கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.11

Page 1


Page 2
(1 مخال Չարլ-ջն
ஆற்றல் விருக்கல் ஆல்பதற்கென்றே
| jo i istili siste pisali.
இரு
இ ை 。
இரண்டு விதிகளில் கொண்டவள்
iš išsiša
išsis
இல்லுரு தி ஸ்வில்லையோ
teisiškai sijini
| gjörlegri sig siði seigflegir Բտիկինետիկի:ս տնիմիտի
išsišalisis išsis իtտիեֆի
S. லு:
մին:Ա 、š、 :::
iš šešis šešis sisènsi šī šeigš ir igs నై చై
 
 
 
 
 
 
 
 

ஞானம் ஒளி-04
il_Î-[]s
, 24 film" Yıllı r r i : தி.ஞானசேகரன்
துண்ை ஆசிரியர் #& i ! புலோலியூர் க.சதாசிவம் அந்தனி ஜீவா
இண்ைபம் பதிப்பு ஆசிரியர் : | ஞா.பாலச்சந்திரன்
ஒவபர் பீர் நிக்கோ
நா. ஆனந்தன்
கண் n அண்ாப்பு
கெ.சர் வேளப் வரன்
தொடர்புகளுக்கு - - - - -
தி.ஞானசேகரன் 19/7, பேராதனை விதி, கண்டி.
()yII.(Ei 1. - 081-2478570(Off.) 08-223-1755 (Res.) F: x - (81-223,1755
E-Mill
III II i III III: girine tryil Լիլի, եւ լի || |
آیر
சிறுகதை
இந்திரர்கள் நாடும் அகலிகைகள் . 8
வீ.என்.சந்திரசாந்தி
"இத்துவரும் சுமைதாங்கிகள் .  ெ
முத்து
கட்டுரைகள் எழுதத்தாண்டும் என்னங்கர் - 13
கலாநிதி தரை.மனோகரன்
இலங்கையில் தொலைக்காட்சி நாடகங்கள் . 16
மாண்ரோதயன் பிரெஞ்சுத் திரைப்பட விமர்சனம் . I
எம்.கே.முருகானந்தன்
"மறுமலர்ச்சி' எழுந்தாளர். 25
Լյl, WH I JյIIILII8315:T
கார்த்திகேசு சிவத்தம்பி
. . . . . . . . . . . . . . . . . . . .
புலோனியூர் க.சதாசிவம்
I TLé hm|TT. . . . . .
தமிழிசை உலகில்.
கலைப்பேரரசின் நினைவாக. . 17
ந.சோபசாந்தன்
போட்டிப் பரீட்சை . 고
ஜி. பிரசாந்தன்
சொல்விடுங்கோ.17
ஆராணி
பாகான் கபீர் .ாப  ே
TA III: IJT
சோனக்கிரி
சந்திர கிரகணம் . 40
கவிஞர் ஏ.இக்பால் இன்னுமொது துருஷேத்திரர்?. 58
வாகன்ரான் Apå + 1.s er " | - 5 *
த.ஜெயசீலன்
நேற்றைய கலைஞர்கள்
இலக்கிய நிகழ்வுகள் . 26 ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள்-2 . நெற்றிக்கண் . ... I மலேசிய மடல் .ா 29 விவாதமேடை . - 45
...
வாசகப் பேசுகிறார் . |

Page 3
.' 素 கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் لر .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܓܠ நிலையான சமாதானம் நீடிக்க கலை இலக்கியவாதிகளின் பங்கும் பணியும்
கிலை இலக்கிய வாயிலாக நம் நாட்டில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்திச் சமாதானத்திற்கு வலுவூட்டும் பெருநோக்குடன் ‘ஹறிறு அமைப்பு நாடெங்கிலுமுள்ள கலை இலக்கிய வாதிகளை ஒன்றிணைத்துக் கலைக்கூடல் நிகழ்வொன்றினை சமீபத்தில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடத்தியது.
சிங்களப் பேரினவாதிகள், இனவாத ஊடக வியலாளர்கள் ஆகியோரின் அச்சுறுத்தலின் மத்தியிலும் இந்த அமைப்பு இவ்விழா வினைச் சிறப்பாக நடத்தி வரலாறு படைத்துள்ளது.
இனவிடுதலைக்குப் போராடும் இனத்தின் உணர்வெழுச்சியினைத் திட்டமிட்டு அமுக்கும் கும்பல்களின் வேஷம் கலைக்கப்பட்டதோடு, அவற்றின் காட்டுமிராண்டித்தனத்தையும் அடாவடிச் செயற்பாடுகளையும் சர்வதேச சமூகம் அறிந்துகொள்ள அன்றையதினம் நடந்த அசம்பாவிதங்கள் வழிகோலின.
இந்நிகழ்வானது நம்நாட்டில் வாழும் மூவின மக்களிடையேயும் ஒர் அதிர்வினை ஏற்படுத்தியதோடு சமாதான விரோதிகளையும் இனங்காட்டியுள்ளது; சிங்கள கலை இலக்கிய நெஞ்சங்களில் ஒர் ஆரோக்கியமான புரிந்துணர்வினி தேவையையும் தடத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய கலைக்கூடலில் உரையாற்றிய பேராசிரியர் சச்சரித்த கம் லத் அவர்கள் “கடந்த கால்நூற்றாண்டில் - போர்க்காலத்தில்
படைக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ் மக்கள் மீது வெறுப்பையும்
ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. சிங்கள மொழியில் போர் அவலம்
பற்றி ஆழமான பார்வையில் ஆக்க இலக்கியங்கள் படைக்கப்படவில்லை”
எனச் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், “நாம்
ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசாது தனித்துவத்தைப் பற்றி மட்டுமே
4
 
 
 

பேசியதால் பலவற்றை இழந்துவிட்டோம்” எனக் குறிப்பிட்டார். பேராசிரியர்கள் இருவரும் முன்வைத்துள்ள கருத்துக்கள், சிங்கள தமிழ் மக்களின் புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப பரஸ்பரக் கலை இலக்கியப் பரிவர்த்னைச் செயற்பாடுகள் அவசியம் என்பதனையும், உணர்த்தியுள்ளது. புனைகதை, கவிதை, நாடகம், ஊடகத்துறை ஆகியவற்றின் மூலம் இச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லலாம். இலக்கியத்தில் உள்ள பாத்திரங்களுடன் பரிச்சயமாவதன் மூலம் மனித நடத்தையை ஆழமாகப் புரிந்துகொள்ளமுடியும். பாத்திரங்களுக்கு ஏற்படும் இன்ப துனர்ப அநுபவங்கள் எம்மைப் பாதிக்கின்றன. எமது போர்கால இலக்கியம், இளைஞர்களின் தியாக உணர்வுடன் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்ட வரலாற்றையும் எதிர்கொண்ட அனர்த்தங்களையும் கூறுகின்றன. சோதர இன இலக்கியம் வயிற்றுப்பிழைப்புக்காகச் சிங்களக் குக்கிராமங்களில் இருந்து இராணுவத்தில் சேர்ந்து உயிரிழந்தவர்களினதும், ஊனமானவர் களினதும் சோகங்களைப் பேசுகின்றன. பரஸ்பரம் இரு இன மக்களும் இவற்றைப் படிப்பதால் புரிந்துணர்வு ஏற்பட இடமுண்டு.
ஒவ்வொரு வருடமும் தேசிய சாகித்தியப் பரிசு பெறும் ஆக்கங்கள் பரஸ்பரம் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். சிறந்த சிங்களத் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள் தமிழ் வடிவம் பெறவேண்டும். சிங்கள இளந் தலைமுறையினர் ஹரிந்திப் படங்களைப் பார்த்து இரசிக்கிறார்கள்; பாடல்களையும் சுவைக்கிறார்கள். ஆனால் சோதர மொழியான தமிழ் பற்றி அறிந்துகொள்ள அவர்களில் பெரும்பாலானோர் அக்கறை கொள்வதில்லை. இன்றைய தமிழ் இளந்தலைமுறையினர் தரங்கெட்ட தமிழ் நாட்டு சினிமா மாயையில் மாய்ந்துள்ளனர். சிங்கள இலக்கியத்தியத் தின ஆக்க இலக்கியப் புதுமையை அறிய மனங்கொள்வதில்லை. நமது நாட்டு இளந்தலைமுறையினர் நாட்டின் பெளதீக, பூகோள, பொருளாதார, சமூகப்பின்னணியில் உருவாகும் புதிய பரிமாணங்களைக் கொணிட கலை இலக்கியங்களை அறியாது அந்நியப்பட்டுள்ளனர்.
இரு இனங்களினி கலை இலக்கிய ஒனிறுகூடல்கள், செயற்பாடுகள் இக்குறைகளைக் களைய வழிசமைக்கும். தமிழ் சிங்கள கலை இலக்கியவாதிகள் நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து, மானிட உணர்வுடன் மனந் திறந்து தமது உள்ளக்கிடக்கைகளை, பிரச்சினைகளைப் பரிமாறிக்கொண்டமை, குசலம் விசாரித்துக் கூடி மகிழ்ந்தமை அருமையான நிகழ்வாகும்.
சோதர இன ‘ஹரிறு’ குழுவினர் நீட்டிய நேசக்கரங்கள் வலுவூட்டப்படவேண்டும். தொடர் இலக்கியக் கூடல்கள், செயற்பாடுகள் நடைபெறவேண்டும். கடந்தகால கசப்பான வெறுப்புணர்வுகள் கருகி நேசமான நம்பிக்கை துளிர்விடவேண்டும். அரசியல்வாதிகளாலும், இனவாதிகளாலும் சீரழிக்கப்பட்ட தமிழ் சிங்கள உணர்வுகள் இலக்கிய வாதிகளால் கட்டியெழுப்பப்படவேண்டும். இச்சீரிய பணிக்கு ஞானமும் தன் பங்கினை நல்கும்.
5

Page 4
அகிலாவுக்கு மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை! இருபத்தி நான்கு வயதின் இளமை யின் இறுக்கத்தில் மலர்ந்திருந்த தாமரையொத்த பரந்த முகமும் சிட் டென சிறகடிக்கும் விழிமடலும் அவளது இதயத்தின் இதமான உணர் வின் வெளிப்பாடுகளாகி பளிச்சென பிரகாசித்தன.
மறுநாள் நடைபெற இருக்கும்
விவாத அரங்கொன்றிற்கு அவள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றாள். அதுவும் தொலைக்காட்சி வாயிலான நேரடி ஒளிபரப்பு! அவள் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதானது அவளது ஆசிரியத் தொழிலுக்கும் இலக்கியத்துறை சார்ந்த எழுத்துத் துறைக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப்போகின்ற தென்பதை நினைக்கும்தோறும் அவளது மனக் கடலில் இன்ப அலையின் அதிர்வுகள்
தொடர்ச்சியாக எழுந்து மோதிய வண்
ணம் இருந்தன.
தபால்காரனிடம் கடிதத்தைப்
பெற்ற நேரம்முதல் அவள் வீட்டுக்
கருமங்களை முற்றிலும் மறந்தாள்.
6
இன்று மாலையாவது பயணம் புறப் பட்டால்தான் மறுநாட் காலை தலை நகரை அடைந்து சிறிது நேர ஓய்வின் பின் நிலையத்திற்குச் செல்ல (ypiqujLô.
சங்கரைக் காணவில்லை. வேலை நாட்களில்தான் அப்படி என்றால் சனி ஞாயிறு தினங்களில்கூட துடுப்பாட்டப் பயிற்சி என்றும் கிளப் நடவடிக்கைகள் என்றும் அவனைப் பிடிக்கமுடியாது. விளையாட்டில் ஈடு பாடு கொண்டோர் இப்படித்தான்! மனைவிமார் பற்றி எண்ணவோ அவர்கள் தேவைகள் பற்றி கவனிக் கவோ அவர் களை திருப்திப் படுத்தவோகூட நேரம் கிடையாது. அல்லது ஆர்வம் காட்டுவதில்லை.
சங் கரை நினைக் கையில் அவளுக்கு ‘களுக்' என சிரிப்பு வந்து மோதியது. அவள் நாளையதினம் விவாத அரங்கில் சார்ந்து பேச வேண்டிய தலைப்பு 'அகலிகை கற்பு நெறி பிறழாதவள்’ என்பதே. மறு வள மாக அகலிகை ஒரு சமயம் நெறி தவறியவள் என்பது நிரூபிக்கப்பட்டால் கூட அது கெளதமனின் பாராமுகம் காரணமாகவே ஆகும். தனது கண வனை கெளதமரிஷியுடன் ஒப்பு நோக்கியதால் அவளுக்கு துயர் உண்டாகவில்லை; சிரிப்புத்தான் வந்தது!
அகிலாவுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தும் கூட அவள் குழந்தைப் பாக்கியம் இல்லாதவளாகவே இருந்தாள்.
அவளுக்கு ஆறுதல் தருபவர் களாக இருந்த அவளுடன் ஆசிரியத் தொழில் புரியும் ராஜன் அவனது
திருமலை வீ. என். சந்திரகாந்தி
 

மனைவி அவர்களது இருகுழந்தைகள் அயல் வீட்டில் வசித்து வந்தார்கள். அகிலா ராஜனை ஆசிரியசேவையில் உள்ளோரின் வழமையே போன்று சேர்’ என அழைத்து கதைப்பாள். ராஜனின் மனைவி ராதா அக்கா ஆவாள்!
ராதா அக்கா அகிலாபோல ஆண்களை விழுத்துமளவிற்கு உடை அணியமாட்டாள். உடம்மை பிடித்தாற் போன்று ஆடையாக இருப்பினும் அங்கத்தின் பகுதிகள் எதுவும் பளிச் சிடும்படியாக இருக்காது. இது அவளது குணவியல்பு சார்ந்தது என்னும்படி நடந்து கொள்வதாகவும் சொல்லிக் கொள்ள முடியாது.
கணவனை வரக் காணாததால் அகிலா வீட்டைத் திறந்து போட்டது போட்டபடி ராதா அக்கா வீட்டிற்கு ஓடிவந்தாள். ராஜன்தான் முதலில் எதிர்கொண்டு வரவேற்றான்.
"சேர் ஒரு குட் நியூஸ்." ஓடிவந்தவேகம் அகிலாவுக்கு நெஞ்சு படபடக்க வார்த்தை மழலை மொழியாக பிரவாகித்தது.
உடையணிவதன் நோக்கத்தை யிட்டு அதிகளவில் அலட்டிக் கொள் ளாத பெண்களில் அவளும் ஒருத்தி. அதனால்ேயே அவளது புற அழகு பல இடங்களில் கவர்ச்சிகாட்டி எதிர்ப் படும் ஆண்களைக் கிறங்க வைத்தது. “என்ன அகிலா. சொல்லுமன்” “இல்லை சேர். நாளைக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாத அரங்கில் பங்குபற்றும் சந்தர்ப் பம் எனக்கு கிடைச் சிருக்குது அகலிகை கற்புநெறி தவறாதவள்’ என்ற தலைப்பில் நான் வாதிட வேணும் . சேர் தானி எனக் கு “பொயின்ற்ஸ் சொல்லித்தரவேணும்" ராஜன் இலக்கியப் பாடம் நடத்து
வதில் ஸ்பெஷலைஸ்" பண்ணியிருந் தான். அவன் இலக்கியப் பாடம் எடுக் கும் வகுப்பில் உள்ள மாணவர்கள் மட்டுமன்றி மாணவிகள் கூட அவனது பேச்சுத் திறனில் இலயித்துவிடுவ துடன் அவனை வாயாரப் புகழவும் செய்தார்கள்.
“அகிலா, அகலிகை ஒரு சாதாரண பெண்ணல்ல. அவள் ஒரு ரிஷியின் மனைவி. அரசனின் மனைவி தவறலாம். குடியானவனின் மனைவி தவறலாம். ஒரு ரிஷியின் மனைவி தவறியிருக்க முடியாது. கெளதமர். தியான சுகத்தில் மூழ்கி இருந்தார்; மனவிை சுகம் நாடி சென்ற போதெல்லாம் தட்டிக் கழித்தார் என்ப தெல்லாம் சுத்தப் பொய். இதற்குச் சாட்சியாக அவர்களுக்குப் பல குழந்தைகள் இருந்தமையை சுட்டிக் காட்டலாம். அதுமட்டுமல்ல தேவேந் திரன் அழகிய மனைவியை உடை யவன், சப்த கன்னிகைகளிடமிருந்து எல்லையற்ற சுகத்தைப் பெறுபவன். அப்படியான வாய்ப்புக்களைப் பெற்ற வள் ஒரு ரிஷியின் மனைவியை ஏமாற்றி சுகம் கண்டான் என்பதெல் லாம் புராண காவியங்களின் கதை யோட்டத்திற்கு தேவையான உப சேர்க்கைகளாக இருக்கலாமேயின்றி அது யதார்த்த மானதன்று.
மகாபாரதக் கதையில் அகலிகை தனக்கு துரோகம் செய்து விட்டாள் என்கின்ற கோபத்தில் அவளைக் கொல்லுமாறு மகன் சிர காரிக்கு ஆணை பிறப்பிக்கின்றார் ரிஷியான கெளதமர். ஆனால், சிர காரி தாயைக் கொல்லவில்லை ரிஷியின் கட்டுப்பாடான வாழ்க்கை ஒரு பெண்ணுக்கு உவகை ஊட் டுமா..? சபல புத்தியுள்ளவனும் பல பெண்களுடனும் இன்பம் துய்ப்ப

Page 5
வனுமான இந்திரனுடடான தொடர்பு ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியளிக் குமா?" ராஜன் ஆவேசமான தொனி யில் அகலிகை பக்க நியாங்களை அடுக்கிக் கொண்டே போனான்.
அகிலா சில சந்தேகங்களை முன்வைத்தாள். ராஜன் அவற்றை வெட்டி வாதாடினான்.
"அகலிகை செய்த பாவம். அவள் மனித உணர்வுகளுடனும் ஏக்கங்களுடனும் கூடிய ஒரு சாதாரண பெண்ணாக இருந்தாள். ஆனால் விசுவாமித்திரர் என்றும் வசிட்டர் என்றும் கெளசிகர் என்றும் ஒரு ரிஷி பட்டாளத்தின் முன்னால் அவள் ஒரு அபலையாக பழியேற்று வாழும்படி நேர்ந்தது"
ராஜனின் விளக்கங்களை செவிமடுத்தபடி குசினிக்கட்டிலிருந்து வந்த ராதா அக்காவுக்கு அகிலா தனது விவாத அரங்கு பற்றி விளக் கிக் கூறினாள்.
"அது சரி அகிலா. ஆண்கள் கற்பை உடலோடு சம்பந்தப்பட்டதாக வும் உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட தென்றும் இரு வேறுபாடான கருத்தி யலை முன் வைக்கினை. அகலிகை விசயத்திலை நீ எந்த வரையறையை வைத்து வாதிடப்போகிறாய்?” ராதா அக்காதான் வினாவினாள்.
ராஜன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வை ஒரு கணம் அவளை எடைபோடுவது போல வும் இருந்தது.
இந்திரன் ரிஷி வேடத்தில் வந்து அகலிகையுடன் கலவி இன்பம் பெற்ற தால் அவள் உடலாலன்றி மனத்தா6) தவறவில்லை என்பது ஒரு வாதம். .
தவிர, அகலிகை சிறுவயது முதலே இந்திரனையே மனத்தளவில வரித்திருந்தவளாதலால் ரிஷியுட
8
னான அவளது வாழ்வு உடலளவின தேயின்றி மனத்தளவிலானதன்று என்பது மறுவாதம்.
ராதாவின் கருத்து ராஜனின் உள்ளத்தில் ஆய்வுக்குட்படுகையில் அகிலா உடலளவிலை ‘உள்ளத் தளவிலை என்ற சொற்பிர யோகங் களை மனதிற்கெடுத்து குழம்பத் தொடங்கினாள். பின்.
“நீங்களே பதிலையும் சொல்லுங்கோ அக்கா” என அகிலா வைத் தூண்டினாள்.
“கொஞ்சக் காலத்திற்கு முதல் மாத சஞ்சிகை ஒன்றிலே “ஸ்திரீகள் சம்பந்தப்பட்ட ஒரு சிறுகதையை நாங்கள் வாசிச்சம்தானே. அந்தச் சிறுகதையிலை வீட்டில் கணவன் இல்லாத சமயங்களில் வேறு ஆண் கள் ‘விசிற்ரிங் வருவதும் கணவன் தன் மனைவியையல்லாமல் வேறு பெண்களை "ஸ்கூட்டரில் ஏற்றிப் போவதும் தவறு என்ற கோணத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?"
ராதா கி கா வினவினாளர் அகிலா சிறிது நேரம் சிந்தித்தாள். பின்னர் கூறினாள்.
“அதைப்பற்றி என்ன நினைக் கிறது. அந்த எழுத்தாளனுக்கு தன்னுடைய மனைவியிலை நம்பிக்கை யில்லை. அதுபோக தன்னைத் தவிர பெண்களுக்காக பரிந்து நடக்கிற மற்ற ஆண்கள் எல்லாம் நடத்தை தவறுவதாக ஒரு விதண்டாவாதம் அவருடைய மனத்திலை இருக்குது." ராஜன் இருவரையும் உரையாட
விட்டு மெளனம் காத்தான். ‘அEகைதான் அகிலா நீர் பிழை விடுகிறீர். அந்த எழுத்தாளனுடைய
உள மனதை நீர் புரிந்து கொள் ளேல்லை. ஒரு பெண் நெறி தவறுவது

