கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.07

Page 1


Page 2
இரவு போதும்.
நான்
இரப்புக்கு கட்டளையிட்டுக்கொண்டிருந்தேன் Fii?iy Il IᎦᎼ ᎩIsl↑
எதிர்க்கச் சொல்லி
நாmள நம் மான்களில் ’கறுப்பு ஜூலை
கடலைக் குருவியின் தேசிய கீதத்தோடு
| ||
பாப் சுருட்டுவதா.'
இரத்தத்துபியாஸ் எனது தேசம்
துபர்களை 10ரவத.'
செல்.சுதர்சன் தமிழ் விசேடதுறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
இந்த இரவு போதும்
ஆஃப்ங்களைக் கருக்கட்டல் செய்யாத இந்த இரவு போதும்
(1;II II பட்டனங்கள் J, TIGLITI;III;ITIT சவப்பேட்டிக் கடைகளுக்கும் ஒரு சவப்பெட்டி உருவாகும்
நாளை
| III lg | |
[ #; | f=&ŭ|| || Liu
மின்மினிப் பூச்சிகள் காற்றுவெளிக்குச் சரம் கட்ட தவளையின் தாளத்தோடு பூமி மீதமிர சக்கும் இந்த இரவு போதும்
எனது தேசத்தை பட்டுபட்டப் தேசத்தை விடவும் அழகான தேசப்படத்தையும் இந்த இரஸ்பு காப்புறுதி செப்பட்டும்.
இரவே நில். விடிய கால எதிர்த்து நில்.
வடதிசையில்
ஃானத்திலிருந்த இரEப் பார்த்த எரிந்தவாறு ஒரு வெள்ளி விழுகிறது மிடுக்கோடு வளர்ந்த விருட்சங்களை கண்கள் மீளாய்வு செய்கின்றE ஆத்தனையும் முரன்டங்களாய்.
 

ஞானம் ஒளி-04 diL-O2
ஆசிரியர் தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்கள்: கிக்கோ நா. ஆனந்தன்
கண்ணி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, 5632. G.I.G.L. -08-473,570 (Office)
08-234.755 (Res) FN - O8-234755
E-Mail
(ஜாவா m_magazineஇyahoo.com)
உள்ளே.
நேர் கானல் TE
சிறுகதை காணமல் போனவறுக்கு D th+========۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔++۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔+ iriiآ_g?(tT Talg தாட்சியளி ........ ومعهم دعمهم....-....- 1 ص لاه الالم உக்ருவணயூர் அம்ரீதா
கட்டுரைகள் எார்களுக்கானதொரு சினிமா வளராறை குறித்து. . 12 யதீந்திரா
எண்ணியது நடந்தது! எண்ணாததும் நிகழ்ந்தது .25 பாரத்நஎUபாபதி ஐயர் மலையகக் கலை இலக்கியம். 40 பாலா.சங்குப்பிள்ளை பூகோளமயமாகும் சமுதாயத்தில் கலை இலக்கியவாதிகள் எதிர்கொள்ளும் சவால்கள். புலோலியூர் க.சதாசிவம்
. . . . .
கவிதைகள்
இரவு போதும் . []] 그 செல்.சுதர்சன்
ன்ேனைப்போம் எவரும் ஏமாறவேண்டாம்! . கவிஞர் செரு5ாரத்தினம்
- 고 도
எனக்குள் நீ எப்போத?. . தேசங்கீதா
மூச்சு. SLSLLLLLS LLLLLSLLLLL LSL LLLLLLLLSLLLLL LSLLLLL LLLLLL LLL LLLL LLLLLLLLL LSL த.ஜெயசீலன்
ஈழத்து இலக்கிய
நம்பிக்கைகள் -06.26 நெற்றிக்கண் . . . . . நேற்றைய கலைஞர்கள். 46 CAI DTaFasiñ CLIJKTADIrňr .................. 49 புதிய நூலகம்.50
அட்டைப்படம் - கிக்கோ

Page 3
கலை,இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
.விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܔܠ
புலம்பெயர் இலக்கிய உலகில்
புலரும் இலக்கிய சஞ்சிகைகள்
தமிழுக்கு வளம் சேர்க்கட்டும்
ன்று தமிழர்கள் வரலாற்று நிர்ப்பந்தத்தால் புகலிடம் தேடி, வாழ்வுக்கு வருமான வாய்ப்பினை நாடி, தொழில் தேடி உலகத்தின் எட்டுத்திக்கும் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தமது கலை இலக்கியப் பாரம்பரியத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் எழுந்துள்ள கோயில்களும் அங்கு நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகின்றன. பாரம்பரியமாகத் தமிழ் வழங்கும் நாடுகளைவிட, புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் இலக்கியச் செயற்பாடுகள் ஆரோக்கியமாக உள்ளன. புலம்பெயர் இலக்கியத்திற்கு தனிவீறு உண்டு. இருபத்தியோராம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அதற்குப் பெரும்பங்கு உண்டு என நம்பப்படுகின்றது. புலம்பெயர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்குச் சர்வதேச பரிமாணத்தைக் கொடுக்கிறது.
புகலிடத்து வாழும் பலரின் இலக்கிய ஆர்வமும், ஈடுபாடும், அக்கறையும் எம்மைப் புல்லரிக்க வைக்கின்றன; அன்புடனும் மரியாதை யுடனும் அவர்களை ஆரத்தழுவ மனங்கொள்கின்றது. அவர்களின் இலக்கியச் செயற்பாடுகளில் முக்கியமானதொன்றாகக் கலை இலக்கியச் சஞ்சிகைகள் வெளியிடுவதைக் குறிப்பிடலாம். புலம் பெயர்ந்த நாடுகளி லிருந்து வெளிவரும் சஞ்சிகைகளாக காலம், தேடல், பொதிகை, தாயகம், நான்காவது பரிமாணம், செந்தாமரை, தமிழ் எழில், புன்னகை மலர் போன்றவை கனடாவிலிருந்தும்; ஒசை, மெளனம், கணி, சமர், எக்ஸில், எரிமலை, உயிர்நிழல் போன்ற சஞ்சிகைகள் பிரான்ஸிலிருந்தும; பனிமலர், தாகம், நாழிகை, போன்ற சஞ்சிகைகள் இங்கிலாந்திலிருந்தும்; மரபு, அக்கினிக் குஞ்சு போன்ற சஞ்சிகைகள் அவுஸ்திரேலியாவிலிருந்தும்; சுவடுகள், சக்தி போன்ற சஞ்சிகைகள் நோர்வேயிலிருந்தும்; தூண்டில், நமது குரல், புதுமை, தேன், சிந்தனை, ஊதா போன்ற சஞ்சிகைகள் 4.
 
 
 

ஜேர்மனியிலிருந்தும்; ஆகுதி எனப்படும் சஞ்சிகை நெதர்லாந்திலிருந்தும் வெளிவருகின்றன. இதனைவிட ழகரம், புலம், அம்மா, அசை, மஞ்சரி போன்ற சஞ்சிகைகளும் புலம் பெயர்ந்த இலக்கிய ஆர்வலரால் வெளி யிடப்படும் சஞ்சிகைகளாகும்.
இந்நாடுகளிலிருந்து கையெழுத்துப் பிரதிமுதல் அச்சுப் பத்திரிகை வரை நூறு இதழ்கள் இதுவரை வெளிவந்ததுள்ளன எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இச்சஞ்சிகைகளில் சில இடைநடுவில் தமது பயணத்தை முடித்துக்கொண்டன.
இச்சஞ்சிகைகளில் பல காத்திரமான இலக்கியப்படைப்புகள், இலக்கியப் பரிசோதனைகள், விமர்சனங்கள் வெயியாகியுள்ளன. இலக்கி யச் சர்ச்சைகளும் நடைபெற்றுள்ளன. புகலிடத்து வாழும் மக்களின் வதி விடத்தைப் பகைப்புலமாகக் கொண்டு பல ஆக்க இலக்கியப்படைப்புகள் வெளியாகியுள்ளன. இலக்கியச் சிந்தனையாளரின் தேடலுக்குத் தீனியா கவும், புதுஅனுபவப் பகிர்வாகவும் இவை அமைந்துள்ளன. புலம்பெயர் இலக்கியத்தின் செல்நெறியைப் புலம்பெயர் இலக்கியச் சிற்றேடுகள் காட்டி நிற்கின்றன.
இதேவேளை எமது அவதானிப்பிற்பட்டதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒவ்வாத ஆக்கங்களைச் சில சஞ்சிகைகள் முக்கியங்கொடுத்துப் பிரசுரிக்கின்றன. இவற்றில் சில அருவருக்கத்தக்க விடயங்களாகவும் இருக்கின்றன. சில சஞ்சிகைகள் தெருச்சண்டை போல் அநாகரிகமான சொல்லாடலில் தனிப்பட்டவர் களைத் தாக்குவதும், அவற்றில் சிலர் தாமே கூத்தாடி தாமே மெச்சிக் கொள்ளும் - தங்கள் பணியைத் தாங்களே புகழும் - கோமாளித்தனமும் நடைபெறுகின்றன. பின் நவீனத்துவம் என மேற்கு நாடுகளில் உருவாகிய புதிய கோட்பாடுகளைச் சரிவரப்புரிந்து கொள்ளாது, புரிந்துகொண்டது போலப் பாசாங்கு பண்ணிச் சித்து விளையாட்டும் மாயாவாதமும் செய்யும் கட்டுரைகளும் ஆய்வுகளும் ஆக்கங்களும் சில சஞ்சிகைகளில் வெளியா கின்றன.
புலம்பெயர் கலை இலக்கியச் சஞ்சிகைகளின்முன் விரிந்துள்ள பணி சில உண்டு. நமது பண்பாட்டு வேர்களிலிருந்து அறுந்துபோகாதவாறு அவை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். பூகோளமயமாக்குதலால் பண்பாட்டுச் சங்கமங்களில் ஏற்படும் எதிர் விளைவுகளுடன் போராடி விழிப்புணர்வுகளை ஊட்டவல்ல படைப்புக் களை வெளியிடவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் மூத்த இலக்கிய அறிஞர் களை ஊக்குவித்து இயங்கவைத்து நல்ல இலக்கியங்களைப் படைக்கத் தூண்டவேண்டும். புதிய எழுத்தாளர்கள் சர்வதேசப் பரிமாணங்களை உள்வாங்கி சர்வதேசப் புகழ் தரவல்ல இலக்கியம் படைக்கக் களம் அமைத்துக்கொடுக்கவேண்டும்.
மெல்லத் தமிழ் இனிசாகவிடாது, புவியில் எட்டுத்திக்கும் சென்றுள்ள புலம்பெயர் கலை இலக்கியவாதிகள், ‘கலைச்செல்வங்கள் யாவையும் கொண்டிங்கு சேர்ப்பீர்” எனப் பாரதி வேண்டிநின்றதைத் தங்கள் கலை இலக்கிய சஞ்சிகைகள் மூலம் செயற்படுத்த வேண்டுமென வேண்டுகிறோம்.
S

Page 4
d5 GOTOs) போனவனுக்கு ஒரு கடிதம்
அன்பான உங்களுக்கு,
இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப்பூட்டி ஒழித்து வைத்து, தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகிறேன் எல்லாவற்றையும், எல்லாவற்றை
ரி குறிக்கட் மையால் பலபேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் படாத பாடுபடப் போகிறதெனத் தெரிந்தும் கூட.
எப்படியிருக்கின்றீர்கள்..? உங் கள் ist ges ல் கவிச் தினர் தினமாய் விடிகாலையில் உங்கள்
உங்களுக்கான வேண்டுதலோடு. இன்றாவது, இன்றாவது என எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏங்குதலாய். ஒவ்வொரு நாளும் என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் கனத்த நாள்களின் தேய்விற்காய் என்னையே தேய்த்துக் கொண்டிருக்
கள் யுகங்களாய் மாறி வதைத்துக் கொண்டிருக்கின்றன. என்னைப் பிரிந்து ஒரு நிமிஷமென்றாலும் உங்களால் நிம்மதியாயிருக்க முடியாதே. இப் போது இந்த நீண்ட நிம்மதியற்ற
க்கிடையே நீங்கள் எட் நெருக்குண்டிர்கள்..? உங்கள் நினை வாய் நீங்கள் எனக்கு விட்டுப்போன எங்கள் செல்வ மகள் தேன்கவி வளர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் சிந்தனைக் கோடுகள். அமைதியானவள் அவள் . இரு மனங்கலந்த எங்களின் அந்த உச்சப் பொழுதிற்கு ஒரேயொரு சாட்சியாய் அந்த இனிய கணங்களைத் திரும்பத்
அவளுடைய முகம உங்களுடைய தாகவே தெளிந்துகொண்டு போகிறது.
மாய் வளர்கின்ற கிளிக்குஞ்சு. இடை யிடையே அப்பாவைத் தேடுகிறாள். என்ன சொல்ல.? எதையுமே சொல்
 
 
 
 
 
 
 
 

எழுத்து எதிர்காலத்தில் உங்களுடை யதைப் போலவே வரக்கூடும். சிறுது சிறிதான மெல்லிய எழுத்துக்கள். அந் தச் சிறிய எழுத்துக்களில் உங்கள் முகம் தான் தெரிகிறது. அந்த எழுத்துக் களைப் பார்த்தவுடன் என்னால் அவளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க முடிந்ததில்லை. கண்கள் முட்டி விடுகிறது. அவள் என் னைக் கேள்விக்குறியாய்ப் பார்க் கிறாள். என்ன செய்வது நான்.? நீங்களே சொல்லுங்கள்.
போன மாதத்தில் உங்கள் பிறந்தநாள். மறந்து போய் விட்டீர் களா..? முன்பு நான் ஞாபகப் படுத் தாவிட்டால் உங்களுக்கு அதுகூட ஞாபகம் வராதே. விடியற் காலை அழுதுவிட்டேன். அழக் கூடா தில்லையா. நீங்கள் இந்த மண்ணில் வந்த தினத்திற்கு கோவிலில் உங்கள் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பியபோது "திடும்’மென்றது. சுற்றுப்பிரகாரம் நோக்கி உங்களைப் போலவே. யார் அது.? பட்டென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. வந்து விட்டீர்களா..? கடைசியில் இந்த அபலையின் தவத்துக்கு இறைவன் இரங்கி வரங் கொடுத்துவிட்டானா..? பக்கத்தில் தேன்கவி மிரண்டபடி நிற்க நான் சுற்றுப்பிரகாரப் பக்கம் ஒட்டமாய் நடந்தேன். அந்த ஆள் எனது அரவங் கேட்டுத் திரும்பிப் பார்க்க. சை. எல்லாம் வெறுத்துப் போயிற்று. அது யாரோ..? என் கால்கள் அசையாமல் நின்று போயின. பக்கத்தில் சாமி கும் பிட்டுக் கொண்டிருந்தவர்களின் பார்வை என்மேற்படிய அப்படியே ஒரு புள்ளியாய் கூனிக் குறுகிப் போய் விட்டேன். உலகம் கெட்டுப்போய் விட்டது மாதிரியான பார்வைகளையும் பெருமூச்சுகளையும் அவர்கள் பரி
மாறிக் கொண்டார்கள். நான் என்ன செய்வது.? நான் என்ன செய்வது..? நான் இப்படியானதற்கு நீங்கள்தானே காரணம்.? நான் இப்படியானதற்கு நீங்கள்தானே காரணம்.? என்னை இப்படிப் பைத்தியம் ஆக்கிவிட்டு நீங் கள் எங்கே மறைந்து கொண்டீர்கள்? தேன்கவி கெட்டித்தனமாய்த்தான் வளர்கிறாள். அவளைக் கெட்டித்தன மாய் ஆளாக்கி எப்போதாவது நீங்கள் வருகிறபோது உங்களைப் பெருமைப் பட வைக்க வேண்டுமென்பதே இப் போதுள்ள ஒரே ஆசை. அவள் யாருடனும் பேசுவது குறைவு. விளை யாடுவதும் குறைவு. துடுக்குத்தனம் இல்லாத சொல் கேட்கிற பிள்ளை. அவள் அப்படித்தான் இருப்பாள். எங் களது மெளனமான அமைதியின், நிர்ச்சலனத்தின் ஒன்றிணைவில் கருக் கொண்டவளால் வேறெப்படி இருக்க முடியும்? பக்கத்து வீட்டு ஆச்சி அடிக் கடி சொல்கிறா.
*பிள்ளையைக் கொணர் டே டாக்குத்தரிட்டைக் காட்டு. மூளைலை அடிச்ச மாதிரி ஏன் ஒருதரோடையும் கதைக்கிறாளில்லை” என்று. எங்கள் தேன்கவி புத்திசாலி. ஆச்சி துருவித் துருவிக் கேட்கின்ற வீட்டு விஷயங் களுக்கு அவள் பதில் சொல்வ தில்லை. ஆச்சிக்கு அக்கம்பக்கத்தில் போகிறவர், வருகிறவர் பற்றிய விஷயங்கள் முழுதாய்த் தெரிவதில் ஒரு சந்தோஷம். அப்படித் தெரிந்து கொள்ள முடியவில்லையென்கிற ஆத்திரத்தோடு சேர்ந்து, அந்த வீட்டுக்குக் 'குட்டி பண்ணுகிற அதி காரமும் ஆர்பாட்டமும் இல்லாமல் இங்கே தேன்கவி அமைதியாய் வளர் கிறாள் என்பது தந்த எரிச்சலும் ஆச்சியை அப்படிப் பேசவைத்திருப்ப தாய் அம்மா சொன்னா. தேன் கவியை

Page 5
இப்போது அங்கே விடுவதில்லை. அவளுக்கு வீட்டுக்கு வந்து தன் பாட்டில் ஏதாவது செய்து கொண்டிருக் கப் பிடிக்கும் உங்களைப் போல.
வருகிற கிழமை அப்பாவின் திவசம் வருகிறது. ஒ. உங்களுக்கு அப்பா போனது தெரியாது என்ன..? நீங்கள் போன பிறகு இரண்டு வருஷத் துக்கு அப்பா உயிரோடிருந்தார் அதற்குப் பிறகு “டயபிட்டீஸ் கூடி அப் பாவுக்கு ஒரு காலை எடுக்கவேண்டி வந்தது. அதன்பின்தான் வீட்டுக்குப் பாரம், பாரம் என அப்பா நொந்து சொல்லிக் கொண்டிருந்தார். வாழ் தலினாலான விருப்பம் அற்றுப்போன மாதிரி. பிறகு அப்பா கனகாலம் வாழவில்லை. நீங்களே சொல்லுங் கள். அப்பாவுக்கு ஏன் அப்படிப் போயிற்று புத்தி. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாய்ப் பகிர்ந்து கொள்வோம் என்றுதானே மண வாழ்க்கையில் இணைந்து கொள் கிறோம். நீங்களே முன்பு சொல்ல வில்லையா? இன்பம் பகிர்ந்து கொள்வதால் இரட்டிப்பாகிறதென்றும், துன்பம் பகிர்ந்து கொள்வதால் பாதி யாகிறதென்றும் அப்பா ஏன் அவசரப் பட்டார் .? தனது துன்பத்தைப் பாதியாக்க அம்மா இருக்கின்றா என் பதை ஏன் மறந்தார். அலரி விதை அரைத்துக் குடிக்கையில் கடைசி நிமிடத்திலாவது அம்மாவின் நினைப்பு அப்பாவை வருத்தியிருக்காதா..? இப்போது அம்மா படுகிற துயரத்தைக் குறைக்க யார் வர முடியும்? அம் மாவுக்கு இப்போது தேன்கவியும் நானும்தான் உலகம். என்னை இந்த உலகத்தின் முன் விட்டுவிட்டுப் போக அம்மாவுக்கு பயமாயிருக்கிறது. அதற்
காக இறந்துபோன அப்பாவின்
நினைவுகளையும் விட்டுவிட முடிய
வில்லை. இரண்டுக்குமிடையே அம்மா படுகிற துன்பம். என்னுடையதை விடக் கொடுமையானது. வீடு வரவரத் துயர்க்களமாகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு இரவும் வேதனையும், கண்ணிரும் உங்களுக்கான காத் திருத்தல்களுமெனக் கழியும். சில நாட்களில் நிலவு உதித்து மறையும் வரைக்கும் விழித்துமிருக்கிறேன். கண்கள் எரிந்து எரிந்து, தலையணை ஈரமாகி. தேன்கவி பார்த்துவிடக் கூடாதெனக் கண்ணிரை மறைத்து. பாவம் அவள். சிலவேளை நான் அழு வதைக் கண்டு திருதிருவென விழித்த படி 'அம்மா’ என விம்முவாள். அத னால், அவளறிய அழவும் முடிந்த தில்லை. உறக்கம் ஒரு மாதிரி சமசரம் செய்துகொண்ட பிற்பாடு, கனவுகள் வரும். சிலவேளைகளில் அருகே வந்து ஊமைப்பாஷையில் கண்க ளால். கைகளால். சைகை செய்து ஏதாவது சொல்லுவீர்கள். முக்கியமாய் அழவேண்டாம் எனச் சொல்வதாய் இருக்கும். இல்லாவிட்டால் தேன் கவியைச் சுட்டிக்காட்டி அவளை வளர்த்தெடுத்தல் பற்றியோ, அவளது துணையுடன் வாழ்தல் பற்றியோ நினைவூட்டுதலாயிருக்கும். அப் போதெல்லாம் உங்கள் குரல் கேட்ப தில்லை. ஆனால் நீங்கள் சொல்வது இதுதான் எனப் புரிந்த மாதிரியிருக் கும். ஆனால் உங்கள் குரலைக் கேட்கவேண்டுமெனும் ஆசை மனதின் அடியிலிருக்கும். கனவில் இதற்கு மேலும் ஆசைப்படக்கூடாதா..? அந்தக் கணங்களில் எத்தனை எதிர்பார்ப் போடு உங்களைப் பார்ப்பேன். கண்களில் உயிரைத் தேக்கி வைத்து, கொஞ்சமேனும், கொஞ்சமேனும், உங்கள் குரலை இரகசியமாக்கி யாவது. காதிற்குக்கிட்டே நெருங்கி

