கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.05

Page 1

-
獸
曰 Γ町 円
--
s

Page 2
- SS S SLLSS
寝 சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது.
ஞானம் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான
சிறுகதைத் தொகுப்புப் பேட்
அனேக எழுத்தாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க முடிவுதிகதி 30-06-2003 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும்
இலக்கிய ஆற்றவை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்குடனர் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பரிரதியரிலான சிறுகதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் நடத்துகிறது. நிபந்தனைகள் 1) போட்டபில் பங்குபற்றுபவர்கள் 08-06-2003 அன்று நாற்பது வயதுக்கு
உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறு கதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனரின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேள்ைடும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா ஐயாயிரம் பரிசாக வழங்கப்படும். )ே பரிசுபெறும் சிறுகதைத் தொகுதி ஞானம் பதிப்பக வெளியீடாக நூலுருவம் பெறும் இரண்டாவது பதிப் பின் பதிப் புரிமை கதாசிரியருக்கு வழங்கப்படும் )ே பரிசுக்குரிய தொகுதியை ஞானம் ஆசிரியர் குழாத்துடள் ஒரு விமர்சகரும், ஒர் எழுத்தாளரும் இணைந்து தேர்ந்தெடுப்பர். அவர் களின் முடிவே இறுதியானது. 7) போட்டி முடிவு திகதி 30-3-2003 அதன்பின்னர் வந்துசேரும் படைப்பு பிள் போட்டக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் ஞானம், 197 பேராதனை வீதி, கணிடி என்ற விலாசத்துக்கு பதிவுத்தபாவில் அனுப்பிவைக்கப்படவேண்டும் தபால் உறையினர் இடது பக்க மூலையில் ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி" எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். 8) நிபந்தனைக்கு உட்படாத தொகுப்புகள் போட்டிரில்
 

ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர் நா. ஆனந்தன்
கணனி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. GBT.G.L. -08-47.8570 (Office)
08-23.4755 (Rcs.) Fax - 08-23.4755
E-Mili
ЕПапаппа gazinesayahoo.com
n உள்ளே.
நேம் காணல் 28
சிறுகதை
தொற்றாத உணர்வு .
ாைதிரி இ.இராஜோப்கள்ைணன்
புற்றில் மறையும் பாம்புகள் .
I, III mildli
கட்டுரைகள்
எனது எழுத்துலகம் .
கதாராஜ்
晶D
எழுதத் தாண்டும் எண்ணங்கள் .
துரை.மனோகரன் சிறவர் விர்சனம்
"அனுபவத்தினூடான ஒரு பயணம்".
கப்ாநிதி செ.யோகராசா
கவிதைகள்
மெளனத்தின் அழுகையில் .
செப்.சுதர்சன்
சூழலாம். சுத்தலாம்!!.
படங்களை அண்ாள் எம்.ழியாய்
ffi. Gof"--5for "* ...............................................
மாவை ரோதயன்
உயிருக்கு ஓர் விண்ணப்பம்.
தேசங்கீதா
தீயும் தெளிவும். fast Gud fil-fils 15 š5 ............................. 5
த.ஜெயசீலன்
ஈழத்து இலக்கிய
நம்பிக்கைகள் -04. நெற்றிக்கண் . . . . . . . . . நால் விமர்சனம் . தஞ்சைக் கடிதம் .
வாசகள் பேசுகிறார் .
அட்டைப்படம் :-KIK0
... (i.
. . . . . 45;
S
... 4.

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். لر
-ܢܠ
உழைப்பும் கலை இலக்கியமும்
உழைப்புக்கும் கலை இலக்கியத்திற்கும் உள்ள பிணைப்பு உயர்ந்தது. உற்று நோக்கப்படவேண்டியது.
மனித வரலாற்றில் கலை நிகழ்வின் ஆரம்பம் சுவையானது; சுவாரசியமானது . கலையுணர்வு மனிதனோடு பிறந்தது. ஆதிகாலமனிதர் கூட்டமாக கையிலே அம்பு, வில்லு, ஈட்டி, தடிகள் சகிதம் கானகத்தே வேட்டையாடச் சென்றனர். வேட்டையாடுதலில் வெற்றி கண்ட அவர்கள், வெற்றிக்களிப்பு மேலிட வேட்டைக் கருவிகளால் பேரொலி எழுப்பி பேருவகை கொண்டனர். வெற்றிக்களிப்பு கலை உணர்வாகப் பிரவாகித் தது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்டவர் களால் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியல்ல அது. ஆனால் அதுவே முதன் முதலில் தோன்றிய கலை நிகழ்ச்சி என்பர் சமூகவியலாளர்.
கலையும் வாழ்வும் ஒன்றிணைந்தது. உழைப் போடு பிணைந்து உந்து சக்தியாக விளங்குவது. ஒடம் வலிக்கும் மீனவர்கள் ‘ஏலேலோ” பாடுவதும், வயலில் உழைக்கும் விவசாயிகள் ஏர்ப்பாட்டு இசைப்பதும், நீர் இறைக்கும்போது துலா மிதிக்கும் விவசாயிகள் துலாப் பாட்டுப் பாடுவதும் இதனாலேயே.
உலகம் மாற்றமடைந்தது. உற்பத்தி உறவுகளில் பிறழ்வு ஏற்பட்டது. பிரபுத்துவ சமுதாயம் உருவாகி, தொழில்புரட்சி தோன்றி, முதலாளித்துவ சமுதாயம் ஏற்பட்டு இன்று பூகோள மயமாக்கலினால்
4
 
 
 

புதிய சமுதாயம் ஒன்று தோற்றமளிக்கிறது. கலை இலக்கியமும் நோக்கி லும் போக்கிலும் மாற்றமடைந்துள்ளது. உற்பத்திச்சாதனங்களை ஆள் பவனே கலையைக்கட்டுப்படுத்துகிறான். கலைகளின் உருவமும் உள்ளடக்க மும் இதனால் பாதிக்கப்படுகின்றன. பூகோளமய சமுதாயத்தில் இது பூதாகரமாகி உள்ளது. பரந்த சந்தையை நோக்கிக் கலைப்படைப்புகளைப் படைக்கும்படி கலைஞன் ஊக்கப்படுத்தப்படுகிறான். இதனால் கலை உணர்வு மலினப்படுத்தப்படுகிறது. பாலுறவு, வன்செயல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனை இன்று மிகப்பெரிய மக்கள் தொடர்பு சாதனமான சினிமாவில் காண்கிறோம்.
கலை கற்பனாவாத நிலையில் உள்ளது. அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைக் காட்டி, சாதாரண உழைக்கும் மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு முன்னேறும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையாது, காதல், ஆடம்பரவாழ்வு, அதீத பாச உணர்வுகள் போன்றவற்றைக்காட்டி கற்பனை உலகில் மனிதனைச் சஞ்சரிக்கவைக்கும் கைங்கரியமே நடை பெறுகிறது.
கலைவடிவங்கள் பலம் வாய்ந்தவை. அவை பொய்மையை நம்பவைக்கும் சக்தியாக, போலிக்கற்பனையில் மயங்கிப் போதை உணர்வு தருவதாக இருக்கக்கூடாது. கலை இலக்கியங்கள் விழிப்புணர்வை ஊட்டுவதாக அமையவேண்டும். ஆனால் இன்று அவை விழிப்புணர்வை மழுங்கடிப்பதாக, திசை திருப்புவதாக அமைந்து வருவது கவலைக்குரியது; கண்டிக்கப்படவேண்டியது.
மேதினக் கொண்டாட்டங்களில் பிரபல பாடகர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெறுவதும் தொழிற்சங்க மாநாடுகளில் கோடிக்கணக் கான செலவில் இந்திய சினிமாப்பாடகர்களின் கலை நிகழ்வுகள் நடை பெறுவதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியவை.
கலை இலக்கியத்தின் பண்பும் பயனும் உழைக்கும் மக்களின் உயர்வுக்கு உகந்த வழிவகைக்கான செயற்பாட்டினை உடையதாக அமையவேண்டும் என்பது கலை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்களின் மேதினச் சிந்தனையாக அமைவதாகுக!
(ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி:
WWW.geocities.com\gnanam magazine

Page 4
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்
ஒரு நிறைமாதக் கர்ப் பிணியை போன்று நெல் லியடிச் சந்தியில் இருந்து அந்த "மினிபஸ் புறப்பட்டது. “சிற்றுகள் நிறைந்து நடுவிலே காற்று நுழையாதவாறு அடுக் கப்பட்ட சனக் கிழங்குகள் . ட்றைவருக்கு ஓடிப்போக மனமில்லை. மெதுவாக உருண்டது "மினிபஸ்”. நெல்லியடி நகரைத் தாண்டமுன் இன்னும் யாராவது வருவர் ஏற்றி விடலாம் என்ற எண்ணம்.
அப்போதுதான் நெல்லியடி யில் ஏற்றிய சைக்கிள்கள், சாமான் களை மேலே ‘கரியரில்" சரியாக அடுக்கிக் கட்டிவிட்டு கொண்டக்ரர் பொடியன்’ மிதிப்பலகைக்கு குரங் கினைப் போலத் தாவினான்.
"அண்ணை "புட்போட்டிலை ஒருதரும் நிக்கேலாது, மேலை ஏறுங்கோ. பொலிஸ் நிக்கிறாங்கள். "பைன் கட்டவேண்டிவரும். ஏறுங்கோ. உள்ளுக்கைபோங்கோ."
மிதிபலகையிலி நின்று பயணம் செய்த இரு இளைஞர்கள் அவனை முறைத்தபடி உள்ளே ஏறி நின்றனர். “பொடியன் மிதிபலகையில்
வாயிலுக்குக் குறுக்காக கைகளைப் பிடித்தபடி நின்றான்.
நெல்லியடி பெற்றோல் செட் கழியவும் "ட்றைவர் அண்ணை பாட்டுப் போடுங் கோவணி ...” அந்த இளைஞர் களில் ஒருவன் தானி கேட்டான்.
"சமரசம் . உலாவும் . இடமே.” சீர்காழி கோவிந்தராசனின் குரல் "மினிபஸ்ஸின் கூரைவழியே வழிந்தது.
"உதென்னண்ணை பாட்டுப் போடச் சொன்னால் ஏதோ ஒண்டை. உதை விட்டிட்டு நல்ல பாட்டாப் போடுங்கோ.”
மற்றவன் உரத்த குரலில் நளினம் கலந்து சொன்னான்.
இப்போதெல்லாம் பழைய வற்றை மதிக்கும் பண்பு நலிந்து விட்டது. பழையது என்றால் ஏதோ பழிப்புக்கு இடமானது என்பதுபோல இந்த இளைஞர்கள் நடந்து கொள் கிறார்கள் என்று எண்ணத்துண்டியது. "தம்பி. ட்ரைவர்தம்பி அது பாடட்டும் விடுங்கோ. உவங்கள்
பொடியளுக்கு ரசனை தெரிஞ்சா எட பொடியள் சீர்காழி
லெல்லோ.
 
 

யின்ரை பாட்டை கேட்டால்.”
பெரியவர் முடிப்பதற்கு முன்னரே அவர்களில் ஒருவன்,
"அண்ணை இந் தாங்கோ நல்ல புதிய பாட்டுக் கசற். போடுங் கோ. ஐயாவும் கேக்கட்டுக்கும்.”
தன்னுடைய தோள்ப்பையி னுள் இருந்து எடுத்துக்கொடுக்கிறான். பையினுள் ஒருசில கொப்பிகளும் புத்தகங்களும் இருந்தன. இந்த இளைஞர்கள் பல்கலைக்கழகம் அல்லது தொழினுட்பக் கல்லூரி மாணவர்களாகத்தான் இருக்கலாம் என்று என்னுள் எண்ணிக்கொள்கி றேன்.
சீர்காழி மெளனமாகிவிட்டார். அந்தப் பெரியவருக்கு "ட்ரைவர் மீது வெறுப்பு வந்திருக்கவேண்டும். முகத்தை சுழித்துக்கொண்டார்.
“சும்மா சும்மா சும்மா." இளைஞர்கள் கொடுத்த ஒலி நாடா குரலெடுத்துப் பாடியது. “கொண்டக்ரர் பொடியன் இளைஞர் களுக்குப் பெரியவரைக் கண்களால் காட்டிச் சிமிட்டிச் சிரித்தான். பாட்டு வரிகளைத் தன் தொண்டைக்குழி யோடு முணுமுணுத்தவாறே மினிபஸ் கதவில் தாளம் போட்டான்.
“என்ன பாட்டுகள். சும்மா. சும்மா எண்டு எல்லாமே சும்மா வாகத்தான் உலகத்திலை போகப் போகுது. பொடிபெட்டை எல்லாம் சும்மா திரியிறதெனிடாலும் ஒம் தான்.”
பெரியவர் கொச்சையாகவே பேசினார். இளைஞர்களும், "கொண் டக்ரர் பொடியனும் குலுங்கிச் சிரித் தார்கள்.
"ட்ரைவர்' நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர். கிட்டத்தட்ட எனது வயதுதான் இருக்கும். இந்தக்
கதைகளைக் கேட்டு மெளனமாகச் சிரிப்பது கண்ணாடியில் விம்பமாய்த் தெரிந்தது.
பாட்டின் வேகமும், இசையின் உரப்பும் நெரிசலின் உஷ்ணத்தோடு குமைந்துவர மூத்தவிநாயகர் கோயி லடி, குஞ்சர் கடை, ஆலடி என இறங்குபவர்களே இல் லை ஏறுபவர்கள்தான். அடையப்பட வெயி லின் உஷ்ணமும் உயர்ந்துவர "சேட் முதுகோடு ஒட்டி நசநசத்தது. வல்லை வெளி தாண்டும் முன்னரே பயணம் வெறுப்புத்தட்டியது.
வல்லைவெளியில் ஒருமுறை எல்லோரும் இறங்கி ஏறினால் நல் லாக இருக்கும் என்று மனம் சொன் னது. இப்போது "செக்பொயின்றில்’ இறக்குவதில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தபின்னர் சோதனைச் சாவடியும், சோதிப்பவர்களும் இருந் தனரே ஒழிய, சோதனை இருப்ப தில்லை. யாரைச்சோதிப்பது.? எதைச் சோதிப்பது.?
நான் யாழ்ப்பாணம் செல்வ தானால் தனியார் ‘பஸ்களில் பயணிப் பது குறைவு. பருவகால சீட்டு இருப்ப தால் அரசாங்க பஸ்களில் தான் பயணம் செய்வது வழக்கம். இன்று இடையில் முத்திரைச் சந்தையில் இறங்கி அரியாலை வரை போக வேண்டும். அதற்காக சைக்கிள் கொண்டுவர வேண்டியதால் தனியார் ‘பஸ்ஸில் ஏறவேண்டியதாயிற்று.
அடையப்பட்ட சனங்களின் சுவாசம் அந்த 'மினிபஸ்ஸினுள்
சிறைப்பட்டு, ‘என்ஜின் ஊதிவிடும்
வெக்கையோடு குமைந்து, வியர்வை குழைந்த உடல் நாற்றத்தோடு சேர்ந்து வயிற்றைக் குமட்டிக்கொண்டு வருவதுபோல இருந்தது.
ஆவரங்கால் சந்தி தரிப்பிடத்

Page 5
தில் "மினிபஸ் நின்றது. அந்த இடத் திலும் இறங்குவதற்கு யாருமில்லை. ஒரு நடுத்தர வயதுப்பெண். ஒரு அறுபத்தைந்து எழுபது வயது மதிக்கத் தக்க மூதாட்டி. இரண்டுபேரும் "பஸ்ஸி னுள் புதைக்கப்பட்டனர்.
"அக்கா கொஞ்சம் உள்ளை போங்கோ, பின்னாலை இடமிருக்கு. அணி  ைண உநீ தக் கரையா நில்லுங்கோ. ஆச்சி இந்த இடையிலை வாங் கோ..." பொடியன் வெளி யமைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினான்.
அவனது கடினமான முயற்சி யால் எங்கிருந்து வந்ததோ தெரியாது இரண்டு மூன்றுபேரை ஏற்றக்கூடிய ஒரு இட்ைவெளி உருவானது. அதே வேளை என் முன்னால் நின்ற ஒருவ ரால் நான் சப்பளிக்கப்பட்டேன்.
அந்த மூதாட்டி ஏன் அவசரப் பட்டு இதற்குள் ஏறினாள்? இதற்கு பின்னரும் எத்தனை "பஸ்கள் வரப் போகின்றன. அவள் அந்தரித்தாள். மேலே இருக்கும் கைபிடிக்கும் கம்பி அவள் பிடிக்குள் எட்டவில்லை. ஒரு "சீற்றோடு ஒட்டிக்கொண்டாள்.
"மினிபஸ்ஸின் குலுக்கலுக் குப் பயந்து மூதாட்டி இரண்டு கை களாலும் அணைத்தபடி நின்ற சீற்றில் ஒரு முப்பதுவயது மதிக்கத்தக்க பெண்பிள்ளை அதுவரை இல்லாது அப்போதுதான் உண்டான கரிசனை யோடு தன்கையிலிருந்த புத்தக மொன்றை விரித்து எழுத்தெண்ணத் தொடங்கினாள்.
"ஆச்சி. என்னெனை பல்லி மாதிரி சீற்றோடை ஒட்டிக்கொண்டு கிடக்கிறாய்.”
பாட்டுக் கேட்டுக் கொண்ட இளைஞர்களில் ஒருவன்தான் கேட் டான்.
"ஒமெடி அப்பு" - மூதாட்டி அவனது கேள்வியில் கரவு காணாம லேயே பதில் சொன்னாள்.
“என்னத்துக்கெணை உந்த வயசிலை உப்பிடித் திரியிறியள். அந்த நேரத்திலை சுழட்டிக்கொண்டு திரிஞ்சது. சும்மா வீட்டிலை இருக் கேலாதாம் - ஆச்சிக்கு”
அந்த இளைஞன் நையாண்டி யாகப் பேசினான்.
"ஆச்சி ராஜா தியேட்டரிலை “பாபா பாக்கப்போறாபோலை.”
மற்றவனும் மூதாட்டியோடு செல்லம் பொழிந்தான்.
"என்னடா சொல்லுறியள். உங்கடை கோத்தைமாரையும் ஒரு காலத்திலை உப்படித்தான் கேப்பங் கள். மணிசர் இந்தக் கோதாரி வசுவுக்கை நிக்க முடியாமல் அந்தரிக் கிறம். அவைக்கு ஒரு நக்கல். உது தானே படிக்கிறியள்.”
மூதாட்டிக்கு முக்கு நுனியில் கோபம் வந்தது. பொரிந்து தள்ளி னாள். இளைஞர்கள் இருவரும் முகங் களை மறைத்துக்கொண்டு நசுங்கி நழுவினர்.
"ஆச்சி ஏனெணை கத்து றாய். சும்மா கத்தினியே எண்டால் இதிலை இறக்கிப்போட்டுப் போடுவன். எங்கை போறாய் நீ சொல்லு.?”
என்றவாறே கொண்டக்டரர்’ பொடியன் காசுக்காக மூதாட்டியிடம்
கையை நீட்டினான். சேலைத்தொங்க
லிலே முடிந்துவைத்த ஒரு ஐந்து ரூபா குத்தியும், ஒரு இரண்டு ரூபா குத்தியும் - பவ்வியமாக அவிழ்த்தெடுத்து எழு ரூபாவை நீட்டினாள், மிகவும் சிரமப் பட்டு.
"கோப்பாய் தபால் கந் தோரிலை இறக்கி விடடா அப்பு"
"ணேய். இன்னும் ஒறுவா

தா. எட்டுறுவா” - கொண்டக்ரர்தான். “எடே பொடியா. உன் னாணை ஒருசதமும் இல்லையடா. உதுதான் கிடக்கு. ‘பிச்சைச்சம்பளம் எடுக்கத்தான் போறன். எடுத்துக் கொண்டு வரேக்கை உன்ரை வசு விலை ஏறினால் தாறன். இப்ப உதை வைச்சிரடாப்பு. என்ரை அப்பு எண்ணு வன் என்னை கந்தோரடியிலை இறக்கி விடு நான் பிறகு நடக்கவும் மாட்டன். இடத்தைப்பாத்து பிடிக்கவும் மாட் டன்."
மூதாட்டி வாஞ்சையோடு பொடியனை வேண்டினாள். அவனும் 'ஓம்' எனத் தலை அசைத்தான்.
பிஏஎம் ஏ - ஆதரவற்ற வயோதிபர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம். அதைத்தான் ‘பிச்சைச்சம்பளம் என்றாள் மூதாட்டி. அந்தச் சிறிய தொகை பணத்துக்குத் தான் இவ்வளவு சிரமப்பட்டு பயணம் செய்கிறாள் என்பதை எண்ணும்போது உணர்வு தொற்றி உயிர் எரிந்தது.
"ஆச்சி. பிச்சைச் சம்பளம் ஏன் உன்ரை ஊர் "போஸ்ட் ஒபீ ஸிலை எடுக்கேலாதே. ஏன் இவளவு தூரம் அலையிறாய்"
யாரோ ஒருவர் அவளிடம் நான் கேட்க நினைத்ததைக் கேட் கிறார். காதுகளை கூர்மையாக்கிக் கொண்டேன்.
"தம்பி. முந்தி கோப்பாயிலை தானப்பு இருந்தனான். இப்ப ஆவரங் காலிலை என்ரை மூத்தவளோடை இருக்கிறன். உதை மாத்தித்தரச் சொல்லிக் கேட்டும் ஒருதரும் மாத்தித் தராததுகளாம். என்ன செய்வம்..?” இந்த நாட்டிலை மானியத் தைக் கூட மனிதர் வருந்தித்தான் பெறவேண்டும் என்ற நியதி - பாவம். நீர்வேலிச்சந்தியில் "ட்ரைவ
9
ரின் ஆசனத்துக்கு அருகிலே இருந்த ஒருவர் இறங்குவதற்காக எழுந்தார். "ட்ரைவர் என்னைப்பார்த்து, "அண்ணை இதிலை இருக்கலாம். இருங்கோ. நெல்லியடியிலை இருந்தே நிணர் டுகொணர் டு வாறியளர் . வாங்கோ.”
பொதுவாகச் சாரதியோடு அண்டிய இருக்கைகள் ஆண்களையே தாங்கி வைத்திருப்பதைக் காணலாம். நான் ஆசுவாசமாக அமர்ந்து கொள் கிறேன். எனக்கு அருகிலே இடப்புற மாக இருந்தவர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்.
“தம் பி. என்ன யாழ்ப் பாணமோ..?” என்று தொடங்கியவர், புரிந்துணர்வு ஒப்பந்தம், பேச்சு வார்த்தை, தேர்தல், நாடாளுமன்றத் தலைப்பு, சந்திரிகாவின் கைப்பை, தென்னிலங்கை வியாபாரிகளின் நகர ‘பேமன்ற்’ வியாபாரம், வர்த்தகக்கண்காட்சி என்று ஒன்றும்விடாமல் பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் பத்திரிகைச் செய்திகளாய் பாத்தவை தான். என்றாலும் நீர்வேலி தொடக்கம் இருபாலை வரை சென்றது.ாரமே தெரியவில்லை. அவ்வளவு இதமாகப் பேசிக்கொண்டே வந்தார்.
"உதுதானே ள்ங்கடை சனங்
களுக்கு இவளவு அழிவுகள் . உலகத்திலை. அவர் செய்யிறதையும்

Page 6
செய்துபோட்டு நியாயம் கதைக் கிறார்.”
‘மினிபஸ் இருபாலையில்
தரித்துப் புறப்பட்டவேளை அதன் பின்
புறத்திலிருந்து வந்த ஒரு பெண்ணின் கோபாவேசக் குரல் கேட்டுத் திரும்பி னோம்.
“6T6T6IITLIT GUITọu T. 6T6T6IOT பிரச்சினை" "ட்ரைவர்தான் விசாரித் தார்.
"ஒண்டுமில்லை எடுங்கோ." பதில்சொன்னான் பொடியன்.
“என்னடா தம்பி. ஒண்டு மில்லை எண்ணுறாய். நீ செய்தது சரியே. பாவம் அந்தக் கிழவி "போஸ்ட் ஒபீஸை" தேடி அலையவெல்லோ போகுது.”
அந்தப் பெண் அதட்டலா கவே சொன்னாள்.
"அதுக்கு நானென்ன செய்ய. அவவெல்லோ இடத்தைத் கவனிச்சு
இறங்கவேணும். ஆரார் எங்கை போயினமெண்டு எனக்குத் தெரி պ6լD....?”
*கொணர் டக் ரர் "பொடியன் அந்தப் பெண்ணின் நாவை அடக்க முனைந்தான்.
"எண் னக் கா...? என்ன எனக்குச் சொல்லுங்கோ" சாரதி சமாளிக் கும் தோரணையோடு கேட்டார்.
"அந்தக் கிழவி பாவம் கோப் பாய் 'போஸ்ட் ஒபீஸிலை இறக்கிவிடு நடக்கவும் மாட்டன். இடம் தேடிப் பிடிக்கவும் மாட்டன் எண்டு கேட்டுது. தாண்டி வந்தாப்போலை தம்பி என்ரை இடம் வந்திட்டுதே எண்டு கிழவி கேட்க, பொடியன் அந்த இடத்திலேயே இறக்கிப்போட்டு வாறான். கிட்டத்தட்ட ஒரு கட்டை தாண்டியிருக்கும். அது வழியிலை நிணி டு தடுமாறப்
O
போகுது."
விலாவாரியாக விளக்கம்
அளித்தாள் அந்தப் பெண். திரும்பிப் பார்த்தேன். ஆவரங்காலில் அந்த மூதாட்டி ஏறிய தரிப்பில் ஏறிவந்தவள் தான் அவள்.
"அக்கா கிழவி உன் ரை சொந்தமே..?”
"ட்ரைவர்தான் கேட்டார். "என்ரை சொந்தமுமில்லை பந்தமுமில்லை; அதுக்காக உப்
gGuu...?"
"அவ்வளவு இரக்கமெண்டால் அதிலை இறங்கி கிழவிக்கி வழி காட்டாதன். ஏன் கத்துறாய்?" "ட்ரைவர் தான் சொன்னார்.
நான் கால் வலிக்க நின்றதை பார்த்து ஆசனம் தந்த அதே "ட்ரைவர் தான். இருக்கை என்னை உறுத்தியது. "ட்ரைவரின் சினந்தோய்ந்த முகம் முன்னிருந்த கண்ணாடியில் மீண்டும் விம்பமானது.
அவள் மெளனியானாள். என் மனதில் ஏதோ ஒன்று ஈயக்குண்டாய் இறங்கிக் கனத்தது. இப்படியுமா..?
‘மினிபஸ் சங்கிலியன் சிலை ஒரம் தரித்தது. என்னுடைய சைக்கிள் இறக்கப்பட்ட வேகத்தை பார்க்கும் போது கொண்டக்ரர்" பொடியன் நியாயம்கேட்ட அந்தப் பெண்மீது கொண்ட கோபத்தின் பொரிவு' தெரிந்தது.
மனதில் ஒருவித அமுக்கம் உறுத்தியது. இங்கிருந்து இருபாலை ஒரு மூன்று கட்டைகள்தான் இருக்கும். அந்த மூதாட்டி ஏழுருபா கொடுத்து மீதி ஒரு ரூபாவுக்குக் கடன் சொன்ன சம்பவம் இதயத்தை அறைந்தது.
அரியாலை செல்லவந்த நான் இருபாலை நோக்கி சைக்கிள் வலிக்கத் தொடங்கினேன்.

