கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.03

Page 1


Page 2
- SS
தரமான தங்க நகைகளுக்கு .
NAGALINGAMS
Jo Jewetter
101, COLOMBO STREET KANDY
TEL : 081 - 2232545
آئی۔
-
 
 

பகிர்தலின்
epigoli
விரிவும் ஆழமும்
பெறுவது
- ஞானம்.
ஆசிரியர் " தி. ஞானசேகரன் துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க. சதாசிவம் அந்தளி ஜீவா ჭმ ályLJLIL 1IIFA sálrar lri Hraflir விடயதானப் பொறுப்பாசிரியர் பத்மா சோமகாந்தன் இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன் ஓவியர்கள் : கிக்கோ நா. ஆனந்தன் Iculo III அட்டைப்பட ஓவியம் : எஸ். டி. சாமி
நிர்வாகம் : கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு . தி. ஞானசேகான் 19T, பேராதனை வீதி, கண்டி.
Telephone- (81-247.857() (Office)
8-223.4755 (Res.) Mill - Y - 5
E-Mail - gnanam magazine (gyahoo.com
AAASAA SS SAeATeSeS eASAS AeS AeS AeAeSeSeSASeTTeSTqeTeSTSMezSMTSTSMMMeLSzS
எ.காம - மார்ச் 2004
s
இதழினுள்ளே .
நேர்கானல்
சித்திரலேகா மெளனகுரு
சிறுகதைகள்
சுவாலை - பத்மா சோமகாந்தன் ஈழத்தீ - ராணி சீதரன்
கவிதைகள் H
இரண்டு மனம்
= வே. சங்கீதா பெண்பைகள்
- பா. மகேந்திரன் எனக்கொரு ஆசை
- ருபராணி காத்திருப்பு
- கன. மகேஸ்வரன் புரட்சித் திருத்தம்
- செ. பரிவரஞ்சனி கட்டுரைகள்
பெண்களைக் கொடுமை . - அருள்மணி பாரதி எதிப்பார்த்தபெண் .
- அம்மன்கிளி முருகதாள் வாழ்க்கைக் கிரிக்கெட்
- சுப்பவாரிதி ஜெயராஜ் ஈழத்தின் பெண் விடுதலை . - சுவாநிதி செ. யோகராசா பெண்களுக்கு எதிரான .
- தேவாகொரி ஈழத்து இலக்கிய நம்பிக்கை
- செங்கையாழியான் ஈழத்தில் பெண்கள் சார் தமிழ்.
-றுபிரையன்ரீனா பிரான்சிஸ் பெண் என்றாலே நிர்வான.
- பதிந்திரா எழுதத் தூண்டும் ஷ்ாண்கோங்.
- துரை மனோகரன் இஸ்லாமும் பெண்களும்
- புர்கான் பி. இப்திகார் மலையகத்தின் முதல் பெண். - அந்தக்கரி ஜீவா FTH II al la hill இலக்கிய
- செ. கதர்சன் பெண்கள் மீதாக வன்செயல். - அன்னவட்சுமி ராஜதுரை வாசகர் பேசுகிறார் உலக அரங்கிலே பெண்கள்
- புரோவியூாான்
16
SO
EE
3.
EE;
ர
5
5
HH
59
3.
üኗ!
구II
8
y. ஒ5

Page 3
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
பெண்விடுதலை , உரிமைக்குரல் ஆகியன ஆக்க இலக்கியத்தில் உரிய அர்த்தத்துடன் ஒலிக்கவேண்டும்.
பெண்கள் பற்றிய சிந்தனைகள், அவர்களது பிரச்சினைகள், உணர்வுகள் வெகுஜன ஊடகங்களில் இன்று குறிப்பிடக்கூடியளவு வெளிப்படுத்தப்படுகின்றன. பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பெண்களுக்கெனத் தனியான பகுதிகள் ஒதுக்கப்பட்டு பெண்கள் தொடர்பான அம்சங்கள் வெளிவருகின்றன. தனிப்பகுதி ஒதுக்கும் பான்மை, மகளிர் பிரச்சினைகள் மகளிருக்கு மட்டுமே உரியவை அவை பொதுவானவை அல்ல என்ற தொனியில் வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்பதைப் போன்ற தோரணையில் அமைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பொதுப்பிரச்சினைகள் மகளிருக்குத் தேவையற்றவை என்ற மறைமுக நிலைப்பாட்டை இது உருவாக்குகின்றது. அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புகள், இல்வாழ்க்கைக் குறிப்புகள், வீேட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு போன்றவையே பெரும்பாலும் இவற்றில் பேசும் பொருளாக அமைந்துவிடுகின்றன. பெண்களின் ஒடுக்கப்பட்ட - உரிமை மறுக்கப்பட்ட வாழ்வியலின் உட்கட்டமைப்புப் பற்றிய அணுகுமுறையில் ஆய்வுநோக்கில் விடயதானங்கள் அமைவதில்லை. பெரும்பாலும் மரபுச்சிந்தனைகளைக் கட்டிக்காக்கும் பாங்கிலேயே அவை அமைகின்றன.
இன்று விழிப்புணர்வுபற்றி, மறுக்கப்படும் உரிமைகள் பற்றி ஆழமாகச் சிந்திக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது. தகர்ந்துவரும் சமூகக் கட்டமைப்பில் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் சவால்கள் பலவாகியுள்ளன. இவற்றை வெளிப்படுத்தும் களமாக - பெண்களின் உணர்வு அலைகளின் வடிகாலாக கலை இலக்கியத்தின் சிந்தனைத் தடம் அமையவேண்டும்.
2 ஞானம், மார்ச் 2004
 

பெண்களுக்கு இழைக்கப்படும் அக்கிரமங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வரும்போதும், பாலியல் பலாத்காரம் பற்றிய விவரணம் வெளியிடப்படும்போதும் அவை சித்திரிக்கப்படும் விதம், இடப்படும் தலையங்கம், பயன்படுத்தப்படும் மொழிப்பிரயோகம் ஆகியவை பணம் பண்ணும் நோக்கினைக் கொண்டதாகவும், பலாத்காரத்தை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடுவதைக் காண்கிறோம். கலை இலக்கியங்களில் காட்டப்படும் பெண்களும் ஆணாதிக்கத்தின் பிம்பத்தையே பெரும்பாலும் பிரதிபலிப்பதாகப் பெண்ணியவாதிகள் வாதாடுகின்றனர். உண்மைதான்; பெண்களின் போகத்தன்மையை ஆண் பார்வையில் அணுகுவதும், பாலுணர்வு முலாம் பூசி பெண்களின் உணர்வுகளை மலினப்படுத்துவதும் ஆக்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் இவை உச்சக்கட்டத்தில் உள்ளன. அடக்கம், பொறுமை, தியாகம் ஆகிய குணவியல்புகள் நிறைந்த பெண்கள் உயர்ந்தவர்களாகவும், சுயமான போக்கும் துணிவும் கொண்டவர்கள் வித்தியாசமானவர்களாகவும் காட்டப்படுவதையும் பார்க்கின்றோம். காலமாற்றத்தைக் கணக்கில் கொள்ளாது பழம்பெரும் இலக்கியப் பாத்திரங்களின் பணி புகளே இன்றும் இலட்சியப் பெண்களின் குணவியல்புகளாகக் கொண்டாடப்படுகின்றன; அவை மறுவார்ப்புச் செய்யப்படுகின்றன.
காலத்துக்கேற்ற இலக்கியம் படைத்த பாரதி பாஞ்சாலியை உருவாக்கியதைப்போல, புதுமைப்பித்தன் அகலிகையின் கதையை மறுவாசிப்புச் செய்ததுபோல ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தொழிற்படவேண்டும். பெண்களும் ஆக்க இலக்கியமும் என்று நோக்கும்போது ஆக்க இலக்கியத்தில் பெண் பாத்திரங்கள், ஆக்க இலக்கியங்களைப் படைக்கும் பெண்கள் என இரு பரிமாணங்கள் உள்ளன. எந்தச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள் தமது அனுபவங்களை - தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தாமே எழுதும்போதுதான் அதில் உயிர்த்துடிப்பு இருக்கும். பெண்களின் அகஉணர்வுச் சிக்கல்களை, புற உலகத் தாக்கங்களைப் பெண் எழுத்தாளர்களால்தான் தத்ரூபமாக வடித்தெடுக்கமுடியும். ஆண் எழுத்தாளர்கள் பெண்ணியச் சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் சரியான முறையில் அணுகவேண்டும்.
மலினப்படுத்தப்பட்டுவரும் மகளிர் விடுதலை உணர்வும், உரிமைக்குரலும் ஆக்க இலக்கியத்தில் அர்த்த புஷ்டியுடன் வெளிக்கொணரப்படவேண்டும். சர்வதேச மகளிர் தினம் மலரும் மார்ச் மாதத்தில் ஞானம் இச்சிந்தனைகளை வலியுறுத்துகின்றது.
女女★

Page 4
UIனுதேவன் தன் கொடிய கதிர்களால் புவி மகளின் பசிய உடம்பைக் கருக்கி விளையாடிக் கொண்டிருந்தான். வாயு தேவன் அப்பக்கம் எட்டிப்
பார்க்கவே தயங்கி எங்கோ ஒடி ஒழிந்து விட்டான். வெம்மை
தாங்காமல் பறவைகள் கூட அகப்பட்ட அரும் பொட்டு நிழல்களில் பதுங்கிக் கொண்டன. புனிதா
யிலேயே கணவனதும் குழந்தை களதும் அழுக்கான உடுப்புகளைக் கிணற்றில் நாலு வாளி தண்ணிர் அள்ளித் தொட்டியுள் ஊற்றி, அவற்றை அலசிக் கழுவிக் கொடியில் உலர்த்திவிட்டு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து உட் கார்ந்தாள். குழந்தை முகுந்தன் வயிறு நிறையப் பால் குடித்த திருப்தியில் உள்ளே நல்ல நித்திரை.
நேர்சரி போகத் தொடங்கியிருக்கும் முரளி அத்திண்ணையில் குப்புறப்படுத்துக் கொப்பியில் கலர்ப் பென்சில்களால் தன் மனதுக்குள் எட்டியவற்றைச் சித்திரம் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
தினமும் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியே வந்து திண்ணயையொட்டி வளர்ந்துள்ள வேப்பமரத்தின் கால்களைச் சுற்றிவருவதால் இலைகள் உதிராமல் குளிர்மையாக மரம் இருந்தது.
வெப்பத்தின் களைப்புக்கு அந்தத் திண்ணைச் சுவரில் சாய்ந்திருப்பது புனிதாவுக்கு இதமாக இருந்தது.
女 ★ ★
5606)
ஊறவைத்த,
சில நாட்களுக்கு முன்பு அவ்வூர்ப்
பாடசாலையில், நகரப்பகுதியில் இயங்கிவரும் 'பெண்கள் அமைப்பு நடத்திய பெண்கள் முன்னேற்றக் கருத்தரங்கிற்கு அவளும் சென் றிருந்தாள். பிரதான பேச்சாளர் முன்வைத்த கருத்து புனிதாவின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அது இன்னும் அவள் காதில் ஒலிப்பது போல.
“ஆணாதிக்க சமூக அமைப்பில், குடும்ப நிறுவனத்தில் பெண்ணிற்குரிய கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியைச் சமமாக, உயிரும் உணர்வுகளுமுள்ள சகமனுஷியாக நடத்தாமல், வீட்டு வேலைக்கார அடிமை போல, பிள்ளைபெறும் யந்திரம்போல நடத்தும் ஆண் நாயகப்போக்கு சமுதாயத் திலிருந்து ஒழியும்வரை, ஒழிக்கப்படும்வரை விடிவேயில்லை. திருமணம் பேசப்படும்போது பெண்ணின் விருப்பம்மதிக்கப்படுவதில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாகவே செய்யப் படுகிறது. இன்று நிலவிவரும் சமூக அமைப்பில் திருமண வாழ்க்கை குடும்பம் என்பவை பற்றிய கருத்தாக்கங்கள் மாற்ற மடையாவிடில், சமூக அமைப்பு மாற்றப் படாதவரை பெண்களுக்கு விடிவேயில்லை”
தன்னுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற சத்திய வாசகம் என ஏக்கத்துடன் அவள்விட்ட பெருமூச்சு உஷ்ணத்துடன் கரைந்தது.
புனிதா, க. பொ.த. சாதாரணப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்றுவிட்டாள் என்பதை அறிந்தபோது பாராட்டுத் தெரிவிப்பதற்குப்பதிலாக படித்தது இனிப் போதும்” என்று பெற்றோர்கள் கூறினர்.
எகானம் =
 
 

அவள் கெட்டிக்காரி படிப்பைத் தொடரட்டும்’ என ஆசிரியர்கள் வலியுறுத்தியபடியால் ஒப்பாசாரமாக உயர் தரம் ஒராமாண்டில் தொடர்ந்து படிக்க அனுப்பியபோதிலும் தாயும் தகப்பனுமாகக் குசுகுசுவெனப் பேசித் தமக்குள்ளே ஒரு கணக்குப்போட்டுக் கொண்டனர்.
'இவள் பெரிய படிப்புப் படிச்சால் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை யைத் தேடிக் கட்டிக் குடுக்க எங்களிடம் என்ன வசதியிருக்கு? இளையவளும் பெரியவளாகிற வயதுக்கு வந்து கொண் டிருக்கிறாள். இவளின்ரை காரியத்தை
இழுபடவிட்டால் பிறகு இருகுமரையும்"
எப்படிச் சுமப்பது?” :
புனிதா உயர்தரம் இறுதிப்பரீட்சை
உறவுக்காரப் பையன் ஒருவனைக் கூட்டி
வந்து காட்டி, அடுத்த முகூர்த்தநாளில் இவளின் விருப்பத்தைக் கேளாமல்
T அவனைப் எழுதுவதற்குச் சில மாசங்களுககு முன்பே ே
நாலுபேருக்கும் காணாது. அதனால் நாங்கள் இனி உன் அக்காவீட்டில் இருக்கப் போகிறோம்" எனச் சொல்லிவிட்டு அவளின் பெற்றோர் தமது பெட்டி படுக்கைகளுடன்
புறப்பட்டுப் போய் விட்டனர்.
Yk ydik Ydir
முன் அறிமுகமோ பழக்கமோ இல்லாதவனுடன் படுத்தெழும்புவது
ஆரம்ப நாட்களில் அருவருப்பாயிருந்த போதிலும் புவனாவின் இளமையின் உணர்வு அவனை ஏற்றுச் சகித்துக் கொள்ளச் செய்தது.
அயல் வீட்டுப்பெண்கள் பகல் வேளைகளில் அவன் இல்லாத நாட்களில் புதுப் பெண்ணைப் பார்க்க வந்த சாட்டில்,
பற்றிச் அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் ஏற்படுத்தின. எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திப் போட்டுக் காவாலியாக ஊர் சுற்றித் திரிந்தவனாம்.
சொன்னவை
அவனைத் தாலிகட்ட வைத்தனர். பாவம் அவனின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல்
புனிதாவின் தாய் தகப்பனுக்கு மகள்மீது, பாசமில்லாமல் இல்லை. மண்
பிழைக்கிற குடும்பம், படிப்பறிவுமில்லை, எத்தனையோ கோவில்களைச் சுற்றி வந்தும் ஒரு ஆண்குழந்தை கூட அவர்களுக்குப் பிறக்கவில்லை. பெற்றது இரண்டும் அதனால் இந்த அவசரமும் எரிச்சலும்
பெட்டைக்
இறுக்கமாக மிச்சம்பிடித்துச் சேகரித்த ---
பணத்தில் மகளின் கழுத்துக்கும் கை களுக்கும் நகைகளைப் போட்டுக் கலியாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவிட்ட திருப்தி அவர்களுக்கு
திருமணம் முடிந்து ஒருவாரம் கழியும் முன்பே “சிவனேசா, இது சிறிய வீடு
ஞானம் - மார்ச் 2004
குஞ்சுகள். தகப்பனிடம் வந்து முணு முணுக்கத்
* அவனது தாய் தகப்பன் ஒரு ஐஸ்கிறீம் -- கடையில் எடுபிடி வேலைக்குச் சேர்த்து வெட்டியையும் தோட்டத்தையும் நம்பிப்”
விட்டிருந்தவையாம்.
அவனின் போக்குச் சரியில்லை. குடித்து விட்டு வருவதால் வேலை ஒழுங்காக செய்வதில்லை' என சில மாசங்களிலேயே கடை உரிமையாளர்
தொடங்கிவிட்டாராம் :
ஒரு கால் கட்டுப் போட்டால் சரியாகி
விடுவான்.வாறவள் திருத்திப் போடுவாள்” என அவனின் தாய் அடி யெடுத்துக் கொடுக்க, தகப்பன் புனிதாவின் பெற்றோரிடம் பேசி, அவசரம் அவசரமாக செல்வி குமுதா திருமதி சிவனேசனாக்கப் பட்டிருக்கிறாள்.

Page 5
“பொறாமை பிடித்த சனங்கள் அப்படி இருக்காது” என எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள்.
★ ★ ★
éé . شد క్వె O
புனிதா! நீர் நல்ல வடிவு நாள் முழுதும் ரோஜாமாதிரி உம்மைப் f
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்” , )/(\{\ என அவன் அவளைப் புகழ்ந்தபோது ایبریم؟
அவள் கன்னங்கள் ரோஜாவாகின. محمبر “எனக்கு அவனின் கீழ் வேலை செய்யப் பிடிக்கேல்லை. இனி சுயதொழில் செய்து என் செல்லத்தைச் சந்தோஷமாக வைக்கப் போறன்’ அவளின் கன்னத்தை வருடியபடி சொன்னான் சிவனேசன்.
“சுயதொழில் செய்ய கொஞ்சம் முதல் தேவை. கைநிறையச் சம்பாதிக் கலாம். உமது நகைகளைத் தந்தீ ரெண்டால் இதுமாதிரி இருமடங்கு நகைகளை மூண்டுநாலு மாசத்தில் செய்திடலாம்” அவன் தயங்கித் தயங்கி நைஸாகக் கேட்டான்.
அவனது சுயதொழில் ஆர்வம் சரியெனக் கருதியபுனிதா தனதுசீதனமான நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள். " அன்று மாலையே தகரத்தினால் செய்யப்பட் ஐஸ்கிறீம்பெட்டி பொருத்திய புதிய சைக்கிளுடன் அவன் வந்தபோது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“உள்ளூர் ஐஸ்கிறீம் உற்பத்திக் காரரிடம் வாங்கி நிரப்பிக் கொண்டு நாளைக் காலையிலிருந்தே என் வியாபாரத் திறமையைக் காட்டுறன் பார் புனிதா”
கொள்முதல் கடனைக் கொடுத்து விட்டு மறுநாள் மாலை 180 ரூபாவை அவளிடம் கொண்டு வந்து நீட்டியபோது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது.
6
繼 அலுப்பில் குடித்தால் உனக்கென்னடி, குடி
ஒண்டும் எனக்குப் புதிசில்லையடி’
“நாளைக்கு இன்னும் டபிளாக்கிக் காட்டுறன் பாரும்’ சாப்பிட்டு கொண்டே சவால் போலக் கூறினான்.
அடுத்தநாள் வீடுவரும்போதுஜஸ்கிறீம் வண்டி தள்ளாடிக் கொண்டு வந்தது.
'எடியே எடுத்து வை சோத்தை மதுபோதையில் அவன் வாய் குழறியது. 70 ரூபாவை எடுத்து நீட்டினான்.
“என்ன! குடித்துவிட்டு வந்திருக் கிறியள்? ஏன் இந்த புதுப்பழக்கம்?”
பகலெல்லாம் உழைத்துக் களைத்த
புனிதாவின் உள்ளத்தில் கோபமும் ஏமாற்றமும் கொப்பளித்தன.
சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்துவிட்டு அவள் போய்ப் படுத்து விட்டாள்.
அவள் சாப்பிட்டாளர் என்பதைப்
பற்றிக் கவலைப்படாமல் சோற்றை அள்ளி வயிற்றில் அடைத்துவிட்டு, அவளருகே
வந்து படுத்தவன் அவள்மீது கையைப் போட்டு இறுக்கி அணைத்தான்.
அவள் திமிறினாள். உடம்பைச் சுற்றிய பாம்பு அதன் வெறியைக் கக்கிய பின்பே பிடியைத் தளர்த்தியது.
ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 
 

மறுநாள், அதற்கும் மறுநாள் என அவள் கைக்கு வருவது 50,60 ரூபா மட்டுமே என்றாகியது.
ஒரு நாள் காலை வெறியில்லாமல் அவன் இருந்தபோது வருமானம் போதாததால், தனது படிப்புக்கேற்ற வகையில் தானும் ஏதாவது தொழில் தேடட்டுமா என அவனைக் கேட்டாள்.
“நீ படித்ததை உன்னோடை வைச்சுக் கொள். தொழில் பாக்கிறனெண்டு சொல்லிக்கொண்டு ஊர் மேய்ந்து திரிய வேண்டாம். பொம்பிளை உழைச்சு வீடு நிறையாது? நான் உழைக்கிற காசை
அடங்கியிரு. வீட்டு வேலையைப் ஒழுங்காய்ப் பார்” V, Y
அவனை எதிர்த்தால் 99.
உதைகளையே வேண்டிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் அவள் வீட்டுக் குள்ளேயே அடைந்து கிடந்தாள்.
பாடசாலை நாட்களில் கவிதை
சிறுகதை என எழுதிப் பாராட்டுப் பெற்றவள். தனிமையாகப் பொழுதைப்
போக்க படிப்பது எழுதுவது எனத் ே
தொடங்கி எழுதியவற்றை முடிக்க
முடியாமல் தலைச்சுற்றும் வாந்தியும்
அடிக்கடி குறுக்கிட்டன.
அடிப் பெட்டிக்குள் அவற்றைப்
கழுவுதல், உடுப்புத் என்பவற்றோடு கர்ப்பமாதல், குழந்தை பெறுதல், பாலூட்டல், பராமரித்தல் என்ற வேலைகளும் அவளை இறுக்கிப்பிடித்துக் கொண்டன.
மாலையானதும் அவனது வழமை யான தள்ளாட்டம்.
எானம் - மார்ச் 2004
போட்டு மூடிவைத்துவிட்டு வீடு " துப்பரவாக்கல், சமைத்தல், பாத்திரம்
தோய்த்தல்,
'எடியே! சோத்தைப் போடடி? உறுமல்
-9|Ցil (Մ)ւջա
படுக்க கர்ச்சனை.
புனிதா 21 வயதுக்கிடையிலேயே இருபிள்ளைகளைப் பெற்று காய்ந்த ஒடியல் போலானாள்.
★ ★ ★
வாடி பலவந்தமான
பல சரக்குக் கடையில் அரிசிவாங்கச் சென்ற போதுதான் அந்த விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தாள்
மாவட்ட கலாசாரப்பேரவை சிறுகதைப்
** マーシ போட் 够 4. வைச்சுச் சமாளிச்சுக் கொண்டுவிட்டிலே "? "ே "சிது ?"
விளம்பரம் செய்திருந்தது.
மனதில் ஒரு ஆசை முளைவிட்டது. அடிப் பெட்டியில் போட்டிருந்த நிறைவு
செய்யப்படாத கதையொன்றை எடுத்து
அதைப்பூரணப்படுத்தி அனுப்புவதற்காக அவள்பட்ட பாடுகள்.
அவள் எழுதிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்த குழந்தை முகுந்தன் பாலுக்கழுதது. பால்கொடுத்து அதனைத் தூங்க வைத்து விட்டு எழுதத் துவங்கிய போது, எழுதிவைத்த தாள்களை மூத்தமகன் முரளி எடுத்துக் கசக்கிக்கப்பல் செய்து கொண்டிருந்தான். எரிச்சலில் அவன் முதுகில் இரண்டு வைக்க அவன்
வீரிட்டழதிடுக் கிட்டெழுந்துதத்திஓடி வந்த
சின்னன் கதை எழுதிவைத்திருந்த ஏனைய
தாள்களிலும் சிறுநீர் கழித்துவிட. அவள் ஏசி உலுக்க இரண்டும் வீரிட்டுக்
கதறிக் கச்சேரி பண்ணின. அவர்களைச் சமாதானப்படுத்துவதே போதும் போது மென்றாகிவிட்டது.
இனி,
சைக்கிளின் தள்ளாட்டம்

Page 6
'எடியே! சோத்தைப் போடடி கெதியாய்ப்படுக்கவாடி அடுத்த நாள் காலைச் சாப்பாடு முடித்து ஐஸ்கிறீம் சைக்கிளை அனுப்பி விட்டுக் குழந்தை களைக் குளிப்பாட்டி உணவூட்டிவிளையாட விட்டுவிட்டு அவசர அவசரமாக உடுப்புகளைத் தோய்த்து உலரவிட்டபின் எழுதத் தொடங்க உட்கார்ந்தபோது.
முகுந்தன் காற்சட்டையை நனைத்துப்போட்டு வீரிட்டுக் கதறினான். ஒடிப்போய் அவனைத்துக்கிக் கழுவி
உடுப்புமாற்றிப் பவுடர்போட்டுத்தொட்
டிலில் கிடத்தி ஆட்டிவிட்டுப் பேனையைத் தூக்கியபோது, வீட்டுச் சொந்தக்காரன்
வாடகைப் பணத்தைத் தருமாறு தூஷண
வார்த்தைகளால் அபிஷேகித்துத் தலை
குணிய வைத்தான். &S&Xssrs
அவனைக் கெஞ்சி, தவணை சொல்லி
அனுப்புவதே பெரும்பாடாகி விட்டது.
மாலையில் வழமைபோல சைக்கிள் தள்ளாட்டம்
“பசி வயித்தைக் சோத்தைப் போடடி’
சோற்றுத் தட்டை அவன் முன்னே வைத்து விட்டு வாடகைக் காசுக்காக
கிள்ளுது
வீட்டுக்காரன் வந்து ஏசிப்போனதைச் சொன்னாள் புனிதா.
“வாடகை கேட்க வந்தவனோ உன்னோடைசரசமாடவந்தவனோ?”வாய் உழற வார்த்தைகளைக் கொட்டினான்.
“சே! எளிய மனிசா ! என்ன சொல்லுறாய்? வாடகைக் காசு கொடுக்க வக்கில்லை. உனக்கு வீடென்ன குடும்பமென்ன?” சீற்றத்துடன் புனிதா
கத்தினாள்.
சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்து விட்டுத்துள்ளி எழுந்தவன் அவள் கன்னங்களிலும் உடம்பிலும் கோபம்
தீரும்வரை அறைந்தான். குழந்தைகள்
“ஏன், உன்ரை புருசன் உழைக்கிறீ* வீரிட்டுக் கத்தின.
காசு முழுதும் குடிச்சுத் துலைக்கிறாரோ? இல்லாட்டி வேறு வைப்பாட்டி இருக்கோ?
κΧ.
வீட்டுக்காரன் என்ன கேள்வியெல்லாம். சீ. தூஷணம்கூடப் பேசிவிட்டுப் போறான். அயலட்டைச் சனம் சிரிக்குது”
பக்கத்து வீட்டுப் பார்வதிக் கிழவி
அவனது அட்டகாசத்தைக் கேட்ட அயலவர்களின் தலைகள் வேலிக்கு மேலாய் எட்டி விடுப்புப் பார்த்தன.
குழந்தைகளை அணைத்தபடி அவள் இரவுமுழுதும்விம்மிக்கொண்டேயிருந்தாள். நிறைவெறியில் அவன் உடுத்திருந்த
விண்ணாணமாக விசாரித்து இன்னுஜ சாரம் கழன்றது கூடத் தெரியாமல் அவன்
மின்னும் எரிச்சலை
போனாள்.
இந்தக் குடிகாரனோடு நரகன்
வாழ்க்கை வாழவேணுமென்பது என்ரை தலையெழுத்தாய்ப் போச்சு வெளியே சொல்ல முடியாமல் அவள் மனம் குமைந்தது.
அன்றும் கதையை எழுதி முடிக்க முடியவில்லை!
8
மூட்டிவிட்டுப்
உறங்கிப் போனான்.
காலையில் எழுந்து பார்த்தபோது சைக்கிளுடன் அவன் நேரகாலத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டிருந்தான்.
விசுக்கோத்தையும் கொடுத்துப் பிள்ளைகளைச் சமாளித்து விட்டு உடம்பு வலிதீர அவள் நோ எண்ணெய் தடவி விட்டுப் படுத்துக் கிடந்தாள்.
பாலையும்
கானம் மார்ச் 2004
 
 
 

மாலையில் சைக்கிள் நிதானமாக வேப்பமரத்தில் அதுவரை முடங்கி
வந்து நின்றது. தள்ளாட்டமில்லை. யிருந்த காகங்கள் கூட “காகா” என்றபடி
“முரளி நான் வெளியே சாப்பிட்டு சிறகடித்துப் பறந்தன! விட்டன் உங்களுக்கு இடியப்பப் பார்சல் முரளி கொடுத்த கடிதத்தைப்
வாங்கியிருக்கு, 300 ரூபாவும் வைச் பிரித்துப் படித்தபோது அவள் உள்ளத்தில்
சிருக்கு நாளைக்கு வீட்டு வாடகையைக் மகிழ்ச்சிப்பூ விரிந்து நிறைத்தது
குடுத்திடச் சொல்லு” “முரளி உன்ரை அம்மாவுக்கு முதற் அவன் போய்ப் படுத்து உறங்கி பரிசெடா கண்ணே! என அவனை
விட்டான் . . . அணைத்து உச்சியெல்லாம் முத்தமிட்டுத் இலக்கியப் போட்டி இறுதிநாளுக்கு தனது ஆனந்தத்தைப்பகிர்ந்துகொண்டாள். இன்னும் மூன்று தினங்களே இருந்தன! அன்று மாலை வேதாளம் தள்ளாடிக்
எப்படியும் நாளைக்கு எழுதி முடித்து கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் அனுப்புவதென்ற வைராக்கியத்துடன் * ஏறி நின்றது. குழந்தைகளை அணைத்தபடி அவளும் “சோத்தைப் போடடி’ உறங்கிவிட்டாள். தட்டில் சோறு கறியைப் பரிமாறி
ரொட்டியையும் தேநீரையும் காலை வைத்தாள் ရှုံးနျူရှူး l தக தது ་་་་་་་་་ அருகே உட்கார்ந்தபடி தனக்குப் பரிசு G, ளைகளைகசூ டிமுரள கிடைத்திருக்கும் செய்தியையும், அடுத்த அயலிலுள்ள நேர்சரிக்கு அனுப்பிவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதனைப் பெற்றுக்
க்க சோmmச் ல் செய் முகுநதனுககு சாறறுக கரையல சயது கொள்வதற்காகப் பட்டணத்துக்குப் போக ஊட்டித் தொட்டிலில் போட்டுவிட்டு, மத்தின வேண்டும் என் ம் கயங்கிக் கயங்கிக் யானத்துக்கு முன்பே கதையை எழுதி ஆ ಇನ್ನು மஎனபதையுமதயங் த தயங்கச முடித்துவிட்டாள். திருப்பித்திருப்பி சானனாள.
ள் படித்துப்பார்த்தாள். * அதென்னடி பரிசு கிரிசென்று இருதடவைக o O if omià O
மனதிற்குத் திருப்தியாக இருந்தது அலட்டுறாய் அக்கறையின்றி உளறியவன் அன்றே தபாலில் சேர்த்துவிட்டாள். அடுத்துக் கேட்டான்.
o 99 女 女 女 “காசும் தருவாங்களோ?
R s "அம்மா, தபால் அங்கிள் வாசலில் ஒம எனறாளஅவள
“எவ்வளவு?
స్ట8
அதுதெரியாது 爱 பென்சில்களை வீசிஎறிந்து விட்டுப் அப்படியே, அப்பசரி ஞாயிற்றுக் படலையை நோக்கி முரளி ஓடிச் சென்ற கிழமைதானே! பார்வதிக் கிழவியிடம் போதுதான் அவளின் நீண்ட சிந்தனை குழந்தையைப் பாத்துக்கொள்ளும்படி விடு; கலைந்தது. நீ மூத்தவனைக் கூட்டிக் கொண்டுபோ, வானத்தில் மப்பிட்ட மேகக் பக்குவமாக் காசை வாங்கிக் கொண்டு வா; கூட்டங்களைக் கண்டதால் போலும் "சு கவனம் வெறியையும் மீறிக் எங்கோ ஒரு குயில் கூக்சு. கூக்சு. கொண்டு அவனுக்குள் ஒரு சிரிப்பு
என்று குதூகலித்தது! 女 女 ★
எகானம் - மார்ச் 2004

Page 7
விழா மண்டபத்தின் வாசலை நெருங்கியபோது, அது கலியாணக் களைகொண்டிருந்தது.
வாசலில் பழக்குலையோடு வாழை
மரங்கள்!
மாவிலை தோரணம்! கலாசாரப் பெருவிழா என்ற பதாகை. ஒலிபெருக்கியில் இதமான நாதஸ்வர இசை,
வாசலில் அழகிய கோலம் நிறைகுடம். சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்கும் இரு இளம் பெண்கள்.
அந்தப் பெண்களிடம் அழைப் பிதழைக் காட்டினாள்.
அவர்களில் ஒருத்தி புனிதாவைக் கூட்டிச் சென்று முதல்வரிசை ஆசனத்தில் இருத்தினாள். శ్వేశో
மேடையில் வரிசையாக இருபுறமும் பூஞ்சாடிகள். மண்டபத்துக்கு வண்ண வண்ணமாகக் கடதாசிச் சோடனைகள்! பலூன்கள்!
பிரதம விருந்தினரான மாவட்ட
மந்திரி நேரத்துக்கே வந்துவிட்டதால்,
அழைப்பிதழில் குறிப்பிட்டபடி பகல் 10 மணிக்கே மங்கள விளக்கேற்றலுடன் விழாத் தொடங்கியது.
அரசாங்க அதிபரின் வரவேற்புரை, பிரதம அதிதிஉரை என்ற சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது.
“சிறுகதை - முதல் பரிசு திருமதி புனிதா”
அறிவிப்பாளரின் கம்பீரக்குரல் மண்டபமெங்கும் ஒலித்தது இரு இளம் பெண்கள் அவளருகில் வந்து, மேளம் கொட்ட அவளை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
புனிதாவுக்கு ஆகாயத்தில் பறப்பது போன்ற ஆனந்தப் படபடப்பு சரஸ்வதி விருது, பரிசுப் பணம் ஐயாயிரம் ரூபா, சான்றிதழ், பொன்னாடை, பூமாலை இவற்றைப் பெற்றுக் கொண்டபோது சபையில் எழுந்த கரகோஷப் பாராட்டு அவளைச் சிலிர்க்க வைத்தது!
மேடையிலிருந்து மகிழ்ச்சிபொங்க இறங்கிவந்து அவள் கீழே உட்கார்ந்த போது அவள் மகன் முரளி அவளது காதுக்குள் அச்சா அம்மா கெட்டிக்காரி! சரியான புழுகம்..! என்றெல்லாம் தன் பிஞ்சு மொழியில்
எனக்குச்
தாயை மேலும் குளிர வைத்தான். மகிழ்வால் அவள் பூரித்தாள். “அம்மா நான் இந்தச் சரஸ்வதி சாமியைப் படிக்கிற மேசையில் வைச்சு ஒவ்வொரு நாளும் விளக்குக் கொழுத்திக் கும்பிடப் போறன்.” அந்தச் சின்ன உள்ளமும் கற்பனையில் மிதந்தது.
சரஸ்வதி தோற்றத்திலான அவ்
விருதைத் தாயிடமிருந்து வாங்கி உற்று உற்றுப் பார்த்து ஆசையோடு அதனைத்
தொட்டுத் தடவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உள்ளத்தின் பெருமை, புனிதாவைப் பரவசப்படுத்தியது.
பஸ்பிடித்து வீடுவந்து சேர 2 மனியாகிவிட்டது. இனித்தான் சமைக்க வேண்டும்.
திண்ணையில் சிகரெட் புகைத்தபடி இருந்த சிவனேசன், அவள் கொண்டு வந்த பையைப் பறித்துத் துளாவினான்.
சரஸ்வதி விருது, சான்றிதழ், ஆகியவற்றை அலட்சியமாகத் திண் ணையில் போட்டுவிட்டு என்வலப்பை அவசரமாகப் பிரித்துப் பார்த்து. ‘ஓ! ஐயாயிரமோ நல்லதாய்ப்போச்சு என்ரை

/ ஆணாதிக்க சமூக அமைப்பில், குடும்ப நிறுவனத்தில்: பெண்ணிற்குரிய கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியைச் சமமாக, உயிரும் உணர்வுகளுமுள்ள சக மனுஷியாக நடத்தாமல், வீட்டு வேலைக்கார அடிமை போல, பிள்ளைபெறும் யந்திரம்போல நடத்தும் ஆண்: நாயகப் போக்கு சமுதாயத்திலிருந்து ஒழியும்வரை, ஒழிக்கப்படும்வரை விடி வேயில்லை. திருமணம் பேசப்படும்போது பெண்ணின் விருப்பம் மதிக்கப் படுவதில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாகவே செய்யப் படுகிறது. இன்று நிலவிவரும் சமூக அமைப்பில் திருமண வாழ்க்கை குடும்பம் என்பவை பற்றிய கருத்தாக்கங்கள் மாற்றமடையாவிடில், சமூக அமைப்பு மாற்றப்படாதவரை
பெண்களுக்கு விடிவேயில்லை.”
வியாபாரத்தை விஸ்தரிக்க எனக்கு அவசரமாகத் தேவை” என்றபடி தனது சட்டைப்பையுள் திணித்துக் கொண்டான்.
“கெதியாய்ச் சமை நான் வெளியே போட்டுவாறன்’அவன் சைக்கிளில் புறப்பட்டுவிட்டான்.
திண்ணை அருகேயிருந்த வேப்பமரத்திலிருந்த ஒரு காகம் அனுங்கியபடி தொப்பெனக் கீழே விழுந்தது. அதைத் துரத்தி வந்த கொழுத்த அண்டங்காகம், அதன் ஈனஸ்வரக் கத்தலையும் பொருட் படுத்தாமல் தடித்த கருஞ் சொண்டுகளால் கொத்திக் கொத்தி.
முரளி அதைப்பார்த்துப் பயத்தால் சரஸ்வதி சிலையையும் சான்றிதழையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.
புனிதா உடுப்பை மாற்றிக் கொண்டு சமைப்பதற்காக அடுப்பை மூட்டிளாள்.
“ஆணாதிக்க சமூக அமைப்பில் குடும்ப நிறுவனத்தில் பெண்ணின் கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியை உயிரும் உணர்வுமுள்ள சக மனுஷியாக அல்லாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல நடத்தும் ஆண்நாயகப் போக்கு சமுதாயத் திலிருந்து ஒழிக்கப்படும் வரை பெண் களுக்கு விடிவேயில்லை.”
கருத்தரங்கில் கேட்ட குரல் புனிதாவின் காதுகளில் மந்திரம் போல் மீண்டும் மீண்டும் ஒலித்தது!
அந்த அடுப்பு மெல்ல மெல்ல மூண்டு சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.
大 大 ★
www.geocities.com\gnanam magazine
ஞானம் சஞ்சிை
யின் இணைய முகவரி

Page 8
பெண்களைக் கொடுமைப்படுத்திய
1. பூணூரீராமன்
யாருடன் தொடங்கலாம்? இருக்கவே இருக்கிறார் ராமபிரான் இன்று அவர் தெய்வம் ஆகிவிட்டார். அவரை ஆலயத்தில் வைத்துப் பூஜைசெய்து, பிரமாண்டமான அளவில் வழிபாடு நடக்கிறது.
ஆனால் அவர் ராமாயணக் கதா பாத்திரமாக - கதாநாயகனாகச் செய்த மனதை மிகவும்
ஒரு செயல்
உறுத்துகிறது. அப்படி என்ன செய்தார் அவர்?
இராவணன் சிறையில் எவ்வளவோ துன்பப்பட்டு கணவனால் மீட்கப்பட்டதும் அவள் எவ்வளவோ சந்தோஷப்பட்டாள். அவளுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம். ஆனால் ஒரு வண்ணானின் பேச்சைக் கேட்டு, கர்ப்பிணியான அவளைக் காட்டுக்கனுப்பினான் ராமன்.
சீ  ைத கற்புக்கரசி - ய ரா ரு ம் நெருங்க முடியாத நெருப்பு, இராவணன் அவளை நெருங்க முடியாமல் பூமியுடன் அகழ்ந்து சென்றது அவருக்குத் தெரியும் அப்படிப் பட்டவன் ராவணனால் களங்கப் பட்டிருப்பாள் என்று சந்தேகம் கொள்வதும்,
அதற்குத் தண்டனையாக அவளைக் காட்டுக்கனுப்புவதும் நியாயமா?
அது மட்டுமல்ல, அவளைத் தீக்குளிக்கவும் செய்தான் ராமன். தன்னுடன் நிழலாக ஒட்டி இருந்தவள், தன்னோடு இணைந்து காட்டில் வனவாசம் செய்தவள், அப்படிப்பட்டவளை எல்லாம் அறிந்த இராமன், இப்படிக் கொடுமை GeFiugust Lon? பெளராணிகர்கள் என்னதான் இச்செயலை நியாயப் படுத்தினாலும், மானுட நோக்கில் அது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.
2. தருமர்
மிகவும் நல்ல மனிதன், தர்மத்தின் திருஉருவம் பொறுமைசாலி. ஆனாலும் அவர் திரெளபதிக்கு இழைத்த அநீதிகள் பல. சூதாட்டத்தில் தோற்றவர், என்ன தான் மனைவியாக இருந்தாலும், அவள் வீட்டில் இருக்கத்தக்கதாக, அவள் பெயரை மட்டும் சொல்லி, அவளைச் சூதாட்டப் பொருளாகக் கூறியது அநீதி.
. Ez ar Cxr n — unmri i Oss4
 
