கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.09

Page 1
|-
|- | -
|-
ZZ)
■-, !
| ()|- sae,
|-
 


Page 2
முகில்களினைக் காற்று முக்காங் கயிறுகட்டித் தத்ரென்று இழுத்துச் செல்வதனைப் பார்த்திருந்தேன்.
அன்றொருநாள் ஆபிரிக்க அடிமைகள் இப்படித்தான் வந்தேறுகுடிகளினால்
வி:பங்கு உடல்பினைக்கக் கொண்டுசெல்லப்பட்டாரோ? கொந்தளித்த நெஞ்சோடு. இப்படித்தான் தென்னாட்டார் எழிலோடு அட்டைகளும் விளையாடும் நம்மலைக்கு 3 pjevič UU tim? கரும்புவனங்களிடைபிழிபட்டுச் சாறாக விரும்பியோ விரும்பாதோ இந்தியர்கள் பிஜிநோக்கி இப்படித்தான் மந்தைகள்போல் ஒட்டி வரப்பட்டாரோ?
நானறியேன்
ஆனாலும் எங்கள் நிலக்கள் இப்படித்தான் போர்ப்பேயால் அகதிகளாய் அடிமைகளிர்ப் கொண்டிழுக்கப்பட்டார்கள் கண்டதால். முன்னவர்கள் பட்டதுயர் இழிவை எண்ணிக்கலங்குகிறேன்.
த, ஜெயசீஃபன்
நல்லூர்
 

ஆசிர் : தி.ஞானசேகரன்
துவை ஆffபர் , ! புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இண்ைபர் திப்பு ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்கள் கிக்கோ நா. ஆனந்தன்
கண்ணி அனபா ! - கெ.சர்வேஸ்வரன்
(all, T.G.I. -08-17857 () (Office)
08-23-4755 (Res.) Fax – 08-234755
E-Millgnanan magazinea.yahoo.com
b
தொ ர்புகளுக்கு. "˞" தி.ஞானசேகரன் 197, பேராதனை வீதி, கண்டி.
உள்ளே.
நேம் கானல்
பேராசிரியர் பீ.பீபத்தும் . II fill.3 TL3, Tizi , , , ................. 3.
சிறுகதை சந்தேகக் கதிர் .
:ேவிஜயகர்
கட்டுரைகள் எழுதத்தாண்டும் எண்ணார்கள். 0 ? தனர்.மனோகாள்
இலங்கையின் இப்க்கியத்திறனாம் விண் ஆழக் குறைவும் கனதிவீழ்ச்சியர் . 75 ஒள் ஆய்வாளர்
கவிதைகள் É, JT573, ILIšg, så ................................ 02 ||11:11. (Tr:്വീ - ?T ................................................."للغ #'LITT{f த1 ஜீதரன்
ni ". . . . . . . . . . . . . . . .-.-.-.-..-..-..-...................... 5 2 த.ஜெயசீர்
தக் காரை வாழவைப்போம் . 51 ன்ெ. கதர்ாள்
'F'IL JILT II
இலக்கிய நிகழ்வுகள் - - - - - - - - - - - 2) மலேசிய மடல் .
. . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 42
நெற்றிக் கண் .
. . . . . . if
விவாதமேடை வாசகப் பேசுகிறார் . 1.
அட்டைப்படம் :- கிக்கோ

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
.விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
“பாரதி கழகம்’ அமைப்போம் அவன் வகுத்த பாதையில் நவீன இலக்கியச் செல்நெறித் தேரை இழுத்துச்செல்வோம்
ஆங்கிலத்திற்கு ஷெல்லி, உருதுக்கு இக்பால், வங்காளத்திற்குத் தாகூர், தமிழுக்குப் பாரதி.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதையின் குறியீடு பாரதி. பாரதி எல்லாத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட கவிஞன். தத்துவ ஞானியாக, சமூக சீர்திருத்தவாதியாக, தேசாபிமானியாக, பிறர் ஈனநிலை கண்டு துள்ளுகின்ற மனிதக்குரலாக, ஆணும் பெண்ணும் சரிநிகர்சமன் எனக்குரல் எழுப்பும் பெண்ணிய வாதியாக, இனவிடுதல்ைக்குரலோனாக, பாட்டுத்திறத்தால் பாரினைப் பாலித்திட எண்ணங்கொண்ட கலை இலக்கியவாதியாக பன்முகம் காட்டி நினறவனி பாரதி. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ச் சமுதாயக் கட்டமைப்பில் மிளிர்ந்த பாரதியின் சிந்தனை இன்றும் நாம் வாழ்கின்ற இருபத்தியோராம் வாழ்வியலுக்குப் பொருத்தப்பாடாக இருப்பதைக் காண்கிறோம். நம் நாட்டில் கொழுந்து விட்டெரிகின்ற இன விடுதலை உணர்வு, ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாரதியின் சிந்தனை வழிவந்தது. இன்று நம் இளைஞர் களின் தணியாத போர்க் கோலத்தின் இலக்காகத் தவிக்கும் ‘தாகத்தில் எதிரொலிக்கிறது. தமிழ் இனப் போராட்ட வரலாற்றினர் பெரும் தாக்கத்தை,
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
4
 
 
 
 

என்ற கவிதை உணர்த்தி நிற்கிறது. பெண்ணடிமைக்கு எதிராய் முதலில் குரல் கொடுத்தவன் பாரதி. அவனி படைத்த காவியக் கதாநாயகி பாஞ்சாலியினி குரலில் பெண்ணுரிமைக் குரல் ஒலிக்கிறது.
‘நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் - என்னை நல்குமுரிமை அவர்க்கில்லை. புவி தாங்குந் துருபதன் கன்னி நான் - நிலை சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு தாரமுடமை யவர்க் குண்டோ!” தமிழில் காலத்தின் தேவையான கருத்தினை விரிவு படுத்த, சொல்லும் திறனை மொழியில் புகுத்தி சாதனை புரிந்தவர் பாரதி. புரட்சி, பொதுவுடமை - இப்பதங்களை முதலில் உபயோகித்தவர்.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினூடாக காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் தமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோனாகிறான்” - நவீன இலக்கியம் படைப்போருக்கு பாரதி விடுக்கும் அழைப்பு இது.
ஈழத்து இலக்கியத்தில் பாரதியின் செல்வாக்கை முதலில் பேசியவர்களில் சுவாமி விபுலானந்த அடிகளும் ஒருவர். வீரகேசரியில் சிலகாலம் ஆசிரியராக இருந்த வாரா தோற்றுவித்த பாரதி இரசனை ஏற்படுத்திய தாக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள், குறிப்பாக கைலாசபதி ஆகியோர் பாரதி சிந்தனையில் மூழ்கித் திழைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவற்றின் தொடர்ச்சியாக பாரதி சிந்தனையை ஈழத்தில் கட்டி எழுப்பக் கட்டியம் கூறுவோம். அகில இலங்கை ‘பாரதி கழகம் அமைப்போம். அங்கு நவீன இலக்கிய ஆய்வுகள் பல செய்வோம். நவீன இலக்கியத்தில் ஆர்வமும் திறனும் உள்ளவர்களை ஊக்குவித்து உயர்விப்போம். புதுயுகக் கவிஞன் பாரதி வகுத்த பாதையில் நவீன இலக்கியச் செல்நெறித் தேரை இழுத்துச் செல்வோம்.
தமிழ் உலகெங்கும் பாரதிக்கு நினைவு விழா எடுக்கும் செப்டெம்பர் மாதத்தில் அவனுக்கோர் நிலையத்தை ஈழத்தில் அமைப்போம் அதற்காய் உறுதிகள் கோடி செய்வோம்.
“எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெ ருந்தொழில் நாட்டுவம் வாரீா”
- - - - അ - - - - - - - - - - - - r
ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி : www.geocities.com\gnanam magazine
!= - - - - - - - - - - - - - - - - - -

Page 4
சந்தேகக் கைதிகள்
- கே.விஜயன் -
தூக்கமற்ற இரவு இமைகள் திறந்தபடி "ஒக்கம லேஸ்த்தி வென்ட, அத நடுவட்ட யன்ட வோனே"
சிறைக்காவலனின் குரல். தூங்க மறந்ததால் கனத்துப் போன இமைகளுக்குள் ஈட்டியாகிவிட்ட கண்கள் சிறைச் சுவரில் குத்திட்டு நிற்க கண்மணிகளில் ஓர் ஆனந்த சலனம்.
சட்டென இடுப்பை நிமிர்த்தி எழுந்து முழங்காலை மடித்து உட் கார்ந்துகொண்டான்.
‘அம்மா, மகன், மனைவி ரஞ்சனி அனைவரையும் இன்று பார்க்கலாம். மன நதியில் இன்னும் அந்த நீரோட்டம்தான்.
சிறை அறைக்குள் பரபரப்பு. எல்லோரும் எழுந்துவிட்டார்கள். சில நிமிடங்களில் நீதிமன்றத்தில் நிற்கவேண்டும். அப்பப்பா இன்றாவது விசாரணை நடைபெறட்டும். வழக்கு விசாரணையில் தன்னைக் குற்றவாளி அல்ல என நிரூபிப்பதற்கு ரஞ்சனி ஆதாரங்கள் அனைவற்றையும் கொண்டுவந்திருப்பாள். வக்கீல் துரைசாமி ஐயாவும் இலேசாக சமாளிக்க முடியாதவர். எப்படியோ பெரும் தொகைப் பணத்தை ரஞ்சனி பிரட்டி அவரிடம் கொடுத்துவிட்டாள். நிச்சயம் எனக்குச் சார்பாக தீர்ப்புக் கிடைத்துவிடும்.
சுதனின் நினைவுகள் முறிபடாத நாணலாக நெளிந்தும் வளைந்தும் சுற்றிச் சுற்றி ஒரே விதமாக சழன்று சுழன்று நிமிர்ந்தன.
நிருபனின் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது. அதில் சோகத் தின் நிழல் படர்ந்திருந்திருக்கிறது.
“சுதன் நீ சிறைக்குள்ளே வந்து ஒரு வருஸம்தான் ஆகுது. நான் இதுக் குளிர் ளே வந்து ஐநீ து வருஸமாகுது.”
"நீ வந்தது யுத்தகாலம். இப்ப சமாதானம் . எங்கேயும் குண்டு வெடிப்பு அது இது அசம்பாவிதம் இல் லேதானே. சீக்கிரம் வழக்க முடிச்சு போடுவாங்க. அதைத்தான் சொல்றனான்".
எனக்கு நம்பிக்கை இல்லே என்பது போல் தலையை ஆட்டினான். சுதன் புன்னகை செய்தான் - எனக்கு இருக்கு என்பது புண் ணகையின் பொருள்.
*ஏன் ? போராளிகளையே விடுதலை செய்யிராங்க. நாங்கள் வெறுமனே சந்தேகக்காரர்தானே” நிருபனின் உதடுகளில் மறுபடியும் புன்னகை தோன்றியது. உண்மைதான் அவன் முணுமுணுத்துக் கொண்டான். “அரி அரி கதாவ எதி லேஸ்தி வெணி ட” - போதும் போதும் தயாராகுங்கள் சிறைக்காவலனின் குரல் அதட்டலாக பறந்து வருகிறது. *க்விக் க்விக் க்விக் க்விக் ஜன்னலில் ஒரு சிட்டுக் குருவி. அதன் கீச்சுக் குரல். அதன் பின் புறமாகவிருந்து வெளிச் சம் படர்ந்ததால் குருவி சின்னதொரு கரு நிற திடலாகத் தெரிகிறது.
க்விக் க்விக் க்விக் க்விக்”
அதென்ன சுதந்திர உலகைத்
 

துறந்து இந்தச் சிறைக்குள் அடைக் கலம் தேடிக்கொண்டிருக்கிறது.
சுவரில் சின்னதொரு மண்சட்டி. அதில் ஒரு துவாரம்.
அதுதான் அதன் உலகம். இந்த மாபெரும் உலகம் ஏன் இப்படித் தனித்தனியாக குறுக்கப் பட்டிருக்கிறது.
யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு உடன்படிக்கை, சமாதான பேச்சு வார்த்தைகள் எங்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துவிடும் சிறைச்சாலைக் குள் மங்கலான வெளிச்சம்.
ஒரு மேடை, அதன் மீது நின்று கொண்டு ஓர் அரசியல்வாதி ஆவேச மாகப் பேசிக்கொண்டிருக்கிறான. அந்தக் கனவை சிறைக்காவலின் கடுரமான குரல் கலைத்துவிடுகிறது.
காலிமுக நெடுஞ்சாலை பொலிஸ் வாகனம் விரைகிறது. திருடர்கள், போதைப் பொருள் பாவனையாளர்கள், சண்டியர்கள், பிக் பொக்கட்காரர்கள், கொலை காரர்கள, சந்தேக நபர்கள் ஏழுபேர் வாகனத்துள் மூச்சுவிட சிரமம். அவ் வளவு நெருக்கடி. சந்தேக நபர்கள் ஜன்னலருகில் இருந்தார்கள். அவர் கள் கரங்களுக்கு மட்டும் கை விலங்கு.
சுதனும் நிருபனும் ஒனர் றாகவே உட் கார்ந்து இருந்தார்கள. நிருபனின் கழுத்து மடிந்து நாடியுடன் ஒட்டியிருந்தது. கண்... ணிமைகள் இறுகிக்) கிடக்கின்றன.
அது நித் திரை அல்ல. அவநம்பிக் கையின்போது அவன் கண்கள் இப்படித்தான்
மூடுணர் டு நாடி கீழிறங் கும் . நம்பிக்கையற்ற யோசனைகளில் ஆழ்ந்து விட்டிருப்பான்.
சன நெருக்கடியான வாகன போக்குவரத்து மிகுந்த நெரிசலான பாதையில் எத்தனை முறைகள் அவனை ஏற்றிக்கொண்டு இந்த பொலிஸ் வாகனம் ஓடியிருக்கும்.
அது நம்பிக்கை நிறைந்த கால ஒட்டம. பொலிஸ் வாகனத்தின் சின்ன ஜன்னலினுTடே அவன் கண்கள் வீதியில் மொய்த்துக் கிடக்கும்.
தெரிந்த முகங்களின் நடமாட்டம் வீதியில.
அடடா எவ்வளவு சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆவல் கொப் பளிக்கப் பார்ப்பான். நெஞ்சு தகிக்கும் தவிக்கும். வண்டியிலிருந்து குதித்து அந்த மக்களோடு மக்களாக நடந்து செல்ல மனம் பதறித் துடிக்கும்.
சுதந்திரம் எவ்வளவு பெறுமதி யானது. 1.
ஐந்து வருடங்களுக்கு முன்னால். அம்மா கொடுத்த பணத்தை மிகவும் பத்திரமாக எடுத்துக்கொண்டு கொழும்பு வந்தான். ஜெர்மன் போவதே இலட்சியம். வெள்ளவத்தை யில் ஏஜன்சிக்காரரை கண்டு பணத் தைக் கொடுக்கவேண்டும. அவன் வெள்ளவத்தைக்கு வந்தபோது லேசாக வானம் டி, கறுத்துக் கொண்டு வரு ஆகிறது.
மழைத்தூறல் வருவிக் கின்றது. பாதை நனைந்து லேசாக ஆவி வெளிக் கிளம் பி மணி மணம் கமழுகிறது.
“இந்த ஏஜன்சிக்காரர் ஆபிஸ் எங்கே இருக்கு?" அவனி கணி களி

Page 5
அங்குமிங்கும் தேடின.
சனக் கூட்டத்தில் தட்டுத்தடு மாறியே நடந்துகொண்டிருந்தான். பஸ் நிலையத்தைத் தாண்டியபோது
"அலோ” யார்? தலை உயர்ந்தது. கண்கள் முன்னால் பொலிஸ் ஜீப். அதற்குள் நாலைந்து பேர் உட்கார்ந்து இருப்பது நிழல்களின் தரிசனமாக. கதவு திறபட ஒருவன் கீழிறங்கினான். "மெ எனவா” - இங்கே வா.
வண்டிக்குள் அவனை எற்றி விட் டார்கள் . கையிலிருந்த பொலித்தீன் பை சோதனைக்குள்ளா கிறது. கட்டு கட்டாக பணத்தை அந்த பைக்குள்தான் பத்திரமாக வைத்திருந் தான். அவனை கீழிறக்காமலே ஜிப் முன்னால் நகர்கிறது. வாகனம் வெகு தூரம் சென்று மறையும் வரை அதன் சிகப்பு வெளிச்சத்தை வீதியில் நின்ற சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து வருடங்கள் எவ்வளவு வேகமாகப் பறந்துவிட்டன.
சுதன் பெருமூச் சுவிட்டான கண்கள் பனித்துவிட்டிருக்கின்றன.
பொலிஸ் வாகனம் நீதிமன்ற வாயிலில் நிற்கின்றது. ஜன்னலினு டாக வீதியை பார்த்துக்கொண்டிருக் கும் சுதனின் கண்களில் ஆனந்த பிரவாகம் . வீதியின் மறுபக்கம் ஜடாமுனியென கிளை விரித்துக் கொண்டிருக்கும் அரசமரத்தடியில் லயித்த கருமணிகளில் நிரஞ்சனி மகள் அருணியை இடுப்பில் சுமந்து கொண்டிருக்க அருகில் அம்மா அப்பா சட்டத்தரணி அனைவரினதும் கண்கள் வாகனத் தின் மீது ஆவலுடன் மொய்த்துக் கிடக்கின்றன.
வாகனத்திலிருந்து வரிசையாக இறங்கினார்கள்.
சட்டென வீதிக் குத் தாவி
அதனைக் கடந்து நிரஞ்சனியைக் கட்டியணைத்து மகள் அருணியை முகர்ந்திட மனத்தில் பேரலை பொங்கி பிரவாகித்து சீறலுடன் நிமிர்கின்றது. சுதனின் கைகளில் விலங்கு பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் நிரஞ்சனி விக்கித்துப் போகிறாள். மளமளவென நீர்மணிகள் முத்துக் களாக உதிர்கின்றன.
"மோகத சுதன் பாஞ்சுபோவ பாக்கிறதா? சுருக்க முன்னுக்குப் போ போ.” பொலிஸ்காரன் ஏதொ விசயம் தெரிந்தவன்போல் தமிழிலும் சிங்களத் திலும் பேசினான்.
நீதிமன்றத்தினுள். பயங்கரவாத சந்தேக கைதிகள் அனைவரும் தனியாக ஒரு பகுதியில் இருத்தப்பட்டார்கள்.
நிரஞ்சனி எங்கே? பார்வையாளர் பகுதியில் அவள் தலைக்கறுப்பையும் காணவில்லை. ஆமாம் சந்தேக நபர்களைத் தவிர மற்றைய கைதிகள் எங்கே? உறவினர் களுடன் உறவாடப் போய்விட்டார்கள். அதிஸ் டசாலிகள் நீதிமன்ற கடிகாரம் - அதன் சிறிய முள் பல இலக்கங்களை கடந்து மறைந்து விட்டது.
சந்தேக நபர்களின் பெயர்கள் அழைக்கப்படவில்லை. பொலிஸ் வாகனம் கைதிகளை தன் வயிற்றுக் குள் நிறைத்துக் கொண்டு மறுபடியும் காலிமுக வீதியில் விரைந்தது. களுத்துறைச் சிறைச்சாலை நோக்கிப் LJU 600Tb.
சுதனின் கழுத்து மடிந்துவிட்டது. நிருபனைப் போலவே அவன் கண்களும் வெளிறிப்போயின.

எழுதத் தூண்டும் எண்ணங்கள்).00
குலாநிதி தரை.மனோகரன்)
ஈழத்து இலக்கியத்துறையில் மறைக்க முடியாத ஒரு படைப்பாளி
ஈழத்து இலக்கியத்துறையில் மறைக்க முடியாத சில இலக்கிய ஆளுமைகள் உள்ளன. அத்தகைய ஆளுமைகளைக் கொண்டோருள் ஒருவராக விளங்கு பவர், எஸ்.பொ. என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் فنون எஸ்.பொன்னுத்துரை. எழுத்தாற்றல் வாய்ந்த எஸ்.பொ. 7 ܥܡܵܐ பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நிமிர்ந்து நிற்பவராகவே விளங்குகின்றார். இலங்கையின் சிறந்த சிறுகதை, நாவல், நாடக ஆசிரியர்களுள் ஒருவராக அவர் திகழ்கிறார்.
எஸ்.பொ. வின் உரைநடை தனித்துவமானது. புதுமைப்பித்தனின் பின், தமிழ் உரைநடையை இன்னொரு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றவராக எஸ்.பொ. வைக் குறிப்பிடலாம். அவரோடு கருத்தியல் ரீதியாக வேறுபடுபவர்கள் கூட அவரின் நடையினைப் பின்பற்ற முயன்றுள்ளனர்.
ஆரம்பத்தில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாச ஊழியராக விளங்கிய எஸ்.பொ. காலப்போக்கில் முற்போக்குவாதிகளால் புறக்கணிக்கப் பட்டமை வருத்தத்துக்குரியது. அதனால் அவர் எதிர்முகாமில் "இருப்பிடம்" தேடவேண்டிய நிலைக்கு ஆளாகினார். கைலாசபதி தினகரன் ஆசிரியராக விளங்கியவேளை எஸ்.பொ.வும் அவரும் நெருக்கமாக நட்புப் பாராட்டி வந்தனர். எஸ். பொ. வின் ஆக்கங்கள் தினகரனில் இடம்பெற்றன. கைலாசபதி தினகரன் ஆசிரியர் பதவியை விட்டு விலகி, பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை ஏற்கச் சென்றபோது தினகரனுக்கான புதிய ஆசிரியர் ஒருவரை நியமிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது தினகரன் ஆசிரியர் நியமனம் தொடர்பான நேர்முகத்தின்போது லேக் ஹவுஸ் பத்திரிகை நிர்வாகிகளுக்கு, எஸ்.பொ. வின் முன்னிலையிலேயே அவர் பற்றிக் கைலாசபதி சிறந்த அறிமுகத்தைச் செய்து வைத்தார். எஸ்.பொ. வுக்கே தினகரன் ஆசிரியர் பதவி கிடைப்பதாக இருந்தது. ஆயினும் அவருடன் நாவினால் மட்டும் நட்புப் பாராட்டிய காலஞ்சென்ற தமிழ்க் கம்யூனிஸ்ட் அரசியல்வாதியும், சிறந்த மேடைப்பேச்சாளருமான ஒருவரின் திருகுதாளத்தினால் அந்தப் பதவி எஸ்.பொ. வுக்குக் கிடைக்காமல் போயிற்று. கைலாசபதிக்குப் பின், இன்னொரு சிறந்த ஆசிரியரைப் பெறும் வாய்ப்பினைத் தினகரன் அப்போது இழந்தது. நெருக்கமாக இருந்த கைலாசபதியும் எஸ்.பொ. வும் காலப்போக்கில் இரு துருவங்களாக மாறியமை, ஈழத்து இலக்கிய உலகம் சந்தித்திருக்ககூடாத ஒரு நிகழ்வு.
மேடையிலும், எழுத்திலும் சண்டப்பிரசண்டராக விளங்கும் எஸ்.பொ., இயல்பாகவே மனித நேயம் மிக்கவர் என்பதை அறிந்திருக்கின்றேன். கருத்துரீதியாகப் பிறருடன் அவர் மோதிக் கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் 9

