கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.03

Page 1
| । :
శ్లో
த்
|-
霍
° ■
 


Page 2
பாட்டி பாக்கை எடுத்தTள் உரலினுள் இட்டாள் சிற்றுந்ேகை கொண்டு |_IT&f.୍}{4. # !!!!!!!!!!!!!!! !!f|| உரலுந்தும் உலக்கைக்குமிடையே L, IT, .i. (EsIEIT
நெரிபடலாயிற்று.
அப்பா பாக்கை எடுத்தார் பாக்கு வெட்டியின் இடையினுள் வைத்து பாக்கை வெட்டினார். பின்னர் சிறு சிறு துண்டாப் நறுக்கினார். 1ாக்கு பெட்டியின் மேல்முனை அழுத்த அழுத்த LITä.2ET சிறு சிறு துண்டாப்
ਮIAL.
இளைய தலைமுறை சேர்ந்த ஒருவன் பாக்குக் குவியல்ை பாக்கு இயந்திரத்தினுள் மொத்தமாய்க் கொட்டினான். (BGLJEFLİ,
GJELD
BL-Ef மிகப் பெரும் வேகமாய்ப் பாக்கு இயந்திரம் இயங்கலாயிற்று
பாக்து இயந்திரத்தினுள் அகப்பட்ட
பாக்கோ மெல்லிது மெல்லிதாக மிக மெல்லியதாக சிவப்படலாயிற்று.
இத்தனை துயரம் பெற்றதன் பின்னரும்
மனிதனின் பற்களிடையே அகப்பட்டுக் கொண்டது.
பற்களிடையே அகப்பட்ட பார்கோ
கூழாகும்வரை மிகக் கூழாகும்வரை அரைபடலாயிறIது.
பாக்கை இத்தனை துரப்படுத்தல் பாவி மனிதன் இண்டம் பெரயே
சுவையை இவனுக்கு அளித்த L JITF ġE, கூழாகும்வரை தன்னைக் கரைக்கும். பாக்கு அழிய இவனோ மகிழ்வான்.
அழிவது பாக்கு மகிழ்வது மனிதன்.
மக்களின் நிலைப்பும் பாக்குப் போன்றதே
#LụL || #ữ நெரிபடல் ஆரிபடல் gRJ1.JLsiù யாருக்காகவோ தம்மை அழித்தல்,
s
க்
கு
அழிவது மனிதர் மகிழ்வது பாரோ
பாக்கு பாக்காய் இருக்க வேண்டும் இறுக்கம்
உறுதி
Guglia HD
இதுவே பாக்கின் இயல் .
இடிLடல்
நெரிபடல்
அரிபடல் அரைபடல் இவை புறம் தள்ளி பாக்கின் உறுதியை பாக்கு பெறுக.

ஞானம ஒளி-03 Ls-10
பகிர்தலின் மூலம்
விரிவும் ஆழமும்
பெறுவது
ஞானம்
ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர் கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர் நா. ஆனந்தன்
கண்ணி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. தொ.பே. -08-478570(0fice)
08-23.4755 (Res.) 03-234755
= a
ΕΗ Χ --
E-M1: il
nanam magazineayahoo.com
உள் ளே.
நேர்காணல் . 25
சிறுகதை காயப்பட்டவன் பாபா O 5 ப.ஆப்டீன் குசுமாவதி.டி உக்குவன அக்ரம்
... I 6
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . தரை.மனோகரன் "முஸ்லிம் நேசன்" பதிவுகளுடன். கலாநிதி எம்.எஎப்.எம்.அனஸ் வண்ணிப்பிரதேச தமிழ்
I
T
இலக்கிய முயற்சிகள்.பா. 46 ந.பார்த்திபன்
கவிதைகள் பாக்கு பாயா. D) சிமெளனகுரு நெடுஞ்சாலைய. I5 சிதுமாரலிங்கம் வைர மனிதர்கள் பாய 24 மொழிவரதன் அழுத்தம் பாபா 2 4 வை.சுந்தரேசன் யதார்த்தத்தின் கோரம் .பா 5.2 த.ஜெயசீலன்
நெற்றிக்கள்ை. H 盟置 தஞ்சைக் கடிதம் சாய 49
திரும்பிய் பார்க்கிறேன் umi Lin வாசகப் பேசுகிறார்.50
அட்டைப்படம் - எஸ்.ஷேவியர்
3

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
.விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
ஈழத்து ஆக்க இலக்கியத்துறையில் பெண்கள் 1964ஆம் ஆண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சியை மதிப்பிட்ட இரசிகமணி கனகசெந்திநாதன் ‘எழுத்துத் துறையில் பெண்களுடைய முயற்சி திருப்தி தருவ தாக இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று இக்கூற்று பொருத்தமற்றதாகி, ஆக்க இலக்கியத்துறையில் பெண்களின் பங்கு விதந்து பாராட்டப்படுமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பெண் எழுத்தாளர்கள் பலர் தனித் தொகுதிகளாகவும் பிரதேச ரீதியில் கூட்டாக இணைந்தும் சிறுகதை, கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். இளைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் வீறுடனும் வீரியத்துடனும் எழுதுகிறார்கள்.
நேர்மை நியாயத்தின் ஒளியில், இன்றைய காலகட்டத்தில் பெண்ணி யத்தை முன்னிலைப்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. பெண்ணியம் இன்று தத்துவத் தளமாக கொள்கை கோட்பாடுகளின் கொத்தளமாக வளர்ந் துள்ளது. மரபுவழிச் சிந்தனைகள், மதச் சித்தாந்தங்கள், சமூக ஆய்வாளர்களின் கோட்பாடுகள், அரசியல் தத்துவங்கள், சிந்தனையாளர்களின் கோட்பாடுகள் ஆகியவை மட்டுமன்றி, கலாசார விழுமியங்களும் மீளாய்வுக்கு உட்பட்டு நிற்கின்றன. அடிமைத் தழைகளை அறுத்தெறிந்து விடுதலை வேண்டிநிற்கும், அமுக்கப்பட்ட குரலின் எதிரொலியாகப் பெண்களின் குரல்கள் ஒலிக்கின்றன. சமகால வரலாற்றைப் படைக்கும் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் சத்திய வேட்கையுடன், பெண்ணிப் பார்வையுடன் புதிய சிந்தனைத் தெளிவுடன் தார்மீகக் கடமையுடன் சமூதாயத்தை நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்களின் அக உணர்வுச் சிக்கல்களை, புற உலகத் தாக்கத்தை தத்ரூபமாக வடித்தெடுக்கிறார்கள் பெண் எழுத்தாளர்கள். தலித் இலக்கியத்தை தலித் எழுத்தாளர்கள் மட்டுந்தான் உயிர் துடிப்புடன் எழுதமுடியும் எனக்கூறு வதைப்போல பெண் எழுத்தாளர்கள்தான் உயிர்த்துடிப்புடன் பெண் கதாபாத்திரங் களைப் படைக்கமுடியும் எனும் கருத்தியலை, பெண்ணியத்தை முன்வைக்கும் சில படைப்பாளிகளின் ஆக்கங்களில் தரிசிக்க முடிகிறது.
சர்வதேச மகளிர் தினம் மலரும் இந்த மார்ச் மாதத்தில் “ஞானம்” இக்கருத்துக்களை இலக்கிய நெஞ்சங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.
4.
 

காயப்பட்டவன்
ப. ஆப்டின்
ܢܠ
நேற்றிரவு அவன் மிகவும் சிரமப்பட்டுவிட்டான். மேசைமீது பரத்திக்கிடந்த மருந்து மாத்திரை களை எடுத்து, போத்தலில் உள்ள தண்ணிரைக் கிளாசில் ஊற்றிக்குடிக்க அவன் பட்ட அவஸ்த்தைகள்!
இந்த இடத்தில்தான் மானுட உதவி தேவை.
ஆனால் அது அவனுக்குக் கிடைக்காமலி தொலைந்து :
அறைகளில் மனைவி மக்கள் என்னும் ஜடங்களின் குறட்டை ஒலிகள் உரத்துக் கேட்கின்றன. மனைவி மக்களின் அணு சரணைகள் கிடைக்காமலி போனதற்கு ஒரு நியாயம் இல்லாமல் இல்லை. ஊர் உலகம் நம்பக்கூடிய விடயமா
விட்டிருந்தது. அடுத்த அடுத்த
அது இருந்தாலும் அவற்றை LT யெல்லாம் மீறி உதவி ஒத் டா
தாசைகள் கிடைக்கவேண்டு மானால்.
அதற்கெலி லாம் ஒரு பக்குவப்பட்ட பரந்த உள்ளம் வேண்டுமே!
பேசாமலி அரசாங்க 었
மருத்துவமனையில் படுத்துக் கிடக்கத்தான் முடிவு செய்து
ノ
t തം.
விட்டான். வைத்தியசாலை கடமை சார்ந்த கவனிப்புகளும் நோயாளியைப் பார்க்க வந்து போவோரின் ஜனரஞ்சக ஆறுதல் பார்வைகளுமே மனத்திற்கு இதமாக இருக்குந்தானே!
தனது கதையின் இறுதி அத்தியாயம் மருத்துவ வார்ட்டில் முடியவேண்டும் என்பதுதான் அவன் விருப்பம். அப்பொழுது சொந்த பந்தங் களுக்கு காரியங்கள் மிகவும் இலகுவாக இருக்கும். "தொலைந்து விட்டான் என்ற நிம்மதி அவர்களுக்குப் பிறக்கும். ஆனால் அதற்கு எவ்வளவு காலம் போகும். உடம்பு நோய் எதிர்ப்பு சக்தியை முற்றாக இழந்த பின்புதானே அது நடக்கும்.
அவனது ஆழ்ந்த சிந்தனை நித்திரையை முற்றாக எங்கோ துரத்தி விட்டது.
மனங்குழம்பிப் போய் மணிக் கூட்டை அடிக்கடி பார்த்தான். அது ka
Š

Page 4
அவனுக்காகத் தன் வேகத்தை கூட்டி விடியலை அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்துவிடுமா..?
நியதியின் சோக வடிவங்களில் ஒன்றைத்தான் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
நியதியை அமானுஷ்யம் என்று வர்ணித்தார்கள். ‘இறைவனின் சோதனை என்றும் சொன்னார்கள்.
சோதனை என்ற பெயரில் இன்னும் கடுமையாகத் தண்டித் திருந் தாலும் அதனை அவன் மனப்பூர்வ மாக ஏற்கத் தயார். ஆனால் சமூகத் தில் தனக்கென இருந்த மரியாதை யையும் அந்தஸ்த்தையும் கொடுர மாகப் பாதித்து ஒரு தலைக் குனிவு ஏற்படுத்திவிட்டதே. அந்த அளவுக்கு விதி அமையக்கூடாது என்று தர்க்கித் தாலும் "அதுதானே விதி, அமானுஷ் யம்’ என்றார்கள். விதியைப் பற்றி விவாதிக்கக்கூடாது என்றார்கள்.
அவன் ஒரு நல்ல ஒழுக்க சீலன் என்பதாலோ இப்படி ஒரு சோதனை.?
இப்படியெல்லாம் தத்தம் அறி வுக்கேற்ப அபிப்பிராயங்கள் மொழிந் தார்கள்.
ஒரு நல்லவனுக்கு விதி இப்படி அமைந்து, தனது பொலி லாத சிறகைக் காட்டிவிட்டதே?
இப் படியெல்லாம் கேட்க அவனுக்குத் திருப்திதான். ஆனால் - "யாருக்குத் தெரியும் 'நல்லவன் என்ற போர்வையில் வெளிநாட்டு மண்ணை மிதித்தவுடன் என்னென்ன கூத்து ஆடுகிறார்களோ..?
இதுதான் அவனைக் கொல்ல வந்த வைரஸ் கிருமியைவிட கொடிய தாக இருந்தது.
தீர விசாரித்து பகுத்தறிவுக்கு எட்டிய மட்டும் ஆய்ந்து, "இது இப்படித்
தான் நடந்தது என்று நிரூபித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவப் பட்ட நல்ல உள்ளங்கள் இல்லாவிட் டால் என்ன செய்வது..?
மெளனித்து இருப்பதுதான் மருந்தாகுமா?
"இருபதாம் நூற்றாண்டின் மருத்துவத்துறையையே கலங்க வைத் துள்ளது இந்த நோய்.” என்று மருத்துவர்கள் மதிப்பிடுகின்றனர்.
கீழைத்தேய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு பெரும் சவாலாகத்தான்பட்டது அவனுக்கு.
நியதியின் கொடுரத்தை எண்ணியெண்ணி அவன் மிகவும் மனச்சஞ்சலப்பட்டுவிட்டான்.
ஓயாத சிந்தனையும், மனக் கிலேசமும் ஒழுங்கான நித்திரையின் விரோதிகளாயின. அவன் எடுத்த முடிவுதான் சரி. சமூகம் எப்படித்தான் தன்னை மதிப்பீடு செய்தாலும், அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். 'மெளனமாய் சும்மாயிரு அவனைப் பொறுத்தவரையில் இது ஒரு சிறந்த தத்துவம். அதைத்
தான் அவன் கடைப்பிடித்தான். இனி எதைப்பேசினாலும் பிரயோசனம் இல்
லைத்தானே!
அவனுக்கு உண்மையில் இந்த நோயைப் பற்றிய ஆழமான அறிவு இருந்திருந்தால்? எல்லாம் கேள்விப் பட்டதோடு சரி. பொதுவாக ஒரு
சராசரி மனிதனுக்குத் தெரியவேண்டிய
விபரங்களை மட்டுந்தானே அவனும் அறிந்திருந்தான். அதற்குமேல் ஆழ மாக அறிய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை அவனுக்கு. ஆனால்அது தன்னைத் தேடி வந்து சுட்டபோதுதான் இந்த நோயைப் பற்றி பூரணமாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஞானோதயம் பிறந்தது.

அரை நூற்றாண்டை நிறைவு செய்யப்போகும் வயதில் இளமைத் துடிப்போடு இயங்கிய அந்த இனிமை யான நாட்களை மீட்டிப் பூரித்துப் போகின்றான். ஒரு கெளரவமான தொழிலுடன், வாடகை வீட்டில் என்றா லும் வாழ்க்கையின் வசந்தகாலம் அதுதான்.
காலம் கனிந்துவந்தபோது அவனுக்கும் புரோக்கர் மூலம் திரு மணப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அனைத்து கோணங்களில் இருந்தும் பொருளாதார வசதிகளை மட்டுந்தான் மையமாகக் கொண்டு அணுகினார் கள். -
வயது, கல்வி இவற்றைப் பற்றியும் அலசப்பட்டது. ஆனால் ஒரு சந்தர்ப்பத்திலும் மனப்பொருத்தங்கள், இலட்சியங்கள், விருப்பு வெறுப்புகள், குணவியல்புகள். இவற்றைப்பற்றி சிறிதளவேனும் அக்கறை காட்ட வில்லை.
சொல்லப்போனால் - முன் பின் அறியாத ஒரு பெண் ணும் ஒரு ஆண் மகனும் திருமணம் என்னும் பந்தத்தால் இணைந்தார்கள். "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்கள். உண்மையில் அவன் அவளுடன் அல்லது அவனு டன் மனந்திறந்து கருத்துக்கள் பரி மாறக்கூட வாய்ப்பு கிடைக்கவில் லையே! இந்நிலையில் -
அவர்களும் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
'திருமணம் முடித்து வாழவேண் டும்' என்று வெறுமனே ஒரு சம்பிர தாயத்திற்காக, ஒரு வகை இயந்திர வாழ்க்கைதான் அது
பெண் வீட்டாரைப் பொறுத்த வரையில் "அப்பாடாவென்று குமரிப் பாரம் கழிகிறது.
அவனை முடித்த அவளது இலட்சியங்கள் எல்லாம் பணம், வசதி, சொத்து இவைதான் சொகுசான வாழ்க்கை.
கணவன் என்ற ஸ்தானத்தி லிருந்து அவனும் ஒரு குறையும் வைக்கவில்லை.
வாழ்க்கை, பிரச்சினைகள் எதுவுமின்றிச் சுமுகமாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது திருப்தியாக.
"டாம்பீகம் எதுவுமின்றிப் போதும் என்ற மனப்பாங்குடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே அதுதான் உன்னத வாழ்க்கை.
வாழ்க்கையைப் பற்றி அவனது வரைவிலக்கணம் அது.
பெற்றெடுத்த குழந்தைச் செல் வங்கள் வளர வளர, அதனை ஒரு சாட்டாகத் தூக்கிப் பிடித்து அவள் பொருளாதாரப் பிரச்சினைகளை உரு வாக்கி வளர்த்துக் கொண்டதால் மெள்ள மெள்ள முரண்பாடுகள் வளர்ந்தன.
"இவ்வளவு பேர் போறாங்க ஓங்களுக்கு மட்டுந்தான் வெளிநாட்டு மண்ணில் வேலை இல்லை”
"எதையுமே மனசுக்கு எடுக் கணும்"
"குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கணும்."
"முயற்சி இருக்கணும்" மனைவியின் ஓயாத நச்சரிப்பு கள் சக்திவாய்ந்த ஏவுகணைகளாயின. அவற்றைத் தாங்கும் சக்தியை அவன் முற்றாக இழந்துவிட்டான்.
முயற்சி என்ற பெயரில் அவன் இராப்பகலாக முகவர் நிலையங் களை முத்தமிட்டான்.
வெளிநாட்டு மண்ணை மிதிக் கும் பாக்கியம் அவனுக்குக் கிட்டியது. அவனுக்கு அது ஒரு சர்வ சாதாரணமான விடயமாக இருந்

Page 5
தாலும், மனைவியின் ஏவுகணை களிலிருந்து தப்பிவிட்டோம் என்ற மகிழ்வும் திருப்தியும் அவனில் இழை யோடியது.
அவளுக்குத்தான் ஒரே குஷி யாக இருந்தது. அவளில் பல மாற்றங்கள். அவளது இலட்சியம் நிறைவேறப்போகிறது.
காலச் சக்கரத்திற்கு எப்படி இந்த வேகம் வந்தது?
அவன் பயணமாகிப் போய் இவ்வளவு விரைவில் உருண்டோடி விட்டனவா..?
அவளுக்கே புதினமாக இருந் தது. அவளுக்கு அதிர்ஷ்ட அலை.
வாடகை வீடு சொந்த வீடாக மாறி, மாடி வீடாக உயர்ந்ததைப் பார்க்கும்போது, காலம் வேகமாகத் தான் ஓடியிருக்கு.
*செல்வம் அது தேடினால்தான் வரும் மூன்று மக்கள் செல்வங்களுக் கும் "பிக்ஸ் டிப்பொசிற்கள்' போட் டாயிற்று. கிட்டிய அவளது உறவினர் களுக்கு இப்படியும் அப்படியுமாக சில உதவிகள்.
ஐந்து வருடங்களுக்குள் இவ்வளவு மாற்றமா..? அவள் மலைத் துப் போய் விட்டாள். கூடவே அவளுக்கு ஒரு வகைத் திமிர். அதுவும் புதினமல்ல. அவளுக்கே உரிய குணாம்சத்திற்கு அது வரத் தான் வேண்டும்.
இறக்கத்திலிருந்து ஒரு ஏற்றம். ஏற்றத்திலிருந்து ஓர் உச்சக்கட்டம். உச்சக்கட்டத்திலிருந்து. இன்னும் மேலே. மேலே போக தாராளமாக இடமுண்டு. ஆனால் பரிதாபம் - அலை மாறிவிட்டது.
அவன் அப்பாவி பாதிக்கப்பட்டு விட்டான்.
வருடாவருடம் விடுமுறையில்
தாய்நாடு வந்துவிட்டுப் போனவனுக்கு ஆறாம் வருடம் நடுப்பகுதியில் என்ன வாயிற்று.?
வெளிநாட்டில் ஒரேயொரு முறைதான் கடுமையான காய்ச்சலுக்கு ஒரு மருத்துவமனையில் இஞ்ஜெக்சன் போட்டார்கள். சில நாட்களில் குண மாகி நல்ல சுகதேகியாக வாழ்ந்து வந்த அவனது ஆரோக்கிய வாழ்வுக்கு என்னவாயிற்று..?
ஆரம்பத்தில் உடல் உழைவு ஏற்பட்டபோது அது கடின வேலை நிமித்தம் என்று அவன் பொருட் படுத்தாது இருந்தான். ஓயாத தலை யிடி, பசியின்மை, இரவில் வியர்வை, இருமல். இப்படியாக ஒவ்வொன்றிற் கும் தானே ஒவ்வொரு காரணத்தைக் கற்பித்து, கவனியாது இருந்து விட் டான்.
இருந்தாற்போல் அவனது எடை குறையத் தொடங்கியது. அடிக்கடி தொடர்ச்சியான காய்ச்சல்.
வெளிநாட்டில் வாழ்ந்து கொண் டிருக்கிற நாம் இப்படி அசட்டை யாக இருந்துவிடக்கூடாது என்று ஒரு சக பாடி ஆலோசனை கூறியதற்குப் பிறகுதான் அவனுக்கும் ஞானோதயம் பிறந்தது. உடனடியாக ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துப் பரிசோதித்தான். டாக்டருக்குச் சந்தேகம் வந்து விட்டது.
“எதற்கும் இரத்தப் பரிசோ தனை செய்துவிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.! என்று அதற்கான ஒழுங்கைச் செய்தார்.
அவர் சந்தேகித்தது உண்மை யாகிவிட்டது.
இரத்தப் பரிசோதனைகள் மிகத் தெளிவாகக் காட்டிவிட்டது.
"உங்கள் இரத்தத்தில் H.I.V. வைரஸ் கிருமிகள் தொற்றியிருக்கு."

"அப்படியென்றால். உண்மையில் அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
‘இந்தக் கிருமிகள் எப்படித் தொற்றுகிறது.? என்பதற்கு டாக்டர் ஒரு நீண்ட விளக்கம் கூறியபோது அவனுக்குப் பொறிதட்டிவிட்டது. உடலும் உள்ளமும் வெடவெடத்துப் புல்லரித்துவிட்டது.
“சத்தியமாகச் சொல்கிறேன் டாக்டர் எனக்கு இங்கே. எந்தவித மான பாலியல் தொடர்பும் இல் லையே..!”
அவன் கதிகலங்கிப்போய் நின்றான்.
“உங்களைப் பார்த்தாலி எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. எச்சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு முன் பின் அறியாதவர்களிடமிருந்து இரத்த தானம் செய்யப்படவில்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிருமி கள் அகற்றப்படாத ஊசிமூலம் மருந்து ஏற்றியிருக்கவேண்டும். சலூன் களில் சுத்தம் செய்து கிருமிகள் நீக்கப் படாத சவரக்கத்திகள், அல்லது பிளேடுகள் காயப்படுத்தியிருந்தாலும் உங்கள் இரத்தத்தில் கிருமிகள் தொற்ற வாய்ப்பிருக்கிறது. இப்படி ஏதாவது ஒரு வழியில்."
அவனுக்கு ஒன்றுமே ஞாபகத் திற்கு வரவில்லை.
அவசரம் காரணமாக சலூன் களில் ‘ஷேவ் பண்ணியிருக்கிறான். ஆனால் காயங்கள் ஏற்பட்டனவா..? அவனுக்கு ஞாபகம் இல்லை.
இந்த வைரஸ் கிருமிகள் மூலம்
பரவும் நோய் சம்பந்தமாக மருத்துவர் கொடுத்த விளக்கக் குறிப்புகள் அடங் கிய ஒரு சிறு நூலை ஒரே மூச்சில் படித்துத் தெளிந்து மிகவும் சஞ்சலப் பட்டான்.
அறியப்படாத விடயங்கள் அனைத்தும் அவனுக்கு அதிர்ச்சியா கவும் புதினமாகவும் இருந்தன. கடைசியில் இந்த வைரஸ் கிருமிகளா கழுத்தறுக்கவேண்டும். ஆண்டிறுதியில் நிரந்தரமாக தாயகம் திரும்பத்திட்ட மிட்டிருந்தவன் இப்பொழுது ஒரே மாத அவகாசத்தில் ராஜினாமாவைச் சமர்ப் பித்து எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பியபோது, மனைவி மக்கள் அனைவருமே திகைத்துப் போய் நின்றனர்.
‘ஒருவித அறிவித்தலுமின்றி என்ன இப்படித் திடீரென்று..?
அவனைப்பொறுத்தவரையில் ஒரு சங்கடமான நிலை. இந்த நோயைப் பற்றி எப்படிச் சொல்வது..? பரவாயில்லை.
அவனது மனச்சாட்சிக்கு விரோ தமாக எதுவுமே நடக்காததால் மிகுந்த துணிச்சலுடன் தனக்கு ஏற்பட்டிருக்கிற நோயைப்பற்றி பகிரங்கப் படுத்தினான். நீதிக்கு முன் அல்லது விசாரணைக்கு முன் அவன் நிரபராதி தானே! என்ற தைரியத்தில்.

