கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.04

Page 1
ो. Galla
| - ը :
ീ
 

லக்கியச் சஞ்சிகை

Page 2
இரைச்சலுள் மெளனம்
மெளனம் அலைந்து திரிந்த மினல் வெளி - அமைதி பரந்து விரிந்த பெரு
fi].}} fTRITW] =
சேப்தம் உரிைந்து நிறைந்த பெருவெளி தனியே அமர்ந்திருக்கிறேனர் எதிரே -
அலைமேல் அலை மோத "ஓம்காரத் தொனியோடு இரைச்சல் ஓங்கிப் பெருகி ஒலிக்கும் பெரும் அடப் h
மேளனம் அமைதி - ரிசப்தம் இரைச்சல் - கிரிந்து ஒரு வியம்,
மெளனத்துள் இரைச்சல் அடங்க இரைச்சலுள் மெளனம் ஒடுங்க,
ஏகாந்த உணர்வு, ஏணி மேல் ஏறு
ஏணிதான் தேவை. கடறகரை தனி இருப்பு படிகளைத் தாண்ட பேரின்பம் தரும், படிகளே வேண்டும்
- " ..
uni. அறிவுதான தேவை. அனுபவித்துப் பார் ஞானத்தைத் தாண்ட
இன்பம் தெரியும், டு எனமே வேஈர்டும். .)GTRE ۶ آیه یعنی:
உணர்மையே அறியம் கருவியே ஞானம்,
 
 
 
 
 
 

பகிர்தலின் மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்
ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர்* ஞா.பாலச்சந்திரன்
ஓவியர் நா. ஆனந்தன்
கனணி அமைப்பு கெ.சர்வேஸ்வரன் தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி, as I.C.L. -08-47857O (Office)
08-23.4755 (Res) Fox - DE-234755
E-Mail
\gnanam_magazineடுyahoo.com
உள்ளே.
நேர் காணல் : 28
சிறுகதை
இன்பம் எங்கே? . L. H. ச.முருகானந்தன் "நித்திய சமர்ப்பனம்" . 17 i.iன்.சந்திரகாந்தி
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . தரை.மனோகரன் மலையக கலை இலக்கியம் . B
லெனின் நதிாைனம்
இலக்கியப் பணியில் இவர் .
ந.பார்த்திபன்
கவிதைகள்
இரைச்சலுள் மெளனம் . தானர்டுதலீ .
சி.மெளனகுரு
பொற்கிழி .டி.
கவிஞர் ர.இக்பால்
y'ın dı!"süsü)ğu Glı döin süt gi..............
ஒருபரானி
ரீனிடுமொரு யுத்தம் மூண்டுவிடுமோ.
செ.குனரத்தினம்
உலகப் பொலினம் உத்தியோகம் .
வாகரைவானண்
திரும்பிய் பாய்க்கிறேன் .
ஈழத்து இலக்கிய
நம்பிக்கைகள் -03 . வாசகர் பேசுகிறாள் . . . . . . .
3.
晶宝
I
直曲
II
GI
5.
효5
5

Page 3
ഗ്ഗീ AN ESFSR Tam ( கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். أر
ஈழத்து நவீன இலக்கியத்தின் இருப்புக் கணக்கெடுப்பு அன்பான வாசக நெஞ்சங்களுக்கு “ஞானம்’ உளம்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மலரும் புத்தாண்டை நம்பிக்கையுடனும் எதிர்காலத்திட்டங்களுட னும் எதிர்கொள்ளும் நாம், கடந்த வருட வெற்றிகளையும் செயற் பாடுகளையும் மதிப்பீடு செய்வது வழக்கம். புத்தாண்டில் இருப்புக் கணக்கெடுப்பது வாணிபத்துறையின் மரபாகும். இருப்புக்கணக்கெடுத்தல் வாழ்க்கையிலும் வாழ்க்கையுடன் அத்தியந்தத் தொடர்புடைய கலை இலக்கியத்திலும் வேண்டற்பாலது.
கடந்த வருட அறுவடையாகக் கிடைத்த நூல்கள், அவற்றை வெளி யிட்ட பதிப்பகங்கள், பெற்றுக்கொள்ளக்கூடிய வியாபார நிலையங்கள் இவையடங்கிய ஒரு இருப்புக்கணக்கெடுப்பு கலை இலக்கிய உலகில் பிரயோசனமான செயற்பாடாக அமையும். இது ஈழத்து இலக்கிய உலகின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானதொன்றாகும். இம்முயற்சி இத்துறைகளில் ஈடுபாடுடையவர்களால் சிரத்தையுடனும் சீரியமுறை யிலும் மேற்கொள்ளப்படவேண்டும். இதனைப் பல்கலைக்கழகங்களும், கலாசார அமைச்சும், சுவடிகள் திணைக்களமும் இணைந்து செய்தல் சுலப மானதாக அமையும். இது இன்றைய இலக்கிய மாணவர்களின் தேடலுக்கு உறுதுணையாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் கலாசார அமைச்சின்கீழ் இயங்கும் இலக்கியக்குழு, இலக்கியச் செய்திமடல் ஒன்றினை வெளியிட்டு இலக்கிய உலகில் விநியோகித்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். சில துறைகளில் தனிப்பட்ட முயற்சிகளும் நடை பெற்றன.
நவீன இலக்கியத்தின் முன்னோடி முயற்சியாக கனக செந்தி நாதன் வெளியிட்ட 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலும், சில்லையூர் செல்வராசனர், நா.சுப்பிரமணிய ஐயர், பேராசிரியர் அருணாசலம்
4
 
 
 

ஆகியோர் நாவல் துறைபற்றி எழுதிய நூல்களும், மலையகச் சிறுகதைத் துறைபற்றி தெளிவத்தை ஜோசப் எழுதிய நூலும், ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிபற்றி செங்கை ஆழியானின் நூலும் விதந்துரைக்கப்படவேண்டியவை. பத்தி எழுத்துத்துக்கள், விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்களில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, மு.தளையசிங்கம், முகம்மது சமீம், ம.மக்கீன், கே.எஸ்.சிவகுமாரன், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், வரதர், அன்பு மணி, முல்லைமணி, முருகையன், மு.பொன்னம்பலம், செ.யோகநாதன், செ.யோகராசா, துரை.மனோகரன், அயேசுராசா, செம்பியன் செல்வன், சிதில்லைநாதன், சோ.சந்திரசேகரன், சி.சிவசேகரம், எம்.ஏ.நுஃமான், சித்திர லேகா மெளனகுரு, வ.இராசையா, எம்.கே.முருகானந்தனர், சிவன்னியகுலம், ஏஇக்பால், அந்தனிஜிவா, சாரல் நாடன், அன்னலட்சுமி இராசதுரை, தேவகெளரி, விஜயன், லொரனிஸ் செல்வநாயகம், வி.செல்வநாயகம், நஇரவீந்திரன், சத்யா ஆகியோருடன் இன்னும் சிலரின் முயற்சிகளும் கணக்கெடுப்பில் கொள்ளப்படவேண்டியவை.
குரும்பசிட்டி கனகரத்தின், உலகத்தமிழர் ஆவணக் காப்பகத்தின் பணி மிகச் சிறந்ததும் காலத்தின் தேவையுமாகும். இலைமறை காயாக இருந்து இலக்கிய ஆர்வத்துடன் நூல்களைச் சேகரித்து சேமித்து வைத்திருக்கும் இலக்கிய ஆர்வலர்களின் பணியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து இலக்கிய உலகம் பிரயோசனப்படுத்தவேண்டும்.
இலக்கிய இருப்புக்கணக்கெடுப்பானது நாம் எங்கு நிற்கிறோம், எந்தப்பரப்பில் பின்தங்கியுள்ளோம் - இவற்றை எவ்வாறு எதிர்கொண்டு ஆவன செய்தல்வேண்டும் என்ற சீரிய சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் உந்துசக்தியாக அமையும். நூல் நிலையப்பொறுப்பாளர்கள், இத்துறையில் சீரிய பணியினை நல்கலாம். கலை இலக்கியச் சிற்றேடுகள் காலத்துக் காலம் வரும் நூல்களைத் தத்தம் ஏடுகளின் மூலமாக இலக்கிய உலகிற்கு அறியத்தரவேண்டும். சென்ற ஆண்டு ஈழத்தில் அதிக தொகையான நூல்கள் வெளிவந்ததாக ஒரு மதிப்பீடு கூறுகிறது.
நமது நூல் விநியோகமுறை ஆரோக்கியமானதாக இல்லை. ஒருபுறம் நூலாசிரியர்கள் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்து நூல்களைத் தயாரித்துவிட்டு அவற்றை விநியோகம் செய்யமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். மறுபுறம் புதிய நூல்களைப் பெற விரும்பு கிறவர்கள் அவற்றை எங்கே பெறுவது எனத் தெரியாது திண்டாடு கிறார்கள். இந்நிலை மாறவேண்டும். இதற்குப் படைப்பாளிகள், பதிப்பாளர் கள், அரசியல் அமைப்புகள், அரசுசார்பற்ற நிறுவனங்கள், பத்திரிகைகள், கலை இலக்கியச் சிற்றேடுகள் கூட்டு முயற்சி செய்து புதிய செயற்திட்டங் களை உருவாக்கவேண்டும். உதாரணமாக இந்தியாவில் கூட்டுமுயற்சியாக ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் நடைபெறுவது போன்று, நம்நாட்டி லும் நூல் கண்காட்சியும் விற்பனையும் செய்யலாம்.
‘ஞானம்’ புத்தாண்டுச் சிந்தனையாக இலக்கிய உலகிற்கு இதனைச் சமர்ப்பிக்கிறது.
5

Page 4
ச.முருகானந்தன்
ਠੰUਏ, 669
அதிகாலைக் கனவில் வசந்தி வசந்தமாய் வந்து சிரித்தாள். அவன் கணி களால் அவளை அருகே அழைத்தான். அவள் பிகுபண்ணுவது போல தலையாட்டிவிட்டு, பின் அவ னருகில் வந்தாள். இதற்கிடையில் பெற்றோரின் உரையாடல் மோகனின் தூக்கத்தைக் கலைத்தது. விழித்த போது கனவென்று புரிந்தது. எழும்ப மனமின்றி அம்மாவும், அப்பாவும் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி படுத்திருந்தான்.
“மழை பெய்யுற சிலமனைக் கானன். ஐப்பசியும் முடியப்போகுது. இனி விதைச்சு எப்படிப் பயிராக்கப் போறம்? பட்டகாலிலை படும் எண்ட மாதிரி எல்லாப் பக்கத்தாலையும் கஸ்டமாயிருக்கு". அப்பா சலிப்போடு அம்மாவிடம் கூறினார்.
"விதைச்சுப் பயிராக்கினாப்போல என்ன பெரிசா வெட்டி எடுக்கப் போறி யளே?. உரமும் இல்லை. விளை யுற நெல்லுக்கு விலையுமில்லை." இலட்சுமி பரிவோடு முருகேசரைப் பார்த்தாள். "மிசின் உழவுக்கும் ஆன மிசினுமில்லை எண்ணை, டீசலும் இல்லை.” அம்மாவின் பதிலிலும் சலிப்பு. "மாட்டை வித்ததுதான் மோட்டுத் தனம்" முருகேசரின் காலம் கடந்த ஞானம்! விற்காமலும் சீவியப்பாட்டை ஒட்டியிருக்கமுடியாது. பொருளாதாரத் தடை ஏற்பட்ட பின் கடந்த சில வருடங்களாக வாழ்க்கைப் பாடே
கஸ்டமாகிப் போய்விட்டது. அவர் களுக்கு மட்டுமா?
ஊரோடு ஒத்தப்படி. பட்டினி போட்டு தமிழினத்தைப் பணியவைக்கப்பார்க்கினமோ?
"யசோ. அப்பாவுக்குத் தேத் தண்ணி கொண்டுவந்து கொடு." "நான் இங்க முத்தம் கூட்டிறன் அம்மா."
"இவள் எப்பொழுதும் இப்படித் தான். இடக்கு முடக்காக பதில் சொல் வாள். பருவமடைந்த நாட் தொட்டே அம்மாவுடன் போட்டி".
"பின்னடிக்கு உதவுமெண்டு பிள்ளையளை வளர்த்தால், அதுகள் இப்பவே மல்லுக்கட்டிக்கொண்டு நிக்குதுகள்.”
*பிள் ளையளை ஏணி திட்டுறாயப்பா. அதுகளும் நடக்கிற யுத்தத்தால உள்ளம் பாதிச்சுப் போயிருக்குதுகள். உவன் மோகன் எங்க. இன்னும் எழும்பேல்லையோ?” "சோதினையும் முடிஞ்சுது. வயல் வேலையும் இல்லைத்தானே! இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத் திருக்கின்றான்.”
"ம். போன முறையும் கம்பசுக் குப் போகக் காணாமல் போச்சு. இந்தமுறை எண்டாலும் உச்சில் அம்பாள் அருள் கிடைக்குமோ?”
“சும்மா கடவுளைக் கூப்பிடா தையுங்கோ. உவன் என்ன படிக் கிறானே?. சந்தியில நிண்டு பொடிய
 

ளோட கும்மாளம்” - அம்மாவும், அப்பாவும் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டு படுத்திருந்தான் மோகன். இனியும் படுத்திருந்தால் வாங்கிக்கட்ட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு எழுந்தான். உள்ளமும் உட லும் சோர்வாக இருந்தது.
*ம். கம்பஸ் என்ற பெற்றோரு டைய ஆசை அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது. ரியூசனுக்கே காசு தர முடியாதவை, கம்பஸிலவிட்டுப் படிப்பிக்கப்போயினமாம். அவர்களது ஆசை நியாயமானது. ஆனால் யதார்த்தமானதா? ஏதாவது வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பது அவனது ஆசை. வீட்டுக் கஸ்டத்தைப் போக்கவேண்டு மானால் அதுதான் வழி. ஆனால் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக அல்லவா இருக்கிறது. லஞ் சம், அரசியல் செல்வாக்கு எதுவும் இல்லாமல். அவனும் போடாத விண்ணப்பம் இல்லை. எனினும் நாட்டில் தலை விரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் முன்னே அவனது தராதரத்துக்கு வேலை கிடைப்பதாயில்லை.
காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வழக்கம் போல சந்திக்கு வந்தான் மோகன். எதிர்த்திசையில் ஒரு ட்ரக் வந்து கொண்டிருந்தது. அவனருகில் வந்து அது மெதுவாக நின்றதும் ஏறிட்டு நோக்கினான்.
அது போராளிகளின் வாகனம். அதிலிருந்து குதித்து அவனை நோக்கி வந்தான் ஒருவன். “ஒ. சீலன்” சீருடையில் மட்டுக்கட்டுவது கொஞ்சம் கஸ்டமாக இருந்தது.
சீலன் இவனுடைய நண்பன். பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித் தவன். ஓ.எல். படிக்கும் போது
இயக்கத்தில் சேர்ந்தவன். இயக்கத் துக்குப் போன பின்னர் இரண்டு மூன்று தடவைகள் அவனைச் சந்தித்திருக்கின்றான்.
மோட்டார் சைக்கிளில், டிரக்கில், எல்பில் இப்படி ஒவ்வொரு முறையும் காணும்போது மோகனின் மனதிலும் ஒருவித எண்ணம் பிறக்கும். ‘நானும் இயக்கத்துக்குப் போகவா? இவன் வளர்ந்த சூழ்நிலை, வீட்டுநிலை காரணமாக இவ்வெண்ணம் முளை யிலேயே கிள்ளப்பட்டுவிடும். இந்த இனிய வாழ்வை விட்டுவிட்டு போரா டப்போவதோ?
"மோகன் அடிபாட்டுக்கு போறன். திரும்பி வருவனோ என்பது வந்த பிறகுதான் நிச்சயம். உன்னைக் கண்டது மகிழ்ச்சி. வீட்டில் சொல் லாத. பயப்படுங்கள். எப்படி இருக் கினம்? சீலனின் வார்த்தைகள் மோகனை இவ்வுலகிற்குத் கொண்டுவந்தது.
"சுகமாக இருக்கினம்..” என்ற மோகன், அவனைப் பெருமிதத்துடன் பார்த்தான். "உன்னைப் பார்க்கத்தான் ஆசைப்படுகினம்.” யூனிபோம் போட்டு மிசின்கன்னும் கொண்டு சிமாட்டா நடந்து வந்த சீலனைப் பார்க்கப் பார்க்க இவனுக்கும் ஆசையாக இருந் தது. ‘எங்கையிருந்து இவ்வளவு சுறு சுறுப்பு வந்தது? என்று பிரமித்தான் மோகன்.
தோற்றம் சின்னன் எண்டாலும் ஆளின்ற உசார் கண்ணில தெரியிற தீவிரம். இவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்’ என்று நினைத்துக் கொண்டான் மோகன். உலக இன்பத் தைத் துறந்து தமக்காக வாழாது பிறர் வாழ தம் வாழ்வைத் தியாகம் செய்து.ம்.
"அடிபாடு. ஆனையிறவே?” மோகன் நண்பனை நோக்கினான்.

Page 5
“எந்த நேரமும் நாங்கள் தயாராக இருக்கிறம். இந்தக் கிழமைக்குள்ள மாவீரர் தினத்தோட நடக்கும். கேள்விப்படுவாய் தானே.” அவன் உற்சாகமாகச் சிரித்தான்.
"இடம் இரகசியம்” கண்களைச் சிமிட்டினான்.
"பயப்படாமல் சொல்கிறாய். ஒவ் வொரு சண்டையிலும் எத்தனை பேர் சாகினம்? ཆ་
“இது எங்கட தேசம் மச்சான். எதிரி இதை ஆக்கிரமித்து அட்டுழியம் செய்யிறான். இப்படியே விட்டுக் கொண்டு போனால் எங்கட இனமும் இருக்காது. மண்ணும் இருக்காது. நான் மட்டுமே...? என்னைப் போல எத்தனை ஆயிரம் பொடியள்.!" அவன் அவசர அவசரமாகச் சொல்லி விட்டு "நான் போட்டுவாறன்.” என்றபடி ஓடிச் ハゲー சென்று ‘ரக்கில்' / ஏறிக் கைகாட்டி : னான். 多ー ކީ - ஓடிச் சென்று حمس" தானும் ஏறலாம்: போலிருந்தது மோக லுக்கு. -
ஒரு கணமதான. அபபுறம எல 6ònrưỏ Lị6mỏ6uff60ữupnuủ... “g)ịưôưDH அழுவா. அக்கா தாங்கமாட்டா. வசந்தி.ம். மனதில் உலக இன்ப அலைகள்!
சீலன் போய் இரண்டு மூன்று நாட்களில் ஆனையிறவு அடிபாடு தொடங்கியதாகச் செய்திகள் வந்தன. கனவில்கூட நினைத்துப் பார்க்கமுடி யாத வெற்றிகளைக் குவித்துக் கொண்டு போராளிகள் முன்னேறிப் பாய்ந்த செய்தி தமிழ் மக்களின் மனங்களைக் குளிரவைத்தன.
ஓயாத அலை ஒயந் தபோது தாயகக் கழுத்தை நெரித்துக் கொண் டிருந்த கூலிப்படை பல தசாப்தங் களுக்குப் பின்னர் முற்றுமுழுதாக விரட்டப்பட்டிருந்தது.
சீலனுக்கு என்ன ஆனதோ என்று நினைத்தப்படி மோகன் பத்திரிகை களில் மாவீரர்களின் பெயரைத் தேடியபோது சீலனின் பெயர் இருக்க வில்லை என்பது நிம்மதியளித்தது. எனினும் வாழவேண்டிய வயதில் வீரத் தியாகம் புரிந்த பல தன் வயதை ஒத்த போராளிகளுக்காகக் கண்ணிர் சிந்தினான்.
அடுத்தமுறை சீலனை சில மாதங்களுக்குப் பின்னர் சந்திக்க முடிந்தது. கெந்திக் கெந்தி இநடந்து வந்துகொண்டிருந் ஒரு கால்
உற்சாகத்துடனும், உறுதியுடனும் நண் பனைப் பார்த்துச் சிரித்தான்
*சீலன். செயற்கைக்கால் முண்டு
கொடுத்துக் கொண்டிருந்தது.
மோகனுக்கு அழுகை வந்தது. கூடவே பெருமிதம்.
"இப்போது என்ன செய்கிறாய்?" "கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடு பட்டிருக்கிறேன் . காலை யுத்தத்ததில் இழந்து விட்டமையினால் அடிபாட்டுக் குறுப்பில் இருக்கமுடிய வில்லை.”
மோகன் மெளனமாக அவனை நோக்கினான்.
“எங்கட மண்ணில இலட்சக் கணக்கான நிலக் கண்ணிகளை எதிரி புதைச்சு வைச்சிருக்கிறான். இதை நாம் அகற்றாதுவிட்டால் எத்தனையோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பாவி மக்களுடைய கால் பறி போகும். உயிரிழப்புக்கள் ஏற்படும். என்னால இயன்ற பணியை நான் செய்யிறன்.”
காலை இழந்த பின்னரும் தன் மக்களுக்காக சேவை செய்யும் அவன் எங்கே உலக இன்பங்களைத் தேடி ஓடும் நான் எங்கே? என்று நினைத்த மோகனுக்கு குற்ற உணர்வில் மனது உறுத்தியது.
"மச்சான். எங்கட பூமி எங்கும் நெல்லு விதைச்சமாதிரி நிலக் கண்ணி விதைக்கப்பட்டிருக்கு. இவற்றை எல் லாம் அகற்ற ஆளணி தேவை."
"நீயும் வருகிறாயா? என்று அவன் கேட்காமல் கேட்கிறானா?
ஓ! புனிதமான தொழில். இத னால் எத்தனை உயிர்களைக் காக்க
லாம். அங்கவீனமாவதைத் தடுக்க லாம். மோகன் பலவாறு யோசித் தான்.
"சம்பளம் கொடுக்கிறம். தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின்ர கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு ஆளணி போதாது.” சீலன் தொடர்ந்து சொல் லச் சொல்ல இவனது மனதில் ஒருவித உத்வேகம் பிறந்தது. ‘போராடத்தான் போகவில்லை இதை யாவது செய்யலாம்.
"நானும் வாறன் மச்சான்.” நண்பனைப் பெருமிதத்தோடு நோக்கிய சீலன், “வீட்டில் சொல்லிப் போட்டு, வாற முதலாம் திகதியி லிருந்து வாவன்.”
சீலன் போய்விட்டான். மோகன் தான் செய்யப்போகும் வேலை பற்றி வீட்டில் கூற விரும்பவில்லை. கண்ணி வெடி அகற்றுவது என்றால் அம்மா விடமாட்டார். வீட்டுக்குச் சென்ற மோகன் அம்மாவிடம் தனக்கு வேலை கிடைத்துவிட்டதாகக் கூறினான்.
முருகேசர், இலட்சுமி, தங்கை யசோ எல்லோரும் மகிழ்ந்தனர். இனி அடுப்பு புகையுமல்லவா? வேலையைப் பொறுப்பெடுத்த மோகனுக்குப் பெரு மிதமாக இருந்தது. நவீன உபகரண வசதிகள் இன்றி தாமாகவே தயாரித்த உபகரணங்கள் மூலம் அங்கு நுணுக்கமாகவும் பொறுமையாகவும் செயற்பட்டு நிலக் கண்ணிகளை அகற்றிக் கொண்டிருந்த இளைஞர் களை வியப் போடு பார்த்தான் மோகன்.
சீலன் அவனுக்கு கண்ணிவெடி அகற்றும் நுணுக்கங்களைச் சொல் லிக் கொடுத்தான். ஆபத்தான வேலையை தற்பாதுகாப்புடன் பாதிப்பு ஏற்படாவண்ணம் செய்யும் லாவகத்தை வெகுவிரைவிலேயே மோகன் கற்றுக் கொண்டான்.
“வேலை கஸ்ரமா?” என்று கேட் டான் சீலன்.
"இல்லை மச்சான். கஸ்ரமோ சுகமோ எங்கட மனதிலதான் எல்லாம் தங்கியிருக்கு. மனிதனாகப் பிறந்து சொகுசாக வாழ்கிறதுதான் இன்பம் என்றில்லை. இந்தச் சமூகத்திற்கு சேவை செய்வதில் கிடைக்கும் இன்பம் பேரின்பம்". மோகன் நிறைவோடு கூறினான்.
நெற்றிக்கர்ை’விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக்கண் பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம் பெறவேணர் டுமெனில், நூலின் இருபிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பரினால், நூல் பற்றிய அறிமுகக்குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும்.
- ஆசிரியர்.

