கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.02

Page 1


Page 2
ஞானம்" புதிய தலைமுறை எழுத்தாளிகளுக்கான
சிறுகதைத் தொகுப்புப் போட்
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றலை வெளிக் கொணர வேணர்டுமென்ற நோக்குடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் சிறுகதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் நடத்துகிறது. நிபந்தனைகள் 1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 06-06-2003 அன்று நாற்பது வயதுக்கு
உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறு கதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா ஐயாயிரம் பரிசாக வழங்கப்படும். 5) பரிசுபெறும் சிறுகதைத் தொகுதி ஞானம் பதிப்பக வெளியீடாக நூலுருவம் பெறும். இரணர் டாவது பதிப் பின் பதிப் புரிமை கதாசிரியருக்கு வழங்கப்படும் 6) பரிசுக்குரிய தொகுதியை ஞானம் ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஓர் எழுத்தாளரும் இனைந்து தேர்ந்தெடுப்பர். அவர் களின் முடிவே இறுதியானது. 7) போட்டி முடிவு திகதி20-4-2003. அதன்பின்னர் வந்துசேரும் படைப்பு கள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ள்ப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் "ஞானம் 17, பேராதனை வீதி, கணிபு என்ற விலாசத்துக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்படவேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். 9) நிபந்தனைக்கு உட்படாத தொகுப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது.
குறிப்பு ஓர் இலக்கிய அனிபாரினர் அனுசரனை
புடன் நடாத்தப்படும் இப்போட்ட வருடந்தோறும் நடைபெறும்.
ܥܐ
 

55 மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்.
ஆசிரியர் : தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர் நா. ஆனந்தன்
கணனி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி,
கண்டி. தொ.பே. -08-478570(ome)
08-234.755 (Res) Fax - 08-23.4755 F-Mail\gnanவ_magazineஇyahoo.com)
உள்ளே. சிறுகதை புறாக்களின் di Tionó ................................. 05 சுதர்மமகாராஜன்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி.41 ச.சாரங்கா
கட்டுரைகள் மானிட விடுதலையை நோக்கிய.10 பேராசிரியர் கா.சிவத்தம்பி கு.ப.ரா. சிறுகதைகள் ஒருபார்வை . 18 வே.செவ்வேட்குமரன் ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் ~2.26 செங்கை ஆழியான் எனது எழுத்துலகம்.28 தமிழோவியன்
கவிதைகள்
இரண்டு மாடுகளின் பயணம் . 17 செஸ். சுதர்சன்
மாவை.வரோதயன் கற்பனைக் கணக்குகள்!. + . . . . . . . . . . . தேசங்கீதா ÁS ÁTMüų irrr.................................................. ராணி சீதரன் கண்ணிரோடு ஒரு மெய்யுரைக்கிறேன். 40 வேதினகரன்
.
பொற்கிழியும் வசைமொழியும் . I கலைவாதி கலீல் பாதுகாப்பு வலயம் . 52 வாகரைவாரர்
நூல் விமர்சனம் .33 இலக்கிய மடல்.38
தஞ்சைக் கடிதம் .39 ஈழத்து நவீன இலக்கிய
sistirão do ".......42 திரும்பிப் பார்க்கிறேன்.47 வாசகர் பேசுகிறார்.
அட்டைப்படம் - ஆர்.அன்பழகன்

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
கலை இலக்கிய உலகில் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்
0ே1ற்றுக் கருத்துக்களைச் செவிமடுப்பதும் மதிப்பளிப்பதும் சனநாயக வழிமுறையில் முக்கியமானதோர் அம்சமாகும். ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் விமர்சகர்களின் ஆதிக்கம் மேலோங்கி யிருந்தது. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டது. கருத்துத் தெரிவித்தவர்கள் ஒரங்கட்டப்பட்டார்கள். மேலாதிக்கம் செலுத் தியவர்களின் தலைவர்களை மூலஸ்தானத்தில் வைத்துச் சிறுதெய்வ வழி பாடு நடந்தது. இத்தலைவர்களின் குறைகளை யாரும் தப்பித் தவறிச் சுட்டிக்காட்டிவிட்டால் பக்தர்கள் சன்னதம் கொள்வர். குரு பெருந்தன்மை யுடனர் செவிமடுத்தாலும் சீடர்கள் கருத்துக் கூறியவர்களை விட்டுவைக்க மாட்டார்கள்; விரோதிகளாகக் கொள்வர்.
சீசரின் மனைவி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவளாம்! இத்தகைய பண்பினி எதிர்வினையே பின்நவீனத்துவத்தினி கருத்தியலுக்குக் கால்கோளாக அமைந்தது போலும்.
பாரம்பரிய சிந்தனை மரபுகள், கோட்பாடுகள் முதலியவை பின் நவீனத்துவக் கோட்பாட்டாளரால் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மரபுவழிச் சிந்தனைகளின் கட்டுமானத்தை அவர்கள் நிராகரிக்கின்றனர். அச்சிந்தனைகளில் மேலாதிக்கப்பண்பு, ஒன்று திரட்டிய பண்பு (Totalising) முதலியன காணப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மாற்றுக் கருத்துக்களை அவர்கள் வரவேற்கின்றனர்.
மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்போது தெளிவு பிறக்கிறது. நிலைப்பாடுகளின் நம்பகத்தன்மையும் உறுதிப்பாடும் மீளாய்வு செய்யப் படுகின்றன; விழிப்புணர்வு உருவாகிறது.
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமல்லவா! ஈழத்து இலக்கியம் ஆரோக்கியம் பெறவேண்டுமெனில் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென “ஞானம் வலியுறுத்துகிறது. நாம் செல்லும் வழியும் அதுவே.
4
 

புநாக்களின் * A MAHASAD
உலர்ந்த மெல்லிய காற்றின் இதமான வருடலையும், அதனது வெப் பத்தையும் தனக்குள்ளே உறிஞ்சி யெடுத்து ஆரோக்கியமான, குளிர்ச்சி யான வேப்பமரத்து நிழலின் சுகத்தை யும் நிம்மதியான மனவுணர்வோடு அநுபவித்து எத்தனை நாட்களாகின்றன. வாழ்க்கையின் இறுதி சொச்சத்தின் பாதியை ஒரு பயங்கரமான, நினைவு களிலிருந்து அகற்றமுடியாத ஒரு காலத்தில் கழித்தாயிற்று. இன்றைய அமைதி இன்னும் நிரந்தரமில்லை. ஏதோ சற்று நேரம் அமர்ந்து, மூச்சு வாங்கி இளைப்பாறும் ஒரு குதிரை வீரனின் நிலைமைபோல் இருக்கப் போகிறதோ என்னவோ?
ஏதோ ஒரு வகையில் இந்த அமைதி சற்று நிம்மதியைத் தருகிறது. குண்டு வெடிப்புகள், தாக்குதல்கள், ஆங்காங்கே சிதறி ஓடும் மனிதர்கள், அதனிடையே உயிரற்று வீழ்ந்திருக்கும் உறவுகள், அவலக் குரல்கள் எல்லாம் இன்று ஓய்ந்து இடம்பெயர்ந்த மனிதர்களையும், இறந்த மனிதர்களையும் துறந்து, என்னைப் போன்று பிடிவாதமாயும், வேறு வழியின்றியும் தங்கிய ஒரு சிலரோடு இந்தப் பூமி உருமாறி இப்போது அமைதி காக்கிறது. குண்டுச் த்தங்களையும், அதன் பின்னாலான மனிதக் கதறல்களையும், காய்ந்த உதிரத்தின் நெடியையும் மட்டுமே, ஒரு சில கால மாய் முகர்ந்து பழகிய புலன்களுக்கு, இந்த அமைதியில் மிச்சமான "சாம்பல் நெடி கலந்த இந்த மண்ணின் வாசனை, ஒரு கசப்பான மருந்தைக் குடித்தபின்னாலான உணர்வைக் கொடுக்கிறது.
5

Page 4
எத்தனையோ வருடங்களுக் குப் பிறகு இழந்து போயிருந்த இந்தப் பூமியின் கலகலப்பு மீண்டும், இந்த சில நாட்களாய் உயிர்த்திருப்பதைப் பார்க்கையில் உள்ளத்தின் மகிழ்ச்சி எல்லைகளைக் கடந்து செல்கிறது. நாலா பக்கமும் சிதறியிருந்த உறவுகள் மீண்டும் ஒவ்வொருவராய் ஓரிடம் சேர்வதில், ஏற்படும் உணர்வு களின் பரிமாறல் அநுபவித்தால்தான் புரியும். சில நேரம் இருக்கிறவர்களின் நலம் அறிந்து மகிழ்வுறுதல், சில நேரம் இறந்தவர்களின் நினைவுகள் பகிர்ந்து துக்கமுறுதல், இன்னும் சில நேரம் இருக்கிறார்களோ? இல் லையோ? என ஒரு சிலரை நினைத்து துடிப்புறுதல் என்று பிரிந்திருந்த உயிர் களின் ஒன்றுகூடலில் உணர்வுகள் பிதுங்கும்.
வானத்திலிருந்து குண்டுகள் விழ, பூமியும், மனைகளும், மனிதர் களும் சிதற, ஊரே உயிர்காத்து அங்குமிங்குமாய் ஒடிக்கொண்டிருக் கும்போது, அன்று எனக்குள் மாத் திரம் எங்கிருந்து வந்தது, அப்படி ஒரு தைரியம்!
"அப்பு, வடக்குச் சந்தியில அடிபாடு நடக்குது சுறுக்கா வெளிக் கிடுங்கோ" என்ற மூத்த மகனின் பதற்றம்கூட என்னுள் தொற்றவில்லை. "இல்லையடா, நீ எல்லாரை யும் கூட்டிக்கொண்டு வ்ெளிக்கிடு. நான் வீட்டோட நிக்கிறன்"
பிள்ளைகள் எவ்வளவு பிடிவாதம் பிடித்தும்கூட ஏதோ ஒரு உணர்வு என்னை இடம்பெயரவிடாது தடைசெய்தது. பிறந்து, வளர்ந்து இந்த ஊரிலேயே கலியாணம் கட்டி, பிள்ளை குட்டி பெத்து, அதுகளும்
கலியாணம் கட்டி, பேரன் பேத்தி கண்டாயிற்று. இந்த மண்ணின் ஒவ் வொரு அணுவிலும் உறவுகொண்டு வாழ்ந்துவிட்டு, எவனோ அடிக்கிறான் என்பதற்காக எப்படி இதைவிட்டு ஓடுவது? எது நடந்தாலும் முகம் கொடுப்பது, இல்லாவிடில் இம்மண் ணோடு மண்ணாகுவது என்று உள் மனதின் தைரியம் குரங்குப்பிடியாய்த் தடுத்துவிட்டது.
பிள்ளைகளின் தாய் குடுத்து வைத்தவள், இதையெல்லாம் பார்க்கப் பிடிக்காது முன்னமே கண்ணை மூடிக் கொண்டாள். நான்கு பிள்ளை களோடு, நிலத்தோடு போராடி, அது களையும் படிக்கவைத்து, ஒருவிதமாய் தலைதுாக்கிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த யுத்தம் பூதமாய் கிளம்பி ஊரையே சிதறடிக்கச் செய்து விட்டது.
பெம்பிளைப் பிள்ளைகள் இரண்டும் எப்போதோ தன்தன் குடும் பங்களோடு கடல்தாண்டி போட்டு துகள். இளையவன், நான் எதிர்பார்த் ததைப் போலவே களத்துக்குள் இறங்கி மறைந்து போனான். இறுதி யாய் சண்டை உக்கிரமாகும் தறு வாயில்தான் மூத்தவன் கிளம்பினான்.
கிளம்பும்போது அவனது மிரட்சியான
கண்ணுக்குள் இருந்த கண்ணிர்க் கலவை என் நெஞ்சுக்குழியைப் பிசைந்தது. "அப்பு தனியாய் எப்பிடி இருக்கப் போகிறார் என்கிற பயத்தின் ஏக்கம் அந்த ஊறிய கண்ணுக்குள் தேங்கிக்கிடப்பதை என் உள்மனதிற்கு உணரக் கூடியதாக இருந்தது. இருந்தும் மனதிற்குள் இருந்த அந்தத் தைரியம், இந்த மண்ணோடு கட்டிப் போட்டுவிட்டது.

கிட்டத்தட்ட பதினைந்து வரு டங்கள் யுத்தத்தோடு காலத்தை ஒட்டி யாயிற்று. கஷ்டப்பட்டுக் கட்டிய கல் வீடுகள் குண்டுகளுக்குச் சிதைவுற்று, வீடுகள் பாதுகாப்பற்றதாகிப்போய், பங்கர்கள் பாதுகாப்பான வீடுகளாய் மாறிப்போயின. வானத்தில் 'ஹெலி யின் சத்தம் கேட்கும்போதெல்லாம், குண்டு விழும் பயத்திற்கு, ஒடிப்போய் பங்கருக்குள் பதுங்கிக் கொள்கிற பழக்கத்தால், இப்போதும் ஹெலிச்சத் தம் கேட்டால் மனம் பதறி ஓடமுற்படு கிறது. பங்கருக்குள் பதுங்கியபடி குண்டுகளால் சிதைவுறும் மண்ணை யும், வீடுகளையும், அவற்றிக்குள் ளிருந்து சப்தமிடக்கூட இடம்கிடைக் காது மடியும் மனிதர்களையும், தாங்க முடியாத ரணத்தோடு பார்த்து சகித் துக் கொண்டிருந்த காலம் மட்டு மல்லாது, கோயில்களும், தேவாலயங் களும் குண்டுகளுக்குட்பட்டு, மனிதர் களைப் போலவே கடவுளரும் சிதைவுகளுக்குள் சிக்குற்றுக் கிடந்த காலம் முடிவடைந்து, இப்போது யுத்தம் அப்படியே ஸ்தம்பிதமாகி, ஆயுதங்கள் தலைகவிழ்ந்து, ஊரே களிப்புற்றுக் கொண்டிருக்கிறது.
மீண்டும் இப்படியொரு காலம் வருமென்ற என் நெஞ்சுக்குழிக்குள் அடைபட்டுக்கொண்டிருந்த பேரேக்கம் என் கண்முன்னால் நிகழ்ந்து கொண் டிருப்பதைப் பார்க்கையில், இந்தப் பேரானந்தத்தோடே செத்துவிடலாம் போல் தோன்றுகிறது.
பிணம் தின்னும் கழுகுகளால்
சுற்றிவளைக்கப்பட்ட ஒரு பள்ளத்துள்
அகப்பட்ட எலியைப்போல், நாம் மரணத்திற்கு அஞ்சி, இவ்வளவு காலமும் மழுங்க மழுங்க விழித்துக்
கொண்டிருக்கையில், அடைக்கப் பட்டிருந்த பாதைகள் கோலாகலமாய் திறந்து கொண்டபோதுதான், நிம்மதி யாய் வெளியுலகக் காற்றை நுகரக் கூடியதாயிருக்கிறது. எம் நிலங்களுக் குத் தடை செய்யப்பட்டிருந்த அனைத் தும் அப்பாதை வழியே எம்மை வந் தடைந்தபோது, வியர்வை சிந்தி, கனவுகளோடு கட்டிய கல்வீடுகளை யுத்தம் விழுங்கிய சோகமெல்லாம் இந்தக் களிப்பில் மறைந்து போயிற்று.
இனிப் பிள்ளைகள் வரு வார்கள், ஊர் மண்ணில் கால் வைப் பார்கள், "அப்பா." என்று ஆரத்தழுவு வார்கள் என மனம் தவித்தது. இதே மனம்தான் ஒரு காலத்தில் யுத்தம் எப்போது முடியும், பிள்ளைகளது முகம்
இனி எப்போது பார்க்கக் கிடைக்கும்
என்று பங்கருக்குள் ஒளிந்து ரண மாய்த் தவித்தது. ஒரு சில நேரங் களில் பிள்ளைகள் இனி வரவே கூடா தென்று நினைத்த நாட்களும் உண்டு. அது ஒரு பிணங்களை உண்ணத்துடிக் கும் கழுகுகளின் காலம்.
ஆனால். இன்று, எல்லாம் மாறிக்கொண்டு வருகின்றன. ஒருவருக் கொருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டவர்கள் அவற்றை ஒரத்தில் வைத்துவிட்டு கைகுலுக்கிக் கொள் கிறார்கள். ஆரம்பகாலங்களில் விட்ட தவறுகளை இனம்கண்டு, ஒருவருக் கொருவர் பரஸ்பரம் புரிதல்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்து தங்களது இணைப்பு பற்றிக் கதைக்கிறார்கள். இனி எப்போதும் காணக் கிடைக்காது என்று நினைத்துக் கொண் டிருந்த ஊர்களையும், மக்களையும் அவரவர்கள் கண்டு களிப்புற்று
சிநேகம் கொள்வதைப் பார்க்கும்போது

Page 5
மனம் சிறுவயது நினைவுகளை அசைபோட்டுப் பார்க்கிறது. இவ்வளவு காலமும் பாழடைந்து போயிருந்த பாதைகள் இன்று சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. வகை வகையான வாகனங்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. ராணுவ ட்ரக்குகளையும், ஜீப்புகளையும் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட எம்மூர்ப்பிள்ளைகளுக்கு இந்தப் புதுரகமான வாகனங்கள் ஆச்சரியத் தில் விழியகல வைக்கின்றன.
பங்கர் வாழ்க்கை முடிவுக்கு வந்து சுதந்திரமாய்க் காற்றோட்ட வெளியில் நடமாட முடிகிறது. இத்தனை நாட்களாய், பாதையைப் பார்த்தபடி பிள்ளைகளின் வருகைக் கான எனது ஏக்கம், மூத்தவன் நடராஜா பிள்ளைகுட்டிகளோடு ஊருக்குவர சற்றுத் தணிந்திருக்கிறது. இங்கு இருந்ததைவிட ஆள் வெகுவாக மாறியிருந்தான். உடம்பு பெருத்து எனக்கே அடையாளம் காண முடியாமல் போயிற்று. பேரன் பேர்த் திகள் ஆளுயர வளர்ந்துவிட்டார்கள். இங்கிருந்து போகும்போது விவரம் அறியாத சிறுவர்களாய் இருந்தவர் கள், இதுதான் தங்களது பிறந்தகம் என்பதை அதிசயமாய்ப் பார்த்தார்கள். வரிச்சல்வீடு அவர்களை முகம்சுளிக்க வைத்தது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. மகனும் மருமகளும் சமாளித்துக் கொள் வார்கள். பிள்ளைகள் வெளிநாட்டில் சொகுசாய் வாழ்ந்ததுகள். வெகு நாட்களுக்குப் பிறகு மருமகளின் கைவண்ணத்தில், வாய்க்கு ருசியாக சாப்பிடக் கிடைத் திருக்கிறது. மருமகள் இன்னும் பழைய சுவை மாறாது சமைக்கிறாள்.
இவ்வளவு நாளும் ஏதோ வயிற்றுப் பசிக்காக கையில் கிடைப்பதை அவித்துச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு உணர்வற்றுச் செத்துப் போயிருந்தது. உண்மையில் நாக்கு மட்டுமல்ல, பிள்ளைகுட்டிகள், உற்றார் உறவினர்கள் யாருமற்ற, போர்மழை பெய்யும், ஒரு சூனியப் பிரதேசத்தில், பதுங்கிப் பதுங்கி வாழும்பொழுது முழு வாழ்க்கையுமே உணர்வற்று, ஒரு எல்லையற்றுத்தான் போகிறது. ஆனால் அவ்வளவு இடர் களுக்கும், ஏதோ ஒரு மூலையில் எமக்கான சுதந்திரத்தின் நம்பிக்கை யொலி ஒலித்துக்கொண்டுதானிருக் கிறது.
இன்று அந்த நம்பிக்கை யொலி மெது மெதுவாய், மெல்ல மெல்ல, அடிமேல் அடிவைத்து வெளிக்கிளம்பும்போது, இவ்வளவு நாட்களும் நாம்பட்ட துன்பங்களும், இழப்புகளும் ஒரு கணம் மறந்துபோ கிறது. எங்களது காலம்தான் வேகத் தில் பிணங்கள் குவித்து, கழுகுகள்
 