வந்தாவது, ஏதாவது சொல்லமாட்டீர் களாவென. உங்கள் குரலினுடாக அமுதம் ஊற்றமாட்டீர்களாவென. உங்கள் கரங்கள் கிட்டே. கிட்டே. நெருங்கி வந்து இத்தனை காலப்பிரிவு வெப்பத்தைப் பொசுக்கிக் குளிர்மதி யாய் ஒத்தடம் தராதாவென. இன் னும். இன்னும். கனவிலாவது, கன விலாவது. உங்களோடு உயிர் ஒன்றிக் கலந்து ஒன்றாகிவிட வேண்டு மென. எல்லாத் துன்பமும் மறந்து உங்கள் மார்புக்குள் குறுகிச் சுருண்டு படுத்துவிட வேண்டுமென. எல்லா ஆசைகளும் வெடித்துச் சிதற நீங்கள் மறைந்து விடுவீர்கள். இங்கே கண் ணிர் தலையணையை ஈரமாக்கிக் கொண்டிருக்கும்.
வெட்கமின்றி இப்படியெல்லாம் எழுதிக்கொட்டுகிறாள் என நினைக் கிறீர்களா..? நான் என்ன செய்ய.? உங்களிடமன்றி வேறு யாரிடம் என் வேதனையைக் கொட்டியழ.? வரவரப் பைத்தியக்காரி ஆகிக்கொண்டு போகி றேன் என்பது மட்டும் தெரிகிறது.
கனவுகள் வேறுமாதிரியும் வருகின்றன. என்னை முறித்துப் போடும் கணங்கள் அவை. நீங்கள் மட்டும் தனியே, வலிய ஆயுதங்களின் மத்தியில் வழி நடத்தப்படுகின்றீர்கள். சித்திரவதைகளுக்குகிடையில் என் பேர் சொல்லிக் கத்துகின்றீர்கள். டாங்கிகளுக்கிடையே மோதுண்டு. வேண் டாம் . இனி என்னாலி எதையுமே எழுத முடியாது. இவற்றுள் எந்தக் கணம் என்னை உருட்டித் தள்ளுமொ..? அந்தத் தருணங்களில் நான் எங்கு நிற்பேனோ..? உங்கள் வலிகளுக்கு ஒத்தடந் தரக்கூடத் தொண்டையிலிருந்து சப்தம் கூட வரமுடியாத மாதிரி. ஆனால் இந்தக் கண்கள் மட்டும் என்ன பாவம்
செய்தன.? தீராத் துன்பத்தில் உழலும் உங்களைத் தொடர்ந்து, தொடர்ந்து.
இந்தக் கனவுகளின் முடிவில் மூர்ச்சையுற்று விடுகிறேன். உங் களுக்கு என்ன நடந்தது? எங்கே கொண்டு செல்லப்பட்டீர்கள் என்பதை அறிகிற வரையிலாவது நினை வோடிருந்திருக்கலாம். பலவீனமான மனது சிறிது துன்பம்கூடச் சகிக்க மாட்டாமல் மயக்கம் போட்டு விடு கிறது. மயக்கம் போட்டபிறகு அச்சத் தில் தூக்கம் விலகி விடுகிறது. கொட் டக் கொட்ட விழித்தபடி, தேன்கவியை நெஞ்சோடிறுக்கி அணைத்தபடி. விடிய விடிய, நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு. இரவுதான் நகர்வ தேயில்லை இப்போது.
இரண்டு மூன்று மாதங்கள் ஆகி யிருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை. உங்கள் உடுப்புக்களை மடித்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன். முதல்நாள் இரவு அலுமாரிக்குள் ஏதோ கடமுடா சத்தம் கேட்டதால் தான் எல்லாம் எடுத்து அடுக்க வேண்டி வந்தது. அலுமாரியைத் திறந்தபோது எனக்கு 'திகிர்’ என்றது. அதற் குள்ளிருந்து குண்டு எலியொன்று பாய்ந்தோடிப் போயிற்று. அலுமாரியின் பின்புறம் ஒரு சின்ன வட்டத்துளை. எனக்கென்றால் ஏக்கம். எல்லாம் போயிற்றோ. போயிற்றோவென்று. ஒன்றொன்றாய் எடுத்து மடித்து வைக் கையில் அப்பாடா என்றிருந்தது. அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்கவில்லை. அடியிலிருந்த உங்களது கல்யாணப் பட்டு வேட்டியின் விளிம்போரம் நீளவாக்கில் எலி தின்றுவிட்டது. அந்த எலியின் மேல் ஆத்திரம், ஆத்திர மாய் வந்தது. கையில் அகப்பட்டதை எடுத்து எறிவதற்குள் எலி கீச்சுக்,

Page 6
i * *
கீச்சென்று கத்தியபடி மறைந்து விட்டது.
*உன்ரை கலியாணச் சீலை யளைப் பார்பிள்ளை, அரிச்சுக் கொட் டிப் போட்டுதோவெண்டு.”
அம்மா சொல்ல எனக்கு ஆத்திர மும், அழுகையுமாய் வந்தது. உங் களுடையது போயிற்று, இனி எனக் கெதற்குச் சேலையும், அணிகலனும்.? அம்மாவைக் கோவித்து என்ன பலன் என்னுடைய விதிக்கு? நான் பேசாம லிருக்க அம்மா சேலையை எடுத்துத் தட்டினா. சேலை அப்படியே கசங்கிப் போயிருந்தது. நான் உங்கள் வேட் டியை மடியில் போட்டபடி அப்படியே விக்கி, விக்கி அழுதபடியிருந்தேன். அம்மா வேட் டியைப் பிரித்துப் பார்த்தா. நான் பிடித்து இழுத்தேன், கொடுக்கவில்லை. அம்மா பேசினா. "தந்தாத்தானை பிள்ளை சரிப்படுத்த லாம்.” நான் அழுதபடியே கைப் பிடியை நழுவவிட்டேன். அம்மா விளிம்போரம் மெல்ல மடித்து அரித் தது தெரியாமல் தைத்துத் தந்தா. அதற்குப்பிறகுதான் போன மூச்சு திரும்பி வந்தது. இப்போது அதைப் பத்திரமாய் மடித்து வைத்திருக்கிறேன்.
O
எலி வருகிறதாவென தினசரி கண் காணிப்பதே இப்போது ஒரு வேலை யாகி விட்டது. அதற்குப்பிறகுதான் அம்மா பூனைக்குட்டி வாங்கி வந்தா. தேன்கவிக்கு இப்போது பொழுது முழுக்க பூனைக்குட்டியோடுதான். பந்து உருட்டி விளையாடுகிறாள். எப் படியோ அவளும் கஷ்டம் தெரியாமல் வளரவேண்டும்.
இன்னொரு விஷயம். தங்கம் அக்காவின் புருஷன் ராமமூர்த்தி தேவையில்லாமல் எங்கள் வீட்டுப் பக்கம் வருகிற மாதிரி கிடக்கிறது. அதுவும் அப்பா போனபிறகு கூட சின்னச் சின்ன உதவி செய்து தருவது மாதிரி வருவதும், என்னை ஒரு மாதிரிப் பரிதாபமாய்ப் பார்ப்பதும் எனக்குப் பிடிக்கவேயில்லை. அண்ணா சரியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? அண்ணா, அண்ணிக்குப் பின்னால்தான் எப்போதும். எங்கள் பொறுப்பை எடுத்தால் பிறகு கஷ்டம் என்று அண்ணி ஏற்கனவே சொல்லி வைத்துவிட்டா போல. அண்ணாவும் ஒரு விதத்தில் பாவம்தான். எங்களுக்கு உதவமுடியவில் லையே என்ற வருத்தமும், அண்ணியின் பேச்சை மீறி னால், வீட்டில் ஏற்படக்கூடிய குழப்ப மும், அமைதியின்மையும் என. இரண்டுக்குமிடையே நசிபட்டுத் துரும் பாகிவிட்டார் அண்ணா. ராமமூர்த்தி யைப் பற்றி ஏதாவது சாடைமாடை யாய் அண்ணாவிடம் சொல்ல வெளிக் கிட்டால் கூட அண்ணி முகம் சுழிப்பா. “உங்கட தங்கச்சிக்கு, எல்லா ரும் தன்னைத்தான் பாத்து வழியுறதா ஒரு நினைப்பு.”
இப்படி வெளிப்படையாகவே பேசக்கூடிய அண்ணியை வைத்துக் கொண்டு அண்ணாதான் என்ன செய்யமுடியும்? ராமமூர்த்தியை

ஒரேயடியாய் முறிக்கவும் பயமாய் கிடக்கிறது. அவனை வீட்டுக்கு வர விடுவதும் பிடிக்கவில்லை. என்னதான் செய்வது. நீங்களாவது சீக்கிரம் வந்து விடுங்களேன்.
வீட்டில்தான் இப்படியென்றால், அலுவலக நிலைமை இன்னும் மோசம். தவனிதனைத் தெரியும்தானே உங் களுக்கு. எங்கள் கல்யாணத்தில் கூட ஒடியாடி உதவி செய்தவன். அவன் என்னமாதிரி என்னோடு பழகிக் கொண்டிருந்தான். இப்போது அவன் என்னோடு பேசுவது கூட இல்லை. நீங்கள் காணாமல் போனபிறகு கூடு தல் அக்கறை காட்டியவனும் அவன் தான். கொஞ்ச நாட்களுக்கு எதுவும் வித்தியாசமாய்த் தெரியவில்லை. வித்தியாசமாய்த் தெரியவில்லையோ அல்லது உங்களைப் பற்றிய கவலை அதைக் கவனிக்க வைக்கவில் லையோ தெரியவில்லை. ஒருநாள் சாடையாய் உமா என்னிடம் கேட் டாள், "தவனிதனிடம் உனக்கென்ன அப்படி அக்கறை என்று. நான் அதிர்ந்து போய் அவளைப் பார்த் தேன். அவள் என்னை நேராகப் பார்க்கவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு அலுவலகத்தில் தாறு மாறாய்க் கதை உலவுவதாய்ச் சொன்னாள். உமாவுக்கு என் நலனில் அக்கறை உண்டு. அவள் சொல்லு வதையும் நம்பாமலிருக்க முடிய வில்லை. அதற்குப்பிறகு என்னால் அவனோடு கொஞ்சநேரம் சுடப் பேச முடியவில்லை. ஏதாவது அவன் பேச வருகிறபோது கூடத் தவிர்த்து விடு வேன். அதன்பிறகு அவனுக்கு என் மேல் சரியான கோபம். திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.
“நாக்கு நரம்பில்லாத ஆரும், ஏதும் சொன்னா அதெல்லாம்
11
உண்மையாப் போமோ..?”
என்பது மாதிரியான தொனியில், எப்போதாவது, நான் நிற்கின்ற வேளைகளில் சொற்களை விசுவான். எனக் குத்தான் இந்தக் குத்தல் மொழிகள் என்பது புரியாமல் இல்லை. இருந்தாலும் வம்புப் பேச்சுக்களைத் தாங்குகிற மனோதிடம் என்னிடம் இல்லாமற் போயிற்றே. நீங்கள் இல் லாமற் போனபிறகு யாரிடமும் பழகும் தைரியமும் இல்லை. என்ன செய் வது..? அவப்பெயர்களைத் தவிர்ப் பதற்காக ஒரு நல்ல நட்பை முறித்துக் கொண்டு விட்டேன். வேறு என்னதான் செய்வது.? நீங்கள் இருக்கும் போதானால் எதனையும் தாங்கியிருப் பேன். இனிமேல் எதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே படுகிற துன்பம் போதும். இது வேறு என் துன்பத்தைப் பெருக்க வேண்டாம். எத்தனை. எத்தனை வருஷக் கதை.? இன்னும் இன்னும் எத்தனை யென்று எழுதவது? நினைத்தால் உங்களோடு பேசுவது போல் எழுதிக் கொண்டே போகலாம் போற்படுகிறது. ஆனால் உங்கள் முகவரி தெரியாமல் இதை நான் எங்கென்று அனுப்புவது..? எப்படியாவது எந்தவழியிலாவது இது உங்களிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையே என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
வேறென்ன...? உங்கள் முகவரி எனக்குத் தெரியாமல் போயினும் எனது முகவரி நீங்கள் அறிந்தது தானே. ஒரே ஒரு முறையாவது எனது துன்பங்களை அறிந்த பிறகாவது. மனதுக்கு ஆறுதலாய் பதில் போட மாட்டிர்களா..? நீங்கள் எங்கே இருக் கின்றீர்கள் என்றாவது.
இப்படிக்கு, என்றும் உங்களவள்.

Page 7
எங்களுக்கானதொரு சினிமா வளராமை குறித்து. ஓர் வரலாற்று வழிப் பரிசீலனை
யதீந்திரா (1)
ங்ெகளுக்கானதொரு சினிமாவை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ளலாம் என்பது பற்றிய என் எண்ணங்களை முன்நிறுத்துவதோ அல்லது அது பற்றிப் பரிசீலிப்பதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியடையாமல் இருப்பதற்கான காரணங் களை அதன் முழுமை தழுவித் தொடுவதே எனது நோக்கம். ஒருவேளை இந்த முழுமை தழுவிய தொடுதலே எங்களுக்கானதொரு சினிமாவை வடிவமைத் துக் கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்தவும் கூடும். ஈழத்தமிழர்கள் ஒரு தனித்தேசமாக நிமிர்ந்து நிற்கும் காரணத்தால் தனித்துவமான வளர்ச்சிப் போக்கு குறித்து தேடல்கள் மேலெழுந்து வருகின்றன. அவ்வாறு மேலெழும் தனித்துவ வளர்ச்சிக்கான சிந்தனைக் கூறுகளில் ஒன்றுதான் எங்களுகானதொரு சினிமா என்ற கருத்துருவாக்கம் ஆகும்.
எங்களுக்கானதொரு சினிமா வளராமை குறித்து. இப்படியொரு தலைப்பினை நோக்கி நான் வர நேர்ந்ததும் எதேச்சையானதொரு சம்பவத்தின் வாயிலாகத்தான். அந்தச் சம்பவத்தை இவ்விடத்தில் குறிப்பிடுவது ஒரு வாசகர் மேலும் சில புரிதல்களைப் பெறப் பயன்படலாம். சமீபத்தில் சிங்கள திரைப்பட நெறியாளர் தர்மறி பண்டாரநாயக்கா "சினியாத்திரா" என்ற பெயரில் தமிழ் தேசத்தின் அல்லது வடக்குக் கிழக்கின் பல பாகங்களிலும் திரைப்பட விழா ஒன்றினை நடாத்தியிருந்தார். திருகோணமலையிலும் அவ்விழா நடைபெற்றது. விழாவில் ஜெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜா, சுமித்திரா பீரிஸ், அசோக்கா கந்தேகம போன்ற பிரபல சிங்கள நெறியாளர்களின் திரை வடிவங்கள் காண்பிக்கப்பட்டன. என்னால் எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க முடியாமல் போய்விட்டாலும், படங்களைப் பார்வையுற்ற எம்மவர் சிலருடன் அதுபற்றிப் பேசமுடிந்தது. சில கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளமுடிந்தது. எம்மவர்கள் கூறியவை.
"அவர்கள் எங்கேயோ. போய்விட்டார்கள்; அவர்களோடு (சிங்களவரு டன்) ஒப்பிட்டால் எங்களிடம் ஒன்றுமே இல்லை; நாங்கள் எங்களுக்கானதொரு சினிமா உருவாக்கத்தில் தவறிவிட்டோம்". இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் தேச உணர்வையும், தனித்துவமான வளர்ச்சிக்கான வேட்கையையும் நான் உணர்ந்து கொண்டாலும், எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியை ஒடுக்குமுறை வரலாறு தழுவிப் பார்க்காமல் வெறுமனே அகநிலை சார்ந்து பார்க்க முற்பட்டது என்னளவில் உறுத்தலாக இருந்ததுடன் பாரிய முரண்பாடாகவும் இருந்தது. என்னுள் எழுந்த முரண்பாடு இப்படியொரு தலைப்பு நோக்கி சிந்திக்கவேண்டிய தேவையை உணர்த்தியது.
12

(2)
ஈழத்து தமிழ் சூழலில் தனித்துவமானதொரு சினிமா வளர்ச்சியடை யாமல் இருபதற்கான காரணமாக பலரும் ஒன்றைச் சொல்லுகின்றனர். அதாவது தென்னிந்தியத் தமிழ் சினிமாவின் வருகையும், அது ஈழத்துத் தமிழ் சூழலில் ஏற்படுத்திய தாக்கமுமே எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியை சிதைத்து விட்டது என்பதே அவர்கள் கருத்து. சினிமா ஆய்வாளர்கள் எனப்படுவோரும், சினிமா சார்ந்து சிந்திப்போரும் இதனையே முதன்மைக் காரணமாகக்கொண்டு தங்கள் மதிப்பீடுகளை முன்னிறுத்துகின்றனர். எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியில் மேற்படி காரணம் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருப்பது உண்மை. ஏனெனில் தென்னிந்திய தமிழ் சினிமா ஈழத்துத் தமிழ் சூழலை ஊடறுத்தபொழுது தென்னிந்தியத் தமிழர்களின் வாழ்வியலுக்கும் ஈழத்து தமிழர்களின் வாழ்வியலுக்கும் இடையில் இருந்த மொழிfதியான இணைந்த தன்மையும், கலாசார ரீதியான (பெருமளவு) ஒத்த தன்மைகளும் ஈழத்து தமிழன் தென்னிந்திய தமிழ்ச் சினிமாவை தனக்கான சினிமாவாகவும் வரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்கியது. இந்நிலைமை ஈழத்துத் தமிழ் சூழலில் தனித்துவமானதொரு சினிமா வளர்ச்சியில் இடையூறாக அமைந்ததென ஒருவர் கூறின், அக்கூற்று இலகுவாக நிராகரித்துவிடக் கூடிய ஒன்றல்ல. ஆனால் இதனையே முழுமையான காரணமாகத் தழுவிக்கொண்டு, சிங்கள சினிமாவின் பிரமிப்பில் ஆட்படுவதுதான் முரண்பாடானது. ஏனெனில் இன்றைய ஈழத்துத் தமிழனின் எந்தத் துறைசார் வளர்ச்சியோடும் வளர்ச்சியின்மையோடும் ஈழத்துத் தமிழன் மீதான ஒடுக்குமுறை வரலாறும் பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்த உண்மையை புறமொதுக்கி அல்லது ஒரம்கட்டி, ஈழத்து தமிழனின் வளர்ச்சியை அல்லது வளர்ச்சியின்மையை மதிப்பிட முற்படுவது முற்றிலும் பிழையான பார்வையாக அமைவதுடன் நியாயமற்ற பார்வையாகவும் அமையும் என்பது என் துணிபு.
நாம் இவ்விடத்தில் பிறிதொரு விடயத்தையும் கருத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். தென்னிந்திய தமிழ் சினிமாவின் தாக்கமே எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியைச் சிதைத்து விட்டதாகக் கூறும் பலரும், ஆரம்பத்தில் சிங்கள சினிமாவும் தென்னிந்திய சினிமாவையே முழுமையாக நம்பியிருந்தது என்ற உண்மையை இலகுவாக மறந்து விடுகின்றனர். ஆரம்பத்தில் வெளிவந்த சிங்களத்திரைப்படங்கள் வெறுமனே சிங்களம் பேசும் சினிமாக்களே அன்றி, சிங்கள சினிமா அல்ல என்பது சிங்கள திரைப்பட விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. ஆரம்பத்தில் வெறுமனே சிங்களம் பேசும் சினிமாவாக இருந்த நிலைமை மாறி ஒரு தனித்துவமான வளர்ச்சிப் போக்கு எவ்வாறு தோற்றம் பெற்றது? அதற்கு ஏதுவாக இருந்த காரணிகள் எவை? அதன்பின் இருந்த அரசியல் எத்தகையது?
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிங்களப் பெரும் தேசியவாதம் ஈழத்துத் தமிழனின் முதுகின் மேல் கொலு வீற்றிருக்கிறது. சிங்களப் பெருந்தேசியவாதத்தால் இறுகிப் போயிருக்கும் சிறிலங்கா அரச கட்டமைப்பு திட்டமிட்டு பலவழிகளிலும் தமிழனின் வளர்ச்சியைச் சிதைத்து வந்திருக்கிறது. இன்றும் சிங்கள தேசம் ஈழத்து தமிழனின் நிமிர்வை, எழுகையை, அசைவை
13

Page 8
வெறுப்புணர்வுடனும், அச்சத்துடனுமே பார்க்கத் தலைப்படுகிறது. இந்தப் பின்னணியை எம்முள் செரித்துக் கொண்டுதான் எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியடையாமைக்கான காரணத்தை வெறுமனே அகநிலை சார்ந்து சிந்திக்க விளைகின்றோம். சிங்கள மேலாதிக்கம் ஈழத்து தழிழனின் இருப்பை சிதைப்பதில் எந்தளவு உறுதியுடன் செயற்பட்டிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக கீழ் வரும் சம்பவங்களை நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.
1. 1960ம் ஆண்டு மேற்கு ஜேர்மன் அரசு வடக்கு, கிழக்கில் ஆட்டு மந்தைகளை விருத்தி செய்வதற்காக நல்லின ஆட்டுக் கடாய்களை வழங்கியது. ஈழத்துத் தமிழன் ஆடுவளர்ப்பதா? நாம் அதை விடுவதா என்ற இறுமாப்புடன் சிங்கள அரசியல்வாதிகள் அதைத் தடுத்து அநுராதபுரத்திற்கு மாற்றி எடுத்தனர். 2. 1983ம் ஆண்டு யூலை இனமேலாதிக்கத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஒரு தொகுதி உணவுப் பொதிகள் வந்திறங்கின. இதைக் கேள்வியுற்ற சிறில் மத்தியூ என்ற சிங்கள அரசியல்வாதி கலவரத்தில் சிங்களத் தொழிலாளர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறி, தாக்குதலில் ஈடுபட்ட சிங்களக் குழுவினருக்கே உணவுப் பொதிகளை வழங்கி உற்சாகமளித்தார். ஈழத்து தமிழன் மீதான சிங்களப் பெருந்தேசியவாதச் சுரண்டலின் பட்டியல் மிகவும் நீண்டது. அவற்றோடு ஒப்பிட்டால் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரண்மானவை. ஆனால் இந்தச் சிறிய சம்பவங்களோடு எங்களுக்கான தொரு சினிமா என்ற கருத்துருவாக்கத்தை இணைத்து நோக்கினால் சிங்கள அரசமைப்பினுள் எங்களுக்கானதொரு சினிமாவை வடிவமைத்துக் கொள்வதில் உள்ள சாத்தியமற்ற தன்மையை ஒருவர் இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும். (3) ஆரம்பத்தில் ஈழத்து தமிழ் சூழலில் சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. "சமுதாயத்தில் தொடங்கி ‘சர்மிளாவின் இதய ராகம் வரை ஏறக்குறைய 12ற்கு மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருப்பதாக அறியமுடிகின்றது. எனினும் இத் திரைப்படங்கள் சினிமா உலகில் பெரிதாகப் பேசக்கூடிய நிலையை எட்டியிருக்கவில்லை. ஆனால் இந்நிலைமை அப்படியே தொடர்ந்திருக்கும் என்று நாம் ஆரூடம் கூறிவிடமுடியாது. காலப் போக்கில் இந்த ஆரம்ப நிலை முயற்சிகள் தேசிய தமிழ் சினிமா என்ற நிலையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கலாம். ஆனால் சிங்களப் பெருந்தேசியவாத நலன்களும், திட்டமிட்ட இன அழித்தொழிப்பும் இந்நிலைமைகளை முற்றிலும் சிதைத்துவிடுகின்றன. சிங்கள சினிமாவின் வரலாறு 1947ம் ஆண்டுடன் ஆரம்பமாகின்றது. இக்காலப்பகுதியிலேயே இலங்கையின் முதலாவது படமான கடுவுனு பொறந்துவ வெளிவருகின்றது. ஆனால் 1956ம் ஆண்டுடன் அரசில் பங்கேற்கும் வாய்ப்பை தமிழர்கள் முற்றிலும் இழக்கின்றனர். இக்காலப்பகுதியுடன் ஈழத்துத் தமிழர்கள் முற்றிலும் அடக்கப்படும் இனமாக மாற்றப்படுகின்றனர். இக்காலப்பகுதியினுடனேயே தமிழர்களுக்கானதொரு தனித்துவமான அரசியல் முளைவிடத் தொடங்குகின்றது. அதேவேளை தமிழர்கள் மீதான சிங்கள மேலாதிக்கமும் படிப்படியாக விஸ்தீரணம் கொள்கின்றது. பொருளாதாரம், 14

