனது Fullerton estate என்ற தென்னந்தோட்டத்தில் தாத்தாவைக் கங்காணியாக நியமித்தார். அத்தோடு அக்காலத்தில் அரசு நிறுவனமான பொதுப்பாதை அமைப்புகளின் பொறியிலளாராக இருந்த வெள்ளையர்களிடம் சிபார்சு செய்து பாதையமைக்கும் தொழிலாளர்களை கண்காணிக்கும் பணியாளராக நியமனம் பெற உதவிசெய்தார். அக்காலத்தில் P.W.D.Overseers என்போர் ரைட்டர்கள் என அழைக்கப்பட்டனர். அத்துறையில் ஆங்கிலங்கற்ற ஈழத்தமிழர்களே செயல் புரிந்தனர். இதில் எனது தாத்தா ஒருவரே இதுவரை பணிபுரிந்த ஒரே இந்தியர். தவிரவும் 1926களில் இவர் பேருவளை "ரைட்டர் பதவி வகித்த காலத்தில், அவரது மகன் (எனது தாய்மாமன்) கொழும்புக்கும் களுத்துறைக்குமிடையே பயணப்பேருந்து சேவை நடத்தியவர். கண்டி தலாத்துஒய பேருந்து சேவையை முதலில் நடத்தியவரும் அவரே. அம்பிட்டியாவில் தென்னந்தோட்டமாகிய தலப்பின்னா உரிமையாளராகவும் எனது தாத்தா விளங்கினார். ‘எங்கள் தாத்தாவுக்கு கொம்பன் யானை இருந்தது என்ற கதையாக அமைந்தது இது. அக்கால உயர்நிலை பிற்காலத்தே சரிந்து போனது வேறுகதை.
தி.ஞா. உங்களது தந்தையார் வழி வைணவர்கள் என்கிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு கணேஷ் என்ற பெயர் எப்படி அமைந்தது? இது சைவர்களுக்கு அமையும் பெயர் அல்லவா! கே.கணேஷ் : பாட்டனார் பெயரையே பேரனுக்கும் சூட்டும் மரபுடையவர்களாத லால் எனது பெயர் 'நாராயணன்' என்றுதான் அமைந்திருக்கவேண்டும். எனது பெற்றோருக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் பிள்ளைப்பாக்கியத்திற்கு ஏங்கிய நிலையில் திருச்சி தத்தமங்கலம் கிராமத்தில் ஆற்றங்கரையருகே பிள்ளையார் சிலை அமைத்து, அரசும் வேம்பும் வளர்த்து, சுற்றி வழிபட்டு எனது அன்னை வேளுரம்மாள் விநாயகரது கிருபையால் என்னைப் பெற்றெடுத்தார் என்பர். தலைப்பிள்ளையின் பிரசவம் தாய்வழித் தாத்தா அகத்திலே நடைபெறும் மரபுவழியில், கண்டி - அம்பிட்டியில் தென்னந்தோட்ட உரிமையுற்றிருந்த தலைப்பின்னாவ தோட்டத்தில் நான் பிறந்தேன். விநாயகர் கிருயைால் நான் பிறந்ததினால் எனது பெற்றோர் எனக்குச் சித்திவிநாயகம் எனப் பெயரிட்டனர். எனது தாய்மாமன் முத்துசாமிப்பிள்ளை, அம்மா ஆகியோர் என்னை 'கணேசன்’ எனச் செல்லமாக அழைக்கத் தொடங்கவே அதுவே நிலைபெற்றுவிட்டது. தி.ஞா. : அந்தக்காலத்தில் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் எவற்றில் எழுதினிர்கள்? கே.கணேஷ் : 1932இல் மாணவனாக இருந்தபோது டாக்டர் வரதராஜநாயுடு அவர்களது தமிழ்நாடு வார சஞ்சிகையில் எழுதினேன். ஆனந்தபோதினியிலும் 33

Page 18
எழுதியுள்ளேன். மணிக்கொடி, மாதர் மறுமணம், ஜனசக்தி, லோகசக்தி, கல்கி, வேறும் சில. ஞாபகம் இல்லை. தி.ஞா.: மணிக்கொடி சிறந்த எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கிய பத்திரிகை பி.எஸ்.இராமையா, புதுமைப்பித்தன் ஆகியோர் அதிலேதான் எழுதினார்கள். அப்பத்திரிகையில் உங்களது ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள். கே.கணேஷ் : மணிக்கொடியில் எனது "ஆசாபாசம்' என்ற சிறுகதையும், எனது முதல் மொழிபெயர்ப்பு முயற்சியான 'அதிஷ்டசாலி என்ற ஹங்கேரியச் சிறுகதையும் வெளிவந்தன. தற்போது கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மணிக்கொடித் தொகுப்பில் அதிஷ்டசாலி இணைக்கப்பட்டுள்ளது. தத்தமங்கலம் க.கணேசன் என்ற பெயரிலேயே அது வெளிவந்துள்ளது. தி.ஞா: “மாதர் மறுமணம்’ இதழிலும் எழுதியதாக கூறினீர்கள். அதென்ன மாதர் மறுமணம்? பெயர் வித்தியாசமாக இருக்கிறதே? கே.கணேஷ் : காரைக்குடி காங்கிரஸ் காரரும் இலக்கிய ஆர்வலருமான தனவணிகர் சொ.முருகப்பா அவர்கள் சீர்திருத்த நோக்குடன் ஒரு விதவையை மணந்தார். அவர் பெயர் மரகதவல்லி. சொ.மரகதவல்லி முருகப்பா நடத்திய மாத இதழ்தான் ‘மாதர் மறுமணம் இது ஒரு சீர்திருத்த நோக்கம் கொண்ட பத்திரிகை. வீரகேசரி ஆசிரியராக இருந்த கே.வி.எஸ்.வாஸ் (பி.ஏ.ஹானஸ்) அவர்களும் அதில் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். தி.ஞா. தத்தமங்கலம் க.கணேசன் பின்னர் கே.கணேஷ் ஆக மாறியது எப்படி? கே.கணேஷ் : ஆர்.கே.நாராயணன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவர் தனது பெயரை ஆர்.கே.நாராயன் என்று சுருக்கி கொண்டார். அது தந்த இன்ஸ்பிரேசனில் நானும் கே.கணேஷ் என்று எனது பெயரைச் சுருக்கி, மனுப்போட்டு கோர்ட் மூலம் அதனை உறுதிப்படுத்திக் கொண்டேன். தி.ஞா.: புனைபெயர்களில் எழுதியதுண்டா? கே.கணேஷ் : நான் பிறந்தபோது வைக்கப்பட்ட பெயர் சித்திவிநாயகம். நான் பிறந்தது சித்தார்த்தி வருஷம். இதன் காரணமாக “சித்தார்த்தன்' என்ற புனைபெயரில் எழுதியதுண்டு. மற்ற புனைபெயர் ‘கலாநேசன்', 'கே.ஜி, "மலைமகன் இத்தியாதி. தி.ஞா. தாங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் கல்வி கற்றுள்ளிர்கள். அதுபற்றிக் கூறுங்கள். கே.கணேஷ் : ஆரம்பக்கல்வி தோட்டத்து எல்லையில் இருக்கும் Baptish Mission பெண்கள் கல்லூரியில் சிங்களத்தில் படித்தேன். பெண்கள் கல்லூரி யென்றாலும் சிறுவர்கள் சேரலாம். நான் முதலில் கற்ற மொழி சிங்களம். அங்கு ஓரிரு ஆண்டுகள் படித்தேன். பின்னர் கண்டி St Anthony's கல்லூரியில் படித்தேன். (அக்கல்லூரி தற்போது St Sylvester கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் இருந்தது.) எனது உறவினர் அங்கு ஆசிரியராக இருந்தார். அங்கு தமிழ்மொழி கிடையாது. ஆங்கிலத்தில் கற்றேன். தமிழில் பேசினால் தண்டனை. தமிழ்மொழியை எனது தாயார் வீட்டில் எனக்குக் கற்பித்தார். தனது
34

நண்பிகளின் பிள்ளைகள் சிலருக்கும் எனக்கும் கையில் பிரம்போடு ஓர் ஆசிரியரைப்போல் கற்பித்தார். அன்றாடம் திருப்புகழ், ஒளவையாரின் வாக் குண்டாம், ஆத்திசூடி போன்ற நீதி நூல் களையும் தேவார திருவாசகங்களையும் புகட்டினார். அதுவே எனது குருதியில் ஓடுகிறது. தமிழ்மீது ஒரு தனிப்பற்று ஏற்பட்டது. தமிழகத்திலிருந்தும் நூல்களை அஞ்சல்வழி பெற்றுத்தந்தவர் தாயார். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, ஆரவல்லி, சூரவல்லி கதை, நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை போன்ற நூல்களையும் ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி நாவலையும் படித்தேன். தவிர அக்காலத்து தமிழாசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் தமிழகத்து தமிழ் அறிஞர்களது நூல்களை இரவல் பெற்றுப் படித்தேன்.
தவிரவும் அதிஷ்டவசமாக, கண்டியில் திருகோணமலைவீதியில் எனது தந்தையார் பங்காளியாக இருந்த, ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த செம்பனூர் வாசியான ஆறு.சுப.சுப்பையா அம்பலம் அவர்களது கடையின் முன் பகுதியில் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் அமைந்த "போஸ் சங்கம் வாசிகசாலை இருந்தது. அதனை தமிழ் ஆர்வலர்கள் ஆர்.எம்.செல்லையா போன்றோர் நடத்தினர். அந்த வாசிகசாலையில் மறைமலையடிகளின் “ஞானசாகரம் (அறிவுக்கடல்), இளவழகனாரின் (பாலசுந்தரம்), “முல்லைக்கொடி, திரு.வி.க.வின சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்பக்தின் செந்தமிழ்ச் செல்வி, கரந்தை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட ‘தமிழ்ப்பொழில் ஆகிய சஞ்சிகைகள் வந்தன. அவற்றைத் தொடர்ச்சியாக வாசித்தேன். இதன் தாக்கத்தினால் தமிழ் அறிவை வளர்த்ததோடு இந்தியாவில் உள்ள விடுதலை இயக்கம் குறித்த சஞ்சிகைகளையும் படித்ததனால் ஆங்கில ஆட்சியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. ஆங்கில மொழிமீது பற்றுக் குறைந்து தமிழ்மீது பற்று அதிகமாகியது. தி.ஞா.: மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்வி கற்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? கே.கணேஷ் : மதுரை தமிழ்ச் சங்கத்தில் கல்வி பயின்ற தஞ்சை அறந்தாங்கி வாசியான திரு முத்துராமலிங்கம், போஸ் சங்கத்தில் முக்கியஸ்தராக இருந்தார். இவர் தமிழக மு.ரா.கந்தசாமிக் கவிராயரின் மகன் பண்டிதர் க.பழனிக்குமார் அவர்களின் மாணாக்கர். மதுரை தமிழ்ச் சங்கத்து எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்த் தேர்வில் முதல் “வெள்ளித்தோடா பரிசு பெற்றவர். இவர் அப்போது தனியார் நடத்திய கல்லூரி ஒன்றிலும் ஆசானாக இருந்தார். அக்கல்லூரி பிற்காலத்தில் “மகாத்மா காந்திக்கல்லூரி என்றும் பின்பு Hindu Senior கல்லூரி என்றும் பெயர் பெற்றது. இவரே என்னை மதுரை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்வி கற்கும்படி ஆலோசனை கூறினார். தனது ஆசிரியரான பண்டிதர் க.பழனிக்குமார் அவர்களுக்கும் கடிதம் கொடுத்தார். தி.ஞா.: தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படிப்பதற்கு அடிப்படைக் கல்வித்தகைமைகள் ஏதாவது இருக்கவேண்டுமா? கே.கணேஷ் : நான் அறிமுகக் கடிதம் பெற்று சென்றபோது, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள உயர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக க.பழனிக்குமார் கடமையாற்றினார். நான் சென்றபோது சித்திரை - கோடை விடுமுறைக்காக தமிழ் சங்கக்கல்லூரி மூடியிருந்தது. அதனால் அந்த விடுமுறை நாட்களில், 35

Page 19
தனது மாணவர் ஒருவருடன் தங்கியிருக்க திரு க.பழனிக்குமார் ஒழுங்கு செய்தார். அத்தோடு தமிழ்ச் சங்கத்தில் சேர்வதற்கு வேண்டிய பயிற்சியைக் கொடுத்தார். தமிழ்ச்சங்கக் கல்லூரியில் 'பாலர் வகுப்பு தேர்வு பெற்ற பின், முறையே பிரவேச பண்டிதம், பாலபண்டிதம் முடிவாக பண்டிதர் தேர்வு நடை பெறும். பாலர் வகுப்புக்குரிய பாடங்களாக ஆறுமுக நாவலருடைய பாலபாடம், ஒளவையாருடைய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி போன்றவற்றையும் நாவலரின் உரைநடை வளத்தையும் பயிற்சிபெற வாய்ப்புக் கிடைத்தது. தவிரவும் யாப்பு இலக்கண நெறிகளை உணரவும் வெண்பா பயிற்சி பெறவும், நளவெண்பா போன்ற நூல்கள் பாடநூல்களாக அமைந்தன. இவற்றில் பண்டிதர் க.பழனிக்குமார் எனக்குத் தந்த பயிற்சி, தமிழ்ச் சங்கத்திலே சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. பின்னர் தமிழ்ச் சங்கத்தில் தங்கியிருந்து 1934முதல் அங்கு கல்விகற்றேன். தமிழ்ச் சங்கம், இராமநாதபுரம் அரசரின் உறவினரான சேத்தூர் ஜமீந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களது ஆதரவுடன் தொடங்கப் பட்டது. மாணவர்கள் தங்குவதற்கு உறைவிடமும் இலவசக் கல்விபெற வாய்ப்பும் கிடைத்தன. தி.ஞா. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்வளவு காலம் பயின்றீர்கள்? கே. கணேஷ்: சிறிது காலத்திலேயே நான் தமிழ்ச் சங்கத்தைவிட்டு விலகவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. எனது சைவஊடணவு காரணமாக பகல் இரவு சாப்பாட்டிற்கு வெளியே சென்று உணவருந்தி வரவேண்டிய நிலை. போகும் வழியில் 'ஜதீந்தாஸ் நிலையம்’ என்ற வாசிகசாலை அமைந்திருந்தது. இந்த வாசிகசாலை பாரதியாருடன் நெருங்கிய தொடர்புடைய ரா.ழரீநிவாச வரத ஐயங்காரின் நன்கொடையில், அவரது மனைவி பத்மாசினி அம்மாள் நினைவாக இயங்கி வந்தது. இந்த வாசிகசாலையில் வரும் ஏடுகளை தொடர்ந்து படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
ஜதிந்தாஸ் நாட்டுப்பற்று காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டவர். சிறையில் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு சரியில்லை என்ற காரணத்தால் அறுபத்து மூன்று நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி. அவரது நினைவாக அமைக்கப்பட்டதே ஜதீந்தாஸ் நிலையம். இந்த நிலையம் காங்கிரஸ் இளைஞர்களால் அமைக்கப்பட்டது. அத்தோடு இணைந்து மேலே குறிப்பிட்ட வாசிகசாலை அமைந்திருந்தது. அங்கு ஏற்பட்ட நண்பர்கள் தொடர்பால், அவர்கள் என்னைத் தம்முடன் இணைந்துகொள்ளும்படி வேண்டினர். இதில் உறுப்பினராக இருந்த, தற்போது இந்திய அரசின் தியாகச் சின்னம் தாமிர விருது பெற்றவரும், திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ளவருமான இ.மா.பா. என்ற இ.மாயாண்டி பாரதியின் நட்புக் கிட்டியது. அவருடன் 70, மேலைமாசி வீதி இல்லத்தில் தங்கி தமிழ்சங்கக் கல்லூரியில் பாடம் ஏற்று வந்தேன். அக்காலத்தில் 34, 35 களில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டிருந்ததால் ஜெயப்பிரகாஷ் நாராயன், சந்திரபோஸ் போன்றவர்கள், காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவு போன்று இயங்கிய காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டியில் (காங்கிரஸ் அபேதவாதக் கட்சியில்) இருந்தார்கள். அந்தக் கட்சி சார்ந்த அன்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டு, ஜெயப்பிரகாஷ் 36

