கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.06

Page 1


Page 2
ਅ
"ஞானம் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றவை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்குடனர் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் நடத்துகிறது. நிபந்தனைகள் 1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 08-06-2003 அன்று நாற்பது வயதுக்கு
உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறு கதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேளர்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா ஐயாயிரம் பரிசாக வழங்கப்படும். 5) பரிசுபெறும் சிறுகதைத் தொகுதி ஞானம் பதிப்பக வெளியீடாக நூலுருவம் பெறும். இரணர் டாவது பதிப் பசினர் பதிப் புரிமை கதாசிரியருக்கு வழங்கப்படும் )ே பரிசுக்குரிய தொகுதியை, ஞானம் ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஓர் எழுத்தாளரும் இனைந்து தேர்ந்தெடுப்பர். அவர் களின் முடிவே இறுதியானது. 7) போட்டி முடிவு திகதி 30-6-2003 அதன்பின்னர் வந்துசேரும் படைப்பு கள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் ஞானம்' 1977 பேராதனை வீதி, கண் டி என்ற விலாசத்துக்கு பதிவுத் தபாலில் அணுப் பரிவைக்கப்பட வேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் "ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி' எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். 9) நிபந்தனைக்கு உட்படாத தொகுப் புகா போட்டியில் சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது.
نج
 

ஆசிரியர்: தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்கள்: நிக்கோ நா.ஆனந்தன்
கனணி அமைப்பு .ெசர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி, GBT.G.I. -09-478570 (Office)
08-23.4755 (Res) Fax - 08-23.4755
E-Mail
Uழாanam_magazineடுyah 00.com
உள்ளே.
நேர் காணல் O9
சிறுகதை afé is 5......................................
சுதர்ம மகாராஜன் பொட்டு படி முல்லைமணி
o
I
கட்டுரைகள் புலம்பெயர் இலக்கியம் டி. சிதம்பரநாதன் இரவிேப் எனது எழுத்துலகம் . மொழிவரதன்
கட்டுரைக்குப் பதிலி. சாரல் நாடன்
கவிதைகள்
I
d
எழுதுகின்ற வெண்கொக்கு. 28 சோனலுக்கிளி இரைச்சலுள் மெளனம் . 30 சி.மெளனகுரு வீர சுதந்திரம் விளைக!. 35 தனி சஜீதரன் நாங்கள் பைத்தியங்கள் . 39 செல்.சுதர்சன்
மனச்சாட்சியினி உறுத்தல். 39 பொற்கோ உலகாதிபதி - உயிர்நேசம் . 4T) வேலாயுதம் தினகரன் &ig4g LiLi idi! •ılı...ılırırırı...ı.ı...ılı................................................................... கவிஞர் ஏ.இக்பால்
43
55 riit rrrrrrrrrrrrrrrrr... 57 த.ஜெயசீலன்
ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் -05.26 நேற்றைய கலைஞர்கள். 14յ
எழுதத் தூண்டும் என்னங்கள் 40 வாசகள் பேசுகிறாள். = al 1E
அட்டைப்படம் - கிக்கோ
Celfyrrarth, ger 2003
3)

Page 3
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
لر . .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
கல்விக்கூடங்களில் கலை இலக்கிய உணர்வை வளர்ப்போம்
இன்று கலை இலக்கியத்துறை சார்ந்த கற்கை நெறிகள் கல்விக் கூடங்களில் விரும்பிப் படிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்படுவதும் குறைவாகவே உள்ளன. உயர்வகுப்புகளில் ஏனைய துறைகளுக்கு உகந்தவர்களல்லர் என ஒதுக்கப்பட்டவர்களே கலை இலக்கியப் பாடங் களைக் கற்கிறார்கள். பாடநெறிகளில் கடைசித் தேர்வாகவே இவை உள்ளன. பெரும்பானிமையான பெற்றோரினி விருப்பமும், பல ஆசிரியர்களின் வழிகாட்டலும் ஆலோசனையும்கூட இதற்குச் சார் பாகவே அமைகின்றன. யதார்த்தமாகச் சொல்வதாயின், சமூகத்தினரி டையே கலை இலக்கியத் துறைசார்ந்த கற்கை நெறிகளில் நாட்டம் குறைந்துள்ளது.
சமுதாய மேம்பாட்டிற்ரும் தனிமனித ஆத்மபலத்திற்ரும் கலை இலக்கியத்தின் பங்கினையும் பயன்பாட்டினையும் சமூகத்தால் சரிவரப்புரிந்து கொள்ளப்படவில்லை. ஆழ்ந்து நோக்குகையில் கலை இலக்கியம் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கிறது. வாழ்வியலை விளக்கு கிறது. கம்பனும் வள்ளுவனும் படைத்த இலக்கியங்கள் வாழ்க்கையின் விளக்கங்களாக அமைந்துள்ளன. பாரதியும் கண்ணதாசனும் பாடிய பாடல்கள் வாழ்வியலுக்கு அர்த்தம் கற்பிக்கின்றன. புனைகதை இலக்கியத்தில் சிறுகதை சாளர தரிசனமாக வாழ்க்கையை நோக்கு கிறது. நாவல் முற்று முழுதாக வாழ்வியலை ஆய்வு செய்கின்றது. “மனிதன் சம்பந்தமான எதுவுமே இலக்கியத்திற்கு புறம்பானதல்ல” என்கிறார் இலக்கிய மாமேதை பார்க்ஸிம் கார்க்கி, மனிதனை மானிட t 20o3 4Dܗrrb, sܗrܘG
 

நேயம் உள்ள மனிதனாக உருவாக்குவது கலை இலக்கியம்.
எமது கற்கை நெறிகளும் கல்விக் கூடங்களும் இதனை உற்று உணரவில்லை. ஆகவேதான் இன்று கல்வி நிறுவனங்கள் நற்பிரஜை களை உருவாக்குவதில்லை எனக் கருதப்படுகின்றது. கல்விக்கூடங்கள் தொழில் வல்லுனர்களையும், பொருள் தேடும் வணிக மனப்பான்மை உள்ளவர்களையுமே உருவாக்குகின்றன. இவர்களுக்கும் சமூகத்திற்கும் அத்தியந்த உறவோ ஆத்மார்த்தமான பிணைப்போ இருப்பதில்லை. யந்திரமயமான பிணைப்பு வாழ்க்கையையே யந்திரமயமாக்கிவிடு கிறது. பாரதி கூறியது போல "வேடிக்கை மனிதர்களாகவே நம்மில் பலர் வாழ்கிறோம்.
கல்வித்துறையில் - கற்கை நெறியில் உருவாகியுள்ள இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். இதனைக் கல்வித்திட்டங் களைத் தீட்டுபவர்கள், அதற்கான தீர்மானங்களை எடுப்பவர்கள், செயற்படுத்துபவர்கள் சற்று ஊன்றிச் சிந்திக்க வேண்டும்.
இதற்கு, கலை இலக்கியவாதிகளின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. இலக்கியம் வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் படைப்புக்கள் படைக்கப்பட வேண்டும்; முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
“தேசங்களை உருவாக்குபவர்கள் கவிஞர்களும் கலைஞர் களும் தான். வணிகர்களும் அரசியல் வாதிகளுமல்ல” என்று உலகப் புகழ் பெற்ற கலைஞானி ஆனந்தகுமாரசாமி அவர்கள் கூறியதை அர்த்தபுஷ்டியுடன் சமூகத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும்.
கல்விக் கூடங்களில் விஞ்ஞான மாணவர்கள் உட்பட உயர் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியச் செயல்அமர்வுகள், இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவேண்டும். கலை இலக்கியச் சஞ்சிகைகள் இப்பணியினைச் செய்யலாம்.
ஆரவாரமின்றித் தனிபணியைச் செய்துவரும் “ஞானம்’ நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில், புதிய செயற்திட்டமாக முனைப்புடன் இதனை முன்னெடுத்துச் செல்ல விழைகிறது. வாசகர்கள் தொடர்ந்து நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பார்களாக,
/ーーーーーーーーーーーーーーーーーーーー N ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி :
WWW.geocities.com\gnanam magazine محصے -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- - ܠ
(ஞானம், ஜின் 2003 5)

Page 4
65)G 2-65.
சுதர்ம மகாராஜன், கெங்கல்ல.
னி னைச் சூழவுள் ள மனிதக் கூட்டத்திலிருந்து விலகி, மனித நடமாட்டமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்கவேண்டும்போல், அவளது உள்மனது தனிமை தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணை களிலிருந்து தப்புவதற்காக தனிமைக் குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சினைகளின் இறுதித் தீர்வு அதிஷ்டவசமாக அவளுக்குத் தனிமையில்தான் கிடைத் திருக்கிறது. யாருடைய தலையீடு களையும் பொருட்படுத்தாது, ஒரு கணத்தில் குற்றவாளியாகவும், இன்னு மொரு கணத்தில் குற்றம் சாட்டு பவளாகவும், சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று, தன் மனத்தவிப்புகளுக்கான பிரச் சினைகளைத் தீர்த்துக்கொள்ளத் தனிமை உதவியாய் இருந்திருக்கிறது. தனது இருபத்தியாறாவது வயதில் முதற்காதல், சாதியாலும், பணத்தாலும் முறித்துக்கொண்டு விலகியபோது, உலகமே வெறுத்து, துவண்டு வீழ்ந்திருந்தபோது தனிமை தான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில் அவன் தன்னைப் பயன்படுத்தி, ஆசைகள் கொடுத்து, இறுதியாய் எதிர்பார்ப்புக்களைத் தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்ட போது, அவள் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப்போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலை யில் ஒதுங்கும் தவளையைப்போல், GSBrrernb sak 2003
வீட்டின் ஒரு அறையில் அடங்கி, குடும்பத்தின் வசவுகளிலிருந்தும், சமூ கத்துப் பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டாள். அந்த ஒதுங் கலிலான தனிமை, அவளை உசுப்பி விட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு, அதிஷ்ட வசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து துக்கமானா லும் தனிமை, மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மனவுணர்வுகளைத் தனக் குள்ளேயே பகிர்ந்து, உள்வாங்கிக் கொள்ளப் பழகிக்கொண்டாள்.
இன்றும் அப் படித் தான் தனிமை தேவைப்படுகிறது. உள்ளத் துள் உருண்டு கொண்டிருக்கும், இனம் காணமுடியாத கனக்கும் உருண்டையை உடைக்க மனம் தனிமையைத்தான் தேடுகின்றது. தன் னைச் சுற்றியிருக்கும் கூட்டம் தானாய்க் கலையும் மட்டும் காத்திருக்க வேண்டு மென்று அவளுக்குத் தோன்றியது.
பார்வைக்கு நேரே தெரியும் யன்னலினூடாக வெளியை நோக் கினாள். அங்குமிங்கும் நடமாடும் சனத்துக்கிடையே வெள்ளைக் கொடி களாலான அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் மனம் கனத்தது.
நான்கு வருடங்கள் தட்டிக் கழித்தலின் பின், தன் குடும்ப நெருக் கடியில் நசிந்து, மனதின் விருப்பம் கூட எண்ணாது குமாருக்கு கழுத்தை நீட்டியபோது, பல அலங்காரங்களோ
O
 
 

டும் மேள முழக்கங்களோடும், பல பெரி யோர் ஆசீர்வாதங்களோடும்தான் கழுத்தில் தாலி ஏறியது. கழுத்தில் தாலி கனக்க, உடல் மேல் அவன் தேகம் கணக்க, சாராய நெடியுடனான முதலிரவின் வேதனை தனிமையைத் தான் தேடியது. தேகங்களின் உணர்வுப் பகிர்தலில் அவனது சுய நலம், அவளைத் தனிமையில் கண் னிர் வடிக்க வைத்தது. எல்லை மீறிய போதையுடனான அவனது செயற் பாடுகள் "போகப் போகச் சரியாகி விடும் என்கிற பெரியோரின் வார்த்தை களுக்கு மதிப்பளித்துச் சகித்துக் கொண்டாள்.
வாரத்தில் நான்கு நாட்கள் இரவில் அவனது எல்லை மீறிய குடி போதையும், அதன் பின்னாலான பலாத்காரமான புணர்தலும், தவிர்த்து ஒதுங்கிய போதான அடியையும், உதையையும் அவள் தனிமையில் சகித்துக் கொண்டாள்.
இரவுகள் என்றாலே பயம். எங்காவது ஒடி ஒதுங்கிக்கொள்ள வேண்டுமென்ற அவளது தனிமையான தீர்வினை, வயிற்றில் உருப்பெற்றிருந்த கருவும், அதனது சுகமான வருடலும் மெய்மறக்கச் செய்தன.
தனது இரண்டாவது கரு, குடிபோதையில் அவன் உதைத்த உதையால் கலைந்து போனபோது தளர்ந்த வாழ்க்கையின் பிடிப்பு, தன் இரண்டு வயது மூத்த பிள்ளையின் மழலை மொழியின் தனிமையில் மீண்டும் பற்றிக் கொண்டது.
போகப் போக தேகத்தின்
இச்சை இறந்துபோய், ஒவ்வொரு
இரவும் அவனுக்கு ஒரு பிணமாய் புணர்தலில் ஈடுகொடுத்தாள். குடி போதையின் இயலாமையும் அதனா லான நரம்பின் வீரியக் குறைவும் அவனைப் பாதியிலேயே சோர்வடை
யச் செய்தன. அவனது சோர்வும் இயலாமையும், அவளில் சந்தேகக் கண் கொள்ளவைத்தது. சந்தேகத் தால் ஊர்கூட்டி வார்த்தைகளால் அவன் துகிலுரித்தான். அவளது மானம் காக்க கிருஷ்ணர்கள் வர வில்லை. பதிலாகத் தனிமையில் தமக் கிடையே கோடுபோட்டுப் பிள்ளை யோடு முடங்கிக்கொண்டாள்.
அவள் கணவனை உதறிய சமூகம் அவளைப் பரிதாபமாய் விமர் சனம் பண்ணியது. ஆனால் அவனிட மிருந்து விலகிவிடாது அவளைக் கலா சாரத்தால் நசுக்கியது.
தன் பிள்ளையின் எதிர்காலம் நினைத்து, திருமணமாகி ஐந்து வருடங்களின் பின் முதன் முதலாய் கணவனின் எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்றாள். எப்போதும் போல் தனிமைதான் அவளுக்கு அந்தத் தீர்வைக் கொடுத்தது. ஆரம் பத்தில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய் தவன், பின் ஏனோ பேசாது விட்டுவிட் டான்.
அவள் உழைப்பின் சந் தோஷத்தைப் பிள்ளையோடு தனிமை யில் அனுபவித்தாள். சந்தோஷமாய் வேலைவிட்டு வீடு திரும்பிய ஒரு பொழுதில்தான், அவன் விபத்தில் இறந்த செய்தி கிடைத்தது. ஏனோ மனம் பதறவில்லை. நிதானமாய்
(ஞானம், வின் 2003

Page 5
"ஹொஸ்பிட்டலி செல்ல அவளுக்கு முன்னமேயே அவன் உறவுகள் கூட்டம் கூடியிருந்தது.
வீடு, திருமணத்திற்குப் பின் அவனது மரணத்தில் சனநெரிசலால் நிறைந்து காணப்படுகிறது. தனிமை யையே நாடிப் பழகியவஞக்கு அதிகளவான சன நடமாட்டம் தொந் தரவைக் கொடுத்தது. ஒரு அறைக் குள்ளேயே அடங்கியவளை உற வினர் கூட்டம் இழுத்து வந்து சவத் தினருகே குந்தவைத்து வேடிக்கை பார்த்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, ஒன்றும் செய்வதறி யாது மரக்கட்டையாய் அவளும் வேடிக்கை பார்த்தாள்.
இன்று இரண்டாவது நாள். இன்னும் சிறிது நேரத்தில் அவனது இறுதிப்பயணம். அவள் மனம் தவித் தது. ஆவல் கொண்டது. எதற்காக வென்று இனம்காண முடியாது தடு மாறியது. பிள்ளையின் தலையை வருடியவாறே உயிரற்ற அவனது முகத்தைப் பார்த்தாள். போதை வெறி யில் வாயில் எச்சில் வடித்தப்படி, புணரத்துடிக்கும் அந்த விகாரமான முகத்தைவிட உயிரற்ற உப்பிய முகம் சற்று ஆறுதலைக்கொடுத்தது.
மரண வீட்டின் கூட்டம் சல சலத்தது. அவளைப் பெண்கள் கூட்டம் தனியறையில் அமர்த்தியது. திருமணத் திற்குப் பின் மீண்டும் ஒரு அலங்காரம். அவள் நினைவுகள் பின்நோக்கிச் சென்றன. அறையிலுள்ள சிறு யன்னலினுடாக பார்வையைச் செலுத் தினாள். அவனுக்கான இறுதி மரி யாதை செலுத்துவதில் குழுமியிருந்த கூட்டம் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்மனம் வெளிக் காட்ட இயலாத ஒரு உணர்வால் நிறைந்திருந்தாலும், அதன் கனம் முன்னிலும் பார்க்கக் குறைவதை (ஞானம் 5edir 2003
உணர்ந்தாள். அக்கூட்டத்தினிடையே தன் பிள்ளையின் முகம் கண்டு அவள் மனம் பதறியது. கண்கள் நீர்த்திரை யால் வெளிக்காட்சிகளை மங்கலாக்கியது. இப்போது அவளுக்கான நேரம் . ஒரு சில சடங்குகளை முடித்து, இரு பெண்கள் கைப்பிடித்து சவத்தினருகே புரட்டிப்போட்ட ஒரு உரலில் அவளை அமர வைத்தார் கள். அவர்களது முகத்தில் அப்பி யிருந்த சோகம் கண்டு அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனக்குள் இல் லாத ஒன்று அவர்களுள் வெளிப்படு வதில் இருந்த ஹாஸ்யத்தை மனதுக் குள்ளேயே ரசித்தாள். சவத்துக்கு முதுகு காட்டி அமர்ந்ததில் மனதுக்குச் சற்று ஆறுதலாய் இருந்தது.
நேரம் போகப் போக அவள்
மனது இருப்புக் கொள்ளவில்லை.
சடங்குகளிலான சங்கடத்தைத் தவிர்க்கத் தலையைக் கவிழ்த்து நிலம் பார்த்தாள். அவளைச் சுற்றியிருந்த பெண்களின் கால்கள்தான் கண்ணில் பட்டன. அவை தன் கால்களிலும் பார்க்க நேர்த்தியாக இருப்பதைப்போல் தோன்றியது. திடீரென்று பெண்களின் கால்களின் இடமாற்றம் அவளை உசுப்பியது.
ஒரு சீலையின் மறைவில் இரு பெண்களது உதவியோடு அவள் அணிகலன்கள் கழன்று வீழ்ந்தன.
நெற்றிப்பொட்டு துடைக்கப்பட்டது.
இறுதியில் ஒரு வெட்டவெளி அமைதி
யில், அவளது கழுத்தில் கனத்துக்
கொண்டிருந்த அது அறுந்து வீழ்ந்தது. கண்களிலிருந்து இரு சொட்டுக் கண் ணிர்த் துளிகள் வழிந்து கன்னத்தில் உருண்டு ஓடின.
ஏதோ ஒரு இடுக்குப் பிடியி லிருந்து விடுபட்டதைப் போல் நெஞ்சு நிமிர்த்திப் பலமாய் ஒரு பெருமூச்சு விட்டாள்.
8D

GLUTIrarfuLIňr கா.சிவத்தம்பி
சந்திப்பு : தி.ஞானசேகரன்
(s உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். ཡོད
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
* தலைசிறந்த விமர்சகர்.
* தமிழ்நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந் தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர்.
* வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப்
.பணிபுரிந்தவர் ܢܠ
(3)
தி.ஞர். உங்களது குடும்பப் பாரம்பரியத்தில் இருந்து ஆளுமையின் சிலகூறுகள் உங்களுக்கு வந்திருப்பதாகக் கூறினீர்களே. முற்போக்குப் பார்வையில், பாரம்பரியத்தில் இருந்து இவையெல்லாம் வந்தன என்பதை 6յfն &(լpւգսկլDո? கா.சி. : அது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக்கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி.
الصر
நான் சிறுவனாகக் கரவெட்டியில் வளரும்போது அங்கேயுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளைக் காண்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்களுடைய சமூகம் ‘கரையார் சமூகம். சிலர் 'மீனவர்கள் என்று சொல்வார்கள். கரையார் என்று சொல்வது நல்லதுபோல எனக்குப்படுகிறது. கரையார் சமூகத்தைப்பற்றி கரவெட்டியில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது தாழ்த்தப்பட்ட சமூகம் (ஞானம் இன் 2003 9)

