கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.05

Page 1


Page 2
f; -
NAGALINGA
/
I am
胃
"لي
”ܠܐ + ܬܐ .
سمي ',
هي
Designers and Manufactí
ܘܱܣܛܝܰܐ܂ Soverzign gold Quality Jষ্টvহুllary ട്ട് چلتن _
101, COLOMBO STREET KAMANIDY TEL : በ81 - 2232545
Jeroeslersحصہ
fers of ZZKt.
- - ية SLLLSM M MM MDMD DD D DD D DD D D DM SDMDMSDM DD D S DD SD DD D DD D DLD D u uMuDMLMMML MuD u uMLM LM SMuMu uMu uM uM MuMM D DD D MMM L SAAA S D DDD DSDS
 
 
 
 
 
 
 

MSMeSMSAS Ss SAMSMMASMSMSMSSASqqqqSqS
ஞானம் ஒளி - 04 ELs — 12
பகிர்தலின்
மூலம்
விபிவம் ஆழமும்
பெறுவது
குானம்
ஆசிரியர் : தி. ஞானசேகரன்
துண்ை ஆசிரியர்கள்: புலோலியூப் க. சதாசிவம் அந்தணி ஜீவா
இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா. பாலச் சந்திரன்
ஓவியர்கள் : LI ĈIUJ LJ II நா. ஆனந்தன்
நிர்வாகம் : கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு .
தி. ஞானசேகரன் 1977, பேராதனை வீதி,
கண்டி
Telephone - (81-2-17857 (Office
(81-22-755 Rcs.
777-5, - (18-223 755
-Mill - gilin:LIII IIligarine ayah00.com
ke
LF
MqS See eS SeeeS eee S S eeSSeS SeS SeeSeSeSee SAe SAMe ee SA SASA SAAS SMS SM SMSASASS
இதழினுள்ளே . t
ருேர் கானல்
புதுகள {ဒြ|]] த்தினதுரை பேராசிரியர் சிவத்தம்பி
சிறுகதை
அந்தி 11:3ழ
- ஓட்டமான ராக் மூன்றாவது கால்
கத்ர்யபசாா:ன்
கவிதைகள்
பழுது வண்டிப் பயனத்தில்
- 1ே1iர். முறிந்து தொங்கும் நட்பின். - நாகர், விஷ்' விண்ணில் எழுதல்
,ே பூ பாப் கடுஞ்செலவு
- கவிஞர் பி. ருவாத்திாம்
கட்டுரைகள்
ஈழத்து புதுக் கவிதைத் . - தேன்காந்தின்
எழுதத் துண்டும் எண்ணங்.
- துர மனோகரன்
சம காலக் கலை இலக்கிய.
- செ. சுதர்சன்
கேள்வி ஞானம் புதிய நூலகம் நூல் மதிப்புரை
வாசகப் பேசுகிறார்
அட்டைப்பட ஓவியம் ! Lofo L II
直
57
II

Page 3
:
கலை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܥ ܠ
சிறுபான்மை இனத்தின் கலை இலக்கிய மேம்பாட்டுக்கான ஒளக்குவிப்பினைப் புறக்கணிப்பதும் மனித உரிமை மீறலே.
நமது நாட்டில் தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் மக்களின் தீர்ப்பு என்பர். மக்களின் அரசியல் உணர்வு அலைகளின் வெளிப்பாடு எனவும் கூறலாம். தேசிய ரீதியில் நோக்கும் போது, நடந்த தேர்தலும் அதன் பெறுபேறுகளும் சில விடயங்களை நமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஆழ்ந்து நோக்கும்போது சில சிந்தனைக்குரிய அவதானிப்புகள் தெரிகின்றன. இருவருட காலமாக சமாதான முயற்சியை முன்னெடுத்த ஆட்சியாளர்கள் அந்த முயற்சியில் பெரும்பான்மையின மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு வெகு ஜன இயக்கங்களை முன்னெடுக்கவில்லை. அதேவேளை பதவி மோகமும் இனவாதமும் கொண்டு இயங்கிய எதிர்த்தரப்பினர் தமது ஒத்துணர்வை ஒன்றுதிரட்டி, விடுதலை வேண்டி நின்ற தமிழ் மக்களின் குரலைப் பிரதிநிதிப்படுத்திவந்த இயக்கத்திற்கு எதிராக இனவாத உணர்வைத் தூண்டினர். அரை நூற்றாண்டு காலமாக எதிர் நோக்கிவரும் பிரச்சனைக்குத் தீர்வு தேடும் முயற்சிகளுக்கு எதிரான உணர்வுகளை வளர்த்தெடுத்தனர்.
ஆட்சி செய்தவர்கள்மேல் கசப்பு உணர்வு பெருகுவதற்குச் சமாதான முயற்சிகளுக்கப்பால் வேறு சில காரணிகளும் தொழிற்பட்டன. அதிகரித்துவந்த வாழ்க்கைச் செலவுகள் காரணமாக மக்கள் அல்லலுடன் அனுபவித்து வந்த நிலைமையினை உணராத நிர்வாக அமைப்பு கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பெரு முதலாளிவர்க்கத்தின் பிரதிநிதியாகச் செயற்பட்டமை, மேற்குலக வல்லரசுகளின் அதி விசுவாசியாகத் தன்னைக் காட்டிக் கொண்டமை, நாட்டுப்புற மக்களுடன் அத்தியந்த உறவின்றி அந்நியப்பட்டு நின்றமை போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். தேர்தல் பெறுபேறுகள் இன்று
2 ஞானம் - மே 2004
 
 
 
 

