கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.08

Page 1

. | |-

Page 2
இளம் விமர்சகனுக்கான அறிவுரை அல்லது பக்கசார்பு பற்றிய கவிதை
ாப்கள் சங்கத்து உறுப்பினர் கவி எனிப் செங்கம்பளத்தை இடுக,
சீர்கள் தந்து
பிங்கில Jாழ்த்தும் பாடுக. மற்றவர் கவி என்றாலோ பூந்து' எப்கே 57ாப்கே பிழைtளதென்று
தேடுக,
இE என்றாலும், ”தேங்கை இவ்விடம் "தென்னை' என்றழைத்தல் பங்கம் என்றேனும் ஏதும் பறைக.
ஆத்துவத்தால் ஒத்துவர் சிறுகதை, கவிதை என்றாலோ ஒத்துழைக்குகி நன்றாய், அதுை ஊதி 28 தி மிகப் பெருப்பிக்குக. 'த்தளம் என்னுக,
"கெஞ்சி' என மற்றுவர் உர்ை: சோனினாபோ பித்துப்பிடித்தவர்போல் ஆங்கிலத்தில் பேசுக,
பொப்பாப் மூசுகவே,
目 s བྲི་
பேற்றுப் பாசறை இருந்ஆெதும் கவிதை 6)6. Grific J. (T(56.
ரீதர் அதற்குக் கூற்று. இ)T கவிதைக் குருத்தின் "குருமண் நோயும் நீயே. மாற்றார் பாத்தி மல்லிக்ரக வாசம் மின்ந்தொட வீசலாம் எனினும், அதன் கீழ்ச் சேற்றைப் பற்றியே நீ செப்பிடுக, இல்லையேல்,
'மெளனம்" எனத் தப்பிடுக.
영E
 

விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்
ஆசிரியர் : தி.ஞானசேகரன்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்கள் கிக்கோ நா. ஆனந்தன்
சுனானி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 19/7, பேராதனை விதி, கண்டி. (аљП.(Еш. -08-478.570 (ОТice)
08-23.4755 (Res.) Fax - 08-23.4755
E-Mini
iiiiiiii II i II in Elizinessīliwahı II. CLIII VM II in E "s¬¬.آبی. ܐ
உள்ளே.
நேம் காணல் . 28
வேறு வேறருவம் வேறு வேறியியற்கையும். ேெ "சம்பவாதி இ.ஜெயராஜ்
கட்டுரைகள்
எழுதத் தானடும் எண்ணங்கள் . III H; துரை.மனோகான்
பத்திரிகைத் துறை
id:li di la Tu mi ball 4 புலோலியூர் க.சதாசிவம்
கவிதைகள் இளம் விமர்சகணக்கான அறிவுரை
|- கோப்பி வேனாம் அப்பா வேணும் . 3 B ஆபரணி
Enliga'?TITIT liff, Li Mia! ......................................... 5 I பிதாமகன் In D fi, Ħidp 1. LIJ II) IT .............................. i i. . . . . . . . . . . 57 ச.முருகானந்தனர்
சமகாஸ்க் கலை இலக்கிய நிகழ்வுகள் . 21
ஈழத்து இலக்கிய
நம் பிக்கைகள் -07.26 தஞ்சைக்கடிதம் . : நேற்றைய கலைஞர்கள் . 다.
விவாதமேடை S SS SS SS SS SS SS SS S வாசகப் காசுகிறார்
அட்டைப்படம் - கிக்கோ

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
மணிவிழாப் பருவ ஆக்கஇலக்கியவாதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் நூலுருவம் பெறட்டும்!
1960களில், பொங்கிவரும் இலக்கிய ஆர்வத்துடனும் இளமைத் துடிப்புடனும் ஆக்கஇலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து இத்துறையில் ஈடுபட்டுவரும் இலக்கியவாதிகள் பலர் வயது அறுபதினை எய்தியுள்ளனர். இருபது வயதளவில் எழுதத்தொடங்கி? முப்பது வயதுகளில் பிரகாசித்த இவர்களில் சிலர், சாதனைகளும் படைத்துள்ளனர். ஈழத்தினர் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களை யதார்த்தமாக அழகாக ஆணித்தரமாகப் பிரதிபலிக்கும் ஆக்க இலக்கியம் தோன்றிய அறுபதுகளில் இலக்கிய உலகில் பிரவேசித்த இவர்கள், தொகையிலும் தரத்திலும் முன்னணியில் நிற்கின்றனர் என்பது இன்று இலக்கிய வரலாறாகியுள்ளது. இதற்குத் தாய்மொழிமூலமான கல்வியும், ஈழத்து விமர்சனத்துறையில் ஏற்பட்ட விழிப்பும் வழிகாட்டலும் பகைப்புலமாக அமைந்தன எனலாம். அரசியல் மாற்றம் தேசிய உணர்வுக்குக் கொடுத்த பரிமாணம், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் எமது படைப்புகள் பத்தாண்டு பின்தங்கியவை என்று குருட்டு மதிப்பீடு செய்தமை போன்ற அக்கால கட்டத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் உந்து சக்தியாக எழுத்தாளர்களைச் செயற்பட வைத்தன. சுயமொழிக் கல்வி காரணமாக பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் கல்விகற்று தாய்மொழியில் ஆரோக்கியமாகச் சிந்தித்து நவீன இலக்கியம் படைக்கத் தொடங்கினர் பவர். பல்கலைக்கழகத்தைவிட வெளியே பல துறைகளிலிருந்தும் பலர் ஆக்க இலக்கியம் படைத்தனர்.
4
 
 
 
 
 
 
 
 
 

தேசிய இலக்கியம் புதிய பரிமாணமாகிய மண்வாசனையுடன் பிரதேசப் பணிபுதுலங்க தேசிய ரீதியில் திரட்சி பெற்றது. மலையகம், மட்டக்களப்பு, தலைநகர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் சில மாவட்டங்கள் ஆகியவற்றில் இருந்து பல எழுத்தாளர்கள் பிரதேச இலக்கியம் படைத்தனர். ஆக்க இலக்கிய எழுத்தாளர்களினர் ஆற்றல் பீரிட்டெழுந்தது. ஐம்பதுகளினர் பிற்பகுதியில் முளைவிட்ட முற்போக்கு இலக்கிய சித்தாந்தம் சமூக முரணர் பாடுகளுக்குரிய காரண காரியத் தொடர்புகளைத் தெளிவாக்கியது. வீறாப் புடனும் வீரியத்துடனும் இயங்கிய விமர்சர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கோவுத்டி சேர்ந்து கருத்துக் கலகம் உருவாகியது. பேராசிரியர் கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் ஒரு கோவுத்டியினர் முன்னணியிலும், பேராசிரியர் ஆ.சதாசிவம், கனக செந்திநாதனர், எளப்பொ, தளையசிங்கம் ஆகியோர் எதிர்த்தரப்புகளிலும் நின்று வாதிட்டனர். கலகம் பிறந்தபோது நியாயம் பிறந்தது. ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் அறிவுக்கம் ஆற்றலுக்கும் அநுபவத்திற்கும் ஏற்ப நியாயத்தைப் புரிந்து செயற்பட்டனர். ஈழத்தினர் இலக்கியச் செல்நெறி கம்பீர நடைபோட்டது. அன்று இலக்கிய அணியில் பட்டாளமாகச் சேர்ந்து இன்றும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தினர் தனித்துவத்தைப் பாதுகாத்துவரும் இந்த எழுத்தாளர்கள் பலர் இன்று மணிவிழாக் கண்டுள்ளனர். சிலரினர் மணிவிழாக்களர் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன. மணிவிழா மலர்களும் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் தெணியானின் மணிவிழா கொண்டாடப்பட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. நாம் ஏற்கனவே டொமினிக்ஜிவா நந்தி, சொக்கர்ை, சோமகாந்தனர், போன்றோரினதும் இன்னும் சிலரினதும் மணிவிழா மலர்களைக் கணிடிருக்கிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இலக்கிய கர்த்தாக்களின் பன்முக ஆக்க ஆளுமைகளைப் பல கோணங்களிலும் நோக்கியுள்ள அதேவேளையில் வெறும் புகழ்பாடும் கைங்கரியங்களையும் செய்துள்ளன.
மணிவிழாக்காணும் ஆக்க இலக்கியவாதிகள் அவர்தம் வாழ்நாளில் எழுதிய தேர்ந்தெடுத்த படைப்புகளான மலர்களைத் தொகுத்து மாவை யாக்கி? நூலாக வெளியிடுவது ஒர் ஆரோக்கியமான செயற்பாடாக அமையும் என்ற கருத்தினை ஞானம் இலக்கிய உலகிற்குச் சமர்ப்பிக்கிறது. இம்மாலை குடும் விழாவாக மணிவிழா அமையவேண்டும்.
மணிவிழாக் கோவம்கொண்ட அனைத்துக் கலை இலக்கிய வாதிகளையும் நாம் மனமார வாழ்த்தி பவளவிழாக் காணவேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம்.
VV VV VV.geocities.com\gnanam_magazine
LTTSSS SSSSS S SLLLLSLSSS SLSSS SS SS SSSSLS SLSSLL LSLSS LLSS SS0 SLLLSS LLLSS الے ســــ ـــــــــــــــ
5

Page 4
责 Nästa ம்யூவ வேறு வேறுருவும், இர்ேஜ்
* 如
வேறு வேறியற்கையும். 1970 හි%tb ජේෆ්ලි, உவப்பின் எல்லையில் நின்றது அந்தக்கூட்டம் கல்லூரி மைதானத்தின் மதிற்கவர். மதிலின்மேல் நால்வர்.
எஸ்ராண்டில்’ இடப்பட்ட ஹரோ சைக்கிளில் குந்தியபடி நால்வர்.
திலில் குந்தியிருந்த இருவரின் விரிந்த கால்களுக்குள், படுத்துக் கிடக்கும் போஸ்சில்' இருவர். அழுக்கான டெனிம் எலிபன்ற் பாண்ட்’ அவர்கள் அனைவரினதும் யூனிபோம் ஆகியிருந்தது. பட்ரிக் சேர்ட்டுக்களின் திறந்திருந்த மேற்சட்டைப்பொத்தான்களுக்கிடையில் தெரிந்த மார்பில், அண்மையில் அரும்பிய உரோமங்கள் இளமை பேசின. அதற்குள் கறுப்புநூலில் கட்டப்பட்ட ஏதோவொரு வெள்ளி டொலர் மழுக்காமலும், நீட்டாமலும் இடையில் தொங்கும் சிகையலங்காரம் கையில் சுருண்டு கிடக்கும் கொப்பி, அவர்களை மாணவர்கள் என, அடையாளங்காட்ட முயல்கிறது.
சைக்கிள் கரியரில்' உட்கார்ந்து பெடலை உதைத்தபடி இருக்கிறான் வசா. ஒட்டிய வயிறும், இறுகிய கைகளும், அவன் கராத்தே பயிற்சியை பறைசாற்றுகின்றன. மதிலில் குந்தியிருந்தவனைப் பார்த்துப் பேசத்தொடங்குகிறான் அவன்
மச்சான், வரா! அந்த டொக்ரற்ற சரக்கு என்னவாம்? இரா என்றழைக்கப்பட்டவனின் முகத்தில் பிரகாசம் பக்கத்தில் இருந்தவன் கையில் வைத்திருந்த பாதி சிகரெட்டைப் பறித்து, ஒரு இழு இழுக்கிறான். கண்ணை மூடி அவன் புகையை ஊதிய பாணியில், பிரபலமான சினிமா நடிகரின் ச7யல். அதுதான் மச்சான், ஒன்றும் விளங்கேல. கிளாஸ்’ முடிஞ்சு வெளிக்கிடேக்க,
ஒவ்வொருநாளும் ஒரு எறி எறிஞ்சு போட்டுப் போறாள்.'
பெருமூச்சு விடுகிறான் அவன் அவன் விட்ட இடைவெளிக்குள் மீண்டும் புகுகிறான் வச7.
பேந்தென்னடா மச்சான்! மடக்க வேண்டியதுதானே? வராவின் முகத்தில் வாட்டம் பிரச்சனை அதுதான்டா வச7. ரியூட்டறி' முடிஞ்சு சைக்கிள’ எடுக்கேக்க ஒரு எறி எறியுறாள்.
 

பிறகு பிரண்ட்சோட' போகேக்க கவனிக்காத மாதிரிப் போறாள். முடிவெடுக்க முடியாமக் கிடக்குது மச்சான்’ உறிஞ்சி வரா இழுத்த இழுப்பில் சிகரெட் தன் கடைசி உயிரை விடுகிறது.
மச்சான்! உந்தச் சரக்குகள் இப்பிடித்தான். எங்கள வழிய விடுறதில அவளவைக்கு ஒரு சந்தோஷம் கொஞ்சம் ஏமாந்தமோ, பேக்காட்டிப் போடுவாளவயள்’
அருகில் இருந்த புலா தத்துவம் பேசினான். மச்சான் புலா! நீ இன்னும் அந்த டிஸ்பென்சறி" சரக்கு வெட்டினத மறக்கேல போல.
டேய் வரா! இவன் வாலறுந்த நரி
இவன்ர கதைய விடு
fb5 62íl /TLDaf ag6ou I /7, 676ó6w765; 49/f62(Dyló. சாமான், சங்கு. தவறவிட்டுடாத, வராவை உற்சாகப்படுத்தினான் வச7. டேய் உமா! இவங்கட கதைய விட்டுட்டு நீ சொல்லு, என்னவாம் பக்கத்து விட்டு அன்ரி? இப்பவும் விடியக்காலேல கோப்பி வருதோ?, தான் அக்கறையோடு பேணும் சுருட்டைத் தலைமுடியை விரல்களால் அலைந்தபடி, விதா உரையாடலைத் திசை மாற்றுகிறான்.
போடா. و எழுத முடியாத வார்த்தை ஒன்றைச் சொல்லிச் சிரிக்கிறான் உமா. அவனது கறுத்த உதடு சிகரெட் பயிற்சியை வெளிப்படுத்துகிறது.
tdafay/7607 g/62/60f td6076076077 (I, அவனுக்கென்ன? ஒவ்வொருநாளும் காலை எழுந்தவுடன் படிப்புத்தான்." படிப்பு என்பதை வேணுமென்றே அழுத்திச்சொல்கிறான் மகான். டேய் மச்சான்! எப்பவாம் அன்ரிட அங்கிள் சவுதில இருந்து வர்றார்? நையாண்டியா? நிஜமா? என்று தெரியாத தொனியில் விதா கேட்க, அவர் வந்தா இவற்ற கதை சரி இவர் ரூமை விட்டு ஓடவேண்டியது தான், மகான் கிண்டலடிக்கிறான்.
மச்சான்! மச்சான்! ரூமை விடுறதெண்டால், எனக்குச் சொல்லு நான் எடுக்கிறன்' அன்ரிட்ட கோப்பி குடிக்க எனக்கும் ஆசையாக் கிடக்கு. கனா போலியாய்ப் பரபரப்புக் காட்டுகிறான். ஓடு நாயே! உனக்கும் ஆசைதான். அதுக்கெல்லாம் ஒரு ராசி வேனும் முஞ்சைய இடைக்கிடை கண்ணாடில பார்’ மீண்டும் எழுத முடியாத ஒரு சொல்லைப் போட்டு, நீ ஆயுட்காலம் முழுக்க முயற்சித்தாலும்.
அன்ரிட. க்கு கிட்டயும் போகமுடி/து. உமாவின் வார்த்தைகள் வரம்பைத் த லண்டுகின்றன.
மச்சான்! மச்சான்!
7

Page 5
நீ அளவுக்கதிகமாய் உணர்ச்சி வசப்படாத, நான் இருக்கிற இடம் சரியில்ல. உமாவின் காலுக்குள் கிடந்த விதா கத்த, குழுவிடம் இருந்து கும்மாளமாய் வெடிச்சிரிப்பு
மச்சான்! வி ரி கே. யிட கிளாஸ் முடிஞ்சு சரக்குகள் வெளிக்கிடுது. வாங்கோ! அவடத்தடிக்குப் போவம் குதுரகலமான அக்கூட்டம் கலைகிறது.
Cc3 D C D Cc3 D
1980 ஆம் ஆண்டு, நல்லூர்க் கோயில் விதி காலை மாம்பழத்திருவிழாக் கூட்டம். மாம்பழத்துக்காக வைக்கப்பட்ட போட்டியில் வெற்றிபெற, முருகன் நேர்மையாய் விதி சுத்தத் தொடங்குகிறார். குறுக்கு வழியில் தாய் தந்தையரைச்சுற்றி, மாம்பழம் பெற்ற கணபதியாருக்குப் பஞ்சாலாத்தி காட்டப்படுகிறது. தேர்முட்டி நடுவில் ஒரு சந்திப்பு
என்ன மச்சான் வரதன்! எப்ப கொழும்பால வந்தனி? எப்பிடி வேல போகுது?
வெள்ளை வேட்டி,
அயன்பண்ணிய அரைக்கை சேர்ட் படிய வாரிய தலைமுடியுடன், சற்று தோற்றம் மாறிப் பளபளப்பாய் நின்ற வரதனைப்பார்த்து, வேட்டியும், சால்வையுமாய் நின்ற விஷ்ணு கேட்கிறான். அங்க என்னடாப்பா, மெசின் லைப்' தான். காலம எழும்பி பின்னேரம் வரைக்கும் நாயடி அடிக்க வேணும், சலிக்கிறான் வரதன்.
ஹலோ மச்சான் வரதன்' குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, பிறதட்டை மண்ணைத் தட்டியபடி, இருவரையும் நோக்கி வருகிறான் உமாகாந்தன்
என்னடா மச்சான் பிறதட்ட எல்லாம் செய்யுற போல, இப்ப பெரிய பக்தி மானாக்கும். வீட்டுக்கார அன்ரியும் அழயளக்கிறவவோ? நக்கல் சிரிப்போடு கேட்கிறான் வரதன்.
போடா மச்சான்! பழங்கதையை இப்பவும் கதைச்சுக்கொண்டு. உனக்கென்ன கொழும்பில வேலை கிடச்சிட்டுது. ாங்கள் படுர பாடு எங்களுக்குத்தான் தெரியும். அப்பருக்கு எப்ரோக்” வந்துட்டுது. அவர் இப்ப விட்டோட தான்

இவள் தங்கச்சிட கலியாணமும் ஒன்டும் சரிவருகுதில்ல. கனக்கு வேலையொண்டும் கிடைக்குதுமில்ல. படிக்காம ஊர்சுத்திப்போட்டு, சும்மா இருந்து தின்னிறனென்டு வீட்டில ஒரே அர்ச்சனை தான். வெறுத்துப் போச்சுடாப்பா. அதான் இந்தவருசம் நேர்ந்து முருகனுக்குப் பிறதட்ட பண்ணுறன்.' சலிக்கிறான் உமாகாந்தன். அப்ப அன்ரிட பிறதட்ட இப்ப இல்லையே!” விஷ்ணு நக்கலாய்க் கேட்க, போடா விசரா, நான் படுற பாட்டில அன்ரியும், மயிரும், உனக்கு விளையாட்டாக் கிடக்கு. விஷ்ணுவை முறைத்து விட்டு, மச்சான் வரதன்! அங்க கொழும்பில எனக்கொரு வேல எடுத்துத் தரமாட்டியே!” கெஞ்சல் தொனியில் கேட்கிறான் உமாகாந்தன். நீ ஒன்டும் யோசிக்காத காந்தன், நான் கொழும்பு போய் எப்பிடியும் றை' பண்ணுறன். அவன் தோளில் ஆறுதலாய்க் கைபோட்டு, சொல்கிறான் வரதன், அதுசரி கனநாதனும், மகாராஜாவும் எங்கடாப்பா, ஆக்களக் கோயில் பக்கமே காணேல? வரதன் மீண்டும் விசாரிக்க, அவங்கள் லண்டனுக்குப் போனது உனக்குத் தெரியாதே? வசந்தனும் லண்டன் போறதுக்கெண்டு கொழும்பிலதான் வந்து நிக்கிறான். நீ காணேலெயே? விசாரிக்கப்படாத வசந்தன் பற்றிய செய்தியையும், சேர்த்துச் சொல்கிறான் உமாகாந்தன் அப்பிடியே? நான் கொழும்பில நிண்டனான், நாய்கள் ஒரு வார்த்தை சொல்லேல எனக்கு, உங்களுக்கெண்டாலும் கடிதம் போட்டவங்களே? மீண்டும் வரதனின் விசாரணை ஓமடாப்பா ஏஜென்சியோட போனபடியா ஒருத்தருக்கும் சொல்லேலையாம். அங்கயும் விசரடிக்குதெண்டு எழுதியிருக்கிறாங்கள் ரெண்டு பேரும் ஆளையாள் கண்டா, எப்ப இஞ்ச வரலாம் எண்டுதான் கதைக்கிறவங்களாம்." விபரம் சொல்கிறான் விஷ்ணு அதுசரி புலவற்ற கோஸ்’ எப்ப முடியுதாம்? அவன் ஒருத்தனாவது எங்களுக்குள்ள என்ர' பண்ணினது பெரிய காரியம். டிவுர்பென்சரி சரக்கு வெட்டின ரோசத்தில கவனமாய்ப் படிச்சு என்ர' பண்ணிட்டான்." மீண்டும் வரதனின் விசாரணை