Page 6
அவன் முற்றிலும் எதிர்பார்த்தது போல் -
குடும்பத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது.
அவனுடைய விளக்கங்கள் ஒன்றுமே எடுபடவில்லை. அவர் களுடைய ஏகோபித்த முடிவு -
அவன் ஒழுக்கம் தவறியவன். இப்படியான ஒரு கட்டத்தில் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர் கள் போன்றவர்களின் உதவி தேவை. உதவி என்றால் அள்ளிக்கொடுப்பது மட்டுமா..? அன்புடன் பழகி உற்சாகம் தரும் நல்லவார்த்தைகள் பேசி மிகவும் அந்நியோன்யமாக நடந்துகொள்ள வேண்டும். அவன் தன்னை ஒரு பயங்கர நோயாளி என்று எண்ணி யெண்ணி மனம் வருந்த சந்தர்ப்பம் இல்லாமல் மிகக் கவனமாக அவனுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். ஆனால் அது அவர்களால் முடியுமா..? அவள் அவசரஅவசரமாக ஓடி இரத்தப் பரிசோதனை செய்து, தனக்கு “ஒன்றுமில்லை என்று அறிந்த பிறகு தான் ‘அப்பாடா' என்று நிம்மதியாக மூச்சுவிட்டாள்.
அனைவரும் ஒன்றுகூடி பேசித் தீர்த்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
அவனுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் முற்றிலும் தனிமைப்படுத்தி ஒதுக்கி விட்டார்கள். அள்ளிக்கொடுத்தவனுக்கு ஒரு சிற் றறை தஞ்சம்.
நோய்க்கிருமிகள் பெருகித் தன்னை மரணப்படுக்கைக்கு அழைத் துச் செல்வதற்கு முன் இந்தப் பொல் லாத தனிமை தன்னைக் கொன்று விடுமோ என்று அஞ்சினான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தன.
வைத்தியர்களைச் சந்திப்
பதிலும் ஆலோசனைகள் பெறுதவ திலும் நாட்கள் தள்ளாடிக் கொண் டிருந்தன.
இந்த ஓரங்கட்டிய நிலையில் தான் -
அன்று ‘எப்படா விடியும் என்று காத்துக்கொண்டிருந்தான். எங்கோ நாயும் பூனையும் சண்டைபிடிக்கும் ஊளை. காகங்கள் கரைதல், பறவை பட்சிகளின் விழிப்பு, இரைச்சல், இவை அனைத்தையும் மீறி சாலையின் அமைதியைக் குலைக்கவென ஒரு வாகனம். அதைத்தொடர்ந்து ஆட்டா வணி டிகள் கிளம்பத் தொடங்கி யிருந்தன. தேவையானவற்றை எல் லாம் எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினான். சிரமப்பட்டு வெற்று,
முச்சக்கரவண்டி ஒன்றை மறித்து
10
ஆங்கிலத்தில் "ஹொஸ்பிட்டல்' என்று மட்டும் உதிர்த்து ஏறிக்கொண்டான். ஐந்து வருட காலம் கடுமை யான உழைப்பு. வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து, மீண்டும் பழைய மாதிரியே காலத்தை ஒட்டலாம் என்று தான் திட்டமிட்டிருந்தான். ஆனால் நியதி வேறுமாதிரியாக அமைந்து விட்டது.
நோயைச் சுமந்துவந்து, மருத்துவமனையும் வீடுமாக ஓடியோடி களைத்துப்போய். வீடும் கிட்டத்தட்ட கவனிப்பாரற்ற ஒரு மருத்துவமனை யாகி, கடைசியில் வீட்டை விட்டே கிளம்பவேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டாயிற்று.
அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அங்கே அவனுக்கு ஆரோக்கியமான மாற்றம். வைத்தியசாலையில் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் அவ னைத் தனிமைப்படுத்தி ஒதுக்காமல் வைத்தியர்கள், தாதிகள் முதல்

அனைத்து ஊழியர்கள் வரைக்கும் அனைவருமே அன்புடன் பராமரித் தார்கள். அது அவனுக்குச் சொர்க்க மாக இருந்தது.
நோயாளரைப் பார்க்கவரும் பார்வையாளர்களின் புன்முறுவலும் ஒரிரு அன்பான விசாரிப்புகளும் அவன் உள்ளத்திற்கு எவ்வளவோ இதமாக இருந்தன.
அவனது இவ்வுலக வாழ்க்கை இன்னும் அவனால் நிச்சயமாகக் கூற முடியாது. ஆனால் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவனால் ஊகித்துக் கொள்ளமுடிந்தது.
அவனைப் போல் அறியாமை காரணமாக, பாலியல் தொடர்பற்ற முறையில் கிருமிகளால் பாதிக்கப் பட்டவர்களுக்காகப் பரிதாபப்படு கிறான்.
இந்த நோய்க்கு எதிரான மருந்துகளைக் கணிடுபிடிக்கும் முயற்சிகள் வெற்றிபெறவேண்டும் என்று ஒவ்வொருநாளும் பிரார்த்திக் கின்றான்.
ஒரு நாள் இரவு மருத்துவ மனை மிகவும் அமைதியாக உறங்கிக் கிடப்பது போல் ஓர் உணர்வு.
திடீரென்று விழிப்படைந்து சுற்று முற்றும் பார்த்து தான் "ஐசி ருமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப் பதை இலேசாக உணர்ந்தான். உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந் தது. பார்வையாளருக்கு அழைப்பு மணி அடித்த நேரம் அவனுக்குத் தெரியாது. ஆனால் புதினமாக மனைவியும் மக்களும் இரண்டொரு உறவினருடன் தலைமாட்டில் நின்று கொண்டிருந்துவிட்டு சற்று வெளியே றியது போல் அவனுக்குத் தோன்றி யது. அந்தக் கட்டத்திலும் உயர்ந்த பண்பாடுகளை உள்ளடக்கிய கீழைத்
தேய கலாசாரத்தின் பிரதிநிதிகளாக வெளிநாடுசெல்லும் ஒவ்வொரு நல்ல பணி பாளனையும் மானசீகமாக எண்ணிப்பார்க்கின்றான். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் அவன் கண் முன்னே தோற்றமளிக்கிறார்கள். அவன் கண்கள் கலங்குகின்றன.
'மது, மாமிசம், மங்கை ஆகிய மூன்றையும் தொடமாட்டேன். என்று சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுச் சென்ற இந்தியாவின் மகாத்மாவைக் கூட அவன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கத் தவறவில்லை.
இதனைப் பின்பற்றி எத்தனை எத்தனை பேர் செல்வார்கள்.
ஒருவகைப் பதட்டமும், பச்சா தாபமும் பரிதாபமும் அவனில் இழையோடுகிறது. அதைத்தொடர்ந்து ஒருவகைப் புலம்பல்.
“வெளிநாடுகள் செல்லும் ஒவ்வொருவருக்கும் இந்த எயிட்ஸ் நோயைப்பற்றி தெளிவான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது நிச்சயமாக அவர்களுக்குப் பாதுகாப் பளிக்கும்”.
இது வெறுமனே புலம்பல் மட்டும்அல்ல. அறியாமையால் காயப் பட்ட ஒருவனின் கடைசிவிருப்பம்.
(நெற் றிக்கள்ை"விமர்சனம்
எழுத்தாளர்களே,
நெற்றிக்கண் பகுதியில் உங்களது 7 ல் விமர்சனம் இடம் பெறவேணர் டுமெனில், நூலின் இருபிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினர்ல், நூல் பற்றிய புதிய நூலகம்
色
11
யில் இடம்பெறும். .ஆசிரியர் ܢܠ

Page 7
எழுதத் தூண்டும் எண்ணங்கள்) O
| Ο C .
குலாநிதி தரை.மனோகரன்)
திரையிசைத் துறையில் திசைவழிகாட்டி
தமிழ்த் திரையிசையில் காலத்துக்குக் காலம் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்ந்து வந்துள்ளன. தமிழ்த் திரையிசையில் முதன்முதலாக ஜனரஞ்சக இசையைப் புகுத்தியவராக சி.ஆர். சுப்பராமன் என்ற இசையமைப்பாளர் கருதப்படுகிறார். அவரது காலம் முதல் எஸ்.வி. வெங்கடராமன், தட்சிணாமூர்த்தி, எஸ்.எம். சுப்பையாநாயுடு, ஜி.ராம நாதன், ஆர். சுதர்சனம், கே.வி. மகாதேவன், எஸ். * விஸ்வநாதன். ராமமூர்த்தி உட்படப் பலர் தத்தம் காலத்துக்கேற்ற திரைப்பட இசையை வழங்கிவந்துள்ளனர். இவ்வகையில் வித்தியாசமாகவும் புதுமை யாகவும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, தனது தனித்துவத்தை இனங்காட்டி வந்துள்ள ஒருவர், இளையராஜா ஆவார். கவிஞர் வைரமுத்து ஒரு சந்தர்ப்பத் தில் தமது பாணியில் இளையராஜா பற்றிக் குறிப்பிட்டது போன்று "அவரது வருகைக்குப் பிறகு தமிழ்த் திரையிசை ஒரு புதுச்சட்டை போட்டுக்கொண்டது. வார்த்தைக்கு வசப்படாத சில உணர்ச்சிகளை அவர் தன் வாத்தியங்களில் வாசித்துக் காட்டிவிடுகிறார்.”
ராஜையா என்ற இயற்பெயரைக் கொண்ட இளையராஜா, பாடசாலை யிற் படித்துக் கொண்டிருந்தபோதே பாடுவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். படித்து முன்னேற இளையராஜா விரும்பிய போதிலும் குடும்பப் பொருளாதார நிலை காரணமாக எட்டாம் வகுப்புக்கு மேல் அவரால் படிக்க இயலவில்லை. ஒரு தற்செயல் நிகழ்ச்சியே இளையராஜாவைப் பாடகராக மக்கள் முன் அறிமுகம் செய்தது. வழக்கமாகக் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்த அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் ஒருமுறை சுகவீனமுற்று, மேடை நிகழ்ச்சியைச் செய்யமுடியாமல் போனதால் அவருக்குப் பதிலாக கச்சேரி நடத்திய இளையராஜா மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார்.
இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்மீது இயல்பாகவே பற்றுக் கொண்ட இளையராஜா, விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்களை முதல் நாள் முதற்காட்சியிலேயே பார்த்துவிட்டு, அடுத்து நடைபெறும் தமது இசைக் கச்சேரிகளில் அவரது பாடல்களை இடம்பெறச்செய்வது வழக்கம். காலப் போக்கில் நாடகப் பாடல்களுக்கு இசையமைப்பதிலும், நாடகங்களுக்குப் பின்னணி இசை வழங்குவதிலும் அவர் ஈடுபாடு காட்டினார்.
சினிமா வாய்ப்பைத் தேடி 1967இல் இளையராஜா சகோதரர்கள் சென்னை சென்றபோதும், சினிமா வாய்ப்பு இலகுவாக அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இளையராஜா சிலகாலம் இசையமைப்பாளர் ஜி.கே. வெங்க 12
 
 
 
 
 

டேஷின் உதவியாளராகப் பணிபுரிந்தார். சென்னையில் ஆரம்பகாலங்களில் பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் இசைக்குழுவில் "கிற்றார் வாத்தியக் கலைஞராக விளங்கினார். காலப் போக்கில் அதே பாலசுப்பிரமணிய மும் இளையராஜாவின் இசையமைப்பில் பல திரைப்படப் பாடல்களைப் பாடும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட, பாலசுப்பிரமணியத்தைப் போலக் குரலமைப்புக்கொண்ட மனோ என்ற பாடகரைக் கண்டுபிடித்து, இளையராஜா பயன்படுத்திக்கொண்டார்.
அன்னக்கிளி(1976) என்ற திரைப்படம் இளையராஜாவை அறிமுகப் படுத்தியதோடு, அவரைப் புகழின் உச்சிக்கும் கொண்டு சென்றது. அத்திரைப் படத்துக்கு முன்னரே ஏறத்தாழ மூன்று திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிட்டியபோதும், அவை கடைசி நேரத்தில் அவரைவிட்டு நழுவி விட்டன. அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பினை அவருக்கு வழங்கிய பஞ்சு அருணாசலம், ராஜையா என்ற அவரது பெயரை மாற்றியமைக்க விரும்பினார். சென்னைக்கு வந்தபோது தனது பெயரை சின்னராஜ் என்று அமைத்துக்கொண்ட இளையராஜா, தமது பெயரை ராஜா என வைத்துக் கொள்ள விரும்புவதாக பஞ்சு அருணாசலத்திடம் தெரிவித்தார். ஏற்கனவே திரையிசைத் துறையில் வேறோர் ராஜா (ஏ.எம்.ராஜா) இருந்தமையால் இவரது பெயரை இளையராஜா என வைத்துக்கொள்ளலாம் எனப் பஞ்சு அருணாசலம் ஆலோசனை வழங்கவே, அன்று முதல் ராஜையா இளையராஜா என்னும் பெயருக்குள் குடிபுகுந்தார்.
அன்னக்கிளி படத்தின்மூலம் இளையராஜா இன்னொரு சாதனையையும் புரிந்துள்ளார். 1957இல் அறிமுகமாகி 'சிங்கார வேலனே தேவா" போன்ற பாடல்களால் புகழ் பெற்றும் போதிய வாய்ப்புக்கள் இன்றிச் சாதாரண பாடகி போலவே திகழ்ந்துவந்த எஸ். ஜானகியிடம் மறைந்து கிடந்த அத்தனை திறமைகளையும் அன்னக்கிளி திரைப்படம் முதலாக இளையராஜா வெளிக் கொணர்ந்தார். அன்னக்கிளி படத்தில் பாடுவதற்கு அப்போது பிரபலபாடகியாக இருந்த எல்.ஆர்.ஈஸ்வரியைப் பயன்படுத்தவே இளையராஜா முதலில் விரும்பி யிருந்தார். அது சாத்தியமாகாமற்போகவே ஜானகியை அவர் பயன் படுத்தினார். இவரின் இசையமைப்பில் ஜானகி பாடிய பாடல்கள் மிகப் புகழ் பெற்றன. இளையராஜா திரையுலகிற் புகாமல் இருந்திருந்தால் ஜானகியின் திறமை வெளியுலகுக்குத் தெரியாமலே போயிருக்கும். ஆனாலும் இளையராஜாவின் வரவு, அதுவரை உச்சத்தில் இருந்த பாடகர் ரி.எம். செளந்தரராஜனைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுத்திவிட்டது.
இளையராஜாவின் இசை பல பரிமாணங்களைக் கொண்டதாக விளங்குகிறது. சில திரையிசைப் பாடல்களில் கர்நாடக இசையும், ஹிந்துஸ் தான் இசையும் கலந்து வந்துள்ளன. வேறு சிலவற்றில் மேலைத்தேய இசையை யும் கர்நாடக இசையையும் இணைத்துள்ளார். நாட்டார் இசைவடிவங்களைத் தாராளமாகத் தமது இசையில் அவர் பயன்படுத்தியுள்ளார். அத்தகைய இசை வடிவங்களிலும் கர்நாடக இசை வடிங்களைக் காணமுடிகிறது. இளைய ராஜாவின் கர்நாடக இசை தொடர்பான பாடல்களின் இசையமைப்புக்குப் பக்கபலமாகப் பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் விளங்கியுள்ளார் என்றும் 13

Page 8
கூறப்படுகிறது. அவரது கணிசமான பாடல்களின் இசையமைப்பில் எம்.எஸ். விஸ்வநாதனின் பங்களிப்பும் பின்னணியில் இருந்துள்ளது.
இளையராஜா தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, ஆங்கிலம் முதலான பன்மொழிப்பாடல் களுக்கும் இசையமைத்துள்ளார். புதியது போற்றும் இயக்குநர்களான பாரதி ராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலசந்தர் போன்றோர் இவரது வரவால் புதிய பலம் பெற்றனர் எனலாம். இத்தகைய இயக்குநர்களால் இளையராஜாவின் இசையும் புதிய வளத்தைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
சில வேளைகளில் ஒலிப்பதிவின்போது குறிப்பிட்ட பாடகர்கள் குறிப் பிட்ட நேரத்துக்கு வராவிடின், அவர்களுக்காகக் காத்திராமல் இளையராஜாவே அவர்கள் பாடவேண்டிய பாடல்களைப் பாடிவிடுவதுண்டு. ஆயினும், அவரது குரலைவிட, அவரின் இசையே பலரையும் கவர்ந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் பாடல்களுக்கான பல்லவியை அவரே உருவாக்கியதும் உண்டு. திரைப்படங் களுக்கு இசையமைப்பதோடு நின்றுவிடாது, சில இசைக்கோவைகளையும் அவர் இசை நாடாக்களாகத் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
1976முதல் தமிழ்த் திரையிசைத் துறையில் தம்மை இனங்காட்டி முன்னணிக்கு வந்த இளையராஜாவை, 1990களில் ஏ.ஆர். ரஹற்மானின் வரவு கணிசமான அளவு பாதித்துவிட்டது. ஆயினும் பாரதி படத்தின்மூலம் அவர் மீண்டும் ஒரளவு எழுச்சி பெறத் தொடங்கியுள்ளார். தமது பிள்ளைகளையும் திரையிசைத் துறையில் ஈடுபடுத்தியுள்ளார். தமிழ்த்திரையிசைத் துறையில் இசையமைப்பாளருக்கான கெளரவத்தை முதன் முதலிற் பெற்றுக் கொடுத்தவர் அவரே. ஆயினும் பாடலாசிரியர்களை மதிக்காத போக்கும், அவர்கள் இசை யமைப்பாளர்களுக்குக் கட்டுப்பட்டவர்களே என்ற மனோநிலையும் அவரிடம் காணப்படுகின்றன. இளையராஜாவின் சில குறைகளைத் தவிர்த்துப்பார்த்தால், அவருக்குப் பின்வந்த எத்தனையோ இசையமைப்பாளர்களைவிட அவர் இசை ரசிகர்களின் உள்ளங்களில் உயர்ந்தே நிற்கிறார். இளையராஜா உண்மையில் திரையிசைத் துறையில் ஒரு திசை வழிகாட்டியே.
வில்லன் வேடம்
'அயலவனை நேசி என்று மொழிந்தார் யேசுநாதர். ஆனால், எமது அயல்நாட்டைப் பொறுத்தவரை, தனக்குத் தெற்கேயுள்ள அயல்நாட்டில் எதுவும் நல்லபடியாக நடந்துவிடக் கூடாது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. தானே ஒருவகையான சமஷ்டி ஆட்சிமுறையைப் பேணிக்கொண்டு, இந்நாட்டுக்கு மட்டும் அது கூடாது என்பது போல் மறைமுகமாகத் தமது எதிர்ப்புணர்வைக்காட்டி வருகிறது. அயல்நாட்டிலே இப்போதைய அரசு பதவிக்கு வந்தபோது, இந்நாட்டுத் தமிழ்மக்கள் தமக்கு ஏதோ விடிவுகாலம் வந்து விட்டதைப் போன்று குதூகலித்தனர். ஆனால் அவ்வரசோ தமிழர் எதிர்ப் புணர்வுகளைத்தான் இந்நாட்டின் வில்லர்களோடு சேர்ந்து தீனிபோட்டு வளர்த்து வருகின்றது. போதாக்குறைக்கு இலங்கைவாழ் தமிழர்களுக் கெதிராக வில்லி வேடம் தாங்கிய ஜெயலலிதா எரிகின்ற நெருப்பில் எப்போதும் எண்ணெய் ஊற்றுவதையே தமது பெரும்பணியாகச் செய்து கொண்டிருக்கிறார். தட்டிக்
14

கேட்பவர்களைப் பொடா” என்ற பொல்லாத சட்டத்தின்கீழ் முட்டிதட்டி மடக்கி விடுகிறார், அந்த அம்மையார். "பொடா சட்டத்தை இந்தியாவிலேயே அதிக மாகப் பயன்படுத்துவது தமிழ்நாடு அரசாகவே இருக்கக்கூடும். ஜெயலலிதா அம்மையார் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பதோடு மட்டும் திருப்தி யடையக்கூடிய பெருந்தகை அல்லர். அகில இந்தியத் தலைவியாக புதிய அவதாரம் எடுத்து எதிர்கால இந்தியப் பிரதமர் என்ற பெயரோடும் புகழோடும் விழங்கவேண்டும் என்பதே அவரின் இன்பக்கனவு. அந்தக் கனவு நனவாகும் வரை அந்த அம்மையாரிடம் நல்ல உணர்வுகளை(அப்படி ஏதாவது இருந் தால்) எதிர்பார்ப்பதற்கில்லை. காங்கிரஸ் கட்சியினரைவிடவும் தமக்குத்தான் இலங்கைத் தமிழர்மீது எதிர்ப்புணர்வு அதிகம் என்று காட்டிக்கொண்டு, இந்தியத் தலைவியாகும் முயற்சியிலேயே ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். தாம் எடுக்க விருக்கும் புதிய அவதாரத்திற்கு எங்கே தடை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் காவியக் கதாபாத்திரமாகிய கண்ணகியின் சிலையைக்கூட வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் ஆவேசமாக உடைத்து எடுத்துவிட்டார், அம்மையார். ஒருகாலத்தில் பேச்சளவிலேனும் பகுத்தறிவுக் கொள்கைகளின் புகலிடமாக விளங்கிய தமிழ் நாட்டில் இன்று மந்திர தந்திரங் களும், வாஸ்து சாஸ்திரமும்தான் ஆட்சி செய்கின்றன. அம்மா என்ற புனித வார்த்தைக்குத் தமிழ்நாட்டில் இன்று அர்த்தமே இல்லாது போய்விட்டது. தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டு மக்கள்தான் காப்பாற்ற வேண்டும்.
இந்த இலட்சணத்தில் அயல்நாட்டிலிருந்து இந்நாட்டுக்குப் புதிய "ஆலோசகராக வந்திருக்கும் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ஒருவரின் பெயரைக்கொண்ட ஒருவர் இலங்கையின் வேட்டைக் காரர்களுக்குச் சார்பாகவே தமது ‘ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். இத்தகைய தகுதி வாய்ந்த ஒருவரையே சிவப்புச் சட்டை அணிந்த/ அணியாத பேரின வாதிகளும் பொதுஜனத்தில் அக்கறை கொண்டவர்கள் போல நடிக்கும் அரசியல்வாதிகளும் அவர்களது பரமார்த்த குருக்கள்மாரும், வேட்டைக்காரர்களும் விரும்புகின்றனர். இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கு எதிராக வில்லன் வேடம் தாங்குவதில்தான் பலருக்கும் அக்கறையுண்டு.
Z- யாழ் நகர வீதிகளில் ༄༽
கைத்தடியில் தடவி நடந்தான் நெ கதிரை பின்னுபவன். கைபிடித்தாள் ஒருத்தி 0.
கையில் பிடித்து நடந்தான் அவன். O சயிக்கிள் ஓடினாள் அவள் (S5 அவன் பின்னால் இருந்தான். இப்பொழுது அவள்
CHALY ஒடுகிறாள். அவன் குழந்தையுடன் M பின்னால் இருக்கிறான். 6Ꮼ6ᏄᏪ
O لم .ご சிகுமாரலிங்கம், யாழ்ப்பாணம் ܢܠ
15