 

அதுபற்றியும் திரெளபதி கேட்டாள். ஒரு கேள்வி. தன்னை இழப்பதற்கு முன் என்னைச் 'சூதாட்டப் பொருளாக வைத்தாரா, இழந்தபின் வைத்தாரா? என்று. இழந்தபின் தன்னை வைப்பதற்கு எவ்வித நியாயமுமில்லை என எடுத்துக் கூறினாள்.
அதைவிடக் அடுத்த அநீதி.
சபையில் திரெளபதியை நிறுத்தி, துரியோதனன் (துச்சாதனன்) அவளைத் துகிலுரிந்து நிர்வாணமாக்க முயன்ற போது, வாளாவிருந்தார்களே - தர்மர் மட்டுமல்ல - பஞ்சபாண்டவரும். இது எந்த வகையில் நியாயம்? எந்த ஒரு மானபங்கப்
கொடுமையானது
பெண்ணையும், யார் படுத்தினாலும், ஒடிச்சென்று, அதைத் தடுக்க வேண்டியது ஒருவரது மனிதாபி மானக் கடமை அதைக் கூடச் செய்யாமல் விட்டது எப்படி?
அவளுக்கு அபயம் கொடுத்த கண்ணபிரான் கூட இதில் ஒரு தவறு விட்டிருக்கிறார். ஒரு கையால் ஆடையைப் பற்றிக் கொண்டு மறுகையால் கண்ணனை அழைத்தது அவருக்குப் பிடிக்கவில்லை. இருகைகளையும் மேலே தூக்கிய பின்னரே அவர் அபயம் அளிக்க வந்தாராம். உண்மையில் அவர் திரெளபதி துரியோதனன் சபைக்கு அழைக்கப் பட்டதையே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் அல்லவா?
3. நளன்
காதலியைக் காரிருளில் கானகத்தே
கைவிட்டுச் சென்ற பெருமகன் இவர்.
நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதை
எநானம் - மார்ச் 2004
பதைக்கிறது. இப்படி ஒரு கிராதகன் மனிதப் பிறவியில் இருப்பானா என இதயம் வெடிக்கிறது. அப்படி அவன் கைவிட்டுச் சென்றதற்குக் கூறப்படும் காரணமும் அற்பமானது. எண்ணிப் பாருங்கள்.
ஒரு அழகி - யுவதி - கணவனுடன் செல்கிறோம் என்ற ஒரே தன்னம்பிக் கையுடன், அவனுடன் செல்கிறாள், காடு என்றால் பயம், காட்டில் இருள் என்றால் அதைவிடப்பயம் - அப்படியான சூழலில் இரவில் தங்குவது என்பது ஒரு பெண்ணுக்கு நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. ஆனாலும் கணவனுக்காக அதை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.
ஆனால், கணவன் என்ன செய் கிறான்? தன்னை நம்பி வந்தவளை நட்டாற்றில் கைவிடுவது போல், அவள் தூங்கும்பொழுது, கள்ளத்தனமாக எழுந்து வெளியேறி விடுகிறான்.
நள்ளிரவு-நடுக்காடு-திக்குத்திசை - தெரியாது. பயங்கர மிருகங்கள் - வேடர்கள், கயவர்கள் இப்படி எத்தனையோ ஆபத்துக்கள் நிறைந்த சூழலில் ஒருவன் தன் அருமைக் காதலியை விட்டுச் செல்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கிராதகனாக இருக்க வேண்டும்?
பின்னர் அவள், வேடன்,கார்கோடகன் (மலைப்பாம்பு) முதலிய ஆபத்துக்களில் அகப்பட்டுத் தன் கற்பின் சக்தியால் தப்பிச் செல்கிறாள். அது வேறு விடயம். ஆனால் நளன் செய்தது துரோகமே
4. விஸ்வாமித்திரர்
இந்திரன் சூழ்ச்சியால், விஸ்வா
மித்திரர் ஆற்றில் குளிக்கச் சென்றபின்,
இந்திரன் விஸ்வாமித்திரர் வேடம்

Page 9
கொண்டு அவரது பர்ணசாலைக்குள் சென்று விஸ்வாமித்திரரின் மனைவியான அகலிகையையுடன் கூடியிருக்கிறான். இதில் அகலிகை மணமறிந்து எவ்விதத் தவறும் செய்யவில்லை. கணவன் ரூபத்தில் இந்திரன் இருந்தபடியால் அவனுக்கு இடம் கொடுத்தாள். ஆனால் பர்ணசாலைக்கு வந்த விஸ்வாமித்திரர் அவளைக் ಙ್ சாபமிட்டார். இது எந்த வகையிலும் நியாயமாகப்படவில்லை?
கங்கைக் கரையில், ஞான
S. wW ο Α. திருஷ்டியால், பர்னசாலையில் நிகழ்வதை" புறப
- சிலம்பை விற்றுப்பொருள் தேட முயற்சிக் செய்திருக்க வேண்டும்? தனது தபோ கிறான். கண்ணகிச்
அறிந்த விஸ்வாமித்திரர் என்ன்
w-அகலிகையை இந்திர னிடமிருந்துகாப்பாற்றி இருக்க் வேண்டும். ஆனால் அ அப்படிச் செய்யவில்லை.
தனது தர்மபத்தினி இன்னொரு வனால் கற்பழிக்கப்ப
தன் கண்முன்னே நடந்த
அவர். சம்பவத்தின் உண்மையை அறியவில்லை என்றால் எப்படி?
ஆக, இதுவும் ஒரு மனிதாபிமானமற்ற செயலே!
5. கோவலன்
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான
சிலப்பதிகாரத்தின் நாயகன் இவன்.
கற்புக்கரசியான கண்ணகியை பெரியோர்
14
கல்லாகப் போகும்ப்டி
> பிடித்துக் கொண்டு ஒரு ஏமந்தையாகச்
அநீதியான கொலைக்குப்பின் எண்ணற்ற
முன்னிலையில் கைப்பிடித்தவன். ஆனால் பின்னால் மாதவியின்பால் ஈடுபாடு கொண்டு,
மாதவியிடம் சென்று விடுகிறான்.
கண்ணகியைப் பிரிந்து
கானல் வரிப்பாடலின்போது மாதவி யிடம் கோபம் கொண்டு மீண்டும் கண்ணகியிடமே வருகிறான். வந்தவன்
என்ன செய்திருக்க வேண்டும்? மீண்டும் ஃபொருள் தேடச் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் கண்ணகியையும் அழைத்துக் ாண்டு சொந்த ஊரை விட்டு வெளியூர் აჯჯX-> ணகியின் காற
நாடோடி வாழ்க்கை கிடைக்கிறது. ని
கண் கிசிலம்பைக் கொடுக்க முன்வந்தாலும்ரோசமுள்ள் ஒரு கணவன் அதை நிராகரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்ய
:
வில்லை. கண்ணகியின் முந்தானையைப்
சோதனைக்குள்ளாகிறாள். தனது கற்பின் வலிமையால், பாண்டியனிடம் நீதி கேட்டு, மதுரையைத் தீக்கிரையாக்கிப் பின் தன் விதிப்படி
பரத்தையிடம் சென்ற
செல்கிறாள்.
356T66)6 மீண்டும் ஏற்றுக் கொண்டு அவன் நல்வாழ்வுக்குப் பாடுபட்டது கண்ணகி யின் பெருமையை எடுத்துக் காட்டினாலும்
கோவலனின்
நாம் சிறுமையை
மறப்பதற்கில்லை.
ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6. உதயகுமாரன்
இவரை இலக்கியவாதிகள் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான “மணிமேகலை’ காப்பியத்தில் இவர் வருகிறார்.
மணிமேகலை ஆண்களை வெறுத்துத் துறவு பூண்டு தனியான ஓர் இடத்தில் வசிக்கிறாள். ஆனால் அவள்மேல் மோகம் கொண்ட இளவரசன் உதயகுமாரன், அவளை அடைய முயற்சிக்கிறான். வேட்டை நாய்போல் அவளைத் துரத்துகிறான். அவனிட மிருந்து தப்புவதற்காக மணிமேகலை பல்வேறு தந்திரங்களைக் கையாள வேண்டியிருந்தது. பகீரதப் பிரயத்தனம் செய்து அவள் உதயகுமாரனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாள்.
துறவறம் மேற்கொண்ட ஒருபெண்ணை ஒர் ஆண் காதலிப்பது என்பதே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அவளைப் பலாத்காரமாக அடைய முயற்சிப்பது அதனிலும் கொடுமையானது. அரச பரம்பரையினர்க்கு இது கைவந்த கலை.
எவ்வாறாயினும், உதயகுமாரன் மணிமேகலையை பலாத்காரமாக அடைய முயன்றது தவறு. அதுவும் அவள் ஒரு துறவி என்று தெரிந்து கொண்டும் அவளை அடைவதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டது மனிதாபிமானமற்ற செயல்.
புராண, இதிகாசப்பெண்மணிகளுக்கு ஏற்பட்ட சோதனைகளுக்குப் பெளராணிகர், கர்மவிதியின் அடிப் படையில் விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் மானிட நோக்கில் அவை நியாயமற்ற செயல்களே!
た
༽
ܥܸܠ
உலகத் தமிழ்க் கவிதை உலகத் தமிழ்க் கவிஞர்கள் : ஒரு கையேடு
புதுவைமொழியியல் பண்பாட்டுஆராய்ச்சிநிறுவனம் இந்தியத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு ஒன்றினை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டினையொட்டி 1. உலகத் தமிழ்க் கவிதை, 2. உலகத் தமிழ்க் கவிஞர்கள்: ஒரு கையேடு எனும் இரண்டு தொகுப்புநூல்கள் வெளியிடப்பெறும். எனவே, தங்கள் கவிதைகளில் தாங்கள் விரும்பிய ஐந்தைத் தட்டச்சில் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்து அவற்றோடு தங்கள் வாழ்க்கைக் குறிப்பையும் பெயர், பிறந்தநாள்,இடம்,பெற்றோர், குடும்பவிவரம், கல்வித் தகுதி, வெளியிட்ட கவிதை நூல்கள், சிறப்புத் தகவல்கள்) சிறு நிழற்படம் ஒன்றையும் அடுத்தமாத 31.03.04 இறுதிக்குள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்டாட்டு ஆராய்ச்சிநிறுவனம், /2 காமாட்சி அம்மன் கோயில் விதி புதுச்சேரி- 605004இந்தியா. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நிறுவனம் மேற் கொண் டுள்ள கவிதைத் தொகுப்பாய்வுத் திட்டத்திற்குத் தங்களின் ஒத்துழைப்பினைப்பெரிதும் நாடும்,
- ப. மருதநாயகம் இயக்குனர் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சிநிறுவனம் இந்தியா) الم
ஞானம் - மார்ச் 2004
1 <

Page 10
('[[][ഞ്ചൺ
பேராசிரியை
SflöSl['EadöII மெளனகுரு
சந்திப்பு : பத்மா சோமகாந்தன்
* சோஷலிசப் பெண்ணிலைவாதியான பேராசிரியர் சித்திரலேகா சிறந்த கல்வியாளர், சிந்தனையாளர், சமூகவியல், மானிடவியல், துறைகளின் புலமைமிக்க ஆய்வாளர். இலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் பல ஆய்வரங்குகளில் பங்கேற்றுப் பெண்ணிலை வாதத்துக்கு உரமும் ஊக்கமும் சேர்த்தவர். பெண்களின் சமத்துவத்தை ஊக்குவித்தவர்களுக்கு UNHCR வழங்கும் விருது அண்மையில் இவருக்கு வழங்கப் பெற்றுள்ளது. ஞானம்' சர்வ தேச மகளிர் தினச் சிறப் பிதழுக்கென அவர் வழங்கிய சிறப்புப் பேட்டி இது.
பத்மா : பெண்நிலைச் சிந்தனைக்கு எப்படி அறிமுகமானிர்கள்? உங்கள் வாழ்க்கைப் பின்னணியுடன் தொடர்புபடுத்திக் கூறலாமா? சித்ரா இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது எனது குடும்பச் சூழல், ஆசிரியைகள், பின்னாளில் எனது நண்பிகள் எல்லாம் எனது சிந்தனை வளர்ச்சிக்கும், உலக நோக்கிற்கும் - view world கருத்து நிலைக்கும் பின்னணி எனத் தெரிகிறது.
நான் மட்டக்களப்பில் பிறந்தவள். எனது தந்தையார் யாழ்ப்பாணம், தாய் மட்டக்களப்பு தந்தை யாழ்ப்பாணத்தின் சாதி ஆதிக்கத்திற்கெதிராகக் குரல் எழுப்பியவர். அதை வெறுத்தே மட்டக்களப்பிற்கு வந்தவர். சமூகத்தின் ஆதிக்கக் கருத்தியலுடன் ஒத்துப்போக மறுக்கும் dissent சிந்தனை அவரிடமிருந்தது. இந்த dissent, பிழையானதிலிருந்து மாறுபடும் என்னுடைய ஆசிரியர்கள் வின்சன்ற் மகளிர் கல்லூரியில் திருமதி ராஜகருணா சிவபாதசுந்தரம், திருமதி திரவியம் ராமச்சந்திரன், செல்வி றோசலின் கருணாரட்ண போன்றோரின் பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் என்னில் பாதிப்பை ஏற்படுத்தின. மெளனகுரு என்னைச் சந்தித்த காலத்தில் எனக்கு மார்க்சியம் அறிமுகமானது. மார்க்சியத்துக்குள்ளால்தான் தத்துவ ரீதியாக எனக்குப் பெண்ணினவாதம் அறிமுகமானது. ஏங்கல்சினுடைய "தனிச்சொத்துடமை, குடும்பம்,
-ir r -r 2 - r art : PAfħAħ Att.
 

அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை அப்போதுதான் வாசித்தேன். பெண் ஒடுக்குமுறையின் அடிப்படையை ஏங்கல்ஸ் அதில் விளக்குகிறார். அது என்னை மிகவும் பாதித்த ஒரு நூல் இன்றுவரை,
கொழும்புப் பல்கலைக்கழகக் காலம் முக்கியமானது. அங்குதான் எனது அரசியல், இலக்கியப்பார்வைகள் ஆழமும் உறுதியும் பெற்றன. GujTéffurf கைலாசபதி தொடர்பு முக்கியமானது. அவர்தான் குமாரி ஜயவர்த்தனாவை எனக்கு அறிமுகம் செய்தவர். குமாரி ஜயவர்த்தனா பெண்நிலை ஆராய்ச் சியாளர்களில் இன்று முன்னணியில் இருப்பவர். அன்று பொருளியல் விரிவுரை யாளராக இருந்தார். அவருடைய நட்பு
இன்றைய எனது பெண்நிலைப் பார்வைக்கு நிறையப் பங்களித் திருக்கிறது.
பத்மா : பெண்நிலை ஆய்வுகள்
ஒரு கல்வித்துறையாக இன்று வளர்ந்துள்ளதாகச் சொல்லு கிறார்களே, நீங்கள் அத்தகைய கல்வியைப் பெற முடிந்ததா?
சித்ரா நெதர்லாந்து நாட்டில் சமூக விஞ்ஞானங்களுக்கான நிறுவனம், ISS அபிவிருத்தி தொடர்பான கற்கை நெறிகளுக்குப் புகழ் பெற்றது. அங்கு பெண்களும் அபிவிருத்தியும் என்ற பாட நெறியில் எம். ஏ. செய்கிற வாய்ப்புக் கிடைத்தது. அங்கு அறிமுகமான ஆசிரியைகள் - இன்றுவரை அவர்கள் நட்புத் தொடர்கிறது. அமரிதா சாச்சி, தண்டம் றங் போன்றோர் அங்கு படிக்கும்போதுதான் எனது உலகம் மேலும்
Lfrz n - anari di ?shsh.A.
விரிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் என்னுடன் படித்தார்கள். கொலம்பியா, நைஜீரியா, போர்த்துக்கல், இந்தியா, பாகிஸ்த்ான், தாய்லாந்து, சோமாலியா, தான்சானியா போன்ற நாடுகளில் பெண்கள் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் - இவர்கள் மூலம் வெவ்வேறு நாட்டுப் பெண்களின் அனுபவங்களையும் பிரச்சினைகளையும் அறிய முடிந்தது. அவற்றைப் பெண் நிலைக் கோட்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யவும் விளங்கவும் கற்றுக் கொண்டேன்.
1991 - 92 இல் நியூயோர்க் நகரில் City University of New York gait (5 assign furt 60T Hunter College g6) ஒருவருடம் ஆராய்ச்சிக்காகத் தங்கி யிருந்தபோது எனது சிந்தனை மேலும் வளம் பெற்றது. என்னுடைய சக ஆராய்ச்சியாளராக இருந்தவர் நிக்கி அலெக்சாண்டர், ஹண்டர் கல்லூரியில் பெண்கள் ஆய்வு நிகழ்ச்சியின் இணைப்பாளர் - றோசலின் பச்சஸ்கி - பெண்களது இனப் பெருக்கச் சுகாதார g) flooLD56it - Reproductive Health Rights குறித்து எழுதியவர், பெண்களது மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக உழைத்தவர். சார்லட் பரூக், றொக்ஸானோ கரியோ போன்றோர் நண்பிகளானார்கள். பலஸ்தீனிய, எல்சல்வடோரிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பும் ஏற்பட்டது. இக்காலத்தில்தான் தேசியமும் பெண்நிலைவாதமும் தொடர்பாகக் குறிப்பாக எனது கவனம் சென்றது. புலம்பெயர்ந்த தமிழரின் கலாசாரச் செயற்பாடுகள், - குறிப்பாகப்
17

Page 11
பெண்கள் பற்றிய ஆராய்ச்சியும் இக்காலப் ப கு தி யி ல் த எ ன் ஆ ர ம் ப ம | ன து . யாவற்றுக்கும் மேலாக எனது சமூகத்தை நான் கருத்தூன்றிப்பார்க்கிறேன். அது எனக்கு நிறைய அறிவைத் தருகிறது. எனது
போராளுமன்றத் தேர்தலுக்கு எந்தத் தமிழ்கி கட்சியாலும் இதுவரை பெண்கள் வேட்பாளராக நியமிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும் பிரசார வேலைகட்குப் பெண்களைப் பயன்படுத்துகின்ற வரலாறு உண்டு. ஆனால், தேர்தல் நியமனங்களில் இடம் கொடுப்பதில்லை. ஆனால் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களில் பெண்கள் சேர்ந்துள்ளனர். பங்களித்துள்ளன
பெண்நிலைப் பார்வைக்கு
இந்த முரண்பட்ட நிலை ஏன் என்பதும் சிந்திப்பதற்கு உரியதாகும் 3.
பின்னணியாக لازن إنك அமைகிறது.
பத்மா நீங்கள் இணைந்து
செயற்பட்ட, படுகின்ற பெண்கள் நிறுவனங்கள் அவற்றின் செயற் பாடுகள் பற்றிக் கூற முடியுமா? சித்ரா : நான் கடந்த சுமார் 20 வருடங் களுக்கு மேலாக பல்வேறு இடங்களிலும் பெண்கள் அமைப்புகளுடன் சேர்ந்து செயற்பட்டு வந்துள்ளேன்.
யாழ்ப்பாணத்திலேயே இத்தகைய செயற்பாடு ஆரம்பமாயிற்று. 1981, 82 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் சிலரும் சில சேர்ந்து பெண்கள் முன்னேற்றச் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினோம். பெண்கள், பெண்ணியம் தொடர்பான படிப்புக் குழுவாகவே அது இயங்கியது. எம்முடன் நிர்மலா நித்தியானந்தன், சுல்பிகா இஸ்மாயில், யுவனேஸ்வரி போன்றோர் செயற்பட்டனர். பின்னர் பெண்கள் ஆய்வு வட்டம் என்ற அமைப்பு 1984இல், இயங்கத் தொடங்கியது. இதில் என்னுடன் சர்வம் பார்வதி கந்தசாமி,
மாணவிகளும்
சங்கம்
கைலாசபதி,
8
சிவரமணி, மல்லிகா இராஜரெட்ணம், சோமேஸ்வரி கிருஸ்ண குமார், பத்மினி சிதம்பரநாதன், சுமங்களா கைலாசபதி, ராஜினி திரணகம மோகனா, செல்வி, சிவரமணி இணைந் திருந்தனர். பெண்கள் பற்றிய ஆய்வுகள், கருத்தரங்குகள், கலாசார ஊடகங்கள் மூலம் பெண்களும் சமூகமும் பற்றிய விவாதத்தை எழுப்புதல் இவ் அமைப்பின் நோக்கங்களாக இருந்தன. மெளன குருவின் “சக்தி பிறக்குது’ குழந்தை சண்முகலிங்கத்தின் தியாகத் திருமணம் போன்ற நாடகங்கள் பெண்கள் ஆய்வு
போன்றோர்
வட்டத்திற்காகவே தயாரிக்கப்பட்டவை. இவை இரண்டும் முறையே 86,87ம் ஆண்டுகளில் மார்ச் 8 பெண்கள் தினத்தன்று மேடையேற்றப் பட்டவை.
பொருத்த மானதே என்ற இலகுவாசிப்பு நூல் ஒன்றையும் இந்த அமைப்பு 1985 ஆம் ஆண்டு வெளியிட்டது. 1986 இல் சொல்லாத சேதிகள்” என்ற இலங்கைப்
பெண்ணிலைவாதம்
பெண்ணின் முதலாவது கவிதைத் தொகுப்பையும் இந்த அமைப்பே
வெளியிட்டது.
எகானம் - மார்ச் 2004
 
 
 
 
 
 

இதே கால கட்டத்தில்தான் அன்னையர் முன்னணி என்ற இன்னோர் அமைப்பும் உருவானது. 1984 ஒகஸ்ட் மாதம் வடமராட்சிக் கிராமம் ஒன்றில் ஆண் பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பெற்றோருக்கு எந்த அறிவித்தலுமின்றி ராணுவ ட்ரக்கில் ஏற்றப்பட்டு பூஸா முகாமுக்குக் கொண்டு போகப்பட்டபோது யாழ் குடா நாடே அதிர்ச்சியில் உறைந்தது. பயங்கரவாதச் தடைச் அமுலில் இருந்த அக்காலத்தில் தெருவில் வந்து எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆண்கள் அஞ்சிய காலத்தில், அன்னையர் என்ற தமது மரபு ரீதியான பாத்திரத்தை ஒரு அரசியல் பாத்திரமாக மாற்றினர் பெண்கள். பெண்கள் சிலருடைய ஆலோசனையில் உருவாகியதுதான் அன்னையர் முன்னணி. இதன் அமைப்புப் பற்றி நாம் ஆலோசித்தபோது கொலம்பிய நாட்டின் (psiTLDT.gifu IIT), Mothers of Maya de Plaza என்ற அமைப்புடன் முன்மாதிரியாக அமைந்தது. அங்கும் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமது புதல்வர்களை விடுதலை செய்யக்கோரும் ஒரு அமைப்பாகவே அன்னையரின் அந்த அமைப்பு இருந்தது. யாழ் குடாநாட்டின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அதில் அங்கம் வகித்தனர். இராணுவத்தின் மனித உரிமை மீறல்களைக்கண்டித்து பல ஊர்வலங்களை அது நடத்தியது. 1986இல் தேசிய விடுதலை இயக்கங் களுக்கிடையே முரண்பாடுகள் சச்சரவுகள் ஏற்பட்டபோது அவற்றுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் அன்னையர் முன்னணி ஈடுபட்டது.
சட்டம்
கடல் வலயத்தடைச் சட்டத்தினால் கரையோர மக்களின் தொழில் பாதிக்கப் பட்டபோது அவர்களுக்கான நிவாரணப் பணியிலும் முன்னணி பங்காற்றியது.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு
அன்னையர்
கோரும் அறிக்கைகளை வெளியிட்டது.
தென்னிலங்கைப் பெண்கள் அமைப்பு களின் ஆதரவும் அன்னையர் முன் னணிக்குக் கிடைத்தது. இந்த அமைப்பில் ஆரம்பகால உறுப்பினர்களாக என்னுடன் நிர்மலா பாலரட்ணம், சர்வம் கைலாசபதி, திருமதி தேம்பா குணநாயகம், கனேஸ் பாலசிங்கம், திருமதி அருணாச்சலம், கேசவமலர் ராஜரட்ணம், சாந்தி சச்சிதானந்தன். ஆகியோர் பங்காற்றினர். கை செய்யப்பட்ட பிள்ளைகளின் விடுதலை கோரி 1984 இறுதியில் அன்னையர் முன்னணி நடத்திய மெளன ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் பங்கு பற்றினர். இராணுவ அடக்குமுறைக்கு எதிரான பொது மக்களின் எதிர்ப் புணர்வின் அடையாளமாக அன்னையர் ஊர்வலம் இருந்தது.
இந்திய அமைதிப்படையினரின் வருகையுடன் அன்னையர் முன்னணியின்
சண்முகலிங்கம்,
ஆகஸ்ட்
செயற்பாடும் முடங்கிப்போயிற்று. பின்னர் 1989இன் ஆரம்பத்தில் பூரணி பெண்கள் நிலையத்தை உடுவிலில் ஆரம்பித்தோம். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்த போரில் பாதிக்கப்பட்ட, குடும்பங்களை இழந்த, இளம் பெண்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் நோக்கத்துடன் பூரணி ஆரம்பிக்கப்பட்டது. இது பல திட்டங்களை முன்னெடுத்தது. பக்கத்துக் கிராமங்

Page 12
களிலுள்ள வறிய பெண்களை அவர்களது தேவைகளை அவர்களே பெற்றுக் கொள்ளும் வலுவுடையவர்கள் ஆக்கும் வேலையில் பூரணி ஈடுபட்டிருந்தது.
1991இல் பூரணி தனது செயற்பாட்டை இழக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
1990இல் 2வது ஈழப்போரில் வடக்கு
கிழக்கிலிருந்து பெரும்பாலான மக்கள்
இடம் பெயர்ந்தனர். வடக்கிலிருந்து முஸ்லிம்கள், கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் அரசாங்கம் “நலன்புரிநிலையங்கள்’ என அழைத்த மண்டபங்களிலும் பாடசாலை களிலும் இவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இந்த அகதிகளில் பிள்ளைகளினதும் எண்ணிக்கை அதிக மானதாய் இருந்தது. அக்காலத்தில் நானும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந் திருந்தேன். கொழும்பில் எனது நண்பி சுனிலாவுடன் தங்கி இருந்தேன். அகதி முகாம்களில் வாழ்ந்த பெண்
பெண்களதும்
களதும், பிள்ளைகளதும் நலன்களையும் விசேட தேவைகளையும் கவனிப்பதற்காக சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் என்ற அமைப்பை அப்போது ஆரம்பித் தோம். இந்த அமைப்பில் சுனிலா அபயசேகர, குமுதினி அன்பேரியா ஹனிபா, பவித்ரா கைலாசபதி, ஒளவை, ஒட்றி றிபேரா ஆகியோர் ஆரம்பகால அங்கத்தவர்களாக இருந்தனர். ஜயந்தி தளையசிங்கம், விஜி முருகையா, யமுனா இப்ராகிம், றெஜி டேவிட் போன்றோரும் சூரியாவில் பணியாற்றினர். இடம் பெயர்ந்த பெண்களுடன் வேலை செய்ய ஆரம்பித்த சூரியா இன்று மட்டக்களப்பில் இயங்குகிறது. தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப் பதற்கான பிரசார வேலைகள், சட்ட
சாமுவேல்,
1)
உதவித் திட்டங்கள், சமூகத்தில் பெண்களின் சமத்துவமற்ற நிலை குறித்த விழிப்புணர்வுக்கல்வி, மட்டக்களப்பின் பெண்கள் நிலை பற்றிய ஆராய்ச்சி, பெண்களின் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றில் முனைப்புச் செலுத்துகிறது. இவை தவிர தேசிய மட்டத்தில் இயங்கும் இலங்கைப் பெண்களின் அரச சார்பற்ற நிறுவனங் களின் கூட்டு என்ற ஒரு வலை யமைப்பிலும் நிர்வாகக் குழுவில் உள்ளேன். அத்துடன் பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகிக்கிறேன்.
பத்மா : உலக சனத்தொகையில் சுமார் சரிசமமான எண்ணிக்கை யினரான பெண்கள் வாக்குரிமை யுள்ள நாடுகளில் அரசாங் கங்களை அமைப்பதற்குத் தேர்தல்களில் வாக்களிக்கின்ற போதிலும் அவர்களின் எண் ணிக்கைக்கேற்ற விகிதா சாரத்தில் தேர்தல்களில் போட்டி யிடுவதோ பாராளுமன்றங் களுக்குத் தெரிவு செய்யப் படுவதோ இல்லை. இந்த 21ம் நூற்றாண்டிலும் இதே நிலையே நிலவுகிறது. இதற்குக் காரணம் பெண்களின் அலட்சியப் போக்கா? அல்லது ஆண் களுக்குப் பயந்த சுபாவமா? இதை மாற்றியமைக்க ஏற்ற வழியென்ன?
சித்ரா இதற்குப் பல காரணங் களுள்ளன. இன்றும் அரசியல், ஆண்களின் ஏகபோகமாகத்தான் உள்ளது. தேர்தலுக்காக வேட்பாளர்களை


Page 13
மொத்தத்தில் அரசியலில் நிலவும் ஆணாதிக்க கலாசாரமே பெண்கள் அரசியலில் ஈடுபடாதிருப்பதற்கு அடிப் படைக் காரணமாகும். இதை உணர்ந்து பெண்களின் பங்காற்றலை அதிகரிக்கும்
கொள்கைகளையும் திட்டங்களையும்
உருவாக்க வேண்டும். வன்முறைக்
கலாசாரத்தைக் குறைக்க வேண்டும்.
அதற்காக உழைக்க வேண்டும்.
தென்னாசிய நாடு எழுத்தறிவு
பத்மா களுக்குள்ளேயே
வீதம், உயிர் வாழும் காலம், மேலும்
சுகாதார நிலை போன்றவற்றால் பெண் களைப் பொறுத்தவரை இலங்கையே முன்னணியில் நிற்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பெண்கள் அரசியலில் பங்கு பற்றல் குறைவாக உள்ளது. இது ஒரு முரண்பாடு இல்லையா?
சித்ரா முரண்பாடுதான். ஐக்கிய நாடுகள்
சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் வாழ்க்கைத்தரக் குறி காட்டிகளின் அடிப்படையில் ஏனைய தென்னாசிய நாடுகளை விட இலங்கையின் நிலை உயர்ந்ததாக உள்ளது. பெண்களின் நிலையும் அவ்வாறே, இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைகள் ஆகியவற்றின் பயன்களாகவே இந்நிலையை இலங்கை அடைந்தது. ஆனால் தீர்மானம் எடுக்கும், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் மட்டங்களில் பெண்களின் பிரசன்னம் இன்னும் உறுதி பெறவில்லை. நிர்வாக, நீதித்துறைகளிலும் ஆட்சி மட்டத்திலும் ஏனைய தென்னாசிய நாடுகளை விட இலங்கைப் பெண்கள் மிகவும் கீழ்ப்பட்ட
நிலையிலேயே உள்ளனர்.32 கபினட்
பெண்;
அமைச்சர்களில் ஒருவரே
22
பாராளுமன்றப்பிரதிநிதித்துவம் 44 ஆகவே உள்ளது. உண்மையில் இது 94ஆம் ஆண்டுத் தேர்தலில் அமைக்கப் பட்ட பாராளுமன்றத்தில் இருந்ததைவிட 1% குறைவானது. மாகாணசபைகளிலும் 3.4% பெண்கள் உள்ளனர். நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் அங்கு 197 வீதமே உள்ளது. இந்தப் புள்ளி விபரங்கள் உண்மை நிலையை எமக்குக் காட்டுகின்றன.
நிர்வாக சேவையை எடுத்தால் -
உள்ளூராட்சி
அமைச்சுச் செயலாளர்கள் 55பேரில் பெண்கள் 5 பேர்தான். 1995 ஆம் ஆண்டுதான் முதல் முதல் ஒரு பெண் செயலாளராகப் பணியாற்றினர். மாவட்டச் செயலாளர்களில் - அரசாங்க அதிபர்களில் 25 பேரில் 5 பேரே பெண்கள். இலங்கை நிர்வாக சேவையில் பெண்கள் கால் பங்காகவே - 267 வீதமாகவே உள்ளனர். மக்கட் தொகையில் - 2002 கணக் கெடுப்பின்படி பெண்கள் 50.7 ஆக இலங்கைக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் இரு துறைகளில் மத்திய கிழக்கில் பணிப் பெண்களாகவும் ஆடைத் தொழிற் சாலைகளில் வேலை செய்வோராகவும் பெண்களே உள்ளனர். மக்கட் தொகையில் பாதிக்குச் சற்றுக் கூடியிருந்தும், வருமானம் ஈட்டுவதில் பிரதான பங்காளிகளாக 905figh Power Sharing - 9585Fly5 தையும் ஆட்சியையும் பங்கிடுவதில் சமத்துவம் இன்மையே நிலவுகிறது.இது மிக மோசமான நிலைமை, ஜனநாயகத்துக்கு விரோதமான நிலைமை. இதையிட்டு காத் திரமான, மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கொள்கைகளையும் நடைமுறைகளையும்
உள்ளனர்.
உருவாக்க வேண்டும்.
ஞானம் - மார்ச் 2004

பத்மா பெண்நிலைவாதம் அமைதியான குடும்ப வாழ்க் கையைக் குலைத்துவிடும்.  ெப ண் நி  ைல வ |ா தி க ள் குடும்பத்தைப் பிரிப்பவர்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப் படுகிறதே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சித்ரா : நான் திருமணம் செய்து 30 வருடம் ஆகின்றது. எனக்கு ஒரு மகனும் இருக்கிறான். குடும்பம் ஒன்றும் குலையவில்லை. காரணம் மெளன குருவும், சித்தார்த்தனும் சமூக நீதியில் நம்பிக்கை கொண்டவர்கள். பெண்களின் கோரிக்கைகளைப் புரிந்து கொள் கிறார்கள். பெண்கள் வாக்குரிமைக்கான கோரிக்கை சென்ற நூற்றாண்டில் எழுந்தபோது “அது குடும்பத்திலும் இசைவைக் குறைத்து விடும்” என்றுதான் சேர். பொன். இராமநாதனும் கூறினார். இப்படித்தான் எத்தகைய முற்போக்கான கருத்துக்கள் வரும்போதும் ஒடுக்கப் படுவோரின் நலன்களை முன்னெடுக்கும் கருத்துக்கள் வரும்போதும் பூச்சாண்டி காட்டப்படுகிறது. குடும்பம் என்பதை நாம் மேன்மைப்படுத்தி வைத்திருப்பதால் மறு சிந்தனையின்றி இத்தகைய பூச்சாண்டிப் பேச்சுக்களுக்கு சிலர் விடுகிறார்கள்.
வன்முறை நிலவும் குடும்பத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் பெண் அந்த வன் முறையைப் பொறுத்துக் கொண்டு காலம் முழுக்கப் பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் சுத்தமான அடக்கு முறையாளர்கள். அவ்வாறு குடும்பம் என்ற உன்னத நிறுவனத்தைக் காப்பாற்ற
ஞானம் - மார்ச் 2004
பயந்து
விரும்புகிறவர்கள் அதற்குள் வன்முறை நிகழாமலிருக்க வழி வகைகளைச் செய்யலாமே. பெண்களின் உரிமைகள் குடும்பத்துள் பேணப்படுகின்ற சூழலை உருவாக்கலாமே. அதை விட்டு குடும்பம் குலைந்து போகும் என்று கூச்சல் போடுவதால் எந்தப் பயனும் இல்லை. அப்படிக் கூச்சலிடுவோரின் ஆதிக்க மனப்பான்மையை நாம் அடையாளம் காணுவது தவிர.
மரபு ரீதியான குடும்பம் என்பது தந்தையாதிக்க முறையை உறுதிப் படுத்தும் ஒரு நிறுவனமாகவே இயங்கி வந்திருக்கிறது என்பது உண்மை. இதில் விவாதத்துக்கு இடமில்லை. பெண்ணை மனைவியாகவும், தாயாகவும் மாத்திரம் கட்டிப்போடும் பணியையும் அது எமது கலாசாரத்தில் தனி நபர்களாக ஆணினதும் பெண்ணினதும் அன்பைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிறுவன மாகவும், ஆதரவு தருகின்ற நிறுவன மாகவும் எப்படி மாற்றியமைக்கலாம் என்பதே சமூக நீதியை விரும்புவோரின் ஆக்கபூர்வமான சிந்தனையாக அமைய வேண்டும்.
Luži Lom தமிழ் சமூகத்தில் கலாசாரம், பாரம்பரியம் அவற்றின் மேன்மை பற்றிப் பேசுகிறோம். அவற்றை எப் போதும் பெண்களுடனேயே தொடர்பு படுத்து கிறோம். ஆனால் கலாசாரம் என்பது முழு சமூகத்துக்கும் உரியதல்லவா?
சித்ரா : கலாசாரம் என்றால் என்ன என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

Page 14
என்னுடைய கருத்தில் ஒரு தனிநபரது உரிமைகளையும் விழுமியங்களையும் கெளரவிக்கின்ற ஒரு சமூகமே உயர் கலாசாரமுடைய, பண்பாடுடைய சமூகம் என்று சொல்வேன். அத்தகைய நிலையை முழுமையாக உலகில் எந்தச் சமூகமும் இன்னும் அடையவில்லை.
நீங்கள் கேட்கும் தமிழ்க் கலா
சாரத்தை எடுத்துக் கொண்டால் அதில்
எத்தனையோ பிரிவுகள் உள்ளன; எமது
சமூகச் சிந்தனையில் எவ்வளவோ மாற்றங்கள் காலம்தோறும் ஏற்பட்டு வந்துள்ளது. நிறுவனமாகிய சைவ சமயத்தை 6 (6. வெளியேறிய சித்தர்களின் சிந்தனையும் தமிழ்க் கலாசாரத்தின் ஒரு பகுதிதான். சமூக அநீதிகள் பற்றிய எதிப்புக்குரல்கள் சித்தர் தத்துவத்துள் அடங்கிக் கிடக்கின்றன. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என்ற வள்ளலாரின் சிந்தனையும் கலாசாரத்தில் ஒரு பகுதிதான். ஆனால் இத்தகைய
விடுதலைத் தன்மையுடைய, சமூக நீதி உணர்வுடைய சிந்தனை மரபுகளை ஒதுக்கிவிட்டு தமிழ்க் கலாசாரம் என்பது கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டமைப்பு சமூகத்தில் அதிகாரமுள்ள வர்க்க, சாதி, பால்நிலையிலுள்ள வர்களாலேயே செய்யப்படுகிறது. அவர்கள் தமது நலன்களுக்குத் தகவே கலா சாரத்தைக் கட்டமைக்கிறார்கள். சிலசில குறியீடுகளும், நடத்தை முறைமைகளும், கருத்துகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டு கலாசாரம் எனக் காட்டப்படுகிறது. இதையே எமது கல்வியும் போதிக்கிறது; ஊடகங்களும் இவையும் அதிகார முள்ளோர் கையில் இருப்பதால்
24
அவர்கள் கட்டமைப்பதையே கலாசாரம் எனப் பொதுமக்களிடையே பரப்புகின்றன. நாமும் அரசனையும் ஆசிரியரையும் கணவரையும் தெய்வமென கற்பிக்கப்
பட்டவர்கள் என்றபடியால் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறோம். கேள்விகள் எழுந்தாலும் வெளிப் படையாகக் கேட்பதில்லை. இவ்வாறு
கேட்காமலிருக்கும்போது நாம் ஏற்றுக் கொள்ளப் பழகிவிடுகிறோம். எம்மிடையே விமர்சனப் பார்வை குன்றிவிடுகிறது. சிந்திக்கும் கூர்மை குறைந்து விடுகிறது. குறிப்பாக மத்தியதர வர்க்கத்தினரிடையே இதனைக் காண்கிறேன்.
பெண்களை, பெண்களின் உடலையே கலாசாரத்தின் குறியீடுகளாக இந்தக் கலாசாரம் கட்டமைத்திருக்கிறது. பெண்களின் உடை, அவர்கள் தமது, உடலைக் கையாளும்முறை ஆகியவை எப்படியிருக்கவேண்டும் என உயர் கலாசாரம்/தமிழ்க் கலாசாரம் எனக் கூறப்படுவது கற்பித்ததிலிருந்து விலகும் போது கலாசாரம் கெடுகிறது என அங்கலாய்ப்பு எழுகிறது.
பெண்கள் குழந்தைகளைப் பெறக்கூடிய, சந்ததியை மறு உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியப்பாடு கொண்ட உயிரியல் இருப்பதால் இன, மத அடையாளங்களைப் பேணும்படி அவர்கள் வற்புறுத்தப் படுகிறார்கள். கட்டுப்பாடாக இருக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இத்தகைய வற்புறுத்தல்களும் நிர்ப்பந்தங்களும் இனத்துாய்மையைப் பாதுகாப்பதற்கும் உறுதி செய்வதற்கும் பயன்படுகின்றன. மிகச் சிறிய உதாரணம் பெண்களின் வைபவங்களின் போது
பண்பு உடையவர்களாக
உடைகள்,
ஞானம் - மார்ச் 2004

