கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.10

Page 1


Page 2
கிராமத்துக் கனவுகளைக் கினன்டி எடுத்துத் தின்று தின்று மீண்டும் திருப்தியன்டயாமல் நின்று விழிக்கிறேன்
தென்னைகளின் அணிவகுப்பு தேகம் சிலிர்க்க நிற்கும் பனைமரத்தின் பரவலாக்கம் கன்னனத் துயிலவைக்கும் காற்றுவழி பென்னைப் போலிருந்த பேரழகுச் சிற்றுரே! உன்னன்ப் பிரிகையிலே உள்ளம் கனக்கிறது
உருக்குலைந்து உன் பொட்டிழந்து கட்டழகு மேனியிலே இரத்தக் கறைபடிந்து காடாய்க் கிடக்கும் உந்தன் கதை படித்துத் திரும்புகையில் பாடாய்ப் படுத்தும் நெஞ்சு
- செல்வன். சுதர்சன்,
屋 தமிழ் விசேடதுறை இஜ்
கிராமத்துக் கனவுகள்
பேராதனைப் பல்கலைக்கழகம்
வட்டிழந்த பனைமரத்தில் செருக்கு எங்கே? கட்டுடைந்த கழனிகளில் திலகமெங்கே? குன்டு பட்டுடைந்த LoccTEaffiឆ្នាំ
பரிவு எங்கே? உன் கட்டழகுக் கைகளாய் நாம் கதைபடித்த நெருக்களெங்கே?
அத்தனையும் அழிந்த என் அநாதைச் சிற்றுரே சற்றுமுனைப் பிரியமனம் மறுக்கிறது
ਸLL
கற்றுமுடித்துன் கதைபடிக்க காற்றாகி நான் வருவேன் காத்திருப்பாய்.
 
 
 
 

ஆசிரியர் : தி.ஞானசேகரன்
துளின ஆசிரியர்கள் புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இண்ையம் பதிப்பு ஆரியர் ஞா.பாலச்சந்திரன்
ஓவியர்கள் கிக்கோ நா. ஆனந்தன்
கணனி அமைப்பு கெ.சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு. - தி.ஞானசேகரன் 1977, பேராதனை விதி, கண்டி,
talj, T.“ш. О8-2478.570 (Office)
08-2234.755 (Res.) FN O8-223 755 E-Mii
Il TI HITTI ITIN Eg: Fines@yahoo.corn
உள்ளே.
நேர்காணல் பேராசிரியர் கா.சிவத்தம்பி. 14 நாரோகாந்தள். ந0 சிறுகதை HAň DJ JE [fa] 55 --- ..............-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-......, 0 b
ŽJI, III ILLUELITI
கட்டுரைகள் பேராசிரியர் விசுவாசபதியும். 21
முண்மணி ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள் . 로
| EਘIII இலக்கியப் பணியில் இவர் . 46
நபார்த்தின் எழுதத்தாண்டும் ஈர்ணங்கள் . 章曹
1III
கவிதைகள் சிகரமேறிகை . . 32
பத்தனையூ லோபுதம் தினகரன் நாளை பிறக்கும் ஆழந்தைகளுக்கு. 27
குறிஞ்சி இாந்தென்றல் இயக்கம் ப. 40
சிமொனருரு கிராமத்துக் கனவுகள் .55
செல்.சுதர்சன் "என்ன செய்யப்போகிறார்". ஒரு
கவிஞர் புரட்சிபான்
நேற்றைய கலைஞர்கள் .12 லண்டன் கடிதம் . . . . . 41 விவாதமேடை.48
FIDELIT
இலக்கிய நிகழ்வுகள் .50 புதிய நூலகம் . 53 வாசகப் பேசுகிறார். 54
அட்டைப்படம் - கிக்கோ
3.

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
எமது சிறுவர் இலக்கியத்தை மேம்படுத்த பரந்துபட்ட முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்
அக்டோபர் முதற்திகதி சர்வதேச சிறுவர் தினமாகும். சிறுவர்கள் பற்றிய சிந்தனை சமூக மேம்பாட்டின் ஆரோக்கிய அம்சமாக இன்று கருதப்படுகிறது. சமூகமாற்றம்(Social Transformation) சிறுவர்களிட மிருந்து ஆரம்பிக்கவேண்டுமெனக் கல்வி உளவியலாளர்கள் வலியுறுத்து கின்றனர். சமூக மாற்றத்திற்கு அத்தியந்த பங்களிக்கும் அலகுகளில் ஒன்றாகிய கலை இலக்கியத்தில், "சிறுவர் இலக்கியம்' பற்றிச் சிந்திப்பது இவ்வேளையில் வெகு பொருத்தமானது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைப்பட்டயம் சிறுவர்கள் என 18 வயதுக்கு உட்பட்டோரையே குறிப்பிடுகிறது. கல்வி உளவியலாளர்கள் சிறுவர்களின் உடல் உளவளர்ச்சியை மனங்கொண்டு உப பிரிவுகளாக குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், கட்டிளம்பருவம் என வகுத்துக் கூறவர். ஒவ்வொரு காலகட்டங்களிலும் இவர்களது வளர்ச்சி நிலைகள் வேறானவை. முதல் ஐந்தாண்டுகளில் மனித மூளைவளர்ச்சியின் வேகம் மிகத் துரிதமானது. குழந்தை தன்னை மையமாக வைத்துச் சூழலைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறது. படிப்படியாகச் சிந்தனை வளர்ச்சியடைகிறது. துருவித் துருவி ஆராய்ந்து, சுவைத்து, அனுபவித்து, வினோதங்களைக் கண்டுகளிக்க ஆவல் கொள்கிறது. புதுமையாக எதையும் நோக்குகிறது. அடுத்த படிவளர்ச்சியான கட்டிளம் பருவத்தில் மேற்குறிப்பிட்ட வளர்ச்சியின் அடித்தளத்தின் தொடர்ச்சியில் ஆக்கத்திறனை விருத்தியாக்குகிறது. தலைமைதாங்கும் பண்பு உருவாகிறது. ஆளுமைகளுக்கு அத்திவாரம் 4
 
 
 
 
 

இடப்படுகிறது.
ஆகவே சிறுவர் இலக்கியக்களத்தின் பரப்பும் கருவளத்தின் வீரியமும் கனமும் காத்திரமானவை என்பது புலனாகிறது. வெறும் பாப்பாப்பாடல்கள் நீதிக்கதைகள் மட்டும் சிறுவர் இலக்கியமாகிவிடாது. இலக்கியம் மொழியிலானது. சிறுவர் இலக்கியத்தின் மொழி தனித்துவ மானது. எளிமையானது. ஓசை நயம்மிக்கதாகவும் கருத்துக் கவர்ச்சி யுள்ளதாகவும் அது அமையவேண்டும்.
புதிய சவால்களை இன்று சிறுவர் சமூகம் எதிர்நோக்கியுள்ளது. நிற,இன,மத பாரபட்சம், பாலியல்ரீதியான வன்முறை, வர்க்கரீதியான சுரண்டல், போர்ச்சூழல் உருவாக்கிய பாதிப்புகளான அகதி, அநாதை நிலைமைகள் இவைகள் பற்றிய சிறுவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள், செயற்பாடுகள் கருப்பொருளாகவேண்டும். மறுபுறம் நவீன துரித விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாலும் பூகோள மயமாதலாலும் சிறுவர் சிந்தனையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தை மட்டுமே நோக்காது எதிர்காலத்தை விஞ்ஞான முன்னேற்றக் கற்பனையில் கண்டுகளிக்கின்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது. இதனைத் தொலைக் காட்சியில் சிறுவர்கள் காண்கிறார்கள். ஆனால் எமது இலக்கியங்களில் காணமுடிவதில்லை. நவீன விஞ்ஞான சிந்தனைக்கு வளம் சேர்க்கும் science fiction - விஞ்ஞானப் புனைகதைகள் செய்து தருவோர் சிறுவர் இலக்கியத் திற்கு புதிய உயிர் தருவோராகிறார்கள். சிறுவர் இலக்கிய வடிவங்கள் குழந்தை, பிள்ளை, கட்டிளம் பருவம் ஆகிய நிலைகளுக்குத் தகுந்த வகையிலும், சிறுவர்களைக் கவரும் இசையும் அசைவும் கலந்த நடிப் புடைய நாடகங்களாகவும், சிறுவர் பாடல்களுடைய ஒலிநாடாக்களாகவும் பர்ணமிக்கவேண்டும். இதேவேளையில் எமது பாரம்பரிய விழுமியங்கள் பிறழாது காலத்துக்கேற்ற மாற்றங்களை உள்வாங்கிய உயிர்ப்புடன் சிறுவர் சிந்தனைகள் வேர்பதிய வேண்டும். எமது சிறுவர் இலக்கியத்தில் உதிரியாக பல பாராட்டப்படக்கூடிய முயற்சிகள் நடைபெறுகிறுன்றன. ஆயினும் உலக சிறுவர் இலக்கிய நீரோட்டத்தில் எமது சிறுவர் இலக்கியம் பர்ணமிக்க வேண்டுமாயின் இத்துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆசிரிய சமூகம், பெற்றோர், நூற்பதிப்பாளர்கள், நுகர்வோர் ஆகிய சகலரும் இணைந்து பொறுப்புடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் செயற்பட
ཀྱི་

Page 4
புற்றுநாவல் எப்போது பழுக்கு மென்று சொல்லமுடியாது. பருவத்தி னத்தனை மாற்றங்களையும் கிரமமாக உள்வாங்கிக் கொண்டாலும், அதன் கிரியா கர்மத்தின் மர்மம் இன்னமும் விடுவிக்கப்படாததே. பூத்தமாத்திரத்தே அத்தனையும் கருக்கிக் கொட்டி ஊதாரியாய் நிற்குமதன் அதாப்பியங் களுக்கு ஈடுசெய்யுமுகமாய், மூன்று தலைமுறை இடைவெளியின் பின் இப்போது காய்த்திருக்கிறது.
ஊரிலிருந்து விலகி, ஒரு தவசி யைப் போல் சடைபரப்பி நிற்குமதன் மோன நிஷ்டையின் ரகசியம், தங்கள் சாதாரண மனித அறிவின் தேடலுக்கு மிக அப்பாற்பட்டதாகவே எல்லோரு மெண்ணிக் கொண்டனர், திரிகரண சுத்தியாய்.
அவர்கள் மட்டில், வெறுமனே நாவற் பழந்தானேயென்று ஒதுக்கி விடக் கூடிய பழந்தானுமில்லையது.
கருவண்டைப் போலிருக்குமதைப்
புதிதாய்ப் பார்ப் பெர்கள் கருந் திராட் சைப் பழமென்றே சொல்வார்கள். படைப்பின் அசாதாரண சொரூபியாய், அவ்வளவு அழகின் நேர்த்தியும், தேஜசும் பொருந்தி அபூர்வமாய்க் காய்க்கும் மிகச் சிறிய விதைகொண்ட அந்த நாவற்பழத்தால் ஊருக்கே பெருமைதான்.
அழகைச் சூழ்ந்தெப்போதும் ஆபத்துமிருக்குமென்பதற்குக் கன பொருத்தமாக மரத்தைச் சுற்றிப் புற்றும் பாம்புச் செட்டைகளுமாய்க் காணக்கிடப்பது, அந்தக் கிராமத்தின் மட்டில் இரட்டை விசேடம். ஊர்மட்டில் அப்பழம் உண்மையில் அபூர்வமானதே யென் பதற்கு இதனையும் விட வேறென்னவேண்டும்.
ஒன்றின் நீட்சியும் சாஸ்வதமும், அதன் மீது கொள்ளப்படும் அபரிமித மான விசுவாசத்தின் விளைச்சலே யென்பது வெளிப் டையென்றால், அந்தப் புற்று நாவல் மீது குத்தப்பட்ட 'அபூர்வ முத்திரையும் மிகப் பொருத்த LDfT601035.
அதற்குமப்பால், அந்த நாவலில் ஒரு பறவை நாகம் குடியிருந்ததாகவும், அதன் ஆவி போலொன்று அந்த மரத்தில் நிலை கொள்ளும் அபூர்வ இராக்காலமொன்றில்தான் மரம் சூல் கொள்ளுமென்றும், பழக்காலமோயும் வரை நாகத்தினாவி மரத்தில் நிலைத் திருக்குமென்பதும் ஐதீகம்.
புற்று நாவற்பழத்தை, நாகத்தின் ஆவியின் காவல் அதி தீவிரமாயிருக் கும் சூரியோதயத்துக்கு முந்தியதோர் பொழுதில் பொறுக்கிச் சாப்பிட்டால் மரணமே நிகழாது, நினைத்தவை சித்திக்குமென்றெல்லாம் மறந்துபோன பழைய கதைகள் ஊரில் மீண்டும் நெடுநாட்களின் பின் உலாவத் தொடங்கியதில் பலருக்கு ஏற்பட்ட அதிதீவிர ஆர்வம், மரத்தைச் சுற்றிய புற்றையும், பாம்புச் செட்டைகளையும், பறவை நாகத்தின் ஆவியையும் நினைத்தபோது அடங்கிக்கொண்ட அதேவேளையிலது ஊரின் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இளசுகள் மத்தியில் வேறுவிதமான உணர்வலைகளை ஏற்படுத்திற்று.
 

"ஒரு பளந் திண் டாப் போது மாண்டா. சாவமாட்டமாம். படிக் காமப் பாஸ்பண்ணலாமாம்"
பழத்தைப் பற்றிய அதீத கற் பனையின் வெளிப்பாடு, சிவனேசின் கோனிய வாய்ப்பிதுக்கல் வழியாய் இவ்வாறு வந்தபோது,
"பளந்திண்டாப் பாஸ் பண்ணலா மாடா? அப்படியென்டா என்னத்துக் கிடா பள்ளிக்குடம்” என்றொருவன் நீட்டி ஏளனமாய்ச் சொன்னது, தகாத வொன்றைச் சொல்லிக் கேட்டுவிட்ட தானதொரு உணர்வை அவ்விடத்தில் ஏற்படுத்த, ஒரு கண உறை நிலைக்கு அனைவருஞ்சென்று மீண்டனர்.
"ய்ச். அப்பிடில்லாம் பறயாதரா. பொறகு. மரத்திர காதிலது உளுந்தா அவ்வளதான். உண்டபாடு செரி” அப்பாவியாயொருவன் கண் களை இமைகளில் சொருகி இறந்தவன் போல் பாவனை செய்து சொன்னான்.
"ஒனக்குத் தெரியாம்பி. அதில. பறவநாவமொண்டிருக்காம். அது உட்ற மூச்சில பளுக்கிறால ஆன் அந்தப் பளமப்பிடி.” சிவேனஸ் வாயைப் பிதுக்கிப் பழத்தின் உச்ச அருமையை உணர்த்தினான். எல்லாத் தலைகளும் சிவனேசின் வாய்க் கோணலுக்கேற்றவாறு திரும்பி மீண்டன.
"அப்படியெண்டா. என்னெண் டறா சிவனேசி பளமாயிற.?”
"அது சரசி. பறவ நாவம் பகல்ல வெட்டைக் கெறங்காதாம் ஆருமேயதக் காணயுமேலாதாம்." சிவனேஸ் நிறுத்திச் சரசுவைக் குறும்பாய்ப் பார்த்து, "வாவனென் னோட பளமாஞ்சி தாறன்" என்று கொஞ்சும் ரகசியத்தொனியில் அழுத் திச் சொன்னான்.
சிவனேஸ் வம்புத்தனமாய் அவள் குரும்பட்டி மார்பைப் பார்த்தவாறு அவளிடம் மட்டுமே சொன்னது சரசுக்கு ஏதோபோலிருந்தது. வகுப்புக் கூட்டும்போதும், அசெம்பிளிக்கு வரும் போதும், தெரியாதவன் தோரணையில் முழங்கையால் அவள் மார்பில் இடிப்பதனர்த்தம் அவளுக்கு இப்போது
தான் புரிந்தது.
"நீ. வம் பன். ஒன்னோட நானேன்வர. தேவெண்டா நாங்க
போயாய்வம். எல்லுவா பத்துமா . சரசு சொல்ல பெரிய மாணவிகள் ‘ஓ.மீ என்றார்கள்.
எப்படி போறிங்க.
gy
அப்ப. ம். ஒனக்கேஞ்சொல்ல. வாங்கடி இவனுகளோடென்ன கத” முகவாயைத் தோளிலிடித்து சரசு கோபமாய் அவ்விடத்தை விட்டகல மாணவிகளும் அவளைத் தொடர்ந் தனர்.
*தனியவா போறிங் க...? போங்கடி. குண்டிதெறிக்க ஓடக்க தெரியும்
சிவனேஸ் சொனி னதற்கு, “போடா வம்பா” எனச் சரசு தூரத்தில் நின்று பளிப்புக் காட்டினாள்.
"போடி மம்பட்டிப் பல்லி.” "போடா சேங்குப் பல்லா." சிவனேஸ் பல்லை நகத்தால் சுரண்டிப் பார்த்தான். நக இடுக்கில் சேங்குப்படை தெரிந்தது. நாக்கில் வைத்து நக்கிப் பார்த்தான். நாசி வழியாக ஒருவகை துர்மணம் வீசியது. ஊரெல்லையைத் தாண்டிக் குளத்துக்கட்டால் மருக்காலங் காட் டைக் கடந்து நாயன்மார் திடலில் ஏறினால், அசமந்து கிடக்கும் வெளியில், கச்சானுக்கேற்றவாறெல் லாம் கந்துங் குலையுமாய்த் தனித்து நின்று சாமியாடிச், சூழலையே

Page 5
பயங்கரமாக்கிக் கொண்டிருந்தது புற்று நாவல்.
ஒன்றைச் சாதாரணமாய் பார்ப் பதற்கும் அதனைச் சிருஷ்டித்துக் காட்டும் போது கிடைப்பதற்குமிடை யில்தான் எத்தனை வேறுபாடுகள். எது அசல், எது நகலென்கிற சிருஷ்டி விசாரங்களிலிருந்து விலகுவதும், உண்மைத் தரிசன உந்தலில்
பழைமை விகாரங்களைத் தவிர்ப்பதுந்
தானே மெய்யான தேடல்.
நாயன்மார் சடங்குகளின் போது இரவுகளில் கணிட நாவலும் , இப்போது பயமூட்டும் நாவலும் ஒன்று தானா என்கிற கேள்வியொன்று அந்த அமானுஷ்யச் சூழலில் சிவனேஸ் சரசு பகுதியார்க்கு ஏற்பட்டதுகூட நியாய மானதுதான். அந்த மரத்தின் மீது வலிந்து புனையப்பட்ட அத்தனை கதைகளும் புதியதொருவடிவில் அவர்கள் முன் நிற்பதில் ஏற்பட்ட பிரமையும், பிரமையை மீறத்துடிக்கும் இளமையுமாய் அப்பகுதி, ஒருவித சிலிர்ப்புக்குள் கட்டுண்டுபோன அதே வேளை மரத்தினடியில் இரண்டு உருவங்கள் தெரிந்தன.
ஒருவன் தன்னை மறந்து உளறி னான்.
“என்னடாது. பேய..!" பின்வாங்கியது கூட்டம். சிவ னேஸ் ஒருகையை நீட்டி மறித்து அவர்களைப்பின்தள்ளி, நெற்றியில் படாமல் கையைக் கண்ணுக்குமேல் பிடித்தவாறு நிதானமாக, "பேயுமில்லக் கீயுமில்ல. நம் மட பஞ்சமிக் கெழவியள் தான் டோய்."
“ஆர்ரா சிவனேசி?” "வீரியும், ஆத்தையுந்தான்" “நல்லா பார்ரா சிவனேசி. தரயில காலிருக்காண்டு.”
எதையும் பொருட்படுத்தாது
8.
முன்னேறிய சிவனேஸைத் தொடர்ந்து தைரியமாய் முன்னேறியது விடலைக் கூட்டம்.
நன்கு காய்த்துப் பணிந்திருந்த கொப்பைக் கிழவிகள் தேர்ந்தெடுத்து ஏகபோகமாக்கிக் கொண்டதில் விடலைகளுக்கு உடன்பாடில்லை.
"கொத்து முறிச்சிப் போட்டிருக்காள கள் டோயப் அம் மயக் கெடந்த கெழவியள்."
ஒருவன் சொல்ல ஏனையோர்
‘கூய போட்டனர். கிழவிகளோ உசாரானார்கள்.
“என்னாத்த.?” சினேக பூர்வ
மாய் விசாரித்தான் சிவனேஸ்.
"ஆத்ததான். அதுக்கென்னெப்ப. இந்தக் கன்னைக்க வராம போங் கால.” வீரிக்கிழவி கடுகடுப்பாய் முகத் தை வைத் துக் கொணி டு பொரிந்து தள்ளினாள். விடலை களைச் சீண்டிவிட்டது கிழவியின் போக்கு.
"நாங்கதானாத்த இந்தப் பளந் தின்னணும். சாகப்போற காலத்தில. ஒனக் கென்னத்துக் கிதெல்லாம் . வெலகு. வெலகு. எறிங் கடா கந்துக்கு”
சிவனேஸ் சொல்லிமுடிய, மள மளவென்று தடிகளும் கற்களும் கிழவிகளின் தலைக்குமேலிருந்த கொப்பில் சரமாரியாய் விழ செங் காயும் பழமுமாய்ப் பொலு பொலு வெனச் சொரிந்தன.
“டேய். எறியாதங்கடா மக்களா.." தன்னை மறந்தவளாய் வீரிட்டாள் வீரிக்கிழவி.
‘விடிய வெள்ளணல வந்து கொத்து முறிச்சிப் போட்டிருக்கன் தெரியல் லிய..? இன்னொருக்கா எறிஞ்சியெண்டா. கொக்கத் தடி யிலருக்கிற கத்தியாலான் வெட்டுவன்"