Page 9
குகமாவதி
உக்குவளை அக்ரம்
நிலவை மறைக்கும் வானுயர்ந்த மரங்களும், மேலைநாட்டினரை ஈழத் தின் மீது மோகம்கொள்ள வைத்த ஏலம், கறுவா, கராம்பு, கோப்பி, கொக்கோ, பாக்கு போன்ற வாசனைத் திரவியங்கள் அடர்த்தியாயப். வளர்ந்து செழுமை சேர்க்கும் பிரதேச மாகவும், தென்னை, ஈரப்பலா, பலா, வாழை, மாங்கன்று நிறைந்த இயற்கைக் கொடையை வரப்பிரசாதமாகவும் பெற்றதுதான் உக்குவளைக் கிராம LDIT(5th.
இங்கு சகல இன மக்களும் சகோதரத்துவம் பேணுகின்றனர். உக்குவளை டவுனிலிருந்து, வத்தேகம பாதையில் காலாற சிறிது நடை பயின் றால். மானாம்பொடை என்ற குக் கிராமம் வரவேற்கும்.
பாதையோரத்திலே 'மினா என்ற வரவேற்பு மண்டபம் கம்பீரமாகக் காட்சியளிக்கும். முன்பு இவ்விடம் பரந்த ஒரு தோட்டமாகவும் அதில், மெளலானா அப்பா என்ற தென் னிந்தியரும் அவரின் குடும்பமும் வாழ்ந்து வந்தனர். அதற்கு முன்னால் பாதையின் மறுபுறம் நீண்ட ‘கார் பார்க் உள்ளதையும் நீங்கள் காண லாம். முன்பு நாங்கள் கிரிக்கெட், வொலிபோல் விளையாடும் திடல் இதுதான் என்பதும் கவனத்திற் கொள்
16
ளத்தக்கதாகும். இவ்விரண்டு உவமை களுக்கு அண்மித்தும் முன்னாலும் பத்தடி அகலத்தில் செம்மண் பாதை விரிவதையும், பாதையோடு அண் மித்து பெரிய ஈரப்பலா மரமொன்று கம்பீரமாகக் காட்சியளிப்பதையும் இப் போதும் தரிசிக்கலாம்.
இச்செம்மண் பாதை, கோச்சிப் பாதையை ஊடறுத்து மேலே விரி வதையும். அங்கு பெரிய வீடொன்று புலப்படுவதையும் உங்களால் காணக் கூடியதாக இருக்கும்.
முன்பு அவ்வீட்டில் வாழ்ந்தவர் கள் நாலாபுறமும் சிதறி வாழ. புதி தாக அந்த வீட்டில் வேறொரு குடும் பம் குடியேறி வாழ்கிறது.
மேலே குறிப்பிட்ட படிமக்குறியீடு களை. தாண்டிச் செல் கின்ற ஒவ்வொரு கணநேரத்திற்குள்ளும் நான் அதிர்கிறேன். மனதின் நினைவு களால் அலைக்கழிக்கப்படுகிறேன். அந்தச் சின்ன வயதுச் சிலிர்ப்புகள். நினைவுகள். என்னைப் படிமங்களாக அமிழ்த்துகின்றன. கனவுகளைத் தாண்டி நிஜங்களைத் தரிசிக்கிறது மனசு.
வாகை மரமதில் ஊஞ்சல் கட்டி ஆடும் இளம்பெண்கள் - கயிறு மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் வேகமாக "க்ர். க்ர். ஒசையுடன் அசைகிறது. இரு சடை பின்னப்பட்ட கூந்தல். துணியில் பூக்கள் பொறிக்கப் பட்ட பெரிய கவுண்கள் முழங்கால்களைத் தாண்டியும் நீண்டிருந்து, அழ கூட்டியது அவர்களுக்கு. வயது முதிர்ந்த பெண்களின் ரப்பான் தாள இசை சூழலை ரம்மியமாக்கியது. நான்கு பெரிய கற்களை நிறுத்தி, அதன்மேலே ரப்பானை இருத்தி, கற்களுக்கிடையில் தீ மூட்டி. அதனை அதிரவைத்து, ராகம் பரப்பினர். இன்னொருபுறம் பட்.பட். படபட
 

வென பட்டாசுகள் தீப்பொறி கக்கிச் சப்தம் இசைத்தன. சிறுவர்கள் கெக் கலித்துக் கைகொட்டிச் சிரித்தனர். பட்டாசின் துகள்கள் மறுபுறம் குந்தி யிருந்தவர்களின் அருகில் தெறித்து விழுந்தது. அவர்கள் பரபரப்பிற் குள்ளாகி. "ஏய், பலலா பத்து கரன்ன..” அனிச்சையாக பயத்தின் வெளிப்பாடு அவர்களிடமிருந்து வெளி யாகியது.
"அத்தம்மா மட்ட அவுருது சல்லி தென்ன” சிறுசுகள் சூழ்ந்து கோஷித் தனர். கைகளை நீட்டி, சிலரின் கரங் களைத் தட்டிவிட்டு. கைகளை அவ வின் முகத்திற்கு முன் நீட்டி அவவை சிரமத்திற்குள்ளாக்கிக் கொண்டிருந்தனர். ஊரே வேடிக்கை பார்த்து மெச் சும்படி குசுமாவதி அக்காவின் குடும் பத்தினர் பெருநாள் கொண்டாடுவார்கள். குசுமாவதி அக்கா இப்பிரதேசத் தின் கிரீடம் சூடாத அரசியாக ராச்சி யம் செய்தாள். அதிகமான முஸ்லிம் கள் சந்தானவிருத்திகொண்டும், அவர் களுக்குள் கீர்த்திவாய்க்கப் பெற்றிருந் தாள். அதற்கு அவள் மேற்கொண் டிருந்த தொழில் வழி சமைத்துக் கொடுத்தது.
பணநெருக்கடிக்கும் - அடகுக் கும் நடமாடும் வங்கியாகச் செயற்பட் டாள். பணத்தை வட்டிக்கு விட்டு, அதன் மூலம் அசையாச் சொத்துக் களையும், பணத்தினையும் பெருக்கிக் கொண்டிருந்தாள். அப்பிரதேசத்தின் அன்றாட தொழிலாளி முதல் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவர்கள் வரை, அவளிடம் கடன்பட்டிருந்தார்கள். அத னால், பொலிஸ் பிரிவுகளிலும் அவவுக்குச் செல்வாக்கும் இருந்தது. எனக்கென்றால் அவர்களைப் பிடிக்காது. பிடிக்காது என்பதற்கு சிறுவர்களாக இருந்த எமக்குப் பெரிய
17
காரணங்கள் இருக்கவில்லை.
நாம் கிரிக்கெட் விளையாடுகின்ற வேளைகளில், எமது பந்து அவர்களின் எல்லைக்குள் சென்றால் தரமாட்டார் கள். கேட்டுச் சென்றால் ஏசுவார்கள். சிலவேளைகளில் பந்தை வெட்டியும் எமக்கு முன்னே வீசி எறிவார்கள். அதோடல்லாமல் கேற்றுக்குள்ளேயே உலாவி உறுமி எங்களைப் பயங் காட்டும் அந்த அல்சேஷன் நாயையும் பிடிக்காது போனது சிறுவர்களான எமக்கு. சிலவேளைகளில் திருட்டுத் தனமாகப் பந்தை எடுக்க முனைகை யில். அந்த நாய் எம்மை இனங்காட்டி விடுவதாலும் அதுவும் எங்களுக்கு எதிரானதாகவே கருத்திற் கொள்ளப் பட்டது. அதனால் அந்த நாயைத் தெருவில் எங்கேனும் காணும் சந்தர்ப் பங்கள் கிடைத்தால். கற்களால் அதை அடித்து துன்புறுத்துவதற்கும் எங்கள் அணியினால் ஏக மனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கட்டையான உருவம். திடகாத் திரமான தேகம். தீட்சண்ணியமான பார்வை. எ.கு போன்ற கரங்கள். ஆணுருவத்தை ஒத்த பெண் வடிவம். பாதுகாவலர்கள் அற்ற இராஜ தந்திரியாக காலை வேளைகளில் முற்றத்தில் கதிரையில் அமர்ந்து. தெருவின் நடமாட்டத்தில் உன்னிப் பாக விழிகள் உருளும் . பல தலைகள் மணி மீதே குத்தகை கொண்டு நகருவதை வெகுவாக ரசிப் பாள. கடன்பட்டும், தராமல் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களில் எவராவது செல்கிறார்களா..? என்ற கவனம் அந்தப் பார்வையில் ஆழப்பதிந்திருக் கும்.
என் தந்தையின் திடீர் மரணம், தாயின் மீது குடும்பச்சுமையை அமிழ்த்தியது. இந்தா இருக்கவேண்டி

Page 10
யவள் - மார்க்கம் அனுமதித்தபடி, காலை வேளைகளில் நான்கைந்து வீடுகளில் பணிபுரிய சுழன்றோடி னாள். பசி நிறைந்த ஒவ்வொரு நாழிகையும் எம்மை எதிர்பார்ப்புக் களை நோக்கியே கடத்தியது மரண ஊசலாட்டத்துடன். பொருளாதார அழுத்தம். பரதேசியான வாழ்வு. இன் னொரு குடிலை நோக்கி, எம்மைப் புலம்பெயர வைத்தது.
குசுமாவதி அக்காவின் வீட்டுப் பக்கத்துத் தோட்டத்துக்கே குடியமர்ந் தோம். நாட்களின் கனதியும் - நகர்வும் தோழமை பூண்டு. குசுமாவதி அக்கா வின் வீட்டுக்கே உம்மா வேலைக் கமர்ந்தாள்.
அந்த நெருக்கத்துடன், காலை வேளைகளில் பால் கொண்டுவரு வதற்கு, நானும் அவர்களுக்கு பரிச் சயம் ஆனேன். பாடசாலை இடை வேளை நொறுக்குத்தீனிச் செலவுக்கு பஸ் கட்டணம்போக மீதியான சில் லறை எனக்கு உதவியது. சக நண்பர் களால் எம் ஏழ்மை சுட்டிக் காட்டப்பட்டு புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கு அந்த மீதிக்காசு உதவியது என்பதும், பல வேளைகளில் பாடசாலைக்கு "கட் அடிப்பதற்கு இந்தப் பால் விவகாரம் உதவியது என்பது வேறுவிடயம்.
கிரிக்கெட் விளையாடும் பந்து அவர்கள் எல்லை நோக்கி நகர்ந் தாலும், முன்னேபோல் அவர்கள் ஏசுவ தில்லை. பந்தை வெட்டுவதில்லை. அந்த அல்சேஷன் நாயும் எம்மை இனங்காட்ட முயற்சிப்பதில்லை. இதனால் நண்பர்களிடம் எனக்குச் சிறு மரியாதை. எல்லா மச்சுகளிலும் என்னை இணைத்துக்கொள்வார்கள். கடப்பாடுடையவனாக ஒவ்வொரு அணியிலும் நான் கட்டாயமாக இணைக்கப்பட்டேன். பந்து வீசுவ
18
திலும் துடுப்பெடுத்தாடுவதற்கும் எனக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சின்ன வயசில் கிரிக்கெட் மீதிருந்த ஆர்வம் இரண்டு பிரிவுகளிலும் என்னைப் பிரகாசிக்கவைத்தது. இந்தத் திறமை பிற்பாடு பாடசாலை அணித் தலைவனாகவும், ஊரிலுள்ளோர் என்பெயரை உச்சரிப்பதற்கும் மதிக்கப் படுவதற்கும் காரணமாக அமைந்தது. ஒருமுறை அடைமழை. ஊரை நீரில் குதூகலிக்கச் செய்தது. கூரை யின் இடைவெளியில் மேகங்களின் அசைவுகளும், மின்மினிகளின் கண் ணசைவுகளும், நிலாவின் நெளி வினையும் படம் பிடித்த எம் வீட்டுக் கூரை, நீரை வீட்டுக்குள்ளே சேமித் தது. உறங்க இடமின்றி மழைத் தண்ணிர் சின்னதான எமது தரிப்பிடத் தையும் ஆக்கிரமித்துக்கொண்டது. ஒரு மூலையில் எங்களை அரவணைத்து இரவு இடம்பெயரும்வரை கொட்டக் கொட்ட விழித்திருந்தாள் உம்மா. காலையில் மீன் டின்களின் உதவி யுடன் உள்ளிருக்கும் நீரை வெளி யேற்றுவதுமாக ஒரு வாரம் மழை எங் கள் ஏழ்மையுடன் உராய்ந்து ஆனந் தப்பட்டது. இந்த மழையினால் நான் பாடசாலைக்கு அணிந்து செல்லும். இடதுபுறத்தில் இரண்டு ரூபா குற்றி நாணயத்தின் அளவுடைய. பின்பக்கம் ஒட்டை விழுந்த அரைக் கழிசான் நனைந்ததும், ஒரு கிழமையாக ஸ்கூலுக்குப் போகாமல் இருந்ததும் எனக்குச் சந்தோஷமானது.
பல நாட்கள் குசுமாவதி அக்கா வீட்டுக்குச் செல்லாத உம்மாவைக் காண, அவ வீட்டுக்கே வந்திருந்தாள். சூழ்நிலையின் யதார்த்தத்தை உள் வாங்கி "என்னிடம் ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம்தானே” என்று ஏசினாள். பின் மெளனமாக வெளி

யேறிச் சென்றுவிட்டாள். தன்னால் ஒன்றுமே இயலாததை எண்ணி, உம்மா பெருமூச்சுடன்விட்ட இளம் முறுவல். வீட்டுக்குள் உஷ்ணம் பரப் பியது.
ஒளிக்கதிர்கள் மங்கிய மாலைப் பொழுதொன்றில். எங்கள் வீட்டுக் கூரை பளபளத்தது. பெருமையடித் தது. உம்மாவின் நன்றியின் உணர் வால் பீறிட்ட கணிணி ரையும், சிறுசுகள் எங்கள் சந்தோஷத்தையும். சாந்த மான புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டாள் குசுமா வதி அக்கா.
ஊர் மக்கள் அவ விடம் பயங்கொண்டிருப் பதைப்போல் பவ்வியங் காட்டினாலும், கூறவிய லாத வெறுப்பு அவமிது படர்ந்திருப்பதை - அவர் களின் பேச்சிலும். நடத் தைகளிலும் இனங்கண்டு கொள்ள என் சின்ன மனது தவற வில்லை. எப்போதாவது ஏதாவது நடக் கலாம் என்று உள்ளுணர்வு மட்டும் பெல் அடித்துக் கொண்டிருந்தது என்னில்.
எங்களின் இரு பெருநாள் தினங் களின்போதும், அவர்களின் சிங்களப் பணி டிகையின் போதும் என்னை வாகனத்தில் மாத்தளைக்கு அழைத் துச்சென்று எனக்கு விருப்பமான
உடைகளைத் தெரிவு செய்யச்
சொல்லி வாங்கித் தருவாள். பாட சாலைக்கு வெண்ணிற நீண்ட கழிசா னும், நீண்ட கைச்சேர்ட்டும் வேறாக தைத்தும் தருவாள். தலையைத் தடவி "ஹொந்தட இஹன்ன கண்ண ஓனே" என்று ஒரு தாயாய்ப் பாசங்காட்டுவாள் என்னிடம்.
19
பத்தாம் வகுப்பில் ஜீ.சி.ஈ. சாதாரண பரீட்சை எடுக்கவிருந்த போது, போஸ்டல் ஐடென்ரிக் கார்ட் எடுக்கச்சொல்லி வகுப்பு சேர் சொன் னதும் அதை உம்மாவிடம் மறு மொழி யாக்கமாகத் தெரிவித்தபோது உம்மா உதடு பிதுக்கி 'இச் கொட்டியதும், தலையில் கைவைத்து சிந்தனை செய் ததும், என் சந்தோஷத்தை முடக்கி விட்ட குறியீடுகளாக மனம் பதிந்து ாண்டது. விழிகள் மாத் ரம் குளமாக மாறிவிட த்தனித்தது.
துரத்திலிருந்து இவை
ளை செவிமடுத்து, இன் னாரு உருவம் நகர்ந் தை நானோ ாவோ அறியவில்லை. ன் கையில் காசைத் னித்துப் புகைப்படம் டுப்பதற்கு விரட்டிய சுமாவதி அக்காவின் ன்பை அன்று எடை போடும் பக்குவம் எனக் கிருக்கவில்லை. காசு கிடைத்த சந்தோஷம்தான் அன்று என்னில் மேலோங்கியிருந்தது.
ஒரு அதிகாலை நேரம் கூக் குரலும், பலவிதமான கோஷங்களும் ஆக்ரோஷமாகக் காற்றில் கலந்து ஊரைப் பரபரப்புக்குள்ளாக்கியது. தலைநிறைய பூ விரித்தாற்போலிருந்த அந்தப் பெரிய ஈரப்பலா மரத்தின் ஆயிரக்கணக்கான காய்கள் பறிக்கப் பட்டு ஒவ்வொருவரும் குசுமாவதி அக்காவின் வீட்டைநோக்கி வீசி எறிந் தனர். ‘ஸலாங், படிர், ஸ்லீங் கண் னாடிகள் உடைபட்டு தெறித்து விழுந் தன சிதறல்கள்.
குசுமாவதி அக்காவின் குடும்பத் தினரின் எதுவிதமான எதிர்ப்புமற்று,

Page 11
ஒரு பக்கத்தாளமாக அந்தச் சண்டை நீடித்துக்கொண்டிருந்தது. கம்பீரமாகக் கத்தி, நான்கு புறமும் காவல் செய் திடும் அல்சேஷனும் காணாமல் போயிருந்தது. உயிர் வாழ்தலுக்கான ஆசை அந்த ஜீவனுக்குள்ளும் பாது காப்பு வலயம் குறித்துப் பதுங்கச்
செய்திற்று.
என்ன செய்வதென்று என் வீட் டார் பரிதவித்தனர். என் மனது
வேடிக்கை பார்த்தாலும், குசுமாவதி அக்கா வீட்டினருக்கு எதுவும் நடந் திடக்கூடாதென்று மனம் ஓயாமல் பிரார்த்தித்துக்கொண்டிருந்தது.
வீராவேசம்கொண்டு படை நகர்த் திய குழுவினர், கோச்சிப்பாதையைத் தாண்டி குசுமாவதி அக்காவின் எல்லைக்கருகில் சென்றிடத் துணி வின்றி, பாதுகாப்பு வலயமிட்டவாறு தாக்கிக்கொண்டிருந்தனர்.
குசுமாவதி அக்காவின் குடும்பத் தினர் என்ன ஆனார்கள்! எங்கே இருக்கிறார்கள்! எல்லோரிடையேயும் புதிர் நீடித்தது.
சிங்கப்பூர் ஆச்சி குடும்பத்தினர் - அபயமளித்துப் பாதுகாத்ததாக, மறு நாள் வீடுவந்த குசுமாவதி அக்கா கூறினார்.
இந்தச் சண்டை எதற்காகத் தொடங்கப்பட்டதென்று இன்றுவரை எனக்குப் புலப்படாத மர்மமாகவே நீடிக்கிறது. குசுமாவதி அக்காவைப் பற்றிப் பலபேர் பலமாதிரிக் கதைப் பார்கள். இவ்வாறு கதைப்பவர்கள் எல்லாம் அவவிடம் கடன்பெற்றவர் களாகவும், கடனை மீளளிக்க முடியா மல் சொத்தை இழந்தவர்களாகவுமே இருந்தனர்.
எங்கள் பிரதேசம் பாதுகாப்பு வலயமாகும். இரவில் திருடர்களோ. புதிய ஆட்களோ. அந்தச் சின்னப் பாதையில் குசுமாவதி அக்காவின்
அனுமதியின்றி ஊடுருவ முடியாது. இரவு எத்தனை மணி ஆகிலும் அப் பாதையில் பேச்சுக்குரலோ, காலடி யோசையோ கேட்டாலும் "கவுத?” என்ற குரலுடன் வெளி லைற்று களைப் போட்டுவிடுவாள். அந்த எச் சரிக்கை உணர்வு சுற்றத்தாரின் வீடு களைத் திருடர்களிலிருந்து பாதுகாப் பளித்தது. அவவின் உரத்த குரல் எங்கும் பரவுவதால், பக்கத்து வீடு களில் சண்டைகள் இடம்பெறாது. அவ யாரையும் தொந்தரவு செய்வதில்லை. கடன் எடுத்தவர்கள் ஏமாற்ற நினைக் கும்போதும், தில்லுமுல்லுகள் செய் யும் வேளைகளில் மனிதம் தொலைத்து. ஓர் எஜமானனின் கொள்கையுடன் பணத்தைக் கறந்திட வேண்டுமென்ற வெறி அவவை சில வேளைகளில் இராட்சசியாக்கி உள்ளது. அதுவும் அவவின் தொழில் நிமித்தமாகவே.
தொடர்ந்து வந்த காலங்களில் மன அழுத்தத்திற்கும் சோர்வுக்கும் குடும்பத்தால் ஆக்கப்பட்டாள். அவ வின் அனுமதியிரா பிள்ளைகளின் திருமண முடிவும், சில பிள்ளைகளின் திருமண முறிவும் அவவையும் அவ
வீட்டில் படுக்கையும் - வெளி யில் மருந்துமாக ஒடிந்தாள். ஒருநாள் புற்றுநோய் என்று கூறி மகரகம வைத்தியசாலையில் "அட்மிற் செய் தார்கள்.
நானும் ஒருநாள் பனிகொட்டும் விடியற்காலை நாலரைக் கோச்சியில் கொழும்புக்குப் பயணித்து, குசுமாவதி அக்காவைப் பார்த்துவிட்டு வந்தேன். வழமையான நாளில் ஒன்று குசுமாவதி அக்காவின் மரணச்செய்தி எம்முரை எட்டியது.
구 முன்புபோல், எமது பகுதியில்

அமைதியில்லை. திருடர்களின் தொல் லையும் பக்கத்து வீட்டினரின் ஓயாத சண்டைகளும் வாழ்வின் நகர்வுகளைச் சோதனைக்குள்ளாக்கியது.
குசுமாவதி அக்காவின் வீட்டை அவளின் பிள்ளைகள் விற்றுவிட்டுக் குடிபெயர்ந்தார்கள். நாங்களும் ஒருநாள் அவ்விடத்தைவிட்டு இடம் பெயர்ந்தோம்.
அவவின் கடைசி மரண ஊர்வலத்தில் நானும் பூக்கொத்து தூக்கி அணிவகுத்துச் சென்றேன். அந்தக் கடைசி நிகழ்வின் கனத்த பாதடிகளின் அசைவுகள், நிரம்பலா
கும் போதெல்லாம் விழிகள் ஈரமா வதையும் மனசின் அதிர்வுகளைப் புறக் கணிக்கத் தெரியாதவனாக உடைந்து போகிறேன்.
இன்றும் அவவின் வீட்டைத் தாண்டி என் பாதடிகள் நகரும் போதெல்லாம் அவவின் அன்பும், நேசிப்பும் உதவிடும் மனமும் மனதைக் கசிய வைக்கிறது.
ஊரார்களின் பார்வையில் குசுமாவதி அக்கா எப்படியாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்.
"அவள் மனிதத்தை நேசிக்கக் கூடியவள் .
(அன்பார்ந்த வாசகர்களே!
கொழும்பு;-
யாழ்ப்பாணம்:-
திருகோணமலை:-
மட்டக்களப்பு:-
கிளிநொச்சி:
வவுனியா:-
கண்டி
கொட்டக்கலை:-
புத்தளம்:-
பண்டாரவளை:-
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம். "ஞானம்" சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை . 340, செட்டியார் தெரு, கொழும்பு 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை.
பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி.
திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. திரு. வீ.என்.சந்திரகாந்தி - 572/A, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை
எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு.
கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி.
ந.பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி.
சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை.
சாஹித்திய புத்தகநிலையம், இல 4, குருனாகல் வீதி, புத்தளம்.
மெடிக்கல் கெல்த் கிளினிக், இல 1, டயரபா சந்தி, மிரஹாவத்தை(Po)
என்றும் என் மனம் சொல்கிறது