Page 6
பகைமை பாராட்டாத உயர்ந்த குணம் எஸ்.பொ. விடம் உண்டு. டொமினிக் ஜீவா எஸ்.பொ. பற்றி மல்லிகையில் எழுதும் போதும் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
எஸ்.பொ. வின் ஆக்கங்களில் ஒரு சிலவற்றைத் (உதாரணம் : பந்த நூல் மூலமும் நச்சாதார்க்கு உரையும்) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஈழத்தின் முதல் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறந்த ஒரு படைப்பாளியை இனங்காணலாம். ஆயினும் அவரது ஆக்கங்கள் முறையான ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் பெருமளவுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆய்வு விமர்சன அடிப்படையில் 'எஸ்.பொ. வின் செந்தில்நாதன்; சடங்கு நாவலின் பாத்திரப் பண்பு பற்றிய ஒரு நோக்கு (தேசிய தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் - 1991) ‘எஸ்.பொ வின் இரு கதைத்தலைவர்கள் (இளங்கதிர் - 2000) என்ற இரு கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
ஈழத்து தமிழ் இலக்கியம் எஸ்.பொ.வின் பங்களிப்புகளையும் இணைத்தே நிமிர்ந்து நிற்கிறது. எக்காரணம் கொண்டும் அவர் ஈழத்து இலக்கிய உலகினின்றும் ஒதுக்கப்பட முடியாதவர். வெண்ணெய் திரண்டு வரும் போது.
"வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த மாதிரி” என்ற பழமொழி பலருக்கும் தெரிந்ததே. நமது நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளும் அதைப்போலவேதான். சமாதானம் என்பது ஓர் இனத்துக்கு மட்டும்தான் நன்மை செய்யப்போகிறது, மற்றைய இனத்தவர்கள் எல்லோரும் ஒட்டாண்டிகளாகத்தான் திரியப்போகிறார்கள் என்ற தோரணையில் தான் விஷமத்தனமான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எப்பாடு பட்டேனும் சமாதானத்தைக் கொண்டுவந்தால் அது நாடு முழுவதற்குமே நன்மையை ஏற்படுத்தும், சகல இன மக்களும் அதனால் நன்மை அடைவர். இந்தச் சுலபமான வாய்ப்பாட்டைக்கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாகச் சிலரோ, பலரோ இந்நாட்டில் இருக்கின்றனர் என்பது மிகவும் வெட்கக்கேடானதும், வேதனைக்குரியதுமான விடயம்.
1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக வடக்கும்,கிழக்கும் தற்காலிகமாக இணைந்திருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆயினும் ஆண்டுகள் பல கடந்தும், பேரினவாத அரசுகள் விரும்பாத நிலையிலும் அவை இணைக்கப்பட்டே இருக்கின்றன. பாடசாலை களில் சமூகக்கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களைத் தவிர பலருக்கும் இது தெரிந்த விடயமே. ஆயினும் அண்மைக்காலத்தல் திடீரெனத் தூக்கம் கலைந்து எழுந்தவர்களைப்போன்று பேரினவாதிகளும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் இரு மாகாணங்களையும் பிரித்தெறியவேண்டும் எனக் கூப்பாடு போட்டு வருகின்றனர். ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இவர் களுக்கு இந்த "ஞானோதயம” ஏற்பட்டிருக்கிறது.
யாரோ பாடுபட்டு யாரோ தியாகங்கள் புரிந்து, யாரின் காரணமாகவோ யுத்தங்கள் ஒய்ந்து உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் ஏதோ ஒருவகையில் சமாதான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் சிலர் கோமாளித்தனமான முறையில் இயங்கத் 10

தொடங்கியுள்ளனர். திடீரெனக் குறுக்கே வந்து வடக்கு கிழக்கைப் பிரித்தெறி என்று வாயால் சொல்வது சுலபம். முதலை வாயைத் திறந்து இரைக்காகக் காத்திருப்பது போன்று இதற்கென்றே காத்திருந்து செயற்படத் துடிக்கும் பேரினவாதிகளுக்கும் இது இனிப்பானது. ஆனால் இன்றைய சமாதான முயற்சிகள் வரை வருவதற்கு படிப்படியாக சோகங்கலந்த சுவடுகள் பதியப்பட்டு வந்திருக்கினறன என்பதை மறந்துவிடுவதும் மறைத்து விடுவதும் நேர்மையான செயற்பாடுகள் அல்ல. குற்றம் குறைகள் எங்கும் இருப்பதுண்டு. ஆனால் பாடுப்பட்டவனுக்குத்தான் அதன் கஷ்டம் புரியும். சும்மா இருந்து சுகம் அனுபவித்துவிட்டு காரியம் நிறைவேறும் தருணத்தில் மாத்திரம் தம்மை அறியாமல் எதுவும் நடக்கமுடியாது என்ற தோரணையில் நடந்துகொள்வது விஷமத்தனமானது; வேதனைக்குரியது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைபடத்தில் வெள்ளைக்காரத்துரையொருவன் "எங்களைக் கேட்டுத்தான் சூரியன் எழும் விழும்” என்று இறுமாப்பாகப் பேசும் வசனங்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன். ஆங்காங்கே இனக்குரோதங்களைத் தூண்டிவிடும் முறையில் கபட நாடகங்களும் ஆடப்பட்டு வருகின்றன.
சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தம்மையும் அறியாமல் பேரினவாதி களுக்குத் துணைபோகின்றனர். பேரினவாதிகள் ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக நடந்துகொண்டுவருகின்றனர். இதனைச் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் உணரவேயில்லை. சந்தர்ப்பவாதம் அவர்களது கண்களை மறைக்கிறது.
எவ்வளவோ பாடுபட்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்துவிட்டு அதைப் பிரித்தெறிவது என்பது வேதனைக்குரிய விடயம். இனப்பிரச்சினையின் தீர்வுக்கான அடிப்படையே வடக்கு - கிழக்கு இணைப்பில்தான் தங்கியுள்ளது. வடக்கு - கிழக்கைப் பிரிப்பதற்கு முயற்சி செய்தால் மீண்டும் அரசியல் ரீதியில் குழந்தைத்தனமான முறையில் அரிச்சுவடியில் இருந்தே விடயங்களைத் தொடங்கவேண்டியிருக்கும். எப்போதும் அரசியல் ரீதியாக நவக்கிரங்களைப் போல நடந்துகொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பாரதியாரின் இறுதியாத்திரை 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி சென்னையில் திருவல்லிக்கேணியில் நடந்தது. பாரதியின் உடலை கிருஷணாம்பேட்டை சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்றபோது, பிரேத ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருபதாகும். அவரது محہ ہستی மறைவுபற்றி தமிழகப் பத்திரிகைகள் எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. மரணச் செய்தியைக் கூடப் பிரசுரிக்கவில்லை.
-சதா
11

Page 7
டொக்டர் எம். கே.முருகானந்தனின் کسے N. எடையைக் காத்து
நலத்தைப் பேணுங்கள்’ 岁
புலோலியூர் க.சதாசிவம்
அறிவியலில் மனித வாழ்வுடன் நேரடித்தொடர்புள்ள மருத்துவத் துறையில், நூல் வெளியிடும் முயற்சி ஈழத்தில் நாமறிந்தவரை பரராஜசேகரனின் பாரம்பரியத்துடன் ஆரம்பமாகி, கிறினின் அடிச்சுவடுடன் மேனாட்டு வைத்திய திருப்புமுனை கொண்டு, நந்தியின் புதுயுகச் சொல்லுதமிழ் நடைப்பிரவேசம் கண்டு, இன்று டொக்டர் முருகானந்தனின் புதுமைப்பொலிவுடன் மிளிர்கிறது. ‘சிறுவரின் கண்களைக் காக்கவாரீர், தாயாகப் போகும் உங்களுக்கு, ‘எயிட்ஸ், "பாலியல் நோய்கள்”, “போதையைத் தவிருங்கள்', 'வைத்தியக்கலசமி, ‘சாயிகாட்டிய ஆரோக்கிய வாழ்வு ஆகிய மருத்துவ நூல்களை ஏலவே வெளியிட்டு தேசிய சாகித்திய விருதினைப்பெற்றவர் டொக்டர் முருகானந்தன். பத்திரிகைகளில் பல மருத்துவக்கட்டுரைகள் எழுதி, வானொலி மூலம் நலமாக வாழவைத்து, தொலைக்காட்சியில் சுகவாழ்வு தந்து, சுகாதார நலவியல் தகவல்களையும் ஆலோசனைகளையும் நல்கி இலங்கையின் தமிழ் கூறும் நல்லுலகத்தின் குடும்ப மருத்துவராகப் பர்ணமிக்கும் டொக்டர் எம்.கே.முருகாந் தனின் மிக அண்மைக்கால அறுவடையே 'எடையைக்காத்து நலத்தைப் பேணுங்களி.
எடையைக்காப்பது என்றுமே மருத்துவத்துறையில் முக்கிய ஒரு பொருளாக இருந்துவந்தாலும் இன்று பேசும் பொருளாக சமூகத்தின் கவனிப்பை ஈர்க்கும் விடயமாகியுள்ளது. நவநாகரிக அம்சமாக, உடல் அழகிற்கு புதுவரவு இலக்கணமாக எடையைக்குறைப்பது குறிப்பாக பெண்களிடம் உருக்கொண்டுள் ளது. மருத்துவ உலகின் சமகால எரியும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று எனலாம். இதற்குரிய காரணத்தையும் தீர்வினையும் மிக அழகாக ஆழமாக காத்திரமாக கரிசனையுடனும் சுவையுடனும் கூறுகிறார் டொக்டர் எம்.கே.எம்.
எடையும் உடல்நலமும், ஒருவருக்கு இருக்கவேண்டிய சரியான எடை, பருமனான எடைக்குரிய காரணங்கள், எடையைச் சரியான அளவில் பேணுவது எப்படி, எடையைக்காப்பது, உணவுமுறைகளில் பங்களிப்பு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை இவற்றின் அனுகூலங்கள், எடையைக்குறைப்பதற்கு மருந்து உதவுமா? என்பதற்கான விளக்கம் இவைகளைப்பற்றி எல்லாம் இந்நூல் பேசுகிறது. நவீன ஆய்வுத்துறையில் களஆய்வு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பொருளின் பாதிப்புக்குள்ளானவர்களின் நேரடி அனுபவங்களின் தொகுத்தல் புதிய பரிமாணமாக உள்ளது. இதனை நன்கறிந்த நூலாசிரியர் எடையைக் குறைப்பதற்கு வெற்றி பெற்றவர்களின் ஆலோசனைகள் என்ற அலகினைச் சேர்த்திருப்பது நூலுக்குப் பெறுமானத்தை அளிக்கிறது.
12

குழந்தைகளின் எடைபற்றியும் விளக்கப்படங்களுடன் விவரமாக நூல் ஆய்வு செய்கிறது. அதீதபருமனான குழந்தையின் எதிர்கால உடல் நலத்தாக்கத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டிருப்பது நல்லதோர் அம்சமாகும். பின்னிணைப்பாக சில முக்கிய உணவுகளின் போசாக்குச்செறிவு உடல் திணிவுக்குறியீட்டு அட்டவணை ஆகியவற்றைச் சேர்த்திருப்பது மிகமிகப் பயனுடையதாகும். நூலுக்கு அணிசேர்க்கும் வகையில் 17 வயதுச்சிறுமி வரைந்த விளக்கப்படங்கள் வியந்து பாராட்டப்படவேண்டியவை.
டொக்டர் முருகானந்தன் மூன்று தசாப்தங்களுக்கு மேல் குடும்ப வைத்தியத்துறையில் தொழில் அனுபவம் கொண்டவர். இதற்கு மேலாகக் குடும்ப வைத்தியத் துறையில் உயர் கல்விபெற்று குடும்ப வைத்திய நிபுணத்துவ தரத்திற்கு உயர்ந்தவர். ஆகவேதான் இவரது மருத்துவ நூல்கள் அனைத்தும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல வைத்தியத்துறையில் ஈடுபட்டிருப்போருக்கும் கைநூலாகவும் சுகாதாரப் போதனைக்குரிய துணை நூலாகவும் திகழ்கின்றன. குடும்ப டொக்டர் முருகானந்தன் கூறும் ஆலோசனைகள் இலகுவில் பின்பற்றக்கூடியவை.
அறிவு தேடும் பரிமாணத்தில் must know என்ற பரப்பினை மனத்தி லிருத்தி எடுத்த கருத்தினைத் தெளிவாவும் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லமுடியாதவாறும் சொற்களைத்தேர்ந்தெடுத்துத் தனது அவதானிப்பு களையும் அனுபவங்களையும் கடைந்தெடுத்த வெண்ணையாக்கி பிழிந்தெடுத்துச் சாறாக்கிப் பட்டை தீட்டிய இரத்தினக்கல்லாக்கி மருத்துவப் பொருளாகத் தருகிறார். எடையைக்காத்து நலத்தைப்பேணுங்களில் கூறப்பட்டுள்ள அருமை யான மருத்துவ ஆலோசனைகள் சில வாசகர்களிடையே இன்னும் விளக்கமான கருத்துக்களை வேண்டி நிற்கின்றன. அறிவுத்தாகத்தினை ஏற்படுத்தி பொச்சம் தீராத உணர்வினை ஏற்படுத்துகின்றன. விலைவாசிகள் ஏற்றம் அடைந்துள்ள இன்றைய நிலையில் நூலின் எடையைக்காத்து செலவைப் பேணவேண்டிய கட்டாயம் நூலாசிரியருக்கும் உண்டல்லவா! அடுத்த பதிப்பில் அறிவுத்தேடலின் mustknow எல்லையைத்தாண்டி goodto know பரப்புக்கு அழைத்துச்சென்றால் வாசகர்கள் பெரிதும் மகிழ்வர்.
ஒரு மருத்துவரின் கடமை வெறும் மருந்துகொடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை. நோயாளி பட்ட நோயைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். சுகாதாரப் போதனை மகத்தானது என்ற கடமை அர்ப்பணிப்புடன் தொழில் புரியும் டொக்டர் முருகானந்தனின் பணியின் ஒரு வெளிப்பாடு அவரது நூல் வெளியிடும் செயற்கரிய செயல். அன்னாரின் பணி மென்மேலும் தொடர்ந்து இன்னும் பல மருத்துவ விடயங்கள் அவர் கைப்பட்டுத் துலங்க வேண்டும் என ஈழத்தமிழ் கூறும் நல்லுலகம் நம்பிக்கையுடன் எதிர்பார்கிறது. என்றும் எமக்கு நல் நம்பிக்கையூட்டும் குடும்ப டொக்டர் இப்பணியைத் தொடர்வார் என எதிர்பார்த்து அவரது மருத்துவசேவை திருத்துவ சேவையாகச் சிறப்புற வாழ்த்துவோம்.
O
13

Page 8
GIIIrfuIfi கா.சிவத்தம்பி
சந்திப்பு : தி.ஞானசேகரன்
(* உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். ༄༽
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
* தலைசிறந்த விமர்சகர்.
* தமிழ்நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர்.
* வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
தி. ஞா: தமிழக அரசு தங்களுக்கு திரு வி.க. நினைவுப் பரிசினை அளித்துக் கெளரவித்தது. இந்தப் பரிசுபற்றி அப்போது தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள் எவ்வாறிருந்தன?
கா.சி. இது பற்றி "கரவை யூற்று என்ற சிறு நூலில், அந்தப் பரிசினை ஏற்று நான் விழாவில் பேசிய உரை இடம்பெற்றுள்ளது. ஏறத்தாழ அதில் எனது முழு நினைவும் தெரிகிறது. ஆனாலும் அந்தச் சம்பவங்களை நான் ஆள்நிலைப்படுத்திச் சொல்கிறேன். அந்தப் பரிசு அறிவிக்கப்பட்டபோது எனது மனைவி வீட்டில் இருக்கவில்லை. அமெரிக்காவில் பிள்ளைகளோடு இருந்தார். நான் இங்கு தனியாக இருந்தேன். அன்று பகல் பன்னிரண்டு மணியளவில் கணேசலிங்கத்தின் மகன் குமரன் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு பரிசு கிடைத்திருக்கும் செய்தியைக் கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.
14
الم.
 

அன்றைய வானொலிச் செய்தியில் இதுபற்றி அறிவித்திருந்தார்களென நினைக்கிறேன். அதனைக் கேட்டுவிட்டுத்தான் குமரன் எனக்குக் கூறியிருந்தார். அப்போது அதனை நான் ஒரு பெரிய விடயமாகக் கொள்ளவில்லை. பின்னர் இந்தியாவிலிருந்து தமிழ் வளர்ச்சித் துறையைச் சேர்ந்த திரு ராஜேந்திரன் என்னுடன் தொடர்புகொண்டு இதுபற்றிக் கூறினார். எனக்கு உண்மையிலே ஆச்சரியமாக இருந்தது. நான் அவரிடம், என்ன இது? என்ன அரசியல் பின்னணி? என்று கேட்டேன். ஏனெனில் கருணாநிதியை ஒரு கூட்டத்தில் சந்தித்திருக்கிறேன் அதிகம் அளவளாவியது கிடையாது. தமிழ்க் குடிமகனுடன் அனைத்துலக தமிழாராய்ச்சி மன்ற வேலைகள் தொடர்பாகக் கொஞ்சம் பேசியிருக்கிறேன். மற்றது தமிழ்க் கலைச்சொற்கள் மீழாய்வு செய்யும் பணியினைத் தொடங்கிய அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு. சிவதாசன், தொண்டமானுடன் தமிழகம் வந்திருந்தவேளை, நான் அங்கு ஒரு ஒன்றுகூடலை ஒழுங்குசெய்து எல்லோரையும் வரவழைத்து அங்குள்ளவர்களுடன் பேசியிருக்கிறேன். Information Technology சம்பந்தமான கலைச் சொற்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்புடையதென, நாங்கள் செய்தவற்றை அவர்கள் ஏற்றுள்ளார்கள். அது நூலாகவும் வெளிவந்துள்ளது. மற்றது, நான் கடைசியாகத் தமிழகம்சென்றபோது அங்குள்ள தமிழ்ப் புலமையாளர்களுடன்தான் அதிகமான நேரத்தைக் கழித்தேன். உண்மையில், நான் எல்லாவற்றிலும் அரசியலைப் பார்ப்பதால், இந்தப் பரிசினையும் என்ன அரசியல் பின்னணி என்றுதான் பார்த்தேன்.
பேராசிரியர்வீ.சி.குழந்தைசாமி என்னுடன் தொடர்பு கொண்டு என்னை வாழ்த்திவிட்டு, “சிவத்தம்பி, இது ரெம்ப நல்லது, இந்தியாவிற்கு வெளியேயுள்ள தமிழ்ப் புலமையாளர்களையும் கெளரவிக்க வேண்டிய தேவை தமிழகத்திற்கு இருக்கிறது என நான் உணர்கிறேன். அதனை இம்முறை செய்தது எனக்குச் சந்தோஷம்" என்றார்.
தி.மு.க. அரசாங்கத்தில் அத்தகைய ஒரு கண்ணோட்டம் இருந்திருக் கும் போலத் தெரிந்தது. ஏனெனில் வீ.சி. குழந்தைசாமி உயர் மட்டத்தில் சம்பந்தப்பட்டவர். எனவே அதுவும் தொழிற்பட்டிருக்கலாம். எல்லாப் பரிசு களையும் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே வழங்காமல், தமிழகத்திற்கு வெளியேயும் வழங்குவோம் என ஒரு வேளை அவர்கள் யோசித்திருக்கலாம்.
பரிசு வாங்கச் சென்றவேளை இராமர் இளங்கோ என்னைத் தமிழகக் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு அறிமுகப்படுத்தினார். அங்கு அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலர் இருந்தனர். அன்பழகனை நான் சந்தித்தபோது, "நான் உம்மை இப்படி எதிர்பார்க்கவே இல்லைச் சிவத்தம்பி” என்று கூறிச் சிரித்தார். அவர் என்னை ஒரு காய்ந்த கருவாடு போல இருப்பார் எனக் கற்பனை செய்திருக்கலாம் என எண்ணத் தோன்றியது. நான் அவருக்குச் சொன்னேன், "உங்களைப்பற்றியும் நெடுஞ்செழியனைப்பற்றியும் எங்களுக்கு லசஷ்மண ஐயா சொல்லித் தெரியும்” என்றேன்.
அவர் உடனே, "லசஷ்மணனை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்
“அவர் எனது ஆசிரியர்” என்றேன்
15

Page 9
நான் ஸாகிராவில் படித்தாலும் அவரை எனது ஆசிரியராகவே கொண்டிருந்தேன். கைலாசபதியும் றோயல் கல்லூரியில் லசஷமண ஐயாவிடம் படித்தவர். நாங்கள் இரண்டுபேரும் அவரது வீட்டுக்கும் செல்லும் வழக்கம் இருந்தது.
“லகூழ்மணன் உங்களுக்கு ஆசிரியரா? சரி சரி” எனக் கூறிவிட்டு சாவகாசமாக இருந்து வெற்றிலையைப் போட்டுக்கொண்டே என்னிடம் கேட்டார், "ஏன் சிலப்பதிகார காலத்தை நீங்கள் பின்தள்கின்றீர்கள்?” என்று.
அவருக்குள் ஒரு பேராசிரியர் இருக்கிறார் என்பதை நான் அப்போதே கண்டுகொண்டேன்.
இப்படிப் பார்க்கும்போது, உண்மையான உறவுகள் இல்லாத நிலையில் நான் செய்த வேலைகள் பரிசுத் தேர்வின்போது கணிப்பீட்டைக் கொடுத் திருக்கலாம். பரிசுத் தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்போது, இத்தகைய எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
அதற்கும் மேலாக, நானும் கைலாசபதியும் செய்த வேலைகள் - குறிப்பாக விமர்சனத்துறையில் செய்த வேலைகள். இன்று என்னையும் கைலாசபதியையும் சேர்த்துக் கூறுவது ஒரு மரபாக வந்திருக்கிறது. இதுவும் இந்த வெளிவருகை வருவதற்குக் காரணமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் தாழ்மையுடன் கூறுகிறேன், இலங்கைப் பல்கலைக் கழகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி முறைமை, ஆராய்ச்சிக் கண்ணோட்டங்கள் தமிழகத்து அறிவியல் புலமையாளர்களாகவுள்ள புதிய சந்ததியினருக்கு, அல்லது திராவிடக் கழகத்தில் இருந்தவர்கள் அல்லாத சிந்தனையாளர்களுக்கு எங்களது ஆய்வுக் கண்ணோட்ட முறைமைகள் ஒரு புதிய திசையைக் காட்டியதாக இருக்கலாம். ஏற்கனவே திராவிடக் கழகம் சார்ந்தவர்கள் கூட, தங்களுடைய நாட்டு அறிஞர்களிலும் பார்க்க நாங்கள் தமிழை மிக அகட்டிப் பார்க்கிறோம் என எண்ணுகிறார்கள். இதனை அவர்கள் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். எங்களுடைய Theory, நாங்கள் சொல்கிற காலங்கள் போன்றவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் எங்களைப் புலமையாளர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே இவைகளெல்லாம் வந்து சேரும்போது, திருக்கோவையாரில் கூறியது போல, காலமும் நேரமும் வந்து சேருகிறபொழுது அந்த நேரத்தில் நடக்கும் என்பதுபோல், அந்த நேரத்தில், ஏதோ எனது தாய்தகப்பன், எனது மனைவி பிள்ளைகள் செய்த நல்ல புண்ணியம், நான் போய் அதற்குள் நின்றேன்.
அப்போ, அது கைலாசபதிக்கு, வித்தியானந்தனுக்கு, கணபதிப் பிள்ளைக்கு, செல்வநாயகத்திற்கு விழுந்திருக்கவேண்டிய "சால்வை எனக்குக் கிடைத்தது. அந்த உணர்வோடுதான் நான் இதனைப் பார்க்கிறேன்.
SriLanka-Japanese Society யினர் 1998இல் சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் சுதேசிய பண்பாட்டு வளர்ச்சிக்கு வேலைசெய்த, அறிஞர்களுக்கு விசேஷ கெளரவம் அளித்தார்கள். கெளரவம் பெற்றவர்களில் நான் மட்டுமே தமிழன். எனது நண்பர்கள் சிலர் அதைப்பற்றி நக்கலாக எழுதினார்கள். சிவத்தம்பி என்ன எழுதியிருக்கிறார்? சிவத்தம்பி அதனை வாங்கியிருக்கக் 16