முழங்காலுக்குமேல் சேலையைத் தூக்கி கட்டியவளாய் சன்னதமாடி னாள் கிழவி.
"தூசணம் பறயாதாத்த. இது. ஒண்ட மரமுமில்ல தெரியுமா..?” சிவனேஸ் நிதானமாயும் அழுத்தமா யும் கூறினான்.
“என்ரா வடுவா கதைக்கிறா நீ.? நாங்க கொத்து முறிச்சிப் போட்ட கனி னயில நீயெனி னெணி ட் றா கைவெப்பா..?” நடுங்கினாள் கிழவி. "நாங்கெறிவந்தான். நீ செய்யிற தச் செய்" அலட்சியமாய் சொல்லிய வாறு சரசு கம்பை ஓங்கினாள்.
“ஒன்ரம்மைர சீலைக்க ஏறிடீ. வே. ச”
வீரிக் கிழவி இனி வாய் கூசாது என்னென்ன வெல்லாஞ் சொல்வா ளென்றறிந்த விடலைக் கூட்டம், கூ.யப் போட்டு வேறுபக்கம் கலைந்தது.
亲 决 ★ 先 ★
வீரிக்கிழவி கண்விழித்தபோது, “சும்மா ஏரக்கடிதான் பயமில்ல” என்று பூசாரி சொல்வது துல்லியமாய்க் கேட்டது. கிழவியின் நினைவுகள் ஒருகணம் சரங்கூட்டிப் பிரிகின்றன. விறுவிறென்று கொண்டிருக்கும் கையைப் பார்த்தாள். மணிக்கட்டுக் குக் கீழே பலமான தடைக்கட்டும் கட்டையொட்டிக் காய்ந்து போன சுண்ணாம்புத் தடயமுமிருந்தன.
"பயாபிடாதாத்த, நல்லதுதான் வாய்வெச்சிருக்கு. நீ செஞ்ச புண்ணி யந் தானுன்னக் காப்பாத்திருக்கு” பூசாரி நீட்டிக்கொண்டே போக, கிழவி யோ விறைத்துப் போய் குந்திக் கொண்டிருந்தாள்.
கிழவி பாம்பினால் கடியுண்டதன் பின்னணி வெகுவாகப் பிரஸ்தாபிக்கப் பட்ட கிழவியின் வீட்டுத்திண்ணையில்
பூசாரியின் குரலே ஓங்கியொலித்து, அவனின் பேச்சுக்கு மறுப்புத் தெரி விக்க யாருமில்லையென்பதை நிரூபித் துக் கொண்டிருந்தது.
பின் திண்ணையிலிருந்து அவன் தீர்மானத்துடன் வீட்டுக்குள்ளிருந்த கிழவியிடம் வந் தான் - “புத் து நாவல் லருக்கிறது நாகம் பிரான் தானாத்த. தோசங்களிக்க. வெள்ளி யன் னைக்கி அவருக்கொரு பூச செய்துபோடு.” எனச் சொல்லிப்பின் யோசித்து, “புத்துக்கொரு பட்டுஞ் சாத்தணும். மறந்திராத" என்றொரு திருத்தமுங் கொடுத்தான். கிழவியோ, "நாம்பிரானே.” என்று சொல்லிக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
கிழவியின் மகன் கொடுத்த கசிப்பை கோணல் நாணலின்றி ஒரே இழுவையிலிமுத்து, சில்லறையையும் இடுப்பு வேட்டியில் சொருகிக் கொண்டே “சொல்லியனுப்பு. நான் வந்தெல்லாஞ் செய்தாறன்” என்றவாறு காறித்துப்பிக்கொண்டே இருளுடன் கரைந்தான் பூசாரி.
திண்ணைக்குள் கிடந்த கறுப்பி யாடு பரிதாபமாய் “மே. யென்ற பெருங்குரலெடுத்துப் பின்னங்காலால் செவியோரத்தில் படபட வெனச்

Page 6
சொறிந்து கொண்டது. வீரிக்கிழவி எழுந்து வந்து தெவிட்டங் குழையைத் தளையக் கட்டி கறுப்பியை முகத் திலிருந்து கால் வரை தடவிவிட்டாள். 站 董 辈 古 萤
இப்போதெல்லாம் "புற்றுநாவல் நாகதம்பிரான் ஆலயம் அட்டமயலில் மிகவும் பிரபல்யம். வெள்ளிதோறும்
பூசை, பூசாரியினி மருள், நாக
தம்பிரான் அருள் என எங்கும் பக்திப்
பிரவாகம்.
களிமணி , மரம் இரும் பு,
வெள்ளியென நாகதம்பிரான் புதிய புதிய படிமுறை அவதாரங் களர் எடுத்துக்கொண்டிருந்த அதேவேளை,
பூசாரியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆலய நிருவாக மொனி றையமைக் கும் ஆலோச
னையை நிராகரித்த பூசாரி, நாக தம்பிரானானைப்படி தானிப்போது "சீலி மட்டுமே அருந்துவதாய்க் கூறிக் கொண்டான்.
நாகதம்பிரான் உருமாற்றங்க ளெடுத்த அதேவேளை, அவரருகி லிருந்த உண்டியலும் புதுப் புது வடிவங்களெடுத்து, பெரியதொரு ஆமைப் பூட்டுடன் பக்தர்களின் காணிக்கைகளை விழுங்க வாய் பிளந்து கிடந்தது. தன்னைத் தங்கத் தால் செய்துவிடுமாறு நாகதம்பிரான் தனர் கனவில் வந்து அடிக் கடி சொல்வதால், தாராள மனதுடன் உண்டியலிவிடுமாறு பக்தர்களை நினைவூட்டிக்கொள்வான். 站 古 壹 革 站 பொழுது ரிபார் சியதோர் வெள்ளிக்கிழமை. பக்தர்களெல்லாம் சென்றுவிட்டனர். நெய்ப்பந்தமொன்றை நட்டு, இரும்பு உண்டியலுக்கு முன்ன மர்ந்து, தோள் துண்ைடை நிலத்தில் விரித்துப் பூசாரி உண்டியலைத்
திறந்தான்.
"உளம் ." எண் T fற ஒடன் பூசாரியின் முகத்தில் மின்னல் போல் முதல் நாக்குதல், நிலைகுலைந்த அவனதனை என்னவென்று அறு மாணிக்குமுன் உண்டியலைத் திறந் துயர்த்திய இடது கையில் இரண்டா வது தாக்குதல். 'உஸ். என்றெழுந்த இரண்டாவது சப்தத்தைப் புரிந்து கொண்ட பூசாரி, 'அம்மோ. பப் என்றலறியபடி முடியைக் கைவிட்டான். "பச் சென்று விழுந்த உண்டியல் முடியில் ஏதோ நகங்குண்டு "கீ. ச் செனி நா மெலீ லரிய ஒலியுடன் படபடவென்று உண்டியலில் அடித்து ஓய்ந்தபோது, குளத்துக் கட்டில் வாயில் நுரைகக்கிக் கிடந்தான் பூசாரி. சக்திவாய்ந்த நாகதம்பிரானை பிழந்த சோகத்தில் பக்தர்களிலிருந்த அந்தவொரு பொழுதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான் பூசாரியின் மகன், நாகதம்பிரானை புற்று நாவ லின் கீழ் சமாதி வைப்பதென முடிவா பயிற்று.
ஊரே திரண்டிருந்த நாகதம் பிரான் சமாதியான அந்த மாலையில், பூசாரியின் மகன் கண்களை முடிய தொரு உத்வேகத்தில் மந்திரங்களை உச்சாடனம் பண்ணிக்கொண்டிருந் தான், உச்சாடனத்தின் சுருதியேற்றக் கிறக்கத்தில் பக்தர்கள் உருவேறிக் கொண்டிருந்தவொரு நுகட்பொழுதைத் தேர்ந்தெடுத்து, "அந்தா போறார் நாம் பிரான்." என வானத்திலொரு திக் கைக் கையால் காட்டியவாறு இடைத்துண்டை அவிழ்த்தெறிந்து கோவனத்துடன் ஓடத்தொடங்கினான். பக்தர்களும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினர்.
"அந் தா. அந் தா" என ஓடியவன், அடுத்தவொரு புற்றைத்

தேர்ந்தெடுத்து, "அந்தா. நாம் பிரானந்தப் புத்துக்கெறங்கிறார்" எண் நான் எல்லோரும் நாம் பிரானே என ஒலியெழுப்பிப் புதிய புற்றைச் சூழ்ந்து கொண்டனர்.
மனிதர்களின் வினோத ஒலிகளால் சலனமுற்றிருந்தது வெளி, புதிய பூசாரியின் மொழி புரியா மந்திரத்தால் முற்றுகை யிடப்பட்டிருந்தனர் பக்தர். உச்சா டரை ஆரோகணத்தின் மாபை, எல்லோர் கண்களிலும் புதிய புதிய சர்ப்பங்களை உருவகித்துப் பின்னவர்களைச் சூனியவெளி யில் கண்கட்டிக் குருடர்களாய் நெளியவிட்டிருந்தது.
புதிய பூசாரி வாயைக் குவித்து விரல்களைபதில் பதித்து மகுடிபோல வினோதமாம் க் குரலெழுப்பினான். எல்லோரும் ஆடத்தொடங்கினர் . பினர் பினர் புற்றில் உதட்டைப் பதித்துக் கட்டளைகளாயுச்சரித்து, "அந்தா.
நாம் பிரான் புத்துக்க தரிசனந் தாறார்." என்று நீட்டியவாறு
மருள் கொண் டவனைப் போலப் ஒடத்தொடங்கினான்.
புற்றை உற்றுநோக்கியவாறு கூட்டமோ, "நாம் பிரானே ..." என வெறிகொண்டு மீண்டும் மீண்டும் ஓங்காரிக்க, கூட்டத்தில் நின்ற சிறுவ னொருவனி தாயைச் சுரன்ைடி, "அம்ம. அங்கபார் புத்துக்க உடும்புக்குட்டி. நாக்க நாக்க நீட்டுது" என்று சோன்னது
புற்றைச்சுற்றியெழுந்த ஓங்காரத் தில் அமுங்கிப்போனது.
甲T
இப்போது இல்லையே!
அருந்ததி நட்சத்திரங்கள் இப்போது உதிப்பதில்லை! எங்கள் பெண்கள் மத்திய கிழக்கிவென்றா? எங்கள் பரட்டை நாய்கள் இப்போதெல்லாம் நள்ளிரவில் குரைப்பதில்லை? நள்ளிரவில் திரியோ திரி என்று
திரி வைத்துத் திரிந்த த் அமைதிப்படை திரும்பிப் பல வருஷம்! ஏனோ நாய்கட்கு இன்னும் தெரியவில்லை! சித்திரை பறந்தது; நித்திரைபறந்தது. எங்கள் நாட்டு மரக்கொம்புகளில்
உட்கார்ந்து நெளிவெடுக்கும் * உயர்திரு குயில்களின்னும்'
ஓவென்று சுவவில்லை! புரிந்துணர்வு வந்ததென்று: நித்திரைதான் கொண்டதுவோ 翡 குயில்கள்தான் சுவவில்லை : மயில்கள்தானும் ஆடவில்லை : அமெரிக்கா கண்டுகொண்டால் சதாம் ஆடுவதாய் அழித்து விடுவான் என எண்ணி
巽
ஆட்ாதுவிட்டதுவோ
கண்னே மறுக்கிறது.இர் ஏனென்று புரிகிறதா? மானிடமே கர்ப்பத்தட்ை போடுவதால் ஏனினியேல் கன்றெனக்குக் கத்துதடா பகராடு சுத்தமாய் நானிருப்பேன் சுதந்திரமாய்
என்றுரைத்துக்கத்துதடா காரைகாராடு
திக்கவயல் சிதர்மு

Page 7
நேற்றைய து என்று எண் 90 பே திரும்
கலைஞ T55 GT பப் பார்த்த நான் மீண்டும்
நேற்றைய கலைஞர்களைப்
பற்றித்திரும் சிப் பார்க்கி
- அந்தனி ஜீவா - றேன்.
முதல் தமிழ்ப்படத் தாரகை
இலங்கையில் முதன் முதலில் 16 MM படச்சுருளில் தயாரிக்கப்பட்டது "சமுதாயம்" என்ற தமிழ்த் திரைப் படம். இதனை பொரளை வை.எம்.பீ.ஏ. மண்டபத்தில் திரையிடப்பட்ட பொழுது ஒரு பகல் வேளையில் பாடசாலைக்குப் போகாமல் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகையை பின்னர் நாடக நெறியாளர் சுஹைர் ஹமிட் தயாரித்த "பொம்மலாட்டம்" நாடகத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்ததைப் பார்த்தேன்.
இவர்தான் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் நாடகத்தில் நடித்துவரும் முத்த நடிகை ஜெயகெளரி.
1957ஆம் ஆண்டு கவின்கலை மன்றத்தின் எழுத்தாளன் காதலி என்ற நாடகத்தில் ஜெயகெளரி முதன் முதலாக நடித்தார். இவரை மேடைக்கு கொண்டு வந்தவர்கள் ஜே.பி. றொபர், ஜோன் சாமிதாசன் என்ற நாடகக் கலைஞர்களாவர். இவர் கலைஞர் இராஜேந்திர மாஸ்டரின் மனோ ரஞ்சித கான சாபவின் ஆளல்தான நடிகையாவார்.
உண்மையில் இவரது மகள் பிரியங்கா ஷேக்ஸ்பியரின் "ஒத்தெல்லோ" நாடகத்தில் நடித்த பொழுது, ஒத்திகையின்போது நடிகை ஜெயகெளரியைச் சந்தித்து உரையாடினேன். அப்பொழுது அவர் நினைவுகளைப் பகிர்ந்தார்.
"அன்றைய நாடக மேடையில் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகளைக் குறிப்பிட்டே ஆகவேண்டும், புகழ்பூத்த மேடை வானொலி நடிகரான என்.தாலிப் நடிகவேள் லடீஸ் வீரமணி, ஹிலெயென் பெர்னாண்டோ, உதயகுமார், அலக்சாண்டர் பெர்னாண்டோ, வேல் முருகன், நாகராஜன், நடிகைகள் முத்துலட்சுமி, ராஜமணி, நேசராணி, சசிகலா, சுக்ரா லத்தீப், பொரளை
நடிகையுமிருந்தார். ஆகவே அவர் வாழ்ந்த இடத்தை பெயருக்கு முன்னால் குறிப்பிடுவதுண்டு)" என்று தன்னுடன் நடித்தவர்களின் பெயர்களை நினைவு கூறினார் நடிகை ஜெயகெளரி.
மேலும் தான் நடித்த நாடகங்களைப் பற்றித் தன் ஞாபகக் குறிப்புகளை என்னோடு பகிர்ந்துகொண்டார்.
12

நடிகை ஜெயகெளரியின் முதல் அறிமுகம் கவின் கலை மன்றத்தின் எழுத்தாளன் காதலி. அதன் பின்னர் கவிஞர் யுவனின் நூதனலஞ்சம், பி.எஸ். கிருஷ்ணகுமாரின் மார்த்தாண்டபுரி மகாராணி, கே.எஸ் துரைசிங்கத்தின் அன்புச்சுடர், வரணியூரானின் சங்கிலியன் (இதில் சங்கிலியானாக நடித்தவர் இன்றைய பிரபல வர்த்தகரும் தினக் குரல் பத்திரிகை நிர்வாகப் பொறுப்பாளருமான எஸ்.பி.சாமி அவர்கள்) கலைவானர் மன்றத்தின் தீச்சுடர் மனோரஞ்சித கானசபாவின் கலிங்கத்து கைதி, மலர்ந்த வாழ்வு, எழில் முடி, நடிகவேல் லடீஸ் வீரமணியின் தாய் நாட்டின் எல்லையிலே, கங்காணியின் மகன், மானங்காத்த மறவன், நாடற்றவன் ஆகிய நாடகங்களில் நடித்ததை நினைவு கூர்ந்தார்.
சிறிது நேரத்தில் மீண்டும் மீண்டும் தனது நினைவுகளை இரைமீட்டி வானொலி, மேடையில் புகழ் பெற்ற கலைஞராகத் திகழ்ந்த ரொஸாரியோ பீரிஸின் வாழதே, ஒரு மின்னல், சிங்களத் திரையுலகில் புகழ் பெற்ற கமிரா கலைஞராகவும் டைரக்டராகவும் இருந்த லெனின் மொறாயனவியின் நெறியாள்கையில் "நீ இல்லையேல்", "வாழதே ஆகிய நாடகங்களில் நடித்ததைக்கூறினார்.
நாடக ஆசிரியராகவும் பின்னாளில் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த கே.எம். வாசகருடன் வாழதே நாடகத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
நடிகை ஜெயகெளரி மனோரஞ்சித கானசபாவின் ஆளப்தான நாயகியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இன்றைய நாடறிந்த நாடக நெறியாளரான கலாபூஷணம் கலைச் செல்வன் சிறுவனாக நாடகங்களில் நடித்ததையும், பின்னாளில் அவர் இயக்கிய எதிர் நீச்சல்' நாடகத்தில் நடித்ததையும், இன்று அவரது மகள் பிரியங்கா நடிகர் கலைச் செல்வனின் நெறியாள்கையில் நடிப்பதையும் கூறி நாடகமே தன் வாழ்வாக அமைந்து விட்டதைப் புன்னகையுடன் குறிப்பிட்டார்.
நாடக நெறியாளர் கஹைர் ஹமீட்டின் பொம்மலாட்டம், நகரத்து கோமாளிகள் ஆகிய நாடகங்கள் இவரது நடிப்பின் சிறப்பை எடுத்துக் காட்டின. அரை நூற்றாண்டு காலமாக நாடகத்துறையில் ஈடுபட்டுவரும் இந்த நடிகையின் ஆற்றலையும் ஆளுமையையும் கெளரவிக்கும் விதத்தில் 2002 இல் தமிழ் நாடக விழாவின் பரிசளிப்பின்போது கெளரவம் வழங்க தமிழ் நாடக ஆலோசனைக்குழு முடிவு செய்திருந்தது. அந்த நாடக ஆலோசனைக் குழுவின் தலைவரின் ராஜினாமா காரணமாக நாடக விழாவின் பரிசளிப்பு இதுவரை நடைபெறவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
வாழும் பொழுதே கலைஞர்கள் கெளரவிக்கப்படவேண்டியது காலத்தின் கடமையாகும். காலமெல்லாம் கலைத்துறைக்காக பங்களிப்பு செய்த நடிகை ஜெயகெளரி போன்றவர்கள் இன்றும் இருட்டில்தான் வாழ்கிறார்கள்.
தமிழ் கலைஞர்களைச் சரியான முறையில் கெளரவிக்க எந்த அரசும் முன்வராதது மோசமான சம்பவமாகும். இவர்களும் வாழ்வில் வசந்தம் வராதா எனக் காத்திருக்கிறார்கள்.

Page 8
('[[][ഞൺ
GLITIrifuIfi
கா.சிவத்தம்பி
சந்திப்பு : தி.ஞானசேகரன்
.ெ உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். N
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ் நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். w * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் ر .பணிபுரிந்தவர் ܢ
(7)
தி.ஞா.: தமிழகத்தில் வழங்கிவந்த விமர்சன முறையில் தாங்களும் பேராசிரியர் கைலாசபதியும் ஏற்படுத்திய மாற்றங்கள் எவை?
கா.சி. இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். என்னவென்றால் நாங்கள் இலங்கையில் இலக்கிய விமர்சனத்தை மேற்கொண்ட பொழுது, தமிழ் இலக்கிய மாணவர்கள் என்கின்ற வகையிலேதான் அந்தத் துறைக்கு வந்தோம். அவ் வேளையில் நாங்கள் மார்க்சிய சிந்தனை உள்ளவர்கள் என்ற அடிப்படையிலும் அந்த மார்க்சிய சிந்தனையில் தமிழ் இலக்கியம் இணைந்து தொழிற்படுகின்ற முறைமைபற்றி - அதிலேயுள்ள ஊடாட்டம் பற்றி பார்க்கின்ற ஒரு முறைமையைத் தான் நாங்கள் தொடங்கினோம். தமிழ் இலக்கியம் பற்றிய எல்லா விடயங்க்ளையும் ஒட்டுமொத்தமாக நோக்கி அதுபற்றிப் பேசுகிறபோது,
14
 

எங்களுடைய எழுத்து என்கிறபோது நாங்கள் முதலில் நவீன இலக்கியம் பற்றியும், நவீன இலக்கியத்தில் சமூக நோக்கின் அத்தியாவசியம் பற்றியும் பேச வேண்டிய ஒரு சூழல், குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டது. அது நாங்கள் சார்ந்த முற்போக்கு அணியினுடைய தாக்கம். முற்போக்கு அணியுடன் நாங்கள் சேர்ந்தோம். முற்போக்கு அணி எங்களுடன் சேர்ந்து கொண்டது. We found each other. அவர்களைத் தேடிப்போகவில்லை. அவர்களும் எங்களைத் தேடி 6hij656ö6006). We met& we worked together. 9g56ü (65/T60TT6530.60)Lulu (h(3Jubg ஞானசுந்தரம்) பங்கு மிக முக்கியமானது.
இங்கு நாங்கள் தொழிற்பட்டபொழுது, இந்த எழுத்துக்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதும் இந்த எழுத்துக்களுக்கான ஒரு ஆதியாயப்பாடு இருக்கிறது என்பதனை உலகப் பொதுவான இலக்கிய விமர்சனங் களிலிருந்து எடுத்துக் காட்டுவதும், தமிழ் இலக்கிய மரபுக்குள் நின்று இவற்றை எதிர்த்துப் பேசுபவர்களுடன் எதிர்வாதம் செய்வதும் எங்களுடைய முக்கிய பணியாக இருந்தது. அதாவது, இந்த இலக்கியங்களுக்கு ஒரு நியாயப்பாடு உண்டு. இழிசினர் பற்றிப் பேசிய போதும், மரபு பற்றிய போராட்டத்தின் போதும் நாங்கள் பேசினோம். ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய Struggle இனுடைய - அந்தமாதிரியான விவாதத்தினுடைய ஓர் அம்சமாக அது இருந்தது.
இந்த விவாதம் இங்கு நடந்துகொண்டிருந்த பொழுது, இந்தியச் சூழல் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. 48,49களில் இந்தியச் சூழல், திராவிட இயக்கத்தினுடைய பெரும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் - சுதந்திரம் கிடைத்து விட்டது அதற்குப் பின்னர் எந்த விதமான போக்கு இருக்கவேண்டும் என்பது பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் சிந்தனை செய்து கொண்டிருக்கிற அந்தக் காலகட்டத்தில், 50,51களில் இந்தப் பிரச்சினை இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்களுடைய எழுத்தாளர் களும் இங்கு வந்த பத்திரிகைகளிலும் பார்க்க தமிழ்நாட்டிலிருந்து வந்த சிறு சஞ்சிகைகளில்- சரஸ்வதியில், சாந்தியில் எழுதுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் அங்குள்ளவர்களும் எங்களுக்கு நண்பர்களானார்கள். ரகுநாதன் எங்களுடைய நண்பரானார். ரகுநாதனுடைய தாக்கம் மிக முக்கியமானது, விஜயபாஸ்கரனுடைய உறவு - இப்படிப் பலருடைய உறவு எமக்குக் கிடைத்தது. இவர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவு இருந்ததால், ஜீவானந்தத்துடன் உறவு இருந்தது. நான் ஜீவானந்தத்தைச் சந்திக்கவில்லை. இப்படிப் பார்க்கிறபோது, நாங்கள் தமிழகத்தோடு எம்மை இணைத்துப் பார்க்கிற ஒரு தேவை இருந்தது.
குறிப்பாக இரண்டு விடயங்கள். தமிழ்நாவல் இலக்கியம்பற்றி கைலாசபதி எழுதியது, அகிலனைப்பற்றி கைலாசபதி எழுதிய விமர்சனம், வரதராசனைப்பற்றி காவலூர் ராஜதுரை எழுதிய விமர்சனம் போன்றவை முக்கியமானவை. என்னுடைய தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்தடவையாக தமிழ்ச் சிறுகதை வரலாற்றை ஏதோ ஒரு அடிப்படையில் பார்க்கின்ற நூலாக அது அமைந்தது. இன்னும் ஒன்று, புனைகதை இலக்கியம் அங்கு படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிற காலம் - அவர்களுடைய கவனத்தை ஈர்த்த காலம். அங்கு வருகின்ற இளந்தலைமுறையினருக்கு 15