மொய்க்கும் காலமாய் இருந்தது. இனிவரும் எம்பேரப் பிள்ளைகளது காலமாவது புறாக்கள் பறக்கும் ஒரு ஐக்கிய பூமியாக இருக்கட்டுமே.
வேப்ப மரத்தின் நிழலின் குளிர்ச்சியை இன்று மனநிம்மதி யோடு, பீதியற்று அநுபவிக்கிறேன். ஆனால் என்னுடைய கணிகள், என்னையும் மீறி, இங்கிருந்து இருபது முப்பதடி தள்ளியுள்ள மண்மேட்டை யும், அதன் பின்னாலுள்ள பங்கரையும் அடிக்கடி நோக்குகின்றன. அவை எனது போர்க்கால கவச குண்ட லங்கள்.
அந்த இடத்தைப் பார்க்கும் போதெல்லாம், என் இதயம் ஒருவகை அதிர்ச்சிக்குள்ளாகிறது. அந்த அதிர்ச்சியால், போர்க்கால அசம்பா விதங்கள் ஒவ்வொன்றாய் கண்முன் தோன்றி என்னை மிரள வைக்கின்றன. அதற்குள் பதுங்கியிருந்துதான், நான் பல கொடுர அவலக் குரல்களைக் கேட்டு மிரண்டிருக்கிறேன்.
முதல் வேலையாய் அந்த மேட்டைக் கொத்தி பங்கரை மூடிப் போட வேண்டும். அதனுடன் என்னுள் இருக்கும் அந்தக் கசப்பான நினைவு களும் புதைந்துபோகும். மணி வெட்டியை எடுப்பதற்காகக் கோடிப் புறம் சென்றேன். வீட்டுக்குள்ளிருந்து பிள்ளைகளின் சிரிப்பொலி செவி களுக்கு ஒரு இதத்தைத் தருகிறது. எத்தனை காலங்களுக்குப்பின் இந்தச் சந்தோஷம். எத்தனை இழப்புகளின் பின் இந்த உறவுகளின் களியாட்டம். மண்வெட்டியோடு பங்கரை நெருங்க நெருங்க, ஏதோ பலகால மாய் வாழ்ந்த வீட்டை இடிக்கும்போது உண்டாகும் கவலை மனதிற்கு
ஏற்படுகிறது. இருந்தும் அதற்குள் இருக்கும் கசப்பான நினைவுகள் எவ்வளவு கொடுரமானவை.
பல வருடங்களுக்கு முன் குவித்த மண்மேடு, இப்போது புல் மண்டிப்போய், இறுகிப்போய் இருந்தது. உடலினி முழு வீரியத்தையும் கொண்டு முதல் கொத்தைக் கொத் தினேன். மண்ணிற்குள் மண்வெட்டி யின் கால்வாசிகூட இறங்கவில்லை. மண்ணின் இறுக்கமா அல்லது எனது உடற்பலம் குறைந்துவிட்டதா? ஒரு வைராக்கியமான வீரியத்தோடு இரண் டாவது கொத்தைக் கொத்துவதற்காக, கால்களை அகற்றிவைத்துக்கொண்டு, மண்வெட்டியைத் தூக்கும்போது, மிக வும் பழக்கமான அந்தச் சத்தம் என் காதுகளை உசுப்பியது. ஓங்கிய மண் வெட்டியை அப்படியே நிலத்தில் வைத்துவிட்டு, ஒரு கையை கண்களுக் குக் குடையாக்கி சத்தம் வந்த திசையை நோக்கினேன். கிட்டத்தட்ட நூறடிக்கு அப்பால், ஓங்கி வளர்ந் திருந்த ஒரு வேப்பமர உச்சியில், கழுகுகள் போன்ற தோற்றங்கொண்ட இரு பறவைகள் இங்கேயே பார்வை யிட்டுக் கொண்டிருந்தன; பயங்கர மாய் உற்று நோக்கின.
மனம் பீதியில் பதைபதைத் தது. ஏனோ பங்கரை மூட மனம் பின் வாங்கியது. எதற்கும் இருக்கட்டுமென, மண்வெட்டியோடு மெதுவாய் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

Page 6
மானுட விடுதலையை நோக்கிய திசையில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டமும் கலை இலக்கிய ஊடகங்களின் வகிபாகமும்.
~ பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
(I)
இந்த மையப் பொருளை மானுடத்தின் தமிழ்க் கூடலாக கலை, பண்பாட்டுக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை வரலாற்றின் ஒரு முக்கிய பரிசோதனைக்காலத்தில் நிகழ்கிறது. இருபத்தைந்து வருட யுத்த அனுபவத்தின் பின்னர் யுத்தம் வழியான தீர்வு வேண்டாம் பேச்சுவார்த்தை வழிவரும் தீர்வு வேண்டும் என்ற பரிசோதனை ஒன்று நடைபெறுகிறது. இலங்கையில் தமிழைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ள மூன்று குழுமங்கள் தமிழால் தாங்கள் ஒருமைப்பட்டு நிற்கும் அதேவேளையில் உரிமைக்கான போராட்டத்தைத் தனித்தனியே நிகழ்த்த வேண்டுமென்ற குரல்கள் முக்கியத்துவம் பெறும் அரசியல் பரிசோதனைக்காலம் இது.
மானுடத்தின் தமிழ்க் கூடலை இவ்வாறு விளங்கிக் கொள்வது நல்லது போலப்படுகிறது.
இந்த மையக் கருத்தில் நான்கு அம்சங்கள் முக்கியத்துவப் படுகின்றன. 1. இலங்கையின் தமிழர்போராட்டமானது உயிர்ப்பிலும் போக்கிலும்
மானுட விடுதலையைத் தளமாகக் கொண்டது. 2. இந்தப் போராட்டம் ஈழத்தமிழரின் உரிமைகளுக்கான போராட்ட மென வரையறுத்துக் கூறப்படுவது. அதேவேளை இந்தத் தமிழர் உரிமை மானுட விடுதலையின் அடிப்படையில் வருவது. (உரிமைப்போராட்டம் என்பதை நான் Struggle எனக் கொள்கி றேன். Struggle என்பதன் உண்மையான கருத்து இடரெதிர் நெடும் போராகும்) இத்தகைய போராட்டத்தில் கலை இலக்கியம் பெறுமிடம். 4. இக் கலை இலக்கியங்களின் வெளிப்பாட்டுக்களமாக அமையும் ஊடகம் பற்றியது. படைப்புக்கான தொடர்பு ஊடகத்தால் வருவது.
(II) மானுட விடுதலை பற்றிய விளக்கம்.
முதலில் நமக்கு இரண்டு விடயங்கள் பற்றிய தெளிவு வேண்டும். 1. மானுடம் என்பது யாது? 2. அதற்கான மொழி யாது என்பது. அதாவது மானுடத்தின் தேவைக் கான எடுத்துரைப்பு எப்போது நிகழும் என்பது.
மானுடம் என்பது மனிதர்களை மனிதர்களாக மதிப்பது, சுய சிந்தனைத் தேடல், மனித உறவின் மகத்துவத்தில் நம்பிக்கை வைத்தல், அவற்றினூடே மானுடத்தை மேம்படுத்தல் என்பனதான் மானுடத்தின் சாரமாகும். மனிதன் மனிதனாக இருப்பதும் மனிதனாக உயர்வதும் மானுடத்தின் அடிப்படை இயல்பு 1 O
3.

களாகும்.
மனிதர்களின் இந்த முயற்சிகளுக்கு எதிரான தடைகள் கிளம்பும் போது மனிதரை மனிதர்களாக வாழவிடாது கீழ்த்தள்ளப்படும் நிலைமை வரும்போது அந்த அமானுஷ்யத்தன்மையை எதிர்ப்பது அந்த மக்களின் வெளிப் பாட்டுக்கடனாகிறது. எந்த ஒரு மொழியும் இந்தத் தேவையைப் பேசத் தொடங்கும்போது அது மானுடத்தின் மொழியாகிறது. மனிதர்களின் உரிமைக் குரல், உணர்ச்சி ஆதங்கங்கள் ஆகியன பற்றிப் பேசும்போது அந்த மொழி மானுடத்தின் மொழியாகிறது. இதற்கு மொழியின் வரலாற்றுத் தொன்மை முக்கியமாவதில்லை. இதற்கு முக்கியம் அந்த மானுட விடுதலைக்கான உணர்ச்சி ஆழம். உயிர்ப்பாழம். தொன்மையான மொழியென்றால் அது தன் வரலாற்று வளத்தை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த வளம் எழுத்தில்லாத மொழிகளுக்குக்கூட வரும். ஆபிரிக்க இலக்கிய வரலாறு இதற்கு நல்ல உதாரணமாகும்.
நாம் இன்று இங்கு மானுடத்தின் தமிழ்க் கூடலில் இணைந்து கொள்கின்றபோது தமிழின் தொன்மைக்காகவோ பாராண்டது என்பதற்காகவோ அல்ல. இந்தத் தமிழ் எமது சூழலில் எமது வரலாற்றில் சமூக மானுட ஒடுக்குமுறையை எதிர் நோக்கியது என்பதனால் அந்த ஒடுக்கு முறையையும் எதிர்ப்பையும் தமிழிலே தெரிவித்தது என்பதனால் இது மானுடத்தின் தமிழ்க் கூடலாகிறது; அந்த அடக்கு முறைகளிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தமிழ்க் கூடலாக இது அமைகிறது.
(III)
இந்தத் தலைப்பு ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் பற்றியும் அந்த உரிமைப் போராட்ட வரலாறு பற்றியும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இதில் ஒரு பிரதானமான கேள்வி என்னவென்றால் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் எப்போது மானுட விடுதலைப் போராட்டத்தின் ஓர் அங்கமாகிறது என்பதாகும்.
இதில் சற்றுத் தெளிவாக இருத்தல் அவசியம். ஈழத்தமிழர் உரிமைக் கான குரல் எழுப்பப்படும்போதே அது மானுட விடுதலைக் கோரிக்கையின் ஒர் அங்கமாகிறது. ஆகிற்றா என்பது கேள்வி.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் தொடங்கும்போதே அதற்குள் மனித உரிமைக்கான ஒரு குரல் இருக்கின்றது என்பது உண்மையே. ஆனால் தமிழர் உரிமைப் போராட்டம் என்பது ஒரு மானுட விடுதலைப் போராட்டமாக மாறுகிறதென்பது தமிழர்கள் தங்கள் கோரிக்கைகளின் காரணமாக மனிதர்களாக நடத்தப்படாமல் அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆட்படுத்தப் படும்போதுதான் அது மானுடம் பற்றிய போராகிறது. ஈழத்துத் தமிழர் உரிமைக் கோரிக்கைகள் 1920களிலிருந்தே ஆரம்பிக்கின்றனவென்பதை அறிவோம். ஆனால் அப்போது அது ஒரு மானுட விடுதலைப்போராக அமையவில்லை. இலங்கையின் சுதந்திரத்துக்கான கோரிக்கையே இந்தியாவில் இருந்ததுபோல் இங்கு இடரெதிர் நீள்போராக, அதாவது Struggle ஆக அமையவில்லை. அத்தகைய ஒரு கொள்கைக்கான உயிர்த்துடிப்புக்கான ஒரு போராட்டத்தினை
11

Page 7
ஒரு மக்கட்கூட்டம் நடத்துவதற்குப் பழக்கப்படாத இலங்கை அரசு இதனை உரிமைகளுக்கான போராட்டமாகக் காணாமல் சண்டையாகவே பார்த்தது. அந்த நிலையிலேயே தன் பதிற்குறியையும் (Response) காட்டிற்று.
உண்மையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இலங்கையின் சுதந்திரத்தினூடேயே வருகின்றன. இந்த இடத்தில் மூன்றாவது உலக நாடுகளின் சமகாலச் சிந்தனை மரபில் முக்கிய இடம்பெறும் ஒரு கருத் தோட்டத்தினை இங்கு பயன்படுத்த விரும்புகிறேன். அவை காலனித்துவம், பின்காலனித்துவம் என்பவையாகும். அரசியல் ஆய்வுக்கு முக்கியமான இந்தக் கருதுகோள்கள் இலக்கிய ஆய்வில் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன. அதுவும் பின்காலனித்துவம் என்பது சமகால ஆசிய ஆபிரிக்க இலக்கியங்களை விளங்கிக்கொள்வதற்கான ஒரு முக்கிய திறவுகோலாகும்.
காலனித்துவ காலத்தில் குறிப்பாக ஆசிய, தென்னாசியப் பிராந்தியங் களில் காலனித்துவம் திணித்த உரிமைமறுப்புகள், சமவீனங்கள், மதமாற்றம், பண்பாட்டு மாற்றங்கள் ஆதியன காரணமாக நமது அடையாளத்தை மறந்து விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது. மேல்நாட்டுக் கல்வியை பெற்றபொழுது அந்தக் கல்வி முறையின் இலக்கை உய்த்துணர்ந்து கொண்ட நமது சிந்தனையாளர் பலர் மேல்நாடுகளில் வளர்த்தெடுக்கப்பட்ட Nation தேசியம் என்ற கோட்பாடுகளினுடாக நமது பாரம்பரியங்களைத் தளமாகக் கொண்டு மேனாட்டின் பெரும்பான்மைச் சனநாயக அடிப்படையில் நமது நாடுகளிலே மதமொழி நிலைகள் நின்று தேசியம்பற்றிய கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொண்டனர். இந்துக்கள் பெளத்தர்கள் என்றும் சிங்களவர் தமிழர் என்றும் மதமொழி இணைவுகளில் தேசியவாதக் கட்டுருவாக்கங்களைச் செய்து கொண்டனர். இதனால் எமது பாரம்பரியத்தை ஸ்திரப்படுத்தவும் எமது அடையாளங்களை வலுப்படுத்தவும் முனைந்தனர். இவை எமக்கு அக்கால கட்டத்தில் அத்தியாவசியத் தேவையாகவும் இருந்தன. காலனித்துவ எதிர்ப்புக் கும் உதவின.
ஆனால் காலனித்துவ ஆட்சிபோய் காலனித்துவத்தின் பொருளாதார அரசியல் தளங்கள் மாறாத நிலையில் சுதேசக் குழுக்கள் ஆட்சிக்கு வந்தன. பின்காலனித்துவ காலத்தில் ஆட்சியைப் பெற்றுக்கொண்ட நிலையில் ஒரு தேசியம் மற்றத் தேசிய உணர்வுகளை, தேசிய வடிவங்களை அழித் தொழிப்பதே தனது கடமை எனக்கொண்டது. இலங்கையின் சிங்களத் தேசியவாதம், இந்தியாவின் இந்துத்துவம் ஆகியன மூன்றாவது உலகநாடுகள் சிலவற்றின் பின்காலனித்துவ சிதைவின் வெளிப்பாடுகள். இதனால் சில தேசியங்கள் பேரினவாதங்களாக மாறின.
இந்தப் பின்காலனித்துவத்தின் தாக்கம் இலங்கையில் எடுத்த வடிவம் தான் சிங்கள மேலாண்மை வாதமாகும்.
சிங்களத் தேசியம் சிங்கள மேலாண்மைவாதமாக மாறியமை பற்றி நான் இங்கு கூறவிரும்பவில்லை. அதற்கான இடமுமல்ல இது. ஆனால் சிங்கள மேலாண்மைவாதம் தனது அடிநிலை மக்களுக்கே தனது சுயரூபத் தைக் காட்டாது அந்த மேலாண்மை வாதத்தைத் திணிக்கத் தொடங்கிற்று. 12

இந்தத் திணிப்புத் தொடங்கிய காலத்தில் ஈழத்தமிழர் தமது உரிமைக் குரல்களை எழுப்பினர். ஆனால் ஒரு கட்டத்தில் உரிமைக் குரல்களை அடக்குவதற்கு அரச பலத்தையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழர் களின் மானுட உரிமைகளைப் பறிக்கத்தொடங்கிற்று. இது 1960களில் முனைப்புப் பெறத் தொடங்குகிறது. தெரிந்தோ தெரியாமலோதான் இந்தக் காலகட்டத்தில் Liberation என்ற சொல் வழக்குக்கு வருகிறது. TU.FTU.L.F. ஆகிறது. .
Liberation என்ற இந்தக் கருதுகோள் மார்க்சிய அகராதியிலிருந்து வருவது. அதற்கான மொழிபெயர்ப்பு விடுதலைப் போர் அல்ல. உண்மையில் தளைநீக்க, கட்டறுப்புப்போராட்டமாகும். அந்தத் தளைகள், அந்தக் கட்டுக்கள் தமிழர்களின் மானுட உரிமைகளின் மீது விழுந்த அடிகளாகும். பெரு நீரோட்ட மார்க்சியத்தினாலும் இந்தப் பேரினவாதப் போக்கை இனங்கண்டு கொள்ள முடியாதுபோக இனக்குழும அடிப்படையில் தளைநீக்கப் போர்கள் ஆரம்ப மாகின்றன. இளைஞர் இயக்கங்கள் ஒவ்வொன்றுமே தம்மை Liberationபோராளி களாகவே கண்டுகொண்டனர்.
அந்தக்கட்டத்தில்தான் தமிழர் போராட்டம் உண்மையான மானுட விடுதலையாகிறது. பாலஸ்தீன (PLO) விடுதலை இயக்கப் போராட்டங்கள் இவற்றிற்கு முன்னுதாரணங்களாகின. இதில் முக்கியமென்னவென்றால் இந்த உரிமைப் போராட்டம் மனித உரிம்ை மறுப்புகளையே எதிர்கொண்டது. இந்த மனித உரிமை மறுப்பு, போராட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த மானுட விடுதலைப் போராட்டம் போராளிகளை மாத்திரமல்லாது சாதாரண மக்களையும் பாதித்தது. குண்டுகளின் நெருப்பிலும் எறிகணைகளின் வெடிப்புக் களிலும் இந்தப் போராட்டம் மானுடத்தின் குரலாக மாறியது. உலக கவனத்தை
ஈர்த்தது.
(V) - (ae0 ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தின் மானுடத்தன்மைக்கான நிருபணம் உலக வரலாற்றில் நடைபெறுகின்ற அரசியல் சமூக எழுச்சிகள் எல்லாமே மானுட எழுச்சிகளல்ல. மானுட எழுச்சி எனும்போது அது மனிதத்துவம் சம்பந்தப்பட்டது. மனித உணர்வு சம்பத்தப்பட்டதன் காரணமாக மனித அவலம், மனித சந்தோஷம் சம்பந்தப்பட்டது. இந்தச் சந்தோஷம் அல்லது அவலம் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும்போது அது கலைக்கான விடயப் பொருளாகிறது. அது பாட்டுக்களுக்குரியதாகிறது, நாடகங்களுக்குரியதாகிறது, ஒவியங்களுக்குரியதாகிறது, சிற்பங்களுக்குரியதாகிறது.
உலகின் பேரினவாத எழுச்சிகள் எவையுமே அமர இலக்கியங்களைத் தோற்றுவிக்கவில்லை. ஹிட்லரின் ஜேர்மனியாலும், முசோலினியின் இத்தாலி யாலும் அவர்களைப் போற்றி அமர இலக்கியங்களைப் படைக்க முடியவில்லை. கடந்த 20 வருடகாலத்து ஈழத்தமிழரது இலக்கிய அறுவடையைப் பார்க்கும்போது தான் இந்த உரிமைப் போராட்டம் தோற்றுவித்துள்ள கலைப்படைப்புகளின் உன்னதம் தெரிய வருகின்றது. இதனை நான் தமிழுக்குள் நின்று சொல்ல வில்லை. அண்மையில் இந்தக் கலை இலக்கியங்கள் குறிப்பாகக் கவிதைகள் 13

Page 8
கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டபோது கிடைத்த வரவேற்பைக் கொண்டு சொல்கிறேன். s
1) கன்னட மொழிபெயர்ப்பை வாசித்த விமர்சகர்கள் திராவிட அநுபவத்திற்கான ஒரு புதிய விஸ்தரிப்பு என்று சொல்கிறார்கள். 2) Lute Songs & Lemons is dissolips 6 y(36 gibl. 3) அண்மையில் "இலங்காதீப பத்திரிகையில் வெளிவந்த "சமகாலத் தமிழ் இலக்கியம்' பற்றிய கட்டுரை சிங்கள வாசகர்களிடையே கிளப்பியுள்ள ஆர்வம். 4) சனாதன், கொன்ஸன்ரைன் ஆகியோரின் ஒவியங்கள் கிளப்பியுள்ள
ஆர்வம்.
(TW) - (g) இந்த மானுடத்தன்மை பேணப்படல் வேண்டும். எமது போராட்டத்துக் கான மானுடத்தன்மைக்கான சான்று எமது கலை இலக்கியத்தின் நேர்மையே. எமது இன்றைய கலை இலக்கியத்தின் மானுடத்தின் உட்பொருள் குறையு மென்றால் நமது போராட்டத்தின் மானுடத்தன்மையும் கேள்விக்குள்ளாகும். இந்தக் கலை இலக்கியத் தொகுதியினுள் ஈழத்துத்தமிழர் போராட்டத் தின் நியாயப்பாடுகளும், அந்தப் போராட்டத்தின் சில முனைப்புகள் காரணமாக சில தமிழர்களிடையேயும் பிரதானமாக வட, கிழக்கு முஸ்லீம்களிடையேயும் தோற்றுவித்த மானுட எதிர்ப்புச் சலனங்களையும் பதிவுசெய்யத் தவறவில்லை. உண்மையில் அந்தப் பதிவுகள் அந்தக் குரல்களின் மானுடத்தை எடுத்துக் காட்டத் தொடங்கியதும் ஈழத்தமிழரின் போராட்ட சக்திகளும் அவர்களின் நியாயப்பாடுகளை விளங்கிக் கொண்டன. இதனால் இந்தக் கலை இலக்கியம் மேலும் செழுமைப்பட்டதே தவிர மலினப்படவில்லை. இந்த இலக்கியத்தின் மானுடசாரம் மேலும் வலுப்பட்டது.
தமிழரின் போராட்டத்தின் செல்நெறியை எடுத்துக்கொண்டாலும் அறுபதுகளில் காணப்படாத மானுடச் சோகமும் தாகமும் எழுபதுகளின் நடுக் கூற்றிலிருந்தே வருகிறது. ஏற்கனவே அறுபதுகளில் ஈழத்தமிழர் சமூகத்தில் நிலவிய சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகிப் பேசிய தமிழிலக்கியம் எழுபது களின் நடுக்கூற்றில் அரச ஒடுக்கு முறைகளுக்கெதிராகப் பேசத் தொடங்குவதில் எந்தவொரு தட்டுத் தடங்கலும் ஏற்படவில்லை. அந்த இலக்கியத்தின் பின்புலத் தில் வந்த எழுபதுகளின் ஒடுக்கு முறைகளுக்கு முகங்கொடுத்த இளைய தலைமுறையினர் இந்த மானுட இலக்கியத்தின் சுருதி மீட்டலுக்குக் காரண மாகின்றனர். அதன் பின்னர் எண்பது, தொண்ணுறுகளில் ஈழத்தமிழரின் ஒரு மித்த குரலாகின்றது.
1960களில் தமிழர் போராட்டத்தை முனைப்புப் படுத்திநின்ற அரசியற் சக்தியினர் கலை இலக்கியங்களில் தங்கள் போராட்டங்களை வெளிக்கொணர்ந் தனர். அந்தப் போராட்டத்தின் பிரதான அரசியற் கவிஞனாக காசி ஆனந்தனைக் கொள்ளலாம். காசி ஆனந்தன் அவர்கள் அடிப்படையில் அன்றைய திராவிட இயக்கத்தின் அரசியலான இன எழுச்சியையே பாடுபொருளாகக் கொண்டார். எண்பதுகளில் ஈழத்தமிழர் போராட்டத்தின் ஏறத்தாழ உத்தியோக பூர்வ கவிஞ 14

