கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.01

Page 1


Page 2
தரமான தங்க நகைகளுக்கு .
NAGALINGAMS
101, COLOMBO STREET KANDY TEL: 081 - 2232545
F SS
 
 

- بنيته . 3.
விரிவும் ஆழமும்
பெறுவது
ET-Ti.
| o!
ஆசிரியர் : தி. ஞானசேகான்
துண் ஆசிரியர்கள்: புலோலியூர் க. சதாசிவம் அந்தனி ஜீவா
t இணையம் பதிப்பு ஆசிரியர் :
ஞா. பாலச்சந்திரன்
ஓவியர்கள் : கிக்கோ நா. ஆனந்தன் Lլ Ճ՛ւյւIII
நிர்வாகம் : கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு . தி. ஞானசேகரன் 1971 பேராதனை வீதி, கண்டி
| Telephone- (181 247857) (Office)
J81-22,34755 (Res. | Milli bibill: - 1777 - 3{ }{5},
F: x - S-22-755 E-Mail -
ElliIIlliIII magazine (1 yahul.ru ——
எாாம் - புவ (பு
இதழினுள்ளே .
நேர்கானல்
பேராசிரியர் ரா. சிவத்தம்பி
சிறுகதை அன்றே என்னின் அன்றே பாம்
வாரி இ.ஜெயராஜ்
- 1ெ iார்
கவிதை பூகோளமயப் பொங்கல்
- புபோயிபுரர் நீர் பயன் பாதுகாப்பு
- விஞர் . இக்பால் சத்தியப் பிரமானம்
- 1 பிராந்துன்
கட்டுரைகள் பேராசிரியர் கைலாச தியும் தமிழ்த் தேசியமும்
- சி பருவகப்
பேராசிரியர் சி. மெளனகுரு ஈழத்து இலக்கிய நம்பிக்
சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
- .ொருள்
நானும் என் எழுத்தும்
- புரிந்தவா வினாத மேடை
E IN II, 5; III |1|
ད།
|}
III
..

Page 3
ஞானம்
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் لر .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
அன்பார்ந்த கலை இலக்கிய நெஞ்சங்களே, வணக்கம்.
‘ஞானம் வாசக அன்பர்களுக்கு, படைப் பாளிகளுக்கு, நலன்விரும்பிகளுக்கு எமது உளங்கனிந்த புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். மலரும் புத்தாண்டில் ஈழத்துக் கலை இலக்கிய வளர்ச்சிக்கு இதழியல் மூலம் சிறப்பாகப் பணிபுரிவோம் என உறுதிகொள்வோம்.
ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கு ஊடகவியல் சாதனங்களில் காலத்தால் மூத்தது எனக்கொள்ளக்கூடிய பத்திரிகைகளின் பங்கு மகத்தானது. அவை நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரச் செய்திகளைச் சேகரித்து மக்களுக்கு அளித்து பொதுசனத் தகவல் பரிமாற்று ஊடகமாக இயங்குகின்றன. இருப்பினும், கலை இலக்கியம் வாழ்வியலின் ஓர் அம்சம், கருத்துக்களை உருவாக்கும் ஊற்று என்பதால் அவற்றிற்கும் பத்திரிகைகள் கணிசமான இடத்தை ஒதுக்கி வருகின்றன. தேசியப் பத்திரிகைகளின் வாரமலர்களில் காத்திரமான கலை இலக்கிய அம்சங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. வாசகர்களின் பரப்பளவு பெருகிவரும் பத்திரிகைகளின் குறிக்கோள் வர்த்தக நோக்குடையதால் கலை இலக்கியத்திற்கு ஒதுக்கப்படும் பக்கங்கள் இன்று மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. பூகோளமயம் இதனை இன்னும் சிக்கலாக்கி உள்ளது.
இந்நிலையில் கலை இலக்கியச் சிற்றேடுகளின் பங்கும் பணியும் மாற்றீடாக மட்டுமல்லாமல் மகத்தானதுமாக அமைகின்றன. தமிழ்நாட்டிலுள்ள பிரபலமான சிற்றேடுகளோ வாசகர் தொகைப் பெருக்கத்தையும், சந்தை வாய்ப்பையும் கருத்திற்கொண்டு கலை இலக்கியத்தை மலினப்படுத்துகின்றன. நமது நாட்டில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டபோதும் கலை இலக்கியச் சிற்றேடுகள் எமது கலை இலக்கியப் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் பேணி வருகின்றன. இலக்கியப் பரிசோதனைகள், திறனாய்வுகள், விவாத அரங்குகள் ஆகியவற்றுக்குக் களமமைத்துக் காத்திரமான படைப்புகள் வெளிவர வழிசமைக்கின்றன. புதிய பரம்பரையினர் இலக்கியச் சிந்தனைத் தெளிவு பெற்று
1. ஞானம் - ஜனவரி 2004
 
 

நம்பிக்கைதரும் படைப்புகளை ஆக்கத் தலைபட்டுள்ளனர். சுருங்கக் கூறின் எமது சீரிய இலக்கியச் செல்நெறியைச் சிற்றேடுகள் செழுமைப்படுத்திச் செல்கின்றன.
ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்ற விரிந்த நோக்கில் இன்று பல சிற்றேடுகள் மலர்வதைக் கண்டு மகிழ்கிறோம். கலை இலக்கிய ஆர்வம் காரணமாகப் பயணத்தை ஆரம்பித்து, எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியாமையினாலும், திட்டமிட்டுச் செயலாற்றாமையினாலும், குறுகிய நோக்கங்கொண்டு இயங்குவதினாலும் பல சிற்றேடுகள் இடைநடுவில் நின்றுவிடுகின்றன.
சிற்றேடுகளின் உலகின்முன் பல பணிகள் காத்திருக்கின்றன. தனிமனிதப் பகட்டொளி வீசாது, சோதரச் சிற்றேடுகள் மீது காழ்ப்புணர்வு கொள்ளாது, வலிந்து குறை கண்டு தரமிறக்கும் குறுகிய செயல்களில் ஈடுபடாது, பொறுப்புணர்வுடன், கூட்டுச்செயற்பாட்டுடன் எமது புனிதப் பணியைத் தொடரவேண்டியுள்ளது.
ஞானம் இப்புத்தாண்டில் பல புதிய திட்டங்களை அறிமுகஞ் செய்து செயலாக்கவுள்ளது. எமது பணியை நிறுவனப்படுத்த ஞானம் கலை இலக்கியப் பண்ணை உதயமாகின்றது. இது தொடர்பான செய்தியினை இவ்விதழினுள்ளே காணலாம்.
இதுவரை காலமும் ஞானம் சஞ்சிகையின் தள அமைப்பு (Layout), அச்சுப்பதிவு, வெளிவரும் கால ஒழுங்கு ஆகியவற்றில் சில குறைபாடுகள் இருந்தன. அவற்றை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஞானம் சஞ்சிகையை நேர்த்தியான அச்சுப்பதிவுடன் சிறந்த முறையில் வெளிக்கொணர, இலங்கையின் முன்னணி அச்சகங்களில் ஒன்றான, சர்வதேச விருதுபெற்ற யுனி ஆர்ட்ஸ் பிறைவேற் லிமிடெட் நிறுவனத்தினரை நாடினோம். அந்நிறுவனத்தின் அதிபரும், சமூக சேவையாளருமான திரு. பொன் விமலேந்திரன் அவர்கள் பெருமனத்துடன் எமது பணிக்கு ஒத்துழைப்பு நல்க முன்வந்துள்ளார். அவரது பங்களிப்புடன் ஞானம் சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் முதல் திகதியிலேயே சிறந்த முறையில் வெளிவரும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் வாசக அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது கரங்களை வலுப்படுத்த அன்பார்ந்த வாசகர்கள், படைப்பாளிகள், விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தையும் நாடுகின்றோம்.
அடுத்த இதழ். அவுஸ்திரேலிய நான்காவது எழுத்தாளர் விழா'ச் சிறப்பிதழாக வெளிவருகிறது. ஜனவரி 25ஆம் திகதி கன்பராவில் நடைபெறும் மேற்படி விழாவில் இம்மலர் வெளியிடப்படவுள்ளது.
- ஆசிரியர்
ஞானம் - ஜனவரி 2004 3

Page 4
அன்றே எண்ணின் அன்றேயாம்
ஆமென்றுரைக்கின் ஆமேயாம்.
‘இல்லை என்றால் இல்லை உள்ளதென்றால் உள்ளது’
- பரம்பொருள் பற்றிக் கம்பன்.
உள்ளம் கொதிக்க கொழும்புக் கல்யாணம் ஒன்றில், கால்கடுக்கத் தட்டேந்தி நிற்கிறேன். மனக்கழுகு முப்பத்தைந்தாண்டுத் தூரத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறது.
ஊர்க்கல்யாணம், சம்பவங்கள் ஒவ்வொன்றாய் உள்ளத்துள்
மெகா தொடராய் விரிய, மனநாக்கு உருசிக்கத் தொடங்குகிறது. மலர் ஆசையம்மாவின் மறக்கமுடியாத கல்யாணவீடு. சாகும்வரையும் அச்சம்பவம் மறக்குமா? நேற்றுநடந்தாற்போல், நினைக்க இப்பொழுதும் மனஞ்சிலிர்க்கிறது. அந்தக்கல்யாணவீடுபற்றி, உங்களுக்கு முக்கியமான ஒருவிசயம் சொல்லவேண்டும். அதை முடிவில் சொல்கிறேன்.
米 米 米 米 米 米 米
LDலர் ஆசையம்மாவின் கல்யாணம். முப்பத்து மூன்று வயதிலாவது, குமர் கரையேறுகிறதே என்ற குதுாகலம் ஆச்சியின் முகத்தில்.
4. ஞானம் - ஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிய மாமா, அப்பர் மாமா, சீனி மாமா, வரதர் மாமா, எல்லோர் முகத்திலும் சுமைநீங்கிய களை. அம்மா, தேவி ஆசையம்மா, கிளி ஆசையம்மா ஆகியோர், கூடிக்கூடிக் குதுாகலமாய்க் குசுகுசுக்கின்றனர். மலர் ஆசையம்மாதான் குடும்பத்தின் கடைக்குட்டி. மொத்தம் எட்டு உருப்படிகள். கிளிஆசையம்மாவின் கல்யாணம் பத்துவருசத்துக்குமுந்தி நடந்ததாம். பத்தாண்டுகளின்பின் வீட்டில் நடக்கப்போகும் தங்கையின் கல்யாணம், குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக்கியிருந்தது. மூத்த பிள்ளைகளுக்கு கொடுத்து மிஞ்சியவை, அண்ணன்மார் மனைவிமாருக்குத் தெரியாமல் கொடுத்த, உழைப்பின் ஒருபகுதி,
வளவும், வயலும் தந்த பயன்கள், மலர் ஆசையம்மாவிற்கு சீதனமாக, கல்யாணம் நிச்சயமாகி இருந்தது.
அப்போது எனக்கு வயது 6J(ԼՔ. பள்ளிக்கூட லீவுக்கு ஊருக்கு வரும்போது, ஆச்சி தந்த ஐஞ்சு மோதகத்துக்குப் பிறகும், அவவுக்குத் தெரியாமல் இரகசியமாய் ஒரு மோதகம் தரும், மலர் ஆசையம்மாவில் கொள்ளைப்பிரியம் எனக்கு. அவவுக்குக் கல்யாணம். கல்யாணம் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும், உறவுகூடியதில் மகிழ்ந்துபோய் நிற்கிறேன்.
வீடே குதுாகலிக்க,
பின்வளவில் நிற்கும் மலர் ஆசையம்மாவிற்குப் பிடித்த நாவல்மரத்திற்குக்கீழ், அவவின் மடியில் படுத்துக்கிடக்கிறேன். எதுவும் பேசாமல் ஆசையம்மாவின் கண்கள் ஆகாயம் நோக்குகிறது. ஆசையம்மாவின் முகத்தில் மாற்றம் உணர்கிறேன். நான் உணர்ந்ததை, அடுத்தநாள் பூரணம்மாமி எல்லார்முன்னாலும் வாய்விட்டுச் சொல்கிறா. "கல்யாணக் களையில மலரிட முகமே மாறிப்போச்சு. அவசொல்ல, 'ஓம் ஓம்’ என்று உறவு அங்கீகரித்தது. ஒன்றும் பேசாமல் மலர் ஆசையம்மா உள்ளே போகிறா. 'பார் பார் கலியாணத்தைப் பற்றிக் கதைச்சவுடன அவவுக்கு வெட்கமாக்கும், மாப்பிள்ளை எப்ப வர்றாராம்?
பூரணம் மாமி புதினம் விசாரிக்கிறா. அவ மாப்பிள்ளையைப்பற்றிக் கதைச்சவுடன, போனமாசம் பொம்பிள பார்க்க வந்த
ஞானம் - ஜனவரி 2004

Page 5
மாப்பிள்ளையின் முகம் நினைவில் வருகிறது. மறக்கமுடியாத நாள்.
இந்தக் கல்யாணம்பற்றி முக்கியமாய் உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும். முதலில் பொம்பிளை பார்த்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு, பிறகு அதைச் சொல்கிறேன்.
糖糖熬糖料攀料
இருந்த ஒரே வீடு,
எங்கள் அம்மாவுக்கும், தேவி ஆசையம்மாவுக்கும், சீதனமாய்த் தரப்பட்டது.
ஆசையம்மாவின் புருஷன் "ஹெட் கிளாக். பதவியால் வீட்டின் மூன்றில் இரண்டு பகுதி,
அவருக்குச் சீதனமாக,
மூன்றில் ஒருபகுதியை சீதனமாய் வாங்கிய, *ஒவசியரான எங்கள் அப்பாவிற்குக் கடுங்கோபம். மூத்த மாப்பிள்ளையான தான் அவமதிக்கப்பட்டதாய், அப்பாச்சியின் ஆலோசனையின்பின் கொதித்தெழுந்தார். ‘முழுவீட்டையும் எடுத்துக்கொண்டு எங்கள் பங்குக்கான காசைத்தாங்கோ! நாங்கள் வேறெங்கையும் வீடு வாங்கிறோம். சாதுவான ஆனந்தம் சின்னையா வேண்டுகோள் விடுக்க, ‘முடியாது’ என முரண்டுபிடித்தார் எங்கள் அப்பா. ‘அப்ப உங்கட பங்கையெண்டாலும் எங்களுக்குத் தாங்கோ!’ மீண்டும் சின்னையாவின் கோரிக்கை. ‘அம்பட்டனுக்கு வித்தாலும் விப்பனே தவிர,
உங்களுக்குத் தரன். அப்பாவின் உயர்சாதி வெள்ளாள இரத்தம் பேசிற்று. இரண்டு மாப்பிள்ளைகளும் முகம் திருப்பிக்கொள்ள,
பகை பதிவாயிற்று.
மாற்றுச்சடங்காய் கல்யாணம் முடித்த,
கிளிஆசையம்மா,
தனக்குச் சீதனம் ஒன்றும் தரவில்லையென்று, ஒவ்வொருதரம் வரும்போதும் சீலைத்தலைப்பைக் கண்ணிரால் நனைத்தபடி. வெள்ளைக்காரியை முடித்த பெரியமாமா, வெள்ளைக்காரத் தனமாய் எதிலும் ஒட்டாமல் கொழும்பில். வருசம் ஒருக்கா கள்ளுச் சீசனில வந்துபோவதோடு அவர் கடமை முடியும். கல்யாணம் குழம்பிய துரைமாமாவிற்கு அரைலூஸ் என்று ஊரில் கதை. இவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்து முடிப்பதற்குள், மலர் ஆசையம்மாவிற்கு முப்பத்திரண்டு வயது முடிந்திருந்தது. புரோக்கர் கதிர்காமத்தார் கொண்டுவந்த,
6 ஞானம் - ஜன்வரி 2004

இந்தக்கல்யாணம் சீதன பாதனங்களால், ஓரளவில் பேசிமுடிவாயிற்று. 'மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயசுதானென்றாலும், ஆட்கள் நல்ல சாதிமான்கள்.
பொன்னம்பலத்தார் புழுகினார். பொம்பளை பார்க்க மாப்பிள்ளை வரவேண்டியதுதான் பாக்கி. ஏதேதோ செய்து, ஆச்சி குடும்ப நவக்கிரகங்களை ஒன்றுசேர்த்திருந்தா. ஊருக்கும், உறவுக்கும் தெரியாமல், மாப்பிள்ளை வீட்டார் வர ஒழுங்காகியிருந்தது. ‘தெரியவந்தால் கந்தசாமி கார்பிடித்துப் போயும் கல்லுக்குத்துவான். இது எங்கள் அம்மாவின் அபிப்பிராயம். ஐயனாருக்கு நேர்ந்தபடி ஆச்சி இருக்க, மாப்பிள்ளை வீட்டுக்கார் உள்ளே புகுந்தது.
பரபரப்பு.
ஒவ்வொருவராய் இறங்கி உள்ளே வர, அழகான மலர் ஆசையம்மாவைக் கல்யாணம் முடிக்கப்போகும், மாப்பிள்ளையை என் கண் தேடுகிறது.
'மாப்பிள்ளை வாங்கோ!' அப்பர்மாமா கைகொடுத்தவரைக் கண்டதும் எனக்கு அதிர்ச்சி. சட்டிக்கரி நிறம்.
துருத்திய பற்கள்.
ஐயனார் மீசை,
ஆளைப்பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. கோப்பி, பலகாரம் கொடுத்து முடிய, ஆசையம்மா அழைத்து வரப்படுகிறா.
புதிய சிவப்புச் சீலையில், ஆசையம்மா இன்னும் அழகாய்த் தெரிகிறா. அவவின் வெள்ளை முகம் சிவந்து கிடக்கிறது. கோழிக்குஞ்சைப்பார்க்கும் கழுகாய், மாப்பிள்ளையின் கண்கள் அவவை மொய்க்க, மீண்டும் ஒருதரம் ஆச்சி ஐயனாரைக் கையெடுத்து வேண்டிக்கொள்கிறா. சம்மதம் சொல்லி மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப, வீடே குதூகலிக்கிறது. முகத்தை நீட்டிக்கொண்டிருந்த என் அப்பாகூட ஒருதரம் சிரிக்கிறார். எனக்கு மாப்பிள்ளை பிடிக்காவிட்டாலும்,
எல்லோரும் சந்தோசப்பட, நானும் ஆனந்தத்துடன் ஆசையம்மாவைப் பார்க்கிறேன். அவவின் கண்கள் கலங்கினாற்போல் ஒரு தோற்றம். கிளிஆசையம்மா அவவைக் கட்டிப்பிடித்துக் கண்ணிர் வடிக்கிறா. ‘என்ன மலர்?, இந்த மாப்பிள்ளையும் வேண்டாம் எண்டு சொல்லிப்போடுவார் எண்டு,
ஞானம் - ஜனவரி 2004

Page 6
பயந்து போனியே!”
கிளிஆசையம்மா கேட்க,
"சீச்சீ என்று சமாளித்து, மலர் ஆசையம்மா குசினிக்குள் ஒடுறா. ‘என்ட ஐயனாரே நீதான் குமரக் கரையேத்த வேணும் பழையபடி கையெடுத்துக் கும்பிட்டு ஆச்சி விம்முது. சொல்ல வந்த முக்கியமான விசயத்தை இன்னும் நான் சொல்லவில்லை. கலியாணத்தைப்பற்றிச் சொல்லிவிட்டுப் பிறகு அதைச் சொல்கிறேன்.
棘料辙糖糖教
"மலருக்குக் கல்யாணம்.” fi அடுத்தகிழமை முழுவதும் எங்களூரின் தலைப்புச் செய்தி இது. A 4. ‘சாதி, சனமெல்லாம் சரியாய் விசாரிச்சனிங்களோ..? SS கல்லுக்குத்த . முடியாமற்போன கவலையில் இருந்த கந்தசாமி A. அக்கறைபோல விசாரிக்கிறார். it 'உந்த நாய் சட்டியைக் கவுக்கப்பாக்குது கலை, அங்கால AT குசினி வாசலில் நின்ற நாயைக் கலைச்சு, ஆச்சி இரட்டை அர்த்தத்தில் பேச, கந்தசாமி மெல்ல நழுவுகிறார். நாய் குரைக்கப் படல திறக்கிற சத்தம், கள் இறக்க உள்ளே வருகிறான் நளப்பொன்னன். இழுத்துக்கட்டிய கொடுக்குக்கு வெளியே, திரண்டிருந்த அவன் பருத்த தொடைகளும், மரமேறி மரமேறித் திரண்டிருந்த தோள்களும், உரோமம் நிறைந்து விரிந்த நெஞ்சும் ஆண்மை பேசின. முப்பது வயதுக்கு மிஞ்சிய கம்பீரம் ஆரோ என்று குரைத்த பப்பி, அவனைக்கண்டதும் நட்புக்காட்டி வாலாட்டியது. தலைகுனிந்து பொன்னன் போக, ‘டேய் பொன்னன் இங்க வா, தங்கச்சிக்கெல்லே கல்யாணம் நிச்சயமாகி இருக்கு; உனக்குத்தான் சரியான வேலை கிடக்கு; எல்லா மரத்துத் தேங்காயும் பிடுங்க வேணும்; பனையோலை வெட்டி வேலி அடைக்க வேணும்; படலை ஆடிக்கொண்டிருக்குது அதையும் ஒருக்காச் சரிபண்ணவேணும்; துலாவும் சரியில்ல, முடிஞ்சா அதையும் மாத்த வேணும்;
8 ஞானம் - ஜனவரி 2004
 

சரியா ஒருகிழமைதான் கிடக்கு; செய்து முடிச்சுப்போடுவியோ? அப்பர்மாமா கேட்க, பொன்னனின் முகம் இருளுகிறது. இலுப்பக் கொட்டை உடைச்சுக் கொண்டிருந்த ஆச்சி, திரும்பவும் ஒருக்கா’ஐயனாரே' என்று கும்பிடுது. ‘என்ன வேலை சொன்னவுடன முகம் கறுக்குது. வேற ஆர் இதையெல்லாம் செய்யிறது? அப்பர்மாமா பொன்னனை முறைக்க.
"சீச்சீ இல்லை ஐயா! எல்லாம் செய்வம்.” பொன்னன் குசினி ஜன்னலைப் பார்த்தபடி தலையாட்டுகிறான். ஜன்னலுள் ஆசையம்மாவின் முகம். என்னைப்பார்க்குமாற்போலத்தோன்ற சந்தோசமாய் கையசைக்கிறேன். உயிர்ப்பூட்டும் எண்ண அலைகள். சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறென்னவோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் பொறுங்கள், அதற்குமுதல் கல்யாண ஆயத்தங்கள்பற்றி சொல்லவேண்டும்.
棘鳞攀教料潜艇
பொன்னுருக்கு முடிந்து கன்னிக்காலும் நட்டாகிவிட்டது. சந்ததித்திமிர்காட்டி கொழுத்து நிற்கும் முள்முருக்கின், கதியால் ஒன்று ஆசையம்மாவின் பெயரால் நடப்பட்டது. “பெரியக்காவுக்கும், தேவிக்கும், கிளிக்கும் நட்ட கதியால்களைப் பாருங்கோ!
என்ன செழிப்பாய் நிக்குதெண்டு! மலருக்கு நடுறதும் இப்படித்தான் வரும். நட்ட கதியாலுக்குத் தண்ணிர் வாத்துக்கொண்டு அப்பர்மாமா சொல்லுறார். ஆச்சி பிறகும் ஒருதரம் ‘ஐயனாரே என்று கையெடுத்துக் கும்பிடுது. ‘என்னண, நெடுக நெடுகக் கும்பிடுர’ சீனி மாமா கேட்க, ‘பிரச்சினை ஒண்டும் இல்லாம என்ட குமர் கரையேறிட வேணும். திருப்பியும் கிழவி கும்பிடுது. ‘நாளைக்குப் பலகாரச்சூட்டுக்கு சரசுக்குச் சொன்னனிங்களே! அவவுக்குத்தான் சீனி அரியதரப்பதம் சரியா வரும். அப்பர் நீ ஒருக்காச் சொல்லிட்டு வா' - இது என் அம்மா. “ஓம் பெரியக்கா நான் போறன். இல்லாட்டி அவ நாளைக்குவர பெரிய அருக்கு விடுவா. அப்பர் மாமா அவசரமாய் வெளிக்கிடுறார். அடுத்தநாள் நடந்த பலகாரச்சூட்டை, இப்பவும் என்னால் மறக்கமுடியாது. ஏழு வயதுக்குப் பாய்கிறது மனம்,
ஞானம் - ஜனவரி 2004

Page 7
சொல்லவந்ததைவிட்டுட்டு வேறேதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். பலகாரச்சூட்டைப்பற்றி கொஞ்சம் சொல்லி விட்டு, பிறகு அதைச் சொல்லுகிறேன்.
棘棘棘料棘料
பலகாரச்சூடு தொடங்கியாச்சு. உறவுப்பெண்கள் சூழ்ந்து உட்கார்ந்திருக்க, காட்டுக்கல்லில அடுப்பு மூட்டி பெரிய தாச்சி வைச்சாச்சு. உள்ளே தேங்காயெண்ணெய் பளபளக்கிறது. ‘குலமணி உந்த எண்ணெய்பானைய ஒருக்காத் தா!' எண்ணெய்விட்டு வைத்திருந்த மண்பானையை வாங்கி மணந்துபார்த்து, ‘உது எப்ப ஆட்டினதெண?
சரசு மாமி கேட்க,
அம்மா ஆச்சியைப் பார்க்கிறா. ‘இந்த வருசம் ஆட்டின எண்ணெய்தானென. போனவருசத்தானும் கொஞ்சம் கிடந்தது.
ஆச்சி சொல்ல,
‘நினைச்சனான், அதுதான் பாண்டலடிக்குது. கொஞ்சம் புளி கொண்டாங்கோ!'
இது சரசு மாமியின் உத்தரவு. ‘அல்லணி வளவுக்க பிடுங்கின புதுப்புளி இருக்கு, எடுத்துக்குடெண!’ ஆச்சி சொல்ல, அம்மா கொண்டோடி வருகிறா. ‘உது காணாது உந்த முருக்கம் இலையும் கொஞ்சம் பிடுங்கு. பக்கத்தில் நின்ற வதனி அக்காவுக்கு உத்தரவு போகிறது. ‘முள்முருங்கோ, கறிமுருங்கோ? வதனி அக்கா கேட்க, 'நீ எந்த ஊரால வந்தனி? நளினம் விடுற; உந்தக் கறிமுருங்கை இலை கொஞ்சம் பிடுங்கடி சரசு மாமி பாய, கூடியிருந்த மற்றப் பெண்டுகள் சிரிக்கினம்.
சரி சரி கனக்கச் சிரியாதயுங்கோ என்றபடி பழையபடி ஆச்சி ஐயனாரைக் கும்பிடுது. ‘சரி சரசுமாமி நீங்கள் மாவைக் குளையுங்கவன்.' அன்னம் மாமி சொல்ல, "சட்டியக் கொண்டு வாங்கோ!' என்கிறா சரசு மாமி, தேவி ஆசையம்மா பெரிய பித்தளைச் சருவச்சட்டியைக் கொண்டு வருகிறா.
‘உதுவே சட்டி?
உதில குளைச்சால் பலகாரம் சரிவராது. எடி சின்னவள்! இஞ்ச வா! வீட்டில அவள் இஞ்சி நிற்கிறாள் ஓடிப்போய் அவளிட்ட, சீனி அரியதரம் குளைக்கிற பெரிய மண்மூடிச்சட்டியைத் தரட்டாம் எண்டு வேண்டிக்கொண்டு வா!'
10 ஞானம் - ஜனவரி 2004