Page 6
அல்ல. ஆனால் உயர்ந்ததும் அல்ல. வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் அது உயர்ந்ததாகக் கருதப்படும். யாழ்ப்பாணத்தில் கொக்குவில், தெல்லிப்பளை போன்ற இடங்களில் அது தாழ்ந்ததாகக் கருதப்படுவதே இல்லை. கரவெட்டியில் அந்தச் சமூகத்திற்கு ஒரு பொருளாதாரப்பிடி - ஒரு Economic Hold இல்லை. அதனால் அவர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். உயர்ந்தவர்களாகக் கருதப்படவில்லை. ஆனால் எந்தவிதச் சமூகத் தடை நிலையும் இல்லாத ஒரு நிலைமை. வேளாளருடன் அவர்கள் ஒன்றாகக் கருதப்படுவதில்லை. இதனை அவதானிக்கின்ற தன்மை எனக்கு இருந்தது; அது முக்கியமானது. மற்றது, நான் வளர்ந்து வந்தபோது சமூக ஏற்றத்தாழ்வுகள் காரண மாகக் காணப்படுகிற சமூக அநீதிகளைக் காண்கிற வாய்ப்பு இருந்தது. நான் மார்க்ஸியத்தில் ஈடுபடவேண்டி வந்ததற்கான ஒரு நிகழ்வினைச் சொல்கி றேன். அதை நான் என் சீவியத்தில் மறக்கவேமாட்டேன். எனக்குப் 14,15 வயதில், நாங்கள் - நண்பர்கள் நெல்லியடிச் சந்திக்குச் சென்றுவருவோம். அங்கு பலரும் வருவார்கள். இப்படியிருக்கும்போது எங்களுடன் படித்து, படிப் பெல்லாவற்றையும் விட்டு சண்டித்தனமாகத் திரிந்த ஒருவன் இருந்தான். அவனுக்கு காங்கேயன் என்று பெயர். அவன் ஒருநாள் தெருவில் எதிர்ப்பட்டு “சிவத்தம்பி வா, நீ இண்டைக்கு என்னோட வாறாய்” என்று என்னை அழைத் தான். அவனுக்கு நல்ல வெறி. அவனை என்னால் தவிர்க்கவும் முடியவில்லை. என்னுடைய வீட்டைத் தாண்டித்தான் அவன் செல்லவும் வேண்டியிருந்தது. நாங்கள் நடந்து வரும்பொழுது எதிரே பனையேறுகின்ற நளச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுதுதான் தொழில் முடித்துக் குளித்துவிட்டு நின்றார் போலத் தெரிந்தது. அது பொழுது படும் மைம்மல் நேரம்.
"கள்ளிருக்கோ?” என்று காங்கேயன் அண்ணை கேட்டான். "தம்பி, இப்பதான் எல்லாம் வித்து முடிஞ்சுது. என்னட்டை இல்லை ராசா." என்று அவர் பதில் சொன்னார்.
"என்ன பகிடி விடுகிறியோ?” என்று கேட்டுக்கொண்டே, காங்கேயன் நேராக அந்தத் தொழிலாளியின் வீட்டினுள் சென்றான். வடமராட்சியில் ஒரு வழக்கம் உண்டு. இரவுச் சாப்பாட்டை முற்றத்தில் வைத்துச் சாப்பிடுவார்கள். இதில் சாதி குறைந்தது கூடியது என்றில்லை. நிலச்சுவாந்தர்கள் - உடையார் - மணியகாரர் போன்றவர்களைத் தவிர, இந்த வழக்கம் வேளாளரிலும் இருக்கிறது. கோவியரிலும் இருக்கிறது. கரையார் ஆட்களிலும் இருக்கிறது. அந்தத் தொழிலாளியின் மனைவி சாப்பிடுவதற்கு ஆயத்தமாக முற்றத்தில் சாப்பாட்டைக் கொணர்ந்து வைத்திருந்தாள். காங்கேயன் அவர்களது வீட்டினுள் சென்று எல்லா இடங்களிலும் ஆராய்ந்தான். நான் அவனது கையைப் பிடித்து "வா போவோம்” என்று இழுத்தேன். அவன் என்னை உதறிவிட்டு அங்கிருந்த சோற்றுப்பானையையும், கறிச்சட்டியையும் நிலத்திலே போட்டு உடைத்தான். அந்த பெண் பெரிதாகக் குழறி அழுதாள். நான் உண்மையாகச் சொல்லுகிறேன். அந்த ஏக்கத்திலிருந்து - அதனுடைய தாக்கத்திலிருந்து நான் இன்றைக்கும் விடுபடவில்லை. அந்தத் தொழிலாளி என்னைப்பார்த்து "வாத்தியாற்றை மேன், அவரைப் பிடியுங்கோ” என்று கெஞ்சியது எனது மனதைப் பிழிந்தது. நான் 6T660T Gayuu(plgub? That was the biggest shock of my life. Gerraris, star 2003 10D

இச்சம்பவம் நடந்த காலத்தில் எங்களுடைய ஊரில் இடதுசாரியாக இருந்த வி. மகாலிங்கம் என்பவரது வீட்டில் தர்மகுலசிங்கம் - ஜெயம் வந்து மார்க்ஸிய வகுப்பு நடத்தினார். இரண்டாவது கிழமை நான் அந்த வகுப்புக்குச் சென்றேன். அங்கு பல விடயங்கள், ஒடுக்குமுறை போன்ற சொற்கள் எனக்குத் தெரியவந்தன. இரண்டு வகுப்புகளுக்குத்தான் நான் சென்றேன். அந்த வகுப்புகள் பின்னர் ஒழுங்காக நடைபெறவில்லை. ஐந்தாறு பேர்தான் வகுப்பில் இருந்ததாக ஞாபகம்.
அதன் பிறகு பி.கந்தையா தேர்தலில் நின்றார். 47ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது நான் எஸ்.எஸ்.ஸி.கூடப் படிக்கவில்லை. தேர்தலில் கத்துவதற்காக நான் சென்றேன். அதிலிருந்து பி.கந்தையாவுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் படித்தது இன்னொரு விதம். கொம்யூனிஸ்ட் என்பதற்காக மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. கரவெட்டியான் என்பதற் காகத்தான் எல்லோரும் வாக்களித்தார்கள். அவர் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, "என்னை எல்லோரும் கொம்யூனிஸ்ட் என்று சொல் கிறார்கள். தெய்வத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தில் 'தத் பிரஹற்மம் என்றுதான் சொல்லப்படுகிறது. அதன் கருத்து "அது பிரம்மம்' என்பது. சமஸ்கிருதத்தில் 'அது' என்றுதான் சொல்லப்படுகிறது. "அவன் என்று சொல்லப்படவில்லை” என்று பேசினார். அதனைக் கேட்டபோது, என்ன இந்த மனுஷன் தேர்தல் கூட்டத்தில் இதையெல்லாம் பேசுகிறாரே என்று சிரிப்புத்தான் வந்தது. அவர் எல்லோரையும் தாறுமாறாக ஏசுவார். அவரிடம் நான் ஏச்சுவாங்கியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல எம்.ஸி.சுப்பிர மணியத்தைக்கூட அவர் ஒரு தடவை "போடா” என்று ஏசினார். அவருக்கு தேர்தல் வேலை செய்பவர்களையே அவர் ஏசுவார். அவரிடம் நான் வரன்முறை யாகப் படிக்கவில்லை. அவரிடம் ஏதாவது கேட்டால், ஆறுதலாக இருக்கும் போது பதில் கூறுவார். அதனாலும் எனக்கு மார்க்ஸியம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. அவர் பின்னர் கொழும்புக்கு வந்தபின், சனிக்கிழமைகளில் அவரைப் போய்ச் சந்தித்து உரையாடுவேன்.
நான் ஸாகிறாவில் படிக்கும்போது, எச்.எம்.பி.முஹைதீன் என்ற ஒரு நண்பர் கிடைத்தார். அவர் ஒரு பெரிய கம்யூனிஸ்ட், முக்கியமான ஆள். மிகவும் கெட்டிக்காரர். அவராலேதான் எனக்குக் கட்சித்தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு படிப்படியாக கைலாசபதியின் உறவு வந்தது. நானும் கைலாசபதியும் இலக்கியத்தில் மார்க்ஸியம் பற்றிப் பேசத்தொடங்கினோம். அங்கிருந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்குப் போனோம். என்னுடைய மார்க்ஸியத்தின் தோற்றம் வளர்ச்சி இப்படியாகத்தான் இருந்தது. பல்கலைகழகத் தில் அதைப்பற்றிச் சிறிது தெளிவுபெற்றேன்.
மார்க்ஸியத்தை எப்படிப் பார்ப்பது, அதனை ஒரு Methodology ஆக எப்படிப் பயன்படுத்துவது என்ற தெளிவு தொம்ஸனுடன் வேலை செய்தபோது தான் எனக்கு ஏற்பட்டது.
மற்றது நண்பர்களுடன் நான் செய்த விவாதங்கள். குமாரி ஜெய வர்த்தன, நியூட்டன் குணசிங்க போன்ற மார்க்ஸியத்தின் முக்கியமானவர் களுடன் அளவளாவியமை, அவர்களுடன் செய்த விவாதங்கள் போன்றவற்றி னில் இருந்து நான் மார்க்ஸியத்தில் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். பிற்காலத் (ஞானம், இன் 2003 1D

Page 7
தில் அவைத்திலிங்கத்துடன் ஏற்பட்ட நட்பு - அவர் மார்க்ஸியம் பற்றி அதிகம் பேசமாட்டார். ஆனாலும் ஒரு விஷயத்தை எப்படிப்பார்க்கவேண்டும் என்பதில் அவரிடம் நிறைய ஆளுமை இருந்தது. என்னுடைய மார்க்ஸியப்போக்கிற்கு இப்படியான தடயங்கள் மிக முக்கியமானதாக அமைந்தன.
தி.ஞா. : அப்படியானால் உங்களுடைய ஆளுமை, பாரம்பரியத்தில் இருந்து வந்ததோடு மார்க்ஸியப்பார்வையிலும் சேர்ந்துதான் வந்தது என்று சொல்கிறீர்களா? கா.சி.: ஆமாம்; அது உண்மை. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் நான் பாரம்பரியத்தில் இருந்தும் விடுபடமுடியவில்லை. என்னில் உள்ள பிரச்சினையே அதுதான். ஏனென்றால் என்னுடைய பாரம்பரியம் எனக்கொரு சுமையாக அமையவில்லை. சிலருடைய வாழ்க்கையில் இளமைக்கால நினைவுகள் சுமையாக மாறமுடியும். அவர்கள் ஏதாவது பாராபட்சமான வாழ்க் கைக்கு உட்பட்டு அல்லது வேறு ஏதாவது சிக்கல்களுக்குள் அகப்பட்டிருந்தால், அது அவர்களுக்கு ஒரு தண்டனையாக அமையும். அதை அவர்கள் திரும்பிப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியிருக்கவில்லை. அதனால் எல்லாவற்றையும் பார்க்கவேண்டிய தேவைகளை மறக்காத ஒருவனாக நானிருக்கிறேன் என்று சொல்லலாம்.
பிற்காலத்தில், பண்பாட்டியல் கல்வி (Cultural Studies) என்றொரு பாடம் வந்தது. அதனை Richard Hoggart என்பவர் தொடக்கிவைத்தார். அவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். Uses of Literacy 616ip ju6)LDIT60T troods) 6TQpisu6 ft. 96f Centre of comtomparary cultural Studies என்ற நிறுவனத்தில், நாவல்கள், ஊடக நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு சமூகவரலாற்று விமர்சனம் செய்தவர். இலக்கியங் களுக்கும் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்பு, ஊடகங்களுக்கும் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் பொதுப்படையாக ஆராய்ந்தார். அவருடைய பிரிவில் Stuart Hall என்பவர் வேலை செய்தார். அவர் ஒரு நீக்கிரோ ஆங்கிலக் கலப்பு. மேற்கிந்தியப் பின்னணியில் இருந்து வந்தவர். நான் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் பிற்காலத்தில் பெரிய அறிஞராகிவிட்டார். பிரித்தானிய திறந்த பல்கலைக் கழகத்தில் அவர் சமூகவியல் பேராசிரியரானார். உண்மையில் அவர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். பின்னர் சமூகவியல் பேராசிரியராக வந்தார். இது 96hlyg. Multi Deciplinary approach g6STT6ö 6Jibu Lg). 955 Multi Deciplinary approach ஒருவரை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இதிலிருந்து உணரலாம். அவர் பண்பாட்டியல் கல்வியைத் தொடர்ந்து செய்தார். சமூகவி யலை மார்க்ஸியத்தோடு சேர்த்து அவர் பண்பாட்டு ஆய்வு செய்தார். அதில் பண்பாட்டுக்கும் சமூகத்துக்கும் உள்ள தொடர்பு, அதில் அரசியல் எவ்வாறு இணைகிறது போன்ற விடயங்கள் இருந்தன. இவற்றுள் சில விரும்பக்கூடியதும் இருக்கும், விரும்பாததும் இருக்கும். இப்படியாக ஆய்வுசெய்கின்ற முறைமையை அந்தச் சிந்தனைப் பள்ளி வழியாகவும் நான் பெற்றுக்கொண்டேன். இதனை இங்குள்ளவர்கள் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
Cerroriba aos 2003 12)

தி.ஞா.: இங்குள்ளவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? முற்போக்காளர் களையா? கா. சி. முற்போக்குவாதிகளை மட்டுமல்ல எல்லோருமே பெற்றுக்கொள்ள வில்லை என்றுதான் சொல்வேன். ஒரு பல்கலைக்கழகத்தில் பண்பாட்டியல் என்ற பாடத்தைக் கற்பிப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் முன்னர் சொன்ன பண்பாட்டியல் பற்றிய கருத்துக்கள் எதுவுமின்றியே அவர்கள் இப் பாடத்தை நடத்துவதாக நான் கேள்விப்பட்டேன். தமிழகத்தில் இது இன்னும் வந்துசேரவில்லை. மார்க்ஸ், வேலுசாமி போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே இதில் பரிச்சயம் உண்டு என்பதை அவர்களுடன் நான் கலந்துரையாடியபோது அறிந்துகொள்ளமுடிந்தது.
இந்தப் பண்பாட்டுக் கல்வி உண்மையில் Multi Deciplinary approach உள்ளால் வளர்ந்த ஒரு பாடம். உதாரணமாக ரஷ்யாவில் கம்யூனிஸம் வந்தபோது, அங்கு ஏற்பட்ட அநுபவங்கள், சீனாவில் ஏற்பட்ட அநுபவங்கள், வங்காளம் - கேரளாவில் ஏற்பட்ட அநுபவங்கள் மூலம் இதனைக் காணலாம். இந்தச் சீனக் கம்யூனிஸமும், ரஷ்யக் கம்யூனிஸமும் எங்கே வித்தியாசப் படுகிறது என்று பார்த்தால், நான் நினைக்கிறேன் - Chinese culture, Slavonic culture involvement. அந்த ஸ்லாவிக் சமூகத்துக்குரிய சில பண்புகள் கம்யூனிஸத்தையும் தாக்கியுள்ளன. சீன நாட்டினுடைய பண்புகள், மரபுகள், பாரம்பரியங்கள் ஆகியன கம்யூனிஸத்தை உள்வாங்கிய முறையினாலும் நடைமுறைப்படுத்திய முறையினாலும் இது ஏற்பட்டது. உதாரணமாக Thoughts of Lenin 616 p. 616)l(iblib. Gla T606uф606060. el,60IT60 Thoughts of Mase Tung என்று சொல்வார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், சீனப்பாரம்பரியத்தில் ஒருவருடைய சிந்தனை என்று சொல்வதுதான் மரபு. அதேபோன்று கான்பூசியஸ் உடைய Thoughts தான். கான்பூசியஸ் உடைய சிந்தனை என்று சொல்வ தில்லை. சீனாவில் அடிக்கடி சொல்வார்கள், Running dogs of Capitalism என்று. முதலாளித்துவத்திற்குப் பின்னால் செல்பவர்களை அதனுடைய “ஓடும் நாய்கள் என்று சொல்வார்கள். சீன நிலச்சுவாந்தர்கள் தமது வயல்களினுடாகச் செல்லும்போது அவர்களின் பின்னால் அவர்களது நாயொன்று ஓடிக்கொண்டு போகும். அதனாலேதான் முதலாளித்துவத்திற்குப் பின்னால் செல்பவர்களை அவர்கள் ஒடும்நாய்கள்’ என்று சொல்வார்கள். இப்படிப் பார்க்கும்போது பண்பாட்டிற்கு ஒரு பங்கு இருக்கிறது. அதிலிருந்து விடுபடுவது மிகவும் கஷ்டம். ஏனென்றால் அது Conditionbehaviour.அது எம்முடன் வந்து கலக்கலாம் கலக்காமல் விடலாம்.
பிரான்ஸிற்கு ஒரு சிந்தனை மரபு. அதுபோல் இங்கிலாந்தில் ஒரு சிந்தனை மரபு. இங்கிலாந்தில் ஒரு எழுதப்பட்ட அரசியல் யாப்பு இல்லை. ஆனால் அந்த நாட்டின் அரசியல் நடைமுறை மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அது அரசியல் கலாசாரத்தின் பலம். இந்தியாவில் கூட பலமுறை முயற்சித்த போதும் அங்கு சரியாக அமையவில்லை. சுதந்திரப் போராட்டத்தின் ஞாபகம் இருக்கும்வரை இருந்த இந்தியாவிற்கும், சுதந்திரப்போராட்ட ஞாபகம் மறைந்த பின் மாநிலங்களாக இருக்கும் இந்தியாவிற்கும் இடையில் எவ்வளவோ வித்தியாசங்கள் உள்ளன.
பண்பாடு என்பதில் ஊடகங்களின் முக்கியத்துவம் - வானொலி, Gegrarnb, stał 2003 13)

Page 8
சினிமா, தொலைக்காட்சி இவைகளெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இலக்கியங்களில் எவற்றை விரும்புகிறோம், எவற்றை வாசிக்கிறோம் என்ப தெல்லாம் பண்பாட்டுக் கல்வியின் ஒரு பகுதிதான்.
இந்த பண்பாட்டுக் கல்வியில் இரண்டு வகையுண்டு. ஒன்று மார்க்ஸி யத்தை ஏற்றுக்கொள்வது. மற்றது மார்க்ஸியத்தை ஏற்றுக்கொள்ளாதது. அமெரிக்காவில் மார்க்ஸியத்தை ஏற்றுக்கொள்ளாத பண்பாட்டுக் கல்வி இருக்கிறது. இதில் என்ன பிரச்சினை என்றால், பண்பாட்டுக் கல்வியை படிப்பவர்கள் பின்நவீனத்துவத்தை சேர்த்துக்கொள்வதா வேண்டாமா என்ற விவாதம் அங்கு நடந்தது. அந்த விவாதத்தில் இவையெல்லாம் தெளிவாகின. என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பண்பாட்டுக்கல்வி ஒரு முக்கியமான துறை யாக வந்தது. அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வரலாறு இவையெல்லாம் சேர்ந்து ஒரு பண்பாட்டுக்கோலத்துக்குள்ளால் வரும். நாங்கள் Pop cultureஐ இங்கு எடுக்கிறோம். கோவில் வீதியிலேதான் இது நடைபெறுகிறது. கோவில் வீதியல் பாடும்போது அவர்கள் சீர்காழியினதும், செளந்தரராஜனினதும் பாடல் களைப் பாடிவிட்டு, பின்னர் சினிமாப் பாடல்களுக்குப் போய்விடுவார்கள். எங்களால் Pop Songs எல்லா இடங்களிலும் பாட முடிவதில்லை. இது நின்று கொண்டு பாடுபவர்களுக்குத்தான் உசிதமானது. கர்நாடக சங்கீதக்காரர்களுக்கு இது பொருத்தமில்லை. கர்நாடக சங்கீதக்காரர்கள் இருந்துபாடவேண்டும். நான் ஒருமுறை WD. அமரதேவாவிடம் சொல்லியிருக்கிறேன் "நீங்கள் நின்று பாடக்கூடாது, இருந்துதான் பாடவேண்டும்" என்று. இதனை எப்படி விளங்கிக் கொள்வது. உலகப்பொதுவாகவும் இருக்கிறது - அதற்குள் வித்தியாசமும் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இன்று நாங்கள் எல்லோருமே நீள்காற்சட்டை போடுகிறோம், பெண்கள் கவுண், சுரிதார் அணிகிறார்கள். இதனால் எங்களுடைய அடையாளங்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டதாக நாங்கள் நினைப்பதில்லை. இப்படியான விடயங்களெல்லாம் பண்பாட்டுக்கல்விக்குள் வரும். இதில் சில முரண்பாடுகள் வரலாம்.
நான் தஞ்சாவூரில் 1982ஆம் ஆண்டு இருக்கும்பொழுது, இப்பொழுது முக்கியமான எழுத்தாளராகக் கருதப்படும் பொ.வேலுசாமி என்னிடம் கேட்டார் “என்ன நீங்கள் 'முருகா, முருகா" என்று அடிக்கடி சொல்கிறீர்கள்” என்று. இது என்னுடைய தகப்பனார், பேரனார், என்னுடைய தாய்மாமன் வழியாக வந்த விடயம். அவர்கள் அடிக்கடி வேலாயுதம் என்பார்கள். நானும் 'வேலாயுதம் என்று சொல்லுவேன். என்னுடைய பேரன் கேட்கிறான், "வேலாயுதம் யார்?, அடிக்கடி கூப்பிடுகிறீர்கள்” என்று. நான் முருகா முருகா என்று சொல்வதைப் பார்த்து தஞ்சாவூரில் வேலுசாமி கேட்டார், “என்ன பெரிய மார்க்ஸிய ஸ்ரண்ட் எல்லாம் பேசுகிறீர்கள்; நீங்கள் எல்லாவற்றிற்கும் 'முருகா" என்கிறீர்களே!” என்று. அதற்கு நான் சொன்னேன், “எனக்கு வயிற்றுக்குள் குத்தினால், "மார்க்ஸே என்று கத்தவா?”. ஒருவர் பிள்ளையாரே என்பார். இன்னொருவர் அம்மனே என்பார். இந்த வளர்ச்சிகளை நாங்கள் பார்க்கவேண்டும். இவற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவருடைய பின்னணியைக் கவனிக்கவேண்டும். இயன்றளவு புத்திபூர்வமாகவும் தொழிற்பட வேண்டும். நாங்கள் வேர்களிலிருந்து அறுந்தவர்களாக இருக்கமுடியாது. இந்தப் போக்கிலே போகிறதுக்கான ஒரு Cersarib, aer 2003 14)

நிலையை அந்தக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்கவேண்டும். அதனை எங்களுடைய சமூக வாழ்க்கையினுடைய இலட்சியமாகக் கொள்ளவேண்டும். “ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை” என்று ஒரு வரலாற்று ஆசிரியன் கூறியதை பண்டாரநாயக்காவும் சொன்னார். ஆனால் ஓடுகிறபொழுது எல்லாம் சங்கமிக்கத்தான் செய்யும். அந்தப் பல்சங்கமத்தில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். அந்தச் சங்கமத்தில் தெளிவு என்னிடம் இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் சங்கமம் நிச்சயமாக இருக்கிறது.
தி.ஞா.: இந்தப் பண்பாட்டு வேர்கள், பண்பாட்டு சங்கமத்திலிருந்து இலகுவில் விடுபடமுடியாது எனக் கூறுகிறீர்கள். இப்படிப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படுகிறவர்களும் அவர்களுடைய பண்பாட்டு அம்சங்களிலிருந்து விடுபட முடியாதவர்களா? தாங்கள் தமிழரி டையே பண்பாடும் தொடர்பாடலும் சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண் டவர் என்பதனால் இக்கேள்வி. கா.சி.; அதாவது அந்தப் பண்பாட்டு அம்சங்களிருந்து அவர்கள் விடுபட முடியாதிருப்பதனாலும், ஆனால் அந்தப் பண்பாட்டு அம்சங்கள் அவர்களைத் தனிமனிதர்கள் என்ற வகையிலும் - குழுமம் என்ற வகையிலும் அடக்கு முறையாக வைத்திருக்கின்றது என்பதன் காரணமாகவும் அவர்களுடைய போராட்ட இலக்குகள் எல்லாமே அவர்களுடைய சமத்துவ இலக்குகள்தான். யாழ்ப்பாணத்தில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சம்பந்தமான போராட்டத்தில், அவர்கள் தங்களுக்குக் காணிவேண்டும் என்றோ நிலம்வேண்டும் என்றோ கேட்கவில்லை. தாங்கள் லோன்றி வைப்பதற்கும் சலூன் வைப்பதற்கும் பட்டினத்தில் இடம்வேண்டும் என்று கேட்கவில்லை. கோவிலுக்குள் இடம் வேண்டும் என்றுதான் முதலில் கேட்டனர். எல்லோருமே தங்களது சாதியில் இருந்து விடுபட விரும்புவதில்லை. அந்தச் சாதிகாரணமாக ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைத்தான் விரும்புவதில்லை. நாங்கள் ஒவ்வொருவருமே, நாங்கள் வாழுகின்ற எங்களுடைய இனசன உறவுகளுடன்தான் வாழ விரும்புவோம். அதற்காக நாங்கள் அடக்கப்படுவதையும் விரும்புவதில்லை. இந்தப் போராட்டங் களின் சின்னங்களிலிருந்தே அவர்கள் தமது பண்பாட்டு நிலையிலிருந்து விடுபடமுடியாமல் இருப்பதும் எத்தகைய விடுபாட்டை விரும்புகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. தங்களைச் சமமானவர்களாகக் கருதப்படாத விடயங்களில், தங்களைச் சமமானவர்களாகக் கருதும்படி கேட்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்களுடைய வழக்கங்களை, நம்பிக்கைகளை விட்டுவிடுவார்களா? தமது இனசன பந்து உறவுகளை விட்டுவிடுவார்களா? அப்படி விடுவதில்லை. இது எங்களுக்கு மாத்திரமல்ல இந்தியச் சமுதாயத்திற்குள்ளும் இருக்கிறது.
இதில் ஒரு அடிப்படையான வரலாற்று உண்மையை நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். ஏறத்தாழ நமது சமுக உருவாக்கம் (Social formation) தோன்றிய காலம் முதலே சாதி அமைப்பும், வளங்களுக்கான பெறு வழிகளும்(Access to resources) சமனற்றதாக இருந்து வந்துள்ளது. இந்தச் சமனற்ற தன்மை காரணமாக ஏறத்தாழ நாங்கள் குழும நிலைப் பண்பாடுகளை உருவாக்கிவிட்டோம். ஆனால் காலனித்துவம், பின்காலனித்துவம் ஆகியவை எங்களுடைய அடையாளங்களை மாற்றியுள்ளன. இந்தப் படிநிலைப் பண்பாட்டி (ஞானம், விண் 2003 15)