Page 12
நெற்றிக்கண்
நால் விமர்சனம்
: இஸ்லாமிய இலக்கியச்
சிந்தனைகள் எழுதியவர் : எஸ்.எம்.ஹனிபா
இலங்கையின் நூல் வெளி யீட்டுத் துறையில் சாதனையாளருள் ஒருவராக விளங்குபவர், எஸ்.எம். ஹனிபா. பிறரது நூல்களும் தமது நூல்களுமாக நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைத் தமது கல்ஹின்னைத் தமிழ்மன்றத்தின் ஊடாக வெளியிட்டு வந்துள்ளார். ஹனிபாவின் கட்டுரை களும் பிறரது கட்டுரைகளும் அடங் கிய இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை கள் (2002)என்ற நூல், தமிழ் மன்றத் தின் நூற்றியிரண்டாவது வெளியீடாக அமைந்துள்ளது.
இந்நூலில் ஒன்பது கட்டுரை கள் அடங்கியுள்ளன. முஸ்லிம் தமிழ் இலக்கியம் இன்று என்ன நிலையில் இருக்கிறது? இஸ்லாமியத் தமிழ் இலக் கிய மறுமலர்ச்சியில் இலங்கையின் பங்களிப்பு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையில் பாரிய சாதனை, காவத்தை ஆலிம் புலவர், கல்ஹின் னையில் இலக்கிய ஆர்வம் ஆகிய கட்டுரைகளை எஸ்.எம். ஹனிபா எழுதி யுள்ளார். மறுமலர்ச்சி முன்னோடிகள் என்னும் கட்டுரையை எஸ்.எம். இத்தி யாஸ"ம், நாஹூர் நாவலனார் என்ற கட்டுரையை வா.கு.மு. ஆரிபு நாவல ரும், முஹம்மது ஹாசிம் சித்தி லெவ்வை அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் ஆகிய கட்டுரைகளை அப்துற் றஹீமும் ஆக்கியுள்ளனர். இந்நூல் அடிப்படையில் இஸ்லாமியத்
நூல்
22
தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றியும், அதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு களை நல்கியவர்கள் பற்றியும் எடுத் துக் கூறுவதாக அமைந்துள்ளது. சில கட்டுரைகளில் ஒரே விடயங்கள் திரும்பத் திரும்ப இடம் பெற்றுள் ளமை, தொகுப்பு நோக்கில் தவிர்க்க முடியாததே. இந்நூலின் குறிப்பிடத் தக்க விடயங்களுள் ஒன்று, பேரா சிரியர் ம.மு. உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் ஈடுபட்டதற் கான பின்னணியை விளக்கியமை யாகும். உவைஸ் அத்துறையில் ஈடுபடுவதற்குக் காரணம், அவர் அக் காலத்தில் வழக்கில் இருந்த முறைப் படி பல்கலைக் கழக அனுமதிக்கான நேர்முகப் பரீட்சையின்போது சுவாமி விபுலானந்தர் அவரைப்பார்த்துக் கேட்ட கேள்விகள் ஆகும். இஸ்லா மிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியம் ஒன்றின் பெயரைக் கேட்ட போது, அப்போது உவைஸால் அதற்குப் பதில் கூற முடியவில்லை. “சீறாப் புராணத்தைப் படித்திருக் கிறீரா?” என்ற அடுத்த கேள்வியை விபுலானந்தர் கேட்டபோது, "ஆம்" என அவர் பதிலளித்தார். உவைஸ் பிற்காலத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையில் அயராது கருத் தூன்றி உழைப்பதற்குச் சுவாமி விபுலானந்தரே மறைமுகக் காரணத் தர் ஆவர். இந்த முக்கியமான விடயத்தை ஹனிபா இந்நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் பேராசிரியர் g6)6OstLDIT s 60616) (1997) 6T6ip

பெரும் நூலில் அதன் ஆசிரியர் இம் முக்கியமான விடயத்தை மறைத்து விட்டார் என்பது இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று. இவ்வகையில் உண்மையை மறைக் காத ஹனிபா பாராட்டத் தக்கவர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சி தொடர்பான தகவல்கள் பலவற்றைத் தெரிந்து கொள்வதற்கும் அத்துறையில் ஈடுபாடு கொள்வதற்கும் அத்துறையில் மேன்மேலும் முயற்சி கள் செய்யப்படுவதற்கும், ஆய்வுகள் மேலோங்குவதற்கும் இச்சிறிய நூல் தன்னளவில் பணிசெய்கிறது.
நூல் : சிறுகதை எழுதியவர் : சுதந்திரராஜா.
இலங்கையின் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்குபவர், சி.சுதந்திரராஜா. புனை கதைத் துறையில் அவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள் ளார். அவரது சிறுகதை (2001) என்ற சிறுகதைத்தொகுதி நாற்பத்தாறு சிறுகதைகளைக் கொண்டுள்ளது. எழுத்தாளர் ஒருவர் தமது நாற்பத்தாறு சிறுகதைகளையும் ஒரே தொகுதிக் குள் அடக்கிவிட வேண்டுமா என்ற கேள்வி, இத்தொகுதியைப் புரட்டும் போது எழாமல் இல்லை.
சுதந்திரராஜாவின் இச்சிறு கதைத் தொகுதியின் முக்கிய அம்சம், அவரது பன்முக வீச்சுக்களை இது வெளிப்படுத்துவதாகும். அனாயாசமாக அனுபவம் கலந்து எழுதும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளராக இத்தொகுதி மூலம் தம்மை அவர் இனங்காட்டிக் கொள்கிறார். உரையாடல்களை அவ் வப் பிரதேசங்களுக்கும் ஏற்ப இயல் பாகப் பயன்படுத்துகின்றார்.
இத்தொகுதியிலுள்ள அவரது கணிசமான சிறுகதைகள், சிறுகதைத்
23
துறையில் புதிய பரிமாணத்துக்கு வித்திடுகின்றன. ஆயினும் சில படைப்புகள் அவசர கோலத்தில் தோற்றம் காட்டி மின்னிமறைந்து விடுபவையாக விளங்குகின்றன. சில சிறுகதைகளில் ஆசிரியரின் மார்க்சிய சிந்தனைகள் வலிந்து புகுத்தப்பட்டிருப் பதைக் காணமுடிகிறது. உதாரண மாக, “மனங்கனியின் மாறுகோலம் என்ற சிறுகதையில் ஆசிரியரின் கருத்துக்கள் கட்டுரைப்பாங்கில் பின் வருமாறு அமைந்துள்ளன "அறவியல் - சமயம் - அரசு இயல்இவை சம்பந்தப்பட்ட எல்லாப் பிர கடன வாக்குறுதிகளுக்கும் பின்னால் ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன் இருக்கும். இதைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொள்ளுகிற வரையில் மக்கள் மோசடிக்கும் சுய மோசடிக்கும் எப்போதுமே பலியானார்கள். இனியும் பலியாவார்கள் என்பதே அந்த உண்மை." கதையோடு கதையாக ஆசிரியரின் கருத்துக்கள் கலந்து கொள்வதே இலக்கியப் படைப்புக்கு உகந்தது. இல்லையேல் படைப்பாளி கள் என்ற நிலையிலிருந்து உபதேசி கள் என்ற நிலைக்கு எழுத்தாளர்கள் சென்றுவிடக்கூடும்.
அச்சமைப்பில் அக்கறை தேவை என்பதை இத்தொகுதி இனங் காட்ட முற்படுகின்றது. ஆங் காங்கு எழுத்துப் பிழைகள், அச்சுப் பிழைகள் தம்மை இனங்காட்டிக் கொள்ள மறக்க வேண்டாம் என வாசகரை வற்புறுத் தப்பார்க்கின்றன.
ஈழத்துச் சிறுகதைத்துறையில் சி.சுதந்திரராஜாவுக்கு ஓர் இடம் உண்டு என்பதை அவரது சிறுகதை கள் உணர்த்துகின்றன. அவசர கோலப் படைப்புகளைத் தவிர்த்தால், அவர் மேலும் உயர்வார் என்பதிற் சந்தேகமில்லை.

Page 13
வைர மனிதர்கள்
முருங்கை மர வாதுகள் வெட்டப்படும்தான். தேயிலை வாதுகள் வெட்டப்படும்தான். என்றாலும் கிளைகள் வளர்வது இல்லையா தேயிலைத்துளிர் துளிர்ப்பது இல்லையா
அழுத்தம்
பச்சை தேயிலைத் தளிர் வைசுந்தரேசன் மாள்வது இல்லையே. ஆங்கிலத்தறை,
டெவன். பெரகல்ல. பலாங்கொட யாழ்பல்கலைக்கழகம் என இப்படி எத்தனை மண்சரிவுகள்.
மலைகள் கவிழ்ந்ததனால் என் சம்மதம் இன்றியே
மலைமனிதர் மனம் சோர்ந்தனரா? என் தொடையில் துளையிட்டாய் இல்லையே தேவையைத் தணித்துவிட்டு மீளவும் மீளவும் மலைமுகடுகளில் சடுதியில் தலைமறைவானாய்.
எம்மவர் ஏறவில்லையா சரிவுகளில் பள்ளங்களில் புதிய தேயிலைக் கன்றுகள் நட வில்லையா
காயவடு தந்த அழற்சியில் கனன்று எழுந்தேன் உன் மறைவிடங்களை ஒவ்வொன்றாய்ச் சோதித்தேன்.
ஐம்பத்தாறு ஐம்பத்தெட்டு 0 哆 « 8
w us கிச் சுருங்கி ஒளி கிடந்தாய் 6trupuéGS 66 6∂Tለ).... குறு @ g நது நத
ழுபததேழு ததுமூனறு குற்றி இழுத்தேன்
தப்பி நகர முயன்றாய்
தடுத்து மிதித்தேன்.
இந்தக்கதைகளுக்கு என்று உருக்கெட்டுச் சிதைந்தது
முற்றுப்புள்ளி இடப்படும்? O இறப்பர், கோப்பி, சிங்கோனா உன் சிற்றுடல் துணுக்கு தேயிலை போல் இரத்தக் கறையில்
நம்பிக்கை ஒலி அலைகள். தெறித்து விழுந்தது சிறு கீறல்.
நாடிநரம்புகளில் சில நாட்கள் முன்னர்தான் புடம் போட்டதால் நைந்துபோன இருதய நோயாளிக்கு வைர மனிதனாய் வாழ்கிறோம். தானம் செய்தேன்
சில பைந்து இரத்தம் உடல்பசி தீர்க்க ஒரு துளி உறிஞ்சிய குற்றத்திற்காய் உன் உயிரையே எடுத்தேன். நீ உறிஞ்சிய குருதி உனக்கும் சுவறுவதில்லை உயிர்க் கீறலாய் இப்போதும் என் கண்முன்.
24
மொழிவரதன்
 
 
 

நேர்காணல் சிற்பி
சந்திப்பு: திஞானசேகரன்
* 50 வருடங்களுக்கு மேலாக ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, சிறுகதை, நாவல், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்த மூத்த தலைமுறைப் படைப்பாளி.
* 'கலைச்செல்வி சஞ்சிகை மூலம் ஈழத்து இதழியல் துறையில் அளப்பரிய பங்காற்றியவர்.
டி "ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்ட கலைநயம் மிக்க ஆக்கங்களால் ஈழத்துத் தமிழிலக்கியத் துறையை செழுமைப்படுத்திவரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ.யோகநாதன், யாழ் நங்கை, ச.வே.பஞ்சாட்சரம், பெனடிக்ற் பாலன், சாந்தன், வே.குமாரசாமி, மயிலன், பொ.சண்முகநாதன், மு.பொன்னம்பலம், தி.ஞானசேகரன், மு.கனகராஜன், பா.சத்தியசீலன், தெணியான், மட்டுவிலான், கவிதா, பாமா இராஜகோபால், கான மயில்நாதன், து.வைத்திலிங்கம், வி.க.ரட்னசபாபதி, இளையவன், செ.கதிர்காமநாதன், முனியப்ப தாசன், க.பரராஜசிங்கம், மணியம், முகிலன், பெரி.சண்முகநாதன் என்பவர்கள் கலைச்செல்விப் பணிணையில் வளர்ந்தவர்களே” - என்ற பெருமைக்குரியவர்.
* ஈழத்தின் முதற்சிறுகதைத்தொகுப்பான 'ஈழத்துச் சிறுகதைகள் தொகுதியை வெளியிட்டவர்.
தி.ஞா. : தங்களுக்குள் ஒர் எழுத்தாளன் உருவாகுவதற்குப் பின்னணியாக இருந்த இளமைப்பருவத்தைப் பற்றிக் கூறுங்கள்.
சிற்பி : எழுத்தாளராக வர விரும்புகின்றவர்கள் முதலில் நல்ல வாசகர்களாக இருக்கவேண்டும்; நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும்; சிறுகதைகள் நாவல்களுடன் பழைய தமிழ் இலக்கியங்களையும் வாசிக்க வெண்டும் . என்றெல்லாம் அனுபவம் மிக்க எழுத்தாளர்கள் பலர் ஆலோசனை கூறிவருவதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் இப்படியான ஆலோசனைகள் எதுவும் என்காதிற்கெட்டாத ஒரு பருவத்தில் நான் சிறுவனாக இருந்தபோதே நிறைய வாசிக்கத் தொடங்கிவிட்டேன். பயிற்றப்பட்ட தமிழாசிரியராக எங்களுரிலேயே பணிபுரிந்த என் தந்தையார், பழந்தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இவ்வாண்டு தத்துவ கலாநிதி என்று கெளரவப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட வைத்தீஸ்வரக் குருக்கள் என் தாய்மாமன்; தமிழ்ப் பண்டிதர்; பயிற்றப்பட்ட தமிழாசிரியர்; வித்துவ
25

Page 14
சிரோமணி கணேசையரின் அபிமான மாணவர்; நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டிலிருந்தே தன் கல்வியைக் கற்றவர். இவர்கள் இருவரும் எழுதிய கட்டுரைக் கொப்பிகளும், உபயோகித்த தமிழ்ப் புத்தகங்களும் என்விட்டில் இருந்தன. பள்ளிக்கூடம் போய்வருவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லாத நான் விடுப்பார்வம் காரணமாக இவர்களின் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். ஆயிரம் பக்கங்கள்வரை இருந்த இராமாயண வசனத்தை 10, 12 வயதிலேயே வாசித்துவிட்டேன். தொடர்ந்து, பாரதம், மயில் இராவணன் கதை, புராணக்கதைகள் போன்றவற்றையும் வாசித்தேன். சுன்னாகத்திலிருந்து வெளியான "ஈழகேசரி யாழ்ப்பாணம் இந்து சாதனம் சென்னை 'கலைமகள் ஆகியவற்றை என் தந்தையார் தவறாது வாங்கிவருவார். இவற்றையும் அவ்வப்போது கிடைக்கின்ற ஆனந்த விகடன், கல்கி முதலியவற்றையும் வாசிப்பது எனக்கு மிகப் பிடித்த விஷயமாக இருந்தது. கதைகள், தொடர்கதைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. இவற்றை வாசிக்க வாசிக்க நானும் இப்படி எழுதவேண்டும், என்கதைகளும் அழகான படங்களுடன் அச்சில் வெளிவர வேண்டும் என ஆசைப்படத் தொடங்கினேன். நான் எழுத்தாள னாவதற்கு இதுதான் வழிவகுத்தது எனச் சொல்லலாம். அதாவது, எழுத்தாள னாக வரவேண்டும் என்பதற்காக நான் வாசிக்கவில்லை; ஆனால் வாசித்த படியால் நான் எழுத்தாளனானேன்.
தி.ஞா. உங்கள் பாடசாலை அனுபவங்களைப்பற்றி.? சிற்பி ; கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் நான் மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் திரு சி. பொன்னம்பலம் என் வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டினார். மஹாகவி பாரதியாரின் பாடல்களை என்போன்ற சிறுவர் களுக்கு அவர் அறிமுகம் செய்துவைத்தார். மாணவர் மன்றம் இரண்டு வாரங் கட்கு ஒருமுறை வெளியிட்ட ‘மாணவர் போதினி என்ற கையெழுத்துச் சஞ்சிகை யில் என் கட்டுரைகளை இடம்பெறச் செய்தார். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் எனக்கு ஊக்கமளித்தவர் வித்துவான் சி. ஆறுமுகம். வகுப்பில் நான் எழுதிய கட்டுரைகளை ஏனைய மாணவர்களுக்கு வாசித்துக் காட்டி, "இப்படித்தான் நீங்களும் எழுதவேண்டும்” என்று அவர் அடிக்கடி சொன்னது, என் எழுத்தாற்றல் வளர உதவியது என நினைக்கின்றேன். "ஈழகேசரி பாலர் பகுதியில் என்கவிதை யொன்று வெளிவந்தது. "பழம் பண்பைப் பற்றிப் பகர்வதில் பயனில்லை என்ற நீண்ட தலைப்பில் நான் எழுதிய சிறிய கட்டுரை ஒன்றைச் சுதந்திரன்' வெளியிட்டது. "ஸ்கந்தா' என்ற கல்லூரிச் சஞ்சிகையில் 'இளைஞர் கடனி என்ற கட்டுரை வெளியானது.
தி.ஞா. : மாணவனாக இருந்தபோதே எழுத்தாளனாகிவிட்மர்கள் இல்லையா? சிற்பி : இல்லை. நான் எழுதியவை அச்சில் வெளிவந்துவிட்டன என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது உண்மைதான். என்றாலும் நானும் ஓர் எழுத்தாளன் ஆகிவிட்டேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை.
தி.ஞா. : ஏன் அதிகம் எழுதவில்லை என்பதனாலா? சிற்பி : அந்தக் காலத்தில், எழுத்தாளராகக் கருதப்பட்டவர்கள் எல்லோருமே சிறுகதைகளையே அதிக அளவில் எழுதினார்கள். அவர்களைப்போல் கற்பனை
26

வளம் நிறைந்த கதைகளை எழுதி வெளியிட்டால்தான் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் கருதியதால் - ஒரு சிறுகதையைக்கூட நான் அப்போது எழுதியிராதபடியால் நானும் ஓர் எழுத்தாளன்தான் என நான் நினைக்கவேயில்லை.
தி.ஞா. : அப்படியானால், எப்போது சிறுகதை எழுத ஆரம்பித்தீர்கள்?
சிற்பி : நான் எஸ். எஸ். சி. சித்தியடைந்த பின்னர் கொழும்பிலுள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில்(Supreme CourtRegistry) எழுது வினைஞ ராகக் கடமையாற்றியபோது "மலர்ந்த காதல்’ என்ற சிறுகதையை எழுதி ‘சுதந்திரன் பத்திரிகைக்கு அனுப்பினேன். எவ்வித திருத்தங்களும் மாற்றங்களும் இன்றித் திரு எஸ். டி . சிவநாயகம் அந்தக் கதையை வெளியிட்டார். “மாணிக்கம் என்ற சிறுகதையை இலங்கை வானொலிக்கு அனுப்பினேன். ஒலிபரப்புக்காக அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வானொலி கலையகத்துக்குச் சென்று நானே கதையை வாசித்தேன். சில மாதங்களின் பின்னர் இந்தக் கதை "ஏழையின் இதயம்' என்ற தலைப்பில் ‘வீரகேசரியில் வெளியானது. என்னுடைய இரண்டு சிறுகதைகள் தினகரன் ஞாயிறு பதிப்பிலும் வெளிவந்தன. - . .
தி.ஞா: சென்னையில் நீங்கள் கல்வி கற்றதாகவும், அங்கே இழந் தமிழன்' “என்ற சஞ்சிகை ஒன்றினை வெளியிட்டதாகவும் அறிகின்றேன். விபரங்களைச் சொல்வீர்களா? சிற்பி : நான் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது, இலண்டன் பல்கலைக்கழக 'இன்ரர் ஆட்ஸ்" பரீட்சையிற் சித்தியடைந்தேன். அதனால் எழுது வினைஞர் வேலையை விட்டு ஆசிரியரானேன். ஒரு பட்டதாரியாக இருந்தாற்றான், நல்ல ஆசிரியராக இருக்க முடியும் என்பதை உணர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியிற் சேர்ந்தேன். கல்லூரியின் விடுதிகளில் ஒன்றான செலையூர் மண்டபத்தில் நான் தங்கினேன். ஏற்கனவே தமிழார்வம் மிக்க மாணவர்களால், அந்த விடுதியில், தமிழ் மன்றம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. உறுப்பினர் களின் எழுத்து, பேச்சு ஆற்றல்களை வளர்க்கும் விதத்தில் மன்றத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. 'இளந் தமிழன் என்ற கையெழுத்துச் சஞ்சிகை யையும் மன்றம் வெளியிட்டது. நான் அங்கே சென்றபோது அதன் ஆசிரியராக இருந்தவர் அழ. சிதம்பரம் என்பவர். அவர் தங்கியிருந்த அறைக்கு அண்மையி லேயே என் அறை இருந்தது. உறுப்பினர்களிடமிருந்து ஆக்கங்களைப் பெறுவ திலும், சஞ்சிகைக்கு ஏற்ற விதத்தில் அவற்றை மீண்டும் எழுதுவதிலும் நான் உற்சாகமுடன் ஈடுபட்டேன். அடுத்த ஆண்டில் நானே அதன் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டேன். 'இளந் தமிழன் அச்சில் வெளியாக வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. வரலாற்றுப் புகழ்மிக்க சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் விடுதி ஒன்றிலிருந்து அச்சுவாகனம் ஏறிய முதலாவது தமிழ்ச் சஞ்சிகை என்ற புகழை 'இளந் தமிழன் பெற்றுக்கொண்டது. வாழ்த்துச் செய்தி பெறுவதற்காக டாக்டர் மு. வரதராசன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று ஒருமணிநேரம்வரை அவருடன் உரையாடியது இன்றும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
ஆற்றல் மிகுந்த, அதே வேளையிற் பலவித சர்ச்சைகளுக்கு
27

Page 15
உள்ளாகியும் வருகின்ற எஸ். பொ. அவர்கள் இந்தத் தமிழ் மன்றத்தின் கவர்ச்சிகரமான - புரட்சிகரமான பேச்சாளர் உறுப்பினராக இருந்தார் என்பதும் எனக்குப் பின்னர் கவிஞர் வி. கந்தவனம் 'இளந் தமிழன்’ ஆசிரியராகப் பணியாற்றினார் என்பதும் குறிக்கத்தக்க தகவல்கள்.
தி.ஞா : "சிற்பி" என்ற புனைபெயரை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு விசேட காரணங்கள் உண்டா? சிற்பி : அந்தக் காலத்தில, பெரும்பாலான எழுத்தாளர்கள் புனை பெயர்களி லேயே எழுதினார்கள். அதனால் எழுத்தாளன் என்றால் கட்டாயம் ஒரு புனை பெயர் இருக்கத்தான் வேண்டும் என்று நான் நினைத்தேன். அரசியலிலும் எழுத்துலகிலும் பிரபலமான பலர் மூன்றெழுத்துப் பெயர்களை உடையவர்களே எனக்குறிப்பிட்டு, காந்தி, ராஜாஜி, நேருஜி, கல்கி, அண்ணா, தேவன் போன் றவர்களை உதாரணமாகக் காட்டி யாரோ எழுதிய கட்டுரை ஒன்றை நான் வாசிக்க நேர்ந்தது. ஆகவே, நானும் மூன்றெழுத்துப் புனைபெயரொன்றில் எழுதவே விரும்பினேன். ‘சுதந்திரன்’ இதழில் வெளியான என் முதற் கட்டுரை “கீதன் என்ற பெயரில் வெளிவந்தது. 'தினகரன் கதைகளுக்கு நான் "சேயோன்' என்ற புனைபெயரை உபயோகித்தேன். எனினும் இந்தப் புனை பெயர்கள் எனக்குத் திருப்தி தரவில்லை. கல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பியைப் போல் சொல்லிலே கலைவண்ணம் காணும் விருப்பத்தினால், “சிற்பி என்ற புனைபெயரைத் தேர்ந்தெடுத்தேன். கற்சிலைகள் அழியாமல் இருப்பதைப்போல் என் எழுத்துக்களும் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற ஆசையும் ஒரு காரணம். (அவை நீடித்து நிலைக்குமா என்பது வேறு விஷயம்)
தி.ஞா : முதன் முதலில், "ஈழத்துச் சிறுகதைகள் என்ற நூலை வெளியிட்ட பெருமை உங்களுக்குண்டு. அதைப்பற்றி விபரமாகச் சொல்வீர்களா? சிற்பி : 1956ஆம் ஆண்டளவில் டெல்கியிலுள்ள இந்திய சாகித்திய அக்கடமி, ‘சிறுகதை மஞ்சரி என்ற தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளி யிட்டது. தமிழ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை, "கல்கி ஆசிரியராக இருந்த மீ.ப. சோமு, (சோமு) தொகுத்திருந்தார். ஆனந்த விகடன், கலைமகள், கிராம ஊழியன் போன்ற தமிழக இதழ்களில் கதைகள் எழுதிப் பிரபலமான இலங்கையர்கோன், சி.வைத்திலிங்கம், சம்பந்தன் போன்ற வர்கள் இலங்கையில் இருந்தனர். சென்னை -அல்லயன்ஸ் கம்பனி வெளியிட்ட "கதைக்கோவையில் இவர்களுடைய சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சிறுகதை மஞ்சரியில் இலங்கையைச் சேர்ந்த எந்த ஒருவரின் கதையுமே இடம்பெறவில்லை. இது ஒரு பெரிய குறையாக - புறக்கணிப்பாக எனக்குப் பட்டது. இங்கிருந்தே தரமான ஒரு சிறுகதைத் தெகுதியை வெளியிடுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் எனக்குத் தோன்றியது. சிறுவயதில் எனக்கு ஊக்கமளித்த ஆசிரியர் சி. பொன்னம்பலம், பிரபல எழுத்தாளர் அ. செ. முருகானந்தன் ஆகியோருடன் நான் கலந்துரையாடியபோது, அவர்கள் கூறிய கருத்துக்கள் எனக்கு உற்சாகமூட்டின. சென்னையில் நண்பர்கள் அழ.சிதம்பரம் , அன்புப் பழம் நீ ஆகியோருக்கு எழுதினேன். சென்னை பாரி நிலையத்தின் உதவியைப் பெற்றுத் தருவதாகச் சொன்னார்கள். இலங்கையர் கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன், கனக. செந்திநாதன், இராஜ அரிய 28