சின்னவள் ஒட, கதைக்கச்சேரி தொடர்கிறது. 'இவள் குஞ்சுட தாயைக் காணேல. அவளுக்கு நீங்கள் சொல்லேலேயே? - பெரியகுஞ்சு அத்தை கேட்க, ‘அவள் இப்ப ஒரு கல்யாணவீட்டுக்கும் போறதில்லையாம். முப்பத்தைஞ்சு வயசில குமர வச்சுக்கொண்டு, ஊர்க்கல்யாண வீடுகளுக்குப் பலகாரம் சுடவே? என்று கேட்கிறாள். சின்னக்குஞ்சு அத்தை பதில் சொல்லுறா.
'ஓம்ஓம் அவளும் பாவந்தான். அவன் சித்தன் குடிச்சுக் குடிச்சு எல்லாச் சொத்தையும் அழிச்சுப்போட்டான். அது என்ன செய்யும்? பாவம்' சரசு மாமி ஆமோதிக்கிறா. "அது சரி. அவள் மகேசுவரி, நெசவுக்குப் போறன்; நெசவுக்குப் போறன் எண்டு , உங்க பனைவளவுக்குள்ள உவன் தோட்டம் செய்யிற கனகரத்தினத்தோட கதைச்சுக்கொண்டு நிற்கிறாளாம்; கேள்விப்பட்டனியளே? இது பொன்னம்மா மாமி. ‘இஞ்சார் பொன்னம்மா! எங்களுக்கேன் தேவையில்லாத கதை. பானைல இல்லாமலே அகப்பையில வந்தது? சரசு மாமி ஆமோதிக்கிறாவா மறுக்கிறாவா எண்டு விளங்காமலே முடிக்கிறா.
"இஞ்ச கொண்டா மோன, இந்தச் சட்டி இருந்தால்தான் எனக்கு சீனி அரியதரம் குளைக்க வரும். எத்தின கலியாணவீட்டிற்கு இதில குளைச்சுப்போட்டன். சின்னவள் கொண்டுவந்த சட்டியை வாங்கி, மாக்குளைக்க ஆயத்தம் பண்ணுகிறா சரசு மாமி. சீலையைக் கணுக்கால்களுக்குள் இடுக்கி, காப்பைப் பின்னுக்கு இழுத்துவிட்டு மாக்குளைக்க அவ தயாராக, ‘ஓ! சீனி அரியதரத்தில மாமி ஒரு ஸ்பெசலிஸ்ற்றாக்கும்.’ கிளிஆசையம்மா சொல்ல, எல்லாரும் சிரிக்கினம். சரசு மாமி பிள்ளையாரைக்கும்பிட்டு, முதற்சீனி அரியதரத்தை தாச்சிக்குள் போட, அது பொங்காமல் தட்டையாய் மிதக்குது. y ‘என்ன சரசிட பலகாரமும் பிளைச்சுப்போச்சுது போல’\! பூரணம் மாமியின் வார்த்தைகளில் பொறாமைத்துளிர், ‘என்ர ஐயனாரே' ஆச்சி பதறிக் கும்பிடுது. 'உந்தப் பொடியள அங்கால கலையுங்கோ! இவங்கள் சுற்றிநின்று பார்க்கிறாங்கள். அதுதான் சீனி அரியதரம் பொங்குதில்ல. சரசுமாமி பழியை எங்களில போடுறா. நாங்கள் கலைக்கப்படுகிறோம். ‘மாமி! உந்த முதற்பணியாரத்தை அடுப்பு நாச்சியாருக்குப் போடுங்கோ!
ஞானம் - ஜனவரி 2004

Page 8
இனிப் போட்டுப் பாருங்கோ! பொதுபொதெண்டு பொங்கும். பொன்னம்மா மாமி சொல்ல,
‘ஓமடி நீ சொல்றதும் சரிதான்’ என்றபடி, சரசுமாமி தோற்றுப்போன தன் முதற்பணியாரத்தை அடுப்புக்குள் எறியிறா. அடுத்தமுறை பணியாரம் போடப்படுகிறது. இந்தமுறை பணியாரம் பொங்கி எழும்புகிறது. தூர நின்ற நாங்கள் ஆச்சரியமாய்ப் பார்க்கிறோம். ‘அதுதானே பார்த்தன்! சரசுமாமின்ர கை பிழைக்குமே!’ பெரிய குஞ்சு சொல்ல, சரசுமாமி வாய்க்குள் ஆணவமாய்ச் சிரிக்கிறா. கடகடவென பலகாரம் போட்டு அள்ளப்படுகிறது. குஞ்சுப்பெட்டிக்குள் போடப்பட்ட பணியாரங்களை, ஒடியோடிப்போய் அள்ளித் தின்னுகிறோம்.
இவங்களை அங்கால கலையுங்கோ! சரசுமாமி சத்தம்போட, ‘போடா அங்கால எண்டு சொல்லி,
கலைக்குமாற்போல,
மற்றவர்களுக்குத் தெரியாமல், கையைப்பிடித்து இரண்டு பணியாரங்களைத் திணிக்கிறா அம்மா. அவவின் உத்தியறிந்து, எண்ணெய் ஊறஊற பொத்திய கையைப் பொக்கற்றுக்குள் விட்டு ஒடுகிறேன்.
“அவள் ராணி பிள்ளத்தாச்சியெல்லே! அவளுக்குச் சுடச்சுட ஐஞ்சாறைக்குடுத்துவிடுங்கோ! தின்னட்டும்.’ இது பூரணம் மாமி.
ஒம்ஓமென்று சொல்லி, இரண்டு பூவரசம் இலைய சிரட்டைக்குள்ள வைச்சு, அதுக்குள்ள ஐஞ்சாறு பலகாரங்களை அள்ளிவைக்கிறா தேவி ஆசையம்மா. மைம்மல் பொழுதாப்போச்சு ஒரு கரிக்கட்டையை வைச்சுக் கொடுத்துவிடு. சரசுமாமியின் பிரேணனை ஏற்கப்படுகிறது. “பெரிய தங்கச்சி, கிளி, தேவி இங்க ஒருக்கா வாங்கோ!' மாப்பிள்ளை வீட்டார் “வேள்வு கொண்டுவந்திருக்கினம். ஆச்சி கூப்பிட அம்மாவும், ஆசையம்மாமாரும் உள்ளே போகினம். ‘உவள் மலருக்கு, இவ்வளவு கெதியில் கலியாணம் நடக்குமெண்டு நான் நினைக்கேல. சகோதரங்கள் எல்லாம் கலியாணம் முடிச்சுக் கொழும்பும், கண்டியுமெண்டு போக,
கிழவியோட இந்த வளவைக் காவல்காத்துக்கொண்டு கிடந்தவள். சீதனப்பிரச்சினையில, வந்த மாப்பிள்ளைமாருக்குச் சண்டை. ஏதோ கிழவி ஒருமாதிரிச் சமாளிச்சு மலரைக் கரையேத்துது. நான் நிற்பது தெரியாமல் கதையை எங்கள் வீடுநோக்கித் திருப்புறா
12 ஞானம் - ஜனவரி 2004

சரசுமாமி. "இஞ்சபார் குலமணியிண்ட மோன் திருப்பிப் பலகாரத்துக்கு வாறான். நான் நிற்பதைப் பூரணமாமி மறைமுகமாய் உணர்த்த, சரசுமாமியின் கதை அப்படியே நின்றுவிடுகிறது. இப்படியாய் ஒருகிழமையாய்ப் பலகாரச்சூடு நடந்துமுடிந்தது. இதுக்கிடையில் நடந்த சொக்கட்டான் பந்தல் வேலையைச் சொல்லவேணும். சொல்லவந்ததை விட்டுவிட்டு ஏதேதோ சொல்கிறேன். ஆனாலும் பந்தல்கதையைச் சொல்லாமல் இருக்க முடியாது. அதைச் சொல்லிவிட்டுப் பிறகு சொல்லவந்ததை சொல்கிறேன்.
辑辑棣
முத்தத்தில ஆம்பிளைகள் கூட்டம். 'இதுதான் எங்கட வீட்டுக் கடைசிக் கல்யாணம். திருநாவண்ண திறமான சொக்கட்டான் பந்தல் போடவேணும். சின்னராசா மேளம் கொண்டுவரவேணும். அந்த ஆள் வந்தாலே சபைக்கு ஒரு இலட்சணம்தான். அவர் மேளம் அடிக்கிறதவிட, தாளக்காரனை அடிக்கிறது திறமா இருக்கும்.
சமையலுக்கு,
பண்டாரத்திட்ட ஒருக்காச் சொல்லிப்போடுங்கோ. உதுகள் உங்களுக்குத்தான் தெரிஞ்ச விசயம். கிடாரங்கள், பந்திப்பாய்களுக்கும் சொல்லி வைக்கவேணும். சீவரத்தினம் மாமாவிட்டதான் நாலஞ்சு கதிர்ப்பாய் கிடக்கு. அவர் லேசில தரார். நான் எப்பிடியும் மாமியைப் பிடிச்சு வேண்டிப்போடுவன். மாமி சொன்னா, பிறகு அங்க வேறொருவரும் கதைக்கமுடியாது. இந்த முறையான் தோட்டத்து மிளகாயும், பயறும் போதியது கிடக்கு. அதுகள் வேண்டத் தேவையில்லை. நேற்றுத் தெய்வானை வந்து தூள் இடிச்சுப் போட்டாள். ஊத்தின நல்லெண்ணையும் கிடக்கு. போனவருசத்தான் மொட்டக்கருப்பன் நெல்லுக்கிடந்து, அவிச்சு அம்மா அரிசியாக்கிப்போட்டா. மிச்சங்களப் பாத்து வேண்டுங்கோ! காசத் தர்றன். உங்களுக்குத்தானே கன கலியாணம் செய்விச்சுப் பழக்கம். எல்லாப் பொறுப்பும் உங்களிட்ட விட்டாச்சு.
uDTLDT (ogst 6è6D, திருநாவுக்கரசர் வெறுமேலில் கிடந்த சால்வையை இழுத்துவிட்டுக்கொண்டு,
உத நீ சொல்லவேணுமே தம்பி.
ஞானம் - ஜனவரி 2004 3

Page 9
இவள் மலரின்ர கலியானத்த நான் நிண்டு செய்யாமல் வேற ஆர் செய்யுறது,
என்றபடி பொறுப்பேற்றுக்கொள்கிறார். அடுத்த நாள் பந்தல் வேலை ஆரம்பம். காட்டுத்தடிகள் நட்டு, கிழக்குப்பார்த்து அறுபதடியில் கொட்டில். பின்வளவில் அடுக்கிக் கிடந்த கிடுகெல்லாம் மேலே ஏறுகிறது. “எடேய் சின்னான், சித்திரை மாசம், சிலவேள மழை வந்தாலும் வரலாம்!
ஒருதுளி உள்ளே ஒழுகப்படாது; நெருக்கி வேய்; பனை ஈர்க்குக்கட்டை எறிஞ்சபடி திருநாவண்ண உத்தரவு இடுகிறார். ‘உதென்ன கதையும், நான் வேஞ்ச கொட்டில் என்டைக்காவது ஒழுகியிருக்கே?
நமக்கு எல்லாம் ஜமிசம்தான்! எத்தின நாளா நமக்குக் கொட்டில்போடுறன். என்ர கொடுக்குக் கட்டு அவிழ்ந்தாலும் அவிழும், ஈர்க்குக் கட்டு அவிழாது.
சின்னான் சொல்ல பந்தல்முழுதும் சிரிப்பலை. ‘இவன் பொன்னன இரண்டுமூன்டு நாளாக்காணேல, எங்கபோய்த் துலைஞ்சானெண்டு தெரியேல. சும்மா சும்மா வளவைச்சுத்திக்கொண்டு நிப்பான், இப்ப அவசரத்திற்குக் காணக்கிடைக்கிறானில்ல. இரண்டு நாளா கள்ளிறக்கவும் வரேல. உடம்பு கிடம்பு சுகயினமோ தெரியேல. அப்பர் மாமா சொல்ல, “அவன்ர உடம்போ சுகயினப்படுறது. வெள்ளன வந்துடுவான்; நீ உன்ட வேலையப் பார்’ என்கிறார் திருநாவண்ண. ‘அதுசரி வெள்ளகட்ட இவன் கட்டாடி வீரசிங்கத்த வரச்சொன்னனான், அவனக் காணேல. திருநாவண்ண சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீரசிங்கம் உள்நுழைகிறான். ‘என்னடா வீரசிங்கம்! இனித்தொடங்கி எப்ப கட்டி முடிக்கப்போற? நாலு நாளில கலியாணம். நீ மாசாமாசம் வெள்ள கொண்டு வர்ற மாதிரி எல்லாத்திலயும் லேற்தான். திருநாவண்ண முறுகுகிறார்.
"ஏன் சொல்லமாட்டியள்? இவ்வளவு பெரிய பந்தலுக்கு வெள்ள கட்டிறதெண்டால், எத்தின வேட்டி, சீலை வேணும்.
ஊரில கலியாண வீடெண்டால், ஒருதரும் வேட்டி, வெள்ளைச் சீலை வெளுக்கப் போடாயியள். ஆனா தங்கட தங்கட வீட்டுக் கலியாணங்களுக்கு மட்டும் வெள்ள
4. ஞானம் - ஜனவரி 2004

கடடவேணும். பழம் வேட்டி தானாக்கிழிஞ்சாலும், வெள்ளகட்டிக்கிழிச்சுப் போட்டானென்டு எனக்குத்தான் பழி. மத்தளம் மாதிரி இரண்டு பக்கமும் அடிவேண்டி, நாங்கள் படுறபாடு எங்களுக்குத்தான் தெரியும்.’ வீரசிங்கம் முணுமுணுக்கிறான். ‘வீரசிங்கம்,விட்டால் நீ கணக்கக் கதைப்ப. வெளுத்துவாங்கிறதில நீ கெட்டிக்காரனென்டு சொல்லவே வேணும். உந்தக்கதையளை விட்டுட்டு எப்ப கட்டிமுடிப்ப எண்டு சொல்லு? ‘இது நல்ல கதையாக் கிடக்கு; ஏதோ இண்டைக்குத்தான் வெள்ள கட்டிப்பழகிறனான்போல; இரண்டு பெற்றோல்மக்சைக் கொளுத்தித் தாங்கோ. விடியிறதுக்குள்ள என்ட வேலை முடிஞ்சுபோம்; என்னோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்காமல் , உங்கட வேலையள நீங்கள் போய்ப்பாருங்கோ!’ சொன்னாற்போல காலையில் பந்தல் வெள்ளையாய்ச் சிரித்தது. சிற்றம்பலம் ஈயத்தாள் வெட்ட, அப்பன் கிறே பேப்பர் சுத்த, குலசிங்கம் பலூன் ஊதிக்கட்ட, இரவில் பந்தல் அரண்மனையாயிற்று. நாளை மறுநாள் கலியாணம். ஏதோ சொல்லவந்து ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். இனியும் இழுப்பது சரியில்லை. இதோ நான் சொல்லவந்தது இதுதான்.
桦棒棒料
கலியாணத்திற்கு இரண்டு நாட்கள் முந்தி. மலர் ஆசையம்மா கிணத்துக்குள் விழுந்து செத்துப்போனா. மாப்பிள்ள வீட்டுக்குக் கொண்டுபோகவெண்டு, குசினிக்குள்ள எல்லாரும் மோதகம் அவிக்கேக்க, கிணத்தடிக்குத் தண்ணி அள்ளப்போன மலர் ஆசையம்மா, கிணத்துக்குள்ள தவறி விழுந்திட்டாவாம். நினைச்சால் இப்பவும் நெஞ்சு நடுங்குது. ஆச்சி "ஐயனாரே ஐயனாரே எண்டு, கதறின கதறு காதுக்குள்ள இப்பவும் கேட்குது.
ஞானம் - ஜனவரி 2004 5

Page 10
அப்பர் மாமாவும், சீனி மாமாவும் அந்த வளவெல்லாம், உருண்டுருண்டு அழுகினம். நெஞ்சு நெஞ்சா அடிக்கும் ஆச்சிட கையைப்பிடிச்சுத் தடுத்துக்கொண்டு, கிளிஆசையம்மாவும், தேவி ஆசையம்மாவும் மற்றைக்கையால தங்கட நெஞ்சில அடிச்சுக் கதறுகினம், பிரேதமாக்கிடக்கும் ஆசையம்மாட காலைப்பிடிச்சுக்கொண்டு அம்மா தலைதலையா அடிக்குது.
பந்தல் போட்ட சின்னான்,
கட்டாடி வீரசிங்கம்,
அம்பட்டன் முத்தையன்,
மாவிடிக்கிற தெய்வானைக்கிழவி, சரசு மாமி, பூரணம் மாமி எண்டு ஊரே வளவுக்குள்ள நிண்டு ஒப்பாரி வைச்சு அழுகுது. கல்லா அசையாமல் நீண்டுகிடக்கிறா மலர் ஆசையம்மா. இரகசியமா மோதகம் தருகிற ஆசையம்மா, பேசாமற்கிடக்கிறதப் பார்க்க, எனக்கும் அழுகை அழுகையா வருகுது. சனத்திட அழுகைச் சத்தம் கேட்காமல் இருக்க, தனக்குப் பிடிச்ச இடம் எண்டு சொல்லி, நெடுக ஆசையம்மா என்னைக் கூட்டிக்கொண்டுபோய் வைச்சிருக்கிற, நாவல் மரத்தடிக்கு ஓடிப்போய் மரத்தில தலைசாய்ஞ்சு நிக்கிறன். ஆசையம்மாட மடியில சாய்ஞ்ச மாதிரி ஒரு உணர்வு. மரத்திட மற்றப்பக்கத்தில யாரோ விம்முகிற சத்தம். இங்க யார் அழுகிறது.
கொஞ்சம் பயமா இருக்கு. மெல்ல மரத்தைச் சுத்தி வந்து எட்டிப்பார்க்கிறன். முழங்கால் மடக்கி,
பருத்த தோளும், தொடையும் குலுங்க, தலைகுனிந்து ஓர் உருவம் விம்மி விம்மி அழுதுகொண்டிருக்கிறது. மைம்மல் இருட்டில் யாரெண்டு சரியாய்த் தெரியேல்ல. பயமாவுங்கிடக்கு அது ஆரெண்டு பாக்க துணிஞ்சு கொஞ்சம் கிட்டப் போறன் என் கால் அசைவால் சருகு ஓசை கிளப்ப, குனிந்து அழுத உருவம் தலைநிமித்துது.
நளப்பொன்னன்.
枋糖料
16 ஞானம் - ஜனவரி 2004

காற்றிலே அரிச்சுவடி அருவமாய் எழுதிக்கற்று, 'கல்குலேட்ட ரே கதியெனக் கணக்காய்வு கண்டு, காலமெல்லாம் கல்லூரியில் போராடி, 'ao)-gsGLuft' (F)aofai) காசு போகக் கதையளந்து, '(B) பை பாஸால் கார்ட் அற்றாக்கை களைந்தெடுத்து, களவாக கற்பழிய, உறவு வைத்து, போ(F) ரினுக்கு போலி பாஸ்போர்ட்டில் போயுழைத்து வந்து, வேஷம் தரித்து அமங்கலங்களையும் ஆவணப்படுத்தி, பொய்யான பொன்வண்டு போலி காட்டி, இண்டர் நெட்டில் இன்பியலை இனிதாய் சுவைத்து, இயல்பான ஏக்கங்களைப் பதுக்கி பகட்டு நூலில் பட்டம் விட்டு, மரபு அணுக் கனி பறித்து போதை கொண்டு, மாயமானை மதியிழந்து மருள வெருட்டி, கவின் ஒசையையும் கவர்காட்சியையும். ஒரே தட்டில் உண்டு களித்து, பூண்டொழுகும் விழுமியங்களை அடகு வைத்து பமீளாது வெந்தீளயில் விற்றெடுத்து, புது ஒலபமிடும்
பூகோளமயப் பொங்கலோ பொங்கல்!!
ஞானம் - ஜனவரி 2004 7

Page 11
60°து அகவை காணும்
●→ பேராசிரியர் சின்னையா மெளனகுரு X
ஈழத் தமிழர் தேசியத்தில் ஆணி வேராகவும் கிளை வேர்களாகவும் ஆழப் பதிந்துகிடப்பவைதமிழ்மக்களின் பாரம்பரிய பண்பாட்டு மூலக்கூறுகள். அவை வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் கிராமங் களிலேதான் புதையுண்டு கிடக்கின்றன.
18ம், 19ம் நூற்றாண்டுகளில் இவை பற்றிய தேடலை யாழ்ப்பாணத் தமிழறிஞர்கள் மேற்கொள்ளத் தொடங்கி இது மட்டக்களப்புப் பிரதே சத்தில் அண்மைக் காலமாகத்தான் ஆரம்பமாகியுள்ளது. சுவாமி விபுலானந்தர், முதலியார் கணகரெத்தினம், வித்துவான்
விட்டனர்.
சரவணமுத்தன், இலக்கிய கலாநிதி
களான வீ. சி. கந்தையா, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, மகாவித்துவான் F X, C. நடராசா என்று தொடங்கும் வரிசையில் இன்று (LJJT f(flui சி. மெளனகுரு அவர்களே 20ம், 21ம் நூற்றாண்டுகளை இணைக்கும் பாலமாகி இப்பிரதேசத்தின் பண்பாட்டு மூலங்களைத் தேடி வெளிக்கொணரும் அரும் பணிகளை ஆரம்பித்து வெற்றியும் கண்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு சீலா முனையில் சின்னையா முத்தம்மா தம்பதிகளின் ஏக புதல்வனாக 1943.06.09 ல் பிறந்தவர். மட்டு. அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்று புலமைப் பரிசு பெற்று வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வி கற்று, 1961இல் இலங்கைப் பல்கலைக்கழகம் பேரா தனையில் உயர்கல்வியை ஆரம்பித்து, தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று கொழும்புப்
1 92
: |
பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வியைப்
பயின்று, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுமானி கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டு, தொடர்ந்து ஆய்வுத் துறையில்
பேராசிரியர் அந்தஸ்தையும் பெற்றுத் தன்னை உயர்த்திக் கொண்டவர்.
தொண்டர் ஆசிரியராக மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி, அரசினர் கல்லூரி (இன்றைய இந்துக் கல்லூரி), வின்சன்ட் மகளிர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் உயர்வகுப்பு மாணவர் களுக்குத் தமிழ் கற்பித்தலுடன் ஆரம்பித்து, கல்முனை சாஹிராக் கல்லூரி, கல்முனை உவெஸ்லி கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகி, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரை யாளராகி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகி, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரை யாளராக, நுண்கலைத்துறைத் தலை வராக, கலைப் பீடாதிபதியாக, உபவேந்தர்
ஞானம் - ஜனவரி 2004
 
 

வெளிநாடு சென்றபோது பதில் உபவேந்தராக, பேராசிரியராக உயர்ந்து 1960 களில் கூத்தை செம்மைப் படுத்துவதில் பேராசிரியர் சு. வித்தி யானந்தனுக்கு வலதுகரமாக பல்கலைக் கழகத்தில் இருந்தார் மெளனகுரு. பல்வேறு படிநிலைகளிலும் இன்றுவரை இயங்கு தளத்தில் நின்று 21 நூல்களை அச்சில் வெளியிட்டும், 12 நூல்களை வெளியிட ஆயத்தமாகிய நிலையில் வைத்துக் கொண்டும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியும், விரிவுரை களையும், உரையாடல்களையும், நெறிப் படுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கிக்கொண்டு வரும் மக்கள் தொடர்பாளருக்கு மணிவிழா எடுக்க வேண்டியது பொருத்தமானதே.
கலைத்துறையில் 16 நாடகங்களுக்கு மேல் எழுதியும், நடித்தும், நெறிப்படுத்தியும் வந்துள்ளார். சிறந்த கூத்துக் கலைஞர். அரங்கியலில் புதுப்பரம்பரையை உருவாக்கிக் கொண்டு வரும் கலைத் துறைச் சிற்பி. 1949ல் மட்டு. அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் பெரிய வைத்தியர்' என்னும் நாடகத்தில் பெரிய வைத்தியர் பாத்திரம் தாங்கி இன்றுவரை கலைத் துறையின் பெரிய வைத்தியராகவே மிளிரும் பேராசிரியர் மெளனகுரு எமது பண்பாட்டு முதுசொம்களில் ஒன்றாவார்.
கிழக்கு ஈழத்தில் ஆடப்படும் பறை மேளம், வசந்தன், மகிடி, தென்மோடி, வடமோடி ஆட்ட முறைகளைத் தெரிந்து ஒன்று சேர்த்து கிழக்கு நடனம் ஒன்றை உருவாக்கி மேடை நிகழ்வாக அறிமுகஞ் செய்தவர்.
தமிழருக்கான ஓர் இனிய அணியைத் (Tamil Cultural Band) 5L6pf 6JT55uri களான பறை, உடுக்கு, மத்தளம், மேளம்,
ஞானம் - ஜனவரி 2004
கஞ்சிரா, தாளம், சங்கு, சலங்கை என்பன கொண்டு வடமோடி, தென்மோடி ஆட்டங்களை இணைத்து நிகழ்த்திக் காட்டியவர்.
மட்டக்களப்பின் தோல் வாத்தியங் களான பறை, தப்பட்டை, மத்தளம், உடுக்கு என்பவற்றின் இசையையும் சிலம்பு, சல்லரி போன்ற கஞ்சகக் கருவிகளின் இசையையும் ஒன்றுடன் ஒன்று பேசவிட்டு அக்கருவிகளின் வீரியத்தையும் பிரதேச இசையின் தனித்துவத்தையும் மேடை நிகழ்வாக 'மேளப்பேச்சு' என நிகழ்த்திக் காட்டியவர். இவ்வாறு தொடர்ந்து பல்வேறு புதுப்புது உத்திகளையும் கையாண்டு, தமிழர் பண்பாட்டுத் தனித்துவம் பேண முயன்று வருபவர். அத்துடன் இலங்கைப் பாடவிதான அபிவிருத்தி நிலைய பாடநூல் எழுத்தாளராக தேசியக் கல்வித் துறையில் விளங்கியவர். உலகக் கருத்தரங்குகள் பலவற்றிலும் கலந்துகொண்டு ஈழத்தமிழர் பண்பாட்டியலை வெளிக்கொணருபவர். இவருக்கு இலக்கிய வித்தகர், கலைச் செம்மல் ஆகிய பட்டங்களை இந்து கலாசார அமைச்சு வழங்கியது.
கொழும்பு தமிழ்ச்சங்கம், யாழ். கலை வட்டம் முதலான கலை நிறுவனங்களின் பாராட்டும், வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசும், தேசிய சாகித்திய மண்டல ஆராய்ச்சிக்கு 3 தடவையும், ஆக்கத்துக்கு ஒரு தடவையும் சாகித்திய மண்டலப்பரிசும், ஆளுனர் விருதும் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தேச, சர்வதேச பாராட்டுக்களையும் பெற்று உயர்வடைந்து வருபவர். w
609 அகவை காணும் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களின் பணி மென்மேலும் சிறக்க ஞானம் வாழ்த்துகிறது.
19