கூடாது. என்று இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆட்களே சொன்னார்கள். அதனை இரகசியமாக எழுதியும் அனுப்பினார்கள். ஆனால், தேர்வுக் குழுவினர் தேர்வு தொடர்பாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள், “இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் பண்பாடுகள் பற்றி வெளியுலகில் உள்ளவர்கள் அறியத்தக்கவகையில் தொழிற்பட்டவர்கள் எனக் கருதப் படுபவர்களில் இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கெளரவம் அளிக்கப்படுகிறது’ என்று. உண்மையில், அது கணபதிப்பிள்ளை இருந்திருந் தால் கணபதிப்பிள்ளைக்கும், வித்தியானந்தன் இருந்திருந்தால் வித்தியானந் தனுக்கும் போயிருக்கும். கைலாசபதி இருந்திருந்தால், எங்கள் இரண்டு பேருக்கும் தந்திருப்பார்களோ எனக்குத் தெரியாது. நிச்சயம் கைலாசபதிக்குக் கொடுத்திருப்பார்கள். இவ்வளவு பேரும் இல்லாததால் தெரிவுக் குழுவினருக்கு ஒரு கஷ்டம். அந்த வகையில், இலங்கைத் தமிழ்ப் புலமைப் பயிற்சியின் ஓர் எடுத்துக்காட்டாக, நாங்கள் கொள்ளப் படுகிறோமேதவிர தனியாக சிவத்தம்பிக் காக அல்ல. ஒரு வேளை நான் எல்லோரையும் அணைத்துக்கொண்டு போகிற தன்மை, ஆட்களோடு கோபிக்காமல் இருக்கிற தன்மை ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கி எறிந்து பேசிற தன்மை இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே என்னுடைய பலவீனமாகவும் இருக்கலாம். அடிக்கவேண்டியவர்களையும் நான் அடிக்காமல் விட்டிருக்கிறேன். இவற்றினால் அது வரலாம். ஆனபடியால் நான் திருவி.க.விருதினை ஒரு மட்டத்துக்குமேல் பெரிதுபண்ண விரும்பவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த விருதுகள் கொடுக்கப்படும்போது, சண்டைப்படுவார்கள். நல்லகாலம், எனக்கு விருது கிடைத்த வருடம் தெரிவுகள்பற்றி சண்டைப்படவில்லை. அடுத்த வருடங்களிலும் பிரச்சினைப்பட்டார்கள். நான் உண்மையாக , விஸ்வ்ாசமாகச் சொல்கிறேன், நான் இப்பரிசினை மிகப்பெரிய விடயமாகக் கருதவில்லை. ஆனால், இருந்து யோசித்துப் பார்க்கிறபொழுது, அதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கிறபொழுது துச்சமாகவும் கருத என்னால் முடியவில்லை.
எனது நண்பர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஒருமுறை சொன்னார், "நீங்கள், தாமோதரம்பிள்ளை, நாவலர், சிவசம்புப்புலவர் என்று இந்தியாவுக்குப் போனவர்களைத்தானே - இந்தியாவைத்தானே பெரிது பண்ணுகிறீர்கள் அவற்றைப் பற்றித்தானே நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று. அது எனக்கு ஒரு Clue தந்தது போல் இருந்தது. எங்களுடைய பாரம்பரியத்தில், நாங்கள் எங்கு இருந்துதான் வேலை செய்தாலும் தமிழகத்தில் ஒரு கணிப்பு ஏற்படும்போது எங்களுக்கு ஒரு கெளரவம் ஏற்படுகிறது என்று நான் ஒருமுறை கூறியபோது, வித்துவான் வேலன் எனக்கு எதிராக, "நீங்கள் இப்படிச் சொல்லலாமா?” என ஒரு நீண்ட கடிதம் எழுதியனுப்பினார். ஏன் அப்படிச் சொன்னீர்கள்? நீங்கள் இந்தியாவுக்கு எதிராக இருந்தீர்கள் அல்லவா? (சஞ்சிகை இறக்குமதி பற்றி) பின்பு எப்படி இந்தியாவில் பரிசு வாங்கினீர்கள்? உங்களுக்கு மானம் மரியாதை இல்லையா? என்றெல்லாம் எழுதியிருந்தார். அது ஒரு வாதம் - நான் இல்லையென்று சொல்லவில்லை. அந்தக்கடிதம் வரவில்லையென்று சொல்லமுடியுமா? நான் அதற்கு ஒரு நீண்ட பதில் கடிதம் எழுதிவிட்டு, பின்னர் தேவையில்லை என அதனை அனுப்பாமல் 17

Page 10
விட்டுவிட்டேன்.
பரிசு வழங்கியபோது அதனை ஏற்று நான் பேசிய பேச்சில், நாவலரைப்பற்றி எதுவும் கூறவில்லையென, நான் இங்கு வந்தபின் ஒரு நண்பர் கூறினார். நான் பேசிய பேச்சில் குறிப்பிட்ட அறிஞர்களின் பட்டியலைப் பார்த்தால் தெரியும், நான் குறிப்பிட்ட எல்லோரும் தமிழ்ப் பேராசிரியர்கள். நாவலரைப்பற்றி இந்தளவுக்குக் கொண்டு வருவது அவருக்கு விருப்பமா? ஒன்றை நான் கூறுவேன், நாவலரைப்பற்றி இலங்கையில் மிக இறுக்கமான விமர்சனங்களை நான் முன்வைத்திருக்கிறேன். ஆனால் தமிழகத்தில் இருந்தபோது, நாவலரின் இலக்கியப் பணிபற்றி நானே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அவருடைய பதிப்புத் துறைபற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறேன். என்னுடைய அபிப்பிராயப்படி, இவர்கள் எல்லோருமே 'கயிற்றை விட்டு வாலைப் பிடிக்கிறார்கள். உ. வே. சாமிநாத ஐயர், சி.வை. தாமோதரம்பிள்ளை இவர்களுக்கு முன்னரே நாவலர் சைவ நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். முதலாம் பதிப்புக்கும் இரண்டாம் பதிப்புக்கும் உள்ள வேறுபாடுகள், அப்பதிப்புகளிலே காணப்படுகின்ற செம்மை - தமிழுக்கு அது முக்கியம்; இலக்கியத்துக்கு முக்கியம். நாங்கள் ஒட்டுமொத்தமாக ஈழத்தின் பாரம்பரியம் என்று பேசும் போது, நான் இங்கு நாவலரை மிகவும் பயங்கரமாகச் சாடியிருக்கிறேன். இல்லையென்று கூறவில்லை. அது இலங்கைச்சூழலில். அவரது சைவமும் தமிழும் பற்றிய, சாதியம் பற்றிய கூற்றுக்கள் இவற்றை யெல்லாம் நான் சாடியிருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியத்திற்கு அவர் செய்த பங்களிப்பை நான் மறுக்க மாட்டேன். இதுதான் முக்கியம். நாங்கள், பல ஒன்றுக்கொன்று முரணான விடயங்கள், தரவுகள், தகவல்கள், நிலைப்பாடு களுக்கூடே ஒரு சமன்பாட்டைக் காண விழைகிறோம். இந்தச் சமன்பாட்டைக் காண்பதற்கு உதவுகின்ற ஒரு பின்புலம்- அதிலிருந்து என்னை அசைக்காமல் வைத்திருக்கின்ற பின்புலம் மார்க்சியம்தான். அதன் அணுகுமுறை, அதிலே சொல்லப்படுகின்ற விடயங்கள், வரலாற்றுப் பொருள் முதல்வாதம்-Historical &Dialectical Aspects. LDTiri,61) GFIT6Ö6hTir,Unity of opposits 616irp) - 3.j607(6 எதிர்களின் ஒற்றுமை. அதனை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று, இலங்கைத் தமிழ்ப் புலமையாளருக்கு தமிழகத்தில் ஒரு இடமிருக்கிறது. அது எங்களுடைய காலத்திற்குப் பின் நுஃமானுக்கு இருக்கிறது என நினைக்கிறேன். எங்களுக்குப் பிறகு நான் நம்புகிறேன், இப்ப உள்ளவர்களில் நுட்மான்தான். மற்றவர்கள் எல்லோரும் அங்கு போய்வந்து சொல்லாம், நான் வெட்டினேன் விழுத்தினேன் என்று. நுஃமானுக்கு மொழியியல் சம்பந்தமான, இலக்கியம் சம்பந்தமான ஒரு அகன்ற பார்வை இருக்கிறது. நுஃமான் ஒரு கணிசமான ஏற்புடமையுள்ள ஒரு அறிஞராக அங்கு கருதப்படுவார். அவர் அண்ணாமலையில் படித்தபொழுது உள்ள நண்பர்கள், சென்னையில் உள்ள நண்பர்களென நுஃமானை ஓர் அறிஞராகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். நானும் எங்களுடைய தலைமுறைக்குப்பிறகு அடுத்த ஒரு பெரிய தமிழ் Scholar என்று நுட்மானைத்தான் சொல்வேன். இன்னும் ஒருவருடைய பெயரைச் சொல்ல வேண்டி இருந்திருக்கும் ஆனால் துரதிஷ்டவசமாக அவர் தனது திறமைகளை வேறு துறைகளில் செலுத்திக் 18

கொண்டிருக்கிறார். அதுக்குப் பிறகு எங்களுடைய மாணவர்கள் யார் இருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. ஆற்றலுள்ளவர்கள் இருக்கிறார்கள். நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் ஆற்றலுக்கு இயைந்த அளவு வேலை செய்ய வில்லை. ஆராய்ச்சி என்பது ஒரு நிரந்தர புலமைத் தேடல். அது நாங்கள் செய்யும் வேலைகள் கூடக் கூட அந்த அவா கூடிக் கொண்டே போகும். ஒரு நூலுக்கோ அல்லது ஒரு கட்டுரைக்கோ தரவுகள் சேர்க்கப்படுவதுடன் அது நின்று விடுவதில்லை. Your profession is reserch. g5LDITs guorig560TT Gatmob6hirts, If you are a resercher you are twenty four hours a resercher. இப்படிச் சொல்கின்ற அதே வேளையில் எனக்கு மனம் நிறைந்த ஒரு நம்பிக்கை உண்டு நிச்சயமாக நாளைக்கு ஒருவனோ ஒருத்தியோ இந்த சி.வை. தாமோதரம்பிள்ளை பாரம்பரியத்தை மேலேகொண்டு செல்லப் போகிறார்கள்.
விருது கிடைத்தது சந்தோஷம். ஆனால், அதனை அதிகம் பெரிது படுத்தக்கூடாது. ஏனெனில், இந்தியாவில்- தமிழகத்தில் தி.மு.க ஆட்சி இருந்தால் ஒரு தி.மு.க காரணுக்குக் கொடுப்பார்கள். அதிமு.க. ஆட்சி இருந்தால், அ.தி.மு.க. காரணுக்குக் கொடுப்பார்கள். அங்கு அந்தமாதிரியான போக்கு" உண்டு. இது என்னுடைய உணர்வுகள். தொடரும்.
எட்டைய புரத்தினுக் கெட்டியதீ! IIIJF;
எழுதமிழ் முரசங்கள் கொட்டியதீ! துட்டரின் தாழ்வினைச் சுட்டியதீ! துணிவுறு தமிழரைப் பற்றியதீ! வெட்டென வானகம் முட்டியதீ!
விடுதலை வாஞ்சையைத் தட்டியதீ! பட்டொளி வீசிடும் பைந்தமிழாள் பாரினுக் கீந்தவெம் பாரதித்தீ!
மாதர்தம் விழிப்பினை நாட்டியதீ !
வஞ்சகர் நெஞ்சினை வாட்டிய தீ! சாதிகள் ஒழிவினை மூட்டியதீ
? புதுநெறி காட்டியதீ!
ன் வலிமையை ஊட் ?? ஆட்சியை ಘ್ನ; தவித்தவர்க் கொளியினை ஏற்றியதீ ! தரு சுடருறுந் தென்தமிழாள் தாயெனக் காளியைப் போற்றியத! செகத்தினுக் கருளிய பாரதித்தீ! கவித்தமிழ் புதுமைகள் சாற்றிய தீ!
கயவரின் புண்மையை மாற்றிய தீ! உவத்தலின் நயத்தினை ஊற்றியதீ!
உளத்துறும் பயத்தினைத் துர்ற்றியதீ! செவித்தவர்க் கினிமைகள் தேரவென்று செழுந்தமிழ் அளித்தவெம் பாரதித்தீ!
19

Page 11
ܢ - -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ܕ -- -- -- 2
iIiIQUà:
ਰੰਗ நிகழ்வுகள்
பார்வையும் பதிவும்
~ செ.சுதர்சன்
مح -------------------------------------------NS
ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான புதுவை இரத்தினதுரை ‘உலைக்களம்' என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ளார். வியாசன் என்ற புனைபெயரோடு விடுதலைப் புலிகள் பத்திரிகைக்கு எழுதியவற்றின் தொகுப்பே இந்நூல். நூலின் வரவேற்பு பகுதியில் புதுவை, "இறுதியாக இலக்கியவாதி களுக்கு உரத்தொன்று உரைக்கின்றேன். உள்ளே உள்ளன கவிதைகள் அல்ல, உணர்வின் வரிகளே. நிழலை நிஜமென கருதி நிறுக்காதீர். என் கவிதைகளுடன் விரைவில் உங்கள் முன் ஆஜராவேன். அப்போது விசாரணை யைத் தொடங்குங்கள்” என்கிறார். அப்படியெனின் கவிதைகள் உணர்வின் வரிகள் இல்லையா? மேலும் புதுவையின் கூற்றின்படிநோக்கினால் இந்நூல் எவ்வக்ை சார்ந்தது? வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.
கவிஞர் ஜின்னாஹற் கடலில் மிதக்கும் மாடிவீடு' எனும் சிறுவர்க்கான கவிதை நூலைப் படைத்துள்ளார்.
“வெள்ளைப் பிரம்பு கையினிலே
வைத்து நிற்கும் மனிதர் யார்
உள்ளம் பதிப்பாய் அவர் பார்வை
ஊனம் கொண்ட அந்தகராம்"
முதலிய பல அறிவுட்டற் சிந்தனைகளைக் கொண்ட பாடல்கள் இந்நூலில் காணப்படுகின்றன. செங்கை ஆழியானின் ‘வானும் கனல் சொரியும்,
பத்தினியம்மா திலகநாயகம் போலின் நிஜத்தின் நிழல்கள்’ ஆகிய
படைப்புக்களும் அண்மையில் வெளியான நூல்களில் குறிப்பிடத்தக்கவை.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் தனது பவள விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. பல்கலைக் கழங்கள் பாடசாலைகள் இதில் பங்கேற்றன. தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித் தனர். பவளவிழா நிகழ்ச்சித் தொடரில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டி, விவாதம், கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டிகள், கைலாசபதி விமர்சனப் பட்டறை, நாடக விழா முதலின சிறப்பாக நடைபெற்றன. அறிவிப்பாளர் பயிற்சிப் பட்டறை எதுவித பிரயோசனமும் அற்று முடிவடைந்தது. பயிற்சிக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள் பயிற்சி வழங்க வந்தமையே இதற்குக்
20
 

காரணமாகும். வருடந்தோறும் வெளிவரும் இளங்கதிர் பவளவிழா மலராக மிகச் சிறப்பாக வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வீணடிக்கப்பட்டது. ஈழத்தின் இவ்வாண்டு வெளிவந்த சஞ்சிகைகளில் எண்ணிலடங்காத பிழை களைக்கொண்ட ஒரு இதழ் பல்கலைக்கழத்தில் இருந்து வெளியாகியது என்ற சாதனையை இவ்வாண்டு இதழ் நிகழ்த்தியுள்ளது. புகழ்பெற்ற கவிஞர் களின் கவிதைகளைத் திருடியும், தரமற்ற பல ஆக்கங்களுடனும் இதழ் வெளிவந்தது. ஈழத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கும் இளங்கதிர் இம்முறை படுமோசமான நிலையில் வெளியாகியது வருந்தத் தக்கதே. பேராசிரியர் க. அருணாசலம் "காலக்கண்ணாடி இளங்கதிர்” என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளமையே இவ் இதழின் முதன்மையைக்காட்டும். இவ்வாண்டு இதழின் இழிதகைமைக்கு இதழாசிரியர்களின் பொறுப்பின்மை, நாட்டின் இனப்பிரச்சினை போல பீடங்களுக்கிடையே தொடரும் முரண்பாடுகள் முதலியன காரணங்களாக அமைந்தன. இவற்றிற்கு ஓர் இலக்கியச் சஞ்சிகையா பலியாக வேண்டும்?
தேவதாசன் ஜெயசிங்கின் ஆரோகணம் நூலின் அறிமுக விழா கண்டி யில் நடைபெற்றது. இதன்போது விசேட நிகழ்ச்சியாக "பெண்ணாதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுபவர் மாமனாரா? மருமகனா? என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராகக் கலாநிதி துரைமனோகரன் கலந்துகொண்டார். தெல்தோட்டை மலைமகள் கல்லூரி, கலகா இராமகிருஷ்ணா கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியர்கள் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.
பட்டிமன்றப் பேச்சாளர்கள் எதையுமே பேசவில்லை. மேற்குறிப்பிட்ட இரு கல்லூரிகளின் மாணவர்கள் பங்குபற்றிய பட்டிமன்றம் ஆசிரியர்களின் பட்டிமன்றத்தைவிட நன்றாகவே அமைந்தது. மிக அண்மைக்காலமாக ஆசிரியர் களைவிட மாணவர்கள் அதிகமாக வாசிக்கின்றார்கள், அதிகமாகச் சிந்திக் கின்றார்கள், அதிகமாகச் செயற்படுகிறார்கள். எது எவ்வாறாயினும் உழைக்கும் வர்க்கத்தை விட்டுவிட்டு உயர்தர வர்க்கத்திலே இருந்துகொண்டு தலை நகரங்களில் மாத்திரம் உயர்வர்க்கத்துக்காகவே பொழுது போக்காகப் பெண் ணியம் பேசுவோருக்கு இப்பட்டிமன்றத் தலைப்பு சற்றுச் சாட்டை அடிதான். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உலகப் பிரசித்தி பெற்ற நூல்களை அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் முதற் கட்டமாக பேராசிரியர் சி.தில்லைநாதனால் சிலப்பதிகார விரிவுரை நிகழ்த்தப்பட்டது. பேராசிரியர் தமது பிரத்தியேக நூலகத்தின் ஒரு பகுதியை இப்பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மூத்த எழுத்தாளர் தெணியானுக்கு ‘மக்கள் படைப்பாளி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் இப்பட்டம் பெறுவதற்கு முன்பும் மக்கள் படைப்பாளி என்ற சிறப்பைப் பெற்றிருந்தார். ஆசிரியர் மன்னவன் கந்தப்பு அவர்களுக்கு நகைச்சுவை மன்னன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஈழநாட்டில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மரபுக் கவிஞர்களில் ஒருவராவார். 21

Page 12
கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு தமிழ் நாட்டில் இருபெரும் விருதுகள் கிடைத்துள்ளன. அறவாணன் ஆராய்ச்சிக் கட்டளை நிலையத்தின் அனைத்துலக சாதனையாளர் விருது, கம்ப கலாநிதி உயர்விருது என்பனவே அவையாகும். சொற்பொழிவு, கழக அமைப்பு, எழுத்து, இலவச இலக்கிய வகுப்புக்கள், இயல் இசை நாட்டிய வேள்விகள் நடத்துதல் முதலிய பல தமிழ்ப் பணிகளுக்காகவே இவ்விருதுகள் வழங்கப்பட்டன. இவருடைய கட்டுரைகள் சில நீண்டகாலச் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான மறைந்த எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களின் ஓராண்டு நினைவையொட்டி மூத்த இலக்கியவாதிக்கான கெளரவம் மல்லிகை டொமினிக் ஜீவாவிற்கு வழங்கப்பட்டது. இவர் தமிழ் இதழியலின் ஜாம்பவானாக விளங்கி இன்றுவரை ஈழத்திற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றார். “கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. ஈழத்துப் பிரச்சினையை சரியாகக் காட்ட ஈழத்திலேயே இன்னும் திரைப்படங்கள் தோன்றாத நிலையில், ஒரு குழந்தையின் தன்னை அறிதல் நிகழ்வின் தொடர்ச்சியாக ஈழத்தைப் பகைப்புலத்தின் ஒரு பகுதியாகக் காட்டினாலும் அதனை இப்படம் மிகவும் சிறப்பாகக் காட்டியது. நம் நாட்டு இலக்கியவாதிகள் சிலர் தாம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக இப்படத்தை அங்கீகரிக்காமல் விட்டுவிட்டனர். சிலர் வழக்காடு மன்றங்களில் மணிரத்தினத்திற்கு வசைமாரி பொழிகின்றனர். உரிமைகளை வென்றெடுக்க யுத்தம் மட்டுமல்ல கலை இலக்கியமும் அவசியம். கலை இலக்கியவாதிகள் குறட்டைவிட்டுக் கொண்டிருந்ததால் தானே கலை இலக்கியத்துறையினை வளர்க்க போராளிகள் கலை பண்பாட்டுக் கழகம் அமைத்ததாக மக்கள் கூறுகின்றனர்.
துபாயில் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பு அண்மையில் சிறந்த விழா மலரை வெளியிட்டது. 'எமிரேட்' என்ற சொல்லுக்கு 'அமீரகம் என்ற தமிழ் வடிவத்தைப் பயன்படுத்தும் இந்த அமைப்பின் விழா மலரில் உலகின் பல்வேறு படைப்பாளிகளின் 93 படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
நம்நாட்டில் மிக அண்மைக்காலமாக நூல்வெளியீடுகளுக்கான அழைப் பிதழ்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நூல்களைவிட அழைப்பிதழ்கள் புத்தக வடிவில் வருவதுதான் அதிர்ச்சிக்கான காரணம் “அம்பிடுகின்ற” எல்லோரையும் அனுமதியின்றியே சிறப்பு விருந்தினர் சிம்மாசனத்தில் ஏற்றி அச்சடித்து விடுகின்றார்கள். எதிர்காலத்தில் அழைப்பிதழ்களே நூல்களாக வெளியிடப்பட்டாலும் ஆச்ச்ரியப்படுவதற்கில்லை. இன்னும் இன்று வெளிவரும் சில நூல்களைவிட பல அழைப்பிதழ்கள் மிகத் தரமானவையாக இருக்கின்றன. “கண்டித் தமிழ்ச் சங்கம் ஒன்று 07-09-2003 அன்று ஆரம்பிக்கப்பட்டது. கலாநிதி துரை மனோகரனைத் தலைவராகக் கொண்ட இத்தமிழ்ச் சங்கத்தில் மலையகத்தின் முக்கியமான இலக்கியவாதிகள் அங்கம் வகிக்கின்றனர். மத்திய மாகாண கலைஇலக்கிய முயற்சிகளுக்கு இச்சங்கம் ஒரு வரப்பிரசாதமாகும். O 22

