கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.04

Page 1


Page 2
uuuS S SuS uMSS ༽།
ரமான தங்க நகைகளுக்கு . 互 31)
101, COLOMBO STREET KANDY TEL: 081 - 2232545
انكس--
心
 

இதழினுள்ளே -
( l ர்கா 1 ல்
||лыa31 511 இரத்தினது க்க | 모
சிரசாத்
ரிந்துனர் «| - IFT. பriம்
கவிதைகள்
விரிவும் ஆழமும்
பெறுவது
குனம் நீரும் நீரே
து. ஜிதின்
ஓவியத்திற்காய் காத்திருத்தல் 38 - பாா சோத1ாகவன்
ஆசிரியர் : தி. ஞானசேகரன்
பிரியா வின் 5.
- புது பீாார்சின்
"
k
".
', ",
', ',
',
|à: ಗೌT ೨}, AtlılıIII firir: புலோலியூர் க. சதாசிவம்
அந்தணி ஜீவா கட்டுரைகள்
இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
ዛ፡ ﷽፡ ነነ ...ll இலக்கியத் திறனாய்வில் 2
- '
ரா. :ெபா:
ாங் தோஸ் தபு த்த காகத் 5
II τία 11 ΙΙ - டொர்.ாக் ந11. ஆனந்தன் நதிக் கரையினிலே
- :ர். கே. முருகானந்த்ன் நிர்வாகம் : எழுதத் துண்டும் " அண்துைங். 39
- கனா பகோசரன்
',
༣,
ஓவிய ர்கள் :
'',
鲇 ".
'. ', '', * '',
8,
கெ. சர்வேஸ்வரன்
%
“, “, % ',
- " . . . - ர் சா ஈழத்தில் பெண்கள் சார் . 5. 모 (III || || FHS (Iffi (čij - - - - -
hl |i - ரபி எப்ன்ஃகா தி. ஞானம் சகா
it 197, பேராதனை விதி, பராட்டு விழா
- சிேய கடிதம் 구 li rrak li l, Telephone - (81-247.857) (Office) கேள்வி - பதில் 3.1
(81-22-755 Res. திய நூலகம் 4. like — 1777 — 3llifb5) dlı நூல் மதிப்புரை 5 , Fax - 8-23-1755 வாசகப் பேசுகிறார்
, E-Mail
gnanam nagazine'ayah 10.com அட்டைப்பட ஓவியம் !
Leo L J II
SASAMAAMAMMMASTeAMseAS Te ee A eq A ASeA eeeS SeeSASASS

Page 3
ஞானம்
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். = لد
அன்பான வாசக நெஞ்சங்களுக்கு ஞானம் உளங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மலரும் புத்தாண்டை நம்பிக்கையுடனும் எதிர்காலத் திட்டங்களுடனும் எதிர்கொள்ளும் நாம், கடந்த காலச் செயற்பாடுகளை மீட்டுப் பார்த்து, இருப்பின் நிலையைக் கணிப்புச் செய்வது வழக்கம்.
ஈழத்து இதழியல் உலகில் ஞானம் சுவடுகளைப் பதித்துவருகிறது எனக் கலை இலக்கிய உலகம் பாராட்டுவது எமக்கு உற்சாகத்தை அளிக்கிறது. எமது குறிக்கோள், செல்நெறி, கருத்தியல் இவற்றையெல்லாம் இதுவரை மலர்ந்த இதழ்கள் காட்டிநிற்கின்றன. எமது கருத்தியலைப் புரிந்துகொண்ட படைப்பாளிகள் அனுப்பிவைக்கும் ஆக்கங்கள் வந்து குவிந்துகொண்டே யிருக்கின்றன. வாசகர்கள் தனிப்பட்ட முறையில் அனுப்பும் அன்புமடல்கள், குழுக்களாகக் கூடி வாசகர் வட்டங்களாக எமது கலை இலக்கியப் பண்ணையிலே சங்கமிக்கும் நிகழ்வுகள் எம் நெஞ்சை நெகிழ வைககின்றன. இதேவேளையில் எமது நோக்கையும் போக்கையும் புரிந்துகொள்ளாத சிலர், ஞானத்தின் கருத்தியல் பற்றித் தெளிவுகொள்ளாது முணுமுணுப்பதும் எமது காதுகளுக்குக் கேட்கிறது. எமது நடுநிலைமைச் செயற்பாட்டினை - ஈழத்தில் ஓர் ஆரோக்கியமான இலக்கியச் சூழலை ஏற்படுத்திவரும் பயன்பாட்டினை காழ்ப்புணர்வுக் கண்கொண்டு பார்ப்பவர்களின் கருத்தியல்’ இது எனப் பெருந்தன்மையுடன் செவிசாய்க்காது விட்டுவிடலாம். ஆனாலும் ஒரு கருத்தினை மட்டும் தெளிவற்றவர்கள் தெளிவுபெறத் தெளிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். எமது சிந்தனை முற்போக்கானது. செயற்பாடுகள் நடுநிலைமை யானவை. முற்போக்கான ஒரு தத்துவத்தை, யான்ை தடவிய குருடர்களாக எமது பார் வையே முழுமையானது; நாமே அதனைப் பூரணமாகப் புரிந்துகொண்டவர்கள் என அணிசேர்ந்து, மற்றவர்களை எதிரிகளாக வரிந்து கட்டிக்கொண்டு வாதிட்டும், முட்டை எறிந்தும், குட்டை குழப்பியும், இலக்கிய ஆற்றல் மிகுந்தவர்களை- ஆரவாரமின்றி இலக்கியப்பணி செய்பவர்களைப் புறந்தள்ளியும், கெளரவிக்காது ஓரங்கட்டியும், இளந்தளிர்களைக் குருத்திலே
2
 
 
 

கருகவைக்கும் செயல்களைப் புரிந்தும் செயற்பட்டவர்கள் இன்று வீழ்ச்சியுற்று, எழும்ப முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கருத்தியலைச் சரிவரப் புரிந்து செயற்படாததன் விளைவே இவர்களது வீழ்ச்சி. இதன் பின்னரும் இவர்களில் ஒரு சிலருக்குத் தெளிவு பிறக்கவில்லையென்றால், இவர்களை எதில் சேர்ப்பது?
நடுநிலைமை என்று ஒன்று உலகில் இல்லை என எண்ணுவது வரலாற்றைப் புரிந்துகொள்ளாத தெளிவற்ற கருக்கட்டலின் பிள்ளைப்பேறே. ஈழத்து மூத்த இலக்கியவாதிகள் எஸ்.பொ.வும் ஜீவாவும் சமீபத்தில் சந்தித்து உறவாடியது, எமது நடுநிலைமை பேணும் ஒளியில் அர்த்தமும் ஆரோக்கியமும் உள்ள நிகழ்வாக நாம் தரிசிக்கிறோம். மனம்நிறைந்து பாராட்டுகிறோம்.
நாம் சிறுசஞ்சிகைச் சூழலுடன் சுமுகமான முறையில் இனிய நட்புணர்வுடன் பரிச்சயமாவதுடன் இதழியல் உலகின் நிகழ்வுகளை நிதானமாக அவதானித்து பொறுப்புணர்வுடன் செயற்படுகிறோம். இதழியல் உலகில் 'ஏகாதிபத்தியச் சூழல் ஏற்படக் கூடாது. ஆயிரம் மலர்கள் மலரவேண்டும். காலம் என்னும் கதிரவனின் ஒளியில் வாடாத மலர்களை ஈழத்து இலக்கியமாதா சூடி அழகு பெறவேண்டும் என விரும்புகிறோம்.
ஞானத்தின் இலக் குகள் தனித்துவமான ஈழத்து இலக்கிய ஆரோக்கியத்தைப் பேணவேண்டும். புதிய பரம்பரையை தெளிந்த இலக்கிய ஞானச் சிந்தனையுடன் வளர்த்தெடுக்க வேண்டும்.
எமது வாசல் என்றும் யாருக்கும் அடையா நெடுங்கதவே. புதிய தமிழ்ப் புத்தாண்டில் காத்திரமான கலை இலக்கிய வாசகர்களின் வரவேற்பினை இதயம் கனிந்த கைவிஷேசமாகப் பெறுகிறது ஞானம்.
*ஞானம் சந்தா விபரம்
உள்நாடு மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். தனிப்பிரதி ரூபா 30/- அனுப்ப வேண்டிய பெயர், முகவரி
ஆண்டுச் சந்தா ரூபா 360/=
2 ஆண்டுச் சந்தா : ரூபா 700/= T. Gnanasekaran
3 ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= 19/7, Peradeniya Road,
ஆயுள் சந்தா ரூபா 15000/- Kandy.
சந்தா காசோலை மூலமாகவோ வெளிநாடு
மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். ஆண்டுச் சந்தா : 25 USS
மணியோடர் அனுப்புபவர்கள் ஆயுள் சந்தா : 300 USS
|മങ്ങ கண்டி தபால் நிலையத்தில்
எாளம் - ஏப்ரல் 2004 3

Page 4
கிரிப்பரணில் துவக்கும் கையுமாக இருந்தபடி பயங்கரவாதிகளைத் தேடும் படைவீரனைப் போலச் சித்திரபுத்திரன், வீதியில் ஒடிக் கொண்டிருக்கும் ஆட்டோக்கள் ஒன்றைக் கூடத் தவற விடாது, கவலை கசியும் முகத்தோடு நோட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தார். தேநீர் குடிப்பதற்காகவே பணி மனையை விட்டு வெளியே வந்தார். வழக்கமான உசார் இருக்கவில்லை. பத்துமணியென அவருக்கு அலாம் அடித்து ஞாபகமூட்டத் தேவையில்லை. அவரையறியாமலே அவர் வயிறு கொதிப்பெடுக்கும். தொண்டை நீர்ப் பசுமையை இழந்து வறண்டு கொள்ளும். கதிரையை விட்டு எழுந்து கொள்வார்!
‘ரீ குடிக்கப் போறன்.” முதலாளியின் எவ்விதமான பதிலையும் எதிர்பாராது செருப்பைக் கொழுவிக் கொள்வார்.
ஆனால் இன்றெனில் அத்தகைய தாகசாந்திக்கான எவ்விதமான அசு மாத்தமும் அவருக்குத் தென்படவில்லை. “சுறுக்கா ரீயைக் குடிச்சுப் போட்டு வாரும். அங்க ஆரோடயும் கதைச்சுக் கொண்டு நிண்டு போடாதயும் . கதையெண்டா கைலாயமாச்சே.” சுவர்க் கடிகாரத்தை ஏறிட்டுப்பார்த்தபடி, முகத்தை “உம்” எனப் பாவனைப்படுத்தியபடி
உமக்குத்தானே
முதலாளி சொன்னதைக் கேட்டபின்னர்
தான் இன்று அவரது ஞாபகத்தில் தேநீர் உறைத்தது. முதலாளியின் சொற்களும்
4.
நளினமாகவும், கடுகடுப்பாகவுமே இருந்தன! அதுவதை படலத்தின் ஆரம்ப உரையென்பதைச் சித்திரபுத்திரன் பட்டென உள்வாங்கிக் கொண்டார்.
தெருக்கானுக்குள் ஒடித் திரியும் பெருச்சாளிகள் போல் ஆட்டோக்கள் வீதியில் புழுத்திருந்தன.
“எந்த ஆட்டோவெண்டு பார்க்கிறது . அந்த அறுவான்ர ஆட்டோவை லொறி அடிக்கும்.” மனத் திட்டு உரியவனைச் சென்று குதற வேண்டுமென்ற கெட்டித்த ஆவேசம்
வழக்கமாகத் தான் தேநீர் குடிக்கும் சந்திக் கடையை நோக்கிச் சித்திர புத்திரன் நடைப் பிணமாக முன்னேறிக் கொண் டிருந்தார். மனம் சவுத் தடித்தது. எதிலும் அனிச்சையான அசுவராஸ்ய நிலை! பாதசாரிகளை இன்னாரென அடையாளம் காண முடியாத ஞாபகக் கழுவல்
“ஆட்டோக்காரன் தான் அப்படிச் செய்திட்டானென்டால், இவன் முதலாளி சும்மாவா விட்டான். இம்மட்டுக் காலமாக தன்னோட கிடக்கிறஎன்னை இப்புடியா நீதி ஞாயமில்லாம பேசுறது.”
வெப்பிசார வெதும்பல் சித்திர புத்திரனின் சுயத்தன்மைக்கு வேட்டு வைக்கிறது.
 

"படிக்காத மேதை சினிமாப் படத்தில் பார்த்தரங்கனை மாதிரி மறுபேச்சில்லாது சொன்னதையெல்லாம் செய்தனே. அற்ப விஷயமொண்டிற்காக முதலாளி முகத்தைக் கோணிப் போட்டாரே.”
கோல்பேஸ் கடலில் கொந்தளிக்கும் அலைகளாகச் சித்திரபுத்திரனின் மனதில் எண்ணத் திரைகள் மோதின.
“இம்மட்டு வயசு செண்ட உமக்குமா கிளிப்புள்ளைப் பாடம் சொல்லிக் குடுக்க வேணும். செய்து முடிச்ச பிறகுதான், சரி புழை பாத்துக் குடுக்க வேண்டிய கூலியைக் குடுத்து ஆட்டோவை அனுப்ப வேணும். மூளை உள்ளதுகள் அதைத்தான் செய்யும்.”
முதலாளித்துவத்தின் ஒட்டு மொத்த மான சுயவடிவத்தை அன்று தான் முதலாளி காட்டினார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் சித்திர புத்திரனை நாராக உரித்தது.
“சுறுக்காப் போக வேண்டுமெண்டு, தானே அந்தரப்பட்டனான். அதுக்காத்தான்" இறங்கின கையோட ஆட்டோக் காசைக் குடுத்தன்.”
பெருமூச்சுக் காற்றில் கலக்கச் சித்திரபுத்திரன் நடையை வேகப்படுத்த எத்தனித்தார்.
தனது கைச் சுறுக்கை, திறமையை
அலுவலைச்
முதலாளி 905 “வெள்ளைச் சல்லிக்கும் స్టమ్ల్లో
கணக்கெடுக்காததை நினைக்க, நினைக்க சித்திரபுத்திரனுக்கு நெஞ்சுத் துடிப்பு ஒய்வது போன்றிருந்தது.
தேநீர்க் கடைக்கான நடைப் பயணம் ஏறாத மேடாக உணரச் செய்தது!
“தேத்தண்ணியைக் குடிக்காம திரும்பிப் போனாலென்ன. இப்படிப்பட்ட இரக்கமில்லாதவங்களோட என்னத்துக்கு
ஞானம் - ஏப்ரல் 2004
வேலை செய்வான். ம். இப்பதானே தொழிலாளிக்கு எந்தவிதமான பிரச்சினையுமில்லாத மாதிரிப் போச்சே. மே தினமாம் மே தினம். அண்டைக்கு காணிவெல்லே நடக்குது.
கண்டறியாத இனப்பிரச்சினை எல்லாப்பிரச்சினைக்கும் மூடு சாந்து கட்டிப் போட்டுது. அவங்களுக்கு லக்குத்தான்! ஏதோ கடத்திக் கடத்தி, நிறத்தை மாத்தி மாத்தி ஆட்சி நடத்துறாங்கள்.”
சித்திரபுத்திரன் உரோசக் கட்டை மண்டேக்க நிறைய வைத்திருக்கிறார். அவரைக் குடைந்து கொண்டிருக்கும் பிரச்சினை அவரைப் பட்டி மன்றத்தில் நிறுத்தியது!
“சன நாயகமாம் சன நாயகம். ஒருவனுக்குக் கையைக் கட்டிக் கொண்டு நிக்க வேண்டிய நிலை. சண்டித்தனம் காட்டப் போனால் முதலாளி வந்தவுடன் தொலைபேசி ரிசீவரைத் தூக்குவான். தொலைபேசி கிண்டுவான். ஆரோ கூட்டாளி ஒருத்தன் நல்லொரு ஆள் இருக்கெண்டவன் எண்டு தனு வைப்பான்.”
இப்படியான முதலாளியின் எச்சரிக்
எண்பதிவேட்டைக்
கையான நடவடிக்கைகள் சித்திர புத்திரனின் கையைக் கட்டி போட்டு விடும் கக்கிக் கொடுத்தால் தின்னக் கூடிய
கூட்டாளிக்கே கூட என்ன சொன்னவை.
"உன்னைப் பார்த்தாமச்சான் ஆரும் ஜொப் குடுப்பாங்களா.” இப்படித்தானே அவர்களுக்கு அதிரடி போடத்தான் சித்திரபுத்திரனின் கை விறுவிறுத்தது.
“ஓல்ட் இஸ் கோல்ட் எண்டு நினையுங்கடா.” இப்படித்தான் அவர் களை மடக்கினவர்.
நொடிச்சவை!

Page 5
அவருக்கு அப்படியென்ன பெரிய மணிவிழா அகவையைத் தாண்டித்தான் விட்டார். உடம்பு வாசிக்கு
வயதா!
என்ன செய்ய முடியும். வழு, வழுவென் றிருந்த அவர் முகம் தோட்டா பட்ட சுவராகக் குண்டும் குழியுமாகி விட்டது. தேகச் சட்டத்தை அடைத்திருந்த தசைச் சாந்து காலத்தால் உதிர்ந்து விட்டது. எலும்புகள் தோலைப் புட்டுக் கொண்டு நிற்கின்றன. அவர் இப்பொழுது முழுப் பழசாம்! அப்படித்தான் தீர்ப்பாகி விட்டது! பாவ புண்ணியம் பேசுகிறவர்கள் “வயோதிப மட்டத்துக்கு போனாலென்ன” என்றும் கதைத்தவைதான். இதெல்லாம் வெளி நாட்டிலிருந்து கடத்தி வந்த யோசினைகள். அவங்களையெல்லாம் அடித்துக் கலைத்துப் போட்டு ஏன் இவர்கள் இப்பவும் அங்கு என்ன நடக்குதென கண்ணுக்க கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்? இவைகளைக் கேட்க சித்திரபுத்திரனின் இரத்தக் கொதிப்பு “கிபீர்” வானூர்தியாக வேகப்படும்.
தானும் தனக்கு வந்தவளும் எவரிடமும் நக்கித்தின்னக் கூடாதென்ற
எண்ணெய்
மன வன்மம் தான் அவரை வழி நடத்துகிறது. பெற்றதுகளும் உண்டு தான்! நத்த மாட்டார் தன் கையே தன் பலம் என்பதில் அவர் அழுங்குதான்
முன்னர் செய்த வேலையில் சித்திர புத்திரன் இன்றைக்கும் “அந்த மாதிரித் தான்” ஆண்டறிக்கைகளைக் கூடக் கிடைக்கும் தரவுகளை வைத்துத் தட்டச்சில் பிரதி எடுத்து அதிகாரிகளுக்குச் சமர்ப் பித்து பாராட்டைப் பெற்றவர். இப்பொழுதோ, அவரது இன்றைய நிலையில் எல்லாமே தலைகீழாகி விட்டன.
6
கண்டறியாத கொம்பியூற்றர் வந்து மனிதனின் மூளையை மறக்கச் செய்து விட்டதென்பார். இன்னமும் தட்டச்சுப் பொறியில் மாறாத காதல்! கொம்பி யூற்றரைப் படித்து இன்னும் ஒரு “இன்னிங்ஸ்’ ஆடினாலென்ன என்ற சின்ன ஆசையும் அவரை உறுத்தியது தான்! என்ன நடக்காததையா புதிதாகச்
மக்களிடமென்று அந்நிய நாட்டுக்கு போன பழசுகள் அங்கு கொப்பியும் கையுமாகத் திரியிறதை இவரும் கேள்விப்பட்டிருந்தார். அவையும்
செய்யப் போறார்.
அங்கு பாஷை படிக்கும் கிழட்டு மாணவர்கள் தானே! “உந்தக் கொம்பியூற்றர் படிக்கக் கொஞ்சக்
காசா?” இருக்கிற நிலமைக்கு நல்லாங்கு போல ஒரு பொல்லாங்கு நடந்திட்டா நட்டவாளி ஆக வேண்டுமே? தனது பின் &Tպլհ காலத்தை உத்தேசித்து வெடித்தெழுந்த நப்பித்தனம் அவரது
கைானம் - எப்ரல் 2004
 

ஆசைக்கு அணை கட்டிவிட்டது. இருக்கிறதைக் கரைக்காமல் வைத் திருந்தால், தனது அடிசிற்கினியவளும் றாங்கியாக வாழலாமென்ற கெளரவ உந்தலும் இன்னொரு காரணமாகியது!
தொட்டாட்டு வேலையென்றாலும் போதுமென கிடைத்ததை அழுங்குப் பிடியாக இறுக்கிப் பிடித்தவர். அவரது தேடலில் ஒரு கொம்யூனிக்கேசன்தான் எத்துப்பட்டது. வெளிநாட்டுத் தொலை பேசி அழைப்புகள் வந்தால் அயலில் வசிக்கும் உரியவர்களிடம் சென்று தகவல் கொடுக்க வேண்டும். ஒரு அழைப்புக்கு பத்து ரூபாக் கைக்காசு. பெரிய சம்பாத்தியமென்று சொல்ல ஏலாது தான்! இருந்தாலும் இரண்டு வயிறுகளை மூன்று நேரமும் கழுவ ஏதாவது கொத்தும் அதையும் பூச்சியொன்று கடித்தது.
“அப்பு வைச்சிருந்த கொட்டப் பெட்டி மாதிரி ஒவ்வொண்டை
செல்போன்.”
செல்போன் புழக்கத்திற்கு வந்ததால் கொம்யூனிக் கேசனுக்கான தொலைபேசி அழைப்பு களும் சுருங்கின. இதனால் சித்திர புத்திரனின் இருப்பும் கேள்விக் குறியாகிவிட்டது! எனவே தான் அவர்
அமளியாகப்
தற்போதைய வேலைக்குப் பாய்ந்தார்.
நியமனக் கடிதம், கடமைப்பட்டியல் இல்லாத வேலை முதலாளி என்ன பேச்சோடை மட்டுமா விட்டவர். தொலைத்த பழைய பேப்பர் கட்டின் பெறுமதியைச் சம்பளத்தில் வெட்டப் போகிறாராம்! இந்தக் கொடுமைதான்
ஞானம் - ஏப்ரல் 2004
பொக்ஜ கட்டுகளிலும் இடுப்பிலும் செருகிக் :
ச்ெ கொண்டு திரியினம் செல்போனாம் '
சித்திரபுத்திரனை நெருப்பாகக் கருக்கிக் கொண்டிருக்கிறது. முதியோர் தினத்தைத் தவறாது அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் மனிதம் இப்படியான மனிதர்களையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறதே? இதை அவர் யாரிடம் சொல்லி அழுவார்!
தஞ்சக் கெட்ட மனிதனைப் போல் நடந்து வந்த அவர் தேநீர் கடையை அண்மித்து விட்டார்!
“ஒரு பிளேன்ரி.” வந்த சித்திரபுத்திரன் உட்காருமுன், தேநீர் தயாரிப்பாளருக்கு கட்டளை பறக்கின்றது. வெயிற்ரரின் குரலில். “f 60f கொறைச்சு.” அதே குரல் மீண்டும் ஒலிக்கிறது. ஒடிக் கொலோன் வாசனை சித்திரபுத்திரனின் நாசித் துவாரத்தை நிறைக்கிறது. பாதணியிலிருந்து பாதத்தைப் பற்றச் செய்கிறார்.
“சித்தா.” காதில் விழுந்த இச் சொல் சித்திரபுத்திரனை ஆச்சரியப் படுத்துகிறது. ஓய்வூதியம் பெற கதிரையை விட்டு இறங்கின பின்னர் சித்தர் என்ற மங்கிவிட்டதே! தேடலொன்று மனதைக் குடைகின்றது. கவுண்டிருந்த தலையை நிமிர்த்தி எதிரே பார்க்கிறார். “தங்கவாகனம்”
கச்சேரியில் பென்சன் கிளையில் வேலை செய்த கூட்டாளி சித்திர புத்திரனையொத்த வயதுதான்! மயிர் கொட்டுண்டு நரைத்திருந்தாலும் முகத்தில் சுருக்கமில்லை. உற்சாகமான மனோ நிலை முகத்தில் பொலிவை அள்ளிக் கொட்டி இருந்தது.
“ஐயாவுக்கு என்ன கொண்டு வர.”சித்திர புத்திரனின் முன் பிளேன்ரியை வைத்தபடி வெயிற்றர் புதுக்க வந்த தங்கவாகனத்தைக் கேட்டான். மேசையிலிருந்த பிளேன்ரியைப் பார்த்துப்
7

Page 6
“தின்ன எதும் சித்தா என்னவும் தங்கவாகனம்
புன்னகைத்தப்படி கொண்டு வா. சாப்பிடன்ரா.” விருந்துக்கழைத்தான்.
“இல்லை. நீ சாப்பிடு.” கப்பில் இருந்த தேநீரை குளிர்ச்சிப்படுத்தும் அலுவலில் சித்திரபுத்திரன் ஊக்கங் கொண்டார்.
“என்னத்துக்கடா உந்தச் சீலம்பாய்த் தண்ணியைக் குடிக்கிற. நெஸ்ரமோல்ற் கிஸ்ரமோற்றை குடிச்சாதானே கொஞ்சக் காலம் கூட ஊசாடலாம்.” கட்டி இருந்த சங்குப்பற்களை அம்பலப்படுத்தியபடி தங்கவாகனம் சிரித்தான். “சொந்த வீட்டில வெள்ளவத்தையில இருக்கிறன்.” ஒரு மிடறு தேநீரை வாய்க்குள் சித்திரபுத்திரன்.
“கொட்டாஞ்சேனையா? கொச்சிக் கடையா?” *.
வெவ்வேறு ரகமான பலகாரங்கள்
விடுகிறார்
※
ஆ சொல்லும். என்னவும் புரியாணியா கொண்டு வர. கோழிக் குறுமாவா. அப்ப சமைக்காதேயும். நான் முஸ்லிம் ஹோட்டலில் கட்டிக் கொண்டு வாறன். என்னது படப் பீசுமோ?. என்ன காதல் கிசு கிசுவோ. சரி சரி . திரும்பவும் செல்போன் பொக்கட்டுக்குள் ஆமைக் குட்டி போல் நுழைகின்றது.
“கோழிக் குறுமா வேண்டி வரட்டாம்.” வடையைக் கடித்தபடி தங்கவாகனம் சொல்கிறான்.
சிறிய தட்டில் வைத்து நான்கு ரூபாவுக்கான பில்லை வெயிற்றர் வைக்கிறான். சித்திரபுத்திரன் எடுக்கிறார். வேலை வேலையெண்டு நிண்ட நீ. கடைசியா சீ. சீயாத்தானே இருந்தியாம்.
அந்த நேரம் வேலையை விட்டுப் போட்டு எங்களோட வந்திருந்தா”
'
காகம் எருதைக் கொத்தி அதன்
தோலை இழுக்கிறது. சித்திரபுத்திரனுக்கு
அடங்கிய அலுமினியத் தட்டை வெயிற்றர் 8
இருவருக்குமிடையில் வைக்கிறான்.
“நெஸ்கோபி கொண்டு வா.நல்லாக்.
கேவலமாப் போன பொடியன் வெளியில இல்லையா? அஞ்சு கண்டத்திலும் என்ர பொடியள் இருக்குதுகள். மகளைக் கொண்ணந்திருக்கிறன் கனடாவுக்குப் போக” “இதையெல்லாம் ஆரு கேட்டது! இந்தக் கோதாரியில போவான் தேவை யில்லாமக் குப்பையக் கிழறிறான்.”
மனக் குமைச்சலில் தோழமை சோதனைக்குள்ளாகின்றது. சித்திர புத்திரனுக்குத் தன்னை விட்டால் போது மென்றாகிவிட்டது!
சேட் பொக்கட்டுக்குள் கிடந்த செல்போன் சத்தமிடுகிறது. அதை வெளியெடுத்துத் தங்கவாகனம் காதுக்கு நேராகப் பிடிக்கிறான்.
8
சினம் பற்றிக் கொள்கிறது. கண்கள் தங்கவாகனத்தை வெறித்து நோக்கு கின்றன. “இவன் இப்ப இதையெல்லாம் சொல்லி என்ன செய்யப் போறான்!” வேலையை இடையில் நிறுத்தி, மெடிக்கல் கொடுத்துப் பென்சன் எடுத்தவன் தங்கவாகனம். வெளி நாட்டுக்குப் போய் வந்தவன். நவீன கலாச்சாரத்தின் நல்லதொரு விதைப்பெனச் சித்திர புத்திரன் மதிப்பிட்டுக் கொண்டார்.
“ஒரு ஹோட்டலில் வந்து ஒரு ஐம்பது ரூபாவுக்காவது சாப்பிட்டா வெயிற்ரர் θη 1. பணத்தடிப்புப் பேசியது. நமக்குள் இப்படி எத்தனை தடிப்புக்கள்? சிநேகிதனின் நக்கல் சற்றுத் தூரத்தில் நிற்கும் வெயிற்றருக்குக் கேட்கின்றதாவென வெட்க உணர்வோடு சித்திர புத்திரன் அயலை மேய்ந்தார்.
s மதிப்பானா?”
ஞானம் - ஏப்ரல் 2004

இப்பொழுது எருதின் தோல் பிடுங்குப்பட்டு காயத்தை உண்டாக்கி விட்டது. காயத்தையும் காகம் கொத்துகிறது!
“எட விசரா எனக்கு டயபற்ரிஸ், பிறசரெல்லாம் இருக்கு. உதுகளையும் தின்டா எனக்கு காட் அற்ராக்கெல்லே வரும்” அநுதாபம் நண்பனின் கேளாக் கேள்விகளை நிறுத்துமென்ற தந்திரோ }JTub!
தங்கவாகனம் சற்று யோசிக்கிறான். “மக்களென்ன (3LJITUT 6flu 1п? Lont:65 rydym?” 88
உள்ளேகிய நெஸ் கோப்பி தங்க வாகனத்திற்குப் புதுத்தென்பை வார்த்து விட்டது போலும். அக்கம் பக்கம் பாராது கேட்டான். ിട്ടുള്
மோதி மிதித்தாலென்ன என்ற விறுவிறுப்பில் சித்திரபுத்திரனின் காலும் கையும் படபடத்தன.
“ரெண்டுந்தான். நான் வாறன்’
அழுத்தமாக நிலத்தில் உராய்ந்த பிளாஸ்டிக் கதிரை சப்தித்தது. షో
“ஐயா பிளாஸ்டிக் கதிரை
தெறிச்சிடும்.”கசியர் வெற்றிலைக் காவிப் பற்களைக் காட்டியபடி சித்திர புத்திரனுக்கு உரத்துச் சொன்னான்.
“இந்தா காட். அட்ரஸ் இருக்கு ஏதும் தேவையெண்டாவா’
மலியச் செய்து, பணக்காரத் தனத்தை பிரசித்தப்படுத்தும் புகழுக்கு வீங்க நீட்டிப்பிடித்திருந்த காட் துண்டை அனாசாரமாக இழுத்து வாங்குகிறார் சித்திரபுத்திரன். நடக்கிறார் வெளியே போவதற்கு “சீ” இண்டைக்கு ஆரில முழிச்சன். ஒட்டோக்காரன் அப்படிச் செய்து போட்டானென்டா, முதலாளி சம்பளத்தில வெட்டப் போறானாம். இஞ்ச
யாசகர்களை
இந்த நரகாலியில போவான் தங்கவாகனம் என்ர சீலம்பையான சீவியத்தை விடுத்து விடுத்துக்கேக்கிறான்”சித்திரபுத்திரனின் மனம் சுமையாகக் கணக்கின்றது.
பூனையொன்று புலியாகும் நிலைக்குத் தேறுகிறது. பாதங்களை ஆத்திர உணர்வு தெருவில் பாய விடாது கெந்த வைக்கிறது. பழைய பேப்பர் கட்டைத் தொலைத்த விஷயம் மனதைக் கிள்ளுகின்றது.
★ ★ ★
பத்தரை மணியாகியும் 'நல்லதொரு
சவாரி அகப்படாதது காதருக்குச்
சலிப்பைக் கொடுத்தது. ஆட்டோவின்
சீற்றில் இருந்தபடி தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான். டெனிம் களிசானும்,
ரீ சேட்டும் அணிந்த “கைபையான
ஒரிளைஞன் நிமிர்ந்த நடையில், தெருவில் நடு நாயகமாக வருவது தெரிந்தது. கழுத்திலும் கையிலும் சங்கிலி தொங்கியது. எங்கயாவது மினித் தியேட்டரை அல்லது மதுபானக் கடையைத் தேடுகிறானாவென்ற சமிசியம்
காதருக்கு அப்படியல்லாமல் வந்தவனின்
பார்வைஆட்டோக்கள் தரிப்பிடத்தைத்தான் மேய்ந்து கொண்டிருந்தது. காதருக்கு நம்பிக்கை வலு பெருத்தது. பரவச உணர்வு முகத்தைப் போர்த்தியது. அவனது முறைதான்! யாரும் வந்தால் காதருக்குத் தான் முன்னுரிமை. முதுகை வளைத் திருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். வந்தவனும் காதரை எதிர்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தான். அருகே வந்து விட்டான்.
“ரத்மலானை போக வேணும்.” “சரி. ஏறுங்க.” “எவ்வளவு ஆட்டோவுக்குள் காலை ஒட்டியபடி வந்தவன் கேட்டான்.
எடுப்பீங்க.