Page 9
இந்த வாதங்கள் விவாதங்கள் மிக முக்கியமானவையாகப்பட்டன. அதற்கு முன்னர் அங்கு இலக்கிய விமர்சனம் அல்லது இலக்கியத் திறனாய்வு என்ற பெயரில் ஞானசம்பந்தன், வரதராசன் போன்றவர்களுடைய நூல்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தமாதிரியான விமர்சனத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் பொதுப் படையாகக் கூறினரே தவிர ஆழமாக எழுதவில்லை. எமது எழுத்துக்கள் அங்கு சென்றவுடன் எங்களுக்கான ஒரு வாசிப்புத் தளம் அங்கு ஏற்பட்டது. அந்த வாசிப்புத் தளம் நிச்சயமாக அங்கிருந்த பொதுவுடைமைக் கட்சிகளுடைய கவனத்தின் வழியாகத்தான் எங்களுக்கு வந்தது.
அந்தக்காலகட்டத்தில் நாங்களும் பல்கலைக்கழகத்தில் இருந்தமை யால், அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களும் இவற்றினால் கவரப்பட்டார் கள். அந்தத் தேவைகளுக்காக நாங்கள் எழுதியபோது, விமர்சனத்தை ஒரு வரன்முறையான சமூக விமர்சனத்தின் தளங்கள் பற்றி நாங்கள் எழுத ஆரம்பித்தோம். முதலில் அங்குள்ள பேராசிரியர்களில் பெரும்பாலானோர் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மாணவர்கள்தான் ஏற்றுக் கொண்டார்கள். கைலாசபதியையும் என்னையும் அங்கு முதலில் ஏற்றுக் கொண்டவர்கள் மாணவர்கள்தான். Presidency கல்லூரியில் படித்த பாண்டியன், சிதம்பரம், போன்ற மாணவர்களும் அதுபோன்று வேறு இடங்களில் படித்தவர்களும் எங்களை ஏற்றுக் கொண்டார்கள். இவர்களில் நான்கு பேர் முக்கியமானவர்கள். அவர்கள் ‘சிந்தனைச் சுடர்' என்ற வாசகர் குழு மூலம் கைலாசபதியின் நூலையும் எனது நூலையும் வெளியிட்டார்கள்.
இந்த வரவேற்பு அங்கு எற்பட்டதால், ஏற்கனவே எமக்கு அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த அல்லது கம்யூனிஸத் தத்துவம் சார்ந்தவர்களோடு உறவு இருந்தது. ரகுநாதன், ராமகிருஷ்ணன், விஜயபாஸ்கரன் போன்றவர் களோடு இருந்த உறவு. அதன்பிறகு இந்த மாணவர் தளம். இது விரிவடைந்து கொண்டிருந்த வேளையில், அங்குள்ள இலக்கியப் போக்கில் அதிருப்திகொண்ட பிரசுரகர்த்தாக்கள், உண்மையான தமிழ் அபிமானிகள், சில தமிழ் விரும்பிகள் எங்களைப்பற்றி அக்கறை கொண்டார்கள். அவர்களில் ஒரு முக்கியமான ஆளாக நான் கண. முத்தையாவைக் கூறுவேன். கண. முத்தையா போன்ற பிரசுர கர்த்தாக்களுடன் கணேசலிங்கத்திற்கு ஏற்கனவே தொடர்பு இருந்தது. இதேவேளையில் தமிழ்பற்றி வாசிக்கும் ஆங்கிலம் தெரிந்தவர்களும் எங்களுக்கு நண்பர்களானார்கள். இந்த முறையிலேதான் நாங்கள் அங்கு சென்று சேர்ந்தோம்.
சென்று சேர்ந்த பின்னர், முதலாவது இலக்கிய விமர்சனம் அல்லது திறனாய்வு என்பது, ஒரு வரன்முறையான- Integrated Curriculum ஆகப் படிப்பிக்கத் தக்கது. தமிழ் இலக்கியத்தைப் பார்க்கத்தக்கது என்கின்ற ஒரு நிலைப்பாடு ஏற்பட்டது. பாடத்திட்டத்தின்படி படிப்பிக்க வேண்டிய விடயம் அதற்குள் ஒரு உலகப் பொதுவான Scientific Base இருந்தது. இந்தத் திறனாய்வு பற்றி அவர்களுடைய பழைய புத்தகங்களில், மு.வ.வுடைய புத்தகத்திலோ ஞானசம்பந்தனுடைய புத்தகத்திலோ எதுவம் இல்லை.
அப்போது எங்களுக்கு, Integratedஆக நாங்கள் சொல்லக் கூடிய
16

ஒருங்கிணைத்துப் பார்க்கக் கூடிய ஒரு கற்கை நெறியாக அது வெளிவந்தது அதனால் தமிழ் நாட்டில் பல இடங்களில் எமது பெயர்கள் தெரியவந்தன எமது நாட்டில் பல்கலைக் கழகங்கள எல்லாவற்றிலும் ஒரு நேரத்தில், எல்லாமாகத் தமிழ் மாணவர்கள் 2500 பேர்வரைதான் இருப்பார்கள். ஆனால் தமிழ் நாட்டில் அப்படியல்ல. ஒரு மாவட்டத்திலேயே 10,000 முதல் 15,000 மாணவர்கள் வரை இருப்பார்கள். அவர்களிடையே எமது பெயர்கள் தெரிய வந்தன. ஆரம்பத்தில் இந்த மாணவர் மட்டத்திலேதான் எங்களுக்கு வரவேற்பு இருந்தது. பாலாஜி, பாண்டியன், சிதம்பரம் உட்பட நால்வர் சேர்ந்து கூட்டம் ஒழுங்கு செய்து எங்களைக் கூப்பிட்டார்கள். நான் முதலில் சென்றது அப்படியே. பின்னர் கைலாசபதியும் சென்றிருந்தார். விஜயபாஸ்கரன் எங்களுடைய புத்தகங் களைப் போடுவதற்குத் தயாராக இருந்தார். NCBS தயாராக இருந்தது. அது ஒரு முக்கியமான விடயம். அங்கு போனவுடன் மாணவர்களுடைய நிலையில் நாங்கள் Integrated ஆனோம். இதனால் எங்களுடைய நூல்களை அவர்கள் வாசிக்கத் தொடங்கினார்கள். என்னுடைய, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்-66, கைலாசபதியினுடைய தமிழ் நாவல் இலக்கியம்-67. ஆனால் , தமிழ் நாவல் இலக்கியத்தின் தாக்கம் மிகப் பெரிதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், தமிழில் Ph.D செய்யலாம் என்று சொன்னார்கள். அப்போது தமிழகத்தில் இருந்த அரசியல் நிலைமை என்ன வென்றால், - தி.மு.க. ஆட்சி - திராவிடக் கட்சியின் நிலைப்பாடு என்னவென்றால் அவர்கள் சங்க இலக்கியம் பற்றிப் பேசுவார்கள் இடைக்கால இலக்கியத்திற்கு வரமாட்டார்கள். கம்பன், பக்தி இலக்கிம் பற்றிப் பேசமாட்டார்கள். இலக்கணம் பற்றிப் பேசுவதற்கும் ஆழமான ஆட்கள் அங்கு இருக்கவில்லை. படிப்பிப்பதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஆனால் மாணவர் களுக்குள் போகமாட்டார்கள். நவீன இலக்கியங்கள்தான் செய்வார்கள் . நாவல்கள், சிறுகதைகள் பற்றித்தான் செய்வார்கள். நாவல் சிறுககைள் பற்றிச் செய்வதென்றால், அப்போது எங்களுடைய புத்தகங்களை வாசித்துத்தான் ஆகவேண்டும். எதிர்க்கிறதென்றாலும் இந்த நூல்களை வாசித்துத்தான் ஆக வேண்டும். இந்த நூல்களைப் போல் வேறு நூல்கள் இருக்கவில்லை. அத்தோடு ஆக்க இலக்கியத் துறையில் எங்களுடைய எழுத்தாளர்களுடைய எழுத்துக்களும் அங்கு பிரசுரமாயிருந்தன.
இந்த வேளையில், மார்க்ஸிஸ் ஆராய்ச்சி கொண்ட வானமாமலை குழுவினர் அங்கு குழுவாக இயங்கிக் கொண்டிருந்தனர். நாங்களும் அவர்களும் சமமாக முக்கியமான ஒரு விடயம் செய்தோம். என்னவென்றால் நவீன இலக்கிம் மட்டுமல்லாது, Pre modern literature ஐயும் இப்படியான ஒரு சமூக விமர்சனத்திற்கு உட்படுத்தினோம். அது மிக முக்கியமான விடயம். தனித்தமிழ் இயக்கம் பற்றிய எனது கட்டுரையும், திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் என்ற கட்டுரையும், பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், நாடும் நாயன்மாரும், பேரரசும் பெருந்தத்துவமும் என்ற கைலாசபதியின் கட்டுரைகள் மிக முக்கியமான கட்டுரைகள். அவைபற்றிப் பல பேராசிரியர்கள் என்னுடன் பேசியிருக்கிறார்கள். மறையமலை அடிகள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரானவர் அல்லர், அவர் சமஸ்கிருதத்தை வேண்டாமென்றாலும், ஆங்கிலத்தை 17

Page 10
விரும்பினார் என்ற கருத்துப்பட நான் எழுதிய கட்டுரைக்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. அதுமாத்திரமல்லாமல், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் தங்களுக்கள் ஒரு தனித்தமிழ் இயக்கத்தை நடத்தினார்கள். என்று கூறியபோது மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. இவற்றினால், Pre Contemporary literatureஐ விமர்சிப்பதற்கான ஒரு மரபு தொடங்கியது. கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம் போன்ற கட்டுரைகள் முக்கியத்துவம் பெற்றன. கணேசலிங்கம் மூலமாகப் பல நூல்கள் வெளியாகின. இந்த நூல்களுக்குப் பெரும் வரவேற்புக் கிடைத்தது. இரண்டாம் மூன்றாம் பதிப்புகள் வெளியாகின. நவீன இலக்கியத்திற்கு முற்பட்ட இலக்கியங்களையும், நமது பண்டைய, இடைக்கால இலக்கியங்களையம் நாங்கள் சமூக இலக்கிய விமர்சனங்களுக்கு உட்படுத்தினோம். நாங்கள்தான் தனியாகச் செய்தோம் என்று கூறவில்லை. வானமாமலையின் கட்டுரைகள், ரகுநாதனின் கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை. ஆனால் எங்களுடைய தாக்கம் கணிசமானது. இதனாலேயே எங்களுக்கு ஒரு இடம் அங்கு ஏற்பட்டது.
மற்றது, அங்கு நாங்கள் பல சொற்பொழிவுகள் ஆற்றினோம். அச் சொற்பொழிவுகளைப் பலர் கேட்கவும் அவற்றை நூல்களாக்கவும் வாய்ப்பாகின. முற்போக்கு இலக்கியம் பற்றிய எனது நூல். இது கோவையில் 74 அல்லது 75 ஆம் ஆண்டில் பேசிய பேச்சு. அதேபோல கைலாசபதியின் சொற்பொழிவு களும் நூல்வடிவம் பெற்றுள்ளன. CLS நடத்திய கருத்தரங்குகளிலும் நாங்கள் பங்குபற்றினோம். கைலாசபதியினுடைய சமூகமும் சமத்துவமும் பற்றியது. எனது வறுமையும் சாதியமும் பற்றியபேச்சுகள்- இப்படியாக அங்கு ஒரு பரவலான தாக்கம் ஏற்பட்டது.
முதலில் அது எங்களை வெறுமனே நவீன இலக்கிய விமர்சகர் களாகவே கண்டது. அதன்பின்னர்தான், படிப்படியாக இந்த விடயங்களைப்பற்றி ஆராய்கின்ற போதுதான் பண்டைய தமிழ் இலக்கியத்திலும் எங்களுக்குத் தாடனம் இருக்கிறது என்பதை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதனை வரவேற்ற சில தமிழ் அறிஞர்களின் பெயர்களைச் சொல்லாவிடில் இது பற்றி நான் பூர்த்தி செய்ய முடியாது. உதாரணமாக, முதலில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கிய பொழுது, வரவழைக்கப்பட்ட ஆட்களில் ஒரு இலங்கையைச் சேர்ந்தவரும் இருக்க வேண்டுமென என்னை அழைத்தார்கள். அந்தத் தமிழ் பல்கலைக்கழக Senate க்கு ஒரு இலங்கைப் பேராசிரியரும் இருக்கவேண்டு GLD60T 6ig55ust 607b256 was appointed member of the university Senate. 9.g. பெரிய விடயம். இப்போது ஒருவரும் இல்லை. அவர் தமிழ்ப் பல்கலைக்கழகச் செலவிலேயே அங்கு சென்று வருவார். இந்த விஷயத்தில் வி.எஸ். சுப்பிர மணியம் அதில் முக்கியமான ஆள். அவர்களுக்குத் தெரியும் எனக்கு இந்த விடயங்களில் ஈடுபாடு என்று. இந்த நிலைமை காரணமாக அங்குள்ள பழந்தமிழ் அறிஞர்கள் எம்மை முற்றிலும் புறக்கணிக்கமுடியாத நிலைமை ஒன்று ஏற்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத்தலைவராக இருந்த ந.சஞ்சீவி, அவர் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஒரு கற்கை நெறி எம்.ஏ.க்குப் படிப்பிக்கப்படவேண்டுமென விரும்பினார். அவர்தான் என்னைச் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு வருகைப் பேராசிரியராக 18

அழைத்திருந்தார். மற்றையவர் மதுரைப் பல்கலைக்கழத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த எம்.சண்முகம்பிள்ளை. நானும் கைலாசபதியும் தொடர்புபடவில்லை என்றாலும் தெ.பொ.மீனாட்சி சுந்தரமும் முக்கியமானவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் அகஸ்தியலிங்கம்பிள்ளை, சே.வை.சண்முகம் போன்றவர்களும் ஈழத்துத் தமிழ்ப் புலமைபற்றி நன்மதிப்புக்கொண்டவர்கள்.
அடுத்த முக்கியத்துவம் என்னவென்றால், எமது கல்வி முறையினால் எங்களுக்கு வந்தது. ஆங்கில இலக்கியத் துறையில், அல்லது பிறநாட்டு இலக்கியத்துறையில் எங்களுக்கு இருந்த பரிச்சயம். துரதிஷ்ட வசமாக அது அடுத்த தலைமுறையினருக்கு இல்லாமல் போனது. நாங்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவோம். அங்கே என்னவென்றால், தமிழ்ப் பேராசிரியர் என்றால் ஆங்கிலத்தில் பேச மாட்டார் என்ற அபிப்பிராயம் உண்டு. நான் ஒரு முறை மட்ராஸில் இருந்து தஞ்சாவூருக்கு றயிலில் போனேன். போகும்போது கல்கற்றாவில் இருக்கும் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரியும் என்னோடு பேசிக்கொண்டு வந்தார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். நான் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் என்றேன். அவர் என்னோடு இலக்கியம் பற்றிப் பேசி, ஆங்கில நாவல்கள் பற்றிப் பேசி, அரசியல்பற்றியும் பேசிக்கொண்டு வந்தார். இறங்கும்போது, நீங்கள் என்ன படிப்பிக்கிறீர்கள் என்று கேட்டார். நான் Professor ofTamil என்று கூறினேன். அவர், தமிழா! என்று ஆச்சரியப் UL(85. T(6, But You are speaking in Englishe16irgo) UnfoTITs. 91st (35 blfgp பேராசிரியர்கள் ஆங்கிலம் பேசினால் அவன் நினைப்பான், கல்ரோட்டில் வண்டில் போனமாதிரி. அவருக்குத் பேசத் தெரியாது. தமிழாசிரியர் பற்றி, கமலாம்பாள் சரித்திரத்தில் வருகின்ற தமிழ் ஆசிரியர் ஆடுசாபட்டி அம்மையப்பபிள்ளை போன்ற மனப்பதிவுதான் அங்கு உள்ளவர்களுக்கு. தமிழ் ஆசிரியர்கள் எல்லோரும் தனித்தமிழ் பேசுவார்கள். ஆனால் வேட்டி கட்டமாட்டார்கள். Trouser தான் போடுவார்கள். முனைவர் என்றுதான் சொல்வார்கள்; தமிழ்ப் படுத்துவார்கள். ஆனால் டாக்டர்’ என்றுதான் போடுவார்கள். ஆங்கில அறிவு அவர்களுக்குப் பெரும்பாலும் குறைவு, English medium என்று சொல்வதெல்லாம் ‘கப்சா. ஆங்கில அறிவு பழைய தலைமுறைக்கு இருந்தது. இன்றைய தலைமுறைக்கு மிகவும் குறைவு. வீ எஸ். சுப்பிரமணியம் சொல்வார், நாங்கள் அங்கு காலூன்றியதற்குக் காரணம், நாங்கள் Western training உள்ள ஆட்கள் என்று. கணபதிப்பிள்ளையாக இருந் தால் என்ன, வித்தியானந்தனாக இருந்தாலென்ன, கைலாசபதியாக இருந்தாலென்ன, சிவத்தம்பியாக இருந்தாலென்ன, வேலுப்பிள்ளையாக g(bbbit G6)65,60T, BITIE356ir, London training, Oxford training, Bermingham training உள்ளவர்கள். அந்த Training அவர்களுக்கு இல்லை. இதுவும் எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது.
திரும்பவும் நான் இதனைச் சொல்ல வேண்டும். எங்களுக்கு அங்கு பெருவாய்ப்பாக அமைந்ததற்கான காரணம், அங்குள்ள எங்களுடைய தோழர்கள். அவர்களுடன் நாங்கள் ஊடாடினோம், பேசினோம், கருத்துக்களைப் பரிமாறினோம். CP, CPM என்று பிரிந்தாலும் எங்களுக்குள் உறவு இருந்தது. 19

Page 11
CPI இலும் இருப்பார்கள், CPMஇலும் இருப்பார்கள். கல்யாணசுந்தரம் இல்லாமல், நான் எனது Dramainancient Tamil Society நூலைப் போட்டிருக்க முடியாது. நான் அதற்காக ஒருசதம் காசும் கொடுக்கவில்லை. 1981இல் அதற்கு 65000 ரூபா முடிந்தது. இவற்றை மறக்க முடியாது. இந்தமதிரியான ஒரு சூழல் காரணமாகத்தான் எங்களுக்கு அங்கு வரவேற்புக் கிடைத்தது. இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை என்று நான் கூற மாட்டேன். எதிர்ப்பும் இருந்தது. மார்க்சியத்தை எதிர்த்தவர்கள் எதிர்த்தார்கள். 'மார்க்சியம்கல்லறையில் இருந்து ஒரு குரல்" என்று வே.சாமிநாதன் எழுதினார். இங்கும் எங்களுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. நிறைய எதிர்ப்பு இருந்தது. நான் பேர்மிங்காமில் படித்தபடியால், "இரும்புக் கலாநிதி என்று சொன்னவர்களும், எங்களுக்குத் தமிழ் தெரியாது என்று சொன்னவர்களும் இருந்தார்கள். ஒருவர் தனது மனைவிக்குச் சொல்லியிருக்கிறார், “சிவத்தம்பி Ph.D.செய்தது ஏதோ நாட்டுக் கூத்தைப்பற்றி” என்று. அவரது மனைவி ஒரு சங்கீதக்காரி. அவர் என்னுடன் வேலை செய்தவர். அவர் என்னிடம் கேட்டார், ஸேர், நீங்கள் நாட்டுக் கூத்தைப்பற்றித் Thesis செய்தீர்களாம்" என்று. நான் நாட்டுக் கூத்தைப்பற்றிச் செய்யவில்லை - Ancient Drama பற்றியெல்லோ செய்தனான் என்றேன். அவர் பின்பு அதனை அவரது கணவனிடம் கூறியிருக்கிறார். அவர் என்னிடம் வந்தபோது கேட்டார், "நீங்கள் என்ன Folk Dramaசெய்யவில்லையா” என்று. இப்படி எங்களைப்பற்றி நிறைய அபிப்பிராயங்கள் இருந்தன. ஏதோ கால ஓட்டத்தில் அவையெல்லாம் மறைந்து நாங்கள் தமிழ் சம்பந்தமாகப் பேசப்படக் கூடியவர்களாக மாறுவதற்கான ஒரு சந்தர்ப்பம் எற்பட்டது.
எங்களது பங்களிப்பு என்று கருதுவது இதுதான். Providing Scientific basis for literary critilism in Tamil. 915T6...g5 5Lógo) g6udasu விமர்சனத்தை அறிவியல் பூர்வமான ஒரு அணுகு முறைக்கு கொண்டுவருவதற் கான ஒரு தளத்தை ஏற்படுத்தியது.
மிகவும் துரதிஷ்டமான காரியம், கைலாசபதி 50 வயதிலேயே காலமானது. 20 வருஷம் இன்னும் இருந்திருந்தால், அவருடைய முதிர்வு இன்னும் கூடியிருக்கும். என்னுடன் பேசிய பல விடயங்கள் மிக உச்சத்திற்குப் போயிருக்கும். காலகஷ்டம் நாங்கள் கைலாசபதியை இழந்தது.
தொடரும்.
"நெற்றிக்கணி” விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கண் பகுதியில் உங்களது நூல்விமர்சனம் இடம பெறவேண்டுமெனில், நூலின் இருபிரதிகளை அனுப்பிவையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல்பற்றிய அறிமுகக்குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும். - ஆசிரியர்.
20

இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு புதிய ஒளிபாய்ச்சியவர் என்ற ரீதியில் பேராசிரியர் க.கைலாசபதி முக்கித்துவம் பெறு கிறார். அவரது திறனாய்வுப் போக்குகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
01. தமிழ் இலக்கியப் பரப்பில் ஏறத் தாழ எல்லாக் காலகட்ட இலக்கியங்களையும் - சங்ககாலம் தொடக்கம் இக்காலம்வரை - கருத்தில் கொண்டு ஆய்வில் ஈடுபட்டார்.
02. மார்க்சிய அறிவியல் தளத்தில் நின்று தமிழ் இலக்கியங்களையும் அவற்றின் சமுதாயச் சூழலையும் காலகட்டங்களாக வகைப்படுத்தினார்.
03. இலக்கியத்தில் சமூகவியல் நோக்கிற்கு அழுத்தம் கொடுத்தார். 04. ஒப்பியல் இலக்கிய ஆய்வினை மேற்கொண்டார். 05. இலக்கியங்களை வரலாற்றுச் சூழலில் பொருத்தி நோக்கினார். 06. ஈழத்தில் "தேசிய இலக்கியம்' என்னும் கருதுகோளை முன்வைத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.
இவ்வாறு இலக்கியம், இலக்கியத்திறனாய்வுத் துறைகளில் அவரின் பங்களிப்பு மகத்தானது என்பதை மறுக்க முடியாது. தமிழில் மார்க்சிய அடிப்படையிலான சமுதாய வரலாற்றுப் பார்வை கைலாசபதிக்கு முன்பே அறிமுகமாகியிருந்தது. ப.ஜீவானந்தம், இஸ்மத் பாஷா, எஸ்.இராமகிருஷ்ணன் முதலானோர் இவ்வகையில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறான சிந்தனையை ஒரு திட்டப்பாங்கான முறையில் தமிழ் நூல் பரப்பு முழுவதையும் கருத்தில் கொண்டு கட்டமைத்து வெளியிட முற்பட்டவர் களுள் முதல்வர் என்று கைலாசபதியைக் கூறலாம்.
அறிவியல் ரீதியில் இலக்கிய ஆய்வினை மேற்கொண்டவர்கள் என்ற வகையில் எஸ்.வையாபுரிப்பிள்ளை, தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் என்போர் முன்னணி வகிக்கின்றனர். இவர்கள் மார்க்சிய தளத்தில் நின்று இலக்கியத்தில் சமுதாய நோக்கினைப் புலப்படுத்தவில்லை.
ஆறமுகநாவலரின் நல்லறிவுச்சுடர் கொளுத்துதல், ம.க.வேற்பிள்ளை யின் ஈழமண்டல சதகம், மகாவித்துவான் சி.கணேசையரின் ஈழமண்டலப் புலவர் சரிதம் முதலானவை இலங்கைத் தமிழர் தேசிய அடையாளத்தை 21