பற்றி அவர் அந்தக் கதையில் எங்கும் விமிர்சிக்கவில்லை. ஆனால் நெறி தவறக்கூடும் என்று மற்றவர்கள் ஊகிக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தையே அவர் சுட்டிக்காட்டினார். இன்னும் ஆழமாக அந்த எழுத்தாளனுடைய அடி மனதைக் கீறிப்பார்த்தால். ‘ஒரு பெண் தவறு இழைத்துவிட்டுக் கூட அமைதியாக இருந்து விடலாம். ஆனால் தவறு விடாமல் இருக்கும் நிலையிலும், மற்றவர்கள் அவளை சந்தேகிக்கும்படி அவள் ஏதாவது கரும மாற் றுபவளாக விருந் தாலி அதுவே அவளுக்கு பெரும் பழி சூழக் காரணமாகிவிடும். அகலிகைக்கு வந்த பிரச்சினையே இந்திரனோடு அவள் தவறு விட்டிருக்கக்கூடும் என்கின்ற ஊகங்கள்தானே!"
அகிலா கதையினுடு வினவினாள். “உலகத்தார் ஊகிக்கிறதாலை ஒரு பெண் மனத்தளவாலை தனது கற்பை இழக்கின்றாளா?
“உலகத்தார் ஊகிக்கின்றார்க ளென்றால் குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலை ஒரு நெருக்கத்தை. உடன்பாட்டை. அவர் கள் ஊகிக்கின்றார்கள். அந்த அனு மானம் தனிமையிலை விடப்பட்ட ஒரு
/
--------- உள்நாடு தனிப்பிரதி --
uD6of)(3 uur. அனுப்பலாம். . மனியோடர் அனுப்புபவர்கள் அதனை கண்டி தபால் நிலையத்
மூலமாகவோ
E
ந்
函
ff
ff:
(3•ሪ
没下颜
函
88Ꮫ
ல
Rp
6ು!
Ld.
τ
s
G3
6)f
ff
\தில் மாற்றக்கூடியதாக அனுப்ப
YeBBu SCSSL LSLSL LL LSLSL LSL LSLSL LSL LSLSL LSL LSL LSL S LSLSL LSL LSL LSL LSLSLSL S LSL LSL LSLS S LSL LSL SLSLSL
"ஞானம் சந்தா விபரம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக் குள் ஏற்படாதா எண்டதையும் யோசிக்க வேணும் ”
"அக்கா மனோவியல் சாஸ் திரத்தை படித்துவிட்டு பேசுகிறமாதிரி கிடக்கு."
"மனோவியல் சாஸ்த்திரமும் இல்லை. மண்ணாங்கட்டியுமில்லை. சாதாரண மனித உணர்வுகளை எடை போடுவதற்கு எங்கள் எங்களுடைய
உடம்பும் உணர்வுகளுமே போது
மானது."
காலை நேர பயிற்சிகளை
முடித்துவிட்டு வீடுதிரும்பிய சங்கர்
அகிலாவைத் தேடி ராஜன் வீட்டுக்கே வந்துவிட்டிருந்தான்.
அகிலா வுக்கு மகிழ்ச்சி. அனைத் து விபரங்களையும் கூறினாள்.
* சங்கர். இண்டைக்கு மாலை ரெயினிலை போகவேனும். என்ன சொல்லுறியள்.? "
“என்ன. அகிலா குண்டைத் தூக்கி போடுகிறீர். நாளைக்கு எனக்கு 'டிஸ்றிக் மட்ச் நான் அசைய ஏலாது.”
அகிலா அழவே தொடங்கிவிட் டாள். அந்த அழுகை புறணியாக
řGNANASEKA
19/7, PERADENIYARO
ஆண்டுச் சந்தா 20 USS
(தபால் செலவு உட்பட)
9

Page 6
மாறி. வாயத் தர்க்கமாகி. சண்டை தொடங்கும் என்கின்ற அறிகுறி ஏற்பட்டபோது ராதா தலையிட்டாள். "இதுக்கெல்லாம் போய் அழு கிறதா அகிலா. உனக்குத்தான் உன்னுடைய "சேர்’ இருக்கிறாரே. அவர் கூட்டிப் போவார். இது பெரிய பிரச்சனையா?”
அப்போது தான் அகிலாவுடைய விம்மல் அடங்கியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“ரெயினில் பிரயாணம் செய்யும் போதும் அகிலா ராஜன் சேருடன்
அகிலிகை பற்றி விவாதம் செய்து
தனது தரப்பு நியாங்களைத் தெளிவு படுத்திக் கொண்டாள்.
“அகிலா. அகலிகை வாழ்ந்த காலகட்டம் வேறு; நாங்கள் வாழு கின்ற காலகட்டம் வேறு. இண் டைக்கு நாங்கள் பெண்களை ஆண் களுக்கு சமமாக மதிக்கிறம். அவை யளின்ரை உணர்வுகளை கேவலப் படுத்தி பார்க்கிறதன்மை இல்லாமல் போய்க் கொண்டிருக்குது. அகலிகை கற்புநெறி பிறந்தவளா என்று விவாத மேடை வைக் கிற நாங்கள் எங்களோடை வாழ்ந்து கொண்டிருக் கின்ற பெண்களினுடைய கற்பியல் வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் அனுசரணையாக இருக்கிறம்..?”
“ஓம் சேர் . இப்பவெல்லாம் வெளிநாடு போக எண்டும் தொழில் பார்க்க எண்டும் பெண்கள் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கினம் . இவற்றையெல்லாம் ஆர்தான் கண்டு கொள்ளுகினை?” - அகிலா.
“அதுக்கு மேலாலை. காசுக் காக எதையும் செய்ய பெண்கள் துணிவது. அதைச் சொல்லேக்கை தான் எனக்கு ஒரு விசயம் ஞாபகத் துக்கு வருகிது. வெளிநாட்டிலை
10
* Dyfë (Bum fî கொன்வீனியன்ஸ்” (marriage for conveneance)6T60ii(6 (b திருமணம் அறிமுகமாகி இருக்குது. குடிவரவு குடியகல்வு சட்டத்தின்ரை பிடியிலையிருந்து ஒருவரை தப்ப வைக்க அந்த நாட்டு வாசியான ஒரு பெண் காசை வாங்கிக் கொண்டு அவனைத் திருமணம் செய்கின்றாள். இப் படியான நிலைமைகளிலை உடலாலை தவறிழைக் கிறது, உள்ளத்தாலை தவறிழைக்கிறது எண்ட தெல்லாம் ஒரு நூலிடை வித்தி யாசத்திலை தான் இருக்கிறது போலை" - ராஜன்.
அகிலாவே தனது குழுவுக்கு தலைமை தாங்கினாள். மறுதரப் பினரின் விவாதம் சூடாக இருந்தது. "அகலிகை திருமணத்திற்கு முன்பு தொட்டே இந்திரனுடன் சினேக மாக இருந்திருக்கின்றாள், உட லளவில்தான் அவள் கெளதமருடன் வாழ்ந்து வந்தாள், உள்ளத்தால் இந்திரனை நினைத்து வாழ்ந்தாள். இரு வகையாலுமே அவள் கற்பு நெறி தவறினாள், விசுவாமித்திரர் ஒரு சமயம் அவளை, தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்” என வாழத்தியபோது. “யாருடன்? இந்திரனுடனா? கெளத மருடானா?” என வினா தொடுக் கின்றாள்.
ஒரு பசுக் கன்று கூட தொலை வில் வந்துகொண்டிருக்கும் தாய்ப் பசுவை இனம் கண்டு குரல் கொடுக்க முடியுமென்றால் தன்னை நோக்கி வருவது தனது கனவணா பிறனா என்பதை ரிஷி பத்தினியானவளுக்கு நேரிலே கூட உய்த்துணர முடியாத மர்மம் என்ன ? அவளுக்கு தெரியும் தான் மனத்தளவில் கலவி சுகம் காணும் இந்திரனே வருகின்றான் என்பது. வேண்டு மென்றே அவள்

மாறு வேடத்தில் வந்த இந்திரனை
அடையாளம் காணாதது போல
நடித்தாள். அப்படி அல்லாமல் அவள் உண்மையிலே ஏமாந்திருந் தால் கெளதமரின் சாபம் பலித்து கல்லாக மாறிவிட நேர்ந்திருக்காது. இது ஒன்றே அவள் கற்பு நெறியி லிருந்தும் தவறினாள் என்பதற்கு உகந்த முழுமையான ஆதாரமாகும்." இருபக்க நியாங்களையும் செவி மடுத்த விவாத மன்ற தலைவர் இரு ப்க்க நியாங்களையும் சமன் செய்து தீர்ப்பு வழங்கினார்.
ராஜனுக்கு அகிலாவை நிலை
யத்திலிருந்து அழைத்துச் செல்ல நேரமாகிவிட்டது. அகிலா நன்கு களைத்து விட்டிருந்தாள். இரவு
'ரெயினுக்கு போனால் போதுமான தென இருவரும் தீர்மானித்து அருகி லிருந்த கடற்கரைக்குச் சென்றனர். "ஏன் சேர். எனது பக்க வாதம் எப்படி இருந்தது ?"
அகிலா ஆசிரியை ன்ன்பதாலும் எழுத்து வன்மை உடையவளானா தாலும் அவள் தனது பங்கை திறமை யாகவே நிறைவேற்றியிருந்தாள். நிலையத்திற்கு வெளியே தொலைக் காட்சியில் நிகழ்ச்சியைப் பார்த் திருந்த ராஜன் உண்மையிலேயே அவளது வாதத்திலும் ஆற்றலிலும் நெகிழ்ந்திருந்தான். சரி பிழைகள் இருக்கலாம். ஆனால் நன்று ’ என்ற சொல்லின் கனதியை எந்த வாதம் தான் நிராகரிக்க முடியும்.
அகலிகை கற்புடையவள். அகலிகை கற்பு நெறி தவறா தவள்.
அகலிகை கற்புக்கரசி. அகிலாமீது ராஜனுக்கு மேலும் மேலும் அன்பும் பரிவும் ஏற்பட
கித்த அந்த வசனங்கள் காரண LDTuj60T.
கடற்கரைக் காற்று களையை நீக்குவதாக இருந்தது. ஒரமாக இருந்த தொலைபேசிக் கூண்டில் ராஜன் மனைவியுடன் தொடர்பினை
ஏற்படுத்தினான்.
"ஏன் ராதா அகிலாவின் புரோகிராம் எப்படி? "
“சுப்பர்’. அகிலாவிட்டை
கொடுங்கோ 'விஷ் பண்ணுறன்"
“ஒ. அகிலாவா?. வெற்றிதான்! "கொன்கிராஜுலேசன்ஸ் (congratulations) நல்லாய்ச் செய்தீங்கள். களையாய் இருக்கும். போக இரவுப் பயணம் வேண்டாம். நிண்டு நாளைக்கு வாங்கோ . 劳
“என்னுடைய அவரைப் பற்றித் தான் யோசிக்கிறன்." - அகிலா.
"அவரைப்பற்றி யோசியாதை யுங்கோ. அவர் இண்டைக்கு 'மட்ச் முடிந்த கையோடையே வீட்டுக்கு வந்திட்டார். எங்கடை வீட்டிலை 'டின்னரும் ரெடி'. அவருக்கும்தான்.” "கொயின்ஸ் முடிஞ்சுது சேர், ‘லைன் கட் ஆகிவிட்டது". ராதாக்கா சொல்லுகிறா "சேருக்கு களையா யிருக்குமாம் இரவுப் பிரயாணம்
வேண்டாமாம். என் ரை இவரும் அங்கைதான் நிற்கிறார்."
“லொட்ஜிலை...' நிண்டு போட்டு நாளைக்கு போறதெண் டால் பிரச்சனை இல்லை .” ராஜனும்
களை நிமித்தம் எங்கென்றுதானிருந் தான்.
‘ஐஸ்கிறிம் வான்கள். கடலை விற்கும் சிறுவர் சிறுமியர்கள். பலுான் வியாபாரிகள். விடுமுறை தினமாதலால் அதிக அளவில் ஜனங்கள் திரண்டிருந்தனர்.
அவள் உணாச்சி பூர்வமாக பிரயோ குழந்தைகளின் களியாட்டங்கள்
11

Page 7
கண்ணைக் கவர்வனவாக இருந்தன. அகிலா மகிழச்சியுடன் துள்ளு நடை பயின்றாள். தனது சின்ன சின்ன
சந்தேகங்களுக்கும் ராஜனிடம் விளக்கம் கேட்டாள்.
"ஏன் சேர்’. கடற்கரைக்கு
960060) Dust 85 ஏராளம் குடைகள் கவிழ்க்கப்பட்டிருக்குது. ஏன்? ”
ராஜனுக்கு சிரிப்புத் தான் வந்தது.
“அவை வெறும குடைகளல்ல அகிலா. ஒவ்வொரு குடைகளுக்கு கீழேயும் ஒவ்வொரு காதல் சோடி மறைந்திருந்து சல் லாபத்திலை ஈடுபட்டிருக்கினை.?”
அகிலாவுக்கு அதிர்ச்சி “ இப்படி பப்ளிக் பிளேசிலையா? சரியா அது? இவர்கள் உண்மையான காதலர்
E6TIT?”
ராஜன் விளக்கினான். "இதிலை உறவுகளுக்கு ஒளித்து வந்த உண்மையான காதலர்கள். நேர்மையாக காதலித்துவிட்டு பின்னர் ஆழ் நிலைகளால் பிரிந்துவிடப் போகின்றவர்கள். நேரம் போக்குவதற் காக இணைந்து கொள்பவர்கள். பொய்மை பேசி ஒருவரை ஒருவர் ஏமாற்றுபவர்கள். குடும்ப வாழ்வில் அதிருப்தியுற்றோர். இவர்களனை வரையும் விட மோசமாக பணம் புரட்டுவதை நோக்கமாக கொண்டவர் கள்."
ராஜன் அடுக்கிக் கொண்டே போனான்.
அகிலாவுக்கு அருவருப்பாக இருந்தது.
ஆதங்காக்கா ஆதங்காக்கா
அவசரமாய் போறியளோ
மாதவனின் முல்லைக்கொடி
மாடியிலபடருதென்று
கரும்பான மச்சானுக்கு
கடுகதியாய் சொல்லிடுங்கோ
விரும்பினவர் வராவிட்டால்
வஞ்சிக்கொடி வாடுமென்று
முள்ளுவேலி சுற்றிவர
முகம்பார்க்க முடியாதே
கள்ளவழி ஏதுமில்ல
கடப்பில நாய்கிடக்கே
-ரூபராணி
சொல்லிடுங்கோ.
வேணுமெண்ட கள்ளனுக்கு
வேலி ஒரு பொருட்டாமோ
மூணு தரம் ஒசை வச்சா
முல்லை முகம் காட்டாதோ
மாமனவன் கடுங்கோபி
மாமியோ சுடுகோப்பி
ஏமாந்து போவானோ
எப்படித்தான் வருவானோ?
தேனிகதலி புடிக்குமெண்டா
தென்திசையால் வர ஏலும்
மான் விழியாள் காத்திருப்பாள்
மறக்காமல் சொல்லிடுங்கோ

எழுதத் தூண்டும் எண்ணங்கள் coe
(கலாநிதி தரை.மனோகரன்)
இலங்கைத் தமிழ்ச் சமூக நாவலின் பிதாமகர்
இலங்கைத் தமிழ் நாவல் 1885 இல் சித்திலெவ்வையின் அஸன்பேயுடைய சரித்திரம் முதலாக வளர்ச்சிபெற்று வந்துள்ளது என்பது பொதுவான - szpry வரலாறு. ஆயினும், இலங்கையில் தமிழ்ச் சமூக ് സ്ക് நாவலின் வரலாறு எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் (ހ நீண்டபயணம் (1965) என்ற நாவலுடனேயே முறையாக ஆரம்பிக்கிறது. நாவல்துறையில் தொடர்ந்து சடங்கு (1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968), போர்க்கோலம் (1969) வரை தரமான நாவல்களை அவர் தந்துள்ளார். மண்ணும் மக்களும் (1970) என்ற நாவல் முதலாக செ. கணேசலிங்கனின் நாவல் பயணம் திசைமாறிவிட்டதோ என்ற எண்ணம் வாசகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. “சமீபகாலமாய் வரும் அவரது நூல்களைக் கவனித்தால் அவர் தன் ஈழத்தன்மையை படைப்பில் இழக்கும் அபாயக்கூறுகள் அவற்றில் அதிகரித்து வருவதை ஒருவரால் காணக்கூடும்” என்று எழுத்தாளர் தேவகாந்தன் (மல்லிகை, ஒக்டோபர் 2003) குறிப்பிட்டிருப்பது கருத்திற் கொள்ளத்தக்கதே. ஆயினும், ஈழத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் வரிசையில் செ. கணேசலிங்கனும் இடம்பெற்றுள்ளார். மார்க்சீயக் கண்ணோட்டத்தில் எழுதும் இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக செ.க. விளங்குகின்றார். செ. கணேசலிங்கனும் நானும் யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் என்ற ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவரது ஆரம்பகால நாவல்களில் உரும் பிராய் என்ற கிராமமே கதைக்களமாக அமைந்துள்ளது. தமது ஆரம்பகால நாவல்களை உரும்பிராயில் தமது மூத்த சகோதரி ஒருவரின் வீட்டில் வைத்து எழுதுவதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது.
செ. கணேசலிங்கன் முன்னர் இலங்கையில் வெளியிட்ட குமரன் என்ற சிற்றேடு, மார்க்சீய ஆர்வலர்களால் விரும்பி வாசிக்கப்பட்டது. குமரன் இதழில் கலை இலக்கியம் தொடர்பாக மார்க்சீயக் கண்ணோட்டத்திற் பல விமர்சனக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. படைப்பிலக்கியம் தவிர்ந்த அவரது பிற நூல்களும் குறிப்பிட்டத்தக்கவை. நூற்பதிப்புத் துறையிலும் அவர் பெரிதும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். கைலாசபதியின் நூல்கள் தமிழ்நாட்டில் வெளிவருவதற்கும் செ. கணேசலிங்கன் காரணகர்த்தராக விளங்கியிருக்கிறார். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செ. கணேசலிங்கனின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் தமக்கெனத் தனியான ஓர் இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவரின் எழுத்துப் பணிகள் மேலும் பல்லாண்டுகள் தொடரும் என்ற நம்பிக்கை இலக்கிய உலகில் இயல்பாகவே உண்டு.
13

Page 8
ஒரு சோக்கான வில்லுப்பாட்டு
கொழும்புத் தமிழ்ச் சங்கம் அண்மையில் நடத்திய பாரதி விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாகச் சோக்கல்லோ சண்முகநாதனின் வில்லுப்பாட்டு இடம் பெற்றது. கவிராஜன் கதை என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்வில்லுப்பாட்டு நிகழ்ச்சி சபையோரைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்களோடு பெண்கள் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியமையாகும். சோக்கல்லோ சண்முகநாதன் தமக்கேயுரிய பாணியில் நகைச்சுவை கலந்து வில்லிசைக்க, நிகழ்ச்சியிற் கலந்துகொண்ட பாடகியும் மிக அருமையாகப் பாடி நிகழ்ச்சி மேலும் கலகலப்பாக அமைவதற்குத் துணைசெய்தார். இலங்கையின் பிரபல நடிக நடிகைகள் சிலரும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியிற் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. பல்துறைத் திறமை வாய்ந்தவர்கள் ஒன்றாகச் சங்கமித்தமை நிகழ்ச்சியைச் சிறப்பித்தது. ஒரு சோக்கான வில்லுப்பாட்டாக அந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. யாருக்குச் சொல்லி அழுவது?
பாருக்குள்ளே ஓர் அதிசய நாடு நம் இலங்கைத் திருநாடு என்று சொல்லக்கூடிய முறையில் நாட்டின் நடப்புகள் நிகழ்ந்துகொண்டு வருகின்றன. பதவியில் இருக்க விரும்பாதவர்களுக்கு வில்லங்கமாகப் பதவி நீடிப்புகள் வழங்கப்படுகின்றன. பதவியில் இருகக விரும்பியவர்களுக்குப் பதவி நீடிப்புகள் மறுக்கப்படுகின்றன. இவற்றுக்கு அடிப்படையாக அமைவன இனரீதியான சிந்தனைகளே. இலங்கைத்தீவில் பெரும்பான்மையினத்தில் பிறப்பது புண்ணியம் எனவும் சிறுபான்மையினத்தில் - குறிப்பாகத் - தமிழராகப் பிறப்பது பாவம் என்றும் ஓர் எழுதாத சட்டம் இருப்பதைப் போலவே பேரினவாதிகள் நடந்து கொள்கின்றனர். குறிப்பிட்டவர் பெரும்பான்மையினத்தவராக இருப்பின், அவர் விரும்பாத நிலையிலும் பதவி நீடிப்பு இடம்பெறும். தமிழராக இருந்தால் பதவி நீடிப்புப் பெறும் அருகதை அவருக்கு அறவே இல்லை. இதுவே நாட்டின் ஜனநாயகம் என்று ஆகிவிட்டது. ஆனால், இந்த அநீதி தொடர்பாகக் குரல் கொடுத்த தமிழ் அரசியல்வாதிகள் இருவர் மட்டுமே. மற்றைய தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, அவர்களது கண்களும், காதுகளும், வாய்களும் அவ்வப்போது எங்கோ தொலைந்துவிடுவதுண்டு. இது கேடுகெட்ட பேரினவாதிகளுக்கு மிகவும் வாய்ப்பாகப் போய்விடுவதுண்டு.
தீபாவளித் திருநாள் இந்து மக்களின் மகிழ்ச்சிகரமான ஒரு தினம். தீபாவளி தமிழருக்கு எதிராக ஆரியராற் கொண்டாடப்படத் தொடங்கிய தினம் என்ற கருத்தும் சிந்தனையாளர் ஒருசாராரிடம் இருக்கின்றது. எவ்வாறா யினும், இந்துக்களாற் கொண்டாடப்படும் ஒரு தினத்தையே தமது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்ற தினமாகப் பேரினவாதிகள் தேர்ந்தெடுத் தமை, தமிழர் விரோதப் பேரினவாதச் சிந்தனையின் வெளிப்பாடு என்பதிற் சிறிதும் சந்தேகமில்லை. பெளத்த மதத்துக்குரிய புனிதத் திருநாட்களில் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கு எந்தக் கடைகெட்ட பேரினவாதியும் துணிவாரா?
நாட்டிலே ஒன்றும் வெளியிலே வேறொன்றும் பேசுகிற அரசியல்வாதி களுக்கு நமது நாட்டில் என்றும் குறைவில்லை. உள்நாட்டுக்குள்ளேயே 14

உள்ளுர்வாசிகளுக்கு ஒன்றும், வெளிநாட்டுக்காரர்களுக்குப் பிறிதொன்றுமாக வாய்கூசாமல் இவர்கள் "அலம்புவர்” இடத்துக்கேற்ற விதமாகத் தமது பேரின வாதச் சிந்தனைகளையும் ஜனநாயகம் பற்றிய கருத்துகளையும் பிதற்றுவர். "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று இராமலிங்க வள்ளலார் பாடியது இவர்களுக்கே மிகப்பொருத்தம்.
நாட்டின் வடபுலத்தில் நிகழும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அங்கு வேட்டைக்காரர்கள் தனிக்காட்டு ராஜாக்கள் போன்றே நடந்துகொள்கின்றனர். பொதுமக்களை வேட்டை ஊர்திகளால் மோதுவது, ஊடகவியலாளர்களைத் தாக்குவது போன்ற வேட்டைச் செயல்களில் வேட்டைக்காரர்கள் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மறைமுகமான மனித சங்காரத்தை மெதுமெதுவாக நடத்துவதற்கான ஒத்திகைகள் போல இவை தோன்றுகின்றன.
நமது நாடு அயல்நாட்டுடன் சிநேகயூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்ல விடயமே. ஆனால், அத்தகைய சிநேகிதம் இலங்கைவாழ். தமிழர்களின் அபிலாசைகளுக்கு விரோதமானதாக அமையக்கூடாது. அயல் நாட்டின் அபிலாசைகளுக்குப் பாதகம் ஏற்படாத முறையிலேயே இந்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் அமையும் என வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கின்றது. இது போதாது என்று பாதுகாப்பு ஒத்துழைப்பும் அயல் நாட்டில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அனைத்தும் சூசகமாக எதனையோ உணர்த்து கின்றன. தமிழர் தரப்பில் என்னதான் முயற்சித்தாலும் மட்டுப்படுத்தப்பட்ட தீர்வுதான் வழங்கப்படும் என்ற ரீதியிலேதான் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன போலத் தோன்றுகின்றது. தமது மட்டுப்படுத்தப்பட்ட தீர்வுக்கு எதிர்ப்புக் கிளம்பினால் அந்நிய நாடொன்றையும் அயல் நாட்டையும் பேய் பிசாசுகளாக முன்னிறுத்திப் பயம் காட்டலாம் என்ற திட்டமும் இருக்கக் கூடும். “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” என்று ஒரு காலத்தில் இலங்கைத் தமிழர்கள் நம்பியிருந்த அயல் நாடு, இன்று அவர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது. போதாததற்கு ஜெயலலிதா என்ற ஓர் அணுகுண்டு வேறு. தனது நலன்களில் மாத்திரம் கவனம் செலுத்தி ஒப்புக்காக மாத்திரம் சமாதான நடவடிக்கைகள் பற்றிப் போலியாக மகிழ்ச்சி தெரிவித்து, நாடகம் ஒன்றை அயல் நாடு அரங்கேற்றி வருகின்றது. இலங்கைத் தமிழர்களைவிடத் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் அயல் நாட்டுக்கு முக்கியமானவை. இலங்கைப் பேரினவாதிகளின் ஒவ்வொரு முயற்சியையும் அயல்நாடு இரகசியமாக ஆதரித்து ஆனந்தத்துடன் இரசித்து வருகின்றது. பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு மானசீகமான ஆசிகளையும் அது வழங்கி வருகின்றது. இலங்கையில் தமிழர் எதிர்பார்க்கும் கெளவரத்தோடு கூடிய சமாதானம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அயல் நாடு கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. தனது கண்ணுக்கு முன்னால் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் செல்வாக்குப் பெறுவதையும் அது விரும்புவ தில்லை. எத்தகைய சமாதானம் இலங்கைக்குத் தேவை என்பதை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டுமென்றால், இத்தகைய சமாதான முயற்சிகள் எதற்காக? யாருக்குச் சொல்லி அழுவது?
15