665 atgijos
- சுதாராஜ் -
ܪ݀ܚܝܬ݁ ܪܳ
னெது முதற் சிறுகதை ‘இனி வருமோ உறக்கம்? என்பதாகும். இதை எழுதியது 1971ல். அப்போது மொரட்டுவ பல்கலைக்கழகத்திற் படித்துக் கொண்டிருந்தேன். பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினர் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தார்கள். எனது எழுத்தாற்றலைச் சோதித்துப் பார்க்கலாமே என்ற எண்ணத்திற்தான் எழுதினேன். கதை பரிசு பெற்றது.
எழுதும் ஆசை (அல்லது ஆர்வம்) அதற்கும் பல வருடங்களுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தது. யாழ் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது நிறைய சிறுவர் கதைப் புத்தகங்கள் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நண்பனொருவன் தினமும் வித விதமான புத்தகங்களைக் கொண்டுவருவான். கல்லூரியொன்றின் அதிபராயிருந்த அவனது தந்தை அவனுக்கு நல்ல புத்தகங்களைத் தேடிக் கொடுத்து விடுவார். (தனது மகன் பிற் காலத்தில் ஒரு நல்ல எழுத்தாளனாக வரவேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்திருக்கக்கூடும்!) நெல்லுக்கு இறைத்த நீர் இந்தப் புல்லுக்கு சுவறியது. விநோதமானதும் வேடிக்கையானதுமான சிறுவர் கதைகள் எனது வாசிப்பு ரசனையை இன்னும் வளர்த்தன.
ஆறாம் வகுப்பிற் கிடைத்த இன்னொரு அறிமுகம் சிரித்திரன் சஞ்சிகை. அதிலுள்ள நகைச்சுவைத் துணுக்குகளுக்காகவே நண்பர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தது சிரித்திரன். ஒவ்வொரு புதிய சிரித்திரன் இதழ்களும் வெளிவரும்போது, அதை யார் முதலில் வகுப்பிற்குக் கொண்டு வருவது என்பதில் எங்களுக்குள் போட்டி இருந்தது. நகைச்சுவைத் துணுக்குகளை ஒருவர்க்கொருவர் வாசித்து மகிழ்வோம். சிரித்திரனில் வெளிவந்த செங்கை ஆழியானின் நகைச்சுவை நாவல்களையும் விரும்பி வாசித்திருக்கிறேன்.
சிரித்திரனில் பிரசுரமாகி வந்த சிறுகதைகளிலும் எனது கண்ணோட்டம் சென்றது. சிரித்திரனில் மகுடம் ஆட்டி பல நல்ல சிறுகதைகள் வந்தன. நெஞ்சைத் தொடும் சில அற்புதமான சிறுகதைகளில் மனதை இழந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு எனது சிறுகதையும் சிரித்திரனில் மகுடக் கதையாக வரவேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறேன். ஞாயிறு பத்திரிகைகளில் வரும் நல்ல சிறுகதைகளையும் அந்த வயதில் விரும்பி வாசித்திருக்கிறேன். சாந்தனின் சிறுகதைகளிலிருந்த செட்டு என்னைக் கவர்ந்திருக்கிறது.
11

Page 7
இந்துக் கல்லூரியில் கார்த்திகேசன், தேவன்-யாழ்ப்பாணம், சொக்கன், சிவராமலிங்கம், ஏரம்பமூர்த்தி போன்ற ஆசிரியர்களிடம் படித்திருக்கிறேன். எழுத்துத்துறை பற்றி ஏதும் அவர்களிடம் கற்கவில்லையாயினும், அவர்களுடைய மாணவனாயிருந்தது சமூக நோக்குடைய ஒரு மானுடனாகப் பக்குவப்படுவதற்கு வழி சமைத்தது எனலாம்.
ஆசிரியர் தேவன்-யாழ்ப்பாணம் அவர்கள் கல்லூரி சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மாற்றலாகிப் போகும் இன்னொரு ஆசிரியருக்கு எழுதப்பட்ட பிரியாவிடைக் கட்டுரை அது. அதை வாசித்த போது, அந்த எழுத்தின் ஸ்டைலில் (எழுத்து நடையில்) ஒருவித லயிப்பு ஏற்பட்டது. எழுதவேண்டும் எனும் ஆசைவித்தை நெஞ்சில் போட்டுவிட்டது அந்த எழுத்துக்கள் தான் என நினைக்கிறேன்.
எந்த எழுத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு முன்னரே ஒரு சஞ்சிகை ஆசிரியராய் இருந்திருக்கிறேன். கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர் ஒன்றியத்தின் மூலம் வெளியிடப்பட்ட ‘விஞ்ஞான தீபம்’ எனும் சஞ்சிகைதான் அது. நெஞ்சைத் தொட்டதும் விட்டு அகலாததுமான பலவித உணர்வுக் கலவைகளில்தான் கதைகள் முகிழ்கின்றன. அந்தக் கதைகளைத் தாளில் எழுதும்வரை, பல காலமானாலும் மனதுக்குள் கிடந்து தாமே எழுதிக்கொள்கின்றன. அந்த உணர்வுகளை மற்றவர்களுக்கும் தொற்றவைப்பதற்கு எழுத்தில் வடிக்கும் முயற்சிதான் எனது சிறுகதைகள். கதைகளை வாசிப்பதில் கிடைக்கும் ரசனை உணர்வு போன்றே கதைகளை எழுதுவதிலும் ஒருவித ரசனை உண்டு.
புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலையிற் பணி புரிந்த நாட்களில், வேறு வேறு பெயர்களில் சில சிறுகதைகளை வேறு வேறு சஞ்சிகைகளுக்கு எழுதியிருக்கிறேன். அவை அநேகமாக எனது நண்பர்களால் அல்லது தெரிந்தவர்களால் புதிதாகத் தொடங்கப்பட்ட சஞ்சிகைகளாக இருக்கும். (ஒளி, காவலன், மாணிக்கம் போன்றவை)
பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து சில பொறியியற்துறை மாணவர்கள் அப்போது தொழிற்துறைப் பயிற்சிக்காகப் புத்தளம் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தி அனுஷியா. “பெண்களின் பெயரில் எழுதினாற்தான் பிரபல்யம் அடையலாம். பிரசுர வாய்ப்பும் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான ஒரு பெண்ணின் பெயரில் எழுதலாமே..? என அபிப்பிராயம் தெரிவித்தாள் அனுஷியா, அவள் ஒரு பெண்ணாக இருப்பதால் அப்படிக் கூறியிருக்கலாம். அல்லது பத்திரிகை ஆசிரியர்கள் பொதுவாக ஆண்களாக இருப்பார்கள் என்ற நோக்கத்திலும் கூறியிருக்கலாம்.
"அப்படியானால் அனுஷியா என்ற பெயரில்தான் எழுதவேண்டும். என ஜோக் அடித்தேன். அந்தப் பருவத்தில் எனக்கு விருப்பமான பெண்கள் நிறையப்பேர் இருந்தார்கள். ஆனால் என்னை விரும்பும் பெண் யார் என்றுதான் தெரியவில்லை. (அல்லது என்னை யாராவது விரும்பினார்களா என்பதும் தெரியாது.) அதனால் புனைபெயர் வைப்பதில் குழப்பமும் தாமதமாயுமிருந்தது. எனக்கு ஒரே ஒரு தங்கை சுதாமதி. அவளது பெயரைச் சேர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்திற் தோன்றிய பெயர்தான் சுதாராஜ்.
அப்போது சிரித்திரனில் சிறுகதைப் போட்டி ஒன்று பற்றிய அறிவிப்பு
2

வந்திருந்தது. பலாத்காரம் எனும் கதையை அதற்கு எழுதினேன். எழுத ஆரம்பித்த காலத்தில் அநேகமாக சிறுகதைப் போட்டிகளுக்குத்தான் எழுதியிருக்கிறேன். பத்திரிகைகளுக்கோ சஞ்சிகைகளுக்கோ கதையை அனுப்பினால், அவற்றின் ஆசிரியர்கள், முன் அறிமுகமற்ற புதிய எழுத்தாளனைக் கண்டுகொள்வார்களோ எனும் தயக்கம் எனக்கு இருந்தது. கதையை வாசிக்காமலே தூக்கிப் போட்டுவிடக்கூடும்.(குப்பைக் கூடையில்) போட்டிக்கு அனுப்பினால் கதையை எப்படியும் நடுவர்கள் வாசிப்பார்கள்தானே. கதை பரிசு பெற்றால் அதை எனது எழுத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகவும் கொள்ளலாம் என்றெல்லாம் எண்ணினேன். 'அக்கிரமங்கள் தலைதூக்கும்போது அவற்றை அழிப்பதற்காகப் பாவிக்கப்படவேண்டிய ஆயுதம்தான் பலாத்காரம்' எனும் பகவத் கீதையின் கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் எழுதப்பட்ட கதை பலாத்காரம். எனது நண்பனொருவன் கூறிய அவனது உண்மைக் கதை அது. அந்தக் கதையை சிரித்திரனில் அறிவிக்கப்பட்டிருந்த ஒரு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பினேன். சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் அவர்கள், கதை பரிசு பெற்ற தகவலையும் தெரிவித்து, என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அடுத்தமுறை லீவில் சென்றபோது அவரைச் சந்தித்தேன். அவரது நேரடியான பாராட்டு எனக்கு மிக உற்சாகத்தை அளித்தது. எழுத்துத் துறையில் நம்பிக்கையூட்டி முதலிற் கை கொடுத்துத் தூக்கிவிட்டவர் அவர். தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமருந்து ஊட்டிவிட்டவர் அவர். சிரித்திரனில் எனது பல கதைகளை மகுடக் கதைகளாகப் பிரசுரித்துப் பெருமைப் படுத்தியவர். இலக்கிய உலகின் உள்ளும் வெளியிலுமான பல தகவல்களை அறியத் தந்தவர். அவர் எனது ஞானத் தந்தை.
எழுதத் தொடங்கியதற்கு இன்னொரு காரணம் தமிழுணர்வு. அந்தக் கால கட்டத்தில் (இந்தக் காலகட்டத்திலும்தான்) இலங்கை ஆட்சியாளர்களின் தமிழின ஒடுக்குகளும் அதை எதிர்த்துக் கிளர்ந்த உரிமைப் போராட்டங்களும் இயல்பாகவே தமிழ்ப்பற்றை ஏற்படுத்தியிருந்தது. ‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு போன்ற கோஷங்களிலெல்லாம் உருக்கொண்டு எழுந்த பருவம் அது. எனது கல்வித்துறை வேறாயிருந்போதிலும், தமிழில் ஏதாவது செய்யவேண்டும் எனும் துடிப்பு, தமிழில் எழுதுவதற்கு உந்துதலாயிருந்தது.
எழுதத் தொடங்கிவிட்டதால் புத்தகம் வெளியிடும் ஆசையும் வந்தது. பலாத்காரம் எனும் கருத்தின் மேற் கொண்டிருந்த பற்றின் காரணமாக எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்கும் பலாத்காரம் என்றே பெயரிட்டேன். 1977ல் அந்நூல் தமிழ்ப்பணிமனை வெளியீடாக வந்தது. தமிழ்ப்பணிமனை என்பது ஏதும் பிரபல்யமான புத்தக நிறுவனமல்ல. எனது புத்தகத்தைப் பதிப்பிக்கும் ஆர்வத்தில் நானே உருவாக்கிய அமைப்பு அது. பலாத்காரம் எனும் ஒரே ஒரு புத்தகத்தை வெளியிட்டதுடன் அது தன் பணியை நிறுத்திக்கொண்டது. அந்தப் புண்ணியம் சில புத்தகக் கடைகளையே போய்ச்சேரும் பலாத்காரம் ஆயிரம் பிரதிகள் பதிப்பிக்கப்பட்டது. புத்தகக் கடைக்காரர்களெல்லாம் விருப்பத்துடன் பெற்றுக்கொண்டார்கள். பிரதிகள் எல்லாம் (என் கையிலிருந்து) சீக்கிரமாகத் தீர்ந்துவிட்டன. ஆனால் பணம்தான் வந்து சேரவில்லை.
பலாத்காரம்" நுாலைக் கண்ணுற்று, கொழும்பில் தமிழ் கதைஞர் வட்டத்தைச் சேர்ந்த இராசையா மாஸ்டரும், வேல் அமுதனும் தாமாகவே 13

Page 8
அறிமுக விழா ஏற்பாடு செய்து என்னை உற்சாகப்படுத்தினார்கள். பலாத்காரம் வெளியீட்டு விழா. அது, இது, என்ற சம்பிரதாயங்கள் எதுவுமின்றி வெளிவந்த நூல். புத்தகங்கள் அச்சிட்டு முடிந்ததும் அதை அச்சிட்ட கலா நிலையப் பதிப்பகத் தொழிலாளர்களுக்கு தேநீர் விருந்தளித்து, அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அவற்றில் இரண்டு பிரதிகளை எடுத்துக் கொண்டு சைக்கிளில் யாழ் இந்துக் கல்லூரிக்குப் போனேன். பாடசாலைக்குள் நுழையும்போது, நான் தேடிக் கொண்டு போனவர் வாசலை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர்தான் தேவன். யாழ்ப்பாணம் அவர்கள். அவரிடம் அந்தப் பிரதிகளைக் கொடுத்தேன். எனது கல்லூரி வாசலிலேயே எனது ஆசிரியருக்கு எனது நூலின் முதற் பிரதிகளை வழங்கியது ஒரு நல்ல ஆரம்பமாகத் தோன்றியது.
எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே மல்லிகை சஞ்சிகை, அதன் இலக்கியத் தரத்தினால் என்னைக் கவர்ந்திருந்தது. மல்லிகையைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். ஆனால் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களை நேரடி அறிமுகம் இல்லை. ஒருமுறை அவர் எனது வீடு தேடி வந்திருந்தார்.
“சுதாராஜ் விடு இதுதானோ?” "ஓம் இதுதான். . வாங்கோ!” அவர் உள்ளே வந்து அமர்ந்தார். "நான் சுதாராஜைப் பார்க்க வேணும்” “அது நான்தான்!” எனக் கூறினேன். “அட நீங்களா?” என்றார். ஆளைப் பார்த்தால் பொடிப் பயலாக இருக்கிறானே!’ என்பது போன்ற பார்வை. (அப்படி நான் நினைத்துக் கொண்டேன்.) “உங்கடை கதைகளை சிரித்திரனில் பார்க்கிறனான். . நல்லா எழுதுறிங்கள். எழுதுங்கோ. எழுதுங்கோ!. மல்லிகைக்கும் எழுதுங்கோ. .!"
ஒரு மூத்த எழுத்தாளர், இலக்கியத் தரமான சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் என்ற எந்தக் கொம்புகளுமின்றி, யாருக்கும் தெரியாதிருந்த இந்த ஆரம்பகால எழுத்தாளனைத் தேடி வந்து அறிமுகமாகித் தைரியமளித்தவர் டொமினிக் ஜீவா. அன்றிலிருந்து இன்று வரை அவரது நட்புத் தொடர்கிறது. அவ்வப்போது அன்புடன் வற்புறுத்தி எழுத வைப்பவர்அவர். மல்லிகையில் தொடர்ந்து எழுத வைத்து எனது எழுத்திற்கு உரிய இடமளித்துக் கெளரவித்தவர் ஜீவா.
புத்தளத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, நான் தங்கியிருந்த வீட்டுக்கு ஒருவர் என்னைத் தேடி வந்தார். நல்ல உயரமான கம்பீரத் தோற்றம். எனக்கு அவரை முன்பின் தெரியாது. மின்னும் புன்னகை முகத்துக்குரிய அவர், தன்னை அறிமுகம் செய்தார். அவர்தான் இலக்கிய ஆர்வலர் பத்மநாபஐயர். கொழும்பிலிருந்து உத்தியோக அலுவலாக புத்தளம் வந்திருந்தவர், இலக்கிய ஆர்வம் காரணமாக மேற் கொண்ட சந்திப்பு அது. இயல்பாகவே யாரையும் வலிந்து சென்று அறிமுகமாகும் சுபாவமில்லாதவன் நான். ஆனால் சிரித்திரன் சுந்தர், மல்லிகை ஜிவா, பத்மநாபஐயர் போன்றவர்களிடமிருந்து தானாகக் கிடைத்த அறிமுகமும் ஆதரவும் எனது எழுத்துப் பணிகளில் பயனுள்ளதாகவும் பெறுமதியானதாகவும் இருந்திருக்கிறது.
தமிழகத்திலிருந்து நவீன இலக்கிய நூல்களையும், சிறு சஞ்சிகை களையும் பல தடவைகள் கொண்டுவந்து தந்திருக்கிறார் பத்மநாபஐயர். கணை

யாழியும் தாமரையும் எனக்கு அறிமுகமானது அவர்மூலம்தான். எழுதத் தொடங்கியிருந்தேனே தவிர, எத்தனையோ எழுத்தாளர்களை எனக்கு அப்போது தெரியாது. எனது கல்வித்துறையும் வேறாக இருந்தபடியால் தமிழ் இலக்கிய நூல்களை வாசிக்கும் சந்தர்ப்பங்களும் தேவையும் குறைவாக இருந்தது. காணும்போதெல்லாம் நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் சிலாகித்து நீண்டநேரம் பேசிச் செல்வார் பத்மநாபஐயர். வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, பூமணி, போன்ற இன்னும் பலரின் புத்தகங்கள் அவர்மூலம் வாசிக்கக் கிடைத்தன. இப்படியானவர்களையெல்லாம் தெரியவந்தது அப்போதுதான். இது போன்ற புத்தகங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கியதும் அதன் பிறகுதான்.
"மனம்' எனும் ஒரு நாவலை 1977 ல் எழுதினேன். வீரகேசரிப் பிரசுரமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதன் முடிவில் சில மாற்றங்களைச் செய்வதற்காக, அந் நாவலை வீரகேசரியிலிருந்து கொண்டு வந்து அலுவலகத்தில் வைத்திருந்தேன். (அலுவல் ஓய்வு நேரங்களில் எழுதும் அலுவலைச் செய்யலாம் எனும் உத்தேசம்) ஆனால் , அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அப்போது வெடித்த இனக் கலவரம் காரணமாக எல்லாவற்றையும் அந்த அந்தப்படியே போட்டுவிட்டு ஊருக்கு ஓடவேண்டி நேரிட்டது. (பயத்தினால் அல்ல. பாதுகாப்பிற் காக) திரும்ப வந்து பார்த்தபோது நாவலுக்கு ஒரு சோகமான முடிவு ஏற்பட்டிருந் தது. இனக் கலவரத்தில் பல தமிழர்களுக்கு நேர்ந்த கதி (தமிழில் எழுதப்பட்ட காரணத்திற்காக) அதற்கும் நேர்ந்திருந்தது. அந்த நாவல் காணாமற்போய்விட்டது. ஓவியர் ரமணியின் மூத்த சகோதரர் சச்சிதானந்தன் (ஞானரதன்) அப்போது புத்தளத்திற் கடமையாற்றிக்கொண்டிருந்தார். மாலை வேளைகளிற் சந்தித்துக்கொள்வோம். ஏற்கனவே அவரது நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்திருந்தது. என்னை இன்னொரு நாவல் எழுதுமாறு தூண்டினார். நாவல் எழுதுவதில் "மனம்" விட்டுப்போயிருந்த நேரம் அது. ‘ஒரு முழு நாவல் எழுதுமளவிற்கு நேர வசதியில் லை’ என அவருக்குச் சாட்டுக் கூறிக்கொண்டிருந்தேன். அவர் விடவில்லை. ஒரு சிறுகதை எழுதுவது போல ஒவ்வொரு அத்தியாயத்தையும் (நேரம் கிடைக்கும்போது) எழுதலாமே என வற்புறுத்திக் கொண்டிருந்தார். “சரி” என்றேன். எனினும் அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. ஆனால் நாவல் ஒன்று எழுதுமளவிற்கு எனக்குச் சீக்கிரமாகவே தாராளமான நேரம் கிடைத்தது. வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்து ஈராக்கில் வேலையாகிப் போயிருந்தேன். போன நேரம் சரியில்லையோ என்னவோ. அங்கே யுத்தம் வெடித்துவிட்டது. திரும்ப வந்தேன். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் கைவிட்டுப் போயிருந்த நிலையில். ‘இவர் இனிச் சும்மா இருக்கப் போகிறார்’ எனப் பல நலன் விரும்பிகளுக்குக் கவலை அல்லது சந்தோஷம். ஆனால் நான் சும்மா இருக்கவில்லை. ஞானரதனின் வற்புறுத்தல்கள் உள்ளே வேலை செய்தது. அந்த நேரத்தில் எழுதிய நாவல்தான் இளமைக் கோலங்கள். அது வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
ஞாயிறு பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில், அப்போது வீரகேசரிச் சிறுகதைகள் என் மனதைக் கவர்ந்திருந்தன. சிரித்திரன், மல்லிகை ஆகிய சஞ்சிகைகளுக்கு மட்டுமின்றி வீரகேசரிக்கும் எழுதத் தொடங்கினேன். அனுப்பப்பட்ட ஆட்டோடு கதைகள் பிரசுரமாகின. அப்போது வீரகேசரிப் பிரதம
S