ஏ.எஸ்.குணா (பத்தாங் பெர்சுந்தை)
அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 9ஆவது ஆண்டாகத் தமிழ் எழுத்தாளர்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய பொதுப் பணித்துறை அமைச்சரும், மலேசியன் இந்தியர் காங்கிரஸ் தேசியத் தலைவருமாகிய மாண்புமிகு டத்தோற் டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமையேற்றார்.
அவரது துணைவியார் மகளிர் மாமணி டத்தின்றி இந்திராணி சாமிவேலு அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்படும் ‘மலேசிய பாரதிதாசன் இயக்கம்’ தமிழ் எழுத்தாளர் தினத்திற்கு நல்லமுறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
கோலாலம்பூரிலுள்ள புத்ரா உலக வாணிப மைய மண்டபத்தில் ஆறாயிரம் தமிழ் ஆர்வலர்கள் புடைசூழ சுமார் ஆறு மணி நேரம் இலக்கிய விழாவாக இது மலர்ந்தது.
சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் மாண்புமிகு டத்தோழரீ ச. சாமிவேலு பொன்னாடை, மாலை அணிவித்துத் தங்கப்பதக்கம், ரொக்கப் பரிசு நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவித்தார்.
மேலும் மூத்த எழுத்தாளர்கள் பத்திரிகையாசிரியர், பொதுப் பணியாளர்கள், கலைஞர்கள் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் உச்சக் கட்டமாக தமிழகத்தில் மகளிர் மாமணி டத்தின்று இந்திராணி அவர்களின் பெரு முயற்சியில் தயாரிக்கப்பட்ட ‘பாரதிதாசன் குறும்படம் (சுமாா 45 நிமிடம் ஒடக் கூடியது) அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இந்நிகழ்வை முன்னிட்டு 50 பக்கங்களில் உள்நாட்டு மற்றும் இந்திய, தமிழகத் தலைவர்களின் வாழ்த்துரைகளுடன் அழகிய மலரும் வெளியிடப்பட்டது.
“ஞானம் சந்தா விபரம் Y உள்நாடு ۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔
. வேண்டும். தனிப்பிரதி - ரூபா 30/- அனுப்பவேண்டிய பெயர், அரை ஆண்டுச் சந்தா ரூபா 180/= முகவரி ;- ஆண்டுச் சந்தா ரூபால. TIGNANASEKARAN சந்தா காசோலை மூலமாகவோ 19/7, PERADENIYAROAD,
மனியோடர் மூலமாகவோ KANDY அனுப பலாம.
மனியோடர் அனுப்புபவர்கள் வெளிநாடு அதனை கணி டி தபால் நிலையத் ஆண்டுச் சந்தா 20 USS త్ర6ు மாற்றக்கூடியதாக அனுப்ப (தபால் செலவு உட்பட) محبر
23

Page 13
\ - - - - - - --------------ـــــــــــــــــــــــــــــ ---------------------- صبر
சாகித்திய இரத்தினம் சொக்கன்
இலங்கை கலைக்கழகம் - தமிழ் சாகித்தியக் குழு இவ்வாண்டு மூதறிஞர் கலாநிதி க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்களுக்கு ‘சாகித்திய இரத்தினம்" என்ற அதி உயர் விருதினை வழங்கிக் கெளரவித்துள்ளது. இவர் தனது பதின்னான்கு வயதில் எழுதத்தொடங்கி இன்றுவரை ஓயாது ல்லாக் காலகட்டங்களிலும் எழுதிக்கொண்டே இருப்பவர். ஈழகேசரியில் 1947இல் எழுதிய 'கனவுக்கோயிலி என்ற வரலாற்றுக் கதையுடன் எழுத்துலகில் ಹTಉg எடுத்துவைத்த சொக்கன் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், ய்வுக்கட்டுரை, பாடநூல் எனப் பல்துறைகளிலும் முத்திரைபதித்தவர். த்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினூடாகப் பல நூல்களை வெளியிட்ட பருமைக்குரியவர். ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் ஐரோப்பிய ாடுகளிலும் தனது தமிழ்ப்பணியினால் பலதடவைகள் கெளரவிக்கப்பட்டவர். ாழ்ப்பாணத்தில் நிலவிய போர்ச்சூழ் நிலையிலும் மற்றவர்போல் மண்ணை ட்டு நீங்காது அம்மண்ணில் தொடர்ந்து கலை இலக்கியப் பணிகளை ற்றி வருபவர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், யாழ். இலக்கிய வட்டம், தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றிலும் முக்கியபதவிகள் வகித்தவர்.
இவரின் சீதா என்ற நாவல் ஈழத்தின் முதலாவது நவீனத்துவ சாதிய நாவலாகக் கருதப்படுகிறது. இவர் எழுதிய நாடகங்களில் சிங்ககிரிக்காவலன், சிலம்பு பிறந்தது, தெய்வப்பாவை ஆகியன கலைக்கழகப் பரிசு பெற்றவை. இவர் சிறந்த நாடக நடிகரும் நெறியாளரும் ஆவார். மரபிலும் நவீனத்திலும் காலூன்றிய சொக்கன், ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடையவர். இவர் எழுதிய நல்லூர்க்கந்தன் திருப்புகழி இந்தியாவில் இருந்து வெளிவந்த பன்னிரண்டு தொகுதிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. நசிகேசன் என்ற நெடும்பா 1966இல் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்து பலரின் பாராட்டினைப் பெற்றது. ‘பத்திக்சந்தி என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ள இவர் ஒரு சிறந்த பேச்சாளருமாவார்.
சொக்கன், ஆராவமுதன், அடியவன், வேனிலான், தேனி, சோனா, ழத்துப் பேய்ச்சாத்தான், ஞானம், ஜனனி உட்பட இருபதுக்கும் மேற்பட்ட னைபெயர்களில் எழுதிவரும் சொக்கன் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர் தறிஞர், கலாநிதி, குகழரீ ஆகிய கெளரவப் பட்டங்களுக்கு உரியவர். { சாகித்திய இரத்தினம் என்ற உயர் விருதினைப் பெறும் @={##၏!
ல்லாண்டு வாழ்ந்து நல்ல தமிழ்ப்பணிசெய்ய ஞானத்தின் வாழ்த்துக்கள்.
24
 

இலங்கையின் இலக்கியத்திறனாய்வின் ஆழக்குறைவும் கனதி வீழ்ச்சியும்
ஓர் ஆய்வாளர் - யாழ். பல்கலைக்கழகம்
இலக்கியத் திறனாய்வுக் கலையில் தமிழகத்தையும் விஞ்சிய சிறப்புக் குரியவர்கள் நாங்கள் என்ற பெருமையில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதும், காலத்துக்கு ஒவ்வாத திறனாய்வுப் பகுப்பாய்வுகளைப் பேசிக்கொண்டிருப்பதும், உறைந்த போதனைகளைக் கற்பித்துக் கொண்டிருத்தலும், வாய்ப்பாடுகளை எழுதிக் கொண்டிருத்தலும் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளன.
ஆழம், கனதி என்பவற்றின் அடிப்படையில் திறனாய்வு வகைகளைப் பகுப்பாய்வு செய்வதாயின் இரண்டு பெரும் பிரிவுகளின் எழுச்சி விசைகளை மட்டுமே குறிப்பிட முடியும். அவை:
1. மார்க்கசியமும் மார்க்கச்சிய நிலைப்பட்ட வளர்ச்சியும் தழுவிய திறனாய்வு. 2. மார்கச்சியம் சாராததும் மார்க்சிய விரோதமானதுமான திறனாய்வு. மார்க்கச்சியத்தின் இயங்கியலை விளங்காத இலக்கிய வட்டத்தினர் மார்க்கச்சியம் என்பது உறைந்த நிலையில் உள்ளதென்று தமது அறியாமையை அவ்வப்போது புலப்படுத்துதல் உண்டு. இந்த அறியாமையானது, தமது சுய இலாபத்துக்காக மார்க்கச்சிய வட்டத்துள் நின்று “ஈழத்து இலக்கியத்தைக் கொழும்பிலிருந்து வளர்க்கிறோம்” என்று சொல்லிக் கொள்பவர்களிடத்தும் காணப்படுகின்றது.
மார்க்கசியம் சாராத திறனாய்வு எத்துணை மேலோட்டமானது என்பதை விளங்கிக் கொள்வதற்கு “சுவை மீட்டல்” திறனாய்வு வகையே சான்றாகும். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையவர்கள் ஆசிரிய கலாசாலை மாணவர்களி டத்து இலக்கிய ஈடுபாட்டை வளர்ப்பதற்கு அதனை ஒரு போதனா நுட்பவியல் 35656ft (INSTRUCTIONAL TECHNOLOGY) 96ipTis UusiTu(65560III (3) யன்றி, ஒரு திறனாய்வு நீரோட்டமாகவோ புலமைப் பகுப்பாய்வுகளுள் ஒன்றா கவோ கருதவில்லை. ஏனெனில் சுவைமீட்டல் என்பது மட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்ற தெளிவு அவருக்கு இருந்தது. (பண்டிதமணியவர்கள் ஹண்டிப் பேரின்ப நாயகம் அவர்களுடன் மார்க்கசியம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங் களைச் செய்தார் என்ற தகவலும் உண்டு)
சுவை மீட்டலை ஒரு திறனாய்வு வகையாக வளர்ப்பதற்கு கனக செந்திநாதன் அவர்களுக்கு ஒரு தேவை இருந்தது. பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் இந்நாட்டில் முன்னெடுத்த மார்க்கச்சிய திறனாய்வு விசைக்கு முகம் கொடுப்பதற்கு கனக செந்திநாதன் அவர்களும் எஸ். பொன்னுத்துரையும் முன்றள்ளப்பட்டார்கள். எஸ். பொன்னுத்துரை அவர்கள் சுவை மீட்டல் திறனாய் வின் விசை வீட்சியை அறிந்திருந்தமையால், மேலை நாடுகளில் முன்னெடுக்கப் பட்ட மார்க்கச்சிய எதிர்ப்புத் திறனாய்வுகளை அடியொற்றியும், தனியாள் கிண்டல்களை அடியொற்றியும், தனிமனித வெதும்பல் திறனாய்வு வகைப்பாடு ஒன்றை வளர்க்க முயன்றார்.
25

Page 14
காலவோட்டத்தில் மார்க்சியத்தை அடியொற்றிய கனங்காத்திரமான
திறனாய்வு மரபு வளராமைக்கு சில பிரதிகூலமான நிலைகள் ஏற்பட்டன.
96.O6T660T:
(1) கனங்காத்திரமான எழுத்தாக்கங்கள் விளங்கவில்லை என்ற கூக் குரலை மார்க்சிய விரோத திறனாய்வாளர்கள் முன்வைத்ததில் வியப் பில்லை. ஆனால் தம்மை மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ‘வசதி வாதிகளும் ‘விளங்கவில்லை என்ற கூக்குரலை முன்வைத்தார் கள். (கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் ஆழமும், மொழிநடையும் பற்றிய அறியாமையை அவர்கள் புலப்படுத்தினர்) இந்நாட்டில் ஏற்பட்டு வருகின்ற கல்வி வளர்ச்சியின் ஆழமும் விரிவும், அறியாத நிலையில் புதிய புதிய எண்ணக்கருக்களை விளக்க புதிய கலைச் சொற்களின் தேவைகளை உணராத நிலையில் அவர்களின் "மலினவாதம் கனங் காத்திரமான திறனாய்வு வளர்ச்சிக்கு இடறுகட்டையாயிற்று. (இன்றைய பாடசாலைகளில் மாணவர்கள் பயன்படுத்தும் சொற்களஞ்சியத்தை அறிந்தால் மலினவாதிகள் ஏங்கிப்போவார்கள்). (2) இலங்கையின் திறனாய்வாளர்கள் தமது கட்டுரைகளில் மேற் கொண்ட “பட்டியல் ஒப்புவித்தல் திறனாய்வின் கனங்காத்திரத்தை வீழ்த்தியது. (திறனாய்வு பற்றிய விளக்கமற்றவர்களும் அப்பட்டியல் களில் இடம்பெற்றனர்) பட்டியல் முறையை முதலில் அறிமுகம் செய்த பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் அதன் மட்டுப்பாட்டை அறிந்து பின்னர் அந்த அணுகுமுறையைக் கைவிட்டார். (3) இந்நாட்டின் திறனாய்வு வளத்தின் ஆழத்தை வீழ்த்திய இன்னொரு செயற்பாடு, பத்திரிகை வாசிப்பு அலகை (COLUMN) எழுதியோரால் மேற்கொள்ளப்பட்டது. மார்க்சிய விரோத அடிகள் இந்த அலகுகளில் அவ்வப்போது தலைநிமிர்த்தியவண்ணமிருக்கும். (4) கனங்காத்திரமான திறனாய்வு வளர்ச்சிக்குப் பங்கம் விளைவித்த மற்றொரு நிகழ்ச்சி, கருத்துக்களை மலினமாக்கியும், திரிபுபடுத்தியும், எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ளாமலும், நவீன கல்விப் பெருகை அறிந்து கொள்ளாமலும் வளர்க்கப்பட்டுவரும் சுழலும் சொற் போர், பட்டிமன்றம் முதலின.
ரீலறி ஆறுமுக நாவலர் அவர்களால் ஆழமாகவும், கனதியா கவும் வளர்க்கப்பட்ட பிரசங்க மரபு பிற்காலத்தில் கேலியும் கிண்டலும், மலினமான பாலியல் நகைச்சுவைப் பேச்சும் கொண்ட நிலைக்குத் தள்ளப்பட்டது. விடய ஆழத்திலும், நகைச்சுவையும் பரவசமுமே மேலோங்கின. சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருந்த நாடுகள் பிரிந்து சென்றமை மார்க்சியத்தின் அழிவு என்று விளக்கப்பட்ட பட்டிமன் றங்கள் ஏராளம்! (5) இச்சந்தர்ப்பத்தில் இலங்கையின் மார்க்சிய வாதிகள் சிலரிடத்துக் காணப்பெற்ற மார்க்சியம் பற்றிய தெளிவின்மையும், திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களை உள்வாங்கியமையும், சந்தர்ப்பவாதமும் தேசிய இனங் பிரச்சினையை தெளிாக இனங்காணத்தவறியமையும் அவர்களது
2

பார்வைகளில் ஈடாட்டங்களைக் கொடுத்தன. உலகில் அதிகம் திரிபு படுத்தப்பட்ட தத்துவங்களில் ஒன்றாக அமைவது மார்க்சியம் என்று ஓர் ஆய்வாளர் ஒரு சமயம் குறிப்பிட்டார். (மார்க்சியத்தை திரிபுபடுத்தி எழுதுவதற்காக முதலாளித்துவ நாடுகள் சிலவற்றில் ஆய்வாளர்கள் குத்தகைக்கும் அமர்த்தப்பட்டார்கள். இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அன்று) (6) இந்நாட்டில் நிகழ்ந்த இனப்பாகுபாடு, இன ஒடுக்குமுறை முதலிய வற்றை சந்தர்ப்பவாதிகளால் இனங்காட்ட முடியாமற் போய்விட்டது. வெறுமனே பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் இனப்பிரச் சினையை அணுகமுற்பட்டமை, மார்க்சியம் வலியுறுத்திய ஒன்றினைந்த seng paglais (INTEGRATED APPROACH) , 6îGEJg5 uniras Sesambassig
இந்நாட்டிம் கதியமைப்பை பொருளாதாரக் காரணிகளல் மட்டுமன்றி ஒன்றிாந்த அணுகு முறையால் விளக்கியவர்களால், தேசிய இனப்பிரச்சி ைபற்றிய தெளிவான புலக்காட்சியை (PER. CEPTION) ஏற்படுத்த முடியாமற் போய்விட்டது. (T) மார்க்கிய திறனய்வின் கனதியும் ஆழமும் குறைந்தமைக்குரிய பிறிதொரு பிரதான காரணி மார்க்சியத் திறனாய்வாளர் பலரிடத்துக் காணப்பெற்ற உளவியலறிவின் போதமையாகும். இந்தக் குறைபாடு பேராசிரியர் கைலாசபதி அவர்களால் தெளிவாக எடுத்துக் காட்டப் பட்டது. உளவியல் நூல்களை வாசிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டினார். உலக அறிவியற் பரப்பில் மார்க்சியத்தையும் உளவியலை யும் இணைத்து புதிய வீச்சை ஏற்படுத்திய லுசியன் செவே, எரிக்புறாம் போலேபிறேறி முதலியோரது நூல்களை இலங்கையின் ஏனைய நூல கங்கள் பெறுவதற்கு முன்னரே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு கொண்டு வந்துவிட்டார். (மார்க் சியமும், உளவியலும் ஒத்துவராது என்று விளங்காத்தனத்தினால் ஒருவர் உரக்கக் கத்தியமை இன்றும் எதிரொலிக்கின்றது.) இன்றைய உலக நிலவரங்களைப் பார்க்கும்பொழுது மார்க்சியத் திறனாய்வை கலை இலக்கியங்களில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. நவ முதலாளித்துவத்தின் கருத்தியலை நிலை நிறுத்தி சுரண்டப்படுபவர்களின் ஐக்கியத்தை நெகிழ்ச்சியாக நிலை குலைக்க முயலும் பின்நவீனத்துவத்தின் இயல்புகளையும், அதிதீவிரப் போர்வையில் உள்ளடங்கிய பின்னிழுப்புகளையும் இனங்கய்டவேண்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம் பற்றிய ஒரு தெளிவையும் குறிப்பிட வேண்டியுள்ளது. மார்க்சிய நிலைப்பட்ட பெண்ணியம் மார்க்சிய விரோதப் பெண்ணியம் என்ற இரு பெரும் விசைகள் உலக அரங்கில் முனைப்படைந் துள்ளமையைப் பல திறனாய்வாளர்கள் அறிந்து கொள்ளவில்லை, எண்தை அவர்களின் எழுத்தாக்கங்களில் இருந்து இனங்கானமூடியும். மார்க்சிய விரோத பெண்ாவியம் சார்ந்த நூல்களையே எமது ஆய்வாளங்கள் பொதுவாக மேற்கேகள் கட்டுகின்றார்கள்.
27

Page 15
கோள்மயமாக்கல் என்ற நடவடிக்கையும் அதன் கருத்தியலும், வளர் வுறும் நாடுகளை மூர்க்கத்தனமாகச் சுரண்டும் நடவடிக்கையாகவும், பெரிய நாடுகள் சிறிய நாடுகளை விழுங்கும் நடவடிக்கையாகவும், முகிழ்த்தெழுந் துள்ளன. வளர்வுறும் நாடுகளின் தனித்துவமான பண்பாட்டுக் கோலங்களின் அழிவுக்கும் மொழிகளின் அழிவுக்கும், தரமான கலை இலக்கியங்களின் அழிவுக்கும் கோள்மயமாக்கல் நேரடியாகவும் மறை முகமாகவும் வழியமைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த அவலங்களின் மத்தியில் கருத்தியல் சார்ந்த தெளிவை ஏற்படுத்துவதற்கு மார்க்சியம் தவிர்ந்த வேறெந்த அணுகு முறையும் கைகொடுக்க மாட்டாது. திறனாய்வுச் சிந்தனை
திறனாய்வின் கனதியை நோக்கி நகர்வதற்கு முதலில் சிந்தித்தல் தொடர்பான அடிப்படை எண்ணக்கரு விளக்கங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. gäsat5ë fjög56oo6OT (CREATIVE THINKING) gßgp6oTTu'u6më áfbg56oo6OT (CRITICALTHINKING) ஆகிய இரு எண்ணக்கருக்கள் பற்றிய விளக்கம் ஆரம்பநிலை யில் அவசியமாகின்றது.
ஆக்கச்சிந்தனை எப்பொழுதும் விலகிய நிலைச் சிந்தனையாக இருக் கும். ஆக்கச் சிந்தனை உருவாகும் தளமாக இருப்பது சமூகப் பொருளாதாரக் கட்டுமானமும், ஒருவரது வாழ்நிலை இயல்புமாகும். ஆக்கச்சிந்தனை தெளிவான வர்க்கச் சார்புடையது. வளியும், நிலமும், நீரும், ஒளியும், ஆகாயமும் என்றவாறு சூழல் விரைந்து மாசுபடுவதற்கு சுரண்டுவோரிடத்து வளர்ச்சி பெற்றுவரும் ‘எதிர் நிலை ஆக்கச் சிந்தனைகளே காரணமாகும். கலை இலக்கியங்களில் யதார்தங்களைத் தெரியவிடாது திரிபுபடுத்துதலும், திசை திருப்புதலும், அவற்றை இலாபமீட்டும் பண்டங்களாக மாற்றி விற்பனை செய்தலும், (இன்று எமது கலை இலக்கியங்களுக்கு வெளிநாடுகளிலும் விற்பனை வசதிகள் உண்டு!) சுரண்டுவோரிடத்து வளர்ச்சி பெற்றுவரும் எதிர் மறை ஆக்கச்சிந்தனையின் வெளிப்பாடுகளாகும்.
சுரண்டலுக்கு உட்படும் மக்களிடத்து உருவாகும் ஆக்கச்சிந்தனை "நேர்நிலை ஆக்கச்சிந்தனை எனப்படும். ஆக்கபூர்வமான அழித்த ஆக்கபூர்வமான கட்டுமானங்களும் அங்கு மேலோங்கியிருக்கும். இதன் காரணமாகவே தர உறுதியும் சிறப்பும் வாய்ந்த கலைப்படைப்புக்களை உருவாக்குபவர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவோராக இருக்கின்றனர். ‘என்னால் தூங்க முடியவில்லை எனது பேனாவாலும் தூங்க முடியவில்லை' என்பது ஒரு மகாவாக்கியம்.
முதலாளித்துவ உளவியலாளர்களுள் ஒருவராகிய கார்ல் ரொஜர்ஸ் அவர்கள் ஆக்கத்திறன் பற்றி விளக்கிய கருத்துக்களை ஆழ்ந்து நோக்கும் பொழுது மேற்கூறிய விவரணங்கள் பற்றிய தெளிவை மேலும் நோக்கலாம். ‘ஆக்கத்திறனை மதிப்பீடு செய்வதற்கு எத்தகைய நியமங்களும் இல்லை. சமகாலத்தவர்கள் அதுபற்றிய முடிவுகளை எடுப்பது முட்டாள்தனமானது EĐ6ð6og gugög5sT60īgi’ (GARLROGERS, TOWARD A THEORY OF CREATIVITY) மேற்கூறிய கருத்து ஆக்கத்திறன் என்பது ‘தன்னியல் நிறைவை அடைவதற்கான ஒரு வழிமுறை என்றவாறு தனிமனித வாதத்தை முதன்மைப் 28