ராக கிளம்புகின்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைகளோடு ஒப்பு நோக்கு கின்றபோதுதான் எழுபதுகளின் பிற்கூற்றிலும் எண்பதுகளிலும் கிளம்புகின்ற ஈழத்தமிழ்ப் போராட்டத்தின் அடிநாதமாக விளங்கும் மானுட சோகமும் மானுட விடுதலைக் கோரிக்கையும் தெரிகின்றன. சேரன் முதல் உஸ்மான்கனி வரை வரும் கவிஞர்கள் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறார்கள். முதலிலே கூறியதுபோல இவையெல்லாம் இந்த உரிமைப்போராட்ட இலக்கியங்களுக்குக் கனதியையும் ஆழத்தையும் செழுமையையும் நெகிழ்வையும் தருகின்றன.
இந்தக் கலை இலக்கியங்களின் முக்கியத்துவமும் பயன்பாடும் அவற்றின் தொடர்பாடலிலேயே உள்ளது. அத்தொடர்பு ஊடகங்களினால் தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய உலகில் ஊடகம் (Media) என்பது முதலாளித்துவ அமைப்பின் ஒரு அம்சமாகவும் தானேயொரு கைத்தொழிலா கவும் உள்ளது. இது உலகப் பொதுவானது. ஊடகங்களில் இரண்டு நிலைகள் முக்கியத்துவமுடையதாகின்றன. ஒன்று உலகமட்டத்தில் பூகோளமயமாக்கல் வழியாக கிளம்பியுள்ள ஜனரஞ்சகப் பண்பாடும் அது காத்திரமான பிரச்சினை களைக் கொச்சைப்படுத்தும் தன்மையுமாகும். இந்த Popular Culture இன் usoil (Soap box Opera Television) D-6)35i Gurg61mGOTg5. UITsuu assigsgy மான மானுடப் பிரச்சினைகளைச் சித்திரிப்பது போலக் காட்டி அவற்றின் சமூக முக்கியத்துவத்தைக் கொச்சைப்படுத்திக்காட்டும். சமூகப் பிரச்சினைகளை தனிமனிதப் பிரச்சினைகளாகவோ அல்லாது சமூகப் போராட்டங்களை பாத்திரங் களின் இயல்பாகவோ காட்டி வழமையான கறுப்பு, வெள்ளை, நல்லது, கெட்டது என்ற வரையறைக்குள் கொண்டுவந்து ஒரு வாய்ப்பாடாக்கிவிடும். இந்த வகையிலேதான் அண்மைக்காலத்துத் தமிழ்த்திரைப்படங்கள், இலங்கைத் தொலைக்காட்சி நாடகங்கள் சிலவற்றில் தமிழர் போராட்டம் சித்திரிக்கப்படும் முறைமை திரிபுபடுத்திக் காட்டப்படுவதைக் கண்டுகொள்ளலாம். புலம்பெயர் தமிழரென ஒரு உலகமட்டச் சந்தை இருப்பதைக் கண்டு அந்தச் சந்தைக்கான விற்பனைப் பொருளாக யாழ்ப்பாணத்தின் பேச்சுவழக்குத் தமிழ் கொச்சைப் படுத்தப்பட்டதை அண்மையில் கண்டோம். நண்பர் புகழேந்தியின் "காற்றுக் கென்ன வேலி என்ற உதாரணபூர்வமான நல்ல முயற்சிகள் இருப்பினும் சில தமிழ்த் திரைப்பட முயற்சிகள் இந்தப் போராட்டத்தையே ஒரு சென்டி மென்றிற்கான விடயமாக்கிவிட்டன.
இது உலகநிலைப்பட்ட, சர்வதேச ஜனரஞ்சகப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத ஒருநிலை.
இந்தப் பேரூடகங்களின் தாக்கம் காரணமாகவே காத்திரமான விடயங் களைக் கையாளும் இலக்கியங்களைக் கொண்ட தனிப்பிரசுரங்கள் வெளி வந்தன. அந்தச் சந்தைக்குள் இப்பொழுது வெகுஜன சஞ்சிகைகளும் புகத் தொடங்கியமையைக் காணலாம். தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகள் முன்பு ஆற்றிய இலக்கியப் பணிகளை இப்போது செய்யமுடியாமல் இருக் கின்றன. காத்திரமான இலங்கியங்கட்கு சிறு சஞ்சிகைகளை நம்பியிருக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.
15

Page 9
இரண்டாவது சிங்கள-தமிழ் உறவில் ஏற்பட்ட விரிசல்களுக்கு சிங்கள ஊடகங்கள் காரணமாக இருந்த தன்மை. 19ம் நூற்றாண்டில் பெளத்தமத எழுச்சியும் சிங்களத் தேசிய எழுச்சியும் சிங்கள அச்சுசாதனங்கள் இலங்கை யைச் சிங்களநாடாகவும் பிற இனத்தவரை எதிரிகளாகப் பார்க்கும் தன்மையை ஏற்படுத்தின. இது ஆரம்பத்தில் இந்தியர்கட்கும் முஸ்லீம்கட்கும் எதிராக இருந்தது. படிப்படியாக ஈழத்தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கும் தன்மை ஏற்படலாயிற்று.
1949ல் பிரதேச சுயாட்சியைப் பேசுகின்ற கூட்டாட்சியை நாடு பிரிப்ப தென்று சொன்னது. அதன்பின் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாமலே போய்விட்டன.
இதில் அடுத்த முக்கியமான விடயம் தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்குத் தமது கஷ்டங்களைக் கூறவில்லை. எமக்கு ஏற்பட்ட போர் தொடக்கம் எந்த இழப்புகளுமே சிங்கள மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறப்படவில்லை. ஊடகங்கள் இந்த விடயத்தில் ஊடகப் பொறுப்பாக, நடந்து கொள்ளவேண்டும்.
நம்மிடையேயும் மொழிப் போராட்டம் ஏற்படுத்திய காழ்ப்புணர்வு காரணமாக ஒரு இனவாத எதிர்ப்புத்தொனி நமது பத்திரிகைகள் சிலவற்றிலும் இலக்கியங்களிலும்கூட காணப்பட்டது. அதிஷ்டவசமாக குறிப்பாக 1981 இலிருந்து தொடங்கும் கலை இலக்கியங்கள் தமிழர் போராட்டத்தினூடே கிடக்கும் மானுடத்துவத்தையே அதன் சிதைவுகளையும் கதறல்களையுமே வற்புறுத்துவனவாக மேற்கிளம்பியுள்ளன. இன்று அவைதான் எமது போராட்டத் தின் நியாயப்பாட்டை உலகமட்டத்தில் எடுத்துக் கூறுகின்றன. நாங்கள் வந்தபாதை சரியென்பதையும் காட்டுகின்றன.
இந்தப்பின்புலத்தில்தான் இக்கருத்தரங்கின் அவசியத்தையும் முக்கியத் துவத்தையும் விளங்கிக்கொள்ளல் வேண்டும். கலை இலக்கியத்தின் தேவையை யும் தொடர்பாடலின் அத்தியாவசியத்தையும் ஊடகங்களின் அசை வியக்கப் பின்புலத்தையும் நன்கு விளங்கிக்கொள்ளல் வேண்டும். நமது கலை இலக்கியங்கள் நம்மை நமக்கு காட்டுவது மாத்திரமல்லாமல் நம்மை நமது ஆதங்கங்களை பிறருக்கும் காட்டுகின்றன. இந்த உண்மையை நாம் என்றுமே மறத்தல்கூடாது. போராட்டத்தை மாத்திரமல்லாமல் போராட்டத்தின் மானுட நியாயப்பாட்டையும் பேணுவதிலேயே இந்த உரிமைப் போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.
(19.11.2002 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலை, பண்பாட்டுக் கழகக் கருத்தரங்கின்பொழுது ஆற்றிய தொடக்கவுரையின் செம்மைப் படுத்தப்பட்ட வடிவமாகும்.
இக்கட்டுரை ஆக்கத்துக்கும் படி எடுப்பிற்கும் உதவியுள்ள எனது மாணவி செல்வி. மாகிறித்தா வேதநாயகம் அவர்கட்டு எனது நன்றி.)
德
16

இரண்டு மாடுகளின் பயணம்
பயணம் தொடர்ந்தது இருளில். மாட்டு வண்டிலின் கீழ் மங்கலாப் எரிந்த அரிக்கன் லாம்பு உடைந்தும், பயணம் தொடர்ந்தது இருளில்.
வண்டிற்காரனற்று நெட்டை நெடு வழியே நீண்டு பயணித்தது. வயல் வெளிகள்
இயற்கை வருத்தம்
除 8 இருந்து வதைக்க காட்டு வழிகள் e se என்றுமட்டுமல்லாமற் es:* கரடு முரடான றோட்டு வழிகளிலும், கடபுடென்று
சக்கல் சகதியென்று
மிகுதி யெதுவுமில்லாமல் காலங் கடந்தோடியது.
சாமத்திரை கிழித்துக் செந்தணல் மிகுந்த காலைக் கோழி கூவும் வரை பூமியில் மிதித்துச் தொடர்ந்து பயணித்தது. இரும் o್ಲೆ:
ருமபு காயசச் சுட6)டாபப ಇಂಣ್ಣ. புயற்காற்று சொற் சூட்டுப் மருட்டும் இடி பச்சைக் காயங்கள் சுமந்தும் கண்ணைக் குருடாக்கும் பிச்சை ஏற்காமல் தொடர்ந்தும். கனத்த மின்னல், ஊனற்று, காலில் மிதித்து உறக்கமற்று, சினத்தை அறிவாக்கி உள்ளக்களை தாமறந்து, பயணம் தொடர்ந்தது இருளில். வீணற்றுப் போகாத
பெருமுயற்சி பற்றி, தண்மதியை நோக்கித் தாம் சிரிக்கும் குழந்தையர் போல் கிட்டக் கிடக்கும் வெற்றிக் கொடியை
"கிறிஸ்’ திண்னாமல் கிறிச் கிறிச் எனும் சில்லுகளின் சினப்பொலியிலும் வெல்லுவமெனும் வேட்கையொடு
விரைந்தோடிற்று எட்டிப்பிடிக்க முகமலர்ந்து வாயிற் பசையாயப் ஒடிய மாடுகளில் நுரை நீர் சிந்த செல். சுதர்சன் ஒன்று. ஈன இரக்கமற்ற | பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றொன்று.
17

Page 10
குப. ராஜகோபாலன் சிறுகதைகள் ஒரு பார்வை
- வே.செவ்வேட்குமரன் - (உதவி விரிவுரையாளர், மொழித்தறை, கிழக்குப் பல்கலைக்கழகம்) சென்ற வருடம் நூற்றாண்டு கண்ட மணிக்கொடி எழுத்தாளரான கு.ப.ரா. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியின் பொற்காலமாகக் கருதப்படும் மணிக்கொடிக்காலத்தில் புதுமைப்பித்தன், மெளனி, பிச்சமூர்த்தி போன்றோர்களுடன் இணைந்து தமிழ்ச் சிறுகதையினை உலகத் தரத்துக்கு எடுத்துச் செல்வதில் முன்னின்று உழைத்தவர் கு.ப.ரா. இதுவரையான தமிழ்ச் சிறுகதைவரலாற்றில் பிரக்ஞை பூர்வமாக ஆண்-பெண் உறவின் சிக்கல்களை சிறுகதை என்னும் வடிவத்தினுாடு நாசூக்காக வெளிப்படுத்தியவர் கு.ப.ரா. இதற்கெல்லாம் அவரது படைப்பாற்றல் ஆளுமையும் சிறுகதை உத்திகளுமே காரணம் எனலாம்.
இத்தகையவரான கு.ப.ரா.வின் கலைக்கொள்கை எத்தண்கயது? அவரது சிறுகதைகளின் உள்ளடக்கம் எத்தகையது? அவருக்கேயுரிய தனித்துவ மான சிறுகதை உத்திகள் எவை? என்பனபற்றி இவ்வேளை சிந்திப்பது பொருத்த மாகப்படுகிறது.
நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களை அப்படியே எடுத்துக் காட்டவேண்டும் என்ற கொள்கையுடையவர் கு.ப.ரா. வாழ்க்கையின் உண்மை களை மிகையின்றி கூறுவதுதான் கலை. அதையடுத்து மகிழ்வூட்டலுக்கான காரணியாக மட்டும் இவர் கதைகளைப் படைக்கவில்லை. "சிறுகதை என்னும் தலைப்பினிலேயே இவர் ஒரு கதை எழுதியுள்ளார். அக்கதையின்முடிவில் சிறுகதைபற்றிய தம் கொள்கையைப் புலப்படுத்தியுள்ளார்.
“சீ... இந்த முடிவு எனக்குப் பிடிக்கவில்லை ஏதோ நாம்தான் வாழ்க்கை யில் கஷ்ரப்படுகிறோம்; கதையில் வருகின்றவாளுமா கஷ்ரப்படவேண்டும்? கதையிலாவது மனதுக்கு ஒரு மாற்று வேண்டாமா?
“கதை வாழ்க்கையின் உண்மையை அப்படியே எடுத்துக் காட்டுகிறது" (560185. Tubulb, U.149)
அன்றாட வாழ்வில் காணும் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிறுகதைகளைப் படைக்க முற்பட்டபோது ஆண் - பெண் உறவு, பெண் மன வேதனை, குடும்ப வாழ்க்கை என்னும் மூன்றையும் முதன்மைப்படுத்தி கதைகளை எழுதியுள்ளார்.
ஆண்- பெண் உறவில் உள்ள முடிச்சுகள் பற்றிய உண்மையான கவலை, காதலைப் பற்றிய புனைவியல் நோக்கம், நம்பிக்கை வரட்சியும் சேர்ந்த ஒரு கூட்டுக் கவலைப் பார்வை, யதார்த்த வாழ்வில் எதிர் கொள்ளும் பிடிப்பற்ற காதல் கண்ணாமூச்சிவிளையாட்டுக்கள், குடும்பக் கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்த பிடிப்பு, இவைதான் இவர் கதையின் கரு. இவற்றில் பெண்மன உணர்வுக்கே அதிக முதன்மை கொடுத்துள்ளார். பெண்வழி நோக்குடன் உணர்வுகள் அணுகப்படுவது இவரது சிறுகதையின் சிறப்பம்சமாகும். இவரது சிறுகதைகள் விளங்கிக் கொள்வதானால் மென்மையான
18

உளப்பாங்கு இருக்கவேண்டும். குரூரமான உணர்வுகளையும் மென்மைப்படுத்தி உணர்சிக் கொந்தளிப்புக்களோ, ஆரவாரமோ இல்லாமல் சொல்லுவது கு.ப.ரா.வின் ஆற்றலாகும்.
ஆண்- பெண் உறவின் புனிதத்தைக் கொச்சைப்படுத்தி, விரசமாக்கி, கிளுகிளுப்பூட்டும் குப்பை இலக்கியம் படைத்தோர் மத்தியில் அழகான கலை நயத்துடன் நாசூக்காகக் கூறுவதுதான் கு.ப.ரா.வின் படைப்பு ரகசியம். (உ-ம்) “ஆற்றாமையில் சாவித்திரியின் விரகதாபத்தைப் புலப்படுத்தும் இவர்,
"சாவித்திரியின் பக்கத்திலிருந்த காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரி யின் உள்ளத்திலிருந்த சூடு ஆறவில்லை" - என முடிக்கிறார். இதுதான் கு.ப.ராவின் சிறுகதை உத்தி.
கு.ப.ராவின் சிறுகதையின் உருவத்தைப் பொறுத்த வரையில் மிக எளிமையானதாகவும் அளவில் சிறியதாகவும் காணப்பட்டது. குறைந்தது மூன்று பக்கங்களுக்குள்ளும் கூடியது பதினான்கு பக்கங்களுக்கும் இடைப்பட்டதாகவும் சிறுகதைகள் காணப்படுகின்றன. இவரது கதைகளில் மிகச் சிறியது தாயாரின் திருப்தி மிக நீண்டது சிறிது வெளிச்சம். இவ்வகையில்,
"அவரது எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படு கிறது. பட்டுப் போன்ற சொற்களிலும், பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலைவடிவங்களையும், உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார்" (வழிகாட்டி, சிறிது வெளிச்சம், பக்.286-287) என தி.ஜானகிராமன் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய கதைகள் பெரிதும் பாத்திர உணர்வுச் சித்தரிப்புகளாகும். ‘புரியும் கதை', 'சிறிது வெளிச்சம்', 'பெண்மனம்', 'கனகாம்பரம்', 'மூன்று உள்ளங்கள், "மோகினி மாயை' என்பன போன்ற கதைகள் இதற்கு நல்ல உதாரணம்.
கதைகள் ஆசிரியர் கூற்றுக்களாகவும் பாத்திரங்களின் கூற்றுக்களா கவும் வந்துள்ளன. இவற்றில் பாத்திரங்களின் கூற்றுக்களே அதிகம். இரண்டு கூற்றுக்களிலும் இடையிடையே உரையாடலை அயல் கூற்றாகவும், நேர் கூற்றாகவும் பயன்படுத்தி கதையை நகர்த்துகிறார். கதையை ஒரே மூச்சில் சொல்லிவிடும் உத்தியைக் கையாள்கின்றார்.
கதை எழுதும்போது முடியவேண்டிய இடத்தில் தானாக நின்றுவிடு கிறது. அதன்பின் ஒருவார்த்தை வந்தால்கூட இதுவரை கட்டியெழுப்பிய உணர்வு நிலைகளின் கோபுரம் சிதறிவிடும் எனக் கூறும் அளவிற்கு ஒரு தேவையற்ற சொல்லும் இன்றி கதைகள் அமைகின்றன. இங்கு கதைக்குரிய சுய வரலாறு மட்டுமே முடிவடைந்து விடுகின்றது. ஆனால் கதைபற்றிய வாசகர்களின் உணர்வு அந்த முடிவிலிருந்துதான் தொடங்குகிறது. ( உ-ம்) 'விடியுமா
ஆண்பெண் மன உணர்வுகளை சில நெருக்கடியான நேரங்களில் மெளனம் மூலமே விளக்குகின்றார். இதனால்,
"தமிழில் மெளனங்கள் நிறைந்த சிறுகதைகளை எழுதியவர் கு.ப.ரா." (வழிகாட்டி, சிறிது வெளிச்சம், பக்.284) - என தி.ஜானகிராமன் குறிப்பிடுகிறார். முன்கதையைப் பின் சொல்லும் உத்திகொண்டும் சில கதைகள் எழுதப்பட்டுள்ளன. 'தாய், ‘விடியுமா என்பன அதற்கு நல்ல உதாரணம்
19

Page 11
இவர் கையாண்ட நடை மிக எளிய நடையாகவும் உணர்வு நிலை களைப் புலப்படுத்த்க்கூடிய சொற்களை பயன் படுத்தியும் கதைகளைப் படைத்துள்ளார். இதைப்பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி,
"கவிதைப் பண்பு நிறைந்த சொற்றொடர்களைக் கொண்டு அமைந்த அவரது நடை உணர்ச்சி நிலையைக் காட்டுவதில் வெற்றி பெறுகிறது. தமிழ், வடமொழி இலக்கிய அறிவு இந்நடை வளர்ச்சிக்கு உதவியது" (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பக்.60) - எனக் குறிப்பிடுவது இவரது நடைத்திறனைப் புலப்படுத்துவதாகும்.
இவ்வகையில் கு.ப.ரா. தனது சிறுகதைகளில் கையாண்டுள்ள உள்ளடக்கமும் உருவ அமைப்பும், உத்திமுறைகளும் வெளிப்பாட்டு முறைமை யும் மிகவும். சிறப்பானவையாகும். அவை தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவருக்கேயுரிய தனிமுத்திரைகளாகும் என்றால் மிகையல்ல.
(அன்பார்ந்த வாசகர்களே །༽ ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
"ஞானம்" சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
கொழும்பு;- பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை. u TupůUTsunů:- பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி.
திருகோணமலை:- திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. திரு. வீ.என்.சந்திரகாந்தி - 572/A, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை மட்டக்களப்பு:- எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு.
கிளிநொச்சி:- கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி. வவுனியா:- ந.பார்த்திபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
கண்டி
லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி. கொட்டக்கலை:- சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை. புத்தளம்:- சாஹித்திய புத்தகநிலையம், இல 4, குருனாகல் வீதி, புத்தளம். பண்டாரவளை:
மெடிக்கல் கெல்த் கிளினிக், இல 1, டயரபா. சந்தி, மிரஹாவத்தை(PO)
20