Page 12
Doorco
சிங்கள மூலம் : நீரங்க விக்ரமசிங்ஹ
அகதி முகாம் சிறுவர்கள் சிலர் கடற்கரையில் அலைமிதித்து ஒடியாடி விளையாடுவதை, புளியமரத்தினடியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ரத்னபால.
அன்று துறைமுகம் பாழடைந்து காணப்பட்டது. இப்போதெல்லாம் துறைமுகக் கடலில் சேர்ந்தாற் போல் இரு கப்பல்கள் ஒன்றாக நங்கூரமிட்டிருப்பது ஒரு அரிதான காட்சியாகப் போய்விட்டது.
அந்த
xை மணலும், தேயிலைப் S. பெட்டிகளும் ஏற்றப்பட்டது இந்தத் துறைமுகத்தில் தான். ஆனால் இந் நாட்களில் என்றாவது ஒரு நாள், மா ஆலைக்குக் கோதுமைக் கொட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரிரு கப்பல்கள் வந்து போகும். அதுபோக துறைமுகத்துக்கு அருகிலுள்ள சீமெந்து பக்டரிகூட கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருக்கிறது.
“வெள்ளக்காரனுக்குக் கம்பனி கட்டக் கொடுத்து இவர்கள். இந்தத் துறைமுகத்தை. நாசமாக்கி விடுவார்கள்.”
“நாட்டையே நாசமாக்கியவர்கள். இதை மட்டும் விட்டு வைப்பார்களா?”
அந்நாட்களில் துறைமுகத்தில் கம்பனிகளுக்காகப் புதிய கட்டிடங்கள் எழும்பும்போது ஊரார் அனைவரும்
20
நாட்களில் புல்மோட்டை
தமிழில் : லோ. சுதர்மன்
இப்படித்தான் பேசிக் கொண்டார்கள். ஆனால் இப்போது இன்னுமொரு கரித்
தொழிற்சாலை கட்டப்போவதாகப் பரவலான வதந்தி.
தர்மபாலவும், புத்ததாசவும் இரு
துவக்குகளைத் தூக்கிக் கொண்டு, முகாம் எல்லை ஓரமாக ஐஸ் பக்டரியைத் தாண்டிச் செல்வதை ரத்னபால கண்டான். அவன் மனம் கனத்தது. சிறிதுநேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“குடிகாரன்கள் . இன்னும் வெறி இறங்கவில்லை போல.”
அவன் தனக்குள்ளேயே முணு முணுத்துக் கொண்டான்.
விடியற்காலையிலேயே ஆரம்பித்த மாமிச ஏலத்தில் நாள் பூராவும் அவர்கள் இருவரும் பங்கு கொண்டிருந்தார்கள்.
நேற்று மாலை குளிக்கச் சென்ற ஆந்தன்குளத்துச் சில சிங்களப் பெண்களையும், குழந்தைகளையும் காட்டுக்குள் மறைந்திருந்த போராளிகள் சுட்டுக் கொன்றதையடுத்து, இவர்கள் இன்று விடியற்காலையிலேயே மாமிச ஏலத்தைத் துவங்கி விட்டார்கள்.
திருகோணமலையிலிருந்து வரும் ஒவ்வொரு பஸ்சும் நான்காம் கட்டையில் இடைநிறுத்தப்பட்டு தமிழர்கள் வடிகட்டப் படுகிறார்கள். பின் விகாரையின் பின்னாலிருக்கும் காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மரங்களில் சாத்தி ஆணி அடிக்கப்படுகிறார்கள்.
வாள், தடி, துவக்குகள் கொண்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் அங்குமிங்கும் ஒழிந்திருந்து தாக்குகிறார்கள். மூன்று
ஞானம் - ஜனவரி 2004
 

வாலிபர்கள் பெரிய கட்டைகளைப்
பாதையின் குறுக்காகப் போட்டு வாகனங்களை நிறுத்தித் தமிழர்களைத் தேடுவதில் ஈடுபட்டுக் கொண் டிருந்தார்கள்.
“ஆ . இவனுடைய நெற்றியில் திருநீறு இருக்கு .”
“இறங்குடா பறத் தமிழா.”
இப்படித் தமிழர்கள் இறக்கப்படும் போது மறைவிலிருக்கும் மற்றவர்கள், ஒடி வந்து பொல்லுகளாலும், வாள்களாலும் தாக்கி, பின் காடுகளுக்குள் இழுத்துச் சென்று மறைவாக இறுதிக் கிரியைகளை முடிக்கிறார்கள். அதிலும் தப்பும் ஒரிரு தமிழர்கள் மீண்டும் பாதைக்கு ஓடி வந்து மரண ஒலமிடுவார்கள்.
“அந்த. பொம்பிள மண்ணைத் திங்கிறா. அவளைக் கொல்லாம. வேற என்னவாவது செய்யச் சொல்றா. அதெல்லாம் எங்க என்னோட. ஒரு அடி தான் கொடுத்தேன். கழுத்து துண்டா போயிட்டது”
எல்லோரும் கை கொட்டிச் சிரித்தார்கள்.
“எங்கடா அந்தப் . போத்தல் எல்லாம்? ஒண்டை எடு. இங்க”
ஒருவன் வெறியோடு சொன்னான். “ஏய் . நல்ல வேல ஒன்று நடந்திட்டுது. நான் அந்த மரத்துக்குப் பின்னால . ஒரு தமிழனை இழுத்துக் கொண்டு போய் . முதல்ல அவன்ரை வயிற்றை வெட்டினேன் . அவன் பேய் மாதிரிக் கத்தினான். குடலெல்லாம் வெளிய வந்திட்டுது.
ஞானம் - ஜனவரி 2004
சுற்றியிருந்தவர்கள் வெறியோடும், அவன் பேச்சில் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் தொடர்ந்து
கூறினான்.
“கொஞ்ச நேரத்தில் அவன் பேசினான் . என் கண்ரெண் டையும்
கழட்டி வைச்சுக்கோங்கடா. ஈழத்தைப் பார்க்க . என்று
"அதோடையே கொடுத்தேன் ஒரு 99 ....... தலை ரெண்டாப் போக”
அவன் பெருமையாகக் கூறிச் சிரித்தான்.
"சூப்பர்டா.” இன்னொருவன் பாராட்டினான். பகல், சில பொலிஸ் ஜிப்களும், ஒரு ராணுவ ட்ரக் வண்டியும் வரும்வரையும் தமிழர்கள் தாக்கப்படுவதும், கொல்லப் படுவதும் குறையவில்லை.

Page 13
ஆரம்பத்தில் பொலிசும், ராணுவமும் எந்த ஒரு இடையூறுமின்றி அவர்களது வீரச் செயலுக்கு இடம் கொடுத்து, பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“எங்களுடைய..ராணுவம்வாழ்க.” “எங்களுடைய. பொலிஸ் வாழ்க.” குண்டர்கள் கரகோஷமிட்டார்கள். இனி இன்றைக்கோ, நாளைக்கோ. ஒரு அப்பாவிக் கிராமத்தைத் தாக்குவார்கள்
போராளிகள்
ரத்னபால மனதுக்குள் நினைத்துக் கொண்டான். கடந்த காலம் முழுக்க இப்படித்தானே நடந்தது?
அன்றாடச் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அப்பாவி மக்கள் வயல் வெளிகளிலோ பாதைகளிலோ வீணாக வெட்டிக் இல்லாவிடின் பஸ்சோடு கொளுத்தப்பட்டார்கள்.
கொல்லப்பட்டார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை, அன்பு வழிப்புரத்தில், ஒரு வீட்டினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த ஒரு இளம் தமிழ் பெண்ணைக் கற்பழிக்க முயன்ற போது, ஊரே கூடித் தடுக்க வந்ததால்,
ராணுவத்தினர் துப்பாக்கிகளால் பலரைச்
சுட்டுக் கொன்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அதன் பிரதிச் செயலாகவே நேற்று குளிக்கச் சென்ற பெண்களும், சிறு குழந்தைகளும் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
கோக்கிளாய் தாக்குதலில் தன் தந்தையும், தங்கையும் கொல்லப்பட்ட சம்பவம் அவனுக்கு ஞாபகம் வந்தது. விடியற்காலையிலேயே களப்புக்குச் சென்று மீன் பிடித்து விட்டுத் திரும்பிய தந்தையையும், அடுப்படியில் தேநீர்
22
தயாரித்துக்கொண்டிருந்த தங்கையையும் சித்திரவதைக்குள்ளாக்கி கொன்று போட்டுக் கிடந்ததை எப்படி மறப்பது.
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை இப்போது காணவில்லை. எல்லோரும் தத்தம் கூடாரங்களுக்குள் அடங்கியிருப்பார்கள். முகாம் கூடாரங்களிலிருந்து குப்பி லாம்பின் ஒளி வீசத் தொடங்கியது.
சிறு கைக்குழந்தையொன்றின் அழுகுரலுக்கு மத்தியில், அங்குமிங்கும் குவிக்கப்பட்டிருந்த ஊத்தைகளிலிருந்து துர்நாற்றம் ரத்ன பாலாவின் மூக்கை அரித்தது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வயிற்றோட்டத்தால், எட்டு முகாம் வாசிகள் இறந்ததையிட்டு முகாமைப் பார்வையிட வந்த அப்பிரதேச மந்திரியின் வாக்குறுதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன.
மந்திரி அகதிகளோடு பேசும்போது அவர் வாயிலிருந்து சாராய நெடி வீசிக் கொண்டிருந்தது.
“நாங்கள் போரை எப்படியாவது நிறுத்துவோம் . மீண்டும் உங்கள்
முகாமில்
எல்லோரையும் உங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் . அது
வரை. முகாமுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்போம்.”
டவுனிலிருந்து வந்த சில முதலாளி மார்கள் சூழவந்துவிட்டுபோனவர்கள்தான்.
இது ஒரு அகதி முகாமில்லாது, ஒரு சிறைக் கூடம் என்றே ரத்னபாலவுக்குத் தோன்றியது. படங்குகளால் சூழ மூடப்பட்டு, தென்னங்கிடுகுகளால் கூரை
ஞானம் - ஜனவரி 2004

வேயப்பட்டு. அதனுள் வாழும் நரக வாழ்க்கையிலிருந்து எப்போதுதான் மீள்வதோ?
“ரத்னே.” திடீரென பலமாக ஒலித்த அந்த
மனிதக் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினான் ரத்னபால.
“நாங்கள். உன்னை எல்லா. இடத்திலும் தேடினோம்.”
என்று கூறியவாறே தர்மபால துவக்கை புளியமரத்தடியில் சாத்தினான். “இங்கு உட்கார்ந்து என்ன செய்யிறாய் தம்பி”
“ஒன்றுமில்லை” ரத்னபால நிலத்தை வெறிக்கப் பார்த்தபடி பதிலளித்தான்.
தர்மபாலவும், புத்ததாசவும் மீண்டும்
மூக்குமுட்டக் குடித்திருப்பது தெரிந்தது.
ஞானம் - ஜனவரி 2004
அவர்களிடமிருந்து வீசிய சாராய நெடி அவனது மூக்கைச் சுளிக்க வைத்தது.
“ரத்னே . தம்பி இங்க பார் . நாங்கள் வந்தது ஒரு முக்கியமான விஷயம் பேச.”
தர்மபால சாரத்தை கால்களுக் கிடையில் சொருகிக் கொண்டே அவன் அருகில் அமர்ந்துகொண்டான்.
“தம்பி நாங்கலெல்லாம் சிங்கள வர்கள் .
இந்தப் பறத் தமிழன் நாட்டில பாதியைக் கேட்கிறான்.
அதெல்லாம் எப்படி எங்களோட . தர்மபாலவின் முகம் போதையாலும், கோபத்தாலும் விகாரமாகிக் காணப்பட்டது.
GG
தம்பி . அவர்கள் குளத்தடியில்
y
கொன்றது எங்களுடைய ஆட்களை .
கோக்கிளாயில் கொன்றது . உன்னுடைய அப்பாவையும் . தங்கையையும் . நிலாவெளில கொன்றது எங்களுடைய ஆக்களை.” மூச்சு வாங்கப் பேசிய அவனது முகத்தை ரத்னபால உற்று நோக்கினான். மாலை இருட்டில் நன்றாய்த் தெரிய வில்லை. ஆனால் அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
“தம்பி இது. ரொம்ப . ரகசியமான வேலை . இன்றைக்கு இரவைக்கு . காளி கோவில் அகதி முகாமை அடிக்கப் போறோம் . அதில முழுக்க முழுக்க இருக்கிறது ஆறாம் கட்டை தமிழர்கள் . இந்த வேலைக்கு நீயும் எங்களோட சேரவேணும்.”
ரத்னபாலவின் இதயத்தில் யாரோ ஆணி அடித்தாற் போல் இருந்தது அந்தச் செய்தி. அவன் ஏதோ பேச வாயெடுத்தான்
23

Page 14
..அதற்கு முன் தர்மபால முந்திக் கொண்டான்.
“சோமபால முதலாளியும். வில்சன் முதலாளியும். நமக்குத் தேவையான சாமான்களைத் கொடுத்துள்ளார்கள். பெட்ரல் சரி . டயனமைட் கொஞ்சம் இருக்கு . இன்னும் கொஞ்சம் இருட்டான உடனே. மார்கட்ல இருந்து பொடியன்கள் வருவான்கள்”
சொல்லிவிட்டு அவன் ரத்னபாலவின் முகத்தைப் பார்த்தான்.
“அப்ப ரெடி தானே.” ஒன்றுமே - முகத்தைத் திருப்பிக் கொண்டான். கடலலையின் மெல்லிய ஓசைக்கிடையே இருட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பரவத் தொடங்கியது. ரத்னபால, தர்மபாலவின் தோளில் ஒரு கையைப் போட்டவாறே
ரத்னபால பேசாது
“தர்மே அண்ணே. நாங்கள் செய்யிறது சரியா ..? என்னத்துக்காக நாங்கள் அவர்களைக் கொல்ல வேணும்”
தர்மபால கேலியாய் சிரித்தான்.
“தம்பி. ரத்னே . சின்னப்புள்ள
அவன் கோபத்தில் கத்தினான். அவனது வெறிபிடித்த பார்வை ரத்னபால வையே எரித்து விடும் போல் இருந்தது. ஆனால் ரத்னபால அமைதியோடும், நிதானத்தோடும் பேசினான்.
“தர்மே அண்ணே . நாங்களும் அகதிகள், அவர்களும் அகதிகள். நாங்க அடிக்கிறது
இன்னொரு அகதி முகாமுக்கு . ஆனா நாங்களும், அவர்களும் எந்த நாளும் அகதிகளாகத்தான் இருக்கிறோம். இப்படி அடிக்கிறது சரியா.?”
ரத்னபால கேள்விக்குறியோடு அவர்களது முகத்தைப் பார்த்தான்.
தர்மபால எதுவுமே பேசாது, துவக்கை கையிலெடுத்துக் கொண்டு எழும்பி நடக்கத் தொடங்கினான். புத்ததாசவும் அவன் பின்னால் சேர்ந்து கொண்டான். இருட்டில், கடலோசைக்கிடையே அவர்களது காலடி யோசை மெதுவாய் மங்கத் தொடங்கியது.
“நாளைக்கு மீண்டும் ஊரடங்குச் சட்டம் போடுவார்கள்’
ரத்னபால இதயம் கணக்க தூரக்கடல் இருட்டில் எதையோ தேடினான்.
மாதிரிப் பேசாதே . அவர்களை . வைக்கக் கூடாது கொல்லணும்.” (ഉ
“ஞானம் சந்தா விபரம் உள்நாடு மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். தனிப்பிரதி : ரூபா 30/= அனுப்ப வேண்டிய பெயர், முகவரி அரையாண்டுச் சந்தா : ரூபா 180/= T. Gnanasekaran
i. ಘ್ವಿ ميم /360 ۰8 ،x۰۰ن3X :.۰ . . بیش88:X ,... به
ஆண்டுச் சநதா ரூபா 360/ 19/7,Peradeniyà Road, Kandy. சந்தா காசோலை மூலமாகவோ . . . .
மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
:
24
மணியோடர் அனுப்புபவர்கள் அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : ரூபா 20 US$ (தபால் செலவு உட்பட)
8 . .8.
ஞானம் - ஜனவரி 2004
 
 
 

(BITITFfurfr கா. சிவத்தம்பி
சந்திப்பு: தி. ஞானசேகரன்
N
/。
•
உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர்.
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
* தலைசிறந்த விமர்சகர்.
* தமிழ்நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர்.
* வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
தி.ஞா. அறுபதுகளில் முற்போக்கு, நற்போக்கு, மரபுப் போராட்டங்கள் நடந்தன. ஒரு கூட்டத்தில் முற்போக்காளர்கள் முட்டையெறிந்ததோடு, அவை முடிவுற்றதாக அறிகிறோம். இதுபற்றிய உங்களுடைய கருத்து என்ன?
கா.சி.; அந்தக்காலத்தில் முற்போக்கு வாதம் இருந்தது. மரபுவழிக்காரருக்கு எதிரான போராட்டமும் இருந்தது. பேராசிரியர் தில்லைநாதன் தினகரனில் ஆசிரியராக இருந்தபோது மரபுப்போராட்டம் பற்றிய கட்டுரைகளைப் பிரசுரித்துக்கொண்டிருந்தார். அதில் வந்த முதலாவது கட்டுரை என்னுடைய கட்டுரை. இளமுருகன், சொக்கலிங்கம், தேவன் போன்ற பலர் அதில் எழுதினார்கள். துரதிஷ்டவசமாக நண்பர் இளங்கீரன் போட்ட தொகுதியில் எனது கட்டுரை வரவில்லை.
الصر ܢܠ
ஞானம் - ஜனவரி 2004 25

Page 15
மரபு என்னும்போது அதில் புதிய வற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மரபில் மாற்றத்துக்கும் இடமுணி டு என்னும் வாதமும் நடந்தது. அதில் பணி டிதர்கள் ஒருபுறமாகவும் , முற் போக் கு எழுத்தாளர்கள் மறுபுறமாகவும் விவாதங்களை முன்வைத்தனர். முற்போக்கை ஆதரித்தவர்களும் அதற்கு ஆதரவாக இருந்தார்கள். சொக்கலிங்கம் போன்றவர்கள் அதற்கு ஆதரவாக எழுதினார்கள். அப்போது அவையிரண்டும் இருந்தன.
நற் போக்கு என்பது, அது பொன்னுத்துரையால் கொண்டு வரப்பட்ட ஒரு கோஷம். சு.நடேசன் சாகித்திய மண்டலய கூட்டத்தில் பேசும் போது ‘இலக் கியத் தை முற்போக்குப் பிற்போக்கு என்று பிரிக் காதீர்கள் . இலக் கியம் நற்போக்காக இருந்தால் அதுவே போதும்’ என அவர் அழகாகச் சொன்னார். பொன்னுத்துரைக்கு எப்பொழுதும் சொற்களிலே ஒரு கவர்ச்சி உண்டு. அவர் அதனைப் பிடித்துக் கொண்டு 'நற் போக்கு இலக் கியம்’ என்று முக்கியப் படுத்தினார். அது என்றைக்குமே ஒரு இலக்கிய இயக்கமாக இருந்த தில்லை. எது நற்போக்கு இலக்கியம் என அவர் வரை விலக் கணம் கூறவுமில்லை. நான் சுவாரஸ்யமான ஒரு கேள்வி கேட்டேன். 'பொன்னுத் துரையின் இலக்கியங்கள் நற்போக்கு இலக்கியங்களா? எனக்கேட்டேன். அவர், நற்போக்கு இலக்கியம் என்றது ஒரு விதண்டா வாதத்தின் தன்மை; பொன்னுத்துரைக்கே இயல பாக உள் ள குணம் . நாங்கள்
26
அதைப்பற்றிக் கவலைப் படவில்லை. நான் அவருக்காகக் கவலைப்படுவது என்னவென்றால், அவர் இப்படியான சண்டைகளில் மினக்கெட்டதால் தனது திறமை களைச் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இதுதான் பொன்னுத்துரையைப் பற்றி pb T65, God mo) 6)ds Jing uugs. A good stylist. ஆனால் மற்றச்சண்டைகளில் ஈடுபட்டதனால் g56oi 960) Lu திறமைகளைத் தானே மழுங்கடித்துக் கொண்டார்; பாவம்.
முட்டையடித்த விடயம், அது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் பாதித்த ஒரு மிகப் பெரிய எங்களுடைய சங்கத்தினால் செய்யப் பட்ட ஒரு மிக மோசமான காரியம். அதை நான் மறுக்க முடியாது. அது நடந்த சூழ்நிலையை நான் சொல்ல வேண்டும். 1963ஆம் ஆண்டு நான் திருமணம் முடித்திருந்த காலகட்டம். நான் முதல் நாள் பின் னேரம் யாழ்ப்பாணத்திற்குச் செல்லவில்லை. மறுநாள் நேராக இந்துக் கல்லூரிக்கு கூட்டம் நடந்த இடத்திற் குச் சென்றேன். கூட்டத்தில் ஆட்கள் எல்லோரும் நின்றார்கள். நான் பின் னுக்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
பேராசிரியர் சதாசிவம் தான் இழிசினர் வழக்குப் பற்றித் தொடக்கியவர். அவர் விஷயம் விளங்காமல் இது இழிசினர் வழக்கு என்று தொல்காப்பிய உரைகளில் வருவதைக் குறிப்பிட்டார். பண்டிதர் மார் எங்களைப்பற்றிப் பேசும்போது இது இழிசினர் வழக்கு என்று குறிப்பிட்டார்கள். `இழிசினர்’ என்று
ஞானம் - ஜனவரி 2004

கூறும்போது ஒரு சாதிபற்றிய தொனி தெரிகிறதல்லவா? இதுபற்றி எழுதிய பணி டிதர் ஒருவர் சரியாக விளங்கிக்கொள்ளாமல் இழிசனர் என்று எழுதிவிட்டார். இழிசினர் என்று சொனி னால் கீழ் நிலைக் குப் போனவர்கள் என்று கருத்து. இழிசனர் என்று சொன்னால் அது சாதியைத் தான் குறிக்கும். அதனை நாங்கள் பிடித்துக்கொண்டோம். அதற்கெதிரான பலமான கட்டுரைகள் எல்லாம் எழுதப்பட்டன. இந்த விவாதத்தை துரதிஷ்டவசமாக சதாசிவம் முன்னெடுத்திருந்தார்.
அந்த நேரத்தில் சதாசிவம் சாகித்திய மண்டலயவில் முக்கிய மானவராக இருந்தார். அவர் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். சாள்ஸ் சில்வா என்றவரும் வந்திருந்தார். சு.நடேசபிள்ளையும் பேசினார். இந்த சாகித்திய மண்டலயவில் சமீமும் ஒரு அங்கத்தினராக இருந்தார். அவரும் அங்கு வந்திருந்தார். அவருக்கு அங்கு ஒரு இடமிருந்தது.
இழிசினர் என்று சொன்ன அந்தக் கோபம் அங்கே இருந்தது. இழிசினர். இழிசனரா? அப்போ, அந்தக் கூட்டத்தில் ஏதாவது தப்பு ஏற்பட்டால் கூட்டத் தைக் குழப் புவதற்குத் தீர்மானித் திருந்தார்கள். அது உண்மை என்று நினைக்கிறேன். கூட்டத் தைக் குழப்பும் போது என்னமாதிரிக் குழப்புவது? கூட்டத்தில் பிரச்சினை எழுப்பி நீங்கள் இழிசனர் என்று பேசினீர்களா? என்று கேட்கிற ஒரு தீர்மானம் இருந்தது. அதனை சாகித்திய மண்டல அங்கத்தினரான சமீம் கேட்பதாகவும் இருந்தது.
ஞானம் - ஜனவரி 2004
வேறொருவரும் கேட்பதாக இருக்க வில்லை. இதற்குள், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்குள் இருந்த இளம் மட்டங்கள் - எனக் கு ஆட்களைத் தெரியும்; நான் பெயர் சொல்ல விரும்பவில்லை - முட்டை அடிப்பது என்று தீர்மானித்துவிட்டார்கள். உண்ழையில் எங்களுக்கு இவை ஒன்றுமே தெரியாது. கைலாசபதியும் அப்போது யாழ்ப்பாணத்தில் நின்றவர், அவரும் வருவார் என்று நினைத்துக் கொண்டு நான் கூட்டத்திற்குச் சென்றேன். அவர் கூட்டத்தில் நிற்பார் என நான் நினைத்தேன்.
நடேசன் அற்புதமாகப் பேசினார். அப்போதுதான் நற்போக்கு என்ற வசனத்தைப் பாவித்தார். அதன்பின்பு சதாசிவம் பேசத் தொடங்கினார். அப்போது சமீம் எழுந்து ஏதோ கேட்டார். கூட்டம் குழம்பியது. நான் கூட்டத்தின் நடுப்பகுதியில் இடையில் நின்றேன். எனக்கு நடந்தது எதுவும் புரியவில்லை. கூட்டம் குழம்பியவுடன் நான் சடாரென முன்னுக்குப் போனேன். சாள்ஸ் சில்வா கீழே விழுந்துபோனார். நான் அவரைத் தூக்கினேன். நடேசன் அருகிலே சட்டையில் முட்டை வழிய நின்று கொண்டிருந்தார். சாள்ஸ் சில்வா சிங்களவர், ஏங்கிப்போனார். நான் அவருக்குத் தண்ணிர் கொடுத்து அழைத்துவந்து காரில் ஏற்றினேன். நான் சடாரென்று முன்னுக்குப் பாய்ந்து போனதால் அங்கு அந்த நேரத்தில் நான் முன்னுக்கு நின்றேன். எனக்கு மனது தாங்காமல்தான் பாய்ந்து போனேன். அதன்பின்னர் கூட்டம் கலைந்து எல்லோரும் போயப் விட்டார்கள்.
27