Page 9
இலங்கையில் தமிழ் சினிமா என்பது ஏறக்குறைய செத்துவிட்டது என்ற நிலைமையே இன்று உள்ளது. அதற்கு தொலைக்காட்சியின் வருகை, இந்திய சினிமா ஆதிக்கம் போன்றவற்றுடன் பொருளாதாரக் காரணிகளும் அரசியலும் பாதகமாக இருப்பது கண்கூடு. ஆனால் இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி இன்னும் பிறக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அது ஊனமாகி உள்ளமை கவலைக்குரியதாக உள்ளது. −
அதற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்திய தொலைக்காட்சி நாடகங்களின் செய்மதியூடான ஆதிக்கம், இந்திய சினிமாவின் நீக்கமற நிறைந்த தன்மை, இலங்கையின் தமிழர் சார்பான அரசியல் அதிகார, பொருளாதார பின்னடைவுகள் காரணமாகக் கூறப்படுகின்றன.
இவற்றுக்கும் அப்பால் எளிதாகப் பணம் பண்ணும் குறுகிய நோக்குடைய பொருளாதாரச் சுரண்டல்களே இந்த இழி நிலைக்குக் காரணம் என்பதை இலத்திரனியல் ஊடகம் சார்ந்தவர்கள் ஏனோ வெளிப்படுத்த விரும்புவதில்லை .
அந்த யதார்த்தத்திற்குள்ளால் எமது நாட்டின் தமிழ் மக்களுக்கு வேண்டப்படாத பல விடயங்கள், மெகா தொடர்களின் வடிவில் வீட்டுக்கு வீடு, ஒவ்வொரு கணமும் திணிக்கப்படுகின்றன.
இந்தக் கேவல நிலையின் அடுத்த பக்கமாக சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும்போது அவை மிகவும் காத்திரமானவையாக மேலெழுந்து நிற்கின்றன.
சமூக யதார்த்தத்தைப் பிரதி பலிப்பனவாகவும், தொழில் நுட்பத் துறையில் உயர்வு பெற்றனவாகவும், மொழிப் பயன்பாடு, ஊடகப்பயன்பாடு என்பனவற்றில் சாத்தியமானவையாகவும் உள்ளன.
அதனுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் தமிழ்த் தொலைக்காட்சி என்பது ஊனப்பட்ட ஜீவனாக, பிறக்கும்போதே எம்மவர்களால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றது என்பதே பொருத்தமான கூற்று ஆகும்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தமிழ் நிகழ்ச்சிகளுக்கும், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குமென விழி அலை (1) வரிசையைத் தந்ததாக மார்தட்டியது. அதில் அண்மைக் காலங்களில் ஒரு அரைமணி நேரம் கூட இலங்கைத் தொலைக்காட்சி தமிழ் நாடகம் ஒளிபரப்பாகியிருக்கவில்லை. இந்திய வள வளா நாடகங்களும் திரைப்படங்களுமே ஒன்றுக்கு இரண்டாக நேரத்தை விழுங்குகின்றன. அரச கூட்டுத்தாபனம் என்ற வகையில் வேண்டிய உபகரணங்கள், ஆள்பலம், கலைஞர்கள், இருந்தும் ரூபவாஹினி 16
 

தயாரிப்பின் 5வீதம் ஆகவேனும் தமிழ் நாடகங்கள் தயாரிக்கப்படாமைக்கு சம்பந்தப்பட்டவர்களின் அக்கறையின்மையே காரணம் ஆகும். அடுத்தது சக்தி ரி.வி - தமிழுக்கு தனியே அலைவரிசை தொடங்கி வைத்த மிடுக்கில் மகாராஜா கூட்டு நிறுவனம் “சக்தியை அறிமுகப்படுத்தியது.
மாறாக இலங்கையில் ஒன்றுமே இல்லை, எல்லாம் இந்தியாவில் இருந்தே வரவேண்டும் என்கின்ற அளவுக்கு உள்ளுர் நாடக முயற்சிகளை அது மழுங்கடித்திருக்கிறது.
மின்னல், களம், "இப்படிக்கு நீங்கள் என்று விரல்விட்டு எண்ணத்தக்க மூன்று நான்கைத் தவிர மற்றும் இமை நொடிக்கின்ற அத்தனை கணங்களும் செய்மதி இறக்குமதிகளே. அதற்கும் அப்பால் தமிழக சினிமாவில் வாய்ப்புக் குறைந்தவர்களும் வளத்துடன் இருப்பவர்களும் யுத்தம் இல்லை என்கின்ற நம்பிக்கையில் இங்கு வருகையில் அவர்களுக்கு அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் கொடுத்து, பார்வையாளர்களை வியாபார மயப்படுத்தி விழா எடுப்பதில் இந்த சக்தி தன் முதுகெலும்பை இழந்துவிடுகின்றது. ለ சிரச என்ற ஊடகம் சுயாதீனமாக சிங்கள நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும்போது சக்திக்கு மட்டும் முள்ளந்தண்டு இல்லாமற்போக நியாயம் இல்லை. ஆனால் இல்லாமற்போவது மட்டுமல்லாமல் நமது நாட்டுக் கலைஞர் களுக்குக் குழிபறித்தும் தன் பார்வையாளர்களுக்கு விஷம் ஊட்டியும் வருகின்றது என்பதே உண்மை.
‘வெகுஜனக் கலாசாரத்தின் ஆதிக்கம் செய்மதிகளின் ஊடாக, இன்ர நெற் ஊடாக மக்களைப் பாதித்துள்ளது. எனவே அந்த ரசனைக்கே நிகழ்ச்சி களைத் தரவேண்டிய தேவை உள்ளது என்பது பதிலாக எழலாம். அப்படியா னால் அதே பதில் சிங்களப் பார்வையாளர்களுக்கும் சமவாய்ப்புப் பொருத்தம் உடையதாக இருக்கவேண்டும்.
ஆனால் சிங்கள மக்களின் ரசனை மட்டம் தொலைக்காட்சியானாலும், சினிமா ஆனாலும் உயர்ந்ததாகவே இருக்கின்றது. இதில் ஓரளவு ஹிந்தி ஆதிக்கம் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒப்பீட்டுரீதியில் தமிழர் களின் ரசனை மட்டம் அடிமட்டத்துக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது என்பதை யாராலும் ஒப்புக்கொள்ளமுடியும். இதற்கு எதேச்சாதிகாரமான தமிழக சினிமாகவும் தமிழக தொலைக்காட்சி மெகா தொடர்களும் நமது வியாபார மனோநிலை ஊடகக்காரர்களுமே காரணம்.
வெறும் சேலைக்கும், தாலிக்கும் சொத்துக்கும் அடிபடும், பழி வாங்கும் கூட்டமாக, வெறும் வன்முறைச் சிந்தனையாளராக, தமிழகப் பெண்களும், ஆண்களும், சமூகமும் காட்டப்படுகின்றது. ஆங்காங்கே பாலுமகேந்திராவின், பாலச்சந்திரரின் நல்ல நாடகங்கள் வந்தாலும் எமது மக்களின் பிரச்சனைகள் மழுங்கடிக்கப்படும் நாடகங்களே அல்ையாக எழுந்து பார்வையாளர்களை அடித்து அமுக்கி விடுகின்றன.
மீதமாகவுள்ள (ஐ.ரி.என்) சுயாதீன தொலைக்காட்சி, ஸ்வர்ண வாஹினி, ரி.என்.எல். என்பன மேலும் பாவப்பட்ட ஜீவன்கள். அவற்றுக்குத் தமிழ் நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்ற தேசியக் கடமை இல்லை. ஆனாலும் அந்த இறக்குமதி நாடகங்கள், சினிமா ஒளிபரப்பில் அவையும் 17

Page 10
விடா முயற்சியுடன் தமிழருக்குத் தீனி போடுகின்றன.
காரணம், போட்டி அடிப்படையிலான பார்வையாளர் வசீகரிப்பின் தேவையும், விளம்பரங்களை விற்றாக வேண்டிய கட்டாயமும் அவற்றுக்கு உள்ளன. ஒப்பீட்டு அடிப்படையில் விளம்பரங்களின் அதிவேக கொள்வன வாளர்களாகத் தமிழர்கள் இருப்பதால் தமிழர்களையும் வசீகரிக்கவேண்டிய தேவை தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உண்டு.
மிகவும் விரிவாக எழுதிச்செல்லப்பட வேண்டிய இந்த விடயம், ஞானம் சஞ்சிகையின் இடவசதி குறித்து தன்னைச் சுருக்கிக் கொண்டுள்ளது.
இனித்தொடரும் அங்கங்களில் நல்ல ரசனை பற்றிய குறிப்புகளைத் தனித்தனியே, விரிவாகத் தருவது கட்டுரையின் நோக்கம் ஆகின்றது. இந்தக் கட்டுரைகளின் ஊடாக இனிவரும் நாள்களில் வாசகர்கள் தம் தொலைக்காட்சி தமிழ் நாடகங்களையும் இதர நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும் என்பது
ஞான அவா. O
Os3(Jes6 (s
தவமிருந்தோம் அதற்காக - அது வரவேயில்லை
அழைத்துப்பார்த்தேன் அது அணிமிக்கவேயில்லை
விரும்பியும் வேண்டியும் பார்த்தேன் - - அது ":ി, விடுதலையாக வில்லை
கைகூப்பினேனர் கூடிப்பார்த்தோம் கனவிலேனுமது રૂ) கூண்டிற்றேனும் வருமென்று ls அதை இருத்திவைப்போமென இறஞ்சினேன் S இரு தசாப்தத்தின் வைகறையினர் S பின்னரான நாட்களில் போதெல்லாம் S 82 தேசத் தெருவெங்கும் இறக்கை யேனும் S | உலா வருமென்றனர்
தென்படுமென பருந்தின் உருவிலேனும்.
18
 

பிரெஞ்சுத் திரைப்படம்
எனது மனை
வி ஒரு
எம்.
உங்களுக்கு ஒரு திரைப்பட நடிகையின் கணவனாக வர வேண்டும் என்ற ஆவல் எப்பொழுதாவது இருந்திருக்கிறதா? அதுவும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியான, அழகும் கவர்ச்சியும் நளினமும் நிறைந்த நடிகையின் கணவனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? இன்றில்லாவிட்டாலும் விசிலடித்துத் திரிந்த கட்டிளம் பருவத்திலாவது இருந்திருக்கிறதா? அப்படியாயின் My Wife is an actreSS என்ற பிரெஞ்சுத் திரைப்படத்தை ஒரு தடவை பாருங்கள். அது உங்கள் மனத்தைத் தயார்ப்படுத்த உதவும்.
r யுவான் ஒரு இளம் பத்திரிகையாளன். விளையாட்டுத்துறை பற்றி எழுதுபவன். அவனது மனைவி சார்லட் பெயரும் புகழும் கொண்ட திரைப்பட நட்சத்திரம். அழகானவள். மனதுக்குகந்த வசீகரமான பழகும் முறைகள் நிறைந்தவள். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த காதல். திருமணத்தின் பின்னும் தொடரும் உதாரண காதல். பாரிஸ்காரர்களுக்கு காதற்கலை பற்றிச் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணி சிரித்து மகிழும் அவர்கள் திருமண வாழ்க்கையை எம்மால் ஆழ்ந்து அனுபவித்து இரசிக்க முடிகிறது.
அமைதியான நீரோட்டம் போல் ஓடிக்கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் சிறுசிறு சலனங்கள். காரணம் அவளுக்கு இருந்த பெயரும் புகழும்தான். குதுாகலமாக உணவருந்த வெளியே செல்லும் நேரங்களிலும் அவர்களின் தனிமையையும் நெருக்கத்தையும் குலைத்து ஒட்டோகிராவ் கேட்கும் ரசிகர் கூட்டம். பாதை ஒழுங்கை மீறியதற்காக அவர்களை மறித்து தண்டிக்க வெளிக்கிட்ட பொலீஸ்காரர்கள் அவளை இனங்கண்டதும் அவளை நோக்கிப் புன்னகைத்து எச்சரிப்பதுடன் விட்டு விடுவிடுகிறார்கள். டின்னருக்கு இடம் முற்பதிவு செய்யும்படி போனில் அவன் கேட்டால் இல்லை எனும் உணவு விடுதிக்காரர்கள் அவளது குரல் கேட்டதும் குழைந்து மந்திரத்தால் கிட்டியதுபோல இடம் கொடுக்கிறார்கள்.
இவையெல்லாம் யதார்த்தமான சம்பவங்கள்தான். ஆனால் அவனது ஆண் என்ற தற்பெருமைக்கு (ஈகோ) சவால் விடப்படுகிறது. அவனது வெள்ளை மனத்திலும் சில கரும்புள்ளிகள் தெளிக்கப்படுகின்றன. இருந்தபோதும் நடிகையான மனைவியின் மின்னலென ஒளிரும் பிரகாசத்துடன் முரண்படாமலும், அதேவேளை அதற்குள் தன்னை ஆழ்த்தி முழுமையாக இழந்து விடாமலும் அவனால் எப்படியோ அந்த வாழ்க்கையில் இசைந்து நடக்க முடிகிறது. இதற்குக் காரணமாயிருப்பது அவள் மீதான அவனது தீவிர காதல்தான். ஒரு
9

Page 11
ஆளுமை மற்றொரு ஆளுமையை தானறியாமலே மேவி மறைத்து முழுங்கி விட முயல்வது எத்துணை துர்பாக்கியமானது.
இவ்வேளையில் மதுச்சாலையில் சந்தித்த அவனது சகோதரியின் மாஜிக்காதலன் அவன் மனத்தில் சில சந்தேகங்களை விதைத்து விடுகிறான். "உனது மனைவி மற்றவர்களுடன் காதல் செய்வதையும், நாக்கால் துளாவி முத்தம் கொடுப்பதையும் திரையில் பார்க்கும்போது உன் மனத்தில் பொறாமையும் கோபமும் ஏற்படுவதில்லையா? இது போன்ற நக்கல் கேள்விகள். பஞ்சுப் பொதியில் வீழ்ந்த தீந்தணலாக பற்றிவிடுகிறது.
இதுவரை அலட்டிக்கொள்ளாமல், சாதாரணமாகப் பார்த்த சம்பவங்கள் கூட அவனுக்குப் புது அர்த்தத்தைக் கொடுக்கின்றன. அதுவும் வயதான ஆனால் காதல் நாயகன் எனப் பெயர் கொண்ட ஜோனுடன் நடிப்பதற்றாக சார்லட் லண்டன் செல்லும்போது அவனது பொறாமைத் தீ சுடர்விட ஆரம்பிக்கிறது. அந்த நடிகனோ ஜெமினி கணேசன் போல திரைப்படத்தில் மாத்திரமில்லாது நிஜவாழ்விலும் காதல் சாகசங்கள் செய்பவன். சில தற்செயலான சம்பவங்களால் யுவானின் சந்தேகம் வலுக்கிறது. "நீ அவனுடன் படுத்தாயா” என கேட்குமளவு அதிகரிக்கிறது. அடிக்கடி இது போன்ற கேள்விகளைக் கேட்டு நச்சரிப்பதால் அவளது பொறுமையையும் சோதிக்கிறான். யுவான் ஆக நடிப்பவர் Yvan Attal. பொறாமையும் சந்தேகமும் கொண்ட கணவன் என்ற சிக்கலான பாத்திரம். அத்துடன் சற்று நகைச்சுவையும் கலந்தது. பழுதில்லாமல் செய்கிறார். மனைவி சார்லட் ஆக நடிப்பவள் நிஜ வாழ்விலும் அவனது மனைவிதான். பெயர் Charlotte Gainsbourg. 1996 அளவில் வெளியான “Jane Eyre” என்ற படம் மூலம் புகழ் பெற்றவள். அவளது ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பு எம்மைக் கவர்கிறது. அவள் போலி முகம் காட்டாது மனம் விட்டுச் சிரிக்கும்போது வரிசை பிறழ்ந்த பற்கள் வெளித் தெரிவதிலுள்ள வித்தியாசமான அழகு கூட எம் மனத்தை நிறைக்கிறது. அவளது விரிந்த கண்கள் நிறையப் பேசுகின்றன. தலை அசைப்புக்களும் கவிதையாக மெளன கீதம் இசைக்கின்றன.
ஜோன் ஆக நடிப்பவர் Terence Stamp- ஒரு பண்பட்ட நடிகர். கதையின்படி ஜோனுக்கு சார்லட் மீது உண்மையிலேயே ஒரு கண் இருக்கிறது. ஆயினும் கனவான் போன்ற பாவனையுடன் அவளுடன் பழகுகிறான். வெளிப்படையாக எந்தவித நிர்ப்பந்தமும் கொடுக்காது தந்திரமாக அவளைத் தன் வலைக்குள் விழுத்தப் பார்க்கிறான். அவளுக்கும் இது புரிந்தபோதும் கூட நடிக்கும் அவனை முழுமையாக ஒதுக்கி வைக்க முடியாத நிலை. ஆயினும் அவனை ஓரளவு எட்டத்திலேயே சார்லட் வைத்திருக்கிறாள். Terence Stamp மிக அழகாகத் தனது பாத்திரம் அறிந்து நடிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் Remy Chevrin ன் கமெரா லண்டன், பாரீஸ் ஆகிய நகரங்களின் வெளிப்புற அழகை தனது ரசனையுள்ள கமெராவினால் விழுங்கி எம் முன் அற்புதமாகப் விரிக்கிறார். வெளிப்புறக் காட்சிகளை மாத்திரமின்றி உள்ளகக் காட்சிகளையும் கண்குளிரப் பதிவு செய்கிறார். படப்பிடிப்பு அரங்கம், விரைந்தோடும் ரெயின், கன்ரீன், மதுச்சாலை போன்ற யாவுமே உயிர்த் துடிப்புடன் எம் கண் முன் விரிகின்றன. 20

சண்டையும் சாகசங்களும் கொம்பியூட்டர் கிரபிக்ஸ்சும் நிறைந்த இன்றைய திரைப்பட உலகில், இது வித்தியாசமான படம். உயிர்த் துடிப்புள்ள உணர்ச்சிகள் நிறைந்த பாத்திரங்களைக் கொண்ட இப்படம் மனத்திற்கு இதமாக இருக்கிறது. காதல் என்ற நுண் இழையால் பிணைக்கப்படும் திருமண உறவானது சந்தேகம் பொறாமை போன்ற கணைகளால் எப்படிச் சோதனைக்கு உள்ளாகும் என்பதை யுவன் அட்டால் நுண்ணுணர்வும் கலையழகும் கைகோத்து வர, காட்சிகளுடாக அற்புதமாக நகர்த்துகிறார். திறமையும் கற்பனையுணர்வும் கொண்ட அவரது நெறியாள்கையில் திரைப்படம் சோபிக்கிறது.
மனைவி ஒரு நடிகையாக இருந்தால்தான் கணவன் மனைவியிடையே இத்தகைய மனவிரிசல்கள் ஏற்படும் என்றில்லை. எவருடைய வாழ்விலும் இவை நிகழலாம். பரஸ்பர நம்பிக்கையும், ஒளிவு மறைவற்ற திறந்த உள்ளங்களும் தானே திருமண உறவின் ஆணிவேர்.
தமிழ்ப் படங்களை எடுத்துக் கொண்டால் அங்கு காதல் தவிர்ந்த வேறெந்தக் கருவும் கிடையாது, அதுவும் காலத்தால் ஊசிப்போன சம்பவங்களைத்தான் கொண்டிருக்கும். பெண்ணைக் கவர்வதற்காக, அவளது காதலைப் பெறுவதற்காக, Idea க்களையும் குறுக்கு வழிகளையும் நகைச்சுவை நடிகனிடம் கேட்பது போன்ற அசட்டுக் காட்சிகள் தவறாது இடம் பெறும். மரங்களைச் சுற்றியும், மலர்த்தோட்டங்களில் ஓடிப் பிடித்தும் காதல் செய்ய வைப்பார்கள்.
காதலோடு தொடர்புடைய, ஆனால் காதல் காட்சிகளைக் கொண்டிராத எத்தனை நுண்ணுணர்வுச் சங்கதிகள் ஒவ்வொரு மனிதனதும் வாழ்வில் தினமும் அரங்கேறிக் கொண்டு இருக்கிறன. அவற்றையும் சுவையாகவும் ரசிகர்களைக் கவரும் வண்ணமும் சொல்லாம் என்பதை என்றுதான் எம்மவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்களோ?
இந்த விதத்தில் பார்க்கும்போது பார்த்திபனின் அழகி என்ற படம் வித்தியாசமானது என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். விடலைப் பருவத்தின் முதிராக் காதல் கருகுவதையும், வேறு இடங்களில் திருமணமான பின், காலவோட்டத்தில் சந்திக்கும்போது அவர்களிடையே ஏற்படும் மன உணர்வுகளையும், அவர்களது குடும்பங்களில் ஏற்படும் சலனங்களையும் அழகி உணர்வு பூர்வமாகச் சித்தரித்தது.
குடும்ப கெளரவத்தைக் காக்கும் நிர்ப்பந்தத்திற்காக தவறியவளை மணம் செய்கிறான் ஒருவன். உடலுக்கும் உள்ளத்திற்கும் அப் பெண்ணின் துணையையும் அரவணைப்பையும் பெற முடியாத நிலை. பருவம் தப்பிய வயதில் ஒரு இளம் பெண்ணிடம் அவன் மனம் இணங்கிப்போவதை முதல் மரியாதை அற்புதமாப் பதிவு செய்தது.
My wife is an actress 6T6ip (3) ULggio) 6 (5&6p 696.06) T(b பாத்திரமும் வெளிப்படுத்துகிற உணர்வுகள் தீவிரமானவை, நிஜமானவை, சத்தியமானவை. மனிதர்கள் இடையே முகிழும் உறவுகளின் போது எவரிடத்திலும் வெளிப்படக் கூடியவை. எனவே உங்கள் மனைவி நடிகையாக இல்லாவிட்டால் கூட, உங்கள் கணவன் சந்தேகப் பிராணியாக இல்லாவிட்டால் கூட உங்களது பல உணர்வுகளும் எண்ணங்களும் இப்படத்தில் காட்சிகளாக 21