Page 7
“இருநூறு எடுப்பன்.” மற்றக் காலையும் ஆட்டோவுக்குள் வைக்கத் தூக்கிய பயணி, சடாரென இரண்டு கால்களையும் வெளியே இழுத்தான் தெருவில் ஊன்றினான்.
“பேப்பர் கட்டொண்டு கிடக்கு.” காதரை பிடித்தது. திரும்பிப் பார்த்தான். பேப்பர்
கட்டைக் கண்டு ஏங்கிச் சுதாகரித்தான். & தெருப் பிராக்கும், ரேடியோப் பாட்டும்
தன்னை ஏமாற்றி விட்டதையிட்டு ஆதங்கித்தான்.
“அந்த ஐயா தூக்காம விட்டிட்டார்"
காதரின் நெஞ்சு கணத்தது. நினைவுகள்
x Şჯ
படர்ந்தன. - - et A * . .̄ ܫ̄ ..:
யாழபபாண ஐயா. பாவம.
அகதியாக வந்ததாகச் சொன்னார்.
கஷ்டமாம் சின்னக் கடையொண்டில
ஆச்சரியம் கெளவிப் ஆ"
* மங்கள் மனதில் உறையும் பொழுது
ஆ. சித்திரபுத்திரனின் மனம் புயல் கொண்டு சுழன்றது. வாழ்வின் சகிக்க முடியாத
பின்னுக்கு நகர்ந்தான். காதரின் ஆட்டோ விசை கொண்டு தெருவில் ஓடியது.
★ ★ ★
சுரண்டி வாழும் முதலாளி, சுத்தி ஏமாற்றும் ஆட்டோக்காரன், புளுகுண்ணி நண்பன் தங்கவாகனம் இவர்களது படி
సీx
காலங்கள் அவரைக் கொதிக்க
வைத்தது. இந்தக் கொடும்பாவிகளின் " மத்தியில் வாழத்தான் வேண்டுமா?
தனது கையாலாகாத தனத்தை நினைத்து வருந்தினார். சவால்களைத் துணிவுட்ன் எதிர் கொண்டாலும் எதிர்மறையான விளைவுகள் அவரைத் தேடி வந்து அச்சுறுத்திக் கொண்
வேலையாம். வயசாளி. மறந்திட்டுது. டிருப்பதை அசை போடும் பொழுது
நாங்க இருந்த சோனகத் தெருவுக்குப் பக்கத்துக் கிராமமாம். நாங்க அகதியானதைப்பத்தியும் இரக்கப்பட்டார். எப்படியாவது அவரைச் சந்தித்து இந்தக் கட்டைக் குடுக்கோணும். எத்தினை
நாளானாலும்: கவலையில்லை. இப்பத்தைய முதலாளிமார் லேசு பட்டவங்களா. நானும் நனைஞ்சு
தோஞ்சவன்தானே. யாழ்ப்பாணத்தில நாங்கள் தாய் புள்ளை மாதிரிச் சீவிச்சம். இந்தச் சவாரி போனா இன்னொண்டு. இரக்கமான அல்லா தருவான்.” காதர் ஏற்கனவே வாங்கிய அடி அவனை வழி நடத்தியது.
“நீங்க பின்னுக்கு நிக்கிற ஆட்டோவில் போங்க.”
ஆட்டோ புறப்படுவதற்கான
இரைச்சலைச் செய்தது. வந்த பயணி
O
அவருக்காக அவரது கண்கள் தான் கசிந்தன! நனவிடை தோய்ந்தபடி நடந்து கொண்டிருந்த சித்திரபுத்திரனை அவரை உரசுவது போல நிறுத்தபட்ட ஆட்டோ அலமலக்க விழிக்க வைத்தது.
உடலை நிலத்தில்-புரட்டுவது போன்ற காற்றின் உதைப்பு பூமியின் ஆகர்சிப்பை இழந்தது போன்ற தழும்பல் சித்திர புத்திரனின் உடல் உஷ்ணத்தைக் கொப்பளித்தது இரத்த அழுத்தம் உச்சம் கொண்டு விட்டதோவென்ற ஏக்கம் கவிந்தது!
“ஐயா.” கேட்ட குரல் மாதிரி “அவன் தான். அந்தக் கோதாரியில போவான்’
எதிரியைச் சந்தித்த போராளியின் ஆக்ரோசம் சேட்டைப் பிடித்திழுத்து காலால் உதைக்கச் சித்திரபுத்திரனின்
„K s km - er l’ or CKY ? Ash Ash 4
 

மனம் உன்னியது. இன்னொரு பாட்டம் எதிரியை எதிர்கொள்ளும் நிலை!
“என்னடா. என்னை ஏமாத்திப் போட்ட தெண்ட திமிரா!”
சித்திர புத்திரனின் முஷ்டி காதரின் நெஞ்சைக் குறிபார்த்தது.
“என்ர வாப்பா மாதிரி நீங்க. ஒங்களை ஏமாத்தின்ா அல்லா தின்னக் குடிக்க குடுக்கமாட்டான். அங்க விட்டிட்டுப் போன கட்டைத் திரும்பிக் கொண்டு போய் அதே கடையில குடுத்துப் போட்டுத்தான் வாறன்.”
காதரின் ஆசாரமான பேச்சு சித்திரபுத்திரனின் தாண்டவ நிலையைச் சந்து பெயர்த்தியது. இருந்தாலும் சலனப் பட்டார்.
“இவன் யோசித்தார்.
“என்னையா கடுமையா யோசிக் கிறீங்க. நம்பாட்டி ஏறுங்க.”
காதர் ஆட்டோவைத் திருப்பி
கயிறு விடுறான்.”
மறுகரைக்குப் போகிறான். மனதைக்
கேள்விப் பொதியாக்கிச் சித்திரபுத்திரன் நின்ற இடத்திலேயே நிற்கிறார்.
“ஐயாவாங்களன். உந்தச் சந்தேகத்தால தானே நம்ம நாடு இப்புடிச் சீரழியுது. சனத்திட மாச்சலுக்கும் முடிவில்லாம இருக்கு.” காதர் உரத்துப் பேசினான்.
“எனக்கு நடந்தது. ஒங்களுக்கும் நடக்கக் கூடாது”
பாதசாரிகளது விநோதமான பார்வைகள் சித்திரபுத்திரனுக்குக் கூச்சத்தைக் கொடுத்தன. ஆட்டோ அருகே சென்றார்.
காதரின் ஆட்டோ அவனுக்குச் சொந்தமானதல்ல! கூலிக்குத் தான் ஒடுகிறான். போன வாரம் வான்
ஞானம் ஏப்ரல் 2004
காரனொருவன் காதரின் ஆட்டோவுடன் வானை மோதவிட்டு, சைட் கண்ணா டியை நொருக்கிவிட்டு, ஒடித் தப்பி விட்டான். இதற்காகக் காதரின் முதலாளி காதரைக் குற்றப்படுத்தித் தெண்டம் போட்டு விட்டான். ஒரு நாள் சம்பள வெட்டு அந்த வலி கொண்ட நெஞ்சு தான் பேசியது!
“அந்த எரக்கந்தானுங்க. இந்த வயசிலும் நாலு பணம் புழைக்க வேணுமெண்டு புழைக்கிற ஒங்கட சம்பளத்தில வெட்டி விடக் கூடாதெண்டு தான் நல்லதொரு சவாரியைக் கூடத் தூக்கி எறிஞ்சிட்டு பேப்பர் கட்டைக் கொண்டு போய் பேப்பர் கடையில குடுத்திட்டு வாறன். ஒங்க நல்ல மனசுக்கு நீங்களும் வந்திட்டீங்க.”
காதரின் பாச ஊற்று சித்திர புத்திரனை நனைத்தது. இதென்ன தொழிலாளியென்ற வர்க்கக் கசிவா அல்லது அகதியென்ற பற்றா?
“என்னை மாதிரித்தான் அவனும். கையடிச்சுத் தின்பவன் அத்தோடு அவனும் அகதி ஆக்கப்பட்டவன். என்னைப் புரிந்தவன்.” “சோ” வெனப் பெய்த வானமாக சித்திரபுத்திரனின் மனம் வெளுத்தது. М
“இப்படியான மணிசர் வாழுகிற தாலதான் இந்த உலகம் இருபத்தோராம் நூற்றாண்டுக்கும் நகர்ந்திருக்கு.சரி. சரி. காதர் நீ போய் உழைப்பைப் பார்.” வெகு நேரத்தின் பின்னர் சித்திர புத்திரனை வருடிய சிரிப்பு காதரைத் தோழமையோடு சென்றடைந்தது. மிக உசாராகச் சித்திரபுத்திரன் பழைய பேப்பர் கடையை நோக்கி நடந்தார்.
1

Page 8
شاzے- جس سے یہ
ー -ー。、
(.
கவிஞர் புதுவை இரத்தினதுரை
சந்திப்பு - நுதல் விழி இமயவன் (ஈழத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவர்
கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் நினைவழியா நாட்கள், காலம் எழுதிய வரிகள், வானம் சிவக்கிறது, உலைக்களம் ஆகிய நூல்களுக்குச் சொந்தக்காரர். X‛ . ጳ ' * .ጆ8 ...::&& :: பல ஆயிரக்கணக்கான எழுச்சிப்பாடல்களின் ஆசிரியர் கவிதை சொல்லுகை முறையில் மிகவும் கைதேர்ந்தவர் ஈழத்தமிழர் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்த கவிஞர்.
"கற்றவர் என்ற மாயைக் கவிஞர்கள் சிரித்த போதும் சற்றுமே நில்லேன், ஏழைச் : சனங்களின் துயரம் போக்கச் சொற்களால் கவிதை யாப்பேன் துயரிதாற் போகாதென்றால் பெற்றதாய் தடுத்தபோதும் போர்க்களம் புகுந்து சாவேன்’
புதர்வை أر கேள்வி - வணக்கம் கவிஞர் அவர்களே. ஈழத்துப் போராட்டத்தைப் பாடியவர்களை கவிஞர்கள், வெளிக்கவிஞர்கள், புலம்பெயர்ந்த கவிஞர்கள், விமர்சகர்களாக விளங்கும் கவிஞர்கள் இன்னும் மு.பொ. போன்ற சாரார் என வகைப்படுத்துகின்றனர். இவற்றிலே எவ்வகை சார் கவிஞர்களின் கவிதையில் போர்நிலைச் சமுதாயத் தாக்கம் அதிகமாக உள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்? பதில் :- வணக்கம். இந்தக் கேள்வி நீண்ட பதிலுக்குரிய கேள்வியாகப்படுகிறது. என்றாலும் நான், என்னால் முடிந்தளவு சுருக்கமாக உங்களுக்குக் கூற முற்படுகிறேன். இப்ப போர்ச் சூழலுக்குள்ளே ஒரு சமூகம் வாழ்வதென்பதொன்று இருக்கிறது. அச்சூழலுக்குள்ளே போராட்டத்தை முன்னடத்திச் செல்வதென்பது இன்னொரு புறமாக இருக்கிறது. இரண்டு விதமாக இருக்கிறது. அப்படியே இருபக்கத்தையும் பாதிக்கின்ற அல்லது இரு பகுதியையும்
12 ஞானம் - ஏப்ரல் 2004
 
 
 
 
 
 
 

தன்னோடு இணைத்துக் கொள்வதிலே வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருக் கின்றன.
இந்தப் போராளிகளைத் தவிர்ந்த வெளிக்கவிஞர்கள் போர் நிகழ்கின்ற அந்த நிலத்திலே இருக்கிறார்கள். களமுனையிலே நிற்கின்ற கவிஞர்கள் இருக்கின்றார்கள். போரின் சத்தமே கேளாமல் போரைப்பாடுகின்ற கவிஞர்கள் இருக்கிறார்கள். இதைவிட இன்னும். புலம்பெயர்ந்து போயிருக்கின்ற கவிஞ ர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் குறிப்பிட்டது போல அகஉணர்வை வெளிப்படுத்துகின்ற அல்லது அதனுT டாக சமூகத்தைப் பார்க்கின்ற கவிஞர்கள் இருக்கிறார்கள். இவர்களின் கவிதை களாலே போரின் சமூகத்தின் தாக்கம் அல்லது போராட்டத்தின் தாக்கம் எப்படியென்று விபரமாகப் பார்ப்போம்.
முதலாவது. நாங்கள், இந்தப் போராளிக் கவிஞர்கள் பற்றிப் பேசிக் கொள்வோம். அந்த வகைப்படுத்தலையே நான் அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள் வதில்லை. ஏனென்று சொன்னால் போராட்டமே சமூகத்தின் ஒரு அங்கம் தான். போராளி என்பவன் இந்தச் சமூகத்திலேயிருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்ற ஒரு நீரோட்டம் போன்றவன். எனவே போராளி என்று வகைப் படுத்துவதைக்கூட அதனூடே அவன் போராளியாகியிருக்கின்றான் என்பதால் அவன் கவிதை எழுதுகின்றதால் அவன் போராளிக் கவிஞனே ஒழிய அவனும் ஒரு சமூகத்தின் அங்கம்தான். ஒருவகைப் படுத்தலுக்காகப் போராளிக் கவிஞன் என்று வைத்துக் கொண்டால் அவனுக்கு இருவகைப் பணி இருக்கிறது. ஒன்று
GumTITIT 6f போராடுவதற்காகவே வருகிறான். உரிமைக்கான வெற்றி பெறுதலை நோக்கியது இது. இரண்டு, அவன் போராட்ட களத்தில் நிற்கின்ற போது பெறுகின்ற அனுபவம் அல்லது தன்னுடன் இணைந்து கொண்ட போராளிகள் மாவீரராகும்போது அவனுடைய மனத்தில் ஏற்படும் தாக்கங்கள், தனது கனவு மெய்ப்படுமா என்ற நம்பிக்கை, அதற்காக அவன் அடுத்த கட்டத்திற்கு நகருகின்ற தன்மைகள் எல்லாம் போராளிக் கவிஞர் களிடையே அவர்களின் கவிதைகளிலே அதிகமாக உள்ளன. இவற்றைப் பதிவு செய்கின்ற, வெளிப்படுத்துகின்ற தன்மை சார்ந்ததாக இது அமையும்.
எமது போராளிக் கவிஞர்களைச் சொல்வதானால் நூற்றிற்கு மேற்பட்ட கவிஞர்கள் இருக்கிறார்கள். இன்று நிறையப்பேர் வெளியிலே பேசப்படு மளவிற்கு போராளிக் கவிஞர்களாக இருக்கிறார்கள். நீங்கள் அறிந்திருப் பீர்கள் மலரவன் என்ற ஒரு எழுத்தாளர். அவர் இப்போது மாவீரர் ஆகிவிட்டார். அவருடைய போர் உலா என்ற அந்தப் புதிய இலக்கிய வடிவம் இன்று உலகம் முழுக்கப் பேசப்படுகிறது. அது இலக் கியத்திலேயே புதியவடிவம் என்கிறார்கள். அதுபோல எங்களுடைய பெண் போராளிகளாகிய வானதி, கஸ்தூரி, பாரதி இப்படியான கவிஞர்களுடைய இன்று எல்லோருமே எடுத்துரைத்து முன்னுதாரணமாகக் காட்டுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றன. இவைதவிர இப்பொழுது போர்க் களத்தில் நின்றுகொண்டு இந்தப் போராட்டத்தையே நேரடியாகக் கள
கவிதைகள்
3.

Page 9
தரிசனமாகக் கவிதையாக்குகின்ற கவிஞர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இவர்கள் பெறுகின்ற அந்தப் பாடுபொருள், இவர்கள் பெறுகின்ற அந்த அனுபவப் பகிர்வு இவற்றை இன் னொருவர் பெற்றுக்கொள்ள முடியாது. நிச்சயமாக, இந்த அனுபவத்தை வெளிக் கவிஞரே அல்லது புலம் பெயர்ந்த கவிஞரோ, அல்லது இந்த விமர்சகர்களாக இருக்கின்ற கவிஞர்களோ பெற்றுக் கொள்ளமுடியாது.
ஏனென்று சொன்னால் அந்த யுத்தம் நடக்கின்ற பிரதேசத்தை எட்டிப்பார்க்க யாருமே தயாராகவில்லை. ஆனால் போராளிக் கவிஞர்கள் யுத்தம் நடக்கிற பிரதேசத்தை நோக்கி நகர்பவர்கள் எனவே அவர்களுடைய அந்த அனுபவத்தைப்
பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் அல்லது
பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள்; பெற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் சித்திக் காதவர்கள் நல்ல கெட்டித்தனமாகத் தப்பித்துக் கொள்வதற்காக ஒரு உதாரணத் தையோ அல்லது ஒரு கருத்தையோ சொல்வார்கள். அது ஒரு பிரச்சாரக் கவிதை. அதில் போர் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்வார்கள். ஏனென்று சொன்னால் இவர்களுக்கு அந்தப் பாக்கியம் சித்திக்காது. இவர் போராட்டக் களத்தையே கண்ணாற் பார்ப்பதற்கு ஞாயமில்லை. காரணமில்லை. அப்ப. தனக்குக்கிட்டாத அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகச் சொல்லுவது -போராளிகள் எழுதும் கவிதைகள் பிரசாரமானவை.
இப்ப நான் கேட்கிறேன். இவர்கள் சமூகத்திற்குள் இருந்து கவிதை எழுதுபவர்கள் எல்லோருமே புதிய
1 4
}
சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டு மென்று சொல்கிறார்கள். தமிழுக்குப் புதிய புதிய சொற்களையெல்லாம் கவிதை யினுரடாகச் சொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்குத் தயாரான வர்கள் இந்தப் போரின் சொற்களை மட்டும் பயன்படுத்தினால் பிரசாரம் என்று சொல்கிறார்கள். இப்ப. களத்தில் நிற்கும். ஒரு போராளி ஆர்.பி. ஜி:என்று எழுதத்தான் வேணும், ஆட்லறி என்று எழுதத்தான் வேணும்.:பிக்ஸ் அடிக் கிறதைப் பற்றிக்கதைக்கத்தான் வேணும், பொக்ஸ் அடிக்கிறதைப் பற்றிக் கதைக்கத்தான் வேணும். ஏனென்றால்
அவனுடைய பகைப்புலம் அதுதான். நீ அவனுடைய பாடுபொருள் அதுதான்.
அவனுடைய கவிதைகளில் இவை யெல்லாம் வரும். வரும்பொழுது இந்தப் பாக்கியம் சித்திக்காதவர்கள் இதைக் காணமுடியாதவர்கள் தப்பித்துக் கொள் வதற்காக அது பிரசாரம், பிரசாரம், பிரசாரம் என்று கூறித் தப்பிக் கொள்கிறார்கள். அது தப்பிக் கொள்ளும் குணாம்சத்தில் ஒன்று. அவர்கள் வெளியில் நின்று கொண்டு புதிய சொற்களைக் கண்டுபிடிக்கிறார்களாம். அவர்களுடைய சொல் வீழ்ச்சியைப் பார்த்தாயா? புதிய சொற்பிரகடனம் என்றெல்லாம் இவர்கள் சொல்கிறார்கள். இந்தச் சொற்பிரகடனம் வந்தவுடன் மட்டும் அதனைப் பிரசாரமாகக் கொள்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் இந்தப் போராளிகளின் கவிதைகள் அந்த விமர்சகர்களுக்குச் சிலவேளை ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தச் சமூகம் ஒட்டி வாழுகிற சமூகம் அல்லது நாளைய

சமூகம் இந்தப் போரை அறியவேண்டு மென்று துடிக்கிற சமூகம் அல்லது இந்தப் போராட்டத்தை ஆவணப்படுத்தி வைத்து அடுத்த தலைமுறைக்கு
சமூகம். இவற்றுக்கு போராளிக் கவிஞர்களுடைய கவிதைகள் தேவை. அடுத்த தலைமுறை இத்தகைய
சொற்களுக்கு ஆசைப்படும். அவர் களுக்குத் தேவையாக இருக்கிறது. போராளிக் கவிஞர்களுடைய கவிதைகள் பிரசாரமாகக் கருதினால் அவ்வாறே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அது காலத்தை மீறி நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது ஏனென்றால் அதில் பொய்யில்லை. அது உண்மை முகத்துடன் உலாவுகிறது. அதற்கு எந்த உபாதையும் இல்லை. எந்தப் பொய்யும் இல்லை. எந்த மெருகும் இல்லை. எந்த மேக்கப்பும் அந்தக் கவிதைக்கு இல்லைத் தான். அது உண்மை முகத்துடனே இருந்து விட்டுப் போகட்டும்.
இப்ப நாங்கள் கேட்பது இதுதான். இந்தப் போரைப் பாடுவது தான் தமிழ் இலக்கியத்தில் கணக்க உண்டு. கலிங்கத்துப் பரணியாக இருந்தாலும் சரி. புறநானூறாக இருந்தாலும் சரி. இப்படியே பார்த்துக்கொண்டு போகலாம். இன் றைக்கு வியட்நாம் இலக்கியங்களாக இருந்தாலும் சரிதான், சீன இலக்கியங் களாக இருந்தாலும் சரிதான், ருஷிய இலக்கியங்களாக இருந்தாலும் சரிதான் அல்லது இன்றைக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருவதாக இருந்தாலும் சரிதான், தென்னாபிரிக்கக்
கவிதையாக இருந்தாலும் சரிதான்
எல்லாமே போரைப் பாடியவைதான்.
எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் உள்ள
போர்க்களத்தைப் பாடியவைதான். அந்தப் போருக்குள் வாழும் மக்களைப் பாடியவை தான். அவற்றை மட்டும் மொழி பெயர்ப்பவர்கள், மொழிபெயர்த்து இது போராட்ட இலக்கியம் என்று சொல் பவர்கள் எல்லோரும் மொழி பெயர்க்கிற கவிஞரே தான் எழுதும்போது இதிலி
ருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். பாலஸ்தீனக் கவிதையை மொழி பெயர்த்து இங்கு வெளியிடு
கின்றவர்களே தமிழீழப் பிரச்சினையை எழுதும்போது 9]gl Sly & Tryb என்கிறார்கள். அப்படி என்றால் அதை ஏன் எழுதுகிறாய்? அதை ஏன் மொழி
பெயர்க்கிறாய். மொழிபெயர்த்துக் கொண்டு வருவதற்கு ஒம்தான். எழுதுவதற்கு தயாரில்லை. இது
தப்பித்துக் கொள்ளல் அல்லாது வேறு என்ன? தெரியாத விசயத்தை எனக்குத் தெரியாது என்று சொல்லுறது கெளரவம். ஆனால் தெரியாது என்று சொல்லு றதைக் கெளரவக் குறைவாகக் கருதிக் கொண்டு அதிலிருந்து தப்புவதற்கு இது பிரசாரம் என்று சொல்வது படு மோசமான மோசடித்தனம்.
அடுத்ததிற்கு வருவோம். அடுத்தது வெளிக்கவிஞர்கள் உண்மையிலே இந்தப் போராடுகிற பூமியிலே இருந்துகொண்டு இந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் சக்திகள். இவர்களை நாங்கள் பெரிதாக மதிக்கிறோம். நான் மதிக்கிறேன். ஏனென்று சொன்னால் நகமும் சதை யுமாக இந்தப் போரின்துயரமெல்லாம் அவர்களும் சுமந்து கொண்டு பொரு ளாதாரத் தடை என்றால் அவர் களுக்கும்தான். மருத்துவத்தடை என்றால் அவர்களுக்கும்தான். இது தனியப் போராளிகளுக்கு மட்டுமல்ல.
15