ரத்தினம், தாழையடி சபாரத்தினம், வரதர், அ.இராசரத்தினம், சு. இராஜநாயகன், சகிதேவி தியாகராஜா, கே. டானியல், செ. கணேசலிங்கன் ஆகிய பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள், அவர்களைப்பற்றிய குறிப்புகளுடன் பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை அவர்களின் அணிந்துரையுடனும் "ஈழத்துச் சிறுகதைகள் என்ற பெயரில் வெளிவந்தன. ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களின் ஆக்கத் திறனை முதல் முதலில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்டிய தொகுதி இதுதான்.
தி.ஞா : இணுவை மூர்த்தி அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த "உதயம்" பத்திரிகை நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் நீங்கள் முதற்பரிசு பெற்றதைப் பற்றி.? சிற்பி : அன்றுஞ்சரி, இன்றுஞ்சரி ஒரு சிறுகதையை எழுதிமுடிக்க எனக்குப் பலநாள் ஆகும் சில எழுத்தாளர்களைப்போல் சில மணித்தியாலங்களிலோ இரண்டொரு நாளிலோ எழுதிமுடிக்க என்னால் முடியாது. ஆனால் மறுமணம் என்ற அந்தச் சிறுகதையை ஒரே மூச்சிலேயே எழுதிமுடித்துவிட்டேன். முடிவு திகதிக்கு இரண்டொரு நாளின் முன்னர்தான் போட்டியைப்பற்றி அறிந்தேன். அதிக அளவில் அறியப்படாத, ஆரம்ப எழுத்தாளன் என்ற வகையில் - 1955 ஆம் ஆண்டில். முதற்பரிசுக்குரியதாக என்கதை தேர்ந்தெடுக்கப்பட்டமை எனக்குப் பெரும் உற்சாகத்தை ஊட்டியது. ‘பத்திரிகை ரகக் கதை எனச் சில விமர்சகர்கள் அதைக்கருதினாலும், எனது இலக்கியக் கொள்கைக்கு அமைய அது இருப்பதாகவே நான் கருதுகிறேன். தி.ஞா. : உங்கள் இலக்கியக் கொள்கையை விளக்குவீர்களா? சிற்பி : இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றிய பல்வேறு கருத்துக்கள், விளக்கங்கள் கூறப்படுகின்றன. இலக்கியம் என்பது ஒரு வரைவிலக்கணத் துக்குள் அடக்கப்பட முடியாதது என்ற கருத்தும் நிலவுகின்றது. இலக்கியம் மக்களுக்காக என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் எந்த மக்களுக்காக? அந்த மக்கள் சம்பந்தமான எந்தத் தேவையை நிறை வேற்று வதற்காக? - என்ற கேள்விகள் எழும்போது கருத்து வேறுபாடுகள் நிறைய இருப்பதை அவதானிக்கலாம்.
விடுப்பார்வம் காரணமாகவே நான் வாசிக்கத் தொடங்கினேன் என்பதை முன்னரே குறிப்பிட்டேன். ஆனால் காலப்போக்கில் புதிய எண்ணங்கள், புதிய கருத்துக்களை சில நூல்கள் என்னுள்ளே உருவாக்கத் தொடங்கின. எப்படி வாழவேண்டும் , எப்படி வாழக்கூடாது, நல்ல குணங்கள் எவை, தீயவை எவை - என்பவற்றைப்பற்றிய தெளிவான சிலகருத்துக்கள் என்னுள்ளே சிறிது சிறிதாக ஏற்படத் தொடங்கின. நான் அடைந்த பயனைப்போல் மற்றவர்களும் அடையவேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம். மனிதன் மனிதனாக வாழ, மகாத்மாவாக உயர, அமரனாக நிறைவுபெற - சொர்க்கம் என நினைப்பதை, இந்த வாழ்க்கையிலேயே சாத்தியமாக்க . அவனைத் தூண்டிச் செயற்படவைக்கும் ஆற்றலுடைய, உயர்ந்த சிந்தனையின் சிறந்த கலைநயம் மிக்க சொல்வடிவமே இலக்கியம் என்பது என் கருத்து. பாரதி வேண்டியதைப் போல, "தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவு பலகாட்டல், கண்ணிர்த்துளிவர உள்ளுருக்குதல்” போன்றவற்றை நினைவிலிருத்தி நல்ல இலக்கிய ஆக்கங் 29

Page 16
களை வாசகர்கட்கு வழங்கவேண்டும் என்பது என்விருப்பம்; கொள்கை.
தி.ஞா : உங்களுடைய எழுத்து முயற்சிகளுக்கு ஆதர்சமாக - வழிகாட்டிகளாக இருந்தவர்களைப்பற்றிக் கூறுங்கள். சிற்பி : சிறுகதைகள், நாவல்களைக் கண்டால் அவற்றை யார் எழுதினார்கள் என்பதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல், ஆவலுடன் வாசித்து வந்த என்னை, *அகிலன் எழுதிய கதைகள், சற்று அதிகமாகக் கவரத்தொடங்கின. அவருடைய தமிழ்நடை, கதை சொல்லும் முறை, அவருடைய கருத்துக்கள் எல்லாம் எனக்குப்பிடித்தன. அன்பு, அமைதி, இன்பம், தியாகம், நேர்மை, தெய்வபக்தி, தேசபக்தி, முதலியவை நிறைந்த ஒரு வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை அவருடைய கதைகள் என்னுள்ளே தோன்றச் செய்தன. அத்தகைய கதைகளையே எழுதவேண்டும் என்ற நாட்டம் என்னிடம் ஏற்பட்டது. 1952 ஆண்டளவில் 'கலைமகள்' இதழில் அவர் எழுதிய கதை ஒன்றைப் பாராட்டிக் கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜ. அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். பத்து நாள்களுள் நன்றி தெரிவித்து அகிலனே எனக்கு எழுதியிருந்தார். பின்னர், அடிக்கடி அவருடன் தொடர்பு கொண்டேன். அவருடைய கதைகளைப் போல, கடிதங்களும் பண்பு நிறைந்தவை; இனிமையானவை. நிலவும் நினைவும் என்ற என் சிறுகதைத்தொகுதிக்கு அவரே அணிந்துரை எழுதினார். நான் மாணவ னாக இருந்தபோது வாசித்த டாக்டர் மு.வ. அவர்களின் நூல்களும் என் இலக்கியப் பாதையின் வழிகாட்டிகளாக இருந்தன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தி.ஞா. உங்கள் படைப்புகளில் காதலும் மனித முரண்பாட்டு உணர்வு களும் தூக்கலாகத் தெரிகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் கூறுகின்றீர்கள். சிற்பி ; காதல் சம்பந்தமான கதைகளை எழுதுவதை ஒரு குற்றமாக நான் கருதுவதில்லை. எல்லோரிடமும் ஒரு பருவத்திலே தோன்றுகின்ற இயல்பான ஓர் உணர்ச்சி அது. கல்யாணமாகாத வாலிப வயதினரிடையே மட்டுந்தான் அது உண்டாகும் என்பதில்லை. கணவன்-மனைவியரிடையே ஏற்படுவதும், ஏற்பட வேண்டியதும் அந்தப் புனித உணர்ச்சிதான். வெறுக்கத்தக்க தீய வழி களில் செல்ல யாரையும் தூண்டாமல், அவர்களுடைய நல்வாழ்க்கைக்கு ஆதாரமாக, உறுதுணையாக இருக்கும் வகையிலே காதற்கதைகள் உருவாக்கப்படல் வேண்டும். காமத்துப் பால் என்ற பிரிவில் காதலின் தன்மை யையும், மேன்மையையும் செயற்பாடுகளையும் திருவள்ளுவர் விளக்கி யிருக்கிறார். ஒரு சமுதாயத்தின் நீடித்த ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் அடிப்படையாகவுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு பிறனில் விழையாமை, போன்றவற்றிற்கு இன்றியமையாதிருப்பது காதல் என்னும் புனித உணர்ச்சியே. பணத்தைக் குவிப்பதையே தம் ஒரே நோக்கமாகக் கொண்ட பல சினிமாத்தயாரிப்பாளர்களும், நாடகத் தயாரிப்பாளர்களும் இரசிகர் களின் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டும்வகையில், அருவருக்கத்தக்க, ஆபாசமான காட்சிகளைக் காதல் காட்சிகளாகக் காட்டி அதை வெறுக்கத்தக்க ஒன்றாகச் செய்துவருகின்றார்கள்.
வாசகர்களைக் கிளு கிளுப்பூட்டவேண்டும் என்ற எண்ணம் என்னிடம்
30

அறவே கிடையாது. ஆபாசமான சொற்பிரயோகங்கள், உரையாடல்கள் சம்பவங்களை என்கதைகளில் உங்களால் பார்க்கவே முடியாது. வாசகர்களைத் தவறாக வழிநடத்தக்கூடாது என்பதில் நான் கவனமாகவே இருக்கின்றேன். மனித முரண்பாட்டைப்பற்றிக் கேட்கின்றீர்கள் சுயநலம்மிக்க, தீய, கெட்ட பாத்திரங்கள் சிலவற்றையும் நான் படைத்துள்ளேன். ஆனால் என்கதைகளில் இவர்கள் என்றுமே வென்றதில்லை. மற்றவர்களின் கண்டனத்துக்கும் புறக்கணிப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாகியவர்கள் இவர்கள்! தி.ஞா. : ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பினைச்செய்த “கலைச்செல்வி சஞ்சிகையை ஆரம்பிப்பதற்கான எண்ணக்கரு எப்போது, எப்படி ஏற்பட்டது? சிற்பி : நான் சிறிதும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவே கலைச்செல்வியின் தோற்றத்திற்குக் காரணம். என்னுடைய சிறுகதைகள் சில பிரபல பத்திரிகைகளில் வெளியான ஆரம்பகாலத்திலேயே சஞ்சிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற விருப்பம் எனக்கு ஏற்பட்டது. பெரும்பாலான எழுத்தாளர்களிடம் அவர்களுடைய இலக் கியப்பணியின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இப்படியான விருப்பங்கள் எழுவது இயல்பானதுதான். பலரிடம் கருத்து அளவிலேயே நின்று, பின்னர் கருகி விடுவதைப் போல், என்விருப்பமும் கருகிவிட்டது. சென்னையில் 'இழந் தமிழன்’ இதழை வெளியிட்டது; திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத் தைப் பெற்றது; ஈழத்துச் சிறுகதைகள் தொகுதியை வெளியிட்டது; உதயம் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது - எல்லாம் உற்சாகத்தை ஊட்ட, சஞ்சிகை வெளியீட்டைப்பற்றி மீண்டும் சிந்திக்கத் தொடங்கினேன். ஆனால் அப்படியான முயற்சியில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் பற்றி, அனுபவம் மிக்க எழுத்தாளர்கள் பலர், விளக்கமாகச் சொன்னார்கள். என் உற்சாகம் கரைந்துவிட்டது. இந்த நிலையில் 'ஈழத்துச் சிறுகதைகள் இரண்டாம் தொகுதிக்கான ஆரம்ப வேலைகளில் நான் ஈடு பட்டிருந்தபோது எழுத்தாள நண்பர் உதயணன் திடீர் என்று என் வீட்டிற்கு வந்தார். அவருடன் அவருடைய நண்பர் தமிழ்ச்செல்வன் என்பவரும் வந்திருந் தார். தென் இலங்கை களுத்துறையிலுள்ள தமிழ்க்கழகம் என்ற அமைப்பின் சார்பில் ‘ஈழ தேவி என்ற தமிழ் இதழைத் தமிழ்ச் செல்வன் வெளியிட்டுக் கொண்டிருந்தார். உதயணன் அவருக்கு உதவி செய்து வந்தார். 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரம் காரணமாக, களுத்துறையிலிருந்து 'ஈழதேவியை வெளியிடுவது சாத்தியமற்றதாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து அதை வெளி யிடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்கள்; சகல உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார்கள். அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆசை என்னுள் மீண்டும் எழுந்துவிட்டது. பலதடவை அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். சஞ்சிகையின் பெயரைக் 'கலைச்செல்வி ஆக்கவேண்டும் என்ற என் கோரிக்கையையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். களுத்துறை தமிழ்க் கழகத்தின் ‘ஈழதேவி இதழுடன்
31

Page 17
இணைந்துள்ளது என்ற குறிப்புடன், 1958ஆம் ஆண்டு ஆடிமாதம் 'கலைச் செல்வி வெளியாகத் தொடங்கியது.
தி.ஞா. : கலைச்செல்வி மூலம் ஈழத்துச் சிறுகதை உலகிற்குப் புதிய பரம்பரை ஒன்றை உருவாக்கினிர்கள். இது சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சிகள் பற்றிக் கூறுவீர்களா? சிற்பி : புதிய எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கு எழுதும் கதைகள், அவர் களிடமே திரும்பி வந்துவிடும்; அல்லது கிணற்றுட் போட்ட கல்லைப்போல பத்திரிகை அலுவலகத்திலேயே கிடந்து தூங்கும். கலைச்செல்விக்கு எழுது பவர்களுக்கு இத்தகைய கசப்பான அனுபவம் ஏற்படக்கூடாது என நான் தீர்மானித்தேன். பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பத்திரிகை ஆசிரியராகவும் செயற்பட்டவன் நான். அரும்பு நிலையில் மாணவர் களிடம் இருக்கும் ஆற்றல்களை சரியாக இனங்கண்டு அவர்களுக்கும் சமுதாயத் துக்கும் பயன்தரும் வகையில் அவற்றை வளர்த்துப் பூரணமடையச் செய்வது ஆசிரியனின் கடமை. பத்திரிகை ஆசிரியன் என்ற நிலையிலும் நான் இதையே செய்தேன். அதிக அளவிலான மாணவர்களும் இளைஞர்களும் கலைச்செல்விக் குத் தம் ஆக்கங்களை அனுப்பினார்கள். ஒவ்வொன்றையும் பொறுமையுடன் வாசித்துப் பார்த்துத் தரமானவற்றை வெளியிட்டேன். நம்பிக்கை தருகின்ற, ஆனால் திருத்தப்படவேண்டியவற்றை, தகுந்த விளக்கக் குறிப்புக்களுடன் திருப்பி அனுப்பி, உரியவர்களைக் கொண்டே திருப்பி எழுதுவித்து வெளி யிட்டேன். ஆர்வம் மிகுந்தும் ஆற்றல் குறைந்தும் உள்ளவர்களையும் நான் புறக்கணிக்கவில்லை. தொடர்ந்து முயற்சிசெய்யும்படி எழுதினேன். தம் இடை விடா முயற்சியால் சிலர் எழுத்தாளரானார்கள். புதிய எழுத்தாளர்களை "இளம் எழுத்தாளர்” எனச்சொல்லாமல் “வளரும் எழுத்தாளர்” எனக்குறிப்பிட்டேன். “வளரும்” என்பது ஆக்கபூர்வமான உற்சாகமூட்டக் கூடிய அடைமொழி என்பது என்கருத்து. 1959ஆம் ஆண்டின் சித்திரை - வைகாசி இதழ் வளரும் எழுத்தாளர் மலராகவே வெளிவந்தது. பெரும்பாலான இதழ்களில் ஆகக் குறைந்தது ஒரு வளரும் எழுத்தாளரின் ஆக்கமாவது இடம்பெறுவதை உறுதிப்படுத்தினேன். கலைச்செல்வி நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டி, புதிய எழுத் தாளர் பலரை சிறுகதை உலகிற்குக் கொண்டுவந்தது. இத்தகைய பணிகளால் ஊக்கமும் உற்சாகமும் பெற்று வளர்ந்த எழுத்தாளர்களுட் பலர் இன்று மிகப் பிரபலமாகித் தம்பணியைத் தொடர்கின்றனர். தி.ஞா. : இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக்காலகட்டத் தில் "மறுமலர்ச்சி என்ற சஞ்சிகை ஏற்படுத்திய தாக்கத்தைப்போல் கலைச் செல்வியும் ஒரு தலைமுறையினரிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைப்பற்றி ஏதாவது கூறுவீர்களா? சிற்பி : நல்ல - தரமான - சிறந்த கதைகள் கவிதைகளையே கலைச் செல்வியில் வெளியிடவேண்டும் என்ற என் விருப்பத்தை எழுத்தாளர்களை நேரிற் சந்தித்தும், கடிதங்கள் மூலமாகவும் நான் தெரிவித்தேன். அவர்களின் ஒத்துழைப்பு, அதிக அளவில் எனக்குக் கிடைத்தது. தாம் எழுதுபவற்றுள் மிகச் சிறந்தவற்றை கலைச்செல்விக்கே அனுப்பவேண்டும் என்பது சிலருடைய இலட்சியமாகவே இருந்தது. கதை, கட்டுரை , கவிதைகளை வெளியிடும்போது 32

அவற்றை எழுதியவர்களைப்பற்றி நான் எழுதிய குறிப்புக்கள், பலருக்கு உற்சாகமளித்தன. வாசகர்கள் எழுதும் பாராட்டுக் கடிதங்களைச் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அனுப்பிவைத்ததும் பலரைக் கவர்ந்தது. ‘எழுத்துலகில் நான், ‘என்னை உருவாக்கியவர்கள்', ‘என்னைக் கவர்ந்த என்கவிதை, முற்போக்கு இலக்கியம் பற்றிய விவாத அரங்கு, அ.ஸ். அப்துஸ் ஸமதுவின் ஈழத்து முஸ்லிம் கவிஞர்கள் பற்றிய விமர்சனத் தொடர், எஸ். பொ. வின் நான் நினைப்பவை என்ற கட்டுரைத் தொடர், பண்டிதர் வ. நடராசா எழுதிய நமது இலக்கிய பரம்பரை, முதலியவை பலரால் வரவேற்கப்பட்டன. கலைச்செல்வி நடத்திய தங்கத்தாத்தா கவிதைப் போட்டி, நகைச் சுவைக் கட்டுரைப் போட்டி, நாவல் போட்டி ஆகியவை, இலக்கியதரம் நிறைந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதத் துண்டின. கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966ஆம் ஆண்டு ஆவணியில் வெளியானது. இவ்விடத்தில், 1988ஆம் ஆண்டு சிறப்புக் கலைமாணி இறுதியாண்டுத் தேர்வினைப் பூர்த்திசெய்யும் வகையில், செல்வி ப. வித்தியா என்னும் மாணவி ‘ஈழத்துச் சிறு சஞ்சிகை வரிசையில் கலைச்செல்வியின் பங்களிப்பு என்ற தலைப்பில் நீண்ட ஓர் ஆய்வுக் கட்டுரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குச் சமர்ப்பித்தார் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். 'மறுமலர்ச்சி மூன்று ஆண்டுகள் செய்த இலக்கியப் பணியை, ஏறக்குறையப் பத்து ஆண்டுகளின் பின்னர் கலைச்செல்வி தொடர்ந்தது; விரிவாக்கியது.
தி.ஞா. : “கலைச்செல்வி நாவல் போட்டியில் "ஒரு தனிவீடு முதற்பரிசினைப் பெற்றது. அந்த நாவலைப்பற்றியும் அதனை எழுதிய மு. தளையசிங்கம் பற்றியும் உங்கள் கணிப்பீடு யாது?
சிற்பி: ; கலைச்செல்வி ஆரம்பித்த காலம் தொடக்கம் அதனுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர் தளையசிங்கம். கலைச்செல்வி பற்றி விமர்சன ரீதியான கடிதங்களை அவர் எழுதியதுண்டு. தமிழ்ப்பற்றும் எழுத் தாற்றலும் பிறமொழி இலக்கியப் பரிச்சயமும் நிறைந்தவராக இருந்தார். அவருடைய ஏழு சிறுகதைகள் கலைச்செல்வியில் வெளிவந்தன. அவர் எழுதிக் கொண்டிருந்த ஒளியை நோக்கி என்ற நாவலைக் கலைச்செல்வி வாசகர் களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் அதன் ஓர் அத்தியாயத்தைக் கலைச் செல்வியில் வெளியிட்டேன். முற்போக்கு இலக்கியம் சம்பந்தமான விவாதத்திலே கலந்துகொண்டு ஆழமான பல கருத்துக்களைக் கலைச்செல்வியில் அவர் வெளியிட்டார். நல்ல ஆரோக்கியமான கற்பனைக்கும் , நடைமுறைக்கும் இடையேயான வெளி குறைக்கப்பட்டு, நீக்கப்படவேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடு என நான் கருதுகிறேன். சுதந்திரம். சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலை - என்பவை எல்லாம் கற்பனையாக இல்லாமல் நடைமுறைக்கு வந்துவிட்டால் அந்த யதார்த்த நிலையைக் கலைநயத்துடன் எழுதுவதுதான் இலக்கியமாகும் என அவர் நினைத்தார். தன் புதுக்கவிதைகளை "மெய்யுள் என அவர் குறிப்பிட்டதற்கு இதுதான் அடிப்படை என நினைக்கிறேன். இலக்கிய உலகில் தனிவழிகாண விழைந்தவர்; கண்டவர் தளையசிங்கம். தரமான நாவல்களை எழுத இங்குள்ள எழுத்தாளர்களைத் தூண்டுவதற்காகவே
33

Page 18
நாவல்போட்டி நடத்தப்பட்டது. எழுத்தாளர் பலர் உற்சாகமுடன் கலந்து கொண்டனர். இலக்கியத் தரம்வாய்ந்த நாவல்கள் சில எமக்குக் கிடைத்தன. ‘ஒரு தனிவீடு முதற்பரிசுக்குரியதாக நடுவர்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. தெரிவு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, நடுவர்களில் ஒருவர் என்ற வகையில் நாவல்களை இரண்டு மூன்று தடவை நான் வாசித்தேன். என் றாலும் முப்பத்தாறு ஆண்டுகள் கடந்த நிலையில் ‘ஒரு தனிவீடு நாவலின் சிறப்பம்சங்களைப்பற்றி விரிவாகச் சொல்ல என்னால் இப்போது இயலவில்லை.
தி.ஞா. : கலைச்செல்வி கால எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும் இன்றைய எழுத்துக்களுக்குமிடையே எத்தகைய வித்தியாசத்தைக் காணன் கிறீர்கள்? சிற்பி: ; மரபு, பண்டிதப் போக்கு, இழிசினர் இலக்கியம், யதார்த்தம், மண் வாசனை முதலியனவற்றைப்பற்றிப் பகிரங்கமாக விவாதிக்கப்பட்ட காலம் அன்றைய காலம். இவை சம்பந்தமான தம் சிந்தனையின் அடிப்படையில் எழுத்தாளர்களுட் பலர் இருவேறு அணிகளாகப் பிரிந்திருந்தனர். ‘அணிசாரா' எழுத்தாளர்களும் இருந்தனர். தமிழ் இலக்கியத்தில் மரபு என ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டு, தேவையான சந்தர்ப்பங்களில் அந்த மரபை மீறும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பது கலைச்செல்வியின் நிலைப்பாடு. பாத்திரங் களின் தரம், தன்மை போன்றவற்றுக்கு ஏற்ற மாதிரி உரையாடல்கள் பேச்சுத் தமிழில் இடம்பெறுவதையும், களவர்ணனை, சம்பவக் கோவை போன்றவை நல்ல தமிழில் அமைவதையும் கலைச்செல்வி ஆதரித்தது. தமிழ் மக்களின் தனித்தன்மை பண்பாட்டுச் சிறப்பு முதலியவற்றைப் பிரதிபலிக்கும் ஆக்கங்களை வெளியிடக் கலைச்செல்வி தயங்கியதில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் அஹிம்சைப்போராட்டத்தையும் கலைச்செல்வி ஆதரித்தது. இவை காரணமாக இனவாதத்தைத் தூண்டும் சஞ்சிகை என்ற குற்றச் சாட்டுக்கும் கலைச்செல்வி உள்ளானது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை, வீரத்தை, தியாகத்தை வரவேற்று உற்சாகப்படுத்தும் கதைகள், கவிதைகள் அதிக அளவில் வெளியாகின்றன. அகதிகளாக உள்நாட்டில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் போன்றவர்களின் ஏக்கங்கள் அபிலாஷைகள், பிரச்சினைகள், பெண்நிலை வாதம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் ஆக்கங் களும் இப்போது நிறைய வருகின்றன. கவிஞர்கள் பலர் மரபுக் கவிதைளையே அன்று எழுதினார்கள். ஆனால் இப்போது வெளியாகும் புதுக் கவிதைகளின் தொகை மிகவும் அதிகம். தமிழ் நடையிலும் மாற்றம் இருப்பதை அவதானிக் கலாம் - வேகமும் கூர்மையும் "ஆங்கிலக் கலப்பும் நிறைந்த ஒரு வீச்சு நடை.
தி.ஞா. : "முற்போக்கு இலக்கியம் உச்சக்கட்டத்தில் இருந்த அறுபதுகளை ஒட்டிய காலகட்டத்தில், எதிரணியில் இருந்தவர்களுக்கு ஓர் ஒதுக்கிடமாகக் "கலைச்செல்வி விளங்கியது" எனப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டதாக அறிகிறோம். உங்கள் கருத்து என்ன?
சிற்பி : வாசகர்களுடைய சிந்தனையைத் தூண்டிச் செழுமைப்படுத்தும் விதத்தில், அவர்களுடைய இதயத்தைத் தொட்டு நல்லுணர்ச்சிகள் கிளர்ந்தெழும் வகையில், கலைநயத்தடன் எழுதப்படும் கதைகள், கவிதைகள் இலக்கியத்
34