த
வீட்டின் முற்றத்து வெணி மணலில் கால்களை அழுந்தப் புதைத்து நடப்பதில் ஒருவகையான இன் பத்தை உணர்ந்தேன். ஒரு தாயின் கரங்களாலான வருடற் சுகமாக இருந்தது அது. பன்னிரண்டு வருடங்களின் பின் கால்கள் அனுப விக்கும் சுகமில்லையா இது? கிராமத்துக் காற்று பூவாசங் கலந்து வீசிற்று. சுற்றிலும் படிந்திருந்த ஆழ்ந்த அமைதி மனதில் இனம் புரியாத அமைதியை ஆக்கியிருந்தது. “என் ரை மண் ... எங்கடை சொந்த வீடு”
வாயப் விட்டுச் சொன்னேன். திருமணமான புதிதில் பிரிந்த தாய் நாட்டுக்கு இப்போதுதான் திரும்பிவரக் கிடைத்திருக்கிறது. ஒரு மாதத்தை இங்கு கழிக்கமுடியும். எவ்வளவு மாற்றங்களைக் காலம் சாதித்திருக் கிறது.
மெல்லக் காதோரம் துளிர்க்கும் ஓரிரு நரையோடு நானும் இவரும் பதினொன்றிலும் ஆறிலுமாக இரு குழந்தைகளுமென வாழ்வு செழித் திருக்கிறது. இப்போதெல்லாம் முன்பொருநாள் போலக் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாய் ஒட முடியாது. கொடியிடை அசைய ஒயிலாய் நடக்கவும் சரிப்பட்டு வராது. உடல் சற்றுப் பருத்து கன்னங்களில் தசைப்பிடிப்போடு தளதள வென்று இருப்பதாய் பக்கத்து வீட்டு மாமி சொல்லும்படி மாறிவிட்டிருக்கிறேன். உடலில் மட்டுமல்ல ஊரிலும்தான்
21
தாயும் மகிழ்ந்து குவாவி.
őF.6FMJJ Mhis 66MJ சங்கத்தானை, சாவகக்சேரி
மாற்றங்கள்.
முன்பெல்லாம் வெறுங்காணி களாய்க் கிடந்த காணிகளில் எல்லாம் புதிய கண்ணைக்கவரும் வகையி லான வீடுகள் தலைநிமிர்ந்து நிற்கின் றன.
"என்னம்மா ஊர் மாறிப்போச்சு." வரும் வழியில் கேட்டேன்.
"வெளிநாட்டுக் காசு. செய்யிற வேலை.”
"இது ஈஸ்வரிமாமின்ரை காணி யில்லையோ..."
“ச்சீ. பெரும்பாலான காணியள் இப்ப விலைப்பட்டுப் போச்சு. வெளி நாட்டுக்குப் போன “பொடியளும் பெரிய மாற்றத்தைத்தான் செய்து இருக்கிறாங்கள்.”
“மாற்றமெண்டு. சமூகமாற்றம் எண்டு எதைச் சொல்லுறீங்கள்.? " தீவிரமாக அம்மாவின் முகம் பார்த்துக் கேட்டேன்.
"சாதியைத் தூக்கி வீசியிருக்குது காலம்.”
"நல்ல ஒரு மாற்றந்தானே நடந் திருக்குது. முந்தின சனம் எவ்வளவு பாடுபட்டது சாதியைப் போக்குற துக்கு."
அம்மா எதுவும் சொல்லவில்லை கதை அதோடு முடிவுக்கு வந்தது. "மம்மி வாட்ஸ் திஸ். " டிலூவின் கீச்சுக்குரல் வீட்டின் பின் புறத்திலிருந்து எழுந்தது. எதையோ புதுமையாகக் கண்டிருக்க வேண்டும். அவளின் கூர்மையான கண்களுக்கும் இருக்கமுடியாது ஒடித்

Page 12
திரிகின்ற சுறுசுறுப்புக்கும் எதுவும் தப்பிவிட முடியாது. தமிழ் தெரியும் எனினும் சடுதியாகச் சில வேளை களில்தான் பிறந்த தேசத்து மொழிக் குத் தாவி விடுகிறாள். தன்னுணர் வின்றிய பொழுதில், தமிழ் பிள்ளை களின் வாயில் உலவுவ தில்லை. கூடவே அம்மா கொடுக்கும் விளக் கமும் தெளிவில்லாமல் கேட்டது.
பேரப்பிள்ளைகளுடன் வாழக் கிடைத்திருக்கும் இந்தப் பொழுது களுக்காக அம்மாவும் அப்பாவும் எவ்வளவு காலம் ஏங்கிக்கொண்டிருந் தார்கள் என்பதற்கு லட்சக்கணக்கில் செலவான தொலைபேசிக் கட்டணந் தான் சாட்சி சொல்லும். ஆனாலும் நாடு விட்டகலாத பிடிவாதம் இன்ன மும் அவர்களை ஊரோடு கட்டிப் போட்டிருக்கிறது.
வாசலில் நிழலாட நிமிர்ந்தேன். ஒட்டி உலர்ந்த தேகத்தோடு ஒரு சிறுபையனோடு வாசலில் நிற்பது கெளரியில்லையா. கெளரி என் சிறுவயதுப் பள்ளித் தோழி. ஒரே வயதுதான் என்றாலும் அவள் என்னைக் கவனித்துக் கொள்ளும் பெரிய பெண்ணாகவே இருந்தாள். எங்கள் காணியில்தான் குடும்பம் இருந்தது. காலையில் பாடசாலைக்குப் போகும்போது கூட்டிப்போக வருவாள். பாடசாலை முடிந்தபிறகும் இருவரு மாகவே வீடு திரும்புவோம்.
"நீ. நீ. கெளரிதானே" “தெரியேல்லையாம்மா. அப்பிடி மாறிப் போயிட்டனா?”
“என்ன இது அம்மா எல்லாம் வேண்டாம். சும்மா பேரைச் சொல்லிக் கூப்பிடு.”
சொன்னபடியே படியிலிருந்து இறங்கி அவள் கைகளைப் பற்றி னேன். மிகவும் கூச்சத்தோடு கை
22
களைப் பிரித்துக் கொணர் டாள். அப்பாவித்தனமாய்ச் சிரித்தாள். கிராமத்துக்கே உரிய அப்பாவித்தன மான வெள்ளைச் சிரிப்பு. மனம் முழுதும் அன்பு பரவிற்று.
"மகனா இவன், புருஷன் என்ன செய்யிறார்? எத்தினை குழந்தையள் உனக்கு."
6r of தொடர் கேளிர் விகள் அவளைத் திகைப்படையச் செய் திருக்கவேண்டும். “இவன் என்ரை நாலாவது. கீழை ரெண்டு பேர் இருக்கினம்.”
ஆறுபிள்ளைகளின் தாயா? இப்போது திகைப்படைவது என் முறை யாக இருந்தது.
*அவர் என்ன செய்யிறார்?" "கூலிவேலைதான்." *சாப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லையோ..?”
"உங்கடை காணியிலை இருக் கேக்கை குறையென்னம்மா..?”
கேட்கச் சந்தோஷம் பொங்கிற்று. "நாளைக்குப் பின்னேரமாய்க் காணிப்பக்கம் போய்ப் பார்க்கலாம் சாப்பாடு செய்தாச்சு, சாப்பிட்டுப் போங்கோவன்”
தலையாட்டினாள். ஆவலாகச் சாப்பிட்டார்கள். கெளரி அடிக்கடி இட்டிலிகளைத் தூக்கி மகனுக்குப் போட்டுக்கொண்டிருந்தாள்.
"நீ சாப்பிடு.” என்றேன். "அவன்தானே வளருற வயது." இப்போது அவனது ஒட்டிய தேகத்தின் காரணம் புரிந்தது. ஆசை யாய்ச் சாப்பிடுகிற பையனைப் பார்த் தேன்.
"இற்ஸ் இனவ் மம்மி. சொல்லிச் சிணுங்காமல் டிலுா சாப்பிட்டதில்லை. மேலும், சாப்பிடும் தட்டத்துச் சாப்பாட்டை அவர்களது
秀

தட்டிற்கு 'அம்மா அன்பு சொல்லிப் போட்டுவிடவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரை எச்சில் சாப்பாட்டை மாற்றுவது "(b)பாட் ஹபிற்” அவ்வளவு தான். ஏதோ அலுவலாக அந்தப் பக்கம் வந்த என்னவர் என்னைப் பார்த்து அர்த்தமுறச் சிரித்தார்.
"எலி லாச் சநீ தோஷமும் எல்லாருக்கும் கிடைக்கிறதில்லை."
"ம்.” என்றேன்.
[-] [-]
அவர்கள் போய்விட்டார்கள்.
ஒரு மென்வெயில் பூசிய மாலைப் பொழுதில் எங்கள் காணிக்குள் நடந்துகொண்டிருந்தோம். செருப்புக் கள் அணிந்திருப்பினும் முள் பற்றிய நினைவு ஆறுதலாய் நடக்கவைத்தது. பிள்ளைகளும் அவதானமாகவே நடந்தார்கள். ஆனால் வயதின் குதிப்பு அந்த நடையில் துள்ளலைச் சேர்த் திருந்தது.
"மார்வெலஸ். "பைன்.
டிலூவின் கீச்சுக்குரலில் வியப்பும் சேர்ந்தே வந்தது. பச்சைப் பாசிக் குளம், வீதியோர நத்தைக் கூடு, அழுத்தமான கூழாங்கல், நுங்குக் குலைகள், தென்னைக் கூட்டங்கள், நீலநட்சத்திரமாய்க் காலடியில் மிதிபடும் புற் பூக்கள் எல்லாமே வினோதந்தான் என் பிள்ளைகளுக்கு. ஒரு சிறு பெட்டிக்குள் சிறுபூக்கள், கற்கள், அழகிய இலைகளென நிறைத்தபடி என்பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். முன்பொருநாள் சின்னஞ் சிறுமியாய் நான் பொன் வண்டினைச் சிறுபெட்டிக்குள் வைத் துப் பாதுகாத்திருந்த கவனம் என் நினைப்பிற்கு வந்தது.
"கண்ணன். இது சாப்பிடும். இல்லை.?" டிஷானின் கேள்வி.
23
咒
"இல்லை இது சாப்பிடுறதில்லை கெளரியின் சிறுபையனுக்கு இவர்களின் கொச்சைத்தமிழ் சிரிப் பையும் அதே நேரத்தில் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் கொடுத்திருக்க வேண்டும். பொறுமை யாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் தமிழ் அழகாகக் கைவந்த பெருமிதம் அவன் முகத்தில் சுடர்வதாகப் பட்டது.
"அந்த இனிப்புப்புளி இன்னும் நிக்குதா தெற்கு மூலையிலை.?" என் கேள்வி அவளுக்குப் பழைய நினைவுகளை மீட்கச் செய்திருக்க வேண்டும். அவளது முகம் முழுதும் பூரிப்புப் பரவிற்று. கண்கள் ஒரு கனவுலகத்தைக் காவியதாய் விரிந் தன. சிறு பெண்ணாயிருந்தபோது இந்த இனிப்புப் புளியால் தான் என்னைக் கைக்குள் போட்டிருந்தாள் எனினும் மிகையில்லை.
"ஒமோம் புளி நிக்குது. காயுங் கிடக்கவேணும்."
உற்சாகமாய் நடநீ தோம் . பையன் அநாயாசமாய் மரத்தின் மீது ஏறினான். புளியங்காய்கள் குறை வின்றிக் காய்த்துக் குலுங்கின. அவன் மரத்திலிருந்து விழுந்து விடக் கூடும்

Page 13
என்ற நினைப்பில் 'டிலூ’ பதட்டமாய்க் கையுதறிக் கொண்டிருந்தாள்.
காய்களை ஆசையுடன் வாயில் வைத்தேன். பற்களில் கூச்சம்.
"வயசாகிப் போயிட்டுது. என்ன." ஒருமாதிரிச் சிரித்தேன். பிள்ளைகள் வாயில் வைத்தோமோ இல்லையா என்பதற்கிடையில் துப்பி விட்டார்கள்.
"புளிக்காய் கூடாது." என்மகன் தான் சொன்னான்.
"புளியங்காய் எண் டுதான் சொல்லுறது." இது கண்ணன்.
"ஏன்” "அப்பிடித்தான். புளியம்பூ, புளியம் பழம் எணர்டுதான் சொல்லவேணும்." “upubuნმ.....”
"அது சரிதான் புளியங்காய் எண்டுதான் சொல்லுறது."
நான் படித்த அம்முச்சாரியை பற்றி இவர்களிடம் கதைக்க முடியாது.
"பப்பாசிப்பூ. நேற்றுச் சொன் னது."
பப்பாசியம்பூவாக அது இல்லா தது அவனது பிரச்சினை.
"கேளுங்கோ டிஷான். புளியங் காய் எண்டு தான் சொல்ல வேணும்" அழுத்தமாகச் சொன்னேன். டிலு ஒரு மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். டிஷான் ஒருமுறை கூர்ந்து பார்த்ததில் மனக்கசப்புத் தெரிந்தது. கண்டிப்பே அறியாது வளர்ந்த குழந்தைகள். அவர்களுக்கு அழுத்திச் சொல்வது கூடத் தாங்கிக் கொள்ள முடியாது. திரும்பி நடந்தோம்.
நீண்ட நிலப்பரப்பில் அடர்த்தி யாகச் செழித்திருந்தன தென்னை மரங்கள். இடையிடையே பயன்தரு மரங்கள்.
24
"ஐயான் ரை உழைப்பு. செழிச்சுக் கிடக்குது பூமி.”
சொன்னபடி கெளரி நடந்தாள்.
99
ம்.” என்றேன் கெளரியின் புருஷன் இளநீர் பறித்து அழகாக வெட்டித்தர ஆசை யோடு குடித்தோம்.
"ம். இற்ஸ் ஸ்வீற். பாதிக்கண் மூடித் தலைசரித்துச் சிரித்ததள் டிலூ. சற்று முன்ன்தான் கோபத்தை முற்றுமாய் மறந்திருக்க வேண்டும். குளிர்ந்த இனிமையான இயற்கையின் அமிர்த வர்ஷம்.
"அவரும் வந்திருக்கலாம். இதைக்குடிக்க."
நான் சொல்லச் சிரித்தார்கள். ஈரறை கொண்ட வீட்டின் முற்றத் தில் அமர்ந்திருந்தோம்.
"இருக்கக் கதிரை இல்லை ubLDT....."
சொன்னபடி ஒலைப்பாய் விரித்த வளைத் தடுத்திருந்தேன்.
"மண்ணிலை இருக்கிறதிலை ஒரு சுகமிருக்கு."
சொன்னவார்த்தைகள் மீண்டும் என்காதில் கேட்டபோது வேறு பொரு ளைக் கொண்டிருந்தன போலுணர்ந் தேன். எல்லோரும் அமைதியாக இருந்தோம். அவளின் சின்னக் குழந்தைகள் எம்மைச் சுற்றின.
‘நிம்மதியாய் இருக்கிறீங்களா..? கெளரியின் புருஷனிடம் கேட்டேன்.
நிம்மதிக்கென்னம்மா குறை. அப்பர் ஆத்தை இருந்த இடத்திலை பரம்பரை பரம்பரையாய் வாழக்கிடைச் சிருக்கு. பிள்ளையஞம் வாழும் எண்ட நம்பிக்கையிருக்கு. இருப்புக்குக் கஷ்டமில்லாத சீவியம்.
அவனது வார்த்தைகளிலி விக்கித்தேன்.
gy

"இருப்புக் கவர் டமிலி லாத சீவியம். நாங்கள். இருப்பிலி as6mm.....?"
திட்டமற்ற மொழிக் கலாசாரக் குறியீடுகளுடன் அப்பாவித்தனமாய் என் பிள்ளைகளின் முகம் மின்னிற்று. அருகே பிளந்து வைக்கப்பட்டிருந்த இளநீரில் என்பார்வை படிந்தது. உள்ளே வெள்ளைக் கலாசாரம் ஊறிய நிறத்தினால் ‘தமிழராய் இருக் கிற என்பிள்ளைகளின் தலைமுறை கூட இப்படித்தான் அடையாளங்
கொள்கிறது.
"நீங்கள் நிம்மதியாய் இருக்கிறீங் æ6mmubuDT.....?"
விட்டுக்கொடுக்காமல் .........ظL தலையசைத்தேன். புன்னகை பூசிற்று என்முகம். பழகிப்போன வழிதான். போவதற்காக எழுந்தோம். கெளரி வழிகாட்டி நடந்தாள். ஏனோ என் நடை தொய்ந்து தளர்ந்திருந்தது. களைப்பாக இருக்க வேண்டும் ஆனால் என்பிள்ளைகள் மாற்றமுறாத
{ଭି ஹf
t
Gň
நாளை எங்கள் அலுவலகங்களிலும் நாங்கள் வன்முறைகள் புரிவோம்!
கம்புகள் கற்கள் கொண்டு மாணவர்கள்
பாடசாலைகளைத் தாக்கிக் !கண்டு விட்டார்கள் ܣܵܗܘܢ
ஆளுக்காள் மோதிக் கொள்வோம்!
உற்சாகத்துடன் நடந்தார்கள்.
கம்பியூட்டர்களால் தலை நொருக்கி, கதிரைகளால் அடித்தும் பல்கலை மாணவர்கள் உயிர் பறிக்கும் புதிய கலாசாரம் கண்டு விட்டார்கள்!
நாளை நாங்கள் எங்கள் அலுவலகங்களிலும் அடிபட்டுக் கொள்வோம்!
மேலதிகாரி மோசமாக நடந்தால் சக நிலதாரி - சாக்குப் போக்குச் சொன்னால், ஏவலாளன் எறிந்து பேசினால் ஊழல், இலஞ்சம் ஏதும் உள்ளுக்குள் நடந்தால்
நாங்கள்
அரசியல் வாதிகள் அறிக்கை விடுவார்கள், மேலதிகாரிகள் கவலை தெரிவிப்பார்கள்
நீ荔 துறை கன துடைததுக e)
گبرے
25

Page 14
இளம் எழுத்தாளர் இ. இராஜேஸ்கண்ணன் கரவெட்டி வதிரியைச் சேர்ந்தவர். சிறுகதைத் துறையோடு கவிதை, நாடகம் ஆகிய இலக்கியத் துறைகளிலும் கால்களை ஊன்றியிருப்பவர். வதிரி இ. இராஜேஸ்கண்ணன், சத்திராதி, இராகன் ஆகிய பெயர்களுள் தன் படைப்புகளைத் தந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் சிறப்புப் பட்டதாரி. சஞ்சீவி, தினக்குரல், தூண்டி, இலங்கை வானொலி முதலான ஊடகங்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ள போதிலும், சஞ்சீவி வார இதழே இவரை எழுத்துத் துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமையைப் பெறுகிறது. 1992 இலிருந்து சிறுகதைகளைப் படைத்துவரும் இராஜேஸ்கண்ணன் ஈழத்து சிறுகதை இலக்கியத்திற்கு நம்பிக்கை தரும் படைப்பாளியாக மாறிவிட்டார். காவோலைகள், சமாதான நீதவான், மூன்றாம் தலைமுறை, லீவு போம், பித்து மனங்கள், மாரீசம், முதுசொமாக, மனிதம் மட்டுமல்ல, இடைவெளி, அகதி அந்தஸ்த்து, என்பன இராஜேஸ்கண்ணனின் சிறுகதை களில் குறிப்பிடத்தக்கவை. இந்தக் குறிப்பிடத்தக்க பத்துச் சிறுகதை களையும் தொகுத்து 'முதுசொமாக என்ற சிறுகதைத் தொகுதி ஒன்றினை தூண்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இராஜேஸ்கண்ணன் மூன்று காரணங் களுக்காக கவனத்திற்குரிய படைப்பாளியாகிறார். ஒன்று: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடாக 1990/2000 காலகட்டத்தில் என்றுமில்லாத வகையில் ஆரோக்கியமாக முகிழ்ந்தெழுந்துள்ள் சிறுகதைப் படைப்பாளி களுள் குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளி இராஜேஸ்கண்ணன். இரண்டு: சரியான இடத்தில் சிறுகதையை ஆரம்பித்து, முறையாக வளர்த்து சரியான இடத்தில் சிறுகதையை நிறைவுறுத்தும் இப்படைப்பாளியின் சிறுகதை வடிவ நேர்த்தி. மூன்று: அவரின் சிறுகதைகளின் உள்ளடக்கம் சமூக விமர்சனங்களாக மனதைத் தாக்கும் பாங்கு.
இராஜேஸ்கண்ணனின் பெரும்பாலான சிறுகதைகள் நனவோடை உத்தியில் கூறப்பட்டுள்ளன. காவோலைகள், லீவு போம், மாரீசம் ஆகிய சிறுகதைகள் இவ்வகையில் மிகவும் இலக்கிய நேர்த்தியாக எழுதப் பட்டுள்ளன. அவரின் சிறுகதைகளிலிருந்தும் நகர்த்தும் பாணியிலிருந்தும் நிறைய நல்ல சிறுகதைகளைப் படித்து உள்வாங்கியுள்ளாரென்பது புலனாகின்றது. தமிழக, ஈழ சிறுகதை முன்னோடிகளின் படைப்புக்களின் பரிச்சய
26
 
 
 
 
 
 
 