Page 6
ACA 67Փ99 துரண்டும் எண்ணங்கள் | குலாநிதி தரைமனோகரன்) கம்பீரக் குரல் வாய்ந்த பண்பட்ட நடிகர்
சிவாஜிகணேசன் காலத்தில் திரைப்பட நடிப்புத் துறையில் புகுந்த மூவர் அவருக்குப் போட்டியாளர் களாக விளங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேஜர் சுந்தரராஜன், எஸ்.ஏ.அசோகன், ஏ.வி.ஏம்.ராஜன் ஆகியோரே அம்மூவரும் ஆவர். இவர்களுள் மேஜர் சுந்தரராஜன், பிரபல பாடகர் ரி.எம்.செனந்தரராஜன் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களுள் ஒன்றாகிய تستقيقة " 8 جيج பட்டினத்தார் படத்தில் அறிமுகமாகி, பாலசந்தரின் ് ബീ' மேஜர் சந்திரகாந்த் (1966) என்ற படத்தின் மூலம் Aޗަރ/ · பெரும் பிரபலமாகியவர். பெரும்பாலான பழைய ;ހށ/ நடிகர்களைப் போன்று நாடகத் துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்த அவர், திரைப்படநடிகரான பின்னரும் நாடகத்துறையோடு தமக்குள்ள தொடர்பினை அறுத்துக்கொண்டார் அல்லர்.
சிவாஜிகணேசன் சுந்தரராஜன் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். உயர்ந்த மனிதன்(1968) என்ற திரைப்படத்தில் "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!” என்ற பாடல் காட்சியில் சிவாஜிகணேசனும், மேஜர் சுந்தரராஜனும் அற்புதமாக நடித்திருந்தனர். இரு நடிகர்களுக்கும் ஏற்றமுறையில் குரலை மாற்றி ரி.ஏம்.செனந்தரராஜன் அந்தப்பாடலை அருமையாகப் பாடியிருந்தார். தாமும், சந்தரராஜனும் அந்தப் பாடல் காட்சியில் நடித்தபோது, தாம் கொஞ்சம் அசந்திருந்தால் சுந்தரராஜன் நடிப்பில் தம்மை வென்றிருப்பார் என்று சிவாஜிகணேசணே மணந்திறந்து இவள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். சுந்தரராஜன் நாடகங்கள் சிலவற்றில் தாம் நடித்திருந்த ஒரு சில பாத்திரங்களைத் திரைப் படத்தில் சிவாஜிகணேசனுக்கு வழங்கியிருந்தார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, ஞானஒணி(1972) என்ற திரைப்படத்தில் சிவாஜிகணேசன் ஏற்றபாத்திரம். சுந்தர ராஜனும் அத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சிவாஜிகணேசனைப் போன்று பல்வேறு மாறுபட்ட பாத்திரங்களில் சுந்தரராஜன் நடித்திருக்காவிடினும், தமக்குரிய பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துமுடிக்கும் ஆற்றல் மிகுந்த பண்பட்ட நடிகராக அவர் விளங்கினார். கம்பிரமான குரல்வளம்கொண்ட நடிகர்களுள் அவரும் ஒருவர்.
இலங்கையிலும் தமிழ்த் தொலைக்காட்சி நாடகமொன்றில் அவர் நடித்திருந்தார். ராமதாஸ் தயாரித்து இயக்கிய அத்தொலைக்காட்சி நாடகத்தில் சிங்கன நடிகை வினா ஜயக்கொடியும் நடித்திருந்தார்.
பண்பட்ட நடிகர், நடிகையான வி.கே.ராமசாமி, பண்டரிபாய் ஆகி மறைவைத் ஆந்தராஜனின் மறைவும் தமிழ்த் 60LLL a-69{GöG SCB Estés UV85VSUL. ாேஃடுேம்
சொன்னால் கோபிக்கக்கூடும் என்றாலும் சொல்லாமல் விடமுடியாத சில சங்கதிகளும் இருப்பதுண்டு. இலங்கை நீண்ட காலமாகச் சுத்தமான
10
 
 
 
 

தமிழ் நூற்பதிப்புக்குப் பெயர்போன நாடு. ஆறுமுகநாவலர் காலந்தொட்டு, இந்நாட்டுக்கு அந்தப் புகழ் இருந்துவந்துள்ளது. ஆயினும், அண்மைக் காலங்களில் அந்தப்பெரும் புகழுக்கு இந்நாடு அருகதை உடையதுதானா என்ற கேள்வி எழத்தொடங்கியுள்ளது. அந்த அளவுக்குத் தமிழ் நூல்களில் எழுத்துப்பிழைகளும், அச்சுபிழைகளும் மலியத் தொடங்கிவிட்டன. இத்தகைய பிழைகள் எதுவும் அற்ற ஒரு நூலுக்கு எதிர்காலத்தில் சாகித்திய மண்டலம் தனிப்பரிசு ஒன்றை வழங்கினால்கூட நல்லது போலத்தான் தோன்றுகின்றது. பொதுவாக இலங்கையின் தமிழ் நூல்களின்நிலை இவ்வாறிருக்க, மலையகத்தில் இருந்து வெளிவரும் நூல்கள், பிரசுரங்களில் இடம்பெறும் எழுத்துப்பிழைகளும் அச்சுப்பிழைகளும் சொல்லுந்தரமன்று. எக்கச்சக்கமான எழுத்துப்பிழைகள், அச்சுப்பிழைகள் இன்றி, எந்த நூலும் மலையகத்திலிருந்து வெளிவரக்கூடாது என்ற சபதம் எடுத்ததைப்போன்று, இப்பிரதேசத்திலிருந்து வெளிவரும் நூல்கள் முதலியன விளங்குகின்றன. இந்நிலை ஒருபுறத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
இத்தகைய போக்கு வளர்வது மலைகத்துக்கு மாத்திரமல்ல, இலங்கை முழுவதற்கும் ஆரோக்கியமானது அன்று. எந்தத் தாயும் தன் பிள்ளை குறைப் பிரசவமாகப் பிறப்பதை விரும்பமாட்டாள். எழுத்தாளர்களின் நிலையும் அத்தகை யதே. எழுத்துப்பிழைகளும், அச்சுப்பிழைகளும் அற்ற நிலையில் தம் வெளியீடு கள் அமையவேண்டும் என்பதில் எழுத்தாளர்களும், பிரசுரகர்த்தாக்களும் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டும். இல்லையேல், பிழைகள் மலிந்த நூல் களைத்தான் நாம் பார்த்துப் பார்த்துச் சலிப்படையவேண்டி ஏற்படும். நாமும் நம்மவர்களும்
"நம்ம நாடு ரொம்ப நல்ல நாடு” என்று பாடுவதற்குத்தான் நம் அனைவருக்கும் பெருவிருப்பம். ஆனால், அப்படி பாடமுடியவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் நெஞ்சைத் துளைக்கிறது. நமது நாட்டுக்கு நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில், நமது அரசியல்வாதிகளுள் ஒருசாரார் மிகுந்த அக்கறையாகவே இருந்துவருகின்றனர் என்பது கண்கூடு. சமாதானத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் "திறமை” வாய்ந்தவர்கள் தாம் என்பதை உலகுக்கு உணர்த்திய “பெருமை” நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு உண்டு.
நாட்டின் தலைவிதியின் காரணமாக தலையில் எதுவும் இல்லாதவர்கள் பொதுஜனங்களின் தலைவர்களாக விளங்குவதுதான் வேடிக்கைக்கும் விசனத்துக்கும் உரிய விடயம். ஈராக்கில் யுத்தம் வேண்டாம். (உண்மையில் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக் கண்டிக்கத்தக்கதே) என்று கத்தத் தெரிந்த இவர்கள் உள்நாட்டில் மட்டும் யுத்தம் வேண்டும் என விரும்புவது, உலகத்தில் பெரிய நகைச்சுவை. நாட்டின் பொறுப்புமிக்க அரசியல்வாதிகளாக விளங்கவேண்டியவர்கள் நேரத்துக்கு ஒரு பேச்சும், ஆளுக்கு ஒரு கதையும் பேசும் நரித்தந்திரம் மிக்கவர்களாகவே விளங்குகின்றனர். இத்தகைய கோமாளிகள் நச்சுப்பல்லி நச்சரிப்பதைப்போல எந்த நேரமும் சமாதானத்துக்கு எதிராக எதையாவது அலட்டிக்கொண்டு திரிகின்றனர். இந்நாட்டில் சமாதானம் ஏற்பட்டால், தங்களின் இருப்பு, தங்களின் எதிர்காலம் எல்லாமே கேள்விக் குறியாகிவிடும் என்ற அச்சத்தில் இத்தகைய அரசியல்வாதிகள் திணறுகிறார்கள். உலகத்தின் மிகப்பெரிய பைத்தியக்காரர்கள் இந்நாட்டின் அரசியல்வாதிகள் என்ற பெயரில் உலவுகிறார்கள்.
சமாதானத்தை குழப்ப முயலும் அரசியல்வாதிகள் ஒருபுறமிருக்க,
11

Page 7
வேட்டைக்காரர்களோ, தாம்தான் இந்த நாட்டை ஆளுகின்றனர் என்ற பிரமையில் விசித்திரமாக நடந்துகொள்கின்றனர். தங்களுக்குப் பிடிக்காத எதுவும் சமாதான முயற்சிகளில் இடம்பெற்றுவிடக்கூடாது என்ற தோரணையில் அவர்களின் போக்கு அமைந்துள்ளது. ஆளுகின்ற, எதிர்க்கின்ற அரசியல்வாதி களும் வேட்டைக்காரர்களுக்குச் சார்பாகவே நடந்து கொள்கின்றனர். வேட்டைக் காரர்கள் விரும்புவதையும், சொல்வதையுமே இத்தகைய அரசியல்வாதிகள் கிளிப்பிள்ளைபோலத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அதனால், நாட்டில் சமாதான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பினும், வேட்டையாடிப் பழகிய வேட்டைக்காரர்களின் திமிர் இன்னமும் அடங்கவில்லை. இதேவேளை, இன்னொரு வேடிக்கையும் உலகத்தின் சில நாடுகளில் நடக்கிறது. தர்மத்தைக் காக்க வேண்டியவர்களே, மாபாதகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் காப்புக் கட்டி ஆசிர்வாதம் செய்கிறார்கள். இவற்றைக் கண்டு தர்மதேவதை தன் கைகளால் வயிற்றில் அடித்துக்கொண்டு அலறுகிறாள்.
இந்நாட்டில் ஒருசாரார் நடந்துகொள்ளும் விதமும் மிகவும் வேடிக்கை யாக இருக்கின்றது. ஒருபுறத்தில் உலக நாடுகளோடு கலந்துபேசி உறவு கொண்டு சமாதான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதேவேளை, சமா தானத்துக்காகக் கைகுலுக்கும் கைகளாலேயே, உலக வல்லரசு ஒன்று வழங்கும் யுத்தக் கப்பலைக் கைநீட்டி வாங்குகிறார்கள். "நாங்கள் ஆடுவதும் பாடுவதும் காசுக்கே; நல்லா ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கே. காசுக்கே. காசுக்கே." என்ற நிலையில், பிற நாடுகளில் இருந்து உதவிகளை வரவழைப்பதற்காகத்தான் இவர்கள் சமாதான வேஷம் போடுகிறார்களோ என்ற நியாயமான சந்தேகமும் தோன்றாமல் இல்லை.
இன்னொரு வேடிக்கையும் சில நாடுகளில் இடம்பெறுவதுண்டு. கோட்டுச்சூட்டுக் கழற்றாத சில அரசியல்வாதிகள் தம்மைத்தாமே "தேச பக்தர்கள்” என்று பிரகடனம்செய்து பெருமிதம் கொள்வதுண்டு. தமது தாய் மொழியை மறந்து, தமது இன மக்கள் படும் துன்பங்களை அலட்சியப்படுத்தி பெரும்பான்மையின மக்கள் மத்தியில் மட்டும் “தேசபக்தர்” என்ற பெருமை பெறுவதையே இத்தகைய கேவலமான அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். தமது மொழி, இனம், நாடு உட்பட அனைத்தையும் நேசிப்பவர்களே உண்மை யான தேசபக்தர்கள். கோட்டுச் சூட்டுக் கழற்றாத வேடதாரிகள் எல்லாம் தேசபக்தர்கள் அல்லர்.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகச் சில தமிழ்க் கல்வி மான்களின் போக்கு விசனிக்கத்தக்கது. பிறரை எப்போதும் நொட்டை சொல் வதையே தமது தலையாய பணியாகவும், இலட்சியமாகவும் பொழுதுபோக்கா கவும் கொண்ட இவர்கள், தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களையும், அபிலாசைகளையும், எழுச்சிகளையும் கொச்சைப்படுத்துவதையே தமது பெருமை யாகக் கருதிக்கொள்வர். இவர்களது அணுக்கத் தொண்டர்கள் சிலர், கதிரைக் குக் கையையும், யானைக்குக் கண்ணையும் காட்டத்தக்க மகாவல்லமை பொருந்தியவர்கள். தமது அணுக்கத் தொண்டர்களின் குறைகளையே நிறை களாகவும், சாமர்த்தியமாகவும் கருதி, இக்கல்விமான்கள் பெருமிதம் கொள்வர். 12

நெற்றிக்கண்
நால் விமர்சனம்
நூல் : செவத்த கமலம் எழுதியவர் : கா.வேலாயுதன்
இலங்கையின் சிறுகதைத்துறை யில் அவ்வப்போது புதிய படைப்பாளி களும் புதுநீர் பாய்ச்சி வருவதைக் காணமுடிகிறது. திறமையான சில எழுத்தாளர்கள் இவ்வாறு தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கிவந்துள்ளனர். இவர் களுள் ஒருவராகவே தமது முதலாவது சிறுகதைத்தொகுதியான செவத்த கமலம் (2002) மூலம் தம்மை இனங் காட்டத்தொடங்கியுள்ளார், கா.வேலா யுதன்.
அவரது இச்சிறுகதைத்தொகுதி யில் பத்துப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. பலதும் பத்துமாகப் பல் வேறு விடயங்களைத் தம் கதைக் கருக்களாக வேலாயுதன் தேர்வுசெய் துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள எல்லாப் படைப்புகளும் சிறப்பாக உள் ளன என்று சொல்வது எழுத்தாளரின் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆனால் சில சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு வளம் சேர்க்கின்றன என்பது உண்மை. காவல், கரத்தைக்காதர், பேசாத பாசம் ஆகிய மூன்று சிறுகதைகளும் சிறப்பாக அமைந் துள்ளன. அண்ணாமலை, மனம் ஒரு. ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாக விளங்குகின்றன. மற்றையவை சாதாரணமான ஆக்கங் களே.
அண்மைக்காலமாகவே வேலாயு தனின் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆயினும், அவர்
13
இத்துறையில் சாதிக்கத் தொடங்கி யுள்ளார் என்ற திருப்தியும் மேலும் சாதிப்பார் என்ற நம்பிக்கையும் மேற் குறிப்பிட்ட சில சிறுகதைகள் வாயி லாக ஏற்படுகின்றன. ஈழத்துச் சிறு கதைகள் பற்றி எதிர்காலத்தில் எழுது பவர்கள் கா.வேலாயுதனைப் புறக் கணிக்க முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.
ஆங்காங்கு சிற்சில இடங்களில் எழுத்து, அச்சுப் பிழைகள் இடம்பெற் றுள்ளன. சில சிறுகதைகளில் பாத்திர உரையாடல்களின்போது இரட்டை மேற்கோள்குறிகள் சரிவரப் பயன் படுத்தப்படாமலும் உள்ளன. அச்சுப் பதிப்பின்போது ஏற்பட்ட தவறுகளா கவும் அவை இருக்கலாம். ஆயினும், இவ்விடயத்திலும் கவனம் தேவை.
கா.வேலாயுதனின் செவத்த கமலம் என்ற சிறுகதைத்தொகுதி, எதிர்காலத்திலும் அவரின் சிறுகதை கள் தொகுதிகளாக வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது. நூல் : இலங்கைத் திரை யுலக முன்னோடிகள் எழுதியவர் : தம்பிஜயா தேவதாஸ் இலங்கைத் திரைப்படத்துறை பற்றித் தமிழில் எழுதிவருவோருள் முக்கியமானவர் தம்பிஐயா தேவதாஸ். ஏற்கனவே இலங்கைத் தமிழ்ச் சினிமா விண் கதை (1994), (2000), பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா (2000) ஆகியவற்றை எழுதிய அவர், மூன்றாவதாக இலங்கைத் திரையுலக முன்னோடிகள் (பாகம் 1) என்ற

Page 8
நூலை 2001 இல் எழுதி வெளியிட்டுள் ளார். நாற்பது பேரைப் பற்றிய தகவல் களை நூலாசிரியர் நூலில் தந்துள் ளார். இவர்களுள் ஒரு சிங்களவரும், மூன்று முஸ்லிம்களும், மூன்று பெண் கலைஞர்களும் அடங்குவர். இந் நூலுக்கு அணிந்துறை அளித்த பிரபல திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா இலங்கைத் தமிழ்த் திரைப் படத்துறை வளர்ச்சி பெறாமைக்கான காரணங்களைக் கூறிச்செல்கிறார். அவை கவனத்திற் கொள்ளப்படத் தக்க கருத்துக்கள்.
இந் நூலில் இலங்கையின் சிங்கள, தமிழ்த் திரைப்படங்களோடு தொடர்புபட்ட முன்னோடிகள் பலரின் முயற்சிகள் பற்றி விரிவாகக் கூறப்படு கிறது. பலருக்குத் தெரியாத பல விடயங்கள் இந்நூல் மூலம் வெளிச் சத்துக்கு வந்துள்ளன. பல திரைப்படக் கலைஞர்களின் திறமையும், உழைப் பும், தியாகமும் இந்நூல் மூலம் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இவற் றோடு இலங்கையில் திரைப்படத் துறையை வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்புமிக்க இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சீர் கேடுகளும் இந்நூல் மூலம் அம்பலத் துக்கு வந்துள்ளன. திரைப்படக் கூட்டுத் தாபனம் இலங்கைத் தமிழ்த் திரைப் படங்களுக்குச் செய்துள்ள நயவஞ்சக வேலையை நூலாசிரியர் பின்வருமாறு தெரிவிக்கிறார்: “83 ஜூலைக் கலவரம் பல தமிழ்ப் படங்களை அழித்து விட்டது. எஞ்சியிருந்த தமிழ்ப் படங் களை யாரிடமும் கேட்காமல் திரைப் படக் கூட்டுதாபனம் எரித்துவிட்டது. இவற்றை யாரிடம் போய்ச் சொல்லி அழுவது?” சிங்களச் சினிமாவின் பொன்விழாவையொட்டி, இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுதாபனம் பல
14
சிங்களக் கலைஞர்களைப் பாராட்டிக் கெளரவித்தது. ஆனால், அத்துறை யின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தமிழ்க் கலைஞர்களைப் புறக்கணித்துவிட்டது. கூட்டுத்தாபனத்தின் இத்தகைய குறைகளை நூலாசிரியர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
நூலில் ஆங்காங்கு சிற்சில இடங்களில் இடம்பெறும் எழுத்துப் பிழைகள், அச்சுப்பிழைகளைத் தவிர்த் திருக்காலாம்.
இலங்கைத் திரைப்படத்துறை தொடர்பாக நூலாசிரியர் கொண் டுள்ள ஆர்வத்தையும், அக்கறையை யும், உழைப்பையும் இந்நூல் இனங் காட்டுகிறது. நூலாசிரியர் தமது ‘என்னுரையில்", "இது "இலங்கைத் திரையுலக முன்னோடிகள்’ என்ற தொடர்நூலின் முதலாம் பாகமாகும். இதன் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளிவரவேண்டுமா இல் லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்” எனக் குறிப்பிடு கிறார்.
இதற்கான ஒரே பதில் இந்நூலின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் வெளிவரவேண்டும் என்பதே.
: தெய்வம்
பேசுவதில்லை எழுதியவர் : ந.பாலேஸ்வரி
இலங்கையில் தமிழ்நாவல் துறையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராக ந.பாலேஸ்வரி விளங்குகிறார். சிறுகதைத்துறையில் ஏற்கனவே ஒரு தொகுதியை வெளி யிட்டுள்ள அவரின் இரண்டாவது சிறுகதைத்தொகுதி, ‘தெய்வம் பேசுவ தில்லை' (2000). இந்நூலில் நூல் பதிப்புத்தொடர்பான குறிப்பில், நூல்
நூல்