நாராயன் எழுதிய Why Socialism - அபேதவாதம் ஏன்? என்ற நூலும், ஜவகர்லால் நேரு எழுதிய Whither India - இந்தியா எங்கு செல்கிறது? என்ற நூலும், அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய ‘சாம்ய வாதம்' என்ற நூலும் வழிகாட்ட எனக்கு இடதுசாரிக் கொள்கைளில் ஈடுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக ஆக்ராவில் இருந்த அபேதவாதக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதன் காரணாக இந்திய இரகசிய பொலிசார் என்னை விசாரிக்க, தமிழ்ச்சங்க தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டனர்.
பொதுவாகவே அக்காலத்தில் உயர் பதவி வகித்தவர்கள் அரச விசுவாசிகளாக இருந்தனர். மிதவாதியான தலைமை ஆசிரியர் என்னை அழைத்து “நீ காங்கிரஸ் அங்கத்தவனா?” என்று கேட்டார். நான், “இல்லை. அக்கொள்கையில் ஈடுபாடு உடையவன்” என்று சொன்னேன். அதற்குத் தலைமை ஆசிரியர், "நீ இன்று ஈடுபாடு என்பாய், நாளை பாம்(வெடிகுண்டு) போடுவாய் - நம்பமுடியாது” என்றார். என்னை எச்சரித்தார். ஏற்கனவே நான் ராமநாதபுரம் சேது சமஸ்தான உறவினரான - மதுரை காங்கிரஸ் பிரமுகர் சிதம்பர பாரதி சிபாரிசுடன் காங்கிரஸ் தொடர்புடைய ராஜாராம் பாண்டி தேவரிடம் இருந்து சிபார்சுக் கடிதம் பெற்றிருந்தமையால், “பாலர் வகுப்புத் தேர்வு முடியும்வரை படிக்க அனுமதி தருகிறேன். அதுவரை இங்கு கற்கலாம். அதன்பின்னர் விலகிவிடவேண்டும்” என்றார் தலைமை ஆசிரியர். அதன் காரணமாக நான் சிலமாதங்களில் தமிழ்ச்சங்கக் கல்லூரியை விட்டு விலக வேண்டியதாயிற்று.
தி.ஞா. அதன்பின்னர் எவ்வாறு உங்கள் கல்வியைத் தொடர்ந்தீர்கள்? கே.கணேஷ் : சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் நுழைவுத் தேர்வு விண்ணப்பம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இத்தேர்வானது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு தமிழ் இலக்கிய பாடத்திட்டம் சார்ந்த கேள்விகளுடன் வித்துவான் நுழைவுத்தேர்வு மாணவர்களுக்காக மேலதிகக் கேள்விகளைக்கொண்ட வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். அதற்கென நான் விண்ணப்பப் பத்திரத்தை அனுப்புவதற்குக் கடைசிநாள் மதுரை Treasury இல் கடைசி விண்ணப்பதாரனாய் சென்றேன். உயர் அதிகாரி அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். தேர்வில் சான்றிதழ் பெற்று திருவையாறு அரசக் கல்லூரியில் சேர்ந்து எனது கல்வியைத் தொடர்ந்தேன். தி.ஞா.: "லோக சக்தி இதழுடன் உங்களுக்கிருந்த தொடர்புகள் பற்றிக் கூறுங்கள். கே.கணேஷ் : நான் இலங்கைக்குத் திரும்பிய பின்னர், சித்தாரிப்பேட்டையில் இருந்த ம.கி.திருவேங்கடம் என்பாரை ஆசிரியராகக் கொண்டு லோகசக்தி இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அது சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும், இளைஞர்களைக் கவர்வதாகவும் இருந்தது. அரசியல், இலக்கியம் சார்ந்திருந்ததால் அதற்குப் பெரும் ஆதரவு இருந்தது. இந்த இதழ் சக்திதாசன் சுப்பிரமணியம், கே.இராமநாதன், இ.மாயாண்டி பாரதி ஆகியோர் அமைத்த இளைஞர் காங்கிரஸ் என்ற நிறுவனத்தின் ஆதரவில் வெளிவந்தது. இ.மாயாண்டி பாரதி எழுதிய “படுகளத்தில் பாரதி தேவி என்ற 37

Page 20
நூல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி அதிலிருந்து கிடைத்த வருமானம் லோகசக்தி வெளிவர உதவியது. அத்துடன் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தையும் நடத்தினார்கள். மாயாண்டி பாரதியுடன் தொடர்பு கொண்டு இந்த இதழுக்கு நான் கட்டுரைகள் கவிதைகள் எழுதினேன். இந்த இதழுக்கு நான் சந்தாவும் சேர்த்து அனுப்பினேன். இந்தத் தொடர்பால் கே.இராமநாதனின் தொடர்பும் கிடைத்தது.
தி.ஞா. கே.இராமநாதனுடன் இணைந்து கொழும்பில் நவசக்தியிலும் ‘தேசாபிமானியிலும் பணிபுரிந்தீர்கள். அது பற்றிக் கூறுங்கள். கே.கணேஷ் : கே.இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியத்துடன் திருவி.க.வின் நவசக்தியில் பணிபுரிந்தவர். இவர்களைப்பற்றி திருவி.க. தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். கே.இராமநாதன் பிற்காலத்தில் இலங்கை வந்து சமசமாஜக் கட்சி நடத்திய சமதர்மம்' என்ற ஏட்டிற்கு ஆசிரியராக இருந்தார். இவர் பல தொழிற்சங்கங்களை அமைத்தார். பிற்காலத்தில் சமசமாஜக்கட்சி பிளவுபட்ட போது, B.L.P. கட்சி எனவும், யுனைட்டெட் சோஷலிஸ்ட் பார்ட்டி (U.S.P) எனவும் வழங்கியது. கே.இராமநாதன் சமதர்மம் ஏட்டிலிருந்து விலகி யு.எஸ்.பி. கட்சியின் சார்பில் தேசாபிமானி என்ற இதழின் ஆசிரியரானார். யு.எஸ்.பி. கட்சி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரை மாற்றிக்கொண்டது. நான் கே.இராமநாதனுடன் இணைந்து தேசாபிமானியிலும் நவசக்தியிலும் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. தி.ஞா.: முற்போக்கு இலக்கியத்தில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமாயிருந்த பின்னணியைக் கூறுங்கள். கே.கணேஷ் : கே.இராமநாதன் இலங்கையில் சுருட்டுத் தொழிலாளர் சங்கம், 'கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம்’ போன்ற தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். அதில் பல மலையாளிகள் இருந்தனர். அதனால் கேரளநாட்டு (மலையாள) அரசியல் இலக்கியத் தொடர்புகள், முற்போக்குச் சிந்தனைகள் ஏற்பட்டன. இவர்கள் வாயிலாக கேசவதேவ், சங்கரகுருப்பு, தகழி சிவசங்கரன்பிள்ளை, பிரேம்ஜி ஆகியோரது இலக்கியங்களை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முற்போக்கு இலக்கியத்தில் ஒரு பற்றுதல் ஏற்பட்டது. (பிற்காலத்தில் தேசாபிமானியில் பணிபுரிந்த அச்சுவேலி ஞானசுந்தரம் பிரேம்ஜியின் படைப்புகளில் ஈடுபாடுகொண்டு தன்பெரையும் பிரேம்ஜி என மாற்றினார்).
தி.ஞா.: மணிக்கொடி சஞ்சிகையுடன் தங்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறுங்கள். கே.கணேஷ் : நான் மதுரையில் இருக்கும்போதே மணிக்கொடி சஞ்சிகையை வாசிக்கத் தொடங்கினேன். திருவையாறில் இருக்கும்போதும் மணிக்கொடி வாசகனாக இருந்தேன்.
பின்னர் மணிக்கொடியில் எனது ஆசாபாசம், அதிஷ்டசாலி என்ற கதைகளை எழுதினேன். மணிக்கொடி எழுத்தாளரான பி.எஸ்.ராமையாவுடன் எனக்குக் கடிதத்தொடர்பு இருந்தது. அவர் "அன்டன் செக்கோவ் ரஷ்ய சிறுகதை ஆசிரியருடைய சிறுகதைகளையும், அக்காலத்து பெயர்பெற்ற 38

sg) haŝao 6T(upgög51T6Tsĩ John Galsworthy 6T(upgâulu * Forsyte Saga’ 6.Jf60das நூல்களையும் படிக்கும்படி கூறினார். அவ்வகையில் நான் அவற்றை ஆர்வத்துடன் படித்தேன். மணிக்கொடி ஆசிரியராக இருந்த ப.இராமசாமி பிற்காலத்தில் இலங்கைக்கு வந்தபோது அவருடன் மலைநாட்டுக்குச் சென்று மணிக்கொடிக்கு சந்தா சேர்த்தோம்.
தி.ஞா.: முதன் முதலில் இலங்கையில் ஓர் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்க தாங்கள் பின்னணியில் இருந்து உழைத்ததாக அறிகிறோம். அதுபற்றிக் கூறுங்கள். கே.கணேஷ் : இரண்டாவது மகாயுத்த காலத்தில் லண்டனில் தங்க நேர்ந்த டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் அவர்களது Untouchables என்ற நாவலை London Lawrance And Wishart நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதை நான் வாசித்து, லண்டனில் பி.பி.சியில் பகுதிநேர நிருபராக கடைமையாற்றிக் கொண்டிருந்த முல்க்ராஜ் ஆனந்த்துடன் தொடர்பு கொண்டேன். அந்நூலை மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் அனுமதிபெற்று மொழி பெயர்த்தேன். அவரது முற்போக்குச் சிந்தனைகள் என்னைக் கவர்ந்தன. அது இரண்டாவது மகாயுத்த காலம். அதனால் அவர் அக்காலத்தில் இந்தியாவுக்கு திரும்பிவர முடியாத நிலையில் இருந்தார். பிற்காலத்தில் அவர் இந்தியாவுக்கு வந்து, பம்பாயில் தங்கியிருந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை, கே.அப்பாஸ், கிருஷ்ணசந்தர், பிரேம்சந்த் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். அப்போது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதன் கிளைகளை அமைக்கவேணடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தபோது, கொம்பனித்தெருவில் உள்ள Polski பொல்ஸ்கி ஹோட்டலில் (தற்போதைய Nippon Hotel) 'அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமி விபுலானந்த அடிகள் தலைவராகவும், மார்ட்டின் விக்கிரமசிங்கா உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். டாக்டர் சரத் சந்திரவும் நானும் (கே.கணேஷ்) இணைச் செயலாளர்களாகவும், பி.கந்தையா அவர்கள் பொருளாளராகவும் , தேர்ந்தெடுக்கப்பட்டோம். டாக்டர் சரத் சந்திர மேற்படிப்புக்காக லண்டன் சென்றதும் அதன் இயக்கம் குன்றியது. தி.ஞா.: முற்போக்கு எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் அவர்களின் தொடர்பு எப்படி ஏற்பட்டது? கே.கணேஷ் : Bombay Chronicle’ என்ற பத்திரிகையின் வாரப்பதிப்பில், Last Page என்ற பத்தி எழுத்துக்கள் எழுதுவதன்மூலம் கே.ஏ.அப்பாஸ் அக்காலத்தில் பிரசித்தமாகியிருந்தார். அந்தப் பத்தி எழுத்துக்களை நான் விரும்பிப் படிப்பேன். இதன்காரணமாக அப்பாஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவரது சிறுகதைகள் பம்பாயில் வெளியான கம்யூனிஸ்ட் uggfoodsbóTré0T People's Front, People's Age gasu 6 in Jiuguab6f 6f) வெளிவந்தன. குறிப்பாக காஷ்மீர் மக்கள் நடத்திய மன்னர் ஆட்சி எதிர்ப்புப் போராட்டத்தை சித்திரிக்கும் குங்குமப் பூ (Saffron Blosons) என்ற சிறுகதையின் அமைப்பும் அதனுடைய கருப்பொருளும் உருவ அமைப்பும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதை உடன் தமிழில் மொழிபெயர்த்து அவரது அனுமதி பெற்று 39

Page 21
தென்னிந்திய இதழ்களில் வெளியிட்டேன். பின்னர் அவரது பல சிறுகதைகளை மொழிபெயர்த்து தமிழக சஞ்சிகைகளில் வெளிவரச் செய்தேன். சென்னையில் நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் வருகை தந்தபோது நானும் அங்கு சென்று முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தேன்.
தி.ஞா.: 1945இல் இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அப்பாஸ், தி.க.சி போன்றோருடன் இணைந்து உருவாக்கினிர்கள். இதன் பின்னணியை கூறுங்கள். கே.கணேஷ் : அக்காலத்தில் சென்னை, மதராஸ் மாநிலமாக விளங்கியது. கேரளம் தமிழ்நாடு கன்னடா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மாநிலமாகவும் சென்னை தலைநகராகவும் விளங்கியது. சென்னையில் நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவிற்கு கே.ஏ.அப்பாஸ் வந்திருந்தார். அப்பொழுது ஆந்திரக்காரராகிய ஜஸ்டிஸ் ராஜமன்னார் மேல் நீதி மன்ற நீதிபதியாக இருந்தார். அவருடைய விருந்தினராக கே.ஏ.அப்பாஸ் இருந்தார். அவரை நான் நீதிபதியின் வீட்டில் சந்தித்தேன். சந்தித்தபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்திலும் அமைப்பது பற்றிப்பேசினோம். இதன் விளைவாக பின்னர் ஒரு தொடக்கக் கூட்டத்தை மைலாப்பூர் Tutorial College ஏ.ஜி.வெங்கடாச்சாரி அவர்கள் தலைமையில் நடத்தினோம். தி.கா.சி., தமிழொளி, குயிலன், சக்திதாசன் சுப்பிரமணியம், ஆர்வி, சாண்டில்யன் புனைபெயருடைய சுதேச மித்திரன் துணை ஆசிரியர் திரு பாஷ்யம் ஐயங்கார் போன்றோர் துணையுடன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. இதற்கு நான் பின்னணியில் இருந்து இயங்கினேன்.
தி.ஞா. கல்கி இதழில் தாங்கள் மொழிபெயர்த்த கே.ஏ.அப்பாஸின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. இதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வாறு ஏற்பட்டன? கே.கணேஷ் : முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட காலகட்டத்தில், நானும் அப்பாஸ"ம் சேர்ந்து, கல்கியை சென்று பார்த்தோம். அப்போது கல்கி கீழ்ப்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி - ரி.சதாசிவம் தம்பதியினரின் இல்லத்தில் இருந்தார். அவர்கள் எமக்குப் பகல்போசன விருந்து அளித்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னால் மொழிபெயர்க்கப்பட்ட அப்பாஸின் கதைகளை கல்கியில் தொடர்ச்சியாக வெளியிட கல்கி உடன்பட்டார். அவ்விதமே பல கதைகள் கல்கியில் மணியனின் சித்திரத்துடன் வெளியாகின. அக்கதைகள் பின்னர் குங்குமப் பூ என்ற தலைப்பில் தி.ஜ.ரா. அவர்களுடைய முகவுரையுடன் சென்னை இன்ப நிலைய வெளியீடாக இரண்டு பதிப்புகளாக வெளிவந்தன.
தி.ஞா.: அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை
ஆரம்பிப்பதற்குத் தாங்கள் முன்னோடியாக இருந்ததாக அறிகிறோம்.
அதுபற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : அகில இலங்கை எழுத்தாளர் சங்கம், டாக்டர் சரத் சந்திர
மேற்படிப்புக்காக லண்டன் சென்றதால் செயற்படாமல் போயிற்று. 40

சிறிதுகாலத்தின் பின்னர் நானும் கே.இராமநாதனும் இணைந்து நடத்திய பாரதி பத்திரிகை எழுத்தாளர்கள், தேசாபிமானி எழுத்தாளர்கள், நவசக்தி எழுத்தாளர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தோம். இதில் செ.கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி முதலியோரும் ஆரம்ப முயற்சிக்குப் பக்கபலமாக நின்றனர். பிற்காலத்தே பிரேம்ஜி, இளங்கீரன், என்.கே.ரகுநாதன், எச்.எம்.பி.முகைதீன், எஸ்.பொ., கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, டானியல், பி.இராமநாதன், நீர்வைப் பொன்னையன், முருகபூபதி, சோமகாந்தன் போன்றோர் இணைந்து கொண்டனர். பின்னர் இதிலிருந்து கொள்கை முரண்பாடுகள் காரணமாக சிலர் பிரிந்து சென்றது வருந்தத்தக்கது. தி.ஞா.: சுதந்திரன் பத்திரிகையில் பணியாற்றிய காலம் குறித்து கூறுங்கள். கே.கணேஷ் : நான் இந்தியாவிலிருந்து திரும்பிவந்தபோது எனது பெருமதிப்பிற்குரிய டி.ராமானுஜம் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் இந்தியாவில் நடந்த போராட்டங்கள் பற்றி சுதந்திரனில் எழுதுமாறு பணித்ததோடு திரு செல்வநாயகம் அவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்தார். தமிழுணர்வு இங்கும் ஏற்படக்கூடிய வகையில் நான் கட்டுரைத் தொடரை எழுதினேன். பின்னர் 1956இல் சுதந்திரன் செய்தி ஆசிரியராக சிலகாலம் பணிபுரிய நேர்ந்தது. எஸ்.டி.சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். எஸ்.ராஜதுரை, சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி ஆகியோரும் அங்கு பணியாற்றினார் கள். அங்கு நான் பணிபுரிந்த காலத்திலேதான் எனக்குத் திருமணம் நடந்தது. அதன்பின்னர் நான் சுதந்திரனிலிருந்து விலகிவிட்டேன். டி.ராமானுஜம் அவர் களே எனது ஆளுமை வளர்ச்சிக்கு பேருதவி செய்தவர். அவரும் நானும் பிற்காலத்தில் கண்டியில் அமைந்த இலங்கை இந்தியன் காங்கிரஸின் இணைச்செயலாளராக இருந்தோம்.
தி.ஞா. வீரகேசரியில் பணிபுரிந்த நாட்களை நினைவு மீட்டுங்கள். கே.கணேஷ் : இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில், வீரகேசரி வாரப்பதிப்பில், திரு. லோகநாதன் அவர்களின் கீழ் நான் துணையாசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். அச்சமயம் கே.பி.ஹரன் ஆசிரியராகவும், கே.வி.எஸ்.வாஸ் அவர்கள் செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த வீரகேசரி சுதந்திரமலர் தயாரிக்கும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது. நான் பணிபுரிந்தபோது, வீரகேசரி முகவரிக்கு கம்யூனிஸ்ட் தொடர்புடைய ஏடுகளும் , எண் பெயருக்குக் கடிதங்களும் வரவே முகாமையாளர்கள் அதனை விரும்பாமல் என்னை விலக்கிவிட்டனர்.
தி.ஞா. தாங்கள் நடத்திய பாரதி இதழ் பற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : கே.இராமநாதன் அவர்கள் பத்திரிகைத் தொடர்புகள்
விட்டுப் போனதால் இந்தியா சென்று சுதேசமித்திரனில் நிருபராகப்
பணியாற்றினார். அவரும் நானும் இணையாசிரியர்களாக “பாரதி சஞ்சிகையைத்
தொடங்கினோம். மகாகவி பாரதியின் பெயரிலேயே ஒரு ஏடு தோன்ற வேண்டும்
என்ற எண்ணத்துடன் இச்சஞ்சிகையைத் தொடங்கினோம். பீற்றர் கெனமன் 41