Page 16
அதன் பிறகு நாங்கள் எ ல லோரும் வந்து ஆரிய குளத்தடியில் இருந்த சனசமூக நிலையத்தில் கூட்டம் கூடிப்பேசிப் போட்டுப் போனோம். அந்த நேரத்தில் அது ஒரு சாதிப்பிரச்சினையாக இருந்தது. அந்த நிலைக்கு அது போகாமல் தடுத்திருக்க வேண்டும். நிலைமை மாறியது. முற்போக்கு எழுத்தாளர்களோடு தொடர் பு வைத்திருந்த ஆதரவாளர்கள் பலர் ஒதுங் கிக் கொணர் டார் களர் . சொக் கலிங் கம் எங்களோடு இருந்தவர். அக்காலத்தில் கல்வித் திணைக்களத்தில் உயரதிகாரியாக இருந்த சோமசுந்தரம், சொக்கலிங்கத் தைக் கொண்டுபோய் எங்கோ ஒரு கண்காணாத இடத்திற்கு மாற்றம் கொடுத்தார். பின்பு கஷ்டத்தின்பேரில் நந்தியைப் பிடித்து வேறொரு பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். முட்டை அடித்த விடயம் மிகப் பார தூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. முற்போக்கு இலக்கிய இயக்கம் யானை தன்னுடைய தலையிலே தானே மண்ணை அள்ளிப் போடுகிற மாதிரி தன்னைத்தானே மாசுபடுத்திக் கொண்டதற்கு முக்கிய காரணம் அந்த முட்டையடி. ஆனால் அதற்காக அவர்களை இழிசினர் என்று சொல்ல என்றும் விடவும் தயாராகயில்லை. முட்டையடித்தது என்பது நாங்கள் செய்த மிகப்பெரிய மோசமான தவறு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அது மோசமாகப் பாதித்தது. நிச்சயமாக அது ஒரு கறை. நான் ஒத்துக் கொள்கிறேன். அதன்பிறகு நாங்கள் எழும்பவேயில்லை.
28
தி.ஞா. அந்தக் காலகட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் சண்டித்தனத்தைப் பாவித்தார்கள். அதற்குப் பயந்துதான் இந்தப் பணி டிதர்கள் எலி லோரும் ஒதுங்கிப் போனார்கள் என்றும் கூறப்படுகிறது.! கா.சி. இல்லை. அப்படியல்ல, சண்டித்தனம் பயன்படுத்தப்பட்டது அந்தக் கூட்டத்திலேயே தவிர மற்ற எந்த இடத்திலும் சண்டித்தனம் பயன்படுத்தப்படவில்லை. அது அந்த இடத்தில் நடந்ததற்குக் காரணம் அது சாகித்திய மண்டல விழா, இழிசினர் வழக்குப் பற்றிய பிரசாரம் - சமீம் அதில் மெம்பர். நடேசன் பேசி முடிந்த பின்புதான் . சதாசிவம் பேசிய போதுதான் சமீம் கேள்வி கேட்டார். அதனாலேதான் அந்தப்பிரச்சினை வந்தது. இழிசனர் வழக்குச் சர்ச்சை நடந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட விடயமிது.
சணி டித்தனம் வேறெங் குங் காட்டப்படவில்லை என்பதற்கு உதாரணம் சொல் கிறேனர் . இளமுருகன் மரபுப்போராட்டம் பற்றி எங்களிடம் பேசினார் . நான் 'அசையாத குட்டை நீரல்ல மரபு என்று தினகரனில் கட்டுரை எழுதினேன். அதுதான் அதுபற்றிய எனது முதலாவது கட்டுரை. அதற்கு இளமுருகன் பதில் எழுதினார். பதில் முழுவதையும் தில் லைநாதனால் போடமுடியவில்லை. இளமுருகன் என்ன செய்தார் என்றால், எழுதிய முழுவதையும் ஒரு புத்தகமாகத் தொகுத்து ‘செந்தமிழ் வழக்கு என்ற பெயரில் வெளியிட்டார். இந்த மரபு விவாதம் பற்றி நாங்கள் பல
ஞானம் - ஜனவரி 2004

இடங்களில் விவாதித்திருக்கிறோம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளங்கதிர்’ இதழில் மரபு பற்றி சதாசிவம், வித்தியானந்தன், கைலாசபதி ஆகியோர் கட்டுரைகள் எழுதினார்கள். நான் சொல்லும் முக்கியமான உதாரணம் என்ன வெனில், வறுத்தலை விளானில் ஒரு கூட்டம் நடந்தது. சதாசிவத்திற்குச் சார்பாக இருந்த FXC நடராசா ஒருபுறமும், மறுபுறத்தில் நானும் பேசினோம். அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் பிற்காலத்தில் இலக்கண வித்தகள் என அழைக்கப் பட்ட நமசிவாய தேசிகர். நான் முதலிலும் பின்னர் நடராசாவும் பேசினோம். தலைமை வகித்த நமசிவாய தேசிகர், ஈற்றில் நேர்மையான ஒரு விசயத்தை எடுத்துக்கூறினார். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு வல 56)
சண்டித்தனத்தால் ஒதுங்கினார்கள் என்பது நிச்சயமாக இல்லை. பேராசிரியர் கணபதிப்பிள்ளை பற்றி Work பண்ணிய போதுதான் அதன் தன்மை எனக்குப் பிடிபட்டது. என்னவென்றால் தமிழை ஒரு பாடமாகப் படிப்பிக்கின்ற முறைமை இருந்தது. உயர்தர வகுப்புக்கு - பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக்குத் தமிழை அந்தக் காலத்தில் பண்டிதர்மார்தான் படிப்பித்தார்கள். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பாட அமைப்புக் காரணமாக இலக்கிய வரலாறு பற்றிய பாடப்புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின. இலக்கிய வரலாறு பற்றி அந்தப் பண்டித பரம்பரையினருக்கு அவ்வளவு தேர்ச்சியில்லை. இதன்காரணமாக, இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றை அவர்கள் படிப்பிக்க, இலக்கிய
manunun
வகையினான என்று பேசினார். அப்போது தான் அவரது நேர்மையை மெச்சி னேன். இது நடந்தது 62, 63களில். 78இல் நான் uu TT Up . பல் கலைக் கழகத் திற்குப் போனேன். அதைத் தொடர்ந்து வந்த காலத்தில் , உள்ளுர் அறிஞர் களுக்குப் பட்டம் கொடுக்க வேண்டும்
r
முட்டை அடித்த விடயம் மிகப் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. முற்போக்கு இலக்கிய இயக்கம் யானை தன்னுடைய தலையிலே தானே மண்ணை அள்ளிப் போடுகிற மாதிரி தன்னைத் தானே. மாசு படுத்திக் கொண்டதற்கு முக்கியகாரணம் அந்த முட்டையடி. ஆனால் அதற்காக அவர்களை இழிசினர் என்று சொல்ல என்றும் விடவும் தயாராகயில்லை. முட்டையடித்தது என்பது நாங்கள் செய்த மிகப்பெரிய மோசமான தவறு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அது மோசமாகப் பாதித்தது. நிச்சயமாக அது ஒரு கறை. நான் ஒத்துக்கொள்கிறேன். அதன்பிறகு நாங்கள் எழும்பவேயில்லை.
என்று கூறி, நமசிவாய தேசிகருக்கு இலக்கண வித்தகர்' பட்டம் கொடுக்க வேண்டுமென நான் வாதாடினேன். அப்போது நான் தமிழ்ப் பிரிவுத் தலைவராக இருந்தேன். கைலாசபதி பீடாதிபதியாக இருந்தார். பண்டிதர்மார்
ஞானம் - ஜனவரி 2004
வரலாற்றை மற்றவர்கள் படிப்பிக்க வேண்டிய நிலைமை இருந்தது. ஒட்டுமொத்தமான, இலங்கை முழுவதற்கும் பொதுவான ஒரு தமிழ் tradition ? 6o 60d AD @ 6d (bi 60o a5 Lú பல்கலைக்கழகத்தில் பிரதானமாகப்
29

Page 17
பேராசிரியர் கணபதிப்பிள்ளை கொண்டு வந்தார். அதற்கு உதவியாக பேராசிரியர் செல்வநாயகம், வித்தியானந்தன் ஆகியோர் இருந்தார்கள். பண்டிதர் மாருடைய படிப்பித்தல் முக்கியத்துவம் இதனால் குறைந்தது. இந்தப் பின்புலத்திலேதான் அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். அவர்கள் தனியாகக் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் தாக்கவில்லை. தனியாக டானியலையும் ஜீவாவையும் தாக்கவில்லை. அவர்கள் தாக்கியது கணபதிப் பிள்ளை. செல்வநாயகத்தின் முறைமையை. அதனாலேதான் இவர்கள் ஆடுகிறார்கள் என்று இளமுருகனே கூறினார். இளமுருகனின் செந்தமிழ் வழக்கு என்ற புத்தகத்தை எடுத்துப்பார்த் தீர்களானால் இது விளங்கும்.
அவர்களுக்கு வந்த பிரச்சினை என்னவென்றால் அதுகாலவரையில் எழுத்தாளர் களாக இருந்த இலங்கையர்கோன், வைத்திலிங்கம் ஆகியோர் நவீன இலக்கியக்காரர்கள். அவர்கள் தங்களைப் பழைய இலக்கியக்காரர் என்று சொல்லவும் இல்லை. பண்டிதர்களும் அவர்க ளோடு சண்டைபோடவும் இல்லை. இவர்கள் எப்போது பேசினார்கள் என்றால், டானியலும் ஜீவாவும் தங்களுடைய பிரச்சினைகளை எழுதியபோதுதான். அப்போதுதான் இவர் களுக் குச் சிறுகதையே வேண்டாம் என்ற கோபம் வந்தது என நான் கருதுகிறேன். அதற்குள் ஒரு சமூகப்பிரச்சினை இருக்கிறது. அந்தச் சமூகப் பிரச்சினையை நாங்கள் மறுதலிக்க இயலாது. இந்த நேரத்தில், இதுவரைகாலமும் இவர்களுக்குத்தான் தெரியும் என்றிருந்த தொல்காப்பிய
30
படிப்பித்தல்
உரைகளைப் பற்றி நாங்களும் கை வைத் துச் சொனி னோம் . பேராசிரியர் மரபு பற்றி இவ்வாறு கூறுகிறார். “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே. மரபு பற்றிச் சொன்னோம் - காலமும் வழக்கும் திரிந்தவிடத்து திரிந்த வற்றிற்கேற்ப அமைத்துக்கொள்வதோர் முறைமை எனப் பேராசிரியர் உரையில் சொல்லியிருக்கிறார். 'சேரிமொழியாற் செவ்விதிற் படுமே - சேரிமொழி பயன் படுத்தலாம் - டானியலும் ஜீவாவும் அந்த மொழியில் கதை எழுதலாம் என்றோம். இவற்றை நாங்கள் சொல்லத்தொடங்கியபோது பண்டிதர் மார்களுக்கு, நாங்கள் முற்றிலும் தமிழ் தெரியாதவர்களல்லர் என்று தெரியவந்தது. எல்லாப் பண்டிதர் மாரும் இவற்றை எதிர்க்கவில்லை. வேந்தனார் எதிர்க்கவில்லை, பொன. கிருஷ்ணபிள்ளை எதிர்க்கவில்லை.
பாவம் சதாசிவம், பேராதனையில் பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் ஆகியோருடன் இருந்த சண்டை இப்படி வந்து வெடித்தது. செல்வநாயகம் தனக்கு ஆதரவாக இருப்பார் என்று பார்த்தார். ஆனால் செல்வநாயகம் இந்த விடயத்தில் நிதானமாக இருந்தார். சதாசிவம் எவ்வளவோ கெட் டிக் காரனாக இருந்தபோதும் அவரைப்பற்றி இன்று பேசுவார் இல்லை. வித்தியர், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம் ஆகியோர் பேசப்படும் அளவிற்கு சதாசிவம் பேசப்படுவதில்லை.
பண்டிதர்மார் சண்டித்தனத்துக்குப் பயந்து ஒதுங்கினர் என்பதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.
தொடரும்.
ஞானம் - ஜனவரி 2004

༄ས་
"ஞானம் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான
சிறுகதைத் தொகுப்புப் போட்டி
ஞானம் விருது 2004 இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றலை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்குடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் வருடந்தோறும் நடத்துகிறது. நிபந்தனைகள்: 1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 30-04- 2004 அன்று நாற்பது
வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறு கதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா ஐயாயிரம் பரிசாக
வழங்கப்படும். s 5) இரணர் டாவது பதிப் பின் பதிப் புரிமை
கதாசிரியருக்கு வழங்கப்படும் 6) பரிசுக்குரிய தொகுதியை, ஞானம்
ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஒர் எழுத்தாளரும் இணைந்து தேர்ந்தெடுப்பர். அவர்களின் முடிவே இறுதியானது. 7) போட்டி முடிவு திகதி 30-04-2004. அதன் பின்னர் வந்துசேரும் படைப்புகள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் ஞானம், 19. பேராதனை வீதி, கண்டி என்ற விலாசத்துக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்படவேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி’ எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். 9) நிபந்தனைக்கு உட்படாத தொகுப்புகள் போட்டியில்
சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது. 10) ஞானம் விருது ஒர் எழுத்தாளருக்கு ஒரு தடவைதான் வழங்கப்படும்.
குறிப்பு :- ஓர் இலக்கிய அன்பாரின் அனுசரணையுடன் நடாத்தப்படும்
இப் போட்டி வருடந்தோறும் நடைபெறும். کرس_ ܢܠ
ஞானம் - ஜனவரி 2004 31

Page 18
ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் - 10
மலையக மக்கள் படுகின்ற
அவலங்கள் துன்ப துயரங்கள் என்னைக்
கவிஞனாக்கின’ எனக்கூறும் குறிஞ்சி
ஆ, இளந்தென்றல், ஈழத்தின் மலையகக்
கவிஞராவார்.
மலையகக் கவிஞர்கள் வரிசையில் வளர்ந்துவரும் கவிஞர் குறிஞ்சி இளந்தென்றல். தன் இலக்கிய குருவாக மலையகத்தின் மூத்த எழுத்தாளர் ‘இலக்கிய செம்மல் திரு.
W குறிஞ்சி W தெளிவத்தை ஜோசப் அவர்களை வரித்துக் இளந்தென்றல்
கொண்டு கவியுலகத்திற்கு வந்தவர். மக்கள் ச. புஸ்பராஜ் கவிஞர் பட்டுக்கோட்டையார் மீது மிகவும் டிம்திப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். இலங்கையின் பல மூத்த w ནི་ புடைப்பாளர்களின் மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர். தனது 16 வது \t வயதில் தனது முதல் கவிதையை எழுதினார். இவரின் முதல் விதையான “இறைவனில்லை” என்ற கவிதையைத் தனது 19வது
3 プ இரண்டு வரை தன் தோட்டத்து பாடசாலையான ஆகலை தமிழ் N (வித்தியாலயத்திலும், ஆண்டு இரண்டு முதல் ஆண்டு பதினொன்று & སྣོ་ வரை கொழும்பு முகத்துவாரம் இந்துக்கல்லுாரியிலும் கல்வி பயின்றவர்.
* * கவிஞரான இவர் சிறந்த ஒவியரும் கூட. தனது கல்லுாரி
ாலங்களில் பாடசாலை மட்டத்தில் நடந்த ஒவியப்போட்டிகளில்
லங்கரித்துள்ளன. 雳, கவிதை உலகிற்கு வந்த இவர் தனது சொந்தப் பெயரான //சந்திரசேகரம் புஸ்பராஜ்என்பதை கவிஞர் குறிஞ்சி தென்னவன், கவிஞர் /ಅಶ್ವಿ மணவாளன் போன்றவர்களின் நட்பினாலும், அவர்களின் # கவிதைகளின் பாதிப்பினாலும் தன் பெயரையும் மாற்றி குறிஞ்சி செங்கை ஆழியான் இளந்தென்றல்' என வைத்துக் கொண்டார்.
32 ஞானம் - ஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவரது கவிதைத் தொகுப்பு'அப்புறமென்ன. என்ற மகுடத்தில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ளது.
புதுக்கவிதைகள் எழுதும் இவர் மற்றகவிஞர்கள் போல் அல்லாமல் தான் எடுத்துக் கொண்ட கருவை மிக எளிதாகப் புரியும்படி பாடிவிடுகிறார்.
குறிஞ்சி இளந்தென்றலின் கவிதைகள் இலங்கையில் தினக்குரல், வீரகேசரி தினகரன், சூடாமணி, நவமணி, மித்திரன், தினமுரசு, மல்லிகை, சரிநிகர் போன்ற பத்திரிகையிலும் மற்றும் பல மாதாந்த சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இவர் தனது தாய் பத்திரிகையாக தினக்குரலை குறிப்பிடுகிறார். இவரின் பல ஆக்கங்கள் தினக்குரலில் தான் வெளிவந்துள்ளன. திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் மீது தனது தாயைப் போல அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்.
ஈழத்து இலக்கிய நம்பிக்கைகளில் ஒருவர்.
云冷行觅
நீர் பயன் பாதுகாப்பு
காடு மலை யெலாம் சேர்ந்து - நீர் காவிய மேகத்தில் மோதியபோது கூடும் மழை வீழ்ச்சியாலே - நீர் ஊற்றுக்கள் குளம் ஆறு பெருகும்! மனிதனின் வாழ்வில் தண்ணிரும் - பெரும் மாண்புறு பங்கை விளைப்பது தெரியும் இனி இங்கு சுத்தமே பேண - இந்த இயற்கையாம் நீரே பெருஞ் செல்வமாகும்
தண்ணிரின் தேவைகள் அதிகம் - அதை எண்ணி நாம் பேணிக் காத்திடல் வேண்டும் உண்மையில் உணவுடை வீடு - எமக் குதவும் பணிக்கு முதன் நிலை நீராம்! மழை வீழ்ச்சியற்ற இடத்தில் - பயிர் மறுத்திடும் வளராது விவசாயம் குன்றும் பிழை வாழ்வில் நடந்திடா திருக்க - நீரை மழை பெய்யும் போது தேக்கிட வேண்டும்!
மழையினால் நீரை நாம் பெற்று பெரும் மகிமையாய் விவசாய விருத்தியால் உலகம் பிழைத்திடும் வழியினுக் குதவும் - நீரைப் பிழையாக்காச் சுத்தமாய்ப் பேணுதல் வேண்டும்!
கவிஞர் ஏ. இக்பால்
SG4S)2 宾垩公三叉
ஞானம் - ஜனவரி 2004 33

Page 19
Gelgeflattend OD),
தமிழ்த் தேசீயமும்
முல்லைமணியின் கட்டுரைக்குச் சில எதிர்வினைகள்
பேராசிரியர் கைலாசபதியும், தமிழ்த் தேசீயமும் என்ற முல்லைமணியின் கட்டுரை கடந்த 41வது இதழ் ஞானத்தில் வெளியானது. இக்கட்டுரைக்குச் சில எதிர்வினைகளை இத்தால் தெரிவிக்கின்றேன்.
திரு. முல்லைமணி அவர்கள் இன்று கைலாசபதி உயிருடன் இருந்திருந்தால், அவரின் சகாக்களைப் போலவே தமிழ்த் தேசீயத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்’ எனக் குறிப்பிட்டு உள்ளார். அவருடைய சகாக்களாக 'முல்லைமணி'யாரைக் குறிப்பிடுகின்றார் என்பது கட்டுரையில் தோன்றா எழுவாயாக நிற்கின்றது.
1969, 1970 ஆண்டுகளிலே பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் எமக்கு மூத்த விரிவுரையாளராக இருந்தார். அதற்கு முன்புள்ள கால கட்டத்தில் அவர் தினகரன் ஆசிரியராக இருந்தார். இரண்டு காலகட்டங்களிலும் அவர் மார்க்சீயவாதத்தினூடாகத் தமிழ்த் தேசீயத்தை அங்கீகரித்தே வந்துள்ளார்.
மார்க்சீயவாதம் என்பது தமிழின உரிமைப் போராட்டத்துக்கு எதிரானதும் அல்ல. அதனூடாக அவர் தமிழ்த் தேசீய வாதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அரசியல் தீட்சண்யம் குறைந்தவராக மதிப்பிடவும் முடியாது.
செக்-ஸ்லாவகிய இனங்கள் தமது தனித்துவத்தை இழந்து சிதறுண்டு போகும் எனக் கால்மாக்ஸ் எழுதியுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. செக், மக்களும், ஸ்லாவாகிய மக்களும் இன்று இருவேறுபட்டதாயகத்தில் வாழ்கின்றார்கள். அதுபோன்று தமிழர்கள் பற்றிக் கால்மாக்ஸ் எதுவும் சொல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தமிழனும் தலைநிமிர்ந்து தன்னாட்சி பெற்று வாழ்வான் (Self Autonomy Rule).
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தமிழ்த் தேசீயத்தை ஏற்றுக் கொண்டிரா விட்டால் கூடத் தமிழனுக்கு நஷ்டமும், (திக்கவயல் தர்மகுலசிங்கம்) கஷ்டமும் இல்லை.
விமர்சனக் கலை கைலாசபதியின் ஆளுமையைப் பெரிதாக எடுத்துக் கொள்வதால் இப்படியும் செய்திருக்கலாமே என ஆதங்கப்படும் பரிதாப நிலையைக் காண முடியும். இந்தக் குறியீடு ஒரு தாழ்வுணர்ச்சிச் சிக்கலே. இந்தத் தாழ்வுணர்ச்சிச் சிக்கல் முல்லைமணிக்கு மாத்திரம் அன்றி வேறு பல தேசீயவாதிகட்கும் இருப்பதுதான் கவலைக்கு உரியது.
34 ஞானம் - ஜனவரி 2004
 
 
 

தமிழ் இலக்கியப் பரப்பில் ஏறத்தாழ எல்லாக் காலகட்ட இலக்கியங்களையும் - சங்ககாலம் தொடக்கம் இக்காலம் வரை கருத்தில் கொண்டு ஆய்வில் ஈடுபட்டார் என முல்லைமணி கூறுகிறார். என்ன கருத்து தெளிவுபடுத்தப் படவில்லை. சங்ககால இலக்கியங்களைப்
என்பது
பொற்கால இலக்கியங்கள் அல்ல என மறுக்கும் கைலாசபதி அவர்கள் சங்கப் பாடல்களை வீரயுகப் பாடல்களாகவே
அறிமுகம் செய்கிறார். அவர் ஆங்கிலத்தில்
6TQg5u Tamil Heroic Poetry 5L6 gph ஆங்கிலத்திலும் இருந்த நுண்மானர் நுழைபுலத்தையே எடுத்துக் காட்டுகிறது.
தமிழில் மார்க்சீயக் கருத்துக்களை முதலில் குறுகத்தறித்த குறள் மூலம் தந்தவர் திருவள்ளுவரே! திருவள்ளு வருக்கு மார்க்ஸ் எனப் பெயரிட்டிருந்தால் மார்க்சீயத்துக்கு வேறு பெயர்தான் கொடுத்திருக்க வேண்டும்.
முதலில் மார்க்சீயக் கருத்துக்கள் வள்ளுவத்திலேயே உள்ளன. இலக்கியத்தில் தமிழ்நூல் பரப்பு முழுவதையும் படித்த பேராசிரியர் இது சம்பந்தமாக எதுவும் தமது நூல்களில் குறிப்பிடவில்லை.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தமிழ்த் தேசீயத்துக்கு எதிராக எழுதியிருந்தால் அக்கட்டுரைகளை மீண்டும் ஆய்வுக்களத்தில் போட வேண்டிய
தேவை உள்ளது. நான் அறிந்த மட்டில்
அவ்வாறான கட்டுரைகளைச் சந்திக்க வில்லை. அவ்வாறான கட்டுரைகள் முல்லைமணியிடம் இருப்பின் அதனைப் கடித மூலம் யாருக்காவது எழுதியிருப்பின் அதனையும் ஆதாரமாகத் தரலாமே?
பிரசுரிக்க வேண்டும்.
ஞானம் - ஜனவரி 2004
மண்ணுலகத்து ஒசைகள்' என்ற தலைப்பிட்டுவரதரின் வெள்ளிஎன்ற இதழில் பல வரலாற்றுக் கட்டுரைகளைக் கைலாசபதி அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரைகள் பற்றி பலவாதப் பிரதிவாதங்களை நான் அவருடனேயே நடத்திஇருக்கின்றேன். திரு. முல்லைமணி அவர்களின் இக்கட்டுரைக்குப் பின்பு மீண்டும் ஒரு தடவை நான் அக் கட்டுரைகளைப் பார்வையிட்டேன். அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் மூலமாகவும் பார்வையிட்டேன். வேறு பல இடங்களிலும் தேடினேன். அவ்வாறான கட்டுரைகள்
அவர் முற்போக்காளர்; மொழி முதல் வாதத்தை முன்வைக்கவில்லை. பொருள் முதல் வாதத்தையே முன் வைத்தார். மொழியியல் சம்பந்தமான தீவிரவாதத்தை இரண்டாம் பட்சமாகவே அவர் உலக அரசியலில் நோக்கினார். அதற்காக அவர் தமிழ்த் தேசீயவாதத்துக்கு எதிராக எழுதினார் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தன்ை யைப் பிரதிபலிப்பது முற்போக்கு இலக்கியம் என்றால் ஈழத்தின் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசீய எழுச்சியினையும், அதன் வழித்தோன்றிய இலக்கியங்களையும் பேராசிரியர் கண்டு கொள்ள மறுத்த தேன்? என முல்லைமணி அவர்கள் அர்த்த புஷ்டியுடன் கேட்கிறார்.
கேள்விக்கு விடை இறுக்கு முன்பு சில கேள்விகளைத் தமிழர்களாகிய நாமும் எமக்குள் கேட்டே ஆக வேண்டும். தமிழுக்கும், சிங்களத்துக்கும் சம அந்தஸ்து என இடதுசாரிகள் அறிவித்துக் களத்தில் இறங்கியபோது தமிழ்த் தேசீயவாதம் எழுச்சி பெற்று அவர்கள் பின்னால்
35