Page 6
நீ இன்னும் அவனக் காணேலையே! அவங்களுக்குக் கோஸ் முடிய இன்னும் ஐஞ்சு வருசம் ஆகும7ம், காணுறபோதெல்லாம் சலிச்சுக் கொண்டு இருக்கிறான் அவன்.' இது உமாகாந்தனின் பதில்.
என்ன ஐஞ்சு வருசமோ? அப்ப கிழண்ட பிறகுதான் அவருக்குக் கலியாணம்’ வரதனின் கொமண்ட்’ கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள் டேய்! அவன்ர பாடு பறவாயில்ல, கிழண்டாலும் டொக்ரருக்கெண்டா பொம்பள குடுப்பாங்கள். எங்கடபாடுதான் பிரச்சனை, இது விஷ்ணு சரி மச்சான் நான் வெளிக்கிடப் போறன் தங்கச்சியவளவையும், மச்சாள்மாரும் என்னோட வந்தவையள், பார்த்துக்கொண்டு நிப்பாளவையள்.
வரதன் புறப்படுகிறான். பேந்தென்ன! மச்சாள்மாரையும் ஹாட் பண்ணத்தொடங்கிட்டீராக்கும்." மீண்டும் விஷ்ணு
போடா விசரா உனக்கெப்பவும் பகிடிதான். நான் நாளைக்கு வெளிக்கிடுறன். இனி டிசம்பருக்குத்தான்."
வரதன் புறப்பட,
ஏன் மச்சான்! தேருக்கு நிக்கேலெயே? அக்கறையோடு கேட்கிறான் உமாகாந்தன் "ரெஜினிங் பீடியற்" மச்சான்,
லிவுதராங்கள்
அடுத்த வருசம் பாப்பம்
ஒகே’ மச்சான் சீ யூ"
கூட்டம் கலைகிறது.
CES SEO C235 DRO CO2 SO
1995 ஆம் ஆண்டு,
ஊதல் காற்றால், பனிக்குளிர் மேலும் ஆவேசமடைகிறது. வெறிச்சோடிய விதிகளுக்கு மறுதலையாய், கூட்டம் நிறைந்த ஒரு பப்" கையில் விளப்கியோடு வசந்தகுமார் கணபதி, மகாராஜா முவரும், ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள் தோள்களை உயர்த்தி கோர்ட்டை அட்ஜெஸ்ற் செய்தபடி, என்ன மச்சரன்! சிலோன்ல' இருந்து எதாவது நியூஸ்' வந்ததே? விஸ்கியை உறிஞ்சிக்கொண்டு கணபதி கேட்கிறான். நோ மச்சான்! கனநாளா ஒரு லெற்றசையும் காணேல. நாங்களும் லண்டன் வந்து ()பிப்ரின் இயர்ஸ்' ஆகிட்டுதெல்லே.
10

கன நாள ஒருவரோடையும் கனக்சன் இல்ல, விஷ்ணுதாசன் மட்டும் லாஸ்ற் இயர் ஒரு லெற்றர் போட்டிருந்தவன்.' - இது மகாராஜா.
என்ன நியூசாம்'7 - மீண்டும் கணபதி வரதன் தன்ர மச்சாளத்தான் கலியாணம் முடிச்சவனாம். இப்ப அவனுக்கு மூன்று பிள்ளையளாம். மகராஜா சொல்ல,
ஓ அப்பிடியே? அப்ப அவன் முந்தி லவ் பணிணின டொக்ரற்ற டோற்றருக்கு' என்ன நடந்ததாம்? முந்தி அவள முடிக்காட்டி சுவிசயிற் பண்ணுவன் எண்டு சொல்லுவான். இப்ப மச்சாள எப்பிடி முடிச்சவனாம்? கணபதி கேட்க, மூவரும் சிரிக்கிறார்கள் அந்த ஏஜ்ஜில அப்பிடித்தான் மச்சான் நாங்களும் அப்பிடி நினைச்சனாங்கள் தானே!" இது வசந்தகுமார். "யெஸ், யெஸ், தற்ஸ்றுா' என்று ஆமோதித்த கணபதி, பருத்த வயிற்றைத் தடவியபடி இருந்த வசந்தகுமாரை நோக்கி, உம்மட வைப்பிட டான்ஸ் கிளாஸ் எல்லாம் இப்ப எப்பிடிப் போகுது? அக்கறையோடு விசாரிக்கிறான். முந்தி மாதிரி இல்ல மச்சான், செக்கண்ட் டெலிவரி" அவவுக்கு சிசிரியன்னல்லே, அதால கிளாசஸ்ச' இப்பக் குறைச்சுப் போட்டா, அதோட நானும் டயப்பிற்றிக் பேசன்ராப்' போனதால, என்னையும் கவனிக்க வேணுமென்டு இப்ப விட்டு வேலையளிலதான் கூட மினக்கடுறா. வசந்தகுமார் சொல்ல,
ஓ நீரும் இப்ப டயப்பிற்றிக் பேசன்ரே7 கேள்வியிலேயே தன்நோயையும் வெளிப்படுத்துகிறான் கணபதி உம்மட கெல்த்’ எப்பிடி மச்சான்? இருவரும் மகாராஜாவை விசாரிக்கிறார்கள்.
நல்ல காலம் எனக்கு இன்னும் டயப்பிற்றிக்' வரேல. ஆனால், பிறசர்’ கொஞ்சம் இருக்கு. அதோட, கேணியா ரயிலும் இடக்கிடை, டொக்ரர்ஸ் ஒப்பிரேசன்' பண்ண வேணும் என்றாங்கள் மனிசி இப்ப லிவெடுக்க முடியாது, பிறகு செய்யலாம் எண்டு சொல்லுது பெருமுச்சோடு மகாராஜா சொல்லி முடிக்க, மகாராஜாவின் குடும்பப் பூசலை ஓரளவு அறிந்திருந்த கணபதி, கதையை மாற்றி,
மச்சான்! நீங்கள் கேள்விப்பட்டனிங்களே? அங்க சிலோனில விஷ்ணுவுக்கும், (1) பெஸ்ற் அட்ராக்' வந்ததாம் அல்லே, அரும்பொட்டுல தப்பினவனாம்.
II

Page 7
வரதன்ர மகன் ஒருவனும் ரைகேசில சேர்ந்து, கடைசி அட்ராக்கில செத்து போட்டானாம். அதால, வரதனும் சாடையா மென்ரல்’ மாதிரி திரியிறானாம். எல்லாரையும் ஒருக்காப் போய்ப்பாக்க விருப்பமாத்தான் கிடக்கு, ஆனால் அந்த கொட்கிளைமற்’ எனக்கு ஒத்துக்கொள்ளாது. அதான் யோசிக்கிறன்' பெருமுச்சோடு சொல்லி முடிக்கிறான் கணபதி ஓமோம் நானும் நினைச்சனான் தான், ஆனால், அங்கு ஒரே மொஸ்கிற்றோசாம், பிள்ளையளி விருப்பப்படுகுதுகள் இல்ல. அங்க காரும் ஓடமுடியாதெண்டு எழுதுகினம், அதான் யோசனையாக்கிடக்கு. இது மகாராஜா. சரி மச்சான், லேட்டாகியிட்டுது. இனி வெளிக்கிடுவம்
வி வில் மற் நெக்ஸ் ரைம். கார்ச் சாவிகளைக் கையில் எடுத்து முவரும் கிளம்ப, கூட்டம் கலைகிறது.
C3 SO C. S C3 )
2020 ஆம் ஆண்டு, வெள்ளவத்தைக் கடற்கரை. கடற்கரையோர சிமெந்து பெஞ்சில் நான்கு உருவங்கள். நரைத்த தலை, சோடாப்புட்டிக் கண்ணாடி. ஊத்தை படிந்த கொலறோடு கடின சேர்ட் இரண்டுமுன்றுதரம் செருமி காறித் துப்பியபடி, வரதர் பேசத்தொடங்குகிறார்.
டொக்ரர்! கொஞ்சநாளாய் இந்த சளி பெரிய பிரச்சனையாக் கிடக்கு, 676,076.07 65uiua/Tib? கடலை வெறித்தபடி இருந்த டொக்ரர் புலவர்க்கடியான், "ஏஜ் ஏற, ஏற, வருத்தங்கள் வரத்தான் செய்யும். நீங்கள் முந்தி செயின் சிமோக்கர், அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். பிறகு டிஸ்பென்சரிக்கு வாங்கோ, கொஞ்சம் ரெஸ்ற்றுகள் எடுத்துப் பாப்போம். கால்களை, கொஞ்சம் கொஞ்சம் உயர்த்தி,
எக்சசைஸ்” செய்தபடி பதில் சொல்கிறார் அவர் டொக்ரர் நீங்கள் கேள்விப்பட்டனிங்களே, லண்டனில, எங்கட மகாராஜர் போனவருசம் திடீரென்று ஹார்ட் அட்ராக்கில போயிட்டாராம். பாருங்கோ இருபது வருசத்துக்கு முன்னுக்கு ஹார்ட் அட்ராக் வந்த நான் இப்பவும் இருக்கிறன் அந்த ஆள் போய்ச் சேர்ந்திட்டுது.
12

அவற்ற பெண்டில், இரண்டு பிள்ளைகளையும் இவரிட்ட விட்டுட்டு வேற ஆரோடையோ ஓடினதோட அந்த மனுசன் பாவம் நோயாளியாப் போச்சு நல்ல காலம், நாங்கள் லண்டன் போகாமல் விட்டது. அங்கத்தப் பெண்டுகள் ஒடுகாலிகள் எங்கடதுகள் என்ன சண்டை பிடிச்சாலும் காலைச் சுத்திக்கொண்டு கிடக்குங்கள். விஷ்னுதாசனார் தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி சொல்ல, ஓமோம் நிங்கள் சொல்லுறது உண்மைதான். இப்பவும் நான் விடியக்காத்தால எழும்பினவுடன, தன்ர நாளிப்பிடிப்பையும் பாக்காம, இந்த வயசிலயும், சின்னப்பெட்டயப்போல மனிசி கோப்பி கொண்டு ஓடிவருகுது வாழ்க்கை அமையிறதெல்லாம் விதிதான் பாருங்கோ.' ஆமோதிக்கிறார் உமாகாந்தனார்.
ஒமோம், நீங்கள் சொல்லுறது சரிதான் நானும் என்ர பெடி இயக்கத்துக்குப் போய்ச் செத்ததோட இதைத்தானி நினைச்சனான் கொஞ்சநாள் விசரன் மாதிரித் திரிஞ்சன் பிறகு விதியைப் பற்றி ஒரு பிரசங்கியார் சொல்லத்தான் என்ர மனம் கொஞ்சம் தேறிச்சு முருகா! பிள்ளைகளைப் பெத்து நாங்கள் படுற பாடு போதும், வரதராஜர் மெதுவாக விம்முகிறார். குழிவிழுந்த கணிகளை இடுக்கியபடி, நீங்கள் சொல்லுறது சரிதான் வரதர்' நீங்கள் பிள்ளைய இழந்து பாடுபடுரிங்கள் நான் வச்சுக்கொண்டு பாடுபடுறன். என்ர முத்தவன், தங்கச்சிமார் குமரா இருக்க, ஒரு பெட்டையோட திரிஞ்சான் என்ன சொல்லியும் கேட்கமாட்டேனெண்டுட்டான். பிறகு, அவள் பிள்ளத்தாச்சியாப்போனாள் எண்டு அந்தப் பெட்டேட தாயப்தேப்பன் சண்டைக்கு வந்திட்டாங்கள் குமருகள வைச்சுக்கொண்டு அவனக் கட்டிக்குடுத்தனான். இப்ப அதுகளக் கரையேத்த,
றிற்டெயர்' பண்ணிப்போட்டும் வேலை செய்ய வேண்டிக்கிடக்கு. எல்லாம் என்ர விதி' உமாகாந்தர் கண்கலங்கிச் சலிக்கிறார்.
சரிசளி, நீங்கள் வெறி' பண்ணாதேங்கோ, உமாகாந்தன் அந்த வயசு அப்படித்தானே! பழசுகளை நீங்கள் மறந்திட்டீங்கள் போல படிக்கேக்க விட்டுக்கார அன்ரியோட நீங்கள் பட்டபாடு/. டொக்ரர் புலவர்க்கடியான், ஒருபக்கம் பொக்கையான தன்வாயைத் தடவியபடி சிரிக்கிறார். ஓமோம்! இவற்ற அந்த விளையாட்டுக்கள மறக்கமுடியுமே?
13

Page 8
வரதருடைய சிரிப்பு இருமலுக்கிடையே வெளிவருகிறது.
சும்மா பழங்கதையள் கதையாதைங்கோ, இப்பதான் அந்தப் பாவங்கள் விளங்குது. வெட்கமும், வேதனையும் கலந்த சிரிப்பு, உமாகாந்தனார் முகத்தில்
சரி சரி குளிர்காத்து வீசத்தொடங்கிட்டுது வெளிக்கிடுவம். முடிஞ்சால் நெக்ஸ்ற் வீக் சந்திப்பம்." கொக். கொக்!!. கொக்! வரதர் எழும்புகிறார். யெஸ், யெஸ் எனக்கும் இது ஒத்துக்கொள்ளாது தான்." வோக்கிங் ஸ்ரிக்கை’ எடுத்துக்கொண்டு டொக்ரர் புலவர்க்கடியானும் நடக்கத்தொடங்குகிறார். கொஞ்சம் பொறுங்கோ டொக்ரர், உங்கட கையப்பிடிச்சுக்கொண்டு அதுவரைக்கும் நானும் வiறன். இந்தக் கைகால் நடுக்கம் வரவரக்கூடுது' உமாகாந்தனாரும் டாக்ரரின் கைபிடித்து தள்ள7ழநடக்க, நீங்கள் நடவுங்கோ, நான் மெல்லமெல்ல வர்றன், இந்த நாளிப்பிடிப்புச் சனியன், டக்கெண்டு எழும்ப விடுதில்ல, விஷ்ணுதாசனார் விடைதரக் கூட்டம் கலைகிறது.
C38 SO C93. SO C93. S)
2030 ஆம் ஆண்டு, அதே கல்லூரி முன்னைய அதேமதிற்கவர் மாபிள் வேய்ந்து அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. மதிற்கவரில் நால்வர், ஸ்ராண்டில் விடப்பட்ட புதிதாய் வந்த மொவுதிக்கி மோட்டார்சைக்கிளில், முன்னும் பின்னுமாய் நால்வர்.
ஹலோ மச்1 இன்டைக்கும் கொம்பியூட்டர் கிளாசுக்குப் போகேலயே? கசங்காத முழுக்கைச் சட்டையுடன் இருந்த அம்றித்திடம், ரிசேட் அணிந்திருந்த முக்கேஷ் கேட்கிறான். அவனது ரிசேர்ட்டின் நெஞ்சுப் பகுதியில்,
கிளப் மி" என்ற கோரிக்கை. விசர் மச்சான், இந்தக் கொம்பியூட்டரோட இருந்து, இருந்து அலுத்துப் போச்சுது நெடுக இந்த மவுசத் தடவித்தடவி விசரடிக்குது. இது அம்றித்தின் பதில் ஒமோம் உமக்குத் தடவ எத்தின இருக்குது, உது அலுப்படிக்குந்தான்.' மோட்டசைக்கிள் சிற்றிலிருந்த கிறிவின் நக்கலிது விட்ட (1)பாதர் கேட்டால் என்ன சொல்லுவ? மதிலிலிருந்து சிகரெட்டை உறிஞ்சியபடி கேட்கிறான் குமரேஸ் அவன் கையில் ஒரு பெரிய இரும்பு வளையம். ஒற்றைக் காதிலும், கண்புருவத்திலும் வெள்ளித்தோடுகள் அவர் கேள7ர்.
14

பாவம் கிறான்ட்()பா செத்த கவலேல அவர் இருக்கிறார்." அம்றித் சொல்ல,
என்னது? டொக்ரர் புலவர்க்கடியான் மண்டையப் போட்டுட்டுதே? ப்றிதன் புதினம் கேட்கிறான். போட்டிட்டுதேயோ? அது எப்ப மண்டையைப்போடும் எண்டு தவம் இருந்தனான்.
கிழட்ஸ்’ தந்த அலுப்புக் கொஞ்சநஞ்சமே? இன்ரநெட்டில ராத்திரில கொஞ்சம் (ரிபிகர்ஸ்’ பாக்கலாமெண்டால், நொண்டி நொண்டி வந்து எட்டிப்பாக்கும். இப்பதான் கொஞ்சம் நிம்மதியா எல்லாம் பாக்கிறன். அம்றித் சொல்ல, மச்சான் அந்த வெப்சைட் அட்ரசை' எனக்கும் ஒருக்காச் சொல்லு மச்சான்? முக்கேஷ் ஆவலாய்க் கேட்கிறான்.
இவங்களப் பாற்ற7 மச்சான், இன்னும் சின்னப்பொடியங்கள் மாதிரி இன்ரநெட்டில பாக்கிறாங்கள் ஒமெண்டால் சொல்லுங்கோ மச்சான், வர்ற சண்டே நேராப் பாக்கக் கூட்டிக்கொண்டு போறன்’ கையால் ஏதோ ஜாடை காட்டி கிறிவுச் சொல்ல, ஓ எனப் பெரும் சிரிப்பு. அதுசரி, நேற்றுப் ஹாண்டில கதைக்கேக்க, சரக்கு நிக்குது பிறகு கதைக்கிறன் எண்டனி u IIsill/Ill IT 9,525 at Taig5? மீண்டும் அம்றித்தைக் கேட்கிறான் குமரேஸ் அது என்ர கிராணி ()பாவிணர ()பிரண்டிட பேத்தியாம். லண்டினில இருக்கிறவையள், (h) கொலிடேக்கு வந்திருக்கினமாம். கிரண்ட் ()பா செத்தது கேள்விப்பட்டு விட்டுக்கு வந்தவையள். பேத்தியும் வந்தவள், செய்தி சொல்லித் தொடர்கிறான் அம்றித்.
மணிச் சரக்கடா மச்சான்! பெரியாக்கள் ஹோலுக்கிள' இருக்க, கொம்பியூட்டரில அவளோட ஒரே விளையாட்டுத்தான். நேரம் 1ே7னது தெரியேல. அம்றித் சொல்லி முடிக்க,
துலைஞ்சுது போ. அப்ப நேற்றுமுழுக்க மவுஸ் ஓடி ஆடிக் களைச்சிருக்கும். வழக்கமாகவே வரம்புமிறிப் பேசும் கிறிவுத், இரட்டையர்த்தத்தில் கொமண்ட்’ அடிக்க, ஓ எனக் கும்மாளச் சிரிப்பு வானைத்தொடுகிறது. மச்சான்! சரக்கு விட்டுல தான் நிக்குது.
15

Page 9
(s) சொப்பிங் கூட்டிக்கொண்டுபோக வர்றன் எண்டு சொன்னனான். நான் போகவேனும் நாளைக்குச் சந்திப்போம்,
af” u (b) L/(Tun.” அவன் உதைத்த உதையில் மொவுதிக்கி’ சிறிப்பாய, கூட்டம் கலைகிறது.
(3 S) (S S) (S S)
வாசகருக்கு என் வணக்கங்கள். வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும் என்ற திருவாசக அடிகளைக்கொண்ட தலைப்பையும், கீழேயிருந்த எண்பெயரையும் பார்த்துவிட்டு, நான் திருவாசகம் பற்றி எழுதப்போவதாய் நீங்கள் நினைத்திருந்தால், பாவம்! ஏமாந்திருப்பீர்கள். திருவாசகம் படிக்கும்போது வந்த, புதியதோர் உலகியல் சிந்தனையை, இவ்வாக்கமாய் வெளிப்படுத்தி இருக்கிறேன். பக்தியுடன் திருவாசகம் படிப்பவர்கள் என்னை மன்னிப்பார்களாக! அத்தகையோர்க்கு இந்த ஆக்கம் சற்றுக் கோபத்தைக்கூடத் தரலாம். சில இடங்களில் சொற்கள் வரம்பு கடந்திருக்கின்றன. உங்கள் நிலைக்கு இவை அவசியமா? என்மேல் மதிப்புக்கொண்டோரின் கேள்வி காதில் விழுகிறது. மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன். யதார்த்தத்தை நிஜமாய் வெளிப்படுத்த, அச்சொற்கள் தேவைப்பட்டன. ஆக்கமுயற்சியில், எழுத்தாளனின் தகைமை, பாத்திர உணர்வைப் பாதிக்கக்கூடாதென்ற என்விருப்பத்தின் விளைவிது. யதார்த்தம்நோக்கி, கூச்சத்தோடு அவற்றை எழுதி முடித்தேன். கல்லூரிக்காலத்தில், சக நண்பர்களிடம் கேட்ட உரையாடல், கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல மாறியதை, இரசனையோடு அவதானித்திருந்தேன். அவர்தம் செயற்பாடுகள், உருவிலும், இயல்பிலும், நூறு நூறாயிரம் மாற்றங்கள் கொண்டன. இவ் ஆக்கத்தில், பந்திக்குப் பந்தி, வார்த்தைகளிலும், செயல்களிலும், தோற்றங்களிலும், அனுபவத்தால் வந்த அவர்தம் மாற்றங்களை,
16