Page 9
லிருந்து (Hierarchical culture) நாம் வேறு மட்டங்களுக்குச் சென்றுள்ளோம், இந்தியர்களாக, தமிழர்களாக, சீக்கியர்களாக. இந்த மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் நமது மரபு வழிப்பண்பாடு நாம் மாற இடம் தரவேண்டும். ஆனால் அந்தந்தப் பண்பாடுக்குள்ளே உள்ள ஒடுக்கு முறை அம்சங்கள் இதற்கு இடந்தராததால் (காரணம்:- சமூகப் பொருளாதார அமைப்பு முற்றிலும் மாறாத தாலேயே). நாம் புதிய மட்ட நிலைகளுக்கு மாற்றுருப் பெறுகின்ற பொழுது நமது பாரம்பரியப் பண்பாட்டின் ஒடுக்கு முறை அம்சங்கள் காணப்பட வேண்டும். சமூக மாற்றத்தினூடாக இவை நடந்துகொண்டே இருக்கும். சிலவேளைகளில் இது பெரும் சிரமமாகவும் இருக்கலாம்.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திரப் போராட்டத்தினூடேயும், சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்வந்த வளர்ச்சியினூடேயும் இந்த மாற்றங்களை யும், மாற விரும்பாமையையும் காணலாம். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பிரிவினையை இவ்வாறுதான் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 50 வருடங்களுக்குப் பின்னர்தான் இந்தியாவின் அடிநிலை மக்களிடையே சமூக ஜனநாயக( Social Democracy) பிரக்ஞை ஏற்பட்டுள்ளது. தலித் எழுச்சியை இவ்வாறாகத்தான் விளங்கிக்கொள்ளவேண்டும்.
தி.ஞா. : அப்படியெனில் இவர்களது குணாதிசயங்களிலும் மாற்றங்கள் ஏற்படுமா?
கா.சி. : குணாதிசயங்கள் படிப்படியாக மாறும். அவரவர்களுடைய பொருளா தார வசதிக்கேற்ப அந்த நிலைமைகள் மாறும். அதற்குரிய பொருளாதார நியாயத்தை மாற்றினால், நிலைமை மாறும். மாறிய பொருளாதாரச் சூழலுக்கு கேற்பச் செயற்படுவர். அதற்கேற்ப சமூக உறவுகளைக் கொண்டாடுவர். அதற் கேற்ற வாழ்க்கை முறைகளை வைத்திருக்க விரும்புவர். பொருளாதாரச் சூழல் மாறும்பொழுது எமது அபிலாசைகள் மாறுகிறது. ஆனால் அதனை இந்தச் சமூகம் தடுக்கிறபோது அவர்கள் இந்தச் சமூகத்திற்கு எதிரானவர்களாகக் கிளம்புகிறார்கள். எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் சாதிவித்தியாசமே இல்லை. எழுத்தாளர்களிடையே எல்லா இடங்களிலும் ஒரு சமத்தவம் இருக் கிறது. இது நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் 50,60 களில் ஏற்பட்ட எழுத்தாளர் மலர்ச்சி இயக்கத்துடன் வந்த விடயம். எங்களுடைய சமூகம் ஒரு புரட்சிவந்த சமூகமல்ல. புரட்சிவந்த சமூகம் என்பதன் கருத்து என்னவென்றால், முந்திய ஒரு பொருளாதார முறையிலிருந்து இன்னொரு புதிய பொருளாதார உறவு முறைக்கு போவதற்கான - அந்தப் பொருளாதார முறைகளுக்கேற்ற அதிகார அமைப்புகளை- அதற்கேற்ற ஆளணிகளை புதுக்கக்கொண்டுவருவதான ஒரு மாற்றத்திற்கான பெயர்தான் Revolution - புரட்சி. எங்களுடைய சமூகத்தில் அந்தமாதிரியான புரட்சி ஏதும் ஏற்படவில்லை. அவ்வாறான புரட்சி ஏற்பட்டதாகக் கருதப்பட்ட சீனாவிலும், ரஷ்யாவிலும், ஹங்கேரியிலும் கூட அதற்கு முன்பிருந்த வழக்காறுகள் மிகப்படிப்படியாகத்தான் மாறின. அந்தப் பொருளாதார அமைப்பு மாறி அந்தப் பொருளாதார அமைப்பின் காரணமாக ஏற்படுகின்ற சூழல்கள் மாறுகிறபோது, அதற்கேற்ற ஒரு அதிகார அமைப்பு முறை - Power Structure வருகிறபொழுது - அந்த அமைப்பு முறைக்கான திருப்தி ஏற்படுகிற போதுதான் அது சரியாக வரும். அதில் எங்கேயோ ஒரு சிறிய பிரச்சினை (ஞானம், விண் 2003 16)

இருந்ததால்தான் 1917இல் தொடங்கியது 1988இல் விழுந்தது. அந்தப் பிரச்சினை காரணமாகத்தான் 47, 48 இல் வந்த சீனப்புரட்சியில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டன.
Internal Diamension என்கிற ஒன்று இருக்கிறது. அது மாறிக்கொண்டே வரும். படிப்படியாகத்தான் மாறும். அது சகல விஷயங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களுடைய உடை, மொழி, போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும். யாரைப்பார்த்து Sir என்று சொல்வது? அதற்காகத்தான் Comrade என்று வைத்தார்கள். எல்லோருக்கும் பொதுவான ஒரு சொல் - தோழர். இவ்வாறாக அமைப்புமுறை - அதிகார முறை மாறுகிறபொழுது சொற்கள் மாறும், மொழிமாற்றம் ஏற்படும். இந்தமாதிரியான மாற்றங்கள் எங்களுடைய சமூகத்தில் ஏற்படவில்லை. ஆனால் அடிப்படையில் பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. கல்வி, சுயமொழிக்கல்வி போன்றவற்றின் காரணமாக சகலரும் படிக்கின்றார்கள். படித்தபடியால்தான் உத்தியோகங்கள். உத்தியோகத்தினாலே தான் சமூக அந்தஸ்து ஏற்படுகின்றது. அதனால் சமூகம் மாறுகின்றபொழுது - அடிநிலையில் உள்ளவர்கள் மேலுக்கு வருகிறபொழுது படிப்படியாக அந்த அம்சங்கள் மாறும்; திடீரென்று மாறாது. அந்தமாற்றம் பொதுப்படையானதாக இருக்கவேண்டும். அதற்கு அரசியல் திசைநோக்கி, அரசியல் முகம்நோக்கி ஒரு சமூக முகம் நோக்கி அதனை வளர்த்துக்கொண்டு செல்லவேண்டும். இல்லாவிடில் ஆபத்து ஏற்படும். ஏனென்றால் குறிப்பாக இந்திய சமூகங்களில் - இலங்கையிலும் கூட ஒரு பிரச்சினை இருக்கிறது. என்னவென்றால், இந்தச் சமூகங்கள் பொருளாதாரம் மாற, அந்தஸ்து மேல்நிலைப்பட அவர்கள் மேல்நிலையில் உள்வர்கள் பின்பற்றுகின்ற பண்பாட்டு நியமங்களைப் பின்பற்றுவார்கள். அன்னமார்கோயில் வைரவர் கோயிலாக மாறும். வைரவர் பிள்ளையாராக மாறுவர். அன்னமார் கோயிலுக்கு விளக்கு வைத்தவர், வைர வருக்கு விளக்கு வைக்க இயலாது. வைரவருக்கு விளக்கு வைத்தவர் பிள்ளையாருக்கு வைக்க இயலாது. இந்தமாதிரியான மாற்றங்கள் படிப்படியாக வரும். நாங்கள் எல்லோரும் எங்களுடைய அந்தரங்கமான உறவுகளை இனசனங்களோடு வைத்துக்கொண்டு வெளியால் புழங்குகிறபோது அப்படிப் பார்ப்பதில்லை . கந்தோரில் பார்ப்பதில்லை. பஸ்ஸில் பார்ப்பதில்லை. முன்னர் பஸ்ஸில் பார்க்கப்பட்டது அதனால் சண்டை நடந்தது. முன்பெல்லாம் எனது குடும்பத்தவர் ஒருவர் பஸ்ஸில் போய்வந்தால், வேட்டியெல்லாம் தோய்த்துக் குளிப்பார். துடக்கு என்கின்ற ஒரு நம்பிக்கை - Sense ofpolution என்கிற ஒரு நம்பிக்கை எங்களுடைய சமூகத்தில் இருக்கிறதல்லவா - அது தண்ணிரால்தான் வரும் தண்ணிரால்தான் போகும். இவையெல்லாம் படிப்படியாக மாறிக்கொண்டு வரும். உடுப்புகளை எடுத்துக்கொண்டால், என்னுடைய அம்மாவிற்கு சட்டை போடுகிற ஆக்களைக் காட்டமுடியாது. என்னுடைய பாட்டிசொல்வார், "அவள் சட்டைக்காரி - அப்படித்தான் பேசுவாள்” என்று. அவவுக்குத்தெரியாது அவ வுடைய பூட்டப்பிள்ளைகள் எல்லோரும் இப்பொழுது சட்டைக்காரிகள்தான்! இவைகளெல்லாம் இப்பொழுது கட்டாயம் மாறும். அந்த மாற்றத்தை நாங்கள் பிரக்ஞைபூர்வமாக மேற்கொண்டு செல்லவேண்டும். அதற்கொரு அரசியல் திசைநோக்கி வேண்டும். அவ்வாறு முன்னே செல்வதுதான் முற்போக்கு. அதற்குவேண்டிய Political direction கொடுப்பதுதான் மார்க்ஸியம். மாறாதோ Gsirarib, agai 2003 正の

Page 10
என்று கேட்டால் மாறாமல் விடாது. ஆனால் திடீரென்று மாறாது. படிப்படியாகத் தான் மாறும். முந்தினதையும் இல்லையென்று சொல்லாமல் இப்ப இருக்கிற மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு புகழ்பெற்ற மொழியியற் துறைப் பேராசிரியர் ஒருவர், இன்று இந்தோனிசியா நாளைக்கு இந்தியா என்று திரிகின்ற ஒரு மனிதர் இருக்கிறார். அவருடைய வீட்டில் அவரது தாயாரின் பெரிய படம் இருக்கிறது. தாயின் படத்தைப் பார்த்தபோது சட்டைகிடையாது - வெறும் தாவணி மாத்திரம்தான் போட்டிருந்தார். அவர்கள் சொல்லப்பட்ட கைக்கோள முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் படத்தைப் பார்த்து மிகவும் சந்தோச மடைந்தேன். "இது அம்மாவின் படந்தான்” என்று அவர் எனக்குக் கூறினார். நான் சொன்னேன் "அம்மாவின் படம் என்பதிலும் பார்க்க இது குறிப்பிட்ட காலத்தின் வரலாறு" என்றேன்.
அப்போ மாறாது என்று எதையும் சொல்ல முடியாது. இதைத்தான் கட்டிடக்கலையில் உள்ள சொல்லைக் கடன்வாங்கி கீழ்க்கட்டுமானம், மேல்கட்டுமானம் என்று கம்யூனிஸத்தில் சொல்வார்கள். உண்மையில் இப்போது அவற்றைக்கூட மார்க்ஸியவாதிகள் ஏற்றுக்கொள்வ தில்லை. Ravan Williams என்பவர் சொன்னார், "மேல் கட்டுமானமும் தாக்கும், கீழ்க்கட்டுமானமும் மேல்கட்டுமானத்தைத் தாக்கும். ஒன்றின் அடிப்படையாக ஒன்று வளர்த்தெடுக்கப்படுமென்றால் அந்த வளர்க்கப்பட்டதும் எங்களைப் பாதிக்கும்.
திருநாவுக்கரசு நாயனார் ‘குலம் வந்தேன் குணம் வந்த குடியும் வந்தேன்’ என்று சொல்கிறார். நாங்கள் சாதியொழிப்பு வேண்டுமென்றால் அந்தத் தேவாரத்தைத் தூக்கியெறிவதா? அதனைப் புரிந்துகொள்ள அல்லவா வேண்டும். அவர் தம்முடைய நிகழ்வுகளைச் சொன்னதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை நான் நம்புகிறேனோ என்றால் இல்லை. அதனையெல்லாம் மாணவர்களுக்குந்தான் படிப்பிக்கிறேன்.
நிலத்தளவே ஆகுமாம் நீராம்பல்; தான்பெற்ற குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்றார் ஒளவையார். அப்பொழுது இருந்த சமுதாயத்திற்கு அது சரியாக இருந்தது. இப்போது மாறிக்கொண்டு வருகிறது. காரணம் என்ன வென்றால் நாங்கள் சகலருக்கும் பொதுவான மானுடத்தில் கவனத்தைச் செலுத்துகிறோம். இது சும்மா வந்ததல்ல. இதில் ஒரு ஜனநாயக மரபு இருந்தது. அந்த ஜனநாயகம் அரசியல் ஜனநாயகமாக இருந்தது. பின்புதான் சமூக ஜனநாயகமாக மாறியது. ரஷ்யாவில் அந்தக் கட்சிக்குப் பெயர் Social democrets. எங்களுக்கு உண்மையில் சமுதாய ஜனநாயகம் ஏற்படவில்லை. அரசியல் ஜனநாயகம்தான் வந்துள்ளது. சமுதாய ஜனநாயகம் வரும்; அது படிப்படியாகத்தான் வரும். ஆனாலும் சமூகத்தில் சில வகைபாடுகள், Statification - ஒரு படிநிலை ஆக்கங்கள் இல்லாமல் போகாது. மனிதத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தில் இவையெல்லாம் இல்லாமல் போகும்.
(ஞானம், இன் 2003 18)
 

Gob Guuui இலக்கியம்
தமிழ் எழுத்தாளர் ஒணிறியத்திணி மனவெளி
சிதம்பரநாதன் இரமேஸ்
Dனவெளி நிகழ்வின் நோக்கம் படைப்பிலக்கியவாதி ஒருவர் தம் ஆக்க இலக்கியப் படைப்புக்களை, எதனை உள்வாங்கி எத்தளத்தில் நின்று எந் நோக்கத்துக்காகப் படைத்தார் என்பதை வாசகருடன் பகிர்ந்து கொள்ளல் ஆகும். அதாவது படைப்பிலக்கியவாதி தன் கலை இலக்கிய அனுபவங்களை வாசகருடன் பகிர்தலாகும். இதன் அடிப்படையில் இந்நிகழ்வானது தாயக இதழின் ஆசிரியரும், கவிஞரும் கதையாசிரியரும், மார்க்ஸிய இலக்கிய விமர்சகருமான தணிகாசலம் அவர்களின் படைப்பு இலக்கிய அனுபவங்களை வாசகருடன் பகிர்ந்துகொள்ளும் நிமித்தமாகவே அமைந்திருந்தது.
தணிகாசலம் அவர்கள் தம்முடைய இலக்கிய அனுபவங்களை வாசகருடன் பகிர்ந்து கொண்டார். அவரின் மனவெளியிலிருந்து வெளிப்பட்ட அனுபவ உணர்வுகள் சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்குரிய சாசனமா கவும் சாதியத்துக்கு எதிரான போர்ப்பறையாகவும் அமைந்திருந்தன. இவரின் சமூகம் பற்றிய பார்வை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இவர் தம் மனவெளி அனுபவங்களை நனவோடை உத்தியில் அமைந்த, ஒரு நாவலைக் கூறிச் செல்வதைப் போல வாசகருக்கு கூறிச்சென்றா லும் இவரின் பேச்சானது இவரின் சிறுகதைகளைப் போலவே சொற்சிக்கனத்துட னும், காத்திரத் தன்மையுடனும் விளங்கியது என்றால் மிகையில்லை.
இதனைத் தொடர்ந்து செம்பியன் செல்வனின் வேண்டுகோளுக்கிணங்க இலக்கிய ஆர்வலரும் மார்க்ஸிய விமர்சகருமான சி.கா.செந்தில்வேல் உரை யாற்றினார்.
புலம் பெயர்ந்த ஆக்க இலக்கியம் பற்றி சி.கா.செ கூறும் போது "ஆரம்பத்தில் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து ஏராளமான சஞ்சிகைகள் வந்தன என்றும் இன்று அவை இடைநடுவில் நின்றுவிட்டன என்றும் கூறிய அவர் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களின் எதிர்காலச் சந்ததியினரால் ஆக்க இலக்கியங்களைப் படைக்க முடியுமா? என்ற கேள்வியையும் வாசகரை நோக்கி எழுப்பினார். அவர் தொடர்ந்து இதனைப் பற்றிப் பிரஸ்தாபிக்கையில் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்கள் அனைவரும் அனைத்துப் படைப் பிலக்கியங்களையும் படைத்து விட்டதாகவும், இனி அவர்களுக்கு எதனைப் படைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் இதனால் அவர்கள் வீண் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வீனெனக் காலத்தைப் போக்குகிறார்கள்” (ஞானம் Tour 2003 19)

Page 11
என்றும் கூறினார். புலம் பெயர்ந்த எழுத்தாளனின் ஆக்க இலக்கியங்களைத் தேடிப்படிக்கும் வாசகன் என்னும் முறையில் சி.கா.செ.வின் இப் பேச்சின் உண்மை நிலைகளை மதிப்பிடவேண்டிய தேவை என்னுள் எழுந்துள்ளது.
முதன் முதல் கே.எம்.வேணுகோபால் அவர்களால் புகலிட இலக்கியம் என அழைக்கப்பட்ட புலம் பெயர்ந்த இலக்கியங்கள் தம் சொந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து சென்று மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஸ்கண்டி நேவிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழரால் அங்கிருந்து படைக்கப்படும் இலக்கியங்களையே குறித்து நிற்கிறது. இந்நாடுகளிலிருந்து கையெழுத்துப் பிரதிமுதல் அச்சுப்பத்திரிகை வரை 100 இதழ்கள் இதுவரை வெளிவந்துள்ளன என வேணுகோபால் கூறுவார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிவரும் இச்சஞ்சிகைகள் கலை இலக்கியம், அரசியல், பெண்ணியம், தத்துவார்த்தம், சினிமா எனப் பல்வேறு தளங்களில் இயங்குவதுடன் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் வேறுப்பட்டவையாகவும் விளங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளில் காலம், தேடல், பொதிகை, தாயகம், நான்காவது பரிமாணம், செந்தாமரை, தமிழ் எழில், புன்னகை மலர் போன்ற சஞ்சிகைகள் கனடாவிலிருந்தும்; ஓசை, மெளனம், கண், சமர், எக்ஸில், எரிமலை, உயிர்நிழல் போன்ற சஞ்சிகைகள் பிரான்ஸிலிருந்தும்; பனிமலர், தாகம், நாழிகை, போன்ற சஞ்சிகைகள் இங்கிலாந்திலிருந்தும்; மரபு, அக்கினிக் குஞ்சு போன்ற சஞ்சிகைகள் அவுஸ்திரேலியாவிலிருந்தும்; சுவடுகள், சக்தி போன்ற சஞ்சிகைகள் நோர்வேயிலிருந்தும்; தூண்டில், நமது குரல், புதுமை, தேன், சிந்தனை, ஊதா போன்ற சஞ்சிகைகள் ஜேர்மனியிலிருந் தும்; ஆகுதி எனப்படும் சஞ்சிகை நெதர்லாந்திலிருந்தும் வெளிவருகின்றன. இதனைவிட ழகரம், புலம், அம்மா, அசை, மஞ்சரி போன்ற சஞ்சிகைகளும் புலம் பெயர்ந்த இலக்கிய ஆர்வலரால் வெளியிடப்படும் சஞ்சிகைகளாகும். இச்சஞ்சிகைகளில் நமது குரல், சக்தி, ஊதா போன்ற சஞ்சிகைகள் பெண்களால் வெளியிடப்படுகின்றன. இவை பெண்களின் பிரச்சினைகளை அடையாளம் காட்டுவதுடன் அவை குறித்த விழிப்புணர்வையும் மக்கள் மனதில் ஏற்படுத்துகின்றன. ஜேர்மனியிலிருந்து வந்த ஊதா இதழானது பெண்களின் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகமாகவே செயற்பட்டது எனலாம். இலங்கை அரசால் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத் துரைப்பதற்காகத் தாகம் இதழ் வெளிவந்ததைப் போலவே தாயகம், எரிமலை, சமர் போன்ற சஞ்சிகைகளும் வெளிவந்தன. இதில் எரிமலை என்னும் சஞ்சிகை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும், போராளிகள் பற்றியும், போராடிய களங்கள் பற்றியும் பேசுகின்ற சஞ்சிகையாக இன்றுவரை வெளிவந்தவண்ணம் உள்ளது. பனிமலர், அசை போன்ற சஞ்சிகைகள் மார்க்ஸியம், தேசியம் பற்றியும் பேசும் சஞ்சிகைகளாக உள்ளன. இதில் அசை தனியே மார்க்ஸியம் பற்றிப் பேசாது பெண்ணியம் உலகமயமாக்கல், ஆண்சமபால் உறவு இயக்கத் தின் வரலாறு பற்றியும் பேசுகிறது. ழகரம், உள்முகம் போன்ற சஞ்சிகைகள் முழுக்க முழுக்க கவிதைகளுக்கான ஏடாக உள்ளன. இதில் உள்முகம் கவிதைகளுக்கான அரையாண்டு இதழாகும். உயிர் நிழல், எக்ஸில், அம்மா, (ஞானம், வின் 2003 20