கல்வி, கலாசாரம் எனப் பல வழிகளிலும் தமிழர்கள் மீது பாரியளவில் சுரண்டல் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இந்தப் பின்னணியில் சிங்கள சினிமாவின் வளர்ச்சிப் போக்கை பார்ப்போமானால், . .
1947ம் ஆண்டுடன் தோற்றம் பெற்ற சிங்கள சினிமா தனித்துவமான தொரு வளர்ச்சிப்போக்கைக் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் தென்னிந்தியப் படங்களின் தழுவல்களாகவும் அல்லது தென்னிந்திய கலைஞர்களின் திரை வெளிப்பாட்டு முறைமைகளைச் சார்ந்துமே வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் 1956ம் ஆண்டுடன் இந்நிலைமைகள் முற்றிலும் மாற்றமடைந்தன. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த S.WRD.பண்டாரநாயக்கா சினிமா தொடர்பில் புதிய சட்ட நடைமுறையொன்றை அமுல்படுத்தினார். அதாவது இனி சிங்களப் படங்கள் வெளிநாட்டுப் படங்களைத் தழுவி உருவாக்கப்படக்கூடாது. சிங்களப் படங்கள் இலங்கையிலேயே உருவாக்கப்படவேண்டும். இந்தச் சட்ட நடைமுறை அதுவரை தென்னிந்தியாவை நம்பியிருந்த சிங்கள சினிமாக் கலைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தையும், புதியபார்வைகளையும் வழங்கியது எனலாம். இக்காலப்பகுதியிலேயே சிங்கள சினிமா உலகின் ‘சத்தியஜித்ரே என்று வருணிக்கப்படும் "ஜெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், ரேகாவ' என்ற திரைப்படத்தினுடாக சினிமா உலகிற்கு அறிமுகமாகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய வருகையின் பின்னரேயே சிங்கள சினிமா தனித்துவமானதொரு வளர்ச்சியை நோக்கி நகர்ந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் இதே 1956ம் ஆண்டே பண்டாரநாயக்காவால் 24 மணித்தியாலத்தில் தனிச்சிங்களச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நாம் மேற்படி சினிமா தொடர்பான சட்ட நடைமுறையை யும், தனிச்சிங்களப் பிரேரணையையும் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். 1943ம் ஆண்டளவிலேயே தனிச்சிங்களப் பிரேரணை தொடர்பான சர்ச்சைகள் மேற்கிளம்பிவிட்டாலும் 1956ம் ஆண்டே தமிழ்மொழி சட்டரீதியான புறக்கணிப்பிற்கு உள்ளாகின்றது.
தவிர பண்டாரநாயக்காவின் சினிமா தொடர்பான சட்டநடைமுறையை கட்டவிழ்த்து நோக்கினால், சிங்களப் படங்கள் வெளிநாட்டுப் படங்களை தழுவி உருவாக்கப்படக் கூடாது என்ற கருத்து முன்னிறுத்தப் பட்டிருக்கிறதே யன்றி சிறுபான்மை சமூகங்களின் கலை கலாசாரங்களை உள்ளடக்கியதொரு விரிந்த பார்வை முன்னிறுத்தப்படவில்லை. எனவே பண்டாவின் சினிமா தொடர் பான சட்ட நடைமுறையின்படி இலங்கைக்கான சினிமா வளர்ச்சி என்பது சிங்களமொழி சார்ந்த சினிமா வளர்ச்சியென்றே பொருள் கொள்ளலாம். இதனை ஆழமாக நோக்கின் இது ஒரு பெளத்த சிங்கள நாடு. இங்கு சிங்களத்தைச் சார்ந்தே சகல வளர்ச்சிகளும் அமையவேண்டும் என்ற கருத்துநிலை ஆதிக்கம் பெற்றிருப்பதை உணரமுடிகின்றது.
(4)
1975ம் ஆண்டுடன் தமிழர் தேசிய அரசியல் மாறுபட்ட அரசியல் சூழலை உள்வாங்கிக் கொள்கிறது. இக்காலப்பகுதியிலிருந்து தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியெனப் பலமாக உணரப்படுகின்றது. எங்களுக்கானதொரு தனித்துவமான வளர்ச்சி என்பது எங்களை நாங்களே தீர்மானிக்கும் சுதந்திரமான
15

Page 9
இருப்பினுாடாக சாத்தியப்படக்கூடிய ஒன்றேயன்றி சிங்கள அரசிடம் யாசித்துப்பெறும் ஒன்றல்ல என்ற கருத்துநிலை பலமடைகின்றது. இந்த அரசியல் சூழல் அதுவரை சிங்கள சினிமாக் கலைஞர்களுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாக்கலைஞர்கள் பலரைச் சினிமாத் துறையிலிருந்து ஒதுக்கியது. சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். சிங்கள சினிமாவின் ஆரம்ப நிலை வளர்ச்சிக்கட்டத்தில் தமிழ், முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு கணிசமானது. குறிப்பாக லெனின் மொறாயஸ், எஸ்.ராமநாதன், அன்ரன் கிரகிரி, எம். எம்.ஆனந்தன் (நிதாயை படத்தின் ஒளிப்பதிவாளர்), ஈழத்துரத்தினம் போன்ற தமிழ்க் கலைஞர்களின் பங்களிப்பும், எம்.மஸ்தான், ஜபிர் ஏ.காதர், எம்.ஏ.கபூர், சுபைர் மக்கீன் போன்ற முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பும் விதந்து கூறத்தக்கவை. ஆனால் இவர்களின் பங்களிப்பு சிங்கள சினிமா உலகில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஒருவகையில் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதெனவும் கூறலாம்.
1983ம் ஆண்டு தமிழ் மக்களால் மறக்க முடியாத ஆண்டு. தமிழ் மக்கள் ஒவ்வொருவரது மனங்களிலும் ரணமாக ஆழப்பதிந்து கிடக்கும் ஆண்டு. இந்த ஆண்டு இடம்பெற்ற இன மேலாதிக்க தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதனைச் சினிமாத்துறை யோடு மட்டும் மட்டுபடுத்தி நோக்கினால் இலங்கையின் மிகப்பிரமாண்டமான சினிமா ஸ்ரூடியோவாகக் கருதப்பட்ட கே.குணரத்தினத்தின் விஜயா ஸ்ரூடியோ அழிக்கப்பட்டது. சினிமாஸ் லிமிட்டேட்டிற்கு சொந்தமான பல திரையரங்குகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலின்போது கே.வெங்கட் என்ற தமிழ் சினிமாக் கலைஞர் கொல்லப்பட்டார். இவரே முதல் முதலாக தென்னிந்தியாவி லிருந்து நடிகர்களை வரவழைத்து ‘மாமியார் வீடு என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவர் நிவிகா', 'யூரிபத்துவ, ‘மகே அம்மா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுப் பின்னணியை மனதில் இருத்தி ஆழ்ந்து நோக்கினால் இரண்டு உண்மைகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஒன்று - ஒருபுறம் ஈழத்து தமிழர்களின் வாழ்வியல் இருப்பு கேள்விக்குள்ளான நிலையில் சிங்களதேசம் தன்னை சகல வழிகளிலும் மேம்படுத்திக் கொள்கிறது. இரண்டு - ஈழத்துத் தமிழர்கள் கலாசார ரீதியாக சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் உள்ளாகிக் கொண்டிருந்த நிலையில் அந்தச் சுரண்டலயும், ஒடுக்குமுறையை யும் சிங்களதேசம் தமது கலை, கலாசாரரீதியான வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறது. இந்த இரண்டு காரணங்களை அடியொற்றியே நாம் சிங்கள சினிமாவின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஈழத்து தமிழ் சூழலின் தனித்துவமானதொரு சினிமாவை வளர்த்துச் செல்வதற்கான சகல வாய்ப்புக்களும் மறுக்கப்பட்ட நிலையில், தேசிய சினிமா என்ற பெயரில் சிங்கள சினிமா வளர்த்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதற்காக சிங்கள சினிமாக் கலைஞர்களின் ஆற்றலையும், உழைப்பையும் குறைத்து மதிப்பிடுவதாக எவரும் அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. மேலும் சிங்கள சினிமாவின் வளர்ச்சிப்போக்கில் பொருளாதாரமும் பாரிய பங்காற்றியிருக்கிறது. சிங்கள தேசம் ஆளும் தேசமாகவும், தமிழ்த் தேசம் அடக்கப்படும் தேசமாகவும் 16

இருக்கும் காரணத்தினால் பொருளாதாரத் திட்டமிடல்கள் யாவும் சிங்கள தேசத்தின் நலன்கள் சார்ந்தே திட்டமிடப்பட்டன. இந்நிலைமை சிங்கள, தமிழ் சமூகங்களுக்கிடையிலான பொருளாதார வளர்ச்சிப்போக்கில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியது. 1977ல் அறிமுகமான திறந்த பொருளாதார முறைமை இந்நிலைமைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது. இதனைச் சற்று ஆழ்ந்து நோக்கின் தமிழர்கள் மீது பாரியளவில் ஒரு பொருளாதாரரீதியான அடக்குமுறை கட்டவிழ்ந்து விடப்பட்டது எனலாம். இதுபற்றி நியுட்டன் குணசிங்க குறிப்பிடுகையில், 'திறந்த பொருளாதாரக் கொள்கை பல்வேறு குழுக்களையும் சமனற்ற முறையில் முன்னேறச் செய்தது என்றார்(1984).
இன்று நிலைமை வேறாக இருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டாக தமது ஆற்றல், அவதானம் முழுவற்றையும் போராட்டத்திலும், அது சார்ந்த அகக் கட்டுமானங்களிலும் குவித்து நின்ற ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்கின்றனர். எனவே ஒரு தேசத்திற்கான தனித்துவமானதொரு சினிமாவை வடிவமைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் உணரப்பட வேண்டிய ஒன்றே! எங்களுக்கானதொரு சினிமாவை வடிவமைத்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையின் நல் அறிகுறியாக நிதர்சன அமைப்பின் முயற்சிகளை இனம் காணலாம். நிதர்சனத்தினுடாக வெளிவந்த குறும்படங்கள், நீளத்திரைப் படங்கள் (எ.கா. - கடலோரக்காற்று) ஆழமான புரிதலுக்குரியவை. குறிப்பாக போர்ச் சூழலின் மத்தியிலும், குறைந்த வசதிவாய்ப்புகளே கைவசப்பட்ட நிலையிலும் நிதர்சனத்தின் இத்தகைய முயற்சிகள் போற்றுவதற்குரியவை. ஏனினும் நிதர்சனத்தின் திரைவெளிப்பாட்டு முயற்சிகள் வெளியில் உள்ளவர் களால் ஆழமாகப் பார்க்கப்படவில்லை. அவர்கள் பார்க்க முன்வரவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. நவீன திரை வெளிப்பாட்டு முறைகளில் நின்று நோக்கும்போது ஒருவேளை நிதர்சனத்தின் திரைப்பட முயற்சிகளின் தரம் பற்றி வேறுபட்ட பார்வைகள் எழலாம். எனினும் நிதர்சன வெளியீடுகள் ஆரம்பநிலை முயற்சிகளாகக் கருதப்படவேண்டியவை. எங்களுக்கானதொரு சினிமா என்ற கருத்துருவாக்கத்தின் செயற்பாட்டு இலக்கை நோக்கி நகள்வதற்கு நிதர்சனத்தின் திரைவடிவங்கள் இன்றியமையாதவை. எவ்வாறாயினும் போர்ச்சூழலினால் அகநிலையில் பல்வேறு சிதைவுகளுக்கு உள்ளாகியிருக்கும் நாம் ஒரு கூட்டு இணைவின் மூலமே எங்களுக்கானதொரு சினிமா என்னும் இலக்கை எய்த முயலவேண்டும். அதுவே சாத்தியமானதும் கூட. தற்போதுள்ள சூழலில் இதுபற்றி நாம் ஆழமாகச் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக் கின்றது.
நெற்றிக்கணி” விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக்கண் பகுதியில் உங்களது நூல்விமர்சனம் இடம் பெறவேண்டுமெனில், நூலின் இருபிரதிகளை அனுப்பிவையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல்-பற்றிய அறிமுகக்குறிப்பு
புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும்.
-geflrfurt
17

Page 10
GLUTraifuLIů கா.சிவத்தம்பி
சந்திப்பு : தி.ஞானசேகரன்
(* உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். N * பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ்நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் لم .பணிபுரிந்தவர் ܢ
(4)
தி.ஞா. தாங்கள் பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளீர்கள். இலங்கையிலும் இந்தியாவிலும், அமெரிக் காவிலும், உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளிர்கள். அக்காலகட்டங்களில் ' தாங்கள் பெற்ற அநுபவங்கள், தங்களது வளர்ச்சிக்கு எவ்வாறு துணைநின்றன?
கா.சி. நான் PhD. செய்ததன் பின்னர் 70ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இவ்வாறு பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அதுவும் வித்தியோதராவில் இருக்கும்போது ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்திற்குப் போய், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று வருடங்கள் வேலை செய்துவிட்டு வந்தபின்னர்தான் எனக்குக் Sabbatical leave கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி நான் சென்றேன். உண்மையில் இவ்வாறு பல பல்கலைக்கழகங்
18
 

களுக்குப் போவதனால் ஒருவருடைய அநுபவம் விருத்தியடைகின்றது. அது மாத்திரமன்றி நமது துறையில் உள்ளவர்களை அல்லது நமது துறைசார்ந்தவர் களை, பல்வேறு அறிஞர்களை, ஆராய்ச்சி மாணவர்களைக் கண்டு பேசுவதற்கும், அவர்களுடன் நண்பர்களாகப் பழகுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். அதுமாத்திரமன்றி வேறுபலருடைய நட்புகளும் இதனடியாகத் தோன்றுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 1981ம்ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கியவுடன், அங்கு துணைவேந்தராகப் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் இருந்தார். அவருடன் 1966ஆம் ஆண்டிலிருந்தே எனக்கு உறவு இருந்து வந்தது. அவர் இரண்டு பேராசிரியர்களையும் இரண்டு சிரேஷ்ட ஆய்வாளர்களையும் தமிழகத்துக்கு வெளியே இருந்து அழைத்திருந்தார். அவர் அழைத்த பேராசிரியர்களில் ஒருவர் வரவில்லை. வந்தவர்களில் ஒருவர் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இலக்கிய - சமஸ்கிருத துறைகளிலே மிகவும் பெயர்பெற்றவரான எஸ்.எம்.காத்ரே. அவர் சமஸ்கிருதப் பேராசிரியர்; மொழியியல் அறிஞர். இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்தான் மூலபாட திறனாய்வு என்று சொல்லப்படுகின்ற, பாடஆய்வியலினுடைய மூலபிதா என்று சொல்லலாம். நான் தஞ்சாவூருக்குச் சென்று அங்கு ஆறு மாதம் பணியாற்றினேன். பேராசிரியர் வி.எஸ்.சுப்பிரமணியம் எனக்கு ஒருபணி தந்தார். "நீர் எதைப்பற்றி இங்கு ஆய்வுசெய்யப் போகிறீர்?" என்று என்னிடம் வினாவினார். நான் பல்வேறு விடயங்களை எழுதிக்கொண்டு சென்றேன். அதைப் பார்த்துவிட்டு, அதில் நிறைய வேலை செய்யவேண்டிவரும் போல் இருக்கிறது எனக் கூறி, ஆறு மாதத்திற்குள் முடிக்கக்கூடியதான தமிழோடு சம்பந்தப்பட்ட ஓர் ஆய்வினை நான் செய்வதையே அவர் விரும்பினார். நான் கூறினேன், "தமிழில் இலக்கிய வரலாறு என்ற பாடம் எவ்வாறு வளர்ந்துள்ளது -அதனுாடாக நாங்கள் அறிவதற்கு ஏதாவது வாய்ப்புகள் உண்டா? ஏதாவது புதிய விஷயங்கள் தென்படுகின்றனவா? என்று பார்ப்போம். அதனை நான் செய்யலாம் "என்றேன். தமிழில் இலக்கிய வரலாறு' என்கின்ற ஆராய்ச்சியை நான் அங்கு செய்தேன். அதனைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முதலில் grilaiologisi) tijdisgs.g5gs. Literrary history in Tamil 6Tg)b 5606) list) psigiig, கட்டுரைகளை நான் வாசித்து, அது சம்பந்தப்பட்ட அறிஞர்களை அழைத்து ஒரு பெரிய கருத்தரங்கு நடத்தி, அதில் ஏற்பட்ட வாதங்களை அடிப்படையாகக் கொண்டு அக்கட்டுரைகளை மீள் பரிசோதனை செய்து, அதன் பின்னர் பிரசுரஞ் செய்தேன். இன்று தமிழில் இலக்கிய வரலாறு என்ற அந்த நூல் தமிழகத்திலும் இலங்கையிலும் உயர்நிலை மாணவர்களுக்கு உதவுகிற ஒரு நூலாக இருக்கிறது. நான் PhD க்குப் பிறகு செய்த ஒரு முக்கியமான வேலைகளில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன். இதனைச் செய்கின்றபோது நான் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்றேன். பல்வேறு தமிழ்க் கல்லூரிகளுக்கும் சென்றேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னை இரண்டு வாரம் விருந்தினராக அழைத்திருந் தார்கள். அப்போதுதான் பேராசிரியர்கள் அகஸ்தியலிங்கம், எஸ்.டி.சண்முகம் போன்றவர்களை நண்பர்களாகக் கிடைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த நட்பு இன்றுவரையும் தொடர்ந்து வருகிறது. அதுமாத்திரமன்றி தமிழ்த் துறையிலிருந்த ஆறு. அழகப்பர் என்பவரோடு 19

Page 11
நாடகம் பற்றியெல்லாம் உரை யாடினேன். அந்த நாட்களில், மாணவராக இருந்தவர்தான் தி.மு.க.வில் போக்கு வரத்து அமைச்சராக இருந்த பொன்முடி. அப்படியான உறவுகளெல்லாம் எனக்கு ஏற்பட்டன. பாண்டிச்சேரி French Institute க்கு வி. எச். சுப்பிரமணியம் அவர்கள் என்னைப்பற்றிச் சிபார்சு செய்து ஒரு கடிதம் அனுப்பினார். அங்கு ஒருவாரகாலம் அவர்களது செலவில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது. அங்கு கிடைத்த அனுபவம் மிகப் பெரியது; மறக்க முடியாதது. அங்கு அற்புதமான நூலகம் இருந்தது. எமது பழந்தமிழ் நூல்கள் - குறிப்பாக சமய நூல்கள் எல்லாவற்றறையும் பிரெஞ்சிற்கு மொழிபெயர்த்திருக்கிறார்கள். சங்க இலக்கியம் பற்றிய அகராதிகளில் பிரஞ்சு மொழியில் உள்ள ஒரு அகராதிதான் இன்றும் சிறப்பானதாக விளங்குகிறது. அது இரண்டு பாகங்களைக் கொண்டது. அங்குள்ள அறிஞர்களுடன் பேசிப்பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. கோபால் ஐயர் என்பவருடன் பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள அறிஞர்கள் ஆர்.எம். சுந்தரம், வெள்ளை வாரணனார் நம்பியாரூரன், சுந்தர சண்முகனார், ஏ. எஸ்.ராமன், ராம நரசன், முருகரத்தினம், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சுப்பராயுலு, மொழியியல் துறையில் முக்கியத்துவம் உள்ள பேராசிரியர் அரங்கன், வையாபுரிப்பிள்ளையுடன் கடமை யாற்றிய மு. சண்முகம்பிள்ளை போன்ற பலருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சிலம்பொலி செல்லப்பன் அங்கு பதிவாளராக இருந்தார். இவர்கள் எல்லோரை யும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அதனால் அறிவு மிக மிக வளமாகப் பெருகிற்று என்று சொல்லலாம். அந்தக் காலகட்டத்திலேதான், அ. மார்க்ஸ், பொ. வேலுசாமி போன்றவர்கள் தினமும் என்னைச் சந்தித்து அளவளாவினார் கள். பிற்காலத்தில் அவர்கள் தமிழ் நாட்டில் முக்கியமான எழுத்தாளர்களாக, விமர்சகர்களாக - என்னுடன்கூடக் கருத்து வித்தியாசம் கொண்டு விஷயங் களை விவாதிக்கிறவர்களாக மாறி இருப்பது எனக்குப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
இந்தக் காலகட்டத்திலேதான் நான் மடங்களைப் பார்த்தேன். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியவற்றில் ஒருநாள் முழுவதும் தங்கியிருந்து அங்குள்ள நடைமுறைகள் யாவற்றையும் பார்த்தேன். அது ஒரு பெரிய அனுபவம். அவர்கள் தமிழ் படிக்கிற முறைமை, அதனைச் சொல்கின்ற முறைமை, தமிழ் வளர்க்கிற முறைமை இவையெல்லாம் இலங்கையில் முன்னர் நிலவிய எங்களுடைய தமிழ்க் கல்விப் பரம்பரையை ஒத்தது. அதிலிருந்தும் சற்று வேறுபட்டது என்று சொல்வேன். திருவாவடு துறை ஆதீனம் ஒருமாதிரியும், தருமபுர ஆதீனம் இன்னொரு மாதிரியும் என்று சொல்லலாம்.
இதன் பின்பு நான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். றொமிலா தாப்பர் என்ற வரலாற்றுப்பேராசிரியரின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றேன். இந்திய வரலாற்றுத் துறையில் அவர் ஒரு பிரசித்திபெற்ற பெண்மணி. அவரை நான் கொழும்பில் சந்தித்து அளவளாவி யிருக்கிறேன். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவர்கள் என்னை விருந்தினராக இரண்டுவாரம் அழைத்திருந்தனர். அந்தத் தருணத்தில் நான் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோற்றம்பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். 20