வெளியான ஆண்டு 2000 என்றும், நூலாசிரியரின் முன்னுரையில் 2001 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் படி, 2000ஆம் ஆண்டு நூல் வெளி வந்து 2001 இல் முன்னுரை எழுதப் பட்டதாக அல்லவா கொள்ளவேண்டி யிருக்கிறது? வாசகரைக் குழம்பச் செய்கிறது, ஆண்டு வித்தியாசம்!
இத்தொகுதியில் பாலேஸ்வரி 1960 -1980களுக்கு இடையில் எழுதிய இருபத்தொன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நீண்ட காலமாக ஈழத் துத் தமிழ்ப் புனைகதைத்துறையில் ஈடு பட்டு வந்த பழம்பெரும் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுதி என்ற முறையில் இந்நூலை அணுகும்போது சற்று ஏமாற்றமே ஏற்படுகிறது. காதல் பிறவாத கதை, எழுதவே மாட்டேன், சாந்தி கேட்ட ஆசியஜோதி, தண் டனை போன்ற சிறுகதைகள் ஓரளவு குறிப்பிடத்தக்கவையாக விளங்கு கின்றன. பெரும்பாலான படைப்புகள் அனுபவம் வாய்ந்த ஓர் எழுத்தாளரின் ஆக்கங்கள் போன்று தோன்றவில்லை. வளரும் எழுத்தாளர் ஒருவர் ஆர்வத் தில் எழுதிய கதைகள் போலவே அவை அமைந்துள்ளன.
பாலேஸ்வரி இத்தொகுதியி லுள்ள பெரும்பாலான சிறுகதைகளுக் குத் தமது கற்பனையையே மூலாதார மாகக் கொண்டுள்ளார் என்பதை அவற்றைப் படிக்கும்போது உணரமுடி கின்றது. தமது படைப்புகளில் யதார்த் தத்துக்கு முக்கியத்துவம் வழங்கப் பெரும்பாலும் அவர் தவறிவிடுகிறார். சும்மா கதைவாசிப்போரையே அவர் திருப்திப்படுத்த முயல்கிறார். பாத்திர உரையாடல்கள் யதார்த்தத்துக்குப் புறம்பாகச் செயற்கையாக அமைந்
15
துள்ளன. ஒருசில கதைகளில் ஒருசில இடங்களில் மட்டும் உரையாடல்களிற் பேச்சுமொழியைப் பயன்படுத்தி யுள்ளார். பல கதைகளிலும் பல பாத் திரங்களும் பழங்காலத்துத் தமிழ்ச் சினிமா வசனங்கள்போன்ற வார்த்தை களையே பேசுகின்றன. இலங்கையில் ஸார், டாக்டர் என்றெல்லாம் பேசுவது வழக்கமில்லை. தமிழ்நாட்டு எழுத் தாளர்களின் பாணியைச் செயற்கை யான முறையில் பாலேஸ்வரி பின் பற்றமுனைகிறார் என்பது இவற்றின் மூலம் தெரிகிறது. ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைத்துறையில் பழம்பெரும் எழுத்தாளர் ந.பாலேஸ்வரின் பங் களிப்புப் பற்றிய கேள்வியை எழுப் பும்முறையில் இத்தொகுதி அமைந் துள்ளது.
எழுத்தாளர் ந.பாலேஸ்வரி எதிர்காலத்திலாவது தரமான ஒரு சிறுகதைத்தொகுதியைத் தரவேண்டும்.
நூல் : இன்னமும் வாழ்வேள் எழுதியவர் : மாவை வரோதயன்
ஈழத்துத் தமிழ்க்கவிதை பாரதி வழிவந்த நவீனகவிதை வழி யிலும், பிச்சமூர்த்தி வழிவந்த புதுக் கவிதைப் போக்கிலும் தடம்பதித்துச் செல்கிறது. எழுபதுக்குப்பின் புதுக் கவிதை தனது வேகத்தை அதிகரித்த போதிலும், அவ்வப்போது நவீன கவிதைத்தொகுதிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றுட் சில காத்திரமான தொகுதிகளாக அமைவ துண்டு. சில தொகுதிகள் கவிஞர்கள் எதிர்காலத்தில் ஒளிவீசுவர் என்பதை இனங்காட்டுபவையாக விளங்கு கின்றன. மாவை வரோதயனின் (சிவ கடாட்சம்பிள்ளை சக்தியகுமாரன்) இன்னமும் வாழ்வேன் (2000) என்ற

Page 9
கவிதைத் தொகுதி இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
இத்தொகுதி மாவை வரோத யனின் கவிதா ஆர்வத்தைப் புலப் படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதை களில் கணிசமானவை கவிஞரின் ஆற்றலை ஓரளவு இனங்காட்டுகின் றன. அளவான தொப்பி, இன்று என் தாலாட்டு, தேருவர் காணிர், காற் றடிக்கத்தான் தெரியும் போன்றவை நாட்டார் பாடல் வடிவத்தில் அமைந் துள்ளன. சமூகத்தின் குறைகளைக் கண்டு சீறும் குணமும், மக்கள் நல் வாழ்வின் மீது ஈடுபாடும் , மொழியின் மீது ஆழ்ந்த பற்றும் போலித்தனங்களின் மீது வெறுப்பும் கொண்ட ஒரு கவிஞராக மாவை வரோதயன் இத்தொகுதிமூலம் தம்மை இனங்காட்டுகின்றார்.
இக் கவிதைத் தொகுதி
வளர்ந்துவரும் ஒரு கவிஞரை இனங் காட்டுகின்றது. அவர் மேலும் வளர் வதற்குக் கவிதைத் துறையில் இன்னும் உழைக்கவேண்டும். நவீன கவிதைத்துறையில் தத்தம் உழைப்பை நல்கிய மஹாகவி, முருகையன், நீலா வணன், எம்.ஏ.நுட்மான், சில்லையூர் செல்வராசன் போன்றோரை மனங் கொண்டு மாவை வரோதயன் தமது கவிதா உழைப்பை மேலும் வலுப் படுத்திக் கொள்வது நல்லது.
நூலில் ஆங்காங்கு இடம் பெறும் எழுத்துப் பிழைகளும், அச்சுப் பிழைகளும் தமக்கு நூலாசிரியர் உரிய இடமளித்துக் கெளரவித்துள் ளார் என்று கருதாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
வளரக்கூடிய கவிஞரான மாவை வரோதயன் கவிதைத்துறை யில் மேலும் வளருவதற்கு இடமுண்டு.
(பொற்கிழி
வயதில் முதிர்ந்த கிழடுகளும் வனப்பை இழந்த இளககளும் துயரம் தோய்ந்த குருடுகளும் தூய்மையற்ற வறியவரும்
ஒருங்கே சேர்ந்து வரிசையுடன் ஒருமித் தங்கே நிற்பதுமேன்?
இருங்கள் தபால் கந்தோர் அது இப்போ திவர்கள் வந்திருத்தல்
வசதி யறியா ஏழைகட்கு வறுமை நிதியாய் அரசளிக்கும் \gణమిల பெறவே என அறிவீர்!
வறுமைக் கோட்டின் கீழுள்ளோர்
ཡོད།
இதனைச் சிலபேர் பொற்கிழியாய் ஏற்றுப் பெருமை கொள்வதினால் உதவும் அரசு உயர்ந்ததுதான் உதவாதவரும் இதைப் பெறுவார்!
கவிஞர் ஏஇக்பால்
16
 

(॰ಣಾ
பளிங்குக் கற்கள் பதிந்த மண்டபத் தரையில். சுவரோரமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட நினைவு மலர்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. வள்ளியம்மை, வல்லிபுரத்தாரின் சட்டமிடப்பட்ட படத்திற்கு முன்பாக ஒளிர்ந்து பிரகாசித்துக் கொண்டிருந்த வெள்ளிக் குத்துவிளக்கின் ஒளி வெள்ளத்தில் ஒரு நினைவு மலரைப் பிரித்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முதலில் சமர்ப்பணம்.
வையத்துள் எம்மை வாழ்வாங்கு வாழவைத்த தெய்வம்.
கற்றோர் சபையில் முந்தியிருக்க வைத்த பிதா.
பாசமிகு அப்பா வேலுப்பிள்ளை வல்லிப்புரம் அவர்களுக்கு
இந்நூல் காணிக்கையாகட்டும். வள்ளியம் மையினி மனம் கரைந்து கசிந்தது.
இரண்டு பிள்ளைகள். இரு வருமே ஆண்கள். மூத்தவன் நாதன் மணமுடித்த கையுடன் மனைவியுடன் வெளிநாடு சென்றவன். இரண்டு பிள்ளைகள் பிறந்து. வளர்ந்து. ஆளாகிய நிலையிலும் தனது பெற் றோரை நினைந்து தாய்நாடு திரும்ப எண்ணாதவன். புாதுகாத்து. வளர்த்து ஆளாக்கிய தந்தைக்குச் சுகயினம் என்று தொலைபேசியில் தெரிவித் ததும் கவலைப்பட்டான். செலவினைப் பாராது அடிக்கடி தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திக்கொண்டு
சுகநலன் விசாரித்தான். தந்தை இறந்தசெய்தி அறிவிக்கப்பட்டதும் அழுதேவிட்டான்.
செலவைப் பெரிதாக எண்ணாமல் அப்பாவின் இறுதிக்கிரியைகளை ஊர் வியக்கும்படி செய்யவேண்டும் எனத் தொலைபேசி வழியான அறிவுறுத் தல் வழங்கினான்.
அதனைக் காட்டிலும் அவனால் என்ன செய்யமுடியும்? மக்கள் இருவரும் பாடசாலை போய்விட்டால் மனைவி வீட்டில் இருக்கமாட்டாள். மனைவி வீட்டுக்கு வரும்நேரம் அவன் தொழிலுக்காகப் புறப்பட்டு விடுவான். யாருடன் யார் பேசி முடிவெடுப்பது? தவிர அனைத்து மரண வீடுகளிலும், "அழுது என்ன பலன்; எல்லோருமேதான் ஒரு நாளைக்கு a masü Gum alai Gg) TLó' என்ற "டயலக்கை திரும்பத் திரும்பச் சொல்லி வந்ததால், 'சா என்பது சகஜம் என்கிற மகத்தான உண்மை
அதிலும் வெளிநாட்டு எம் ஜனங்கள் தமது நாளாந்த வாழ்க்கை ஒட்டத்தில் இப்படியான இடையூறுகளை விவேகத் துடன் தவிர்த்து வருகின்றார்கள்.
இளையவன் சங்கர் பயிற்றப்பட்ட
ஆசிரியர். எழுத்துத்துறையில் அவ
17
னுக்கு இருந்த ஈடுபாடுகாரணமாகச் சில இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், போன்றோரின் , “பாராட்டு விழா எடுத்தல்', 'பொன் னாடை போர்த்திக் கெளரவித்தல்

Page 10
போன்ற புகழச்சிகளில் அவன் மருணி டிருந்ததுடன் வெளிநாடு சென்றவர்களைத் தூற்றியபடி. தாய் மண்ணுக்கு ஒரு முத்தம்', 'தாய் நாடே எம் நாடு, எம் உயிர் போயினும் ஆகிய உணர்ச்சி ஊட்டும் நாவல் களை எழுதியிருந்தான்.
வல்லிபுரத்தார் சுகயினம் காரண மாகப் படுக்கையில் வீழ்ந்ததுமே சங்கர், அவனது மனைவி, பிள்ளை கள் நால்வர் அனைவருமே குடும்ப
மாக வந்து வள்ளியம்மையுடன் தங்கி
விட்டார்கள்
செத்தவீட்டுச் செல்வு மூத்தவன்; அந்தியேட்டிச் செலவு இளையவன் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் செத்தவீடு “பெரி யவனின் பணச் செலவில் பெரும் எடுப்பாக நடாத்தப்பட்டது.
மறுநாள் நடைபெறவுள்ள அத்தியேட்டி சபிண்டீகரண கிரிய்ை களுக்கான சகல ஏற்பாடுக்ளிலும் சங்கர் மூழ்கியிருந்தான்.
வள்ளியம்மையின் கையிலிருந்த நினைவுமலர் கைநழுவி மடியிலி விழவும் அவள் தனது சிந்தன்ை களிலிருந்து மீண்டவளாக திரும்பவும் மலரைக் கையிலெடுத்துப் பக்கங் களைப் புரட்டினாள். S.
வல்லிபுரத்தாரை நேரில் பார்ப் பது போன்று பிரமையூட்டும் அழகிய வர்ண நிழற்படம். படத்தின் கீழ் ‘மண்ணில், “விண்ணில், என்ற குறிப் புடன் அவர் பிறந்த திகதியும் இறந்த திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தன.
‘ச்சா. சீமானுக்கு எழுபது வயது மாச்சு. யாராவது சொல்லமுடியுமா? வள்ளியம் மை தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். காதல் கண்ண்ை மறைப்பது போல, அன்பு வயோதிப்ம் தீட்டும் குரூரத் தளும்புகளைக் காண
8
விடுவதில்லை! சாவை நெருங்கும் சமயத்திலும் உண்மையான நேசத் துடன் வாழும் தம்பதியினர் இந்த அனுபவத்தை நிச்சயம் எய்துவர்.
இந்த உலகில் அவளைக் கைப் பிடித்த நாள்முதல் பற்பல கஷ்டங் களையும் சவால்களையும் எதிர் கொண்டு.உண்மை, நேர்மை, சத்தி யம் ஆகிய நற்பண்புகளைக் கடைப் பிடித்து. மனைவி பிள்ளைக்ளின் சுக சீவியத்திற்காக அரும்பாடுபட்டு உழைத்து. அவர்கள்ை எவ்வித குறையுமின்றி பாதுகாத்த. வளர்த்த. ஆளாக்கிய அந்த உயிர் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமலும் எவரிடமும் ஒரு நேர சேவகத்தை எதிர்பார்க்காமலும் புண்ணிய ஜீவனாக இந்த உலகை நீத்துச் சென்றுவிட்டது. வள்ளியம்மை சோகமே உருவமாக அமர்ந்திருப்பதைக் கண்ணுற்ற சங்கர், அவனது வேட்டித் தலைப்பில் பிடித் தபடி இழுப்பட்டு வந்த கடைக்குட்டி மகனை விரட்டி அனுப்பிவிட்டு தாயை அண்மித்தான். m
'அம்மா. நெடுகக் கவலைப்பட்டுக் கொண்டு இராதையணை; ஆருக்கு இல்லாத கவலை, தாயைத் தேற்றி னான்.
தம்பி. நீ கொண்ணன் மாதிரி வெளிநாட்டுக்காரனில்லை. செலவிை அளந்து செய். நூறு பக்கத்திலை கல் வெட்டு அடிக்க வேணுமே? என்று தாய் கூறவும்.
அம்மா. எங்களுடைய அப்பா தான் நோ பட்டாலும் எங்களுக்கு ஒரு நோவு வரக்கூடாது எண்டு நின்ைச்சி வாழ்ந்தவர். அப்பாவுக்கு செலவழிக்
காமல் நாங்கள் ஆருகி கு
செலவழிக்கிறது?
சங்கர் கூறியதிலும் நியாயம்
இருக்கத்தான் செய்தது. வல்லிபுரத்

தார் ஒரு தடவையாயினும் பிள்ளை களைப் பார்த்து, "நான் உங்களிலை அன்பாயிருக்கிறன்' என்று சொல்லி யிருக்கமாட்டார். ஆனால் அவருடைய ஒவ்வொரு செயலும் அவரது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர் உணவருந்தும் சமயங்களில் தனது இரு வாரிசு களையும் இருபக்கங்களிலும் அமர வைத்துக்கொள்வார். அவரது தட்டு களிருக்கும் தெளிவுகளெல்லாம் இரு பிள்ளைகளினதும் தட்டுகளுக்கு மாறி விடும். வள்ளியம்மை என்னதான் சொன்னாலும் கேட்கமாட்டார்.
அப்பாவுக்குச் செலவழிக்காமல் நாங்கள் யாருக்குச் செலவழிப்பது என இளைய மகன் கேட்டது வள்ளியம் மைக்குப் பெரும் ஆத்ம திருப்தியைக் கொடுத்துவிட்டது. அவளையறியாமல் விழிகளிலிருந்து கண்ணிர் பெருகி யது. தான் வணங்கி வழிப்படும் கண வனை, தாமும் போற்றித் துதிக்கும் பிள்ளைகளைப் பெற்ற அன்னையரில் தாமும் ஒருத்தி என நினைத்ததும் அத் தாய்மனம் பூரித்தது.
"எண்டாலும் உவன் மூத்தவனும் மனுசி பிள்ளைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை சில தினங் களாவது தள்ளிபோட்டுவிட்டு தகப் பனுடைய சா வீட்டுக்கு வந்து போயிருந்தால்தான் பெருமையாய் இருந்திருக்கும் அவளது ஆழ்மனம் சிந்தித்து அழுதது.
இளையவன் சென்றுவிட அவள் மீண்டும் நினைவு மலரின் பக்கங் களைப் புரட்டத்தொடங்கினாள்.
வாழ்க்கை வரலாறு. விநாயகர் வணக்கம். தேவாரம். திருவாசகம். திருவிசைப்பா. திருப்பல்லாண்டு. கந்தபுராணம். திருப்புகழ். சிவ புராணம். திருப்பொற்சுண்ணம்.
19
மனைவி புலம்பல். மக்கள் புலம்பல். மருமக்கள் புலம்பல். பேரப்பிள்ளை கள் புலம்பல். நன்றி கூறல் வம்சா வழி. ஒ. முப்பது பக்கங்களுக்குள் அனைத்து அம்சங்களுமே அடங்க விட்டாலும்கூட நூலின் கனதி குறைய வில்லை.
மறுபக்கத்தைத் தட்டினாள். முன்னுரை. முகவுரை தொடர்ந்த பக்கத்தில் கவர்ச்சியான எழுத்துக் களில். நங்கை - நாவல்!
வள்ளியம்மைக்கு எதுவுமே புரிய வில்லை. கண்கள் இரண்டையும் பிசைந்து விட்டபடி பக்கங்களைப் புரட்டினாள். நாவல் தொடர்ந்தது.
‘ஏதும் அச்சுப் பிழைபாடாய் நடந்துவிட்டிருக்குமோ?.
"பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த பேரப் பிள்ளைகளிலொன்றை அதட்டி அழைத்த வள்ளியம்மை. 'போய் அப்பாவை கூட்டி வாடா. என்று சத்த மிட்டாள்.
இளையவன் வந்தான். '660TLD DIT? ‘இதென்ன தம்பி கல்வெட்டிலை போய் நாவலை சேர்த்திருக்கிறான் கள்? - வினவினாள்.
இளையவன் விளக்கினான். 'அம்மா. அப்பாவினுடைய நினைவுமலரை எவரும் கல்வெட் டெண்டு நினைக்க. கதைக்க கூடா தெண்டதுக்காகத்தான் நான் என்னு டைய புதிய நாவல் ஒண்டை இதிலை சேர்த் திருக்கிறேன் . கலி வெட் டெண் டால் போற பாதையிலை எறிஞ்சுபோட்டு போறவை இந்த நினைவுமலரை கண்ணாடி அலுமாரி யில் வைத்துப் பாதுகாக்கப் போகினை பாரன்".
வள்ளியம் மையிடம் ஒரு

Page 11
பலவீனம் இருந்தது. தான் என்னதான் நினைத்திருந்தாலும் முடிவெடுத் திருந்தாலும் தன்னுடைய பிள்ளை களில் ஒருவன், "அப்படி இல்லை யம்மா. இப்படி என்று சொன்னால் அவளும், "இப்படித்தான் இருக்கும் என்று நம்பிவிடுவாள்.
மறுநாள் அந்தியேட்டிக் கிரியை கள், நடந்து கொண்டிருக்கும்போதே நினைவுமலர் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் சிலர் அதனை வழமையான கல்வெட்டென்று எண்ணி இரண்டாக மடித்து சுற்றி "சேர்ட் பொக் கற்றில் வைக்கப்பார்த்தார்கள். ஆனால் அதன் பக்கங்கள் அதிகமான தால் அது 'பொக்கற்றில் அடங்காமல் எகிறி மடியில் விழுந்தது.
சிலர் ஞாபகமறதியாக போய் விட்ட தேவார திருவாசகத்தை மீட்டுப் பார்ப்பதற்காக பக்கங்களைப் புரட்டினார்கள்.
மற்றும் சிலர் இறந்தவரின் வம்சாவழி பற்றி அறிய பக்கங்களைத் தட்டினார்கள்.
‘இது கல்வெட்டில் லை. நாவல்!” சிலரது வாய்கள் முணு முணுத்தன.
விமர்சனங்கள் பிய்த்துக்கொண்டு புறப்பட்டன.
முதியவர் ஒருவர். ‘எங்கடை
20
ஆட்கள் தாங்கள் செய்யவும் மாட் டான்கள், மற்றவங்களைச் செய்ய விடவும் மாட்டான்கள் தனது மேலான அபிப்பிராயத்தைச் சமர்ப்பித்தார்.
இளவயதினன் ஒருவன் அவரது கருத்துக்கு மாறாக ஏதாவது கூறி தனது பெயரை நிலைநாட்ட விரும்பியவன் போல பேசினான்.
‘உப்பிடித்தான் பாருங்கோ. "இந்தியன் ஆமி பலாலியிலையிருந்து அடித்த "செலி லிலை இளம் தாயொருத்தியும் வயதுக்கு வந்த அவளது ஒரே மகளும் செத்தவை. புருஷன்காரனுக்கு கவலைதான். வடிவான மனுசியை இந்த வயதிலை பறிகொடுத்து தவிச்சு நிற்கிறனே என்று. மனுசி மிகவும் அழகானவள் என்கிறதாலை மற்ற மற்ற ஆண்கள் பார்க்காமல் பழகாமல் அவளைப் பாதுகாத்து வந்த அவருக்கு தானே தன்னுடைய மனுசியை பார்க்க முடியாமல் போன நிலைமை வந்தது பெரிய கவலையாய் போச்சுது.
அநீதியேட்டியும் மறந்து எல்லோரும் இளைஞனின் முகத்தை யும் அவன் கதை சொல்லும் அழகை யும் பார்த்தபடி இருந்தார்கள். பின் வரிசையில் அமர்ந்து எதேச்சையாகக் கதை கேட்டுக் கொணி டிருந்த சிலருக்கு கதையில் சுவாரசியம் ஏற் படவே தமது ஆசனங்களை முன் வரிசைக்கு மாற்றிப்போட்டு அமர்ந் தார்கள்.
'பிறகு என்ன தம்பி நடந்தது? ஆவலைத் தடுக்கமாட்டதவராக ஒருவர் கேட்டார்.
அதுவரைக்கும் கதிரையில் சாய்ந்திருந்து கதை கூறிக்கொண் டிருந்த இளைஞன் கதை கேட்பவர் களுக்கு இசைவாக நகர்ந்து முன் னோக்கி அமர்ந்தபின் தொடர்ந்தான்.
 

