கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2003.12

Page 1


Page 2
闵行彦泌行觅
C'EST UTSIDADESTOD
- த. ஜெயசீலன் -
கால மழையிற் கரைகிறது புவிவாழ்வு. நாகரிகம் என்ன
நவமாய்க் குடைபிடித்தும் கால மழையிற் கரைகிறது புவிவாழ்வு. புவியின் விளிம்பிற் புதிதாய் தான் நின்றுயிர்த்தேன் காலமழை கரைககக கரைந்துபோன தெத்தனைதான்?
மாளிகைகள்,
கோபுரங்கள்,
அத்தாணி மண்டபங்கள், அப்பாவி எலும்புகளில் ஆக்கி வைத்த ராச்சியங்கள், சர்வாதிகாரத்தால்
தகராதென் றிறுமாந்த கொத்தளங்கள், கணக்கற்ற கோட்டைகள் உயிருறுஞ்சிக் கோடீஸ் வரர்என்று கொக்கரித்த கல்லறைகள், கால மழைகரைக்கக் கரைந்துபோன தெத்தனைதான்? இந்த இடமெல்லாம் இடிந்தழிந்து இன்றைக்கு விந்தைபகுெ கட்டடங்கள் விண்ணுக்கு முத்தமிடப் பூமி தினந்தினமும் புதிதாய் மலர்ந்துளது. புவியின் விளிம்பிற் புதிராய்தான் நின்றுயிர்த்தேன். எத்தனை நம்பிக்கை,
எத்தனை உறுதிகளைச் சத்தமின்றிக் காலமழை சருகாக்கி. பபிதக்கவிட்டு தன்னிருப்பை நிரூபித்துப் போயிற்று நேற்றைக்கு இன்றும் அக் காலமழை
3:":': துரறியேனும் தன்னிருப்பை நிரூபிக்கச் சந்தர்ப்பம் பார்க்கிறது. கால மழை தன்னைக் கட்டுப்படுத்தாமல் பூவுலகம் நிம்மதியாய்க் கோட்டைகட்ட முடியாது. கால மழையில் கரைகிறது புவி வாழ்வு நாகரிகம் என்ன நவமாய்க் குடை பிடித்தும் கால மழையில்
கரைகிறது புவிவாழ்வு.
 
 

இதழினுள்ளே .
நேர் கானல்
பேராசிரியர் கா. சிவத்தம்பி 22
சிறுகதை காணி நிலம் வேண்டும்
சுதர்மகாராஜன்
அவன் அவள் அது 3.
ச. முருகானந்தன்
கட்டுரைகள்
எழுதத் தூண்டும் எண்ணங்கள் 40
துரை னோகரன் திறனாய்வு நெருடல்கள் I9
ஆசிரியர் : தி. ஞானசேகரன்
ஒர் ஆய்வாளர் துணை ஆசிரியர்கள்: நாடகப் பயனத்தில் நான் புலோலியூர் க. சதாசிவம்
அந்தனி ஜீவா
ந. சுபாங்கி
கவிதைகள் * KT | Kao i KTT 3ĝ621) (ix.ITALI tie பதிப்பு ஆசிரியர் புதிய வகைப் போர் முரசம்
ஞா. பாலச்சந்திரன் தவசஜிதரன்
ஓவியர்கள் : Light ir
கிக்கோ நா. ஆனந்தன்
நிர்வாகம் : கெ. சர்வேஸ்வரன்
ம்ே. பி. நளிம் பயிரை மேயும் வேலிகள் 39
அன்பன்
காலமழை
த. ஜெயசீலன் தொடர்புகளுக்கு . தி. ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி Telephone. (81-2478.570 (Office)
(8-2234.755 (Res.) Mill .. 777 - 5
Fix - S1-223,4755
E-Mail - | gnanan magazine (ayahoo.com
SqMSqTSASqeASqeSeSASSeSeSeMMSeSeMzS
இரைகள்
உmஸ் கனி விரிதல்
செ. சுதர்சன்
விவாதமேடை 43
சமகால இலக்கிய நிகழ்வுகள் 60 நேற்றைய கலைஞர்கள் 5) நூல் மதிப்புரை 53 வாசகர் பேசுகிறார் 63
ஞானம் - டிசம்பர் 2003

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܓܠ
புத்தகக் கலாசாரத்தை வளர்த்தெடுப்போம்.
ஒரு மொழியின் கலாசாரச் செழுமையை மதிப்பிடுவதற்கு அம்மொழியில் வெளியாகியுள்ள நூல்களின் தொகையை ஓர் அளவிடும் அலகாகக் கொள்ளலாம். நூலும் நூலகங்களும் பெறுமானமுள்ள அறிவு வளங்களாகும். நூலகங்கள் அறிவு பரப்பும் கலங்கரைவிளக்கம் மட்டுமன்றி நாட்டின் அருஞ்செல்வமுமாகும்.
நமது நாட்டில் தமிழ்மொழியின் கலாசாரத்தை வலுவிழக்கச் செய்வதற்குப் பேரினவாதிகள் போட்ட பயங்கரச் சதித்திட்டமே 1981ஆம் ஆண்டு தென்கிழக்காசியாவில் அதிகளவு நூல்களைக் கொண்டதெனப் பெருமையுடைய யாழ். நூலகத்திற்கு இட்ட தீ.
கலை கலாசார சமூகமேம்பாடு உயர்வடையப் புத்தகக் கலாசாரம் (Book Culture) மிக அவசியமானதாகும். இன்று கல்வி அறிவு பெற்றோர் தொகை அதிகமிருந்தும், வாசிப்போர் தொகை விகிதாசாரத்தில் குறைந்து வருவதைக் காண்கிறோம்.
சிந்தனை வளம் மிகுந்த தகவல் யுகமாகிய இன்றைய காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துரித வளர்ச்சியின் காரணமாக, தேடல்களுக்கும் அறிவு பெறும் மார்க்கங்களுக்கும் சுலபமானதும் வேகமானதுமான வாயில்கள் தோன்றியுள்ளன. இதன் தாற்பரியம், ஆரோக்கியமாகக் குழந்தையை வளர்ப்பதற்குத் தாய்ப்பால் கொடுப்பதற்குப் பதிலாகப் புட்டிப்பால் கொடுப்பதைப் போன்றதாகும்.
நல்லதொரு நூல் அருகிலிருந்து அறிவுட்டும் ஆசானைப் போன்று செயற்படும். வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகிறான் என்பது ஆங்கில முதுமொழி.
2 ஞானம் - டிசம்பர் 2003
 
 
 

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" - என்றார் வள்ளுவர். ஜவஹர்லால் நேரு நூல்களை வாசிப்பதிலும் அவற்றைச் சேகரித்து வைப்பதிலும் அக்கறை கொண்டவராக இருந்தார். மகாத்மா காந்தி காலைக்கடன்களைக் கழிக்கும் போதும் நூல் வாசிப்பாராம். நெப்போலியனுக்கு நூல்வாசிப்பது மிக விரும்பிய பொழுதுபோக்காக இருந்தது. லெனினும் மாசேதுங்கும் கருத்துக்களைப் பரப்ப நூல்களையும் நூலகங்களையும் சாதனங்களாகக் கொண்டனர். ஒவ்வொரு புத்தகமும் என் முன்னே மக்களைப்பற்றியும் அவர்களின் ஆசாபாசம், இதயஉணர்வு, கருத்தோட்டம் ஆகியவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ளத் திறந்துவிடப்பட்ட சாளரங்களாகத் திகழ்கின்றன என்றார் ஆக்க இலக்கிய மாமேதை மார்க்சிம் கார்க்கி.
பிரான்ஸ் புரட்சி, சோவியத்துப் புரட்சி, தமிழ்நாட்டில் தி.மு.க. ஏற்படுத்திய கலாசார மாற்றம் ஆகியவற்றுக்கெல்லாம் நூல்களின் பங்கு மகத்தானதாக இருந்தது.
அன்று கையில் நூல்களுடன் உலாவுவதைப் பெருமையாகக் கொண்டனர் இளைஞர்கள். மேலை நாடுகளில் மக்கள் பிரயாணம் செய்யும்போது சூழல் சுற்றுப் புறங்களை மறந்து பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பதை இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால் நமது இளைஞர்களோ இன்று வீடியோ - சீ.டி. தட்டுகளுடன் பவனி வருவதை நாகரிகமாகக் கொள்கின்றனர்.
வாசிப்புப் பழக்கம் சிறுவயதிலேயே ஆரம்பிக்கப்படவேண்டும். ஆரம்பப் பாடசாலை மட்டத்திலேயே ஊக்குவிக்கப்படவேண்டும். பிறந்தநாள், திருமணப் பரிசுகள் நூல்களாக வழங்கப்படலாம். வீடுகளில் பூஜை அறை இருப்பது போல ஒவ்வொரு வீட்டிலும் சிறு நூலகமாவது இருக்கவேண்டும். அது எதிர்காலச் சந்ததியினருக்கும் “முதுசொம்'ஆக அமையவேண்டும்.
புத்தகக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பது மொழியினதும் கலாசாரப் பண்பாட்டினதும் வளர்ச்சிக்கு மட்டுமன்றி மானுடத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் வேண்டற்பாலதாகும்.
و&)
*இணம் புதிய தலைமுறை எழுத்தாளiအံဓါးနှဲ*
\fipl35605jb 05TöIII (BLITIQ (pI06)
பரிசு பெறுபவர் ச. சாரங்கா زه
V சங்கத்தானை, சாவகச்சேரி தொகுப்பு ஏன் பெண்ணென்று .
பரிசுத் தொகை ரூபா 5000/- வழங்கப்படுவதோடு தொகுப்பு ஞானம் வெளியீடாக விரைவில் வெளிவரும்.
འོ། ༽ (SN \డ్డా~ - ஆசிரியர்
ஞானம் - டிசம்பர் 2003 3

Page 4
zsírraufi
திேகாலை ஐந்து மணிக்கு விகாரையில் ஒலித்த பிரித் சப்தம், முனியம்மாவைத் தூக்கிப் போட்டால் போல் உசுப்பி விட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் சுகமாகத்தான் இருக்கும், ஆனால், விடியற் காலையிலேயே காணிக்குப்போக வேண்டும், அங்கிருக்கும் புருஷனுக்குத் தேநீரும், சாப்பாடும் கொண்டு போக வேண்டுமென்ற நினைப்பு அவளைப் பாயிலிருந்து வாரிச் சுருட்டி எழும்ப வைத்தது.
கலைந்திருந்த தலைமுடியைக் கைகளால் அழுத்தமாய் பின்வருடி ஒரு :
சுருட்டு சுருட்டி, பந்தாய் கொண்ை
போட்டுக் கொண்டாள். பக்கத்தில படுத்திருந்த மூத்த மகளின் விலகியிருந்: கவுணைச் சரி செய்து விட்டாள். சிம்ன்
முன்பாக கொஞ்சம் காணியில் வேலை செய்யலாம். பத்து மணிக்குப் பின் கொளுத்தும் வெயிலை நினைக்கவே அவளுக்குப் பயமாகவிருந்தது. தலைக்கு மேல் வளர்ந்திருக்கும் முட்புதர்களைக்
கழற்றி, காணியை வெளிச்ச மாக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். முட்கள் கிழித்த
காயங்கள் கைகளிலும்,
4.
சுதர்மகாராஜன் -
கால்களிலும்
விண் விண்னென்று எரிச்சலைக் கொடுத்தன. தன்னைவிடத் தன் புருஷனின் கை கால்களிலுள்ள சிறு சிறு காயங்களை நினைக்கும்போது அவளுக்கு இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது.
ஒரு துண்டுகாணிக்காகத்தானே
இவ்வளவு கஷ்ட்ங்களும். கடந்த பதினைந்து வருடகாலமாகக் குத்தகைக் காணிகளிலும், சு: வீடுகளிலும்
துண்டு காணி வசதி ல்ல்ாம்ல் "திண்டாடி, திண்டாடி இன்னும் ஒய்ந்த பாடில்லை. திண்டாட்டங் களுக்கிடையே, சொந்தக் காணிக்கான
கனவின் ஏக்கம், ஒரு கனவாகவே முன்
நகர்வது எவ்வளவு பெரிய வேதனை.
ஒரு காலத்தில் சொந்தக் காணி நிலங்களோடு வாழ்ந்த குடும்பம், மனிதர்களின் துவேஷ வெறியால் காணிக்கரைகளை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு வன்னிக்கு ஓடியதும், பின் அங்கு நடந்த யுத்தம் காரணமாக, அவற்றில் பட்ட பந்தாய், மீண்டும் பழைய இடங்களுக்கே வந்து, சுடலி வீடுகளில் வாழ்வது மறக்க முடியாத சோகக் கதை. மீள வந்தவர்களில் சிலருக்கு சொந்த வீடுகளே, கூலி வீடுகளாக மாறியது வேதனையிலும் வேதனை.
முனியம்மாவும், புருஷன் வீரய்யாவும் தன்
அவள்
ஞானம் - டிசம்பர் 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு பிள்ளைகளோடு கடந்த பதினைந்து வருடங்களில் ஆறேழு வீடுகள் மாறியாயிற்று. 14 ே வருடத்திற்கு வருடம் வீட்டின் கூலிகள் அதிகரிக்கும்போது, இருந்த வீட்டை விட்டு குறைந்த கூலியில் வீடு தேட வேண்டி வரும். அவன் செய்யும் கூலிவேலை, வீட்டு கூலி கட்டவும், இருவேளைச் சாப்பாட்டிற்குமே போதுமானதாக
இருந்தது. இந்தக் கஷ்டத்தை ஓரளவுக்காவது தீர்க்க உதவி புரிவது, முனியம்மா அங்க இங்க தெரிந்தவர்களின் கைய கால பிடித்து பெற்றுக் அரசாங்கத்தால்
“சமுர்த்தி” உலர் உணவு ஊதியம்
கொண்ட அளிக்கும்
தான.
எவ்வளவு காலம்தான் கூலி வீடுகளில் வாழ்வது, தமக்கென்று சொந்தமாய் ஒரு நிலத்தில், ஒரு வீடு கட்டி நிம்மதியாய் வாழ வேண்டுமென்ற ஏக்கம், ஒவ்வொரு நாளும் அவர்களுக்குள் வெளிப்பட்டுக் கொண்டுதாணிருந்தது. அப்படி எங்கிக் கொண்டிருந்த ஒரு நாள்தான் மேல்வீட்டுசுப்டையாமாமா கூறிய செய்தி, முனியம்மாவை நம்பிக்கையின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
"ஏய் புள்ள முனியம்மா. இந்த முறை மேடம்' எலக்ஷன்ல வெத்துனனால் காணி இல்லாதவங்களுக்கு காணி கொடுக்குறாங்களாம்.” என்ற சுப்பையா மாமாவின் வார்த்தை களால் அவள் உள்ளம் பூரித்து, காணி கிடைத்ததாகவே எண்ணிக் களிப்புற்றாள். மேடத்துக்கு இலக்ஷன் காலத்துல
ஞானம் - டிசம்பர் 2003
போஸ்டர் ஒட்டி, பிரசாரம் பண்ணிய கூட்டத்தில் வீரய்யாவும் இருந்தான். அவர்கள் பணத்துக்காகவும், சாராயப் போத்தலுக்காகவும்தான் அதைச் செய் தார்களாயினும், தற்போது அது காணி ஒரு துண்டு பெற்றுக் கொள் வதற்கு உதவும்
என்கிற பாரிய நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்தது.
சுப்பையா மாமா கூறிய விடயத்தை ஊர்ஜிதப்படுத்திக் உடனடியாக அவள் கிராமசேவகரின்
கொள்வதற்காக,
ஒபீஸுக்கு ஓடினாள். காணி இல்லாத ஏழைகள் நூறு பேருக்கு இருபது பேர்சஸ் காணியும், வீடுகட்ட ஐம்பதினாயிரம் ரூபாய் கடனுதவியும் வழங்கும்படி, அரசாங்கத்தால் காணியும், காசும் ஒதுக்கிக் கொடுத் திருப்பதாகவும், அதற்கான மனுக்களைத் தானே சேகரிப்பதாகவும் கிராம சேவகர் கூறியபோது முனியம்மாவின் நம்பிக்கை
இருமடங்காகியது.

Page 5
அப்போதே, ஊரிலிருந்த அநேகமானோர் மனுக்களைக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். காணி இல்லாத வர்களோடு, காணி சொந்தமாக இருக்கிறவர்களும் கொடுத்தார்கள். முனியம்மாவும் அவசர அவசரமாக பக்கத்து வீட்டு சுமனதாசவிடம் சொல்லி, சிங்களத்தில், தன் குடும்ப கஷ்டங்களையும், தமக்குச் சொந்தமாக ஒரு காணியில்லாது கூலி வீட்டில் வாழ்வதையும், இறுதியாக அடியில் இலக்ஷன் காலத்தில் தன் கணவன் மேடத்துக்காக வேலை செய்ததையும் மனுவாக எழுதி,அதை ஒரு கவருக்குள் இட்டு கிராம சேவகரிடம் கொடுத்தாள். அந்தக் கவருக்குள் மனுவின் கனதியை விட, அவளது நம்பிக்கையின் கனதி கனத்திருந்தது.
காணிக்கான கடிதம் கொடுத்து ஒரு மாதமாயிற்று. முனியம்மா ஆவலோடும், மிக நம்பிக்கையோடும் காத்திருந்தாள். கிடைக்கப்போகும் காணியில், கட்டப் போகும் வீட்டைப் பற்றிக் கனவு கண்டாள். நாளும், மாலை நேரங்களில் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் வீட்டை எந்த முறையில் கட்டி, வடிவமைப்பதென்று அளவில்லாது பேசினாள். சில நேரங்களில் வீரய்யாவுக்கு எரிச்சலாகவும் இருக்கும்.
"சும்மா இருடி இன்னும் காணியே கிடைக்கல, அதுக்குள்ள மனக்கோட்ட கட்டுறா"
உள்ளுக்கால் எவ்வளவு எரிச்சல் பட்டாலும், வீரய்யாவுக்கும் ஒரு காணித் துண்டொன்று அரசாங்கத்தால் கொடுத்தால், தானும் தன் குடும்பமும் சிறிய வீடொன்றைக் கட்டி, அதற்குள் அடங்கி நிம்மதியாய் வாழலாம் என்கிறபாரிய ஆசை இருந்து கொண்டுதான் இருந்தது.
6
ஒவ்வொரு
எண்பத்து மூன்று கலவரத்தில், இருந்த வீட்டு நிலங்களைத் துட்டு ரெண்டுக்கு விற்றுவிட்டு, குடும்பத்தோடு வன்னிக்கு ஒடி பட்ட கஷ்டங்கள் எண்ணிமாளாதவை. கையிலிருந்த காசில் காணி வாங்கி, வீடு கட்டி, கொதிக்கும் வெயிலுக்குப் பழக்கப்படுவதற்குள், அதே கலவரம் அங்கு யுத்தமாய் வெடிக்க, உள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு, மீண்டும் அகதிகளாய் பிறப்பிடத்திற்கே ஓடிவந்து, தமக்கென்று எதுவுமில்லாது குடும்பத்தோடு நடுத்தெருவில் நின்ற போது, பழைய நண்பன் சோமதாசவின் உதவி மறக்க முடியாதது.
அன்றிலிருந்து இன்றுவரை கூலி வீடுகளில், கூலிகளாய் வாழச் சபிக்கப் பட்டாயிற்று. என்று முடியும் இந்த சாபக்கேடு என்று, அதற்கான எதிர் பார்ப்புகளோடு வாழ்ந்து, வாழ்ந்து சலித்துப் போயிற்று.
"மேடம்,காணிஇல்லாதவர்களுக்கு காணி கொடுத்து, வீடும் கட்டி கொடுக்கப் போறாங்க"என்றுமுனியம்மா கூறியபோது, வீரய்யாவுக்கும் அவளது உற்சாகம் பற்றிக் கொண்டது. இம்முறை எப்படியாவது காணி துண்டொன்று கொள்ள வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டான். மேடம் எப்படியும் தனக்குக் காணித் துண்டொன்று தரத்தான் வேண்டும் தேர்தல் காலத்தில் மேடத்துக்கு வேலை செய்தவர்களில் அவனும் ஒருவன். இரவு நேரங்களில் காமினி சுமனதாச சுப்பு மஜித் ஆகியோருடன் சேர்ந்து அவனும் விடிய விடிய போஸ்டர் ஒட்டியிருக்கிறான்.
இப்போது அது, தமக்கு உதவும் என்று, முனியம்மாவை போலவே அவனும் பெரிதும் நம்பியிருந்தான்.
வாங்கிக்
ஞானம் - டிசம்பர் 2003

மனு கொடுத்து ஒன்றரை மாதங்களின் பின், காணி கொடுக்கப் பட்டவர்களது பெயர் பட்டியல் கிராம சேவகரிடம் வந்திருப்பது கேள்விப்பட்டு ஊரே திரண்டது. முனியம்மாவும், வீரய்யாவும் கிராமசேவகரது வீட்டில் முதல் ஆளாய் நின்றார்கள். சுவரொட்டியில் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. நாற்பத்தியாறு பேர்களது பெயர்கள்தான் இருந்தன. மூன்று தமிழர்களுக்கும், இரண்டு முஸ்லிம் களுக்கும், மிகுதியெல்லாம் பெரும்பான்மை யினத்தவர்களுக்குமென கிராமசேவகர் நாசூக்காக விளக்கமளித்தார்.
வீரய்யா ஆவலோடு பட்டியலைப் பார்த்தான். வயல்வீட்டு அப்புவின் பெயர் இருந்தது. பியதாஸவின் பெயருக்கு அடுத்து சுண்ணாம்பு மோலில் வேலை செய்யும் பரமலிங்கத்தின் பெயர் இருந்தது. அவனது இதயம் தன்னிலையை தாண்டி வேகமாய் அடித்துக் கொண்டது. தனது பெயர் இருக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடே பட்டியலில் கீழ் நோக்கி கண்ணை நகர்த்தினான். நாற்பத்தைந்தாவது பெயர் காசீம், இறுதியாக வீராச்சாமி என்றிருந்தது. ஒரு கணம் முதல் எழுத்தில் தன் பெயர் தானோவென்று தடுமாறிப் போனான். ஆனால் தன் பெயரில்லாததை கிராம
சேவகர் ஊர்ஜிதப்படுத்தியபோது அவனுக்கு இடிவிழுந்தாற் போலிருந்தது. மிகுதி ஐம்பத்திநாலு காணித்
துண்டுகளும் தமக்கு தேவையான வர்களுக்கு மேடம் பகிர்ந்தளித்து விட்டாரென்று, விவரமறிந்தவர் ஒருவர் கூறியபோது அவனுக்குள் இருந்த நம்பிக்கை கோட்டை சுக்கு நூறாய் இடிந்து விழுந்தது.
வீரய்யாவும், நம்பிக்கையுடைந்து நடைப்பிணங்களாய்
முனியம்மாவும்
ஞானம் - டிசம்பர் 2003
வீடு திரும்பினார்கள். இந்த ஏமாற்றத்தின் தாக்கத்தினால் வீடு இரண்டு மூன்று நாட்களாய் உற்சாகமிழந்து இழவு விழுந்த வீடு போல் மாறிப் போயிருந்தது. சொந்தமாய் காணித் துண் டொன்றிற்கான எதிர்பார்ப்பின் நம்பிக்கை குன்றி, ஒரு பகல் வேளையில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒருவருக் கொருவர் புலம்பியபடியிருக்கையில், அம்பி தோட்டத்து அப்துல்நானா மீண்டும் நம்பிக்கை துளிர்க்கும் அந்தச் செய்தியைச் சொன்னார்.
“ஏய் வீரய்யா பணிய ஆத்தோரத்துல, எல்லாரும் காணி பிடிக்கிறாங்க, நீயும் போனியன்னா ஒரு பத்து பர்சஸ் பிடிச்சிக்கலாம்”
முனியம்மாவின் விரிந்தன.
“என்ன நானா சொல்றிங்க . "ஆமா தங்கச்சி, அது அரசாங்கத்து காணிக, மொதல்ல ஒரு சின்ன குடிசைய அடிச்சி இருந்துகிட்டா, பொறல் சொந்தமாக்கிகல்லாம்”
அப்துல் நானாவின் பேச்சில், முனியம்மாவின் புதைந்திருந்த நம்பிக்கை மெதுமெதுவாய் துளிரெடுக்கத் தொடங்கியது. நம்பிக்கையாய் தன் கணவனது முகம் பார்த்தாள். அவன் நம்பிக்கையற்று “உச்” கொட்டினான். ஆனால் அவள் விடுவதாயில்லை. அரசாங்கம் இல்லாதவர்களுக்கு காணி கொடுக்கா விட்டால், பலாத்காரமாயாவது காணி பிடித்தால் தான் சரி. முதலாளி மார்களுக்கெல்லாம், ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய காணிகளைப் பங்கிட்டு கொடுத்ததால, நாம பலாத்காரமா சரி காணி பிடிக்கணும். அவள் எண்ணங்கள் பலவாறு சிந்தித்தன.
கண்கள்
s
7

Page 6
இறுதியில் வீரய்யாவையும் அழைத்துக் கொண்டு, வீட்டிலிருந்த பழைய வெட்டுக்கத்தி, மண்வெட்டி, சகிதமாக ஆற்றோரம் சென்றாள். ஏற்கனவே ஒரு சிலர் குடிசையடித்துக் காணி பிடித்திருந்தார்கள். அப்துல் நானா சொன்னது சரிதானென்று,அப்துலை வாழ்த்தியவாறே, இருவரும் ஒரு தொங்கலில் காட்டை வெட்டத் தொடங்கினார்கள்.
அ க் க ம் ப க் க மி ரு ந் த மரங்களிலிருந்து தடிகள் வெட்டி, பழைய தகரங்கள் கொண்டு ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டார்கள். காணிபிடித்தால் போதாது, யாராவது அங்கேயே தங்க வேண்டும், இல்லையெனில் இரவில் குடிசையை உடைத்து எறிந்து விடுவார்கள். வீரய்யா இரவைக்குத் தங்குவதென்று முடிவாயிற்று. பகல் காலங்களில் வீரய்யா வேலைக்குப் போக, முனியம்மா காணியைத் துப்பரவாக்கிக் கொண்டு குடிசையில் இருக்கத் தொடங்கினாள்.
இன்றோடு இரண்டு நாட்களாகி விட்டது. அவர்கள் காணிபிடித்ததன் பின் அந்தப்பிரதேசத்தில் இன்னும் ஒரிரு திடீர் குடிசைகள் முளைத்திருந்தன. அக் குடிசைகளிலிருந்து கிட்டத்தட்ட இருநூறு அடி தூரத்தில் மகாவலி ஆறு அமைதியாக ஒடிக் கொண்டிருந்தது.
முனியம்மா, பிள்ளைகளை எழுப்பி தேநீர் கொடுத்தாள். புருஷனுக்காகக் கொஞ்சம் தேநீரை போத்தலில் ஊற்றி எடுத்துக் கொண்டு விடியல் இருட்டு கரைந்து கொண்டிருக்கையில் பாதைக்கு இறங்கித் தன் காணியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
இதமான காலைவெயில் மெதுமெதுவாய் அகன்று, வெயிலின் உக்கிரம் பரவத் தொடங்கியிருந்தது. முனியம்மா குடிசையைச் சுற்றி புல்லு வெட்டிக் கொண்டிருந்தாள். காலைச் சாப்பாடும் இல்லாது, குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ததில், அவளுக்கு தலை சுற்றுமாப்போல் இருந்தது. அப்படியே குடிசையோரமாய் அமரப் போனவள், காணிப்பக்கமாக வரும் இரு நபர்களைக் கண்டு எழும்பி நின்றாள்.
அவர்களைப் பார்த்தவுடன் அவளுக்கு விளங்கியது அவர்கள் அரசாங்க அதிகாரிகளென்று. அவர்களது உடை, நடை என்பன அவளுக்கு அதை உணர்த்தியது. நெஞ்சு
உதறல் எடுத்தது. ஒன்றும் செய்வதறியாது கல்லுபோல் நின்று கொண்டிருந்தாள்.
அவர்கள் அருகே வரும்வரை அவள் அசையவில்லை. நெஞ்சுக்குழி அடைத்தது. முனியம்மாவைப் பார்த்துச் சிங்களத்தில் கேட்டார்கள்.
“இங்க யாரு வீடு கட்டச் சொன்னது"
முனியம்மா பதிலளிக்காது நிலம் பார்த்து மெளனம் சாதித்தாள்.
“இது மகாவலிக்குச் சொந்தமான காணி. இதெல்லாம் ஆத்து நிலம்"
மற்றவன் கூறினான். “எங்களுக்கு இருக்க வேற இடமில்லதொர”
முனியம்மாவுக்கு அழுகை வருமாப்போல் இருந்தது. கண்ணிர்துளிகள் விழியின் ஒரம் வந்து எட்டிப்பார்த்தன.
"அது எங்களுக்குத் தெரியாது. மழை காலத்துக்கு ஆத்துத் தண்ணி
ஞானம் - டிசம்பர் 2003

இந்த இடமெல்லாம் மூடிரும், அதனால இன்னைக்கே இந்த இடத்த விட்டு போயிரணும்"
ஒல்லியாய் இருந்த அதிகாரி கடுமையாகக் கூறியதைக் கேட்டு முனியம்மாவுக்கு நடுக்கமெடுத்தது.
“ஆறு எங்க இருக்கு, பொய்யச் சொல்லி வெரட்ட பார்க்குறாங்க”
மனசுக்குள் திட்டித் தீர்த்தாள். ஏதோ சமாளிப்பதற்காகச் சரியென்று தலையாட்டினாள்.
அதிகாரிகள், அங்கிருக்கும் குடிசைக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்து 6չՊւ (6) பேசிக்கொண்டே நடந்தார்கள். ஒல்லியானவன் கூறினான்.
மற்றக்
“இந்த சனங்களுக்கு பைத்தியமா தெரியல, இந்த நிலமெல்லாம் மழைகாலத்துக்குத் தண்ணிகூடி நிறைஞ்சிடும்,. அங்க பாருங்க எல்லை கல்லு.”
அவன் காட்டிய திசையில் மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் பூசிய கல்லொன்று நடப்பட்டிருந்தது. அதுபோலஇன்னும் கற்கள் ஐம்பதடி இடைவெளியில் நடப்பட்டிருப்பதை
அவன் சுட்டிக் காட்டினான்.
அவர்கள் அந்த எல்லைக் கற்களைத் தாண்டிப் போய்க்
கொண்டிருந்தார்கள். முனியம்மா தன் காணியில் வேலியடிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். தூர வானம் கருக்கத் தொடங்கியிருந்தது.
முற்றும்
அவன் குற்றமிழைக்கவில்லை ஆயினும் சிறையிட்டனர் இவன் கொலை செய்தான் எனினும் விடுதலை செய்தனர்
அவன் லஞ்சம் கொடுக்கவில்லை
அதனால் கைதாக்கினர்
ஞானம் - டிசம்பர் 2003
(£6)2
0.
TD
- எம். பீ. நளிம், ஒட்டமாவடி
இவன் ஐனுாறு கொடுத்தான். நிரபராதியென்றனர்
நான் குற்றமோ செய்யேன் லஞ்சமோ கொடுக்கேன்
இருப்பினும் பணமின்று பத்தும் செய்கிறது.