அப்போதுதான் கே.என்.பணிக்கர் - இராதாகிருஷ்ணனின் மகன் கோபால், செம்பகலசஷமி பி.சி.ஜயின், மீனாட்சி போன்ற மிகப்பிரசித்தமான வரலாற்று ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்நாட்டு வரலாறு ஏன் நீலகண்ட சாஸ்திரிக்குப்பின்னர் அனைத்திந்திய மட்டத்தில் எடுபடவில்லை என்பதற்கான காரணங்கள் அவர்களுடன் ஊடாடுகின்றபோதுதான் தெரிய வந்தது. திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி காரணமாக, குறிப்பாக அதன் செல்வாக்குக் காரணமாக தமிழை முதன்மைப்படுத்தி வரலாறு எழுதமுனையும் பொழுது, அக்கருத்துக்கள் எடுத்துக் கூறும் முறைமையிலும் கருத்துக்களின் தள நிலைகள் பற்றியும் பல்வேறு புலமைப்பிரச்சினைகள் தோன்றின. திராவிடக் கருத்து நிலை அக்காலத்தில் தமிழ்நாட்டின் மதப்பண்பாட்டு வளர்ச்சியினைப் புறக்கணித்திருந்தது. பக்தி இலக்கியங்கள் மதம்சார் இலக்கியங்கள்பற்றி சனவிருப்புவாத(Populist) போக்குகளைக் கொண்டிருந்தது. இதனால் தமிழையும் தமிழ் நாட்டையும் அனைத்திந்தியப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் முறைமையில் ஊறு ஏற்பட்டது. குறிப்பாக பண்டைய தமிழ் நூல்களின் காலம் பற்றிக் கூறப்பட்ட சில கருத்துக்கள் வரலாற்றுணர்வு அற்றனவாகவே இருந்தன. உதாரணமாக தொல்காப்பியம் கி.மு. ஏழாயிரம் வருடத்திற்கு முந்தியது என்று சொல்வது போன்ற கருத்துக்கள். இப்படியான கருத்துக்கள் வரலாற்றின் மற்றைய சான்றுகளுடன் இணைவதும் சிரமமாக இருந்தது. ஒன்று வாதிடவும், இரண்டு தங்களுடைய வாதங்களை நிலைநிறுத்தவும் தயங்குகிற - எடுத்து பேசுகிற பேராசிரியர்கள் பலர் இருக்கவில்லை. பாலச்சந்திரன் என்கின்ற ஒருவர் மாத்திரம் Presidency கல்லூரியில் இருந்தார். அவர் நவீன வரலாற்றை மட்டும் செய்தார். பழைய இந்தியாவைப் பொறுத்தவரையில், கே.கே.பிள்ளை கூட அங்கு பெரிய தாக்கத்தினை வடஇந்தியாவில் ஏற்படுத்தவில்லை. அவர்களோடு வாழ்ந்த அந்த இரண்டு வாரகாலமும் மிகச்சிறந்த காலம். அது மாத்திரமல்ல இன்றும்கூட, சிலவேளைகளில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக்தில் படிக்கிற மாணவர்களை - அந்தத் துறையில் படிக்கிற மாணவர்களை எங்களிடம் சென்று அந்த விடயங்களை அறிந்துவாருங்கள் என்று மேலிடத்தில் அனுப்புவார்கள். நான் சென்னையில் இருக்கின்றபோதெல் லாம் மாணவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அங்குசென்றபின்னர்தான் எனக்குத்தெரியும், நாங்கள் எழுதுவதெல்லாம் நிதானமாக இருக்கவேண்டும் என்பது. நாங்கள் எழுதுவதையெல்லாம் அவர்கள் மிகக் கவனமாக வாசிக் கிறார்கள். என்னுடைய திணைபற்றிய கட்டுரை அவர்களுடைய கண்ணோட்டத் தில் ஒரு முக்கியமான கட்டுரை. அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. ஏனென்றெல் நான் தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அக்கட்டுரையை எழுதினேன். அவர்கள் அதற்குமேலால் பொருளாதாரக் கட்டமைப்புப் பற்றியெல்லாம் கேட்டார்கள்.
இதைவிட Primary Sourcesக்கு நாங்கள் போகவேண்டும் என்கிற விடயம். நான் திராவிடக்கழகத்தைப்பற்றிய ஆரம்பக்காலம் பற்றிப்பேசினேன். அப்போது, பெரியாருக்கும் மறைமலையடிகளுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியெல்லாம் எடுத்துப்பேசினேன். பேசுகிறபொழுது, நல்லவேளையாக, நான் மறைமலையடிகள் எழுதிய பெரியாருடைய பத்திரிகை குடியரசில் வந்த கட்டுரைகளையும் வாசித்தேன். பணிக்கள் என்னிடம் கேட்ட கேள்விகளெல்லாமே
21

Page 12
குடியரசுப் பத்திரிகையில் இப்படி எழுதியிருக்கிறது என்பதுபற்றியதாகவே இருந்தது. நான் அதிலிருந்து ஒன்றைப் படித்துக்கொண்டேன் - இன்னொருவர் எழுதியவற்றை வைத்துக்கொண்டு எக்காலத்திலும் ஒரு தனி ஆராய்ச்சி செய்யக் கூடாது. அவற்றுடன் தொடர்பான மூலநூலை, மூலச்சான்றைப் படிக்கவேண்டும். ஒருவர் சொல்கிறார் என்பதை வைத்துக்கொண்டு நான் ஒரு பெரிய Theory ஐ Develop பண்ணக்கூடாது. ஏனென்றால் அதனை நான் வாசிக்கிறபொழுது இன்னொரு கருத்துவரும். நான் இதனை எனது தமிழிலக்கிய வரலாறு எழுதுகின்றபோதுகூட அவதானித்தேன். என்னுடைய அனுபவம், எனது செல் வாக்கு, எனது கண்ணோட்டம், நான் படித்த ஆசிரியர்களுடைய செல்வாக்கு, எங்களுடைய இலட்சியங்கள், எங்களுக்கிருக்கிற சிந்தனை முறைமை என்பன வற்றிலிருந்து வேறு விடயங்கள் வெளியாகும். அங்கு இருந்த ஒன்பது மாதங்களும் எனக்கு மிகமிகப் பிரயோசனமான காலமென்பேன். எனக்கு ஒரு உலகம் திறந்துவிட்டது என்பதை அறிந்தேன்.
83ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். PH.Farmer get Gu:i5 Centre for South Asian Studies Sp161601,5565 issoccer Ustas g(5pb.25Tfr. 916 irst6tit Peasant colonisation in Ceylon, Ceylon a divided nation ஆகிய மிகப்பிரசித்தமான நூல்களை எழுதியவர். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இலங்கை பற்றிய தகவல்களுக்கான ஒரு சான்றாதாரமாக அவர் இருந்தார். அங்கு நான் திராவிட கழகத்தின் வளர்ச்சிபற்றி UnderStanding the Dravidian movement 616 rugs upg& G&L (356.5i. 91stile (36.606) செய்தது மிகட்பெரிய அநுபவம். உதாரணத்திற்கு, ‘தமிழகத்தில் முஸ்லிம்கள் என்று ஒரு கருத்தரங்கு அங்கு நடந்தது. அதனை ஒரு பெண் நடத்தினார். எல்லாமாக ஐந்தே பேர்தான் அதில் பங்குபற்றினர். நான்கு மணிக்குத் தொடங்கி ஏழு மணிக்கு அக்கருத்தரங்கு முடிந்தது. அவுஸ்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவரும், போல் ஆர் பிறஸ் என்பவரும் அதில் பங்குபற்றினார்கள். நானும் அதில் பங்குபற்றினேன். எங்களைவிட ஒரு மாணவனும் இருந்தான். அக்கருத்தரங்கு முடிந்தபின் எல்லோரும் அதனை ஓர் அருமையான கருத்தரங்கு என்று சொன்னார்கள். நாங்கள் 200, 300 பேர் இருந்தால்தான் கருத்தரங்கு என்று நினைக்கின்றோம். அன்று ஐந்தாறு Cபரும் ருள் நடந்த விஷயங்கள் மிக முக்கியமானவை. அந்தக் கருத்தரங்கை நடத்திய பெண், தான் முஸ்லிம் பெண்களுடள் கலந்துரையாடிமை பற்றியெல்லாம் கூறினார். நான் சொன்னேன், அவர்களுடன் சந்தித்துப் பேசுவதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காதே என்று. கீழைக்கரை முஸ்லிம்களை எனக்குத் தெரிந்திருந்தது. நான் கீழைக்கரை சமுதாயம் பற்றிக் கூறியபோது அவர் களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அந்தப் பெண்றுக்கு ஓரளவு விளங்கியது. ஏனென்றால் அவர் அங்கு சென்று ஆய்வு செய்திருந்தார். ஒரு பெண்ணுக்கு அவர்களைப்பற்றி எவ்வாறு தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற பிரச்சினை எழுந்தது. அவற்றைப்பற்றியெல்லாம் மிக விரிவாகக் கதைத்தோம்.
scg.ucrissy.ccgc.), 9ttig GT63Tig5 Birth of Indian civilisation ciggu Raymond Allchin என்பவருடள் தொடர்பு கிடைத்தது. அவர் மிகப்பெரிய தொல் பொருளியல் ஆய்வாளர்களில் ஒருவர். Astrophysics இல் உள்ள மிகப்பெரிய 22
 
 
 

பேராசிரியர் ஒருவர் அங்கு இருக்கிறார். அவர் சக்கர நாற்காலியிலேதான் நடமாடுவார். எழுந்து நடக்கமாட்டார். எலும்புருக்கி நோயால் பீடிக்கப்பட்டிருந் தார். அங்குள்ள நூலகத்துக்குச் சென்றேன். அது மிகப்பெரியது. இலங்கையில் உள்ள புத்தகங்கள் யாவும் அங்கும் இருக்கின்றன. அங்கு பொறுப்பாக இருக்கும் நூலகருடன் கதைப்பதே தனிப்பெரும் அனுபவமாக இருக்கும். எங்களுடைய Center இல் ஒரு நூலகம் உண்டு. அங்கு ஒரு முக்கியமான விடயத்தைக் கண்டேன். தொண்டமானாறு ஏரியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்ற தகவல்களை ஒருவர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அதைவிடச் சுவாரஸ்யமான - ஆஷ் துரையின் கொலை வழக்குப் பற்றிய (பாரதியாருடைய) ஒரு கடிதம் அங்கிருந்தது. அந்த ஆஷ்துரையோடு சமாந்தரமாக இருந்த இன்னொரு Deputy Collector தனது தகப்பனுக்கு எழுதிய கடிதங்கள் அங்கிருந்தன. அதில் ஆஷ் கொலைசெய்யப்பட்ட சம்பவம் எழுதப்பட்டிருந்தது. "மிகவும் ஆர்வத்தோடு ஆஷ் இருந்தார். அப்படிப்பட்டவரை கொலைசெய்து விட்டார்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. இவையெல்லாம் பெரிய விஷயங்கள். அத்தோடு இந்தியாவில் இருந்த ஜமீந்தார்கள் பற்றிய புத்தகம் ஒன்றினையும் அங்கு பார்த்தேன். அங்குதான் பிரசித்தமான Hobson Jobson என்ற நூலைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அங்குள்ள மாணவர்களோடு பேசுவது ஒரு புதிய அநுபவம். நான் அங்கு இருக்கிற நாட்களில் அவர்களோடு சேர்ந்து சென்ற் ஜோன்ஸ் கல்லூரியின் Dinningfellow ஆக இருந்தேன். அப்போது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அங்கு வந்தார் . அவர் என்னைச் சந்தித்தபோது, "நீர் என்ன செய்கிறீர்?" எனக்கேட்டார். Politicization of culture என்ற தலைப்பில் ஆய்வு செய்வதாகக் கூறினேன். அப்போது அவர் அதுபற்றி விரிவாகக் கூறும்படி சொன்னார். அவர் சர்வதேச ரீதியில் சட்டத்தில் பெரிய நிபுணர். அப்படியானவரின் பக்கத்திலிருந்துகொண்டு, நான் திராவிட முன்னேற்றக்கழகத்தைப்பற்றிச் செய்கிறேன் என்று கூறியபொழுது sinGoidsgps (SuT(360T6ir. How the concept of culture is politicized 6T6 ru605 பற்றிக் கேட்டு, இந்த Aspect ஐப் பார்த்தீர்களா, French tradition ஐப் uTirgigsfras6TT2, Spanish tradition gUiTigsfras6TIT? French tradition 6T66hTop அதனைப்பாதித்து என்றெல்லாம் கேட்டார். உண்மையில் அது போதுமே! அது ஒரு கல்லெறிந்த மாதிரித்தான். குளக்கரைக்கு அந்த Ribbles வரவே நான் பலதை அறிந்துவிட்டேன். அந்தமாதிரியான மிகப்பெரிய அநுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.
இதன் பின்பு Peter Schalkசுவீடிஷ் பேராசியரோடு இருந்த உறவுகள் காரணமாக உப்சாலா பலகலைக்கழகத்திற்குச் சென்றேன். அங்கு மூன்று மாதம் Guest Professor ஆக இருந்தேன். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் உறவுகள் ஏற்படுத்தினேன். அதன் பின்பு அங்கு பத்ம நாதன், பேராசியர் வேலுப்பிள்ளை ஆகியோர் சென்றனர். அந்தப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவர்களுக்குத் தமிழ் படிப்பிக்க வேண்டி இருந்தது. அவர்களுடைய பாஷை சுவீடிஷ். அவர்களுக்கு ஆங்கில அறிவு மிகக் குறைவு. நாங்கள் பேசுகின்ற ஆங்கிலம் அவர்களுக்குப் புரிவதில்லை. நாங்கள் படிப்பிக்கின்ற முறையிலும் அவர்களுக்குப் படிப்பிக்க முடியாது. அங்குள்ள Department of Theology fas (upsiduuLDIT60Tg. girtig,6f 6T Sweedish Church 23

Page 13
க்கு இந்தியாவில் தொடர்பு இருந்தது. Ruth Walden என்ற பெண்மணி அங்கு தமிழ் படிப்பித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் ஒரு Church Missonary. அவர் இந்தியாவில் வேலை செய்தவர். அந்தப் பெண். அங்கு என்னை IntroducingTamil Literature என்ற தலைப்பில் ஒரு தொடர் விரிவுரை நிகழ்த்தச் சொன்னார். முன்று நாட்கள் அந்த விரிவுரைகளைச் செய்தேன். அப்போது, அவர்களுக்கு வேண்டிய விஷயங்களையும் எழுதிக் கொடுத்தேன். Scandinavion Institute of Asian Studies 6T6tropiT(5 pigp6.j60Tib D 6irgings. 9Irisis டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லன்ட ஆகிய நான்கு நாடுகளிலும் உள்ள, ஆசிய கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனர். அவர்களுடைய Resercher ஆக மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளிலுமுள்ள ஒன்பது பல்கலைக் கழகங்களுக்கு நான் விரிவுரைகளுக்குச் சென்றேன். இவ்வாறு செல்லும்போது, நாங்கள் தலைப்புகள் சிலவற்றை முன்கூட்டியே அவர்களுக்கு எழுதி அனுப்ப வேண்டும். அதில் அவர்கள் விரும்பிய தலைப்பில் பேசும்படி சொல்வார்கள். bT67, Religion & Poetry -The Tamil Experience, 6Trialsely 60Lu goodsai,600T அமைப்பில் சில விசேடமான அம்சங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதிக் கொண்டு சென்றேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, Lundபல்கலைக் aspassist) Religion & Poetry - The Tamil Experience, 676ip g5606).56) பக்தி இலக்கியம் பற்றிப் பேசினேன். அதில் ஆண்டாளைப்பற்றிப் பேசிய பொழுது அந்த ஆண்டாளின் Language முக்கிமானது என்று கூறினேன். அங்குள்ள ஒருபெண், ஆண்டாளின் கதையைக் கேட்டு, ஆண்டாளைப்பற்றிக் கேட்டு, ஆண்டாளின் அனுபவம் பற்றியெல்லாம் கேட்டாள். அந்தளவுக்கு ஆர்வமுள்ள மாணவர்களை அங்கு சந்தித்தேன். பல்வேறு பல்கலைக்கழகங் களில் உள்ள மிகச்சிறந்தவர்களை, பல்வேறு துறைகளில் உள்ளவர்களை யெல்லாம் நான் சந்திக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் கேட்கிற கேள்விகள், செய்கிற ஆராய்ச்சிகள் எல்லாம் முக்கியமானவை. நாங்கள் எதிர்பார்க்காத விடயங்களையெல்லாம் அவர்கள் படித்திருப்பார்கள்.
சுவீடிஷ் மரபில் பெளத்தத்தைப்பற்றிய ஆய்வுகள் நிறையச் செய்யப்பட்டுள்ளன. இலங்கை, சீனா, திபெத் போன்ற நாடுகளில் உள்ள பெளத்தத்தைப்பற்றி மிக மிக நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் என்னுடன் கதைத்தபோது, எனக்குப் பெளத்தத்தைப்பற்றித் தெரியாது என்று சொல்லவேண்டியிருந்தது. ஆனால் தமிழில் உள்ள பெளத்த நூல்களைப்பற்றிப் பேசுகிறபோது அவர்கள் மிகவும் ஆர்வமாகக் கேட்டார்கள். மணிமேகலையில் உள்ள பெளத்தம் எது? என்று ஒருவர் கேட்டார். 'அறிதொறும் அறிதொறும் அறியாமை கண்டவாறு என்பது அப்போதுதான் தெரிந்தது. ஒன்றைப் புதுக்கப் படிக்கிற போதுதான், இதனை இப்படியும் பார்க்கலாமே என்று தெரியாமல் இருந்ததே என்று எண்ணத் தோன்றியது. அது பெரிய உந்தல், பல விடயங்களை வாசிக்கத் தூண்டியது. அது ஒரு முக்கியமான அனுபவம்.
நான் 1988ல் சென்னைப் பல்கலைக் கழகத்திற்குத் தமிழ்ப் பேராசிரியராக, பேராசிரியர் சஞ்சீவியால் அழைக்கப்பட்டேன். ஆனால் நான் அங்கு சென்றபோது, சஞ்சீவி போய், பொற்கோ வந்திருந்தார். அங்கு நான் தமிழ் நாட்டில் அரச உருவாக்கம் பற்றிச் செய்ய எண்ணியிருந்தேன் அது பெரிய விடயம். ஆறு மாதத்தில் செய்யமுடியாது. அதன் பின்னர் சங்க 24

goloidsuggis'), Organisation of Political Authority in Anciant Tamil Nadu, A study of the Terms used for rulers in Sangam literature seduoT upg5Qugb6urIub அங்கு ஆய்வுகள் மேற்கொண்டேன். இறை, கோ, மன்னன், அரசு, வேந்தன், கிழான் இப்படியெல்லாம் பல சொற்கள் இருக்கின்றன. இதில் கிழானைத் தவிர மற்ற எல்லாம் மன்னனைக் குறிக்கும் சொற்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். மன்னன்தான் முதன் முதலில் பரந்த நிலப்பகுதியை ஆண்டவன் என நான் நினைக்கிறேன். பொருந்துபவன், இணைபவன்- Man who fits in - என்ற கருத்திலேதான் மன்னன் என்ற சொல்லைப் பார்க்க வேணடும்போல் இருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் நான் அங்கு ஆய்வு செய்தேன்.
அங்கு இருக்கிறபொழுது தமிழ்நாட்டு அறிஞர்கள் பலரையும் காண்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. சென்னையில் உள்ள எழுத்தாளர்கள் பலருடனும் ஊடாடுகிற விஷயங்கள் ஏற்பட்டன. Hinduபத்திரிகையைச் சேர்ந்த ராம் உடன் தொடர்பு வந்தது. இலங்கையில் பிரஜைகள் குழுவினைச் சேர்ந்தவன் நான் என்ற தகைமையும் இருந்தது. அத்தோடு பல்கலைக்கழகத்தில் நான் வேலை செய்த துறையைச் சாராத மாணவர்களும் வந்து கேள்வி கேட்பார்கள் அதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும. அங்குள்ள கல்லூரிகளுக்கு விரிவுரைகளுக்குக் கூப்பிடுவார்கள் அதற்கெல்லாம் போகவேண்டும். தி.ஞா.: சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றியபின் அமெரிக்காவிற்குச் சென்றீர்கள் அல்லவா? அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெற்ற அநுபவங்களைக் கூறுங்கள்.
தொடரும். என்னைப்போல் வெருகலாறு, புல்லுமலை எவளும் வெளிச்சவீடு வெபரரங்கு
O கரடியனாறு கூட ஏமாறவேண் CsCİÓ ! கற்கண்டே உனக்குத்தான்."
”கல்லடிப் பாலமென்ன கரவாகுவட்டை யென்ன எல்லாமும் உனக்குத்தான் என்பக்கம் வாகிளியே!
காமவெறி கொண்டதொரு கவிஞன் புலம்பியதை நானொரு மடப்பொடிச்சி நம்பிவீண் ஏமாந்தேன்.
“பாசிக்குடா"; மீன்கள் வயிற்றினிலே ஆறுமாசம்
பாடுகின்ற உப்பாறு காகித ஆலைகூட கண்ணே உனக்குத்தான். மாந்தீவு, குமுக்கனாறு மணற்பிட்டி, உன்னிச்சை தாந்தா மலையெல்லாம் தங்கமே உனக்குத்தான.
வளர்கிறது ஓர் குழந்தை! கயிற்றிலே தொங்குதற்கும் காலம்வர வில்லையம்மா!
ஆசைவார்த்தை கேட்டு நானும் அறிவிழந்து போனது போல் மோசம் போகப் பெண்கள்யாரும் மோகம் கொள்ள வேண்டாமே!

Page 14
இரா.நாகலிங்கம் (அன்புமணி)
நமது கவனத்தை ஈர்க்கும் இளைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்களில் "தமிழ்ச்செல்வி” ஒருவராகிறார்.
காலத்திற்கேற்ற வகையில், சமகால வாழ்வியல் பிரச்சினைகள் இவரது கதைகளின் கருப்பொருளாக அமைகின்றன. கதை சொல்லும் பாணி மிக இதமாக உள்ளது. சிறு சிறு காட்சிகளாகக் கதையை நகர்த்திச் செல்வது இவரது உத்தி கதை முடிவுகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதும் இவரது தனித்துவம். இவரது பல ஆக்கங்கள் போட்டிகளில் பரிசு பெற்றிருப்பது கவனத்திற்குரியது. ஒரு சில வருமாறு: 1. "திசைதிரும்பிய திலகன்” (மட்டு. மாவட்ட சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சிறுகதை(வீரகேசரியில் பிரசுரமானது).
2. "விடியலை நோக்கி” (தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறுகதை).
3. “வந்தது வசந்தம்” மேற்படி நிறுவனம் நடாத்திய மற்றொரு சிறுகதைப்போட்டியில் 2வது இடம் பெற்றது, வீரகேசரியில் பிரசுரமானது. 4. "பண்பாடு காப்போம்” (மண்முனைப் பிரதேச சாகித்திய விழா சிறுகதைப் போட்டியில் 2ம் இடம் பெற்ற சிறுகதை)
5. "பிறந்த மணி” (இதே மண்முனைப் பிரதேச மற்றொரு சாகித்தியவிழா சிறுகதைப் போட்டியில் முதல் இடம் பெற்றது. “சொந்த மண்” என்ற தலைப்பில் தினகரனில் பிரசுரமானது.
6. "கருகிய சோலை” “சுவைத்திரள் மாத சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சிறுகதை.
இவைதவிர தாயின் பாதச்சுவடுகள் வழியே, நிழல்களாகும் நிஜங்கள் முதலிய சிறுகதைகள் தினக்கதிர் பத்திரிகையிலும் "பீனிக்ஸ்’ என்ற சிறுகதை மண்முனைப் பிரதேச கலைவிழா சிறப்புமலரிலும் பிரசுரமாகின. இவர் எழுதிய கட்டுரைகள் சிலவும் பரிசு பெற்றுள்ளன.
கூட்டுறவும் மக்களும்’ (மட்டு. மாவட்ட கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் இடம் பெற்றது). இக்கட்டுரை கூட்டுறவு சஞ்சிகையில் பிரசுரமானது. கேடயம் ஒன்றைப் பரிசாகப் பெற்றுத்தந்தது.
26
 
 

இவர் எழுதிய கவிதைகள் சிலவும் அவ்வப்போது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. மட்.மாவட்ட கலாசார பேரவை கவிஞர் திமிலைத்துமிலனைக் கொண்டு நடாத்திய மூன்று மாதக் கவிதைப் பயிற்சியில் பங்குபற்றிக் கவிஞரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
நிறைய வாசிப்பவர். தான் வாசிப்பதை இரைமீட்டி எடைபோடுபவர். இதுவே இவரது எழுத்தாற்றலுக்கு உந்து சக்தி எனலாம். புதுமை நோக்குக் கொண்டவர். ஆனால் பெண்ணிலைவாதம் பேசுபவர் அல்ல. அமைதியும் அடக்கமும் நிறைந்தவர். ஆரையம்பதியை பிறப்பிடமாக கொண்ட இவர் மட்.புனித வின்சென்ற் தேசிய பாடசாலையில் கல்வி கற்றுத் தற்போது வெளிவாரிப்பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
பிரபல எழுத்தாளரும், நாடகாசிரியருமான, கலாபூஷணம் ‘ஆரையூர் இளவலின் இரண்டாவது புத்திரி தமிழ்செல்வி என்றாலும் தந்தையினுடைய துறை நாடகம், மகளுடைய துறை சிறுகதை என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். இவருடைய இளைய சகோதரி தாரகைச் செல்வியும் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ளவர். ஆனால் அவரது துறை கவிதை
(35 p.
"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்’ என்று சொல்வார்கள். எல்லாக் கட்டுத்தறிகளும் கவி பாடுவதில்லை என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். (இதை முன்பும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்). உண்மையைச் சொன்னால், இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆற்றலை வெளிக் கொணர்வதில் பெற்றோரோ, ஆசிரியர்களோ எவ்வித பங்களிப்பும் செய்வதில்லை. (கட்டாயமாகச் செய்யவேண்டும் என்பது வேறு விடயம்). ஆனால் இவர்கள் தாமாகவே ஏகலைவன் பாணியில் தமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள்
என்பதுதான் யதார்த்தம்.
27