மறைமுகமாய்க் குறிப்பிட்டிருக்கிறேன். புலா, புலவராகி, புலவர்க்கடியாராவதும், நி, நீர், நீங்கள் என உரையாடல்கள் மாறுவதும், கசங்காத சட்டை போட்ட வரதன், வரதனாராகும்போது அழுக்குக் கொலர்ச்சட்டை போடுவதும், சுருட்டைமுடி விஷ்ணு, வழுக்கைத் தலையராவதும், கராத்தே வசந்தனுக்கு, வயிறு ஊதுவதும் இம்மாற்றங்களின் அடையாளங்கள். மற்றும் பல உங்கள் தேடலுக்கு. முதல் பந்தியில், காமம் கலந்த இளமைக் குதூகலத்தையும், இரண்டாம் பந்தியில், வாழ்வைச் சந்திக்கும் இளமை மருட்சியையும், மூன்றாம் பந்தியில், நோய்தொடும் நடுத்தர வயதுக் குழப்பங்களையும், நான்காம் பந்தியில், முதுமையின் அனுபவ வெளிப்பாட்டையும் காட்டி, ஐந்தாம் பந்தியில், காலமாற்றத்தோடு கூடிய காமம் கலந்த இளமைக் குதுரகலத்தை, மீண்டும் உரைத்து, முடித்திருப்பதை அவதானித்திருப்பீர்கள் உலகம் மட்டுமல்ல, வாழ்க்கையும் வட்டம் தான். காலம் மாற, கருவிகள் மாறும், கருத்துக்கள் மாறா. புதிய புதிய தலைமுறைகள் வேறுவேறு வடிவத்தில், ஒரே இடத்தையே திரும்பத் திரும்பத் தொடுகின்றன. வடிவங்களில் மட்டுந்தான் மாற்றம். வாழ்க்கையை ஒன்றி அவதானித்துவரும் இயல்பால், இம்மாற்றங்களில் எல்லையற்ற இரசணை காண்கிறேன். இங்கு நான் எழுதியிருக்கும், எழுபது, எண்பது, தொண்ணுற்றைந்து சம்பவங்கள், நான் நேரில் கண்ட நிஜங்கள். 2020உம், 2030உம் என் கற்பனைகள் ஏதோ முயன்றிருக்கிறேன். இந்தக் கடைசிப்பந்தியை விட்டிருந்தால், அற்புதமான சிறுகதையாய் அமைந்திருக்கும். இப்ப இது கதையா? கட்டுரையா? எனத் தெரியாமல் கிடக்குது. விமர்சகர்களிடம் படித்த என் மாணவனின் கருத்து இது. விமர்சகர்களுக்கு வேலை வேண்டாமா? இது கதையா? கட்டுரையா? அவர்களே கண்டுபிடிக்கட்டும். விமர்சகர்கள் மண்டையை உடைப்பது தெரிகிறது. விமர்சகப் பெருமக்காள்! ஆக்க முயற்சிகளுக்கு உங்கள் விமர்சனங்களால் தானே மோட்சம் கிடைக்கிறது. நீங்கள் சொல்லப்போகும் முடிவில்தான் என் ஆக்கத்தின் வெற்றி தங்கியிருக்கிறது. சீக்கிரம் சொல்லுங்கள் ஐயா! இது கதையா? கட்டுரையா?
17

Page 10
எழுதத் தூண்டும் எண்ணங்கள்).ce (கலாநிதி துரை.மனோகரன்) و خیر. به
ஈழத்துத் தமிழ்நாடகத்துறையில் ஒரு மைல்கல்
fழத்துக் கலை இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் போது, இயல்பாகவே எமது கவனத்தைப் பெறுபவர்களில் ஒருவர், பேராசிரியர் சி.மெளனகுரு. இலக்கியவாதி, விமர் சகர், ஆய்வாளர், கலைஞர் என்ற பல்துறைப் பாத்திரங் களை ஏற்றுக்கொண்டவராக அவர் விளங்குகிறார். காலப்போக்கில் கலைஞர், ஆய்வாளர் என்னும் இரு الخدخط பக்கங்கள் அவரை அதிகமாக இழுத்துச்சென்றுவிட்டன. ஈழத்துக் கலை வரலாற்றில் மெளனகுரு தமக்கென ஒரு தனியான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். மெளனகுருவைத் தவிர்த்துவிட்டு, ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றை எழுதமுடியாத ஒரு நிலையை அவர் ஏற்படுத்திவிட்டார். இதுவே அவரது ஆற்றலினதும், ஆளுமையினதும் பெரும் பலம் என்பேன்.
ஈழத்து நாட்டுக்கூத்து வளர்ச்சியில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பணிகள் என்றும் மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாதவை. நவீன காலத்துக்கேற்ப நாட்டுக்கூத்துகளின் உருவத்தில் மாற்றங்களைப் புகுத்தி, நேரத்தைச் சுருக்கி, நவீன வசதிகளுடன் அவற்றைப் பேணி மேடையேற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஒரு கட்டம் வரை வித்தியானந்தன் அத்துறையை வளர்த்துச் சென்றார். அதன் அடுத்த கட்டத்தை நிறைவு செய்யும் பணியில், அவரது மாணவரான மெளனகுரு ஈடுபடத் தொடங்கினார். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தி வந்த நாட்டுக்கூத்தில், சமகாலச் சிந்தனைகளைப் புகுத்தி வெற்றிகண்டவராக அவர் விளங்குகிறார். நாட்டுக் கூத்தைப் பேணுதல் என்ற நிலையில் இருந்து, அதனை வளர்த்தல் என்ற அடுத்தகட்ட முயற்சியிலேயே மெளனகுருவின் முக்கிய பங்களிப்பும் அமைந் துள்ளது.
பாடசாலைகளைப் பொறுத்தவரை நாடகம் என்பது, அவ்வப்போது சில தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்ற ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால், பாடசாலை மட்டத்து நாடக அரங்கை ஒரு கலையரங்காகவும், கல்வியரங்காகவும் ஒருங்கே பயன்படுத்த வழிகாட்டிப் பயிற்சியளித்தோருள் மெளனகுருவும் ஒருவர்.
மெளனகுருவுக்குள் ஒரு மாபெரும் கலைஞனும், கவிஞனும் அடங்கு வர். கலைஞன் முக்கியத்துவம் பெறும்போது, கவிஞன் தன்னடக்கத்துடன் காணப்படுவான். இலங்கையின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராக மெளனகுரு இனங்காணப்பட்டுக் கொண்டிருந்தவேளையில், அவருக்குள் இருந்த கலைஞன் முந்திக்கொண்டுள்ளான். அண்மைக்காலத்தில் கவிஞனும் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளான். மெளனகுருவின் இன்னொரு பக்கம் ஆய்வாளர், விமர்சகர் ஆகியோரைக் கொண்டுள்ளது. அவரது பல்வேறு நூல்கள், அவரின் இந்தப் 18
 
 

பக்கத்தைச் சிறப்பாகக் காட்டுகின்றன.
இவை அனைத்துக்கும் மேலாகப் பேராசிரியர் ம்ெளனகுரு ஒரு நல்ல மனிதர்; இனிய சுபாவம் கொண்டவர்; பிறரை மதிக்கும் பண்புகள் வாய்ந்தவர்; ஈழத்துத் தமிழ் நாடகத்துறையின் ஒரு மைல்கல்லாக விளங்கும் மெளனகுரு அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் தமிழ் நாடகத்துறை வளர்ச்சிக்குத் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துகொண்டே இருப்பார் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு. சாகாவரம் பெற்ற செளந்தரராஜன்
பிரபல பாடகர் ரி.எம். செளந்தரராஜன் பற்றிய அண்மைய செய்தி யொன்று அவரது இலட்சக்கணக்கான ரசிகர்களைப் போன்று, என்னையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்கொலை முயற்சி பற்றிய அந்தச் செய்தியை அவர் மறுத்துள்ளார். எவ்வாறாயினும், அவர் உயிர்பெற்று மீண்டும் எழுந்தமை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. என்னை மிகவும் கவர்ந்த பாடக ரான அவ்ரைப் பற்றி ஞானத்தில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
ஐம்பதுகள் முதலாக ஒகோவென்று தமிழ்த் திரையிசைத்துறையில் உச்சியில் இருந்துவந்த செளந்தரராஜனை இளையராஜாவின் வருகை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றது. ஓரளவுக்கு எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் அவர் பாடக்கூடியதாக இருந்தது. இளையராஜா தாம் இசையமைத்த சிவாஜி கணேசனின் திரைப்படங்களில் மலேசியா வாசுதேவனைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, சிவாஜிக்குக் குரல் வழங்கும் வாய்ப்பும் செளந்தரராஜனுக்கு அற்றுப்போனது. செளந்தரராஜன் விடயத்தில் ஒரு சுவாரசியமான விடயத்தையும் அவதானிக்க முடிகிறது. இயக்குநர் ரி.ராஜேந்தர் திரையுலகுக்கு வந்த ஆரம்ப காலத்தில் (எண்பதுகளின் தொடக்கத்தில்) அவரது திரைப்படமொன்றில் அவரது இசையமைப்பில் "என்கதை முடியும் நேரமிது” என்ற பாடலைச் செளந்தரராஜன் பாடினார். அந்தப் பாடலைப் பாடியபின் ஏனோ தெரியவில்லை . செளந்தர ராஜனின் உச்சநிலை மிக வேகமாகச் சரியத் தொடங்கியது.
தமிழ்த் திரையுலகில் ஒரு மோசமான நிலை இருக்கிறது. ஒரு பாடகரோ, பாடகியோ உச்சநிலையில் இருந்து சரிந்துவிட்டால் (பிற கலைஞர்களுக்கும் இது பொருந்தும்) அவர் எத்தகைய திறமை வாய்ந்தவராக இருப்பினும், அவரைத் திரையுலகம் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. ஓர் உதாரணம், ஏ.எம்.ராஜா. அந்தநிலை செளந்தரராஜனுக்கும் ஏற்பட்டது. அதனால் அவர் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கவேண்டியவர் ஆனார். தம்மை ஒகோவென்று போற்றிய திரையுலகம், பின்னர் "அம்போ’ என்று கைவிட்ட நிலையில் அவர் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டார். ஹிந்தித் திரை யிசைத்துறையை நோக்கினால் அங்கு இத்தகைய நிலை இருப்பதாகத் தெரியவில்லை. லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, மொகமட் ரா.பி, முக்கேஷ் போன்றோர் இன்று திரையிசைத்துறையில் இல்லாவிடினும் (இவர் களில் மொகமட் ரா.பியும், முக்கேஷ"ம் காலமாகிவிட்டனர்) அவர்களின் புகழுக்கு எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அவர்களுக்குரிய மதிப்பு ஹிந்தித் திரையுலகிற் கொடுக்கப்படுகிறது. அவர்களது பாடல்கள் பேணப் 19

Page 11
பட்டும், இசை அல்பங்கள் வெளியிடப்பட்டும் அவர்கள் கெளரவிக்கப் படுகின்றனர். தெலுங்குத் திரையிசைத்துறையில் கொடிகட்டிப் பறந்த கண்ட சாலா (தமிழிலும் பாடியும் இசையமைத்தும் உள்ளார்) நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையிலும்கூட அவரைப் பின்னணி பாடத் தெலுங்குத் திரையுலகினர் அழைத்துச் சென்றனர். ஆனால், தமிழ் திரையுலகம் அப்படியன்று. எவரும் உச்சத்தில் இருந்து வீழ்ந்துவிட்டால். அது தூக்கி வீசிவிடும்.
வழக்கம் போல் காலங்கடந்து இந்திய அரசு இவ்வாண்டில் செளந்தர ராஜனுக்குப் ‘பத்மபூரி விருது வழங்கியது. சென்னையில் அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடைபெற்றது. அவர் பற்றிய பெரிய நூல் ஒன்றும் வெளி வந்துள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். ஆயினும் இவை ஒரு மாபெரும் கலைஞனுக்குப் போது மானவை அல்ல. இடைக்கிடையேயாவது திறமை வாய்ந்த அந்தக் கலை ஞனைத் திரையுலகம் பயன்படுத்தியிருக்கவேண்டும். அவர் பாடிய பாடல்களைத் தொகுத்து இசை அல்பங்களை வெளியிட்டிருக்க வேண்டும். இன்று 81 வயதான நிலையில் அவரால் முன்னர் போலப் பாடமுடியாவிடினும், அவர் எப்போதும் இசைத்துறையில் கெளரவத்துக்குரியவராகவே கருதப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ்த் திரையிசைத்துறையில் தமது முத்திரையை ரி.எம்.சௌந்தர ராஜன் ஆழமாகவே பதித்துள்ளார். மறுவாழ்வு பெற்ற செளந்தரராஜனை இனியாவது தமிழ்த் திரையிசையுலகம் தகுந்தபடி மதிக்கவேண்டும். தமது வாழ்நாள்வரை அவர் மனநிறைவோடு வாழவேண்டும். புகழ் பூத்த அந்த மாபெரும் பாடகர் சாகாவரம் பெற்றவர்.
நாடும் நடப்பும்
எமது நாட்டில் புதிய புதிய செய்திகளுக்குக் குறைவே இல்லை. அண்மைக்காலத்தில் இலங்கையில் மனநோயாளர்களின் வளர்ச்சிவீதம் அதிகரித்து வந்துள்ளதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. நமது அரசியல் வாதிகளின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் கவனிக்கும்போது அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவே உள்ளது.
இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாகச் சிந்திக்கும் போது, புதிய சில நாடகங்கள் அரங்கேறப் போவதுபோல் தோன்றுகிறது. அமெரிக்காவில் பிறந்திருக்கவேண்டியவர்களாக இருந்தும், தப்பித்தவறி இலங்கையில் பிறந்துவிட்ட சிலர் "சமாதான” விடயங்களில் இப்போது முதல் மரியாதை பெற்றுவருவதாகத் தெரிகிறது. இத்தகையோர் போர்மூண்டால் அந்நிய நாடொன்றையும், அயல் நாட்டையும் தாம் துணைக்கு அழைக்க விருப்பதாக "வீரம்” பேசி வருகின்றனர். உலகப் பொலிஸ்கார வேலை பார்க்கும் நாடொன்றைச் சேர்ந்தவரும், அந்நாட்டின் முக்கிய பதவியொன்றை வகிப்பவரும், பார்த்தால் ஒரு பயில்வானைப் போலத் தோற்றமளிப்பவருமான ஒருவர், சமாதானப் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்டிருந்த மறுசாராரை வெருட்டும் பாணியில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். உலகத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் அவர்களது பழக்கதோஷம், இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்திலும் தலைகாட்டப் பார்க்கிறது.
20

ܢ - -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
iIiIQಹಿ ಗ್ಲಿಹ600 BIGÜáU iči
பார்வையும் பதிவும்
I AV V ~ செ.சுதர்சன் مح -------------------------------------------N-S நமது நாட்டில் சமகாலத்தில் இலக்கிய விழாக்கள், நூல்வெளியீடுகள், திரைப்பட விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என மிகவும் காத்திரமான நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன. இவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியது வித்தியாசமான திரைப்படவிழாக்களாகும். யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையும், பிரெஞ்சு நட்புறவுக் கழகமும் ஏற்பாடு செய்த பிரெஞ்சுத் திரைப்படவிழா சுமார் நான்கு நாட்கள் யாழ். கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. கலைத்துறை சார்ந்தவர்கள் எப்படி ஒரு திரைப்படவிழா எடுக்கவேண்டும் என்பதற்கு இவ்விழா ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. ஈழத்தில் ஆரோக்கியமானதொரு சினிமா கலாசாரத்தைக் கட்டி எழுப்பவும், சினிமா வரலாறு கற்பவர்களுக்கான நேரடி அனுபவத்தைத் தரவும், கலை வெளிப்பாடு, கலா இரசனை ஆகியவற்றில் தேர்ச்சி பெறவும் இவ்விழா வழிசமைத்தது. ஏற்பாட்டாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்திய உயர் ஸ்தானிகராலய ஏற்பாட்டில் இந்தியத் திரைப்படவிழா ஒன்று கொழும்பு சோவியத் கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
சமீபத்தில் யாழ். நெல்லியடியில் தமிழ் விவரணத் திரைப்படம் ஒன்று தயாரித்து வெளியிடப்பட்டது. “யாருக்கு யார் காவல்' என்ற இத்திரைப்படத்தை சலனசித்திரம் திரைக்கலை நிறுவன உதவியுடன் க.தேவதாசன் தயாரித் துள்ளார். சுமார் ஒன்றேகால் மணித்தியாலத்தைக் கொண்ட இப்படமானது, சாதாரண வீடியோக் கமெரா கொண்டு எடுக்கப்பட்டதாகும். ஈழத்துத் தமிழ்ச் சினிமா தம்பிஐயா தேவதாஸின் நூல்களில் மட்டுமே இருக்கிறது என்ற விமர்சனத்திற்கு மத்தியிலும் சிறுமுயற்சியாயினும் இச்சிறந்த முயற்சி வரவேற்கத்தக்கதே.
திருமறைக் கலாமன்றம் சமீபத்தில் யாழில் தமிழ் சிங்கள முஸ்லிம் கலைஞர்களை ஒன்று கூட்டி சமாதானக் கலை நிகழ்வுகள் ஒன்றை நடத்தியது. மூன்று இனங்களின் கலைகளும் நிகழ்வில் சங்கமமாகின. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான சமாதானப் பாசறை ஒன்றும் நடைபெற்றது. கலைஞர்களும் கவிஞர்களும்தான் தேசத்தை உருவாக்குபவர்கள் என்ற கருத்து நிலைக்கான ஆரம்பக்கட்ட செயல்வடிவமாக இந்நிகழ்வைக் கருதலாம். இன்னும் அண்மையிலேயே சிவஞானபோதப் பாடல்களை இசை இறுவெட்டாக வெளியிட்டதோடு சைவசித்தாந்தம் என்ற 21

Page 12
ஆங்கில நூலையும், 'கலைமுகம் என்ற காலாண்டு இதழையும் பிரசுரித்துள்ளது. யாழ். நல்லை ஆதீனத்தில் முதற் தடவையாக ஈழத்துத் தமிழ்ப்புலவர் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் வெளியிடப்பட்ட மாநாட்டுச் சிறப்புமலரில் ஈழத்துத் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய பல்வேறு அம்சங்களை அறிய முடிகிறது. இம்மாநாட்டில் "ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்” (க.செபரத்தினம்) என்ற நூலிற்கும், "தன்மானத் தமிழ்ப்புலவர்” (க.சொக்கலிங்கம்), “தொல்காப்பியம் காட்டும் பண்பாடு” (ச.சாம்பசிவனார்) ஆகிய கட்டுரைகளுக்கும் ஆதீன முதல்வரின் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
வவுனியா கலை இலக்கிய நண்பர் வட்டத்தின் ஆறாவது ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. 14.06.2003 அன்று நடைபெற்ற இவ்விழாவில் 'வன்னி ஊற்று என்ற இசைநாடாவும், 'மாருதம் காலாண்டுச் சஞ்சிகையும் வெளியிடப் பட்டதுடன், அறிஞர் கெளரவிப்பும் இடம்பெற்றது.
கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பையின் காலம் மறவாக் கவிதைகள்’ என்ற நூலின் வெளியீடு மாத்தளை ஆமினாக் கல்லூரியில் நடைபெற்றது. ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவரான அப்துல் காதர் லெப்பை எழுதிய கவிதைகளின் தொகுப்பான இந்நூல் வெளியீட்டு விழாவில், விமர்சன உரை நிகழ்த்திய கலாநிதி துரை.மனோகரன் அவர்கள் "ஈழத்து முஸ்லிம்களின் தேசியக் கவியாக அப்துல் காதர் லெப்பை விளங்குகிறார். அவரது கவிதைகளில் பாரதியின் பாதிப்பை வெகுவாகக் காணலாம்” என்று கூறியமை அவசியமாக இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும்.
“கோடுகளும் கோலங்களும் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் இலக்கிய உலகிற் பிரவேசித்த குப்பிழான் ஐ.சண்முகன் அண்மையில் 'அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் என்ற நூலை வெளியிட்டார். பத்தி எழுத்துக்களின் திரட்டான இந்நூல் வெளியீட்டு விழாவில் விமர்சன உரை நிகழ்த்திய 'இராகவன் எண்பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு தனது கணிதப் புலமையை சபையில் திணித்தார். இலக்கியச் சபை இதனைத் தாங்குமா!
எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் ‘முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்’ என்ற நூலின் ஆய்வரங்கு கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. பத்து முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளின் விபரங்களும் அவர்களது ஒவ்வொரு படைப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. முடிவிலே கலந்துரையாடலின்போது, முற்போக்காளர் ஒருவரின் கருத்துப் பற்றி உறைப்பான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றாலும், பின்னர் நற்போக்கில் ஆய்வரங்கு முடிவுற்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறை விரைவுரையாளர் லஹினா ஏ.ஹக் எழுதிய ‘எருமைமாடும் துளசிச்செடியும், வீசுக புயலே ஆகிய இரு நூல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. மேற்படி நூல்களை வெளியிடுவதற் காகத் தமது கணனியை விற்ற நூலாசிரியரை நினைந்து இலக்கிய உலகு பெருமிதம் கொள்கிறது.
த.கனகரத்தினத்தின் 'பாட்டுப் பாடுவோம் என்ற சிறுவருக்கான பாடநூல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளால் அமைந்த ஒரு நூலாக வெளிவந்துள்ளது. சிறுவன் ஒருவன் ஒரு நூலிலேயே ஒரு கருத்துடைய 22