மெளனம், புலம், அ,ஆ.இ. போன்ற ஏனைய சஞ்சிகைகள் கலை இலக்கிய உணர்வுகளை வெளிக்கொணரும் சஞ்சிகைகளாகவே உள்ளன. இதில் அ,ஆ.இ. என்னும் சஞ்சிகை ஒருமுறை புகலிட சிறுகதைகளை உள் வாங்கி சிறப்பிதழாகவும் பிரசுரித்தது.
இவ்வாறு வெளிவந்த பல சஞ்சிகைகள் செந்தில்வேல் அவர்கள் கூறியபடி காலப்போக்கில் இடைநடுவில் நின்று விட்டன என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறு வெளிவந்த எல்லாச் சஞ்சிகைகளும் ஒட்டு மொத்தமாக நின்று விடவில்லை. மற்றும் இனி வரும் காலங்களில் இச்சஞ்சிகைகள் அனைத்தும் நின்றுவிடுவதற்கு இவை தனிமனித முயற்சியால் மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. கலை இலக்கியக் குழுக்களின் வெளியீடாக வரும் சஞ்சிகைகளே அதிகளவில் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவருகின்றன. இவ்வாறு இந்நாடுகளிலிருந்து சஞ்சிகைகளை வெளிக்கொணரும் குழுக்களாக கனடாவில் இயங்கும் காலம் இலக்கியகுழு, தேடல் பதிப்பகம், இங்கிலாந்தில் இயங்கும் தமிழ் மக்கள் புதிய கலாசாரக்குழு, தமிழ் நலன்புரிச்சங்கம், பிரான்சில் இயங்கும் எக்ஸில், நெதர்லாந்தில் இயங்கும் இலங்கை கலாசார குழு, ஜேர்மனியில் இயங்கும் தூண்டில், நோர்வேயில் இயங்கும் சுவடுகள் பதிப்பகம், போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
இக்குழுக்கள் யாவும் கூட்டுமுயற்சியின் அடிப்படையிலேயே தத்தம் சஞ்சிகைகளை வெளிக்கொணருகின்றன. ஆயினும் குழுக்களுக்குள் ஏற்படும் தலைமைத்துவப் போட்டிகள், கருத்து முரண்பாடுகள், தனிமனித விரோதம், வேலைப்பழுக்கள் எனப் பல்வேறு காரணங்களால் இக்குழுக்கள் பல இடைநடுவில் உடைந்து போனதும் வரலாறு கண்ட உண்மை.
சி.க.செந்தில்வேலால் எழுப்பப்பட்ட ‘புலம் பெயர்ந்த இலக்கிய வாதிகளால் இனிவரும் காலப்பகுதியில் தமிழில் இலக்கியத்தைப் படைக்க முடியுமா? என்ற வினாவுக்கு எழுந்தமாதிரியாக எடுத்தவுடன் விடை கூறமுடி யாது. புலம் பெயர்ந்த சமூகத்தில் உருவாகும் இரண்டாம் மூன்றாம் தலைமுறை யால் எதிர்வரும் காலப்பகுதியில் எந்தளவுக்கு தமிழில் இலக்கியப்படைப்பைப் படைக்க முடியுமென்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. புலம் பெயர்ந்த நாட்டில் வளரும் குழந்தை புலம்பெயர்ந்த அந்நாட்டு மொழியையே கற்று அம்மொழியிலேயே பேசவும் எழுதவும் வேண்டியுள்ளதால் எந்தளவில் தன் தாய் மொழியான தமிழைக் கற்று பேசவும் எழுதவும் முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சேரன், மூன்றாவது மனிதனுக்கு அளித்த பேட்டியில் சியாம் செல்லத்துரையின் எழுத்துக்களை ஆதாரம் காட்டிப் பேசும் போது, புலம் பெயர்ந்த சமூகத்தில் உருவாகும் இனிவரும் தலைமுறையினர் ஆங்கிலத்தில் தான் எழுதுவார்கள் ஆனால் வாசிக்கிற போது அவர்களின் உணர்வுத்திறனும் அனுபவமும் தமிழ்நிலைப்பட்ட அனுபவமாகவே இருக்கும் என்றார். ஆனால் புலம் பெயர்ந்த சமூகத்தில் உருவாகும் தலைமுறையினரான ஆக்க இலக்கியப் படைப்பாளிகளால் எந்தளவுக்கு தமிழ் மூல அறிவைப் பெற்று அதனைக் கிரகித்து உள்வாங்கிப் பிரயோகிக்க முடியுமோ அந்தளவுக்கு தமிழ் இலக்கியப் படைப்பை அவர்களால் படைக்க முடியுமெனலாம்.
மற்றும் சி.கா.செ கூறிய “புலம் பெயர்ந்த படைப்பிலக்கியவாதிகள் Gerarub, sei 2003 2D

Page 12
அனைத்து படைப்பிலக்கியங்களையும் படைத்துவிட்டனர். இனி அவர்களால் எதனையும் படைக்க முடியாது" எனக் கூறும் கருத்தை எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. காரணம், புலம் பெயர்ந்த இலக்கியவாதிகள் தம்மாலான ஆக்க இலக்கியங்களை புதிய உருவக உள்ளடக்கங்களை உள்வாங்கி நேர்த்தியான முறையில் படைத்துக்கொண்டே உள்ளனர் எனலாம். ஈழத்தோடு ஒப்பிடும்போது அவர்களின் இலக்கியப்படைப்புக்கள் காத்திரத்தன்மை உடைய தாகவே உள்ளன.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த நாடுகளுக்குச் சென்று இலக்கியம் படைக்கும் இலக்கிய கர்த்தாக்களை இருவகையில் வைத்து நோக்கலாம். முதல் வகையினர் எனப்படுவோர் ஆரம்ப காலங்களில் தாய் நாடான இலங்கை யிலிருந்து தம் படைப்பு முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு அதனைப் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தொடர்பவர்கள். (உ-ம்) எஸ் பொன்னுத்துரை, வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், முருகபூபதி, இளவாலை விஜேந்திரன், நட்சத்திர செவ்விந் தியன், மு.நித்தியானந்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் , இ. பி அரவிந்தன். இரண்டாவது வகையினர் எனச் சொல்லத் தக்கவர்கள், புலம் பெயர்ந்த நாட்டிற்குச் சென்று முதல் முதல் அங்கிருந்தபடியே இலக்கிய ஆக்கங்களைப் படைத்தவர்கள். இவர்களுக்கு உதாரணமாக பிரதீபா தில்லைநாதன், தான்யா, சுமதி ரூபன், சுவிஸ் ரவி, துர்க்கா, புஸ்பராஜா, சுரேஸ் கனகராஜா, கி.செ.துறை, பிரசாந்தி சேகர்.
மேற்குறிப்பிட்டோர் தவிர்ந்த ஆழியன் குமார் மூர்த்தி, ஆனந்தபிரசாத், சக்கரவர்த்தி, திருமாவளவன், கலாமோகன், நட்சத்திர செவ்விந்தியன், இளவாலை விஜேந்திரன், கி.பி. அரவிந்தன் ஆகியோர் ஈழத்தில் எழுதினாலும் கனடாவுக்குச் சென்ற பின்னரே மக்களால் நன்கு அறியப்பட்டவர்களாகவும் தமிழ் ஆக்க இலக்கியவரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்களாகவும் உள்ளனர். சிறுகதை ஆசிரியரான அமரர் குமார் மூர்த்தி என்பவர் 'காலம் இதழை வளமாக்கியவரும் வலுப்படுத்தியவரும் ஆவார். இவரைப் போலவே ஆனந்த பிரசாத் காலத்தில் கவிதை கட்டுரைகளை வரைந்ததுடன் நின்று விடாது தேடல், தமிழ் எழில், பார்வை போன்ற சஞ்சிகைகளிலும் தன் ஆக்கங்களை வரைந்தவர். அதைப் போலவே கி.பி. அரவிந்தன் பாலம், பனிமலர், ஓசை ஆகிய சிறு சஞ்சிகைகளில் ஆக்கங்களை எழுதி நன்கு அறியப்பட்டவர். இலக்கிய விமர்சகரும் ஆக்க இலக்கியப் படைப்பாளியுமான நட்சத்திர செவ்விந்தியனும் புலம், எக்ஸில், உயிர்நிழல், காலச்சுவடு, மூன்றாவது மனிதன் எனப் பல சஞ்சிகைகளில் எழுதி வருபவர். இலங்கையில் சரிநிகர் வருகையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஆத்மா, ஏனம், றஸ்மி, தேவ அபிரா வரிசையில் எண்ணத்தக்கவரான இவர், பத்நாபஐயரின் பல தொகுப்புக்களிலும் எழுதி வருபவர். நட்சத்திர செவ்விந்தியன் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவரான பிறிதொரு கவிஞர் இளவாலை விஜேந்திரன் ஆவர். நட்சத்திர செவ்விந்தியனைப் போல் பத்மநாபஐயரின் தொகுப்புக்களில் எழுதி வரும் இவர் ஓசை, மெளனம், அஆ.இ, பனிமலர், மரபு (அவுஸ்திரேலியா) சக்தி, நண்பன் (நோர்வே) ஆகிய இதழ்களினூடாக நன்கு அறியப்பட்டவர். இவரின் ஆரம்பகாலக் கவிதைகள் சில சரிநிகரிலும் வெளிவந்துள்ளன. (ஞானம், விண் 2003 22

இவர்களைப் போலவே பத்மநாப ஐயரின் தொகுப்புக்களில் எழுதி வரும் ஆழியான் உயிர்நிழல், கணையாழி, மூன்றாவது மனிதனிலும் தன் கவிதை ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்.
சக்கரவர்த்தி, திருமாவளவன், பிரதீபா தில்லைநாதன் ஆகியோர் சிறுகதை, கவிதை என இரு வேறுப்பட்ட இலக்கிய வடிவங்களினூடாகத் தம் ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்கள். இதில் சக்கரவர்த்தி நான்காவது பரிமாணம், காலம், மஞ்சரி, எக்ஸில், ழகரம் ஆகிய சிறுசஞ்சிகைகளில் தன் சிறுகதை, கவிதைகளை வெளிக்கொணர்ந்தவர். 39 புலம் பெயர்ந்த எழுத் தாளரை உள்ளடக்கிய ‘பனியும் பனையிலும் கூட இவரின் சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது. இதே போல் திருமாவளவனும் தாயகம், சூரியன், ஈழநாடு, ழகரம், எக்ஸில், உயிர்நிழல் இனியும் ஆள்கொள் ஆகிய சிறுசஞ்சிகைகளில் எழுதியவர். மக்களால் நன்கறியப்பட்ட இவர் சபாலிங்கத்தின் 5 வது நினைவு மலரான 'தோற்றுத்தான் போவோமா வில் கவிதையை வரைந்தவர். அன்மையில் வெளிவந்து நின்றுபோன வாரமலரான நிகரியில் கூட இவரின் சிறுகதை ஒன்று வெளிவந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கனடாவுக்குச் சென்று அங்கிருந்து எழுதியவர்களில் மிகவும் முக்கிய மானவராக அடையாளம் காணப்படக்கூடியவர்களில் வைத்து எண்ணத் தக்கவராக பிரதீபா தில்லைநாதன், சியாம் செல்லத்துரை இருவரையும் கூறலாம். ஏராளமான சிறுகதை கவிதைகளை எழுதியவராக பிரதீபா விளங்கி யிருக்கின்றார். உயிர் நிழலில் இவர் எழுதிய ஜனனி, காய்ச்சலில் சோகை பிடித்த. என்ற இரு சிறுகதைகளும், ‘கண்ணில் தெரியுது வானத்தில் வெளிவந்த இன்றில் பழந் தேவதைகள், தூசி படிந்த வீணை, கொஞ்சும் நினைவுகள் என்ற சிறுகதையும் புதிய உருவக உள்ளடக்கங்களை உள்வாங்கி நேர்க் கோட்டுத் தன்மையற்று படைக்கப்பட்ட சிறுகதைகளாகும் இவர்களைப் போல் அல்லாது ஆங்கிலத்தில் நாவல், கட்டுரைகளை எழுதிவரும் சியாம் செல்லத் துரையும் படைப்பிலக்கிய வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.
இப்புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகள் அனைத் தும் ஒட்டு மொத்தமாக புலம் பெயர் ஆக்க இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புக்களை மாத்திரமே தாங்கி வந்தன என்று சொல்வதற்கில்லை. ஈழத்து படைப்பாளிகள் பலர் இதில் எழுதி உள்ளனர். பேராசிரியர்களான சி.சிவசேகரம், கா.சிவதம்பி, சித்திரலேகா மெளனகுரு, மலர்ச்செல்வன், நீர்கொழும்பூர் முத்து லிங்கம், நந்தினி சேவியர், மு. பொன்னம்பலம், தி. ஞானசேகரன், சு.வில்வரத் தினம், அம்ரிதா ஏயெம், க.நீலாம்பிகை, உமாதேவி, ஞானசக்திகணேசன், சாந்தன், எஸ்போஸ், ரவி வர்மன், என இப்பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். சிறுசஞ்சிகைகளைப் போலவே புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து ஏராளமான சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத் தொகுப்புக்கள், நாவல்கள் பல வெளிவந்துள்ளன.
புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக் களாக குமார் மூர்த்தியின் முகம் தேடும் மனிதன், சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம், குழந்தை வேலின் தெருவில் அலையும் தெய்வங்கள், அவளுக்குள் ஒருத்தி, அ.முத்துலிங்கத்தின் வடக்கு வீதி, கலாமோகனின் Gerard5, set 2003 23)

Page 13
நிஸ்டை, புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைகளை உள்ளடக்கிய புது உலகம் எமை நோக்கி, எஸ்.பொ.வின் ஆண்மை, அவா, 39 புலம் பெயர்ந்த கதைஞரின் புதுக்கதைகளை உள்ளடக்கிய பனியும் பனையும், மாத்தளை சோமுவின் அவர்களின் தேசம் போன்றவற்றைக் கூறலாம்.
இதே போல் ஏராளமான கவிதைத் தொகுப்புக்களும் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவந்துள்ளன. உதாரணங்களாக திருமாவளவனின் பனிவயல் உழவு, ஆனந்த பிரசாத்தின் ஒரு சுயதரிசனம், சக்கரவர்த்தி, பிரதீபா தில்லைநாதன், திருமாவளவன் மூவரும் எழுதிய யுத்தத்தை தின்போம், நட்சத்திர செவ்விந்தியனின் வசந்தம் 91 (கனடாவில் நான்காவது பரிமாணம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டாலும் இதில் பெரும்பாலான கவிதைகள் சரிநிகரில் எழுதப்பட்டவை) எப்போதாவது ஒருநாள், அரவிந்தனின் முகம்கொள், கனவின் மீதி புகலிடப் பெண்களின் தொகுப்பாக வெளிவந்த மறையாத மறுபாதி, நா.கண்ணனின் உதிர் இலைக்காலம், ஜெயபாலனின் ஒரு அகதியின் பாடல், இளவாலை விஜேந்திரனின் நிறமற்றுப்போன கனவுகள்.
ஆழியானின் உரத்துப்பேசு, செழியனின் ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு ஈரமற்ற மழை போன்ற கவிதைத் தொகுதிகளை உதாரணமாகக் கூறலாம். சிறுகதை கவிதைகளைப் போலவே ஏராளமான நாவல்களும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினால் எழுதப்படுகின்றன. ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் தேம்ஸ்நதிக்கரையில், பனிபெய்யும் இரவு, உலகெல்லாம் வியா பாரிகள், வசந்தம் வந்து போய்விட்டது, சோபாசக்தியின் கெரில்லா, பொ.கருணா கரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம் (தி. ஜானகிராமன் நினைவாக 1994 இல் கணையாழி நடாத்திய குறுநாவல்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட நாவல்) அக்கரைப்பற்று கோளாவில் பனங்காடு கிராமங்களைச் சித்திரிக்கும் விமல் குழந்தை வேலின் முற்றத்து மல்லிகை, செழியனின் ஒரு நாட் குறிப்பி லிருந்து போன்ற நாவல்களை புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவந்த நாவல்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
இதனை விட புலம் பெயர்ந்த எழுத்தாளர் பலர் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களாக எஸ்.பொன்னுத்துரை, சேரன், கலாமோகன், விமல நாதன், கீதாரஞ்சனி, பாரதிதாசன், சுசீந்திரன், யமுனாராஜேந்திரன் என்போரை உதாரணத்துக்குக் காட்டலாம். புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவந்த மொழிபெயர்ப்பு நாவலாக எஸ்.பொன்னுத்துரையின் காலா, தேம்பி அழாதே பாப்பா, என்.கே மகாலிங்கத்தின் சிதைவுகள் போன்றவற்றையும் கூறலாம். இவ்வாறு புலம் பெயர்ந்த நாட்டிலிருந்து வெளிவந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதியாக த.தர்மகுலசிங்கத்தின் தாயைக் கூறலாம். இது அனசன் டெனிஸில் எழுதிய 16 சிறுகதைகளின் தமிழ் வடிவமாகும். மற்றும் யமுனா ராஜேந்திரன் எனக்குள் பெய்யும் மழை என்னும் தலைப்பில் 22 ஆசிய கவிகளின் கவிகளை மொழிபெயர்த்துள்ளார்.
இவை தவிர்ந்த இலக்கிய முயற்சிகள் என நோக்குகையில் இலக்கிய சிருஷ்டிகர்த்தாக்கள் தாம் ஆரம்பத்தில் தாய் நாட்டில் எழுதிய நூல்களை புலம் பெயர்ந்த நாட்டில் மீள்மதிப்பு செய்கின்றனர். இவர்களுக்கு உதாரணமாக (ஞானம், இன் 2003 24)

எஸ்.பொ, மாத்தளை சோமுவை கூறலாம். இது மாத்திரமன்றி புலம் பெயர்வு எழுத்தாளர்கள் தாம் ஆரம்பகாலத்தில் எழுதிய கட்டுரை, விமர்சனம், கவிதைத் தொகுப்புகள் நேர்காணல்களை தொகுத்து நூலுருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் எஸ் பொன்னுத்துரை, தான் ஆரம்ப காலத்தில் எழுதிய கட்டுரை, விமர்சனம், நேர்காணல்களைத் தொகுத்து இனி ஒரு விதி செய்வோம். என்னும் பெயரில் ஒரு நூலை ஆக்கி உள்ளார். இவரைப் போலவே சேரனும் தான் ஆரம்பகாலத்தில் வீரகேசரி, சரிநிகர், செந்தாமரையில் எழுதிய பத்தி எழுத்துக்களைத் தொகுத்து உயிர் கொல்லும் வார்த்தைகள் என்னும் நூலையும், தன் கவிதைத் தொகுதிகள் யாவற்றில் வெளிவந்த முக்கிய கவிதைகள் நூறினை எடுத்து இப்பொழுது இறங்கும் ஆறு என்னும் நூலையும் அளித்துள்ளார். இதே போல் ஜெயபாலனின் வெளிவந்த கவிதைகளில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கி ஜெயபாலன் கவிதைகள் என்ற பிறிதொரு நூலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போலவே புலம் பெயர் வாதிகளின் இலக்கியங்களை நாடு தழுவிய ரீதியில் உலகறியச் செய்த பத்மநாப ஐயரின் பணிகளும் மறக்க முடியாதவை. இவர் 5 தொகுப்புக்களை வெளிக்கொணர்ந்து உள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆயினும் இலங்கையில் கிடைக்கப் பெற்ற தொகுப்புக் களாக இனியும் ஆள்கொள், இன்னுமொரு காவடி, யுகம் மாறும், கண்ணில் தெரியுது வானம் ஆகியவற்றைக் கூறலாம்.
ஆகவே இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, ஈழத்தைப் போலவே புலம் பெயர்ந்த நாடுகளிலும் இலக்கியக் களம் விரிந்து கொண்டே வந்துள்ளது என்பதை அறியலாம். இலக்கிய ஊற்று என்றுமே வற்றுவது இல்லை. அது ஆறுகளைப் போல முன்னோக்கியதாகவே ஓடிக் கொண்டிருக்கும். அது தன் உருவ உள்ளடக்கங்களைக் காலம் தோறும் மாற்றிக் கொள்ளுமே தவிர அது என்றேனும் நின்று விடுவது இல்லை. சி.கா.செ. அவர்கள் புலம் பெயர்ந்த எழுத்தாளர் அனைவரும் தாம் புலம் பெயர்ந்து சென்ற அனுபவங்கள் அனைத்தையும் படைப்பில் கொண்டுவந்து விட்டனர் என்ற கருத்துடன் இயைந்த வகையில் "புலம்பெயர்ந்த எழுத்தாளர் தம் இலக்கியப் படைப்புக்கள் அனைத்தையும் படைத்து விட்டனர்" எனக் கூறியிருந்தால் அதனை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் புலம்பெயர்ந்த எழுத்தாளனின் ஆக்க இலக்கியம் நின்று விட்டது. இனி அவர்களிடமிருந்து வருவதற்கு ஒன்றும் இல்லை எனக் கூறியிருந்தால் அக்கருத்தை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அத்தோடு சி.கா.செ.கண்ட ஒரு சில படைப்பாளிகள் வீண் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வீணெனக் காலத்தைக் கழித்துக்கொண்டு இருக்கலாம். ஆனால் எல்லாப் படைப்பாளிகளையும் சி.கா.செ ஒட்டுமொத்தமாக வீண்வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வீணெனக் காலத்தைக் கழிக்கிறார்கள் எனப் பார்ப்பது தவறு. அவ்வாறு வீணெனக் காலத்தை கழிப்பவரல்ல புலம்பெயர்ந்த படைப்பாளிகள். இவர்கள் இன்றைய நிலையில் தமிழின் தேவையறிந்து அமைப்பியல், பின் நவீனத்துவமென பல்வேறு வாதங்களை உள்வாங்கி அதற்கேற்ப படைப்புக்களை சிருஷ்டித்துக் கொண்டுள்ளனர் என்றால் மிகையில்லை. (ஞானம் இன் 2003 25)