Page 10
இவர்களுக்கும் உரியது. எல்லாத்தையும் வதைபட்டுக்கொண்டு அவர் வெறும் பார்வையாளர்களாக நாங்கள் கருத வில்லை. போரின் பங்காளிகளாக நாங்கள் இணைத்துக் கொள்கிறோம். கொண்டு இந்தச் சமூகம் போரிற்குள் எப்படி வதைபடுகிறது என்று இந்தச் சமூகத்தினுடைய கண்ணிரோடை தானும் கரைந்து சமூகத்தினுடைய சந்தோசத்தில் தானும் புளகாங்கிதமடைந்து தானாய் ஒன்றாய்க் கலந்து நின்று எழுதும் கவிஞர்கள் இவர்கள். இவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இது தனிய யாழ்ப்பாணத்துக்கு மட்டுமென்று சொல்லவில்லை. வன்னிக்கு மட்டுமல்ல, மட்டக்களப்பிலும் இருக்கு. திருகோண
அவர்களைப்
மலையிலும் இருக்கு. இவர்களுடைய
கவிதைகள் போராட்ட காலத்தைப்
பதிவுசெய்துள்ளன. மாறாக போராளிக்
கவிஞர்கள் போரைப் பதிவு செய்தனர். போராளிக்கவிஞர்கள் போர்க்களத்தைப் பாடினால் இவர்கள் அந்தப் பல்லும் சில்லுமாக இருந்த போருக்குள்ளே வாழ்வதனால் போராட்டகாலத்தை இவர்கள் எழுதுகிறார்கள். இப்படியான கவிஞர்கள் நிறையப்பேர் இங்குமட்டுமல்ல எங்கும் இருக்கிறார்கள்.
அடுத்த வகைப்படுத்தல் புலம் பெயர்ந்துபோன கவிஞர்கள், புலம் பெயர்ந்துபோன கவிஞர்களிலே இருவகை உண்டு. சந்தர்ப்ப வசத்தால் தேவைகருதி உண்மையாகவே இந்த நாட்டைவிட்டுப் பிரிய மனமில்லாமல் இங்கு தேடப்படுபவர்களாக இந்தப் போராட்டத்துடன் இணைந்து நின்ற தனால் பாதிக்கப்படுபவர்களாக வெளி யேறியவர்களும் இருக்கிறார்கள்.
16
அதற்குள் இருந்து
ஒரு காலத்தில் போராட்டத்தைப் போராட்டம், போராட்டம்' என்று ஆரம்ப காலத்திலே சொல்லிவிட்டு இன்று தேவைகருதி வசதியான இடங்களில் சிம்மாசனங்களிற் குந்திக்கொண்டு நாங்கள் தான் முதலிற் போரைப் பாடியவர்கள், போராட்டத்தைப் பாடியவர்கள் என்று கொண்டு அந்த முள்முடியைத் தங்களது தலையிலே இன்னும் சுமந்துகொண்டு இந்தப் போராட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள். அப்படிப்பட்ட இருவகையான கவிஞர் களையும், கவிதை ஓட்டங்களையும் பார்க்கிறோம். ,ே
ஒன்று இந்த மண்ணின் சூடு தனியாமல் இந்த மண்ணின் நினைவு கலையாமல்,இந்த மண்ணின் நினை வுடனே புலம் பெயர்ந்துபோய் இன்னும் அதற்காகவே தங்களைத் தக்கவைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பவர்களை அறிகிறோம். அவர்களுடைய எழுத் துக்கள் எல்லாமே இந்த மண்ணின் நினைவுதான். இந்தப் போராட்டத்தின் நினைவுதான். ஆனால் நாளை ஒரு நல்ல நிலைமை வரவேண்டும் என்ற கனவுடன் தான் அவர்கள் எல்லோரும் வாழ் கிறார்கள். இன்னும் சிலர் இருக் கிறார்கள். அவர்கள் எதுக் கெடுத்தாலும் போராட்டத்திற்கு எதிர்தான். என்ன நடந்தாலும் அவை பேராட்டத்திற்கு எதிர். ஏனென்றால் தான் இல்லை. தான் இல்லாமையும் ஒரு போராட்டம் நடப்பதா? நான் விட்டிட்டுப் போனபிறகும் போராட்டம் நடக்க முடியுமா? என்ற ஆதங்கம் உள்ளவர்கள் அப்ப என்ன செய்யவேணும். தான் இல்லை யெண்டதுக்காக ஒரு காரணம் சொல்ல
ஞானம் - ஏப்ரல் 2004

வேணும். போராட்டம் பிழை. தான் இருக்கும்வரையும் போராட்டம் சரி. தான் போட்டனல்லோ இனிப் போராட்டம் பிழை.
இது தன்னைத்தானே காதலிக்கின்ற ஒரு அபத்தம். நான் வெளியேறிவிட்டன் அதற்குப் பிறகும் இந்த அற்புதமான,
நாளைக்கு
போராட்டமா? அட! வரலாற்றில் என் பெயர் இல்லாமற் போய்விடுமா? அதற்காகக் கூறுவது
போராட்டம் சரியில்லை. அவர்கள் அப்படி, எழுதிக் கொண்டிருக்கின்ற ஒருவித மன நோயாளர்கள், ஒரளவுக்குச் சொன்னால்
ஒரு மனநோய் பிடித்த கவிஞர்களும்,
எழுத்தாளர்களும் உண்டு. அதற்கு
ஒண்டும் செய்யேலாது. அதைப் பற்றிப் பிரச்சினையே இல்லை.
மற்றது இந்த விமர்சகர்களாக இருக்கும் கவிஞர்கள் என்று சொன் னிர்கள், இல்லை அது தவறான சொற்பிரயோகம். கவிஞர்களாக இருந்து விமர்சகர்களாக மாறியவர்கள். நுஃமானாக இருந்தாலும் சரிதான். சிவசேகரமாக இருந்தாலும் சரிதான். மெளனகுருவாக இருந்தாலும் சரிதான். ஆரம்பத்தில் கவிதை எழுதிய கவிஞர்கள் பிறகு அவர்கள் விமர்சகர்களாக மாறுகிறார்கள். அதுதான் சொல்கிறேனே ஒரு கவிஞன் உணர்வுபூர்வமானவன். ஒரு விமர்சகன் அறிவுபூர்வமானவன். இவர்கள் கவிஞர்களாக இருக்கும் வரையும் உணர்வுபூர்வமானவர்களாக இருந்தார்கள். இவர்களெல்லாம் இன்று கல்விமான்களாகி, இன்ரலெக்சுவலாகி, புத்திஜீவிகளாகி இப்போ அறிஞர்களாகி விட்டார்கள். இப்ப விமர்சகர்களாகி விட்டார்கள். நான் நினைக்கிறேன். அவர்களிடம் நல்ல கவிதைகள் ஒரு காலத்தில் இருந்தன. நுஃமான், மெளனகுரு, சிவசேகரம் போன்றவர்கள்.
KK m KMT rin - KT di m kin 7 s s 41
சிவசேகரத்தை நான் இதிலிருந்து வேறுபடுத்துவேன். ஏனென்று சொன் னால் அவர் இன்றும் நல்ல கவிஞராக இருக்கிறார். அவர் விமர்சகராக இருந்தாலும் நல்ல கவிஞராக இருக்கிறார். ஆனால் நுஃமான் நீண்டகாலமாக விமர்சகராகவே போய்விட்டார். மெளனகுருவையும் அப்படித்தான் நான் நினைக்கிறேன். இனி அவர்களிடமிருந்து நல்ல கவிதைகள் எதுவும் வராது என்று நல்ல விமர்சகர்களாகவே அவர்கள் இருப்பார்கள். ஐம்பத்தைந்து வந்த ஒரு தாயைப் போன்றவர்கள். இனிப் பிள்ளை பெறமுடியாது என்று நான் நின்ைக் கிறேன். அவர்களுக்கு ஐம்பது வயது வந்துவிட்டது. இனி அப்படியே இருக்கலாமே ஒழிய, ஒரு பேரிளம் பெண்ணாக இருக்கலாமே ஒழிய ஒரு கவிதைக் கர்ப்பம் தரிக்கும் ஒரு தாயாக அந்த வயதை அடையமுடியாது என்று நான் நம்புகிறேன். இது என்னுடைய கருத்து. ஆனால் ஒருகாலத்தில் மிக அற்புதமாக எழுதியவர்கள் அற்புதமான கவிஞர்களாக இருந்தவர்கள். இன்று அவர்களே ஒத்துக் கொள்வார்கள். நாங்கள் கவிதை எழுதுவதை விட்டு விட்டோமென்று. ஏனென்றால் கவிதை எழுதுவதிலும் பார்க்க அறிஞன் என்று சமூகத்தில் உலாவுவது இலாபங்கூடியது. மற்றது வாய்ப்பு வசதிகள் கிட்டக் கூடியதாக இருக்கும். ஏனென்று சொன்னால் கவிஞன்என்றால் இன்றும் சமூகத்தின் அங்கீகாரம் இழக்கம்தான். ஆனால் அறிஞர்கள் என்பதற்கு எங்கள் சமூகத்தில் இன்றும் நல்ல இடமிருக்கிறது. நல்ல விளைச்சல் எடுக்கலாம், அந்த வயலில். இந்த வயல்

Page 11
கொஞ்சம் கரைச்சல். ஆனபடியால் அந்த வயலையே நோக்கி உழவு செய்வது நல்லதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
மு.பொ. என்று படுத்துகிறார்கள். ஏன் அது மு.பொ. என்ற தனிமனிதனைச் சுட்டி அந்தப் பிரிவு வந்ததென்று எனக்குத் தெரியவில்லை. மு.பொ. ஒரு நல்ல கவிஞராக, நல்ல படைப்பாளியாக அதுவும் நோயில் இருத்தல்' என்ற நாவல் மூலம் அதிகமாகத் தன்னை அடையாளப் படுத்தியவர். மு.பொ. வின் கவிதைகள் பற்றி நோக்கும்போது மு.பொ. சில நேரங்களில் சில கவிதைகள் கவிதைகள்
வகைப்
இல்லை என்று சொல்லுவார். பிறகு அதேமாதிரியான கவிதைகள் அவரே
எழுதுவார். அது ஏன் என்று எனக்கு
விளங்கவில்லை. சில நேரம் நான்
கேட்டால் இந்தக் கவிதைகள் எல்லாம் ,
கவிதைகள் இல்லை என்று சொல்லுவார்."
பேந்து அவர் நாவேந்தனுடைய எத்தனை யாவதோ ஆண்டு விழாவுக்கு ஒரு கவிதை எழுதினார். ஆனால் அதைப் பார்த்தால் ஒரு ஆரம்பகால எழுத்துப் போல, ஆரம்பகாலக் கிறுக்கல் போல எனக்கு இருந்தது. ஆனால் அவருடைய 'அது' என்ற கவிதைத் தொகுதி நல்ல கவிதைகளைக் கொண்டது. சில நேரம் நல்ல கவிதை எல்லாம் மு.பொ. எழுதும். நெஞ்சைத் தொடக்கூடிய மாதிரி எழுதும். சிலநேரம் சிறுபிள்ளைக் கிறுக்கலாக இருக்கும். அதற்கு உதாரணம் நா வேந்தனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு. அதைப் பார்த்து நான் சிரித்தேன். இந்தக் கவிதைகளைத் தானே இவர்கள் கவிதை இல்லை என்று ஒரு காலத்தில்
18
சொன்னார்களே பேந்தென்ன. இப்பொழுது இவர்களே அப்படி எழுது கிறார்களே என்று. ஆனால் மு.பொ. தனியொரு வகையல்ல. மு.பொ. வும் இந்தத் தேசிய இனப்பிரச்சினையிலே கணிசமாகப் பங்குசெய்த ஒரு கவிஞன். மறக்க முடியாது. கேள்வி - கவிஞர் அவர்களே “பிரசாரத் தன்மையுடைய கவிதைகளாக அவர்கள் கருதினால் போராளிக்கவிஞர்களுடைய கவிதைகள் அவ்வாறே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று கூறுகிறீர்கள். ஆனால் இலக்கிய உலகிலே இலக்கியத் தரம் என்ற நிலையில் அந்தக் கவிதை களுக்கு ஒர் இடமிருக்க வேண்டு மல்லவா?
:பதில் :- றைற். இந்த இலக்கியத் தரத்தைத் தீர்மானிப்பவன் யார்? யாரிடம்
அந்த அளவு கோல் இருக்கிறது? அப்படி அதை நிறுத்து விற்கிற அந்தத் தராசுப்படி யாரிடம் இருக்கிறது? அதை அளந்து விற்பவன் யார்? அந்த வியாபாரியின்ரை பெயரை எங்களுக்கு ஒருக்காச் சொல்லுங்கோவன். அவர்களுடன் நாங்கள் பேசிக்கொள்வதற்கு இலக்கியத் தரத்தை எடையிடக்கூடிய அந்த ஆள் LUTri? Who is the black sheep?gut ஒருவர் கிடையாது என்று நாங்கள் சொல்லுகிறோம். இலக்கியத்தை அளவிடும் அந்த அளவுகோலை யாரிடமும் ஒரு செங்கோலாக யாரும் கொடுக்கவில்லை. நாங்களும் பிர சாரத்தை எதிர்க்கிறோம். பிரசாரம் கவிதை இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். இலக்கியம் இல்லை என்பது எங்ளுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் எழுதிய கவிதைகளை நாங்கள்
கானம் - எப்ால் 2004

பிரசாரமற்றதாகவே கருது கிறோம். நான் கேட்கிறேன் இவர் களுடைய வரை விலக்கணத்தின்படி பார்த்தால் பாரதியின் எந்தக் கவிதைகளை இவர்கள் கவிதை,
என்று ஏற்றுக் கொள்வார்கள்.
“பார்ப்பானை ஐயன் என்ற காலமும்,
போச்சே
வெள்ளைப் பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” இது கவிதை என்று ஏற்றுக் கொள்வார்களா? பாரதியை மிக உச்சமான கவிதையின் கொடுமுடி என்றும் இவர்கள் தானே கூறுகிறார்கள். அதற்குப் பிறகு வந்த பாரதிதாசனை என்ன செய்வார்கள்?
தங்களுடைய சமகாலத்தில் இல்லாத எல்லாரையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் தங்களுக்கும், அவர்களுக்கும் 69 (5 பிரச்சினையும் கிடையாது. தன்னுடைய சமகாலத்துக் கவிஞர்களிடம் மட்டுந்தான் இவர்களுக்குப் பிரசாரமும், அழகியலும், உன்னத இலக்கியமும் வரும். ஏனென்றால் அவனுக்குக் கிடைத்து விடுமா? இது அவனுக்குப் போய்ச் சேர்ந்து விடுமோ? எனக்குரிய அவிப்பாகம் அவனுக்குக் கிடைத்து 6ճl(6)ւOT?
ஏன் நான் கேட்கின்றேனே இந்தப் புகழ்பெற்ற கவிஞர்களுடைய கவிதைகள் எல்லாமே பாட்டாளி மக்களுடன் நின்று கூவிக் கூவி விற்ற பொருள்தானே. இன்றைக்கு தமிழீழப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்து மக்களை ஒன்று திரட்டிய பெரும்பணியை இந்தக் கவிதைகள்தானே செய்திருக்கின்றன. நீங்கள் பிரசாரம் என்று குறிப்பிடும் இந்தக் கவிதைகள்
ஞானம் - ஏப்ரல் 2004
தானே செய்திருக்கின்றன. தொய்ந்து போயிருக்கும் அவர்களது உணர் வலைகளைத் தட்டியும் சந்தோசத்துடன் அவர்களுடன் சேர்ந்து கூடிச் சந்தோசப் பட்டும் இந்தக் கவிதைகள் தானே வழிநடத்துகின்றன. இவர்கள் அழகியல் கவிதை என்று எழுதிப்போட்டு யாருக்குக் கொடுக்கப்போகிறார்கள். தனக்கும், தன்னைச் சுற்றிய நாலு பேருக்கும், அவருக்கு ஒத்த ஒரு விமர்சகருக்கும். இவைகளுடன் இவர்களது கவிதைப் பணி முடிந்து போய்விடுமா? நான் கேட்கிறேன். மக்கள் கவிதையாக இருந்தால் 9ےgj[ சென்றடையும். காலத்துக்கு உதவாத எதுவுமே தாக்குப்பிடித்து நிற்க மாட்டாது. அதைக் காலந்தான் தீர்மானிக்கும். அந்தக் கவிதை காலத்தை மீறி நிற்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்கு இங்கு எவருமே உரித்தாளர்கள் அல்ல. எந்தக் கவிதை காலத்தை மீறி நிற்கும் என்பதைக் காலந்தான் தீர்மானிக்கும். அதை இப்பொழுது சமகாலக் கவிஞர்களோ? அல்லது இந்த விருப்பு, வெறுப்புகளுடன் இருக்கின்ற விமர் சகர்களோ தீர்மானிக்க முடியாது. நான் நினைக்கிறேன், இந்தத் தேவாரத் திருமுறைகள் எல்லாம் கறையான் அரித்தது என்று சொல்லுகிறார்களே அது பொய். காலம் அரித்தது. தனக்கு ஒவ்வாததைக்காலம் அரித்துவிட்டுப் போய்விட்டது. கறையான் திண்டி ருக்குமென்றால் முழுவதையும் தின்றிருக்கும். பேந்தென்ன? அதில கொஞ்சத்தை விட்டிருக்காது. கொஞ்சத் திருமுறைகள் தான் தப்பியிருக்கின்றன. இக்காலத்துக்கு
19
மக்களைச்
அப்படியில்லை.

Page 12
வேண்டிய திருமுறைகள்தான் தப்பியிருக்கின்றன. மிஞ்சியிருக்கின்றன. மற்றையது அழிந்து போய்விட்டது. அது காலம் தீர்மானிக்கும். நாங்களும் பிரச்சாரக் கவிதைகளை எதிர்க்கிறோம். ஆனால் இந்தப் போர்ச் சமூகத்திற்குள் நிற்கும், போராட்டத்தை வழிநடத்தி இணைத்துக் கொண்டு போகவேண்டிய கவிஞனுக்கு தேவை இருக்கின்றது. இவர்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். இவர்களுக்கு ஆட்லறியும் துவக்குத் தான். ஆர்.பி.ஜி உம் துவக்குத்தான். எல்.எம்.ஜியும் துவக்குத் தான் டாஸ்வும் துவக்குத்தான் எல்லாமே. இவர்களுக்குத் துவக்குத்தான். துவக்கைத் தவிர வேறையேதும் தெரியாது. அந்த வகைப்படுத்தல்கூடத் தெரியாது. பேந்து, துவக்கைப் பற்றி எழுதிறன் எண்டு இவர்கள் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இவர்களுக்குக் தெரியாது. அடே இவனுக்கு என்ன நடக்குது என்றும் தெரியாது. இவனுக்கு ஷெல்' என்றாலும் என்னென்று தெரியாது ஒன்றும் தெரியாது. ஆனால் எழுதினால் பிரசாரம் என்று சொல்லுவாங்கள். ஆனால் அவை இன்று இங்குள்ள மக்கள் அத்தியா வசியமாக அறிந்திருக்க வேண்டி யவையாக விளங்குகின்றன.
களமுனையும்
அந்தச் சொற்களைக் கவிதையில் குறிப்பிடும்போது அல்லது வா’ என்று சமூகத்தைக் கூப்பிடும்போது இல்லா விட்டால் என்னுடன் சேர்ந்துபோ என்று சொல்லும் போது பிரசாரமாம். ஏனென்றால் இவர்கள் செய்யவும் இல்லை போகவும் இல்லை, நிற்கவும் இல்லை. எங்கேயோ நிற்கிறார்கள். அப்போ, 'வா
2O
என்று கூப்பிடுகின்ற தாற்பரியம் இவர்களுக்கு இல்லாமற் போய்விட்டது. இந்தப் என்று கூப்பிட்டால் கோசமாம். உனக்குக் கூப்பிடுகின்ற தகுதி லாயக்கு இல்லாமற் போச்சே. அந்தப் பாக்கியம் சித்தித்த ஒரு கவிஞன் 'போருக்கு வா’ என்று கூப்பிடுகிறான். 9il பிரசாரமாகும்? இந்தச் சமூகத்தை வா என்று கூப்பிடுவதற்கு ஒரு தகுதி வேண்டும். இது வேறெங்கும் இருந்துகொண்டு, எண்ணுறு கிலோ மீற்றருக்கு அங்கால இருந்து கொண்டு 'வா’ என்றால் சிரிப்பாங்கள், மச்சான் நீ
‘போருக்கு வா’
எப்படிப்
முதல் வா என்று கூப்பிடுவாங்கள். அப்ப
அப்படி நின்று கொண்டு கூப்பிடும் பாக்கியம் இல்லைத்தானே. அப்ப நான் நிற்கேல்லை அல்லோ. ஆகவே இது
பிரசாரம். நின்று கூப்பிடுகின்ற பலம், தில் இல்லை. நின்று கூப்பிடக்கூடிய சக்தி உள்ளவன், உரிமை உள்ளவன் கூப்பிடுகிறான். ஐயா, அதை எப்படி பிரசாரம் என்று சொல்லுவாய்?
போராட்டம் என்பதே உங்களைப் பூப்பறிக்கின்ற வேலையா? அது இரத்தமும் சதையுமாய் உயிர் கொடுக்கின்ற வேலை. அதற்குத்
கவிதைப்
தயாராக இருக்க வேண்டும். உங்களை எழும்புங்கோ என்று சொன்னால், உங்களுக்கு எழுப்பிவிடவே ஒன்றரை மணித்தியாலம் வேணும், இருந்துகொண்டு கவிதை எழுதுவதற்கு மட்டும் கை நடுங்குவதில்லை. பேந்து எப்படி நீங்கள் பிரசாரம் என்று சொல்லுவியள்? அந்தச் சமூகத்திற்கு இல்லாவிட்டால் கவிதை எப்படி அந்தச்
தேவை.
ஞானம் - ஏப்ரல் 2004

சமூகத்தில் நிற்க முடியும். இன்றைக்கு இந்தப் போராட்டக்காலத்திலே ஏறக் குறைய 1500 பாடல்கள் வந்திருக் கின்றன. ஆயிரக்கணக்கான கவிதைகள் வந்திருக்கின்றன. அது எல்லா நாடுகளுக்கும் போயுள்ளன. இன்று சிங்களத்திற் கூட மொழிபெயர்க்கப் பட்டுக் கொண்டு இருக்கின்றன. இது மானுடத்தின் கலைக்கூடலுக்கு அவர்கள் வந்தபிறகுதான், அவர்கள் எவ்வாறு? எப்படி? சிங்களத்தில் மொழி பெயர்த் திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
இவ்வளவு நாளும் தமிழீழத்தின் இலக்கியம் இதுதான் என்று சிங்கள மக்களுக்கு ‘டூப்’ விட்டுக் கொண் டிருந்தவை இனி என்ன செய்யப் போயினம்? இப்ப அந்த 'டுப் வெடிச்சுப் போச்சு. டொப் என்று பலூன் வெடிப்பது போல வெடித்துவிட்டது.
இப்ப அவர்களுக்குத் தெரிந்து விட்டது. உண்மை இலக்கியம் எங்கு வந்துவிட்டது என்று அவர்கள் ஓடி வருகிறார்கள். இன்றைக்குப் பெரிய தொகுதியாகப் போர் இலக்கியத்தை மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறார் மடுல்கிரிய விஜயரட்ன. இந்த ‘டூப்’ இன்னும் கனகாலத்திற்கு விடேலாது. இது பிரசாரம், நாங்கள் செய்கிறம், புடுங்கிறம், வெட்டிறம் என்ற அலுவல் எல்லாம் முடிந்தது. மூட்டை கட்டி வைத்துவிட்டு இருக்க வேண்டியது தான்.
ஆனபடியால் பிரசாரம் என்பது எனக்கு விளங்கும். ஆனால் அதன்
தெரிவும் தேவையாக இருந்தது.
“நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம்” இது என்ன மாதிரி? இது கவிதையா? “தந்தது உன்தனை கொண்டது என்தனை சங்கரா யார்கொலோ சதுரர்” இதென்ன கேட்டது? இதனை மட்டும் எவ்வாறு அற்புதமான இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வீர்கள்? “ஆடுதல் பாடுதல்.” வெறும் சொல்லுத்தானே? “ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இணைய கலைகளில் மனம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்'இதென்ன கவிதை? இதைக் கவிதை என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏன்? பாரதி உன்னுடைய காலத்தவன் இல்லை. உன்னோடு போட்டிக்கு வரேல்லை. அது கவிதை என்று ஏற்றுக் கொண்டுவிட்டாய். உன்னுடைய காலத்தவன் இப்படி எழுத நீ தப்பித்துக் கொள்வதற்காக இது பிரசாரம் என்று தள்ளுறாய். எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதை யாரும் தீர்மானிக்க முடியாது. உயரியல் இலக்கியமோ? பிரசார இலக்கியமோ? என்று யாரும் தீர்மானிக்க முடியாது. காலம் தான் தீர்மானிக்கும். அதில் இது பிரசார இலக்கியமாகக் காலம் கழித்துவிடில் கழித்துவிடட்டும். இல்லை, இது நல்ல இலக்கியம் தான் என்று காலம் ஏற்றுக் கொண்டால், ஏற்றுக் கொள்ளட்டும். இப்ப ஏன் அந்தரம்? இவர்கள் ஏன் இவ்வளவு குதியம் குத்துகிறார்கள். ஏன் இந்தப் பெரிய குரல். நீயும் எழுதையா, என்னையும் எழுதவிடு ஐயா. பார்ப்பம், காலம் தீர்மானிக்கட்டும்.
(தொடரும்.)

Page 13
கலை இலக்கியத்
il)4UICIch&fildi) Sable lab
தநிலைப்பட்ட 4)தாடர்புகள்
நூலியம் (Text) என்பது இலக்கிய ஆக்கத்தின் செய்தியாகவும் கருத்தாகவும்
அதனை ஆக்கியவரிலிருந்தும், அதனைச் சுவைப்பவனிலிருந்தும் விடுபட்டு சுயாதீனமாக இயக்கும்
அமைப்பு என்று கூறுதல் இலக்கியத் திறனாய்வின் ஒர் அணுகுமுறை.
ஆனால், இந்த வரைவிலக்கணம் நூலியம் பற்றிய முடிந்த முடிபான கருத்து அன்று.
பார்திஸ் தாம் எழுதிய நூலில் (Barthes s/z, 1970) (T6óuuģ60.g5 gy6oTG வகையாகப் பாகுபடுத் துகின்றார்.
அவையாவன:
1. வாசகர்நிலை நூலியம் 2. எழுத்தாளர்நிலை நூலியம் வாசகர்நிலை (Readerly) நூலி யத்தில் சுயதெறிப்பு அற்றவெறும் நுகர்ச்சியாளர்களாகக் காணப்படுகிறார்கள். வெறுமனே அலையவிடப்பட்டவர்களாக வாசகர்கள் ஆக்கப்படுகின்றார்கள். எழுத்தாளர் நிலை (Writery) நூலியத்தில் வாசகர்கள் முயற்சி யாளர்களாகவும் நூலியத்தை உருவாக்கு
வாசகர்கள்
தூண்டப்படுபவர்களாகவும்,
பவர்களாகவும் மாற்றப்படுகின்றார்கள். இதே கருத்து வேறு பல திறனாய்
வாளர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இத்தாலியத் திறனாய் வாளர் அம்பேற்றோ இகோ"மூடிய நூலியம்' “திறந்த நூலியம்” என்ற எண்ணக் கருக்களை முன்வைத்தார். மூடிய திறனாய் வில் வாசகரது வாசிப்பு உணர்வுகள் வரையறுக்கப்பட்டிருக்கும். திறந்த திறனாய்வில் வாசகரது பல வகையான வியாக்கியானங்களுக்கும் இடமிருக்கும்.
நூலியத்தை பார்த்திஸ் ஒரு “வலைப்பின்னல்’ அமைப்பாகக் கருதினார். கருத்தின் உள்ளார்ந்த அமைப்பும், 95ül செயற்படும் புறச்சூழலின் கட்டமைப்பும் அந்த வலைப்பின்னலுடன் தொடர்புடையது. வாசகர் ஒவ்வொருவரதும் உளஅமைப்புச் சட்டங்களுக்கு ஏற்றவாறு நூலியத்தின் கருத்து வேறுபட்டு நிற்கும். (இக்கருத்து ஒரு வகையில் ஈன்ஸ்ரினுடைய சார்புக் கோட்பாட்டோடு இணைந்துள்ளது.) நூலியம் என்பது திட்டவட்டமான கருத்தைக் கொண்டிருக்கும் என்ற பாரம்பரியமான அணுகுமுறையை அவர் நிராகரித்தார். வாசகரின் இயல்பைப் பொறுத்தும், சூழமைவைப் பொறுத்தும் நூலியத்தின் கருத்து மாற்றமடைந்த வண்ணமிருக்கும்.
 