Page 7
நாடகப் பயணத்தில் நான்..
38:w,3,3 ::: :;?% જી. 榭 徽錢繳
Uழ்ப்பாணத்தின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படுகின்ற 1995 தொடக்கம் 2001வரையான இராணுவ ஆட்சிக்காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட அக்கினிப் பெருமூச்சு நாடகம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் மேடையேற்றப்பட்டது. இதில் அண்மையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள கலைக்கூடல் நிகழ்வில் மேடையேற்றப்பட்டதை குறிப்பிட்டுக் கூறமுடியும். இந் நாடகம் காணாமற்போனோரின் பிரச்சினை பற்றிப் பேசுகிறது.
அக்கினிப்பெருமூச்சு நாடகப்பயணத்தில் இணைந்து செயற்பட்ட அனுபவம் மிகப் பெறுமதியானது.
நான் முதன் முதலில் நடித்த நாடகம் 'அக்கினிப் பெருமூச்சு ஆகும். எனக்கு நாடகம் பேசிய விடையத்தோடு உடன்பாடு இருந்ததாலும் நடனம் தெரியும் என்பதாலும் நாடகத்தில் இணைந்து கொண்டேன். ஏற்கனவே பாடசாலைகளில் நடன நிகழ்ச்சிகள் நிறையச் செய்த அனுபவங்கள் எனக்குண்டு. எனவே, எந்தவித பயமுமின்றி நடனம் செய்வதற்காக நாடகத்தில் செய்ய ஒப்புக் கொண்டேன். முதன் முதலாக எல்லோரும் ஒன்றிணைந்து கதைத்தபோது ஆண்கள், பெண்கள் என்று பலபேர் காணப்பட்டமையினால் எனக்கு நான் செய்வேனோ என்கின்ற பயம் எழுந்தது. எனினும் செய்து பார்ப்போம் என்ற நிலையில் இதனுள் இறங்கினேன். முதலில் எங்களை சில வசனங்கள் பேசவைத்தபோது எனக்கு பயம் எழத் தொடங்கியது. பலபேருக்கு முன் கதைப்பதென்றால் எனக்குப் பயம். குரல் நடுங்கத் தொடங்கி விடும் எனினும் நான் எனக்கு தெரிந்த மாதிரிகதைத்தேன். அதன் பின் நாடகத்தில் எனக்கு முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. சொல்லித் தருவதைச் செய்வது தானே என எண்ணி சம்மதித்தேன். ஆனால் தேவா அண்ணாவினது நாடகங்கள் எல்லாம் நல்லது என ஏனையவர்கள் கதைத்த போது நான் செய்யாமல் விட்டு அவர் பற்றிய நல்ல அபிப்பிராயங்களை குழப்பிடுவேனோ என்கின்ற பயம் எழுந்தது. நான் நடிக்கவில்லை என்று சொன்னேன். அதற்கு நெறியாளரான தேவா அண்ணா நீர்தான் மகள் பாத்திரம் செய்ய வேண்டும். அதெல்லாம் செய்யலாம் என்று சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். நாடகம் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்ததால் நானும் ஒப்புக் கொண்டேன்.
ஆரம்பத்தில் நான் சொல்லித்தருகின்றமாதிரி செய்வேனா? என்ற பயம் இருந்தது. ஆனால் எங்களிடமிருந்தே உணர்வுகள், வெளிப்பாடுகள் என்பவற்றை வெளிக் கொணரச் செய்வதன் மூலமும் எங்களுடன் கதைத்து,எங்களது அபிப்பிராயங்களை கேட்டு, எங்களது உணர்ச்சிகளை வெளிக்கொணர்ந்து செயற்பட்டதன் மூலமும் எமது பயம் நீங்கியது. இதற்கு ஏனைய நடிகர்களின் ஆதரவும் கிடைத்தது. அதன் பின்னர் நாடக ஒத்திகைகளின் போது
10 ஞானம் - டிசம்பர் 2003
 
 
 
 

எனது பாத்திரத்தினை வடிவாக செய்ய வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. என்னால் இந்த நாடகத்திற்கு எந்தவித இழுக்கும் வரக் கூடாது என எண்ணினேன். மிகக் கவனமாக எனது பாத்திரத்தை உள்வாங்கி அப்பாத்திரத்தில் நடித்தேன்.
நான் நாடகம் செய்தது இதுதான் முதல் தடவை எனவே எனது பாத்திரத்தின் உணர்வு வெளிப்பாட்டுக்கு எனக்கு எனது நடன அனுபவங்கள்’ உதவி செய்தன. நடனத்தின் அங்க அசைவு, முகபாவங்களினால் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். ஆனால் நாடகம் இன்னொருபடி நிலை கடந்து வார்த்தைகளை அங்க அசைவு, முகபாவங்களுடன் இணைப்பதன் மூலம் எமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அசைவுடன் வார்த்தை சேரும்போது அதிகமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. நடனத்தில் பாத்திரங்களுக்கு சில வரையறுக்கப்பட்ட அசைவுகள் உண்டு. உதாரணமாக கவலை என்ற உணர்வினை வெளிப்படுத்தும் போது அழ முடியாது. அழுவது போன்ற பாவனையே செய்யமுடியும். இங்கு பாவனைதான் முதலிடம் பெறுகிறது. ஆனால் நாடகத்தில் இத்தன்மைகள் இல்லை. சுதந்திரமான நிலைமை காணப்படுகிறது. இதனால் அதிகளவில் எம்மை பாத்திரத்துடன் ஒன்றிணைக்கக் கூடியதாக இருந்தது.
முதல் மேடையேற்றத்திற்கு முன் தேவா அண்ணா நீங்கள் செய்யிறது தான் நாடகம் பயப்படாமல் வடிவாச் செய்யுங்கோ’ என்று கூறினார். இதை மனதில் கொண்டு துணிவுடன் மேடையேறினேன். எனினும் நான் வடிவாகச் செய்வேனோ அல்லது நடுங்கி வசனங்களை பிழை விட்டு விடுவேனோ என்கின்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும், வடிவாச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. முதன் முதல் நாடகம் செய்து முடியும் மட்டும் நான் நானாக இல்லை. மேடையில் ஏறியபின் நான் என்ன செய்தனான் எப்படி செய்தனான் என்பதே எனக்குத் தெரியாது. நாடகம் முடிந்த பின்னர் பார்வையாளர்கள் வந்து நாடகம் நன்றாக இருந்தது. நீங்கள் நன்றாக செய்திருக்கிறீர்கள் என்று சொன்னபோது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. நானா அப்படிச் செய்தேன் என்கின்ற பிரமிப்பு ஏற்பட்டது. என்னாலும் நாடகம் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அப்போதே எனக்குள் வேரூன்றியது. என் நடிப்பை பார்த்தவர்கள் வந்து என்னெண்டு அந்த உணர்வுடன் செய்தனிங்கள் அதாவது அழுதணிங்கள், உங்களுக்கு அப்படி நிகழ்ந்த அனுபவம் இருந்ததா என கேட்டபோது நான் நல்லா செய்தனானா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஆரம்பத்தில் இருந்த வெட்கம், பயம் என்பன கொஞ்சம் குறைந்து விட்டது. ஆண்களுடன் இணைந்து செய்வது என்பது பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை.
நாடகத்தின் இறுதியில் நான் வேறொரு பாத்திரம் தாங்கி நடித்தேன். புதைக்குழிக்குள் இருந்து மூச்சுடன் எழுந்து வரும் உயிர்களில் நானும் ஒருவராக இணைந்து நின்றேன். இதில் எழுந்து கொண்ட உயிர் மூச்சுக்கள் அசைய வேண்டும். குறிப்பாக அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். இதில் நான் முன்னய காட்சியில் அடக்கப்பட்டதும் நினைவுக்கு வரும். எனது ஆசைகள் நிறைவேறாவிடின் எப்படிக் கோபப் படுவேனோ அந்த உணர்வில் செய்தேன். அவ்வாறு செய்யும் போது பரத நாட்டிய கட்டுப்பாடுகளை மீறி உடலை நன்கு அசைத்து அதற்கேற்ப கைகளை கொண்டு சென்ற
ஞானம் - டிசம்பர் 2003 11

Page 8
போது வேறொரு அனுபவம் கிடைத்தது. நான் புதைகுழிக்குள் கிடக்கும் போது நான் இறந்த பின் இப்படித்தானே கிடப்பேன் என்ற உணர்வு வரும். அதுவும் ஒரு வித்தியாசமான மனக்கிளர்ச்சி நிலை. புதைகுழிக்குள் படுத்துக் கிடந்தபடி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இன்றுவரை நிறைவேறவில்லை.
அக்கினிப் பெருமூச்சு நாடகம் 18 தடவைகள் மேடையேற்றப்பட்டுவிட்டது. எனினும் ஒவ்வொரு தடவையும் மேடையேறும் போது சிறுபயம், பதட்டம் ஏற்படுவது இன்னும் கூடக் காணப்படுகின்றது. ஆனால் பார்வையாளர்கள் ஒவ்வொரு தடவையும் இயல்பாக நன்றாக நடித்ததாக எனது நடிப்பைப் பார்த்து தாம் அழுததாக, அந்தரப்பட்டதாகச் சொல்வார்கள். 2000ம் ஆண்டு பல்வேறு இடங்களிலும் பயம் நிறைந்த சூழலில் குழுவாக வாகனத்தில் சென்று நாடகத்தை மேடையேற்றினோம். ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு அனுபவங்கள் ஏற்பட்டன. இராணுவக் கெடுபிடிகள் ஏதும் இருக்கக் கூடாது என்று கடவுளை அடிக்கடி வேண்டிக்கொள்வோம்.
சமாதானச் சூழலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் எமது நாடகம் வவுனியாவில் மூன்று தடவைகள் மேடையேற்றப்பட்டது. ஒரு ஆற்றுகை கலைஞர்களுக்காக காமினி மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது. இதன்போது வித்தியாசமான உணர்ச்சி வெளிப்பாடு மனக் கொதிப்பு காணப்பட்டது. சிறிய தொகை பார்வையாளர்கள் மிக அருகில் இருந்தார்கள் அடக்கமான மண்டபம். மைக் பூட்டப்படவில்லை. செயற்கை ஒளிஅமைப்பு இல்லை. இந்தச் சூழல் எம்மை மிகுந்த உணர்ச்சித்தளத்திற்கு இட்டுச் சென்றது. உணர்ச்சிக்குள் அமிழ்ந்து போனோம். பார்த்தவர்கள் அழுதழுது பார்த்தார்கள்.உண்மையில் காமினிவித்தியாலயத்தில் நாடகத்தை மேடையேற்றும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை. பல நடிகர்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை. இதனை பார்க்க வந்த கலைஞர்களுக்கு சொன்னோம். அதனைப் பலர் ஏற்றுக்கொண்டார்கள்.இருந்தாலும் வந்தவர்களை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்துடன் நாடகத்தை ஒப்பனைகள் ஒளியமைப்புக்கள் மைக் போன்றன இல்லாது ஆற்றுகை செய்தோம். ஆற்றுகை மிக நன்றாக வந்திருந்தது. புதியதொரு அனுபவத்தைத் தந்தது.
ஆரம்பத்தில் இருந்த பயம், வெட்கம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற நிலை இன்று இல்லை. அத்துடன் நான் செய்வதைப்பார்த்து மற்றவர்கள் சிரிப்பார்களோ என ஆரம்பத்தில் எண்ணியது உண்டு. இன்று இந்நிலை இல்லை. என்னால் எதையும் சுலபமாக செய்யமுடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். பல நாடகங்கள் செய்ய வேண்டும். பல பாத்திரங்கள் ஏற்று நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், ஆசை உண்டு.
எனது பல்கலைக்கழக வாழ்வின் ஆரம்பத்தில் நானும் என்பாடும் என்று இருந்தேன். நாடகத்தில் ஈடுபட்டதன் மூலம் பல நண்பர்களைப் பெற்றுக் கொண்டுள்ளேன். மேலும் பலபேருடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பல்வேறுபட்ட மக்களை சந்திக்கக் கூடியதாகவும், பலரைப்புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. அதாவது, சமூகத்திலுள்ளவர்களின், ஒவ்வொருவரது குணங்கள் அவர்களது நடத்தைகள் அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன பற்றி எல்லாம் இந்த நாடகச் செயற்பாட்டுக்கு வந்ததன் பின்னரே அறிந்து கொண்டேன். எனது படம் பத்திரிகையில் வந்த போதும், எமது நாடகம் பற்றிய கருத்துக்கள் பத்திரிகைகளில் வந்த போதும், நாங்கள் செய்த நாடகம் என்று சொல்லும் போது பெருமையாக இருக்கிறது.
12 ஞானம் - டிசம்பர் 2003

O
岑
r s அவன் லைட் சுவிச்சை ஒப்
பண்ண, அவள் கட்டிலில் சாய்ந்து படுக்கவும், ரெலிபோன் மணி அடித்தது.
பூசை வேளையில் கரடியா? அவன் சலிப்போடு லைற்றைப் போட்டுவிட்டு ரெலிபோனை எடுத்தான்.
“ஹலோ. அருண் ஹியர்.” எதிர் முனையில் மனைவி விமலாவின் குரல்.
9
“என்னங்க. நம்ம வினோத்.
K. : : அருண் வெளியேறுவதை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண் டிருந்தாள் திவ்வியா.
வெண்ணை திரண்டுவரும் வேளையில் தாழி உடைந்த கதை போல .
அருண்.?
நிச்சலனமாக இருந்த அவளது மனது ஏன் இப்படி மாறியது? ரீன் ஏஜ்ஜிலும், இருபதுகளிலும் இல்லாத இந்தக் குழப்பம் முப்பதுகளின் பிற்பகுதியில் ஏன் ஏற்பட்டது?
சலிப்பா? விரக்தியா? அருண் அவளது அலுவல கத்திற்கு மாற்றலாகி வந்த நாட்களில் இப்படி ஏதும் இருந்ததில்லையே!
ஒரு வருடத்திற்கு முன்னர் அருண்கூட இப்படி இருக்கவில்லையே!
பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே அவனது பார்வையும், நெருக்கமும் சற்று வித்தியாசமாக
ஞானம் - டிசம்பர் 2003
அவள். O O
சிறுகதை ஆ.
Cse இருப்பதை அவதானித்தவள், இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று நினைத்தாள்.
திவ்வியா அந்த அலுவலகத்தில் பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றுகிறாள். திருமண வயது கடந்தும் அவள் தனிமரமாக இருந்த போதிலும், அவளைப்பற்றி ஒருவிதமான கிசு கிசுப்பும் கிடையாது. சொல்லப் போனால் அந்த மாதிரி அவளை நெருங்க யாருக்கும் தைரியமில்லை.
ஆனால் புதிதாக வந்த அருண். எப்படிப் பார்த்தாலும் அருணுக்கு அவளைவிட இரண்டு மூன்று வயது குறைவாகத்தானிருக்கும்.
அ வ ன து* முருகானந்தன்
வாட்டசாட்டமான தோற்றம், வசீகரமான பேச்சு, நீற்றான உடை பெண்களை ஈர்த்ததில் வியப்பில்லை. ஒருவேளை அவன் திருமணமாகாதவனாக இருந்திருந்தால் அவனுக்குப் பலத்த போட்டி இருந்திருக்கும்.
வந்த முதல்நாளிலேயே அவன் திருமணமானவன் என்பதும், அவனுக்கு ஐந்து வயதில் வினோத் என்று மகன் இருக்கிறான் என்பதும் தெரிய வந்தமையினால் அப்படி ஏதும் ஏற்படாமல் போயிற்று.
திவ்வியாவைப் பொறுத்தவரை இனித் தன் வாழ்வில் திருமண வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையை இழந்து
13

Page 9
விட்டாள். ஒரு கன்னியாஸ்திரி போலவே அவள் வாழ்ந்து வருகிறாள்.
வேலை நிமித்தம் அருணோடு ஏற்பட்ட நெருக்கம் அவர்களை நல்ல நண்பர்களாக்கியது. ஆரம்பத்தில் அவர்கள் கண்ணியமாக, எதுவித சலனமுமின்றியே பழகிவந்தார்கள். எனினும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நெருங்கிப் பழகினால் ஈர்ப்பு ஏற்படுவது சகஜம்தான். கூடவே சுற்றமும் தப்பாகக் கணிப்பது இயல்பே.
அலுவலகத்தில் சிலர் மறை முகமாகவும், சிலர் அருணின் காதுபடவும் இவர்களை இணைத்துப் பேசியபோது, அவன் இதை மனப் பொருமலுடன் திவ்வியாவிடம் கூறி, கவலைப்பட்டான்.
“நீயும் நானும் சரியாகப்
விமலா மனைவி மட்டுமா? அன்பு மகன் வினோத்தின் அம்மாவல்லவா?
கடிவாளமிடாத குதிரைபோல அவன் மனதில் திவ்வியாவின் எண்ணங்கள் ઈી6) நாட்களாக ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளமையைக் கண்டு, அருணுக்குத் தன்மீதே வெறுப் பேற்பட்டது.
'திவ்வியா எவ்வளவு பண்பாகப் பழகுகிறாள்? சீ. இப்படியெல்லாம் நாம் நினைக்கலாமா? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தான் அருண்.
படுக்கையறையில் முரண்டுபிடித்து நிற்கும் வேளைகளிலும் திவ்வியாவின் முகம் இனிமையாக அவன்
விமலா
பழகுகிறோம். மற்றவர்களின் அபிப் பிராயத்தைக் கண்டு ஏன் சீற்றம்
நிச்சலனமாக இருந்த அவளது மனது ஏன் இப்படி மாறியது?
கொள்கிறாய்?’ என்றாள். அவள்
சொல்வது சரியாகவே ரின் ஏஜ்ஜிலும், இருபதுகளிலும் ೫ಣ್ನಃ நீங்களில் இல்லாத இந்தக் குழப்பம்
எனனும மனங்களல முப்பதுகளின் பிற்பகுதியில் (3542.JLJLD. 3. #y೬Jಿಲ್ತಿ
வீட்டில் அளவுக்கதிகமாக { மனைவி விமலா அவனை அதிகாரம் செய்யும் போதும், எதிர்த்து வாதிடும் போதும் பிசாசு என்றுமனதில் அவனைச் சபித்துக் கொள்வதுதான் வழக்கம்.
ஆனால் இப்போது சில நாட்களாக அப்படியான நேரங்களில் அவனது மனதில் ஒத்தடம் கொடுப்பது போல திவ்வியாவின் முகம் நினைவில் வரும்.
மனதிலே விமலாவையும், திவ்வியாவையும் ஒப்பிட்டு சில வேளைகளில் ஏக்கப் பெருமூச்சு
விடுவான். எனினும் விமலாவை இழக்கவும் அவன் மனது தயாரில்லை.
4
ஏன் ஏற்பட்டது?
மனத்திரையில் தோன்றும் போது
அவனுக்குக் குழப்பம் அதிகரித்தது.
திவ்வியாவும் 3 (5
சொன்னாள், "அருண் உன்னை நேற்று
நாள்
கனவில் கண்டேன்.”
அப்படியானால் அவளுக்கும் குழப்பமா?’ என்று அவன் யோசித்தான். ‘ஒரு ஆணும், பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதா? மனதில் விடைகாண முடியாத கேள்வி அடிக்கடி எழுந்தது.
ஞானம் - டிசம்பர் 2003
 
 
 
 
 
 

மனதைப் படம் பிடிக்கும் அறிகுறிகள் இருவரையும் குழப்பி யடித்தது. ஒரு நாள் அருண் கேட்டான், “படத்திற்குப் போவோமா?”
“ஏன்?”
“சும்மா தான்.”
“சும்மா தானா?” என்று கேட்டு விட்டு அவள் கல கல என்று சிரித்தபோது
அவளை அதிகம் இளமையாக உணர்ந்தான்.
“வேண்டாம்.” இறுக்கமான அவளது பதில்.”
“அப்படியானால் சரி. நான் வற்புறுத்தவில்லை.”
இன்னொரு நாள் அவளே சொன்னாள். “உன் விருப்பப்படியே சினிமாவுக்குப்போவோம். ஆனால் நல்ல நண்பர்களாக மட்டும்.”
அவள் சொல்வது போல் முடிகிற காரியமா? என்று அவனால் நிச்சயிக்க முடியவில்லை.
திரையரங்கில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கையில் மனதில் அவனுக்குப் போராட்டமாக இருந்தாலும், அவள் நிச்சலனமாக இருக்கையில், அவனாலும் எல்லை தாண்ட முடியவில்லை. தவறுதலாக கை தட்டுப் பட்டபோது கூட கெளரவமாக விலக்கிக் கொண்டான். நல்ல சில காட்சிகளை அவள் அவனோடு உரையாடிப் பகிர்ந்து கொண்டாள். காதல் காட்சிகள் உட்பட
படம் முடிந்து வெளியே வந்த போது திவ்வியா கூறினாள். “இரண்டரை மணித்தியாலமும், இருநூறு ரூபாவும் தண்டம்.”
“ஏன்? அவன் வியப்போடு அவளைநோக்கினான். அவள் என்ன
ஞானம் - டிசம்பர் 2003
சொல்ல வருகிறாள் என்று புரியாத தடுமாற்றம். ஆண்பிள்ளை நீதானே ஆரம்பிக்க வேண்டும் என்கிறாளா?
“படமா எடுத்திருக்கிறார்கள். படு போர்.”
அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இம்முறை அலுவலக விடயமாக இருவரும் கொழும்புக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது.
“கொழும்பில் எங்கே தங்குவதாக உத்தேசம்.?”
“உறவினர்கள் வீடுகளில் தங்க (ւplջ աո Ցil. லொட்ஜில்தான் தங்க வேண்டும். நீ.?” அருண் திவ்வியாவை நோக்கிக் கேட்டான். 'பொலிசில் பதிய வேண்டி வரும்.”
“லொட்ஜில் தான். உடலெங்கும் மெல்லிய மின்சாரம் பாய்வது போலிருந்தது அவனுக்கு. இவளைப் புரிந்து கொள்ள முடிய வில்லையே! பெருங்கடலின் ஆழத்தை அறிந்தாலும், பெண் மனதின் ஆழத்தை அறிய முடியாது என்று தெரியாமலா சொன்னார்கள்?
அவன் எதுவும் மேற்கொண்டு பேசவில்லை.
“எந்த ரயிலில் போகிறதாக எண்ணம்?”
“நாளை காலையில்.”என்றான் அருண்.
“எனக்கும் சேர்த்து ரிக்கெட் ரிசேர்வ் பண்ணிவிடு.”
அருகருகே ரயில் பயணம் இனித்தது. தமிழீழ அரசியல், தமிழக அரசியல், உலக அரசியல் என்று ஆரம்பித்த உரையாடல் இலக்கியம், சினிமா என்று தடம்மாறித் தொடர்ந்தது.
うう
15

Page 10
கொழும்பில் ரயிலிலிருந்து இறங்கியதும் நீ எந்த லொட்ஜில் தங்கப் போகிறாய்..?’ என்றான் அருண்.
“அது உன் தெரிவு.” மீண்டும் உடலில் மின்சாரம். “ஹோட்டல் வாசலில் வைத்துக் கேட்டான். “சிங்கிள் ரூம்ஸா, டபுள் ரூமா.?”
“அது உன் விருப்பம்.” மீண்டும் பந்து அவனது கைக்கு வந்தது. அவளை ‘போல்ட் ஆக்க வேண்டும்.
டபுள் ரூம்.” ரிசப்சனில் திறப்பை வாங்கினான்.
“சிங்கிள் ரூம்ஸ் எடுப்பாயோ என்று நினைத்தேன்.”
“எங்களுக்கிடையே ஏன் நடிப்பு? மனதில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்?” என்றான் அருண்.
“உன் மனைவி உன்னைச் சந்தேகிப்பதில்லையா?அறை மூலையில் பாதணிகளைக் கழற்றியபடி கேட்டாள் திவ்வியா’
“அவள் பிசாசுதான். ஆனாலும் இந்த விடயத்தில் என்மீது அவளுக்கு நம்பிக்கை. ஆழமான நேசிப்பு.”
“ஆனால் நீஅந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் இல்லை. அப்படித் தானே?”
“நேற்றுவரை நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் தான்” “fல் விடாதே.” “நீ நம்பாவிட்டால் பரவாயில்லை. இது சத்தியம்.” அருண் வித்தியாவின் தலையில் தொட்டுக் கூறினான்.
“உனது இளமையில்.” கலியாணத்திற்கு முன்னர்?”
6
“தேவையில்லாத கேள்வி.” அவன் சிடுசிடுத்தான்.
“என்னைப் பற்றி நீ கேட்க வில்லையே!"
“கேட்டால் உண்மையா சொல்லப் போகிறாய்?”
‘அப்படியானால் நீ சொன்ன பதிலும் பொய்யா?” அவள் அவனை மடக்கினாள்.
“உண்மையான சிரித்தான் அருண்.
அவள் பாத்ரூமில் குளித்து விட்டு வந்ததும், அவன் அவளைப் பார்த்துசோ நைஸ்.” என்று கண்களைச் சிமிட்டி விட்டுச் சென்றான்.
அவன் திரும்பி வந்தபோது அவள் நைற்றியில் நின்றாள், ‘உனக்கு முப்பத்தியெட்டு வயது என்று யார் சொன்னது.? மெதுவாக காதைக் திருகினான்.
“இதுதானே வேண்டாம் என்பது.” “நமக்குள்ளே ஒளிவு மறைவு வேண்டாம்.”
“இல்லை இத்தனை நாளாக இல்லாத எண்ணம் ஏன் திடீரென்று? நட்பு என்றதெல்லாம் பசுத்தோல் தானா?”
“தனிமை. சந்தர்ப்பம் சூழ்நிலை. திடீரென்று வந்தது என்றில்லை. தயக்கம். அவ்வளவு தான். அதோட உன்னைப் புரிஞ்சு கொள்ளுறது முரளியின் ஸ்பின் போல கொஞ்சம் கஸ்டமாக இருந்தது.” அருண் சிரித்தான்.
“இப்போ பாட் பண்ண முடியுமா? டொன் பிராட்மன் கூட வெற் பிச்சில் ஸ்பினுக்கு ஈடு கொடுத்துப் பாட்பண்ண மாட்டாராமே. நீ எப்படி..” திவ்வியா அவனை நோக்கினாள்.
s
பொய்.
ஞானம் - டிசம்பர் 2003

“வெற் பிச்சா? பாற்றிங் விக்கெட் என்றல்லவா நினைத்தேன்.”
இருவரும் குயீர் என்று சிரித்தார்கள்.
“மனைவிக்கு ஒரு ‘கோல்
எடுத்துவிட்டு வருகிறேன். கொஞ்சம் பொறு.”
பிசாசு என்று இப்போது கொஞ்சம் முன்னர் தானே சொன்னாய்? பிசாசுடனா பேசப் போகிறாய்?”
“விமலா என்னை உயிருக் குயிராய் நேசிக்கின்ற பிசாசு. என் இனிய இராட்சசி.” அவன் திவ்வியாவைப் பார்த்துச் சிரித்தபடி கண்சிமிட்டிவிட்டு டயல் பண்ணினான்.
கதைத்து முடித்து அவளருகே வந்து அமர்ந்ததும். “அன்பான ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இது எல்லாம் தேவையா? உனக்குக் குற்ற உணர்வு இல்லையா?"
“குற்ற உணர்வு இல்லை என்று நான் பொய் சொல்லலை. உனக்குக் குற்ற உணர்வு இல்லையா?.”
“நான் தனிமரம் . வாழவேண்டிய பருவமெல்லாம் கோட்டை விட்டுட்டு ‘மெனப்போசை நெருங்குகிறேன். எனக்கென்ன குற்ற உணர்வு.?”
“அப்படியானால் உனக்குப் பூரண சம்மதமா?”
“நான் சம்மதிக்க மாட்டேன்னு ஏன் நினைத்தாய்?நானும் ஒரு பெண்
அவன்
தானே? திவ்வியா நாணத்தோடு
சிரித்தாள்.
“பெண் என்பதால் தான்
குழப்பமாயிருந்தது.”
“நட்பு. காதல் இவற்றைப்பற்றி என்ன நினைக்கிறாய்?. நமது பழக்கம்
ஞானம் - டிசம்பர் 2003
நட்பா? காதலா, அல்லது வேறு ஏதாவதான்னு யோசிக்கலையா?"
திவ்வியாவின் புதிய வினா.
“நட்பு என்கிறதில் சந்தேக மில்லை. காதல் என்று சொல்ல முடியுமா?. காதல் என்பதன் சரியான வரைவிலக்கணம் என்ன?" அருண்அவளை நோக்கினான்.
“காதல் என்பது திருமண வாழ்வை நோக்கிய ஒருவித நட்புன்னு நான் நினைக்கிறேன். நமது நட்பு அப்படி இல்லை என்கிறாய், அதுதானே? உண்மை தான். ஆனா கலியாணம் என்கிறது கூட கட்டிலுக்கு இட்டுச் செல்லுற ஒரு சமாச்சாரம் தானே? மனித நாகரீகம் ஏற்படுத்திய பண்பாட்டுக் கோலங்கள்.” திவ்வியாவின் பதில் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது.
“இல்லை. பாலியல் ஈர்ப்பு இல்லாத ஆண் பெண் நட்பு இருக்க முடியாது என்று தோணுது எனக்கு.”
“இருக்க முடியும். ஐம்பது வயதுக்குப் பிறகு ஐம்பது வயதைக் கடந்திட்டா அந்தப் பெண்ணும் ஆணும் ஒன்றுதான்.”என்று சிரித்தாள் திவ்வியா. “ஆண்களுக்கு அறுபது. அதற்கு மேலும்.”
“முப்பதுகளிலிருந்து கொண்டு ஐம்பது அறுபதுகளைப் பற்றிய ஆய்வு நமக்கு எதற்கு?.”
“ம். நான் ரெடி. நீ ரெடியா?” அவன் குறும்போடு அவளைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டான். அவள் மெதுவாக அவன் மார்பில் சாய்ந்தாள்.
“இது உனக்கு முதல் அனுபவமா?” “அது ஏன் உனக்கு” என்னைத் திருமணம் செய்யவா போகிறாய்?. இந்த
தான்
17