பெண்கள் “தமிழ்க் கலாசாரப்படி உடை அணியும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். சேலை, பொட்டு, பூ, கால் சங்கிலி இத்தியாதி. ஆண்களுக்கு இது கட்டாயம் அல்ல; அவர்கள் கால்சட்டை, டை அணியலாம். அது கெளரவம் என்றும் எண்ணப்படுகிறது. வைபவங்கள் சமூக ஒன்று கூடல் களாகவும், நிறுவனமயப் பட்டதாகவும், இருப்பதால் அவற்றில் பெண்கள் கலாசாரக் குறியீடுகளைப் பின்பற்ற வேண்டும் எனப்படுகிறது. இப்போது சேலை தவிர்ந்த பிற வசதியான உடைகளைப் பெண்கள் அணிவது அதிகரித்திருந்தாலும் இத்தகைய வைபவங்களில் அவர்கள் குறிப்பிட்ட ஆடைகளையே அணியவேண்டும் என்பது எழுதாச் சட்டமாக உள்ளது. இங்கு ஆண்கள் கலாசாரக் குறியீடு களைத் தாங்குபவர்களாக இல்லை;
பெண்களே அவ்வாறு ஆக்கப் படுகிறார்கள். Ethnic Makers என இதைத்தான் நாம் ஆங்கிலத்தில் சொல்லுவோம்.
மேலும் தமிழரின் ஆடைக்கலாசாரம் பற்றிப் பேசும் போது இந்த ரவிக்கையும் சேலையும் எங்கிருந்து எப்போது வந்தது என்று பார்ப்பது நல்லது. ரவிக்கை போர்த்துக்கேயர் கொண்டு வந்தது. சேலை அணியும் முறை மேற்காசியா, மத்திய தரைக் கடற்பகுதிகளிலிருந்து இந்தியாவுக்குப் பரவியது. தமிழ்நாட்டில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல், செப்புச் சிலைகளைப் பார்த்தால் அக்காலத்தில் எத்தகைய உடைகள் இருந்தன என ஊகிக்கலாம். வெப்பவலய நாடுகளில் உடலை மூடும் தேவையுடனும் ஆடைக் கலாசாரம் தொடர்பு படுகிறது.
எகானம் - மார்ச் 2004
இதே சமயம் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு ரவிக்கை அணியும் உரிமை உயர்சாதியினர் எனப்படுவோரால் மறுக்கப்பட்டதையும் அணிந்தபோது அது கிழிக்கப்பட்டதையும் நாம் இப்போது வசதியாக மறந்து விடுகிறோம். இவை யெல்லாம் சமீபகால வரலாறுகள் Recent history. ஆகவே தமிழ்க் கலாசாரம் எது என்று கேள்வி எழுப்புவது முக்கியம் என நான் நினைக்கிறேன். தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் என்பதை வெறும் குறியீடு இரட்டை நியாயமுடைய கட்டளைகளால் குறுக்கிவிடக் கூடாது
களால்,
என்று நான் நினைக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை மரபில் மிகப் பரந்ததும், நீதியானதும், நாகரிக மானதுமான போக்குகள் உள்ளன. அத்தகைய பண்பாடுகளுக்கு நாம் வாரிசாக வேண்டும். அத்தகைய சிந்தனைகளும் விழுமியங்களும் அடக்கு முறைத்தன்மை அற்றவை.
மற்றது; தமிழ்க் கலாசாரம்/பண்பாடு ஒன்று அல்ல; அதற்குள் பல்வகைத் தன்மை உள்ளது; பிரதேச வேறுபாடுகள் உள்ளன; நகரங்களைவிடக் கிராமங் களிடையே இந்தப் பல்வகைமையை நாம்
இந்தக் u6)6)6O)560LD cultural diversity (upé, du மானது; வளமானது. இதை மறுத்து ஒழித்துவிட்டு தமிழ்க் கலாசாரம் ஒன்றே ஒன்றுதான்; அது இன்னதுதான் என்று சில குறியீடுகளையே வற்புறுத் தினால் அது இன்று பன்னாட்டுக் கம்பனிகள்
காணலாம். 356uITFTJ
உருவாக்கும் மக்டொனால்ட், கொக்கா கோலா உலகத்தைப் போலவே இருக்கும். பண்பாடு பற்றிப் பேசும் கல்வியாளர்களும்

Page 15
ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும்
இது பற்றி இன்று தீவிரமாகச் சிந்திக்க
வேண்டும் என எண்ணுகிறேன்.
பத்மா : “பெண்ணுக்கு அழகு எதிர் பேசாதிருத்தல்” என்று தானே எமது மரபில் கூறப் பட்டது. நீங்கள் கூறுவதுபோல வினாக்கள் எழுப்புதல் சிந்திப் பதன் அடை யாளம் அல்லவா? அப்படி யானால் பெண்ணுக்குச் சிந்தனை மறுக்கப்பட்டது என்று சொல் லலாமா?
சித்ரா : பத்மா,
உங்களுக்குத் தெரியும்தானே ஒரு உபநிடதத்தில் பெண் முனிவரான கார்க்கிக்கும் யாக்ஞ வல்லியருக்கும் இடையிலான உரையாடல்: அது பிரமம் பற்றியது. அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் “இதற்கு மேல் வினவினால் உனதுதலை அறுந்து விழும்” என்று கூறித்தான் யாக்ஞவல்லியர் அவளது கேள்விகளை நிறுத்தினார். அப்படித்தான்; கேள்வி கேட்பது பெண்மைக்கு அழகல்ல என்று கூறிச் சிந்தனைச் சுதந்திரத்தையும் எதிர்வினா எழுப்பும் சுதந்திரத்தையும் மறுத்துள்ளனர். இதை நாம் எமது பிள்ளைகளுக்குக் கற்பிப்பது மடமை; பெண்களின் நாற்குணங்கள் அவற்றின் படை போன்ற வல்லமை குறித்து எல்லாம் இப்போது கற்பிப்பதில்லை என நினைக்கிறேன்.
பத்மா : நான் ஏற்கனவே கேட்ட கேள்வியுடன் - பெண்ணிலைக் கல்வித்துறை பற்றியதுடன் தொடர்புபட்ட ஒன்றைக் கேட்க
விரும்புகிறேன். இலங்கையில் இத்தகைய கல்வி நெறிகள் உள்ளனவா? விரிவாகக் கூறலாமா? சித்ரா பெண்நிலைக் கல்வி / பெண்ணின் கல்வி என்றும் சிலர் Gynsio6 intfessir. - Women's Studies என்று குறிப்பிடப்படுவது; இது தனித்துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. மாத்திரமன்றி ஏனைய பொருளியல், சமூகவியல், மானுடவியல், இலக்கியம், தொடர்பூடகக் கற்கைகள், விவசாயம், இயற்கை விஞ்ஞானம் என எல்லாக் கல்வித்துறைகளிலும் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. இது பொதுவானது;
இந்தியாவிலும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை
பெண்கள் பற்றிய கற்கைகள் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பு மட்டத்தில் M.A. - சில ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலம் மூலம் கற்பிக்கப்படுகிறது. சில ஆண்களும் படித்துமுடித்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இதைப்படிக்கும் தமிழ்ப் பெண்கள் மிக மிகக் குறைவு. பட்டப்படிப்பு மட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2 பாட நெறிகள் உள்ளன. ஒன்று சமூகவியலை ஒரு பாடமாகக் கொள் வோருக்கானது. பால்நிலையின் சமூகவியல் என்பது. ஆரம்பத்தில் பெண்களும் அபிவிருத்தியும் என்ற பாடநெறி இருந்தது. ஏற்கனவே இரு தொகுதி மாணவ மாணவிகள் படித்து வெளியேறியுள்ளனர். தற்போது பால் f60) GoussiT Felpe,65usi) Sociology of Gender என்பது - இப்பாடநெறியில் பெண்நிலைக் கருத்தாக்கங்கள்

மா ண வி க ஞ க் கு அ றி மு க ப் படுத் த ப் படுகின்றன. அத்துடன் அத்தகைய கருத் தாக்கங்
களையும் கோட்பாடு களையும் பயன்படுத்தி 函LDgh சமூகத்தைப்
பெண்களை பெண்களின் உடலையே கலாசி சாரத்தின் குறியீடுகளாக இந்தக் கலாசாரம் கட்டமைத்திருக்கிறது. பெண்களின் உடை, அவர்கள் தமது உடலைக் கையாளும்முறை ஆகியவை எப்படியிருக்கவேண்டும் என உயர் கலாசாரம்/தமிழ்க் கலாசாரம் எனக்கறப்படுவது கற்பித்ததிலிருந்து விலகும் போது கலாசாரம்
பகுப்பாய்வு செய்யவும் அவர்கள் பழகுகின்றனர்.
கெடுகிறது என அங்கலாய்ப்பு எழுகிறது.
இவ்வாறு கல்வி கற்றவர்கள் அபிவிருத்தி நிறுவனங்களில் பணி புரிகிறார்கள்; சிலர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சிலர் தான் கற்றதை மேலும் வளர்த்து எழுதவும் முனைந் துள்ளனர். நானும் கமலினி கதிரவேற் பிள்ளையும் இவற்றை எமது பல்கலைக் கழகத்தில் கற்பித்தோம். இப்போது ஏற்கனவே எம்மிடம் கற்றவர்கள் கற்பிக்கத் தொடங்கிவிட்டனர். இத் தகைய பாடநெறிகள் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் துறையிலும் உள்ளன.
அடுத்த பாடநெறி தமிழில் பெண் களின் இலக்கியம் என்பது. இத்தமிழ் இலக்கியம் கற்கும் மாணவருக்கானது. இலக்கியத்தைப் பெண்நிலைப் பார்வையில் அணுகுவது நோக்கம். இலக்கிய வரலாற்றை மீள் பரிசீலனை செய்வது; அலட்சியப்படுத்தப்பட்ட பெண் படைப்பாளிகளைக் கூர்ந்து ஆராய்வது பெண்களின் வாய்மொழிமரபு, அவர்களது படைப்புத்தன்மையின் விசேட அம்சங்கள், பெண்நிலை விமர்சனம் போன்ற கூறுகள் இதற்குள் அடங்கும். இந்தப் பாட நெறியின் பயனாக மாணவர்கள் தமது இறுதித் தேர்வின் ஒரு பகுதியான ஆராய்ச்சித் திட்டங்களை பெண்கள் இலக்கியம் குறித்துச் செய்துள்ளனர்.
ஒளவையார், வெள்ளி வீதியார் பற்றிய மறுபார்வைகள், அம்பை, பவானி ஆழ்வாப்பிள்ளை, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற சமகால எழுத்தாளிகள் பற்றியும் இலங்கையில் பெண்களின் கவிதை இலக்கியம் பற்றியும் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்தப் பாட நெறியிலும் பால், பால்நிலை பற்றிய கருத்தாக்கங்களும், பெண்நிலைக் கோட்பாடுகள் மாணவர்களுக்கு அறிமுக மாகின்றன. இத்தகைய ஒரு பாடநெறி இலங்கையில் வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறையில் இல்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு பல்கலைக்கழகங்கள் தவிர வேறு பெண்கள் அமைப்புகளும் இத்தகைய கல்வியை ஊக்குவிக்கின்றன. 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் - லாகூரைச் சேர்ந்த பெண்கள் கல்வி நிறுவனமும் இலங்கை யில் உள்ள பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பும் சேர்ந்து பெண்கள் கற்கைகளில் 3 மாத சான்றிதழ் படிப்பு நெறியொன்றை நடத்தின. இதில் பாக்கிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நேபால் நாடுகளைச் சேர்ந்தோருடன் இலங்கைப் பெண்களும் கற்றனர். இலங்கையிலிருந்து 6 தமிழ்ப் பெண்கள்

Page 16
இப்பாடநெறியைப் பின்பற்றினர் என்பது முக்கியமான செய்தி. பிலிருந்து இருவர், யாழ்ப்பாணத்திலிருந்து இருவர், கொழும்பைச் சேர்ந்தவர்கள் இருவர். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தோர் விரிவுரைகள் ஆற்றினர். மிகமுக்கியமான வரலாற்றா சிரியரான உமா சக்கரவர்த்தி பொருளி
மட்டக்களப்
யளாளர் நிகத்சைத்கான் உட்பட இலங்கையைச் சேர்ந்த குமாரி ஜயவர்த்தனா, சேபால கோதகொட, செல்வி திருச்சந்திரன், ரமணி
முத்தெட்டுகம, குமுதினிசாமுவல், சுனிலா அபயசேகர, மைத்திரி விக்கிரமசிங்க போன்றோருடன் நானும் கற்பித்தேன். இக் கற்கைநெறியும் ஆங்கிலத்திலேயே நடந்தது.
செல்வி திருச்சந்திரன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் மூலம் இதே போன்ற கல்வி நெறியை ஆரம்பிக்க முயற்சி செய்தார். சிங்கள மொழி மூலமான கற்கைநெறி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. தமிழ்மூலம் இக்கற்கை நெறியை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் அனுசரணையுடன்
விரைவில் அவர் அங்கு தொடங்க
வுள்ளதாக அறிகிறேன்.
பத்மா : இன்று இறுதியாக ஒரு விடயம். பெண்கள் அமைப்புகள் தற்போது தமிழ் முஸ்லிம் பெண்களிடையே அதிகரித் துள்ளன. பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள்/ சவால்கள் ஆகியவற்றைச் சந்திப்பதற்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கும். இவற்றின் செயற்பாடுகள் போதுமானதா?
சித்ரா பெண்கள் அமைப்புகள் மாத்திரமல்ல; வேறு அரசசார்பற்ற நிறுவனங்களும் பெண்கள் தொடர்பான திட்டங்களை மேற்கொள்கின்றன.
இந்த அமைப்புகளையும் நிறுவனங் களையும் நான் இரண்டு பிரிவாக நோக்குகிறேன். ஒருவகை சிறிய அமைப்புகள், சிறிய அளவிலான நிதியுடன் அல்லது வெறும் தன்னார்வ நிறுவனங் களாக இயங்குபவை. இவற்றினுடைய நிகழ்ச்சிகள் Intervention தன்மை - குறுக்கீட்டுத் தன்மை கொண்டிருக்கும். சமத்துவத்திற்கான வன்முறையை ஒழிப்பதற்கான கோரிக்கை
கோரிக்கை,
களை இவை முன் வைக்கும். பிரசாரங் களைச் செய்யும். பெண்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு வேலை GeFijuh. g6 fiflói (15 Commitment - ஈடுபாடு இருக்கும். நிறுவனங்கள், பெண்கள் செய்யும்
பெண்கள்
வேலைகளில் இந்தத் தன்மை நிறையவே இருக்கும். ஏனெனில் பெண்களுக்கு இன்னொரு பெண்ணின் பிரச்சனை என்பது தன்னுடைய பிரச்சனையாகவும் gcció(gth. Personal is Political 6T66Tug அதுதான். இன்னொரு வகை; திட்டம் 6T66TD 960g)5(p60p Project approach - குறித்த காலத்தில் ஒதுக்கப் பட்ட நிதி செலவழிக்கப்பட்டு திட்டம் முடிவடை கின்றதா என்பதில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தும் நடைமுறைகள்.
இத்தகைய கவனம் செலுத்தப் படும்போது குறுக்கீடு செய்வது பற்றியோ, சாதகமான உண்மையான மாற்றங்கள் பற்றியோ அதிக அக்கறை இராது.

இத்தகைய அணுகுமுறையைத் தெரிந்தோ தெரியாமலோ சார்வது மிகவும் அபாயகரமானதாகும். ஏனெனில் இதில் தொடர்நடவடிக்கை, ஏனைய திட்டங் களுடன் இணைத்துப் பார்த்தல், நிகழ்ச் சிகளைச் செய்தல் என்பவை இல்லாமல் போய்விடும்.
பெண்கள் அமைப்புகள் இந்தச் சரிவில் கால்வைத்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். கூடியவரை ஏனைய நிறுவனங் களுடனும், அரசாங்கத்திடம் தமது கோரிக்கைகளை வற்புறுத்த வேண்டும். இவ்வகையில் தொடர்ந்த Lobbying, Negotiation மிக முக்கியமானவை.
பெண்கள் கோரிக்கைகளை வென்
றெடுப்பதற்கோ பிரச்சனைகளைக் கையாள்வதற்கோ பெண்கள் அமைப்பு களின் செயற்பாடுகள் மாத்திரம் போதாது. அவை மாத்திரம் இவற்றுக்குப் பாத்திர வாளிகள் அல்ல; சமூகத்தின் சகல மட்டத்தைச் சேர்ந்த பொறுப்புவாய்ந்த தனிநபர்களும், நிறுவனங்களும், அரசியல்வாதிகளும், அரசாங்கமும், ஊடகங்களும் இந்தப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு ஒரு பெண் பலாத்காரப்படுத்தப்பட்டால் “இந்தப் பெண்கள் அமைப்புகள் என்ன செய்கின்றன?” கேள்வி எழுப்புவதுபோல் கொச்சைத்தனமானது
எனக்
வேறொன்றும் இல்லை.
கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சினால் பால்நிலைச் சமத்துவ 65st'L6i56ir- Gender Equity Guide 1ines எல்லா அரசாங்க நிறுவனங் களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவை
667 6øJúlio - orië 2004
பற்றித் திணைக்களங்கள், நிறுவனங்கள் எத்தகைய நடவடிக் கைகளை எடுத் துள்ளன? இது எப்படி செயல்படுத்தப்படப் போகின்றது? இவ்விடயங்கள் பற்றிய கண்காணிப்பு தேவையானது.
எனவே, பெண்களது பிரச்சனை என்பது அவர்களது மாத்திரம் அல்ல; அது சமூகத்தின் பொதுப்பிரச்சனை, சமூக நீதியை நாடுபவர்களின் அக்கறை க்கும் செயல்வாதத்திற்கும் உரிய பிரச்சனை அனைவரதும் பங்களிப்பு வேண்டும்.
பத்மா : சென்ற வருட இறுதியில் ஐக்கிய நாடுகளின் அகதி களுக்கான தூதுவர் அலுவல கத்தினால் (U.N.H.C.R.) உங்களுக்கு ஒரு விருது தரப் பட்டதாக அறிகிறேன். அது பற்றி.? சித்ரா 2003 டிசம்பர் மாதம் இந்த விருது அறிவிக்கப்பட்டது. பெண்களின் சமத்துவத்தை ஊக்குவித்ததற்கான விருது அது. எனக்கு மாத்திரமல்ல இலங்கையில் 3 பெண்களுக்குக் கிடைத்தது. ஆனால் வெவ்வேறான விடயங்களுக்காக UNHCR இன் திருகோணமலை அலுவலகத்தில் பணிபுரியும் செல்வி அருணி அருள் சுப்பிரமணியம், அனுராதபுரத்தைச் சேர்ந்த அங்கவீனம் உற்ற பெண்கள் அமைப்பின் தலைவியான கமலா ஆகியோர் மற்ற இருவர்.
இத்தகைய பாராட்டுதல்கள் முக்கியம் என நான் நினைக்கிறேன். அவை வேலை செய்வதற்கு உற்சாகம் தருபவை. வேலையை அங்கீகரிப்பவை.

Page 17
UIரதியின் பாடல்களின் சிறப்பம்சம் அவனது பாடல்களில் காணப்பட்ட உள்ளடக்கவீச்சும், அவனது மொழி நடைக்கவர்ச்சியுமாகும். எல்லோரும் உதாரணம் காட்டுகின்றபடி “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பும் மெட்டு ஆகியவற்றினையுடைய பாடல்களை இயற்றிப் பாடினார். அவரது பாடல்களின் பொருள் பரந்துபட்டது. சமகாலக் கட்டுகளைத் தகர்த்தெறிந்து புதிய பொருள்களை அவர் பாடினார். அவை அவரின் வாழ்வில் அவர் நேர் கொண்டவையாக இருந்தன.
பாரதிகாலத்தில் மத்தியதரவர்க்கம் எழுச்சி பெறத் தொடங்கிற்று. இந்திய சுதந்திர தாகம் மேலெழத் தொடங்கியது. ஆங்கிலேய ஆட்சியினால் இந்தியர் வாழ்வில் பெற்ற தாழ்ச்சிகள் அவரது கவிதைகளுக்குப் பொருளாயின. அதே நேரம் தன்கால இந்திய சமூகத்திற்
2 s Uாரதி திெர்Uார்த்த 幽 Uென் விடுதலை
சிந்தனையிலிருந்து விடுதலை” எல்லாரையும் விடுதலை பெறவைப்பன வாக அமைந்தன. பாரதி விரும்பிய நாட்டு விடுதலை பின்வரும் “விடுதலை’களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1 பெண் விடுதலை 2. சாதிய அடக்குமுறைகளிலிருந்து
விடுதலை
3. ஆங்கில மொழி மோகத்திலிருந்து
விடுதலை, 4. சமயப் பிரிவினையிலிருந்து
விடுதலை. 5. பொருளாதார விடுதலை / இவை
அமைந்த
6. அரசியல் விடுதலை / நாட்டு
விடுதலை
எனவே முழுமையாக நோக்கின் எல்லா வகையான பாரம்பரிய மரபுவழிச் சிந்தனைகளிலிருந்தும் விடுபட்டு “புதியதோர் உலகம்” செய்ய பாரதி விரும்பியமையை இது காட்டும்,
பாரதி என்ற ஒரு புலவனின்
- கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் - கவிதை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏன் நிற்கிறது; காணபபடட குறைகள அவனது புகழப்படுகிறது; மீண்டும் மீண்டும்
கவனத்திற்குள்ளாயின. அந்தவகையில் எல்லாவகையிலும் விடுதலையை பாரதி வேண்டிநின்றான். அதற்கு ஆரம்பம் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும், என அவர் சிந்தித்தார். பாரதியின் விடுதலை
எனவேதான் “மரபுவழிச்
30
பேசப்படுகிறது என்று பார்க்கும்போது அதன் தேவை இன்றும் உணரப்படுகிறது என்பதுதான் அதற்கு விடையாகும்.
பாரதியின் “விடுதலை’களுள் ஒன்றான பெண் விடுதலை அவற்றுள் முக்கியமானது, இன்று பலர்
ஞானம் - மார்ச் 2004
 
 

1 பெண்களுக்கு விடுதலை
இல்லையா?
2. பெண்கள் வேலை பார்க்க
வில்லையா?
3. அரசியலில் பெண்கள் நுழைய
வில்லையா?
என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால்
இவையெல்லாம் குருட்டுத்தனமான
கேள்விகள், மேற்குறிப்பிட்ட சுட்டிகள் (Indicators) மட்டும் பெண்கள் முன்னேற்ற மடைந்து விட்டார்கள் என்பதைக்
காட்டாது,
1 பெண்களுக்கு எவ்வாறான
விடுதலை கிடைத்தது.
2. பெண்கள் வேலை பார்ப்பது
யாருக்காக, அவர்களது பொருளாதாரம் யாரைச் சென்றடைகிறது. 3. அரசியலில் நுழைந்த பெண்கள் யார்? பெண்கள் என்ற காரணத் திற்காக மட்டும் அவர்கள் அரசியலில் செல்வாக்குப் பெற முடிந்ததா? என்ற கேள்விகளையும் கேட்க வேண்டும். அத்துடன் பெண்களின் உடை களையும் அலங்காரங்களையும் சினிமா மோகத்தையும் அளவு கோலாகக் கொண்டு இப்போது உங்களுக்கு வேண்டியதென்ன, என வக்கிரமாகச் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.
பெண்களுக்கும் மனம் இருக்கிறது, சிந்திக்க விடுங்கள். உலக நியாயம் தெரிந்திருக்கிறது செயலாற்ற விடுங்கள். பொதுப் பிரச்சினைகளில் ஈடுபாடு உண்டு. அதில் வேலை செய்ய விடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்,
ஞானம் - மார்ச் 2004
இன்று வேலை செய்யும் பெண்களின் வேலைகளை அவ தானித்தால், ஆசிரியர், தாதிகள்,
தட்டெழுத்தாளர் எழுதுவினைஞர் ஆகிய பதவிகளைத் தான் எடுக்கிறார்கள். இந்தத் தொழில்கள் பெண்களின் பொறுமை சார்ந்தவை.
ஆசிரியத் தொழிலில் குழந்தைகளைப் பராமரித்தலுடன் சம்பந்தப்பட்டது. தாதியத் தொழிலும் - மனிதர்களைப் சம்பந்தப்பட்டது.
நிர்வாகிகளாக இருக்கும் பெண்கள் மிகவும் குறைவே. ஏற்கனவே குறிப்பிட்ட படி அலங்காரப் பதுமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களைப் பற்றியும்
பராமரிப்பது
கூறத்தான் வேண்டும்.
சிந்தனைகளைக் “குடும்பத்துள்” அடக்கிவிட்டு அல்லது எதிர்காலக் கணவனுக்குள் கற்பனை செய்து கொண்டு வெறும் பொம்மைகளாக வளர்த்த இந்தச் சமூகத்தில் சிந்தனை மரபில் இருந்து அவர்களை விடுபட வைப்பது இலகுவானதா? என்ன?
மறுபக்கத்தில் 5 மாதப் பெண் குழந்தை முதல் 80 வயதுக் கிழவி வரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். இது வீடு, தெரு, அலுவலகம், வழிபாட்டிடம், பொது இடங்கள் பொலிஸ் நிலையங்கள் என்ற வேறுபாடின்றித் தொடர்கின்றன.
சினிமாவும் சின்னத்திரைகளும் பெண்களை ஒரு பக்கத்தில் கண்ணிரிழுப் பிகளாகவும் பஞ்சுப்பாதங்களை உடையவர்களாகவும், காட்டுகின்ற அதேவேளை, மறுபக்கத்தில் தன்
31

Page 18
பெண்ணினது/ பேரப்பிள்ளையினது வாழ்வையே அழிக்கும் “வில்லி”களாகவும் காட் டுகின்றன.
அல்லது அரை குறை ஆடைகளுடன் வியாபார விளம்பரத்தில் அவர்களை ஈடுபடுத்துகின்றன. (உ-ம் ஒபோடு
பிள்ளையினது /
சக்தி).
இவைதான் இன்றையப் பெண்களின்
நிலைமைகள்; அதாவது பாரதி
எதிர்பார்த்த கல்வியை இவர்கள்
பெற்றிருக்கின்றனர். ஆனால் மாதர் "தம்மை” இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தவில்லை. எனவேதான் அவரது
கவிதைகள் தொடர்ந்து முக்கியம்
பெறுகின்றன.
“நானும் அச்சமும் பெண்பாற்கு உரிய” என்ற பாரம்பரியக் கருத்தியலின் நேரெதிர்க்கருத்தாக அதனை "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என மாற்றியமைக்கும் போதும் பெண்கள் பற்றிய பாரம்பரியக் காழ்ப்புணர்வு வெளிப்படுத்தப்படுகிறது.
பாரதியின் கருத்துக்கு வித்திட்டவர் நிவேதிதா, கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு மனைவியை அழைத்துச் செல்லவில்லை. அதனைக் கண்ட நிவேதிதா அம்மை கோபம் கொண்டு பெண்களுக்குச் சம உரிமையும் தகுந்த கல்வியும் கொடுக்கா விட்டால் சமூகம் எப்படிச் சீர்திருத்தம் பெறும். மனைவியை உன் வலதுகை என
அன்னை
மதித்து வா என உபதேசம் செய்தார்.
இதன் பின்னர் தமிழ் நாட்டுச் சமூகத்துக்கு பிறநாட்டுப் பெண்களின்
எடுத்துக் காட்டி
நிலைமைகளை
32
கருத்தியலின்
பெண்விடுதலைக்
பாரதி
தர்மயுத்தம்” என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகளை எழுதினார். 1 துருக்கி நாட்டில் பெண்களுக் குள்ளே நடந்த விடுதலைக் கிளர்ச்சி. 2. தென் ஆபிரிக்காவில் டிபே மாரிஸ் பார்க்பட்டணத்தில் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெண்கள் விடுதலைச் சங்கம். 3. பிரித்தானிய ஸ்தீரி சாம்ராஜ்யம். போன்றன அவை. அத்துடன் சீனநாட்டு சியூசின் என்ற பெண்ணைப் புகழ்ந்து அவரின் பெண்ணுரிமை இயக்கப்பாடலைத் தமிழாக்கினார். இந்த “தர்மயுத்தத்தில்” தமிழ்நாட்டில் பெண் விடுதலைக் கட்சி தொடங்கப்பட்டு அதன் தலைவியாக மங்களாம்பிகை அந்தக் கட்சியின் தலைவியானார், அவருக்குத் துணையாக நின்றவர் அன்னிபெசன்ற் அம்மையார். பாரதி அன்னை நிவேதிதாவைப் பாடும் போது,
அருளுக்கு நிவேதனமாய்
அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயிர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு பொருளுக்குவழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய்ப் புன்மைத்தாதச் சுருளுக்கு நெருப்பாகிவிளங்கியதாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன். என்று பாடுகிறார். பெண்கள் பற்றிப் பாடும்போது
புதுமைப் பெண் பெண்மை வாழ்க பெண்கள் விடுதலைக்கும்மி பெண்கள் விடுதலை, என நேரடியாகவே பாடிய அதே வேளை ஏனைய பாடல்களிலும் பெண்விடுதலை பற்றிப் பேசியுள்ளார்.
ஞானம் - மார்ச் 2004

புதுமைப் பெண் என்ற பாடலில் புதுமைப் பெண்ணை நோக்கி மாதர்க் குண்டு சுதந்திரம்' என்று நின்வண் மலர்த்திருவாயின் மொழிந்த சொல் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார். பெண்ணின் மேன்மை பின்வரும் விடயங்களில் அடங்கி யுள்ளமையைக் காட்டுகிறார். 1. அறிவு கொண்ட மனித உயிர்களை
அடிமையாக்கக் கூடாது. 2. அடிமைச்சுருள் தீயிலிட்டுப்
பொசுக்கிட வேண்டும். 3. ஆணும் பெண்ணும் நிகரென்றால் தான் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும். 4. ஞான நல்லறம் வீரசுதந்திரம் -
பெண்ணின் குணங்கள்.
5. (பெண்களுக்கு) கொடுமைசெய்து அறிவையழித்து அந்தஸ்தைக் காக்க விரும்புதல் தீமை.
6. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு ஆகியவை கொண்ட வர்கள் செம்மைமாதர். 7. அறியாமையில் அவலமெய்தி வாழ்தலை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம். 8. உலகவாழ்க்கையின் நுட்பங்கள் தேரல், பற்பல நூல்கள் கற்றல், நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமைகள் சேர்த்தல் பாரதம் ஓங்க உழைத்தல்- பெண்ணின் கடன்கள். 9. சாஸ்திரங்கள் பலகற்பர் மூத்த பொய்மைகள் அழிப்பர், மூடக் கட்டுகள் தகர்ப்பர் அவர்களே புதுமைப் பெண்கள் என்கிறார்.
ஞானம் - மார்ச் 2004
அவ்வாறு கூறியவர் “பெண்கள்
விடுதலைக் கும்மி”யில் அவற்றை யெல்லாம் அடைந்து விட்டதாகப் பாடுகிறார்.
1. நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின. 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார். 3. வீட்டுக்குள்ளே
பூட்டிவைப்போமென்ற மனிதர் தலை கவிழ்ந்தார். 4. மாட்டை அடித்து
தொழுவினில் மாட்டும் வழக்கத்தை பெண்களிடம் கொண்டு வந்து காட்டவந்தார் அதனை வெட்டி விட்டோம். என்பவர் எதிர்காலம் பற்றிக் கூறும் பெண்ணைக் காட்டுகிறார். 1. கற்புநிலை என்று சொல்லவந்தார் இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம். 2. வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
பெண்ணைப் விந்தை
வசக்கித்
3. பட்டங்கள் ஆளவும் சட்டங்கள்
செய்யவும் வந்தோம்.
4. அறிவிலே ஆணுக்குப் பெண்
இளைப்பில்லை.
5. வேதம் படைக்கவும் நீதிகள்
செய்யவும் வந்தோம்.
6. காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கை கொடுத்து மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாண்புறச் செய்வோம்.
என்கிறார், மேலும்,
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்

Page 19
தீயபண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் குறைவிலாது முழுநிகர் நம்மை
கொள்வராண்களெனில் அவரொடும் சிறுமை தீர நந்தாய்த் திருநாட்டைத்
திரும்பவெல்வதில் சேர்ந்திங்
குழைப்போம். என்று ஒரு நிபந்தனை கூட விதிக்கப் படுகிறது.
கவிதைகள் தவிர பெண் விடுதலை பற்றி அதிகமான கட்டுரைகளும் அவரால் எழுதப்பட்டுள்ளன. அவை பாரதியார் கட்டுரைகள் என்ற நூலில் மாதர்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. பெண் என்ற கட்டுரையில் வரும் உரையாடலில் வாத்தியார் என்ற பாத்திரம் பின்வரும் விடயங்களைப் பேசுகிறது. 1. ருதுவான பிறகு பெண்ணுடைய இஷ்டப்படி கலியாணம் செய்ய வேண்டும் 2. புருஷன் கொடுமையைச் சகிக்க முடியாமலிருந்தால் ஸ்தீரி சட்டப்படி அவனை தியாஜ்யம் செய்துவிட சட்டமும் இடம் கொடுக்க வேண்டும். ஊர்க்காரரும் தூவுணை செய்யக் கூடாது. 3. கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்தை அவளு டையதாகவே பாவிக்க வேண்டும். 4. பெண் அவளிஷ்டப்படி சஞ்சரிக்கலாம். 5. தனி இடங்களில் ஸ்தீரிகளைக் கண்டால் மரியாதை செய்து வணங்க வேண்டும். 6. அப்படி எந்தப் புருஷர் மரியாதை செய்து வணங்கவில்லையோ அவனை கிருஹஸ்தர்கள் நெருங்கக் கூடாது.
" ᎹᎸ Ꭺ
7. ஸ்தீரிகள் சுயேச்சையாய்ப் பேசலாம்.
சுயேச்சையாய்ச் சஞ்சரிக்கலாம்
என்று வைக்க வேண்டும். 8. அது சாத்தியமாகும்
புருஷரைத் தண்டிக்க வேண்டும்.
என,
660)
1 பெண்ணின் திருமண சுதந்திரம் 2. பெண்ணின் விவாகரத்து உரிமை 3. பெண்ணின் சொத்துரிமை 4. நடமாடும் உரிமை 5. பெண்களை மதிக்காதவர்கள் (அதாவது வன்முறைகளுக்கு உள்ளாக் குபவர்கள்) தண்டிக்கப்பட வேண்டும். என்று இன்று நாம் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கும் விடயங்களை அவர் அன்றே முன்வைக்கிறார்.
தமிழ் நாட்டின் பெண்விடுதலை பற்றிப் பேசும் போது தமிழ் நாட்டிற் தோற்றுவிக்கப்பட்ட “பெண் விடுதலைக் கட்சி” பற்றிப் (பக் 106) பேசுகிறார்.
“இவர்களுடைய கட்சி என்ன வென்றால் ஸ்தீரிகளுக்கு ஜீவன் உண்டு, மனம் உண்டு, புத்தி உண்டு, ஐந்து புலன்கள் உண்டு, அவர்கள் செத்தயந்திரங்கள் அல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர், சாதாரணமாக ஆண்மாதிரியாகவே தான். புற உறுப்புக்களில் மாறுதல், ஆத்மா ஒரேமாதிரி” “இதனை மறந்து அவர்களைச் செக்குமாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணிகளாகக் கருதுவோர் மற்றொரு திறத்தார், இரண்டும் பிழை”
ஞானம் - மார்ச் 2004

என்று நீண்ட கட்டுரையை எழுதி இறுதியில் முடிக்கும் போது,
“பரிபூரண சமத்துவம் இல்லாத விடத்து ஆண்மக்களுடன் வாழ மாட்டோம்” என பிரதிக்ஞை செய்து எந்தக் கொடுமைகள் வந்தாலும் அதற்காக சாகும்வரை போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
அதேபோல “பதிவிரதை” என்ற
கட்டுரையில் ஆண்கள் பிறமகளிரை விரும்பி அடைய முனையும் பட்சத்தில் பெண்கள் பதிவிரதைகளாக இருக்க முடியாது, பெண்கள் பதிவிரதைகளாக வேண்டுமெனில் ஆண்களும் கற்புடையவராக இருக்க வேண்டும்” கருத்தையும், ஆண் ஒரு பெண்ணின் அன்பைப் பலாத்காரமாகப் பெற முடியாது என்ற கருத்தையும் முன்வைக்கிறார். பெண் விடுதலை என்ற கட்டுரையில் பெண்களுக்கு விடுதலை கொடுப்பதற்கான ஆரம்பப் படிகளாக முன்னே குறிப்பிட்ட வாத்தியார் உரையாடலில் வந்தவை உள்ளிட்ட 9 படிகளை முன்வைக்கிறார்.
பெண்விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கத யாத, தமிழ்நாட்டு மாதருக்கு ஆகிய கட்டுரைகளில் முன்னே கூறப்பட்ட கருத்துக்களை விரித்து எழுதுகிறார்.
“தமிழ்நாட்டுப் பெண்கள் மேல் நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள வேண்டும். ஐரோப்பிய நாகரிகத்தால் பெறக்கூடிய நல்ல
என்ற
மாற்றங்களை ஏற்க வேண்டும் என்கிறார். ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்களின் கருத்துக்
ஞானம் - மார்ச் 2004
களைப் புகழ்கிறார். கியூசின் என்ற சீனப் பெண்மணியின் புகழ் பெற்ற சரித்திரத்தை எழுதுகிறார். “முகமதிய ஸ்தீரிகளின் நிலைமை” பற்றி எழுதுகிறார் இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை பற்றிப் பேசும் போது விதவைகளின் எண்ணிக்கையை வயது அடிப்படையில் நவஜீவன் பத்திரிகையில் வந்தபடி பட்டியலிட்டு, அதை விபரிக்கும் போது அதனைத் தீர்க்க ஒரே வழிதான் இருக்கிறது என்று அந்தப் பிரேரணையை முன்வைக்கிறார். விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரை புணர்விவாகம் செய்து கொள்ளலாம்
என்பதே அது. இதில் மகாத்மா காந்தியுடன் முரண்படுவதையும் காணலாம்.
இதில் சோகம் என்னவென்றால் 100 ஆண்டுகள் சென்றபின்னும் பாரதி காலத்து நிலைமையே தொடர்வதுதான். எனவேதான் அவன் எதிர்பார்த்த விடுதலை எய்தப்பட இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ என எண்ண வேண்டியுள்ளது.
அவர் எதிர்பார்த்த விடுதலையும் உண்மையான பெண் விடுதலையை விரும்பும் பெண்களும் விரும்பும் விடுதலையும் கிடைக்க வேண்டு மெனில் முதலில் பெண்கள் “தம்மை’ உணர்ந்து கொள்ள வேண்டும் அல்லது அந்த விடுதலையைப் பெறுவது அசாத்தியமே.