"அவர் நல்ல மனுசன். தான் இன்ன மொரு கலியாணம் முடிக்கவேணும் எண்டு நினைக்கேல்லை. ஆனால் ஒண்டு செய்தார். மனைவி உயிரோடு இருந்தபோது அவளுடன் தானும் கலந்துகொணர் ட உறவினரின் கலியாணவீடு, சாமத்திய வீடு, பிறந்த நாள் விழாக்களிலை எடுத்த ‘வீடியோ' பதிவுகள் அனைத்தையும் சேகரித்து ஒரு தொகுப்பாக்கினார்.
"அவர் கெட்டிக்காரர் தானே? ஒருவர் வியந்தார்.
கதை கூறிக் கொண்டிருந்த
இளைஞன் தொடர்ந்தான்.
"அங் கைதான் அவர் ஒரு பிழையை விட்டுட்டார்.
‘வீடியோவை அடிச்சு எடுத்த கையோடு மனைவியின் தங்கை “ஸ்பொன்சர் பண்ண வெளிநாட்டுக்கு போனார். ‘வீடியோ’ பிரதியை மச்சாளி
டம் பெருமையாகக் கொடுத்தார்.
மச் சாளும் ஆவலோடு போட்டுப் பார்த்துக் கண்ணிர் வடிச்சா. கடைசி யிலைதான் அவர் மச்சாள்காரியிடம் ஏச்சு வாங்கும் அந்த பிழையை விட்டிருந்தார். மூண்டு மணித்தியால பிரதியிலை இரண்டு மணித்தியால தொகுப்பு போக மீதியிலை 'ஒல்ட் இஸ் கோல்ட் எண்ட தலைப்பிலை
பழைய சினிமா பாடல் காட்சிகளை
சேர்த்துவிட்டிருந்தார்!’
‘என்ன மனுசனப்பா..!" முணுமுணுத்தனர்.
“இப்ப விளங்குதல்லே. அதே மாதிரியான ஒரு பிழைதான் இந்த கல்வெட்டிலை நாவல் ஒண்டைச் சேர்த்ததாலை நேர்ந்திருக்குது.
'கதையை நிப்பாட்டுங்கோ. இதெல்லாம் ஆரோ ஒரு மனுசனுடைய
பலர்
அந்தியேட்டி வீட்டிலை கதைக்கிற
கதை மாதிரி இல்லை.
21
முதியவர் தனது கட்சி எடுபடா மல் போனதால் ஏற்பட்ட மன அழுத் தத்தை அவ்வாறு கூறி வெளிப்படுத் தினார்.
இளையவன் சங்கரின் மனை தான் அந்தியேட்டிக் கருமங்களில் உதவி ஒத்தாசையாக இருப்பதைக் காட்டிலும் தனது நான்கு குழந்தை களும் அவற்றிற்குத் தடையாக இல்லாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. அவளின் மூத்தவளுக்கு மட்டு மட்டாக பதினாறு வயதுதான் இருக் கும். ஆனால் தனது நெளிப்பாலும் சுழிப்பாலும் அந்தக் கிராமத்து இளசு கள் சிலரை அவள் கலக்கி அடித்துக் கொண்டு திரிந்தாள். அவளைக் கண் காணிக்கும் பொறுப்பைத் தாயே கவனிக்கவேண்டும் என்று சங்கர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தான். அது ஒரு பக்கம் அவளுக்குப் பெரும் பொறுப்பாக இருந்தது.
அரை மணி நேரமாக மகளின் தரிசனம் கிடைக்காததால் தாய்க்காரி சிறிது குழப்பமடைந்து கடைக்குட்டி யை இடுப்பில் சுமந்தபடியே வீட்டை ஒரு சுற்று சுற்றி அவளைத் தேடி வநதாள.
அவளது மகள்காரியை. அவள் தம் துடியாட்டத்தை அறிந்த அவ்வூர் இளைஞர்களின் பெற்றோர் பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தனர். எனவே மிகுந்த அக்கறை எடுத்துத்துத்தான் அவள் தேடினாள். ஆனாலும் ஆள் இல்லை!
பன்னிரண்டு மாசிகம் வைத்து பிராமணக் குருக்கள் சபிண்டீகரணக் கிரியைகள் செய்து கொண்டிருந்தார். கிரியைகள் முடிவடைந்த கையுடன் சபை வைக்கவேண்டும். அனைத்து வாழை இலைகளுக்கும் "சில்வர் கப்

Page 12
பில் நீர் வைப்பது மகளின் பொறுப்பு எனத் திர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் இவள் எங்கு சென்று விட்டிருக்கக்கூடும்? நாழிகை ஆக ஆக தாய்க்காரிக்குச் சந்தேகம் வலுக் கத் தொடங்கியது.
“எத்தனை கருமங்கள் இருக்கு. இவள் எங்கை போட்டாள்?
இதற்கு மேலும் தாமதித்து விசயம் ஏதாவது இசகு பிசகாக நடந்துவிட்டால் தானும் குற்றவாளி யாக நிற்க வேண்டி நேரிடும் என்ற பயம் உறுத்த ஐயருக்கு முன்பாக கைகட்டிப் பயபக்தியுடன் நிற்கும் கணவனின் காதில் விசயத்தை இரகசியமாகக் கூறினாள்.
சங்கர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
*கொண்ணன் ரை மகன் ராசு வோடை கதைச்சுக் கொண்டு நிற்பாள் பார்.
சங்கர் தனது மனப் பதிவொன் றினை நினைவு கூர்ந்து கூறினான்.
தாய்க்காரிக்கு, "அப்படி இருந்தால் பரவாயில்லை என்று தோன்றினாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற் காக மீதமாயிருந்த மறைவிடங்களுக் கும் சிரமப்பட்டு சென்று தேடினாள். எங்கும் காணோம்.
அவளது இரண்டாவது மகள், பத்து வயதினள். தாய்க்காரி மூத்த வளைத் தேடுவதனை ஒரு மறைவில் இருந்து அவதானித்துக் கொண்டிருந் தவள் போலவும் இன்னமும் கால தாமதமானால் நிலைமை விபரீதமாகக் கூடும் என அனுமானித்தவள் போல வும் ஓடிவந்து தாயின் முன் பிரசன்ன மானாள்.
'அம் மா, அக் காவையே தேடுறியள்? அவா கல்வெட்டிலை ஏதோ நாவல் இருக்கெண்டு கூறி
22
படிச்சுக்கொண்டு இருக்கிறார்.
தாய்க்காரிக்கு வந்த கோபத்தில் தனது பலம் அனைத்தையும் ஒன்று சேர்த்து முதுகில் 'பளிச் என்று சாத்தி னாள்.
‘உனக்கு உன்னுடைய மூக்கைத் துடைத்து சுத்தமாக வைத்திருக்க தெரியாது கொக்காவின்ரை திருகு தாளங்களுக்கு நீ ஒரு "சிண்’ என்ன? என்றும் கேட்டு வைத்தாள்.
அந்த அந் தியேட்டி வீட்டில் நினைவுமலருக்கு இருந்த கிராக்கி சங்கருக்கு மிகுந்த மனத்திருப்தியைக் கொடுத்தது. சிலர் தமக்கான பிரதியை அவனிடம் கேட்டுப் பெற்றார்கள். சிலர் மேலதிக பிரதியை வேண்டிப் பெற்றார் கள்.
வள்ளியம்மை ஊரில் நடைபெ றும் சாவீடு அந்தியேட்டி ஆகிய எவற் றையும் தவறவிட்டவள் அல்ல. எனவே அவற்றில் அனுஷ்டிக்கப்படவேண்டிய ஆகம விதிகள் அத்தனையும் அவளுக்கு அத்துபடி. அந்நிலையில் தனது கணவன் பொருட்டு நடை பெறவேணி டிய கிரியைகளுக்கு ஐயருக்கு எவ்வித மனக்குறையும் வரக்கூடாதென்ற உள்ளுணர்வுடன் அனைத்தையும் உன்னிப்பாக அவ தானித்துக் கொண்டிருந்தாள்.
வலி லிபுரத்தார் உயிருடன் இருந்தபோது அவள் அவருக்கு செய்யவேண்டிய எந்தப் பணிவிடை யிலும் குறை வைக்கவில்லை என்ப தனை ஊர் அறியும். அவரது உயிர் பிரிந்துவிட்ட அந்த நிலையிலும் அவருக்கான கருமங்களில் ஒரு குறை வந்தாலும் அவளால் தாங்கிகொள்ள (Մ9ւգեւIT5l.
சபை வைப்பதற்கு முன்னராக குளிர்பானம் வழங்கப்பட்டது. அந்த ஊர் வழக்கப்படி எல்லோரும் எல்லா

வீடுகளிலும் அவர்கள் உறவினர் களாக இருந்தாலும் கூட ‘கை நனைக்கமாட்டார்கள். சாப்பாட்டுக் காரர்கள் தவிர ஏனையோர் குளிர் பானம் பரிமாறப்பட்டதும் விடைபெற் றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் நினைவுமலர் வழங்கப்பட்டது.
நூற்றியைம்பது ரூபா விலை மதிக்கக்கூடிய நாவல் இலவசமாகக் கிடைத்தால் யார்தான் விடுவார்கள். இலக்கிய ஆர்வம் இல்லாதவர் களுக்கே இலவசம் என்றதும் பேரார் வம் வந்துவிட்டது
ஆண்கள் சபை முடிந்து சென் றோர் தாமும் பிரதி பெற்றதுடன் தத்தம் மனைவியரிடமும் பிரதி ஒன் றினை பெற்றுவருமாறு இரகசியமாகக் கூறிச் சென்றனர்.
பெண்கள் சபை முடிந்தபோதும் கையிலான்று மடியிலொன்று என அதிக பிரதிகள் போயின.
அனைவரும் சென்றுவிட்டனர். இறுதியாக வள்ளியம்மையின் ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி விடை பெற வந்தபோது அவளை நிற்கும்படி கூறி நினைவுமலரின் பிரதி ஒன்றினை எடுத்துக் கொடுப்பதற்காக வள்ளி யம்மை மண்டபத்தை நோக்கி ஓடி னான்.
எங்கிருந்தோ ஓடிவந்த சங்கர் பதைபதைத்தபடி கூறினான் "அம்மா. நினைவுமலர் முடிஞ்சுது!”
வள்ளியம்மைக்குத் திகைப்பு. அப்ப உதிலை கட்டுக்கட்டாக கிடக்கிற தெல்லாம்? - வினவினாள். சங்கர் தனது பிள்ளைகளில் ஒன்று விளையாட்டுக்காக வைத் திருந்த நினைவுமலர் ஒன்றை அவனு டைய முதுகில் ஒரு தட்டு வைத்து பறித்து பெரியதாயாரிடம் கொடுத்த துடன் அவளை அனுப்பியும் வைத்
தான்.
பின்னர் புதிய கட்டொன்றினை உடைத்து அதில் இருந்து பிரித் தெடுத்த நூற் பிரதி ஒன்றினைத் தாயி டம் கொடுத்தான்.
கறுப்பு வெள்ளையில் இருந்த பிரித்தெடுத்த நூற் பிரதி ஒன்றினை தாயிடம் கொடுத்தான்.
கறுப்பு வெள்ளையில் இருந்த அதே அட்டைப்படம் இப்போ கண் ணைக் கவரும் வர்ண அச்சில் இருந் தது உட்பக்கங்களைப் புரட்டினாள். கணவனின் படத்தைக் காணவில்லை நங்கை - நாவல் என்ற எழுத்துக்கள் பளபளத்தன.
தேவாரம், திருவாசகம் முதல் வம்சாவளி வரை நினைவு மலரில் இருந்த அத்தனை பக்கங்களும் நீக்கப்
பட்டிருந்தன.
சங்கர் விளக்கினான். "அம்மா . எங்களுக்கு
கல்வெட்டு முன்னுறு பிரதிகள்தான் அவசியமாக இருந்தது. முன்னுாறு பிரதிகள் அடிப்பதும் ஆயிரம் பிரதி கள் அடிப்பதும் ஏறத்தாழ ஒரே செலவு தான். என்னுடைய நங்கை என்ற புதிய நாவலும் நிதிப்பிரச்சினை காரணமாக அச்சேற்ற முடியாமல் இழுப்பட்டு வந்தது. இப்போ ஒரு கல் லில் இரண்டு மாங்காய்கள். நாங்கள் இவ்வளவு நேரமும் விநியோகித்தது நினைவுமலர்.
எஞ்சியிருப்பன அத்தனையுமே நூற்றியைம்பது ரூபா விலைமதிப்பு போடப்பட்ட நாவல். இப்போ உனது கையில் இருப்பது அந்த நாவலின் ஒரு பிரதிதான். நாவலின் எழுநூறு பிரதிகளையும் நான் விற்றுவிட்டால் கல்வெட்டுக்காக உண்டான செல வென்ன. அந்தியேட்டி செலவும் போய் மீதமும் வரும்!"

Page 13
வள்ளியம்மையின் தலை கிறு கிறுத்தது.
பார்வை மங்கலடைந்தது. தனது கணவன் இறந்தபோது அவள் அடைந்த கவலையைவிட இப் போதுதான் அதிகளவு வேதனையை, மனத்துயரை அடைந்தாள்.
நினைவு மலரிலிருந்த ஒரே ஒரு பக்கம்தான் அந்த நூலில் இடம் பிடித்திருந்தது.
வையத்துள் எம்மை வாழ்வாங்கு வாழவைத்த தெய்வம் கற்றோர் சபை யில் முந்தி இருக்க வைத்த பிதா பாசமிகு அப்பா வேலுப்பிள்ளை வல்லிபுரம் அவர்களுக்கு இந்நூல் காணிக்கையாகட்டும்.
வள்ளியம்மையின் கைகள் பட படத்தன. இந்தப் பக்கம்கூட எதற்கு என்கின்ற ஆத்திரத்துடன் அத்தாளை இறுகப்பற்றி இழுத்துக் கசக்கிவிசி
r அன்பு நெஞ்சங்களே,
ஞானம் சஞ்சிகையை நாம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய
னாள்.
கண்ணின் மணிகள் எனத் தனது இரு மக்களையும் பாதுகாத்து. வாழ் நாள் பூராகவும் அவளைத் தனது இத யத்தில் வைத்துப்போற்றி வாழ்ந்த கணவனின் பிரிவை நினைக்கையில் அவளது விழிகளிலிருந்து நீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அந்த நித்திய சமர்ப்பணம் ஒன்றே அவரது ஆத்ம சாந்திக்குப் போதுமான தென அவளது உள்ளுணர் வு உணர்த்தியது!
༄།
ஆர்வலர்கள் ஆகிய பலருக்கும் அவர்களது இலக்கிய ஈடுபாட்டினைக் கருத்திற்கொண்டு இனமாக அனுப்பிவருகிறோம். சந்தாதாரர்கள் பலர் அவர்களது சந்தா முடிந்தபின்னர், அதனைப் புதுப்பிப்பதில்லை. அவர்களுக்கும் நாம் தொடர்ந்து அனுப்பிவருகிறோம். இவர்களிற் பலர் ஞானத்துடன் எவ்வித தொடர்புகளும் வைத்துக்கொள்வதில்லை. தமக்கு ஞானம் கிடைப்பதைக்கூட அறியத்தருவதில்லை.
ஞானம் சஞ்சிகையின் செலவினை ஈடுசெய்ய நாம் விளம்பரதாரர்களை ாடுவதில்லை. முழுக்க முழுக்க சஞ்சிகையின் விற்பனையிலும் சந்தாப் பணத்திலுமே
ஆகியவற்றை முழுமையாக ஈடுசெய்யமுடிவதில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு கணிசமான தொகையை இழந்தே ஞானம் சஞ்சிகையை வெளிக்கொணர்கிறோம். ஞானம் சஞ்சிகையின் தரம் இதழுக்கிதழ் மேம்பட்டுவருவதை வாசகர்கள் அவதானித்திருப்பார்கள். ஞானத்தின் பக்கங்களைக் கூட்டுவதோடு அதன் தரத்தையும் நிகரித்துக்கொண்டு செல்லவே நாம் விரும்புகிறோம் ற்கு, ஞானத்தின் வளர்ச்சியில் அக் ட்டாது முறை அனுப்புவதைத் தவிர்த்து, அதனால் மாதாமாதம் மிதப்படும் கணிசமான தொகையை, ஞானத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக உபயோகிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தயவுசெய்து சந்தாதாரர்களாகச் சேர்ந்து எமது இலக்கியப் பணிக்கு ஊக்கமளிக்கும்படி வேண்டுகிறோம். .அலட்சியமாக இருப்பவர்களுக்கு "ஞானம்' கிடைக்காது ܢܠ
24
- ஆசிரியர்.)
 

தோழர் எஸ்.நடேசன்
தொழிலாளர்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தோழர் நடேசன் அவர்கள் ஜனவரி 13-ஆம் திகதி அமரராகிவிட்டார்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொழிற்சங்கத் துறையில், மலையகத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணத்துடன் செயற்பட்ட தோழர் எஸ்.நடேசன் இன்று நம்மோடு இல்லை.
96 T6, 96j spu "AHISTORYOFTHEUP-COUNTRYTAMILPEOPLE INSRILANKA ஆங்கில நூல் அவரது பெயரை என்றென்றும் கூறிக் கொண்டிருக்கும். தோழர் எஸ்.நடேசன் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் கல்வியை முடித்துக்கொண்டு மருத்துவப் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றவர்.
மருத்துவக் கல்வியைக் கற்கும்பொழுது, அங்கு இலங்கை மாணவர் இயக்கத் தலைவராக இருந்ததோடு, இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்துகொண்டு அதன் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்குகொண்டார்.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டதன் காரணமாகத் தனது மருத்துவக்கல்வியை பாதியில் முடித்துகொண்டு நாடு திரும்பினார். நாடு திரும்பிய பின்னர் தொழிலாளரின் விடிவுக்காகத் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டார். இவர் 1956-ஆம் ஆண்டு இலங்கை வந்தபொழுது மலையகத்தில் ஓரளவு முற்போக்கு எண்ணங்கொண்டு செயற்பட்ட அ.அஸிஸ் தலைமையில் இயங்கிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் சேர்ந்து செயற்பட்டார்.
பின்னர், அங்கிருந்து வெளியேறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். அது மாத்திரமல்ல, தனது பரம்பரை சேமிப்புக்களைத் தாராளமாகச் செலவுசெய்தார்.
1964-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தில் இறக்கும்வரை தலைவராக இருந்து செயற்பட்டார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும், இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைத்தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இடதுசாரித் தலைவர்களான கலாநிதி என்.எம்.பெரேரா, எஸ்.ஏ.விக்ரமசிங்க, கொல்வின் ஆர்.டி.சில்வா ஆகியோரால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
தோழர் எஸ்.நடேசன் தொழிலாளர் வர்க்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்.
"தோழர்' என்று எல்லோருடனும் அன்பாகப் பழகும் நடேசன் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் மலையக மக்களைப் பற்றி எழுதிய நூலின் மூலம் என்றும் நம்மிடையே மாத்திரமல்ல. மலையக மக்களின் நெஞ்சங்களிலும் வாழ்வார்.
25

Page 14
ஈழத்து இலக்கிய
ழுெத்துத்துறையில் ஈடுபடும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. இவர்களை ஊக்குவிக்கும் பத்திரிகை, சஞ்சிகைகளும் குறைவு. இத்தகைய சூழ்நிலையில் தமது தனித்துவமான ஆற்றலால் வெடித்துக் கிளம்பும் பெண் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய ஒருவர்தான் செல்வி.கு.வாசுகி.
இவர் பிரபல எழுத்தாளர், கவிஞர் செ. குணரத்தினத்தின் புதல்வி என்பதைக் குறிப்பிட்டால், 'ஓகோ! அதுதான் காரணம் என்று சொல்வது அபத்தம். எழுத்தாளரின் மக்கள் எழுத்தாளராவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒருசில இளம் எழுத்தாளர்கள் செய்வதுபோல (தந்தையின் பெயரையும் சேர்த்துக்கொண்டு) தந்தையின் நிழலில் நிற்க முற்படாது, தனது சொந்தக் காலில் நின்று தனது தனித்துவத்தை வெளிப்படுத்தும் எழுத்தாளர் இவர்.
ஆனால் தந்தையைப் போலவே, கவிதை, கட்டுரை, சிறுகதை, சித்திரம் எனப் பலதுறைகளிலும் இவர் கைவைத்துள்ளார். போட்டிகளில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். இன்னும் ஒருபடி மேல்சென்று பெண்ணியம் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். பெண்ணுரிமை என்பது பெண்களின் கலாசார மரபுகளுக்கு உட்பட்ட தாக அமையவேண்டும் என்பதும் இவர் கருத்தாகும்.
மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரி ஆகி, தற்போது முறக்கொட்டாஞ் சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் முகாமைத்துவ உதவி யாளராகக் கடமை ஆற்றுகிறார். இவருடைய சகோதரிகளான கு.பாரதி (விபுலானந்த இசை நடனக் கல்லூரி), உமா (கிழக்குப்பல்கலைக்கழகம்) ஆகியோரும் எழுத்தார்வம் உடையவர்களே.
12 வயதில் எழுதத் தொடங்கிய வாசுகியின் முதல் ஆக்கம் (கவிதை) இலங்கை வானொலி சிறுவர் மலரில் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து வீரகேசரி, தினக்கதிர், பெண்(சஞ்சிகை), கிழக்கொளி (கி.ப.க.சஞ்சிகை), உதயம் (சஞ்சிகை), பேழை முதலியவற்றில் இவரது கவிதை, கட்டுரை, சிறுகதை முதலியன அவ்வப்போது வெளிவந்துள்ளன. இதுவரை சுமார் 30 கவிதைகள், 10 சிறுகதைகள், 15 கட்டுரைகள் எழுதியுள்ள இவர் பெற்றபரிசுகள் வருமாறு: (அ).மட். தமிழ்த்தின விழா கவிதைப்போட்டி (1989-1990) முதற்பரிசு, (ஆ).கொழும்புத் தமிழ்ச்சங்கக் கவிதைப்போட்டி (1988) 2ம் பரிசு, (இ).கொழும்புத் தமிழ்ச்சங்க 50 ஆண்டு
26
 
 
 
 
 
 
 
 

செல்வி குவாககி 2 مشترك
(இரா.நாகலிங்கம் (அன்புமணி)
நிறைவு கவிதைப்போட்டி-1992 முதற்பரிசு (தங்கப்பதக்கம்), (ஈ).தேசிய இளைஞர் மன்றம் தைப்பொங்கல் கவிதைப் போட்டி 1994 - மூன் றாம் பரிசு, (உ).மேற்படி மன்றத்தின் கட்டுரைப் போட்டி 1994 (1ம் பரிசு), (ஊ). சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய கட்டுரைப்போட்டி-1995(2ம் பரிசு), (எ).அமரர் ஜீவா ஜீவரத்தினம் நினைவுக் கவிதைப்போட்டி-1999 (2ம் பரிசு). இவை தவிர அவ்வப்போது சில இலக்கிய மன்றங்களின் பாராட்டுதல்களையும், சான்றிதழ்களையும் கூட இவர் பெற்றுள்ளார்.
இவரது கவிதை நடைபற்றியும், சிறுகதை நடைபற்றியும் சிறிது கூறவேண்டும். கவிதைகள் அணி அலங்காரம் அதிகம் இல்லாது மிக வீச்சாக அமைகின்றன. எதுகை மோனைக்காக, சீர் சந்தங்களுக்காக வர்ணனைகளைச் சேர்க்கும் பழக்கம் இவரிடம் இல்லை. அவ்வாறே கவிதைப்பொருளும் புரட்சிகரமானதாக பெண்ணியத்தைத் தொட்டுக் கொண்டதாக அமைகின்றன. கட்டுப் பெட்டித்தனமான மரபுகளை மீறும் இயல் பையும் இக்கவிதைகளில் காணலாம். பல கவிஞர்கள், தமது இயலா மையை எண்ணி கழிவிரக்கப்பட்டும் தோல்விகளைக்கண்டு மனம் நொந்தும் கவிதைகள் எழுதுவது வழக்கம். ஆனால் அந்த வழக்கம் வாசுகியிடம் இல்லை. அந்த வகையில் இவரை ஒரு புதுமைப்பெண் எனக் கூறலாம்.
சிறுகதைகளைப் பொறுத்தவரை, பெரும்பலான கதைகளின் கருப்பொருள்கள் அவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளையே மையமாகக் கொண்டுள்ளன.
இவர் எழுதும் கட்டுரைகள் ஆய்வு நோக்குடன் அமைவது குறிப்பிடத்தக்கது. இவற்றைப் பெண் பற்றிய கட்டுரைகள், ‘பொதுவான கட்டுரைகளி என இரு வகையாகப் பிரிக்கலாம்.
இவைதவிர சில நேர்காணல் கட்டுரைகளையும் இவர் எழுதியுள் ளார். இவரது எழுத்துக்களில் தொனிக்கும் வேகம் இவர் போக்கில் இல்லை. அமைதியும் அடக்கமும் கொண்ட இவரை நேரில் பார்ப்பவர்கள் அசந்துபோவார்கள். அந்த வகையில் இவர் ஒரு ‘மண்டுர் அசோகா எனலாம்.
27