Page 9
ஆசிரியராயிருந்த சிவனேசச்செல்வன் பின்னர் ஒருமுறை கண்டபோது பாராட்டினார். வீரகேசரிக்குத் தொடர்ந்து எழுதும்படி கேட்டுக்கொண்டார். அந்த வகையில் என்னை ஊக்குவித்தவர்களில் சிவனேசச்செல்வனும் ஒருவர்.
“கொடுத்தல் சிறுகதைத் தொகுப்பு சிரித்திரன் பிரசுரமாக 1983 ல் வெளிவந்தது. புத்தகங்கள் வெளியிடும்போது வெளியீட்டு விழாக்களைக் கூடியவரை தவிர்த்துக் கொள்வேன். வெளியீட்டு விழா என்றால் நாலு பேர் முன்னிலையில் (கவனியுங்கள். நாலு பேர்கள்) எழுந்து நின்று ஏதாவது பேசவேண்டிவருமே!
‘கொடுத்தல்' வெளிவந்தபோது திக்கவயல் தர்மகுலசிங்கம் என்மீது அல்லது சிரித்திரன் சுந்தர்மீது கொண்டிருந்த அபிமானம் காரணமாக பல அறிமுக விழாக்களை நடத்தினாராம். நல்ல காலத்துக்கு நான் அப்போது ஊரிலில்லை. உத்தியோகம் காரணமாக வெளிநாட்டிலிருந்தேன். ஒருமுறை விடுமுறையில் வந்திருந்தபோது மாட்டிக்கொண்டேன். நெல்லியடியில் இன்னொரு அறிமுக விழாவை ஏற்பாடு செய்திருந்தார் திக்கவயல். என்னை அவ்விழாவிற் கட்டாயமாகப் பங்குபற்ற வேண்டுமென அன்புத் தொல்லை செய்தார். தவிர்க்கமுடியாமல் விழாவுக்குப் போனேன். அங்கு போய்ச் சேர்ந்தபோது திக்கவயலும், மற்றது. எழுத்தாளர் தெணியான் என நினைக்கிறேன் - இருவருமாக வரவேற்றார்கள். அங்குள்ள ஒரு பாடசாலையின் ஒரு வகுப்பறைக்குக் கூட்டிப் போனார்கள். "இங்குதான் விழா நடக்கப்போகிறது.’ எனக் கூறினார்கள். ஆனால் யாரையும் காணவில்லை. ‘இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் கூட்டம் நடக்குமாக்கும் என்ற சந்தேகத்துடன் அவர்களைப் பார்த்தேன். "இங்கு ஒரு முக்கியமான உதைபந்தாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. எல்லோரும் அங்கு போய்விட்டார்கள். முடிந்ததும் வந்துவிடுவார்கள். நீங்கள் இருங்கோ..!" என என்னைச் சமாளித்து அங்குள்ள ஓர் இருக்கையில் அமர்த்துவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார்கள். உதை பந்தாட்டம் பொழுதுபடும்வரை முடியவுமில்லை. எங்களுடைய கூட்டம் தொடங்கவுமில்லை. இலக்கிய ஆர்வலர்கள் உதைபந்தாட்ட ரசிகர்களாயுமிருப்பதால் ஏற்படக்கூடிய சில நன்மைகளுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.
கொடுத்தல் - சிறுகதைத் தொகுதி 1981-1988 எட்டு வருடக் காலப் பகுதியின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான சாகித்ய மண்டலப் பரிசு பெற்றது. ஏற்கனவே "ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்’ எனும் எனது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார் மல்லிகை ஜீவா. அந் நூல் 1989 ம் வருட சிறந்த சிறுகதைத் தொகுப்பாக யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசு பெற்றது.
அவர் எனது இன்னொரு தொகுதியையும் வெளியிட முன்வந்தார். ‘தெரியாத பக்கங்கள்’ எனும் அத்தொகுதிக்குரிய கதைகளை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள மல்லிகைப் பந்தலுக்குப் போனேன். அங்கு கலாநிதி. நா. சுப்பிரமணியன் இருந்தார். என்னைக் கண்டதும், ‘சுதாராஜ்' என அழைத்துக் குசலம் விசாரித்தார். அவரை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் கண்ட பின்னர் அப்போதுதான் காண்கிறேன். வேலை நிமித்தம் வெளிநாடுகளில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்ததால் இப்படிப் பல தொடர்புகளை இழந்துபோயிருந்தேன்.
S

அதனால், ‘என்னை நினைவிருக்குதா?’ எனக் கேட்டேன். 'உங்களைப் படிப்பிக்கிறோம். மறந்து விடுமா? என்று பதிற் கேள்வி கேட்டார். நான் கொண்டு சென்ற சிறுகதைத் தொகுதிக்கான கதைகளை அவரிடமே கொடுத்தேன். இதற்கு ஒரு முன்னுரை எழுதித் தாருங்கள் என்ற வேண்டுகோளுடன். அப்படியே ஆகியது. சில வருடங்களின் பின்னர், ஒருநாள் தற்செயலாக மே 98 தாமரை இதழைப் பார்த்தபோது, அதில் கலாநிதி சுப்பிரமணியனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் ஒரு கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார்: "ஈழத்தில் சிறுகதை வளர்ச்சி ஒன்றும் பின் தங்கிப் போய்விடவில்லை. ரஞ்சகுமார், சாந்தன், சட்டநாதன், சுதாராஜ் போன்ற இன்னும் சிலரைக் குறிப்பிடலாம். இவர்களின் கதை கனதியானவை. இவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்தில்கூட எடுத்துப் பேசப்படக்கூடியவர்கள். இன்னும் இருபது வருஷங்களுக்கு இவர்களைச் சொல்ல நான் தயார்' - இந்த விமர்சனம் எனது எழுத்துக்குக் கிடைத்த பெரிய பாராட்டு. இன்னும் ஆயிரம் கதைகள் எழுதவேண்டும், உலகமட்டத்துக்கு உயரவேண்டும் என உற்சாகமளித்த பாராட்டு.
நான் வெளிநாட்டிலிருந்தபோது ஒருமுறை மனைவியிடமிருந்து தகவல் கிடைத்தது: 'விபவி கலாசார மையம் இலக்கிய விருதுத் தேர்வுக்காக சிறுகதைத் தொகுதிகள் அனுப்புமாறு பத்திரிகைகளிற் கேட்டிருக்கிறார்கள். உங்களுடைய தெரியாத பக்கங்கள் தொகுப்பை அனுப்பவா? என்று. நான் அதற்கு, 'அனுப்ப வேண்டாம்' எனப் பதிலளித்தேன். பொதுவாக இலக்கிய விருதுத் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளும் பக்கசார்புத் தன்மைகளும் காரணமாக, விருதுகளைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத மனநிலை அது. ஆனால் அந்த வருடத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரியாத பக்கங்களை விபவி கலாசார மையம் தெரிவு செய்திருந்தது. தங்களுக்கு அனுப்பப்படாத நூல்களையும் தேடி எடுத்து அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். விபவியின் இலக்கியநேர்மை என்னை ஆச்சரியப்படுத்தியது. அண்மையிற்கூட, ‘சுதாராஜின் இலக்கியப் படைப்புகள்ஒரு பன்முக நோக்கு' எனும் ஓர் ஆய்வரங்கை விபவி, கொழும்பில் ஏற்பாடு செய்து நடத்தியது. இந்த வகையில் விபவியைச் சேர்ந்த இராசையா மாஸ்டர், நீர்வை பொன்னையன், டொக்டர் முருகானந்தன் போன்றவர்கள் எனது எழுத்துப் பணியை ஊக்குவிக்கும் பணியைச் செய்திருக்கிறார்கள்.
இப்போது சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டுள்ளேன். சிறுவர் கதைகளை வாசித்த மாணவப் பருவத்தில், அக் கதைகளிலிருந்த நீதிபோதனை களும் படிப்பினைகளும் நேர்மையான வாழ்வு வாழ்வதன் மகத்துவத்தை மனதிற் பதித்தன. அந்த நினைவுகளின் பாதிப்பில், கதைகள் சிறுவர்களின் மனதைப் பக்குவப்படுத்த உதவுகின்றன என்பதை நம்புகிறேன். சமூகச் செய்திகளையும் பொது அறிவு சம்பந்தப்பட்ட விடயங்களையும் அவர்கள் மட்டத்தில் மென்மையாகவும் வேடிக்கையாகவும் கதைகள் மூலம் சொல்ல விரும்புகிறேன். 'காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை', 'பறக்கும் குடை ஆகிய சிறுவர் இலக்கியநூல்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன். இவ் இரு நூல்களையும் வெளியிட இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை அனுசரணை செய்தது. சிறுவர் இலக்கியம் எழுதவேண்டும் எனும் ஆசை பல காலமாக இருந்தது. அதை இன்னும் ஊக்குவித்தவர் செ. யோகநாதன். சில சிறுவர் 17

Page 10
இலக்கிய அமைப்புகளிலும் ஈடுபட வைத்தவர். எனது, “காற்றோடு போதல் சிறுகதைத் தொகுப்பையும் எம். டீ. குணசேன நிறுவனத்தின்மூலம் வெளியிட்டு வைத்தவர்.
காட்ட தோஸ் பவறமுத?’ எனும் (யாரொடு நோவோம்?) எனது சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை மல்லிகைப் பந்தல் வெளியிட்டது. வட - கிழக்கில் சமாதானத்துக்கான யுத்தம் எனும் பெயரில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் சாதாரண சிங்கள மக்களுக்கும் உணர்வுபூர்வமாக தெரியப்படுத்தும் நோக்கத்தில் எனது சிறுகதைகளைச் சிங்களத்தில் வெளியிட விரும்பியிருந்தேன். அந்நூலை வாசித்து, பல முகம் தெரியாத நண்பர்கள்கூட தொடர்பு கொண்டு, "இப்படியெல்லாம் அங்கு நடக்கிறதா? என வியப்பும் கவலையும் அடைந்தார்கள். சிங்கள இலக்கியகாரரும் நாடகக் கலைஞருமான ஹேமசிறீ அபேவர்த்தன அண்மையிற் தொடர்பு கொண்டு இந் நூலிலுள்ள சில கதைகளை தொலைக்காட்சி நாடகமாக்க விரும்பி அனுமதி கேட்டிருந்தார். இந்நூலை வாசித்தபிறகு, தான் யாழ்ப்பாணம் சென்று போரின் கொடுமைகளைப் பார்த்து வந்ததாகக் கூறினார்.
எனது எழுத்துலகம்பற்றி முழுமையாக நான் இங்கு எழுதவில்லை. மேற்கூறியவற்றை ஒரு மேலோட்டமான குறிப்பாகக் கொள்ளலாம். எனது எழுத்துலகம் எனும் தொடர் ஞானத்தில் ஆரம்பிக்கப்பட்டபோதே அதன் ஆசிரியர் ஞானசேகரன் அவர்கள் அதற்கு எழுது ,கை = க = - = க = N
மாறு கேட்டிருந்தார். ஞானத்துக்கு “ஞானம்" சிறுகதை எழுதுமாறு அதற்கு முன்னரே புதிய சந்தா விபரம் கேட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் 'ಆಕೆ' உள்நாடு
என ஒப்புக்கொண்டேன். ஆனால் எழுதா தனிப்பிரதி esunt 30மலே காலம் கடந்துவிட்டது. அவரைக் அரை ஆண்டுச் சந்தாரூபா 180காணும்போதுகளிலும், சிலவேளை ஆண்டுச் சந்தா Lunt 360/ தொலைபேசும்போதும், இந்தா தருகி : அநதா தருகிறேன். "மனியோடர் மூலமாகவோ
பாக்குக் காட்டிக் கொண்டிருந்தேன். அனுப்பலாம். நேர நெருக்கடிதான்காரணம். எனினும் மனியோடர் அனுப்புபவர்கள் குற்ற மனப்பான்மை நெஞ்சை உறுத்திக் அதனை கண்டி தபால் நிலையத் கொண்டிருக்கும். அவர் தனது தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வைத்தியத் தொழிலுக்கு மத்தியிலும், வேண்டும். ஞானத்துக்காக நேரத்தை ஒதுக்கி, தன் அனுப்பவேண்டிய பெயர், கைப் பண நஷ்டத்துடனேயே இச்சஞ் முகவரி :- சிகையை வெளியிடும் தொண்டைச் TGNANASEKARAN Qơuủ g16ì65T60ổi tọ(55 5ì0 Tĩ. (915 : 19/7, PERADENIYAROAD, நஷ்டமல்ல. முதலீடு என்பது KANDY. கருத்து.) அவருக்கு இலக்கியகாரர்
செய்யவேண்டும். அற் லீஸ்ட் வெளிநாடு விடயதானங்களையாவது கொடுத்துதவ ஆண்டுச் சந்தா 20 USS வேண்டும். N-(2,9792-)-1
18
சந்தா காசோலை மூலமாகவோ

எழுதத் தூண்டும் எண்ணங்கள்). oC
/us குலாநிதி துரை.மனோகரன்) சிரித்திரன் சிந்தனை  ീച്ഛ இலங்கை காலத்துக்குக் காலம் பல மேதைகளை S. ar உற்பத்தி செய்து வந்துள்ளது. இவ்வகையில் அது ?6 3yK8y xʻ . vX. 3 தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் தாழ்ந்ததல்ல தமிழ்நாட்டாரே புகழ்ந்து மெச்சத்தக்க மேதைகள் இந்நாட்டில் தோன்றியிருக்கின்றனர். இவ்வகையில், ጰ” இலங்கையில் ஆக்கபூர்வமான சிந்தனையாளராகவும், 7 ޗާރޗް சிறந்த அங்கத ஓவியராகவும் ஒரு மேதைக்குரிய சிறப்பியல்புகளுடன் விளங்கி மறைந்தவர், சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் என்ற சி.சிவஞானசுந்தரம்.
சிவஞானசுந்தரத்துடன் நான் பழகவில்லையாயினும், அவரது சிரித்திரனுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தமிழில் முழுக்க முழுக்க அங்கத ஒவியங்களை முதன்மைப்படுத்திப் பல ஆண்டுகள் வெளிவந்த சஞ்சிகை அது. நான் பாடசாலைப் பையனாக இருந்தபோது, தினகரனில் வெளிவந்த சவாரித்தம்பர் மூலமே சுந்தரின் அங்கத ஒவியங்களோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. சவாரிதம்பரும், சின்னக்குட்டியும் சிறுவயதிலிருந்தே என்னை மிகவும் கவர்ந்தவர்கள். சவாரித்தம்பர் என்ற அங்கத ஓவியம் மூலம் சுந்தர் செய்த சமுதாய விமர்சனம் மிகச் சிறந்தது. அவரது பிற அங்கத ஓவியப் பாத்திரங்களான விக்கிரி, மிஸ்டர் அன்ட் மிஸிஸ் டாமோடிரன், மைனர் மச்சான் முதலியவையும் குறிப்பிடத்தக்கவை. சுந்தரின் "சித்திரகானம்” என்ற அங்கத ஒவியங்களையும் நான் விரும்பிப் பார்த்ததுண்டு, அங்கத ஒவியங் களுக்கு அப்பால், சிரித்திரனில் அவர் எழுதிவந்த மகுடியார் கேள்வி - பதில்கள் பகுதியும் சுவையானது.
சிரித்திரனை அங்கத ஓவியச் சஞ்சிகையாக மாத்திரமன்றி, ஓர் இலக்கி யச் சஞ்சிகையாகவும் ஆக்கிய பெருமையும் சுந்தருக்கு உண்டு. குறிப்பிடத்தக்க பல புனைகதைகள் அதில் வெளியாகியுள்ளன.
மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்த கார்ட்டுன் ஒவிய உலகில் நான்(2001) என்ற நூலில், சுந்தர் தமது ஓவிய அனுபவங்களையும், வாழ்க்கைப் போக்கினையும் சுவையாக எழுதியுள்ளார். திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் தொகுத்த சிந்தனைப் போராளி சிரித்திரன் சி.சிவஞானசுந்தரம் (2003) என்ற நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. அந்நூலில் பல்வேறு எழுத்தாளர்கள் தத்தம் கோணத்தில் சுந்தரைப்பற்றி எழுதியுள்ளனர்.
இவை மட்டுமன்றி, அவரது அங்கத ஒவியங்கள் அனைத்தும்-நூலுருவம் பெறவேண்டும். மகுடியர் கேள்வி - பதில்கள் பகுதியும் நூல் வடிவம் பெறின, சிந்தனைகக்குப் பெருவிருந்தாகும். சிரித்திரன் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுத் தனிநூலாக வெளிவர வேண்டும். திறமை வாய்ந்த மேதையொருவர் நம் மத்தியில் வாழ்ந்தார் என்பதை, எதிர்காலச் சந்ததிக்கு நாம் உணர்த்த வேண்டும். 19

Page 11
தென்றல் வந்து விசாதோ?
இலங்கை வானொலியின் இரு சேவைகளுக்கும் நீண்ட காலப் பெருமையுண்டு. ஆனால், இன்றைய நிலையில் அவை அப்பெருமையைக் காப்பாற்றுகின்றனவா என்பது கேள்விக்குறியே. இலங்கை வானொலியின் தேசிய சேவை பற்றி முன்னர் எழுதியுள்ளேன். இலங்கை வானொலி வர்த்தக சேவைக்குத் "தென்றல்” எனப் பெயரிட்டமையில் எனக்கும் தொடர்பு உண்டு என்பதனால், இயல்பாகவே அச்சேவை பற்றியும் அக்கறை உள்ளது. பழம் பெரும் அறிவிப்பாளர் பலரும், பின்வந்த அறிவிப்பாளர் சிலரும் தங்களது புகழையும் வளர்த்து, வர்த்தக சேவையின் பெருமையையும் காலங்காலமாகக் கட்டிக்காத்து வந்துள்ளனர். அவ்வப்போது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் தென்றலில் ஒலிபரப்பாகி வந்துள்ளன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் புவன லோஜினி நாகபூசணி போன்றோர் தயாரித்தளித்த சில நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தக்கவையாக விளங்கின. அண்மையில் 'பாட்டுக்கென்ன பதில்? என்ற நிகழ்ச்சி யொன்றினைச் சிறந்த முறையில் அறிவிப்பாளர் ஜெயலட்சுமி சந்திரசேகர் வழங்கியிருந்தார். வானொலி அறிவிப்பாளர்கள் பலரைத் தக்கபடி அறிமுகம் செய்து நிகழ்ச்சியை அவர் வழங்கியிருந்த முறை பாராட்டத்தக்க தாகும். தென்றலில் ஒலிபரப்பாகும் “சொந்தங்களைத் தேடி என்ற நிகழ்ச்சி பயனுள்ள ஒன்றாகும்.
ஆயினும, புதிய அறிவிப்பாளர்கள் சிலர் நேயர்களின் பெயர்களை மாத்திரமே உச்சரிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஒரு திருக்குறளையே ஒழுங்காக "அறுத்து உறுத்து"ச் சொல்லமுடியாதவர்களாகச் சிலர் திக்கித் திணறுகின்றனர். காலையில் பக்திப் பாடல்களை அடுத்து இடம் பெறும் "குறள் தரும் கீதம்' நிகழ்ச்சியில் சில புதிய அறிவிப்பாளர்கள் திருக்குறளைப் படுத்தும்பாடு சொல்லும் தரமன்று. அறிவிப்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, பெயர்களை வாசிக்கக் கொடுத்துப் பார்ப்பதைவிட, ஒரு திருக்குறளை ஒழுங்காக உச்சரிக்கத் தெரிகிறதா என்று பார்ப்பது நல்லது. அறிவிப்பாளர் தேர்வு விடயத்தில் தற்போது இனரீதியான சிந்தனைகளும், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுவதும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
வானொலியானது ஒரு கட்டுக்கோப்பான சாதனம். தேவையில்லாமல் அறிவிப்பாளர்கள் எதையாவது உளறிவிட்டால், சிந்திய பால்போல் ஆகிவிடும். கடந்த ஆண்டில் (2002) ஓர் இளம் பெண் அறிவிப்பாளர், கணினி அறிவில்லா தவர்கள் முட்டாள்கள் என்றரீதியில் வானொலியில் உளறப்போய், ஏராளமான நேயர்களின் கடும் கண்டனங்களைப் பெற்றுக்கொண்டார். தமக்குக் கணினி அறிவு இருக்கிறது என்பதை வில்லங்கமாகக் காட்டப்போனதால் ஏற்பட்டது இந்தத் தொல்லை. இறுதியில், தமிழ் நிகழ்ச்சி பிரதிப்பணிப்பாளர் நாயகம் நேயர்களிடம் தமது வருத்தத்தை வானொலி மூலம் தெரிவிக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
புதிய இனிய பாடல்களைக் காலை நேரத்தில் இடம்பெறச் செய்வதற் காகப் பொங்கும் பூம்புனல்’ என்ற நிகழ்ச்சி விவியன் நமசிவாயத்தினால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கேற்ப, புதிய இனியபாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம் பெற்று வந்தன. இப்போது புதிய குப்பைப் பாடல்கள் ஒலிபரப்பாகிவருகின்றன. வானொலி நிலையத்துக்குக் கிடைக்கும் பாடல்களையெல்லாம்"ஓடும் செம்பொனும்” ஒப்ப மதிக்கும் நமது அறிவிப்பாளர்கள் தரம்பார்க்காது ஒலிபரப்பி வருகின்றனர். பொதுவாகவே தரமான பல பாடல்கள் ஒலிபரப்புவாரின்றி வானொலி நிலையத்தில் அனாதர
O