பாடலை மூன்று மொழிகளிலும் படித்து மகிழலாம். இத்தகைய நூல்கள் வெளிவருவது சிறுவயதிலிருந்தே பன்மொழி ஆற்றலையும் மொழிfதியான சமரச மனப்பான்மையையும் வளர்க்க உதவும்.
அமரர் வை.அ.கயிலாசநாதன் படைத்த கவிதைகள், அங்கையன் கவிதைகள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது. இம்முயற்சியை மேற்கொண்ட அமரரின் துணைவியாருக்குக் கலையுலகின் நன்றிகள்.
தூயவன் என்ற போராளி (வைத்தியன்) எழுதிய சமரும் மருத்துவமும் என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. ஒரு போராளி மருத்துவன் தனது உயிரை மறந்து பிறபோராளி உயிரைக் காப்பாற்றப் போராடவேண்டும் என்பதை தமது நூலின் மூலம் அவர் விளக்குவதை உணரமுடிகிறது.
ஜெயகுலேந்திரன் என்பவர், மறவழித்திலகங்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
டென்மார்க் தமிழ் இலக்கியமன்றம் தமிழ் இலக்கிய விழா ஒன்றை மயன் நகரில் நடத்தியது. பி.ஏ.காதர் எழுதிய ‘சுயநிர்ணய உரிமை என்ற தமிழ் ஆய்வு நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
கனடா விபுலானந்தர் மன்றம், சுவாமி விபுலானந்தர் விழாவை டொரன்ரோவில் உள்ள காபரோசென் ஜோன்டக் டொனால்ட் கலையரங்கில் நடத்தியது.
யாழ். சுதுமலையைச் சேர்ந்த க.இராஜமனோகரன் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நாற்று, ‘தமிழிசைப் பாடல்கள்', 'வானொலிக் கவிதைகள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டார். போர் காரணமாக இடம்பெயர்ந்த பொறியியலாளரான இவரின் முயற்சி பாராட்டத்தக்கதே.
அவைக்காற்றுக்கழகத்தின் கலைப்பயணம் 25வது ஆண்டு நிறைவை யொட்டி செழியனின் “வேருக்குள் பெய்யும் மழை, ரென்னஸி வில்லியத்தின் *கண்ணாடி வார்ப்புகள், அன்ரன் செக்கோவன் ‘சம்பந்தம்' ஆகிய நாடகங்கள் அளிக்கை செய்யப்பட்டன. இலங்கைத்தமிழர் புலம் பெயர்ந்தும் இத்தகைய கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவது சிறப்பிற்குரியதாகும்.
அண்மையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தாவீது அடிகளின் திருவுருவப் படத்தைத் திரைநீக்கம் செய்து வைத்தது. 35 மொழிகளில் புலமையும், 70 மொழிகளில் பரிச்சயமும் உடைய பல்துறைவிற்பன்னரான தாவீது அடிகள் (1907 -1981) யாழ் நூலகம் எரிந்த செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியால் உயிரிழந்த மகான் ஆவார். இவரின் உருவப்படத்தை ஈழத்தின் அனைத்து நூலகங்களிலும் திரைநீக்கம் செய்யவேண்டும். அப்போதுதான் அது, நூலகத்தின் முதன்மையையும வரலாற்றுத் தவறையும் அறிவுலகுக்கும் அரசியல் உலகுக்கும் உணர்த்தி நிற்கும்.
இவ்வாறு தமிழ்க் கலை இலக்கிய உலகில் புதிய பல நிகழ்வுகளும் வரவுகளும் இடம்பெற்றாலும் அண்மையில் வித்துவான் க.ந.வேலன், பத்திரிகைத் துறை வித்தகர் கலாசூரி சிவகுருநாதன், நாதஸ்வரச் சக்கரவர்த்தி கலாசூரி என்.கே. பத்மநாதன் ஆகியோரின் மறைவு தமிழ் உலகில் ஈடுசெய்ய முடியாத செலவாகவே அமைந்துவிட்டது.
23

Page 13
பத்திரிகைத் துறை வித்தக மலை சாய்ந்தது
Gபுலோலியூர் சதாசிவம்)
எமது நாட்டு ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு நான்கு தசாப்தங்களாகப் பாரிய பங்களிப்பினை நல்கிய, தமிழ்ப் பத்திரிகைத் துறையில் புதிய வரலாறு படைத்த, "இலங்கையின் பத்திரிகை வரலாறு தந்த கலாசூரி சிவகுருநாதனின் மறைவு இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
சஞ்சிகை வெளியீட்டின் மூலமே தனது இலக்கிய ஆர்வத்தையும் ஆற்றலையும் வெளிக்கொணர்ந்தவர் அவர்.
சாஹிராக் கல்லூரியின் மாணவனாய் இருந்த காலை, தமிழ் ஒளி கண்டு, பல்கலைக்கழக இளங்கதிர் வீசி, தினகரன் தேசிய தமிழ்ப் பத்திரிகையினூடாகச் சிகரத்தைத் தொட்டவர்.
அவரது பணி பன்முகப்பட்டது. ஊடகத்துறையின் வழிகாட்டி. உழைக்கும் பத்திரிகையாளரின் சங்கத்தை உருவாக்கிய முன்னோடி.
பெரும்பான்மையினச் சிங்கள ஊடகவியலாளர்களின் அமோக ஆதரவுடன் அதன் தலைவராகச் சிறப்பாகக் கடமையாற்றியவர்.
பத்திரிகைத்துறையின் நெளிவு சுழிவுகள், நுட்பங்கள், நுணுக்கங்கள் இவற்றையெல்லாம் தெளிவாக அறிந்து, பத்திரிகைத் தர்மத்தைப் பேணிக்காத்தவர். ஆகவேதான், சிங்களச் செய்திப் பத்திரிகையான தினமினவின் ஆசிரிய குழுவில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்.
அவரது ஆளுமை இத்துறைக்கு உகந்ததாக இருந்தது. Journalism பற்றி ஆய்வு செய்த மேல் நாட்டு நல்லறிஞர் பிராங்க் கென்ட்லின்
The most desirable quality in a journalist is that he should be a good mixer, a sociable soul who finds it easy to make contacts and get on with his fellow men and women in all ranks and Professions and works of life இப்பண்புகள் அத்தனையும் கொண்டவர் அவர்.
பத்திரிகைத் துறையை நேசித்தார். இத்துறைக்குப் புத்துணர்வு கொடுத் தார். ஆய்வும் செய்தார். எத்தனையோ வசதி படைத்த தொழில்கள் வந்தபோதும் அவற்றை உதறித்தள்ளி இத்துறையையே தனது தொழிற்துறையாக வாஞ்சையுடன் வரித்துக்கொண்டார்.
முற்போக்கு சிந்தனையுள்ள எழுத்தாளர் பலரை ஊக்குவித்தார். இன்று துடிப்பும் திறமையும் கொண்ட முஸ்லிம் எழுத்தாளர் பரம்பரையொன்று உருவாகுவதற்குரிய காரணங்களில் இவரது செயற்பாடும் ஒன்று என்றால் அது மிகையாகாது.
'தினகரன் பண்ணையில் உருவானவர்கள் நாம் எனப் பல முஸ்லிம் எழுத்தாளர்கள் பெருமையாகக் கூறிக் கொள்வதுண்டு.
தினகரன் வாரஇதழ் தமிழியலின் மஞ்சரியாக இலக்கிய கர்த்தாக்களின் பல்துறை ஆக்கங்களுக்கும் ஆய்வுகளுக்கும் கருத்தரங்குகளுக்கும், விவாத 24
 

மேடைகளுக்கும், பரிசோதனை முயற்சிகளுக்கும் களமாக அமைவதற்குக் காரண கர்த்தாவாயிருந்தார்.
பழகுவதற்கு இனியவர், பண்பாளர், இறை பக்தர், அறிவாற்றல் கொண்ட அடக்கமானவர். அரும்பும் இளைய தலைமுறையினரின் ஆலோசகர். வளர்ந்தோர்க்கு வழிகாட்டி, சமயப் பணியாளன், சமூகத் தொண்டர், சட்ட வல்லுனர்.
கனமும் காத்திரமும் நிறைந்த கருத்துக்களைப் புதைத்து நகைச்சுவை அணி சேர்த்து அழகாக உரையாற்றும் அருமையான பேச்சாளர் இவர். நல்ல தமிழறிஞர் சிவகுருநாதன். அவரது இறுதி மூச்சில் தமிழ்ச் சங்கமே சுவாசமாக இருந்தது.
வாழ்வியலில் பூரணத்துவத்தைத் தழுவி இறுதிக் காலத்தில் அதீத ஆத்மீகப் பற்றுடன் வாழ்ந்து பிறவிப் பயனைக் கண்டு, சிவபதமடைந்த சிவகுருநாதனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
இசைமழை ஒய்ந்தது இசை மாமேதை
நாதஸ்வரச் சக்கரவர்த்தி கலாநிதி,
கலாசூரி
என்.கே.பத்மநாதன்
ஈழத்து இசையுல்கில் மங்கள வாத்தியமாக ஒலித்தவர் அண்மையில் அமரத்துவமடைந்தார்.
அன்னாரின் இசைமாரி அனைத்து ஈழத்துத் தலங்களின் மகோற்சவங் களிலும், நாடு தழுவிய மங்கள வைபவங்களிலும், கடல் கடந்த கலை விழாக்களிலும் பொழிந்தது.
தமிழ் கூறும் கலை உலகமே அவரது இசையில் மூழ்கித் திளைத்தது. அவரது ராக ஆலாபனையில் ராகங்கள் புதுப் பொலிவு பெற்றன.
நாதஸ்வரக் கலைப் பாரம்பரியத்தில் தோன்றிக் குரு சிஷ்ய முறையைப் பேணிக் கலை நுட்பங்களைத் துறைபோகக் கற்றுக் கலைஞரானவர் அவர். கலையைத் தொழில் ரீதியாக எவ்வாறு தொழிற்படுத்தவேண்டும் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கினார்.
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஈழத்தவரின் கலைப் பங்கினைத் தனித்துவ முத்திரையாகப் பதித்தவர் என்.கே.பத்மநாதன் ஆவார். அரச கெளர வத்திலிருந்து கனடாவின் புலம்பெயர்ந்த மக்கள் தங்கத்தினாலான நாதஸ்வரம் வழங்கி கெளரவித்திலிருந்து எத்தனை எத்தனையோ விருதுகளைப் பெற்றவர். இவரது மறைவு ஈழத்துக் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு பிரிவுத்துயரால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அமரர் இசை மேதை பத்மநாதனின் நாதஸ்வர ஓசை என்றும் காந்தர்வ கானமாக ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
25

Page 14
எஸ்.நஸிறுதீன் இன்றைய சிறுகதை எழுத்தாளர்களின் போக்கிலிருந்தும் வித்தியாசப்பட்டவர். பிரக்ஞை பூர்வமாக தன்னை ஈர்த்துள்ள வாழ்க்கைப் பிரிவுகளினுள் சென்று ஊகித்து இயற்கையினதும் மனிதனினதும் தலையில் ஏற்றிச் சிறுகதை எழுதும் வல்லமையுள்ளவர். நவீன இலக்கியச் சிந்தனைப் பிரிவுகள் எதனிலும் உள்வாங்கும் தன்மையுடைய சிறுகதைகளை இவர் சிருஷ்டித்திருக்கிறார்.
05.02.1961களில் சாய்ந்தமருதுவில் பிறந்த எஸ்.நஸிறுதீன் அவர்களின் கல்வி கல்முனை ஸாஹிறாவில் பெறப்பட்டதே. மட்டக்களப்புப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப்பட்டதாரியான இவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவைச் செய்திருக்கிறார். 1987களில் ஆசிரியரான இவர், தற்போது இங்கிலாந்தில் உயர்பதவி ஒன்றை வகிக்கின்றார்.
மன அமைதிக்கும் சாந்திக்கும் மனிதப்புரிந்துணர்விற்கும் இடங்கொடாத லெளகீகத்தைச் சட்டை செய்யாத ஒருவரிவர். இவரது குடும்பம் கல்வியை நோக்கி நிற்கும் முனைப்புக்குரியது. டாக்டர், ஆசிரியர் எனத் தொடங்கும் விஞ்ஞானக் கல்வி பெற்ற குடும்பத்தில் விஞ்ஞானத்துாடாகக் கலைப்பண்பை நோக்கும் தன்மையான தடங்களைக் கடந்து வந்தவரிவர். இவரது 18வது வயதிலேயே இவர் குடும்பத்திலுள்ளவர்களுடன் சேர்ந்து "பங்கயம்” என்னும் கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டிருக்கின்றார். வெளிவந்த நான்கு இதழ்களிலும் சிறுகதைகள் நான்கை எழுதியிருக்கிறார். அந்நான்கு சிறுகதைகளும் மதிப்பு வாய்ந்தவைகளே!
"ஒரு தெளிவான இலக்கின்றி எழுதும் வேட்கையினால் மட்டுமே எழுதுகிறேன்” எனத் தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான "நல்லதோர் வீணை செய்தே.” என்பதில் முன்னுரையில் வெளிக்காட்டும் நஸிறுதீனின் சிறுகதைகள், அவரையறியாமலேயே தெளிந்த இலக்கை அடைந்திருப்பதை அவதானிக்க முடியும்.
"நல்லதோர் வீணை செய்தே." சிறுகதைத் தொகுதியில் பதினொரு சிறுகதைகளுள்ளன. ஆறு சிறுகதைகள் வீரகேசரி வார மலர்களில் வந்தவை. தினகரன் வார மஞ்சரியில் வெளிவந்ததொன்று. அக்கரைப்பற்று தேசிய பாடசாலைப் பொன்விழாச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதொன்று. 1996களில் நடந்த தேசிய ஆசிரியர் தினச் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றதொன்று. 1998களில் வெளி யான கலையமுதமலரில் வெளியானதொன்று. தொகுதிக்காக எழுதியதொன்று. 1999களில் அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதி “பெண்ணே போற்றி” வெளிவந்தது. அதிலுள்ள அநேக
26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிஞர் ஏ.இக்பால்
மானவை பத்திரிகைகள் கேட்டுப் பெற்றவைகள்தான். அந்த முன்னேற்றத் தேறுதல் இவரது கதைகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
"பெண்ணே போற்றி” தொகுதியை விமர்சித்த வ.இராசையா அவர்கள் "நஸிறுதீன் மனித உள்ளங்களின் மிக நுட்பமான அசைவுகளைக் கருவாகக் கொண்டு இந்த நூலிலுள்ள கதைகளைப் படைத்திருக்கின்றார். இவற்றுட் பல வாழ்விலே இதுவரை பார்க்கப்படாத, பார்ப்பதற்கு மறுக்கப்பட்ட யதார்த்தங் களாகும்” என்றும், "ஆழமான தேடலை நடத்தி இருக்கிறார்” என்றும், "உள்ளத் தந்திகளின் மீட்டல்களை - அந்த நாதத்தின் நளினங்களை அழகாகக் காட்டு கிறார்” என்றும், "தனிமனிதனதும் குடும்பத்தினதும் இதமான இருப்புக்கு வேண் டிய தகவல்களை இங்குள்ள கதைகளில் காணமுடிகிற” தென்றும் சுட்டிக்காட்டி யிருக்கிறார்.
மூன்றாவது மனிதன் வெளியீடாக வந்துள்ள "மறைத்தலின் அழகு” எனும் சிறுகதைத் தொகுதியில் பத்துச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இச்சிறுகதைகள் நஸிறுதீனின் இலக்கிய வளர்ச்சியையும் உயர்ச்சி யையும் எடுத்துக்காட்டுவன. இவ்வருடம் ஏப்பிரல் 27இல் ஞாயிறு தினக்குரலில் "வெள்ளை நிறத்திலொரு பூனை” எனும் சிறுகதை வெளிவந்துள்ளது. இவர் தொடர்ந்தும் சிறுகதைத்துறையில் விரைந்து செல்கிறார் என்பதை இது காட்டு கிறது.
இப்போது இவரது "நச்சு வளையம்” எனும் நாவல் அச்சேறி முடிந் துள்ளது. இந்நாட்களில் அது வெளிவந்துவிடும்.
‘கதை நிகழ்ச்சிப் பின்னலைக் கருத்தியல் அறிவுடன் இணைந்து சமூக நடத்தைப் பரிமாணங்களை அதிலும் முக்கியமாக சமூகவியல், உளவி யல், கருத்தியல் சார்ந்த கருத்துக் கூறுகளை நுண்ணிய முறையில் எடுத் தாண்டிருப்பது இந்நாவலுக்கு மிக வலிமையைக் கொடுக் கிறது என்பது எனது கருத்து. இந்த வழியில் ஈழத்து இலகி* கியத்தின் நம்பிக்கை ஒளியாக எஸ். நஸிறுதீன் விளங்குவார்
என்பது திண்ணம்.
27

Page 15
сшцтптаFFuшй கா.சிவத்தம்பி
சந்திப்பு : தி.ஞானசேகரன்
(s உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். N * பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், ܀
இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர்.
* தமிழ்நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ر
(5)
தி.ஞா.: சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றியபின் அமெரிக்காவிற்குச் சென்றீர்கள் அல்லவா? அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெற்ற அநுபவங்களைக் கூறுங்கள்.
கா.சி. நான் அமெரிக்காவில் உள்ள பெர்கிலி பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அப்போது நான் சென்னையில் செய்த ஆய்வுக் கட்டுரை தயாராக இருந்தது. அங்கு சென்றபோது, பிரபல பேராசிரியர் George Hart தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். நான் அவருடன் இணைந்து வேலை செய்வதாக இருந்தது. நான் சென்னையில் செய்த ஆய்வுக் கட்டுரையை, அங்குள்ள கேட்போருக்கு ஒருநாள் வாசித்துக் காட்டினேன். ஐந்து பேர்தான் இருந்தார்கள். அதில் Robert என்னும் ஒரு சமஸ்கிருதப் பேராசிரியரும் இருந்தார். நான் செல்வதற்கு முதன்நாள் அங்கு பூகம்பம் நிகழ்ந்திருந்தது. அந்தச் சமஸ்கிருதப்
28
ܢܠ
 

பேராசிரியர் என்னிடம் கேட்டார், Earthquake க்கு தமிழில் எப்படிச் சொல்வது? என்று. நான் ‘பூகம்பம் என்று சொன்னேன். அவர் உடனே, என்ன உங்களுக்குத் தமிழில் சொல்லே இல்லையா? 'கம்ப' என்பது சமஸ்கிருதச் சொல் அல்லவா! என்றார். உடனே நான், ‘நில நடுக்கம்' என்ற சொல் இருக்கிறது என்றேன். அவர் 'கம்ப' என்பதும் நடுக்கம்' என்பதும் ஒன்றல்ல "Gambe and Nadukkam are not the same” என்றார். அதன் பிறகு நான் எப்போதும் ஆங்கிலத்தில் அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ்ப்படுத்தும்போது அச் சொற்கள் சரிசமனான கருத்தைக் கொடுக்கிறதா என்பதைக் கவனிப்பது வழக்கம். அது வேறு கருத்தைக் கொடுக்கிறதா எனப் பார்ப்பதும் வழக்கம்.
அந்தப் பல்கலைக்கழகத்திற்கு கைலாசபதியும் சென்றிருக்கிறார். பேராசிரியர் Hart உடன் பேசும்போதெல்லாம் நவீன இலக்கியம் பற்றியும், பழந்தமிழ் இலக்கியம் பற்றியும் நாங்கள் பேசுவது அவருக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்று வரைக்கும் Hart எனது நண்பராக இருக்கிறார். நான் அங்கு வேலை செய்யும்போது, சுமதி ராமசாமி என்ற பிராமணப்பெண் PhD.செய்தார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். Richard Freeman என்ற Sanskritscholarஐ திருமணம் செய்திருந்தார். அப்பெண் சென்ற தடவை கொழும்புக்கு வந்தபோது என்னையும் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். தமிழ்நாட்டில் அவர் பல சந்தர்ப்பங்களில் என்னைப் பற்றி அங்குள்ள அறிஞர் களுக்குக் கூறியிருப்பதாக அறிகிறேன். அங்குதான் பேராசிரியர் எமனோவைக் கண்டேன். Travidian Bimological அகராதியை எழுதியவர்கள் இருவர். ஒருவர் பேராசிரியர் எமனோ. மற்றவர் பேராசிரியர் பறோ. பேராசிரியர் பறோ முன்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கடமை ஆற்றியவர். நான் PhD.செய்யும் காலத்தில் பறோவுடன் கதைத்திருக்கிறேன். எனது பேராசிரியர் தொம்சனுக்குத் தமிழில் தாடனம் இல்லாததால் அவர் பறோவுடன் கதைக்கும்படி கூறுவார். மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமைகளில் நான் அவரிடம் போய் கதைப்பேன். அது பெரிய அநுபவம். ஒருமுறை பறோ என்னைத் தேநீர் அருந்த அழைத்துச் சென்றபோது, Senior Common Roomல் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பேராசிரியர். பறோ என்னைப்பற்றி அவருக்குக் கூறினார். அப்போது அவர், நீர் சிங்கள நாடகத்திற்கும் தமிழ் நாடகத்திற்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றிப் பேசாமல், ஏன் கிரேக்க நாடகங்களைப் பற்றிச் செய்ய வருகிறீர்? என்ற தொனியில் என்னைக் கேட்டார். நான் கூறினேன், தமிழில் நாடகங்கள் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் தகவல்கள் இல்லை. அதனால் நாடகம் வளர்ச்சியடைந்த ஒரு சமுதாயத்தோடு செய்யும்போது மறுமொழி வரும் என்பதாலேயே நான் இங்கு வந்து ஆய்வு செய்கிறேன் என்று பதில் சொன்னேன். பேராசிரியர் எமனோவுக்கு அப்போது வயது 82. திடகாத்திரமாக இருந்தார். அமெரிக்காவில் 70 வயதுதான் ஒய்வு பெறும் வயது. பெரிய பேராசிரியர்கள் 75 - 80 வயதுவரை வேலை செய்யலாம். அவர் 80 வயது வரை வேலை செய்து விட்டு அப்போது ஓய்வு பெற்றிருந்தார். அவர். Toda Love Songs - தொதுவர்களுடைய காதல் பாடல் பற்றிய முக்கியமான ஆய்வுகளை எழுதியவர். இதற்கும் எங்களுடைய அகப்பாடல் மரபுக்கும் தொடர்பு இருக்கிறது. அங்கும் சுட்டி ஒருவர் பெயர் பெறப்படார். பக்கத்தில் 29