இந்நாட்டின் எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற கேள்விக்குறியுடன் நிற்கின்றன. அரசியல் வானில் ஆரோக்கியமான கால நிலை இல்லையென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். மப்பும் மந்தாரமும் எவ்வேளையிலும் மின்னலும் இடியுமாக முடியலாம்.
இக்காலகட்டத்தில், இந்நாட்டின் சிறுபான்மை இனமக்கள் தமது கலை, கலாசாரத் துறைகளில் ஊறு ஏற்படாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும். மாறுபட்ட கருத்தியல்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுதிரண்டு ஓர் அணியில் ஒரு குரலில் ஒலிக்கவேண்டும். தமிழ் பேசும் கலை இலக்கிய வாதிகள் தேசிய ரீதியில் ஒரம் கட்டப்படுவதையும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதையும் அனுமதிக்கலாகாது. கடந்தகாலங்களில் தமிழ் பேசும் கலைஞர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமையை சமீபத்தில் ஒரு கலை இலக்கிய அமைப்பு சுட்டிக்காட்டியதை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
வருடந்தோறும் தேசிய நாடகவிழா, சிறுவர்நாடகவிழா, குறுநாடகவிழா என அரச மட்டத்தில் நாடக விழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால் 2001ஆம் ஆண்டு நடைறெவேண்டிய தமிழ் நாடகவிழா 2002ஆம் ஆண்டு நடைபெற்று 2003ஆம் ஆண்டே பரிசளிப்பு நடைபெற்றது. நாடகப் பரிசுத் தேர்வுகளிலும் ஊழல்கள், குளறுபடிகள், மோசடிகள், அரசியல் தலையீடுகள் நடைபெறுவதாக இத்துறையில் சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். நலிவுற்ற கலைஞர்களுக்கு ஒதுக்கிய நிதியைக் கூட தமிழ்க்கலைஞர்கள் பெறமுடியாத நிலை இருக்கின்றது. இன்னும் பல கூறலாம்.
கலாசார அமைச்சு நியமிக்கும் தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆலோசனைக் குழுவினரால் ஆண்டு தோறும் அரச விருதுகளுக்கு நூல்களைத் தெரிவு செய்வதற்காக நியமிக்கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி இயங்க வேண்டும். அரசு, தமிழ்க்கலை கலாசார விவகாரங்களை செவ்வனே கவனித்து, எல்லாவற்றையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் சிறப்புறச் செயற்படவேண்டும். கலை இலக்கியவாதிகளுடன் காலத்துக்குக் காலம் கலந்துரையாடி புதிய செயற்திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு இனமக்களும் தத்தமது கலைகலாசார மேம்பாட்டினை அடைய வழிவகுத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அது நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பிறப்புரிமையாகும்; மீறப்படுவது மனித உரிமை மீறலாகும்.
ஞானம் - மே 2004 3

Page 4
"நீங்கள் தந்த “விசிடிங்கார்ட்” விலாசத்திற்கே இக்கடிதத்தை எழுதுகின்றேன்.” மழைக்காலம். கனதியற்று சிலுசிலுவென அழுது கொண் டிருந்தது வானம். தலைநகரத்து அழுக்கு களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, அசுத்தங்கள் வீதியை நிறைக்கின்றன.
நீங்கள் ஆமர்வீதியில் நின்றீர்கள். “குடை கொண்டு வரவில்லை" என்ற மடமையில் வசை பொழிந்தபடி பஸ்சுக்காகக் காத்து நிற்கும் உங்களில், விழி வைத்து நின்றேன் நான்.
மாலையின் வயதை இரவாக உயர்த்திக் காட்டியது இருள். மழை இலேசாகத் தூறினாலும் நேரே நெஞ்சை நிமிர்த்தி “என்னில் விழு” என்று தாரைவார்க்க முடியாது. அப்படியொரு சீராகத் தூறிக் கொண்டிருந்தது.
குடைக்குள் நங்கூரமிட்ட சில உடல்கள் வெளியே தலை நீட்டி "பஸ் வருகுதா என வீதியைப் பார்ப்பதும், மணிக்கட்டைப்
பார்ப்பதுமாய் அவஸ்தைப்பட்டனர். எனினும் நீங்கள் சாவகாசமாக நிற்கிறீர்கள்.
அருகே ஒரு பெட்டிக்கடை, சினிமா நட்சத்திரங்களின் படங்களை தன்னில் மாலையாக வரித்துக் கொண்டு பிஸியாக இருந்தது. அதற்குள் பீடா, பாபுல், வெற்றிலை வகையறாக்கள். சில குமர் பெண்கள் பெட்டிக் கடைக்காரனிடம் சிரிப்பும், கும்மாளமுமாய் அமர்க்களப்பட்டனர். நீங்கள் புறக்காட்சிகளைச் சுவாரஸ்யமாக அவதானிப்பதை நான் பார்க்கிறேன்.
அந்தப் பெண்களின் விழிகளில் இரைதேடும் வெறியிருந்தது. வீதியோரங்களில் களிநடனம் புரியும் வசீகரமும், வேண்டுமென்றே மார்பைத் தூக்கி, நிமிர்த்தியிருக்கும் சில்மிஷமும் உங்களை ஒரு கணம் திணறடிக்கிறது.
உங்கள் ஆய்வு மனம் பரபரப்பதை உணர்கிறேன். பேரம் பேசும் தலமாக அந்தப் பெட்டிக்கடை சுலபமாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். திடீரென உங்களை அச்சம் வந்து கெளவுகிறது. இளமையின் மதர்ப்பில் தளதளக்கும் அழகிகள் கூட்டம் வசியம் செய்தது. பிரயாசைப்பட்டு, நீங்கள் விழிகளை விடுவித்து, வீதியில் எறிகிறீர்கள்.
4. w ஞானம் - மே 2004
 