வாகக் கிடக்கின்றன.
இரவு நிகழ்ச்சிகளில் ஒரு குறிப்பிட்ட நாளில் 'நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்சியை நடத்தும் ஓர் அறிவிப்பாளர், நெஞ்சம் மறக்காத பாடல்கள் என்று, தமக்குப் பிடித்த சோகப் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வியாக்கியானங்களோடு ஒலிபரப்பி வருகிறார். அவருக்கு உலகமே சோகமயமாகத் தோன்றக் கூடும். ஆனால், எல்லா நேயர்களுக்கும் உலகம் அப்படியன்று. மகிழ்ச்சியான நெஞ்சம் மறக்காத பாடல்களும் பல உண்டு.
இலங்கை வானொலி நாட்டின் தேசியச் சொத்து. அதன் தரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, சம்பந்தப்பட்ட அனைவரதும் பொறுப்பாகும். தென்றல் இதமாக வீசவேண்டும்.
மலர்ந்தும் மலராத.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விடிவு காணப்படும் என்ற நம்பிக்கையில் தற்போது சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. முன்னர் நான் ஞானம் இதழில் எழுதியது போல, "நாங்க ஆடுவதும் பாடுவதும் காசுக்கே சும்மா ஆளைக்குல்லா போடுவதும் காசுக்கே” என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. சமாதானம் என்ற கற்பனைப் புறாவைக் காரணம் காட்டி, வெளிநாடு களிலிருந்து கோடி கோடியாக வறுகிக் கொள்வதற்கே திட்டங்கள் தீட்டப்படு கின்றன. கோடிக்கணக்கில் வறுகும் பணத்தின் பெரும் பகுதியைத் தென்பகுதி களில் கொட்டி, அபிவிருத்தித் திட்டங்களைக் காட்டி எதிர்வரும் தேர்தல்களில் தமது ஆசனங்களைப் பெருக்குவதே ஒருசாரரின் திட்டமாக இருக்கிறது. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் பல வெளிநாடுகள் இதற்குத் துணை போகின்றன. அந்நிய நாடொன்றும், அயல்நாடொன்றும் தமிழ்மக்களின் பிரச்சினைகளைக் கணக்கில் எடுக்காதவைகளாகவே விளங்குகின்றன.
அண்மையில் சமாதானப் பேச்சுக்களிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக ஒருசாரார் அறிவித்த போது, சில பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் மிக வேடிக்கையானவையாக இருந்தன. எப்போது சமாதான முயற்சிகள் குழம்பும் என்பதிலேயே எப்போதும் அக்கறையாகவுள்ள இவர்களின் கழுகுப் பார்வை, இத்தகைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் துடிக் கிறது. ஏதோ யுத்தமே மீண்டும் வந்துவிட்டதைப் போல இவர்கள் பதறித்துடித்து நடித்தது சிறந்த நகைச்சுவை விருந்து. தமது நடிப்புக்குச் சமாதானத்தை விரும்பும் மக்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்று தெரிந்தவுடன், அவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு, எட்ட நின்று குரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நமது தமிழ் அரசியல்வாதிகள், அரசியல் கைதிகளைப் பற்றி அறவே மறந்து, வேட்டைக்காரர்கள் தரித்திருப்பதற்குப் பொருத்தமான இடம் தேடிக்கொண்டு கொஞ்சக்காலம் திரிந்தார்கள். அமைச்சர் சந்திரசேகரன் மட்டும் சமாதானத்தின் மீதான தமது அக்கறையைப் பிற தமிழ் அரசியல் வாதிகளுடன் இணைந்து கொழும்பில் வெளிப்படுத்தினார்.
சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது முற்று முழுக்க அரசியல் தொடர்பான விடயம். அதற்கு அயல்நாட்டு வேட்டைக்காரர்களின் ஆலோசனை கள் தேவையில்லை. தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் வேடம் தாங்கும் ஒரு நடிகரின் பெயரைக் கொண்ட அயல்நாட்டு ஆலோசகர் ஒருவர் உள்ளுர் வேட்டைக்காரர்களுக்குச் சார்பாகவே தமது ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் நாட்டில் எவ்வாறு சமாதானம் ஏற்படப்போகிறது? 2

Page 12
क्षं
us N g 縫 < భ * و பிவத்தினுடான ஒரு பூவணம்"
: கலாநிதி யோகரா **.
“சிறுவர் விமர்சனம்" என்ற மேற்குறித்த தலைப்பினை நோக்குகின்ற இலக்கிய ஆர்வலர் அப்படி ஒன்று இருக்கின்றதா என்று வியப்படையவோ குழப்பமடையவோ கூடும். எனவே முதலில் அது பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். இங்கு சிறுவர்களிடமிருந்தே சிறுவர் இலக்கியப் படைப்புகள் பற்றிய (எ-டு: சிறுவர் பாடல், சிறுவர் கதை) அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து கொள்வதனையே சிறுவர் விமர்சனம் என்று நான் கருதுகிறேன்.
மேலும் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள் எனது அனுபவத்தினூடாகப் பெறப்பட்டவையாகும். அதாவது, அவ்வப்போது எனது மகளின் சில செயற்பாடு களை அவதானித்ததனுடாகவும், அவள் தெரிவித்த அபிப்பிராயங்களுடாகவும் பெறப்பட்டவையாகும்.
அவளின் செயற்பாடுகளை உற்று அவதானித்ததன் ஊடாகவும் பெறப்பட்டவற்றுள் ஒன்றை மட்டும் குறிப்பிடுவது போதுமென்று கருதுகின்றேன். அது சிறுவர் உலகம் மிக வித்தியாசமானது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்ற தொன்று.
அது யாது? கடந்த சில மாதங்களின் முன்னர் இராணுவக்கட்டுப்பாட்டி லுள்ள மட்டக்களப்பு நகருக்கு விடுதலைப்புலிகள் முதன்முதலாக வந்திருந்தார் கள். அவ்வேளை ‘விடுதலைப்புலிகள் வருகின்றார்கள்’ என்றதும் மகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி! நேரே பார்க்கவேண்டும் என்ற அங்கலாய்ப்பு பொங்கி வழியும் மகிழ்ச்சிப் பிரவாகம்! அதேவேளை அவர்கள் வந்த பின்னர் ஏமாற்றம்! அது ஏன்? அதாவது ‘விடுதலைப்புலிகள்’ என்று அவள் நினைத்தது காட்டிலே வாழ்கின்ற உண்மையான புலிகளையே! அவைதாம் வர இருக் கின்றன என்று அவளது பிஞ்சு உள்ளம் எண்ணியிருந்தது. அதனாலேதான் அவளுக்கு ஏமாற்றம். ஆனால், ஓரளவாவது சிறுவர் உளவியல் அறிந்த நான் அதனை உணர்ந்திருக்கவில்லை. இங்கு நான் வலியுறுத்த விரும்புவது, சிறுவர் உலகம் வித்தியாசமான உலகம். ஆகவே சிறுவர் இலக்கியம் எழுத முற்படுவோர் சிறுவர் உளவியலை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதுமட்டு மன்றி அதுபற்றித் தெளிவு பெறுவதற்கு சிறுவர்களோடு நெருங்கிப் பழக முன்வரவேண்டும் என்பதே.
மேலே சிறுவர் இலக்கியம் தொடர்பான அடிப்படை விடயமொன்றினைக் குறிப்பிட்டேன். இனி சிறுவர்களுக்கு நாம் இலக்கியம் படைக்கும்போது அது பாடலோ கதையோ எதுவாக இருந்தாலும் மொழிப் பிரயோகத்தில் கவனம் செலுத்துவதன் அவசியம் தொடர்பான எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
"தபாற்காரன் வருகின்றான். தபாற்காரன் வருகின்றான்"
 
 
 
 
 
 
 

என்ற சிறுவர் பாடலொன்றினை மகள் நன்கு அறிந்திருந்தாள். அப்பாடலில் ஏதும் பிழை இருப்பதாக அன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதனிடையே எமக்குத் தபால் விநியோகம் செய்கின்ற தபாற்காரனுடனும் மகளுக்கு நல்ல தொடர்பு; மாமா - மருமகள் என்று கூப்பிடும் அளவிற்கு நல்ல தொடர்பு. இப்பின்னணியில் சடுதியாக ஒருநாள் மேற்குறித்த பாடலில் தபாற்காரன்’ என்று வரக்கூடாது என்று அவள் கூறினாள். உண்மைதான். அப்படிக்கூறுவது மரியாதைக்குறைவு என்று ஏதோ ஒரு விதத்தில் அவள் உணர்ந்திருந்தாள். அதனை, அப்பாடலை இயற்றியவரோ நானோ நிச்சயமாக இதற்கு முன் உணர்ந்திருக்கமாட்டோம். இவ்வாறான பல பாடல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க இதனோடு தொடர்புபட்ட இன்னொரு உண்மை மனதைக் குடைகின்றது. அதாவது பிள்ளைகள், பெரியார்களை மதிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லுகின்ற நாம் - அது பற்றி பாடல்கள், கதைகள் எழுதுகின்ற நாம் - எங்களை அறியாமல் எமது படைப்புகளுடே மரியாதைக் குறைவான - பண்பாடற்ற விடயங்களைத் தெரியப்படுத்தி வருகின்றோம்!
மேலும், சிறுவர் பாடல்களில், இடம்பெறும் சொற்றொடர்கள் சிறுவர் பாடுகின்ற வசதிக்கேற்ப பிரித்தோ சேர்த்தோ இடம்பெறவேண்டும். எனினும், தற்போது வெளிவரும் பாடல்கள் பலவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்தும்போது இப்பாடல்கள் அதற்கு எதிர்மாறாக அமைவதனால் எனக்கேற்படும் இடர்பாடு களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இனி, சிறுவர் கதைகள் தொடர்பாக எனது அனுபவம் ஒன்றினை எடுத்துரைப்பது பொருத்தமானது. படைப்புகளில் பேய், பிசாசு, இரத்தம் முதலிய குறிப்புக்கள் ஓரளவாவது இடம்பெற்றாலும் கூட, இவ்வயதுச் சிறுவர்கள் இவற்றினைக் கேட்க விரும்புவதில்லை என்று தெரிகின்றது. அதேவேளையில் மற்றொன்றையும் குறிப்பிடவேண்டும். துன்பமான முடிவுள்ள சிறுவர் கதை களையும் அவர்கள் விரும்பத் தயங்குவதை என்னால் உணர முடிந்துள்ளமை உங்கள் கவனத்திற்குரியது.
பொதுவாக சிறுவர்களுக்குரிய படைப்புக்கள் எத்தகையனவாய் இருந் தாலும் படங்கள் (சித்திரங்கள்) இடம்பெறவேண்டுமென்று அடிக்கடி கூறப் படுவது பலரும் நன்கு அறிந்த விடயமாயினும் சிறுவர்களோடு பழகும்போதுதான் அதனுடைய முக்கியத்துவத்தை நன்கு அறிய முடிகின்றது. உதாரணமாக, சிறுவர் பாடலொன்றில் ஒன்பது மிருகங்கள் பற்றிய விடயம் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்தப் பாடலுக்குப் படம் வரைந்தவர் ஏழு மிருகங்களின் படங்களைத் தான் வரைந்திருந்தார். இதை அவதானித்த எனது மகள், “ஏன் மீதி இரண்டு மிருகங்களும் வரையவில்லை? என்று கேட்டாள். இதற்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. எனினும், சிறுவர்களை ஏமாற்றுவது கடினம் என்பதை என்னால் உணர்ந்துகொள்ளமுடிந்தது.
படங்கள் அதிகம் இடம்பெறவேண்டும் என அவர்கள் விரும்புகின்ற வேளையில் தமது இயலாமை காரணமாக ஓரிரு வர்ணங்களில் (இன்னும் தெளிவாகக் கூறினால் கறுப்பு, வெள்ளை என்பனவோ ஒரேஒரு வர்ணமோ) போடுகின்ற படங்களை அவர்கள் விரும்புவதில்லை என்பதையும் உணரக் 龙3

Page 13
கூடியதாகவுள்ளது.
ஆக, சிறுவர்கள் உலகம் வித்தியாசமான தனி உலகமாகவுள்ளது என்பதை மேற்கூறிய எனது அனுபவங்களினூடாக உணர்ந்துகொள்ள முடி கின்றது. எனவே சிறுவர் இலக்கியம் படைப்பவர் சிறுவர் உளவியல் உணர்ந்திருக்கவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, சிறுவர்களுடன் ஊடாடு வதனூடாகவே அதில் தெளிவு பெற முடியும் என்று கருதுகிறேன். எனவேதான் சிறுவர் இலக்கியம் படைத்த பின்னர் சிறுவர்களிடமே அவற்றைக் கொடுத்து அவர்களது அபிப்பிராயங்களை அனுசரித்து தமது படைப்புக் குறைபாடுகள் பல வற்றை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என்கின்றேன்.
கடந்த சில வருடங்களாக தமிழ் நாட்டிலிருந்து "கட்டி என்ற பெயரில் குறிப்பிடத்தக்க சிறுவர் சஞ்சிகை ஒன்று வெளிவந்துகொண்டிருக்கின்றது என்பதையும் அவ்வப்போது இச்சஞ்சிகையின் படைப்புக்கள் பற்றிய அபிப்பிராயங் களை அதன் ஆசிரியர் குழுவினர் சிறுவர்களிடமிருந்து அறிந்து கொள்கின்றார் கள் என்பதையும் அதற்கேற்ப சஞ்சிகையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியமானது.
இவ்வாறு சிறுவர் உலகம் மிக ஆழமான - மர்மமான கடலாக இருக்கின்றபோது இன்று புற்றிசல்கள் போல சிறுவர் இலக்கியம் படைக்க வேண்டும் என்று ஈழத்து எழுத்தாளர்கள் பலர் புறப்பட்டிருப்பது எமது கவனத்திற் குரிய விடயமாகின்றது; விசனத்திற்குரிய விடயமுமாகின்றது. ஏனெனில், அண்மைக்கால ஈழத்துச் சிறுவர் இலக்கிய முயற்சிகள் பற்றி, குறிப்பாக சிறுவர் பாடல்கள் முயற்சி பற்றிய விபரீதமான போக்கொள்றைப் பொருத்தம் கருதிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது அண்மையில் வெளியான சிறுவர் தொகுப்பொன்றில் இடம்பெற்றுள்ளது பின்வரும் பாடல். (யானை பற்றியதொரு பாடலின் இறுதிப்பகுதி):
"வாழ்வின் அதன் நம்பிக்கை வளர்ந்து இருக்கும் தும்பிக்கையில் நீர்குடிக்கும் காட்சிகள் குட்டிபோடும் சிரத்தைகள் எல்லாமே நன்றுதான் நம்பிக்கையும் வென்றுதான்" இது புதுக்கவிதைப் பாணியிலமைந்த "பாடல், உண்மைதான். புதுக் கவிதை எழுதிய பிரபல்யமான கவிஞர்கள் பலர் இவ்வாறு சிறுவர் பாடல்கள் எழுதுகின்றார்கள். அவர்கள் எழுதுவதில் தவறொன்றுமில்லை. ஆனால் புதுக்கவிதைப் பாணியிலான சிறுவர் பாடல்கள் எழுதுவதுதான் தவறாகும். ஏனெனில், சிறுவர்கள் விரும்பும் இன்னோசை, இனிய சந்தம் என்பவற்றிற்கு முற்றிலும் மாறானதாகவுள்ள புதுக்கவிதை வடிவத்தை அவர்கள் பயன் படுத்துவது சிறுவர் உளவியல் பற்றி அரிச்சுவடியே தெரியாத பளிதாபகரமான நிலையையல்லவா உணர்த்தி நிற்கின்றது
இறுதியாகக் கூறியதுபோன்று புதுக்கவிதைக்காரரது சிறுவர் இலக்கிய உலகப் பிரவேசத்தினால் ஏற்படுகின்ற விபரீதங்கள் ஒருப்புறமிருக்க, உயர்கல்வி நிறுவனமொன்றில் அதுவும் உளவியல் கல்வி போதிக்கின்ற விரிவுரையாளர் 24

ஒருவர் எழுதிவுள்ள சிறுவர் பாடல்களின் அவல நிலையை என்னவென்பது! (அந்நூலிற்கு ஆரம்ப கல்விப்பணிப்பாளர் பாராட்டுரை எழுதியிருப்பதை என்ன வென்பது) அந்நூலில் இடம்பெற்றுள்ள 'அம்மா’ என்ற தலைப்பில் அமைந்த பாடலின் ஒரு பகுதி இங்கு தரப்படுகின்றது:
"குழந்தையாய் எப்படிப் பிறந்தோமோ - நாம் எப்படி எழுந்து வளர்ந்தோமோ பாலுடன் உணவை ஊட்டினாளே - எம்மை உறுதுணையாய் காத்தாளே” மேற்சுட்டிய விடயத்தினூடாக இன்னொரு கசப்பான உண்மையும் பளிச்சிடுகின்றது. சிறுவர் உளவியல் நன்கு தெரிந்தாலும் கூட சிறுவர் பாடல் களை - சிறுவர் படைப்புக்களை - உருவாக்கிவிடமுடியாது என்பதுதான் அது
z- ༄ மெளனத்தின் அழுகையில்
6T6) 6ዕ፫ፈ፰ . :::” கிடுகு ஜே ஊர் முழுவதும் · · P· · சர். என்று சொரியும் நள்ளிரவின் நிசப்தத்தில். கறையானின் மணி தொடர்கிறது. இவை ஊர்நாய்களின் அவளுககு
ஊமைக் கச்சேரி ஆட்காட்டிக் குருவிகளாய்.
பீதி தோய்ந்து. தோய்ந்து. 德 மகனுக்காய் காற்றலைகளில் esse மண்சட்டியில் அவித்த மறுபடியும். மறுபடியும். s மரவள்ளிக் கிழங்கோடு ஊர்ப்புறத்தில் உறங்கும் -á வழமைபோல மயானம்போல b இந்த இரவிலும்.
Crs | ஊரே ச் ச் ச். உறங்கிக் கொண்டிருக்கிறது. | பல்லி மட்டும் சொல்லியது அந்தத் தெரு. 器 ‘இனி நேற்றுப் போல் இல்லை 할 படைக்கவேண்டியதுதான்”
கிளுவை மர இலைகள் உடைத்து உடைத்து நிலத்திற் போடும் w நிலா ஒளி. དུས་བཞི ། அதன் மேல் །--།། பிய்ந்து பிய்ந்து
முெல்ல அசையும்
மனித நிழல்

Page 14
1976 இல் கரவெட்டி கிழக்கில் பிறந்த சபாரத்தினம் இராகவன், யாழ்ப்பாணப் பல்கலைகழக முகாமைத்துவ பட்டதாரி யாவார்; தற்போது பகுதிநேர ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். சரிநிகர், சஞ்சீவி, தாயகம், ஆதவன், மித்திரன், தினகரன், ஆகிய பத்திரிகைகளில் சில நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். கவிதைத்துறையிலும், திரைப்படத்துறையிலும் இராகவனுக்கு ஆர்வமுண்டு. 1994-2001 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வீறு கொண்டெழுந்து, சிறுகதைப் படைப்புலகில் புகுந்த சிலரில், ச.இராகவன் குறிப்பிடத்தக்க படைப்பாளி.
இராகவனுடைய படைப்பிலக்கிய வெற்றிப்படிகளை அவரின் நிறைந்த வாசிப்பும், உயர் இரசனையுடையோரின் பரிச்சயமும் நன்கு செம்மைபடுத்தி அமைத்துக் கொடுத்துள்ளன. ஒரு படைப்பாளி, சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கடமைபட்டவன். இராகவனின் படைப்புகளில் இந்த அநீதிக்கெதிரான குரல் மிக அழுத்தமாகவே படிந்திருக்கும். ‘நெருக்கடிக்குள்ளாகும் ஒரு சமூகத்தின் குரலாக, உடைவுகளின் மையத்திலிருந்து உற்பவிக்கும் ஆத்மாவின் பீறிடலாக இவரது படைப்புகள் தம்மை இனங்காட்டு வதுண்டு என இவரது சக படைப்பாளிகள் இவரைபற்றிக் குறிப்பிடு வதில் உண்மையில்லாமலில்லை.
‘இலக்கியம் சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் தருவ தோடு, சமூக நெருக்கடிகளுக்கு விடிவும் காட்டுதல் வேண்டும் என இராகவன் கருதுகிறார். "அமைதியழிந்த இந்த மண்ணிலேயே வாழ்ந்து, அது தரும் சவால்களை எதிர்கொண்டு வாழ்பவனாலேயே சமூகப்பயன் நிறைந்த படைப்புகளைத் தருதல் சாத்தியம். இங்கு கசியும் நச்சப்புகைக்குள் நல்ல காற்றுக்காகத் தவமிருக்கும் படைப்பாளிகளின் உருவாக்குதல்கள் நிச்சயமாக ஏனைய படைப்பு களிலிருந்து வேறுபட்டிருக்கும். இம்மண்ணின் அவலங்களுள் ஒரு கணமேனும் வாழாதவர்களால் உயிர்த்துடிப் புடன் அவற்றைச் சொல்ல முடியாது என்கிறார்
26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச.இராகவன்
இராகவன், தனது எழுத்துலக ஆரம்ப நிலையில் பூரீநிதி என்ற புனைபெயருடன் எழுதியுள்ளார்; “சித்திரா" என்பது அவரது இன்னொரு புனைபெயர். யாழ்பாணப் பல்கலைக்கழக படைப்பாள மாணவர்கள் பன்னிருவரின் சிறுகதைகளைத் தொகுத்து, ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதைத்தொகுதியை மல்லிகை டொமினிக் ஜீவா வெளியிட்டார்; அத்தொகுதியில் ‘வானதி கணவன் என்ற இவரது சிறுகதை இடம்பிடித்துள்ளது. படைப்பாளிகள் பன்னிருவர் இணைந்து வெளியிட்ட ‘இங்கிருந்து என்ற சிறுகதைத்தொகுதியில் இராகவனின் “மாறிப் போன அடையாளம்' என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது. இச்சிறுகதை ஆதவன் சஞ்சிகையில் வெளிவந்தது; சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் பெற்றுப் பிரசுரமாகியது. தாயகம் சஞ்சிகையில் 'இறப்பு’ என்ற நல்லதொரு சிறுகதையைப் படைத்துள்ளார். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் மாணவரான இராகவன் அண்மையில் 'நிகரி விருது மூலம் கெளரவிக்கப் பட்டுள்ளார். இவரது சிறுகதைகளில் யதார்த்தப் பாண்மை மேவிய, பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். காலம் கடந்தும் நிலைக்கக்கூடிய சிறுகதைகள் இவரது எழுதுகோலிலிருந்து நிச்சயம் உதிக்கும் என்பது பலருடைய நம்பிக்கை.
27

Page 15
Nநேர்காணல்
பேராசிரியர் கா.சிவத்தம்பி
சந்திப்பு : தி.ஞானசேகரன்
* உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். ༄༽ * பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ்நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் أر .பணிபுரிந்தவர் ܢܠ
(2)
தி.ஞா. உங்களது வளர்ச்சியில் யார் யார் முக்கியமானவர்களாக நீங்கள் கருதுகிறீர்கள்? கா.சி. என்னுடைய ஆளுமை வளர்ச்சியில் நான் நான்கு அம்சங்களை பிரதானப்படுத்தவேண்டிவரும்.
1. நான் பிறந்துவளர்ந்த குடும்பச் சூழல். என்னுடைய பெற்றோர் உறவினர் சம்பந்தப்பட்ட நிலை.
2. என்னுடைய ஆசிரியர்கள்.
3. என்னுடைய நண்பர்கள்.
4. என்னுடைய கருத்துக்களை எதிர்ப்பவர்கள்.
என்னுடைய குடும்பத்தில், எனது தாயார் ஒரு கிராமத்துப் பெண் - கரவெட்டியைச் சேர்ந்தவர். அவர் நெஞ்சாலேதான் பேசுவார். தலையால் பேசுவது குறைவு. OutSpokeness - எதையும் மனதைத் திறந்து பார்க்கின்ற 28
 