Page 22
அவர்களது வீட்டையே செயலகமாகக் கொண்டு சஞ்சிகை வெளிவந்தது. இதற்கு மூலதனம் வேண்டியபோது என்பெயரில் எனது தந்தை எழுதிவைத்த தலாத்துஒய - தற்போதைய தலாத்துஒய மத்தியமகாவித்தியாலயம் அமைந்திருக்கும் இடத்தை விற்று சஞ்சிகையை ஆரம்பித்தோம். சிறிது காலத்தின் பின்னர் கே.இராமநாதன் இந்தியா சென்றார். பின்னர் அ.ந.கந்தசாமி இணைந்து அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி பாரதியை நடத்தினோம்.
தி.ஞா.: கம்யூனிஸ்ட் கட்சிப்பிரமுகர் ப.ஜீவானந்தம் இலங்கை வந்தபோது அவருடன் தாங்கள் இலங்கையின் பல இடங்களுக்கும் சென்றதாக அறிகிறோம். அதுபற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : 1950இல் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா காங்கிரஸ் மாநாடு இந்தியாவில் நடந்தபோது, இங்கிருந்து இலங்கைப் பிரதிநிதியாக கட்சித் தலைவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க சென்றிருந்தார். அம்மாநாட்டில் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதுவரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய பி.வழி.ஜோஷி என்பாருடைய கொள்கைகள் மிதவாதத் தன்மை உடையன என்றும் அது இயக்கத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், பலாத்கார முறையிலேயே பாட்டாளி அரசு அமைக்கத் திட்டமிட வேண்டும் எனவும் PTரணதேவ் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கூட்டத்திற்கு ப.ஜீவானந்தம் அவர்களும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருந்தார். தீர்மானம் காரணமாக, அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்ய இருந்ததை முன்கூட்டியே உணர்ந்த டாக்டர் விக்கிரம சிங்கா ஜீவானந்தத்தை இலங்கைக்கு அழைத்து வந்தார். அக்காலத்தில் பயணச்சீட்டு விசா முறைகள் இருக்கவில்லை. எனவே அவரை அழைத்து வருவதில் எவ்வித கஷ்டமும் இருக்கவில்லை. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரத்திற்காக அவரை அழைத்துவந்தார். அவரும் சிலகாலம் இலங்கை யில் தங்கியிருந்து யாழ்ப்பாணம், மலையகம் முதலிய இடங்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தினார். ஏற்கனவே அவரது ஜனசக்தி இதழில் நான் எழுதியிருந் தேன். அதனால் அவருடன் தொடர்பு இருந்தது. கண்டிக்கு வந்தபோது எனது இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். இதற்கிடையில் இந்தியாவில் எதிர்பார்த்ததுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமான கட்சி எனத் தடை செய்யப்பட்டது. பல அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர் களில் சிலர் தமிழகத்தில் தலைமறைவாக கட்சிச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
தி.ஞா. : ப.ஜீவானந்தம் இலங்கையில் தங்களுடன் இருந்த காலகட்டத்தில் அவருக்கு வேறு எவ்வகையில் உதவி புரிந்தீர்கள்? கே.கணேஷ் : அக்காலகட்டத்தில், நாஞ்சில் நாடு கேரளநாட்டு மலையாள ஆட்சியில் இருந்தமையால் தமிழகத்துடன் கன்னியாகுமரி, நாகர்கோயில் முதலிய பகுதிகள் தமிழகத்துடன் சேரவேண்டுமென ம.பொ.சி., கே.ரி.தங்கமணி, ப. ஜீவானந்தம் முதலியோர் போராடி வந்தனர். அதன் விளைவாக தற்போது சென்னை மாநிலத்தோடு இப்பகுதிகள் சேர்ந்தது யாவரும் அறிந்ததே.
அது தொடர்பாக அக்காலத்தில் நாகர் கோயிலில் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, நாடகக் கலைஞர்கள் 42

டீ.கே.சண்முகம் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரது ஆதரவில் இந்த மாநாடு ஏற்பாடாகி இருந்தது. இந்த மாநாட்டுக்கு ப.ஜீவானந்தம் அவர்கள் வாழ்த்துக்கூறி தந்து அனுப்பிய ஒரு மடலை, நான் அங்கு கொண்டு சென்று சேர்க்கவேண்டியிருந்தது. அதனை நாராயணன் என்பவரிடம் சமர்ப்பித்தேன். அவர் அந்த வாழ்த்துச் செய்தியை, "அஞ்ஞாதவாசம் செய்யும் ஜீவானந்தம் அவர்களிடமிருந்து கிடைத்த செய்தி எனக்கூறி கூட்டத்தில் அதனை வாசித்தார். அது பலரது கரகோஷத்தைப் பெற்றது.
தி.ஞா. : ப.ஜீவானந்தத்துடன் தாங்கள் சிலகாலம் யாழ்ப்பாணத்திலும் தங்கியிருந்ததாக அறிகிறோம். அக்காலத்தைய செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : சென்னையில் அஞ்ஞாதவாசம் செய்த தமிழக மத்திய குழுவினர், ஜிவானந்தம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழகத்துடனும் இலங்கையுடனும் நான் தொடர்புள்ளவன் என்ற காரணத்தினாலும், பேச்சுமொழி நடையுடை பாவனைகளில் நான் இந்தியனாக இருந்தது எவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தினாலும் என்னை ஜீவானந்தம் அவர்களை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்படி பணிக்கப்பட்டது. இதனை பி.கந்தையா அவர்களே என்னைக் கேட்டுக்கொண்டார். வல்வெட்டித் துறையிலிருந்து அவரைத் தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆசிரியர், கார்த்திகேசு மாஸ்டர் ஆகியோரே இந்த ஏற்பாடுகளைச் செய்தனர். கார்த்திகேசு மாஸ்டர் வீட்டில் நான் தங்கியிருந்தேன். ப.ஜீவானந்தம் அவர்கள் அப்போது திருநெல்வேலி ரி.துரைசிங்கம் வீட்டில் தங்கியிருக்க நான் அங்கு சென்று அவரை அழைத்துச் செல்வதாக இருந்தது. இச்சந்தர்ப்பத்திலேதான் இந்தியாவில் ஹைகிரபாத் நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க மறுத்து ‘கஜாக்கர் படை அமைத்துப் போராட்டம் நடத்தினர். இதனை அடக்க ராஜாஜி அவர்கள் கவர்னராகவும் வல்லவாய் படேல் உள்நாட்டு அமைச்சராகவும் இருந்து எடுக்கப்பட்ட பொலிஸ் அக்ஷன் காரணமாக கிளர்ச்சி அடங்கியது. அக்காலகட்டம் வரை நானும் ஜீவானந்தமும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தோம். ஹைதரபாத் கெடுபிடிகள் காரணமாக இந்திய கவர்னர் ஜெனரல் அவர்களது ஆணைப்படி இந்திய கரையோரப் பகுதிகள் இந்திய கடற்படையினரது கடும் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் எனது தங்குதல் நீண்டுவிட்டது. ஜீவானந்தமும் நானும் நிலைமை சீரடையும்வரை யாழ்நகரில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் ஜீவானந்தம் பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அத்தோடு கம்யூனிஸம் என்ற நூலை துரைசிங்கம் வீட்டில் இருந்த காலத்தில் எழுதினார். அந்நூல் துரைசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. கார்த்திகேசு மாஸ்டர் இல்லத்திற்கு ப.ஜீவானந்தம் வரும்போது, டொமினிக் ஜீவா, எஸ்.பொ., தி.ராஜகோபால் போன்றவர்கள் அவருடன் கலந்துரையாட வாய்ப்புக் கிட்டியது. ஜீவானந்தம் மீது கொண்ட பக்தியினால், டொமினிக் ஜீவா தனது பெயரை
43

Page 23
"ஜீவா என்ற பெயருடன் இணைத்துக்கொண்டார். தி.ஞா. பின்னர் எவ்வாறு ஜீவானந்தம் அவர்களை தமிழகத்திற்கு கொண்டு சென்று சேர்த்தீர்கள்? கே.கணேஷ் : ஜீவானந்தம் அவர்களை பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு எனக்கிருந்ததன் காரணமாக நான் Air Ceylon வானூர்தி மூலம் சென்னைக்குச் சென்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அக்காலத்தில் விசா, பயணச்சீட்டு தடைகள் கிடையாது. ஆனால் வெளிநாடு செல்லும் இலங்கையர் அக்காலத்தில் வழக்கிலிருந்த தமது அரிசிக் கூப்பனை உரிய அதிகாரியிடம் சமர்ப்பித்துப் பெற்ற ரசீதைக் காட்டியே பயணச்சீட்டு பெறமுடியும். எனது அரிசிக்கூப்பன் அப்போது கையில் இருக்கவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் அப்போது 'சிறு பான்மையோர் இயக்கத் தலைவராகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பின ராகவும் விளங்கிய, எழுத்தாளர் எஸ்.பொ.வின் மைத்துனர் திரு சுப்பிரமணியம் ஆவார். அவர் தனது தந்தையாரான திரு ஐயாம்பிள்ளையின் அரிசிக்கூப் பனைக் கொடுத்து உதவினார். அதனை நான் பயன்படுத்திப் பயணித்தேன். சென்னையில், மவுண்ட் ரோட்டில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கட்டடத்தில் முற்போக்கு இலக்கிய நூல் விற்பனை நிலையம் அமைந்திருந்தது. அங்கு, பிற்காலத்தில் சரஸ்வதி இதழ் நடத்திய கோவை எஸ்.விஜயபாஸ்கரன் அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர் தலைமறைவாக இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த ஏற்பாட்டின் படி சென்னை மரினா கடற்கரையில் ராஜஸ்தானிக் கல்லூரிக்கு எதிரே காந்தி சிலைக்கு அருகாமையில் நான் தினமணி இதழை கையில் அடையாளமாக வைத்தபடி அமர்ந்திருந்தேன். காக்கி ஜோர்னாப்பையுடன் ஒருவர் வந்து என்னுடன் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி, வந்தவர் என்னை அடையாளம் கண்டு குழுக்குறியைக் கூறியவுடன் ஏற்பாடுகள் குறித்துப் பேசினோம். அதன்படி வல்வெட்டித்துறையில் இருந்து ஜீவானந்தம் புறப்பட்டு நாகபட்டினம், காரைக்கால், சிதம்பரம் ஆகிய மூன்று இறங்குதுறைகளில் ஏதாவது ஒன்றில் வந்து இறங்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கரையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் வந்து இறங்குவது என்பதை தந்திமூலம் குழுக்குறியாக தெரிவிக்கவேண்டும். அதாவது அப்பொழுது இராஜப்பேட்டையில் பொலிஸ் ஸ்ரேசன் பின் புறத்திலே அமைந்த கட்டிடமொன்றில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த குயிலன், தமிழ் ஒளி ராஜகோபால் ஆகியவர்களுக்கு இங்குள்ள ஏஜெண்ட் தந்தி அனுப்புவதுபோல குழுக்குறியாக செய்தி அனுப்ப வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இறங்கு துறைகளுக்கு ஒவ்வொரு எண் குழுக்குறியாக வைத்துக்கொண்டோம். நாகபட்டினம் இறங்குதுறைக்கு 50 எனவும், காரைக்கால் இறங்குதுறைக்கு 100 எனவும், சிதம்பரம் இறங்கு துறைக்கு 150 எனவும் எண்ணிக்கையைக் குழுக்குறியாக அமைத்துக் கொண்டோம்.
நான் ஏற்பாடுகளை முடித்து இலங்கை திரும்பி வந்ததும் 1948இல் ஒருதினம் ஜீவானந்தத்துடன் அக்கரைக்குப் புறப்பட ஏற்பாடாகி இருந்தது. 44

முன் ஏற்பாட்டின்படி, பத்திரிகை ஏஜெண்ட் தந்திகொடுப்பதுபோல, “இத்தனை யாவது இதழில் 50 பிரதிகள் கூடுதலாக அனுப்பவும்" எனத் தந்திகொடுத்து, அக்கரையில் உள்ளவர்களுக்கு நாம் புறப்படும் திகதியையும், கரைசேரும் இறங்கு துறையையும் தெரிவித்துப் புறப்பட்டோம். ஜீவானந்தம் உயரமானவர், ஸ்டாலின் மீசை உடையவர், காது மந்தமுடையவர். இந்த அடையாளங்களை மாற்றுவதற்கு மீசையை மழித்து முஸ்லிம்போன்று சாரம் உடுத்து மாறுவேடத்தில் அழைத்துச் சென்றோம்.
தி.ஞா.: வல்வெட்டித்துறையிலிருந்து அக்கரைக்குச் செல்லும் உங்களது பயணம் எப்படி அமைந்தது? கே.கணேஷ் : அக்காலத்தில் கிராம முக்கியஸ்தராக இருந்த திரு திருப்பதி அவர்களுடன் மகாலிங்கம் மாஸ்ரர் தொடர்பு கொண்டு எமது பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி அவர் ஓரிரவில் கார்த்திகேசு மாஸ்டர் வீட்டிலிருந்த என்னையும் துரைசிங்கம் வீட்டிலிருந்த ஜீவானந்தத்தையும் காரில் அழைத்துச்சென்று, கடற்கரையில் சுங்கப்பகுதி காரியாலயத்தின் அருகே இருந்து புறப்பட்ட விசைப்படகு ஒன்றில் எம்மை ஏற்றிவிட்டார்கள். அந்த விசைப்படகு இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின் ஆங்கிலேயக் கடற்படையினரால் ஏலம் விடப்பட்ட விசைப்படகு. அதில் நவீன ராடர் கருவி களும் இருந்தன. அதனை வல்வெட்டித்துறை மீனவர்கள் வாங்கித் தமது தொழிலுக்குப் பாவித்தனர். சுங்கப் பகுதியினரிடம்கூட அத்தகைய விசைப்படகு கள் இருக்கவில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் - ஓரிரண்டு மணித்தியாலயத் தில் தமிழ் நாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போது இருந்தது. அக்காலத் தில் சர்வசாதாரணமாக வல்வையில் உள்ளவர்கள் சிதம்பரம், நாகபட்டினம் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து ‘பண்டமாற்று செய்வதற்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரியைக் கேட்பதற்கும், புதிய சினிமாப்படங்களைப் பார்ப்பதற்கும் சகஜமாகச் சென்று வந்தார்கள். நாங்கள் சென்ற படகு புறப்படமுன் படகோட்டிகள் செல்வச்சந்நிதி முருகனை வேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து புறப்பட்டார்கள். அக்கரை செல்லும் வழியில் பல படகுகள் எதிரே வந்தன. அவர்கள் கிராமபோன் குழாய் போன்ற அமைப்புள்ள குழாயை வாயில் பொருத்தி பலத்த சத்தத்தில் பரிபாஷையில் வள்ளங்களுக்கிடையே ஏதோ பேசிக்கொண்டார்கள். எதிரே சுங்கப் பகுதியினரின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறிச்சென்றார்கள்.
நாங்கள் சென்ற படகு அதிகாலை நேரத்தில் நாகபட்டின கடற்கரையி லிருந்து சுமார் மூன்று மைல்களுக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டது. சுங்கப் பகுதியினரின் கண்ணோட்டத்திற்கு அகப்படாத முறையில் நாங்கள் கரையேற வேண்டியிருந்தது. அக்கரையில் இருந்து பாதுகாப்பான நேரம் என்பதை அறி விக்க ஒளிவிளக்குச் சமிக்ஞை கிடைக்கும் வரை காத்திருந்தோம். கடலில் நங்கூரம் இடப்பட்டு பகல் முழுவதும் கடலில் தங்கியிருந்து மறுநாள் இரவு ஒளிவிளக்கு சமிக்ஞை கிடைத்ததும் புறப்பட்டோம். அங்கிருந்து ‘நாகூர் தர்கா (பள்ளிவாசல்) தெரிந்தது. விசைப்படகில் இருந்து இறக்கப்பட்டு சிறு வள்ளங்களில் தாம் கொண்டுவந்த பொருட்களுடன் காரைக்கால் அருகில் 45