Page 12
உணர்த்துபவை. நாற்பதுகளிலேயே இலங்கையர்கோன், கனக செந்திநாதன் போன்றோர் ஈழத்து மண்வாசனையுடைய புனைகதைகளைப் படைத்துள்ளனர். எனினும் தேசிய இலக்கியம் என்னும் கருதுகோளை வலியுறுத்திப் பரவலாக்கி யவர் கைலாசபதி அவர்களே.
இவ்வாறு தமிழ் இலக்கியத் திறனாய்வுத்துறையில் காத்திரமான பங்களிப்புச் செய்த கைலாசபதி அவர்களின் ஈழத்தில் தமிழ்த் தேசியம் பற்றிய நிலைப்பாடு எத்தகையது?
அவர் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் 1956 இல் தனது இலக்கிய சகவான் முருகையனுக்கு எழுதிய கடிதத்தில்,
"இனி ஏதாவது எழுதவேண்டிதுதான். தமிழர் தேசியப்போராட்டம் பற்றி எழுதவும் ஆசை. எழுத்தாளன் தனித்து வாழ முடியாது என்பது எனது அடிப்படை நம்பிக்கை. எனவே "சும்மா இலக்கியம் தற்சமயம் படைக்க முடியாதல்லவா?” என எழுதியிருந்தார் அவர் ஆசைப்பட்டாரே அன்றித் தமிழர் தேசியம் பற்றி அவர் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களையே எழுதியுள்ளார்.
"கைலாசபதியை ஈழத்துத் தேசிய இன விடுதலைச் சூழலுடன் தொடர்புபடுத்தி நோக்கும் ஆய்வாளர் கேசவன், அவர் முன்வைத்த தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டின் சமூக நோக்கு, சனநாயக நாட்டம் முதலியவற்றுடன் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்ற அம்சம் குறிப்பிடப்படாமையைச் சுட்டிக்காட்டுகின்றார். மேலும் ‘தமிழரிடையே மொழி, பண்பாடு பற்றிய உணர்வு என்னும் கட்டுரையிலே (1979) கைலாசபதி ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் நலன்களை ஒடுங்கிய இன நள்ைகள் என அடையாளம் காண்கிறார்”
(பேராசிரியர் நா.சுப்பிரமணியன் - தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - சவுத் விஷன் 1999)
கைலாசபதி அவர்கள் ஈழத்தில் முற்போக்கு இலக்கியத்தின் மூலவர்களில் ஒருவர் என மதிக்கப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனையைப் பிரதிபலிப்பது முற்போக்கு இலக்கியம் என்றால் ஈழத்தில் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியையும் அதன் வழித் தோன்றிய இலக்கியங்களையும் கண்டுகொள்ள மறுப்பது ஏன் என்ற வினா எழுகின்றது.
தமிழகத்துப் பிரபல இலக்கியத் திறனாய்வாளர் க.நா.சுப்பிரமணியன் பற்றி கைலாசபதி பின்வறுமாறு குறிப்பிடுகின்றார்.
‘இந்தியாவிலும், ஆசியாவின் ஏனைய பகுதிகளிலும், ஐரோப்பாவிலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. க.நா.சு வின் கண்முன்னாலேயே பல எழுத்தாளர்கள் காந்திய சட்டமறுப்பு இயக்கத்தில் இறங்கி சிறை சென்று கொண்டிருந்தனர். ஆனால் தேசிய சமூக நிகழ்வுகள் அவரை ஈர்த்ததாகத் தெரியவில்லை. தூய இலக்கிய வாழ்வு நடத்துவதற்காக பிற் தளைகளை உதறிவிட்டுத் தன் போக்கில் எழுதிக் கொண்டிருந்தார் (க.கைலாசபதி - திறனாய்வுப் பிரச்சினைகள் - சென் புக் ஹவுஸ் 1980)
இலங்கையின் வடபுலத்தில் கைலாசபதியின் கண்முன்னாள்
22

சத்தியாக்கிரகப் போராட்டம், ரீ எதிர்ப்புப் போராட்டம் உண்ணாவிரதம், திருமலையாத்திரை முதலான சாத்வீகப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் அகில உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடைபெற்றது. இவற்றையெல்லாம் கைலாசபதி கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் தோன்றிய இலக்கிய ஆக்கங்களையும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. க.நா.சு. மீது அவர் சுமத்திய அதே குற்றச்சாட்டுக்கு தானே ஆளாகிவிட்டார் கைலாசபதி,
தமிழ் மக்களின் கணிசமான அளவு ஆதரவினைப் பெற்ற சாத்வீகப் போராட்டங்களை குறுகிய இனவாதத்தின் வெளிப்பாடு எனக் கைலாசபதி கணிப்பிட்டிருக்க வேண்டும். இது இலங்கையில் அவர் சார்ந்திருந்த அரசின் பேரினவாத சிந்தனைக்கு பொருந்துவதாகலாம். ஆய்வறிஞராகத் தன்னை இனங்காட்டிக் கொண்ட அவர் யாழ்பாணத்தில் இடம் பெற்ற 4ஆவது அகில உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் பங்கு கொள்ளத் தவறிவிட்டார். அந்த மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதால் அது தமிழாராய்ச்சி மகாநாடாகவன்றி தமிழ் எழுச்சி மகாநாடாக ஆகிவிடும் என்ற அன்றைய அரசின் பேரினவாத சிந்தனைக்குத் துணைபோய்விட்டார் என்றே சொல்ல வேண்டும். இலக்கியம் சமுதாயத்தின் விளைபொருள் என்றால் அந்தச் சமுதாயத்தில் ஏற்பட்ட எழுச்சியை, உணர்வை, அதன் வழி தோற்றம் பெற்ற இலக்கியங்களை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இனரீதியான தேசியம் பற்றி மார்க்ஸ் என்ன கருதினார் என்பது கைலாசபதிக்கு முக்கியமானதல்ல. இடதுசாரிக் கூட்டமைப்பாக அமைந்த அரசின் சிந்தனைப் போக்கையே அவர் வரித்துக் கொண்டார்.
ஈழத்தின் தமிழ் தேசியத்தின் பரிணாம வளர்ச்சியை - சாத்வீக போராட்டம் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சி பெற்றதை - காண்பதற்கான ஆயுள் நீட்சியை அவர் பெற்றிருக்கவில்லை.
தமிழ்த் தேசியம் குறுகிய இனவாதம் என்றும் தேசிய ஒருமைப்பாடே சிறந்த தத்துவப் பார்வை என்றும் பேசியும் எழுதியும் வந்தவர்கள் இன்று தமிழ் தேசியத்துக்கு வக்காலத்து வாங்குகின்றார்கள். இலங்கையில் தமிழினம் அரசியல் பொருளாதாரம், மொழி, கல்வி முதலான சகலதுறைகளிலும் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகிறார்கள் என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள். தமிழினம் இழந்த உரிமையைப் பெறுவதற்காக நடத்தும் போராட்டங்களையும் அதன் வழியில் தோன்றி வரும் ஆக்க இலக்கியங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைத் தமது திறனாய்வு வட்டத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டனர். தமிழினத்துக்கென ஒரு நிர்வாக அலகு ஏற்படுமானால் அதில் பதவி வகிக்கவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இன்று கைலாசபதி உயிருடன் இருந்தால் அவரின் சகாக்களைப் போலவே தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்.
23

Page 13
ACCA
எழுதத் தூண்டும் எண்ணங்கள்
குலாநிதி தரை.மனோகரன்)
உயர்விருதுக்கு உரியவர்
இலங்கையில் தமிழ் அறிஞராகவும், எழுத்தாள ராகவும் ஒருங்கே விளங்குபவர்களுள் ஒருவர், சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள். ஐம்பதுகள் முதலாக இற்றைவரை பல்வேறுதுறைகளில் தமது எழுத்து முயற்சி /ふ/ களைச் செய்துவருபவர், அவர். நாவல், சிறுகதை, 

Page 14
உலகத்திலேயே இலங்கையில்தான் அரசியல் பைத்தியங்கள் அதிகம் என்பதை, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் நிரூபித்து வருகின்றனர். சாத்தானும் வேதம் ஓதுவதுண்டு என்பதை இடைக்கிடை வெளிப் படுத்தி வரும் சிலர், அவ்வப்போது உளறுகின்ற உளறல்களுக்கு நரிகள் கூடப் பயப்படும். சமாதானத்துக்கு எப்போதும் சாபம் போடுவது போன்றே இவர்கள் வாய்கள் எப்போதும் "அலம்பி"க் கொண்டிருக்கும். நாட்டில் சமாதானம் வரக்கூடாது என்று நாளும் பொழுதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தால், சமாதானம் எப்படிக் கைகூடும்? சமாதான தேவதை இவர்களைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை பொதுவாக எல்லோருக் கும் தெரிந்ததே. அதில் பரமார்த்த குருவின் சீடர்களாக மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்போர் இடம்பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இவர்கள் ஐந்து பேரையும் உறைபோடக்கூடிய சிலர் உண்மையாகவே இருக்கின்றனர். கோட்டுச் சூட்டுக் கழற்றாமல் அவர்கள் செய்யும் விசுவாசத் தொண்டுக்கு உலகில் ஈடேது? இணையேது? எட்டப்பர்களையும், காக்கை வன்னியர்களையும் நாம் வரலாற்றில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போ தெல்லாம் அவர்கள் கோட்டுச் சூட்டுப் போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் உலாவுகிறார்கள்.
தர்மவழியைச் சிந்தை செய்யவேண்டிய குருக்கள்மார், வேட்டைக்காரர் செய்யும் தொழில்களைத்தான் வாயால் செய்கிறார்கள். சமாதானத்தைப் போதிக்கவேண்டிய அவர்கள், தெருத்தெருவாகத் திரிந்து, சமாதானத்திற்கு எதிராகக் கூக்குரல் இடுகின்றனர். உலகமெல்லாம் உய்யத்தோன்றிய ஆன்மீகத் தலைவரை மறந்து, தர்மத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, தமது வயிற்றை மட்டுமே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இவர்கள் அலைகின்றனர். குருக்கள் மாரின் செயல்களைப் பார்த்தால், "மதம் ஒரு அபின்” என்று கூறிய கார்ல்மார்க் ஸின் வாய்க்குச் சர்க்கரை போடவேண்டும்போல் தோன்றுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, அலைகடலுக்கு அப்பால் கிரீடம் மாத்திரமே இல்லாமல், ஆயிரம் தலைவாங்காத அபூர்வ சிந்தாமணியாக விளங்கும் பெருந்தகைப் பெண்மணி, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கவேண்டும் என்ற பாரதியின் கனவைத் தடுப்புச் சுவர் போல நின்று தடுத்துக் கொண்டிருக்கிறார். பாலம் அமைக்கப்பட்டால் இலங்கை அகதிகளும் பிறரும் அதனுடாகத் தமிழ் நாட்டுக்கு வந்துவிடுவார்கள் என்று அந்த அம்மணி உருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார். பொல்லாத சட்டமான பொடா சட்டத்துக்குள் இனி யாருக்குப் பொறிவைக்கலாம் என்று சீமாட்டி இப்போது தேடிக்கொண்டிருக்கிறார். முன்னாள் இந்திய சுகாதார அமைச்சர் ராஜ் நாராயணனுக்குப் பின் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் கோமாளியாக விளங்கும் சுப்பிரமணிய சுவாமி அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்.) 26

(மனிதன் நடத்தும் ༄༽
அக்கிரமங்களைப் பார்த்துப் பார்த்து அந்திச் சூரியன் சிவக்க முறைத்துக்கொண்டு வீழ்கிறான்.
மனிதனின் காலைத் தொடுவதே பாவம் என எண்ணியே அலைகள் மீண்டும் மீண்டும் கடலுக்கே திரும்பி விடுகின்றன.
தொட்டு விட்டோமே என ஒப்பாரியும் வைக்கின்றன.
மழையை ரசிக்கத் தெரியாத மனித மனங்களிடம் விழுந்து கொண்டிருக்கிறது அழுதவண்ணம் மழை.
சுத்தமான காற்றை அழுக்குப் படுத்திக் கொண்டிருக்கின்றன அணு ஆயுத கண்டுபிடிப்புக்கள்.
வாகனப் புகையில் réir (GGT6ggingi திணறிக் கொண்டிருக்கிறது உலகம் குறி இ As OSGOD
நகர மயமாக்குவோம் என
இயற்கையை அழித்துக்கொண்டிருக்கின்றன மனித கோடாலிகள்
யாருடைய விருப்பத்தையும் r கேட்காமல் நடக்கிறது போர். M
போர் நிறைந்த பூமிக்கு கடவுள் பயந்து பயந்து வாழ்கிறான்.
வரங்கள் கொடுத்த கரங்கள் சாபங்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டன.
வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது 7ܝܡ
பூமியை Al
61.60. () () d
நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு. ノ
- ܢܠ
27

Page 15
மண்டுர் அசோகாவுடன் எழுத்துலகில் நுழைந்த மண்டுர் மீனா பல்வேறு காரணங்களால், எழுத்துத் துறையை விட்டு ஒதுங்கியிருக்கிறார். அவரது சிறுகதைத் தொகுதி
இத்துறையில் இழுத்துவிட முயற்சிக்கிறோம்.
கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற முருகன் தலமான மண்டுரில், வல்லிபுரம் -சந்தனப்பிள்ளை தம்பதிகளின் மகளாகப் பிறந்த மண்டுர் மீனாவுக்கு ஏழு அண்ணன்மார், ஒரு தங்கை, இருதம்பிகள் உளர். பெரிய குடும்பம்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை மணி டுர் ரீராமகிருஷ்ணமிஷன் பாடசாலையில் பெற்றார். பின்னர் மட்டக்களப்பு ஆனைப்பந்தி கி.கி.மி. பெண்கள் கல்லூரியில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். எஸ். எஸ். சி. (9ம் வகுப்பு) சித்தியடைந்தார். வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைத் தாண்டி, ஒரு ஆசிரியராகி மட்டக்களப்பில் புகழ்பெற்ற உயர்தர கல்லூரியான புனித மைக்கேல் கல்லூரியில் உதவி ஆசிரியராகத் தற்போது கடமை ஆற்றுகிறார்.
இவரது எழுத்துலகப் பிரவேசம் பற்றி விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அமரர் வேலணை வீரசிங்கம் நடாத்திய 'தாய்நாடு” பத்திரிகையில் 1966முதல் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. தாய்நாடு ஆசிரியர் வேலணை வீரசிங்கம் வழங்கிய உற்சாகமும், தூண்டுதலும் மண்டுர் அசோகாவையும் தன்னையும் எழுத்துலகுக்கு இழுத்துவிட்டன என இவர் மனந்திறந்து கூறுகிறார். அவர் மட்டுமல்லாது பூரணி (மலையகம்) பாலேஸ்வரி (திருமலை) நெல்லை க. பேரன் (யாழப்பாணம்) ஆகியோரும் இவரை ஊக்குவித்துள்ளனர்.
ஆரம்பகாலத்தில் தாய்நாடு, ஜோதி, தினகரன், வீரகேசரி, கலைச்செல்வி முதலிய பத்திரிகை / சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. சில கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். 1978 சூறாவளி, 1990 இராணுவத்தினரின் வன்செயல்கள் முதலியவற்றால் இவரது ஆக்கங்கள் சில அழிந்துபோயின. இந்தச் சம்பவங்களுக்குப் பின் எழுதும் உற்சாகமும் குறைந்துவிட்டது என்கிறார்.
(ஆனால் உண்மையில் இத்தகைய சம்பவங்கள்தான் எழுத்தாளர்களை உசுப்பிவிடவேண்டும்.) "
அதிஷ்டவசமாக இவரை நன்கு அறிந்த சென்னை நடேசபிள்ளை இவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட முன்வந்துள்ளார். அவரது தீவிர முயற்சியில் மண்டுர் மீனாவின் 12 சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுதி விரைவில் வெளிவரவுள்ளது. இத்தொகுதி மண்டூர் மீனாவை அவரது
28
நம்பிக்ை
ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்ட அவரை, மீண்டும்
w
Weus
V
 
 
 
 

Ea. Տ மண்ரூர் மீனா
ఖ எழுத்தாற்றாலை அறிய மிகவும் உதவும் என்ப சந்தேகமில்லை.
இவரது பெரும்பாலன சிறுகதைகளில் போர்க் அனர்த்தங்கள், அவற்றால் தனிமனித வாழ்க்கையில் ஏ பாதிப்புகள் முதலியன தவிர்க்க முடியாதபடி இடம்பெறுகி இவரது எழுத்து நடை வித்தியாசமானது. ஏனையே போல சாங்கோபாங்கமான விவரணத்தைத் தவிர்த்து வகையான ‘பாய்ச்சலி நடையை இவர் கையாளுகிறார். உணர்வுகளின் வெளிப்பாடாகவே பல சிறுகதைகள் அமைகின்றன.
கடவுள் நம்பிக்கை, உண்மை, அன்பு முதலியவற்றில் அசையாத நம்பிக்கையோடு வாழ்க்கையில் ஈடுபட்டபோதும் உலகத்தில் அவற்றைத் தரிசிக்க முடியாத ஏமாற்றமும் அங்கலாய்ப்பும் இவரது கதைகளில் பிரதிபலிப்பதைக் காணலாம். அவை இதயத்து உணர்வுகள் ஆகின்றன.
இவ்வாறே ஈழத்து இலக்கிய உலகில் இடம்பெறும் போலித்தனங்களும் நேர்மையற்ற விமர்சகர்களின் அடாவடித்தனமும் இவரை வாட்டியிருக்கின்றன. அவற்றை மனதுக்குள்ளேயே புதைத்துவிட்டார்.
1960களில் ஈழத்து இலக்கிய உலகில் ஏற்பட்ட விழிப்புணர்வும், வேகமும், பின்னர் படிப்படியாகக் குறைந்து போனது பற்றிக் கவலைப்படுகிறார், இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம், கல்முனை முதலிய பிரதேசங்களில், நூல் வெளியீடுகள் சஞ்சிகைகள் முதலியவற்றின்மூலம் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சி மட்டக்களப்பில் ஏற்படாமற் போனது பற்றியும் வருத்தப் படுகிறார். ஈழத்து இலக்கிய உலகின் முன்னோடி இதழான ‘பாரதி மண் டூரிலிருந்து 1940ல் வெளிவந்தது. அப்போது மணி டூர் மீனா பிறந்திருக்கவில்லை. ஆனாலும் அந்த ஏடுபற்றிப் பெருமையாகக் கூறுகிறார். அண்மைக்காலமாக அவர் எழுத்துலகிலிருந்து ஒதுங்கியிருந்தாலும், நிறைய வாசித்து வருகிறார். தமிழக எழுத்தாளர் நூல்கள், ஈழத்து எழுத்தாளர் நூல்கள் எனப் பலவகைப்பட்ட நூல்கள் அவரது இலக்கியப் பசிக்குத் தீனியாகின்றன. இதன் பிரதிபலிப்பை அவரது எதிர்கால ஆக்கங்களில் காணமுடியும் என்பது எமது நம்பிக்கை.
29

Page 16
()ữở}]]6):6Ö நா.சோமகாந்தன்
சந்திப்பு : தி.ஞானசேகரன்
ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் மூத்த லமுறை எழுத்தாளர்.
சிறுகதைகள், நாவல்கள், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், பத்தியெழுத்துக்கள் ஆகிய துறைகளில் எழுதி வருபவர். இதுவரை இவரது எட்டு நூல்கள் வெளியாகியுள்ளன. * 1984இல் இருந்து இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய அமைப்புச் செயலாளராகப் பணியாற்றியவர். பல இலக்கிய விழாக்களை, மாநாடுகளை முன்னின்று நடத்தியதோடு, பல இலக்கியச் சிறப்பு மலர்களின் தொகுப்பு ஆசிரியராகவும் விளங்கியவர். * இலக்கியக்குரிசில், தமிழ்மாமணி, தமிழ் ஒளி ஆகிய
ட்டங்களைப் பெற்றவர்.
தி. ஞா: இலக்கியத்துறையில் இதுவரை வெளிவந்த தங்களது நூல்கள் பற்றிக் கூறுங்கள் நா.சோ: இதுவரை எனது எட்டு நுல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியானது இலக்கியத்துறை சார்ந்த நூலல்ல; "ஈழத் தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை? என்ற அரசியல் வரலாற்று நூல். இந்நூல் மிகுந்த வரவேற்பைப் பொற்று வருகின்றது. இந்நூல் விற்பனையாகும் வேகத்தைப் பார்க்கும்போது, விரைவில் அடுத்த பதிப்புக்கான தேவை இருக்குமெனக் கருதுகின்றேன். படைப்பு இலக்கியம் என எடுத்துக் கொண்டால் 'ஆகுதி (சிறுகதைத் தொகுதி) நிலவோ? நெருப்போ? (ஆகுதிக் கதைகளுடன் ஒரு சில கதைகளும் சேர்க்கப் பட்ட தமிழகப் பதிப்பு) ‘விடிவெள்ளி பூத்தது (நாவல்), பொய்கை மலர் (பண்பாட்டியல் நாவல்)என்பவற்றைச் சொல்லலாம். அறிவு இலக்கியத்துறையில் ‘தத்துவச் சித்திரங்கள் ( வானொலி உரைகள்) ஈழத்து இலக்கியம்- பல்துறை நோக்கு, நிகழ்வுகளும் நினைவுகளும். பல்துறைக் குறிப்புகள் ஆகியவை நூலாக வெளிவந்துள்ளன. இவற்றில் நான்கு நூல்கள் இரண்டாம் பதிப்பைக் கண்டவை.
சிறுகதை எழுத்தாளனாகப் பிரவேசித்த நான், நாவல் துறையில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது சுவாரஸ்யமான அனுபவம். 1964ல் என நினைக்கிறேன். கொழும்பில் அரசுப் பணியில் இருந்த நான், முக்கிய குடும்பத்தேவை காரண மாக மூன்று வாரகால விடுமுறையில் யாழ்ப்பாணத்தில் தங்கவேண்டி எற்பட்டது. மதிப்புக்குரிய மூத்த எழுத்தாளர் வரதர் எனது நெருங்கிய நண்பர். எழுத்துத் 30
 