தன்மை - எதையும் தாராளமாகப் பார்க்கவேண்டும் என்கின்ற தன்மை - எம்மிடம் இல்லையென்றாலும் அவரிடம் கொடுத்தால் நல்லாயிருக்கும் என்று ஆதங்கப்படுகின்ற தன்மை - இவையெல்லாம் எனக்கு அம்மாவிடமிருந்து வந்தது. நிச்சயமாக அம்மாவின் குணங்கள் நிறைய என்னிடம் இருக்கிறது - எதற்கும் அந்தரப்படுவது - Tension ஆகிறது - சத்தம் போடுகிறது - பிறகு சந்தோஷப்படுகிறது இவையெல்லாம் அம்மாவிடமிருந்துதான் எனக்கு வந்ததென்று நினைக்கிறேன். இப்போது எனக்கு வயது 71 ஆகிறது. அம்மா என்று சொல்லும்போது குழந்தைமாதிரி நான் உருகிவிடுகிறேன்.
என்னுடைய தகப்பனார் ஒரு பண்டிதர். சைவப்புலவர். ஒருமுறை அவர் வித்துவான் சோதனை எடுப்பதற்கு பண்டாரகமையிலிருந்து புறப்பட்டு வந்தார். அந்த வித்துவான் சோதனை இந்தியாவில் இருந்து நடத்தப்படுவது. விவேகானந்தா கல்லூரியில் நடக்கவிருந்தது. அந்த வேளை நான் பாணந்துறை வைத்தியசாலையில் சுகமில்லாமல் படுத்திருந்தேன். அன்றிரவு எனது நிலை சிறிது மோசமாகியிருந்தது. எனது தகப்பனார் என்னைப் பார்த்துவிட்டு, சோதனை எடுப்பதற்குச் செல்லவில்லை. அதற்கென்று புறப்பட்டுவந்தவர் சோதனை எடுக்கவில்லை. கார்த்திகேசு சிவத்தம்பி என்று நான் தொடர்ந்து எழுதுவதற்கு இவைகளெல்லாம் வேர். அவர் அந்தமாதிரியான ஒரு மனிதர். வெளியில் எதனையும் காட்டிக்கொள்ளமாட்டார். சோமசுந்தரப்புலவரிடமும் கணேசையரிடமும் நவனித கிருஷ்ண பாரதியாரிடமும் படித்தவர். தானாகவே படித்து மேல்நிலைக்கு வந்தவர். பண்டிதர் பரீட்சை எழுதியவர். அவருக்கு இலக்கணத்தில் தாடனம் அதிகம். செய்யுள் இயற்றுவதில் விசேஷமான திறமை உள்ளவர்; பல பரிசில்கள் பெற்றவர். தமிழாசிரியராக - தலைமை ஆசிரியராக இருந்தவர். அவரிடமிருந்துதான் எனக்குத் தமிழைப்பற்றிய ஆர்வம் ஏற்பட்டது என நினைக்கிறேன். பக்தி இலக்கியம் பற்றி ஈடுபாடுகூட அவருக்குள்ளால் தான் எனக்கு வந்ததென்று நான் நம்புகிறேன். தகப்பனாருடைய இலக்கிய ஆர்வம் அல்லது எதையும் படிக்கவேண்டும் என்ற முனைப்பு எனக்கு வந்திருக்கிறது.
என்னுடைய தகப்பனாரின் தகப்பனார் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். ஆனால் எனது தகப்பனாருடைய சிறிய தகப்பனார் சிதம்பரப்பிள்ளை பக்கத்திலேயே இருந்தவர். கிராமியக் கலைகள் பற்றிய ஈடுபாடு அவருக்கு அதிகம் இருந்தது. எங்களது கோயிலில் சூரன் ஆட்டுவது அவர்தான். அவர் பணத்துக்காக எதனையும் செய்வதில்லை. அதனால் அவருக்கு எங்கள் கிராமத்தில் மரியாதையும் இருந்தது. காவடிக்கு முள்ளுக்குத்துவதில் அவர் கைதேர்ந்தவர். அதனைத் தொழிலாலக் கொண்டவர்களே அவரிடம் வந்து அதுபற்றிக் கதைப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஊர்க்காரியங்களுக்கு முன்னுக்கு நிற்பது போன்ற விஷயங்களில் அவருடைய செல்வாக்கு அதிகம் இருந்தது. அது காலப்போக்கில் என்னிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிதம்பரப்பிள்ளை என்பவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டது அதிகம். அதையும் மறுக்க இயலாது. - இது என்னுடைய குடும்பப்பின்னணி. தி.ஞா. : உங்களது ஆளுமையை வளர்த்த ஆசிரியர்களைப் பற்றிக் கூறுங்கள். கா.சி.; சின்ன வயதில் கரவெட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். நான் பள்ளிக்கூடத்திற்குப் போகுமுன்னர் எனக்கு பாடம்சொல்லித் தந்தவர் ஷம்ஸ"டீன் என்ற முஸ்லிம் ஆசிரியர்.
29

Page 16
என்னுடைய ஆளுமையை வளர்த்த ஆசிரியர்கள் - என்னிடம் ஏதோ வொன்று இருக்கிறது என்பதை உணர்ந்து, தட்டிவளர்த்தால் இவனிடமிருந்து ஏதாவது வரும் என்று முதலில் நினைத்து என்னை வளர்த்தவர் விக்னேஸ்வரா கல்லூரி அதிபராக இருந்த கே.சிவப்பிரகாசம். அந்தக்காலத்தில் நாங்கள் பல பிரச்சினைகள், மோதுதல்கள், விளையாட்டுத்தனங்கள், குதியன்குத்துதல். இதன்காரணமாக அதிபர் எங்களைத் தனி வகுப்பில் வைத்திருந்தார். சிவப்பிர காசம் சேர் வகுப்புக்கு வந்தவுடன் சொன்னார், “இந்தப் பள்ளிக்கூடத்தில் இதுதான் மோசமான வகுப்பு" என்று. பின்னர் ‘ஈடாளி உலகத்து என்ற பாரதக் காப்பு செய்யுளை எழுதிவிட்டு, "நான் உங்களிடம் கொஞ்சம் தமிழ் படிக்கலாம் என்று உத்தேசம்" என்று சொன்னார். உங்களுக்குத் தமிழ் படிப்பிக்கப்போகிறேன் என்று அவர் கூறவில்லை. எனக்கு இன்றைக்கும், "நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேளுங்கள்" என்று சொல்வதற்கு நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருக்கும். "உங்களோடு சேர்ந்து நான் படிக்கிறேன்” என்று சொல்லுவேனே தவிர நான் உங்களுக்குப் படிப்பிக்கிறேன் என்று சொல்ல நா தடக்கும். இதற்குக் காரணம் சிவப்பிரகாசம் சேர் அன்று சொன்னது. அவர்தான் என்னிடம் ஆங்கில ஆர்வத்தை வளர்த்து நிறைய வாசிக்கச் செய்து, ஆங்கிலக் கவிதைகளில் இரசனை ஏற்படுத்தி, ஆங்கிலத்தில் எழுதவைத்தவர். அதேநேரத்தில் தமிழிலும் ஆர்வத்தை ஊட்டியவர்.
இதற்கு அனுசரணையாக வேறும் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். வாசுதேவன் பிள்ளை என்ற ஒரு சரித்திர ஆசிரியர் இருந்தார். அவர் இந்தியாவுக்குப் போகும் போது ஒரு கறுப்புநிறக் கொப்பியைத் தந்துவிட்டுப்போனார். அது அவருடைய குறிப்புகள் அடங்கிய கொப்பி. “சிவத்தம்பி, இதை நீ பார். என்றோ ஒருநாள் நீ இதனைப் பயன்படுத்துவாய். இதனை வைத்துக்கொள்” என்று சொல்லித்தந்தார். அந்தக் கொப்பி நீண்ட காலமாக என்னிடம் இருந்தது. வீடுகள் மாறும் போதுதான் அது தொலைந்தது. நான் எஸ்.எஸ்.சி. படித்தபின் ஸஹிராக் கல்லூரிக்கு வந்தேன். அங்கு வந்தபின்பு எல்லா ஆசிரியர்களுமே முக்கியமானவர்களாக இருந்தனர். கமால்தீன் என்பவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். தன்னை ஓர் ஆசிரியராக அவர் கருதவில்லை. எம்மை நண்பராகவே கருதினார். சண்முகரத் தினம் என்ற ஆசிரியரோடும் நல்ல உறவு. இருந்தது. அஸிஸ் உடைய ஆளுமை மிக முக்கியமானது. அவர் நல்ல ஆசிரியர் அல்ல. ஆனால் நல்ல மனிதர். எங்களைத் தட்டிக்கொடுத்து வளர்த்துவிட்டவர்.
ஸஹிராவுக்கு வந்ததன் பின் எனக்கு வானொலித்தொடர்பு, பொதுத் தொடர்பு எல்லாம் இருந்தது. அதற்கெல்லாம் வழிகொடுக்கிறமாதிரி கொஞ்சம் அகலப்பண்ணின தன்மை, ஸஹிரா ஆசிரியர்களுக்கு உண்டு. அந்தக் காலத்தில் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் எச்.எம்.பி.முஹைதீன், சிவகுரு நாதன் ஆகியோர். அவர்களுடன் நான் கூடப்படித்தேன். சிவராஜா, குகப்பெருமான், ஷிப்லி காஸிம், சமீம் எல்லோரும் ஒன்றாகப் படித்தோம்.
பல்கலைக்கழகத்திற்குப் போனபின் கைலாசபதியின் நட்புக் கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் எப்படியோ வித்தியானந்தனுடைய பார்ன்வக்குள் வந்தேன். அது நாடகம் நடிப்பதனாலேதான் வந்தது. ஏற்கனவே வானொலி நாடகங்களில் நடித்திருந்தேன். அதனால் நாடகம் நடிப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. 'உடையார் மிடுக்கு நாடகம்தான் முதலில் நடந்தது. கண்டி திரித்துவக் 3O

கல்லூரியில் அது அரங்கேற்றப்பட்டது. அத்தோடு பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் கண்ணுக்குள் நான் அகப்பட்டேன். வித்தியானந்தனால் என்னுடைய ஆளுமை விருத்திபெற்றது. தகப்பனாக, வழிகாட்டியாக - Guide philosopher and friend என்று சொல்லலாம். சமஸ்கிருதத்தில் 'கடாட்சம் என்று சொல்வார்கள் - கடைக்கண் பார்வை. அந்தக் குருகடாட்சம் எனக்குக் கிடைத்தது. வித்தியானந்தன் எனக்கு மிக முக்கியமானவர். எனது ஆளுமையின் விருத்தியில் பங்கேற்றவர். எனது கல்யாணத்தைக் கூட பேராசிரியரையும் வித்தியானந்தனையும் வைத்துத்தான் செய்தேன். பெண்பார்த்து சரியென்று சொன்னவுடன், நான் வித்தியானந்தனிடம்தான் முதலில் சொன்னேன். பேராசிரியர்தான் வந்து கொடியைத் தூக்கித் தரவேண்டும் - நீங்கள்தான் தரவேண்டும் என்று கேட்டேன். அந்தளவுக்கு எங்களை வளர்த்துவிட்டார்கள். வித்தியானந்தன் இல்லையென்றால் நான் இந்தளவிற்கு வந்திருக்கவும் முடியாது. பேராசிரியர் செல்வநாயகம் அவர்களுடைய அறிவுப்புலமையை நான் நேசித்தவன்; இரசித்தவன். அவர் சில சமயம் எங்களுக்கு எதிராகவும் பேசுவார். எங்களை "நக்கல் செய்வார். நான் பல்கலைக்கழகத்தில் சித்தியடைந்தபின் என்னுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டார். தன்னுடைய புத்தகங்களை எனக்கு அனுப்பும் அளவிற்கு என்னை ஒரு மனிதனாகக் கணித்துக்கொண்டார். அதை நினைக்கும்பொழுது இன்றைக்கும் புல்லரிக்கிறது. ஒரு முறை அவரது விரிவுரை - இலக்கிய விமர்சனம் நடந்தது. நானும் கைலாசபதியும் அதற்குப் போகவில்லை. அவர் எங்களோடு கொழுவல். நாங்கள் வித்தியரோடு போய்விட்டோம். இதைப்பற்றி அவர் பேராசிரியரிடம் கூறியிருந்தார். “சிவத் தம்பியும் கைலாசபதியும் இனிமேல் என்னுடைய வகுப்புக்கு வரவேண்டாம்” என்று சொல்லியிருந்தார். நாங்கள் பேராசிரியரைச் சந்தித்தபோது, “டேய், அவர் கோபத்திலை இருக்கிறார்; அவரோடை போய்க் கதையுங்கோ” என்று சொன்னார். நாங்கள் போனோம். அவரோடு கதைப்பதற்குப் பயம். தட்டுத் தடுமாறிச் சொன்னோம். “சேர் வகுப்புக்கு வரவில்லை, மன்னிச்சுக் கொள்ளுங்கோ" என்றோம். அவர் ஏசிப்போட்டுக் கடைசியில் சொன்னார், "வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் என்று நான் கணித்திருக்கும் சிலபேர் வகுப்புக்கு வரவில்லை என்றால் கோபம்தானே வரும்". எங்களுக்குப் பால் வார்த்த மாதிரி இருந்தது. பயபக்தியாக வெளியில் வந்து, உண்மையில் நாங்கள் ஒருவருக்கு மேலால் ஒருவர் பாய்ந்தோம். அவ்வளவு சந்தோஷம். இதைக்கூறியபோது வித்தியர் ஏங்கிப்போனார். அவரும் எங்களுக்கு முக்கிய மானவர். தாரமும் குருவும் தலைவிதி என்பார்கள்.
ஆசிரியர்களில் பேராசிரியர் ஹேமச்சந்திர ராய் என்பவருடைய செல்வாக்கும் மிக முக்கியமானது. நான் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய வரலாறுதான் செய்தேன். அங்கு ஹேமச்சந்திர ராய் படிப்பித்த முறைமைகள் முற்றிலும் புதுமையானது. அவர் ஒரு கடல்; சமுத்திரம். அவர் குறிப்புகள் தருவதில்லை. அவரிடம் படித்தது இன்றும் எனக்கு உதவியாக இருக்கிறது. தமிழ்நாட்டு வரலாறு பற்றி நான் செய்ததற்குக் காரணம் நான் அவரிடம் படித்த சரித்திரம்தான். அவருடைய வகுப்புக்கு கைலாஸ"ம் வருவார். நாங்கள் அவரிடம் நிறையப் பெற்றுக் கொண்டோம். அதனாலேதான், நாங்கள் எழுதுகின்ற இலக்கிய வரலாற்றுக்கும் மற்றவர்கள் எழுதுவதற்கும் ரெம்ப வித்தியாசங்கள் இருக்கிறது. தமிழை நாங்கள் வெறுமனே தமிழ்நாட்டிலல்லாது 3.

Page 17
இந்தியச் சரித்திரத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிற ஒரு பார்வை எமக்கு வந்தது. தமிழ்நாட்டு வரலாற்றை தமிழ் நாட்டிற்குள் நின்று பார்ப்பதற்கும், தமிழ்நாட்டின் வரலாற்றை தென்னிந்தியாவிற்குள் நின்றுபார்ப்பதற்கும், தமிழ்நாட்டு வரலாற்றை அகில இந்தியாவில் நின்று பார்ப்பதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் தென்னிந்திய வரலாற்றை அனைத்திந்தியப் பின்னணியில் படித்தவர்கள்; பார்த்தவர்கள். அது ராய் மூலமாக வந்தது.
போராசிரியர் தொம்சன் எனக்கு முக்கியமானவர். தொம்ஸன் இப்படிச் செய், அப்படிச்செய் என்று ஒருபோதும் சொல்லமாட்டார். அப்படிச் சொல்வது தவறு என்று கருதுபவர் அவர். நான் அவருடன் வேலை செய்வதற்குத் தொடங்கி நான்கைந்து மாதங்களின் பின்னர், நான் படித்த புத்தகங்களின் தரவுகளை, சமூக வாழ்க்கையைப் பற்றிக் கவனிக்காமல் நாடகத்தைப் பற்றி - நாடகத்தில் என்ன இருக்கிறது? நாடகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் யார்? சம்பந்தப்படுபவர்கள் யார்? போன்றவற்றையெல்லாம் தொகுத்துக்கொண்டு சென்றேன். பின்புபார்த்தால் ஆறு மாதங்களுக்குப் பின், நான் படித்த புத்தகங் களைத் திரும்பவும் Index பண்ண வேண்டி ஏற்பட்டது. படிப்பிப்பதில் ஒரு நுட்பம் இருக்கிறது. தசஷ்ணா மூர்த்தி என்கின்ற தத்துவம் இருக்கிறதல்லவா - தசஷ்ணா மூர்த்தம் வாய் திறந்து சொல்வதில்லை. கையாலேதான் காட்டுவார். 'சிவத்தம்பி, இதைப்படி என்று சொல்வதில்லை. நாங்கள் வெள்ளிக்கிழமைகளில் 11 மணிக்கும் 12 மணிக்குமிடையில்தான் சந்திப்போம். அவர் தேநீர் அருந்திவிட்டு வருவார். நான் அந்தந்தக் கிழமைகளில் செய்த வேலைகளை அவருக்குச் சொல்லவேண்டும். எனக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றன என்று சொல்லவேண்டும். எந்தெந்தப் பகுதிகளைப் படித்தேன். அதில் இப்படியொரு பிரச்சினை இருக்கிறது, இது இப்படியிருக்கலாமா என்றெல்லாம் கேட்பேன். அவர் கேட்டுக்கொண்டே இருப்பார். ஒன்றுமே பேசமாட்டார். ஒரு நாள் நான் எனது பல சந்தேகங்களைக் கூறி அதனை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று சொன்னேன். பேசாமல் இருந்தார். அவருடைய முகத்தில் ஈயாடவில்லை. எழும்பி "கோட்டைப்போட்டுக்கொண்டு போய்விட்டார். அதைப் பார்த்தபோது எனக்குப் பயம் வந்துவிட்டது. நான் நினைத்தேன், இன்றுடன் PhDயும் சரி எல்லாஞ்சரி என்று. பயந்து அந்தரப்பட்டுப்போனேன். அவருடைய மருமகனை எனக்குத் தெரியும். அவர் ஒரு கிரேக்க இனத்தைச் சேர்ந்தவர். தொம்சனின் மகளைத் திருமணஞ் செய்தவர். நான் மிகவும் கவலையோடு இருக்கும்பொழுது அவர் வந்தார். அவரிடம் நான் விஷயத்தைச் சொன்னேன். அப்பொழுது அவர், "இந்த வெள்ளைக்காரர்கள் எல்லோரும் இப்படித்தான்” என்று கூறி என்னைத் தேற்றிவிட்டு தனது மாமனாரிடம் சென்று, நான் கவலை அடைந்திருப்பதைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதற்கு தொம்சன், "அந்தப் பிரச்சினை சிவத்தம்பியால் தீர்க்கப்படவேண்டியது. தமிழ் மூலத்துடன் சம்பந்தப்பட்டது. தமிழ் மூலம் தெரியாமல் நான் வழிகாட்ட முடியாது” என்று கூறினாராம். அந்தத் தெளிவு வருவது பெரிய விஷயம்.
ஒரு ஆசிரியன் அப்படித்தான் இருப்பான். அவர் வாய்திறந்து சொல்வது மிகவும் குறைவு. நாங்கள் சொல்வதற்கு எதற்குத் தலையசைக்கிறார், எப்படித் தலையசைக்கிறார் என்பதைக் கொண்டுதான் எங்களுக்கு என்னவென்று தெரிய வரும். ஆசிரியரின் பணி, செவியில் பிடித்து நாலு அடி அடித்துத் திருத்துவதல்ல.

பேராசிரியர் செல்வநாயகம் ஒருபோதும் எங்களது விடைத்தாள்களைத் திருத்தியது கிடையாது. திருத்துவதெல்லாம் வித்தியானந்தன்தான். பேராசிரியர் கணபதிப்பிள்ளை யாராவது வாசிப்பதைக் கேட்டுவிட்டுத்தான் புள்ளிகள் இடுவார். இப்படியாக ஆசிரியர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஒரு வகையானது.
ஒரு நல்ல ஆசிரியன் கற்பிக்கும்போதுதான் படிப்பான். மாணவர் களுக்குப் படிப்பிப்பதற்காகப் படிப்பான். மாணவர்களிடம் இருக்கிறது ஒரு குணம் என்ன தெரியுமா - நாங்கள் எந்தப் பகுதி சுலபமானது என்று நினைத்து ஆழமாகப் பார்க்காமல் போனால், யாராவது ஒரு மாணவன் அதிலேதான் ஒரு கேள்வி கேட்பான். தெரியாததைத் தெரியாது என்று சொல்லவேண்டும். பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். அல்லது பின்னேரம் வீட்டுக்கு வா, இரண்டு பேருமாய்ப் பார்ப்போம் என்று சொல்ல வேண்டும். எனது ஆளுமை விருத்தியில் மாணவர்களுடைய பங்கு முக்கிய மானது. எங்களுடைய மாணவர்களும் எங்களை வளர்த்தார்கள். மாணவர் களால், தான் வளரவில்லை என்று சொல்கிறவன் ஆசிரியனே அல்ல; கேட்கிற கேள்விகள் அப்படியானவை. ஸஹிரவிலே என்னுடைய மாணவர்களாக இருந்தவர்களால் அந்த அநுபவம் கிடைத்தது. ஜமீல், அமீர்அலி ஆகிய இருவரும் இப்படியானவர்கள். இன்று பெரியவர்களாகி விட்டார்கள். வித்தியோத யாவில் சிங்களவர்களுடன் படிப்பித்தேன். "தென்னிந்தியாவில் பெளத்தம் என்ற தலைப்பில் படிப்பிக்கவேண்டியிருந்தது. அத்தோடு அவர்களுக்குத் தமிழ் படிப்பிக்கவேண்டியும் இருந்தது. அங்கு பெளத்த ஆகமம் விசேட பிரிவுக்கு இரண்டு வருடம் படிப்பித்தேன். சிவஞான சித்தியார் பரபக்கத்தில் உள்ள பகுதிகளை விளங்கப்படுத்த வேண்டியிருந்தது. நான் சைவசித்தாந்தம் படித் திருக்கவில்லை. பெளத்தத்தில் நான்கு வகையுண்டு. அதில் செளத்தாந்திரியம் பற்றி எங்களுக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பதை அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்படி என்னைக் கேட்டிருந்தனர். அது எனக்குச் சவாலாக இருந்தது. மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நான் படிக்கவேண்டி யிருந்தது. தி.ஞா.: உங்களை எதிர்த்தவர்களும் உங்களை வளர்த்ததாகக் கூறினீர்களே. கா.சி. இதை நான் ஒரு வரட்டுத்தனமாகக் கூறவில்லை. அவர்களால் நான் சில விடயங்களைக் கூடுதலாகப் படிக்கவேண்டியிருந்தது. அவர்கள் என்னைப் பற்றி ஒன்றைக் கூறும்போது அதைப்பற்றி நான் கூட ஆராயவேண்டியிருந்தது. நான் யாருடன் வாதாடுகிறேனோ அவர்களும் என்னை வளர்த்தார்கள். மற்றவர்களுடன் எதிர்த்து சம்வாதம் செய்கிறபோது, அவர்களும் விஷயம் தெரிந்தவர்கள்தான். பண்டிதர் இளமுருகன், பண்டிதர் நடராஜா இவர்கள் எல்லோரும் சில்லறை ஆட்கள் அல்ல. இளமுருகன் எனது தந்தையாரின் ஆசிரியர் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன். எனது தந்தையாரின் வகுப்புச் சகபாடி. இளமுருகன் எனது ஐயாவுக்கு ஒருமுறை எழுதினார். "முற்போக்குக்காரர்களுக்கு எதிராக நாங்கள் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் ஒரு கூட்டம் கூடுகிறோம், அதற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். பண்டிதர்களை அழைத்திருந்தார். அழைப்பிதழில் இன்னார் இன்னார் பேசுகிறார்கள் என்று போடப்பட்டிருந்தது. எனது பெயரும் அதில் இருந்தது. ஐயா கூட்டத்துக்குப் 33