படுத்தி அவர் தமது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிய சிந்தனைகளையும், நவீன உளவியல் சிந்தனைகளையும் இணைக்க முயன்ற எறிக் புறோம் (ERICFROMM) என்பார் ஆக்கச்சிந்தனை பற்றி விளக்கிய கருத்துக்கள் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உட்பட்டவர் களின் சிருஷ்டியாற்றலை ஒரு விதத்தில் இனங்காட்டுபவையாகவுள்ளன. (முழுமையாக அல்ல)
ஆக்கச்சிந்தனை என்பது மனவிரக்தியைத் தவிர்ப்பதற்கு ஒருவர் மேற்கொள்ளும் அறிபரவல் நிலை. அது மனத்தை ஒருங்குவிக்கும் ஆற்றலை வளர்த்து, தனது வினைப்பாடுகளை ஒருவர் தாமே ஒழுங்கமைக்கும் ஆற்றலை வழங்கி, முரண்பாடுகளுக்கு ஈடுகொடுக்க முடியாதிருக்கும் மன உதைப்புகளுக் குரிய சகிப்புத்தன்மையின் போதாமையை உணர்த்தி நிற்கின்றது. (ERIC FROMM, THE CREATIVE ATTITUDE) g56LD66b isosuust 60L eligiousoul யாகக் கொண்டு சிருஷ்டியாக்கம் செய்யும் உளவியலை கார்ல் ரெஜர்ஸ் வலியுறுத்தினார். தனிமனிதரைச் சமூகத் தளத்தில் நின்றும் பிரிக்கமுடியாத அணுகுமுறையில் நின்றும் எரிக் புரொம் படைப்பாற்றல் பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்தார்.
படைப்பாற்றலின் வெளிப்பாடுகளாகிய புதிய கருத்துக்கள், புதிய எண்ணக்கருக்கள், புதிய சொற்கள் முதலியவை தொடர்பான சகிப்புத்தன்மை யைத் திறனாய்வாளர்கள் வளர்த்துக்கொள்ளல்வேண்டும்.
அண்மைக்காலமாக உளவியலாளர்கள் திறனாய்வுச் சிந்தனை பற்றிய பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இச்சிந்தனையின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்கியவர்களுள் மத்தியு லிப்மன் (MATHEWLIPMAN) சிறப்பாகக் காட்டியுள்ளார். அவையாவன:
1. சாதாரண சிந்தனை எளிதாக இருக்கும். அதனுடைய தரம் பற்றாக்குறையாக இருக்கும். (LACKSSTANDARDS) (எளிமைவாதி களுக்கு இது சமர்ப்பணம்) 2. திறனாய்வுச் சிந்தனை அதிக சிக்கல் பொருந்தியதாக இருக்கும். 3. திறனாய்வுச் சிந்தனையில் புறவயப்பண்பு, பயன்படுபண்பு (UTILITY) தொடர்ச்சி நிலைகளைப் பராமரிக்கும் பண்பு (CONSISTENCY) முதலியவை காணப்படும். 4. அது ஊகித்தலில் இருந்து மதிப்பீட்டை நோக்கி நகர்ந்து செல்லும். 5. அதன் தொழிற்பாடு விருப்பு நிலையிலிருந்து மதிப்பீட்டு நிலைக்கு பெயர்ந்து செல்லும். 6. குழுவாகப் பிரித்தலில் இருந்து (GROUPING) தெளிவான வகைப்படுத்தலை (CLASSIFYING) நோக்கி அது வளர்ந்து செல்லும். 7. நம்புவதிலிருந்து சிந்தனை எடுப்பை நோக்கி (ASSUMING) அது உயர்ந்து செல்லும், 8. தருக்கமற்ற அனுமானங்களை நோக்கி அது மேலோங்கிச் செல்லும். 9. எண்ணக்கருக்களை இணைப்பதிலிருந்து முதன்மியங்களை (PRINCIPLES) தெரிந்தறிதலை நோக்கி அது வியாபித்து வளரும். 10. இப்படியிருக்கலாம் என்று எண்ணுவதிலிருந்து கருது கோளாக்
29

Page 16
365605 (HYPOTHESISING) GBTádé egöl LD6uišáAugub. 11. காரண அடிப்படையின்றிக் கருத்துச் சொல்வதிலிருந்து காரண அடிப்படைகளுடன் கருத்துச் சொல்வதை அது உருவாக்கும். 12. கட்டளைகள் நியமங்கள் இன்றித் தீர்ப்புக் கூறுதலை விடுத்து கட்டளைகள் நியமங்களுடன் கருத்துக்கூறும் செயற்பாட்டைத் திறனாய்வுச் சிந்தனை முன்னெடுக்கும். திறனாய்வுச் சிந்தனை ஒடுங்கிய துண்டமான சிந்தனையன்று. முழுநிறைவான நுண்மதித் தொழிற்பாடுகளை அது உள்ளடக்கி நிற்கும். சிந்தனைப் பொறிகளை உருவாக்கும் வினாக்களுடன் அது தொடர்புபட்டு நிற்கும். r
இஸ்ரன் பேர்க் என்பார் திறனாய்வுச் சிந்தனையின் மூன்று பிரதான பரிமாணங்களைப் பின்வருமாறு விளக்குகின்றார். அவையாவன:
1. உயர்நிலையான சிந்தனைச் செயல்முறையின் வழியான திட்டமிடல், நெறிகை செய்தல், மதிப்பீடு செய்தல் முதலியவற்றை அது அடக்கியிருக்கும். 2. ஆற்றுகை நிலைப்பட்ட கூறுகளையும் அது உள்ளடக்கியிருக்கும். 3. அறிவு சார்ந்த வினாக்களை உள்ளடக்கிய கூறுகளும் அதிலே உட்பொதிந்திருக்கும். இவ்வாறாக ஆக்கச்சிந்தனை, திறனாய்வுச்சிந்தனை தொடர்பான அண்மைக்கால ஆய்வுகள் பற்றிய அறிவு திறனாய்வாளர்களுக்கு இன்றிமை யாதது. விரியும் உலகை நோக்காது பழைய நோட்டுப்புத்தகங்களைப் பார்த்து
புராணம் சொல்வோருக்கு இது சமர்ப்பணம்.
பாரதியாரின் குணவியல்புகள் S كص பாரதியாரின் பேர்த்திகளில் ஒருவர் திருமதி விஜயபாரதி. அவர் ஆங்கில மொழியில் சி.சுப்பிரமணியபாரதி என்ற நூலை 1972 செப்டம்பரில் வெளியிட்டார். அந்நூலில் பாரதியாரின் குணவியல்புகள் பற்றி பின்வரும் கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புத் தாயை ஐந்து வயதில் இழந்த பாரதியார், தாய் அன்புக்காக ஏங்கித் தவித்தவர். அவர் தனது பாடல்களில் 'அம்மா', 'அன்னை' என விழித்துப் பாடியமைக்கு இது ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.
பாரதியாரிடம் காணப்பட்ட அதிகமான குணாதிசயங்களும் தந்தை வழி வந்ததே. எதையும் ஒழித்து மறக்காது நேரடியாகவே சொல்வது, உண்மையில் ஆழ்ந்த நம்பிக்கை, இலகுவில் கோபம் கொள்வது, பிடிவாதம், நினைத்ததைச் செய்து முடிப்பது - இவையே இவரது மரணத்திற்கும் காரணமாக அமைந்தன. தினமும் பார்த்தசாரதி கோவிலுக்குப் போய் அங்குள்ள யானைக்கு வாழைப்பழம் கொடுப்பார். அன்று யானை கட்டுப்பாடின்றி நின்றது. யானைக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டாமென்று கோயில் அதிகாரிகள் சொல்லியும் செவிசாய்க்காது கொடுத்தபோது அது அவரை உதைத்துத் தள்ளியது. அதுவே அவரது \ழுரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. - சதா ノ
30

நேர்காணல்
நா.சோமகாந் தன்
சந்திப்பு : தி.ஞானசேகரன்
s ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் மூத்தி தலைமுறை எழுத தாளா. * சிறுகதைகள், நாவல்கள், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், பத்தியெழுத்துக்கள் ஆகிய துறைகளில் எழுதி வருபவர். இதுவரை இவரது எட்டு நூல்கள் வெளியாகியுள்ளன. * 1964இல் இருந்து இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய அமைப்புச் செயலாளராகப் பணியாற்றியவர். பல இலக்கிய விழாக்களை, மாநாடுகளை முன்னின்று நடத்தியதோடு, பல இலக்கியச் சிறப்பு மலர்களின் தொகுப்பு ஆசிரியராகவும் விளங்கியவர். * இலக்கியக்குரிசில், தமிழ்மாமணி, தமிழ் ஒளி ஆகிய கெளரவப் Nபூட்டங்களைப் பெற்றவர். گر
தி.ஞா. ; இலக்கிய ஆர்வம் ஏற்படுவதற்குப் பின்னணியாக இருந்த இளமைப் பருவம் பற்றிக் கூறுங்கள்.
நா.சோ. - என் இளமைப் பருவத்தில் பாடசாலைப்படிப்புக்கு மேலதிகமான வாசிப்புகளைச் செய்துகொள்வதற்கு வசதிகளற்றதாக நான் பிறந்து வளர்ந்த கரணவாய்க் கிராமம் இருந்தது. நான் ஆலயத்தில் பணிபுரியும் ஆசார அனுஷ்டானம் மிக்க அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்களுக்கே தெரியும், பிராமண சமூகத்தினர் இலங்கையில் சிறுபான்மையினருக்குள் மிக மிகச் சிறுபான்மையினராக பொருளாதரத்தில் நலிந்துபோய் அங்குமிங்குமாகச் சிதறுண்டு ஆலயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். கிராமப்புறம் எனில் ஆசார அனுஷ்டானக் கட்டுப்பாடுகள் மிகக் கண்டிப்பானவை, மீறப்பட முடியாதவை. அப்போது என் கிராமத்தில் ஒரு வாசிகசாலைகூட இல்லை. அப்படி இருந்திருந் தாலும், அதற்கு நான் சென்று பல சாதியினருடன் அங்கு உட்கார்ந்திருந்து வாசிப்பதைக் கிராமமக்கள் அங்கீகரித்திருக்க மாட்டார்கள். அப்படி இறுக்க மான அழுத்தமான சாதியாசாரத்தை அக்காலத்தில் எமதுர் கடைப்பிடித்தது. பிராமணப் பையன் என்ற காரணத்துக்காக வகுப்பில் முதலாவது ஆசனத்தில் உட்காரவைத்து, ஆசிரியர்கள் போதிப்பதைக் கற்றுக் கொண்டவன் நான். எமது ஆலயத்தில் வருடா வருடம் கந்தபுராணப் படனம், பெரிய புராணப் படிப்பு, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி என நடைபெறுவதுண்டு. கந்த புராணப் படனத்தின்போது எனது தகப்பனார் செய்யுள்களைப் படிக்க, கணபதிப் பிள்ளை என்ற பெரியவர் அப்பாடல்களுக்குரிய விளக்கங்களை இராகத்துடன் கற்பனையுங்கலந்து மிக விஸ்தாரமாக, சொல்லுவது மிகக் கவர்ச்சியாகவும்
31

Page 17
சுவையாகவும் இருக்கும். 50, 60 பேர்வரை கூடியிருந்து மெய்மறந்து பக்திபூர்வ மாக அதைக் கேட்டுக் கொண்டிருப்பர். என் இளம் வயசிலேயே அப்பாடல்களுக் குக் கூறப்பட்ட பயன்கள் சொற்பிரயோகங்கள், சொல்லும் திறம் என்னை மிகவும் கவர்ந்தன. அந்தப் பின்னணியில் எனது வகுப்புகளில் தமிழ்ப் பாடங் களில்- குறிப்பாக பழைய இலக்கியங்களைக் கற்றுக்கொள்வது மிக எளிதாக இருந்தது. மார்கழி மாதத்தில் கோவில் அதிகாலைப் பூசையின்போது பாடப் பெற்ற திருவெம்பாவை என் உள்ளத்தில் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தியது. வகுப்பில் வியாசம் எழுதும்போது, வகுப்பில் கற்றவைக்கும் மேலாக கேள்வி ஞானத்தால் பெற்ற அறிவு எனது வியாசங்களுக்கு மெருகூட்டின. வகுப்பா சிரியர்கள் அவற்றை மெச்சி, உதாரண வியாசமாக வகுப்பில் வாசித்துக் காட்டும்போது, அடுத்ததை இன்னும் சிறப்பாகச் செய்துகாட்டவேண்டும் என்ற ஊக்கம் கிடைத்தது. மது ஒழிப்பு, உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுப்பது பற்றி வகுப்பில் எழுதிப் பாராட்டப்பெற்ற சில சிறிய கட்டுரைகளை யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வெளியாகிக்கொண்டிருந்த 'சமூகத் தொண்டன் ஆசிரியர் ‘விடி வெள்ளி கா. பே. முத்தையா அவர்களுக்கு அனுப்பினேன். அவர் அடுத்தமாத இதழில் வெளியிட்டதுடன், இவ்வாறான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி அனுப்புமாறு என்னை மிகப் பாராட்டிக் கடிதம் எழுதினார்.
என் சகமாணவன் ஒருவரின் தந்தையார் கண்டியில் வர்த்தகராக இருந்தார். தாம் படித்து முடித்ததும் கல்கி ‘சுதந்திரன்’ இதழ்களையும் அம் மாணவனுக்கு அனுப்புவது வழக்கம். அம்மாணவனிடம் இரவலாகப் பெற்று இரவோடிரவாகப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்து விடுவேன். 'கல்கியின் எழுத்து நடையில் கம்பீரம் தொனித்தது. வர்ணனைகள் என்னை மிகவும் கவர்ந்தன. சுதந்திரன் எழுத்துக்கள் எரிசரமாக தமிழர் பிரச்சினைபற்றி நெருப் பெடுத்தன. நண்பன் படித்துவிட்டு இரவலாகத் தரும்வரை காத்திருக்க முடியாமல், நெல்லியடிச் சந்தியில் இருந்த கடையொன்றில் சுதந்திரனை ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஓடிச்சென்று வாங்கிவந்து படிப்பது என் வழக்க மாகிவிட்டது. விடுமுறை காலத்தில, ஓர் இலக்கிய அன்பர் தம்மிடமிருந்த ஆரணி குப்புசாமி ஐயர், வடுவூர் துரைசாமி மற்றும் கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் அக்கால நாவல்களைப் படிக்கத்தந்து உதவினார். ஆனாலும் சுதந்திரனில் வெளிவந்த சிறுகதைகளே எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை ஊட்டின எனலாம். அதாவது எமது பிரச்சனைகளை எமது பேச்சு மொழியைப் புகுத்தி, கருத்துகளைச் சொல்ல வேண்டுமெனத் தூண்டின. எனது கிராமத்திலும் அதனை அண்டிய கிராமங்களிலும் பலநிகழ்ச்சிகள் என் மனசைச் சீண்டி என் உள்ளத்தைக் காயப்படுத்திக் கொண்டிருந்தன. எமது கிராமத்தில் ஒரு வாசிகசாலையை அமைக்கவேண்டுமென நான் எடுத்த முயற்சியை - பல சாதிக்காரரும் அங்கு வருவர், சமமாக உட்காருவர் என்ற காரணத்தைக் காட்டி சாக்குப் போக்குச் சொல்லி முறியடித்தனர் உயர் குழாத்தினர். எனது கிராமத்தை அண்டிய வயிரவர் கோயிலில் மூடத்தனத்தினால் பல ஆடுகள் கோழிகள் பலிகொடுக்கும் வழக்கம் இருந்தது. வாயில்லாப் பூச்சிகளாக அக்காலத்தில் வாழ்ந்த கள்ளிறக்கும் தொழிலாளர்களின் வீடுகளுக்கு ‘மாலைக்கள்ளுக் குடிக்கச் செல்லும் உயர்சாதியினரில் பலர், அக்குடும்பங் 32

களிலுள்ள இளம் பெண்களையும் பசியாறிவிட்டு வருவது வழக்கமாயிருந்தது. புகையிலைச் செடிக்குப் பசளை சேர்ப்பதற்காக மாலையில் குழைவிற்க வரும் பெண்களும் இவ்வாறு பலியாகினர். சைவ சமயம் என்ற பெயரைச் சொல்லியாவது நமதுாரில் உள்ள இளைஞர்களை ஓரணியில் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில், நானும் சில நண்பர்களும், சுந்தரமூர்த்தி நாயனார் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஊரின் மத்தியிலிருந்த கோவிலின் முன்வீதியில் சமயக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். "ஐயர்ப் பெடியன் சமாசனம் சமபோசனம் நடத்தப் போகிறான்” என அன்று மாலை சில போலிச் சைவர்கள் கதையைக்கட்டி, குறிப்பிட்ட வேளைக்கு முன்னரே கோவிற் பூசையை முடித்து கதவைப் பூட்டி, விளக்குகளை அணைத்துவிட்டுச் சென்று விட்டார்கள் என்பது மட்டுமல்ல, நேரில் வாதிட்டு எதிர்க்க முடியாமல், இருட்டில் ஒளிந்து நின்று என்மீதும், அந்த இரண்டொரு நண்பர்கள் மீதும் கல்லெறி நடத்தியதுதான் வேடிக்கை1 இவற்றினால் மூடத்தனமான அந்தச் சமுதாயக் கட்டமைப்பை மீற வேண்டும், எதிர்க்க வேண்டும், உடைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வலுப்பெற்றுக் கொண்டேயிருந்தது. தனியொருவனாகிய என்னால் தனித்து நின்று இவற்றைச் சாதிக்க முடியாது. அதனால் என் படைப்புகள் மூலம் இவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. 1950-1960 காலப்பகுதியில் நான் எழுதிய என் ஆரம்ப காலச் சிறுகதைகளில் இவற்றின் தொனியை நீங்கள் கேட்கமுடியும் என நினைக்கிறேன். திஞா. :- இ.மு.எ. சங்கத்தின் தேசிய அமைப்புச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளிர்கள். அந்த நினைவுகளை மீட்டுங்கள். நா.சோ - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டு அதன் பணிகளை விஸ்தரிப்பதற்கான நோக்கத்தில் திரு செ. கணேசலிங்கம் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றதாயும் பல எழுத்தாளர்கள் சமூக மளித்திருந்ததாகவும், 1957ல் ஒரு தினம் எழுத்தாள நண்பர் உதயணன்( இப்போது பின்லாந்தில் வசிப்பவர்) என்னிடம் கூறினார். அழைப்பு வராததாலும் அப்படி ஒரு எழுத்தாளர் சந்திப்பு நடைபெற இருப்பதை அறிந்து கொள்ளாத தாலும், நான் அக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. நானும் உதயணனும் ஒரே விதியில் கொழும்பில் வசித்தமையால் அடிக்கடி சந்திப்பதும், சுதந்திரன் ஆசிரியர் மதிப்புக்குரிய எஸ். டி. சிவநாயகம் அவர்களும் அதே தெருவில் வசித்ததால் - அவர் அளித்த ஊக்குவிப்பின் காரணமாக சுதந்திரனில் அடிக்கடி எழுதிக்கொண்டுமிருந்தோம். சுதந்திரனில் பணியாற்றிய இணுவை மாறனும் நவசோதியும் தமிழோசை என்ற மாதப்பத்திரிகை ஒன்றை நடத்திவந்தனர். இப்பத்திரிகையின் ஏற்பாட்டில் கொழும்பு விவேகானந்த சபையில் இலக்கியக் கூட்டம் ஒன்றை அப்போது ஏற்பாடு செய்திருந்தனர். எஸ். டி. சிவநாயகம் தலைமையில் பிரேம்ஜியையும் என்னையும் உரையாற்ற அழைத்திருந்தனர். அப்போது பிரேம்ஜி என்பவர் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் மாணவனாக யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஞானா, பிரேம்ஜி என்ற பெயரில் அவர் எழுதும் இலக்கியக்கட்டுரைகளையும் தேசபக்தன் குறிப்புகளையும் வாசித்து - அக்கருத்துக்களிலும் எழில் கொஞ்சும் 33