Page 16
இருப்பவர்களைத் தவிர, இதில் யார் காதலன் - யார் காதலி என்பது தெரியாது. அவருக்கு முன்பு அவரது இடத்தில் இருந்தவர், ஒரு சமஸ்கிருதப் பேராசிரியர். அப் பல்கலைக்கழகத்தின் அணுவாராய்ச்சித்துறைப் பேராசிரியர் ஒருவருக்கு கடவுளின் விசுவரூபம் பற்றிய பகவத்கீதை சுலோகத்தை அந்த சமஸ்கிருதப் பேராசிரியர் விளக்கியிருந்தார். அணுக்குண்டு வெடித்தபோது, அதனை அவதானித்த அந்தப் பேராசிரியர், தனக்கு சமஸ்கிருதப் பேராசிரியர் விளக்கிய சுலோகமே - “ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்' என்று சமஸ் கிருதத்தில் சொல்லப்படுகின்ற அந்த சுலோகமே ஞாபகம் வந்ததாக, Brighter than thousand Suns; என்ற தனது நூலில் வபரித்துள்ளதாகக் கூறியதாக, எமனோ என்னிடம் கூறினார். நாங்கள் வழக்கமாகச் செல்லும் பாதையில், ஒரு அரை வட்ட அமைப்புடைய ஓர் இடம் இருந்தது. அந்த இடத்தைக் காட்டி, இங்குதான் அந்தச் சமஸ்கிருதப் பேராசிரியர் இருந்தார் என எமனோ கூறினார். பேராசிரியர் எமனோவுடன் கதைத்தது பெரிய அநுபவம். மறு நாளும் நான் அவருடன் கதைக்க விரும்புவதாகக் கூறினேன். அவர் அடுத்த நாள் தானாகவே என்னைத் தேடி வந்து விட்டார். எமனோ பெரியமனிதர். அவரை நான் சந்தித்தது பெரும் பாக்கியம்; வரம் என்று சொல்லலாம்.
அந்தக் காலகட்டத்தில் கலிபோர்னியாவில் உள்ள கோவில் ஒன்றில் சூரன் போர் நடந்தது. கந்தஷஷ்டி விரதகாலம். நான் கெளசல்யா என்ற பெண்ணுடன் அந்தக் கோவிலுக்குக் காரில் சென்றேன். கௌசல்யா Hartஇன் மனைவி. அப்பெண் கந்தஷஷ்டி விரதம் இருந்தாள். நானும் அன்று மாமிசம் உண்பதைத் தவிர்த்து அவளுடன் சென்றேன். அங்கு அளவெட்டி சுவாமியுடன் சம்பந்தமுடைய ஒருவர் இருந்தார். அவர்தான் அங்கு பூஜை செய்தார். அது வேறொரு அநுபவம்.
அங்குள்ள நாடகத்துறைக்குச் சென்றேன். திறந்தவெளி அரங்கு - அதில் நாடகங்கள் நடக்கின்ற விதம் இவற்றையெல்லாம் பார்த்தேன். கிரேக்க அரங்கின் மாதிரியை வைத்திருக்கிறார்கள்.
மற்றது, சமஸ்கிருதத் துறையில் இருந்தவர்களோடு நாங்கள் வேலை செய்தது. என்னுடைய சொந்தத் தேடல்களுக்காக நான் போய்ப் பார்த்தது. அமெரிக்காவால் நமது நாட்டில் இருந்து வாங்கப்படுகின்ற நூல்கள் எல்லாம் அங்கிருந்தன. தமிழர் சால்பு, இலக்கிய வரலாறு, கைலாசபதியினுடைய நூல்கள் என்னுடைய ஏழெட்டு நூல்கள் அங்கிருந்தன. Drama in anciant Tamil Society அங்கு இருந்தது . அது பெரிய விஷயம்.
பெர்கிலியில் ஏற்பட்ட இன்னுமொரு அநுபவம். நான் சென்ற நேரத்தில் Heinz என்ற ஜேர்மன் பேராசிரியரோடு சேர்ந்து Hart புறநானூற்றுப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். Hynes, ஜூ இனத்தைச் சேர்ந்தவர். அவருக்குச் சமஸ்கிருதம் தெரியும். தமிழும் கொஞ்சம் தெரியும். அவர்கள் இருந்த இடத்திற்கு நான் ஐந்தாறு மாடிப்படிகள் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. லிப்ட் இருக்கவில்லை. நான் அங்கு சென்றபோது ஐந்தாறு பிள்ளைகள் சூழவிருந்தனர். Hart பாட்டைப் பாடுவார். பின்னர் பாட்டின் கருத்தைச் சொல்வார். ஹைன்ஸ் அந்தத் தாளத்தைப் பிடித்துக் கொண்டு அதற்கேற்றமாதிரிப் பாடுவார். நான் ஒருத்தன்தான் அங்கு கறுப்பன். இருந்து 30

கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலே நான் தலை ஆட்டத் தொடங்கிவிட்டேன். ஹைன்ஸ"ம் நானும் நன்கு சினேகிதமாகிவிட்டோம். அடுத்தநாள் ஹைன்ஸ் என்னிடம் வந்தார். வந்து என்னிடம் சொன்னார், "இரவு ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. எனது மகள் கேட்டாள், "அந்த இந்தியர் நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஏன் தலையசைத்து இல்லை. S6)6O)6) 6T65rp singbaoTITir? -Why did that Indian shake his head and said no to everythingyou said?. நான் அவளுக்குச் சொன்னேன், அவர் இல்லையென்று singp656)606). 96 fressi Jé Lig gliugigiT66 -That is the way they appreciate என மகளுக்கு விளக்கம் கொடுத்தேன் என்றார். நான் தலையாட்டி ஆகா என்று ரசித்ததை, அவரது மகள் இல்லை என்று கூறித் தலையாட்டுவதாகக் கருதியிருக்கிறாள். இந்தமாதியான அநுபவம் எனக்கு பெர்கிலியில் கிடைத்தது. அதன் பிறகு நான் ஹாவாட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அங்கு மூன்று நான்கு நாட்கள்தான் தங்கியிருந்தேன். அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் Anthropologyல் மிகப் பெரிதாகப் போற்றப்படுகின்ற இருவர் அங்கு இருந்தனர். ஒருவர் எஸ்.ஜே.தம்பையா. மற்றவர் நூர் யால்மன். தம்பையா என்னை வரவேற்று, தாய் தனக்கு யாழ்ப்பாணத்தில் சமைத்துத்தந்த வெண்டிக்காய் குழம்பு செய்து தந்தார். நான் ருசித்துச் சாப்பிட்டேன். அவரது மனைவி சிரித்த முகத்துடனேயே இருப்பார். அன்று எல்லோரும் மகிழ்வுடன் உரையாடினோம்.
ஹாவாட் பல்கலைக் கழகத்தில், Theological Institute இல் உள்ள நூலகத்தை நான் சென்று பார்த்தேன். அங்கு மூன்று நான்கு கோவைகள் இருந்தன. திராவிடக் கழகத்தினரால் போற்றப்படும் ஒரு சமூக விஞ்ஞானி, பகுத்தறிவாளி, American Non beliver ஆன இங்கர்சால் பற்றிய தகவல்கள் அங்கு இருந்தன.
அடையாறு பிரம்மஞான சங்கத்தில் இரண்டு விதமான ஆட்கள் இருந்தனர். ஒன்று Olcott ஆட்கள். மற்றது Anni Besant. இந்து மதத்தில் சில குறைபாடுகளை Olcot ஆட்கள் ஏற்றுக் கொண்டனர். - குறிப்பாக பிராமணியம் சம்பந்தப்பட்ட சில எதிர்க்கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர். அந்த விடயங்கள் எல்லாம் அவற்றுள் இருந்தன. சில கடிதங்களும் துண்டுப் பிரசுரங்களும் பிரசுரிக்கப்படாமல் இருந்தன. அவை முக்கியமானவை. அவற்றையெல்லாம் பார்க்க முடிந்தது.
அதன் பின்பு விஸ்கொன்ஸின் பல்கலைக்கழகத்தைச் சென்று பார்த்தேன். என்னோடு வேலை செய்த ஒரு பூமி சாஸ்திரப் பேராசிரியர் - ஒரு இலங்கைத் தமிழர் அங்கு இருந்தார். அவருடன் தங்கியிருந்து அங்குள்ள வற்றையெல்லாம் பார்த்தேன்.
அமெரிக்க விஜயத்தில் எனக்கு மிகமுக்கியமானது பெர்கிலி. ஹாவார்ட்டில் நின்றபோதுதான் ஒன்று தெரியவந்தது. என்னவென்றால் அவர்கள் Theological Instituteஇல் சமயத்தைப்பற்றித்தான் படிப்பித்தார்கள். சமயம் பற்றிப் Ugljiais5tb(Surgi, Devotional Aspect and religion 6T6irp 90 sq555J stics செய்கிறார்கள். அதிலே எங்களுடைய பக்திமார்க்கம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதில் அவர்கள் தமிழ் மூலத்தைப் பயன்படுத்தி நாயன்மார் 31

Page 17
ஆழ்வார்களைப் பற்றிப் பார்க்கிறார்கள். அந்த வகுப்பை முதலில் செய்தவர் ஏ.கே. இராமானுஜம். அவர் காலமாகிவிட்டார். அதற்குப் பின்பு யார் செய்வதென்று அந்தரப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மாணவர்களில் சிலரை நான் சந்தித்தேன். அதில் தென் இந்திய பிராமணப் பையன்கள் இருவர் இருந்தனர். நான் அவர்களுக்கு இலங்கையைப்பற்றி ஒரு விரிவுரை செய்தேன். அந்த விரிவுரைக்குப் பலரும் வந்திருந்தார்கள். இங்கு "Under the bow tree" எழுதிய நூறி ஆல்மன் என்பவரும் வந்திருந்தார். அவரிடம் பேசியபோது அவர்தான் அந்த மாணவர்களைச் சந்திக்கும்படி கூறினார். அன்று வீரகேசரி ஆசிரியராக இருந்த சிவப்பிரகாசமும் அங்குவந்து மாலை நேரத்தில் ஒரு விரிவுரை நிகழ்த்தினார். பிரேமதாஸாவின் ஆட்சியில் நிட்சயமாக வேறு சில எதிர்பார்ப்புகள் இருக்கும். கறுவாக்காட்டு எதிர்பார்ப்புகள் இந்த அரசியலில் இருக்காது என்று நான் பேசினேன். அப்போதுதான் அவர் சொன்னார், கனகாலத்திற்குப் பிறகு நீங்கள்தான் கொஞ்சம் நம்பிக்கையூட்டுவதான கருத்துச்சொல்கிறீர்கள் என்று.
அவர்கள் தமிழ்ப் பையன்கள் அவர்களுக்கு தமிழ் ஏன் இவ்வளவு பெரியது - அப்பர், சுந்தரர் என்றால் உயிரை விடுகிறார்களே! என்ன விசயம் அதை எங்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். நான் அவர்களுடன், Religion and poetry பற்றிப் பேசும்போது எனக்கு ஒரு முக்கியமான கருத்து ஒன்று வந்தது. எங்களுடைய தேவார திருவாசகங்களை, ஆழ்வார் பாடல்களை இலக்கியங்களாக எழுதவேண்டும். இலக்கியங்களாக விமர்சிக்கவேண்டும் என்பதுதான் அது.
திருஞானசம்பந்தருடைய தேவாரங்களை நான் ஏற்கனவே கவிதை களாகப் பார்த்திருக்கின்றேன். அது ஒரு முக்கியமான விசயம். என்னுடைய மாணவர் ஒருவர் அதைத் தனது ஆய்வுக் கட்டுரைக்கான பொருளாகக் கொண்டிருந்தார்.
தேவாரமுதலிகளின் ஆளுமைகளைப் பார்க்கும்போதுதான், அந்தப்பாடல்களின் இலக்கியச் சுவை நன்கு தெரியவருகிறது. உதாரணமாக சுந்தரர்,
“மூளாத் தீபோல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னற்கால் வாளாங்கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.” மூளாத் தீபோல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி - தீ மூளாமல் இருந்தால் என்ன செய்யும் - புகைக்கும், கண்ணுக்குள் குத்தும்- அது எரிக்காது. ஆளா இருக்கும் அடியார் தங்கள் - இந்த ஆள் என்பதற்குக் கருத்து Person என்பதல்ல - உன்னுடைய ஆள் என்றால் - உனது தனிப்பட்ட அடிமை - வேலையாள் என்பது கருத்து. பல்லவர், சோழர் காலத்தில் இதுதான் கருத்து.
"அல்லல் சொல்லற்கால் வாளாங்கிருக்கும் - பேசாமல் இருக்கிறியே அப்பா", சரி இருந்திட்டுப்போ.
இவ்வாறு எடுத்துக்கூற அவர்கள் திகைத்துப்போனார்கள். “கடவுளே, ஆண்டவரே, நாங்கள் உன்னைப்பிரார்த்திக்கிறோம்.
32

அல்லது அல்லாஹற்வைப் பார்த்து அல்லாஹற் எங்களுக்கு எல்லாம் தருவாயாக" என்றெல்லாம் உலகத்தில் மதங்கள் பேசும்போது, வாளாதிருப்பின் திருவாரூரில் வாழும் - சரியப்பா, நீ தராவிட்டால் வைத்துக்கொள். நீ வைத்துக்கொள் என்று இறைவனைப் பார்த்துக் கூறும் பாங்கு, கடவுளைக் கிட்டவைத்த பாங்கு. அதுவும் அந்தக் காலத்தில் சிவனையும் அம்மையையும் வைத்துத்தான் பாடப்பட்டது.
'இரண்டாவது பக்தியுகம்' என்று நான் எழுதியிருப்பது (15 - 17 நூற்றாண்டுகளை) முருகனையும் அம்மனையும் வைத்துப் பாடப்பட்ட பாடல்கள். எத்தகைய நயமிக்க பாடல்கள்! கடவுளின் பக்கத்தில் நிற்பதுபோன்ற உணர்வினைக் கொடுக்கும் பாடல்கள்.
சகலகலாவல்லி மாலையில் - கோமளமே என்று பாடும்போது உனது பக்கத்திலே நிற்கின்ற உனது மகளை, உனது தங்கச்சியைத் தடவி விடுகிற மாதிரி இருக்கும். அதுமாத்திரமல்ல ஒரு பாடலில் அம்மனுடைய எல்லா நகைகளையும் சொல்லிக்கொண்டு வந்து, முத்து மூக்குத்தியும், இரத்தினப் பதக்கமும் முடிந்திட்ட தாலியழகும் - அம்மனுடைய கழுத்தில் முடிந்திட்ட தாலி. ஒரு பெண் தாலி கட்டியிருப்பதைப் பார்த்து சந்தோசப்படக்கூடிய ஆள் யார்? - அந்தப் பெண்ணின் அப்பா அல்லது அம்மா அல்லது சகோதரன். அம்மன் சகோதரி ஆகிறாள். இந்த Source of devotion இருக்கிறதே, இது தமிழில் இருந்துதான் ஆரம்பமாகியது. கடைசியில் சைதன்னியருக்கு சென்றது. இந்த ராதா வழிபாடுகூட தமிழில்தான் தொடங்கியது. தமிழில்தான் முதன் முதலில் கிருஷ்ணனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்ற மரபு இருக்கிறது. நப்பின்னை - "நப்பின்னை பிள்ளாய், நங்காய் எழுந்திடாய்" - நப்பின்னை பற்றி ஆச்சியர் குரவையில் வருகிறது. இந்த நப்பின்னைதான் ராதாவாக மாறியதாக ஏ.கே.மஜும்தார் என்பவர் கூறுகிறார். நப்பின்னை என்றால், நமக்குப் பின்னே வந்தவள் என்று பொருள். நமது தங்கச்சி. அவளைக் கண்ணனுக்குத் திருமணம் பேசப்பட்டிருக்கிறது. அவர்கள் திருமணம் செய்யவேண்டியவர்கள். எல்லாக்காலத்திலும் அவர்கள் திருமணம் செய்யவேண்டியவர்கள். ராதா எப்போதும் அழகானவள், இளமையானவள். எப்போதும் நெருக்கமானவள், எப்போதும் அருகே இருப்பவள், எல்லாக் காலத்திலும் அவள் கன்னிப் பெண். விரும்பத்தக்கவள். ராதா அப்படித்தான். ராதா Culture கடவுளை அடைவதல்ல முக்கியம் - கடவுளைத்தேடுவதுதான் முக்கியம். This entirething was opened up. அந்த மாணவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதுவும் MIT இல் Engineering செய்கின்ற பிராமணப் பையன்கள். அவர்களுக்குச் சிறிது காழ்ப்புணர்வு, சமஸ்கிருதத்தில் இவைகள் இல்லையே என்று. இந்தக் கேள்விகளே தேடல்களுக்கு ஆளாக்கும்.
அதன் பிறகு யப்பான் சென்றேன். ஒனோ என்ற பேராசிரியர் அங்கு கடமையாற்றிக்கொண்டிருந்தார். ஷண்முகதாஸ் வேலை செய்த இடத்திற்கும் சென்றேன். பின்னர் மலேசியா, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுக்கும் சென்றேன். நான் கேம்பிரிட்ஜில் இருக்கும்போது, பிரிட்டிஷ் லைபிரரிக்கு லண்டனுக்கு வருவது வழக்கம். அப்போதுதான் மிக முக்கியமான, பிரித்தானி யாவில் இருந்த அமெரிக்க அறிஞர் Birturn Stine அவர்களைச் சந்தித்தேன். 33