செங்கை ஆழியான்
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் மில்லாமலேயே பல இளம் எழுத்தாளர்கள் சிறுகதைக் களத்தில் இறங்கி புள்ள அவலம் அண்மைக்காலத்தில் வெளிவரும் சிறுகதைகளிலிருந்து புலனா கிறது. சிறந்ததொரு படைப்பாளியின் உருவாக்கம் வாசினைத்தேடல், பட்டறிவுப் பயிற்சி, கூர்ந்த அவதானிப்பு, மொழியறிவுத்திறன் என்பனவற்றிலேயே முக்கிய மாகத் தங்கியுள்ளது. இராஜேஸ்கண்ணனிடம் இவை அனைத்துமுள்ளன என்பேன்.
இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள் சமூக விமர்சனங்களாக விளங்கு வதற்கு அவரது கூரிய அவதானிப்பே காரணமெனப்படுகிறது. அத்தோடு அவர் சமூகவியல் சிறப்புப் பட்டதாரியாக விளங்குவது அறிவுபூர்வச் சமூகப் பார்வையை அவரது படைப்புகளில் பொதிய வைத்துள்ளது. ‘லிவு போம் என்ற சிறுகதை அவ்வகையில் உச்சமானது. நெஞ்சைத் தொடும் படைப்பு. மானிட உணர்வுகள் எந்த இனத்தவருக்கும் ஒன்றே. 'எல்லாப் பக்கங்களிலும் சாவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெரும் சோகம் பொதிந்திருக்கிறது என ஆசிரியர் கூறும்போது இதயம் வலிக்கிறது. அவமான மரணங்களுக்கு எதிரான படைப்பாளியின் கருத்தியல்பு 'முதுசொமாக என்ற சிறுகதையிலும் விழுந்துள்ளது. தொலைந்துபோன பரம்பரைகள், பெற்றோரைக் கவனியாத வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள், வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் மோசடி, இடம் பெயராது தமது வீட்டிலேயே தங்கிவிடும் வயோதிபர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் எனப் பல்வேறு சமூகத்தின் அவலங்களைத் தன் படைப்பில் சமூக விமர்சனமாக்கி வழங்கியுள்ளார். ஆற்றொழுக்கான நடை, சிறந்த பாத்திர வார்ப்புகள் அவரது சிறுகதைகளின் பலம். வாழ்த்துகின்றோம்.
27

Page 15
6.65 எழுத்துலக
- தமிழோவியண் -
எழுத்துலகத்தோடு எனக்குள்ள தொடர்பு என்று சொல்லப் போனால், அதன்வயது சுமார் 45 ஆண்டுகளாகும். இந்தக்கால எல்லைக்குள் சந்தித்த நிகழ்வுகள் சிந்தையை விட்டு அகலாதவை. மலையக இலக்கிய வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தவை; மகிழ்சியானவை.
கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்றுக்கொண்ட அனுபவங்கள் சற்றும் மாறிவிடாத மறந்து விடாத சித்திரங்களாக உள்ளத்தை மயக்குவனவாக உந்தி எழுகின்றன. உற்ற துணையாக அதுவே உறுதுணை புரிகின்றன.
பாரதி "எழுத்தே தெய்வம்!-எனது எழுதுகோலே தெய்வம்" என்று ஆர்ப்பரிதான், ஆரவாரம் செய்தான். பாட்டுத் திறத்தாலே பலகோடி தமிழ்மக்களை ஈர்த்துக் கொண்டான். எனினும், அந்தப் பாரதியின் தொடக்க காலம் தொல்லைகளின் பின்னலாகவே அல்லற்படுத்தியது. அதுவே அவனது உள்ளத்தில் உற்சாக உணர்வு பொங்கி எழப் பக்க பலமாக நின்றது. இந்த பாரதியின் ஒரு பத்தாண்டு மறைமுக வாழ்வில் அவன் உயிர் மூச்சு பெற்றுக்கொள்ள உறுதுணை புரிந்திட கனக - சுப்பிரத்தினம் என்னும் ஒப்பற்ற சீடனைப் புதுச்சேரியில் இனங்கண்டுகொள்ள வகை செய்தது. அந்தச் சீடனை ஊரும் உலகமும் பாரதிதாசன் என்று பறை சாற்றியது.
இந்த பாரதிதாசனின் கவிதைகளை- தி.மு.க ஏடுகளைப் பயின்றபடியினால் எழுந்த ஈடுபாடு என்னைக் கவிதை பாடத் தூண்டியது. அறிஞர் அண்ணாவும் நாவலர் நெடுஞ்செழியனும் பாரதிதாசனின் கவிதைகளைத் தங்களது பேச்சிலும் எழுத்திலும் எழுத்தாண்டிருந்த பாங்கு, மாணவனான என்னை மனம் லயிக்கச் செய்தது.
பயின்று கொண்டிருந்த காலத்திலே கொழும்பு சாகிராக்கல்லூரி மாணவர் வெளியிட்ட 'சிறுவர் சுடர் எனனும் திங்கள் இதழில், முன்பக்கத்தில் நான் எழுதிய "பாட்டொன்று பாடிடா!. தமிழ்ப்
பாவலன் பாரதிதாசனின் பாட்டொன்று பாடிடா!
என்ற பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடலை எழுதிய தமிழோவியன் யார்? எங்கே உள்ளார்? என்ற தேடல் முயற்சி பலரிடமும் பரவியதாக அதன் ஆசிரியர் திரு நாகேந்திரம் எனக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருந்தார். “மாணவர் நேசன்' ஆசிரியர் பணி
பதுளை சரசுவதி வித்தியாசாலையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட
28
 

கையெழுத்துப் பத்திரிகை மாணவர் நேசன் மாத இதழுக்கு ஆசிரியராக என்னைத் தெரிவு செய்தார் ஆசிரியமணி ந. சிவகுரு அவர்கள். ஆசிரியர் என்னும் பொறுப்பிலிருந்தபடியால் பலவிதமான புனைபெயர்களில் பல்வேறுபட்ட ஆக்கங்களை வடித்திடும் வாய்ப்பு இலகுவாகக் கிட்டியது. ஊவா மாகாண மட்டத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற எழுத்துப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றேன்.
தமிழகத்திலிருந்து வார இதழாக வெளிவந்த 'கலை மன்றம் ஏட்டில் இடம்பெற்ற எனது படைப்புகள், அண்ணாவின் திராவிட நாடு, கலைஞரின் 'முரசொலி” நாவலரின் “மன்றம், கவிஞர் கண்ணதாசனின் ‘தென்றல்", கி.வா.ஜ.வின் "கலைமகள், 'ஆனந்த விகடன், குமுதம்', 'அமுதசுரபி என்னும் பல்வேறு இலக்கிய அரசியல் ஏடுகளைத் தொடர்ந்து வாசித்ததும் நான் எழுதுகோல் ஏந்துவதற்குக் காரணமாக அமைந்தன. "திருக்குறள் மன்றம்"
பொதுவாக ஐம்பதுகளில் பதுளையில் பயின்ற மாணவ மாணவிகளிடம் நிரம்பி நின்ற தமிழ் உணர்வு- பற்று. தி.மு.க.வின் மறுமலர்ச்சிப் பணியால் விரிவடைந்தது. இச்சூழ்நிலையில் பதுளையில் முன்னணிவகித்த பல தமிழ் இளைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய பதுளை திருக்குறள் மன்றம் நடத்திய குறள் வகுப்புகள், வள்ளுவர் விழாக்கள், பெரியார்கள் நினைவு விழாக்கள் தமிழ் மாணவ மாணவிகளிடமும் தமிழ் மக்களிடமும் உண்டு பண்ணிய மாற்றம், புதிய மலர்ச்சி குறிப்பிடத்தக்க பயன்பாட்டைப் பரப்பியது. இந்தத் திருக்குறள் மன்றத்தின் நண்பர் பெரி. கந்தசாமியைத் தொடர்ந்து செயலாளராகப் பொறுப்பேற்றேன். இலங்கையிற் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களை அழைத்து உரையாற்றச் செய்தமை - அதனால் அப் பெரு மக்களுடன் ஏற்பட்ட தொடர்பு எனது எழுத்தாற்றல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. ஏடுகளும் என்னைப் புரிந்து கொண்டன. தமிழகத்திலிருந்து வருகைதந்த நாஞ்சில் சி. மனோகரன், கவிஞர் கண்ணதாசன், தத்துவமேதை டி. கே. சீனிவாசன், இலங்கை நண்பர் சுபைர் இளங்கீரன் போன்றவர்கள் திருக்குறள் மன்றத்தின் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். அவர்களின் தொடர்பால் எனது பேச்சாற்றல் வீறு பெற்றதோடு, எழுத்தாற்றலும் ஏற்றம் பெற்றது. முதலாககம
அந்த நாட்களில் ஈழத்து எழுத்தாளர்களின் மண்வாசனைமிகுந்த - மிளிர்ந்த படைப்புக்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததோடு, பல இலக்கியப் போட்டிகளையும் நடத்திவந்தது சுதந்திரன். இச் சுதந்திரன் ஏட்டில் தமிழிசையின் சிறப்பை எடுத்துணர்த்தும் பாங்கில் அமைந்த, அகநானூற்றுப் பாடலை மையமாக வைத்து ஓர் இலக்கியக் கட்டுரையை எழுதினேன். இப்படி பல படைப்புகள் பல சிற்றேடுகளில் வெளிவந்தன. ‘வீரகேசரி தோட்டமஞ்சரி நடத்திய மலையகச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற “வெறி என்னும் எனது சிறுகதை எனக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. அதேவேளை மிதமிஞ்சிய எதிர்ப்பையும் சந்திக்க வைத்தது. தொழிற் துறையில் என்னோடு சம்பந்தப்பட்ட முதலாளி ஒருவருடைய சொந்த வாழ்வினை மையமாக வைத்து வடிக்கப்பட்ட கதை அது. அதன் பாதிப்பால் வெளியுலகில் 29

Page 16
அவருடைய பேருக்கு உண்டான அவமதிப்பிற்கு ஈடாக ஐம்பதினாயிரம் ரூபாய் இழப்பீடு கோரி வெறி கதையை வெளியிட்டமைக்கு தண்டமாக அந்த முதலாளியே வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கால் வீரகேசரி ஆசிரிய பீடமும், நிருவாகமும் பலவிதமான சிக்கலான பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டம் தலைதூக்கியது. வீரகேசரி நிருவாகப் பணிப்பாளர் மறைந்த கேசவன் என்னுடன் கடுமையாக வாக்குவாதப் பட்டார். இறுதியில், இதனால் ஐந்தாண்டுகளுக்கு தமிழோவியன் என்ற பேரே வீரகேசரியில் வெளிவரக் கூடாது என்ற கட்டாய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
ஆண்டு ஒன்றோடிய பின்னர், ஐந்தாண்டு என்பது நாலாண்டாகி, பிறகு மூன்றாண்டாகி, கடைசியில் இரண்டாண்டாகியது. இதனால் மலையக எழுத்தாளர்களுக்கு ஓரளவு வாய்ப்பு தந்துகொண்டிருந்த வீரகேசரி ஏடும் எனக்கு - எனது கதைகளுக்கு கதவடைப்பு செய்தது. "தோட்ட மஞ்சரியில் மலையக சம்பந்தமாக எனது கவிதைகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெற்று வந்தன. என்னுடைய இத்தகைய வெறியால் சுமார் மூன்றாண்டுகள் பலவிதமான போராட்டங்கள் நடத்தினேன். பழிவாங்கும் குறியால் பாதிக்கப்பட்டேன். *வைராக்கியம்' என்னும் எனது சிறுகதை சுதந்திரன் போட்டியில் பரிசு பெற்று, ஓரளவு மன ஆறுதலைத் தந்தது. "வெறுங்கல்' என்னும் எனது சிறுகதை மலையக மூன்றாவது சிறு கதைப் போட்டியில் பரிசு பெற்றது, பெருமளவு மன நிறைவைத் தந்தது.
இந்த வெறியின் விளையாட்டைப்பற்றி ஏன் சற்று விரிவாகக் குறிப்பிட்டேன் என்றால், இந்த இளைய தலைமுறையினர் இதனைப் பார்த்து இப்படியான சிக்கலான வெறிச் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்ற உந்துதலினால்தான் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே! என்னை வெளியுலகம் தி.மு.க. வைச் சார்ந்தவன் என்று பறைசாற்றினாலும், தமிழ் கலை இலக்கியம் என்ற பரப்பிற்குள்ளேயே எனது பணி பரந்து கிடக்கின்றது. பாரதிதாசன் மானசீகக் குருவாக என்னை வழிநடத்தினாலும் அப்பெருமகனின் இலக்கியப் பணியும் இதய வேட்கையும் எவருக்கும் அஞ்சாத நெஞ்சுரமும் நாமெல்லாம் கட்டாயம் பின்பற்றத்தக்கன.
மலையகக் கவிதைப்போட்டியில் மலைமுரசு எனது கவிதைக்கு 1962ல் முதற்பரிசு வழங்கியது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. பல கவிதைப் போட்டிகளிலும் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றவன் எனினும் பாரதிதாசன் நூற்றாண்டு விழா சர்வதேச அளவில் நடந்த கட்டுரைப் போட்டி யில் மூன்றாம் பரிசு பெற்றதை நான் எனது ஆசானுக்குச் செய்த கடப்பாடாகவே கருதுகிறேன்.
கவிஞர் கண்ணதாசனை அழைத்துச்சென்று தெளிவத்தையில் வள்ளுவர் மன்றம் ஆரம்பித்து வைத்தது, குறள் வகுப்பு நடத்தியது. எழுத்தாளன் காதலி, நச்சுக் கோப்பை, தூக்கு மேடை போன்ற நாடகங்களை இயக்கி மேடை ஏற்றியது. அதனைத் தொடர்ந்து தியாகி, "ஏட்டிக்குப் போட்டி, "மாற்றம், “மனமாற்றம்’, ‘மதிமயக்கம்’, ‘காதலின் வெற்றி', 'கலைப்பித்தன்' என்ற நாடகங்களை எழுதி இசை அமைத்து அரங்கேற்றியமை ஆகியன எனக்கு 30

மனநிறைவைத் தந்தன.
“அரைப் பேர்' , 'சமசம்பளம்” “போராட்டம்', "எல்லோருக்கும் இல்லம் போன்ற வானொலி நாடகங்களை அக்காலகட்டத்தில் எழுதினேன்.
1959ஆம் ஆண்டு எட்டாம் மாதம், ‘எழுத்தாளன் காதலி இசைப் பாடல்கள் என்னும் எனது நாடகப் பாடலகள் நூலை தெளிவத்தை வள்ளுவர் மன்றத்தார் கண்ணதாசன் படிப்பகத்தின் சார்பாக நூலாக வெளியிட்டனர். 'கலைச் செல்வி என்னும் (சிற்பி - சரவணபவன் வெளியிட்ட) மாத இதழ் இந்த எழுத்தாளன் காதலி இசைப்பாடல்கள் நூலுக்கு கவிதை யிலே விமர்சனம் எழுதிப் பாராட்டியது. அதனால் மிகுந்த உற்சாகம் அடைந்தேன். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு தமிழோவியன் கவிதைகள். இதற்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசும் வழங்கிப் பாராட்டப் பெற்றது. பெற்ற அரசபட்டங்கள்
‘தமிழ்மணி', 'கவிமணி', 'கலாபூஷணம்’ என்பன. அத்தோடு தெளிவத்தை வள்ளுவர் நாடக மன்றத்தார், கணையாழியை தங்கத்தால் செய்து அணிவித்துப் பாராட்டினர். லிந்துலை பாரதி மன்றத்தார், அமைச்சர் அமரர் தொண்டமான் தலைமையில் பாராட்டிப் பொன்னாடை போர்த்தினர். எழுதவேண்டும் என்ற ஆர்வம்
ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சில் நான் மலர் ஆசிரியராகப் பல தடவைகள் பணியாற்றியுள்ளேன். ஊவா மாகாணக் கவிதைத் தொகுப்பு வெளிவர எங்களது பதுளை மாவட்டக் கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக, பலமுறை போராடி இறுதியில் வெளியீட்டு விழா வைக்காமலேயே 1996ஆம் ஆண்டு சாகித்திய விழா முடிந்த பின்பு ஊவாமாகாணக் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
2001ஆம் ஆண்டுக்கான ஊவாமாகாண சாகித்திய விழாவில் (2002 இல்) பண்டாரவளையில் எங்களது பதுளை மாவட்டக் கலை இலக்கிய வட்டத்தின் வேண்டுகோளுக்கமைய, "பதுளை சொல்லும் கதைகள்’ என்ற பதுளை மாவட்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்பு நூல் வெளியிடவும், எனது முனைப்பான முயற்சி ஒரு காரணமாகும். தமிழ்ப் புலமையோடு பலரின் கவிதைகளை, காவியங்களைப் பயின்றமையால் பெற்ற மொழி அறிவு எனது கவிதைகளின் வெற்றிக்கு வித்திட்டன. தோட்டத்து மக்களின் இன்ப துன்பங்களை கண்கூடாகக் கண்டபோது, அதன் தாக்கம் ஏற்படுத்திய வேகமே மலையகக் கவிதைகளாக மலர்ந்தன. துயர ஒவியங்களாகின. காதல் வேகம் என்று எடுத்துப்பார்த்தால், அதனை விட விஞ்சி நிற்பது மலையக மக்களது வாழ்வியல் கவிதைகளே. எனது கவிதைகளின் வார்ப்பு பலதரப்பட்ட சந்தங்களுக்குச் சொந்தமானவை. எனினும் ஆய்வாளர்கள் நாட்டுப் பாடல் பாணியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுக் கூறுகின்றனர். எப்படியோ எதை யான் இயம்ப எண்ணினேனோ அவற்றை அப்படியே வடித்துள்ளேன் - கவிதைகளாக அதனை வாசகர்களின் முடிவிற்கு விட்டு விடுவோம். விமரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு. கதைகள் என்கிறபோது அவை மண்வாசனை என்ற வரம்பிற்குள்
31

Page 17
அடங்கியும் நிற்கும். சில கதைகள் அதனையும் தாண்டி வெளியுலகோடு பின்னியும் கிடக்கும். கதைமாந்தர்கள் படைப்பு இயல்போடு கைகோர்த்து ஓடுவதும் உண்டு. இனிமை நிகழ்வுகளில் இறுமாந்து கிடப்பதும் உண்டு. சமுதாயத்தின் பலதரப்பட்ட பகுதியினரின் போக்குகள் நமக்கு விந்தையாகவும் இருக்கும். வேடிக்கையாகவும் விளங்கும். அப்படியானவர்களை அதே கோணத்தில் காட்ட முற்படும்போது, அது சற்று வேறுபட்ட பாத்திரமாகவே விளங்கும். எப்படிப் பார்க்கினும் அப்படியான ஏறுமாறான பாத்திரங்களை நாம் ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. ஏனென்றால் அவர்கள்தான் இன்று நமது சமூகத்தையே ஆட்டிப்படைக்கின்றனர். அவர்களின் அந்தரங்க விளையாட்டை அறிந்து கொள்வதற்கே இந்தப் பகிரங்க வேலை. நாடக வளர்ச்சி
இலங்கையில் நாடகத்துறையை எடுத்துக் கொண்டால் பெரும் பான்மை இன மக்களின் முன்னேற்றகரமான வளர்ச்சி வியப்புக்குரியது, பாராட்டத்தக்கது. ஆனால் தமிழ் நாடகத்துறை பரிதாபமான நிலையில் தள்ளாடு கின்றது. பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராட்டக் களத்தில் நிற்பது. மற்றது அரசின் ஆதரவின்றி புறக்கணிப்பிற்கு இலக்கானது.
நாடகத்துறையில் தொண்டு தொட்டு ஈடுபாடு கொண்டவன் என்னும் அநுபவத்தில் தெரிந்து கொண்டது என்னவெனில் மேடை நாடகங்கள் தற்போது இடம்பெறுவது மிக மிகக் குறைவு.
குறுந்திரைப்படங்கள் எடுப்பது மிகக் குறைவு. வர்த்தக நிறுவனங்கள் சிங்களக் குறுந்திரைப்படங்களையே தேடி ஓடுகின்றன. இதனால் தமிழ் நடிகர்கள் நடிகைகளின் திறமைகள் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றிற்கெல்லாம் விடிவுகாலம் தோன்ற வேணடுமாகில், நாடக வளர்ச்சியில் நாட்டம் காட்டுவது நல்லது. இதனை நாடகத்துறையில் கொண்ட பற்றுதலினாலேயே இங்கு குறிப்பிட்டேன்.
கணக்குப் போடும்போது N பைதகரசின் தங்கையாகவும் െ விஞ்ஞானச் செய்முறையில் o மேரிகியூரி அம்மையாகவும் 0. சமூகக்கல்வியில் சந்தித்த *്യ ള് கார்ள் மாக்சின் தோழியாகவும் சங்கத் தமிழ் படிக்கும்போது * ஈழத்துப் பூதந்தேவனாராகவும் o கற்பனை செய்ததெல்லாம் கற்பனையாகவே - வசதிப்படும் என்றெண்ணி வர்த்தகம்தான் படித்தேன் தெருதல் போதே தேங்கீதா படித்திருப்பேன் மனையியலையும் - ノ
32
 