Page 15
*
யது நடந்தது
ாரத்நஸ்பாபதி அய்யர்
錢 徽
ーーーーーー。ーーーーーーーーーーーーーーーーーー -
அமரர் பூபாலசிங்கம் தமது புத்தகசாலையை வியாபார
நிலையமாக மட்டுமன்றி ஓர் அறிவுக்கூடமாகவும் ஆக்கியவர். அவர்காலத்தில் அறிஞர்கள், இலக்கியக்காரர்கள் ஒன்றுகூடும் இடமாகவும் அவரது புத்தகசாலை விளங்கியது. வியாபாரமே நோக்கமாக அல்லாது வாசிப்பினை ஊக்குவிக்கவேண்டும் என்னும் நோக்கோடு யாழ்ப்பாணத்தில் தமது பூபாலசிங்கம் புத்தகசாலையை நடத்தியவர். அவரது நினைவுதினம் 21.07.2003 ஆகும். அப்பெரியாரது நினைவு தினத்தையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. - ஆசிரியர் -ل அரை டிக்கட்டிலிருந்து முழு டிக்கட்டுக்குப் போகும் வயது அப்போது எனக்கு. நல்ல நூல்களைப் படிக்கவேண்டும்; எவ்வாறு நல்ல நூல்களைத் தெரிந்து எடுத்துக்கொள்வது. அவை எவை? எங்கே அவைகளைப் பெற்றுக்கொள்ளலாம், என்று எண்ணத் தொடங்கிய காலம் அது. - எனது பெரிய அண்ணா இந்தியாவில் சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றவர். உலகப் புகழ்பெற்ற ராஜ் செளத்திரியிடம் சிற்பம் ஒவியம் பற்றித் தெரிந்து கொண்டவர். ராஜ் செளத்திரியின் புகழ்பெற்ற சிலையான "தொழிலாளர்கள், உருவாக்கி வடித்தெடுக்கும்போது, அருகில் நின்று அனுபவம் பெற்றவர் அவர். இலங்கைக்குத் திரும்பி வரும்பீோது, அங்கு தன்னால் வாங்கப்பட்ட அனைத்து நூல்களையும் கொண்டு வந்திருந்தார். சாகித்திய அக்கடமி வெளியீடுகள், தென் இந்திய புஸ்தக ரஸ்டியின் வெளியீடுகள், தமிழ்நாட்டின் நல்ல புஸ்தக வெளியீட்டாளர் அனைவரது அதிகமான புஸ்தகங் களையும் வாங்கி வந்திருந்தார். அண்ணாவின் ஏற்பாட்டில் சென்னையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த "சோவியத் நாடு என்ற சஞ்சிகையும் தபால் மூலம் மாதம் மாதம் வந்துகொண்டிருந்தது. சோவியத் நாடு 'ஆட்பேப்பரில் அழகாக அச்சிடப்பட்டிருந்தது. பக்கத்துக்குப் பக்கம் சோஷலிசம், கம்யூனிசம், பொதுவுடமை என்று எல்லாம் எழுதி இருந்தார்கள். அப்போது சோவியத் நாட்டின் தலைவர் தோழர் குருசேவ் அவர்களின் வழிகாட்டிலில் நாடு எவ்வாறு செல்கிறது என்பதை - வளம், வளர்ச்சி பற்றி எல்லாம் விரிவாக எழுதப் பட்டிருந்தது. எனக்கு சோஷலிஸம், கம்யூனிசம் இது எல்லாம் புரிந்தது போலும் புரியாமலும் நின்றது போலும் விளையாட்டுக் காட்டியது. அதனை எவ்வாறு புரிந்து கொள்ளலாம். புரிந்ததை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் அனேக நூல்கள் இருக்கிறதாம். ஆனால் எனக்கோ ஆங்கிலம் புரியாது; 28
 
 
 
 
 
 
 
 

தெரியாது என்ன செய்யலாம்?
"சோவியத் நாடு சஞ்சிகையில் அனேக படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. காடுகள், மலைகள், மண்வெளிகள், வயல்கள், புல்வெளிகள், சமவெளிகள், நீர்வீழ்ச்சிகள், நந்தவனங்கள், நதிகள், தொழிற்சாலைகள், கால்நடைப் பண்ணைகள், பள்ளிக்கூடங்கள், மகிழ்ச்சியில் மகிழும் குழந்தைகள், உற்சாகத்துடன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் மகிழ்ச்சியான மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய படங்கள். இதையெல்லாம் பார்க்கும்போதும், படிக்கும்போதும் நினைக்கும்போதும் ஒரே மகிழ்ச்சி, ஒரே சந்தோஷம். கம்யூனிசம் என்றால் என்ன? பொதுவுடமை என்றால் என்ன? என்று என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. பொதுவுடமை, கம்யூனிசம் என்றால் மகிழ்ச்சியாக மக்கள் அனைவரும் இருத்தல் என்று எனக்குத் தெரிந்தது. மகிழ்ச்சி! மகிழ்ச்சி! இதுதான் அது. இந்த மகிழ்ச்சியைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும். இது ஒரு தவிப்பாய் என்னுள் விறுவிறுத்துக் கொண்டிருந்தது. இந்தத் "தவிப்பை” என்னால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் பிறந்த ஊரான பருத்தித்துறையில் அப்போது பிரபலமான ஒரு புத்தகசாலை இருந்தது. "வடலங்கா புத்தகசாலை" என்பது அதன் பெயர். பாடசாலைக்கு வேண்டிய புத்தகங்களும், பேனை, பென்சில், பேப்பர் போன்றவைகளும் தமிழ்நாட்டிலிருந்து வந்த நாவல், கதைப்புத்தகங்களும், கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், அம்புலிமாமா, கலைக்கதிர், கலைமகள், கற்கண்டு போன்ற சஞ்சிகைகளும் கொழும்பிலிருந்து வீரகேசரி பத்திரிகையும் வந்து விற்பனையாகும். அதன் உரிமையாளர் திரு.சிவக்கொழுந்து மாஸ்டர் அவர்களும் கணிதப்புத்தகங்களையும், பூமிசாஸ்திரப் புத்தகங்களையும் எழுதி தனது ‘கலாபவனம்’ என்ற அச்சகத்தில் அச்சேற்றி வெளியிட்டவர். “யாழ்ப்பாணன்" என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வந்தவர்.
இந்த வடலங்கா புத்தகசாலையில் பொறுப்பாக இருந்தவர் திரு.குமாரசாமி என்பார். எனது புத்தக ஆர்வத்தை நாடியறிந்து கொண்டார். "குட்டி ஐயர் என்ன புத்தகத்தை எதிர்பார்க்கிறீர்?" என்று என்னிடம் ஒரு நாள் கேட்டார். “பொதுவுடமை, கம்யூனிசம் பற்றி ஏதேனும் புத்தகம் தமிழில் உண்டோ?” என்றேன். “கம்யூனிசம், பொதுவுடமை சம்பந்தமாக தமிழில் உள்ள புத்தகங்கள் சோவியத் நாட்டில் அச்சடிக்கப்பட்டவையும் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டவை யும் யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் இருக்கிறது. அந்தக்கடைக்குப் என்ன பெயர் தெரியுமோ? "பூபாலசிங்கம் புத்தகசாலை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் இருக்கிறது. அங்கே போனால் எல்லாம் வாங்கலாம்" என்று திரு.குமாரசாமி சொன்னார்.
எங்களின் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டு நின்றது ஒரு வெள்ளைவேட்டி. வாயில் சுருட்டுப்புகைய அன்றைய வீரகேசரி பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்.
"ஒய் ஐயரே, சாதி சமயம் பார்க்காத, அந்த எளிய சாதிகளின் கட்சிதான் காணும் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த எளியசாதிகளின் கட்சி பற்றி உமக்கேன் காணும். கொம்மினிசக் கட்சி பற்றி ஏதோ படிக்கப்போறாம். 29

Page 16
இந்தாரும் ஐயரே சும்மா கம்யூனிஸ்ட் எண்டு அலையாமல் கோயிலில மணியைக் கிலிக்கிக்கொண்டு இருங்காணும். ஏதோ கொஞ்சம் பள்ளிக் கூடத்திலை படிச்சுப் போட்டினம் இந்தப் பிராமணிகள்" இவ்வாறு அந்த வெள்ளை வேட்டி என்னைப் பார்த்துச் சொன்னது.
பக்கத்தில் "டெயிலி நியூஸ் படித்துக்கொண்டிருந்த ஒருவரும் "ஐயர் கம்யூனிசம் பற்றி படிச்சுத் தெரியப் போறாராம். அதற்காக புத்தகம் வாங்க யாழ்ப்பாணம் போக, பூபாலசிங்கம் புத்தகசாலைக்குப் போக, இஞ்சை வடலங்கா புத்தகசாலை மனேஜர் வழிகாட்டிவிடுகிறார். உலகம் எங்கே போகுது எண்டு பாருங்கோவன்” என்று சொன்னார்.
அப்போது மனத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொண்டேன். "கொம்யுனிச சிந்தனைகள்தான் எனக்கு வழிகாட்டும்; வழிகாட்டவேண்டும்.
ஆண்டவனே கொட்டிப்பிள்ளையாரே! எனக்கு யாழ்ப்பாணம் போகவும், பூபாலசிங்கம் புத்தகசாலையில் புத்தகம் வாங்கவும் அருள் புரியவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
இந்தச் சம்பவத்தின் பின் பல மாதங்கள் போய்விட்டன. சித்திரைமாதம் வந்தது. புத்தாண்டு பிறக்கும் நாளில் இந்துக்கள் தலையில் 'மருத்து நீர் தேய்த்து நீராடுவார்கள். இந்த மருத்துநீரை கோயில் குருக்கள் ஐயா வீட்டிலிருந்து அல்லது கோயிலிலிருந்துதான் ஊர்மக்கள் பெற்றுக் கொள்வார்கள். எங்களின் வீட்டில் 'மருத்து நீர் தயாரிக்கப்படும். தாழம்பூ, தாமரைப் பூ, அறுகு, துளசி, வில்வம், விஷ்ணுகிராந்தி, ஆகியவற்றின் இலைகளும், பூக்களும் எடுக்கப்படவேண்டும். மருந்துக்கடையில் கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், மஞ்சள், சுக்கு, திற்பலி, அத்துடன் கோமயம் கோசலம் பால் ஆகியவை சேகரிக்கப்படவேண்டும். மேற்படி திரவியங்களை குறிப்பிட்ட விகிதாசாரத்தில் எடுத்து இடிப்பனவற்றை இடித்தும் துவைப்பன வற்றைத் துவைத்தும் பெரிய அண்டாவில் இட்டு சுத்தமான நீர் சேர்த்து அத்துடன் கோசலம், கோமயம், பால் ஆசியவற்றையும் சேர்த்து பன்னிரண்டு மணித்தியாலங்கள் அவற்றை அவித்து வடித்து எடுக்கும்பொது ஒரு புனிதமான திவ்வியமான வாசனையுடன் கூடிய மருத்து நீர் கிடைக்கும். இந்த மருத்துநீரை வருடம் பிறந்த முதல் நாள் (வருடப்பிறப்பு) தலையில் தேய்த்து அதன் பின் தான் நீராடுவார்கள். இதுதான் இந்துக்களின் மரபு.
மருத்து நீர் தயாரிப்பு எங்கள் வீட்டில் வருடாவருடம் நடக்கும். ஊர் மக்கள் மருத்துநீர் எடுத்துச் செல்ல கொண்டுவரும் செம்புக்குள் ஐம்பது சதமோ, ஒரு ரூபாவோ, அல்லது ஏதோ ஏலக் கூடிய காசு சில்லறை நாணயங் களைப் போட்டுக் கொண்டுதான் வருவார்கள். நாங்கள் அதனை எடுத்துக் கொண்டு மருத்துநீர் கொடுப்போம். தரும்பணத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு மருத்துநீர் வழங்குவதில்லை. அவர்கள் கொண்டு வரும் செம்பு நிறைய கொடுத்து அனுப்புவோம்.
மருத்து நீருக்காக சுமார் ஐம்பது அல்லது அறுபது ரூபாய் கிடைக்கும். வருடப்பிறப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பின்பு அப்பாவிடமிருந்து "புத்தகம் வாங்க வேணும்" என்று கேட்டு ஒரு பத்து ரூபாய் பெற்றுக்கொண்டேன். சில்லறையாகவே எண்ணித் தந்தார். எங்களின் வீட்டுக்கு முன்னால் இருந்த 30

மலையாளத்தான் தேநீர்க்கடையில் சில்லறைகளைக் கொடுத்து பத்துருபா தாளாக்கி வைத்துக் கொண்டேன். அதன்பிறகு வந்த சனிக்கிழமையன்று காலையில் அம்மாவிடம் புத்தகம் வாங்க யாழ்ப்பாணம் போகப் போவதைச் சொன்னபோது, தனது சேலைத் தலைப்பு முடிச்சில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாயை எனக்குத் தந்தா. s
காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்ட பஸ்ஸில் நான் ஏறினேன். யாழ்ப்பாணத்துக்கு ஒரு அரை ரிக்கட் என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "குட்டி ஐயா, இப்பொழுது நீங்கள் அரை ரிக்கட் ஆள் இல்லை. நீங்கள் முழு ரிக்கட்தான் எடுக்கவேணும்” என்று கூறிக்கொண்டு ரிக்கட்டைத் தந்தார் நடத்துனர். எவ்வளவு என்றேன். எழுபது சதம் என்றார் அவர். நான் அம்மா தந்த இரண்டு ரூபாயைக் கொடுத்து மிச்சம் வாங்கிக் கொண்டேன். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இறங்கினேன். முன்பாக இருந்த கடைகளை நோட்டம் விட்டேன். மூன்றாவது கடையாக பேப்பர்கள் தொங்க விடப்பட்ட கடை ஒன்று இருந்தது. அந்தக் கடையை நோக்கி நடந்தேன். கடைக்கு முன்னால் சென்று நின்றேன். முகப்பைப் பார்த்ததும் அது ஒரு புத்தகக் கடைபோல் இல்லை. ஒரு கிராமப்புற வாசிகசாலை போலிருந்தது. வெளியில் இருந்த வாங்கினில் இருவர். ஒருவர் புத்தகம் ஒன்றையும் மற்றவர் பத்திரிகை ஒன்றையும் படித்துக் கொண்டிருந்தனர். நின்றுகொண்டு ஒருவர் ஒரு குட்டையான பத்திரிகை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார். என்ன பத்திரிகையோ வீரகேசரி, தினகரன் மாதிரி பெரிய பத்திரிகைகளைத்தான் நான் பாத்திருந்தேன். இது என்னவாய் இருக்கும் எட்டிப்பார்த்தேன். “தேசாபிமானி என்று சிவப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இரண்டுபேர் புத்தகங்களை உள்ளே நின்று பார்த்துக்கொண்டு நின்றனர். ஒருவர் ஒன்றும் செய்யாமல் இதனை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். கறுத்த பிறேம் போட்ட கண்ணாடிக்காரர் அவர். நோட்டம் விட்டவர் என்னை வாசலில் நிற்பதைக் கண்டுவிட்டார். என்னை நாடி அவர் இரண்டு அடி முன் வைத்து வந்தார். நானும் அவரைநோக்கிச் சென்றேன்.
"இது பூபாலசிங்கம் புத்தகசாலையா?” என்று கேட்டேன். என்னை அந்தக் கண்ணாடிக்காரர் ஏற இறங்கப் பார்த்தார். கண்ணால் அளந்து எடுத்துக் கொண்டார்.
"ஓம் இதுதான் அந்தப் புத்தகசாலை” என்றார் கண்ணாடியார். "பருத்தித்துறை வடலங்கா புத்தகசாலையில் இருக்கிற திரு. குமாரசாமி என்பவர், பூபாலசிங்கம் கடைக்குப் போனால் இந்தியாவில் இருந்து வந்திருக்கிற கொம்யூனிட் புத்தகங்களைப் பார்க்கலாம், விரும்பியதை வாங்கலாம் எண்டு சொன்னார். அதுதான் வந்தனான். இதுதான் பூபாலசிங்கம் புத்தகக் கடையோ?” என்று கேட்டேன்.
"ஓம் தம்பி இதுதான் பூபாலசிங்கம் புத்தகக்கடை. எனக்குத் தம்பியைப்பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. வடிவாய் எல்லாத்தையும் பாருங்கோ. வேண்டிய புத்தகத்தை எடுங்கோ. எட்டாத புத்தகத்தை எடுத்துப்பார்க்க வேணுமெண்டால் சொல்லுங்கோ எடுத்துத்தாறன்"
“தம்பியின்ரை பெயர் என்ன சொல்லுங்கோ” என்று என்னுடன் அன்
31

Page 17
போடு கதையைத் தொடுத்தார்.
என்னுடைய பெயரை முழுதாக சொன்னால் ஐயர் பொடியன் என்று தெரிந்துவிடும். பருத்தித்துறையில் "வெள்ளைவேட்டி ஒன்று முன்பு கூறியது எனக்கு ஞாபகம். ஆகவே முழுப்பெயரா? அரைப்பெயரா? இறுதியில் ஒரு முடிவு. "இரத்தின சபாபதி ஐயர், பருத்தித்துறை பாஸ்கரக் குருக்களின் மூன்றாவது மகன்” என்று சொன்னேன்.
கண்ணாடிக்காரருக்கு மிகவும் மகிழ்ச்சி போல் தெரிந்தது. அகத்தின் நிலை முகத்தில் காட்டியது. "வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வாருங்கோ சின்னையா” என்றார்.
கடை அவ்வளவு பெரிதல்ல. பதினைந்து அடி அளவுதான் கடை இருக்கும். முன்புறம் தவிர்ந்த மற்ற மூன்று பக்கங்களும் அலுமாரிகளும் ராக்கைகளும் இருந்தன. ஒரு பகுதியில் ஆங்கிலப்புத்தகங்கள் இருந்தன. பெரிய பெரிய புத்தகங்கள். தாடிக்காரர்களின் படங்கள்தான் அந்த புத்தகங்களின் அட்டைப்படங்களாக இருந்தன. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு ஆங்கிலப் புத்தகம் இருக்கிறதா? ஒரு அலுமாரி முட்ட ஆங்கிலப் புத்தகங்கள். அடுத்த அலுமாரியைப் பார்க்கிறேன், தமிழ்ப்புத்தகங்கள். ஆங்கிலப் புத்தகங்களில் பார்த்த அந்த தாடிக்காரர்களின் படங்கள்தான் அவற்றிலும் இருந்தது. லெனின், கார்ள்மாக்ஸ், ஏங்கல்ஸ் என்று எல்லாம் புத்தகங்களின் பெயர் இருந்தது. புத்தகங்களின் பெயர்களும் புதுமையாக இருந்தன. இயற்கை யின் இயக்கவியல், அரசு, கூலி, லாபம், தேர்ந்து எடுக்கப்பட்ட கட்டுரைகள். இப்படிச் சில இருந்தன. போரும் சமாதானமும், வீரம் விளைந்தது, டான் நதி அமைதியாகப் பாய்கிறது, அம்மா, இப்படியான புத்தகங்களும் இருந்தன. ஒவ்வொரு புத்தகங்களின் பெயரையும் படித்துக்கொண்டு வந்தேன். பொது உடமை என்றால் என்ன? என்று ஒரு புத்தகம் இருந்தது. மெல்லியதான புத்தகம் தான். நான் என்னுள் கேட்கும் கேள்வியாக இருந்தது புத்தகத்தின் பெயர். புத்தகத்தைக் கையில் எடுத்துப்பார்த்தேன். எழுதியவர் 'ராகுல சங்கிருத்தியாயன்' என்று இருந்தது. என்கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விடை இருக்கும். எனக்கு இந்தப் புத்தகம் வேண்டும்; எடுத்துக்கொண்ட்ேன். திரும்பவும் அலுமாரியுள் நோட்டம் விட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை என்று இருந்தது. அதையும் அடுத்துக் கொண்டு முன்னுக்கு வந்தேன். புத்தகங்களைக் கண்ணாடிக்காரர் வாங்கிப் பார்த்தார்.
"நீங்கள் உலகத்தில் மிகச்சிறந்த புத்தகங்கள் இரண்டை எடுத்துக் கொண்டீர்கள். ராகுல சங்கிருத்தியாயன் மிகப்பெரிய தத்துவஞானி, அறிஞர், சிறந்த கட்டுரையாளர், எழுத்தாளர். அடுத்த புத்தகம் கார்ள்மாக்ஸம், ஏங்கல்சும் சேர்ந்து எழுதி முதன் முதல் வெளியிட்ட புத்தகம். உங்கடை இந்த சின்ன வயதுக்கு புரியுமோ? இல்லையோ? படியுங்கள்” என்று சொன்னார் கண்ணாடிக்காரர்.
ஒரு பேப்பர் உறையில் போட்டு புத்தகங்கள் இரண்டையும் என்னிடம் தந்தார்.
"இரண்டு புத்தகங்களுக்கும் எவ்வளவு" என்றேன் நான். “காசு வேண்டாம். நீங்கள் பருத்தித்துறையில் இருந்து வந்திருக்கிறீர்கள்.
v 32

