கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.01

Page 1


Page 2
அமைதிக்கான காலம்
மூச்சிழந்து கிடக்கிறது வானம். முறுவலற்றுப் பேச்சிழந்து எங்கேபோய்க் குந்திற்றுப் பூங்காற்று? மெளனம் ஒரு இராணுவத்தின் டாங்கிபோல் அசைந்தசைந்து என்தெருவிற் செல்கிறது. மரணவெடில் மணக்கிறது. குயில்கள், புறாக்களது மெல்லிய இறகுகள் நூலறுந்த பட்டமென அலைகிறது பரவெளியில் புவ்வினிலும், புழுவினிலும் ஆங்காங்கு பொசுங்கல்கள் எரிந்த கடைகளத்தின் வீடுகளின், கோப்புசமும் புகை(க்கிறதோ? தீயணைப்பு எந்திரத்தாற் பாய்ந்தகங்கை நீரில்ட கருதியோரின் சாம்பவோடிப் போகிறது! முக்தி அவர்களுக்கு மோட்சம் எரித்தவர்க்கு இன்னும் எங்கேனும் தனல்நூராதிருந்திடலாம். இன்னும் எவரேனும் குற்றுயிராப்க் கிடந்திடலாம். பார்த்துத்தான் கால்வைத்தேனி. கேட்டதொரு அசரீரி, "நிம்மதியாப் வாழுவதோ நீங்கள்" என்றததன் கேவி மூச்சிழந்து கிடக்கிறது வானம்; முறுவவற்றுப் பேச்சிழந்து எங்கேபோய்க் குத்திற்றுப் பூங்காற்று
G தஜெஜ்ன் - ந்ல்லூர் )

பகிர்தலின் மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்.
ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்: நா. ஆனந்தன்
கனணி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. தொ.பே. -08-478570(0fice)
O8-23.4755 (Res) Fax - 08-234.755
E-Mail
gnanam_magazineடுy ahoo.com
உள்ளே.
சிறுகதை அலைகடல் தாண்டி பாடியா செங்கை ஆழியான் காவிக்குள் கிரீடம் படி: கனகசபை தேவகடாட்சம் கட்டுரைகள் தமிழ்ப் பாரம்பரியத்திற் கல்வி.
FLIT. Agugrafi எழுதத் தாண்டும் எண்ணங்கள் .டி. I. A துரை. மனோகரன்
எனது எழுத்தலகம் LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLL LLLLLL I TV வாகரைவாணன் ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் -1-426 செங்கை ஆழியான் இரு இலக்கியப் பெரியவாகள் சா.
என்.சோமகாந்தன்
கவிதைகள்
அமைதிக்கான காலம் பாடி ?ெ த.ஜெயசீலன் தோழமைப் பொங்கல் சாரா நல்லை அமிழ்தன் வாழ்க்கையின் மர்மம்படி தேசங்கீதா
மரணங்கள் மலிந்த பூமி LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLL செவிவதனி வாழ்வதா? வீழ்வதா?ப கவிஞர் ஏ.இக்பால் greb affDïrorerib... 8 திரும்பிப் பார்க்கிறேன். தஞ்சைக் கடிதம் காமா 事直 நெற்றிக்கண்.ா 粤芷 GIragraf பேகமிறார் HHHHHH ... d4 புதிய நூலகம் sssssssssssss: 50
அட்டைப்படம் : என். வைஜயந்தி
3.

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
அன்புள்ள கலை இலக்சிய நெஞ்சங்களே,
வணக்கம்! ஞானம் தனது வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், நலன் விரும்பிகளுக்கும் உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மலர்ந்துள்ள புத்தாண்டில் கலை இலக்கியம் இம்மண்ணில் மேலும் சிறப்புற நாம் உழைப்போமாக.
“தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக வுழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடும் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப்போல” - அல்லாது கலை இலக்கியம் மூலம் மாநிலம் பயனுற, மானுடம் சிறப்புற நாம் உழைப்போமாக.
இப்புதிய ஆண்டில் “ஞானம்" சஞ்சிகையை மேலும் மேம்படுத்தப் புதிய பல அம்சங்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். புதிய தலைமுறை யினரை ஊக்குவித்து வளர்த்தெடுத்தல், சோம்பிக்கிடக்கும் முதிர்ந்த எழுத் தாளர்களைச் செயற்பட வைத்து அவர்களது ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து அநுபவங்களைப் பகிர்ந்து ஆவணப்படுத்துதல், புதிய இலக்கிய சிந்தனைகளை வளர்த்தெடுத்தல் போன்ற பல திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளோம்.
சிற்றேடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் இலக்கிய உலகம் அறிந்ததே. ஆனால் நாம் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்வோம். மேலே குறிப்பிட்ட பாரதி கூறிய கவிதையின், “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்ற இறுதி அடியை மனத்திலிருத்தி, புதிய ஆண்டில் புத்துணர்ச்சியுடன் செயலூக்கம் பெறுவோம்.
எமது கைகளைப் பலப்படுத்துங்கள். ஈழத்துக் கலையிலக்கியப் பாரம்பரியத்தைப் பேணி வளமுடன் வளர்ப்போமாக. - ஆசிரியர். 4
 
 
 
 
 
 

-9/606224bu1625
ിഞ്ഞുങ്ക
ܓ
காற்று கடலைக் குடைந்து அலையெற்றிக் குமுறியது. கிழக்கில் வானம் வெழுத்துக் கொண்டிருப்பதைக் கடல் மடியில் மிதந்து கொண்டிருக் கும் மைக் கலால் உணரமுடிய வில்லை. அவன் இலக்கு தூரத்தில் விரிந்து கருங்கோடாகத் தெரியும் தலைமன்னார்க் கரையில் பதிந்து கிடக்கிறது. தன்னுடன் கூடவே கடலில் இறங்கிய ஜோசெப் என்ன வானான்? பசிக்களை, தாகம் இவற்று டன் உடல் அசதி, அவன் முயற்சியை இடைநடுவில் பறித்துவிட வாய்ப்புண்டு. அவன் நீந்தியபடி மிதப்பது சமுத்திரம். பாக்கு ஜலசந்தி. அலை கள் அவனை அலைமுடிக் கு உயர்த்தி பள்ளத்தில் சரித்துப் பின் னர் கிளப்பியது. கரங்கள் வலிகண்ட போது அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான். “நான் சாகமாட்டேன். அக்கரையில் நானும் ஜோசெப்பும் அல்லது எவராவது ஒருவர் கரை யேறாவிடில் மணல்திட்டில் உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் இருபது உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். பால் குடியிலிருந்து எண்பது வயதுக் கிழவிவரை அந்த மணல் திட்டில் மூன்று நாட்களாக நீரும் உணவுமின்றித் தவிக்கிறார்கள். கடலலை மைக்கலை தூரத்தில் தெரிந்த கரையை நோக்கி நகர்த்திச் செல்கிறது. அவன் கடலில் திரிபவன். அவனுக்குக் கடல் புதியதன்று. அதன் நெளிவு சுழிவுகளை அவன் நன்கு
ஆழியான்
அறிவான். பிறந்ததிலிருந்து கடற்கரை யில் திரிந்ததும் தந்தையுடன் வள்ளத் தில் மீன்பிடிக்கக் கடலின் ஆழ்பகுதி களுக்குச் சென்றதும் அவனுக்குக் கற்றுத்தந்த பாடங்கள் பல. அவற் றால்தான் துணிச்சலாக அந்த மணல் திட்டியிலிருந்து புறப்பட்டான்.
"ஐயோ ...கடவுளே, எண் ர பிள்ளையளைக் காப்பாற்று., தம்பி எங்களைக் காப்பாற்றுங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி நடுக்கடலில் சாகப்போகின்றோமே. எங்களைக் காப் பாற்றுவார் எவருமில்லையா?”
இந்த வேண்டுகோளை அவர் களில் ஒருத்திமட்டும் கண்ணிருடன் கதறிக் கூறவில்லை. அவனையும் ஜோசெப்பையும் தவிர்த்து இருபது பேரும் யாசித்தார்கள்.
ஜோசெப் தன் இளம் மனைவி யுடனும் சிறு குழந்தையுடனும் வந் திருந்தான். அவன். கலங்காதவன் போல மைக்கலைப் பார்த்தான்.
"நீங்க நில்லுங்க அண்ணை. நான் கடலில இறங்கி நீந்தித் தலை மன்னாருக்குப் போறன். எனக்கு நல்லா நீந்தத் தெரியும். அங்க போய் மீன்பிடி வள்ளங்களை இங்க ஆனுப் பிறன். நேவிக் காரரிட்ட சொல்லியா வது அனுப்பிவைக்கிறன்." என்றான் மைக்கல்.
"நேவிக்காரரிட்டையோ.." என ஒருத்தி அலறினாள். கடந்த கால அனுபவம் அப்படி அவளை அலற வைத்தது. தொன்னூற்றைந்துகளில்

Page 4
இதேகடலிலி அவர்கள் தம்பி இராமேஸ்வரத்திற்கு வள்ளமேறினர். நடுக்கடலில் கடற்படைக் கப்பல் துரத் தியதும் வெடி தீர்த்ததும் இப்பொழு தும் பயமுறுத்துகிறது.
"இப்ப யுத்தமில்லையாம். சமாதானமாம். பயமில்லையாம்." என்றார் ஒருவர்.
"நானும் உம்முடன் வாறன்." "வேண்டாம் அண்ணை. நீங்க குடும்பஸ்தர். நான் தனியாள்."
ஜோசெப் அவன் கூற்றை ஏற்றுக்
கொள்ளவில்லை.
"ரெணர் டு பேரும் நீந்திப் போவம். வேறை வழியில்லை. போற வழியில மீன்பிடி வள்ளங்களைக் கண் டால் மறித்துச் சொல்லி அழைத்து வருவம்."
இருபது உயிர்களும் அவர் களை நம்பிக்கையுடன் பார்த்தனர். ஜோசெப் தன் குழந்தையை எடுத்து முத்தமிட்டான். விழிகளால் மனைவி யிடம் விடைபெற்றுக் கொண்டான். இருவரும் அந்த மணல் திட்டிலிருந்து கடல்நீரில் இறங்கி நீந்தத் தொடங்கிய போது அதிகாலை மம்மல் வியாபித் திருந்தது. வானத்தில் சில நட்சத்திரங் கள் ஒளிமங்கித் தெரிந்தன.
அந்த வள்ளக்காரன் அவர்களை ஏமாற்றிவிட்டான். இராமேஸ்வரத்தின் காட்டுக் கடற்கரையிலிருந்து நள்ளிரவில் அவர்கள் இருபத்திரண்டு பேரையும் இரகசியமாக அழைத்து வந்து தன் வள்ளத்தில் ஏற்றுமுன் ஒவ்வொருவரிடமிருந்தும் தலைக்கு மூவாயிரத்திஐந்நூறு வசூலித்துக் கொண்டான். அக்கரையில் வைத்தே அவர்களைச் சேகரித்துக் கொடுத்த பேசாலை செபமாலை தன் தரகுப் பணத் தைப் பெற்றுக் கொணி டு இருளுள் மறைந்து போனான்.
"செபமாலை அணி ணை. உங்களை நம்பித்தான் முகாமி லிருந்து வந்தம். அதுவும் இரகசியமாக வெளியேறி வந்தம். இவர்கள் சரியாக எங்களைக் கொண்டுபோய்த் தலை மன்னார்க் கரையில் விடுவான்களோ?” என்று மைக்கல் ஐயத்துடன் கேட்ட போது, "சிச்சி. இவங்கள் அப்படி யில்லை தம்பி. தலைமன்னார்க்கரையி லேயே இறக்கி விடுவான்கள். பயப் படாதையும்.” என்று செபமாலை திடம் சொன்னான்.
என்றாலும் மைக்கலின் மனதில் ஐயப்பாடு இருக்கவே செய்தது. வள்ளத்தில் ஏறி இடித்து நெருக்கி அமர்ந்து கொண்டதும் குழந்தைகள் அழத்தொடங்கின. கூதல் காற்று முள்ளாகத் தைக்கின்ற நள்ளிரவு.
"ஒருத்தரும் சத்தம் போடக் கூடாது. காவற்படையிடம் அகப்பட் டால் அவ்வளவுதான். மீண்டும் அகதி முகாமிற்குத்தான் போகவேண்டி வரும் ." என்று வள்ளக் காரன் எச்சரித்தான்.
அவர்கள் அகதிமுகாமில் ஏழு வருடங்கள் வாழ்ந்து முடித்து விட்டார்கள். அது பெரியதொரு நரகம். அவர்களைக் காரணமாகவைத்து உழைப்பவர்கள் அந்த முகாமில் அதிகரித்துவிட்டனர். இலங்கையில் சமாதானம் வந்துவிட்டது. எங்களை அனுப்பிவையுங்கள் என்று கேட்டும் அதனைக் கவனிப்பாரில்லை. அது அவர்களுக்கு நட்டம். ஓராயிரம் சட்டப் பிரச்சினைகளைக் கிளப்பினர். அச் சட்டப் பிரச்சினைகளைத் தீர்த்து உரிய முறையில் நாடு திரும்புவதா யின் ஒவ்வொரு அதிகாரிகள் மட்டத் திலும் சிந்திவிடுவதற்கு நிறையப் பணந்தேவை. தாள் இல்லாமல் அந்த நாட்டில் ஒரு சிறு தாள்கூட நகராது.

外 p リ、 \\ \1ለዩAኮ محمج 勿 ሌላ S. N
ཡོད་། Y 合ぶみf リのら、人腸リ
“எங்க நாடே மேல். குண்டுகள் வெடித்தாலும் அங்க வாழ்ந்திருக் கலாம். பட்டிகள்போல மனிதர்களை அடைத்துவிட்டு கொஞ்சமும் மனிதாப மின்றி ஒவ்வொரு அதிகாரிகளும் அவர்களைச் சுரண்டிப் பிழைக் கிறார்கள். வாயிலும் வயிற்றிலும் அடித்தால் பரவாயில்லை. அந்தக் கொடுமைகளை எப்படிச் சொல்வது? பெண்புரசுகளை மானத்தோட விட் டான்களா. நியாயம் கேட்டால் புலியெனக் கூறிப் பிடித்துக்கொண்டு போய் வேலூர் சிறையில் போட்டு விடுகிறான்கள்.” என்று பொன்னப்பர் பலதடவை அலுத்துக்கொண்டார்.
"அதனாலதான் இப்படி அவங் களுக்குத் தெரியாமல் வள்ளம் ஏறினம். அவன்களுக்குத் தெரியாமல் என்பது பிழை. செபமாலை முகாம் ஆக் களுக்கு ஏதோ கொடுத்துத்தான் சரி பண்ணியிருக்க வேணும். இல்லாட்டில் வெளியில் விட்டிருக்கமாட்டாங்கள்." மைக்கல் சந்தேகப்பட்டது சரி யாகிவிட்டது. அதிகாலை வேளையில் ஒரு கரை தென்பட்டது.
படகோட்டி எஞ்சினை நிறுத்தாது
மெதுவாக வள்ளத்தைக் கரையில். அனைத் தான். வாந்தியெடுத்து வாந்தியெடுத்து அதன் மேலேயே சரிந்து நாறிக் கிடந்த பலரும் ஆவலுடன் எழுந்தார்கள். முகங்களில் தம் தாய்மண்ணில் மிதித்துவிட்ட மகிழ்ச்சி.
மைக்கல் சந்தேகத்துடன் வானத் தையும் திசைகளையும் பார்த்தான்.
“இது தலைமன்னார் கரை யில்ல." -
"சுருக்கா இறங்குங்கோ நேவி வந்திடும்."
நடுக்கடலில் மணல்திட்டியில இறக்கிவிடாதையுங்கோ.” என்றான் மைக்கல்.
"கூப்பிடு தூரத்தில தலை மன்னார் தெரியுது. கடலுக்குள்ளால நடந்தே போகலாம். அல்லது உங்கள் ஆட்களின் போர்ட்டுகள் இப்பக்கம் வரும். கெதியாக இறங்குங்கோ. இந்தவிடத்தில் பிடிபட்டு யாழ்ப்பாணச் சிறையில் எங்கள் மீன்பிடிக்காரர் இருபதுபேர் இருக்கிறார்கள் தெரியுமே?."
அவர்களைப் பிடிவாதமாக அவன் அந்த மணல் பிட்டியில் இறக்கிவிட்டான்.
அவர்கள் காவிவந்த பொருட் களை அவர்கள் இறங்கு முன்னரே கரையில் தூக்கி வீசிவிட்டான்.
அவர் களை இறக் கிவிட்டு உறுமியபடி வள்ளம் திரும்பிச் சென்றது.
நன்றாக விடிந்தபோது அந்த நீண்ட மணல் திட்டின் வடிவம் தெரிந்தது. பற்றைகள் ஆங்காங்கு வளர்ந்து முறுகிக் கிடந்தன. இப்பக்க மிருந்து பார்க்கும்போது அப்பக்கக் கடல் தெரிந்தது. கடல்மட்டம் கூடில் இந்த மணல்திட்டு நீரினுள் மூழ்கிவிடும்

Page 5
அபாயமுள்ளதை மைக்கல் புரிந்து கொண்டான்.
தூரத்தில் மெல்லிய கோடாகத் தலைமன்னார்க் கரை தெரிகிறது.
"ஏழு கடல் மைல் தூரம் இருக் கும்.” என்றான் மைக்கல்
* தலைமன்னாருக்கும் இந்த மணல் திட்டிற்கும் இடையில் இன்ன மும் இரண்டு மணல் திட்டிகள் இருக்கு. பாவி முதல் மணல் திட்டி யில் இறக்கிவிட்டிருக்கலாம்."
வெயில் உச்சிக்கு ஏற ஏறப் பிரச்சினைகள் உருவாகின. காவி வந்த தண்ணிர்ப் போத்தல்கள் வெறுமையாகின. மணல் நிலம் கொதிக்கத் தொடங்கியது. குழந்தை கள் பசியால் அழுகுரல் எழுப்பின. கொதிக்கும் தரையில் இருக்கமுடியா மல் பற்றைகளின் கீழ் படிந்து கிடந்த சொற்ப நிழலுக்குள் அடைக்கலம் தேடிக் கொண்டனர். மைக்கலும் இன்னும் சிலரும் கரையோரத்தில் தரித்து நின்று ஏதாவது மீன்பிடி வள்ளங்கள் தென்படுகின்றனவா எனக் கடலை ஊடுருவிப் பார்த்தனர். ஒரு அசுகையுமில்லாமல் நீலப்பரப்பாக கடல் விரிந்து கிடந்தது. சிறு பறவைகளைக்கூட அந்த மணல்திட்டி யில் காணமுடியவில்லை.
நீர்மட்டம் சற்று உயர்ந்ததால் மணல்திட்டியின் பரப்பு சற்று கடலி னுள் அமிழ்ந்திருப்பதை மைக்கல் அவ தானித்தான் . எவரிடமும் கூறவில்லை. மேலை வானில் சூரியன் வீழ்ந் தான். மாலை கவியத் தொடங்கியது. பலர் மணல் தரையில் சோர்ந்து கிடந்தார்கள். அழுத குழந்தைகள் மெல்ல மயங்கத் தொடங்கியிருந்தன. எல்லாரது நாக்குகளும் வரண்டு சொண்டுகள் காய்ந்து போயின.
"கொடுமை." என்று கலங்கி
னான் மைக்கல். "அகதிகளாக இந்த மக்கள் இந்தியாவில் பட்ட துயரங்கள் போதா தென்று இப் படியும் ஒரு கஷ்டமா? யுத்தம் இல்லாத பூமியாக மாறிவிட்ட தாயக மண்ணிற்குத் திரும்பிச் செல்வதற்கும் வழியில்லாத பாவிகளாக மாறிவிட்டார்கள். சபிக்கப் பட்ட ஜன்மங்கள். ஆண்டவரே காப் பாற்றும்."
அந்த மணல்திட்டியில் சோர்ந்து கிடக்கின்ற மனிதர்களைப் பார்க்கப் பார்க்க மனத்துயர் அதிகரித்தது. மைக்கல் கலங்கி அழுவான்போல அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். "பதினேழு ஆண்டுகளாகப் பரித விக்கும் இந்த மக்களுக்கு விடிவில் லையா? இவர்களை இந்த மணல் பிட்டியிலிருந்து காப்பாற்றுவார் யார்? ஒரு நாள் அவலமாகக் கழிந்தது. மறுநாள்
நள்ளிரவு கழிந்த வேளையில் மைக்கல் முடிவு செய்தான். அந்த முடிவு அதிகாலை செயற்படுத்தப்பட்ட தன் விளைவு அவனும் ஜோசெப்பும் எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டு கடல் நீரில் இறங்கி தூரத்தில் தெரிந்த நிலக்கீற்றை நோக்கி நீந்தத் தொடங்கினார்கள். கண்ணுக் கெட்டிய தூரத்தில் தெரிந்த நிலக்கீறு நீந்த நீந்த விலகிப் போய்க் கொண் டிருந்தது. கடல் நிலை அவ்வாறானது என்பதை மைக்கல் அறியாதவ னல்லன்.
எதிர்ப்பட்ட மணல்பிட்டியில் மைக் கல் ஏறியபோது அங்கு ஜோசெப்பும் முதலில் ஏறி நின்றிருந்தான். அவர்கள் அப்படியே சிலபொழுது அந்த மணலில் சரிந்து படுத்துக் கொண்டார்கள்.
"இன்னமும் ஒரு மணல் பிட்டி வரும் அதனைக் கடந்தால் தலை

மன்னார்க் கரை தெரியும். மத்தியானத் திற்கு முதல் போயிடலாம்."
*முதல் மணல் பிட்டிக்கும் தலைமன்னாருக்குமிடையிலான கடல் பயங்கரமானது, மைக்கல். வடகடலும் தென்கடலும் சந்திக்கிற இடம். கடல் குடைந்தபடி சுழித்து மேலெழும், மைக்கல் . அதில் நீந்துவதற்கு அவதானம் தேவை. நாக்கெல்லாம் வரண்டுவிட்டது. உப்புக் கரிக்கிறது." "அங்க சோர்ந்தும் மயங்கியும் கிடக்குதுகள். பிள்ளைகள் தாக்குப் பிடிக் குங்களோ நாங்க தலை மன்னாரை அடைவதிலதான் இருக் கிறது."
அவர்கள் மீண்டும் கடலில் இறங்கி முதலாவது மணல்திட்டியை அடையும்போது மத்தியானப் பொழு தாகியிருந்தது.
"என்னால இனி நீந்த முடியு மென்று தெரியவில்லை, தம்பி.” என்றான் ஜோசெப். அப்படியே தரை யில் அமர்ந்து கரங்களால் தலையைப் பற்றிக் கொண்டான். உடல் குலுங்கு வதிலிருந்து அவன் அழுவது தெரி கிறது. மைக்கல் அவன் அருகில் வந்து ஆதரவாக அவன் தோளில் கரம் பதித்தான்.
*அண்ணை, நீங்க இங்கயே நில்லுங்கோ. நான் மட்டும் நீந்தி அங்க போறன்."
ஜோசெப் எழுந்திருந்தான். "வேண்டாம். நானும் வாறன். என்னால முடியும்". இருவரும் மீண்டும் கடலில் குதித்தனர். இந்தத் தடவை நீந்தி முடித்துவிட்டால் தலைமன்னார்க் கரைதான். ஆனால் முன்னைய கடல்மாதிரி இப்பகுதியிருக்கவில்லை. பாக் ஜலசந்தியின் வடநீரும் தென்நீரும் இந்த ஒடுங்கிய இடை வெளியில் வேகமாக வந்து மோதிக்
கொண்டன. நீர் குடையப்பட்டு சுழித்துக்கொண்டு மேலெழுந்தது. மைக்கல் அடிக்கடி தான் அலைச் சுழியின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தான். ஒரு கட்டத்தில் கடலுக்கும் அவன் திறனுக்குமிடையில் பெரும்போட்டி. "நான் ஒருக்காலும் சாகமாட்டன். அக்கரையை அடைந்து மணல்திட்டி யில் தவிக்கும் அவர்களைக் காப் பாற்றும்வரை நான் அமிழ மாட்டன்." ஒரு கட்டத்தில் ஜோசெப் அருகில் காணப்பட்டான்.
“என்னால முடியவில்லை. நீ முன்னால போ தம்பி. முன்னால போ. கிட்ட வராதை. மரணபயத்தில் உன்னையும் நான் கட்டிப்பிடித்துக் கொள்ளவேண்டி வந்திடும். நீயாவது முன்னால நீந்திப் போ." ஜோசெப் கூறியவை சிதைந்தும் சிதையாமலும் மைக்கலுக்குக் கேட்டன. அலைகள் ஆர்ப்பரித்து அலறின.
*அண்ணை சோர்ந்து போகாதை யுங்கோ. இன்னமும் கொஞ்சத் தூரந்தான்."
திடீரென ஜோசெப் காணாமல் போனான்.
மைக்கலின் கரங்கள் சற்று குறளத் தொடங்கின. நீண்ட நேரம் கடல் நீரில் கிடந்துவிட்டான். அவனைப் பயம் பற்றிக் கொள்ளப் பார்த்தது. மணல்திட்டில் பரிதவிக்கும் குழந்தைகளையும் பெண் பிள்ளை களையும் நினைவிற்குக் கொண்டு வந்தான்.
உடம்பில் சற்றுத் தெம்பு ஏற் பட்டது. கரங்கள் நீரை வலித்தன. கடல் குடைந்து சுழிப்பது அவ்விடத் தில் காணப்படவில்லை. தூரத்தில் கரை தெரிகிறது.
இன்னமும் கொஞ்சத் தூரந்தான்.