Page 18
அவரின் எழுத்து நடையிலும் லயித்திருக்கிறேன். எனினும் ஆளை நேரில் தெரியாது. அக்கூட்டத்தில்தான் முதற் சந்திப்பு. நான் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். அவ்வுரையை எஸ்.டி.எஸ். அவர்களும் பிரேம்ஜியும் மிகப்பாராட்டினர். கூட்டமுடிவில் இராமநாதன் என்ற மற்றொருவரையும் பிரேம்ஜி அறிமுகப்படுத்திவைத்தார். இராமநாதன் ஒரு மிகச்சிறந்த வாசகர். அவர் வாழ்ந்த அறையே ஒரு நூலகம்போல அரிய பல நூல்களைக் கொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து வரும் வழியில் தினமும் அவரைச் சந்தித்து சிலமணி நேரம் இலக்கியம், அரசியல் பற்றி அளவளாவிவிட்டு நூலொன்றைப் படிக்க எடுத்து வருவது எனது வழக்கமானது. வார இறுதி நாட்களில் பிரேம்ஜியும் அங்கு வருவார்.
அரசியல், இலக்கியம், வரலாறு என்பவை அவர்களின் விரல் நுனியில் இருந்ததைக் கண்டு வியந்து போனேன். அவர்கள் இருவரின் நட்பும் என்னை இ.மு.எ.ச. வில் இணைத்து வைத்தன. ஆரம்பத்தில் கூறியபடி என் பாட சாலைக் காலத்திருந்தே சமுதாயத்தின் மூடத்தனங்களை உடைத்தெறிய வேண்டும் என உள்ளத்தில் அந்தரப்பட்டுக் கொண்டு தனியனாக இருந்த எனக்கு இ.மு.எ.ச வின் இலட்சியங்கள் - சமூக ஒடுக்குமுறை அடக்கு முறை களுக்கு எதிராக எழுத்தாளர்கள் தம் பேனாக்களைப் பயன்படுத்த வேண்டும், ஈழத்து மண்வாசனைகொண்ட இலக்கியங்கள் உருவாக்கப்பட வேண்டும், எமது இலக்கியப் படைப்புக்கள் எமது மண்ணின், மக்களின் ஆசாபாசங்களை வாழ்க்கையை இன்பதுன்பங்களை பிரதிபலிப்பனவாக அமைய வேண்டும் போன்றவை எனக்கு ஒத்துப்போவனவாக இருந்தன. சங்கத்தின் செயற்குழுவில் என்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனப் பிரேம்ஜி முன் மொழிந்த போது, தலைமைக் குழுவில் அப்போது இருந்த அநேகரின் புருவங்கள் நிமிர்ந்தன. ஏனெனில் அவர்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சியின் அங்கத் தவராகவோ அனுதாபியாகவோ கூட நான் இருந்ததில்லை. நான் எப்போதுமே இன்று வரை எந்த அரசியல் கட்சியிலும் அங்கத்தவனல்ல. தவிர, அக்கால இ.மு.எ.ச. செயற்குழுவில் - வயதில்கூட நான் இளையவன். இவன் சங்கத்தில் எதைச்சாதித்துவிடப் போகிறான் என அவர்கள் எண்ணியிருக்கலாம்.
பகீரதன் என்ற தென்னிந்திய எழுத்தாளன் (கல்கியில் பணியாற்றி யவர்) இலங்கை வந்திருந்தபோது, ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புக்களிலிருந்து பத்து வருடங்கள் பின்தங்கி யவை என அளித்த உளறல் பேட்டி, இங்குள்ள எழுத்தாளர்கள் மத்தியில் ஆக்ரோஷத்தை ஏற்படுத்தியது. அதைக் கண்டித்து அக்கருத்தை முறியடிப்பதில் இ. மு.எ.ச. முன்னின்று செயற்படவேண்டியிருந்தது. இலவசக்கல்வி காரணமாக அடிமட்டத்தைச் சேர்ந்த சமூகங்களிலுள்ள சிலர் ஓரளவு கல்வி அறிவுபெற்று, ஆக்க இலக்கியத் துறையில் ஈடுப்பட்டனர். அவர்களின் எழுத்துகளை மரபு வாத பண்டிதர் குழாம் ஒன்று இழிசினர் இலக்கியம்' என நையாண்டி செய்தது. இவர்கள் நவீன இலக்கியத்தின் எதிரிகள். அக்காலத்தில் சக்திமிக்க ஒரே இலக்கிய சங்கமாக விளங்கிய இ.மு.எ.ச.வுக்கு இவற்றுக்குத் தக்க விளக்கமளித்து, நவீன இலக்கியத்தை முன்னெடுக்கவேண்டிய கடமை இருந்தது. இலங்கையிலுள்ள அனைத்து எழுத்தாளர்களையும் ஒன்று திரட்டி 34

இலங்கையில் தமிழ் எழுத்தாளர் பொது மாநாட்டை முன்னெப்போதும் நடை பெற்றிருக்காதவகையில் இ.மு.எ.ச. 1962ல் கொழும்பு சாகிரா கல்லூரியில் இருநாட்கள் நடத்தியது. அவ்வரலாற்று நிகழ்வை குழப்பி மாநாடு கலைந்தது என்ற அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக ஒரு பொறாமைக் குழு இறுதி நேரச் சதி முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அந்தரங்கத் தகவல் முதலில் எனக்கே கிடைத்தது. அவர்களுக்குள்ளிருந்த ஒருவர் அளித்த நம்பகரமான தகவல். மறுநாள் மாநாடு ஆரம்பம். நாடெங்குமிருந்து எழுத்தாளர்கள் கொழும்புக்கு வந்துவிட்டனர். மண்டப அலங்கார ஒழுங்குகள், அறிக்கை தயாரிப்பு, புத்தக - புகைப்பட கண்காட்சி ஏற்பாடு என பிரேம்ஜி , சிவத்தம்பி , எச்.எம்.பி, இளங்கீரன் இராமநாதன், கைலாசபதி, செ.கணேசலிங்கன் முதலியோர் கண்விழித்துக் கொண்டிருந்தனர். இ.மு.எ.ச. வைப் பொறுத்தவரை தலைவர் தொண்டர் என்ற வித்தியாசம் இருப்பதில்லை. இந்த மனப்பான்மை எங்களை இறுக்கமாக நெருக்கமாக வைத்திருந்தது. எங்கள் மத்தியில் பெரிது சிறிது என்ற பேதமிருக்கவில்லை. எனக்குக்கிடைத்த தகவலை யாரிடம் சொல்வது என்ற தவிப்பு எனக்குள். பிரேம்ஜி எடுத்த எடுப்பில் எதையும் நம்பமாட்டார். சிரித்து அசட்டையாக இருந்துவிடுவார். எதற்கும் பரபரப்பு அடையமாட்டார். இராமநாதன் பொறுமையாகக் கேட்டு, நாணயத்தின் இருபக்கங்களையும் புரட்டிப் பார்த்து செயலாற்றுவதில் வல்லவர். எனக்கு இருந்த தொடர்புகளும் ஓரளவு அவருக்குத்தெரியும். அவரைத் தனியாகக் கூட்டிச்சென்று விஷயத்தைத் தெரிவித்தேன். அவர் பிரேம்ஜியை அழைத்தார். அக்காலத்தில் அவர்களிருவரும் இரட்டையர்கள் போல ஒருவருக்குள் மற்றவர் அடக்கம். இவ்விஷயத்தை ஏனையவர்களுக்கு சொல்வதில்லை என்றும் குழப்ப முனைபவர்கள் மாநாட்டிற்கு வருகிறபோது அவர்களைக் கண்காணிப்பதற்கு இராமநாதன் ஏற்பாடு செய்வ தென்றும் இரகசிய முடிவொன்றை எடுத்துக்கொண்டோம். மறுநாள் மண்டபம் நிறைந்த எழுத்தாளர் கூட்டம். கண்காட்சி திறப்புவிழா பிரேம்ஜியின் அறிக்கை சமர்ப்பிப்பு என்பன முடிந்து, இளங்கீரன் தலைமையுரை ஆற்றுகையில் இரண் டொருவர் எழுந்து கேள்வி கேட்க, அவர் உறைப்பாகப் பதிலளிக்க . நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்ட விஷயம் அதனால் "எழுவாய் பயனிலை எனச் சிவத்தம்பி நகைச்சுவையாகக் கூறி அவர்களை எழவிடாமல் அமர்த்தி விட்டார். கணிசமானவர்களின் ஆதரவு தங்களுக்கே என்ற நம்பிக்கைகொண்டு வந்தவர்கள் தாம் தனிமரமாக நிற்பதை உணர்ந்து அந்த இரண்டொருவர் மட்டுமே தேநீர் இடைவேளையின் பின்னர் தலைமறைவாகிவிட்டனர். இவற்றை விபரமாக நான் கூறவேண்டிய காரணம் என்னவென்றால் அந்த மாநாட்டிக்கு பின்னர்தான் இ.மு.எ.ச. தலைமை பல முக்கிய ஏற்பாட்டுப் பணிகளை என்னிடம் ஒப்படைத்தது. மரபுப் போராட்டம், ஈழத்து இலக்கிய இயக்கம் போன்றவற்றை வேகமாக எழுத்து மூலம் ஒரு சாரார் முன்னெடுத்துச் செல்ல, கூட்டங்கள், பிரதேசக் கருத்தரங்குகள், விழாக்கள் பற்றிய ஒழுங்குகளைச் செய்து மக்களிடம் கருத்துகளை எடுத்துச் செல்லும் பணி மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. s
ஈழத்து எழுத்தாளர்கள் இலக்கிய அநாதைகளல்லர். ஈழத்து இலக்கியத் துக்கென ஓர் பாரம்பரியம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக 35

Page 19
தமிழுக்கு வசன நடை தந்த வல்லாளராகிய ஆறுமுகநாவலர் மற்றும் அறிஞர் களான சித்திலெப்பை, கணேசையர், விபுலாந்த அடிகள் , சோமசுந்தரப்புலவர், பாரதியின் ஞானகுருவாக விளங்கிய மோனம் அருளம்பல சுவாமிகள் முதலியோரின் விழாக்களை கொழும்பு, யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, கண்டி முதலிய பகுதிகளில் இ.மு.எ.ச. ஏற்பாடு செய்தது. இவ்விழாக்களின் மூலமாக இப்பெரியார்களின் பணிகளின் புதிய பரிமாணங்களைப் தெரியப் படுத்த முடிந்தது.
பாரதி, தனது ஞானகுரு என விதந்து பாடிய யாழ்ப்பாணத்துச்சாமி என்பவர் வடமராட்சியிலுள்ள வியாபாரிமூலை என்னுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மோனம் அருளம்பலம் என்பவரே என்பதை அ.ந.கந்தசாமி ஆராய்ந்து ஐயந்திரிபற நிலைநாட்டினார். அந்த ஞானி பிறந்த ஊரில் அவரின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுக்கல் நிறுவும் விழாவையும் இ .மு எ. ச.வின் தேசியப் மாநாட்டையொட்டி மூன்று நாள் கலை இலக்கியப் பெருவிழாவை யாழ். மாநகரசபை மண்டபத்திலும், 1963ல் நடத்துவதற்குத் திட்டமிட்ட இ. மு.எ.ச. அதற்கான தயாரிப்புக் குழுவின் செயலாளராக என்னை நியமித்தது. அக்குழுவின் தலைவர் நந்தி, பொருளாளர் பத்மா. உறுப்பினர்களாக டொமினிக் ஜீவா, இளங்கீரன், வேதவல்லி கந்தையா, டானியல், மூத்த கவிஞர் யாழ்ப் பாணன், அட்வகேட் ஜெயசிங்கம், செ.யோகநாதன், பெனடிக்ற்பாலன் முதலியோர் செயலாற்றினர். எனது யாழ். ஒட்டுமடம் வீதி இல்லம் விழாச் செயலகமாக இயங்கியது. பின்னர் பல ஆண்டுகளாக இ.மு.எ.ச. யாழ். கிளையின் அலுவக முகவரியாகவும் இருந்தது.
நாம் மேற்கொண்ட பிரசார முயற்சிகளினால் அவ்விழாவுக்கு யாழ்.குடா நாடெங்கிலும் பெருத்த வரவேற்பு ஏற்பட்டது. இலக்கிய ஆர்வலர்கள் விழாத் தயாரிப்புகள் நிகழ்ச்சிகள் பற்றி தமது கிராமங்களுக்கு வந்து விளக்கிச் சொல்லுமாறு இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து எம்மை அழைத்தமை ஒரு புதிய அனுபவம். நந்தி அவர்களின் காரில் நான், டொமினிக் ஜீவா, இளங்கீரன், முதலியோர் விழாத் தயாரிப்பு வேலைப்பழுவின் மத்தியிலும் கிராமிய மட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பெரும்பாலும் தினமும் மாலை வேளைகளில் சென்று உரையாற்றினோம். பருத்தித்துறை, கரவெட்டி, கைதடி, சாவகச்சேரி, குரும்பசிட்டி, சங்கானை, காரைநகர் என. ઈ6o கிராமங்களில் தேர்தல் கால அரசியல் கூட்டம் போல மக்கள் திரண்டுவந்து கிராம எல்லையில் இலக்கியக்காரர்களாகிய எம்மை வரவேற்று மாலை சூட்டி அழைத்துச்சென்றமை எமது மக்களுக்கு இலக்கியவாதிகள் மீதுள்ள மதிப்பையும் மரியாதையும் எமக்கு உணர்த்தின.
இலங்கையின் எல்லாப் பாகங்களிலுமிருந்து பல நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் அறிஞர்கள் வெளிநாட்டுத்தூதுவராலயப் பிரதிநிதிகள் மற்றும் குடா நாட்டில் வாழும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்ட அவ்விழா பெருவிழாவாக அமைந்தது மட்டுமன்றி நவீன இலக்கியத்துக்கு எதிரான பழைமைவாதிகளின் வாய்களையும் அடைக்கச்செய்தது.
அவ்விழாவின் மூன்றாவதுநாள் பகல் இ.மு.எ.ச.வின் தேசிய அமைப்பு மாநாட்டில் இ.மு.எ.ச. தேசிய அமைப்புச் செயலாளாராக என்னைப் 36

போட்டியின்றித் தெரிவு செய்தனர்.
இ.மு.எ.ச. சுறுசுறுப்பாக இயங்கிய காலத்தில் சுதந்திரன் தவிர ஏனைய பத்திரிகைகள் இலங்கை எழுத்தாளர்களின் நவீன இலக்கியப் படைப்புகளுக்கு இடமொதுக்குவது அபூர்வத்திலும் அபூர்வமாக இருந்தது. தினகரன் பண்டிதகுழாத்தைச் சேர்ந்தவர்களின் எழுத்துக்களையும், வீரகேசரி சென்னையிலிருந்து இறக்குமதி செய்தும் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தது. 1960ல் நூல்வெளியீடடுத்துறையென்பது உபபாட நூல்களை அல்லது பக்தி இலக்கியநூல்களை வெளியிடுவதாகவே இருந்தது. சஞ்சிகை வெளியிடுவ தென்பது கல்லிலே நார் உரிப்பதாக இருந்தது. அக்காலத்துக்குச் சற்றுமுன்னர் எழுதிக்கொண்டிருந்தவர்களில் பலர் . 'மறுமலர்ச்சிக்காரர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர, ஏனையோரின் எழுத்து முயற்சிகள் தமிழ் நாட்டின் அச்சாக இருந்ததே தவிர எமது மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக் கும் வகையில் இருக்கவில்லை. நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கை யில் இ.மு.எ.ச வின் தொடர்ச்சியான போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் பிரமிக்க வைக்கின்றன. இன்று வெளியிடும் நமது நாட்டினரின் எழுத்துகளில் நூறு வீதமானவையும் எமது மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பனவாக உள்ளன. வாரத்திற்கு குறைந்தது இரு இலக்கிய நூல்களாவது இங்கு வெளியாகின்றன. வெளியிடும் பத்திரிகைகள் எல்லாம் தமக்கு எழுதும்படி அழைக்கின்றன. சஞ்சிகைத்துறையில் மூத்த சஞ்சிகையான மல்லிகை மற்றும் ஞானம், மூன்றாவது மனிதன் போன்றவை வாசகரிடம் நல்ல வரவேற்பையும் ஆழமான இலக்கியத்தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
பேரினவாதிகளால் இன்றுகூட ஈழத்தமிழினம் சிறுபான்மையாக இருந்தபோதிலும் அது ஒரு தேசிய இனம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை ஜீரணிக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்; மறுத்துவிடுகின்றனர். இ.மு.எ.ச. தோற்றம் பெற்ற காலத்திலேயே தமிழர்கள் இந்நாட்டின் தேசிய இனம்; சுயநிர்ணயம் உட்பட அவர்களுக்கு சம உரிமை உண்டு என்பதை தனது கோட்பாடாக வரித்துக்கொண்டுள்ளதுடன் அதை வலியுறுத்திக் குரல்எழுப்பி வந்ததையும் நாம் மறந்து விடக்கூடாது. சிங்களப் புத்திஜீவிகள் பெளத்த பிக்குகள் எழுத்தாளர்கள் கலைஞர்களுடான சந்திப்புகள் கலந்துரை யாடல்களில் இவை வலியுறுத்தப் பெற்றன. சிங்கள மொழித்திணிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு, வன்முறை அழுத்தங்களைக் கண்டித்ததுடன் நிற்காமல் குறைந்தபட்ச அடிப்படையில் நிரந்தரத் தீர்வை நோக்கிய ஏற்பாடு ஒன்றைச் செய்ய வேண்டிய அவசியத்தினாலே - நாட்டில் இரத்த ஆறு ஓடக்கூடாது; இன செளஜன்யம் ஒற்றுமை, சமாதானம் நிலவவேண்டுமென்பதற்காக குறைந்த பட்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து 1974ல் இ.மு.எ.ச. சிங்கள - தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர் மாநாட்டைக் கூட்டி தனது கோரிக்கைகளை சகல இன எழுத்தாளர்களின் ஆதரவு பெற்ற கோரிக்கையாக அக்கால அரசிடம் கையளித்தது. நிறைவேற்றுவதாக மாநாட்டிலேயே வைத்து ஏற்றுக்கொண்ட அக்காலப் பிரதமரும், பல அமைச்சர்களும் எதனையுமே பின்னர் செய்யவில்லை.
முந்திய தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்
37

Page 20
களைக் கிழித்தெறிந்த பேரினவாத அரசுகள் போலவே இக்கோரிக்கைகளையும் அக்கால அரசுத்தலைமையும் இனப்பிரச்சனைத்தீர்வு விடயமாகச் செயற்பட்டது. இன ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, சமாதானம் என்பவற்றுக்கான கோரிக்கை கள் ஒருநாட்டில் யதார்த்தமாகி நிலைத்திருக்கவேண்டுமெனில், அவற்றில் அக்கறை இருக்குமெனில் அவைபற்றி முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டியது பெரும்பான்மையினத்தினரது கடமை. தனது ஜனநாயக உரிமை களுக்காகக் கெஞ்சக் கெஞ்ச பெரும்பான்மையினமும் அவர்களின் அரசியற் தலைமையும் தலைக்கணத்துடன் மரத்தின் உச்சிக்கே ஏறிச் சென்று விடுகின்றன. மக்களைப்பற்றியோ, சமாதானத்தைப்பற்றியோ கவலை அவர்களுக்கில்லை. பதவி ஒன்றே அவர்களின் குறி என்பது எனது பட்டறிவின் காரணமாக உதித்த சொந்தக்கருத்து.
இ.மு.எ.ச. வுடனான நான்கு தசாப்தகால நினைவுகள் நான் மீட்பதாயிருந்தால் நூலொன்றுக்குரிய அளவுக்கு வளர்ந்துவிடும். 1980, 1990 களில் ஈழத்து எழுத்தாளர்களனைவரையும் இணைத்து, இ .மு. எ. ச. நடத்திய ஆய்வரங்குகள், இலக்கியப் பேரரங்குகள், பிரதேச இலக்கிய வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல்கள் முதலியவை சங்கம் நடத்திய ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் முதலியவை சங்கம் நடத்திய ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் எனக் கொள்ளலாம். தி. ஞா: 1963ல் யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய விழாவில் முட்டை அடித்துக் கூட்டம் குழப்பியமை மிக மிகச் சரியானது என டொமினிக் ஜீவா, கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பழம் பன்டிதரின் கடிதங்கள்’ நூல் வெளியீட்டு விழாவிலே குறிப்பிட்டார். இது தொடர்பான தங்களது கருத்து என்ன?. நா.சோ. அப்படி திரு டொமினிக் ஜீவா கூறியிருந்தாரானால் அது அவரின் சொந்தக்கருத்து. முட்டை எறிந்த அச் செயலைச் சரியென்று நான் கூறமாட்டேன். தவிர முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழு கூட அதைச்சரியென்று எந்தக்கட்டத்திலும் கூறியதில்லை. எழுத்தாளர் சங்கத்தின் வரலாற்றில் அந்நிகழ்ச்சியானது துரதிஷ்டவசமான கறைபடிந்த சம்பவமே. குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற முதல்நாளிரவு சங்கத்தின் யாழ் செயலகமாக விளங்கிய எனது ஒட்டுமடம் வீதி இல்லத்தில் கூடிய தலைமைக் குழு மற்றும் உறுப்பினர் இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வுக்குச் சமூகமளித்து சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் பிரேம்ஜி கண்டன அறிக்கையொன்றை அங்கு வெளியிட்டுவிட்டு எமது எதிர்ப்பைக்காட்டும் வகையில் வெளிநடப்புச் செய்வதாகவே தீர்மானம் எடுத்திருந்தது. அந்தமுடிவோடுதான் எல்லோரும் சென்றிருந்தோம். அவ்விழாவில் குழப்பம் ஏதும் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் எமக்கு இருக்கவில்லை. இ.மு.எ.ச. சார்பில் பிரேம்ஜி எழுந்து கண்டன அறிக்கையை வாசிக்க விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி மறுத்தனர். அந்த ஆண்டு பரிசுக்குரிய நூல்களைத் தேர்வு செய்தலில் முறைகேடுகள் நடந்திருந்தன என்பதை சாகித்திய மண்டலத்தில் உறுப்பினராக இருந்த ஜனாப் சமீம் மேடையேறி அம்பலப்படுத்தியபோது அவரைப் பேசவிடாமல் மேடையிலிருந்தவர்கள் குறுக்கீடு செய்து குழப்பினர். இதனால் ஆத்திரமடைந்த 38

சபையோர் மற்றும் சங்க அனுதாபிகளிற் சிலர் நாம் எவரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மேடையை நோக்கி முட்டைகளை எறிந்து. சங்கத்தைச் சேர்ந்த சிலரும் இதில் பங்குபற்றியிருந்திருக்கக் கூடும். இது உத்தியோக பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை. எது எவ்வாறெனினும் சம்பவத்திற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதால் இ.மு.எ.ச. இப்பழிப்பைச் சுமந்து கொண்டது. இச்சம்பவத்தால் சங்கத்தின் வளர்ச்சி நீண்ட காலத்துக்குப் பின்தள்ளப்பட்டதென்பது உண்மையே. எமது நேச சக்திகளாக விளங்கிய மூத்த எழுத்தாளர்கள்/பண்பாடற்ற இக்செயல் காரண மாக சங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். அவ்விழாவில் நடந்த களேபரங்கள் முடிந்தகையோடு, இ.மு.எ.ச தலைமைக்குழுவினா, இதுபற்றி ஆராய்வதற்காக எனது இல்லத்தில் கூடிவிட்டனர். எனது இல்லம் விழாநடைபெற்ற இந்துக்கல்லூரிக்கு மிக அருகாமையிலுள்ளது. தவிர அக்கல்லூரியிலுள்ள கோவிலின் அாச்சகராகவும் எனது மனைவியின் தந்தையார் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பகுதியில் மிக மதிப்பும் மரியாதைக்குமுரிய பிராமணக் குருக்களின் மருமகனாகிய நானும் இச்செயற்பாட்டிற்கு உடந்தை யானவன் என (தப்பாக) அடையாளப்படுத்தப்பட்ட போது, அக்குடும்பம் சமுதாயத்தில் எதிர்நோக்கிய அவமானங்கள், அச்சுறுத்தல்கள். அடிக்கடி என் மீதான பொலிஸ்விசாரணைக்கென பொலிஸ்காரர்களின் விஜயம் - முதலிய காரணங்களால் நானோ எனது மனைவியோ இந்துக்கல்லூரி வீதியால் நிமிர்ந்து நடப்பதற்கு பலகாலம் எடுத்ததென்றால், கோவில் குருக்களான என்மாமனார் எந்தளவுக்கு தலைகுனிவுக்கும் துக்கத்துக்கும் வெட்கத்துக்கும் ஆளாகியிருப்பார்? இழப்பதற்று எதுவுமில்லாதவர்கள் அச்செயலை வீர சாதனை என வீறாப்புப் பேசலாம். என் போன்றவர்கள் சங்கத்துக்காகப் பப்ளிசிட்டி இல்லாமலேயே பல விலையைக் கொடுத்தவர்கள். எனினும் சங்கத்தைவிட்டு ஓடவோ, செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ளவோ இல்லை என்பதை புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்கமுடியாது.
அப்போதும் சரி இப்போது சில காலமாகவுஞ்சரி சாகித்திய மண்டலம், கலைக்கழகம் ஆகியவற்றின் இலக்கிய நூற்பரிசுத்தேர்வு என்பது நேர்மை நம்பிக்கை முதலியவற்றை உதறித்தள்ளிவிட்டே செயல்படுகின்றது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை. கண்துடைப்புக்காக நூற் தேர்வுக்கென தாம் விரும்பிய சில நடுவர்களுக்கு நூல்களை அனுப்புகிறார்கள். ஆனால் பரிந்துரைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்தவர்கள், தேவையானவர்கள் முதுகு சொறிபவர்கள் முதலியோருக்கே என உறுப்பினர்கள் சிலர் கூடி மூடுமந்திரமாகப் பரிசுக்குரிய நூல்களைத் தீர்மானித்துக் கொள்கின்றனர். தேர்வாளர்களிடமிருந்து கிடைக்கும் தேர்வுப் புள்ளிகளைக கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்து, தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக முடிவை அறிவித்து விடுகின்றனர். நியாயமாக நடப்பது போல் காட்டுவதற்காக சில சந்தர்பங்களில் இரண்டொரு துறைகளில் தேர்வாளர்களின் தீர்ப்பும் சேர்க்கப்படுகின்றது. போதாக்குறைக்கு இவ்வமைப்பில் அரசியல் தலையீடும் அவ்வப்போது தாராளமாக குறுக்கிட்டு தேர்வாளர்களின் தீர்ப்பை நிராகரித்துவிட்டு, தாம் குறிப்பிட்டவருக்குப் பரிசைக் கொடுக்கும்படி 39