Page 20
ཞུ་
ரூபராணி - لکسمبر
ಕ್ಲಿ னடாப்பா இது பெரிய தலையிடி எனக்கு
N 67.607(56275/7/25 (2.3606
\ள்ப்புபார்த்தாலும் வேட்டியும் சட்டையும் தேடுறியள் R சொன்னஉடன் நான் எடுத்துத் தரவேணும் `சேர்க்காக உடுத்திக்கொண்டு போறதுக்கு
கன்னங்குடாவிலே கவியரங்கம் நாளைக்கு
தந்தறுந்த செருப்பையும் தச்சிவரத் தெரியாதா
\ஜிபொன்னாடையில் சட்டைதை என்று உங்க
S 雨読 ாண்டாட்டி சொன்னாளா சொல்லுங்க \\ என்ன மடவேலை செய்துவிட்டுக் கத்துறிங்க
s ரவுக்கை தைக்க நல்லமென நெனச்சன் சின்னாச்சி கலியாணம் வாரமாதம் வருகுதென்று சே உங்களோடை வாழ்ததிலை என்ன கண்டன்
鲨Y
v,
s நான் ஒருமடச்சி குமராய் இருந்தப்ப மூளையில்ல \நாகமணிப் போடியக் கட்டிக்கக் கேட்டாங்க \?: நாட்டில் பேர்பெற்ற கவிஞன் நீங்க என்று *மார்தட்டிச் சொன்ன பலபேரின் கதையில மயங்கி ஏன்என்று தெரியாஒம் என்று தலையாட்டிவிட்டன்
என்தலைவிதி ஆரைநொந்து என்ன பலன்
RA இன்னமும் நானே வேட்டி சட்டை துவைக்கிறேன்
N இதுவரைக்கும் என்ர துணிமணிகள் கழுவினது உண்டா
சொன்னபடி சுடுதண்ணிப் போத்தலால் மினுக்கிறன் சோறுகறி ஆக்கிறன் மாடாய் உழைக்கிறனர் அன்பாக ஒருவார்த்தை சொல்லத்தெரியல்ல ஆம்பளைங்க குணமே இப்படித்தானாக்கும்
த்தா தெரியும்.
&జోx
ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഖരശല്ക്കു് ശില്ക്ക്
- கம்பவாரிதி இ. ஜெயராஜ்
உள்ளம் சற்றுச் சோர்ந்திருந்தது. தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்தேன். மனம் ஒருநிலைப்படாததால், எண்ணங்கள் எங்கோ இருக்க, கண்கள் மட்டும் தொலைக்காட்சியில், ஒருப்படாத மனத்தின் இயல்பால், விரல்கள் றிமோட் மூலம் 'சனல்களை மாற்றியபடி. அவுஸ்திரேலிய, இந்தியக் கிரிக்கெட் மச். டென்டுல்கர் விளாசிய பந்து பெளன்றியைத் தாண்ட, ஹோ' என ஆயிரமாய்த் தலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. ‘பதினொரு முட்டாள்கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு.” 'பேனார்ட்ஷோ கருத்து சரியாய்ப்பட்டது. சலிப்போடு விரல்கள் தொலைக்காட்சியை அணைக்கின்றன. மனச்சோர்வு விரிகிறது. மனச்சோர்வின் காரணம் சொல்ல மறந்துவிட்டேன். சமூகம்பற்றிய அக்கறையோடு, அண்மையில், ஒரு சிறுசஞ்சிகையில் நான் எழுதியிருந்த கட்டுரை, சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. தரமற்ற வார்த்தைகளால், தகுதியற்ற ஒருவர் எழுதியிருந்த மறுப்பை, பொறுப்பற்ற முறையில், அதே சஞ்சிகையின் ஆசிரியர் வெளியிட்டிருந்தார். தனி மனித தாக்குதல் முயற்சி. நடுவுநிலைமையாய் நடித்து மற்றொருபத்திரிகை அதை மறுபிரசுரம் செய்திருந்தது. வன்னிப்பத்திரிகையில் வழிமொழிந்து மற்றொரு கட்டுரை. இப்படியாய், என் தலை இஸ்ரப்படி உருட்டப்பட்டது. என் எழுத்து மருந்து வேலைசெய்ததில் எனக்கு ஏகப்பட்ட சந்தோசம். இருபதாண்டுகளாக இது எனக்குப் பழக்கப்பட்டதுதான். சோர்வுக்குக் காரணம் அதுவல்ல. எழுதியவர்பற்றி எனக்குக் கவலையில்லை. எழுதாதவர்கள்பற்றியே அதிகம் கவலைப்பட்டேன். அறிவுலகம், அறிவுலகம் என அதிகம் பிதற்றிக்கொள்ளும் பலரும், ஒரு சமூகப்பிரச்சினை பற்றிய என் கருத்தை, மறுக்கவோ, ஆதரிக்கவோ செய்யாமல் மெளனம் காத்தனர்.
எதானம் - மார்ச் 2004

Page 21
'அட்றஸ்' இல்லாத ஒருவரின் வெற்று ஆர்ப்பரிப்பை, தட்டிக்கேட்கும் வலிமையின்றி,
தனிப்பட்ட முறையில்,
தொலைபேசியில் 'உச்சுக் கொட்டினர். வெறும் பெட்டைப் புலம்பல். அறிவாளிகளாய்த் தம்மைத்தாம் பிரகடனப்படுத்தும் பெரியமனிதரின், அந்த 'நபுஞ்சக தன்மை எரிச்சலூட்டியது. பாஞ்சாலி துகில் உரியப்படுகையில், பார்த்திருந்த துரோணரும், கிருபரும், பீஷ்மரும் நினைவில் வந்தனர். பாண்டவர்க்குப் புத்தி சொல்லும் பலம்மட்டுமே அவர்களிடம். துரியோதனனிடம் பேசினால் தூக்கியெறியப்படுவார்கள். தம் தனி கெளரவம்நோக்கி, தர்மம் துகிலுரியப்பட, தலைதாழ்த்தி அமர்ந்திருந்தனராம் அவர்கள். அவர்களின் இயலாமைச்சகிப்புத்தன்மைக்கு, பொறுமை என்ற புகழாரம் வேறு. கொதித்தெழுந்த இளைய விகர்ணனை, மடக்கமட்டுமே அவர்தம் மதிக்கு வலிமை. பாரதம் படிக்கும்பொழுதே பதறியிருக்கின்றேன். பின்னால், அம்புப்படுக்கையில் அழுந்திய அவர்கள் நிலைக்கு, பாவத்தைப் பார்த்திருந்த குற்றமே காரணமாய் எனக்குப்படும். இன்று பாஞ்சாலியாய் நான். துரியோதனன் உத்தரவால், துர்ச்சாதனன் ஆர்ப்பரித்துத் துகிலுரிந்தான். களம் அமைத்துக் கொடுத்து, பின், அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான், கண்ணில்லாத் திருதராட்டினன்.
விளையாட்டுப் பிள்ளையின் விருப்புக்காக, தான் அமைத்துக்கொடுத்த களம், தன் தேசத்தையே அழித்துவிடுமோ எனும், அச்சம் அவன் மனதில். களம் அமைத்துக்கொடுத்து, பின், துரியோதனனைக் கண்டித்த அவன் வார்த்தைகளில், சத்தியத்தின் வலிமை இல்லை.
பாண்டவரைப் பார்க்கும் திறனின்றி, குருடே தகுதியாய்த்தோன்ற, குனிந்திருந்தது அவன் தலை. வஞ்சகச் சகுனி வழிமொழிந்து ஆர்ப்பரித்தான். பிழையென்று தெரிந்தும் பெற்ற உதவிக்காய், கர்ணனும் ஏதேதோ கதையளந்தான். ஆன்றோர் அமைதி காத்தனர்.
.az Tarrain - nrri i ? shf)4

கண்ணன்மேற்கொண்ட நம்பிக்கையால், கழராது துகிலெனும் உறுதியுடன் கைதுக்கி நின்றாள் பாஞ்சாலி. மீண்டும் பாரதம். சலிப்பின் காரணம் இது. புத்தியின் உத்தரவின்றியே, கை தொலைக்காட்சியை மீண்டும் போடுகின்றது. பழையபடி அதே ஆயிரமான தலைகளின் ஆர்ப்பரிப்பு. இப்பொழுது டென்டுல்கர் ’அவுட்டாகியிருந்தார். வெற்றிக்கும் ஆர்ப்பரிப்பு. தோல்விக்கும் ஆர்ப்பரிப்பு. உலகின் இயல்பு தெரியாமல் புத்தி குழம்பிற்று.
责 寅 宽 ★
“ஹலோ! என்ன யோசனையாய் இருக்கிறியள்? ஒ டென்டுல்கர் "அவுட்டேங்கோ ?” ஒவ்வொரு எழுத்திலும் உற்சாகம் பொங்க, வார்த்தைகளை வாரியிறைத்து உள்நுழைகிறார் நண்பர் யோகநாதன். அது அவரது இயல்பு. “இவ்வளவு மகிழ்ச்சியான மனிதன், எப்படித்தான் கஸ்ரம்ஸ் அதிகாரியாக இருக்கின்றாரோ? மற்றவர்களை மிரட்டவும் இவரால் முடியுமா? எப்பொழுதும் நினைப்பேன். சோர்ந்திருந்த மனம் அவர் வருகையால் சற்று மலர்ந்தது. ‘என்ன வழக்கமான சிரிப்பைக் காணேல? ஏதாவது பிரச்சினையே? அவர் வார்த்தைகளில் இருந்த கரிசனை ஈர்க்க, முன் உங்களுக்குச்சொன்ன பிரச்சினை அத்தனையையும், கொட்டிமுடித்தேன்.
sDT. . . . . . . . . . DT . . . . . . . . . 90 -....... sDT......... நாக்கைக் கடித்தபடி அவரது வழமையான சிரிப்பு. எல்லோருக்கும் வாய்மட்டுந்தான் சிரிக்கும். பாவி மனிசனுக்குக் கண்ணும், மூக்கும் சேர்ந்து சிரித்தன. அது அவரது தனி முத்திரை. "சீரியஸான’ என் கருத்தைக் கேட்டுச்சிரிக்கும் அந்த மனிதரில், எரிச்சலுண்டானது.
முகத்தில் சலிப்புக் காட்டினேன். ‘என்னங்கோ, இதுக்கெல்லாம் யோசிக்கிறியள். சின்னப்பிரச்சினை விடுங்கோ.
ஞானம் - மார்ச் 2004 2Ο,

Page 22
*காய்ச்ச மரந்தான் கல்லெறிபடும் யோசியாதேங்கோ. பலரும் சொல்லும் பழமொழியைத் தன் கண்டுபிடிப்பாய் எடுத்துவிட்டார். நான் சொல்லவந்தது அவருக்குப் புரியவில்லையோ எனப்பட்டது. "ஐயா! எறிபட்டதில எனக்குத் துளியும் கவலையில்லை. எவனும் எவனுக்கும் எறியலாம், கேட்க ஒருவரும் இல்லை என்ற, சமூகப் பொறுப்பின்மைதான் கோபமாய்க் கிடக்கு.
TT. . . . . . . . . . TDT . . . . . . . . . £5f DT • • • • • • • • • • DT. . . . . . . . . மீண்டும் அதே வில்லன் வீரப்பா சிரிப்பால் எரிச்சலூட்டினார். இவரோடு பேசிப் பிரியோசனம் இல்லை.
உள்ளம் உரைத்தது. “எப்பிடி உங்கட கஸ்ரம்ஸ் எல்லாம் பிரச்சினை இல்லாமல் போகுதோ?” கதையை மாற்றினேன். “என்னங்கோ நான் கதைக்கிறது பிடிக்கேல போல. கதையை மாத்திறியள்.” மனிதர் என் மனதின் நாடிபிடித்து மடக்கினார். “சிரிக்காம என்னால ஒன்டையும் கதைக்க முடியாதுங்கோ அதுக்காக "சீரியஸ் விளங்காதவன் என்று நினைக்கப்படாது. கொஞ்சம் பொறுமையா என்ட கதையக் கேளுங்கோ?” மனிதர் ஏதோ அறுக்கப்போகிறார் எனச் சற்று மனம் சலிக்கிறேன். ஆனாலும் முகம்மறுக்க முடியாத உறவு, கேட்க வைக்கிறது. எதைப்பற்றியும் கவலையில்லாமல் தொடர்ந்தார் அவர். “இப்ப உந்த ரி.வி.யில என்னங்கோ பார்த்தனிங்கள்?” “கிரிக்கெட் மச்’ போகுது.” "அதைப் பார்த்த பிறகுமோ யோசனை?” “எனக்குக் 'கிரிக்கெட் பிடியாது. வேலையில்லாத விசரங்களின்ட பொழுதுபோக்கு" - சலித்தேன். “என்னத்தான் விசரன் என்றியள் போல?” வார்த்தைகளால் முகத்தில் எற்றினார்.
அது அவர் பாணி. வார்த்தைகளின் அர்த்தம் அறியாது பேசிவிட்ட நாணம் தாக்கியது. "சீச்சி உங்களச் சொல்லேல, பொதுவா. த "நீங்கள் என்னச் சொன்னாத்தான் என்ன? ஒருவிதத்தில உலகத்தில இருக்கிற எல்லாரும் விசரங்கள்தான்” மனுசன் ஞானியாய்ப் பேசினார். மனத்துள் மதிப்புயர அவரை அண்ணாந்து பார்க்கிறேன். "நான் சொன்னத நீங்கள் விளங்கேல பாருங்கோ, உங்கள நான் ‘கிரிக்கெட்ட ரசிக்கச் சொல்லேல,
40 ஞானம் - மார்ச் 2004

"கிரிக்கெட்' விளையாட்டப் பார்த்தால், வாழ்க்கையை விளங்கிக் கொள்ளலாம்.
நீங்கள் புத்திசாலி. அதப்பார்த்து, உலகத்த விளங்குங்கோ எண்டுதான் சொன்னனான்."
MsOfT. . . . . . . . . . MIDT • . . . . . . . . sDT . . . . . . . . . . NADT. . . . . . . . . பேச்சின் இணைப்பாக ஏனென்று தெரியாத ஒரு சிரிப்பு. “என்னது, “கிரிக்கெட்டப் பார்த்து வாழ்க்கையை விளங்கலாமோ? அதெப்பிடி?” - இது நான்.
sDT. . . . . . . . . . 9MDIT - ............. 9lsDT .......... NADT. - - - ..... "அப்பிடிக் கேளுங்கோ?, அதக் கொஞ்சம் விளங்கப்படுத்தவே? உங்களுக்கு நேரம் இருக்கோ?” வெகுளித்தனமாய்ப் பேசினாலும் வார்த்தைகளில் நாகரீகம் காட்டினார். ஏதோ புதிதாய்ச் சொல்கிறார் என்ற அளவில், அவர் கருத்தைக்கேட்க மனம் ஆர்வப்பட்டது. நேரமும் இருந்ததால், சற்றுக் காதுகொடுத்தால் என்ன? எனப்பட்டது. விளையாட்டைப்பற்றி, விளையாட்டாய்ப் பேசும் மனிதரிடம், விளையாட்டாய்ப் பொழுதுபோக்க முடிவுசெய்தேன். "அது என்ன பாருங்கோ கிரிக்கெட்டில வாழ்க்கையைப் படிக்கிறது. கனபேர் வாழ்க்கையே விளையாட்டென்கிறாங்கள். நீங்கள் விளையாட்டை வாழ்க்கை என்கிறீங்கள். சரி. உங்கட கண்டுபிடிப்பையும் ஒருக்காக் கேப்பம் சொல்லுங்கோ? உத்தரவு கொடுத்தேன். அவரது குதூகலம் எனக்குள்ளும் தொற்றிக்கொள்ள, சற்று உற்சாகமாகியிருந்தேன்.
அவருக்கு ஆனந்தம்.
MsOfT. ......... DT . . . . . . . . . NADAT . . . . . . . . . . MOT . . . . . . . . . மீண்டும் தேவையில்லாத, ஆனால், கொஞ்சம் ரசிக்கவைக்கும் சிரிப்பு. அடிக்கடி வந்து அச்சிரிப்பு தன்னைப்பழக்கப்படுத்தியிருந்தது. வினோதமாய் அவரை ரசித்தபடி, அவர் சொன்னவற்றைக் கேட்கத் தொடங்கினேன். விளையாட்டாய் அவர் தொடங்கிய பேச்சு, ’கிரிக்கெட்டைப்போலவே போகப்போக விறுவிறுப்பானது. உற்சாகப்பட்டேன்.
நான் உற்சாகப்பட, உற்சாகப்பட, சபையின் ஆர்ப்புக்கண்ட ‘கிரிக்கெட்' வீரனாய் அவர் எழுச்சிகொண்டார். அவர் விளாசிய வார்த்தைப் பந்துகள், என் அறிவுப் 'பெளன்றியைக் கடந்து "சிக்ஸர்களாய் விழுந்தன.
Cymrk ar ran - Min (Tri i 9ff14

Page 23
ஒரு விளையாட்டான மனிதர், விளையாட்டைப்பற்றி, விளையாட்டாகச் சொன்ன செய்தி, மிகச் "சீரியஸ்'சாய் இருந்தது. என் அகத்துள் அடைபட்டுக்கிடந்த ஆயிரம் கதவுகள் திறந்தன. உள்ளே பாய்ந்த ஒளியில் என் சோர்விருள் கலைந்தது. தட்சணாமூர்த்தியாய் மனிதர் தரிசனம் தந்தார். அவர் சொன்ன அந்த அற்புதச் செய்திகளை, உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கே இக்கட்டுரை. இதோ! அவர் சொன்ன பாணியிலேயே, அவர் சொன்ன செய்திகள். படித்துப் பாருங்கள்.
食 责 ★ 宽
"அப்ப நான் சொல்லுறதக் கேக்கப் போறியள்? பெரிய சந்தோசமுங்கோ.” இப்ப நான் ஒரு வகுப்பெடுக்கப்போறன் பாருங்கோ. நான் கேக்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவேணும்.
sDT.......... NUOT......... NADT. ......... ĝĴD • • • • • • • • • éé அதே சிரிப்பு. “இப்பிடி அடிக்கடி சிரிப்பேன் யோசிக்கப்படாது." அவருக்கே அது சற்று மிகையாய்ப் பட்டிருக்கும்போலும். தொடர்ந்தார்.
இப்ப ஸ்கிரீனைப் பாருங்கோ. எத்தினபேர் விளையாடினம்? சொல்லுங்கோ பார்ப்பம்." ஐயத்திற்கே இடமில்லாத கேள்வி. ஆனாலும் பதில் சொல்கிறேன். “இரண்டுபேர் (B) பட்’ பண்ணுகினம். பதினொருபேர் (F) பீல்ட்' பண்ணுகினம்." “இதிலயிருந்து உங்களுக்கு என்ன விளங்குது?” “விளங்கிறதுக்கு என்ன இருக்கு? மொத்தம் பதின்மூண்டுபேர் விளையாடினம் எண்டு விளங்குது.” சலிப்பைப் பதிலாக்குகிறேன். “இந்த நக்கல்தானுங்கோ வேண்டாமென்னுறது. நல்லா யோசிச்சுச் சொல்லுங்கோ என்ன விளங்குது?” எனக்குள் எரிச்சல். “எனக்குத் தெரியேல நீங்களே சொல்லுங்கோ" “சரி. நானே சொல்லுறன்.
42 ஞானம் - மார்ச் 2004

உலகத்தில இரண்டுபேர் சாதனை செய்ய நினைச்சால், பதினொருபேர் அவங்கள "அவுட்டாக்க நினைப்பாங்கள். இதுதான் ‘கிரிக்கெட்டிலிருந்து படிக்கிற முதல் வாழ்க்கைப்பாடம்.
Ds. . . . . . . . . . MOT ......... MIDT . . . . . . . . . . MsOfT......... அவர் சொன்ன செய்தியால் அறிவில் ஒரு மின்னல் தெறிக்க, முதல்த்தரமாய் அவர் சிரிப்பில் மதிப்புண்டாகிறது.
食 ★ 贪 ★
“சரி இனி அடுத்த விசயத்துக்கு வருவம்.
இரண்டு "ரீமிலும், பதினொரு, பதினொருபேர்தானே விளையாட இருக்கினம்?” ‘ஓம். - இது நான். "அப்ப ஏன் "அவுட்டாக்க பதினொருபேரும் விளையாட, "ஸ்கோர்’ எடுக்க இரண்டே இரண்டுபேர்மட்டும் விளையாடினம்? அது எப்பிடியுங்கோ நீதியாகும்?" வழமையில்ஊறி, மேற்சொன்ன விடயம்பற்றி இதுவரை சிந்திக்காத புத்தி, நியாயமுள்ள அவரின் புதுக்கேள்வியால் அதிர்ந்தது.
"அது. அது வந்து. " நான் தடுமாற, தொடர்கிறார் அவர். “அது சரியோ, பிழையோ எண்டு, ’கிரிக்கெட்காரர் முடிவு செய்யட்டும் பாருங்கோ? நாங்கள் வாழ்க்கையைப் படிப்பம்.
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும், எப்பவும் சமமாய்த்தான் ஆக்கள் சேருவினம். ஆனால், பிரச்சினையெண்டு வந்திட்டால், தர்மத்தை விழுத்துறத்துக்கு அதர்மக்காரரெல்லாம் ஒண்டாய் நிற்பாங்கள். ஆனால், தர்மக்காரர் ஒவ்வொருத்தராய்த்தான் துணைக்கு வருவினம்." அவர் நிறுத்த, “இது தர்மக்காரரின் பலயினம் என்கிறீயளோ?" - நான் கேட்கிறேன். "இல்ல, பலம் என்னுறன்.”
‘அதெப்படி? "பதினொரு அதர்மக்காரரை எதிர்க்க இரண்டு தர்மக்காரர் போதும். அது பலயினமில்ல, பலமுங்கோ.
இப்ப விளங்குதே உலகம்?
MDM---------- NsDsf ...- .-.-. ghs) . . . . . . . . . . 2DT......... QT) என் மனத்துள் அவர் சிரிப்பின் மதிப்பு மேலும் உயர்கிறது.
禽 宽 禽 ★
ஞானம் - மார்ச் 2004 al

Page 24
“என்ன களைச்சுப் போனிங்களே? இன்னுஞ் சொல்லவோ, அல்லது இவ்வளவத்தோட விடவோ?” விசயம் என்னை ஈர்ப்பது தெரிந்து மனுசன் மவுசு காட்டினார். “வலு திறமாய் இருக்குது பாருங்கோ, எவ்வளவு வேணுமென்டாலும் சொல்லுங்கோ, கேட்க நான் தயார்." வெளிப்படையாய்ச் சரணடைந்தேன். அவருக்கு அளவில்லாத உற்சாகம். “சரி. திரும்ப மைதானத்தைப் பாருங்கோ. ‘(B)பட்' பண்ணுறவையள் எங்க நிற்கினம்?” ‘பிச்சுக்குள்ள. “(f)பீல்ட்' பண்ணுறவை?” “கிரவுண்ட்ஸ் முழுக்க நிற்கினம்.” "இப்ப தெரியுதே? ‘ரண்ஸ்’ எடுக்கிறவ, ‘பிச்சுக்குள்ள நிண்டுதான் விளையாட வேணும். "அவுட்டாக்கிறவ எங்க நிண்டும் ’அவுட்டாக்கலாம். இதிலயிருந்து என்ன விளங்குதுங்கோ?" - அவர் கேட்க, "தர்மம் பற்றி சிந்திப்பவனுக்குத்தான் வரம்புகள். அவன "அவுட்டாக்க நினைக்கும் அதர்மக்காரருக்கு, எந்த வரம்பும் இல்ல." நான் விளங்கியதைச் சொல்கிறேன். "அட, பிடிக்கத் தொடங்கியிட்டியள்.
DT. . . . . . . . . . Tit . . . . . . . . . DT . . . . . . . . . . MIDT • • • • • • • • • மீண்டும் சிரிக்கிறார்.
宽 禽 宽 禽
“சரி, இன்னுஞ் சொல்லுங்கோ?” இப்பொழுது நானே ஆர்வப்படுகிறேன். “ஒரு பெரிய ரகசியம் சொல்லட்டே?” குரலில் இரகசியம் காட்டி பரபரப்பூட்டினார். "சொல்லுங்கோ. “இப்ப டென்டுல்கர் "அவுட்டாகினதப் பார்த்தனிங்களெல்லே? என்னண்டு அவர் "அவுட்டாகினவர்?” "ரண் அவுட்”
“ரண் அவுட்டெண்டால்?” “எதிர்ப்பக்கத்தில் நின்ற பட்ஸ்மென் அவசரப்பட்டு ஓடிவர், அவரைக் காப்பாற்ற இவரும் ஒட, இவையளிட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி,

அவங்கள் "அவுட்"டாக்கிப் போட்டாங்கள்." - நான் சொன்னதும், "இதில இருந்து என்ன விளங்குது?” - மீண்டும் அவரிடமிருந்து கேள்வி. "நீங்களே சொல்லுங்கோ?" - இது நான். “எங்கள, எதிரிமட்டும் விழுத்திறத்தில்ல. சிலநேரத்தில சேர்ந்து நிக்கிறவங்களே விழுத்திப்போடுவாங்கள். இது எப்படியிருக்கு?"
ரஜினிபோல “ஸ்ரைல் காட்டி மீண்டும்,
NADT. . . . . . . . . . DIT . . . . . . . . . MDT ---------- DT......... இப்பொழுது அந்தச் சிரிப்பு என்னிலும் தொற்றிக் கொள்கிறது.
寅 ★ 宽 责
"முடிஞ்சுதோ? இன்னும் இருக்குதோ?" - நான் கேட்க, “இனித்தான் முக்கியமான விசயமே இருக்குதுங்கோ." இயல்பாகவே பெருத்திருந்த முழியை, மேலும்பெருப்பித்து உருட்டுகிறார். “அதென்ன முக்கியமான விசயம்?” “கொஞ்சம் முந்தி, டெண்டுல்கர் அடுத்தடுத்து மூன்டு ‘சிக்ஸ்’ அடித்தவர் பார்த்தனிங்களே?” “ஓம்.” "அப்ப ‘கிரவுண்ட்'டுக்குள்ள இருந்த சனம் என்ன செஞ்சது?” "அதையேன் கேட்கிறீயள்? பெரிய ஆர்ப்பாட்டம்தான், சத்தத்தில காது கிழிஞ்சுது." “சரி. இப்ப டென்டுல்கர் "அவுட்டானவரல்லே?" "ஒமோம்.” "அப்ப சனம் என்ன செஞ்சது?" "அப்பவும் பெரிய சத்தமும் ஆர்ப்பாட்டமுந்தான்.” "இதிலயிருந்து என்ன விளங்குது?” நான் யோசிப்பதற்குள் அவரே தொடர்ந்தார். "சனம், வெண்டாலும் கைதட்டும், தோத்தாலும் கைதட்டும். "சிக்ஸ்’ அடிச்சவனுக்கும் கைதட்டும். ‘கச் பிடிச்சவனுக்கும் கைதட்டும். எப்பவும் சனங்கள் இப்படித்தான். விளையாட இறங்க முன்னரே இது தெரியவேணும். விளங்குதே?” சிரிப்பின்றியே இம்முறை பதில் வருகின்றது. அவர் சிரிப்பு தன்னைத் தேடவைத்து வெற்றி காட்டியது.
禽 贪 资 寅
ஞானம் - மார்ச் 2004 45

Page 25
"இன்னொரு விசயம் கவனிச்சனிங்களே?” அவரே தொடர்ந்தார். "எதைச் சொல்லுறீங்கள்?” “கொஞ்ச நேரத்துக்கு முந்தி, ‘(B)போல் போட்டவர் LBW எண்டு கத்தினவரல்லே?" “ஓம்.” “eg L.B.W. (36)?" "அப்பிடித்தான் கிடந்தது." "அவர் கத்தினவுடன சனம் என்ன செஞ்சதுங்கோ?” "அவுட் தான் எண்டு நினைச்சு அப்பவும் ஆர்ப்பரிச்சது.” "கூட விளையாடினவங்கள் என்ன செய்தவங்கள்?” "(B)போலரோட’ சேர்ந்து கையையும், காலையும் ஆட்டி, "அவுட்', "அவுட்’ எண்டு ‘அம்பயரை நோக்கிக் கூவினவங்கள்.” "அவுட்டெண்டு ஆர்ப்பரிச்சது எத்தனைபேர்?" "அது ஒரு ஐயாயிரம், பத்தாயிரம்பேர் இருக்கும்.” "அவுட்', "அவுட்’ எண்டு ‘அம்பயரை வெருட்டினவங்கள் எத்தனைபேர்?” "அது ‘(F)பீல்ட்' பண்ணின பதினொருபேர்.” "அப்ப மொத்தம் "அவுட்டுக்கு ஆதரவாய் இருந்தது எத்தனைபேர்?" “என்ன கணக்குப் பாடம் நடத்திறீங்களோ?” "உதுதானே வேண்டாம் என்னுறது. கேட்டதற்குப் பதில் சொல்லுங்கோ.” "சரி. பத்தாயிரத்து பதினொரு பேர்.” உலகத்தில இரண்டுபேர் "பத்தாயிரத்துப் பதினொரு பேரும் கத்தேக்க, சாதனை செய்ய ‘(B)பட் பண்ணின டென்டுல்கர் என்ன செய்தவர்?" நினைச்சால், "ஒண்டும் பேசாம மெளனமா நிண்டவர்.” பதினொருபேர் "பிறகென்ன நடந்தது?" 5ள அவுட் டாக்க “அவுட் இல்லயெண்டு சொல்லியாச்சு.” நினைப்பாங்கள். "அதச் சொன்னது யார்?" இதுதான் "அம்பயர்" கிரிக்கெட் டிலிருந்து படிக்கிற முதல் 99 8- ۔ ? ۔۔۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔ %ک அம்பயர்’ எத்தினபேர்? வாழ்க்கைப்பாடம். “மெயினானவர் ஒரு ஆள்தான்." "அப்ப பத்தாயிரத்து பதினொரு பேரை எதிர்த்து, ஒராள் சொன்னவரோ?” ‘ஓம். "அது எடுபட்டதோ?” “ஓம் அதுதானே எடுபடும்.” "அதெப்படி கனபேர் சொன்னதுக்கு எதிரா ஒராள் சொன்னது எடுபட்டது?” "அவர் சொன்னது உண்மையெண்டபடியால்." "அவர் சொன்னவுடன, "அவுட்டெண்டு சொன்னவங்கள் எல்லாம் என்ன செய்தவங்கள்?" “பேசாமல் அடங்கிப் போனாங்கள்.” "இதிலயிருந்து என்ன தெரியுது?”
46 ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"நீங்களே சொல்லுங்கோ?” இப்போது, ஒரு சீடனின் பக்குவம் என் வார்த்தைகளில். "அவுட்டாகாத ஒருவன "அவுட்டாக்க, எதிர்த்து விளையாடுறவன், பொய்யா முயற்சிப்பான். அவன் சொன்னது சரியெண்டு சொல்லவும், ஆர்ப்பரிக்கவும், ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதால மட்டும் ஒராள "அவுட்டாக்க முடியாது. அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு எதிரா, உண்மையைச் சொல்ல ஒருவன் இருப்பான். அவன் அதுக்கெண்டு நியமிக்கப்பட்டவன். உங்கட தமிழில அவனத்தான் சான்றோன் எண்டு சொல்லுறதுங்கோ. கிரிக்கெட் விளையாட்டில முடிவு சொல்லுற அம்பயரைப்போல, வாழ்க்கை விளையாட்டில முடிவு சொல்லுற அம்பயர், அந்த சான்றோர்தானுங்கோ.
ஆயிரம்பேர் சேர்ந்து கத்தினாலும், அந்த ஒராள் சொல்லுற முடிவைத்தான் உலகம் அங்கீகரிக்கும். அது தெரிஞ்சுதான், அத்தனைபேர் கத்தவும் டென்டுல்கர் பேசாமல் நிண்டவர். இப்ப விளங்குதே?”
“ஒமோம் நல்லா விளங்குதுங்கோ.” அவர் பாஷை என்னிலும் தொற்றிக்கொள்ள, நான் என்னையறியாமல் தலையாட்டுகிறேன். “என்ன விளங்குது?”
"ஆர் கத்தினாலும் கவலைப்படாமல், நான் பேசாமல் என்ட விளையாட்டைத் தொடரவேண்டுமெண்டு.” “பேந்தென்ன பிடிச்சிட்டீங்கள்? நான் வரட்டே.
D.......... ghs) . . . . . . . . . gs)st . . . . . . . . . . MD--------- இப்போது அவர் சிரிப்பு, சிவனின் சிரிப்பாய் எனக்குப்படுகிறது. கை ரிமோட்டைத் தட்ட, இப்போதும் பிழையான ஒரு 'கச் பிடித்து, "அவுட்’ கேட்கிறது விளையாட்டுக்கூட்டம். ‘(B)பட்’ பண்ணியவன் சலனமற்று நிற்கிறான். ஞானியாய் அவன்மேல் மதிப்புண்டாகிறது. எந்தப் பதற்றமும் காட்டாமல் நிதானித்து, அவர்கள் கோரிக்கையை நிராகரிக்கிறார் ‘அம்பயர். ஆண்டவனின் சாயல் ‘அம்பயரில்'. மனத்துள் 'பேனார்ட்ஷோ தலைகுனிவதாய் தோன்ற, "கிரிக்கெட்' டில் மதிப்புண்டாகிறது. சர்ச்சைக்குரிய அடுத்த கட்டுரைக்காய்ப் பேனாவை எடுக்கிறேன்.
资 宽 宽 资
ஞானம் - மார்ச் 2004 47

Page 26
ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் - 11
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் ஆறாந்தலைமுறைப் படைப்பாளிகளின் வரிசையில் முன்னணி வகிப்பவர்களில் ஒருவர் தாட்சாயினி. சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த தாட் சாயினியின் இயற்பெயர் பிரேமினி சபாரத்தினம். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் சாவகச்சேரி இந்துக் | கல்லூரியிலும் கல்விகற்ற தாட்சாயினி, | யாழ்ப்பாணப் பல்கலைக் கழக தாட்சாயினி விஞ்ஞானப் பட்டதாரி.
மாணவ நிலையிலேயே சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டு, அவற்றினை எழுதவும் ஆரம்பித்த தாட்சாயினி, பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டிகளில் இத்துறைகளில் முதற்பரிசில்களைத் தனதாக்கிக் கொண்டார். சிறுகதை, கவிதை ஆகிய இரு துறைகளிலும் தாட்சாயினி தனக்கென இடங்களைத் தக்க வைத்துள்ளார். 1993இல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் இவரது கவிதையொன்று பிரசுரமாகிப் பலரதும் கவனத்தை ஈர்த்தது. அகில 4ே இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கவிதைப் போட்டியில் தங்கப்
சீ^ பதக்கத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெள்ளி விழாச் アー சிறுகதைப் போட்டியில் முதலிடத்தையும், இலங்கை ஒலிபரப்புக் f கூட்டுத்தாபனத்தின் பவளவிழாச் சிறுகதைப் போட்டியில் 米。 முதலிடத்தையும் தாட்சாயினி தனதாக்கிக் கொண்டுள்ளார். இவற்றைவிட வேறும் பலபல பரிசில்களை இந்த எழுத்தாளர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாட்சாயினியின் படைப்புகள் தினகரன், ஈழநாதம், சஞ்சீவி, தினக்குரல், சங்குநாதம், நமது ஈழநாடு, சுடர்ஒளி, அமுது, சக்கரம், தாயகம், மல்லிகை, கலைமுகம், சுபமங்களா, நங்கை, ஞானம் முதலான சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இன்றைய இளம் படைப்பாளிகளில் மிகமிகத் தரமான சிறுகதைகளை எழுதித் தனக்கெனவோரிடத்தைப் பிடித்திருக்கும் தாட்சாயினியை அவர் எழுதிய ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்
48 ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 
 
 
 
 

படைப்பாளியாக அவரை இனங்காட்டியது.
இக்குறுகிய காலத்திற்குள் அறுபது வரையிலான சிறுகதைகளைத் தாட்சாயினி எழுதியுள்ளார். அவரது
சிறுகதைகளில் சமகாலப் பிரச்சினை களும் இனமதப் பிரிவினைக்கு அப்பாற் பட்ட மனித நேயமும், பெண்ணியக் கருத்துக்களும் மிக ஆழமாகப் பதிந் திருக்கும். பாத்திர முரண்பாடற்ற, உணர்வுபூர்வமான வார்த்தைப் பிர
புதைந்திருக்கும். அவரது சிறுகதைகளில் புல்லாங்குழலும் ஒரு புலிவீரனும், சோதனைகள், ஒரு பூவரசு, வெளியில் வாழ்தல் என்பன தமிழுக்குச் சிறப்புத்தரும் சிறுகதைகள். இவரது சிறுகதைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் களின் ‘மண்ணின் மலர்கள்’ தொகுதி யிலும் மல்லிகைச் சிறுகதைத் தொகுதி 2இலும் இடம்பிடித்துள்ளன. ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும் என்றும் பேசப்படும்
யோகங்கள் அவரது படைப்புகளில் சிறுகதையாக விளங்கும்.
பெண்மைகள்
உலக மானுடத்தின் இன்றும் .
உயிர் வித்துக்கள் வாசுகி பாம்புகளாய் . 65uound சந்தையின் யாப்பு வேலிகளை விளம்பரங்களாய், அழிக்க முடியாது
கரு சுமப்புக்கும் கவர்ச்சிக் குளிர்ச்சிக்குமான எல்லைக்குள் முடுங்குண்ட அவலம் உலக கண்களுக்கு சுதந்திர அரிதாரம் பூசி
சோடனை காட்டும் அபத்தம்
ஆட்சி அமர்வு அடுத்த கிரக பிரவேசம்
அலுவலக அரியாசனம்
இவைகள் தான் - உங்கள்
விடுதலை கரத்தின் விசாலிப்பா?
முட்டைக்குள் உலகளக்கும்
முற்றுகை தகருங்கள்
வணிக சாக்கு கொழுக்க
தசையினும் சிபிகளாய்
தரிபடுவதோ!
பழமைகளின் அடர்கயிறு
முறுக்கிக் கடைய
ஞானம் - மார்ச் 2004
அசோகவன சீதைகளாய் கேளிக்கை அரங்கின் உணர்ச்சி மாமிசங்களாய்
gs.............. இந்த வேதனை ரணச்சாற்றில் நனைந்து கொண்டு உணரா ஆடுகளாய் நசிந்து போவதேன் ஒடுங்குதல் சிதற உணர்வை பிழிந்து சிறகசையுங்கள் இருண்ட நசிவுகள் வரண்டு போகும் எல்லோரும் ஓர் விலையாம் எழுகையுறுங்கள் வையம் வெளிச்சமாக "வைல் நீங்கி ஒன்று படுங்கள் மானுட கோப்பையின் மனிதம் நாம் என்று.
4
9

Page 27
50
8
ஈழத்தின் பெண் விடுதலைச் சிந்தனை
வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும்
திருகோணமலைப் பிரதேசம்
ஈழத்தைப் பொறுத்தவரையில் பெண் விடுதலைச் சிந்தனைக்கான பின்புலம் ஆங்கில ஆட்சியினால் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்களினால் ஏற்பட்டவை என்பது பலரும் அறிந்ததே. எனினும், அதற்குச் சமமாக, ஈழ - இந்திய / தமிழகத் தொடர்புகளும் வாய்ப்பளித்துள்ளன என்பதை நாம் நினைவுகூர வேண்டும். இவ்வாறான ஆரோக்கியமான சூழலில், ஈழத்தின் பெண் விடுதலைச் சிந்தனை வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் திருகோணமலைப் பிரதேசம் முதன்மையிடம் பெற்றுள்ளது. சர்வதேச மகளிர் நினைவுதினம் கொண்டாடப் படுகின்ற இவ்வேளையில் இதுபற்றிச் சிந்திக்க முற்படுவது பொருத்தமானதே. இவ்வழி சிந்திக்கும்போது, பெண்விடுதலைச் சிந்தனை வளர்ச்சியில் (திருகோணமலை) தி.த.சரவணமுத்துப்பிள்ளை(தி.த.ச.)யும் செயற்பாட்டுநிலையிைல் திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கமும் (1923) எமது கவனத்தை அவாவிநிற்கின்றன.
- 2 -
தி.த.ச. பெண்கள் முன்னேற்றம் பற்றி, குறிப்பாக இந்துப் பெண்களின் உயர் கல்வி குறித்து சொற்பொழிவுகள் நிக்ழ்த்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. ஆயினும், அதுபற்றி மேலதிகமாக அறியமுடியாநிலையில் இவரியற்றிய தத்தைவிடுதூது (1892) நூலே இங்கு கணிப்பிற்குரியதாகின்றது. ‘தத்தைவிடு தூது பற்றிக் கவனிப்பதற்கு முற்குறிப்பிட்ட (மாயூரம் வேதநாயகம்பிள்ளை இயற்றிய செய்யுள் நூலான) பெண் மதிமாலை (1869) பற்றி சிறிது கவனிப்பது அவசியமாகிறது. இரு பகுதிகள் கொண்ட இந்நூலில் இசைப்பாடல்கள் கொண்ட முதற்பகுதி (இப்பகுதிப் பாடல்கள் ஆசிரியர் தமது மகளுக்காக இயற்றியவை) பெண்கள் ஒழுக்கம், விழுமியம் என்பன பற்றிய பாரம்பரியச் சிந்தனைகளையே (எ-டு: தெய்வபக்தி, குருவணக்கம், புருஷபக்தி, கற்பு, பாவம், புண்ணியம்) முன்வைக்கிறது. கீர்த்தனைகள் கொண்ட இரண்டாம் பகுதியில் இருபாடல்கள் மட்டுமே குறிப்பிடத்தக்கவை. இவற்றுளொன்று பெண்கல்வி பற்றியது. (தங்களுக்குப்
- கலாநிதி செ.யோகராசா படிப்பிக்கும்படி ஸ்திரிகள்
ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 