Page 18
१
போகவில்லை. நீங்கள் அழைப்பிதழில் குறிப்பிட்ட ஒருவர் எனது மகன் என்று ஐயா இளமுருகனாருக்குப் பதில் அனுப்பியிருந்தாராம். 豫
ஒரு முறை, "அசையாத குட்டை நீரல்ல மரபு என்று நான் எழுதினேன். இளமுருகனார் சொன்னார், 'அசையாத குட்டை நீரன்று மரபு என்றிருக்க வேண்டும். "அல்ல' என்று இருக்கக்கூடாது. ஒருமைக்கு 'அன்றுதான் வரும். பன்மைக்குத்தான் அல்ல வரும். அதை நான் இன்றுவரைக்கும் மறக்கவில்லை. அவர்களிடம் படித்ததை மறக்க முடியாது. இலக்கணப் பிழை பிழைதானே! நான் அதற்காக இலக்கணம் படித்தேன்.
அவர்களுக்கு வந்த பிரச்சினை என்னவென்றால், அவர்கள் தொல்காப்பி யத்தை, நன்னூலை தங்களுடையது என்று நினைத்துக்கொண்டிருக்க, நாங்களும் தொல்காப்பியத்தை, நன்னூலை எடுத்துக்காட்டிக் கையாளும்பொழுது சிக்கல் ஏற்பட்டது. ஆங்கில மரபில் நாங்கள் எழுதவேண்டிய தேவைகள் ஏற்பட்டன. மற்றவர்களுடன் எதிர்த்து வாதாட வேண்டிய தேவையும் இருந்தது. தெளிவு இல்லாமல் வாதாட முடியாது. ஆகையால் எங்களுடைய எதிரிகளும் எங்களை வளர்த்தார்கள். நான் இதனைக் கிண்டலாகச் சொல்லவில்லை. தி.ஞா. உங்களுடைய ஆளும்ை வளர்ச்சியில் நண்பர்களது பங்கு எத்தகையதாக இருந்தது? கா.சி. நண்பர்களில் என்னுடைய ஆளுமை வளர்ச்சிக்குரிய நண்பர்கள் என்று சிலரைச் சொல்லவேண்டும். ஆளுமை இரண்டு வகையானது. சமூக ஆளுமை, மற்றது அறிவுப்புலமை.
விஸ்வலிங்கம் என்றொரு நண்பன் இருந்தான். அவன் கெட்டிக்காரன்; நல்லவன். அவனாலேதான் எனக்கு வெளியுலகம் தெரியவந்தது.
கைலாசபதியினுடைய செல்வாக்கு எனக்கு ரெம்பப் பெரியது. கைலாஸ் இல்லாதிருந்திருந்தால் நான் ஒருவேளை முழுமையாக நாடகத்திலேயே நின்றிருப்பேன். கைலாஸினாலேதான் நான் இலக்கியத்திற்கு வந்தேன். அதனை நான் ஒத்துக்கொள்ளவேண்டும். கைலாஸின் நட்பு அதற்குக் காரணமாக இருந்தது. 52ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 72, 73வரை கைலாசபதியுடன் எனக்குப் பலமான உறவு இருந்தது. குறிப்பாக 52 இலிருந்து 67வரையும் மிகநெருங்கிப் பழகினோம். அதன்பின்புதான் ‘அப்படி இப்படியாய் போனது - Chineses wing (651T6őT.
எனக்குப் பல்கலைக்கழகத்தில் படிக்கிற காலத்தில் நல்லைநாதன் என்று எனது அறை நண்பன் இருந்தான். நான் உத்தியோகம் பார்க்கத் தொடங்கியபின் கதிர்காமநாதன் என்ற நண்பர் கிடைத்தார். கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் வளர்ச்சியில் கதிர்காமநாதனுடைய பங்கு மிகப் பெரியது. அவர் இப்போது அவுஸ்திரெலியாவில் இருக்கிறார். அவர் இல்லை என்றால் நான் பல விடயங்களைக் கைவிட்டிருப்பேன். நான் ஏதாவது கூட்டங்களுக்குப் போகாமல் விட்டால், அவர் ஏசுவார். ஒருவருக்கு ஒன்று செய்வதாகக் கூறிவிட்டுச் செய்யாமல் விட்டால் அவர் ஏசுவார். . He had a great influence on us. m
Qasri (Lpublisg, 6 gigs.jpg, Social scientist associasion 36) g(bsiss குமாரி ஜயவர்த்தனா, சாள்ஸ் அபயசேகர, நியூட்டன் குணசிங்க ஆகிய இந்த மூன்றுபேரும் என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். மார்க்சியத்தை நான் அவர்களோடு சேர்ந்து தெளிவுபடுத்திக் கொண்டேன். 34

என்னுடைய மனைவி பல்கலைக்கழகத்தில் படித்தவர் அல்ல. அவர் ஒரு வர்த்தகப் பின்னணியைச் சேர்ந்தவர். திருமணம் நடக்கும்போது அவரது தந்தையார் காலமாகிவிட்டார். பிற்காலத்தில் அவவே எனது வீட்டை நிர்வகித் தார். அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லாது நான் வேலை செய்யக் கூடியதாக இருந்தது. என்னோடு நன்றாகக் கதைக்கின்ற - ஆனால் என்னை விரும்பாத நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார், “எப்படி இவ்வளவு காலத்தில் இவ்வளவையும் எழுதினாய்?" என்று. உண்மையில் வீட்டுச்சூழல்தான் அதற்குக் காரணம். அதற்காக எனது மனைவிக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். Thank God பிள்ளைகளும் அந்தச் சூழலுக்குள் வளர்ந்தபடியால் ரெம்பப் புரிந்துணர்வு உள்ளவர்கள். நான் ஒரு வகையில் அதிஷ்டசாலி என்றுதான் கூறவேண்டும்.
நான் மனந்திறந்து ஒன்று சொல்கிறேன். நான் செய்தது General Degree தான். சரித்திரம், பொருளாதாரம், தமிழ் படித்தேன். அதில் எனக்குக் கிடைத்தது. 3"class தான். நண்பர்களும், உறவுகளும், ஆர்வங்களும் உந்துதல் களும் இருந்ததால்தான் நான் ஒரு சிரேஷ்ட பேராசிரியராக இளைப்பாறினேன். இது எனது தாய் தகப்பன் செய்த புண்ணியம், நண்பர்களுடைய நல்வாக்கு. எனக்குத் தெய்வ நம்பிக்கை உண்டு. இல்லாமல் இல்லை. ஏன் என்றால் நான் பண்டிதருடைய, சைவப்புலவருடைய மகன். அந்தப் பின்னணியில் இருந்து வந்தவன். சந்நதி கோயிலையும் தச்சந்தோப்புக்கோயிலையும் நான் மறந்து விட்டேன் என்று சொல்லமுடியாது. 'தன்னெஞ்சு அறிவது பொய்யற்க - இருக்கு. எல்லாருக்கும் இருக்கு. இதுகளால் நான் அதிஷ்டசாலி என்பேன்.
அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் என்னைக் கேட்டார்கள், உங்களுடைய குறிக்கோள் என்ன என்று. நான் சொன்னேன் “உழைப்பு ஊதியத்தைத்தரும் - I worked, worked and worked" BIT6 Ulysissip assroojsis) Qafutusir guó) படிக்கவில்லை. எனக்கு யாப்பு இலக்கணம் அதிகம் தெரியாது. நான் பதிப்பித்த புத்தகம் ஒன்றை என்னுடைய நண்பன் சொக்கன் விமர்சனம் செய்தபோது, "யாப்பு பிழையாக இருக்கிறது. சிவத்தம்பிக்கு யாப்புத்தெரியாது" என்றார். நான் தொழிலிருந்து ஓய்வு பெற்ற பின், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். கடைசி ஒன்றரை வருடம் அங்கு மாணவர்களுக்கு தொல்காப்பியம் - செய்யுள் இயல் கற்பிக்கவேண்டியிருந்தது. நான் உண்மையைச் சொல்கிறேன். செய்யுள் இயல் நான் படித்தது அங்கேதான்! அதைவைத்துக்கொண்டு தொல்காப் பியர் கவிதைக்கோட்பாடு பற்றி ஒரு கட்டுரை எழுதினேன்; ஒரு விரிவுரை செய்தேன். தொல்காப்பியத்தைப் பற்றி சில சில கருத்துக்கள் வைத்திருக்கிறேன். அவையெல்லாவற்றையும் இந்தியாவிலுள்ள நான் மதிக்கிற பேராசிரியர்கள் மேற்கோள் காட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். அசை, சீர், அடி என்பவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கவேண்டும் என்பதுபற்றி எனக்கு வித்தியாச மான கருத்து உண்டு.
மற்றது தொல்காப்பியர் பற்றி அடிப்படையான விஷயங்கள் பற்றி கேள்வியெழுப்பியிருக்கிறேன். தொல்காப்பியருடைய மாணவர்கள் யார்? தொல் 'காப்பியர் யாருக்காக எழுதினார் - இந்தப் பிரச்சினைகள் தீராதா? இவை நானாகக் கண்டு பிடித்தவை அல்ல. ஆங்கில விமர்சனம் படிக்கும்போது இது வந்தது. வாசிப்பவன்தான் கருத்துக்களை உண்டாக்குகிறான். தொல் காப்பியம் தமிழின் பழமையைச் சொல்வதற்காக எழுந்த நூல் என்கிறார்கள். 35

Page 19
ஆனால் அப்படியல்ல. தொல்காப்பியம் பழமையைச் சொல்லவில்லை; விபரிக்கிறது. தொல்காப்பியர் யாருக்கு விபரித்தார். தொல்காப்பியரின் மாணவர்கள் யார். இந்தக் கேள்வியைக் கேட்கும்போது அதனது காலம் காண்பது சுலபம். அதனை விளங்கிக்கொள்வது சுலபம். நான் பொருளதிகாரம் தான் படிப்பித்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அகற்றிணையியல், பொருட்திணையியல் என்பனவற்றையெல்லாம் மாணவர்களுக்குப் படிப்பித்தேன். செய்யுளியல் நான் படிப்பிக்கவில்லை. எங்களுக்கெதிராக, பண்டிதர் போராட்டத்தில் நின்ற ஒருவரின் மகள் என்னிடம் தொல்காப்பியம் படித்தாள். அவர் என்னிடம் ஒருநாள் சொன்னார், "ஆராய்ச்சிக் கட்டுரை விஷயமாக மகள் தொல்காப்பியம் வேணுமென்கிறாள். இந்த உரைகள் எல்லாம் எப்படி அவளுக்கு விளங்கும்?” என்று என்னிடம் கூறினார். இப்படியானவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
படிப்பு என்பதை நான் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றுதான் பார்க்கிறேன். மார்க்சியத்தையும் அப்படித்தான் பார்க்கிறேன். மார்க்சியத்தை ஒரு கரைபோட்ட வேட்டியாக - அந்தக்கரைக்குமேல் வேட்டியில்லை என்று சொல்லுமாற்போல் நான் பார்க்கத் தயாராக இல்லை. மார்க்சியத்திற்கு ஒரு எதிர்காலம் இல்லையா? சீனப் புரட்சி, சோவியத் புரட்சி என்பன முடிந்தபின் ஓர் எதிர்காலம் இல்லையா? - இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் மனித அசமத்துவங்களை, அந்த அசமத்துவத்தினால் ஏற்படும் சுரண்டல் முறைகளை மார்க்சியத்தைத் தவிர தெளிவாகந் சொன்ன தத்துவம் இதுவரையில் இல்லை. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நாட்டிலிருந்த மார்க்சியம் மாதிரித்தான் எல்லா நாட்டிலும் அது செயற்படும் என்று அர்த்தமல்ல.
ஒரு சுவாரசியமான விடயம். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் தமிழும் சிங்களமும் வேண்டும் என்று சொன்னது. அதன்பிறகு எல்லாம்மாறி சிங்களம் மட்டுமென்று வந்தது. இந்த வருடத்தில் கட்சியின் மொழிக்கொள்கையாக, பி.கந்தையா 56ஆம் ஆண்டு பேசிய பேச்சை பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது சிங்களத்திற்கும் தமிழிற்கும் சம அந்தஸ்து வேண்டும் என்று சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்தக் கட்சியில் இருக்கிறவனை, நான் மார்க்சியவாதி என்ற பெயரோடு கத்துகின்றவனை எப்படிக்கருதுவது? அந்த நேரத்தில் யேசு GFIT661601355T6f 6T60tdiscs (65mu35lb 6.j(bib. - Oh Lord forgive them for they do not know what they do - g605L6G3y g6 fis006T LD616 furtures 606016ipme) இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாதவர்கள்.
என்னுடைய ஒரேயொரு விருப்பம் என்னவென்று சொன்னால் இந்த மகிமை குன்றாமல் நான் போய்விடவேண்டும். அதுதான் பெரிய ஆசை. ஒரு புதிய விஷயம் வருகிறபொழுது, அந்தப் புதிய விஷயத்தைத் தெரிகின்ற இரண்டாவது மூன்றாவது ஆளாக நான் இருக்கக்கூடாது. அந்தத் துறையில் உள்ளவர்களுக்கு தெரிகின்ற அதேவேளையில் எனக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டும். நான் பழசை ஒதுக்கவில்லை. பழசில் காலூன்றிக்கொண்டு நான் மேலே வரவேண்டும். மரபுபற்றிப் பேராசிரியர் உரையிலே சொல்கிறார் - காலமும் வழக்கும் திரிந்தவிடத்து - திரிந்தனவற்றிற்கேற்பவோர் மாற்றம் செய்க. இவற்றையெல்லாம் நாங்கள் மறக்கமுடியாது. தொடரும்.
36

நெற்றிக்கண்
நால் விமர்சனம் -
நூல் : வேர்கள் துளிர்க்கும்
எழுதியவர்: தமிழீழப் பெண் எழுத்தாளர்கள்.
அண்மைக்காலங்களில் இலங்கை
யின் பெண் எழுத்தாளர் களது வளர்ச்சியும், சாதனைகளும் வியக்கத் தக்கவையாக உள்ளன. நாட்டின் சூழல் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றது என்றும்கூடக் கூறலாம். இலங்கையின் போர்ச்சூழலும், அது கொணர்ந்த புதிய அனுபவங்களும் தமிழ்நாட்டு எழுத்தாளர் எவராலும் தரிசிக்கப்படா தவை. இவ்வகையில், வன்னியையும், வடக்குக் கிழக்கின் பிற பிரதேசங் களையும் சார்ந்த பெண் எழுத்தாளர் களின் எழுத்துக்களில் போர்ச்சூழலும், அதன் விளைவுகளும், தாக்கங்களும் முக்கியத்துவம் பெறுவதைக் காண முடிகிறது. இவ்வகையான ஆக்கங்கள் பெரும்பாலும் வன்னியை மையமாகக் கொணி டு வெளிவருகின்றன. இத்தகைய வெளியீடுகளுள் ஒன்று 'கனவுக்கு வெளியேயான உலகு (2002) என்ற சிறுகதைத்தொகுதி. இதனையடுத்து, "வேர்கள் துளிர்க்கும் (2003) என்ற சிறுகதைத்தொகுதி அண்மையில் வெளியாகியுள்ளது.
இத்தொகுதியில் வன்னியையும், பிற வடக்குக் கிழக்குப் பிரதேசங் களையும் சேர்ந்த பதினைந்து பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு படைப்பும் எழுத்தாளர்களின் ஆளுமையையும், ஆற்றலையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. போர்ச்சூழல், அச் சூழலால் ஏற்பட்ட தாக்கங்கள், அவற்றுக் கிடையே தொழிற்படும்
மனித உணர்வுகள், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் காணப்படும் நம்பிக்கையுணர்வுகள், பொதுவாகவே சமுதாயத் தில் வேரோடிப் போயிருக்கும் ஆணாதிக்க நிலைப்பாடு முதலான பலவும் இச் சிறுகதைகளில் ஊடுருவி நிற்கின்றன.
இச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான படைப்புகளில் போர்ச்சூழல் விரவி இருக்கின்றது. போர்ச் சூழலின் பின்னணியில் சமூக அசைவியக் கத்தை அவை காட்டுகின்றன. தென்னம்பிள்ளை (தமிழவள்) விடிவு (கலைச்செல்வி சுரேந்திரன்) மைதிலி (அ.காந்தா) புரிதல் (தீபா குமரேஷ்) திறக்கப்பட வேண்டியது. மூடியிருந்த பாதை மட்டுமல்ல. (ஆதித்த நிலா) உடைந்த வீடு (செ.புரட்சிகா) அவளுக் கென் றொரு விதி (சி.ஜீவரஞ்சினி), சொன்னால்தான் புரியுமா. (சந்திரா அற்புதலிங்கம்) என்று தணியும் இந்தத் தாகம் (அனுராதா பாக்கியராஜா) முகம் மாறும் மனிதர்களும்.முகம் மறந்த உதவிகளும். (காயத்திரி இராஜேஸ் வரன்) அனுமதி (மலைமகள்), அடையாளம் (பூமாதேவி)ஆகிய படைப்புகள் போர்ச்சூழலின் பின்னணி யில் வெவ்வேறு தரிசனங்களைத்
தருகின்றன. முடிவு (யோகவதி),
37
அப்பாப்பூனை(ச. சாரங்கா), மனக் கூண்டு (அம்புலி) ஆகிய சிறுகதை கள் ஆணாதிக்கத்தின் போக்கினை வெவ்வேறு நிலைகளிற் காட்டுகின்றன.
இவற்றுள், கணிசமான படைப்பு கள் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு வளம் சேர்க்கவல்லன.

Page 20
தென்னம்பிள்ளை, முடிவு?, மைதிலி, உடைந்த வீடு, அப்பாப் பூனை, அனுமதி, மனக்கூண்டு ஆகியவை படைப்பாளிகளின் ஆற்றலைப் புலப் படுத்தும் சிறந்த சிறுகதைகளாக விளங்குகின்றன. திறக்கப்பட வேண்டி யது. முடியிருந்த பாதை மட்டு மல்ல., என்று தணியும் இந்தத் தாகம் ஆகிய படைப்புகளின் ஆக்கச் செழுமையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஆங் காங் கு காணப் படும் எழுத்து, அச்சுப் பிழைகள் தவிர்க்கப் பட வேண்டியவையே.
வேர்கள் துளிர்க்கும் என்னும் இச் சிறுகதைத்தொகுதி, ஈழத்துப் பெண் எழத்தாளர்களின் ஆற்றலை இன் னொரு வகையில் வெளிப்படுத்தும் புதிய வரவாக அமைந்துள்ளது. நூல் : அழுவதற்கு நேரமில்லை எழுதியவர் : தாமரைச்செல்வி
இன்றைய காலக் கட்டத்தில் வன்னிப்பிரதேசம் இலங்கையின் முக்கிய இலக்கியப் பிரதேசங்களுள் ஒன்றாக வளர்ச்சிபெற்று வருகிறது. வன்னிப் பிரதேச எழுத்துக் கள் உணி மையுடனும், உயிர் புடனும் சமகால நிகழ்வுகளையும், விளைவு களையும், மன உணர்வுகளையும் தருகின்றன. போர்ச்சூழல் வன்னியின் வளத்தைப் பெருமளவு கொள்ளை கொண்டுவிட்டது. ஆனால், அதன் வலிமையை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை. வெட்ட வெட்டத் தழைப்பதுபோல், எத்தனையோ இடர் களுக்கு மத்தியிலும் வன்னியின் எழுத்தாளர்களும் தமது பங்களிப்பு களை இடையறாது நல கியே வந்துள்ளனர். அவர்களுள் ஒருவர், தாமரைச்செல்வி. அவரது இரண்டா வது சிறுகதைத்தொகுதியாக "அழு வதற்கு நேரமில்லை' (2002) வெளி வந்துள்ளது.
38
வையாக அன்றி,
இலங்கையின் தமிழ்ப் புனை கதைத்துறை வளர்ச்சியில் தாமரைச் செல் விக்கும் கணிசமான பங்கு உண்டு. அவரது இலக்கியப் பங்களிப் பின் ஒரு வெட்டுமுகத் தோற்றம் போல் இச் சிறுகதைத் தெகுதியும் அமைந் துள்ளது. தமது நூல் பற்றி நூலா சிரியர் குறிப்பிடும்போது, "எல்லாக் கதைகளுக்கும் பொதுவான அடித் தளமாக இடப்பெயர்வு இருக்கிறது. அதனால்தான் ஒரே பின்னணி எல்லாக் கதைகளிலும் பரவும் போது ஒரே சாயலைத்தரும் தன்மை ஏற்பட்டிருக் கிறது. ஆனாலும் ஒரே மண்ணில் ஒரே காலகட்டத்தில் வாழும் இந்த மனிதர் களின் உணர்வுகளின் வெளிப் பாடுகள் இந்தவிதமாய் அமைவதைத் தவிர்க்க முடியாமலே இருக்கிறது. எத்தனையோ அவலங்களுக்கு மத்தி யிலும் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுதுவது காலத்தின் தேவையாகிறது. இதுவே மனநிறைவையும் தருகிறது" என்று கூறுகின்றார். பன்னிரு சிறுகதை களைக் கொண்ட இத்தொகுதியில், நாளைய செய்தி என்ற சிறுகதை யைத் (வியட்னாம் போர்ச்சூழற் பின்னணியில் அமைந்தது) தவிர, மற்றையவை அனைத்தும் வன்னியின் இடம்பெயர்வுச் சூழலைப் பகைப்புல மாகக் கொண்டவை. நாளைய செய்தி என்ற சிறுகதையும் இலங்கை யின் போர்ச்சூழலையே ஒருவகையில் ஞாபகப்படுத்தும் குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
வன்னி மண்ணைக் களமாகக் கொணி டவையாக விளங்கும் தாமரைச்செல்வியின் சிறுகதைகள், நடப்பியல் புக்குப் புறம் போகாத வண்ணம் யதார்த்த பூர்வமாகப் படைக் கப்பட்டுள்ளன. அவரது பாத்திரங்கள் கற்பனைக் கெட்டாத கண்முன்னால்

காணக் கூடிய நிஜமாந்தர்களாக விளங்குகின்றன. பொதுவாகவே பாத்திர வார்ப்பில் தாமரைச் செல்வி சிறந்த கவனம் செலுத்திவருகின்றார். அவரது சிறுகதைகளில் இடம்பெறும் சம் பவங்கள் கணி மு னி னால் நடந்தவை போலவும், நடப்பவை போலவும் விளங்குகின்றன. ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் போர்ச் சூழலும், இராணுவ அட்டுழியங்களும் ஏற்படுத்திய பாதிப்புகள் வாசகரின் மனத்தைத் தைக்கின்றன. இத்தொகுதி யில் இடம்பெற்றுள்ள அழுவதற்று நேரமில்லை, நாளைய செய்தி, பாதை, சுயம், அக்கா, ஆகியவை தாமரைச்செல்வியின் எழுத்தாற்றலைப் புலப்படுத்தும் சிறந்த சிறுகதைகள்.
மற்றையவையும் குறிப்பிடத்தக்க படைப்புகளே. சுயம், அக்கா ஆகிய சிறுகதைகள் ஆணாதிக்கத்தின் கொடுரமான பக்கங்களை இனங் காட்டுகின்றன.
ஆங்காங்கே இடம் பெறும் ஒரு சில எழுத்துப் பிழைகளையும், அச்சுப் பிழைகளையும் தவிர்த்துப் பார்த்தால், படிப்பதற்கு நேரமில்லை என்று வைப் பதற்கு முடியாதபடி இச்சிறுகதைத் தொகுதி அமைந்துள்ளது. இலங்கை யின் சிறந்த சிறுகதை எழுத்தாளருள் ஒருவர் தாமரைச் செல்வி என்பதனை அழுவதற்கு நேரமில்லை என்ற இத்தொகுதி மேலும் உறுதிப்படுத்து கிறது.
வெற்றிலைச் சாற்றைப்போய் முற்றத்துப் பூமரத்தில் துப்பிவந்த அம்மா, சூழலைச் சுத்தமாய் வைப்பது பற்றி காரசாரமாய் அறிவுறுத்தினார்.
அப்பாவுக்கும் அதில் ரொம்பக் கரிசனை; தப்பித் தவறியேனும் சூழல் மாசுபட்டால் திட்டித் தீர்ப்பார் - வீடு பூராவும் "சிகரட்டை ஊதித் தள்ளியவாறே!
சுற்றாடல் ஆசிரியை சும்மாவா., வகுப்பறைக்கு வெளியில் இன்ன இடத்தில் என்றில்லாமல் - தினசரி மறக்காமல் ‘லஞ்ச்" உறை
6Tojountil
------ܝܢ
Θ5φ6υσώ-----
D 6.606 அன்சார் எம்.ஷியாம்
N
சுத்தமாம்!!
ஒருமுறை
இப்படித்தான் - சூழலைப் பேணுவது பற்றி ‘அனவின்ஸ்” பண்ணியவாறே போனார்கள் வாகனத்தில் - பின்னால். > மூச்சுத்திணறும் S Կ6093;!
நான் மட்டுமென்ன. என் பங்குக்கு விடுவேனா - அவ்வப்போது என்னால் இயன்றது. கொல்லைப் புறத்தில் குறைந்தது, சில ‘யோகட் கப்"களை வீசியோ அல்லது
சிறுநீர் கழித்தோ -
e