Page 18
இவர்தான் தமிழக வரலாற்றில் நீலகண்டசாஸ்திரிக்குப் பிறகு ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்தவர். அவர் நீங்கள் ஒரு இந்தியரா என்று என்னைப்பார்த்துக் கேட்டார். அவர் ஹாவாயில் இருந்தவர். ஓய்வின்பின் வந்திருந்தார். நான் அவரது புத்தகங்களை வாசித்ததாகக் கூறினேன். அவர் விஜய நகர காலத்தில் உள்ள சதகங்களை முக்கியப்படுத்திக் கூறினார். நான் சொன்னேன், ‘எங்களுக்கு சதக இலக்கியங்கள் பெரிதாக இல்லை. நீங்கள் கூறுவது எல்லாவற்றையும் சதகத்துக்குள் எடுக்கலாமோ தெரியவில்லை என்றேன். அவர் உடனே கூறினார். நீங்கள் கொஞ்சம் பார்த்திருக்கிறீர்கள். வேறும் சில சதகங்களும் இருக்கின்றன. முழுச் சதகங் களையும் நீங்கள் பார்க்கவேண்டும்' என்றார். "இவற்றையெல்லாம் எழுத வேண்டியது நீங்கள், நாங்கள் அல்ல” என்றுங் கூறினார். Birtum Stine கூறிய அந்தச் சொல் இன்றைக்கும் என்னைவிட்டுப் போகவில்லை. நாங்கள் எழுதவேண்டியவற்றை யாரோ எழுதுகிறார்கள்.
AlfHytal Bell என்ற அமெரிக்க மானிடவியலாளர் தமிழ் நாட்டிலிலுள்ள திரெளபதி வழிபாட்டுமுறைகள் பற்றி அக்குவேறு ஆணிவேறாகப் பார்த்திருக் கிறார். இது தொடர்பாக நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தில் காத்தவராயன் பற்றி இருக்கிறது. உண்மையில் காத்தவராயன் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்று நீண்ட காலமாக நினைத்திருந்தேன். நான் அவரிடம் கூறினேன், ‘உங்கள் முன் நிற்பதற்கு எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. நீங்கள் காத்தவராயனைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் இன்னும் எழுதவில்லை என்றேன். இப்படியாக பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குப் போவது எங்களைக் கூர்மைப் படுத்தும். எங்களைப் பிறசெல்வாக்கிற்கு ஆட்படுத்தும். அதன்காரணமாக எங்களை விரிவடையச் செய்யும்.
அண்மையில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகைப்
பேராசிரியராகச் சென்றேன். என்னுடைய பதவி ஓய்வு அங்குதான். இங்கு
பதவி ஓய்வு பெற்று அங்குதான் சென்றேன். அங்கு போனபோது ஓர் எழுத்தாளனாகச் செல்வதிலும் பார்க்க நான் ஒரு தமிழறிஞராகவே சென்றேன். நான் பழகியது முழுக்க முழுக்கத் தமிழறிஞர்களுடன்தான். பேராசிரியர்கள் சோ.ந.கந்தசாமி, அகஸ்தியலிங்கம், பொற்கோ, சி.சண்முகம், இளவரசு, இ.சுந்தரமூர்த்தி, தமிழ் அண்ணல், மணவாளன் ஆகியோரோடும் பழகினேன். அதற்கு முன்னர் எழுத்தாளனாக, விமர்சகனாக, ஒரு மார்க்ஸிஸ்ட் ஆக பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். இந்த முறை முற்று முழுதாக ஒரு தமிழ் அறிஞராகச் சென்றேன். என்னுடைய நண்பர் ஒருவர் இதுபற்றி, "உங்களுடைய நட்புகளே மாறிவிட்டன” எனக் கூறிக் குறைப்பட்டார். ‘இவர் என்ன எங்களிடம் வந்து பேசுகிறார் இல்லையே. அங்கேயே நிற்கிறார்’ என்று குறைப்பட்டார். ஏனென்றால் எங்களுடைய பாரம்பரியங்களையும் சொல்லவேண்டிய தேவை யிருக்கிறது. பேராசிரியர் செல்வநாயகத்திடம் நாங்கள் படித்த முறை, அல்லது அவர் படிப்பித்த முறை இவைகளெல்லாம் அங்கு தெரியாது. நாச்சி முத்துவுக்கு பேராசிரியர் வேலுப்பிள்ளையைத் தெரியும். நாங்கள் இவற்றைச் சொல்லும் போது அவர் அதனைப் புரிந்துகொண்டார். செல்லமணி - மட்ராஸ் கிறிஸ்தவக்
34

கல்லூரியில் உள்ளவர். அவர் தொல்காப்பியம் அகத்திணையியலை மொழி பெயர்த்தவர். அவராலும் புரிந்துகொள்ள முடிந்தது. இப்படிப் பல்வேறு மட்டங் களில் இத்துறைகளில் உள்ள எல்லோருடனும் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
தி.ஞா. : தாங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையில் அல்லது இங்குள்ள ஒரு எழுத்தாளன் என்ற வகையில் வெளிநாடுகளில் நடந்த மகாநாடுகள் சிலவற்றிற்குச் சென்றுள்ளிர்கள். அந்த அநுபவங்கள் பற்றிக் கூறுங்கள். கா.சி. : ரஷ்யாவுக்கு நான்கு தடவைகள் சென்றிருக்கிறேன். மொஸ்கோ பல்கலைக்கழகத்தை ஒரு தடவை சென்று பார்த்தேன். Oriental institute இல் உள்ள தமிழ்ப்பேராசிரியர்களுடன் பேசியிருக்கிறேன். அவர்களுள் ஒருவரை தமிழ் பல்கலைக்கழகத்திலும் பார்த்திருக்கிறேன். அந்திரநோவ் அவர்களை அங்கு கண்டேன். அவர் தமிழ் இலக்கணம் பற்றி நல்ல ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவரோடு அதுபற்றியெல்லாம் பேசினேன். பின்னர் இந்திய வரலாற்றுடன் சம்பந்தமான ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். மார்க்ஸிய வரலாற்றின் அடிப்படையில் அலெயேவ் என்பவர் விஜயநகர காலம் பற்றிய ஒரு இளம் விற்பன்னர். அவர் எப்படி விஜயநகர காலம் பிரித்தானிய குடியேற்ற வரலாற்றுடன் இணைகிறது என்பதுபற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். அவர் மார்க்ஸியம் பற்றிப் பல விடயங்களைப் பேசினார். நாங்கள்தான் மார்க்ஸியம் பற்றி ஏதோ அதிகம் படித்தவர்கள், தெரிந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவரோடு பேசும்போது அவர் பல விடயங்களைச் சொன்னார். அப்போதுதான் நான் Lesy Goonawardene எழுதிய சில கட்டுரைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். அவரோடு பேசும்போது அந்தக் கட்டுரை பற்றிப் பேசினேன். இதைத்தெரிந்திருந்ததனால், தெரியாதவற்றிற்கு ஜால்ஜாப்பு சொல்லமுடிந்தது. கொஞ்சம் தெரிந்திருந்ததால், தெரியாததற்கு அது எங்களது Area அல்ல என்று சொல்ல முடிந்தது. அவர் உடனே தமிழில் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று கேட்பார். அவர் தனது கண்ணோட்டத்தில் தமிழையும் பார்ப்பார். அதிலே கேள்வி கேட்பார். தமிழ் இதைப்பற்றி என்ன சொல்கிறது. தமிழில் இதைப்பற்றி என்ன பார்க்கிறீர்கள். அதில் இப்படி இருக்கிறதா? இருக்கா இல்லையா என்று கேட்கும்போது நாங்கள் பதில் சொல்லவேண்டும். அந்த ஒரு அறிவு உங்களைக் கூர்மைப்படுத்தும். நீங்கள் எதுவும் பேசலாம். அப்போது அவர்கள் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள்.
British Scholars 36tb American Scholars gub is 6ft 6T (5600TLb என்னவென்றால், British Scholar ஆரம்பத்திலேயே அதிகம் பேசான். அவனிடம் நீங்கள் ஒரு சரக்குள்ள ஆள் என்று அவனைக் கணிக்க வைப்பது சிரமம். அவன் கணிசமாகத்தான் நிற்பான். Americans உங்களை ஒரு புலமையாளனாக ஏற்றுக்கொள்வதற்கு, நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டும். அவனுடன் பேசுவது எமது அறியாமையை வெளிக்காட்டுவதாக அனேக சந்தர்ப்பங்களில் அமைந்துவிடும். எல்லோரையும் நாங்கள் Impress பண்ணினோம் என்று சொல்லமுடியாது. சிலபேரை Impress பண்ணினோம். அவர்களோடு தொடர்ந்து நட்பு வைத்திருக்கின்றோம். இந்த மாதிரியான விடயங்களெல்லாம் எங்களுக்கு 35

Page 19
6(5D.
பிறநாட்டு நல்லறிஞர் தொடர்புவேண்டும் என்கிறபோது, அவர்கள் எத்தனையோ விடயங்களைக் கேட்பார்கள். ரஷ்யாவுக்குச் சென்றபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் சென்று அங்கு Afro Asian Writers Conference க்கு 1974இல் சென்றேன். இந்திய பாகிஸ்தானிய முற்போக்கு இலக்கிய பாரம்பரியத்தின் உச்சக்கொம்புகள் எல்லோரையும் பார்த்தேன். பைஸ் அகமட் பைஸ், சஜ்ஜத் சகீர், குபேஷ் குப்தா போன்ற மிகப்பெரிய ஆட்களையெல்லாம் நேராகக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
சைனாவுக்கும் போனேன். சைனா அப்போதுதான் மாற்றம் அடைந்துகொண்டிருந்தது. அங்கு 11 நாட்கள் தங்கியிருந்தேன். Chinese Acadamy of social sciences 36.) BIT6i United nation university delegation ஒன்றுடன் சென்றேன். அங்கு கலாசாரப் புரட்சி எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது பற்றிய மிகப்பெரிய காரசாரமான விவாதங்கள் எல்லாம் நடந்தன. நான் ரஷ்ய ஆதரவாளனாக இருந்தேன். ஆனாலும் அந்த சீன சோஷலிஸத் தன்மை மாறுகின்றது என்பதைப் பார்த்தபோது நான் மிகவும் கவலைப்பட்டேன். அதுபற்றி சைனாக்காரர்களோடு பேசினேன். எங்களுடைய ஆட்களுடனும் பேசினேன். இந்தப் பெரிய ஒரு பரிசோதனை வீணாகிறது என்பது எனது கவலையாக இருந்தது. அவர்களுடன் பேசியபோது இன்னொரு நண்பரும் என்னுடன் சேர்ந்துகொண்டார். அவர்கள் எங்களைப்பார்த்து, “மாவோவுடைய விதவைகள்’ என எங்கள் இருவருக்கும் பட்டம் வைத்து, நீங்கள் இப்படி அழுதுகொண்டிருக்கிறீர்களே என்று கூறினார்கள். நான் சொன்னேன், எங்களுடைய ஊரில் என்னை எல்லோரும் மாவோக்கு எதிரானவனாகவே பார்க்கிறார்கள். சைனாவில் உள்ள சில விடயங்கள் வேறானவை. அப்படியென்று சொன்னேன். அந்தப் பண்பாட்டின் தன்மைகள் அடிப்படைகளைப் பார்கிறபோதுதான் இந்த விடயங்கள் எல்லாம் தெரியவந்தன. சீனா கம்யூனிஸம் பரவிய பெரிய நாடு. Thoughts of Mase Thung என்ற சிறிய கை நூல்கள் மூலமாகவே தரப்படுத்தப்பட்ட சீன எழுத்து முறைமையும் எழுது முறையும் வந்தது. எழுத்துக்களில், - மாசே துங்கின் எழுத்துக்களோடு தான் சீன மொழியில், சைனா முழுவதும் நியம மொழி வந்தது. அதற்கு முன்னர் சைனாசின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு Dielect அதனாலேதான் சிறிய புத்தகங்களில் அடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். அதுதான் முதல் Standard dielect. இவையெல்லாம் அங்கு சென்றதாலேதான் தெரிய வந்தது. அந்த மட்டத்தி லிருந்து நாங்களும் தேவைப்படுவதைப் பெற்றுக்கொள்ளலாம்.
பாக்கிஸ்தானுக்கு - லாகூருக்கும் போனபோது முஸ்லிம் பேராசிரியர் கள் சிலர் - இந்தியாவைப்பற்றி ஆர்வம் உள்ளவர்கள் - திராவிட இயக்கம் பற்றி மிகவும் ஆர்வமாகக் கேட்டார்கள். அவர்கள் எங்கெங்கு இந்திய ஒருமைப்பாடு பலவீனமாக இருந்தது என்பதைப் பற்றியெல்லாம் கவனித் foL555Tira,6ft. BT65, Social concerns of Tamil literture 66rp st' (S60).j60)u அங்கே வாசித்தேன். ஆனால் அவர்கள் கேட்டதெல்லாம் திராவிட இயக்கம் பற்றி - அதன் பலம் பலவீனம்பற்றி. ஒரு நீண்ட Session லாகூரில் வைத்தார்கள்.
36

அப்போதுதான் உருதுப் பாடல்கள் பற்றி அதன் மரபு பற்றி நான் அறிந்தேன். நான் இதனை ரஷ்யாவிலும் கண்டேன். உருது மரபில் கவிதையை இரசிப்பது தனித்துவமானது. எல்லோரும் பாயை விரித்து தலையணையை வைத்துச் சாய்ந்து கொண்டிருப்பார்கள். ஒருவன் பாட மற்றவர்கள் இரசிப்பார்கள். இத்தகைய இரசனை அவர்களுக்கே உரியது. கூக்கா வைத்துக்கொண்டு புகைபிடித்துக்கொண்டு இரசிப்பார்கள். மாறிமாறிப் பாடுவார்கள். தமிழ் இலக்கியத்தை ஒருபோதும் நாங்கள் அப்படி இரசிப்பதில்லை. இங்கு இரசிக்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லோரும் கொச்சைப்படுத்துகிறார்கள். பட்டிமன்றங்கள், விழாக்கள் - கவிதை சம்பந்தப்பட்டவர்கள் 'ஆஹா ஊகு என்று இரசிக்கிறார்கள். ஏன் 'ஆஹா ஊகு என்று இரசிக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் தெரிவதில்லை.
இவற்றையெல்லாம் நான் மற்றவர்களுக்குச் சொல்வதில்லை. இப்போது எனக்கு எழுபத்தொரு வயதாகிறது. இப்போதுதான் உங்களுக்குத் தொகுத்துச் சொல்கிறேன். உயர் நிலையிலுள்ள ஒரு பெரிய கல்விமானால் ஒரு வசனம் போட்டு இன்னார் எழுதிய இந்தக் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது என்று போட்டால் போதும். அந்தக் கட்டுரைக்கு உள்ளளவு சீவியம் அந்தக் கல்விமானுக்கும் இருக்கும். அது சும்மா வராது. பலர் கைலாசபதியை தமது கட்டுரைகளில் மேற்கோள்காட்டுவார்கள். கைலாசபதி இறந்து இன்று 20 வருடமாகிறது. ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அறிதொறும் அறிதொறும் அறியாமை கண்டவாறு - இதெல்லாம் தாய் தகப்பன் செய்த புண்ணியம். எங்களது கெட்டித்தனமில்லை.
நாங்கள் லீவில் போகிறபோது, இந்த லீவினால் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு என்ன பயன் கிடைக்கிறது என நீங்கள் கருதுகிறீர்கள் என்று ஒரு கேள்வியிருக்கும். நான் எல்லாக் காலத்திலும் எழுதுவது, 'இதனால் எனது மாணவர்கள் நன்மை அடைவார்கள்’ என்று. என்னிடம் எம்.ஏ., பி.எச்.டி. செய்வது ஒரு மிகக் கஷ்டமான விடயம்; ஆபத்தான வேலை என்று யாழ்ப்பாணத்தில் பலரது அபிப்பிராயம். ஏனென்றால், நான் இழுத்தடிப்பேன். அங்கு இங்கு செல்வேன். அவருக்கு எத்தனை அத்தியாயம் அதனை இப்படியெழுது என்று சொல்லமாட்டேன். அத்தியாயங்களின் பெயர்களைச் சொல்லுங்கோ என்று கேட்டால் நான் சொல்லமாட்டேன். இதனை வாசித்தாயா அதனை வாசித்தாயா என்று கேட்கும்போதே அவர் "சீ என்று தப்பியோடி விடுவார். அப்படித் தப்பியோடியவர்கள் ஏழெட்டுப்பேர் இருக்கிறார்கள்.
நான் பிரிட்டிஷ் மியூசியத்திற்கு Greek Section ஐப் பார்க்கப்போனேன். அப்போது தொம்சனிடம் ஒரு கடிதம் கேட்டு வாங்கினேன். அவர்,
"Mr Sivathamby is working with me on Tamil and Greek Drama" என்று எழுதினார். Working Under me என்று எழுதவில்லை. அதனைப்பார்த்த பின்பு நான் எவருக்கும் Working Under me என்று எழுதுவதில்லை. இதுதான் பிறசெல்வாக்குகளுக்கு, பண்பாடுகளுக்கு Exposed ஆகிறதால் வரும் நன்மை. இந்தியப் பேராசிரியர்களிடம் அல்லது எங்களுடைய கல்விமான்களிடம் கேட்டால் Worked underme என்று தான் எழுதுவார்கள். பல மாநாடுகளுக்குச் சென்றது. சைனா, ஜப்பான், செக்கோசெலவாக்கியா, ஹங்கேரி, ரஷ்யா 37

Page 20
போன்ற நாடுகளுக்குச் சென்றதால் ஏற்பட்ட அநுபவங்கள் எங்களை அகட்டிப் பார்க்க வைத்தது. நீங்கள் ஒரு விடயத்தில் உங்களை ஒரு நிபுணர் என்று கருதுவதென்றால் அது சம்பந்தமாக எந்தக் கோணத்தில் இருந்து கேட்டாலும் பதில் சொல்வதற்கு தயாராக இருக்கிறீரா என்று பார்க்கவேண்டும். ஒரு விசயத்தைப் பற்றி அத்தனை கோணங்களில் பார்க்கலாம் என்பதற்கு அது Q(b. 9 g5 Tj600TLb. U6) 6ig5LDTasis (335 UTirasoit. What does Tamil say about it?, How is Tamil reacted to that? 6T6öīGp6ð6oTub (Bab'LJITra66ĩ. 5 Ta656 SÐg5b5ů பதில் சொல்லவேண்டும். அது சிலவேளை எமது அறியாமையை G6116ffiLJG5356 g5T36 gub gi(big, b. I am not quite sure, may I say this?, we have this problem என்று நாங்கள் சொன்னால், அவன் இன்னும் கூட உதவி செய்வான். எவனையும் குறைத்து மதிப்பிட முடியாது. ‘எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும்' என்று தெரியாது.
இந்த அநுபவங்களில் இருந்து நான் பெற்றுக்கொண்டது என்னவெனில், நான்தான். எனக்குத் தெரியும்' என்ற தலைக்கணம் எந்த ஒரு Scholar க்கும் வரக்கூடாது. வந்தால் அன்றோடு அவருக்கு Scholarship இல்லை. இது என்னுடைய மிகத் தாழ்மையான அபிப்பிராயம்.
தொடரும்.
/, e O سمعہ ཛོད༽
கொப்பி வேணாம் ༼ ༽ O १* ノ அப்பா வேணும். * எழுதக்கொப்பி இல்லை என்றேன் /ンダ\
எதுக்குப்படிப்பு போடா வெளியே 一。 - i. என்று சத்தமாய்க் கத்தினார் வாத்தியார் ーA)
அழுதகொண்டு அப்பாவிடம் சொன்னேன்
அவர்மடியில் ஒன்றுமில்லை பாவம் அண்ணாந்து முகட்டைப் பார்த்துவிட்டு எழுந்துவெளியே போனார் கவலையுடன்
எனக்கு அம்மா இல்லை அப்பாதானெல்லாம் 宦 ஏறாவூர்ச் சந்தையில் மூட்டை தூக்கிறவர் ミ பொழுதுபட்டுப் போயும் போனவரைக் காணல்ல
பயமாயும்கிடக்கு எங்கபோய்த்தேடுறது ) பாவம் என்று உதவ யாரும் எனக்கில்ல. விழுந்தடிச்சி வந்து வைரமுத்து சொன்னார்
வாகையடிச் சந்தி சென்றியில ஆயி வாகனத்தில் அப்பாவைக் கொண்டுபோகுதெண்டு புழுவாய்த் துடித்து ஒடுறன் சென்றிக்கு
பள்ளிக்குப் போகமாட்டன் பாடம் படிக்கமாட்டன் பெத்த அப்பன்வேணும் கொப்பிவேணாம். لر
38

(i®æä 5ಙ್ಗಸ್ರಿಸಿ
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
தழிழகம் முழுவதும் எப்போ பார்த்தாலும் பழங்களின் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கும். கொய்யாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கின்றது. பலாப்பழச்சீசனில் பண்டுருட்டிப் பலாப்பழ மலைகளாகக் காட்சிதரும். திராட்சை யில் பச்சை, கபிலம் என நிறங்கள், விதையுள்ளது (பன்னீர் திராட்சை), விதையற்றது எனப் பல ரகங்கள். ஆப்பிள் சீசனில் காச்மிரத்து ஆப்பிள்கள், கபலா ஒறேஞ்சு, சாத்துக்குடி எனத் தோடை வகைகள். மற்றும் திண்டுக்கல் சப்போட்டா எனப் பலவகைகள் மிக மலிவான விலையில் எங்கும் கிடைக்கும். கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கும் பன்னிர்த்திராட்சை சிந்து வாரற்றுக் கிடக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலோ - பங்கனப்பள்ளி, நீலம், ஒட்டுமா, கிளிமூக்கு, மல்கோவா எனப் பலரகங்கள் செம்மஞ்சள் நிறத்தில் மலை மலையாக. மாதுளம் பழங்கள் எனிலோ. கண்ணகியினதும், பாண்டிமாதேவியினதும் காற்சிலம்புப் பரல்களை ஒத்த முத்தும் மாணிக்கமும் எனத் தெரு வெங்கும் வாய் பிளந்து. காவிரிக் கரையில் விழையும் வாழைப் பழத் தார்கள். இவையெல்லாம் தமிழகத்தின் கடுங்கோடைக்குக் கடவுள் தந்த கொடை. எனினும் என்ன. வாங்குந் தகுதியற்று. மலிவு விலைக் கூறுகளுடன் திருப்திப்படுவோரே அதிகம்.
கடந்த மாதம் எமதுதுறை (கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்) தருமபுரி மாவட்டத்தில் மயிலாடும் பாறையில் அகழாய்வு நிகழ்த்தியது. நான்கு புறமும் மலைக்குன்றுகள். நடுவே சமதரையில் ஆய்வுக் களம். அது கவுண்டர் ஒருவரது 2500 ஏக்கரில் விரிந்த மாந்தோப்பு. சீசன், மாம்பழ சீசன். மாழ்பழம் கைக்கெட்டும் தூரமல்ல காலுக்கு எட்டும் தூரத்தில். எங்கு பார்த்தாலும் செம்மஞ்சள் பூத்த மாம்பழம், மாம்பழம். யாழ்பாணத்தில் ஒரேயொரு கறுத்தக் கொழும்பான் மாமரம் பிஞ்சு பிடித்தவுடன் அதைக் காப்பாற்ற மரத்தில் தகரடப்பா அல்லது காவோலை கட்டி "டொங்கு, டொங்கு என்று அடித்து அணில், பறவைகள் விரட்டிய எனக்கு. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலான மாந்தோப்பும். மாம்பழமும். அடடா நானும் நண்பர்களும் தின்று தீராது போயிற்று.
"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்.
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
என்ற திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியின் யதார்த்தம்
அப்போதுதான் புரிந்தது. இ
வமகேஸ்வரன், தஞ்சாவூர்.
39