Page 6
அவனுடன் ஏதோ ஒரு பொருள் வந்து மோதியது. அது ஒரு மீன்பிடி மிதவைக்கோளம். மீன்பிடிவலை யிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவனருகில் வந்திருக்கிறது. அதனை இருகைகளாலும் இறுகப் பற்றித் தன்மார்புடன் அணைத்துக் கொண்டான். அவ்வளவுதான் அவனுக் குத் தெரியும். அப்படியே மயங்கிப் போனான்.
மயக்கம் தெளிந்தபோது அவன் கரையில் கிடந்தான். அவனைச் சுற்றிப் பலர் நின்றிருந்தனர். துடித்துப் பதைத்து எழுந்தான்.
“இது தலை மன்னாரா?”
“ஓம் தம்பி.”
"இப்ப நேரம்."
"ஐந்தாகுது.”
"ஐயோ. மூன்றாவது மணல் பிட்டியில இருபதுபேர் குழந்தைகளும் பெரிசுகளுமாகத் தவிக்கினம். காப்பாற்றுங்கோ"
அவர் களர் வளர் ளங்களை ஒழுங்குபடுத்திப் புறப்பட்டபோது இரவு கவியத் தொடங்கியிருந்தது, குறித்த மணல்பிட்டியை அடைந்தபோது -
பற்றைப் புதர்களின் அடிப்பாகம் நீரினுள் அமிழ்ந்திருந்ததை அவர்கள் கண்டார்கள். மணல்பிட்டியை மேவி ஒரு அடிவரை கடல் நீர் அலை யெறிந்தது.
"ஐயோ, ஆண்டவரே" என்று மைக்கல் கதறினான். நான்கு சடலங் கள் புதர்களுள் அகப்பட்டுக் கிடைத் தன. அவற்றினுடன் அவர்கள் திரும் பிய போது, கரையில் ஜோசெப்பின் சடலம் ஒதுங்கியிருந்தது.
இனி ஒவ்வொன்றாக எல்லாச் சடலங்களும் தாய் மண்ணில் தப்பாது கரை ஒதுங்கும்.
தோழமைப் 6)ото6) கல் 2003
அமைதி நதியில் பால் பொங்கும் அழகு நிலத்தில் பானை பொங்கும்
சூரியன் நெருப்பில் சுதந்திரம் பொங்கும் வீரர்கள் விழிப்பில் வெற்றி பொங்கும்
உழவன் வீட்டில் உழைப்பு பொங்கும் அழுதவன் வீட்டில் ஆனந்தம் பொங்கும்
தாமரை முகங்களில் தாகம் பொங்கும் தமிழர் பூமியில் விவேகம் பொங்கும்
ஊடக மூளைகளில் உண்மை பொங்கும் - நாம் தேடிடும் வாழ்வில் தோழமை பொங்கும்
 

தமிழ்ப் பாரம்பரியத்திற் கல்வி
- ஒரு மறுவாசிப்பு
- சபா.ஜெயராசா
சமூகக் கட்டமைப்பு, சமூக அசைவியம், சமூக இலக்குகள் முதலியவற் றால். கல்வி இலக்குகள் நெறிப்படுத்தப்படும் பொழுது அவற்றுக்கியைந்தவாறு கற்பித்தற்கலையும் முகிழ்த்தெழுகின்றது. நிலமானிய பொருளாதாரமும் குறுநில அரசுகளும், வணிகச் செயற்பாடுகளோடு இணைந்த பட்டினங்களும், நீரும் நிலமும் தழுவிய உற்பத்திக் கோலங்களும் நிலவிய தொன்மைத் தமிழகம் தனது சமூக இயல்புக்குரிய கல்வியையும், கற்பித்தற் கலையையும் கொண்டிருந்தது.
கற்றல், கற்பித்தல் தமிழ்ப் பாரம்பரியத்தில் வளர்ந்து மேலெழுந்த நிலையை நன்னூல் பாயிரவியல் பின்வருமாறு விளக்குகின்றது. "உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையோன் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப" கற்பித்தல் கலையை முன்னெடுக்கும் இலட்சிய ஆசிரிய மாதிரி வடிவினர் (MODEL) பற்றிய விளக்கமாக இது அமைகிறது.
தமிழ்ப் பண்பாட்டில் ஆசிரிய மாதிரி வடிவினர் சித்திரிக்கப்பட்டுள்ளமை போன்று மாணவர் வகை மாதிரியினரும் விளக்கப்பட்டுள்ளனர். நன்னூல் பாயிரவியல், மாணாக்கரை முதல், இடை, கடை என வகைப்படுத்தியுள்ளது.
"அன்னமாவே மண்ணொடு கிளியே இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர் தலை இடை கடை மாணாக்கர்.”
சமூகத்தில் மேட்டுக் குடியினர் வற்கடமெய்தி நலிந்தோர் என்ற நிரலமைப்பு (HIERARCHY) வளர்ச்சிபெறும் பொழுது, மாணவர்களை வகைப்படுத்தித் தரம்பிரித்தலும், சமூக நிரலமைப்பை கட்டிக்காப்பதற்கு கல்வியைக் கருவியாக்குதலும் தோன்றுதல் பொதுவான ஓர் அகிலப் பண்பாகும். சமூகத்தில் "கற்கலாகாதார்’ என்று ஒரு சாராரை வகைப்படுத்தும் பொழுது அது பெரும்பாலும் ஒடுக்கப்பட்டோரையே சுட்டி நின்றது.
மாணவர்கள் வேறு பிரிக்கப்பட்டமை போன்று ஒடுக்கு முறைமைக்கு ஏற்றவாறு ஆசிரிரும் தரம் பிரிக்கப்பட்டனர். ஆசிரியரது தன்மை "ஈவோன் தன்மை” எனவும், கற்பித்தற் செயல் "ஈதலியற்கை” என்றும், மாணவர் இயல்பு “கொள்வோன் தன்மை" எனவும் நச்சினார்க்கினியார் குறிப்பிட்டுள்ளார். ஈவோர் என்போர் நல்லாசிரியர் என்றும், நல்லாசிரியர் ஆகாதார் என்றும் வகைப்படுத்தப் பட்டனர். நல்லாசிரியர் ஆகாதோர் கழற் பெய் குடத்துக்கும், மடற் பனைக்கும், முடத் தெங்கினுக்கும், குண்டிகைப் பருத்திக்கும் நச்சினார்கினியாரால் உவமை யாக்கப்பட்டுள்ளனர். மாணாக்கரது கொள்ளளவு சிறிதாயினும், அதனைக் கருத்திற் கொள்ளாது, தாம் கற்றதெல்லாவற்றையும் திணிப்பவர் கழற் பெய்
11

Page 7
குடத்துக்கு உவமிக்கப்பட்டுள்ளார். இனிய பயன்களைக் கொண்டிருந்தாலும் கிட்டுதற்கு அரிதாக இருக்கும் ஆசிரியர் மடற் பனைக்கு உவமிக்கப்பட்டுள்ளார். ஒருவர் வேண்டிநிற்க அவரைப் புறக்கணித்து பிறர்க்கு உரைக்கும் ஆசிரியர் முடத் தெங்கினுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளார். கற்கும் மாணவர்களது ஆற்றல் பெரிதாக இருப்பதை மனங்கொள்ளாது, சிறிதளவு அறிவை மட்டும் வழங்கும் ஆசிரியர் குண்டிகைப் பருத்திக்கு ஒப்பானவர்.
சமூகத்லே பன்முகப்பாங்கான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் வேளை ஆசிரியர்களை எதிர்மறை நோக்கில் பலவாறு பாகுபடுத்துதல் ஒடுக்கு முறைகள் தோன்றிய காலகட்டங்களில் நிலவுவதாயிற்று. உயர் குடிப்பிறப்பு நல்லாசிரியர்களுக்குரிய, நிபந்தனையாக நன்னூல் பாயிரத்திலே(26) கூறப்படுதல் மேற்கூறிய கருத்தை மீள வலியுறுத்துகின்றது.
மேலைத்தேய மரபில் இயற்பண்புக் கோட்பாட்டினை முன்னெடுத்த ரூசோ என்பார் தாம் எழுதிய எமிலி என்ற நாவலில், எமிலி என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கி அவனது இயற்கையான படிநிலை வளர்ச்சிக்குரிய கல்வி பற்றியும் விளக்கியுள்ளார். தமிழ் மரபில் சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர், சீவகன் என்ற கதாபாத்திரத்தின் வழியாக தமிழகத்து இலட்சிய வடிவிலான கல்வியை விளக்கியுள்ளார். சீவகன் தமது ஐந்தாம் வயதில் மையோலையைப் பிடித்துக் கற்கத் தொடங்கிய செய்தி சீவக சிந்தாமணியிற் (2706) குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியானது பொருள் நிலை சார்ந்து செயற்பட்டமைக்குரிய செய்தியை சீவக சிந்தாமணியிலே (நாமகள் கலம்பகம்339) காணமுடியும், ஆசிரியரும் மாணவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்து கற்றல் கற்பித்தலிலே ஈடுபட்ட செய்தியும் சீவக சிந்தாமணியிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணிக்கு முற்பட்ட இலக்கியமாகிய பரிபாடலில் கற்கத் தொடங்கும் மாணவர்கள் "மழபுலவர் என்று அழைக்கப்பட்டனர். முதன் முதலாக அவர்கள் சுவடி தூக்கி எழுதத்தொடங்கிய செயல் ‘மையாடல் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. ( பரிபாடல் 11, 88- 90) கல்விச் செயல் முறை தொழிற் பிரிவு (DVISONOFLABOUR) அடிப்படையில் சிறப்பெய்தி வளரும் நிலை யில் இவ்வாறான தனித்துவமான சிறப்புப் பெயர்கள் வழங்கப்படுதல் மரபு.
கற்கும் செயற்பாடு "கோடன் மரபு" என அழைக்கப்பட்டது. அதாவது ஆசிரியரிடத்து மாணவர் பாடங்கேட்கும் முறைமையும், கலையும், கோடன் மரபு எனப்பட்டது. நேரம் தவறாமை, வழிபாடு செய்தலில் வெறுப்பில்லாமை, ஆசிரியர் குறிப்பொடு பொருந்திச் செல்லல், உரைத்தபடி செய்தல், பாடங் கேட்டலில் ஆசையுடையவனாயிருத்தல், சித்திரப்பாவை போன்றிருந்து கற்றல், மீண்டும் கற்றல், கற்ற பொருளை மறந்துவிடாது உள்ளத்திலே நிலைநிறுத்தல் முதலியவை கோடன் மரபிலே விளக்கப்பட்டுள்ளன.(நன்னூல் பாயிரவியல்40) சமூக வளர்ச்சியில் ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் என்ற இருமை நிலைகள் துருவப்பட்டு வளரும்போது, நூற்கல்வியும் நூல்சாரா அனுபவக் கல்வியும் துருவப்பட்டு முரண்படுதல் மரபு.
இத்தகைய துருவப்பாடு "செய்யுள்” “உலகவழக்கு" என்ற இருமை நிலைகளாற் புலப்படுத்தப்பட்டுள்ளது. "நூல் பயிலியல்பே நுவலின் வழக்கறிதல்” என்ற நன்னூல் பாயிரவியலிற்(41) சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
12

இவற்றின் பின்புலத்தில் நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் கலையை நோக்கும்பொழுது வினாவுதல், மீண்டும் மீண்டும் கேட்டு மனத்திலே பதித்தல், சக மாணாக்கரோடு பழகுதல், ஆசிரியரைப் பின்தொடர்ந்து செல்லும் நிழலைப் போன்று விட்டகலாதிருத்தல் முதலியவை நச்சினார்க்கினியாராலும் பவணந்தி யாராலும் விளக்கப்பட்டுள்ள கற்றல் உபாயங்களாகும். மாணாக்கர் இறை வனிடத்து பக்தி செலுத்துதல் போன்று ஆசிரியரிடத்தும் பக்தியும் அன்பும் செலுத்துதல் வேண்டுமென்று தமிழ் மரபில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "மாணக்கன் என்பான் அன்பின் வழிபாடுவான்" என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது.
ஆசிரியர் வாவென்றதும் வருதல், இருவென்பதும் இருத்தல், சுவடி களைப் பிரிக்கும்படி கூறியதும் பிரித்தல், படிக்கும்படி கூறியதும் படித்தல் என்ற வகையில் ஆசிரியரின் கட்டளைகளே கற்றல் கற்பித்தலில் மேலோங்கி யிருந்தன. மாணாக்கர் வணங்கி நின்றேனும், வாய்பொத்தி நின்றேனும் ஆசிரி யரிடத்துப் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டுமென ஆசாரக்கோவை குறிப்பிட்டுள்ளது. பசித்தவர்கள் உணவுப்படையலை உண்பதற்கு எத்தகைய ஆவல் கொண்டிருப்பார்களோ அவ்வாறே மாணவர்களும் கற்பதற்குரிய அவாக் கொண்டிருத்தல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கற்றலைக் காட்டிலும் இனிய செயல் வேறொன்றும் இல்லை என்பதை “கற்றலின் காழினியது இல்” என்று இனியவை நாற்பது குறிப்பிட்டுள்ளது.
தமிழ்ப் பாரம்பரியத்திற் கற்றல் கற்பித்தற் கலையை நோக்கும் பொழுது அந்தணர்க்குரிய கல்வியில் தனித்துவமான பண்புகள் விரவியிருந்தன.
"அறுவகைப்பட்ட பார்பக்கம்" (தொல்காப்பியம், வாகைத்திணை). ஆறு திறன்களாகிய அந்தணர் ஒழுக்கம் என்பதில் ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்-ஏற்றல், என்றவாறு விரித்துரைக்கப்படும். நூல்களை விட்டுப் பிரியாதிருத்தலும் அந்தணர்க்குரிய அணிகலனாயிற்று.
தமிழகக் கல்வி வருணப்பாகுபாடுகளோடும் தொடர்பு பட்டிருந்தமை அந்தணர்க்குரிய தனித்துவமான உயர்கல்விச் செயற்பாடுகளினால் அறியப்படக் கூடியதாகவுள்ளது. அரச மரபினருக்கும் தனித்துவமான உயர் கல்விச் செயற் பாடுகள் காணப்பட்டன. இவ்வாறான கல்விக் கட்டமைப்புகளை நோக்கும் பொழுது சாமானியர்களுக்குரிய கல்வி, சமூக ஒழுங்கைக் கட்டிக்காப்பதற்குரிய வற்புறுத்தல்களையும் ஒடுக்கு முறையை மெளனமாக வழங்கும் பக்குவத்தையும் கொண்டிருந்தது.
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்” என்ற புறநானூறுப்பாடல்(186) அரச மேன்மையை சாமானியர்கள் மீது திணிக்கும் கல்விசார்ந்த வலியுறுத்தலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். திருக்குறளிலும் இதற்குரிய பல்வேறு சான்றாதாரங்களைக் காணலாம். வகைமாதிரிக்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு.
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்" தமிழகக் கல்வி வரலாற்றை ஆழ்ந்து நோக்கும்பொழுது வரன் முறை சார்ந்த நிலையிலும் சாராநிலையிலும் ஒடுக்கப்பட்டோர் மனங்களை அடக்கி அழுத்திச் செயற்படவைத்த செயல்முறைகளை விரிவாகக் காணமுடியும்.
13

Page 8
O
எழுதத் துரண்டும் எண்ணங்கள்
(கலாநிதி தரைமனோகரன்)
மணிவிழா நாயகர்
ஈழத்து இலக்கியவுலகில் அடிக்கடி உச்சரிக்கப் படும் பெயர்களுள் ஒன்று, தெணியான் என்பது. கந்தையா நடேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட தெணியானின் எழுத்துக்கள் கடந்த நாற்பது ஆண்டு களாக இலக்கியத்துறையில் பவனி வந்துள்ளன. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் ஆகிய இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். ஆயினும், நாவல், சிறுகதை ஆகிய துறைகளில் தெணியானின் பங்களிப்புக் குறிப்பிடத் தக்கது. இவற்றோடு பல கட்டுரைகள், நூல் மதிப்பீடுகள் என்பவற்றையும் அவர் எழுதியுள்ளார்.
தெணியானின் இலக்கியப் பங்களிப்புகள் தனியாக நோக்கப் படத்தக்கவை. யாழ்ப்பாணத்து வாழ்வியலின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தை அவரது சிறுகதைகளில் தரிசிக்க முடிகிறது. அவரது நாவல் ஒவ்வொன்றும் புதிய புதிய அநுபவங்களை வாசகனுக்குத் தருகிறது. குறிப்பாக, “பொற்சிறை யில் வாடும் புனிதர்கள்’ என்ற நாவல், யாழ்ப்பாணத்துப் பிராமண சமூகத்தின் நிலைப்பாட்டைத் தக்கபடி உணர்த்துகிறது. யாழ்ப்பாணப் பிராமண சமூகம் பற்றியதான முதல் நாவல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றோடு ஈழத்து இலக்கிய உலகில் சில ஆக்கபூர்வமான இலக்கியச் சர்ச்சைகளுக்கு அவரே காரணகர்த்தராகவும் விளங்கியுள்ளார். தெணியானின் மிகப் பெரிய சாதனையாகக் கொள்ளத்தக்கது, சமுதாயத்தின் சவால்களுக்கு உறுதியுடன் முகம் கொடுத்து வெற்றிபெற்றமையாகும். இது அவரது எழுத்துக்கும் ஆக்கபூர்வ மான ஒரு கனதியை ஏற்படுத்துகின்றது என்று கூறலாம்.
மார்க்சிய சிந்தனைகளை வரித்துக்கொண்ட இலக்கியவாதியான தெணி யானின் எழுத்துக்கள் ஈழத்து இலக்கியத்திற்கு வலிவையும், வனப்பையும் சேர்த்துவருகின்றன. "ஐம்பதாண்டு காலச் சமூக மாற்றங்களைச் சித்திரிக்கும் நாவல் ஒன்று எழுதவேண்டும் என்பது எனது எண்ணம்” (ஞானம்) எனக் குறிப்பிடும் அவரது அத்தகைய நாவலை வாசகரும், விமர்சகரும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். மணிவிழா நாயகனாக விளங்கும் தெணியானின் எழுத்துப் பணி மேன்மேலும் தொடரவேண்டும் என வாழ்த்துகிறோம். கல்வியும் கலையும் கலந்த விழா
அண்மையில் கண்டியில் தேசிய கல்வி நிறுவகக் கண்டி நிலையக் கல்விமாணிப் பட்டக்கற்கைநெறி மாணவர்களின் விழாவொன்று இடம்பெற்றது. இந்த விழாவைச் சிறப்பாகச் செய்வதில் ஈடுபாடு காட்டிய விரிவுரையாளர்களும், மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள். இவ்விழாவின் சிறப்பம்சமே, தேசிய 14
 