Page 20
சென்று இடதுசாரிகட்குப் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்ததோ? எல்லா இடங்களிலும் தமிழ்த் தேசீயவாதம் வரலாற்றுக் கால கட்டங்களை சரியாகக் கடந்து வந்துள்ளதா? இல்லையெனச் சொன்னால் முல்லைமணி அவர்கள் சகித்துக் கொள்வாரோ?
இக்கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எனக் குறிக்கப்படும் பதம் அன்று சாதி ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களையே குறித்தது. 1961ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின்பு தமிழர்களுக்குள் நடந்த மோசமான ஒடுக்குமுறைப் போராட்டங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தன. இவை கற்றோர் கனத்துள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இப்பிரச்சனையூடாக அன்று பிரபல்யமான கவிஞர்களாகப் புதுவை ரத்தினதுரை, சுபத்திரன் போன்றவர்கள் தோன்றினார்கள். குமரேசன், கார்த்திகேசன் போன்ற பலர் இப் போராட்டத்தில் தியாகிகள் ஆனார்கள். இப்போராட்டங்களுக்கு மெத்தப்படித்த தமிழன், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் போன்றோரும், மேல்தட்டு வர்க்கத் தினருக்குச் சாதகமாக நின்றமையை முல்லைமணி அவர்கள் மறந்திருப்பாரோ என்னவோ? ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக எழுதப்பட்ட இந்த இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம் எனக் கைலாசபதி அவர்கள் இனம் கண்டது தவறா?
சீதனக் கொடுமைகளும், நிலப் பிரபுத்துவக் கொடுமைகளும் தமிழ் உலகில் கோலோச்சிய கதைகள் பலவும் தினகரனில் (அவர் ஆசிரியராக இருந்தபோது) வெளிவந்தன. அந்தக் காலக் கட்டத்தில் அவையும் முற்போக்கு
36
இலக்கியமாகவே கருதப்பட்டன. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தினகரனில் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த பலகதைகள் தமிழ்த் தேசங்களை உருவாக்கிய கதைகள் என்பதையும் மறந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியத்தை உருவாக்கிய சவாரித்தம்பர் கார்ட்டூன்கள் பல தினகரனில்தான் முதலில் வெளிவந்தது. தமிழ்த்தேசீயத்துக்குப் பேராசிரியர் கைலாசபதி என நினைப்பவர்கள் இவற்றைக் கருத்தில் எடுக்க வேண்டும்!
கால்மாக்சின் பொருள் முதல்வாதக் கருத்தை முன்னணியில் வைத்தவர் கைலாசபதி. மொழி முதல் வாதத்தை அவர் முன்வைக்கவில்லை. (உலக மொழிகளுக்கு எல்லாம் தமிழ் மொழிதான் தாய்மொழி போன்ற கருத்துக்களை) உலக மொழிகள் பலவற்றில் அவருக்கு இருந்த பரிச்சயமும் இதற்குக் காரணம். இதற்காகத் தமிழ்த்தேசீய இனத்தின் எழுச்சியையும் அதன் வழித் தோன்றிய இலக்கியங்களையும் கண்டுகொள்ள மறுத்தார் என்பது அபத்தமானது. அவர் அவ்வாறான இலக்கியங்களையும் கண்டு கொள்ள மறுத்தார் என்பதும் அபத்த மானது. அவர் அதனைத் தெரிந்தே வைத்திருந்தார். ஆனால் விமர்சிக்க மறுத்தார். மெளனமாக இருந்தார்.
கவிஞர் காசி ஆனந்தன் தெருப் புலவர் சுவர்க்கவிதை' என ஒரு கவிதைப் புத்தகத்தை வெளியிட்டிருந்தார். எனது ஞாபகத்தில் அது ஒரு புதிய கவிதைப் புத்தகமே. அதில் பொடி மெனிக்கா மொக்கு; 'பொன்னம்மா புத்திசாலி 6T6T கவிதை பொழியப்பட்டிருந்தது. இவ்வாறன கவிதைகளைப் பற்றிப் பேராசிரியர் என்னுடன் கதைத்தபோது இனச்
ஞானம் - ஜனவரி 2004

சமத்துவத்தை மறுக்கும் கவிதைகள் இவை? எனச் சுட்டிக் காட்டினார். ஒரு கருத்தில் சொல்லப் போனால் இக்கவிதையை ஒரு தமிழ்த் தேசீயக் கவிதை எனச் சுட்டிக் காட்டலாமோ?
இக்கால கட்டங்களில் கவிஞர் காசி ஆனந்தன் ஒரு பக்கமாகவும், கைலாசபதி போன்றவர்கள் மறுபக்கமாகவும் பகிரங்க மேடைகளில் மோதிக் கொண்டார்கள். இதில் தமிழ்த் தேசீயத்தின் குரலாகக் காசி ஆனந்தனின் குரலே பொது
மேடைகளில் (அதிகம் கொழும்பு மேடைகளில்) ஓங்கி ஒலித்தது. பேராசிரியர் கைலாசபதிக்கு ஒரு
கொள்கை இருந்தது; பரந்த அறிவு இருந்தது; அந்தக் கொள்கையூடாகவே அவர் இலக்கியத்தைப் பார்த்தார். அவ்வாறு பார்க்கையில் பலரும் விடுபட்டார்கள். அது தமிழ்த் தேசீய இனத்தின் எழுச்சியைப் புறக்கணித்தது எனச் சொல்லின் ஏதுதான் செய்வது?
யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெற்ற கால கட்டத்தில் தமிழின உணர்வுக்கே இடம் இருந்தது. பேராசிரியர் கைலாசபதி அப்போது பேராசிரியராக இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த அரசு ஆதரவு வழங்கவில்லை. இதனால் அரசு சார்பாக இருந்தவர்கள் பலரும் தமிழினத் துரோகிகளாகக் கருதப்பட்டார்கள். பேராசிரியர் கைலாசபதி போன்றவர் கட்குத் தனித்துவமான அழைப்புகள் கிடைக்கவில்லை. அதனால் பேராசிரியர்
தூர விலகிக்கொண்டார். இது பேரினவாதச் சிந்தனைகட்குத் துணை போவதா?
தமிழ்த் தேசீய இனத்தின் எழுச்சியைக் காட்டும் பெரும் இலக்கி யங்கள் எனக் கைலாசபதி மறையும் வரை, அதன்பின்பு இன்று வரை எதனைத் தான் முல்லைமணி காட்ட முடியும்? இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் வரலாற்று ஆசான் வீரசவர்க்கார் தொடங்கி மகாகவி தாகூர் தொடங்கி மகாகவி பாரதிவரை ஆயிரக் கணக்கான புத்தி ஜீவிகள் புரட்சிகர இலக்கியங்களால் இந்தியத் தேசீய வாதத்தைத் தட்டி எழுப்பியது போன்று தமிழ்த் தேசீயவாதத்தைக் கட்டி எழுப்பிய அமரத்துவ இலக்கியம் இலங்கையில் தோன்றியுள்ளதா? முல்லைமணி அவர்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டும் இதை
தமிழ் ஈழ இலக்கியத்தில் சில Good Pieces 9 6doTG g606) Master Pieces அல்ல. பேராசிரியர் இந்த இலக்கியங்களை இனம் காணவில்லை எனச் சொல்வது தவறு. அவரால் வளர்ந்த எழுத்தாளர்களும் சரி, மற்றோரும் சரி இக்கருத்தை என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
முல்லைமணி அவர்கள் ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு மறு கண்ணால் பார்க்கும் இலக்கிய விவேகத்தை மறந்து விடவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து சிந்திப் பாரானால் 'வன்னியியல் சிந்தனைகள் என்ற பதத்துக்கு மாறுபட்டவராகவே முல்லைமணியை எதிர்காலத்தில் நோக்க வேண்டி வரும்.
ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி www.geocities.com\gnanam magazine
ஞானம் - ஜனவரி 2004
37

Page 21
எழுதத் தூண்டும் எண்ணங்கள்
கலாநிதி துரை மனோகரன்
ஈழத்தில் ஓர் இரசிகமணி
தமிழ்நாட்டில் இரசிகமணி என்றால் டி.கே.சிதம்பரநாத முதலியாரைக் குறிக்கும். ஈழத்தில் இரசிகமணி என்னும்போது, கனக செந்திநாதன் இயல்பாகவே ஞாபகத்துக்கு வருவார். ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் மாணவராக விளங்கிய அவர், எழுத்தாளராகவும், விமர்சகராகவும் திகழ்ந்து, ஈழத்து இலக்கிய வரலாற்றில் தமது பெயரை ஆழமாகவே பதித்துக் கொண்டவர்.
சிறுகதை, நாவல் எழுத்தாளராக விளங்கிய கனக செந்திநாதன், தமது படைப்புகள் தொடர்பாகப் பின்வருமாறு தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “யாழ்ப்பாணப் பழமை, சமயச்சூழல், பழமையான கதை சொல்லும் உத்தி என்ற என் தனித்துவத்தை நான் இழந்துவிடத் தயாராக இல்லை. என் கதைகளை நோக்குவோர் என் தனித்துவம் என்னும் அச்சாளரத்தினூடு பார்த்தல் நல்லது. தாம்தாம் வைத்திருக்கும் கொள்கை, அரசியற் பிடிப்பு, மேனாட்டு உத்திமுறை என்னும் இவற்றை அளவுகோலாகக் கொண்டு சிரமப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” (வெண்சங்கு முன்னுரை) கனக செந்திநாதன் ஒர் எழுத்தாளராக இருந்த போதிலும், தம்மை ஒரு விமர்சகராக இனங்காட்டிக் கொள்வதையே பெரிதும் விரும்பியிருந்தார் போலத் தெரிகிறது. ஆரம்பத்தில் ஓர் இரசிகமணியாகத் திகழ்ந்த அவர், காலப்போக்கில் தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்ட விமர்சகராக வளர்ச்சி பெற்றார். ஈழகேசரி பத்திரிகையில் கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைப்பெயரில் ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றி விமர்சன பூர்வமாக எழுதிவந்தமை அவரது குறிப்பிடத்தக்க பணிகளுள் ஒன்றாகும். சில குறைகள் இருந்த போதிலும், அவரது ஈழத்து இலக்கிய வளர்ச்சி(1964) என்னும் நூல், இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய வரலாறு பற்றிய முதல் நூலாக விளங்குகிறது. பல்வேறு நூல்களுக்கு அவர் வழங்கிவந்த முன்னுரைகள், அவர் விமர்சனத்துறையில் பெற்றுவந்த வளர்ச்சிநிலையைக் காட்டுகின்றன. நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் பற்றிக் கனக செந்திநாதன் எழுதிய திறவாத படலை (1972) என்ற நூல், தமிழ் மரபும், நவீன விமர்சனமும் இணைந்த ஒரு விமர்சகராக அவரை இனங்காட்டுகின்றது.
நான் யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவர் என்ற முறையில் கணக செந்திநாதனையும், டொமினிக் ஜீவாவையும் உரையாற்றக் கல்லூரிக்கு
38 ஞானம் - ஜனவரி 2004
 

அழைத்திருந்தேன். அப்போது நவீன இலக்கியம் பற்றிக் கனக செந்திநாதன் பேசியதாக ஞாபகம், இன்னொரு முறை பழந்தமிழ் இலக்கியம் தொடர்பாகப் பேசுவதற்கு அவரை அழைத்திருந்தேன். அப்போது, கம்பராமாயணத்தில் ஒரு பாடலையும், தேம்பாவணியிலிருந்து ஒரு பாடலையும் ஒப்பிட்டு, விமர்சன ரீதியாகச் சிறந்த ஒரு சொற்பொழிவை அவர் ஆற்றினார். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் ஒரு விரலில் எப்போதும் “பந்தம்’ ஒன்று காணப்படும். ஆயினும், ஈழத்து இலக்கியவாதிகளைப் பற்றிப் பேசும்போது, அவரது உடல் வருத்தம் எல்லாம் எங்கோ பறந்துவிடும். அவரோடு கருத்து வேறுபாடுகள் உள்ளவர்கள்கூட, அவரது இலக்கிய நேர்மையைச் சந்தேகித்ததில்லை.
மயக்கமா, கலக்கமா?
ஞானம் இதழில் இடம்பெறும் ஆக்கங்கள் சிலவற்றைப் பற்றி அண்மையில் வீ. என். சந்திரகாந்தி என்பவர் குறிப்பொன்றை எழுதியிருந்தார். ஒரு குறிப்பிட்ட சஞ்சிகை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ஞானம் சஞ்சிகை பற்றி எழுத்தாளர் சிலர் முன்வைத்த கருத்துக்கள் அவை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவற்றுள் ஒன்று,"துரை மனோகரனால் எழுதப்படும் எழுதத் தூண்டும் எண்ணங்கள் பகுதி அர்த்தமற்றது எனவும் பேராசிரியர்களிடம் கடமைப்பட்டு விட்டால் அவர்கள் தரும் குப்பைகளையும் பிரசுரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆசிரியருக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது” என்பது. எனது பத்தி எழுத்துக்கள் பற்றி ஆரோக்கியமான முறையிற் கருத்து வேறுபாடுகள்
ஞானம் - ஜனவரி 2004
இருப்பின், அவை வரவேற்கத்தக்கவை. ஆனால், எனது பத்தி எழுத்துக்கள் தொடர்பாகவும், ஞானத்தில் இடம்பெறும் பிற விடயங்கள் தொடர்பாகவும் அடிக்குறிப்பில் காணப்படுபவை விமர்சன பூர்வமான, ஆக்கபூர்வமான கருத்துக்கள் அல்ல என்பதை, அதனைப் பார்த்த மாத்திரத்திலேயே எவரும் இலகுவில் புரிந்து கொள்வர். எழுத்தாளர் குழு ஒன்று, தனது கலந்துரையாடலில் ஒரு சஞ்சிகையின் “குறைகளை’ மாத்திரம் தான் “கண்டுபிடித்ததா’ என்பது முக்கியமான ஒரு கேள்வி. எழுத்தாளர் குழு ஒன்று ஞானம் சஞ்சிகை பற்றி "அதிகாரபூர்வமாக”ஒரு தீர்மானத்தினை எடுத்துவிட்டது போலவும், அதை அச்சஞ்சிகை எதிர்காலத்தில் நடை முறைப்படுத்த வேண்டும் என்று எடுத்துரைப்பது போன்றும் அவர்களின் கருத்து அமைந்துள்ளது. அது ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக உணர்த்துகிறது. ஞானம் வாசகர் மத்தியில் இச்சஞ்சிகையில் இடம்பெறும் ஆக்கங்கள் பற்றி ஓர் எதிர் மறையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஓர் உள்நோக்கம் கருதியே அக்குறிப்பு எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன். இதனை அவர்கள் மறுக்கலாம். ஆனால், உண்மை அதுவே என்பதை, குறிப்புப் புலப்படுத்துகிறது.
பத்தி எழுத்துக்களுக்கும், ஆய்வு / விமர்சன எழுத்துக்களுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. பத்தி எழுத்துக்கள் பலதரப்பட்ட வாசகரையும் மனங்கொண்டு எழுதப்படுபவை. சொல்லப்படும் விடயங்கள் எளிமையான முறையிலும், சுவையாகவும் சொல்லப்படுதல் வேண்டும். பத்தி எழுத்துக்களில் பலதரப்பட்ட
39

Page 22
விடயங்கள் அலசப்படும். பல்கலைக் கழகங்களைச் சார்ந்தவர்கள் பத்தி எழுத்துக்களில் ஈடுபடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை.முன்னர் பேராசிரியர் கைலாசபதி வரதரின் வெள்ளி என்ற பத்திரிகையிலும், GUITT ffurf சி. மெளனகுரு சிறிது காலம் வீரகேசரி யிலும் பத்தி எழுத்துக்களை எழுதி யுள்ளனர். நான் எனது பாணியில் பத்தி எழுத்துக்களை எழுதி வருகிறேன்.
ஞானம் ஆசிரியர் எனக்கு எவ்வகையிலும் கடமைப்பட்டவர் அல்லர். சுதந்திரமாக எழுதும் வாய்ப்பினை அவர் எனக்கு நல்கியுள்ளார். அவ்வளவுதான். சுதந்திரமான எனது எழுத்துக்களை அர்த்தமற்றவை எனவும், குப்பைகள் என்றும் குறிப்பிட்ட குழுவினர் “கண்டு பிடித்துள்ளமை” அவர்களது மன அழுக்கையே வெளிப்படுத்துகின்றது.
ஒவ்வோர் இதழிலும் எனது பகுதியில் என் மனதைக் கவர்ந்த கலை - இலக்கியவாதிகள் பலரைப்பற்றி எழுதி வந்துள்ளேன். பிற துறைகளைச் சார்ந்தவர்களைப்பற்றியும் எழுதியுள்ளேன். இவர்களிற் பலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். சிலர் பற்றி எனது அனுபவத் தையும் கலந்து எழுதியுள்ளேன். திறமை யானவர்கள், சாதனையாளர்கள், சிறந்த பணிபுரிபவர்கள் பற்றி எழுதுவது அக் குழுவினருக்கு அர்த்தமற்றவை யாகவும், குப்பைகளாகவுமா தெரிகின்றன? அவர்கள் தமது குறிப்பின் மூலம் என்னால் எழுதப்பட்ட அத்தனை பேரையும் அவமானப் படுத்தியுள்ளார்கள். தரமானவர்களையும், தரமானவற்றையும் முன்விழுந்து பாராட்டுவதற்கு நான் ஒருபோதும் தயங்குவதில்லை. அதேவேளை, கண்டிக்க வேண்டியவர்களையும், கண்டிக்கப்பட
40
வேண்டியவற்றையும் கண்டிப்பதற்கும் நான் தயக்கம் காட்டுவதில்லை. நமது நாட்டில் காலங்காலமாகப் பெருவளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பேரினவாதத்துக்கு எதிராக எனது தார்மீகக் கோபத்தை எனது எழுத்துக்கள் வாயிலாக வெளிப் படுத்தி வந்துள்ளேன். சமாதானத்துக்கு ஆதரவாக எப்போதும் எனது எழுத்துக் களைப் பயன்படுத்தி வருகிறேன். நாட்டின் அரசியல் பற்றி எழுதும்போது எச்சரிக்கையுடன் எழுத வேண்டிய காரணத்தால் குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறேன். பொதுவாக எனது பத்தி எழுத்துக்களிற் பல்வேறு விடயங்கள் பற்றியும் எழுதி வருகிறேன். எனது எழுத்தின் நேர்மை பற்றி எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. தேவையற்ற முறையில் பிறரிடம் வில்லங்கமாகக் “குறை” காண்பதன் மூலம், தங்களை மேதாவிகளாகப் பிறர் கருத வேண்டும் என்ற தாழ்வுச்சிக்கலால் எழுதப்பட்டதே அந்தக் குறிப்பு.
“எழுத்தாளர்கள்” எனத் தம்மைக் கருதிக் கொள்பவர்கள் ஆக்கபூர்மான சிந்தனை, செயற்பாடு கொண்டவர் களாகவும், உண்மைக்கு மதிப்பளிப் பவர்களாகவும் விளங்க வேண்டும். உள்நோக்கத்துடன் அநியாயமாக அவ தூறுகளை அள்ளித் தெளிப்பவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டாம். எழுத்தாளர்கள் தாம் பயன்படுத்தும் சொற்களின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும். எனது எழுத்துக்கள் தொடர் பாக என்னை எழுதத் தூண்டியமைக்கு நன்றி. சம்பந்தப்பட்ட கோஷ்டியினர் எதிர்காலத்தில் தமக்குப்பிடிக்காதவற்றைப் படிக்காது இருப்பார்களாக.
ஞானம் - ஜனவரி 2004

ഗZശ്രബശ്
ধ্রুস্থ ശബബ ക്ര് ബഗ്ഗ്ലൂ"
-பார்வையும் பதிவும் -
ஈழத்தில் சமகால இலக்கிய உலகில் சுவாரசியமான சர்ச்சைகள் சில
இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, ஞானம்' சஞ்சிகை பற்றிய திருகோணமலை இலக்கிய ஆர்வலர்களின் கருத்துநிலையாகும். கலாநிதி துரை.மனோகரனின் எழுதத் தூண்டும் எண்ணங்கள் பற்றிய அபிப்பிராயம் தவறானது என்பதைப் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அவரது எழுத்துக்கள் பலருக்கும் விளங்கும் தன்மையுடையன என்றும் கலை, இலக்கியம், அரசியல். எனப் பல பார்வைகளைக் கொண்ட பத்தியெழுத்துக்களாக விளங்குகின்றன என்றும் இதனால் “ஞானம்' சாதாரண வாசகரோடும் பேசும் தன்மையைப் பெறுகிறது என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பியின் பேட்டி நீட்சி தொடர்பாக எழுந்துள்ள சார்பு, எதிர்நிலை அபிப்பிராயங்கள் சமமாக உள்ளன. பேராசிரியரை முழுமையாக அறியவும், அவர் பற்றிய அவர் பார்வையாகவும், தன் வரலாறாகவும் அமைகின்றன என்ற சார்பு நிலைக்கருத்துகளும், பேட்டி நீண்டுவிட்டது, அவரது சில பதில்கள் ஏற்புடையன அல்ல என்ற எதிர்நிலைக்கருத்துகளும் வந்துள்ளன.
ஞானம் பேராசிரியர்களுக்குக் கடமைப்பட்டது என்ற கருத்தைப் பலர் கண்டித்துள்ளனர். ஈழத்தில் தங்களையும், தாம் சார் கட்சிகளையும், கைக் கொண்ட வரட்டுக்கொள்கைகளையும், எதிர்க்கருத்துக்களை அங்கீகரிக்காமலும், சுயபுராணங்களையும் தாங்கிவரும் சஞ்சிகையல்ல ஞானம் என்று பல வாசகர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் இளம் எழுத்தாளர்களின் சரியான கருத்துக்களை ஞானம் தடைசெய்வதில்லை என்றும் சில சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் தாம் புனையும் கருத்துக்களுக்குத் தானே புனைபெயர்களை இடுவதுபோல ஞானம் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
யாழில் வலம்புரி பத்திரிகையின் வார இதழான சங்குநாதத்தில் வெளியாகிய ‘டும். டும். டும். என்ற, இளம் பெண் படைப்பாளியினுடைய சிறுகதை பலத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. கதாபாத்திரமே வீடுதேடிச் செல்லுமளவுக்குச் சிறுகதை பெருங்கதை ஆகிவிட்டது. கதையின் கரு - "மாணவரின் பிழையைக் கடிந்து கொள்ளும் ஆசிரியர் பின்பு அவர்களுடன் முகமலர்வு காட்டி அவர்களை மகிழ்வித்துத் தானும் மகிழ்வது. களம் - தனியார் கல்வி நிறுவனம். குறிப்பிட்ட கதை எவரையும் சாடுவதாக அமையவில்லை. ஆனால் பாத்திரம், பாத்திரப்பெயர்கள், சம்பவங்கள் யாவுமே
ஞானம் - ஜனவரி 2004 41

Page 23
நிஜத்தின் நிழல்களாகப் பதிவு செய்யப்பட்டதுதான் பிரச்சினை. படைப் பாளி இவ் விடயத் தில் நிதானமாக நடந்துகொள்ளாமை தவறானதே. இவற்றை நாசுக்காகக் காட்டியிருக்கலாம். இருப்பினும் கதாசிரியர் குறிப்பிட்ட பாத்திரங்கள் பற்றி எதுவுமே தவறான முறையில்
கூறவில்லை.
ஆனால் கற்றவர் களெனச் சமுதாயம் நினைக்கும் தனியார்
கல்வி நிலைய உரிமையாளரும்,
பாத்திரமாக வரும் ஆசிரியரும், வேறு
ஒரு ஆசிரியரும் மாணவியின் வீடு தேடிச் சென்றுள்ளனர். வார்த்தை களை ‘அளவையியல் அற்றுப் பயன்படுத்தியுள்ளார் ஓர் ஆசிரியர். அக் கல்விநிலையத்தில் கற்பதற்கும் அம்மாணவி தடைசெய்யப்பட்டாராம். இதன் மூலம் சிறுகதை மேலும் ஒருபடி வெற்றியடைந்துவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். இவை ஒரு புறமிருக்க வீடு தேடிச் சென்ற மூவரும் பெண்ணை வளர்ப்பது பற்றிப் பெற்றோருக்குக் கூறுவதை விடுத்து இளம் பெண் படைப் பாளியை வளர்த்தெடுப்பது பற்றிச் சிந்தித் திருக்கலாம். வளரவேண்டிய பெண் படைப் பாளிகளை கருச் சிதைவு செயப் வது ஆணாதிக் கமாகவே அமைகிறது. குறிப்பிட்ட தமிழாசிரியர் படைப்பாளியை ஊக் குவித்துக் குறைநீக்கி எழுதுவதற்கான வழிகளைக் கூறி அப்பெண்ணைப் பெரும் எழுத்தாளராக மாற்றும் வல்லமை உடையவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு முன்னர் தனியார் கல்வி நிறுவனக் கொட்டில்களில் 'அகிலமே தான் என்று சுயபுகழ் பாடுவதை நிறுத்த திருச்சிற்றம்பலம் சொல்லவேண்டுமே!
42
அடுத்த சர்ச்சை "பிதாமகன்’ திரைப்படம் பற்றியது. தமிழ் ச் சினிமாவின் முன்னேற்றம் என வருணிக்கப்படும், "பிதாமகன்’ படம் மொழிபெயர்ப்பு தழுவல் படங் களையும், பிறமொழிப் படங்களையும், டுயட் காட்சிகளையும் பார்த்துப் பழகியவர்களுக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை என்ற விமர்சனங்கள் வந்துள்ளன. எவரும் எத்தகைய விமர்சனங்களையும் முன்வைக்கலாம். ஆனால் நவீன தமிழ்ச் சினிமாவின் புதியதொரு பாதையை பிதாமகன் திறந்து வைத்துள்ளது என்பதை எவருமே மறுக்கமுடியாது. பத்திரி கைகளின் சினிமாப்பக்கங்களையும் திரை விமர்சனங்களையும் பார்த்து விட்டு பிதாமகன் பற்றி விமர்சனக் குறிப்பு எழுதுபவர்கள் உள்ளனர்.
'பாலா தும்பிக்கை கொண்ட குரங்கு
ஒன்றையே பிடித்துள்ளார்’ என்றும் கூறுகின்றனர் . இவை திரைப் படக் கலை பற்றிய தெரிதல் இன்மையைக் காட்டுகின்றன.
முருகேசு பாக்கியநாதனின் "பனையியல்’ என்ற நூல் வெளி வந்துள்ளது. இது பனையியற் கற்கை நெறியை உருவாக்க வழிசமைக்கும் என்று அறிஞர்கள் கருத்துரைக் கின்றனர். புலோலியூர் க.சதாசிவம் அவர்களின் மணி விழாவையொட்டி 'அக்கா ஏன் அழுகிறாய்’ என்ற அவரின் பதினாறு சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு தமிழ்நாட்டில் வெளி வந்துள்ளது. மணிமேகலைப் பிரசுரமான இந்நூலைத் தமிழ்நாட்டில் அறுநூறு நூல்கள் வாங்கிய சாதனை பாராட்டுக்குரியது. கனடா உதயன் பத்திரிகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் எழுதிய சிறுகதைகள் ‘துTரமும் துயரமும் ' என்ற தொகுதியாக வெளிவந்துள்ளன.
ஞானம் - ஜனவரி 2004