Page 24
உள்ள அதிராமப் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இறக்கப்பட்டோம். அங்கிருந்து ஒரு கோஷ்டியினர் வந்து மோட்டார் காரில் எம்மை அழைத்துச் சென்று காரைக்கால் பாக்குவியாபாரியான ஒரு முஸ்லிம் அன்பரின் கடையில் எங்களைச் சேர்த்தனர்.
நாங்கள் திட்டமிட்டபடி போய்ச்சேரவேண்டிய இறங்குதுறையில் இறக்கப்படவில்லை. காரைக்கால் அப்போது ஆங்கில ஆட்சியில் இருக்க வில்லை; பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்திலிருந்தது. அதனாலேயே அங்கு சென்று இறங்குவது பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது. காரைக்காலைச் சேர்ந்த “கல்கி பீடி’ வள்ளங்கள் இறங்குதுறையில் எம்மை வரவேற்க வேண்டியவர்கள் காந்திருந்தனர். அதனால் ஜீவானந்தத்தை அந்த முஸ்லிம் அன்பரின் கடையில் விட்டுவிட்டு நான்மட்டும் சென்று அவர்களைக் கண்டு அடையாளம் அறிந்து அவர்களிடம் ஜீவானந்தம் அவர்களைச் சேர்த்தேன்.
ஜீவானந்தம் காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்று சிலகாலம் அங்கு தலைமறைவாக இருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
தி.ஞா. நீங்கள் எந்தெந்த வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளிர்கள்? கே.கணேஷ் : மத்திய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளான சோவியத் ரஷ்யா, ருமேனியா, பல்கேரியா, உக்கிரேன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள் ளேன். அங்கு நடந்த எழுத்தாளர் மாநாடுகளில் பங்கு பற்றினேன். பல்கேரிய தேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், உக்கிரேன் எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழி பெயர்த்ததன் காரணமாக அந்த நாடுகளில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளில் பற்குபற்ற அழைக்கப்பட்டேன்.
தி.ஞா.: மலையக தொழிற்சங்க முன்னோடி தேசபக்தன் கோ.நடே சைய்யர் அவர்களுடன் தங்களுக்குத் தொடர்புகள் ஏதும் இருந்ததா? கே.கணேஷ் : மலையகத்தின் மூத்த எழுத்தாளரான அவருடன் எனக்கு நேரடித் தொடர்புகள் இருக்கவில்லை. தேசபக்தன் நடத்தியபொழுது சந்தா சேர்ப்பதற்காக வீடுவந்து செல்வார். நான் அக்காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவருடைய பத்திரிகை வாசகனாகவும் அவரது எழுத்துக்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தேன். திரு டி.ராமானுஜம் அவர்களின் மூத்த சகோதரர் டி.சாரநாதன் என்ற பிரசித்த பத்திரிகையாளர், கோ.நடேசைய்யர் மீனாட்சி அம்மை தம்பதிகளின் புதல்வியை மணந்த மருமகனாவார். இதனாலும் கோ.நடேசைய்யர் அவர்களது தொண்டும் எழுத்துக்களும் எனக்கு மிக நெருக்க மாயிருந்தன.
தி.ஞா. : இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பு பற்றிக் கூறுங்கள். கே.கணேஷ் : ஜவர்ஹர்லால் நேரு இலங்கைக்கு வந்தபோது, இலங்கை வாழ் இந்தியர்களின் உதிரிச் சங்கங்கள் ஒன்றுசேர்ந்து ஒரே அமைப்பாக - தனியொரு நிறுவனமாக செயல்பட வேண்டுமென அறிவுரை கூறினார். அதன்படி கொழும்பு கொள்ளுப்பெட்டியில் இந்தியன் கிளப் கூட்டத்தில் 1939ல் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைப்பு நிறுவப்பட்டது. அதுவே பின்னர் "இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்' என வழங்கியது. அதனின்று பிரிந்து "ஜனநாயக 46

காங்கிரஸ் அமைப்பு தோன்றியது.
முதற் கூட்டத்திற்கு சென்றவர்களில் அம்பிட்டிய, தலாத்து ஒயா இந்தியர் சங்கமும் போஸ் சங்கமும் கண்டிப் பகுதியின் பிரதிநிதிகளாகச் சென்றனர். பங்குபற்றியவர்களில் டி.ராமானுஜம், ராமையா ராஜப்பிரியர், கே.ராஜலிங்கம் சோமசுந்தரம், தெல்தோட்டை பழனிசாமி, கே.கணேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தி.ஞா. : நீங்கள் மொழிபெயர்ப்புத் துறையிலேயே அதிக ஈடுபாடுகாட்டி யுள்ளிர்கள். இதுவரை 22 மொழிபெயர்ப்பு நூல்களை வெளிக்கொணர்ந் துள்ளிர்கள். இதற்கான உந்துதல் ஆரம்பத்தில் எப்படி ஏற்பட்டது? கே.கணேஷ் : "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் கட்டளையை நிறைவேற்றும் முகமாகத்தான், மற்றத் துறைகளில் அதிகம் ஈடுபடாது மொழியாக்கத் துறையில் அதிக கவனம் செலுத்த நேர்ந்தது. அரச குடியேற்ற நாடாக - Crown Colony என்ற பிரிட்டிஷ் அரசின் சலுகை பெற்ற பெரும் நாடாக இலங்கை அவர்கள் ஆட்சிக்காலத்தில் நிலவியது. பரந்த பாரதத்தினைவிட இத்தீவில் பேச்சு, எழுத்து, கல்வி உரிமைகளும் வாய்ப்புகளும் நிறைந்திருந்தன. அங்கு தடை செய்யப்பட்ட நூல்கள் இங்கு சர்வ சாதாரணமாகப் பரவியிருந்தன. உதாரணமாக சுபாஷ் சந்திரபோஸின் "Indian Struggle (இந்தியப் போராட்டம்) என்ற நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பினும் இங்கு இறக்குமதியாகி, தலைப்புகளை மாற்றி இந்தியாவுக்குக் கடத்தப்பட்டன. இந்தியாவில் வெளிவந்தவுடன் விறுவிறுப்பாக இலங்கையை வந்தடையும் நூல்கள், பின்னர் அக்கரையில் தடைசெய்யப்பட்டு அபூர்வமாக அமைபவை, இங்கு பரவலாகக் கிடைத்தன. தவிரவும், ஐரோப்பிய இலக்கியங்கள் இங்கு சரளமாகப் புளங்கின. இந்த நிலையில், இந்திய எழுத்தாளரும் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமான முல்க்ராஜ் ஆனந்த் வெளியிட்ட Untouchables போன்ற நூல்கள் இந்நாட்டில் பரவியதைப்போல இந்தியாவில் அறியப்படவில்லை.
பெங்குவின் வெளியீட்டினர் தொடங்கிய New Writing என்ற புதுமை இலக்கிய வரிசை இதழில், முல்க்ராஜ் ஆனந்த், இக்பால் அலி, ராஜாராவ் போன்றோரின் படைப்புகள் வெளியாகின. ஒரு இதழில் முல்க்ராஜ் ஆனந்தின் Barber’s Trade Union (நாவிதர் சங்கம்) என்ற சிறுகதை வெளியாகியது. அதன் உணர்வும், உணர்த்திய புது உலக எண்ண உதய வெளிப்பாடும் என்னை ஈர்த்தன. இரண்டாம் பேர்க்காலத்தில் லண்டனில் தங்கியிருந்த முல்க் ராஜ் ஆனந்த், அப்போது பொதுமக்கள் எண்ண வெளிப்பாடுகளை உணர்த்தும் பேட்டி காண்பவராக இருந்தார். அவருடன் தொடர்பு கொண்டு, அவரது அனுமதி பெற்று அக்கதையை மொழிபெயர்த்து சக்தி இதழுக்கு அனுப்பினேன். தி.ஜ.ர. அவர்கள் அதனைப் பாராட்டியதுடன் தொடர்ந்தும் பல மொழிபெயர்ப்பு களை வெளியிடும்படி தூண்டிக் கடிதம் எழுதினார். இவ்வகையில், அவர் ஆசிரியராக அமைந்த, "மஞ்சரி, ஹனுமான், 'ஹிந்துஸ்தான், ஆகிய இதழ்களுக் கும் சிறுகதைகளை மொழிபெயர்த்து அனுப்பத் தொடங்கினேன்.
பஞ்சாபி எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸ் அவர்களின் சிறந்த சிறுகதைகளை, இலங்கையனான நான், தமிழகத்தவர்களுக்கு அறிமுகப் 47

Page 25
படுத்தும் வாய்ப்பினைப் பெற்றேன். இப்போது போலல்லாது, அக்காலத்தில் ஆங்கிலக்கல்வி தமிழகத்தைவிட இலங்கையில் உயர்நிலையில் இருந்தமையும், ஆங்கில ஆர்வமும் பயிற்சியும் மெத்தனமாக இருந்தமையும் எனது முயற்சிகளுக் குத் தூண்டுகோலாக அமைந்தன. அத்துறையில் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது.
மொழியாக்கத்திற்கு ஆங்கில மொழியே துணையாக அமைந்தது. அம்மொழியில் மொழியாக்கப்பட்டதை, என்னால் தமிழ் நாட்டுச் சூழலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப தமிழாக்கப்பட்டன. இதற்கென மொழிபெயர்க்கப்படும் பிறநாட்டு வரலாறுகள், பண்பாடுகள், மக்களது வாழ்க்கை நெறிகள், சமயக் கோட்பாடுகள் இவற்றுடன் மரபு, குறியீடுகள், பழக்க வழக்கங்கள், சகுனங்கள், சமய வழிபாடுகள் இவற்றை ஆய்வு செய்வதில் காலங்கழிந்தது; கழிகின்றது.
தி.ஞா: : ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு எத்தகைய தகுதிகள் இருக்க வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்? கே.கணேஷ் : மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கும். மொழி பெயர்க்கப் படும் இரு மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தவிரவும் நாட்டு மொழிமரபுகள்; வரலாறு , சமூக அமைப்பு இயல் அனைத்திலும் ஓரளவேனும் அறிமுகமானவனாக இருத்தல் வேண்டும். இவற்றைப்பெற பல நூற்களில் பயிற்சியும் பல மக்களிடையே பெற்ற பயிற்சி அனுபவமும் பெற்றிருக்கவேண்டும். தி.ஞா : தமிழில் மொழிபெயர்ப்புத்துறை வளர்ச்சி பெறுவதற்கு ஆரம்பகால முயற்சிகள் எந்த அளவிற்குப் பங்களிப்புச் செய்தன? கே.கணேஷ் : பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் வரத் தலைப்பட்டன. சில சமயங்களில் மேலை நாட்டு உடைமாறி உள்நாட்டு வேட்டி சட்டை அணிந்து வந்ததுமுண்டு. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எட்கார் வாலசையும், அகதா கிறிஸ்டியையும் உருமாற்றினர். ஷொவாக்ஹோம்ஸ் துப்பறியும் துரைசாமி ஆனார். மாப்பசானின் 'அட்டிகை சிறுகதை தமிழகத்து அக்கிரகாரத்திற்குள் புகுந்தது. ஜெரோம் கே ஜெரோம், ஓ ஹென்றி பாத்திரங்கள் உருமாறின. எனினும், பி. எஸ்.ராமையா சிட்டி நடத்திய மணிக்கொடி தோன்றியதும் இப் பம்மாத்துக்கள் மாறி, பல வெளிநாட்டுப் படைப்புகள் தமிழாக்கம் பெறுவதில் மதிப்பைப் பெற்றன. மொழி பெயர்ப்புக்கும் ஒரு அந்தஸ்த்து தோன்றியது. புதுமைப் பித்தன, புரசு பால கிருஷ்ணன், தி.ஜ.ர., அ.கி.ஜெயராமன், கு அழகிரிசாமி, த.நா. குமாரசுவாமி, ப. ராமசாமி போன்றவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் முன்னணியில் நின்றனர். சிதம்பர ரகுநாதன் ரஷ்ய இலக்கியங்களையும் கவிதைகளையும் உயர்ந்த முறையில் தமிழ்ப்படுத்தினார். இதேபோல பன்மொழி வழங்கும் இந்திய நாட்டில் தெலுங்கு, மலை யாளம், கன்னடம், இந்தி, மலையாளம், போன்ற மொழிகளில் தோன்றிய படைப்புகளும் தமிழில் தோன்றவும் இறவாத புகழுடைய தமிழ்நூல்கள் அவ்வவ் மொழிகளில் பெயர்க்கப்படவும் ஆங்கில மொழி கருவியாக இருந்தது. திருக்குறள் திருவாசகம் போன்ற தமிழ் உயர் இலக்கியங்களின் பெருமையை, ஜி.யு. போப் மொழிபெயர்த்து, வெளிநாட்டவர் புகழ்ந்த பின்னரே தமிழர்களின்
48

கண்களும் திறக்கத் தொடங்கின. அயர்லாந்துக் கவிஞரான W.B.Yeats ஈட்ஸ் தாகூரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கு முன்மொழிந்து பெற்றுத் தந்த பின்னரே வங்காளிகளும் அவரைப் புகழத் தொடங்கினர். ஆங்கிலப் படிப்பின் காரணமாக ஷேக்ஸ்பியர், மில்டன், வாட்ஸ்வர்த், ஷெல்லி, பைரன் போன்ற புலவர்களின் ஆக்கங்களும் நவீனத் துறையில் முன்னின்ற சார்ல்ஸ் டிக்கன்ஸ், வோல்டர் ஸ்கொட், பிரெஞ்சு எழுத்தாளர்கள் அலெக் சாண்டர் டுமாஸ், விக்டர் ஹற்பூகோ, ருஷ்ய மேதை லியோதோல்ஸ்தோய், அன்டன் செக்கோவ், தொஸ்தொவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தமிழில் நவீனம் என்ற புனைகதைத் துறையை உருவாக்க உதவின.
தி.ஞா : மொழிபெயர்ப்பின்போது எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் யாது? கே.கணேஷ் : மேல்நாட்டு மரபுச்சொற்களை மரபு வழியறியாது நேரடியாக மொழிபெயர்க்கும்போது, அர்த்தத்தை அனர்த்தமாக்கிவிடுவதுமுண்டு. Go to Hell என்பதைத் தமிழ்ப் படுத்திய ஒருவர் நரகத்துக்குப் போ’ என்று தமிழ்ப் படுத்தியிருந்தார். “தொலைந்து போ, நாசமாய்ப் போ’ என்பன போன்று மொழிபெயர்த்திருந்தால் நம் மரபை ஒட்டியதாக இருந்திருக்கும்.
ஆங்கிலத்தில் Uncle, Cousin என்பன தாய்வழி, தந்தைவழி உறவினர் களை வேறு வேறு உணர்த்துபவை அல்ல. இந்தியப் பண்பாட்டை உணர்த்தும் நெடுங்கதை மொழிபெயர்ப்பில் தன் உடன் பிறந்தவரின் மகனை அதாவது சிற்றப்பன் தன் அண்ணன் மகனை அழைத்துச் செல்லும்பொழுது சில தாயைக் குறிக்கும் வகைச் சொற்களை உதிர்க்கிறான். அவனை Uncle என்றே மூலத் தில் குறிப்பிட்டதால் மாமன் என்றே மொழிபெயர்பாளர் குறிப்பிடுகிறார். உண்மை யில் மாமன் அப்படிக் கூறான். அவ்விடத்தில் ஒரு சிற்றப்பனோ பெரியப்பனோ தான் கூறமுடியும். இத்தகைய நம் மரபுகளையும் நோக்கி, நேரடியாக மொழி பெயர்ப்புச் செய்யாது, இடம்பொருள் ஏவல் அறிந்து கையாள வேண்டிவரும். இதேபோன்று சமூகவியல், வரலாறு போன்றவற்றில் மொழி பெயர்ப்பாளன் உணர்ந்திருக்கவேண்டிய நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு, சீன நாட்டில் ஆடவர்கள் நம்மவர்கள் கொண்டை வளர்த்ததுபோல் சடை போட்டிருந் தனர். கொண்டை கர்நாடகமாகக் கருதப்பட்டதுபோல் புதுமைக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சடை வளர்த்தவர்கள் பழமைவாதிகளாகக் கருதப் பட்டனர். 1911இல் தோன்றிய புரட்சிக்கு முற்பட்ட காலங்களில் சடை வளர்ப் பவர்கள் பிற்போக்குவாதிகளாகக் கருதப்பட்டனர். முடியாட்சியை ஆதரிப் பவர்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய சின்னமான சடை ஆங்கிலத்தில் PigTail என்று வழங்கப்பட்டது. இதை பன்றி வால் என மொழிபெயர்த்தனர் சிலர். உண்மையில் இம்முடி மாற்றத் தத்துவத்தை உணர்ந்து மொழிபெயர்ப் பாளன் தன் வாசகர்களுக்கு உணர்த்தும் தன்மை பெற வரலாறு அறிந்திருத்தல் வேண்டும்.
மேல்நாட்டவர்களுக்கு விளக்கமாகத் தலைப்பாகையை வர்ணித்த முல்க்ராஜ் ஆனந்த் தனது தீண்டாதான் நூலில், பலஅடி நீளமிக்க துணியை இத்தனை புரிமடித்துச் சுற்றிச் சொருக வேண்டும் என விரிவாக எழுதியிருந்தார். நம்மவர்க்கு இதனை மொழிபெயர்க்கும்போது, தலைப்பாகை அணிந்திருந்தான் 49