மழை பேரிரைச்சலுடன் கொ ட் ட வார ம் பித்தது . தூவானமே மழையாகியது. அருகிலிருந்த ஹோட்டலுக்குள் நுழைகிறீர்கள். 'பிளேன்ரீ”யை உறிஞ்சியபடி மழையின் சங்கீதத்தில் லயித்திருக்கின்றீர்கள். உங்களின் எதிரே நானும் அமர்கிறேன். ஹோட்டலில் அவ் வளவு சனமில்லை. வாழ்வின் வனப் பையும், மதர்ப்பையும் சுவாசமாகக் கொண்டு வாழும் உங்களுக்கு, வாழ்க்கை தன் மறுபக்கத்தைப் புரட்டிக் காட்டியது.
வானத்தைப் புரட்டிப் போட் டால், பூமியைக் கவிழ்த்துக் கொட்டினால் என்ன வெல்லாம் உதிரும். கடல் வற்றினால் எப்படி இருக்கும். எல்லாவற்றையும் என்னைப் பார்த்த முதற் பார் வையில் அவதானிக்கின்றீர்கள்.
தோளில் அடம்பிடித்துத் தொங்கிய கைப்பையை அவ தானத்துடன் உருவி, மடியில் வைத்துக் கொள்கிறேன். நீலக்
குடையின் கைப்பிடி மட்டும்.
அடாத்தாகப் பையின் வெளியே
தலை நீட்டியபடி பராக்குப்
பார்த்தது.
மழை இன்னும் வலுக்கத் தொடங்கியது. டிஸ்கவரி
செனலில் மட்டுமே கண்டு வியந்த பெருத்த எலிகள் உங்கள் பாதங் களில் உஷ்ணத்தை உமிழ்ந்தபடி கடை முழுக்க ஒடித்திரிந்தன. விழிகளை இடுக்கி, சிறுத்துப் பார்க்கும் வெள்ளை வெளே ரென்ற எலிகள்.
ஞானம் - மே 2004
திடீரென உங்கள் முதுகந் தண்டில் நண்டுர்ந்திருக்க வேண்டும். குனிந்திருந்த நீங்கள் சரேலென நிமிர்ந்து அதிர் கின்றீர்கள். எதிரே இருந்த நான் உங்களையே வெறித்துக் கொண் டிருக்கின்றேன். துணுக்குற்று உங்கள் விழிகள் பரபரக்கின்றன. உங்களுக்கு அழகான விழிகள்,
* குறுகுறு வென்று எதையும்
அலைந்து கெளவுகின்ற துடுக்குப் பையன் போல், துருதுருவென்று சுழலும் விழிகளின் வசீகரம் எனக்குப் பிடித்தது.
"நீங்க கொழும்புக்குப் புதுசா'?, எனது கேள்வி பிச கின்றி விழ, நீங்கள் சுற்றமும் பார்க்கின்றீர்கள், என் இத ழோரம் கேலியாய் ஒரு சிரிப்பு முகிழ்ந்து உதிர்கிறது.
"ஒங்களத்தான், நீங்க கொழும்புக்குப் புதுசா’? மறு படியும் நான் நீங்கள் சுதாரித்துக் கொண்டு, என்னை நோக்கி மெலிதாகப் புன்னகைக்கின் நீர்கள். ஒரு ரோஜா முகிழ்ந்து பாதி இதழ்கள் விரிந்து, இதோ முழுவதும் மலரப் போகிறேன் என்ற பாவனையைப் போல் அந்தச் சிரிப்பு. அது ஒளிர்ந்த முனையிலிருந்து உங்கள் குர லினிமை பிறக்கிறது. "இல்ல 10 வருஷம்" என்கிறீர்கள். “எங்க இருக்கிறீங்க” / “தெஹி வளையில்"/"என்ன செய்யுறிங்க', / “தனியார் கம்பனியில வேலை செய்யிறன்,”/ நான் கேட்பதும்,
5

Page 5
நீங்கள் சொல்வதுமாக இரு வரிடையே நிலவிய மெளன முடிச்சுக்கள் நெகிழ, நீங்கள் இயல்பாகி என்னைக் கேள்வி களால் துளைபோட ஆரம் பித்தீர்கள்.
மழை இன்னும் ஒய்ந்த பாடில்லை. கடை முன்றலில் ஏகப்பட்ட சனநெரிசல், சிறு குடைக்கு அடங்க மாட்டேன் என்பது போல், மழை அதிக இரைச்சலுடன் கொட்டவாரம் பித்தது.
பெண் மூடி வைத்த புத்தகம். திறந்து படிக்கும் போதுதான் உள்ளே இருப்பது தத்துவமா? கவிதையா, துயரமா என்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. உங்களிடம் என்னைத் திறந்து காட்டுகிறேன். என் கவிதைகளின் அவலமும் அலறலும் உங்கள் நெஞ்சைச் சுடுகிறது. வரிக்குவரி சமுத்திரத்தின் பேரிரைச்சல்,
நீங்கள் படிக்கவென்றே இத் துணை காலம் நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்தேனா1? உங்களைப்
பார்த்த கணத்தில் மட்டும், ஏன் எனக்கு நம்பிக்கை துளிர்த்தது. என் வாழ்வைப் போல் இதுவும் புதிராகவே தெரிகிறது.
அடிக்கிற அம்மாவின் கால் களைக் கட்டிக் கொண்டு அழும் சின்னக் குழந்தை மாதிரி, நீங்கள் என்னைத் தவிர்த்து விலக விலக நான் உங்களிடம் எனது கதையை கூறிக்கொண்டிருக்கிறேன்.
"எனது பெயர் பாத்திமா, ஊர் காலி, எனக்கு மூன்று பிள்ளைகள். காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். காதலின் திவ்யத்தில் பிரபஞ்சத்தில் இறக்கை முளைத்துப் பறந்து பார்த்தவர்களில் நானும் ஒருத்தி, காதல் கணவன் கைவிட்டு விட்டான். மூன்று குழந்தை களையும் காப்பாற்ற ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தேன்.
இலயிப்பின்றி எழுந்து கொள் கின்றீர்கள், “மன்னிக்கவும், இந்த இடம் உன் கதை கேட்க, உகந்தது இல்ல, எனது விலாசம் தாரன்,
அலுவலகம் வா" என்றுவிட்டு, நகரப்போன உங்கள் கரத்தைப் பலாத்கார (ாகப்பற்றுகிறேன். பிர வத்தில் அரைவாசி வெளியே வந்து, பாதிக்
குழந்தை உள்ளேயிருந்தால் உண்டாகும் வலி எனக்குள் படர்கிறது. என் மனசின் சுமையை இறக்கி வைக்க நீங்கள் கடவுள் அனுப்பிய தூதர் என்றேனண்ணுகிறேன்.
ஞானம் - மே 2004
 