லோகேந்திரலிங்கம் தொகுத்த இந்த நூல் புலம் பெயர் இலக்கிய நூல்களில் முக்கியமான பதி வொன்றைப் பெறுகிறது.
வவுனியாக் கலை இலக்கிய நண்பர் வட்டம் நடத்திய கருத்தாடல் நிகழ்வில் பி.ஏ.சி. ஆனந்தராசாவின் ‘இருட்டினுள் குருட்டாட்டம்' என்ற நூலும் சி.தர்மகுலசிங்கத்தின் மட்டக்களப்பில் கண்ணதாசன்', அன்புமணியின் ‘ஒரு தந்தையின் கதை' (நாவல்) ஆகியனவும் அண்மைக்கால வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவை.
கண்டி சத்திய சசி கலாலயம் நடத்திய ‘கலாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் க.அருணாசலம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இவ்விழாவில் மூன்று இன ஐக்கியம் கலை நிகழ்வுகளின் மூலம் உணர்த்தப்பட்டது. பிரான்சில் இருந்து வெளிவரும் 'அறிவோர் பக்கம் இம்முறையும் சிறப்பாக வந்துள்ளது. இது சத்தமில்லாத ஒரு சமுதாய இலக்கியப் பணி என்ற கணிப்பைப் பெறுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து பல்சுவை அம்சங்களைத் தாங்கி ‘தெரிதல்" என்ற இருதிங்கள் இதழ் வெளி வந்துள்ளது. இதன் ஆசிரியர் அ.யேசுராசா அரசியலில் இருந்து கலை வரை அலசுவதாகச் சஞ்சிகை அமைந்துள்ளது.
அண்மைக் கால ஆற்றுகைகளில் 'மெளனத்தின் நிழலில்" (In the shadow of the gun) 6T6örp 6 (SLDT356ir சுமதியின் நாடகம் குறிப்பிடத்தக்கது. மெளனத்தைப் பெண்மை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதே நாடகத்தின் சாராம்சம். தேசிய கலை இலக்கியப்
ஞானம் - ஜனவரி 2004
பேரவை கைலாசபதி நினைவுநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. இதில் ம.சணி முகலிங் கத்தின் * மனத் தவமி " என்ற நாடகம் இராமாயணத்தின் ராமன் பற்றிய மறுவாசிப்பாக அமைந்தது சிறப்புக் குரியது. இன்னும் திருமறைக்கலா மன்றத்தின் ‘பூம் பூம்’, ‘வார்த்தை களற்ற அசோகா ஆகியவையும், ஜெயசங்கரின் ‘நவபத்மாசுரனும்’ குறிப்பிடத்தக்க அரங்க அளிக்கை களாக அமைகின்றன.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சிலர் நீணி டகாலமாக எழுதுவதை நிறுத்திவிட்டு “படைப்பு உந்தல் இன்மையை அதற்குக் காரணம் காட்டுகின்றனர். எமது நாட்டின் சோகவரலாற்றுக் காலத்திற் கூட தாம் எழுதுவதற்குப் படைப்பு உந்தல் இல்லை என்பதைப் பகிரங்கமாகவே பேசிவருகின்றனர். இளம் இலக்கிய ஆர்வலர் களை தம் அறிவு வீக்கத்தால், அவ்வப்போது மட்டம் தட்டியும் வருகின்றனர். ‘இவர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இனித் தாம் படைத்தால் தமது படைப் பை யாராவது விமர்சித்துவிடுவார்களோ என்ற பயம் இவர்களுக்கு உண்டு. என்றெல்லாம் கருத்துக்கள் வருகின்றன.
எது எவ் பிம்ை * مجھے نیست இல்லை எனப் பசப்பும் சில பழைய படைய்யாளிகளுக்கு இனி மூன்றே மூன்று விடயங்கள்தான் கைகூடும். ஒன்று, வேற்று மொழியிலிருந்து ஏதாவது மொழி பெயர்க்கலாம்: இரண்டு, பத்திரிகைகள், சஞ்சிகைகள் நடத்தலாம், மூன்று விமர்சனங்கள் கு நிப்புகள் எ b.
43

Page 24
- அந்தனிஜீவா -
புதிய ஆண்டில் புத்தம் புதிய எண்ணங்கள் உதயமாக வேண்டும் என்கிற அவாவில் . என்னையே நான் எடை போட்டுப் பார்க்க விரும்புகிறேன்.
நான் ஏடு தூக்கி, பாடசாலை சென்ற காலத்திலேயே, மிக இள வயதிலேயே எழுதும் ஆர்வம் என்னில் துளிர்த்தது.
சுதந்திரனில். மாணவர் பகுதியில்
எனது சின்னஞ்சிறிய கவிதா வரிகள்
மலர்ந்தன.
அச்சில் எனது எழுத்தையும், எனது பெயரையும் பார்த்த பொழுது கனவுகளில் மிதந்தேன். இன்றும் நிறைய எழுத வேண்டும் என்கிற ஆர்வம் என்னில் ஏற்பட்டது. நிறைய வாசிக்க வேண்டும் என்பதற்காகத் தேடித்தேடி வாசித்தேன்.
கொழும்பு நூலகமே எனது ஞான
இல்லமாக அமைந்தது.
அங்குதான் புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும் தரிசித்தேன்.
பாரதியையும், பாரதிதாசனையும் படித்தேன்.
ஜெயகாந்தனின் எழுத்துக்களே என்னை மிகவும் ஆகர்சித்தன.
அந்த எழுத்துக்கள் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவே புருட்செலட்'என்றகவிதையைஎழுதினேன். இன்னும் சிலசிறுகதைகள் எழுதினேன். இப்பொழுதும் அந்த எழுத்துக்களைப் படித்துப்பார்க்கையில் நானா எழுதினேன் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. ஆனால்.
44
அந்தக் காலத்திலேயே எனது தொடர்பு பரந்தது, விரிந்தது. அந்தக் காலத்தில் எழுத்துலகில் சிகரமாக இருந்த பலரின் அறிமுகம் ஏற்பட்டது. அத்தகையோரில் மிக முக்கியமானவர்கள் பேராசிரியர் கைலாசபதி, பேராசான் கே. சிவத்தம்பி, அறிஞர் அ. ந. கந்தசாமி, தான் தோன்றிக் கவிராயரான சில்லையூர் செல்வராசன், என். சோமகாந்தன் முருகையன், எஸ். பொ. இப்படிப் பலர்
அத்தகைய ஜாம்பவான்களின் தொடர்பும், வாசிப்பும் என்னை உருவாக்கின.
முற்போக்கு எழுத்தாளர் சங்கக்
கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புக்கள், நூல்
வெளியீடுகள். ஆகிய இடங்களில் பெரிய மனிதர்களுடன் நானும் காணப்படுவேன்.
இரவாகிவிட்டால், மூதறிஞர்
லஷ்மண ஐயர் தன் காரிலேயே அழைத்து
வந்து வீட்டருகில் விட்டு விட்டுப் போவார். அத்தொடர்பினால் அவரே என் திருமணத்திற்குத் தலைமை தாங்கி வாழ்த்தினார்.
அறிஞர் அ. ந. கந்தசாமியின் தூண்டுதலால் நாடகம் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.
அவரே. எனக்கு நாடக இலக்கிய மேதைகளை அறிமுகப்படுத்தியவர்
என்னை ஒரு எழுத்தாளனாகப் பார்க்காமல் படைப்பாளியாக கண்டு கொள்ளாமல் நாடகக் கலைஞனாகவே இனங்கண்டார்கள்.
ஞானம் - ஜனவரி 2004
 

இது ஒரு வகையில் நன்மையாகவே முடிந்தது. பரவலாக விளம்பரமும் விமர்சனமும் கிடைத்தன.
முள்ளில் ரோஜா' என்ற எனது நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட முதல் நாடகமே தனித்துவமாக என்னை இனங் காட்டியது.
அதன் பின்னர். சில நாடகங்கள் மேடை ஏறிய போதும் எழுபதுகளில் மேடைக்கு வந்த 'அக்கினிப் பூக்கள்” நாடகமே அதிகம் பேசப்பட்டது.
எழுபதுகளில் எனக்கு ஏற்பட்ட மிக முக்கியமான தொடர்பு மக்கள் கவிமணி விமர்சி சி. வி. வேலுப்பிள்ளை யினுடையது. இவரின் தொடர்பே மலையக இலக்கியத்தின் மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்தியது.
ஆனால் அதற்கு முன்னரே, எனக்கு மலையகத்துடன் நெருக்கமான தொடர்பு இருந்தது.
அறுபதுகளின் பிற்பகுதியில் மலையகத் தொழிற்சங்கம் ஒன்றில் முழு நேர ஊழியம் செய்தேன். அங்கு வெளி வந்த ஜனசக்தி என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினேன்.
யாழிலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு பத்திரிகைக்கு கொழும்பு நிருபராகப் பணியாற்றியுள்ளேன்.
தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகை களில் பணியாற்றிய பொழுது அந்த பத்திரிகைகளில் ஆசிரியர் பீடத்திலிருந்த பத்திரிகையுலக ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகத்தின் கீழ் பணியாற்றிய பொழுது, பத்திரிகையுலகின் நெளிவு சுழிவுகளைக் கற்றுக்கொண்டதுடன் ஆற்றலை வளர்த்துக் கொண்டேன்.
1978ல் தமிழகத்தில் திருப்பூரில் நடைபெற்ற கலை, இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு திரும்பிய பின்னர் .
ஞானம் - ஜனவரி 2004
மலையக கலை இலக்கிய பேரவை பிறந்தது.
அந்த மாநாட்டில் சந்தித்த, எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய சிறிய தொடர் ஒன்றைத்தினகரன்' வார மஞ்சரியில் எழுதினேன்.
அதன் பிறகு இன்றுவரை'தினகரன்' பத்திரிகையே. எனது களமாக அமைந்தது.
இதற்கு வழி சமைத்த அமரர் ஆர். சிவகுருநாதன் என்றும் என் வாழ்த்து க்கும் வணக்கத்துக்குமுரியவர்.
இன்றைய இலக்கிய உலகு உன்னை ஒரு நாடகக் கலைஞனாக, பத்தி எழுத்தாளனாக, இலக்கியச் செயற் பாட்டாளனாக எடைபோட்டுள்ளது.
எழுபதுகளில் எனக்கு ஏற்பட்ட மலையகத்தின் நெருக்கமான தொடர்பு எண்பதுகளில் மலையகமெங்கும் சிறகடித்து வானம்பாடியாகச் சுற்றித் திரிந்து மலையகத்தில் புலம் பெயர்ந்து குடியேறச் செய்து விட்டது.
"கொழுந்து' என்ற பெயரில் மலையக இலக்கிய சஞ்சிகை ஒன்றை வெளியிட்டேன். அது பதின்மூன்று இதழ்களுடன் தன் பயணத்தை முடித்து கொண்டது.
அரச சார்பற்ற நிறுவனம் வெளியிட்ட ‘குன்றின்குரல்’ என்ற சஞ்சிகைக்கு இலக்கிய மதிப்பைத் தேடிக் கொடுத்தேன். ஞானம்' சஞ்சிகை தோன்றிய காலம்முதல் இதுவரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கவிதை, சிறுகதை. பின்னர் நாடகம் என ஆரம்பித்த எனது எழுத்துப்பணி பத்தி எழுத்துகளாக மாறிப் பல விதத் தகவல்களைத் தருகிறது.
அந்த எழுத்து நிலைக்குமா? நிலைக்காதா? எனக் காலம்தான் சொல்ல வேண்டும்.
45

Page 25
sö GEBIDOGOL
மலையகக் கலை இலக்கியம் தொடர்பில்
செய்யக்கூடியவை செய்ய வேண்டியவை
லெனின் மதிவானத்தின் கட்டுரைக்குப்பதிலாக, என்னுடைய கட்டுரை வெளிவந்து ஐந்து மாதங்களாகிவிட்ட நிலையில் தற்பொழுது சிலருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. நான் எதிர்பார்த்திருந்த பலர் இக்கருத்தாடலில் கலந்து கொள்ளாதது கவலை அளிக்கிறது. என்னை நேரில் காணும் பொழுதும், டெலிபோனிலும், கடிதங்கள் மூலமும் என்னைக் கொம்புசீவிவிடப்பார்த்தவர்கள் பலர். லெனின் மதிவானம் எனக்கு நன்கு தெரிந்தவர். எங்களுக்குள் பிரச்சனையோ, ஒத்துழைக்காத குணாம்சங்களோ இருப்பதாக யாரும் பிழையாக நினைக்கக் கூடாது. என்னுடைய கட்டுரை வந்ததற்குப்பின்னால் அட்டனில் அமரர் இர. சிவலிங்கத்தின் நினைவு தினச் செயலமர்வு நடைபெற்ற 19.07.2003 தினத்தில் அவர் என்னைச் சந்தித்தார். தன்னுடைய கட்டுரையில் இடம் பெற்ற சில தவறான வார்த்தைப் பிரயோகங்கள் குறித்துக் கவலை தெரிவித்தார். விஷயம் அவ்வளவே.
இதற்கிடையில் சிலர் இடையில் புகுந்து கட்டுரையின் தொனியை மாற்றி வேறுதிசையில் இழுத்து வெறுமனே அல்லாட்டம் போடுகின்றனர். கட்டுரைகளில் இடம் பெற்ற தவறான கருத்துக்களுக்குப் பதில் அளிப்பது அவசியமாகிறது.
ஜூலை ஞானத்தில் பாலா சங்குப்பிள்ளையின் சிறுபிள்ளைத் தனமான குற்றச் சாட்டுகள் காணப்படுகின்றன. இவரின் எந்தத் தொகுப்பிலுமே புதியவர்கள் மற்றும் திறமை இருந்தும் பொருளாதாரம் இல்லாமல் இருட்டில் இருப்பவர்களின் ஆக்கங்கள் எவையுமே இடம்பெற்றதாக நினைவில்லை என்றெழுதுகிறார். சாரல் வெளியீட்டகத்தின் முதல் தொகுப்பு நாற்பத்தொன்பது இளங் கவிஞர்களின் தொகுப்புதான். முதன் முறையாக அச்சில் வெளிவந்திருப்பவர்கள். சுப்ரா மைந்தன் தொகுத்து வெளிவந்த அத் தொகுப்பின் 500 பிரதிகளையும் விற்றதன் பின்னாலேயே வெளியீட்டகத்தின் கணக்கை முடித்தார்கள். "ஏதாவது வட்டம் ஒன்றியம் என்று அமைப்புகளை உருவாக்கினால், முதல்நாள் வரும் கூட்டமானது சந்தா கேட்டவுடன் அடுத்த முறை சந்தடியே இல்லாமல் நின்று விடுகிறது. இருக்கும் ஒரு சிலரும் தனக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கிறதாவென ஆராய்ந்து எதுவுமில்லாவிட்டால் அடுத்து எட்டியும் பார்ப்பதில்லை” என்று எழுதுகிறார். நான்கு கூட்டங்களுக்கு மாத்திரமே வந்து பின் சந்தடியே இல்லாமல் நின்று விடுகிற இவர், தான் கூட்டங்களுக்கு எட்டியும் பார்க்காததன் காரணத்தைப் பிறர் மீது ஏற்றிக் கூறியிருக்க வேண்டியதில்லை. இன்றும் எங்களது கூட்டத்துக்கு முப்பது
46 ஞானம் - ஜனவரி 2004
 

பேர்கள் வந்து கொண்டுதாணிருக் கிறார்கள். இந்த ஆண்டு மத்தியமாகாண சாகித்யப் பரிசு பெற்ற நான்கு நூல்களில் மூன்று நாங்கள் வெளியிட்டதுதான் என்பதையும், என்னுடைய பதிப்பு முயற்சிகளில் நஷ்டம் ஏற்படுவது உண்மைதானெனும் அதற்குக் கொட்ட இலக்கியவட்ட இலக்கிய வாதிகளை சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டுவது தவறு என்பதையும் பாலசங்குப் பிள்ளை உணர வேண்டும். ஜூலை ஞானத்தில் என்னைச் சினம் கொள்ளத் தேவையில்லை என்றவரின் செப்டம்பர் ஞானக் கட்டுரையில் வெளிப்பட்டிருக்கும் அபத்தமான கருத்துக்கள் உண்மையில் என்னை எரிசினம் கொள்ள வைத்திருக் கிறது. அமரராகிவிட்ட என் தாயார் பொறுக்க முடியாத கோபம் ஏற்படும்போது அவன் தலையில் இடி விழ என்று சிலரை சபித்ததுண்டு. யையும் அப்படிச் சபிக்க வேண்டும் போலிருக்கிறது. இர. சிவலிங்கத்தைப் பற்றிய இவரது கருத்து பாரதூரமானது, கண்டிக்கத்தக்கது.
வாமதேவனும், தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துப் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடருவதா இல்லையா என்று தடுமாறிய வேளையில், பணநெருக்கடியும் இயற்கையின் கொடூரமும் அவர்களைச் சோதித்த ஆசிரியத் தொழிலில் தனக்குக் கிடைத்த மாத வருவாயில் ஒரு தொகையை வழங்கியும், தன் நண்பர்களிடம் சேகரித்து மீதித் தொகையை வழங்கியும் உதவியவர் அவர். அவரைப்பற்றியா உங்களால் இப்படி எழுத முடிகிறது? நன்றி மறப்பது நல்லதல்ல.
ஞானம் - ஜனவரி 2004
Ց56Ծ) 6Ն)
பாலா சங்குப்பிள்ளை
மரியதாசனும்
வேளையில்,
அவரின் புதல்வர்கள் வெளிநாடுகளில் நல்ல வசதியுடன் இருப்பதைப் பற்றி இவர் ஏன் அல்லாடுகின்றார்? பொதுப் பணியில் ஈடுபடுபவர்களின் பிள்ளைகள் நடுத் தெருவில் நிற்கவேண்டு மென்பது தான் இவர் எண்ணமா? தனது கட்டுரையை எழுதுகையில் தன் பெயரைக்கூட குறிப்பிடுவதற்குத் திராணியற்ற ஒரன்பரின் கருத்து என்று தூக்கிப் பிடித்து"இடதுசாரியாக இருந்தால் எந்தச் சூழலிலும் மலையகத்தை விட்டு ஒடியிருக்க மாட்டார்” என்று கொச்சைப் படுத்தியிருக்கிறார். தமிழகத்துக்குத் தப்பிச் சென்று அங்கேயே வசதியுடன் வாழுகிற எத்தனையோ இடதுசாரிகளின் விபரங்களை என்னால் தரமுடியும்.
இந்தியாவுக்குச் சிவலிங்கம் அங்கேயும் மலையக மக்கள்
சென்ற
மத்தியிலேதான் வாழ்ந்தார், அவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார், அவர்களுக் பண்ணி இரண்டு மாதங்கள் தடாவில் சிறையிலிருந்தார்.
காக அரசியல்
நீலகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், சென்னை தாயகம் திரும்பியோர் ஆய்வு மையம், கோவை மனித உரிமைக் கழகம், உலக உணவீட்டல் உரிமை இயக்கம் ஆகியவைகளின் உந்து சக்தியாக விளங்கி நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடிய அவர் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு அநுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்கா. நீலகிரி தலித் மக்கள் அவரது
மறைவுக்குப் பின்னர் திலைவனில்லா
நிலையில் இருக்கின்றனர், என்பதே அவரது பணியின் பெருமையைக் கூறும்.
47

Page 26
கொட்டகலை இலக்கிய வட்டக் கூட்டமொன்றில், பாலா சங்குப்பிள்ளையும்
க்கின்m வேளையில் “உங்கள ல் (5 jil J
ஒன்றை அச்சில் கொண்டு வாருங்கள், அதன்பின் உங்களது கருத்துக்களைப் பரிசீலனை செய்யலாம்” என்று தி. இரா. கோபாலனுக்கு நான் கூறினேன். கடந்த வாரம் ஓர் அன்பர் சுவர் நோட்டீஸைக் கையளித்தார். கோபாலின் நாவல் ஒன்று வருவதாக அதில் குறித்திருந்தது. என்னுடைய பாராட்டுதல்கள். இவரைப் போல பாலா சங்குப்பிள்ளையும் ஒரு நூலைக் கொண்டு வந்திருந்தால் பாராட்டலாம். அதைவிடுத்து 'ஒரு கதை வந்த தொகுதியை பெரிதாகக் கூறுவதற்கு இவர் ஒன்றும் வளரும் எழுத்தாளர் இல்லை. மலையகத்தின் ஜனரஞ்சக எழுத்தாளராக குறிப்பிடப் படும் இவருக்கு, ஆயிரம் ரூபாவைக் கொடுத்துத்தான் தன்னுடைய கதையை ஒரு தொகுதியில் போடவேண்டிய நிலையா? ஈழவரின் இருபத்தேழு சிறுகதைகள்’ என்ற தொகுப்புக்கு, ஆயிரம் ரூபா என்ற கணக்கில் 27,000 ரூபாய்கள் கிடைக்கின்றன. மணி மேகலைப் பிரசுரத்துக்கு அது ஒரு பெரிய தொகை. “மணிமேகலைப்பிரசுரம் வணிக இலாபத்துக்கு அப்பால் எதுவித அக்கறையும் அற்று காய்கறி வியாபாரம் போல செய்கிறது, அது மிகவும் அதிருப்தி தரும் செயல், எட்டுப் பத்து நூல்களுக்கு ஒருங்கு சேர ஆங்காங்கே வெளியீட்டு விழாவையும் ஏற்பாடு செய்கிறார்கள். இதனால் மணிமேகலைப் பிரசுர அதிபர் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடிகிறது. இந்த நூல்களின் அச்சுத் தரமும் மிகவும் சாதாரண
48
மானவை” என்று இ. பத்மநாப ஐயர் பேட்டியில் கூறியவை (தினக்குரல்,21.09. 2003) உடன் வைத்து கவனிக்கத்தக்கது.
திருகோணமலை இலக்கிய ஒன்றிய நூலுக்காக எழுத்தாளர்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது என்று கூறிவிட்டு, “அதேபோல் மலையகத்தைச் சார்ந்த துரைவி பதிப்பகம் சில சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டது உண்மைதான். அந்தத்
தொகுப்பில்"ஒளி பிறந்தது” என்ற தனது
சிறுகதையொன்றும் வெளியானதும் உண்மைதான்” என்ற இவரது கூற்றுப் பிழையான அர்த்தத்தைத் தருகிறது. இவரது கூற்றின் படி துரைவி பதிப்பகம் காசு சேர்த்துத் தொகுதி வெளியிட்டது என்றாகிவிட்டது. உண்மை நிலை அதுவல்ல. துரைவி பதிப்பகம் எழுத்தாளர் களின் படைப்புகளைத் தனது சொந்தச் செலவில் அச்சடித்து, நூலாசிரியர் களுக்கு 250 பிரதிகளையும் இலவசமாக அளித்தது. இத்தகு கைங்கரியத்தை எல்லாப் பிரசுரகர்த்தாக்களாலும் செய்ய முடியாது. இவர்களில் எவருடைய உதவியிலாவது ஒரு நூலைப் பிரசுரிக் காமல் பாலா சங்குப்பிள்ளை தொடர்ந்தும் கருத்துக்கள் கூறுவது மலடி குழவியை எடுத்து இடித்துக் கொள்வதற்குச் சமம்.
பதிப்புத்துறையில் புத்தக வெளி யீட்டாளரின் முதல் கடமை, இரண்டாவது கடமை என்று இவரெழுதுவதைக் கேட்க வேண்டிய நிலையில் நானில்லை. ஆனால் இவ்வாண்டு மத்திய மாகாணத்தில் முப்பத்தைந்து தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் கொள்வனவு செய்யப் பட்டிருக்கிறது. அதில் சாரல் வெளி யீட்டகம் வெளியிட்ட ஐந்து புத்தகங்களும்
ஞானம் - ஜனவரி 2004

அடங்கும் என்பது எங்களுக்குப் பெருமை. பாலா சங்குப்பிள்ளையின் கட்டுரை களை மீண்டும் ஒருமுறை படிப்பவர்கள் திருகோணமலை இலக்கிய ஒன்றியத்தின் சார்பாக மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் தன்னுடைய சிறுகதையும் வெளி வந்திருக்கிறது என்பதற்காகத் தான் அவரின் இத்தனை ஆர்ப்பரிப்பு களும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். எஸ். செல்வகுமார் கூறும் அவரது திருகோணமலை இலக்கிய ஒன்றியம் பற்றிய செய்திகளை மறுப்பதற்கோ, ஆமோதிப்பதற்கோ எனக்கு உரிமை யில்லை. ஆனால் உங்களுடன் ஒத் துழைத்து, தோள் கொடுத்து, நட்புக்கரம் நீட்டி மணிமேகலைப் பிரசுரத்துக்கூடாக நூல்கள் வெளியிடும் காரியத்தை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். அது இலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கு உதவாத ஒரு செயல்.
எமது வெளியீட்டகத்துக்கூடாக தமது நூல்களைக் கொண்டுவர பலரும் தொடர்பு கொள்கிறார்கள். இன்னும் சிறிது காலத்துக்கு மலையக எழுத்தாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் தீர்மானத்தை மாற்றிக் கொள்ள முடியாத நிலையி லிருக்கிறோம். மலையகத்தில் கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், ஆய்வு, சிறுவர் இலக்கியம் என்று பல துறைகளிலும் நூல்கள் வெளிவர வேண்டியிருக்கிறது. நம்முன் உள்ள பொறுப்பினை உணர்ந்து மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக நடைபோடுகிறோம். கடந்த ஆண்டுநாங்கள் வெளியிட்ட ஸி. வி. வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வு நாவல் இலங்கை இலக்கியப்பேரவையினரால்2002ம் ஆண்டு
ஞானம் - ஜனவரி 2004
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் எங்களுக்கும் பெருமைதானே!
மத்திய மாகாண சாகித்தியப் பரிசு வழங்குவதில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால், அத்திட்டத்தில் பங்கேற்பதில்லை என்று எவராவது, அல்லது எந்த அமைப்பாவது தீர்மானித்திருக்கிறதா? பங்கேற்று, பரிசு கிடைத்து, அந்தப் பரிசை வேண்டாமென்று கூற யாராவது மறுக்க முன்வராதவரை அந்தப் பரிசை ஒரு கெளரவமாக நினைப்பதில் என்ன பிழை? நானறிந்தவரையில், ம. மா. சா. பரிசு பெற்ற பல எழுத்தாளர்கள் தமக்களிக்கப்பட்ட பரிசுப் பணம் போதவில்லையே என்று குறைபட்டுக் கொள்கிறார்களே தவிர பரிசுபெறும் கெளரவத்தை விரும்பவே செய்கிறார்கள். இந்த வருடம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இதை அசோகா முதல்வர் செ. நடராசா தன் நன்றியறி தலில் அவையினரின் பலத்த கரகோஷங் களுக்கு மத்தியில் பிரகடனமே செய்தார். மேலும், நம் மத்தியில் எழுத்தாளர் களுக்கு அளிக்கப்படும் ஒரே கெளரவமும் இதுவாகத்தானிருக்கிறது. இதைக் கூடப் பெறமுடியாதவர்கள், அல்லது பெற விரும்பாதவர்கள் இதைவிட அகில இலங்கை ரீதியில் தரப்படும் கெளரவங் களையேனும் பெறுதல் வேண்டும். எல்லாவற்றிலும் குறை கண்டு தன்னை ஒதுக்கிக் கொள்பவர்களை,“குளத்தோடு கோபித்துக் குண்டி கழுவாதவர்” களோடுதான் வைத்துப் பார்க்க வேண்டும். இறுதியாக ஒன்று. லெனின் மதிவானம் மீண்டும் ஒரு கட்டுரையில் திருத்தத்துக்கான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்.
49