Page 14
O Ο ஈழத்து இலக்கிய
கிடந்த சில வருடங்களில் கவிதை, சிறுகதை ஆகியவற்றில் அடுத்தடுத்துப் பரிசுகளைப் பெற்று அசத்தினார் ஒரு இளம் எழுத்தாளர். அவர் பெயர் அ.ச.பாய்வா. கவிதை, சிறுகதை எதுவானாலும் அதில் புதுமை செய்தார். இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்தார்.
வானொலியில், மெல்லிசைப்பாடல்கள். கவிதைகள். பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள். (வீரகேசரி,மித்திரன், தினக்குரல், தினகரன், சுடர்ஒளி, சரிநிகர், தொண்டன், வெற்றிமணி, எனப் பல வகைத்தான பத்திரிகை/ சஞ்சிகைகள் ஆகியவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்திருப்பது இவரது எழுத்தின் ஆற்றலுக்கான ஒரு அங்கீகாரம் எனக் கொள்ளலாம்).
இவைமட்டுமல்ல மட்டக்களப்பில் பல முக்கியமான சிறப்பு மலர்களில் இவரது ஆக்கங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. மட்டக்களப்புப் பிரதேச கலாசாரப்பேரவை ஆண்டுதோறும் நடாத்தும் இலக்கியப் போட்டி களில் 1996-2000 (5வருடங்கள்) அடுத்தடுத்து சிறுகதைக்கான முதற் பரிசை இவர் பெற்றிருக்கிறார். இச்சிறுகதைகள், கலாசாரப் பேரவையின் சிறப்பு மலரான ‘தேனகம் ஏட்டில் பிரசுரமாகியுள்ளன. (அவை -அப்பா, ஆசாரங்கள், யாரும் இங்கே தீர்ப்பிடலாம் முதலியன). m இரண்டொரு வருடங்கள் இப்போட்டிகளில் கவிதையிலும் முதல் பரிசு பெற்றிருக்கின்றார். (காத்திருப்பேன், மீட்டுத் தரும் தெய்வம், பாணிச் சேவல், மீண்டும் ஓர் பெளர்ணமி)
இவ்வாறே தொண்டன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் ‘போர்க்கால விதவைகள் 2ம் பரிசு பெற்றது.
இவரது முதல் தொடர்கதை கனவிடை தோய்ந்து. மட்டக்களப்பின் பிரபல ஏடான 'தொண்டனி மாதசஞ்சிகையில் ஆரம்பமாகி 4வது அத்தியாயத் துடன் இடைநிறுத்தப்பட்டது.
காரணம் என்ன ? சஸ்பென்ஸ்! உண்மையான காரணம் அ.ச. பாய்வாவுக்கே தெரியாது.
இதனால் நாவலுக்கு முழுக்குப்போட்ட பாய்வா, பல வருடங்களின் பின் மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் நாவலில் கைவைத்துள்ளார்.
இலங்கையின் பிரபல இலக்கிய அமைப்பான 'சாகித்திய கலாபிரஸாதினி நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஒருமுறை இவரது சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்துள்ளது. ஆனால் அப்போது (கலவரகாலத்தில்) இலங்கையில் நிலவிய
Gerairib, assar 2003 26 D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூழ்நிலை காரணமாகக் கொழும்பு சென்று பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. சர்வசாதாரணமாக, மிக அலட்சியமாக அவர் இதைச் சொன்னார்.
இரா.நாகலிங்கம் (அன்புமணி)
இலக்கியத்துறையைவிட இசைத் துறையிலும் இவர் அபார திறமை பெற்றவர். 16 வாத்தியங்களை வாசிக்கும் வல்லமை பெற்றவர். இவர் இசையமைத்த பல பாடல்கள் ஒலிநாடாவாகியுள்ளன. தான் இயற்றும் பாடல்களுக்குத் தானே இசையமைத்துத் திருப்தி காண்பது இவரது இயல்பு. பல மெல்லிசை அரங்குகளில் இவர் தோன்றிப் பாராட்டுப் பெற்றுள்ளார். கவியரங்குகள் இவரது மற்றொரு களம். பல கவியரங்குகளில் புரட்சிகரமாக எதையாவது சொல்லி ‘அப்ளாஸி வாங்கிவிடுவார்.
பிரதேச மட்டத்தில் அவ்வப்போது நடைபெறும் சில விழாக்களில் அல்லது நாடக மேடையேற்றங்களில் இவரைக் காணலாம்.
w 27-10-1948ல் மூதூர் என்னும் கொட்டியாரப்பற்றுக் கிராமத்தில் பிறந்த இவரது முழுப்பெயர் அன்ரனி சத்தியசீலன் பாய்வா. (பிரபல எழுத்தாளர் வ.அ.இராசரத்தினத்தின் சொந்த ஊர்தான் மூதூர்) தந்தை பெயர் செபத்தியன் அன்ரனி பாய்வா. தாயார் அன்ரனி பீலிக்ஸ் பாய்வா)
மூதூர் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பூர்த்திசெய்த இவர், திருமலையில் உள்ள தி/புனித சூசையப்பர் கல்லூரியில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்தார். க. பொ. த. தராதரத்துடன் கிராமசேவகர் . உத்தியோகம் பெற்று தற்போது மட்டக்களப்பில் கடமை புரிகிறார். இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் இவர், பரவலாக அறியப்படவேண்டுமானால் இவரது ஆக்கங்கள் தொகுப்புக்களாக வெளிவரவேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும்?
மட்டகளப்பு இலக்கிய வளர்ச்சியில் அக்கறை உள்ள பொது நிறுவனங்கள் ஏதாவது இது பற்றிச் சிந்தித்தால் ஒருவேளை அது சாத்தியமாகலாம்.
(ஞானம், ஜூன் 2003 27)

Page 15
O ஒன குறிக்கிறது எழுதுகின் கொக்கு () O MMO O வயல் பரப்பில் 6) ண்ெ குனிந்து எழுதுகின்ற பேனை 6) 66665 நீள் சொண்டு அது இருக்கட்டும் - இப்படி ஒவ்வொரு நாளும் வெள்ளை வெள்ளையாய் அணிந்து வருகின்ற உடுப்புக்கு பதவி என்னவாம் தொழில் விவசாயம் இல்லை இந்தப் பக்கம் வருவது உலாத்தலுக்கு மணி காய்ந்து வெடித்தது பொது வரம்பில் ஆமை செத்து காகங்கள் உலர்ந்து கடதாசி போல் பறக்கப் பார்க்கின்ற நிலத்திற்கு பாரமாய் தன் மூலத்தை முக்கி ஊன்றிக் கொண்டு நிற்கும் பெயர் தெரியாத மரம்
நாக்கைக் காட்டியது
குடிக்க
தண்ணிர் வினவி {·့် .......့် ஒரு கோப்பை வார்த்தால் Y புண்ணியம்தான் V QNX
ஆகியதா
போய்க்கொண்டே இருக்கின்றேன்
நெரிச்சலுள்ள
புகை கக்கும் வாகனத்தில்
சிறுகச் சிறுக
இவ்விடத்தில் இருந்தும்
அழிந்து
நான் அழிவதைப் பற்றித்தான்
வெண் கொக்கு எழுதும்
இரண்டு வரி
Ceramarrib eesti 2003 28)
 
 

நேற்றைய
திரும் பரிப் பார்க்கிறேனர்
கலைஞர்கள் என்று எண்னையே திரும்
பரிப் பார்த்த நான், மீண்டும்
நேற்றைய கலைஞர்களைப் பற்றித் திரும்பிப் பார்க்கி
AP அந்தனி ஜீவா as VG3pai.
கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களின் கலைத்துறைப் பணிகள், பதிவுகள் காலத்தின் தேவையாகும். அதனைப் பற்றிய ஒரு தேடுதல் அவசியமாகும்.
நாடக மேடையின் வளர்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணித்த அந்தக் கலைஞர்களைப்பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நமது முன்னோடிகளான நேற்றைய கலைஞர்களின் நாடகப் படைப்பு களை, நாடக முயற்சிகளைப் பற்றிய பதிவுகள் அவசியம் தேவை.
நான் ஏடுதூக்கி, பள்ளிசென்ற காலம்முதல் இன்றுவரை கலைஞர்களை உன்னிப்பாகக் கவனித்தே வந்துள்ளேன். அறிவு தெரிந்த நாள் முதல் நாடகங் களைப் பார்த்திருக்கிறேன். நாடகக் கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன்.
வாழ்க்கையோடு போராடிக்கொண்டு, எதிர்நீச்சல்போட்டு ஒருவருக் கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார்கள். இந்தக் கலைஞர்களின் படைப்புகளைப் பற்றிப் பல்வேறு விமர்சனங் கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஆத்மசுத்தியுடன் செயற்பட்டிருக் கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடவேசுவடாது. நேற்றைய கலைஞர்களின் தொடர்ச்சியிலிருந்துதான் இன்றைய கலைஞர்கள் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். நவீன நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்திலிருந்து தொடங்கு கிறது என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும். கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள், நாடகமேதை பம்மல் சம்பந்தமுதலியாரைக் குருவாகக் கொண்டவர். அந்த பம்மல் சம்பந்தமுதலியாரின் சுகுணவிலாச சபையினர் இலங்கை வந்து பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்கள். இவர்களின் நாடகங்கள் டவர் ஹோல் மண்டபத்தில் நடைபெற்றன.
பம்மல் சம்பந்தமுதலியாரின் நாடகங்களாலும் - டவர் ஹோல் மண்டபத் தில் அரங்கேறிய சிங்களக் கலைஞர்களான ஜோன்.டி.சில்வா, தொன் பஸ்ரியன், சார்ல்ஸ் த.சில்வா ஆகியோரின் நாடகங்களின் தாக்கமும் இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தது.
இவர் ‘மனோரஞ்சித கான சபா' என்ற அமைப்பை உருவாக்கி நாடகக் கலையை வளர்ப்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டார். "மாஸ்டர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கலைஞர் இராஜேந்திரம் மாஸ்டர் அவர்கள் ஆர்மோனியம், தபேலா வாசிப்பதில் வல்லவர்.
தலைநகரில் பல நாடகக் கலைஞர்கள் உருவாகக் கரணமானவர். இவரது நாடக முயற்சிகள் கொழும்பு -13 - என்று அழைக்கப்படும் (ஞானம் விண் 2003 29)

Page 16
கொட்டாஞ்சேனை, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் ஆரம்பமானது.
"கொழும்பில் சமூக மாற்றங்கள் பல ஏற்பட்டன. (50-60 களில்) ஜிந்துப்பிட்டி பிரதேசம் மாத்திரம் அடிநிலைத் தமிழ் உயிர்ப்புக் கொண்ட பிரதேசமாக இருந்தது. ஐம்பதுகளில் திரைப்படத்தில் ஜனரஞ்சகமும், வானொலி யின் புதுமையும் வர இந்த இளைஞர் குழாத்தின் நாடக முயற்சிகளும் வேறு பட்டன. இவர்களோடு தொடர்பு கொண்டபோதுதான் நாடக ஆற்றுகை எத்த கைய ஒரு வலுவான ஒரு சமூக வெளிக்கொணர்கையாக தொழிற்பட்டது என்பது தெரியவந்தது.
வெளியுலக வாழ்க்கையில் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் இந்தக் கலை உதவிற்று. பார்ஸிஸ் மரபு மறக்கப்பட்டுப் போய் அதனை உள்வாங்கிய திரைக்கதை அமைப்பு கோலோச்சிய நாட்களில் (ஏறத்தாழ "வேலைக்காரிமுதல்) அப்பகுதியில் வாழ்ந்த தமிழ், தமிழ் பேசும் இளைஞர்களுக்கு நாடகம் ஒரு முக்கிய கலைவடிவமாயிற்று. தங்களின் திறமைகளை தங்களுக்கு தாமேயும் தங்கள் நண்பர்களுக்கும் நிரூபிப்பதற்கான ஒரு கலை வடிவமாக நாடகம் அமைந்தது" இவ்வாறு பேராசிரியர் கா.சிவத்தம்பி "வடகொழும்பில் நாடக வளம் என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
"கலைஞர்களின் ஆற்றல், பணி பற்றிய எவ்வித பதிவும் இல்லாம லிருப்பது மனம் வருந்தற்குரியதொன்றாகும்” எனவும் குறிப்பிடுகிறார்.
வடகொழும்பில் நாடக வளத்திற்கு முன்னோடியான கலைஞன் இராஜேந்திரம் மாஸ்டரின் நாடகக் குழுவிலிருந்து “ஒரு தலைமுறையின் முன்னோடியாக ஒரு கலைஞன் உதயமானான்." ( - இனியும் அரங்கேறும்)
இரைச்சலுளி .ை
நிசப்தம் - GD 66rds இரைச்சல் -
கலந்த ஒரு லயம். மெளனம் அலைந்து திரிந்த S) மெளனத்துள் இரைச்சல் மணல் வெளி - S) அடங்க அமைதி பரந்து விரிந்த பெரு 每 இரைச்சலுள் மெளனம் வானம் - 号 ஒடுங்க, நிசப்தம் உறைந்து நிறைந்த S | ஏகாந்த உணர்வு பெருவெளி Crs கடற்கரைத் தனி இருப்பு தனியே அமர்ந்திருக்கிறேன் O பேரின்பம் தரும். எதிரே - C போய் இரு அலைமேல் அலை மோத தனியாக "ஓம்" காரத் தொனியோடு அனுபவித்துப் பார், இரைச்சல் ஓங்கிப் பெருகி ஒலிக்கும் இன்பம் தெரியும் Sபரும் கடல் 4.
Gegburaurb, stadt 2003 3O

இருளில் தொலைந்து போன சூரியன் வேலிக் கிளுவைக் கூடாகப் பூமியை எட்டிப்பார்க்க இன்னும் எவ் வளவோ நேரம் இருந்தது. பக்கத்து வீட்டுப் பாறாத்தைக் கிழவியின் வெள்ளடியன் சேவல் செட்டையை அடித்துக் கொக்கரக்கோ எனக் கூவத் தொடங்கியபோதே வள்ளிக்கொடி எழுந்துவிட்டாள்.
மூத்தவன் பத்மன் குறட்டை விட்டுக் கொண்டே நித்திரையைச் சுகித்துக் கொண்டிருந்தான். மகள் இராணியும் எழும்பவில்லை.
வள்ளிக் கொடி அப்பச் சட்டியை அடுப்பில் ஏற்றிவிட்டாள். சீவல்காரக் கனகன் கொடுத்த கள்ளு மண்டியை விட்டதாற்போலும் அப்பத்து மா அளவாகப் புளித்துப் பொருமி யிருந்தது. மாவை அப்பச் சட்டியில் இட்டுச் சிலாவிச் சிமியானின் கிணற் றடித் தேங்காய்ப் பாலை அளவாக இட்டு அவள் சுடும் அப்பத்தின் சுவையை அந்த ஊரே அறியும்.
சீத்தை மணியனின் கடைக்கு நாற்பது, தாடிக்காரத் தாவீதரின் 'கபேக்கு முப்பது, வீட்டுக்குவரும்
வாடிக்கையாளருக்கு பதினைந்தோ இருபதோ, மிச்சம் மீசாடி வயிற்றுப் பாட்டுக்கு. பாவம் பிள்ளையஸ் வாழுற வளரிற வயசிலே ஏதும் தின்னத்தானே வேணும்.
ஒரு நாளா இரண்டு நாளா? கடந்த பத்து மாதங்களாக அப்பத்து டன் வள்ளியும் நெருப்பில் வேகிறபடி யால் ஓரளவாவது வயிற்றைக் கழுவ முடிந்தது. என்ன முயன்றும் இராணிக் கொரு சட்டைத்துண்டோ, பத்மனுக் கொரு கட்டைக் காற்சட்டையோ வாங்க முடியவில்லை.
வள்ளிக்கொடி முல்லைத் தீவிலே தங்கராசுவுக்கு வாழ்க்கைப் பட்டு இரண்டு குஞ்சுகளைப் பெற் றெடுத்தவள்; அயல்வீடு அடுத்தவீடு அறியாதவள்; கணவனும் இரண்டு பிள்ளைகளுந்தான் அவளது உலகம். அவர்களின் பாடுபறப்புக்களைப் பார்க் கவே நேரம் சரியாக இருக்கும். தங்கராசு அவளையும் பிள்ளைகளை யும் தளப்படி இல்லாமல் காப்பாற்றி வந்தான்.
சாணி அப்பிய எருமை மாட் டுக்கூட்டம் போல இராணுவத்தினர் திடீரென்று முல்லைத்தீவை உளக்கி உழுதபோது, பட்டிப் பசுவையும் பால் கறந்த முட்டியையும் விட்டு உடுத்த துணியோடு ஊரோடு ஒத்தோடி, வேர்த்துக் களைத்துப் புதுக்குடியிருப் பில் ஒதுங்கிய குடும்பங்களில் ஒன்று தான் தங்கராசுவின் குடும்பமும்.
புதுக் குடியிருப்பு அப்படி யென்ன காப்புறுதி செய்யப்பட்ட இடமா என்ன? வந்து சேர்ந்த பத்தாம் நாளே சந்தையிலே சனம் நிரம்பிப் பிதுங்கிக் கொண்டிருக்கும்போதுதான் சுழன்று வந்த கிபிர் ஐந்தாறு குண்டு களை முக்கித் தள்ளிவிட்டு போனது. சதையும் குருதியும் சந்தைச்
(ஞானம், விண் 2003
3D

Page 17
சுவரிலே பீச்சியடிக்கப்பட்டன. தலை வேறு, முண்டம்வேறு, கால்வேறு. கை வேறு, சதையும் எலும்பும் வேறு என்று பத்தோ பதினைந்தோ பேர் சிதறிப் போனார்கள்.
தங்கராசு ஒரு பாக்குவெட்டிற நேரம் முந்தியிருந்தால் அவனும் சிதறி உயிர்விட்டிருப்பான். விரகத்திப் பிள்ளையாரின் அருளோ என்னவோ தங்கராசு குடும்பம் தப்பிப்பிழைத்தது. என்னதான் சொந்தகாரர் என்றாலும் அவர்களின் தாவாரத்தில் தங்கி அவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்க விரும்பாததால் வெட்டைக் காணியொன்றில் கொட்டில் போட்டு விட்டான் தங்கராசு.
புதுக் குடியிருப்பில் கடல் தொழில் செய்யத் தோதுப்படாத நிலையில், வவுனியா வியாபாரச் சிந்தனை அவன் உள்ளத்தைக் கொழுவி இழுத்தது. அதற்கு உதவி யாக பெல்லைத்தவிர மற்ற பகுதிக ளெல்லாம் சத்தம் போடும் "கசெலி சைக்கிள் இருந்தது. வள்ளிக்கொடியும் பச்சைக் கொடி காட்டவே வவுனியா வியாபாரத்தைத் தொடங்கிவிட்டான். புதுக்குடியிருப்புக்கும் தாண் டிக்குளத்துக்கும் மூசி மூசிச் சைக்கிள் உழக்கி மூன்று நாள் வவுனியாவுக் கும் தாண்டிக்குளத்துக்குமிடையே வாங்கிய சாமான்களைக் கடத்திச் சேர்த்துகொண்டு வந்தால் முந்நூறோ நானுாறோ தேறும். ஒரு மாதிரித் தட்டல் தடவலாக வாழ்க்கையை ஒட்ட முடிந்தது. காலைப் பூசைக்குக் கந்தசாமி கோயில் மணி கேட்டதுமே நினைவுக் கயிறு அறுபட அவசரம் அவசரமாக பத்மனைக் கூப்பிட்டாள். “என் ரை ராசவெல் லே, அப்பத்தைக் கடையஞக்குக் குடுத் திட்டுவா குஞ்சு".
“நெடுக நான்தான் போற (ஞானம், இன் 2003
தோ? என்னாலை ஏலாது” என்று சிணுங்கியவன் இறுதியில் தாயின்
கெஞ்சலுக்கு மசிந்து கொடுத்துவிட்டான்.
அநியாயம் சொல்லக்கூடாது; சீத்தைமணியன் நேர்மையான பிறவி; கறாராய் அன்று பின்னேரமே பிசகைத் தீர்த்துவிடுவான். தாடிக்காறத் தாவீதரி டம் காசு வாங்குவது கல்லில் நார் உரிப்பது போலத்தான்! வாடிக்கை யான உத்தியோகத்தரின் காசுக்குப் பிழையில்லை. * ジ
மீண்டும் பழைய நினைவுகள் வள்ளிக்கொடியின் இதயத்தைக் காவடிச் செடிலாய்க் குத்தி இழுத்தன.
வவுனியா வியாபாரத்துக்குச் சென்ற தங்கராசு ஒருவாரமாகியும் திரும்பி வரவில்லை. "இண்டு வரு வான், நாளை வருவான் என்று காத் திருந்து காத்திருந்து பதினைந்து நாளாகியும் வரவில்லை. வள்ளிக் கொடி தேடாத இடமில்லை. எழுதிக் கொடுக்க வேண்டிய இடமெல்லாம் கொடுத்தாயிற்று. பலன்தான் பூச்சியம். ஆமி பிடிச்சு வைச்சிருக்குதா? அல் லது சுட்டுத்தான் போட்டாங்களா? எதுவும் தெரியாத நிலையில் வள்ளிக் கொடி இடிந்து போனாள். அழுது அழுது முகம் உப்பியதுதான் மிச்சம். பிள்ளைகள் பசியால் துடித் துக் கதறியபோதுதான் ‘இனி அழு வதற்கு நேரமில்லை என்ற உண் மையை உணர்ந்து கொண்டாள். பாறாத்தைக் கிழவியின் அற்ப சொற்ப உதவி எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறது. கிழவியின் ஆலோசனை தான் அப்பச்சட்டியை அடுப்பில் ஏற்ற வைத்தது. எஞ்சியிருந்த இரண்டு பவுண் காப்பு அடகு கடையினுள் புகுந்து கொண்டது.
என்னமாய்த் தளதள என் றிருந்த வள்ளிக்கொடி ஒரேடியாய்
32