 

நூலியத்துக்கு வியாக்கியானம் தரும்பொழுது நூலியத்தின் மையப் பொருளாக இருக்கும் நூலாசிரியர் அந்த மையத்திலிருந்து நீக்கப்பட்டு விடுகின்றார். தமிழ் மரபில் உரையா சிரியர்களது வியாக்கியானங்களைப் பார்க்கும் பொழுது இவ்வகையான பன்மை வெளிப்பாடு துலங்குவதைக் காணலாம். அதாவது ნკა ([5 நூலியத்துக்குப் பல வகையான வியாக்கி யானங்கள் தரப்பட்டுள்ளன. நூலியத்தின் ஒருமைப்பாடு மாறும் பண்பு உடைய தாகவும் சார்புடையதாகவும் இருக்கும் என்பதை மைகல் பூக்கோவும் தெளிவாகக்
efílů Slů GirSTTi. (The Archaeology of
Knowledge)
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்பொழுது இலக்கிய நூலியம் ஒவ்வொரு வாசகராலும் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்ற கூற்று மீள வலியுறுத்துப்படுகின்றது. இந்தச் செயற்பாடு “கட்டுமானக் குலைப்பு’ அல்லது "கட்டுடைக்கும் வாசிப்பு” என்று கூறப்படும்.
நூலியத்தின் உள்ளமைந்த முரண் பாட்டுக் கூறுகளின் விசைகள் வேறு வேறு விளக்கத்துக்கும் மாற்று வகையான அல்லது பன்முகமான வியாக்கியானங் களுக்கும் இடமளிக்கின்றன. நூலியத்தின் கருத்து மட்டுமன்றி கருத்து எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்ற செயல் முறையும் மாற்று நிலைகளை உருவாக் குகின்றது.
நூலியம் தொடர்பான வியாக்கி யானத்தில் ஏற்படும் பிறிதொரு நிகழ்ச்சி தாமதித்து வைத்தல் அல்லது பின்தள்ளி வைத்தலாகும் (Diferment). சொற்கள் மாற்றீடான வேறு சொற்களால்
வரையறுக்கப்படுகின்றன. சொற்கள் மேலும் வேறு சொற்களால் வரையறுக்கப்பட்டுக் கொண்டே செல்லப் படுகின்றது. இந்நிலையில் நூலியத்தி லிருந்து கருத்து கட்டுப்படுத்த முடியாது சென்று கொண்டேயிருக்கும். “அனைத்து வாசிப்புக்களும் வழிதவறிய வாசிப்பு க்களே” என்று கட்டமைப்புக் குலைப்பு வாதி போல் டி. மெல் ஒரு சமயம் குறிப்பிட்டார். அதாவது எந்த இலக்கியப் படைப்புக்கும், சிரஞ்சீவியான அல்லது என்றும் நிலைத்திருக்கின்ற ஒரு கருத்து இருக்கும் என்பதை ஏற்கமுடியாதுள்ளது. நூலியத்தை விளங்கிக் கொள் வதற்கு வரலாற்றுப் பின்புலம் துணிை செய்கின்றது என்று கூறுவோர், “வரலாறு நூலியத்துக்குத் துணையான நூலியம்” என்பர். நூலியம் வரலாற்று விளை பொருளாக விளங்குவதால், வரலாற்று உணர்வின்றி தகுந்த விளக்கம் தரமுடியாது என்ற விளக்கத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் வரலாற் றுக்குத் தரப்படுகின்ற விளக்கம் கருத்தியலுடன் இணைந்த செயற் பாடாகின்றது.
நூலியம் பற்றிய விளக்கத்தை ஒடுக்கிய வரலாற்றுத் தரிசனத்துடன் விளக்குபவர்கள் அதற்கு இலக்கிய (S6)6O)6 out G (Literary Work) 6T6ttp விளக்கத்தைக் கொடுக்கின்றனர். இந்த எண்ணக்கரு நூலாசிரியரின் மேலாதிக் கத்தை வலியுறுத்துவதுடன் நூற் பொருளின் விளக்கம் ஒன்றாகவே இருக்குமென்றும் பன்முகப்பாங்கினுக்கு இடமில்லை எனவும் வலியுறுத்துகின்றது. நவீன கல்வி வளர்ச்சியும் வாசிப்புடன் இணைந்த திறனாய்வு வளர்ச்சியும் இந்தப் பழைய கருத்தை நிராகரித்துவிடுகின்றன.
வேறு

Page 14
6) IIT fissiT guó,5s,606) (Dynamics of Reading) என்ற எண்ணக்கரு கல்வி வளர்ச்சிப் மேலும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
நூலாசிரியர் - நூலியம் - வாசகர் என்ற தொடர்பில் வாசகர் பிரதான ஆளுமை கொண்டவராக மாற்றப் படுகின்றார். வாசகர் வலுவுள்ளவராக மாற்றப்பட்டமை நவீன கல்வி வளர்ச்சி யினதும் சமூக வளர்ச்சியினதும் வெளிப்பாடாகும். மாயைத் தோற்றங்களை மொழி கொண்டுள்ளமையால் வேறு வேறுபட்ட நூலிய விளக்கங்கள் வாசகர் களுக்குக் கிடைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. சொற்கள் தேய்ந்தும் உருமாறியும், சில சமயங்களில் வேற்று உருவேறியும் வருதல் உண்டு.
மேற்கூறிய அலசல்களில் இருந்து நூலியம் பற்றிய தெளிவை நோக்கி நகரவேண்டியுள்ளது. கலைவடிவம் என்பது கருத்தியலினதும் வடிவ மாகின்றது. இந்நிலையில் கருத்தியல் சார்ந்த தெளிவின்மையும், நொதுமல் நிலையும் நூலியத்தின் கொள்ளளவில் வஞ்சகத் தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. உயர்ந்தோர் நிலைகளில் பயன்படுத்தப்படும் மொழியில் ஏமாற்றுத் தன்மைகள் நிறைந்திருப்பதால் நூலியத்திலும் அதனுடைய தொடர்ச்சி முனைப்படைந்து நிற்கும். ஆனால் சாமானி யர்களின் மொழியில் ஏமாற்றுப் பண்புகள் இல் லாமையால் அவர்களது வாசிப்புக்கள் நீண்ட துருவப் பட்ட வீச்சுக்களைக் கொண் டிருப்பதில்லை. அதாவது ஒடுக்கப் படுவோரின் புலக் காட்சியில் பல பொதுத் தன்மைகள் நிறைந்திருக்கும்.
பரம்பலால்
மேற்கூறியவற்றின் 9|| لاوا படையிலேதான் நூலியத்தின் அகவயப் LIT rig (Subjectivity) 960) of 5(55(5th. இந்த அகவயப்பாங்கு காலத்தின் விசையுடன் இணைந்திருக்கும். நிறை வாக நோக்கப்போனால் அனைத்து இலக்கிய நூலியங்களும் ஏதோ ஒருபக்கம் சார்ந்தவையாகவே இருக்கும். குறிப்பிட்ட இலக்கிய வடிவத்துக்குரிய நடைச் செழுமையும் கருத்தியலின் மொழிக் கோலமாகவே அமையும்.
நூலியம் பற்றி ஆராயும்பொழுது நூலியத்தால் உருவாக்கப்படும் 'உள நிலைத்தளம்” என்ற விடயம் முக்கியமான தாகும். சாமானியர்களின் உளநிலைத் தளத்தோடு நூலியம் நேர்ப்பங்களிப்பைச் செய்கின்றதா அல்லது எதிர்ப் பங்களிப்பைச் செய்கின்றதா என்பது ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியுள்ளது.
அதாவது ஒடுக்கப்பட்டோரைப் பற்றிச் சிந்திப்பது இலக்கியத்துக்கு அவதூறு என்றும் அழகியலுக்கு இம்சை என்றும் கூறிய கருத்தாடல்கள் நவீன உலக மயமாக்கலின் நெருக்குவாரங்களின் பின்னணியில் வலுவிழக்கத் தொடங்கி யுள்ளன. இலக்கியத் திறனாய்வும், இலக்கிய ஆக்கங்களும், நூலிய விளக்கங்களும் ஏதோ ஒருவகையிலே பக்கம் சார்ந்தவையாகவே இருக்கும். அழகியல் பற்றிய வியாக்கியானங்களும் இவற்றுக்கு விதிவிலக்கு அன்று. பக்கம் சார்ந்தவை” என்று கூறும்பொழுது அவை ஒடுக்கு முறைக்கு அனுசரணை வழங்குகின்றனவா என்ற வினாவிலிருந்து தப்பமுடியாதவையாக இருக்கும்.
"தாவாரமில்லை, தனக்கொரு வீடில்லை. தேவாரம் ஏதுக்கடி” என்ற சித்தர் பாடல் அடிகள் நூலியத் திறனாய் வுக்கு நல்லதொரு சமர்ப்பணம்.

என்தோல் தழத்த கதை
இலங்கைக் கலைக்கழகத் தமிழ் இலக்கியக் குழு 2003 ஆம் ஆண்டுக்கான சாகித்தியரத்தினம் என்ற அதி உயர் விருதினை எனக்கு வழங்கியுள்ளது. இவ்விருது மாண்புமிகு அமைச்சர் கரு. ஜெயசூரியா அவர்களால் 18-09-2003 அன்று, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நிகழ்ந்த கலைக்கழக இலக்கிய விழாவில் வழங்கப்பட்டது.
இவ்விழாவின் போது கலைக்கழகத் தமிழ்க் குழுவின் தலைவர் பேராசிரியர் க. அருணாசலம் அவர்கள் என்னை நேரில் பாராட்டியதோடு, கண்டியிலிருந்து வெளியாகும் ஞானம்' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினர் என்னை நேர்காண விரும்புவதாகவும் எடுத்துரைத்தார். அதனோடு ஞானம் செப்டம்பர் இதழிலே நான் ‘சாகித்திய ரத்தினம் விருது பெற்றதைப் பாராட்டிச் சிறியதொரு கட்டுரை வெளியாகி உள்ளதாகவும் கூறினார். ஞானத்தினருக்கு என் நன்றி.
ஞானத்தின் நேர்காணல் எனக்கு மகிழ்ச்சி தருவதாயினும், என் உடல்நிலை தொடர்ந்து கொழும்பில் சில நாள்கள் தங்கக் கூடியதாய் இருக்காமையால் பேராசிரியரின் அறிவுறுத்தலின் படி அந்நேர்காணலை ஏற்கக் கூடவில்லை. ஆனால் “ஞானம் ஆசிரியபீடம் நேர்காணலுக்கான வினாக்களை எழுதி, என் யாழ்ப்பாண முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவற்றிற்கான விடைகளை விளக்கமாக எழுதி அனுப்புவேன்” என்று பேராசிரியரிடம் கூறினேன்.
இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் “ஞானத்”துக்கே சூட்டோடு சூடு செவ்வி அளிக்காதது நல்லது என்றே தோன்றுகின்றது 'பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி.
கலைக்கழகத் தமிழ்க்குழு விருது வழங்கலிலும் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்குவதிலும் கடைப்பிடித்த முறைமை கேள்விக் குறியாகிப் பத்திரிகைகளில் பெரும் விவாதங்கள் பின்னர் நிகழ்ந்தன. அவற்றைப் படித்த பின்பு உண்மையில் சாகித்திய ரத்தினம் விருதுக்கு நான் எந்த அளவுக்குத் தகுதியானவன் என்று நானே என்னை எடைபோட்டுப் பார்க்க வேண்டியவனானேன். இந்த எடைபோடலின் முடிவாக நான் வந்த தீர்ப்பை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். -
கொழும்பிலிருந்து திரும்பிய பின் என் நோய் முற்றி, யாழ் போதனா வைத்திய சாலையில், பித்தப்பையில் கல் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானேன். இதற்கென ஏறக்குறைய இரண்டு வாரங்கள் வைத்தியசாலையிலே தங்கியிருந்தேன். அந்தக்
- செரக்கன் -
. « L. rT 

Page 15
காலத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை என் குருதியை எடுத்துச் சோதிக்கும் கருமத்தை ஆண்தாதி (Male Nurse) மேற்கொண்டார். அவர் என் நண்பர். அவர் “மாஸ்டர், உங்கள் தோல் மென்மையாக இருக்கிறது. தோல் மிகவும் மென்மையாக இருப்பவர்கள் விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்களாயும், மிகுந்த உரோசம் உடையவர்களாயும், முற்கோபிகளாயும் இருப்பார்களாம். நீங்கள் எப்படி?” என்று முதல் நாள் இரத்தம் எடுக்கையிலேயே என்னை வினவினார். நான் பதில் சொல்லவில்லை. சிரித்து அசடு வழிந்தேன்.
ஆனால், அவர் கேள்விக்குச் சரியான விடை அளித்திருப்பேனானால் இப்படித்தான் கூறியிருப்பேன். “எனக்கு இன்று வயது எழுபத்து மூன்று (02-06-1930). சிறுவனாய் இருந்தகாலத்தில் நீங்கள் கூறியது உண்மை யாயிருந்திருக்கலாம். ஆனால் கடந்த அறுபதாண்டுகளில் எனது பட்டறிவுகளோடு எழுத்தாளர், கல்வியாளர் அவர்களோடிணைந்து கூடியும் ஊடியும் பெற்ற அநுபவங்களால் என் தோல் தடித்திருக்க வேண்டுமே”
1. “சொக்கன் எழுத்தாளனல்லர்; அவர் எழுத்தின் பலதுறைகளிலும்
பயிலுநரே” பேராசிரியர் ஒருவர் ஆராய்ந்து கண்ட முடிபு இது. 2. “சொக்கன் நாடகம் பற்றி எதுவும் அறியார். எனவே அவர் பற்றிக் கட்டுரை எழுதுவது எனது தகுதிக்கு உகந்ததன்று' என்று மனத்தில் முடிவு செய்து (இன்று) பேராசிரியராய் விளங்கும் ஒருவர் எனது மணிவிழா மலருக்குக் கட்டுரை எழுதாமலே கடத்தினார். 3. யாழ் பல்கலைக்கழகத்தில் நான் தமிழ்த்துறையில் வருகை விரிவுரையாளனாய் நியமனம் பெற்றதை, ஐரோப்பிய நாடொன்றிலே தமிழ் மணம் கமழச் செய்து கொண்டிருந்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் கடுமையாக ஆட்சேபித்து கண்டவன் நிண்டவனையெல்லாம் விரிவுரையாளராக்குவதா? எங்கள் மாணவர் இல்லையா? உடனடியாக அந்த நியமனத்தை நிறுத்துக” என்று தொலைக் கட்டளை (Remote Control) 9”. LITi. 4. கலைக்கழகத் தமிழ்நாடகக்குழு 1960-1961ஆம் ஆண்டுகள் தொடர்ந்து என் நாடகப் பிரதிகளுக்கு ( சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக்காவலன்) முதற்பரிசு வழங்கியதை மிகக் கடுமையாகக் கண்டித்து ஆட்சேபக் குரல்கள் பத்திரிகைகள் வாயிலாக எழுப்பப்பட்டன. எனக்கும் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுத்தலைவராய் அன்று பணியாற்றியவருக்கும் மாணவ ஆசிரியத் தொடர்பிருந்தமையை வலியுறுத்தி மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடும் முயற்சிகளிலே வயிற்றெரிச்சல் காரர்கள் சிலர் ஈடுபட்டனர். போட்டியிலே கலந்து கொண்டு, இரண்டாம் முறை இரண்டாம் பரிசு பெற்ற எழுத்தாளர் ஒருவர், “சொக்கன், நீர் உண்மையில் நாடகப் பிரதி அனுப்பியது
26 6, 16 in . 4T (rai 2s sh4

உண்மையா?” என்று கூட வினாக் கிளப்பியதுண்டு. (சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக்காவலன் இரண்டும் நூல்களாக வெளிவந்துள்ளன.) காய்த்த மரமே கல்லெறி படுவதும் நிலத்தில் அடிக்கப்படும் பந்தே மேற் கிளம்புவதும் இயற்கை. இவைபோல காய்த்த மரமாயும், அடித்த பந்தாயும் விளங்கும் எனக்குத் தோல் மென்மையானதாமே! நிச்சயமாக என்தோல் மென்மையானதல்ல!
நண்பர் சோமகாந்தன் சாகித்திய மண்டலக் கூழ்முட்டை எறி விழா (1963-09-15) (சாகித்திய மண்டலப் பங்காளருக்கு என ஆகு பெயராகவும் நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் விரிக்கவும்) எறிதலின் எவ்வித பங்களிப்பும் வழங்காது, இருண்டது விடிந்தது தெரியாமல் இருந்த தாம் மட்டுமன்றித் தம் மனைவியும் மனைவியின் குடும்பத்தினரும் அபவாதத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளானதை மிகுந்த கவலையோடு கூறியிருந்தார். (ஞானம் செப்டம்பர்)
சோமகாந்தனும், மனைவி பத்மாவும் யாழ் இந்துக் கல்லூரி வீதி வழியாகச் செல்வதற்கே கூசியது பற்றியும் விபரித்திருந்தார் அவர்.
ஆனால் கூழ்முட்டையெறிதலிலே ஈடுபடமுடியாத ஆரதக் கறிக்காரரான (மரக்கறியை ஆரதக் கறி என்பதும் வழக்கு. ஆரதம் ஆருகதம் என்ற சொல்லின் திரிபு. ஆருகதம் - பெளத்தம் பெளத்தர், சமணர் அஹிம்சாவாதிகள். உயிர்க்கொலை அவர்களுக்குப் பெரும்பாவம். மரக்கறி உணவு இவர்களிடமிருந்தே சைவர்களால் பின்பற்றப்பட்டமைக்கு ஆரதக்கறி என்ற சொற்றொடரே சான்று) சோமகாந்தனைப் போலவே நானும் இருந்தும் அவரிலும் கூடிய அளவு பாதிப்புக்கு உள்ளானவனாய் நான் இருந்தேன். மரபுப் போராட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முழு ஆதரவாளனாயிருந்து, அவர்களில் ஒருவனாகவே இனங்காணப்பட்ட நான் மேற்படி விழாவில் பார்வையாளனாயும் இருந்த குற்றத்தால், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு ஆசிரியனாய் வந்த இரண்டு வாரத்திலேயே மீண்டும் தண்ணியில்லாக் காட்டுக்கு (புத்தளத்துக்கு) மாற்றப்பட்டேன் என்றால் என் மனநிலை அக்காலத்தில் எவ்வாறிருந்திருக்கும் என்பதை வாசகர்களின் முடிவுக்கே விடுகின்றேன்.
எனது மாற்றம் ஒரு மாதத்தில் இரத்துச் செய்யப்பட்ட பொழுதிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலே பத்தாண்டுகள் நான் ஆசிரியனாய் இருந்த பொழுதெல்லாம், முட்டையெறி சம்பவத்தை அவ்வப்போது, கேள்போற் பகைவர் சிலர் நினைவுறுத்தவும் , என் முகத்தில் அதன் மூலம் கரிபூசவும் தவறவில்லை. (கேள்போற் பகைவர் - வெளிக்கு நண்பர்போல் காட்டும் பகைவர்)
தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் காட்டக் கூட்டம் நடத்தியவர்கள் மீது கூழ் முட்டை எறிந்தது அநாகரிகமான செயல்தான். ஆனால் அக்காலத்தில் சாகித்திய மண்டலத்தின் தமிழ்ப்பிரிவிலே இடம் பெற்றிருந்தவர்களின் சாதியக் காழ்ப்புணர்வுகளும், தாமே தமிழுக்குத் தனிப்பிரதிநிதிகள் என முடிவு செய்து கொண்டு தமிழில் முறைகொண்டு வந்த ஆக்க இலக்கியத்தைக் கடுமையாகச் சாடிய முறைகளும் நிச்சயம் கண்டிப்பதற்குரியனவே.
எானம் - எப்ரல் 2004 27

Page 16
அறுபதுகளில் தினகரன் வாயிலாக நடந்த மரபுப் போராட்ட விவாதக் கட்டுரைகளில் மரபுக்கெதிரான கட்டுரைகளிலே கணிசமான அளவு கட்டுரைகள் என்னால் எழுதப்பட்டன. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் யாழ் மாநகர சபை மண்டபத்தில் எடுத்த விழாவில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கவிதைச் சமர் என்பது. இன்று வழக்காடல் மன்றத்திற்கு அதுவே முன்னோடியோ என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அந்தக் கவிதைச் சமர் உண்மையில் வழக்காடல்தான். மரபுவழியே நியாயமான வழி என்று பண்டிதர் சார்பாகக் கவிஞர் முருகையன் கவிதையிலே தன்பக்க நியாயங்களை எடுத்துரைக்க. மரபுவழி பிழை என்று அதன்பக்க நியாயங்களைக் சில்லையூர் செல்வராசன் கவிதையில் எடுத்துரைக்க : தீர்ப்பு வழங்கும் நடுவராக நான் என் தீர்ப்பைக் கவிதையில் எடுத்துரைத்தேன் இந்நிகழ்வு மிகவும் பாராட்டப்பட்டது. இன்றும் நண்பர் முருகையன் இக்கவிதைச் சமர்பற்றி எடுத்துரைப்பார்.
மரபுப் போராட்டத்தில் ஒரு நிகழ்வாக கருத்தரங்கு ஒன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் 1961இல் நிகழ்ந்தது இக்கருத்தரங்கிற்குத் தலைமைதாங்கியவர் அந்நாளில் பிரபலம் பெற்றிருந்த ஆங்கில, தமிழ் வல்லுநரும் உரும்பராய் இந்துக்கல்லூரி அதிபருமான எஸ். பூரீநிவாசன். மரபுக்குச் சார்பாக மகாவித்துவான் கணேசையரின் மாணாக்கரும் சிறந்த இலக்கண இலக்கிய அறிஞருமான பண்டிதர் வ. நடராசன். (இவ்விருவரும் அமரர்கள்) மரபை எதிர்த்து வாதிட்டவன் நான். முன்னவர் இருவரளவு அறிவு வாய்ந்தவன் நான் அல்லன்.
இது எனக்கு அன்றும் தெரிந்திருந்தது. சபையில் கூடியிருந்த முற்போக்கெழுத்தாளர்கள், ஆதரவாளர்களின் தொகைப் பெருக்கமும் இயற்கையாகவே அன்று எனக்கிருந்த அசட்டுத் துணிச்சலும் என்னைப் பண்டிதரவர்களோடு அஞ்சாது மோதவைத்தன.
நான் அன்று மரபுநெறி நின்ற பேரறிஞர்களும் வசனப்பிழைவிட்டுள்ளனர் என்று அடித்துரைத்து, என் கூற்றுக்கு எடுத்துக் காட்டுக்களாகப், பரிமேலழகர் உரையிலிருந்தும் பூரீலழரீ ஆறுமுகநாவலர் கட்டுரையிலிருந்தும் உதாரணங்கள் காட்டினேன்.
1. தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாவும், பூசையும்
5-6) Tiġill................
இவ்வாக்கியத்தில் விழாவும், பூஜையுமாக இரு பொருள்களையும் உள்ளடக்கிய எழுவாய் ( விழாவும், பூஜையும்) பன்மையில் இருக்க நடவாது என்று ஒருமையிலே பயனிலை வந்தது தவறு.
(திருக்குறள் வான்சிறப்பு. குறள் 7. சிறப்போடு பூசனை செய்யாது எனத் தொடங்குவது )
28 ஞானம் - ஏப்ரல் 2004

பண்டிதர் அவர்கள் சிறப்பொடு என்ற சொல்லின் மூன்றாம் வேற்றுமை யுரபு அமைந்ததால் எழுவாயும் ஒருமையே என்று வாதாடினார். மூன்றாம் வேற்றுமைக்கும், எண்ணுப் பொருளில் வந்த 'உம்' மை இடைச் சொல்லுக்கும் சம்பந்தமில்லை என்றேன். பண்டிதர் சற்றுத் தயங்க, அத்தயக்கம் சபையில் பெரும் கரகோஷத்துக்கு இலக்காயிற்று. 2. “செல்வமாவது இரத்தினம், பொன் வெள்ளி, நெல் முதலாயின’
(பாலபாடம் - நான்காம் புத்தகம் (நாவலர்) பக் 43) இவ் வாக்கியத்திலே ‘செல்வமாவது எழுவாய் ஒருமையிலும் முதலாயின பயனிலை பன்மையிலும் அமைந்துள்ளமை தவறு. இதனைச் சொன்னதும் பண்டிதருக்கு ஆவேசமே வந்துவிட்டது. தர்க்கம் குதர்க்கமாகி. எப்படியோ தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் ! என்றாலும் அன்று மழை என்பக்கமே என்று சொல்ல வேண்டுவதில்லை.
இளமையின் வளவளப்புக் குன்றாத அக்காலத்தில் இவை வெற்றிக் களிப்பையும் பெருமிதத்தையும் எற்படுத்தியது உண்மையே. தமிழில் அகலக் காலூன்றிய நாள்கள் அவை. ஆழக்காலூன்றிய பொழுது தொன்மையான எல்லாமே நன்றாகா என்று நான் கொண்டிருந்த எண்ணம் மிகத் தவறானது என உணரத் தொடங்கினேன். தொன்மையில் தள்ள வேண்டியவை உளவாகலாம். ஆனால் 'தொன்மை மறவேல்' என்ற குறிக்கோள் வாசகம் (Motto) யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்க மகுட வாசகம் தவறானதன்று. இவ்வுணர்ச்சி தலைப்பட்டபோது அதனோடு இணைந்து பணியாற்றும் நிலை ஏற்பட்டது.
பண்டிதர்ப்படிப்பு அறிய வேண்டியது எது என்று வழிபடுத்த, பல்கலைக்கழக ஆய்வு அவ்வாறு அறிந்த பொருளை ஏன், எப்படி என்று உள் நுழைந்து அறிவது என்பதே நான் வந்துள்ள முடிவு. இவ்விருவகை அறிவுத் தேட்டங்களும் ஒன்றிணைகையில் தமிழ்மொழிக் கல்வி பூரணமடைகிறது என்பதே என் கருத்து. இக்கருத்து செல்லாக்கருத்து என்பதைப் பண்டிதர் வகுப்புகளுக்கு இன்று இருக்கும் மவுசின்மை எடுத்துக்காட்டும்
இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதனும் வேறும் (திருக்குறள் 374) இந்தப் பூர்வாங்கப் பின்னணியோடு எனக்குக் கிடைத்த விருது விடயத்திற்கு வருகிறேன்.
1. கலைக்கழ்கத் தமிழ்க்குழுத்தலைவருக்கு, கலைக்கழகப்பொறுப்பாளாரான அமைச்சர், சமாதான முயற்சிகள் தொடர்வதை (ஊக்கும் வகையில்) மனங்கொண்டு இரண்டாவது தடவையும் யாழ்ப்பாணத்தவர் ஒருவருக்கே 'சாகித்திய ரத்தினம் விருது வழங்கவேண்டும்” என்று அறிவுறுத்தினாராம். ஆகவே சலுகையாக, பிச்சையாகப் பெற்றளிக்கப்பட்ட விருதே இவ்விருது என்பது கம்பவாரிதி ஜெயராஜின் ஆதங்கம்.
எகானம் - ஏப்ரல் 2004 29

Page 17
விருது பிச்சையாக இருந்தாலும் சொக்கனுக்கு இவ்விருது தகுதிக்கப்பாற்பட்டது என்று அவர் கொள்ளமாட்டார் என்பது என் நம்பிக்கை. ஏனெனில் அவரது மகத்தான ( எமக்கும் மகத்தானதே) கம்பன்கழகமே தனது 2002 ஆம் ஆண்டு கம்பன் விழாவில் என் இலக்கியப் பணிகளைக் கெளரவித்து விருது வழங்கியுள்ளது!
நண்பர் சோமகாந்தன் புத்தகப் பரிசில்கள், விருதுகள் பட்டங்கள் வழங்குவதன் பின்னணியில் ஊழல்கள், சலுகைகள் மலிந்திருப்பதாகக் கூறும் குறையும் பொதுவானதே. அது என்னைச் சுட்டாது என்றே உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவர் செயலாளராயிருந்த ழநீலழரீ ஆறுமுகநாவலர் சபை 1980 இல் நடத்திய நாவலர் விழாவிலே விருது வழங்கிய சான்றோர் இருபத்தெழுவரில் தமிழ்மாமணி’ வழங்கப்பட்டோரில் நானும் ஒருவன். அதேபோன்று 1992 இல் அவர் காலத்தில் இந்து கலாசார அமைச்சும் எனக்கு இலக்கியமாமணி விருது வழங்கிக் கெளரவித்தது.
வீரகேசரியில் நண்பர் செ. யோகநாதன், சாகித்திய விழாக் கையேட்டில், ஆங்கிலத்தில் என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்று குறைப்பட்டது முற்றிலும் உண்மை. ஆனால் அவர் என்னைப் பற்றி எழுதியவை யாவும் சரியானவையே. (அரச இலக்கிய விழா - தொடர்கின்றன தவறுகள் - வீரகேசரி (5-10-2003) ஞானத்தில் வந்துள்ள கட்டுரையிலே இரு தவறுகள் உள்ளன. அ. கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு எனது சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக்காவலன் ஆகிய இரண்டு நாடகப் பிரதிகளுக்கே பரிசளித்தது. ஆ. “தமிழகத்திலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது தமிழ்ப் பணியினால் பல தடவைகள் கெளரவிக்கப்பட்டவர்” இவ்விரண்டும் மிகைப்படுத்திக் கூறப்பட்டனவே என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். துரும்பு தூணாக்கப் பட்டிருக்கின்றது. இ. “1947இல் எழுதிய 'கனவுக் கோயில் என்ற வரலாற்றுக் கதையுடன்
எழுத்துலகில் காலடி எடுத்து வைத்த சொக்கன் .” 1944இல் தியாகம்' என்ற சிறுகதையை எழுதி, வீரகேசரியில் அது வெளிவந்தது. தொடர்ந்து ஈழகேசரியில் 1945இல் ‘வேதாந்தி' என்ற உரைச்சித்திரம் வெளியாயிற்று. 1946இல் மின்னொளி' சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை கடைசி ஆசை முதற் பரிசு பெற்றது. அமரர் தாளையடி சபாரத்தினத்தின் சிறுகதை இரண்டாம் இடம் பெற்றது.
ஞானம் - ஏப்ரல்:2904