கல்வி நிறுவகக் கண்டி நிலையத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.வை.எம். முஸ்லிம் அவர்களது ஆளுமையும், ஆற்றலும் கலந்த முயற்சிகளே. தமிழ்மீது தணியாப் பற்றுக்கொண்ட அவர், அவ்விழாவை ஒரு முத்தமிழ் விழாவாகவே நடத்திக்காட்டினார்.
விழாவின் சிறப்புக்குரிய விடயமாக அமைந்தது, ஒரே மேடையில் மூன்று நூல்களின் வெளியீடாகும். முத்துப்பரல்கள் (சிறுவர் பாடல்கள் தொகுதி), கல்வியியல் கட்டுரைகள் (கட்டுரைத்தொகுதி), கல்வித்தாரகை (சஞ்சிகை) ஆகியவை வெளியிட்டு வைக்கப்பட்டன. முத்துப்பரல்கள் என்ற சிறுவர் பாடல்தொகுதி படைத்தவை, தொகுத்தவை, கதைப்பாடல் என மூன்று பகுதி களைக் கொண்டதாக அமைந்துள்ளது. படைத்தவை பகுதியில் இடம்பெற்ற கணிசமான சிறுவர் பாடல்கள் குறிப்பிடத்தக்கவையாக விளங்குகின்றன. தொகுத்தவை பகுதியில் காணப்படும் சிறுவர் பாடல்களை இயற்றியவர்களின் பெயர்களும், கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தொகுத்தவர்களின். பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆயினும், முயற்சி பாராட்டத்தக்கது. கல்வியியல் கட்டுரைகள் என்ற நூல், கல்வியியல் தொடர்பான பல தரமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. கல்வித்தாரகை என்ற சஞ்சிகை கல்விமாணிப் பட்டக் கற்கை நெறி மாணவர்களின் பல்வேறு படைப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது.
இவ்விழாவில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகளும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. பேராதனைப் பல்கலைக்கழக மாணவரின் மல்லாரி நடனம், துரை. மனோகரன் எழுதி, கலைவாணி மாணிக்கம் இசையமைத்த சர்வமதப் பாடல், வையந்திமாலா செல்வரத்தினம் தயாரித்தளித்த கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் தியான லிங்கோற்பவம் நடனம், தேசிய கல்வி நிறுவகக் கண்டி நிலைய மாணவிகளின் வில்லுப்பாட்டு ஆகியவை சிறப்பாக இருந்தன. வேறுசில கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சில கலை நிகழ்ச்சிகளோடு ஒத்துழைப்பதற்கு ஒலியமைப்பு முரண்டுபண்ணிக்கொண்டிருந் தது. தரமான ஒலியமைப்பை வழங்கக் கூடியவர்கள் கண்டியில் இருந்தும், தரமற்ற ஒலியமைப்பையே விழாவின் சில கட்டங்களில் அனுபவிக்க வேண்டி யிருந்தது. விழாவின் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய பெண்மணி (இலங்கை வானொலி மலையக சேவையின் பகுதிநேர அறிவிப்பாளருங்கூட) தமிழ் உச்சரிப்பில் போதிய கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் தமிழ் அவரைவிட்டுத் தப்பியோடிவிடும். மாலையும் மரியாதையும்
நமது விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும் விடயங்கள் மிகச் சுவாரசியமானவை. விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முக்கியஸ்தர் களுக்கு மாலை சூட்டி மரியாதை செய்வது வழமையானது. அது வரவேற்கத் தக்கதே. ஆனால், அவர்களுக்கு மாலை சூட்டியதுந்தான் தாமதம், முதல் வேலையாக அதனைக் கழற்றிவிட்டுத்தான் அவர்கள் மறுவேலை பார்ப்பர். ஏதோ தங்களுக்கு இந்த மாலை மரியாதை எதுவும் பிடிக்காது என்பதைப்போல அவர்கள் நடந்துகொள்வர். எனினும், அந்த மாலைக்குப் பின்னால் உள்ள மாலை கட்டும் கலைஞர்களின் உழைப்பை இவர்கள் உணர்ந்துகொள்வ 15

Page 9
தில்லை; அந்த கலைஞர்களின் அழகியல் உணர்வை மதிப்பதில்லை. மாலை செய்யும் கலைஞர்களின் உழைப்பை மதிக்கத் தெரியாதவர்களுக்கு மாலை போட்டுக் கெளரவிக்கவேண்டிய அவசியமே இல்லை. மாலை சூட்டப்பட்டவர்கள் சிறிது நேரமாவது அதனைச் சூடியபடி இருப்பது, மாலை செய்த அந்தக் கலைஞர்களை, உழைப்பாளர்களை கெளரவிப்பதாக அமையும். மாலை சூடப்பட்ட வேகத்திலேயே அதனைக் கழற்றி ஒரு பக்கத்தில் போடுவது, உழைப்பின் மாண்பையும், கலையின் பெருமையையும் மதிக்காத செயலாகும். பொன்னாடை படும் பாடு
பொன்னாடை போர்த்தல் என்பது ஒரு மனிதனின் உழைப்பை, திறமையை, பெருமையைப் போற்றுவதற்காக நிகழ்த்தப்படும் ஒரு நல்ல நிகழ்வு. உழைப்பால் உயர்ந்தவர்கள், அரிய சாதனைகளைப் படைத்தவர்கள், கல்வித்தொண்டு, கலைத்தொண்டு புரிந்தவர்கள், மக்களுக்காகச் சேவை யாற்றிய மாபெரும் தொண்டர்கள் போன்றவர்களுக்குச் செலுத்தப்படும் அதியுயர் மரியாதைதான் பொன்னாடை போர்த்தல். ஆனால், இன்றைய நிலையில் பொன்னாடை படும்பாட்டைப் பார்க்கும்போது வேதனையும் சிரிப்புமே ஏற்படு கிறது. மக்களுக்காக எதுவும் செய்யாத அரசியல்வாதிகளுக்கும் பொன்னாடை. சும்மாயிருந்து “சாதனை” படைத்தவர்களுக்கும் பொன்னாடை. இலக்கியம் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடியவர்களுக்கும் பொன்னாடை.
கலைகள் பற்றித் தெரியாவர்களுக்கும் A 9 N பொன்னாடை பிறரைப்பார்த்துக் கைதட்ட ஞா6D விபாம் மட்டும் தெரிந்தவர்களுக்கும் பொன் புதிய சநதா LITLD னாடை, முதன்முதலாக மேடையேறுபவர் உள்நாடு களுக்கும் பொன்னாடை பொன்னாடை. தனிப்பிரதி Bunr 30/--
பொன்னாடை. பொன்னாடை. பொன் அரை ஆண்டுச் சந்தாரூபா 1801 னாடையை விட்டால் விழாவே இல்லை!ஆண்டுச் சந்தா unr 360/ என்பதுபோல் ஆகிவிட்டது இன்றைசந்தர காசோலை மூலமாகவோ நிலை. பொன்னாடை யாரால் யாருக்குப் டுெ_ மூலமாகவோ போர்த்தப்படவேண்டும் என்பதிற்கூட அனுப்பலாம். அதிகம் அக்கறை செலுத்தப்படுவதாகத் மனியோடர் அனுப்புபவர்கள் தெரியவில்லை. பொன்னாடை போர்த்தப் அதனை கண்டி தபால் நிலையத் பட்ட பலரும், தமக்கு எதற்காக அதுதில் மாற்றக்கூடியதாக அனுப்ப போர்த்தப்பட்டது என்று தெரியாமல் வேண்டும். மனத்துக்குள் ஆராய்ச்சி செய்வதுண்டு. அனுப்பவேண்டிய பெயர், பொன்னாடைக்குரிய மரியாதை இன்று முகவரி :- மலினப்படுத்தப்பட்டுவிட்டது. TIGNANASEKARAN
எதிர்காலத்திலாவது ஒருவரின் 19/7, PERADENIYA ROAD,
உழைப்பு, சாதனை, தகுதி அறிந்து KANDY.
பொன்னாடை போர்த்துவது நல்லது. (ର இல்லையேல் பொன்னாடை சாதாரண - ளிநாடு USS போர்வையைப்போல் ஆகிவிடும். ஆண்டுச் சந்தா
v (தபால் செலவு உட்பட)
16
محبر

665 (
- வாகரைவாணன் -
வாகரை நான் பிறந்து வளர்ந்த கிராமம். மட்டக்களப்புப் பிரதேசத்தின் வடக்கில் உள்ள மண் வாசனைக் கிராமங்களில் அதுவும் ஒன்று. இந்த மண்ணின் வெளிச்ச வீடாகத் திகழ்ந்த றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தான் எனது அரிச்சுவடிப் பாடம் ஆரம்பமானது. நான்கு ஆண்டுகள் இந்தப் பாடசாலையில் நவமணிவாசகத்தோடு இருந்த நான் அடுத்த- வகுப்பை ஆரம்பிப்பதற்காக 1952 தையில் மட் / புனித மரியநாயகி பாடசாலையில் (1979 கார்த்திகை 23ல் வீசிய கடும் சூறாவளியில் இந்தப் பாடசாலை முற்றாக இடிந்து தரைமட்டமானது. இன்று இந்த இடத்தில் தான் மட்/ புனித மிக்கேல் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு அமைந்துள்ளது.) எனது உறவினர் ஒருவரோடு அடி எடுத்து வைத்தேன்.
சிறு வயதிலேயே புத்தகங்களோடு சினேகம் செய்துகொண்ட எனக்கு விளையாட்டு வேப்பங்காயாகக் கசந்தது. இது காரணமாக விடுதிப் பொறுப்பாளர் Br0. பேணாட் அவர்களிடம் நான் வாங்கிக்கட்டிக்கொண்டதும் உண்டு.
எனது எழுத்துலகத்திற்கு வழிகாட்டியது இந்தப் பாடசாலைதான். பத்தாம் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் போதே கிறுக்கத் தொடங்கியவன் நான். ‘முனைத்தெரு 33 நான் எழுதிய முதல் சிறுகதை; இரண்டொரு நாடகங்களும் எழுதியதுண்டு. 'சாஸ்திரமும் சமூகமும் ஒரு நாடகத்தின் பெயர். மூடக் கொள்கைகளை அந்த வயதிலேயே மும்முரமாகச் சாடி இந்த நாடகத்தை எழுதியவன் நான்.
சிவாஜி கணேசனின் சினிமாப்படம் வணங்காமுடி, அதே காலப்பகுதி யில் மட்டக்களப்பு இம்பீரியல் தியேட்டரில் திரையிடப்பட்டது. இதைப் பார்த்த என் மனதில் அதே மாதிரி நாடகம் ஒன்று உருவானது. பவளநாடு காத்த பாலகன்’ என்னும் பெயர் பூண்ட அந்த நாடகம் எனது ஊரில் அரங்கேற்றப்பட்ட போது (1958இல்) கதாநாயகன் கஜேந்திரனாக நானும் வில்லன் நரேந்திரனாக திரு.லியோன் அருள்வேதராசாவும் (மட்டக்களப்பின் பிரபல்ய ஆங்கில ஆசிரியர்) வாள் சண்டை போட்டு நடித்தமை இன்றும் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. 8
1959இல் எஸ். எஸ். சி. பரீட்சை எழுதிய கையோடு புனித மரியநாயகி பாடசாலையில் இருந்து விடைபெற்றுக்கொண்ட என்னை அறுபதுகளில் இடம் பெற்ற தமிழரசுக்கட்சியின் அறப்போராட்டம் ஆட்கொண்டது. இந்தப் போராட் டத்தின்போதுதான், எனது இன மொழி உணர்வுகள் அதிகம் கூர்மையாயின. சூடான இந்தச் சூழல், எனது எழுத்துலக வளர்ச்சிக்கு எருவாக அமைந்தது. அப்போது "மங்கையர் திலகம் திரைப்படத்தில் நீல வண்ணக் 17

Page 10
கண்ணா வாடா என்ற பாடல் வெகு பிரசித்தம். என்னையும் அப்பாடல் வெகுவாக ஈர்த்தது. எனவே, இந்தப் பாடல் மெட்டில் அன்றைய அரசியல் நிலைமையை முன்னிலைப்படுத்தி 'மானமுள்ள தமிழா வாடா" என்ற ஒரு பாடலை எழுதினேன் (இப்பாடல் மட்/சின்ன ஊறணியைச் சேர்ந்த புலவர் பூபாலப் பிள்ளையினுடையது என்று பிரபல விமரிசகரும் விரிவுரையாளருமான செ.யோகராசா மண்முனைப்பற்று பிரதேச சாகித்திய விழா சிறப்பு மலரில் - 1999 - எழுதியுள்ளார் - பக்-29) இந்தப் பாடல் மட்டக்களப்பில் மட்டுமன்றி - யாழ்ப்பாணத்திலும் திருமதி.அ. மங்கையர்க்கரசி அவர்களால் பாடப்பட்டு பிரபல்யமடைந்தது. இதனை அடுத்து, "மிஸ்ஸியம்மா' படத்தின் ‘வாராயோ வெண்ணிலாவே. என்ற பாடல் மெட்டில் கேளாயோ யூரீமா நீயும். என்னும் ஒரு பாடலையும் எழுதினேன். இதுவும் அறப்போராட்ட வீரர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
எனது அரசியல் தொடர்பு மிக விரைவிலேயே இற்றுப் போனது. இதற்குக் காரணம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையே. இந்த ஆசை, கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் கலைப்பிரிவில் உயர்தர மாணவர்களில் ஒருவனாக என்னைச் சேர்த்தது. கவனம் முழுவதையும் கல்வியிலே பதித்தாலும் எழுத்துப்பணியை என்னால் எட்ட வைக்க இயலவில்லை.
சிவாநந்தா வித்தியாலயத்தில் எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்களில் பண்டிதர் வி. சி. கந்தையா ஒருவர்; மற்றவர் திரு. இராமச்சந்திர சர்மா B.A அவர்கள். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
தினகரன் - புதன்மலர் - இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த காலம் அது. நானும், புதிர் தந்த போதை, ஆடினாய் எனும் தலைப்புக்களில் இரண்டு கவிதைகள் எழுதி அனுப்பினேன். இரண்டும் பிரசுரமாகியிருந்தன. எனக்குப் பரமசந்தோஷம். கவிதைகளைப் படித்துப் பார்த்த பண்டிதர் வி. சி.கந்தையா அவர்கள், நீ என்ன அகராதி பார்த்தா கவிதை எழுதுகிறாய்? என்று கேட்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதே நேரம், எங்கள் சமஸ்கிருத ஆசிரியர் திரு. தியாகராசா சர்மா அவர்கள், ‘தொடர்ந்து எழுது என்று கூறி என்னை ஊக்குவித்தார்.
சிவாநந்தா வித்தியாலய கலைப்பிரிவு மாணவர்களின் கையிலேயே கலைக்கழகம் இருந்தது. மாணவர்களுக்காக இந்தக் கலைக்கழகம் நடத்திய கவிதை, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டிலும் இரண்டாவது பரிசு பெற்றமையும் என்நினைவில் பசுமையாகவே இருக்கிறது.
எழுத்தில் எனக்கிருந்த ஈடுபாடே, கலைக்கழகத்தின் "அருவி கையெழுத்துப் பிரதியில் இணையாசிரியர் பொறுப்பை, சக மாணவர்கள் என்னிடம் அளிக்கக் காரணம். கத்தோலிக்க சமயத்தவனாயிருந்தும், இச் சஞ்சிகையில் நான் எழுதிய "கலைமகள் துதி அன்றிலிருந்து இன்றுவரை என்னிடம் இருந்து வரும் சர்வசமய சமரச உணர்வின் வெளிப்பாடு என்றே நம்புகிறேன். இந்த உணர்வு என்னிடம் ஆழமாக இருந்தமையால்தான் பிறகாலத்தில் (1977ல்) எனது ஊரில் நிலை பெற்றிருந்த "வேதக்காரன் - சைவக்காரன் வேறுபாட்டை என்னால் எதிர் கொள்ள முடிந்தது மட்டுமன்றி இரு பகுதியாரையும் இணைத்துக் 18

கொண்டு, வாகரை பிள்ளையார் கோவில் முன்றலில் கல்லறை திறந்தது எனும் கத்தோலிக்க நாடகத்தை அரங்கேற்றவும் செய்தது.
சிவாநந்தா வித்தியாலய மாணவனாக இருந்த சமயம் 'கைதி’ எனும் தலைப்பில் நான் எழுதிய நாடகம், எங்கள் அரசியல் வரலாற்றுத்துறை ஆசிரியராக விளங்கிய திரு. கே. தியாகராசா (ஆளுநர் ஆணையாளர்) அவர்களின் நெறியாள்கையில், ஒரு முக்கிய நிகழ்வை ஒட்டி வித்தியாலயத்தில் அரங்கேற்றப்பட்டது.
1964ல் சிவாநந்தா வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்ட நான், சரியாக ஒராண்டு கழித்து இந்தியாவுக்குப் பயணமானேன். இவ்வோராண்டு காலத்தில் நான் எழுதிய கத்தோலிக்க சமயம் சார்ந்த கவிதைகள் பல யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் சத்திய வேத பாதுகாவலனில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்தியா சென்ற நான் (இந்தப் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டவர் இன்று திருகோணமலை மாவட்டத்தின் கத்தோலிக்க குரு முதல்வராக விளங்கும் வண அன்ரனி லியோ அடிகள்) முற்றிலும் புதிய இடமான மங்களுர் (MANGALORE) (கர்நாடக மாநிலம்) புனித சூசையப்பர் குருமடத்தில் லத்தீன், ஆங்கிலம், ஐரோப்பிய வராலாறு, கத்தோலிக்க ஆன்மீகம் முதலான பாடங்களை மிகுந்த அவதானத்தோடு கற்க ஆரம்பித்தேன்.
இந்தக் குருமடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்தான், எனது முதல் ஆங்கிலக் கவிதை பிறந்தது (இக் கவிதை எனது My Country எனும் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில் Have you Seen எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.) இக் கவிதையைத் தொடர்ந்து வேறு சில ஆங்கிலக் கவிதைகளும் எழுதியதாக நினைவு.
1997ல் நான் மட்டக்களப்பில் வெளியிட்ட கிறிஸ்துகாவியத்தை எழுதும் பணியை இங்கேதான் நான் முதன் முதலாக ஆரம்பித்தேன். ஆனால், இம் முயற்சி அரைகுறையில் நின்றதோடு, எழுத்துப் பிரதியும் கைதவறிவிட்டது. என்றாலும் காவியத்தைத் தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆவல் என்னுள் நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது.
மங்களுரில் இருந்து 1967இல் தாயகம் திரும்பிய நான் மட்டக்களப்பில் கலை இலக்கியப் பணியில் தீவிரமாக ஈடுபடலானேன். இதற்குத் துணையாக மட்டக்களப்பு வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றம் எனும் ஒர் இலக்கிய அமைப் பினையும் (1968) உருவாக்கினேன். இவ்வமைப்பு கொடி, இலச்சினை என்பவற் றையும் கொண்டிருந்தது.
நாற்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இவ்வமைப்பு கலை இலக்கியப் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டது. நான் எழுதிய துரோணர் சபதம், போர்ப்புயல், புலத்திநகரப் புரவலன், (பராக்கிரமபாகு பற்றியது) பங்குனி 15 (IDESIFMARCH) போராட்டம், புரட்சித்துறவி, வெற்றித்திருநகர், முதலான நாடகங்களை இம்மன்றத்தினரே, மட்டக்களப்பு நகரசபை, புனித மிக்கேல் கல்லூரி, ஆகிய இடங்களில் அரங்கேற்றினர். இந் நாடகங்கள் சிலவற்றில் மட்/ இளங்கதிர் நாடக மன்றத்தைச் சேர்ந்த ரைற்றஸ் ஹென்றிக் ஆரையூர் இளவல், கணேசானந்தம், பாலசுப்பிரமணியம் முதலானோர் 19

Page 11
பங்கேற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதே காலப்பகுதியில், புளியடிக்குடாப் பங்கிலிருந்து வெளிவந்த "அன்னையின் குரல் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. (இச்சஞ்சிகை இரண்டொரு இதழ்களோடு தனது இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டது.)
எனது இரண்டாவது இந்தியப் பயணம் 1970ல் நிகழ்ந்தது. தமிழ் படிக்க வேண்டுமென்ற தாகத்தோடு புறப்பட்ட நான், தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை அமைந்தகரையில் (பச்சையப்பன் கல்லூரிக்குச் சமீபமாக) உள்ள AMBASSADOR எனும் HOTEL இல் ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு (வாடகைப்பணம் 40/=) சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளிவாரியாக நடத்தப்படும் வித்துவான் பட்டப்படிப்பு PRELIMINARY தேர்வுக்கு வேண்டிய ஆயத்தங்களில் உடனடியாகவே இறங்கினேன்.
மேற்படி தேர்வுக்குப் படிப்பவர்களுக்கு அங்கு இயங்கிய மாலை நேரக் கல்லூரிகளே பெரும் வரப்பிரசாதமாக அமைந்தன. இந்தச் சூழ்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் (காலம் சென்ற) மகாவித்துவான் வேணுகோபாலப் பிள்ளை அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிய மாலைக்கல்லூரி (நக்கீரன் கல்லூரி) எனக்குப் பெரும்பேறாக வாய்த்தது.
அக்கல்லூரியில் படிக்கையிலேயே மகாவித்துவான் வேணுகோபாலப் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற கவிதை அரங்கில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அரங்கிற்கு தலைமை ஏற்ற உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் எனது கவிதைகளில் சில வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டிப் பேசியமை என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனது சென்னை வாழ்க்கையில், பச்சையப்பன், லொயெலா கல்லூரி யைச் சேர்ந்த மாணவர் சிலர் எனக்கு நெருக்கமாயிருந்தார்கள். அவர்களில் தென்னம்பட்டு ஏகாம்பரம் என்பவர் ஒருவர். நண்பர்; நல்ல கவிஞர். இவரும் நானும் இணைந்து மனித வாழ்க்கையை மையமாக வைத்து எழுதிய கவிதைத் தொடர், (பயணம்) கவியரசு கண்ணதாசனின் அணிந்துரையோடு 1971ல் நூல் வடிவம் பெற்றது. இந்நூல் வெளிவருவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் சுட்டபொன்’ எனும் கவிதை நூலை வெளியிட்டிருந்தேன். அன்றைய நிலையில் எனக்கு எல்லாவழிகளிலும் உதவியாக இருந்த ஆயர் இக்னேஷியஸ் கிளெனி ஆண்டகை அவர்களைப் பல்வேறு தலைப்புக்களில் வைத்து நான் பாடிய கவிதைகளின் தொகுப்பாகிய இந்நூலுக்கு ஆயர். வ.தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இந்நூலே எனது முதல் நூலுமாகும். இந்நூல்களைத் தொடர்ந்து, "துரோணர் சபதம்- நாடகநூலையும், "எண்ணத்தில் நீந்துகிறேன் கவிதை நூலையும் வெளியிட்டிருந்தேன்.
சென்னை நண்பர்களும் நானும் சேர்ந்து ஓர் இலக்கிய அமைப்பையும் உருவாக்கியிருந்தோம் அதற்கு இளைஞர் எழுச்சிமன்றம் என்று பெயர். இவ்வமைப்பு நடத்திய கவிதை அரங்கு ஒன்றில் நானும் நண்பர் ஏகாம்பரமும் கலந்து கொண்டோம். அரங்கிற்குத் தலைமை ஏற்ற கவிஞர் நா. காமராஜன் அவர்கள், சிலோன்காரரின் கவிதை நன்றாகவே இருக்கிறது என்று எனது 20