Page 21
புற்றில் மறையும் பாம்புகள்
ச. சாரங்கா
சங்கத்தானை
ノ
அவள் மெல்லச் சிரித்தாள். கசப்பு நிரம்பியிருந்த வெற்றுச்சிரிப்பு. முன்பெல்லாம் வெள்ளி நாணயங் களைக் குலுக்கி விட்டாற் போலவான கலகலத்த சிரிப்பைத்தான் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கை கசப்பைப் பிழிந்து இவளைத் தோய வார்த்து விட்டதாய்த் தோன்றிற்று. மூக்கிலும் காதிலும் கண்மடல்களிலும் வழிந்த கசப்பு மார் பிற்கிறங்கிய பொழுதில் ஏனோ புருஷனின் நினைப் பெழுந்தது. அவர் இருந்திருந்தால் நிச்சயம் இந்தக் கசப்புணர்வை வழித் தெறிந்து அதன் சாயலே தெரியாத ஆனந்தத்தினுள் அவளை அமிழ்த்தி யிருப்பார். ஆனாலும் அவசரப்பட்டுக் கொண்டுதான் விட்டார்.
விட்டத்தை வெறித்துப் பார்த் தாள். மெல்லத் தூசிபடிந்த கூரைப் பகுதி. மெல்லிய கால்களை உடைய சிலந்தி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. அங்கு அதன் சந்ததி கள் கூட்டமாய் முட்டைகளிலிருந்து வெளியேறித் துாசிப்படுக்கையில் கிடக்கக்கூடும் என்றெண்ணிக் கண்
ܢܠ
40
களைக் கூசினாள். தோல்விதான். எதுவும் புரியாத ஏதோ ஒரு வெளிர் படலத்தைக் காட்டியது கண். பாவம் அதன் வயதும் அறுபது ஆகிவிட்டதே. ஆனாலும் இந்தக் கண் மூடிக்கிடக்கும் வேளைகளில் மட்டும் தெளிவான கனவுகளைக் கண்டு விடுகிறதே. அது எப்படி? நேற்றுங்கூடத் தெளிவான அந்தக் கனவு வந்தது. அவர்தான் வழமைபோலக் கூப்பிடுகிறார்.
"வாடி. வாடி. மீனும்மா." ஊருக்கெல்லாம் மீனாட்சியான இவள் அவருக் குமட்டும் மீனு, மீனும்மா, மீனுக்குட்டி எல்லாம்.
“ம்கூம்.” மெளனமாய் முழங்கால்களில் முகம் புதைத்திருந்த இவள் தலை யசைக்கிறாள். மாட்டேன் எனும் பொருளுற. நாணம் மிகுந்த ஒரு நெளிவு அந்த 'அமர்ந்திருக்கும் முறை'யில் பொதிந்திருக்கிறது. அவர் கூட பட் டு வேட் டியும் சால்வையுமாய் என்ன ஒரு கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறார்.
"ஏனம்மா. எழும்பு. எனக்குக்கிட்ட வாம்மா."
கைகளை நீட்டுகிறார். நீட்டிய பரந்த கைகளுக்குள் ஓடிப்போய்ப் புகுந்துவிட வேண்டு மென்ற தவிப்பு இவள் உடலெங்கும் பரவுகிறது.
"கூடாது. வேணி டாம் . வேண்டாம்."
உள்மனம் இவளைத் தடுக் கிறது. மிகுந்த பிரயத்தனப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கின் றாள்.
"ஏன் வரமாட்டாய்? காரணத்தை யாவது சொல்லம்மா"
இவள் மார்பு துடிக்கிறது. "நான். நான் குழந்தைக்குப் பால் குடுக்கவேணும்"
இவளது குரல் இவளுக்கே
எழும்பி
 

கேட்காத தீனமாக, கிணறில்லாத போதிலும் அதற்குள்ளிருந்து வெளிப் படுவதாய் ஒலிக்கிறது. அவரது உருவம் மறைந்து விடுகிறது. கனவு கலைந்துவிட்டது. இந்தக் கனவைப் பலமுறை அவள் கண்டதுண்டு.
இருபத்தெட்டு வயதில் ஒருநாள் மாரடைப்பென நெஞ்சைத் தடவியவர் இவளது மடியிலேயே உயிரை விட்டு விட்டதை இவளுக்கு நம்ப முடியாதிருந்தது.
"சாகும் வரைக்கும் நீதானடி எனக்கு எல்லாமும்.”
சொன்னதை நிரூபித்துத்தான் விட்டார். அதற்குள் தன்பேர் பதிக்க நான்கு குருத்துக்களைத் தந்துவிட்டு எந்தவித ஒட்டலும் இல்லாமல் எப்படி அவரால் விலகிவிட முடிந்தது? இன்னும்தான் தெரியாதிருக்கிறது. அப்போதிருந்து இப்படித்தான். கனவில் வந்து கூப்பிடுவாார். இவள் மறுத்து விடுவாள். ஒற்றை மகனையும் மூன்று பெண் குஞ்சுகளையும் ஆளாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவளது தலைமேலிருக்கிறது.
ஒவ்வொரு குழந்தையும் சிறு
பூங்கன்றாய்த் தோன்றும் அவளுக்கு. தன்னுணர்வற்ற ஒரு பேரின்பப் பொழு தொன்றில் அவளது கர்ப்பப் பைக்குள் மெதுவாய் அவர்தூவிய சிறுவிதைகள் தானே அவளது வயிற்றுள் வளர்ந்தன. வளரமுடியாது விரிந்தபோது வெளி யேறின. பெண்ணென்ன ஆணென்ன, அற்புதமான இனிய உறவின் சாட்சி கள் அவை. ஒவ்வொரு பூங்கன்றை யும் உதிரஞ் சிந்தியாயினம் செழிப்புற வளர்த்துவிட வேண்டும். இது அவரது ஆத்மாவிற்கு அவள் செய்தாக வேண்டிய சத்தியமாகும். அவளது சிந்தனை செயலெல்லாம் அதுவன்றி வெறில்லை.
அப்போதெல்லாம் விடிகாலை
4.
யில் எழுந்து விடுவாள். இருளின்முகம் இவளை உறுத்துப் பார்க்கும்.
"உன் வாழ்வில் நான் அப்பிக் கொண்டேனே எப்படி..?” என்று மெளனமாய்க் கேலிபண்ணும். அதை அசட்டை செய்துவிட்டுப் புடவையை “வரிந்து கட்டிக்கொண்டு பலகாரஞ் செயப் யத் தொடங்கிவிடுவாள். ஒவ்வொரு செயலிலும் பிள்ளைகள் எழுந்துவிடாதபடியான சந்தடியற்ற நிதானம் இருக்கும். குழந்தைகள் அவளால் வருந்திவிடக்கூடாது.
கடைப்பையன் வாசலுக்கு வந்து நிற்கிறபோது ஆறுமணி புலர்ந்து கொண்டிருக்கும்.
"அட. ஆறாகிப் போச்சுதா." அவசர அவசரமாய்க் கடைசி வேலைகளைச் செய்யவேண்டியிருக் கும். அந்த விடிகாலையிலும் நெற்றி யோரம் துளித்துளியாய் வியர்த்திருக் கும். கழுத்து வியர்வை கசகசக்க நெருப்பின் தகிப்பில் முகம் கறுத்துக் கிடக்கும்.
“மீனாட்சியின்ரை கைபட்டாத் தனிச்சுவையப்பா.”
அவளது முயற்சிக்கு ஊர் முழுவதும் நல்லபேர் இருந்தது. பொன்னிறமாய் வெந்திருக்கும் பலகாரங்களைப் பார்க்கும் போதெல் லாம் அவளுக்குத் தன்மனம்தான் நினைப் பில் எழும். வாழ்க்கை எண்ணெய்க் கொப்பறையாய்க் கிடந் தது. அதனுள் இவளைத் தூக்கி விசி யெறிந்துவிட்டது விதி. அவ்வளவு தான். அவர் விதைத்த சிறுகன்றுகள் செழித்துப் பூச்சொரிந்தாக வேண்டும். அவரது நினைப் பே அவளது உழைப்புந்தலாகும். உழைப்பு. உழைப்பு. உழைப்பு. வேறில்லை. ஊர் ஏதோ தியாகமி என்று எல்லாம் கதைத்தது. எதையும் பொருட்படுத்தாத அவள் வாழ்வின் போக்கில் செயற்

Page 22
பட்டுக்கொண்டே இருந்தாள்.
"சடார்” எனத் திறந்த கதவு அவளது கடந்த கால நினைவுகளைக் குறுக்கறுத்து வெட்டிற்று. ஒரு கை நீண்டு சாப்பாட்டுத் தட்டத்தைத் தரை யோடு வைத்துத் தேய்த்துத் தள்ளியது. தட்டம் சறுக்கி வந்து பாய்விளிம்வில் மோதி நின்றது. அருகில் கொண்டு வந்து தரப் பொறுமையற்ற மகளாக அல்லது பேர்த்தியாக இருக்கவேண் டும். ஏனோ அவ்விதம் உணவைத் தள்ளுகையில் அவர்கள் ஒரு வித குரூர திருப்தியை அனுபவிப்பதாகத் தோன்றியது. அனுபவித்துவிட்டுப் போகட்டும். இப்போது இவளது மனதில் வளர்த்திருந்த பூங்கன்றுக் கனவுகளை எல்லாம் பிடுங்கி வீசி யெறிந்து விட்டது காலம். பிள்ளைகள் வளர் நீது காலூன் றிக் கொண்டு விட்டார்கள். உழைத்து ஒயும் ஒரு நாளில் பிள்ளைகளின் நிழலில் பெறக்கூடிய நிர்ச்சலனமான ஆனந் தம் பற்றிய கனவுகளும் கூடத்தான் அழிந்து போய்விட்டன.
சிக்கனமற்றிருக்கத் தகுந்த
வாழ்க்கை நிலை மகளுடையது. ஏன் இவளை மகள் வெறுக்கவேண்டும்? ஒருவேளை தள்ளாமை மிகுந்த அவளது தோற்றம் வீட்டின் நாகரிகத் திற்குக் குறுக்காக நிற்கிறதோ? சுருக்கமுடைய முகத்தில் அன்பான ஒரு பார்வைக்காக ஏங்கும் இவளது விழிகளை யாராவது கவனிக்க DT LITír 356 Tr? LD356ôr Ll|6no60). Di'i ll y fflaf லில் நாடு விட்டுப் போனவன் தான். பிறகு தொடர் பேயில் லை. மகள் ஒருத்தி தன் விருப்பப்படி மணம் புரிந்ததில் உறவு விட்டுப்போயிற்று. மற்றைய மகள் கடிதமூலம் தன் நிலையைத் தெளிவுபடுத்தியிருந்தாள்.
“மகனுக்கு இப்பதான் ரெண்டரை வயது. பார்த்துப் பாவனை பண்ணுற
வயது. அம்மா வந்தா அவவின்ரை தமிழைப் பிள்ளை பழகிடுவன். அதோடை அவ போலப் பாவனை பண்ணுவான். தமிழ் பேசினா இங்கை மதிப்பில்லை. அதுதான் கொஞ்சக் காலம் பொறுத்து வந்தா என்டாப் பிரச்சினையில்லை.”
ஆக மூத்தமகளுடன் வாழ்வு தங்கிப் போயிற்று. அயலவருடன் ஒரு வார்த்தையும் அவள் பேசிவிடக் கூடாது. அது மகளுக்கு பிடிக்காது. ஆனால் இவ்விதமான நிர்ப்பந்தம் பற்றி வெளியில் எவருக்கும் தெரியாது.
"அகங்காரம் பிடிச்ச கிழவி. ஒரு சொல்லுக் கதையாது"
“முந்தியெல்லாம் பலகாரம் சுட்டுச் சீவியம் நடந்தினதை மறந் திட்டு திடீர்ப்பணத்திலை அகங்காரம் காட்டுது.”
“பெருமை பிடிச்சது. பணம் இருந்தாப் போதுமே? மனிசர் தேவையில்லையே?”
இப்ப்டித்தான் உலகம் கதைத்துக் கொள்கிறதாம். பரிமளம் சொன்னாள். வீட்டில் எவருமில்லாத வேளையில் தற்செயலாக வருவது போல வந்து "செய்தி சொல்லும் அந்த உயிரைத் தவிர வேறு யாருமே அவளுக்கென்று இல்லாமல் போய்விட்டார்கள். தனிமை சாட்டையாகி ஓங்கி ஓங்கி அடிக்கிறது. நாராகக் கிழிந்து போகும் படி இவளைத் துவம்சிக்கிறது. வலிந்து சுமத்தப்பட்ட மெளனத்தையே இவள் காவுவது எவருக்கும் தெரியாது.
வீட்டிற்கு யாரர்வது வந்துவிட் டால் அவர்களின் கண்ணில் படாதபடி ஒதுக்குப்பறமான அறைக்குள் அவள் ஒதுங் கிக் கொள்ளவேணி டும் . தற்செயலாக வெளிப்படினும் மனித சாயல் கண்டதும் மறைந்து கொள்வது தான் மகளுக்குப் பிடிக்கும். நினைவு
42

கள் கொதிக்கையிலும் பெருமூச்சும் முனகலும் வெளிப் பட்டுவிடக்கூடாது.
வெறும் வாகனம் மேகங்கள் அற்றுக்கிடந்தது. மேகக் குழந்தைக ளால் கைவிடப்பட்ட தாய் தான் வானமோ? பாவம் அதுதான் துன்பம் தாளாமல் அடக்கிவைத்த கண்ணிரெல் லாம் ஒரு பொழுதில் கொட்டித் தீர்த்து விடுகின்றதோ? மனமெல்லாம் முட்டும் சோகத்தை கண்ணிராகக் கொட்டி விடக் கூடப்பயமாக இருக்கிறதே. மகள் கண்டால் வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.
மகளது குரல் சற்றே தடித்தது. ஆண்களின் சாயல். பேர்த்தியின் குரலும் போட்டி போட்டுப் பேசும். கீச்சுக்குரல் அவளது. தன்வரையில் முணுமுணுத் துக் கொள் வாள். குடும்பத்தில் குரல்கள் கதம்பமாய்க் கேட்பது சந்தோஷம் என்றுதான் இவள் நினைத்திருந்தாள். அதெல் லாம் அவரிருந்த நாட்களோடு போய் விட்டது. பொய்க்காகக் கண்ணிரை ஊற்றுவது சாத்தியமா? வேதனை வசப்பட்ட உணர்வுகளின் விளைவு
களாகத்தானே கண்ணிரும் அழுகை
யும் வரமுடியும்? உணர்வுகளை வெளிக்காட்டாத இறுக்கத்தில் அவளு டைய மனம் கழுத்து நெரிக்கப்பட்ட குழந்தையாய்த் துடித்தது.
"மற்றவை ரெண்டு பேரும் வெளி நாட்டிலை சொகுசா இருக்க என் னோடை வந்து இழுத்துக் கொண்டு கிடக்குது..?
வருபவர்களிடம் இவள் காது படவே மகள் குறைபட்டுக்கொள்வாள். “ஏன் மகனிட்டையும் போய் இருக்கலாம் தானே"
வந்தவர்கள் தம் பங்குக்குச் சொல்வார்கள். கையில் எடுத்த உணவுக் கவளத்தை விழுங்க முடியாது தொண்டைக்கள் சிக்கும்.
43
உணவுத் தட்டத்தை மெதுவாகத் தள்ளி வைத்துவிட்டுப் படுத்துக் கொள்வாள். கண் மங்கும். கண்ணிர் தான். விம்மல் வெடித்துவிடக் கூடாத எச்சரிக்கை உடல் முழுவதும் பரவும். குப்புறப் படுத்து கொள்வாள். சாப்பிடப்படாத உணவுத் தட் டத்தை யன்னல் கம்பிகளும் கிறீச்சிடும் மரக்கதவும் தான் வெறித்துப் பார்த்துக் கொண் டிருக்கும்.
இப்போதெல்லாம் "அவர் வரும் கனவொன்றுதான் ஆறதலாக இருக் கிறது. இந்த வயதிலும் இரகசியத் தொனியில் புருஷன் அந்தரங்கமாக அழைக்கும் அழைப்பு நினைவில் வந்து வருத்துவதேன்? அவரோடு ‘போய்விடுவது நல்லதுதானோ? சிந்தனைகளின் முடிவில் தான் அந்தக் கசந்த சிரிப்பு அவள் முகத்தில் வழிந்
5.
இனிப் பொறுக்க முடியாது. பொறுமையின் எலி லைகளைக் கடக்கும்படி காயம்பட்ட மனம் வற் புறுத்துகிறது. ஏதாவது செய்தாக

Page 23
வேண்டும். புருஷனை இழந்த பிறகு குழந்தைகளைக் கண்ணுக்குள் மணி யாகக் காத்திருந்தாள். ஒரு அன்பான தாய்க்குரிய, நல்ல மனைவிக்குரிய கடமைகளைச் செய்வனே செய்த திருப்தி அவளுள் உண்டு. வாழ்ந்தது போதும் என்ற நினைப்பு வலிமையாய் அவளுள் படர்ந்தது.
இரணர் டாவது நாளாகவும் உணவுத் தட்டம் சாப்பிடப்படாது கிடந்தது.
“என்னவாம்? விதம் விதமாயச் சாப்பாடு கேக்குதோ?”
“வயித்துவலியாய்க் கிடக்குது." முனகினாள்.
“வயித்துவலியிலை சனம் சாகிற தில்லை. ரெண்டு நாளைக்குச் சாப் பிடாமல் விடச் சரியாய் போடும்.”
D... "ஆசை இருந்தாப் போதுமே. கண்டதையும் தின்னுற வயதே இது.?” முகத்தைத் தோளில் இடித் துச் சொல்லி விலகும் மகளை இரக்கத்தோடு பார்த்தாள். அவள் வெல் லப் போவதை அறியாத பேதைமைக்குள் அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவளுக்கு மகளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். பேர்த்தி இரக்க உணர்வற்ற, பெரி யவர்களை மதிக்கத் தெரியாத உணர்வுகளோடு வளர்வது பற்றி மகள் சிரத்தை எடுப்பதில்லை. கஷ்டங் களின் சாயலைக் கூட அறியவிடாமல் அவள் வளர்த்த குழந்தைகள் ஏன் இப்படி ஆனார்கள்? ஏல்லாவற்றையும் யோசிக்க எதிலுமே எதுவும் இல்லை யாகிய மாயை புரிந்து போயிற்று.
நான்கு நாட்களின் பின்னதான ஒரு இரவு விலகத் தொடங்கிய காலைப் பொழுது மானுடத்தின் அவலட்சணமாய்த் தன்னையுணர்ந்து தயங்கித் தயங்கி வந்தது.
44
“எங்களை விட்டிட்டுப் போயிட்டி யேம்மா." மகளது தடித்த குரல் ஒலமாய் எழுந்தது. அக்குரல் அடுத்த வீட்டு வாசல் கதவை அறைந்து எழுப்பிற்று. காற்றின் முதுகில் ஏறிக் கரகரப்பாக ஊர் முழுவதும் துன்பம் பறைசாற்ற வேண்டி நகர்ந்தது.
கிழவி தொங்கிக் கொணி டிருந்தாள். அதே சின்ன அறையின் உத்தரத்திலிருந்து நீலநிறமான நைலோன் கயிற்றில் குரல்வளை இறுகியிருக்கச் செத்திருந்தாள். விஷமும் கூட நீல நிறமாகத் தான் காட்டப்படுகிறது. அவளின் இரத்த பந்தங்களே வார்த்தை விஷங் கொட்டிய பாம்புகளாய் ஆனது துரதிஷ்டம்தான். விஷப்பாம்புகள் பெரும்பாலும் வெளிப்படுவதில்லை. அவை மறைந்து வாழவே பிரியப்படும். மறைந்தே வாழ்ந்து கொள்கின்றன.
கிழவியின் கையில் கசங்கிய துண்டுக் காகிதம் ஒன்று சிக்கி யிருந்தது. இதயம் படபடக்க கைகள் குளிர்ந்து நடுங்க மருமகன் அதை లి வாசித்தார். அதில் ஒரே ஒரு 6) T.
"வலி தாங்கமுடியவில்லை, போகி றேன்”
இறுதிக் கணங்களிற் கூட உண்மையைக் காட்டிக் கொடுக்காத பெருந்தன்மை மிக்க தாய்மை அவ் வரியில் வாழ்ந்து கொண்டிருந்தது.
“வயித்துவலிக் கொடுமைதான் அதுக்காப் போய் இப்பிடிச் செய்து போட்டாவே. உன்ரை பாட்டியைப் பாரம்மா. பாதிவழியிலை போட்டி யளே அம்மா. அம்மா."
இன்னும் இறக்கப்படாது தொங்கிக் கொண்டிருக்கு தாய்க்கிழவியின் பிணத்தில் மகளின் ஒப்பாரி மோதிச் சிதறிக்கொண்டிருந்தது.