Page 21
O நேற்றைய திரும் பரிப் பார்க் கிறேனர் எனர் று எனர் னையே திரும்
கலைஞர்கள் பிப் பார்த்த நான், மீண்டும்
நேற்றைய கலைஞர்களைப் பற்றித் திரும்பிப் பார்க்கி
~ அந்தனி ஜீவா ~ \றேன்.
நாடக நெறியாளர் சுஹைர் ஹமீடின் பங்களிப்பு
"ஒரே இரவில் தமிழ் நாடக மேடையை இருபது ஆண்டுகளுக்கு முன்னெடுத்துக் சென்றுள்ளார்” என்று பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டார். அவர் அப்படிக் குறிப்பிட்டது வேறுயாரையும் அல்ல, 'பொம்மலாட்டம்' என்ற நாடகத்தை நெறிப்படுத்திய நெறியாளர் கலைஞர் சுஹைர் ஹமீடை.
நானும் நடிகர் அன்பரசனும் லயனல் வென்ட் நாடக அரங்கில் இந்த நாடகத்தைப் பார்த்தோம். இந்த நாடகத்தின் போதுதான் நடிகர் ஹிலேரியன் பெர்னான்டோவின் அறிமுகம் கிட்டியது.
பொம்மலாட்டம் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் நடிகவேள் லடீஸ் வீரமணி. இந்த பொம்மலாட்டம் தமிழ் நாடகக்கலைஞர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கையில் ஐம்பதுகளுக்குப் பின்னரே கலை இலக்கியத்துறையில் தேசிய ரீதியிலான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. சிங்கள நாடக மேடையில் ஏற்பட்டது போன்ற விழிப்புணர்வு தமிழ் நாடக மேடையில் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
தமிழ் நாடக மேடையில் வரட்சி தென்பட்டாலும் அத்தி பூத்தாற்போல் நல்ல முயற்சிகள் ஓரிரண்டு நடைபெற்றன. சிங்கள நாடக மேடையில் பேராசிரியர் சரத் சந்திரா மனமே" என்ற நாடகத்தை மேடையேற்றினார்.
பழைய கொட்டகை கூத்து மரபில் அமைந்த நாடகங்களைப் பார்த்துத் திருப்தி அடைந்த சிங்கள மக்களிடயே "மனமே நாடகம் சிங்கள நாடக மேடையில் திருப்பு முனையாக அமைந்தது.
சிங்கள நாடக மேடைக்குப் படித்த புத்திஜீவிகளின் வருகை சிங்கள நாடக மேடையை முன்னெடுத்துச் சென்றது. பேராசிரியர் சரத் சந்திராவைத் தொடர்ந்து தயானந்த குணவர்தனா, ஹென்றி ஜயசேன, சகதபால டி.சில்வா, சந்திரதாஸ் தஸநாயக்க, குணசேன கலபதி, தம்மா ஜாகொட போன்ற இளைஞர் கூட்டம் சிங்கள நாடக மேடைக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்ய முன் வந்தது. இவர்களுக்குப் புலமைப்பரிசில் கிடைத்தது. வெளிநாடுகளுக்குச் சென்று உலக அரங்கு பற்றிய பயிற்சி பெற்றுத் திரும்பி னார்கள்.
இந்த நிலையில் தமிழ் நாடக மேடையில் தனது பங்களிப்பை செய்ய முன்வந்தார் ஒரு இளைஞர். இவர்தான் நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட். இவர் ஆங்கில நாடகங்களை நெறிப்படுத்திய ஏனெஸ்ட் மக்கீன்டையர், கலாநிதி
40
 

ஆஷ்லி கல்பே போன்றவர் நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறையில் பங்கு பற்றினார். நவீன நாடக மேடைகளைப் பற்றிய அநுபவமிக்க நிபுணர்களான இவர்கள் இருவரிடமும் அரங்கியலைப் பற்றிய பல விடயங்களைக் கேட்டறிந் தார். நாடகம் சம்பந்தமான ஆங்கில நூல்களைப் பெற்று வாசிப்பார்.
பொம்மலாட்டத்தைத் தொடர்ந்து இவரது நெறியாள்கையில் மேடை யேறிய 'அவளைக் கொன்றவள் நீ என்ற நாடகம் பல தடவை மேடையேறியது. இந்த நாடகத்தில் பல நவீன உத்தி முறைகளைக் கையாண்டார்.
சுஹைர் ஹமீட் 1960களிலிருந்தே காத்திரமான நாடக உணர்வுடன் நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டார். பொம்மலாட்டம், அவளைக் கொன்றவள் நீ, அதள பாதாளம் போன்ற மொழிபெயர்ப்பு தழுவல் நாடகங்களை நெறியாள்கை செய்தார். தமிழில் நல்ல நாடகப் பிரதியில்லாமையாலேயே இம்மொழிபெயர்ப்புத் தழுவல் நாடகங்களைச் செய்கிறேன் என்று கூறியவர். எனினும் நாடகப் பிரதியை மேடையில் அளிக்கும் முறையே நாடகத்தின் சிறப்பு என்று நம்பியவர். இவ்வகையில் நாடகத்தை ஓர் அளிக்கைக் கலையாகக்கண்டவர். சுஹைர் ஹமீட் மேடை உத்திகளாக ஒளி, ஒலி, இசை, ஒப்பனை, ஓவியம், மேடை யமைப்பு என்பவற்றைக் கைக்கொண்டார். 1970 களில் சுஹைர் ஹமீட் அம்பி யின் ‘வேதாளம் சொன்ன கதையை நெறிப்படுத்தினார் "வேதாளம் சொன்ன கதை, மனிதர்களுக்கு இயல்பாக உள்ள குணங்களைப் பழைய கதை ஒன்றின் மூலம் கூறும் நாடகமாகும். நாடக நெறியாளரான சுஹைர் ஹமீட்டின் ஆலோ சனைகளுடனேயே இந்நாடகம் எழுதப்பட்டது" இவ்வாறு 'ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு என்ற நூலில் கலாநிதி சி.மெளனகுரு குறிப்பிடுகின்றார். தழுவல் நாடகங்களை நெறிப்படுத்திய நெறியாளர் சுஹைர் ஹமீட் 'வாடகை அறை', ‘ஏணிப் படிகள், 'பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்', 'சாதிகள் இல்லையடி பாப்பா, 'வலை, முறுவல், "தோரோட்டி மகன் ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தினார்
நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட் நாடக ஆசிரியர்களுடன் நாடகப்பிரதிகளை எழுத முன்னர் கலந்துரையாடுவார். அதனால்தான் மேடையில் அவரது பிரதிகள் வெற்றி பெற்றன.
நாடகம் சம்பந்தமாக நானும் அவரும் எஸ்.பொன்னுத்துரையும் பல மணி நேரங்கள் பல சந்தர்ப்பங்களில் உரையாடியுள்ளோம்.
நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட்டின் நாடகங்களில் நடிக்கப் பலரும் ஆசைப்படுவார்கள். இவரது நாடகங்களில் நடிகவேள் லடிஸ் வீரமணி, எம்.எம்.ஏ.லத்தீப், கே.ஏ.ஜவாஹர், ஜெய கெளரி, ஜெயந்தி, ஆர்.மணிமேகலை, ராஜபாண்டியன், ஜோபு நஸிர், மகாராஜா, ஹிலெரியன் பெர்னான்டோ, கலைச்செல்வன், ஏ.ரகுநாதன் போன்ற கலைஞர்கள் பங்கு பற்றினார்கள்.
இப்பொழுது இலண்டனில் நாடகங்களை மேடையேற்றும் பாலேந்திரா இவரின் அறிமுகமே என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
இலங்கை தமிழ் நாடக மேடைக்கு நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட்டின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.
O 41

Page 22
விவாத ఇమిమిLళీ
"மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யக்கூடியவை செய்யவேண்டியவை”
மலையகத்தில் அமைப்பு ரீதியாக இணைந்து இலக்கியம் படைக்கும் காலம் அறுபதுகளின் பின்னரே முகிழ்ந்திருக்கிறது. எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்த இடங்களில் - தோட்டங்கள் தோறும் மன்றங்களை, வாசிகசாலைகளை, இரவுப் பள்ளிகளை ஏற்படுத்தி செவிக்கல்விச் செல்வத்தின் மூலம் பகுத்தறிவுடன் கூடிய சிந்தனைகனையும் முற்போக்கு இன உணர்வுகளையும் ஏற்படுத்தியவர்கள் தி.மு.க.வினர். தமிழக தி.மு.க. ஏடுகளுடன் இலங்கை தி.மு.க.வினரின் ஏடுகளும் எழுத்துக்களும் உலவிவந்தன. மார்க்ஸியம் பேசியவர்கள் அன்றும் கோஷங் களையும் குறைகளையும் மாத்திரமே மலையகத்தில் விதைத்தார்கள்.
இர.சிவலிங்கம் காலத்தில் ஏற்பட்ட கல்வித்தாகம், இலக்கிய வேகம் வீரகேசரி உதவியுடன் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மூலம் பரந்த அளவில் செயல்பட்டது. அம்மன்றம் நலிவடைந்த பின் சில வருடங்களின் பின் அட்டனில் மலையக எழுத்தாளர் மன்றம் அமைக்கப்பட்டது. அம்மன்றமும் அற்ப ஆயுளிலேயே மறைந்து போயிற்று. அதைத் தொடர்ந்து ஆங்காங்கு பல இலக்கிய அமைப்புகள் தோன்றின. நந்தலாலா குழுவினரைத் தவிர மற்றவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதும் செய்யவில்லை.
அந்தனி ஜீவாவின் முயற்சியினால் மலையக கலை இலக்கியப் பேரவை அமைக்கப்பட்டு புதிய உற்சாகத்தோடு பலரை இயங்க வைத்தது. சில நூல்களும் பிரசுரத்துக்கு வந்து வெற்றி பெற்றன. அந்தனி ஜீவாவின் நெருக்கத்துக்குப் பின்தான் மலையகத்தின் இலக்கியத் தென்றலாக மிளிரும் சாரல் நாடன் அதீத இலக்கிய முயற்சியில் ஈடுபட்டார் என எண்ணுகிறேன். சாரல் நாடன் பழைய ஆவணங்களைத் தேடி ஆய்வுகளை செய்து கோ.நடே சய்யர் சீ.வீ.வேலுப்பிள்ளை போன்றோரின் வாழ்வையும் பணிகளையும் தந்துள்ளார். இன்னும் அவரிடம் மலையக சமூகம் பல்வேறு வரலாற்று ஆவணங்களை சிரமப்பட்டுக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கின்றது.
கொட்டகலை இலக்கிய வட்டத்தை சாரல் நாடன் அமைத்து தனது சொந்தப் பணத்தைப் போட்டு ஒன்பது நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளார். இவற்றுள் கடல் கடந்து சென்று முன்னவர் பூமியில் நம்மவரின் புதிய அவலங்களை இரத்தம் சொட்டச் சொட்ட சிக்கன்னராஜ எழுதியுள்ள வேரனுந்த மரங்கள் குறுநாவலும் அடங்கும். புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் எழுத்தாளர் சிக்கன்னராஜ பல ஆண்டுகள் இயந்திரங்களுடன் இரவும் பகலும் உறவாடி உழைத்துச் சேகரித்த பணத்தை இலட்சியப் பணியுள் 42

லாபம் கருதாது செய்ததை தவறான எண்ணங்களை வைத்துக்கொண்டு விமர்சிக்கக்கூடாது.
புதிய சிந்தனை, நவீன இலக்கிய எண்ணம், மற்றும் கொள்கைகளைக் கொண்டு எழுதி வருபவர்களுக்கு அதிகமான ஆதரவு இல்லை என்று பாலா சங்குப்பிள்ளை எழுதியுள்ளார். மற்றவர்கள் எல்லாம் கொள்கைகள் இன்றியா எழுதினார்கள்? ரஷ்யாவில் அக்டோபர் சோஷலிசப் புரட்சி ஏற்பட்டபோது மகாகவி பாரதி மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள். என்று தனது மூதாதையர்களின் தெய்வீக நிலையிலிருந்து வாழ்த்தியுள்ளார். பேராசிரியர் கா.சிவ்த்தம்பி என்ற பேரறிஞர்கூட நாங்கள் வேர்களிலிருந்து அறுந்தவர்களாக இருக்க முடியாது இந்தப் போக்கிலே போகிறதுக்கான ஒரு நிலையை அந்தக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும், அதனை எங்களுடைய சமூக, வாழ்க்கையினுடைய இலட்சியமாகக் கொள்ளவேண்டும் (ஞானம் 37) என்கிறார். கலை இலக்கிய உருவாக்கத்தில் முற்போக்கு, நவீனத்துவம் என்ற சொற்களால் மூதாதையர்களின் தெய்வீகத் தளங்களை நிர்மூலமாக்குவதாக நோக்கங்கள் இருக்கக்கூடாது. இந்தக் கீழ் நிலை எண்ணங்கள் நிலை யற்றவையாகும். எமது வழியில் இடைச்செருகல்களாக வந்த மனிதநேய ஒருமைப்பாட்டை அழிக்கும் தீமைகளை பூசல்களை மட்டுமே இல்லாது பண்ண வேண்டும்.
அச்சடிக்கப்பட்ட நூல்களை திட்டமிட்ட வகையில் விநியோகம் செய்தல் வேண்டும் என லெனின் மதிவானம் எழுதியுள்ளார். இவர் யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தவர். பக்கத்தில் உள்ள சாரல் வெளியீட்டகம் வெளியிட்ட நூல்களில் சில பிரதிகளையேனும் விற்பனை செய்து கொடுத்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இலக்கிய அமர்வுகளில் வந்து சொற்களைக் கொட்டிவிட்டுச் செல்வதில் என்ன பயன்.
பாலா. சங்குப்பிள்ளை கொட்டகலை இலக்கிய வட்டத்தின் அமர்வு களில் நான்கு அமர்வுகளுக்கு மட்டுமே சமூகமளித்தார். புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் எதையும் வெளியிட்டுத்தருமாறு கேட்கவில்லை, கேட்டிருக்கலாம் தானே. பாலா நிறைய வர்த்தகஸ்தானங்களுடன் தொடர்புடையவர். அவருடைய நூல்களையேனும் அச்சிட்டு வாங்கி விற்பனை செய்திருக்கலாமே.
மலையக இலக்கிய வாதிகளிடையே பொறாமையும் போட்டிக் குணங்களும் இருப்பதினால்தான் நாம் பயணப்பட்டு இன்னும் அதே இடத்தில் இருக்கிறோம் என்கிறார். சென்ற மாத மல்லிகை சஞ்சிகையில் இவர் எழுதியுள்ள கட்டுரையில் நம்மவர்கள் யாரைப்பிடித்து என்ன செய்ய வேண்டுமென தெரியாமல்தான் இன்னமும் இருட்டில் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மை அது அல்ல. எல்லைகளைக் கடந்து நாடுகளைத்தாண்டி நம்மவர்களும் தடம் பதித்து வருகிறார்கள்.
திருகோணமலை இலக்கிய ஒன்றியம் சென்னை மணிமேகலை பிரசுரம் மூலம் இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளிக்கொணர்ந்துள்ளதாகவும் இத்தொகுதிகளில் மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இடம்பெற்று சம்பந்தப்பட்டவர்கள் கெளரவிக்கவும் பட்டார்கள். மலையகத்தில் இத்தகைய முயற்சிகள் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
43

Page 23
மணிமேகலை பிரசுரம் இலங்கை எழுத்தாளர்களின் 126 நூல்களைப் பதிப்பித்துள்ளது. புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் 97 எழுத்தாளர் களினதும் புலம் பெயராது இலங்கையில் குறிப்பாக வட கிழக்கில் உள்ள எழுத்தாளர்களின் 29 நூல்களையும் பதிப்பித்துள்ளது. புரட்சி பாலன் போன்ற சிலரது மூன்று நூல்களும் பிரசுரமாகியுள்ளன.
திருகோணமலை இலக்கிய ஒன்றியம் சென்னை மணிமேகலை பிரசுரம் மூலம் சிறுகதைகளை அச்சுக்குக் கொடுக்குமுன் எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதையுடன் ஒவ்வொருவரிடமும் 1000 ரூபாய் பணமும் பெற்றுக்கொண்டு அச்சிட்ட பின் ஆயிரம் ரூபாய்க்கான பிரதிகளை வழங்குகிறது.
மலையகத்தில் இத்தகைய முயற்சிகளை இல்லை எனும் பாலா மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கதைக்கனிகள் உட்பட பல நூல்கள் வெளியிட்டுள்ளதையும் மலையகத்தைச் சார்ந்த துரைவி பதிப்பகத்தார் 33 சிறுகதைகளையும், வரலாற்றுப் போக்கிலான 53 சிறுகதைகளையும் இன்னும் பல நூல்களையும் அண்மையில் கூட மு.சிவலிங்கம் மொழி பெயர்த்த சீ.வீ.யின் தேயிலை தேசம் நூலும் எவ்வித பணமும் பெறாமல் வெளியிட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு வெளியீட்டின் போது கெளரவித்து பிரதிகளை இலவச மாகவும் வழங்கியுள்ளார். ஈழக்குமார், “குறிஞ்சி பூ” கவிதைகளை வெளி யிட்டுள்ளார். இன்னும் உண்டு. இவைகளையெல்லாம் தெரியாமல் அல்லது தெரிந்தும் மறைப்பது சரியல்ல.
180 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் எம்மவரின் வரலாற்று ஆவணங்களை முறையாகச் சேகரிக்கத் தவறியதை தேடித் தேடி வெளிக்கொணர்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் அல்லது அவர்களை விட சிறப்பாகச் செய்துகாட்ட வேண்டும்.
பொய்யான குற்றசாட்டுகளைச் சுமத்த கூடாது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் காலம் முதல் பல எழுத்தாளர்களோடு உறவு வைத் திருக்கும் நான் சாதித்துவத்தை காணவில்லை. என்றோ சொன்னதை சிலர் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சாரல் பதிப்பகம் வெளியிட்ட நூல் களின் படைப்பாளிகள் எவரேனும் சாரல் நாடனுக்கு உறவினர் அல்ல. இலக்கிய நண்பர்கள்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விமர்சித்துகொண்டிராமல் இனி யேனும் எழுத்தாளர்கள் செயல்படுபவர்களோடு சேர்ந்து பணிகளை முன் னெடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைத்து நூல்களையும் அச்சிடும் வாய்ப்பில்லை. ஒவ்வொரு நூல்களாக வெளிக்கொணர ஒன்றுபடுவோம். காலத் தின் பல்வேறு அவசியங்களையும் எழுத்தில் காண்போம். சிந்தனைத் தோட்டத் தில் மலரச் செய்வோம்.
இல.நாகலிங்கம், தலவாக்கலை,
கடந்த யூன் மாதம் வெயியாகியிருந்த “ஞானம்' சஞ்சிகையில், திரு.
லெனின் மதிவானம் கட்டுரைக்கு ஒருபதிலுரையை சாரல்’ நாடன் எழுதி
யிருந்தார். அது பொறுப்புள்ள சமூக அக்கறையுள்ள எழுத்தாளரின் பதிலாகத்
தென்ப்டவில்லை. அதற்காய் திரு லெனின் மதிவானம் கட்டுரையிலுள்ள 44