கவிதையைச் சிலாகித்துப் பேசியமை இன்றும் என் மனதில் இனிக்கவே செய்கின்றது.
1971இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடைபெற்ற யுத்தத் தின்போது, ‘வெல்க இந்தியா என்ற தலைப்பில் நான் எழுதி வெளியிட்ட கவிதை (பிரசுரம்) சென்னையில் பலரின் கவனத்தைக் கவர்ந்து பாராட்டை அள்ளித் தந்தது. இது போன்று 1973இல் சென்னையில் இடம்பெற்ற இந்திய விடுதலை வெள்ளிவிழா நிகழ்ச்சி ஒன்றில் நான் பாடிய கவிதையும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
சென்னையில் நான் தங்கி இருந்தபோது, பத்திரிகைகளுக்கும் சஞ்சிகை களுக்கும் ஏன் அதிகம் எழுதவில்லை என்ற கேள்விக்கு என்னால் பதில் செல்வது சிரமம்தான். எனினும், முரசொலி, சுதேசமித்திரன், மாலைமுரசு போன்ற தினப்பத்திரிகைகளும், உரிமைவேட்கை, தமிழ்த்தேன், பூச்செண்டு, தென்னொலி போன்ற சஞ்சிகைகளும் என் கவிதைகளை அவ்வப்போது தாங்கி வந்தன.
நான் எழுதிய ஒரு பூ மலர்கிறது, பங்குனி 15, அக்கினிப்பரீட்சை ஆகிய மூன்று நாடகங்களும் பங்களுர்(BANGALORE) கத்தோலிக்க நிறுவகங் களில் அரங்கேற்றப்பட்டமை என்னைப் பொறுத்தவரையில் ஒரு சாதனையே! 1976இல் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய என்னை மீண்டும் அரசியல் இழுத்துக்கொண்டது. எங்களுர் இளைஞர் பேரவைத் தலைவர் பதவியும் என்மேல் சுமத்தப்பட்டது. இந்த அரசியல் பிரவேசம், சுதந்திரனில் உணர்ச்சிக் கவிதைகளை எழுத்தத் தூண்டியது. அதே ஆண்டிலேயே வீரகேசரியில் "துறவிகளும் மனிதர்கள் தாம் என்ற எனது சிறுகதை பிரசுரமானது. 1977ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அமரர். அ. அமிர்தலிங்கம் அவர்களின் சிபார்சின் பேரில் சுதந்திரன் உதவி ஆசிரியர் ஆனேன். சுதந்திரனில் சேர்ந்து கொண்டதும், அதில் சுடச்சுட அரசியல் கட்டுரைகளையும், கவிதைகளையும் ஒவ்வொரு வாரமும் எழுதினேன். இவ் வார இதழில் நான் எழுதிய "ஈழமகள் கண்ணிர்’ எனும் நெடுங் கவிதைத் தொடர் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சுதந்திரனின் இலக்கிய ஏடான சுடரிலும் எனது கவிதைகளும் சிறுகதை களும், தமிழ்ப்பாவை என்ற தொடர் கவிதையும் வெளிவந்தன. (தமிழ்ப்பாவை பின்பு நூல் வடிவம்பெற்றது.)
இதே காலப்பகுதியில் ‘ஈழநாடு’ பத்திரிகையில் வயலும் வாழ்வும், சித்திரைப்பாவை ஆகிய குறுங்காவியங்களையும், அன்புச்சிலுவை, அம்மா என்றொரு தெய்வம், முதலான கதைகளையும் எழுதினேன். இது போன்று, யாழ் மண்ணில் பிற்காலத்தில் தோன்றிய முரசொலி, ஈழமுரசு இதழ்களில், எனது குறுங்காவியம் (ஒரு கூத்து அரங்கேறுகிறது), கவிதை, கட்டுரைகள் என்பனவும் வெளிவந்தன.
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் வெளியீடான கலைமுகம் காலாண்டிதழையும் அவ்வப்போது எனது எழுத்துக்கள் அலங்கரித்தன.
யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் நான் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், தினகரன், விரகேசரி பத்திரிகைகளிலும் எனது 2.

Page 12
கட்டுரைகளும், சிறுகதைகளும் வெளியாயின. தினகரன் முத்தொள்ளாயிரம் - சில முத்துக்கள் எனும் தொடர் கட்டுரையையும், வீரகேசரி, ஒரு கிராமத்துப் பாடசாலை (இக் கதை, வித்துவான் சொக்கன் அவர்களால் இலங்கை வானொலியில் விமர்சிக்கப்பட்டது) எல்லை வேலி, இந்தச் சமுதாயம் இப்படித்தான், உயிர்ப்பு எப்போது? பரிநிர்வாணம், இருள் பிரிந்த இரவு ஆகிய சிறுகதைகளையும் வெளியிட்டன.
சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் காலஞ்சென்ற கோவை மகேசனுக்கும், அமரர். அ.அமிர்தலிங்கத்துக்குமிடையே ஏற்பட்ட கசப்புணர்வு - "உதயசூரியன் எனும் வார இதழ், யாழ் மண்ணில் உதயமாகக் காரணமாயிற்று. அரசியலையே நோக்கமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்ட நான், ஒவ்வொரு வாரமும் ஆசிரியர் தலையங்கம் உட்பட, பல்வேறு கட்டுரை கவிதைகளையும் இதில் தொடரந்து எழுதினேன். ஓராண்டா கத் தொடர்ந்து வெளிவந்த இவ்வரசியல் ஏடு 1981 மே - 31ல் யாழ் மண்ணுக்கு வைக்கப்பட்ட தீயில் எரிந்து சாம்பலானது ஒரு துயரம் நிறைந்த வரலாறாகும். இப்பத்திரிகையின் இறுதியோடு அரசியலில் இருந்து முற்றாக விலகிநின்ற என்னை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, ஓர் ஆசிரியராக இணைத்துக் கொண்டமை, என்னைப் பொறுத்தவரையில் ஒரு பெரும் பேறென்பதில் ஐயமில்லை.
பிரபலமான ஒரு கல்லூரியின் ஆசிரியராக நான், யாழ் மண்ணில் வலம் வந்தபோதுதான், கடற்கரைப்பூக்கள், ஒரு பூ மலர்கிறது, இனிக்கும் தமிழ், விபுலாநந்தம், கிறிஸ்துதத்துவம், ஆசிரியன் ஒரு அட்சய பாத்திரம், பாலர் தமிழ்ப்பாட்டு, பண்பாடும் நாகரிகமும் (ஆங்கில நூல்) ஆகிய நூல்களை வாசகர்களுக்கு என்னால் தர முடிந்தது.
கல்லூரி ஆசிரியராகவும், நூலாசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் நான் பிரகாசிக்கத் தொடங்கிய வேளை. எங்கள் கல்லூரி சஞ்சிகை (PATRICIAN) யின் ஆசிரியர் பொறுப்பும் என்னை வந்து சேர்ந்தது. இருமொழி ஆக்கங்களையும் கொண்டு வெளிவந்த இவ்விதழின் ஆசிரியராகப் பணியாற்றியமை என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
புனித - பத்திரிசியார் கல்லூரியின் கலை பண்பாட்டு நிறுவகம் அங்கு இயங்கும் தனிநாயகம் முத்தமிழ் மன்றமாகும். புலவர் வேல்மாறனைக் காப்பாளராகக் கொண்டிருந்த இம்மன்றம் 1982ல் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபோது ‘புதுவையில் ஒரு பூங்குயில்' எனும் நாடகத் தினை எழுதி, நெறிப்படுத்தி அரங்கேற்றினேன்.
இதனைத் தொடர்ந்து 1984ல் நடைபெற்ற முத்தமிழ்விழாவில் நான் எழுதி நெறிப்படுத்திய போரா, சமாதானமா? எனும் நாடகம் பலரின் கைதட்ட லைப் பெற்றுத் தந்தது.
1992ல் கி.வாமி விபுலாநந்தரின் நூற்றாண்டு விழாவையும் மன்றம் சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழாவின் காலை நிகழ்வில் சுவாமிகள் பற்றிய ஆய்வுரை அரங்கம், காலம் சென்ற க.சி. குலரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வரங்கில் யாழ் .பல்கலைக்கழக விரிவுரையாளர்களான திரு. சிவலிங்கராசா அருட்தந்தை. அ.சந்திரகாசன் 22

மற்றும் வித்துவர்ன்.க. சொக்கலிங்கம் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு, இந்து சமயத்தில் சுவாமி விபுலாநந்தரின் இடம் எனும் தலைப்பில் ஒர் ஆய்வுரையை நிகழ்த்தினேன். (இவ்வுரை 1996ல் வெளியான வடக்கு கிழக்கு மாகாண சபையின் இலக்கிய மலர் “மருத நிலா வில் வெளிவந்தது) விழாவின் மாலை நிகழ்வில் நான் எழுதிய சுவாமிகளின் வாழ்க்கைச் சித்திரம் திரு.கந்தையா ரீகணேசனின் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம்) நெறியாள்கையில் அரங்கேற்றப்பட்டது.
எனது எழுத்துலகம் மட்டக்களப்பில் உருவாகி, இந்தியாவில் வளர்ந்து யாழ்ப்பாணத்தில் (1978 - 1995) பெரிதும் விரிவடைந்தது. மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக்கொண்ட எனக்கு அந்த மண் தந்த மரியாதை என்றென்றும் என் நினைவில் இருக்கக் கூடியதொன்று.
எனது குடும்பத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து நான் கொழும்புக்கு இடம் பெயர்ந்த பின் அங்கு (1995ல்) திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் உதவியோடு, இலங்கை வானொலியில், இலங்கையர்கோன், கு.ப.ராஜ கோபாலன், சி.வைத்தியலிங்கம், புதுமைப்பித்தன் ஆகியோரின் சிறுகதைகளை மதிப்பிட்டு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.
பல்லாண்டுகால இடைவெளிக்குப் பின்பு 1996ல் தாயகம் (மட்டக்களப்பு) திரும்பிய எனக்கு எழுத்துலகமே எனது முழுநேர வாழ்வாகிவிட்டது. இவ்வாழ் வில் நான்காண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய இலக்கிய அமைப்பு ‘கலைபண் பாட்டுக் களரியும் "போது சஞ்சிகையும் எனக்கு மிக நெருக்கமாகிவிட்டன. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவனாக எழுத்துலகில் பிரவேசித்த நான், இது வரை முப்பது நூல்களை வெளியிட்டு முடித்தமையை எண்ணிப் பார்க்கையில் சற்றுப் பெருமையாகவே இருக்கிறது. ஆனாலும், இது போதாது, இன்னும் நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆசை என்னை விட்டபாடில்லை.
இறுதியாக இந்த எழுத்துலகிற்குள் யாருடைய கையைப் பிடித்துக் கொண்டும் நான் நுழையவில்லை என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியும். அதேநேரம் - நாட்டுக் கூத்து ஆசிரியரான என் தந்தையிடம் இயற்கையாகவே இருந்த தமிழ்ப்புலமை எனக்குக் கருவிலேயே கிடைத்திருக்கக் கூடும்.
எனினும், எழுத்தின்மீது எனக்கிருந்த ஈடுபாடு, இடைவிடா வாசிப்பு, முயற்சி இவையே இந்த நிலைக்கு என்னை உயர்த்தியவை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இச்சந்தர்ப்பத்தில் - எனது எழுத்துலகில் - என்னோடு கூட இருந்துகொண்டு எனது கிறுக்கல்களையெல்லாம், இரவு பகல் என்று பாராது, ஒழுங்காகத் திருத்தி எழுதித்தருபவர், யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட, என் மனைவி என்பதை எப்படி நான் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியும்?
葵葵 戮歡
23

Page 13
"இரண்டாவது கம்பன்”
பாரதி முதல். பல கவிஞர்களை எனக்கு பிடிக்கும். கவிஞர் மீராவிலிருந்து கவிஞர் மேத்தா வரை எனக்குத் தெரியும். அவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.
அவர்களில் இருவர் எனக்கு வித்தியாசமான வர்களாகத் தென்பட்டார்கள்.
ஒருவர் கவிக்கோ அப்துல் ரகுமான்! மற்றவர் கவிஞர் இன்குலாப்! கவிக்கோ அப்துல் ரகுமான் குளிர் நிலவு! கவிஞர் இன்குலாப் சுட்டெரிக்கும் சூரியன்! இந்த இரண்டு கவிஞர்களில் ‘கவிக்கோ' வைப்பற்றித் திரும்பிப்பார்க்க ஆசைப்படுகிறேன்.
கவிக்கோவை நினைப்பதற்குக் காரணம், அவரைக் கடந்த ஆண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சந்தித்தேன். அதற்கு முதலில் தமிழ் நாட்டிலும் சந்தித்துள்ளேன். மீண்டும் புத்தாண்டில் இங்கு வருவதாக கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்தார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர்களாலேயே மதிக்கப்படுபவர். அவரோடு உரையாடுவதே ஒரு சுகானுபவமாகும். சிலேடைகளும், உவமை களும் அவரிடம் சிறப்பாக உதிரும்.
கவிக்கோவைப்பற்றி கவிஞர் மீரா சொன்னது இப்பொழுதும் என் நெஞ்சில் பசுமையாக பதிந்துள்ளது.
கவியரசர் தாகூர் குறித்து ஹிரென் முகர்ஜி என்பவர் எழுதிய நூலின் பெயர் "அவரே ஒரு கவிதை" (Himself a poem) அது கவிக்கோவுக்கும் பொருந்தும். அப்துல் ரகுமானே ஒரு கவிதை என்றார்.
கவியரங்கம் ஒன்றில் தலைமை ஏற்ற கலைஞர் முதல்வர் கருணாநிதி அவர்கள், கவிக்கோவைப்பற்றி,
"வெற்றி பல கண்டு விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேண்டுமெனக்கேட்டால் அப்துல் ரகுமானைத் தருக என்பேன்!” - என்று பாராட்டினார்.
24
 
 

கவிக்கோவைப்பற்றி கவிஞர் இன்குலாப் இவ்வாறு குறிப்பிடுகிறார். இஸ்லாமிய விழுமியங்களில் உறுதியான பிடிப்புள்ள கவிஞர், மதங்களின் சடங்குகளில் மயங்குபவர் அல்லர். இவரது மனித நேயம் மதத்தின் குறுகிய குட்டைகளில் தேங்காது. கீதை, பைபிள், குர்ஆன், இந்துவை, கிறிஸ்தவனை, முஸ்லிமை உருவாக்கி இருக்கலாம். ஆனால் மனிதனை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் துணிச்சல் ரகுமானுக்கு வந்தபிறகு இவரது தோழமைக் கைகள் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளும்; நீளும்.
“கவிஞர்கள் பல சமயம் மனிதர்களாய் இருப்பதில்லை. இவர் மனிதர், கவிஞர், கவிதையில் இவர் செய்யும் அழகியல் முயற்சி என்பது மனிதரை அழகுபடுத்த இவர் செய்யும் முயற்சியாகவே தோன்றுகிறது".
அப்துல் ரகுமான் ஓர் அற்புதமான மனிதர். ஒருதடவை, ரகுமானுக்கும் இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தமென்று எதிராளி கேட்டு முடிப்பதற்குள் ரகுவும் - மானும் இல்லாத ராமாயணமா? என்று கேட்டிருக்கிறார்.
கவிக்கோவின் கவிதைகள் என்னை காந்தம்போல கவர்ந்திழுக்கக் காரணம் கவிதைகளில் அவர் கையாளும் சிலேடைகள், கற்பனைகள், சொல்லாட்சிகள் மற்ற கவிஞர்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும்.
இவர் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி ஒரு கலைக்கூடமாகத்திகழ்ந்தது என ஏனைய பேராசிரியர்கள் வியந்து பாராட்டியுள்ளார்கள். ஆண்டுதோறும் கல்லூரி இலக்கிய விழா நடைபெறும். கவியரங்கம், பட்டிமன்றம் என விழா பொலிவு பெறுமாம். இரவு விருந்துக்குப் பின்னர் “கவிராத்திரி" என்ற ஒரு சுவையான நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடைபெறுமாம்.
"சன் தொலைக்காட்சியில் இவர் நடத்திய கவிராத்திரி கவியரங்க நிகழ்வுகளை நமது சக்தி ஒளிபரப்பியபோது தவறாமல் கேட்டு நான் இரசித்தேன். அதை நடத்தும் விதமே அபரிமிதமாக இருக்கும்.
தம் கவிதைப்பணிக்கு இடையூறாகப் பேராசிரியர் பதவி இருந்த காரணத்தால் அதையும் தூக்கி எறிந்தார். அவர் பெற்ற பட்டங்களும் விருதுகளும் பரிசுகளும் தாமே விரும்பி அவரைத்தேடி வந்தவை. அவர் எதையும் தேடிப்போவதில்லை. வெண்சுருட்டைத் தவிர.
“கவிதா தேவிக்கு இந்த நூற்றாண்டில் பல கவிஞர்கள் தங்கக் கிரீடங்களைச் சூட்டியிருக்கின்றனர். ரகுமான், அவள் நெற்றியில் கோகினுர் வைரத்தைப் பதித்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு ‘கவிக்கோ’ என்ற புகழாரம் சூட்டுகிறார் பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர் முருகு சுந்தரம். கவிஞர் மீரா இன்று நம்மோடு இல்லை. அந்த மூத்த கவிஞர் சொன்ன சத்திய வார்த்தைகள்தான் கவிக்கோவுக்கு பொருத்தமானது.
"இருபத்தோராம் நூற்றாண்டு பிறக்கும்பொழுது தமிழுக்கு இரண்டாவது கம்பன் கிடைக்கவேண்டும்".
ஆம், அப்துல் ரகுமான் நம்காலத்தில் வாழும் "இரண்டாவது கம்பன்". அதனால்தான் நமது கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவரை அடிக்கடி அழைக்கிறார் என நினைக்கின்றேன்.
25

Page 14
வீறுகொண்ட புதியதொரு இளந் தலைமுறை புனைகதைத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. அவ்வகையில் உடுவில் அரவிந்தன் குறிப்பிடத்தக்கவர். 21.03.1972இல் உடுவில் மேற்கில் பிறந்த அரவிந்தன் தனது ஆரம்பக் கல்வியை உடுவில் மகளிர் கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ்ப்பாண இந்துக்கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ இறுதி யாண்டு மாணவராக விளங்குகிறார். 1985களில் முதன்முதல் கவிதைத் துறையில் காலடி எடுத்துவைத்த அரவிந்தன், 1987இல் பாடசாலை களுக்கிடையே நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் தியாக தீபம்’ என்ற சிறுகதையை எழுதி முதற் பரிசினைத் தனதாக்கிக் கொண்டார். அதன்பின்னர் பத்தாண்டுகள் ஏனோ ஒய்வு நிலையிலிருந்து விட்டு, மீண்டும் 1995இல் சஞ்சீவிப் பத்திரிகையில் தீர்வு என்ற சிறுகதையுடன் தனது புனைகதைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். உண்மையில் சஞ்சீவி உருவாக்கிய சிறுகதை எழுத்தாளராக அரவிந்தன் விளங்குகிறார்.
அப்புத்துரை அரவிந்தன் தனது புனைகதைப் படைப்புகளுக்குத் தன் பெயருடன் தான் பிறந்த ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டிருக்கிறார். இதுவைைர 32 சிறுகதைகள்வரை எழுதியுள்ள இவர், ஈழத்தின் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் தன் படைப்புக்களை வெளியிட்டுள்ளார். சஞ்சீவி, தினக்குரல், ஆதவன், உள்ளம், தாயகம், சுடரொளி, முரசொலி முதலானவற்றில் உடுவில் அரவிந்தனின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. சிறுகதை எழுதுவதோடு ஒவியம் வரைவதிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு.
உடுவில் அரவிந்தனின் சிறுகதைகள் பன்னிரண்டின் தொகுதியாக ‘உணர்வுகள் 1999இல் வெளிவந்து அவரை இலக்கியவுலகிற்கு நன்கு பரிச்சியமாக்கியது. மல்லிகைப்பந்தல் வெளி யீடாக வெளிவந்த ‘மண்ணின் மலர்கள்’ என்ற இளம் படைப்பாளிகளின் சிறுகதைத்தொகுதியில் உடுவில் அரவிந்தனின் சிறுகதையும் இடம் பிடித்துள்ளது. அத்துடன் பன்னிரண்டு இளம்படைப்பாளிகளின் இன்னொரு சிறுகதைத்தொகுதியான "இங்கிருந்து. என்பதிலும் அரவிந்தனின் சிறுகதையொன்றுள்ளது. எனவே உடுவில் அரவிந்தன் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றில் மட்டுமன்றி தன் படைப்புக்களை இலக்கிய
26
ஈழத்த இலக்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்பிக்கைகள் - 1
செங்கை ஆழியான்
உருவில் அரவிந்தன்
ஆய்வாளர்களின் கண்களில் தெரியப்படுத்தும் விதத்தில் சிறுகதைத் தொகுதிகளிலும் இடம்பெற வைத்துள்ளார்.
தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளராக விளங்கும் உடுவில் அரவிந்தன் ஈழத்துப் புனைகதை வரலாற்றில் ஆறர்ந் தலைமுறை எழுத்தாளர். அரவிந்தனின் சிறுகதைகள் யாழ்ப்பாண மண்ணின் மக்களின் உணர்வுகளையும் நடத்தைகளையும் சித்திரிக்கும் பாங்கானவை. ஒருவகையில் யதார்த்தப்பண்பு வாய்ந்தவை. தான் வாழ்கின்ற சமூகத்தை அக்கறையோடு அவதானித்துத் தன் சிறுகதைகளைப் படைத்துள்ளார். சமகாலப் பிரச்சினைகளையும் போராட்ட நிலைமைகளையும் உள்ளடக்கமாகக்கொண்ட சிறுகதை களில் உடுவில் அரவிந்தன் மிக அவதானமாகத் தன் கருத்துக்களைப் பொதித்துள்ள விதம் பாராட்டுக்குரியது. (உணர்வுகள், பிரசவம், இணைவு) வாழ்க்கையின் அவலங்களை அவரது சிறுகதைகள் உணர்வு பூர்வமாகச் சித்திரிக்கின்றன. சமூகமனிதர்கள் சிலரின் முகமூடிகளைக் கிழித்தெறியும் உந்துதல் அவரின் சிறுகதைகளில் காணப்படுகிறது. (மலராத மலர், போலி) குடும்ப உறவுகளின் மெல்லிய உணர்வுகளைக் கலாபூர்வமாகச் சித்திரிக்க அவரால் முடிந்திருக்கிறது.(ஊடல், பொருத்தம்). உடுவில் அரவிந்தன் எளிமையான சொற்களில் தான் எடுத்துக்கொண்ட கதையினைச் சொல்வதில் வல்லவராக விளங்கு கிறார். நிறைவாக உடுவில் அரவிந்தனின் பாத்திர வார்ப்பும், நிகழ்ச்சிச் சித்திரிப்பும் அவர் எழுத்தில் முதிர்ச்சியைக் காட்டுகின்றன. இலக்கியக் கருத்தியல் நோக்கில் தெளிவும் படைப்பில் கலைநயமும் சேரும்போது உடுவில் அரவிந்தன் ஈழத்து இலக்கியத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாவார் என நம்புகிறேன்.
27