தரம் வாய்ந்தவை என்பது என்கருத்து. கச்ைசெல்வியில் வெளியிடுவதற்குரிய ஆக்கங்களை இதன் அடிப்படையிலேயே தெரிவு செய்தேன். எழுத்தாளர்களின் பின்னணிகளை. அரசியற் சார்பு, இலக்கிய அணி, வாழ்விடம் , கல்வித் தரா தரம், சாதிசமயப் பிரிவுகள் - போன்றவற்றை நான் சிறிதும் கவனத்திற் கெடுக்கவில்லை. வெளிவந்த கதை, கவிதைகளுள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பலரின் ஆக்கங்களும் அடங்கும். பேராசிரியர் கைலாசபதி கூடக் கலைச்செல்வியில் எழுதினார். எழுத்துலகில் நான், என்னை உருவாக்கியவர்கள் போன்ற புதுமைத் தொடர்களில் முற்போக்கு எழுத்தாளர் களின் கட்டுரைகளும் இடம்பெற்றன. இருந்தும், அவர் அப்படியான ஒரு கருத்தை ஏன் வெளியிட்டார் என்பது எனக்கு விளங்கவில்லை; அதைப்பற்றி ஆராய நான் விரும்பவில்லை.
தி.ஞா. : கலைச்செல்வியைத் தொடர்ந்து வெளியிட முடியாமற் போனதிற் குரிய காரணங்களை விளக்குவீர்களா?
சிற்பி : கலைச்செல்விக்கென நல்ல ஒரு நிர்வாகக் கட்டமைப்பு இருக்க வில்லை. ஆரம்பத்தில் பள்ளிக்கூடப் பணிகளையும் பத்திரிகைப் பணியையும், ஒன்றை ஒன்று பாதிக்காத விதத்தில் திருப்திகரமாகச் செய்ய என்னால் முடிந்தது. கலைச் செல்விக்குரிய வேலைகள் சிறிது சிறிதாக அதிகரித்தபோது, நான் பெரிதும் கஷ்டப்பட்டேன். உதயணன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வெகு தொலைவில் இருந்ததால், நாளாந்த வேலைகளில் அவர்களால் உதவிசெய்ய முடியவில்லை. எனக்கு அதிக அளவில் உதவிசெய்தவர் எனது ஆசிரியர் பொன்னம்பலம் அவர்கள். நிதி நிலைமையும் திருப்தியாக இல்லை. சந்தாப் பணத்தையும் விற்பனைப் பணத் தையும் கொண்டு, ஒரு சஞ்சிகை நடத்துவது கடினம் என்பதை இதுவரை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். என் மாதச் சம்பளத்தின் பெரும்பகுதியைக் கலைச்செல்விக்காகவே செலவிட வேண்டி ஏற்பட்டது. கலைச்செல்வியால் என் கற்பித் தற் பணிகள் பாதிக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இத்தகைய கஷ்டங்களால் அதை நிறுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
தி.ஞா. : சென்னை தீபம் இதழில் மாதந்தோறும் "இலங்கைக் கடிதம் எழுதியதைப்பற்றிச் சொல்லுங்கள்:
சிற்பி : இந்தியத் தமிழகத்து எழுத்தாளர்கள், கலைஞர்களைப்பற்றியும் அவர் களின் ஆக்கங்கள், பிற செயற்பாடுகள் பற்றியும் எமது நாட்டிலுள்ளவர்கள் நிறையவே அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் இங்குள்ள எழுத்தாளர்கள், கலைஞர்களைப்பற்றி அங்குள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. பகீரதன் போன்றவர்கள் எங்களைப்பற்றி குறைவாக மதிப்பிடுவதற்கு இத்தகைய அறியாமையும் ஒருகாரணம். இங்கு நடப்பவற்றை நாங்கள்தான் வெளியுலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சென்னை தீபம் அலுவலகத்தில் அதன் ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்களைச் சந்தித்தபோது, தீபம் இதழில் பம்பாய், டெல்கி, கல்கத்தா, மலேசியா கடிதங்கள் இடம்பெறுவதைப்போல் 'இலங்கைக் கடிதம்' ஒன்றும் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினேன். என் ஆலோச னையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அவர், அந்தப் பணியை என்னிடமே ஒப்படைத்தார். இலங்கையைச் சேர்ந்த இரண்டொரு எழுத்தாளர்
35

Page 19
களைப் பற்றிமட்டும் தெரிந்து வைத்திருந்த தீபம் வாசகர்களுக்கு இலங்கை எழுத்தாளர்களைப்பற்றியும் இங்கு நடைபெறும் கலை, இலக்கிய, சமய, கலாசார நிகழ்ச்சிகளைப் பற்றியும் அறிந்து வைத்துக் கொள்வதற்கு இந்தக் கடிதத் தொடர் பெருமளவில் உதவியது.
எழுதுபவர் யார் என்பது யாருக்குமே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே “யாழ்வாசி என்ற பெயரிலே கடிதத்தை எழுதினேன்.
தி.ஞா. : இன்றைய சிறு சஞ்சிகையாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? சிற்பி : விற்பனையை எந்த வகையிலாவது அதிகரித்து, இலாபமீட்ட வேண்டும் என்பதற்காக, வாசகர்களின் இரசனையை கீழ்நிலைக்குக் கொண்டு போகின்ற சில பிரபல சஞ்சிகைகளின் "கோவை யில் ஏற்பட்ட வெறுப்பாலும், தம் இலக்கியக் கோட்பாடுகளை கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆவலாலும் சிறு சஞ்சிகையாளர்கள் தம் சஞ்சிகைகளை வெளியிடுகின்றனர். பல்வேறு விதமான இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய ஆக்கங்கள், உத்திகள், பற்றி அறிவு பூர்வமான விளக்கங்களும் விமர்சனங்களும் இவற்றில் இடம் பெறு கின்றன. சிறு சஞ்சிகைகள் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான பலர், இன்று பிரபல எழுத்தாளர்களாகத் திகழ்கின்றனர். வியாபாரரீதியாக இவை வெற்றியளிப்பதில்லை. ஆகவே 'கையைக் கடிக்கும்வரை அவை வெளியிடப் படும்போது, தம்கொள்கையைக் கோட்டைவிடாமல் அவர்கள் இருக்க வேண்டும். ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம் எனச் சொல்லப்படுவது சிறு சஞ்சிகை களுக்கும் பொருந்தும் என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். தி.ஞா: ஐம்பது வருடங்களுக்கு மேலான தங்களது இலக்கியப் பங்களிப்பின் பயனாகக் கிடைத்த அனுபவத்தின் பின்னணியில், இன்றைய எழுத்தாளர் களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? சிற்பி : ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு "சுயம் உண்டு. திறமை உண்டு; அறிவுரை கூறுவது அவசியமில்லை. அந்தத் தகுதி எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை. ஓர் ஆலோசனையை மட்டும் கூற விழைகிறேன். இரசிகமணி கனக. செந்திநாதன் ஓர் எழுத்தாளராக மடடுமல்லாமல் நல்ல பேச்சாளாரா கவும் விளங்கியவர். சமயம் சம்பந்தமான பேச்சென்றாலும், இலக்கியப் பேச்சென் றாலும், இக்காலச் சிறுகதைகள், கவிதைகள், எழுத்தாளர்கள் பற்றிச் சுவையா கவும் சுருக்கமாகவும் தன் பேச்சினிடையே குறிப்பிடுவது அவர் வழக்கம். இந்நாட்டு எழுத்தாளர்களுட் பலர் பேச்சாற்றலும் படைத்தவர்கள்; பள்ளி யாசிரியர்களாகவும் இருப்பவர்கள். வேறு எழுத்தாளர்கள் எழுதிய, தமக்கு நன்கு பிடித்த, கதைகள் கவிதைகளைப்பற்றியும் தம் மேடைப் பேச்சின்போது குறிப்பிடுவது நல்லது எனக் கருதுகிறேன். ஒரு நூலின் வெளியீட்டு விழாவின்போதோ, ஓர் எழுத்தாளரின் பாராட்டு விழாவின் போதோதான் இப்படிப் பேசவேண்டும் எனக்காத்திருக்கத் தேவையில்லை. இந்நாட்டு எழுத்தாளரின் ஆக்கங்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதற்கு இது உதவக்கூடும்.
36

‘முஸ்லிம் நேசன்" பதிவுகளுடன் 1883 கொட்டஹேனக் கலவரமும் சமய எழுச்சிகளும், கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்
1883ல் கொட்டாஞ்சேனையில் நடந்த கலகம் கொழும்பில் நடந்த முதல் கலகமாகும். 1983ஜுலைக் கலவரத்தில் சிங்கள - தமிழ் மோதலுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கலவரம் கொழும்பில் நடந்தது. அது பெளத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் நடந்த கலகம். 1983 கலகத்திற்கு சரியாக ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கொழும்பு நகரின் தெருக்களில் பெளத்தர்களும் கிறிஸ்தவர்களும் 1883ல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் என குமாரி ஜெயவர்த்தன குறிப்பிடும் கொட்டஹேனக் கலவரம் இதுவாகும். அறிஞர் சித்திலெப்பை தமது 1882 மார்ச் மாத 'முஸ்லிம் நேசன்’ இதழில் 'இந்த மாதம், 25, ஞாயிற்றுக்கிழமை கொட்டாஞ்சேனையில் கடுமையான ஒரு கலகம் உண்டாயிற்று என்று இதனைச் செய்தியாக வெளியிட்டிருந்தார்.
கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திற்கு அருகே இருந்த பெளத்த விகாரையின் பிரதான பிக்குவான மிகெட்டுவத்தே குணானந்த தேரர் கிறிஸ்தவ ஈஸ்ட்டர் பெருநாளின்போது தமது விகாரையிலும் ஊர்வலங் களையும் பிங்கம நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தார். சிறிதுகாலமாக பெளத்த கத்தோலிக்க முரண்பாடுகள் நடந்துகொண்டிருந்ததால் தேரரின் நடவடிக்கைகள் தமக்கு எதிரான திட்டமிட்ட செயல் எனக் கத்தோலிக்கர் ஆத்திரம் கொண்ட திலிருந்து இக்கலவரம் கொட்டாஞ்சேனையில் ஆரம்பித்தது. மனக்குமுறல்
கொட்டஹேனக் கலவரத்திற்கான உடனடிச் சம்பவம் இதில்தான் ஆரம்பித்திருந்தபோதும் இதற்கு வழிவகுத்த, தூபமிட்ட செயற்பாடுகள் மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாகவே இடம்பெறத்தொடங்கிவிட்டன. 1815 கண்டிய உடன்படிக்கையினால் இழக்கப்பட்ட சுதந்திரத்தை மீளப்பெறுவதற்காக ஆங்கிலேயருக்கெதிராக நடந்த 1818 கலகத்தின் தோல்வியிலிருந்து இப்பிரச்சினையின் வரலாற்று வேர்கள் நீண்டு பரவியுள்ளன. 1818ல் கொண்டுவரப்பட்ட புதிய உடன்படிக்கை பெளத்த சமயத்தை நசுக்கி கிறிஸ்த வத்தை வளர்ப்பதற்கு இடமளித்ததாக பெளத்தர்கள் மனங்குமுறினர். மிஷனறி களின் மதம் பரப்பும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருவதா கவும் பெளத்தர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இவ்வாறான மனக்குமுறல்களுடன் சில தசாப்தங்களைக் கழித்த போதும் சிங்கள பெளத்தர்கள் சமயரீதியில் எழுச்சிகானும் நாட்கள் விரைவில் அவர்களை வந்துசேர்ந்தது. 1860களில் நாட்டுப்பற்றுடன் செயற்பட்ட சில பெளத்த கல்விமான்கள் பிற சமயத்தவர்களுக்கும் குறிப்பாக மிஷனறி களுக்கும் எதிரான கருத்துக்களை பிரசாரப்படுத்தினர். இதேவேளை மிஷனறிகளைச்சேர்ந்த பிரசாரகர்கள் பெளத்தமதம் பொய்யானது என நிரூபிக்கும் பிரசுரங்களை வெளியிட்டு வந்தனர். கிறிஸ்தவ மிஷனறிகளின் செயற்பாடுகளும் பெளத்தசமய 37

Page 20
எழுச்சிகளும் ஒன்றுடன் ஒன்று மோத ஆரம்பித்த காலப்பகுதி என இதனைக் குறிப்பிடலாம்.
சமய மறுமலர்ச்சி
பெளத்த மறுமலர்ச்சி நடவடிக்கைகளில் ஒரு பிரதான பகுதி கிறிஸ்தவ மிஷனறி எதிர்ப்புப்பணியாகவே அமைந்தது. முகத்திற்கு முகமாக நடைபெற்ற சொற்போர்களிலிருந்து அது அதன் உறுதியான முதல் வடிவத்தைப் பெற்றுக்கொண்டது. மிஷனறிச்செயற்பாடுகளுக்கு எதிரான சவால் தென் மாகாணத்தில் பெத்தேகமவில் ஆரம்பமாகியது. 1864, பெப்ரவரி 8ம் நாள் வணக்கத்திற்குரிய புலத்கம தர்மாலங்கார ரீ சுமணதிஸ்ஸ, ஹிக்கடுவே றி சுமங்கல, வண. மிகெட்டுவத்தே குணானந்த தேரர் ஆகியோர் கிறிஸ்தவ மதத்தலைவர்களுடன் நேருக்குநேர் சமய விவாதத்தில் ஈடுபட்டனர். அந்தவிவாதத்தில் கிறிஸ்தவர்கள் சார்பில் தலைமைதாங்கிய ஜோர்ஜ் பார்சள்ஸ் இதுபற்றிக் கூறுகையில் "இங்கு ஒன்று கூடிய 50 பிக்குமார்களும் அவர்களின் இரண்டாயிரம் அபிமானிகளும் கொண்டிருந்த நோக்கு பெளத்தசமயத்தை எடுத்துக் கூறுவதல்ல ஆனால், கிறிஸ்தவத்தைத் தூக்கி எறிவதேயாகும். கிறிஸ்தவத்திற்கு எதிரான இப்படியொரு எதிரணி இதற்கு முன்னர் இருந்ததில்லை” என்று குறிப்பிட்ட கருத்து, நிலைமையின் அழுத்தத்தை எடுத்துக்காட்டப்போதுமானது.
பெத்தேகம விவாதத்தைத் தொடர்ந்து, 1865இல் வராகொட, 1866ல் உடன்விட்ட, 1871ல் கம்பொல, 1873ல் பாணந்துறை ஆகிய நான்கு இடங்களில் சமயவிவாதங்கள் நடந்தன. இவற்றுள் பாணந்துறையில் நடந்த சமய விவாதம் பெரும்பரபரப்பைப் பெற்றிருந்தது. பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள், பெளத்த பிக்குமார்களுக்கும், கிறிஸ்தவப்பாதிரிகளுக்கும் இடையில் நடந்த சொற்போரைப் பார்ப்பதற்காக ஒன்று கூடினர்.
"சொற்போர்ச்சிங்கம்' என்று பெயரெடுத்திருந்த ‘வாதிபாசிங்ஹ' மிகட்டுவத்தே குணானந்த தேரர் இச்சமயச் சொற்போருக்குத் தலைமை தாங்கினார். இந்த விவாதங்கள் நாடுமுழுக்க பரபரப்பையும் குதூகலத்தையும் இந்நாட்களில் ஏற்படுத்திவந்தன. இவ்விவாதங்களுக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம்தந்தன. சிறு பிரசுரங்களாகவும் இவ்விவாதங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. இவ்விவாதங்களின் தன்மையையும் போக்கையும் சித்தி லெப்பையின் முஸ்லிம் நேசன் அக்காலத்தில் (1882ல்) வெளியிட்ட பின்வரும் செய்திக் குறிப்பிலிருந்து நன்குணரமுடியும்:
"இலங்கை இங்கிலீஸ் அரசாட்சிக்குக்கீட்பட்ட நாள்முதற் புத்த சமயத்திலிருந்து அச்சமயத்தோர்களில் அநேகர் கிறிஸ்தவர்களாகியும் தங்கள் சமயத்தைக் கனம்பண்ணிக்கொண்டாடாதவர்களாயும் வருங்காலத்தில் கொட்டாஞ்சேனையில் இருக்கிற ஒரு உண்ணான்சை (தேரர்) புத்த சமயத்தை நிலைப்படுத்தவேண்டும் என்று தோன்றி அவருக்கும் கிறிஸ்து சமயப்பாதிரி களுக்கும் இடையே பாணந்துறையில் வைத்து வேதவாதம் உண்டாயிற்று. அந்த இரண்டு வேதங்களுக்கும் மக்கள் பெருங்கூட்டமாக கூடினார்கள். சில நாளாக வாதம் நடத்தியபின் இருபட்சத்தாரும் அவரவருக்கே ஜயம் 38

கிடைத்ததாகச் சொல்லிக்கொண்டு அவ்விடம்விட்டுப்பிரிந்தார்கள். அந்த நாள் முதல் இந்த இரு சமயத்தவர்களுக்குமிடையே வேத குரோதம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது. புத்தவேதக்காரர்கள் கிறிஸ்து வேதத்திற்கு விரோதமாகப் பற்பல பாஷைகளிலும் எழுதிய புத்தகங்களைப் பார்த்துப்படித்து கிறிஸ்து வேதத்தை எவ்வேளையும் நிந்தித்து வந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நஞ்சூட்டிய வார்த்தைகளையும் தீப்போன்ற சொற்களையும் பாவிப்பார்கள்."
மேலும் அங்கு பேசப்பட்ட விடயங்களைப்பற்றி முஸ்லிம் நேசன் குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “நாமொருநாள் ஒரு புத்த வேதக்காரனுக்குங் கிறிஸ்து சமய உபதேசிக்கும் நடந்த வாதத்தைக் கேட்டிருந்தோம். புத்த வேதக்காரன் பையலைத் திறந்துபார்த்துவிட்டு சுற்றி இருந்தவர்களை நோக்கி சிங்களத்திற் சொல்லுகிறான் ("மொக்கதே மேப் பொத்தேத் தியென்னே வட்ட எலுவாகே கத்தாவாய்"). "இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கின்றது, எல்லாம் செம்மறியாட்டுக் கதைதான் இதைக் கேட்டவுடன் கூடிய சனங்கள் கைதட்டிக் கொக்கரித்துச் சிரித்தார்கள். இன்னுஞ் சொன்னான் புஷ்பங்களிலும் பரிமளங் களிலும் பிரீதியடைவது தெய்வம், இரத்தப் பலியைத் தேடுவது பிசாசு. கிறிஸ்துப் பலியாய்த் தன் இரத்தத்தைக் கொடுத்ததனாற் கிறிஸ்தவர்களின் தெய்வம் பிசாசு. இப்படியான வீண்வாதங்களல்லாமற் புத்தியான ஒரு பேச்சையும் நாம் கேட்கவில்லை. இவைகளே இக்கலகங்களுக்கு முதற்காரணம்.
1860 களில் தீவிரமடைந்த இவ்வெழுச்சிக்கும் சொற்போர்களுக்குமான முதல் முயற்சிகள் 1839ல் இரத்மலானையில் வன. வலனே சிறிசித்தார்த்த தேரரினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சிங்கள மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றும் நடவடிக்கையாக ஆரம்பமான அம்முயற்சிகள் விரைவில் சமயத்துறைச் சம்பவங் களுக்கு முகம் கொடுப்பதற்கான நிகழ்ச்சிகளாகவும் மாறத் தொடங்கின. பரமதம்ம செத்யப் பிரிவெனவின் மூலம் இம்முயற்சிகள் சிறிசித்தார்த்த தேரரி னால் நடத்தப்பட்டு வந்தன.
கிறிஸ்தவர்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையிலான முரண்பாட்டில் சமயக்கருத்து பேதங்களுக்கு முக்கிய பங்கு இருந்தபோதும் சமயம் சாராத விடயங்களிலும் முரண்பாடுகள் வளர்ச்சிபெற்றிருந்தன. பத்து விதத்துக்கும் குறைவான கிறிஸ்தவர்கள் நாட்டின் அரசியல் பொருளாதார மட்டங்களிலும் சமூக அந்தஸ்துகளிலும் உயர்வான இடத்தைப் பெற்று வந்தனர். இது பெளத்தர்களிடையே காழ்ப்புணர்வையும் விரக்தியையும் உருவாக்கியது. ஆயினும் இவ்வுளவியல் குமுறல்கள் 1883ல் வெளிப்படையான சண்டையாக கொட்டஹேன வீதிகளில் வெடித்தது.
தீப்ப துட்டாறாமய விகாரை
சொற்போர்களில் பங்கு பற்றுவதிலும் பெளத்த சமய எழுச்சிகளுக்குத் தலைமை தாங்குவதிலும் பெயர்பெற்ற மிகக்டுவத்தே குணானந்த தேரர் கொழும்பில் பெளத்த சமயச் சடங்குகளையும் பெரஹெராக்களையும் ஒழுங்கு செய்யும் தம்ம சங்கத்தை உருவாக்கியதோடு கொட்டஹேன புனித தேவாலயத்திற்கு அருகே கட்டப்பட்டுக் கொண்டிருந்த 'தீப்ப துட்டாறாமய
39