உருகிப் போனாள். முதுமையின் அடையாளங்கள் அவள் முகத்தில். வயதுக்கு மிஞ்சிய தளர்ச்சி.
“எடி பிள்ளை றெட்பானாவோ என்னவோ ஒரு சங்கம் ஏழையளுக்கு உதவி செய்யுதாம் நீயும் போய்ப் பதியன்".
"ஓமிணை ஆச்சி, முந்தியும் உப்பிடித்தான் ஆரோ சொல்லிப் போய்ப் பதிஞ்சன். அவங்கள் ஒண்டும் தரேல்லை".
"முந்தி இருந்தவன் சனத் துக்கு குடுக்கிறன் குடுக்கிறன் எண்டு எல்லாத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போட்டானாம். இப்ப ஒரு புதுப் பொடிச்சியைப் போட்டிருக்கினம். முந்தநாள் கேப்பா பிலவிலை வீடு மேயக் கிடுகு, சேலை, சட்டைத்துணி, படிக்கிற பிள்ளையஞக்கு கொப்பி, பேனையள் எல்லாம் குடுத்ததாம்".
ஏ.ஜி.எ. கந்தோரில் காவல் இருந்து பதியிற படிவம் ஒன்றைப் பெற்றுக் கொண்டாள் வள்ளி.
“போமை நிரப் பி வச் சிருங்கோ; உங்கடை வீடுகளுக்கு வந்து நிலமையைப் பாத்து உதவிக்கு ஏற்பாடு செய்யிறன்” புதிதாக நியமிக் கப்பட்ட வனிதா சொல்லிவிட்டுச் சென்றாள்.
சொல்லி வச்சது போல ஐந்தாம் நாளே வனிதா வள்ளிக்கொடி யின் குடிசைக்கு வந்துவிட்டாள்.
கிழிந்து போய் ஒரு ஓரத்தில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்த புற் பாயை எடுத்துப் பொருத்தி விரித்து விட்டு, "இப்படி இருங்கோ அம்மா, வீடு தேடிவந்த உங்களை இரு எண்டு சொல்ல ஒரு கதிரையோ ஆன பாயோ இல்லை”. மன்னிப்புக்கோரும் தொனியில் இருந்தது அவள் பேச்சு. “பறவாயில்லை; உங்கடை நிலமையைப் பாக்கத்தானே வந்திருக்
கிறன்".
ஒரே பார்வையில் ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்ப நிலைபரத்தை உணர முடிந்தது.
வரதன் கிளாக்கரைக் கொண்டு நிரப்புவித்த படிவத்தை நீட்டினான் வள்ளி. அவளை வனிதா நிமிர்ந்து பார்த்தாள். ஐம்பது சத நாணயமளவு குங்குமப்பொட்டு அவள் நெற்றியில் பிரகாசித்தது.
படிவத்தையும் நெற்றியையும் மாறி மாறிப் பார்த்த வனிதாவின் முகம் சுருங்கியது. சிரிக்கச் சிரிக்கச் பேசி ஆறுதல் வார்த்தை சொன்ன வனிதா வின் முகம் கறுத்துச் சுருங்கியது ஏன்?
"நீங்கள் விதவை இல்லை uuff?”
"இல்லை அம்மா, அவர் வவு னியா யாவாரத்துக்குப் போனவர் காணமலேயே போய்விட்டார்".
வனிதா புருவத்தைச் சுருக்கி ஏதோ சிந்தனையில் ஆழ்வதுபோல் இருந்தது.
"அம்மா, உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்; எங்கடை நிலவரத்தை நேரடியாய் பாத்திட்டியள். இரவு பெய்த மழைக்கு கூரையில் ஒரே ஒழுக்கு. நானும் பிள்ளையஞம் குந்திக் கொணிடுதான் இருந்த நாங்கள். கொஞ்சம் கிடுகெண்டாலும் தந்தால்.”
"உங்களுக்கு உதவி செய்யிறதுதான் எனது வேலை. எப்படிச் செய்யலாம் எண்டுதான் யோசிக்கிறன்".
"666 siblost?”
"இது போர்க்கால விதவை களுக்கான உதவித்திட்டம். அதை நிறைவேற்றிறதுதான் எனது வேலை".
நாதியற்ற நாற்பத்திரண்டு பெண்கள் படிவம் நிரப்பிக் கொடுத் திருந்தனர். நாற்பது பேருக்கு உதவி
(ஞானம், ஜின் 2003
33)

Page 18
செய்வதில் பிரச்சினை இல்லை. கற்பகத்தின் கணவன் அவள் கண் முன்னாலேயே இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான். பொம் பருக்குப் பயந்து பங்கருக்குள் சென்று சின்னாச்சியின் கணவன் அவசரப்பட்டு வெளியே வந்ததால் குண்டுத் தாக்கு தலால் இறந்தான். சுற்றி வளைத்து அழைத்துச்சென்று வாசிகசாலைக்குள் அடைத்து கட்டிடத்திற்கே குண்டு வைத்ததால் சிதறிப்போன குடும்பத் தலைவரின் மனைவிமார் . இப்படி முப்பந்தைந்து விதவைகள்.
போர்க்கால விதவைகள் என்ற தொடரை அர்த்தப்படுத்துவதில் தான் சிக்கல். முதலில் நேரடியாக ஷெல்லடி, குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு போன்றவற்றால் சாவைத் தழுவிக் கொண்டவர்களின் மனைவிமார் தான் என்று கூறப்பட்டது.
அணி மையில் நடந்த கூட்டத்தில் போர்க்கால விதவைகள் என்ற தொடருக்கு விரிவான விளக்கம் கொடுத்து வாதாடினாள் வனிதா.
தங்கம் மாவின் கணவன் தறுமன் நெருப்புக் காய்ச்சல் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். அதற்குரிய குளிசை அங்கு இல்லாத தால் மரணம் அடைந்தான்.
இன்னொரு குடும்பத்தலை வன் மாரடைப்பினால் அவதிப்பட்டான். ஆஸ்பத்திரிக்கு அவனை எடுத்துச் செல்ல வாகனத்துக்கு எரிபொருள் கிடைக் கவில்லை. வைத்தியம் இன்றியே செத்துப்போனான்.
போர் அனர்த்தத்தால் இடப் பெயர்வு, குடும்பத்தலைவனுக்கு உழைப்பு பிழைப்பு இல்லை. குடும் பத்துக்கு அரை வயிற்றுக் கஞ்சி யேனும் ஊற்ற முடியாதநிலை. கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை சச்சரவு. விரக்தி அடைந்த (ஞானம், ஜின் 2003
கணவன் நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டான்.
இவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னதில் இறந்தவர்களின் மனைவி மார் போர்க்கால விதவைகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
வள்ளிக்கொடியின் பிரச்சினை வேறாக இருக்கிறதே.
புதன்கிழமை தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லிவிட்டுச் சென் றாள் வனிதா.
வனிதா சொன்னபடி வள்ளிக் கொடி சந்தித்தாள்.
வனிதாவின் கண்ணுக்கு முதல்பட்டது பொட்டுத்தான்.
"வள்ளிக்கொடி, நான் சொல்ற படி செய்தால் உதவி கிடைக்கும்".
"சொல்லுங்கோ, அம்மா" "நீ பொட்டுப் போடுவதை நிறுத்தவேணும்; உன்ரை புருஷன் செத்துப்போனான் என்று ஜே.பி. முன்னிலையில் சத்தியக் கடதாசி முடிக்கவேணும்".
அண்ட சராசரங்களும் சுற்று வது போல இருந்தது அவளுக்கு.
செத்துபோனார் என்று சத்தியக் கடதாசி முடிப்பதா? பொட்டை அழிப்பதா?
"வேண்டாம் அம்மா; எனக்கு எந்த உதவியும் வேண்டாம்" - சொல்லி விட்டு விறுக்கென நடந்தாள் வள்ளிக் கொடி. (யாவும் கற்பனையல்ல).
34D
 

kN
வீர சுதந்திரம் வேண்டுகின்றார் - தமிழர் விடுதலை எய்திடும் வேட்கைகொண்டார் - இவை நேர மறுப்பது நீதிகொலோ? - தெய்வம் நிற்பதன் மெய்ப்பொருள் கெட்டதுவோ?
அஞ்சி வாழ்தலைத் துறந்தனம்நாம் - உரிமை அற்றவ ராவதை வெறுத்தனம்நாம் - கழல் கெஞ்சிப் பெறுவது சுதந்திரமோ? - எங்கள் கீாத்திநி லைப்பினுக்(கு) ஈதழகோ?
தன்னில் வேற்றவர் யாவருக்கும் - உரிமை தள்ளி,ம றுப்பவர் மனிதராமோ? இன்னல் உற்றவர்க்(கு) உதவலன்றி - மாந்தர் இருப்பினைச் சொல்லிடச் சாட்சியில்லை!
நீதி கெடுப்பவர் எவரெனினும் - அவர் ாெஞ்சினில் மிதித்திட அஞ்சுகிலோம்! ஆதிப் பரம்பொருள் ஆனவர்காள்! - எரி அழலென நமதகத் தொளிர்ந்திடுவீர்!
பகைமை வளர்த்திடும் நாட்டமிலோம் - இந்தப் பாரினில் யாவரும் சமானமெனுந் தகைமை காத்திடல் நமதுகுறி - எனில் தாழ்வுகள் சாய்ப்பதும் நமதுபணி
முன்னம் நம்மிடை மூடரெல்லாம் - வாழ்வில் மூட்டிய சாதியின் தீயரக்கன் சென்னி வீழ்ந்தழி வெய்திடவே - விதி செய்யும்,ம னத்தினர் வேண்டுமிங்கே
ஆண்டில் ஆயிரம் போமெனினும் - நாம் ஆண்டுல கத்தினில் வாழ்ந்ததெலாம் மீண்டு நிலைத்திடும் வினைவிளைந்தால் - விடுதலை வேண்டி,ம ரித்தவர் விழிதிறப்பார்!
Cஞானம், இன் 2003 35)

Page 19
6.65 எழுத்துலs;
- மொழிவரதண் -
எனது எழுத்துலகம் பற்றி எண்ணும் போது எனது பள்ளிவாழ்க்கை மனக்கண்முன் நிழலாடுகிறது.
ஆலிஎல முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நான் கல்வி கற்கும் காலத் தில் கற்பித்த ஆசிரியர்களான திரு.நிஸார், திரு.ராசீக், கவிஞர் சாரணாகையூம் போன்றோர்கள் பல இலக்கிய வேலைகளைப் பாடசாலயில் செய்தார்கள்.
பாடசாலையில் ஓர் இலக்கியக் கையேட்டை வெளியிட வேண்டும் என்று ஒரு முறை திரு.ராசீக் அவர்கள் குறிப்பிட்ட போது, அதற்கு ‘மாணவர் குரலி எனப்பெயரிடலாம் என்றேன். பொருத்தமான பெயர் என்று அவர் கூறியதுடன் ஆக்கங்களைத் தருமாறும் வேண்டினார்.
சிறுகதைகள், கவிதைகள் எழுதுங்கள் என ஆசிரியர் நிஸார் வேண்டு வார். வகுப்பில் ஏனையோருடன் நானும் எழுதிக்கொடுப்பேன். அதனைத் திருத்தி வாசித்து என்னை ஊக்குவிப்பார். அந்த முதல் முயற்சிகளே என்னுள் இருந்த இலக்கிய உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பளித்தன.
தொடர்ந்து எனது உணர்வுகளை வார்த்தைகளால் அள்ளித் தெளித் தேன். அவைகள் எல்லாம் முழுமையானவை அல்ல என்று என்னால் பின்னால் உணர முடிந்தது. ஏனெனில் அவைகள் எனது ஆரம்ப எழுத்துக்கள் என்றாலும் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த இலக்கிய ஆத்மா விழித்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
தொடர்ந்து எழுதினேன். பல புனைபெயர்களில் எழுதினேன். ‘இன்ஸான் எனும் முஸ்லிம் ஏட்டில் எஸ்.ஏ.பி.கே-ரியாழ் என்ற பெயரில் எனது கவிதை வெளிவந்தது. தினகரன் புதன்மலரில் எனது கவிதை எஸ்.ஏ.பி.கே.மஹாலெட்சுமி என்ற பெயரில் வெளிவந்தது.
“மஹாலெட்சுமி எப்படி?” என வகுப்பில் நிஸார் ஆசிரியர் கேட்க மாணவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். எனது கவிதை வெளி வந்துள்ளதை அவர்களுக்குக் கூறிச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார் அவர். ஆலிஎலையில் சண்மோகன் காந்தி, பாண்டியன் நடராஜா ஆகியோரி னால் ஏற்படுத்தப்பட்ட ‘மலையக மறுமலர்ச்சி மன்றத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். வள்ளுவத்தின் சிறப்பு, திராவிடத்தின் மேன்மை, தமிழ் உணர்வு மறமலர்ச்சி மன்றத்தின் அடி நாதமாகி இருந்தன. பல போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருநூலகம்/ வாசிகசாலை கூட ஏற்படுத்தப்பட்டது.
திராவிட சிந்தனையாளர் ஏ.இளஞ்செழியனின் பேச்சைக் கேட்க (ஞானம், இன் 2003 36)
 

ஆலிஎல பிள்ளையார் கோயிலில் காத்திருந்த காலம் நெஞ்சில் பசுமையாகி இருக்கிறது. அவை எவ்வளவு மகிழ்ச்சியான காலங்கள்.? மறுமலர்ச்சி மன்றம் பல வேலைகளை ஆலிஎலையில் செய்தது. தொடர்ந்து பல பொது நிகழ்ச்சிகளில், கவியரங்குகளில் கலந்து கொண்டேன்.
சில்லையூர் செல்வராசன், கல்முனைப் பூபால் போன்றோர் தலைமை யில் பல கவியரங்குகளில் பங்கு கொள்ளும் பாக்கியம் பெற்றேன்.
பதுளை சரஸ்வதி கல்லூரியில் உயர் வகுப்பில் சேர்ந்து கற்ற வேளை பதுளை மு.நித்தியானந்தன், செ.சற்குருநாதன் போன்ற பலரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.
பதுளை பல இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கிய மண்வாசனை மிக்க ஊராகும். கல்லூரி வாழ்க்கையில் நிறைய வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. மார்கஸியம் பற்றிய சிந்தனை என்னை ஈர்த்தது. போலித்தனமான நடத்தைகளை வெறுத்தேன். உயர்தர வகுப்பில் இலக்கிய மன்றச் செயலாளராகி செயலாற்றினேன்.
என்னை வளர்க்க இந்தப் பின்புலம் உதவியது. இலக்கிய நண்பர்கள் ஒன்றுகூடி அமைத்த பதுளை சிந்தனை ஒன்றியத்தில் பொருளாளராக இருந் தேன். செ.சற்குருநாதன, எஸ்.கணேசன், பி.வேதாந்த மூர்த்தி, என்.வெங்டாசலம, கவிஞர் சாரணாகையூம் எஸ்.சந்திரசேகரன், பாரதி இராமசாமி போன்றவர்கள் அதில் முக்கிய உறுப்பினர்கள். (கே. கோவிந்தராஜும் ஒருவர்) R இலங்கையில் எவரும் நடத்தாத வகையில் பாரதி நூற்றாண்டை பதுளையில் சிந்தனை ஒன்றியம் நடத்தியது. பாரதி புத்தகக் கண்காட்சி, சித்திரக்கண்காட்சி, மலர் வெளியீடு என அது தொடர்ந்தது.மலர் வெளியீட்டில், மலர் குழுவுக்கு நானே தலைவராக இருந்தேன். இளங்கீரன், மு.நித்தியானந் தன், தெளிவத்தை ஜோசப் போன்றோர் இந்நிகழ்வைச் சிறப்பாகப் பாராட்டினர். வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டேன். கு.இராமச்சந்திரன் (குன்றின் குரலில்) பல சந்தர்ப்பங்களை எனக்குத் தந்தார்.
சிந்தாமணி எனக்கு நிறைய வாய்ப்புத் தந்தது. வீரகேசரி, தினபதி, தினகரன் பத்திரிகைகளில் எழுதினேன். குன்றின்குரல், பூங்குன்றம் (பதுளை) மல்லிகை, குமரன், பாரதி (பதுளை) நதி, கொந்தளிப்பு போன்ற பல சஞ்சிகை களில் எனது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
எனது பல்கலைக்கழக வாழ்வு (1974 - 1977) என்னை மேலும் வளர்க்க, நெறிப்படுத்த உதவியது. கண்டி இலக்கிய வட்டத்துடன் இயங்கிய யான் பெனடிக்ற் பாலன், சி.சிவசேகரம் போன்றோரின் நட்பைப் பெற்றுக் கொண்டேன். பல்கலைக்கழகத்தின் சிங்கள, தமிழ் இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் ஒருவனாகி நான் இருந்தேன்.
"மேகமலைகளின் ராகங்கள் (சிறுகதை) பேராதனை தமிழ்ச் சங்க சிறுகதைப் போட்டியில் பரிசைப் பெற்றுக்கொண்டது. 'கிணற்றுத் தவளை கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆறுதல் பரிசினைப் பெற்றுக் கொண்டது.
கேள்விஞானத்தால் வளாகத்தில் நிறையவே கற்றேன். செ.கணேச லிங்கம் எனது எழுத்தை விமர்சித்து திருத்தி அனுப்புவார். மீண்டும் மீண்டும் நான் எழுதி அனுப்புவேன். அவர் ஒரு சீரியஸான மார்க்ஸியப் பார்வை (ஞானம், இன் 2003 37)

Page 20
உடையவர். எளிதில் எதையும் சரியென ஏற்கமாட்டார். எவ்வாறெனினும் குமரன் 13 ஆவது இதழில் “வழி” என்ற கதையை வெளியிட்ட போது நான் மகிழ்ந்தேன்.
எனது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் பல சந்தர்ப்பங் களில் பல்வேறு இடங்களில் என்னோடு பழகியவர்கள்; கண்ணில்பட்டவர்கள் ஆவர். மேகமலைகளின் ராகங்கள் சிறுகதை அதில் ஒன்று. வெள்ளையர்கள் தோட்டங் களிலிருந்து சென்ற பின்னர் துரையாகி வந்த தேசிய முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான சிங்கள, தமிழ் துரைமார்கள் நடந்து கொள்ளும் முறை அக்கதையில் வருகிறது. இந்தக் கறுப்புத்துரைமார்கள் தங்களை வெள்ளைத் துரைகளாகக் கற்பித்துக் கொள்கின்ற பாங்கு அக்கதையில் வெளிபடுத்தப் பட்டுள்ளது. 'அவர்களை இனித் தடுக்கமுடியாது 1970 - 1977 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் பெருந்தோட்டப் பகுதிகளில் நிகழ்ந்த பட்டினி இறப்பு, பசி, பஞ்சம் என்பனவற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அந்தக்காலச் சம்பவங்களை இன்றும் எண்ணும் போது அவர்களை இனித்தடுக்கமுடியாது என்ற தலைப்பு எவ்வளவு பொருத்தமானது என எண்ணுவ துண்டு. எனது கதைகள் அனைத்தும் உயிருள்ளவை என்பதில் மனம் மகிழ்கிறேன்.
கறுப்பு ஆச்சி, கோளயா, பிரிந்துசெல்லும் ஒரு தோழன் எனது வாழ் வோடு அன்றாடம் கலந்து, பிணைந்து சென்றவர்கள். பூரீமா சாஸ்திரி ஒப்பந்தத் தால் ஒரு கூட்டம் இலங்கையை விட்டுப் பிரிந்து சென்றபோது நான் எனது உயிர் நண்பன் ஒருவனை இழந்தேன். இலக்கிய நண்பர்களை இழந்தேன். உறவினர்களை இழந்தேன். அந்த அருட்டுணர்வின் வெளிப்பாடே “பிரிந்து செல்லும் ஒரு தோழன்.
‘ஒரு நாடும் மூன்று நண்பர்களுமி (குறுநாவல் தொகுதி) பல்கலைக் கழக வாழ்வின் யதார்த்தத்தினை அப்படியே காட்டுகிறது. (1974 - 1977) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் இதன் உயிரோட்டத்தை அறிவர். நிலப்பசி ஓர் உண்மையான கதை. ஓர் அதிபரின் உண்மையான துடிப்பு, உணர்வு, உழைப்பு அதில் நரம்பும் சதையும் இதயமுமாகி உள்ளது. அந்தக் கதாபாத்திரங்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றன. இது 2001ல் எழுதப்பட்டதாகும். சு.முரளிதரன், அந்தனி ஜீவா, சாரல் நாடன் போன்றோருடனான தொடர்புகள் எனது ஆக்கங்களை நூலுருவாக்க வழிவகுத்தது. "மேகமலைகளின் ராகங்கள் (சிறுகதைத்தொகுதி) 1988ல் வெளிவந்தது. "ஒரு நாடும் மூன்று நண்பர்களும் குறுநாவல் தொகுதி 2001 ல் வெளிவந்தது.
கொட்டகலை இலக்கிய வட்டத்தில் ஓர் உறுப்பினராகி தற்போது செயற்பட்டு வருகிறேன். எனது கவிதைகள் நூலுருப் பெறாமலே உள்ளன. புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கவியரங்குக் கவிதைகள் எனப் பல. மேலும் சிறுவர் கவிதைகளை தங்க மலரே தளிரே என்ற தலைப்பில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றேன்.
என்றாலும் ‘என்ன எழுதினேன்? இன்னும் எழுதவேண்டுமே என்ற குற்ற உணர்வே என்னுள் உள்ளது. இன்னும் எனக்காக எவ்வளவு பணி உள்ளது..? (ஞானம், ஜின் 2003 38D

sa எங்கள் கால்களில் స్ట్ இனவாத விலங்குகள்
நாங்கள் பைத்தியங்கள்! நம்பி நம்பி ஏமாந்த
நாங்கள் பைத்தியங்கள்! *’ அவர்கள் கால்களில் எங்கள் வயிறு ஒருதர
o O நாறகாலகளாக பசியின் நிரந்தர முகவரியாய் துடைப்பங்களாக
அவர்கள் மனசு
மலத்திற் கலந்த முகாரியாய் po; விளம்பர
o o & چچنی எங்கள் சிந்தையில் ¥ ಗಿಣಿ பட்ஜட்டில்
சீவப்படாது சிறைப்பட்ட தாசிகள் مارهٔ O s அவர்கள் ேே து g * கைச்சாத்திடும் பேனாவுள்
இனவாதக் கழுகுகள் பீச்சிய எச்சங்கள் எங்களில் உறிஞ்சிய இரத்தம் எங்கள் மீது வீசப்படும் கந்தகப் பூக்களின் விசையிலும் நாங்கள் கட்டிய வரிப்பணம்
೨fo7 × ×್ನ பைத்தியங்கள்!
நாங்களே வடித்தவைகள்
-செல்.சுதர்சன்பேராதனைப் பல்கலைக்கழகம்.
நாங்கள் பைத்தியங்கள் நம்பி நம்பி ஏமாந்த நாங்கள் பைத்தியங்கள்!
மனச்சாட்சியின் உறுத்தல்
பொற்கோ
நேற்றுவரை இருந்ததொரு தேசிய கல்வியியற் கல்லூரி s כג
முறையை மாற்றினேன்.
அது அவர்களுக்குப் பொருந்தவில்லை என்பதே என் நியாயங்கள்.
இன்று இன்னுமொரு புதியதை முன்வைத்தேன். இதுவே இவர்களுக்குப் பொருத்தமென உரத்து உரைத்தேன்.
வவுனியா
நேற்றைய பிரச்சினைகளை இன்றைய முறைகள் - தீர்த்ததா
என்பதில் விடைகாண - நான்
என்றுமே முனைந்ததில்லை.
ஏனென்றால் என் முறைகள் மாறியதே தவிர நான் மாற வில்லை.
(ஞானம், ஜின் 2003
39D