Page 15
சுதாராஜின் இரு நால்கள்
1. காற்றோடு போதல் 2. பறக்கும் குடை ஓர் அறிமுகமும் சில அவதானிப்புகளும்
புலோலியூர் க.சதாசிவம்
1970 களில் எழுத்துத்துறையில் பிரவேசித்த சுதாராஜ் ஏலவே பலாத் காரம் (1977), கொடுத்தல் (1983), ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் (1989), தெரியாத பக்கங்கள்(1997), சுதாராஜ் கதைகள் (2000) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் இளமைக்கோலம்(1981) நாவலையும் ஈழத்து இலக்கிய உலகிற்குக் கொடுத்துள்ளார். காற்றோடு போதல் (சிறுகதை கள்), பறக்கும் குடை (குழந்தை இலக்கியம்) ஆகியவை அவருடைய அண்மைக்கால அறுவடைகளாகும். காற்றோடு போதல் :
1995ல் இருந்து 2000 ஆண்டுவரை எழுதிய தனது 8 சிறுகதைகளை காற்றோடு போதலில் எமக்குக் கையளித்துள்ளார் சுதாராஜ். ஈழத்துச் சிறுகதை வரலாற்றை எழுதிய செங்கை ஆழியான், சுதாராஜ் ஈழத்துச் சிறுகதைத் துறையின் பங்காளி என மதிப்பிடுகிறார். இப்பங்காளியின் பங்கு காற்றோடு போதலில் எந்தளவில் அமைந்திருக்கிறது? சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தை வரவு இலக்கணம், வாய்ப்பாடு வழியாக நோக்குபவர்களுக்கு “காற்றோடு போதல் வெறும் காற்றோடு போதலாகவே இருக்கும்; கதையைப் படித்ததும் முகத்தைச் சுழிப்பார்கள். உண்மையில் நல்லதொரு சிறுகதையின் தரம், கதையின் நீளத்திலோ, பாத்திரங்களின் எண்ணிக்கையிலோ, சம்பவக் கோவைச் செறிவுகளிலோ பாதிக்கப்படுவதில்லை. ஒரு நல்ல சிறுகதையைப் படித்து முடித்ததும் அதுதரும் உணர்வுகள் படிப்பவர்களின் சிந்தனையைத் தொற்றி மனதில் தொக்கி நிற்கும். சுதாராஜ் கதைகளைப் படித்ததும் அவைதரும் உணர்வுகள் எம்மை ஆட்கொள்கின்றன. நவீன இலக்கியக் கோட்பாடுகள் வலிமை பெற்றுள்ள இக்காலகட்டத்தில், இக்கோட்பாடுகளின் நல்ல அம்சங் களைத் தரிசிக்க முடிகிறது. தனிமனித பாத்திரங்கள் இயங்கி சலனத்தை ஏற்படுத்துதல் நவீனத்தின் சிறப்பான பரிமாணம் என்பர். இலக்கியபாத்திரங்கள் தமது அனுபவங்கள் என்ற வரையறைக்குள் அடங்கி நிற்பதுவும், உதிரியாக நிற்கும் பண்புகளில் கவனம் செலுத்துவதும். இவற்றையெல்லாம் காற்றோடு போதலில் தரிசிக்க முடிகிறது; நவீனத்து நடையின் முன்னோடி முயற்சிபோல. சுதாராஜ் கதை சொல்லும் பாணி அலாதியானது. சுற்றிவளைக்காது, உத்தி சாகசம் காட்டாது நேரடியாக அருகிலிருந்து சொல்வதுபோல வசீகரத்துடன் கதைசொல்லும் திறமை இவருக்கு கைவந்த கலை, வாலாயம் எனலாம். பலர் எழுதக்கூசும் உண்மைகளை உயிர்த்துடிப்புடன் கூறுகிறார், "நடைமுறை விவகாரங்களை எழுதுவது கெளரவக் குறைச்சல் அல்ல" என அடித்துக்கூறும்
28
 
 

புதுமைப்பித்தனைப் போல. பேச்சு வழக்குச் சொற்களை பொருள் குறித்து பண்பாட்டியியலால் வெளிக்கொணரும் வகையில் கையாள்கிறார். சமூகக் குறைபாடுகளை, முரண்பாடுகளை சாடும்போது நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து நாசுக்காக கூறுவார், மனதை மயிலிறகு தடவுவது போல - மென்மையாக இருக்கும். பிரசங்கி எழுத்தாளர் அல்லர் அவர். சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களை, முரண்பாடுகளை, ஈனநிலைகளை, மானிடத்துயர்களை வெளிக் கொணரும்போது விரக்தி கொள்ளாது நம்பிக்கை ஒளிக்கீற்றைப் பாய்ச்சுகிறார். வாழ்க்கையைச் சுதாராஜ் மிகப் பரிவோடு பார்க்கிறார். மானுடம் கதையின் மையப்பொருளாக பூக்களைத் தொடுத்து நிற்கும் பூமாலையின் நாரைப்போல இழையோடுகிறது. சூழலையும் இயற்கை யையும் நேசிக்கும் கலைஞர் இவர். இவரின் பாத்திரங்கள் நேசிப்புக்குரியவர்கள். எம்முடன் உறவாடிச் செல்வதுபோல இயல்பான குணாதிசயம் கொண்டவர் களாக இருக்கிறார்கள்; பாத்திரங்கள் யதார்த்தப் பண்புடன் அறிமுகமாகிறார்கள். இத்தொகுதியில் வரும் கள்ளக்கோழிக்கறி சமைத்த நித்தி, ஜெயந்தன், சோமையா, தாமரா இன்னும் எல்லோருமே.
சமகாலப் பிரச்சினைகளை ஆழமாகவும் ஆணிவேரை இனங்காணும் துணிவுடனும் தெளிவுடனும் பகுப்பாய்வு செய்கின்றார். சமகாலப் பிரச்சினை களை அணுகுவது ஆபத்து எனப் பயங்கொண்டு நழுவுதல் (Escapism) சுதாராஜிடம் கிடையவே கிடையாது. சுதாராஜ் கூறும் சமூகச் செய்திகள் மனிதகுலத்துக்குப் பொதுவான உணர்வுகள் கொண்டிருக்கின்றன. ஓர் உண்மைக் கலைஞனின் தேடலும் சத்திய வேட்கையும் இவரிடம் இருக்கின்றன. ஏதோ ஒரு தத்துவத்தைக் கட்டி அணைத்து பம்மாத்து செய்வது இவரிடம் இல்லை. எந்த அணிக்கும் இவர் அடிமையல்ல. சிந்தனைத் தெளிவுடனே பிரச்சினைகளை அணுகுகிறார். சம்பவத்தின் உச்சக் கட்டத்தில் கதை முடிவதைவிட சிந்தனைத் தெளிவின் உச்சக்கட்டத்தில் கதையை நிறைவு செய்வது இவரது தனிப்பண்புகளில் ஒன்றாகும். சிறுகதை என்பது வெறும் பொழுது போக்குச் சாதனமாக இல்லாமல் படித்து முடிப்பவர் சிந்தனையில் ஒரு சிறந்த கருத்தை, ஒரு சிறந்த உண்மையை கையிருப்பாக விட்டுச் செல்கிறார் என கு.அழகிரிசாமியின் கதைகளைப்பற்றி ஒரு திறனாய்வாளர் கூறியது சுதாராஜ் கதைகளுக்கும் சாலப் பொருந்தும். கதாராஜின் ஆளுமை பன்முகப்பட்டது. இவரது பார்வை பாய்ந்துள்ள தளம், களம் பல. சூழலையும் மனித நடப்பியல்புகளையும் கூர்ந்து கவனிக்கிறார், உளவியல் சார்புடன் நோக்குகிறார். பூகோளமயமான சமுதாயத்தில் உலகளாவிய இவரது பார்வை காலத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளது.
ஈழத்து விமர்சனப் போக்கு விசித்திரமானது. ஏதோவிதமாக விமர்சன உலகில் செல்வாக்குப் பெற்றுள்ளவர்களின் வாக்கு வேதவாக்காகி, அவர் களது அளவுகோலை விமர்சனமானியாக்கி, வாய்ப்பாடுபோல ஒரு சில எழுத்தாளர்களையே சிறுகதை மன்னர்கள் எனப் பட்டியல் போடும்போது, சுதாராஜ் போன்ற எழுத்தாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சுதாராஜ் படைப்புக்களை நுண்மையாக ஆய்வு செய்யும்போது, ஈழத்தில் குறிப்பிடக்கூடிய தமிழ்ச் சிறுகதைத்துறையின் ஒரு பங்காளி என்பது புலனாகும். 29

Page 16
பறக்கும் குடை :
சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் இன்று நம் ஆக்க இலக்கிய கர்த்தாக் களின் நாட்டம் சென்றிருப்பது ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் ஓர் ஆரோக்கிய மான நிலைமையாகும். சமுதாய மாற்றம் சிறுவர்களிடமிருந்தே ஆரம்பிக்க (36.606 (Sub. (Social transformation should be begin from children) 6T607 is ass)05 உளவியலாளர் வலியுறுத்தியதை கலை இலக்கிய உலகம் உணரத் தலைப் பட்டுள்ளது. இந்த எழுச்சியிலும் வளர்ச்சியிலும் பங்களிப்பாக சுதாராஜ் ஏற்கனவே “காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதையைத் தந்திருக்கிறார். இப்போது “பறக்கும் குடை என்ற சிறுவர் இலக்கிய நூல் ஒன்றினைக் கையளித்துள்ளார். சிறுவர்களுடைய உளநடத்தை, சிந்தனை வளம், ரசனைத் திறம், வளர்ச்சிநிலை, முதிர்ச்சி நிலை, சொல் அறிவு, விடய அறிவு, இலக் கிய நாட்டம் இவற்றையெல்லாம் அறிவு பூர்வமாகக் கிரகித்து உணர்வு பூர்வமாக உள்வாங்கி இம்முயற்சியில் இறங்கியுள்ளார். மழையும் குடையும் சிறுவர்களுக்கு மிகப்பிடித்த நிகழ்வும் பொருளுமாகும். இதனுடாக சிறுவர் இலக்கியம் படைத்து, இதன் வழியாக விஞ்ஞான உண்மையை - மழை பெய் யும் விதத்தினையும், கடல் நீர் உப்புத் தன்மையுடையது அது ஆவியாக மாறி மழையாகப் பெய்யும்போது நல்ல நீராக இருப்பதற்கான காரணத்தையும் சிறுவர்கள் உணரும் வகையில் சொல்லியிருப்பது விதந்து பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
பறக்கும் குடையில் சிறுவர் பாடல்கள் வருகின்றன. சிறுவர் பாடல் களுக்குச் சந்தம் - ஒசைநயம் மிக முக்கியமானது. கவிதை இலக்கியத்திற்குச் சந்தம் உயிர்நாடி. சிறுவர் இலக்கியத்திற்கு உயிர்த்துடிப்பான படிமம்.
"ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே” என்ற சோமசுந்தரப் புலவரின் பாடலுடன், மழையைப் பொழிந்து தருவதற்கு திரண்டுவந்த மேகங்களே மழையைப் பொழிந்து தருகிறீர் வளமாய் நாங்கள் வாழ்கிறோம் மரமும் செடி கொடிகளும் வாழ்வதற்கு உதவுகிறீர்” என்ற சுதாராஜின் பாடலையும் ஒப்பிடும்போது, 'பறக்கும் குடை குடை சாய்கிறது. W ஆயினும் சுதாராஜின் “பறக்கும் குடை ஈழத்துச் சிறுவர் இலக்கியத் திற்கு ஒரு நல்வரவாகும். விஞ்ஞான உண்மைகளைச் சிறுவர்களுக்கு உணர்த் தும் இவரது நோக்கம் வரவேற்கத்தக்கது. காலத்தின் தேவையும்கூட. இவரது ஆக்க ஆளுமையும் அனுபவ முதிர்ச்சியும் ஈழத்துச் சிறுவர் இலக்கியத்திற்கு இன்னும் சிறப்புறப் பங்களிக்க வேண்டுமென வாழ்த்தி வரவேற்கிறோம்.
30

காவிக்குள் கிபீடம்
கனகசபை தேவகடாட்சம்
பிறந்த மண்ணில் பாதங்கள் பட்டதும் ஏற்பட்ட ஸ்பரிசம் உச்சியைக் குளிரப்பண்ணிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பின் அந்த மண்ணில் கால்கள். சொந்த மண்ணின் சுகங்களும், நினைவுகளும் ஒரு நிறைஞானியைக் கூட சராசரி நிலைக் குக் கொணர்ந்துவிடும் என்பதில் எத்தனை உண்மைகள்!
தர்மத்தின் பிரதிக்ஞையின் பிரகாரம் ‘புத்தன்' ஆன பிறகு இன்று காலடிகள் பதிகின்றன.
கபிலவஸ்து நகரே தர்மத்தின் தலைவனைக் காணத் திரண்டு நின்றிருந்தது.
ஒரு சாதாரண சித்தார்த்தனாக, ஒரு இளவரசனாக லெளகீக இன்பங் கள் திணிக்கப்பட்டவனாக வாழ்ந் திருந்தவன், இப்போது பரிநிர்வாண நிலையில், முற்றும் துறந்த துறவி யாக, அன்பின் பொக்கிஷமாக, காவிக் குள் தமை மறைத்து வந்து கொண் டிருந்தார்.
ஒரு காலத்தில், கோமான் குலத் தில் உதித்த இந்த இளம் கோவிற் காக, தந்தை சுத் தோதனனின் கட்டளைப்படி அவனின் மன மாறு தலுக்காக இந்த நகரமே ஆடம்பர ஆரவாரங்களால் ஆர்ப்பரித்துக்கிடந் திருந்தது. இவைகள் எதுவுமே இளவரசனில் பலிதம் கொள்ளாது தோற்று நின்றன.
31
'அன்று அந்த மனதில் கொண்ட மாரன் என்கின்ற மாயை வென்றிருந் தால், இன்று நான் புத்தனாகியிருப் (3usOTIT?
இந்தத் திருப்தி இதயம் நிறை வாக வியாபித்திருந்தது, அவரில்!
அன்றைய விழாக்கோலமும், இன்றைய விழாக்கோலமும் முற்றா கவே வேறுபட்டிருந்தன. ஞானத்தைத் தேடி மக்கள் அலை அலையாகத் திரண்டு கொண்டிருந்தனர். அருளாள னிடம் ஆசிகள் பெறுவதற்காய் ஆயிர மாயிரமாய் குவிந்தனர்.
கெளதம புத்தரின் வருகையால் உத்தரகோசலமே பொலிவு பெற் றிருந்தது. இத்தனைக்கும் மத்தியில், ஞானத்தைத் தேடிச் சிவந்திருந்த அணி ணல் புத்தரின் கணிகள், சாதாரண உணர்வுகள் கொண்ட மானிடனாக அந்த நிறை கூட்டத் தினுள் எவரையோ தேடி அலைந்து கொண்டிருந்தன. அதோ, அந்தத் தென்புறமான ஜனத்திர ளில் விழிகள் ததும்பும்படி தன்னை மறைத்துக் கொண்டு நன்றிப் பெருக் கோடு பார்த்துக்கொண்டு நின்றது அவ்வுருவம்.
அடையாளம் கண்டுகொண்டார் பெருமான் புத்தர்.
கூட்டத்தைச் சிரமப் பட்டு விலக்கியவாறு, அந்த நன்றிப் பெருக் குடை விழிகளின் அண்டை சென்று விட்டார்.
"சன்னா” உணர்ச்சிகள் பொங்க அழைத் தார். பாசத்துடனும், நன்றியுடனும் அவன் இரு கரங்களையும் பற்றினார். “பெருமானே" என கோவென அலறியபடி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் சன்னா.

Page 17
சன்னாவின் தீட்சண்ணியக் குரல் கேட்டு கூட்டமே அதிர்ந்து நின்றது.
கரங்களைப் பற்றிய புத்தபக வான், சன்னாவைத் தூக்கியெழுப்பி னார். வார்த்தைகள் மொழியின்றி பிசிறடித்தன.
அப்படியே வாரி அணைத்துக் கொண்டார்.
எவருக்குமே கிடைக்காத பெரும் பேறு சாதாரண குதிரையோட்டி
சன்னாவிற்குக் கிடைத்தது கண்டு
மக்கள் பிரமித்து நின்றார்கள்.
பகவானின் காவி உடைகள் சன்னாவின் கண்ணிரால் நனைந்து கொண்டிருந்தன.
சாந்தமாக திருவாய் மொழிந் தார் பகவான்.
"எனதன்பு நிறை நண்பா உன் செயலில் மாற்றமுண்டாகி, என் மார்க்க நெறிக்கு வழி கோலாவிடின் இந்த அநுகூலங்கள் ஏற்பட்டிருக்குமா? நிறைஞானி ஒருவர் இவ்வுலகிற்கு கிடைத்திருப்பாரா? நான் உனக்கு என்னென்று நன்றி மொழிவேன்?" மேலும் வார்த்தைகள் கிளர்ந்தெழுந்து உச்சம் கொள்ளாவண்ணம் பக வானின் வாயைக் கைகளால் பொத்தி னான் சன்னா.
+ + + ஏழு ஆண்டுகளுக்கு முன்னர். அன்று நடுநிசி கடந்தும் இளவரசன் சித்தார்த்தனுக்கு உறக்கம் பிடிக்க வில்லை.
காலையில் கண்ட காட்சிகள் மனதை வருடிக் கொண்டிருந்தன. வயோதிபமும், நோய் கொண்டவரின் காட்சியும் முதன் முதலாகக் கண்டிருந் தான் கோமகன்.
குதிரையோட்டி சன்னாவிடம் இதுபற்றிய விளக்கங்கள் கேட்டான்.
32
அரச கட்டளையையும் மீறி லெளகீக வாழ்வின் சக்கரத்தைச் சிறிது சிறிதாக விளக்கினான் சன்னா. *காயங்கள் கொண்ட உடல் காய்ந்து சருகாகி வயோதிபம் ஆட் கொண்டு. பின்னர் மரணம் உரு எடுத்தவை யாவும் உரு அழியும்"
இளவேந்தனின் உதடுகள் ஓயாது உச்சரித்துக் கொண்டன.
நடுச்சாமம் நகர்ந்துகொண்டிருந் 535.
தர்மசக்கரத்தின் சுழலி வு சித்தார்த்தனைப் பாதிக்க ஆரம்பித்து விட்டது.
படுக்கையை விட்டு எழுந்து விட்டான்.
தான் வசித்திருந்த அரண்மனை யை சுற்றும்முற்றும் பார்க்கிறான்.
அனைவரும் சயனித்துக்கிடந் தனர்.
கட்டழகிகள் சரிந்து கிடந்தனர். மெய்மறந்து உறங்குவது பிணம்போல் தோன்றியது. இறுதியாக மனைவி யசோதரைரையும் மகன் ராகுலனை யும் பார்க்கவேண்டும் போல் தோன் றியது.
இருவரும் சயனித் திருந்த அறையை மெதுவாகத் திறந்தான். எட்ட நின்றே மனதால் பேசினான்.
“உங்கள் இருவரையும் நேசிக்கி றேன். அதைவிட உயர்ந்த நோக்க மொன்று என்னுள் பிரகாசித்து நிற் கிறது.
ஒசையின்றி மாளிகையைத் துறந்து வெளியேறினான்.
வாசலண்டையில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சன்னாவை எழுப்பி னான். தேர் பூட்டும்படி பணித்தான்.
கோமகனின் செயல் புரியாதிருந் தது சன்னாவிற்கு.
காரிருளைக் கிழித்துக்கொண்டு

வாயுவேகத்தில் தேர் பயணித்தது.
அது இளவரசைத் துறந்து துற வரசுக்குள் புகுந்துகொண்டிருந்தது.
சன்னாவின் முகத்தை நிமிர்த்திக் கொண்டார் புத்தபகவான். நீர் வழிந்த படியே இருந்தது.
சுபன ஸ்பரிசத்துடன் சன்னாவின் தலையைத் தடவிக்கொடுத்தார் கெளத முனி.
பரஞானத்தின் ரீங்காரம் , உணர்வு எனும் நரம்பில் நாதம் இசைத்துக்கொண்டிருப்பதை சன்னா உணரத்தொடங்கினான்.
ஞானத்தின் நிவேதனம் உள் ளத்தை நிறைத்திருந்தது.
சன்னா இப்போ திருநிலைப் படுத்தப்பட்டுக்கொண்டிருந்தான். காவி உடையை அவன் கண்கள் தேடின.
சன்னாவை அழைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தார் பகவான். திருக்கூட்டமும் தொடர்ந்தது. மகனின் திருக்கோலம் உணர்ந்த தந்தை சுத்தோதனன் அருகே சென்று சேவிதம் செய்தான்.
உலகத்தையும் உறவையும் துறந்து ஏழு ஆண்டுகள்.
மின்னலாக சித்தார்த்தன் நினை வில் வந்து மறைந்தாள் மனைவி யசோதரை.
ஏழு ஆண்டுகளாக உலகத்து இன்ப துன்பங்கள் அனைத்தையும் துறந்தவளாக தானும் வாழ்ந்து வருகி றாள்.
யாவையும் மனதில் புதைத்து விட்டு பகவான் சாந்த சொரூபியாய் நடந்துகொண்டிருந்தார்.
"அப்பா! அப்பா!” பகவானின் நடையை ஸ்தம்பிதம் செய்தது அக்குரல். தாய் யசோதரை காட்டிய திசையிலே புத்தபகவானின்
33
மைந்தன் அழைத்து நின்றான்.
ஏதோ ஒரு உணர்வு. சாந்த மூர்த்தியை வெட்கவைத்தது.
புத்தர் மைந்தனை உற்றுநோக் கினார்.
"அப்பா! எனக்குரிய செல்வத்தை யும், எனக்குரிய அரச முதுசொத்தை யும் தந்தருள வேண்டும்" மைந்தன் ராகுலன் வேண்டிநின்றான்.
மகனைப் பார்த்து ஒரு புன்னகை வீசி நின்றார் துறவி.
மீண்டும் மகன் அதையே கேட் டான்.
"மகனே! அரசு முதுசொத்தல்ல! உனக்கு வேண்டியது அதுவுமல்ல!" கூட இருந்த பிக்குகளைப் பார்த்துக்கொண்டார்.
சன் னா வுக்கு இருந்தது.
பகவான் சன்னாவை நோக்கி, "அவன் வேண்டுவதைக் கொடுத்து விடுங்கள்” என்றார்.
காவித் துணியால் போர்த்திவிட் டான் சன்னா.
எதுவுமே விளங்கிக் கொள்ள முடியாத சன்னா, பகவானிடம் கேட் டான். "பகவானே, அரியாசனம் துறந்ததைவிட அரச முதுசொத்தை வழங்காததுதான் வியப்பாக இருக் கிறது. இதன் காரணம் யாது?”
"இந்த அரச வாழ்வு யாவும் என் னோடு முடிந்திடவேண்டும். அரியணை பரம்பரைச் சொத்தாக மாறலாகாது". பகவான் சாந்தமாகக் கூறினார்.
மீண்டும் சன்னா, "புத்தபகவானே! உங்களால் உணர் டான இந்தப் புரட்சியின் சாதனை காலங்காலமாக இப்பூமியில் நிலைத்து வாழுமா?"
புத்தபகவானினி விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. அந்த
வியப் பாக