Page 26
என்றால் போதுமானதல்லவா?
இவ்விதம் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கபடும் சொற்கள் - நேரடி மொழி பெயர்ப்புகள், தமிழ்மரபில், "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதுபோலி ஆகிவிடுவதுமுண்டு. பழந்தமிழ்ச் சங்ககாலம் முதல் வழிவழியாக வழங்கும் "அருவி என்ற அழகிய சொல் இருக்க, Water Falls என்பதன் நேர்மொழிபெயர்ப்பான நீர் வீழ்ச்சி என்ற நீண்ட சொல்லும் தமிழில் இடம்பிடித்துக் கொண்டதை நோக்கலம்.
இங்ங்ணம் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உருமாறி உடைமாறி உணர்வு களை ஒருமைப்பட உணர்த்தி மூல ஆசிரியரின் கருத்தை கற்பு நிலை மாறாது காப்பாற்றவேண்டிய கடமையுள்ளவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்க வேண்டும். மொத்தத்தில் இக்கூடுவிட்டு கூடுபாயும் பணியில், யாருக்காக இலக்கியம் ஆக்கப்படுகின்றதோ அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட்கருத்தை மொழிபெயர்ப்பாளன் அனைவரும் புரிந்து கொள்ளும் நடையில் சுவைபட உணர்த்துவதே பெருங் கடமையாகும்.
தி.ஞா. நீங்கள் மலையக எழுத்தாளராக இருந்தபோதிலும் மலையகத் தொழிலாளர்கள் பற்றி இலக்கியம் படைக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டு நிலவுகிறதே. கே.கணேஷ் : நான் இருக்கும் இடம் சுற்றுச் சார்புகள் சிங்களக் கிராமமாக இருக்கிறது. இந்நிலையில் தேயிலைத்தோட்டம் தொலைநோக்கிச் செல்ல நேர்ந்ததால், தேயிலைச் செடிகள் கண்ட வாய்ப்பே எமக்கு அறிய முடிந்தது. தவிர்த்து அங்கு வசித்த தொழிலாளிகளைப் பற்றியோ, தேயிலைப் பயிர்ச்செய்கை சூழ்நிலைகள் குறித்து அறிய எனக்குப் பெரிதும் வாய்க்க வில்லை. இலங்கை, தமிழகப் பள்ளிப்படிப்பு முடித்து நான் முப்பதை எட்டும் காலத்திலேயே மலை நாட்டுப் பகுதியில் நண்பர்கள் உறவினர்களுடன் தங்கி தேயிலைத் தோட்ட வாழ்க்கை முறைகளையும், சூழல்களையும் ஓரளவு அறிய வாய்த்தது. மற்றும் ஏடுகள், நூல்கள் வாயிலாகவே அறிய முடிந்தது. எனவே நான் வாழ்ந்த கண்டியச் சூழ்நிலையில் மலையகத்து மக்களது வாழ்வு குறித்து ஆக்கங்கள் படைக்கத் தகுதியற்றவனாக இருந்த நிலையில் கற்பனையில் கதைகள், கவிதைகளோ புனைய விரும்பவில்லை. ஒரு ஒட்டம் பார்த்துவந்து அவர்களது உள்ளாத்மாவையே உணர்ந்துவிட்டதாகப் பம்மாத் துப் புரிய மனம் வரவில்லை. இதுவே மலையகத்தைக் குறித்து நான் கவனம் செலுத்த முடியாமையின் காரணமாகும்.
சமூகத்தின் பொருளாதாரச் சீர்கேடுகள், மேடுபள்ளங்கள் சரிசமன் ஆக்கப்பட்டு கீழ்நிலையில் உள்ளவர்களும் மேல் நிலையில் உள்ளவர்களு டைய வாழ்க்கைத் தரத்தை எய்தவேண்டும் என்ற சமதர்மக் கொள்கையில் எனக்குக் ஈடுபாடு இருந்தது. சாதி, வகுப்பு, இனபேதம் போன்றவற்றில் ஈடுபாடுகள் இத்தகைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்குமேயன்றி அதற்குத் துணையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அதனால் மலைநாடு என்று நான் தனியாக நோக்கவில்லை. சமத்துவநிலை ஏற்படும்பொழுது பெரு வெள்ளம் வந்து சிறு குப்பைகூழங்களை அழித்துச் சமநிலையாக்கிவிடும் என்று நினைத்தேன்.
50

மணிக்கொடிதொகுப்பில் கணேஷின் கதை
சாரல் நாடன்
‘மணிக்கொடி இதழ் தொகுப்பு, ‘சரஸ்வதி களஞ்சியம், 'கணையாழி களஞ்சியம் என்று சில நூல்கள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. முன் தலைமுறையிதழ்களை நூல் வடிவில் அறிமுகப்படுத்தும் இந்தப் பயன்தரும் முயற்சி, இன்னும் ‘கசடதபற' இதழ் தொகுப்பு, ‘மனிதன் இதழ் தொகுப்பு, ‘சுபமங்களா' இதழ் தொகுப்பு என்று விரிவடைந்துள்ளது.
மனம்விட்டுப் பாராட்டத்தக்க முயற்சிகள்.
மலைநாட்டில் இருபதுகளில் பிறந்து, இலக்கியப்பணி செய்தவர்களில் சிவபாக்கியம் குமாரவேலு, கே.கணேஷ், சக்தி.அ.பாலையா என்ற மூவரே இன்னும் நம்மோடு உயிர் வாழ்கின்றனர். இவர்களின் எழுத்துக்களை இன்றைய காலகட்டத்தில் நம்மால் பார்க்கமுடியாதிருக்கின்றது. ஆனால் கே.கணேஷ் எழுதிய ஒரு கதை - மணிக்கொடி தொகுப்பில் இடம்பிடித்திருக்கிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான செய்தி. 1939இல் அவர் தமிழ் நாட்டிலிருக்கும் பொழுது மணிக்கொடியில் வெளிவந்த இந்தக் கதையின் பெயர் அதிர்ஷ்டசாலி என்பதாகும். தன் ஊரையும் சேர்த்து, தத்தமங்கலம் க.கணேசன் என்ற பெயரில் அவர் இதை எழுதியிருக்கிறார். கே.கணேஷ் பழம்பெரும் எழுத்தாளர். இவர் எழுதியவற்றுள் ‘சத்தியபோதிமரம்' என்ற சிறுகதையே இதுநாள்வரைக்கும் நமது பார்வைக்குக் கிடைத்துள்ளது. 1967ல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட மலரிலும், 1997ல் துரைவி வெளியிட்ட மலைநாட்டுச் சிறுகதைகளிலும் சத்தியபோதிமரமே வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நிலைமையில் ஒரு மாற்றம் உண்டாகி இருக்கிறது. கே.கணேஷ் எழுதிய டைரக்டர் வெங்கு - வீரகேசரியில் வெளிவந்தது, *காலச்சக்கரம்' வீரகேசரியில் வெளிவந்தது, என்ற கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவைகள் 1949ல் வெளியானவை. இராம சுப்பிரமணியம் எழுதி 1964, 65களில் வீரகேசரியில் வெளியான எட்டுச்சிறுகதைகள், சுவாமிநாதன் எழுதி 64, 65களில் வீரகேசரியில் வெளியான நான்கு சிறுகதைகள், சொலமன் ராஜின் நான்கு சிறுகதைகள், பூரணி எழுதிய ஐந்து சிறுகதைகள் நமக்குக் கிடைத்துள்ளன. தேடுதல் என்பதைச் சாத்தியமாக்கிக்கொண்டால் முடியாதது என்று ஏதேனும் இருக்கிறதா?
மலைநாட்டில் வெளிவருகின்ற தொகுப்புகளில் இவைகளை நாம் எதிர்பார்க்கலாம். கூடவே நம்மில் ஒரு கேள்வியும் எழுகிறது. இப்படி வெளிவருகிற தொகுப்புகளால் நம்மவர்க்குப் பயன் உள்ளதா என்று.
சமீபத்தில் மலைநாட்டில் முப்பது கல்லூரிகளுக்கு மேற்குறித்த தமிழ் நாட்டுத் தொகுப்புகள், வாசிகசாலை நூல்களாக சமூக அபிவிருத்தி அமைச்சின் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் ஐம்பது ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் ஒன்றேனும் இலங்கையில் வெளியிடப்பட்ட புத்தகங்களாக இல்லை என்பதுதான் நம்மைக் கவலைப்பட வைக்கிறது.
51

Page 27
கே.கணேஷ் - ஒரு இலக்கியச் சுரங்கம்! தெளிவத்தை ஜோசப்
IDலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்கள் ஒரு கவிஞராகவே எழுத்துலகில் பிரவேசம் செய்தார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதில், படிக்கப்போன தமிழ் நாட்டிலிருந்து "லோகசக்தி என்னும் சஞ்சிகையின் முதல் இதழிலேயே கலாநேசன் என்னும'புனைபெயரில் ஒரு கவிதை எழுதியன் மூலம் இந்த இலக்கியப் பிரவேசம் ஆரம்பமாகியுள்ளது.
மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் படித்து ஒரு பண்டிதராக வரவேண்டும் என்கின்ற அவாவில் தன் மகனை பெற்றவர்கள் தமிழ் நாட்டிற்கனுப்பி வைத்தார்கள். மகன் கணேஷ"க்கோ திரு.வி.கல்யாணசுந்தரனாரின் தமிழை விடவும் தமிழ் இலக்கியத்தில் கருத்துப்புரட்சி செய்த ப.ஜீவானந்தம் அவர்களின் நெருங்கிய நண்பரும் சிறந்த பேச்சாளரும் ஜனசக்தியின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான மாயாண்டி பாரதியின் நட்புப் பிடித்திருந்தது.
மாயாண்டி பாரதி அவர்களின் தொடர்பினால் நவசக்தியிலும் இவரது படைப்புகள் அடிக்கடி இடம்பெற்றன.
தமிழ்ச் சிறுகதையின் கொடுமுடிகளான புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, மெளனி போன்றவர்கள் எழுதிய மணிக்கொடியில் கே.கணேஷ"ம் சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பதுவே ஒரு இலக்கிய மகுடம்தான்.
மணிக்கொடியில் மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், தழுவல்கள் ஆகிய இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன.
கலைஞன் பதிப்பகம் தமிழ்ப்பத்திரிகை உலகத்தில் தடம்பத்தித்த ஏடுகளின் தொகுப்புகளை வெளிக்கொண்டுவரும் ஒரு பாரிய பணியினை ஏற்று செயற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மணிக்கொடி, சரஸ்வதி ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மணிக்கொடித் தொகுப்பில் தத்த மங்கலம் த.கணேசன் என்னும் பெயரில் கே.கணேஷ் எழுதிய ஒரு ஹங்கேரிய தழுவல் கதையும் இருக்கிறது. மணிக்கொடியில் எழுதியதன் மூலமும் மலையக இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்திருப்பவர் திரு. கே.கணேஷ் அவர்கள்.
தீவிர இடதுசாரிக் கொள்கை உடையவரான கே.கணேஷ் முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், பிரேம்சந்த் போன்றோருடன் நெருக்கமாகப் பழகியவர். இந்த நெருக்கத்தின் காரணமாக அப்பாஸ் அவர்களுடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். குயிலன், தமிழொளி, தி.கா.சி போன்றோர் துணையாக நின்றனர்.
புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் ஆகிய தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமின்றி இந்திய எழுத்தாளர்கள், வெளிநாட்டு எழுத்தாளர்கள் என்று சகலருடனும் பழகி, சகலரையும் நண்பர்களாக்கிக் கொண்டு, சகலருடனும் கடிதத்தொடர்பும் கொண்டிருந்தவர் இவர்.
“இலங்கையில் இருக்கும் பூரீ.கே.கணேஷம் சென்னையில் இருக்கும் நானும் உற்ற நண்பர்கள். சிலமுறை நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. ஒரு பத்திரிகை ஆசியரான எனக்கு (மஞ்சரி, ஹிந்துஸ்தான்) பிரசுரிக்கச் சில நல்ல கதைகள் கிடைத்தால் எப்படியான மகிழ்வு ஏற்படும்! 52

அந்த இலக்கிய மகிழ்வை எனக்கு அடிக்கடி தருபவர் நண்பர் கணேஷ். கே.ஏ.அப்பாஸின் அருமையான சிறுகதைகளை அவரின் அனுமதியுடன் மொழி பெயர்த்து மஞ்சரிக்கும், ஹிந்துஸ்தானுக்கும் அனுப்புவார். என்றெழுதுகிறார் தி.ஜ.ர.(குங்குமப்பூ முன்னுரை).
பம்பாய்க்காரரான கே.ஏ.அப்பாஸின் பத்துச் சிறுகதைகள் அடங்கிய தொகுதி குங்குமப்பூ. கே.கணேஷ் மொழிபெயர்த்து வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுதியும் இதுவே. 1955இல் சென்னை இன்பநிலையம் இத்தொகுதியை வெளியிட்டுள்ளது. இதற்கு எட்டாண்டுகளுக்கு முன்னதாகவே 1947இல் முல்க்ராஜ் ஆனந்தின் Untouchables நாவலை தீண்டத்தகாதவன்' என்று மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார் கே.கணேஷ் அவர்கள்.
1920இல் (2-3-1920) கண்டிக்கு அண்மையில் உள்ள அம்பிட்டியவில் பிறந்து கல்வி கற்கச்சென்ற தமிழகத்தில் 1932இலேயே எழுதத்தொடங்கி இளைஞர் காங்கிரஸ் என்னும் அமைப்பை உருவாக்கி லோகசக்தி என்னும் சஞ்சிகை வெளியீட்டில் பங்கேற்று, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் ஆரம்பித்து இலங்கைக்கு மீண்டும் வந்து ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த நாள் விழாவுக்கான அகில உலகக் கவிதைப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்று, ஜப்பானுக்கு விருதுபெற அழைக்கப்பட்டு. கே.கணேஷ் என்பது ஓர் இலக்கிய சுரங்கம். அதை நாம் தோண்டிக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வப்போது இலக்கிய முத்துக்கள் வந்துவந்து விழுந்துகொண்டே இருக்கும். கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, மதுரைத் தமிழ்ச்சங்கம், திருவையாறு ராஜா கல்லூரி ஆகியவை இவர் கல்வி பயின்ற கல்விக்கூடங்கள். கல்லூரிப்படிப்பை விடவும் கலை இலக்கிய உலகில் அவர் கற்றுத்தேர்ந்த பாடங்களே அவரைப்பற்றி இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் ஓர் உயர்வைத் தந்திருக்கிறது.
“இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் என்பது பற்றிய ஒரு வரலாற்று குறிப்பெழுதிய பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு குறிக்கின்றார்.
1946இல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தோர் அக்காலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த கே.ராமநாதன், கே.கணேஷ் ஆகியோரே. (புதுமை இலக்கியம் - தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டு மலர் (1975).
இதே 1946இல்தான் இதே கணேஷ"ம் ராமநாதனும் இணைந்து பாரதி என்னும் முற்போக்குச் சஞ்சிகையையும் வெளியிடத் தொடங்கினர். (இந்தப் பாரதி பற்றிய ஒரு விரிவான வரலாறு 'நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்’ என்னும் மல்லிகைப்பந்தல் நூலில் இடம்பெற்றுள்ளது).
1946 ஜனவரியிலிருந்து 1948 ஜனவரியிலான இரண்டு வருட இடைவெளில் 6 பாரதி இதழ்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான இவ்விருவரும் தங்களுடைய அரசியல் நிறமும் அரசியல் கொள்கைகளும் தங்களுடைய பத்திரிகையில் துல்லியமாகத் தெரியவேண்டும் என்பதற்காகவே அதற்குப் ‘பாரதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
53