Page 15
நேர்காணல்
GLITraffuń கா.சிவத்தம்பி
சந்திப்பு : திஞானசேகரன்
(s உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். N * பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ்நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் أر .பணிபுரிந்தவர் ܢܠ
தி.ஞா: தமிழ் இலக்கியம், சமூகம், பண்பாடு, தமிழ் இலக்கிய விமர்சனம் ஆகிய பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளீர்கள். இந்தப் பின்னணியில் நீங்கள் உங்களை எவ்வாறு இனங்காண்கிறீர்கள்? கா.சி : என்னுடைய விசேட ஆய்வுத்துறைகளென நீங்கள் சொன்னவற்றை உள்ளடக்கி நான் இவற்றை நான்காகப் பிரிப்பது வழக்கம். 1)தமிழரின் சமூக இலக்கிய வரலாறு. 2) தமிழரிடையே பண்பாடும் தொடர்பாடலும். 3) தமிழ் நாடகம் 4) இலக்கிய விமர்சனம்.
உண்மையில் இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கக்கூடிய ஒரு நிலைமை வந்ததற்குக் காரணம், எனக்குத் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் சமூகத்திலும், தமிழ் சமூக வரலாற்றிலும் அதனால் அதனுடைய பண் பாட்டிலும் உள்ள ஈடுபாடுதான். ஒரு சமூகத்தைப் பார்க்கும்போது அதனுடைய பண்பாட்டினை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கினை ஒட்டு
28
 
 

மொத்தமாக முற்றுமுழுதாகப் பார்க்கவேண்டுமென்பது என்னுடைய மார்க்சிய தாடனம் காரணமாக, மார்க்சியத்தில் இருந்த ஆர்வம் காரணமாக அவ்வாறு பார்க்கின்ற ஒரு தன்மையொன்று ஏற்பட்டது. சமூக நிலைகொண்டு அதனுடைய அடித்தள நிலையிலிருந்து பார்க்கிற தன்மை வளர்ந்தது என்று கருதுகிறேன். இதனால் உண்மையில் என்னுடைய ஆய்வு ஈடுபாடு என்று சொல்கிறவற்றில் இந்த நான்கையும் நான் உள்ளடக்குவேன்.
தி.ஞா : முதலில் உங்களது நாடகத்துறை ஈடுபாடு பற்றிக் கூறுங்கள் கா.சி. : நாடகம் எனக்கு நீண்டகாலமாக என்னுடைய ஒரு ஈடுபாட்டுத் துறை யாக இருந்தது. அதில் நான் இரண்டு நிலைகளில் பங்கு பற்றியுள்ளேன். ஒன்று நடிகனாக - அந்த நாடகம் சம்பந்தப்பட்ட கலைஞனாக. பிரதானமாக நடிகனாக மேடையில், வானொலியில் நான் நடித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நான் ஒரு நாடக நெறியாளனாகத் தொழிற்பட்டிருக்கிறேன். அது பின்னர், அதனுடாக நாடகத்தின் வரலாறுபற்றி பார்க்கிற ஒரு தன்மையொன்று வந்தது. தமிழ் நாடகவரலாறு ஒரு சுவாரஸ்யமான விடயம். தமிழ் நாடக வரலாறுபற்றி நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பண்டைய காலத்து ஒரு தமிழ் நாடகமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஏறத்தாழ 13ஆம், 14ஆம் நூற்றாண்டுவரையில் நாடகத்தைப்பற்றிப் பேசுகிறார்கள்; நாடகம் கிடைக்க வில்லை. இதற்கான ஆய்வு செய்யப்புறப்பட்டபோது அதிஷ்டவசமாக, மிக மிக அதிஷ்டவசமாக பேராசிரியர் ஜோர்ஜ் தோம்சனின் கீழ் பணிசெய்கின்ற ஒரு பெரிய வாய்ப்புக் கிடைத்தது. இந்த நாடகம் பற்றிய குறிப்புகள் இருக் கின்றன - நாடகத்தைக் காணவில்லை என்பதற்கான காரணத்தைக் காண முற்பட்டபொழுது, அந்தச் சமூகத்தில் ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்தது. ஏனென்றால் கிரேக்க சமூகத்தில் அதனுடைய ஆரம்ப காலத்திலேயே, நாடகம் இருக்கிறது - அந்த நாடகங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்த அளவுக்கு நாடகங்களும் இருக்கின்றன. தமிழுக்கு மாத்திரம் ஏன் இல்லை என்கிற பொழுது, அது கிரேக்க சமூகத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள வித்தியாசம். இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அண்மைக்காலத்தில், குறிப்பாக 19ம்,20ஆம் நூற்றாண் டில் நாடகம் வளர்ந்தமைக்கான சான்றுகள் தமிழ் நாட்டில் நிறைய உள்ளன. தி.மு.க.வின் நாடகங்கள், அவற்றின் பின்னர் வந்தவை. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த நாடகங்கள்.
அப்போ, இந்த சமூகத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று ஆராயப்புறப்பட்டு அந்த சமூகத்துக்கும் கலைக்கும் உள்ள தொடர்பு எத்தகை யது? என்பதுபற்றி ஆராயவேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தத் தேவை காரணமாக, அதனுடாகப் பார்க்கும்போது உண்மையில், நான் Development of Tamil drama up to the 6th century seis)6)g 9thcentury 6T6irp 6T(p5 gybig55 BT6, 3560Lduis) Drama in anciant Tamil society 6T6 rp 5606055 மாறி, அந்தப் பழைய தமிழ் சமுதாயத்தில் எவை எவை இருந்தன? ஏன் அது நாடகங்களைப் பேணவில்லை என்கிற விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து, கடைசியில் படிப்படியாக ஒரு நாடகம் பற்றிய ஆய்வும் ஈடுபாடும் அதே
29

Page 16
நேரத்தில் சமூக வரலாறு பற்றிய ஈடுபாடும் எனக்கு வந்தது. தி.ஞா : நாடகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது உங்களுக்குச் சமூக வரலாறுபற்றிய ஆய்வில் ஈடுபடவேண்டிய தேவை ஏற்பட்டது என்றா கூறுகின்றீர்கள்? கா.சி : அந்த சமூக வரலாறு பற்றிய ஈடுபாடு எனக்கு ஒரு மிக மிக முக்கியமான விடயமாக வந்தது. ஏனென்றால் உண்மையில் இன்னும்தான் தமிழ் மக்களுக்கு ஒரு சமூக வரலாறு எழுதப்படவில்லை. நான் இப்படிச் சொல்வதைச் சிலர் தவறாக எண்ணக்கூடும். பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் எல்லோரும் வரலாறு எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தமது வரலாற்று நூல்களில் Social history ofTamils என்று எழுதி யிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், சமூகத்தில் காணப்பட்ட சடங்குகள், விளையாட்டுக்கள் பல்வேறு விடயங்கள் என்று பார்த்தார்களே தவிர அந்தச் சமூகம் எவ்வாறு இயங்கிற்று? அந்தச் சமூகத் தினுள் நிலவிய உறவுகள் யாவை?. சுருக்கமாகச் சொன்னால் பண்டைத் 5 flypé &epsisgj60Lu Feyp856.5uj6) usTg5? What was the sociology of the anciant Tamil Society? - அது இன்னும் எழுதப்படவில்லை. அது தொட்டம் தொட்டமாக, அண்மைக் காலத்தில் பல்லவர், சோழர், விஜயநகர காலத்திற்கு நிறைய வேலைகள் நடந்திருக்கின்றன. பொருளாதார வரலாறு ஓரளவுக்கு வந்துவிட்டது. ஆனால் சமூக வரலாறு என்று வரவில்லை. சாசனவியல்பற்றி படித்தவர்கள் மூலமாக அது ஓரளவுக்கு வந்துவிட்டது. குறிப்பாக கரஷிம் மூலமாக Inscription பற்றிப் படிக்கும்போது அது வந்துவிட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சமூகவரலாறு வரவில்லை. இந்த விடயம் பற்றி ஆராய வேண்டியதேவை எனக்கு ஏற்பட்டது. இதில் நான் முக்கியமாக எனது இரண்டு கட்டுரைகள்பற்றிச் சொல்லவேண்டும். 1) நான் திணை பற்றி எழுதியது. திணைக்கான விளக்கம் தொல்காப்பியத்தில் இல்லை. திணையை Define பண்ணவேயில்லை. அடிக்கடி எனது மாணவர்களுக்குச் சொல்வதுபோல, இந்தப் பூவினால் இந்த நிலம் பெயர்பெற்றது என்று சொல்கிறேன். இது ஏன் என்று கேட்காதீர்கள். ‘கேட்பார்க்கு விடையின்மை காண்க என்று - "கடாயினார்க்கு விடையின்மை காண்க” என்று நச்சினார்க்கினியார் மிகத் தெளிவாகச் சூத்திரத் திலே கூறியுள்ளார். ஆனால் இராகவ ஐயங்கார் ஓரிடத்தில் கூறுகின்றார், இந்தப் பூக்களுக்கும் நிலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக. தனிநாயகமும் அதையெடுத்துக் கொஞ்சம் சொல்கிறார். ஏனெனில் அவர் Anthropologyபடித்தவர். நிலத்திற்கும் அந்த நிலங்களுக்குரிய ஒழுக்கங்களுக்குமுரிய தொடர்பு பற்றிச் சொல்லப்படுகிறது. ஏன் குறிஞ்சியில் மாத்திரம் புணர்தல்? மருத நிலத்திற்கு மாத்திரம் ஊடல்? முல்லையில் மாத்திரம் இருத்தல்? ஏன் மற்ற நிலங்களில் இவை இல்லையா? மற்ற இடங்களில் புணர்தல் இல்லையா, மற்ற இடங்களில் புருஷனுக்காகப் பெண்சாதி காத்திருப்பதில்லையா?. பிரச் சினை என்னவென்றால், இவை ஒவ்வொன்றும் அந்த அந்த நிலங்களில் ஆண் - பெண் உறவில் இருந்த இந்த இந்த அம்சங்கள்தான் முக்கியமானதாக அல்லது பிரச்சினைகளைத் தருவதாக அமைந்தன. Problemetique என்று சொல்வார்கள். வெறும் பிரச்சினைகள் அல்ல. அந்தப் பிரச்சினைகளின் 30

மையம். அப்படிப் பார்க்கிறபொழுது ஒன்று தெளிவாக வந்தது என்னவென்றால், அந்தக் குறிஞ்சிநிலச் சமுதாயத்தில் குடும்பம் தொடக்க நிலை. அங்கு அரசு போன்ற விசேட சமூக நிறுவனங்கள் வளரவில்லை. பொருளாதார விருத்தி கிடையாது. அங்கு உணவைத் தேடுதலே தவிர உணவை உற்பத்தி செய்தல் இல்லை. ஆகக்கூடியது அவர்கள் செய்தது தினைச் செய்கைதான். அத் தினைப் பயிர்ச் செய்கைகூட சேனைப் பயிர்ச் செய்கை போன்று செய்யப்பட்டது. அதாவது இந்த வருடத்தில் ஓரிடத்தில் செய்தால் அடுத்த வருடம் அதைவிடுத்து வேறிடத்தில் செய்யப்பட்டது. அந்தத் திணைப்புனம் காக்கப் பெண்கள் போவார்கள். அந்தக் கதைதான் வள்ளி திருமணம். மருத நிலத்திலும் பார்க்க இந்த நிலத்து மக்கள் குறைந்த மட்டச் சமூகத்தினர். அந்தச் சமூகத்தில் ஆண்- பெண் உறவில் உள்ள பிரதானமான அம்சம் ஒன்றாகுதல் - ஒன்றாக இருத்தல். புணர்தல் (Joiningtogether) அங்கு வடிவாகச் சொல்லப்படுகிறது, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் " என்று.
முல்லைக்கு அப்படியல்ல. முல்லையில் ஒரு குடும்பம் இருக்கிறது. கணவன் வேலை செய்கிறான். அவன் அரச கருமத்திற்காகப் போகலாம் அல்லது மாடு ஆடு மேய்ப்பதற்காகப் போகலாம். அங்கு ஒரு குடிசை இருக் கிறது. அதனைச்சுற்றி ஒரு கொல்லை இருக்கிறது. அங்கு ஒரு குடும்பம் தொடங்கியாகிவிட்டது. சிறிய அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் புருஷன் இரண்டு காரணங்களுக்காக வெளியே போகிறான். ஒன்று வேந்தனுடைய கடமை அல்லது ஆநிரை மேய்த்தல். இப்பவும் வன்னியில் ஆநிரை மேய்த்தலுக்குப் போய்வருவதுண்டு. அந்த நேரத்தில் இந்தப் பெண் வீட்டில் இருந்து, அந்த வீட்டைச் சுற்றியுள்ள கருமங்களை அவள் பார்த்தல். உலகம் முழுவதிலுமே விவசாயம் முதன் முதலில் பெண்களால்தான் ஆரம்பிக்கப்பட்டது. உலகப் பொதுவான வற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்பொழுது முல்லை தெளிவாகிறது. இவற்றை வைத்துக்கொண்டு, "The social origins of Tinai concept' 6T65rp biTGit (gpg5656) 6TQg5 6.histdiss st (660).j60)u, Qg56 gigurgisi) 'Social Scientist' 6T6ip F(655-605'Early South Indian society and its economy - the problem of Tinai" 6T6ip g5606) is) வெளியிட்டது. அந்தக் கட்டுரை இன்று வரைக்கும் வரலாற்று ஆசிரியர்களால் ஓரளவு பேசப்படுகிறது. செம்பகலசஷ்மி, சுப்புராயுலு போன்ற இந்தத் துறையில் ஈடுபட்டவர்களால் பேசப்படுகிறது. எனது பெற்றோர் செய்த புண்ணியம், எனது ஆசிரியர்களின் ஆசீர்வாதம் காரணமாக எனக்கு அந்தப் பெருமை கிடைத்தது. இதேமாதிரி இன்னொரு சுவாரஸ்யமான விடயம் ஒன்று செய்தேன், அது தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி பற்றியது. அதில் நான் (pp5656) 6T(pg5ugs. The politics of a literrary style.
இதேமாதிரி நான் சமூக வரலாற்றில் படிப்படியாக ஈடுபட்டு வந்தேன். நண்பர் கைலாசபதி நாடும் நாயன்மாரும், பேரரசும் பெருந்தத்துவமும் எழுதிய அதேகாலப்பகுதியில், நான் 'இயக்கமும் இலக்கியமும்' என்று தேனருவியில் இலக்கிய வரலாறு முழுவதையும் மார்க்சியத்தின் பின்புலத்தில் சொன்னேன். அந்த நேரத்தில் அதில் நான் ரெம்பக் கற்றுக் குட்டித்தனமான விஷயங்களையும் சொல்லியிருக்கிறேன். ஆனால், PhD செய்யிற நேரத்தில்தான் 31

Page 17
எங்களை நாங்கள் திருத்திக் கொள்கிற தன்மை ஏற்பட்டது. இதில் பல ஆழ மான விஷயங்கள் உண்டு. நாங்கள் Fuedalism என்று சொல்கிறோம். அதனை நிலமானியம் என்று சொல்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டு Fuedalismநிலமானியம் தானா? அதாவது நிலத்தை மானியமாகக் கொடுத்ததா? அப்படிக் கொடுத்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அப்படிக் கொடுத்தால் அந்த நிலமெல்லாம் அரசனுக்குச் சொந்தம். ஒரு அரசனின்கீழ் வரும் ஆள்புலம் எல்லாம் அவனது நிலமாக இருப்பதில்லை. கிளார்கள் எனப்படுவோர் தத்தம் பகுதிக்கு உரியவர்களாக இருப்பார்கள். வேந்தர்களின் கீழ் வரும் மன்னர்கள் தங்களுடைய நிலத்தைத் தாங்களே ஆண்டனர். இவை நமது பிரதேசத்தில் Fuedalism தொழிற்பட்ட முறைபற்றிப் பல பிரச்சினைகளைக் கிளப்பின. காணி, ஆட்சி நிலம் என்று சோழர் ஆட்சிக் காலத்தில் வழக்கில் இருந்தது. காணி என்ற சொல்லுக்குக் கருத்து அளக்கப்பட்ட நிலம். காணி என்பது ஒரு அளவுகோலின் வழியாக வந்ந பெயர். காணி நிலம் என்று சொன்னால், காணி அளக்கப்பட்டது, நிலம் அளக்கப்படாதது. இப்படிப் பார்த்துக்கொண்டு போகும்போது தென்னாட்டினது வரலாறு மிகவும் ஆழமானது. அதைப்பற்றி இன்னும் எவருமே செய்யவில்லை. இதை அடிப்படையாக வைத்துத்தான் The organisation of political authority in anciant Tamil Nadu. 6T6irgo syafair தோற்றம்பற்றி, வரலாறுபற்றி பார்த்தேன். அதனைத் திருக்குறளை மையமாக வைத்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போது, மன்னன் என்ற சொல்லுக்கும் அரசன் என்ற சொல்லுக்கும் இறை என்ற சொல்லுக்கும் கோ என்ற சொல்லுக் கும் வேந்து என்ற சொல்லுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டு. ஆனால் நாங்கள் இவற்றைச் சொல்லும்போது ஒரே கருத்தில் சொல்கிறோம். இந்த மாதிரியான பிரச்சனைகளை நான் பார்க்கவேண்டிய தேவை இருந்தது.
படிப்பிக்கிற காலத்தில், அருணகிரிநாதர் தாயுமானவர், குமரகுருபரர் போன்றவர்களுடைய பக்திக்கும் நால்வர் காலத்துப் பக்திக்கும் இடையில் ஏதாவது வேறுபாடு உண்டா? அதன் அடிப்படை யாது? என்பவற்றையெல்லாம் ஆராய்ந்து, தமிழின் இரண்டாவது பக்தியுகம் என்றொரு கட்டுரை எழுதினேன். இந்த அம்சம்தான் பின்னர், யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், சமூக வரலாறு போன்ற பல விடயங்களைச் செய்யவேண்டி வந்ததற்கும் காரணமாய் அமைந்தது.
தி.ஞா : தொடர்பியல் பற்றிய ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்த பின்னணியைக் கூறுங்கள்
கா.சி. : 1975,76 இல் களனி வித்தியாலங்கார பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் (Communication) படிப்பிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. கைலாச பதியும் நானும் செய்தோம். அவர் யாழ்ப்பாணம் சென்றதும் முழுப் பொறுப்பை யும் பொறுப்பேற்றுச் செய்யவேண்டிய கடமை எனக்கிருந்தது. ஏற்கனவே வானொலியுடனான தொடர்பு நிறைய இருந்தது. பத்திரிகை இயங்குவது பற்றிய ஒரு பரிமட்டமான அறிவும் இருந்தது. இதை வைத்துக்கொண்டு தொடர்பியல் எவ்வாறு உள்ளது? அது எமது சமூகத்துள்ளும் எங்கள் பண்பாட்டுள்ளும் எவ்வாறு தொழிற்படும் Culture and Communication எவ்வாறு
32

இருக்கும் என்பது பற்றியும் நான் பல கட்டுரைகள் எழுதினேன். இதனால்தான் Tamil film as a medium of political communication 6T6trugs upbpl) 6T(p5660T6ör. எம்.ஜி.ஆர். உடைய பாடல்கள் ஏன் முக்கியமானவை என்பது பற்றியெல்லாம் சொன்னேன். அதுமட்டுமல்ல நாடக நடிகர்கள் அரசியல் வாதிகளாகவும் இருக்கிறதுக்கான தொடர்பியல் காரணங்கள்பற்றி அமெரிக்க சஞ்சிகை ஒன்றிற்கு எழுதினேன். politicians asplayers அது 1971ஆம் ஆண்டிலேயே எழுதியது. அதனை தி.மு.க. மொழிபெயர்த்துப் போட்டது. அந்தக் கட்டுரைகள் தொடர்பியல் துறையில் உள்ளவர்களால் இன்றுவரைக்கும் பேசப்படுகிறது. இக்கட்டுரைகள் எல்லாம் ஆங்கிலத்தில் வந்தவை. அதன்பின்பு ஏன் தமிழ் சினிமா நாடகத்திலும் பார்க்க முக்கியமானது? தமிழ் நாட்டில் சினிமா ஏன் முக்கியத்துவத்தைப் பெற்றது? என்பதற்கான விவாதங்கள் எல்லாம் அதில் இருந்து பிறந்தன. எப்படி எம்.ஜி.ஆர். தமிழ் நாட்டில் உள்ள சகலருக்கும் பொதுவான ஒரு தலைவனாக மாறினார்? தமிழ்ச் சமுதாயத்திற்கு இவரால் ஏதாவது பலன் உண்டா? என்.டி.ராமராவ் தலைவனாக வந்தார். இது தென் இந்திய சமுதாயம் முழுவதற்கும் ஏற்புடையதாக இருந்தாலும் வட இந்தி யாவுக்கு வரவில்லை. இந்த விடயங்களையெல்லாம் விவாதித்தோம். இதில் ஆராய்வது படிப்பித்தலுக்கு உதவியாக இருந்தது. இப்படி ஒன்றுக்கொன்று ஆதரவாக அமைந்தது. இது பண்பாடும் தொடர்பியலும் பற்றி நான் செய்த வேலைகளில் சில.
தி.ஞா.: இலக்கிய விமர்சனத்துறையில் தங்களது பங்களிப்புப் பற்றிக் கூறுங்கள்
கா.சி. : இலக்கிய விமர்சனம் சம்பந்தமாக நீண்டகாலமாக எனக்கு ஆர்வம் உண்டு. ஆரம்பத்திலே நாடகத்தில் ஆர்வம் இருந்தது. அது பின்பு எனது நண்பர்கள் - குறிப்பாக கைலாசபதி அவர்களுடைய நட்புக் காரணமாக இலக்கியத்தில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தேன். இருவருக்கும் மார்க்சியத்திலே இருந்த ஈடுபாடு காரணமாக மார்க்சியக் கோட்பாட்டை இலக்கியத்தில் வைத்துச் செய்தோம். மற்றது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகாலத்தில்அது மீட்டெடுக்கப்படுகிற காலத்தில், 1954ல் நாங்கள் அதில் முக்கிய பணிபுரிந்தோம். 1956ல் நான் ஸாஹிராவுக்கு வந்த காலம் முதல் ஏறத்தாழ 70வரை மிகத் தீவிரமாகத் தொழிற்பட்டோம். அப்போது இலக்கியம் பற்றிய ஆய்வு, இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வு வந்தவுடன் இலக்கிய விமர்சனம் பற்றிய ஆய்வு மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக முற்போக்குக் குழுவைச் சார்ந்தவர்களுடைய இலக்கியத்தை நியாயப்படுத்துவது. உதாரண மாக சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இலங்கையர்கோன், வைத்தி லிங்கம், பண்டிதமணி ஆகியோர் சிறுகதை எழுதியபோது கோபப்படாத ஈழத்துத் தமிழ் அறிஞர்கள், டானியலும் ஜீவாவும் எழுதியவுடன் கோபித்தார்கள். இது சிறுகதையல்ல 'சிறுகத்தை என்று சொன்னார்கள். இந்த வடிவே இலக்கியத் திற்கு உரியதல்ல என்றார்கள். இவர்கள் தமது பாஷையை எழுதியபோது, "இழிசனர் வழக்கு என்றார்கள். உரைகளில் இழிசினர் வழக்கு என்றுதான் இருக்கிறது. அதனை மாற்றி இழிசனர் வழக்கு என்று சொல்ல அதனால்
33