வேணி டுதல் ) மற்றொன் று, பெண்களது வேலைச் சுமை, போகப்
பொருளாகக் கருதப்படுகின்ற நிலைமை என்பன பற்றிக் குறிப்பிடுவது.
எனினும், ‘தத்தைவிடு தூது, பெணி மு னி னேற்றம் குறித் து, குறிப் பாக, பெணி கல் வி, பெண் ணடிமை, பொருந் தாத
திருமணம், திருமணத்திற்குப் பிற்பட்ட பெண்கள் வாழ்க்கை, பெண்கள் எதிர்ப்பின்றி அதற்கு அடங்கிவிடுதல் முதலியன பற்றி விரிவாக உணர்ச்சி முனைப் புடன் பேசுகிறது. இத்தொடர்பில் முதலில் இருபாடல்கள் எடுத்தாளப் படவேண்டியவை. கூட்டிற் பசுங்கிளி போற்
கோதையரை எப்போதும் வீட்டில் அடைத்து வைக்கும்
விரகிலருக்கு யாதுரைப்போம் பூட்டித் திறந்தெடுக்கும்
பொருளாகக் கருதினரோ கேட்டோர் நகைப்பதுவும்
கேட்டிலரோ. (16) கண்ணை மறைத்தே கொண்டுபோய்க் காட்டில் விடும் பூனையைப்போல் பெண்ணை மனை அடைத்துவைத்து பின் ஒருவர் கைகொடுப்பர். (19) இப் பாடல் களில் ஆசிரியர் கையாண் டுள்ள உவமைகளும் படிமங்களும் பெண்களது வாழ்க்கை நிலையைக் கச்சிதமாக வெளிப் படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களது திருமணம் பற்றி - அதுபற்றிய அண்றைய சமூக நோக்குப் பற்றி தி.த.ச. மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் பாங்கு விதைந்துரைக்கப்படவேண்டியது. அது வருமாறு:
ஞானம் - மார்ச் 2004
தன் மனைக்கோர் பசு வேண்டிற் தாம் பலகாற் பார்த்திருந்தும் பின்னுந் துணிவிலராய் பேதுறுதல்
மாந்தர்குணம் என்னே மணவினையை இமைப் பொழுதிலே முடிப்பார் . (28)
இத்தகைய திருமணம், சிறுவர்களது பொம்மை விளையாட்டுப்போன்று ஆசிரியருக்குத் தெரிகின்றது.
மேலே தி.க.ச. “பசு" பற்றிக் குறிப்பிடுவதுபோன்று பாரதியாரும் பெண்கள் நிலைபற்றி "மாட்டைத் தொழுவினில் கட்டி வைப்பது" போன்று என்றும் "நாயை விலைக்கு வாங்குவது" போன்று எண் றும் பாடுகிறார் . இதுபற்றியும் பெண்களை வீட்டில் கூட்டில் அடைத்துவைப்பது பற்றியும் தி.க.ச. வும் பாரதியும் கூறியுள்ளவை பற்றி நுணுக்கமாகச் சிந்திக்கும்போது இவர்கள் இருவருக்குமிடையில் கவிதா நோக்கில் நெருங்கிய ஒற்றுமை உள் ளமை தெளிவாகின்றது. இதனாலேயே ‘தத்தைவிடு தூது’ நூலினைப் பாரதியார் படித்திருக்கலாம் என்று ஊகிக்க வாய்ப்புள்ளது என்று கைலாசபதி குறிப்பிடநேர்ந்தது. கைலாசபதியின் கருத்தினை மேலும் உறுதிப்படுத்துவது போன்று ஊக அடிப்படையில் இன்னொரு விடயத்தைக் குறிப்பிடத்தோன்றுகிறது.
தி.த.ச. பணிபுரிந்த “காலேசு"க்குப் பாரதியார் சென்றுள்ளதையும், தி.த.ச. சொற்பொழிவாற்றிய அக்காலேசுத் தமிழ்ச் சங்கம் பற்றிப் பாரதியார் பாடியுள்ளதோடு அங்கு சொற்பொழிவாற்றியுள்ளதையும் (1905) கவனிக்கும்போது தத்தைவிடு தூதினைப் பாரதியார் படித்திருக்கலாம் என்ற கைலாசபதியின் ஊகம் வலுப்பெற வாயப் ப் புள்ளது என்பது எனது அபிப்பிராயம் ஆகும்.
51

Page 28
பாரதியாரைவிட, குறிப்பாக பெண்களது திருமணம் பற்றி, பொருந்தா மணம் பற்றி தி.த.ச. நுணுக்கமாகவும் பல கோணங்களிலும் நோக்கியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. இவ்விதத்தில் முற் குறித்த பாடல் களைவிட, குறிப்பிடத்தக்க வேறுசில பாடல்களும் உள்ளன. பின் வருவன தகுந்த எடுத்துக்காட்டுகளாகின்றன. மூடருக்கும் பேடருக்கும் முதியோர் மெலியோர்க்கும் தேடருறல் லிரத்தினம் போல் தெரிவையரை சேர்த்துவரே. - (10) தம்பெருமை தானறியா தஞ்சமிலா பெண்களினை வெம்புலிவாய் மான் என்ன வீணே கொடுத்திடுவார் (12) பெண்ணருமை தானறியா பேதையர்க்குப் பெண்கொடுத்தார் மண்ணிலுள்ள காலம் வருந்துதற்கே பெற்றெடுத்தார் கண்ணிலர் இத் தந்தை தமர் கடுநரகிற்கே உரியர் - (11)
பெண்கள் திருமணம் பற்றி தி.த.ச. ஆழமாகச் சிந்தித்தமைக்கு காரணம் உள்ளது. ஏனெனில் , தத்தைவிடு தூதினை தி.த.ச." இயற்றுவதற்கு அவரது தனிப்பட்ட காதல் தோல்வியே காரணம் என்று கருதப் படுகிறது. இச் சூழலில தத்தைவிடு தூது தன்னுணர்ச்சிப் பாடல் களுக்குரிய பணி புகள் கொண்டமை வியப்புக்குரியதன்று.
- 3 - திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் 19 || 9 Lö ஆணி டு
ஸ்தாபிக்கப்பட்டது; 1930ம் ஆண்டுவரை செயற்பட்டதாக ஊகிக்கமுடிகிறது.
52
இச்சங்கத்தின் ஆரம்பகால குழுவின் தலைவியாக, பூரீமதி அ.விசாலாட்சி அம்மாள் பிள்ளையும் உபதலைவிகளாக ரீமதி சு.தங் கம்மாள், ரீமதி நா. நீலயதாகூரி ஆகியோரும் காரியதரிசிகளக பூரீமதி பகுமதுராம்பிகை, ரீமதி கு.தெய்வநாயகி ஆகியோரும் தனாதிகாரியாக பூரீமதி அ.பாக்கியமும் செயற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இச்சங்கத்தின் செயற்பாடுகள்பற்றி 2ம் ஆண்டு வாழ்த் துப்பா இவ்வாறு குறிப்பிடும்: “மாதந்தோறும் மகிழ்ந்து குழுமினர். தீதங்கோட்டித் தெளிந்துரையாடினர் வாதஞ் ச்ெயதனர் வாக்கு நிரப்பினர் போதம் எய்தினர் புன்மை அகற்றினர்” ‘புன்மை அகற்ற, இந்தியாவி லிருந்தும் அறிஞர்கள் (எ-டு: திரு. வி.க., திருமகள் ருக்குமணி) வந்து போயுள்ளனர்! ஆண்டு நிறைவு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அவை காற்றோடு கலந்துவிடாமல், அவ்வேளை ஆண்டு மலர்களும் வெளியிடப்பட்டன. இத்தகைய ஆண்டுமலரே மாதர்மதி மாலிகை"!
- 4 - மாதர் மதிமா லிகை"யின் ஒவ்வொரு இதழின் அட்டையிலும் வீணை ஏந்திய சரஸ் வதியின் உருவம் வெவ்வேறு தோற்றங்களில் இடம்பெறுகின்றமை கவனிக்கத் தக்கது. சைவ சமயத்தவர்களின் கல்வித் தெய்வமான சரஸ்வதி முகப்பில் காட்சியளிப்பது அன்றைய சூழலில் இயல்பானதே.
மேலும், ஒவ்வொரு இதழின் ஆரம்பப் பக்கங்களிலும் மாதர் இலக்கிய சங்க வாழ்த்துப்பாக்களும்,
ஞானம் - மார்ச் 2004

இறுதிப் பக்கங்களில் சங்கத்தின் ஆணி டு நிறைவு 6hflрт வாழ்த்துக் களும் , அறிக் கைப் பத்திரங்களும் இடம்பெறுகின்றன. வாழ்த்துப்பாக்கள் எழுதியோருள் மூவர் குறிப்பிடத் தக்கவர்கள். ஒருவர் பத்மாசனி. அன்னார் அக்காலத்தில்
சித்தி பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்க
முதல் ஐந்து தமிழ்ப் பண்டிதர்களுள் ஒரே ஒருவரான பெண் மணி. ஏனையோருள் ஒருவர் திரு கோணமலை தந்த அறிஞர் தி.த. கனகசுந்தரம்பிள்ளை. மற்றொருவர் அன்னாரது புதல் வர் தி.க. இராஜேஸ்வரன். அவரது விஞ்ஞானக் கட்டுரைகளும் சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன.
*மாதர் மதிமாலிகை"யின் இலட்சியம் என்ன? நேரடியாகப் பெண்கள் தொடர்பான விடயங்களில் மட்டுமன்றி அவர்களது அறிவு வளர்ச் சிக்கு உகந்த ஏனைய விடயங்களிலும் கவனஞ் செலுத்தி அறிஞர் பெருமக்கள் எழுதும் கட்டுரைகளைப் பிரசுரிப்பதே அதன் இலட்சியமாகும். இன்று பரவலாக அறியப்படாத சுவாமி விபுலானந்தர், மா. பீதாம் பரம் , புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை முதலானோரும் தமிழ்நாட்டு அறிஞர்கள் சிலரும் மாதர் மதிமாலிகையில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தி யுள்ளனர்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது கணிசமான கட்டுரைகள் எமது தமிழ் இலக்கியங்கள் பெண்கள் பற்றிக் கூறும் மரபு ரீதியான விடங்களை எடுத்துரைப்பனவாக அமைகின்றன. ஆனால் அன்றைய காலப் பின்னணி பற்றி நாம் நன்கு
எானம் - mார்ச் 2004
சிந்திக்கும்போது அவற்றையிட்டு அதிகம் விசனப்படாமல் பாராட்டவே முற்படுவோம்.
அதேவேளையில் விதந்துரைக்கப் படவேண்டிய சில கட்டுரைகளும் இடம்பெற்று உள்ளமை மனநிறைவு அளிக்கின்றது. இவற்றுள் ஒன்று திருமகள் இரத்தின சுப்பிரமணிம் என்பவரால் எழுதப்பட்டது. “பெண்கள் மூளையில் போதிய அறிவு இல்லையா? என்பது கட்டுரையின் தலைப்பு. விஞ்ஞான ரீதியான சான்றுகள் கொண்டு பெண்களது அறிவாற்றலை நிரூபிக்கின்றார் கட்டுரை ஆசிரியை. ஓரிடத்தில் அவர் எழுதுகின்றார்: “இவ்வுண்மைகள் எல்லாம் இவ்வாண்டு இலண்டன் நகரத்து இரணபநியாறிகள் தம் இராஜகலாசாலையில் சேர்.ஆதர்கீத் என்பவர் ரஷ்யா கண்டத்தின் தலைவராக இருந்த லெனின் என்பவருடைய மூளையின் பரிசோதனையைப் பற்றிச் செய்த மிக்க அருமையான உபந்நியாசத்தாலும் நன்கு விளங்குகின்றன". தொடர்ந்து கூறுகின்றார்:
“இன்னோரன்ன நியாயங்களால் பெண் களுடைய இயற்கையின் செயற்கையுமாகிய அறிவும் அதனால் விளையும் ஆற்றலும் விருத்தியுறா வண்ணம் இயற்கை ஒழுங்கிற்கு மாறாக விரிந்த அறிவும் நெஞ்ச நெகிழ்ச்சியும் இல்லாத ஆடவராலும், மாதராலும் அடக்கி வைக் கப் படுகின்றன என்பதும் இயற்கை ஒழுங்கிற்கு இணங்க அவை பெரிதும் விருத்தியடைய செவ்வி தரப்படுமேல் பெண் மக்கள் ஆணி மக்களுக்கு ஒத் தாராகவும் , அறிவிலும் மிக் காராகவும் பொழிவடைவர்
53

Page 29
என்பதும் நன்கு அறியக்கிடக்கின்றன".
இறுதியாக, தமது உரிமைகள் பெற பெண்கள் முன்வரவேண்டும்’ என்று அமைதியான குரலில் சிந்திக்கத் தூண்டுகிறார் ஆசிரியை.
இவி வாறே தேவாரம் ஆர். நாராயணசுவாமி என்பவர் எழுதிய இரு கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. ஒன்று ‘இந்தியப் பெண்களின் தற்கால நிலையும் அவர் தம் வேலையும்" என்பது. மற்றொன் று ‘மலையனைத் து மாதர்கள் என்பது. முதற்கட்டுரையில் கட்டுரையாளர் இந்தியாவில் பெணி கள் அநுபவித் துவரும் அவலங்களை விரிவாக எடுத்துரைக் கின்றார். ஓரிடத்தில் இவ்வாறு எழுதுகின்றார்.
“தாமாகவே கணவனை வரித்த நம் சகோதரிகள் இக்காலத்தில் சந்தைகளில் விற்கப்படும் மாடுகள் போன்று விற்கப்படுகின்றார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கிரகப்பொருத்தம், அறிவுப்பொருத்தம், அழகுப் பொருத்தம் முதலியவைகளைக் கூட கவனிக்க வேண்டும். ஒன்றையுமே கவனியாது விட்டாலும் மனப பொருத்தத்தையாவது மதித்துப் பெண்கள் காதலிக்கும் காதலர்களை மணக்கும்படி செய்ய வேணி டியது கடமையாகும்”. முடிவுரையில் சொல் கின்றார்: “சகோதரிகளே நீங்கள் வெகுகாலமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பெண் ஜென்மம் புண் ஜென்மம்', பெண்ஜென்மம் பாவஜென்மம் என்ற பழமொழிகளுக்கு நீங்கள் தற்சமயம் ‘இலக்காய் இருக்கிறீர்கள். உலகத்தில் ஒருவித நூதனசக்தி உருவாகித்ததும்பித்
54
தாண்டவமாடுவது நீங்கள் அறியாததா? மாதர் இயக்கம் ஒன்று தோன்றி யிருக்கிறது. கான்பூரில் கூடிய பாரத ஜன சபையில் பூரீமதி சரோஜினி தேவி அக்கிராசனம் வகித்ததே உங்களுடைய பிற்காலத்திற்கான அறிகுறிகளில் ஒன்று. உங்கள் முன்னேற்றம் உங்கள் வசமே இருக்கிறது"
“மலையாளத்து மாதர்கள்” என்ற கட்டுரையிலே ஏனைய மாநில மாதர்களைவிட மலையாள மாதர்கள் முன்னேற்றம் பெற்றிருப்பதுபற்றி விபரிக்கின்றார். தமிழ் நாட்டுப
பெண்களை எண்ணி விசனிக்கின்றார்.
கட்டுரையை முடிக்கின்றார் இவ்வாறு, “இப்பொழுது அயல்நாடுகளைக் கவனித்துப்பாருங்கள். அங்கோலா நாட்டினை நோக்குங்கள். எகிப்து தேசத்தினைப் பற்றி ஆலோசியுங்கள். வேலை செய்து விடுதலை பெறுங்கள். 'எழுமின்! விழுமின்!, கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்!”, “இந்திய மாதர் எழுச்சி
என்ற ஒரு கட்டுரையும் இவ்வாசிரியரால் வரையப்பட்டுள்ளது. முன்னைய கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் பிறிதொரு கோணத்தில் அதில் இடம் பெற்றுள்ளதெனலாம்.
“மாதர் மதிமாலிகையில் பொது அறிவுசார் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன என்று முதலில்
குறிப்பிட்டேன். இராஜேஸ்வரன் எழுதிய 'உலகத்தின் உற்பத்தி என்ற கட்டுரை இத்தகையவற்றுள் ஒன்று. வான்வெளி கிரகங்கள் பற்றி விரிவாக எளிமையாக எடுத்துரைக்கின்றது அக்கட்டுரை.
ஞானம் - மார்ச் 2004

இவ்வாறு சிறப்புற்றுள்ள 'மாதர் மதிமாலிகை எத்தனை ஆண்டுவரை வெளிவந்துள்ளதென்றோ, எத்தனை இதழ்கள் வெளிவந்துள்ளனவென்றோ உறுதியாக அறியமுடியாதுள்ளது. (நான்கு இதழ்கள் என்பார்வைக்குக் கிடைத் துள்ளன; இவற் றைத் தந்துதவியவர் எழுதி தாளர் ந.பாலேஸ்வரி).
- 5 -
இவ்வேளையில், இறுதியாக, திருமதி தங்கம்மா என்பவரும் கவனத்திற்குரியவராகின்றார் . சிற்றம்பலம் சண்முகம்பிள்ளையின் மனைவியாகிய இவர் அன்னார் திருகோணமலையில் பெண்கள் கலி லு ரியொன் றை நிறுவும் நோக்குடன் செயற்பட்டவேளையில் (கணவர் காலமான மையால் ) அன்னாரது சிந்தனை செயலுருப்பெற வழிவகுத்தார். ரீமதி தங்கம்மாவின் முயற்சியினால் நிறுவப்பட்டதே ரீ
சண்முக வித்தியாலயமாகும். அன்னார் சிறந்த அதிபர், ஆசிரியர்களை நியமித்து வித்தியாலயத்தைத் திறம்பட நிர்வகித்து வந்துள்ளார். தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் இநீ தியாவிலிருந்தும் சிறந்த கல்விமான்கள் வரவழைக்கப்பட்டனர். நகைகள் விற்றல் தொடக்கம் எவ்வளவோ கஷடப்பட்டு வித்தி யாலயத்தை நிறுவி செயற்படச் செய்த பூரீமதி தங்கம்மா தனக்குப்பின்னரும் வித்தியாலயம் திறம்பட இயங்க ஏற்ற நடவடிக் கைகள் எடுத்துள்ளதாகவும் அறிகின்றோம்.
தொகுத்துக்கூறின், ஆரம்பகால, ஈழத்துப் பெண் விடுதலைச் சிந்தனை வளர்ச்சியிலும் செயற்பாட்டு நிலையிலும் திருகோணமலைப் பிரதேசம் அகலமான - ஆழமான - தடங் களைப் பதித் துள்ளமை புலப்படுகின்றது. இவை மேன்மேலும் விரிவான ஆய்வுக் குரியனவாகின்றன!
༼ལཚོགས་ཁོ་ན་ இஜ>
உள்நாடு
தனிப்பிரதி ரூபா 30/=
அரையாண்டுச் சந்தா : ரூபா 180l: |ஆண்டுச் சந்தா et5urt 360/=
2 ஆண்டுச் சந்தா ரூபா 700/=
3 ஆண்டுச் சந்தா ரூபா 1000/=
ஆயுள் சந்தா
சந்தா காசோலை மூலமாகவோ மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
ஞானம் - மார்ச் 2004
“ஞானம் சந்தா விபரம்
ரூபா 15000/=
மணியோடர் அனுப்புபவர்கள் அதனைக் கண்டி தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய பெயர், முகவரி. T. Gnanasekaran 19/7, Peradeniya i Road, Kandy. :
வெளிநாடு မွို;်
| 96ooTG)ë Fft:5T :25 USS
ஆயுள் சந்தா : 300 US$
38;
55

Page 30
മീബ്ര ബ്ര മഗ്ദീബ്രുl
- இதன் உருவாக்கம் பற்றிய பார்வை
அடிமைகள் உருவாக்கப்படும்போது அதிகாரம் உருவெடுக்கும். அந்த அதிகாரம் மீளவும் மீளவும் அடிமைகளை உருவாக்கும். எப்போது அடிமைகள் அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கத் தொடங்கு கின்றனவோ அன்று வனமுறை கட்ட விழ்த்துவிடப்படும் அல்லது வன்முறையின் மூலம் அதிகாரம் கட்டமைக்கப்பட்டு அடிமைகள் உருவாக்கப்படும். உலக ஒழுங்கில் அதிகாரம்- வன்முறை-அடிமை இப்படித்தான் ஒடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் சமூகத்தின் சரிபாதியினராக விளங்கும் பெண்கள் மீது எந்த அதிகாரத்துவமும் இல்லாது வன்முறை மிக இலகுவாகப் பிரயோகிக்கத்தக்கதாக இருக்கிறது. எதிர்கொள்ளும் வன்முறைக்கு அதிகாரம் இயங்க
அதாவது பெண்கள்
என்பது வெளிப்படையாக வேண்டிய தேவையில்லை. வாழ்வியலில் கீழைத்தேச கலாசார முறைமையில் மிகமிக நாசூக்காக ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள் பல்வேறு தளங்களினூடாக அதிகாரத்தை கட்டமைத்து கொள்கிறது. பின்னர் அதனுாடாக பெண்களுக் கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அதாவது அரசு, மதம், சமூகம், குடும்பம் ஆகியன கட்டமைக் கப்படும் விதத்தில் அவை அதிகார சக்திகளாக இயங்கி மனிதவாழ்வை ஒழுங்கமைக்கும் அதனூடாக பெண்களின் வாழ்வை
கருவிகளாகி
56
அசமத்துவ நிலைக்கு அவை தள்ளியுள்ளன. இந்த அசமத்துவ நிலையானது பெண்கள் பல்வேறு வகைகளிலும் வன்முறைக்குள்ளாக
ஏதுவாகிறது. இதை சாதாரணமாக நாம்
இரண்டு நிலைகளில் நோக்கலாம்.
ஒன்று குடும்ப வன்முறை. மற்றது குடும்பம் அல்லாத தளத்தில் இயங்கும் வன்முறை (சமூகம், நாடு) இவ்விரண்டு பக்கங்களிலும் ஒரு பெண் வன்முறையை எதிர்கொள்வது தனக்காக மட்டுமல்ல தான் சார்ந்த அங்கத்தவர்களுக்காகவும் தான். அதாவது உடல், உள ரீதியாக ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது அப்பெண்ணின் மீதான எதிர்வினை மட்டுமல்ல அப்பெண் சார்ந்த அங்கத் தவர்கள் மீதான எதிர்வினையும் அப்பெண்ணை வன்முறைக்குள்ளாக் குவதன் மூலம் சாத்தியப்படுகிறது.
இதனால்தான் மகன் அல்லது மகள் பிழை செய்தால் தாய்க்குத் தகப்பன் அடிப்பது எனத் தொடங்கி ஒரு இனத்தைப் பழிவாங்க வேண்டுமானால் அந்த இனத்துப் பெண்ணை பலாத்காரப்படுத்துவது வரை நீள்கிறது.
வன்முறை என்னும்போது உடல் ரீதியானது மட்டுமல்ல, உளரீதியான வன்முறையும் பெண்ணுக்கு மிகுந்த தாக்கம்மிக்கது. பெண்ணுக்கு மட்டுமல்ல பெண் சார்ந்த
நானம் - மார்ச் 2004
 

அது தாக்கம் விளைவிக்கக்கூடியது. ஒரு பெண் ணினுடைய பாலியல் தன்மையை விமர்சிக்கின்றபோது, பெண்ணின் ஒழுக்கம் விமர்சிக்கப்படுகிறது. அதனூடாக ஒரு பெண்ணை, அவள் சார்ந்த குடும்பத்தை, சமூகத்தை உள வன்முறைக்கு உட்படுத்த முடிகிறது. இந்த வன்முறை கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் மிகவும் சுவாரஸ்யமானது.
கீழைத்தேச மதம், இலக்கியம் என்பன கற்புக்கோட்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. இதை "ஒருவனுக்கு ஒருத்திகள் பலர் இருக்கலாம். ஆனால் ஒருத்திக்கு ஒருவன்தான் இருக்கலாம்” என்பதன் இதற்குள் இருக்கக்கூடிய முரண்பாட்டைப் புரிந்து கொள்ள முயற்சிக்காத அல்லது புரிந்து கொள்ள முடியாத ஒரு சமூகமாய் இயங்குகிறது நம் சமூகம். இதற்குத் தீர்வாய் பெண்களை பிரித்து குலமகள், விலைமகள் என இரு துருவங்களை உலாவவிட்டிருக்கிறது. சமூகக் கட்டமைப்பு என்ற அதிகாரம் இந்த இரு துருவங்களைப் பற்றிப் பேசுகின்ற இலக்கியங்கள் படங்களை இன்றுவரை
சாரமாகக் கொள்ளலாம்.
நாம் காணலாம்.
இத்தகைய ஒரு சமூக இயங்கு நிலையை வைத்துக் கொண்டு மிக இலகுவாகப் பெண்கள் அனைவரையுமே ஒரு கணத்தில் விலைமக்கள் ஆக்க முடியும். இதற்கு எந்த அதிகாரமும் தேவையில்லை. இதைத்தான் வன் முறையின் ஆயுதமாக எடுத்துக் கொண்டுள்ளது சமூகம்.
அடுத்து, உலகளாவிய ரீதியிலும் சரி நம் சமூகத்திலும் சரி பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறை
ஞானம் - மார்ச் 2004
அதிகளவில் கணக்கெடுக்கப் படுவதில்லை. இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டு நடத்துகின்ற தாம்பத்திய உறவில் மூன்றாம் நபர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை. ஆனால், இதைப் பயன்படுத்தி வன்முறை பிரயோகிக்கப்படுகின்றபோது,
பூவே பிடிக்காத நீ பூச்செடி வாங்கி வந்தது ஆச்சரியம் தான்
கொல்லையில் வைத்தாய் பின் பிடுங்கி வாசலில் வைத்தாய் மீண்டும் பிடுங்கி கொல்லையில் வைத்தாய்
தொட்டியோடு ஒருநாள் தொபுகடீர் என்று வரவேற்பறையில் வைத்தாய்
கண்டபடி அலைக்கழிக்கப்பட்டதால் கருகிச் செத்தது செடி
எதிலும் திருப்தியில்லா உன்
ஈன எண்ணத்திற்கெல்லாம்
ஈடு கொடுத்து
உயிர் நீட்டிப்பு செய்ய
என்னைப்போல
பூச்செடியொன்றும்
உன்பொண்டாட்டியில்லை.
(தேவகி கவிதை)
என்று குமையும் பெண்களைத்தான் காணமுடியும். குடும்ப வன்முறைகள் எல்லாம் கலாசாரம், பண்பாடு என்ற தளங்களினூடாக மிக இலகுவாக பிரயோகிக்கப்படுகிறது. மேற்கத்தேய
57

Page 31
நாடுகள் சிலவற்றில் தன் கணவனின் ஆண் உறுப்பையே வெட்டும் அளவுக்கு எதிர்வினையைப் பெண்கள் காட்டி இவ்வளவு வன்முறை யாளர்களாக, கொடுமையானவர்களாகப் பெண்கள் நடந்து கொள்வதற்குக் குடும்ப வன்முறைச் சட்டத்தால் கணக்கெடுக்கப் அங்கீகரிக்கப்பட்ட வன்முறைக்கூடமாக குடும்பம் இயங்குவதும் ஒரு காரணம் எனலாம்.
பலவீனமானவர்கள் மீது வன்முறை
உள்ளனர்.
படாமையும்,
பிரயோகிக்கப்படும் என்ற கூற்று பெண்கள் விடயத்தில் அடிபட்டு போகிறது. பலமான ஆளுமை உள்ள
•S 因 Է67
res
יב
བྱེ་
e6
ხუ હો
es
S s S GÉ)
ெ
ଐଚ୍ଛ୍ର
ஆசிரியரின் கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாது பரிதவித்த பொழுதிலும்
பெண்கள் மீது கூட மிக இலகுவாக வன்முறைகள் பிரயோகப்படுத்தப் படுகின்றன என்றால் அதற்குக் காரணம் சமூகத்தில் பெண்களின் இடம், பெண்கள் புரிய
பெண்கள் 山Tf?
வேண்டிய செயல் போன்றவற்றைத்
சமூக கருத்துக்களே. ஆணாதிக்கக் கருத்துக் களாக இவற்றை நாம் இனம் காண்பதை சமூகத்தின் வன்முறைக் காரணிகளாக இவற்றை
தீர்மானிக்கும் கலாசாரக்
விட ஒட்டுமொத்த
இனம் கண்டு புரிந்து கொள்வதே முதல் தேவையாக நம்முன் உள்ளது.
முதல்காதல் பமறுக்கப்பட்டு ஒரு தலையாக துடித்த பொழுதிலும்
பலர் முன்பாக கைநீட்டிய பிச்சைக்காரனுக்குக் கொடுக்க பணமில்லாத பொழுதிலும்
எவ்வளவு கவனமெடுத்தாலும் குறைகூறும் முதலாளிமுன் கூசி நின்ற பொழுதிலும்
வாழ்வதை வெறுத்து வதைக்கும் மனம்
உனக்காகத்தான் நான் உயிரோடிருக்கிறேன் எனும் தாயின் முன்பாக மட்டும் வாழத் துடிக்கிறது.
58
ஞானம் - மார்ச் 2004
 
 

ஈழத்தில் லபண்கள்சார்
தமிழ்ச் சஞ்சிகைகள்
பெண்கள் சார் சஞ்சிகைகள், காத்திரமானதும் முக்கியமானதுமான பணியை இன்று சமூகத்தில் ஆற்றி வருகின்றன. இச்சஞ்சிகைகள் பெண்கள் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து ஆக்கங்களை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலும் பெண்கள் அமைப்புக்களே இத்தகைய சஞ்சிகைகளை வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
இச் சஞ்சிகைகளின் சமூக மற்றும் இலக்கியப் பங்களிப்புக் குறித்து ஆய்வு செய்கின்ற அல்லது நடுநிலை நின்று விமர்சிக்கின்ற போக்கு இல்லாமை அல்லது வளராமை துரதிஷ்டமானதே. பாரம்பரியமாக பெண்பற்றி நிலவும் கருத்துக்களின் அடிப்படையில் வைத்தே பெண்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் நோக்கப்படுகின்றன. பெண் பலவீன மானவள், உணர்ச்சி வயப்படுபவள்; தங்கியிருக்க வேண்டியவள்; அவளுக்கென்று சொந்தக் கருத்து எதுவும் இல்லை அல்லது இருக்க முடியாது; தெளிந்த அறிவோ அனுபவ ஞானமோ அவளிடம் கிடையாது என்பன போன்ற கருத்துக்களை மனதில் வன்மையாக வரித்துக் கொண்டே பெண்களின் ஆக்கங்களை மதிப்பீடு செய்பவர்களும் பலர் உள்ளனர். இவ்விதம் பால் வேறுபாட்டிற்குத் தகத் திறனாய்வு மேற்கொள்ளப்படும் நிலைமையில், பெண்களின் எழுத்துக்கள் வெளிப்படுத்தும் விடயங்கள் கூடக் கவனிக்கப்படாமல் போகும் ஆபத்துக்கள் நிறையவே ஏற்படுகின்றன. தவிரவும் இவ்வாக்கங்களைப் பற்றிப் பெண்களே பேசவேண்டிய நிலை தொடர்வதனையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.
மேற்குறித்த விடயங்கள் ஆய்வுலகில் பல்வேறு வினாக்களையும், ஐயங்களையும், தேவைகளையும் கூடத் தோற்றுவித்துள்ள இச்சூழலில் ஈழத்தில் வெளிவரும் பெண்கள் சார் தமிழ்ச் சஞ்சிகைகளது இலக்கிய முக்கியத்துவத்தையும், சமூகப் பெறுமதியையும் இனங்காட்ட விழைந்ததன் வெளிப்பாடே இக் கட்டுரையாகும்.
இங்கு சஞ்சிகை என்ற சொல், தேவையும் முக்கியத்துவமும் காரணமாக சஞ்சிகைகளோடு பத்திரிகைகள், செய்தி மடல்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி யுள்ளமை கவனத்திற்குரியது.
தமிழில் பெண்கள் சார் சஞ்சிகைகளின் தோற்றத்தினை 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து நோக்கலாம். அமிர்தவசனி (1865), சுகுணபோதினி (1887), மகாராணி (1887), மாதர் மித்ரி (1887), பெண்மதி போதினி (1891), மாதர் மனோரஞ்சனி (1901), சக்கரவர்த்தினி (1905), தமிழ்மாது (1906), மாதர் போதினி (1911), சிந்தாமணி (1924), தமிழ்ப்பெருமாட்டி (1934), மறுமணம் (1936), கிரகலட்சுமி (1937), மங்கை (1947), புதுமைப்
(- றாபி வலன்ரீனா பிரான்
arraín - rnia 2004 59

Page 32
பெண் (1947),குங்குமம் (1948), சகோதரி(1948), பாக்கிய லட்சுமி(1961), மணமகள் (1965), காதம்பரி (1965), பெண்மணி (1996) ஆகியன அவற்றுள் சிலவாகும். இவையாவும் தமிழகத்திலிருந்து வெளிவந்தவை. (ஈழத்து வெளியீடுகள் குறித்து பின்னர் விரிவாகக் கூறப்படும்.) இச்சஞ்சிகைகளை மதிப்பீட்டிற்காகப் பின்வரும் வகைப்பாட்டிற்குள் அடக்கலாம்.
(அ) ஆண்களை ஆசிரியர்களாகக் கொண்டவை:
உதாரணம் :
மாதர் மனோ ரஞ்சனி' - சி. எஸ். இராமசாமி ஐயர் சக்கரவர்த்தனி - டி. வைத்தியநாத ஐயர் தமிழ்ப் பெருமாட்டி - வடுவூர். கே. துரைசாமி ஐயங்கார் கிரகலட்சுமி - எஸ். கிருஷ்ணன் மகாராணி - வி. கிருஷ்ணமாச்சாரி (ஆ) பெண்களை ஆசிரியர்களாகக் கொண்டவை:
உதாரணம் :
பெண் கல்வி - ஆர். ஜெயம்மாள் மறுமணம் - மு. மரகதவல்லி தமிழரசி - ச. கமலாவதி மாதர் போதினி - திருமதி. இங்கலிஸ் மாதர் மித்திரி - திருமதி ஏ. ரூடிஸில் கிரகமணி' - திருமதி வி. கே. பிளாக் (இ) பெண்கள் அமைப்புக்களால் வெளியிடப்பட்டவை:
உதாரணம் :
அமிர்தவசனி' - சுதேச கிறிஸ்தவப் பெண்கள் அமைப்பு
மேற் குறிக்கப்பட்டவை, காலாகாலமாகப் பெண்களுக்கென விதிக்கப்பட்டுவரும் மரபுகளை வலியுறுத்துவனவாகவும், அவற்றைப் பேணுவதே பெண்ணின் பெருமை என்று கூறுவனவாகவுமே பெரும்பாலும் அமைந்திருந்தன. சுருங்கக் கூறின் ஆணாதிக்கச் சிந்தனையே இவற்றில் வெளிப்பட்டு நின்றது எனக் கூறுவது மிகையானதல்ல.
பெண்கள் சார் சஞ்சிகைகளின் தேவை :
பெண்கள் சார் சஞ்சிகைகளின் தேவை குறித்து நோக்குகின்றபோது, பெண்களுக்கென்று சஞ்சிகைகள் தேவையா? தேவைதானா?” என்று பலர் எழுப்பும் வினாவிற்கு முதலில் பதிலளிக்க வேண்டியது. தவிர்க்க முடியாததாகின்றது. பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரிக்காத, பெண்களுக்கென்று தனித்துவமானதும் முக்கியமானதுமான பிரச்சினைகள் உண்டு என்பதை ஏற்காத,பெண் 'பேசுவதை அல்லது 'எழுதுவதை மரபு மீறலாகக் கருதுகின்ற, பெண்ணின் மாற்றுக் கருத்துக்களை எழுத்தினூடாகச் சந்திக்க விரும்பாத சிலர் இத்தகையதொரு வினாவினை எழுப்பக்கூடும்.
60 ஞானம் -மார்ச் 2004

இவ்வினாவினை எழுப்புவோர் தம் ஆழ் மனதில், இத்தகைய பிரத்தியேக சஞ்சிகைகள் தேவையற்றவை' என்ற எண்ணத்தை நிர்த்தாட்சணியமாக வரித்துக் கொண்டு, பொதுவான பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் பெண்களும் எழுதலாம்தானே' என்ற வரட்டு நியாயத்தினை முன் வைப்பதனையும் காணலாம்.
பெண்களுக்கென்ற எழுத்துக்களம் தனியானதாகத் தேவை என்ற நியாயப்பாடு, மேற்குறித்த வினாவின் பின்னணியில் தோன்றும் ஐயப்பாடுகளின் காரணமாகத் தோன்றியிருப்பதை மறுக்க முடியாது. எமது பாரம்பரியத்தில் மிக நீண்ட காலமாகப் பெண்களுக்காகவும் ஆண்களே பேசியும் எழுதியும் வந்துள்ளமையைக் காணலாம். பெண்களின் குரலாக ஆணின் மொழியே அமைந்திருந்தது. ஓரிரு பெண்பாற் புலவர்களும், படைப்பாளிகளும் இருந்திருந்தாலும்கூட ஆணாதிக்கச் சிந்தனைக்குப் புறம்பாக / வெளியே அவர்கள் பேசியபோது அல்லது எழுதியபோது அவை கேள்விக்குள்ளாக்கப்பட்டன; அல்லது இருட்டடிப்புச் செய்யப்பட்டன அல்லது வேறு (உதாரணம் : பத்தி) சாயம் பூசப்பட்டன.
எனவே மரபு ரீதியாக காலந்தோறும் தன் குரலை வெளிப்படுத்த முடியாதபடி அடக்கப்பட்ட பெண், சமூக - அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட புதிய விழிப்புணர்வு காரணமாகத் தனக்கான ஒரு மொழியை வரித்துக் கொண்டு தன் (பெண்) நிலைநின்று தன்னை அடையாளங் காட்ட முயன்றாள். மரபுசார்ந்த பத்திரிகைகளும்,சஞ்சிகைகளும் பெண்நிலைவாதக் கருத்துக்களை வெளியிடத் தயங்கிய அல்லது திரிபுபடுத்தி வழங்கிய சூழலில் பெண்களுக்கான தனித்துவமான சஞ்சிகைகளின் தேவை உணரப்பட்டது. பத்திரிகைகள் பலவற்றில் 'பெண்களுக்கான பக்கம் ஒதுக்கப்பட்டாலும் அவை போதுமானவையாகவோ கருத்துக்களைத் தொடராகவும் காத்திரமாகவும் வெளியிடக் கூடியனவாகவோ, பெண்கள் தன்னிச்சையாக, கட்டுப்பாடுகளின்றி எழுதக் கூடியனவாகவோ பெரும்பாலும் இருக்கவில்லை. அத்துடன் அவற்றில் அழகுக் குறிப்புகளும், சமையல் கலைநுணுக்கங்களும், சிறந்த குடும்பப்பெண்ணாக மரபுரீதியாக வாழ வேண்டிய வழிமுறைகளும், குழந்தைப் பராமரிப்பு உட்பட கணவனுக்கு ஏற்ற மனைவியாக ஒத்திசைவாக வாழ வேண்டிய முறைகளுமே பெரும்பாலும் உள்ளடக்கமாகக் கொள்ளப்பட்டிருந்தன. இன்றும் இந்நிலைகளிற் பெரிய மாற்றமில்லை. ஒரு சில பத்திரிகைகளில் மாத்திரம் இடைக்கிடை காத்திரமான கட்டுரைகள், பெண்ணிலைவாதிகளின் பேட்டிகள் வெளிவருகின்றன.
இத்தகைய சூழலில் பெண் என்ற நிலையிலிருந்து, பெண் தன் உணர்வுகளை அல்லது பிரச்சினைகளைத் தன் அனுபவ வெளிப்பாடாக எவ்வித கட்டுப்பாடுகளும், தடைகளும், அச்சுறுத்தலுமின்றிச் சுதந்திரமாக எழுதுவதற்கும், பெண்நிலைச் சிந்தனைகளைக் காத்திரமான கருத்துக்களாக, சமூக ஏற்புடைத்தான முறையில் பெண்ணின் மொழியூடாகத் தருவதற்கும் பெண்சார் பிரத்தியேக சஞ்சிகைகள் களம் அமைக்க வேண்டியிருந்தமை காலங்கருதிய செயற்பாடாய் அமைய வேண்டியதாயிற்று. இப் பின்னணியிலேயே பெண்கள் சார் சஞ்சிகைகளின் தேவையை விளங்கிக் கொள்ள (ւpկչպԼ0.
ஞானம் - மார்ச் 2004 6