Page 28
தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் முற்போக்குக் கொள்கைப் பிரசாரத்துக் கென வெளிவந்த முதல் முற்போக்குச் சஞ்சிகை எனும் பெருமை கே.கணேஷின் பாரதிக்கே உண்டு. என்னுடைய அரசியல் வர்ணம் என்னுடைய ஏட்டுக்கு வந்துவிடக்கூடாது என்னும் கவனத்துடனேயே அதற்கு சரஸ்வதி பெயர் வைத்தேன் என்று கூறும் வ.விஜயபாஸ்கரன் அவர்களைளும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
‘ஒரு காலத்தில் வங்காள நாமானந்த சட்டர்ஜி நடாத்திய ‘மொடர்ன் ரிவியூவை எனது பள்ளிக்காலத்தில் படித்தபோது இதைப்போல் ஒன்றை நடத்திப் பார்க்கவேண்டும் என்றும் ஆசை தோன்றியது. அவைகள் கனவாகிப் போயின. எனினும் பாரதி என்ற சிற்றிதழை எனது தோட்டத்தின் ஒரு பகுதியை விற்று நடத்தினேன். அதை விற்ற கோபத்தில் தந்தையார் சினந்து சொத்துக்களின் மற்றப் பகுதிகளை நான் விற்கமுடியாதபடி எழுதிவிட்டார். நானும் சிலரிடம் தொழில்புரியும் நிலை ஏற்பட்டது. என்று எழுதுகிறார் கே.கணேஷ்.(மூன்றாவது மனிதன் இதழ் 14 - ஏப்பிரல் - மே, 2002).
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கும் பத்திரிகைகளுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்புண்டு. மலையகத்தின் சிறுகதை முன்னோடிகளான கோ.நடேசையர், சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ் ஆகியோரும் பத்திரிகை களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
மணிக்கொடி, வீரகேசரி, தேசாபிமானி போன்ற பத்திரிகைகளில் சிறுகதை எழுதியுள்ள கே.கணேஷ் அவர்கள் தன்னுடைய சொந்தப் பத்திரிகை யான பாரதியில் ஒரு சிறுகதைகூட எழுதவில்லை என்பது ஆச்சரியமானதே.
உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரான முல்க்ராஜ் ஆனந்தின் Untouchables நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கே.கணேஷ்.
இந்த 'அன்டச்சயில் நாவலுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. 'ஜேம்ஸ் ஜோய்சின் பாதிப்பால் எழுந்த இந்த நாவல் என்னுடைய எழுத்துப் பயணத்தில் ஒரு திருப்புமுனை என்கிறார் முல்க்ராஜ். ‘காதல் கதை, கவிதைகள் எழுதுவதும் அவற்றை அச்சில் பார்த்து ஆனந்திப்பதுமாக இருந்தவன் நான். அனுபவங்களை உண்மையாகவும், இயற்கையாகவும் எதிர்ப்புக்களை வெளிப்படையாகவும் எழுதவேண்டும் என்ற நினைவுதான் என்னுடைய அந்தத் திருப்புமுனை. லண்டனில் இருந்து கொண்டு அவர்களுடைய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவலின் கதாநாயகனான தீண்டத்தகாத சிறுவனை ஒரு இந்திய ஹீரோவாக்கிக் காட்ட என்னால் முடியுமா என்னும் நினைவுதான் அந்தத் திருப்புமுனை. இந்த நாவலை காந்திஜி இடம் வாசித்துக்காட்டி அபிப்பிராயம் பெறவேண்டும் என்ற உந்துதல் மேலிட்டது. தீண்டாமை பற்றி நிறையப் பேசியவர், எழுதியவர், பாடுபட்டவர் அவர். அவருடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று முன்னுாறு பக்கத்தில் எழுதிவைத்திருந்த இந்த நாவலையும் தூக்கிக்கொண்டு இந்தியா வந்தேன். சபர்மதி ஆசிரமத்தில் அவருடன் தங்க அனுமதி கிடைத்துவிட்டது. ஒரு நாளில் ஒரு மணிநேரம் பேச ஒத்துக்கொண்டவர் எதைப்பற்றிப்பேசவேண்டும் என்கிறாய் என்றார். ‘நான் எழுதிய நாவல் ஒன்றை உங்களிடம் காட்டவேண்டும்.
54

‘நாவல். ஒரு பையனும் பெண்ணும் சேர்ந்து காதல் செய்வதா..? ‘இல்லை உங்கள் அன்பைப் போன்றது. அதுவும் ஒருவகைக் காதல்தான். திண்டாமை பற்றியது.
‘ஓ ஹரிஜனன் பற்றி எழுதியிருக்கிறாயா! அதற்கு ஏன் நாவல். நேரடியாகவே தீண்டாமை பற்றி எழுதி இருக்கலாமே..?
‘நான் பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை. “டால்ஸ்டாய் படித்திருக்கின்றாயா? ‘இல்லை. இங்கிலாந்தில் ரஷ்ய எழுத்தாளர்கள் அவ்வளவு பிரபல்யம் இல்லை. டால்ஸ்டாய் மிகவும் கடினம் என்று பிரித்தானியர்கள் கருதுகின்றார்கள் எனக்கு டால்ஸ்டாயின் நாவலை வாசிக்க ஏற்பாடு செய்கின்றார். அடுத்த நாளில் இருந்து எனது நாவலை வாசித்துக் காட்டத் தொடங்கினேன். ஒரு மணிநேரம் மட்டுந்தான். முதல் ஐந்து பக்கங்களை வாசித்தேன். “இத்தனை பக்கங்களையும் ஒரு பக்கத்தில் எழுதி இருக்கலாமே! ஏன் இத்தனை வர்ணனை. ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறாய். உன் தாய் மொழியில் எழுதி இருக்கலாமே.”
“என்னுடைய தாய்மொழி எனக்கு மறந்து விட்டது. மேலும் பஞ்சாப்பில் நூல் வெளியீட்டாளர்கள் இல்லை”.
"பரவாயில்லை, எந்த மொழியில் வேண்டுமனாலும் எழுது. ஆனால் உன்னுடைய கதாநாயகனான துப்புரவுத் தொழிலாளி மிகவும் புத்திசாலி இல்லை என்பதை எந்நேரமும் நினைவில் வைத்துக்கொள்.”
மூன்றே மாதங்களில் என்னுடைய முன்னுாறு பக்க நாவல் நூற்றிஐம்பது பக்கங்களில் உருவாகியது என்று இந்த நாவலின் பிறப்புப் பற்றி கூறுகின்றார் முல்க்ராஜ்.
இது நடந்தது 1927இல், 1940களின் முற்பகுதியில் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்தார். கே.கணேஷைச் சந்திருக்கிறார்.
அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற ஒன்றினை அமைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த கே.கணேஷ் முல்க்ராஜ் முன்னிலையில் அதைச் செயற்படுத்திக்கொண்டார். ஈழத்தின் சகல மொழி எழுத்தாளர்களையும் ஒரு அமைப்பின்கீழ் கொண்டுவரும் அசுர முயற்சி இது.
அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக சுவாமி விபுலானந்தரும், உபதலைவராக மார்ட்டின் விக்கிரமசிங்கவும் பொறுப்பேற்றனர். கலாநிதி சரத் சந்திரவும் கே.கணேஷ"ம் சங்கத்தின் இணைச் செயலாளர்கள். எழுத்தாளர்கள் அனைவருடனும் கே.கணேஷ"க்கு இருந்த அருமையான தொடர்பு, சக எழுத்தாளர்களுக்கு இவர்மேல் உள்ள மதிப்பு, குறுகிய இடைவெளிக்குள் இச் சங்கம் அமைக்க எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டிய ஆற்றல் போன்ற இவருடைய இலக்கிய இயக்கம் முல்க்ராஜ் ஆனந்திற்கு வெகுவாகப் பிடித்துக்கொண்டது. தன்னுடைய தீண்டத்தகாதவன் நாவலொன்றை கணேஷிடம் கொடுத்து அதைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியினைவும் ஒப்படைத்துச் சொன்றார்.
மொழிபெயர்ப்புத் துறைக்கு கணேஷை இழுத்துவிட்ட ஒரு மூலவராக உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்தையே நான் கருதுகிறேன். 55

Page 29
முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், ஹோசிமின், லூசுன், அல்தாய் முகமத் தோவ், சண்டோர் பெட்டோவ்பி, குப்பிரியானோவ், பார்பரா, தாராளில் செவ் சென்கொ, இவான் பிராங்கோ என்று பத்துக்கும் மேற்பட்ட உலக எழுத்தாளர்களின் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்து வெளியிடு வதற்கு மூலமாய் அமைந்தது முல்க்ராஜ் ஆனந்தின் அன்டச்சபில் தான்.
இந்த அன்டச்சபில் நாவலை தீண்டத்தகாதவன் என்னும் பெயரில் காரைக்குடி புதுமைப்பதிப்பகம் 1947இல் நூலாக வெளியிட்டது.
பாரதியின் ஆறு இதழ்களிலும் முல்க்ராஜ் ஆனந்த நான்கு சிறுகதைகள் எழுதி இருப்பது கணேஷ"க்கும் அவருக்கும் உள்ள இலக்கிய நெருக்கத்தைக் காட்டுகிறது.
தமிழுக்குப் புதுமைப்பித்தன் எப்படியோ, சீனத்துக்கு லூசுன் அப்படியே. சமூதாய முரண்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் யதார்த்த பூர்வமாக, அதேவேளை கலை நயத்துடனும் எடுத்துக்காட்டும் லூசுன் அவர் களுடைய சிறுகதைகளை தமிழ் மக்களுக்கு அறிமுகஞ்செய்த, வாசிக்கக் கொடுத்த பெருமை கே.கணேஷ் அவர்களுடையது.
Selected stories of Luh Shun' 6T660)tb grid sug5Qg5 Tg55, 196036) சீனாவில் வெளியிடப்பட்டது. 1972லும் 1978லும் இந்த ஆங்கிலத்தொகுதி மறுபதிப்புப் பெற்றுள்ளது. இந்தத் தொகுதியின் பதினெட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பே லூசுன் சிறுகதைகள். தேசியக் கலை இலக்கியப் பேரவை இந்தச் சிறுகதைத் தொகுதியை 1995இல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முல்க்ராஜ் ஆனந்த், கே.அப்பாஸ், பிரேம்சந்த், வியதநாமிய விடுதலைவீரர் ஹோசிமின், சீனாவின் சிறுகதைச் சிற்பி லூசுன், ஹங்கேரிய கவிஞர் சந்தோர் பெட்டோவ்பி, ரஷ்யாவின் குப்பிரியானோவ், பார்பரா என்று மொழிபெயர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் ஆசிரியர்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலுங்கூட இலக்கியச் செல்நெறி பற்றியதான ஒரு ஒற்றுமையும் இந்தத் தெரிவுக்குள் இழையோடி நிற்பதையும் நாம் காணலாம். வியத்நாமியச் சிறுகதை நூலுக்காக 1992லும், உக்ரேனிய மகாகவி தாராஸ் செவ் சென்கோவின் சிறுகதை நூலுக்காக 1993இலும் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை 'விபவி இவருக்கு வழங்கியது.
மொழிபெயர்ப்புத் துறைக்கான அரச சாகித்திய விருது இவருடைய எந்த மொழிபெயர்ப்பு நூலுக்கும் கிடைக்கவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது. ஆனாலும் அரச இலக்கிய விருதான இலக்கியச் செம்மல் (1991), கலாபூஷணம் (1995) விருதுகள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன.
பிந்திய நாற்பதுகளில் (1948) வீரகேசரியில் ஆசிரிய பீடத்தில் இரண்டு வருடம்போல் பணிபுரிந்துவிட்டு . 1950இன் ஆரம்பத்தில் சுதந்திரன் செய்தி ஆசிரியராக இணைந்து பணியாற்றினார். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 50களின் ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்தார். எஸ்.ஜே.வி.யைக் காணவேண்டும் என்ற உந்தலில் சுதந்திரன் ஆசிரியராக இருந்த எஸ்.டி.சிவநாயகத்துடன் தொடர்புகொண்டு 'அவர் இருக்கும் நேரம் பார்த்துச் சொல்லுங்கள் வந்துவிடு கிறேன்’ என்று ஏற்பாடு செய்துகொண்டு சுதந்திரன் காரியாலயத்துக்கு சென்ற போது, அங்கே கணேஷ் அவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். 56

"நீங்கள் என்ன இங்கு செய்கிறீர்கள்” என்று மகிழ்வு மிகுதியால் கணேஷைக் கட்டித் தழுவிக்கொண்டாராம். இவர் எனது நீண்டநாள் நண்பர். இங்கே சந்திப்பேன் என்று எண்ணவேயில்லை என்று எஸ்.டி.எஸ்.ஸிடம் கல்கி கூற, "இவர்தான் எங்கள் செய்தி ஆசிரியர்' என்று எஸ்.டி.எஸ். கல்கியிடம் கூற கல்கி மேலும் வியப்படைந்துவிட்டார். (கல்கியின் ஆச்சரியத்தையும் கணேஷைக் கட்டித் தழுவிக்கொண்டதையும் கண்டு ரசித்த பெரியார் துரைஸ்வாமி அவர்கள் கல்கியின் சுதந்திரன் காரியாலய விஜயத்தை என்னிடம் ஒரு கதைபோல கூறினார்).
தோட்டத்தின் ஒரு பகுதியை விற்று பாரதியை நடத்தியதால் கோபப்பட்ட கணேஷின் தந்தை சொத்துக்கள் எதையும் மகன் விற்க முடியாதவாறு பத்திரங்களைத் தயார் படுத்திக்கொண்டதால் நான் தொழிபுரியும் நிலை ஏற்பட்டது என்னும் கணேஷின் கூற்றை நாம் இந்த இடத்தில் பொருத்திப் பார்த்தோமானால், கல்கியின் ஆச்சரியம் புலப்படும்! சம்பளத்துக்குத் தொழில் பார்க்கும் தேவை கணேஷிற்கு ஏன் வந்தது எனும் நினைப்பால் ஏற்பட்ட வியப்பாகவும் அது இருக்கலாம் அல்லவா!
தன்னுடைய மொழிபெயர்ப்பின் அறுவடைகளாக 22நூல்களை வெளிக்கொண்டு வந்திருக்கும் திரு கே.கணேஷ் அவர்கள் தன்னுடைய சொந்த ஆக்கங்கள் எதனையுமே நூலாக்கிக்கொள்ளும் அக்கறை அற்றவராவே இருந்திருக்கிறார். (இவர் மொழிபெயர்த்துள்ள நூல்களின் பட்டியலை மலையகச் சிறுகதை வரலாறு நூலில் பார்க்கலாம் - பக்கம் 55).
ஒரு தொகுதி போடுமளவிற்குக் கவிதைகள் எழுதியிருக்கிறார் கணேஷ். பல்வேறு இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில் இவரால் எழுதப்பட்ட கவிதைகள் தேடி எடுக்கப்பட்டு தொகுக்கப்படவேண்டும்.
1930ற்கும் 50இற்கும் இடைப்பட்ட காலத்தில் மணிக்கொடி, தேசாபி மானி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் இவர் எழுதியுள்ள மகாசக்தி, ஆசாநாசம், பால்காரப் பழனி, சட்டமும் சந்தர்ப்பமும், சத்திபோதி மரம், ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்னும் ஆறு சிறுகதைகளும் தேடி எடுக்கப்பட்டு தொகுக்கப்படவேண்டும்.
இவ்விலக்கியப் பெருமகனை மல்லிகை தனது 1971 ஏப்ரல் இதழ் அட்டையில் பிரசுரித்துக் கெளரவித்துள்ளது. அந்தனி ஜீவா வெளியிட்ட கொழுந்து தனது மே - ஜூன் 1989 இதழின் அட்டையில் திரு கணேஷின் உருவப்படத்தை பிரசுரித்துக் கனம்பண்ணியுள்ளது. இப்போது "ஞானம்’ கே. கணேஷ் சிறப்பிதழ் வெளியிட்டு கெளரவம் செய்கிறது (டிசம்பர் 2002-ஞானம்). கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை வெளியீட்டாளர், மொழிபெயர்ப்பாளர், கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச் சபையின் முன்னாள் உறுப்பினர், எழுத்தாளர் சங்கங்களை உருவாக்கியவர், சிறுகதை எழுத்தாளர் என்ற பல சிறப்புக்களைக் கொண்டவர் திரு கே.கணேஷ் அவர்கள்.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம். அவருடன் பேசினோம், பழகினோம், உடனிருந்தோம், உலாப்போனோம் என்று சொல்லிக்கொள்வதில் எங்களுக்கும் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது.
57

Page 30
மலையகத்தின் ஆக்க இலக்கிய முன்னோடி கோ.நடேசையர். அவருக்குப் பின்னால் வந்தவர் களில் இரண்டுபேர் சிலாகித்துப் பேசப்பட்டார்கள். ஒருவர் சி.வி.வேலுப்பிள்ளை, மற்றவர் கே.கணேஷ். இலங்கையிலும் இந்தியாவிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுபவர் கே.கணேஷ். ** ** 義義 **ぐ。
இன்று நம்மத்தியில் வாழ்பவர் கே.கணேஷ். A: , ༣་ 2ޓ அதுவும் கண்டிக்கு அருகில் தலாத்து ஒய என்ற நகரின் அருகில் வாழ்கிறார். இவரை நான் முதன் முதலில் சந்தித்ததைத் திரும்பிப்பார்க்கிறேன். எழுபதுகளில் என நினைக்கிறேன். கொழும்பிலுள்ள “ரெயின்போ' அச்சகத்திற்கு எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அங்கே வந்திருந்த ஒருவரை எஸ்.பொ. எனக்கு அறிமுகப்டுத்தி வைத்தார். அவர்தான் கே.கணேஷ். அங்கே இவரின் மொழிபெயர்ப்பான “ஹோசிமின் சிறைக்குறிப்புகள்’ என்ற படைப்பு அச்சாகிக் கொண்டிருந்தது. அன்று முதல் இன்று வரை அவருடனான தொடர்பு தொடர்கிறது. எனது வாழ்க்கையில் நான் பெரிதும் பாக்கியம் செய்தவன். மலையக இலக்கிய முன்னோடிகளான, இலக்கிய 'ஜீனியஸ்களான சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ் அகியவர்களுடன் நெருக்கமாகப் பழகியுள்ளேன்.
தமிழ் இலக்கியத்தில் சிறப்பாகப் பேசப்படும் சஞ்சிகையான ‘மணிக்கொடியில் இரண்டு சிறுகதைகளை கே.கணேஷ் எழுதியுள்ளார்.
தமிழ் சிறுகதை மன்னன் எனப் போற்றப்படும் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், வல்லிக்கண்ணன், போன்றவர்களுடன் பழகியவர் கே.கணேஷ்.
தமிழ் எழுத்தாளர்கள் மாத்திரமன்றி இந்திய இலக்கிய மேதைகளான கே.ஏ.அப்பாஸ், முல்க்ராஜ் ஆனந்த் பிரேம்சந்த் போன்றவர்களுடனும் நெருக்கமாக பழகியுள்ளார் நமது படைப்பாளியான கே.கணேஷ்.
கே.கணேஷ் தமது நண்பரான கே.ராமநாதனுடன் இணைந்து 'பாரதி என்ற முற்போக்கு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டுள்ளார்.
வீரகேசரி நாளிதளிலும் சுதந்திரன் வார இதழிலும் கே.கணேஷ் பணியாற்றியுள்ளார். இவருடன் எழுத்தாளர்களான அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தம், பிரேம்ஜி ஞானசுந்தரம் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். அமைதியாக ஆரவாரமில்லாது தனது இலக்கியப் பணியை மூதறிஞரான கே.கணேஷ் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
இதுவரை இவரின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் 20க்கு மேல் நூலுருவில்
S8
 