Page 18
பெரும் சண்டையெல்லாம் நடந்தது. இன்னொரு விடயம் என்னவென்றால், இலங்கையில் மாத்திரமல்லாது தமிழ் நாட்டிலும் இந்த விஷயம்பற்றி நாங்கள் பேசவேண்டிய தேவை ஏற்பட்டது. உதாரணமாக சரஸ்வதி மூலம் வந்த எழுச்சி மணிக்கொடி குழுவினரை முன்னுக்குக் கொண்டுவர அந்த மணிக்கொடி குழுவினருக்குள்ளே இருந்த முரண்பாடு க.நா.சு, செல்லப்பா ஆட்கள் தனியொரு சஞ்சிகை தொடங்கவேண்டிய தேவை ஏற்பட்டு ‘எழுத்து சஞ்சிகை தொடங்கியது. கருத்து வித்தியாசம் ஏற்பட்டாலும் அவர்கள் மிகவும் நியாயமாக நடந்துகொண்டார்கள். கைலாசபதியினுடைய ஒரு கட்டுரை பற்றி எழுத்து சஞ்சிகையில் க.நா.சு. மிக மோசமாக எழுதிவிட்டார். நான் அதனை எதிர்த்து ஒரு விமர்சனம் எழுதினேன். தமிழ்நாடு சம்பந்தப்பட்ட நான் எழுதிய முதலாவது மிகமுக்கியமான கட்டுரை அதுதான். அந்தக் கட்டுரையை நான் இங்குள்ள புதுமை இலக்கியத்தில் எழுதினேன். “பொருளும் விமர்சனமும் என்ற தலைப்பில் எழுதினேன். செல்லப்பா ஒரு பெரிய மனுஷன். அந்தக் கட்டுரையை எழுத்து சஞ்சிகையில் மீள்பிரசுரம் செய்து அதனை விமர்சித்தார். ‘விமர்சனச் சிந்தனை கள் என்ற எனது நூலில் அந்தக் கட்டுரை சேர்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து படிப்படியாக ஆரம்பித்து மார்க்சியவாதம் சம்பந்தமாக ஈடுபாடு ஏற்பட்டது. அந்தக்காலத்தில் தொ.மு.சி.ரகுநாதனுடன் ஏற்பட்ட தொடர்பு மிக முக்கியமானது. அவர் எனக்கும் கைலாசபதிக்கும் நிறைய உத்வேகம் தந்த ஒரு மனிதர். இலக்கிய விமர்சனம் தொடர்பாக இங்கும் தமிழகத்திலும் தொழிற்பட்டோம். இலக்கிய விமர்சனம் என்பது ஏதோ நவீன இலக்கியத்தில் செய்யப்படுகிற விடயம்தான் என்கிற ஒரு அபிப்பிராயம் இருந்தது. அந்த அடிப்படையிலேதான் அப்போது புத்தகங்கள் எல்லாம் எழுதப்பட்டன. மதிப்புக்குரிய பேராசிரியர் வரதராஜன், பிற்காலத்தில் ஞானசம்பந்தன் போன்றோர் இலக்கியங்கள் பற்றி எழுதிய நூல்களில் இக்கருத்து மேலோங்கி நிற்பதைக்காணலாம். வரத ராஜன்கூட எழுதும்போது நாவல் சிறுகதை பற்றித்தான் எழுதுவார். இந்தமாதிரி யான எண்ணக் கருத்துக்களுக்கு எதிராக எழுதவேண்டிய தேவை எமக்கிருந் தது. திரும்பிப் பார்க்கும்போது சிரமமாகவும் இருக்கிறது. ஞானசம்பந்தனுடன் எல்லாம் ரெம்ப 'லடாய் படவேண்டிய காரணம் இருந்தது. நான் ரெம்பக் காத்திரமான சில வசனங்களைக்கூடப் பாவித்து விட்டேன். அவர்Plot என்பதற்கு சூழ்ச்சி என்று சொன்னார். ‘சூழ்வு என்று சொல்லியிருந்தால் அது சரி. சூழச்சி என்று சொன்னால் அது பிழை. கதைப்பின்னல் என்ற சொல்தான் பயன்படுத்தப்படவேண்டும் என்று நான் எழுதினேன். 'கதைப்பின்னல்" என்பது புதுமைப்பித்தனுடைய சொல். அதையே பாவிக்கவேண்டும் என்று நான் சொன் னேன். எல்லோரும் 'கரு' என்பார்கள். Plot வேறு, கரு வேறு.
நாங்கள் விமர்சனத்துறையில் செய்த மிக முக்கியமான விடயம் என நான் கருதுவது, பழைய தமிழ் இலக்கியத்தையும் நவீன தமிழ் இலக்கியம் போன்ற ஒரு விமர்சன நெறிக்குள் கொண்டுவந்தது. நவீன காலத்துக்கு முற்பட்ட இலக்கியங்களை அப்படிப் பார்த்தோம். 'திருவாசகம் காட்டும் மணிவாசகர் இதில் எதைக்கூறினேன் என்றால், மணிவாசகரை ஒரு கவிஞனாக. 'மதமும் கவிதையும் என்ற நூலிலும் இது கூறப்படுகிறது. Religion and poetry இல், சுந்தரருடைய, சம்பந்தருடைய, மாணிக்கவாசகருடைய கவித்துவத்தை 34

மறந்து அவற்றை வெறும் பாராயணமாகக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளேன். மேல்நாட்டில் அப்படிப் பார்ப்பதில்லை.NorthropFrye 6T6iugust Bible as Literature, 676. பைபிளை ஓர் இலக்கியமாகப் பார்க் கிறார். குறானின் வாசகங்களில் இருக்கும் திறன்பற்றி எத்தனையோ ஆசிரியர்கள் எழுதியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஸஹிராவில் இருந்த காலத்தில் அசீஸ் போன்றவர் களுடன் இருந்த தொடர்பு காரணமாக, அவர்கள் குறானைப் பற்றிப் பேசுகிறபொழுது, குறிான் எப்படி அரபு இலக்கியத்திற்குத் தளமாக அமைந்திருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நான் மாணிக்கவாசகரைத் தளமாகக்கொண்டு, நம்மாள் வாரைத் தளமாகக்கொண்டு பார்த்திருக்கிறேன். நம்மாள்வருக்காவது வைஷ்ணவர்களிடையே ஒரு பாரம்பரியம் இருக்கிறது; படிகள் எழுதுகிற மரபு இருக்கிறது. எங்களுக்கு அந்தக்காலத்தில் தேவாரம் திருவாசகத்திற்கு உரைகள் எழுதுகிற மரபே இருக்கவில்லை. இப்படிப்பார்ப்பது ஒன்று. மற்றது பழைய தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு சமூக விமர்சனம் செய்கிறது. உதாரண மாக நான் திணை பற்றி எழுதியது . கைலாசபதி, நாடும் நாயன்மாரும், “பேரரசும் பெருந்தத்துவமும் பற்றி எழுதியது. அதை வைத்துக்கொண்டு நான், 'சைவசித்தாந்தத்தில் சமூக நோக்கு எனச் சிறிது வித்தியாசமாகச் செய் துள்ளேன் - இப்படியாக நாங்கள் நவீன காலத்துக்கு முற்பட்ட இலக்கியங் களையும் விமர்சனத்துக்கு ஆட்படுத்தினோம்.
உண்மையில், சினிமாப் பாடல்களை வரன்முறையான கவிதை என்று அக்காலத்தில் ஒருவரும் கொள்வதில்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரவோடுதான் ஒரு மாற்றம் ஏற்பட்டது. உடுவலை நாராயணகவியிடம் இது ஏற்கனவே இருந்தது. மற்றவர்களுக்கெல்லாம் அது வெறும் சாகித்தியம்தான். திரை தந்த கவிதை என்று நான் முதலில் பேசினேன். எனக்கு அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனத்துடன் உறவு இருந்தது. அவருடன் அடிக்கடி கதைப்பேன். விதானையார் வீடு நாடகத்தில் நான் விதானையாராக-'அப்புவாக நடித்தேன். இரண்டரைவருடம் நடந்த நாடக நிகழ்ச்சி அது. நாடகத்தில் நடித்த காலத்தில் மயில்வாகனத்துடன் உறவு அதிகமாகியது. மயில்வாகனம் திரை தந்த கவிதை பற்றி Indian beam இல் செய்யும்படி வேண்டினார். சிலகாலத்தின் பின்னர், திரைப்பாடல்களில் இருந்த கர்நாடக இசையின் அடிப்படைகள்பற்றி முதன் முதலில் எஸ்.கே.பரராசசிங்கம் பேசினார். இன்று எல்லோருமே பேசுகிறார்கள். அதன் பிறகு இலங்கை வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் இதயரஞ்சனியில் அவர் மிகவும் விஸ்தாரமாகச் செய்தார். இந்த மாதிரியான பல்வேறு துறைக்குள் போகக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. விமர்சனம் என்பது வெறுமனே நாவல் 35

Page 19
களையும் சிறுகதைகளையும் பார்க்கிறது அல்ல. பழந்தமிழ் இலக்கியங்களையும் கொண்டுவரவேண்டும். இந்தியாவில் வானமாமலை செய்திருக்கிறார். அவருக் கும் ஒரு நீண்டகால ஈடுபாடு இருந்தது. ரகுநாதனுக்கும் நீண்டகால ஈடுபாடு இருந்தது. இதெல்லாம் ஒன்றாக வந்து சேர்ந்தது. ரகுநாதனின் சமுதாய இலக்கியம் பற்றிய கட்டுரைத்தொகுதியில் வந்த பஞ்சலட்சன திருமுக விலாசம் பற்றிய கட்டுரைகள் (இது தினகரனில் வந்தது). இதேமாதிரித்தான் வானமாமலை ரகுநாதன் ஆகியோருடன் தொடர்பு இருந்தது. எனது திணை பற்றிய கட்டுரையை வானமாமலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார். அவரும் ஆ.சிவசுப்பிரமணியமும் கட்டுரையை மொழி பெயர்த் தார்கள். திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படை என மொழிபெயர்த்தார்கள். இக்கட்டுரைத்தொடர் இளங்கீரனின் மரகதம் சஞ்சிகையில் 1961ல் வந்தது. விமர்சனம் என்பது வெறுமனே நவீன இலக்கியத்துக்கு உரியதானது என்ற கருத்தில் இருந்த நிலையை நாங்கள் மாற்றி அமைத்தோம்.
எனக்கு இலக்கிய விமர்சனத்தில் ஈடுபாடுள்ள சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். குறிப்பாக காலஞ்சென்ற ஏ.ஜே.குணவர்த்தனா, சாள்ஸ் அபெயசேகர ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தேன். ஆங்கில இலக்கிய விமர்சனம் பற்றிய தொடர்பு நிறைய இருந்தது. பல நண்பர்கள் ஏ.ஜே.கனக ரட்னாவையும், கைலாசபதியையும் என்னையும் இரு துருவங்களாக வைத்துப் பார்த்தார்கள். சமீபத்தில் ஒருவர் எங்களுக்குள் யார் பெரியவர் என்று எழுதியதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் ஏ.ஜே.கனகரட்னாவுக்கும் எங்களுக்கும் ஓர் ஆழமான அடிப்படையான சினேகம் நீண்டகாலமாக உண்டு. அதை நாங்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. எனது சில புத்தகங்களுக்கு 'புறுப் கூட அவர் பார்த்து உதவியிருக்கிறார். நாங்கள் புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதுண்டு. சித்தார்த்தன் பேரின்பநாயகம் போன்றோருடனும் உறவு இருந்தது. இந்த மாதிரியான இலக்கிய ஆர்வலர்களுடன் இருந்த உறவு காரணமாக ஆங்கிலத்தில் அவ்வக்காலத்தில் வருகிற சிந்தனை மரபுகள்பற்றி ஆழமாகப் பார்க்கிற ஒரு தன்மை இருந்தது. குறிப்பாக 60, 70 களில் ஏற்பட்டது. அதனாலேதான் நாங்கள் நவீனத்துவம், பின்நவீனத்துவம் பற்றியெல்லாம் பேசவேண்டி இருந்தது. 93,94இல் அமைப்பியல் வாதம், பின்நவீனத்துவம் இவைபற்றி யாழ்ப்பாணத்தில் பேசியபோது, சொக்கன் போன்ற நண்பர்கள் இப்படியெல்லாம் பார்க்கலாமா என்று என்னுடன் சண்டை பிடித்தார்கள். இந்தத் தொடர்புகள் காரணமாக நாங்கள் இவற்றைச் செய்யக்கூடியதாக இருந்தது. ஆங்கில அறிவையும் வைத்துக்கொண்டு அதனோடு பார்க்கிற தன்மை. இந்தத் துறையில் ஒரு அடிப்படை விஷயம் வருகிறது. சுருங்கச் சொல்வதானால் ஆங்கிலத்தில் கூறுவார்கள் Multi disciplinary approch 616 iml.
5. (abst : Agis Multi disciplinary approch Tair, Luis Capgapasoda)
தாங்கள் திறமையாக இயங்குவதற்கு ஏதுவாக இருந்தது என்று கொள்ளலாமா?
கா.சி. பல்துறைச் சங்கம ஆய்வு என்று இதைச் சொல்லலாம். அதாவது
சமூகவியல், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் இவற்றையெல்லாம் சேர்த்து 36

இயங்குதல். பொருளாதாரம் தெரியாமல் நீங்கள் குறிஞ்சியைப் பார்க்க முடியாது. ஆனால் குறிஞ்சி இலக்கியம். பின்பு நாடகத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கிற தேவை ஏற்பட்டது. வித்தியானந்தனுடன் சேர்ந்து வேலை செய்தது. அதன் பின்பு ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் நாடகத்தை க.பொ.த. உயர்தர வகுப்பிற்குப் பாடமாக்கியது. தம்மஜாகொட என்ற நாடகக் கலைஞர்தான் அதனை முதலில் தொடக்கியவர். அவர் சிங்களத்தில் தொடங்கும்போது தமிழிலும் நாங்கள் செய்யவேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டார். நான் சண்முகலிங்கத்தோடு தொடர்புகொண்டு இருவரும் அதனைத் தொடக்கிவைத்தோம். இப்போது பல்கலைக் கழகத்திலும் நாடகம் ஒரு பாடமாக இருக்கிறது. சிங்களப் பல்கலைக் கழகத்தில் செய்யாத ஒரு விஷயத்தை நாங்கள் முதலில் செய்தோம். தமிழ் நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்திலும் முதல் பட்ட வகுப்பில் நாடகத்தை ஒரு பாடமாகப் படிப்பிக்கிறதில்லை. இப் போதுதான் பாண்டிச்சேரியில் எம்.ஏ.க்கு பாடமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு முதலேயே நாங்கள்Undergradatecourseற்கு வைத்திருந்தோம். எப்படி அதற்குப் படிப்பிக்கிறது என்பது ஒரு பெரிய விடயமாக இருந்தது. அதற்குப் பெரிய உதவியாக இருந்தவர் குழந்தை சண்முகலிங்கம். 75 அல்லது 80 வீத பங்களிப்பு அவருடையது. நாங்கள் இருவரும் சேர்ந்து செய்தோம். இப்படிப் பல்வேறுதுறைகளில் இயங்க வேண்டிய தேவை இருந்தது. இந்த Multi disciplinary approch ஒரு காரணமாக அமைந்தது.
சுருக்கமாகச் சொன்னால், மனிதனை ஒரு சமூக ஜீவனாக, மற்றைய மனிதர்களோடு உறவு கொண்டவனாக, அந்த உறவுகளுக்கு வேண்டிய தொடர்பாடல் முறைகளை வளர்த்துக் கொண்டவனாக பார்க்கின்ற முறைமை பற்றிய ஒரு தேடல் படிப்படியாக வளர்ந்து வந்தது. அதை நான்தான் செய்தேன் என்று சொல்ல முடியாது. பல நண்பர்களின் உதவி, பல வாய்ப்புக்களின் உதவி. இந்த வகையில் நான் பெரிய அதிஷ்டசாலி என்றுதான் சொல்வேன். எனக்கு வாய்த்த நண்பர்கள் நல்ல நண்பர்கள். எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் மிகப் பெரிய ஆசிரியர்கள். கல்வி என்பது கொடுத்தால் குறைவுறாது இன்னும் வளரும் என்பதை எனது ஆசிரியர்கள் எனக்குச் சொல்லித் தந்தார்கள். தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லவேண்டும். தெரியாததைத் தெரிகிற மாதிரி காட்டிக்கொள்ளவும் கூடாது. இந்த இரண்டு விடயத்தையும் நான் என்னுடைய ஆசிரியர்களிடம் படித்தேன். அவர்களுடைய ஆசி, எனது நண்பர் களின் உதவி, சாதனங்கள் ஊடகங்களின் வாய்ப்பு இவை எல்லாவற்றாலும் இந்தத் துறைகளில் நான் தொழிற்படக்கூடியதாக இருந்தது. ஆனால் இவை எத்தகைய காத்திரமானவை, எத்தகைய தாக்கங்களை ஏற்படத்தின, இவற்றி னுடைய தாக்கங்கள் எந்தளவுக்குச் சரியானவை என்பது பற்றிய முடிவுகளுக்கு நான் வரவிரும்பவில்லை. இந்த இந்த விடயங்களில் ஈடுபட்டோம் என்பதை மாத்திரம் சொல்ல முடியுமே தவிர இவை பற்றிய மதிப்புகள் மதிப்பீடுகள் காலத்துக்குக் காலம் மாறலாம். அது காலத்தின் தேவைகளையும் காலத்தின் உணர்வுகளையும் பொறுத்த விஷயம்.
தொடரும்.
37

Page 20
8:8 தொடர்பில் செய்யக்கூடியவை, செய்யவேண்டியவை
- லெனின் மதிவானம் ബ
"மலையக இலக்கியம்” எனும் இலக்கிய நெறியானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய கூறாகப் போற்றப்பட்டு வருகின்றது. இலக்கியத்தில் ஜனநாயகப் பண்பு வளர வளர இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு பல ஆராய்ச்சியாளர்களின் கவனம் இதன்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களாக, மலையக இலக்கியம் தொடர்பிலான சர்ச்சைகளிலும், விசாரங்களிலும், பலருக்கு ஈடுபாடு அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது. மலையகத்தின் தனித்துவத்தினையும், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும், இணைத்து நிற்கும் தமிழ் இலக்கிய மரபு தோன்றி வளர்ந் துள்ளமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இவ்வாறானதோர் சூழலில், இத்தருணத்தில் செய்யவேண்டியவை குறித்தும், செய்யக்கூடியவை குறித்தும் சுருக்கமாய்க் கூறுவதே இச்சிறுகட்டுரையின் நோக்கமாகும்.
மலையக இலக்கியம் குறித்து நோக்குவதற்கு முன்னர், அதன் அடித்தள மாக உள்ள மலையக சமுதாய அமைப்புப் பற்றிய தெளிவுணர்வு அவசியமான தொன்றாகின்றது.
மலையக சமூகவமைப்பானது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதோர் சமூக அமைப்பாக விளங்குகின்றது. மூலதனக்காரர்களுக்கும், உழைப்பை விற்பவர்களான தொழிலாள வர்த்தகத் தினருக்கும், இடையில் நிலவுகின்ற உற்பத்தியுறவே மலையக சமூக மனித வூடாட்டத்தின் அடிப்படையாகும். இது ஒரு பகை முரண்பாடாகும். இதன் அடியாக எழுவதே வர்க்கப் போராட்டமாகும்.
ஒரு புறமான காலனித்துவ ஆதிக்கமும், மறுபுறமான சமூகவுருவாக்க மும் இணைந்து, இம்மக்களுக்கு தாம் தனித்துவமான தேசிய சிறுப்பான்மை இனமென்ற உணர்வை, பிரக்ஞையை உருவாக்கியுள்ளது எனலாம். இன்றுவரை இவர்கள் பல்வேறுவிதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டுவருகின்றனர்.
சமூக மாற்றத்துக்கான செயற்பாடுகளில் இலக்கியத்தின் பங்கு முக்கியமானதொன்றாகக் காணப்படுவதுடன் சமூகத்தின் அசைவியக்கத்திற்கும் இலக்கியம் வழிகாட்டவேண்டும். அதனைச் சாதிப்பதற்கான அணுகுமுறையை வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதாக அமையவேண்டும். எனவே தான் இலக்கியமானது காலத்தின் கண்ணாடியாக மட்டுமன்றி, அது காலத்தை உருவாக்குகின்ற பணியினையும் ஆற்றுகின்றது.
38
 
 
 
 
 

அவ்வகையில் மலையக இலக்கியமானது புரட்சிகரமான யந்திரத்தின் ஒர் அங்கமாக உள்ளதுடன், உழைக்கும் வர்க்கம் சார்ந்த நல்வாழ்வுக்கான போராட்டத்தில் வலிமைமிக்க ஆயுதமாகவும் பயன்படுகிறது. இந்த நோக்கத்தை அது சாதிக்கவேண்டுமென்றால், மலையக மக்கள் தொடர்பிலான மக்கள் இயக்கமொன்றினைக் கட்டியெழுப்ப முனைவது அதன் முக்கியகடமைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
மேற்குறித்த கருதுகோளின் அடிப்படையில் மலையக இலக்கியம் குறித்து நோக்குகின்றபோது, இதுவரை வெளிவந்த இலக்கியப் படைப்புகள் குறித்தும், அதன் போக்குகள் குறித்ததுமான பார்வை அவசியமானதொன்றா கின்றது.
மலையகப் படைப்பிலக்கியமானது இருதரப்பினரால் எழுதப்பட்டுள்ளது. ஒன்று இம் மண்ணைச் சார்ந்த, இம்மண்ணின் மைந்தர்களாக வெளிப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள். மற்றது இம்மண்ணைச் சாராத அதேசமயம் இம்மக்கள் மீது நேச பூர்வமான பார்வைகொண்டு எழுதிய இலக்கியப் படைப்புகள் என்பனவாகும்.
மண்ணைச் சார்ந்து நின்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை நோக்குகின்றபோது இந்த வாழ்வியலை உள்வாங்கி எழுதுகின்ற பண்பினை காணக்கூடியதாக உள்ளது. இவ்வகைப்பாட்டினுள் மலையக இலக்கியம் படைத்த அனைத்து எழுத்தாளர்களையும் கொள்ளமுடியாது என்பதும் மனம் கொள்ளத்தக்கதாகும். யதார்த்த நோக்கு, சமூக அசைவியக்கம் என்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்வதில் இவர்களிடையே வேறுபாடுகள் உண்டு என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கதொன்றாகும்.
மற்றது மலையகப் பிரதேசத்துடன், தொடர்புகொண்ட பிற பிரதேச இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்றபோது, இம்மக்களின் மீதான நேச உணர்வுகொண்டவர் களாக இருந்தபோதிலும், இம்மண்ணின் வாழ்வியலைப் புரிந்துகொண்டு இலக்கியம் படைத்துள்ளனர் எனக்கூற முடியாது. பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்தின் போராட்டமான தனியுடமைக்கு எதிரான பார்வை என்பதனைவிடுத்து நிலத்தைச் சொந்தமாக்கு என்ற விவசாய வர்க்கத்திற்குரிய பார்வையினையே முன்வைத்துள்ளனர். மிக அண்மையில் மலையகத்தில் தோன்றி வளர்ந்து வருகின்ற மத்தியதரவர்க்கமும் இப்பார்வையின் நிலைநின்று இலக்கியம் படைக்க முனைவதனைக் காணலாம் வே.இராமரின் காணி நிலம் வேண்டும் என்ற கவிதை இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும். இதுபற்றி எனது "ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியம்” என்ற கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளேன்.
இன்றைய உலகமயமாதல் சூழலானது, மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அவை இயற்கையானது எனக் கற்பிதம்செய்து தனிமனிதர்களிடையிலான போட்டியைத் தீவிரமாக்கியுள்ளது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்வதற்கு எதனையும் செய்யலாம் என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இப்பின்னணியில்தான் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான வர்க்கப் போராட்டத்தைச் சிதைப்பதற்கான பால், சாதி, 39