Page 21
Ο
O
எழுதத் தூண்டும் எண்ணங்கள்
குலாநிதி தரைமனோகரன்)
இனிய குரல் கொண்ட ஒர் இசையரசு.
தமிழ்த் திரையிசைத்துறை 1950களிலிருந்து புதிய பாதையை நோக்கிச் செல்லத் தொடங்கியது. புதிய புதிய இசையமைப்பாளர்களின் வருகை மாத்திரமன்றி, புதுப்புதுப் பாடகர், பாடகிகளின் வரவும் தமிழ்த் திரையிசைத் துறைக்கு வளம் சேர்க்கத்தொடங்கியது. மெல்லிசை அக்காலகட்டத்திலிருந்து முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. தமிழ்த் திரையிசையில் பின்னணிப் பாடகிகள் தொடர்பாகச் சிந்திக்கும்போது, குரல் வளம் வாய்ந்த பல பாடகிகள் 50களில் அறிமுகமாகியமை கவனத்திற் கொள்ளத்தக்கது. பெரியநாயகி, காலசரஸ்வதி, ரி.வி.ரத்தினம், ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி முதலான கர்நாடக இசைவல்ல பாடகிகள் ஒருபுறத்தில் புகழ்பெற்று விளங்கினர். இன் னொரு புறத்தில் பி.சுசீலா, ஜிக்கி, பி.லீலா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனாராணி, பாலசரஸ்வதிதேவி, கே.ராணி, ஏ.பி.கோமளா, பகவதி, ரத்னமாலா, சரோஜினி, எஸ்.ஜானகி முதலானோர் திறமை வாய்ந்த மெல்லிசைப்பாடகிகளாக விளங்கி வந்துள்ளனர். இவர்களோடு, ஐம்பதுகளுக்கு முன்பிருந்தே நடிகைகளாகவும், பாடகிகளாகவும் விளங்கிய பி.பானுமதி, எஸ்.வரலட்சுமி முதலியோரும் உள்ளடக்கத்தக்கவர்கள். இத்தகைய திறமைவாய்ந்த பாடகிகளுக்கு இடையே பி.சுசீலா ஏறத்தாழ ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து புகழின் உச்சிக்கே செல்லத் தொடங்கினார். எழுபதுகளின் நடுப்பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைவரை அவர் தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடகியாகத் திகழ்ந்தார்.
பல்வேறு பின்னணிப் பாடகியரிடையே சுசீலாவின் குரல்வளம் தனித் துவமானது. மென்மையும் இனிமையும் கலந்த சிறந்த குரல்வளம் அவருடையது. பின்னணிப் பாடகிகளுள் ஜமுனாராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, சுவர்ண லதா, அனுராதா ரீராம் ஆகியோரது குரல்கள் இனிமையும், ஒரு வகைப் போதைத் தன்மையும் கொண்டவை. ஆனால், சுசீலாவின் குரலில் போதை யூட்டும் தன்மை இல்லை. எவ்வகைப் பாடலையும் இயல்பாகப் பாடக்கூடிய தன்மை அவரிடம் உண்டு.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சுசீலா, தமிழ் உச்சரிப்பில் எப்போதும் போதிய கவனம் செலுத்துவதுண்டு. செளராஷ்டிர மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ரி.எம்.சௌந்தரராஜனின் நாவில் தமிழ் அழகாக உருண்டு புரழ்வதைப்போல, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சுசீலாவின் நாவிலும் தமிழ் களிநடனம் புரியும். தமிழ் திரையிசைத்துறையில் அவர் நீண்ட காலம் நீடித்திருந்தமைக்கு, அவரது இனிய குரல்வளமும், உச்சரிப்புச் சுத்தமும், இயல்பான திறமையும், இசைஞானமும், அயராத Geomrærb stak 2003 40)
 
 

உழைப்பும் காரணங்களாக அமைந்துள்ளன. திரையிசைத்துறையில் சுசீலா வினதும், செளந்தரராஜனதும் கடும் உழைப்பைப் பாராட்டிக் கவிஞர் கண்ண தாசன் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் பாடும் பாடல்கள் சிறப்பாக அமையவேண்டும் என்பதில் இருவரும் கடும் சிரத்தை எடுத்துக்கொள்வதுண்டு. இளையராஜாவின் இசை அமைப்பில் ஒரு பாடல் ஒலிப்பதிவின்போது அப்பாடல் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக, சுசீலா பதின்மூன்று முறை அப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடவேண்டியிருந்தது. உயர்ந்தமனிதன் (1968) திரைப்படத்துக்கான ஒரு பாடல் ஒலிப்பதிவின்போது தாம் பாடிய பாடல் திருப்தியாக அமையவில்லை என இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறைசொன்னபோது, சுசீலா கண்ணிர் மல்க வருந்திவிட்டு திரும்ப அப்பாடலைப் பாடினார். பாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. திருவருட் செல்வர் (1967) படத்தில் பத்மினியின் நடனத்துக்காக இடம்பெறவேண்டிய ஒரு பாடலைச் சுசீலாவைக் கொண்டு பாடுவிக்க இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் விரும்பினார். கர்நாடக இசையில் அமைந்த அந்தப் பாடலைப் பாடுவதற்குச் சுசீலா தயக்கங் காட்டி, வேறு யாராவது ஒரு பாடகியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆயினும், இசையமைப்பாளரின் வற்புறுத்தலின்பேரில் போதிய அக்கறை எடுத்து அந்தப் பாடலை அவர் பாடினார். “மன்னவன் வந்தானடி தோழி!” என்று தொடங்கும் அந்தப் பாடல் சிறப்பாக அமைந்துவிட்டது. பத்மினியும் அந்த நடனக்காட்சி சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக, காட்சி படமாக்கப்படுவதற்கு முன் அருகில் இருந்த கோயிலுக்கு சென்று வழிபாடு இயற்றிவிட்டு வந்து காட்சியில் நடித்தார். இனிய பாடலும், அருமையான நடனமும் கலந்ததாக அக்காட்சி சிறப்பாக அமைந்தது. போதாததற்கு, அக்காட்சியில் சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பு வேறு. ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியைப் பற்றிச் சுசீலா பத்திரிகை நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை தாம் குதூகலமாகப் பாடிய பாடல் ஒன்று, திரைப்படத்தில் இடம்பெற்றபோது, நடிகை கண்களுக்குக் 'கிளிசரின் போட்டுக்கொண்டு அழுதழுது நடித்தாராம். பாடலின் பொருள் பற்றியோ, இசை பற்றியோ கவனஞ் செலுத்தாத ஒர் இயக்குனரின் தவறு அது.
சுசீலாவின் வளர்ச்சியின் பின்னணியில் அவரது தந்தையும், கணவரும் இருந்திருக்கின்றனர். இயல்பிலேயே இனிய சுபாவம் கொண்ட பாடகி அவர். அவரது சக பின்னணிப் பாடகிகளே புகழ்ந்து கூறும் அளவுக்கு அவரது திறமையும், சுபாவமும் அமைந்துள்ளன.
தமிழ் திரையுலகில் அதிகமான பாடல்களைப் பாடிய பாடகி என்ற பெருமை சுசீலாவுக்கு உண்டு. பல்வேறு நடிகைகளுக்கும் பொருத்தமான முறையில் அவரது குரல் அமைந்துள்ளது. இனிய குரல் வாய்ந்த ஓர் இசையரசி அவர். அவர் பாடிய பாடல்கள் இன்னும் பல்லாண்டுகள் எமது செவிகளில் ஒலித்துக்கொண்டும் இதயங்களைக் கவர்ந்துகொண்டும் இருக்கப்போகின்றன. கவியரங்குகளும் கோமாளித்தனங்களும்.
கவிதையையும், கவிதா உணர்வையும், கவிதா இரசனையையும் ஓரளவு மக்கள் மத்தியில் பரப்புவதில் தரமான கவியரங்குகள் பங்காற்றி வந்துள்ளன. இலங்கையில் சில தரமான கவிஞர்கள் கவியரங்குகளைச் Gerarb assor 2003 4D

Page 22
சிறப்புற நடத்தியும் பங்கேற்றும் வந்துள்ளனர். இலங்கை வானொலியும் தன்னளவில் கவியரங்கு வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து வந்துள்ளது.
ஆயினும், பல சந்தர்ப்பங்களில் கவியரங்கு என்பது வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும், கோமாளிக்கூத்தாகவும் அமைந்துவிடுகின்றது. தங்கள் இரட்டை அர்த்தம் கொண்ட "கவிதைகளை" மேடையில் மக்கள் முன் கூறி மகிழ்ந்து, அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்கள் என்பதைக் கருத்திற் கொள்ளாது, மக்களின் சிரிப்பையே தமக்குக் கிடைக்கும் கெளரவமாகக் கருதி, ஆத்மதிருப்தி கொள்ளும் “கவிஞர்களும்” உளர். விரசமான முறையில் மேடையில் வார்த்தை ஜாலங்களைக் கொட்டுவதே கவிஞர்களுக்கும், கவியரங்களுக்கும் இலட்சணம் என்ற ஒரு வகை மாயையைத் தரங்கெட்ட கவிஞர்கள் சிலர் ஏற்படுத்த முனைகின்றனர். "நமக்குத் தொழில் கவிதை” என்று பாடிய பாரதிக்கும், “நமக்குப் பொழுதுபோக்கு கவிதை” என நினைக்கும் இவர்களுக்கும் வெகுதூரம். "எந்தன் பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும்" என்று பாடிய பாரதிக்கும், "எந்தன் இரட்டை அர்த்தத்தால் இவ்வையத்தை பழுதாக்கிட வேண்டும்” என எண்ணும் இவர்களுக்கும் எட்டாப் பொருத்தம். நகைச்சுவை என்பது கவியரங்கில் இயல்பாக இடம்பெறவேண்டும். ஆனால், நகைச்சுவை இடம்பெறவேண்டும் என்பதற்காக நமது கவிஞர்கள் நல்கும் கோமாளித்தனங்கள் அருவருப்பானவை. கவியரங்குகளில் விரசமான பகிடிகள் விடுவதற்காகவே தாங்கள் பிறந்தவர்கள் போலச் சில “கவிஞர்கள்” நடந்துகொள்கின்றனர்.
இத்தகைய கோமாளித்தனங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் ஆங்காங்கே சில தரமான கவியரங்குகள் நடந்துகொண்டுதான் வருகின்றன. அவற்றை ஊக்குவிக்கவேண்டும். தரமான கவிஞர்களை மட்டும் மேடையேற அநுமதித்தால், கவியரங்குகளின் தரமும் பாதுகாக்கப்படும்; பொதுமக்களின் கவிதா உணர்வும் வளர்ச்சிபெறும்.
நாக்குப் புரட்டலும் நமது அரசியலும்
அரசியல் வேடிக்கை விநோதங்களுக்கு எமது நாட்டைப்போல சிறந்த உதாரணம் உலகத்தில் வேறெங்கும் இருக்கமுடியாது. நமது பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகளின் இலட்சணமே நேற்றுச்சொன்னதை இன்று மறுத்தல் என்பதுதான். இவர்களது வாயில் நல்லது என்பது ஒருபோதும் வரமாட்டாது. தப்பித்தவறி தம்மை அறியாமல் ஏதாவது நல்லதைச் சொன்னாலும், அடுத்தநாள் அதற்கு மறுப்பறிக்கை விடுவார்கள். நாக்குப் புரட்டுவதற்கு நமது நாட்டை விஞ்ச இன்னொரு நாடு உலகில் இல்லை.
காலங்காலமாக நாக்கைப் புரட்டி வந்ததால்தான் நாட்டுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மக்கள் விடயத்தில் பல்வேறு கட்டங்களில் நாக்குப் புரட்டல்கள் நடந்துள்ளன. காலங்காலமாக தமிழ்த் தலைவர்கள் பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமாந்துபோன கதை, நமது நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. ஆயினும், நாக்குப் புரட்டல்கள் எப்போதும் செல்லுபடியாகாது என்பது ஓரளவுக்குப் பொறுப்புவாய்ந்த சிலருக்குப் புரிந்துதான் இருக்கிறது. புரியாதவர்களும் உளர். "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? இந்த நாட்டிலே!" Gessnrearrib, essar 2oo3 42)

உலகாதிபதி -
உயிர்நேசம்
நான்
யுத்த வெறி தலைக்கேறி A. கோரத் தாண்டவமாடும் 刁U工
வெள்ளையடிக்கப்பட்ட கழுகு. இருதயத்திற்கும் மூளைக்குமிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்ட அதிசய மனிதன். மனிதக் குருதி குடித்து மானுட மாமிசம் புசிக்கும்" நரமாமிச பட்சணி. தாய்ப்பாலிலேயே வீரமெனும் போர்வையணிந்த வெறியும், மண்பற்றெனும் உயிர்ச்சிதைப்பும் ஊட்டப்பட்டு தேற்றப்பட்ட பூலோக நரகன்.
என் முகம் நோக்கு மூர்க்கத்தன்மை நிர்வாணமாய் நிற்கும். மீசையை. கிட்லரின் மீளவதாரமெனப்புரியும் நான் சாத்தானின் அவதாரம். கலியுகமே என் யுகம். இறையென்றே எனையுலகு தொழவேண்டுமென மறைவகுத்தவன். என் மறைக்கு
எதிர்மறையில்லை. ஜீவ காருணியர்களுக்கு என் மன்றில் தூக்கு மரமன்றி வேறில்லை. எண்ணெய் கலந்த குருதி எவ்வளவு குடித்தும் என்தாகமின்னும் ஓயவில்லை. யாரங்கே.
வெணர்புறா பொரியலே இன்றுமெனக்குணவென உரை. பிளேயரும் இன்றுவருவான்.
வேலாயுதம் தினகரன் பத்தனையூர்
N)
குழப்பம்! கவிஞர் ஏ.இக்பால்
வாசல் திறந்திருக்க ஊசல் ஆடியவன் உட்புகுந்தான்!
நாசம் புதுமனிதன் வேசம் புனைந்துடனே வெளி வந்தான்!
ஏதும் அறியாத நாதியற்ற வொரு ஏழை எழுந்துடனே
ஆதி பகவனிங்கு ஊதிவிட்டவர்கள் உலகைக் குழப்பினரா?
பேதம் ஏதுமில்லாப் பெருமை பெறுமளவு நீதம் எழுந்ததுவே!
மீதம் இருந்தவர்கள் சேதம் விளைத்துச் செய்தவையே குழப்பம்!
Gerarb, start 2003
43)

Page 23
லெனினர் மதிவானம் அவர்களின் கட்டுரைக்குப் பதில்
~ சாரல்நாடன்
லெனின் மதிவானம் வளர்ந்து வரும் இளம் விமர்சகர் என்ற அபிப் பிராயம் எனக்குண்டு. கூடவே, தன்னுடைய தகுதிக்கு மீறிய விடயங்களைப்பற்றி எழுத முயன்று தன்னைப்பற்றிய ஒரு பிரமையை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார் என்ற எண்ணமும் எழுகிறது. மலைநாட்டிலிருந்து இப்போது விமர்சனத்துறைக்கு வந்திருப்பவர்களின் எழுத்துக்களும், கருத்தரங்குகளில் காணக்கிடைக்கும் அவர்களின் பேச்சுக்களும் அந்த எண்ணத்தையே ஏற்படுத்துகின்றன. மலையகத்தில் விமர்சனத்தில் எவரும் அக்கறை காட்டுவதில்லை என்பதால் நாம் இவர்களைப் பொறுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது. பல்கலைக்கழகப் படிப்புப் பெற்ற எம்.வாமதேவனும், மரியதாசனும், நித்தியானந் தனும் தமது விமர்சனப் பார்வையை சமூக நலனில் அக்கறை கொண்டதாக எப்படி மாற்றிக்கொண்டார்கள் என்பதை தெளிவத்தை ஜோசப் தன்னுடைய “மலையக சிறுகதை வரலாறு” என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.
லெனின் மதிவானம் சேவை செய்த யதன்சைட் ஆசிரியக்கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த என்னுடைய “மலையகம் வளர்த்த தமிழ்” நூல் அறிமுக விழாவில் அவர் விமர்சகராகக் கலந்து கொண்டார். அவருக்குப் பின் பேசிய இர.சிவலிங்கம் “பல்கலைக்கழகப் படிப்பு என்பது இளமைக் கனவுகள், இலட்சியத்துடிப்புக்கள் என்பவைகளால் ஆனது. ஆனால் வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது. நான் பேசாத இடதுசாரிக் கருத்துக்கள் இல்லை. மலையகம் என்னை இப்போது மறுவாசிப்புக்கு இட்டுச் செல்கிறது” என்று கூறினார்.
லெனின் மதிவானம் அவர்களது “மலையக கலை இலக்கியம் தொடர்பில் செய்யக் கூடியவை, செய்ய வேண்டியவை” என்ற தலைப்பிலான கட்டுரையை வாசித்தபோது - இந்தக் கட்டுரையில் பெயர் குறித்து எழுதப்பட்டிருப்பவன் நான் ஒருவனே ஆதலின், இந்தச் ‘சீண்டல்’ பதில் தரப்படாது விடப்படக்கூடிய விசயமல்ல என்ற முடிவுக்கு வந்தேன். சுருக்கமாய் கூறுவதே தனது சிறு கட்டுரையின் நோக்கமாகும் என்று கூறிவிட்டு --கட்டுரைத்தலைப்புக்குப் பொருந்தாத பல விசயங்களை எழுதித் தன்னுடைய “இலவச அறிவுரையை’ இட்டு ஏழு பக்கங்களில் நிரப்பி இருக்கிறார்.
1. “மலையக இலக்கியம் குறித்து நோக்குவதற்கு முன்னர், அதன் அடித்தளமாகவுள்ள மலையக சமுதாய அமைப்புப் பற்றிய தெளிவுணர்வு
Ce5 marrb, s'ai 2003 44)
 

அவசியமானதொன்றாகிறது” என்கிறார். யாரில்லை என்றது? கடந்த எழுபதாண்டுகள் மலையக இலக்கியம் படைத்தவர்கள் இத்தெளிவுணர்வு அற்றவர்களா?
2. “மலையக சமூகவமைப்பானது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்டதோர் சமூக அமைப்பாக விளங்குகிறது” என்கிறார். இலட்சக்கணக்கான தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது மலையக சமூக அமைப்பு என்றிருக்க வேண்டும்.
3. “மலையக மக்கள் தொடர்பிலான மக்கள் இயக்கமொன்றினைக் கட்டியெழுப்ப முனைவது இலக்கியத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாக விளங்குகிறது” - எழுத்தாளனிடம் முக்கிய கடமையாக அரசியற் செயற்பாடுகளை எதிர்பார்ப்பது பொருந்தாது.
4. கட்டுரையில் ஓரிடத்தில் “எனது 'ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியம் என்ற கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளேன்” என்கிறார். இன்னோரிடத்தில் “இந்நூலாசிரியரின் 'ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் மலையகம் 2000" விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்கிறார். உண்மை என்ன? 2000ம் ஆண்டில் இப்படி ஒரு நூலை இவர் எழுதியுள்ளாரா? இல்லை என்றால் கட்டுரை இடம்பெற்ற சஞ்சிகையின் பெயரையாவது குறித்திருக்க வேண்டாமா? வசந்தம் சஞ்சிகையில் இவரெழுதிய கட்டுரையைத்தான் குறிக்கிறார் என்று நினைக்கிறேன். அக்கட்டுரையை இவரெப்படி விரிவான விளக்கம் தரும் கட்டுரையாகக் கருதுகிறார்? நானறிந்த வரையில் இவருடைய நூல் எதுவும் வரவில்லை.
5. மண்ணைச் சார்ந்த - மண்ணைச் சாராத எழுத்தாளர்கள் என்ற பாகுபாடுகள் லெனின் மதிவானம் போன்றவர்களால்தான் அதிகம் தூக்கிப் பிடிக்கப்படுகின்றன. இலக்கிய தரம் மிகுந்த ஒரு படைப்பு வெற்றி அடையும்போது இந்த வேறுபாடுகள் அர்த்தமற்றவைகளாகின்றன. மண்ணைச் சார்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அதிகமாக வெளிவரத் தொடங்குகிற ஒரு நேரத்தில் இந்த வேறுபாடுகள் தானாகவே மறைந்து போவதுண்டு. ஆழமாக நோக்கினால் மலைப்பொறி 1964, ஞானம் 2000, என்ற இதழ்களின் வெற்றி தோல்விகளை (இரண்டுக்கும் யாழ்பாணத்தவர்களான இரா.பாலா, தி.ஞானசேகரன் தாம் ஆசிரியர்கள்) பார்க்கலாம். மலையகத்தில் இலக்கிய எழுச்சி மிகுந்த காலமான அறுபதுகளில் அமரர் எஸ்.நடேசன் சிறப்பாசிரியராக மலைமுரசுவுக்கும் 1964, அமரர் இரா.சிவலிங்கம் மலைப்பொறிக்கும் விளங்கினர். முழுக்கமுழுக்க மலையகத்தை மையமாக்கிய படைப்புகளையே இரண்டு இதழ்களும் தந்தன. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப்பின்னர் “ஞானம்’ என்றொரு இலக்கிய இதழ்தானே மலையகத்திலிருந்து வருகிறது? மண்சாராத என்ற வேறுபாடுகளை முன்னெடுப்பதில் என்ன பயனிருக்க முடியும்?
6. “மலையக மக்களின் நல்வாழ்வுக்கான பதாகையை உயர்த்திப் பிடிக்கின்ற போது” என்றாரம்பித்து, இவர் தந்திருக்கும் "இலவச அறிவுரைகள்” ஞானம் 35 இதழின் 42 ஆம் பக்கத்தில் பெரும் பகுதியை நிரப்பி உள்ளது. இதில் என்ன சொல்லியிருக்கிறார் என்பது சத்தியமாக எனக்கு விளங்கவில்லை. 7. “மலையக இலக்கியத்தினைப் பாதித்திருக்கின்ற மற்றொரு முக்கிய விடயம் பதிப்பு முயற்சியாகும் என்றெழுதுகிறார். இதற்கடுத்த வரி மலையக எழுத்தாளர்கள் அனைவரும் அறிந்தது. அதற்கடுத்த வரியும் அப்படியே. Gebrraribo arer 2003 45)