 
 
 
 

துறையில் பல் துறைகளிலும் எனக்கு இருக்கும் ஈடுபாட்டைக் கவனித்து ஊக்கப்படுத்தி வருபவர். அப்போது அவர் "புதினம் என்ற வார இதழை நடத்திக் கொண்டிருந்தார். அங்கு நின்ற நாட்களில் தினமும் நான் அவரைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் பத்திரிகை அச்சாகிக் கொண்டிருந்தபோது, ஒரு பக்கத்துக்குரிய விடயம் அவசரமாகத் தேவைப்பட்டது. " சுவாரஸ்யமாக எதாவது உடனே எழுதுங்கள்” என்றார். எதை எழுதலாம் என்று நான் யோசிப்பதற்கிடையில் "இந்த இதழில் இருந்து ஒரு தொடர்கதை ஆரம்பியுங்கள் ” என்றார். கொழும்பில் எனது அறைத் தோழன் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகரிக யுவதி ஒருத்தியில் மயங்கி சம்பளம் முழுவதையும் அவளுக்காகச் செலவழித்து, ஏமாந்த சங்கதி ஒன்றை நான் நன்கறிந்திருந் தேன். களனி நதித் தீரத்திலே. எனத் தலைப்பைப் போட்டுவிட்டு குறிப்பிட்ட சம்பவத்தைப் பின்னணியாக வைத்து அத்தொடர் கதையின் முதல் வாரத்துக் கான பகுதியை எழுதிக் கொடுத்தேன். அவருக்கு அது பிடித்தவிட்டது. 16 வாரங்கள் எழுதினேன். முழுமையாக அதனைப்படித்த நண்பர்கள் நந்தி, சொக்கன், வரதர் ஆகியோர், சில சிறு சேர்க்கைகளுடன் அதை நூலாக வெளியிடலாம் என ஆலோசனை கூறினார்கள். ஈழத்து இலக்கிய இயக்கம், நாவலர் இயக்கம் என்று சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அமைப்பு முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த எனக்கு எழுதுவதற்கோ, நூல்களை வெளியிடவோ நேரங்கிடைக்கவில்லை. இந்திய சமாதானப்படை யாழ்ப்பாணம் வந்ததோடு, அந்தப் பிரதிகள் தொலைந்துவிட்டன. நண்பர் செங்கை ஆழியான் என்னைக் காணும் போதெல்லாம் நாவல் ஒன்று எழுதுங்கோ’ என அடிக்கடி தூண்டிக்கொண்டிருந்தார். வரதரின் ஒரு பிறந்த நாளன்று வாழ்த்துக் கூற நான், நந்தி, சொக்கன், செங்கை ஆழியான் ஆகியோர் சென்றிருந்தோம். பேச்சுவாக்கில் வரதர் அவர்கள் தான் மாதம் ஒரு நாவல் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், இருவாரங்களில் முதலாவது நாவலின் கையெழுத்து பிரதி தேவை எனவும் யாரிடம் பிரதி இருக்கிறது எனவும் விசாரித்தார். எடுத்த எடுப்பில் நண்பர் செங்கை ஆழியான் என்னைச் சுட்டிக் காட்டிவிட்டார். தப்ப வழியில்லை. அக் காலத்தில் சமாதானப்படை மயிர்க் கொட்டிப் புழுப்போலப் பரவி, வீதிகள் எங்கும் இராப்பகலாய் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் எங்கும் மின்சாரம் இல்லை. பகலில்கூட வீட்டுப் படலையைத் திறக்கப்பயம். சில மாசங்களின் முன் எனது மூத்த சகோதரரை இழந்திருந்தேன். அந்த மரணச்சடங்கு, மயானக் கிரியைகள், பிராமண சமூகத்தின் நலிவான பொருளா தார வாழ்க்கை, உயர் சாதிக்காரரின் மேலாதிக்கம், தாழ்ந்த சாதிக்காரர் களுக்கு எதிராக எமது கிராமத்திலுள்ள அவர்களின் வீடுகளுக்குத் தீ மூட்டப்பட்ட அநீதியான சம்பவம். இவற்றை எதிர்த்து நிற்கும் ஒரு பிராமண வாலிபன் எனப் பல சம்பவங்கள் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக. அன்றன்றாடு எழுதியதை நான் மீண்டும் படிப்பதற்கு முன்பே அச்சில் விடுவதற்கென வரதர் அவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்லத் துவங்கிவிட்டார். பகலில் தூங்குவேன் . இரவில் குப்பிவிளக்கை கொழுத்தி வைத்துக் கொண்டு எழுதுவேன். இரவில் எழுதுவதுதான் என் வழக்கம். ஐ. பி. கே. எப். எங்கள் தெருவுக்கு வருகிறார்கள் 31

Page 17
என்பதைக் குறிக்க நாய்கள் தொடர்ந்து குலைக்கும். வெளிச்சம் எரிவது தெரிந்தால் வீட்டுக்குள் நுழைந்துவிடுவார்கள். அதனால் குப்பி விளக்கை அணைத்துவிட்டு, அவர்கள் தெருவைக் கடக்கும் வரை பதுங்கி இருந்து விட்டு, பிறகு எழுதத் துவங்குவேன். முழுக்கதையின் Proofபை படித்து விட்டு ஒரு சொல்லைக்கூட நீக்கக் கூடாது என செங்கை ஆழியான் திருப்தி தெரிவித்தார். நல்லாயிருக்கிறது என வரதர் திருப்திப் பட்டுக் கொண்டார். கலாநிதி சுப்பிரமணிய ஐயர் படித்துப் பார்த்து விட்டு, தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை நினைவூட்டுகிறது எனக்கண்ணிர் துளிர்த்தார். ஆம், அரை நூற்றாண்டுக்கு முன் ஒவ்வொரு பிராமணப் பையனும் எதிர் நோக்கிய பிரச்சனைகளின் சித்திரிப்பே அந்நாவல். சில குறைபாடுகள் இருந்தபோதிலும் எனக்கு நாவல் ஆசிரியர் என்ற முத்திரையைத் தந்தது அந்த நாவல். நண்பர் செ. கணேசலிங்கன் சிறந்த பண்பாட்டு நாவல் எனப் புகழ்ந்து அதனை இரண்டாம் பதிப்பாகச் சென்னையில் வெளியிட்டார். இரண்டா வது பதிப்பின் பிரதிகளைக்கூட இப்பொழுது பெற முடியாமல் இருக்கிறது.
தி. ஞா: முற்போக்கு எழுத்தானாக இருந்து கொண்டு சிறுகதைகள், நாவல்கள், இலக்கியக் கட்டுரைகள் என்று எழதிய நீங்கள் “பொய்கை மலர்” என்று முருகனைப்பற்றிய நூலையும் எழுதியிருக்கிறீர்கள் இந்த முரண்பாடு பற்றி.?
நா, சோ: தமிழ்க் கடவுளான முருகனைப்பற்றியும் அறுபடை வீடுகளைப்பற்றியும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு நான் ஆற்றிய உரைகள் சிலவற்றை பின்னிணைப்பாகக் இந்நூல் கொண்டுள்ளதால், இதை முருகனைப்பற்றிய நூல் என மேலோட்டமாக எண்ணிவிட்டீர்கள் என நினைக்கிறேன். செல்வச்சந்நதி கோவிலில் ஆரம்பித்து கதிர்காமம்வரை 50,60 ஆண்டுகளுக்கு முன்பு வரை வடபகுதி முருகன் அடியார்கள் கால்நடை யாத்திரையை காலாதிகாலமாக மேற்கொண்டதை அண்மைக்காலமாக நாம் மறந்துவிட்டோம். போர்ச் சூழ்நிலை காரணமாக பலவருடங்களாக இது கைவிடப்பட்டுவிட்டது. அவ்வாறு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் கால்நடை யாத்திரை மேற்கொண்ட குழுவினர்கள் அனுஷ்டித்த ஒழுக்கங்கள், மனவைராக்கியம் முதலியவற்றை எனது சிறு வயதில் எனதுரில் நான் கண்டிருக்கிறேன். செல்வச் சந்நதி கோயில் எனது கிராமத்திலிருந்து சில தொலைவு மைல்களில் இருப்பது. இந்நூலின் பிரதான பகுதி, பக்தியும் மனவைராக்கியமும் கொண்ட அவ்வாறான யாத்திரைக்குழு ஒன்றைப் பற்றியதே. ஒரு நாவலில் பெயர் சூட்டப்பட்ட கதாமாந்தர்கள் இருப்பர். அவர்களைச் சுற்றிச் சம்பவங்கள் படரும். இந்நூலில் பெயர் சூட்டப்படாத யாத்திரைக் குழுவின் செயற்பாடுகள் உணர்வுகள் கூறப்பட்டுள்ளன. ஈழத்தமிழர் தாயகத்திலிருந்த பல தலங்களின் பெருமை, ஆலய அழகு கலாசாரச் சின்னங்கள் கிராமங்களின் செழிப்பு, மக்களின் உபசரிப்பு போன்ற உயர் பண்புகள் விவரிக்கப் படுகின்றன. தவிர மாறிமாறி ஆட்சியி லிருந்த பேரினவாத சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் பூர்வீக வாழ்விடத்தை ஊடறுத்து காணிக் குடியேற்றம் செய்துவிட்ட தற்போதைய நிலையில் பருத்தித் துறை முதல் உகணை வரை நிலத்தொடர்புள்ளதாக
32

தமிழர் தாயகம் புராதன காலத்திலிருந்தே விளங்கிற்று என்பதையும் அங்கு தமிழர்களுக்கேயுரித்தான வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற பராம்பரியக் கலாசாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பதையும் இச்சம்பவங்களினூடாக காண்பித்திருக்கிறேன். இதனைச் சிறந்த பண்பாட்டு நாவல் எனக் கூறும் விமர்சகர்களும் உளர். இப்படி ஒரு நூலை எழுதவேண்டும் என்ற எண்ணத்துக்கு தூண்டுகோலாய் இருந்தது ஒரு சம்பவம். யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உணவோ குடிநீரோ இன்றி சிக்கிக் கொண்ட இராணுவ வீரர்களை மீட்கமுடியாமல், பல குண்டு வீச்சு விமானங் களின் துணையுடன் பலாலியில் இருந்து பறந்து வந்த விமானங்கள் உணவுப் பொதிகளைப் போட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓடி மறைந்து கொண்டிருந்தன. நீண்ட நாட்களுக்கு இப்படியே தொடர்ந்து செய்யமுடியாதபடி விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருந்தது. எனவே கோட்டையையும் அதனைச் சூழவிருந்த இருமைல் சுற்றுப்பிரதேசத்தையும் ஆபத்துப் பகுதி யெனவும் அங்கு குடியிருந்த மக்களை வெளியேறுமாறும் இரவோடிரவாக படையினர் அறிவித்துவிட்டு, கடுமையான விமானத்தாக்குதல்களை, மேறகொண்டனர். அவ்வலயத்துள் எமது வீடு இருந்ததால் போட்டது போட்டபடி நள்ளிரவில் எமது விட்டை விட்டு வெளியேறி கள்ளியங்காட்டிலுள்ள உறவினர் வீட்டில் நானும் குடும்பத்தினரும் தஞ்சமடைந்திருந்தோம். இரவு பகலென்று பாராமல் அங்கும் ஹெலிகளும், குண்டு வீச்சு விமானங்களும் சைக்கிள் அல்லது ஆட்களின் தலைக்கறுப்பு தென்பட்டால் குண்டுகளைப் பொழியத் துவங்கின. தஞ்சமடைந்திருந்த வீட்டின் பின்வளவில் இருந்த சடைத்த பெரிய புளிய மரமொன்று மட்டுமே எம்மில் பலருக்கு மறைவிடமாக விளங்கியது. அந்நிலையில் நல்லூர்த்திருவிழாக் காலம் வேறு. பெண்கள் உட்படப் பலர் ஹெலியின் கலைப்பையும் பொருட்படுத்தாமல், வைராக்கிய மனத்தோடு பகல் திருவிழாவுக்குச் சென்று முருகனைத் தரிசிக்கச் சென்றனர், அவர்களின் திடசித்தம் எனக்கு ஆச்சரியத்தை ஊட்டியது மட்டுமல்லாமல், அரைநூற் றாண்டுக்கு முன் கதிர்காம கால்நடை யாத்திரை மேற்கொண்ட அடியார்களின் வைராக்கியத்தை நினைவுககுக் கொண்டு வந்தது. பசி, களைப்பு, தாகம்,காடு, வன விலங்குகளால் ஏற்படக் கூடிய ஆபத்து என எதற்கும் அஞ்சாது யாத்திரை மேற்கொண்ட அவர்களின் கதையே பொய்கை மலர். எம் முன்னோர்களின் வைராக்கியத்தையும் துணிவையும் பண்டைய கலாசாரச் சிறப்பையும் காலம் அடித்துச் சென்றுவிடாமல் பதிவு செய்வதற்காக இந்நூலை எழுதினேன். கலாசாரத்தைப் பதிவு செய்வதில் முரண்பாடு இருப்பதாக நான் கருதவில்லை.
தி.ஞா: அறிவு இலக்கியத்துறையில் கட்டுரைகள், இலக்கியத்துறையில் விமர்சனங்கள் அறிமுகங்கள் ஆகியவற்றில் தங்களது பங்களிப்புகள் பற்றிக்கூறுங்கள். நா.சோ. நண்பர்கள் சில்லையூர் செல்வராஜன், பிரேம்ஜி ஆகியோர் சுதந்திரனில் பணியாற்றிய காலத்தில் பொதுவான பல இலக்கியக்கட்டுரைகளை எழுதியுள் ளேன். திறனாய்வுத் துறையிலான கட்டுரைகளை நான் எழுதுவதற்கு தூண்டு கோலாக விளங்கியவர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள். அவர் தினகரனில் 33

Page 18
ஆசிரியராக இருந்தபோது, பல புதிய நூல்களைத் தந்து, காய்தல் உவத்த லின்றி மதிப்புரைகளை எழுதிக்கொண்டுவருமாறு கேட்டுக்கொள்வார். இப்படி அநேக நூல்களின் விமர்சனங்களைத் தினகரனில் எழுதியிருக்கிறேன். எமுத் தாளன் ஒருவனுடைய ஆக்கத்தில் ஓரெழுத்தைக் கூட மாற்றாமல் தான் விரும்பியப்படி வசதிப்படி அடித்து திருத்தி வெளியிடாத பத்திரிகா தர்மத்தைக் கடைப்பிடித்தவர் அவர், நாவலர் மலர்கள், புதுமை இலக்கியமலர்கள், கலாசார கழகப் பெருவிழா மலர்கள், கம்பன் விழா மலர், மற்றும் மல்லிகை, சி.க.செல்லப் பாவின் "எழுத்து சஞ்சிகைகளிலும் என் இலக்கியக் கட்டுரைகள் | lել: வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் சேக்கிழார் விழாவில் அறிஞர் அ. ச. ஞானசம்பந்தன் தலைமையில் நடந்த ஆய்வரங்கில் நான் சமர்ப்பித்த "இலங்கை யில் பேரிய புராணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்' என்ற தலைப்பிலான கட்டுரை பெரிதும் பாராட்டப்பெற்றது. "ஈழத்துப்புராதான சைவாலயங்கள் என்ற ஆங்கிரி நூல் தொகுப்பில் முன்னேஸ்வரம் கோவிலைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதிய எனது கட்டுரை அந்நூலின் முதலாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இவை தவிர, பல புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதிகளுக் கான அணிந்துரைகளையும் எழுதியுள்ளேன். வரதர் 1971 முதல் 1974 வரை வெளியிட்ட பாபிய நூலான வரதரின் பல துறிப்பு (TII Directory) தொகுப் பாசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன. இலக்கிய அறிமுகங்களாக 1959 - 1962 காலத்தில் சுதந்திரனில் வாரா வாரம் இலங்கையி லுள்ள சுமார் 200 எழுத்தாளர்கள, கலைஞர்களைப்பற்றி அறிமுகப்படுத்து கிறோம் என்ற தலைப் பின்கீழ் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுதியுள்ளேன். சில ஆண்டு களுக்கு முன்னர் சுமார் 120 வாரங்களாக, கலை, இலக்கியம், புதிய நூல்கள் சமூகச் சீர்கேடுகள் தொடர்பாக "காந்தனின் கண்ணோட்டபம்" என்ற பகுதியைத் தினகரன் வாரமஞ்சரியில் தொடர்ந்து எழுதினேன். அவற்றில் சில பகுதிகளைத் திரட்டி நிகழ்வுகளும் நினைவுகளும் என்ற நூலாகச் சென்னை குமரன் பதிப்பகத்தினர் இரு ஆண்டுகளுக்கு முன்பு நூலாக வெளியிடடிருக்கிறார்கள், 1996ல் கோழும்பு கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா பற்றிய காரசாரமான ஒரு விமர்சனத்தை 16 வாரங்கள் வீரகேசரி ஞாயிறு மலரில் தொடராக எழுதி, சிலரிடம் சொல்லடியும், பலரிடம் பாராட்டும் பெறறிருக்கிறேன் ஈழத்து இலக்கியம் - பல்துறை நோக்கிலுள்ள கட்டுரைகளில் அடங்கியுள்ள தகவல்கள் இலக்கியத்துறை பற்றி மேற்கொண்டு ஆய்வில் ஈடுபடுபவர்களுக்குப் பயனுள்ள ஆவனமாகத் திகழ்கிறது என பேராசிரியர் நு:மான் போன்றோர் பாராட்டியுள்ளனர்.
தி. ஞா ஆறுமுக நாவலரை ஈழத்து தேசிய விழிப்பின் ஈழத்து தேசிய இலக்கியத்தின் மூலவராக இ.மு.எ.ச இனங்கண்டுகாட்டியது. இதன் பொருத்தப்பாட்டினை இன்றைய வாசகருக்கு அறியத்தாருங்கள.
நா.சோ : ஈழத்து இலக்கியம் தமிழக இலக்கியங்களிலிருந்து வேறுப்பட்டது; தனித்துவமானது. நாம் மொழியால், கலாசாரத்தால், உறவு முறைகளால் தமிழர்கள் என்ற போதிலும், எமது இலக்கியம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் நகலாக இருக்கக் கூடாது. எமது பிரச்சினைகளை, வாழ்க்கைச்சூழலை, அவசிய
34

மான இடத்தில் கதாமாந்தரின் பேச்சு மொழியைக் கொண்ட ஈழத்து மணன் வாசனை மிக்க சிருட்டிகளாகப் படைக்க வேண்டுமென இ.மு.எ.ச வலியுறுத்தி வந்தது. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ மறுமலர்ச்சியாளராகிய யாழ்ப் பானம் ஆறுமுகநாவலர் தேசப்பற்றும் சமுகப்பற்றும் கொண்டவராக விளங்கி யவர். பல நூல்களை உரை எழுதி வெளியிட்டவர்; சிறந்த பதிப்பாளர். பன்னூலாசிரியர். கல்வி வளர்ச்சியாளர் என பலதுறைகளிலும் எமது முன்னோடி யாக விளங்கியவர். தமிழுக்கு வசன நடைதந்த வல்லாளர் எனத் தமிழகத் தாராலும் ஏற்றிப் போற்றப்பட்டவர். தமிழகத்தில் தமது சைவத்தமிழ்ப்புலமையை யும் நாவன்மையையும் அங்கிருந்த கற்றவர்களே மெச்சும்படி நிலைநாட்டி "நாவலர் என்ற கெளரவப் பட்டமும் அங்கே சூட்டப் பெற்றவர். தமிழ் நாட்டில் பல மதிப்புகளையும் கெளரவங்களையும் பெற்ற போதிலும், ஆறுமுகநாவலர் தாம் பிறந்த மண்ணுக்கும் அங்குள்ள மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகளை முன்னின்று செய்தவர். அந்நிய கலாசார ஊடுருவலை எதிர்த்துச் செயற்பட்டதன் மூலம் "தேசவிடுதலைக்கு வித்திட்ட முன்னோடியாகவும் அவர் விளங்கியவா. ஈழத்து எழுத்தாளர்கள் இலக்கிய அநாதைகளல்லர் அவர்களுக்கென செழுமைபரிது பாரம் பரியமுனர் டு எனர் பதை சான்றுபடுத்துவதற்காக ஆறுமுகநாவலரை ஈழத்து இலக்கியப் பிதாமகர் எனத் தமிழகத்தாருக்கும் ஏனையோருக்கும் நாம் அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. நாவலரின் செயற்பாடுகள் பன்முகப்பட்டவையெனினும், அவரின் மறைவுக்குப்பின்னர் அவர் புரிந்த சைவப்பணிகளே மேலாக எடுத்துக்காட்டப்பட்டன. சைவ நாயன்மார்களில் ஒருவாராகக் கூட அவரைப் போற்றத் தலைப்பட்டுவிட்டனர். ஒவ்வோராண்டும் சைவப்பாடசாலைகளில் குருபூசைக்குள் மட்டும் அடக்கப்பட்டிருந்த அவரின் நினைவை நாவலர் விழாக்களாகக் கொண்டாடி, அவரின் பன்முகப்பணிகளை மக்களுக்கு உணர்த்திய பெருமை இ.மு.வி. சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உண்டு.
தி. ஞா. ஆறுமுக நாவலருக்கு நிறுவப்பட்ட சிலை இரவோடு இரவாக, முக்காடு அணியப்பட்டு மாநகரசபை குப்பை லொறியில் ஏற்றப்பட்டு வேறோரிடத்திற்கு மாற்றப்பட்டதாகக்கூறப்படுகிறதே. ஏன் முதலில்தெரிவு செய்யப்பட்ட இடம்பொருத்தப்பாடு அற்றதா?
நா.சோ. இக்கேள்வியில் இரு விடயங்கள் தொக்கியிருப்பதாக நினைக்கின்றேனர். முதலாவது சிலை அகற்றப்பட்ட முறை பற்றியது; அடுத்தது முதலில் தெரிவு செய்யப்பட்ட இடம் பொருத்தமற்றதா என்பது. ஒவ்வொன்றுக்கும் விபரமாக பதிலளிப்பது பொருத்தமும் தெளிவும் கொண்டவையாக இருக்குமெனக் கருதுகிறேன். அச்சிலையை இரவோடிரவாக மாநகர சபைக் குப்பை லொறியில் ஏற்றிச் செல்லப்பட்டதென்பது அப்பட்டமான பொய். நாவலர் சபைக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட விஷமப் பிரசாரம். ஒரு மாலை வேளையில், இருட்டுப்படர முன்னரே பல நூற்றுக் கணக்கானவர்கள் ஊர்வல மாகவர அச்சிலை எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 10 தொன்கொண்ட செப்பி விால் வார்க்கப்பெற்ற சிலை அது. அதனைத் தோளில் சுமந்து செல்லமுடியாது. பாரமான வாகாத்தில்தான் நூற்றிச் செல்லமுடியும். கொண்டு செல்லப்பட்டது