Page 21
இன, மத ரீதியான ஒடுக்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. மலையகத்தில் தோற்றம் பெற்றுக்கொண்டிருக்கின்ற புதியவர்க்கம் சாதிய அடிப்படையைக் கருவியாகக்கொண்டு தமது நலனைக்காக்கத் தொடங்கியுள்ளது. மலையகத் தினுள் சாதிய முரண்பாட்டைப் பிரதான முரண்பாடாகக் காட்டி வர்க்கப் போராட்டத்தைச் சிதைக்கும் கலை இலக்கியப் படைப்புகளும் இன்று தோன்றி யுள்ளன. ரூபவாஹினி தொலைகாட்சி சேவையில் ஒளிப்பரப்பட் "தப்பு" நாடகம் இதற்குத் தக்கதோர் எடுத்துகாட்டாகும்.
மலையகப் பெண்களின் நிலைகுறித்துச் சிந்திக்கத் தலைப்படுகின்றபோது இனம், மொழி, வர்க்க, பால் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டு வந்துள்ளமையை அவதானிக்க முடியும். குறிப்பாக மத்தியதரவர்க்கப் பெண்கள் வர்க்க அடிப்படையில் (தொழிலாளி என்ற ஒடுக்குதலுக்கு) உட்படவில்லையா யினும், ஏனைய ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டே வந்துள்ளனர். இவ்வொடுக்கு தல்களை மலையக எழுத்தாளர்கள், வெவ்வேறு தளங்களில் இருந்து நோக்கி யுள்ளனர் என்பது ஒருபுறமிருக்க, ஏனைய பிரதேசப் படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது மலையகத்தில் பெண்விடுதலை என்ற கருத்து சமூக விடுதலையுடன் இணைந்துள்ளதாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதை இப்படைப்புகள் உறுதிசெய்கின்றன. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோக்குதல் அவசியமான தொன்றாகும். பூகோளமயமாதல் என்னும் ஏகாதிபத்திய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மூன்றாம் உலக நாடுகளின் கலாசாரம் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்பட்டு வருகின்றது. ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளின் ஆசீர்வாதத்துடன், ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களான என்.ஜி.ஒக்கள், கட்டவிழ்ப்பு, கட்டு டைப்பு, பின் நவீனத்துவம், பெண்ணியம் முதலிய மாயா ஜாலங்களைக் கட்டவிழ்த்து அதனூடாக மக்கள் இலக்கியத்தினையும் அதனைப் படைப்பவர் களையும், பல முனைகளில் நின்று தாக்கி வருகின்றன.
இவ்வகையில் மலையகத்தின், பிரதான முரண்பாடு சாதி எனக் காட்டு வதிலும், மலையக சமூகப் போராட்டத்திலிருந்து பெண்விடுதலையைப் பிரித்து நோக்குவதிலும் இவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். “சாதியம்” “பெண்ணியம்” எனக் கூப்பாடு எழுப்பிக் குதியாட்டம் போடுகையில் இவர்களின் கூற்று நியாயமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் தென்படும். சற்றுக் கூர்ந்து நோக்கினால்தான் சமூகமாற்றத்தை எதிர்க்கும் மனப்போக்கிற்குப் பின்னால், ஏகாதிபத்திய நிறுவனங்களும் அதற்கு இலகுவாக விலைபோகக் கூடிய புத்தி ஜீவிகளும் காணப்படுவர். இது தற்செயல் நிகழ்ச்சியல்ல.
மலையக மண்ணைச் சார்ந்து எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்களின் சிந்தனைத் தெளிவு, பார்வை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.முற்போக்குவாதச் சிந்தனையின் நிலைநின்று இலக்கியம் படைத்தவர்கள் 2. மார்க்ஸிய சித்தாந்த நிலைநின்று இலக்கியம் படைத்தவர்கள். முதலாவது பிரிவினர் மலையக இலக்கியத்தினை முற்போக்கு உணர்வுடன் நோக்கியதுடன் மண்வாசனைமிக்க படைப்புகளை வெளிக்கொணர் வதில் முக்கியத்துவம் உடையவர்களாக உள்ளனர். இருப்பினும், மலையக சமூகம் குறித்த தீட்சண்யம் மிக்கதும், யதார்த்த பூர்வமானதுமான தத்துவார்த்தப்
40

பார்வையினைக்கொண்டிராமை காரணமாக இச் சமூக அமைப்பில் நிலவிய உற்பத்திமுறைகள், உற்பத்தி உறவுகள் சமூக அரசியல் கலாசாரம் குறித்த தெளிவற்றோராய்க் காணப்படுகின்றனர். இவ்விடத்தில்தான் இரண்டாவது அணியினர் முக்கியத்துவம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். (இது பற்றி இந்நூலாசிரி யரின் "ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் மலையம்" - 2000 விரிவாக விளக்கப் பட்டுள்ளது). எனவே மலையக சமூகத்தினைப் புரிந்துகொள்வதன் மூலமும் வரலாறு, சமூகவியல், அழகியல், உளவியல் இவற்றையெல்லாம் தனித்தனி யாகவும், மிகைப்படுத்தியும், குறைவாக எடைபோட்டும் குழப்பிக் கொள்ளாமல், யாவற்றினையும் ஒன்றினைத்து மலையக இலக்கியத்தைச் சிருஷ்டிக்கவும், ஆய்வு செய்யவும் வேண்டும். இவ்விடத்தில் நமது எழுத்தாளர்கள் பின்வரும் அனுபவத்தினை உள்வாங்கவேண்டும்.
"அரசியலுக்கும், கலைக்கும் இடையே ஐக்கியம் உண்டாக வேண்டும் என்று நாம் கோருகின்றோம். உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையே இணக்கம் இருக்கவேண்டும் என்று நாம் கோருகின்றோம். புரட்சிகரமான அரசியல் உள்ளடக்கமும் மிக உன்னதமான கலாம்சரூபமும் பக்குவமாகப் பிணைந்து இருக்கவேண்டும். கலாரீதியான குணாம்சம் நிறைந்ததாயில்லாத கலை இலக்கிய சிருஷ்டிகள், அவைகள் அரசியல் ரீதியாக எவ்வளவு முற்போக்கு வாய்ந்தவையாக இருந்தாலும் சரி, அவைகள் பிரயோஜன மற்றவகைகளாகும்.
ஆகவே, தீங்கு விளைவிக்கும், பிற்போக்கு உள்ளடக்கம் நிறைந்த கலா சிருஷ்டிகளை மட்டும் நாம் வெறுக்கவில்லை. "சுவரொட்டிகள், விளம்பரம் மாதிரி கோஷம் போடுவது போன்ற நடையிலுள்ள" உள்ளடக்கம்தான் முக்கியம், உருவம் முக்கியமே இல்லை என்று வலியுறுத்தும் கலா சிருஷ்டி களையும் நாம் வெறுக்கின்றோம். கலை இலக்கியப் பிரச்சினைகளில் இத்தகை இரண்டு முனைகளிலும் நாம் போராடவேண்டும்".
(மாசேதுங் -1942 இல் இலக்கியம் குறித்து யோனானில் ஆற்றிய உரை)
இத்தகைய பண்பு மலையக கலை இலக்கியத்தில் ஏதோ ஒரு வகையிலும், அளவிலும் காணப்படுகின்றது என்றபோதிலும் ஆழமான - நுட்ப மான மார்க்ஸிய சிந்தனையை வளம்படுத்துவதன் மூலமும், அது குறித்த தேடலின் மூலமும்தான் இதனை முழுமையடையச் செய்யமுடியும்.
தற்காலப்போக்கில் உலகளாவிய ரீதியிலான மக்கள் இயக்கங்களின் வீழ்ச்சி பல பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது எனலாம். மக்கள் கலை இலக்கியங்களைப் படைத்துவருபவர்களுக்கும், அதனைப் பேணிப் பாதுகாத்து வருகின்றவர்களுக்கும், எதிரான எதிர்ப்புக்குரல் பல முனைகளிலிருந்து முன்வைக்கப்படுவதனைக் காணலாம். ஒரு காலகட்டத்தில் சமூகவியல் பார்வை யில் கொடிகட்டிப் பறந்த இலக்கிய கர்த்தாக்களே இன்று இத்தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். சோஷலிசமானது முதலாளித்துவத்தின் அடிப்படையான சில பண்புகளை உள்வாங்கி நவீனத்துவமாக மிளிர்கின்றது என்ற திரிபுவாதச் சிந்தனையை முன்வைத்து விடுவதனை அண்மைக்கால ஆய்வுகளில் காணக்கூடியதாக உள்ளது. இவ் அறிவுஜீவிகள், எதிரியின் பக்கம் போய்விட்ட நிலையையும் வெளிவிட முடியாமல் மார்க்ஸியத்தின் மெய்மையையும் மறந்து 41

Page 22
விடமுடியாது அறிவு தடுமாறுவதைக் காணக்கூடியதாயுள்ளது. இவ்வாறானதோர் சூழலில் மலையகத்தில் சில நம்பிக்கைக் கீற்றுகள் தென்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க, பின்வரும் விடயம் தொடர்பில் மலையக கலை இலக்கிய கர்த்தாக்கள் கவனம் செலுத்தவேண்டும்.
மக்கள் அரசியலில் ஓர் ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டின் அவசியத் தைப் போலவே மலையக கலை இலக்கியத்துறையிலும் ஐக்கிய முன்னணிக் கோட்பாடு அவசியமானதாகின்றது. தலைகுனியவேண்டிய தனிமனித சண்டை களாலும் எழுத்தாளரைத் தனிமைப்படுத்தி தாழ் நிலைக்கு கொண்டுசெல்லும் குழு மனப்பாங்கும் இன்று மலையக கலை இலக்கியத்திலும் தாக்கம் செலுத்திவருகின்றது. சிறு முதலாளித்துவப் பண்பும், அது தோற்றுவிக்கக்கூடிய தனிமனித முனைப்புமே இதன் அடிப்படையாகும். இப்பண்பு மலையக எழுத்தாளர்கள் பலரைப் பாதித்துள்ளதை இவர்களது ஆய்வுக்கட்டுரைகளும் ஆய்வரங்க உரைகளும் உணர்த்தி நிற்கின்றன. இது ஆழமான சமூகவியலைக் கற்பதனாலும், அது தொடர்பிலான பங்கேற்பினாலும் திருத்தப்படவேண்டிய அம்சமாகும்.
இது இவ்வாறிருக்க மலையக மக்களின் நல்வாழ்வுக்கான பதாகையை உயர்த்திப் பிடிக்கின்றபோது தேசிய ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்தல், அவசியமானதொன்றாகும். இவர்கள் கலை இலக்கிய ஐக்கிய முன்னணியில் முக்கிய சக்திகளாவர். நேச சக்திகளுடனான இத்தகைய ஐக்கியம் முக்கியப் படுத்தப்படுவதுடன், அதன் மறுபுறமான விமர்சனமும் அவசியமானதொன்றா கின்றது. மாசேதுங், தமது கலை இலக்கியம் குறித்த உரையில் குறிப்பிடுகின்ற போது “ஒரு ஐக்கிய முன்னணியில் போராட்டம் இல்லை என்றால், அல்லது போராட்டம் தவிர ஐக்கியம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி இல்லையென்றால், கடந்த காலத்தில் நம்முடைய தோழர்களில் சிலர் இழைத்தது போன்ற தவறுகளையே நாமும் திருப்பிச் செய்துகொண்டிருப்போம். அதாவது வலதுசாரி "சரணாகதிப் படலாம்” “வால் பிடித்துநிற்கும் தன்மை" அல்லது "இடது சாரி தனிமைவாதம்” செக்டேரியனிசம் போன்ற தவறுகளைச் செய்துகொண்டிருப்போம்” இரத்தினச் சுருக்கமான இக்கூற்று மலையக கலை இலக்கிய ஐக்கியத்திற்கும் பொருந்தும் எனலாம்.
இவ்வாறான ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டை அமைக்கின்றபோது சமூகத்தின் அசிங்கங்களை அழகுப்படுத்தல், நியாயப்படுத்தல், சமரசம் செய்தல் எனும் புன்மைகளைத் தாண்டி மக்களின் ஜீவனோபாயத்திற்கான போராட்டத் தினை முன்னெடுப்பதாக அமைதல்வேண்டும். எடுத்துக்காட்டாக திரு.சாரல்நாடன் அவர்கள் மலையக கலை இலக்கியம் தொடர்பிலான பதிவுகளை முற்போக் குணர்வுடன் வெளிக்கொணர்ந்துள்ளார். மறுப்புறமாக அவரது ஆய்வுகளிலும் படைப்புகளிலும் சிறு முதலாளித்துவப் பண்பின் தாக்கம் இழையோடியிருப்பதனை உணரக்கூடியதாக உள்ளன. இதனை முற்போக்குச் சக்திகளுடனான, ஐக்கிய மும் விமர்சனமும் என்ற பதம் உணர்த்தி நிற்கின்றது.
மலையக இலக்கியத்தினைப் பாதித்திருக்கின்ற மற்றொரு முக்கிய விடயம் பதிப்பு முயற்சியாகும். மலையக எழுத்தாளர்களின் அனேகமான படைப்புகள் நூலுருப்பெறவில்லை. மூத்த எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள்கூட 42

இதுவரை நூலுருப் பெறாதிருப்பதனைக் காணலாம். இருப்பினும் மலையக வெளியீட்டகம், தேசியக் கலை இலக்கியப் பேரவை, நந்தலாலா இலக்கிய வட்டம், சாரல் வெளியீட்டகம் என்பன இது விடயத்தில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களை வெளியிடுவதில் தேசிய கலை இலக்கியப் பேரவை, நந்தலாலா இலக்கிய வட்டம் முதலியவற்றின் முயற்சிகள் பாராட்டத்தக்கன.
இது விடயத்திலும் மலையக கலை இலக்கியவாதிகள் கவனமெடுக்க வேண்டும். எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து வெளியீட்டு அமைப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமாக இப்பிரச்சினையை ஓரளவுக்காவது தீர்க்கமுடியும். அத்துடன் அச்சடிக்கப்பட்ட நூல்களைத் திட்டமிட்டவகையில் விநியோகம் செய்தல்வேண்டும்.
இவ்விடயத்தில் எழுகின்ற மற்றொரு முக்கியவிடயம்தான் மலையக கலை இலக்கியத்தின் வாசகர் யார் என்ற வினாவாகும். அண்மைக்காலக் கட்டுரை ஒன்றில் பேராசிரியர் கா.சிவதம்பி இவ்வினாவை எழுப்பி விடை காணவும் முற்பட்டுள்ளார்.
கலை இலக்கியத்தை சமூக மாற்றத்திற்கான கருவியாக நோக்குகின்ற போது அதன் வாசகர் பற்றிய சிரத்தையும் முக்கியமானதொன்றாகின்றது.
யாழ்ப்பான சமூகமாற்றப் போராட்டத்தில் இலக்கியம் வகித்த பங்கினை யும், இவ்விடயத்தில் மனங்கொள்ளல் அவசியமானதாகும். அவ்வகையில் மலையகம் தொடர்பில் படைக்கப்படுகின்ற இலக்கியமும், மலையக சமூகமாற்றத் திற்கு துணையாக வேண்டுமெனின் அதன் மறுபுறமான மலையக வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவேண்டும்.
மலையகத்தில் காணப்படுகின்ற கலை இலக்கிய வட்டங்களான தேசிய கலை இலக்கிய பேரவை, நந்தலாலா இலக்கிய வட்டம், புதிய சிந்தனை கலை இலக்கிய பேரவை முதலிய அமைப்புகள், மலையக இலக்கியங்களை மலையக புத்திஜீவிகளின் மத்தியில் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்தபோதும், அவை திட்டமிடப்பட்ட வகையில், செம்மையாகச் செய்யப் படவில்லை.
மறுபுறமாக, மலையகப் பாடசாலைகளிலும், உயர் கல்வி நிலையங் களிலும், அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவை பெரும்பாலும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், கெணரவிப்பதிலேயே முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. அத்துடன் பாடசாலை மட்டத்தில், நடத்தப் படுகின்ற தமிழ்த் தின விழாவும், போட்டிகளும் வருடா வருடம் நடத்தப்படுகின்ற கேலிக் கூத்தாகவே அமைந்துள்ளன. அதனையும் மீறி அதில் வெளிப்பட்ட சமுதாய விழிப்புணர்வை இல்லாததாக்குவதிலும், அதற்கு எதிரான நடவடிக்கை களை மேற்கொள்வதிலும், அவை நிதானமாகவே செயற்பட்டு வருகின்றன. "வெளிச்சம் வெளியே இல்லை" என்ற நாடகம் தொடர்பிலான நடவடிக்கையை இங்கு குறிப்பிடலாம். அத்துடன் இச் சுற்றுநிருபங்களில் வெளிப்படும் பாரதியின் பாடல்கள்கூட சிதைந்த அல்லது பாரதியின் பலவீனமான பாடல்களே போடப்படுகின்றன என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது அவசியமான தாகும்.
43

Page 23
மலையக உயர் கல்வி நிறுவனங்களில் இதனையும் மேவிய சில இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. எடுத்துக்காட்டாக யதன்சைட் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் கலாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட கைலாசபதி அரங்கிலான மலையக நாட்டாரியல் ஆய்வு அரங்கும், சாருமதி அரங்கில் நடாத்தப்பட்ட நவீன கலை இலக்கியம் ஒரு கருத்தாடல் என்ற அமர்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளாகும். இவ்வாறுதான் சிறியாத கல்வியியல் கல்லூரியின் தமிழ்ச் சங்கமும், சாஹித்திய விழாக்குழுவும் இணைந்து நடாத்திய "மலையக இனத்துவப் பன்முக ஆய்வு அமர்வும்", "லயம்" சஞ்சிகையின் வெளியீடும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.
இவற்றினைவிடுத்து மலையகப் பாடசாலைகளிலும், கல்வி நிறுவனங் களிலும் வெளிவருகின்ற வெளியீடுகளைப் பார்த்தால் அவை பலரைத் திருப்திப் படுத்தும் வகையிலான ஆசியுரைகளாலும், விளம்பரங்களாலும், நிரப்பப்பட்டவை யாகவே வெளிவருகின்றன.
இலக்கிய வாசிப்பினைப் பெருக்கும் வகையிலும், அது குறித்த விவாதங் களை ஏற்படுத்தும் வகையிலுமான இலக்கிய அமைப்புகள் தோன்றவும், ஏற்கனவே உள்ள அமைப்புகள் தங்களைச் சுய விமர்சனப்படுத்திக்கொண்டு செயற்படவும் வேண்டும். மலையகத் தோட்டங்களிலே இவ்வாறான அமைப்புகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். ரஷ்ய புரட்சிக்கு மகத்தான பங்களிப்பினை நல்கிய எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி, கிராமப் புறப் பத்திரிகை நிருபர் கூட்டத்திற்கு வழிகாட்டியதுடன், இளைஞர்களுக்குப் போதிப்பதிலும் அதிக கவனமெடுத்தார். அவ்வாறே சீன இலக்கிய முன்னோடி லூசுனும் இளம் மாணவர்களை வளர்ப் பதிலும், அவர்களுடனான கடிதப்போக்குவரத்துக்களை வைத்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தினார். மலையக இலக்கிய கர்த்தாக்களும் இவ்வாறான அனுபவங்களை உள்வாங்கிச் செயற்படல் அவசர அவசியமாகும்.
தவிரவும் மலையக மக்களின் வாழ்க்கை அம்சங்களைச் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தவும், அவர்களின் ஜீவனோபாயத்திற்கான போராட் டத்தில் அவர்களை இணைத்துக் கொள்வதற்கும் மலையகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் யாவும் சிங்கள மொழியில் மொழிப்பெயர்க்கப்படல்வேண்டும். அவ்வாறே சர்வதேச தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்த சக்திகளுக்கு மலையக மக்களின் வாழ்க்கையை எடுத்துக்கூறுவதற்கு ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்படல் அவசியமானதொன்றாகும்.
இவ்வகையில் மலையக இலக்கியமானது மக்களை வரலாற்றின் உந்து சக்தியாக நோக்கி மக்களிடமிருந்து கற்று மக்களுக்கான கலை இலக்கியங் களைச் சிருஷ்டிப்பதன் மூலம் புதிய உலகை ஆக்குவதற்கான பெரும் பங்களிப் பினை வழங்கமுடியும்.
இறுதியாக நோக்குகின்றபோது மலையக மக்களின் நிலைமை களையும், கருத்துநிலைகளின் தொழிற்பாடுகளையும் ஒருங்குசேரவைத்து நோக்கி எவ்வித சுரண்டலுமற்ற மனிதத்துவத்தை இலக்காகக் கொள்வோமாக.