“பக்கத்துல என்டரூம் இருக்கு, வாங்க, “உங்களப் பார்த்தா நல்லவரா" தெரியுது, "நான் யாருக் கிட்டயும் இப்படி நடந்துக்கல்ல, பிளிஸ் என்ட கதயக் கேளுங்க, நான் உடைந்து கரைகிறேன். சனங்களின் பார்வை நம்மீது படரத் தொடங்குகின்றது. உங்களுக்கு இருப்புக் கொள்ள வில்லை. “சரி வருகிறேன்” என்ற நீங்கள் என்னை முன்னேவிட்டு, இடைவெளிகள் அதிகமெடுத்து வருகின்றீர்கள். கொட்டும் மழையில் கடைக்கு கடை தாவி வந்த உங்களின் பிரசன்னம் என் மனசுக்குள் மலையாய் உயர்கிறது. எனது அறை ஒரு ஹோட் டலின் மேல் மாடியிலிருந்தது. அங்கு வந்த பின்புதான் அதற்குள் கால் வைப்பதே பாவம், என்ற உணர்வு உங்க ளுக்குள் ஊர்கிறது. இலேசான நடுக்கத்துடன் அறைக்குள் நுழைவதை நான் அவதானிக் கின்றேன். உங்களுக்கு அசெள கரியங்களை ஏற்படுத்தியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.
உங்கள் திருவடியில் நான் அமர்ந்திருக்கின்றேன். "தறுக்கு வைத்து மூடப்பட்ட புத்தகத் தைத் திறக்கின்றேன்.
ஆடைத் தொழிற்சாலையில் அறிமுகமான நண்பி, அதிக பணம் சம்பாதிக்க 'பார்ட் டைம் ஜொப் இரிக்குது, வா” வென்று என்னை அழைத்து வந்தாள். மருதானையில் ஒரு ஹோட்டல்
ரூமில் என்னை இருத்திவிட்டு போய் விட்டாள். உள்ளே ஒருவன் வந்து பேரம் பேசும் வரை அந்த ஜொப் இதுதான் என்று எனக்குத் தெரியாது.
ஒரு கைதிபோல அந்த அறைக்குள் உழன்றேன். உணவும் உடையும் வந்தது. நண்பி என்ற துரோகி என்னை அந்த ஹோட் டலுக்கு விற்றுவிட்ட செய்தி என்னைத் துடிக்க வைத்தது.
என் அதரங்கள் துடித்து, நெஞ்சு வெடித்து கேவுகிறேன். தன்னுணர்வற்று என் துயரத்தில் தோய்ந்திருந்த நீங்கள் என் தலையை ஆதுரமாகக் கோதி விடுகின்றீர்கள். ஆண்டவா அந்தத் தொடுகையால்தான் எத்தனை கோடி அமைதியைத் தந்தாய் நன்றி.
அழுகையினுாடே கதையைத் தொடர்கின்றேன். "அந்த ஹோட்டலில் எனக்காகத் தலைக்கு 2000/= வாங்குவார்கள். எனக்குக் கிடைப்பதோ 500
ତT ତfit
மட்டும். வாரமொருமுறை எனது பிள்ளைகளைப் பார்த்து வருவேன். வாழ்க்கை - உடம்பை விற்று உடலுக்குச் சோறு போடு கிறது. ஒவ்வொரு ஆணின் படர்தலும், வெறியும் என் இரவுகளைச் சுட்டெரித்தன. கலவி என்பதை சொர்க்கமாய் அனுபவித்த நான் என்னில் ஊரும் நாகங்களை, அனுமதித்த படி மரக்கட்டையாகினேன்.