நீங்கள் எடுத்த புத்தகத்தைப் பார்த்ததும் உங்களுடைய ஆர்வம், அறிவு இரண்டையும் தெரிந்து கொண்டேன். உங்கடை வயதிலை இப்படியான சிறப்பு உள்ள புத்தகத்தை எந்தப் பொடியனும் எடுக்கமாட்டான். இப்ப எனக்கு சரியான சந்தோஷம். 2 புத்தகத்தை விக்கிறபோது வருகிற லாபத்திலை எனக்குச் சந்தோஷம் வாறத்தில்லை. உங்களைப் போலை அறிவான பிள்ளைகள் புத்தகத்தை வாங்கிறபோதும், படித்து பெரிய ஆட்களா மேதைகளாக வரும்பொழுதுதான் எனக்குச் சந்தோசம். காசு வேண்டாம். எனது அன்பளிப்பாக இருக்கட்டும் இந்த இரண்டு புத்தகங்களும்” என்று அவர் சொன்னார்.
“இல்லை அப்படிச் சொல்லக்கூடாது. நான் காசு கொண்டு வந்தனான் எவ்வளவு என்று சொல்லுங்கோ"
"நான் காசு எடுக்கமாட்டேன். அது உங்களுக்கு பூபாலசிங்கம் புத்தகக் கடையின் அன்பளிப்பு"
இந்த வார்த்தைகளை கண்ணாடியார் நிதானமாக கண்டிப்பாக சொன்னார். மறுவார்த்தை பேச முடியவில்லை என்னால்.
"நீங்கள் எடுத்தீர்களே ‘பொது உடமை என்றால் என்ன? என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராகுல சங்கிருத்தியாயன் எழுதிய வேறு ஒரு புத்தகம் உள்ளது. அதன் பெயர் “வால்காவிலிருந்து கங்கைவரை அந்தப் புத்தகத்தையும் நீங்கள் படியுங்கோ. கதை மாதிரியும் சரித்திரக் கதை மாதிரியும் இருக்கும். பழைய நாகரீகம், பண்பாடு இவையெல்லாம் பின்னிப்பிணைந்து எழுதப்பட்ட புதுமையான ஒரு புத்தகம். நான் எடுத்துத்தாறன்" என்று சொல்லிக் கொண்டு அடுத்த பக்கத்திலிருந்த அலுமாரியிலிருந்து ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்தார். "இந்தாங்கோ இதுதான் அந்தப் புத்தகம்” என்றார்.
புத்தகத்தைக் கையில் வாங்கிக் கொண்டேன். "இதற்கு எவ்வளவு பணம்? இதற்கு எண்டாலும் காசு கட்டாயம் வாங்கவேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பத்து ரூபா நோட்டை நீட்டினேன். பணம் வாங்குவதா? இல்லையா? என்ற நிலைபோலும், சிலகணங்கள் சென்றபின் அவர் காசை வாங்கி லாச்சியில் போட்டார். மிகுதியாக ஏழு ரூபாய் என்னிடம் தந்தார்.
"மிச்சம் பெரிய உபகாரம். நான் போய் வரப்போறன். நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? சொல்லுங்கோவன். அடுத்த முறை வந்தால் உங்களைப் பார்க்க வசதியாக இருக்கும்” என்றேன் நான். ܚ
“எப்பவும் நீங்கள் வரலாம். உங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்திருப்பேன், என்பெயர் பூபாலசிங்கம்".
"அப்ப நீங்கள்தான் கடைக்காரர் போல் இருக்கிறது". “ஓம் நான்தான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொழில் அமைகிறது. எனக்கு புத்தகம் விக்கிற தொழில் அமைந்துவிட்டது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற மகிழ்ச்சியிலை தொழிலைச் செய்யிறன். இது தெய்வம் விட்டவழி, அந்த வழியிலை போறன்” என்றார் அவர்.
எனக்கு ஒரே ஆச்சரியம்; புதுமை. முன்பின் தெரியாத ஒருவர், ராகுல சங்கிருத்தியாயன் புத்தகத்தை எடுத்தவுடன் காசு கூட வாங்கவில்லை. அன்பளிப்பாக தந்துவிட்டார். அது யாரின் பெருமை ராகுல சங்கிருத்தியாயனின் 33

Page 18
பெருமையா? பூபாலசிங்கத்தின் பெருந்தன்மையா? மேலும் ராகுல சங்கிருத்தியனின் "வால்காவிலிருந்து கங்கைவரையையும் எடுத்துத் தந்தார். நான்தானே கட்டாயப்படுத்தி அதற்குப் பணம் கொடுத்தேன். ராகுல சங்கிருத்தியாயன் என்ற பெயரே இவ்விதம் செய்யும் என்றால், அவரின் பேச்சு, எழுத்து, செயல் ஆகியவை என்ன என்ன செய்திருக்கும். புத்தகத்தைப் படித்தால் தெரியும்.
"அப்ப நான் போட்டு வாறன். அடுத்த முறை வாறன்” என்று சொல்லிக்கொண்டு கடையை விட்டுப் புறப்படும்போது கண்ணாடிக்காரர் "அறிவைத் தேடுகிற வயது. புத்தகங்கள்தான் அறிவை வளர்க்க உதவும். காசு இருந்ததோ இல்லையோ கட்டாயம் அடிக்கடி கடைக்கு வாங்கோ. வேண்டியதை எடுத்துப் படியுங்கோ, போய் வாருங்கோ" என்று என்னை வழியனுப்பி வைத்தார்.
நான் பஸ் நிலையத்தை நோக்கி நடக்கிறேன். சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்க்கிறேன். கண்ணாடிக்காரர், அவர்தான் பூபாலசிங்கத்தார் என்னைப் பார்த்துக்கொண்டு கடை வாசலில் நிற்கிறார். நான் கையை உயர்த்தி அசைத்து போய் வாறன் என்று சைகை காட்டினேன். அவரும் கை அசைத்து விடைதந்தார்.
நான் பருத்தித்துறை பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். கண்ணாடி சன்னல் வழியாகக் கடையைப் பார்க்கிறேன். பூபாலசிங்கத்தாரின் கடை தெரிகிறது. "ஏன் ஒரு பெயர் பலகைகூட அவர் வைக்கவில்லை?” என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். எனக்கு என் மனத்திலிருந்து "ஊர் அறிந்த பார்ப்பனனுக்கு பூணுால் எதற்கு" என்று ஒரு விடை கிடைத்தது.
காதல் மதியின் கவிதைகளில்
எனக்குப் பிடித்த வரிகள்
ਐਬੰo 6r60rée6 4 நீ கூறிய போதா இத்தினத்துறு வெளிவந்த எப்போது? உன் கவிதையின்
கருத்துச் செருக்கிலா அல்லது
நீ தேசிய கீதம் பாடிய போதா
அகநானூற்றுப் பாடலுக்குப்
போட்டியாக எழுதிய பொருளில்
பொருத்தமான பொருள்
நீ எழுதியதாக இருந்ததாலா
கடைசியான கவியரங்க கைகலப்பொன்றில், எண்கண்ணின் நீர்த்துளிகண்டு O கருத்துப் பிழைசெய்த உன் கவிதையிலா எந்தப் பொழுதில் நீ எனக்குள் வந்தாய்
காதல் சிறைக்குள் என்னைக் கைது செய்தாய்.
34
 

ஹலீமா
ஹலீமா இஸ்லாமிய வரலாற் றில் செவிலித்தாய். இவளும் ஹலீமா. இருபத்தெட்டுக்குள் விதவையாகி னாள். ஐந்து சேய்களின் எதிர்காலம் குறித்த சுமையுடன் வாழ்வை எதிரா டிய கொள்கை வகுத்தாள்.
"நெஞ்சு வலிக்.” கண்ணி மைக்கும் நொடிக்குள் பூரணமாகி விடாத வார்த்தையாக கணவன் மரணித்தபோது செய்வதறியாது தனிமரமாக நின்றாள்.
本 水 本 来 水 冰 * உலகம் ஒடுங்கியிருந்ததான துன்பியல் என்னுள் வியாபித்தது. குடிசைக்குள் பாசம் வற்றி உணர் வின்றியிருந்தது. பத்துமாதம் சிறை வைத்து உயிர் ஊட்டி தொப்புள்கொடி பிரித்தவள், சுவாசமற்றிருந்தாள். அறு பது ஆண்டுகள் வாழ்வில் வறுமைக் கெதிராகப் போராடியவள் சுவாசம் பிரிந்து, கபன் புடவை அணிவிக்கப் பட்டு நேர்க்கோடாகக் கிடத்தப்பட்டிருந் தாள். அவளின் திறந்து வைக்கப்பட்ட முகத்தைப் பெண்கள் கூட்டம் கூட்ட மாகப் பார்த்துவிட்டு நகர. வெளியில் தொப்பி, லேஞ்ஜி தலையில் அணிந்த ஏராளமான ஆண்கள் உதட்டசைவு களைப் பரிமாறிக்கொண்டிருந்தனர்.
மையத்தை ஆறடி ஐந்தங் குல கப்று குழியில் இறக்கி வைத்து, மண் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பப் பட்டது. தலைமாட்டிலும், கால்மாட்டி
3S
லும் மீஸான் பலகை நிறுத்தி வைத்து பூஞ்செடி நாற்றி நீருற்றினர். அதிக மதிகம் பாவம் செய்திருந்தால் நரக வாசியாகக் கருதப்பட்டு உலகம் முடியும் வரை மண்சுவர்கள் உடல் நெருக்குமாம். எவரையும் அநியாய மாக வஞ்சித்திருக்க மாட்டாள். என்றா லும் இறைவனிடம் பிரார்த்தனை செய் திற்று கல்பு. முன்கர், நகீர் வந்திருப் பார்களா..? கேள்விகளை இப்போது கேட்டுகொண்டிருப்பார்களா..? என் இருப்பு நிலைகுலைந்து தவித்தது. படித்திராதவள். குர்ஆன் ஐ"சுக் களைப் புரட்டி ஒதியிராதவள் எப்படிப் பதில் சொல்வாள். சின்ன விடய மென்றாலும் சுற்றத்தாரிடம் வன்மத் துடன் சண்டையிடுவாள். காட்டுக் கத்தல் கதறி எதிராளியின் வீரத்தை வாய் வார்த் தையில் துவம் சம் பண்ணிடுவாள். சூரியன் ஒளிக்கற்றை
உக்குவளையுர் அம்ரிதா

Page 19
களை மறைக்கும் பொழுதுகளில் குரோதம் மறந்து குழந்தையாவாள். பிஞ்சு தளிர்களே தனது விழுதுகளாய். மண்ணில் வேர் பாய்ச் சிட துயர வாழ்க்கையில் உழன்றவள். எப்படி உணர்வுகள் மரத்து கட்டை யாகிப் போனாள். சின்னக் குடிலையும் பிள்ளைகளையும் விட்டும் பிரிந்திரா தவள். மண்ணுக்குள் தனித்திருப் பாளா..? இல்லை வீட்டைச் சுற்றியே எண்ணங்கள் சிறைப்பட்டிருக்குமா..? கூடியிருந்தோர் தேற்றிக் கொண்டிருந்தார்கள். எனக்குள் வெறுமை நிழல் விரிந்தது. மனம் அவளைச் சுற்றியே வலையமைத்து உறைந்து போயிற்று. அவள் பாசத் துக்கும் அன்புக்கும் குழந்தையாகி ஏங்கித் தவித்தது என்னுள்ளம். அவள் வீற்றிருந்த மனப்பரப்பெங்கும் சூனிய மாக்கப்பட்ட நினைவுதனில் சூழன்று கொண்டிருந்தது. நூற்றி எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றில். குருதி தோய்ந்த மலைநாட்டுச் சந்ததிகளின் வழித்தோன்றலில் ஒருத்தியே ஹலீமா. தென்னிந்தியாவிலிருந்து, வஞ்சித்து வரவழைக்கப்பட்ட ஏழைத் தமிழ் தொழிலாளிகளுடன் இஸ்லாமிய பாமர தொழிலாளர் குடும்பங்களும் வந்திறங்கினர். இதுவே அவளின் தொன்மை வாழ்வியல் படிமம், குறியீடு எனவாகிறது.
அரவமாகி வளைந்து நெகிழ் கின்ற பாதையும், பனிசூழ்ந்து மலை
கள் கவிந்திருப்பதுமான வளைவு
களில், குளிரில் ஒடுங்கி வெட வெடத்து, பூக்கொத்துகளை விற்பனை செய்து பசிவிரட்ட காத்திருக்கும் ஏழைச் சிறுவர், சிறுமியர்களுள் அவளும் கால்கடுக்க தவம் செய்திருக்கின்றாள். இவர்களைக் கவனிப்பாரற்று விரைந் தோடுகின்ற வாகனங்களையும், அத
னுள்ளே சந்தோஷித்து குதூகலிக்கும்
உருவங்களையும். ஏக்கத்துடன் பார்த்து, கண்ணிர் விட்டிருக்கிறாள். இருந்தும், மனம் தளர்ந்திடாது
குறுக்குப் பாதையிலேறி மலர்களுடன் விரைந்தோடி, மூச்சிரைத்து அடுத்த வளைவில் விற்பனை பூக்களுடன் பிரயாணிகளை நோக்கி விழி விரியும். சிலர் பரிதாபம் கொண்டு, மனிதம் துயரம் படர கார்க் கண்ணாடியை கீழிறக்கி மலர்க் கொத்தை வாங்கு வார்கள்.அவள் இதழோரங்களில் பூக்கும் இனம் புரியாத மகிழ்ச்சியைக் கண்டு ஆத்ம திருப்திப்படுவார்கள் சில பிரயாணிகள்.
சில்லென்று உடலைப் பதப் படுத்தும் குளிரைவிரட்டும் பிரயத்தனத் துடன் சட்டை மேல் சட்டை அணிந்து, தேயிலை மலைகளை நோக்கி அணி வகுப்பர் ரம்பொடை வாசிகள். அவ் வணிவகுப்பில் அவளும் தாயும் சகோதரிகளும் கொழுந்துக் கூடை களுடன் விரைவார்கள்.
அன்றாடங் காயப்சி சியான குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தாள். கடைக் குட்டியான அவள் மீதான வாப்பாவின் கரிசனை அரியணை தேவதையாக்கியது. தேயிலை மலை களுக்குள் சுதந்திரக் காற்றாய் சுழன் றோடித் திரிந்தாள். அருவி சறுக்கி விழுந்து எழுந்தோடுகின்ற பச்சைக் கம்பளங்களுக்கிடையில் புள்ளி மானாகி ஒடித்திருந்தாள். மூத்தவர்கள் கொழுந்துக் கூடைக்குள் வாழ்வினை சுமந்தவேளை. திரைச் சீலை அகற்றி காரிருளுக்குள் ஊடுருவி விண்மீன் களைக் குவித்து, நிலவைக் கோர்த்துக்
கவிதை பழகினாள் . இதுவே திருமணத்தின் முன்பான அவளின் வாழ்க்கை.
se si se se se a:

விதவை நிலா முகம் உப்பி சோகம் வடிந்தது. பனியாகி அவள் கண்ணிர் துளிகள் புவியில் படர்ந்து கொண்டிருந்தன. விழுதுகள் சுமக் கின்ற ஆலமரமாகி பிள்ளைகளின் எதிர்காலத்தை வெறித்தவளாக சிந்தனை தொலைத்து சோர்ந்து உடலைத் தரைமீது பரத்தியிருந்தாள். ஆதரவின்றி துயரம் தோய்ந் திருந்த ஹலிமாவை விட்டு, உறவுகள் துார விலகிக் கொண்டிருந்தனர். கணவன் உழைப்பில் வீட்டை அலங் கரித்த ஆடம்பரப் பொருட்களும் தங்க ஆபரணங்களும் சில மாதங்களுக்கு குடும் பத்தின் அத்தியாவசியத் தேவைகளை உந்தித்தள்ள உதவி Ա5l.
இதற் கிடையில் . காற் றெங்கும் குடும்பத்தின் சிலர். விஷ விதைகளை பரப்பினர். 'கணவனுக்கு நஞ்சூட்டியவள் இவள் உறவுகள் பழி சுமத்தி, அவளின் குடும்பத்துக்கு உதவுவதை விட்டும் விலகிக்கொள் வதற்கு, அவர்களுக்கு இவ்வதந்தி வழி சமைத்தது. மெல்ல அவல் கிடைத்த சந்தோஷம் ஊராரின் நாவுக் குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அவளின் துயரங்களைக் குரூரமாய் சிலுவையில் கொழுவி திருப்தி கண்டன, சில கறைபடிந்த இதயங்கள். மூன்று மாதமாகியிருந்த தொட்டில் குழந்தையை நோக்கிய வாறு, ‘வாப்பாவுக்கு இஸ்ராயிலாக
வந்து உயிர் பறித்தவன் என உவமித்
துக்காட்டினர். கீழ்த்தரமாகியிருந்த தமது எண்ணங்களை அவளுக் கெதிராகவும், அவளின் பிள்ளைகள் மீதும் பிரயோகித்தனர். மெளனித்த உணர்வுகளால் பீறிட்டழ மாத்திரமே அவளால் முடிந்தது.
"ஐநீது புள் ளகளுடன்
37
மலி லா டுறதவிட, சினி னவனை எங்களுக்குத் தந்துவிடு” பிள்ளைப் பாக்கியமற்றவர்களும், பணத்தினை செறித்து வைத்திருந்தவர்களும் வறுமைக்கு விலை பேசினர். அவளி டம். பருந்தின் நகர்வுகளில் கிலி கொண்டு, துணிகரமாகக் குஞ்சுகளை அரவணைக்கும் தாய்க் கோழியாகிப் பிள்ளைகளை இறுக்கியணைத்து. உச்சிமோந்து., “என் ஒடம்புல உசுரு ஒட்டியிருக்கும் மட்டும், என் புள்ளகள யாருக்கும் தரமாட்டன்" அழுகையுடன் ஆத்திரமாய் கத்தி விரட்டிடுவாள்.
கூலி வேலைகளைத் தனக்கு வாடிக்கையாக்கி, பல வீடுகளை நோக்கி அதிகாலை சுபஹத் பாங்குக் குச் சத்தத்துடன் புறப்படுவாள். “ஹலீமா அஞ்சி கொத்து பச்சரிசி ஊறப்போட்டிருக்கன்” அதிகமதிகமாக கொச்சிக்காய் அரைக்க கை அனர்த் தும். தேங்காய் துருவிக் கொடுப்பது, துணிமணி சட்டிபானைகளைக் கழுவி அடுக்கி வைப்பதுடன் வீட்டையும் சுத்தம் செய்து கொடுப்பதென அன்றாடம் தொடர்ந்தன வீடுகள் தோறும் அவள் பணி.
உலக்கையை இடதுகை மாற்றி வலதுகை தாங்கி இடிக்க இடிக்க அட்ஷய பாத்திரமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் அரிசி. கூலி மட்டும் அஞ்சிக் கொத்துக் கானதாக இருக்கும். ஏழ்மையை நினைத்து இசைவாக ஏற்றுக்கொள் வாள்."கைபிசைந்த சோறு கூலியோடு போனஸாக அவளின் பிள்ளைகளுக் கும் கிடைத்தன.
மரங்களடர்ந்த தோப்பினுள் சூரியன் கூட உட்புகச் சிரமப்படும் சூழலில் அவளின் மாளிகை. இரண்டு புறம் மண் சுவர்களுடன் நடுவில் மாத்திரம் பொலித்தீன் மறைவு காட்டி

Page 20
நிற்கும். மழை பெய்யும் காலங்களில் விட்டிற்குள் நீர்தேங்கிக் குளமாகக் காட்சியளிக்கும். சின்னஞ்சிறுசுகள் பேப்பரில் கப்பல் செய்து நீரில் மிதக்க விட்டுச் சந்தோஷித்துக் கொண்டிருப் பார்கள்.
சல்லடைப் பொட்டுகளாய் இருக்கும் கூரை. நிலா வெளிச்சத்தை பரப்பி இரவைப் பகலாக்கிடும். திரி மண்ணென்ணெய் உறிஞ்ச நாதியற்று, குப்பிலாம்பு அடிக்கடி நித்திரைக் குள்ளாகும். ஒலை வேயப்பட்ட முகட் டில் சாரைப்பாம்பும் எலியும் ஓடிப் பிடித்து விளையாடுவதும் பிள்ளை களின் கூக்குரலும் அழுகை சத்தமும் தினமும் அச்சம் மோகித்த வாழ்வு தனைப் பறைசாற்றிக் கொண்டே யிருக்கும்.
ஒரு பொழுது உணவுத் தேவை கணங்களாகி மயானமாகக் கடத்தும். ஹலீமாவின் குடும்பத்தை அடிக்கடி பசியில் பாதையில் மயக்க முறும் பிள்ளைகளை நினைத்தும் தரித் திரம் சுமந்த வாழ்வைப் புகைந்தும் குமுறுவாள். பலாக்கா, பொலசிக்கா, வாழைத்தண்டு, வயலோர கீரை வகைகள் பல வேளைகளில் அவள் குடும்பத்தைப் பசியின் பிணியிலிருந்து பாதுகாக்கும். வயிறு நிறைய உண்டு களைத்துறங்கும் குருத்துக்களின் புன்னகையில் கவலை மறந்து நிம்மதி யாக இரவில் உறக்கம் கொள்வாள். வருடங்கள் தோறும் உவப்பு டன் மிளிரும் இரண்டு பெருநாள் தினங்கள். புத்தாடை அணிந்து பள்ளி செல்லும் கனவுடன் அவள் வீட்டு சிறுசுகள் கனவுகளில் ஸ்பரிக்கும். அன்றாட உணவுத் தேவைகளே வடக்கு கிழக்கு யுத்தமாக நீண்டிருக்க. புதிய ஆடை ஆசைகள் தொலை தூர நட்சத்திரமாகத் தேய்ந்து
38
கொண்டிருக்கும். செல்வம் படைத் தோரும் உறவினரும் பிள்ளைகளின் கனவை நனவாக்கிட மாட்டார்களா வென்று மனசு தவியாய்த் தவித்து கொண்டிருக்கும்.
பொய்களையும் எதிர்பார்ப்பு களையும் கனவுகளையும் மிதமாக ஊட்டி அவளால் பிள்ளைகளைத் தேற்றிடவே பல வருடங்கள் முடிந்திருக்கின்றது.
ஊருக்குள் வாண வெடிகளின் ஓசை லயம் புதிய இசையாகப் பரிணமித்தது. பலகாரங்களின் மணம் காற்றில் ஊடுருவி நாவில் உமிழ் நீரைச் சுரக்க வைக்கும். பெரியோர் களின் கைகளைப் பிடித்துச் சிறுசுகள் வண்ண வண்ண ஆடைகளுடன் பள்ளிவாசலை நோக்கி சந்தோஷ மாக விரைவார்கள். ஹலிமாவின் குழந்தைகள் கந்தலாகிப்போன உடையுடன் விழிநீர் பீறிட்டெழ ஒற்றை ஜன்னலினுடே விழி தழம்பிய பார்வைகளால் சூழலை உஷ்ண மாக்கிக் கொண்டிருப்பர்.
பள்ளி வாசலிருந்து பெரு நாள் குத்பா இமாமின் சாந்தமான குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. "இன்றைய ஈகைத் திருநாளில் பள்ளி அருகே கந்தல் ஆடையுடன் விழி நனைந்து ஏழைச் சிறுவன் நிற்கிறான். காருண்ய நபி அவர்கள் அன்புடன் அரவணைத்து சோகம் விசாரிக் கிறார்கள். வாரியணைத்துச் சென்று உடல் சுத்தம் செய்து புத்தாடை அணிவிக்கிறார்கள். தம்மோடு பள்ளிக் கும் அழைத்துச் செல்கிறார்கள்” எல்லோர் மனங்களிலும் பக்தியின் பரவுசம் கண்களில் நீர் கட்டுகிறது. அனாதரவற்றிருக்கும் ஹலிமாவின் குடும்பத்தைப் புறக்கணித்து நபி அவர்கள் காட்டிச் சென்ற சுன்னத்