Page 11
நிமிடம், இந்த மார்புக் கேசங்களைத் தடவியபடி இந்த மார்பில் சாய்ந்தபடி இருப்பது எப்படி இருக்குத் தெரியுமா? ஆனந்தமாய், சுகமாய், ம். மனதுக்குப் பிடித்தவனுடன் உறவு கொள்வது பேரின்பம். தான்.”
“உண்மைதான் திவ்வியா. பல கணவன் மனைவியரிடையே கூட சுமூக பாலுறவு இல்லை. வெறும் பாலியல் வன்முறைபோல், நிர்ப்பந்தம் போல் இருக்கிறது. இன்றைய திருமணங்கள் பெரும்பாலும் சாதி, மதம், பணம், பதவி இவற்றின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் மனதிற்கு இடமில்லை. விருப்பமில்லாத சோடியுடன் கூடிக் குலாவுவதென்பது வெறும் உடல் வேட்கைக்கான வடிகால்தானே?”
'உண்மைதான் அருண். உடம்பின் இயக்கங்களுக்கும் உணர்வுகளுக்கும் மட்டுமான வடிகால் மட்டுமா தாம்பத்திய
உறவு? இரண்டு மனது கலந்து உறவாடி
சங்கமிக்கணும்.”
"அப்படியானால் Lusuf விபச்சாரிகளை நாடுகிறார்கள்?"
“அங்கே மனப்படிவு
இல்லைத்தான். ஆனாலும் அங்கே வருபவரைத் திருப்திப்பட வைக்கும் எண்ணம் இருக்கும். ஐந்து ரூபா கொடுத்தாலென்ன, சினிமா ஸ்டார் தேடி ஐம்பதினாயிரம் கொடுத்தாலென்ன அதில் மனதின் பங்கில்லை."
“நம்மிடையே.?" அருண் சிரித்தபடி அவளை நோக்கினான்.
திவ்வியா பதில் சொல்லாமல் சிரித்தாள். "ஆயிரம் ரூபாவுக்கு அறையை எடுத்துவிட்டு நேரத்தை வீணடிக்கிறோம் என்று நினைக்கிறேன்."
8
“இப்பவாவது புரிஞ்சுகிட்டியா?” “சில ஆண்களுக்கு வாழைப் பழத்தை உரிச்சுக் கொடுத்தாலும் உண்ணத் தெரியாது.”
“சாப்பிட்டுக் காட்டுகிறேன். வெளிச்சமா இருட்டா உனக்கு விருப்பம்?” “எதற்கெடுத்தாலும் பெண்களிடம் கேட்டுக் கொண் டிருக்காதே. ஆண் பிள்ளையாக நட”
“பெண்ணுரிமையை மதிக்கிறவன் நான்.”
“படுக்கையறையில் மட்டுமா?” என்று சிரித்தபடி கட்டிலில் சாய்ந்தாள் திவ்வியா.
அருண் லைற்றை அணைக்க ரெலிபோன் மணி அடித்தது. இப்படியான நேரங்களில் செல்போனை ஒப் பண்ணி வைக்க வேண்டும் என்று நினைத்தபடி போனை எடுத்தான்.
பூசை வேளையில் கரடியா? “ஹலோ. நான் விமலா பேசுறன்." எதிர்முனையில் மனைவியின் குரல்.
“என்னங்க. நம்ம வினோத் கிணற்றில் தவறி விழுந்திட்டான். அவசர சிகிச்சைப் பிரிவிலை வச்சிருக்கிறன்." மனைவி அழுதாள்.
‘கடவுளே. வினோத் எப்படி இருக்கிறான்?. நான் உடனே புறப்பட்டு வாறன்.” போனை வைத்த அருணைக்
கேள்விக்குறியோடு நோக்கியபடி எழுந்தாள் திவ்வியா.
நடந்ததைச் சொல்லிவிட்டு
அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் புறப்பட்டான் அருண்.
அவன் போவதை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்வியா.
முற்றும்
ஞானம் - டிசம்பர் 2003

திறனாய்வு நெருடல்கள்
ஒர் ஆய்வாளர், யாழ் பல்கலைக்கழகம்
மெது நாட்டிலே திறனாய்வை விளங்கிக்கொள்ள முடியாதவர்களும் திறனாய்வைச் சீரணிக்க முடியாதவர்களும் ஒரு புறமிருக்க, திறனாய்வாளர்களைச் சிருஷ்டியாளர்களுடன் ஒப்புமை செய்து சிருஷ்டியாளர்களை விட திறனாய்வாளர்கள் எவ்வாறு மேலோங்கமுடியும் என்று தமது அறியாமை வறுமையை அவ்வப்போது வெளிப்படுத்துபவர்களும் இருக்கின்றனர். திறனாய்வும் சிருஷ்டி கலந்த ஒரு கலை என்ற அடிப்படைப்பாடமே தெரியாத அவலத்தின் விளைவுதான் அது.
வாசித்தல் வேறு, திறனாய்வு வேறு, வாசித்தலின் முடிவில் திறனாய்வு முகிழ்க்கலாம் அல்லது முகிழ்க்காமல் விடலாம். இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு முதலில் பின்வரும் எண்ணக்கருக்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்துதல் வேண்டும்.
(1) இலக்கியத் திறனாய்வு (2) இலக்கியக் கோட்பாடு (3) திறனாய்வுக்கோட்பாடு குறிப்பிட்ட நூலியத்தை (TEXT) ஆராய்ந்தறிந்து விமர்சித்தல் திறனாய்வு ஆகின்றது. திறனாய்விலிருந்து இலக்கியத்தின் பொதுவான உள்ளடக்கப் பண்புகளை இனங்காணுதல் இலக்கியக் கோட்பாட்டுக்கு இட்டுச் செல்லும், திறனாய்வுக் கோட்பாடு (CRITICALTHEORY) என்பது திறனாய்வை மட்டும் ஆராய்ந்தறியும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
ஆங்கிலத் திறனாய்வு மரபில் ஐ. எ. றிச்சார்ட் குறிப்பிட்ட நடைமுறைத் திறனாய்வு (PRACTICALCRTICSM) ஒடுங்கிய திறனாய்வுப்பாதையை மட்டுமே காட்டியது. அது ஒரு காலகட்டத்தின் இலக்கியக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இலக்கியத் திறனாய்வு பல்வேறுபரிமாணங்களை உள்ளடக்கிய அகல்விரி தொழிற்பாடாக அமைந்து வளர்ந்து வருகின்றது. பகுத்தறிதல், சூழமைவு காணல், வியாக்கியானம் செய்தல், புறநிலைப்படுத்தல், சிருஷ்டி கலந்த கலை வடிவமாக்கல் முதலிய பல பண்புகளைத் திறனாய்வு உள்ளடக்கி நிற்கின்றது.
திறனாய்வு ஒரு வகையில் புலமைப் பயில்வுடன் (Scholarship) இணைந்தது. படைப்பின் ஆழத்தையும் தொடர்புகளையும், சூழமையையும் விளங்கிக் கொள்வதற்கு புலமைப்பயில்வு திறனாய்வுக்கு இன்றியமையாதது என்பது திறனாய்வாளர் பேற்சனின் (BATESON) துணிவு. புலமைப்பயில்வு என்ற தொடருக்கு ஒவ்வாமை கொள்ளும் எழுத்தாளர்கள் இருப்பின் அவர்கள் அறியாமையில் நித்தியமானவர்களாகவே இருப்பார்கள். (பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் திறனாய்வுக்குக் கிடைத்த பெறுமானம் அவரின் புலமைப்பயில்வுடன் திறனாய்வு தொடர்புகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது).
ஞானம் 2 டிசம்பர் 2003 19

Page 12
திறனாய்வின் இன்னொரு பரிமாணம் அதன் முதன்மைத் துலங்கல் (Explication) என்பதாகும். இலக்கிய வடிவம் தாங்கி நிற்கும் மூலாதாரமான கருத்தை அவிழ்த்துக்காட்டும் செயற்பாடுதான் முதன்மைத் துலங்கள் எனப்படும். இந்த முதன்மைக் கருத்தை அடியொற்றியே ஆழ்ந்த கருத்துக்களும் பொருண்மை வெளிப்பாடுகளும் வியாக்கியானம் செய்யப்படுகின்றன.
திறனாய்வின் பிறிதொரு பரிமாணமாக அமைவது வியாக்கியானம் (interpretatiar) ஆகும். கலைப்படைப்புக்குரிய புலக்காட்சியை ஏற்படுத்துவதிலும், கருத்தை மேலும் ஆழமாக நோக்குவதிலும் வியாக்கியானம் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. வியாக்கியானம் என்ற பணியை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குரிய வலிமையான சாதனமாக அமைவது மார்க்சிய அறிக்கையாகும். மார்க்சிய அறிக்கை நிலைப்படாத திறனாய்வுகளில் பலங்குன்றியதும், ஆழம் குன்றியதும், நொதுமலானதுமான வியாக்கியானங்களையே தரமுடிகின்றது. மார்க்சிய அறிக்கையானது வியாக்கியானங்களைக் கூர்மைப்படுத்தவல்ல ஒன்றிணைந்த பல தள அணுகுமுறைகளைக் கொடுக்கின்றது. மார்க்சிய அணுகுமுறை வியாக் கியான ம் v , '' ' ኛy° 'w& το oo:::::::::::
இலக்கியத் திறனாய்வு பல்வேறு : பரிமாணங்களை உள்ளடக்கிய அகல்விரி, தொழிற்பாடாக அமைந்து வளர்ந்து வருகின்றது. பகுத்தறிதல், சூழமைவு கானல், வியாக்கியானம் செய்தல், ! (Creative Performer) புறநிலைப்படுத்தல், ဖါ(g)ဓဇုbtဗု. கலந்த கலை : வனர் த் து வடிவமாக்கல் முதலிய பல பண்புகளைத் விடுகின்றது. சமூக திறனாய்வு உள்ளடக்கி நிற்கின்றது. ஆககம, σθLμό Ντε థ్రోవ్లో "..ప్లేవ్లోవ్లో இயங்கியல், சமூக அசைவியம், சமூக ஊடாட்டம் போன்றவை தொடர்பான தெளிந்த புலக்காட்சியை மார்க்சிய அறிகை வழியாகவே பெற முடிகின்றது. கலையாக்கத்தின் பொருண்மை மார்க்சிய அறிகையால் வெளிப்படுகின்றது.
மார்க்சிய அணுகுமுறையின் பரிமாணங்களை விளங்கிக் கொள்ளாதவர்களும், விளங்கிக்கொள்ள முடியாதவர்களும் அவற்றின் பன்முகத் தொழிற்பாடுகளை அறியாத நிலையில் ஒரு முக அடைப்பு (Monolithic) என எண்ணிவிடுகின்றனர்.
நவீன திறனாய்வு மரபு, நூலிகை சார்ந்த வியாக்கியானங்கள் மீது மேலும் மேலும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் நிலையில் இலக்கியத்தின் சமூகத்தளமும், புறவயமான நோக்கும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. “நூலிகையை நம்புங்கள்’ என்று டி.எச். லோரன்ஸ் வலியுறுத்திக் கூறியமை (D.H.Lawrenes, 1964) படைப்பு உள்ளடக்கத்திற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை ஒரு வகையில் குறிப்பிடுகின்றது. திறனாய்வுச் செயற்பாடு என்பது படைப்பை உருவாக்கியவரை நடுநாயகப்படுத்தி மேற்கொள்ளப்படுவதில்லை என்பது படைப்பாளிகளுக்கு சமர்ப்பணம். மார்க்சிய விரோத திறனாய்வுகள் படைப்பாளியை முதன்மைப்படுத்திய நிகழ்ச்சிகள் தமிழ் மரபில்
செய்பவரை சமூக நி  ைல ப் ப ட் ட ஆக் க ம லர் ச் சி  ெக |ா எண் ட ஆற்றுகையாளராக
இயல்பானதாகிவிட்டன.
20 ஞானம் - டிசம்பர் 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோட்பாட்டு நிலையில் இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு வித்தியாசமான திறனாய்வாளர் மக்கானுடைய கருத்து ஒன்றை நினைவு கொள்ளலாம். “இலக்கிய ஆக்கம் என்பது ஒருவரது தன்னியக்கமான வெளிப்பாடோ அல்லது சுயத்தெறிப்புத் தொழிற்பாடோ அன்று, அது சமூக நிலைப்பட்டதும் நிறுவன மயப்பட்டதுமான ஒரு சம்பவம்” (Mc Gann. 1983) இலக்கியப்படைப்பு சமூகச் செயல் முறையின் சம்பவமாக வெளிவரும் நிலையில் தெளிவான சமூகப் புலக்காட்சியை உட்கொள்ளாத படைப்புகள் சோடை போவதைத் தடுக்க முடியாது.
இலக்கிய ஆக்கம் சமூக நிலைப்பட்டது என்பதை ஆழ்ந்து நோக்கும் பொழுது ஆசிரியரது உளப்பாங்கும் ஆசிரியரது சமூகக்கண்ணோட்டங்களும் அதிக முக்கியத்துவம் பெறுவதை நிராகரிக்கமுடியாது. உருத்திரிந்த சமூகப்பார்வையுடன் எழுதிக்கொண்டு சமூகப்பார்வைக்குரிய சொந்தம் கொண்டாடமுடியாது. சமூகப்பார்வை கருத்தியலுடன் இணைந்தது. அது இலக்கியப்படைப்பின் வெளிப்படையான சுலோகம் எனக் காட்டுவதற்கு மார்க்சிய அணியினர் முயன்றனர். கருத்தியலுக்கும் இலக்கிய ஆக்கத்துக்குமுள்ள தொடர்பை அல்துஸ்ஸர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை ஆழ்ந்து நோக்குதற்குரியது. “கருத்தியல் என்பது கலைப்படைப்பின் குறிப்பிட்ட பிரச்சினைக் குவியத்தோடு உள்ளார்ந்த வகையில் ஒருங்கிணைந்து நிற்கும்’ (Louis Athusser, 1969) நல்ல படைப்பு என்பது புனைவுநிலைப்பட்ட ஒரு விடயமன்று. புனைவினுள்ளே சங்கமித்து நிற்கும் கருத்தியல் சார்ந்த விடயமாக விடுகின்றது.
மார்க்சிய திறனாய்வு வளர்ச்சியின் இன்றைய போக்குகளை எதிர்க்கும் வகையில் பின்னவீனத்துவ வாதியாகிய லொயிற்றாட் முன்வைத்த “உறுதியின் மாயை' (UNCERTAINTY) என்பது ஏற்கனவே உலகை மாயைப் பொருளாகக்கருதும் பழைய கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.
அதனை அடிப்படையாக வைத்து மார்க்சிய திறனாய்வின் அடிப்படைகளை வீழ்த்தலாம் என்பது அறிக்கை நிலைப்பட்ட பலமிழந்த வாதம். பின்னவீனத்துவம் தனக்குள்ளே தனது பலத்தை இழக்க ச் செய்யும் கூறுகளையும் தனக்குள்ளே தனது எதிரிகளையும் வைத்திருக்கின்றது என்ற கூற்று (hab Hassan 1987) பின்ன நவீனத்துவத்தை ஏந்துவோருக்கு சமர்ப்பணமாகட்டும்.
சமூகத்தில் ஏற்படும் நெருக்குவார இறுப்புக்களுக்குரிய அமைப்பியல் ஆதாரங்களை (STRUCTURAL SOURCES OF TENSION) ப் புலக்காட்சி கொள்ளாமல் படைக்கப்பட்ட படைப்புகளை இனங்காணும் அறிகைக் கட்டமைப்பு இன்றைய கால கட்டத்திலும் மேலும் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளது. நவீன திறனாய்வு மரபில் முன்வைக்கப்படும் 'அறிவியம்' (EPISTEME) என்ற எண்ணக்கரு காலத்தையும், பொருளையும், அறிவையும், திட்டவட்டமான பொருட்கூறுகளின் இணைப்பையும் புலப்படுத்துகின்றது. இடைவினை இயம்பலின் (Discourse) வெளிப்பாடாகி திறனாய்வு உருப்பெறுகின்றதேயன்றி தீர்ப்புக்கூறி முடிசூடும் செயல் அன்று என்பதை, தெளிவை நோக்கி மனங்கொள்ளல் வேண்டும்.
ஞானம் - டிசம்பர் 2003 21

Page 13
|}|}['ഞ്ചീൺ
ceIIIIIrififul Ifir கா.சிவத்தம்பி
சந்திப்பு: திஞானசேகரன்
.ெ உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். ༽
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம்,
இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல்
ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ் நாடு அரசினால் திரு.வி.கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
தி.ஞா.: முற்போக்கு விமர்சகர்கள் எப்போதும் தங்களைச் சூழவுள்ள வட்டத்தினரையே எதற்கும் தட்டிக்கொடுத்து வந்துள்ளனர். மற்றவர்களுடைய எழுத்துக்களை அதிகம் பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே...?
النص
கா. சி. 55,56களிலிருந்து ஒரு புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு 60களில் ஒரு உச்ச நிலையை எட்டுகிற வரையில், முற்போக்கு இலக்கிய இயக்கம் ஈழத்தமிழ் இலக்கிய உலகில் செயற்பட்டு வந்தது. இப்போது, பின் நோக்கிப் பார்க்கையில் மறுமலர்ச்சி இயக்கமும் அல்லது எழுத்தாளர் சம்பந்தப்பட்ட வேலைகளும் கணேஷ் 'பாரதியைத் தொடக்கியதும் இன்று வரலாற்று நோக்கில்
22 ஞானம் - டிசம்பர் 2003
 

பார்க்கும் போது, மாறிவருகின்ற காலத்தினுடைய தன்மைகளை இந்த இரண்டும் காட்டுகின்றன. மறுமலர்ச்சி இயக்கம் என்பது பாரதியுகத்தை ஈழத்தில் கொண்டு வரவேண்டும் என்பதையும், கணேஷினுடைய 'பாரதி முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலும் வந்தன. ஆனால் இவை பற்றிய நேரடி உணர்வுகள் இல் லாமலும் , காலத்தின் தேவைகளுக்காகவும் கலை இலக்கியத் துறையில் சமூக சிந்தனைப்பட்ட செயற்பாடுகள் நிகழ வேண்டும், செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்து அந்தக் காலகட்டத்தில் கட்சிமட்டத்தில் நிலவியது. குறிப்பாக இந்தக் கம்யூனிஸ்ட் இயக்கங்கள், அந்தந்த நாடுகளில் உள்ள பண்பாடுகளோடு இணைந்து தொழிற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை 50களில் பொதுவாக எடுத்தது. இந்தப் பின்புலத்திலேதான் இந்த இயக்கம் படிப்படியாக ஆரம்பித்தது. ஈழத்துக்கு ஓர் இலக்கியப் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதும் அந்தப் பாரம் பரியத்தில் காலூன்றி நின்றுகொண்டு இன்றைய சமூகப் பிரச்சினைகளை எழுதுவதும், என்கின்ற நோக்கம்தான் மேல்நிலையில் இருந்தது.
பிற்காலத்தில் நான் நாவலரைப்பற்றிக் கண்டிப்பாகப் பேசினாலும் கூட, புதிதாக வந்த புதுமை இலக்கியம் முதலாவது தொடரில், நான் நமது பரம்பரை' என்று நாவலரைப்பற்றி எழுதியிருக்கிறேன். இது நாவலர் வகுத்த பாதை. நாவலர் வகுத்த பாதையிலேயே நாங்கள் போவோமென்று. அது எங்களுக்குத் தேவையாகவும் இருந்தது. ஏனெனில் நாங்கள் வெறுமனே இலக்கிய அநாதைகளல்ல. ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்திற்கு நாவலர் வித்திட்டார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக வைத்து எழுதினேன். அதனைப் பின்னர் நாவலர் சபையில் உள்ளவர்கள் மீள்பிரசுரம் செய்தார்கள். அது படிப்படியாக வந்து, குறிப்பாக யாழ்ப்பாண சமூக ஒடுக்கு முறைகள் பற்றிப் பேசுகிற, சமூகத்தை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துக் காட்டுகிற, பிரதிபலிக்கின்ற ஒ எழுத்து முறைமையாகத் தொடங்கினோம். அக்காலகட்டத்தில் டானியல், ரகுநாதன் ஜீவா, அ.ந. கந்தசாமி போன்ற எழுத்தாளர்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கினார்கள்.
முற்போக்கு எழுத்தாளர்களின் இந்த எழுச்சி இரண்டு மூன்று நிலைப்பட வந்தது. முதலில் 'ஈழத்து இலக்கியம்’ என்ற கோஷம்தான் இருந்தது. எல்லோரும் சேர்ந்து ஒருமைப்பட்ட இலக்கியமாக இருந்தது. ஸாகிரா கல்லூரியில் நடந்த மாநாடு உண்மையில், ஈழத்து இலக்கியம் என்ற அடிப்படையில் நடந்தது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கனக செந்திநாதன் போன்ற எல்லோருமே அந்தக் காலகட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள்.
அதன்பிறகு இன்னொரு கட்டம் வந்தது. வருகின்ற ஈழத்து இலக்கியம் எத்தகைய நிலைப்பட்ட இலக்கியமாக இருத்தல் வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை வந்தது. அந்நிலையில் இந்தத் தேசத்தைப் பிரதிபலிக்கின்ற இலக்கியமாக இருக்கவேண்டும் என்கின்ற இரண்டாவது கட்டம் வந்தது. அந்தக் கட்டம்தான் "தேசிய இலக்கியம்' என்பது. தேசிய இலக்கியத்திற்கு இரண்டு நிலைப்பாடு இருந்தது. ஒன்று இந்த நாட்டில் உள்ள பிரச்சனைகளைச்
ஞானம் - டிசம்பர் 2003 23

Page 14
சொல்லுதல். மற்றது பொதுவுடமைப் பின்புலம் அல்லது சோஷலிசப் பின்புலம் காரணமாக சிங்களவர் தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல், இலங்கை மக்களை இலங்கை மக்களாகப் பார்த்து, அவர்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவது. இந்தக்கால கட்டத்திலேதான் தேசிய இலக்கியம் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. தேசிய இலக்கியம் பற்றித் தொடர்ந்து ஒரு விவாதம் நடைபெற்றது. தினகரனிலும் எழுதப்பட்டது, புதுமை இலக்கியத்திலும் எழுதப்பட்டது. எழுதும்போது, இந்தியாவினுடைய தாக்கம் இல்லாது - சென்னை எழுத்தாளர்களுடைய செல்வாக்கிலிருந்து விடுபட்டு நமக்கென ஒரு பாரம்பரியத்தை உண்டாக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இது நடக்கிறபோது இன்னுமொரு முக்கியமான விடயம் நடந்தது. என்னவென்றால் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்கின்ற பிரதேசங்களுடன் மாத்திரம்தான் இருந்த இலக்கிய எழுத்துலகை படிப்படியாக இலங்கையின் மற்றைய தமிழர் வாழகின்ற - தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற மற்றைய பிரதேசங்களை உள்ளடக்கத் தொடங்கிற்று. உதாரணமாக, வன்னியில் செளந்தரநாயகம், மட்டக்களப்பில் எற்கனவே தமிழ் எழுச்சி சம்பந்தமான எழுத்தாளர்கள் எஸ். டி. சிவநாயகம், இராஜபாரதி, பித்தன் எல்லோரும் அந்தப் பின்புலத்தைச் சார்ந்தவர்கள். மலையகத்து எழுத்து தொடங்கியது. கணேஷ் காலம் போய் என்.எஸ் .எம். இராமையா போன்றோருடைய காலம் தொடங்கியது. முஸ்லிம்களுடைய எழுத்துக்கள் மிக முக்கியமாக வெளிவரத் தொடங்கின. குறிப்பாக இலங்கையின் தென் கோடியிலுள்ள திக்வல்லை கிராமத்திலிருந்து கமால் போன்றவர்கள் வந்தார்கள். இவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாக ஈழத்து இலக்கியம் என்கின்ற பண்பு முதற்தடவையாக இந்த முற்போக்கு எழுத்தாளர்களால் கொண்டுவரப்பட்டது. அதுவரை ஈழத்து இலக்கியம் என்று சொன்னால், அது நாவலருடைய பாரம்பரியத்தை சைவப் பாரம்பரியத்தை அல்லது இங்குள்ள மேலாண்மையுள்ள, மேலோங்கி நின்ற ஒரு பாரம்பரியத்தைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம். அடுத்த கட்டமாக, 50களிலிருந்து இங்குள்ள தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள சகல எழுத்தாளர்களும் பங்குபற்றுகின்ற ஒட்டுமொத்தமான இலக்கியமாகப் பார்த்தோம். மலையக இலக்கியத்தினுடைய வளர்ச்சி, திக்வல்லை போன்ற முஸ்லிம்களுடைய எழுத்துக்களுடைய வருகை. மடடக்களப்பிலும் பார்க்க அக்கரைப்பற்றிலேதான் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஒரு தளம் இருந்தது. அப்துல் ஸமது, மருதுர்க் கொத்தன், ஏ.இக்பால் போன்றவர்கள்.
இவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. ஆனால் இலக்கியத்தில் அந்தப் பிரதேசங்களைப் பிரதிபலித்து, எழுத வேண்டும் என்கின்ற ஒரு நோக்கில் எழுதினார்கள். தேசிய இலக்கியம் என்பதற்கு அந்த ஒரு பரிமாணம் உண்டு. இன்னொன்றுதான் இலங்கை என்று சொல்லும்போது சிங்கள மக்களையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்பது. உண்மையில் அந்த தேசிய இலக்கியம் என்கிற நாணயத்தின் ஒரு புறம் சென்னை எழுத்தாளர்களின் செல்வாக்குக்கு உட்படாமல் இருத்தல். அந்த நாணயத்தின் மறுபுறம், இங்குள்ள தமிழ்ப் பிரதேசங்கள் யாவும் எழுதத்தொடங்குதல்.
24 ஞானம் - டிசம்பர் 2003

அதற்குள் ஒரு ஊடாட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆளுமை பிரேம்ஜி ஞானசுந்தரத்திற்கு இருந்தது. யார்யார் முன்னுக்கு வருகிறார்களோ யார்யார் இந்த முறையிலே செல்கிறார்களோ அவர்களை உள்வாங்கிக் கொள்ளுதல். லசஷ்மண ஐயர், பண்டிதமணி, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, கனக செந்திநாதன், இவர்கள் எல்லோருக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மேடை அமைத்துக் கொடுத்தது. லசஷ்மண ஐயருக்கு கடைசிவரையில் மேடை அமைத்துக் கொடுத்தது.
அதன் பின்பு, படிப்படியாக இந்த எழுத்தாளர்கள் பிரதேசப் பிரச்சினை களை, குறிப்பாக சமூக ஒடுக்கு முறைகளைப் பற்றி எழுதத் தொடங்கினார்கள். அந்த எழுத்துகளுக்கான நியாயப்பாட்டை வழங்குகின்ற ஒரு விமர்சனக் குழு ஒன்று வந்தது. இந்த முற்போக்கு சங்கத்துக்குள்ளால் வந்த விமர்சனத்தைப்பற்றி நீங்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் எங்களுடைய குழுவில் யாராவது கதை எழுதினால், அவர் அந்தக் கதையை வாசிப்பார்கதை பிரசுரமாகியிருக்காது. அந்தக் கதையை எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுவார்கள். பிறகு அதை எழுதியவர் திருத்தி அனுப்புவார். அடுத்த கட்டத்தில் என்ன நடந்ததென்றால், பிரசுரமான கதைகளை வைத்துக்கொண்டு எல்லோரும் சேர்ந் திருந்து பேசுவோம். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, விவேகானந்தா சபை மண்டபத்தில் பின்னேர வேளைகளில் இப்படிக் கலந்து v- . . . . . . . பேசுவோம். நந்தியின் "ஊர் நம்புமா? கதையை நாங்கள் இப்படி Discuss பண்ணினோம். இப்படி, எழுதி, வாசித்து, திருத்தி - திருத்துவதென்றால், அப்படி எழுது, இப்படி எழுது என்று சொல் வதல்ல. இதில் என்ன என்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்று சொல்கின்ற தன்மை இருந்தது. அந்த ஒரு உத்வேகம் வருகிற போது, இந்தக் கதைகள் எல்லாம் பிரதானமாக இந்தியாவிலேதான் வெளியிடப்பட்டன. சரஸ்வதி, சாந்தி போன்ற பத்திரிகைகளிலேதான் வெளியிடப்பட்டன. இந்த நேரத்தில் - 57ல் கைலாசபதி தினகரன் ஆசிரியரானார். தினகரனின் பின்புலத்தைப் பார்க்கவேண்டும். நாதன் இருந்து அதில் முதன்முதலில் ஈழத்து எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அதனை நாங்கள் மறுக்கக் கூடாது. ஆனால், அதனை பண்டிதமணி, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, போன்றவர்களுடன்தான் வைத்துக் கொண்டாரே தவிர கீழுக்கு வரவில்லை. கைலாசபதி ஞாயிறு தினகரன் ஆசிரியர் ஆனவுடன் இந்தக் கதைகள் எல்லாவற்றையும் பிரசுரிக்கத் தொடங்கினார். ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்களை எழுதவைத்தார். அந்தக் காலகட்டத்தில், கைலாசபதிக்கும் எனக்கும் இருந்த தனிப்பட்ட உறவு
யாரைத் தன்னிர் அள்ள வேண்டாம் என்று: சொன்னார்களோ அந்தத் தண்ணிர் அள்ள மறுக்கப்பட்டவனுடைய மகன் எழுதும்போது அது சில ஆத்திரங்களுடன் வரும். சில: பாஷைகளோடு வரும், நாங்கள் இதை ஒரு சமூகமாற்றமாக, சமூகப் புரட்சிக்கான ஒரு தளமாகவே கருதினோம் :
ஞானம் - டிசம்பர் 2003 25