Page 27
விமர்சன நிகழ்வின் இறுதியில் குறித்த நூலின் எழுத்தாளருக்கு, அவர்களிடமிருந்து பெற்ற நூலுக்கான பணம் எவ்வித பாக்கியும் இன்றி ஒப்படைக்கப்பட்டன” என்ற கூற்றுடன் என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.
மலையக இலக்கியத் தளங்கள் நிகழ்வின் இறுதியில் எங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அநுபவமே யதன்சைட் ஆசிரியக் கல்லூரியில் இனி ஒரு நூலுக்கு விமர்சன நிகழ்வை ஒழுங்கு செய்யப் போவதில்லை என்ற முடியைத் தந்திருக்கிறது.
எது எப்படி இருப்பினும், வெறும் வாய்
விமர்சன
ஜம்பம் சோறு போடாது என்பதை நாங்கள் உணர்ந்திருப்பதால்தான் தொடர்ந்து இயங்கிக் என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்குக்
கொண்டிருக்கிறோம்
கூற விரும்புகிறேன்.
எட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் லெனின் மதிவானனின் கட்டுரை டிசம்பர் மாதத்தில் வெளியாகி யுள்ளது. இவரது முதல் கட்டுரையில் நான் எழுப்பிய வினாக்களுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்துக் கொண்டு, தத்துவ விசாரத்தில் இறங்கியுள்ளார்.
இவர் என் கட்டுரையை விளங்கிக் கொண்ட விதத்தில் பிழை இருக்கிறது. இலவச அறிவுரை என்று நான் கூறியது கருத்துக்களை மேடையில் கூறுவதுடன் அமைத்து விட்ட, அந்தக் கருத்துக்களை செயல்படுத்தாத வாய்ச் சொல் வீரர்களை
இவர் எடுத்துக் காட்டிய அத்தனைப்
பேர்களும் செயல் வீரர்கள். இவர்களுடன் தன்னை வைத்துப் பேசுவதற்கு இவருக்கு எந்த யோக்கியாம்சமுமில்லை.
50
அமர்ந்து என் படித்துப் பார்த்தால் சில்லறை விளையாட்டுக்களில் ஈடுபடுவது யார் என்பது தெரியவரும்.
மீண்டும் ஆர
கட்டுரையைப்
- ஆசிரியர் - சாரல் நாடன்
அன்பான மல்லிகை சி. குமாருக்கு
ஒரு எழுத்தாளன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படை ஞானம் கூடத் தெரியாமல் யாருக்காகவோ வக்காலத்து வாங்கப்போய் தன் தலையில் தானே சேற்றை வாரி இறைத்துக் கொண்ட மல்லிகை சி. குமாரை நினைக்க உண்மையிலேயே பரிதாபமாகத்தான் இருக்கிறது. இவரை இவ்வளவு நாளும் நல்லதொரு மலையக எழுத்தாளரென்று எண்ணியிருந்தேன். ஆனால் நல்ல எழுத்தாளர்களுக்குரிய அடிப்படை நாகரீகம் கூட இல்லாத இவரின் அகத் தோற்றம் இப்போதுதான் தெரிகின்றது. மறுப்புக் கட்டுரை எழுதுவதற்கும் புனை பெயருக்கும் என்னய்யா சம்பந்தம்? மறுப்புக் கட்டுரை எழுதுபவர்கள் புனை பெயரில் எழுதக் கூடாதா அல்லது சொந்தப் பெயரில் எழுதுபவர்கள் மறுப்புக் கட்டுரையை எழுதக்கூடாதா? என்னதான் நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?
திருகோணமலை இலக்கிய வட்டம் ஆயிரம் ரூபாய் பணம் வாங்குவது உண்மைதான். ஆனால் அது அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் கதையை இடம்பெறச் செய்வதற்காக அல்ல. அப்படியானால் - அவர்கள் குறிப்பிட்ட தொகைக்குச் சமமான புத்தகங்களை நமக்குத் தரவேண்டிய அவசியமில்லை.
ஞானம் - ஜனவரி 2004

மேலும் அந்தத் தொகுப்பில் காசு கொடுத்து சிறுகதையை இடம் பெறச் செய்வதனால் அந்தக் கதைகள் எல்லாம் தரமற்றவை என்கிறாரா? பத்திரிகை களில் எழுதிக் கிடைக்கும் சன்மானம் மற்றும் பரிசுப்பணம் எல்லாம் அனைவருக்குமே உயர் வானதுதான். அதை யாரும் மறுக்க வில்லை. ஆனால் அந்தச் சிறுதொகையை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஒட்டி விட முடியுமா? படியினால் சிறுகதைத் தொகுப்பில்
பணம் இல்லாத
தன்னுடைய கதையை இடம்பெறச் செய்ய முடியாத காழ்ப்புணர்ச்சியினால் மலையக எழுத் தாளர்களுக்கு களமமைத்துக் கொடுப்பவர்களைக் குறை சொல்லுவது நல்லதொரு எழுத்தாளனுக்கு அழகல்ல. மேலும் பணம் கொடுத்துத்தான் என் கதையைப் பிரசுரிக்க வேண்டும் என்ற நிலையில் நானில்லை. ஏனென்றால் இலங்கை எழுத்தாளர்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிக்காமல் சர்வதேசமும் புகழ் பெறக் கூடிய நிலையில் எனது இலக்கிய
வருகின்றது.
வளர்ச்சி வியாபித்து
வறுமையில் வாடும் பல மலையக எழுத்தாளர்களுக்கு நான் பலவகையில் உதவியிருந்தாலும் அதை நான் யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை. என்மீது சேற்றை வாரியிறைத் தவர்களுக்குக்கூட நான் சோற்றைப் போட்டுத் தோழமை கொண்டிருக்கிறேன். எனவே மல்லிகை சி. குமாருக்கு நான் கூறுவதெல்லாம் இன்னொரு வருக்காக நீங்கள் வக்காலத்து வாங்க வராதீர்கள். ஒரு நல்ல எழுத்தாளர் என்ற பெயர் வாங்கா விட்டாலும் பரவாயில்லை. மற்றவர்கள் கேலி செய்யும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள். அரச விழாக்களில் விருது பெறுவதற்காக விரும்பியோ விரும்பாமலோ யார் நிழலையாவது பின்பற்றிச் செல்லும் தங்களைப் போன்றவர்களெல்லாம் எனக்கு அறிவுரை கூறவருவதுதான் வேடிக்கை. பரவாயில்லை - மறப்போம் மன்னிப்போம்.
பாலா சங்குப்பிள்ளை
இத்துடன் இவ்விவாதம் நிறைவு பெறுகிறது.
:இ * புத்தகக் களஞ்சியம் དཀརེད། (நூல் மதிப்புரை)
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை ஜஅனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
s. e o O 7ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந் நூல் பற்றிய சிறு
۸۷
భట్టి ( மரத்திரமே புதிய நூலகத்தில் இடம் பெறும்.
...
*
ஞானம் - ஜனவரி 2004
5

Page 28
நூல் தேயாத முழுநிலவு (நாவல்) ஆசிரியர் : செ. தமிழ்ச் செல்வன் வெளியீடு: பழைய மாணவர் சங்கம் இந்து தேசிய கல்லூரி, புசல்லாவ. விலை : ரூ.150/-
10லையகத்தை மையமாக வைத்து அப்பகுதியைப் பிறப்பிடமாகக் கொள்ளாத நந்தி, ஞானசேகரன், பெனடிக்ட் பாலன் முதலியோரும் அம்மண்ணில் உதித்த தெளிவத்தை யோசப், சாரல் நாடன் போன்றோரும் தமது நாவல்களில் அம்மக்களுடைய துன்பங்கள், துயரங்கள், இயலாமைகள் வாழ்வின் பல முனை களாலும் ஏற்படுத்தப்படும் நெருடல் களைச் சமாளிக்க முடியாமல் துயருறும் அவலங்களை வெளிக்கொணர்ந் துள்ளனர். இந்த வரிசையை நோக்கி இப்போது காலடி எடுத்துள்ளார் தமிழ்ச் செல்வன். புசல்லாவையிலே பிறந்து, அங்கே கல்விகற்று அம்மக்களோடு மக்களாக வாழ்ந்து மலையக மக்கள் படும்வேதனைகளோடெல்லாம் தானும் இணைந்து நின்று தனது அனுபவங்களை இந்நாவலில் சித்தரித்துள்ளார்.
52
ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் பொருத்தமான பத்திரி கைச் செய்தியொன்றை மகுடமாக வெளியிட்டுக் கதையையும் சம்பவங் களையும் நகர்த்திச் செல்லும் உத்தி படிப்பவரை ஈர்க்கிறது.
தமிழ்ச் செல்வனின் “தேயாத முழு நிலவு” - நாவல் இவரது கன்னி முயற்சி யாயினும் நாவலின் ஒட்டம், பாத்திரப் படைப்புகள், கதையின் கனம், காலம் கருத்து என்பன பொருத்தமாகவே பின்னப்பட்டுள்ளன.
“பள்ளிக்கூடத்தில் பல மாணவர்கள் என்னோடு ரொம்ப நல்லா ஒரு வகையில் நண்பர்களாகப் பழகத் தொடங்கி விட்டாங்க. ஆசிரியரென்றால் மாணவர் அருகில் இருக்க வேண்டும். ஆசிரிய ருக்கும் மாணவருக்குமிடையே இடை வெளி ஒன்று இருந்தால் ஆசிரியத்துவம் வெற்றி பெறாது. இவ்வகையில் பல மாணவர்கள் தம் வீட்டுநிலை, லயத்து நிலையைப் பற்றி என்னிடம் கூறு கின்றனர்” என்ற ஆசிரியை இந்துமதி யின் கூற்று மூலம், தமது நீண்ட கால ஆசிரியப் பணியில் பெற்ற அனுபவத்தை இந் நாவலில் பதித்துள்ளார்.
நிலவு-தேய்ந்தும் வளர்ந்தும் முழுமை பெறுகிறது. ஆனால் இந் நாவலின் கதாநாயகி ஆயிபுள்ள என அழைக்கப்படும் லதா குணத்திலும் பண்பிலும் தேய்வோ புதிய வளர்ச்சியோ இல்லாத முழுநிலவாகத் திகழ்கிறாள். மென்மையான இலகுவான நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலை மலையக இலக்கியத்துக்கு ஒரு புதிய வரவாகக் கொள்ளலாம்.
“பாருங்கோ அண்ணி சீதைக்கு எங்கேயும் சிலை வைக்கேல்ல. ஆனால் கண்ணகிக்குக் கண்ட இடமெல்லாம் சிலை; ஏன் தெரியுமா?
ஞானம் - ஜனவரி 2004
 

அண்ணி, போராடினாத்தான் மதிப்பு கண்ணகி போராடினாள்; சீதை இராமனுக்கு அடங்கி நடந்தாள். இராவணனுக்கு அடங்கினாள்; இராமர் தீக்குளிக்கச் சொன்னவுடன் குளித்தாள். ஆனால் கண்ணகி அரசனிடமே போராடினாள். ஆகவேதான் இண்டைக்கு இதே ஆண்கள் கண்ணகிக்குச் சிலை எடுக்கிறாங்க."
பெண்கள் போராடினால்தான் தம் அடிமைத்தளையை வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்க முடியும் என வலியுறுத்தி யுள்ள ஆசிரியரின் கருத்து வரவேற்கக் கூடியதே.
மலையகத்திலே பிறந்து வறுமை, குடும்பக் கஷ்டங்களால் படிக்க முடியாமல் வருவாய் தேட வெளிநாட்டில் பணிப் பெண்ணாகத் தொழில் செய்து சகோதரங் களுக்கு உதவிய லதா கடைசிக் காலத்திலேயே ஒரு பெரியவருடைய உதவியால் அவரின் மனைவி யென்ற ஸ்தானத்தைப் பெற்று அநாதைச் சிறுவர்களைப் பராமரிக்கும் காப்பகத்தில் மனம் ஒன்றிச் சேவை செய்ய முன்வரும் மலையகப் பெண்ணொருத்தியின் நேர்மை யான, போராட்ட எண்ணங்கள் கொண்ட வாழ்வுச் சித்தரிப்பே தேயாத முழு நிலவு.
- பத்மா പ്പില്ക്ക நூல் அர்த்தமுள்ள சைவத்
திருமணம் ஆசிரியர் : புத்தொளி வெளியீடு: செல்வா அகம்,
ஆனைக்கோட்டை
திருமணம் என்பது சம்பந்தப்பட்ட மணமக்களுக்கு மட்டும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியல்ல; பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் முதலிய பலரும்
ஞானம் - ஜனவரி 2004
அதில் பங்கேற்று வாழ்த்தி மகிழும் வைபவமாகும்.
சைவத்திருமணங்களில் பல சடங்குகள் இடம் பெறுகின்றன. சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவற்றின் அர்த்தம் தெரியாத புதிய தலைமுறையினர், இவை எல்லாம் ஏன் என எண்ணக்கூடும் அப்படியான நிலை ஏற்படாமல் தவிர்ப் பதற்காக, இச் சடங்குகளின் பின்னாலுள்ள அர்த்தத்தை யாவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இந்நூல் விளக்கிக் கூறுகிறது.
குத்துவிளக்கேற்றல், ஹோமம் வளர்த்தல், கன்னிக்கால் நாட்டல், கன்னிகாதானம், கூறை உடுத்தல், தாலி கட்டுதல்,பாணிக்கிரகணம், சப்தபதி,அம்மி மிதித்தல், பொரியிடுதல், அருந்ததி தரிசனம், ஆசீர்வாதம், விருந்தளித்தல் 660 சைவத் திருமணங்களில் காணப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சம்பந்தப்பட்ட மணமக்களின் வாழ்க்கையில் நிலைத்த மகிழ்ச்சியையும், செல்வத்தையும், சிறப்புகளையும் ஏற்படுத்துவதற்காகவே என்பதைப் பல நூல்களை ஆராய்ந்து சுருக்கமாகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி இந்நூலை இலவசமாக வழங்க முன் வந்த நூலாசிரியரின் பணி பயன் மிக்கது, பாராட்டுக்குரியது.
- வாதராயணன்
நூல் : ஸ்திரி இலட்சணம்
(சிறுகதைத் தொகுதி) ஆசிரியர் : திருமலை
வீ. என். சந்திரகாந்தி வெளியீடு: ஈழத்துஇலக்கியச்சோலை
27, ஒளவையார் வீதி, திருக்கோணமலை,
விலை : ரூ.100/-
53

Page 29
இந்நூலில், 2000 - 2002 காலப் பகுதியில் ஆசிரியரால் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இச் சமூகத்தில் பிரச்சனைகளை,
பெண்கள் எத்தனை ஏமாற்றங்களை, ஏக்கங்களை எதிர் கொள்ள வேண்டி யிருக்கிறது என்பதை இக்கதைகளில்
வெளிப்படுத்தியுள்ளார். இளம்பெண், பெற்றோர்
ஆசிரியர்
பூப்பெய்திய பயப்படுவது போலன்றி, தன்னைத்தானே ஆண்களின் சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அறிவும் துணிவும் கொண்டவளென்பதை கலாசாரப் புயல் தெளிவுபடுத்துகிறது. தனது கணவர் உத்தமர் என ஏமாந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதையை "இரகசியங்கள்’ கூறுகிறது. ஊசலாடும் மெளனமானால்', 'சின்னஞ்சிறிசுகள்’
ஆண்களின் மனதில் அவசங்களை ‘காதலே
கதைகளில் காண முடிகின்றது.
கணவனால் ஏமாற்றப்பட்ட பெண் பாழாகும் நிலைக் காளாக்குவதை குடிசை சித்தரிக்கிறது.
எல்லை மீறிப்
காதலனால் ஏமாற்றப்பட்டு, குழந்தையைப் பெற்ற ஏழை இளம் பெண், தனது வயது போன தாயையும் குழந்தையையும் காப்பாற்ற வெளிநாட்டுப் பணிப்பெண் வேலை பார்க்கச் செல்லும் சோக நிகழ்வு” என்னவென்று சொல்வதம்மா!
சாதியம் உள்ளடக்கப்பட்டுவருவதை'நீ ஏன் மச்சான் அவளுடைய ஆசைக்கு முரணாய் நிற்கிறாய். கறுவல் விதானையாற்றை பெடியன் எங்கடை சாதிப் பெட்டையை முடிச்சிட்டான் எண்டு துள்ளினவை. நேற்றுப் பார்த்தன்
54
மருமகளை நடுவீட்டுக்கை வைச்சுப் பேரப்பிள்ளையைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கினம்’ எனச் செல்லியின் கூற்றுமூலமாகவும், சிவந்தினி எழுந்தாள். தான் அமர்ந்திருந்த ஆசனத்தை இடது கையால் ஒரமாக நகர்த்தி விட்டாள். ராகவனின் வலது கையை உறுதியுடன் பற்றி அவனை அறைக்குள் இழுத் தெடுத்து கதவினை இறுகப் பூட்டிக் கொண்டாள் என்ற ஆசிரியரின் சித்தரிப்பு மூலமாகவும் எதற்கும் துணிந்து விட்ட மலரத்துடிக்கும் மொட்டுகளை இனிக் கருகச் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது. ‘ஸ்திரீ தசாப்தங்களுக்கு முன் பெண்கள் படித்து
இலட்சணம், சில
உத்தியோகம் பார்ப்பதைச் சமூகம் கேவலமாகக் கருதியதைச் சித்தரிப் பதுடன், இக்காலத்திலும் கல்வியறிவு பெற்று பெண்கள் வேலைக்குச் சென்றால், ஒழுக்கம் கெட்டவர்களாகி விடுவார் களென்ற தப்பபிப்பிராயத்தை முன்வைக்க முயலும் கருத்தை, இன்றைய சமுதாயம் ஏற்க மாட்டாது,
நிதானமான வாசிப்பு முயற்சியும், புதிய உத்தியைக் கையாளக் கூடிய ஆற்றலை ஆசிரியருக்கு அளித்துள்ளன. சில கதைகளின் முடிவு, திடீர்த் திருப்பமாக அமைந்திருக்கிறது. சில கதைகளில் முடிவைக் கூறாது. வாசகர்களே தீர்மானிக்குமாறு விட்டு விடுகின்றார். தங்கு தடையற்ற சோர்வடையாமல் வாசிக்கத் தூண்டுகிறது.
கூர்மையான அவதானிப்பும்,
எழுத்தோட்டம்
- காந்தன்
ஞானம் - ஜனவரி 2004

போர்க்களம்
நூல்
(சிறுகதைத் தொகுதி) ஆசிரியர் : இளையவன் வெளியீடு: விவேக அமுது வெளியீட்டகம் ஊரெழு மேற்கு, சுன்னாகம், விலை : ரூ. 110/-
இலக்கியப் படைப்புகளைக் காலம் காட்டும் கண்ணாடி என்பர். இத் தொகுதியில் இடம் சிறுகதைகள் 1990-2003 காலப்பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இக்காலப் பகுதியில் அவர்கள் வாழ்ந்த பாரம்பரியப் பிரதேசத்தில், போர் ஏற்படுத்திய கொடுமைகள், இராணுவம் புரிந்த அட்டூழியச் செயல்கள்,இயக்க மோதல்கள், இடப்பெயர்வுகள், அந்தரங்கள், அவலங்கள் எத்தனை எத்தனை. தாயகப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல் அதற்கும் வெளியே வாழும் தமிழர்களும் பல இன்னல் நெருக்கு வாரங்களுக்கும் முகங் கொடுத்து வந்தனர்.
இத்தொகுதியிலுள்ள போர்க்களம், தடுமாற்றம் ஆகிய முதலிரு கதைகளும், இயக்கங்களிடையே ஏற்பட்ட முரண் பாடுகளால், ஒன்று மற்ற இயக்கத்தைச் சேர்ந்தவரைக் காட்டிக் கொடுப்பதையும் சுட்டுக் கொல்வதையும் வெளிப் படுத்தியுள்ளது. நியாயங்கள் என்னும் கதையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் களை இராணுவமும் கடற்படையும் வெட்டியும், சுட்டும் அழிந்த உண்மைச் சம்பவம் இதயத்தைத் தொடும் வகையில் சொல்லப்பட்டிருப்பதுடன், சிறுவர்கள் விடுதலை இயக்கங்களில் இணையும் காரணமும் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஞானம் - ஜனவரி 2004
பெற்றிருக்கும்
“சூடுபட்டுச் செத்தவையின்ரை சடலங்கள் இனித்தான் கரைக்கு ஒதுங்கும் பிரான்சிசின் உடல் இருந்து விடக் கூடாது என்ற பலமான
பிரார்த்தனையுடன் வந்த அஞ்சலாவின்
கால்கள் அடியெடுத்து வைக்கவே தயங்கின. . அடுத்த அடியை எடுத்து வைத்த அவள் ஐயோ என்ரைராசா எனக் கதறிக் கொண்டு ஓடினாள். . சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டு சில நாட்களில், (அவளின் மகன்) ஸ்ரீபனை மட்டுமல்ல அவனோடு ஒத்த பலரையும் ஊரில் காண முடியவில்லை. "இரத்தத்துக்கு இரத்தம்; பழிக்குப் பழி: பைத்தியம் பிடித்தவள் போல அஞ்சலா தெருவெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாள்.
இச்சித்தரிப்பின் மூலம், சிறுவர்களின் மனசில் விடுதலை இயக்கங்களுடன் இணைந்து கொள்வதன் மூலமே இராணுவ அக்கிரமங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என்ற கருத்து ஏற்படுவதற்கு இராணுவச் செயற் பாடுகளே காரணம் என்பதை இளையவன் பூடகமாகக் கூறியிருக்கிறார்.
புரிந்த மூடித்தனமான குண்டு வீச்சுக்களால் தேவாலயம் மட்டுமல்ல, எத்தனை அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் அழிக்கப்பட்டனர் என்பதை வெகு நேர்த்தியாக எடுத்துச் சொல்கிறது தடயங்கள்’ என்ற சிறுகதை. “ஒரு நொடி ஒரு கணம் ஒரு பேரிரைச்சல், ஒரு பெரு முழக்கம். அவ்வளவும் தூசு மண்டலமாக மாறிப் போய் விட்டது. கண் இமைக்கும் நேரப் பொழுதுக்குள் ஒரு கோரம். கண்முன்னே அரங்கேறி விட்டது. 150 ஆண்டு காலத்துக்கும் மேலாக
விமானப்படை கண்
55

Page 30
அமைதியைத் தேடும் ஆத்மாக்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஆண்டவனின் இருப்பிடம் கற்குவியலாய் மாறிப் போய் விட்டது. யாகப்பர் தேவாலயத்தின் மீது யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக குண்டு வீசிய அச்சம்பவத்தையும் அதனைத் தொடர்ந்து அங்கு நிலவிய பரிதாப உயிரிழப்புகளையும் கண்முன்னே கொண்டு வந்து மனச்சாட்சியை யுத்த அக்கிரமங்களுக்கு எதிராகத் தூண்டி விடுவதில் ஆசிரியர் வெற்றி கண்டுள்ளார்.
நெருக்கடி நிலை, எக்ஸ்போட் பார்சல், ஒரு தமிழனின் கதை ஆகியவை, யுத்தத்தின் விளைவான இடப் பெயர்வு, புலப்பெயர்வு அவலங்களைச் சித்தரிப்பவை. இளையவன் பத்திரிகைத் துறை அனுபவம் கொண்டவரென்பதால் சம்பவங்களைச் சுற்றி வளைக்காமல் வாசகர் மனதில் சுளிர் எனப் பதியும் செய்திகளைப் போல அநாயாசமாக இத் தொகுதியிடம் பெற்றிருக்கும் சிறு கதைகளைப் படைத்திருக்கிறார்.
வாசகர்களின்
- காந்தன்
நூல் ஈழத்து மாண்புறு
மகளிர் ஆசிரியர் : பத்மா சோமகாந்தன்
வெளியீடு: குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை.
விலை : ரூ.300/=
"ஈழத்து மாண்புறு மகளிர் என்ற இந்த நூலைப் படித்ததும் நூலாசிரி யருடைய வளர்ச்சியை நினைத்துப் பார்க்கின்றேன். வியப்பாக இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
56
எழுத்துத் துறையில் அவருக்குள்ள மிகுந்த ஆர்வமும் இடையறாத முயற்சியும் அவரை உச்சத் திற்குக் கொண்டு வந்திருக் கின்றன. இந்த நூல் அதற்குச் சான்றாக விளங்குகிறது.
தமது வாழ்க்கையில் சாதனைகள் புரிந்து-இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் 23 மணியான பெண்களைப் பற்றி இந்த நூலில் பத்மா எழுதியிருக்கிறார். கடைசி யாக நூலாசிரியை மல்லிகைசஞ்சிகைக்கு அளித்த ஒரு நேர்காணலும் இடம் பெற்றிருக்கிறது. அதனுடன் சேர்த்து 24 மாண்புறு மங்கையரின் வரலாறுகள் இந்த நூலில் உள்ளன.
இந்த மாண்புறுமகளிரைச் சரியாக இனங்கண்டு, சிரமம் பாராது அவர்களைப் பற்றிய விபரங்களையெல்லாம் சரிவரச் சேகரித்து இந்த நூலை உருவாக்கிய பத்மா மிகுந்த பாராட்டுக்குரியவர்.
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில தாரகைகளை நான் நேரில் கண்டு பழகியதுண்டு. மற்றவர்களைப் பற்றி படித்தும் கேட்டும் அறிந்திருக்கின்றேன். இவர்களனைவரும் இந்த நூலில் இடம்பெற மிகவும் தகுதியானவர்களே. எனினும் இன்னும் சிலருடைய பெயர்கள் விடுபட்டிருக்க வாய்ப்புண்டு. ஆயினும் மாண்புறுமகளிர்கள் இந்தத் தொகுதியுடன் நின்று விட மாட்டார்கள்; வந்து கொண்டே யிருப்பார்கள் என நம்புகின்றேன்.
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் தாம் பெற்ற கல்வியறிவு, பட்டம், பதவி, கலை-இலக்கியத் தொடர்புகள், முகாமைத்துவப்பட்டறிவு ஆகியவற்றால் முன்னணிக்கு வந்தவர்கள். ஒரே ஒருவர் மட்டும் பாரம் பரியமாகத்
ஞானம் - ஜனவரி 2004