Page 18
DTT TS TTTTTT T TT SSLLSJYLLLLLLLLLLLLLSLLLLLL ருகே"கோடு சென்றது" வாழ்க்கையின் மர்மம்
"சன்னா! சுழலும் தர்ம சக்கரத் D தைக் கொண்ட இந்த மதம், ஆசை களைத் துறப்பதிலேயே பெரிதும் தங்கி நிற்கிறது. என்னைப் பின்பற்று பவர்கள் அஷ்டமார்க்கங்களுக்கூடாக ஆசைகளையும் அரச விவகாரங் களையயும் துறந்துகொள்ளவேண் டும். விருப்பு வெறுப்புகளைக் கடந்த ஆறுவயதில் பள்ளிக்குப் போக நீதியான செயற்பாடே நாட்டை அஞ்சிய போது ೬ುರಿಹಅb பரிநிர்வாணத்தின் முதற் அருணோடு போ” என்று U19 ●
சன்னாவிற்கு எதிர்காலத்தைப் ೭ಖ್ರ எனககு பற்றிய ஏக்கம் மலையாகக் கனத்தது. அறிமுகப்படுத்திய 6T60 900.
"இந்த ஞான தவமுனியின் 曼 & R a மார்க்கத்தைத் தொடர்பவர்கள் எதிர் புலமைப்பரிசில் ಸ್ಥಿತಿ'யடைந்தபின் காலத்தில் இச் செயற்பாடுகளினின்று புதுசசடடை வாங்க வழுவாதிருப்பார்களா? இப்பூமியை §ಳ್ತೀ சேர்த்துப் ஞானத்தாலும் சீலத்தாலும் நிரப்ப பரிசளித்த என் அம்மா. வேண்டியவர்கள் தவறு இழைத்து விடுவார்களா? தீமையைக் “அருணுக்கும் கொடு” என்று கொண்டே தீமையை நீக்க முயல் அம்பலவி மாழ்பழங்கள் வார்களா? ஞானத்தின் படிகளை இரண்டு தந்த என் அம்மா. கவனத்தில் கொள்வார்களா?
சூனியமாகவே தெரிந்தது உன்னோடு சன்னாவிற்கு. மனம் குழம்பிக் பந்தடிக்கும் நேரங்களில் கொண்டது. எதுவுமே விளங்காமல் பார்க்காமலே போகும் என் அம்மா. சாந்த சொரூபமான புத்தபகவா னைப் பார்த்தான். முப்பத்தொரு நாட்களின்பின்
அமைதியான புன்னகை முகம்பார்த்த களிப்பில் காவியுடையைச் சரிசெய்து கைகோர்க்க முயன்றபோது ஆகள்: !!!!!!!!!!!!!! கைபிரித்துவிட்டதின் எதிர்கால வியாகூலங்களைப புரிநது 8 . . . . ) s கொண்டவராக்த் தலையை அசைத் மர்மம் தெரியவில்லைத்தான் துக்கொள்கிறார். என்றாலும்
துறவியின் கால்களும் சிந்தனை D229காள் களும் வேகப்பட்டுக்கொண்டன . எனக்காக அவளை.
ஞானத்தால் இப்பூமியை வரித்துக் கொள்வதற்காய்! தேசங்கீத
34
 

இடு இலக்கியப் பெரியவர்கள்
என். சோமகாந்தன்
இலக்கியத் துறையில் மகிழ்ச்சிக்குரிய இரு நிகழ்ச்சிகள் அண்மையில் நிகழ்ந்துள்ளன. தமிழ் இலக்கியக்காரர்கள் அனைவரையுமே ஒட்டுமொத்தமாகப் பூரிப்பு அடைய வைத்தவை இவ்விரு சம்பவங்களும்! தமிழகத்தின் மூத்த எழுத்தாளராக விளங்கும் வல்லிக்கண்ணன் அவர்களுக்கு சிரேஷ்ட எழுத் தாளருக்கான ஆதித்தனார் அறக்கட்டளை விருது வழங்கப் பெற்றது; அடுத்தது, நமது நாட்டின் மூத்த எழுத்தாளரான வரதர் அவர்களுக்கு இலங்கை அரசாங்க கலைக்கழகத்தின் "சாகித்திய இரத்தினம்" என்ற அதியுயர் இலக்கிய விருது வழங்கிக் கெளரவிக்கப்பெற்றது.
இவர்கள் இருவருமே பெரியவர்கள் - வயதால் மட்டு மல்ல; இலக்கியச் சாதனைகளில் பெரியவர்கள்; பண்பால் பெரியவர்கள்; அடக்கத்தால் பெரியவர் கள்; அன்பு காட்டுவதில் பெரியவர்கள்; இலக்கியத்திற்கான ஓயாத உழைப்பி னால் உயர்ந்து நிற்கும் பெரியவர்கள். இருவருமே இளமைப் பருவத்தில் எழுதத் துவங்கியவர்கள். (இவர்களுக்குப் பல ஆண்டுகள் பின்னர் எழுதத் துவங்கிய என் போன்றவர்கள் - இடைத்தங்கல் கிடைத்தால், அதில் உட்கார்ந்து, ஓய்ந்து உறங்கி. கண்விழித்து - மீண்டும் பேனாவைத் தூக்கும் போது - எத்தனை பெரிய இடைவெளி மற்றும் பலர் இலக்கிய உலகிலிருந்தே அஞ்ஞாதவாசிகளாகி விடுகின்றனர் என்பது வேறு கதை) இன்றுங்கூட மனம் தளராமல் இவர்கள் உற்சாகமாக இலக்கியப் பணிபுரிந்து கொண்டிருப்பது, முழுத் தமிழுலகமுமே பெருமையுற வேண்டிய சங்கதி; போற்றி மதிக்கப்பட வேண்டிய பெரியவர்கள் இவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமேயில்லை. வல்லிக்கண்ணன்
சென்ற நவம்பர் 12ஆம் திகதி தமது 83வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ள பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்கள். இலக்கிய ஆர்வம் காரணமாகத் தமது 16வது வயசில் 'இதய ஒலி என்ற கை எழுத்துப் பத்திரிகையை நடத்தியவர். நெல்லை வாலிபர் சங்கத்துக்காக "இளந்தமிழன்' என்ற மற்றொரு கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பையும் ஏககாலத்தில் ஏற்று நடத்தியவர். நவீன இலக்கித்துறையில் ‘மணிக்கொடி 幾經.,... காலம் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தது. స్ట్రీజీల్ల్లో புதுமைப்பித்தன் , கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, பி.எஸ். இராமையா
35

Page 19
போன்றவர்களின் எழுத்துக்கள், இலக்கியத்தின் புதிய பரிமாணத்துக்கு இலக்கிய ஆர்வலர்களை இட்டுச்சென்றன. அப்போதைய இளந்தலைமுறையினர் இவற்றால் வெகுவாக ஆகர்ஷிக்கப் பெற்றனர். தாமும் அப்படி எழுதவேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது. ‘புதுமைப் பித்தன் எழுத்துக்களால் வசீகரிக்கப் பட்டேன்’ என வல்லிக்கண்ணனே தனது கட்டுரையொன்றில் கூறியுள்ளார்.
‘மணிக்கொடி போன்ற இலக்கிய சஞ்சிகையை நாமும் நடத்த வேண்டும் எனப் பல இளம் எழுத்தாளர்கள் முனைந்தனர். தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும்கூட!
வல்லிக்கண்ணன் அவர்களின் 19வது வயதில்(1939) அவர் எழுதிய ‘சந்திர காந்தக்கல்' என்னும் சிறுகதை முதன்முதலாக 'பிரசண்ட விகடன் பத்திரிகையில் வெளியாகியது. தணியாத இலக்கிய தாகங்கொண்டவராக இளமையிலிருந்தே அவர் விளங்கியதால், தாம் அமர்ந்திருந்த அரசுப் பணியையே துறந்துவிட்டு, இலக்கியத்துக்கெனத் தமது வாழ்நாள் முழுவதை யும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். "இலக்கியத்துக்கு வாழ்க்கைப்பட்டதால் அவர் இன்னமும் பிரமச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார்” என்பார் ஜெயகாந்தன். திருமகள், சினிமா உலகம், நவசக்தி போன்ற இதழ்களில் சிறிதுகாலம் பணிபுரிந்துவிட்டு 1944ல் ‘கிராம ஊழியன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக அமர்ந்தார். துறையூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மறுமலர்ச்சி இதழான “கிராம ஊழியன்” அக்காலத்தில் மணிக்கொடிக்குப்பின் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெருஞ் செல்வாக்கைப் பெற்றிருந்தது.
வல்லிக் கண்ணன் அவர்களின் எழுத்துகளில் படாடோபமோ, திகிலூட்டும் சம்பவங்களோ, செயற்கை அலங்காரச் சோடனைகளோ இருக்காது. இயல்பான நடையில், எவருக்கும் புரியும் நடையில், போகிறபோக்கில் கதை சொல்லும் பாங்கு இவருடையது. சிறுகதை, நாவல், கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பன்முகப்பட்ட ஆற்றல் மிக்கவர் வல்லிக்கண்ணன் என்பதை இதுவரை அச்சில் வெளிவந்த அவரின் 74 நூல்களிலிருந்தும் அறிந்துகொள்ள முடியும்.
‘சாந்தி நிலையம் என்னும் நிறுவனத்தின் மூலம் அவர் பல புனை பெயர்களில் துறையூரிலிருந்து வெளியிட்ட பிரசுரங்கள் அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேராதரவையும் பெற்றன.
அவரின் எழுத்தைப்போலவே வாழ்க்கையிலும் அவர் அமைதியானவர்; அடக்கமானவர்; எளிமையானவர்; இனிய பண்பாளர்; எழுத்தாளர்களை ஊக்குவிப் பதிலுஞ்சரி, அவர்களின் சுக துக்கங்களில் அக்கறை காட்டுவதிலும் சரி, அவர் ஒரு அன்புத் தந்தையைப்போல.
அவர் கிராம ஊழியன் பத்திரிகையின் பொறுப்பாசிரியப் பணியிலிருந்தபோது, பல இலங்கை எழுத்தாளர்களை கி.ஊ.வில் எழுத வைத்தார். சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் , சோ. தியாகராஜா போன்றவர்களின் படைப்புகள் அதில் இடம்பெற்றன. அக்காலத்தி லேயே ஈழத்து எழுத்தாளர்களின் ஆற்றல்களை உணர்ந்து அவர்களின் படைப்பு களை ஊக்குவித்தவர். தினமணி போன்ற பத்திரிகைகள் தமது ஆண்டு மலர்களில் அரசியல் பிரமுகர் அல்லது இந்துமதப் பெரியார் ஒருவரின் 36

கட்டுரையையே முதலாவது ஆக்கமாக முன்னுரிமை கொடுத்து விெயிடுவது வழக்கம். இன்னும் அது தொடர்கிறது. ஆனால் வ.க. அவர்களோ ஈழத்து எழுத்தாளரான சோ. தியாகராஜாவின் இலக்கியக் கட்டுரைக்கு முதலிடமளித்து கிராம ஊழியன் ஆண்டு மலரை வெளியிட்டு ஒரு புரட்சியையே அவர் செய்தார்! ஈழத்து எழுத்தாளர்மீது மிகுந்த பற்றும், அவர்களின் எழுத்தாற்றலில் பெரும் நம்பிக்கையும் கொண்டவர் வ. க. பல ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்கு அன்புடன் முன்னுரைகளை எழுதியுள்ளார். அம் முன்னுரைகள் வெறும் சம்பிரதாயத்துக்காக எழுதப்பட்டவையாக இருக்காது. ஒவ்வொரு கதை யையும் ஆழ்ந்து படித்து குறைநிறைகளை எடுத்துக்காட்டும் விமர்சனமாகவே அமைந்திருக்கும்.(உதாரணம்: எனது நிலவோ நெருப்போ? (1992), பத்மா சோமகாந்தனின் “வேள்வி மலர்கள்’(2001) சிறுகதைத்தொகுதிகளின் முன்னுரைகள்)
திரு வ.க. அவர்களுக்கு விருப்பமானவை வாசிப்பது, எழுதுவது மற்றும் இடங்களைச் சுற்றிப்பார்ப்பது என்ற போதிலும், அவர் அருகில் உள்ள இலங்கைக்கு வந்ததில்லை. சில தடவைகளில் அவரை இங்குள்ள அன்பர்கள் வருமாறு அழைத்த போதிலும், வெளிநாடுகளுக்கு சென்று வரும் சிரமங்கள் காரணமாக அவர் தட்டிக்கழித்துவிட்டார். ஆனால் 1996 ஜுலையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்த இலக்கியப் பேரரங்குக்கு அவரை எப்படியும் அழைக்க வேண்டுமென்ற உறுதியான எண்ணத்துடன் - அப்போது சென்னையில் வசித்த எழுத்தாள நண்பர் செ. யோகநாதனுடன் அவரைச் சென்று சந்தித்து எனது ஆவலை வெளியிட்டேன். முதலில் தயங்கியபோதும், என் அன்புக் கோரிக்கைக்கு, சிறிய புன்முறுவலுடன் சம்மதித்தார். அந்த விழாவில் எமது நாட்டின் மூத்த எழுத்தாளர் திரு வரதர் அவர்களின் இலக்கியப்பணியின் மணிவிழா ஆண்டுப் பாராட்டுவைபவத்தையும், தமிழக மூத்த எழுத்தாளர் வ.க. முன்னிலையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தேன். திரு. வ.க. அவர்கள் சாதாரணமாக சம்பாஷிக்கும்போதுதான் சாது. மேடையில் உரையாற்றத் துவங்கிவிட்டால் எவ்வளவோ தகவல்களை அள்ளிக்கொட்டும் ஆற்றல் மிக்க பேரறிஞர் என்பதை அவர் கொழும்பு, கண்டி, ஹட்டன், மாத்தளை, திருக்கோணமலையில் நிகழ்த்திய உரைகளில் கண்டு பிரமித்துப் போனேன். அப்போது நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைகாரணமாக, அவர் பார்க்க விரும்பிய கன்னியாய் நீருற்று, தலதா, அனுராதபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. 12 நாட்களில் அவர் ஆற்றிய இலக்கிய உரைகளே 20க்கும் அதிகம்! "நான் இலங்கை போனதும் வந்ததும் அங்கே தங்கிய நாட்களின் அனுபவங்களும் மனோகரமானவை” என அண்மையில் வெளியாகியுள்ள அவரின் வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதை) நூலில் குறிப்பிட்டுள்ளார்.
"வல்லிக்கண்ணன் போன்ற அறிஞர்கள் புதிதாக ஒன்றும் எழுதக்கூட வேண்டாம். தாங்கள் எழுத வந்த நாள்தொட்டு தமிழ்க் கலை இலக்கிய உலகம் சம்பந்தப்பட்ட தமது அனுபவங்களை எழுதினால் புதிய தமிழிலக்கியத்தின் சரித்திரத்தை அதன் தலை எழுத்தைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும். அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத்தக்கதும் 37

Page 20
வழிபடத்தக்கதுமாகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும், அந்த மாற்றங்களை, அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கபூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன் அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஒர் ஆத்மஜோதி அவர்” (ஜெயகாந்தன்)
கருமமே கண்ணாகக் கொண்டு பிரதிபலன் கருதாது கடந்த ஆறு தசாப்தங்களாகத் தொடர்ந்து இலக்கியப்பணி புரிந்துவரும் வ.க. அவர்கள் பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பாராட்டுகள் என்பவற்றிற்காக ஒருபோதும் ஏங்கியவர் அல்லர். ஆனாலும் அவை அடிக்கடி அவரைத் தேடிவந்து அவரின் தலையில் அமர்ந்து கொள்கின்றன.
வரதர்
தமிழ் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையாக அக்காலத்தில் விளங்கிய 'மணிக்கொடி தமிழ் நாட்டுக்கும் அப்பால், கடல் கடந்து இலங்கை யிலுள்ள இலக்கிய ஆர்வலர்களிடம் தனது தாக் கத்தை ஏற்படுத்தியது. அதனால் வசீகரிக்கப்பெற்ற அக்கால இளைஞர்களில் ஒருவரே நமது நாட்டின் I : மூத்த எழுத்தாளராக விளங்கும் "வரதர் அவர்கள். V
1-7-1924ல் பொன்னாலைக் கிராமத்தில் பிறந்த வரதர், பாடசாலை நாட்களிலேயே தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த பெரியாரின் பகுத்தறிவு இயக்க இதழ்களிலும், ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், சந்திரோதயம் போன்ற சஞ்சிகைகள், வடுவூர் துரைசாமிஜயர், வை.மு.கோதைநாயகிஅம்மாள் முதலியோரின் எழுத்துகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பொன்னாலை சமூகத்தொண்டு நிறுவனத்தின் கையெழுத்து இதழ், மற்றும் மூளாய் சைவப் பிரகாச வித்தியாலய மாணவர் மன்ற இதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராக இருந்து பாடசாலை நாட்களிலேயே தம் கைவண்ணத்தைக் காட்டினார். புதுமைப்பித்தனின் படைப்புகள் அவரை மிகவும் ஈர்த்தன. அக்காலத்தில் சுன்னாகத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த ஈழகேசரியின் கல்வி அனுபந்த இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ள வரதர், 1940ல், ஈழகேசரி ஆண்டு மலரில் தனது 16வது வயசில் எழுதிய 'கல்யாணியின் காதல்’ என்னும் சிறுகதை வாயிலாக இலக்கியப் பிரவேசம் செய்தார். மணிக்கொடி போன்ற ஒரு பத்திரிகையை இங்கும் நடத்த வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக 1943ல் எழுத்தார்வமுள்ள பல இளைஞர்களைச் சேர்த்து, அவ்வமைப்புக்கு (புதுமைப்பித்தன் மீது கொண்டிருந்த பேரபிமானங்காரணமாக) "புதுமைப் பித்தர்கள் சங்கம்” என நாமகரணஞ் செய்யப் பிரேரித்தித்தார். ஆனால் பல காரணங்களால் அது "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்” என்றே மலர்ந்தது. அவ்வமைப்புக் கையெழுத்து இதழான 'மறுமலர்ச்சி வரதரின் முன்முயற்சியால் 1946ல் மணிக்கொடி போன்ற அச்சமைப்பில் வெளிவரத் தொடங்கி பல எழுத்தாளர்கள் உருவாகுவதற்குக் களமாக விளங்கியது. அதன் இணையா சிரியர் களாக தி. ச. வரதராஜனும் (வரதர்) அ. செ. முருகானந்தனும் இருந் தனர். மறுமலர்ச்சி சஞ்சிகை சுமார் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே மாசாமாசம் 38
 

வெளிவந்தது. எனினும் ஈழத்து இலக்கிய வரலாற்றில், அது ஏற்படுத்திய தாக்கம் அழிக்க முடியாத சுவடுகளாகப் பதிந்துள்ளன. 'மறுமலர்ச்சி சிறுகதைகள் என்னும் பெயரில் அதில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்துள்ள எழுத்தாளர் செங்கை ஆழியான், இச்சஞ்சிகையின் இலக்கியத் தாக்கம் பற்றிச் சிறந்த விரிவான ஆய்வுக் கட்டுரையொன்றை அந்நூலில் எழுதியுள்ளார்.
தமது 16வது வயதில் சிறுகதைப் படைப்பாளியாகத் தம்மை அடையாளங் காட்டிய வரதர் இன்று ஆறு தசாப்தங்களின் பின்பு, நான்காவது தலைமுறை எழுத்தாளர்கள் தலையெடுத்த நிலையிலும், தமது படைப்புத் திறமையைக் காட்டிவருவதுதான் அவரிடமுள்ள தனிச்சிறப்பு.
வரதர் அவர்கள் அத்திபூத்தாற்போல் அரிதாகவே எழுதுவார். ஆனால் அப்படைப்புகள் அசல் முத்தாக ஜொலிப்பும் பெறுமதியும் கொண்டு என்றும் விளங்குபவை. சாதிக்கொடுமை, பெண்விடுதலை பற்றி - மற்றவர்கள் இங்கே சிந்திப்பதற்கு பல காலத்துக்கு முன்னரே, அவர் இவற்றிற்காக தமது படைப்புகளினூடாக ஓங்கிக் குரல் எழுப்பியிருக்கிறார்.
புதுக்கவிதை பற்றி பேசப்படுவதற்கு முன்னரே, அதற்கு முதலில் செயல்வடிவம் கொடுத்த முன்னோடியாகவும் அவர் விளங்குகிறார்.
வரதர் அவர்கள் பன்முக ஆற்றல் கொண்டவர். சிறுகதையாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், நூல்வெளியீட்டாளர் என அவரின் இலக்கியப் பணிகள் பல. மறுமலர்ச்சிக்குப் பிறகு ஆனந்தன், தேன்மொழி, (கவிதைக்கான தனித்துவச் சஞ்சிகை), வெள்ளி, புதினம், அறிவுக் களஞ்சியம் முதலிய சஞ்சிகைகளை தமிழுலகுக்குத் தந்தவர். சுமார் 35 நூல்களைத் தந்து "வரதர் வெளியீடு நிறுவனம் வாயிலாக வெளியிட்டு, எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். “வரலாறு என்ற வழிநடைப்பாதையில் சுவடுகள் பதித்த வரதரின் முனைவுகள்” (முருகையன்)
புதிது புதிதாக ஏதாவது செய்யவேண்டும் - அதில் புதுமையும் இருக்க வேண்டுமென ஓயாது சிந்தித்துச் செயலாற்றுபவர். பழகுவதற்கு இனிய பண்பாளர்; அவருக்கு அதிர்ந்து பேசத்தெரியாது. அடக்கமே உருவாக இருப்பார். மற்றவர்களுக்கு ஊக்கமளித்து எழுதத் தூண்டுவதில் மகா சாமர்த்தியசாலி. ஆற்றல்மிக்க இளம் எழுத்தாளர்களிலிருந்து மூதறிஞர்வரை, பலரை உற்சாகமூட்டி எழுதுவித்து, அவ்வாக்கங்களைத் தமது செலவில் நூலாக்கி அளித்தவர் வரதர் அவர்கள்.
"ஈழத்தின் தமிழர் நிலைப்பட்ட அனுபவங்களை மிகுந்த உணர்வுத் திறனுடன் பதிவு செய்துள்ள படைப்புகளுள் வரதரின் புனைகதைகள் இடம் பெறுவன. அவர் கதைகளில் மனித அவலவேளைகளில் ஏற்படும் விழுமியச் சிதைவு, மிகுந்த நுண்ணுணர்வுடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமூகப் பாங்கான எழுத்துக்களால் இவர் சமூகத்தின் பொதுவான முற்போக்குச் செல்நெறிக்கு ஆதரவு நல்கினார். வரதரின் இலக்கிய முக்கியத்துவம் அவரது இலக்கியப் பிரசுர முயற்சியாலும் அழுத்தம் பெறுகிறது. வரதர் இன்று ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களிடையே மதிப்புமிக்கதொரு மூத்தோனாக விளங்குகிறார். (போராசிரியர் கா.சிவத்தம்பி)
விழா, விருது பரிசில் என எதற்குமே ஆசைப்படாத இலக்கிய
39