Page 15
காரணமாக - அது பல்கலைக்கழகத்தால் வந்தது இரண்டு பேரும் ஒன்றாக வேலை செய்தோம், ஒன்றாக கதைக்கிறது -அது தனிப்பட்ட உறவு. இந்த முற்போக்கு சங்க உறவினால் மேலும் பலப்படுத்தப்பட்டது. நான் அப்போது ருத்திரா மாவத்தையில் இருந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கூட்டம் நடக்கும். அதற்குள் ஒரு ஒழுங்கு முறை இருக்கும். படிப்படியாக அது ஒரு Debate கொடுக்கிற விடயமாக வந்தது. முதலாவது விடயமாக வந்தது என்னவென்றால், ஈழத்து இலக்கியம் என்கிற விடயம்.
இந்த நேரத்தில் இன்னுமொன்று வந்தது என்ன வென்றால், தென்னிந்தியாவில் இருந்து வருகின்ற வணிகப் பத்திரிகைகளை கட்டுப்படுத்துவது நல்லது என்று சொன்னோம். அப்போது எல்லோரும் இவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்றார்கள். உண்மையில் இந்தியாவிலுள்ள கணிசமான காத்திரமான இலக்கியவாதிகளுக்கு எங்களில் ஒரு பிடிப்பு ஏற்பட்டதற்குக் காரணம், நாங்கள் இந்தக் கோஷத்தை இங்கு வைத்தது. ரகுநாதனுக்கு ராமகிருஷ்ணனுக்கு எங்களில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. 59ஆம் ஆண்டு, நானும் சமீமும் தமிழகத்திற்குச் சென்று திருச்சிக்குப் போனபோது, திரு லோக சீத்தாராம் சொன்னார், " நீங்கள் எல்லோரும் இப்படிச் சொல்கிறீர்களாமே, உங்களுக்கு ரெம்பத் துணிவு வேணும்” என்றார். அந்தக் கட்டத்தில் அது மூன்று நான்கு வகையான தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒன்று, இவர்கள் எழுதுகின்றவை இலக்கிய மரபின்பாற் பட்டவையா? என்கின்ற விஷயம் வந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அந்த இலக்கியங்களில் எழுதப்படுகின்ற விஷயங்களும் அவர்கள் கையாண்ட மொழியும். இது ஒரு பிரச்சினையைக் கிழப்பியது. இன்னொரு பிரச்சனை இந்த வணிக இலக்கியத் தாக்கங்களை எதிர்க்கிறது. இது அரசியல் பிரச்சனையாகவும் வந்தது. அந்தக்காலத்தில் சமஷ்டிக்கட்சி அதற்கு ரெம்பவும் எதிராக இருந்தது. அவர்கள் நாங்கள் சொல்வதை கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அல்லது சிங்களக் கட்சிகளுடைய நிலைப்பாடாகக் கருதினார்கள். எனக்கு நல்ல ஞாபகம் ஒரு கூட்டத்தில் நான் பேசி முடித்ததும் அமிர்தலிங்கம் பேசினார். அவர் பேசியபோது இதுபற்றி என்னை மிகவும் தாக்கிப் பேசினார். அதற்கு ஒரு அரசியல் தாக்கம் இருந்தது. மற்றது, இலக்கிய ரீதியாக இந்த இலக்கியங்களின் தன்மை எத்தகையது என்கின்றது பற்றிய ஒரு விஷயம் வருகிற போது, எங்களை அறியாமல், இந்த Realism என்கின்ற கோட்பாடு வருகின்றது. யதார்த்தவாதம். ஈழத்து இலக்கியம், தேசிய இலக்கியம் அத்தோடு யதார்த்தவாதம் என்றும் வரத்தொடங்கியது. யதார்தவாதம் என்று வரத் தொடங்கியபோதுதான் மற்றைய எழுத்தாளர்கள் இதற்கு எதிராகத் தொடங்கினார்கள். அந்த நேரத்திலேதான் Socialist Realism, Critical Realism 6166tug up fouj6)6)TLD (Sud (360TTib. 955 மட்டத்தில் வருகிறபோது, படிப்படியாக முதற்தடவையாக தமிழ் எழத்தாளர்கள் அவர்களுடைய கருத்து நிலையின் அடிப்படையில்-Ideology இன் அடிப்படையில் பிரிவு படுவதற்கான ஒரு சூழல் எற்பட்டது. இந்தியாவிலும் பொதுவுடமைக்
26 ஞானம் - டிசம்பர் 2003

கட்சியின் நிலைப்பாடு திராவிட முன்னேற்றக் கழக இனவாதங்களுக்கு எதிரானதாக இருந்தது. இவை இரண்டுக்குள்ளும் ஒரு வித ஒருமைப்பாடு இருந்தது. இந்த ஒரு சூழலுக்குள் வருகிறபோது இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை நியாயப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அவர்களுடைய எழுத்துக்கள் நியாயமானவை என்பதை நாங்கள் இங்கும் நிரூபிக்க வேண்டியிருந்தது. தமிழகத்திலும் நிரூபிக்க வேண்டியிருந்தது. விந்தனின் எழுத்துக்களைப்பற்றி கல்கி ஒரு முறை சொன்னார், நாங்கள் எவ்வளவுதான் தொழிலாளியைப்பற்றி எழுதினாலும் அந்தத் தொழிலாளி எழுதுவது போல் வராது என்று. முதல்தடவையாக யாரைத் தண்ணிர் அள்ள வேண்டாம் என்று சொன்னார்களோ அந்தத் தண்ணிர் அள்ள மறுக்கப்பட்டவனுடைய மகன் எழுதும்போது அது சில ஆத்திரங்களுடன் வரும். சில பாஷைகளோடு வரும், நாங்கள் இதை ஒரு சமூகமாற்றமாக, சமூகப் புரட்சிக்கான ஒரு தளமாகவே கருதினோம். இந்தக் காலகட்டத்தில் கருத்து நிலை அடிப்படையில் அதற்குச் சார்பானவர்கள் ஒரு புறமாகவும் அதற்குச் சார்பில்லாதவர்கள் மறுபுறமாகவும் இருந்தனர். இந்தப் பிரச்சினைக்குள்ளேதான் பொன்னுத்துரை விடுபட்டுப் போனார். பொன்னுத்துரையின் உறவினர்தான் எம்.சி. சுப்பிரமணியம். இதனால் கட்சி சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களோடு பொன்னுத்துரைக்கு முன்னர் உறவு இருந்தது. - டானியல், ஜிவா இவர்களுடன் பொன்னுத்துரைக்கு உறவு இருந்தது. தங்களுடைய இலக்கியங்களை - எழுத்துக்களை இவர்கள் பொன்னுத்துரையுடன் DiscuSS பண்ணுவார்கள். அதில் ஏதாவது பிழையென்று சொன்னால் திருத்துவார்கள். ஏனென்றால் பொன்னுத்துரைதான் இவர்களுக்குள் முந்தியே படித்தவர். பிற்பட்டகாலத்தில் பொன்னுத்துரையுடன் அவர்களால் வேலைசெய்ய இயலாமல் போனது. ஆரம்ப காலத்தில் பொன்னுத்துரை எங்களது கூட்டத்திற்கு வருவார். பின்பு வருவதில்லை. Ideology ரீதியாகப் பிரியத் தொடங்கியது. சமூக முன்னேற்றத்துக்கு சார்பாக யார் யார் இருந்தார்களோ அவர்கள் கம்யூனிஸ் ட்டுகளாக இருந்தாலென்ன இல்லாதவர்களாக இருந்தாலென்ன அவர்கள் ஒன்றாக நின்றார்கள். நந்தி, லசஷ்மண ஐயர் போன்றவர்கள் நின்றார்கள். ஒரு காலகட்டம் வரை கனகசெந்திநாதன் நின்றார். பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் போன்றவர்கள் ஆதரித்தார்கள். பேராசிரியர் செல்வநாயகம் எங்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஓர் இலக்கிய விழிப்புணர்வு ஏற்பட்டது. முந்திய எழுத்தாளர்களும் திரும்ப எழுதினார்கள். - வ.அ. இராசரத்தினம் போன்றவர்கள். அவர் முதலில் எங்களோடு சேர்ந்து நின்றார். பின்னர் படிப்படியாக எங்களோடு கோபித்துக்கொண்டு விலகினார். இந்த நேரத்தில் முற்போக்குடன் சார்ந்து நின்ற படைப்பிலக்கிய எழுத்தாளர்களுடைய எழுத்துக்களை நியாயப்படுத்துவதும் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதுமான ஒரு நிலைமையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அந்தக்கட்டத்தில் எங்களுடைய போராட்டம் இந்த யதார்த்தவாத இலக்கியங்களைப் பேணுகின்ற
ஞானம் - டிசம்பர் 2003 27

Page 16
அல்லது அவற்றைப்பற்றிப் பேசுகின்ற போராட்டமாக அமைந்தது. இந்த நேரத்தில் முதல்தடவையாக யாழ்ப்பாணச் சமூகத்தின் அதுவரை எழுதப்படாத விஷயங்கள் வெளிவந்தன. அதுவும் ஒரு முக்கியமான விஷயம். இந்த அம்சங்கள் காரணமாக பல எதிர்ப்புக்கள் வரத் தொடங்கின. இங்கேயுள்ள இந்தக் கருத்து நிலையை ஏற்காதவர்கள் இரண்டு பகுதியினராக இருந்தார்கள். ஒன்று மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள். இந்தப்பிரச்சனை இங்கு மாத்திரமல்ல தமிழகத்தில் இந்த எழுத்துக்களை எதிர்ப்பவர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். வெ. சாமிநாதன் போன்றவர்கள். 50களில் தோன்றிய எழுச்சி மார்க்சிய எழுச்சியாக இருந்தது. அந்த எழுச்சியோடு சேர்ந்து கொண்டவர்கள்- மணிக்கொடிக் காலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் பிறகு தாங்கள் இதிலிருந்து புறம்பானவர்கள் என்பதைக் காட்டிக்கொண்டார்கள். சரஸ்வதி, சாந்திக்கு எழுதிய செல்லப்பா, க.நா.சு. போன்றவர்கள் எல்லோருக்கும் எழுத்து அவர்களுடைய பத்திரிகையானது. ஒரு Polarisation - ஒரு துருவப்பாடு ஏற்பட்டது. அந்தத் துருவப்பாட்டின்போது நாங்கள் இந்த எழுத்தாளர்களுக்காக அதற்கும் மேலாக இந்த எழுத்துக்களுக்காக வாதிட்டோம். வெளிப்படையாகப் பேசினோம்.
பொன்னுத்துரையின் “வீ என்ற நூல் வந்தபோது, நான்போய்ப் பேசினேன். என்னுடைய பல தோழர்கள் பேசப் போகவேண்டாம் என்று தடுத்த போதும் விவேகானந்த சபையில் நடந்த அந்தக் கூட்டத்தில் நான்போய்ப் பேசினேன். சண்டை வந்தாலும் என்று எனது கட்சித் தோழர்கள் சிலர் எனக்காக அங்கு வந்திருந்தார்கள். பேசும்போது பொன்னுத்துரையின் எழுத்துக்களிலுள்ள சாதகமான அம்சங்கள் பற்றியும் பேசினேன். பாதகமான அம்சங்கள் பற்றியும் பேசினேன். இலக்கியநடை ஒன்று இருக்கிறது. அந்த இலக்கிய நடைத்திறனை வைத்துக் கொண்டு எதனைச் சித்தரிக்க வேண்டும் என்று நான் திட்டவட்டமாகக் கூறினேன்.
இந்த விவாதங்கள் வருகிற போதுதான் தளையசிங்கம் மேலுக்கு வந்தார். அப்போது “கலைச்செல்வி மிகமுக்கியமான பத்திரிகையாக இருந்தது. தேவன் போன்றவர்கள் அங்காலும் நாங்கள் இங்காலும் நின்றோம். 'கலைச் செல்வி என்ன செய்ததென்றால், முற்போக்கு இலக்கியம் பற்றிய ஒரு விவாதத்தை ஆரம்பித்தது. எது முற்போக்கு இலக்கியம்? -கலைச்செல்வி கட்டுரைத்தொடரில் நான் முதலில் எழுதினேன். முற்போக்கு இலக்கியம் என்றால் இதுதான் என கட்டுரையில் விளக்கி, இது எங்களுக்கு நாவலர் காட்டிய பாதை என அக்கட்டுரையை முடித்தேன். அதற்கெதிராக சோ.நடராசா ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அக்கட்டுரைத் தொடரிலேதான் தளையசிங்கம் எழுதினார். அதில் மார்க்சியத்தை ஓரளவுக்கு ஏற்றும் ஒரளவுக்கு ஏற்காமலும் எழுதியிருந்தார். சோ.நடராசா முற்று முழுதாக எதிர்த்தார். சமஷ்டிக் கட்சியினரோடு எங்களுக்குப் பிரச்சனை. மற்றது ஏற்கனவே இருந்து வந்த அறிஞர்களோடு எங்களுக்குப் பிரச்சனை. இவ்வளவுதான் நடந்தது. இவர்களில் சிலர் முக்கியமான இலக்கியங்களை எழுதியவர்கள். உண்மையில், நாங்கள்
28 ஞானம் - டிசம்பர் 2003

எங்களுக்குள் யாராவது ஒருவரை இவர்தான் எழுத்தாளன் என்று சொல்லித் தூக்கியது கிடையாது. கவிதைத் துறையில் முருகையன் முக்கியமானவர். அங்கால் மகாகவி. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், எனக்கும் மகாகவிக்கும் ஒரு நீண்டகாலத் தொடர்பு இருந்தது. நாங்கள் மகாகவியைப் புறக்கணித்து விட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு மகாகவியுடன் பிரச்சினை எதுவும் இல்லை. 1965இல் எனது தகப்பனார் காலமானபோது, நான் மகாகவியினுடைய கவிதையையும் வாங்கிப் போட்டேன். அந்தக் கவிதையின் இரண்டு வரிதான் சாதாரண மனிதனின் சரித்திரம்" எழுதுவதற்கு காரணமாக இருந்தது என்று நுட்மான், மகாகவி பற்றிய தனது நூலில் எழுதியிருந்தார். ஆனால் சுதந்திரனில் நான் எழுதுகிறபோது, மகாகவியினுடைய Sentimental Issue பற்றி நான் சொல்லியிருக்கிறேன். அதை மறுக்கவில்லை. மிகையுணர்வு காரணமாக யதார்த்தத்தைக் காணமுடியாத நிலைமை ஏற்பட்டால் அதுதான் Sentimentalism. அப்போதுதான் கூடாமல் போய்விடும். அது நியாயபூர்வமான சிந்தனைகளை மழுங்கடிக்கும். இந்தக் காரணத்தைத்தான் நான் கூறினேனேதவிர மகாகவியின் கவிதைகள் கூடாதவை என்று நான் கூறவில்லை. கைலாசபதி சொன்னதாகவும் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் நிச்சயமாக நான் சொல்லவில்லை.
நான் அடிக்கடி சொல்வதென்ன வென்றால், முற்போக்கு எழுத்தாளர்களில் எல்லோருமே கெட்டிக்காரர் அல்ல. ஆனால் எங்களுக்குள் இருந்த கெட்டிக்காரன் இவர்களுக்குச் சமமான கெட்டிக்காரன். அல்லது இவர்களைவிட கொஞ்சம் மேலே உள்ளவன். அதுதான் எங்களுடைய வாதம். நாவல் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் எழுதிய நாவல்களில் இளங்கீரன் மிகவும் சரளமாக எழுதினார். கணேசலிங்கம், தான் வளர்ந்த பிரதேசமாகிய உரும்பிராயை வைத்துக்கொண்டு நல்ல நாவல் எழுதினார். பிற்காலத்தின் கணேசலிங்கத்தின் நாவல்கள் வளர்ச்சி பற்றி தனியாக யோசிக்கவேண்டும். ஆரம்பத்தில் வந்ததெல்லாம் ரொம்ப நல்ல நாவல்கள். குறிப்பாக ‘சடங்கு போன்றவை. உரும்பிராயைச் சேர்ந்த ஒரு மேல்தட்டு வேளாளக் குடும்பத்தினுடைய கஷ்டங்களையெல்லாம மிகவும் அழகாகக் காட்டுகிற நாவல். இந்த முறையில் வந்த எழுத்துக்களை நாங்கள் நியாயப்படுத்தினோம். மற்றவர்களுக்கு எதிராக என்று சொன்னால், மற்றவர்கள் யார்? அவர்களுடைய Ideologyக்கு எதிராகப் போனமே தவிர வேறில்லை.
எங்களுடைய எழுத்தாளர்களுக்குள்ளேயே நாங்கள் சிலரை மேலுக்குத் தள்ளவில்லை என்ற குறைபாடு உண்டு. அகஸ்தியருக்கு என்னுடன் நீண்டகாலக் கோபம். நான் ஒன்றும் அவரைப்பற்றி நல்லதாய் எழுதவில்லை என்று. அகஸ்த்தியர் என்னுடைய நெருங்கிய நண்பர், தோழர். எங்களிடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் ஒரு மட்டத்துக்கு மேல் அவரைப்பற்றி எழுத முடியவில்லை. ஏனென்றால் அகஸ்தியர் ஒரு Stylist அந்த Style
ஞானம் - டிசம்பர் 2003 29

Page 17
கூடாது என்பதல்ல. ஆனால் அந்த Style வந்து முக்கியமாகக் கூடாது. Matterதான் முக்கியமாக வேண்டும். நீ என்று எதோ எழுதினார். கொஞ்சம் வித்தியாசமான எழுத்தாளர். அதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.
என். எஸ். எம். இராமையாவை கைலாசபதி தினகரனில் அறிமுகப்படுத்தினார். எம்.எஸ். எம். இராமையா முதலில் ரேடியோவுக்குத்தான் நாடகம் எழுதினார். அப்போது நான் ரேடியோவில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது நாடக எழுத்தாளன் என்று ரேடியோவுக்கு வரும்போது, நான் கதைத்து, கைலாஸ"க்குச் சொன்னேன், "இப்படி ஒரு முக்கியமான ஆள் இருக்கிறார், அவரிடம் கதை வாங்கலாம் என்று. அவர் ஆளைவரச் சொல்லு என்று சொல்லி, கதைத்தார். அப்படித்தான் ‘ஒரு கூடைக் கொழுந்து வந்தது. ஒட்டு மொத்தமாக ஒன்று சொல்வேன், என்னவென்றால் நாங்கள் சிலபேரை வேணுமென்று தூக்கிவிட்டோம் என்பதல்ல. அவர்களின் தன்மைகளை எடுத்துக் காட்டினோம். சாதிமுறை பற்றி எழுதுகிறபோது, டானியல் எழுதுவதற்கும் ரகுநாதன் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. டானியல், ஜீவா எழுதுகிறபோது அதில் ஒரு கோபம் இருக்கும். ரகுநாதன் - வடமராச்சியான், நிலவிலே பேசுவோம்’ எழுதுகிறபோது அற்புதமாக இருக்கும். ஏனென்றால் வடமராச்சியில் அப்படித்தான் சாதிமுறை இருக்கிறது. வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் நைஸாகத் தட்டிவிடுவார்கள். அப்போ, நாங்கள் ரகுநாதனைப் பெரிதாகச் சொன்னோம். டானியலுடைய தண்ணிர் கதையை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது Sunday Observerஇல் வந்தது. அப்போது ஏ ஜே. கனகரட்னா Sunday Observerஇல் ஆசிரியராக இருந்தார். ஒரு பகுதி இந்த மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள். இன்னொரு பகுதியினர் என்னவென்றால், உங்களுக்கு ஒன்றும் தெரியாது. மார்க்சியத்தில் எவ்வளவோ பெரிய வளர்ச்சியெல்லாம் வந்துவிட்டது. நீங்கள் பேசகிற மார்க்சியம் ரெம்பப் பழையது. ரெம்பப் பழைய ஒரு கட்சிக் கொள்கையான மார்க்சியம் என்று எதிர்த்து நின்றார்கள். யேசுராசா போன்றவர்கள். உங்களுக்கு இந்தப் புதிய விஷயங்கள் தெரியாது என்றார்கள். அவர்களுக்கும் நாங்கள் பதில் கூற வேண்டியிருந்தது. நாங்கள் வேணுமென்று யாரையும் தூக்கிப் பிடிக்கவில்லை. எல்லோரும் தோழர்கள். வேலை செய்கிறவர்கள். சேர்ந்து எழுதுகிறவர்கள். எங்களுக்குள் விமர்சகர்கள் எழுத்தாளர்கள் என்று வித்தியாசம் கிடையாது. ஒரு பொதுவுடமைச் சித்தாந்தத்தின் அடிப்படையாக, வந்த ஒரு தோழமை இருந்தது. அந்த Comrade Shipஐ நீங்கள் தவறாக எடுக்கக் கூடாது. யாழ்ப்பாணத்தில் நாங்கள் கூட்டம் போட்டபோது, சிவக்கொழுந்து மாஸ்டர், என்னிடம், 'உங்களுடைய சங்கத்தில் சேரலாமா, நான் சேருகிறேன்’ என்று கேட்டார். அவருக்குப் பதில் சொல்வது கஷ்டமாக இருந்தது. Ideology இல்லாவிட்டால் அங்கத்தவராகச் சேர்ப்பதில்லை. கட்சிகளுக்குள் ஒரு தோழமை இருந்தது , அதேவேளை ஒரு பொதுப்படையான முன்னெடு நிலைமையும் இருந்தது. அதனாலேதான் லசஷ்மண ஐயர், நந்தி போன்றவர்கள் எல்லோரும்
ვი ஞானம் - டிசம்பர் 2003

இவர் களைத்தான் நாங்கள் முன் னுக் குத் வநதாாகள. இவை தள்ளினோம் அவர்களை முன் னுக் குதி இருந ததே தவிர, தள்ளவில்லை என்பது எனது கண்ணோட்டத்தில் "*" "P"
8 师 ( களைத் தாக்கியது. அது பிழையாகத் தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய குறுாப்பைப் பற்றித்தான் நான் இல்லை. 96T660)6 பேசுவேன். அந்தக்காலத்தில் அப்படியான எதிர் த து எழுதி PoliticSதானே இருந்தது. யரிரு கி களிறோம் . . பொன்னுத்துரையுடைய எழுத்துப் போக்கைப்பற்றி அவர் என்னதான் சொன்னாலும், எழுத்துப் போக்கைப்பற்றி எழுதியிருப்பேனே தவிர தனிப்பட்ட முறையில் நான் ஒரு காலமும் எதிர்க்க வில்லை. உண்மையில் நாங்கள் யாருக்கு எதிராக எழுதினோம்? யாரைத் தூக்கிவிட்டோம்? சொல்லுங்கள்.
60களின் பிற்பகுதியில், 70களில் ஒரு கட்டம் வருகிறது, என்ன வென்றால், பல இளம் எழுத் தாளர்கள் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அந்த நேரத்தில் முற்போக்கு எழுத்தாளர்களிடையே நிச்சயமாகத் தர வேறுபாடு இருந்தது. இதுபற்றி நாங்கள் மிகவும் காரசாரமாக விவாதித்து இருக்கிறோம். முன்னுரைகள் கொடுக்கப்பட்டது போன்ற விடயங்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர்களை மாத்திரம் தூக்கிவிட்டு இவர்களைத் தூக்கிவிடவில்லை என்ற கூற்றை நான் ஏற்கத் தயாராக இல்லை. நாங்கள் வெளிப்படையாக அந்தக் கருத்தியல் நிலைப்பாட்டை வற்புறுத்தியதுண்டு. அது அந்தக்காலத்தின் தேவையாக இருந்தது.
முற்போக்கு எழுத்தாளர்களின் பிரச்சினை பின்னர், எப்படி வந்தது என்றால், தமிழர்கள் பிரச்சினையைத் தீாப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஒரு கருத்துப்பரிமாறல் செய்வது நல்லதென பிரேம்ஜி, ஞானசுந்தரம் ஒரு Session வைத்தார். முதல் மாநாட்டைத்தவிர பின்னர் நடந்த இரண்டு மூன்று மாநாட்டிலும் இலக்கியத் தன்மை குறைந்து தமிழர்களுடைய அரசியல் பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்ற அந்த விடயத்தை முன்னெடுத்திருந்தார்கள். நாங்கள் கட்சி அங்கத்தவர்கள் அதற்குள் போகக் கூடாது என்ற கருத்தும் இருந்தது. நான் BMICH இல் நடந்த மாநாட்டுக்குப் போகவில்லை. எங்களுக்குள் முரண்பாடு இல்லாமல் இல்லை; நிறைய இருந்தது. நாங்கள் இலக்கிய விடயங்களில் ஒற்றுமையாக இருந்தபோதிலும், அரசியலில் அந்தப் போராட்டம் வேறுமாதிரி இருக்கவேண்டும் என நான் உணர்ந்தேன்.
முற்போக்கு சங்க வரலாறு எழுதினேன். அது ஒரு Magazine இல் வந்தது. அந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில், அந்தக் கட்டுரைக்கான தகவல்களை நான் யாரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன் எனக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடுவது எனக்கு Reserch Disipline காரணமாக வந்தது. கட்டுரை வெளியிடப்பட்டபோது அந்தப் பெயரை
ஞானம் - டிசம்பர் 2003 31

Page 18
நீக்கிவிட்டார்கள். எனக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எழுதியதும் ஒரு தோழர். அழித்ததும் ஒரு தோழர், ஞான சுந்தரம் ஒரு வருஷத்துக்குப்பிறகு 'பிழை நடந்து போச்சு என்று என்னிடம் கூறினார். எங்களுக்குள் முரண்பாடு இல்லாமல் இல்லை. டானியல் ஆக்களுக்கும் ஜீவா ஆக்களுக்கும் பயங்கரச் சண்டை. மல்லிகையில் ஆரம்பகால எழுத்தாளர்களுடைய அட்டைப் படம் வந்தபோது, டானியலுடையதுதான் கடைசி. தெணியான் இருக்காவிட்டால் கடைசிவரைக்கும் வந்திருக்காது. அந்தக் கட்டுரையை, ஆவேசவாதி என்ற தலைப்பில் நான்தான் எழுதினேன். தெணியான்தான் எழுதுவித்து போடுவித்தார்.
ஆனால் 60கள் வரும்போது சைனா, ரஷ்யா என்று உடைந்தது. அந்த நேரத்திலேகூட நாங்கள் இந்த எழுத்தாளர் சங்கத்தை உடைய விடவில்லை. கட்சி உடைந்துபோன பின்னரும்கூட எழுத்தாளர் சங்கத்தை உடைய விடவில்லை. நீர்வை பொன்னையன் அங்காலைதான் நின்றார். அவர் Chinese Embasy இல்தான் வேலை செய்தார். காண்கின்றபோது கதைத்துக் கொள்வோம். எச். எம். பி. முகைதீன் எங்களை விட்டுப் போனார். ஆனாலும் தொடர்ந்து வேலை செய்தோம். முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அது காலத்தின் தேவையான ஜீவன்.
நாங்கள் 60கள் வரை ஒரே சுலோகத்தோடு நிற்கவில்லை. அது படிப்படியாக மாறிக்கொண்டே வந்தது. பின்னர் 64,65,66 இன் பின்பு இரண்டு விடயங்கள் வந்தன. ஒன்று சீன கொம்யூனிஸம். ஏறத்தாழ எல்லா நல்ல எழுத்தாளர்களும் அங்குதான் இருந்தார்கள். எல்லோரும் ஷண் குறுப்தான். டானியல், நீர்வைப் பொன்னையன், இளங்கீரன் எச்,எம், பி, முகைதீன் போன்றவர்கள். இந்தப்பக்கம் இருந்தவர்கள் மிகக் குறைவு - ஜீவா தான் ரஷ்யக் கொம்யூனிஸ்ட்டுகளின் பக்கம். அப்போ அந்நியோன்னியமான உறவு இருக்கவில்லை. அது உண்மை. அந்த அந்நியோன்னியமான உறவு குறைந்ததால் எழுத்தில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. இது முக்கியமான கட்டம். மற்றது என்னவென்றால், - அது இப்போதுதான் தெரிகிறது, 61,64 களில் கட்சி தமிழ் சம்பந்தமாக எடுக்கிற நிலைப்பாடு. 72,73,75 வரை நாங்கள் உள்ளிருந்து அதனைச் சரிப்படுத்தப் பார்த்தோம், 83க்குப் பிறகுதான் அது பட்டென்று தெரியவந்தது. என்னவென்றால், எஸ். எல். எப். பி.யுடன் சேர்ந்ததால், 66இல் தமிழ் சம்பந்தமான ஒரு எதிர்ப்புப் பிரச்சனையைக் கொண்டுவந்தது. அதற்குப்பிறகு ஒரு சிக்கலான நிலைமை ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் இருந்து, எங்களுடைய இலக்கியத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பது பற்றி ஒரு தெளிவான, தீர்க்கமான, Ideology க்கலான ஒன்றை எடுக்கவில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இங்கால் இருந்தது. ஜனதா லேகக பெரமுன அங்கால் இருந்தது. நாங்கள் அங்கு சென்றோம், அவர்கள் இங்கு வந்தார்கள். நாங்கள் சேர்ந்து வேலை செய்தோம். ஆனால், 66க்குப் பின் எங்களால் அங்கால் போகமுடியவில்லை. நாங்கள் இலக்கிய ரீதியாக, ஆக்கப்படைப்பு ரீதியாக, இதைத்தான் எழுதவேண்டும் என்று சொல்கிற நிலையில் இருக்கவில்லை.
32 ஞானம் - டிசம்பர் 2003

சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக நாங்கள் பேசினோம். அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக நாங்கள் உரையாடியபோது, அந்தக் காலகட்டத்தில் இந்த இனவாதத்திற்கு எதிராக நாங்கள் பேசவில்லை. அது பாரதிதாசன் சொன்ன இனவாதமாக இருக்கலாம் அல்லது நாரா நாச்சியப்பன் சொன்ன இனவாதமாக இருக்கலாம். அல்லது இலங்கையில் உள்ளதாக இருக்கலாம். இனப்பிரச்சனை முகிழ்கிறபோது, அந்தப் பிரச்சனையையும் இனவாத அடிப்படையிலேதான் பார்த்தோம். 83 இலிருந்து அது நிதர்சனமான, கருத்து வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் அது ஒரு இன ஒடுக்கு முறையாக மாறியது. இந்தக் காலகட்டத்தில், தமிழ் இளைஞர்களுக்கெதிரான போராட்டம் தமிழ் தீவிர வாதிகளுக்கு எதிரான போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றப்படுகிற பொழுது, எத்தகைய நிலையை எடுப்பது? கலை இலக்கியம் எதைச் செய்ய வேண்டும்? இதைப்பற்றிச் சிந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தீர்ப்பதற்கு முனைவோம் என்று பார்த்தோமே தவிர அதைச் செய்ய வில்லை. அந்த ஒரு அங்கலாய்ப்புக் காரணமாக நான் ஞானாவை ரெம்ப மெச்சுகிறேன். அவர் இந்தப் பிரச்சினையை எழுத்தாளர் மட்டத்திலே சொல்லித் தீர்க்கவேண்டும் என்று பாடுபட்டார். துரதிஷ்டவசமாக அரசியல் - காரணமாக அது நடைபெறவில்லை. சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அதிலேயிருந்து பிரிந்துபோன ஷண்முகதாசன் படிப்படியாகப் போய், ஒருகால கட்டத்தில் தமிழ் எழுச்சிக்கு எதிராக மிகக் கண்டிப்பாக நின்றவர், அதை ஏராளமாகக் கண்டித்தவர், கடைசியில் - இறக்கிற காலத்தில் தமிழ்த் தீவிரவாதிகளின் போராட்டம் பிழையில்லை.IPKFக்கு எதிராகப் பெடியள் போராடுவது பிழையில்லையென்று எழுதியிருக்கிறார் என அறிந்தேன். எனக்கு நிச்சயமாகத் தெரியும், பிற்காலத்தில் அவர் தமிழ்த் தீவிரவாதத்தின் நியாயப்பாட்டை உணர்ந்திருந்தார். இந்தக் காரணம்தான் புதுவை, மூர்த்தி போன்றவர்கள் புலிகளிடத்துச் செல்வதற்குக் காரணமாக இருந்தது. இந்தப் புதிய சூழலில் இலக்கிய கர்த்தாவினுடைய பணியாது? இது பற்றிய திட்டவட்டமான கருத்து இல்லை.
முற்போக்கு எழுத்தாளர்களுடைய வளர்ச்சியில் பல்வேறு கட்டங்கள் உள்ளன. அந்தக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் கருத்து நிலை அடிப்படை என்பது, தேசிய இலக்கியத்தின் பின்னர் வருகின்ற யதார்த்த வாத இலக்கியக் கோட்பாட்டுடன் சம்பந்தப் படுவதால், அது மார்க்சியம் பற்றிய ஒரு நிதர்சனமான இடத்தைக் கொண்டு வருகிறது. அப்படி வருகிற போது, Idealogically we became Separate அந்த நேரத்தில் நாங்கள் அங்கால் உள்ளவர்களையும் இங்கால் உள்ளவர்களையும் இனங்காண வேண்டியிருந்தது. இப்படிச் சொல்வதால் எங்களுக்குள் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை; இருந்தது.
ஞானம் - டிசம்பர் 2003 33

Page 19
ஒரு முறை ரஷ்ய நாட்டு இலக்கியங்கள்பற்றி பெரிய வாதங்கள் நடைபெற்றதாம். இதேபோன்று, 'பிரச்சார இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள. உங்களுடைய விம்ர்சனங்கள் எல்லாம் மோசமாக இருக்கின்றது' என்று பெரிய விவாதம் நடந்தது. அப்போது கம்யூனிச எழுத்தாளர்களுக்குச் சார்பாகப் போன Elya Ehrenburgh என்கின்ற ஒரு பிரபல நாவலாசிரியர் சொன்னார், “கம்யூனிசம் பேசுகிறதால், Fools எங்களுக்குள் இல்லாமல் இல்லை. கெட்டிக்காரன், தரம் குறைந்தவன் என்று இல்லாமல் இல்லை. உங்களிடம் இருக்கிறது போலத்தான் எங்களிடமும் இருக்கிறார்கள். நாங்கள் யாருடைய இலக்கியத்தைப்பற்றிப் பேசுகிறோமென்றால், எங்களுக்குள் கெட்டிக்காரனுடைய இலக்கியத்தைப்பற்றிப் பேசுகிறோம். அது ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றிப் பேசுகிறோம் அதில் என்ன பிழை?
25 வருடங்களின் பின்னர், டானியல் தலித் இலக்கியத்தின் பிதாமகன் என்று கொண்டாடப்படவில்லையா? என்னதான் கணேசலிங்கத்தினுடைய பிற்காலத்திய எழுத்துக்களெல்லாம் இலக்கிய தரத்திற்கு வரவில்லை என்றாலும், ஆரம்பகாலத்து நாவல்களின் தரம் காரணமாக இன்றைக்கும் இந்தியாவில் கணேசலிங்கத்திற்கு இடம் இருக்கிறது இல்லையா. இவை தமிழ் நாவல் வரலாற்றில் முக்கியமானவையல்லவா. முருகையன் ஒரு Intelectual Poet. இந்த மகாகவி முருகையன் சண்டை வந்தாலும்கூட அது உண்மையில் சண்டை இல்லை. இரண்டு பேரும் தனிப்பட்டமுறையில் நல்ல நண்பர்கள். நான் மகாகவியின் நண்பன். நீங்கள் சரியான முறையில் மகாகவியை Analise பண்ணினால், மகாகவியிடமும் இந்தக் குணம் இருக்கிறது. அந்தத் தேரும் திங்களும் என்ற கவிதையில் 'மிச்சாக்கள் சாகலாமாடா? என்று கேட்கிறான் மனிசன். நாங்கள் எங்களுக்குள் உள்ள திறமைசாலிகளைப்பற்றித்தான் பேசினோம். திறமைசாலிகள் என்று கருதியவர்களை முன்னுக்குத்தள்ளினோம். அது உண்மை. அதற்கு முக்கியமான காரணம் கைலாசபதி தினகரனில் இருந்தது. அந்தக்காலத்தில் இனங்காணப்பட்ட எழுத்தாளர்கள் யார்? திக்வல்லை கமால். நிச்சயமாக புதிய நல்ல விஷயங்களைக் கொண்டுவந்த எழுத்தாளர். அ.முத்துலிங்கம் அவர் கொம்யூனிஸ்ட் எழுத்தாளரே அல்ல. ஆனால் அற்புதமான அவதானிப்பு சக்தி கொண்ட, யாழ்ப்பாணத்து மண்ணை அப்படியேகொண்டு வருகிற அற்பதமான ஒரு சிறுகதை எழுத்தாளர். பிறகு அவர் படித்து உத்தியோகம் பார்த்து எல்லாம் மறந்து போய், இப்போது மீண்டும் எழுதுகிறார். இப்போதும் நன்றாகத்தான் எழுதுகிறார். முத்துலிங்கத்தை Identify பண்ணியது பிழை என்று சொல்ல முடியமா? அந்தக்காலத்தில் புதிய எழுத்தாளர்களை நாங்கள் Identify பண்ணினோம் அது உண்மை. இங்குள்ள பல எழுத்தாளர்களுக்கு நாங்கள் அவர்களை நன்றாகச் சொல்லவில்லை என்று கோபம். அகஸ்தியருக்கு என்னுடன் நல்ல உறவு இல்லை. அப்போ, இவர்களைத்தான் நாங்கள் முன்னுக்குத் தள்ளினோம் அவர்களை முன்னுக்குத்
34 ஞானம் - டிசம்பர் 2003

தள்ளவில்லை என்பது எனது கண்ணோட்டத்தில் அது பிழையாகத் தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய குறுப்பைப் பற்றித்தான் நான் பேசுவேன். அந்தக்காலத்தில் அப்படியான PoliticSதானே இருந்தது. Politics of Politicsg God T6) 6)636) 60)6) Politics of Literaturegg Q& T6) as(8p6. இலக்கியத்தின் அரசியலைச் சொல்கிறேன். அந்தக்காலகட்டத்தில் நான் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. இன்னொரு கட்டம் வந்தபோது இந்திய எழுத்தாளர்களை நாங்கள் சாடியது போல இலங்கை எழுத்தாளர்களைச் சாடவில்லை. கைலாசபதி அகிலனையும், க.நா.சு. வையும் அடித்ததுபோல இலங்கை எழுத்தாளர்கள் யாரையாவது அடித்திருக்கிறோமா? அகிலனுக்கு என்ன அடி அகிலன் அந்த அடியிலிருந்து எழும்பவே இல்லையே.
பொன்னுத்துரையின் விஷயத்திலே கூட பொன்னுத்துரை தான் விரும்பியது போல எழுதுவதற்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை. எழுதினதுதான், அவர் தனது ஆக்கத்திறனை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. எங்களைப்பற்றி எதிராக எழுதியதுதான் அவர் செய்த வேலை.
யாழ்ப்பாணத்தில் சண்டை நடந்தபோது முட்டை அடித்தார்கள். நான் முன்னுக்கு நின்றனான். ஈழத்துச் சோமு நின்றவர் - பிராமணன். சொக்கன் அப்போது எங்களோடு இருந்தவர் இப்போது இல்லை, நந்தி எங்களோடு இருந்தவர் பின்னர் இல்லை. அதற்காக நாங்கள் சொக்கனையும் நந்தியையும் சொல்லவில்லை. கைலாசபதிக்கு பரிசு கிடைத்த அதே வருடம் சொக்கனுடைய கதைக்கும் பரிசு கொடுத்தார்கள். கைலாசும் அதைச் சரி என்று சொன்னார். நாங்களும் அது சரி என்று செய்தோம். அந்தப் பாகுபாடு எங்களுக்கு இல்லை. முன்னுக்கு வருகிறவர்களை யார்யாரை கொண்டுவரமுடியுமோ கொண்டு வந்தோம். செம்பியன் செல்வனுக்கும் கைலாசபதிக்கும் இருந்த உறவை நீங்கள் / யே Iா ச த து ப ப ா ரு ங் க ள’ . கருத்தியல் ரீதியாக ஒருத்தருக்கு எதிராக மிக எதிரான நிலை. கைலாசபதியைபற்றி
இனப் பிரச்சனை முகிழ்கிறபோது, அந்தப் பிரச்சனையையும் இனவாத அடிப்படையிலேதான் பார்த்தோம். 83 இலிருந்து அது நிதர்சனமான, கருத்து வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் அது ஒரு இன ஒடுக்கு முறையாக மாறியது. இந்தக் காலகட்டத்தில், தமிழ் இளைஞர்களுக்கெதிரான
நீர் என்ன நினைக் கிறீர்? என்று செம் பியன் செல்வனைக் கேட்டுப்பாருங்கள். எனக்கு செம்பியன் செல் வணி மிக
ஞானம் - டிசம்பர் 2003
போராட்டம் தமிழ் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றப்படுகிற பொழுது, எத்தகைய நிலையை எடுப்பது? கலை இலக்கியம் எதைச் செய்ய வேண்டும்? இதைப்பற்றிச் சிந்திக்கிறதுக்கு ஒரு
வாய்ப்பு எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

Page 20
அண்மையிலேதான் இதனைச் சொன்னார். தனிப்பட்ட உறவுகள் வேறு. எழுத்து ரீதியாக எழுதினதுதான். அதுக்கு ஒன்றும் செய்ய முடியாது.
இவர்களுக்கு ஆக்க இலக்கியம் எழுதத் தெரியாது என்று சொன்னவர்களும் உண்டு. நாங்கள் எழுத்தாளர்கள் என்று நாண்டு கொண்டு நிற்கவில்லை. கைலாசபதி ஒரு காலத்தில் சிறுகதை எழுதினார். என் னுடைய Creativity, Actingஇல் போனது. நான் ஒரு Creative Writer என்று சண்டைக்கு வர வில்லை. பிரச்சினை என்னவென்றால், நாங்கள் ஒரு குழுவினரைத்தான் ஆதரித்தோம் என்று சொன்னால் - இல்லை. Ideological Basisஐ நாங்கள், ஆதரித்தோம். ஆனால் அவர்களுக்குள்ளும் எழுத்துத் திறமை உள்ளவர்களை நாங்கள் கூடச் சொன்னோமே தவிர, எழுத்துத் திறமை இல்லாதவர்கள் எவரையும் நாங்கள் மேலுக்குத் தள்ளவில்லை. முருகையனை மேலுக்குத்தள்ளிவிட்டீர்கள் மகாகவியை முன்னுக்குத் தள்ளவில்லை என்று சொன்னார்கள். நாங்கள் மகாகவியைப்பற்றிப் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் மகாகவியை ஒரு மட்டமான கவி என்று நான் சொல்லவில்லை. ஈழத்து இலக்கிய வளர்ச்சிபற்றி எழுதியபோது, ஈழத்தின் தமிழ்க் கவிதை வளர்ச்சி என்ற கட்டுரையை நீங்கள் பார்க்கலாம் நான் மகாகவியை எப்படிப் பாாக்கிறேன் என்று.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயப்பாடு இருக்கும். முற்போக்கினுடைய தன்மை என்னவென்றால், கால கட்டங்கள் மாறுகிற GBJ Tg, SÐbg5äs ab Isab6ń6ör LDT gp6Opa5 Quantitative change makes Qualitative changes. இது மார்க்சியத்தின் அடிப்படை நிலை இரண்டு தேங்காய் இருக்கிறது -அது கறிக்குப் பயன்படுகிற முறைக்கும், 10 தேங்காய் இருக்கிறபோது அது கறிக்குப் பயன்படுகிற முறைக்கும் வித்தியாசம் உண்டு. Quantitative change is also a Qualitative change. It brings about Qulitative change. BIT stildb6ft 955 Quantitative changeஐ மறுதலித்தோம். அதற்கு அந்த PoliticSவிடவில்லை. அதுதான் பிரச்சனை.
அதனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ன செய்தது என்றால், கட்சி இங்காலை எப்படிப் பேசினாலும் அங்காலை எப்படிப் பேசினாலும்தமிழ்மக்களுடைய உரிமைகளை எப்படி வென்றெடுப்பது என்று 10 ஆலோசனைகளை வைத்துக்கொண்டு ஞானா மூன்று நான்கு கூட்டம் நடத்தினார்.
72இல் செய்தோம் சரிவரவில்லை. 72இல் செய்தபோது நானும் குமாரசூரியரோடு சேர்ந்து, இலங்கை வானொலியில் நான் ஒரு சம்பந்தம் இல்லாத உத்தியோகம் பார்த்து இன்றைக்கும் இலங்கை வானொலிக்காரர்கள் திட்டுகிறார்கள். நாங்கள் யாருக்கு எதிராகக் கொடி கிழப்பினோமோ. திருமதி குலசிங்கம்- அவர் வந்து என்னுடன் கதைத்துவிட்டுச் சென்றார். யாருக்காகப் பேசினோமோ. நண்பர் இராஜசுந்தரம், அவர் எங்களைப்பற்றி நல்லாகச் சொல்ல வில்லை. யாரைக் கொண்டுவரவேண்டுமென்று நாங்கள் கஷடப்பட்டு
36 ஞானம் - டிசம்பர் 2003

60p6nıġ58.g5(TG&LDT SÐ6Nur 6T (Étatsägb 6īgs. gÐ6 ?(b | WonderFull man, Close friend. But he will not have a good word for me. gigs6ft 61636) Tib LD6015 இயல்புகள். இதுகளல்ல முக்கியம். அந்த Ideogy எங்காலபோகுது?
74வரையில் நாங்களும் போராடினோம். நான் வீ. பொன்னம்பலத்தைக் கேட்டேன், ‘என்னப்பா, கொல்வினுடைய Constitutionஇல் ஒன்றையும் காணவில்லையே' என்று. 'போசாமல் இரு, அதெல்லாம் சரிவரும்’ என்றார். அப்போதுதான் ரஷ்யாவிற்குப் போய்வந்து, தமிழ் செந்தமிழ் ஆகிறது என்று அங்குள்ள தமிழ்ப் பெடியள் இதில் ஆர்வமாக இருந்தது பற்றி இரண்டு கட்டுரைகள் மல்லிகையில் எழுதினேன். அதைப் பார்த்துவிட்டுத்தான் ‘செந்தமிழர் இயக்கம்' என மாற்றினோம். சிவசுப்பிரமணியம் பாரிய தூணாக வி. பொன்னம்பலத்துடன் நின்றார். பின்பு பொன்னம்பலம் வெளியில் போனதும்தான் தொலைந்தது. உலகத்தில் வெகு மோசமானவன் யார் என்று சொன்னால், அது மாஜி கொம்யூனிஸ்ட் தான். அது அந்தக் கட்சியினுடைய கட்டுப்பாட்டி னுடைய தாக்கம்.
இவையெல்லாம் முடிந்து, 97 காலகட்டத்தில் எதாவது செய்யலாமா என்பது பற்றி நீர்வை பொன்னையன், சமீம், ஈழத்துச் சோமு, நான் சேர்ந்து பேசினோம். ஜீவாவை வரச் சொன்னோம். ஜிவா வரவில்லை. நாங்கள் அந்தக் கூட்டத்தை நடத்த முடியவில்லை. அதன்பின்பு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இரண்டு கூட்டங்கள் நடத்தினோம். அதன்பிறகு நடத்த முடியவில்லை.
முற்போக்கு எழுத்தாளர் என்பது Ideologyயை பொறுத்த விடயம். அது பொதுவுடமையைத் தளமாகக் கொண்டது. அதற்குச் சார்பாக உள்ளவர்களை அது ஏற்றுக் கொள்ளும். அவர்களை வரவேற்கும். காலத்தின் தேவைகளுக்கேற்ப கோஷங்களை மாற்றிக் கொண்டு வரும். இந்தக் காலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கோஷங்கள் மாற்றப்படாமல் போனதுதான் அதற்கு ஏற்பட்ட பிரச்சனை. இன்றைக்கும் நாங்கள் இல்லாத ஒரு இளந்தலை முறை வந்து அதனை எடுத்துச் செய்வார்களேயானால், நான் அவர்களோடு நிற்பேன். துரதிஷ்டவசமாக நிலைமை மாறிவிட்டது. என்னவென்றால் சிங்கள மக்களுக்குள்ளும் சிங்களத் தேசியம் பேசுகிற ஆட்கள், தமிழ் மக்களுக்குள் தமிழ் மார்க்சியம் பேசுகிறவர்கள். அந்தமாதிரியான நிலைமை வந்து விட்டது. நாங்கள் இனவாதத்திற்கு எதிராக இருந்தோம். இன ஒடுக்கு முறைக்கு எதிராக என்னசெய்வதென்று எங்களுக்குள் தெரியாமல் போய்விட்டது. இதுதான் எங்களுக்கு ஏற்பட்ட அவலம்.
தொடரும்.
ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி www.geocities.com\gnanam magazine
ஞானம் - டிசம்பர் 2003 37

Page 21
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். புதுவை அரசு நிறுவனம் (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணைப்புப் பெற்றது) 112, காமாட்சியம்மன் கோவில் தெரு, புதுச்சேரி 605 001
தி.ஞானசேகரன், அன்புடையீர், வணக்கம்.
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ்க் கவிதை, உலகத் தமிழ்க் கவிஞர்கள் : ஒரு கையேடு எனும் இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட இருக்கின்றது. மேற் குறிப்பிட்ட கவிதைத்தொகுப்பு முயற்சிக்கு உலகில் உள்ள பல்வேறு இலக்கிய அமைப்புக்களையும் கவிஞர்களையும் நாடி வருகின்றோம். பலரும் உதவி செய்து வருகின்றனர். உலகத் தமிழ்க் கவிதைத்தொகுப்பு முயற்சி என்பது ஊர் கூடித் தேர் இழுப்பதற்குச் சமமாகும். எனவே, இத்தொகுப்பு முயற்சியில் தங்கள் ஒத்துழைப்பினை நாடுகிறோம். இத்திட்டம் தொடர்பான செய்தியைத் தங்களுக்கு அனுப்பிவைக்கிறோம். இச்செய்தியினை தங்கள் இதழிலும் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும், அங்குள்ள மற்ற இதழ்களுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும், கவிஞர்களுக்கும் உலகத் தமிழ்க் கவிதைத்தொகுப்புத் தொடர்பான செய்தியைத் தெரியப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம். புத்தளம் தே.சங்கீதா, பத்தனையூர் வேதினகரன், முல்லைக்கமல், கிளிநொச்சி கருணாகரன், கவிஞர் பசுபதி, குறிஞ்சி நாடன், நல்லூர் ஜெயசீலன், அட்டாளைச்சேனை பொ.சத்தியநாதன், பூண்டுலோயா தர்மு, மாவை வரோதயன், வாகரைவாணன், புத்தளம் கே.நாகேந்திரன், மட்டவளை அன்சார்.எம்.ஷியாம், தமிழோவியன், லேவல்ல பெனி, சித்தாந்தன், செல்வி ஜெ.நிரோசா, புத்தளம் ஸாலிக் அஸிம், க.ஆனந்தகுமார், கவிஞர் திக்கவயல், மட்டக்களப்பு அருள்மணி, மா.சந்திரலேகா, நல்லை அமிழ்தன், கவிஞர் வேலணை வேணியன், கண்டி ரூபராணி ஜோசப், பாரதெக்க தமிழ்ச்செல்வன் ஆகிய கவிஞர்களுக்கு அவசியமாக இச்செய்தியினைத் தெரிவிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். இக்கடிதத்துடன் கவிஞர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தி மடல்களையும் இணைத்து அனுப்புகிறோம். முனைவர் உதயசூரியன் அறிவுறுத்தலின்படி தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறோம்.
தங்கள் ஒத்துழைப்பினை பெரிதும் நாடும்,
இரா.சம்பத் U.LD(b5b Tujabib ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் (குறிப்பு : “ஞானம்' பண்ணையைச் சார்ந்த கவிஞர்கள் சிலரின் பெயர்களே மேலே உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனைய கவிஞர்களும் தமது கவிதைகளை இத்தொகுப்பு முயற்சிக்கு அனுப்பி ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம். - ஆசிரியர்)
38 ஞானம் - டிசம்பர் 2003

செய்திக் குறிப்பு :
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு ஒன்றினை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டினையொட்டி (1). உலகத் தமிழ்க் கவிதை (2). உலகத் தமிழ்க் கவிஞர்கள்: ஒரு கையேடு எனும் இரண்டு தொகுப்பு நூல்கள் வெளியிடப்பெறும். எனவே, தங்கள் கவிதைகளில் தாங்கள் விரும்பிய ஐந்தைத் தட்டச்சில் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்து அவற்றோடு தங்கள் வாழ்க்கைக் குறிப்பையும் (பெயர், பிறந்தநாள், இடம், பெற்றோர், குடும்ப விபரம், கல்வித் தகுதி, வெளியிட்ட கவிதை நூல்கள், சிறப்புத் தகவல்கள்) சிறு நிழற்படம் ஒன்றையும் அடுத்த மாத (30.12.2003) இறுதிக்குள் இயக்குனர், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், 112, காமாட்சியம்மன் கோவில் வீதி, புதுச்சேரி 605 001, இந்தியா. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
இரா.சம்பத் ப.மருதநாயகம் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர்
செய்திக்கதிர் :
பயிரை மேயும் வேலிகள்
- அன்பன்
நாகரிகம் வளர்ந்துள்ள நோயாளிகளின் உயிருடன் நமது இன்றைய சமுதாயம் விளையாடுகிறார்கள் மூளைக்கு வேலை கொடுக்கிறது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே காவல் நிலையத்தில் நோயாளிகள் ஊசலாடுகிறார்கள் கைதிகளுக்குப் பாதுகாப்பில்லை நர்ஸிங் ஹோம்கள் சோடித்த வழக்குகளில் பகற்கொள்ளையடிக்கின்றன அவர்கள் தோற்றுப்போகிறார்கள் பணக்காரர்கள் அதற்குப் நீதிமன்றங்களில் நீதி கிடைப்பதில்லை பலியாகிறார்கள் பொய்யான வாதங்களால் போலீஸ் நிலையம், நீதிமன்றம் அப்பாவிகள் சிறை செல்கிறார்கள் சிறைச்சாலை, வைத்தியசாலை பொய்யையே மூலதனமாக்கி எல்லாமே அப்பாவி மக்களைப் சட்டத்தரணிகள் வயிறு வளர்க்கிறார்கள் பந்தாடும் நிறுவனங்களா? சிறைச்சாலைகளில் ஐயகோ! இதுவா நாகரிகம் லஞ்சம் கொடுத்தால்மட்டுமே இதுவா முன்னேற்றம் உயிர் வாழ முடிகிறது இதுவா விஞ்ஞான உலகின் வைத்தியசாலைகளில் டாக்டர்கள் விளைபொருள்?
qqqqqLSLSLSLSLSLSLSLSLGSLSLSLSLSLSLSLSLSLSLSGSLSLSLSLGSLGLLLLSSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLuLSLSLSAATS
ஞானம் - டிசம்பர் 2003 39

Page 22
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை மனோகரன்
இலக்கியத் தம்பதி
இலங்கையில் தமது எழுத்தாற்றலினால் தமக்கென ஒவ்வோர் இடத்தை இலக்கிய உலகில் தக்கவைத்துக் கொண்டுள்ள இருவர் இலக்கியத் தம்பதியாகவும் விளங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவ்விருவரும் நா. சோமகாந்தனும், பத்மா சோமகாந்தனும் ஆவர். ஈழத்து எழுத்துலகில் இருவரது பங்களிப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
சோமகாந்தன் எழுத்தாளராக விளங்குவதோடு, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய தூண்களுள் ஒருவராகவும் திகழ்ந்தவர். சிறுகதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்து எனப்பல துறைகளில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தவர் அவர். இலங்கையின் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளருள் ஒருவராகச் சோமகாந்தன் விளங்குகின்றார். இடையிலே நோய்வாய்ப்பட்ட நிலையிலும் தமது எழுத்து முயற்சிகளைக் கைவிடாத விடாக்கண்டராகவே அவர் திகழ்கிறார். ஈழத்தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை? என்ற நூலை உண்மையில் “உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு” தான் அவர் எழுதியுள்ளார்.
பத்மா சோமகாந்தன் எழுத்தாளர் மட்டுமன்றி, ஒருகாலத்தில் இலங்கையின் மிகச் சிறந்த பெண் பேச்சாளர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையின் பெண் எழுத்தாளர் வரிசையில் அவரும் முக்கியமான ஒருவராகத் தம்மை இனங்காட்டி வந்துள்ளார். குறிப்பிடத்தக்க சிறுகதைகளை அவர் படைத்துள்ளார். அவரது சிறுகதைகள் பற்றிப் பேராதனைப்பல்கலைக்கழக மாணவியொருவர் எனது மேற்பார்வையில் ஆய்வு செய்துள்ளார். எதிர்காலத்தில் பெண்ணிய அடிப்படையில் ஒரு நாவலையாவது அவர் படைத்தளிக்க வேண்டும். பெண்ணின் குரல் ஆசிரியராகவும், வீரகேசரியில் அமைதி தேடும் நெஞ்சங்களுக்கு ஆலோசகராகவும் செயற்படுவதும் வரவேற்புக்கு உரியவை.
நா. சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தின் ஆசாரங்கள் மலிந்த ஒரு சமூகத்தின் கட்டுக்கோப்புக்குள் வளர்ந்தவர்களாயினும், காலப்போக்கில் முற்போக்குச் சிந்தனைகளின் வயப்பட்டு, தமது எழுத்துக்கு வளமும் வலிவும் சேர்த்துக் கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமிருந்தும் இலக்கியவுலகம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பை இருவரும் நிறைவு செய்வர் என்பது நிச்சயம்.
40 ஞானம் - டிசம்பர் 2003
 