Page 24
அடுத்த 35 வரிகளில் காணப்படும் யோசனைகள் நாம் ஒருபோதும் செயற்படுத்தப் போவதில்லை.
சமீபத்தில் மலையகத்தில் நடந்த வெளியீட்டு விழாக்களில் ராசாத் தோட்டத்தில் மார்ச் 2003 இல் நடந்த விழுதுகள் குறிப்பிட்டு கூறத்தக்கவிதத்தில் அமைந்திருந்தது. லெனின் மதிவானம் கூறியிருக்கும் குறைகள் எதுவும் அந்த வெளியீட்டில் இல்லை. அட்டனில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிவரும் லோயல் கல்வியகத்தின் ‘சங்கத்தமிழ் மன்றம்" நடாத்திய விழா அது.
பதிப்புத்துறை பற்றிப் பேசும்போது சிறந்த நூல்களை வெளியிடும் நந்தலாலா பதிப்பகத்தைக் குறித்து எழுதுகிறார். ஏப்ரல் 1995 இல் மலையகச் சிறுகதைகள் என்ற தமிழ் நூலை மாத்திரமே இது வெளியிட்டது. தேசிய கலை இலக்கியப் பேரவை என்ற தேசம் தழுவிய வெளியீட்டகம் இதுவரை 4 மலையக நூல்களையே வெளியிட்டுள்ளது. மலையக வெளியீட்டகம் இதுவரை 22 புத்தகங் களை வெளியிட்டுள்ளது. இதில் இரண்டுக்கு சாகித்திய விருதுகள் கிடைத்தன. சாரல் வெளியிட்டகம் 9 நூல்களை வெளியிட்டுள்ளது. இதில் மூன்றுக்கு மாகாண சாகித்திய விருதுகள் கிடைத்தன. ஞானம் பதிப்பகம் 7 நூல்களை வெளி யிட்டுள்ளது. இதில் ஒரு நூல் தேசிய சாகித்திய விருதினையும் மத்தியமாகாண சாகித்திய விருதினையும் பெற்றது. இன்னொரு நூல் இந்து கலாசார அமைச்சின் தேசிய மட்டத்திலான விருதினைப் பெற்றது. மற்றொரு நூல் மத்தியமாகாண சாகித்திய பரிசினைப் பெற்றுள்ளது. இந்த முயற்சிகள் கட்டுரையாசிரியரான லெனின் மதிவானத்தால் பாராட்டத்தக்கனவாகக் கருத முடியவில்லையா?
இன்றைய காலக்கட்டத்தில் நூறு பக்கத்தில் ஒரு நூலை அச்சகத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு ரூபா ஐம்பதாயிரம் தேவைப்படுகின்றது. வெளியிட்டு விழா விமர்சனம் என்றால் முன்னே வருபவர்கள் விற்பனையில் உதவுவதில்லை. விற்பனைக்கு புத்தகங்களை அள்ளிக் கொண்டு போகும் நண்பர்கள் பணம் கொடுக்கும் கைங்கரியத்தில் உண்மையாக நடந்து கொள்வதில்லை.
இந்தக் கசப்பான அநுபவங்கள் நூல் வெளியிடுபவர்களை யோசிக்க வைக்கிறது. சொந்த அச்சகம் இல்லாது பதிப்புத்துறையில் ஈடுபடுபவர்களின் நிலைதான் பரிதாபகரமானது. இந்த நிலையிலும் தொடர்ந்து மலையகத்தில் செயற்படுபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும், அல்லது ஆரம்பத்திலேயே தரம் பற்றி வலியுறுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
மலையக வாய்மொழி இலக்கியம் - ஓர் விமர்சனக் குறிப்பு என்ற அடைமொழியுடன் லெனின் மதிவானம் சரிநிகள் ஏட்டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதே கட்டுரை பின்னர் யதன்சைட் கல்விக்கழக வெளியீடான கலையருவியில் மறுபிரசுரம் பெற்றிருந்தது (1997). இக்கட்டுரைகள் வெளியான தகவல்களைப் பின்நாட்களில்தான் நான் அறிந்து கொண்டேன். ஒரு கட்டுரையை பத்திரிகையில் எழுதி பிரசரித்தப்பிறகு அதே கட்டுரையை கல்லூரிமட்டத்திலான மலரில் எழுதுவது தன்னைப்பற்றிய ஒரு பிரமையை ஏற்படுத்துவது அல்லால் வேறென்ன காரணமிருக்க முடியும்?
அக்கட்டுரையில் “தொகுப்பில் சேகரிக்கப்படாத இன்று மலையக மக்களிடையே காணப்பட்ட சில பாடல்களை அண்மையில் ரீபாத கல்வியற் கல்லூரி மாணவர்கள் (விரிவுரையாளர் வ.செல்வராஜாவின் வழிகாட்டலுடனும், மேற்பார்வையின் கீழும்) சேகரித்துள்ளனர் என்று கூறியுள்ளார். “இதைச் சரியான ஆய்வுப்பார்வையில் தொகுத்து வெளியிடுதல் இத்துறையில் குறிப்பிடத்தக்க CBirerby So 2003 46)

பங்களிப்பாக அமையும்” என்று "இலவச அறிவுரை* கூறவதற்கும் மறக்கவில்லை எத்தனை அபத்தம்?
1. பூரீபாத கல்வியல் மாணவர்கள் சேகரித்த பாடல்கள் உண்மையில் நாட்டுப்பாடல்கள் தானா? என்பதை அறியும் பொறுப்பு என்னிடமே தரப்பட்டது என்பதை லெனின் மதிவானம் அறிந்திருக்க நியாயமில்லை.
2. ஆய்வுப்பார்வையில் அதைத்தொகுத்து வெளியிடுவதற்கு அதில் ஒன்றுமில்லை. சேகரிக்கப்பட்ட நூறுபாடல்களில் 3 மாத்திரமே நாட்டுப்பாடல்கள். 3. சாரல் பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட ஆரம்பித்தவுடன் அதை அவரிடமே கொடுத்து விட்டேன்.
4. வாய்மொழி இலக்கியம் நூல் பற்றிய கட்டுரை என்றாலும் பல இடங்களில் என்னைக் கட்டுரை ஆசிரியர் என்றே குறித்துள்ளார்.
ஒரு நூல் தானும் எழுதாத லெனின் மதிவானம் நூலாசிரியர், பத்து நூல்களை அச்சில் கொண்டு வந்த நான் கட்டுரையாசிரியர். இதைப் பார்வைக் குரோதம் எனலாமா? என்னுடைய வாய்மொழி இலக்கியம் கட்டுரைகள் அடங்கிய ஏட்டுப்பிரதி அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபன மதிப்பீட்டுச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்பதையும் இங்கே குறித்தல் நலம். ஆனால் கட்டுரை யாசிரியர் அனுபவச் செழுமையற்ற அரைவேக்காட்டுத்தனம், தேசிய உணர்வு பற்றி சிந்திக்கத்தவறிவிட்டமை, நுனிப்புல் மேயுந்தன்மை, கதாப்பிரசங்கம், ஆய்வு நூல் அல்ல என்று பல சொற்களால் என்னை அர்சித்திருக்கிறார். ஆனால் லயம் ஏட்டிலும் கலையருவி இதழிலும் என் வாய் மொழி இலக்கியம் நூல் பரவலாக எடுத்தாளப்பட்டிருப்பதை நானறிவேன்.
மறைந்த சி.வி.வேலுப்பிள்ளையின் நூலொன்றை சமீபத்தில் அச்சிடுவித் தேன். இந்த நாவலைத்தேடி எடுத்து கணினியில் பதிக்க ரூபா இருபதினாயிரம் செலவாயிற்று. அச்சில் கொண்டு வருவதற்கு மேலும் ஒரு லட்சம் செலவாயிற்று. என்றாலும் பதிப்பக முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறேன். இந்த நிலையில், ஆய்வு எழுத்துக்கள் இல்லை, அவை வெறும் தகவல்கள் என்று கூறுவதன் மூலமோ, முதலாளித்துவ பண்புகள் இழையோடுகிற ஆய்வுகள் என்று கூறுவதன் மூலமோ என்னை ஓரங்கட்ட நினைப்பது எந்த விதத்தில் நியாயமானது?
என்னுடைய பணம் நான்கு லட்சத்தை முதலிட்டு இதுவரையிலும் ஒன்பது புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். விருட்சப்பதியங்கள், ஒரு நாடும் மூன்று நண்பர் களும், மனுவியம், வேரறுந்த மரங்கள், வாழ்வற்ற வாழ்வு, மலையக இலக்கிய தளங்கள் ஆகிய நூல்களை விமர்சனம் செய்யவென்றும் விற்பனைக்கென்றும் வாங்கிச் சென்றவர் பலர். யதன்சைட் ஆசிரியர் கலாசாலையிலும், ரீ பாதக் கல்வியற் கல்லூரியிலும், ராகலை, தலவாக்கொல்லை, கொட்டகலை, அக்கர பத்தனையில் இயங்குகிற கலை இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இப்படி உள்ளனர். நூல்களை விற்பதாகக் கூறி வாங்கிச்சென்றவர்கள் வாங்கிச் சென்றதோடு சரி. இனி அடுத்த நூல் வெளியிட்டு விழாவில்தான் அவர்களைப் பார்க்கமுடியும்.
நிதிமிகுந்தவர் பொற்குவை தாரிர்! நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்! அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர்! என்றார் பாரதி. மலையகத்தில் இலக்கியம் வளர்வதற்கு சம்பந்தபட்டவர்கள் சொல்லிலும் செயலிலும் ஒன்று போலிருந்தால் போதும். t (ஞானம், வின் 2003 47)

Page 25
వ్య
--లి- వడి
蘇 ترهA அன்புள்ள ஞானம் ஆசிரியருக்கு,
"பாக்கு கவிதை அற்புதம். மெளனகுரு கவிதையும் எழுதுவது இப்போதுதான் எனக்குத் தெரியும். ஞானத்தின் ஆணிவேர் அதன் நேர்காணல்கள்தான். தொடரும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மார்ச் “ஞானம்' இதழில் கலாநிதி துரை.மனோகரனின் இளைய ராஜா குறித்த கட்டுரை, அவரைப் பற்றிய மேலும் சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறது.
இளையராஜாவின் திரையுலகப் பிரவேசத்தை வெறும் கலைப்பிரவேச மாகவோ, சினிமாப் பிரவேசமாகவோ கொள்ளலாகாது. அவரது வருகைக்கு முன்னால் "ருப்புத்தரா மஸ்தானா" என வட நாட்டு ஹிந்திப் பாடல்களிடம் சோரம் போயிருந்த தமிழ் இரசிகர்களை தமிழ்த் திரைப்பாடல்களின்பால் திரும்பிப்பார்க்க வைத்த பெருமை இந்தப் பண்ணைப்புரத்து இராசையாவையே öFT(bub.
அறுபதுகளின் நடுப்பகுதியில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத்தீவிரமாக வலுப்பெற்ற காலம். அதன் விளைவாக ஹிந்தி திரைப்படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்திருந்தகாலம். ஹிந்தித் திரைப்படப்பாடல்களின் செல்வாக்கை எழுபதுகளின் நடுப்பகுதிவரை யாராலும் குறைக்க முடியவில்லை.
இந்தக் காலகட்டத்தில் திரையுலகிற்குள் நுழைந்த இளையாராஜா “கொடி பிடிக்காமல், கோஷம் போடாமல், ஊர்வலம் போகாமல், உண்ணாவிரதம் இருக்காமல் இந்திப் படப்ப்ாடல்களை - இருந்த இடத்திலிருந்து எழுந்துபோக வைத்தவர்.
"அரசியல் இயக்கங்களும், ஆட்சி அதிகாரங்களும் சாதிக்க முடியாததைக்கூட ஒரு கலைஞன் சாதித்துக்காட்டமுடியும் என்பதற்குப் பண்ணைப் புரத்துக் குயில் பதவுரை எழுதிவிட்டது" என மு.மேத்தா பக்கம் பார்த்துப் பேசுகிறேன்’ என்ற நூலில் குறிப்படுகிறார். (பக்கம் 54).
திரைப்பாடல்களில் பல அற்புதமான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர் இளையராஜா. காலடி ஓசையையே பின்னணி இசையாகக் கொண்டு உருவாக்கிய "பருவமே புதிய பாடல் பாடு.” (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ரயில் சத்தத்தைப் பின்னணியாகக் கொண்ட "வெண்மனச் சங்கு பூத்தாச்சி." (கிழக்கே போகும் ரயில்), வெற்றிலை இடிக்கும் சத்தம் - "சின்னஞ் சிறு வயதில். (மீண்டும் கோகிலா), அரிசி இடிக்கும் சத்தம் - 'அரிசி குத்தும் அக்கா மகளே. (மண்வாசனை) போன்ற பாடல்களை இவரது புதுமையான முயற்சிக்கு உதாரணமாக கொள்ளலாம்.
மேலும் "ராக்கம்மா கையைத் தட்டு' (தளபதி) போன்ற டப்பாங்கூத்துப் பாடல்களுக்குள் தேவாரத்தைப் புகுத்தி மரபுகளை உடைத்து மந்திரங்களை (ஞானம், விண் 2003 48)
 
 

நிகழ்த்திய விந்தைக்காரர் எனவும் இந்த இராசையாவை நோக்கலாம்.
"அன்னக்கிளியின் மூலம் அறிமுகமான இளையராஜாவை “இது தவில் செட்டு; ரொம்ப நாளைக்கு ஓடாது" என எள்ளிநகையாடியவர் பலர். ஒடுக்கப்பட்ட போதும் பாறையிலே இசைச்சோலையாய் தழைத்து ஒடுக்கப்படும் மக்களின் இசைக்கருவிகளான பறை, உடுக்கு போன்றவற்றிற்கு திரையுலகில் ஒரு அங்கீகாரத்தையும் அந்தஸ்த்தையும் வாங்கித் தந்தவர் இந்த இராசையாதான். அண்ணாசாலையில் ‘கட்-அவுட் வைக்கும் அளவிற்கு, திரையில் இளையராஜா என்ற பெயர் தோன்றியவுடன் கைதட்டி ஆரவாரிக்கும் அளவிற்கு, ஒரு இசையமைப்பாளனுக்கு நட்சத்திர அந்தஸ்த்தை வாங்கித் தந்த பெருமை இவரையே சாரும். m
இளையராஜாவின் இசை ஆளுமையைப் புரிந்து கொள்ளவேண்டு மானால் திரைப்பாடல்கள் மட்டும் போதாது. வார்த்தைகளே இல்லாத அவரது Nothing but wind, "How to name it 6T6ip S60s BTLITss62GTi (35ig5ubGurg தான் அன்னக்கிளிக்கு முளைக்கவிருந்த "சிம்பொனி சிறகை அப்போதே உணர முடிகிறது.
லண்டனுக்கு சென்று முதல் ஆசியனாய் சிம்பொனி அமைத்துவிட்டு தாயகம் திரும்பிய இளையராஜாவைப் பார்த்து திரு சிவாஜி கணேசன் “நம்மை ஆட்டுவித்தவர்களை ஆட்டுவித்தவன்” என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சாதியம், இனவாதம், பிரதேசவாதம் என்ற சமூகக் கொடுமைகள் தலைதுாக்கம் இந்தியாவில், மத்திய அரசு சரியாக இதைக்கண்டு கொள்ளவில்லை என்பதும் உண்மை. இன்று கிராமங்கள் தோறும் கைத்தொழில் பேட்டைகளாக மாறிவரும் காலத்தில், இன்னும் 50 வருடங்களுக்குப் பின்பு, ஒரு குயில் சத்தத்தை, அருவியின் ஓசையை, இலைகளின் அசைவை, ஆற்றின் சலசலப்பை எதிர்காலத் தலைமுறையினர் இளையராஜாவிலிருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டும்.
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பதைப்போல் 'இளைய ராஜா வீட்டுத் தும்புத்தடியும் இசையமைக்கும் என அவரது மூன்று வாரிசுகளும் திரையுலகில் பிரவேசித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பாரதி படத்தின் மூலம் சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்ற பாவதாரினி, ரேவதியின் படம் ஒன்றிற்கு இசையமைப்பது புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது மெய்ப்பிக்கின்றது.
இளையராஜா தனது 25வருட கால திரையுலக வாழ்க்கையில் செய்த சாதனைகள் பல. ஆனால் அவர் தனது இசை ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை சினிமாவோடு நிறுத்திவிடக்கூடாது. இன்னும் ‘கட்டெறும்பு என்னைக் கடிக்குது என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சாதியம், குழுவாதம், இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் போன்ற அனைத்து வாதங்களுக்கும் எதிராக, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் சார்பாக "எடு அந்தப் பறையை" என எடுத்து சினிமாவிற்கு அப்பால் நின்று ஒரு வேள்வியை நிகழ்த்தும் போதுதான் அவர் தனது இசைப்பணியை பூரணமாக செய்து முடிக்கிறார் - He hasplayed his Role என நாம் பெருமைப்படலாம்.
- பெனி யே.ச, லேவல்ல.
Ceyrarb air 2003 49)

Page 26
ஏப்ரல் இதழ் கிடைத்தது. மேஜர் சுந்தரராஜன், மேஜராக நடித்த மேஜர் சந்திரகாந்' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைப் பொறுக்கமுடியாமல் சிவாஜி கணேசன் தனது ஆட்களைக்கொண்டு "உயர்ந்த மனிதன் என்ற படத்தில் தான் மேஜர் பாத்திரமேற்று சுந்தரராஜனை கார்ச் சாரதியாக வேடம் கொடுத்து மட்டம் தட்டினார்.
சி.குமாரலிங்கம், நல்லூர்.
தங்களின் 36வது இதழ் கண்டு மகிழ்ந்தேன். ஞானம் ஒவ்வொரு படைப்புகளும் உயர்ந்து காணப்படுகின்றன. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நேர்காணல் இளம் இலக்கிய கர்த்தாக்களுக்கு மட்டுமல்லாது முத்த இலக்கிய கர்த்தாக்களுக்கும் அசைக்கமுடியாத அத்திவாரமாக அமைந்துள்ளது.
"உங்கள் வளர்ச்சியில் முக்கியமானவர்கள் யார் என்ற வினாவிற்கு, "என்னுடைய கருத்துக்களை எதிர்ப்பவர்கள்" என்ற வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது.
ஞானத்தின் வளர்ச்சி எல்லா வகையிலும் உயர்ந்து காணப்படுகிறது. முத்த இலக்கிய கர்த்தா நந்தி அவர்கள் கூறியதுபோல கடைசிக் கவரில் விளம்பரங்களைச் சேர்த்தால் அது தப்பில்லைத் தான்; ஞானம் நிலைத்து நிற்கும்.
அடுத்து அடியேனின் சின்ன விண்ணப்பம்; ஒவியம் சார்ந்தது. நம்நாட்டு ஓவியர்களின் ஓவியங்களை நடுப்பக்கத்திலோ அல்லது அட்டைகளிலோ வெளியிட்டால் என்போன்ற ஓவியர்களுக்குத் தங்கள் "ஞானம் தெளிவையும், புதிய பரிணாமத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.
ஓவியர் நா.ஆனந்தன், யாழ்ப்பாணம்.
"ஞானம் மிகமிகத் தரமாக உள்ளது. தொடர்ந்து வரவேண்டும் என்பதே
என் அவா. இலக்கிய ஆர்வம் உள்ளவர்களே நிதி விடயத்தில் (சந்தா) சிரத்தையில்லாமல் இருப்பது பெரிதும் கவலையளிப்பதாகவே உள்ளது."
வி.என்.சந்திரகாந்தி, திருகோணமலை.
விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் ஞானம் இதழைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றமைக்கு எனது பாராட்டுக்கள். தமிழைப் புதுமையோடு
வளர்க்க ஞானமும் நற்பணி புரிவதாக!
இ.ஆ.தமிழோவியன், பதுளை.
எனது கவிதைகளைத் தாங்கள் பிரசுரித்த நாளிலிருந்து எனது எழுத்து முயற்சியில் ஒரு உந்தல் தெரிவதை உணர்கிறேன். நண்பர்கள், பெரியவர்கள் பார்த்துவிட்டு பாராட்டுவதும் விமர்சிப்பதும் எனது எழுத்து முயற்சியை மேலும் தட்டிக்கொடுத்து கவிதை வீறாப்ப் பிறக்கிறது. அனைத்து நன்றிகளும் உங்களுக்கே உரியவை. என்றும் உங்கள் அன்பும் ஆசியும் வேண்டி நிறைக்கிறேன். செல்.சுதர்சன், பேராதனைப் பல்கலைக்கழகம். (ஞானம் gr 2003 D

۔- - ༄ ன்ெபார்ந்த வாசகர்களே! ཡོད།
| ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச்
சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம். - ஆசிரியர்
"ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
(AեII Աքլճւի
பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை.
யாழ்ப்பாணம்:-
பூபாலசிங்கம் புத்தகசாலை = ஆஸ்பத்திரி வீதி, பாழ்ப்பாணம், திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி.
திருகோணமலை: திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் விதி, திருகோணமலை, திரு. வீ.என்.சந்திரகாந்தி - 572"A, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை மட்டக்களப்பு:- |சக்தி புத்தக நிலையம், 58, திருகோணமலை வீதி, மட்டக்களப்பு. |எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 481, பார் வீதி, மட்டக்களப்பு.
கிளிநொச்சி: கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி.
வவுனியா:-
ந.பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
கண்டிலங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி,
கொட்டக்கலை: சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை.
புத்தளம்:-
ாஹித்திய புத்தகநிலையம், இல 4, குருனாகல் வீதி, புத்தளம்.
பண்டாரவளை:-
மெடிக்கல் கெல்த் கிளினிக், இல 1, டயரபா சந்தி, மிரஹாவத்தை(P0)
பதுளை: །སྔ་མས་༡༧ புத்தக நிலையம், இல 51-52, பஸார் தெரு, பதுளை. أر

Page 27
கருப்பை
பேச்சுவார்த்தை மேசையொரு
கருப்பையாய்த் திகழவேண்டும். கலவி முடிந்து, கருத்தரித்து. கை
வளர்ந்து இழையமாகி,
மலர்ந்து உறுப்புகளாப்
முழுமையடைந்து, மூச்சு இதயத் வெளியேறும்வரை. காக்கக்
கருப்பை உதவி செப்பும்
பேச்சுத்தொடங்கி பிசகாமல் வள்
பேச்சின் முடிவு.
உயிர்ப்புள்ள பிள்ளையொன்றை ஈன்றெடுத்தல் போல எல்லோருச் தேன் விடிவைத் தந்து റ്റുകേ
எங்களது
பேச்சுவார்த்தை மேசையொரு
கருப்பை போல் இருக்கெனினு அதுவோர் இறந்த குறைமாதக் கு இதயத் துடிப்பிலாமல்
சிலநேரம் பொம்மைகளை மட்டும் உருவாக்கும் மலடாச்சே இனியெனினும் பேச்சுவார்த்தை மேசை. முழுக்
கருப்பையாப் மாவேண்டும்!

துடிப்போடு
ார்ந்துசென்று
山 惩 动 @ *E} 隐
பணிடும்.
ழந்தைகளை