Page 12
விரிவதை இனம் கண்பீர்கள். எனவே மனம் ஒன்றி உங்களால் ரசிக்க முடியும் என நம்புகிறேன்.
பிரெஞ்சுத் திரைப்படமாலும் ஆங்கில உபதலைப்புகள் போடப்படுவதால் உரையாடல்களைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை. லண்டனில் நடக்கும் காட்சிகளில் ஆங்கிலமே பேச்சு மொழியாக இருக்கிறது. எனவே இரு மொழிப்படம் என்றும் சொல்லலாம்.
இந்தப் படத்தை எங்கே பார்த்தேன் என்கிறீர்களா? ரூபவாஹினியின் Eye வரிசையில் ஒவ்வொரு புதன் இரவும் 9.30 மணிக்கு பிரெஞ்சுத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறார்கள். அதில் பார்த்ததுதான். பெரும்பாலும் நல்ல படங்கள். ரூபவாஹினியின் Eye வரிசையின் பணி பாராட்டுக்கு உரியது. / N
கையில் பணமில்லை செலவழிக்க நீ சொரியும் புன்னகையை என்னசெய்வேன்
துளிர் துவண்டு விழுந்தாலும் பூக்கின்ற ஒரு சாதி நீ
தன் கொப்பு முறிந்தாலும் நிமிர்த்திப் பிடிக்கின்ற கொடிபோல என்னைத் தாங்குகிறாய் வீட்டில் எண்ணெய் இல்லை என்றுமில்லை
பருப்புக் குறைகிறது முருங்கை இலை உருவுகின்றாய் சீனி இனி ஒரு கரண்டி ஒரு சுண்டல் போட்டு இன்று கிடக்கிறது ஆணத்தில் நனைத்துவிட்டாய் மரக்கறியும் நல்ல ருசி தீர்ந்து நம் சட்டி நாற இரவு போகிறது என்றுமில்லை பிட்டுக்குப் புளி ஆணம்
கறி மாங்காய் வளவில்
காய்த்த கறி இதுவென்று நீ அள்ளி ஊற்றும்போது கை பிசைந்த சோற்றுக்குள் என்ன பசை
நம் உறவு அரிசியிலும் அப்பியதா ノ
 

O xx. 2. நேற்றைய திரும்பப் பார்க்கிறேனில்
O O எனர் று என்னையே திரும் கலைஞாகளெ பிப் பார்த்த நான்.மீண்டும் நேற்றைய கலைஞர்களை .
பற்றித் திரும்பிப் பார்க்கி:
~ அந்தனி ஜீவா - றேன்  ീ
கலைஞர் ஏ. ரகுநாதன்
fழத்திருநாட்டில் நாடகமும் திரைப்படமும் வளர்ச்சி அடையவேண்டும் என அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு மூத்த கலைஞரை, கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் பாசறையில் வளர்ந்த கலைஞர் ஏ. ரகுநாதனை பாரிஸில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
நான் கலைத்துறையில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட நிர்மலா திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் திரைப்படங்களைச் சிறப்பாகத் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை நிர்மலா திரைப்படம் தந்தது.
நாடகத்துறை வளர வேண்டும், நல்ல நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என ஆர்வம்கொண்ட ஏ.ரகுநாதன் 1968-ல் தனது "நிழல்" நாடக மன்றம் மூலம் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஏழு நாட்கள் இலவச தமிழ் நாடகவிழா ஒன்றை நடத்திச் சாதனை படைத்தார். அது மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் ஐந்து நாட்கள் நாடக விழாவை நடாத்தினார்.
கலையரசுவின் நாடகப் பாசறையில் வளர்ந்த இவர் கலையரசு சொர்ணலிங்கம், சாவன்னா சண்முகநாதன், ரொஸாரியோ பீரிஸ், சுஹைர் ஹமீட், நடிகவேள் லடீஸ்வீரமணி ஆகியோர் இயக்கிய நாடகங்களில் நடித்துள்ளார். நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட் நெறிப்படுத்திய தேரோட்டி மகன், வேதாளம் சொன்ன கதை (கவிதை நாடகம் கவிஞர் அம்பி எழுதியது) ரகுபதிராகவ ராஜாராம், பச்சைக்கிளியே பழம்கொண்டா, வாடகை அறை, நகரத்து கோமாளிகள், அவளைக் கொன்றவள் நீ ஆகிய நாடகங்களில் நடித்ததை நேரில் பார்த்துள்ளேன். ரகுநாதன், நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவரைப் பற்றி ‘மல்லிகை சஞ்சிகையில் அட்டைப்படக்கட்டுரை கூட எழுதியிருந்தார்.
இவர் நிர்மலா திரைப்படத்தை தயாரித்ததுடன் நின்று விடாமல் 1978-ல் வெளிவந்த ‘தெய்வம் தந்த வீடு சினிமாஸ்கோப் திரைப்படத்தையும் தயாரித்து, அதன் முக்கிய பாத்திரத்தில் நாதஸ்வரக் கலைஞராக நடித்தவர். அது மாத்திரம் அல்ல, இங்கு தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லை, நெஞ்சுக்கு நீதி, திரைப்படங்களில் நடித்தவர்.
இலங்கையில் வாழ்ந்த இவர், நாட்டில் ஏற்பட்ட இன வன்செயலுக்குப்
23

Page 13
பின்னர் தமிழகம் சென்று சென்னையில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த பொழுது அங்கும் திரைப்பட ஆசையும் ஆர்வமும் இவரை விடவில்லை.
ஒரு திரைப்படக் கதையை எழுதி நடிகர் சிவகுமாரையும் நடிகை லசஷ்மியையும் வைத்து தயாரிக்க வேண்டும் என முயற்சி செய்தார். அது கைகூடாமல் போகவும் அதனை ஒரு குறுநாவலாக எழுதி “எனக்காகப் பூக்கும்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
மூத்த கலைஞரான ரகுநாதன் பாரிஸிலும் சும்மா இருக்கவில்லை. 1994-ல் பாரிஸில் “இன்னும் ஒரு பெண்” படத்தையும் இயக்கியுள்ளார். அதே ஆண்டு "முகத்தார் வீடு” படத்தையும் இயக்கியுள்ளார்.
அதன் பின்னர் நினைவு முகம்', 'மெளனம் (1966), பிரான்ஸ்- ஜெர்மன் கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் தயாரான தயவுடன் வாழவிடுங்கள் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
கலையரசுவின் நாடகப் பட்டறையில் பயின்றவரும் லண்டனில் பாரிஸ்ட ராகப் பணிபுரிந்து கொண்டு கலை வளர்க்கும் எஸ். ஜே . ஜோசப் என் பவர் சுவிஸ் அஜீவன் எழுதி இயக்கிய "அழியாத கவிதை" குறுந் திரைப்படத் தில் ரகுநாதன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னும் இந்தக் குறுந் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் போட்டுக்காட்டப் படவில்லை. அதனைத் தயாரிப்பாளர் ஜோசப் அவர்கள் எனக்காகப் பிரத்தியேக திரையிட்டுக் காட்டினார். அழியாத கவிதை திரைப்படத்தில் ரகுநாதன் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். -
நாடகக் கலைஞராக கொழும்பில் வாழ்ந்த காலங்களில் கலைஞர் களை நேசிக்கும் மனித நேயமிக்க வராகத் திகழ்ந்துள்ளார். 1935-ல் மலேசியாவில் பிறந்த இவர், இன்று எழுபது வயதை எட்டிப்பிடிக்கும் வேளையிலும் இருபது வயது இளைஞரைப் போல செயல்படுகிறார். கலையரசுவின் பாசறையில் வளர்ந்தவர் என்பதால் உடலை சீராக வைத்துள்ளார். இந்த மூத்த கலைஞரிடமிருந்து இளைய தலைமுறையினர் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டிய சங்கதிகள் உள்ளன.
இவரது உள்ளத்து ஆசைகளை என்னிடம் மனந்திறந்து தெரிவித்தார். “பூமிப் பந்தெங்கும் சிதறுண்டு கிடக்கும் எங்கள் கலைக்கண்மணிகளை ஒன்றிணைத்து, ஒரு தொலைக்காட்சித் தொடரையும், தனது கலையுலக ஆசான் கலையரசு சொர்ணலிங்கம் பற்றிய ஒரு தொகுப்பு நூலையும வெளியிடவேண்டும். அத்தோடு 1947 முதல் தான் சந்தித்த - தன்னைப் பாதித்த எழுத்தாளர்கள், நடிகர்கள், இசைஞர்கள், நடன மணிகள், நாட்டுக் கூத்துக்கலைஞர்கள் பற்றிய தான் எழுதிய ‘ஒரு ஒப்பனை இல்லாத முகம் என்ற பிறிதொரு நூலையும் தொகுத்து வெளியிடவேண்டும்” என்றார். இவரது கலையுலகக் கனவுகளை நனவாக்க வேண்டும். ஐரோப்பிய மண்ணில் தனது தொப்புள்கொடி உறவுகளை மறந்துவிடாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஈழத்தின் மூத்த கலைஞர் ரகுநாதன் தனது அரை நூற்றாண்டு கலையுலக வாழ்வை எழுத்தில் பதிவு செய்யவேண்டும். அத்துடன் இவரைப்பற்றிய ஒரு குறுந்திரைப்படத்தை புலம் பெயர்ந்து வாழும் கலைஞர் ஒருவர் பதிவு செய்ய வேண்டும்.
24

/ー
0 0 O 0 "மறுமலர்ச்சி” எழுத்தாளர் ༽ பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா
பண்டிதர்கள் என்றாலே பழைமைவாத மரபுவழி வந்த இலக்கியங்களைத் தவிர நவீன இலக்கியத்தை தீண்டத்தகாத பொருளாகப் பார்க்கிற, புறக்கணித்து எதிர்க்கிறவர்கள் என்ற ஒரு கருத்து 1960களில் கூட நிலவியது. மரபு என்பது தேங்கிய குட்டையல்ல என்பதை நவீன இலக்கியத்தை எதிர்த்த பண்டிதர்களுக்கு எடுத்துச்சொல்லி “ஞானச்சுடர் ஏற்றிய பணியை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது என்பது வரலாறு.
பண்டிதர் ச.ப.சர்மா பழைய பண்டிதர்களிலிருந்து மாறுபட்டவர்; வேறுபட்டவர். தமது இளம்வயதில் மகாவித்துவான் சி.கணேசையரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர். 17வது வயதிலேயே பண்டிதர் பரீட்சையில் சித்திபெற்றவர். அதேபோல சமஸ்கிருதத்திலும் அவர் பண்டிதர் பட்டம் பெற்றவர்.
ஆனால் . பழைமையின் தளத்தில் ஆழமாகக் காலூன்றி நின்றவரெனினும், புதுமையை, நவீன இலக்கியத்தை, அதன் வளர்ச்சிப் போக்குக்கான பணிகளை வரவேற்று ஊக்கிவிடுபவராக 1940களிலேயே விளங்கியவர் பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா. சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளில் யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற மறுமலர்ச்சி இலக்கியக் குழுவின் காரிய கர்த்தாக்களுள் ஒருவர். இவரது ஊக்கமும் உற்சாகமான ஒத்துழைப்பின் காரணமாக 'மறுமலர்ச்சிக்காலத்தில் பல எழுத்தாளர்கள் உருவாகினர். 'மறுமலர்ச்சி சஞ்சிகை வெளிவருவதற்கு உந்துசக்தியாக விளங்கியவர். 'மறுமலர்ச்சியின் ஆரம்பகாலம் முதல் இறுதிவரை திரு.வரதருக்குப் பக்கபலமாக விளங்கியவர் பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா. "மறுமலர்ச்சியைத் துவக்கிய ஐவரில் இவரும் ஒருவர். ஏனையவர்கள்: வரதர், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன்.
பல புனைபெயர்களில் 1939ஆம் ஆண்டிலிருந்தே கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்களை, இலங்கை விகடன்', 'மறுமலர்ச்சி, ஈழகேசரி, சென்னை நவசக்தி, கோவை வீரசக்தி, திருச்சி கலாமோகினி, சென்னை 'பாரததேவி, ‘காந்தியம் என்பவற்றில் பலகாலமாக எழுதிவந்தவர். பல வடமொழிநூல்களின் பதிப்பாசிரியர். தமிழாசிரியர், சமஸ்கிருத விரிவுரையாளர். ஆழ்ந்த அறிவும், அடக்கமும், எளிமையும் மிக்க இவ்விலக்கியப் பெரியவர் நிறைவாழ்வு வாழ்ந்து தமது 87வது வயதில் அண்மையில் சிவபதமெய்திவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடைக!
للمرے - நீ வரதராயணனர், வண்ணார்பண்ணை - ܢܠ
25

Page 14
O
隆 BiU fiÇäct
பார்வையும் பதிவும்
~ செ.சுதர்சன் مح -------------------------------------------N-S IDத்தியமாகாணத் தமிழ் சாகித்திய விழா நுவரெலியாவில் நடை பெற்று முடிந்தது. ஒக்டோபர் மாதம் 11, 12 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு பாடசாலைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவை மலையக மாணவர்களின் அதீத கலைத்திறமைகளை வெளிப்படுத்தின. ஆயினும், ஒரு பாடசாலையின் இசை நிகழ்ச்சி அரபு மொழியிலேயே இடம் பெற்றது. அரபு மொழி தெரிந்த வித்துவ வீக்கத்தைத் தமிழ் சாகித்திய விழா விலா காட்டவேண்டும்?
பொது மக்கள் வழங்கிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பானவையாக அமைந்தன. மலையகத்துக்கே உரிய பல மரபுக்கலைகள் மேடையில் அருமையான முறையில் அழகாக ஆற்றுகைப்படுத்தப்பட்டன. “வையத்தலைமை கொள்” என்ற தலைப்பிலான கவியரங்கம் பலத்த கைதட்டல் களைப் பெற்றது. கவியரங்கின் தலைவராக கலாநிதி துரை. மனோகரனும் கவிஞர்களாக சு. முரளிதரன், இந்திராணி, இராமச்சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேற்படி சாகித்திய விழாவிற்குத் தமிழகத்திலிருந்து பேச்சாளர்களாகப் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், முன்னாள் இந்தியப்பாரளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன் ஆகிய இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களது பேச்சாற்றல் சபையைக் கட்டிப்போட்டது. குமரி அனந்தன் தமிழின் பெருமை பற்றிச் சிறப்பாகப் பேசினார். பேராசிரியர் அரங்க இராமலிங்கம் இரண்டு நாட்களும் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
இலக்கியத்துறை சார்ந்த பரிசுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன. நாவலுக்குச் சிக்கன்ன ராஜுவும், நாடகத்திற்கு மலையக வாசுதேவனும், சிறுவர் இலக்கியத்திற்கு மொழிவரதனும், ஆய்வுக்கு சு.முரளிதரனும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர். கலாநிதி துரைமனோகரன், செ.நடராசா, கோவிந்தராஜ் உட்படப் பலர் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். வழமைபோல் அரசியல் வாடையும் வீசத்தான் செய்தது.
ஜே.எக்ஸ், மிலோ ஆகியோர் பியசெவன என்ற சிங்களத் தொலைக் காட்சி நாடகத்தின் 30 அங்கங்களை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளனர். முற்றிலும் புதிய பாணியில் அமைந்த இத் தொலைக்காட்சி நாடகத்தின் இயக்குனர் ஜே.சிவகுருநாதன் ஆவார். 30 அங்கங்களும் ஆணைமடுப்பகுதி 26
 

யிலேயே எடுக்கப்பட்டுள்ளன. மிலோ அவர்கள் 12 அங்கங்கள் கொண்ட தமிழ்த் தொலைக்காட்சி நாடகத்தையும் தயாரிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு கள் அனைத்தும் உடப்புக்கிராமத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனியே தமிழகத் தொலைக்காட்சி நாடகங்களில் மாத்திரம் அடக்கம் செய்யப் படும், சித்தி போன்ற நாடகங்களில் மட்டும் உணர்வுகளை உணரும் ஈழத் தமிழருக்கு இதுவாவது முத்தி வழங்கட்டும். முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
அண்மையில் சிறுவர் இலக்கியம் தொடர்பாக இருநூல்கள் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. சோமா ஜெயகொடி சிங்கள மொழியில் எழுதிய சுகராமல் காலயக (தேவதையும் மூன்று சகோதரிகளும்) என்ற நூலை ம.யோகவிநாயகன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜப்பான் நாட்டுக் கிராமம் ஒன்றில் வசிக்கும் மூன்று சிறுமிகள் தமது தாய் நாட்டிற்குச் செய்த தொண்டே கதையின் உள்ளடக்கம். நூல் முழுவதும் சிறுவருக்கான நல்லொழுக் கங்கள் விரவிவருகின்றன.
தெனகம சிரிவர்த்தன எழுதிய சிங்கள நூல் ஒன்றை பி.யோகநாதன் மொழிபெயர்த்துள்ளார். “கண்தானம் செய்த மன்னன்’ என்ற இந்த நூல் போதிசத்துவக்கதை ஒன்றினை உள்ளடக்கமாகக் கொண்டது. நாட்டிற்குப் பல தொண்டுகள் செய்துவரும் மன்னன், இறுதியில் மக்களுக்குத் தனது கண்களையே தானம் செய்ய முன்வருகிறான். இதுவே கதை. நமது நாட்டில் எதிர்காலத்திலாவது இப்படிப்பட்ட மன்னர்கள் உருவாகினால்..???
‘கண்ணில் தாரைகள் என்ற கவிதை நூலை ஈ.எஸ். மகேந்திரராஜா வெளியிட்டுள்ளாா. சமகால விடயங்களை இயல்பாக, மரபுமூலம் பேசும் இக்கவிதை நூல் சிறப்புக்குரியதே. குறிஞ்சி இளந்தென்றலின் அப்புறமென்ன முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பு ஆகிய கவிதை நூல்களும் குறிப்பிடத்தக்கன.
தமிழ் இலக்கியப் பெருவிழா வவுனியாவில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. பல்வேறுபட்ட கலைநிகழ்வுகளும் கருத்தரங்குகளும் இடம் பெற்றன. பெருந்தொகையான கலை இலக்கியவாதிகளும் பொது மக்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர். வவுனியாவில் இடம் பெற்ற இவ்விழாவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மஹாவித்துவான் மா.த.ந.வீரமணி ஐயரின் இழப்பு கலை உலகில் இனி எவராலும் ஈடுசெய்ய முடியாதது. பரதநாட்டியக் கலைஞராகவும் கவிஞரா கவும் இசை வல்லுநராகவும் விளங்கிய இவர், தனக்கென ஒரு மாணவ பரம் பரையையும் உருவாக்கியவர். எல்லோருடனும் இனிமையாகப் பேசும் இவர், சிறியவர் பெரியவர் என்ற பேதத்தின் பக்கங்களைப் புரட்டி அறியாதவர். இந்தியக் கலை உலகு இவரை வைத்தே ஈழநாட்டின் கலைத்திறமையை எடைபோட்டுக்கொண்டிருந்தது. கவிமாமணி, கலாரத்னா, கலாபூஷணம், முத் தமிழ்க் கலாநிதி, மஹாவித்துவான் ஆகிய சிறப்புப் பட்டங்களுக்குரிய இவர், பல்வேறுபட்ட கீர்த்தனை நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், இவருடைய கனிவான பேச்சும், கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன். என்ற பாடலும் கலைஉலகு உள்ளவரை கேட்டுக் கொண்டேயிருக்கும். 27

Page 15
இன்று ஈழத்து இலக்கியவுலகில் அதிகம் பேசப்படும் இளந் தலைமுறைப் படைப் பாளி ச.சாரங்கா ஆவார். அவரது இயற்பெயர் செல்வி. குணாளினி சதாசிவமூர்த்தி ஆகும். சாவகச்சேரி சங்கத்தானையில் பிறந்த சாரங்கா, சாவக்கச்சேரி இந்துக்கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றார். சிறுகதை, கவிதை, திரைக்கதை, (ஸ்கிறிப்நெற்) என்பனவற்றில் தனது ஆளுமையையும் ஆற்றலையும் சாரங்கா வெளிப்படுத்தியுள்ளார்.
1992களில் சாரங்காவின் முதற் சிறுகதை யான ‘ஒன்றரைக்கால் ஈழநாதத்தில் மாவீரர் தினக் சிறுகதையாகப் பிரசுரமாகியது. அதன்பின்னர் தனது சிறுகதைகளுக்காகவும் கவிதைகளுக்காகவும் பல பரிசுகளைத் தொடர்ந்து சுவீகரித்த பெருமை இந்த இளம் படைப்பாளிக்குரியது. குரும்பசிட்டி சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு, வலம்புரி நடாத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசுகள், பாரிஸ் தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம், விபவி கவிதைப் போட்டியில் பரிசு எனப் பல பரிசில்களை வென்றுள்ளார். இவரது சகோதரி குமுதினி சதாசிவமூர்த்தியுடன் இணைந்து கட்டுரைக் கதம்பம் எனும் பாடநூல்களையும் எழுதியுள்ளார்.
சாரங்கா இதுவரை இருபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், முப்பது வரையிலான குறுங்கதைகளையும் எழுதித்தந்துள்ளார்; புதுக் கவிதை கள் பலவும் படைத்துள்ளார். சிறுகதைகளில் காணப்படும் வீச்சும் பார்வையும் சாரங்காவின் படைப்பனுபவத்தினைச் சுட்டுவனவாகவுள்ளன.
சஞ்சீவி, வீரகேசரி, தினகரன், சுடரொளி, தினக்குரல், ஈழநாடு, ஈழ நாதம், கலைமுகம், தாயகம், அமுது, ஞானம், வெளிச்சம், காற்று, அங்குசம், திசைபுதிது என இவரது படைப்புகளைத் தாங்கிய பத்திரிகைளின் பட்டியல் நீளும். இவரது சிறுகதைகளில் வானம் மட்டும் தேசம், ஒன்றரைக்கால், ஒரு கழுத்துச் சலங்கை என்பன குறிப்பிடத்தக்க சிறுகதைகள். ஆங்கிலப் பட்டதாரி யான சாரங்காவின் இலக்கிய நோக்கம், சர்வதேச இலக்கியச் சிகரத்தைத் தொடும் ஆக்கங்களைச் செய்தலாகும், அது சாத்தியமாகுமென்பது இந்த இளம்படைப்பாளியின் எழுத்துக்களிலிருந்து புலனாகிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஸ்கிறிப்ற்நெற் திரைக்கதை எழுத்தாளர் தெரிவில் இறுதிச் சுற்றுவரை தேறிச் சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமகால எரியும் பிரச்சினைகள், பெண்ணியம், அடக்கு முறைகளுக்கு எதிரான அறைகூவல் என்பன அவரது படைப்புகளின் அடிநாதம்.
~ செங்கை ஆழியான்
28
 
 