Page 19
குப்பை லொறியிலல்ல. புதிய டிறாக்டர் ஒன்றுக்கு சைவாசார முறைப்படி புண்ணியாகவாசனம் செய்து தூய்மையாக்கி பின்னரே அதில் அச்சிலை ஏற்றிச் செல்லப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழராய்ச்சி மாநாட்டின் போது பல தமிழறிஞர்களின் உருவச்சிலைகள் நிறுவப்பெற்றன. - ஆனால் நாவலரை ஒதுக்கிவிட்டனர்; அல்லது மறந்து விட்டனர். இச்சம்பவத்தால் ஈழத்தமிழர் பலர் மனக் கொதிப்படைத்தனா. அதன் வெளிப்பாடாக நாவலரின் சிலையை அவர் பிறந்த நல்லூர் மண்ணில் நிறுவவேண்டுமெனவும, அவர் நினைவாகப் பல பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பலர் முன்வந்தனா. அக்காலத் தில் இயங்கிக் கொண்டிருந்த நடைமுறைத் தமிழியக்க இளைஞர்கள் இவ் விடயத்தில் பல பெரியார்களை ஈடுபடுத்துவதற்காக ஓர் அமைப்பை நிறுவ முன்முயற்சி எடுத்தனர். ‘நாவலர் சபை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தையொட்டினாற் போல அரசின் பொறுப்பில் ஒரு காணி இருந்தது. அதனை 99 வருட குத்தகைக்குப்பெற்ற சபை, அதில் சிலையை வைப்பதற்காக ஒரு மணிமண்டபத்தை நிறுவியது. நாவலர் உயிரோடிருந்த பிற்காலத்தில் சில கருத்து முரண்பாடுகளின் காரணமாக அக் கோவிலின் பக்கமே எட்டிப்பாராமல் வைராக்கியமாக இருந்தவர். எனினும் அவரின் சிலையை நல்லூரில் நிறுவுவதற்கு உடனே வேறு பொருத்தமான காணி எதுவும் கிடைக்காததால் ஆறுமுகநாவலர் சபை சிலையையும் மண்டபத் தையும் நல்லூர் முருகனாலய தென்மேற்கு மூலையில் நிறுவியது. அம்மண்டப மும் சிலையும் நாவலர் சபையின் பரிபாலனத்திலேயே இருந்தன. சிலை நிறுவப் பெற்றதையொட்டி எழுந்த எழுச்சியினால் “தேச அரசியல் விடுதலை இயக்கத்துக்கு வித்திட்ட முன்னோடி என அவரைக் கெளரவித்து தேசியப் பெரியார் பட்டியலில் இடம் பெறச்செய்து நாவலிரின் உருவம் தாங்கிய தபால் முத்திரையை அரசாங்கம் வெளியிட்டது. தேசியப் பெரியார்கள் பிறந்து வாழ்ந்த இல்லத்தையும் அவர்களின் பாவனையிலிருந்த பொருட் களையும் எதிர்காலத் தலைமுறை அறிந்து மதிப்பளிக்கும் வகையில் நினைவகமாக அமைப்பது பல நாடுகளிலும் இருந்து வரும் வழக்கம. நாவலரின் சிலை நிறுவப்பட்டபோது, அவர் பிறந்து வாழ்ந்த இல்லம் எது என்பது அறியப்படாம லிருந்தது. சிங்களப் பெரியார்கள் பிறந்து வளர்ந்த இடங்களில் நினைவகங் களை அரசாங்கம் நிறுவிவந்தது. அதனால் தமிழ்ப்பெரியாராகிய நாவலிரின் இல்லம் எது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அங்கு அவருக்கு நினைவாலயம் அமைக்க வேண்டுமென அக்காலத்தின் கலாசார அமைச்சரை இ.மு.எ.ச. வலியுறுத்தியது. இதற்கென அமைச்சர் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் நியமித்த ஆய்வுக்குழு, அக்காலத்தில் யாழ் உதவி அரசாங்க அதிபராயிருந்த திரு.முருகேசம் பிள்ளை, அறிஞர் சி.அம்பிகைபாகன் முதலியோரின் உதவியுடன் இப்போது யாழ். நாவலர் வீதியில’ நாவலர் கலாசாரமணடபம் இருக்கும் காணியிலேயே நாவலர் பிறந்து வாழ்ந்தார் என்பதை ஆதார பூர்வமாக நிறுவியது. அதை ஏற்றுக்கொண்ட அரசு அக்காணியைச் சுவீகரித்து, அதில் நாவலர் கலாசார மண்டபத்தை நிறுவியது. அம்மண்டபத்திலேயே நாவலர் சிலையை வைப்பது பொருத்த மென 36

ஆறுமுகநாவலர் சபையின் பொதுக்குழுவும் ஆட்சிக்குழுவும் முடிவு செய்தன. அம்முடிவுக்கமையவே இச்சிலை இடமாற்றம் செய்யப்பட்டது. வேறு எவ்வித உள்நோக்கமும் இவ்விவகாரத்தில் இருக்கவில்லை. தி.ஞா : ஈழத்து தேசிய இலக்கியம், கோட்பாட்டு ரீதியான எழுச்சியைப் பெற்றுவந்த காலத்தில் அதனை நெறிப்படுத்துவதில் அ.ந.கந்தசாமி, கைலாசபதி, இளங்கீரன், கா.சிவத்தம்பி, பிரேம்ஜி ஞான சுந்தரன் என்ற வரிசையில் ஈழத்துச் சோமு என்ற தாங்களும் முக்கியத்துவம் பெறுகிறீர்கள். இந்த வரிசைபின்னர் அற்றுப்போனது ஏன்? நா.சோ. : பிரவகிக்கத் தொடங்கிய நதி நீர் சரியான வழியை நோக்கிச் செல்லுவதற்குத் தடுமாறுகிறபோதுதான, குறிப்பிட்ட இலக்கை நோக்கி அதை நெறிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இப்பொழுது ஈழத்து இலக்கியம் நெறிப்படுத்தலுக்கான அவசியமின்றி சரியான பாதையில் கம்பீரப்பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறதே! தி.ஞா. இ.மு.எ.ச இன்று வலுவிழந்து போனதற்கு என்ன காரணமென நீங்கள் நினைக்கிறீர்கள்? நா. சோ. : சுமார் ஐந்து, ஆறு தசாப்தங்களுக்கு முன்புவரை, இலக்கியமென்பது சுவைத்து மகிழும் ஒரு பண்டமாகவே கருதப்பட்டது. கலை இலக்கியங்களுக்கு சமூகப்பொறுப்பும் உண்டு என்பது உணரப்படவில்லை. 'மறுமலர்ச்சி காலத்து எழுத்தாளர் சிலரின் படைப்புகளில் ஓரளவு தென்பட்ட சமூகப்பிரக்ஞை கொண்ட முற்போக்குக் கருத்துகளை மேலும் முன்னெடுத்துச சென்று கட்டி வளர்க்க வேண்டிய அவசியம் இருந்தது. அக்காலத்தில் எழுதிக் கொண்டிருந்த சிலர் கூட யாழ்பாணம் முற்றவெளியில் உட்கார்ந்து கொண்டே எமது மக்களின் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்காமல சென்னை மெரீனா பற்றிய கற்பனையில் மூழ்கி, தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நகலாக தமது படைப்புகளைச் செய்து கொண்டிருந்தனர். எமது மண்ணின் மைந்தர்களின் பிரச்சினைகளைத் தொட்டு சமூகப் பிரக்ஞை கொண்ட ஆக்கங்களை எழுத வேண்டுமெனத் துடித்த புதிய எழுத்தாளர்களுக்கு பிரசுரக்களம் மிக அரிதாகவே இருந்தது. பெரிய பத்திரிகைகள் இறக்குமதிச் சரக்குகளால் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருந்தன. தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள்ோ எமது இலக்கிய வளர்ச்சி பற்றித் துளிகூட எண்ணாமல் இலங்கையைத் தமது விற்பனைச் சந்தைக்களமாக மட்டுமே கருதின. அதனால் ஒருசஞ்சிகை கூட இங்கு தலையெடுத்து நீடித்து வாழ முடியாத நிலை நிலவியது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படைக்கப்படும் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் இருந்தபோதிலும், அவ்வவ் நாடுகளின் மக்கள் பிரச்சினைகளையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் தனித்துவத்தன்மை கொண்டவை. ஆனால் எம்மைப் பொறுத்த வரை, தமிழ் நாட்டு இலக்கியமே தமிழ் இலக்கியமென அக்காலத்தில் கருதப் பட்டது. எனவே ஈழத்துமக்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் சித்தரிக் கும் - அதே வேளையில் வாசிக்கும் வாசகர்கள் தமது வாழ்க்கையில் மேம்பாட டையக் கூடிய கருத்துக்களைக் கொண்ட தனித்துவப் பண்பு கொண்ட ஈழத்து இலக்கியத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது. எமது பாரம் பரியத்தை மீட்டெடுத்து தெரியப்படுத்த வேண்டியிருந்தது. எனவே குறிப்பிட்ட காலகட்டத்தின் 37

Page 20
தேவையாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றமும் பின்னர் அத்ன் வேகமான செயற்பாடுகளும் அமைந்தன. எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் எதிர்பார்த்தபடி இ.மு.எ.ச. ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல சாதனைகளை ஈட்டியதை எவரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. இன்று சங்கத்தின் செயற்பாடுகள் முடங்கிப் போயிருப்பதன் பிரதான காரணம் அதன் குறிக்கோள்களில் அநேகமானவை யதார்த்தமாகி விட்டதனாலேயே. உபகாரணங்களாக பின்வருபவற்றையும் சொல்லலாம். முன்னின்று செயற் பட்டவர்களில் சிலர் மரணித்துவிட்டனர். மற்றுஞ்சிலர் யுத்த சூழ்நிலை காரண மாக புலம் பெயர்ந்துள்ளனர். வேறு சிலர் வெகுவாக உடல் நலம் பாதிக்கப் படட நிலையில் உள்ளனர். ஓர் இலக்கிய சங்கம் என்ற வகையில் புதிதாக இயங்குகின்ற பல சங்கங்களில் ஒன்றாக இ.மு.எ.ச.வும் இயங்கலாம். புது இள இரத்தம் பாய்ச்சப்பட்டாலே அது கூட சாத்தியமாகலாம். சங்கத்தலைமைக் குழுவிலும் செயற் குழுவிலும் பல வெற்றிடங்களை நிரப்பவேண்டியுள்ளது. சங்கவிதிகளின்படி இதனை நினைத்தபடி எவரும் செய்ய முடியாது. அவ்வப்பகுதிகளிலுள்ள உறுப்பினர்களைக் கொண்ட கிளைகள் புனரமைக்கப் பட்டவேண்டும். அவற்றின் பிரதிநிதிகளை கொண்ட தேசிய மாநாடு கூட்டப்பட வேண்டும். எந்த முக்கிய பதவிக்குரியவர்களை நியமிக்கிற அல்லது நீக்கு கிற அதிகாரம் தேசிய சபைக்கே உண்டு. கருத்து முரண்பாடுகள் தனிப் பட்ட முரண்பாடுகள் தலை எடுத்துவிட்ட இன்றைய நிலையில் சங்கம் உடனடி யாக இயங்கக்கூடிய சூழ்நிலை தற்போது இருப்பதாக நான் நினைக்கவில்லை. தி.ஞா: உங்களது எழுத்துத் திறனை மறைக்கும் அளவுக்கு உங்களது சமூக ஆளுமை வளர்ந்துள்ளதே! இதுபற்றி.
நா.சோ. சுமார் அரை நூற்றாண்டு காலமாக இலக்கியத்துறையில் நான் ஈடுபட்டிருந்த போதிலும், அதற்கு ஏற்றளவுக்கு எனது எழுத்துகள் வெளிவந்தது போதாது. இடையில் எழுதக் கூடிய முக்கியமான காலகட்டத்தில் ஒரு 15 ஆண்டுகளுக்கும் மேல் இ.மு.எ.ச நாவலர் சபை மற்றும் சில பண்பாட்டியக்கங் களில் நான் முக்கிய பதவிகளை வகித்ததால், அவற்றின் இயக்கியரீதியான செயற்பாடுகளில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாக இருந்தது. எழுதுவதை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைப்பு வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட்டேன் என்று கூடச் சொல்லலாம. மீண்டும் என்னை எழுத்துத்துறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தவர்களான நண்பர்கள் வரதர், டொமினிக்ஜிவா, செங்கை ஆழியான் மற்றும் எனது துணைவி ஆகியோர் எனது நன்றிக்குரியவர்கள். நான் பேச்சிலும் செயலிலும் நேர்மையைக் கடைப்பிடித்து அடிமட்டத்திலிருந்து உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் வரை எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்தி மனித நேயத்துடனும் விஸ்வாசத்துடனும் பழகி வருபவன். பதிலாக அவர்களும் என்னை விசுவாசிக்கிறார்கள். யாரிடம் எந்த விஷயத்தை, எவ்வாறான முறையில் அணுகி அதனை நிறைவேற்ற முடியும் என்ற நுண்ணறிவு என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன். தலைக்கணம் இல்லாமல் பணிவோடு பழகுவது எனது சுபாவம. அதனால் நாடெங் கிலும் அநேக நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். எடுத்த காரியத்தை தளம்பாமல் உறுதியாக நின்று -
38

நிறைவேற்றுகின்ற அர்பணிப்பான உழைப்பில் என்றுமே எனக்கு நம்பிக்கை உண்டு. அதனைக் கடைப்பிடித்து வருகின்றேன். எந்தச் சவாலையும் கண்டு, நான் கலங்கிப் போவதில்லை. அதற்குத் துணிவாக முகங்கொடுத்து முறியடிப்பது சிறுவயதிலிருந்தே எனது இயல் பாகி விட்டது. எனது மாணவப்பருவத்திலேயே கவர்ச்சிகரமான பேச்சுக்கலை என்னிடமிருந்தது. இ.மு.எ.ச, நாவலர் சபை, மற்றும் பண்பாட்டியக்களின் அமைப்பு வேலைகள, பிரசாரப்பணிகளுக்கெனப் பெரும்பாலும் நாடு முழுவதிலும் சென்று நான் உரையாற்றிருக்கிறேன. இளமையில் என்னிடமிருந்த பேச்சுக்கலை இதனால் மேலும் வளர்ச்சிபெற்றது. இவைகாரணமாக நீங்கள் என்னிடமிருப்பதாக குறிப்பிடும் சமூக ஆளுமை வளர்ந்திருக்கலாமென நினைக்கின்றேன். தி.ஞா: காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து, தனது ஆளுமையின் பலத்தினால் வளர்ந்து நிற்பவர் தங்களது மனைவி. தங்களது இலக்கிய முயற்சிகளுக்கு அவரது பங்களிப்பு எத்தகையது? நா.சோ: நாம் இருவரும் இல்லற வாழ்வில் இணைவதற்கு - முன்னரே எமது மாணவப் பருவத்தில், ஒருவரையொருவர் அறிந்திருக்காத காலகட்டத்தில், இலக்கியப் பிரவேசம் செய்தவர்களென்பதை புதிய தலைமுறையினர் அறிந்திருக்கமுடியாது. இலக்கியத்தைபப்ற்றிய நோக்கமும், சமதாயத்தைப்பற்றிய பார்வையும் இருவரிடமும் ஒத்ததாக இருந்ததனாலும் தொடர்ந்து இருப்பதனாலும் எம்மத்தியில் கூடுதலான புரிந்துணர்வு உண்டு. ஒருவரின் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் முதலியவற்றை அடுத்தவர் சிறப்பாக மதிக்கிறோம். இவற்றில் அநாவசியமாகத் தலையடுபடுவதில்லை. அவான் எழுத்து களின் முதற்பிரதிகளைப் படிப்பவன் நான். அதே போல எனது ஆக்கங்களை முதலில் வாசிப்பவர் அவரே. இலக்கண வழுக்கள், எழுத்துபிழைகள் முதலியவற்றை திருத்துவதுடன் விஷயத்தின் ஒழுங்மைப்பு பற்றி மாற்றஞ் செய்ய வேண்டி யிருந்தால் அபிப்பிராயப்பரிமாற்றங்களையும் செய்வதுண்டு. ஆனால் இறுதி முடிவெடுக்கும் சுதந்திரம் அவரவருடையதே. எழுத்து முயற்சிகளுக்கு அப்பாலும் பல செயற்பாடுகளில் முழுமூச்சாக நான் ஈடுபட்டுவந்துள்ளமையை முன்னரே விபரித்துள்ளேன். அவ்வேளைகளிலெல்லாம் பிள்ளைகளின் சுகாதாரம், கல்வி முதலியவற்றை முற்று முழுதாகக் கவனித்த அவர், என்மீது அச்சுமை களை ஏற்றாமலிருந்தது பெரிய பங்களிப்பு அல்லவா? யாழ்பாணத்திலும் சரி கொழும்பிலுஞ்சரி எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆட்சிக்குழு செயற்குழு மற்றும் சந்திப்புகள் எமது இல்லதிலே நடைபெறுவது வழக்கம். ராஜம் கிருஷ்ணண், பேராசிரியர் இராமகிருஷ்ணன் சிதம்பரரகுநாதன, வாசந்தி, கோமல் சுவாமிநாதன், வல்லிக்கண்ணன, பொன்னிலன், தாமரை மகேந்திரன் முதலிய தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் சந்திப்புகளும் எனது இல்லதிலேயே அக்காலத்தில் நடைபெற்றன. இச்சந்தர்ப்பங்களுக்கான உபசரிப்பு மற்றும் ஏற்பாடுகளை முன்னின்று நிகழ்த்திச் சிறப்பித்துவருபவர் எனது துணைவியாரே. சிலகாலமாக நான் சுகவீனமுற்றிருப்பதனால் எழுதுவது படிப்பதென்பது எனக்குச் சிரமம். அதற்கான ஒழுங்குகள் கவனிப்புகளைச் செய்து இன்னும் என்னை எழுதத்துண்டிக் கொண்டிருப்பவர் எனது மனைவியே. D 39

Page 21
பூச்சாடி ஒன்று கம்பீரமாக O O ஸ்டுலின் மேல் இருந்தது. இயக்கம் இரண்டு
சிவந்த பூக்களை ஈன்ற இறுமாப்பில்
அறையைத் திறந்தேன் அதற்குள் இருந்தது சிறுசெடி அறையின் ஓரத்திற், கட்டில் கிடந்தது அழகிய அந்தப் பூக்களின் மீதும் கட்டில் மேல் அழுககு இலையான்கள், இலையான்கள் ஊருதன. மொய்த்துக் கிடந்தன. திரிந்தன. தலையனை மேலும் ஓரிரு இலையான் காலையில் கேற்றைத் திறந்து தரையிலே தெறித்த கரிய நீர் போல ವಿ. திட்டுத் திட்டாய் &EITGO.g. ಐಾಖಹ್ರವಾಹ (သ, இலையான் கூட்டம் தெரு ஒரம ශ්‍රීසී IETU Ln6)Ln LOS கட்டில் கால்மாட்டில் மேசை இருந்தது கிடந்த மேசையின் மீதும் 6O)6ADOLUT6O ĉ5hLLO இலையான் கூட்டம். ஞாபகம வந்தது. மேசை முன்னிருந்த படிக்கும் கதிரை, நாய் மலம் மீது வாழ்ந்த இப்பிராணிகள் மேசை மீதடுக்கிய புத்தகம், நறுமணம் வீசும் மலரிலும் மொய்ப்பதா? எங்கணும் - மனது அருக்குளிக்க சுவரிலே இருந்த இலையான் கூட்டம் மின்சார விசிறியின் குமிழைத் திருகினேன் இலையான் கூட்டம். ஒனறு இரண்டு (3Ln(86) 6) flirijafu இலக்கம் மேவி Loara III 6îeftuîei Full எனும் நிலைவரை குமிழைக் கொணர்ந்தேன். 8 ରLoଙbରd மேலும் இலையான் மெல்லச் இருந்தமை தெரிந்தது. சுழன்ற விசிறி, தனியாய், Lóči (86 Jē5LOITSE5 இயங்கலாயிற்று இரண்டாய்,
O 6ts ep6OTODITL, பலவாய் சி. மெளனகுரு) அதிமிக வேகம் எங்கெங்கு காணிலும் இயக்கம், இலையான் கூட்டம். அதிவே බ්‍රි: さちご5LD, கட்டிற் தலைமாட்டில் மின்சார விசிறியின் அதிவேக இயக்கம்.
40

கட்டிலில், ଔରjଅ5th
மேசையில், வேகமாய் பூக்கள், விசிறி சுழன்றது. புத்தகங்களில், இலையான்கள் இலாது அறையோ ஒளிர்ந்தது. மின்சார விசிறியில்,
மொய்த்த அப்பிராணிகள், பூச்செடி ஈன்ற இரு செம் பூக்களும் எழுந்தன. இலையான் இலாது அசைந்தன. தனி ஒளி வீசின. பறந்தன. Lâ6öTöFTp 6îefo663UT" ତୁlଠୁ ଠେt. வேகமாய்ச் சுழன்றது.
இயக்கம் முன்னே எதுதான் தங்கும்?
2 NÒ
நினைவுகனர், நிகழ்வுகள்
தேமதுரத் தமிழோசையை உலகமெங்கும் பரவச் செய்யவேண்டும் என்ற மகாகவி பாரதியின் எண்ணத்தை நமது புலம் பெயர்ந்தவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய மண்ணில் கலை இலக்கியம், பத்திரிகை வானொலி, தொலைக்காட்சி என்று பல் துறைகளிலும் சாதனை படைக் கின்றார்கள். பாரிசில் டி.டி.என் தமிழ் ஒளி என்ற தொலைக்காட்சியில் கலைஞர் தாசீசியஸின் ஏற்பாட்டில் என்னை ஒரு சகோதரி இருபது நிமிடம் பேட்டி கண்டார். கவிஞர் அருள் நதி, கலைஞர் ஏ.ரகுநாதன், ஷோபா சக்தி (கெரில்லா நாவலை எழுதியவர்) ஆகியோரைச் சந்தித்தேன். லண்டனில் தீபம் தொலைக் ாட்சியில் திரு நித்தியானந்தனின் ஏற்பாட்டில் அனஸ் (கவிஞர் இளைய அப்துல்லாஹற்) ஒரு மணிநேரம் நேரடியாக என்னைப் பேட்டி கணடதை ஒளிபரப்புச் செய்தனர். புதினம் பத்திகை ராஜகோபால் ஏற்பாட்டில் செப்டம்பர் ஏழாம் திகதி இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிகழ்வு மாத்தளை செல்வராஜ் லண்டன் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட வழக்கறிஞர்) தலைமையில் நடைபெற்றது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டார்கள். அதனைத் தீபம் தொலைக்காட்சியில் முப்பத்தைந்துநிமிடம் ஒளிபரப்பினார்கள். எஸ். ஜோசப் தயாரித்துள்ள அழியாத கவிதை (குறுந்திரைப்படம்), ஏகலைவன் (நாட்டுக்கூத்து) ஆகியவற்றை எனக்காகத் திரையிட்டுக் காட்டினார்கள். கீர்த்தி என்பவர் தயாரித்த இரகசிய காதல் என்ற இரண்டரை மணித்தியால திரைப்படத்தை அவருடைய வீட்டில் பெரிய திரையில் கண்டு இரசித்தேன். இவரது திரைப்படத்தில் தொழில்நுட்பம் சிறப்பாக இருந்தது. கண்டியைச் சேர்ந்த சிலோன் சின்னையா தான் நடித்த நாடகங்களின் வீடியோப்பிரதியைப் போட்டுக்காட்டினார்.
'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்ற கார்ல்மார்க்ஸின் கல்லறையைச் சென்று பார்த்தேன். ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்திற்கும் சென்றேன். இவையெல்லாம் என் நெஞ்சின் நினைவுகளாகப் பதிந்துள்ளன. )லண்டனிலிருந்து அந்தனி ஜீவா ܓܰ
41