Page 6
என்னைக் கட்டியவன் ‘தூளுக்கு அடிமையானான். ஒரு நாள் வீட்டுக்கு ஒருவனை அழைத்து வந்தான். நண்பர் என அறிமுகப்படுத்தி, அவனுக்கு டீ போடு என்றுவிட்டு, வீதியில் இறங்கி ஓடினான். "எங்கே போறிங்க?" என்று கத்தினேன். "பிஸ்கட் வாங்கிவாரன்” என்ற வனின் குரல் உடைந்து விழுந்தது. பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று விட்டிருந்த காலை நேரம். நண்பனாக வந்தவன். என்னைக் கட்டிலில் தள்ளி சூறையாடினான். “gj GOTLIT இப்படிச் செய்தாய்”? என்ற என் விம்மலிடையே அவன் கூறிய பேரிடி இணைந்து வெடித்தது.
"உன் புருஷன் துரளடிக்க எனக்கிட்ட வாங்கின கடன் தலைக்கு மேல ஏறிட்டு, தாரதுக்கு வழியில்ல, சரி உன் பொண்டாட்டிய ஒரு தடவை தா என்றன், கூட்டி வந்தான், போயிட்டான். “அன்று போன கணவன், இன்னுமில்ல, அவன் நண்பன் தான் அடிக்கடி'கடனை தீர்த்து போக வந்தான். உங்களுக்குத் தெரியுமா நான் மக்கா போய் உம்ரா செஞ்சவள் என்ன பயன் என்னயும் கிருபை யுடன் நோக்க அருள் விழிகள் இல்லையே!
நீங்கள் பேரிடி விழுந்தவர் போல் இடிந்து போகிறீர்கள். பக்கத்து அறைகளில் சிணுங் கல்கள், பேரம் பேசல்கள், ஒர் ஆணின் துவம்சத்தில் சிதையும்
8
பெண்ணின் வேதனைகள் எல்லாம் மிகத் துல்லியமாகக் கேட்டன.
மழையின் வேகம் குறைகிறது. இரவின் உக்கிரத்தில் தலைநகர் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஜன்னலிடுக்கில் கசிந்து வரும் வெளிச்சம் நாமிருந்த அறைக்குள் சொட்டியது. அந்த அறையே துயரம் படிந்து பிசுபிசுத்தது. எனது புத்தகத்தின் சுவாரஸ் யமான அத்தியாயங்களையும் படிக்கின்றீர்கள்.
“எனக்கு ஒரு கூட்டாளி இருக்காரு, என்ட"பொடிகார்ட்” போல. இந்த ஏரியாவுல அவரு தான் சண்டியன். ரூமுக்க அடை பட்டுக்கிடந்தன். 'j56iu U Loss” இல்ல. வீதிக்கு நானே இறங்கி, பேரம் பேசி, தொழில் தொடர் கிறேன். “பொடி காட்டுக்கு தலைக்கு நூறு மாமூல். ஒரு நாளக்கி 5000/= அல்லது 6000/= வருமானம் வரும். சிலநாளக்கி எதுவுமே கிடைக்காது. இந்த ஹோட்டல்காரங்க, மாதா மாதம் பொலிசுக்கு இலஞ்சம் கொடுக்கிறாங்க. அதுதான் நாங்க நிம்மதியா இருக்கம். எங்கள்ற ஒவ்வொருத்திக்கும் ஒரு ஆம்புள பொடி கார்ட் இருக்கு. அவங்க தான் எங்கட பாதுகாப்பு. இதுல வேதன, அவமானம் என் னென்டா சிலபேரோட புருஷனே. கட்டியவளுக்கு "மாமா” வேல பார்க்குறான்கள்.
திடீரென நாமிருக்கும் அறை தட்டப்படுகிறது. உங்கள்
ஞானம் - மே 2004

சர்வாங்கமும் ஒடுங்கி, வியர்த்துக் கொட்டுகிறது. சேமித்து வைத்து
பாதுகாத்த மானம், மரி யாதை எல்லாம் அம் பலத்தில் கரையப் போ கிறது என்ற பயம் உங்கள்
உயிரில் உறைவதைப் பார்க்கிறேன்.
நான் கதவண்டை
சென்று தாழ்ப்பாள் விலக்கு கிறேன். உங்களுக்கு முகம் தெரியவில்லை. ஒர் ஆணின் கை என்கரங்களுக்குள் எதையோ திணித்து விட்டு மறைகிறது. தாழ்ப் பாளைப் போட்டு விட்டு, வந்தமர்கிறேன். அதற்குள் தெப்பமாகி விட்டீர்கள். யாரெனக் கேட்பதற்கும் உங்கள் நாக்கு எழவில்லை. சுதாகரித்த படி நானே சொல்கிறேன்.
இவன்தான் என்ர பொடி கார்ட் கஷ்ரமர் ரூமுக்கு வந்தா
(கொண்டம்) ஆணுறை வாங்கித்
தருவது இவன் பணிகளில் ஒன்று. நீங்க என்னோட வருவதப் பார்த்திட்டான். அதான் இது. சிரிக்கிறேன். என் சிரிப்பில் உயிருமில்லை. ஒசையுமில்ல.
அந்த ஹோட்டல் முழுக்க சுக்கிலத்தின் துர்மணம் வீசுவ
தான பிரேமை உங்கள் நாசியை
நிறைக்கிறது.
நான் எழுந்து நிற்கிறேன். காய்ந்த திராட்சைப்பழமாய் உலர்ந்திருக்கும் உதடுகளுக்கு சாயம்பூசி மினுக்கம் கொடுக்
கின்றேன். நீங்கள் என்னை
ஞானம் - மே 2004
வாஞ்சையுடன் பார்க்கின்றீர்கள். பவுடரை முகம் முழுக்க அப்பி, தலைசீவிக் கொள்கிறேன். என் மனசிலிருந்த கனத்த பாரம் இறங்கிட்டு. அல்ஹம் துலி ல்லாஹ். என் விழிகள் ஆனந் தத்தில் ஒளிர்கின்றன.
என்மேல் பச்சாதாபம் மேலிட, ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை, நீட்டி, இந்தா வைத்துக் கொள், இந்த நரகத்தி லிருந்து மீண்டு வேறு தொழி லைத் தேடிக் கொள் என்கி றிர்கள். நான் பிகு பண்ணவே, பலாத்காரமாக என் கரங்களுக் குள் நோட்டைத் திணித்து விட்டு வெளியேறிச் சென்றீர்கள்.
உங்கள் முதுகுக்குப் பின் என்குரல் தளதளத்து, உடைந்து சிதறுகிறது.
"இந்த ரூமுக்கு வந்து, என்னத் தொடாம காசு தந்துட்டு போற முதல் ஆம்புள நீங்கதான், நீங்க நல்லா இருக்கணும், மறுபடியும் என்னைத் திரும்பிப் பார்க் கின்றீர்கள். நான் ஓவென்று அழுகின்றேன். ஓங்காரமாகப் பெய்யும் அடைமழையில் என் அழுகையும் கரைகிறது.