ஓர் அறிமுகமும் சில அவதானிப்புகளும்
புலோலியூர் க.சதாசிவம்
சீழத்தின் அதிமூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரும் ஆக்க இலக்கியத்துறையில் ஏலவே மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாவல்கள், ஒரு நாடக நூல் ஆகியவற்றுடன் பல மருத்துவ நூல்கள், சிறுவர் நூல்கள், ஆத்மீக நூல்கள் ஆகியவற்றைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்த நந்தியவர்கள் தனது நான்காவது சிறுகதைத் தொகுதியாக தரிசனத்தை நல்கியுள்ளார். 1947ல் இலக்கிய உலகிற்கு அடியெடுத்து வைத்த நந்தி அவர்கள் ஐந்து தசாப்தங்களாக ஆக்க இலக்கியம் படைத்து வருகிறார். ஈழத் தமிழ் ஆக்க இலக்கியத்தின் பதச்சோறு எனக் கொள்ளக் கூடியவர் நந்தி. ஈழத்துச் சிறுகதை வரலாற்றை நோக்கும்போது நாம் பொதுவாக வகுக்கும் பெரும் பிரிவுகளான சுதேச இலக்கியம் படைத்த காலம், தேசிய இலக்கிம் படைத்த காலம், தமிழ்த் தேசிய இலக்கியம் படைத்த காலம் ஆகிய முப்பிரிவுகளில், சீர்திருத்த நோக்கில் கலையழகுடனும், முற்போக்குச் சிந்தனை நோக்கில் யதார்த்தக் கருத்தியலுடனும் தமிழ்த்தேசிய நோக்கில் நவீன இலக்கிய வடிவிலும் சென்ற - செல்கின்ற ஈழத்துச் செல்நெறிக்கு இசைவாக மூன்று காலப்பிரிவிலும் இலக்கியம் படைத்து தனக்கென ஓர் இடத்தை, "இமேஜ்ஐ ஏற்படுத்தியவர் நந்தி. 1995-2002 ஆண்டுகளில் எழுதப்பட்ட பெரும்பான்மையான கதைகளைக் கொண்ட தரிசனம் தமிழ்த் தேசிய இலக்கியக் காலகட்டத்தின் அவரது பங்களிப்பு எனலாம். இக்காலகட்டப் பண்பினை வெளிக்கொணர்கின்ற 95க்கு முன்பு எழுதப்பட்ட ‘பதுங்குகுழி, "ஒரு கேள்வி பிறக்கிறது ஆகிய அவரது தலைசிறந்த படைப்புகளை அசைமீட்டு, கலை வடிவத்தைக் கருத்தில் கொண்டு தரிசனத்தைப் படிக்கத் தொடங்குபவர்களுக்கு பொச்சம் தீராது. இலக்கிய வடிவம் என்பது குறித்த வார்ப்பு அச்சுக்குள் ஊற்றி நிரப்பி எடுக்கும் விவகாரம் அல்ல. காலத்தின் தேவைக்கு ஏற்ப விரிந்து கொடுப்பது என்பதை மனங்கொள்ள வேண்டும். பின்நவீனத்துவப் பண்புகளை மனங்கொண்டு தரிசனத்தைத் தரிசிக்கும்போது, நந்தியின் தனித்துவம் மேலோங்கி நிற்கிறது. பின்நவீனத்துவம் எவ்வித அழகியல் கோல்களுக்கும் ஆட்படுவதில்லை.
மனிதர்களின் குணவியல்புகளையும் யதார்த்தச் செயற்பாடுகளையும் கூர்ந்து அவதானித்து உளவியல் சார்புடன் சித்திரிக்கும் திறன் அவரது ஆக்க ஆளுமையில் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியது. கூரிய சமூக 33

Page 18
அவதானிப்புடன் சமூக விமர்சனத்தோடு கூடிய இலக்கியத் தேடல் தெரிகிறது. பொதுவாக இப்பண்பை எல்லாக் கதைகளிலும் காணலாம். வடபுல சமூக மாந்தர்களின் உளப்பாங்கினை ‘கொடுமைக்கு அப்பால்., "உணர்ச்சிகள் உணர்ச்சிகள்', 'காலங்கள் இராகங்கள், இருட்டிலிருந்து ஆகிய கதைகள் அழகாகக் காட்டுகின்றன. சமூக முரண்பாடுகள் சித்திரிக்கப்படும்போது மானுடத்தின் அவலங்களை நாம் யதார்த்தமாகக் காண்கிறோம் - 'அன்ரன் செக்கோவின் கதைகளில் ருஷ்யப் பாட்டாளிகளைக் காண்கிறேன் என லெனின் கூறியதுபோல.
நந்தி முரண்பாடுகளை வெளிப்படுத்தும்போது புதுமைப்பித்தன்போல விரக்தியுடன் நோக்காது வாழ்க்கையை எதிர்கால நம்பிக்கையுடன் நோக்கு கிறார். மானுடத்தின் உயர்வைக் காட்டுகிறார். அவரது மானுட நோக்கமே அவரை முற்போக்குச் சிந்தனையாளனாக்கியது. காலம் மாறுகிறது, கருத்து மாறுகிறது, விழுமியங்கள் புது வடிவம் எடுக்கின்றன என்பதை அவரது படைப்புக் களான ‘காலங்கள் இராகங்கள், ‘இருட்டிலிருந்து ஆகிய கதைகள் 'பிரசார வாடையின்றி, பிரசங்கத் தொனி இன்றிக் கூறுகின்றன.
ஆக்க இலக்கிய கர்த்தா சமகால வரலாற்றை எழுதுபவன் என்ற பொறுப்புணர்வுடன் இனக்குரோதம் நிறைந்த நாட்டு நிலைமைகள், அடையாள அட்டை விஸா கெடுபிடிகள், குண்டுவீச்சுகளினால் ஏற்பட்ட பாதிப்புகள், விசாரணைக்கைதிகளாகக் கூட்டிச் செல்லப்பட்டவர்கள் பிணமாக மீட்கப்படும் அவலங்கள். இவற்றையெல்லாம் தரிசனத்தில் பதிவு செய்துள்ளார். நந்தியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் தனித்துவமானவை. மிகை உணர்ச்சியூட்டுவனவாகவோ, மயிர்க் கூச்செறிவதாகவோ அவைகள் இருக்காது. சமூகத்தின் மனவோட்டத்தை பதிவாக, வாசகர்களின் நெஞ்சைத் தொட்டு, கேள்விகளை உருவாக்கும்.
இவரது அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கும். புதிய கோணத்தில் புதுமையுடன் நோக்கி சிந்தனையைத் தூண்டி, எடுத்த விடயத்தைத் தெளிவு படுத்த எடுத்த உத்தியாக இருக்கும். தொலைந்துபோன நாயைத்தேடிய மனிதனைக்காட்டி காணாமல்போன மகனைத்தேடி, ஆமிபிடித்துச் சென்றதாக அறிந்து பின்னர் பிணமாகக் கிடைத்த மனிதனின் அவலநிலைப் பின்னணியில் tpfDJL- நேயத்தைக் காட்டுகிறார். நம்பிக்கையூட்டவேண்டியது மருத்துவர் களுக்குரிய கடமை. இது நடைபெறுவதில்லை. இதனை வலியுறுத்த குருவிச் சாத்திரி கூறுவதால் ஏற்படும் நம்பிக்கையின் பெறுமதியைக் காட்டுகிறார். பிறவிக் குருடனுக்குத் தரிசனம் கொடுப்பதைக் காட்டி மனித உருவில் உள்ள தெய்வீகத் தன்மை உள்ளவரின் அற்புதத்தை வெளிப்படுத்துகிறார்.
நந்தி கதை கூறும் விதம் - கதையாடல் - Naாation தனித்துவமானது. தனது பன்முகப்பட்ட ஆற்றலில் உருவான அனுபவத்தைக் கதையின் பொருளுடன் சம்பந்தப்படுத்தி, வாசகனின் பார்வையையும் எண்ணங்களையும் விசாலப்படுத்தி, மருத்துவக் கருத்துக்களை ஆங்காங்கே தூவி சிந்தனையைத் தூண்டும் வகையில் கதையை நகர்த்திச் செல்வார். கதைப் பொருளையும் 34

சம்பவத்தையும் அதனை விபரிக்கும் முறையிலும் தனது கருத்தினைக் கூறிச் செல்லாது வாசகர்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கு வழிகாட்டுவதுபோல இருக்கும் பண்பு கு. அழகிரிசாமியின் நடையை நினைவூட்டுகிறது. நந்தி சமூகத்தை விமர்சனம் செய்யும்போது அங்கதச் சுவையூட்டும் மென்மையான கிண்டலும் நையாண்டியும் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும். வர்ணிப்பும் கையாளும் உவமையும் உருவகமும் புதுமையும் பொருளைத் தெளிவு படுத்தும் தன்மையுடையதாகவும் இருக்கும். உதாரணத்துக்கு, "பேசிவந்த சம்பந்தம் கருச்சிதைவில் முடிந்தது", "கருப்பையில் நோயுற்ற ஒரு பெண்ணின் மாத சுகவீனம் போல மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறைதான்", "வெட்கப்பட்டான் பாலியல் குற்றவாளிபோல” என்பவற்றைக் காட்டலாம்.
சமுதாய மருத்துவப் பேராசிரியரான நந்தியின் கதைகளில் புதிய அணுகு முறையில் நோக்கிய சமூக விழிப்புணர்வு தொக்கி நிற்கிறது. வாழும் முறைமையில் மாற்றம் வேண்டும் என்ற வேட்கை தொனிக்கிறது. மருத்துவத் துறையைச் சேர்ந்த சிருஷ்டிக்ர்த்தாக்களின் பார்வை வித்தியாசமானது. அவர்களது தொழில் துறை வாயிலான நுண்ணிய அறிதிறன், நோய் நாடி நோய்முதல் நாடும் அணுகு முறை, மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதால் விரிவும் விசாலமும் கொண்ட வாழ்வியல் விளக்கம் இவற்றையெல்லாம் தரிசனத்தில் தரிசிக்கலாம். “ஸ்ரெதஸ் கோப் மூலம் கேட்கும் தனிமனித ஓசையின் பின்னணியில் ஒரு நுட்பமான மானுடக் கதையைக்காணும் மருத்துவத் துறுையில் ஈடுபட்டுள்ள மருத்துவ கர்த்தாக்களுக்கு ஈழத்தின் முன்னோடியாக விளங்கும் நந்தியின் ஆக்கங்கள், ரஷ்ய எழுத்தாளர் அன்ரன் செக்கோவ், தமிழ் நாட்டு எழுத்தாளர் புரசு பாலகிருஷ்ணன் ஆகிய மருத்துவத் துறை சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகளுடன் ஒப்பு நோக்கப்படவேண்டும். ஆத்மாவின் என்ஜினியர் எழுத்தாளன் என்றார் மார்க்சிம் கார்க்கி. ஆத்மாவின் துடிப்பை பதிகை செய்யும் மருத்துவன் ஆக்க இலக்கிய எழுத்தாளன் என்கிறது நந்தியின் படைப்புகள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆக்க இலக்கியத் துறையில் தொடர்ந்து பங்களித்துவரும் நந்தி என்ற படைப்பாளியின் ஆக்கத்திறனின் வளர்ச்சி கலை அறிவியல் பரிமாணங்களுடன் ஆத்மீக நோக்குடைய பரிமாணம் சமீப காலமாக தர்க்க ரீதியாக கூர்மையான வளர்ச்சி பெற்றுள்ளமையை தரிசனம் காட்டி நிற்கிறது.
கண்ணைக்கவரும் வடிவமைப்புடன் கருத்து நிறைந்த தமிழில், தரமான விமர்சகரான வல்லிக்கண்ணனின் மதிப்புரையுடன் வெளிவந்துள்ள தரிசனத்தில் பரந்த புலமைப்பதிவும், பல சிறப்பியல்புகளும் கொண்ட நந்தியின் ஆளுமையின் ஒரு முகவெட்டினைத் திருப்தியுடன் தரிசிக்கமுடிகிறது. முழுத்தரிசனம் தரவல்ல படைப்புகளை ஈழத்து இலக்கிய உலகம் நந்தியிடம் எதிர்பார்க்கிறது.
O MIRS
35

Page 19
தீக்குள்ப்பு
போரெல்லாம் நிறுத்தியிங்கு புறா வெங்கும் பறக்கிறது ஏறி இறங்கும் இன்னலும் குறைந்திடிச்சு.
உயிரை உறுதிசெய்யும் ‘ஐடென்ரி தேவையில்லை இரவும் பகலுமென்று எங்குமே போய்வரலாம்
முகமூடித் தொல்லையில்லை மூடு “வான்’ தேடவில்லை தடைபோட்ட எல்லையிலும் நடையாகப் போய்வரலாம்
என்ன இருந்துமென்ன எண்ணப் பிரளயத்தில் உருகி உருக்குலைந்து கருகிச் சருகாகி காவேரி வாடுகிறாள்
கைக்குழந்தை இடுப்பினிலே கறிசோறு தலையினிலே வாட்டுகின்ற வெய்யிலிலே அவள் வயல் நோக்கிப் போகின்றாள்
மனச் சிறையில் பூட்டிவைத்த மர்மத் துயரமதை தனக்குள் நினைத்தவளும் தவிக்கின்றான். போர் நிறுத்தம் வந்தபின்னும் நெஞ்சுப் புழுக்கமின்னும் மாறவில்லை யாரையவள் நோவாள்?
கலியாண நாளொன்றில் கோழிக்கறி சமைத்துக் கொண்டுவந்தாள் கணவனுக்கு காவல் படையிலுள்ளான் கட்டைக் கறுப்பனவன் தாவிப் பிடித்தான் தலைமயிரை
வீரை விளா நாயுருவி பேர் தெரியா பெருமரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் பெருங்காட்டுப் பகுதிக்குள் போகவிட்டான்.
கோழிக்கறி சுவைக்க கொட்டிப் பிழிந்து கட்டிப்பால் எடுத்து வீசியெறிந்த வெறுந் தேய்ங்காய்ப் பூவாக
கடும்பசியில் காத்திருந்த காட்டுப் பூனையொன்று கூட்டுக் கோழியினைக் குறிவைத்துத் தின்றது போல்.
சொல்லமுடியாத வெந்துயரும் வேதனையும் நோதரவே மெல்ல எழுந்தாள்
வீட்டுக்குச் சென்று வெந்நீரால் உடல்கழுவி மூலைச் சுவரோடு முடங்கிக் கிடந்தாள்
வேலை செய்த களைப்பு வெறும் வயிற்று இரைச்சல் பசிபோக்க *வடி வாங்கிக் குடித்து வந்த கணவனிடம் அடிவாங்கித் துடித்தாள் ஒங்கி உதைத்தான் ஒன்றுமவள் சொல்லவில்லை
36

காட்டில் நடந்த கதை காற்றோடு போயாச்சு ஆண்டொன்று கழிய கையில் ஒரு ஆண் குழந்தை வழித்துணைக்கு வாய்த்தது போல்
காவலரணில் அவன் கள்ளச் சிரிப்போடு கிட்டவந்து கன்னத்தில் கிள்ளி ‘புத்தா” என்பான் புரியாது அவளுக்கு
உள்ளே கனன்றிருக்கும் ஊழித் தீயை மெல்ல அணைத்தபடி மெதுவாகப் போய்விடுவாள்
இப்பவெல்லாம் ஊருக்குள் பலர் வருவார் ‘புனர்வாழ்வு’ “கணக்கெடுப்பு” எதுவெதுவோ நடக்கிறது வந்தான் ஒருவன் வழிமறித்தான்
பழகிய முகமென்று பார்த்தாள் காவேரி “அக்கா அவரெங்கே” என்றான் ஆவேசத்தோடு
வயல் வேலை செய்கின்றார் வந்த செய்தி சொல் லென்றாள் இடுப்பிலுள்ள பிள்ளைக்கு இல்லை தகப்பனென்று அவன் ஏதோ சொல்லுகிறான் அறியமனம் துடிக்கிறது என்றான் களவாய்ப் பழம் பறித்து முழுவதுமே உண்டபின்பு
உரிமைக்காரனுக்கு தோலைக் கொடுப்பவன்போல்
37
காவல் அதிகாரி ஆவலுடன் நின்றான்
இளைஞனோ அவனின் கழுத்தில் பிடித்து இழுத்து உடல் சிதற நசித்து ஒடும் குருதியில் குளித்து பெரும் கோபம் தணிக்க நினைத்து உதிரம் கொதிக்கச் சினந்து தவித்தான்
இருக்காதா? அவன் இளைஞன் அசோக வனத்தில் சிறையிருந்த சீதை தீக்குளித்தாள் அதே நிலத்தில் பிறந்தவர்க்கும் தீக்குளியல் தொடர்ந்திடுமோ? பரி(தாப) சோதனைக்காய் வரிசையொன்று தோன்றிவிட்ட பிரமையுடன் அவசரமாய் அவனோ திரும்பி விட்டான்
விபரமவன் கேட்டபின்பு வெந்து கருகி வேரறந்த மரமாகி அனலில் மெழுகாக அவலச் சிலையாகி கவலைக் கனலுக்குள் கருகினாள் காவேரி,

Page 20
அவுஸ்திரேலியாவில் - இலக்கியம்
தலைமுறை இலக்கிய உறவைப் பேணிய எழுத்தாளர் сѓут ரஸஞானி
"அறிந்ததைப் பகிர்தல்; அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்" - என்ற நோக்கத்துடன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள்- கலை, இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், பொதுசன ஊடகவியலாளர்கள் வருடாந்தம் ஒன்றுகூடும் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பனில் இரண்டு நாட்கள் மிகவும் சிறப்பாக நடந்
2001 ஆம் ஆண்டு மெல்பனில் அங்குரார்ப்பணமான முதலாவது விழாவைத் தொடர்ந்து கடந்த 2002இல் சிட்னியில் இரண்டாவது விழா நடந்தது.
மூன்றாவது விழா மீண்டும் மெல்பனில் கோடைவிடுமுறையில் ஜனவரி 4ஆம் 5ஆம் திகதிகளில் நிகழ்ந்தபோது மேற்கு அவுஸ்திரேலியா, தெற்கு அவுஸ்திரேலியா, கன்பரா, நியு சவுத்வேல்ஸ், விக்டோரியா முதலான மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தனர். மூத்த தலைமுறையினரும் - இளம் தலைமுறையினரும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தகுந்தது.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் இலங்கையர்கோனின் புதல்வி திருமதி சந்திரலேகா வாமதேவா, எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் புதல்வன் செல்வன் பிரவீணன் மகேந்திராஜா, கி.இலக்ஷ்மண ஐயரின் புதல்வி திருமதி மங்களம் ரீநிவாசன் ஆகியோர் இவ்விழா கருத்தரங்குகளில் உரை யாற்றியமை இரண்டு தலை முறைகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இலக்கிய் உறவுப்பாலமாக அமைந்தது.
அண்ணாவியார் இளைய பத்மநாதன் வழங்கிய காத்தான் கூத்து இசைக்கோலம் மிகவும் வித்தியாசமான கலா நிகழ்வு.
ஈழத்துப்போர்க்கால இலக்கியம் - புலம்பெயர்ந்த முதியோர் - விவகாரம் - பெற்றோர். பிள்ளைகள் உறவு பெண்ணியம் முதலான தலைப்புகளில் நான்கு அமர்வுகளில் மொத்தம் ஏழு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
பெண்ணியம் தொடர்பான அமர்வு காரசாரமான விவாதத்துக்குட்பட்டது. சட்டத்தரணி செ.ரவீந்தரனின் தலைமையில் நடந்த விமர்சன அரங்கில் - "ஊடறு" (பெண்கள் இதழ்), உலகத்தழிழோசை(சர்வதேச இதழ்) கலியுகத்தின் சில பக்கங்கள் (இலக்கியத் தொகுப்பு) கண்ணில் தெரியுது வானம் (இலக்கியத் தொகுப்பு) பறவைகள் (நாவல்) முனியப்பதாஸன் கதைகள் (சிறுகதை) என்பன விமர்சனத்திற்குட்படுத்தப்பட்டன.
ஒவியம் - தையற்கலை, கேக் அலங்காரம் தொடர்பான கண்காட்சிகளும் நடந்தன. இரவு - கலை நிகழ்ச்சிகளில் இன்னிசை விருந்தும் - "ஆண்டாள்" கதையும் காட்சியும் நாட்டிய நிகழ்வும் சிறுவர்சிறுமியர் பங்குபற்றிய படிக்க ஒரு பாடம் (வில்லிசை நாடகம்) முகவரி (நவீன நாடகம்) என்பனவும் மேடையேறியடை
அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பாளிகளைப்பற்றிய விபரநூல் "எம்மவர்" விழாவில் வெளியிடப்பட்டது. மறுநாள் 5ஆம் திகதி பண்டுரா பூங்காவில் திறந்தவெளி அரங்கில் கவிஞர் அம்பி தலைமையில் கவியரங்கும் இலக்கிய கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இலக்கிய விருந்தும் அறுசுவை விருந்தும் இந்த எழுத்தாளர் விழாவில் ஒன்றுகூடலை மெருகூட்டியது எனலாம்.
அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பாளிகள் திறந்தவெளிப் பூங்காவில் ஒடியல்கூழ் சுவைத்தவாறே இலக்கியம் பேசினர்.
38
 
 
 