Page 22
ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள்
- கலாநிதி. செ.யோகராசா - (கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை)
ஈழத்துச் சிறுவர் இலக்கியத் துறையில் சிறுவர் பாடற்பிரிவே ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. ஈழத்தின் முதற் சிறுவர் பாடல்தொகுப்பு 1918ல் வெளிவந்ததென்பர் சிலர். எனினும் 1935ல் வெளியான "பிள்ளைப்பாட்டு" தொகுப்பே இத்துறையில் ஆழமான தடங்களை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும் ஏறத்தாழ 75 ஆண்டுக்கால வளர்ச்சிகண்டுள்ள சிறுவர் பாடல் துறையில் சிறுவர் அறிவியல் பாடல் எய்தியுள்ள வளர்ச்சி பற்றிச் சுருக்கமாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாறு நோக்கும்போது குறைந்த எண்ணிக்கையிலான சிறுவர் பாடல்களின் வரவினையே காணமுடிகிறது. இவ்விதத்தல் சி.அகிலேஸ்வரசர்மா, மு.நல்லதம்பி, மாஹாகவி, கவி, கண்டி, மு.இராமச்சந்திரன், ச.அருளானந்தம், மாவை வரோதயன், த.துரைசிங்கம், ஆடலிறை, மு.பொன்னம்பலம், சிதம்பர பத்தினி, வளவைவளவன் மனோ.பற்குணம், ராணி சீதரன், வாகரைவாணன், இக்பால் அலி ஆகிய சிலரே இவ்வேளை நினைவிற்கு வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட கவிஞர்களின் பாடல்களை ஆழமாக நோக்கும்போது
மின்சாரம், வானொலி, தொலைபேசி, கணனி, ஈமெயில் முதலான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பற்றியே ஓரளவு அதிகமாகப் பாடியுள்ளமை புலப்படுகின்றது. இவ்விதத்தில் மின்சாரம் பற்றி முதல் முதல் பாடியவர் மூத்த கவிஞர்களுள் ஒருவராகிய மு.நல்லத்தம்பி எனில் ஈமெயில் பற்றி அண்மையில் பாடியவரும் மூத்த கவிஞருள் ஒருவராகிய தில்லைச்சிவனே. இவரது சுவைமிகு பாடல் பின்வருகிறது.
“மரதன் ஒட்ட மெயிலின் பின்னால்
குதிரை கோச்சு மெயில் பெற்றோம்
குதிரை வேகம் குறைவு என்றே
கொண்டு வந்தார் மெயில் ரயில்.
சீச்சி எங்கள் அவசரத்தை தெரிந்து கொள்ளாச் சுடு மூஞ்சி கோச்சி விட்டு விமானத் தபால் போட்டோம் விரைந்து போகவே
விமானம் வீட்டு முற்றத்திலே விசில் அடித்தா மெயில் தரும்? ஞானத் தாலே இருந்த இடத்தில் நாங்கள் அறிகிறோம்.
42

கண்கள் இமைக்கும் நேரத்திலே கணனி தரும் "ஈமெயில்’ மண்ணின் இந்தச் சாதனையை மனோ வேகம் என்பாரோ?” விஞ்ஞானிகள் பற்றி எழுந்துள்ள பாடல்கள் சிலவே. இவ்விதத்தில் கண்டி மு.இராமச்சந்திரன் சற்று அதிகமாக எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அவரெழுதிய பாடலொன்று இங்கு இடம் பெறுகின்றது.
ஆய்செக் நியூட்டன் - என்ற
“மரத்திலிருந்து காய்கனி - அங்கே அறிவுடையோனே தரையில் விழக் கண்டே புவியீர்ப் பென்றே - கண்டு மர்மம் விளக்கிய - மா புகன்ற மனிதனாம் மனிதன் யாராம்? எப்படி இப் புவி - ஆம்! மர்மம் விளக்கியமா எடை எனப் போட்டதோ? மனிதன் யாராம்? அப்படி யல்வேன் - நானறி
யாததோ கடலே! என்று கூறிய - எம் இனியன் நியூட்டனே" அறிவியல் விளைவினால் உருவான புகைவண்டி, கப்பல், விமானம் பற்றி அதிக பாடல்கள் எழுந்திருப்பதுண்மையே. எனினும் விண்வெளிக்கப்பல் பற்றிய அத்தகைய ஆக்கங்கள் குறைவு. இவ்விதத்தில் ‘அப்பலோ 8 பற்றிய ‘கவியின் பாடல் குறிப்பிடத்தக்கது. விண்வெளிப் பயண முயற்சிபற்றிய வரலாறு, அதனால் ஏற்படும் பயன் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் இந்நெடும் பாடல் பின்வருமாறு முடிகின்றது.
இமயத்தில் புலிபொறித்த பழங்கதையைத் தம்பி இனியேனும் சொல்லாதே இது பெரிய வெட்கம் பிரபஞ்ச இயக்கம் - கிரகங்கள் - ஐம்பூதங்கள் முதலியன பற்றி உருவான பாடல்களும் அரிதே. இவ்விதத்தில் முற்குறிப்பிட்ட “பிள்ளைப் பாட்டு தொகுப்பிலுள்ள (அகிலேஸ்வர சர்மாவின்) 'பூமியை அறிதல்' என்ற பாட்டே முதலில் எழுந்த ஆக்கமெனலாம். அண்மையில் மனோபற்குணம் எழுதியுள்ள பஞ்சபூதங்கள் பற்றிய பாடல் நாடகபாணியிலுள்ளமை கவனத்திற்குரியது.
இயற்கையின் செயற்பாடுகள் பற்றி எழுந்துள்ள பாடல்களுள் செயன் முறை ஊடாக அவற்றுக்கு விளக்கமளிக்க முற்படும் ச.அருளானந்தத்தின் ஆக்கங்கள் கவனத்திற்குரியவை. எ - டு:
கடலும் உப்பும்
"கடற்கரையில் சிறுவர்கள் கலத்தில் நீரை அள்ளினர் அடுப்பில் தீயை முட்டினர் அதிலே கலத்தை வைத்தனர்
43

Page 23
அடுப்பின தீயின் வெப்பத்தால் அசைந்து நீரும் கொதித்தது அடுத்து முடி அசைந்தது அருமை பாடம் புரிந்தது.
கொதிக்கக் கொதிக்க நீருமே குறைந்து கொண்டு போனது அதிக வெப்பம் கண்டதால் ஆவி ஆகிப் பறந்தது
கலத்தை எடுத்துப் பார்த்தனர்
கலத்துள் உப்பைக் கண்டனர்
குலுக்கிக் கூத்து ஆடினர்
கற்ற பாடம் புரிந்தனர்"
ஆரம்பத்திலே நான் குறிப்பிட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பற்றி
எழுந்தவை அவற்றின் வரவு, பயன் என்பன பற்றியே பேசுகின்றன. மாறாக அவை அவ்வாறு செயற்படுவதற்கான காரணம் பற்றி எடுத்துரைப்பனவல்ல. அவ்வாறான பாடல்கள் மிக அரிதாகவேயுள்ளன. எனினும் இ.சிவானந்தன் இப்பொருள் பற்றி பல பாடல்கள் எழுதியுள்ளமையும் ‘கண்டறியாதது என்ற தலைப்பிலே அது நூலுருப் பெற்றுள்ளமையும் பலரது கவனத்தை ஈர்க்கத் தவறிய விடயங்களாகும். நாட்டார் பாடல் மெட்டிலே - உரையாடல் பாங்கிலே அமைந்த அந்நூலின் பாடல்கள் அனைவரும் படித்தறிய வேண்டியவை. எனினும் அவற்றிலுள்ள பாடல்களைச் சில ஆய்வாளர்கள் சிறுவர்களுக்கேற்றவை என்று கூறினும் அவ்வாறு கூறுவது கடினமே. (கவிஞரும் சிறுவர்க்காக அவற்றை இயற்றவில்லை!) ஆயினும், வாசகர் சிந்தனைக்காக ஒரு பாடலின் ஒரு பகுதி இங்கு இடம் பெறுகிறது.
வெப்பமானி
கந்தையா:
ஆசுப்பத்திரியிலே நான் அடிக்கொருகால் கண்டிருப்பன் நேசுப்பெட்டைகள் வந்து காச்சல் அளப்பதனை கண்ணாடிக் குழாய்க்குள்ளே கச்சிதமாய் செய்துவிட்டான் என்னவிதமான இதுவெப்ப நிலை காட்டும்?
வடிவேலு
இரசவிழை இதற்குள்ளே இருப்பதனைப் பார்த்தாயா? சூடுற்ற பதார்த்தங்கள் விரிவடைதல் அறிவாய் நீ விரிவடையும் பாதரசம் மேலேறிச் சென்றிடுமே
எவ்வாறாயினும் முன்னர் சுட்டியது போன்று சிறுவர் அறிவியல்
44

பாடல்களின் வரவு குறைவாயினும் கிடைத்துள்ள பாடல்களையும் மேலே கூறியவற்றையும் வைத்துக் கொண்டு பின்வரும் மதிப்பீட்டினை முன்வைக்கலாம்.
(i) கணிசமானவை வெறும் தகவல் தெரிவிப்பாகவே உள்ளன (ii) சிறுவர் உளவியலுக்கமைவானவை அரிதாகவே காணப்படுகின்றன. அதே வேளையில் தமிழ்நாட்டில் இத்தகைய பாடல்கள் அதிகமெழு கின்றபோது இங்கு ஏன் குறைவாக எழுகின்றன என்றொரு கேள்வியும் எழுகின்றது. அதற்கு இவை விடையாகலாம்
அ) அறிவியல் கல்வி பரவலடையாமை ஆ) இவ்விடயத்தில் படைப்பாளர்களுக்கு நாட்டமிலாமை இ) இயற்றுவது கடினமாகவுள்ளமை ஈ) மரபுவழிச் சிந்தனைகளுக்கு ஆட்பட்டுள்ளமை எவ்வாறாயினும் வலுமிக்க ஊடகமொன்றின் முக்கியத்துவம் கவிஞர்களால் உணரப்படாமை எழுதப்படாமையும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவின் வெளிப்பாடாகவுள்ளது. இது பற்றி ஆழ்ந்து சிந்திப்பது அவசியமானது.
இறுதியாக, அறவியல் பாடலொன்றின் ‘அறிவியல் நோக்கும் வெளிபாட்டு முறைமையும் எவ்வாறிருக்க வேண்டுமென்பதைத் திறம்படக் காட்டும் பாடலொன்றினை இங்கு தருவது பொருத்தமானது; மு.பொன்னம்பலம் எழுதிய அது பின்வருவதாது: ஆம்புலியின் பூபாலன்
"பூபாலா பூபாலா எங்கே போனாய்? பூமிக்கு அப்பாலே நானும் போனேன்.
பூமிக்கு அப்பாலே எங்கே போனாய்? அம்புலியைத் பார்த்துவர நானும் போனேன்.
அம்புலியில் என்னென்ன பார்த்து வந்தாய்? பார்ப்பதற்கு அங்கொன்றும் இல்லை. ஒளவை பாட்டி கூட நான் போக ஒளிந்து கொண்டாள். பாட்டி என்று நம்முன்னோர் எதனைச் சொன்னர்? அம்புலியின் பாறைகளை கண்ட சொன்னர். அம்புலியில் நீ என்ன அறிந்து வந்தாய்? அந்தரத்தில் நான் நின்றேன் கொஞ்சநேரம் காற்றில்லை நீரில்லை உணவுமில்லை கதைப்பதற்கும் ஆள்கூட அங்கே இல்லை
ஆளில்லா ஊருக்கா இத்தனை போட்டி?
ஆளிருக்கும் ஊர்களுக்கு உதவி செய்வோம் அப்புறம் நாம் அம்புலிக்கும் பயணம் செய்வோம்.
29
45

Page 24
“பல்கலை வேந்தன்” கலைவாதி கலீல்
ந.பார்த்திபன்
மதாறு முஹைதீன் முகம்மது கலீல் என்ற பெயர் மறைந்து, கலைவாதி கலீல் என்ற புனைபெயர் நிலைத்து நிற்கும் வகையில் தன் பல்துறை ஆற்றலால் புகழ்பரப்பி நிற்பவர் இவர். இஸ்லாத்தில் தாஜுல் உலூம்' என்ற சொல்லின் பொருள் பல்கலை வேந்தன். நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கட்டுரையாசிரியர், கவிஞர், ஓவியர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், சஞ்சிகை ஆசிரியகுழு உறுப்பினர் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டதுடன் தான் ஈடுபட்ட துறைகளில் முத்திரை பதித்தவர். உண்மையில் ஒரு தாஜுல் உலூம் தான்.
ஆறு நூல்களின் சொந்தக்காரர். உலகை மாற்றிய உத்தமர் (இயல்இசைச் சித்திரம்) ஒருவெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி) கருவறையிலிருந்து கல்லறைக்கு, ஓ பாலஸ்தீனமே(கவிதைத்தொகுதிகள்) றோனியோக்கள் வாழுமா? (ஆய்வுக்கட்டுரை) எங்கிருந்தோ ஒரு ஜீவன் (நாவல்) என்பன இவரின் ஆக்கங்கள். இவற்றில் ஒருவெள்ளி ரூபாய்(சிறுகதைத்தொகுதி) எழுத்தாளர் தேசிய கவுன்சில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. நாவல் விரைவில் வெளிவரவிருக்கிறது என்பதும் கவனத்திற் கொள்ளப்படத்தக்கது. கொழும்பு ஹமீத் அல்-ஹ"சைனி கல்லூரியில் ஆசிரியப் பணிபுரிந்து உதவி அதிபராகப் பதவியுயர்வு பெற்று அளுத்கமை ஆசிரிய பயிற்சிக் கலாசாலைப் பிரதி அதிபராகி இன்று தர்காநகர் தேசிய கல்லூரியின் உபபீடாதிபதியாகி தனது கல்விப் பணியைத் திறம்படச் செய்து வருகிறார். 1943ம் ஆண்டிஸ் பிறந்த இவர் இன்றுவரை கல்விப் பணி, இலக்கியப்பணி, கலைப்பணி புரிந்து வருபவர். 1956ம் ஆண்டிலிருந்து எழுதிவருகின்றார் என்று பார்க்கும் போது, தனது 13வது வயதிலிருந்து 48 ஆண்டுகளாக எழுதிக் கொண்டு இருக்கிறார். இன்னும் எழுதுகிறார் என்பது திருப்தி தருகிறது.
ஜனாதிபதி டீ.பி. விஜயதுங்காவினால் தாஜுல் உலூம் என்ற பட்டமும் கலாசார அமைச்சர் லகூழ்மன் ஜெயக்கொடியினால் கலாபூஷணம் விருதும் இலக்கிய அமைப்புக்களால் கலைவாதி, தீந்தமிழ்ச் செல்வன் பல்கலைக்குரிசில் என்ற பட்டங்களும் அளிக்கப்பட்டும், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 46
 
 

மாநாட்டில் பொன்னாடை போர்த்தியும் பொற்கிழி வழங்கியும் கொளரவிக்கப் பட்டவர். இவரது “சகோதரத்துவமி என்ற சிறுகதை இன்ஸான் என்ற வாரப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு அனைத்துலக இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலரில் மறுபிரசுரம் செய்யப்பட்டு ராவய என்ற நாளேட்டிலும் சிங்கள மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரசுரமாகியது என்பது இவரின் எழுத்து வன்மைக்கு சான்று பகரும்.
சர்தார் மேலும் புரட்சிக் கவிஞன் கே!, மன்னிநகர்க்கலில், மன்னாரான், புரட்சிதாசன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். இப்பெயர்களில் சில என்னால் சூட்டப்பட்டது எனக் கூறும் இன்ஸானின் முன்னாள் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீப் பின்வருமாறு குறிப்பிடுவது சிந்தையைத் தொடுகிறது. "முற்போக்குச் சிந்தனையே கலீலின் பேச்சு, மூச்சு எண்ணம், எழுத்து எல்லாம்! இடதுசாரிக் கொள்கை, புரட்சிகரக் கருத்துகள்; அதீத வார்த்தைப் பிரயோகங்கள்; பாட்டாளிவர்க்க நிலைப்பாடு; பஞ்சை பராரிகளின் ஆபத்பாந்தவனாகத் திகழும் இவர் கலை - இலக்கியத்தில் ஆழக்கால் ஊன்றினார்; அகலக்கால் பதித்தார்.” இவருடைய வானொலிப் பேச்சுப் பற்றிக் குறிப்பிடுபவர்கள் ‘மைக்ரோபோனிக் குரல் வளத்தால் வானலைகளில் நேயர்களை வாரி இழுத்துக் கொண்டிருக்கும், எத்தகைய சிக்கலான கருத்துக்களையும் வேகத்துடனும் விவேத்துடனும் எழுத்தாக வடித்துத் தந்து கொண்டிருக்கும், சுறுப்சுறுப்பான ஆரோக்கியமான களைப்பே அற்ற ஓர் அற்புத சிருஷ்டி" என்பார்கள். இசைப்பாடல், மேடைப்பேச்சு , கவியரங்கக் கவிதை வாசிப்பு, உரைச்சித்திரம், அறிவிப்பு எனத் தன் குரல் வளத்தாலும் எல்லோரையும் கவர்ந்தவர் கலில் அவர்கள்.
எல்லோருக்கும் வாய்க்காத கலையும் இலக்கியமும் இரண்டு கண்களாய் அமையப்பெற்றவர் இவர் "பாமிஸ்" என்ற மாசிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த காலத்தில் சிறுகதை, கவிதை இலக்கியக் கட்டுரை என்பவற்றுக்குப் பொறுப்பாயிருந்ததோடு சித்திர வேலைப்பாடுகளுக்கும் பொறுப்பாயிருந்துள் ளார். தொடர்ந்து படமும் வரைந்து பொருத்தமான கவிதையும் எழுதி இன்ஸான் வார ஏட்டின் பக்கங்கங்களை அலங்கரித்து இன்ஸான் வார ஏட்டையும் பாமிஸ் மாசிகையினையும் பலரது கவனத்தை ஈர்க்க வைத்த பெருமைக் குரியவர் கலில்.
ஓர் அராபிய கூடார்த்த சித்திரம் ( கேரி - கேட்சர் ); அந்த அங்கத ஒவியம்; தமிழ் மொழியில் முதற்தடவையாக கருத்தோவியமாகப் புனையப் பட்டது .அதுதான் இவரது வெற்றிக்குக் காரணமென்று சொல்லலாம். இன்று கூட அழகியலும் தமிழும் விரிவுரையாற்றும் தகுதி பெற்ற ஒருவர் கலைவாதி கலில் தான். இது கணவனும் மனைவியும் எழுத்துத்துறையில் இருப்பது போன்ற ஒரு வரப்பிரசாதம். இது கலீலுக்கு வாய்த்திருக்கிறது. இவ்வாறான பல்துறை ஆற்றல் கொண்ட ஒருவர் அறுபது வயதை 13-10-2003ல் பூர்த்தி செய்து கல்விப் பணியிலிருந்து ஓய்வினைப் பெற்றாலும் கலை இலக்கியப் பணியில் ஓய்விலாது உற்சாகமாக உழைக்கவும், தனது கல்வி அனுபவங்களை கட்டுரைகளாக எழுதவும் வேண்டுமென்பது வாசக நெஞ்சங்களின் வேணவாவாகும். D 47

Page 25
விவாத ఇమిమి-ళ్లీ
"மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யக்கூடியவை செய்யவேண்டியவை" “ஞானம் இதழில் கடந்த சில மாதங்களாக "மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யப்படக்கூடியவை, செய்யப்படவேண்டிவை என்னும் தலைப்பிலமைந்த விடயத்தை உள்வாங்கியதான கருத்துப் பரிமாறல்கள், மலையக எழுத்தாளர்களான லெனின் மதிவானம், சாரல் நாடன், பாலா சங்குப்பிள்ளை, இல.நாகலிங்கம் ஆகியவர்களால் மேற்கொள்ளப்பட்டதை ஞானம் வாசகர்கள் அறிவார்கள்.
ஞானம் ஜுலை இதழில் திரு.பாலா சங்குப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் திரு. இல.நாகலிங்கம் அவர்கள் தனது மாற்றுக் கருத்துக்களை ஞானம் ஆகஸ்ட் மாத இதழில் எழுதியிருந்தார்கள். திரு.பாலா சங்குப்பிள்ளை அவர்களின் கருத்துக்களின் போக்கைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற கருத்துக்களை அவர் முன்வைப்பதை விடுத்து, வேறு யாரையோ சாடவேண்டுமென்ற முனைப்புடன் தனது கருத்துக் களை இடைச்செருகலாகச் செருகியிருக்கிறார் என்ற எண்ணமே, அவர் கட்டுரையை வாசிப்போர் மனதில் மேலோங்குகிறது.
ஆரம்பத்தில் திரு.லெனின் மதிவானம் அவர்களால் எடுத்தாளப்பட்ட கருத்து வெளிப்பாட்டின் தலைப்பம்சமானது ‘மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யப்படக்கூடியவையும், செய்யப்பட வேண்டியவையுமே அன்றி, கடந்த காலங்களில் செய்து முடிக்கப்பட்டவை சம்பந்தமானவையல்ல என்பதை முதலில் திரு.இல.நாகலிங்கம் அவர்கள் புரிந்துகொண்டிருந்தால், தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க முடிந்திருப்பதோடு கசப்பான காழ்ப் புணர்ச்சி வெளிப்பட்டிருப்பதையும் தவிர்த்திருக்கமுடிந்திருக்கும்.
1930களிலிருந்து தோற்றம் பெற்ற மலையக இலக்கியத்தின் வளர்ச்சி யில் பல இலக்கியவாதிகளினதும் அரசியல்வாதிகளினதும் பங்களிப்பு இருந் துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. மலையக இலக்கியத்தின் அசுர வளர்ச்சியையும், அதன் சாதனை முயற்சிகளையும் திரு.பாலா சங்குப்பிள்ளை, புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு, ‘திருகோணமலை இலக்கிய ஒன்றியத்திற்காக வெறுமனே வக்காலத்து வாங்கித் தனது கருத்துக்களை முன்வைக்க வரவில்லை என்பதையும், மூத்த தலைமுறை இலக்கியவாதிகளின் சுயநலப்போக்கையும், ஒற்றுமையில்லாத்தனத்தையும் வாசகர்களுக்குத் தோலுரித்துக் காட்டவே அவர் அவ்விதம் எழுதினார் என்பதையும் திரு.இல.நாகலிங்கம் அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எமது திருகோணமலை இலக்கிய ஒன்றியத்தின்மீது வெறுமனே
48