மகாகவி பாரதியும் மறைந்த தமிழ்ப் பேராசிரியரும்
மகாகவி பாரதியைப் பற்றிப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை. ஆனால், அம்மகாகவி தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த மறைந்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் ஒருமுறை நடந்து கொண்ட முறை வியப்புக்கும், வேதனைக்கும் உரியது.
குறிப்பிட்ட பேராசிரியர் இலங்கைப்பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்ச்சிறப்புக்கலை மாணவருக்கு ஒரு முறை பாரதி பற்றி விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் கற்பித்துக் கொண்டிருந்தபோது “போச்சுது போச்சுது பாரதநாடு” என்ற பாடலடியும் இடம்பெற்றது. அச்சந்தர்ப்பத்தில் தமது மேதாவிலாசத்தை வெளிப்படுத்த விரும்பிய பேராசிரியர் “போச்சுது போச்சுது என்று பாரதியார் பாடியது தவறு. போயிற்று போயிற்று என்று தான் அவர் பாடியிருக்க வேண்டும். அதுவே தமிழ் இலக்கண முறைமைக்குச் சரி” என்று கூறினார். அப்போது அங்கு வகுப்பிலிருந்த மாணவர் ஒருவர் (இப்போது கண்டியின் பிரபல கல்லூரியொன்றின் பிரிவுத் தலைவர்), “சேர் போச்சுது என்னும்போதுதானே கவிஞரின் உணர்ச்சி சிறப்பாக அமைகிறது. போயிற்று என்று பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்காதே’ என்றார். அதைக் கேட்ட தமிழ்ப் பேராசிரியருக்குக் கோபம் தலையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிட்டது. “நீர் எனக்குச் சொல்கிறீரா? என்று சொல்லிக்கொண்டு, தாம் கையில் வைத்திருந்த பாரதியார் கவிதைகள் என்ற புத்தகத்தை, குறிப்பிட்ட அந்த மாணவரை நோக்கி எறிந்தார். புத்தகம் இலக்குத்தவறி, மாணவரின் அருகிலிருந்த மாணவியின் நெற்றியைப் பதம் பார்த்தது. எதிர்பாராது ஏற்பட்ட இத்தகைய திடீர் “விபத்தினால்” மாணவி கதிகலங்கிப் போனார். தரையில் வீழ்ந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை மீளப்பெற்று, பாரதியைத் தண்டித்துவிட்ட தமது “வெற்றி” பற்றித் தாமே பெருமிதம் கொண்டார் அத்தமிழ்ப் பேராசிரியர்.
பிழைப்புக்காகப் பாரதி பற்றிக் கற்பித்தாலும் அந்த மகாகவியை ஜிரணிக்க முடியாத படுபிற்போக்குவாதியாக வாழ்ந்து மறைந்தார் சதா காலமும் சிவனின் பெயரைக் கொண்ட அப்பேராசிரியர்.
காட்டுமிராண்டித்தனம்
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நாட்டையே தலைகுனிய வைத்துவிட்டது. சிங்கள தமிழ் இலக்கியவாதிகள், கலைஞர்களின் ஒன்றுகூடல் விழாவினைக் குழப்புவதற்கு நாகரிகம் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காட்டுமிராண்டித் தனத்தின் உச்சக் கட்டமாகும். இதற்கு ஒர் ஆங்கிலப்பத்திரிகையும், சிங்களப்பத்திரிகையும் பின்னணியில் இருந்துள்ளன என்பது மிக வெட்கக்கேடானது.
இந்நாட்டில் நல்லது எதனையும் நடக்கவிடமாட்டோம் என்ற தோரணையில் ஒரு சாரார் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். காட்டுப் பிரதேசத்திலிருந்து வழிதவறி நாட்டுப்பிரதேசத்துக்குள் நுழைந்தவர்கள் போன்று அவர்களது போக்கும்,
ஞானம் - டிசம்பர் 2003 41

Page 23
செயற்பாடுகளும் அமைந்துள்ளன. நவநாகரிகத்துக்கு இன்னமும் அறிமுகமாகாத அம்பு - வில்லுக் காலத்துப்பூர்வீக மனிதர்களைப் போன்றே அவர்கள் நடந்து கொள்கின்றனர். உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இவர்களோ உலகம் அறியாக் கிணற்றுத்தவளைகளாகவே இப்போதும் நடந்துகொள்கிறார்கள். இத்தகைய பூர்வீக மனிதர்கள் தமது வக்கிர உணர்வுகளின் போக்கினையே அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். எளிதில் உணர்ச்சிவசப்படும் பாமரர்களையும், படித்தவர்களையும் இத்தகைய பூர்வீக மனிதர்களும், சிவப்புப் பேரினவாதிகளும், இலகுவில் கவர்ந்துவிடுவர்.
சிங்கள - தமிழ் இலக்கியவாதிகள், கலைஞர்களின் ஒன்றுகூடல் விழாவைக் குழப்புவதற்குப் பேரினவாதிகள் இரு நாட்களும் கடின முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் விழா ஏற்பாட்டாளர்களும், நிகழ்வுகளில் பங்குபற்றியோரும் உறுதியோடு விழாவினை நடத்தி முடித்தமை பாராட்டுக்குரியது.
கோமாளிக் கூத்துகள்
இலங்கையில் அரசியல் கோமாளித்தனங்களுக்கு ஒருபோதும் குறைவில்லை. அண்மையில் இடம்பெற்ற கோமாளித்தனங்கள் மிகவும் நகைப்புக்குரியவை. குழந்தைப் பிள்ளைகள் கோபத்தில் குறும்புத்தனங்கள் செய்வதைப் போன்று பொறுப்புவாய்ந்தவர்கள் கோமாளிக்கூத்துகள் ஆடிவருகின்றனர். பொதுமக்கள் பெயரால் கூத்துக்கள் நடைபெறும் கொட்டகையொன்று சிறிதுகாலம் தேவையின்றி மூடப்பட்டுக் கிடந்தது. அரசியல்வாதிகள் ஆளுக்கொருவிதமாக வாயில் வந்ததை உளறிக் கொண்டிருக்கின்றனர். முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையே அவர்கள் முன்மொழிந்து கொண்டிருக்கின்றனர். “குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு” என்ற ரீதியிலேயே அரசியல்வாதிகளின் வாய்மொழிகள் அமைந்துள்ளன. கயிறிழுப்புப் போட்டியில் போதிய பயிற்சி பெறுவதற்காக உழைப்பவர்கள் போன்றே அவர்கள் நடந்து கொள்கின்றனர்.
அரசியல்வாதிகளின் அயரா முயற்சிகளின் விளைவாகச் சமாதானப் புறா தூரப் பறந்துகொண்டிருக்க பேரினவாதம் இந்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது. சில ஊடகங்களில் பேரினவாதத்தின் போதிய பயிற்சி பெற்றவர்களே அடிக்கடி முகங்களைக் காட்டுகின்றனர். சமாதானத்தைப் பற்றி இந்நாட்டிற் பேசுவது, செயற்படுவது பாவமான காரியம் என்பது போல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சமாதான முயற்சிகளைக் கண்டு துவண்டு போனவர்கள்கூட, மீண்டும் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளனர். காற்றடிக்கும் திசை நோக்கித் தலை சாய்க்கக் காத்திருக்கும் சந்தர்ப்பவாதிகள், எல்லாப் பக்கங்களையும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். கோமாளிக்கூத்துக்கள் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன.
42 ஞானம் - டிசம்பர் 2003

Gifihloorsjö GIBIDOGOL og மலையகக் கலை இலக்கியம் இன்னும் சில குறிப்புகள்
- லெனின் மதிவானம்
V
ஞானம் ஏப்பிரல் - 2003 இதழில் வெளியான “மலையகக் கலை இலக்கியம் தொடர்பில் செய்யக்கூடியவை - செய்ய வேண்டியவை” என்ற தலைப்பிலான எனது கட்டுரை பல கோணங்களிலிருந்தும், தளங்களிலிருந்தும் விவாதத்திற் குள்ளாக்கப்பட்டுள்ளது. ஓர் அன்பர்’ என்பவர் எழுதிய கட்டுரையைத் தவிர ஏனையவை யாவும், விமர்சனத்திற்குத் தகாத குரோத உணர்வுகளையும், தனிமனித முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்து காணப்படுகின்றன.
இவையொருபுறமிருக்க, வாதப் பிரதிவாதங்களினூடாக எழுப்பப்பட்ட சில வினாக்களுக்கு விடை கூற வேண்டியது அவசியமானதொன்றாகும். இதுபற்றி உருப்படியான விமர்சனங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. சாரல் நாடனையும், அவரின் இலக்கியப் போக்கினைச் சார்ந்தவர்களையும் மையமாகக் கொண்டு எழுதப்படுகின்ற இக்கட்டுரை மலையகக் கலை இலக்கியத்தில் நிலவும் ஓர் இலக்கியப் போக்கினைத் திறனாய்வு செய்வதாகவும் அமையும்.
மலையகக் கலை இலக்கியம் தொடர்பிலான எனது கட்டுரையில் சாரல் நாடனுக்குப் பிரச்சனை தந்த பகுதியை வாசகர்களின் நலன் கருதி இங்கொருமுறை குறித்துக் காட்டுவது அவசியமானதொன்றாகும்.
"திரு. சாரல் நாடன் அவர்கள் மலையகக் கலை இலக்கியம் தொடர்பிலான பதிவுகளை முற்போக்குணர்வுடன் வெளிக் கொணர்ந்துள்ளார். மறுபுறமாக அவரது ஆய்வுகளிலும், படைப்புகளிலும் சிறுமுதலாளித்துவப் பண்பின் தாக்கம் இழையோடியிருப்பதனைக் காணக் கூடியதாக உள்ளது”
மேற்குறித்த எனது மதிப்பீடு எத்தகையது என்பது பற்றித் தெளிவுணர்வு அவசியமானதொன்றாகும்.
ஆய்வொன்றின் கனதி இரண்டு அடிப்படையான விடயங்களில் தங்கியுள்ளது. ஒன்று போதியளவு தகவல்கள்; மற்றது உலகக் கண்ணோட்டம். மலையகக் கலை இலக்கியம் தொடர்பிலான பதிவுகளை வெளிக் கொணர்வதில் சாரல்நாடனின் பங்களிப்பு கணிசமானது. சி. வி. வேலுப்பிள்ளை, கோ. நடேசய்யர், மலையகக் கவிதை, சிறுகதை, நாவல் முதலியன பற்றிய தகவல்களையும், பதிவுகளையும் குறிப்பிடலாம்.
ஞானம் - டிசம்பர் 2003 43

Page 24
மறுபுறமாக அவரது ஆய்வுகளிலும், படைப்புகளிலும், சிறு முதலாளித்துவப் பார்வை இழையோடியிருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஓர் ஒப்புவமை வசதிக்காக மலையக வாய்மொழி இலக்கியம் தொடர்பிலான அவரது ஆய்வின்சாரத்தை இங்கொரு முறை குறித்துக் காட்ட வேண்டியது அவசியமானதாகின்றது.
“ஒட்ட வருதா பாருங்கடி ஒட்ட
ஒசந்து வருதா பாருங்கடி
ஒட்ட மேல குந்தி நம்ப மொதலாளி வாராங்க
ஒசந்த சம்பளம் கேளுங்கடி" என்ற தமிழக நாட்டார் பாடலைப் பின்வரும் மலையக நாட்டார் பாடலுடன் ஒப்பு நோக்குகின்றார்.
“குதிரே வாரதைப் பாருங்கடி குதிரே குனிஞ்சு வாரதைப் பாருங்கடி குதிரே மேலே நம்மையா கங்காணி கும்பிட்டு சம்பளம் கேளுங்கடி" இப் பாடல்களுக்குச் சாரல் நாடன் தரும் விளக்கம்.
தோட்டங்களில் தொழிலாளர்கள் தமது சம்பளத்தை பெரிய கங்காணிமார்களிடமிருந்தே வாங்கும் வழக்கம் காணப்பட்டது. துரையிடமிருந்து (Superintendent) வாங்கும்போது கூட அப்படி வாங்கிய பணத்தைக் கங்காணி ஐயாவிடம் சேர்ப்பித்துவிட்டுத் தங்களுக்கு அத்தியாவசியமான வேளைகளில் கேட்டு வாங்கும் வழக்கமே இருந்தது. அப்படிக் கேட்டு வாங்கும்போது கும்பிட்டே வாங்கினார்கள் என விளக்கமளிக்கும் இக் கனவான், தொழிலாளர்களின் நல்வாழ்வில் கங்காணி வகித்த பாத்திரத்தின் காரணமாகவே அவரைக் கடவுள் நிலையில் வைத்துப் போற்றினார்கள் என்கின்றார். மேலும் கங்காணி தொடர்பில் பாடப்பட்ட நாட்டார் பாடல்களை மேற்கோளாகக் காட்டுகின்ற சாரல் நாடன் அவை தமது தொழிற் களைப்பைப் போக்குவதற்காகப் பாடப்பட்டவை என விளக்கமளிக்கின்றார்.
உண்மை நிலை என்ன? தென்னிந்தியக் கிராமச் சூழலில் எசமான் அல்லது முதலாளி வருகின்றபோது, ஒசந்த சம்பளம் (உயர்ந்த சம்பளம்) தருமாறு உரிமையுடன் கேட்ட மக்கள் குழுவினர் இலங்கையில் அதுவும் முதலாளித்துவ சமூகவமைப்பில் தமது சம்பளத்தைக்கூட கும்பிட்டு கேட்கின்ற பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதனையும், புதிய பொருளாதார அமைப்பில் எத்தகைய அடக்குமுறைகளுக்கு உட்பட்டனர் என்பதனையுமே இவை எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய பார்வையை அவரது சிறுகதைப் படைப்புகளிலும் காணலாம்.
44 ஞானம் - டிசம்பர் 2003

சாரல் நாடனது சிறுகதைப் படைப்புகளில் உழைக்கும் மக்கள் பாத்திரப் படைப்புகளாக்கப்பட்டிருப்பினும், மத்தியதர வர்க்கத்திற்குரிய பார்வையிலே நோக்கிச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். வர்க்கங்களைக் கடந்த மனிதாபிமானம் என்பது இவர்களின் படைப்புகளில் முனைப்புற்றுள்ள பண்பாகும். இத்தகைய போக்கினையே சிறு முதலாளித்துவப் பார்வையென அடையாளப்படுத்தி இருந்தேன்.
இத்தகைய விமர்சனங்கள், மதிப்புரைகள் சாரல்நாடனையும், அவரது இலக்கியப் போக்கினைச் சார்ந்தோரையும், ஆத்திரம் கொள்ளச் செய்ததுடன் அறிவு தடுமாறி விமர்சனத்திற்குத் தகாத குரோத உணர்வுடன் மார்க்ஸிய தத்துவ ஞானத்தையும், அவ்வணி சார்ந்த இலக்கியவாதிகளையும் தாக்க வைத்துள்ளன.
திருவாளர் சாரல் நாடன் அவர்கள் தமது குருநாதரான இர. சிவலிங்கம் தமது அந்திம காலத்தில் கூறிய பொன் மொழிகளை ஆதாரமாகக் கொண்டு மார்க்ஸியத்தையும், அவ்வணி சார்ந்தோரையும் தாக்க முற்படுகின்றனர். அந்தக் கூற்று,
“பல்கலைக்கழகப் படிப்பு என்பது இளமைக்காலக் கனவுகள், இலட்சியத் துடிப்புகள் என்பனவற்றால் ஆனது. ஆனால் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. நான் பேசாத இடதுசாரிக் கருத்துக்கள் இல்லை. மலையகம் என்னை மறுவாசிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது.”
தவிரவும் சாரல் நாடனின் கருத்துக்களுக்குப் பக்க வாத்தியம் இசைக்கும் இல. நாகலிங்கம்,
“அன்றும் மார்க்ஸியம் பேசியவர்கள் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டினார்கள்"
எனவும், மார்க்ஸியத்திற்கு எதிராக கூப்பாடு எழுப்புகின்றார்கள். மார்க்ஸியம் தோற்றுவிட்டது என்றோ, இல்லையில்லை அது இன்றும் ஜிவித்திருக்கின்றது என்றோ, அவையதார்த்தத்திற்குப் பொருத்தமற்ற தத்துவம் என்றோ கூறிக்கொண்டிருப்பது பாமரத் தனமாகும்.
மார்க்ஸியம் என்றால் என்ன? அதன் அடிப்படை அம்சங்கள் யாவை? எனக் காட்ட வேண்டும். இன்ன, இன்ன அம்சங்களை அது காணத்தவறிவிட்டது. இன்ன, இன்ன வகையில் அது யதார்த்த வாழ்க்கைக்குப் பொருந்தாதுள்ளது எனக் காட்ட வேண்டும். இக் கனவான்களைப் பொறுத்த மட்டில் மார்க்ஸிய தத்துவஞானத்தில் எந்தளவு தெளிவு கொண்டவர்களாக உள்ளார்கள் என்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டியதொரு விடயமாகும். சாரல் நாடன் அவர்கள் இர. சிவலிங்கத்தை மார்க்ஸியவாதியாக நோக்கி, அவரது இளமைக்காலக் கனவாக, இலட்சியத் துடிப்பாக மார்க்ஸியத்தை விளங்கியிருப்பது மார்க்ஸியத்தின் அரிச்சுவடியைக் கூடத் தெரிந்து வைத்திருக்கின்றாரா? என்ற ஐயத்தை எழுப்புகின்றது.
இத்தகையதோர் சூழலில் மார்க்ஸியத் தத்துவஞானம் குறித்து விளக்க வேண்டிய கடமைப்பொறுப்பு எமக்குள்ளது.
ஞானம் - டிசம்பர் 2003 45

Page 25
சமுதாயவமைப்பு வர்க்கங்களாகப் பிளவுபட்ட பின்னர் ஒரு வர்க்கத்தின் உடைமைகளை இன்னொரு வர்க்கம் சுரண்டிக் கொண்டேயிருக்கும். இந்த உற்பத்தி முறையின், உற்பத்தி உறவின் அடியாக எழுவதே வர்க்கப் போராட்டமாகும். வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய அமைப்பொன்றில் “பாராபட்சமற்ற விஞ்ஞானம்" என்ற ஒன்று இருக்க முடியாது என்பதனை மார்க்ஸியம் எடுத்துக் காட்டியதுடன், அது கூலி அடிமை முறையினை ஈவிரக்கமற்ற முறையில் எதிர்த்தது. ஏனைய மிதவாதிகளது விஞ்ஞானங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையிலும், அளவிலும் கூலி அடிமை முறையினை ஆதரிப்பதாக அமைந்திருந்தது. மார்க்ஸியம் எல்லாத் துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப் பாதையில் அது தோன்றி வளர்ச்சியடைகின்றது. எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளைக் கூர்மையுடைய மனிதர்கள் எழுப்பியுள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்ஸியமாகும்.
இது தொடர்பில் 1848லிருந்து 1850 வரை பிரான்சில் நடந்த வர்க்கப் போராட்டங்கள்’ என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய ஏங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"சமகால வரலாற்றின் ஒரு பகுதியை நிலவுகின்ற பொருளாதார நிலைமையின் அடிப்படையில் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்திலே விளக்க ஆசிரியர் மேற்கொண்ட முயற்சியின் விளைவே இந்நூல். ஆசிரியரின் கண்ணோட்டத்தின்படி அரசியல் நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்த்து இறுதிப் பகுப்பாராய்விலே அவை பொருளியல் காரணிகளின் விளைவுகளே என்று நிறுவுகிறார். பொருளாதார வளர்ச்சியின்போது உருவாகும் சமூக வர்க்கங்களினதும், ஒரே வர்க்கத்திற்குள்ளிருக்கும் பல்வேறு குழுக்கள் பகுதியினதும் நலன்கள் சம்பந்தமான போராட்டங்கள் அரசியல் மோதல்களாக எவ்வாறு இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, அதே வர்க்கங்களினதும், வர்க்கப் பகுதியினதும், அரசியல் வெளிப்பாட்டைப் போதுமான அளவிலே குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன என்பதனையும் தெளிவுறுத்தியிருக்கின்றார்." S.
மனித வாழ்க்கையையும், இயற்கையோடு இணைந்த தன்மைகளையும் விஞ்ஞான பூர்வமாக அணுகி பல உண்மைகளை மார்க்ஸியம் வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது. அத் தத்துவம் உலகை விபரிப்பதாக மட்டுமன்றி, அதனை மாற்றியமைப்பதற்கான செயலூக்கத்தினையும் அது வலியுறுத்தி நிற்பதனால் தான் மிதவாதிகளதும், அதிகாரத் தரப்பினைச் சார்ந்தவர்களதும் மூக்கைச் சிணுங்க வைத்தது.
46 ஞானம் - டிசம்பர் 2003

தமது அறியாமையினாலோ அல்லது நேர்மையீனத்தாலோ, மார்க்ஸியத்தின் விசாலமான பரந்துபட்ட பார்வையைச் சுருக்கி, சுரண்டும் வர்க்கத்திற்குத் தமது அறிவையும், ஆன்மாவையும் அடகு வைத்துவிட்டவர்கள் மார்க்ஸியத்தை நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம் எனவும், அது யதார்த்தத்திற்குப் பொருந்தாத இளமைக்காலக் கனவுகள், இளமைத் துடிப்புகள் எனவும் அலம்புகின்றனர்.
மலையக வரலாற்றுப் போக்கில், கல்வி, பண்பாட்டு ரீதியான வளர்ச்சியில் முற்போக்கான பாத்திரத்தை வகித்தவர் இர. சிவலிங்கம். அவரும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய இயக்கங்களும், மலையகச் சமூக வளர்ச்சிக்காகப் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டன. இவர்களுடைய உலக நோக்கையும், வாழ்க்கைத் தத்துவத்தினையும் விபரிப்பதற்கு 'மனிதாபிமானம்' அல்லது 'மனித நலநாட்டம்' என்னும் தொடர்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதாயிருக்கும்.
மலையகச் சமூகவமைப்புக் குறித்த விஞ்ஞான பூர்வமான தத்துவார்த்தப் பார்வையினைக் கொண்டிராமை காரணமாக, ஒடுக்கப்படும் மிகப்பெரும் திரளான மக்களுடைய மனப்பாங்கினைக் குறிப்பிடத்தக்க வலிமையோடு புலப்படுத்திக் காட்டவும், அவர்களிடையே மூண்டெழும் கண்டன உணர்ச்சிகளையும், ஆத்திரக் கனலையும், வெளிப்படுத்திக் காட்டவும் முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். இர. சிவலிங்கத்தின் இத்தகைய பார்வையினை அவர் வழிவந்த சீடரான சாரல்நாடனிலும் காணக்கூடியதாக உள்ளது.
மார்க்ஸியத் தத்துவஞானத்தைப் பல்கலைக்கழகக் கனவாகக் காணுகின்ற இர. சிவலிங்கத்தின் அந்திம காலம் எத்தகைய சிந்தனைத் தளத்தில், எத்தகைய முகாமைச் சார்ந்திருந்தது? சாரல்நாடன் வேணுமென்றே மறந்திருந்தாலும், மலையகச் சமூகமும், இன்றைய தலைமுறையினரும் அத்தகைய சீரழிவுகளை மறந்து விட மாட்டார்கள். இத்தகைய பின்னணியில் நின்றுகொண்டுதான் இர. சிவலிங்கம் மார்க்ஸிய தத்துவஞானத்தின் மீதும், இலக்கிய கர்த்தாக்கள் மீதுமான தாக்குதலைத் தொடுத்தார். இதன் மூலமாக அறிந்தோ, அறியாமலோ சமூக மாற்றத்திற்காகப் பேனா பிடித்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் நிராகரிக்கின்றனர். ஒரு நலனை பிறிதொரு நலனில் தூக்கி வீசும் இத்தகைய எத்தனிப்புகள் தற்செயல் நிகழ்ச்சியல்ல. வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பேயாகும்.
மலையக சமூகவமைப்பு பற்றிய எமது பார்வையை நையாண்டி செய்கின்ற சாரல்நாடன் பின்வரும் வினாவை எழுப்புகின்றார்.
"மலையக இலக்கியம் பற்றி நோக்குவதற்கு முன்னர் அதன் அடித்தளமாகவுள்ள சமுதாயவமைப்பு பற்றிய தெளிவுணர்வு அவசியமானது என்கின்றார். யாரில்லை என்றது. கடந்த எழுபது ஆண்டுகள் இலக்கியம் படைத்தவர்கள் இத்தெளிவுணர்வு அற்றவர்களா?"
ஞானம் - டிசம்பர் 2003 47

Page 26
கலப்பேயில்லாத முதலாளித்துவச் சமூகவமைப்பொன்றில் அவை தோற்றுவிக்கக் கூடிய உற்பத்திமுறை, உற்பத்தி உறவு என்பனவற்றின் அடியாக எழும் வர்க்க முரண்பாடு, வர்க்கப் போராட்டம் மலையக சமூகவமைப்பின் தன்மைக்கேற்ப சில தனித்துவங்களையும், அதே சமயம் ஏனைய சமூகவமைப்புடன் இணையக் கூடிய பொதுமைகளையும் கொண்டுள்ளன. இதனடியாக எழுகின்ற மலையக இலக்கியமும் இந்தப் பண்பினை பிரதிபலிப்பதாகவே அமைந்து காணப்படுகின்றது. இத்தெளிவு சாரல் நாடனின் எந்தப் படைப்புகளில் அல்லது ஆய்வுகளில் வெளிப்பட்டு நிற்கின்றது?
மலையகச் சமூகவமைப்புக் குறித்த தீட்சண்யமிக்கதும், விஞ்ஞான பூர்வமானதுமான பார்வையின்மை காரணமாக சமூக அரசியல் கலாசாரம் பற்றிய தெளிவின்மை இவரது ஆய்வுகளிலும், படைப்புகளிலும் வெளிப்பட்டு நிற்கின்றன.
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்களுக்கும் இம்மண்ணைப் பிறப்பிடமாகக் கொள்ளாத அதே சமயம் இம் மண்ணின் மீது நேசம் கொண்டு இலக்கியம் படைத்தவர்களுக்கும் இடையிலான வேறுபட்ட இலக்கியப் பண்புகளைச் சுட்டிக் காட்டினேன் என்பதற்காகத் திரு. சாரல் நாடன் என்னைக் குறுகிய தேசியவாதியாகக் காட்ட முனைகின்றார்.
பரந்துபட்ட தொழிலாளி வர்க்கம் மலையகச் சமூகவமைப்பினைப் பிரதிபலித்து நிற்பதனாலும், அவர்களே அவ்விலக்கியத்தின் பிரமாக்களாக இருப்பதனாலும், "தனியுடமைக்கு எதிரான போராட்டம்” என்ற பாட்டாளிவர்க்க உணர்வு மலையக இலக்கியத்தில் முனைப்புற்றுக் காணப்படுகின்றது. ஆனால் இம் மண்ணைப் பிறப்பிடமாகக் கொள்ளாத அதே சமயம் இம்மண்ணின் மீது நேசங்கொண்டு இலக்கியம் படைத்த படைப்பாளிகளின் படைப்புகளை நோக்குகின்றபோது ஒரு நிலவுடமை சமூகவமைப்பில் நிலவக்கூடிய ஒரு விவசாய வர்க்கத்திற்குரிய நிலத்தை சொந்தமாக்கு என்ற சிந்தனை முனைப்புற்றுள்ளதைக் காணலாம்.
யோ. பெனடிக் பாலனின் 'சொந்தகாரன்’? (நாவல்) கவிஞர் சுபத்திரனின் மலையிலும் பெரியது சிவனுவின் மரணம்? (கவிதை) ஆகிய படைப்புகள் இப்போக்கிற்குத் தக்க எடுத்துக் காட்டுகளாகும். மலையகத்தில் தோற்றம் பெற்று வருகின்ற புதிய மத்திய தர வர்க்கமும், இத்தகைய பார்வைக்குட்பட்டுள்ளதை அண்மைக்கால இந்தியப் படைப்புகள் எடுத்துக் காட்டுகின்றன என்பதனையும், வே. இராமரின் காணிநிலம் வேண்டும்’ என்ற கவிதையை உதாரணம் காட்டி விளக்கியிருந்தேன். (ஞானம் - ஏப்பிரல் - 2003)
அந்த வகையில் சாரல் நாடனோ அல்லது அவரது இலக்கியப் போக்கினைச் சார்ந்தவர்களோ மலையகத்தின் அடிப்படையான உற்பத்திமுறை, உற்பத்தி உறவு என்பவற்றினை விஞ்ஞான அறிவு கொண்டு விளங்காத வரையில் மேற்குறித்த கருத்துக்களைக் காணுபவர்களாகவே காணப்படுவர்.
48 ஞானம் - டிசம்பர் 2003