 
 
 

வெளிவந்துள்ளன.
எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் கே.கணேஷ்.
இலக்கியச் செம்மல்(1991), கலாபூஷணம் (1995) என்ற இலக்கிய விருதுகளை அரசு வழங்கிக் கெளரவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்டியில் நடைபெற்ற மத்திய மாகாண சபையின் தமிழ் இலக்கிய விழாவில் இவர் கெளரவிக்கப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் செளமியம், அகிலம் ஆகிய சஞ்சிகைகளில் இவர் எழுதிய முப்பதுகளில் கண்டி, கண்டி வளர்த்த தமிழ் ஆகிய தொடர்கட்டுரைகளை நிறைவு செய்து ஒரு நூலாகத் தருவாரானால் இதுவரை பலருக்குத் தெரியாத தகவல்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
அதுமாத்திரமல்ல, தினசரி தொலைபேசி மூலம் இவருடன் தொடர்பு கொண்டு இவரது சுய வரலாற்றை எழுதும்படி வற்புறுத்தி வருகிறேன். அந்தப் பணியினையும் இப்பொழுது ஆரம்பித்துவிட்டார்.
மலையகத்தின் மூத்த எழுத்தாளர், ஈழத்து இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். இவர் காலத்தில் வாழ்ந்தோம், அவருடன் இலக்கியம் பேசினோம், இன்முகத்துடன் உரையாடினோம் என்ற பசுமையான நினைவுகளை நெஞ்சின் நினைவுகளாகப் பதித்து வைத்திருப்போம்.
-------------------------------------------------- سس
|L ஆண் டுகள் s புளியாணமும்
G பன்னிரண்டு ஆனபோதும் புளகாங்கிதம் தருகிறது. c
மீண்டெழும் துணிவு நினைக்குந்தோறும்! 额鲁门 含 பிறக்கவில்லை ஆயினும், 8, ミ
இன்னும்! செல்ல மனமில்லை! སྤྱི་
றற ஏச6 புதைத்து விளையாடிய 幽器1 கொளுத்தும் வெயில் குடியிருப்புப் 鳍墨 குலவும ஒன்றல் U66fc56,of 图 镜 கூதற் ப முற்றத்துக் V9. | R இவையெல்லாம் o್ಲೆ རྒྱུ་ S கோடி காட்டுகின்றன! இரு கரம் நீட்டி Տ| நெஞ்சத்திரையில் அழைக்கின்றது! S. G நிழலாடுகின்றன. ஆயினும் 響醫 /*G நெஞ்சத் திரையில் மட்டுமே! செல்ல மனமில்லை! È, ğel
தின்ற மீன்களும் சோம்பலா? Վ5 திகட்டாத கருவாடும் சொகுசா? \9 Gề தீஞ்சுவைக் கிழங்கும் அல்லது தித்திக்கும் பதனிரும் திமிரா?
ié (36(100b 9 கலைவாதி கலீல் ------------222725 -- لم

Page 31
ருபத்தேழாம் இரவு
திக்குவல்லை கமால்
நாளை இருபத்தேழாம் நோன்பு. இந்த இரவை ஹயாத்தாக்க ஏராள மான ஏற்பாடுகள். லைலத்துல் கத்ர் நேரம் குறித்து வந்திறங்கப்போவது போன்ற பரபரப்பு.
"ரீப்ப பட்டிக்கி ஆணியடிச்சி வயர இறுக்குங்கொ” - கீழே நின்று மோதீனப்பா நெறிப்படுத்தினார்.
“ஆ சரிசரி” மேலே ஏறிநின்ற இரண் டு பொடியன்களும் மிகக் கவனமாக பச்சை. நீலம். மஞ்சள். பல்ப்புகள் கொண் ட வயர் தொடரணியை பொருத்திக்கொண்டிருந்தனர்.
பள்ளிவாசலில் அன்றுதான் எல்லா பல்ப்புகளும் ஒளிர்ந்தன. அதற்கு மேலதிகமாக வர்ண பல்ப்பு களும்.
"ஸ"விச்ச போடவா?” - பரீட்சித் துப் பார்ப்பதற்காக மோதீனப்பா (335'LITs.
“சரி போடுங்கொ.” நிறக்குமிழ்கள் ஒளிர்ந்து அலாதி யான அழகை அள்ளிச் சொரிந்தன. இறங்கிய இரண்டு இளைஞர் களும் தள்ளிநின்று பார்த்துப் பரவச மடைந்தனர்.
“இப்ப ஜாதியா ஈக்கிடா” பாதையோரம் கூடிநின்ற பலரும் பாராட்டுப் பத்திரம் வழங்கினர்.
ஏழு வானங்களுக்கு அப்பால் நின்று பார்த்தாலும் இதுதான் பள்ளி
60
வாசலென்று சொல்லிவிடக்கூடிய அளவுக்குப் பிரகாசம்.
“லைலத்துல் கத்ர் இரவு எப்படிப் பட்ட இரவென்றால் அது மகத்துவ மான இரவாகும்”
தராவிஹற் தொழுகையை அடுத்து முதலாவது பயான் ஆரம்பமாகியது. வீடு வாசல் களிலுள் ள பெண்களுக்கும் கேட்கக்கூடியதாக ஸ் பீக் கர் ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது.
வரிசை வரிசையாக நின்று தொழுதவர்கள் முன்பின்னாகி. ஸப்பு கலைந்து வசதியாக அமர்ந்து கொண் டனர்.
மத்ரஸாக்களில் ஹ."ப்ளு, கிதாப் என்று ஒதுகின்ற குட்டி மெளலவிக ளெல்லாம் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடாத்த வந்து சேர்ந்திருந்தார்கள்.
ஒன்பது மணிமுதல் அதிகாலை நான் குமணி வரையில் நிகழ்ச்சி பட்டியல் படுத்தப்பட்டிருந்தது. இடை யில் இருதடவை தேநீர் உபசாரம். நான்கு மணிக்கு ஸஹர் சாப்பாடு. ஐந்தே காலுக்கு ஸ"பஹற் தொழுகை. எதிர்பார்த்ததுபோல் ஒஹோ வென்று சனம். பள்ளிவாசல் நிரம்பும் அளவுக்கு தெளபா செய்து மீட்சி பெற வும் பலமடங்காக நன்மை கொள்ளை யடிக்கவும் யாருக்குத்தான் விருப்ப மில்லை.
“இத்தகைய மகத்தான இரவில் விழித்திருந்து நின்று வணங்குவது எத்தகைய நன்மையைத் தருமென் றால்." - பயான் மும்முரமாகத் தொடர்ந்தது.
"அந்த எறச்சிச் சட்டிய பாரு" - பிரதம சமையற்காரர் தன் உதவி யாளரை வேணர் டினார் . காலை
 

முதலே அவர்களுக்கு வேலை ஒய்ந்த பாடில்லை.
சோறு இறக்கிப் பரவப்பட்டிருந் தது. மற்றும் கற்களெல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இறைச்சியை இறக்கினால் சரி.
கையுதவி காலுதவியென்று ஒரு பட்டாளமே காத்திருந்தது.
"மூனுமணிக்குப் போடோம்" ரெளல் டிமார் தங்களுக்குள் தீர்மானித்தனர்.
இருநூற்றைம்பது ஸஹனென் றால் சும் மாவா? இலேசுப் பட்ட வேலையா என்ன?
ஸவனி களில் சோற் றுக் கு மேலால் கறிகளைப் பரவி, இறைச்சிக் குழம்பை மாத்திரம் பிரத்தியேகமாக கோப்பையில் இட்டு நடுவில் அழுத்தி வைப்பதென்ற முடிவு ஆறுதலாகவிருந் g5Sl.
அன்றைய விருந்துச் செலவைப் பங்கு போட்டுக் கொண்டவர்கள், அவ்வப்போது வந்து பார்ப்பதும் போவதுமாக இருந்தனர். முதல் நோன்புக்கு முன்பிருந்தே நோட்டீஸ் போர்டில் அவர்களது பெயர்ப்பட்டியல் தொங்கியபடிதான்.
கஞ்சி, நார்ஷா லிஸ்டில் முப்பது பேரின் பெயர்கள் காணப்பட்டதுபோக, இருபத்தேழாம் இரவு விருந்தென்ற வகையில் மூன்றே மூன்று பேரின் நாமம் குறிக்கப்பட்டிருந்தது.
“ரெண்டு மணியாகீட்டு ஸவன் போட்டா நல்லம்"
சாப்பாட்டுப் பிரிவில் எல்லோரும் உஷாரடைந்தனர்.
“கொஞ சம் வெட் டக் கி பெய்த்திட்டு வரோமா?”
“போம்டா’ பள்ளிக்குள் அடை பட்டுக்கிடந்து பொறுமை இழந்து
61
விட்டார்கள் அவர்கள். தூக்கம் வேறு அவர்களை நாடிவந்திருந்தது. விளை யாட்டுச் சிந்தை கொண்ட சிறுசுகள் வெளியே பாய்ந்துவிட்டார்கள்.
"பள்ளிக் கிப் பெய்த் திட்டு அங்கிங்க கூத்தடிக்கொண்டு திரியப் ULT561601"
அனுமதி தரும்போது வாப்பா சொன்னதை நினைத்துப் பார்த்தான் ஒருவன். ஊர் சுற்றத் தயாராகும் நண்பர்களைவிட்டு விலகவும் அவன் விரும்பவில்லை.
"சாப்பாடு நாலுமணிக்கிடா. ஒரு ரவுண் அடிச்சிட்டு வரோம்".
நால்வரும் புறப்பட்டுப் பள்ளி வாசல் சுற்று வட்டாரத்துக்கு அப்பால் வந்துவிட்டார்கள். வீடுகள் அடைத்துக் கிடந்தன. உள்ளே வானொலி முஸ்லிம் பிரிவு பெரிய சேவை செய்து கொண்டிருந்தது.
தொடர்ந்து நடக்கும்போதுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. அவர்களைப்போன்று கூட்டம் கூட்ட
DT5....
"இந்த மாங்க மரத்தப் பாரேடா", மிகக் குறைந்த உயரம். நடுத் தர மாங்காய்கள் குலைகுலையாய். "சராஸ்” - யார் அடித்ததென்று தெரியவில் லை. தடதட வென்று விழுந்த மாங்காய்களில் ஆளுக்கு ஒன்றிரண்டாய் பொறுக்கிக்கொண்டு ஒட்டமெடுத்தனர்.
“பள்ளத்து ரோட்டாலாதான் இனிப் பள்ளிக்குப் பொகோணும்” . இளைத்திளைத்து ஒருவன் சொன் னான்.
சைத்தான்களுக்கு விலங்கு பூட்டப்பட்டுள்ள காலமல்லவா. பயம் அவர்களை விட்டுப் பறந்து போயிருந் தது. ஊரின் எல்லைக்கே வந்து சேர்ந்திருந்தார்கள்.

Page 32
"அடுத்ததாக தஸ்பீஹற் தொழுகை நடைபெறும்".
ஒலிபெருக்கி அறிவிப்பைத் தொடர்ந்து வாழ்க்கையில் ஒரு தடவையாவது தொழவேணர் டிய அந்தத் தொழுகைக்காக வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களும் அவசர அவசரமாக வுழுச் செய்து கொண்டு வந்தனர்.
ஹஸ்ரத் தொழுகை முறைபற்றி விளக்கமளித்துக்கொண்டிருந்தார்.
பின்வரிசையில் நின்ற வாலிப னொருவன் அடுத்தவனைக் கிண்டிக் கேட்டான்.
“மச்சான் ஸ"ப்ஹான கலிமாவக் கொஞ்சம் சொல்லிக் காட்டு”.
"இப்பதான் மூனுமணிடா” கடைப் படியில் குந்தி கைவாறு போட்டுக் கொண்டிருந்த ஒருவன் அலுத்துக்கொண்டான்.
"ஓடா சாப்பாட்டத்தந்து அனுப் பாம சும் ம வெச் சிக் கொணி டு இழுக்கிய" - இன்னொருவன் அதனை ஆமோதித்துப் பேசினான்.
“எப்பிடியன் பெருநாள் உடுப் பெல்லாம் ரெடியா?"
அவர்களது கவனம் வேறுபக்க மாகத் திரும்பியது.
"ஆயிரத்து நூறுருவட சேட்டேன் இந்தப் பைனம் பைஷன்"
"தாருக்கட்டயன்டா அந்த மாதிரி சல்லிக்கிய"
“சல்லில்லயென்டு எடுக்காமீந்தா எங்களக் கணக்கெடுக்கியா",
“எங்களுக்கு மட்டுமெடுத்து சரி வாரா? பொஞ்சாதி புள்ளகுட்டிக்கும் எடுக்கோனேன்".
"மெய்தான்டா கடனெடுத்துச்சரி அவங்களுக்கும் வாங்கிக் குடுக்
62
கோனும். இல்லாட்டிக் கரச்சல்".
“பொம் புளயஞக்கு உடுப்பு வாங்கியென்டா லேசி வேலயா. கபாயவொன் டு ரெணி டாயிரத்து நானூறுருவ. மத்தமத்த ஜாதியளேம் எடுக்கச் செல்லே நாலையாயிரம் வந்திரும்.ம். புள்ளயஞக்கு."
"இந்தஜாதி பேசிச் சரிவாரல்ல. பொஞ சாதி புள் ளகுட் டிக் கு பெருநாளக் காலும் உடுப்பெடுத்துக் குடுக் கே லாட் டி நீங்கொரு வாப்பவான்டு கேக்கி யொன்டும். அதச் சொட்டீம் கடன் பட்டுச் சரி எடுத்துக்குடு”.
"கடன்பட்டல்லடா களவான்டிச்சரி எடுத்துக்குடு. இல்லாட்டி தப்பக்கெடக் கியல்ல".
நேரத்தைப் பார்த்துப் பார்த்து கைவாறு தடம்மாறித் தடம்மாறிப் போய்க்கொண்டிருந்தது.
“யா அல்லா எங்கள் பாவங் களை மன்னித்தருள்வாயாக".
“ஆமீன்”. தெளபா ஆரம்பித்துவிட்டது. நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமும் அது தான்.
வெளியே எவரும் இருக்க வில்லை. பள்ளிவாசல் நிரம்பி வழிந் தது. வீடுகளில் தூங்கிவிட்டு கண் களைத் துடைத்தபடி வந்துவந்து சேர்ந்து கொண்டிருந்தனர்.
"நாங்கள் அறிந்து செய்த பாவங் கள். அறியாமல் செய்த பாவங்கள் . இரவில் செயப் த பாவங்கள். பகலில் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடு ரஹற்மானே".
பேஷ் இமாமின் குரல் கம்மி. கவலை தோய்ந்து. அழுகை வந்து வெடித்து. ஆங் காங் கே