ஏ.எஸ்.குணா, பத்தாங் பெர்சுந்தை.
இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா
5டந்த 22-09-2003இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சிறுகதை, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குத் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் பரிசுகளை வழங்கிக் கெளரவித்தது.
நாட்டின் முன்னணி கூட்டுறவுக் கழகமாகத் திகழும் இதில் 90வீத விழுக்காட்டினர் இந்தியர்கள் (பெரும்பான்மை தமிழர்கள்) உறுப்பினர்களாக உள்ளனர். கோலாலம்பூரில் மையப்பகுதியில் 'விஸ்மா துன்சம்பந்தனி என்ற மாபெரும் கட்டடத்தையும், நாட்டின் பல பாகங்களில் செம்பனை தோட்டங்களை யும் இக்கழகம் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்களையும் இது வெற்றிகரமாக நடத்திவருகின்றது.
இக்கூட்டுறவுக் கழகம் கடந்த 10 ஆண்டுகளாக இலக்கியப் போட்டிகளை நடத்திவருகிறது. இம்முறை பதினோராவது ஆண்டாக இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பரிசளிப்பு விழா 'விஸ்மா துன்சம்பந்தனிலுள்ள ‘டான்றி சோமா அரங்கில் நடைபெற்றது. வெற்றியாளர்கட்கு மலேசிய ரிங்கிட் 1500, 1000, 500 ரொக்கத் தொகை முதல், இரண்டாவது மூன்றாவது என வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக மலேரிங். 200 ஒவ்வொரு பிரிவிலும் இருவருக்கு வழங்கப்பட்டது.
பரிசுகளை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ‘கூட்டுறவு காவலர் டான்றி டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மலேசியாவின் தலைசிறந்த பேச்சாளர் வழக்கறிஞர் சு.பாண்டிதுரை அவர்களின் இலக்கிய உரை இடம்பெற்றது.
1998 முதல் 2002 வரை பரிசு பெற்ற சிறுகதைகளும் கவிதைகளும் நூலாகத் தொகுக்கப்பட்டு பரிசு பெற்ற படைப்புகள் என்ற தலைப்பில் வந்தோர்க்கு இலவசமாக வழங்கப்பட்டது.
மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இம்மாதிரியான பணியை கூட்டுறவுக் கழகம் தொடர்ந்து ஆற்றி வரும் என்று அதன் தலைவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் இரவு உணவையும் வழங்கி கழகம் சிறப்பித்தது. இலவசமாக பரிசு பெற்ற படைப்புகள் எனும் நூலை பெற விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு எழுதினால் அனுப்பிவைக்கப்படும். National Land Finance Co-operative Society Level l 0 Wisma Tun Sambanthan Post Box : 12133, Jalan Sultan Sulaiman, 50768 Kuala Lumpur, Malaysia.
29

Page 16
“இத்து வரும்
- முத்த -
பரந்த பெருவெளி நிர் மானுடம்! தொலைவு அ.தாவது, மனிதர்களற்ற பரந்த பெருவெளியின் கண்ணுக்கு எட்டிய தூரத்தில்:
நேர்கோடு தடம்! வளையம்! இ.தாவது, புகையிரத நிலையத்தி லுள்ள நேர்கோடான பாதையில், மற்றுமொரு வண்டி இலகுவாகக் கடந்து அல்லது மாறிச் செல்ல வகை செய்யும் தடம் அல்லது பாதை போன்றும், புகையிரதத்தைத் திசை திருப்ப உதவும் வளையம் அல்லது வட்டம் போன்றும் -
அழகு சொட்ட, மிக மிக நேர்த்தியாக, கூட்டுணர்வுடன் கோலம், -கோளமல்ல. செய்பவர்கள் கோலமே யானவர்கள் அவர்கள்!
எழும்பும் போது, மிதக்கும் போது, இறங்கும் போது, அமரும் போது ஒரு ஒழுங்கு, ஒரு நியதி ஒரு லாவகம்! என்றாலும், இறங்கும் போதும் , அமரும் போதும் , வெளிக் காட்டும் லாவகம் கணி கொள்ளாக்காட்சி! அது அவர்களால் தான் முடியும்.
பிராந்தியம் முழுவதும் அழகு
ܓܠ
30
N கொப்பளிக் கச்
சுமைதாங்கிகள்
گبرسر
போகுதாம்?
செய்ய இந்த நாரைகளால்தான் முடியும்!
பட்டிக்குத் திரும்பிற நேரத் தில் துள்ளித் துவண்டு வந்தால் நீவவேணுமே? மேய வேண்டாமே?
ஒன்றை ஒன்று துரத்திவரும் காக்கை இரண்டுக்கும் என்ன உறவு? ஏன் இந்த விரைவு?
குளிக் கிற சோடியைப் பார்த்து வெட்கி முகம் சிவந்து ஒளிக்கிறதோ சூரியன்?
ஊரைக் கூட்டிக் காட்டவோ ஆள்காட்டி அலறுகிறது?
来 米 米 米 米
“எத்தனை முறை சொல்லிப் போட்டன், இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம். நாலுபேர் பாக்கிற இடமோ இல்லையோ? வாய்க்கா லென்ன எங்கடையா?
"அங் கை, அங் கை, நாங்களும் அந்தத் தங்க வள்ளத்தில
போவமே? குகையுக் கை உள் ளிடுதே. ஐயையோ! சுக் கில் சுக்கிலாய் போச்சே. அந்த ஆட்
களுக்கு என்ன நடந்தது? இந்தளவு பஞ் சுப் பொதியளும் எங் கை
"கூடாரத்துக்கை இருந்து வாறவையைப் பார்த்தால் எஸ்கி மோவரோ?
‘இதெனி னப் பா, நோ கு தல்லே. என்னாலை இனி நிக்கே லாது, போகப் போறன்; வாறியளோ இல்லையோ?”
‘என்னக்கா! சொண்டொரு மாதிரி? கொத்தாரைக்கேள், என்னி றதே? சட்டையைக் கழட்டினால் தெரி պլճ!'
水 米 米 米 #
 

விதைப் பு, வெட்டுக் குக் கொண்டுபோய் வச் சிருந்துவிட்டு, வேலை முடிய கூட்டி வந்து விடுவார்!
“போகட்டே? போகட்டே..?” என்னத்தைச் சொல்லிறது. "ஏன்டா, வெளிக்கிட்ட நீ போகலையோ?”
“என்னவோ செய்யிதிணை வயித்திக்கை!"
சரியான கள்ளப் பூனை!
水 来 米 水 米
டாக்குத்தர் அம்மா சொன் னதை இப்ப நினைச்சாலும் சீலை அரையாலை உரியுது
எங் கடை இவர் சொன்னார் தெரியுமே..?
“வேறை வேலை யே இல் லையா எண் கினமோ? எங் களுக்கோ? அஞ்சு வரியத்திலை நாலு பிள்ளையஸ். இரண்டு வரிய இடைவெளியாவது வேண்டாமோ. என்கினமோ? இதெல்லாம் ஆரோ கேட்டதோ? பெறவந்தால், பெறப் பண்ணிவிட வேண்டியதுதானே!”
பிறகொரு நாள் :- "உன்னாணைத் தெரியாமல் கேட் கிறன் , எப்ப வந்தாலும் வெளியிலை வெளியிலை என்கிறாய். ஏதோ சுகமில்லையோ?”
குமருகளையும் வைச் சுக் கொண்டு பாக்கப் பாவமாயிருக்கும்! 水 来 米 米 米
எண் ன
சின்னச் சின்ன வேலை யென்றாலும் மாதச் சம்பளக்காரர் களுக்கு மூண்டு பெட்டையளையும் கொடுத்தாச்சு. பெரியவனுக்குத்தான் படிப் பேறாமல் போச் சு; மிசின் ஒடுறான். தேப்பனுக்கும் உதவி. மரத்தையும் புரட்டுவான்!
3.
இளையவனும் கடைசிப் பெட்டையுந்தான் உடம்பு எடுக்காது களாம்! குடுக்காத மருந்துமில்லை. சாப் பாடுமில் லை. மற்றவளவை இரண்டு பேருக்கும் என்ன தெரியாது? குடும்பம் நடத்தப் பழக்கிவைச்சிருக் கிறன். ஒண்டும் தோதாய் வருகுதில் லையே.
本 来 来 米 米
அமைதிப் படை 87 ல) வந்ததோ இல்லையோ, அன்று பிடிச்சது அட்டமத்துச் சனியன்!
கமம் செய்யிறது எண்டால் விளையாட்டல்ல. சுத்திச் சுத்தி அதுக்கை திரிய வேணும். பயளை யெனி ன. தணி னியெனி ன. மருந் தென்ன. மருந்து அல்லது பயளை வேண்ட முடிஞ்சுதே?
ஊருக்கு வந்து போறதெண் டால் சிலவு ஒருபக்கம்; உயிரைப் பிடிச்சுக் கொண்டு ஒருநாளைக்கு ஒரு பாதை கொம்பெடி, சங்குப்பிட்டி, கிளாலி. காலமைபோய் பின்னேரம் வந்தனாங்கள். இப்ப போனால் வாறது ஐமிச்சம்.
அங்கை சுத்திவளைப்பு. இங்கை தேடுதல் . அதுதான் போகட்டும். மேலை அடி கீழை அடி! ஏன்தான் பிறந்தமோ?
போர்க்களமாகிவிட்ட பரந்த னிலை ஆரும் நிப்பினமே?
விட்டது விட்டபடி இவரும் பெரிய பொடியனும் வெளிக்கிடறதுக்கு ஆறுமாசத்துக்கு முந்தி, தலை நிமிர முடியாமல் இடி விழுந்து போச்சு!
படிச்சு படிச்சு காலங்கூடா தென்று இவருக்கும் மூத்தவனுக்கும் எத்தனை முறை சொன்னனான். கேட்டினமே..?

Page 17
கள்ள மரம் ஏத்துப் போயப் மிசினும் போச்சு. பெடியனை மீட்க பல்லுக்காட்டாதவையெல்லாரிட்டும் காட்ட வேண்டிவந்திட்டுது. நகை நட்டு, தாலியை விட என்ன கிடக்கு? ஆறுவரியம் கமம் செய்யவில்லை; செலவுக்கு வேண்டாமே? நகையை வைச்சிருந்தால் பசிமாறுமே?
சரி, கடன் தந்தவனுக்கு விளங்குமோ? அல்லது இதைக் கேட் பானோ? மினா சித் தமி பி அண்ணையின்ரைதான் பெரிய கடன். முந்தி என்றால் இவர், அவர் அங்கை போக இங்கை நிற்பர். அவர் இங்கை வர, அங்கை நிற்பர். எத்தனை நாளைக் கெணி டு ஒளிக் கிறது; தவணை சொல்லிறது?
அணி டைக் கெல் லாம் “புளுத்தபாட்டாய் பேசிப் போட்டுப்
போ குது. கிடந்தாலெல் லோ
குடுக்கிறது?
அந்த மனிசன் கிழமையிலை
இரணர் டு நாள் வரு குது . . .
ஏசிப்போட்டுப் போகுது. தாங்கலாம். இஞ்சை பேச்சு மூச்சில் லாமல், அடுப்புக் கால் போலை மூண்டு குமர் குந்திக் கொண்டிருக்கு. அது களைக் கிணத்திலேயே தள்ளிறது?
பதினைஞ்சு நாளைக் கு இருட்டு பதினைஞ்சு நாளைக்கு வெளிச்சம் என்கிறார்கள். எங்களுக்கு எந்த நாளும் இருட்டு இருட்டுத்தான்!! ஏணி இருப் பாணி என று வந்திட்டது!
本 本
本 水
2000மும் பிறந் துட்டுது,
ஆணையிறவும் விழுந் திட்டுது, தமிழருக்கு குறையில்லை எண்டு
米
32
கதைச்சினம். நாங்களும் நம்பினம்! நடந்ததென்ன?
வைகாசி இருபத்தேழு மறக்க முடியுமே?
ở IT 6uở (39 fì g560o0 LDL’ Lư) ! நாங்களெல்லாம் உயிர் தப்பினல் போதுமெண்டு, குளவி கூட்டிலே கல் விழுந்தால் என்னவோ அது போல, அங் கையும் இங் கையுமா யப் ஓடினதுதானே!
கரணவாயிலை இரணர் டு கிழமை. பிறகு உரும்பிராய்! வெறுங் கையோடு நிக்கிறம்! நிவாரணமு
f6)6)IT65tLIT6)....?
米 米 来 米 米
அடுத்த கட்டிலிலை கிடக்கிற மனிசி, “எதுக்கும் ஒருகணக்கிருக்கு பிள் ளை குட் டியெண் றாலும் !” ஆருக் கோ சொல் லிச் சிது! எனக்குத்தான் சொல்லுதோ என்று நினைச்சன்.
"நித்திரையே செங்கமலம் அக்கா?”
“சகுந் தலா வே? எங்கை மேனை நித்திரை வாற? சும்மாய்
கணி  ைன மூடிக் கொணி டு கிடந்தனான்!”
"நேத் துதான் நீங்கள்
ஆசுப்பத்திரியிலென்று தெரியும். சினி னத் துரை அணி னை தானி சொன்னவர்.
“என்ன இருந்தாப் போல நடந்தது?"
“கிரகம் சரியில்லை. ஒண்டு மாறி ஒண்டு. எதைச் சொல்லிறது? எத்தனையைச் சொல்லுறது? ஏதோ பிறந்திட்டோம் வாறதை வேண்டாம் எண்ட முடியுமே?
"பத்து வரியம் இருக்கும்.

வலது காலுக்கை நெறிபோல ஒரு பாக் களவு இருந்தது. நான் அதையேன் கவனிக்கிறன். ஒரு விக்கினமுமில்லாட்டில். அது இப்ப பெருத்து ஒரு எலுமிச்சம் பழமாட்டம் வந்திட்டுது
"போன திங்கள் இருந்தாப் போல குத்துத் துவங்கிச் சுதே. என்னாலை தாங்கேலாமல் போச்சு.
"விடிய இஞ்சை வந்தால் உடன் ஒப்பரேசன் செய்ய வேணும் எண்டினம்.”
"அப்ப மயக்க மருந்தும்.?”
"சீச் சீ, அதொணி டும் தரேலை. வெட்டிச் சிதல் எடுத்தது தான்.”
"குத் துவாதி சிருக்கும்.?”
"அப்ப குத்துவாதி இல்லைத் தான். இரவு நித்திரை கொள்ளே லாமல் போச்சு. பிறகு நித்திரை மருந்தெல்லே தந்தவை!”
"இதென்ன புது வருத்தம்?” "ஒமொடி மேனை, மற்றநாள் காலமை, ஏன் அடுத்த நாள். அதுதான் நேத்து மருந்து கட்ட அவிட்ட போது, ஆணிச் சிதல் சுரீரென்று வருகுதல்லோ! அந்தக் கோப் பை நிறைஞ சு வழியத் தொடங்கியிட்டுது! உவ்வளவும் எங்கை இருந்துதான் வருகுதோ?
"அவைதான் மருந்து கட்ட வேணுமாம். அங்கை வந்துந்தான் என்ன செய்யிற?”
"நீங்கள் சொல்லிறதெண் டால் சரி, மாத்திக் கொணி டு ஆறுதலாய் வாறதுதானே. சமைக்க ஆளில் லாட்டில் தான் யோசிக்க வேணும் . மணியும் எப்பவோ
குறைஞ்
33
அடிச்சாச்சு. நானப்ப வரப்போறன். விசுக்கோத்துப் பையை கபேட்டுக்கை
வைக்கட்டே?”
冰 水 水 米 水
"ஆரும் வரேலையே? “சகுந் தலா சொன்னாள், நீங்கள் சொல்லித்தான் தெரியும் எண்டு. நேற்றுச் சொல்ல மறந்து போனன்.”
"ஆங்" அதிலை என்ன. எப்பவாம் துண்டு வெட்டிறது?"
"நாலஞ்சு நாள் செல்லும் போல கிடக்கு. டாக்குத்தர் கன நேரமாய் கதைச்சவர்.”
“என்ன சொன்னார்?” "வருத்தத்தைப் பற்றி அதிகம்
சொல்லேலை. எங்கடை குடும்பம்
பற்றி எல்லாம் விசாரித்தார்; நல்ல மனிசன் அப்பா. உங்களுக்கும் எனக்கும் மனத்தாங்கல் கீங்கல்’ வாறதோ எண்டும் கேட்டார். கடன் தனி, இடம்பெயர்வாலை, இருக்கும் தானே என்றும் சொல்லுறார்!
"நல்ல சத்துள்ள சாப்பாடு,
முட்டை, இறைச் சி எலி லாம் சாப்பிடட்டாம். அப்பதான் 'பிலன்' வருமாம்! ஒண்டுக்கும் பயப்பட
வேணி டாம் . சந்தோஷம் தான் உங்களுக்கு இப்ப தேவை எண்டும் சொன்னவர்.
"பெடியளர் நேரத் துக் கு எல்லாம் செய்யுதுகளே? சின்னவளை ஒருக்கால் வரச் சொல்லிறியளே. எனக்கு ஒரு கஷ்டமுமில்லை. நீங்கள் நேரத்துக்கு சாப்பிட்டு உடம்பை கவனமாகப் பாருங்கோ.” 米 米 水 米 米
"தம் பி சினி னத் துரை, உனி ரை கஷ டம் எனக் குத்

Page 18
தெரியாததல்ல, என்ரையையும் எப்பன் எண்ணிப் பார் . நம்பமாட்டாயப் , 'ஆப்பிழுத்த குரங்காய் நிக்கிறன். உன் னட் டை ஓடி ஓடி வா றது அதாலைதான். கொஞ்சமாவது தருவாய் என்று.
“இந்தச் சண்டை ஏதோ முடிஞ சுபோச் சுது எணர் டு தானி வையன். இந்த இருவது வரியம் மனிசரைப் பழக் கி வைத் த பழக்கமிருக்கே, அது எங்கை போகப் போகுது? போக்கத்தான் முடியுமோ? “நல்லவையளை எங்காலும் காண முடியுமே இப்ப? நல்லவையளே இப்ப? சாவுடன் வாழ்வு. காலம் கடந்து விடுமோ எணர் டு தானி துடிப்பாயிருக்கு. நான் சொல்லிறது விளங்குதெல்லே.
"நாங்களேதானி 69 (5 ‘அர்த்தத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
"வயலை எழுதித்தாறதெண்டு சொல்லுறாய். அதை வச்சு நான் என்ன செய்யிற? அரைக்கரைவாசி எண்டாலும். ஆரிட்ட எண்டாலும் மாறித்தா மேனை. வேறை எண்னத்தை உன்னோடை நான் கதைக்கிற."
சின்னத்துரைக்கு என்னவோ போல இருந்தது. 'மினாசித்தம்பி அண்ணன்ரை பாடும் கஷ்டம்தான். ஒரிடமும் பிரிக்கேலாமல் கிடக்கே. அவருக்கும் ஆறேழு பிள்ளையஸ்.
அதுக்கை மூண்டுகுமர்.
米 率 冰 米 米
“இரண்டு கிழமைக்குள்ளை இப்படி எலும்பாய் போனியேயப்பா!” “எனக்கெண்டால் அப்படித் தெரியேலை. இப்பதான் நல்ல
34
இறைச்சி, முட்டை, டால் எல்லாம் தாறியளே! வருத்தம் இருக்கிறதாயே தெரியலை.
"மறந் திட்டனே, வாற கப்பலுக்கு கொழும்புக்கு ‘கறன்ட் பிடிக்கப் போக வேணுமாம்.”
“கொழும்புக்கோ..?”
"அதுதான் யோசனையாய் இருக்கு. ஏனப்பா இரண்டு மூண்டு பிள் ளையளர் எணி டால் இந்த முக்குப்பாடெல்லாம் வந்திருக்கா தெல லோ? செத்த இரணர் டும் இருந்திருந்தால்..?"
"அதுகளை விடு. எந்தாஸ் பத்திரியாம்?”
"மகரகமவாம்.!”
"நீ ஒண்டுக்கும் யோசி யாதை. முதல் சாப்பிடு. நானுன் னோடை வருவன் . பின் னேரம் வரப்பிந்தினால் காலமை வருவன். காசு தேவையல்லோ.”
முதல் முறையாக தேகம் கனத்ததை உணர்ந்தார்.
மேலும் வினைக் கெட விரும்பாமல் மணி அடிப்பதற்கு முன், வாட் டை விட் டு அவசரமாக வெளியேறுகிறார் சின்னத்துரை.
பெருமூச்சு விட்டபடி கண்கள் பனிக்க கட்டிலிலிருந்தபடி இமை கொட்டாது அவர் போவதை பார்த்துக் கொண்டிருக்கிறாள் செங்கமலம்.
 