கடிதல்
அரையர் சேவையும் ஆருத்ரா தரிசனமும்.
மார்கழிமாதம் பிறந்து விட்டாலே தமிழகத்து வீடுகளின் முற்றங்களை விதவிதமான மாக்கோலங்கள் அலங்கரிக்கத் தொடங்கிவிடுகின்றன. கோலங்களின் நடுவில், பூசினிப்பூவுடன் கூடிய பிள்ளையார் காட்சியளிப்பர். ஐயப்ப பக்தர்களின் பஜனைச்சத்தம் சன்னமாகக் காதுகளில் ஒலிக்கும். கோயில்களில் மாதம் முழுவதும் அதிகாலைப்பூசை நடைபெறும். வைஷ்ணவத் தலங்களில் திருப்பாவையும், சிவத்தலங்களில் திருவெம்பாவையும் ஒதுதல் நடக்கும்.
திருவரங்கத்தில் இக்காலத்தில் அரையர் சேவை என்ற நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெறுகிறது. இதனை பகல்பத்து, இராப்பத்து என்கின்றனர். அரையர் எனப்படும் வைஷ்ணவப் பிராமணர்களுள் ஒருவகையினர் இந்தச் சேவையை நிகழ்த்துகின்றனர். ஆழ்வார்களின் பாசுரத்தைப் பண்ணுடன் இசைப்பதும் அப்பாசுரங்களுக்கும் உரைகளுக்கும் அபிநயம் செய்தலுமே இடம்பெறுகிறது. உற்சவர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும்போது இவர்கள் சிகப்பு நிறக்கரையுடைய வெள்ளை வேட்டியை பஞ்சகச்சம்போல் சுருக்குகளுடன் அணிந்து, தலையில் கூம்பு வடிவில் அமைந்த முடியணிந்து கையில் தாளங்களுடன் நுழைகிறார்கள். இறைவன் சூடிக்களைந்த இரு மாலைகள் அவர்களுக்குப் பட்டர்களால் அணிவிக்கப்படுகின்றது. இப்போது அவர்கள் வரிசையாக இறைவன் திருமுன் நின்று தாளத்தில் இருந்து ஒலி எழுப்புவதுடன் பாசுரங்களைப் பாடுகிறார்கள். இடையிடையில் ஒருவர் அல்லது இருவள் அப்பாடல்களுக்கு ஏற்ப அபிநயம் செய்கின்றனர். தாளம் மாத்திரமே பின்னணி இசை, அபிநயம் பரதத்தின் சாயலை ஒத்துக் காணப்படுகிறது.
ஆழ்வார்களது பாசுரங்களைப் பாடும்போது சைவத் தேவாரங்களுக்கமைந்த பண்முறையல்லாது வேறுவிதமான ஓர் முறைமையிலேயே இசைக்கின்றனர். மந்திர உச்சாடனத்துக்கும் இசைக்கும் இடைப்பட்ட நிலையாகவே அது கேட்கிறது. நீண்ட நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியைக் காணும் பக்தர்கள் அவ்வப்போது அரையர்களுக்கு பணம் அன்பளிப்பாக வழங்குகிறார்கள் ( பகலில் இவ்வாறு நடப்பது பகல்பத்து என்றும், இரவில் நடப்பது இராப்பத்து என்றும் அழைக்கப்படுகிறது)
சைவத்தலமான தில்லை அம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் கூத்தப் பிரான் எழுந்தருளியிருக்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பனிக்குளிரையும் பொருட்படுத்தாது சூழ்ந்திருக்க அதிகாலையில் தொடங்கிய அபிஷேக ஆராதனை நண்பகல்வரை நீடித்தது. அதிர் வேட்டுக்களும் மங்கல வாத்தியங்களும் முழங்க நடராஜர் நர்த்தனமாடியபடியே பொன்னம்பலத்துள் பிரவேசித்தார். காத்துக் கிடந்த கூட்டம் பரவசத்தில் திழைத்து தரிசனம் முடித்தது.
குறிப்பு: சிதம்பரத்தில் மாலைகட்டித் தெருவில் ஆறுமுகநாவலர் மடம் இருந்தது. அது இப்போது புனருத்தாரணத்துக்காக இடிக்கப்பட்டுவிட்டது. சைவ பரிபாலன சபை அழகான மடம் ஒன்றைக்கட்டிப் பராமரிக்கின்றது. ஆறுமுக நாவலரது பாடசாலை உயர்நிலைப் பாடசாலையாக நீடிக்கின்றது. நம்மவர் ஆலயத்துக்கு அளித்த பல கொடைகள் பற்றியும் அறிய முடிகிறது.
வ:மகேஸ்வரன், தஞ்சாவூர். 39

Page 21
6oਹ6 9 மிகப் பெரிய வியர்வைக் கடலை fで登 குடித்து, களித்து, விடுவித்த ஏப்பத்தின் அடர்த்தியை அசை போட்டபடி நீண்டதாய் உள் இழுத்து பெருமூச்சு கக்கும் நிலவுடமை ஒட்டகங்கள்
சம்பள வாசல்களில் அரிவாள்முனை பலிக்கடாவின் திகைப்பில், கைக்கு வரும் நெயப்பற்றிய அளவீட்டுச் சிந்தனையில் உழைத்துக் களைத்த எருதுகளின் வரிசை நீளும்.
鉴سند ーーーー・ミ>。
வியர்த்த நாணயங்களைப் பிராண்டி பிராண்டி சேகரித்த சேதாரப் பெறுமதிகளில் ஊறும் சாராயக் கனவில் போதையுற்று அலுவல(க)ம் இயங்கும்.
முப்பது தினங்களில் ஒற்றை நாளிலாவது மாற்றுணவில் மகிழத்துடிக்கும்
மழலைகளைப் பார்த்தழும் வரண்டகரத் தாய்ப்பசுக்கள் வேதினகரண்,
வரம் வராத அன்றும் பத்தனையூர் வெற்று எச்சிலை விழுங்கிவிட்டு
ஒட்டிய மடி நாடும் பாற் பற்களில் திடமான கறைகளாய் ஒட்டிக் கொள்ளும் ஏமாற்றங்கள்.
40
 
 
 
 

மெய்யாைக்கிறேன்
மய்யுரைக்கிறேன். இந்த வறுமைக் காட்சிகளுக்கு எப்போதும் நிரம்பி வழியும் காட்சியரங்கு அடுப்பில் காணாத புகையை கொடுத்தவைகளையே கரைத்துவிழுங்கி காலக் கழிப்பிற்கு காலாட்டி ரசிக்கும் மேட்டுக் குடிகளின் இதழ்களில் கண்டு இன்புறுதல் எங்கனமியலும்.?
“மலைய விட்டு எறங்குடி”
“பட்டினி நாய்க்கும்
பஞ்சாமிர்தம் கேக்குதோ”
“எங்க போய் படுத்திருந்த?” வெனும்
வேட்டைச் சிம்மங்களுக்கு வால் பிடிக்கும் உடன்பிறந்த மத்திம எருதுகளின் அதிகார பொன்மொழிகளுதிர, கண்ணிர் உதிர்த்து, கருவறையை இறுகப் பற்றி, காளைகளின் பலத்தை உள்மூச்சில் இழுத்து, அடர்கிளை விலக்கி மலையேறும் நிறை மாத சினைப்பசுக்கள்
இம்மந்தைகளுக்கு எதிர்க்க மட்டும் தெரிந்திருந்தால் எப்போதோ எரிந்தே போயிருக்கும் அனுமனிடம் தப்பிய இந்த அசோகவனம்
சுமை இழுக்கும் கறவைகளின் á. கண்ணிரால் ஈரம் கனக்கும் Ž“
இந்த மணி - “இந்நிரை’களின் பாட்டப் பசுக்குள் ஜனித்த மணி பேரக் கன்றுகள் மரிக்கும் மணி கண்ணிரோடு ஒரு மெய்யுரைக்கிறேன். - இது எங்கள் மணர் -
41

Page 22
ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி’
(இலங்கைக் கலைக் கழகத் தமிழ் இலக்கியக் குழுவினர் ஏற்பாட்டில் 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14, 15, 16ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கூறப்பட்ட முக்கிய கருத்துகள்)
. செல்வி.எஸ்.சிவலோஜினி . (சமூக விஞ்ஞான மொழிகள் பீடம், சப்ரகமுவ பல்கலைக்கழகம்)
முதல்நாள் காலை அமர்வானது ஈழத்து நவீன சிறுகதை வளர்ச்சி பற்றி ஆராயப்பட்டது. பேராசிரியர் சி.தில்லைநாதன் தலைமையில் சிறுகதை பற்றிய முதற் கட்டுரையைப் படித்தவர் முதுநிலைத் தமிழ் விரிவுரையாளர் க.நாகேஸ்வரன். இவர் 1930-1950 வரையிலான காலப்பகுதியில் எழுந்த சிறுகதைகள் பற்றிய சுவாரஸ்யமான பல செய்திகளைக் கூறினார். 19ஆம் நூற்றாண்டில் சிறுகதை இலக்கியம் வளர்ச்சியடைய உந்துசக்தியாக இருந்த காரணி ஆங்கிலேயரின் வருகையும் அவர்களது ஆட்சிமுறையும் என்று கூறப்பட்டது. அத்துடன் சிறுகதையின் தந்தை எனச் சிறப்பிக்கப்படும் புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பற்றியும், அவர் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் பற்றியும் இங்கு முக்கியமாகக் கூறப்பட்டது.
இதே அமர்வில் கலாநிதி, செ.யோகராசா கருத்துக் கூறுகையில், 50களின் பின்னர் பல்வேறு காலகட்டங்களிலும் சமூகத்திலே காணப்பட்ட பிரச்சினைகளை அவ்வக்காலகட்டங்களில் எழுந்த சிறுகதைகள் பிரதிபலித்துக் காட்டுகின்றன என்று கூறினார். அத்துடன் 50களில் பித்தனின் கதைகள் அடித்தள மக்களது வாழ்க்கை அம்சங்களை வெளிக்காட்டியவிதம் பற்றி முக்கியப்படுத்திக் கூறினார். இவ்வாறாக இன்றுவரை சிறுகதை எவ்வாறான மாற்றங்களுடன் வளர்ச்சியடைந்தது என்பது பற்றியும் கூறினார். தொடர்ந்து சிறுகதை எழுத்தாளர் திருமதி. கோகிலா மகேந்திரன் சிறுகதைக்குரிய சில வரையறைகளைக் கூறியதுடன் சிறுகதைகளுக்கும் சிறுகதை எழுத்தாளர் களுக்கும் சமூகத்தில் உள்ள சவால்கள், பிரச்சினைகள் என்பன பற்றித் தனது கருத்துக்களை முன்வைத்தார். இவரது கருத்துரையைத் தொடர்ந்து சபையோரின் வினாக்கள் சந்தேகங்களுக்குக் கட்டுரை படித்தோரும் பிறரும், சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளும் விளக்கமளித்ததுடன் தெளிவும் பெற்று இவ்வமர்வு இனிதே நிறைவுற்றது.
முதல்நாள் மாலை அமர்வில் ஈழத்து நாவல் வளர்ச்சி பற்றி விரிவாக ஆராயப்பட்டது. பேராசிரியரும் எழுத்தாளருமான நந்தியின் தலைமையில் நடைபெற்ற இவ்வரங்கில் விரிவுரையாளர் ரகுநாதன் அவர்கள் முதலாவது கட்டுரையை ஒப்புவித்தார். நந்தி அவர்களின் கருத்தில் “கதை கூறுவது நாவலல்ல, நாவலில் கதை காணப்படவேண்டும்" என்று கூறினார். விரிவுரை யாளர் ரகுநாதன் தனது உரையில் நாவலாசிரியர்களை இருவேறு அணிகளாக வகைப்படுத்திக் கூறினார். அதாவது முற்போக்கு அணி - சாதியம், கல்வி,
42

சமூகம், பொதுவுடைமை பற்றிய கருத்துக்களைக் கூறுபவர்கள். முற்போக்குச் சாரா அணி இரண்டாவது; இவர்கள் முற்போக்கு அணியினருடைய கருத்துக்கள் தவிர்ந்த ஏனைய அம்சங்களைத் தமது கருத்துக்களாகக் கொண்டவர்கள் எனப் பலவாறாக நாவல் வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மலையக நாவல் வளர்ச்சி பற்றிக் கவிஞர் சு.முரளிதரன் பேசுகையில், மலையகத்தில் நாவல் பெரிதும் வளர்ச்சியடையாத போதிலும், அங்கு எழுந்த சில நாவல்களின் பொருளாக மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான அடக்குமுறை ஒடுக்குமுறைகளையே அவை பிரதிபலித்துக் காட்டுகின்றன என்றார். அத்துடன் மலையகத்தில் நாவல் வளர்ச்சியடையாமைக்குக் காரணம் கல்வியறிவின்மை, கற்றோர் அதிக மின்மையே என்றார்.
கலாநிதி செ.யோகராசா 80கள் தொடக்கம் இன்று வரையான நாவல் வளர்ச்சி பற்றிக் கூறும்போது இவ்வெண்பதுகளில் நாவல்களின் கருப்பொருள் மாற்றமடைய அரசியல், பொருளாதார மாற்றமும், இனவாத ஒடுக்குமுறை அடக்குமுறைகளும், போரியல் அழிவுகளும் காரணம் என்றார். தொடர்ந்து மருதூர்க்கொத்தன் முஸ்லிம்களின் நாவலுக்கான பங்களிப்புப் பற்றிக் கூறும் போது 50 நாவல்களே தமிழ் முஸ்லிம் நாவல்கள் எனவும் அதிலும் 20 மட்டுமே முஸ்லிம்மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரம் பற்றியது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து நாவலாசிரியர் தெணியான் பேசுகையில், படைப்பாளி பற்றியும் படைப்பாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார். இதன்பின் கலாநிதி சி.சிவலிங்கராசா சருத்துரை கூறும்போது ‘அசன்பேயின்கதை' எனும் நாவல்பற்றி யாரும் குறிப்பிடவில்லை என்பதை எடுத்துக் காட்டினார். இவரது கருத்துரையைத் தொடர்ந்து எழுத்தாளர்கள் தாமரைச்செல்வி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஆகியோர் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். பேராசிரியர் நந்தி அவர்களது விருப்பத் தின்படியும், தமிழ் இலக்கியக் குழுவின் தலைவர் பேராசிரியர் க.அருணாசலம், பேராசிரியர் சிதில்லைநாதன், விரிவுரையாளர் கனகசபாபதி நாகேஸ்வரன் ஆகியோரது வேண்டுதலினாலும், விருப்பத்தினாலும் பெண்ணெழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம், மற்றும் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆகியோர் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். சபையோரின் பாராட்டுதலையும், உற்சாகத்தையும் இவர்கள் பெற்றுப் பேசினார்கள். பின்னர் கட்டுரை படித் தோராலே ஈழத்து நாவல் பற்றிய பல்வேறு தெளிவான விளக்கங்களும், சந்தேக நிவிர்த்திகளும் வியாக்கியானங்களும் கொடுக்கப்பட்டு அரங்கு கலகலப்புடன் அமைந்தது. விரிவுரையாளர் கந்தையா சிறிகணேசன் ஒரு கட்டத்தில் சபையிலிருந்து எழுந்து 'ரமணிச்சந்திரன் ஒரு நாவலாசிரியரல்ல. அத்துடன் அவரது நூல்கள் நாவல்களும் அல்ல. அவர் ஓர் எழுத்தாளரன்றி நாவலாசிரியராகக் கொள்ளமுடியாது என்ற கருத்தினை முன்வைத்து ஆக்ரோசத்துடன் தமது கருத்தினை வலியுறுத்தினார். இப்படிப்பட்ட மிக ஆரோக் கியமான இலக்கியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் முதல்நாள் 43

Page 23
அமர்வுகள் முதுநிலை விரிவுரையாளர் க.நாகேஸ்வரனின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றன.
இரண்டாம் நாள் காலை அமர்வில் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி பற்றி ஆராயப்பட்டது. பேராசிரியர் சிதில்லைநாதன் தலைமையிலே இவ்வமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கலாநிதி சி.சிவலிங்கராசா 40-70 வரையான காலப்பகுதியின் கவிதை வளர்ச்சி பற்றிக் கூறினார். இவரின் கருத்துப்படி 19ஆம் நூற்றாண்டின் முதற்கவிதை "கோதாரிக்கழிச்சல்” என்பதாகும். இது குமாரசாமி முதலியாரால் எழுதப்பட்டதாகும். இதைத் தொடர்ந்து நாட்டார் இலக்கிய வடிவிலேயே கவிதை மரபு யாப்பு அமைந்திருந்தது. இதன்பின் புராணம் எனும் வடிவில் கோட்டுப்புராணம், கனசிபுராணம் போன்றன வெளி வந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி நவீன கவிதைக்காலம் எனப்படுகிறது. பாவலர் துரையப்பாபிள்ளை இங்கு முக்கிய இடம் பெறுகிறார். நவீன கவிதை முன்னோடிகளாக மஹாகவி, சாராதா போன்ற பலர் குறிப்பிடக் கூடியவர்கள். 50களின் கவிதையின் பாடுபொருளான மழை, மின்னலைப் பாடுவதைத் தவிர்த்து சமூகப் பிரச்சினைகளைப் பாடுபொருளாகக் கொண்டனர்.
70களில் தமிழக புதுக்கவிதையைவிட ஈழத்துப் புதுக்கவிதைகள் தாக்கம் கூடியதாகக் காணப்படுகின்றன. 20ஆம் நூற்றாண்டுக் கவிதைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டன. மரபுகளிலிருந்த் விடுபட்டு யாப்புக்கமைய எழுந்த கவிதை, குறியீட்டுக் கவிதைகள், கவிதை மரபிற்குக் குறியீட்டுப்பாங்கு பேச்சோசை என்பன கவிஞர் முருகையனால் அறிமுகப்படுத்தப்பட்டன. குறும்பா போன்ற மாற்றங்கள் பரிமாணங்களுடன் 40-70 வரையான கவிதை வளர்ச்சியடைந்தது என்று இவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
80களின் கவிதை வளர்ச்சி பற்றிக் கலாநிதி செ.யோகராசா கூறுகையில் இக்காலப்பகுதி ஏன் சிறப்பாக நோக்கப்படுகின்றது என்பதற்கு அரசியலில் ஏற்பட்ட மாற்றம் முஸ்லிம், மலையக மக்கள் மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகள் அரசியல் பற்றிய நோக்குகள் போன்றவற்றின் தாக்கம், அத்துடன் போராளிகளாலும் போராளிகளல்லாதவர்களாலும் இனக்கொடுரங் களைப் பாடிய காலம் என்பதாலும் சிறப்பிக்கப்படுகின்றது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. புதுக்கவிதை, மொழி, அமைப்பு என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டது. அத்துடன் புதுக்கவிதை இரு முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. 1. மெல்லிசையைப் பாரதிக்குப் பின் பயன்படுத்தியுள்ளமை, 2. பெண்ணியல் வாதத்தை வெளிக்கொணர்ந்தமை என்பனவாகும். இதைத் தொடர்ந்து 90களில் இராணுவக் கெடுபிடிகள், ! உள்நாட்டு யுத்தம், இயக்கம், முஸ்லிம்கள் இடம்பெயர்வு, பெண் போராளி களின் கவிதைக்கான பங்களிப்பு என்பன இங்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துக்களாகும்.
தொடர்ந்து முத்துமீரான் கவிதை பற்றிக் கருத்துக்கூறுகையிலே, நவீன கவிதை வளர்ச்சியை மூன்று வகைப்படுத்தினார். காப்பியக் காலம், நவீன கவிதைக் காலம், புதுக்கவிதை என்று வகுத்துக் கூறியதுடன் செய்யுள்
44

மரபு வழியில் முதலாவது காப்பியம் /ਸ5 \\ படைத்தவர் அருள்வாக்கி அப்துல்காதர் புதிய சந்தா விபரம் புவலர் என்றும் ஏனைய முஸ்லிம் புலவர் உள்நாடு களது படைப்புகள் பற்றிக் கூறியதுடன் it fly e5 unt Of இலைமறை காயாக இருக்கும் இளையர் 0SSSAASLSS SYSLLLL S SLL
syaprarold fissites unt Of தலைமுறைக் கவிஞர்கள் பற்றியும் 8 R b , d
O ஆண்டுச் சந்தா unr 00l தனக்குத் தெரிந்தவற்றை இன்றுவரை” முஸ்லிம்களின் கவிதைக்குரிய பங்களிப்புசநதரகாசோலை மூலமா பைக் கூறினார். புலம்பெயர் கவிதைகள்,j): elp6uLDrts வா ஆபிரிக்கக் கவிதைகள் பற்றிய குறிப்புேே'; அனுப்புபவர்கள் கள கூறபபடடதன பின் மலையககஅதனை கண்டி தபால் நிலையத் கவிதை வளர்ச்சி பற்றி சு.முரளிதரன்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப கூறினார். இவரின் கூற்றுப்படி மலையக்வேண்டும். கவிதைகள் பாடல் வடிவில் (மரபில்) அனுப்பவேண்டிய பெயர். அமைந்தவை எனவும் இம்மரபுக்குக் முகவரி ;- கல்வியறிவு அவசியமற்றது, முயற்சியும் TIGNANASEKARAN துணிவும் போதுமானது எனக் குறிப் 19/7, PERADENTYAROAD, பிட்டார். சி.வி.வேலுப்பிள்ளை போன்றோர் KANDY. மலையக மக்களது பிரச்சினைகளை வெளிநாடு வெளிக்கொணர்ந்தமையினால் இளைய ஆண்டுச் சந்தா 20 USS :ပ္ဖပ္းဇံၿဖစ္မ္ယုပ္ : న N )ل تھاrID محہ (لاقحہ தூண்டியது. 70க மந்தநிலையில் - ள் - - - - - - -- காணப்பட்ட கவிதை வளர்ச்சி 80களின் பின்னர் வளர்ச்சியைப் பெற்றதுடன் கற்றவர்களும் கவிதையை எழுதத்தொடங்கிவிட்டனர் என்பன போன்ற கருத்துக்களை முரளிதரன் முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து விமர்சகர், ஆங்கில விரிவுரையாளர், நீதி சபையினரின் சந்தேகங்களும் தீர்த்து வைத்து நிகழ்வு இ றைவடைநதது. இரண்டாம் நாள் மாலை அமர்வின்போது 'ஈழத்து நவீன நாடக வளர்ச்சி பற்றி ஆராயப்பட்டது. கவிஞர் காலாநிதி முருகையனின் தலைமையில் ஆங்கில விரிவுரையாளர் சிறிகணேசன் தமது கருத்துக்களை கட்டுரையாக முன்வைத்தார். அவர் 50களின் ஆரம்பக் கட்டத்தில் ஒரு நாடக வடிவம் இருக்கவில்லை எனவும் பம்மல் சம்பந்தமுதலியாரைத் தலைவராகக் கொண்டே நாடகங்கள் தோன்றியது எனவும் குறிப்பிட்டார். 40களில் மேலைநாட்டியற் பண்பு கலாநிதி கணபதிப்பிள்ளையால் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் 56இல் கலாநிதி க.கணபதிப்பிள்ளையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் அரசியற் பிரச்சினைகள், அரசியல் மறுமலர்ச்சி பற்றியது என்று குறிப்பிடப்பட்டது. 60-70 வரையான காலப்பகுதி நாடகங்கள் சமகாலப் போக்கைக் காட்டுவனவாகவும், 70களில் பேச்சுமொழி, கூத்துமரபு என்பனவற்றின் தேவைக்கும் போக்கிற்கும் ஏற்ப நவீன நாடக அரங்கிற்குக் கொண்டு வரப்பட்டன. இக்காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு நாடகங்கள் நாடக உலகிற்குப் 45