விம்மல்கள்.
"ஆமீன். ஆ. மீன். ஆ. மீ. ன.” பாவங்களை நினைத்துக் கசிந் துருகி தங்களையே மறந்து கண்ணிர் சொரிந்து.
“ஆமீன்". தள்ளாத வயது சாய்பு காக்கா அந் நாளில் சண்டித்தனத்தோடு
மாடுகள் கடத்திவந்து விற்றுக் காசாக் கியதை நினைத்து ஏங்கியழுதார்.
மம்ம காசீம் நானா காணிப் பிரச் சினையினி போது சொந்த மச்சானையே அடித்து முடமாக்கியதை எண்ணி வெதும்பினார்.
அய்சா பீபியோடு மூன்றுவருடம் தொடர்பாகவிருந்து கைவிட்டபோது, அவள் கல்யாணம் செய்யாமலேயே இருந்து மெளத்தாகிப்போனதையிட்டு மனம் கலங்கிப்போனான் தஸ்லீம்.
“யா அல்லா. நீ அருளாளன் அன்புடையோன். நாங்கள் பலஹின மான மனிதர்கள். யாஅல்லா எங் களை மன்னித்துவிடு யாஅல்லா”.
“ஆமீன்”. ஹஸ் ரத் மீண்டும் பழைய நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தார்.
மனப்பாரம் குறைந்து புதுமனிதர் களாய் மாறியவர்களாக எல்லோரும் துஆவைப் பூர்த்திசெய்து ஏந்திய கைகளை முகத்திலும் நெஞ்சிலும் தடவிக்கொண்டனர்.
“ஆறாறு பேரா இfங்கொ". மிகமிகச் சுறுசுறுப்பான கட்டம். ஸஹனி களும் தணி னிர் க் கோப் பைகளும் வரிசையாகப் பரிமாறப்பட்டன.
சாப்பாட்டு வாசம் பசியை மேலும் விசுவரூபமெடுக்கச் செய்திருந்தது போலும். எப்போது "பிஸ்மில்லா”
63
சொல் வார்களென்று எதிர்பார்த்து தயார் நிலையில் அனைவரும் தவங் கிடந்தனர்.
விநியோகப் பிரிவிலிருந்து ஓர்டர் வரும்வரை மைக்கை கையில் பிடித்த படி ஹஸ்ரத் காத்திருந்தார்.
ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இருநூற்றி நாற்பதுக்கு மேற்பட்ட ஸஹன்கள் விநியோகப் பட்டு விட்டன. நோன்பு காலத்தில் மிஞ்சிப் போனால் வீணாகிவிடுமே என்ற கவலை கலைந்து போனது.
"பிஸ்மில்லா”. சாப்பாடு ஆரம்பித்துவிட்டது. நாலேகாலாகும்போது சாப்பாட்டு விடயம் முடிவடைந்தது. இனி யார் சொல்லித்தான் கேட்கப்போகிறார்கள். ஸ"பஹ"க்கு பாங்கு சொல் ல இன்னும் முப்பதே நிமிடம்.
எல்லோரும் பள்ளிவாசலைவிட்டு வெளியேறியதும் வேகவேகமாக துப் புரவு செய்யும்பணி ஆரம்பித்தது.
வெளியே பழம், பீடி, சிகரட், பிளேன்ரீ கடைகளுக்கு பிஸியான 6òu JTLITUtö.
இருபத்தேழாம் இரவின் இறுதிக் கட்டம் எல்லோருக்கும்.
"அல்லாஹ" அக்பர்." அதிகாலைத் தொழுகைக்கான அழைப்பு. வழமைபோல் சுன்னத்துத் தொழுகையைத் தொடர்ந்து ஐந்தே நிமிடத்தில் தொழுகை ஆரம்பித்து விடும்.
இகாமத்து சொல்லியாகிவிட்டது. தொழுவிக்க வந்த பேஷ் இமாம் ஏமாற்றத்தோடு திரும்பித் திரும்பிப் பாாததாா.
இரண்டே இரண்டு ஸ்.ட்ப்புகள். ‘நெரஞ்சி வடிஞ் ச பள்ளி இவளது சீக்கரம் வெள்ளம் வடிஞ்ச

Page 33
LDT.gif".
"அல்லாஹ" அக்பர்”. தொழுகை ஆரம்பித்துவிட்டது. இரவிரவாக விழித் திருந்து இபாதத்து செய்தவர்கள், ஸ"பஹ"க்கு
பாங்கு சொல்லும்வரை கொஞ்சம் சாய்ந்திருப்பார்கள். தற்செயலாக தூக்கம் போயிருக்கும். என்னதான்
r
செய்வது?.
 

8a staf38s i මු இறுதிEதி
“ஞானம்' சஞ்சிகையின் அனைத்து ஆக்கங்களும் காத்திரமானவை. இப்போது ஒரு தாகம், பற்றாக்குறை உள்ளது. “ஞானம் இதழை நாம் ஒரே மூச்சில் படித்துவிட்டு அடுத்த ஞானம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. உண்மையில் எனது அலுவலக ஊழியர்கள் எனது கேள்விக்கு அடிக்கடி ஆளாகுவார்கள். "புத்தகம் ஒன்று தபாலில் வரவேண்டும், இதுவரை வரவில்லையே, இன்று வந்ததா?” என்று நான் அவர்களை நச்சரிப்பதுண்டு. “ஞானம்' இதழ் 29இல் ‘எழுதத்துாண்டும் எண்ணங்கள் பத்தியில் கலாநிதி துரைமனோகரன் அவர்கள் இலங்கை வானொலி பற்றி எழுதிய குறிப்புகள் தொடர்பாக எனது கருத்துகள் சிலவற்றைத் தர விரும்புகிறேன். பவள விழாக் கண்ட இலங்கை வானொலியின் வளர்ச்சியில் (இன்று இறங்குதிசை) தமிழ்ச் சேவைக்கு என ஒரு பணிப்பாளர் இன்று இல்லாத நிலை உள்ளது. அந்த வெற்றிடத்தில் சிங்களவர் ஒருவர் அந்தப் பதவிக்குரிய கடமைகளைச் செய்யும் அளவிற்கு ஒரு அரச ஊடக இயந்திரம் தள்ளப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினை, சமாதானத் தீர்வு, அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்படும் நாளில் மேற்கூறிய விடயம் பேசாப் பொருளாக உள்ளது.
கடந்த இரண்டு வருட காலமாக ‘கவிதைக்கலசம்" என்ற இலங்கை வானொலி தேசிய சேவையின் கவிதை நிகழ்ச்சி ஒன்றை ஒருவர் ஹிட்லர்த்தனமாக நடத்தி வருகின்றார். "நிகழ்ச்சியில் உங்கள் கவிதைகளும் இடம்பெற வேண்டுமானால் பிழையின்றித் தெளிவாக எழுதி." அனுப்பும்படி கேட்கின்றார். ஆனால் இளந்தேவன் (இந்தியக் கலைஞர்) மேமன்கவி, சி.பற்குணம், ம.சண்முகநாதன், தாஸிம் அகமது போன்ற கவிஞர்கள் ஒரு சிலரது கவிதைகள் மட்டும் மாற்றி மாற்றி மீள் ஒலிபரப்பாகவும், மறுபடியும் வாசித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் மறைந்த கவிஞர் சி.பற்குணம் அவர்களைத் தவிர ஏனையவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கேட்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை. ஆனால் புதிய கவிஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது கவிதைக்கலசத்தின் ஊடக நோக்கம். மிக விநோதமான விடயமுமசுவட.
இது ஒரு கர்ண கொடுரமான ஊடக அத்துமீறல். இது சம்மந்தப்பட்ட நிகழ்ச்சித்தொகுப்பாளர், தயாரிப்பாளர், பணிப்பாளர்களுக்கு பலமுறை நேரடியாகத் தெரிவித்தும் பயன் கிட்டவில்லை. ஆனால் நிகழ்ச்சிப்போக்கில் எதுவித மாற்றமுமின்றி - முன்மொழியும் நயவுரையில் ஏடாகூடமான நய (வஞ்சக) உரை தரப்படுகின்றது.
இவர்கள் குறைந்த பட்சம் இதர தனியார் வானொலிகளின் கவிதை சார்ந்த நிகழ்ச்சிகளை அல்லது, இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் 65

Page 34
‘கவிதைக் களம்' நிகழ்ச்சியைக் கேட்கவேண்டும்.
செவிவழி ஊடகம் பற்றிய எவ்வித அடிப்படையும் இல்லாது இப்படி நடந்துகொள்ளும் ஒரு சிலராலேயே இன்று இலங்கை வானொலி - தேசிய சேவை அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
பொருத்தமான தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் நியமிக்கப்பட ஞானம் சஞ்சிகையாவது உதவி செய்யவேண்டும். - மாவை. வரோதயன்."
ஞானம் வெளியான பின்னர், நான் எழுதும் முதற்கடிதம் இது. கடிதம் எழுதாவிட்டாலும் ஞானம் இதழ் பற்றிப் பல தடவைகள் நவமணியிலும், தினகரனிலும் எழுதியிருக்கிறேன். சிற்றிலக்கிய ஏடுகளின் சீரான பங்களிப்பைப் பற்றித் தினகரன் மகரந்தத்தில் எழுதியபோது ஞானம் பற்றி விசேடமாகக் குறிப்பிட்டிருந்தேன்.
நவமணி வார ஏட்டில் நான் நடத்திவரும் பகுதியாகிய ‘மணியாரத்தில் ஞானம் பற்றிப் பலதடவைகள் விதந்துரைத்திருக்கிறேன். தாங்களும் அறிந் திருக்கலாம்.
தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு சில சிற்றேடுகளில் ஞானம் முதன்மை பெறத்தக்கது என்பது எனது கருத்து. ஆயினும் ஞானத்தின் தளக் கோலம் (Lay-out) மாற்றப்படவேண்டியது. இன்னும் மெருகூட்டப்பட வேண்டியது. - கலைவாதி கலில், (உப பீடாதிபதி), தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி.
ஞானம் (1-24) தொகுப்பில் 10 பிரதிகளை எமக்கு அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். உடன் கொடுப்பனவுக்கான காசோலை அனுப்பி வைப்போம். ஈழகேசரிச் சிறுகதைத் தொகுதி, மல்லிகைச் சிறுகதைத் தொகுதி, சுதந்திரன் சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து ஞானம் தொகுப்பு வரவேண்டிய தேவையிருந்தது. அதுவும் வந்துவிட்டது; மகிழ்ச்சியைத் தருகிறது. த.சிதம்பரப்பிள்ளை, தலைவர், கட்டைவேலி - நெல்லியடி ப.நோ.சங்கம்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்குத் தங்கள் ஞானத்தின் இருவருட சிறுகதைகளை எடுத் திருப்பதாக அறிந்து,"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்” நிலையில் இருக்கும் தங்களின் பெரு முயற்சியைப் பாராட்டுகிறேன். சிறியவனின் வாழ்த்துக்கள். "கிளாக்கர்ப் புத்தியில் இருந்து வளரும் விவாதமேடை ஞானத்தின் ஆரோக்கியமான முயற்சி. அது முடிவுற இன்னொரு கோட்பாட்டு ரீதியான சர்ச்சையைக் கிளப்பிவிடலாமே. - வதிரி. இ.இராஜேஸ்கண்ணன்.
ஞானத்தின் 30வது இதழ்மட்டுமல்ல, தொடர்ந்து நீங்கள் அனுப்பிவரும் 30 இதழ்களையும் ஒருங்காகப் படித்து வருகிறோம். படிப்படியாக அது ஆரோக்கியமாக வளர்ந்துவருவதைக்கண்டு மகிழ்சிசியடைகிறோம் இலக்கிய வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு - பிரதிபலனையோ/ விளம்பரங் களையோகூட எதிர்பார்க்காமல், உறுதியாக ஞானத்தை நடத்திவருவதற்காக எமது பாராட்டுகள். - நா. சோமகாந்தன்.
66

6 R 9 தேன் தமிழ் வீதி,
கவிமடல் தெய்வ நகர். என் இனிய நண்பனுக்கு, 27-11-2002 அன்புமிகு நல்வணக்கம். இங்கு நாம் நல்லசுகம். எப்படியோ நீங்கள் அங்கு? பாதை திறந்தாச்சு. பயணம் சுகமாச்சு. இடம்பெயர்ந்து போனபின்பு இருப்பிடங்கள் நிலைத்திருக்கோ? சென்றகிழமை நான் வன்னிக்குச் சென்றுவந்தேன். என்னிதயம் விம்மியது. கட்டிடங்கள் எல்லாம் கண்டபடி நொருங்கி மொட்டையடித்ததுபோல் முகடுமட்டும் கிடக்கிறது. தந்திரத்தால் இந்திரனும் சாபமது பெற்றதுபோல் துப்பாக்கிக் குண்டால் துளைத்தெடுத்த சுவர்கள், பாவமென்ன செய்தனவோ? சாபமில்லை. அவை எமக்குச் சான்றுகள். கட்டிடங்கள் மட்டுமல்ல நெட்டைநெடும் பனைமரங்கள் வட்டுகளே இல்லாமல் பட்டுப்போய் நிற்கிறது. ஊட்டி வளர்த்தெடுத்த உயிர்க்கூடு என்ன நிலை? கூட்டி அள்ளிப்போட்டுக் கொளுத்திடவும் கூடியதோ? என்ன அவலம்! சொல்லமுடியாத பேரவலம். அவலமே வாழ்வாகி அழிந்தனவோ எம் உறவு? எண்ணி மனங்குமுறி ஏங்கித் தவித்தேன். சிந்தையிலே தெளிவுவந்து சிந்தித்தேன். பாஷை புரியாதோர் இங்கு எம்மைப் பயங்கர வாதியென்றார். மொழிபேசும் இனமான தமிழ்ச்சாதி நாமோ பலநூறு பிளவோடு பகைமோத வாழுகிறோம். சாதியால் பிரிந்து, சமயத்தால் வேறுபட்டு முட்டியதும் மோதியதும் போதவில்லை. இடப்பெயர்வு வந்தபின்பு இடத்தாலும் பிரித்து வைத்து இனங்காணப் பழகிவிட்டோம். மொழியொன்று, இனமொன்று, வழிவழியாய் பயின்றுவரும் வாழ்க்கைமுறை ஒன்று. ஒன்றாகி வாழ்வதற்கு மனம் ஒன்றும் நிலையில்லை. கடந்த கிழமை கண்ணன் இங்கு வந்தான். இடமாற்றம் பெற்றுவிட்டேன். இங்கிருந்து போய்விடுவேன். கண்கலங்கிச் சொன்னவனை என்னடா பகிடி என்றேன். இல்லையிது உண்மையென்றான். பதவி உயர்வுக்குத் தகுதி தனக்கிருந்தும் தலைமை அதிகாரி தரவிருப்புக் கொள்ளவில்லை. காரணம் என்னவோ கனக்கத்தான் சொன்னான். முட்டாள் குணங்களை மூட்டைகட்டும் நாளேது? சற்றேனும் நாம் இதனைச் சிந்தித்தால் ஆகாதோ? மெழுகுவர்த்திகூட மெல்லத்தான் உருகும். ஒளிகொடுத்து, ஒளிகொடுத்து உருகியது மறைந்துவிடும். எம் உறவுகளோ உடல் சிதறி உயிர்கொடுத்து உரமாக மாறுகின்ற மனித வரலாறு; உலகில் எங்கும் கண்டதில்லை. அந்தப் பெருமைக்கு அகிலமெல்லாம் தலைவணங்கும். எந்தவகையில் நாம் இதற்கு உரித்தாவோம்? சிந்தித்தால் சிரிப்புவரும். சிலவேளை அழுகைவரும். கொத்துமலர் எடுத்துக் கும்பிடுவோம். மனவீட்டில் குடியிருக்கும் மாயப்பிசாசு இனியேனும் ஏகட்டும். என்குறைகள் சொல்லிவிட்டேன். உன்னிலைதான் எப்படியோ? மனதில் உள்ள பாரத்தை மறைக்காமல் எழுதிவிடு. நடந்தவற்றை மறந்துவிட்டு நல்லவற்றைச் சிந்திப்போம். இல்லையேல் கையிலே கிடைப்பதுவும் சிந்திப் போம். ஆதலினால் நன்றே செயற்படுவோம். பதில் எழுது பார்த்திருப்பேன்.
அன்புடனே,
அரவிந்.

Page 35
இரத்த அழுத்தம் உச்சம் தொடுகிறது. கோபம் கொப்பளிக்க இயலாமை வெறுப்பேற்ற இதயம் படபடத்து இறுக்கம் முறுக்கேறுகிறது. வெண்ணெய் திரள்கையில் தாளியை உடைத்தால் வேறென்ன நிகழும்?
இருபதாண்டுகள் புத்தத்தின் ரத்தத்தில் தோய்ந்திருக்கும் நாங்கள் துவண்டெழுகையில் சம்மட்டியால் அடிக்க சங்கற்பம் கொண்டுள்ளார் தமிழக முதல்வரெனும் சகுனி பிரபாகரனைப் பிடிக்க இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டுமாம். கோழைகளே. வீரப்பனிடம் வாலாட்ட இயலாத விகடன்கள் நீங்களா வீரம் பேசுவது? சந்தனக் காட்டுக்கே நடுங்கும் நீங்களா முல்லைத் தீவுக்குள் நுழைய முனைவது? அமைதிப் பேச்சுக்கு
ஆதரவு வேண்டாம் - நீங்கள்
அமைதியாய் இருந்தால் அதுவே போதும் எங்கள் வானத்தில் வெண்புறாக்கள் பறக்க விழைகின்ற வேளையில் சிறகுகளைச் சிதைக்க சித்தம் கொள்கிறீர்கள்
fick in Frin T5 Tel :
"S
翡

போரின் கொடூரம் புரையோடிய மண்ணில் சாந்தி நிகழும் சமிக்ஞைகள் தெரிகையில் தமிழனுக்கெதிராப் சட்டசபையில் தீர்மானம்
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது வரலாற்றுக் காலத்தில் இரத்தத்தால் எழுதப்படும் ஈழ வரலாற்றில் சமாதானத் தீபங்கள் ஒளிர்கின்ற போது எதிர்ச் சூறாவளியாய் தமிழகம்
இங்கே பெரும்பான்மை - சிறுபான்மை பிளவுண்டு நிற்பது வெளிப்படை
அங்கே சுயமரியாதைக்காக தோன்றிய இயக்கங்கள் சுயத்தை இழந்து நாயக வழிபாட்டில் நலிந்து கிடப்பதே பரிதாபம்
சினிமா - கவர்ச்சி சாதி வெறிகளுக்கு பலியாகிப் போன தமிழக தலைமுறையே
ாாப்களின் விடுதலைக்கு ஆதர,ே ஈயுமுன் எப்போது உணரப்போகிறாய் நீ - அங்கு அடிமையாப் வாழும் அவலத்தை?
(பெனி யே.ச)
T. H. . . H.