29, 30/10/2003 திகதிகளில் 'ஹிறு குழுவினப் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடாத்திய சிங்கள-தமிழ் கலைக் கூடலின் பொழுது 2ம் நாள் நிகழ்ச்சிகளின் பொழுது ஆற்றிய தொடக்க உை
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
வணக்கத்துக்குரிய பெளத்த பிக்குப் பெரியோரே, இங்கு குழுமியுள்ள தோழர்களே, நண்பர்களே,
நாம் இன்று இங்கு குழுமியுள்ளமை ஒரு வரலாற்று முக்கியத்துவமுடைய நிகழ்ச்சியாகும். ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு மேல் இந்த நாட்டில் இரண்டு இனக்குழுமங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய யுத்தம் நடந்தது. நியாயமும் நீதியுமுள்ள ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கென செய்யப்பட்டுள்ள யுத்த நிறுத்தம் தரும் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, நடந்தேறியது போன்று மக்கள் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்த யுத்தம் ஒன்று மீண்டும் வராமலிருப்பதற்கான நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திப்பது, அவற்றை மேற்கொள்வது அத்தியாவசியமாகும்.
சமாதான எதிர்ப்புக்கான அரசியல் நிலைப்பட்ட அபிப்பிராய ஒருங்கு சேர்ப்பு சில சக்திகளால் மிகுந்த வன்மையுடன் நடத்தப் பெறுகின்ற இந்த வேளையில் இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களையும் சிந்தனைகளையும் அறிந்தவர்கள் பிரதிபலிப்பவர்கள் என்கின்ற முறையில் சிங்களக் கலைஞர்களும் தமிழ்க் கலைஞர்களும், சிங்களப் புத்திஜீவிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் ஒருங்கு சேர்ந்து ஒன்றுபட்டு எம்மிடையே நிலவிய நல்லுறவுகளையும் நம்மைப் பிணைக்கும் தொடர்புகளையும் மீளக்கண்டுபிடித்தல் (Re discovery) மிக மிக முக்கியமானதாகும்.
நண்பர்களே, நம்முடைய தனித்துவங்கள் காரணமாக நம்மிடையே சில வேறுபாடுகள் உள்ளன. அது ஓரளவிற்குத் தவிர்க்கமுடியாமலும் கூட இருப்பது. ஆனால், அதேவேளையில் நம்மிடையே நம்மைப் பிணைக்கும் பல நல்லுறவுகள் உள்ளன. வரலாற்றுக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன. சமாதான சகஜீவனம் உள்ளது. ஆனால் இன்று நாமோ அந்தப் பேதங்களை மாத்திரம் பெரிதுபடுத்தி நாம் இந்த மக்கள் தங்களிடையே உள்ள அடிப்படை ஒருமைப்பாடுகளை, ஒருங்கிணைப்புகளை மறக்கச் செய்கின்ற அளவிற்கு,
35

Page 19
மறுதலிக்கின்ற முறையில் பேதங்களைப் பெரிதுபடுத்தி விட்டோம். இதனால் நாமின்று, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என ஒருவருக்கொருவர் உறவற்றவர்களாகப் போய் வேற்றுமைகளையே வளர்த்துக் கொண்டு வருகின்றோம். அத்தகைய ஒரு சூழலில், கலைஞர்களும் புத்திஜீவிகளுமாகிய நாங்கள், நம்மிடையேயுள்ள காலகாலமான நல்லுறவுகளை மீளக்கண்டுபிடித்து ஒவ்வொருவரும் தத்தமது தனித்துவங்களை நன்கு பேணி அந்தத் தளத்தில் நின்று கொண்டு, நாம் ஒரு நாட்டவர், குறிப்பிட்ட சில வரலாற்றுப் போக்குகளுக்கு முகம்கொடுத்தவர்கள் என்கின்ற வகையில் மீள ஒன்றுபடுவது அவசியம்.
தோழமைமிக்க நண்பர்களே, இந்த வேளை நான் சிங்கள, தமிழ் மக்களிடையே நிலவிவந்துள்ள வரலாற்றுப் பெறுமதியுடைய சில உறவுகளை நினைவுறுத்த விரும்புகிறேன்.
சிங்கள, தமிழ் உறவுகள் சம்பந்தமாக அடிக்கடி எடுத்துக் கூறப்பட்டவற்றிற்கு சற்றுமேலே போய், இந்த உறவுகளின் ஆழத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேரவாத பெளத்தத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள் உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.
இந்துமத வளர்ச்சிகளோடு தமிழ் சம்பந்தப் படுவதற்கு முன்னர் சைவ, வைஷ்ணவ இயக்கங்களுக்கு முன்னர் தமிழின் வளம், பெளத்த சமண மதங்களோடு சம்பந்தப்பட்டிருந்தது. தமிழர் பண்பாட்டிலும் இலக்கியத்திலும் இந்த முக்கிய உண்மையை நீங்கள் காணலாம். அவைபற்றி விரிவாகப் பேச இதுவல்ல இடம். மிகச்சிலவற்றையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 'சிவஞான சித்தியார்’ எனும் நூலின் பரபக்கத்தில் சைவத்திற்கெதிரான புறமதங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. அவ்வாறு விவாதிக்கப்படுவனவற்றில் பெளத்தமும் ஒன்றாகும். அவ்வாறு பெளத்தம் பற்றி எடுத்துப் பேசப்படுகின்ற பொழுது பெளத்தத்திலுள்ள நான்கு தத்துவமரபுகள், முறைமைகள் பற்றிச் சொல்லப்படுகிறது.
அவற்றில் ஒன்று “செளத்தாந்திரிக பெளத்தம். இந்தச் சிந்தனை மரபு பற்றி அறிந்து கொள்வதற்கான பெளத்தமதம் சார்ந்த மூல நூல்கள் எதுவுமில்லை என்றும், சிவஞான சித்தியாரில் கூறப்படும் அதன் கொள்கைகளை அடிப்படையாக வைத்தே அதனுடைய மூல நிலையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது என்றும் துறைபோகிய பெளத்த குருமார் என்னிடம் கூறியுள்ளனர். நான் அவர்களுடன் சேர்ந்து என்னால் இயன்றளவு அந்தப் பகுதியை வாசித்திருக்கிறேன்.
சித்தியார் பரபக்கத்தில் கூறப்படுவது இறுதியில் புறமதங்களுக்கு எதிரான சைவ வாதமே என்றாலும் பெளத்த சிந்தனை வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இந்தத் தமிழ் நூல் மிக முக்கியமானது என்பதனை இங்கு கூற விரும்புகிறேன். நான் ‘மணிமேகலை போன்ற நூல்களைப்பற்றி இங்கு கூற விரும்பவில்லை. அவையெல்லாம் நன்கு தெரிந்தவை, பேசப்பட்டவை. தமிழ்நாட்டு புத்ததத்தர் முதல் புத்த மித்திரர் வரை பல பெளத்த
36

அறிஞர்கள் தமிழை வளப்படுத்தியுள்ளார்கள். 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த மித்திரர் பற்றி ஒரு குறிப்புச் சொல்ல விரும்புகிறேன்.
பல்லவ, சோழ காலங்களில் ஏற்பட்ட தமிழ்மொழி மாற்றங்கள், பிறமொழிச் செல்வாக்குகள் ஆதியனவற்றை உள்வாங்கி புத்த மித்திரர் வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதுகிறார். அதில் அவர் அவலோகிதேஸ்வரர் அகத்தியருக்கு அருளிச்செய்த மொழி தமிழ்மொழி என்றுதான் நூலைத் தொடங்குகிறார்.
அந்த நூலில் கூறப்பட்டுள்ள சில முறைமைகள் காரணமாக அந்த நூல் தமிழிற் பெரும் செல்வாக்கைப் பெறவில்லை.
ஆனால், சிங்கள மொழியினது வரன்முறையான இலக்கணம் என்று கூறப்படுகின்ற ‘சிதத் சங்கராவ' என்னும் இலக்கண நூல், 13ம் நூற்றாண்டில் எழுந்தபோது அது வீரசோழியத்தை அடிப்படையாகக்கொண்டே எழுந்தது. இதனைப் பல சிங்கள அறிஞர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். இதனால், கலாநிதி பீற்றர் சில்வா, வீரசோழியத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
13ம் நூற்றாண்டில் அத்தகையதொரு இறுக்கம் இருந்தது. நான் எனது உரையை நீட்டிக்கொள்ள விரும்பாமல் இதுசம்பந்தமாக இன்னுமொரு விடயத்தை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்குநல்லார் ஏறத்தாழ 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது பொதுவான அபிப்பிராயம்.
சிலப்பதிகாரம், அரங்கேற்று காதையில் வரும், "இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து" என்ற விடயம் பற்றிய விளக்கத்தைத் தருகின்ற அடியார்க்கு நல்லார், மெய்க்கூத்து என்ற ஒருவகைக் கூத்தைப் பற்றிப்பேசி, அதாவது பிரதானமாக விறுவிறுப்பான உடலசைவு களைக் கொண்டது என்ற வகைக்கு உதாரணம் கூறுகின்றபோது "சிங்களம்” என்று கூறுகிறார்.
நான் நம்புகிறேன், சப்ரகமுவ கண்டிய நடனங்கள் பற்றிய பிறநாட்டுக் குறிப்புக்களில் இதுவே பழமையானதாக இருத்தல் வேண்டும்.
இப்படியான கூத்து மரபைச் சொல்கிற அளவுக்குச் சிங்கள மக்களைப்பற்றி, அவர்கள் கலைகளைப் பற்றி தமிழர்கள், தமிழகத்திலேயே அறிந்திருந்தனர். இவையெல்லாம் சிங்களப் பண்பாட்டின் உயர்மட்ட உதாரணங்கள். சிங்கள - தமிழ் உறவு வெறுமனே உயர்மட்ட உறவல்ல. உண்மையில் அடிநிலை மட்ட சிங்கள-தமிழ் மக்களிடையே இருந்து வருகின்ற பழக்கவழக்கங்கள், பண்பாட்டு நடைமுறைகள் மிகமிக இறுக்கமானவை.
வேறோன்றும் வேண்டாம், சிங்கள மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் நிலவுகின்ற உறவுமுறை (Kinship) ஒரே முறைமையானது. இந்த விடயத்தில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் குடி மரபினை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த உறவு முறைகள் ஒன்றென்றால், அதன் கருத்து சமூக ஒழுங்கமைப்பில் (Social Organization) ஒரே தன்மையான பண்பே காணப்படுகிறது என்பதாகும்.
37

Page 20
சிங்கள, தமிழ் பழமொழிகளை எடுத்துப் பாருங்கள். அடிநிலையில் பார்த்தால், அவை ஏறத்தாழ ஒரே தன்மையினவாய் இருக்கும்.
உயர் தேரவாத பெளத்தத்தை விடுத்து, சாதாரண சிங்கள மக்களினது உயர் பெளத்த செல் வாக்கிற்குள் வராத “கம் மடுவ பண்பாட்டை எடுத்துக்கொள்வோம். அதாவது, நோய் துன்பங்கள் ஏற்படும்போது ஒரு மடுவத்தைக் கட்டி அதிலே நேர்த்திச் சடங்குகளும் தணித்தற் சடங்குகளும் நடத்துவார்கள். அந்த மட்டத்திலே ஆடப்படுபவைதான் “கொகம்ப கங்காரிய, 'கோலம போன்றவை. இந்த வேப்பிலை (கொகம்ப) மரபு நமது மாரியம்மன் வணக்கத்திற்கு மிகமிக முக்கியமானது. ‘கோலம' நடனங்களில் பெயர் முக்கியமானது. அதைப்பற்றிச் சிங்கள அறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர். இவற்றிற்கு மேலாக, "நாடகங்" என்று சொல்லப்படுகின்ற ஆட்டக்கூத்து தமிழ்க் கூத்திலிருந்தே எடுக்கப்பட்டது என்று பேராசிரியர் சரத் சந்திர சொல்வார். இவை மாத்திரமல்லாமல் 'சொக்கரி ஆட்டத்தை பார்க்கின்ற பொழுது அதிலொரு வளமான தமிழ்ச் சாயல் வீசும். இத்துணை இறுக்கமான உறவுகள் இருந்துள்ளன. தனித்துவங்களின் அடிப்படையில் ஒரு சகோதரத்துவத்தைப் பேணியுள்ளோம். தயவுசெய்து அவற்றை இன்று வெட்டிவிடாதீர்கள். கோட்டே யுகத்தில் தோன்றிய “செலலகினி சந்தேஷய'வில் அந்த "செலலகினி" கோட்டேயிலிருந்து பறந்து சென்றபொழுது அதன் காதில் சிங்களப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களும் கேட்டன என்று கூறப்படுகிறது. இது இந்த நாட்டின் ஒற்றுமையின் சின்னம். இந்தச் சிங்களப் பாடல்களின் ஒசைகளோடு, தமிழ்ப் பாடல்களின் ஓசைகள் இணைய முடியாது போய்விட்டால் அவை தனித்தனியே ஒலிப்பதை நாங்கள் தடைசெய்துவிட முடியாது.
இந்த அடிப்படையில்தான் கூறுகிறேன் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற நமது தனித்துவங்களின் தளங்களில் நின்றுகொண்டு நாம் ஒற்றுமைப்படுவது அவசியம். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அந்த காலனித்துவத்தின் ஆட்சி முறைமை காரணமாக அதற்கு முன்னர் நிலவிய ஒரு சகஜீவன முறைமை பற்றி அல்லது அதைப்பற்றிச் சிந்திக்காமல் நாம், தமிழ்-சைவம், இஸ்லாம், சிங்கள-பெளத்தம் என ஒன்றுடன் ஒன்று இணையாது பண்பாட்டுத் தனித்துவங்களை ஒதுக்கற்பாட்டுடன் வளர்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. பின்காலனித்துவக் காலத்தில் வந்த பல்வேறு ஆட்சிகள் இந்த ஒதுக்கற்பாடுகளை எண்ணெய் ஊற்றி வளர்த்தனவே தவிர, மக்களின் அடிப்படைச் சகோதரத்துவம் என்னும் கொள்கையை முன்வைக்கவில்லை.
சில வரலாற்றாசிரியர்களைத் தவிர, (RALH குணவர்த்தன, சிறிவீர, லியன கமகே போன்றவர்கள்) பலர் இந்த வேற்றுமைகளுக்குத் தூபம் போட்டனர். இந்த ஒதுக் கற்பாட்டுப் பிடியிலிருந்து விடுபட்டு நாட்டு முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவது அவசியமானது.
நண்பர்களே, இந்தியாவின் சுதந்திரத்தை பாடிய தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய பாரதி பாடியுள்ள இந்திய ஒற்றுமை பற்றிய இரு வரிகள் இந்தியாவில் மிக மிகப் பிரசித்தமானது. இந்தியத் தாயைப் பற்றிச் சொல்கின்ற 38

பொழுது, “செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்" என்று கூறுவார்.
நண்பர்களே, இந்த நாட்டில் இருப்பது இரண்டே இரண்டு மொழிகள்தான். இந்த இரண்டு மொழிகளில், இந்த நாட்டைப் பற்றிய ஒரே சிந்தனை பாடப்படமுடியாது போனால் அது எத்தனை பெரு நட்டத்தை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். சிங்கள, தமிழ் கலைஞர்கள் புத் திஜீவிகளின் ஒன்றுகூடல் என்பது நமது தனித்துவங்களுக்கு மதிப்பளிக்கின்ற அதேவேளையில், ஒருவர் கெளரவத்திற்கு மற்றவர் மதிப்பளிக்கின்ற அதேவேளையில் இந்த தனித்துவங்களிற்கு மேலேயுள்ள மானுடத்தன்மைபற்றி, மனித நிலை பற்றி நாம் பேசுதல் வேண்டும். அந்த மானுட நிலை ஒற்றுமைதான் எங்களது கலைகளுக்கு வலுவூட்டும். இந்த நாட்டிற்கு வலுவூட்டும்.
இன்னுமொரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிடவேண்டும். இலங்கையில் தமிழ்க் கலை இலக்கியம் என்பதற்கு ஒரு மிக முக்கிய பிரதிநிதித்துவத் தன்மை உண்டு. முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்றபடியினால் அவர்களது சிந்தனைகளை, அவர்களது படைப்புக்களை தமிழிலேயே காணலாம். அதுமாத்திரமல்ல, இந்த நாட்டில் நீண்ட காலமாக இருப்பே உத்தியோக பூர்வமாக மறுக்கப்பட்டுவந்த மலையகத் தமிழரது சிந்தனைகளையும் அபிலாசைகளையும் தமிழ் காட்டும். சிங்களக் கலை இலக்கியங்கள் எவ்வாறு இந்தக் காலகட்டத்துள்ளேயும் சகோதர மானுட உறவை வளர்த்துள்ளன என்பதைத் தர்மசிறி பண்டாரநாயகா, பிரசன்ன விதானகே போன்றோரது படைப்புக்கள் மூலம் நாங்கள் அறிகின்றோம். இந்தக் கலைக்கூடல் மூலம் நம்நாட்டில் இனக் குழுமங்களை சகஜீவனத்திற்கான சகோதர உறவுகளை, மானுட ஒருமைப்பாடுகளை, அவற்றைத் தனியே மீட்டெடுப்பதுமாத்திரமல்லாமல் அவற்றை மேலும் வளர்த்துச் செல்வோம் என்று வேண்டிக்கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான சூழலிலும் இத்தனை முக்கியஸ்தர்கள் இத்தனை கலைஞர்கள், இத்தனை புத்திஜீவிகள் இங்கு வந்திருப்பது நமக்குப் பெருத்த நம்பிக்கையைத் தருகிறது. அந்தப் பெருவெளியில் செல்வோமாக.
பேராசிரியா?னர் உரை இவ்விதழில் இடம்பெற்றதால், அவரது நேர்காணல்
இடம்பெறவில்லை. அடுத்த இதழிலிருந்து நேர்காணல் தொடரும்.
39

Page 21
சிறுவர் அறிவியல் பாடல்
கவிஞர் ஏ.இக்பால்
ஒளியை வீசும் சந்திரனே உடனே ஒளிந்தாய் ஏனது சொல்? வழியில் வந்த பாம்புன்னை விழுங்கியதால் நீ மறைந்தாயோ?
விழுங்கிய பாம்பு துப்பியதும் மீண்டும் ஒளியைத் தந்தாயோ? எழுந்துணர் கதையைக் கூறிடுவாய் எங்கள் நிலவே ஒளிமகனே!
சந்திர கிரகணம் ஏற்பட்டால் சந்திரன் ஒளியே மறைந்துவிடும். இந்தக் கதைதான் பாம்பென்னை எடுத்து விழுங்கிய தென்பார்கள்
சந்திர பாதையில் பூமிதனைச் சுற்றி வந்திடும் போதொருநாள் சந்திரன் சூரியனுக் கிடையில் சரியாய்ப் பூமி வந்துவிடும்
சூரியன் ஒளியே பூமியின்மேல் சரிநேர் விழுந்து விடும்போது பூமியின் நிழல்தான் சந்திரனில் பூரணமாகச் சாய்ந்து விழும்
பூமியின் நிழலின் முழுப்பகுதி பூமியின் நிழலின் ஒருபகுதி சந்திரன் மீது விழும்போது நிழல்விழும் பகுதி ஒளிமறையும்!
இவ்விதம் நடக்கும் இயற்கையினை சந்திரன் மறைப்பு என்றறிவீர் எவ்விதம் மறைப்பு ஏற்படுமோ சந்திர கிரகணம் உண்டாகும்!
40
 

நெற்றிக்கணர்
நால் விமர்சனம்
நூல்: வானுறையும் தெய்வத்தினுள்
எழுதியவர் : கெளரிபாலன்
இராமகிருஷ்ண பரமஹம்ஸர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவே கானந்தர் ஆகிய மூவரும் பத்தொன்ப தாம் நூற்றாண்டில் இந்தியச் சமய மறுமலர்ச்சியின் உயர்ந்த சின்னங் களாக வாழ்ந்து, ஆன்மீக ஒளிபரப்பி யவர்கள். சமயத்துறையில் போலித் தனமும் ஆடம்பரமும் ஏமாற்றங்களும் மலிந்துவந்துள்ள நிலையில் அவர் களின் வாழ்வு பெரும் சாதனையா கவே திகழ்கிறது. ஆன்மீக ஒளி பரப் பிய இம்மூவருள் ஒருவரும் இராம கிருஷ னரினர் மனைவியுமான அன்னை சாரதாதேவி பற்றிய ஒரு குறுநாடகத்தைக் கெளரிபாலன் எழுதி மேடையேற்றி வானுறையும் தெய்வத் தினுள் (2003) என்ற பெயரில் நால் வடிவிலும் வெளியிட்டுள்ளார்.
அன்னை பூரீ சாரதாதேவி விரி வான வாழ்க்கை வரலாறு என்ற நூலைத் தழுவி கெளரிபாலன் எழுதிய இந்நாடகம், அன்னை சாரதா தேவியின் பெருமையை விளக்குவது மாத்திரமன்றி, இன்றைய தமிழ்ச் சமூகத்தின் சூழலுக்கும் பொருந்துவ தாகவும் அமைந்துள்ளது.
அச்சில் சிறிய எழுத்தில் இருபது பக்கங்களைக் கொண்ட இந்நூல், சாரதாதேவி வாழ்க்கைச் சரிதத்தின் ஒரு வெட்டுமுகத் தோற்ற
41
மாக விளங்குகிறது. நாடகத்தின் முதற்காட்சி இராமகிருஷ்ணரையும் சாரதாதேவியையும் திறம்பட நாடக ரசிகர்களுக்கு இனங்காட்டுகின்றது. குழந்தை இல்லாத் துயரம் சாரதா தேவியை வாட்டும் நிலையில் இருவருக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல் இருவரின் போக்கையும் உணர்த்துகிறது. ஈற்றில் சாரதாதேவி யையே அன்னை பராசக்தியாகப் பாவனை செய்து இராமகிருஷ்ணர் வழிபாடு செய்வதும், சாரதாதேவி ஆன்மீகப் பேரின்ப நிலையை எய்துவதும் காட்டப்படுகின்றன. இரண் டாம் காட்சியிலிருந்து இராமகிருஷ் ணரின் சமாதிநிலைக்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் சித்திரிக்கப் படுகின்றன. இராமகிருஷ்னர் சமாதி யடைந்த பின்னர் சாரதாதேவி அறிவற் றவர்களால் தூற்றப்பட்டமை, இராம கிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரும் சிறந்த நாடக எழுத்தாளரும் கலைஞ ருமான கிரீஷ் சந்திரகோஷ் பித்தம் பிடித்த நிலையில் சாரதாதேவியைத் தாக்குவதற்கு முயற் சித்தமை, அதனைத் தமது ஆன்மீக பலத்தினால் சாரதாதேவி சமாளித்தமை, சாரதா தேவியின் சகோதரர்கள் பாகப் பிரிவினை தொடர்பாக அவருக்குத் தொல்லைகள் கொடுத்தமை, அவரின் சீடர்களில் ஒருவரான சாரதானந்தர் பிரச்சினையைத் தீர்த்துவைத்தமை, பலராலும் ஒதுக்கப்பட்ட அம்ஸத் என்ற

Page 22
முஸ்லிமை அன்போடு உபசரித்தமை உட்படப் பல்வேறு நிகழ்வுகள் நாட கத்தில் இடம் பெற்றுள்ளன. அன்னை சாரதாதேவியின் கல்கத்தா வருகை யோடு நாடகம் நிறைவு பெறுகிறது. இது ஒரு குறுநாடகமாக இருந்தபோதிலும், அன்னை சாரதா தேவி பற்றிய சிறந்த அறிமுகத்தையும் அவரது ஆளுமை பற்றிய பதிவையும் தருகின்றது. இவ்வகையில் நாடக ஆசிரியரின் முயற்சி குறிப்பிடத்தக்கது. ஆயினும், இந்நாடகத்தை இன்னும் சிறிது விரிவாக்கியிருக்கலாம்.
நூலின் முன்புற பின்புற அட்டைகளில், இந்நாடகம் மேடை யேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றமை வரவேற்கத் தக்கது. எழுத்து, அச்சுப் பிழைகள் இடம்பெறாதவாறு கவனித்திருக்கலாம். மிகச் சிறிய எழுத்தில் அச்சுப் பதிக் காமல், ஓரளவு வாசிக்கக்கூடிய எழுத்தமைப்பைப் பயன்படுத்தியிருப் பின் நூல் மேலும் பொலிவாகவும் கனதியாகவும் அமைந்திருக்கும். இத்தகைய சிறு குறைகள் இருந்த போதிலும், கெளரிபாலனின் வானுறை யும் தெய்வத்தினுள் என்ற நாடக நூல் பற்றிச் சுருக்கமாகக் கூறுவ தாயின், மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்று குறிப்பீடலாம்.
நூல் : இதிய ஊனம் , எழுதியவர் : சித்தி சண்மு
இலங்கையில் மலையகச் சூழலில் இருந்து கவிதைகளும் சிறுகதைகளும் அதிகமாகப் பிறக் கின்றன. ஆயினும், ஒப்பீட்டு ரீதியில் நாவல்களின் வரவு குறைவாகவே
நாதன
இருக்கிறது. அத்த6 தய பற்றாக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்யு முகமாகச் சித்தி சண்முகநாதனின் இதய ஊனம் (2003) என்ற நாவல் வெளிவந்துள்ளது. இலங்கையில் பிரதேசவாதம் என்ற இதய ஊனம் காதலுக்கு ஊறு விளைவிப்பதாக மட்டுமன்றி, சமூக உறவுகளுக்கும் பங்கமாக இருப்பதனை இந்நாவல் உணர்த்துகிறது.
இதய ஊனம் என்ற இந் நாவல், எழுத்தாளர் சித்தி சண்முக நாதனின் கன்னி முயற்சி. ஆயினும் எழுத்தாற்றல் அவருக்கு உண்டு என்பதனை இப்படைப்பு நிரூபிக்கிறது. கதைக்கரு, பாத்திரப் படைப்பு, கதை கூறும் திறமை முதலியவற்றில் கதா சிரியர் தேர்ச்சி பெறுகிறார். அவர் படைத்துள்ள பிச்சைப்பிள்ளையையும் புஷபவரணியையும் அபிதாவையும் வாசகர்கள் இலகுவில் மறந்துவிட முடியாது. கதையின் நகர்வும் சம்பவங் களும் வாசகரைத் தொடுகின்றன. எதிர்காலத்தில் மலையகத்தில் குறிப் பிடத்தக்க நாவலாசிரியராகச் சித்தி
சண்முகநாதன் வளரக்கூடிய வாய்ப்பு
42
நிறைவே இருக்கிறது.
வளரும் எழுத் தாளரான சித்தி சண்முகநாதன் கவனத்திற் கொள்ளவேணி டிய குறைகளும் இப்படைப்பில் உண்டு. மிக முக்கிய மான குறைபாடு, பாத்திரங்களின் உரையாடல் செந்தமிழில் அமைந்து விட்டமை. மண்வாசனை கமழ இயல் பான பேச்சுவழக்கில் உரையாடலை நடத்துமாறு எழுத்தாளர் தமது பாத்திரங்களைப் பழக்கியிருக்க வேண்டும். அவை தம்பாட்டில் செந் தமிழ் பேசிக்கொண்டு திரிகின்றன.
 