Page 7
($1|$i୪୩:୩୬ ଶକ୍ତି
கவிஞர் புதுவை இரத்தினதுரை
சந்திப்பு - நுதல்விழி இமையவன்
(ஈழத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவர் —
கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் நினைவழியாநாட்கள், இரத்த புஷ்பங்கள், ஒரு தோழனின் காதல் கடிதங்கள் வானம் சிவக்கிறது, உலைக்களம் ஆகிய நூல்களுக்குச் சொந்தக்காரர். பல ஆயிரக்கணக்கான எழுச்சிப்பாடல்களின் ஆசிரியர் பக்திப்பாடல்கள் பல படித்தவர் கவிதை சொல்லுகை முறையில் மிகவும் கைதேர்ந்தவர் ஈழத்தமிழர் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்த கவிஞர்
"கஞ்சிக்காய் உழைக்கும் மாந்தர்
கடல்மடி தவழ்ந்து சென்று
குஞ்சிரால் ஒராஒட்டி
கூடைமீன் கொணர்வோர் தேகப்
பஞ்சியென் றெதுவுமின்றிப்
பனைமரப் பதனீர் சேர்ப்போர் சஞ்சலம் துடைக்கப் பாவில் சரித்திரம் எழுதும் தீரர்.
).புதுவை - ܢܠ
கேள்வி :- பொருளாதாரத்தடை, இடம் பெயர்வு, புலம் பெயர்வு, இனப்படுகொலைகள் முதலியன ஈழத்திலே நடைபெற்ற போரின் தாக்கத்தினால் ஏற்பட்டவிளைவுகள். இவைகள் தங்களுடைய கவிதைகளில் எவ்வாறு பதியப்பட்டுள்ளன? பதில் :- இது ஒரு விளக்கமான கேள்வி. இது இப்படியே செய்ய முடியாது. என்னென்று சொன்னால் என்னுடைய கவிதையில் இவை எவ்வளவு தூரம் பதியப்பட்டுள்ளது என்பதற்கு நான் இனித்தரவுகள், ஆவணங்கள் எடுத்துத்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அப்படிப் பதியப்பட்டிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதை வைத்துத்தான் என்னால் சொல்ல முடியுமே ஒழிய, நாங்கள் கவிஞர்கள், இன்ன பொருளைப் பற்றிப் பாடப்போறன் என்று போய்க் குந்துவதில்லை. கவிதை வருவது
10 ஞானம் - மே 2004
 

எனக்குத் தெரியும். கவிதை ஒன்று பிறக்கப் போவதை என்னால் அறிய முடியும். இதை விட்டிட்டு கவிதை ஒன்று எழுதப் போகின்றோம் என்று சொல்லி ஒரு பேனையும் எடுத்து வெள்ளைத் தாளையும் எடுத்து அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு கவிதை எழுதுவதில்லை. ஒரு நாளும் அப்படிக் கவிதை எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. கவிதை வருவது ஒரு கவிஞனுக்குத் தெரியும். அது ஒரு பிரசவம் என்று சொல்லுவார்கள். ஒரு தாய் குழந்தை பிறக்கப் போகின்றதை அறிவது போல் ஒரு கவிதை பிறக்கப் போவதைக் கவிஞன் அறிவான். இது ஒரு நல்ல கவிஞனுக்குத் தெரியும். அவன் சும்மா போய் எழுத வெளிக்கிடுவதில்லை.
சமூகத்தில் தினசரி சந்திப்பதை, பார்ப்பதை, அவனது மனத்தில் கீறல் விழுத்தியதை அவனுடைய நெஞ்சிலே ஏற்படுகின்ற நெருடல்களை அல்லது சந்தோசத்தை எல்லாவற்றையும் சேர்த்துத் தான் எழுதுவான். ஆனபடியால் பொரு ளாதாரத் தடை அப்படி. இப்படி. என்று இல்லாமல் சமூகத்திலே உள்ள ஏதாவது அவனது மனதுக்குக் கீறலை ஏற்படுத் தியதோ அல்லது மகிழ்ச்சிப் பூக்களை அவனது மனதில் எது எறிந்ததோ அவை எல்லாம் பாடு பொருளாகும். நானும் அப்படித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னை விளித்து நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதால் நான் என்னைப் பற்றியதைத்தான் சொல்லமுடியும் என்னுடன் இணைந்த பல கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள். எங்களுடன் இணைந்து நிற்பவர்களை நாங்கள் அறிவோம். அவர்களும் அப்படித்தான்.
சில கவிஞர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அதிகமாகத் தீபாவளிக்குக் கவிதை எழுதுவார்கள். பிறகு தைப்
ஞானம் - மே 2004
பொங்கலுக்கு எழுதுவார்கள். பிறகு ஆடிப் பிறப்புக்கொண்டு எழுதுவார்கள். பிறகு மேதினத்திற்கு ஒன்று எழுது வார்கள். பிறகு போய்ப்படுத்து விடுவார்கள். அப்படிக் கவிதை எழுதுவது இல்லை. இல்லாவிட்டால் பொருளாதாரத் தடைக்கென்று ஒரு கவிதை எழுதப் போறன் என்று சொல்லியும் யாரும் போய் உட்காருவதில்லை. அவர்களது மனத்திலே அது ஒரு கீறலை ஏற்படுத்தும். ஏதோ ஒரு சம்பவம் கீறலை ஏற்படுத்தும் அல்லது சந்தோசத்தை ஏற்படுத்தும் அல்லது வேறு வகையான உணர்வை ஏற்படுத்தும். அந்த உணர்வின் நேரம் இனிப் பொறுக்க முடியாது என்றபோது கவிதை வரும். இதுதான் உண்மையான விசயம். அதற்கு இன்னபாடுபொருள் என்று இல்லை. அவனது மனதில் அதுபடும், தெரியும். கவிதை பிறப்பது, வருவது தெரியும். அதற்கு இதுதான் பாடுபொருள் என்று இல்லை. ஆனால் அப்படித் தொடர்ந்து சமூகத்துடன் ஒன்றி வரும் கவிஞனுடன் அந்தச் சமூகமும் இணைந்து ஒன்றி வரும். இந்தச் சமூகத்தில் பிரச்சி னைகள் வரும். பாதைத் தடை வரும். மருத்துவத் தடைவரும். வெற்றியின் சந்தோசம் வரும். தோல்விகளின் சோகம் வரும். இழப்புக்களின் துயரம் வரும். எல்லாம் சேர்ந்து வரும். ஏன் என்றால் அவன் அந்தச் சமூகத்தோடு, தானே வாழ்கிறான். அந்தச் சமூகத்தினுடைய சகல அம்சங்களும் அவனைப் பாதிக்கும். இன்னதுதான் பாடுவது என்று ஒன்றும் இல்லை. அவனைப் பாதிப்பதெல்லாம் கவிதையாக வரும். சிலவேளை ஒரு வருஷத்திற்கும் கவிதை எழுதாமல் இருக்கலாம். சிலநேரம் அடுத்த நாளே கவிதை எழுத வேண்டிய அந்தப் பிரசவம் தெரிந்தால் அடுத்தநாளே கவிதை