சாரல் நாடன் தமது பதிப்பு முயற்சியினை நான் குறைத்து மதிப்பிட்டதாகக் கூப்பாடு எழுப்புகின்றார். அவரது பணியினை முயற்சியினை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் தேசிய கலை இலக்கியப் பேரவை, நந்தலாலா வெளியீட்டகங்கள் போன்று பதிப்புத்துறையில் சித்தாந்தத் தளத்தினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
மலையக வாய்மொழி இலக்கியம் தொடர்பிலான எனது கட்டுரையொன்றில், பூரீபாத கல்வியியற் கல்லூரி மாணவர்களதும், விரிவுரையாளர் வ. செல்வராஜாவைப் பாராட்டிய நான் அப்பாடல்களைப் பரிசீலனை செய்தேனா என்ற வினாவை எழுப்புகின்ற சாரல் நாடன், அவை நாட்டார் பாடல்கள் அல்ல எனவும் கூறுகின்றார்.
கல்விப்புலத்தில் இடம்பெற்ற இத்தகைய முயற்சிகள் குறித்துப் பாராட்டியதுடன் அத்தகைய முயற்சிகள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நிதானித்த பார்வையுடனும் செய்யப்பட வேண்டியது எனக் கூறியிருந்தேனே தவிர அப்பாடல்களைப் பற்றியதல்ல, என்பதை கட்டுரையை நிதானத்துடன் வாசிப்பவர்களுக்குப் புரியும். சாரல் நாடனின் எழுத்துக்களில் பொதுவாகவே காணப்படும் குறைப்பாடு வாழ்வு பற்றிய தரிசனம் இல்லாமையாகும். இதற்கான காரணம் தமக்கெனதொரு உலக நோக்கை வளர்த்துக் கொள்ளாமையாகும். அதிகமாக எழுதி, எழுதித் தள்ளிவிடுவதாலோ, அல்லது சாகித்திய மண்டலப் பரிசுகள், பணமுடிச்சுகள் என்பனவற்றினைப் பெற்றுவிடுவதனாலோ ஒருவர் சிறந்த படைப்பாளியாகவோ, எழுத்தாளனாகவோ ஆகிவிட முடியாது. பாரதியை பாரதிதாசனை விடுவோம். 148 செய்யுள்களை மட்டுமே எழுதித் தமக்கெனத் தனித்துவமான இடத்தைப் பெற்றுக் கொண்டவர் காரைக்கால் அம்மையார். தமது காலத்து எழுத்தாளர்களின் படைப்புகளில் காணப்படாத வாழ்வு தரிசனம் அவரது படைப்புகளில் காணப்பட்டமையே அம்மையாரின் ஆளுமையின் உள்ளீடாகும்.
நான் "இலவச அறிவுரை” வழங்குகின்றேன் எனச் சாடுகின்றார் சாரல் நாடன். பாரதி, பாரதிதாசன், கைலாசபதி, சி. வி. வேலுப்பிள்ளை போன்ற இன்னும் பலர் என்னை விட அதிகமாக இலவச அறிவுரைகளை வழங்கியவர்களல்லவா? இவர்கள் யாவரும் சாகித்திய விருதுகளுக்காக மண்டியிடவில்லை என்பதற்காகச் சாரல் நாடன் இவர்களின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் "இலவச அறிவுரை” என வரையறை செய்வாரா? சாரல் நாடன், தமது அறியாமையினாலோ, அல்லது நேர்மையீனத்தாலோ எனது மலையகக் கலை இலக்கியம் தொடர்பிலான கட்டுரையில் உள்ள பரந்துபட்ட விடயங்களை ஒதுக்கிவிட்டு, அவை பிரயோசனமற்ற இலவச அறிவுரை என முத்திரை குத்தித் தனது பார்வை வட்டத்தைச் சுருட்டி மடக்கித் தனது உள்ளங்கையில் வைத்து ஊதிக் காட்ட முனைகின்றார். ஒரு பிரமாண்டமான, விஞ்ஞான பூர்வமான பார்வையை சித்தாந்த பூர்வமாக எதிர்க்கும் ஆளுமை இல்லாமையினாலேயே சாரல் நாடன் போன்றோர் இத்தகைய சில்லறை விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.
(அடுத்த இதழில் இந்த விவாதத் தொடர்நிறைவு பெறும், - ஆசிரியர்)
ஞானம் - டிசம்பர் 2003 49

Page 27
ஒரு வரலாற்றுப்பதிவுக்காக நேற்றைய கலைஞர்களைத் திரும்பிப் பார்க்கிறேன்.
நேற்றைய - அந்தனிஜீவா - £തജന്ദ്രീക്സ്
தமிழ்த் திரையுலக முன்னோடி
ஏடு தூக்கி பாடசாலை சென்ற எனது மாணவப் பருவத்தில், வெள்ளவத்தை பிளாஸா திரையரங்கில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற விளம்பரத்துடன் தோட்டக்காரி என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்தத் திரைப்படத்தை நம்மவர்கள் தயாரித்தது என்ற ஆர்வத்துடன் பார்த்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, எனது முதல் நாடகமான “முள்ளில் ரோஜா” என்ற நாடகம் முடிந்தவுடன் அதில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்த நடிகர் சுசில்குமார், நாடகம் பார்க்க வந்திருந்த ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
இவர்தான் தோட்டக்காரிகதை வசனகர்த்தா டைரக்டர் பி.எஸ்.கிருஷ்ணகுமார் என்று.
எளிமையான தோற்றத்துடன் எந்தவித பந்தாவுமில்லாமல் காட்சியளித்த கலைஞர் பி.எஸ்.கிருஷ்ணகுமார் ஆற்றலும் ஆளுமையும் மிக்க கலைஞர் என்பதைப் பிற்காலத்தில் அவருடன் பழகிய பொழுது தெரிந்து கொண்டேன்.
இலங்கையில் தமிழ்த்திரைப்படங்களை உருவாக்கிய முன்னோடிகள் இருவரும் மலையாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் தமிழ்த் திரைப்படம் எனக் கூறப்படும் 16 எம். எம். மில் தயாரிக்கப்பட்ட சமுதாயம் திரைப்படத்தை உருவாக்கிய ஹென்றி சந்திரவன்ஸஒரு மலையாளி. ஆனால் இவரை சினிமா விமர்சகர்கள் சிங்களவர் என்றே குறிப்பிடுவார்கள்.
சமுதாயம்' என்ற திரைப்படம் 1962ம் ஆண்டு பொரளை வை. எம். பீ. ஏ. மண்டபத்தில் காண்பிக்கப்பட்டது.
ஆனால், வர்த்தக ரீதியில் இலங்கையில் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற விளம்பரத்துடன் கொழும்பில் கிங்ஸ்லி, பிளாஸா ஆகிய திரையரங்குகளில் தோட்டக்காரி திரையிடப்பட்டது.
இந்தத் திரைப்படத்தின் ஆரம்பத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. எஸ். தொண்டமான், ஜனநாயக காங்கிரஸ் தலைவர் ஜனாப் அஸிஸ் ஆகியோர் திரையில் தோன்றி இந்தத் திரைப்படத்தை இலங்கை ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுப்பார்கள். ஏனெனில் இந்தத் தோட்டக்காரி திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய வம்சாவளியினர்.
50 ஞானம் - டிசம்பர் 2003
 
 
 
 
 
 
 
 

தமிழ்த் திரையுலக முன்னோடியும் தோட்டக்காரி திரைப்படத்தின் நாயகனுமான பி. எஸ். கிருஷ்ணகுமார் ஆகஸ்ட் 8ம் திகதி 1936ம் ஆண்டு கொழும்பில் பிறந்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஈடுபட்டதோடு கலைக்குரல்’ என்ற பத்திரிகையையும் நடத்திய கலைஞர் பி. எஸ். கிருஷ்ணகுமார் கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி அமரரானார்.
தமிழகத்தில் பெரியார் முன்னெடுத்த சமூக சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகம், அதன் பின்னர் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் செயற்பாட்டுச் சிற்பிகளான அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி ஆகியோர் நடத்திய பத்திரிகைகள், எழுதிய நாடகங்கள், வேலைக்காரி, பராசக்தி போன்ற திரைப்படங்கள் இங்குள்ள தமிழ் பேசும் இளைஞர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின.
கொழும்பில் இருந்த இந்திய வம்சாவளியினரான இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தனர். எழுதுவதிலும், மேடைகளில் பேசுவதிலும் ஆர்வம் காட்டினார். கலைஞர் கருணாநிதியின் தூக்கு மேடை, மணிமகுடம், பரப்பிரம்மம், எம். ஆர். ராதாவின் 'ரத்தக் கண்ணிர்’ ஆகிய நாடகங்களை மேடையேற்றியதுடன் தாங்களே சொந்தமாக நாடகங்களை எழுதி மேடையேற்றினார்கள். இத்தகைய இளைஞர்களில் ஒருவராக பி. எஸ். கிருஷ்ணகுமார் இருந்தார். ஐம்பதுகளின் நடுப்பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டார். நாடகம் எழுதுவதிலும் நடிப்பதிலும் ஆர்வம் கொண்ட பி. எஸ். கிருஷ்ணகுமார், கொழும்பு வாழ் கலைஞர்களின் குருகுலமாகத் திகழ்ந்த நாடகப் பாசறையான "மனோரஞ்சித கான சபா" நடத்திய கலைஞர் இராஜேந்திர மாஸ்டரிடம் தனது கலை ஆர்வத்தை வெளியிட்டார்.
இவரது கலை ஆர்வத்தைக் கண்ட இராஜேந்திர மாஸ்டர் தனது சபாவில் ஒருவராக இவரைச் சேர்த்துக் கொண்டார். அங்கு “கலிங்கத்துக் கைதி’ 'மலர்ந்த வாழ்வு” ஆகிய நாடகங்களில் நடித்தார். இவருடன் நடிகர் தாலிப், நடிகை ராஜலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
பின்னர் இரா. சு. தங்கபழம் எழுதிய “புரட்சிப் பெண்" என்ற நாடகத்தை டைரக்ட் செய்து அதில் கதாநாயகனாகவும் நடித்தார். நாடகங்களில் நடிப்பதுடன் சமுதாயச் சீர் திருத்த இயக்கமான திராவிடர் முன்னேற்றக் கழகச் செயற்பாடுகளிலும் ஈடுபாடு காட்டினர் பி. எஸ். கிருஷ்ணகுமார். அந்த இயக்கத்தைச் சேர்ந்த "திரைக்கலை” என்ற பத்திரிகை நடத்திய மணவைத்தம்பியின் தூண்டுதலால், இலங்கையில் தமிழ்த்திரைப்படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஐம்பதுகளின் இறுதியில் மலையகத்தைச் சேர்ந்த சிலர் தமிழ்த் திரைப்படம் தயாரிக்க ஆர்வம் கொண்டிருந்தனர். மலைவாசல், புரட்சி, கடல் கடந்த தமிழர், சமுதாயம் போன்ற திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.
ஞானம் - டிசம்பர் 2003 5

Page 28
நாமும் ஒரு தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தால் என்ன? என்ற ஆவேசம் நாடகக் கலைஞரான பி. எஸ். கிருஷ்ணகுமாருக்கு ஏற்பட்டது. இதற்கான அடிப்படை அறிவைப் பெறுவதற்காக சிங்களத்திரைப்பட முன்னோடிகளில் ஒருவரான சிறிசேன விமலவிரவின் நவஜீவன் ஸ்டூடியோவில் உருவாகிய சிங்களப்படத் தயாரிப்புகளை பி. எஸ். கிருஷ்ணகுமார் நேரில் சென்று பார்த்தார்.
இவரின் ஆர்வத்தைக் கண்ட சிறிசேன விடிலவீர, தனது சிங்களப் படத் தயாரிப்புகளில் பணியாற்ற இவரை இணைத்துக் கொண்டார். அத்துடன் இவருடைய தமிழ்ப்பட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
இவரது நண்பரான வீ. தங்கவேலு, இவருக்குத் தூண்டுகோலாக அமைந்தார். தன்னால் இயன்ற அளவு பண உதவி செய்தார். இவர்கள் இருவரின் முயற்சியும் வெற்றிபெற, இந்திய வங்கியில் பணியாற்றிய வி. எஸ். முத்துவேலு, அவரது மனைவி ரஞ்சனி ஆகியோர் கை கொடுத்தனர்.
நாடகக் கலைஞரான பி. எஸ். கிருஷ்ணகுமார் எழுதி டைரக்ட் செய்த தோட்டக்காரி 1963-ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு பிறகு. “மீனவப் பெண்” என்ற திரைப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தயாரித்து வெளியிட்டார். அந்தத் திரைப்படம் 1973-ம் ஆண்டு வெளிவந்தது.
கலைஞர் பி. எஸ்.கிருஷ்ணகுமார் போன்றவர்கள்தான் இன்றைய கலைஞர்களின் வழிகாட்டிகள். அவர்கள் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.
w
綴 N புதிய வகைப் போர்முரசம்
- தவ சஜிதரன் -
ஆர்மனமும் அஞ்சற்க! துவேஷத் தீயில் {} ஆர்ப்பரிக்கும் அசுரர்முன்னும் அமைதி கொள்க! கூர்முனைத்த நெடுவாளும் குண்டுந் தானா கொடியவரின் விதியொழிக்கக் குறித்த மார்க்கம்? வேர்முளைத்து நிலந்துளைத்துப் பொதிந்த பின்னும்
தலையின் பெருவிருட்சம் வீழா! ஆயின்
ர்முரசம் மனத்தின்வழி முழங்கி டட்டும் ! ! திடப்படுக 1 புரட்சி கொள்க !
52 ஞானம் - டிசம்பர் 2003
 
 
 
 
 
 
 
 
 
 

நூல் மேடும் பள்ளமும்
(சிறுகதைத் தொகுதி) ஆக்கம் : நீர்வை பொன்னையன் வெளியீடு: மீரா பதிப்பக்கம்,
கொழும்பு, விலை : ரூ. 200/-
ஈழத் தமிழ் ஆக்க இலக்கியத்தில் மார்க்ஸியசித்தாந்த கோட்பாடு 1950களின் பிற்பகுதியில் முளைவிட்டு 60,70 களில் அடர்ந்த கிளைபரப்பியது. ஆரோக்கியமான ஆக்க முயற்சிகளும் அறுவடைகளும் அக்காலகட்டத்தில் நடைபெற்றன. ஆழமான சமூகப்பார்வை இலக்கியத்தின் செல் நெறியாகச் செல்வாக்கடைந்து தமிழ் நாட்டிலும் இலக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் இலக்கிய வர லாற்றிலேயே ஒரு புதிய பரிமாணம் தோன்றியது. 1950 இல் எழுத்துலகில் புகுந்த நீர்வை பொன்னையனின் இலக்கியப் பயணமும் இக்காலத்தில் வீறு நடைபோட்டது. அறுபதுவரை தான் எழுதிய கதைகளை 1961 இல் ‘மேடும் பள்ளமும் என்ற நூலாக வெளியிட்டார். இந்நூலின் மறு பதிப்பு சமீபத்தில் மீரா பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.
காலம் இலக்கியத்தின் தரத்தைக் கணக்கீடு செய்யும் அளவுகோல் என்பர்.
ஞானம் - டிசம்பர் 2003
நாற்பது ஆண்டுகள் கடந்து இன்று இக்கதைகளைப் படிக்கும் போது நீர்வை பொன்னையனின் ஆக்க ஆளுமைச் சிறப்பு தரமானது என்ற அங்கீகாரம் உறுதியாகிறது. கலைத்துவமான படைப்புக்கள் காலத்தைக் கடந்து நிற்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. நான்கு தசாப்தங்களுக்கு முன்னான இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக வடபுல யாழ்ப்பாண மக்களின் மண்ணோடு இசைந்த கிராமப்புற வாழ்க்கை நிலையையும் வாழ்க்கை முறைகளையும் தரிசிக்க முடிகிறது. அன்றைய சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்டு பொருளாதார ஏற்றத் தாழ்வினால் அடக்கப்பட்ட சமுதாயக்கட்டமைப்பின் அவலத்தை, உழைப்பின் உயிர் நாடியுடன் வாழத் துடிப்பதை அவர்களது அபிலாசைகள், ஏக்கங்கள், நம்பிக்கைகள் இவற்றையெல்லாம் கலைத்துவமாக வடித்துள்ளார் தன் கதைகளில் நீர்வை. மார்க்ஸிச கோட்பாட்டில் பற்றுறுதி கொண்ட நீர்வை பொன்னையனின் ஆக்க ஆளுமை தனித்துவமானது. கொண்ட கருத்தினை வரித்துக் கொண்டு பிரசார வாடையுடன் கதை படைப்பவர் களுடன் வேறுபட்டு நிற்பவர். கோட் பாடுகளை கலை வடிவமாக்கி, கலைப் பொருளாக்கி, ‘மேடும் பள்ளமும் (1961) உதயம் (1970), பாதை (1997), வேட்கை (2000) ஆகிய சிறுகதைத் தொகுதி களைத் தந்தவர். உலகளாவிய புனை கதை ரசனை வேட்கையின் உந்துதலால் 'உலகத்து நாட்டார் கதைகளை' (2001) தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மீள்மொழிவு செய்தவர். அவரது உயர்மட்ட ரசனையின் வெளிப்பாடாக முற்போக்கு இலக்கிய
53

Page 29
முன்னோடிகள்’(2002) நூலினைத் தமிழ் இலக்கியத்திற்குத் தந்து, உலக முற்போக்கு ஆக்க இலக்கிய மேதைகளை அறிமுகம் செய்து அவர்தம் படைப்புகளை பொக்கிஷமாக இளந் தலைமுறையினர் படிக்கும் அரிய வாய்ப்பினை அளித்தவர். நீர்வை பொன்னையன் கல்கத்தாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்.முன்னோடி முற்போக்கு இலக்கியவாதிகளுடன் நேரடித் தொடர்புகொண்டவர், நுாலறிவாளன்; முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தூண். இதயத்தாலும் செயற்பாட்டாலும் ஒரு முற்போக்காளன். தொழிற்சங்கவாதி யாகவும் பள்ளிக்கூட ஆசிரியராகவும் தொழில் புரிந்தவர். முற்போக்கான மாற்று இலக்கியக் கொள்கையுடன் நம் நாட்டில் சீரிய முறையில் செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான விபவி யில் தமிழ் பகுதி பொறுப்பாளராகப் பணிபுரிபவர், சுறு சுறுப்பானவர், கலைஞர், கலாரசிகர், பழகுவதற்கு இனியவர், தன்னடக்கமும் எளிமையும் கொண்டு ஆரவாரமின்றி இலக்கியப் பணிபுரிபவர். இக் குணவியல் புகள் வாழ்க்கைப் பிண்னணி இவரது ஆக்க ஆளுமைக்குப் பெரும் பங்களிக் கின்றன என்பது ஆழ்ந்து நோக்கின் புலப்படும். ஆரம்பகாலத்தில் எழுதிய சிறுகதைகளைக் கொண்டுள்ள மேடும் பள்ளமும் படைப்புக்களில் இவரது விளையும் பயிரின் வீச்சுத் தெரிகிறது. நீர்வையின் கதாபாத்திரங்கள் வெறும் லட்சிய புருஷர்களல்ல, நடைமுறையை
ஒட்டிய நம்பகரமானவை என்பது குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும். ஆனால் வர்க்க முரண்பாட்டினை
வலியுறுத்த எழுதிய சிலகதைகளில் கலையழகு தாழ்ந்து கருத்து வெளிப்பாடு
54
மேலோங்கிநிற்கிறது.ஆயினும் அதற்கு ஈடு செய்யும் வகையில் சத்திய வேட்கையின் தரிசனமும் அமுக்கப்பட்ட குரலின் விடுதலை உணர்வும் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
புதுமையான மாற்றுச்சிந்தனைகள், புதிய பரிமாண நோக்கு ஆகியவற்றுடன் விறுவிறுப்பும் வீரியமும் கொண்டு கதைபடைக்கும் பல இளம் எழுத்தாளர் களிடம் சிறு கதை ஆக்கநுட்ப அறிவும் பயிற்சியும் இல்லாதிருப்பதைக் காண் கிறோம். காலமாற்றத்தால் கலை வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் அடிப்படை அம்சங்கள், ஆக்கநுட்பங்கள் மாறுவதில்லை. இன்றைய இளைய தலைமுறையினர், கதையின் கட்டமைப்பு நுட்பத்தில் கவனம் எடுத்து வெற்றிகண்ட நீர்வை பொன்னையனின் ஆக்க ஆளுமையிலிருந்து பல பயன் தரும் கருத்துக்களை உள்வாங்க முடியும். சிறுகதைத் தலைப்பு, ஆரம்ப வசனம், இறுதி வசனம் ஆகியவை சிறுகதைக் கட்டமைப்பில் முக்கியமானவையாகும். குறியீடுகள் சொல்லாமல் சொல்லும் மெளன இடைவெளிகள் வலிமையுடன்
வாசகர் உள்ளத்தை ஈர்ப்பவை. இப்பண்புகள் ‘மேடும் பள்ளம் படைப்புக்களின் பிரமாதமாக
அமைந்துள்ளன. சூழலுடன் இசைந்த சுயமான உவமை உருவகங்கள், செட்டும் செறிவுமான சொற்பிரயோகம், வாக்கியங்களில் இறுக்கம், உயிர்த் துடிப்பான உரையாடல்கள் கதைகளின் கட்டமைப்புச் சிறப்பாகும். கதைப் பொருட்களுக்கேற்ற உத்திகளைக் கையாளும் பான்மை சிலை செதுக்கும் சிற்பியின் நுட்பம் நீர்வையின் படைப்பு
ஞானம் - டிசம்பர் 2003

களில் காணப்படுகின்றன. 'சோறு இவரது படைப்பு ஆளுமைச்சிறப்புக்கு ஒரு பதச்சோறாகும். வறுமையும் சாதியமும் தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தில் வயிற்றுப்பசி உருவாக்கிய வேட்கையைத் தணிக்க சிந்தனை அறிவு அரும்பாத இளம் சிறுவனின் துன்பியல் நடத்தையை நெஞ்சை அள்ளும் கதையாக வடித் துள்ளார் நீர்வை.
உள்ளடக்கமும் உருவமும் இணைந்து கலாசிருஷ்டி தோன்றும் போது அது காலத்தை வென்று நிற்கும். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பும் மேடும் மூன்றாவது மறுபதிப்பு வெளிவந்தாலும் கலை உள்ளங்கள் வாழ்த்தி வரவேற்கும்.
புலோலியூர். க. சதாசிவம்
പ്പെട്ടില്ല
பள்ளமும்
நூல் : இருட்டினிலே
ஒர் இதயம் (கவிதைத் தொகுதி) ஆக்கம் : கலா வெளியீடு: சிந்தியா வெளியீட்டகம், 27 முதலாம் ஒழுங்கை விலை : ரூ. 50/-
இலக்கியத்துறையில் காலடி
எடுத்து வைத்துள்ள இளங் கவிஞர் செல்வி. கலாவின் கன்னி முயற்சி இந்நூல். 48 பக்கங்களில் 32 கவிதைகளை அடக்கியுள்ளார். இக் கவிதைகளில் அநேகமானவை, சமூகத்தில் காணப்படும் சோகங்களையும், இளந் தலைமுறையின் ஏமாற்றங்களையும்,
ஏமாற்றுக்களையும் சொல்ல முற்
ஞானம் - டிசம்பர் 2003
பட்டுள்ளன. இன்றைய இளைஞர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் பல இருந்தும், காதல் என்று கூறி இளம் பெண்களுக்குப் பின்னால் சுற்றித்திரிந்து வலை வீசுவதைக்காணும் இவ்விளங் கவிஞர்,
பூங்காவையும் கடற்கரையையும் போவதை விட்டு விட்டு நாட்டின் ஆயிரம் ஒட்டை இருப்பதை நீகாணாயோ? - எனக் கேட்கின்றார். அத்துடன் விடாமல்,
அமைதியாய் வீட்டில் தூங்கி எழுந்தவனை - சுடு காட்டில் நிரந்தரமாய் கல்லறைக் கோட்டையில் துயில விடாதே - எனவும் எச்சரிக்கின்றார்.
கவிஞர் சமூக மாற்றத்துக்காக பல விடயங்களைப் புரிய ஆசைப்படுகின்றார்.
"துப்பாக்கி கையில் தூக்க ஆசை சீதனக் கொடுமைகளை சிதறடிக்க ஆசை சாதிமத பேதங்களை சமூகத்தை விட்டு விரட்ட ஆசை”
மேலும் பயிற்சியும் சொல்லாட்சியும் இவருக்கு கைவரப் பெற்று வீச்சு மிக்க கவிதைகளை இவர் எதிர்காலத்தில் படைக்க வேண்டுமென்பது எமது ஆசை எதிர்பார்ப்பு. இச் சிறுநூலில் பல இடங்களில் எழுத்துப் பிழைகள் மலிந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
நா. சோமகாந்தன்
55

Page 30
நூல் தளிரே தங்க மலரே
(சிறுவர் பாடல்கள்) ஆக்கம் : மொழி வரதன்
வெளியீடு: சாரல் வெளியீட்டகம், 7) பல்கூட்டுச் சந்தை, ரொசிட்டா கடைவீதி, கொட்டகலை, விலை : ரூ. 180/=
ஈழத்தமிழிலக்கியத்தில், சிறுவர் இலக்கியத்துறை ஏனைய துறைகளின் அளவுக்கு வளர்ச்சிபெறவில்லை. அதிலும் சிறுவர்க்கான பாடல்களை எழுதுவோர் மிகச்சிலரே. சில தசாப்தங்களின் முன்னர் மா. பீதாம்பரம், சோமசுந்தரப்புலவர், வேந்தனார் முதலியோர் சிறப்பாக இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர் களுக்குப்பின் சத்திய சீலன், அம்பி, வ. இராசையா, த. துரைசிங்கம், நீர் கொழும்பு தர்மலிங்கம் முதலியோரின் சிறுவர் பாடல்கள் பாராட்டும் படியாக அமைந்து இருந்தன.
சிறுவர்களுக்கான இலக்கியத்தைப் படைப்பது எளிதான விஷயமல்ல. சிறுவர்களின் உலகம் ஓர் எல்லைக் குட்பட்டது. அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில், அவர்களின் மனதைக் கவரக்கூடிய வகையில் சுவையாக, கவர்ச்சியாக நல்ல எண்ணங்கள் அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில் அவர்களுக்கான இலக் கியத்தைப் படைக்கவேண்டும். குழுவாக இசையோடு பாடுவதென்றால் சிறுவர் களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே' என்ற சோமசுந்தரப்புலவரின் சிறுவர் பாடல்
56
களும், காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றி கட்டிக் கொஞ்சும் அம்மா, பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத்தரும் அம்மா, முதலிய வேந்தனாரின் பாடல்களும் சிறுவர்களை வெகுவாகக் கவர்ந்தன.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பல முற்போக்கான, புதுமைக் கருத்துக்களைப் பொதுவில் பெரியோர்களுக்காகப் பாடியிருக்கிற போதிலும், அவற்றில் பல சிறுவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் எளிய நடையில், எழுதப் பெற்றுள்ளதை மறந்து விட முடியாது.
சொல்லவல்லாயோ கிளியே! சொல்ல நீவல்லாயே ? - போன்ற பாடல்களைக் கூறலாம்.
இந்நூலாசிரியர் மொழிவரதன் பாரதியின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப் பெற்றவர். கல்வியூட்டும் ஆசிரியப் பணிகளில் பல்லாண்டு அனுபவம் கொண்டவர். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாடகம், மெல்லிசைப்பாடல் முதலிய பல்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். உளவியலை விசேடமாகக் கற்றுத் தேர்ந்த பட்டதாரி.
சின்னஞ்சிறு குழந்தைகளே, சிட்டாய்ப்பறக்கும் குழந்தைகளே, எண்ணங்கள் பல கொள்ளுங்கள் எதிர்கால வாழ்வை வெல்லுங்கள் குட்டிக் குட்டிக் கதைகள் கோடி உண்டு அறிவீரே. எனச்சிறுவர்களை அன்புடன் அழைத்து, குட்டக் குட்டக் குனிபவன் கோழை, மதுவில் மூழ்குபவன் மடையன், திட்டம் இல்லாது வாழ்பவன் தரித்திரன், கட்டுக் கடங்காதவன் காவாலி சிறார்களின் மனதில் அவர் புகட்டும் கருத்துக்கள் நேர்த்தியாகவுள்ளன.
ஞானம் - டிசம்பர் 2003

சமாதானம், சமத்துவம், தொழி லாளர்களின் அவலம், பெண்களின் பெருமை, வறுமை ஒழிப்பு, சமூக
முன்னேற்றம்,போரின் கொடுமை,கல்வியின் அவசியம், விடாமுயற்சி முதலிய அரிய கருத்துக்களை மாணவர்மனங்களில் பதியும் வண்ணம், வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல, மிகச்சிறப்பாக இனிய சந்தத்துடன் கூடிய எளிய பாடல்களின் மூலம், இளம் சமுதாயத்துக்கு அறிவுறுத்தியிருப்பதைப் பாராட்ட வேண்டும்.
இந்நூலில் சிறுவர்களைக் கவரும் வண்ணம் பல படங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. எனினும் சிலவற்றில் எம்சிறுவர்களுக்கு அறிமுகமில்லாத வேற்றுக்கலாசாரம் இடம் பெற்றிருப்பது தெளிவாகத் தெரிகிறது. பாப்பாவுக்கு
என்ற பாடலில்னு எழுத்துக்குப்பதிலாக
‘னு’ என்று அடிக்கடி வந்திருப்பதை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள வேண்டும் .
முதலாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையான மாணவர்க்கு நல்லறி
வூட்டும் நூல் இது.
ਅs§ஆ.சோமகாந்தன்.
நூல் ; அப்புறமென்ன. ஆக்கம் : குறிஞ்சி இளந்தென்றல் வெளியீடு: மல்லிகைப் பந்தல்,
20174றுரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13 விலை : ரூ. 120/-
Rழத்திலக்கியத்தின் இன்றி
யமையாத அங்கமாக விளங்கும் மலையக இலக்கியம் இப்போது புது வேகத்துடன் வீறுகொண்டெழுந்து விட்டது. பாரம்பரிய தாயகத்தில் வாழ்ந்து வரும் ஈழத்
ஞானம் - டிசம்பர் 2003
தமிழர்களின் இளைய சகோதரர்கள் இவர்கள். இவர்களின் மூதாதையர்கள் வெள்ளைக்காரர்களால், தேயிலை, இறப்பர் தோட்டங்களில் கூலிகளாகப் பணியாற்றக் கூட்டிவரப் பட்டவர்கள். இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி இலங்கை மலைகளைப் பசுமைப்படுத்தி, வளமும் செழிப்புமூட்டி, தேயிலைச் செடிகளுக்கே பசளையாகிப் போனவர்கள்.
“தேனிரை உறிஞ்சும் நாவுக்கு என்றாவது தெரியுமா? மலைமக்களின் ஏக்கங்கள்?” அடிப்படை வசதிகளேதுமின்றி, இன்னும் சிறைக் கூடு போன்றலயங்களில் மலையக மக்களின் வாழ்க்கை அப்படியே இருக்கிறது. கல்வி வசதிக் குறைவு, கடன் திண்டாட்டம், காலை முதல் மாலை வரை வேலை. கள்ளரக்கனின் கொட்டம், மூடத்தனத்திலிருந்து விடுபடாமை, இன்னும் அங்கு ஆட்சி செலுத்திக் கொண்டேயிருக்கிறது. போதாக் குறைக்கு அரசியலும் தொழிற் சங்கமும் புரியும் சுரண்டலும் ஏமாற்றும் அவர்களை நன்கு திரள விடாமல், முன்னேற்றத்தை முடக்கும் தடைக்கற்களாக.
ஏமாற்றத்துக்கும் ஏழ்மைக்கும் அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்படும் மக்களி டமிருந்து அவர்களின் அனுபவம், வீரிய மிக்க இலக்கியப் படைப்புகளாக வெளிப்படும். மலையகப் புத்திஜீவிகள், சிருஷ்டிகர்த்தாக்களின் ஆக்கங்களில் இதனைக் காணமுடிகிறது. “குறிஞ்சி இளந்தென்றல்'அப்புறமென்ன-”நூலில் உள்ள கவிதைகளின் மூலம் அவர்களின் வரிசைக்கு புதிதாக வந்துசேர்ந்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.
57