Page 21
என்ற பெளத்த விகாரைக்கும் விகாராபதியானார். அவரது செயல் திறனால் தீப்பதுட்டாறாமயாவின் சமய நிகழ்ச்சிகளில் பெளத்த அடியார்கள் பெருந் திரளாகப் பங்கேற்று வந்தனர்.
குணானந்த தேரர் அமரபுர நிக்காயவைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னணி இடம் வகித்தவர். சமய விவாதங்களில் எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில்தர வல்லவர் என்று மக்களிடத்தில் பெயர் எடுத்தவர். சமய விவாதங்களில் எதிர்மதவாதியைத் துன்புறுத்தக்கூடிய உணர்ச்சி வசமான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்திப் பேசிவருபவர். அவர் கேணல் ஒல்கோட்டின் இறையியற் சங்கத்தின் அங்கத்தவருமாவார்.
குணானந்த தேரர் 1823ல் பலப்பிட்டியப் பகுதியில் பிறந்தார். இக்காலத்தில் கொழும்பில் பெளத்தர்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கவில்லை. அப்போது கெலனி விகாரை கொழும்பின் பிரதான விகாரையாக விளங்கிவந்தது. அதனால் கொட்டஹேன 'தீப்ப துட்டாறாமய கொழும்பில் புதிதாக உருவாகிய கொழும்புக்குரிய விகாரையாகும். கொழும்பு விகாரைகளில் இது பழைமையானதென்று கருதப்படுகிறது. இவ்விகாரை இனிகம திரக்கந்த தேரரினால் 1832ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தென்மாகாணத்திலிருந்து குடியேறிவந்த பெளத்தர்கள் இவ்விகாரையைத் தமது வழிபாட்டு மையமாக ஆக்கிக் கொள்வதில் அக்கறை காட்டினர்.
புனித லூசியா தேவாலயம்
கொட்டாஞ்சேனை லூசியா தேவாலயத்தின் வரலாறு இதற்கு முதற்பட்டதாகும். இத்தேவாலயத்தின் கட்டிட வேலைகள் 1782ல் பூர்த்தி பெற்றிருந்தன. 1852ல் இத்தேவாலயம் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. இத்தேவாலயத்திற்கு சுமார் 100 யார் தூரத்திலேயே விகாரையின் கட்டிட வேலைகள் ஆரம்பமாகின. 1862ல் விகாராதிபதி பதவியை ஏற்ற குணானந்த தேரர் கட்டிட வேலைகள் பூர்த்தியடைவதில் தீவிரமாகச் செயல்பட்டார்.
1883, ஜனவரி மாதத்தில் "தீப்ப துட்டாறாமய கட்டிட வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டும், புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு கண் வைக்கும் புனித நிகழ்ச்சியை முன்னிட்டும் ஒரு பெரிய சமய உற்சவம் நடக்க இருப்பதாக விகாரை அதிகாரிகள் அறிவித்தனர். பெளத்தர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பெரஹரா ஊர்வலம், மேளதாள வாத்திய இசைகள் கொண்ட பெரிய பின்கம' நிகழ்ச்சிக்கு குணானந்த தேரர் ஏற்பாடுகளைச் செய்தார். தொடர்ச்சியாக ஏழுவாரங்களுக்கு பிரித் பன ஒதும் நிகழ்ச்சிகளும் ஒழுங்குசெய்யப்பட்டன. திட்டமிட்டபடி சில நிகழ்ச்சிகள் பெப்ரவரி மாதமே ஆரம்பமாகிவிட்டன. அதனால் அடிக்கடி மக்கள் விகாரையில் ஒன்று கூடினர்.
விகாரையில் தொடர்ச்சியாக நடந்துவந்த இந்த நிகழ்ச்சிகளாலும் ஆரவாரங்களாலும் கிறிஸ்தவர்கள் தமது தேவாலய நிகழ்ச்சிகள் பாதிப்படைவதாகக்கருதினர். அனேகமாக ஒவ்வொருநாளும் மேளதாளங்கள் முழங்க பின்கம ஊர்வலங்கள் லூசியா தேவாலயத்தைக்கடந்து சென்ற வண்ணமிருந்தன. இதே நேரத்தில் கிறிஸ்தவர்களுக்கான புனிதப் பெருநாள்
40

தினங்களும் நெருங்கிக் கொண்டிருந்தன. பெரிய வெள்ளியும், ஈஸ்ட்டரும் இதில் முக்கியமானவை. ஒரே சுற்றாடலில் ஒரே பாதையில், ஏற்கனவே மனக்கசப்பிற்குள்ளாகியுள்ள இரு சமயப்பிரிவினரின் ஊர்வலங்களும் சமய விழாக்களும் ஆயத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
இதனால் பிரச்சினைகள் ஏற்படும் என தேவாலயப் பாதிரியார் பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்தார். அனுமதிப் பத்திரம் வழங்குவதில் பொலிஸ் சரியாக நடந்து கொள்ளவில்லை. பொருத்தமற்ற விதத்தில் ஊர்வல அனுமதிகள் வழங்கப்பட்டன. மார்ச் 18ம் திகதியும் அதன் பின்னரும் ஊர்வலம் நடத்த ஒரேநாளில் அனுமதிகள் வழங்கப்பட்டன. இதனால் சிறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஊர்வல அனுமதி வழங்குவதில் பொலிஸார் கத்தோலிக்கருக்குச் சார்பாகச் செயற்பட்டதாக பெளத்தர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், பெரிய ஊர்வலத்திற்கான நாள் எதிரே வந்துகொண்டிருந்தது.
1883 மார்ச் 25ம் திகதி பெளத்தர்களின் பெரிய பின்கம ஊர்வலம் செல்வதற்கு ஏற்பாடுகள் நடந்தன. இதற்குப் பொலிஸ் அனுமதி தந்திருந்தது. கிறிஸ்தவர்களின் பெருநாள் நிகழ்ச்சிகளும் அதே தினம் நடக்கவிருந்ததனால் கிறிஸ்தவர்கள் அந்த அனுமதியை ரத்துச் செய்யும்படி பொலிஸைக் கேட்டனர். எனினும் பொலிஸ் இப்புகாரைப் பரிசீலிக்கவில்லை.
25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெளத்த ஊர்வலம் பொரளையில் இருந்து ஆரம்பமாகி மரதானையை நெருங்கிக் கொண்டிருந்தது. கிறிஸ்தவர் களின் சமய நிகழ்ச்சிகள் லூசியா தேவாலயத்தில் காலையிலேயே நடந்து முடிந்திருந்தன. பகல்12 மணியளவில் பெளத்த ஊர்வலம் வந்துகொண்டிருப்ப தாகவும் அவ்வூர்வலத்தில் கிறிஸ்தவர்களை ஆத்திரமூட்டக்கூடிய 'சுருவங்களும் 'அட்டைகளும் கொண்டுவரப்படுவதாகவும் செய்திகள் வந்துசேர்ந்தன. லூசியா தேவாலயத்திற்கருகே கிறிஸ்தவர் ஒன்றுகூடினர். எங்கும் பதற்றம் நிலவியது.
கலகம்
பெளத்த ஊர்வலம் லூசியா தேவாலயத்தை நோக்கி ஸ்க்கின்னர் வீதியில் திரும்பியபோது கொட்டஹேனவில் பதற்றம் அதிகரிப்பதாகவும் பெளத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் "செய்திகள் கிடைத்தன. ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தவர்களில் பலர் பக்கத்தில் இருந்த மர ஆலைக்குள் புகுந்து பலகைகள், தடிகள், மற்றும் கண்ணில் பட்டவற்றை யெல்லாம் ஆயுதங்களாகக் கைகளில் எடுத்துக் கொண்டனர். ஊர்வலம் கொட்டஹேனயை அண்மித்தது.
ஆத்திரமடைந்திருந்த கிறிஸ்தவர்கள் பகல் ஒருமணியளவில் தேவாலய மணியை நீண்டநேரம் அடித்து ஓசை எழுப்பினர். பக்கத்திலிருந்த தேவாலயங்களிலிருந்தும் இவ்வாறு மணிகள் ஒலிக்கத் தொடங்கின. லூசியா தேவாலயத்திற்கு அருகில் கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டனர். கம்புகளும், பொல்லுகளும் அவர்களின் கைகளிலும் இருந்தன. தேவாலயத்தை நெருங்கிய ஊர்வலத்தை தடுக்க முற்பட்டபோது இரு சமயப்பிரிவினரும் மோதிக்கொண்டனர். கம்பு, பொல், கத்தி போன்ற ஆயுதங்கள் மூலம் ஒருவரை ஒருவர் தாக்கினர். குழப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொலிஸ் பின்வாங்கியது.
41

Page 22
பொலிஸாரும் காயமடைந்தனர்.
கலகச்செய்தி
அறிஞர் சித்திலெப்பையின் ‘முஸ்லிம் நேசன் (1883) செய்தி இதழ் கொட்டாஞ்சேனைக் கலவரச் செய்தியைப் பின்வருமாறு வெளியிட்டது.
"இந்த மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொட்டாஞ்சேனையிற் கடுமையான ஒரு கலகமுண்டாயிற்று. பொறள்ளை மறுதானையாகிய இவ்விடங்களிலிருக்கிற புத்த சமயக்காரர்கள், கொட்டாஞ்சேனை றோட்டுக் கடைசியில் இருக்கும் பாஞ்சாலையினடக்கிற பிங்கமைக்குச் சில வேடிக்கைகளுடனே, பூசைக்குரிய பொருள்களையெடுத்துக் கொண்டு போகத் திட்டஞ்செய்தார்கள். அவர்கள் லூசியாவென்கிற றோமான் கோயிலுக்குச் சமீபமாகவிருக்கிற றோட்டிற் போக வேண்டியதாயிருந்தது. புத்த வேதக்காரர்கள் எண்ணுாறு பெயர்மட்டிற் சேர்ந்து பகல் 12ம் மணி நேரத்திலே பொலிசாட்க ளோடும் மேளதாளங்களோடும் பற்பல வேடிக்கைகளோடும் புறப்பட்டுப் போனார்கள். ஆனால் அதற்குமுன் ஒருக்காலும் நடக்காத ஒரு கருமத்தைச் செய்துகொண்டு வந்தார்கள். அதாவது கிறிஸ்துவுடைய இரண்டு ரூபங்களை ஒன்று சிலுவையிலறையப்பட்ட தன்மையும் மற்ற ரூபம் கிறிஸ்துவை அடக்கஞ் செய்து எழுந்தருளிய தன்மையுமாய்க் காட்டும்படிச் செய்து ஒரு வண்டியிலேற்றி ஒரு கூட்டிலே வைத்துக்கொண்டு போகவே இதைக் கிறிஸ்தவர்கள் அறிந்து தங்கள் வேதத்தை நிந்திக்கும்படிச் செய்ததாக மனத்திற்கொண்டு. அந்தக் கூட்டத்தை இந்த வழியிற் போகவிடாமற் றடைசெய்ய வெண்டும் எனத் தீர்மானித்தார்கள். பொலிசுகள் சனத்தை விலக்கத் தெண்டித்துக் கூடாமையால் கற்களினால் கிறிஸ்தவர்களுடைய கூட்டத்திற்கு மற்றக் கூட்டத்தாரெறிய உடனே கிறிஸ்தவர்கள் தெருவிலிரு பக்கத்திலுமுள்ள வீட்டுக் கூரைகளிலேறி ஒடுகளை எறியத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் இரு கூட்டங்களும் ஒருவரோடுருவர் மோதிக் கம்புகளினாலும் கற்களினாலும் கத்தியினாலும் சண்டை நடத்தும்போது பொலிஸ் துரைமார்கள். நடுவில் அகப்பட்டுக் காயப்பட்டவர்களானார்கள். கிறிஸ்தவர்கள் அந்த ருபங்களையும் அவர்கள் வைத்திருந்த கூட்டையும் அதை ஏற்றியிருந்த வண்டியையும் அம்மாடு களையும் கைப்பற்றி அந்த ருபங்களையும் கூடுகளையும் உடைத்து நெருப்பி லிட்டுச் சுட்டு மாடுகளையடித்து வெட்டிக் குத்தினார்கள். அவைகளிலே மூன்று மாடுகள் உடனே செத்துப் போயின."
முஸ்லிம் நேசன் செய்திப்படி இராணுவமும் விசேட துப்பாக்கிப் பிரிவும், பீரங்கிப் பிரிவும் அழைக்கப்பட்டு கலகம் பரவாது தடுக்கப்பட்டது. பின்னர் கொட்டஹேனக் கலகம் பற்றி எழுதிய சிலர் கிறிஸ்தவர்களை நிந்திக்கும் வகையில் சுருவங்கள் எவையும் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ளனர். முஸ்லிம் நேசனின் செய்தியின் இறுதியில் பின்வரும் குறிப்புக் காணப்படுகிறது. ‘மேற்காட்டியபடி புத்த வேதக்காரர்கள் ரூபங்களைக் கொண்டு வரவில்லை என்றுஞ் சொல்லப்படுகிறது.
கலகத்தின்போது 30 பேர் காயமடைந்தனர். ஒரு பெளத்தர் கொல்லப்பட்டார். ஊர்வலத்தில் வந்த கரத்தை மாடுகள் ஐந்து கலகக்
42

காரர்களால் கொல்லப்பட்டன. கொழும்பில் பெரும் பதற்றத்தை இக்கலகம் ஏற்படுத்திய போதும் 1915 சிங்கள - முஸ்லிம் கலவரத்தைப் போல நாடு முழுக்கப் பரவவில்லை. இது சிங்கள இனத்திற்குள் இரு சமயப் பிரிவினர்க் கிடையில் நடந்த கலகம் என்பதனால் எதிர்ப்புணர்வுகள் வலிமைபெற்றதாக இருக்கவில்லை. மேலும் பெளத்தர்களுடன் மோதுவதற்கு கத்தோலிக்க உயர் சமய பீடம் ஊக்கமளிக்கவில்லை.
எனினும் பெளத்தர்கள் இக்கலகத்தை தமது சமய எழுச்சிக்காகவும் அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காகவும் பயன்படுத்தினர். ஒல்கோட் இவ்விவகாரங்களின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்போலச் செயல்பட்டார். கொட்டஹேனக் கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது உட்பட பலகோரிக்கைகளை பெளத்தர்கள் அரசிடம் முன்வைத்தனர். பெளத்த சமய நடவடிக்கைகளுக்கான சுதந்திரம், வாத்திய இசையுடன் செல்லும் பெரஹரா ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குதல், புத்தரின் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக்குதல் கிராமங்களில் பெளத்த விவாகப் பதிவாளர்களை நியமித்தில் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
இக்கலகத்தின் காரணங்கள் பல்வேறு கோணங்களில் ஆராயப் பட்டுள்ளன. இரு சமயங்களின் கோயில்களும் அருகருகே இருந்தமை ஒரு காரணமாகக் கூறப்பட்டது. கத்தோலிக்க சமூகத்தினர் குணானந்ததேரர் மீது காட்டிவந்த குரோதமனப்பான்மையே கலகத்திற்குக் காரணமாயமைந்ததென சில பெளத்த தரப்பினர் கூறினர். லூசியா தேவாலயத்தைவிட பெளத்த விகாரையை குணானந்ததேரர் அலங்காரமாகவும் கவர்ச்சியானதாகவும் ஆக்கிவந்தமையும் விகாரையின் சமய நடவடிக்கைகள் விரிவுபடுத்தப் பட்டமையுமே கலகத்திற்குக் காரணமென்று கூறப்பட்டது.
எவ்வாறாயினும் இக்கலவரத்திற்கு முற்பட்ட காலத்தில் நடந்துவந்த சமயப் போட்டிகள் முக்கிய காரணமாகக் கொள்ளப்படவேண்டும். அத்துடன்1883 ஜனவரி மாதத்திலிருந்து புனித லூசியா தேவாலயத்திற்கும் விகாரைக்கு மிடையில் நடந்த நேரடிப் பூசலை அரசு வளர்வதற்கு இடமளித்தது. லூசியா தேவாலய குருமார்களினால் செய்யப்பட்ட புகார்களை பொலிஸ் கவனத்திற் கொள்ளத் தவறியது. மேலும் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதில் பொலிஸ் சரியான ஒழுங்கு முறைகளைக் கையாளவில்லை. பொலிஸின் தெளிவற்ற நடவடிக்கைகள், பொருத்தமற்ற ஊர்வல அனுமதிகள், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியமை என்ற குற்றச் சாட்டுகளுக்குப் பொலிஸ் பதில் தரவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால் பொலிஸ் பிரிவினர் இவ்விடயத்தில் பலத்த கண்டனத்திற்குள்ளாக்கப்பட்டனர்.
அருத்த இதழில். * பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின்
நேர்காணல் கொடர் bLULb.
43

Page 23
அந்தனிஜிவா
மலையகத்தின் முதற் பெண்மணி
மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் சர்வதேசமே இந்தத் தினத்தை "பெண்கள் தினமாக” அரசு முதல் பல சமூக அமைப்புகள் கோலா கலமாகக் கொண்டாடுவார்கள்.
மலையகத்திலும் பல அமைப்புகள் இந்தச் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவார்கள். s へ ஆனால், மலையக மக்களுக்காக குரல் கொடுத்த முதல் FLa பெண்மணியை நினைவுகூற மறந்துவிடுகிறார்கள். KFY
இன்றைய இளந்தலைமுறைக்கு திருமதி மீனாட்சி அம்மையார் யார் என்று தெரியாது. அவர்களுக்கு மாத்திரமல்ல. நமது மலையகத்து தலைமை களுக்கே இவரைப் பற்றித் தெரியாது. ஏனெனில் படிக்காத தலைமை நம்மத்தி யில் இருக்கும்வரை இதே நிலைமைதான்.
இலங்கையில் புகழ்பூத்த பெண்மணிகளில் ஒருவர் திருமதி மீனாட்சி அம்மையார். இவர் மலையகத்தின் முதல் தொழிற்சங்க அமைப்பைத் தோற்று வித்தவரும், இலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான கோ.நடேசய்யரின் துணைவியாவார். திருமதி மீனாட்சி அம்மையார் தனது கணவருடன் இணைந்து தொழிற் சங்க, பத்திரிகை சமூதாயப் பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
"சட்டமிருக்குது ஏட்டிலே நம்முள் சக்தியிருக்குது கூட்டிலே பட்டமிருக்கு வஞ்சத்திலே வெள்ளைப்பவர் உருக்குது நெஞ்சத்திலே வேலையிருக்குது நாட்டிலே உங்கள் வினையிருக்குது வீட்டிலே. என்று மீனாட்சி அம்மையார் பாடிய தொழிலாளர் சட்டக் கும்மியைக் கேட்டு மெய்மறக்காதவர் யாருமில்லை.
அது மாத்திரமல்ல, மகாகவி பாரதியாரின் பாடல்களை மலையக மெங்கும் பாடிப், பரப்பிய பெருமைக்குரியவர் மீனாட்சி அம்மையார். தோட்டம் தோட்டமாகச் சென்று மீனாட்சி அம்மையார் பாரதியார் பாடல்களை பாட, அதன் பின்னர் கோ.நடேசய்யர் பிரசங்கம் செய்வார்.
திருமதி மீனாட்சி அம்மையார் பாடுவதில் மாத்திரமல்ல, பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய பாடல் தொகுப்பு, "இந்தியர்களது இலங்கையின் வாழ்க்கை நிலைமை” என்ற பெயரில் 1947இல் வெளிவந்துள்ளது. கோ.நடேசய்யர் நடத்திய தேசபக்தன் பத்திரிகை1929ஆம் ஆண்டு தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. நடேசய்யர் தொழிற்சங்கப் பணிகளுக்காக அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் “தேசபக்தன்” பத்திரிகை அச்சிடும் பொறுப்பை மீனாட்சி அம்மையார் ஏற்றார்.
44
ܘܠ] 鯊
穷
 
 
 
 
 
 
 
 
 

"தேசபக்தன்” பத்திரிகையில் மீனாட்சி அம்மையார் நிறைய எழுதினார். ஆசிரியர் தலையங்கள்கூட எழுதியுள்ளார். “ஸ்திரி பக்கம்” என்று பெண்களுக் காக பத்திரிகையில் ஒரு பக்கத்தை ஒதுக்கி அவரே பொறுப்பாக இருந்து பெண்களின் விழிப்புணர்வுக்காகப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
"இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் போராளிகளின் முன் வரிசையில் திருமதி மீனாட்சி அம்மையாரைக் காணலாம்” எனக் கலாநிதி என்.எம்.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆதரித்து அவர்களின் உரிமைக்காக 1939ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கோ.நடேசய்யர், ஜி.ஜி.பொன்னம்பலம், ஏ.அஸிஸ், ஐ.எக்ஸ்.பெரைரா ஆகியோருடன் மீனாட்சி அம்மாள் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி மறுநாள் ‘வீரகேசரி பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளைப் பிரசுரித்திருந்தது.
மீனாட்சி அம்மையார் எழுதுவதிலும், பேசுவதிலும் மட்டும் வல்லவராக விளங்கவில்லை. எதனையும் செயற்படுத்துவதில் தீவிரமாக இருந்துள்ளார். மகாகவி பாரதியாரின் பாடல்களில் அதிக ஈடுபாடுகொண்ட மீனாட்சி அம்மையார் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மலையகப் பெண்களின் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந் தவர் மீனாட்சி அம்மாள். அவரை ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச பெண்கள் தினத்தில் மலையக மக்கள் நினைவுகூர வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
( அன்பு நெஞ்சங்களே, N ஞானம் சஞ்சிகையை நாம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகிய பலருக்கும் அவர்களது இலக்கிய ஈடுபாட்டினைக் கருத்திற்கொண்டு இனாமாக அனுப்பிவருகிறோம். சந்தாதாரர்கள் பலர் அவர்களது சந்தா முடிந்தபின்னர், அதனைப் புதுப்பிப்பதில்லை. அவர்களுக்கும் நாம் தொடர்ந்து அனுப்பிவருகிறோம். இவர்களிற் பலர் ஞானத்துடன் எவ்வித தொடர் ந்துக்கொள்வதில்லை. P ஞானம் கிடைப்பதைக்கூட அறியத்தருவதில்லை.
ஞானம் சஞ்சிகையின் செலவினை ஈடுசெய்ய நாம் விளம்பரதாரர்களை ாடுவதில்bலை. முழுக்க முழுக்க சஞ்சிகையின் விற்பனையிலும் சந்தாப் பணத்திலுமே ற்செலவு ஆகியவற்றை முழுமையாக ஈடுசெய்யமுடிவதில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு கணிசமான தொகையை இழந்தே ஞானம் சஞ்சிகையை வெளிக்கொணர்கிறோம். ஞானம் சஞ்சிகையின் தரம் இதழுக்கிதழ் மேம்பட்டுவருவதை வாசகர்கள் அவதானித்திருப்பார்கள். ஞானத்தின் பக்கங்களைக் கூட்டுவதோடு அதன் தரத்தையும் oಷ್ರಣಾಳ್ತಿಲ್ಲ. ஞான El ö5 க்கு ஞானத் அனுப்புவதைத் தவிர்த்து, அதனால் மாதாமாதம் மீதப்படும் கணிசமான தொகையை, ஞானத்தின் தரத் மேம்படுத் Dasmas யோகிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தயவுசெய்து சந்தாதாரர்களாகச் சேர்ந்து எமது இலக்கியப் பணிக்கு )அலட்சியமாக இருப்பவர்களுக்கு "ஞானம் கிடைக்காது. ஆசிரியர் ܢܠ
45

Page 24
வண்ணிய் பிரதேசத் தமிழ் இலக்கிய முயற்சிகள் கருத்தரங்கும் கலை நிகழ்வும் ந.பார்த்திபன்
இலங்கைப் கலைக் கழகத் தமிழ் இலக்கிய குழுவின் ஆதரவில் வவுனியா நண்பர் கலை இலக்கிய வட்டமும், வவுனியா கல்வியியற் கல்லூரியும் இணைந்து நடாத்திய வன்னிப்பிரதேசத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய கருத்தரங்கும், கலை நிகழ்ச்சிகளும் மூன்று தினங்களாக (31-1-2003 - 2-2- 2003) வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. கருத்தரங்கு நிகழ்வுகள் தேசிய கல்வியியற் கல்லூரியிலும் கலை நிகழ்ச்சிகள் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திலும் முறையே காலை, மாலை நிகழ்வுகளாக நடைபெற்றன.
இலங்கைக் கலைக்கழகத் தமிழ் இலக்கியக் குழுவின் தலைவர் பேராசிரியர் க.அருணாசலம், தனது தொடக்கவுரையில் வன்னிப்பிரதேசம் தொடர்பான தமிழ் இலக்கிய முயற்சிகள் முதன்முதலாக காத்திரமாகவும், கனதியாகவும் ஆராயப்படுவதுடன் பேராசிரியர்கள், கலாநிதிகள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார். வரவேற்புரையில் இலங்கைக் கலைக்கழகத் தமிழ இலக்கிய குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், நிகழ்வுகள் சிறப்புற நடைபெற முன்னின்று உழைத்தவருமான சப்பிரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் வாகீச கலாநிதி திரு கனகசபாபதி நாகேஸ்வரன் குறுகிய கால ஒழுங்கமைப்பாயினும் எதிர்பார்த்ததைவிட கட்டுரை படிப்போர் சமூகமளித்ததோடு இக்கட்டுரைக் கருத்துக்கள் ஆசிரியர்களைச் சென்றடைவதே மிகப்பொருத்தமானதும் - அதிக பயனுள்ளதும் என்பதற்கிணங்க கல்வியியற் கல்லூரியின் நிறைநிலை ஆசிரியர்களின் பங்குபற்றல் நிறைவைத் தருகிறது எனக் குறிப்பிட்டார்.
முதலாம் நாள் நிகழ்வு "வன்னிப் பிரதேச வரலாறு. வவுனியா வளாகத் தலைவர் சு.மோகனதாஸ் தலைமையில் 'ஈழத்து வரலாற்றை நிர்ணயிக்க உதவும் வன்னியின் வரலாற்றுச் சான்றுகள்’ என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தனது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். இரண்டாவது கட்டுரையான 'வன்னியர் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்பேராசிரியர் சி.பத்மநாதன் சமூகமளிக்கத் தவறியபோதும் தமது கட்டுரையைச் சமர்ப்பித்ததால் அதனை பேராசியர் சி.க.சிற்றம்பலம் அவர்களே மனமுவந்து வாசித்தளித்தார். தொடர்ந்து நடைபெற்ற நாட்டாரியல் அமர்வானது யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ் வின்போது "வன்னிப்பிரதேச நாட்டாரிலக்கியங்களும் பண்பாடும்" என்ற தலைப் பில் எழுத்தாளர் 'முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களும், 'வன்னிப்
46