Page 8
எழுதலாம். ஏன்? ஒரு கவிதை எழுதி முடித்து ஒரு மணித்தியாலத் திற்குள் மற்றக் கவிதை எழுதவேண்டி இருக்கும். அதற்குக் காலம் இல்லை. அந்தச் சமூகத்துடன் ஒன்றி இணைபவனுக்குச்
கவிஞர்கள் பாருங்கள் அதிகமாகத் தீபாவளிக்குக் கவிதை எழுதுவார்கள். பொங்கலுக்கு எழுதுவார்கள். பிறகு ஆடிப் பிறப்புக் கொண்டு எழுதுவார்கள். பிறகு மேதினத்திற்கு ஒன்று எழுது வார்கள். பிறகு போய்ப் படுத்து விடுவார்கள்.
பிறகு தைப்
சமூகத்தின் சகலதுமே பல்லும் சில்லுமாகச் சேர்ந்து சுத்தும். அந்தப் பொருள்கள் யாவும், அவனைப் பாதிக்கும் பொருள்கள் யாவும் கவிதை' ஆகும்.
கேள்வி :- “போராட்டச் சூழ் நிலையைத் திறம்படப் படைப் பதற்கு களக்கவிஞராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆளுமையும் ஆற்ற லும் உள்ள எந்தவொரு வெளிக் கவிஞராலும் அத்தகைய ஒரு போர்ச் சூழலைத் திறம்படப் படைக்க முடியும்’ என்று சிலர் கூறுகிறார்களே. அது பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில் :- நல்ல கேள்வி, ஒருவர் கொழும்பில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குக் கள அனுபவம் தேவையில்லை. அவருக்கு ஏ9 பாதை யைப் பற்றித் தெரியாது. அவரை ஏ9 பாதை பற்றிக் கவிதை ஒன்று எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். முல்லைத் தீவினுடைய ஓயாத அலை ஒன்று சமரைப் பற்றி அந்தக் களம் தெரியாத ஒருவரை ஒரு அற்புதமான காவியத்தை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனை யிறவைக் கண்ணால் காணாத ஒருவரைக் கொண்டு நீங்கள், ஆனையிறவு வெற்றியைப் பற்றியோ, அல்லது
12
ஆனையிறவு மீண்ட மகிழ்ச்சியைப் பற்றியோ அல்லது ஆனையிறவிலே விழுந்த மாவீரர்களின் துயரம் பற்றியோ ஒரு காவியத்தை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். அது என்ன களம் தெரியாமலும் கவிதை எழுதலாம் என்று இது முகம் தெரியாத பெண்ணுடன் பிள்ளைப் பெறலாம் என்பதற்குச் சரியாக இருக்கிறது. முன்பின் தெரியாத பெண்ணின் போட்டோவைக் குடுத்திட்டு இதுதான் அந்தப் பெண் இவளுடன் குடும்பம் நடத்து என்ற மாதிரி இருக்கு.
கவிஞன் தெரியாத எதையுமே பாடமுடியாது. அதாவது நான் மெரீனா பீச்சைப் பற்றி எழுத முடியுமா? அல்லது நயாகரா நீர் வீழ்ச்சியைப் பற்றி எழுத முடியுமா? நான் அல்ஸ்பரியை எழுத முடியுமா? அல்லது ஒரு சகாரா பாலை வனத்தைப் பற்றி எழுத முடியுமா? தெரியாத ஒரு பொருளைப் பற்றி எப்படிப் பாடமுடியும்? இது ஒரு ஆகலும் கெட்டித் தனமான வேலை.
பத்திரிகைகளில் வருகின்ற செய் திகள்,கட்டுரைகளைப்பாத்திட்டு கொஞ்சப் பேர் இப்ப கவிதை எழுத வெளிக்கிட்டு இருக்கினம். அவை சொல்லுகிற விளையாட்டு இது. பத்திரிகைகளில் எழுதப்படுகின்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்து இப்படித்தான் இருக்கும் என்று எழுதுகிறது.
ஞானம் - மே 2004
 