புலோலியூர் க.சதாசிவம்
நாடறிந்த ஆக்க இலக்கிய எழுத்தாளரும் நல்ல நாவலாசிரியருமான தெணியானின் ஆறாவது நாவலாகிய 'கானலில் மான் தோற்றம் தந்துள்ளது. தெணியான் மிகத் தரமான படைப்புகளை ஈழத்துச் சிறுகதை உலகிற்குத் தந்தவர். ஆனால் இதுவரை வெளிவந்த இரு சிறுகதைத்தொகுதிகள், "சொத்து (1984), “மாத்துவேட்டி(1986) ஆகியவற்றில் அவரது சிறந்த சிறுகதைகள் அனைத்தும் இடம்பெறவில்லை. தெணியானின் தேர்ந்தெடுத்த ஆக்கங்கள் தனியாக நூலுருவம் பெறவேண்டும். ஆனால் அவரது நாவல் துறையின் பங்களிப்பைக் கணிப்பிடக்கூடிய அளவிற்கு நூல்கள் வெளிவந்துள்ளன.
தெணியான் இலங்கை முற்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தின் மூன்றாவது தலைமுறையின் பதச்சோறாகப் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் இனங்காட்டப்பட்டவர். இந்தத் தலைமுறையினரின் முக்கிய பண்பாகக் களம் விரிவடைந்திருத்தல் எனப் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார். ‘விடிவை நோக்கி நாவலில் (1973) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஓர் ஆசிரியன் தாழ்த்தும் சமூகங்களின் சூழலில் பெறும் அனுபவங்களைச் சித்திரித்தும், "கழுகுகள் நாவலில் (1981) நிலவுடமையாளர்களிடம் சொத்துரிமை ஏற்படுத்தும் இன்னல்களையும், "பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவலில்(1989) பிராமண சமூகத்தின் பொருளாதாரரீதியாக அமுக்கப்பட்ட மனிதக் குரலில் அவல நிலையையும், "மரக்கொக்கு நாவலில் (1997) சொத்துரிமையும் சாதித்தடிப்பும் உள்ள மேற்தட்டினரின் கெளரவத்தைக் கட்டிக்காப்பதற்காகத் திருமணப் பிணைப்பையே இழந்து உறுமினைத் தேடி வாடி இருக்கும் கொக்காகி வயோதிபம் அடையும் ஒரு பெண்ணின் பரிதாப நிலையையும் காட்டி களவிரிவைக் கண்டவர் தெணியான். 'கானலில் மானுக்கு முன் எழுதிய 'காத்திருப்பு (1999) என்ற நாவல் தெணியானின் நாவல் இலக்கிய ஆக்க முயற்சியில் ஒரு திருப்பு முனையாக, வாழ்வியல் பிரச்சினை ஒன்றினை அறியாமை, சுரண்டல், இவற்றின் ஒளியில் உளவியல் கலந்த பாலியல் தொழிற்பாட்டுடன் தொட்டுப் பார்த்து கணிசமான வெற்றியும் பெற்றுள்ளார். இந்தப் பின்னணியில் சமீபத்தில் அன்னாரின் மணிவிழாவையொட்டி வெளியாகிய கானலில் மான் நாவலை நோக்குவோம்.
இந்நாவலுக்கு எழுதிய முன்னுரையில் தெணியான் பின்வரும்ாறு கூறுகிறார். “வித்தியாசமான எனது இன்னொரு படைப்பு 'கானலில் மானி
45

Page 24
என்னும் இந்த நாவல். ஒரு நாவல் போல எனது இன்னொரு நாவல் இருப்பதில்லை என்பதினை இந்த நாவலின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறேன். வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை நன்கு படித்து, இந்த நாவலுக்கூடாக சமூகத்திற்கு எடுத்துச்சொல்லும் செய்தி, அந்த செய்தியை எடுத்துச் சொல்லியிருக்கும் உத்திமுறை என்பன தமிழ் நாவல் இலக்கிய உலகிற்கு சராசரியானவை அல்ல. எனக்கு என்றும் உள்ள சமூகப் பிரக்ஞையோடு இந்த நாவலைப் படைத்திருக்கும் அதேவேளையில் வாசகர் விரும்பிப் படிக்கும் இலக்கிய சுவைமிகுந்த ஒரு கலைப்படைப்பாகவும் இது விளங்கவேண்டும் என்னும் அக்கறையுடன் இதனையெழுதியிருக்கிறேன்!”
ஆகவே 'கானலில் மான்’ நாவலை மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்கத் தொடங்குகிறோம். பொய்மானாக இருக்காது, நிஜமான - நெஞ்சில் நிலைத்திருக்கும் மானாக இருக்கும் என்ற ஆவலுடன். அன்புக்காக ஏங்கி ஏமாறுகின்ற பரிதாபகரமான மனிதனின் கதை இது. ஈழத்து நாவல் இலக்கிய உலகிற்கு ஒரு புதிய பாத்திரம் அறிமுகமாகிறது என்ற மகிழ்வு ஆரம்பத்தில் ஏற்பட, கதையைத் தொடர்ந்து படிக்கிறோம். ஆனால் முடிவில் எமக்கு ஏற்படும்
தெணியான் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு சராசரியானவை அல்ல என்று கூறும் உத்தி முறையில், காலையில் எழுந்து விரக்தியுடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட கதாநாயகன் இரவில் திரும்பிவந்து சயிக்கிளை நிற்பாட்டி இருதயநோய் பீடித்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றும் நெஞ்சுவலியுடன் படுக்கையில் சாய்வதுடன் கதை முடிகிறது. கதையை வாசித்து முடித்ததும் கதாநாயகன் இரு பெண்கள்மேல் கொண்ட ஒருதலைக்காதல் உறவின் முறிவே முனைப்புடன் முன்நிற்கிறது. நாவலில் பெரும்பகுதி ஆசிரியரின் கலாசாலை நிகழ்வுகளை ஆக்கிரமிக்கின்றன. காதலில் தோல்வி கண்டு சாமிப்போக்குடன் வாழ்ந்த கதாநாயகன் போலி உறவைக்கொண்ட ஒரு பெண்மேல் மீண்டும் ஒரு தலைக்காதலை ஆரம்பிப்பது யதார்த்தத்துக்கு ஒவ்வாத நிகழ்வாக, திடீர் திருப்பத்தை உண்டாக்கும் எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிறது. கலாசாலைக் காட்சிகளும் இறுதியில் வரும் திருப்பமும் இன்னும் சில காட்சிகளும் சினிமாவில் இரசனைச் சுவைக்காகக் காட்டப்பட்டது போலப்படுகிறது. வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டுமென்ற நோக்கில் நாவலாசிரியர் மலினப்படுத்தப்பட்ட உணர்வுகளால் - நிகழ்வுகளால் ரசனைசேர்க்க முற்பட்டுள்ளாரோ என எண்ண இடமளிக்கிறது. உளவியல் பாதிப்புக்கு உட்பட்ட ஒரு பாத்திரத்தை அசட்டுப் பாத்திரமாக சிறுபிள்ளைத்தனமான நிகழ்வுகளைக் காட்டி அன்புக்காக ஏங்கும் மனிதனின்பால் வாசகனுக்கு ஏற்படும் பரிவின் உயிர்த்துடிப்பு சிதைவுபெறச் செய்கிறார் நாவலாசிரியர். மையப் பிரச்சினையின் ஆணிவேரை அலசுகின்ற நிகழ்வுகள் போதாது. முத்து ஒரு உளநிலைத் தாக்கமடைந்தவன்.(Psyc0 - case) ஒரு மனநோயாளித் தாயின் மகன். பொறுப்பற்ற தந்தை, நேர்மையான பாசமற்ற தங்கை. இச்சூழலில் வளர்ந்தவன். துரதிஷ்ட சம்பவங்களுக்கு முகம் கொடுத்ததால் மேலும் அவனது ஆளுமை பாதிக்கப்படுகிறது.
மனித உறவு அலகின் உன்னதப் படியான குடும்ப வாழ்க்கைப் பிணைப்புக்கு வந்து வாய்த்த மனைவியோ, பொருளாதாரத்தை முதன்மைப்
46

படுத்தும் ஒரு பிற்போக்கான சமுதாயத்தின் பிரதிநிதி. உண்மையான அன்பு கிடைக்கவேண்டிய இடத்தில் அது பொய்த்துவிடுகிறது. ஆகவே இக்கதையின் குருஷேத்திர களம் உளவியல் போராட்டமாக அமைய வேண்டும். ஒரு தலைக்காதல் தோல்வி தந்த உணர்வைவிட மனைவியின் நடத்தை, அதன் உணர்வுத்தாக்கம் ஆகியவை முதன்மைப்படுத்தியிருக்கப்படவேண்டும். அன்புக்கும் பிறரின் நேசிப்புக்கும் ஏங்கும் கதாநாயகன் வாசகனின் உணர்வுகளில் ஆழமாகப் பதியும் பாத்திரமாக வளர்க்கப்படவில்லை. வார்க்கப்பட்ட பாத்திரத்தின் அருகிலிருந்து கதாசிரியர் வாசகனுக்கு உணர்த்த முற்படுகிறார். தெணியான் இந்நாவலின் கதாநாயகt" முத்துவின் மனநிலையை பெரும்பாலும் விவரணமாகவே சொல்கிறார். விவரணமாக இல்லாமல் சித்திரிப்பாக இருக்கும்போதே நாவல் சிறப்படைகிறது. தி.ஜானகிராமனின் நாவல்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. வெறும் சம்பவ விவரணங்கள் நாவலாகாது. ஈழத்து நாவல்கள் சிறப்புறாமைக்கு இதுவே காரணம் எனலாம். எண்ணிக்கைத் தொகையால் முன்னணியில் நின்று பலநாவல்களை எழுதியுள்ள சில எழுத்தாளர்களின் நாவல்கள் விவரண நாவல்களாக இருக்கின்றன என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மை. தெணியான் கையாண்ட உத்திக்கு இது தவிர்க்கமுடியாதது என வாதிட முடியாது. கதை முழுவதும் இரண்டே நாட்களில் இரண்டே இடங்களில் நடந்து முடிகின்ற அருள் சுப்பிரமணியத்தின் "அவர்களுக்கு வயதுவந்துவிட்டது நாவலில் ஆற்றோட்டம்போல வாசகர் கவனத்தைச் சிதறவிடாது உருவ அமைதியுடன் விவரணத்தைவிட சித்திரிப்பு முனைப்புப்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டலாம்.
"காத்திருப்பு நாவல் உளவியல் கலந்த பாலியல் நாவல் என்றால் 'கானலில் மான் சிக்மண்ட் பிரய்ட் கூறும் பாலியல் கலந்த உளவியல் நாவல் எனலாம். 'காத்திருப்பு நாவலின் ஆக்கத்திறன் விருத்தியில் ஓர் அடி ஏறிய தெணியான், 'கானலில் மானில் ஓர் அங்குலம் சறுக்கியுள்ளார் எனக் கூறத்தோன்றுகிறது. தெணியானின் நீண்ட எழுத்து அனுபவ முதிர்ச்சி, எழுத்தாற்றல், இலக்கியப் பரிச்சயம், மொழிவள ஆற்றல், சமூகப்பிரக்ஞை அணுகுமுறை, தர்க்கரீதியாக விடயங்களை விளக்கும் திறன், ஆக்க ஆளுமை ஆகியவை இந்நாவலைத் தலை தூக்கி நிற்க வைக்கிறது. கானலில் மானைக் கொண்டு தெணியானின் எழுத்தாற்றலைக் குறைத்து அளவிட முடியாது. உணி மையில் எழுத் தாளனின் ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பரிசோதனையே. பரிசோதனைகள் பல எழுத்தாளர்களே, காரணங்களினால் சில வேளைகளில் நெற்றிக் கண் பகுதியில் எதிர்பார்த்த வெற்றியைத் தருவ உங்களது நுT ல் விமர்சனம் தில்லை. தெணியான் கானலில் மான் இடம் பெறவேணர் டுமெனில், படைப்புப் பரிசோதனையில் பெற்ற நூலின் இருபிரதிகளை அனுப்பி பெறுபேறு, அடைந்த அனுபவங்கள் வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அவரது அடுத்த தலைசிறந்த நாவல் அனுப்பினால், நூல் பற்றிய உருவாக்கத்திற்கு கட்டியம் கூறுவ அறிமுகக்குறிப்பு புதிய நூலகம் தாகக்கொண்டு அவரது பணி சிறப்புற பகுதியில் இடம்பெறும். வாழ்த்துவோம். - ஆசிரியர்.
நற்றிக்கணி’விமர்சனம்
47

Page 25
தஞ்தைத் தடிதல்
மாட்டு வேடிக்கை
பண்டைத் தமிழகத்தின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்கியதுதான் மஞ்சுவிரட்டு அல்லது காளைவிரட்டு. வீரங்கொண்ட இளைஞர்கள் அடங்காத காளைகளை அடக்கித் தமது பலத்தை நிரூபித்துப் பரிசு பெறும் விளையாட்டாக அது விளங்கியது. அதன் எச்சங்களை இன்றும் தமிழகத்துக் கிராமங்களில் காணமுடிகின்றது. தைப்பொங்கலுக்குப் பின்னான நாட்களில் இவ்விளையாட்டுப்பற்றிய பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது. தென் தமிழகத்தில் அலங்கா நல்லூரில் அரசு ஆதரவுடன் இந்த வியைாட்டு இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து பட்டி தொட்டிகள் எல்லாம் மாட்டுவேடிக்கை தான் (அவ்வாறுதான் இப்போ சொல்கிறார்கள்). தைமாதத்தில் தொடங்கும் வேடிக்கை, மாசிச் சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
பெரும்பாலும் வார இறுதி நாட்களிலேயே இது நடைபெறுகிறது. சில ஊர்கள் இவ்விளையாட்டிற்குப் பிரசித்தி பெற்றவை. கால்நடையாகவும், இரு சக்கர வண்டிகளிலும், மோட்டார் வாகனங்களிலும், மக்கள் வந்து குவிகின்றனர். ஒரு மைதானம் அல்லது ஒரு நீண்ட தெருவே விளையாட்டுக் களம். திமில் உடைய பெரிய மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, ஜிகினாத் தூள் பூசப்பட்டு, மாலை மரியாதையுடன் அழைத்து வரப்படுகின்றன. ஒரு மாட்டிற்குக் குறைந்த பட்சம் பத்து மெய்க்காப்பாளர்கள். பாவம் கன்றுக் குட்டிகளும், பலமின்றி வற்றிப்போன மாடுகளும் இவ்வாறு அழைத்து வரப்படு கின்றன. ஒலி பெருக்கியில் மாடுகள் பற்றிய வீர வருணனைகள் நிகழும். மாட்டுச்சொந்தக்காரர் அதனைப் பட்டிக்கு அழைத்து வந்து மூக்கணாங்கயிற்றை அறுத்து விரட்டுவார். மாடு தலைதெறிக்க வெறிகொண்டு ஒடும். ஒடு பாதையில் கும்பலாக நிற்கும் இளைஞர்கள் அதனைத் துரத்தித் துரத்தி அதன் திமிலைப் பிடித்து அடக்க முயற்சிப்பர். சில மாடுகள் அடங்கிவிடுவதுண்டு. பெரும்பாலான மாடுகள் ஒரே ஒட்டம்தான். அவை உயிருக்குப் பயந்து ஓடுவது பார்க்கப் பரிதாபமாகவிருக்கும். அவ்வாறு ஒடும் மாடுகளின் மேனியில் வரிசையாக நிற்கும் வீரர்கள் ஆளுக்கொரு தர்ம அடிபோட அதை வாங்கிக் கொண்டே அவை வெடிவாலைக்கிழப்பிக்கொண்டு ஒடுவதுதான் பரிதாபம். அடங்காத மாடுகளின் சொந்தக்காரர் பெருமிதத்துடன் மாட்டை ஒட்டிச் செல்வார். மாட்டை அடக்கிய வீரர்களுக்கு கிராமங்களில் எல்லாம் துண்டு துக்கடா பரிசுகள்தான். விழுப்புண் படுவோரும் அதிகம்.
விவசாயத்தில் உயிர்நாடியாக விளங்கிய கால்நடைகள், அவற்றின் உற்பத்திப் பயன்பாடு, மதிப்பீடு, பண்பாடு ஆகியவற்றின் அடியாக உருவாகிய இந்த விளையாட்டு, பாரம்பரியத்தின் வேர்களைநினைவூட்டுவதான (அவற்றின் நோக்கங்களும், வழிமுறைகளும் மாறுபட்ட போதும்) சுவடுகளாகும்.
வமகேஸ்வரன், தஞ்சாவூர்.
48

拳》
(Brigasgoncir
ஏப்ரல் இதழ் கிடைத்தது. நண்பர் சிவத்தம்பியின் குரல் கேட்கிறது. வாழும் இலக்கிய சரித்திரத்தின் ஒசை அது. "
கட்டுரைகள் தரமாக இருக்கின்றன. ஞானத்தின் பெறுமதி அது. நான் சிறுகதையின் மாணவன். ஆனால் ‘உலகப் பொலிஸ் உத்தியோகம் என்ற வாகரைவாணனின் கவிதையைப் பலமுறை படித்தேன். அனைவரையும் சிந்திக்கவைப்பது அது.
ஞானத்தில் வரும் சிறுகதைகள் “உலகத்தரமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். அத்தகைய கதைகள் வராவிடில், சிறுகதைகளைப் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என நினைக்கிறேன். ஆகவே எழுத் தாளர்களும் ஞானத்திலிருந்து தமது கதைகள் திரும்பி வருவதைப் பொருட் படுத்தப்படாது. ஞானத்தின் கடைசிக் கவரில் உள்ளும் புறமும் விளம்பரங்கள் போடுவது தப்பில்லை. அதனால் ஞானத்தின் பணமுடை குறையும்.
- நந்தி, நல்லூர். ஞானம் 35வது இதழ் கிடைத்தது. கணக்கெடுப்பு என்ற ஆசிரியரின் தலையங்கம் மிகப் பொருத்தமான சிந்தனைகளை வேண்டி நிற்கிறது. நமது புத்தக வெளியீடும், விற்பனையும் இன்னும் நிறுவனப்படுத்தப்படாத உதிரிகளாகவே இருக்கின்றன.
. வெளியீட்டுத்துறையும் விற்பனைத் துறையும் இங்கு ஒழுங்குபடுத்தப் படுமேயானால் எழுதும் பணியும் இலகுவாகிவிடும். இது எனது அனுபவத்தின் முடிவு. ஏனெனில் இதுவரை ஏழு நூற்களைச் சொந்தச் செலவில் அச்சிட்டு, விற்பனை செய்து சிரமங்களை அனுபவித்தவன் என்ற அடிப்படையில் இதனைச்
சுட்டிக்காட்டினேன். - ஓட்டமாவடி அறபாத். ஞானத்தின் உள்ளடக்கத்தின் தரம் நாளுக்குநாள் உயர்வதையொட்டி பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இறுதி இதழில் திரு லெனின் மதிவானம் அவர்களது மலையக கலை இலக்கியம் தொடர்பான கட்டுரை மிகவும் வரவேற்கத்தக்கதுடன் சிந்திக்கவும் தூண்டுகிறது. அத்தோடு பேராசிரியர் கா .சிவத்தம்பி அவர்களது
நேர்காணல் இளையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
- சுதர்மமகாராஜன், கெங்கல்ல பேராசிரியர் கா . சிவத்தம்பியுடனான நேர்காணலை வாசிக்கும் போது அவரது பணிகள் என்னைப் புளகாங்கிதம் அடையச் செய்வதோடு அவரது பாதையில் தொடரவும் வழிகாட்டுகிறது. கலாநிதி துரை. மனோகரனது ‘எழுதத் தூண்டும் எண்ணங்கள்’ ஞானத்தைக் கையில் எடுத்தவுடன் அப்பக்கத்தைப் புரட்டச் செய்கிறது. சி. மெளனகுரு இதழ் 35ல் எழுதிய
கவிதை அனுபவிக்காமலேயே இன்பம் பெறச் செய்கிறது.
- எம்.பிரதீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
49

Page 26
ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் ஆரோக்கியமான சிந்தனையைத் தூண்டி விடுகின்றன. நூலாசிரியர்கள் விற்பனைக்காகத் தத்தளிக்கின்ற அதேவேளை வாசகர்கள் நல்ல நூல்களை எங்கே பெறலாம் என ஒடி அலைகிறார்கள். அவ்வப்போது இதுபற்றிப் பிரஸ் தாபிக்கப்பட்டபோதும் உருப்படியான செயன்முறை எதுவும் நிகழவில்லை என்பது வருந்தத்தக்கதே.
ஏப்ரல் இதழில் ருபராணி யோசப், செ. குனரத்தினம் ஆகியோரின் கவிதைகள் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. சொல்லப்படவேண்டிய பொருளை சொல்லவேண்டிய முறையில் சொல்கிறது ரூபராணி யோசப் அவர்களின் கவிதை, சீதனம் பெண் ஒடுக்குமுறையின் முதன்மையான அம்சங் களில் ஒன்று என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. இருப்பினும் தாங்கள் விடுகின்ற தவறை மறைக்க சீதனக் கொடுமையைத் துணைக்கு அழைத்துக் கொள்ளும் சில பெண்களை எம் அயலிலேயே பார்க்கிறோம். இந்நிலையை ருபராணி யோசப் அவர்கள் மிக அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். அவருக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுகள்.
போர் நடந்தபோது ஓடியவர்கள், அமைதி வந்தபோது வந்து நிற்கிறார் கள். மீண்டும் போர்ஏற்படுமா? ஏற்படுமென்றால் முன்னதாக ஓடி விடலாம் என எம்மில் ஒரு கூட்டம் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கவிஞர் செ. குணரத்தினத்தின் கவிதை அவர்களுக்கான ஒரு முன்னறிவிப்பாய் அமைகிறது. சிந்திப்பார்களா அவர்கள்? தக்கதருணத்தில் சொல்லிய கவிஞரைப் பாராட்டா மல் இருக்கமுடியவில்லை. பாராட்டுக்கள்.
- தருமை வதனன், வன்னி, ஏப்ரல் 2003 ஞானம், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நேர்கானலுடன் பரந்த விசாலமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது. லெனின் மதிவானத்தின் கட்டுரை மலையகப் படைப்புகள் பற்றிப் பல சிந்தனைக் கிளறல்களைத் தோற்றுவித்துள்ளது. மார்க்சியப் பார்வையில் அவரது கட்டுரை அவரது பாணியில் அமைந்துள்ளது. அவரது "ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் மலைப்பகம்’ எனும் கட்டுரையும் ஞானத்தில் மீள்பிரசுரம் செய்யப்படின் நலம். தப்பு தொலைக்காட்சி நாடகம் எமது சமுகத்தில் நிலவும் சாதி முரண்பாட்டைச் சுட்டிக் காட்டிட முயன்ற ஒரு நாடகமாகும். பிரதான முரண் பாடாக சித்திரிக்கப்படுகின்றதா? என்பது கேள்வியாகும். இவ்வகையான முயற்சிகள் வழிகாட்டப்பட்டு வளர்த்தெடுக்கப்படவேண்டியவைகள் ஆகும், யாழ்ப்பான சமூகத்திலும் கூட இவ்வாறான பல முயற்சிகள் நாவலாக
U få
 

ġiċi 6) 'irt ! ஓடி வந்து உள்நுழைந்து கவி ー "りTó எதையோ தேடு தேடலுக்குக் காலமில்லை; பையினுள் கைவிடு அகப்பட்டதில் ஒன்றிரண்டு நூலெடு, தேர்வு செப்பத் தேவையில்லை பிரித்துப் படி, படித்துப் பதி, குடும்பமாய் வந்திருந்தால் பெண்குரலுக்கும் பஞ்சமில்லை! முன்னோட்டமாக எதையோ சொல் - கடவுளே! அதுவும் உன்னதாக இருக்கட்டும்!
கல்விதை எழுதுபவர்களை பிழையின்றி, தெளிவாக எழுதி அனுப்பும்படி சொல் - ஆனால் மாவை-வரோதயன்
அனுப்பப்படும் எதையும் படித்துப் பார்க்காதே!
கையெழுத்து வைத்துக் காசெடு கடுகதிக்கு ஒடு! கம்பெடுத்தவன் எல்லாம் கோலோச்சும் ஜனநாயகத்தில் உன்னதும் கவியரசு தானர். ஆளத் தெரியாதவன் கையில் "கவிதைக் கவசம் சிறைப்பட்ட வரை அது
மணி குடமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! தட்டிக் கேட்பதற்கு நமக்கென்ன தார்மீகம்!
என்னே? இந்நோய் போனும் அறியாது, யார்க்கும் தெரியாது ஊரேன உருக்கி உயிர் கொப்ப நினைக்கிறதே முப்போதும் உன் நினைப்பில் மூழ்கிப்போய் இருப்பேனென்று எப்போதும் நினைத்ததில்லை. அச்செயலும் பிடித்ததில்லை, சத்தியமாய், இந்நோய்க்கு மருந்தென்று சத்திய சோதனையை படித்தேன். பத்தி பத்தியாய் காந்தியை பார்த்ததும் காந்தியாய் உண்னையே
a) கற்பனை செய்தது. இந்நோய்.

Page 27
தீயும் தெளிவு
தீயை வளர்த்தவரே - இன்று தீயை அணைக்க நீருற்ற வந்தார். தீயைப் புகழ்ந்தவர்கள் - இன்று தீயின் கனவில் வெறுப்படைந்தார் தீக்குள் விரலைவிட்டோர் - வெந்: தீயின் கொடுமை தெளிந்து கொள் தீக்கரம் எணர்திசையைச் - கட்டுத் தின்பதைக் கண்டோர் பதறுகிறார்
தீ பற்றாச் சட்டையுடன் - வானின் திரிபவர் "தீப்க்கு நெய் விடுவ".ெ தீ மூழவே. அயலைக் - கொள்ளி செருகிடச் சொல்வி உசுப்புகிறார்! தீயின் குணமறியார் - எங்கும் சிதைகள் பெருகவே ஆசைகொணர் தீயிலே. தீபமொன்றை - ஏற்றித் திக்கிருள் போக்குவோர் தன் ஜெ
●5.6凰血 4}5 (Y) ஆ
6) மின்துக்கு வ
5 it is
f
இத்தனை
|-
தத்து மதிப்
கூட்டிக் கழி

r
গ্লা"
Trī
s
i
- S R DÉSATTg) r7rT съ S S —
سے ٹاT
• Lanfri.
2யிப்பார்.
சீலன் - நல்லூர்
ாழ்க்கைபும் மாப்ந்த மனங்களில்
"T - " 1று இன்பம் வழங்கு திசைகளின் ாட்டைத்தைச் சாப்த்திடு. பர் மீண்டும் அரியண்ை செப் தனி
ஆணவ வேறுப்பாட்
பூமரம் ஊன்றி. நம் அபல்ை மரபைப்டாப்
TI, i i i, jEF. Trī Frī ஏக்கத்தை ஏன் தகர்த்தாப்' ர்டினோம் எர்ரரிற் சிகரங்கள் ஏறினோம். ஏன் மறந்தப்"
, , த்தெம் கனக்கினைத் தீர்த்துவை கூட இருந்தருள்ாப்.