Page 33
ஈழத்தில் மும்மொழிகளிலும் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வெளிவருகின்றன. பத்திரிகைகளின் வாராந்தப் பதிப்புகளில் பெண்களுக்கெனவும் ஒரு பகுதி பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருக்கும். இவற்றின் உள்ளடக்கம் குறித்து ஏற்கனவே கூறப்பட்டது. பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் கூட இவற்றில் வெளியிடப்படுகின்றன. எனினும் மரபுரீதியான கட்டுப்பாட்டினுள் பெண் வாழவேண்டியவள் என்ற அடிப்படையிலேயே பெண்கள் பகுதி பெரும்பாலும் அமைந்து விடுகின்றது.
சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பத்திரிகைகளின் இத்தகைய பெண்கள் பக்கம் குறித்த அவதானங்களை சுனிலா அபேயசேகர (1995:501-502)'பெண்களும் வெகுசனத் தொடர்பு சாதனங்களும் என்ற கட்டுரையொன்றிற் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஞாயிறு வெளியீடுகள் விசேடமாகப் பெண்களுக்கென சில பகுதிகள் வெளியிடுகின்றன. இவற்றில் அழகுப் போட்டிகள், உடை அலங்காரப் போட்டிகள், ஆடம்பர விருந்துகள், திருமணங்கள் என்பவற்றில் அணியப்பட்ட கவர்ச்சியான உடைகள் பற்றிய விபரங்கள் மிக விபரமாக ஆங்கில ஞாயிறு வெளியீடுகளில் எழுதப்படுகின்றன. சிங்களப்பத்திரிகைகளில் லங்கா தீப ஒரு பெண்கள் பக்கம் வெளியிடுகின்றது. அதன் பெயர் பெண்கள் கூட்டம். அதுவும் ஏனைய மாதர் பக்கங்களைப் போன்றதுதான். எல்லா ஆலோசனைகளும் பெண்களை மரபு வழியான முறைகளைப் பின்பற்றிப் பெண்களைக் கட்டுப்பாடாக வாழ ஆலோசனை கூறுவன. இந்தப் பெண் பகுதிக்கு ஆலோசனை எழுதுபவர்கள். ஆண்களாகவும் சமையல் குறிப்புக்கள், சிக்கனம், வீட்டு நிர்வாகம் போன்றவற்றை எழுதுபவர்கள் பெண்களாகவும் இருப்பதைக் காணலாம். பொதுவாகப் பார்க்கும்போது ஆண்கள் சற்று முக்கியமான விடயங்களை எழுதவும் பெண்களை அவர்களது பிரிவுக்குள்ளேயே வைத்திருப்பதையும் காணலாம். என அவர் கூறியுள்ளார். மேலும் இப்பத்திரிகைகளும், இதழ்களும் தாம் வெளியிடும் கேலிச் சித்திரங்களில் பெண்ணைக் கேலிக்குரியவளாகச் சித்தரிப்பதையும் 1980 களின் நடுப்பகுதி வரை பெண்களுக்கான வார வெளியீடுகளும்.
உதாரணம் : தருணி (இளம்பெண் - 1969 தொடக்கம்) நவலிய (புதிய பெண் - 1982 தொடக்கம்) ஸ்திரிக்த்தா (அதிர்ஷ்டப் பெண் - 1980 தொடக்கம்)
பாரம்பரிய மரபுமுறைக்குட்பட்டனவாகவே இயங்கியமையையும், அத்துடன் ஆண்களை ஆசிரியர் குழுவினராகக் கொண்ட றெஜினா, பிரிந்தா, சொண்டுர முதலிய வார வெளியீடுகளும் (1990 களின் ஆரம்பத்தில் இவை வெளிவந்தன) இதனையே பின்பற்றியமையையும் அவர் தனது கட்டுரையிற் சுட்டிக் காட்டுகின்றார்.
இச் சந்தர்ப்பத்தில் மாற்றீடாக பெண்கள் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவரத் தொடங்கியமையையும் குறிப்பிட வேண்டும். பெண்கள் அமைப்புக்கள் இவ்வெளியீடுகளில் முக்கிய பங்கு வகித்தன. அவற்றுள் ஒன்றே பெண்ணின் குரல் என்னும் சஞ்சிகையாகும்.
(மிகுதி அடுத்த இதழில்.)
62 ஞானம்- மார்ச் 2004

பெண் என்றாலே நிர்வாணம்தான்
- ஆண் மேலாதிக்க ஓவிய மொழி குறித்து
- யதீந்திரா -
(1)
மெது பார்வைகள் பெரும்பாலும் தன்னிலைகள் சார்ந்தவை. இனம், வர்க்கம், பால், சாதி மதம் என ஏதோ ஒன்றைச் சார்ந்துதான் நாம் ஒவ்வொருவரும் வரையறுக்கப்பட்டிருக்கின்றோம். அல்லது வரையறைகளை உருவாக்கியிருக்கிறோம். சிந்தனையாளர் தாமஸ்லாஸ் சொல்வது போன்று மனித உலகின் சட்டம் என்பதே வரையறு அல்லது வரையறுக்கப்படு என்பதுதான். நமது இயங்குதளத்திற்கு ஏற்ப பேசு பொருள்கள் மாறுகின்றன, சமூகப் பார்வைக் கோணங்கள் வேறுபடுகின்றன. அவ்வளவுதான். இவற்றிற்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் இருப்பதாகச் சொல்வதெல்லாம் வெறும் பாசாங்கு. தன்னிலை சார்ந்த பார்வைகள் பிழையென்பதல்ல வாதம். ஆனால் இவ்வாறான தன்னிலை சார்ந்த கருத்தியல்கள் (சில விளிம்பு நிலைக் கருத்தியல்கள் விதிவிலக்கானவை) பிற தன்னிலைகளை மறுதலிக்கும் அடக்கி ஒடுக்கும் ஆதிக்கக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்ற, உண்மையில்தான் நாம் அதிக கவனக்குவிப்பைச் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பெரும்பான்மை இனம் சிறுபான்மைகளை அடக்கியாழ முற்படுகிறது. முதாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டி வாழ்கிறது. ஆண்பாலர் பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கின்றனர் உயர்சாதி எனப்படும் பிரிவினரால் சில மக்கட் பிரிவினர் ஒடுக்கப்படுகின்றனர், இம்சிக்கப்படுகின்றனர். மக்களில் அதிகமானவர்களை பற்றியிருக்கும் மதம் சிறுபான்மையோரின் மத நம்பிக்கைளை இழிவுபடுத்துகின்றது, அவர்களின் தனித்துவத்தைச் சிதைக்க முற்படுகின்றது. இவ்வாறு ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவினர் தமது தனித்துவத்தையும், சுய இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். தமக்கான கருத்தியல்களை தாமே வடிவமைத்துக் கொள்கின்றனர். தமக்கான போராட்ட வழிமுறைகளை வடிவமைத்துக் கொள்கின்றனர். மீண்டும் தன்னிலை சார்ந்த பார்வைகளே மேலெழுகின்றன. இந்த வகையில்தான் தேசியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற கருத்தியல்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
(2) நாம் ஆணியப்பார்வை என்னும் தன்னிலை சார்ந்த பார்வையிலிருந்து விலகி நவீன ஆண் ஒவியர்களின் ஓவிய மொழியைக் கட்டவிழ்க்க முயல்வோம். நாம் பொதுவாகவே தன்னிலை சார்ந்து (ஆண் நோக்கில்) சிந்திக்கும் பழக்கம் உடையவ்ர்களே அன்றி, பெண்ணிலை சார்ந்து சிந்திக்கும்
ஞானம் - மார்ச் 2004 63

Page 34
பழக்கமுடையவர்களல்ல. நான் என் னையும் உள்ளடக் கி ஆண்களைச் சொல்கிறேன். இது காலாதிகாலமாக கடத்தப்பட்டு வரும் ஆண் தலைமைத்துவ பண்பு நிலை. எமது பேச்சு எழுத்து செயல் எல்லாவற்றிலும் பெண்களுக்கு இரண்டாம் இடம்தான். இந்நிலைமை யானது முற்போக்கு, பிற்போக்கு,
பரவியிருக்கிறது. இங்கு தமது எண்ணத்திற்கு ஏற்ப பெண் உடலைக் கையாளும் அதிகாரத்தை ஆண் ஒவியர்கள் எடுத்துக் கொள்கின்றனர். தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பெண்களை உருவாக்குகின்றனர். நிலந்தி வீரசேகர என்னும் ஓவியை செல்லுவது போன்று ஆண்களால் உருவாக்கப்படும் பெண். உண்
மார்க்சியம், பின்நவீனத்துவம்,(மையில் இதனை நாம் நுணுகிப் ஆன்மிகம் போன்ற வட்டங்களைNபார்ப்போமானால் பெண் எனக்கு
யெல்லாம் தாண்டியது. இதன்? காரணமாகத் தான் இது ஒரு
பெண்களால் இலகுவாகச் சொல்ல முடிகிறது. உண்மையும் அதுதான் எனது அவதானத்துக்கு உட்பட்ட வகையில் பெரும்பாலான நவீன் ஒவியர்களின், நவீன ஓவியர்களென சிலாகிக்கப் படுபவர்களின் பெண் பற்றிய புரிதல், பெண் என்றாலே நிர்வாணம்தான். அவர்களின் ஓவிய மொழியில் இரண் டு பெரிய முலைகள் , பெரிய பிருஸ்ட்ம் அவ்வளவுதான் பெண்.” .
ஆண் ஓவியர்களைப் பொறுத்த வரையில் வாழ்வியலின் இன்னல் களை சித்தரிப்பதானாலும் அதன் அழகைச் சித்தரிப்பதானாலும், போரின் கொடுரத்தைக் காட் டுவதானாலும் , சமூகப் பிரச் சினைகளைச் சித்திரிப்பதானாலும் கட்டாயமாக ஒரு பெண் ணின் நிர்வாணம் தேவைப் படுகிறது. அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழும் போதும் பெண்கள் ஆடையில் லாமல் தான் இருக்க வேண்டுமென்பது ஆண் ஒவியர்களின் எதிர்பார்ப்பு. இவி வாறான சித்திரிப்புகள் நவீன ஆண் ஒவியர்கள் மத்தியில் ஒரு நோய்க் கூறாகவே
64
x
கட்டுப்பட்டவள், எனக்கு கீழானவள்,
ჯ நான் அவளை எப்படி வேண்டு ஆணி மேலாதிக்க சமூகமென,
மானாலும் கையாளக் கூடிய அதிகார முடையவன் என்ற, சராசரி ஆண் புத்திதான் நவீன ஓவியர்கள் எனப்படு
வோரையும் ஆட்கொண்டிருக்கிறது.
அந்தப் புத்திதான் அவர்களை
*இயக்கிக்கொண்டிருக்கிறது.
- இந்நிலைமை தமிழ்ச் சூழலுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல.
ଽ
* இது ஒரு உலகளாவிய நிலை
மையாகச் சொல்லக் கூடியது. நாம் பிக்காசோவை அறிவோம். அவர்
நேவீன ஓவியத்தின் பிதாமகரென
கொண்டாடப்படுபவர். இன்று வரை உலகளவில் நவீன ஓவியர்களின் ஆதர்சமாக விளங்குபவர். கியூபிசஷம் என்னும் ஓவியப் பாணியில் அவரது பங்களிப்பு அசாதாரணமானதெனச் சொல்லப்படுகிறது. உருவச்சிதைப்பு என்ற அடிப் டையில் நவீன ஓவியத் திற்கு முப் பரிமாண முறை மையை வழங் கியவர் பிக்காசோ. சமாதானப் புறா இவரது படைப்பு. போரும் அமைதியும், கொரியாவில் படுகொலை, ஆவிக்ணான் நங்கையர், குவர்ணிகா போன்றன, பிக்காசோவின் அற்புத படைப்புகளாகச் கொள்ளப்படுபவை. பிக்காசோ பிரான்ஸின் ஆவிக்ணான்
ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 

நகர விலைமாதர்களின் இன்னல் களினால் தாக்குண்டதன் விளைவே, ஆவிக்ணான் நகர நங்கையர் என்ற படைப்பு. ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது ..பிராங்கோவிற்கு உதவியாக வநீத நாஜி விமானங்களால் அழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமே குவர்ணிகா , பிக் காசோ அந்த அழிவை தனது துாரிகையால் அற்புதமான படைப் பாக் கி யிருக்கின்றார். குவர்ணிகா தனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை ஜப்பானிய எழுத் தாளரும் , ஓவியருமான ஒக்கமாட்டோ இப்படி விபரிக்கின்றார். “அன்று எனக் குள் உணி டான அதிர்ச்சி வெறும் திகைப்புக்கும், அச்சத்திற்கும், மனித அட்டுழியத் திற்கும், மேற்பட்டது. கட்டுங்கடங்கா கோபாவேசம் கித்தானில் வெடித்துச் சிதறுகிறது. அதில் காணும் உணர்ச்சி வெளிப் பாடு எனர் னை நிலை குலையச் செய்து விட்டது" இவ்வாறு புறச் சூழலி நிலை மைகளை அற்புதமான படைப்புகளாக்கிய பிக்காசோவால் பெண்களை மட்டும் இறுதிவரை புரிந்துகொள் ள முடியவில்லையாம். பிக்காசோவின் பெண் பற்றிய சில சித்திரிப்புகள் அதிர்ச்சியளிப்பனவாக இருக்கின்றன. அதேவேளை பிக் காசோ வினி இன்னொரு முகத்தை அடையாளம் காட்டுபவையாகவும் இருக்கின்றன. வோல்லார்ட் என்பாரது ஆடம்பரமான தொகுதிக் காக நுாறு செதுக் கோவியங்களை வரைந்திருக்கின்றார் பிக்காசோ. அனைத்து ஓவியங்களும் உணர்வூட்டக் கூடிய வகையிலான சித்திரிப்புகளாகும். காளை முகமும் மனித உருவமும் கொண்ட புராணப்
ஞானம் - மார்ச் 2004
பாத்திரம் பெண்களை பலாத்காரப் படுத்துவதான ஒவியங்கள். பிக்காசோ தனது காதலி ஜாக்குலின் ஹ"டின் சிறுநீர் கழிப்பதாக ஒரு ஓவியத்தை வரைந் திருக்கின்றார். எலும்பும் தோலுமான ஒரு பெண்னை கூரிய நகங்களால் குத்திக் கிழிப்பதாக இன்னொரு ஓவியம். பிக்காசோ விரும்பிய பெண்கள் எல்லோரும் மாடலாக நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமாதானப் L|[D IT ഞി ബ உருவாக்கிய அதே பிக்காசோதான் பெண் களை இழிவு படுத்தும் இவ்வாறான சித்திரிப்புகளையும் ஆக்கியிருக் கிறார். எனினும் பிக் காசோவின் இந்த முகத்தை யாரும் பார்ப்பதில்லை. ஏனெனில் பிக் காசோ இப் பொழுது ஒரு ஓவியப் புனிதர். புனிதர்களை கேள்விக்குள்ளாக்கலாமா? அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவா.
உண்மையில் புனிதர், புனிதம் ஆகிய சொற்களுக்குப் பின்னால்தான் பதுங் கிக் கிடக் கிறது அநேக அசிங்கங்கள்.
(3)
நிர்வாண சித்திரிப்புகளில் புனித நிர்வாணம் என்ற ஒன்றைப் பற்றி சொல்கிறார் தமிழக கலை விமர்சகர் இநீ திரண் - NAKED என்பது சங் கடத் தைக் கொடுக் கும் ஆடைகளைந்த உடம்பின் நிலை. NUDE என்பது சகஜபாவத் தி லிருக்கிற, தன்னம்பிக் கையோடு கூடிய, சமநிலையிலிருக் கிற உடம்பின் நிலை. ஒவியர்களும் சிற்பிகளும் இந்த சகஜபாவத்திலுள்ள நிர்வாணத் தைத் தான் தங்கள் படைப்பில் கையாள்கிறார்கள்.
65

Page 35
வியலின் இன்னல்களைச் சித்தரிப்பதானாலும் அதன் அழகைச் சித்தரிப்பதானாலும், போரின் கொடுரத்தைக் காட்டுவதானாலும், சமூகப் பிரச் சினைகளைச் சித்திரிப்பதானாலும் கட்டாயமாக ஒரு பெண்ணின் நிர்வாணம் தேவைப்படுகிறது.
வெகுண்டெழும் யில்லாமல்தான் இருக்க வேண்டுமென்பது ஆண் ஓவியர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறான
ஒரு நோய்க் கூறாகவே பரவியிருக்கிறது.
இங்கே வசதி கருதி NAKED என்பதை நிர்வாணம் என்றும் NUDE என்பதை புனிதநிர்வாணம் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்பது இந்திரன் வாதம் (பார்க்க தீராநதி - ஆகஸ்ட் 2003)
இங்கு நிர்வாணம் என்பது புனிதமானதா, அல்லது அழகானதா என்பதல்ல பிரச்சனை. இந்திரன் சொல் லுவது போன்று அது புனிதமானதாகவே இருக்கட்டும். ஆனால் அந்தப் புனித நிர்வாணம், அழகியல் ரசிப்புக்குரிய நிாவாணம் பெணி உடலோடு மட்டும் மட்டுப்படுத்தப்படுவதன் சூட்சுமம் என்ன என்பதுதான் நமக்குரிய கேள்வியாக இருக்கிறது. இன்றைய ஆணியமுதலாளித்துவ உலகில்
(ஆண் ஓவியர்களைப் பொறுத்தவரையில் வாழ்ெ
அடக் குமுறைக் கு எதிராக பெணிகள் போதும் பெண்கள் ஆடை
சித்திரிப்புகள் நவீன ஆண் ஒவியர்கள் மத்தியில்
أزة வரவேற்பறை களையும் அலங்கரிக்கப் பயன் படுபவைகளாகவும், பெரும் பணக்காரர்களின் இல்லங்களில் தொங்குபவையாகவும் இருக்கின்ற தேயன்றி எட்டக்கூடிய நிலையிலில்லை. அவை அபூர்வமாகத்தான் சாதாரண மக்களின் பார்வைக்கு எட்டுகின்றன. சில விதிவிலக்கான ஓவிய செயற் பாட்டாளர்களும் செய்கின்றனர். வரைபுகளை மக்களை நோக்கி கொண்டு செல்கின்றனர். நாட்டுப்புற கலை வடிவங்களை உள்வாங்கி புதிய ஓவிய மரபொன்றை உருவாக்க முயல் கினி றனர். வரைபுகளில் திருப்தி கொண்டு சுருங்கிப் போகாமல் வேரிலிருந்து எழ
த* ன ப பொரு ள
இந்நிலைமையை நவீன ஆணி ஓவியர்களும் துல்லியமாக புரிந்து வைத்திருக் கிறார்கள். முதலாளியச் சந்தையில் நிர்வாணப் பெண் சித்தரிப் புகளுக்குத்தான் விலை அதிகம் . ஏனெனில் இன்றைய நவீன ஓவியம் என்பதே ஐந்து நட்சத்திர ஹொட் டே ல களினி படுக்கை யறைகளையும்,
சாதாரண மக்களுக்கு
இருக்கவே இவர்கள் தமது
மேற் கினி
O ஸ்கின்றனர். பெண் உடல் என்பது ஒரு நுகர்வுப் (puj6) - பொருள். சனரஞ்சக ஊடகங்களி எனினும் இவ்வாறானவர்கள் மிக
அரிதானவர்களே.
லிருந்து கோடாம்பாக்க சினிமா வரை பெண் உடல்தான் பெரும் மூலதனம். இவற்றின் பார்வை என்னவென்றால் எந்தளவிற்கு பெண் உடலில் ஆடை குறைகிறதோ அந்தளவிற்கு இலாபம் கூடும் . பெண் உடல் என்பது ஆண்களின் பாலியல் உணர்விற்கான
66
அதிகம்.
(4)
நவீன ஓவியத் துறையைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் ஆண் ஒவியர்களின் பங்குபற்றலே ஓவியமொழி முழுக்க,
ஞானம் - மார்ச் 2004

முழுக்க ஆண் நோக்கிற்குட்பட்டதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஈழத்துச் சூழலைப் பொறுத் தவரையில் வாசு கி ஜெயசங்கர், அருந்ததி, ரஞ்சனி போன்ற ஒரு சில ஒவியைகளே தமது சுவடுகளைப் பதித் துள்ளனர். இவர்களது வெளிப்பாடுகள் ஆண் மேலாதிக் க ஓவிய மொழியை கேள்விக்கு உள்ளாக்குவனவாகவும், அவற்றை மறுதலிப்பனவாகவும் இருக்கின்றன. பெண் என்றாலே நிர்வாணம் தான் எனும் ஆணிய வரையறையை சிதைத் து, பெண்ணைப் பெண்ணாக சித்திரிக் கின்றன. பெண்ணின் பல்வேறு சமூக எதிர்கொள்ளல்களை பெண்ணின் உணர்வுசார்ந்தும், அறிவுசார்ந்தும் பார்க்கின்றன. இது பற்றி சிங்களப் பெண் ஓவியையான நிலநீ தி வீரசேகர இப்படிச் சொல்கிறார் "ஓவியத் துறையில் வெவ்வேறுபட்ட கோணங்களில் பெண்கள் சித்தரிக் கப் பட்டுள்ளன. உதாரணமாக லியனாடோ டாவின் சி என்னும் ஒவியர் மோனாலிசாவை சித்தரித்தது தமக் குத் தேவையான முறை
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை ஜஅனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். :/ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறு
குறிப்பு ம
புத்தகக் களஞ்சியம் (நூல் மதிப்புரை)
அவர்
நிறம் ,
யிலாகும் . அதறி கு தேவையான அழகு, உருவமைப்பு, என் பவற்றை பாவித்துள்ளார். அனைத்துக் கலைஞர்களும் இம் முறையில்தான் தமக்கு உரியதான நீள அகலங் களுக் கு ஏற்ப பெணி களை உருவாக் கியுள் ளனர்" நான் ஆண் களால் ஏற்படுத்தப் பட்ட உருவத் தை உடைத் தெறிந்து பெணி னாக பெணி னைப் பார்ப்பதற்கும், பெண் என்ற ரீதியில் அவர்களை உருவாக்கவும் முனை கின்றேன்” இவ்வாறான பெண்ணியல் நோக்கிலான ஒவிய வரைபுகளை தொடர்ச்சியாக முதன் மை ப் படுத்துவதன் ஊடாகவும், அவற்றை தொடர்ச்சியாக முன் தள்ளுவத னுாடாகவும்தான் ஆண் மேலாதிக்க ஓவிய மொழியை கேள் விக் குள்ளாக்குவதும், ஆண் ஓவிய முடிபுகளை ஒரம் கட்டுவதும்
சாத்தியமாகும். ஒடுக்குமுறைகளும்,
இழிவுபடுத்தல்களும் தொடரும் போதே, மாற்றுத் தேடல்களும், எதிர்ச் செயற்பாடுகளும், எதிர்க் குரல்களும் எமக்கு அவசியமாகின்றன.
تايلانعكخذ
ஞானம் - மார்ச் 2004
67

Page 36
தறியில் அலையும் ‘பா’வென - மனம் தறி கெட்டோடக் காத்திருந்தான்; ‘வலியில் துடித்த மனையாளின் கதறியழுடம் குரல் கேட்டான், - பின் அரும்பு ஒன்று பமலர்ந்து அழுகின்ற குரலும் கேட்டான்!
缀
s
美
ஆவல்மீதுார அலடமலந்தான் - தாதி கூப்பிடும் குரலுக்காய் - செவி தீட்டிக் காத்திருந்தான்! சிறுகனப் பொழுதுதான் யுகம் கழிவதாய் உணர்ந்தான்!
தாதி வந்தாள், தன் கையில் ஏந்திநின்ற "சிசு'தனைக் காட்டி “பெண்பிள்ளை' எனச் சிரித்தாள்) பேருக்கு அவனும் பற்காட்டிச் சிரித்தான்! உள்ளத்தை முகத்தில் மறைத்திடல் கூடுவதோ..? தாதி உணர்ந்தாள், தம்பி முகக் குறிப்பால் . ஆண்டபிள்ளை இல்லையென அவர் அழுது வடிவதனை! என்ன நேரம்; என்ன நிறை என்றெதுவும் கேட்காமல். தன்னவளின் நலம்கேட்டு தவிக்காமல் நிற்பதனை . எண்ணிடமனம் வேர்த்து நின்றாள், எரிமலையாய்க் கொதிதது வெந்தாள்!
பாம்பின் காலதனைப் பாம்பே அறிவதுபோல் பெண்னவளின் நிலையெண்ணிப் பேதைபமனம் சலித்து நின்றாள்!
நிற்கமனம் பிடிக்காமல் அகல்வதனைத் தவிர அவளேது செய்வாள் - ?
68 ஞானம் - மார்ச் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுதத் தூண்டும் எண்ணங்கள்
கலாநிதி துரை மனோகரன்
ஒரு புதிய சிற்றேடு இலங்கையில் புதிது புதிதாகப் பல சஞ்சிகைகள், பத்திரிகைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது மகிழ்ச்சிக்குரியதே. இவ்வகையில் அ.யேசுராசாவை ஆசிரியராகக் கொண்டு, 2003 மார்கழியில் இருந்து தெரிதல்' என்ற (சிறு) பத்திரிகை இரு திங்கள் இதழாக வெளிவரத் தொடங்கியுள்ளது. ஆச்சரியப் படத்தக்க முறையில் இதன் விலை ரூபா 5/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த விலையில் பல கலை - இலக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தெரிதலி வாசகருக்கு நல்குகின்றது. “புதிய வாசகரை - குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைந்து அவர்களுடன் தொடர்பாடல் செய்யும் முயற்சி. கலை - இலக்கியத் தகவல்களை, இரசனையை, விமர்சனப் பார்வையை வழங்கி புதிய வாசகர்களாக, விழிப்பு நிலை கொண்டவர்களாக உருவாக்கும் ஓர் எத்தனம். வழமையான (சிறுசஞ்சிகைப் பணியிலிருந்து விலகி, சுருங்கிய அளவில் - இலகுத்தன்மையுடன் - விடயங்களைப் பகிர்ந்து பார்க்கும் ஒரு பரிசோதனை." எனத் தெரிதல் தனது இலக்கினை வெளிப்படுத்தியுள்ளது.
கலை-இலக்கியச் செய்திகள், தகவல்கள், நூல் அறிமுகம், நூல் விமர்சனம், கலை இலக்கிய விமர்சனங்கள், கவிதைகள் எனப் பல்வேறு விடயங்களைத் தாங்கியதாக இதன் முதல் இதழ் வெளிவந்துள்ளது. தகவற் களம் என்ற பகுதியில் "டெயிலி நீயூஸ் பத்திரிகையுடன் வாரம் ஒருமுறை 2؟ Э э இணைப்பாக வெளிவரும் 'ஆர்ட் ஸ்கோப் (கலைக்களம்) பற்றிய குறிப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. சிங்களக் கலை - இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகள் நிறைய அதில் வெளிவருவது பற்றிக் குறிப்பிட்டு தமிழோடு தொடர்பான கலைஇலக்கிய முயற்சிகள் பற்றி பிறரும் அறியும் வண்ணம் தமிழர் அந்தக் களத்தைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முன்னர் கே.எஸ்.சிவகுமாரன் இத்தகைய முயற்சிகளில் இயன்றவரை ஈடுபாடு காட்டிவந்தார். ஆயினும், மறைவாக நமக்குள்ளே பேசிக்கொள்வதைத்தான் பலரும் பெருமையாகக் கருதுகின்றனர். ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் சிலர் (பேராசிரியர் சிவத்தம்பி அல்லர்) திறமையிருந்தும் வாழ்நாள் முழுவதும் பிறரை நொட்டை சொல்வதிலேயே காலத்தை வீணாகக் கழித்து வந்துள்ளனர். அவர்கள் போன்றோர் 'ஆர்ட் ஸ்கோப் போன்ற களங்களைச் சரியாகப் பயன்படுத்தலாம். பிறரைப் போற்றுவதற்கு நல்ல மனம் வேண்டும்.
‘தெரிதல் முதல் இதழில் என்னைக் கவர்ந்த இரு அம்சங்களைக் குறிப்பிடவேண்டும். புத்தக வாசல் வழி என்ற பகுதியில் இடம்பெற்ற ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் என்ற நாவல் பற்றிய விமர்சனம், "இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள். என்ற பகுதியில் இடம்பெற்ற ரமணி சந்திரன் பற்றிய விமர்சனம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள். கவிதைத் தெரிவில் தெரிதல் மேலும் அக்கறை செலுத்தவேண்டும். வசனங்கள் கவிதைகள் அல்ல. தெரிதலின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்!
எகானம் - மார்ச் 2004 69

Page 37
அதிசய பூமி
நமது நாடு ஓர் அதிசய பூமி. எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மக்கள் பெயரில் நடிகர்கள் கூத்தாடும் கூத் துக் கொட்டகையை திடீரென்று கபடத்தனமாக g)600i 600TT 6 கலைத் துவிட்டு, எல்லோரையும் தெருவிலே விட்டுவிட்டார். தமக்குச் சார்பான நடிகர்களைக் கொட் டகைக்குள் கொண்டுவருவதற்காகவே இப்படியொரு நாடகத்தை அண்ணாவி ஆடியிருக்கிறார். அதேவேளை தேவையில்லாமல் இரு புதிய பாத்திரங்களையும் அணி ணாவி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆட வந்தவர்களை உரிய காலம் வரைக்கும் அவர் ஆடவிட்டிருக்கலாம். நடிகர்கள் எல்லோரும் இப்போது கன்னைகட்டிக் கொண்டு தெருக்களிலே மேடை யமைத்துக் கூத்தாடிக் கொண்டிருக் கிறார்கள். நாட்டில் ஏதோ ஓரளவுக் காயினும் மக்கள் சற்று நிம் மதிப் பெருமூச்சு விடத்தொடங்கியபோது, அதைக் கெடுப்பதற்கென்றே இரு பேரினவாதக் கோமாளிக்கோஷ்டிகளும் இணைந்துள்ளன. நீண்ட காலத்துக்கு இக் கோமாளிக் கோஷடியினர் இணைந்திருக்கப் போவதில் லை. இதேவேளை சிவப்புச் சட்டைப் பேரினவாதிகளுக்கும், அம்பு - வில்லுப் பேரினவாதிகளுக்கும் இடையே அதிசிறந்த பேரினவாதிகள் யார் என்பதை “மக்கள்” முன்னிலை நிறுத்தும் போட்டிகளும் கடுமையாக நிலவுகின்றன.
இந்த இலட்சணத்தில், தமிழ் அரசியல் கட்சியொன்று இருவேறு நிறங்களில் அமைந்த பேரினவாதக் கூட்டணியை வாழ்த்தி வரவேற் றிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை இக்கோமாளிக் கூட்டணி தீர்த்துவைக்கும் என்று அக்கட்சி தெரிவித்திருப்பது வேடிக்கையானது. "அம்மை மனம் கனிந்திட்டாள்" என்று கருதுவதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை.
70
துணையோடு தமிழ்
தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டு இயங்கவேண்டிய இன்றைய சூழ்நிலையில், சில தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் ஆனந்தத்தை சங்கரிக்கும் முறையில் நடந்துகொள்ளும் முறையில் நடந்துகொள்கின்றனர். கலைக்கப்பட்ட கொட்டகைக்குள் அதிகமான தமிழ் நடிகர்களைக் கொண்டுசெல்லும் வாய்ப்பு இருந்தும், தலையில்லாத தலைவர்கள் சிலரின் அரக்கத்தனமான போக்கினால் உள்ளதையும் இழந்து தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
மலையகத் தமிழ்த் தலைவர்களும் வேடிக்கை விநோதம் காட்டுவதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இவர்கள் இலங்கையில் வெளியாகும் வாக்கிய பஞ்சாங்கத்தையும் திருக்கணித பஞ்சாங்கத்தையும் போன்றவர்கள். இரு பஞ்சாங்கங்களும் பெரும்பாலும் எந்த விடயத்திலும் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பதில்லை. இவர்களின் சொந்தச் சுயநலங்களே “அரசியல்” கருத்துகளாக வெளிவருகின்றன.
உலகம் சுற்றும் சில அரசியல் வாதிகள் சந்தர்ப்பவாதத்தினி உச்சக்கட்டத்தில் எப்போதும் இருந்து கொள்வர். சந்தர்ப்பத்துக்கு ஏற்ற விதமாக அவர்களின் “அரசியல்" கருத்துகள் அடிக்கடி மாறுபடும். இவர்கள் எப்போதும் தான்தோன்றித்தனமாகவும் தற்பெருமை யோடும் உளறிக்கொண்டே இருப்பர். தாம் இன்றி உலகம் இயங்காது என்பதே இவர்களின் “அரசியல்” தத்துவம்.
யானைப் பாகர்களது முயற்சியினால் நாடு மதங் கொள்ளாமல் சற் , அமைதியாக இருப்பது உண்மையே. ஆயினும், அவர்களும் ஒரு புறத்தில் சமாதானம் பேசிக்கொண்டு மறுபுறத்தில் அயல்நாட்டினதும், அந்நிய நாட்டினதும் LD &É 55 6tf6öi, அபிலாசைகளை அடக்கி ஒடுக்கம், திட்டத்தினையும் கொண்டுள்ளனர் என்பதும் இரகசியமானது அன்று.
, KK mrkrr rh — a n nr: 1AnArA Mi

சமூகத்தின் உயர்வும்
ஒரு
மேம்பாடும் அச் சமூகம் கல்வியில் காட்டும்
அக்கறை, ஈடுபாடு இவற்றிலேயே தங்கியுள்ளது. அறிவைத் தேடுதல் ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும் என இஸ்லாம் போதிக்கிறது. ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறு எனப் பிரித்து நோக்கவில்லை. அன்றைய அரேபியாவில் அடிமைகள் எனும் சாரார் வாழ்ந்து வந்தனர். அவர்களில் அடிமைப் பெண்களுக்குக் கூட கல்வியறிவைப் பெற்றுக் கொடுக்குமாறு ஆணை யிட்டார்கள் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள்.
ஆணும் பெண்ணும் ஒரே ஆத்மா விலிருந்து படைக்கப்பட்டவர்கள். இப்பிரபஞ்சத்தின் முதல் மனிதப் பிறவிகளான ஆதாம், ஹவ்வா (ஏவாள்)
இருவரும் சிருஷ்டிகர்த்தாவினால் புசிக்கக்கூடாதெனத் தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாக
சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். இறைவனின் கட்டளைக்கு அடிபணியாமை காரணமாகக் குற்ற மிழைத்தவர்களாக, பாவத்தில் இருவரும் கருதப்பட்டு மன்னிப்புக் கோரியபோது இருவருக்கும் மன்னிப்பளிக்கப்பட்டது.
ஆண்டவனின் சிருஷ்டிகளான ஆணும் பெண்ணும் சம பெறுமதியுடன் நோக்கப்படுகின்றனர். "ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே
சமபங்குடையோராகக்
ro'r Tarr an - a na ri ili ?ss41
இஸ்லாமும்
பெண்களும்
விசுவாசங் கொண்டு நற்கருமங்களை செய்கிறார்களோ அவர்கள் தாம் சுவனபதி செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
-அல்குரான் - 4 20 பொருளாதாரச் சுதந்திரத்தையும், சமூக வாழ்க்கையில் பங்குபற்றி சேவை செய்யும் உரிமையையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. மைமூனா எனும் அன்றைய அரேபியாவில் ஏவி, தீமையைத் தடுக்கும் வழக்கத்தை யுடையவராகக் காணப்பட்டார். பெண்
அம்மையார்
நன்மையை
களை ஒன்று திரட்டி போதனை செய்வார். பெண்களைச் சீர்திருத்தும் பணிகளில் அவரை ‘நன்மைகளின் முன்மாதிரி’ எனப்
முனைந்து செயல்பட்டார்.
- புர்கான் பீ. இப்திகார் -
முஹம்மது
பாராட்டினர் நாயகம் நபியவர்கள்.
முஸ்லிம்கள் தம் உயிரிலும் மேலாக மதிக்கும் வேத நூலான அல்குரான் வாழ்க்கைத் துறைகள் அனைத்துக்கும் வழிகாட்டும் விரிவான ஒரு நீதிநூல். அந்த அருள்மறையில் அந்நிஸா “பெண்” என்ற ஓர் அத்தியாயத்தையே இடம்பெறச் செய்து இனம் படுத்தப்பட்டுள்ளது. மேலைத்தேய
மாதர் மகிமைப்
7

Page 38
நாடுகளில் கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதிவரை பெண்களுக்குச் சொத்துக் களை தமக்குச் சொந்தமாக வைத்துக் கொள்ளவோ, ஒருவருடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவோ, கணவனுக்குச் சொந்தமான ஒன்றை விற்றுவிடவோ கட்டிய கணவனின் அநுமதியின்றி செய்ய முடியாத நிலை ஒன்றிருந்தது. ஆனால் இஸ்லாம் மதமோ சொத்துக்களை வாங்கவும், விற்கவும், ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் மாத்திரமல்ல, உழைக்கவும், தன் சொந்தப் பணத்தை வைத்திருக்கவும், பராமரிக்கவும் கூடிய உரிமையை என்றோ பெண்களுக்கு வழங்கி விட்டது. தவிர குடும்பத்தின் சொத்தின் பங்குரிமையைப் பெண்ணுக்கு வழங்கும் குர்ஆன், வாரிசுரிமையிலிருந்து பெண்ணை மறுத்து விடுவது பற்றி எச்சரிக்கையும் விடுகிறது.
'மனிதர்கள் என்ற முறையில் இருபாலாரும் கண்ணியத்துக்கும், மரியாதைக்கும் உரியவர்கள். நீதியான முறையில் ஆண்களுக்குப் பெண்கள் மீதுள்ள உரிமைகள் போலவே ஆண்கள் மீதும் பெண்களுக்கும் உரிமையுண்டு.
அல்குரான் 2:228 நன்மை தீமைகளைப் பற்றிய உணர்வு இருபாலாரிடமும் காணப்படுகின்றது. மனிதர்கள் என்ற முறையில் இருபாலாரும் கண்ணியத்துக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் எனும் இஸ்லாம் பெண்களின்
வாரிசுச்
உயர்வுக்காக ஏராளமான உரிமைகளைக் கொடுத்துள்ளது.
'எந்தக் கன்னிப் பெண்ணையும் அவளது அங்கீகாரம் இன்றி மண முடித்துக் கொடுத்தலாகாது. அவளது மெளனம் அவளது அங்கீகாரமாகும் என
72
நபி (சல்) அவர்கள் கூறியுள்ளார்கள், எந்த விதவையையும் கலந்தாலோசிக்காது அவளைத் திருமணம் செய்து கொடுத்த லாகாது என்றும் கூறியுள்ளார்கள். விதவையும் மறுமணம் புரிந்து வாழலாம் என்பதைச் சொல்லால் மாத்திரமன்றி செயலிலும் காட்டியவர் நபியவர்கள்.
கணவன் மனைவி இருவரும் இணக்கமாக வாழ முடியாத நிலை உருவானால் பிரிந்து செல்லும் உரிமை இருவருக்கும் உண்டு. இஸ்லாம் ஒரு மனைவியானவள் நியாயமான காரணங் களுக்காகக் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக்கொள்ள அனுமதி யளிக்கிறது.
"தன் மனைவியைச் சிறந்த முறையில் நடத்துபவரே உங்களில் சிறந்தவர் என நபி (சல்) கூறியிருக்கிறார்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்த வற்றில் உரிய பங்குண்டு. அவ்வாறே பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றில் (உரிய) பங்குண்டு” என அருள்மறையாம் குரான்
குறிப்பிடுகின்றது.
மனிதர்கள் என்ற வகையில் இருபாலாரும் சமமான நிலையில்
படைக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்கள் புரிந்தால் அதற்கான தண்டனை இரு பாலாருக்கும் உண்டு. "திருடுபவர்கள் பெண்ணாயினும் அவர்களுடைய கரங் களைத் துண்டித்து விடுங்கள்.
அல்குரான் - 5: 35 “விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம்
ஆனாயினும்
செய்த ஆண் இவர்கள் ஒவ்வொரு வருக்கும் 100 கசையடிகள் கொடுங்கள்.
- அல்குரான் 24 2
(தொடர்ச்சி 75 பக்கத்தில்)
ஞானம் - மார்ச் 2004