தமக்குக் கிடைத்த நற்பண்பினாலும், இயல்பான பாசப்பிணைப்பாலும், மனித நேயத்தினாலும் இந்த நூலில் இடம் பெறுமளவிற்கு உயர்ந்து நிற்பதனைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவர்தான் திருமதி சிதம்பரத் தம்பாள் தெய்வநாயகம்பிள்ளை. அவரைப் பற்றி பத்மா எழுதியிருப்பதைப் படிக்கும்போது மனதில் பரவச நிலை தோன்றுகிறது.
இப்படியான ஒருவரையும் இனங் கண்டு நூலில் சேர்த்திருப்பது பத்மாவுக் கேயுரிய தனிச்சிறப்பென்று சொல்ல வேண்டும்.
மாண்புறு மகளிர் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைப் பற்றியும், பத்மா எழுதியிருக்கும் குறிப்புரைகள் அவரு டைய பரந்துபட்ட அறிவைக் காட்டி நிற்கின்றன. சிறுகதைகள் எழுதிப் பண்பட்ட எழுத்தாளர் எழுதியிருப்பதால் இந்தநூல் படிப்பதற்கு மிகச் சுவையாகவும் இருக்கிறது.
- வரதா
வேள்வி நெருப்பு
ச. வே. பஞ்சாட்சரம்
நூல் ஆசிரியர் :
ச.வே.பஞ்சாட்சரம் நாடறிந்த நல்ல கவிஞர் . கவிஞராகவே அவர் அறியப்பட்டபோதிலும் அவருக்குள் கதைஞர் ஒருவரும் உள்ளார் என்பதை 1969இல் வெளிவந்த சின்னஞ் சிறுகதைகள் என்ற நுால் வெளிப்படுத்தியது. அதன் இரண்டாம் பதிப்பு புதிய சேர்க்கைகளுடன் வேள்வி நெருப்பு(2003) என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. ஐம்பது சிறிய
ஞானம் - ஜனவரி 2004
கதைகளை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.
சின்னஞ்சிறுகதைகள் இப்போது ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு இடம்பெற்று வருவது கண் கூடு. ஆயினும், சிறுகதையோ, நாவலோ படைப்பதில் போதிய அனுபவம் பெறாதவர் எழுதும் பயிற்சிக்கதைகள் போலவே பெரும் பாலானவை விளங்குகின்றன. ச.வே.பஞ்சாட்சரம் அவர்களும் அதற்கு விதிவிலக் கானவர் அல்லர் என்பதைப் போன்றே இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் விளங்கு கின்றன. ஒரு சில கதைகள் குறிப்பிடும் படியாக உள்ளன. ‘இனி அவரைத் தேவையில்லை, வேள்வி நெருப்பு, அந்தப் பிரார்த்தனை, பட்டப்பகலிலே. கவலையே நீ வாழ்க!, பேச்சுப் பல்லக்கு, சோழியன் குடுமிகள், அழிப்பின் ஆழங்கள், நாம் எங்கே? நாம் எங்கே?, தட்டிக்கொடுப்பா? தண்டிப்பிழைப்பா? ஆகிய கதைகள் குறிப்பிடத் தக்கவையாக விளங்கு கின்றன.
‘விறகைப் பொன்னாக்கி!” என்ற கதையிலே துர் நடத்தையின் காரணமாக குட் டரோகத் தால் பாதிக்கப்பட்டதாக ஒரு பாத்திரம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. குட்டரோகம் (குவர்டரோகம்) துர்நடத்தையின் காரணமாக ஏற்படும் நோயன்று. எயிட்ஸ் உட்படப் பால் வினை நோய்களே துர்நடத்தை காரணமாக ஏற்படுபவை. எம்.ஆர்.ராதா நடித்த இரத்தக்கண்ணிர் திரைப்படத்தைப் பார்த்த அருட்டுணர்வில் இக்கதை எழுதப்பட்டுள்ளது போலத் தோன்று கிறது. அத் திரைப் படத்தில் கதாநாயகனின் துர்நடத்தையால்,
57

Page 31
அவனுக்குக் குஷ்டரோகம் ஏற்பட்டதாக காட்டியிருப்பது தவறானதாகும். அத்திரைப்படத்துக் கதாபாத்திரத்தைப் பின்வந்த எழுத்தாளர் சிலரும் பின்பற்றி யுள்ளனர். ச.வே.ப.வும் குறிப்பிட்ட தமது கதையிலே ஆழமறியாமல் காலை வைத்துவிட்டார்.
இக்கதைகளில் இடம்பெற்றுள்ள பாத்திர உரையாடல்கள் செந்தமிழில் அமைந்து, செயற்கையாக விளங்கு கின்றன. பாத்திர உரையாடல்கள் பேச்சுவழக்கில் அமையும்போதே அவற்றின் உண்மையான உயிர்ப்பை அனுபவிக்கலாம். பெரும்பாலான கதைகளில் உரையாடல் கள் பழங்காலத் தமிழ் சினிமா, நாடக வசனங்களைப்போன்று செயற்கைப் பாங்காகக் காணப் படுகின்றன. இலங்கையிலே 'சார்’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. "சேர்’ என்றுதான் வழங்கப்படும். தமிழ்நாட்டுச் சினிமா, கதைகள் போன்றவற்றின் தாக்கம் ச.வே.ப.வின் கதைகளையும் பாதித்திருக்கலாம்.
“வேண்டாம் சார்!’ என்ற கதையிலே 'வண்ணாத்திப் பூச்சிகள்’ போன்ற குழந்தைகள்.” என்றுவருகிறது. பணி டிதரான ச.வே.ப.அவர்கள் வண்ணத்துப் பூச்சிகள் என்பதை வணி ணாத்திப் பூச்சிகள் என்று குறிப்பிட்டுள்ளமை ஆச்சரியத்தைத் தருகின்றது. (தொலைக் காட்சி விளம்பரப் பாடல் ஒன்றிலும் “வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி” என்றே தவறாகப் பாடப்படுகிறது) இவை போன்ற குறைகளைக் கதாசிரியர் தவிர்த்திருக்கலாம்.
இலங்கையில் வெளியாகும் சின்னஞ் சிறுகதைகளில் பெரும்
58
பாலானவை இலக்கியதரம் இழந்து, ஆசை பற்றி அறைய லுற்றவை யாகவே விளங்குகின்றன. சின்னக் கதைகளை எழுத விரும்புபவர்கள், அவற்றின் இலக்கியதரம் பற்றி அக்கறை கொள்ள வேண்டும் . இல்லையேல், அழகான அட்டைப் பாடங்கள் மாத்திரமே மிஞ்சும். புகழ் பெற்ற கவிஞரான ச.வே.பஞ்சாட்சரம் கதாசிரியராகவும் தம்மை இனங்காட்ட விரும்பியமை வரவேற்கத்தக்கதே. ஆயினும், தம் பணியை இன்னும் செம்மையாகச் செய்திருக்கலாம்.
- நக்கீரன்
நூல் யோகம் இருக்கிறது ஆசிரியர் : குந்தவை
ஈழத்துப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்கவருள் ஒருவராக விளங்குபவர், குந்தவை (இரா.சடாட்சரதேவி). அறுபதுகளில் எழுத்துலகில் பிரவேசித்துத் தம்மைக் குறிப்பிடத் தக்க எழுத்தாளராக அவர் இனங்காட்டி வந்துள்ளார். அவரது முதற் சிறுகதைத் தொகுதியாக ‘யோகம் இருக்கிறது (2002) விளங்குகிறது. பதினி மூன்று சிறுகதைகளைக் கொண்ட இத் தொகுதி குந்தவையைத் தகுந்தபடி இனங்காட்டுகிறது.
இச்சிறுகதைத் தொகுதி பன்முகத் தரிசனங்களை வாசகருக்கு வழங்குகிறது. போர்ச் சூழலின் தாக்கங்கள், பேரினவாத்தின் இருப்பு, மனித இயக்கத்தின் இயல்புகள் உட்படச் சமகால சமுதாயத்தின் வெட்டுமுகத் தோற்றத்தினைக்
ஞானம் - ஜனவரி 2004

குந்தவையின் சிறுகதைகள் இனங்காட்டுகின்றன. எழுத்தாளர் தமது அநுபவ வீச்சுடனும், கலைச் செழுமையுடனும், ஒரு தரமான படைப்பாளிக்குரிய ஆற்றலுடனும் இச்சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஒவ்வொரு கதையிலும் தாம் தோ நீ தெடு த துக கொண ட கதைக்கருவுக்கு ஏற்ற முறையில் சூழல் பற்றிய சித்திரிப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஓரிரு சிறுகதைகள் சாதாரணமானவையாய் அமைந்திருப்பினும் , பெரும் 60 66) 6 குந்தவையினி எழுத்தாற் றலைச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றன. எடுத்துக் காட்டாக “பெயர்வு என்ற சிறு கதையைக் குறிப்பிடலாம். போர்ச் சூழலால் ஏற்பட்ட மக்களின் இடப்பெயர்வைக் கலைச்சிறப்போடு சித்திரிக்கும் இச் சிறுகதையின் இறுதிப்பகுதி மனிதாபிமானத்தின் உச்சத்தை இனங்காட்டுவதோடு குந்தவையின் படைப்பாற்றலின் உச்சத்தையும் புலப்படுத்துகிறது. இதைப் போன்றே இறுக் கம் , வல்லைவெளி, வீடுநோக்கி ஆகிய சிறுகதைகளிலும் கதைசிரியையின் படைப்பாற்றல் பளிச்சிடுகிறது. 'திருவோடு’ என்ற சிறுகதையில், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் குடும்பம் ஒன்று இந்தியாவில் சில நாட்கள் தங் கியிருந்தபோது இடம்பெற்ற அவர்களின் போக்கு களை எள்ளற் சுவையோடு அழகுற எழுத்தாளர் படம்பிடித்துக்காட்டுகிறார். கதையில் தொலைக்காட்சியில் ஒடும் சாமர்த்தியச் சடங்கு ஒளிநாடாவையும் கதையின் நகர்வுக்குச் சாமர்த்திய மாகக் கதாசிரியை பயன்படுத்தி
ஞானம் - ஜனவரி 2004
யுள்ளார். இச்சிறுகதையில் அவரின் கதைகூறும் பாங்கு சிறப்பாக 960LDfbg6irsTg5. Field work 616 D கதையும் எள்ளலின் இன்னனொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. "யோகம் இருக்கிறது’ எள்ளற் பாணியில் அமைந்த பிறிதொரு படைப்பாகும். பிற சிறுகதைகளும் விதம் விதமான அநுபவங்களை வாசகருக் குத் தருகின்றன. இத் தொகுயினி பெரும்பாலான சிறுகதைகள் பெண் பாத்திரங்களின் மன ஓட்டங்களோடும், இயக்கங்களோடும் இணைத்துப் படைக்கப்பட்டுள்ளன.
குந்தவை தமக் கெனத் தனித்துவமான முறையில் எளிமையும், கனதியும் நிறைந்த நடையைக் கையாள்கிறார். அவரது சிறுகதைகளின் இறுதிப்பகுதிகள், அவரது படைப் பாற் றலினி உச்சங்களாக விளங்குகின்றன. இத் தொகுதி ஆங்கிலத்திலும் , சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் பட்டால் இதன் உலகப்பெறுமதி அதிகரிக்கும். ஏற்கனவே இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள ‘பெயர்வு என்ற சிறுகதை ஏ.ஜே. கனகரத்தினாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, “தி லிற்றில் மகசின் என்ற இந்திய சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
யோகம் இருக்கிறது என்ற சிறுகதைத் தொகுதியோடு சிறந்த எழுத்தாளரான குந்தவை திருப்தி கொண்டுவிடக் கூடாது. அப்படிச் செய்வது, வாசகர்களுக்கு அவர் இழைக்கும் துரோகமாகும். அவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவருதல் வேண்டும்.
- நக்கீரன்
59

Page 32
60
சத்தியப் பிரமாணம்
வாழப் பிறந்தோம், பல்வகைத் துன்ப ஆழக்கடலுள் அபமிழாமல் நாளைக்கே வெளிச்ச வீடாய் நாம் நிமிர்வோம்.
தாளில் உள்ளது தமிழன்று, போராட்ட வாழ்வு . அதையே வடிப்போம். கூழுக்குக் கவிபாடக் குறியோம் நாம். நூலுக்கு
100 ஒ 200 ஒ வருமென்று Sale க்குக் கவி செய்ய மாட்டோம். செங்கோலுக்கு
பேனையினைச் ஸ்நேகம் செய்கின்றோம். மற்றவரைப் போலச் சொல்லாமல், ஏதும் புதிதுரைப்போம். வாளுக்கு உறை காட்டி, வைரமெனத் திரண்ட தோளுக்கு உலகின் பாரச் சுமை காட்டி, அன்பை ஆளப் பிறந்தோம். அம்மட்டோ! அறத்தை ஏலும்மட்டும் உலகில் எழுப்பத் துடிக்கின்றோம். வாழப் பிறந்தோம், பல்வகைத் துன்ப ஆழக்கடலுள் அமிழாமல் இன்றைக்கே வெளிச்ச வீடாய் நிபமிர்கின்றோம்.
பூg பிரசாந்தன்
ஞானம் - ஜனவரி 2004
 
 
 

அன்புள்ள ஆசிரியருக்கு
ஞானம்
ஞானம் நவம்பர் 2003 இதழை வழக்கம்போல எழுத்தெண்ணிப் படித்தேன். அதில்
இடம்பெறும் பல ஆக்கங்கள் என் மனதைக் கவர்ந்தன. அவற்றில் மூன்றை மட்டும்
குறிப்பிட விரும்புகிறேன்.
1 பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தொடக்கவுரை
கொழும்பில் நடைபெற்ற சிங்கள தமிழ்க் கலைக்கூடலில் பேராசிரியர் தெரிவித்த கருத்தும் அதனை வெளிப்படுத்திய பாணியும் கையாண்ட மொழிப்பிரயோகமும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. இன்றைய நாட்டுச் சூழலில் தேவையான கருத்துக்களை மிகவும் இரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார். (வழக்கமாக அவர் சுருக்கமாகப் பேசுவதில்லை) வார்த்தைக்குள் அகப்பட முரண்டு பிடிக்கும் எண்ணங்களையும், உணர்வுகளையும் மிக லாவகமாக மடக்கிப் பிடித்து மொழி நிலைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
“இந்நாட்டு மக்களது நெஞ்சங்களையும் சிந்தனைகளையும் அறிந்தவர்கள், பிரதிபலிப்பவர்கள் என்ற முறையில் சிங்களக் கலைஞர்களும் தமிழ்க் கலைஞர்களும்.” "சமாதான எதிர்ப்புக்கான அரசியல் நிலைப்பட்ட அபிப்பிராய ஒழுங்கு சேர்ப்பு சில சக்திகளால் மிக வன்மையுடன் நடத்தப்படுகின்ற இந்த வேளையில் . 2う
“நம்முடைய தனித்துவங்கள் காரணமாக நம்மிடையே இவ்வேறுபாடுகள் உள்ளன. அதேவேளையில் நம்மைப் பிணைக்கும் பல நல்லுறவுகள் உள்ளன. வரலாற்றுக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன. நாமோ பேதங்களை மாத்திரம் பெரிதுபடுத்துகிறோம்" முதலான அவரது சிந்தனைத் தொடர்கள் அட்சர லட்சம் பெறும்.
2. ‘எழுத்து சி. சு. செல்லப்பாவின் கடிதம்
தமிழகத்து எழுத்து! இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியர் சி. சு. செல்லப்பா ஈழத்து எழுத்தாளர் கணேஷ"க்கு எழுதிய கடிதம் இலக்கிய நினைவலைகளை எழுப்புகின்றது. தமிழகத்தில் எழுத்து, கணையாழி, சரஸ்வதி, முதலான சிற்றேடுகள் புறக்கவர்ச்சி எதுவுமின்றி காத்திரமான இலக்கிய ஆக்கங்களையும், இலக்கியச் செய்திகளையும் தந்து இலக்கிய நெஞ்சங்களில் இடம் பிடித்தன. "தனியொருவனாக முழுப்பொறுப்பேற்று எழுத்துப் பற்றிய சகல அலுவல்களையும் கவனிப்பதால்.” என்ற தொடர் ஒரு இலக்கியச் சஞ்சிகையை வெளிக்கொணர எவ்வளவு பாடுபடவேண்டி இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. இதைப்
ஞானம் - ஜனவரி 2004 61

Page 33
பார்க்கும்போது ஞானசேகரன் அவர்கள், ஞானத்தை மாதந்தோறும் கனதியான பயனுள்ள ஆக்கங்களுடன் வெளிக் கொணர அனுபவிக்கும் பிரசவ வேதனையை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
3. சோலைக்கிளியின் கவிதை
சோலைக் கிளியின் கவிதைகள் தனக்கு விளங்குவதில்லை என கவிஞர் முருகையன் மல்லிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். எனக்கும் விளங்குவதில்லைத்தான். பசி விளங்கக் கூடியதாக இருக்கிறது. வறுமையிலும் செம்மையாக வாழும் ஒரு குடும்பத்தின் நுண்ணுணர்வுகளை அற்புதமாகப்படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் சோலைக்கிளி.
ஞானம் பிரமிக்கத் தக்க விதத்தில் வளர்ச்சியடைந்து வருவதைச் சீரணிக்க முடியாத சில்லறைகளின் கருத்துக்கள் சுட்டும் விழிக் கலந்துரையாடலில் வெளியாகியுள்ளன. அழகான குழந்தைகளின் சொக்கில் இடப்படும் கறுத்தப் பொட்டு என்றுதான் அவற்றைச் சொல்ல வேண்டும். காய்த்த மரந்தான் கல்லெறி வாங்கும். தொடர்க ஞானத்தின் இலக்கியப் பணி
- முல்லைமணி
"ஞானம் வாசிக்கிறேன். தனிப்பட்ட நலனைக் கருதாது இலக்கியவாதிகள் அனைவரதும் நலம் பேணும் ஞானத்தின் போக்குச் சிறப்பானது. ஞானத்திற்கெனப்
புதியதோர் இலக்கியப் பரம்பரை உருவாகுமென்பதில் ஐயப்பாட்டிற்கு இடமில்லை.
- மா. பாலசிங்கம்
அன்பு வணக்கம் !
ஞானம் 42, 43 வது இதழ்கள் கிடைத்தன. 42வது இதழை வாசித்து நிமிர்வதற்குள் 43வது இதழ் வந்துவிட்டது. இலக்கியப் பாதையில் தடங்களின்றி ஞானம் பயணிக்கின்றது என்ற பெருமித மகிழ்ச்சி எம்மை சிலிர்க்க வைக்கின்றது. 42வது இதழில் பிரசாந்தன் எழுதிய போட்டிப் பரீட்சை நல்ல கவிதை - சந்தத்துடன் ரசித்துப் படிக்கும்படியான புதுக்கவிதை.
43வது இதழில் “திறனாய்வு நெருடல்கள்’ என்ற ஆய்வு ஓர் ஆய்வாளரால் எழுதப்பட்டுள்ளது. ஆரோக்கியமான கருத்துக்களையும், தகவல்களையும் அதனூடாக படித்துணர்ந்தேன்.
இளம் பெண் எழுத்தாளர்"சாரங்கா"ஞானத்தின் சிறுகதைத் தொகுப்புப் போட்டியில் வெற்றியீட்டியதாக அறிகிறேன். எனது வாழ்த்துக்கள்!
விவாதமேடை ஆரோக்கியம், இருதரப்பிலிருந்தும் அரிய தகவல்களை கொட்டுகிறார்கள். ஞானம் வாசகருக்கு என்ன - யார் குத்தியும் அரிசியானால் சரி
டிசம்பர் மாத ஞானத்தின் சிறுகதைகள் கொஞ்சம் தேறியிருக்கின்றது.
அன்புடன், - ஒட்டமாவடி - அறபாத்
62 ஞானம் - ஜனவரி 2004

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு.
வணக்கம், வாழிய நலம். நவம்பர் மாத “ஞானம்” கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. ஒவ்வொரு மாதத்திலும் ஞானத்தின் வருகையும், அதன்பின்னாலான வாசிப்பும் என்னை பெரு உற்சாகத்தில் ஆழ்த்துவதோடு, என் படைப்பார்வத்திற்கு இன்னும் ஊக்கமளிக்கின்றது.
நவம்பர் மாத ஞானத்தில் என்னை பாதித்த, பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து, சிந்திக்க வைத்த விடயம், பழமெழுத்தாளர் திரு. சி. சு. செல்லப்பா அவர்கள், எமது மூத்த எழுத்தாளர் திரு. கே. கணேஷ் அவர்களுக்கு எழுதிய கடிதம். அக்கடிதம்பாதியாக நின்று விட்டதில் மனதில் துளி சோகம். இருந்தும் தொடர்ச்சி எப்படியிருந்திருக்குமோ, என்னவெல்லாம் எழுதியிருப்பார் எனப் பலமணி நேரம் சிந்தித்துத் சிந்தித்து நித்திரையிழந்தேன். அந்த இரு எழுத்தாளர்களதும் படைப்புகளைத் தேடித்தேடி வாசித்தவன் என்ற வகையில் அவர்களது படைப்பாற்றல் கண்டு வியந்திருக்கிறேன். அந்த உயரத்தின் பாதியாவது கடக்க வேண்டுமென்று அவாக் கொண்டிருக்கிறேன்; கொள்கிறேன்.
இப்போது ஒன்று புரிகிறது. எமது மூத்த எழுத்தாளர்களுக்கிடையில் இருந்த உறவும், தொடர்பாடலும், ஐக்கியமும், இலக்கியத்தில் ஒவ்வொருவரும் முழுமையாய் சாதிக்க, ஒருத்தருக்கொருத்தர் இடையில் இருந்த தட்டிக் கொடுத்தலும்தான் அவர்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது போலும்.
இன்றைய எழுத்தாளர்களுக்கிடையே இப்படியான உறவு இருக்கின்றதா? இளம் எழுத்தாளன் என்ற வகையில் என்னுள் அந்தத் தாக்கம் இருக்கின்றது
ஞானம் வாழ்க! வளர்க! நன்றி!
சுதர்மமகாராஜன்
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கட்கு
இந்தியாவின் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெகு அமைப்புக்களின் தேடலுக்குப் பிறகு ஞானம் விலாசத்தை (இலக்கத்தை) அறிந்தேன். இலக்கியதாகம் கொண்டு அலையும் என் போல் அன்பர்களுக்கு சந்தா செலுத்திப் பிறகு இதழ், தொடர்ந்து கிடைக்க ஆவண செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
குறிப்பாக, இதேபோல் இலக்கிய சிந்தனையோடு வெளிவரும் இலங்கைத் தமிழ் பத்திரிகைகளின் முகவரி தர வணக்கத்துடன் வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன், தீபம் முத்து N. M. R. 8, q do,
புதிய பேருந்து நிலையம் எதிர், புதுக்கோட்டை, தமிழ் நாடு.
Yaprah orgaTaff 2004 63

Page 34
"ஞானம் - கலை இலக்கியப் பண்ணை
நோக்கம் :- ஈழத்துக் கலை இலக் கிபத் தனித் துவத்தை
அங்கத்துவம் !
செயல்திட்டம்
-|| }.
(t), .
- }.
| II),
【配T},
( , ).
பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து மேலும் வளஞ் சேர்ப்பது, கலை இலக்கிய அன்பர்கள் அனைவரும் எள்வித நிபந்தனைகளுமின்றி இதில் அங்கத்தவராகலாம், "ஞானம் சந்தாதாரர்கள் விடயதானம் செய்யும் படைப்பாளிகள், விநியோகஸ்தர்கள் ஞானம் கலை இலக்கிய பண்னையின் பேராளர்கள் ஆகியோர் இதில் முக்கியமானவர்களாக இருப்பர்.
கலை இலக்கியவாதிகளிடையே நேசப்பினைப்பினையும், பரஸ்பர நல்லெண்ணத்தையும் கலை இலக்கிய சமுக உணர்வினையும் ஏற்படுத்துதல், நாடெங்கும் கிளைகள் அமைத்து அவ்வப் பிரதேசங்களில் உள்ள கலை இலக்கிய அன்பர்களை ஒன்றிணைத்து, ஒன்று கூடல்கள் நடத்தி கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்,
புதிய படைப்பாளிகளை இனங்கண்டு உருவாக்கி நெறிப்படுத்தி அவர்களது ஆற்றலை உயர்வடையச் செய்தல்.
நீண்டகாலமாக கலை இலக்கியப் பணி புரிபவர்களின் பங்களிப்பினை இலக்கிய உலகிற்கு வெளிக் கொணர்ந்து, அவர்களின் சேவை நலனைப் பாராட்டுதல்.
கல்விக்கூடங்களில் கலை இலக்கிய உணர்வுகளையும் புத்தகக் கலாசாரத்தையும் பரப்புதல்.
புதிய கலை இலக்கிய நூல்களை அறிமுகம் செய்து விநியோக வசதி வாய்ப்புக்களைப் படைப்பாளிகளுக்குத் தேடிக்கொடுத்து உதவுதல். பயன்தரு படைப்புக்களை வெளியிடும் பதிப்பகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, வாசகர்களுக்கு நூல்களைப் பெற துணைநிற்றல்; வழிவகை செய்தல், கலை இலக்கிய உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு தேடுதல்,
தொடர்பு :- ஒன்றிணைப்பாளர். "ஞானம் கலை இலக்கியப் பண்ணை,
1
19', பேராதனை வீதி, கண்டி,
ஞானம் - ஜனவரி 2004

లిలికొలి?
CENTRAL ESSENCE (SÈ SUPPLIERS 5
DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES. LSL SSSLSLS L LS SLLLL L LLLLLLLLS L LLLS
2
KANIDY TEL : 081 – 222.4187 ()81 - 4.47 1563
గఎంఎంఎం യ്ക്കേ ෆුලද්‍රාලනGGGර -- 3 /?:Sè Carsons 2Mga
Ceramics
R Importers & Distributors of
බී. Wall Tiles, Floor Tiles, High Quality (, Sanitary wares, Bathroom. Accessories, P. V. C. (GY And Hot Water Pipe Fittings
76/B. KING STREET ܡܼܲ
V.
)ବି(المي
X.
آى (Ĉ\ A-74, Colombo Street
Kandy, Sri Lanka. Te: ()81 - 47676), 08 - 220 0052 (9 FX : 081 – 22.00052
Q火○○火○ QركياالرX2 ركلار
Qり
ركلا)
O
Q-9)

Page 35

リ
| | | |
|