நான் லண்டனில் இருந்தபோது ஓய்வு கிடைத்த வேளைகளில் என் சுயசரிதத்தை பாலையும் சோலையும், என்ற தலைப்பில் எழுதி வந்தேன். இதனை வாசித்த லண்டன்வாழ் என் அன்புக்குரிய நண்பர்கள் இ. பத்மநாப ஐயர், டாக்டர் க. சுகுமார் ஆகியோர் இதிற் காணப்படும் சத்தியத்திற்கும், பயன்படுதன்மைக்கும் மதிப்பளித்துத் தாங்களே இதனை வெளியிட முன்வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன். நூல் விரைவில் வெளிவரும். 20 அத்தியாயம் கொண்ட பாலையும் சோலையும் நூலின் முதல் நான்கு அத்தியாயங்கள் முன்னோடி அறிமுகமாக, நமது ஈழநாடு’பத்திரிகையில் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளன. என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
“பாலையும் சோலையும்” வெளிவந்து வாசகர்கள் கைகளில் தவழ்கையில்,
"சொக்கன் யார்?” என்பதை அக்கு வேறு ஆணிவேறாக அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
அதுவரை காத்திருங்கள்.
ஞானம் சர்வதேசச் சிறப்பு மலர் வெளியீடு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையைச் சேர்ந்த சில மகளிர் அமைப்புக்கள் திருக்கோணமலை திருமலைக் கலாமன்றத்தின் அனுசரணையுடன் 06.03.2004 தினம் தி/ழரீ சண்முக மகளிர் வித்தியாலய அரங்கில் நடாத்திய மகளிர் விழாவில் ஞானம் சஞ்சிகையின் 46 வது இதழ் அதுவும் சர்வதேச மகளிர் தினச் சிறப்பு இதழ், ஞானம் இலக்கிய ஆர்வலர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
பிரபல பெண் சிறுகதை எழுத்தாளரும் ஆசிரியையுமான திருமதி ராணி சீதரன் அவர்கள் ஞானம்' சஞ்சிகையின் தோற்றம், வளர்ச்சிப்படி நிலை, சார்ந்து நிற்கும் இலக்கிய துறைகள் பற்றியும் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களின் உலகளாவிய இலக்கிய பணிபற்றியும் எடுத்துரைத்ததுடன் சிறப்பு மலரில் உள்ளடங்கிய விடயதானங்கள் பற்றிய தனது கண்ணோட்டத்தையும் விரிவாக எடுத்தியம்பினார்.
கலாவினோதன், கலாபூஷணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் சஞ்சிகையின் பிரதியை வெளியீடு செய்து வைத்தார். இலக்கிய ஆர்வலர் திரு எஸ். புனிதகுமார் முதற் பிரதியையும் திருமதி ச. செல்வச் சோதி சிறப்புப் பிரதியினையும் பெற்றனர். மேலும் ஞானம் சஞ்சிகைக்கு விடயதானங்களை வழங்கும் பலரும் அச்சமயம் சமூகமளித்திருந்ததுடன் பிரதிகளையும் பெற்றனர்.
ஞானம் சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழ் வெளியீட்டுக்கு களம் வழங்கி ஒத்துழைத்த திருமறைக் கலாமன்றத்தினருக்கும் பங்கேற்ற மகளிர் அமைப்புக் களுக்கும் ஞானம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- திருமலை வீ. என். சந்திரகாந்தி
ஞானம் - ஏப்ரல் 2004 31

Page 18
ర్గర్గర్గర్గర్గ
s 6- לל mÉSoarődŽo mf5ØBM7ř
பிணங்களின் மீது நின்றிதைப் பேசினும் பிழையன்று காண். பிசாசுக்கள் ஒருவேளை உணரக் கூடும் கூட்டுக்குள் உள்ள மட்டிலன்றோ குதர்க்கம் புரிவார் இவர்?
f ம்ேறுந் துணையின்றிச் ‘சலசல’க்கும் ஆற்றின் சிற்றலைகாள்!
அஞ்சற்க!
கடலொடு கலக்கையில்
நீரும் கடலாவீர்.
ஓ!
கரைதழுவும் வேட்கையுடன் கால்கடுக்க நடைபயிலும் கடலலைகாள்! நீரும் நீரே!
அஞ்சற்க!
சூரியக் கடவுளின் சுதந்திரத் தொடுகையின் கருனையில், இன்றன்றெனினும் என்றோ ஒருநாள் முகிலாகி வான்பதவி கொள்வீர்!
ஒ! மனிதர்காள்!
நீரும் நீரே! நீரில் நீர், நிலையில் பிரிவுறினும் நீரெல்லாம் நீராதல் போல், எக்குலம், எம்மதம், எவ்வினம் எனப்பல பூச்சுத் தரித்துப் புறமுகம் மாற்றி மூச்சுப் பெறினும்
நீரும் நீரே!
இங்கு,
"யாரும் நேர்' எனல் என்க.
YeSeceLeOe000YS0SYYSS0S0S0000SY000SYee0eSOLYe0k0OeeSeS00eeeeeS00SSeSS 次兆次X次冰冰冰※※※※※※※※※※※%X%洲Q%※※洲@%※※※※※※兆※※※洲氹冰次冰X次%※※※兆米洲X※※淡兆次次次次次沟
32 ஞானம் - ஏப்ரல் 2004
 

6. Ji 8O - LITT TIL 6 flygp
எண்பதை எய்தியுள்ள ஈழத்தின் மூத்த எழுத்தாளர் "மறுமலர்ச்சி” வரதர் அவர்களின் பாராட்டு விழா 17.03.04இல் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஞானம் இலக்கியப் பண்ணையின் ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவிற்கு ஈழத்தின் பிரபல எழுத்தாளர் என். சோமகாந்தன் தலைமை தாங்கினார். வேலணை 8 வீரசிங்கம் அன்னலட்சுமி தம்பதியரின் மங்கள விளக்கேற்றலுடனும் திருமதி பத்மா சோமகாந்தனுடைய தமிழ் மொழி வாழ்த்துடனும் விழா ஆரம்பமாகியது.
ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவின் முக்கிய நிகழ்வாகப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் வரதரின் வகிபாகம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 翹 விழாவில், ஞானம் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'வரதர் -80 என்ற நூல்கலை இலக்கிய விமர்சகர் தெ. மதுசூதனன் அவர்களின் அறிமுக உரையுடன் வெளியிடப் பட்டது. இந்நூலின் பொறுப்பாசிரியர் திரு. என். சோமகாந்தன் நூலின் முதற்பிரதியை எழுத்தாளர் வரதரிடம் கையளித்தார். வரதர் 80
நூல் சிறந்த பல அறிஞர்களின் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் உள்ளடக்கிய சிறந்த ஒர் ஆவணமாக வெளிவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து விழா நாயகரைப் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மூதறிஞர் பண்டிதர் கா. பொ. இரத்தினம் ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் காப்பாளர் தெ. ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் சார்பில் விழா நாயகருக்கு விருதும் வழங்கப்பட்டது.
விழா நாயகர் வரதர் தனது ஏற்புரையில், தன்னைக் கொளரவித்த விழா அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் புத்தி ஜீவிகள் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இவ்விழா ஞானம் இலக்கியப் பண்ணையின் செயலாளர் பூ பூரீதரசிங் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.
சா. அரவிந்தன்
ஞானம் - ஏப்ரல் 2004 33

Page 19
. --
கேள்விஞானம்
-இலக்கியன் பதில்கர் స్థాగ?
வாசகர்களிடமிருந்து அடிக்கடி ஞானத்திற்குக் கேள்விக் கணைகள் வந்தவண்ணமிருக்கின்றன. அவற்றிற்கான ‘இலக்கியன் பதில்கள்" இப்பகுதியில் இடம் பெறுவது பயனுடையதாக அமையும் எனக்கருதி, கேள்விஞானம் பகுதியை இவ்விதழில் ஆரம்பித்துள்ளோம்.
- ஆசிரியர்
கேள்வி : ஞானத்தின் கருத்துநிலை பற்றிக் கூறுகையில், நடுநிலைமை என்ற ஒன்று இல்லையென மல்லிகையில் சொல்லியிருக்கிறாரே மேமன்கவி உங்கள் கருத்து?
எஸ். எம். எம். பாரூக், கந்தளாய் பதில் : உலகின் எல்லா மொழி அகராதிகளிலும் அச்சொல் இடம்பெற்றிருக்கிறது. இல்லாத கருத்துக்கான சொல்லை உலகம் முழுவதுமா ஏற்றுக் கொள்ளும்? கடலின் ஆழம் அளக்கப் புறப்பட்ட நரியொன்று, தன் வாலை அதன் உள்ளே விட்டுப் பார்த்து, கடலின் ஆழம் இவ்வளவுதான் என்றதாம். நம்மால் முடியாததை உலகத்தில் இல்லை என்பது ஒரு சிலரது பாணி. கேள்விக்கு விடையெழுதத் தெரியாத மாணவன் கேள்வியே பிழையென்பது போலும், ஆடத் தெரியாதவள் அரங்கம் பிழையென்பது போலும் இருக்கிறது மேமனின் கருத்து. தன் ஆக்கங்களின் உண்மைத்தன்மையை அறிவித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லலாம்.
கேள்வி : பேராசிரியர்களுள் சிவத்தம்பி அவர்களுக்கும், இலக்கியவாதிகளுள் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும் நம் ஈழ மண் சற்று அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாய் உங்களுக்குப்படவில்லையா?
எஸ். சிவசம்பு, மானிப்பாய்,
பதில் நீங்கள் சொல்வது உண்மைதான். சற்று என்ன? அளவுக்கதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அங்ங்ணம், கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவராய் ஆராய்வோம்.
விரிந்த அறிவு, பன்மொழிப் புலமை, புதிய பார்வை, ஆய்வுத்திறன், சமூகத் தொடர்பு, தேசங்கடந்த அங்கீகாரம், தமிழ்ப்புலமை, பிறமொழி இலக்கியப் பயிற்சி, கலையாற்றல், கூரிய பார்வை இவை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தகுதிகள்.
34 ஞானம் - ஏப்ரல் 2004
 
 

மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்து ஒரு சிறு சஞ்சிகையைத் தனிமனிதனாய் வெளியிட்டு வரும் சாதனை. தாழ்த்தப்பட்ட அடையாளத்தை மீறி, இலக்கிய அங்கீகாரம் பெற்ற உழைப்பின் வெற்றி. சோறிட்ட தொழிலைத் துறந்து இலக்கியத்தையே தொழிலாய்க் கொண்ட துணிவு. தனி நிறுவனமாய் நின்று, முப்பந்தைந்திற்கும் மேற்பட்ட பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்ட பெருந்தன்மை. பெரிய படிப்போ, பன்மொழிப் புலமையோ இன்றி, தெற்கின் எழுத்தாளர்களாலும் அறியப்பட்ட அங்கீகாரம். தமிழ்நாடு வரை பேசப்படும் ஆற்றல். பல்கலைக் கழகப் பட்டத்தையே வேண்டாமென்று நிராகரிக்கும் நிமிர்வு. இவை எழுத்தாளர்
ஜீவாவின் தனித் தகுதிகள்.
இனிச் சொல்லுங்கள். மேற்சொன்ன இருவர்தம் தகுதிகளுக்குச் சமமான அல்லது அருகில் நிற்கக் கூடிய ஆற்றல் மிக்க பேராசிரியர், எழுத்தாளர் எவரையும் சொல்ல முடியுமா? இப்போது தெரிகிறதா, ஏன் அவர்களுக்கு அளவுக்கதிகமான தகுதி வழங்கப்படுகிறது என்று?
வடக்கு - கிழக்கு
ஞா. சாமிநாத ஐயர், திருக்கோணமலை
பதில் : தண்ணீர் விட்டோ வளர்த்தோம் &ां66uफ्रा! கண்ணிரால் காத்தோம் கருகத் திருவுளமோ! வடமுனையும் தென்முனையுந் தான் ஒன்றையொன்று எதிர்க்குமென விஞ்ஞானம் சொல்கிறது. வடக்கும் கிழக்கும் ஒன்றையொன்று எதிர்ப்பது
ஞானம் - ஏப்ரல் 2004
இயற்கைக்கு முரணானது. சர்வேஸ் வரர்கள் கருத்தில் கொள்வார்களாக
கேள்வி : எழுத்தாளர் அறிஞர் சொக்கன் அவர்களின் துணைவியார் அண்மையில்
மறைந்ததாய் அறிந்தோம். படைப்பாளியின் துயரை ஞானம் பகிர்ந்து கொள்ளாதது ஏன்?
வை. லலிதா, வட்டுக்கோட்டை பதில் : இதோ உங்கள் கேள்விக்கான பதில் மூலம் அறிஞர் சொக்கனது துயரில் பங்கு கொள்கிறது ஞானம். பல தசாப் தங்களாக ஈழத்து இலக்கிய உலகில் தன் தனித்திறமையால் நிலைத்து நின்றவர் சொக்கன் அவர்கள். முற்போக்கை ஊக்கப்படுத்திய முருக பக்தர். மரபுக் கோபுரத்தில் நின்று நவீன இலக்கியங் களுக்குக் கைகொடுத்து உதவிய மறுமலர்ச்சியாளர். சேக்கிழார் கம்பரோடு, சேக்ஸ்பியர் மில்ட்டனையும் கற்ற அறிவாளி கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு நாடகம், மேடைப்பேச்சு எனப் பல கலை, இலக்கியக் களங்களிலும் தனித்துத் தன் பெயர் பதித்தவர். வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்தபடி, மேற்சொன்ன சாதனைகளைப் புரிந்ததோடு அல்லாமல், முப்பதிற்கு மேற்பட்ட நூல்களையும் வெளியிட்ட சாதனையாளர். மேற்சொன்ன, இவரது சாதனைகளுக்கு வாழ்க்கைத் துணையாய் நின்று துணைபுரிந்தவர் அவரது திருமதியார். அவரின் இழப்பு சொக்கன் அவர்களுக்கு மிகப்பெரும் இழப்பு அவரது சோகத்தில் நேயர்களோடு ஞானம் பங்கேற்கிறது. தன் நூலொன்றை மனைவிக்குச் சமர்ப்பணமாக்கி சொக்கன் எழுதிய கீழே தருகிறோம். அது ஒன்றே அவர்கள் இல்லறத்தின் ஏற்றத்தை வெளிப்படுத்தும்.
கவிதையொன்றைக்
35

Page 20
எனக்கு ஒருத்தி வாய்த்தாள் ஒரே தலையணையில் தலைசாய்க்க
உரித்துப் பெற்றவள். பட்டு மேனியால் உரசி எட்டுப் பொடியளுக்கு இடமளித்தவள். எட்டிச்செல் என்றுஇதயத்தாற் சொல்லாமல் கட்டுப்பெட்டி போல் கட்டுண்டு கிடந்து எனது கவலைகளுக்கெல்லாம் சுமைதாங்கிஆனவள். அவளுக்குநான் படைக்க வேண்டியது என் உயிர்தான். என்றாலும்இந்த நூலையே கண்ணப்பர் போன்று களிப்புடனே படைக்கின்றேன்.
- 67சரக்கன்”
கேள்வி: உண்மையைச் சொல்லுங்கள். நம் மண்ணில் வெளிவந்த போர்க்கால இலக்கியங்கள், எழுத்தாளர்களின் விருப்பிற்கேற்ப அணி சார்ந்து போரை ஊக்கப்படுத்தினவேயன்றி மானுடம் என்ற எல்லையில் போரில்லா உலகத்தையோ, அல்லது போரின் தீமையையோ வலியுறுத்திய சிறந்த படைப்புக்கள் ஏதும் இதுவரை வந்ததில்லைத்தானே?
சி. தம்பிமுத்து, வவுனியா. பதில் : நீங்கள் சொல்வது உண்மை தான். நவீன எழுத்தாளர்கள் தாம் சந்தித்த நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் தமது எழுத்தில் பதிவு செய்கின்றனர். அந்நிகழ்ச்சி மீதான பார்வையில், பெரும்பாலும் எழுத்தாளரின் சார்புபட்ட கருத்துத் திணிப்பு இருக்கவே செய்கிறது. எக்ஸ்ரே கண்களோடு சம்பவங்களின் உட்புகுந்து, பிரச்சினைகளின் மூலம்
அறிந்து பக்கச் சார்பின்றி எழுதுவதற்கு
மிகுந்த திறமையும், சான்றாண்மையும் வேண்டும். அத்தகைய எழுத்தாளர்களைக் காண்பது மிக அரிதாய்த்தான் இருக்கிறது.
36
போர் என்பது, உலகம் உள்ளளவும் இருக்கத்தான் போகிறது. எளியவர்களை வலியவர்கள் அடக்குவதும், அதை எதிர்த்த எளியவர்கள் வெல்ல முயலுவதும் மனித சமுதாயம் இருக்கும் வரையில் நடக்கத்தான் போகிறது. போரற்ற சமூகம் வெறும் கற்பனையே போர் என்பது மானுடத்தைச் சிதைக்கும் ஒன்றுதான். எனினும், போருக்குமுகங்கொடுக்கும் எவரும்,அதன் பாதிப்பினால் ஓர் அணி சார்வதும் தவிர்க்க முடியாத ஒன்றே. எழுத்தாளனும் சமூகத்தின் ஒரு பிரதிநிதி என்ற வகையில் இவ்வியல்புக்கு விதிவிலக்காக மாட்டான், அது தவிர, போர் வாழ்வைப் பதிவு செய்வதில் பல பிரச்சினைகள் இருக் கின்றன. எழுத்தாளனுக்குப் புல பிரச்சினைகள் இருக்கின்றன. அவ் வகையில், அணி சார்ந்தேனும் நம் போர் வாழ்வைப் பதிவு செய்த இலக்கியவாதிகள் பாராட்டுக் குரியவர்களே!
எனினும், ஒரு சில கூர்மையுள்ள எழுத்தாளர்கள் தன் சமூகத்தையும், போரையும் கொச்சைப்படுத்தாமலும், அதேநேரம் மானுடம் என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கைவிடாமலும், தொடர்பு பட்டவர்களுக்கு மட்டும் விளங்கும் வண்ணம், குறிப்புப்பொருளில் அற்புதமான இலக்கியங்களை ஆக்கவே செய்கின்றனர். அத்தகையோர் படைக்கும் இலக்கியங்கள், போர்க்கால உணர்ச்சியைத்தாண்டி, காலங்கடந்து வெற்றிகொண்டுநிலைக்கும். அத்தகு இலக்கியங்களைப் படைக்க, மிகப்பெரிய ஆற்றல் வேண்டும்.
இந்நீண்ட முன்னுரைக்குப் பின் உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் நீங்கள் இக்கேள்வியைக் கேட்டிருந்தால், அத்தகு இலக்கியங்கள் இல்லையென்றே பதில் சொல்லி
எானம் - எப்ாஸ் 2004

யிருப்பேன். சென்ற வாரம் பேராசிரியர் மெளனகுருவின் மணிவிழா வெளி யீடான 'மெளனம் சிறப்பு மலரைப் படிக்க
முடிந்தது. அம்மலரில் மெளனகுரு,
சார்வாகன்' என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார். அற்புதமான படைப்பு. பாரதக் கதையை வெளிப்படையாய்க் காட்டி, யாரும் மனம் நோகாதவாறு போரின் விளைவுகளையும், போரினால்
விளையும் மானுடச் சிதைவுகளையும்,
அறமீறல்களையும் நடுவு நிலைமை யாளர்களையும் போர் உள்ளிர்க்கும் விதத்தினையும், நடுவு நிலையோடு போரை விமர்சிப்பவர் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துக்களையும் தெளிவாய் எடுத்துக் காட்டி அற்புதமான ஒரு காவியம் செய்துள்ளார் மெளனகுரு. அக் கதையைப் படித்ததும், மெளனகுருவின் மேலான மதிப்பு பலமடங்கு உயர்ந்தத. உங்கள் கேள்விக்கான பதிலாய் அப்படைப்பு நிச்சயம் அமைந்திருக்கிறது. கேள்வி: இன்றைய கவிஞர்களில்
உங்கள் மனதில் இடம் பிடித்த சிலரை
வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்? (காரணத்தோடு)
பதில் : உணர்வு சார்ந்த கவிதை, அறிவு சார்ந்த கலிதையென கவிதைகளை இருவகைப் படுத்தலாம். உணர்வு சார்ந்து எழுதி மக்களைத் தொட்டு வெற்றிகொண்ட கவிஞர்களுள் முதலிடம் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கே. இன்று பரவலாய் எழுதும் பல இளங்கவிஞர்களிடம் புதுவையின் சாயல் தவிர்க்கமுடியாமல் படிந் திருக்கிறது. அதுதான் அவரது வெற்றி. அறிவுசார்ந்த மானுடத்தை முதன்மைப் படுத்தி அக உணர்வுகளைத் தொட்டு எழுதுவதில் இரு இளைஞர்களுக்கு முதலிடம். ஒருவர் வாசுதேவன். மற்றவர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார். வாசுதேவன்
-e: r erre – - “. r -s off, A
யாழ். பல்கலைக்கழக மாணவனாய் இருக்கும்போது, மல்லிகைப்பந்தலோடு வெளியிட்ட “என்னில் விழும் நான்’ ஈழமக்கள் தலை நிமிர்த்தத்தக்க ஒரு நூல். சிவகுமார் கவியரங்குகளில் மட்டுமே களைகட்டுகிறார். இதுவரை இவரின் கவிதைகள் நூலாகவில்லை என்று நினைக்கிறேன்.இன்றைய இளைஞர்களுள் நடுநிலமையோடு ஆழமாய் எதனையும் நோக்குவதில் சிவகுமாருக்கு முதலிடம் தரலாம். இருவரும் தங்களை அதிகம் வெளிப்படுத்த விரும்பாதவர்கள். ஒருவர் கொள்கையாலும், மற்றவர் கூச்சத்தாலும் அடங்கிக் கிடக்கின்றனர். உலகியலில் வெற்றி கொள்ள விரும்பாத பெரும் பதவிகளற்ற இவர்களைத் தேடிப்பிடித்து இனங்காட்ட, மற்றவர்களுக்குப்பைத்தியமா என்ன? உணர்வு சார்ந்த எழுதிப் புகழ்கொண்ட கவிஞர் காசியானந்தன், அறிவுசார்ந்து அண்மையில் எழுதிய “நறுக்குகள்’ படித்தீர்களா? ஆச்சரியப் படுத்தியிருக்கிறார். அறிவு, உணர்வு என்ற இரண்டுக்குமான பரிசு என்றால் நிச்சயம் அது அவருக்கத்தான்.
கேள்வி: முரளியின் 500 விக்கட் சாதனை பற்றி . 2
இ. சுதர்ஷினி, கொழும்பு பதில் : பார் புகழும் சாதனை. முரளியால் தமிழனுக்குப் பெருமை; நாட்டுக்குப் பெருமை.
படி படி’ என்று சதா கூறிக் கொண்டிருக்கும் சராசரித் தந்தையர் போலல்லாது தனது மைந்தனின் திறமையை சிறுவயதிலேயே இனங் கண்டு வளர்த்தெடுத்து ஊக்கம் கொடுத்த முத்தையா பெரும் பாராட்டுக்குரியவர்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்.’

Page 21
ܝܢܠ
ஒவியத்திற்காய் காத்திருத்தல் யாவரும் வெறுக்கத்தக்கதான ஒவியங்களை நீஇன்னமும் வரைகின்றாய். நீ வரையும் ஒவியங்களின் கோடுகளில் எமது சிறைக் கம்பிகள் தயாராவதாய் எல்லோரும் சொல்கின்றார்கள். எப்போதுதான் எமக்குப் பிடித்தடமான ஒவியத்தை நீ வரைவாய்? அதுவரைக்கும் எதுவும் كم مصر வரையாடமல் இருக்க மாட்டாயா? உனக்கு தெரியுமா? ജ
o O O f #ః
நாம் நம்பி இருப்பதை" w ஒவியங்கள் அழகியமனங்களின் \
467*గ్ \ ஒவியன் గ్రాT 1ւն நாம் இரசிகர் ஆனோம். 2. நிராகரிக்கவே முடியாதல்லவா? / வரையத் தொடங்கு நண்பனே!" எமக்குப் பிடித்த மெலிதானவர்ணங்களால் ஆன ஒவியத்தை. அதுவரைக்கும் நாம் காத்திருக்கின்றோம். எமது மரணத்தின் பின்னும்,
உனது மரணத்தின் பின்னும், நாம் உனது ஒவியத்திற்காய் காத்திருந்தவர் என்று சொல்லப்படுவோம்.
C. T. CT in - CT ' train 2s)s)4
 
 

எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை மனோகரன்
ஆற்றல் வாய்ந்த பெணி படைப்பாளி
இலங்கையின் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளிகளுள் ஒருவராகத் தாமரைச்செல்வி (இரதிதேவி கந்தசாமி) விளங்குகிறார். சிறுகதை, நாவல், ஒவியம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட அவர், கல்கியில் சோமு எழுதிய நந்தவனம்' என்ற நாவலில் இடம்பெற்ற ஒரு பாத்திரத்தின் பெயராகிய தாமரைச்செல்வி என்பதைத் தனது புனைபெயராக வரித்துக்கொண்டார். பரந்தன் பிரதேசத்தில் குமரபுரம் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், 1973இல் வானொலியில் தமது படைப்புகள் மூலம் பிரபலமாகி 1974முதல் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தாமரைச்செல்வி எழுதி வந்துள்ளார். நூற்றைம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், மூன்று குறுநாவல்கள் உட்பட எழு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றுள் சுமைகள் (1977), விண்ணில் அல்ல விடிவெள்ளி (1992), தாகம் (1993) ஆகிய நாவல்களும் வேள்வித் தீ (1994) என்ற குறுநாவலும், ஒரு மழைக்கால இரவு (1998), அழுவதற்கு நேரமில்லை (2002) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் இதுவரை வெளிவந்துள்ளன. எழுத்துத் துறையை அடுத்து ஒவியத்துறையிலும் தாமரைச்செல்வி மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தாமரைச்செல்வியின் எழுத்துக்கள் தனித்துவம் மிக்கவை. இலங்கையின் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களுள் ஒருவராகத் தம்மை எப்போதும் அவர் இனங்காட்டி வந்துள்ளார். யதார்த்தத்திற்குப் புறம் போகாத முறையில் அவர் தமது எழுத்தாற்றலைப் பயன்படுத்தி வருகின்றார். சமூகத்து மாந்தர்களை நுட்பமாகக் கவனித்து அவர் தமது பாத்திரங்களைப் படைத்து வருகின்றார். அவரது சிறுகதைகளுட் கணிசமானவை சிறுகதையின் சிகரத்தைத் தொடுவனவாக விளங்குகின்றன. இலங்கையின் நாவல்துறை வரலாற்றிலும் தாமரைச்செல்விக்குக் குறிப்பிடத்தக்கவோர் இடமுண்டு.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எமது மாணவர் ஒருவர் தமது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக தாமரைச்செல்வியின் எழுத்துக்கள் பற்றி ஆய்வு செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இலங்கைக் குப் பெருமைதேடும் எழுத்தாளர்களுள் ஒருவரான தாமரைச்செல்வியின் படைப்புகள், இந்நாட்டில் நவீன இலக்கியத்துறைக்குப் புதிய புனல் பாய்ச்சி வந்துள்ளன.