Page 31
அரசியல் புருடாத்தனங்களை நோக்கி, தமது கவிதைகளால் உறைக்கக் கூடியதாக சாட்டை அடி கொடுக்கிறதைப் படிக்கும்போது மக்கள் அனுபவிக்கும் கவிஞரின் உள்ளம் உருகி நெகிழ்ந்து போயிருப்பதை உணரமுடிகிறது.
"வீடமைப்புத்திட்டம் என்று சொன்னாங்க ஆளுக்கொரு விடுகட்டித்தருவோம்என்றார்கள் தேர்தல்முடிந்ததும் சொன்னதுபோல்செய்தாங்க ஆளுக்கொருவிடுகட்டினாங்கபிறகுதானேதெளிஞ்சது கட்டினவிடுநமக்கில்லைதலைவர்களுக்கென்று இதுதாங்க எமக்கு நடக்கிற அநியாயம் மலையக சுயநல அரசியல் ஏமாற்றுக்களை எத்தனை தெளிவாக கவிஞர் படம் பிடித்து காட்டியுள்ளார்.
போதும் உன் பொறுமை இனியும் துயில் கொள்ளாதே. விழித்தெழு புது விடியலைத் தேடி இனி இவர்களின் காடுகளில் அமில மழை பெய்யச் செய் அநியாயங்களைப் பொறுக்க முடியாமல் கவிஞரின் உள்ளத்தில் ஆக்ரோஷம் கொப்பளிக்கிறது. ஈழத்திலக்கியத்துக்கு இந்நூல் மலையக இலக்கியத்தின் புதியதொரு பங்களிப்பு
நா. சோமகாந்தன்.
Լ06ն) 60 li I Ց
அல்லல்களினால்
പ്പില്ക്ക நூல் கலிக்கு வந்தவன்
ffഖങ്) ஆக்கம் : ச. வே. பஞ்சாட்சரம் வெளியீடு: தூண்டிஇலக்கிய வட்டம்
141, கேணியடி, திருநெல்வேலி விலை : ரூ. 170/-
இந் நாவல் இரண்டாவது உலக மகாயுத்த காலம் தொடக்கம் கிட்டத்தட்ட
58
1960ம் ஆண்டுவரையுள்ள காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு எழுதப் பட்டிருக்கிறது. 36ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, இப்போதுதான் நூலுருவாக வெளிவந்திருக்கிறது.
படிப்பேறாது காவாலியாகத்திரிந்த சரவணன், மலேசியா சென்று குடியும் குடித்தனமுமாக குபேரனாகி, குண்டு வீச்சில் குடும்பம் உட்பட அனைத்தையும் இழந்துவிட்டு, மன ஆறுதலுக்காக ஊருக்குத் திரும்புகிறான். தங்கை பொன்மணியின் கணவர் உலகநாதன் கட்டிட ஒப்பந்தக்காரர், தகாத வழியில் பணஞ்சேர்ப்பதறிந்து, நேர்மை வழியில் சேர்க்காத பணம் குடும்பத்தை அழித்து விடும் என எச்சரிக்கப் போக, அவர்கள் சரவணனை வீட்டை விட்டே வெளியேற்றி விடுகின்றனர். அவர் கோவில் கோவிலாகத் திரிந்து, அன்னதானப் பணிகளில் ஈடுபட்டுக் காவி தரித்து சாமியாகி விடுகிறார்.
பெருந்தகை என்ற இளைஞன் பி.எஸ்.சி படித்திருந்தும் வெள்ளைச் சட்டை உத்தியோகம் கிடைக்காததால், குடும்ப வறுமையைப் போக்க, தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மூத்தவி என்பவருடன் உலக நாதனின் வீட்டில் தோட்ட வேலை செய்வதற்குச் செல்கிறான். பாடசாலை சென்று கொண்டிருந்த அவரின் மகளுக்கு அவன் மீது காதல் ஏற்படுகிறது. பெருந்தகை அவரின் சாதியைச் சேர்ந்தவன் என்பதைத் தெரியாத உலகநாதன் தன் மகள் காதலிப்பவன் தாழ்ந்த சாதிக்கூலி என எண்ணி அவனைக் கொலை செய்யச் சதி செய்கிறார். மகள் இதனையறிந்து, காதலன் வீட்டுக்குச் சென்று விடுகிறாள்.
ஞானம் - டிசம்பர் 2003

மகன் ஒடிப்போன அவமானம் தாங்காத அவர் மலையகத்திலுள்ள நண்பன் வீட்டுக்கு ஒடிச்செல்கிறார். நண்பரின் மகள் குடித்தும், பலருடன் துர்நடத்தையில் ஈடுபட்டிருப்பதையுங் கண்டு, தன் மகளும் பெருந்தகையும் எவ்வளவோ சிறந்த வர்கள் என்ற உண்மை உள்ளத்தில் தோன்றியதால் ஊருக்குத் திரும்பி வந்து அவர்களை ஏற்றுக் கொள்கிறார். நாவலின் கதைச் சுருக்கம் இதுவே.
நூலாசிரியர் அக்கால யாழ்ப்பாணச் சமூகநிலையை, சாதிக்கட்டமைப்பை, படித்தவாலிபர்கள் கமம், கைத்தொழில் போன்ற ஒன்றில் ஈடுபடுவதை வெட் கமாகக் கருதும் மனோபாவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி வேற்றுமைகளைத் தெரியாத வரைக்கும் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை. விடிவு மலரப் போவதில்லை, வலியுறுத்தி, அவ்வேற்றுமைகளைப் கல்வி, பொருளாதாரம், பழக்கவழக்கம் முதலியவற்றில் மேம்பாடும்
என்ற உண்மையை
போக்க
உயர்சாதிக்காரர்களின் மனப்பாங்கு மாற்றமும் அவசியம் என்ற கருத்தை 40ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தி யிருப்பது பாராட்டுக்குரியது.
சென்ற அறுபதுகளில் எழுந்த ஈழத்து இலக்கிய விழிப்புணர்வை அடுத்து குறிப்பிடக்கூடிய பல நல்ல நாவல்கள் இங்கு தோன்றியுள்ளன. இவற்றின் புதிய உத்தி, வீச்சுமிக்க எழுத்து நடை, புதிய கருத்துக்கள் முதலியவை வாசகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றன. கதா மாந்தர்களின் கல்விநிலைக்கு அமைந் ததாக, பேச்சுமொழி புகுத்தப்பட்டு மண்வாசனை கொண்ட யதார்த்தத் தன்மைமிக்க நாவல்கள் வெளி வரத்துவங்கி சில தசாப்தங்களாகி விட்ட சூழ்நிலையில், சாதாரண பாமரத் தொழி லாளிகூட இலக்கணம் பிசகாத மொழியில் இந்நாவலில் உரையாடுகிறார்கள்.
கதாமாந்தர்களின் சம்பாஷனைகள் பல இடங்களில் சுற்றி வளைந்து, நீண்டு கொண்டிருப்பதால், இந்நாவலைப் படிப்பதற்குப் பொறுமை அவசியம்.
நா. சோமகாந்தன்.
ୱିଦ୍ଧି
శ్లో உள்நாடு
தனிப்பிரதி ரூபா 30/=
அரையாண்டுச் சந்தா : ரூபா 180/= ஆண்டுச் சந்தா: : ரூபா 360/=
சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள்
ஞானம் - டிசம்பர் 2003
*ஞானம் * சந்தா விபரம்
அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். 繁 அனுப்ப வேண்டிய பெயர், முகவரி.
T. Gnanasekaran 19/7, Peradeniya Road, Kandy.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : ரூபா 20 US$ (தபால் செலவு உட்பட)
59

Page 32
ഗZശ്രബശ്
(~ ശബബ ക്ര് ബഗ്ഗ്ലൂ"
മല്ക്ക്
S -பார்வையும் பதிவும் -
நாட்டிலே சமாதான முன்னெடுப்பின் பல்துறைசார் அம்சங்களின் ஓர் அங்கமாக நடைபெற்று முடிந்த சிங்கள - தமிழ் கலைக்கூடல் அமைந்தது. “முகிழ்த்து மலர்வோம் நம் சோதர உறவுடன்” எனும் மகுடவாசகத்தைக் கொண்டமைந்த இக்கலைக் கூடலின் கருத்து நிலைபற்றிப் பேராசிரியர் கா. சிவத்தம்பி தமது சிறப்புரையில், “போரின் முக்கிய விடயங்கள் மனிதத்தைப் பற்றியே பேசியுள்ளன. பிரிவைப் பற்றிப் பேசவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் மனிதர்களாகச் சந்திக்கின்ற இடம் இது. வரலாற்றில் நாம் விட்ட தவறானது தனித்துவங்களை வேறுபாடாகக் கருதியதே. ஒன்றுமை பற்றிக் கதைக்காததால் ஏற்பட்ட விளைவே. நாம் பழையதை மறந்துவிட்டோம். இந்த ஒற்றுமைகளை மீளக் கட்டியெழுப்ப இது போன்ற விழாக்கள் வழி சமைக்கும்” என்றார். இக்கூற்று கலைக்கூடலின் வகிபாகத்தை உணர்த்தி நிற்கிறது. இடம்பெற்ற உரைகளும், கலை நிகழ்வுகளும் ஒற்றுமையூடு தேசத்தைக் கட்டி எழுப்பி அதன் மூலம் சுபீட்சத்தைத் தரிசிக்கும் உண்மையை உணர்த்தின.
ஆயினும், நாட்டின் சகல துறைகளிலும் இனவெறியைத் தூண்டிச் சமாதானத்தைச் சாய்ப்பதற்கு உலை வைத்துக் கொண்டிருக்கும் சில இனவெறி விரும்பிகள் கலைக் கூடலைக் கலைக்கும் முயற்சியில் மிகுந்த ஆர்வத்தோடு இறங்கினர். சொற்போர் மற்றோராகி கலைஞர்களின் குருதிகள் சிந்தின. அன்றுதான் தமிழ்க் கலைஞர்களைப் பாதுகாப்பதற்கு முதல் தடவையாக சிங்களக் கலைஞர்கள் ரத்தம் சிந்திய வரலாறு ஈழத்தில் ஆரம்பமாகியது. ஆனால் பாலுக்கு மட்டுமே அழுகின்ற பாலகர்கள் பசுவதை பற்றிச் சிறிதுகூட அக்கறை கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
கொழும்புக் கம்பன் கழகம் நடாத்திய 2003ம் ஆண்டிற்கான இசைவேள்வி கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் எட்டு நாட்கள் நடைபெற்றன. இசை அரங்குகளை நம்நாட்டுக் கலைஞர்களும் இசைப்பேரரங்குகளைத் தமிழ் நாட்டுக் கலைஞர்களும் அணி செய்தனர். இசைப்
歌 "、" リ躍 பேரரங்குகளை அணிசெய்யத் தமிழ்நாட்டிலிருந்து மதுரை ரி.என்.
சேஷகோபாலன், நெய்வேலி ஆர். சந்தானகோபாலன், மதுரை ரி. எஸ். மணி, திருமதி பம்பாய் ஜெயழரீ, திருமதிசுதா ரகுநாதன், சஞ்சய் சுப்பிரமணியம், ரி.ரி. சங்கரநாராயணன், திருமதி. பூஷணி கல்யாண ராமன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்களில் மதுரை ரி என். சேஷகோபாலன் தமிழ் உலகின் இசை முதல்வர் தற்போது தாமே என்பதைத் தமது பாடல் மூலம் நிரூபித்தார்.
60 ஞானம் - டிசம்பர் 2003
 
 
 
 

அன்றுதான் தமிழ்க் கலைஞ ர்களைப் பாதுகாப்பதற்கு முதல் தடவையாக சிங்களக் கலைஞர்கள் ரத்தம் சிந்திய 62/лт6Uлдр/ ஈழத்தில் ஆ ரம்பமாகியது. ஆனால் பாலுக்கு மட்டுமே அழுகின்ற வித்துவான் பட்டம் பெற்றிருந் 'லகர்கள் பசுவதை பற்றிச் சிறிதுகூட தமை வியப்போடு பாராட்டப்பட அக்கறை கொள்ளவில்லை என்பதையு வேண்டிய விடயம். வயலின் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் இசையால் எட்டு நாட்களும் ; : ... 8 リ淡 சபையைக் கட்டிப்போட்ட இவர் அரங்கில் அளிக்கை செய்து கொண்டிருந்தபோதே இசைப் பேரரங்குப் பாடகர்களிடம் இருந்து பல தடவைகள் பாராட்டுகளைப் பெற்றார். எதிர்காலத்தில் தமிழ் இசை உலகில் வயலின் இசைத் துறையின் மணி முடியாக இவர் விளங்குவார் என்பதில் ஐயமேதும் இல்லை.
பகல் வேளைகளில் நடைபெற்ற இசை தொடர்பான கருத்தரங்குகளில் மதுரை ஜி. எஸ். மணி, நெய்வேலி ஆர். சந்தான கோபாலன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். செய்முறையோடு இடம்பெற்ற இக்கருத்தரங்கு இசைத்தமிழ், நாதோபாசனை, இராகம் - ஆத்மபாவனை, தமிழ் இசை வரலாறு ஆகிய தலைப்புக்களில் விரிவாக நடைபெற்றது. கலைத்துறைசார் மாணவர்களுக்கு மிகச் சிறந்த பயனை இக்கருத்தரங்கு வழங்கியது.
இறுதிநாளன்று மறைந்த நம்நாட்டு இசை மேதைகளான நாதஸ்வர வித்துவான் என். கே. பத்மநாதன், வயலின் வித்துவான் ரி. வி. பிச்சையப்பா, நாதஸ்வரவித்துவான் பி. எஸ். பிச்சையப்பா,இயலிசைவாரிதிபிரம்மபூரீந.வீரமணிஐயர்ஆகியோரின்திருவுருவப்படத்திறப்பும் அஞ்சலி உரைகளும் இடம் பெற்றன. ஈழத்தின் பலபாகங்களில் இருந்தும் இசைப்பிரியர்கள், பல்கலைக்கழக நுண்கலைத் துறையினர், இராமநாதன், விபுலானந்தா இசை நடனக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இசைபருகினர்.
"கானாமிர்தம் படைத்த காட்சி மிக விந்தையடா காட்டுநெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில் பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்ற பாரதி பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
திருமறைக் கலாமன்ற ஏற்பாட்டில் யாழில் நான்குநாட்கள் நாட்டுக்கூத்துப் பெருவிழா நடைபெற்றது. இப்பெருவிழாவில் பகலில் கருத்தரங்குகளும் இரவில் கூத்து அளிக்கைகளும் நடைபெற்றன. வெவ்வேறு பிரதேசக் கூத்துமரபுகள் சார்ந்த கருத்தமர்வுகளும் கூத்து அளிக்கைகளும் இடம்பெற்றன. பேராசிரியர் சி. மெளனகுருவின் முன்னோக்கிப் பாய்ச்சலும் பின்னோக்கிய தேடலும்” என்ற தொடக்க உரையுடன் ஆரம்பமாகிய கருத்தரங்கில் மன்னார், வன்னி, மலையகம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேச அரங்க முறைமைகள் பற்றி விளக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட பிரதேசங்களின் அறியப்படாத சில பக்கங்களையும் கருத்தரங்கினை நிகழ்த்தினோர் புரட்டிப்பார்த்தனர். ஆய்வுநிலையுடன் கருத்துக்களைக் கூறியதோடு செயல் முறையினையும் இணைத்துக் கொடுத்திருந்தமை சிறப்புக்குரியதாகும். இறுதியில்
தமிழ் நாட்டைச் சேர்ந்த வயலின் வித்துவான் நாகை எஸ். பூநீராம் ஈழத்திலே தமக்கென ஒரு ரசிகர் அவையை உருவாக்கி விட்டுச் சென்றார். 21 வயதான இவர்
ஞானம் - டிசம்பர் 2003 61

Page 33
இடம்பெற்ற கலந்துரையாடல் உறைப்பான கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிசமைத்தது. அத்தோடு ஆரோக்கியமான கருத்துருவாக்கத்திற்கும் அது அடிகோலியது. “கூத்துக்கள் கிராமங்களில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அவற்றில் கற்றறிந்தோர் மாற்றங்கள் மேற்கொள்வது தவறானது” “பல்வேறு வகைசார் கூத்துகளில் இருந்து கூறுகளை உள்வாங்கி ஒரு பொது தேசிய மரபினை உருவாக்க வேண்டும்” என்ற இரு கருத்துகளும் விவாதத்தில் முதன்மை பெற்றன. முதற்கருத்து கூத்துப் பேணுகை தொடர்பானதாயினும், காலவோட்டத்தில் ஏற்புடையதல்ல. நகரமயமாக்கம் வந்தபின் கிராமங்களே கேள்விக்குறியாகும் நிலையில் கூத்தின் கிராமம்சார் இருப்பு என்பது பொருத்தமற்றது. அத்தோடு நவீன கல்விமுறையில் நாட்டார் கலைகள் கவனிப்புக்கு உள்ளாகும்போது அதன் மேனிலையாக்கம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இன்னும் புதிய பரிசோதனை முயற்சிகளை கலையில் மேற்கொள்ள முடியாத சூழலையும் இக்கருத்து உருவாக்கிவிடும். எனவே கூத்துக்களின் நகரம் நோக்கிய நகர்வும், அதன் மாறு நிலைகளும் மிகவும் அவசியமானவையே. இரண்டாவது கருத்தினை நோக்கும்போது, ஒரு பொதுச் தேசிய மரபை உருவாக்குதல் சிறப்பிற்குரியதே எனினும் அதன்பின்பு பிரதேசத்துக்குரிய சிறப்புமரபுகளின் அழியா நிலைக்கான உறுதித்தன்மையும் கவனத்திற்கு எடுக்கப்படல் வேண்டும். இன்னும்; பொதுத்தேசிய மரபுஉருவாக்கப்பட்டதன்பின்னர் பீற்றர்புறுக் குறிப்பிடும்பல் தேசிய அரங்கு நோக்கிய பயணப்பாடும் சிந்தனைக்குரியதாக அமைய இக்கருத்து வழிசமைக்கலாம்.
அளிக்கை செய்யப்பட்ட கூத்துக்களில் கல்சுமந்த காவலன் (மன்னார் - வடபாங்கு), அருச்சுனன்தபசு, காமன் கூத்து (மலையகம்) ஏகலைவன் (யாழ். தென்மோடி), சடாசுரன் வதம் (யாழ். வடமோடி) கம்பன்மகன் (யாழ் - தென்மோடி), காத்தவராயன் (சிந்துநடை) என்பவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் மலையகம் சார் கூத்துக்கள் முதற் தடவையாக யாழ் மண்ணில் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கதாகும். அளிக்கைகளையும், கருத்தரங்குகளையும் அவ்வப்பிரதேசக் கலைஞர்களைக் கொண்டு நடத்தியமை சிறப்பிற்குரியதாகும். இவ்விழாக்கூத்து கலைசார் தேடல், முதன்மை, அக்கலைக்குரிய காலநிர்ணயம், விழிப்புணர்வு என்பவற்றை ஏற்படுத்தியிருந்தது.
அ. காந்தா, செ. புரட்சிகா, மலைமகள் ஆகிய மூன்று பெண் போராளிகள் விழுதாகி வேருமாகி' என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளனர். 2ம் லெப். மாலதி படையணியின் வெளியீடான இந்நூல் பெண்போராளிகள், அவர்களின் போரியற் திறன்கள், போருக்குள் நின்ற வாழ்வனுபவம் முதலிய பலவற்றை முன்வைக்கிறது. உயிர்த்துடிப்பான நடையோடு வாசிப்பவரை வசீகரிக்கும் ஆற்றலும் வாசகரை உறைய வைக்கும் சிறப்புத் தன்மையும் இந்த நூலுக்கு உண்டு.
'நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள்’ என்ற நூலும் போராளிகளால் வெளியிடப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வெளியீடான இந்நூல் ஈழத் தமிழினத்தின் முதற்போர் நூல் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
கவிஞர்நீலாவணனின் கதைகள்'ஒட்டுறவு என்றநூலாக வெளிவந்துள்ளது. ஒலுவில் அமுதன் நூலறுந்த பட்டம் என்ற நூலையும், ஒ. கே. குணநாதன் வெள்ளைக்குதிரை' என்ற நூலையும் கலாவிஸ்வநாதன் மனித ஏணிகள் என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளனர். பதுளை சிவானந்தாதமிழ்மகாவித்தியாலயம் அர்த்தநாதம் என்றமலரையும் வெளியிட்டுள்ளது. அண்மைக்கால வெளியீடுகளில் இவை குறிப்பிடத்தக்கவையாகும்.
62 ஞானம் - டிசம்பர் 2003

} SDIT-PažII * 電y薯r置r寧體r * g), 擎醬F證*靈瓷} மோதுர்ஆறுார் ܚܵܐ
மதிப்பிற்குரிய "ஞானம்' ஆசிரியர் அவர்களுக்கு
வகைகம, ஞானம் கிடைத்தது; மெத்த நன்றி
தமிழ்த் தேசிய உணர்வு தொடர்பாக பேராசிரியர் கைலாசபதிபற்றி முல்லைமணி அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சரியானவையே
"மார்க்ஸியப் பார்வை இல்லாததால் தான், டாக்டர் மு. வ, அ. ச. ஞானசம்பந்தன் ஆகியோரின் இலக்கியத்திறன் ஆய்வில் ஆழம் இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கருதுகின்றாரா?
தமிழில் இலக்கியத் திறன் ஆய்வை அறிவு ரீதியாக அணுகி அதற்குத் தளம் அமைத்துக் கொடுத்த பெருமை பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களையே சாரும். இந்தப் பெருமையையும் பேராசிரியர் சிவத்தம்பி, தமக்கும், தமது மாக்ஸிஸ அணிக்கும் உரித்தாக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
தி.மு.க. சார்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலக்கணத்தில் ஆழமான புலமை இல்லை என்று சொல்லும் பேராசிரியர் அவர்களுக்குப் பேராசிரியர் இலக்குவனார் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேராசிரியர் இரா. குமாரவேல் ஆகியோர் பற்றி எதுவுே தெரியாதா?
கம்பராமாயணம் பற்றி பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர், சோமசுந்தரப் பாரதியாரோடு அண்ணாத்துரை நடத்திய சொற்போர்’ உலகப் பிரசித்தம்
அன்புடன் வாகரை வாணன்.
ஞானம் 2003 ஜூலை இதழில், ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் பகுதியில் தமிழ்ச்செல்வி என்ற பெண் எழுத்தாளர் பற்றி இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்கள் எழுதியிருந்தார்கள். எமக்கு தமிழ்ச்செல்வி அவர்களின் முழுமையான முகவரியை அனுப்பமுடியுமா? முடியுமானால் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
ஆ. உலகமங்கை கப்டன் வானதி வெளியீட்டகம் கிளிநொச்சி
"ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள்”-அற்புதமான ஒரு முயற்சி. இது ஒவ்வொரு இதழிலும் கட்டாயம் தொடரவேண்டும். ஞானத்தின் நடுப்பக்கம் எப்பொழுதும் இதற்காகவே இருக்கட்டும். - ஆயினும் 40 ஆவது இதழில் இதனைக் காணவில்லை. காரணம் யாதோ? இளையோர்களை ஊக்குவிக்கும் ஞானத்தின் முயற்சியில் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு செயற்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.
ஞானம் - டிசம்பர் 2003 63

Page 34
ஞானம் மூலமாகப் புதியவர்களின் அறிமுகங்கள் எனக்கு முக்கியமானது. நான் வாழைச்சேனைக்கு வேலைநிமித்தம் சென்றபொழுது- அங்கு ஒட்டமாவடி அநபாத் அவர்களைச் சந்திக்க முடிந்தது. இதற்குமுன் அவரை நான் கண்டதில்ல்ை. ஞானம்தான் வழிகாட்டி. அந்த விகையில் தங்களுக்கு எளது நன்றி அவர்கட்ட உங்கங்கள் நேரில் சந்தித்ததில்லையாபே
1. துல்பந்தன்
புன்னாலைக் கட்டுவன் தெற்கு.
இதழுக்கு இதழ் ஞானத்தின் வளர்ச்சி மிக மகிழ்ச்சி தருகிறது. அவ்வப்போது எழுத நினைத்த சில முக்கிய விஷயங்கள் -
* கம்பவாரிதியின் மூன்று தலைமுறைக் கதை மிக நன்றாகவே இருக்கிறது. ஜெயராஜுக்கு இப்படியும் ஒருமுகமா?” என்று பலர் ஆச்சரியப்படக்கூடும். எதைத் தொட்டாலும் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் அவருக்குண்டு. தனித்துவம் வாய்ந்த ஒரு ஆக்சு இலக்கியக்காரர், பேச்சிலும் எழுத்திலும் மட்டுமல்ல, எடுத்த ஒரு செயலைச் செவ்வனே நிமிர்த்தி நிலைநிறுத்துவதிலும் அவர் ஒரு தனிப் பிறப்பிதான். அவருக்கு என்னது வாழ்த்துக்கள்.
* பேராசிரியர் சிவத்தம்பியின் நேர்கானல் ஞானத்திற்கு ஒரு கனதியைத் தந்திருக்கிறது. பேராசிரியர் பற்றிய பல விஷயங்களை வாசகர்கள் அறியக் கூடியதாக நேர்காணல் அமைந்திருக்கிறது. இந் நேர்காணல் நிறைவுற்றதும் ஒரு சிறிய நூலாக வெளிவருவது பயன்படத்தக்கது.
* ஈழத்துச் சோமு - சோமகாந்தனின் நேர்காணலும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அவருடைய வாழ்வோடு சேர்ந்த பல இலக்கிய நிகழ்ச்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. அவருடைய எழுத்தாற்றலை மட்டுமன்றி ஆளுமையையும் செயல் திறனையும் அதில் பக்கங்களினூடே காண்கிறேன். உடல்நலக் குறைவுள்ள நிலையிலும் அவர் ஓய்ந்துவிடவில்ல்ை. இன்னுமொரு பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் மறுபடியும் ஒரு நேர்காணலைச் செய்யும்பொழுது மேலும் பல சாதனைகளைக் காணமுடியும்.
* ஞானம் அட்டைப் படங்கள் பற்றி - அதி நவீன ஓவியங்கள் பற்றிய விளக்கம் எனக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. சில நண்பர்களிடம் கேட்டேன். அவர்களும் என் நிலையில்தான்.
அட்டைப் படம் குறித்து சிறு விளக்கத்தினை வெளியிட்டால் அதை வைத்துக்
கொண்டு ஓவியத்தை ரவிக்க முயற்சிக்கலாம்.
- வரதர் (சாகித்திய இரத்தினம் தி. ச. வரதராசன்) பாழ்ப்பாணம்
婚+ ஞானம் - டிசம்பர் 2003

இரைகள்
வியூகம் போட்டு கொண்டி களட்டி ஆயுள் பொழுதுகளில் தேங்கிக் கிடந்த மெளன வலிகளை உடைத்துத் திறந்தபோது
- உைைள் கனரி -
தாழ்வாரங்களிலும், தரவை வெளியெங்கும் திகைப்புக்கிடமாகி முள் தைத்த கால்களுடன் பரிச்சங்களை தோளிலேற்றி
கழிப்பூட்ட மறந்த வாழ்க்கையை விட்டும் / நிலத்தில் படர்கிறது அவதானிக்க மறந்த
கரும்புலர்வு
சிறிதாப் சாதுர்பமும்
நிறையவே சுமரத்தானிகளுடனும் அதிர்வுகளை சேமித்து நெருக்கடிகளை தாரை வார்த்தும் சிவது நெஞ்சங்களில் நுளைந்தாலும்.
மணல் கற்களுடன் ஆற்றோட்டத்தின் ஆத்மாவை பறித்த பெப்ப மறுக்கும் மிழைக்காகவும்
இரை தேடும் அவதியில் வட்டமிடும் பருந்துகளை மறந்த குருட்டுக் கோழியின் குஞ்சுகளுக்காகவும்
காலச் சக்கரம் திட்டமாய் தெறிக்க
தேநீரின் அடி மண்டியாய் மிச்சமான நமது வாழ்க்கையோடு
வண்ணாத்தி மொய்க்கும் வீட்டிலிருந்தும் கழுத்து முறிந்த உயிரினமொன்றை காகங்கள் துரக்கி வருவதை அவதானித்தவாறு அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தது சமாதானத்தை சரி பார்க்க வந்த ஹெர்சுலீஸ் விமானமொன்று.

Page 35
(`მნXXნXCCCCXXნXX 臀
ଢେଁଚାଁ 5ff 鬣 - செ. சுத ', வட்டங்கள் போட்டுத் () தமிழ் வளர்க்கும் வித்தகரே!
C கொட்டங்கள் கோட்டுக்கு ளடக்கி (a ஏனைய கூத்தடிக்கிறீர்? '