மலையகத்தின் முதல் பெண்மணி
இலங்கைத் திருநாட்டில் புகழ்பூத்த பெண்மணிகளில் ஒருவர் திருமதி மினாட்சி அம்மையார். மலையகத்தின் முதற்தொழிற்சங்க அமைப்பைத் தோற்றுவித்தவரான கோ.நடேசய்யரின் துணைவியார் திருமதி மீனாட்சி அம்மையார். தனது கணவருடன் இணைந்து தொழிற்சங்க, பத்திரிகை, சமுதாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். திருமதி மீனாட்சி அம்மாள் தனது கணவரான கோ.நடேசய்யருடன் 1920ம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். தனது கணவரின் இலட்சியப் பணிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.
“நடேசய்யரின் சக்தியாக விளங்கியவர் அவரின் மனைவியான மீனாட்சி அம்மையார் ஆவார். தோட்டம் தோட்டமாகச் சென்று அய்யருக்கு துணையாக நின்று கருமங்கள் ஆற்றியவர் மீனாட்சி அம்மையாரே. அய்யரின் முன்கோபத்துக்கு ஈடுகொடுத்து அவரது முரட்டு சுபாவத்தைக் கரைபுரண்டோடாது கட்டிக்காத்து காட்டாறாக புரளவிடாது தடுத்து நிறுத்தி தடைகளைத் தகர்த்தெறியும் சக்தியையும் உருவாக்கியவர் மீனாட்சி அம்மையாரே” என்கிறார் தேசபக்தன் கோ.நடேசய்யர் என்ற நூலில் சாரல் நாடன்.
மலையகத்தின் மூலை முடுக்கெல்லாம், தோட்டத்து எல்லைகள், பஸ்தரிப்பு நிலையங்கள், மக்கள் கூடும் சந்துகள் என்றெல்லாம் இணைந்து நின்று மலையகத் தோட்டத் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டவர்.
"சட்டமிருக்குது ஏட்டிலே - நம்முள் சக்தியிருக்குது கூட்டிலே பட்டமிருக்குது வஞ்சத்திலே - வெள்ளை பவர் உருகுது நெஞ்சத்திலே வேலை இருக்குது நாட்டிலே - உங்கள் வினை இருக்குது வீட்டிலே” என்று மீனாட்சி அம்மாள் பாடிய தொழிலாளர் சட்டக்கும்மியில் மெய்மறக்காதவர் யாருமில்லை.
மஹாகவி பாரதியாரின் பாடல்களை மலையகமெங்கும் பரப்பிய பெருமைக்குரியவர்கள் அய்யரும் அவருடைய துணைவியாரான மீனாட்சி அம்மையாரும் ஆவர். மஹாகவி பாரதியாரின் எழுச்சிமிகு பாடல்களை நடேசய்யர் துண்டுப்பிரசுரமாக அச்சிட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகித்தார். அந்தப்பாடல்களைத் தனது இனிமையான குரலால் மீனாட்சி அம்மையார் பாடுவார். அதன் பிறகு கோ.நடேசய்யர் பிரசங்கம் செய்வார். இவர்கள் மீது பேரபிமானம் வைத்திருந்த தொழிலாளர்கள் தங்கள் தோட்டங்களில் பயிரிட்ட காய்கறிகளை இவர்களுக்கு அன்புடன் வழங்குவார்கள்.
ஞானம் - மார்ச் 2004 73

Page 39
திருமதி மீனாட்சி அம்மையார் பாடுவதில் மாத்திரமல்ல பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய பாடல் தொகுப் பு இநீ தியர் களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை' என்ற தலைப் பில் 1947இல் வெளி வந்துள்ளது.
கோ. நடேசய்யர் நடத்திய தேசபக்தன் பத்திரிகை 1929ம் ஆண்டு தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. பிரதம ஆசிரியர் நடேசய்யராக இருந்தாலும் , தொழிற் சங் கப் பணிகளுக்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் பத் திரிகை அச்சிடும் பொறுப்பை மீனாட்சி
அம்மையார் ஏற்றார் . பிரதம ஆசிரியரும் சொந்தக்காரருமாகிய கெளரவ நடேசயம் யருக் காக
அணி னா ரினி மனைவி ரீமதி கோ.ந.மீனாட்சி அம்மையாரால் அச்சிட்டுப் பிரசுரிக்கப்புடுகிறது என்ற குறிப்புடன் தேசபக்தன் தினசரியாக வெளியாகியது.
தேசபக்தன் பத்திரிகையில் மீனாட்சி அம்மையார் நிறைய எழுதினார். அய்யர் வெளியூர் சென்ற வேளையில் ஆசிரியத் தலையங்கத்தை அவரே எழுதினார். ‘ஸ்தீரி பக்கம் என்ற பகுதிக்கு அவரே பொறுப்பாக இருந்தார். 25-11-1929ம் திகதி தேசபக்தன் பத்திரிகையில் அவர் நடத்திய மகளிர்க்கான பகுதியில் 'பெண்களும் பத்திரிகைகளும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். “இலங்கையில் இந்தியர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த அநீதிகளுக்கு எதிராக போராடும் போராளிகளின் முன்
74
வரிசையில் திருமதி மீனாட்சி அம்மையாரைக் காணலாம்” என சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி எண் . எம் . பெரேரா குறிப்பிட்டுள்ளார். இந்தியர்களை ஆதரித்து அவர்களின் உரிமைக்காக 1930ம் ஆண்டு மேமாதம் 27ம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில் முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கோ.நடேசய்யர், ஜி.ஜி.பொன்னம்பலம், ஏ.அஸிஸ், ஐ.எக்ஸ்.பெரேரா ஆகியோருடன் மீனாட்சி அம்மையாரும் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தார். இதுபற்றி மறுநாள் வெளிவந்த வீரகேசரி பத்திரிகையில் செய்தி இடம்பெற்றுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் துன் பத் தைக் கண்டு, தோட்டத் துரையான வெள்ளையர் ஒருவர் அவர் களுக் காகக் குரல எழுப்பியதைக் கண்டு, அவரை நாடு கடத்த அரசாங்கம் முயற்சித்த பொழுது, அதற்கு எதிராக குரல் கொடுத்த இடதுசாரித் தலைவர் களுடன் இணைந்து கோ.நடேசய்யரும் அவரது துணைவியாரான மீனாட்சி அம்மாளும் குரல் கொடுத்தனர். கொழும்புக் காலிமுகத்திடலில் நடந்த கூட்டத்தில் மீனாட்சி அம்மாள் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தைச் சமசமாஜக் கட்சி ஒழுங்கு செய்தது. மீனாட்சி அம்மாள் எழுதுவதிலும் பேசுவதிலும் வல லவராக விளங் கியதோடு எதனையும் செயல்படுத்துவதிலும் தீவிரமாக இருந்துள்ளார். அச்சுக் கூடங்களில் ஆண்கள் செய்துவந்த
ஞானம் - மார்ச் 2004

அச்சுக் கோர் க் கும் பணிகளை பெண் களுக்குப் பயிற்றுவித்து தேசபக்தன் பத்திரிகையில் அச்சுக் கோப்பாளராக பெணி களைப் பணிபுரிய வைத்துள்ளார்.
மஹாகவி பாரதியா ரினி பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்ட மீனாட்சி அம்மாள், பாரதியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டினார்.
அது மாத்திரமன்றி “இந்தியர்
களது இலங்கை வாழ்க்கையின் பிரதான தலைப்புடன் இவரது நூல், "இலங்கை என்ற உபதலைப்புடன் 1940இல் வெளியாகி
நிலை மை” எண் ற
மந்திரிகளுக்கு எதிர்ப்பு"
யிருக்கிறது. இலங்கைச் சட்டசபை அங்கத்தினர் திரு கோ.நடேசய்யர்
அவர்கள் மனைவியார் திருமதி மீனாட்சி அம்மையார் எழுதிய பாடல்கள்” என்று முன்னட டை யிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. தீட்டின மரத்தில் கூர் பார்க்கிறீர்களா? வெறுவாய்க்கு அவல்போல் மெல்லுறீர் சேதியொன்று சொல்ல வேணுமிப்போ கட்டைக்கு உயிர் கொடுத்தால் போலே.
என்ற சாதாரண மக்களின் பேச்சுமொழியைத் தனது பாடல்களில் கையாள்கிறார் மீனாட்சி அம்மையார். மலையகத்தின் முதற்பெண்மணி என்ற பெருமைக்குரிய மீனாட்சி அம்மையாரை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தில் நினைவுகூரவேண்டியது மலையக மக்களின் கடமையாகும்.
പ്പില്ക്ക
(72ம் பக்கத்தின் தொடர்ச்சி)
தண்டனைக்குரிய ஒரு குற்றத்தைப் பெண் செய்யுமிடத்து, அதே போன்ற ஒரு குற்றத்துக்காக ஒர் ஆணுக்கு வழங்கப் படுவது போன்ற தண்டனையையே கூடுதல் குறைதல் இன்றி அவளும் பெறவேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. அதுபோன்றே அவளுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கும் தீங்குகளுக்கும் பிராயச்சித்தமாக ஆண் பெறுவது போன்ற பரிகாரமே அவளும் பெற வேண்டும்.
எனவே சகல விதமான உரிமைகளும் பெற்றவர்களாகக் கருதப்படும் முஸ்லிம் பெண்கள் உரிமையற்றவர்கள் எனக் கருதப்பட வேண்டிய அவசியமே இல்லை. பெண்மணிகளின் உயர்வுக்காக இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளையும், சட்ட திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் இன்றைய பெண்கள் எதிர்பார்க்கின்றனர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் தம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரம்புகளை கடந்து விடாது அடிப்படை களுக்குட்பட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் தனித்தன்மையை இழந்து விடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதும் சமுதாய நலன் விரும்பும் பெணகளின் எதிர்பார்ப்பு
ஞானம் - மார்ச் 2004 75

Page 40
ബഗുരബശ്
செங்கை ஆழியான் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த இலக்கிய படைப்பாளி. நாவல் களையும் சிறுகதைகளையும் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பவர். பல நூல்களின் தொகுப்பாசிரியர். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு என்னும் நுாலை எழுதியவர் . இந் நூல் முறையான ஆயப் வுநோக் கில அமையாதுவிடினும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை அறிவதற்கான அனைத்துப் பொக்கிஷங்களையும் தன்னகத்தே கொண்டது. செங்கை ஆழியான் பல இலக் கியக் கட்டுரைகளை எழுதியவர். அதுமட்டு மல்லாமல் புவியியல், வரலாறு தொடர் பான நுால் களையும் எழுதியவர். இவரது மரணங்கள் மலிந்த பூமி’ என்ற நாவல் இன வாதிகளின் கழுகுப்பார்வையால் நீதி மன்றம் வரை சென்றது. ஆனால் உண்மை எழுத் துக்காய் வெற்றி பெற ற வா’  ெச ங்'  ைக ஆழியானே. இளம் படைப் பாளிகளை நம்பிக்கையோடும் துணிவோடும் பாராட்டியும் அறிமுகப்படுத்தியும் வருபவர். எமது மண் சிரிக்கும்போதும் சரி அழும்போதும் சரி அவர் தனது பேனாவை மூடிபோட்டு முடக்கி விடவில்லை. அத்தகைய ஒருவரைத்
செ. சுதர்சன்
76
ശ്രൈബ് ബ്ര ബഗ്ഗ്ലൂറ
(ശര്
-பார்வையும் பதிவும் -
‘தெரிதல்' பத் திரிகை தனது பகிர்வுப் பகுதியில் ஜனரஞ் சக எழுதி தாளர் ” பட்டியலுக் குள் அடக்கியதை எழுத்துலகம் வன்மை யாகக் கண்டிக்கிறது. மண்ணை நேசிக்கும் அதற்காகவே தரம்மிக்க எழுத்துக்களைத் தரும் எழுத்தாளர் களை எழுதாமல் இருந்துவிட்டு ஜனரஞ்சக எழுத்தாளர்கள் என “லேபல் ஒட்டுவது சரிதானா?
பேராசிரியர் சி.மெளனகுருவின் மணிவிழா மலராக 'மெளனம்" என்ற நூல் வெளிவந்துள்ளது. கல்விமான், ஆய்வாளர், ஆக்க இலக்கியத் துறைகளில் ஓரளவு முயற்சி செய்தவர் எனப் பல்வேறு சிறப்புகள் இவருக்கு உள்ளன. மேடைக்கான 77 அளிக்கைகளை எழுதியும் நடித்தும் நெறியாள்கை செய்தும் உள்ள இவர் 10 நாடக நுால் களையும் 28 பல துறைசார் நுால் களையும் எழுதியவர். பல பத்தி எழுத்துக் களுக்குச் சொந்தக்காரர். இவரது மணிவிழா மலரான மெளனம் ஈழத்து அறிஞர்கள் பலரின் அரியபல கட்டுரைகளைத் தாங்கி வெளி வந்துள்ளது. இவர் மணிவிழாக் கொண்டாடுவதும் மலர் வெளியிடு வதும் பொருத்தமானதே. ஆனால், ஈழத்தில் உள்ள பெரியவர்கள் சிலர் ஒரு காலத்தில் மணிவிழாக் கொண்டாட்டங்களைக் கிண்டல் செய்தும் அதைக் கொண்டாடி யோரைக் கேலியாக நகைத்தும்
ஞானம் - மார்ச் 2004,
 
 
 
 
 

அதற்காய் வெளியிட்ட மலரை மனம் போனபோக்கில் விமர்சித்தும் வந்தனர். ஆனால் இன்று அவர்களே தமக்கு மணிவிழாக் கொண்டாடி மகிழ்வதும் மலர் வெளியிட்டுத் தமது பணியையும் புகழையும் உலகுக்கு அறிவித்து வருவதும் வேதனைக் குரியது. தனக்குத் தனக்கெண்டால் சுளகும் படக் குப் படக் கெண்டும்’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
ஈழத்தின் முதலாவது தமிழ்த் தெருக்கூத்து எது? என்ற புதிய சர்ச்சையொன்று உருவாகியுள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகக் கருத்தரங்கு மண்டபத்தில் க.ஆதவன் முன் வைத்த கருத்தே இதற்குக் காரணம். "ஈழத்தின் முதலாவது தெருக் கூத்து நான் இயக் கிய
'திருவிழா’தான். மாவை நித்தி யானந்தன் எழுதிய பிரதி இது. ஆனால் இப் போது அதை
மறைத்துவிட்டு எல்லோரும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் ‘மண்சுமந்த மேனியர்’ என்பதையே முதலாவது தெருக்கூத்தாகக் கொள்கின்றனர்.
ஏனோ தெரியவில்லை?” என்றார், ஆதவன். 'திருவிழாவா? மணி சுமந்தமேனியரா? எது ஈழத்தின்
முதலாவது தெருக்கூத்து? ஈழத்தில் உள்ள நாடக ஆய்வாளர்கள் "ஞானம்' சஞ்சிகையின் மூலம் இதற்குரிய தீர்வை முன்வைப்பார்கள் ஆயின் அது இலக்கிய உலகுக்குப் பெரும் பயன் அளிக்கும்.
மிகநீண்ட காலத்திற்குப் பிறகு வடமராட் சிக் கம்பன் கழகம் சேக்கிழார் விழாவை மாசி மாதம் முதல் வாரத்தில் வெகுசிறப்பாகக் கொணி டாடியது. சென் னைப் பல கலைக் கழகப் பேராசிரியர் அரங்கல் இராமலிங்கம், யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,
ாளர் .nார்ச் 2004
நடைபெற விருந்த
விரிவுரையாளர்கள் மாணவர்கள், கம்பவாரிதி இ.ஜெயராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தினர். பெருந்தொகையான பார்வையாளர்கள் கூடிய இவ்விழாவில் கருத்தரங்கம், பட்டிமன்றம், விவாத அரங்கு, சுழலும் சொற்போர் ஆகியன இலக்கியச் சுவையோடும் ஆயப் வுநிலைத் தன் மையோடும் நடைபெற்றன. நெல்லையம்பதி முருகன் ஆலய மண்டபத்தில் மூன்று தினங்கள் இவ் விழா இருதினங்கள் மட்டுமே நடைபெற்றது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழி க் குடா நாடு பூராவும் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலே மூன்றாவது நாள் விழா நிறுத்தப் பட்டமைக்குக் காரணமாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக Lu 6ð H?T L 35 இறுவட்டுவடிவில் திருவாசகம் தயாரிக் கப் பட்டு 18-02-2004 சிவா ராத் திரி தினத் தன் று வெளியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள 658 பாடல் களையும் திருத்தணி என். சுவாமிநாதன் பாடியுள்ளார். அனைத் துப் பாடல் களுக் கும் தெளிவான விளக்கம் தமிழிலே, எளிய உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. ஜி. யு.போப் பின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றள்ளது. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பதிக 9Ꭷ! [ - L - 6Ꮒ1 6ᏡᎠ 6ᏡᎢ எனர் பவற்றுடன் எந்தவொரு பாடலையும் விரைவாகத் தேடிப்பிடித்துப் படிக்கத் தேடுதல்’ என்ற பகுதியும் அமைந்துள்ளது. இவையனைத்தும் அடங்கிய இவ் இறுவட்டு இலக்கியக்காரரிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் இலக்கியம் 2004 என்ற இரண்டுநாள் விழா நடைபெற்றது.
~7“?

Page 41
விழாவில் பலர் விருதுவழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் மிகநீண்ட காலமாகக் கதைக்காமல் கோபம் சாதித்த எஸ்.பொ.வும் ஜீவாவும் கைகோர்த்துக் கதைத்தனராம்.
கலாநிதி செ.யோகராசா எழுதிய ‘இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் என்ற நூல் வாசகள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதிகாசத்தில் வரும் பெண் பாத்திரங்கள் நவீன இலக்கியங் களில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்ற இந்த ஆய்வுநூல் அழகானதும் அர்த்தம் செறிந்ததுமான முகப் போவியத்தைத் தாங்கி வெளி வந்துள்ளது.
அம்பிகை ஆனந் தகுமாரின் தமிழகத்தில் முருகவழிபாடு என்ற நூல் வெளியாகியுள்ளது. இது ஆதிகாலம் முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலவிய முருகவழிபாடு பற்றி ஆராய்கிறது. முருகவழிபாடு பற்றி ஆராயும் நூல் களில் இதுவும் சிறப்பிடம்பெறுகிறது.
‘எல்லா இனங்களும் இணைந்து அணி புகொள் வோம்’ என்ற வாசகத்தைத் தாங்கி வெளிவரும் சமாதானம் சஞ்சிகையின் 12வது இதழ் சிறப்பாக வெளிவந்துள்ளது. மருதூர் வாணரை ஆசிரியராகக் கொணி ட இச் ச ஞ சிகை யின் வெளியீட்டுவிழா மருதமுனை மத்தியகல்லூரி மணி டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தானா. விஷ்ணுவின் நினைவுள் மீள்தல்' என்ற கவிதைத் தொகுதி இவ் ஆணி டின் ஆரம் பத்தில் வெளியாகிய கவிதைத் தொகுதிகளில் சிறப் பிடம் பெறுகிறது. புதுக் கவிதையின் மூலம் சரளமாகச் சமகாலப் பிரச்சினைகளை கவிஞர் பேசுவது சிறப்பிற்குரியதே.
78
அமுதுப் புலவருக்கு 'செவாலியர் விருது கிடைத்தமையையிட்டு ஈழத்து இலக்கிய உலகு பெருமையடைகிறது. இலங்கையில் இவ்விருதைப் பெறும் மூன்றாவது நபர் இவராவார் . இதற்குமுன்னர் கொழும்பைச் சேர்ந்த சிற்றம்பலம் கார்டினர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாத்ராவின் கவிதைக்களத்தில் கதவுகள் பூட்டுகள் சாவிகள் (மா.காளிதாஸ் - முதற்பரிசு), "பாடங்கள் இடறும் முற்றவெளி (பஹமா ஜஹான் இரண்டாம் பரிசு), "வாழ்வை உணர்தல் (பிரேமினி சபாரத்தினம் - மூன்றாம் பரிசு) ஆகியன முதன்மூன்று பரிசுக் குரிய கவிதைகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா 2004 ‘கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள்’ என்ற மகுட வாசகத்தைத் தாங்கி வெகுசிறப்பாக நடைபெற்றது. கன்பரா நகரில் நடைபெற்ற இவ்விழாவில் “ஞானம்' அவுஸ்திரேலியா எழுத்தாளர் விழா சிறப்பிதழும் வெளியிடப்பட்டது. ஞானம் சிறப் பிதழுக் கான அறிமுகவுரையை திருமதி யோகேஸ் கணேசலிங் கம் அவர் களும் , பதிலுரையை "ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரனும் வழங்கினர். விழாவில் கலந்து கொணி ட அனைவருக்கும் ஞானம் சிறப்பிதழ் இலவசமாக வழங்கப் பட்டது. பெற்றோர் பிள்ளைகளிடையே தலைமுறை இடைவெளி குறையுமா?, ‘புலம் பெயர்ந்த தமிழர்களும் தலைமுறை இடைவெளிதி தாக் கங் களும் ’, ‘இலங்கைத் தமிழர்பற்றிய ஆவணச் சேர்ப்பின் அவசியம், “எங்கு ஆரம்பிப்பது என்ன செய்யவேண்டும், "புகுந்த வீட்டில்
நானம் - மார்ச் 2004

பிறந்த வீட்டைப் புகழலாமா?, இணையத்தில் தமிழ் இலக்கியச் சேமிப்பு முயற்சிகள்’, ‘கலை இலக் கியமும் g9 60) 600T uU Li
பக்கங்களும் ஆகிய தலைப்புகளில்
கருத்தரங்குகள் நடைபெற்றன.
இவ் விழாவில் நடைபெற்ற கண்காட்சி தமிழர் அல்லாதோரையும் கவர்ந்தது. “ஞானம் ஆர்ட்ஸ்' ஞானம் அவர்களின் ஓவியங்கள், கன்பரா தமிழ் மாணவர்களின் ஓவியங்கள், புலம்பெயர்ந்தவர்களின் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள் முதலியன கண்காட்சியை அலங்கரித்தன.
எழுதிய நூல்கள் சிறப்பிடம்பெற்றன. இவ் அரங்குக்கு “ஞானம்’ ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமை வகித்தார். மட்டக்களப்புத் தமிழகம் (விசிகர் ), "வண்ணாத்திக்குளம் (என்.எஸ்.நடேசன்), இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் - ஆரம்பம் பற்றியதோர் ஆய்வு (முருகள் குணசிங்கம்), "அப்பா' (எஸ்.தில்லை நடராஜா), மத்தியகால இலங்கைத் தமிழர் (ஆங்கில நூல்) ஆகிய நூல்கள் அறிமுகஞ் செய்யப்பட்டன.
பவளவிழாக் காணும் கவிஞர் அம்பியை கெளரவிக்கும் முகமாக பாராட்டு நிகழ்வும் நடபெற்றது. இதில் அம்பி வாழ்வும் பணியும் என்ற நூல் வெளியிடப்பட்டது. அத்துடன் கவிஞர் அம்பி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து கன்பராக் கானாமிருத இசைப்பள்ளி மாணவர்களின் இசையரங்கும், இன்னிசையரங்கு, நடன அரங்கு என்பனவும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவை கடந்த நான்கு வருடங்களாக கோடை விடுமுறையில் கோலாகலமாகக் கொண்டாடிவரும்
எகானம் - மார்ச் 2004
விழா அமைப்பாளர் லெமுருகபூபதி பாராட்டுக்குரியவர். புலம்பெயர் நாடுகளில் தமிழ் வளர் நீக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான அவரின் பணி நன்குதொடர இலக்கிய உலகு விரும்புகிறது.
இவ்விழாவிற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஞானம்' ஆசிரியரை அங்கிருக்கும் 'இன்பத்தமிழ் வானொலி, சிகரம்", தொலைக் காட்சி, அவுஸ் திரேலிய ஒலிபரப் புக் கூட்டுத்தாபனம்' ஆகியன செவ்வி எடுத்தன. செவ்விகளின்போது "புலம் பெயர்ந்திருக்கும் ஈழத் தமிழர்களை இலக்கியத்தின் மூலம் ஒன்றி ணைக்கவும் அவர்தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் அதன் மூலம் தமிழ் இலக்கியத்தை வளர்த்துச் செல்லவும், ஞானம்' சஞ்சிகை பணியாற்றும்” எனக் குறிப்பிட்டார். இவற்றை அவுஸ்திரேலியத் தகவல் தொடர்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் சு.சுசீந்திரராஜா எழுதிய "மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள், தமிழினமே தாயகமே ஆகிய இரு நூல்கள் வெளியாகி யுள்ளன. இவ் விரு நூல்களும் நூலாசிரியரின் எழுத்தாற்றலைப் புலப்படுத்துகின்றன.
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் குலாம் ரசூல் அவர்கள் 13-2-2004 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தமை இஸ்லாமிய இலக்கிய உலகுக்கும் ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும் . இவர் முஸ்லிம் படைப் பரிலக் கசியத் துறையில முன்னோடியான முயற்சிகள் மேற்கொண்ட சிலரில் ஒருவராகப் பல ரால் கருதப் படுகிறார். 82வயதுவரை இலக்கியப் பணியாற்றிய இவரை இலக்கிய உலகு மிகவும் நன்றியோடு நினைவுகூருகிறது.

Page 42
Rரலிப் பற்று இறுகி வைரம் பாய்ந்து கிடந்த வெறுந்தரையில் மண்வெட்டியால் ஓங்கி ஓங்கிக் கொத்தினான் சிவராசனி . மண்ணுக்கும் மணி வெட்டிக்கும் இடையிலான போராட்டத்தில் ‘னங்’ ‘ணங்' என்று மோதி எழுந்த ஒலி பூமித்தாயின் மன வைரக்கியத்தைப் பறைசாற்றுவது போன்று இருந்தது. வெகு சிரமப்பட்டு வெட்டிப்பிளந்த மண் கட்டிகளைத் தட்டிப் பரவினான் சிவராசன். நெற்றியில் முடிச்சுக் கட்டியிருந்த வெயர் வையைச் சுட்டுவிரலால் வழித்துவிடுவதும் அவனுக் குத் தொடர்ச்சியான கடமையாக இருந்தது. மிகுந்த பிரயத் தனத் தோடு மணி களை வெட்டுவதும், சற்று ஓய்வெடுப் பதுமாகக் கண்ணும் கருத்துமாகத் தனது கடமையில் மூழ்கியிருந்தவன் உற்சாகமிழந்தவனாய் அடிக்கடி தலையை நிமிர்த்திப் பாதையைப் பார்ப்பதில் கவனம் செலுத்தினான். அவனின் ஆசை மனைவி மல்லிகா வரும்நேரம் கொஞ்சம் தாமதமாகி விட்டது. போதைமருந்து போட்ட வனுக்கு ஏற்படும் சுறுசுறுப்புப்போல இனி அவளைக் கண்டால் தான் அவனுக்கு இயக்கமே ஏற்படும். அப்படியான பாசமும் பற்றுதலும்
፪በ
அவனி
மீதும் வைத்ததில்லை. சிவராசனுக்கு எத்தனையோ கலியாணப் பேச்சுக்கள் பேசப்பட்டது உண்மைதான். ஆனால் எல் லாமே காரணம் சொல் ல முடியாதபடி அப்படியே இடையில்
வேறு யார்
நின்றுவிட்டன.
“சிவராசனா! அவன் ஒரு மாப்பிளையே? அவனுக்குக் கட்டிக் கொடுக் கிறதைவிடப் பேசாமல் பிள்ளையை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளிவிடலாம்".
பெணி கேட் டுப் போகும்
பெற்றோர்களிடம் இப் படியான கருத்தும் இருந்தது. சிவராசனைக் கணவனாக ஏற்றுக் குடும் பம் நடத்துவதற்குரிய மனப்பக் குவம் எந்தப் பெண்களுக்கும் இருக்க வில்லை என்பதும் அந்தரங்கமான உண்மையாக இருந்தது.
எந்த நேரமும் இரைமீட்கும் ஆடு மாடு மாதிரி வாய்க்குள் வெத்திலை பாக்கை குதப்பியபடி கடைவாய் வழிய வடியும் வெற்றிலைச் சாறை துடைத்துக்கொண்டு காவிப் பற்கள் தெரியும் படியாக அசடுபோலச் சிரித்துக்கொண்டு நிற்கும் சிவராசனை ஒரு வேடிக்கை மனிதனாகததான் பெண்கள் கருதினார்கள.
படங்களில் வரும் கதா நாயகனைப்போல் கட்டான உடலும் களையான முகமும கொணர் ட
41. TKxT fin - (nri Ai ?shsh4
 

நவநாகரிகமான தோற்றம் தான் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு ஆணி மகனுக் குரிய இலட் சணங்களோடு இங்கிதம் தெரிந்த வனாகவாவது இருக்கவேண்டுமே. அதுகூட இல் லாமல் எடுப் பார் கைப்பிள்ளையாக எதற்குச் சிரிப்பது? எதற்கு அழுவது? எப்போது எப்படிப் பேசுவது? எண் று எதுவுமே தெரியாதவனாய். இப்படியான சிவராசனை அந்த ஊரில் உள்ள பெணி கள் காதலனாகவோ கணவனாகவோ ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத் தினை அடைநீ திருக்கவில்லை.
மல் லிகா அழகி என்று சொ ல ல முடியா வரி ட் டா லுமி துடுக்குப் பேச்சும் கெட்டித்தனமும் கொண்டவள். அவளின் அதிஷ்டக் குறைவு வறுமையான குடும்பத்தில் பிறந்ததுதான்.
"மல்லிகா! அவன் சிவராசன் மாடுமாதிரி பாடுபடக் கூடியவன். கொஞ்சம் கெட்டித்தனம் குறைவு. வேறு என்ன குறை அவனுக்கு? நீ அவனைச் செய்தால் ஒரு மாதிரித் திருத்தி எடுத்துப்போடுவாய்” - அம்மா இப்படி ஆலோசனை கூறினாள்.
“பிள்ளை மல்லிகா சிவராசன் நல்ல பெடியன். குடியா? வெறியா? ஒண்டுமில்லை. உன்னை நல்லா வச்சிருப்பன். நீ நல்லாயிருக்கலாம் பிள்ளை. அவனை வேண்டாம் எண்டு சொல் லா தை” அப் பாவின் வேண்டுகோள் இப்படியிருந்தது.
குடும்பநிலை ஒரு காரணமாக இருந்தாலும் சிவராசனிடம் ஏற்பட்ட ஒருவகை அனுதாபமும் அவளைத் திருமணத்திற் குச் சம் மதிக்க வைத்தது.
cL Tzin - Institi prì4
“மணம் வருடங்கள் பறந்துவிட்டன. இன்னமும் ஏன் அது இல்லை?”
அவன் மனதுக்குள்ளே தினமும் கேட்கும் கேள்வி இது. மல்லிகா! நமக்குக் குழந்தை பிறக்காதா? என்று நேரடியாகக் கேட்டுவிட வேண்டிய
முடித் து இரணர் டு
நியாயமான கேளிர் விதானே. இதற்குப் போய் வளைந்து. நெளிந்து. நகத்தைக் கடித்துக் கொண்டு திரும்பத்திரும்ப ஏன்? ஏன்? இல்ல. சொல்லன். அசடுபோல அவன் கேட்கும்போது மல் லிகா விற்குக் கோபமாக இருக்கும்.
எது இல்லை? கேட் கிறதை நேரடியாகக் கேட்கலாம்தானே. அவன் கேட்பது என்னவென்று அவனுக்குத் தெரியும். ஆனால் தெரியாதவள் போலக் கேட்பாள்.
எனக்கு ஒரு மகன் பெத்துத் தரமாட்டியோ. அவன் தொலை தூரத்தைப் பார்த்தபடியே அவளிடம் கேட்டபோது மல்லிகா மகிழ்ச்சி யடைந்தாள்.
· ጽ†

Page 43
மண்வெட்டியை இலாவகமாகப் பிடித்துக்கொண்டு ஓங்கிக் கொத்தும் போது ஏறி இறங்கும் மார்பு, திரட்சி பொருத்திய புயங்கள், இறுகிப் போன உடலும் அதன் உறுதியும் மினுமினுப்பைக் காட்டுவது போல ஊற்றாய்ப் பெருக்கெடுத்து வரும் வியர் வைத் துளிகள் நிலத்தில்
விழும்போது அந்த அழகில் அடையும்:
பெருமிதத்தைப்போல சிவராசனின்
இந்தக் கேள்வியிலும் மல்லிகா
திருப்தியடைந்தாள்.
"இப் ப என்ன அவசரம்? பொறுப்பான ஒரு அப்பாவாக மாறும் வரைக் கும் நீங்கள் தான் எனக்குப்பிள்ளை"
மல்லிகா தொங்கற் சீலையை எடுத்து அவனது நெற்றியையும் முகத்தையும் அழுத்தித் துடைத்துக் கொணி டே சொல் லுவதைக் குழந்தைப்பிள்ளைபோன்று அவனும் ஆர்வத்தோடு கேட்பான். *
“இஞ்சை பாருங்கோ, நேரமும் கண்டபடி வெத்திலைத் பாக்குப்போடாதையுங்கோ, பல்லுக காவியேறிப்போச்சு”.
"இதென்னப்பா "ரவுடியள் மாதிரி சாரத்தை உசத்திக்கட்டிக்கொண்டு. பணிச்சுவிடுங்கோ”
சிவராசனின் ஒவ்வொரு செயலையும் அவதானித்துப் பிடித்தது, பிடிக் காதது, பொருத்தமானது, பொருத்தமற்றது எது என்பதைச் சுட்டிக்காட்டித் தனக்கு ஏற்றவனாக அவனை மாற்றுவதற்குப் பெருமுயற்சி எடுத்துப் பயிற்சி கொடுத்து இரண்டு வருடங்களுக்குள் சிவராசனை முழுமையாகவே மாற்றிவிட்டாள்.
82
எந்த
%3
*
"மல் லிகா சிவராசனை எண்னமாதிரித் திருத்தமாக்கிப் போட்டாள். இப்ப அவன் 'மைனர் மாப்பிள்ளை மாதிரியெல்லோ”
ஊரில் உள்ள குமரிகள் தொடக்கம் கிழ விகள் வரை இப்படிச்சொல்லும்போது மல்லிகாவின் முக மலர்ச்சியில் புதிய களை தெரியும். சரியாகப் பத்துமணிக்கு மல் லிகா வயலுக்குப் போவாள். யானைச்சோடாப்போத்தல் நிறைய தேநீரும் சாப்பிடுவதற்கு ரொட்டி, பிட்டு, பாண் என ஏதாவது சாப்பாடு நாளுக்கொன் றாயப் ஒழுங்கு படுத்திக்கொள்வாள். - அவள் செல்லமாக வளர்க்கும் இலட்சுமி இன்னும் ஒரு மாதத்தில் கன்று தரப்போகும் நிறைவோடு கட்டடியில் சுற்றிக்கொண்டு நிற்கும். அதிகாலை யில் சிவராசன் மண்வெட்டியைத் தூக்கும்போது இலட்சுமியின் முகத்தைத் தடவியபடி முன்னால் வழியனுப்ப வந்த மல்லிகாவை ஒரு பார்வை பார்ப்பான். “சரி நான் வாறன”. கடைவாய்க்குள் அரும் பிக் கிடக் குமி சிரிப் பை மறைத்துக்கொண்டு போய்விடுவான். மல்லிகா எதுவும் விளங்காதவள் போல நடிப்பாள்.
“இலட்சுமிக் குக் கிடைத்த பாக்கியம்கூட என்ர மல்லிகாவிற்குக் கிடைக் கவில் லையே” என ற
y
-ஏக்கத்தோடு அவன் தன்னைப்
பார் ப் பதை அவள் உணர் நீ திருக்கிறாள்.
மல்லிகா வயலுக்குப்போவதற்கு ஆயத் தமான தை அறிந் தோ என்னமோ இலட்சுமி பெருங்குரல்
எடுத்துக் கத்தியது.
ஞானம் - மார்ச் 2004
 

"உங்களின் குழந்தையைச் சுமநீ திருநீ தாலி நாணி சந்தோசமாக வாழ்ந்திருப்பேன். அது பாவத்தின் சின்னம் என்பதால் நாம் அழிந்து போவது தானி பரிகாரமி. அதற்காகக் கோழையைப்போல சாக மனம் துணியவில்லை.
“இலச் சு! எனி னடி? ஏன் அழுகிறாய்? கவனமாய் இரு, உனக்கு நல்ல பச்சைப்புல்லுக்
கொண்டுவாறன்” சொல்லிக்கொண்டே இலட்சுமியின் நிறைந்த வயிற்றைத்
தடவியபோது அவளுக்கு ஒரு மெல்லிய அதிர்வு ஏற்பட்ட பிரமை. இலச் சுமிக்குப் புல் லுக் கொண்டு வருவதற்காக யூரியா உரப்பசளை பாக்கைச் சுருட்டி எடுத்து ஒரு பிரம் புக் கூடையில் சாப் பாடு, தேநீருடன் சேர்த்துப் பத்திரப் படுத்தினாள்.
வயலுக் குப் போகும் அவ்வளவாகக் குடிசனம் இல்லாத பகுதி. ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தபடி இருக்கும் அம்மன் கோயிலின் பின் வீதியால் வரும்போது சற்றுத் தொலைவில் இருக்கும் இராணுவ முகாமைக் கடந்து வரவேண்டும். மனதிற்குள் ஒரு பயம் ஏற்படும். துணிந்தவளாக நடப்பாள் மல்லிகா. வயலுக்கும் கோயிலுக்கும் இடையில் முள்ளு மரங்களும் பனை வடலிகளுமாக அடர்ந்து கிடக்கும் பெருவெளியில் வருவதறி குக் தயக்கமாக இருக்கும். வருவோர் போவோரைப் பின்பற்றி விரைவாக நடப்பாள்.
is 60) g5
ஞானம் - மார்ச் 2004
குரல் கொடுப்பாள். காத்திருந்தவன்போல ஆவலோடு
கண்திறந்தா.”
இராணுவத்தின் பார்வை, பேச்சு,
சிரிப்பு அனைத்துக்கும் முகம் கொடுத்து விரைவாக நடந்து பழகிவிட்டாள்.
சூரியன் g). L J 2 -uj Ud
செல்லும்போது வெயில் உடலில் சுளிர் என்று சுடுவதால் வெயர்வை முத்துக்கள் முதுகுப்புறமாகவும், வயிற்றுப்பக்கமாகவும் உருண்டுவிழ அடிக்கடி, சாரத்தை அவிழ்த்துக் கட்டுவதும், முகத்தைத் துடைப் பதுமாக நிற்கும் கணவனைப்
பார்ப்பாள். மனம் கரைந்துவிடும்.
அவள் அதற்குக்
6. y என்னங்க! வாங்க!!
தாயைத் தேடிவரும் குழந்தையின் வாஞ்சையுடன் அவளிடம் வருவான்.
"இந்த முறை வயல் முழுக்க வெங்காயம் நடப்போறன். கடவுள் இடையில் பேச்சை நிறுத்தி காவிப்பற்கள் தெரியச்
சிரிப்பான்.
“இந்தாருங்கோ, சாப்பிடுங்கோ. கண்திறந்தாப் பிறகு பாப்பம்”.
“உனக்கு என்மீது நம்பிக்கை யில்லைத்தானே!” அவன் முகம் வாடிப்போகும்.
"அப்படியில்லை. நினைச்சதைப் போல நடக்காவிட்டால் ஏமாற்றமாய் இருக்கும். அதுதான்.”
“இல்லை, நீதான் என்னை ஏமாற்றுறாய். நான் அப்படியில்லை. உனக்காக உயிரைக் கொடுத்தும் எதையும் செய்வன் . இந்தமுறை உனக்கு கழுத்துக்கு ஒரு அழகான கல் அட்டியல், கைக்கு இரண்டுசோடி காப்பு செய்துதருவதென்ற பிடிவாதத் தோடு பாடுபடுகிறன் . பாரன்”
83

Page 44
சிவராசனின் குழந்தைத் தனமான அன்பில் அவள் உறைந்துபோனாள். "வெயில் கொழுதி துது கெதியாய்க் கொத்துங்கோ. போவம்" “போறதா. நான் நாளைக்குப் பாத்தி கட்ட வரச்சொல்லிப்போட்டன். இவ்வளவும் கொத்திமுடிக்க வேணும். நான் வருவதற்கு நேரமாகும். நீ போ” சொல்லிவிட் டு அவன் தனது வேலையில் மும்முரமாய் ஈடுபட்டான். வயலின் வரம்பிலே பசுமையாக வளர்ந்துகிடந்த அறுகம் புல்லை அறுத்து ஒரு பக்கமாகக் குவித்து 'பாக்கில் திணித்தாள்.'
“நான் போறன். கெதியாய் வாருங்கோ.” மல்லிகா போய்விட்டாள். * 9ị Lô tD II தாயே! இந்த முறையாவது கண் திறந்து பார் . வெங்காயம் நல்ல விளைச்சலைத்
தந்தால் நல்லதொரு பொங்கலும்
அபிசேகமும் வைப்பணி. அம்மனை அவனர் LD 60T LD T 5J வேணி டிக்
கொண்டபோது, அடுத்தவருஷம் இதே
நாள் வீட்டில் குழந்தை அழும் சத்தமும் கேட்கவேண்டும் என்ற வேண்டுதலையும் துணையாகச்
சேர்த்துக்கொண்டான். அம்மனுக்குக்
கொடியேறித் திருவிழா நடை பெறுவதற்கு இன்னமும் பத்துநாள் இருக்கிறது. அடுத்த வருடத் திருவிழாவிற்கு கையில் ஒரு குழந்தையும், கழுத்தில் அட்டியலுங் கிடைப்பதற்காகக் கொடியேற்றம் தொடங்கிப் பத்து நாட்களும் விரதமிருப்பதாக வேண்டுதல் செய்தான்.
இரண்டு நாட்களாக மல்லிகாவின் போக்கில் திடீர் மாறுதல் தென்பட்டது. ஆயிரம் கேள் விகள் கேட்டு
84
சிவராசனர்
அடிக்கொரு கட்டளை பிறப்பிக்கும் மல் லிகா உற்சாகமிழந்தவளாய் ஏனோ தானோவென்று இயங்கியதைப் பார் க் க அவனால் பொறுக் க
முடியவில்லை.
“மல் லி! எனக் கு மகனி பெத்துத் தரப் போறியா?” வழமை
போலவே அவள் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு கேட்டான். அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமின்றி
"அவனின் கையை விலக்கியவாறு
மெளனமாகத் தூரத்தை வெறித்துப் பார்த்தாள்.
*மல் லி! உடம் புக் கு முடியல்லையா? ஆஸ்பத்திரிக்குப் போவமா? எழும்பு. வா போவம்"
அவள் அதற்கும் சம்மதிக்கவில்லை.
மல்லிகாவின் மாற்றத்திற்கான காரணத் தை அறிய முடியாது தவித்தான் சிவராசன்.
மல்லிகாவிற்குப் பொல்லாத வருத்தம் ஏதாவது வந்துவிட்டதோ? அப் படியானால் எண் னைத் தனியவிட்டுப் போட்டு அவள் செத்துப்போய் விடுவாளோ? எதை எதையோ கற்பனை செய் து ஏங்கினான்.
விரதமிருந்த பயனோ என்னவோ வெங்காயம் பச்சைச் சேலையை விரித்துவிட்டால்போல பசுமையாகச் செழித்துக் கிடந்தது. சிவராசன் அதிகாலையிலேயே வயலுக்குள் போ யப் விடுவான் . வெங் காயப் பாத்திக்குள் வளர்ந்துகிடக்கும் களைகளைப் பிடுங்கித் தண்ணிர் இறைத்து அதன் வளர்ச்சியில் அவன் காணும் இன்பம் தனியானது.
ஞானம் - மார்ச் 2004