விடயங்களில் முழுமையாக எனக்கு உடன்பாடில்லை. இனி விடயத்துக்கு வருவோம்.
“லெனின் மதிவானம் இலவச அறிவுரையை வழங்கியுள்ளார்” எனத் தனது மறுப்புரையில் கூறியிருந்தார். அந்த இலவச அறிவுரையைத் தானும் வழங்கி வருவதில் முன்னணியில் இருப்பதை அறியவில்லையா? அப்படி எனின் விமர்சனம், திறனாய்வு, நூல் பற்றிய மதிப்பீடு தேவையில்லாத ஒன்றா? இலக்கியத்திற்கு அரசியல் அளவுகோல் தேவையில்லை என்ற தொனியில், ‘எழுத்தாளரிடம் முக்கிய கடமையாக அரசியற் செயற்பாடுகளை எதிர்பார்ப்பது பொருந்தாது என்கிறார். பாரதி, பாரதிதாசன், கைலாசபதி, சிவத்தம்பி, சி.வி.வேலுப்பிள்ளை போன்றவர்கள் அரசியல் நிழலில் நின்று கொண்டு இலக்கியம் படைக்கவில்லையா? அரசியல் இல்லையெனில் ஒரு “பாரதியார்’ என்ற மாமனிதனை உலகம் அடையாளம் கண்டிருக்குமா? அரசியல் அளவுகோல் கொண்டு எழுத்தாளர்களை அடையாளங்காண முற்படக் கூடாது என்பதும் ஒரு அரசியல்தான்.
திரு இரா.சிவலிங்கம் அவர்கள் இடதுசாரியாக இருந்தது பல்கலைக் கழகத்தில்தான். பல்கலைக்கழகத்தில் இளமைக் கனவுகள், இலட்சியத் துடிப்புகள் அது இடதுசாரிக் கருத்துக்களை உள்வாங்கும் எனவும், இன்று மலையகம் மறுவாசிப்புக்கு இட்டுச் செல்லவேண்டும் என அவர் கூறியதை பதிவு செய்திருக்கின்றார் என்ன அபத்தம். இரா. சிவலிங்கம் எப்போதும் இடதுசாரியாய் இருந்ததில்லை. அவர் ஒரு ஜனநாயகவாதி. இடதுசாரியாக இருந்தால் இந்த மண்ணைவிட்டு ஓடிப்போயிருக்கமாட்டார். மலையகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் காத்திரமானவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த திரு. சண்முகதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழு நேரமாகப் பணியாற்றியவர். இடதுசாரியாகவே வாழ்ந்தவர். திரு.மரியதாஸ் சோரம் போகாமல் இடதுசாரியாகவே வாழ்பவர். இப்படி எத்தனையோ பேர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இடதுசாரிக் கருத்துக்களுடன் இன்னும் சொல் நடைமுறைக் கேற்ப வாழ்ந்து செயற்பட்டு வருவதை ஏன் விளங்கிக் கொள்ளவில்லை? திரு சிவலிங்கம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தாரா? பல்கலைக்கழகத்துக்கு அப்பால் இடதுசாரிச் சிந்தனை களை உள்வாங்கிய எத்தனையோ பேர் மலையகத்தில் இருப்பதை இவர் அறியவில்லையா? ஒரு வகையில் இதுவும் ஓர் அரசியல்தான்.
அடுத்து பதிப்பு முயற்சிகள் பற்றிக் கூறுகின்றார். நல்லது அவரது பதிப்பு முயற்சி பற்றிப் பாராட்டவேண்டும். அவரது பொருள், பணம், இழப்பு சர்வ சாதாரணமானவை அல்ல. பலர் புத்தகங்கள் வாங்கிச் சென்றவர்கள் விற்றுப் பணம் தரவில்லை என்ற நிலையும் உண்மைதான்; அது பெரும் பாதிப்பு. அதற்கான மாற்று வழிகளைத் தேடவேண்டும்.
இதுபோக, தான் புத்தகம் எழுதிச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றதை அடையாளப்படுத்துகின்றார். சாகித்திய மண்டலப் பரிசுதான் எழுத்தாளனுக்கு உரிய மதிப்பீட்டு அளவுகோலா? பாரதி, பாரதிதாசன், கைலாசபதி, இராகலை பன்னிர் போன்றவர்களை எப்படி அளவுகோல் போடுவது. இவர்கள், சாகித்திய 45

Page 24
மண்டலம், சாகித்திய அக்கடமி, பொன்னாடை, பரிசுப்பொதி என்ற நிலையில் எழுதி நிலைபெற்றுள்ளனரா என்பதை இவர் விளக்கமுடியுமா?
கூடவே தேசிய கலை இலக்கியப் பேரவையைப் பற்றி எழுதுகின்றார். நான்கு நூல்கள் மலையகத்தைப் பற்றி வெளியிடப்பட்டுள்ளன எனக் கூறியிருக்கின்றார். தேசிய கலை இலக்கியப் பேரவை தேசம் தழுவிய இலக்கிய அமைப்பு. புதிய பண்பாடு, புதிய வாழ்வு, புதிய கலாசாரம் என்ற சுலோகங்களைக்கொண்டு செயற்பட்டு வருகின்றதே ஒழிய சாகித்திய மண்டலப் பரிசுப் பொதிக்காக இல்லை என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள இவ்வமைப்பு தேசிய சாகித்திய விழாவிற்கோ, பரிசுக்கோ ஒரு நூலைத் தானும் அனுப்பவில்லை. அது மக்கள் புத்தகப் பண்பாட்டு வளர்ச்சியிலே தங்கியிருக்கின்றதே ஒழிய, வெறும் என்.ஜி.ஒ.க்களை நாடி நிற்கவில்லை.
எனவே சாரல் நாடன் பதிலுரை ஒரு பொறுப்புள்ள இலக்கிய விபரத்திலிருந்து வரவேண்டும். தவிரவும் இவர் எழுப்பிய ஏனைய கேள்விகள் விளக்கங்கள் நியாயமானவையாக உள்ளன என்பதையும் மனங்கொள்ள வேண்டும். ஓர் அன்பர்.
பேனையை எடுத்து
பேப்பரின் மீது நிறுத்தியாயிற்று
நெடுநாளைக்குப்பின்பு
இன்று!
காசு துரத்தித் துரத்தி
களைத்துப் போயிற்று
O63
சரி இண்டைக்காவது
எல்லாத்தையும்
மறந்திருப்போம்; கவிதை செய்வோம்
என்றால்
கண்ணாமூச்சு ஆடுகிறது
இந்தக் கவிமனசு
ஏனிப்படி ஆகிப்போனேன்
நண்பர்களே!
அது ஒரு நிலாக்காலம்
米 米 米 米 来 米 米 来
காலை கனவு கண்டு எழுந்தேனென்றால்
மாலை சூரியன் வானம்விட்டுப் போகும்வரை
46

வெளியெங்கினும் கவிதை வாகனமேறிச் சிறகடிக்கும் கவிஞன் நான்.
நேற்றுப்போலவே தெரியும் பாடசாலைப் பல்கலைக்கழக பொழுதுகளிலும்கூட பறந்து திரிந்த கணங்கள்
ஞாபகமிருக்கிறது இன்னும்
இன்று?
பூமரம் வெட்டி காய்கறித்தோட்டம் செய்யும் வாழ்க்கை
வானம் சிவக்கும் மாலைப்பொழுதில் பின் வீட்டுத்தோட்டத்திற்கு வரும் செண்பக அக்காவும் முறைக்கிறது இன்று
பக்கத்து வீட்டு நியூட்டனும் வாலாட்டாமல் போயிற்று - உர்ரென்று
தோட்டத்துப்பூக்கள் மாத்திரம் என்றும் போல் மாறாமல் தலையாட்டுகிறது வாசனையுடன் அதற்குத்தான் எனது நிலை புரியும் போலும்
கொய்யாமரத்து அணில்கூட நான் பார்த்தபடி இருக்க கொய்யாவை கோந்திவிட்டு அதன்பாட்டில் போய்விட்டது
(5 மரியாதைக்காவது
என்னைப் பார்த்து புன்னகைத்திருக்கலாம்
சரி பரவாயில்லை as6" fifty sy s அதற்கும் எனக்கிருப்பதைப்போல say crer, யோசனைகள் அதிகமிருக்கும் போல தரு:08லை.
47

Page 25
அன்புள்ள "ஞானம்' ஆசிரியருக்கு, வணக்கம்.
பேராசிரியர் சிவத்தம்பியுடன் தாங்கள் நடத்திய நேர்காணலைப் படித்ததனால் ஏற்பட்ட மன உந்துதல் காரணமாக இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன்.
ஈழத் தமிழிலக்கியப் புலத்தின் இன்றைய முன்னணி அறிஞர்களுள் ஒருவராக விளங்குபவர் சிவத்தம்பி அவர்கள். அவரைச் செவ்விகண்டு எழுதியிருப்பது நமது இன்றைய இலக்கியக் களத்துக்கு ஞானம் செய்த பயன்மிக்க ஒரு பணியாகும். பேராசிரியரது நேர்காணல்கள் வேறு சில சஞ்சிகைகளிலும் மற்றும் ஊடகங்களிலும் முன்னர் வெளியாகியுள்ளன. ஆயினும் ஞானம் நடத்திய இந்த நேர்காணல் அவை எல்லாவற்றிலும் வேறுபட்டதாகவும் தனித்துவம் கொண்டதாகவும் தலை நிமிர்ந்து நிற்கின்றது. சுருங்கிய வினாக்களும் விரிந்த பதில்களுமாயமைந்த அருமையான செவ்வி, இது.
ஒரு சிறந்த நாவலைப் படிப்பது போன்று ஆவலுடன், ஞானத்தின் அடுத்த இதழ் எப்போது கைக்கு வரும் எனக் காத்திருந்து இந்த நேர்காணலைப் படித்தேன். பேராசிரியர் இதுவரை வேறு எங்கும் சொல்லியிருக்காத பல விடயங்கள் இதிலே சொல்லப்படுகின்றன. இதுவரை திறக்கப்படாத அவரது சிந்தனைச் சிமிழ்கள் பல இங்கே திறக்கப்படுகின்றன. நேர்காணல் நடத்திய தங்களது திறமையின் அறுவடை இது. பேராசிரியரது ஆளுமையையும் அறிவுப் புலத்தின் ஆழத்தையும் வெளிக்கொணர்வதாக இருந்தன இங்குள்ள கேள்விகளும் பதில்களும். இந்த நேர்காணலிலே ஓர் அறிவுச் சுரங்கத்தின் அகழ்வு நடந்திருக்கிறது.
இந்தச் செவ்வியில் எது முக்கியமானது என்று சொல்வது எளிதன்று. செவ்வி முழுவதுமே ஒரே சீராக வந்த, மகத்துவமான ஒரு சிந்தனைக் கோவையாக இருக்கின்றது. பேராசிரியர் நிம்மதியாகவிருந்து, மனந்திறந்து பேசியிருக்கிறார். நேற்று, இன்று, நாளை என்னும் முக்காலத்தையும் ஊடறுத்துச் செல்கிறது, அவரது சிந்தனை.
இந்த நேர்காணலில் சில இடங்களைத் திரும்பவும் ஒன்று இரண்டு முறை படித்துக்கொண்டு அப்பாற் சென்றேன், மனநிறைவுக்காக - வியப்பில் லயிக்கும் சுகத்துக்காக. “ஒரு புதிய விஷயம் வருகிறபொழுது, அந்தப் புதிய விஷயத்தைக் தெரிகின்ற இரண்டாவது முன்றாவது ஆளாக நான் இருக்கக் கூடாது. அந்தத் துறையில் உள்ளவர்களுக்குத் தெரிகின்ற அதேவேளையில் எனக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டும்” என்று பேராசிரியர் சொல்வது நெஞ்சைச் சிலிர்க்க வைத்தது. அது அவரது அறிவு வேட்கையின் மூலம்.
"நாங்கள் வேர் அறுந்தவர்களாக இருக்கக்கூடாது." - இது நாம் ஒவ்வொருவரும் நெஞ்சில் பதிக்கவேண்டிய மந்திரம்.
48
 
 
 

இன்னும் இவர் சொல்லாரோ என்னும் ஓர் ஏக்கமும் இன்னும் சொல்ல வைக்கவேண்டும் என்னும் ஆர்வமும் இந்த நேர்காணலைப் படிக்கும்போது என்மனதில் விஞ்சி நின்றன.
நமது இலக்கியப் படைப்பாளிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் வழிகாட்டக்கூடிய இந்த நேர்காணலை வழங்கிய "ஞானம்' நமது பாராட்டுக்கு உரியது. வ. இராசையா கொழும்பு 06.
"ஞானம் கிடைக்கிறது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நேர்காணல் நன்றாக இருக்கிறது. சுயவெளிப்பாடாக, ஒப்புக்கொடுத்தலாக பலவற்றையும் பேசுகிறார். இது வரவேற்கப்படவேண்டியது.
ஒருவர் தன்னை வெளிப்படையாக்குவதையே நாம் மதிக்கவேண்டும். இதை எதிர்ப்பதோ, கிண்டலாக்குவதோ கண்ணியமானதல்ல. எதிர்வினைகள் வேறு. மதிப்பும் கிண்டலும் வேறு. ஞானத்திற்கும் பேராசிரியருக்கும் பாராட்டுகள். நீண்ட காலத்துக்குப் பின்பு புனைவுகள் நீங்கிய ஒரு நேர்காணலைப் படிக்கக் கிடைத்தது மகிழ்ச்சி.
கருணாகரன்.
சுதர்மமகாராஜன் ஜுன் 2003 இதழில் எழுதிய ‘விடுபடல்' என்ற dossos assooTourLDIT fleft unt GSu6) 66tcp60pulsor (DOMESTIC RAPE) கொடுமையை நன்கு உணர்த்துகிறது.
அப்படியான ஆண்களின் மரண முகத்தில்தான் மனைவிமார் ஆறுதல் காணமுடியும். விதவைநிலை விடுதலைதான்.
சுதர்மமகாராஜன் தேடிப் படிக்கவேண்டிய எழுத்தாளர்போல் தோன்று கிறது. நந்தி, யாழ்ப்பாணம்.
தங்களின் "ஞானம்' சஞ்சிகையில் "நேற்றைய கலைஞர்கள்’ என்ற தலைப்பில் நண்பர் அந்தனி ஜீவா கலைஞர்களைப் பற்றி எழுதிவரும் குறிப்புகளைப் படித்து மகிழ்ச்சியடைந்ததோடு தங்களுக்கும் நண்பர் அந்தனி ஜீவாவுக்கும் எங்கள் பாராட்டுக்கள்.
தங்களின் இம்மாத இதழில் நேற்றைய கலைஞர்கள் பகுதியில் நடிகை ஜெய கெளரி மனோரஞ்சித கான சபாவின் கண்டுபிடிப்பு என்று தவறுதலாக எழுதப்பட்டிருக்கிறது. இவர், 1958 ஆம் ஆண்டில் கவின்கலை மன்றத்தின் கண்டுபிடிப்பு என்பதை தங்களின் அடுத்த இதழில் குறிப்பிடும்படி தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஜே.பி.றொபட், தலைவர், கவின்கலை மன்றம்.
கடந்த பல "ஞானம்' இதழ்களில் பேராசிரியர் சிவத்தம்பியுடனான
நேர்காணல் பலவற்றைக் காண முடிந்தது. மிகச் சிறந்த அனுபவங்களை
வருங்காலச் சந்ததிக்கு அர்த்தபுஷ்டியுடன் வெளியிட்டுவரும் ஞானம் இந்தப்
பேட்டியினைச் சிறிய நூல் உருவில் வெளியிட்டால் பலரும் பயனடைவர்
எனக் கருதுகிறேன். திக்கவயல் சிதர்மகுலசிங்கம்.
49

Page 26
இளைய தலைமுறைக் கவிஞனான சஜிதரனின் வீரசுதந்திர வேட்கை பாரதியை நினைவு கூரவைத்தது. ஓசை நயம், உன்னத சொல்லாட்சி, உணர்ச்சிப் பெருக்கு எதிர்காலத்தில் இவனே முதன்மைக் கவிஞனாவான் என்பதை உறுதி செய்வதுபோல் பாடல் அமைந்திருந்தது.
இது வெறும் புகழ்ச்சியல்ல. கவி.கா.மு.ஷரிப் பாடிய வரிகளை நான் அவனுக்குச் சொல்லுவேன்.
சிந்தையள்ளுங் காவியங்கள் செய்துள்ள முன்னோர்
சிரந்தாளும் இவன் கவியில் இவனாளு கின்ற சந்தங்களில் துள்ளுகின்ற ஒசைநயம் கேட்பின்
சான்றுரைப்பேன் இவன்கவிதை காலத்தை வெல்லும், முந்துபுகழ் சொல்லல்ல முற்றிலுமீ துண்மை.
ஜின்னாஹற், தெகிவளை. அன்புடையீர், வணக்கம்.
தங்களின் ஆதரவோடு என் ஆய்வுப்பணி நல்ல முறையில் நடந்தேறி வருகின்றது. முதற்கட்டமாக ஆய்வு நெறிமுறைகள் குறித்த தேர்வுகளை முடித்துவிட்டு தற்பொழுதுதான் முழுமையாக ஞானம் சிறுகதைகளில் கவனஞ் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன். மேலோட்டமான என் முதற்பார்வையில் எழுந்த வினாக்களைத் தங்களின் விரிவான விடைகளைப்பெற பேராசிரியர் மகேஸ்வரன் அவர்களின் மூலம் அனுப்புகிறேன். இதுகுறித்து எழுகின்ற இதர வினாக்களை மடல்வழி அனுப்பி வைப்பேன். தொடர்ந்து என் ஆய்வுப்பணிக்கு தங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
மா.ஷிலா, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். ஆய்வுநெறியாளர் எனும் நிலையில் கடந்த ஓராண்டாய் ஞானம் இதழ்களோடு இரவு பகலாய்ப் பழகி வருகிறேன். என் ஆய்வு மாணவி சிலாவின் உழைப்பு ஒரு நல்ல ஆய்வேடாக மலரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நண்பர் மகேஸ்வரன் அவர்களின் வழி தங்களைப் பற்றியும் தங்கள் படைப்புகளைப் பற்றியும் பெரிதும் அறிந்தேன். சென்ற ஆண்டு அயல்நாட்டுத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்துக் கருத்தரங்கம் நடந்ததையும் அக்கட்டுரைகள் நூல்வடிவம் பெற்றதையும் தாங்கள் அறிவீர்கள். இந்த ஆண்டு அயல்நாட்டுத் தமிழ் நாவல்கள் குறித்துக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில் தங்களின் குருதிமலை நாவல் குறித்து வழிலா கட்டுரை வழங்கவுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் விடைகள் வந்தவுடன் ஆய்வேடு முழுவடிவம் பெற்றுவிடும். ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு ஓராண்டு கால எல்லையை உடையது என்பதால் பார்வைக்கு வேலியிட்டுச் சில கோணங்களில் மட்டும் ஆய்வு நிகழ்ந்துள்ளது. இருப்பினும் ஆய்வு மனநிறைவை அளிக்கிறது. இந்த ஆய்வேட்டை "ஞானம் மூலம் தாங்களே நூல்ாக வெளியிடவேண்டும் என்பது என் விருப்பம்; அதுதான் பொருத்தமுங்கூட வர்லா தேர்ச்சிபெற்றபின் பல்கலைக்கழக அனுமதி வாங்கியபின் இது குறித்து விரிவாக எழுதுவேன்.
முனைவர் சா.உதயசூரியன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாஆர்.

புரிந்துணர்வு
எாப்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலேயே ஓராண்டைக் கடந்துவிட்டது புரிந்துணர்வு ஒப்பந்தம்.
விடியும் என்றிருந்த எம்வாழ்வும், நம்பிக்கையும் விடைகாணா வினாக்குறியுடன் தொடர்கிறது.
இந்நிலை, தொடரும் என்ற நம்பிக்கையைவிட நீண்டநாள், தொடரா என்ற நம்பிக்கையினமே பெரிதாகிறது.
தலைவர்கள் கைகுலுக்கினர், தூதுவர்கள் வந்துபோயினர், ஆறுசுற்றுக்கள் அமர்ந்து பேசினர், அபிவிருத்திக்கு முதலிடம் என்றனர். உதவி கேட்டு மகாநாடு கூடினர்.
இத்தனைக்குப் பிறகும் எம்வாழ்வில் என்ன மாற்றம் நிகழ்ந்தது? ஏதுமில்லை என்று பெருமூச்சைத் தவிர.
களுத்துறையில் கைதிகளாய் கடலில் தொடரும் தடைகளாய் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் தொடரும் இராணுவக் கெடுபிடிகளாய் எம்வாழ்வோடு அவலங்கள் இணைந்து நிற்கையில் எப்படிப் புரிந்து மகிழ முடியும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை. "

Page 27
வடக்கு நோக்கிய பட்ணத்தில் செம்மணி வெளி தாண்டிப்போகையில் வவிக்கும் மனதில் குருதி உதை அவர்கள் புதைகுழிகளுக்கு அர்ச்சனைப் பூக்களாகப் எண்கணிகள் சொரிகின்றன.
எனர் இரத்தத்தினர் இரத்தங்கள் அரும்பாப். மொட்டாப். ஆவி உரிஞ்சாப். காயாப். கணிப்பா குருதி பீச்சி அது உறையுமுனர்னே நாடித்துடிப்புகள் நன்றாய் அடங்கமுண்னே மாயாப் அமிழ்ந்து போன் புதைகுழிகளில் இன்னமும் அழுகையொலி கிே
குருதியுறைந்த இந்த மரணழுமி தெருவோரம் பயணிக்கையில் கண்கள் மூடி மோனத் தவத்தில் ஆழ்ந்து உறங்கவா முடியும்?
காணாமல் போன உறவுகள் சித்திரவதைகளினால் சிதைக் அனுமதியினர்றியே அகால காலத்தில் காவனிடம் அனுப்பிவைக்கப்பட் அவரைான நாடகினிை எனினால் எப்படி மரக்க முடிவி
பிறக்கட்டும் புதுப்புகள் கிடைக்கட்டும் சுதந்திரம் - அதுவிேT 一= தாயக விடிவுக்காப் நாணி
 
 

一下ーニ