Page 22
"நெஞ்சு பொறுக்குதிலையே." நமது நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து, நிதானமான சிந்தனை படைத் த யாரும் வேதனைப்படாமல் இருக்கமுடியாது. குறிப்பாக, தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் , பிரச்சினைகளும் மிக வெட்கக் கேடானவை. வடக்கு, கிழக்கு, மலையகம் என்று பிரிந்துகிடந்த தமிழர் மத்தியில் ஒருமித்த நோக்கையும், ஒற்றுமையையும் தோற்றுவித்த பெருமை அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தைச் சாரும். சிறப்பாக வடக் கையும் , கிழக் கையும் அரசியல்ரீதியிலும், உணர்வுரீதியிலும் ஒன்றுபடுத்தும் பெரும் பணியில் அவரும், அவரது கட்சியினரும் உழைத்தனர். எதிரும் புதிருமாகப் பிரிந்துகிடந்த தமிழ்க் கட்சிகள் எழுபதுகளில் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி, வடக்கு - கிழக்கு ஒருமைப்பாட்டையும் வளர்த்தன. விடுதலை இயக்கங்களும் தமக்கிடையே பல வேறுபாடுகள் இருந்தபோதிலும், வடக்கு - கிழக்கு தமிழர்களதும், முஸ்லிம்களதும் தாயகப் பிரதேசம் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தியே வந்துள்ளன. பேரினவாதிகளும், சில சந்தர்ப்ப வாதிகளும் வடக்கு - கிழக்கைத் துண்டுபோட முயன்ற போதெல்லாம் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.
ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழர்கள் யாரும் (பெயர்களை மாத்திரம் தமிழிற் கொண்டிருக்கும் ஒருசிலரைத் தவிர) கனவிலும் நினையாத ஒரு
காரியம் நடந்துகொண்டிருக்கிறது. உழைப் பையும் , உயிரையும் அர்ப்பணித்து வளர்ந்த தமிழர் அமைப் பு ஒன்று, சுயநல வாதத்தாலும், பிரதேசவாதத்தாலும் பலவீனப்படத் தொடங்கியுள்ளது. பேரினவாதிகளும், சில சந்தர்ப்ப வாதிகளும் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு செய்தி ஆச்சரியப்படத்தக்க முறையில் அவர்களுக்குக் கிடைத் திருக்கிறது. அவர்களைப் பொறுத்த வரையில், பழம் நழுவித் தானாகவே பாலில் விழுந்திருக்கிறது. வடக்கை யும், கிழக்கையும் வெட்டு வெட்டு என்று கத்திக் கொணி டிருந்த வர்களுக்கு, கத்தி இல்லாமலே இதனைச் சாதிக்கக் கூடியதாக ஏற் பட் டுவிட்டது. அணி மைய பிரச்சினைகள் குறித்துப் பேரினவாதச் சிந்தனையாளர்கள் கொடுப்புக்குள் சிரிப் புடன் எக்கச் சக் கமாகக் கருத்துகள் கூறியும், கட்டுரைகள் எழுதியும் வருகின்றனர்.
இன்றைய இந்தப் பிரச்சினை க்குப் பின்னால் ஒரு முக்கிய மறைகரம் செயற்பட்டு வந்துள்ளது என்பது இப் போது வெட் ட வெளிச்சமாகி விட்டது. உலகத்துக்கு ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழிய உபதேசித்துவிட்டு, இலங்கைத் தமிழர் களின் உணர்வுகளைப் பொருட் படுத் தாது, எப்போதும் துாரத்தில் நின்று குரைத் துக் கொண்டிருக்கும் ஓர் அந்நிய நாடே இந்த மறைகரம் என்பது தெட்டத் தெளிவாகிவிட்டது. தமிழர் மத்தியில் பெயரளவிற்கேனும் இருந்துவந்த ஒரு கூட்டணியைச் சங்கரிப்பதிலும் இந்த மறைகரம் செயற் பட்டதாகக் கருதமுடிகிறது. அதேவேளை,

மகாத்மாக்களும், ஞானிகளும், கல்விமான்களும், விஞ்ஞானிகளும், இலக்கியவாதிகளும், கலைஞர்களும் தோன்றிய ஓர் அயல் நாட்டின் உளவுத்தாபனத்துக்கும்கூட, இந்தக் கீழ்த் தரமான கைங்கரியத்தில் தொடர் பிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. இலங்கைத் தமிழரின் அரசியல், பலம் மிக்கதாக வளர்வதை இந்த இரு நாடுகளும் தம்மளவில் விரும்பவில்லை என்பது வெளிபப்டை. புத்தரைத் தோற்றுவித்த அயல்நாடு பேரினவாதத்துக்குத் துணைபோகிறது என்பது வெட்கத்துக்குரியது.
காலங்காலமாக் கட்டியெழுப் பப்பட்டு வந்த வடக்கு-கிழக்கு இணைப்பு, இப்போது காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. வடக்கு-கிழக்கு தமிழரதும், முஸ்லிம்களதும் தாயகம் என்பது சுயநலத்தால் மறுக்கப் படுகிறது. "தண்ணிர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம் கருகத் திருவுளமோ?” என்ற உணர்வு, சிலரின் சுயநலத்துக்காக் பலியிடப்படுகிறது. வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத் தோருக்கும், தமிழ்பேசும் மக்களின் தாயகத்தையே விலைபேசும் சிலருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற உயிரை இழந்துவிட்டு, வடக்கு கிழக் கைப் பிரித்துவரும் “சமாதானத்தால்” என்ன பயன்? சிலர் தங்களின் செயற் பாடுகளினால் பேரினவாதிகளுக்குத் தங்களை அறியாமலே துணைபோகின்றனர்.
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடந்த காலத்தில் வளர்ச்சியுற்று வந்த அரசியல் நிலைப்பாடுகளினால்
பிரதேசவாதம் பெருமளவுக்குத் தணிந்திருந்தது. ஆனால், மிக அண்மைக்காலத்தில் பிரதேசவாதம் சுவாலைவிட்டு எரியத் தொடங்கி யுள்ளது. புத்திஜீவிகள் சிலர் கூட இப்பிரதேசவாதத் தீக்குள் அகப்பட்டுத் திணறிக் கொணி டிருக்கின்றனர். பிரதேசவாதத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்பவர்கள், அதில் குளிர் காயப் நீது கொணி டிருக்கின்றனர். இத்தகைய செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்கமாட்டாது. இத்தகைய சந்தர்ப்பத்தில் பாரதியின் கவிதை வரிகள் தாம் ஞாபகத்துக்கு வருகின்றன: "நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை
நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு கோடி-என்றால் அது பெரிதாமோ?
கண்ணிலாக் குழந்தை கள்போல்
பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார்’
முரளிக்கு வாழ்த்துக்கள்!
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கற் வீரர்களுள் ஒருவரான முத்தையா முரளிதரன், ஐந்நூறு விக்கற்றுக்களை வீழ்த்திச் சாதனை புரிந்த நிகழ்ச்சி அண்மையில் நடந்துள்ளது. 1992முதல் இலங்கையின் கிரிக்கற் வீரராகத் திகழும் முரளி, 1997இல் இருந்து உலகப் புகழைத் தமதாக்கிக் கொண்டார். சாதனை வீரராகத் திகழும் முரளிதரனை மனமாரப் பாராட்டுகிறேன். வளர்க அவர் திறமை தாய்நாட்டுப் பற்றுமிக்க முரளிதரன், தாய்மொழிப் பற்றும் கொண்டவராக விளங்கவேண்டும் என விரும்புகிறேன்.
41

Page 23
கட்டாயம் பார்க்க வேண்டிய
கலாரூபமான திரைப்படம்
6 M265256602/727677660. ...
- எம். கே. முருகானந்தன் -
9
ந்ெதவொரு கலைப்படைப்பும் சமூக நோக்கு உள்ளதாக இருக்க வேண்டும். அப்படைப்பை மெருகூட்டும் அழகியல் அம்சம் கைகோர்த்து வரவேண்டும் இவற்றிற்கு மேலாக அந்தக் கலை வடிவத்தின் உயிர்நாடியான தனித்துவப் பண்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். வெறுமனே பொழுது போக்கிற்காகவும், உள்ளக் கிளர்ச்சிக்காகவும் வியாபார நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படும் படைப்புகள் அபத்தமானவை. விமர்சகர்களால் கண்டிக்கத்தக்கன. மக்களால் ஒரம் கட்டப்பட வேண்டியன.
ஆனால் தமிழ் திரையுலக இயங்கு வட்டத்தின் எண்ணமும் நோக்கமும் முற்று முழுதாக வேறாவே இருந்து வருகிறது. இத்தகைய அழகியல் உணர்வும், சமூக நோக்கும் கொண்ட படைப்புகளுக்கு அங்கு இடமில்லை. நம்பகத்தன்மையான கதையோ, திரைப்படத்தின் மொழியான காட்சிப்படுத்தல் மூலம் அதை நகர்த்த வேண்டிய அவசியமோ இருப்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
மாறாக, மேலோட்டமான ரசனை கொண்ட பெரும்பான்மையான தமிழ்ப்பட இரசிகர்களின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட நெறியாளர்கள், நவீன தொழில் நுட்பங்களும், கொம்பியூட்டர் கிராபிக்சும் கைகொடுக்க, பிரபல நடிகர்களின் அந்தஸ்து முண்டு கொடுக்க, ஒரு குறிப்பிட்ட Formula விற்கு அடங்கிய மசாலாப் படங்களைத் தயாரிக்கிறார்கள். யந்திரமானது ஒரே விதமான பொருட்களை உற்பத்தி செய்வதுபோல் திரைப்படங்களை பிரசவித்துத் தள்ளுகிறார்கள். நவீன ஒளிப்பதிவுக் கருவிகளும், வேகமான காட்சிகளும் பார்வையாளனின் சுதந்திரச் சிந்தனையை அடியோடு மழுங்கடித்து மூளைச் சலவை செலவு செய்துவிட, பொய்களே மெய்களானது போன்ற மாயா உலகிற்குள் ரசிகர்கள் போதையில் மயங்கி உழலுகிறார்கள்.
போய்ஸ், ஒற்றன், ஜெய் எனச் சொல்லியடங்காத பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பிரபல கதாநயகன், கிளுகிளுப்பூட்டும் காதற் காட்சிகள், 4 அல்லது 5 பாடல்கள், படக் கதையோடு ஒட்டாத நகைச்சுவைக் காட்சிகள், கண்ணிர் சிந்த வைக்கும் ஒரிரு சோகக் காட்சிகள்,திகில் ஊட்டும் சண்டை. இவையே தமிழ்த் திரைப்பட உலகின் வரையப்படாத சட்டம். ஆனால் என்றுமே மீற முடியாத சட்டமாகவும் இருக்கிறது. இக்கலவையை இரண்டரை மணிநேரத்திற்குள் சரியான அளவுகளில் பங்கு போட்டு அனைத்துத் தரப்பினரையும் திருப்தி செய்யும் திரைப்படமே வெற்றியான திரைப்படம் என்றாகிவிட்டது. அதைச் செய்து முடிப்பவனே சிறந்த நெறியாளன் என்பது போலாகிவிட்டது. அத்துடன் அண்மைக் காலங்களில் காட்சிப்படுத்தும் பண்பை
42
 
 
 
 

இயக்குனர்களான பாலா, மணிரத்தினம் போன்றோர் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளமையும் உண்மையே. ஆனால் இவைதானா நல்ல திரைப் படத்தின் அம்சங்கள்? நம்ப முடியாத ஒரு மாயா உலகிற்குள் பார்வையாளனை ஆழ்த்தும் அத்தகைய உத்திகளை மீறி ஒரு நல்ல நாவலைப் படித்த மனநிறைவை ஒரு திரைப்படம் தர முடியுமா?
சுந்தர ராமசாமியிடமும், தோப்பில் முகமது மீரானிடமும், ஜெயமோகனிடமும் பெற்றுக் கொண்டது போன்ற ஆழமான, உள்ளத்துக்கு நேசமான, அனுபவப் பகிர்வு ஒரு தமிழ்ப்படம் மூலம் எங்களுக்குக் கிட்டுமா? மனித வாழ்வின் செறிவான கோலங்களை உள்ளடக்கிய தரிசனத்தைத் தமிழ்த் திரைப்படம் எமக்குத் தரமுடியுமா?
நிச்சயம் முடியும்! ஆனால் அபூர்வ மாகத்தான்.
தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மூலையில், வெளி உலகின் கண்ணுக்குள் அகப்படாத ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை, அதுவும் ஒரு இஸ்லாமியச் சமுதாயத்தின் கதையை நதிக் கரையினிலே படத்தில் பார்க்கிறோம். ஒரு பெண்ணிற்கு, அதிலும் பெண் என்ற காரணத்தால் அவளது சமூகம் சமச்சீரற்ற
உச்சக்
அர்ப்பணிப்போடு சொல்ல முடியும் என்பதை நதிக்கரையினிலே என்ற தனது திரைப்படத்தில் செய்து காட்டியிருக்கிறார் பொன்வண்ணன்.
இதனால் அந்த அபலைப் பெண்ணான ஜமீலா, அவளது கணவனான நஸிர், தகப்பனான மொகமட் ஆகியோரோடு அந்த இரண்டரை மணிநேரமும் நாமும் வாழ முடிந்தது. ஜமீலாவாக நடிப்பவர் சுவலட்சுமி. படத்தில் உள்ள ரசிகர்களுக்குப் பரிச்சயமான ஒரே முகம் இவரதுதான். கொழுத்த கன்னங்களும், பார்வையாலேயே பேசும் விரிந்த விழிகளுமாக இஸ்லாமியப் பெண் ணாகவே மாறிவிடுகிறார். கணவனுடன் வாழ்ந்த மகிழ்ச்சியான கணங்களையும் அவனைப் பிரிந்த சோகத்தையும் மிக இயல்பாக நேர்த்தியாக வெளிப் படுத்துகிறார். ஆர்ப்பாட்டமான அதீத நடிப்பு இல்லை. ஆயினும் உணர்ச்சி மேலிட்ட கணங்களில் அவரது குரல் டிரக் மாறிய றெக்கோட் மாதிரிக் கிறீச் சிடுகிறது. டப்பிங் குரல் போடப்பட வில்லை. காரணம் சொந்தக் குரலில் பேசா விட்டால் சிறந்த நடிகைத் தேர்வின்போது புறக்கணித்து விடுவார் களாம். உண்மைதானா?
அளவுகோலால் அவளுக்கு விளை விக்கும் அநீதியை,
எதிர்த்துப் Gurij TL (փլջ աn 5 அவளின் அவலத்தை, அவள்
உத்தரிக்கும் சோகத்தை எடுத்துச் சொல்கிறார். இவ ற்றை யெ ல் லா ம் எளிமையான திரைப்பட  ெம |ா ழி யி ல் ,
(இது ஒடு கலாச்சாரம் சார்ந்த பதிவு அதிலும் சாதாரணமான கிராமப்புற முஸ்லிம் மக்களின் வாழ்வையும், திருமணம் உட்பட்ட அவர்களது. கலாச்சார அம்சங்களையும் முழுமையாகப் பதிவு செய்கிறது. அவர்களது வாழ்வியற் கோலங்களைப் படம் முழுவதும் பார்க்கக்கூடிய வாய்ப்பு:தமிழ்ப்பட ரசிகர்களுக்கு அரிதாகவே கிடைத்து வந்துள்ளது: ஆனால் இப்படம் அதனை முழுமையாகச்
சாத்தியமாக்கியுள்ளது. இது மகிழ்வைத் தருகிறது : ܝܵܠ

Page 24
ஒரு அழகாகப் பின்னப்பட்ட கிராமியக் கதை. திரைக் கதையின் மூலம் சாரா அபுபக்கரின் கன்னட நாவலாகும். சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற அந்த நாவல் தமிழிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் சமூகத்தில் ஒரு பெண் மேல் சுமத்தப்பட்ட துன்பமும், அவள் அதற்குக் காரணமாக இல்லாத போதும் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படும் நிலையும் இப்படத்தில் துல்லியமாக வெளிப் படுகிறது. கத்தி மேல் நடப்பது போன்ற சிக்கலான கரு. சற்றுத் தவறிவிட்டால் கூட முழு முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியிருந்
திருக்கும். மார்க்க நெறியைச் சரியாகப் :
புரிந்து கொள்ளாது, கணவன் அவசர
புத்தியில் மூன்று முறை 'தலாக்' சொல்லியதாலேயே அவளுக்கு
w ལ། ༄་་༦ ༄ཕ་ மணவிலக்கு கொடுக்கப்பட்டது
என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக் கிறார்கள். எனவே இது மார்க்கம் மீதான குற்றச்சாட்டல்ல. அதனைச்சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினதும், அதனைத் தமது தேவைக்கு ஏற்ற விதத்தில் முறைதவறிப் பயன்படுத் துவோரினதும் தவறு என்பதும் துல்லியமாக வெளிப்படுகிறது.
இதனால் இப்படம் பராசக்தியில் வந்தது போல் சமூகத்திற்கு எதிரான ஆவேசக் குரலாக எழவில்லை, சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்விகள் கேட்டுத் திணறடிக்கவில்லை. காட்சிகளும், திரைப்பட வசனங்களும் மதத்திற்கு எதிராகவோ, சமூகத்திற்கு எதிராகவோ உரத்துக் குரல் கொடுக்கவில்லை. அப்பெண்ணின் கதையை நேர்மை
44
பணத்தில்
யாகவும், அர்ப்பணிப்போடும் சொல்கிறார். இன்றித் தட்டையாகவே சொல்கிறார். ஆனால் அதுவே எம் உள்ளத்தைக் குடைகிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதும் பின் நிதானமாக மனத்துள் அலசும் போதும் எம்மில் கேள்விகள் உருவாகின்றன.
மொகமட் ஒரு பெருங்காய டப்பா. நவாப் ராஜ்ஜியத்தின் வாரிசு என்று சொல்லிக் கொள்பவர். இடிந்து சிதிலமடைந்த கோட்டை மட்டுமே அதன் எச்சமாக மீந்திருக்க அதன் அருகில் ஒரு குடிசையில் வாழ்பவர். பிள்ளைகள் பின்னிக் கொடுக்கும் பாய்களை மொத்தமாக நகரத்தில் உள்ள முதலாளிக்கு விற்று வரும் சொற்ப வாழ்க்கை ஒட்டுபவர். ஆனால் கடும் முன்கோபி. அவரது மூத்த மகள் ஜமீலா சின்ன அளவில் புடவை வியாபாரம் செய்யும் நஸிரை மணம் முடித்து மிக ஒற்றுமையாகவும், ஒருவரில் ஒருவர் ஆழ்ந்த காதலுடனும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர். இந் நேரத்தில் இரண்டாவது பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாக இவருக்குப் பணமுடை ஏற்படுகிறது.
மருமகனிடம் கடன் கேட்க அவனது கடைக்குச் செல்கிறார். அவனுக்கு ஏற்கனவே பணமுடை, தனது நிலையை விளக்கியபோதும் இவர் விடாமல் வற்புறுத்துகிறார். நான் என்ன பாங்கா வைத்திருக்கிறேன்’ எனப் பேச்சுக்குக் கேட்டுவிட இவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அவனைத் தாறுமாறாக ஏசி விட்டு அவனது வீடு சென்று, வேறு சாக்குப் போக்குச் சொல்லி, சந்தேகம் எழாதவாறு மகளைக்
விமர்சனக் கணைகள்

தமிழ்ப்பட இரசிகர்களின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட
கொம்பியூட்டர் கிராபிக்சும் கைகொடுக்க, பிரபல
நடிகர்களின் அந்தஸ்து முண்டு கொடுக்க, ஒரு குறிப்பிட்ட Formula விற்கு அட்ங்கிய மசாலாப்
விதமான பொருட்க6ைா உற்பத்தி செய்வதுபோல் திரைப்படங்களை பிரசவித்துத் தள்ளுகிறார்கள். நவீன ஒளிப்பதிவுக் கருவிகளும், வேகமான காட்சிகளும் பார்வையாளனின் சுதந்திரச் சிந்தனையை அடியோடு மழுங்கடித்து மூளைச் சலவை செலவு செய்துவிட,
ཡོད༽
மேலோட்டமான ரசனை கொண்ட் பெரும்பான்மையான
நெறியாளர்கள், நவீன தொழில் நுட்பங்களும்,
படங்களைத் தயாரிக்கிறார்கள். யந்திரமானது ஒரே
 ெக |ா தி த் து எழுகிறாள். தனது
தகப்பன் பேச்சுக்கு
மறு பேச்சுப் பேசாத அவள் சொற்கணை வீசி தகப்பனைச் சுட்டெரிக்கிறாள். மொக மெட் டாக நடிக்கும் ராஜன் தேவ்வினது நடிப்பு சி ற ப் பா ன து . கோபமும், வரட்டுக்
குழந்தையுடன் தனது வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுகிறார். ஜமீலாவின் நகைகளைக் கொண்டு இளைய மகளின் திருமணத்தையும் முடித்து விடுகிறார்.
மேலும் கடன் பிரச்சனைகள் அதிகரித்ததும் ஜமீலாவை ஒரு பணக்கார ஆனால் வயதான முதலாளிக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக் கிறார். இதற்குக் கைமாறாகத் திருமணத்தை முடித்தால் அவரது கடன் தொல்லையைத் தான் தீர்த்து வைக்க முதலாளி இணங்குகிறார். ஆனால் இதற்கு முதல் நஸிரிடமிருந்து ஜமீலாவிற்கு விவாகரத்து (தலாத்) வாங்க வேண்டும். இது இலகுவான காரியமல்ல. ஏனெனில் அவன் அவளில் ஆறாத காதல் வைத்திருக்கிறான். பிரிவின் பின்னரும் அவளுக்காக ஏங்குகிறான்.
எனவே ஜமீலாவிற்கு அவனுடன் சேர்ந்து வாழப் பிரியமில்லை என்று கபடத்தனமாகப் பொய்க் காரணம் கூறி அவனிடமிருந்து தலாத் பெற்று விடுகிறான். இதை அறிந்த மகள்
ஞானம் - ஏப்ரல் 2004
பொய்களே மெய்களானது போன்ற மாயா உலகிற்குள்
சிகர்கள் போதையில் மயங்கி உழலுகிறார்கள்.
 ெக ள ர வ மு ம் ஆரம்ப ン கட்டத்திலும், பின் பொறுப்புள்ள தகப்பனாக மாறித் தன் தவற்றை உணர்ந்து மனமொடிந்த போதும், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அற்புதமாக நடிக்கிறார். இதனால் மொகமட் பாத்திரம் எம் மனத்திலிருந்து மறைய மறுக்கிறது.
கதை வளர்ந்து, தவறுகளை உணர்ந்து, இறுதியில் ஜமிலாவிற்கும் நஸிருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடிவாகிறது. அப்பொழுது இன்னுமொரு மதச்சட்டம் குறுக் கிடுகிறது. ஜமிலா மீண்டும் நஸிரைத் திருமணம் செய்வதானால் அதற்கு முன் அவள் இன்னுமொரு திருமணம் செய்து, இரண்டாவது கணவனிடமிருந்து தலாத் பெற வேண்டும் அல்லது இரண்டாவது கணவன் இறந்த பின்னரே முதற் கணவனை மீள மணம் செய்ய முடியும். குடும்ப வழக்கங்கள், சமூக நடை முறைகள் மற்றும் மதச் சட்டங்களால் அந்தப் பெண்ணின் வாழ்வு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி, மீண்டும் திரும்ப முடியாத எல்லையை அடைவது எமது
பார்க்கும்
45

Page 25
மனத்தை உறுத்துகிறது. எமது உணர்வுகள்
தூண்டப்படுகின்றன. கேள்விகள் எழுகின்றன. அவை சம்பந்தமான சிந்தனை களைக் கிளறிவிடுகிறது.
திரைப்படத்திற்கே உரித்தான காட்சிப் படுத்தும் பண்பை லாவகமாக அழகியல் உணர்வுடன் கையாண்டு இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் பாராட்டுக் குரியவர். தேவையற்ற மசாலாக் காட்சிகளோ, ஆர்ப்பாட்டமான காட்சிப் படுத்தலோ இல்லை. கதையம் சத்திலும், காட்சிப்படுத்தலிலும் நம்பகத் தன்மை படம் முழுவதிலும் தொடர்ந்து வருகிறது.
நஸிராக நடிப்பவர் ராம்ஜி. இவர் வழமையான ஒரு டான்ஸ் மாஸ்டராக இருந்தபோதும் இயல்பான நடிப்பால் பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். ஆயினும் தனது மாமனாரின் திருகு தாளங்களைப் புரிந்து கொண்ட பின்னரும் மனைவியை மீண்டும் அடைய ஏன் உருப்படியான முயற்சி
எடுக்கவில்லை என்பதற்குச் சரியான"
பதில் படத்தில் கிடைக்கவில்லை. இது நடிகரின் தவறல்ல, கதையமைப்பிலே ஏற்பட்ட சறுக்கலாகும். i كيفية 繳
முக்கிய பாத்திரங்களான் தகப்பன் மொகமட் தாய், மூத்த ஜமீலா, அவளது கணவன் நஸிர் மாத்திரமன்றி ஏனைய உப பாத்திரங்களும் உரிய கவனத்தோடு உருவாக்கப் பட்டிருப்பதால் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள். பிரபல நடிகர்கள் எவரையும் பயன்படுத்தாமலே இதைச் சாதித்த நெறியாளர் உண்மை யிலேயே திறமைசாலிதான். இசை தன் தேவைக்கு அதிகமாக உறுத்தாது திரைப்படத்துடன் இணைந்து வருகிறது. ஆயினும் அலி பாத்திரமும், தேநீர்க் கடையோடு சேர்ந்த நகைச் சுவைச் சம்பவங்களும் தேவையற்றவை. நன்கு
46
ஜீ
எதையும்?
" இந்தியத் திரைப்படம் நதிக்கரையினிலே
வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடும் இயல்பான பட ஓட்டத்தோடும் ஒட்டாமல் நெருடுகின்றன. இத்தகைய ஒரிரு குறைகள் இருந்த போதிலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இந்தக் கலாபூர்வமான திரைப்படம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த பின்னரே திரைக்கு வந்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி. அதுவும் வெளிப்படையாக முஸ்லிம் அடையாளத்தைக் கொடுத்த ஜமிலா என்ற முன்னைய தலைப்பை எல்லா இனங் களுக்கும் இணக்கமான நதிக்கரையினிலே என்ற தலைப்பிற்கு மாற்றிய பின்னரே திரையரங்குகளுக்கு விட முடிந்திருக்கிறது. குறுகிய நோக்கங் களைக் கொண்ட விநியோ கஸ்தர்களின் இறுக்கமான பிடி தமிழ்த் திரையுலகில் வலுவுள்ளதாக இருப்பதை இவை காட்டுகின்றன.
2001ஆம் ஆண்டு ஷங்காயில் நடந்த
திரைப்பட விழாவில் பங்குபற்றிய ஒரே
தான் என்பதும் கவனிக்கத்தக்கது.
இது ஒரு கலாச்சாரம் சார்ந்த பதிவு. அதிலும் சாதாரணமான கிராமப்புற முஸ்லிம் மக்களின் வாழ்வையும், திருமணம் உட்பட்ட அவர்களது கலாச்சார அம்சங்களையும் முழுமையாகப் பதிவு செய்கிறது. அவர்களது வாழ்வியற் கோலங்களைப் படம் முழுவதும் பார்க்கக்கூடிய வாய்ப்பு தமிழ்ப்பட ரசிகர்களுக்கு அரிதாகவே கிடைத்து வந்துள்ளது. ஆனால் இப்படம் அதனை முழுமையாகச் சாத்தியமாக்கியுள்ளது. இது மகிழ்வைத் தருகிறது.
இத்திரைப்படத்தைத் தயாரித்த சுந்தரும் காட்சிப்படுத்தலின் மூலம் படத்தை நகர்த்திய பொன்வண்ணனும் பாராட்டுக்குரியவர்கள்.
ஞானம் - ஏப்ரல் 2004

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ܒ -- -- -- -- ܚ -- -- ܒ -- 2
N
மலேசியாவில் தமிழர் திருநாள்
- ஏ. எஸ். குணா, பத்தாங் பெர்சுந்தை
மலேசியாவில் வாழும் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் மத வாரியாகவும், சிற்சில சமயங்களில் சாதி வாரியாகவும், தொழில் வாரியாகவும் பிரிந்து கிடந்த பரிதாப நிலையைக் கண்டு 1950 ஆம் ஆண்டுகளில் கோ. சாரங்கபாணி என்ற தமிழறிஞர் தமிழர் திருநாள்' எனும் விழாவை நடத்த முன்வந்தார்.
தைத் திங்கள் முதல் நாள், தமிழர் திருநாள் நடத்த தெரிவு செய்யப்பட்டது. தமிழர்களிடையே அவர்களின் பழங்கலை, பண்பாடு, மற்ற எல்லாப் பிரிவிலும் புத்துயிர் ஊட்டுவதே தமிழ் திருநாளின் நோக்கம். தமிழர் திருநாளின் விளைவாக தமிழர்களிடையே ஒற்றுமை, மொழிப்பற்று, வர்த்தக வாய்ப்பு, கல்வி மேம்பாடு
தமிழவேள் கோ. சாரங்கபாணி சிங்கப்பூரில் 1935இல் தமிழ் முரசு’ இதழை தொடங்கி, பின்னர் நாளிதழாக வெளியிட்டார். தமிழ் முரசு வாயிலாக தமிழர் திருநாள் கொண்டாடப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
1952இல் சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், காற்பந்து, வலைப்பந்து, பாடல் போட்டி, நடனம், மாறுவேடப் போட்டி போன்ற போட்டிகள் விமரிசையாக நடத்தப்பட்டன. பின்னர் நாடு முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழவேள் கோ. சாரங்கபாணி, தமிழ் நாட்டிலிருந்து பல தமிழ்ப் பேராசிரியர்களை வரவைத்து நாடு முழுவதும் உரயாற்ற அழைத்துச் சென்றார்.
இதன்வழி நாடு முழுவதும் தமிழர்களிடையே புதிய எழுச்சி ஏற்பட்டது. நிறைய இளைஞர்களும் யுவதிகளும் திரளாக வந்து தமிழர் திருநாளில் கலந்து கொண்டனர். தமிழவேள் கோ. சாரங்கபாணியின் இந்த முயற்சி வீண்போகவில்லை!
தமிழர் திருநாளில் இளவயதில் இளைஞர்களாகவும், பள்ளி மாணவர்களாகவும் கலந்து கொண்ட பீர். முகம்மது, பாதாசன், அன்புச் செல்வன், மைதீ. சுல்தான், அசன் கனி போன்ற எண்ணற்றவர்கள் பின்னாளில் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும் மிளிர்ந்தனர்.
பின்னாளில் 1970 களில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அண்மைய காலமாக மீண்டும் தமிழர் திருநாள் சிறப்புற நடைபெறத் தொடங்கி விட்டது. தைப்பிங் என்னும் நகரில் 1953 தொடங்கி இன்றுவரை தமிழர் திருநாள் தமிழ்ச் சீலர் மா. செ. மாயத்தேவன் அவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும் முச்சங்கம் என்ற அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் திருநாளை நடத்தி வருகிறது.
محم ---- س --- س --- س - س -------------ــــــــــــــــــ -- س ------------ N
ஞானம் ஏப்ரல் 2004 47