Page 21
சில தடவைகளில் அமைச்சர்களே கட்டளையிட்ட சம்பவங்களும் அரங்கேறி யிருக்கின்றன. தீர்ப்புக்கள் இரவோடிரவாக திருப்பி எழுதப்பட்டிருக்கின்றன. இக்குற்றச்சாட்டுக்களை எழுந்தமானத்தில் சுமத்தவில்லை. சில காலம் இவ்வமைப்பில் இருந்து இவற்றைச் சகிக்க முடியாமல் அதிலிருந்து வெறுத்து ஒதுங்கியவன் என்ற வகையில் இந்தச் சீரழிவுகளை முழுமையாக அறிந்தவன் நான். நடுவர்களின் தீர்ப்புகள் அரசியல்வாதிகளால் திருப்பி எழுதப்படுகின்றன என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிட முடியும். சென்ற எண்பது களில், சாகித்திய மண்டலமோ, இலங்கைக் கலைக்கழகமோ இயங்கக் கூடிய தாக இருக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகள் சிறந்த நுால்களுக்குப் பரிசுகள் வழங்கப்படாத நிலையில், 1990ல் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு பரிசு வழங்கப்படாத காலகட்டத்தில் வெளியான சிறந்த நூல்களுக்குப் பரிசளிக்க முன்வந்தது. 1984ல் எனது ‘ஆகுதி சிறுகதைத்தொகுதி வெளி யாகியிருந்தது. சிறந்த நூல் என அக்காலத்தில் பலராலும் பாராட்டுப்பெற்றது. 1990ஆம் ஆண்டில் மேற்படி அமைச்சுக்கு நான் பணி இடமாற்றலாகி வந்திருந்தேன். 'ஆகுதி நூலையும் தேர்வுக்கு எடுத்துக்கொண்டனர். அமைச்சர் முன்னிலையில் அமைச்சின் செயலாளர் தலைமையில் மேலும் நான்கு அறிஞர்களைக்கொண்ட தேர்வுக்குழு சிறுகதைத்துறையில் சிறந்த நூல் என ‘ஆகுதி நூலை தேர்ந்தெடுத்தது. தேர்வு முடிவுகள் அந்தரங்கமாக நடைபெற்று முடிந்த கையோடு நடுவர்களாக இருந்த அந்த அறிஞர்கள் என்னைப்பாராட்டி விட்டுச் சென்றனர். அமைச்சின் செயலாளர் எனது நூல் தெரிவுசெய்யப்பட்டிருப்ப தாகக்கூறி என் இருக்கைக்கே வந்து தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தாா. முடிவுகளைப் பத்திரிகைகளில் வெளியிட இருந்த கட்டத்தில் அங்கு பணி யாற்றிக் கொண்டிருந்த ‘சகுனி ஒன்று அது எனது நிர்வாகத்திறமை, தொழில் அனுபவம், இலக்கியகாரர்களிடமிருந்த மதிப்பு, பிரபல்யம், எழுத்தாற்றல் முதலி யவை தன்னிடமில்லையே என்ற பொறாமையில் மிதந்து கொண்டிருந்தது. அமைச்சரிடம் ஒடிச்சென்று என்னைப்பற்றி இல்லாததையையும் பொல்லாத தையும் கூறி, தனது சாகியத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிய நூலுக்காக எனக்கெனத் தீர்மானிக்கப்பட்டதை தட்டிப்பறித்துவிட்டது. நடுவர்களாக இருந்தவர்களையே ஆலோசிக்காமல் அமைச்சர் தீர்ப்பைத் திருப்பி எழுதிவிட்டார். பெரும்பாலான அரசியல்வாதிகள் காற்றடிக்கும் பக்கம் சரிகிற நாணல் போன்றவர்கள்தானே? மேடைகளில் நேர்மை நியாயம் ஜனநாயகம் எனப் பேசுவார்கள். செயல்களோ அதற்கு நேர்மாறாக இருக்கும். அதனால் அரச அமைப்புக்கள் பரிசுத் தேர்வு செய்வதும, பட்டங்களையும் விருதுகளையும் வழங்குவது என்பதும் ஒரு ஏமாற்று மோசடையே தவிர அர்த்தமிருப்பதாக நான் நினைக்கவில்லை. சுதந்திர இலக்கிய அமைப்பு ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடுநிலைமையுடன் சிறந்த நூல்களை தக்காரைக்கொண்டு தேர்வு செய்து நேர்மையாகப் பரிசளித்து வந்தது. அது இப்போது நின்று போனது துரதிஷ்டவசமானது. அரச இலக்கிய அமைப்பின் நூற்தேர்வு தொடர்பாக சிலகாலத்துக்கு முன்னர் “ஞானம்' சஞ்சிகையில் வெளிவந்த தலையங்கத்துடன் நான் முற்று முழுதாக உடன்படுகிறேன்.
(அடுத்த இதழில் நிறைவுபெறும்.)
40

கம்பவாாரிதிக்கு இருபெரும் விருதுகள்
கிம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களுக்கு தமிழகத்தில் இரு பெரும் விருதுகள் கிடைத்துள்ளன. தனது வாழ் வைத் தமிழ் வளர்ச்சிக்காகத் தியாகம் செய்துவரும் இவரின் பல்துறைசார் கலை இலக்கியப் புலமைக்காகவும் தமிழ்ப்பணிக்காகவுமே இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அறிஞர் க.ப. அறவாணன் ஆராய்ச்சிக்கட்டுரை நிலையத்தின் அனைத்துலக சாதனையாளர் விருது கம்பவாரிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அகில உலக ரீதியில் தாழாத் தமிழாசையோடு தமிழ்ப்பணி புரிந்துவரும் ஒருவருக்கு இவ்விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நம்நாட்டில் முதல் முறை யாக இவ்விருது கம்பவாரிதிக்கு வழங்கப்பட்டமை ஒரு வரலாற்றுப் பதிவாகும். கம்பகலாநிதி இரா.இராதாகிருஷ்ணன் நினைவு விருதும் இவ்வாண்டு கம்பவாரிதிக்கே கிடைத்துள்ளது.
நெற்றி நிறைந்த நீறுடனும், முகமெலாம் சிரிப்புடனும், கூப்பிய கரங்களுடனும் காட்சிதரும் இவர் ஒரு கனிவான மனிதர். தனது பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் மக்களைச் சிந்திக்கவைப்பவர். ஒரு தத்துவவாதி; ஆன்மீகச் சிந்தனையாளர்; அறிவுத்திறன் செறிந்தவர். பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவும் தெளிவும் உடையவர். கம்பன்கழகம் மூலம் கலை இலக்கியப் பணிபுரிபவர். தமிழ் உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கியஸ்தர்களில் ஒருவர். ஈழத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ்ப் பணிகள் ஆற்றியமைக்காகவே இவ்விருதுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. கம்பன் புகழ் பாடி கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பவாரிதியை நன்கு பணிசெய்ய ஞானமும் வாழ்த்துகிறது.
}雙 蔓燈
密
5ラ
R
41

Page 22
நெற்றிக்கணர்
நால் விமர்சனம்
நூல் : உலைக்களம் ... எழுதியவர் : புதுவை இரத்தினதுரை.
பலரும் நன்கறிந்த சிறந்த ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவரான புதுவை இரத்தினதுரை, வியாசன் என்ற பெயரில் எழுதிய உணர்வின் வரிகள் உலைக்களம் (2003) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. அவர் இயல்பாகவே கவிஞராக இருப்ப தால், அவரின் உணர்வின் வரிகளும் கவிதைச் சாயலிலேயே அமைந் துள்ளன. அதனால், பலர் இந்நூலில் இடம்பெற்றுள்ள புதுவை இரத்தின துரையின் எழுத்துக்களைக் கவிதை கள் என்றே கருதும் நிலை ஏற்பட்டு விட்டது. உதாரணமாக, ஈழத்தில் புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவ ரான வரதரே (தி.ச.வரதராசன்) இவற் றைக் கவிதைகள் என்று கருதி ஏமாந்துவிட்டார். நூலில் இடம் பெற்றுள்ள வரதரின் கருத்துக்கள் இவை: "ஈழத்தில் புதிதாக ஒரு நல்ல கவிஞரைக் காணக்கூடியதாக இருக் கிறது. அவருடைய பெயர் "வியாசன்" அவருடைய ஒரு கவிதையைப் படித்த வுடனேயே "ஆகா ஒரு நல்ல கவிஞன்” என்று அவரை இனங்கண்டு விடலாம். இந்தக் கவிஞன் வியாசன் இருக்கிறாரே இவர் ஏற்கனவே ஈழத் தின் புகழ்வாய்ந்த ஒரு கவிஞனின் புதுப்பிறவிதான்.” புதுவை இரத்தின துரையின் நூலில் இடம் பெற்றுள்ள ‘வரவேற்பில் இந்நூல் பற்றிய தமது வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். "...இலக்கியவாதிகளுக்கு உரத்
42
தொன்று உரைக்கின்றேன். உள்ளே உள்ளன கவிதைகள் அல்ல. உணர் வின் வரிகளே. நிழலை நிஜமெனக் கருதி நிறுக்காதீர். என் கவிதை களுடன் விரைவில் உங்கள் முன் ஆஜராகுவேன்.”
இந் நூலில் , குந்த ஒரு குடிநிலம் முதல் காலத்தைத் தவற விட்டால் கண்டவனெல்லாம் கதவு தட்டுவான் வரை பல்வேறு தலைப்பு களில் பல்வேறு விடயங்கள் கவிதைச் சாயலில் கூறப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தின் தேவை, தாயகத்தின் சிறப்பு, தாயகத்தின் அழகு, தாயகத் தின் வலிமை முதலியவை உலைக் களத்தின் எழுத்துக்களின் அடிப்படை யாக விளங்குகின்றன.
புதுவை இரத்தினதுரையின் எழுத்துக்களில் வீச்சும், வீரியமும் உண்டு. தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் நிகழ்ந்த அநியாயங் கள், அட்டுழியங்கள், கொடுமைகள் அத்தனையையும் அவர் தமது எழுத்துக்களுக்குள் அடக்கியுள்ளார். தமிழ் மக்களின் சோகங்களைச் சுமந்து வேதனையுடன் எழுதப்பட்ட வரிகளை நூலிற் காணலாம், அதே வேளை துணிச்சலும் நம்பிக்கையும் நிறைந்த வரிகளையும் நூலில் தரிசிக் கலாம். வீரத்தின் விளைநிலமாகவும் தமிழர் தாயகம் விளங்குவதை தமக்கே உரிய பெருமிதத்துடன் நூலா சிரியர் இனங்காட்டிச் செல்கிறார்.
இரத்தினதுரையின் நடை யழகு கவர்ச்சியானது. அவர் வசனம் எழுதினாலும், அது கவிதை போலவே

இருக்கிறது. எவரையும் வாசிக்கத் தூண்டும் பண்பு வாய்ந்தது, அவர் கையாளும் மொழி. சாடவேண்டியவர் களை, சாடவேண்டிய இடங்களில் மொழியையே சாட்டையாக எடுத்து, விளாசு விளாசென்று விளாசுகின்றார்.
உலைக் களம் என்னும் இந்நூல், இலங்கையின் அரசியல் போக்குப் பற்றியும், தமிழர்களின் பிரச் சினைகள் பற்றியும், வீர நிகழ்வுகள் பற்றியும் ஆவணப்படுத்தும் முறை யிலும் அமைந்துள்ளது. 1993 ஆவணி முதல் 2003 பங்குனி, சித்திரை வரையிலான காலகட்டத்து நிகழ்வுகள் இந்நூலிற் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் பத்தாண்டுகாலப் போரியல் வரலாற்றை உணர்ச்சிச் செறிவுடன் அழகிய மொழிநடையில் சிறப்பாகப் பதிவு செய்கின்றது, உலைக்களம்.
நூல் : ஈழத்தமிழர்க்கு
ஏன் இந்த வேட்கை? எழுதியவர் : சோமகாந்தன்
ஈழத் தமிழரின் அரசியல் பிரச்சினைகள் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள அளவுக்கு, தமிழில் போதிய நூல்கள் வெளிவரவில்லை. ஓரிரு முயற்சிகளே இடம் பெற் றுள்ளன. அவ்வகையில் சோம காந்தனின் ஏன் இந்த வேட்கை? (2003) என்ற நூல் இயன்றவரை இக் குறையை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை அக்குவேறு ஆணி வேறாக வரலாற்றுப் பின்னணியில் விளக்கும் நூலாக இது விளங்குகிறது. இந்நூலை எழுதியவர் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் நோக்கும்போது, தேசிய ஒற்றுமையைக் காலந்தோறும்
43
வற்புறுத்திவந்த தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களின் வேதனையை வெளிப்படுத்துவதாகவும் நூல் அமைந் துள்ளது எனலாம்.
இந்நூல் குறிப்பாக 1956 முதல் இந்நாட்டில் இடம்பெற்று வந்துள்ள பல்வேறு பிரச்சினைகளை யும் தேவையான ஆதரங்களோடும், வேண்டிய புள்ளிவிபரங்களோடும் விரி வாக விளக்குகிறது. இலங்கைவாழ் தமிழரின் அரசியல் அபிலாசைகள், அரசியல் பிரச்சினைகள், தேவையான தீர்வுமுயற்சிகள் முதலியவை பற்றிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கைகளும் தேவை யான இடங்களில் தேவையறிந்து வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. பல்வேறு காலகட்டங்களில் இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற ஒப்பந்தங்கள் பற்றிய விபரங்களும் சேர்க்கப்பட்டிருப் பது நூலின் ஆவணத் தகுதியை மேம்படுத்துகின்றது. அவ்வப்போது தமிழருக்கெதிராக இடம்பெற்று வந் துள்ள அநியாயங்கள் முறை கேடுகள் பற்றி நூல் விரிவாகப் பேசுகிறது. தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் சேர்ந்து வாழ முயற்சித்த போதிலும் அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையிலேயே போராட்ட வரலாறு திசை திரும்பியது என்பதை நூலாசிரியர் நூலில் விளக்கியுள்ளார். இந்நூலுக்கு மேலும் மகுடம் சேர்க்கும் முறையில் பேராசிரியர் கா.சிவத் தம்பியின் பாயிரப்பார்வை அமைந் துள்ளது.
சிற்சில இடங்களில் காணப் படும் தகவல் பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால் தேவையொன்றை இயன்ற வரை பூர்த்திசெய்யும் தரமான நூலாக இது விளங்குகிறது. ஆக்க இலக்கியத்

Page 23
துறையில் ஈடுபட்டுவந்த சோமகாந் தனின் இனி னோர் எழுத் துப் பயணத்தை, ஈழத்தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை? என்ற இந்நூல் இனங்காட்டு கின்றது. இந் நூல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்படு மாயின், நூலின் நோக்கம் முழுமை யாக நிறைவேற்றப்படும் எனலாம்.
நூல்: மறைமுகம்
எழுதியவர்: மு. தவராஜா.
இலங்கையின் தமிழ் ச் சிறுகதை வளர்ச்சிபற்றி நோக்கும் போது, வித்தியாசமான பாணியில் எழுதும் சிறுகதையாசிரியர்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவர் களாக விளங்குகின்றனர். இவர்களுள் ஒருவராக மு. த்வராஜா திகழ்கிறார். மறைமுகம் (2003) என்ற சிறுகதைத் தொகுதி மூலம், தம்மை ஒரு வித்தி யாசமான படைப்பாளியாக அவர் இனங்காட்டுகிறார்.
யாழினி முதல் இதிகாசப் படைப்பு ஈறாக இந்நூலில் உள்ள பத்துச் சிறுகதைகளும் சமூகப் பிரச் சினைகள், குடும்ப உறவுகள், அரசியல் விவகாரங்கள் பற்றிப் பேசு கின்றன். அநாயாசமாக எழுத்தைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டிருப்ப தோடு வாசகர்களே படைப்புகளின் உள் ஆழத்தைக் கண்டுணருமாறும் எழுத்தாளர் செய்திருக்கிறார். நூலின் பெயருக்கேற்பவே ஒவ்வொரு சிறுகதையும் அமைந்துள்ளது.
முப்பத்தாறு பக்கங்களில் முடிந்துவிடும் இச்சிறுகதைத் தொகுதி, சில குறைகளையும் கொண்டுள்ளது. யாழினி என்ற முதலாவது சிறுகதை யில் இடம்பெறும் உரையாடல்களில் இரட்டை மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தும் எழுத்தாளர், மற்றைய
44
படைப்புகளில் இக்குறியீடு இல்லா மலே பாத்திரங்களை உரையாட விட்டுள்ளார். இரட்டை மேற்கோள் குறியின்றி பாத்திரங்களை உரையாட விடுவது தவறு. எதிர் காலத்திலாவது பாத்திரங்கள் இரட்டை மேற்கோள் குறிக்குள் பேசுமாறு அவற்றைப் பழக்குவது, எழுத்தாளருக்கும் நல்லது; பாத்திரங்களுக்கும் நல்லது. சிறி சில இடங்களில் தமது குடியிருப்பை உணர்த்தும் எழுத்து அச்சுப் பிழைகளைக் “குடி கலைப் பது” அவசியம்.
எதிர்காலத்தில் இலங்கையில் பேசக்கூடிய எழுத்தாளராகத் தம்மை இனங்காட்டும் தவராஜா, மேலும் தமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும். தமது நூலில் குறைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதும் அவரது பொறுப்பு. மு. தவராஜாவின் மறைமுகம், அவரது எதிர் கால எழுத்துக் கள் பற்றிய நம்பிக்கையைத் தருகிறது.
"நெற்றிக் கணி’ விமர்சனம்
ழுத்தாளர்களே,
நெற்றிக்கண் பகுதியில் ங்களது நூல்விமர்சனம் இடம பறவேண்டுமெனில், நூலின் ருபிரதிகளை அனுப்பிவையுங் கள். ஒரு பிரதி மட்டுமே அனுப் பினால், நூல்பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய நூலகம் பகுதி
பில் இடம்பெறும்.
- ஆசிரியர்.