Page 21
மூத்தோனாகிய வரதரின் பவள விழாவை யாழ் இலக்கிய வட்டம் மிகப் பொருத்தமான வகையில் கொண்டாடியுள்ளது. மூத்த படைப்பாளியின் பவளவிழாவையொட்டி நண்பர் செங்கை ஆழியான் எழுதி வெளிவந்துள்ள "ஈழத்துச் சிறுகதை வரலாறு என்னும் பாரிய நூல் காலத்தின் தேவை மட்டுமல்ல, வரதர் அவர்களின் பாரிய பணிகளுக்கு ஈழத்து இலக்கிய உலகம் அளித்த அர்த்தமும் பெறுமதியும் மிக்க காணிக்கை ஆகும். இருவரும்
வல்லிக்கண்ணனும் வரதரும் நமது தலைமுறையின் முன்னோடிப் படைப்பாளிகளில் இருவர். இவர்கள் இருவருமே தமது இளமைக்காலம்முதல் இன்றைய முதியகாலம்வரை, காலத்திற்கேற்பத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள். இவர்களின் எழுத்தும் செயற்பாடுகளும் எல்லாவயது இலக்கிய காரர்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் தருவன. அதனால் இவ் விருவரும் ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஏதோ ஒருவகையில் நன்கு பரிச்சயமாகி அவர்களின் மனப்பூர்வமான மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்கள். இவர்களின் நீண்டகால இலக்கிய அர்ப்பணிப்புக்காக, அண்மையில் இவர்கள் கெளரவிக்கப்பெற்றிருப்பது மிகப் பொருத்தமானது.
இவர்கள் இருவரையும் பாராட்டுவதில் தமிழ் இலக்கிய உலகம் பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.
"அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக்கொளல்
டாங்கிகள் உழுது கிளறிய N நிலங்களில் கண்ணிகள் விதைக்கப்பட்டன; எண்ணிடாத எங்கள் சிறுசுகள் கால்களைப் புதைக்க ‘டும்"மென முழங்கி சாவுகள் அறுவடையாக வீடுகள்தோறும் அவலங்களின் களஞ்சியம் நிரம்பி வழிகிறது;
9 lus வன்னி பொன்விளையும் பூமி, ஆனால்
பிணம் விளைகிறதே;
ஏனர்?
போரோய்ந்த பின்னும் மழலைகள் நாராய்க்கிழிந்து சாக நாமென்ன செய்தோம் யார்க்கும்?
 

தடிதல் ஐப்பசிச் சதய விழா வமகேஸ்வரன், தஞ்சாவூர்.
கடந்த மாதம் 13,14ஆம் திகதிகளில் தஞ்சைப் பெரியகோயிலில் இராஜராஜனின் ஜென்ம நட்சத்திரமான “ஐப்பசிச் சதயத்தில் பெருவிழா ஒன்று நடந்தது. இராஜராஜன் சிலைக்கு மாலை மரியாதை, அபிஷேகம், ஊர்வலம், வாண வேடிக்கை என ஒருபுறம் நிகழ, இன்னோர்புறம் பிரமாண்டமான சொக்கட்டான் பந்தலின்கீழ் பகல் இரவு என கருத்தரங்கு, பட்டி மன்றம், வழக்காடு மன்றம், இசை, நடனம் என நாள் முழுதும் நிகழ்ச்சிகள் நடந்தேறின. அவற்றுள் எழுதத் தூண்டிய இரு நிகழ்ச்சிகள் பற்றிய மனப்பதிவே இவை, முதல் நாள் நிகழ்ச்சியில் பத்மா கப்பிரமணியத்தின் நர்த்தனம் இடம்பெற்றது. மேடையில் அரங்கேறி ஆடத்தொடங்கி 46 வருடங்களைக் கடந்த நிலையிலும் அவரது நடனத்தின் நேர்த்தியை என்னவென்று உரைப்பது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்"- என்ற அடிகள் ஒவ்வொன்றுக்கும் அவர் காட்டிய பாவங்கள் இருக்கே. அப்பர்கூட அப்படி அனுபவித்திருப்பரோதெரியாது. ரக தாள ஒத்திசைவும் பாவங்களை வெளிக்
இரண்டாம் நாள் நிகழ்வில் கலாநிதிகள் - நவநீத கிருஷ்ணன் தம்பதியினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. நாட்டுப்புற இசைகளையும் வெவ்வேறு பரிமாணங்களையும் வெகுசன கலாசாரத்துக்கு கொணர்ந்தவர்கள் இவர்கள் என்ற வகையில் இருவேறு கருத்துக்கு இட மில்லை. ஆனால் பத்து வருடத்துக்கு முன்பு இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் இப்போது பார்த்தால் மிகவும் ஏமாந்துதான் போவர். முழுவதும்
மட்டுமே இவர்களது பாடுபொருள். வேறு தொழில் முறைகளும் சடங்குகளும் கிராமியத் தன்மையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை. இதைவிட
குழுநடனம் ஆடுவதுதான். சினிமாத்தனத்தின் அப்பட்டமான பாதிப்பாகத்தான் இது தெரிகிறது. கிராமியக் கலைகளின் மீட்டுருவாக்கம் என்பதைத் தவறாக அர்த்தம் செய்துள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. எனினும் நான்கு மணி நேரத்தில் எந்தவித பிசிறில்லாமல், ஒரு நொடிகூட இடைவெளியில்லாது, பிரமாண்டமான நிகழ்ச்சிகளல் மக்களைக் கட்டிப்போடுவதுதான் அவர்களது வெற்றியின் இரகசியம், நாள் முழுக்க உழைக்கும் மக்களின் உள, உடல் பாதிப்புகளுக்கு ஒத்தடம் கொடுக்கும், "டானிக் கொடுக்கும் இத்தம்பதியர் பாராட்டுக்குரியவர்களே.
4.

Page 22
நெற்றிக்கண்
நால் விமர்சனம்
நூல் :மாற்றங்களை
ம்றுப்பதற்கில்லை எழுதியவர்:நீ.பி.அருளானந்தம்
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை பல்வேறு காலகட்டங்களில் புதிய புதிய பரிமாணங்களைப் பெற்று
வளர்ந்து வந்துள்ளது. பழம்பெரும்.
எழுத்தாளர்களுடன் புதியவர்கள் சிலரும் அவ்வப்போது தம் ஆற்றலை வெளிப்படுத்த முனைவதுண்டு. அவ் வகையில் , ஈழத்துச் சிறுகதை உலகுக்குப் புதியவரான நீ.பி.அரு ளானநீதத்தின் மாற்றங்களை மறுப்பதற்கில் லை (2002) ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதைத்தொகுதி யாக வெளிவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த அவரது சிறுகதைகள் பன்னிரெண்டு நூல்வடிவம் பெற்றுள்ளன.
நீ.பி.அருளானந்தம் புதுமை யாகச் சிந்திப்பவர், யதார்த்தபூர்வமாக எழுதுபவர் என்பதை இத்தொகுதி யிலுள்ள அவரது சிறுகதைகள் காட்டுகின்றன. சமுதாயத்தில் தாம் கண்டும் கேட்டும், அனுபவித்தும் உணர்ந்தவைகளைச் சிறுகதைப் படைப்புகளாகக் கதாசிரியர் தந்துள் ளார். சமுதாயம் பற்றித் தாம் உணர்ந்தவற்றை நேர்மையோடு புலப்படுத்தும் திறன் தமக்கு உண்டு என்பதை தமது ஒவ்வொரு படைப் பிலும் அருளானந்தம் உணர்த்த முயற்சிக்கிறார். ஒவ்வொரு பாத்திரத் தையும் அதன் இயல்பு குன்றாமல் படைப்பதில் அவர் அக்கறை செலுத்தி யுள்ளார்.
42
அவரது படைப்புகளுள் அம்மாவுக்குத்தாலி, தாகம், எங்கள் தேசத்தின் சங்கதி, ஓய்வூதியம், சாமியார் பைத்தியம், மாற்றங்களை மறுப்பதற்கில்லை, சக்கரம் சுழலும், முதலான சிறுகதைகள் குறிப்பிடத் தக்கவையாக விளங்குகின்றன. இத்தகைய படைப்புகள் ஓரளவு கலைத்துவத்தோடு அமைந்துள்ளன. ஆயினும், நீ.பி.அருளானந்தம் தமது படைப்புத்திறன் தொடர்பாக மேலும் சற்று ஆழமாக முயற்சிக்கவேண்டும். கதை சொல்பவராக அன்றிக் கதா சிரியராக அவர் உயரவேண்டும். சமுகநோக்கும் கலைத்துவமும் கைகோர்த்துச் செல்லும் போது, அருமையான சிறுகதைப் படைப்புகள் அவர் மூலம் கிடைப்பதற்கு வாய்ப் புண்டு.
சில இடங்களில் அவரது பாத்திரங்கள் செந்தமிழ் பேசத்துடிக் கின்றன(தாகம்). ஆயினும் கதாசிரியர் அப்பாத்திரங்கள் அவ்வாறு பேசு வதற்கு அனுமதிக்கக்கூடாது. அவற் றைக் கட்டுப்படுத்தி, அவற்றுக்கு இயல்பான பேச்சுவழக்கிலேயே பேச வைக்கவேண்டும்.
நீ.பி.அருளானந்தம் சிறு கதைத்துறையில் வளர்ந்துவிட்டார் என்பதை, மாற்றங்களை மறுப்பதற் கில்லை என்ற இத்தொகுதி இனங் காட்டவில்லை. ஆனால், எதிர்காலத் தில் ஈழத்தில் தரமான சிறுகதை எழுத்தாளர் ஒருவர் வளரப்போகிறார் என்பதற்கு, இத்தொகுதி உண்மையி லேயே கட்டியம் கூறி நிற்கிறது.

பயங்கொள்ளலாகாது
LLL எழுதியவர்: ச.அருளானந்தம்
இலங்கைச் சிறுவர் இலக் கியம் நீண்ட வரலாற்றைக் கொண்ட தாக இருப்பினும், சிறுவர் இலக்கியத் துறையில் ஈடுபட்டோர் பெரும்பாலும் சிறுவர் பாடல்கள், சிறுவர் நாடகங் கள், சிறுவர் கதைகள் போன்ற துறை களிலேயே அதிக ஆர்வத்தைச் செலுத்தியுள்ளனர். ஆயினும் சிறுவர் நாவல் துறையில் கவனம் செலுத்தி னோர் மிகக் குறைவானவர்களே. க.நவசோதியின் ஒடிப்போனவன் என்ற நூலே இத்துறையில் முதல் முயற்சி யாக விளங்குகிறது. அவரைத் தொடர்ந்து இத்துறையில் ஈடுபாடு கொண்டோர் மிகச் சிலரே. அவர் களுள் ஒருவராகச் ச.அருளானந்தம் விளங்குகிறார். பொதுவாகவே சிறுவர் இலக்கியத்துறையில் அதிக ஈடுபாடு காட்டிவரும் அவரின் சிறுவர் நாவ லாகப் பயங்கொள்ளலாகாது பாப்பா (2000) என்ற நூல் அமைந்துள்ளது. சிறுவர்களைப் பல்துறை வாசிப்புக்கும் பக்குவம் உடையவர் களாக வளர்க்கவேண்டும். பாடத் திட்டத்தைத் தவிர பிற விடயங்களை அறியாத முறையில் பிள்ளைகள் வளர்வதும், வளர்க்கப்படுவதும் உண்டு. இந்த நிலையில், இத்தகைய நூல்களின் வரவு அவசியமாகின்றது. ஓரளவுக்கு இந் நாவல் முயற்சி ஆங்கிலத்தில் எனிட் பிளைற்றணின் சிறுவர் நாவல்களை ஞாபகமூட்டு கிறது. ஆயினும், திருகோணமலைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு அப்பிரதேசத்தின் மணி வாசனை கமழும் முறையில் நாவல் ஆக்கப் பட்டுள்ளது. கதை கற்பனையானதாக
நூல்
43
இருப்பினும், நேரில் காணக்கூடிய மாந்தர்களைப்போன்ற பாத்திரங் களைக் கதாசிரியர் இயல்பாக வளர்க்க முயற்சித்துள்ளார். சிறுவர் களின் வாசிப்பு அனுபவத்திற்கேற்ப சுவாரசியமான முறையில் அருளானந் தம் கதையை நகர்த்திச் செல்கிறார். சிறுவருக்கேற்ற எளிமையான நடை யைக் கதாசிரியர் பயன்படுத்திருப்பது வரவேற்கத்தக்கது. திருகோணமலைப் பிரதேசம் தொடர்பான பல தகவல் களை வாசகர் அறியச் செய்வதிலும் அவர் அக்கறை காட்டியுள்ளார்.
சிற்சில இடங்களில் பாத்திர உரையாடல்களில் இரட்டை மேற் கோள் குறிகள் சரிவர இடம்பெற வில்லை. "புறுப் பார்க்கும்போது இவற்றைக் கவனித்திருக்கலாம். எந்த நூ லாயினும் அச்சுப் பிழைகள், குறியீட்டுப்பிழைகள் இடம்பெறாது பார்த்துக்கொள்வது அவசியமானதே. ச.அருளானந்தத்தின் பயங் கொள்ளலாகாது பாப்பா என்ற நூல் சிறுவர் நாவல் துறையில் வரவேற் கத்தக்க முயற்சி. அவர் இத்துறையில் மேலும் ஈடுபடுவது இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.
M நெற்றிக்கண்” N விமர்சனம்
எழுத்தாளர்களே, நெற்றிக் கணி பகுதியில் உங்களது நூல்விமர்சனம் இடம் பெறவேணர் டுமெ னில், நூலின் இருபிரதி களை அனுப்பிவையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப் பினால், நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம் \பெறும். ஆசிரியர்.)

Page 23
ஆறுமுக நாவலரின் கந்தபுராண கலாசாரம் கந்தபுராண கலாசாரம் எந்தவிதத்திலும் தமிழர் கலாசாரமாகாது. எனினும், இது போன்றதோர் புராணக் கலாசாரம் தமிழ்நாட்டில் காரைக்கால் அம்மையாரால் (கி.பி. 5ம் நூற்றாண்டு) தோற்றம் பெற்ற பின்பு அது அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பெரிதும் பேணி வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தப் புராணக் கலாசாரமே அங்கு பக்தி வெள்ளமாகப் பாய்ந்து அறிவுபூர்வமாக பெளத்த, சமண சமயங்களை மக்கள் நிராகரிக்க வழி கோலியது.
இவ் வரலாற்றுண்மையை நன்கறிந்திருந்த ஆறுமுகநாவலர் தமது மண்ணில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைத் தடுத்துநிறுத்திட கந்தபுராணத்தைக் கையில் எடுத்தார். நாவலர் நம்பியதைப்போல் கந்தபுராணக் கலாசாரம் கிறிஸ்தவத்தின் வேகத்தைத் தடுத்து நிறுத்தியதோடு சைவசமய நெறியை அந்த மண்ணில் ஒரு பெரும் வைதீக நிறுவனமாக்கியது.
நாவலரின் இந்தச் செயற்பாடு பண்டைத்தமிழர் கலாசாரத்தின் அடிப்படைக் கூறுகளை யாழ்ப்பாணத் தமிழர் கைவிடச் செய்ததோடு அவர்களை ஆரிய கலாசாரத்தை தழுவிய வெறும் இந்து சமயிகளாகவும் சடங்கு மனிதர்களாகவும் மாற்றியமைத்தது.
இயல்பாகவே சாதி உணர்வு மிக்க நாவலர், கந்தபுராணத்தைக் கட்டியனைத்தமை ஒன்றும் வியப்புக்குரியதல்ல. எனினும், கந்தபுராணக் கலாசாரம் யாழ்ப்பாண மண்ணில் கால் வைக்கும் முன்பு அங்கு சாதியத்தை பெருமளவில் கொண்டுவந்து குவித்தவர்கள் குறிப்பிட்ட காலகட்டங்களில் தமிழகத்தில் இருந்து குடியேறிய மக்களே என்பது சரித்திரம்.
நாவலரின் கந்தபுராணக் கலாசாரமே திருகோணமலை கே.யதிந்திரா சொல்வதுபோல் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வந்த சிறுதெய்வ வழிபாடு, கிராமியக் கலைகள் என்பன சிதைந்துபோகவும் வேளாளரின் மேலாதிக்கம் வலுவடையவும் காரணம் ஆயிற்று.
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்து சங்கராச்சாரியார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஈழத்தில் உண்மையான தமிழ்த் தேசிய உணர்வை உருவாக்க வேண்டுமாயின், தமிழகத்தில் போலன்றி இங்கு மறைமுகமாக இருந்துகொண்டு தமிழர் கலாசாரத்தை கபஸ்ரீகரம் செய்துவரும் ஆரிய கலாசாரத்தை முற்றாகத் துடைத்தெறிதல் அவசியமாகும். - வாகரைவாணன்.
சென்ற(நவம்பர்) இதழில் கே.யதிந்திரா எழுதிய வாசகர் பேசுகிறார்
பகுதிக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 'பறையும் பஞ்சமரும்,
பெண்களும் அடிவாங்கப் பிறந்தவர்கள் என அவர் எடுத்துக்காட்டிய நாவலரின்
கூற்று எனது மனதில் குருதி கசியக் குத்திக்கொண்டே இருக்கிறது. இப்படியான 44
 

ஒரு கேவலமான ஒரு கூற்றை - அது எழுதப்பட்ட சமூகச் சூழல் வேறாக இருந்தபோதும் எப்படி அவரால் எழுத முடிந்தது என வேதனைப்படச் செய்கிறது. யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியப் பாகுபாட்டை மீளுருவாக்கம் செய்தமை, சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கு மாறான புதிய கோயில் கலாசார முறை அறிமுகப்படுதல், கிராமியக் கலைகளுக்குப் பதிலாகத் தமிழகத்துக் கலைகளான கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகியன அறிமுகப்படுத்தப் பட்டமை ஆகியவற்றில் நாவலரின் பங்கு பற்றிய அவரது பார்வையும் புதிய சிந்தனைகளை என்னுள் தூண்டிவிட்டது.
நீண்ட காலத்தின் பின் ரத்னசபாபதி அய்யரின் நல்ல சிறுகதையைப் படித்ததில் மனதிற்கு இதமாக இருந்தது. பறவைகள் பற்றி புலோலியூர் சதாசிவத்தின் பார்வையும் வித்தியாசமாகவும் ஆழமாகவும் இருக்கிறது. சிறுகதை, நாவல் துறைகளில் தடம் பதித்த சதாசிவம் விமர்சனத்துறையிலும் மின்னுவார் என்பது தெரிகிறது. - டாக்டர் எம்.கே.முருகானந்தன், கொழும்பு.
கந்தபுராண கலாசாரமும் சாதியமும் - தவறான புரிதலும், பதிலும். கந்தபுராண கலாசாரத்தின் சாதிப்பாகுபாடு பற்றிய யதீந்திரா அவர்களின் பதில், அவர் எனது கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. "கந்த புராணக் கலாசாரம் சாதியப் பாகுபாட்டிற்கு எதிரானது " என்று நான் கூறுவதாக அவர் தெரிவித்திருப்பது தவறு.
என்கூற்று பின்வருமாறு, "உண்மையில் கந்த புராண அடிப்படையில் தோன்றிய கலாசாரம் சாதிப் பாகுபாட்டை எதிர்க்கவேண்டும்.” (இக்கூற்றே கந்த புராண கலாசாரம் சாதிப் பாகுபாட்டை எதிர்க்கவில்லை என்கிறதே)
என்னுடைய கருத்து ஈழத் தமிழர்களிடம் பண்டு தொட்டு நிலவிவந்த சாதிப்பாகுபாடு கந்த புராண கலாசாரத்தைப் பாதித்ததே ஒழிய, யதீந்திரா சொல்வது போல் "சாதியம் கந்த புராணத்தின் பெறு பேறு" என்ற முன்மொழிவு பொய் என்பதே.
உண்மையில் நாவலர் முதலியோர் பண்டைய மரபின் தொடர்ச்சியான சாதியத்தில் இருந்து விடுபட முடியாநிலையில் இருந்தனர். வருணப்பாகுபாட்டை ஏற்றுக்கொண்டு நம்பியமை நாவலருடைய தூரநோக்கு இன்மையையே காட்டுகிறது. எனினும் இறுக்கமான பிறப்பு அடிப்படையில் பேணப்பட்டுவந்த சாதியத்தை ஒழுக்க அடிப்படையில் கொள்ள வேண்டுமெனும் "புரட்சிகர உள்ளம் அந்த மிக இறுக்கமான சமுதாயத்திலும் கந்தபுராண கலாசார மூலவரிடம் இருந்தது என்பதை உணரவேண்டும். "பிராமணனாயினும் ஒழுக்க மில்லாதவனாயின் சூத்திரன் எனப்படுவான். சூத்திரனாயினும் ஒழுக்கமுடையவ னாயின் பிராமணன் எனப்படுவான்"( நான்காம் பாலபாடம்) என்கிறார் நாவலர். சாதிய நோய் கடுமையாகப் பிடித்திருந்த சமுதாயத்தில் ஒழுக்கத்தை முன்னிறுத்துகிற இந்தக் குரல் எவ்வளவு முக்கியமானது. என்பதைப் புரிதல் அவசியம். இதைப் பல இடங்களிலும் எம்மாற் காணமுடியும்.
இனி, யதீந்திரா அவர்களுடைய பதிலிலிருக்கிற வரலாற்றுணர்ச்சி யில்லாத சில இடங்களின் தவறுகளை நோக்கவேண்டும்.
1. நாவலருடைய பார்வையில், சைவ வேளாளரும் வேளாளருடன்
45