“வாங்கோ! சாப்பிடுங்கோ !” மல் லிகா அழைத்த குரலுக்குச் செவிகொடுத்து “வாறன்! வாறன்!”
என்றபடி அவளருகே வந்தான்.
மல் லிகா முன்னரைப் போல கலகலப் பற்றவளாகச் சோர்ந்து
போனதைக் கவனித்தாலும் அதனைப் : பெரிது படுத்திக் கேட்கும் அளவுக்கு
நேரமில் லாத காரணத் தினால்
சிவராசனின் சிந்தனைவேறு பக்கம்
திசை திரும்பியிருந்தது. சிவராசன் மிகுந்த பசியோடு ஆசாப் பிடத் தொடங்கினான். மல் லிகா வாயைப் பொத்தியபடி தூரத்தே எழுந்து ஓடினாள்.
சத்தியா! சாப்பிட்ட கையோடு ஓடிவந்து அவளின் தலையைப் பிடித்தான். மனதிற்குள் இன்ப அலை எழுந் து ஆர் ப் பரிப்பதுபோல உணர் நீ தான் . முகமெங் கும் வெயர்வையரும்பி, துவண்டுபோன மல்லிகாவை மார்போடு அணைத்தான். "கொஞ சநாளாய் நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். மனசுக்குள்ள எவ்வளவு ஆசைகளை அடக்கி வைச்சிருக்கிறன். ஏனடி கள்ளி எனக்குச் சொல்லக்கூடாதா?” அவளின் கன்னத்தை ஆசையோடு கிள்ளினான். "நீ இங்கெல்லாம் வரக்கூடாது. வா வீட்டுக்குப்போவம்.” நிறைமாதக் கர்ப்பிணியை கவனமாகப் பரிடித துக் கொள் வது போலப் பக்குவமாக அணைத்துக்கொண்டான். "கவனமாக இருக்கவேணி டும் . கண்டதெல்லாம் சாப்பிடக்கூடாது. இனிமே ஒரு வேலையும் செய்யக் கூடாது நானே எல்லாம்.”
“கொஞ்சம் நிறுத்துங்கோ போதும் . விசராய் வருகு து”
ZL TCxian - indi di ?shsh4
த ண் னைத் தானே படுத்திக்கொண்டான்.
கடுமையும் அழுத்தமும் மல்லிகாவின் குரலில் வெளிப்பட்டது.
இப்படியான நேரத்தில் எல்லாமே வெறுப்பாக இருக்குமோ எனத் சமாதானப்
மல லிகா வின் வயிற் றிலி மூன்றுமாதக் குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பதாகவும் அவள் கவனமாக இருக்கவேண்டும் எனவும்,
வைத்திய ஆலோசனை கூறப பட்டிருந்தது.
மல்லிகாவின் மனதில் ஒரே போராட்டம். தன் அப்பாவித்தனமான கணவனின் கொள்ளை ஆசை குழந்தை மேல் இருக்க அவள் தன்
வயிற்றில் வளரும் குழந்தையை
அழிப்பதா? உருவாக்குவதா என்று குழம்பினாள்.
- அன்று அவள் கணவனுக்குச் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு புல்லுச் சுமையோடு அறிவிடு திரும் பிக் கொண்டிருந்தவேளை, பாதையில் சன நடமாட் டமும் இல் லாமல் இருந்தது. விரைவாக நடந்தபோது பின்புறமாக யாரோ அவள் இடையில் கை யை வைத் து இழுத்ததை உணர்ந்து திரும்பினாள்.
மதுபோதையில் நின்ற அவன் அவளைத் தள்ளி தான் காட்டும் இடத்திற்கு நடக்கும்படி சைகை செய்தான். தெரியாதவள்போல அவள் திரும்பி நடந்தபோது கனத்தில் 'பளார் என விழந்த அறையில் நிலை குலைந்தாள். அதன் பின்னர் நடந்தது எதுவுமே அவளுக்குத் தெரியாது. அழகான பூஞ் சோலைக் குள் அத்துமீறிப் புகுந்து நாச மாக் கியதைப் போல மல் லிகா
85

Page 45
ஆகிப்போனது யாருக்கும் தெரியாது. ஆனால் அவள் உள்ளே கனன்றாள். நாடி நரம்புகள் புடைத்துக்கொண்டு ஏற்படும் அசுர வெறியை அடக்க முடியாது சிரமப்பட்டாள்.
நீணட நாட்களாகச் சிந்தித்து இறுதியாகத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
அன்று வெள்ளிக் கிழமை, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டுக் கோயிலுக்குப் புறப்பட்டான் சிவராசா.
"மல்லி! இன்று நான் சாமியிடம் ஆண்குழந்தையா, பெண்குழந்தையா
பிறக்கும் என்று கேட்டுவரப்போறன்.
அப்படியே நடக்கும் பார்” கன்னத்தில் தட்டிவிட்டுப் போனான். அவன்
போவதையே பார்த்துக் கொண்டிருந்த
மல் லிகாவின் கண்ணிர் விழுந்தன.
சிவராசன் ஐயரிடம் பூக்கட்டிப் பூசையில் வைக்கச் சொன்னான்.
கணி களிலிருந்து
ஐயர் பூசை முடிந்து அவனிடம்
இரண்டு பூ முடிச்சுக்களை நீட்டினார். "ஐயா, நீங்களே எடுங்கோ’ சிவராசன் கண்களை மூடிக்கொண்டே தேவாரம் பாடியபடியே நின்றான்.
*சிவராசா! உனக்கு வெற்றி. இதோ வெள்ளைப்பூ வந்திருக்கு” ஐயர் தான் எடுத்துப் பிரித்த பூவை அவனிடம் கொடுத்தார். ,
இரண்டு கையாலும் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான். மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு ஒட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தான்.
“மல் லி! மல் லி நீ ஆணி குழந்தைதான் பெத்துத் தரப்போறாய். சாமி சொல்லிப்போட்டுது”.
8s
முத்துக்கள் திரண்டு
அவன் தூரத்தில் வரும்போதே உரத்த சத்தமிட்டுச் சொல்லியபடி
ஓடிவந்தான்.
வீட்டுக் கதவு அகலத்திறந்து
கிடந்தது.
மல் லிகா இருப்பதற்கான
அறிகுறியே இல்லை. அவனைப் பயம் பற்றிக்கொள்ள குசினி, கிணறு, சாமியறையென ஒவ்வொரு இடமாக ஒடியோடித் தேடினான்.
"மல்லிகா! மல்லிகா! எனக்குச்
சொல்லாமல் எங்கே போயிருப்பாள்?”
வாய் விட் டு முணுமுணுத் தபடி படுக்கைப் பக்கமாகச் சென்றான். பாயில் தாலிக்கொடியுடன் கடிதம்
ஒன்று கிடந்தது.
“உங்களின் குழந்தையைச் சுமந்திருந்தால் நான் சந்தோசமாக வாழ்ந்திருப்பேன். அது பாவத்தின் சின்னம் என்பதால் நாம் அழிந்து போவதுதான் பரிகாரம். அதற்காகக் கோழையைப் போல சாக மனம் துணியவில்லை. பழிக்குப்பழி வாங்கி வீரப்பெண்ணாக மரணிப்பதற்காக நான் பயணப்படுகிறேன். மறுபிறவி ஒன்றிருந்தால் மறுபடியும் நானே உங்கள் மனைவியாக வருவதற்கு ஆசைப் படுகிறேன். என் னைத் தேடவேண்டாம்”.
பேரிடி தலையில் விழுந்த அதிர்ச்சியில் சிவராசன் அசைவாட்ட மின்றியிருந்தான். மல் லிகாவின் போக்கில் மாற்றம் தெரிந்த காரணம் புரிந்தபோது அவளின் அப்பழுக்கற்ற சிந்தனையும் செயலும் இலட்சியத்தை நோக்கிய பயணத்துக்கு அவள் பொருத்தமானவனள் என்ற திருப்தியும் இனம்புரியாத வேதனையும் அவனின் நெஞ்சத்தை நெருடின.
^ £xada - LA rrrio di " offin/o

മീബ്Zല്ല/ഗ്മഗ്ദീബ് ശ്രമ മമZമമല്ക്ക് ക്രമീzZ്
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்துவருகின்ற ஒரு நிலைமை பெரும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாலியல் ரீதியான இம்சைகள் வல்லுறவுகளின் அதிகரிப்பு அதிர்ச்சி யளிப்பவையாக இருக்கின்றன. தினமும் பத்திரிகைகளில், இவ்வகையில் ஏதேனும் ஒரு சம்பவத்தைப் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு வருகின்றது. இந்த அநியாயத்திற்கு தொட்டிலில் நிர்ச்சலன மாகத் தூங்கும் பச்சிளம் பாலகி முதற் கொண்டு, அறுபது பராயம் கடந்த மூதாட்டிகள் வரை ஆளாகியிருக்கின்ற தையும் பார்க்க முடிகின்றது.
பத்திரிகைகளில் இடம் பெறுபவை ஒருசில சம்பவங்கள்தான். பிறர் கண் களுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப் பட்டுவிடுகின்ற அல்லது அலட்சியப் படுத்தப்படுகின்ற வல்லுறவுச் சம்பவங்கள் பலவாக இருக்கக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது.
இவ்வுலக வாழ்வின் ஆதாரம் ஆணும், பெண்ணும். இவர்கள் இணைந்து ஒன்று பட்டு, வாழ்வதினாலேயே உலகம் நிலைத்திருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் எனக் கொள்வதால் “அறிவிலோங்கி வையம் தழைகசூமாம்” என்றார் புதுமைக்கவி பாரதி. “சாதி ஒன்றுதான்.
ஆயின் ஒருபுறம் மகளிர் தத்தம் துறைகளில் பிரகாசிக்க முற்படுகின்றன ராயினும், மறுபுறம் அவர்தம் மனித உரிமைகள் மீறப்பட்டு, வன்முறைகள், இம்சைகள் தலைதூக்கி, அவர்கள் அகோரமான அனுபவங்களுக்கும், முடிவுகளுக்கும் ஆளாகும் அவலம் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாகச் சொல்வதானால், குறிப்பிட்ட ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவம் நடைபெற்று, அதுகுறித்த அதிருப்திகளும், கண்டனங்களும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டு பிடித்துத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்ற ஒருசில தினங்களுக்குள், அல்லது வாரங்களுக்குள் அத்தகைய பாரதூரமான சம்பவங்கள் மேலும் இடம் பெறுவதை அவதானிக்கும்போது, நாட்டின் சட்டத் தையும் ஒழுங்கையும் குறித்து தீவிர விசனம் செய்ய வேண்டி இருக்கிறது.
“நடுராத்திரியிலும் ஒரு பெண் வீதியில் சுதந்திரமாக நடந்து போகக்கூடிய ஒரு சூழல் இருக்குமாயின், அதுவே ஒரு நாட்டின் உண்மைச் சுதந்திரம்’ என்று விளக்கம் தந்தார் காந்திஜி. ஆயின், இன்றைய பல நடை முறைகளை அவதானிக்கின்றபோது,
ஆண் பெண் தன்மை இரண்டுதான்”
- அன்னலட்சுமி இராஜதுரை -
என்றார் மற்றோர் அறிஞர். “பெண் உரிமை மதமும் மனித உரிமைகளே” என்று இன்று பெண் உரிமை அமைப்புக்கள் உரத்து முழங்குகின்றன.
பெண்ணுக்குத் தனது வீட்டிலும், சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லை என்றே கருத வேண்டி உள்ளது.

Page 46
ஒரு புறம் வீட்டு வன்முறைகள், அது தப்பினால் வெளி வன்முறைகள் என்றவாறு வன்முறைகள் தலை விரித்தாடுகின்றன. இவற்றிலும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆணாதிக்கச் சுரண்டலுக்கும் வன் முறைகளுக்கும் பெரிதும் ஆட்படுகின்ற நிலைமை பல வீடுகளிலும் உள்ளது. கணவன், தந்தை, சகோதரன், சிறிய தந்தை, மாமன், பாட்டன் என ஆண் வழி உறவு முறைக் கட்டுக்கோப்பில் வாழ்கின்ற பெண்கள் தம் இருப்புக்கு இவர்களில் தங்கியிருக்கும் நிலையில், ஒருபுறம் வாழ்க்கை நடத்த இவர்களுடன் போராடுகிறார்கள். மற்றொருபுறம், மதுபோதையிலும், காம போதையிலும்
மிருகங்களாக மாறும் இவர்களது இம்சைகளுக்கு முகம் கொடுக்கும் நிலைமையிலும் போராடுகிறார்கள்.
இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டான சம்பவங்கள் பல ஆங்காங்கு நடந்து; பொதுசன ஊடகங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை விபரிக்க, இச்சிறுகட்டுரை இடம்தராது. இருப்பினும் ஒரு சிறிய உதாரணத்தை ஈண்டுக் குறிப்பிடுவது பொருத்தம்.
மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்திநிலையம்“பெண்ணுரிமைகள் என்ற தலைப்பில் (தொகுப்பு - 2002-2003) அண்மையில் வெளியிட்ட பிரசுரத்தில் தந்துள்ள தகவல்கள், சமூகநலன்கோரும் அனைத்து தரப்பினரதும் கவனத்துக்கு உரியன. குறிப்பிட்ட காலப்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பகுதியும் உள்ளடக்கப்பட்டதல்ல) பெரும்பாலும்
25 கண்ணோட்டம்
(எல்லாப்
வீட்டில் பெண்கள் மீதும், மற்றும் 4 வயது முதல் 16 வயதுவரை சிறுமிகள் மீதும்
SR SR
மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுகள், இம்சைகள், துன்புறுத்தல்கள் ஆகிய விபரங்கள் சேகரித்து தரப்பட்டுள்ளன.
பெரும்பாலும் மனைவியானால் கணவனாலும், சிறுமியானால் குறிப்பாகத் தந்தையாலும் மற்றும் உறவினர்களாலும் சீரழிக்கப்பட்டிருக்கின்ற சம்பவங்களையும் பார்க்கின்றபோது, நாம் உண்மையில் செல்லும் வழி எது? என்று சிந்திக்காமல் இருக்க முடியாது. இவை ஒரு சிறுபகுதியில் நடந்த விடயங்களே. அப்படியாயின் ஏனைய பகுதிகளின் நிலைமைகள் ?
தாய்மார் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் புரியச் சென்றதையடுத்து,
ஏற்பட்டுவரும் குடும்பப் பாதிப்புகளில்,
குறிப்பிடத்தக்கது. அக்குடும்பத்துச் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகள் தான். பிரதிவருடமும் சுமார் 10 ஆயிரம் சிறுமிகள் குடும்ப அங்கத்தவர்களினால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிறார்கள் என்றும், இந்தத் துஷ்பிரயோகத்தில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள், இச்சிறுமிகளின் தந்தைமார் எனவும் பெண்கள் ஆய்வு நிலையம் தகவல் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருட காலத்தில் 512 பாலியல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், இதில் 54.5 சதவீத குற்றங்கள் தந்தையரால் மேற்
இத்தகைய குடும்பங்களில்
கொள்ளப்பட்டதாகவும் அதில் மேலும்
தெரிவிக்கப்படுகிறது.
இது மட்டுந்தானா ? “பாவப்பட்ட” இந்தச் சின்னஞ்சிறுககள், சில
சமயங்களில் சட்ட விரோத குழந்தைப் பாரத்தைச் சுமப்பதுடன் சமைப்பது,
எநானம் - மார்ச் 2004

சகோதரங்களைக் கவனிப்பது, நீண்டதுாரம் சென்று தண்ணிர் சுமந்து வருவது போன்ற பாரப்பட்ட வேலைகளையுமல்லவா செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்
வீட்டின் நிலைமை இதுவானால், வீட்டுக்கு வெளியிலும் பெண்கள் எதிர் நோக்கும் குறைந்தவையல்ல.
நாடு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, போரின் அகோரப்பிடிக்குள் சிக்கியவேளை, சமூக விழுமியங்கள் பலவும் சீரழிந்துபோயின. இதனாலும் பெண்களும் சிறுமிகளும் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இராணுவக்கெடு பிடிகளின் உச்சக்கட்ட வேளையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி, இராஜலட்சுமி
வன்செயல் அபாயங்கள்
நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகார முள்ள நபர்கள், மதத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் போன்றவர்களால் பல இடங்களில் ஏற்படுகின்றது எனத் தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில், இனப்போரினை அடுத்து, வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களும், சிறுமிகளும் எதிர்நோக்கும் இடர்களும், பாதிப்புகளும் தனியாகக் கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. வீட்டுக் குள்ளேயே பலவித சிக்கல்களையும் வன்முறைகளையும் எதிர்நோக்கும் பெண்கள், வீட்டைவிட்டு வெளியில் வந்த பின், எதிர்நோக்கக் கூடிய தாக்கங்களின் பரிமாணங்களையும் கூறவும் வேண்டுமா?
தவிரவும் பெருந்தோட்டத்
முறைக்கும் வன்முறைகளுக்கும் ஆளா வதற்கு அடிப்படையாக அமையும் அம்சம்,
பிறவிகள் எனக்கருதப்படும் பான்மை
பெண்கள் பல்வேறு வழிகளிலும் அடக்கு)
அவர்கள் மனிதப் பிறவிகள், அதுவும்: ஆண்பாலாருக்குச் சமமான மனிதப்
துறையில் பணிபுரியும் பெண்கள் மத்தியிலும் மற்றும், வீட்டு செல்லும் சிறுமிகள்,பெண்கள் மத்தியிலும் இடம் பெறு வதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும்
வேலைக்கெனச்
குறைந்து, வெறும் நுகர்வுப் பண்டம் OD YR 42 என்பது போன்ற எண்ணப்பாடு வளர்க்கப் இ மசைகளும கருத்தில்
1 கொள்ளத்தக்கனவாகும். பட்டு வருவதினாலாகும். ॐ LSS SSLS SqAS SSSSSS N ノ சட்டத்தின்முன் யாவரும் ஆகிய துர்ப்பாக்கியசாலிகளை மறந்துவிட சமம் என்ற வகையில், பாதிக்கப்படும்
முடியுமா ? இந்தச் சீரழிந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, பெண்கள் மீதான வன்முறை, இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
தொழிற்சாலைகளில், அலுவல கங்களில், மருத்துவமனைகளில், உற்பத்தி
இடங்களில் உள்ள முதலாளிகள்,
பெண்கள் நீதிமன்றத்தில், நீதிகோர உரித் துடையவர்களே, இருப்பினும் ஒரு சிலர் அவ்வாறு நீதிமன்றம் சென்று, வழக்குப் பதிவுசெய்து, வழக்காடி, ஒரளவு ஆறுதல் பெறுகின்றனர் என்பது உண்மையே. ஆனால் கணிசமான பெண்கள், குடும்ப கெளரவம், அச்சம், வெட்கம், அறியாமை

Page 47
மற்றும் ஆட்பக்கபலமின்மை, பொருள் வசதி அற்றதன்மை போன்ற இன்னோரன்ன காரணங்களினால், நீதிமன்றத்தை நாடாதவர்களாக மெளனிகளாகின்றனர். ஆனால் தமது விடயத்திலே காவல்துறை போதிய அக்கறை காட்டுவதில்லை என சில பெண்கள் ஆதங்கப்படுகிறார்கள். விரக்தி கொள்கிறார்கள்.
தவிரவும், “பெண்களின் உடலின் மீதான பலாத்காரம் ஒர் அற்பமான விஷயம் எனக் கருதப்படுகின்றது. அண்மையில் பத்திரிகையில் ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. ஒரு பெண்ணின் மீது பலாத்காரம் புரிந்த ஒருவருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி, அத் தண்டனையைத் தீர்ப்பளித்திருந்தார். ஆனால் ஒரு பெரிய வழங்கப்பட்டது போன்று ஊடகங்களும் பெரிதுபடுத்திக் என்று சாவித்திரி குணசேகரா, சட்டமும் பெண்கள் மீதான வன்முறையும் என்ற தமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தமையும் ஈண்டுச் சுட்டிக் காட்டப்படத்தக்கதே.
பெண்கள் பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைக்கும் வன்முறைகளுக்கும் ஆளாவதற்கு அடிப்படையாக அமையும் அம்சம், அவர்கள் மனிதப் பிறவிகள், அதுவும் ஆண்பாலாருக்குச் சமமான மனிதப் பிறவிகள் எனக்கருதப்படும் பான்மை குறைந்து, வெறும் நுகர்வுப் பண்டம் என்பது போன்ற எண்ணப்பாடு வளர்க்கப்பட்டு வருவதினாலாகும். ஆணாதிக்கம் இதன் அடிப்படையாகும்.
பெண் இயல்பின் மென்மையானவள்.
தண்டனை
> 99 காடடின
எனவே மெலியாரை வலியார் வருத்தும் கொடுமை மேலோங்குகிறது என்றே கூறலாம்.
அதிகரித்துவருகின்ற பெண்கள் மீதான வன்செயல்களைத் தடுக்க வழிவகைகள் என்ன என்பது குறித்தும் சிந்தித்து நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுதல் இன்றியமையாததாகும். பொலீஸில் புகார் செய்தல் முக்கியமான கடமை எனினும், அவை குறித்த அலட்சிய மனோபாவம் இருப்பதாக கூறப்படுவதையும் கருத்தில், கொள்ள வேண்டும். பெண்களின் புகார்களைக் கவனித்து நடவடிக்கை எடுப்பதற்கு, பெண்களுக்கான பொலிஸ் பிரிவுகள் உதவலாம்.
தவிரவும், பெண் அபிவிருத்தி அமைப்புகள், இத்தகையவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும், உதவிகளையும் நல்கும் வகையில்
மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படுதல் இவற்றின் மூலமாக பெண்கள் தமக்கு வேண்டிய ஆலோச னையைப் பெற, தாமே ஒன்றிணைந்து, அமைப்புக்களாகச் செயற்படுதல் சாலச் சிறந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, பெண் தன்னை அறியவும், சமூகத்தில் தனது இருப்பை உணரவும், தனது முன் னேற்றத்திற்கு உழைக்கவும் கல்வியறிவைப் பெறுவதோடு, தனது சக்திகளையும் வளர்க்க வேண்டும். அது பொருளாதார, சமூக, கலாசார சக்தியாக மட்டுமன்றி, அரசியல் ரீதியான சக்தியாகவும் இருக்கும் போதுதான் உரிமைகளைப் பெற முடியும்; தட்டிக் கேட்கவும் முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் நிகர் எனக்
கொள்வதால் அறிவிலோங்கிஇவ்வையம் தழைக்குமாம்”
- LITUgiu (Tii
நன்மை தரலாம்.
எாாம் - மார்ச் 204

运莎行员 运莎行觅
புரட்சித் திருத்தம்
ஒ. வானமே! கண்ணிர் மழை உன்னில் நின்று வரவுக்காய் . என்னை தோகைதனை l îfigJavITLoft? விரித்திருந்து என்று காத்திருக்கும் மார்தட்டிக் கொண்ட மயில்கள் தான் வானத்து மேகங்களாய் எத்தனையோ!
மங்கையருள்
சோகங்கள் வேண்டவே வேண்டாம். கேள்விக் குறிகளால் சுடு சரங்கள் குறிபார்க்கும் கலைகளுக்கு பாச்சலினால் விடைகானா எத்தனைதான் வினாவாக நீ. துளை ரணங்கள்
வீழ்ந்தாலும் வலுவான விடைகாண ஒரு துளியும் எத்தனிப்போர் சிந்தாதே . பலராலே கண்ணிரை பிழை வீழ்ந்த பொல்லா மயில்கள் விடை சுமந்து தம் தோகைதனை வாழ்வதுவா? விரித்தாட
சுடுசரத்தின் திடமாக துளைப்புகளால் ஒர்பார்வை மேகங்கள் ഖ്£ . மோதிக் கொள்ள புரட்சிப் பெண்ணாய் அடைமழையாய் வாழ்ந்து விடு கண்ணிரை திருத்தப்பட்ட சிந்துவதா? Gớì60)LufT9.
廷公垩登 冥公垩登
ፅኣ'!ሳዕ፡ ሰ0 – ባዑ፡Ífid 2004

Page 48
வாதஆர்
(Byr Izzy gorri'r
○*
அன்புடையீர்,
na உலகத் தமிழ்க் கவிதைத் தொகுப்புத் தொடர்பான செய்திக் குறிப்பினைத் தங்கள் இதழில் வெளியிட்டதன் விளைவாகப் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை எங்கள் நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். தங்களின் தன்னலம் கருதாத தமிழ்த் தொண்டினை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றோம். பல கவிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கவிதைகள் வந்து சேரவேண்டிய நாளை மார்ச்சுத் திங்கள்
31ஆம் தேதி வரை (31.03.04) காலநீடிப்புச் செய்துள்ளோம்.
- ப. மருதநாயகம் இயக்குனர் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சிநிறுவனம் இந்தியா)
அன்புள்ள“ஞானம் ஆசிரியருக்கு !
ஞானம் 43வது இதழ் கண்டேன் - மகிழ்ச்சி புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கவிதைகள் அனுப்பியுள்ளேன்.
ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியில் ஞானம் அடையாளம் பொறித்துள்ளது. தாமரை, கணையாழி, மல்லிகை, தாயகம் சஞ்சிகைகளிலும் பார்க்க - சார்புநிலை சேராத தனித்துவ சஞ்சிகையாக வெளிவருவது - எதிர்கால ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெருமையாகும். பேராசிரியர் கா. சிவத்தம்பி தன் நேர்காணல் உரையாடலில் திருமலை எழுத்தாளர், கலைஞர் மாநாடு பற்றி குறிப்பிடுவாரா?
அந்தனி ஜீவாவின் எழுத்தில் முதிர்ச்சி - சிறப்புகள் தெரிகின்றது. சிறுகதைகளில் புதிய பரிணாமம் தோற்றம் உருவாதல் நன்று - ஞானம் கவிதைகள் முழுமையும் ஒசைகள் உள்ள ஓர் உலகத்தைப் பிரகடனம் செய்கின்றன.
மலையக கலை இலக்கியம் பற்றி இன்னும் எழுதப்படல் வேண்டும். துரை மனோகரன் இலங்கை முழுவதையும் தொட்டிடல் நன்று.
யாழ்ப்பாண எழுத்தாளர்களுக்கு வயது போய் விட்டதுபோல் தெரிகின்றது. வன்னிப் போராளிகளின் எழுத்துக்கள் - புதிய வார்ப்புக்கள் கோர்க்கின்றன. −
ஆசிரியர் தலையங்கம் கூறுவது போல் பாடசாலை நூலகங்கள் வாசிப்புப் பணியைச் செய்கின்றன.
இலக்கியத் தாக்கம், வழிந்திட ஞானம் கருத்தரங்குகள் நடத்தினால் பயன் கிடைக்கும்.
நல்லை அமிழ்தன், யாழ்ப்பாணம்.
~'r or ~rran - a marri : "Oh M4
 
 

'சென்ற வருடம் தமிழ் நாட்டுக்கு (சென்னை) நான் சென்றிருந்தபோது பல தடவைகள் வல்லிக்கண்ணனைப் போய் நான் சந்தித்தேன். அவ்வாறான பொழுதில் வல்லிக்கண்ணன் அவர்கள் என்னைப் பார்த்து ஞானம் சஞ்சிகைக்கு நீங்கள் எழுதுவதில்லையா? என்றவாறான ஒரு கேள்வி கேட்டார். இலங்கையிலுள்ள ஒரு சஞ்சிகையைப் பற்றி ஆவலும் அக்கறையுமாக அவர் கதைத்தது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையுமாக இருந்தது. குறித்த தவணையில் ஞானம் சஞ்சிகை வெளிவருவது வியப்பும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. ஞானம் சஞ்சிகையை அனுப்பியதற்கும் கடிதம்
எழுதிப் போட்டதற்கும் நான் மீண்டும் உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
நீ. பி. அருளானந்தம்
ஞானம் 43 கண்டேன். வழமையைவிட வாசிக்கத் தூண்டும் எண்ணம் பல மடங்காகியது. ஞானத்தைத் தந்த பார்த்தீபன் விழிகளிலும் வழமையைவிடக் கூடுதல் பெருமிதம், அட்டை அழகு, உள்ளடக்கம் அதைவிட அழகு. “திறனாய்வு நெருடல்கள்" போன்ற ஆக்கங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுமானால், ஞானம், எங்களுக்கு மேலும் ஞானத்தைத் தரும். ஞானத்தின் கவிதைகளுக்கு சர்வதேசிய கெளரவம் என்பதில் வாசகனாகிய எனக்கும் பெருமை. பகிர்தலின்மூலம் விரிவும், ஆழமும் மட்டுமல்ல அடிப்படையும் கிடைப்பதில் மகிழ்ச்சி.
பொற்கோ, வவுனியா தேசிய கல்விமரியற் கல்லுரரி
ஞானம் சிறுகதை தொடர்பாக திருசசி பிசப் ஹிபர் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் கட்டுரை வாசித்தார். அவர் உங்களிடம் தொடர்பு கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அடிக்கடி இலக்கியச் சர்ச்சைகளை ஏற்படுத்துங்கள். அது ஆழமான கருத்தாடலுக்கு இடமளிக்கும். (தனிமனித சாடல்கள் தவிர்த்து). கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் சிறுகதை படித்தேன். தேன் பழையது. பாத்திரம புதிது. யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தின் உட்கூறுகள் பல மொழியுடனும் உணர்வுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளன. வேரறுந்துபோன யாழ்பபாணத்து நினைவுகளை அச் சிறுகதை மீட்டது. செல்.சுதர்சனின் பத்தி எழுத்து பல தகவல்களைத் தருகின்றது. மகிழ்ச்சி. இங்கு என்ன - பரபரப்பான வணிகப் பத்திரிகை உலகுள் சிறு சஞ்சிகைகள் பகீரதப் பிரயத்தனத்துடன் வெளிவருகின்றன. எனினும் என்ன அகவயமான சித்தாந்தங்களுள்ளும் கோஷ்டிப பூசல்களுள்ளும் அவை போராடிக்கொண்டிருக்கின்றன. இலங்கைத் தமிழ் இலக்கியம் குறித்த பிரக்ஞை பலரிடையே இன்று வளர்ந்துள்ளமைக்கு
சிறுசஞ்சிகைகளின் பங்கு கணிசமானது.
வ. மகேஸ்வரன், தஞ்சை.
eemarran - Annrari 19fas24 ՞ծ ծ*

Page 49
O 4- «O • KO « 6 6 இடைக்கிடையே ஞானத்திற்குக் கல்லெறிகள் விழுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வயிற்றெரிச்சல்களைக் கொட்டித்தீர்க்கிறார்கள்;
விட்டுவிடுங்கள். தங்கள் பணி தொடரட்டும்.
ச.குணசிங்கம், வத்தளை.
ஜனவரி ஞானம் கிடைத்தது, நன்றி. கைலாசபதிக்காக கச்சை கட்டும் நண்பர் திரு சி.தர்மகுலசிங்கம் அவர்கள் அவரது பேராசிரியர் தமிழ்த் தேசியத்தை ஆதரித்தமைக்கான ஆதாரங்களில் ஒன்றையேனும் முன்வைக்கமுடியாத நிலையில் தொடர்பில்லாத பல விடயங்களைத் தமது கட்டுரையில் தொட்டுக்கொண்டு போகிறார். அவற்றிலொன்று, திருவள்ளுவர் ஓர் மார்க்சியவாதி என்பது.
பேராசியர் பெரிய விமர்சகர்; தமிழறிஞர் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மொழியாலே தன்னை வளர்த்துக்கொண்ட ஒருவரிடம் தமிழ்த் தேசிய உணர்வில்லாமையை சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தமிழனும் சுட்டிக்காட்டவே செய்வான். பேராசிரியர் கைலாசபதி, பல வழிகளில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையை ஒத்தவர். கைலாசபதியிடமிருந்த மார்க்சிசப் பற்றுப்போன்றதே வையாபுரிப்பிள்ளையின் வடமொழிப் பற்று. இந்தப் பற்றுக்கள் தமிழ்மொழிப் பற்றுக்கு இடந்தரவில்லை. இதுதான் உண்மை. (திக்கவயலின் கட்டுரைக்கு விரிவான பதில் ஒன்றினை பின்னர் எழுதி அனுப்புகிறேன்) இ.ஜெயராஜின் எழுத்துக்களில் நன்கு தெரிவது யாழ்ப்பாணம்; சிறுகதை அம்சம் அன்று. சாதிப்பெயர் குறிப்பிட்டு எழுதுவது சரியா? நிச்சயம் கண்டிக்கப்படவேண்டும்.
வாகரைவாணன், மட்டக்களப்பு.
'அன்றே என்னின் அன்றேயாம், ஆமென்றுரைக்கின் ஆமேயாம் . கம்பவாரிதியின் சிறுகதையின் தலைப்பு முதலில் பிடிபடவில்லை. கதையை இருதடவை படித்தபோதுதான் அர்த்தம் புரிந்தது. மலர் ஆசையம்மாவுக்கும் பொன்னனுக்கும் தொடர்பு இருந்தது என்று நினைத்து வாசிக்கும்போது தொடர்பு இருப்பதுபோல தெரிகிறது. தொடர்பு இல்லை என்று நினைத்து வாசித்தால் இல்லாததுபோல் இருக்கிறது. கலையம்சத்துடன் எழுதியுள்ளார் கம்பவாரிதி. அன்றைய யாழ்ப்பாணத்தின் ஒரு திருமண வீட்டு நடைமுறைகளை அட்சரசுத்தியாக ஆவணப்படுத்தியிருக்கிறார். நுணுக்கமான் அவரது பார்வை
ஆச்சரியப் படவைத்தது.
க. சிற்றம்பலம், கோண்டாவில்.
உங்களது மண்புழு, செ.ஆ.வின் காங்கேயம் ஆகியவை இதழுக்குச் சிறப்புச்சேர்க்கும’ சிறுகதைகள். உங்களது மண்புழு இதுவரை ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத்துறையில் பேசப்படாத ஒரு விடயத்தைப் பேசியிருக்கிறது. கதைகூறும் திறனும் நன்றாக இருக்கிறது. செ.ஆ. வின் காங்கேயமும் ஒரு தரமான படைப்பு. - கலாநிதி துரை.மனோகரன்

உலக அரங்கிலே 0ெண்கள் .
தொகுப்பு - புலோலியூரான்
இன்றும் உலக அரங்கிலே பெண்கள் பல்வேறு நிலைகளிலும் பின்தள்ளப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாகியிருப்பதைப் பின்வரும் தரவுகள் உணர்த்தி நிற்கின்றன:
* எந்தவொரு நாட்டிலும் ஆண்களுடன் பெண்கள் சமத்துவம்
அடையவில்லை. * நாட்டின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் மத்தியில் பெண்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். * 100கோடி உலக எழுத்தறிவற்ற வளர்ந்தோரில் 2/3 பங்கினர் பெண்கள்.
(1பில்லியன்) * 13கோடி பாடசாலை செல்லாத சிறார்களில் 2/3 பங்கினர் பெண்கள் * அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஆண்களைவிட ஏறத்தாழ இருமடங்கு அதிகமான பெண்கள் போதிய வேதனமற்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். * உலக ரீதியில் 46.7% அலுவலக தொழிலாளியாக உள்ளனர்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கிராமியப் பெண்களில் 55% உணவு உற்பத்தி செய்கிறார்கள். * 1993ஆம் ஆண்டு வீட்டு சமூகப் பணியின் பெறுமதி 110ஆயிரம் கோடி டொலர். இது உலகத்திலுள்ள மொத்த உற்பத்தியில் 20-23 சதவீதத்திற்கு மேலாகும். * 4:1 என்ற விகித்தில் உலகத்தில் பெண்கள் குடும்பத் தலைவியாக
உள்ளனர். * கர்ப்பத்தினாலும், மகப்பேற்றினாலும் ஏற்படும் வியாதிகளில் நாளொன்றுக்கு இறக்கின்ற 1600பெண்களில் 99சதவீதமானோர் வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள். * ஒவ்வொரு வருடமும் 70 000 பெண் கள் பாதுகாப் பற்ற கருக்கலைப்பினால் இறக்கிறார்கள். மேலும் பலர் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர். * 1/3 தொடங்கி 1/2 வரையிலான பெண்கள் தெற்காசியா இலத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 20 வயது அடையும் முன்பு தாயாகிவிடுகின்றார்கள்.
ஞானம் - மார்ச் 2004

Page 50
51 சதவீதமான கர்ப்பவதிகள் இரும்புச்சத்து, போஷாக்கின்மையால் இரத்தச்சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பை புற்றுநோய் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பொதுவான புற்றுநோயாகக் காணப்படுகிறது. குடும்பவன்முறை. பலாத்கார உடலுறவு, பாலியல் துஷ்பிரயோகம் எண் பவற் றுக் கு பெனி களின் இயலாமை காரணமென இனங்கானப்பட்டுள்ளது. புத்தம் நிலவும் நாடுகளில் சாதாரண பெண்களும் குழந்தைகளும்தான் முதலில் பலியாகின்றனர். பாலியல் பலாத்காரம் ஓர் புத்த ஆயுதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ருவாண்ட நாட்டில் 1994-1995 ஒரு வருடத்தில் பல் லாயிரக் கணக்கான புவதிகள் பாவிபலி கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒன்வொரு வருடமும் இலட்சத்திற்கு மேற்பட்ட பெனர்கள் பாலியல் வலப் லுறவுக் கோ அல்லது பாலியல் கொடுமைகளுக்கோ உள்ளாக்கப்படுகிறார்கள், உலகத்தில் 40சதவிதமான பெண்கள் தொழிற்சங்க அங்கத்தவர்கள் ஆனால் சதவீதமான பெண்களே தொழிற்சங்கத் தலைவர்கள். உலகத்தில் பெனன் தொழிலாளர்கள் செய்யும் தொழிலுடன் வீட்டுவேலை உட்பட ஒரு நாளைக்கு 12 மணித் தியா லத்துக்கு மேல் உழைக்கிறார்கள். உதாரனம் மலையகத் தோட்டப்பெண் தொழிலாளி. உலகவாழ் ஏழைகளில் 70சதவீதமானோர் பெண்கள் உலகமயமாக்கப்படுவதால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.
சிறுகதைத் தொகுப்புப் போட்டி
ஞானம் விருது 2004'
1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 30-04-2004 அன்று நாற்பது
வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுரும்ெ பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதைபெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) போட்டி முடிவு திகதி 30-04-2004 அதன்பின்னர் வந்துசேரும் படைப்புகள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
- ஆசிரியர் آبر
, i. i . 4 I rii – i r i d i .i "id III I
 
 

CENTRAL ESSENCE SUPPLIERS
DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES, F() (I)I) (COLOURS ANIO SCIENTS ETC.
76/B, KING STREET KANDY
TEL : ()8I - 222-187
(81 - 4.47 1563
W~
سیا
3 Casons 9Mரa 3 (6 S Ceramics ( 8 IIllporters & Distributors of (6 Wall Tiles, Floor Tiles, High Quality (o Sanitary Wares, Bathroom Accessories, P. W. C. S. 8 And Hot Water Pipe Fittings Θ O 9. 6 A-74, Colombo Street (O Kandy, Sri Lanka. 6 Tel: 081 - 4476760, 081 - 2200052 6 Tax : 081 – 2200)()52 兽

Page 51
l,
ܗ
LUCKYLAN
MANUFA
Kund
Ph(ble : (081
O8.
(8.
Fax : 8
E-Mail : Liu
 
 

司
|ID BISCUIT CTURERS
asale.
- 242027
- 242O574
- 2227 (41
- 2420740 :kyland (ashnet.ik.
'ே
F
廷公茎