Page 24
புதுமையைத் தந்தது எனவும் மேலைத்தேய மரபு மக்களிடையே பலத்த வரவேற்பினைப்பெற்றது எனவும் குறிப்பிட்டார். 70களின் பிற்பகுதியிலே முக்கிய அம்சமாக நாடகக்கழகம், நாடகக்கல்லூரிகள் தோன்றின. 80களில் நாடகம் என்பது திறந்த உருவம், அதற்கு எல்லையில்லை என்ற கருத்துக் காணப்பட்டது. வீதிநாடகங்கள், குறியீட்டுநாடகங்கள் பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டன. குறியீட்டு நாடகங்கள் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தது என்றுங் கூறப் பட்டது. திருமறைக் கலாமன்றத்தின் நாடகப்பணி போன்ற பல்வேறு கருத்துக் களை - இன்றுவரையுள்ள நிலைப்பாடுகளை விரிவுரையாளர் சிறிகணேசன் கூறியபின் மலையக நாடகங்கள் பற்றி முரளிதரன் கருத்துக் கூறினார். இவரது கருத்துக் கணிப்பின்படி, மலையகத்தில் நாடகம் வளர்ச்சியடைந்து இருக்கவில்லை எனவும் அதற்குக் காரணம் மக்களது வாழ்வியற் பிரச்சினைகள், தொழிற்சுமை என்பனவே எனவும் 70களின்பின் உண்மைத் தன்மையினை அரங்கேற்றமுடியாத அச்சுறுத்தல் நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களின் நாடகப்பணி பற்றிப் பேசிய எழுத்தாளார் முத்துமீரான் கூறுகையில் "அல்பாதுஷா குறிப்பிடக்கூடிய நாடகம் எனவும், இலங்கையில் ஐந்து நாடகங்களே முஸ்லிம்களது எனக் குறிப்பிடக்கூடியது எனவும், எம்.ஏ.முஹம்மதுவே இஸ்லாமிய நாடகத்தின் முன்னோடி எனவும் குறிப்பிட்டார். இஸ்லாமிய நாடகங்கள் வானொலி நாடகங்களாகவே பெரிதும் அமைந் திருந்தன எனவும் இதற்கு "மதம் முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்டது எனவும் முத்துமீரான் கூறிமுடித்தார். இதனைத் தொடர்ந்து கருத்துரையுடன் இவ்வரங்கு நிறைவுற்றது.
இறுதி மூன்றாம் நாள் அமர்வில் ஈழத்துக் குழந்தை இலக்கியம் பற்றிக் கலாநிதி. கு. சோமசுந்தரம் தலைமையில் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. ஏனைய இலக்கியங்கள் போன்று இவ்விலக்கியம் இல்லாத போதிலும் சிறுவர்களிடையே இது ஏற்படுத்திய தாக்கம்; இதன் விளைவுகள் புதிய தோற்றங்கள் நவீனமயமான திசைதிரும்பற் கருத்துக்கள் என்பன இங்கு எடுத்துக் காட்டப்பட்டது. சிறுவர்களது செயற்பாட்டில் இவைபெற்றுள்ள இடமே இதன் வளர்ச்சி என்று கண்டறியப்பட்டது. இத்துடன் இவ்வமர்வு நிறைவுற்றது.
இரண்டு நாள் அரங்குகளிலும் மாலையிலே கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இரண்டாம் நாள் மாலை இணுவில் நாதஸ்வரவித்துவான் கோவிந்தசாமி அவர்களின் புதல்வர்களது நாதஸ்வர இன்னிசை இடம்பெற்றது. மூன்றாம்நாள் மாலை "திருநெறிய தமிழிசை அரங்கு பக்கவாத்திய சகிதம் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் இசைத்துறைத் தலைவர் திருநெறிய தமிழிசை அரசு, சங்கீதபூஷணம் நா. வி.மு.நவரத்தினம் அவர்கள் இன்னிசை வழங்கினார். இவ்வரங்குகளிலே சப்ரக முவ பல்கலைக்கழகத்திலே பயிலும் (தமிழ்மொழியைப் பிரதான பாடமாகவும், துணைப்பாடமாகவும் எடுக்கும்) பட்டதாரி மாணவ மாணவியர் பங்கேற்றுக் கொண்டமை விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கும் கலைநிகழ்வுகளும் வெகுதரத்துடனும் சிறப்புடனும் அமையவும், பல்கலைக்கழக மாணவர்க்குப் பயன்படும்படி செயலாற்றியும் பெருமை பெறுகிறார் வரிவுரையாளர் கனகசபாபதி நாகேஸ்வரன்.
46

O - அந்தனிஜிவா சகாப்த நாயகன் நடேசையர்
மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்தது தொழிற்சங்கம். : தோட்டத் தொழிலாளர்களைத் தொழிற்சங்கத்திலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வருகைபற்றிப் பலர் எழுதியுள்ளனர். ஆனால் மலையக மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்ட தொழிற்சங்க வரலாறுபற்றி முழுமையாக இதுவரை f யாரும் எழுதியதாகத் தகவல்கள் இல்லை. *ቷxጫቾቭ፣'ዩ፣ ஒரிரு மாதங்களுக்கு முன்னர் ‘வீரகேசரி பத்திரிகை யில் மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற கட்டுரையை எழுதினேன். அதனை ஒரு சிறுநூலாக எழுதி வெளியிட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அதற்காகப் பல நூல்களைத் தேடிப் படித்தேன்.
மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்காக அமைப்பு ரீதியாகப் போராடிய முதல் தலைவர் கோ. நடேசையர். இந்த மாபெரும் மனிதரோடுதான் மலையகத் தொழிற்சங்க வரலாறு தொடங்குகிறது.
இவரை ஒரு சிலர் மாத்திரமே தொழிற்சங்கவாதியாக அறிந்து வைத்திருந்தபொழுது, இவரைப்பற்றி இரவு பகலாகத் தேடுதல் நடத்தி ‘தேசபக்தன் கோ. நடேசையர்" என்ற ஆய்வு நூலைத் தந்தார் சாரல் நடன். இவர் ஒரு சாமான்ய தொழிற்சங்க வாதி மட்டுமல்ல பன்முக ஆற்றல் கொண்டவர் என்று அந்த நூல் வெளிப்படுத்தியது.
அதன்பிறகு எழுத்தாளர் சாரல்நாடன் கோ.நடேசையரின் பத்திரிகைப் பணிபற்றி தேடுதல் நடத்தி மாதக்கணக்கில தேசிய சுவடிக்கூடத்தில் பழைய பத்திரிகைகளைப் புரட்டிப்பார்த்து 'பத்திரிகையாளர் நடேசையர் என்ற நூலைத் தந்தார்.
ஆனால், நடேசையர் எந்த மக்களுக்காகப் போராடினாரோ அந்த மக்கள் அவரைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அவருக்காக மலையகத்தில் ஒரு நினைவுச்சின்னம் கூடக் கிடையாது.
அருத்த இதழில். * பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின்
நேர்காணல் தொடர் ம்பம்.

Page 25
மலையகத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்காவது அவர் பெயரைச் சூட்டியிருக்கலாம். மலையகத்தில் இந்தியரான சுவாமி விவேகானந்தர் பெயரில், ஏன் அவர் 'குரு இராமகிருஷ்ணர் பெயரில் பாடசாலை நாமங்கள் உள்ளன. அதுமட்டமல்ல கிழக்கின் சுடரொளி விபுலானந்தர் பெயரிலும் பாடசாலைகளுண்டு. ஆனால் மலையக மக்களின் விடிவுக்காக முதல் முதலில் குரல் கொடுத்த கோ. நடேசையரின் பெயரால் ஒரு பாடசாலை கூட இல்லை.
இதற்கெல்லாம் என்ன காரணம் எனத் திரும்பிப் பார்க்கிறேன். நமது தலைமைகள்தான் இதற்குக்காரணம் படித்த புத்திஜீவிகள் தைைமக்கு வருவதில்லை.
நமது தமிழ் சமூகத்தில் - வடக்கு கிழக்கில் உள்ள புத்திஜீவிகள் அந்தச் சமூகத்தைப்பற்றிச் சிந்திக்கிறார்கள். அவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுகிறார்கள்.
ஆனால் நம்மவர்களோ கலை இலக்கியத் துறைபற்றி, அதன் வளர்ச்சிபற்றி அக்கறைப்படுவது இல்லை.
ஒன்று மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது. தேசபக்தன் கோ. நடேசையர் முதல் நமது "ஞானம்' ஞானசேகரஐயர் வரை தங்கள் எழுதுகோல் மூலம் இந்த மக்களின் விடிவிற்காகச் செயற்பட்டவர்களாகத் திகழ்கின்றனர்.
இன்று சர்வதேச ரீதியில் ‘மலையகம்" என்ற அடையாளத்தை நிறுவியவர்கள் எழுத்தாளர்கள்தான். - இதனை வரலாறு என்றும் நிரூபிக்கும்.
அதனால்.
"இந்த மக்கள் சிந்தும் வேர்வை ரெத்தக்காக தானே - அடே இரவு பகல் உறக்கமின்றி ஏய்த்துப் பறிக்கலாமா? என்று எழுதி இந்த மக்களின் விடிவுக்காகப் போராடிய கோ.நடேசையர் என்றும் நினைவு கூறப்படவேண்டியவர். இல்லையென்றால் நாம் நன்றி மறந்தவர்களாவோம்.
நெற்றிக்கணி” விமர்சனம் எழுத்தாளர்களே, நெற்றிக் கணி பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம்பெறவேண்டுமெனில், நூலின் இருபிரதிகளை அனுப்பிவையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம் பெறும். ஆசிரியர்.
48
 
 
 

ஆசிரியர் “ஞானம்,
ஞானம் 32வது இதழ் கிடைக்கப்பெற்றேன். மனதை சில்லிட வைக்கும் முகப்போவியம். 32வது இதழில்தான் அட்டைப்படம் வாய்த்திருக்கிறது என்பது என் இரசனை. செங்கை ஆழியானின் 'அலை கடல்தாண்டி சிறுகதை அற்புதமாக இருந்தது. நிகழ்வுகளை இலக்கியமாக்கும் சரித்திரத்தின் ஒரு துண்டாக இச்சிறுகதையும் வாய்த்திருக்கிறது. ܖ ܀
வாகரைவாணனின் 'எனது எழுத்துலகம்" பல அனுபவங்களைத் தரிசிக்கும் வாய்ப்பைத் தந்தது. ஞானத்தில் பல அறிவியல் சார் கட்டுரைகளை இப்போது வாசிக்கக் கிடைக்கிறது. அறிவியலும், கலையும் ஒருங்கே இணைந்து அற்புத இலக்கியத்தரத்தைப் படைக்கும் ஒரு ஜீவ களையை உண்டாக்கும் முயற்சியை ஞானம் தொடக்கி வைத்துள்ளது. கவிதைத்தேர்வில் சற்று மெருகேறியுள்ளது. நிறைய அநுபவசாலிகள், பரந்த தேடல்மிகு வாசகர்கள் ஞானத்தை தொடர்ந்து வாசித்துக் கருத்துப்பரிமாறிக் கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். உள்ளடக்கத்திலும் கனதியிலும் ஒரு தரத்தை பேணுகின்றீர்கள். அது இன்னும் இதழுக்கு இதழ் மெருகேறி வருகிறது; திருப்தி. திட்டத் திட்டத் தங்கம் ஜொலிப்பதுபோல், ஞானம் பல சிற்பிகளின் செதுக்கலில் சீர்மையும் செழுமையும் அடைகிறது. அடையவேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் அடங்காத ஆவல்.
அன்புடன், ஓட்டமாவடி அறபாத்.
புத்தாண்டில் 32வது புதிய ஞானம் புதுப்பொலிவுடன் புதிய தெம்மைத் தருகிறது. தங்களது ஆற்றலும் ஆழுமையும் இவ்விதழில் தெட்டத்தெளிவாக விளங்குகிறது. தங்களின் ஆசிரியர் தலையங்கம் அதனை வெளிப்படுத்துகின்றது. ஞானம் உலகளாவிய ரீதியில் பேசப்படும் என்பது திண்ணம்.
துரை மனோகரனின் "எழுதத் தூண்டும் எண்ணங்கள் நாட்டின் சமகால நிகழ்வுகளையும் அதன் பிரதிபலிப்புகளையும் தருகிறது. ஆனால் மிகச் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ்விதழில் பூமாலை கட்டுபவர்களைப் பற்றிக் கூறியிருந்தார். அக்கருத்து இப்போதைய வியாபார உலகுக்குப் பொருந்தாது. கொழும்பு விதியிகளில் சுவாமிக்கு பூச்சரம் கட்டுபவர்கள் மிகவும் ஆசாரம் குறைந்தவர்களாகவும், சுருட்டுப் பற்றவைத்துக்கொண்டு ஒரு முழத்திற்கு ஒரு பூ என்ற வீதம் கட்டி வியாபாரம் செய்கிறார்கள். கலை நுணுக்கத்துடன் கட்டி தன் கையாலேயே அணிவிக்கும் ஒரு இரசிகனின் மாலையை உடனே கழற்றுவதுதான் நாகரிகமற்ற செயலாகப்படுகிறது.
தஞ்சைக்கடிதம் பத்மா சுப்பிரமணியத்தின் நடனத்தைக் கண்டு களித்தமாதிரி இருந்தது. அட்டைப்பட ஓவியம் அற்புதமாக, அமைப்பாக இருந்தது. வைஜந்திக்கும் எனது பாராட்டுக்கள். நா.ஆனந்தன், யாழ்ப்பாணம்.
49

Page 26
எனது எழுத்துலகம் வெளியிட்டிருந்தீர்கள். மெத்த நன்றி. அதில் எனக்குப் பரிசு பெற்றுத்தந்த எனது புத்தகங்கள் பற்றி எதுவும் எழுத மறந்துவிட்டேன். மறதி கொடியதுதான்.
கலாநிதி துரை.மனோகரனின் பொன்னாடை பற்றிய குறிப்புகளைப் படித்தபோது "யாரை எங்கு வைப்பது என்று யாருக்கும் தெரியலே!" என்ற கண்ணதாசனின் சினிமாப்பாடல்தான் என் நினைவுக்கு வந்தது.
பொன்னாடை மட்டுமல்ல, விருது வழங்குதலும் அப்படித்தான். உதாரணத்துக்கு ஒன்று :
பேராசிரியர் சி.மெளனகுரு ஓர் இலக்கிய கர்த்தா என்னும் உண்மை வடகிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இவ்வாண்டு தான் தெரியவந்து அவருக்கு ஆளுநர் விருது வழங்கியிருக்கிறார்கள். மட்டக்களப்பில் இருந்து முதல் ஆளுநர் விருது பெற்றிருக்க வேண்டிய மனிதர் பேராசிரியர் மெளனகுருதான்! ஆனால் என்ன சொல்ல? சிபாரிசு வேண்டுமாமே! வாகரைவானன்.
தங்களது இலக்கியப் புலமையும், வீச்சும் கிரமமாக புதிய நெறியினை நோக்கி நகர்வதை ஞானம் இதழ்களில் தரிக்க முடிகிறது. அதன் இலக்கிய
நயம் தமிழ் தேசமெங்கும் சுடர்விட எனது வாழ்த்துக்கள்.
உக்குவளை அக்ரம்.
எழுத்தாளர் கே.கனேவர் அவர்களுக்கான சிறப்பு மலராக வெளிவந்திருக்கும் டிசம்பர் 2002இதழ் அரிய பொக்கிஷமாக வைத்துப் பாதுகாக்கவேண்டிய சிறப்புக் கொண்டது. பயன்மிக்க அரிய தகவல்களை கொண்டதாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
கவிஞர் புரட்சிபாலன், திருகோணமலை,
அன்புமிக்க நண்பர் கணேஷ் அவர்களுக்கு.
வணக்கம், நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். நான் நலம். நான் உங்களுக்கு கடிதம் எழுதி அநேக மாதங்கள் ஓடிவிட்டன. அதன் பின்னர் புதுவருடம் என நம்பப்படுகிற கால மாறுதலும் ஏற்பட்டு, 2003இன் முதலிாவது மாதமும் முடிந்து போகிறது.
நான் முன்னர் உங்களுக்கு எழுதிய கடிதத்தை பார்த்ததாகக் கூறி, "ஞானம் பத்தரிகை ஆசிரியர் ஞானசேகரன் கடிதம் எழுதினார். "ஞானம் இதழின் மூன்றாவது மலரையும் அனுப்பிவைத்தார். கணேஷ் அவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் ஒரு சிறப்பிதழ் வெளியிடுகிறோம் என்று அதற்குக் கட்டுரை கேட்டிருந்தார். என்னால் எழுதி அனுப்ப இயலவில்லை. "ஞானம் கணேஷ் சிறப்பிதழை திரு.ஞானசேகரன் அனுப்பியுள்ளார். படித்து மகிழ்ந்தேன். நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களைப் பற்றிய அரிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. உங்கள் நேர்காணல் உங்களைப் பற்றி அறிய, அதிகம் தெரிந்து கொள்ள உதவுகிறது. உங்களைக் கெளரவிக்கும் ஒரு சிறப்பிதழ் வெளியிட்டிருப்பது மிகுந்த சந்தோஷம் தருகிறது. வாழ்த்துக்கள்.
வல்லிக்கண்ணன், சென்னை.
SO

பொற்கிழியும் வசை மொழியும்!
கை நீட்டி வாங்கியது துப்பாப்ப் போச்சு காசைத்தான்!
பொன்னாடை வாங்கிTேEர் பொறுத்துக் கொண்டார்கள் பொற்கிழி தந்ததால் பொங்கி எழுந்தார்கள்
கை நீட்டி வாங்கியது தப்பாப்ப் போச்சு!
பட்டங்கள் தந்தார்கள் பகையேது மில்லை பாராட்டும் கிர்ைடேன் பதுை பதைக்கவில்லை விருதுகள் கிடைத்தன வெறுத்துவர் குறைவே ஆனால் பொற்கிழி பெற்றதால் புறுபுறுக்கின்றார்.
மூத்த எழுத்தாளர்கள் கெளரவம் பெற்றபோது "உங்களுக்கு ஒன்றும் இல்லையே' என்று உருகி நின்றார்கள் ஆனால் பொற்கிழி பெற்றதும் ரேகலாது கொடுக்கவும் நாதியில்லை!
அனுதாபம் சொல்லிய அன்பர்கள் கூட "இது நாயமா?" என இடித்துக் கேட்டார்கள்.
உள்ளே இருப்பவர் எவ்வாறு பெறலாம்? உயர் பதவி உள்ளவர் எப்படிப் பெறலாம் "சவ்வி" நிறைந்தவர் சன்மானம் பெறலாமோ ஏன் ஏற்றுக் கொண்டார் stat# சொல்வித்திரிந்தார்கள் சுழன்று அவைந்தார்கள். பல்சிே நிறுநிறுத்து பட்டோவை தான் நீட்டி பொல்லை எறிந்தார்கள் "பிட்டிஷம்" அடித்தார்கள்
நானா கேட்டேன். அவர்களாய்த் தந்தார்கள். ஆனாலும் வாங்கியது தப்பாம் வம்பளக்கின்றார்கள்.
பொற்கிழி ஏற்காத புலவர்களும் புகழாராம் நாடாத புரவலர்களும் இருக்கின்றார்களா இங்கு?
பொற்கிழி பெற்றதால் பொங்கி எழுந்து "கிழி கிழி" என்று கிழிப்போரே ஒன்றை மறந்துவிட்டு உபதேசம் செய்கின்றீர்.
தகுதியின்மை தேடுகிறீர்
தகுதியையும் தேடும்.
இலக்கிய உலகில்,
அழுத்தமாகப்
தடம்பதித்து எனக்கு
இல்லையா தகுதி
பொற்கிழி பெற
- கலைவாதி கலீல்

Page 27
பாதுகாப்பு வி
பாதுகாப்பு வலயமாம்
க்கள் பாதம் பட்டுவிட்டால் பூதம் புறப்பட்டு விடுமாம்
புலூடர் விடுகிறது இராணு
சொந்த மண்ணில் குடியேறுக் கூடாதாம் சொல்லுகிறார்கள் அந்த மண்ணின் ஆக்கிரமிப்பாளர்கள் அடடா, விடலாமா?
யாழ்ப்பாணந்தான் தமிழரின் அரியாசனம் காப்பாற்ற வேண்டாமா? கடலாய் எழு
இயல்பு வாழ்க்கை இல்லையேல் எதற்காக ஒப்பந்தம்? உயர் பாதுகாப்பு வலயமாம் (Uriag உபதேசிக்கிறார்கள்?
செங்களம் ஆடவர் சிங்கள இராணுவம் இந்தச் சிண்டு முடிகின்றது?
இந்தியாவின் கரமும் இதில் இருக்கிறது அந்த நாட்டுக்கேன் இவ்வளவு அக்கறை?
Printed by: Multi Graphics - 0

UGULUCIÓ
s
- வாகரைவாணன் -
புாதுகாப்பு வலயம் யாருக்கு? நிச்சயமாய் பட்டாளத்துக்குத்தான்! பாவம் தமிழர்
குடாநாட்டில் இராணுவம் குந்த விரும்புவது இதற்குத்தான்!
அரச மரங்களாலும் விகாரைகளாலும் அந்த மன்ைனை அலங்கரிக்க வேண்டும்.
WWW 8.3230)