Page 24
தன்மயமாகிவருகின்ற சாதிப் பிரிவினரையும் தவிர ஏனையவர்கள் மனிதர்களாகவே தெரியவில்லை" என்கிறார் யதீந்திரா. பின்வரும் நாவலர் கூற்றை நோக்குக,
“இங்கே நளவருள்ளே சிலர் கள்ளுக் குடிப்பதை விட்டும், பறையருள்ளே சிலர் மாட்டிறைச்சி தின்பதைவிட்டும் திருத்தமடைகிறார்கள். இவர்கள் யோக்கியர்களா?(பிரபந்தத் திரட்டு)
இங்கு கள்குடித்தல், புலால் உண்ணல் என்பவற்றையே அடிப்படையாக வைத்து நாவலர் யோக்கியர்களைக் கணிப்பதை அறிக. யதீந்திரா சொல்வதுபோல இல்லாமல், நாவலர் எக்குலத்தினராயினும் மேற்படி குற்றம் விட்டோரை சாதாரண மனிதர்களாக அல்ல, "யோக்கியராகவே" கொண்டுள்ளார் என்பதைக் கண்டுணர்க.
2. "கோயில்களில் பேணப்பட்ட கிராமியக் கலைகள், வாத்தியங்களுக் குப் பதிலாகத் தமிழகத்துக் கலைகள்ான கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன” இது யதீந்திராவின் கூற்று. பரதநாட்டி யம், கந்தபுராணக் கலாசார மூலவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என்பது வரலாற்றறிவில்லாத கூற்று. பின்வரும் சான்றாதாரம் காண்க,
“கி.பி. 11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சோழப்பெருமன்னர் ஆட்சியின்போது தமிழகத்துப் பரதக்கலை முன்னையிலும் நன்கு பரவ வாய்ப்பு ஏற்பட்டது."(வி. சிவசாமி, இலங்கையில் பரதம்).
மேலும், நாவலரால் அறிமுகப்படுத்தப்பட்டது கர்நாடக சங்கீதமல்ல, கொண்டுவரப்பட்டது தமிழ்ப் பண்ணிசையே. பின்வரும் குறிப்பை நோக்குக. བ... தேவாரம் முதலியவை திருவிழாக் காலத்திலே சுவாமிக்குப் பின்னால் ஒதுவதால் சனங்களுக்குண்டாகும் கடவுட்பக்தியையும் இவ் யாழ்ப்பாணத்துச் சனங்களுக்குக் காட்ட நினைத்து திருவாவுடை துறைநின்று ஒதுவார் சிலரை அழைப்பித்து சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஒதுவித்துக்கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஒத, அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஒதுவாராயினார்கள்." (ஆறுமுக நாவலர் சரித்திரம்)
3. "ஈழத்தமிழர்களின் தனித்துவமான கலைகளைச் சிதைத்த பெருமையும் ஆறுமுகநாவலரையே சாரும்” என்று தவறாகக் குறிப்பிடுகிறார் யதீந்திரா. உண்மையில் இப்பெருமை சுதேசியர்களுடைய அனைத்தையும் தயவின்றி அழித்த அந்நியர் ஆதிக்க சக்திகளையே சாரும். பின்வரும் சான்று நோக்கப்படவேண்டும்.
"போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோரின் படையெடுப்புகளாலும், அவர்களாட்சியின் போது பின்பற்றப்பட்ட சுதேசக் கலையழிப்புக் கொள்கை யாலும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களிலிருந்த கோயில்கள் முதலியன அழிக்கப்பட்டன. சிற்பம், ஓவியம், இசை, நடனம் முதலியன இந்துக்களிடையே பெரும்பாலும் கோவிற் கலைகளாகவே நிலவிவந்தன. கோவில்கள் அழிக்கப்பட்டபோது அவை சார்ந்த கலைகளும் ஆதரவின்றி மங்கி மறையலாயின". (வி.சிவசாமி, தென்னாசிய சாஸ்திரீய நடனங்கள்).
4. "யாழ்ப்பாணத்துக் கலாசாரத்தை நாவலர் பிராமணியர் தலைமையில்
46

ஆகமமயப்படுத்தினார்” என்பது யதீந்திராவின் கூற்று. பின்வரும் சான்று மிகப் பண்டைக்காலத்திலேயே பிராமணர் பெற்ற பெருஞ்செல்வாக்கைக் காட்டும். பெளத்த சமயம் பரவுவதற்கு மிக முற்பட்ட காலத்தில், இலங்கையில் பிராமணர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது மகாவம்சத்திலுள்ள குறிப்புகளால் அறியப்படுகிறது. அவர்களில் சிலர் பெரு நிலக்கிழார்களாகவும், செல்வர்களாகவும் காணப்பட்டனர். பிராமணர்களைப் பற்றிய பிராமிச் சாசனங் களிலுள்ள குறிப்புகள் மகாவம்சம் சொன்னவற்றை உறுதிப்படுத்துகின்றன. (சி.பத்மநாதன், இலங்கையில் இந்து கலாசாரம் பகுதி-1)
பின்வரும் நாவலரின் கூற்று, அவர் பிராமணர் தலைமையில் ஆகம மயப்படுத்தினாரா? என்பதைத் தெளிவாக்கும்.
"பசி, தாகங்கள் எல்லாச் சாதியாருக்கும் உள்ளனவேயாகவும், பிராமணருக்கு அன்னதானம் செய்வதே தருமமென்றும், மற்றச் சாதியாருக்கு அன்னதானம் செய்வது தருமம் அன்றென்றும் நம்மவர்கள் பெரும்பான்மையும் எண்ணுகிறார்கள். இவ் விபரீத சிந்தனையிலாலன்றோ நம்மவர்கள் பெரும்பான்மையும் சத்திரத்திலே பிராமணருக்கு மாத்திரமே அன்னதானம் செய்கிறார்கள்” (நான்காம் பாலபாடம்)
5. சிறுதெய்வ வழிபாட்டில் அமைப்புற்றிருந்த யாழ்ப்பாணக் கலாசாரத்தை நாவலர் ஆகம மயப்படுத்தினார் என்ற கருத்துப்பட யதீந்திரா கூறியுள்ள கூற்றின் வன்மை, மென்மையை பின்வரும் சான்றின் மூலம் தீர்மானிக்கலாம்.
"இலங்கைத் தமிழ் மக்களிடம் பண்டைக்காலந்தொட்டு இருவகையான தெய்வ வழிபாடுகள் இருந்து வருகின்றன. முதலாவது ஆகம வழிபாடு. இரண்டாவது கிராமிய வழிபாட்டு முறை. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் நாட்டுவழிபாடுகள் தடைப்படுத்தப்பட்டு கிறிஸ்தவ வணக்கம் ஆட்சியாளரால் நிறுவப்பட்டது". (க.கணபதிப்பிள்ளை, ஈழத்து வாழ்வும் வளமும்)
இவ்வாறு, குற்றம் போர்த்துக்கேயர் முதலிய ஆதிக்க சக்திகளிடம் இருந்தாலும், அவர்களைக் காப்பாற்றி நாவலர் மீது வேண்டுமென்றே "திணிக் கும்” போக்கு தவறானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இவற்றின்மூலம் "கந்தபுராணக் கலாசாரத்தின் பெறுபேறு அல்ல சாதியம்” என்பதை உணர்ந்து கொள்ளலாம். உண்மையில், கந்தபுராணக் கலாசாரத்தினரிடமிருந்துதான், “பிறப்பு முறையில் அமைவதல்ல சாதியம்” என்ற கருத்து தெளிவாக வந்துள்ளது என்பதையும் நாம் தெளிந்து கொள்ள முடிகிறது.
- ரீ பிரசாந்தன், (விரிவுரையாளர், பேராதனைப்பல்கலைக்கழகம்) "ஞானம்’ இதழ்கள் ஈழத்தின் இலக்கியவாதிகளிடம் அடையாளம் கண்டுள்ளது. மானுடத்தின் தமிழ் கூடல் - தங்கள் வரவு அதனை உறுதி செய்கின்றது. இரண்டு டாக்டர்கள் ஆசிரியர்களாக இருப்பது புதிய பரிணாமம். அறிவியலைச் சுமந்து கவிதை, கதைகளில் கட்டுரைகளில் சிகரங்களை நோக்கி நகருங்கள். உலகத் தரம்மிக்க கவிதை, கதை ஞானத்தில் பிறக்கின்ற கீற்று தெரிகின்றது. - நல்லை அமிழ்தன் 47

Page 25
உங்கள் பணியும் முயற்சிகளும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
ஞானத்தின் எழுத்துக்கள் தெளிவாக, நன்றாக உள்ளன. கலைவாதி கலீல் குறிப்பிட்டிருந்த Layout விடயத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.
எம்.அனஸ், (சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப்பல்கலைக்கழகம்)
டிசம்பர் மாத “ஞானம்" மிகவும் சிறப்பாக, ஒரு மூத்த எழுத்தாளருக்கு சூட்டிய கிரீடமாக அமைந்திருந்தது. எழுத்தாளர் கே.கணேஷ் பற்றி அறிந் திராத பல விடயங்கள் அறியவைத்தமைக்கு நன்றி. அத்தோடு எழுத்தாளர் கே.கணேஷினது ஏதாவது ஒரு மொழிபெயர்ப்பையோ, அல்லது ஒரு சிறுகதை யையோ பிரசுரித்திருந்தீர்களேயானால், பெரும் சிறப்பாக இருந்திருக்கும்.
சுதர்மமகாராஜன், கெங்கல்ல, கண்டி,
"ஞானம்" டிசம்பர் இதழ் கிடைத்தது. யாழ் பல்கலைக்கழகததில் "டானியலின்" படைப்புகள் பற்றி மாணவர்கள் ஆய்வு செய்வது வழக்கம். இப்பொழுது "செங்கை ஆழியானின்” படைப்புகள் பற்றி கொடிகாமம் கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் B.A தனது M.Phil பட்டத்திற்காக ஆய்வு செய்கின்றார். அதுமாதிரி பேராதனை தமிழ் துறையினர் பல்கலைக்கழகத்தில் கே.கணேஷ் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளவேண்டும்.
சி.குமாரலிங்கம், 96, செட்டி தெரு, நல்லூர்.
எழுத்தாளர் கே.கணேஷின் சிறப்பு மலர் கண்டேன். இதுவரை எமக்குத் தெரியாத கே.கணேஷ் பற்றிய தகவல்களை இதன்மூலம் தெரிந்து கொண்டேன். அதே இதழில் 'மத்திய மாகாண சாகித்திய விழா' பற்றிய தகவலும் இடம் பெற்றிருந்தது. கலைஞர்கள் விருது பெற்ற வரிசையில் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் விருது பெற்ற வரிசையில் கவனிக்கப்படவில்லை. அவரை ஏனோ தானோவென்று இறுதி நேரத்தில் கெளரவித்தார்கள். இதனால் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கவலைப் பட்டார்கள். எஸ்.வசந்தகுமாரி, டெல்டா, புஸ்ஸல்லாவை.
பேரன்புடையீர்! பணிவான வணக்கம். டிசம்பர் 2002, எழுத்தாளர் கே.கணேஷ் சிறப்புமலர் ஞானம் கிடைக்கப்பெற்றேன். எனக்கு உடன் 6 பிரதிகள் அனுப்பி வைக்கவும் என்னிடம் தமிழ் பயிலும் இறுதியாண்டு மாணவர் களின் வேண்டுதல் இது. பாடத்திட்டத்தில் கே.கணேஷ் அவர்கள் இடம்பெறு கிறார். மொழிபெயர்ப்பு இங்கு தமிழ் படிக்கும் மாணவர்களுக்குத் தனி வினாப் பத்திரம்; முற்போக்கு எழுத்தாளர் வரிசையும் நோக்கற்பாலது. கே.நாகேஸ்வரன்(சிரேஷ்ட விரிவுரையாளர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்)
எழுத்தாளர் கே.கணேஷ் சிறப்பு மலராகி வெளிவந்துள்ள ஞானம், இலக்கியத்தரத்தில் மேலும் பல படிகள் உயர்ந்துள்ளதை வெளிக்காட்டியுள்ளது. மேலும் பணிதொடர வாழ்த்துகிறேன். - மொழிவரதன், கொட்டக்கலை.
"இலக்கியக் கடல்” என வர்ணிக்கக்கூடிய கே.கணேஷ் அவர்களின் இலக்கியப்பணி இலக்கிய ஆழ்கடல் என அதீதமாக வியந்து கூறுமளவிற்கு உயர்ந்தது. தற்கால் நவீன இலக்கியத்துள்ளாழ்வோருக்கு கணேஷ்
48

போன்றோரை எடுத்துக் காட்டுதல் மிகமிக அவசியம். அந்தப்பணியைச் செய்த ஞானத்தின் ஞானம் போற்றத்தக்கதே!
ஏற்கனவே, அ.ந.கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், எம்.எஸ்.எம். இக்பால், பி.இராமநாதன் ஆகியோரைச் சந்திக்கும்போதும், முரீ கணேஷ் பற்றியும், அவரது இலக்கிய உயர்வு பற்றியும் என்னிடம் நிறையக் கதைப்பார்கள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ருஷ்ய, சீன சித்தாந்தப் பிளவு களுக்குப்பின், ஒளியிலிருந்து நிழல் பெறலாயிற்று. அதனால் கணேஷ் போன் றோரின் விதந்துரைகளும் மங்கிப்போய்விட்டன. மிகப்பிந்தியாவது, கே.கணேஷ் அவர்களின் உயர்வை இலக்கிய உலகிற்கு “ஞானம்" வெளிச்சம் காட்டியது பாராட்டுக்குரியதே! வாழ்க ஞானம்; வளர்க அதன் இலக்கியப் பணி.
- கவிஞர் ஏ.இக்பால் - தர்தா நகர்
அன்புமிக்க திரு ஞானசேகரன் அவர்களுக்கு, வணக்கம்.
புது வருட வாழ்த்துகள். உங்கள் அன்பான 8-11-2002 கடிதமும், "ஞானம் மூன்றாவது ஆண்டுமலரும் வந்து சேர்ந்தன. மகிழ்ச்சி, நன்றி. 1996 ஆம்வருடம் நண்பர்கள் பொன்னிலன், மகேந்திரன் உடன் நான் இலங்கை வந்திருந்தபோது உங்களைக் கண்டு பேசியதும், உங்கள் நாவல் வெளியிடப்பெற்ற நிகழ்ச்சியும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. “ஞானம்' மலரில் 'எனது எழுத்துலகம்' பற்றிய உங்கள் அனுபவப் பதிவுகளைப் படித்து மகிழ்ந்தேன். உங்கள் நாவல்கள், சிறுகதைகள், அவை பெற்றுள்ள வரவேற்புகள், உங்கள் கொள்கை, ஊர்ப்பற்று முதலியனவற்றை அறிந்து மகிழ்கிறேன். “ஞானம் மலரை முழுமையாகப் படித்து ரசித்தேன். ஆழ்ந்த விஷயங்களைக் கொண்ட தரமான இதழாக “ஞானம்' அமைந்துள்ளது.
"ஞானம் டிசம்பர் இதழை நண்பர் கே.கணேஷ் அவர்களின் சிறப்பிதழாக வெளியிட்டிருப்பீர்கள். அந்த இதழுக்கு கணேஷ் பற்றி கட்டுரை எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தீர்கள். நன்றி. எதிர்பார்த்திருப்பீர்கள். நான் கடிதம் கூட எழுதாமல் இருந்தது உங்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நவம்பர் - டிசம்பரில் எனக்கு ஏகப்பட்ட வேலைகள், மேலும் உடல்நலம் சீராக இல்லாமல் போயிற்று. அதன் பயனாக சோர்வும் அசதியும். உங்கள் கடிதத்துக்கு பதிலாவது எழுதியிருக்கவேண்டும். தவறிவிட் டேன். “ஞானம்' இதழுக்கு ஏதாவது கட்டுரை எழுதி அனுப்புவேன். இயன்ற அளவு விரைவில் அனுப்பி வைக்க முயல்வேன். நண்பர் அந்தனி ஜீவா நலமாக இருப்பார் என்று எண்ணுகிறேன். அவருக்கு என் அன்பு வணக்கம். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாக்கள் அதிகம் நிகழ்கின்றன. ஒவ்வொரு நாளும் மூன்று நான்கு விழாக்கள் கூட நடைபெறுகின்றன. சில விழாக்களில் 4 நூல்கள் 5 நூல்கள் என வெளியிடப் பெறுகின்றன. சில நாள்களுக்கு முன்பு சுஜாதாவின் 6 நூல்கள் ஒன்றாக வெளியிடப்பட்டன. புத்தகங்கள் வசீகரவனப்புடன் வெளிவருகின்றன. எத்தனைபேர் வாங்கிப் படிக்கிறார்கள் என்பது ஆய்வுக்கு உரிய விஷயம். வழக்கம் போல் இந்த வருடமும் ‘புத்தகக் கண்காட்சி நிகழ இருக்கிறது. 9ம் தேதியிலிருந்து பத்து நாட்கள் நடைபெறும். நலம். நலமே நாடுகிறேன். அன்பு, - வல்லிக்கண்ணன், சென்னை
49

Page 26
நிகழ்வுகளும் நினைவுகளும் (பத்தி எழுத்துக்கள்) எழுதியவர் : ந.சோமகாந்தன் வெளியீடு : குமரன் புத்தக இல்லம், 201, டாம்வீதி, கொழும்பு -12. முதற்பதிப்பு: டிசம்பர் 2001 விலை : LIIT 250/
இந்நூலில், யுத்தம் விளை வித்துவரும் பேரழிவுகள், கொடுமை கள், கலை இலக்கியத்துறையில் நிகழும் பரிசுகேடுகள் கலாசாரச் சீரழிவுகள், இன ஒதுக்கீட்டினால் ஏற் பட்ட பின் விளைவுகள் உட்பட்ட பல் வேறு விடயங்களும், புதிய தலை முறையினர் அறிந்து கொள்ளவேண் டிய சுவையான இலக்கியத் தகவல் களும் விரவிக்கிடக்கின்றன.
பின்னட்டைக் குறிப்பிலிருந்து.
"வாழ்வற்ற வாழ்வு (நாவல்) எழுதியவர் : எபி.வி.வேலுப்பிள்ளை வெளியீடு : சாரல் வெளியீட்டகம், கொட்டக்கலை. முதற்பதிப்பு: டிசம்பர் 2001 விலை : IL TI 390 WF
"ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமகால வரலாற்றை அவர் எழுதிய நாவலுக்கூடாக வாசிக்கும் வாய்ப்பு இந்த நாவலை வாசிப்பதன் முலம் நமக்குச் சித்தித்திருக்கிறது. மூன்று தலைமுறைகளில் நம்மிடையே ஏற் பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு கொள்ள முடிகிறது. "வாழ் வற்ற
வாழ்வு இலங்கையிலே நாம் வாழ்ந்த ஒரு முக்கிய காலகட்டத்திற்குரிய நாவல். முன்னுரையில் சாரல் நாடன் "துன்ப அலைகள் (குறுநாவல்) எழுதியவர் : செ. குனரெத்தினம் வெளியீடு தேசிய கலை இலக் கிய பேரவை, கொழும்பு.
முதற்பதிப்பு: ஜூலை 2002
விலை ருபா 125/-
ஈழத்தின் பிரபல எழுத் தா ளருள் ஒருவரும் கிழக்கு
மாகாணத் திலப் மட்டக் களப் பு மண்ணின் மைந்தரான செ.குனரெத் தினம் அவர்களின் "துன்ப அலைகள் என்ற இக்குறுநாவல் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தமிழகத்தின் சுபமங்களா ஏடும் இணைந்து நடத் திய ஈழக் குறுநாவல் போட்டியில் பங்குபற்றி முதற் பரிசு பெற்ற நாவலா
கும, பதிப்புரையிலிருந்து.
"வேள்வி மலர்கள்" (சிறுகதைகள்)
எழுதியவர் : பத்மா சோமகாந்தன்
வெளியீடு : குமரன் புத்தக இல்லம்,
கொழும்பு.
முதற்பதிப்பு: டிசம்பர் 2001
விலை ரூபா 150/=
சமூகப் பார்வையும் முற்போக் குச் சிந்தனையும் கொண்டு அவர் எழுதியுள்ள சிறுகதைகள், பாழ்ப்பான மக்களின் இன்றைய வாழ்க்கைச் சிரமங்களையும், பலவிதமான பாதிப்பு களாலும் அவர்கள் அநுபவிக்க நேர்ந்துள்ள அவலங்களையும், தாய் நாட்டை விட்டுப்பிரிந்து சென்று அயல் நாடுகளில் வசிக்கின்ற யாழ்ப்பாணத் தவரின் கலாசாரப் பிரச்சினைகளை யும் உறவுச்சிக்கல்களையும் தலை முறைகளுக் கிடையே எழுகின்ற கருத்து மோதல்களையும் நன்கு எடுத் துக் காட்டுகின்றன. வல்லிக்கண்ணன் வாழ்த்துரையில்.
 

கவிஞர் ஏ.இக்
ஞா
இக் 予
பால்5
1ട്ട് (

Page 27
ë--> r:7g::TT
醚
t 4عیب بلحجtiTاللہ
”؟Titr میڈین لکھ ,Lچے
+ 5.3- TI: iff': 'lf, 'l' ^ දී بيت الجهد
!= arj'
த
Actor fast
| 57 బ్లా"
T 31 ஃ
డీరేYLL
- *"ஏாேருளச்
" في L1 بي سيتي "
- - ܒ 5Tਜੰ੭ । כל יוחנן 3", ע_ו של ויחלל
[k5ܐ 5:1ܝ̄ܪ ܕLE :1 -k "
,$";B ކް يا {چى
விராகன் பருச் சிறகள் بعتيم - 1 نيتها لييج من بيته. این 5 ربی تتبع آنها 5 متبلی تEF رو , اهنگی، ੬੭ ਕਰੋ ।
LP చరేTఉర్దూ}LLLI وتمتد مس كيج. & cig is, Effot (2:D" afefტგუaწr
ملا ! پھیلا yتیجہ اجتھے
چrی جو رقیہ آلاtr انتقj \gp > تو پلیٹ { {خھگ
t: *T පද්{{rrර'''
云、1一° ப் "p| في مُعة بن يحكي
(ஞா னம் சஞ்சிை www.geocitie!

ཕྲུ་
கவிக்கோவின்
கையெழுத்தில்.
கயின் இணைய முகவரி Ν
s.com\gnanam magazine
أنمي