விவாத GDమి-ళీ
"மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யக்கூடியவை செய்யவேண்டியவை"
பாலா. சங்குப்பிள்ளை குறிப்பிடுகிறார், மலையகவாதிகள் என்றால் ஒருசிலர் தங்களையே திரும்பத் திரும்ப மலையகவாதிகள் என்பதை பறை சாற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்’ என்று. ஆனால் இது தவறு. புதியவர்களுக்கு எதுவும் செய்வதில்லை என்பது அவரது கூற்று; இதுவும் தவறு.
ஏனெனில் கொட்டக்கலை இலக்கிய வட்டம் ஆரம்பிக்கப்பட்டதே ஒவ்வொரு நோன்மதி தினத்தன்றும் ஒரு நூலை வெளியிடுவது அல்லது கலந்துரையாடல்/விமர்சனம் இப்படி ஏதோ ஒன்றையாவது செய்வது என்ற நோக்கத்துடன்தான். இதன்மூலம் இலக்கிய ஆர்வலர்களையும் புதிய எழுத்தாளர், கவிஞர்களையும் ஊக்குவிக்க இயலும் என்ற எண்ணத்துடன்தான். அந்த வகையில் இலக்கிய வட்டம் வெற்றி பெற்றது என்பதை உணரல் வேண்டும். பலர் தொடர்ச்சியாக இலக்கிய வட்டக் கூட்டங்களில் கலந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் தம் கவிதை வாசிப்பு எனும் நிகழ்வும் இடம்பெற்றது. கவிஞர் சு.முரளிதரன், கவிஞர் மல்லிகை சி.குமார், மொழிவரதன் போன்றோர் கருத்துரை வழங்கி இருந்தனர். மேலும் நிகழ்வுகளையும் புதியவர்கள் ஏற்று நடத்துமாறு வேண்டி அவ்வாறு செய்யப்பட்டும் உள்ளது.
பொருளாதாரம் இல்லாமல் இருட்டில் இருப்பவர்களின் ஆக்கங்கள் இலக்கிய வட்டத்தால் வெளிக்கொணரப்படவில்லை என்கிறார். மல்லிகை சி.குமார் பல இலக்கியவாதிகளிடம் தனது கதைகளை கொடுத்து ஏமாந்தவர். கடைசியாக அவரது கதைகளே அவரிடம் இல்லை. இந்நிலைக்கு காரணமானவர்களை பாலா. சங்குப்பிள்ளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் உதவியாக இருக்கும். இந்நிலையிலேயே அவரது கதைகளைத் தேடி எடுத்து மனுஷியம் தொகுப்பாக சாரல் வெளியிட்டார். தனது சிறுகதைகள் நூலுரு பெறும் என்ற நம்பிக்கையை மல்லிகை சி.குமார் இழந்து முன்னுரையைக் கூட நீண்ட காலம் எழுதிக் கொடாது தவிர்த்திருந்தார்.
மல்லிகை சி.குமார் ஒரு சாதாரண ‘பென்ஷன் வாங்கிய தொழிலாளி என்பதை ஏன் பாலா. சங்குப்பிள்ளை அறியாது உள்ளார்.
அட்டன் இரா.மகேந்திரனின் விடை தெரியாத வினாக்கள்’ கவிதைகள் அறிமுகம் செய்யப்பட்டது. பாலா. சங்குப்பிள்ளை குறிப்பிட்டது போல அவர் 'வட்டத்தில் உள்ளவர் அல்ல. பெண் எழுத்தாளரான சாந்தா இராஜகோபாலின் 45

Page 24
நூல் வெளியீட்டுவிழா கொட்டக்கலை இலக்கிய வட்டத்தால் செய்யப்பட்டது. அவரும் அவ்வாறே. மேலும் “ஞானம்' சஞ்சிகை அறிமுகம் செய்யப்பட்டது. இதழ் ஆசிரியரே நேரடியாக வந்து கலந்துகொண்டார்.
மேலும் ‘மலைஓசை எனும் ஒரு சிறுசெய்தி ஏடு ஒவ்வொருமாதமும் வெளியிடப்பட்டது. இவற்றிற்கெல்லாம் மேலாக கொட்டக்கலை இலக்கிய வட்டம் நூல்களை வெளியிட்டும் அல்லது வெளியிடவும் உள்ளதுடன் கொட்டக்கலையில் ஓர் இலக்கிய துலங்கலை வெளிக்காட்டி உள்ளது.
எமது இலக்கிய வட்டம் குறுகிய வட்டத்திற்குள் இல்லை என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன். - மொழிவரதன், கொட்டக்கலை. ஆகஸ்ட் இதழில் திரு.இல. இராமலிங்கம் அவர்கள் மிகுந்த தாழ்வுணர்வுடன் எம்மீது வைத்த குற்றச்சாட்டை வாசித்தபோது சில விடயங்கள் தொடர்பில் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாசகர்களின் நலன் கருதி அவரது குறிப்பை இங்கொரு முறை குறித்து காட்ட வேண்டியது அவசியமாகின்றது.
‘அச்சடிக்கப்பட்ட நூல்களை திட்டமிட்டவகையில் விநியோகம் செய்தல் வேண்டும் என லெனின் மதிவானம் எழுதியுள்ளார். இவர் யதன்சைட் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தவர். பக்கத்தில் உள்ள வெளியீட்டகம் வெளியிட்ட நூல்களில் சில பிரதிகளையேனும் விற்பனை செய்து கொடுத்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இலக்கிய அமர்வுகளில் வந்து சொற்களை கொட்டி விட்டுச் செல்வதில் என்ன பயன (தடித்த எழுத்து எம்மால் இடப்பட்டது)
யதன்சைட் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் கலாமன்றத்தின் பொறுப்பு விரிவுரையாளராக கடமையாற்றிய காலத்தில் சக விரிவுரையாளர்களினதும், ஆசிரிய மாணவர்களினதும் நிர்வாகத்தினரதும் ஒத்துழைப்புடன் பல இலக்கிய நிகழ்வுகளையும், பல நூல் விமர்சன நிகழ்வுகளையும் நடாத்தியுளளோம். அவற்றில் திரு.அந்தனி ஜீவாவின் ‘அக்கினி பூக்கள் (நாடகம்) சாரல் நாடனின் ‘மலையகம் வளர்த்த தமிழ் கட்டுரைத் தொகுப்பு திரு.சு.முரளிதரனின் மலையக இலக்கிய தளங்கள் (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய நூல் விமர்சன நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
புதிய சிந்தனை கலை இலக்கிய பேரவையை உருவாக்கி அதன் செயற்பாடுகளில் ஈடுபட்ட போதும், இவ்வகையான பணிகள் செய்யப்பட்டே உள்ளன. அத்துடன் விமர்சன நிகழ்வின் இறுதியில் குறித்த நூலின் எழுத்தாளருக்கு, அவர்களிடமிருந்து பெற்ற நூல்களுக்கான பணம் எவ்வித பாக்கியும் இன்றி ஒப்படைக்கப்பட்டன. அவை அந்நிய பொருளுதவியில் வாழும் என்.ஜி.ஒ.க்களை, நாடியோ அல்லது வர்த்தக பிரமுகர்களுக்கு ‘இலக்கிய செம்மலி "இலக்கிய வித்தகர் போன்ற பட்டங்களை வழங்கியோ பெறப்பட்டவை அல்ல. மாறாக மாதாந்த செலவுகளைக்கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாத சம்பளத்தைப் பெற்று வந்த ஆசிரிய மாணவர்களாலும், உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்த நண்பர்களாலும் வழங்கப்பட்டவை யாகும.
இவவம்சம் ஒரு புறம் இருக்க இவ் இலக்கிய நிகழவுகளில் இடம்பெற்ற
46

நூல் மதிப்புரைகள், திறனாய்வு, விமர்சனம் என்பன ஓர் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த அடித்தளத்திலிருந்து முன்வைக்கப்பட்டமை பலரின் மூக்கை சினுங்கவே வைத்தன. இத்தகைய சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் குறித்து எவ்விதமான தேடலும் அற்ற இல. நாகலிங்கம் அவர்கள் இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பது அபத்தமானதொன்றாகும்.
நான் கூட்டங்களுக்குச் சென்று கருத்துக்களை கொட்டி செல்கின்றேன் என ஆத்திரம் கொள்கிறார் இந்தக் கனவான்! இலக்கிய விமர்சனம, திறனாய்வு, மதிப்புரை என்பன தேவையில்லாத ஒன்றா? கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை, சி.வி வேலுப்பிள்ளை, மரியதாஸ் போன்ற இன்னும் பலர் என்னைவிட அதிகமாக கருத்துக்களை கொட்டிச் சென்றவர்கள் அல்லவா? புதிய தலைமுறையினரின் வருகை குறித்தும, அவர்களின் தத்துவார்த்த பாதை குறித்தும், சகித்துக் கொள்ள முடியாத பாமரன் ஒருவரின் குமுறலாகவே மேற்குறித்த கூற்றுக்கள் எனக்குத் தென்படுகின்றன. எதிர் வரும் காலங்களில் இவ்விவாதம் தொடர்பிலான பதிலுரையை எதிர்பார்க்கலாம்.
- லெனின் மதிவானம் திரு நாகலிங்கம் கூறியிருந்த சில குற்றச் சாட்டுக்களை மறுப்பதுடன் அதற்கான விளக்கங்களையும் தெளிவுப்படுத்துவது எனது கடமையாகும்
திரு.லெனின் மதிவானமோ அல்லது நானோ சாரல் நாடனின் சாரல் வெளியீடுகளை விற்பனைசெய்து கொடுக்கவில்லையென்பது கட்டுரையாளரின் முதல் குற்றச்சாட்டு. ஒரு புத்தக வெளியீட்டாளரின் முதல் கடமையென்ன? இத்துறையில் சம்பந்தப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கவேண்டும். வெளியிடப்படும் புதுப்புது புத்தகங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு அனுப்பிவைப்பதுடன் விற்பனை சம்பந்தமாகவும் அவ்வப்போது அவர்களின் உதவிகளையும் ஆலோசனை களையும் பெறவெண்டும. அவ்வாறில்லாமல் உதவி செய்யவில்லை புத்தகங் களை வாங்கவில்லையென அலட்டிக் கொள்ளலாமா?
மேலும் புதிய படைப்பாளிகளின் ஆக்கங்களை வெளியிடுமாறு நான் கேட்கவில்லையென்பதும் அவரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு புத்தக வெளியீட்டாளரின் இன்னொரு கடமைதான் நல்ல திறமையான புதிய படைப்பாளிகளைத் தேடி இனங்கண்டு அவரின் ஆக்கங்களைப் புத்தகமாக்கி வெளியீடு செய்வது. இதற்காக என்னைப் போன்றவர்கள் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. மலையகத்தில் தங்களை மூத்த இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாதா யார் புதியவர் பழையவர் மற்றும் திறமையானவரென்று.
நம்மவர்கள் எல்லைகளை கடந்து நாடுகளைத் தாண்டி தடம் பதித்துள்ளது உண்மைதான் ஐயா. இதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால் அதில் பாதிப்பேர் தாய் நாட்டை துறந்து, மறந்து தங்களை வெளிநாட்டு பிரஜைகள் என்று பெருமையுடன் கூறிக்கொள்பவர்கள்தான் அதிகம. அதிலும் ஆட்சி செய்பவர்களின் அருமை பெருமைகளை பாடி பாதம் பணிபவர்களின் படைப்புகள்தான் இன்று எல்லைதாண்டி தடம் பதித்து வருகின்றன. 'காக்கா’ பிடிக்கத் தெரியாத திறமையான படைப்பாளிகள் 47

Page 25
இன்னமும் இருட்டில் இருப்பது மட்டும் சத்தயமான உண்மை.
மணிமேகலை பிரசரம் மூலமாக திருகோணமலை இலக்கிய ஒன்றியம் சிறுகதை தொகுப்புகளை ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ரூ. 1000 பெற்றுக்கொண்டு அவர்களின் ஆக்கங்களை பதிப்பித்து வெளியிட்டது உண்மைதான. அதேபோல மலையகத்தைச் சார்ந்த துரைவி பதிப்பகம் சில சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டது உண்மைதான். அந்த தொகுப்பில் ஒளி பிறந்தது என்ற எனது சிறுகதையொன்றும் வெளியானதும் மறக்க முடியாத உண்மைதான். ஆனால் இரண்டொரு சிறுகதை தொகுப்புக்கள் மற்றும் சில நாவல்களை வெளியிட்டதுடன் தனது செயற்பாடுகளை துரைவி பதிப்பகம் மட்டுப்படுத்திக் கொண்டது. ஆனால் திருகோணமலை இலக்கிய ஒன்றியம் தொடர்ந்து ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட நான்கு சிறுகதைத் தொகுப்புக்களை வெளிக்கொணர்ந்ததுடன் அதிகமான புதிய ஈழத்து எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்ததுடன் புத்தகவெளியீட்டு வைபவத்தின் போது அனைத்து எழுத்தாளர்களையும் கெளரவிப்பதில் முன்மாதிரியாக திகழ்கின்றது. ஆனால் மலையகத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலவட்டம் தூக்கினால்தான் ஆள்பார்த்து அடையாளம் காட்டுவார்கள்.
எம்மவர்களின் வரலாற்று ஆவணங்களை தேடித் தேடிச் சேகரித்து வெளிக்கொணர்பவர்களை குற்றம் கூறவிலலை. அவர்களை ஊக்குவிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் திரும்ப திரும்ப ஒரு குறுகிய வட்டத்துக்குள் தாங்களே மலையக இலக்கியவாதிகள் என்று கூறிக்கொண்டு மற்றவர்களுக்கு இடம் கொடாமல் பிடிவாதம் செய்வதுதான் எனக்கு பிடிக்கவில்லை.
இதே பகுதியில் ஒரு அன்பர் மிகத்துணிவாக சரியாக ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். திரு.சிவலிங்கம் இடது சாரியல்ல அவர் ஒரு ஜனநாயகவாதி, இடதுசாரியாக இருந்தால் எந்த சூழலிலும் மலையகத்தை விட்டு ஒடியிருக்கமாட்டார். இது சரியான கருத்து. இவரின் புதல்வர்கள் வெளிநாடுகளில் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள். இவர்களை உயர்த்த பாடுபட்ட திரு.சிவலிங்கம் மலையக கலை இலக்கியம் உயர எந்தளவுக்கு பாடு பட்டிருக்கிறார்? மேலும் பல்கலைகழகங்களுக்கு அப்பால் இடதுசாரிக் கருத்துக்களுடன் கலை இலக்கிய ஆற்றலுடன் இருப்பவர்கள் பலர்; உண்மை தான். ஆனால் இவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
அன்று மலையக கலை இலக்கியத்துக்காக வாழ்ந்து வறுமையில் வாடி மடிந்த குறிஞ்சித் தென்னவன் குறிஞ்சிப்பாலன் போன்றவகர்களின் அரிய படைப்புக்கள் எவராலும் ஏறெடுத்துப் பார்க்கப் படாமல் பாதி ஏட்டிலும் மீதி கரையான்களுக்கு உணவாகவும் இருந்து வருகின்றன. இதையெல்லாம் புத்தகமாக்கி வெளிக்கொணர்வதற்கு யாருக்கும் எண்ணம் கிடையாது. ஆனால் வாய் சொல்லில் வீரனாக மட்டும் இருப்பதில் என்ன புண்ணியம்? முதலில் மூத்த இலக்கியவாதிகள் புதியவர்களை அடையாளம் காட்டவேண்டும. இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் உண்மையான படைப்பாளிகளின் படைப்புகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கவேண்டும். இவையெல்லாம் நடக்காத வரையில் மலையக கலை இலக்கியம் வளர வாய்ப்பேயில்லை.
- பாலா சங்குப்பிள்ளை 48

CIaagour &
ஞானம் 39வது இதழ் கிடைத்தது. மணிவிழாக் காணும் எத்தனையோ படைப்பாளிகளின் ஆக்கங்கள் இன்னும் நூலுருப்பெறாமலும் நம்மிடையே உள்ளன. ஞானத்தின் ஆசிரியர் கருத்து இதனை வலியுறுத்தியிருப்பது வலிமையே. கம்பவாரிதியின் வேறு வேறுருவும் வேறு வேறியற்கையும் கவிதையா சிறுகதையா கட்டுரையா என அவருக்கே துலக்கமில்லை. ஞானம் இத்தனை பக்கங்கள் ஒதுக்கயிருக்கத் தேவையில்லை. தம்மை பெரிய ‘இவாளாக காட்டிக் கொள்ள காலத்துக்கு காலம் இப்படி ஒரு கவிப்பாய்ச்சல் கதைப்பாச்சல் இவர்களுக்கு பாய வேண்டியுள்ளது.
இம்முறை கவிதைகள் கவிதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கவிதைகள் படிக்கும் போது யுத்தம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. ஆம் மெளனயுத்தங்களும், அதன் விளைவுகளும், அகோரமாயுள்ளன. விவாத பக்கங்கள் சத்து. அறிவுக்கும் ஆற்றலுக்கும் இது தேவை. கா.சிவத்தம்பி பேராசிரியரின் மடையை திறந்து விட்டுள்ளிர்கள். ஞானம் முழுக்க அவரின் அனுபவ அறிவு வெள்ளம் என்னமாய் பாய்கிறது. நிறைவின் நெடும் பாதையில் ஞானம் முத்தியடையும் எதிர்வு. வாழ்த்துக்கள் - ஓட்டமாவடி அறபாத். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில், தீவிரமான ஒரு தேக்கநிலை நிலவும் இச் சூழலில் ஞானத்தின் தொடர் வரவும் இருப்பும் இலக்கியத்துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் நம்பிக்கை தரும் முயற்சியாகவும் அமைந்திருக்கிறது. இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் நின்று இயங்கும் ஞானத்தின் முயற்சி இலக்கிய உலகில் பெரிதும் அக்கறைக்குரியதாக மாறிவருகிறது. தொடராக வெளிவரும் சிவத்தம்பியின் பேட்டியில் பேசப்படாத பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அவரின் வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுபவங்களையும் ஆய்வு முறைமைகளையும் தெளிவாகத்தருவதும், இதுவரை அவரிடம் கேட்கப்படாத கேள்விகளை திரு தி. ஞானசேகரன் கேட்டிருப்பதும் அவர்களின் செவ்விப் புலமையை நன்கு புலப்படுத்திவிடுகிறது. - பாலைநகர் முகம்மத் ஜி.ப்ரி ஞானம் இலக்கிய உலகில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது. தனி ஒருவனாக் நீங்கள் இம்முயற்சியை மேற்கொள்வது பாராட்டத்தக்கது. ஞானம் இடையில் நின்றுபோகாது தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பது ஈழத்து இலக்கிய நெஞ்சங்களின் பிரார்த்தனையாகும். மலையக மக்களை அடையாளப்படுத்தும் ஒரு ஏடாகவும் இதைக் கொள்ளலாம் அல்லவா!
இரா. நாகலிங்கம் (அன்புமணி) மட்டக்களப்பு சிற்பி ஐயா பேட்டி, தஞ்சைக்கடிதம், பிரசாந்தனின் நாவலர் விடயமாகக் கொடுத்த நீதியான விளக்கம், ஞானம்' சஞ்சிகையின் நெஞ்சை விட்டகலா 49

Page 26
விடயங்கள். சஞ்சிகையின் கடைசி இதழ்கள் கூட அழகாக வடிவமைப்புப்
பெற்றுள்ளன. தயவுசெய்து பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சற்றுக் கூடுதற்
பிரதிகள் அனுப்பங்கள்
கவிஞர். பண்டிதர் ச. வே பஞ்சாட்சரம், இணுவில்.
வேறு வேறுரு வேறு வேறியற்கை.
கம்பனா ரிதியேன்னும் காப்பி பத்தி லகன்
இம்பர் வாழ்விதன் இயக்கத்தை ஞானத்தின் ஆறிரு பக்கத்தில் அளந் நளந் தாக்கினான் தேறிடு போவிப் படைப்புங் கட்டுரையோ புத்திலக் கியமாம் சிறுகதை யோவெனப்
பத்திரி கையறி வாளனரக் கேட்டனன் கேட்டவை யல்லவே அவன் படைப் பிங்கிவை
நீட்டவை நிமிர்ந்து படிக்க நல் நாவலாய் அடைய புெப்நோக் கொடு முக்கா லமுனர்ந்த
கமைபெறு எழில்தரு நடைமுறைச் சித்திரமாமே!
சங்கப்புலவர்- எறிபக்தனார், வெள்ளவத்தை.
- இலங்கை சாகித்திய மண்டலம் - பரிசுத் தேர்வு - செப்ரெம்பர் 2003 - சாகித்தியனன்டலப் பரிசுக்காகத் தமிழ் இலக்கியக் குழுவினால் ஏகமனதாகத் 5. நாவல் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நூல்கள் நூல் கானலில் மான் GAIT; DIT II: நூலின் ஆசிரியர் - தெணியான் 1. கவிதை நூல்: அந்த மழைநாட்களுக்காக. 6.பல்துறை ஆசிரியர்: மருதுர்க்கனி நுTr தொல் வியல் நோக்கில் 2. சிறுகதை ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும் நூல் சர்ப்ப வியூகம் ο Π Π 1 π. ஆசிரியர் செம்பியன் செல்வன், ஆச யா கலாநத பரமு
- LLITL L 3 சிறுவர் இலக்கியம் நூல் : சிறுவர் அரங்கு 7. நாடகம் ஆசிரியர் முத்து இராதாகிருஷ்ணன் தெரிவுக்கான நூல் தகுதியின்மையால் 4. மொழி பெயர்ப்பு அந்த இடத்திற்கு இந்நூல் பரிசு நூல் அண்ட வெளியினிலே அதிரய பெறுகிறது. யாத்திரை. நூல் : காரைநகர் தோன் பையும் ஒரிந்தி முலம் கிருஷ்ன சந்தர் வன்மையும் தமிழில்: எ.எம்.ஏ.அமீன் ஆசிரியர் ச. ஆபாலேந்திரன். \ பரிசுபெற்றோரை ஞானம் வாழ்த்துகிறது.

(
ا حے ேேந்தை அழியும்
-- ܌ܡܩܢ.
சிதைந்தொருகால் நினைவழியும்
தந்தையிருக்க இங்கு தனையன் உயிர் அழியும் என்தாய், என் சுற்றம் என்றுரைக்க முடியாமல் எச்சமின்றி இங்கு நிதம் எல்லாம் அழிந்துவிடும்
பிச்சைக்கும் நாளுமிங்கே பிணத்திற்கும் குறைவில்லை கொச்சைகள் நீக்கிக் குணம் நாடு மானிடமே! இச்சைகள் புரிந்தாய் இருள் தனிற்குளித்தாய் வாழ்விற் தச்சமுள் எடுத்து நீ தரிசனம் தாராயோ?
நொச்சி அவிச்சு உன்நோ தடவி நீயெழும்பி எச்சில் இலை வாழ்க்கையதை எடுத்தெறிந்துவிட்டு பொச்சுமட்டை என்றாலும் போதுமென்ற அடுப்போடு வைச்சுவிடுக்கமெலாம் வையகத்தில் நீ பெரியோய்
ബ/ഗ്ഗബീബേ7)
வெக்கி நின்றாய்! எட்டி நின்று எழும்பி உதைத்து எதிரி கக்கிவிடும் குண்டுகளைக் கடைசிவரை ஏந்தி நக்கிரத்தம் குடிக்க வரும் நாய்களிடம் கடிபட்டும் தப்பியோட எண்ணமோ? சரிப்பட்டு வராது.
பிஞ்சுக் கரங்களிங்கு பிச்சைக் கரங்களாக தஞ்சமற்ற வாழ்வு எங்கள் சரித்திரத்தில் தஞ்சமுற மிஞ்சுவது என்ன? உன்ரை மீசையொடு மிடுக்கோ? நீ அஞ்சுவது அவ்வளவு நல்லதல்ல பொங்கியெழு
நிக்காமல் ஓடி நிலம் விட்டுப் பறந்து வேற்று நாடு புக்காரை வெறும் தீமைகளை இங்கனுப்பி நிப்பாரை கொக்காரை பன்னாடை கொண்டெரித்து நாமீங்கே தக்காரை வாழவைப்போம்.
செல். சுதர்சன் *न्म== == தமிழ் விசேடதுறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 27
ஈராக்கிய அதிர்வுகளுக்காக உறைந்து போகும் என் சேர்தரனே! அமெரிக்க ஆக்கிரமிப்பின் ஏவுகணைகளுக்கும் எறிகணைகளுக்கும் உடைந்து போதும் மொசப்பத்தேமிய சுவர்களுக்காக நீ வேதனைப் படுகிறாய்! உடல் சிதறி உயிர் விடும் குழந்தைகளுக்காக கர்ப்பிணிகளுக்காக கண்ணீர் வடிக்கிறாய்! கதியிழநத் பசி, பட்டினி, படுகாயம். 2 மக்கள் அவலங்களைக் கண்டு
அப்பாவிகள் கொல்லப் படுவதாய் ஆர்ப்பரிக்கிறாய்! யூப்பிரட்டிஸ் நதியிலும் நகர வீதிகளிலும் விளை நிவங்களிலும் பாலைவனங்களிலும் மனிதர்கள் புதையுண்டு போவதாய் ஆதங்கப்படுகிறாய்! அமைதிக்கான புத்தம், வெற்றி நிச்சயம் என்று "றொயிற்றர்கள் தெரிவிக்கும் போ: நீ துவண்டு விடுகிறாய்! ஆத்திரப்படுகிறாய்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தனையும் உன் மண்ணில் எனது இனத்தின் மீது நடந்தன என்பதை2 நீஅறிந்திருக்கவில்லை உணர்வுகளுக்குள் இன போதை யூட்டி ஊடகங்களுள் உண்மைகள் எரியூட்டல் பட்ட போது பயங்கரவாதப் போர்வைக்குள் நீயும் வீரம் பேசிக் கொண்டிருந்தாய்
யுத்தும் உனக்கு எனக்கு மட்டுமல்ல உலகுக்கும் அபத்தமானது