Page 26
இந்து தருமம் 2003/2004
ஆசிரியர்கள் : செ. சுதர்சன்
(கலைப்பீடம்) அ. சனந்தனன் (பொறியியற் பீடம்)
: இந்து மாணவர்
சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம்.
வெளியீடு
இவ்விதழானது, வாழ்த்தியல், ஆய்வியல், மொழி பெயர்ப்பியல், செவ்வியியல், மாணவர் ஆக்கவியல், பதவியல் என ஆறு இயல்களைக் கொண்ட தரமான இதழாக வெளி வந்துள்ளது. பயனுள்ள பல கட்டுரைகள் இதழை அணி செய்கின்றன.
நவாலியூரான்
வெளியீடு வாழும்
கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு, யாழ். மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம். கமலம் 6 ஜனவரி 2004
தொகுப்பு முதற் பதிப்பு
கடந்த 52 ஆண்டுகளாக நாடகக் கலைச் சேவை செய்ததோடு 75 ஆண்டு நிறைவு நாளையும் காணும் கலாபூஷணம் நவாலியூர் நா. செல்லத்துரை அவர்களது பவளவிழா மலர் இந்நூல்.
48
19576i கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர் கண்டி திரித்துவக் கல்லூரியில் 1959ம் ஆண்டிலிருந்து 24 ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். நூறு நாடகங்களுக்கு மேல் எழுதியவர். பல கெளரவப் பட்டங்களைப் பெற்றவர்.
திறனாய்வாளர்
த. கனகசுந்தரம்பிள்ளை
வெளியீடு
ஈழத்து இலக்கியச் சோலை 21, ஒளவையார் வீதி, திருக்கோணமலை.
தொகுப்பு கலாபூஷணம்
த. சித்தி அமரசிங்கம் முதற் பதிப்பு : ஆவணி 2003
திருக்கோணமலை தந்த தமிழறிஞர் தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை அவர்களைப் பற்றியும், அவருடைய தமிழ்ப் புலமை பற்றியும் அறிய விரும்புபவர்
ஞானம் - ஏப்ரல் 2004
 

களுக்கும், ஆய்வு செய்ய விழைபவர் களுக்கும் பயன்படக் கூடிய ஒரு தொகுப்பு நூல் இது.
காவேரி (சிறுகதைகள்)
எழுதியவர் மாத்தளை
செல்வராஜா முதற் பதிப்பு நவம்பர் 2003
மலையகத்தைப் பிறப்பிடமாகக்
கொண்டு லண்டனில் பெரும் புகழோடு பணியாற்றிவரும் செல்வராஜாதான் தன் சுகம்’ என்று ஒதுங்கி வாழாது, தாம்
பிறந்து வாழ்ந்த மண்ணையும் மக்களையும் நினைத்துருகுவதை அவருடைய சிறுகதைகள் பறை
சாற்றுகின்றன. சொந்த மண்ணின் வேதனைகளைத் தாங்காது லண்டனுக்குப் புலம் பெயர்ந்த நூற்றுக் கணக்கான தமிழ் அகதிகளுக்கு வாழ்விடம் ஏற்பாடு செய்வதில் உதவிக்கரம் நீட்டிய செல்வராஜா அவர்களின் சிறுகதைகளில் ஒரு தனித்துவமான சமூகப் பார்வை இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை.
பேராசிரியர் எஸ். சந்திரசேகரன்
கலையருவி (வெள்ளி விழாச் சிறப்புமலர்)
வெளியீடு : கல்விக் கழகம்
அரசினர் ஆசிரியர்
கலாசாலை, கொட்டகலை,
ஒரு வரலாற்றுக் காலத்தை
அறிவதற்கு எமக்கு உதவுவது அக்,
காலத்தில் எழுதப்பட்ட நூல்களே ஆகும்.
an at in - at ' may on A M
இந்த வகையில் கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் 25ஆவது அகவையில் பலதரப்பட்ட எண்ணக் கருத்துக்களைச் சுமந்து வரும் கலையருவி வெள்ளி விழாச் சிறப்பு மலர் களமாக அமைகிறது.
தரமான 65 விடயதானங்களைத் தாங்கிச் சிறந்த முகப்பு அட்டைப்படத்துடன் வெளி வந்துள்ள இந்த மலரை வெளிக் கொணர்ந்த அரசினர் ஆசிரியர் கலாசாலை
மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்
ஈழவரின் இருபத்தேழு
சிறுகதைகள் தொகுப்பாசிரியர் : எஸ்.
செல்வகுமார் வெளியீடு மனி
மேகலைப் பிரசுரம்
சென்னை - 17
இந்தத் தொகுப்பிலும் முதலாவது சிறுகதைத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்ட சிறுகதைகளைப் போன்று சமகாலப் பிரச்சனைகளைக் குறிப்பாக இனப் பிரச்சனை வாயிலாகத் தோன்றிய யுத்த சூழலின் தாக்கங்கள், மற்றும் காதல், பாசம், பிரிவுத்துயரம் ஆகியவற்றைப் பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள் சிலரது சிறு
கதைகளும் சேர்க்கப்பட்டிருப்பது

Page 27
குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மலையக எழுத்தாளர்கள், மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலரது சிறுகதைகளும் சேர்க்கப்பட்டுஒருமுழுமையானதொகுதியாக இந்நூல் வெளிவர திருகோணமலை இலக்கிய ஒன்றியம் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது.
திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
மெளனம் (பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர்)
பதிப்பாசிரியர் திரு. வெ. தவராஜா பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச்
6F 60) LU ,
வெளியீடு
மட்டக்களப்பு. முதற் பதிப்பு 2003
இம்மலர் ஐந்து பகுதிகள் கொண்டது. முதற்பகுதி பேராசிரியர் பற்றிய அறிமுகத்தையும் இரண்டாவது பகுதி பேராசிரியர் பற்றிய பிறரது கருத்துக்களையும் மூன்றாவது பகுதி பேராசிரியர் புலமைசார் ஆய்வுகளையும், நான்காவது பகுதி அவரது துறைசார் ஆய்வுக் கட்டுரைகளையும் ஐந்தாவது பகுதி பேராசிரியரது படைப்புக்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
மெளனம்"ஒரு கனதியான சிறப்புமலர்
நவ மலையகம் (மாத இதழ்)
கெளரவ ஆசிரியர் : வி. எஸ். நவமணி
வெளியீடு நவமலயகம்
பப்பிளிகேசன்ஸ், நிவித்திகலை.
விலை ரூபா 15.00
மலையக அரசியல், சமூக கலை கலாசார விடயங்களைத் தாங்கி வரும் இதழ். “சிந்திக்கும் நெஞ்சங்களைச் செயற்பட வைக்கும் ஒரே பத்திரிகை”
கொழுந்து (மலையகத்தின் மாண்புறு மாசிகை) ஆசிரியர் அந்தனி ஜீவா விலை 30/=
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 'கொழுந்து தளிர் விடுகிறது. மலையக இலக்கிய வளர்ச்சிக்கு அது கணிசமான பங்களிப்புச் செய்துள்ளது. கொழுந்து சஞ்சிகையைப் புதிய ஆண்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வெளிவரும் இதழாகக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆசிரியர்.
கூத்தரங்கம் (அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான செய்திப் பரிமாற்ற ஏடு)
யாழ்ப்பாண செயல்திறன் அரங்க இயக்கம், “கூத்தரங்கம்” என்ற நாடகமும் அரங்கியலும் தொடர்பான தகவல்களைப்
பரிமாறிக் கொள்வதற்கான ஏடு

ஒன்றினை மார்ச் 2004 இல் இருந்து
வெளியிடுகிறது. "திறந்த மனமொன்று
வேண்டும்” என்பது இதன் மகுட வாக்கியமாகக் கொள்ளப்படுகின்றது.
தே. தேவானந்த், அ. விஜயநாதன், கு.லக்ஷ்மணன், க. இ. கமலநாதன் ஆகியோர் இதன் ஆசிரியர் குழுவாகச் செயற்படுகிறார்கள். W
முதலாவது இதழ் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் “கருத்துக்களின் சங்கமம் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் துறையினருக்கும் அவசியம்” என்ற பிரதான செய்தியுடன் வெளிவந்துள்ளது.
முடக்கம் நாடக விமர்சனம், நாடகக் கலைஞர் S. T அரசு பற்றிய தகவல்கள், தாவடி தெற்கு அம்பாள் நாடக மன்றம் பற்றிய அறிமுகம், நாடக நூல்கள் பற்றிய அறிமுகங்கள் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தேவையான சிறுவர் அரங்கு, வார்த்தைகளை நம்பி வாழும் கிராமிய நாடகங்கள், நெஞ்சுறுத்தும் கானல் நாடகத் தயாரிப்பில் பங்கு கொண்ட அனுபவம் போன்ற தலைப்புக்களிலான கட்டுரைகள் இந்த ஏட்டில் வெளி வந்துள்ளன.
தமிழ் அரங்க முயற்சிகள் சார்ந்த செய்திகளையும் தகவல்களையும் அரங்கத் துறையினர் மத்தியில் பகிர்ந்து கொள்வதை நோக்காகக் கொண்டு இந்தச் செய்திப் பரிமாற்ற ஏடு வெளிவருவதாக ஆசிரியர் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். கூத்தரங்கின் தொடர்ச்சியான இயங்கு நிலைக்கு உதவும் முகமாக ஊர்கள் தோறும் பிரதேசங்கள் தோறும் நடைபெறும் நாடக முயற்சிகள் தொடர்பான தகவல்களையும் அதில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல் களையும் தமக்கு அனுப்பி உதவுமாறு கூத்தரங்கின் ஆசிரியர் குழுவினர் கேட்டுக் கொள்கின்றார்கள். இத்தோடு அரங்கத் துறை தொடர்பான நேர்காணல்கள், கட்டுரைகளை அரங்கத்துறை மாணவர்கள், அரங்கவியலாளர்கள் கூத்தரங்கிற்கு அனுப்பி வைக்கலாம்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூத்தரங்கம் வெளிவருவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடகத்துறை மாணவர்களுக்கும் நாடகத்துறை ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த ஏடு எதிர் காலத்தில் பயனுள்ளதாக அமையுமென்று நம்பலாம்.
புத்தகக் களஞ்சியம் * (நூல் மதிப்புரை)
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை
ஜஅனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
'ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறு
K குறிப்பு மாத்திரமே புதிய நூலகத்தில் இடம் பெறும்.
༦ ༤༽ ༦ - ༽ سمجھ سے لاتی تNدھYSدہ

Page 28
ஈழத்தில் லிபண்கள்சார்
தமிழ்ச்சஞ்சிகைகள்
گ سیح சென்ற இதழில் வந்த கட்டுரையின் தொடர்ச்சி.
ஈழத்தில் பெண்கள் சார் தமிழ்ச் சஞ்சிகைகள் :
ஈழத்தில் பெண்களுக்கான தமிழ்ச் சஞ்சிகைகளின் வரலாறு குறித்து ஆராய முன்பு இங்கு பெண்நிலைச் சிந்தனைகள் உருவாக்கம் பெற்றமை குறித்து நோக்க வேண்டியது அவசியமாகின்றது. இத்தொடர்பில் மெள. சித்திரலேகா கூறும் பின்வரும் கருத்து அவதானத்திற்குரியது.
"இலங்கையில் பெண்நிலைச் சிந்தனைகள் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இருந்தே உருவானமையைக் காணலாம். பெண்கள் தனிப்படவும், குழுவாகவும் பெண்ணின் கல்வி, அரசியல், சமூக சீர்திருத்தம், சமூக நலவுரிமை சார்ந்த இயக்கங்களிலும் சோசலிஸ இயக்கங்களிலும் இப்பெண்கள் இயங்கினர். சமூக சீர்திருத்தவாதிகளாகவும் எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் அவர்கள் விளங்கினர். இவர்களுள் மங்களாம்பாள் மிகவும் முக்கியமானவர்” என அவர் (ஆய்வரங்கக் கட்டுரைகள் : 2000 - 97) குறிப்பிடுகின்றார்.
மங்களாம்பாள் என்பவர், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் 'பெண்கள் சேவா சங்கம் என்ற அமைப்பினை 1920ம் ஆண்டளவில் நிறுவியதாகவும் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அவர் விளங்கினாரெனவும் அறிய முடிகின்றது. இவர், தான் நிறுவிய சங்கத்தினூடாக 'தமிழ் மகள்' என்றொரு சஞ்சிகையினை 1923ல் வெளியிட்டார். கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பெண்களுக்காக ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ச் சஞ்சிகையாக இதனைக் கொள்ள முடியும். அக்காலத்தில் பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்கு உரியனவாயிருந்த பெண் கல்வி மற்றும் அரசியல் உரிமை தொடர்பாக இவர் எழுதி வந்ததாகவும் தெரிகின்றது.
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் திருகோணமலையிலிருந்தும் பெண்களுக்கான சஞ்சிகையொன்று வெளிவந்தது. "மாதர் மதி மாளிகை’ என்னும் பெயரையுடைய இச் சஞ்சிகை, 1927 - 1930 வரை வெளி வந்தது. பெண்கள் x தொடர்பான விடயங்களும் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏதுவான கட்டுரைகளும் இதிற் பிரசுரமாயின.
1970 களின் பின்னர் பெண்நிலைச் சிந்தனைகள் ஈழத்தில் துரித வளர்ச்சி பெற்றன. எனவே இக் காலப்பகுதியில் காத்திரமான சஞ்சிகைகள் வெளிவர ஆரம்பித்தன. இவற்றுள் சிறப்பிடம் பெற்றது 'பெண்ணின் குரல்" என்னும் சஞ்சிகையாகும். காந்தா ஹண்ட Voice of Women' 'பெண்ணின் குரல்' என முறையே சிங்களம்,
- றரபி வலன்ரீனா பிரான்சிஸ் དུ་སྐུར་
 
 

ஆங்கிலம், தமிழ் ஆகிய மும் மொழிகளிலும் 1978இல் இச் சஞ்சிகை வெளியிடப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பின் ஆரம்பகால ஆசிரியர்களாக மெள. சித்திரலேகா, திருச்சந்திரன் போன்றோரும் பணி
யாற்றினர். தற்போது இதன் ஆசிரியராகப்
பத்மா சோமகாந்தன் பணியாற்றுகின்றார். பெண்களின் சமூக பொருளாதார அரசியல் மற்றும் சட்ட ரீதியான உரிமைகளுக்காகவும், இலங்கையின் அபிவிருத்தியில் பெண்களை முழுமையாகப் பங்கு கொள்ளச்செய்வதற்காகவும் குரல் கொடுப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கும் 'பெண்ணின் குரல் (காந்தாஹண்ட) அமைப்புப் பெண்களது பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இச் சஞ்சிகையினை வெளியிட்டு வருகின்றது. இதனால் அவசியமான மொழிபெயர்ப்புக் கட்டுரை களும், ஆக்கங்களும் கூட இச்சஞ்சி கையில் இடம் பிடித்துள்ளமையையும் காணலாம்.
சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டுதல் போன்றவற்றைக் குறிக்கோள்களாகவும்; இலங்கையின் பெண்கள் நிலை பற்றி ஆய்வு செய்வதனை முக்கிய நோக்கமாகவும் கொண்டு இயங்கும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் (கொழும்பு) பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகையாக "நிவேதினி வெளி வருகின்றது. காத்திரமான ஆய்வுக் கட்டுரைகள் இச் சஞ்சிகையில் வெளியிடப்படுகின்றன.
ஒரளவு கல்வியறிவுடையவர்களே இச் சஞ்சிகையின் வாசகர்களாகப் பெரும்பாலும் இருப்பதும், ஒரு குறிப்பிட்ட
எாளம் - எப்ால் 2004
செல்வி
வட்டத்தினரிடையிலேயே இது பெறத் தக்கதாய் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
எனினும் மிகவும் கனதியான விடயங்களை உள்ளடக்கிய வகையில் குறிப்பாக பெண்ணியம் சார்ந்த்
கருத்துக்களை முனைப்புடன் முன்னெ டுக்கின்ற வகையில் பெண்கள் சார் சஞ்சிகைகளுள் குறிப்பிடத்தக்கதோர் இடத்தினை இது பெறுகின்றது.
பெண்கள் முன்னேற்றத்தினைக் கருத்திற் கொண்டு யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரால் வெளியிடப் படும் பெண்களுக்கான சஞ்சிகை நங்கை’ என்பதாகும். இதன் ஆசிரியராக சரோஜா சிவச்சந்திரன் பணியாற்றுகின்றார்.
புதுமைப் பெண்ணாகப் புறப்படும்
நங்கையரே அடிமை விலங்கொடிக்க அணி
திரள்வோம் வாரீர்” என்ற வாசகம் இச் சஞ்சிகையின் மகுடவாசகமாக இடம் பெறுகிறது. இச் சஞ்சிகையில் கவிதைகள், கட்டுரைகள்,
செவ்விகள், கடித அமைப்பிலான ஆக்கங்கள் முதலியன g|Lüb பெறுகின்றன.
“பெண் மட்டக்களப்பு - சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடாக 1995ம் ஆண்டு தொடக்கம் வெளி வருகின்றது. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் என்றிராமல் இவ்வமைப்பின் பெண்கள் சுழற்சி முறையில் ஆசிரியர் களாகச் செயற்படுவது இச் சஞ்சிகை யின் சிறப்பம்சங்களுள் ஒன்று. (அ) பெண்களின் மொழியைப் பொதுத் தளத்திற்குக் கொண்டு வருதல். (ஆ)பெண் நிலை நோக்கிலான கருத்துக் களைப் பரவலாக்குதல்.

Page 29
(இ) பெண் எழுத்தாளர்களை உருவாக் குதல்; ஊக்குவித்தல். ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் இச் சஞ்சிகை,
“தூக்கியெறியப்படாத முடியாத கேள்வியாய்
உங்கள் முன் பிரசன்னமாயுள்ளேன் என்ற கவிதை வரிகளை (சிவரமணி) முன் அட்டையில் மகுடவாசகமாய்த் தாங்கி யுள்ளது. பெண் நிராகரிக்கப்படமுடியாதவள் என்பதையும் அவளது பிரச்சினைகளையும், அவளது அபிலாஷைகளும் கவனத்துக்
குரியவை என்பதையும் சஞ்சிகையில் இடம் பெறும் ஆக்கங்கள் உட்பொருளாய்த் தந்து
நிற்கின்றன. " . A ^ ^ ^ போர்ச் சூழல், பொரு
நெருக்கடி குடும்பச் சுமை, தலை
மைத்துவப் பொறுப்பை ஏற்றல், வறுமை
முதலிய இன்னோரன்ன காரணிகளால் பெண் எதிர்கொள்ளும் சவால்களும்,
பிரச்சினைகளும் கவிதைகளாக, கதைகளாக, நாடகங்களாக, துணுக் குகளாக, கருத்துப் படங்களாக வெளியிடப்பட்டிருப்பதை இச்சஞ்சிகை களிற் காணலாம். அத்துடன் மட்டக்
களப்பில் இருந்து புதிய பெண் எழுத்தாளர்`
பரம்பரை புதிய எழுத்து வீச்சைச் சொந்தமாக்கிக் கொண்டு எழுதத் தொடங்கியிருப்பதனையும் பெண்’ சாத்தியமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. "தோழி’ என்னும் சஞ்சிகை செல்வநிதி தியாகராசா (யாழ்ப்பாணம்) என்பவரை ஆசிரியராக் கொண்டு இரு இதழ்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது.
பெண்கள் அமைப்புக்கள் சஞ்சிகை களோடு செய்திமடல்களையும் வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் மட்டக்களப்பு -
4
*நோக்காகக்
'பிரவாகினியும் பெண்களுக்கெதிராக ளாதார -
விபரங்களைத் தருகின்றது.
・"L」「T6l} * கவனத்தைத்
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத் தினரால் வெளியிடப்படும் பெண் ணுரிமைக் கண்ணோட்டம்', 'பெண்கள் செய்தி மடல்' ஆகியனவும்; கொழும்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்படும் பிரவாகினி'யும் குறிப்பிடத்தக்கவை. சமூகத்தில் பெண்கள் உரிமைகள் மீறப்படுவதனை எடுத்துக் காட்டி, அதன் மூலம் அவர்களது உரிமைகளின் பாதுகாப்பை வற்புறுத் துவதையும், சமூகத்தில் பெண்களுக் கெதிரான வன்முறை பற்றிய உரை யாடலைத் தொடங்குவதனையும் 'பெண் ணுரிமைக் கண்ணோட்டம் தனது காண்டுள்ளது.
சமூகத்தில் நடக்கும் வன்முறை இச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பெண்கள் பிரிவினரால் வெளியிடப்பட்ட வெளியிடப்பட்டு வரும் சஞ்சிகைகளின் பால் க திருப்புவது அவசியமாகின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் ጎ'.. கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இயக்கங்களின் மகளிர் படையணிப் ப்ரிவினர் இம் முயற்சிகளில் ஈடுபட்டனர். “பெண் எழுச்சி ‘செந்தழல்’ ‘சுதந்திரப் பறவை கள்’ ஆகியன அத்தகையனவே. இவற்றுள் ‘சுதந்திரப் பறவைகள் தொடர்ந்து வெளிவருகின்றது.
பெண்களின் எழுத்துலக அனு பவத்தில் அல்லது பொதுவான தமிழ் இலக்கிய மரபில் இவை முற்றிலும் புதிய வரவாகும். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வீட்டைவிட்டுப்பெண்கள்
எதானம் - ஏப்ரல் 2004
 
 

புறப்பட்டமை, போர்க்களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்கள், போரிடும் அனுபவங்கள், யுத்த அணியில் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, சொந்த மக்களின் அவலங்களை அவர்கள் எதிர்கொண்ட விதம், இழப்புக்களின் தாக்கம், அவை ஏற்படுத்திய உத்வேகம் , முதலிய யாவும் எழுத்துக்களாக இவற்றிற் பதிவாயிருக் கின்றன. சுருக்கமாகக் கூறின் போரிடும் இயந்திரங்களாக அவர்கள் பார்க்கப்பட்ட சூழலில் அதனை நிராகரித்ததுடன் ஆற்றலும், விவேகமும், தீர்க்கதரிசனமும் உள்ள எழுத்துப் படைப்பாளிகள் தம்மிடையேயும் உள்ளார்கள் என்பதையும் இந்த ஆக்கங்கள் மூலம் அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
‘சுதந்திரப் பறவைகள் தமிழீழ
(அரசியல் துறை) வெளியீடாக 1985 தொடக்கம் வெளிவருகிறது. கல்லச்சுப் பிரதியாக (றோனியோ பிரதி) ஆரம்பத்தில் இது வெளிவந்தது.
இவ்வெளியீட்டின் நோக்கம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“தமிழ் மக்களினதும் பெண்கள் சமுதாயத்தினதும் கடமைகளை உணர்த்து வதற்கும் சிந்தனையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான தூதுவனாகவே சுதந்திரப் பறவைகள் உங்களிடம் வருகின்றது”
(பறவை 9 01-04-1989 பக்.2) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சமூக பெண்கள் மேம்பாட்டு அமைப்பு வெளியீடாக 'கொண்டல் (பத்திரிகை) மாத இதழாக வெளிவருகின்றது. (ஐப்பசி 2002 தொடக்கம்)
பெண் போராளிகளின் போராட்ட
அனுபவங்களும் மனவுணர்வுகளும்
ஆக்கங்களாகப் பதிவு செய்வதற்கு இத்தகைய சஞ்சிகைகள் களங்களா கியுள்ளன. புறநானூற்றுக் காலத்தில் பெண்புலவர்கள் போராடி மீண்ட வீரனைப் பாடினார்கள் போர்க்களத்து நிலைமை களைக் களமாடிய பின் சென்று பார்த்துப் பாடி அந்த மரபில் மாற்றுப் பதிவுகளாக இத்தகைய ஆக்கங்கள் அமைந்திருக் கின்றன. சக போராளி களை இழந்த நிலையில் அவர்களின் இழப்பினை உள்ளார்ந்த ரீதியான அனுபவ உணர் வோடு கையறு நிலைப் பாடல்களாக அவர்கள் தருகிறார்கள். தமிழ்ச் சூழலில் இத்தகைய அனுபவ வெளிப்பாடும், வெளிப்படுத்தல் முறைமை களும் புதிய வரவினவே. குடும்பம், சமூகம் என்ற எல்லைகளுக்கு அப்பால் பரந்த தளத்தில் வேறுபட்ட சூழலில் பெண்நிலை நின்று கள அனுபவங்களைத் தருதல் என்பது ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் மட்டுமன்றி பொதுவான தமிழிலக்கிய வரலாற்றிலும் மிக முக்கிய மைல் கல்லாகும். பெண்கள் சார் சஞ்சிகை களின் உருவாக்கம் இவற்றைப் பதிவு செய்து வைத்துள்ளமையும் முக்கிய மானதாகும்.
மதிப்பீடு :
ஒட்டு மொத்தமாக நோக்குமிடத்து, ஈழத்தில் பெண்கள் சார் தமிழ்ச் சஞ்சிகைகளின் வருகை, பெண்கள் குறித்த பாரம்பரிய நிலைப்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்கி, பெண் விடுதலை குறித்த சிந்தனா விழிப்புணர்வையும், பெண்ணின் முன்னேற்றம் குறித்த வழிமுறைகளையும் உள்ளடக்கி யுள்ளமையைக் காணலாம். அத்துடன் பெண்கள் பலரை எழுதத் தூண்டும் உந்துசக்தியாக களம் அமைத்தமையும் குறிப்பிடற்குரியது.