பிரதேசத்தின் கூத்துக்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் அருணா செல்லத்துரை அவர்களும், "வன்னிப்பிரதேச நாட்டார்கலைகளில் இசைமரபு என்ற தலைப்பில் கலாபூஷணம் மெட்ராஸ் மெயில் அவர்களும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இந்நிகழ்வின் கருத்துரையை ஆசிரியர், சைவப்புலவர் செ.குணபாலசிங்கம் நிகழ்த்தி நிகழ்வினை நிறைவு செய்தார்.
பின்னர், மாலை நிகழ்வாக கலை நிகழ்வுகளின்போது “சிலம்பின் செய்திகள்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவை சைவப்புலவர் செ.குணபாலசிங்கம் நிகழ்த்த, நர்த்தனாஞ்சலி நாட்டியப்பள்ளி மாணவிகளின் விநாயகர் துதி, பாரதி பாடல், கண்ணன் நடனம், கெளத்துவம் ஆகிய நடனங்கள் சிறப்பிக்க முதலாம் நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவெய்தின. இரண்டாம் நாள் நிகழ்வு ‘கவிதை வளர்ச்சி. இந்நிகழ்விற்கு கவிஞர் சு.வில்வரத்தினம் தலைமை தாங்க, மல்லிகையாசிரியர் டொமினிக் ஜீவா வரவேற்புரை வழங்க, "வன்னிப் பிரதேசக் கவிஞர்கள்” என்ற தலைப்பில் கல்வி அதிகாரி சு.ஜெயச்சந்திரனும், "ஈழத்துக் கவிதை வரலாற்றில் வன்னிப் பிரதேசக் கவிதைகளின் செல்வாக்கு” என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி செ.யோகராசாவும் ஆய்வுக் கட்டுரை கள் சமர்ப்பித்தனர். கருத்துரை LSL LSL LSLSLSL LSLSL LSL LSLSL LLSLSL LSLSLSL LSL LSLSLS தமிழ்மணி அகளங்கனால் வழங்கப் Z "ஞானம்" N UL-gl. புதிய சிந்தா"விபரம் !
தொடர்ந்து தொடர்பியல் உள்நாடு வித்தகர் அருணா செல்லத்துரை தனிப்பிரதி Lunt 30M
எழுதிய பண்டாரவன்னியன் வரலாறு UP RA 63 ) O என்ற நூல் வெளியீட்டினை வாகீச తిల్లా ஆண்டுச் சந்தாகுபால
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் ஆண்டுச் சந்தா eunt 300M மேற்கொண்டார். சந் தா காசோலை மூலமாகவோ அடுத்து நாடக வளர்ச்சி மனியோடர் மூலமாகவோ
பற்றிய கருத்தரங்கில் "வன்னிப் பிரதேச ;မ္ယစ္သမ္ဘီı://'; ர்கள் நாடகங்களின் செல்நெறி" பற்றிய மனியோடர் அனுபHபவா கள கட்டுரையை வவுனியா வளாக அதனை கண்டி தபால் நிலையத்
ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரை தில் மற்ற***** அனு'!
யாளர் ரீ கணேசனும், கருத்துரையை வேண்டும். O வருகை தந்திருந்த பார்வையாளர்களும் அனுப்பவேண்டிய பெயர், வழங்கினர். முகவரி :-
மாலை நிகழ்வில் பேரிலக் இN கியங்களில் எதிர்நிலைத் தலைவர்கள் 19/7, PERADENTYAROAD, என்ற சிறப்புச் சொற்பொழிவை இலக் KANDY. கியச் சுடர் ஐ.கதிர்காமசேகரன் வெளிநாடு ஆசிரியர் வழங்கினார். வவுனியா ஆண்டுச் சந்தா 20USS
நிருத்திய நிகேதன மாணவிகள் நடன N (2. செலவு 2-لات طاقة
நிகழ்வுகளை வழங்கிச் சிறப்பித்தனர். LSS LSSLSS LSLS SS LSSSSS SSS SS LSSLSS LSS LSSSSSSL
மூன்றாம் நாள் நிகழ்வு சிறுகதை வளர்ச்சி. இந்நிகழ்வுக்கு எழுத்தாளர்
47

Page 25
ஜனாப் எம்.ஏ.எல்.அஸ"மத் தலைமை தாங்க, "வன்னிப் பிரதேசத்தின் சிறுகதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளரும், கல்வி அதிகாரியுமாகிய திக்குவல்லை கமாலும், "வன்னிப் பிரதேசத்தின் சிறுகதைகளின் படைப்பாக்க நுட்பங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமாகிய ந.பார்தீபனும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தார்கள். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரும், எழுத்தாளருமாகிய தில்லை நடராஜா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிகழ்ந்த நாவல் வளர்ச்சி என்ற ஆய்வரங்கில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் 'வன்னிப் பிரதேச நாவல் வளர்ச்சி என்ற தலைப்பில் எழுத்தாளர் ஓ.கே.குணநாதனும், "வன்னிப் பிரதேச நாவல்களில் மண்வாசனை என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி ம.இரகுநாதனும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருமதி.இமெல்டா சுகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மாலை நிகழ்வில் 'கம்பராமாயணச் சிந்தனைகள் சிறப்புச் சொற் பொழிவை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்த, "வன்னிப் பாரம்பரியம்' என்ற நடனத்தை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் நிகழ்த்திச் சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வுகளில் பல சிறப்புமிக்கவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டதும், பல பெரியோர்கள் பிரதம விருந்தினர்களாக கெளர விக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கன.
இந்நிகழ்வுகளின் பதிவுகள், குறிப்பாக கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் நூலுருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பல்வேறுபட்டோரினதும் கோரிக் கையாக இருந்தது.
தமிழ் எழுத்தாளர்களது நூல் பிரசுரத்தேவைக்கு எழுத்தாளர்கள், ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து ஆவன செய்யலாம் எனத் திரு.தில்லைநடராசா குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வரங்கை முல்லைத்தீவில் செய்யும்படியும், தான் சகல உதவிகளையும் செய்துதர முடியும் என்றும், திருமதி. இமெல்டா சுகுமார் (அரசாங்க அதிபர், முல்லைத்தீவு) குறிப்பிட்டு, தமிழ் இலக்கியக் குழுவிடம் வேண்டுகோளையும் விடுத்திருந்தார். திருகோணமலையில் அடுத்தவிழா 19ம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய கருத்தரங்கு தொடர்பான ஆய்வுகள் பற்றிய கருத்தரங்கு செய்யப்படும் என்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கிய முயற்சிகள் அவசியமானதும், பயனுள்ளதெனவும், இது தொடர்பாகத் தான் முன்னரே தீர்மானித்திருப்பதாகவும் இலங்கைக் கலைக்கழகத் தமிழ் இலக்கியக் குழுவின் தலைவர் பேராசிரியர் க.அருணாசலம் குறிப்பிட்டார்.
எப்படியோ, பயனுள்ள தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய தேடலும், அதன் அனுகூலங்களும் பல்வேறு வகையிலும் உணரப்பட்டது. மேலும் இந்நிகழ்வு இவ்வாறான கருத்தரங்கும், கலைநிகழ்வும் மென்மேலும் சிறப்புற நிகழ்வதற்கு பல்வேறு வழிகளிலும் உதவியுள்ளது என்ற கருத்தையும் மறுக்க (plgus.
48

தஞ்சைக் குடிதல்
இரண்டு கருத்தரங்குகள் கடந்த மாதம் புதுச்சேரி இலக்கிய ஆய்வு மன்றம் தென்னிந்திய அளவிலான கருத்தரங்கொன்றை இரண்டு நாட்கள் நடத்தியது. முற்றிலும் இளைஞர்களையே அமைப்பாளர்களாகக் கொண்ட இம்மன்றம், இளம் ஆய்வாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இதில் களம் அமைத்துக் கொடுத்தது. தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் இளம் ஆய்வாளர்கள் பங்கு கொண்டு கட்டுரை வாசித்தனர். ஆரோக்கியமாகக் கலந்துரையாடினர். புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர்களான முனைவர்கள், பஞ்சாங்கம், மதியழகன், நாகப்பா நாச்சியப்பன் முதலியோரும் புதுவை மொழி, பண்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் இதில் ஆர்வத்துடன் பங்குகொண்டு இளைஞர் களை வழி நடத்தினர். பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணன் தலைமையில் இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றிக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. "ஒளிச்சேர்க்கை என்ற ஆய்வடங்கலும் வெளியிடப்பட்டது. புதுவை மொழிபண்பாட்டு நிறுவனத்தில் "ஈழத்து இலக்கியப் போக்குகள்" குறித்த உரை ஒன்றை நிகழ்த்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. பாரதியார், பாரதிதாசன், வாழ்ந்த இல்லங்கள், பாரதியாரின் நான்மணிமாலையில் போற்றப்பட்ட மணக்குளவிநாயகர் ஆலயம், ஆகியவற்றைத் தரிசிக்கும் வாய்ப்பும், நாடக, நாட்டுப்புற இசைக் கலைஞர், பேராசிரியர். கே.ஏ.குணசேகரனுடன் கலந்துரை யாடும் சந்தர்ப்பமும் ஓர் இனிமையான மாலையில் கிடைத்தது. பாரதியார் குயில்பாட்டுப்பாட கிடைத்த மாஞ்சோலை, இப்போது மக்கள் வாழும் சோலை யாகிவிட்டதாம்.
பூண்டி புஸ்பம் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் “உலகத் தமிழியல் ஆய்வு வளர்ச்சிக் கருத்தரங்கம்” ஒன்றை மூன்று நாட்கள் நடத்தியது. இக்கருத்தரங்கிலும் பெரும்பாலும் இளம் ஆய்வாளர்களே பங்குகொண்டனர். கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களும் ஓரளவு பங்கு கொண்டனர். அவுஸ்திரேலியாவிலிருந்து கலாநிதி ஆ.கந்தையாவும், மலேசியாவில் இருந்து ஓர் இளம் ஆய்வாளரும் வந்திருந்தனர். காந்தளகம் சந்நிதானந்தனும், நானும் இலங்கையர்கள். சுமார் 263கட்டுரைகள் அடங்கிய 'ஆய்வுமாலை இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. கட்டுரைகளுக்கு விதிக்கப்பட்ட பக்க அளவு, கட்டுரை வாசிக்கத்தரப்பட்ட காலஅளவு கட்டுரை களைத் தொகுத்தவர்கள் கடைப்பிடித்த பக்கம் தொடர்பான தீவிர கொள்கைகள் ஆய்வாளரைக் "கட்டிப்”போட்டுவிட்டன. பலபேர் கூடும் ஆய்வரங்குகள் பற்றிய விசனம் வலுவடைகிறது. இன்னும் சில அரங்குகள் அவதானித்த பின் அதனை எழுதுகிறேன். O O
வமகேஸ்வரன் தஞ்சாவூர். 49

Page 26
"ஞானம் பெப்ரவரி இதழில் எனது எழுத்துலகம் வெளிவந்திருந்தது. பார்த்து மகிழ்ச்சியில் திழைத்தது நெஞ்சம்; நன்றி. அதில் 1958 பாரதி கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தபோது, முதலாவது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிட்ட பாரதி மலருக்கு அமரர் பரவி சு.நெல்லையப்பரின் 'லோகோபகாரி ஏட்டில் வெளிவந்த அவரின் முகவரியைத் தேடிப்பிடித்து, அஞ்சல் எழுதி, வாழ்த்துக்கவிதை வாங்கி வெளியிட்டதையும், அச்சிட முன்னம் அதனை அவருக்கு அனுப்பி படி திருத்தி வாங்கியதைப் பற்றியும், எழுத்துலகத்தில் குறிப்பிடத் தவறிவிட்டேன்.
அத்தோடு எனது இல்லத்தரசியார் புஷ்பலீலாவதியோடும், புதல்வர்கள் நால்வருடனும் பதுளை இல்லத்தில் நலங்குன்றியவனாக வாழ்ந்து கொண்டிருக் கின்றேன் - என்பதையும் குறிப்பிடுவது நல்லது என்பது என் கருத்தாகும்.
இ.ஆ.தமிழோவியன், பதுளை.
புத்தாண்டதனில் புதுமெருகு பெற்று மலர்ந்திருக்கும் ஞானம் இதழ் மனங்களில் கூடப் புதுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது. அட்டைப் படம் கண்டு மாத்திரம் தரத்தைக் கணிக்கவில்லை. ஆழம்பொதிந்த ஆக்கங்கள், புதுமைப் புகுத்துதல், நடுநிலை வகித்தல் போன்றவற்றிற்காக ஞானத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. மேலாதிக்கத்திற்கு அடிபணிதல், அந்தஸ்திற்கு அடிபணி யும் போக்கு என்பவற்றை தகர்த்தெறியும் பாங்கில் 'மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும்' என்று ஞானம் வலியுறுத்தியுள்ளது என்பதை வெகு வாக வரவேற்கிறேன். சமூகத்து சீர்கேடுகள், அநீதி, அடக்குமுறைகள் தகர்த் தெறியப்படுவதற்கு ஞானம் இலக்கியம் என்ற களத்தினிலே ஆக்கங்கள் என்ற அம்புகளை எய்து அநீதியை வீழ்த்தி தர்மத்தைக் காக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு, அறுகுபோல் வேரூன்ற எனது இனிய வாழ்த்துக்கள். அக்னஸ் சவரிமுத்து, தலவாக்கல்லை.
ஞானம் பெப்ரவரி இதழ் கிடைத்தது, நன்றி. "தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி தரமான ஒரு சிறுகதை. சாரங்காவிற்குப் பாராட்டுகள். ஆசிரியர் தலையங்கம் அற்புதம். ஆணித்தரம் எனும் சொல்லின் அசல் வார்ப்பு. இலக்கியத்துறையில் மட்டுமல்ல, எந்தத்துறையிலும் யாரும் "சீசர் மனைவியல்ல என்பதுதான் யதார்த்தம். கி.பி. 2ம்நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகச் சொல்லப்படும் திருக்குறளிலும் காலத்திற்கொவ்வாத கருத்துக்கள் உண்டு. கம்பன் கவிச்சக்கரவர்த்திதான். ஆனால், சாதாரண ஒரு அரச குமாரனை - அயோத்தி இராமனை கடவுளின் (திருமாலின்) அவதாரமாகக் காட்டியமை அவன் செய்த பெரும் வரலாற்று மோசடி. இப்படி எத்தனையோ உண்மைகள். கருத்துச் சுதந்திரத்தைப் பெரிதும் போற்றும் ஞானத்தைக் கைகூப்பி வரவேற்கிறேன். - வாகரைவாணன்.
50
 
 

( "ஞானம் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான
சிறுகதைத் தொகுப்புப் போட்
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றலை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்குடனர் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பரிரதியிலான சிறுகதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் நடத்துகிறது.
நிபந்தனைகள்: 1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 08-06-2003அன்று நாற்பது வயதுக்கு
உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறு கதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா ஐயாயிரம் பரிசாக வழங்கப்படும். 5) பரிசுபெறும் சிறுகதைத் தொகுதி ஞானம் பதிப்பக வெளியீடாக நூலுருவம் பெறும். இரணர் டாவது பதிப்பரின் பதிப்புரிமை கதாசிரியருக்கு வழங்கப்படும் 6) பரிசுக்குரிய தொகுதின்ய, ஞானம் ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஒர் எழுத்தாளரும் இணைந்து தேர்ந்தெடுப்பர். அவர் களின்'முடிவே இறுதியானது. . 7) போட்டி முடிவு திகதி 30-4-2003. அதன்பின்னர் வந்துசேரும் படைப்பு கள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் ஞானம், 197 பேராதனை வீதி, கணி டி என்ற விலாசத்துக்கு பதிவுத்தபாவில் அனுப்பிவைக்கப்படவேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி' எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். . 9) நிபந்தனைக்கு உட்படாத தொகுப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது.
குறிப்பு : ஒர் இலக்கிய அனிபாரினர் அனுசரணை
யுடன் நடாத்தப்படும் இப்போட்டி வருடந்தோறும் .நடைபெறும் ܢܥ

Page 27
"ஞானம் பெப்ரவரி இதழில் எனது எழுத்துலகம் வெளிவந்திருந்தது. பார்த்து மகிழ்ச்சியில் திழைத்தது நெஞ்சம்; நன்றி. அதில் 1958 பாரதி கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தபோது, முதலாவது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிட்ட பாரதி மலருக்கு அமரர் பரவி சு.நெல்லையப்பரின் 'லோகோபகாரி ஏட்டில் வெளிவந்த அவரின் முகவரியைத் தேடிப்பிடித்து, அஞ்சல் எழுதி, வாழ்த்துக்கவிதை வாங்கி வெளியிட்டதையும், அச்சிட முன்னம் அதனை அவருக்கு அனுப்பி படி திருத்தி வாங்கியதைப் பற்றியும், எழுத்துலகத்தில் குறிப்பிடத் தவறிவிட்டேன்.
அத்தோடு எனது இல்லத்தரசியார் புஷ்பலீலாவதியோடும், புதல்வர்கள் நால்வருடனும் பதுளை இல்லத்தில் நலங்குன்றியவனாக வாழ்ந்து கொண்டிருக் கின்றேன் - என்பதையும் குறிப்பிடுவது நல்லது என்பது என் கருத்தாகும்.
இ.ஆ.தமிழோவியன், பதுளை.
புத்தாண்டதனில் புதுமெருகு பெற்று மலர்ந்திருக்கும் ஞானம் இதழ் மனங்களில் கூடப் புதுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது. அட்டைப் படம் கண்டு மாத்திரம் தரத்தைக் கணிக்கவில்லை. ஆழம்பொதிந்த ஆக்கங்கள், புதுமைப் புகுத்துதல், நடுநிலை வகித்தல் போன்றவற்றிற்காக ஞானத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. மேலாதிக்கத்திற்கு அடிபணிதல், அந்தஸ்திற்கு அடிபணி யும் போக்கு என்பவற்றை தகர்த்தெறியும் பாங்கில் 'மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்று ஞானம் வலியுறுத்தியுள்ளது என்பதை வெகு வாக வரவேற்கிறேன். சமுகத்து சீர்கேடுகள், அநீதி, அடக்குமுறைகள் தகர்த் தெறியப்படுவதற்கு ஞானம் இலக்கியம் என்ற களத்தினிலே ஆக்கங்கள் என்ற அம்புகளை எய்து அநீதியை வீழ்த்தி தர்மத்தைக் காக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு, அறுகுபோல் வேருன்ற எனது இனிய வாழ்த்துக்கள். அக்னஸ் சவரிமுத்து, தலவாக்கல்லை.
ஞானம் பெப்ரவரி இதழ் கிடைத்தது, நன்றி. "தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி தரமான ஒரு சிறுகதை, சாரங்காவிற்குப் பாராட்டுகள். ஆசிரியர் தலையங்கம் அற்புதம். ஆணித்தரம் எனும் சொல்லின் அசல் வார்ப்பு இலக்கியத்துறையில் மட்டுமல்ல, எந்தத்துறையிலும் யாரும் "சீசர் மனைவியல்ல என்பதுதான் யதார்த்தம். கி.பி. 2ம்நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகச் சொல்லப்படும் திருக்குறளிலும் காலத்திற்கொவ்வாத கருத்துக்கள் உண்டு. கம்பன் கவிச்சக்கரவர்த்திதான். ஆனால், சாதாரண ஒரு அரச குமாரனை - அயோத்தி இராமனை கடவுளின் (திருமாலின்) அவதாரமாகக் காட்டியமை அவன் செய்த பெரும் வரலாற்று மோசடி. இப்படி எத்தனையோ உண்மைகள். கருத்துச் சுதந்திரத்தைப் பெரிதும் போற்றும் ஞானத்தைக் கைகூப்பி வரவேற்கிறேன். - வாகரைவாணன்.
5
 

ஆ.
"ஞானம்" புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தொகுப்புப் போட்டி
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றலை வெளிக்கொணர வேணர்டுமென்ற நோக்குடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத் துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்புப் போட் புடயினை ஞானம் நடத்துகிறது.
நிபந்தனைகள்: 1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 08-06-2003 அன்று நாற்பது வயதுக்கு
உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறு கதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா ஐயாயிரம் பரிசாக வழங்கப்படும். 5) பரிசுபெறும் சிறுகதைத் தொகுதி ஞானம் பதிப்பக வெளியீடாக நூலுருவம் பெறும். இரணர் டாவது பதிப் பினர் பதிப் புரிமை சுதாசிரியருக்கு வழங்கப்படும் )ே பரிசுக்குரிய தொகுதியை, ஞானம் ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஓர் எழுத்தாளரும் இனைந்து தேர்ந்தெடுப்பர். அவர் களின்'முடிவே இறுதியானது. 7) போட்டி முடிவு திகதி 30-4-2003 அதன்பின்னர் வந்துசேரும் படைப்பு கள் போட்டிடக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் ஞானம் 197 பேராதனை வீதி, சுணர்பு என்ற விலாசத்துக்கு பதிவுத் தபாவில் அனுப் பரிவைக்கப்படவேணர்டும். தபால் உறையினர் இடது பக்க மூலையில் ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி' எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். 9) நிபந்தனைக்கு உட்படாத தொகுப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது.
குறிப்பு ஓர் இலக்கிய அர்ைபாரினர் அனுசரணை யுடனர் நடாத்தப்படும் இப்போட்டி வருடந்தோறும் தடைபெறும்.

Page 28
யதார்த்தத்தின் (
வெள்ளை உடையணிந்த விதவைபோற் கிடந்த எங்கள் நெல்வயல்கள் புதுமணப்பெண் போலப் புதிதணிந் பூத்துச் சிரிக்கட்டும். பொகங்கிச் சரிந்த எங்கள் தோட்ட வெளிகளிலே துலாப்பாட்டு கேட்கட்டும். குண்டாற் கிளைமுறிந்தும் உரமிழக் எங்கள் வனங்களுக்கு இளமை தி மங்களம் பதுங்க, மரணம் திரிந்தகடல் பொங்கட்டும் புத்துயிர்த்து எங்கள் நிலத்துக்குப் பள்ளி எழுச்சியென"ஏலேலோ" வள்ளங்கள் வாழ்வோடு மீளட்டும். போர்சாய்த்து தென்னை பனைகளெல்லாம் சிலி இறுதிர்கர வண்ண்பராக வரங்கள் மலரட்டும். அழபட்ட கைகளினை அன்பு பி6ை நடுகல்லுஞ் சாந்திபெற நியாயங்கிடைக்கட்டும். அற்புதமோ. ஆன்மிகமோ. சொற்சிலம்ப அரசியலோ. சற்றுஞ் சுணங்காமல் நிரந்தரமாய் கொண்டரட்டும் , இல்லை இந்த நாடு சதைக்குவிய5

கோரம் 2
অন্ম 를 器 تسمية 莎 ー[
حے 垩 s மீண்டுமினிக்
トーリごあ நT நம்பட்டும்.
கேட்கட்டும்.
ர்த்து எழும்பட்டும்.
ீரக்கட்டும்.
நிம்மதியைக்
பாகும்.
Multi Graphics; (777-83.2300,0777-213253