தான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுபவர்களாகத் தம்மை இனங் காட்டிக் கொண்டவர்கள் அனேகர்.
ஊருக்குள் புரியாணி சாப் பாட்டின் வாசனை காற்றில் நிரம்பிப் பரவுகிறது. ஹலிமா குறுணலி அரிசியை மடக்கில் இட்டு கழுவி உலை வைக்கிறாள். காயப்ந்த கொச்சிக்காய் நான்கைந்தை உப்புக் கட்டியுடன் சேர்த்து, அம்மியில் கிடத்தி அரைத்து தக்காளிக் கூட்டுடன் சொதி யாக்கினாள். பிள்ளைகளின் ஒட்டிய வயிற்றுக்குள் பிசைந்த கவளங்கள் பசி விரட்டுகிறது, பெருநாள் தினத்தில்.
மூத்தவள் வயிற்றுவலியால் மூலையில் சமைகிறாள். மாறாப்பு துணி தேடி களைத்துபோகிறாள். சல்லிக் காசின்றி தேடி அலைந்து. அவளின் கந்தல் புடவையே செல்ல மகளின் துப்பட்டாவாகி மானம் காத்து நிற்கிறது ஹலிமாவின் குடிசையில்.
யுகங்கள் தசாப்தங்களாகி உருண்டோடுகிறது. வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் தொழில்வாய்ப்புகளும், வெளிநாட்டுப் பயணங்களும் விஸ் வருப தரிசனமாகிறார்கள் செல்வச் செழிப்பில், பழிசொன்ன குடும்பத்திற்கு இலக்கணமாகிறாள். ஊரார் ஆச்சரிய விழிகளில் "மாப்பிள்ளையை இழந்தும் வறுமையில் தவழ்ந்தாலும் புள்ளகள நல்லா வளர்த்துட்டா" நடந்துவிட்ட அதிசயத்தை நம்ப இயலாமல் தவித்து, சீற்றம் கொண்டு உள்ளுக்குள் புகைந் தது சுற்றம்.
ஜாஹிலிய்யாக்காலத்து இருள கன்று ஒளிபடர்ந்த சமயம் ஹலிமா உறங்கிப் போகிறாள். ஊர்ச்சனங்கள் வீட்டுக்குள் கூடிய கபன் துணியும் பன்னிரும் மீஸான் பலகையும் குசலம் விசாரித்து, வீட்டுக்குள் தற்காலிக
39
மாகத் தஞ்சமடைகின்றது. சாம்பிராணி வாசனை சுற்றத்தாருக்குத் துயரத் தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஹலீமா காவியநாயகியாகப் பலரின் வார்த்தைகளில் சிக்குப்படுகிறாள். உறவுகள் சோகம் வடிக்கின்றார்கள். விழியிரண்டும் மூடி பெருவிரல்கள் ஒன் றிணைந்து வெள்ளைப் புடவை சுற்றி, கட்டிலில் கிடத்தப்படுகிறாள் இறுதி மரியாதைக்கு. ஆண்கள் புடைசூழ மெளலவிமார்கள் பாத்திஹா துவாஆ ஓதி நகர, பிள்ளைகள் தாழமுடியாத சோகத்துடன் சந்தூக்கை நான்கு தோள்களில் சுமக்கலாயினர். பள்ளி வாசலின் கீழ் தட்டில் மையத்தைக் கிடத்தினர். ஆண்கள் வுழு செய்து, உள் பள்ளியினுள் வரிசையாக மையத்தின் மீது கடமையாக்கப்பட்ட நான்கு தக்பீர் ஜனாசா தொழுகைக்கு இமாமைப் பின்தொடர்ந்து நின்றனர். தொழுகையின் பின்னால் மையத்திற் காக இறைவனிடம் பாவ மன்னிப்பு வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். ஹலிமாவின் பிள்ளைகள் கூடியிருந்த ஊர் சனத்திடம். "எனது தாய் உங்களிடம் ஏதாவது கொடுக்கல் வாங்கல் கள் செய்திருந்தாலி அப்பொருட்களை. பணத்தினை. அவரின் பிள்ளைகளான எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்” என்றனர். பின்னர், மைய லாடியை நோக்கிச் சந்தூக் நகர்த்திச் செல்லப்பட்டது.
3 k E is a k sk
முன்கர், நகீர் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பார்களா..?
ஹலிமா தனிமையில் தூங்கு வாளா..?
எனக்குள் இன்னும் அவள் நினைவுகள் மாத்திரமே.
D O O

Page 21
வட்டத்துக்குள்ளும் இருப்பதனாலேயே மலையக இலக்கியம் இழிநிலையிலிருக்கிறது.
- பாலா.சங்குப்பிள்ளை
கடந்த ஜூன்2003 ஞானம் இதழில் மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யக் கூடியவை செய்ய வேண்டியவை என்ற லெனின் மதிவானம் அவர்களின் கட்டுரைக்குப் பதில் அளிக்கும் வண்ணம் சாரல்நாடன் அவர்களின் கட்டுரையொன்று வெளியாகியிருந்தது. ஏற்கனவே லெனின் மதிவானம் எழுதிய கட்டுரையையும் நான் வாசித்திருந்தேன. ஆனால், இருவரின் கருத்து மோதல்களையும் ஒருபுறம் வைத்து விட்டு உண்மையிலேயே மலையக கலை இலக்கியம் வளர என்ன செய்ய வேண்டும் என்பதைச் சற்றுப் பார்ப்போம். மலையக சமூக அமைப்பைப் பொறுத்தவரை இலட்சக்கணக்கான தொளிலாளர்களைக் கொண்டதோர் சமூக அமைப்பாக இருப்பதை திரு சாரல்நாடன் ஓரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்த இலட்சக்கணக்கா தோட்டத் தொழிலாளர்களில் எத்தனைபேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்? எத்தனை பேருக்கு இலக்கியத்தைப்பற்றித் தெரியும்? எத்தனை பேர் இலக்கியவாதியாக இருக்கிறார்கள்? அந்த இலக்கியம் அவர்களுக்கு ஒருவேளை சோற்றையாவது ஒழுங்காகக் கொடுக்கின்றதா? இன்று மலையக வாதிகள் என்றாலே ஒரு குறிப்பிட்ட சிலர் தங்களையே திரும்பத் திரும்ப மலையக வாதிகள் என்பதை பறை சாற்றிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறாார்களே தவிர, புதிதாக வருபவர்களுக்கு வழிவிடுவதில்லை. திரு சாரல்நாடன் புத்தக வெளியீட்டினால் சொந்தப்பணம் சில இலட்சங்களை இழந்துள்ளதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவரின் எந்தத் தொகுப்பிலுமே புதியவர்கள் மற்றும் திறமை இருந்தும் பொருளாதாரம் இல்லாமல் இருட்டில் இருப்பவர்களின் ஆக்கங்கள் எவையுமே இடம்பெற்றதாக நினைவில்லை. இவரின் இலக்கியச் செயற்பாடுகளுக்கான வட்டம் ஒரு குற்ப்பிட்ட எல்லைக்குள்ளே இருக்கின்றது. அந்த வட்டத்துக்குள் ஏற்கனவே அறிமுகமான பழைய இலக்கிய வாதிகளின் கைகளே ஓங்கியிருக்கின்றன. ஆனால் புதிய சிந்தனை, நவீன இலக்கிய எண்ணம், மற்றும் கொள்கைகளைக்கொண்டு எழுதிவரும் புதிய இலக்கிய எழுத்தாளர்களுக்கு அங்கே அதிகமான ஆதரவு இல்லை. இக்கருத்துக்களை சொல்வதனால் திரு சாரல்நாடன் சினம்கொள்ளத் தேவையில்லை. மேலும்
40
 

லெனின் மதிவானத்தக்கு வக்காலத்து வாங்கவும் நான்வரவில்லை. மலையக இலக்கியம் மற்றும் இலக்கிய வாதிகளுக்கிடையில் இன்னமும் பொறாமை மற்றும் போட்டிக் குணங்கள் ஒற்றுமையின்மை இருப்பதினால்தான் நாம் பயணப்பட்டு இன்னமும் அதுே இடத்தில் இருக்கிறோம். 'திரிசங்குசுவர்க்கம் போல் மேலேயும் இல்லை. கீழேயும் இல்லை. திரு சாரல் நாடன் இலட்சக்கணக்கான ரூபாய்கள் புத்தகப் பதிப்பினால் நஷ்டமடைவதும் அதே இலக்கிய வாதிகளால்தான். ஆர்வம் உள்ளளவுக்கு யாரும் அக்கறை காட்டுவதில்லை. இதற்காக ஏதாவது வட்டம் ஒன்றியம் என்று அமைப்புக்களை உருவாக்கினால் முதல் நாள் வரும் கூட்டமானது 'சந்தா கேட்டவுடன் அடுத்தமுறை சந்தடியே இல்லாமல் நின்றுவிடுகின்றது. இருக்கும் ஒரு சிலரும் தனக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கிறதாவென ஆராய்ந்து எதுவுமில்லாவிட்டால் அடுத்து எட்டியும் பார்ப்பதில்லை. இந்நிலையில் இங்கு இலக்கியம் எப்படித்தான் வளரும் வாழும்? தற்போது மிக வேகமாக இன்னொரு விஷம் இலக்கியத்தில் கலந்து வருகிறது. அது சாதி. தங்களின் "சாதியைச் சேர்ந்த வர்கள் யாராவது இலக்கிய வாதியாக இருந்தால் அவரை எந்த விதத்திலாவது ‘கைகொடுத்து கரையேற்றி விடுவார்கள். இல்லையெனில் அக்கறை எதுவுமில்லாமல் கைவிட்டு விடுவார்கள். இந்த விஷம் பொல்லாதது என்பதுடன் இதை முளையிலேயே கிள்ளாவிட்டால், மலையக தரமான இலக்கிய வாதிகளை மூலையில் உட்காரவைத்து விடுவது உறுதி. மேலும் வளர்ந்து வரும் லெனின் மதிவானம் மற்றும் மூத்த இலக்கிய வாதியான சாரல் நாடன் போன்றவர்கள் இப்படியான இலக்கியத் தாக்குதல்களை கைவிட்டு எதிர்கால மலையக இலக்கியம் மற்றும் இலக்கிய வாதிகளின் நன்மைக்காக கை கோர்க்க வேண்டும. ஆற்றலுள்ள இலக்கிய வளம் உள்ளவர்கள் ஒன்று சேரும்போது அங்கே ஏற்படும் பலத்தினால் பல்வேறு காரியங்களைச் சாதிக்க முடியும். ஒற்றுமையினால் வேற்றுமைகளை ஒதுக்கி ஒன்றாகத் தோளோடு தோள் சேர்த்து உழைப்பதனால் மட்டுமே நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பதையும் மறந்து விடக் கூடாது.
அண்மையில் "ஈழவரின் இருபத்தேழு சிறுகதைகள் என்ற தொகுப்பு சென்னை மணிமேகலை பிரசுரத்தினால் பிரசுரிக்கப்பட்டு திருகோணமலை இலக்கிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் ‘மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இடம் பெற்றிருந்தன. புத்தக வெளியீட்டின்போது அனைத்து எழுத்தாளர்களுடன் மலையக எழுத்தாளர்களும் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்கள். இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். எந்தவிதப் பாகுபாடுமின்றி எல்லாப் பிரதேசங்களிலும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இந்தத் தொகுப்பில் வெளிவந்திருந்தன. இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இப்படியான நல்ல முயற்சிகள் எவையுமே மலையகத்தில் செய்யப் படுவதில்லை. அப்படியே செய்தாலும் குறிப்பிட்ட ஒருசிலரின் ஆக்கங்கள் மட்டுந்தான் அதில் இடம்பெறும். இந்நிலை மாற வேண்டும். திறமைக்கு முதலிடம் அளிக்க வேண்டும். அப்போதுதான் மலையக இலக்கியம் உயிர் பெறும்.
41

Page 22
பூகோளமயமாகும் சமுதாயத்தில் கலை இலக்கியவாதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
:..........28:ہ:خ
லோலியூர் க. சதாசிவம் O இன்று உலகம் முழுவதும் புதிய தாராளமய பூகோளமயமாக்கலின் தாக்கங்கள் பரந்தளவில் உணரப்பட்டுவருகின்றன. இதன் தாக்கம் எல்லா நாடுகளிலும் எல்லாத் துறைகளிலும் தன் வலிமையைக் காட்டத்தொடங்கி யுள்ளது.
பூகோளமயம் பண்பாட்டுத்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பன்முகப் பட்டது. மனித மேம்பாட்டின் சிந்தனை வளத்திற்கு அதிமுக்கிய பங்களிக்கும் கலை இலக்கியத்துறையிலும் இது எதிரொலிக்கிறது. எதிர்விளைவுகளை ஏற்படுத்தி புதிய சவால்களை எதிர்கொள்ள வைத்துள்ளது. பிரபுத்துவ சமுதாயத்தி லிருந்து, தொழிற்புரட்சி தோற்றுவித்த முதலாளித்துவ சமுதாயம் ஏற்பட்டபோது, உற்பத்திச் சாதனங்களை ஆள்பவன் கலை இலக்கியத்தைக் கட்டுப்படுத்தும் சவாலை கலை இலக்கியவாதிகள் எதிர்கொண்டனர். இன்று பூகோளமயமான சமுதாயத்தில் சந்தைப்படுத்தல் விரிவடைந்துள்ள காலகட்டத்தில் இந்நிலை பூதாகரமாகியுள்ளது.
பரந்த சந்தையை நோக்கி கலை ஆக்கங்களைப் படைக்கும்படி கலைஞன் ஊக்குவிக்கப்படுகிறான். ரசிகனும் அதற்கேற்ப வளர்த்தெடுக்கப் படுகின்றான். கலை உணர்வுகள் மலினப்படுத்தப்பட்டுள்ளன. பாலுறவு, வன்செயல்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு முன்னேறவேண்டும், அதற்குரிய காரண காரியத் தொடர்புகளைக் கண்டறிந்து விழிப்புணர்வு கொள்ளவேண்டுமென்பது மழுங்கடிக்கப்பட்டு காதல், ஆடம்பரம், அதீத பாச உணர்வு போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து, போலிக் கற்பனை உணர்வைக் காட்டி, போதை உணர்வை ஊட்டி கற்பனை உலகில் மனிதனைச் சஞ்சரிக்கவைக்கும் கலை களைப் படைப்பவனையே உயர்ந்த கலைஞன் என நோக்கப்படுகிறான். பிரபல்யப்படுத்தப்படுகிறான். பெரிதும் பேசப்படுகிறான்.
கலை இலக்கியங்களின் முக்கியத்துவத்திலும் பயன்பாடுகளிலும் தொடர்பு ஊடகங்களின் பங்கு மகத்தானது இன்று ஊடகங்கள் முதலாளித்துவ அமைப்பின் அம்சமாக அது தனிக் கைத்தொழிலாக உருவெடுத்துள்ளது. இவை பூகோள மயமாக்கலால் ஜனரஞ்சகத் தன்மைகொண்டு காத்திரமான பிரச்சினைகளைக் கொச்சைப்படுத்துகின்றன. இன்று மிகப் பெரிய தொடர்பு சாதனமான சினிமாவில் இதனைக் காண்கிறோம். தமிழ்நாட்டில் தலித் மக்களின் சாதியப் பிரச்சினையும் ஈழத்தமிழரின் இனப்பிரச்சினை ஆகியவற்றை காத்திர மான மானிடப் பிரச்சினையாக சித்தரிப்பது போலக்காட்டி அவற்றின் சமூக முக்கித்துவத்தைக் கொச்சைப்படுத்தும் கைங்கரியம் நடைபெறுகிறது. கலை இலக்கியப் படைப்புக்கள் விற்பனைப் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இலாப நோக்கத்திற்காக, விற்பனைக்காக, கலை இலக்கியம் படைக்கப்படுகின்றன. 42
8**3:
 
 

உற்பத்தியின் சேவகனாகின்றான் மனிதன். இந்நிலை முதலாளித்துவ சமுதாய அமைப்பில் இருந்தது. ஆனால் இன்று பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. கலைஞன் தாராளமய சந்தைக்கு இலாபப் பொருள் உற்பத்தி செய்யப் படுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறான்.
'மருத்துவன், வக்கீல், மதகுரு, கவிஞன், விஞ்ஞானி ஆகிய அனைவரை யும் பூர்ஷ்வா கூலித்தொழிலாளி ஆக்கிவிடுகின்றான்' என்று அன்று மார்க்ஸ் கூறியது இன்று புதிய அர்த்த புஷ்டியுடன் நோக்கப்படவேண்டியது. கலை இலக்கியம் படைப்பவன் கூலி அடிமைபோல் ஆக்கப்பட்டுள்ளான் என்பதற்கு உதாரணமாக கவித்திறன் வாய்ந்த கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோரை, உணர்வுகளை மலினப்படுத்தி, பாலுணர்வை மிருகத்தனமாகத் தூண்டும் பாடல்களை எழுதவைத்துள்ளமையைக் காட்டலாம். விற்பனைத் தேவையை ஒட்டியே கலை இலக்கியத்தின் முக்கியத்துவம் மதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பண்டங்களை விற்க முதலாளித்துவம் ரேட் மார்க் (Trade Mark)குகளைப் பயன்படுத்துவது போல, சில "ஸ்டார் எழுத்தாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். நாவலாசிரியர் சுஜாதாவை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஜெயகாந்தனை ஆனந்தவிகடன் பயன்படுத்தியமையைச் சுட்டிக் காட்டலாம். இன்னும் சில ஆற்றல் வாய்ந்த நாவலாசிரியர்கள் பரந்த வாசகர் கள் விரும்பிப் படிக்கவேண்டுமென்பதற்காக ஜனரஞ்சகமாக எழுதுவதையும், ஜனரஞ்சக ரசனைக்கேற்பப் பாத்திரங்களைப் படைப்பதையும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக உள்ளது.
புலம்பெயர் தமிழர் சமூகத்தில் ஓர் உலகமட்ட சந்தை இருப்பதை இனங்கண்டு வெகுசனப் பத்திரிகைகள் ஈழத்து மண்வாசனை இலக்கியப் படைப்புக்களை அதன் சமூக முக்கியத்துவத்தைக் கொச்சைப்படுத்தி வெளி யிட்டு வருவது ஆழ்ந்து நோக்கும்போது புலனாகும். சர்வதேச ஜனரஞ்சக பண்பாட்டினை பூகோளமயம் உருவாக்கியுள்ளது. படிப்போர் தொகை கூடி யிருந்தும் இன்று பண்பட்ட இரசனை மட்டம் குறைந்து வருவதற்கு இது ஒரு முக்கிய காரணமெனலாம். வாசகர்களின் ரசனை மட்டத்திற்கு இறங்கிவராது - அவர்களது ரசனை மட்டம் உயரவேண்டும் என்ற எண்ணத்துடன் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளாக சுந்தரராமசாமி, ஜானகிராமன், நீல பத்மநாதன் ஆகியோரைக்குறிப்பிடலாம். ஒரு காலத்தில் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றிய பிரபல பத்திரிகைகளும் இந்த வெகுஜனசந்தைக்குத் தீனி போடுவதற்கும் விற்பனைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் காத்திரமான இலக்கியப் படைப்புகளை வெளியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆகவே இதற்கு மாற்றுவழியாக கலை இலக்கிய மாத சஞ்சிகைகளே உள்ளன. இன்று இவற்றின் பண்பும் பயனும் மகத்தானது. கலை இலக்கியவாதிகள் இதனைப் பயன்படுத்த வேண்டும். இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வலுவூட்டவேண்டும்.
தமிழ் இலக்கியத்திற்குக் காத்திரமான தனித்துவமான பங்கினை அளித்துவந்துள்ள ஈழத்து கலை இலக்கியவாதிகள் பூகோளமயமாகி வரும் சமுதாயத்தில் உருவாகி எழுந்துள்ள சவால்களை எதிர்கொண்டு, எமது போக்கினில் மாசு படியவிடாது தனித்துவத்தைக் கட்டிக் காக்கவேண்டிய கட்டத்தில் நிற்கிறோம். கட்டிக் காப்போம் நாம்.
43

Page 23
நெற்றிக்கண்
நால் விமர்சனம் -
நூல் :- கிழக்கில் ஒரு கிராமம் எழுதியவர் :- வாகரைவாணன்
வாகரை எண் பது இன்று எவருக்கும் தெரிந்த ஒரு கிராமமாகி விட்டது. வாகரைவாணனும் தாம் வரித்துக் கொண்ட தமது புனை பெயரால் தமது சொந்தக் கிராம மாகிய வாகரைக்கு “வாழ்வு” கொடுத் துள்ளார். பன்னூல் ஆசிரியரான வாகரைவாணன் கிழக்கில் ஒரு கிராமம் (2002) என்ற நூலொன்றை எழுதியுள்ளார். இந்நூல் வாகரை பற் றிய பல சுவாரசியமான விடயங்களை வாசகருடன் பகிர்ந்து கொள்கிறது.
இந்நூலில் வாகரைக் கிராமம் உருவாகிய வரலாறு, வாகரை என்ற அதன் பெயரும் பொருளும், அக் கிராமத்தின் மக்கள் வாழ்வியல், அக் கிராமத் தைப் பின் னணியாகக் கொண்ட கலை இலக்கிய அனுபவங் கள், அரசபயங்கரவாதத்தால் அக் கிராமத்துக்கு நேர்ந்த கதி முதலான பல விடயங்கள் நோக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் அக் கிராமத்தில் ‘புதுயுகம் பூக்கும்! என்ற நம்பிக்கை யோடு நூலாசிரியர் நூலை நிறைவு செய்கிறார்.
கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, குறிப்பிட்ட அக்கிராமம் வாகரை என்று குறிப் பிடப்பட்டு வருவதாக நூல் தெரி விக்கின்றது. வாகரை என்ற பெயர் அமைந்தமைக் குக் கூறப்படும் காரணங்களை நூலாசிரியர் குறிப் பிடுகிறார். வாகரையின் கலை இலக் கியக் களம் மட்டக்களப்புத் தமிழ்
44
பற்றி நூலாசிரியர் எழுதியுள்ள பகுதி கள் சிறப்பாக உள்ளன. நூலின் மற் றைய பகுதிகளும் வாகரைக் கிராமத்தை இனங்கண்டுகொள்ள உதவுகின்றன.
நாற்பத்திரணி டு பக்கங் களைக் கொண்ட இச்சிறுநூலில், ஆங் காங்கு இடம்பெறும் எழுத்துப் பிழை கள், அச்சுப்பிழைகளைத் தவிர்க்க முயற்சித்திருக்கலாம். இக்குறைகள் இருப்பினும் கிழக்கில் ஒரு கிராமம் என்னும் நூல் வாகரை என்ற கிராமத்தை வாசகருக்குத் தெளிவாகக் காட்ட முயற்சிக்கிறது.
நூல்- மணல்வெளி அரங்கு எழுதியவர்:- இணுவையூர் சிதம்பர
திருச்செந்திநாதன் இலங்கைத் தமிழ் ச் சிறுகதைத்துறை காலந்தோறும் புதிய வளர்ச்சி எல்லைகளைத் தொட்டு நிற் கிறது. சும்மா கதை எழுதும் எழுத் தாளர்கள் சிலர் இருப்பினும், காத்திர மான கனதியான படைப்புகளைத் தரும் சிறுகதை எழுத்தாளர்கள் கணிச மான அளவிலே இலங்கையில் உள் ளனர். இவர்களிற் சிலர் வித்தியாச மான தரிசனங்களைத் தமது படைப்பு கள் ஊடாக வாசகருக்குத் தருகின் றனர். அவர்களில் ஒருவர் இணுவை யூர் சிதம்பர திருச்செந்திநாதன் என்பதை, அவரது மணல் வெளி அரங்கு (2002) என்ற சிறுகதைத் தொகுதி உணர்த்துகின்றது.
ஏற்கனவே இரு சிறுகதைத் தொகுதிகளை அளித்த சிதம்பர திருச்