எழுத்தாளர், ஓவியர் கலைஞர் தாபி.சுப்பிரமணியம்
த.பார்த்திபன்
1954, பாடசாலைக் காலத்திலிருந்தே எழுத்துப்பணியில் ஈடுபட்டு இன்று வரை எழுதிக்கொண்டிருப்பவர் தாபி.சுப்பிரமணியம். இவர் தாபி.எஸ்.ரமணி, சு.பிதா என்ற புனைபெயர்களிலும் தன் பணியைத் தொடர்கிறார். நாடகத்துறை, இலக்கியத்துறை, ஒவியத்துறை, என்பவற்றில் நாற்பது வருடகால சேவையைக் கெளரவிக்கும் முகமாக 1995ல் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்ட துடன், 2000ஆண்டளவில் மூத்த கலைஞர் விருதும், ஆளுநர் விருதும், வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர் தாபி.
முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்று பலவாறான கருத்துக் களோடு மனம் ஒன்றாமல் தன் போக்கிலேயே எழுதியவர் இவர். இதுவரை விடாமுயற்சி (சிறுவர் கதைத்தொகுப்பு) 1960, சந்தனக்குச்சு (சிறுகதைத் தொகுதி) 1961, இளம்பாதன் (சாரணிய வழிக்காட்டி) 1963, இதயங்கள் அழுகின்றன (நாவல்) 1977, கோயிலும் சுனையும் (நாடகத்தொகுதி) 1989, கனிஷ்ர சாரணியம் (சாரணியக் கைநூல்) 1994, அழகியற் கல்வியில் சித்திரம் (சித்திர வழிக்காட்டி) 1999, குடும்பத் தலைவர்களுக்கான வழிகாட்டி நூல் 1999, திருமண ஆயத்த வகுப்பு கையேடு 2000 ஆகிய 9 நூல்களினை எழுதி, வெளியிட்டு தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றி வருகிறார் இவர்.
பயிற்றப்பட்ட ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அழகியற் கல்வி முதன்மை ஆசிரியராக, தரம் 1 அதிபராக என நீண்டகாலப் கல்விப் பணியையும் புரிந்துவருகிறார். தற்போது கல்விப் பணியில் ஒய்வு பெற்றபோதும் அந்த அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டும் நாடகம், எழுத்து, ஒவியம், எனத் தொடர்கிறது இவரது பணி. இந்தப்பணிகளின் மூலம் பல வழிகாட்டி நூல்களை குறிப்பாக சித்திரப் பாடத்திற்கானதும், சாரணியத்திற்கானதுமான, நூல்களைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் வெளியிடப்படும் சஞ்சிகைகள், தொகுப்புகள் தா.பி.சுப்பிரமணியம் அவர்களின் ஒவியங்களையே தாங்கி வருகின்றன என்பதிலிருந்து ஒவியத்துறையில் இவரின் ஈடுபாட்டினையும், சிறப்பினையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். உலக ஆசிரிய தினத்தையொட்டி நடாத்தப்பட்ட விஷேட மலருக்கான அட்டை வரைதற்போட்டியில் 1997ல்
45

Page 24
முதற் பரிசை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இத்தினத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியிலும் முதற்பரிசைப் பெற்றுக்கொண்டார் தாபி.சுப்பிரமணியம்.
அடுத்து வானொலி நாடகம், மேடை நாடகம், எனப் பிரதி எழுதும் போட்டிகளிலும் பலரது கவனத்தைப் பெற்றவர். பிரான்ஸ் தமிழ் ஒலி மன்றம் தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்திய ‘சில்லையூர் செல்வராசன் நினைவு வானொலி நாடகப்போட்டியில் முதல் பரிசாக ரூபா 50000 (ஐம்பதாயிரம்) பெற்றுக்கொண்டதுடன் வட கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டு அமைச்சின் நாடகப் பிரதிப் போட்டியில் மூன்றாம் பரிசையும் பெற்றுக்கொண்டார். 2002ம் ஆண்டு இவரது திருத்தப்படும் தீர்மானங்கள்’ என்ற நாடகம் சித்தி அமரசிங்கத்தினால் மேடையேற்றப்பட்டது. 1970களிலிருந்து வானொலியில் பல நாடகங்களை எழுதி ஒலிபரப்ப வழங்கிக்கொண்டிருக்கும் இவரது மகாஜோதி 1971, ஆசையை அவி 1972, கோயிலும் சுனையும் 1972, தனக்குத் தனக் கெண்டால்., காலத்தின் முடிவுகள் 2000, வாஞ்சையுடன் கேட்டால் 2001 ஆகியன குறிக்கத்தக்கன.
ஈழத்து சுதந்திரன், விவேகி, தினபதி, வீரகேசரி, தினகரன், ஈழகேசரி, வெற்றிமணி போன்ற பத்திரிகைகளிலும் தமிழகத்து கண்ணன், கரும்பு, கலை மகள் போன்ற சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவர் சிறந்த கவிஞராகவும் தன்னை இனங்காட்டி வருகிறார். நீரில் பூத்த மலர் என்ற கவிதைத்தொகுதி யிலும், கவிதாலயா என்ற கவிதைத்தொகுதியிலும், இவரது கவிதைகள் இடம்பெற்றதுடன் நிவேதனம், ஒற்றைப்பனை ஆகிய சிறுகதைத்தொகுதிகளிலும் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவருடைய ஒற்றைப் பனை என்ற சிறுகதை அத்தொகுப்பின் தலைப்பாகவும், தினகரன் வாரமஞ்சரியில் மறுபிரசுரம் செய்யப்பட்டதும் இவரது எழுத்தாற்றலுக்குச் சான்றுகள் எனலாம். மேலும் உலகக் கவிதைத்தொகுப்பின் ஆசிரியரான அழகாபுரி அழகுதாசன் (கண்ணதாசனின் மருமகன்) எழுந்தமானமாக (திடீரென) கவிதைப்போட்டியில் இவர் எழுதிய கவிதையைப் படித்துப் பாராட்டியதோடு தமிழகக் கவிஞர்களுக்கு ஈழத்துக் கவிஞர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர்’ என்று குறிப்பிட்ட தையும் பார்க்கிறோம்.
பல துறை விற்பன்னராக இருந்தபோதும் தனக்கு முன்னோடியாக 1954ல் வகுப்பாசிரியராக இருந்த ஆரயம்பதி அமரசிங்கம்' ஆசிரியரை இன்றும் நினைவில் வைத்துப் போற்றுகிறார்; அவரும் சக மாணவர்களும் அளித்த ஊக்கமே தன் இன்றைய நிலைக்கு காரணமென்று நன்றியுடனும், நட்புடனும், நினைவுகூறுகிறார். மாணவப் பருவத்தில் "அறிவுச் சுடர் என்ற சஞ்சிகையை (1954 காலப்பகுதியில்) கையெழுத்துச் சஞ்சிகையாக உருவாக்கிய இவர், இன்றும் 'இனிமை இல்லம் என்ற குடும்பவாழ்வு பணித்துறையினரின் காலாண்டு சஞ்சிகையின் இதழாசிரியராக இருக்கிறார் என்பது மனங்கொள்ளாதது. அறிவும், ஆற்றலுங்கொண்ட இவர் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்வதுடன் எழுதியும் வருகிறார். இவர் பணி தொடர வாழ்த்துகிறோம்.
46

"ஞானம” மார்ச் இதழ் கிடைக்கப்பெற்றேன். ஒவ்வொரு மாதமும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கும் ஞாலம் போற்றும் ஞானம் மார்ச் இதழில் இடம் பெற்ற “காயப்பட்டவன்" மற்றும் குசுமாவதி இரண்டு சிறுகதைகளும் ஆழ்கடலில் எடுக்கப்பட்ட முத்துக்களைப் போல சத்துள்ள நல்ல கருத்துக்களைக் கொண்டு தரமானதாக இருந்தது. கவிதைகள், கட்டுரைகள் யாவுமே அற்புதம். கடல் கடந்த இலக்கிய நெஞ்சங்களும் கடிதங்கள் வாயிலாக வாழ்த்தும் “ஞானம்" இந்த வானும் வையகமும் இருக்குமட்டும் எந்நாளும் தேனும் பாலும் போல சுவையுடன் நூறாண்டுகள் வாழ வளர வாழ்த்துகிறேன்.
பாலா. சங்குபிள்ளை, அட்டன். ஐயா, நான் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர். தங்களுடைய ஞானம் இதழ்களை அயல் நாட்டுத் தமிழ் கல்வி துறையில் பயிலும் சக ஆய்வாளர்கள் மூலம் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் பிரசுரமாகும் விடயங்கள் மிகவும் கனதியானவையாகவும் ஈழத்து இலக்கியப் போக்கை அறிந்துகொள்ள உதவுவனவாகவும் உள்ளன. ஆகவே தொடர்ந்து ஞானம் சஞ்சிகையின் வாசகனாக இருக்க விரும்புகிறேன். இதனை எனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா சக ஒரத்தூர் கிராம நண்பர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் அறிமுகம் செய்ய உள்ளேன். இதழ்கள் தவறாது பெறும் வழி என்ன? கடந்த கால தொகுப்பு எனக்கு கிடைக்குமாறு தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கின்றேன். ஏ.துளசேந்திரன், திருவாரூர், இந்தியா.
ஞானம் 33 பெப்ரவரி 2003 இதழ் கிடைத்தது. முன் அட்டைப்படம் முதல் கவிஞர் வாகரைவாணனின் கவிதை வரை ஆர்வமாய் படித்தேன். ஞானம் தன் நிகரிலாத் தன்மையை நிரூபித்து வருகின்றது.
மேலும் மனதில் ஒரு நெருடல். இந்த இதழின் ஆசிரியர் தலையங்கம் நெருடியது. அதன் முதற்பந்தியை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். மூத்த எழுத்தாளர் என்.ரகுநாதன் அவர்களின் கோப முகமும் குரலும் நினைவுக்கு வந்தன.
யாரைச் சொல்லி நோவது? ஆனால் ஞானம் சஞ்சிகையும் அந்தக் குருபீட வணக்கத்துக்குள வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக இதனை எழுதுகின்றேன்.
கம்பவாரிதி அவர்களால் ஞானம் இதழில் "கிளாக்கர்ப்புத்தி” என்றொரு விவாதம் தொடக்கப்பட்டு தொடராகக் கருத்துக்கள் வெளிவந்தன. அதில் வந்த கருத்துக்கள் அனைத்தும் கம்பவாரிதியார் சொல்லக் கொண்டு வந்த 47

Page 25
எண்ணக் கருவைச் சொல்லாமல் எதிர்க் கருத்துக்களின் பலத்தையே அதிகமாக்கின. அதைத் தொடரமுடியாத நிலையில் நடுநிலைமை இல்லை என்ற தும்பிக்கை எழுத்துடன் அந்த விவாதம் முற்றுப் பெற்றமை பற்றிக் குறிப்பிடாமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதற்குரிய பதிலையும் சிலகேள்விகளையும் நான் ஞானத்திடம் முன் வைத்திருந்தேன். அவை அப்படியே அமுக்கப்பட்டுவிட்டன. இதனை ஞானம் மாற்றுக் கருத்துகளுக்குக் கொடுக்கும் மரியாதை என்பது மனம் கொள்ளத் தக்கது. பிரமுக வணக்கம் சட்டம்பித் தனங்கள் எல்லாம் கலை இலக்கிய சஞ்சிகைகளுக்கு சாத்தியம் ஆன பண்புகளே. அப்படி பொறிக்குள் விழுந்த சஞ்சிகைகள் பூத்து மணம் பரப்புவதை நமது நாட்டுத் தோட்டத்திலும் காணமுடிகின்றது. அதற்கு விதிவிலக்காக “ஞானம் அமையும் என்று எதிர்பார்ப்பதும் எமது தவறல்ல. மாவை வரோதயன்.
Iநமது இலக்கியவாதிகள் சிலர், "கொண்டதே கோலம், கண்டதே காட்சி என்ற நிலைப்பாடுடையவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு இசைவான கருத்துக்கள் ஞானத்தில் இடம்பெறும்போது கொண்டாடு கின்றனர்.இசைவில்லாத கருத்துக்கள் இடம்பெறும்போது சிற்றங்கொள் கின்றனர். தமது கருத்துக்களைத் தவிர வேறுகருத்துக்கள் ஞானத்தில் இடம்பெறக்கூடாது என்ற விருப்புடையவர்களாக இருக்கின் றனர்.இதன்காரணமாக ஞானத்துடனான தொடர்பினைத் தவிர்த்துக் கொண்ட எழுத்தாளர்களும் உண்டு. இத்தகைய நிலைப்பாடு எமக்குப் பெரிதும் கவலையை அளித்தது. இது தொடர்பான ஞானத்தின் நிலைப் பாட்டைத் தெளிவுபடுத்தவே பெப்ரவரி இதழில் 'கலை இலக்கிய உலகில் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்” என்ற ஆசிரியர் தலையங்கம் திட்டப்பட்டது.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் கிளக்கர்ப்புத்தி கட்டுரை uflað
"உலகம் மூக்கில் விரல் வைக்குமாற்போல், பெரிதாப்ப் புரட்சியும் புதுமையும் செய்த பேரறிஞர்கள் எந்தத்துறையிலும் யாழ்ப்பானத்தில் இருந்ததாகத் தெரிய வில்லை" என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக ஞானத்துக்குக் கிடைத்த கடிதங்கள் யாவும் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டன. மாவைவரோதயனின் கடிதம் ஒன்றும் ஒக்டோபர் 2002 இதழில் பிரகளிக்கப்பட்டது.
கம்பவாரிதி தொடக்கிவைத்த விவாத்தை அவரது பதிலுடனேயே முடித்துவைப்பதுதான் சரியானது எனப்பட்டதால், அந்த விவாதம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.
மாவை வரோதயனின் 22.11.2002 திகதியிடப்பட்ட கடிதம் கத்பவாரிதியின் கருத்தினைப்பற்றிப் பேசாது, விவாதத்தில் பங்கு கொண்ட வேறொருவரைப் பற்றிய தனிமனிதத் தாக்குதலாக அமைந் திருந்ததால் அக்கடிதம் பிரசுரிக்கப்படவில்லை. - ஆசிரியர். /
48

ஞானம் சஞ்சிகை ஒழுங்ககாக எனக்குக் கிடைத்து வருகிறது. ஈழத்து சஞ்சிகைகளில் ஒருசிலவற்றையாயினும் சேர்த்து வைத்திருக்கும் எனக்கு ஞானம் சஞ்சிகையின் கலை இலக்கியச் செறிவு மகிழ்வூட்டுகின்றது. வாசகர் ஒருவர் படித்துப் பயனுற பல ஆக்கங்களும் ஞானத்தில் வெளிவருகின்றன. ஞானம் மார்ச் இதழில் ‘பாக்கு கவிதை மிகவும் பக்குவமாக ஒரு வளர்ச்சியைக் குறிப்பிட்டு நிற்கிறது. படிக்கும்போது சிந்தனையைத் தூண்டும் கவிதை பாக்கு.
ஈழத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் “சிற்பி சிவசரவணபவன் எழுத்தில் கலை நயத்தையும் பண்பு நயத்தையும் இயல்பாகவே எழுதிவருபவர். அவரது பேட்டியில் சிற்பி என்ற எழுத்தாளரின் முழுவடிவமும் தெரிகின்றது. கேட்ட கேள்விகளும் இவர் தந்துள்ள பதில்களும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரை அப்படியே படம் பிடித்துக் காட்டி நிற்கின்றன.
இப்படியான மூத்த எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு ஞானம் வெளியிடுவது வளரும் எழுத்தாளர்களக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் 6jgibuG$gjib. (65T60TLb Excellant getup and Good Printing.
- புத்தொளி, ஆனைக்கோட்டை
ஞானம் ஒழுங்காகக் கிடைத்துவருகிறது. மாத சஞ்சிகையொன்றின் இதழ்கள் யாவும் ஒரே தரத்தில் இருக்கமுடியாதல்லவா? இவ்வாண்டு ஜனவரி இதழ் போலப் பெப்ரவரி இதழ் அமையவில்லைப்போல் தோன்றுகின்றது. இது பெரிய ஒரு குறைபாடல்ல. இப்படி நிகழ்வது இயல்பானதுதான். ஞானம் பற்றிய கருத்துக்களைத் தொடர்ந்து உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்க முடிய வில்லை. இது என்னுடைய இயல்பு. நம்பிக்கையுடன் முன்செல்லுங்கள். எனது வாழ்த்துக்கள். - தெணியான், கரணவாய் வடக்கு. எனது மதிப்பிற்குரிய கலைச்செல்வி ஆசிரியர் அவர்களது செவ்வியை வெளியிட்ட தங்களுக்கு எனது உளமார்ந்த நன்றி. தளம்பாத நிறைகுடம் அவர்! அருமையான திறமையாளர் ஆசிரியர் சி.சரவணபவன் அவர்கள். என்ன காரணத்தினாலோ எதிலும் சம்பந்தப்படாமல், தானுண்டு தன்பாடுண்டு என்று ஒதுங்கியிருக்கின்றார். உயர்ந்த பண்பாளர். இவரை எப்படியாவது
எழுதத்தூண்டுவது அவசியமாகும். வாழ்க அவர்.
- இ.ஆ.தமிழோவியன்,பதுளை.
தங்கள் பெறுமதி, பயன் நிறைந்த “ஞானம் தொடர்ந்து வருகிறது
என்கரம். கனதியாகவும் நன்றாகவும் இருக்கிறது; பாராட்டுக்கள்.
உடுவை எஸ்.தில்லைநடராஜா, கல்வி அமைச்சு. .சிற்பியின் நேர்காணல், முஸ்லிம் நேசன் பதிவுகளுடன் 1983 கொட்டஹேனக் கலவரமும், சமய எழுச்சிகளும் ஆகிய இரு ஆக்கங்களையும் தவிர வேறெதனையும் இரசித்துப் படிக்கும்படியாக இல்லை. குறிப்பாக கலாநிதி அனஸ் அவர்களின் ஆய்வு வரலாற்று மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள அம்சமாகும். சி.மெளனகுரு அவர்களின் ‘பாக்கு கவிதையும் வித்தியாசமான
சிந்தனையைத் தூண்டவல்ல ஒரு கவிதை.
- ஓட்டமாவடி அறபாத்.
49

Page 26
"மறப்பதற்கு அழைப்பு (மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
எழுதியவர் : சி.சிவசேகரம் வெளியீடு தேசிய கலை இலக்
கிபப் பேரவை முதற்பதிப்பு: பெப்ரவரி 2003 விலை ருபா 180/=
தமிழ்க் கவிதையுலகுக்கு இவை புதிய சாத்தியப்பாடுகளை
உணர்த்தாது போயினும் தமக்குள் ளேயே தேடல் நடத்துகிற ஒரு மந்த மான கவிதைப் போக்கினின்றும் வேறு பட்ட ஒரு புறநோக்கிய மனிதநேயப் பார்வையை வழங்கும் என எதிர் பார்க்கிறேன்.
இது வெளியிலிருந்து பாயும் ஒளி, நான் மொழிபெயர்ப்புக் கண்ணாடி பூடு இதை உள்ளே தழுவ விடுகி றேன். என் தமிழாக்கத்தின் குறைபாடு களையும் மீறி இக்கவிதைகள் சிறப் பான கவிதைகளாக அமைகின்றன என்றே நினைக்கிறேன்.
ஆசிரியர் முன்னுரையில்.
"எம்மவர்" எழுதியவர் : லெ.முருகபூபதி வெளியீடு முகுந்தன் பதிப்பகம், அவுஸ்திரேலியா, முதற்பதிப்பு: ஜனவரி 2003
இங்கு பெரும்பாலும் எழுத் தாளர்களே இடம்பெறுகின்றனர். இவர் கள் சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள், நடனக் கலை, ஆய்வுகள், சிறுவர்
இலக்கியம், பயண இலக்கியம், நாடக இலக்கியம், சமய இலக்கியம் முத லான துறைகளில் ஈடுபாடு மிக்கவர் கள்.
இந்நூல் ஒவ்வொரு படைப்
酚 பாளிகளையும் விரிவாக விமர்சிக்கும்
அல்லது புகழ்ந்துரைக்கும் ஆவணம்
அல்ல. சுருக்கமாகச் சொல்வதானால்
இது ஒரு தகவல் திரட்டு.
ஆசிரியர் முன்னுரையில் .
"சுட்டும் விழி (சமூக, கலை, இலக்கிப, அரசியல் ஏடு) (காலாண்டிதழ்) ஆசிரியர் : பதிந்திரா தொடர்புகளுக்கு : பதிந்திரா, 14, வைத்தியசாலை விடுதி, திருகோண
LD WHO fill,
மானுடத்தின் தமிழ்க்கூடல் 2002 இன் கொள்கைத் தளம் பற்றிப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, சமாதான யாத்திரை ஒப்பந்தத்திற்கு அப்பால் - கலாநிதி.ஜெயசிங்கம், ஓடிப்போன நாங்கள் அங்கு சும்மாயிருக்கவில்லை தாசீசியளல் நேர்கானல், எழுதாத உன்கவிதை பற்றி - சு.வில்வரத்தினம், பினர் காலனித் துவ இயங்கியல் பரிமாணங்கள் - வி.கெளரிபாலன், பேண்தகு அபிவிருத்தி சில சிந் தனைச் சிதறல்கள் - பேராசிரியர் காமினி கொரியா ஆகிய கட்டுரைகளும் இன்னும் பலவும் இடம்பெற்றுள்ளன.
"இருப்பு - 5'
{್]ilf 2003) ஆசிரியர் : சோலைக்கிளி தொடர்புகளுக்கு சோலைக்கிளி, 79 பள்ளி வீதி, கல்முனை - 05. விலை 1 ரூபா 50/-
தலையணையில் சாப்ந்து
படிப்பதற்கல்ல இருப்பு கொஞ்சம் ஆழ்ந்து கிடப்பதற்கு.
 

புரியவில்லை பெண்மனது. சீதனக் கொடுமையால கலியானம் கட்டல என்று
சும்மா கதைவிடக் கூடாது கனகா உண்ர அடிமனது ஆசைகளை அப்பட்டமாய் அறிவேன் நாள்
ஆருக்கு நீ காதுகுத்துகிறாய் கடுக்கனிபோட படித்துப் பட்டம்பெற்ற பெணிதானே நீயும்
பதவியிலுயர்ந்த இஞ்சினியர் டாக்டர் எக்கவுண்டனர் புருஷனாய் வேணுமென்று அடம் புடிச்சி நிபும்
கணையாளிப் பேப்பரிவே விளம்பரமும் போட்டாப் காணிபூமி கல்விடு தங்கநகை தருவதாய் சொன்னாப்
கடைசியில நினைத்தபடி எவனும் பொருந்திவரல்ல காத்திருந்தாய் வயகம் நாற்பதைத் தாண்டிப்போக்க
தலைமுடியில் வெள்ளிமுளைத்து வெளியே தெரிகிறது தெய்வத்தை இப்போ நொந்து பயணி என்ன?
படிப்பிலே குறைந்தவள் பாடுபட்டு உழைப்பவன் பரமசிவம் முடிப்பதற்குக் கேட்டானே உனை விரும்பி
கட்டாமல் கன்னியாப் இருந்தாலும் இருப்பேன் நாள் வேட்டி கட்டுபவனி வேனிடவே வேண்டாம் என
பட்டாசாப் வெடித்துச் சொன்னாயே கனகா அன்று உளம்பெரிதா சொல்லு நீ مينية مع
உண்மையிலே யாருக்கும் புரியவில்லை பெண்மனது,
—
மீண்டுமொரு புத்தம் மூண்டுவிடுமோ?
மீண்டுமொரு புத்தம் - இங்கே மூண்டுவரும் வந்தால். மாண்டு விடுவோமே! - என்று மனம் கொதிக்கிறாயா? மீண்டுமந்த யுத்தம் - மர்ைணில் மூண்டுவிட நேரில் மீண்டுமதே தவறை - நீ மறந்தும் விடவேண்டாம்! மக்களெல்லாம் சாக - இளைஞர் மானமுடனர் போரில் திக்கெல்லாம் பாய - நீ தப்பியோடிக் கொணிடாய்!
- கவிஞர் நிசகுனரத்தினர்
போர் தணிந்த பின்பே - வெந்த பூமியில் கால்வைத்தாய்! போர் தொடங்க மீண்டும் - ஒடி போவதற்கா திட்டம்? விட்டபிழை மீண்டும் - நீ விட்டுவிட வேண்டாம்! திட்டமிட்டு நீயும் - போரில் திரமுடன் பாப்வாகப் போர் புரியத் தருணம் - உனக்கு பூத்ததென்று துள்ளு ஆராண்டால் எனின - என்று ஆள்மாற வேண்டாம்!

Page 27
மத்திய கிழக்கில் ஒரு மகா யுத்தமா? அத்தனை உயிர்களும் அதோ கதியா?
ஈராக், அமெரிக்காவின்
இன்னுமொரு ஹிரோசி உலகப் பொலிஸ் உத்தி அமெரிக்காவுக்கு யார் த
ஐக்கிய நாடுகள் சபைய இல்லை, அது | Անիஅமெரிக்க நாடுகள்சை
SN வெள்ளை மாளிகையில் எப்போதும் கறுப்புக் கன
ஈராக் வல்லினம் என்றா இஸ்ரவேல் என்ன மெல்
பயங்கரவாதமி எந்து மணிணில்தான்
பயிராகவில்லை? .
எப்போதும்
அற்ப்ஆய்ள்தான் ஆஆஆவோர்;அடுயிரிக்காவிற்கு CN ஒரு பொழுதுபோக்கா?
ERKKEJ சுதந்திரம் அமெரிக்கிரவு - ல்மட்டும் சொந்தமா? *Ծ ஈராக்-மண் பேங்
ஆமிக இறுக்கமானது.
அமெரிக்கவே
Grஅங் கேஇறங்காதே!
寻
எண்ண்ெமத் தேசம்ே எரியுமானால் மணினெல்லாம்.ஆ. ாமயாண்மாதம் T. Fair,
*

-—
*( 3 עות הש =Fra) גבוה במקדש
।
மாவாசிப் ஸ்டு
ൂ', '*' )
寸
E - நித்துடி , | 2
IN 2 Liter? ( * SふS
あ வுகள்'
"FT
|
|-
-
թ - Խւյն ծ
לד בו ליהדורה ור
at "r er til Au
|-
வாகரைவ ாணன in jail
arhis-77783:307772:55