Page 30
浅煎さ
家s ്ട്പ്രല്പേ
இநீரரமகளிர் தம் பாடலை நிறுத்தினர்.
படுவான்கரையிருந்து என் பாடல் அழுதது, “அஸ்தமிக்காதே ஸ்நேகமே;” என்று. அந்த வேளையில்தான் அங்கே சென்றேன். “எந்தையே!” என்று வெடித்தது பாட்டு. விம்மியபடி அதை விழியால்த்தடவி பிடரித் தலைமயிர் கோதினேன்.
“சபிக்கப்பட்ட யாழ்ப்பாணி நான். நீ என் பிள்ளை.
இரு' என இருத்தலும், ‘போ' என ஒடிப்போதலும், எழுதப்படாத தேசவழமை. பதியிருந்தறியா பாவியர் நாம். எனவே, புறப்படு மகனே போக” என்றேன். “மாட்டேன் அப்பா! நீயோ மனிதன். எவ்விடம் ஏகினும் அவ்வியல்பறிந்து வாழத்தெரிந்த வார்ப்பு. நான், மெல்லியற்பாட்டு. என் சொல்லோ எனின் இம்மண்ணிற் பிறந்தது. பின்போ எனின் அது மக்களைப் புணர்ந்தது. ஆதலின், நீ உடன் போதலும், நான் இங்கேயே வேர்கொள்ளுதலும் இயைவது ஆகும்" என்கிற பிள்ளைப் பாட்டைநோக்கி, “வாழி மகனே!” என்றேன் வாழ்த்தி. கண்ணிராலே மண் கனிவித்து, கைவிரலாலே குழிபறிப்பித்து, நட்டேன் பாடலை, நானூறு தலைமுறைக்கும், நிற்க வேர்கொண்டு, நெடுக நிலைத்து. பின், 'ப்ரிய வாவியே! பிரிகிறேன்” என்றேன்.
GNOOSà)
❖ችmo খ্রিস্ত্ৰ
1-A
 
 
 
 
 
 
 
 
 

நூல் : அக்கா ஏன் அழுகிறாய் (சிறுகதைத் தொகுப்பு)
ஆக்கம் : புலோலியூர்
க. சதாசிவம் வெளியீடு: மணிமேகலைப்
பிரசுரம், கிசன்னை
புலோலியூர் க. சதாசிவத்தின் தெரிவு செய்யப்பட்ட 16 சிறுகதைகளின்
தொகுப்பான 'அக்கா ஏன் அழுகிறாய்?
சென்னை மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் எழுதத் தொடங்கிய காலத்திலேயே (1961) தேசிய இலக்கியம் மண்வாசனை இலக்கியம் என்பவற்றின் இயல்புகளை உள்வாங்கிக் கொண்டு கதைகள் படைத்து வருபவர். சாகித்திய மண்டலப் பரிசு உள்ளிட்ட பலபரிசுகளைத் தட்டிக் கொண்டவர். இவரது சிறுகதைகள் அனைத்துமே தீர்க்கமான சமூகப் பார்வையுடையவை. விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை அவரது கலையாக்கங்களில் ஊடுருவி நிற்பதை அவதானிக்கலாம்.
வடமராட்சியிலுள்ள புலோலி என்னும் விவசாயக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கிராமத்தின் மக்கள் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும், பண்பாட்டம் சங்களையும் அனுபவபூர்வமாக
ஞானம் - ஏப்ரல் 2004
உணர்ந்து கொண்டவர். வைத்தியக் கல்வியின் பொருட்டு கொழும்பு சென்று. தனக்கு முற்றிலும் அந்நியமான வாழ்க்கை முறைகளையும் வாழ்க்கை நோக்குகளையும் புரிந்து கொண்டவர். தொழில் நிமித்தம் மலையகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மக்க ளுடன் நெருங்கிப் பழகியும் கூர்ந்து அவதானித்தும் மலையகத் தோட்டத் தொழிலாளரின் துன்ப துயரங்களையும் சுரண்டல்களையும் அறிந்து கொண்டவர்.
இவரது கதைகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்னும் மூவின மக்களும் உலா வருகின்றனர். இதனால் இவரது கதைகள் தேசிய இலக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றன.
இத்தொகுதியிலுள்ள கதைகளில் பொருள் கூறுகளைப் பின்வருமாறு நோக்கலாம்:
(1) மென்மையான காதல் உணர்வு (2) எல்லை கடந்த பாலியல் உணர்வும்
உறவும். (3) கிராமியத் தமிழ்ப் பெண்களின்
கருகிப் போகும் கல்யாணக் கனவு. (4) பெரிய மனிதரின் சின்னத்தனங்
களால் பெண்கள் வாழ்வு சீரழிதல். (5) தொழில் நிமித்தம் குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவரின் உணர்வு. (6) முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக்
கூறுகள். (7) அரச வன்செயலால் சிங்கள மக்கள் பட்ட துன்பங்கள் (8) முதலாளிக் கெதிராக நகர்ப்புறத் தொழிலாளர் களின் எழுச்சி. (9) மலையகத் தோட்டத் தொழிலாளரின் துன்பதுயரங்கள், அறியாமை, கல்வி. (10) பென்சனியரின் கொழும்பு
வாழ்க்கை.
57

Page 31
(1) கொழும்பில் தமிழர் சந்தேகத்தின்
பேரில் கைது. கதைப் பின்னல் கச்சிதமாக அமைந்துள்ளது. சுவை பயக்கும்
முறையில் அமைந்துள்ளது. கதையின் தொடக்கம் ஆவலைத் தூண்டக் கூடிய முறையிலும் முடிவு சிந்திக்கத் தூண்டும் முறையிலும் அமைந்துள்ளன. அலை என்னும் கதை 'அவளை என் கண்கள் எங்கும் தேடுகின்றன. எனத் தொடங் குகின்றது. அவள் யார்? தேடுபவர் யார்? ஏன் தேடுகிறார் என்ற வினாக்கள் வாசகர் மனத்தில் எழுந்து ஆவலைத் தூண்டுகின்றன. சந்தனக் கட்டை என்னும் கதை ‘சந்தனம் இன்னும் சாகவில்லை என முடிகிறது. அவள் செத்துப் போவாள் அவளது சாவுக்குக் காரணம் யார்? என்ற வினா சிந்தனையைத் தூண்டுகிறது.
சதாசிவம் பேச்சு மொழியைக் கையாள்வதில் ஆற்றல்மிக்கவர். பேச்சு மொழி பாத்திரங்களை உயிர்த் துடிப்புடையதாக்குகின்றது. வடமராட்சித் தமிழ், கொழும்புத் தமிழ், மலைநாட்டுத் தமிழ், முஸ்லிம் தமிழ்,சிங்கள்ம் முதலான பேச்சு வழக்குகளை மிக லாவகமாக ஆசிரியர் கையாள்கின்றார்.
ஆத்தை, என்னணை செய்யுது? இந்தாணை எப்பன் தேத்தண்ணியைக் குடிச்சுப் பாரணை வடமராட்சியில் தந்தையை அப்பு என்றும் தாயை ஆத்தையென்றும் அழைக்கும் வழக்கத்தைக் காட்டுகிறார்.
"ஆமாடி, நம்ம மவன் படிச்சுத் தொரைவேலை, கண்டாக்கு, கணக்குப் பிள்ளை வேலையா பாக்கப் போறான். தோட்டத்தில் பேர் பதிஞ்சு பில்லு வெட்டப் போறவனுக்கு ஒப்பம் போட நாலெழுத்துப் படிச்சாப் போதுண்டி’
58
நோயாளியுமான மனைவி. அவள் சந்தர்ப்ப வசத்தால்
“மம தமாய் சைமன் தொற அறிண்ட”
"பாவம் மரியம். கடைக்கு ஆப்பம் சுட்டுக் குடுத்து ஹயாத்தைக் கொண்டு போகுது. அவ இத்தா இரிந்தத பாத்து வாயிலை கைய வச்சிட்டன்.”
சிறு கதைகளில் பாத்திரங்கள் வார்க்கப்படுகின்றன. நாவலில் பாத்திரங்கள் வளர்க்கப்படுகின்றன. பாத்திரப் படைப்பில் ஆசிரியருக்குரிய அக்கறையால் பாத்திரங்கள் வாசகர் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. புதுவாழ்வு கதையில் வரும் மாம்பழ வள்ளி மறக்கமுடியாத பாத்திரம். அதேபோல் நாம் அடிமைகள் அல்ல' என்னும் கதையில் சேவுகள், 'இடறுகால் மரகதம், இனியொரு விதி வரும் அச்சுக்கூடம் சின்னயா போன்ற இன்னும்
துபல உதாரணங்களைக் கூறலாம்.
* மரகதம், புகையிரத நிலையத்தில்
வேலைபார்க்கும் குடிகாரனும்
கருப்பையாவின்
இளைஞனான மிருக வைத்தியன் ஒருவனின் இச்சைக்குப் பலியாகின்றாள். அந்தக் கணத்தில் நாம் அவளைத் தவறாக எடை போடுகிறோம். அவள் சொல்கிறாள் : “ஒங்க தங்கச்சிக்கு கலியாணம் முடிஞ்சுதானே நீங்கள் நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் செய்யலாந்தானே. அவர் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான பின்னர் பல ஆண்டுகள் கழித்து மரகதத்தைச் சந்திக்கிறார். மீண்டும் அவருக்கொரு சபலம். மரகதம் சொல்கிறாள் அம்மாவுக்குத் துரோகம் செய்யக் கூடாது. அந்த மகராசிக்குத் துரோகம் மனசிலை
ce
வேண்டாம் ஐயா,
ஞானம் - ஏப்ரல் 2004

கூட நெனைக்கக்கூடாது’ டாக்டர் வெட்கித் தலைகுனிகிறார். அவர் விடைபெற்றுச் செல்கிறார். மரகதம் வெளி லயிற்றைப் போடுகிறாள்.
அவர் போட்ட வெளிச்சத்தில் நான் (டாக்டர்) நிதானமாக நடக்கிறேன்’ என்று இடறுகால்' என்னும் கதை முடிகிறது. டாக்டரின் உள்ளத்தில் இருந்த சபலம் என்னும் இருளை மரகதம் நீக்கி வெளிச்சத்தைக் கொடுக்கிறாள் எனக் குறியீடாக இந்த வசனம் உணர்த் துகின்றது.
'அக்கா ஏன் அழுகிறாய் என்னும் கதை அற்புதமாக அமைந்துள்ளது. பார்வதிக்கு அழகு குணம் உறவு என எல்லாம் இருந்தாலும் பணம் இல்லாததால் திருமணம் மறுக்கப்படுவது ஒரு பெண்ணில் ஆழ்ந்த ஆக்குகிறது என்பதை கலாபூர்வமாகப்
படைத்துள்ளார் ஆசிரியர். இதை மட்டும் , சொல்வதுடன் ஆசிரியர் நிறுத்தி"
விடவில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கிராமத்தில் திருமண ஒழுங்குகள் எப்படிச் தெய்யப்பட்டன என்பதையும், மாப்பிள்ளை பகுதியும் பெண்பிள்ள்ை பகுதியும் உறவினர் வீடுகளுக்குச் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்தல், பலகாரம் கடவும் பந்தல் போவும் உறவினரை அழைத்தல் என்னும் நிகழ்ச்சிகள் இக்கதையில் இடம் பெறுகின்றன. திருமண வைபவம் இன்றுபோல இரண்டு மூன்று மணி நேர நிகழ்ச்சியல்ல. சுமார் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் சமூக நிகழ்ச்சியாகும். கிராமத்தின் திருமண வைபவத்தில் இடம் பெறும் முக்கிய பலகாரம் அரியதரம் என்பதையும் ஆசிரியர் காட்டுகின்றார்.
எானம் - எப்ால் 2004
சாலை* NA ki.s; - பேணும் பிராமணனான அம்பிகாபதி guJIT
வடுவுை 籌
போகாத இடந்தனிலே என்னும் கதை சமூகத்தில் மிகக் கேவலமாக மதிக்கப்படும் ஒரு விலைமாதின் கதையாகும். அவள் இத்தொழிலுக்குத் தள்ளப்பட்டதற்கு ஒரு பெரிய மனிதரின் சின்னத்தனமே காரணம் அந்த விலைமாதின் நிலையை கருணை யோடும் மனிதாபிமானத்தோடும் ஆசிரியர் விரசமான சம்பவங் களைப் பச்சையாகச் சொல்லாமல் நாசூக்காக வெளிப்படுத்தும்ஆ விதம் பாராட்டுக்குரியது. శ్లో Y 彎
ஒரு காலகட்டத்தில் அரசவன்செயலால் சிங்கள மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை தேசிய ரீதியாகச் சிந்தித்துப் புனையப்பட்டது"ஐயோ அம்மேஎன்னும் கதை ஜமிக அற்புதமான கதை நெடுஞ் லை"ஆசார அனுஷ்டானங்களைப்
நோக்குகின்றார்.
மருத்துவ மாணவனான போது முற்றிலும்
முரணான சூழலில் தள்ளப்படுகின்றான்.
பல்கலைக் கழகத்தில் சர்வ சதாரணமாக நிகழும் போலியான காதலுணர்வுக்கு ஆளாகித் தவறிழைக்கிறான். என்ன தவறு என்று ஆசிரியர் வெளிப்படையாகச் சொல்ல வில்லை. (ஜஸ்மினை முத்த மிட்டதாக இருக்கலாம்) வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையில் மாட்டு வண்டியை விலத்த முடிந்தது. அதற்கு அப்பால் அவரால் போக முடியவில்லை என்பதை கார் அவரை விலத்திச் செல்கின்றது எனக் குறியீட்டு முறையில் உணர்த்துகிறார்.
“இனி ஒரு விதி' என்னும் கதை முதலாளிக்கெதிராக அச்சுக் கூடத் தொழிலாளர் கிளர்ந்தெழுந்து போராடு வதைச் சித்திரிக்கிறது. வர்க்க முரண் பாட்டினை இக்கதை பிரசாரவாடை சற்றும் இன்றி சித்திரிக்கின்றது.
கலாபூர்வமாகச்
59

Page 32
படிப்பில் ஆர்வம் மிகுந்த சேவுகன் குடிகாரத் தந்தையின் வற்புறுத்தலால் கொழும்புக்கு வீட்டு வேலையாளாக அனுப்பப்படுவதும் அங்குள்ள நிலைமை யால் வீடு திரும்புவதும் திருந்திய தந்தை அவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்பு வதையும் நாம் அடிமைகள்' என்னும் கதை கலையழகுடன் சித்தரிக்கின்றது. மலை நாட்டுப்பிள்ளைகள் புல்லுவெட்டவும், வீட்டு வேலைக்கும்தான் பிறந்தவர்கள் என்று நினைப்பது தவறு. அவர்கள்
படித்து முன்னேறலாம் என்பதை இக்கதை
காட்டுகின்றது.
இங்ங்ணம் வண்ணத்துக் கொன்று வகைக்கொன்றாக பதினாறு கதைகள். அத்தனையும் அவரது பரந்த அனுபவத் தினதும் அவதானிப்புக்களதும் வெளிப் பாடுகள்.
ஏற்கனவே யுகப்பிரவேசம்’, ‘ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது, ஒரு நாட் போர் என்னும் சிறுகதைத் தொகுதிகளையும் நாணயம்', 'மூட்டத் தினுள்ளே’ முதலான நாவல்களையும் எமக்குத் தந்த புலோலியூர் சதாசிவத்தின்
அற்புதமான கதைகளின் தொகுப்பே
அக்கா ஏன் அழுகிறாய் தொகுதியாகும்.
இது ஒரு வெற்றிப்படைப்பு எனத்
துணிந்து கூறலாம்.
- முல்லைமணி -
പ്പുല്ല്ല
வீதியெல்லாம் தோரணங்கள் (நாவல்) ஆக்கம் : தாமரைச் செல்வி வெளியீடு: மீரா பதிப்பகம்,
6%/14ptibly- 05.
நூல்
6 O
கடந்த காலங்களில் வன்னி வாழ் மக்கள் அனுபவித்து வந்த இன்னல்களை அவர்களுடனேயே வாழ்ந்துணர்ந்தும் அவர்களுடைய இன்ப துன்பங்களுக்குத் தானும் ஆட்பட்டும் அவ்வழி வாய்க்கப் பெற்ற மிகப் பரீட்சயப்பட்ட அப் பகைப்புலத்தை மையமாகக் கொண்டு நல்லதோர் ஆளுமையுடன் கதை திறன் வாய்க்கப் பெற்ற தாமரைச் செல்வியின் பரிசு பெற்ற நாவலான “வீதியெல்லாம் தோர ணங்கள்’ நாவல் நூலுருவில் வெளி வந்துள்ளது.
ஏற்கனவே இந்நாவல் 01.03.1992 முதல் 03.05.1992 வரையான காலப் பகுதியில் வீரகேசரி வார வெளியீட்டில் தொடராய்ப் பிரசுர மாயிருப்பினும் மீரா பதிப்பகத்தாரின் கையடக்கமான வடிவமைப்பில் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அழகாக வெளிவந்திருப்பது எவரும் மெச்சும் வகையாக அமைந்துள்ளது.
ஒரு பெண் கதாசிரியர் என்ற வகையில் இயற்கையிலேயே அவரிடம்
புனையும்
அமைந்திருக்கக் கூடிய மென்மையான நுண்ணுணர்வுகளின் ஆதிக்கம் இழையோட, தனது வழமையான பகைப் புலத்திலிருந்து விலகி யாழ் மண்ணின் வாசனையைச் சமாதானப் படையின் வருகைக்குப் பின்னரான காலத்துடன் இணைத்து நாவலைப் புனைந்துள்ளார்.
யாழ் மண்ணின் களம் ஆசிரியை க்குப் பரீட்சயமற்றதாலோ அல்லது ஒரு உத்தியாகப் பயன்படுத்தும் நோக்கத் துடனேயோ ஆசிரியை தனது கதைக் கான நகர்வைத் தனக்கு ஓரளவு
ஞானம் - ஏப்ரல் 2004

பரீட்சயமான தலைநகர் கொழும்பில் அமைத்துக் கொண்டுள்ளார். கதையைச் சிக்கலில்லாது நகர்த்துவதற்கு இந்த உத்தி உதவியிருப்பினும் கூட நாவலின் களம் பலவீனமாகப் போய் விட்டமைக்கும் அது காரணமாகி விட்டது.
உதாரணமாக யாழ் மட்டுமன்றி முழு நாட்டையும் ஏன் சர்வதேச அமைப்புகள் பலவற்றையே ஒரு சமயம் உலுக்கிய ஒரு நிகழ்வினை கொழும்பிற்கு நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்த பெண்கள் தமது உடுப்புக் களைச் சுற்றிவரப் பயன்படுத்திய உதயன் பத்திரிகையின் நடுப்பக்கச் செய்தியாகக் காட்டியிருப்பதானது அழுத்தம் கொடுக்க வேண்டிய ஒரு நிகழ்வில் இருந்து ஆசிரியர் நழுவிப் போவதற்குப் பின்ன னியாக அமைந்து விட்டதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
மண்ணை
பாணம் பெரியாஸ்பத்திரிக்குள் இந்தியன் 霧
ஆமி நுழைஞ்சு கண்டபடி சுட்டதிலை டொக்டர்களும் நேர்ஸ்மார்களும் அங்க வந்து படுத்திருந்த வருத்தக்காரருமாய் ஒன்பது பேர் செத்துப் போச்சினமாம் .
இச்செய்தி இவ்வாறு உரையாடல் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட ğl
எப்படியிருப்பினும் கதையில் பின்னர் நிகழப் போகும் ஒரு சம்பவத்திற்கு இதன் மூலம் ஒரு நம்பகத் தன்மையை முற்கூட்டியே ஆக்கி வைத்து விட்ட ஆசிரியையின் அனுபவ முத்திரையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
எளிய. மிகச் சிறிய வாக்கியங் களாயினும் வாசகர்களின் மனதினை ஊடறுத்து மெய் சிலிர்க்க வைக்கும் நடை!
யாழ்ப்
“வாழ்க்கையெண்டாலே இழப்புகளும் குழப்பங்களும் சோகங்களும் தானே, பிரச்சனை இல்லாமல் ஒருத்தருக்கும் வாழ்க்கை அமையிறேலை.”
“யாழ்ப்பாணத்திலை மாறி மாறி செத்த வீடுகள்தான். மாறி மாறித் திவசங்களும் நினைவஞ்சலிகளும்தான்"
இப்படியான வசனங்கள் பல நாவல்
பூராவும் ஊடுருவிவாசகர் நெஞ்சங்களைச்
சோகத்தில் ஆழ்த்துகின்றன.
“எவ்வளவுவோ பேருக்கு நேர்ந்த கொடுமைகளோடை இதுவும் ஒண்டு எண்டு நினைச்சு மனதை தேற்றிக் கொள்ள முடியேல்லை” என்கின்ற கருத்தோட்டத்திலிருந்து
வழமையாக
மாறி .
“எவ்வளவோ பேருக்கு நேர்ந்த கொடுமைகளோடை இதுவும் ஒண்டு
ஐ எண்டு நினைச்சு மனதைத் தேற்றிக்
கொண்டிருக்கிறம்” என்று ஆசிரியை தனது கதை மாதினை கூற வைத்ததன் வாயிலாக அவளையும் அவளது பொது நலம் சார் சிந்தனை வளத்தையும் சிகரத்தில் ஏற்றி வைத்து விட்டார்.
கதையை நகர்த்த வேண்டிய எல்லை வரை நகர்த்தி விட்டு உரிய தருணத்தில் முடிவினை விரைந்தும் ஆணித் தரமாகவும் கூறும் ஆசிரியரின் திறன் இந் நாவலிலும் நன்கு பளிச்சிடுகின்றது.
நூறு பக்கங்களுக்கும் குறைவான சிறியதொரு நூலுக்கு நூற்றியெழுபது ரூபா விலை சற்று அதிகமாயினும் கூடத் நிச்சயமாக
தரமான வாசகர்கள்
அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்!
-திருமலை வீ. என். சந்திரகாந்தி

Page 33
2 வாசகர் பேசுகிறார் ديه
"ஞானம்’ ஈழத்து இலக்கியப் பிரமுகர் மத்தியில் தனியானதொரு இடத்தைப் பிடித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆக்கங்களும் பரவலாக இடம் பெறுகின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்கது.
“ஞான”த்தில் இடம்பெறும் நேர்காணல் வித்தியாசமாக - கனதியாக அமைந்துள்ளது. அதுவும் பரவலாக அமைவது வரவேற்கத்தக்கதே.
"புதிய நம்பிக்கைகள்” என்ற தலைப்பில் இளம் தலைமுறையினரை அறிமுகம் செய்வது நல்ல பலனைத் தரும். இலைமறை காயாக - ஊக்குவிப்பு இல்லாமல் உறங்கிப் போயிருக்கும் இளம் எழுத்தாளர்கள் இத்தகைய கட்டுரைகளால் பெரிதும் உற்சாகமடைவார்கள்.
விவாதமேடை - தற்செயலாக ஏற்பட்டது. அதை நிரந்தரமாக்கி, இலக்கியப் பிரச்சினைகள் முரண்பட்ட கருத்துக்கள் பற்றி அலச வாசகர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.
இரா. நாகலிங்கம், மட்டக்களப்பு.
இன்றைய நாட்களில் 'வாசகர் பேசுகிறார்’ என்ற பகுதியை வாசித்தால், முற்போககு - நற்போக்கு - பிற்போக்கு என்ற எண்ணம் அடிப்படையாக மனதை ஆட்கொள்ள கருத்துகள் வெளியிடப்படுவதை உணரலாம். அதில் பிழையில்லை.
ஏனெனில் - “கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்ற தத்துவம் - அதாவது கல் என்று பார்த்தால் கல்தான். சிலை என்று பார்த்தால் சிலைதான் என்ற உண்மை விளங்குகிறது. சென்ற சில ஞானம் இதழ்களில் கலாநிதி சிவத்தம்பி, கலாநிதி துரைமனோகரன், சாரல் நாடன் பற்றி எழுதப்பட்டுள்ள நேயர் கடிதங்களை வாசித்துப் பாருங்கள். உண்மையைக் கூறுவதாகில் ஒவ்வொருவரும் அவர்களைப் பார்க்கும் நோக்கம். ஏன்? ஆங்கிலக் கடவுள் பின்னால் இருந்து பார்த்தால் நாயாகத் தோற்றுவார். GOD பின்னாலிருந்து பார்த்தால் DOG சரிதானே. எனவே என் நல்ல நண்பர்களாகிய கலாநிதி சிவத்தம்பி, துரை.மனோகரன், சாரல் நாடன் மூவரும் இவை பற்றிக் கணக்கெடுக்க மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் உலக உண்மையை அறிந்துகொள்வர். எழுதுக தொடர்ந்து எழுதுக. ஞானத்திற்கு என் வாழ்த்துக்கள்.
ஏ.பி.வி. கோமஸ், மாத்தளை
 
 

ஞானம் இதழ் 44 கிடைத்தது. கடைசிப்பக்கத்தில் இருந்து படித்துக்கொண்டு வருகையில் அனைத்து அம்சங்களும் ஞானத்தின் பணியைப் பாராட்ட வைத்தன. சமகாலக் கலை இலக்கிய நிகழ்வுகளில் யாழ் மண்ணில் நடந்த ஒரு சிறுகதையின் களத்தாக்கம் பற்றிய தங்கள் கருத்தும் நியாயமானது. ஆனால் பக்கம் 4முதல் 16வரை ஒரு சிறுகதை? பிரசுரித்துள்ளிர்களே! இரக்கப்படத்தான் முடிந்தது.
1. தரமான சிறுகதைகளைத் தெரிவு செய்யவென்று இயங்கும் “ஞானம் சிறுகதைகள் தெரிவுக்குழுவின் கண்களுக்கு இந்தப் 12பக்கங்கள் அகப்படவில்லையா? 2. பந்தியமைப்பை உடைத்துப்போட்டு அடுக்கினால் அது புதிய வசனநடை
ஆகிவிடுமா? 3. சிறுசஞ்சிகையில் இப்படி பக்கங்களை வீணாக்குவது கட்டுபடியாகுமா? 4. எங்கள் பாட்டனிடம் ஒரு கொம்பன் யானை இருந்தது என்பதைத் தவிர (அடிமை குடிமை முறை) கதாசிரியர் புதிதாக என்ன கூற முற்பட்டுள்ளார். 3. இனி று குல பேதங்கள் கடந்து நடக் கும் அத்துமீறல் திருமணங்களையாவது கதாசிரியர் நியாப்படுத்தியிருக்கலாமே! 6. நவீன இலக்கியகாரர் புதிதாக எதை எழுதிச் சிருஷ்டித்துவிட்டனர்? என்று கேட்டுத்திரிந்த கம்பராஜானந்த ஜி அவர்களுக்கும் ஞானத்துக்கும் மேற்கேள்விகள் சமர்ப்பணம்.
கலாநிதி துரை மனோகரன் அவர்கள் எழுதும் ‘எழுதத்தூண்டும் எண்ணங்கள் நாம் விரும்பிப் படிக்கும் ஒரு பத்தி. அதற்குச் சேறு பூசச் சிலர் புறப்பட்டமை கண்டு காரணம் புரியாது தவித்தோம். கலாநிதி துரை.மனோகரன் அவர்கள் கொடுத்த பதில் சிரியானதே.
கருத்துக் கூறுபவர்கள், விமர்சகர்கள், இலக்கியமேதாவிகள் என்றபோர்வையில் பல ஆற்றாமைச் சக்திகள் நம்மிடையே நடமாடுகின்றன. அவர்களால் எல்லாம் உச்சமட்டம், உயரெல்லை, Extreme, என்றெல்லாம் பேசமுடியும் . அவர்களால் உலக இலக் கியத் தரங்கள் பற்றி ஒப்பிட்டுப்பேசமுடியும். ஆனால் ஏதும் ஒரு இலக்கியத்தை தாமாகப் படைத்திருக்கிறார்களா? அல்லது படைக்கமுடியுமா என்றால் பதில் இல்லை.
அப்படியான வேடதாரிகளிடத்தும் ஞானம் வீழ்ந்துவிடக்கூடாது.
ஞானத்தின் கலை இலக்கியப் பண்ணை நல்ல ஒரு யோசனைதான். ஆனால் அது காத்திரமான சிந்தனைகளை, இலக்கியங்களை, சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். மாறாக நூற்றுவர் கூட்டத்துள் கள்ணன் சேர்ந்த நிலையாக ஞானத்தின் இலக்கிய தர்மமும் பழங்கதையாகிவிடும்.
பாதையைத் தெளிவாக்கி ஞானம் பயணிக்க இந்தப் பாமரனின் பிரார்த்தனைகள்.
மாவை.வரோதயன்

Page 34
நீங்கள் அனுப்பிவைத்த ஞானம் சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழ் கிடைத்தது. அதிக பக்கங்கள் பயன்மிகு படைப்புகள் என அசத்தியுள்ளீர்கள். பல்திசைப் பார்வைகள் ஞானத்தின் ஊடே இலக்கிய ஆர்வலர்களை எந்தடைவது ஆனந்தம் 46வது இதழ் உரை தொய்வின்றி - மாதாந்தம் ஞானத்தை வெளிக்கொணரும் ஞானத்தின் குழுவினர் மீது, மதிப்பும் பரிபாதையும் வளர்கிறது.
எல்பாயதக் கோட்பாடுகளிலிருந்தும் பெண்ணுக்குள்ள உரிமை - பேசப்பட்டிருக்கிறது. அவரவர் கொள்கைகள் - நம்பிக்கைகள், இதிகாசங்கள் - மூலம் பெண்ணுரிமை பற்றிப் பேசியுள்ளனர்.
பெண் - ஆணின் விலா எலும்பிவிருந்து படைக்கப்பட்டவள். எனவே அவள் ஆன்மாவுள்ள சக மனுஷி, என்பது குர்ஆனின் தத்துவம், பெண் இயற்கையானவள். அஃளை அவள் இயற்கையுடன் வாழ விடுவதே மனித தர்மம்.
பெண்களின் சாதனைகள் - இவ்விதழ் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை அறிகிறேன். பெண்கள் சிறப்பிதழ் - படிக்க வேண்டியது மட்டுமல்ல, ஆணைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய மலர், காத்திரமான இதழுமாகும்.
- ஒட்டாயியை - அரபாத்
ஆசிரியர் அவர்களுக்கு,
மார்ச் இதழ் கிடைத்தது. சர்வதேச மகளிர் தின சிறப்பிதழ் கிடைத்தது- பத்மா சோமகாந்தன் எழுதிய 'சுவாலை சிறுகதை நன்றாக இருந்தது - பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இருந்தது.
மற்றைய கட்டுரைகள் - சித்திரலேகா அவர்களின் நேர்கானல் எல்லாம் நன்று - மார்ச் இதழ் ஒரு பரலாற்று ஆவணம் - பாதுகாக்கப்பட வேண்டியது.
சி. குராாபிங்கம், நல்பூர்,
Y
画 சிறுகதைத் தொகுப்புப் போட்டி
ე| ஞானம் விருது 2004 50 الاتህ
1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 30-04-2004 அன்று நாற்பது
வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறு கதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றதாக இருத்தலாகாது.முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) போட்டி முடிவு திகதி 30-04-2004. அதன்பின்னர் வந்துசேரும் படைப்புகள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
- ஆசிரியர்ノ
 

OO)COOCCOOOCOO)COO)COO)(CO)
CENTRAL ESSENCE ?
SUPPLIERS -
※
DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES,
ട്ട്
})
FOOD COLOURS AND SCIENTS EIC.
76/B, KING STREET KANDY TEL : O81 - 222.4187 الليبيا
{}:| - 44715f3.
Importers & Distributors of
Wall Tiles, Floor Tiles, High Quality Sanitary wares, Bathroom. Accessories, P. W. C. And Hot Water Pipe Fittings
A-74, Colombo Street Kandy, Sri Lanka. Tel : 081 - 4476760, 08 - 2200052 Fէլy : 081 - 2200052

Page 35
"Hitli best Carpilirleri ta Freri
LUCKYLAN
MANUFA
Kundi
Phone : 08
08.1
81
Fax : 081
E-Mail : Luc)
ܐ݂
1,
エ
-

D BISCUIT | CTURERS ||
asale.
242027
- 242O574
2227).
- 2420740 | kyland Gshnet.ik.
ந. கி. பி. பு:பெண்டார் வீசி, கொழும்பு 13