செந்திநாதன் 1995 2000 ET6) கட்டத்தில் தாம் எழுதிய சிறுகதை களின் தொகுப்பாக இந்நூலைக் கொணர்ந்துள்ளார். அவர் தமது ‘என்னுரையில் குறிப்பிடும் கருத்துக் கள் அவரது இலக்கியநோக்கை இ5.ங்காட்டுகின்றன: "வெறுமனே விரக்தியும், புலம்பலும் இருப்புத் தொடர்பான அச்சமும், அதனால் எழும் அகமனத்து உளைவுகளுமே நல்ல இலக்கியங்களாக அமைந்து விடுவதில்லை. வாழ்வு பற்றிய தேட லும், அக்கறையும், எதிர்கால நம் பிக்கையுமே இலக்கியத்தின் கருப் பொருளாக அமைவது சிறப்பானதல் லவா? இவையே மனிதனை சூழலுட னும் சக மனிதர்களுடனும் பிரக்ஞை பூர்வமான உறவுகளைப் பேணத் தூண்டுகின்றன".
சிதம்பர திருச்செந்திநாதன் கதைபணி னுபவராகவோ, கதை சொல் லியாகவோ இலி லாமல் , ஆற்றல் மிக்க கதாசிரியராக விளங்கு வதுதான் அவரது பலம். அதனை இச் சிறுகதைத் தொகுதி இயன்றவரை உணர்த்துகிறது. இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள பத்துச் சிறுகதை களும் ஒவ்வொரு வகையில் தமிழ் மக்களின் வாழ்வியல் அனுபவங்களைக் கலாபூர்வமாக இனங்காட்டுகின்றன. எனக்காக? காணாமல் போனவன், அம்மாவாக அல்ல ஆகிய படைப்பு கள், சிறுகதையின் சிகரத்தைத் தொட முயல்கின்றன. தேவர்கள், சமாதானம் போன்ற படைப்புகளும் குறிப்பிடத் தக்கனவாக விளங்குகின்றன.
இணுவையூர் சிதம்பர திருச் செந்திநாதனின் நடை தனித்துவ மானது. ஒரு திறமையான சாரதி நேர்த்தியாக வாகனத்தைச் செலுத்தி பக்குவமாக உரிய இடத்தில் நிறுத்தி
45
விடுவதுபோன்று, சிதம்பர திருச் செந்திநாதனும் தமது சிறுகதைகளை நகர்த்திச் செல்கிறார். அவரின் பொருத்தமான சொல்லாட்சிகளும், புதிய உவமைகளும் அவரது நடைக்கு உறுதுணை புரிகின்றன. சிக்கலான விடயத்தையெல்லாம் தமது நடைச் சாதுரியத்தால் சிறப்பான முறையில் சிறுகதைப் படைப்புகளாக வாசகர் முன் தந்து விடுகிறார்.
ஒருசில இடங்களில் தேவை யற்று இடம்பெறும் எழுத்து, அச்சுப் பிைைழகளைத் தவிர்த்துப் பார்த்தால், இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதனின் மணல்வெளி அரங்கு அவ ரின் சிறுகதைப் படைப்பாற்றலின் வளர்முக நிலையை இனங்காட்டு கின்றது.
“ஞானம்" புதிய சந்தா விபரம்
உள்நாடு தனிப்பிரதி LunT 30/-- அரை ஆண்டுச் சந்தாரூபா 180/= ஆண்டுச் சந்தா :en:5Lunt 3601சந்தர காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ
அனுப்பலாம்.
மனியோடர் அனுப்புபவர்கள் அதனை கண்டி தபால் நிலையத் தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும்.
அனுப்பவேண்டிய பெயர், முகவரி :- TIGNANASEKARAN 19/7, PERADENITYAROAD,
KANDY.
வெளிநாடு ஆண்டுச் சந்தா 20 USS
Nட (தபால்பிசவுஃப2-7
N

Page 24
நேற்றைய கலைஞர்கள் ~ அந்தனி ஜீவா -
2. g2(b5 as606paptuff (p6f(borng...
நடிகவேள் லடீஸ் வீரமணி
இவை ஒரு வரலாற்றுப் பதிவுக்காக
எழுதப்படுகின்ற
குறிப்புகள்.
ஒரு தலைமுறையின் முன்னோடியாக கலையுலகில் விஸ்வரூப தரிசனம் தந்தவர் வேறுயாரமல்ல. கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் "எனது வாரிசு" எனப் பாராட்டப்பட்டவரும், கலைஞர் இராஜேந்திரம் மாஸ்டரின் மனோரஞ்சித கான சபா மூலம் நாடக உலகிற்கு அறிமுகமானவருமான நடிகவேள் லடீஸ் வீரமணியாவார்.
மனோரஞ்சித கான சபா மூலம் நல்ல பல கலைஞர்கள் நாடக உலகிற்கு அறிமுகமானார்கள். அன்றுமுதல் இன்றுவரை நான்கு தசாப்தங் களுக்கு மேலாக நடிகையாக வாழ்ந்துகொண்டிருக்கும் நடிகை ஜெயகெளரி மனோரஞ்சித கான சபாவின் கண்டுபிடிப்பாவார். மேடையிலும் வானொலியிலும் நடிப்பாலும், தனது குரல் வளத்தாலும் "ஈழத்து சிவாஜி எனப் பாராட்டப்பட்ட என்.தாலிப்., இலங்கையின் வர்த்தக ரீதியாக திரையிடப்பட்ட முதல் திரைப்பட மான தோட்டக்காரியில் நாயகனாக நடித்த பி.எஸ்.கிருஷ்ணகுமார். சிங்களத் திரையுலகில் புகழ்பெற்ற அலெக்ஸாண்டர் பெர்னாண்டோ, நடிகர் ஹிலெயேன் பெர்னாண்டோ, நடிகை முத்துலட்சுமி, நடிகை ராஜாமணி. இப்படிப்பலரைக் குறிப்பிடலாம்.
இத்தகைய கலைஞர்களை உருவாக்கிய மனோரஞ்சித கான சபாவின் நடிகர்களில் ஒருவராக அறிமுகமாகியவர்தான் நடிகவேள் லடீஸ் வீரமணி. பிற்காலத்தில் பல நடிகர்களை உருவாக்கிய ஒரு தலைமுறையின் முன்னோடி யாக இவர் திகழ்ந்துள்ளார்.
அரை நூற்றாண்டு காலமாக தமிழ் நாடக மேடையில் நம்பிக்கைக் குரியவராகத் திகழ்ந்த நடிகவேள், 1994ஆம் ஆண்டு மேமாதம் 5ம் திகதி அமரரானார். 50களுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட தேசிய ரீதியான விழிப் புணர்வைத் தொடர்ந்து சகோதர சிங்கள இனம் தங்களது கலை கலாசாரங் களைப் பேணுவதில் முன்னின்றது.
1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள நாடக மேடையில் ஏற்பட்டதைப் போன்றதொரு விழிப்புணர்வு தமிழ் நாடக மேடையில் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
தலைநகரில் தமிழ் நாடக மேடைகளில் அத்தி பூத்தாற்போல் ஓரிரு
 
 
 
 
 
 

நல்ல முயற்சிகள் இனங்காட்டப்பட்டன. இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்தவர்கள் இந்திய வம்சாவழியினரே என்பது மறக்கமுடியாத உண்மையாகும்.
நடிகவேள் லடீஸ் வீரமணியும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்த தாமே நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றினார்.
ஆரம்ப காலங்களில் நடிக வேள் லடீஸ் வீரமணியின் நாடகங்கள் அவரின் நடிப்பாற்றலாலும் காட்சி அமைப்புக்களாலும் பலரின் பாராட்டைப் பெற்றன.
பிற்காலத்தில் நடிகவேளின் நாடகங்கள் சிறப்பாக அமைவதற்கு அறிஞர் அ.ந.கந்தசாமியின் வழிகாட்டலும், நாடக நெறியாளர் சுகைர் ஹமீட்டின் தொடர்பும் காரணமாக அமைந்தன.
நாடகக் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் அவர். தமிழ் நாடக மேடையில் விஸ்வருப தரிசனம் தரும் ஓர் அபூர்வக் கலைஞர் அவர். நாடக மேடையின் சகல நுட்பங்களையும் அறிந்த அவர், ஒப்பனை முதல் காட்சி அமைப்பதுவரை சகல துறைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார். இன்று சிறந்த நடிகர்களாகத் திகழும் சிலர் இவரின் பாசறையில் பயின்றவர்களே. நான் கொழும்பு பம்பலப்பிட்டி சென்மேரிஸ் பாடசாலையில் இறுதி வகுப்பில் படிக்கும்போது நடிகவேள் லடிஸ் வீரமணி எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் வாடகைக் காரோட்டும் சாரதியாகப் பணியாற்றிக்கொண்டு நாடகங்களிலும் நடித்து வந்தார்.
ஒரு தடவை அவரோடு பேசிக்கொண்டிருக்கையில், அவரது கலைத் துறை ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது எனக் கேட்டேன்.
"சிறுவயதிலே எனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நடிக்க வேண்டும், பாடவேண்டும், அதைப்பார்த்துப் பிறர் பாராட்டவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. இதனால் யாரையாவது இமிடேட் பண்ணி அவரைப்போல பேசி நடித்துக்காட்டுவேன். இதனால் என்னைத் தட்டிக்கொடுத்து பலர் உற்சாகப்படுத்துவார்கள். இந்த ஆர்வமே என்னுள்ளத்தில் வளர்ந்து வந்தது. எனது கலையார்வத்தை எப்படி வளர்த்துக்கொள்வதென்று தெரிய வில்லை. காரணம் போதிய கல்வியறிவில்லை. கொழும்பில் மேடையேறும் நாடகங்களைப் பார்பேன். அது எனக்கு உற்சாகம் தராது. சினிமாவையே காப்பியடித்து நாடகமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனால் எனது கலைப்பசியைத் தீர்க்க நானே சுயமாக நாடகங்களை எழுதினேன்; நடித்தேன்." என்றார்.
நாடக மேடையில் உங்கள் முன்னேற்றத்திற்குக் காரணம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, “சிப்பியிலே முத்து, சேற்றிலே செந்தாமரை, குப்பையிலே குன்றுமணி, பாதையிலே வீரமணி என்றிருந்த என்னை உயர்மட்டத்திற்குக் கொண்டுவந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். இன்னுமொருவரையும் நான் நினைவுகூரவேண்டும். அவர்தான் நாடக நெறியாளர் சுகைர் ஹமீட். என்திறமையிலே நம்பிக்கை வைத்து அவர் நெறிப்படுத்திய “பொம்மலாட்டம்’, ‘வாடகை அறை', நந்தவனத்தில் ஆண்டிகள், "வேதாளம் சொன்ன கதை, “ரகுபதி ராகவ 47

Page 25
ராஜா ராம் ஆகிய நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்" என்று குறிப்பிட்டார். 1960க்குப் பின்னர் அரங்கேறிய நாடகங்களில் அ.ந.கந்தசாமியின் "மதமாற்றம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நாடகத்தை நடிகவேள் லடீஸ் வீரமணி சிறப்பாக வெளிப்படுத்தினார். தான்தோன்றிக் கவிஞரான சில்லையூர் செல்வராசன் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
நடிகவேள் லடீஸ் வீரமணி அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கங்காணியின் மகன், நாடற்றவன், சலோமியின் சபதம், கலைஞனின் கனவு, மனிதர் எத்தனை உலகம் அத்தனை, குடுமி அங்கிள், ஊசியும் நூலும் ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தியும் நடித்தும் உள்ளார். இவற்றுள் சில நாடகப் பிரதிகளை இவரே எழுதினார். நடிப்புத்துறையில் மாத்திரமன்றி தமிழர் களின் பாரம்பரியக் கலைகளான வில்லிசையிலும் நடிகவேள் லடீஸ் வீரமணி சிறப்புற்றுவிளங்கினார். இவர் வில்லிசைத்துப் பாடுவதை நேரில் பார்த்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் முயற்சியால், கவிஞர் 'மகாகவி நடிகவேள் லடீஸ் வீரமணிக்காக கண்மணியாள் காதை என்ற காவியத்தை எழுதினார். அதனை அவர் முன்னிலையில் வில்லிசைத்தும் பாடியுள்ளார் வீரமணி. இந்தக் கண்மணியாள் காதை வில்லிசை நிகழ்ச்சியை இலங்கையின் பல பாகங்களிலும் மாத்திரமன்றி புலம் பெயர்ந்த தமிழர்கள்வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் அவர்களின் அழைப்பின்பேரில் சென்று இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
ஆரம்பகாலங்களில் நடிகவேள் லடீஸ் வீரமணின் நடிப்பைப் பார்த்து விட்டு மலையகத்தின் பல இடங்களிலும் இவரது நாடற்றவன்', 'கங்காணியின் மகன் ஆகிய நாடங்களை மேடையேற்ற முன்னின்று செயற்பட்டதுடன் இவருக்கு நடிகவேள் என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தவர் அப்போது இலங்கைத் திராவிட பொதுச்செயலாளராகத் இருந்த ஏ.இளஞ்செழியனாவார்.
தலைநகரில் தமிழ் நாடக மேடையில் காட்டுராஜாவாகத்திகழ்ந்த நடிகவேள் லடீஸ் வீரமணி 1983இல் ஏற்பட்ட ஜூலை இனக்கலவரத்தின் பின்னர் தமிழகம் சென்று அங்கு அகதிகளாக இருந்த இலங்கையர்களை வைத்து நாடகம் ஒன்றினை சென்னை கலைவாணர் அரங்கில் மேடை யேற்றினார்.
அப்பொழுது சென்னைக்குச் சென்றிருந்த எனக்கு, நாடக ஆரம்பத்தில் நடிகவேள் லடீஸ் வீரமணியையும் அவரது கலைப்பணியையும் பற்றி அறிமுகப் படுத்தும் வாய்ப்பினை எனக்குத் தந்தார். இதனை ஏற்பாடு செய்தவர் 'மதுரா டிரவல்ஸ் கலைமாமணி வி.கே.டி. பாலனாவார். அப்போது என்னோடு கூட விருந்து நாடகம் பார்த்தவர் பத்திரிகையாளர் எஸ்.சிவநாயகம் ஆவார். (இவர் Saterday Review gaffluj T6. Tit).
இந்த நாடக மேடையேற்றத்திற்கு பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்திய நடிகவேள் இலங்கை திரும்பிச் சிலகாலம் வடபகுதியில் வாழ்ந்துவிட்டு கொழும்பு திரும்பி இளைய தலைமுறை நடிகரை ஊக்கிவிப்பதில் ஆர்வம் காட்டினார். பின்னர் 1994இல் அமரரானார்.
நாடகமேடையில் சகல கலா வல்லவராகத் திகழ்ந்த நடிகவேள் லடீஸ் வீரமணியின் 50 ஆண்டுகால வரலாறு எழுதுவது அவசியமாகும்.
(இன்னும் அரங்கேறும்.) 48

(Braa,porfir Š
மதிப்பிற்குரிய "ஞானம்' ஆசிரியர் அவர்களுக்கு,
ஈழத்து இலக்கிய ஏடுகளில் முன்வைத்தெண்ணும் அளவிற்கு ஞானதின் தரம் உயர்தல் கண்டுபாராட்டுவதோடு மகிழ்ச்சியும் அடைகிறேன். குறிப்பாக முகம் சுழிக்கும்படியான எழுத்துப்பிழை, சொற்பிழைகளின்றித் திகழ்வது ஞானத்தின் மீதுள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்கின்றது. புத்திஜீவிகளின் ஆக்கங்களே அதிகம் இடம்பெறுவதால் ஆக்கங்கள் தரமுடையதாக மிளிர்கின்றன. ஞாலத்தில் ஞானம் தனியிடம் வகிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கலாநிதி துரை.மனோகரன் அவர்களது எழுதத் தூண்டும் எண்ணங்கள் பகுதியில், மலையகத்திலிருந்து வெளிவரும் நூல்கள், பிரசுரங்களில் இடம்பெறும் எழுத்துப்பிழைகள், அச்சுப்பிழைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். இது கசப்பான உண்மை. இதை வெளிப்படையாக அவர் கூறியுள்ளது தொடரும் பிழைகளைத் திருத்துவதற்கு நல்ல அறிவுரையாகும்.
அக்னஸ் சவரிமுத்து, தலவாக்கலை. மே மாத ஞானம் கிடைக்கப்பெற்றேன். அரிய தகவல்கள் அறியக்கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நேர்காணல் தொடர் மிக்க பயனுள்ளதாய் உள்ளது. ஞானத்தில் மரபுக்கவிதைகள் பெரும்பாலும் பிரசுரமாவதில்லையே, ஏன்? இளையேன் சோராது தொடர்ந்து எழுதிவரும் கவிதைகள் வெளிவராமலிருப்பதற்கு அவற்றின் கருப்பொருளின் காத்திரமின்மை காரணமாயிருக்கக்கூடும் என்று கருதுகிறேன். ஆயினும் பிறிதெவரும் ஏற்ற வகையில் எழுதுவதில்லையா?
தவ சஜிதரன், மாத்தளை. ஈழத்தில் வெளியாகின்ற கலை இலக்கிய சஞ்சிகைகளில் ஞானத்தின் பங்களிப்பு முன்னணியில் திகழ்கிறதொன்று. இராஜேஸ்கண்ணனினதும், சாரங்காவினதும் சிறுகதைகள் சமூகத்திற்கு உள் மனங்களில் உறங்கிக் கிடக்கும் சில சுயநலப்போக்குகளை துகிலுரித்துக் காட்டுகின்றன. எழுத்துலகம் பற்றிய சுதாராஜ், துரை.மனோகரன் கட்டுரைகள் போன்றன இன்னும் வருதல் நல்லது. ஞானம் இன்னும் மெருகேற வாழ்த்துக்களுடன்.
தாட்சாயணி, சங்கத்தானை. ஞானம் இதழை தாமரைச்செல்வி மூலம் அறிந்தேன். கடந்த இரு வருடங்களாகப் படிக்கிறேன். காத்திரமான ஆக்கங்களை அவ்வப்போது தரிசிக்கமுடிகிறது. புதியவர்களுக்கான களமும் வரவேற்கத்தக்கதே. எழுத்தாளர் தகவல், அறிமுகம் என்பன நல்ல பணி. மூன்று வருடங்கள் தொடர்ந்து வருவது இன்னொரு சாதனை. புதியவர்களுக்குக் களம் தரும்போது இலக்கிய 49

Page 26
தரம் சிறிது குறைவடைந்தாலும் அவ்வப் போது சிலர் தரமாக வெளிவருகிறார்கள். ச.முருகானந்தன்
ஞானம் சஞ்சிகையின் ஆரம்ப காலந்தொட்டே அதன் வாசகனாக இரசிகனாக இருந்து வருகிறேன். கபாரதி தமிழ் மகாவித்தியாலயத்திற்கு இலவசமாக அனுப்பியபோதுதான் ஞானம் எனக்கு அறிமுகமாகியது. இலவசப்பிரதிகள் நிறுத்தப்பட்டதும் அதனை விலை கொடுத்து வாங்கும் வாசகனாக மாறிவிட்டேன். இலாபம் கருதாத தங்கள் இலக்கிய சேவை தொடர எனது வாழ்த்துக்கள். தலவின்னை சிபார், உடத்தலவின்னை.
தாங்கள் வெளியிடும் சிறப்புமிக்க ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களின் ஞானம் வளர்ந்தோங்க என்றும் நல்லாசிகள். ஏ.எச்.எம்.அனப்வர், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்.
- | R
:தி: சிறுகதையுலகம் நிறையவே எதிர் ប្រាំយ "ينتهي بي பார்த்திருக்கிறது.
கலாநிதி எளப்.சிவலிங்கராஜா. தமிழ்த்துறை பாழ். பல்கலைக்கழகம்
"சமாதிச் சத்தங்கள்" (கவிதைத்தொகுதி) எழுதியவர் ஓட்டமாவடி எம்.பீ.நளிம் வெளியீடு : இளப்லாமியக் கலை
'நடுகல்" இலக்கியக் கலாசாரப் பேரவை, (சிறுகதைத்தொகுதி) வாழைச்சேனை.
எழுதியவர் ராணி சீதரன் முதற்பதிப்பு: ஜனவரி 2003
| வளியீடு : யது வெளியீடு 2002, விலை : I LITT || 00/=
| திருகோணமலை, தான சாாநத e typřišlai முதற்பதிப்பு: 27-11-2002 மீதான காதலை அதன் கண்ணிரை விலை ரூபா 100"- படைப் புருவாக்கம் செய்வதற்கு
கதை சோல்லும் விதமும், நெஞ்சுரம் தேவைப்படும் பபுக சந்தியில் கருத்து நிலையும் ஒன்றினைந்து | நின்றுகொண் டு தன் னினத்தின் வருவதே இவருக்கு ஈழசிறுகதை துயரதி தைச் சுட்டும் இவரது
வரலாற்றில் நல்லதோர் எதிர்காலம் கவிதைகள். பாலைநகர் ஜிப்ரி உண்டு என்பதைத் தெளிவுபடுத்து கிறது. கருவும், உருவும் மொழியும் “go abaugi
த்தமது 'அளவுகணக்கில் அமைந் (இருதிங்கள் இதழ்) திருப்பது சிறப்புக்குரியது. சமூகம் (சமூக-கலை-கல்வி-இலக்கிய பற்றிய இவரது நோக்குநிலையை அறிவியல் ஏடு) . இவரது சிறுகதைகளில் பரக்கக் (கனை - 4, வைகாசி 2005)
காணலாம். ராணி சீதரனிடம் ஈழத்துச் வெளியீடு : யா/ அ.மி.கல்லூரி, !
ՀՈ
 

அன்பார்ந்த வாசகர்களே!
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம். - ஆசிரியர்
நானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
கொழும்புபூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு 11 பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை
யாழ்ப்பாணம்:- பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி,
|திருகோணமலை
திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை, திரு. வீ.என்.சந்திரகாந்தி - 372/A, ஏகாம்பரம் விதி, திருகோணமலை மட்டக்களப்பு:- சக்தி புத்தக நிலையம், 58, திருகோணமலை விதி, மட்டக்களப்பு. எளப், தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 481, பார் வீதி, மட்டக்களப்பு. கிளிநொச்சி: கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி.
வவுனியா:
ந.பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா,
கண்டி
லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி
GAJETITLE E GOEJ: சாரல் என்டர்பிறைஸ் - 7 ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை.
Li556lтшfr:- சாஹித்திய புத்தகநிலையம், இல 4, குருனாகல் விதி, புத்தளம்.
பண்டாரவளை
மெடிக்கல் கெல்த் கிளினிக், இல 1, டயரபா சந்தி, மிரஹாவத்தை.(P0)
| பதுளை
மகிந்த புத்தக நிலையம், இல 51-52, பளப்ார் தெரு, பதுளை.

Page 27
மூசக
எங்கள் உடன்பிறப்புகளின்
॥
| |॥। உனக்குச் செயற்கைச் சுவாசத்தை நாட்டுகிறோம்.
TLD நடனைமீட்க எத்தனை ஒப்பற்ற உட Պեյլեյլի ք եւիլ IIILDեն, மயக்கந் தெளியாமல், + -ոիմբլդար ուbitalTսն? Haniքո հl இவ்வளவு உயிர்முச்சும் உன்னை ਸLLL மேலும் இளையவரின் முச்சளித்தாற்தான் மயக்கந்
|L நியாயங் கொஞ்சம் பலந் திரட்டி எழுந்துவிடு மேலும் இளமுச்சைத் தயார்தான் எனினும் நீ தானாய் பு நீ நிமிர்ந்து ஏனையோரைக் காத்தெம் கடற்காற்றை உள்ளிழுத்து மேனி உயிர்க்க இன்
। முடிந்து வழங்கிவிட்டுப் பேச்சற்றுப் போனவரைப் பென்னே உந்தனது முத்தத்தால்
|LTL தந்தோர் உயிர்த்துத் தம் ույրեւեդոուք ելքել Լնյլի, I

مجحے <
Qa.
r
L) è マー い
ܩ حے 工
之トごSTS
கின்ற SふS ܠܪ یخ زد مہینہ|\
நாம் புதைத்தோம்
]]
|L BlլլընԼեհյեն ԼIII ?
தொடங்கலையா?
தர. வீரர் բIIIEնIIIյլ եiլլը/
B
நீ முத்தமிடு