 
 
 
 

நூலாசிரியர் அவற்றைக் கட்டுப் மிகச் சிறிய அச்செழுத்தில் நூல் படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் அமைந்துள்ளது. நாவலின் கதைத் செய்யவில்லை. கதையம்சம் யதார்த்த தலைவனும் கதைத் தலைவியும் மாக அமைந்து, பாத்திர உரையாடல் கவிதைப் பிரியர்கள். அவர்கள் கள் செயற்கையாகக் காணப்படுவது அவ்வப்போது ஆசைப்பட்டு எழுதும் பொருத்தமாக இல்லை. வளரும் நாவ கவிதைகளைத் தனியாக வாசகருக்கு லாசிரியர் இக்குறையை எதிர்காலத் இனங்காட்ட விரும்பிய எழுத்தாளர் தில் தவிர்த்துக்கொள்ளவேண்டும். / பதிப்பகத்தார் அழகற்ற அச்செழுத் நாவலாசிரியர் தமது கதைத் தில் அவற்றைப் பிரசுரித்துள்ளனர். தலைவியின் பெயரைப் புஸ்பவரணி கதைத் தலைவன், கதைத்தலைவி என்று குறிப்பிட்டுச் செல்கிறார். யின் கவிதைகளை இப்படி அவமானப் உண்மையில் அப்பெயர் புஷ்பவரணி படுத்தியிருக்க வேண்டாம. என்றே இருக்கவேண்டும். புஷ்ப இலங்கையில புதிய என்பதற்கு பதிலாகப் புஸ்ப என்று நாவலாசிரியராகத் தம்மை அறிமுகப் எழுதுவது தவறு. எழுத்தாளர்களே படுத்தியிருக்கும் சித்தி சண்முகநாதன் எழுத்துப் பிழை விட்டால் யாரொடு இத்தகைய குறைகளைத் தவிர்ப் நோவது? பார்க்கெடுத்துரைப்பது? பாராயின், எதிர்காலத்தில் சிறந்த நூலின் அச்சமைப்பிலும் நாவலாசிரியராகத் திகழ்வார் என்பது போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்க நிச்சயம். வேண்டும். வாசிப்பதற்குக் கஷ்டமான
つ ཡོད༽
"சுட்டும்விழி இரண்டாவது சஞ்சிகைக்கான கலந்துரையாடல்
ஒன்றில் ஞானம்' சஞ்சிகைபற்றி சில கருத்துக்களை சில எழுத்தாளர்கள் முன்வைத்தார்கள்.
மதுரை மனோகரனால் எழுதப்படும், ‘எழுதத் தூண்டும் எண்ணங்கள் பகுதி அர்த்தமற்றது எனவும் பேராசிரியர்களிடம் கடமைப்பட்டுவிட்டால் அவர்கள் தரும் குப்பைகளையும் பிரசுரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆசிரியருக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. e ஞானம் ஆசிரியர் கட்டுரைகளில் தணிக்கை செய்வதனால் எழுத்தாளனின்
கருத்து மழுங்கடிக்கப்படுகிறது அல்லது திசைமாற்றப்படுகிறது. சிவத்தம்பி அவர்களின் பேட்டி நீண்டுகொண்டுபோவதனால் ஞானம் சஞ்சிகை அலுப்புத் தட்டுவதாக உள்ளது. 9 புதிய எழுத்தாளர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கும் நோக்கில்
சிறுகதைகளின் தரம் பேணப்படவில்லை.
)வீ.என்.சந்திரகாந்தி, திருகோணமலை - -ܓܠ
43

Page 23
தமிழிசை உலகில் சாகாவரம் பெற்ற “கற்பகவல்லியின் பொற்பதம்’ தந்த கை ஓய்ந்துவிட்டது
FFழத்துக் கலை உலகில் இயல் இசை நாடகமாகிய
முத் தமிழிலும் வித் தகனாக விளங்கி, தமிழிசை வானில் ஒளி நிலாவாகப் பிரகாசித்தவர் சமீபத்தில் அமரராகிய யாழ்ப்பாணம் பிரம்மபூரீ வீரமணி ஐயர். தழிழிசை உலகில் சாகாவரம் பெற்ற ஐயர் அவர்களால் இயற்றப்பெற்று ரி.எம்.செளந்தரராஜனால் பாடப்பெற்ற பாடலினி வாசகத்தில் உருகாத பக்தி நெஞ்சங்கள் தமிழ் பேசும் நல்லுலகில் இல்லையெனலாம். காத்திரமான கவிபுனைதல், கர்நாடக இசைவடிவமைத்தல், இசை நாடகங்களை மேடையேற்றுதல், நடன நிகழ்வுகளை அரங்கேற்றுதல் ஆகிய முத்தமிழ் கலைகளின் சங்கமாக விளங்கினார் மஹாவித்துவான் வீரமணி ஐயர் அவர்கள். கோப்பாய் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை, யாழ். பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கடமையாற்றி, பல கலை நிகழ்வுகளை நடத்தி, இசை நாடக மரபு ஒன்றினை ஈழத்தில் உருவாக்கினார் இயலிசை வாரிதியான வீரமணி ஐயர். சதா சிரித்த முகம், கணிர் என்ற குரல்வளம், பழகுவதற்கு இனிய பண்பு, கலையே உயிர் மூச்சு, தமிழோடு இசைபாடி இறைபக்தி ப்ரப் புவதே எண் கடனர் எனக் கொணி ட கொள்கை - இதுவே ஐயரின் ஆளுமை. ஈழத்தில் நூறுக்கு மேற்பட்ட திருந்தலத்தலங்களுக்கு அன்னார் இயற்றிய திருவூஞ்சல் பாடல்கள்’ என்றுமே இறைபக்தி பரப்பும். வயலின் வித்துவானின் புத்திரராகப் பிறந்த இவர், துறைபோக முறையாக தமிழ்நாட்டில் கர்நாடக இசை விற்பனர்களிடம் இசையையும், நடனத்தையும் கற்றவர். தான் கற்றதை மற்றவர்களுக்கு வாரி வழங்கிக் கலைச்செல்வத்தைப் பெருக்கியவர். அவரது இழப்பு ஏற்படுத்திய வெற்றிடம் நிரம்ப முடியாது ஏங்கிநிற்கிறது இசையுலகம். அவரது மறைவைக் கேள்வியுற்ற தமிழ்நாட்டுப் பிரபல கர்நாடக இசைவிற்பன்னர்கள் அதிர்ச்சி யடைந்து தமிழிசை உலகிற்குப் பாரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது என விடுத்த இரங்கற் செய்தி அவருக்கு நிகர் அவரே தான் என்பதை உணர்த்திநிற்கிறது. தமிழிசையுடன் இரணர் டறக் கலந்துவிட்ட ஐயரின் நாமம் முத்தமிழ் உலகில் என்றுமே ஓங்காரமாக ஒலிக்கும்.
அன்னாரின் கலையுடன் இறைபணி செய்த ஆத்மா சாந்தியடைவதாக
~ புலோலியூர் க.சதாசிவம்.

ལྕི་ விவாத ఇమిమిLళీ
"மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யக்கூடியவை செய்யவேண்டியவை"
ஞானம் இதழ் 40ல் லெனின் மதிவானம் எனது கட்டுரைக்கு ஆவேசத்தில் பதில் எழுத முனைந்து மேதையைப் போல தாழ்வுணர்வு என்று ஆரம்பித்து, கனவான் என்று அடிமையைப் போல் கூக்குரலிட்டு தன்னுடைய பாமரன் எனும் முத்திரையை என்மீது குத்த முனைந்து தடுமாறியுள்ளதை வாசித்தேன். ஒய்வில்லாது இயங்கும் காலம் கணம்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதைபோல் கலை இலக்கியத்துறையிலும் மாற்றங்களும் தேவைகளும் மேன்மையுறும் வகையில் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நூல்களை விமர்சிப்பதும் திறனாய்தலும் தேவையற்ற ஒன்று என எங்குமே நான் குறிப்பிடவில்லை. (மீண்டும் கட்டுரையைப் பார்க்க) ஆயினும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆய்வு எனும் பல் துறைகளிலும் திறனாய்பவர்கள் ஆளுமை உடையவர்களாயின் சிறப்பாகவும் தைரியமாகவும் நடுநிலை தவறாமலும் செய்ய முடியும் என்பது எனது கருத்தாகும்.
படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை விமர்சனமும் திறனாய்வும் வலிமையும் தெளிவும் பெறச் செய்யும்.
நூல்களை விமர்சித்து அதனை வாங்கி அதற்கான தொகையையும் வழங்கி இருந்தால் பெருமைதான். மாற்றுக் கருத்துக் களையும் அபிப்பிராயங்களையும் சொல்வதால் சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் குறித்து இல.நாகலிங்கம் எவ்வித தேடலுமற்றவர் எனத் தீர்மானிப்பது சரியல்ல. என்.ஜி.ஒ.க்களை நாடி வர்த்தகர்களிடம் கைகட்டி லெனின் போன்றவர்கள் செயல்படுவதாக நான் நினைக்கவோ எழுதவோ இல்லை. மாதாந்த செலவுகளைக் கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாத ஆசிரிய மாணவர்களையும் உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்த நண்பர்களும் நூல்களுக்கு வழங்கப்பட்ட பணத்தைப் பற்றி எழுதியிருந்தார். 1960களில் மாதாந்தம் ஐம்பது அறுபது ரூபாய்களை மாத்திரமே வருமானமாகப் பெற்றுவந்த தோட்டத் தொழிலாளர்களும் கலை இலக்கிய நிகழ்வுகளை நிறையச் செய்துள்ளனர். இன்று லெனின் போன்றவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு பக்கத்துணை போன்ற ஏதுமில்லாத நிலையில் பல இன்னல்களுக்கு மத்தியில் செய்தவர்களும் உண்டு. ஒவ்வொரு காலத்திலும் பணி செய்து வந்திருப்பவர்கள் இளம் தலைமுறையினர் தான், அதற்காக 45

Page 24
மூத்தவர்களை வெறுத்தொதுக்கவோ அவர்களின் கருத்துக்களில் உண்மை இருந்தால் அபத்தம், பாமரன், கனவான், தாழ்வுணர்ச்சி என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் உளறியதோ இல்லை.
லெனின் கருத்துக்களைக் கொட்டிச் செல்வதால் நான் ஆத்திரம் கொள்வதாகக் கருதியுள்ளார். இவரது நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ளாததை தேடல் அற்றவன் என்கிறார். இவரது மாணவனா நான் வகுப்பறையில் பாடம் கேட்க.? லெனினுடைய கருத்துக்களை அறியாத நான் எப்படி எதிராவேன். கோஷம் போடுவதாகக் குறிப்பிட்டிருந்தேனே தவிர கருத்துக்களைக் கொட்டிக் குவிப்பதாகவோ இவரது தடுமாற்ற அல்லது தத்துவார்த்த பாதையைப் பற்றியோ நான் எழுதவில்லை.
புதியயுகம் ஒன்றைத் தோற்றுவிக்க வந்துள்ளதாகத் தோழர் லெனின் மதிவானம் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டால் போதாது. பேரறிஞர்களான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களைப் போன்றோ அன்றி ரகுராமன் வானமாமலை போல் திறனாய்வில் ஆளுமையை நிரூபித்தால் அல்லது சீ.வி.யைப் போல மகாகவியாக வளர்ந்தால் அந்தப் பெருமை மலையகத்துக்கு மட்டுமல்ல தமிழுலகுக்கே பெருமைதான்.
- இல. நாகலிங்கம்.
பாலாசங்குப்பிள்ளை
மேற்படி எழுதிய கட்டுரை சம்பந்தமாக, விஷயம் தெரியாது பேனையைத் தூக்குகிறார் என்று நினைக்கிறேன். மலைநாட்டில் மறுப்புக்கட்டுரை எழுதுபவர்கள் தம்மை இனம் காட்டிக்கொள்வதில்லை. புதிது புதிதாகப் புனைபெயர்கள் வெளிவருவது இதனால்தான். ஆனால் அப்படி ஒரு புனைபெயரைக்கூட சூட்டிக்கொள்ளவிரும்பாத ஓர் அன்பரை எப்படி அழைப்பது? இப்படி ஒரு கடிதத்தை ஞானம் எப்படி வெளியிட்டது? ஞானம் இது விஷயமாக கவனம் செலுத்தவேண்டும். இனி, விஷயத்துக்கு வருவோம்.
திருகோணமலை இலக்கிய வட்டத்தினர் 26,27,28 என்ற பெயர்களில் வெளியிட்ட தொகுப்பு நூல்கள் என்னிடமிருக்கின்றன. அத்தொகுதியில் இடம்பெறும் ஒவ்வொரு சிறுகதைக்கும் எழுத்தாளர்கள் ஆயிரம் ரூபாய் கட்டியதை என்னுடைய கதையைச் சேர்ப்பதற்கு எனக்கு வந்த கடிதம் உறுதிப்படுத்துகிறது.
மலையக எழுத்தாளர்கள் தாமெழுதும் ஒரு சிறுகதை பத்திரிகையில் பிரசுரமானால் கிடைக்கும் சன்மானமான நூறு ரூபாவை பெரிதாக மதிக்கிறார்கள். பரிசுப்போட்டிக்கு எழுதி, தொகுதியில் தனது கதை வரும்போதும், பரிசுப்பணமாக கணிசமான ஒரு தொகையை பெறுவதை பெரும்ையாக நினைக்கிறார்கள்.
நானறிந்த வரையில் காசு கொடுத்து தனது கதையை பிரசுரம் செய்த முதல் மலையக எழுத்தாளர் பாலா சங்குப்பிள்ளைதான்.
- மல்லிகை சி.குமார்.
46

கலைப்பேரரசின் நினைவாக.
~ நா. சோமகாந்தன்
ன்ெ தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு குரும்பசிட்டி என்றதுமே மூன்று பெரியார்களின் பெயர்களே மனதில் சடாரென்று முன்னுக்கு வந்து நிற்கும். ஈழகேசரி நா. பொன்னையா, இரசிகமணி கனக செந்திநாதன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத் துரை. அவ்வளவு தூரத்துக்கு அவர்களின் பணிகள் அக்கிராமத்தோடும், பரவலாக இலங்கையின் கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்து நிலைபெற்று நிற்கின்றன.
ஒமது மனக்கிணற்றை மேலும் சற்றுச் சுரண்டிப்பார்த்தால், ஒவியத் துறையில் துளிர்விட்டுப் பிரகாசித்த பல்கலைக்குரிசில் கே.கே.வி செல்லையா, உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் ‘கவின் கலைக்கு ஒரு கலாகேசரியாக விளங்கிய ஆ. தம்பித்துரை கவிஞர் கந்தவனம் என்ற பெருமக்கள். இரு தசாப்தகாலத்துக்கு முன், இராணுவ விமானங்களின் இரைச்சல்கள், உலங்கு வானூர்திகளின் ஒலங்கள், பீரங்கிகளின் இடியோசைகள், கவச வாகனங்களின் கட்டுப்பாடற்ற பாய்ச்சல்கள், இராணுவ அட்டுழியங்கள் இல்லாத காலத்தில் சைவமும் தமிழும் பன்முக சமூக சேவைகளும் கலையும் இலக்கியமும் நாடகமும் நாட்டுக் கூத்துகளும் - அங்கிருந்த பயிர்களைப் போலவே செழித் தோங்கி மக்களுக்கு மகிழ்ச்சியையும் மனச்சாந்தியையும் அளித்தன. இன்று இப்பெரியார்களின் நினைவுகளை மீட்டுப் பார்த்து ஏங்குவது போலவே அந்தக் கிராமத்தின் அழகையும் செழிப்பையும், செல்வக் கொழிப்பையும்.
‘ஏ.ரி.பி. என்ற மூன்றெழுத்து(ஆத. பொன்னுத்துரை) கலைஞர்கள், எழுத்தாளர்கள் அதிலும் குறிப்பாக நாடகத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் வெகுகெளரவத்தோடு மதிக்கப்படும் பெயர். தமது இளம் வயதிலேயே தமது கிராமத்தில் பிரசித்தமாயிருந்த கிராமியக் கலைகளாலும் நாட்டுக் கூத்துக்களாலும் வெகுவாகக் கவரப்பட்ட இவர் தமது பாடசாலை, மற்றும் பல்ககிைகழக கல்வியை முடித்த பின்னர் ஆசிரியராகி, கல்லூரி அதிபராக உயர்ந்து நின்ற வேளையிலே நாடகத் துறையிலும் நாட்டுப்புறக் கலைகளிலும் முழுமையாகத் தமது அக்கறையைச் செலுத்தினார். ஆசிரியப் பணியிலிருந்த போது பல நாடகங்களை எழுதி மாணவர்களை அதில் நடிக்கவைத்து 47

Page 25
நெறிப்படுத்தித் தயாரித்தளித்தார். அக்காலத்தில் பரிசில்கள் பலவற்றை அவர் தயாரித்தளித்த நாடகங்கள் தட்டிச் சென்றன.
குரும்பசிட்டி சன்மார்க்க சபையும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலும் வலிகாமம் வடக்கின் சமூக,சமய,கலை கலாசார கல்வி வளர்ச்சியின் கேந்திர நிலையங்களாக பல தசாப்தங்களாக விளங்கின. 1955ல் சன்மார்க சபையின் நாடக மன்றத் தலைவராக ஏ.ரி.பி. அவர்கள் பணியேற்றபின், கலைத்துறையில் பெரிய விழிப்புணர்வும் பல பரிமாணங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது எனக் கூறுவது மிகையல்ல. காவடி, கரகம், கும்மி நாட்டுப்பாடல், இசை, நடனம் எனக் கலைத்துறைகள் ஊக்கம் பெற்றன. நிறைகுடம், பகையும் பாசமும், ஆயிரத்தில் ஒருவர், இருமனம், யூலியஸ் சீசர், விலாச மாற்றம், தியாக சீலன், பழிக்குப்பழி, சங்கிலியன், இரணியன், ஒளிபிறந்தது, மேலும் கீழும், பதியூர்ராணி எனப் பல நாடகங்களை புதிய உத்திகளைப் புகுத்தி எழுதித் தயாரித்து பலவற்றில் தாமும் நடித்து ஏ.ரி.பி அவர்கள் நாடக உலகத்தையே கலக்கினார்!
இவர் எழுதி நெறிப்படுத்தி, நடித்து தயாரித்தளித்த 'இருமனம்" நாடகத்தைப் பற்றி சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஈழகேசரி இவ்வாறு எழுதியது. “இந்நாட்டில் நாடக மேடைகள் சமீபகாலமாகப் பெரும்பாலும் பிரசங்க ைேடகளாகவே காணப்படுகின்றன. நாடகம் என்ற பெயரால் தரமும் சுவையுமற்ற மலிவுப் பிரசுரங்கள் படையெடுத்துக் கொண்டிருப்பதும், அவற்றைத் துணைக்கொண்டு கலையைக் களங்கப் படுத்தக் கலாரசனையற்ற பலரும் கங்கணங்கட்டிக்கொண்டு முன்வந்திருப்பதுமே இதற்குக் காரணங்களாகும். இதற்குப் புறநடையாக இருமனம்' என்ற நாடகம் கலை நுணுக்கங்களுடன் சிறப்புற அமைந்திருந்தது. இந்நாடகத்தைத் தயாரித்து அளித்த எ.ரி.பொன்னுத்துரை பிரதான பாகம் ஏற்று நடித்தார். எதிர்காலத்தில் சிறந்த குணசித்திர நடிகராக விளங்கக்கூடிய தகைமைகள் இவரிடம் உள” (ஈழகேசரி 6.6.1956) இவரின் நிறை குடம் நாடகம் அக்காலத்தில் 17 வெவ்வேறு இடங்களில் மேடையேறியது. இதன் கதை, வசனம், இயக்குனர் ஏ.ரி.பி.; இசையமைப்பு வீ. வீ.வைரமுத்து. ‘பதியூர்ராணி நாடகம் (இதில் ஏரி.பி.யுடன் கலையரசு சொர்ணலிங்கமும் நடித்தார்). கொழும்பு கலாபவனம் வரை வந்து பரிசில்களையும் பெற்றது! வருசம் பிறந்து முன்னம் முன்னம் என்ற நகைச்சுவை நாடகம், றோயல் கல்லூரியில் நடந்த இலங்கை வானொலி நாடக விழாவில் ரசிகர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்துப் பாராட்டும் பரிசுகளும் வென்றது.
நல்ல உள்ளம் படைத்தவர்களின் சொல் பலித்து விடுவதுணடு. ஈழகேசரி விமர்சகரின் எதிர்பார்ப்பு 30 ஆண்டுகளுக்குப்பிறகு நிஜமாகிவிட்டதை 1986ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தினத்தினையொட்டி, மெளனகுரு அவர்கள் தயாரித்து நெறிப்படுத்திய சக்தி பிறக்குது என்ற அற்புதமான கலைப்படைப்பில் என்னால் தரிசிக்க முடிந்தது. அதில் கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் கதையை நடத்திச் செல்லும் 48