எடுத்தேன் கவிழ்த்தேன் என்றவகையில் துரைவி போன்ற பெரும் செல்வந்தர் களின் செயற்பாட்டுடன் எம்மை ஒப்பிட்டுக் கருத்து வெளியிட்டிருக்கும் திரு.இல.நாகலிங்கம் அவர்களின் மனத்தூய்மையின்மையை எண்ணி வேதனைப் படுகிறேன். எமது ஒன்றியம் சிறுகதை இலக்கியத்தினூடாக, சமகால நிகழ்வு களை எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறதே அன்றி, பணம் பிடுங்கும் நோக்கிலோ அல்லது பணம் சம்பாதிக்கும் நோக்கிலோ அல்ல. இலக்கியம் கைப்பணத்தைப் பிடுங்கிச் செல்லுமேயன்றி பையை நிரப்பிவிடாது என்பதை யாவரும் உணர்வர்.
இந்த வகையில் பல இலட்சம் ரூபாய்களை இத்துறைக்குள் நான் முடக்கியிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இப்பாரிய முயற்சியை எமது ஒன்றியம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய குறிக்கோளுடன் செயல்படுவதனால்தான் இத்தொகுப்புக்களில் இணைந்து கொள்ளும் எழுத்தாளர் களைத் தொகுப்பின் சில பிரதிகளை வாங்கி, அவரவர் வாழும் பிரதேசங்களில் அவற்றை விநியோகித்து உதவுமாறு கேட்கிறோம். இதனை நாம் ஒரு நிபந்தனையாகப் பேணுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
1. ஈழத்து நூல்களுக்கு முறையான சந்தைப்படுத்தும் வாய்ப்பு இல்லாமை. 2. புத்தக விற்பனை நிலையங்களுக்கு நூல்களின் விலையில் 50வீதம் கழிவு
கொடுக்க வேண்டியிருக்கும் துர்ப்பாக்கிய நிலைமை. 3. ஈழத்து நூல்களுக்கு பரந்த வாசகர் பரப்பு இல்லாமை. 4. நூலகங்கள் ஈழத்து நூல்களைக் கொள்வனவு செய்வதில் காட்டும் தயக்கம். 5. தொகுப்பில் இணைந்து கொள்ளும் எழுத்தாளர்களைச் சில பிரதிகளை வாங்கச் செய்வதன் மூலம் அவை அந்தந்தப் பிரதேச வாசகர்கள் சிலரையாவது சென்றடையும் என்ற எமது எதிர்பார்ப்பு.
திரு. துரை விஸ்வநாதன் போன்றவர்களின் உதவி கிடைக்கும் வரை மலையக இலக்கியவாதிகள் காத்திருப்பார்கள். ஆனால் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நாட்டம் கொண்ட எம்மால் அது முடியாது. எழுத்தாளர்கள் ஒற்றுமைப்பட்டால, ஒத்துழைத்தால் எதைத்தான் சாதிக்க முடியாது? நாம் இன்னும் சாதிப்போம். மலையகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஏதோ ஒருவகையில் தங்களாலியன்ற இலக்கியப் பணிகளை முன்னெடுத்துச் செயல் பட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய அமைப்புகளின் செயற்பாடுகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தேவையற்ற குறைகளைக் கூறுவதை இனியாகிலும் நிறுத்திவிட்டு, திரு.லெனின் மதிவானம் அவர்களால் முன்வைக்கப்பட்ட ‘மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யபடக்கூடியவை, செய்யபட வேண்டியவை எவையென்று நன்கு ஆழமாகச் சிந்தித்து, திரு.பாலா சங்குப் பிள்ளை அவர்களின் யதார்த்தமான வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுத்து அனைத்து மலையகப் படைப்பாளிகளுமே மலையகக் கலை இலக்கியத்தை எதிர்காலத்தில் நல்லமுறையில் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள். நாமும் உங்களுக்குத் தோள் கொடுப்போம். நட்புக்கரம் நீட்டுவோம். அதுவே ஆரோக்கியமான செயற்பாடாக அமையும். - எஸ்.செல்வகுமார்,செயலாளர்,திருகோணமலை இலக்கிய ஒன்றியம். 49

Page 26
\ ------------------------------------------- صبر
ಹló[@ಣೆ லை இலக்கிற நிகழ்வுகள்
பார்வையும் பதிவும்
s
~ செ.சுதர்சன்
مح -------------------------------------------N-S இலங்கையின் தேசிய சாகித்திய விழா அண்மையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் சென்ற ஆண்டு வெளியாகிய நூல்களுக்குரிய சாகித்திய விருதுக்ள் வழங்கப்பட்டன. தேசிய சாகித்திய விழா என்பது மும்மொழிகளுக்கும் உரியதாக அமையவேண்டும். ஆனால் சாகித்திய இரத்தினம், தமிழ் சாகித்திய விருதுகள் ஆகியனபற்றிய அறிவிப்புக்களே தமிழில் இடம்பெற்றன. தலைவர் உரை, பிரதமவிருந்தினர் உரை, கெளரவ விருந்தினர் உரை, ஆய்வுரை முதலியன எல்லாம் சிங்கள மொழியிலேயே நடைபெற்றன. நன்றியுரைகூடத் தமிழில் இடம்பெறவில்லை. படைப்பாளிகள், படைப்புகள், விருதுகள் அடங்கிய விபரக்கோவையில் சிங்களத்துக்குரியவை சிங்களமொழியிலும், ஆங்கிலத்திற் குரியவை ஆங்கிலத்திலும் இடம்பெற, தமிழிற்குரியவையும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. நாட்டில் சமாதானம் பற்றிய புரிந்துணர்வு ஆழ அகல விரியும் இக்காலத்தில் இடம்பெற்ற சாகித்திய விழா நாட்டில் உள்ள மும்மொழிகளுக்கும் சமஅந்தஸ்து வழங்காமையையிட்டுக் கலையுலகு கண்ணிர் வடிக்கிறது. . م
சிறுவர் இலக்கியத்துறையினை வளர்க்கும் பொருட்டு கொட்டக்கலை இலக்கிய வட்டம் தளிரே தங்கமலரே என்ற சிறுவர் இலக்கிய நூலினை வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும். மறுப் 'தடைசெய்யப்பட்ட கவிதை என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ளார். அண்மைக் காலத்தில் வெளியாகிய கவிதை நூல்களில் இந்நூலும் முத்திரை பதித்துள்ளது.
யுகக் கவிஞன் பாரதியின் நினைவுவிழா நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புகள் பல்வகைச் சிறப்புகளுடன் விழாவெடுத்து பாரதிபுகழைப் பாடின. மலையக இந்துமாமன்றம் எடுத்த பாரதி விழாவின் தலைவராக கலாநிதி துரை. மனோகரன் கலந்துகொண்டார். தமிழ்த் துறை விரிவுரையாளர் பரா. ரதீஷ், பத்திரிகையாளர் க.ப.சிவம், சட்டத்தரணி ரொஸ்கி ஆகியோர் பாரதி பற்றிய பன்முகப் பார்வையினை இலக்கியச் கவையுடன் எடுத்தியம்பினர். பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மலையகத்தில் நடைபெற்ற பாரதி விழாக்களில் இவ்விழா SO
 

குறிப்பிடத்தக்கதாகும்.
இருபாலைப் பாரதி கலாமன்றம் ஏற்பாடுசெய்த பாரதி விழாவில் "பண்பாட்டின் வேராகப் பாரதி என்ற தலைப்பில் கருத்தரங்கமும் பண்பாடு உயர்ந்திடப் பாடு என்ற தலைப்பில் கவியரங்கும் நடைபெற்றன. கவியரங்கிற்கு கவிஞர் இ.முருகையன் தலைமை தாங்கினார். காலத்தைப் பாடிய கவியரங்கின் கவிஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
நிர்மலாஞ்சலி பரதநாட்டியக் கல்லூரியின் பதினேழாவது ஆண்டு நிறைவுவிழா கொழும்பில் "பரதமோகனம்' என்றபெயரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக நிர்மலா ஜோனின் பாசத்தின் போர் என்ற நடனம் இடம்பெற்றது. இவர் மஹாகவியின் ‘அகலிகை என்ற படைப்பைச் சென்ற ஆண்டு நடன வடிவில் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பில் பிரபல நடனப் பாடசாலையான பரத கலாலயா தனது இருபத்தோராவது ஆண்டு நிறைவுவிழாவை கோலாகலமாகக் கொண்டாடியது. மட்டக்களப்பின் நடனத்துறை வளர்ச்சியில் இக்கலை நிலையம் பெரும் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சிகளில் கிழக் கிலங்கையில் நடைபெற்ற எஸ்.என்.வாசனின் ஓவியக்கண்காட்சி முதலிடம் வகிக்கிறது. ‘துயர்களின் தூரிகை வீச்சு என்ற தலைப்பிலான இவ்வோவியக் கண்காட்சி ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அவலங்களை வர்ணங்களில் வடித்துக் காட்டியிருந்தது.
வத்துகாமம் பாரதி தமிழ் மகாவித்தியாலயம் நவராத்திரி விழாை முன்னிட்டு நவராத்திரிப் பாக்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளது. சக்திக்குரிய பாடல்கள் அடங்கிய இந்நூல் இளந் தலைமுறையினருக்குப் பெரும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. நவராத்திரி விழாவை முன்னிட்டு நாடுபூராவும் சிறப்பான கலைநிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன.
கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கலைவிழாவில் அப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் மூவருக்குச் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி எம்.இளஞ் செழியன், திரு. ந.சத்தியேந்திரா, திரு. ஜே.ழரீரங்கா ஆகியோரே சாதனையாளர் களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். அதீத திறமை, தன்னலமில்லாத் தலைமைத் துவம், கல்வியிற் சிறப்பு முதலிய தகைமைகளுக்காகவே இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த தமிழிசைக் கலைஞராக இவ்வாண்டு டி.எம்.தியாகராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியாரின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருதினை இவ்வாண்டு டி.எம்.தியாகராஜன் பெற்றுக்கொண்டார். புகழ் பெற்ற இசைமேதையான இவர் இசைத்துறையில் பல வித்துவான்களை உருவாக்கியமைக்காகவும், தம்வாழ்நாளை இசைத்துறை வளர்ச்சிக்காக அர்ப்பணித்தமைக்காகவும் இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது. டி.எம்.தியாகராஜன் அவர்கள் தமிழ் இசை அறிஞர்கள் வரலாற்றில் விலத்திப் 51

Page 27
பார்க்கமுடியாத ஒருவராகத் தம்மையும் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். ·
தமிழுலகின் தலைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘சிந்தையில் ஆயிரம்' என்ற நூல் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. ஜெயகாந்தனின் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இரா.சுந்தரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைத்தார். இதன்போது உரையாற்றிய ஜெயகாந்தன் "சிவப்பு என் சிந்தனையின் வெளிப்பாடு, வெள்ளை என் உள்ளம். நான் எழுதினேன் என்றால் பொய். நீங்கள் தான் எழுதினிர்கள். நான் கருவி. எது என்னைச் சுவாசிக்க வைத்ததோ அதுவே எழுதவும் வைத்தது" என்றார். ஆயினும் எழுத்துக்கும் செயலுக்கும் முரணான எழுத்தாளர் என்று சமீப காலமாக ஜெயகாந்தனைச் சில விமர்சகர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
காத்தான்குடியில் தமிழ் - முஸ்லிம் நட்புறவு இலக்கிய விழா சிறப்பாக நடைபெற்றது.
இசையுலகின் பிரபல பொப் பாடகி மடோனா எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். ஐந்து நூல்களை வெளியிடும் அவரது ஆவலின் முதற்கட்டமாக அண்மையில் 'தி இங்கிலீஷ் ரோஸஸ்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். லண்டனில் உள்ள நூறு குழந்தைகளை அழைத்து இதன் கதையை விபரித்துள்ளார். 25.09.2003 அன்று நூறு நாடுகளில் ஒரே நேரத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. பாடகர்கள் நடிகர்களாகவும், நடிகர்கள் பாடகர்களா கவும் மாறும் இக்காலத்தில் பாடகர் இலக்கியவாதியாக மாறுவது பெருமைக் குரியதே.
கோலாலம்பூரில் 9வது உலக இந்து மாநாடு வெகு சிறப்பாக நடை பெற்றது. பல நாடுகளிலிருந்தும் சமயப் பெரியார்கள், கல்விமான்கள், ஆய்வாளர்கள் முதலியோர் கலந்து மாநாட்டினைச் சிறப்பித்தனர்.
அவுஸ்திரேலியாவின் லிற்கம் யுக்ரேனியன் மண்டபத்தில் காத்தவராயன் கூத்து சிறப்பாக அளிக்கை செய்யப்பட்டது. சிறப்பாக ஈழத்தின் வடபகுதியில் ஆடப்படும் இக்கூத்து சிந்து நடைக்குரிய அளிக்கைப் பாங்கையும் கொண்டமைந் தது. அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்துக் கலையுள்ளங்களாலும் ஆற்றுகைக் கலைஞர்கள் பாராட்டப்பட்டனர்.
'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று பாரதி கூறியதுபோல நம்நாட்டுக் கலை இலக்கியங்களை உலக அரங்கில் அறிமுகப் படுத்தி அங்கிருக்கும் கலையிலக்கியங்களை நம்நாட்டிற்கு அறிமுகம் செய் வோம். அதைவிடுத்து அங்கிருந்து மட்டும் வாங்கிக் கொண்டிருப்பது நம்நாட்டுக் கலை இலக்கியத்தை வளம்படுத்தாது. வாங்குபவர்களின் வங்கிக் கணக்கு களை மட்டுமே வளம்படுத்தும்.
52

ஈழத்து மாண்புறு மகளிர்
எழுதியவா : பத்மா சோமகாந்தன்
வெளியீடு : குமரன் புத்தக இல்லம். கொழும்பு
முதற் பதிப்பு: மே 2003
விலை : b5 300/-
திருமதி பத்மா சோமகாந்தனின் இந்த நூல் சில சுவாரஸ்யமான வரவேற்புகளைப் பெறப்போகிறது. “பெண்ணிலைவாதத்தையே பேச லாமா” என்று கோபித்த பிரமுகர் களைவிடுத்து நோக்கினாலும் இந்நூ லில் இடம்பெறும் மகளிர் பலர் பற்றிய காய்தல் உவத்தல்கள் காரணமாக ஒரு விமர்சனம் வரும்; இன்னொன்று இதில் இடம்பெறாதவர்கள் பெயர் பட்டி யல் பற்றிவரும். மேலும் ஒன்று, ஏற் கனவே நமது மண்ணின் வளத்திற்கு உரம் சேர்த்த பெருமாட்டிகளின் பெயர் இல்லையே என்ற வருத்தம் கிளம்பும். எனது மனமே மூன்றாவதைச் சுட்டி நிற்கின்றது. ஈழத்தின் பிரபலமான பெண் பாடசாலைகள் பலவற்றில் அதிபர்களாகவிருந்து பெரும்பணி செய்த மகளிர்பற்றியும், பல்கலைக் கழகங்களில் அறிஞர்களாக விளங் கிய பெண்மணிகள் பற்றியும் சமூக சேவகிகளாக விளங்கிய தம்நலம் மறந்த பெருமகளிர் பற்றியும் மண்ணி னதும் மக்களதும் விடுதலைக்காகப்
53
போராடிய வீரப் பெண்களைப் பற்றி யும் நமது கலைவளங்களை விஸ் தரித்த படைப்பியற் கலைஞர்களைப் பற்றியும் நிச்சயமாக ஒரு பதிவு இருத்தல்வேண்டும். என்பார்வையில் இந்த நூல், அந்தத் தேவையை வற்புறுத்துகிறது எனலாம்.
- கார்த்திகேசு சிவத்தம்பி
ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் எழுதியவா : கருணாகரன் வெளியீடு : மகிழ் புதுக்குடியிருப்பு முதற் பதிப்பு: மே 2003 விலை : b70/-
எவையெவற்றை எப்படியெப்படி சக மனிதரிடம் பகிர்ந்து கொள்வது அவசியமெனத் தோன்றினவோ அவையே இந்தக் கவிதைகள். சக மனிதருடன் பேசுவதற்குரிய ஒரு மொழியை, பேசும் பொருளுக்குரிய மொழியை இக் கவிதைகள் கொண் டிருக்கின்றன. இது நாம் வாழும் இன்றைய காலச் சூழலின் அவசிய மாயிருந்தது. இந்தக் கவிதைகளில் பெரும்பாலனவை போர் உக்கிரம் பெற்றிருந்த சூழலில், வெளியுலகத்தி லிருந்து பலவகையிலும் துண்டிக்கப் பட்டிருந்த ஒரு பிரதேசத்திலிருந்து 6t(pg5LLILL-606).
..இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நிகழ்ந்துவரும் எமது விடுதலைப் போராட்டத்தில் தம் வாழ்வையும் கனவையும் வைத்துப் போராடி வாழும் மக்களையும் இக் காலகட்ட நிகழ்வுகளையும் நிகழ்ச்சிப் போக்குகளையும் இந்தக் கவிதை களினுாடே பேச முயன்றிருக்கிறேன். - கருணாகரன்

Page 28
ஒறது.ஆர் ടൂ,
(BI-330ERCE S.
அன்புடனும் மதிப்புடனும் ஞானம் ஆசிரியருக்கு,
தரமான அளவான இதழாக, ஒழுங்காக வெளிவரும் ஞானத்திற்கு என் பாராட்டுக்கள். ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கும் இலக்கிய இதழாக ஞானம் பரிமளிப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. சாயங்களைப் பூசி மற்றவரைக் கடிக்கும் சிறு சஞ்சிகைகள் மத்தியில் மக்கள் உணர்வுகளையும், வாழ்வையும், அவலங்களையும் ஏன் எதிர்க்குரலையும் வெளிப்படுத்துவது கணிப்புக்குரியது. ஈழத்து நம்பிக்கைகள் அஞ்சலிகள், சமகால இலக்கிய நிகழ்வுகள், நேற்றைய கலைஞர்கள் பதிவுக்கும் இரசனைக்கும் உரியவை. தஞ்சைக்கரதம் இன்னும் ஆழமாக தமிழக மனத்துடன் வருவது விரும்பத்தக்கது. பேராசிரியர் சிவத்தம்பி எதிர்கால இலக்கியவாதிகள் ஆழமாக உருவாகும் சூழலை ஏற்படுத்துகிறார். தொடரட்டும் உங்கள் பணி. கரீகணேசன், விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம்
நா.சோமகாந்தன் ஐயாவுடனான நேர்கானல் பல விடயங்களை இன்றைய வாசகர்களுக்கு கூறுகின்றது. இ.மு.எ.சங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அதன் அங்கத்தவர்களே முட்டைகளைப் பொக்கெற்றுக்குள் கொண்டு சென்று எறிந்திருக்கிறார்கள். சங்கத்தின் கட்டுப்பாடுகளை உதாசீனம் செய்கின்ற அங்கத்தவர்கள் பலர் இ.மு.எசவில் இருந்திருக்கிறார்கள் என்பது அவரது
நேர்காணல் மூலம் தெரியவருகிறது.
- நா.சுந்தரலிங்கம், பொவிகள்ை.
ஞானம் புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்று வருகிறது. மகிழ்ச்சி. பேராசிரியரின் அநுபவங்கள் சுவையானவை. ஒரு கதையைப் படிப்பது போன்ற அநுபவத்தைத் தருவது மகிழ்ச்சியானது. மென்மேலும் தொடர்ந்தாலும் வரவேற்கக் கூடியது. இவ்வரிசையில் வேறு சிலரையும் சேர்த்துக்கொள்ளத் திட்டம் கொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். தங்கள் பணி சிறப்பதாக,
- திருமதி அன்னலட்சுமி இராசதுரை, கொழும்பு.
இம்முறை வேறு வேறுருவும் வேறு வேறியற்கையும் என்ற கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் எழுதிய பகுதியைத் தாங்கள் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் வரம்பு மீறிய சொற்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று முணுமுணுப்பது கேட்கிறது. ஆனாலும் தமிழர் பண்பாடு என்று ஒன்று இருக்கிறதல்லவா? - வை. லலிதாம்பாள், வட்டுக்கோட்டை வாவ்! கம்பவாரிதியாஸ் இப்படியும் இளமைத்துடிப்புடன் எழுத
முடிகிறதா?. முக்காலமும் உணர்ந்த முனிவர் அவர் பாராட்டுக்கள்.
- எம். இராசதுரை, மானிப்பாப்.
54
 

சிகரமேறுகை
தோழி!
பித்தவெடிப்புக்களால் பாத விளிம்புகள் பிளந்து, ஒழுகும் குருதி பாதச் சுவடுகளுக்கு உரு கொடுக்க, தலையெழுத்தைத் தகர்க்க முனையும் கூடைக் கயிற்றிற்கும் கொங்காணிக்கு மிடையிலான போரியலைத் தலைமேல் சுமந்து, கவசப் போர்வையெனக் கனமுடைய படங்கு சுற்றி, பசிக்கு வரம்பிட
அடிவயிற்றை இடைக் கயிற்றால் இறுக்கி, இமைகளுடைத்து எகிறும் நரம்போடிய விழிகளின் முதுகில் வரண்ட கனவுகளைச்
சுமந்தபடி வழிகாட்டும் வரிச்சி யை வலக்கரமேந்தி
வலி மிகு உயிர்ப்புடன் தொடரும் - உன் சிகரமேறுகை
- பத்தனையூர். வேலாயுதம் தினகரன்
WW

Page 29
தங்கத் தட்டில் வைத்தே
தருவாரோ உரிமை த அங்கம்குளிர அவரை வா அகமகிழ்வாரோ? அன் எங்கள் நாட்டுப்பிரசை இக்
எண்ணி மகிழ்வாரோ? சங்கம் முழங்கிச் சகோதரர் சாற்றி மகிழ்வாரோ? ச
சோதனைச் சாவடிகளமை சோதிக்க நினைப்பாரே வேதனை தந்திட தடைகள் வீண்துயர் தருவாரோ சாதனையென்றே மாதரின்
சடுதியில் களைவாரோ யூதனைப்போல தமிழர்தம் சுடர்வாள் கொண்டெ
போரைத் தொடங்கும் பொ பொறுப்புடன் செய்வா
"08
வேரையமிக்க வேண்டிய
விரைந்தே முடிப்பாரோ இளரைக் கொளுத்தும் உலு
உடனே செய்வாரோ?
பேரைக் கெடுத்து உலகோ NU பேடிக வொன் றாவாே s
Printed by Unie Arts
 

போகிறார்
புரட்சிபாலன், திருகோணமலை
னைத் தமிழருக்கு? ரீயனைத்தே iபு செப்வாரோ? வரென்றே
எரிச்சலுறுவாரோ? வரென்றே மத்துவமளிப்பாரோ?
க் தமீண்டும் ா? தொடர்ந்து ளைப்போட்டு
பெரும் கற்பைச் ? கொடும் உயிரை டுப்பாரோ?
ல்லாத்தனத்தை ரோ? தமிழின்
விகள் ? தமிழர் த்தத்தனத்தை
அதனால் முன்னால் Iff?
(Pvt) Ltd.
蜀