எடுத்துரைஞராக நடித்தார். கதாப்பிரசங்கி, பத்திரிகாசிரியர், ஒலிபரப்பாளர், தொழிற்சங்கவாதி எனப்பல் வேறு பாத்திரங்களையும் உள்ளடக்கிய எடுத்துரைஞர். ஏ.ரி.பி. அவர்கள் தாம் ஒரு சிறந்த குணசித்திர நடிகர் என்பதை வெளிப்படுத்தினார்! அவ்வாறே, யாழ்ப்பாணம் அரங்கியல் கல்லூரியின் பொறுத்தது போதும், சங்காரம்', 'கோடை நாடகங்களிலும் தமது நடிப்பில் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தினார்.
கலைப்பேரரசு அவர்கள் சிறந்த நடிகராக மட்டுமல்ல, துடிப்பான கலை இலக்கியச் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். குரும்பசிட்டி சன்மார்க்கசபையின் செயலாளர், தெல்லிப்பளை கலை இலக்கியக் களத்தின் முக்கிய நிர்வாகி, யாழ். இலக்கிய வட்டத்தின் தலைவர் போன்ற பதவிகளிலமர்ந்து பல விழாக்களையும் புதுமையான நிகழ்ச்சிகளையும் திறம்பட ஏற்பாடு செய்து நிர்வகித்து நடத்தியவர். வலிகாமம் வடக்குக்கேயுரித்தான ‘தாளக்காவடி அருகிப் போய்விடாமல் மீண்டும் துளிர்விட்டு வளரச் செய்த மறுமலர்ச்சியாளர். கலைப்பேரரசு அவர்கள் கண்ணியம் மிக்க கனவான். உன்னத தகைமைகளைக் கொண்ட பண்பாளன். அடக்கமான நிறைகுடம். வளர்ந்து வருபவர்களை தகுந்த ஆலோசனைகள் கூறி உயர்ந்து செல்ல ஊக்குவித்த பெருந்தகை. நண்பர்கள் சந்திப்பு, எழுத்தாளர் ஒன்று கூடல் முதலிய நிகழ்ச்சிகளின் போது அவற்றைக் கலகலப்பாக்குவதில் 'ஏ.ரி.பியின் நகைச் சுவைப் பேச்சுகளும், அட்சர சுத்தம் பிசகாமல் 'தாளக் காவடி மெட்டுகளைக் கட்டமைப்போடு பாடுவதும் கேட்போரை வியக்க வைப்பவை. அந்தக் குரலை இனி நாம் கேட்க முடியாது.
இறக்கும்போது யாழ். இலக்கிய வட்டச் செயலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த கலைப்பேரரசு அவர்கள் நாடகத்துறை பற்றிய பலநூல்களையும் எழுதியிருக்கிறார். அவற்றில் சில “கலையுலகில் கால் நூற்றாண்டு”, “பாடசாலை நாடகம்”, “மயில்”, “நாடகம்", "தாளக்காவடி", "அரங்கியலில் ஐவர்", "கூப்பிய கரங்கள்” தனக்குப்பிறகும் நடிப்புத்துறை வளரவேண்டு மென்பதற்காக, தனிநடிப்புக்கென "ஏ.ரி.பி. அறக்கட்டளையொன்றையும் நிறுவியுள்ளார்.
1928 மே மாதம் 15ந் திகதி பிறந்த ஏ.ரி.பி. அவர்களுக்கு இவ்வாண்டு பவளவிழா ஆண்டு. அவரின் பவளவிழாவையொட்டிக் கட்டுரையொன்றை எழுதியனுப்பும்படி பலதடவை ஞானம் ஆசிரியர் அவர்கள் கேட்டிருந்தும், அதனை நான் எழுத முற்பட்டவேளையில், 9.10.2003 அன்று கலைப்பேரரசு அவர்கள் மறைந்து விட்ட செய்தி, என்மனதைப் பெரிதும் குழப்பிவிட்டது. அவர்களுடன் பழகிய இனிய நாட்களை நினைத்துப் பார்த்து ஏக்கத்துடன் இச்சிறிய இரங்கல் கட்டுரையை எழுத நேரிட்டது எனது துரதிஷ்டமேயென்று என்னையே நான் நொந்துகொள்கிறேன்.
DE
49

Page 26
பேரன்புமிக்க அன்பர் ஞானசேகரத்திற்கு
கொழும்பினின்று மருத்துவ சோதனை முடித்து வீடு திரும்பியதும் உடப்பில் பலகாலம் கிடந்த எனது கோப்புகளை கரையான்களும் இராமபாணங்களும் பதம்பார்த்த நிலையில் எனது மதிப்பிற்குரிய முதிய எழுத்தாளரான திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் எழுதிய மடலின் இரண்டு பக்கங்கள் தப்பியதைப் படிக்க, வறியவன் கண்ட நிதியமாக மகிழ்ச்சி, கரைந்த
ஆவணங்கள் குறித்த கவலைகளை மறக்கச் செய்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுத்துத் தொடங்கிய காலத்தில் அவர் ஏடு இலங்கையில் பரப்ப முடிந்த காலம். கைலாசபதி மற்றும் அக்கால மொகிதீன் போன்றோரிடையே பரப்புதற்கு சிறிது உதவ வாய்த்தது. அவர் ஏடு சிரஞ்சீவியாக வாழவேண்டினேன். அவரது சேவையை நிகர்த்து நீங்களும் பயன்கருதாது உழைப்பையும் பொருளையும் ஆகுதி செய்து "ஞானத்தை மூன்றாண்டுகளுக்குமேல் கொண்டுவந்தீர்கள். உங்களது ஈடுபாடு அவரது செயலை நினைவுபடுத்தியது. எனவே எஞ்சியவற்றைப் படப்பதிவு செய்து அனுப்பியுள்ளேன். இடைவிடாது பல ஆண்டுகளாக ‘எழுத்தைக்கொணர்ந்தார். உங்களதும் சிரஞ்சீவியாகத் திகழ ஊக்கமளிக்கும் இம்மடல் எனக் கருதி
இணைக்கிறேன்.
அன்புள்ள, கே.கணேஷ், தலாத்துஒய.
Ezhutthu Tamil Literary Monthly Editor 19A, Pilliarkovil street,
C.S.CHELLAPPA Triplicane, Madras - 5
7.4.59
அன்புள்ள நண்பர் கணேஷ் அவர்களுக்கு, நமஸ்காரம்.
உங்கள் அன்பும் ஆதரவுமான கடிதங்கள் நான்குக்கும் இவ்வளவு தாமதமாக நான் பதில் எழுதுவதற்கு மன்னிப்பைக்கேட்டுக் கொண்டுதான் நான் இந்த கடிதத்தை ஆரம்பிக்க வேண்டுவது முறையாகும். தனியொருவனாக முழுப்பொறுப்பேற்று எழுத்துபற்றிய சகல அலுவல்களைக் கவனிப்பதால், முதல் நான்கு ஏடுகளைச் சுருக்கச் சுருக்க கொணரவேண்டி ஏற்பட்டதால் மூச்சுவிட அவகாசம் இப்போதுதான் கிடைத்தது. இனிக் கடிதத் தொடர்பை
50
 

ミく、ぐs agイ* ?"~A)*沦|- うs マ*S*よいで、5*&を 斑
·鞑z)ựm ~£2 :君 灣*浮.* |-海砂数&*y* ・ssもうミて/s 3G」s & 6
· · · · -*06Áo (,ぷsと3{メき *aas沪A* (6污染 CS・ミasys、sc g。3/} kmと ***」ごと*塗 もすりト69く3く*て、、さ6ミて「こ。 劑2寫 ✓ዄ” “裙)|5년城へ韃 * マ)う。ょし、メds?もょd ***ミ&s“て今s*メ?赶羚泳-斗? cs*3 ミ** )てくく*0べg g、メ'*< 9 vae) sfsャすもょく、ピ*ミ{ミギ* きくてrてくもてさえgに3}くォく ****ペ ** se 给Y)鞑射 よしfく* ?s、jもsyく 6S を『fg
*灣* S%*g 冷
*も***へss すもく 怒涛泛)泳*** \s3ミ%
**?メ33cssfc《zo so -syss%ミ ss〜も〜〈y)3 33ts* ?****D39**
Z(s);- ~t
***i くさsし§ ø i o:冬* vs*c & 灣溪安心*~x ) &ミ*ミり**と3 ?6・こおもこ、パもん。 }*玖}
*す *いs ---- *メcA
、 y *yJ、「マ6“。 ** な*A** *へ)ris *6 ccolo, o , “km* cds ras
****rĉov voふもでてaふうkvo ĝoj ?赶《江邬)行義* ****メ3s Cィくし、こ* *参探
"→•^.* gsff *ཀ་空战{(~~~go ofo, noɔr* a32*S gなくョ9 * 〜G。**%gうsこs
·rksé て6 s*も すィぐ* * ミcg* マ* **oと、ょく* jミs +幫%%-*过隘 ふ****gぎ、マるくRQ44% •(→ 沁 *く、父て3埼O ; でも~ 36)******ミ 斎 s*****:
giáo. --~~~蹈)多了这Jo 0,3 g 3%とき
\**sérgs~~~ć***AD へっシf| さき きをに薬をぎ 3· *** &w\*\#\: *wosą*必}
· åsựwesw ),y #www.·
nųųnųza|
5

Page 27
சரிவரச் செய்யமுடியுமென்று நம்புகிறேன்.
‘எழுத்துவின் தலையெழுத்து தீர்க்காய்சுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் வாய் நிறைய மனம் நிறைந்து கூறியிருப்பது எனக்கு மிகுந்த இன்பத்தை அளித்தது. இலக்கிய ரீதியான ஒட்டுதல்களுக்கு தேடிப்பார்க்கவேண்டிய காலமாக இருக்கிறது இது. அன்று மணிக்கொடிக்கும் அதற்குப் பிறகு வந்த சில இலக்கியப் பத்திரிகைகளின் காலத்துக்கும் பிறகு வரும் எழுத்துக்கு இந்த ஒட்டுதல் கிடைப்பது ஒரு மரபுவழி வரும் ஒட்டுதல் *று கூறலாம்.
எவ்வளோவோ நாட்களாக இம்மாதிரியொரு முயற்சி தொடங்கவேண்டு மென்ற அவா (தாகம் என்று கூடச் சொல்லலாம்)வுக்கு இன்று உருக்கொடுத்து வளர்க்க முடியுமா என்று பார்க்கவே இந்த சோதனையை தனியொருவனாக மேற்கொண்டு இருக்கிறேன். அன்று மணிக்கொடி ஆரம்பித்ததற்கு மேலாக கணிசமான முதலீடு எதுவும் போட்டு நான் ஆரம்பிக்கவில்லை. ‘Risk' என்று இங்கிலிஸில் சொல்கிறோமே அதன் முழு அர்த்தத்தில்தான் இந்த முயற்சி. ஆனால் மற்ற முந்திய சந்தர்ப்பங்களைவிட அதிக நம்பிக்கை வைத்து ஆரம்பமாகி இருக்கிற முயற்சி. பார்ப்போம்.
எழுத்து நான்கு ஏடுகளைப் பார்த்திருப்பீர்கள். அதுபற்றி உங்கள், உங்கள் நண்பர்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். இலக்கிய விமர்சனத்துறையிலும் படைப்பு சோதனை முயற்சிகளிலும் அங்குள்ள விமர்சகர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களையும் எதிர்பார்க்கிறேன். இதுபற்றி பின்னர் விபரமாக எழுதிக்கொள்ளலாம்.
நீங்கள் தந்திருக்கும் விலாசங்களுக்கு மூன்றாவது, நான்காவது ஏடுகளை அனுப்பிவிட்டேன். VPPயில் முதல் இரண்டு ஏடுகளை அனுப்புவதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. காரணம் VPP அனுப்புவது சம்பந்தமாகவுள்ள சில சிக்கல்கள்தான். Exchange control office க்குப்போய் 'பாரம் வாங்கி அனுப்புவதற்குத் தாமதமாகிவிட்டது. இவ்வளவு அக்கறை நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பது என் நெஞ்சை நன்றியால் நிரப்புகிறது சொந்தநிலையில், இலக்கிய நிலையாலும் உங்களைப் பாராட்டுகிறது என் மனசு. ‘எழுத்து மூலமாக ஏற்பட்டுள்ள தொடர்பு நீடித்து ‘எழுத்து வளர பயன்படுமென்று நம்புகிறேன். ...ه-
‘எழுத்து சிலோனில் பரவச் செய்வதற்கு உங்களிடமிருந்து யோசனைகளை எதிர்பார்க்கிறேன். யாழ்ப்பாணத்துக்கு தம்பித்துரை ஏஜண்டாக பத்துப் பிரதிகள் வரவழைத்துக்கொள்கிறார். கொழும்புவுக்கு யாரும் இல்லை. Western Egencies’க்கு காபி அனுப்பினேன், பதில் இல்லை. நவலசஷ்மி புக்ஸ்டால் எழுதிக் கேட்டார்கள். பதில் எழுதினேன். பதில் இல்லை. கொழும்பு ஏஜன்ஸி.
“பாரதி கழகம் அமைத்தல் நல்ல பணி; காலத்திற்கேற்றது. அவருக்குள் ஒரு பேராசிரியர் இருக்கிறார் என்பதை நான் அப்போதே கண்டுகொண்டேன்" - பேராசிரியர் சிவத்தம்பியின் இந்த வாசகம் தி.மு.க.வினரை 52

மட்டம் தட்டிப் பேசுவோர் மீது விழுந்த சாட்டையடி என்பதில் சந்தேகமில்லை. பேராசிரியரின் வார்த்தைகள் நிதானமானவை. - வாகரைவாணன்
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நேர்காணலைப் படித்து வருகின்றேன். தனது அனுபவங்களை வாசகர்களுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் முறையில் ஓர் அறிவியல் ரீதியான தமிழனின் விவேகம் பிரதிபலிக்கின்றது. சொல்லும் பாணி ஒரு நாவலைப் பிரதிபலிக்கின்றது. அவர் போகும் இடமெல்லாம் எமது மனக்குதிரையும் சென்றடைந்து வருகிறது. அவர் சந்தித்த பேராசிரியர் Hart எம்முடன் பேசுவதுபோல் உள்ளது. ஒரு கம்யூனிஸ்ட் அளிக்கும் சமய விளக்கங்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்துவிடுகிறது. பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒரு யுகத்தைத் தமிழனுக்காகப் பிரதிபலிப்பது போலவும் மனதில் நிறைவு ஏற்படுகின்றது. எதிர்கால நலன்கருதி இப்பேட்டியை ஒரு சிறுநூலாக வெளியிட வேண்டுமென ஞானம் ஆசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன். - திக்கவயல் சி.தர்மகுலசிங்கம்
தனிமரம் தோப்பாகாது என்ற தத்துவத்தை மிக்க ஆக்ரோஷத்துடன் தகர்த்தெறிந்துள்ளது உங்கள் முயற்சி. ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் தொய்வின்றி - ஓர் இலக்கிய சஞ்சிகை வருவதென்பது கல்லில் நார் உரிக்கும் கைங்கரியம்.
நமது மூத்த இலக்கியவாதிகளின் அனுபங்கள் எமக்கு புத்துயிர் ஊட்டுகின்றன. குறிப்பாக 40வது இதழில் நா.சோமகாந்தன் அவர்களின் நேர்காணலைக் குறிப்பிடலாம். சாதிக் கொடுமையையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை சாக்கடை அரசியல். தனது அசிங்கமான கோரத்தை எல்லாவற்றிலும் வெளிப்படுத்தியே வந்துள்ளது. சாகித்திய மண்டல பரிசுக்குழுவினரின் அடாவடித்தனங்களை பல்வேறு சுதந்திர அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வந்தாலும், அந்த அமைப்புக்குத் தன்மானம், சூடு, சொரணை இன்னும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது. அரசியல்வாதிகளுக்கு, ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கும் தெரிவுக்குழுவுக்கு நிகராக சுதந்திர அமைப்புகள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டியதன் அவசியத்தை நா.சோமகாந்தனின் குமுறல் உணர்த்துகிறது.
கவிதை-சிறுகதை இரண்டும் இம்முறை ஞானத்தில் சுவையாக இல்லை என்பது என் ரசனை. - ஓட்டமாவடி அறபாத், கொழும்பு.
- - - - - பேட்டியின் வாயிலாகத்தான் இங்குள்ள பல நண்பர்கள் என்னைப்பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள். “நான் - என்னுடைய - என்னால்." என்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து எழுத்தாளர்கள் பலர், பத்திரிகையாசிரியர்கள் சிலர் சுயபுராணம் பாடுவது, சமீபகாலத்தில் அதிகரித்து வருகின்றது. சுயசரிதைகளில், உண்மை எவ்வளவு, கற்பனை எவ்வளவு என்பதை வெளிக்காட்டாத வகையிற் பலர் எழுதியுள்ளமை அவர்களுடைய எழுத்துத் திறமைக்கு எடுத்துக்காட்டுத்தான்! அறியாதோர்
53

Page 28
முன்னிலையில் தேவை ஏற்படும்போது ஒருவர் தன்னைப் பற்றிச் சொல்லலாம் எனத் தோல்காப்பியமும் கூறுகின்றதாம்! எனினும், இப்போதைய பலரின் போக்கு, அளவிற்கு மீறியதாகவே எனக்குத் தோன்றுகின்றது பேட்டியில் இன்னும் பல விஷயங்களை நான் சொல்லாமல் விட்டுவிட்டேன் என்பது நண்பர் திரு ஆறு திருமுகன் அவர்களின் கருத்து சொன்னவை போதும் என்பதுதான் என் கருத்து.
"ஞானம்" இதழ்கள் ஒழுங்காகக் கிடைத்து வருகின்றன. கதைகள், கட்டுரைகள், கவிதைகள், வாசகர் கடிதங்கள், ஆசிரியத் தலையங்கம் எல்லாமே வாசிக்கத் தூண்டுகின்றன. மார்ச் இதழில் வெளியான ப-ஆட்டீனின் காயப்பட்டவன், மே இதழ் - இராஜேஸ்கண்ணனின் "தொற்றாத உணர்வு", ச.சாரங்காவின் "புற்றில் மறையும் பாம்புகள்", ஜூன் இதழ் முல்லை.மனியின் "பொட்டு" ஜூலை தாட்ராயணியின் "காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்" ஆகியவை நல்ல கதைகளாக எனக்குத் தோன்றுகின்றன.
ஏற்கெனவே கம்பவாரிதி அவர்களின் "கிளாக்கர்ப் புத்தி" பற்றி உங்களுக்குச் சொன்னதாக நினைவு. அவரை, "பிரச்சினைக்குரிய எழுத்தாளர்" எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். எனக்கு அவருடைய எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். வாசகருடைய சிந்தனையைத் தூண்டும் ஆற்றல் அவருடைய எழுத்துக்கு உண்டு. "கிளாக்கர்ப் புத்தி"யில் அவர் சொன்ன கருத்துக்கள் அத்தனையுமே சரி என நான் சொல்ல முன்வரவில்லை. இப்போதைய எழுத்தாளர்களை, அறிஞர்களை சிந்திக்க வைப்பதில் அவர் பெற்றியடைந் துள்ளாரா எனக் கேட்டால், "ஆம்" என நான் தயங்காமற் சொல்வேன். சிந்திக்க வைப்பதுதான் கம்பவாரிதியின் நோக்கம் என்றே நான் கருத்துகின்றேன். "வேறு வேறுருவும் வேறு வேறியற்கையும்" என்பது புதிய பாணியில் எழுதப்பட்ட ஒரு கதைதான். இளங்கோவின் "சிலப்பதிகாரம்" பாரதியின் நெஞ்சை "அள்ளியது". "அரசியல் பிழைத்தோர்க்கு." என்ற தன் நோக்கத்தை வெளிப் படையாக இளங்கோவடிகள் சொல்லாமல் விட்டிருந்தால், சிலப்பதிகாரத்தின் கலைத்தன்மை இன்றும் ஒரு படி பரிந்திருக்கும் என்பது விமர்சகர்கள் சிலரின் கருத்து அடிகளைப் போல் கம்பாரிதியும் தன் நோக்கம், சில் சம்பவங்களின் காரணம் போன்றவற்றைச் சொல்லாமல் விட்டிருந்தால் அவருடைய ஆக்கத்தின் இலக்கியத்தன்மை இன்னும உயர்ந்திருக்கும். தமிழ் உரை நடையைப் பொறுத்தவரை கண்ணதாசன், கம்பலாரிதி ஆகிய இருவரும் அழகும் எளிமையும் இனிமையும் கலந்த ஒரு கவித்துவ நடையைக் கையாள் கின்றார்கள் என்பதே என் கருத்து வாசிப்பதற்கு அலுப்பூட்டாத நண்ட சொற்களின் கவர்ச்சிபால் மயக்காமல் கருத்தின் கூர்மையால் சிந்தனையத் துனன்டிவிடும் நடை
பேராசிரியர் சிவத்தம்பி அ பர்களின் பேட்டியை வரிக்கு வரி வாசித்து வருகின்றேன். இந்தப் பேட்டி, அவரே முழுமையாக அறிவதற்கு உதவுகின்றது. போட்டி முடிவுற்றதும் என்றுடைய சில கருத்துக்களை எழுதலாமென்றுள்ளேன். அன்புள்ள, சி.சிவசரவணபவன் (சிற்பி).
F

அரசியல் வாதிகளின் கையில் இடைக்கால நிருவாகசபை ஒரு நல்ல அஸ்திரம்
ஒவ்வொருவரும் எதிர்ப்பு எனும் வில்வில் அதனை ஏந்திக் கொண்டு இன்னுமொரு குருசேத்திரத்துக்கு ஆயத்தமாகின்றார்கள்
இனமோதல் என்றால் இந்தத் துரியோதன்ர்களுக்கு எப்போதும்
|L
| Li
சகுனி (ாமாக்களுக்கு சன்னதமே வந்து விடும்
ஆட்சிக் கதிரையை அபகரிக்க
அந்தரங்கத்தில் சூழ்ச்சி வலை பின்னுகின்றார்கள்
ਸ਼
ஆiப்பாட்டங்கள் பாதயாத்திரைகள் அதற்கான ஒத்திகைகள்
தேசத்திற்கு ஆபத்து - இEந்த பாகாணங்களே இரண்டாகக் கிழி இதுதான் திரும்பத் திரும்ப
கெளரவ புத்திரர்கள் சொல்லும் " தேவ மந்திரங்கள்.
அரசியல் என்பது அதர்மம் நீதி நியாயங்கள் இதன் நெருங்கா
நல்லப்iாகETபும்
- நரியாக்கிவிடும்.
துட்டர் பக்கம் நின்றால் துரோனர்களினயும் தோற்கள் செய்யும்.
இடக்கால நிருவாகசபை என்னும் அஸ்திரம் எந்த அருச்சுனனைக் குறி வைக்கின்றது?
கிருஸ்னே பரமாத்மாவைத்தான் கேட்க வேண்டும்

Page 29
정령이었TT적정T령이정T령어 정령지정T정전
* 目|- No.■
| – -------- }}*■■ |-■----
/**/贏瀏聽 明W#WEATEW&郡W迎娶驸W动W疆W函W驱W冠W) ...----陶器§.활V:TT的T후T國년T江)'T國TW』유TFT}}|-婴 歴|||#飓#些雕窦W)雅W冠冠W露零照}要|-} W)/延时婴斐s :|-雙W*毒聽 ssssssssssssae saessae******** ĶĪNoÌNo, Isso ̈ ` ŸßIኞኞ ̆ጛ... ዘሸኛ
|-。、「、」E------- -- " Ñ1 1ቫ sol 1:· , */~~ ~~~~ ~~~~ - 「 「T
*싫렸成3
} s.
}
행:Y] 행W些游W)|-
■ si isos
-
*|-
-
 
 
 
 

|-
... ... . . . . . ----------, - - - - - - ... )! !! !! !|-|- -) ,\,\,\!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sae...
A)
磐醛 ]] // |
o exsule-T IJS || |- | |-
|
| |T*환
■s.
"Apuey!|||- 随
opeo) es sua pelē)|4 雪 雅丽
『대피폐義親홍 |||||||||||||W//// |
、
|-sỹ |-
匣