 
 
 

இதற்கு ஒரு சின்ன உதாரணம். வெளிநாட்டில் தயாரித்து எங்களுக்கு ஒரு பாடல் வந்தது. அப்ப அதில் வந்தது 'உதயதாரகை” என்ற சொல் நிறுவனம் பற்றியதாக இருந்தது. அதாவது செஞ் சோலை என்று சொல்லி நாங்கள் ஒரு அமைப்பு வைத்திருக்கின்றோம். தாய் தகப்பன் அற்ற பெண்பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக அந்தக் காப்பகம் வைத் திருக்கின்றோம். அதுபோல காந்தரூபன் அறிவுச் சோலை என்றும் ஒன்று வைத்திருக்கின்றோம். இவற்றிற்குப் பாடல்கள் வந்திருக்கின்றன. அப்ப . வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்து போன கவிஞன் எங்களுக்கு அங்கிருந்து ஒரு பாட்டெழுதி அடித்து வந்தது. நாங்கள் அதைக் கேட்டோம். அதில் உதய தாரகையில் நீங்கள் பிள்ளைகளை வளர்க்கிறீர்கள் என்று சொல்லி எழுதப் பட்டிருந்தது. எங்களுக்கு ஒரு ஆச்சரி யமாகப் போய்விட்டது. அப்படி ஒரு சாமான் இங்கு இல்லையே. செஞ்
கின்றார். அவர் நினைத்தார் இதுவும் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச் சோலை என்று சொல்லிப் போட்டு உதய தாரகையில் பிள்ளைகளை வளர்க்கிறார் என்று எழுதியிருக்கின்றார்.
உண்மையில், களம் தெரியாமல் எழுதினால் இந்த விபத்துத்தான் வரும், ஏற்படும். இதை வைத்துக் கொண்டு பத்திரிகைச் செய்திகளையும் பத்திரிகை அறிக்கைகளையும் வைத்துக் கொண்டு கவிதை எழுதக்கூடாது என்று நான் சொல்லவில்லை. களத்தைத் தெரியாமல் களத்தைப் பாடக்கூடாது. அங்குதான் பிரச்சினை இருக்கிறது. ஏனப்பா களத்தை எழுதிறியள். உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்கோவன். அற் புதமான இலக்கியமாக எழுதலாம். ஆனால் பிழைக்கக் கூடாது. களம் தெரியாமல் எப்படிக் களத்தைப் பாட முடியும்? பாடமுடியாதே.
எப்படி நான் காஸ்மீரைப் பற்றிய கவிதை எழுதமுடியும்? பாரதி, ‘சிந்து நதியின் மிசையினிலே சேர
சமூகத்துடன் ஒன்றி இணைபவனுக்குச் சமூகத்தின் சகலதுமே பல்லும் சில்லுமாகச் T
அந்தப் பொருள்கள் யாவும், அவனைப் பாதிக்கும் பொருள்கள்
சேர்ந்து சுத்தும்,
யாவும் கவிதை ஆகும்.
சோலை இருக்கிறது. காந்தரூபன் அறிவுச் சோலை இருக்கிறது. உதய தாரகை என்று இங்கே எங்கு இருக்கின்றது என்று ஆராய்ந்து கொண்டு போனால் அது ஒரு அப்பளக் கொம்பனி. அவை பாட்டும் எழுதி, இசையும் அமைத்து, பாட்டும் அடிச்சு அனுப்பிவிட்டினம். அவர் உதயதாரகை என்பதைப் பேப்பரில் பார்த்து இருக்
ஞானம் - மே 2004
நாட்டிளம் பெண்களுடன் ’ என்று சொல்லி சேர நாட்டு அந்த அழகிய பெண்களையும் தெரியாமல், சிந்துநதியும் தெரியாமல், கங்கையும் தெரியாமலா கவிதை எழுதியிருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன் நல்லா எல்லாவற்றையும் தெரிந்துதான் எழுதி யிருப்பான். தெலுங்கு மொழி அழகான இசைக்கேற்ற மொழி மலையாளப் பெண்கள் மிக அழகான, நிலவிலும் படகோட்டக் கூடியவர்களான பெண்கள். இதை எல்லாவற்றையும் அறிந்து கொண்டுதான் பாரதி இந்தப் பாட்டை எழுதியிருப்பான்.
13

Page 9
உடனே இவைக்கு விட்டிருந்தா இவை பெண்ணையும் பாத்திருக்க மாட்டினம். சிந்து நதியையும் பாத்திருக்க மாட்டினம். தெலுங்கு மொழியும் அறிந்திருக்க மாட்டினம். கேள்விச் செவியனாக ஊரைக் கெடுத்திருப் பார்கள். தெரியாத களத்தை யாரும்பாட முடியாதையா. எப்பவும் பாடமுடியாதையா. அது எந்தப் பொருளாக இருந்தாலும் சரிதான் எப்படிப் பாட முடியும்.
இப்ப என்னென்று சொன்னால் இது ஒரு மலட்டு 'நேஸ்' செய்கின்ற வேலை. இந்த மலட்டு நேஸ்மார் இருக்கினம். பிள்ளை பெறுவது எப்படி என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏன் என்றால் அவர்களுடைய தொழிலோடு சம்பந்தப்பட்டது. ஆனால் அவர்கள் பிள்ளை பெறுவார்களோ? பெற மாட்டினம். இது போலத்தான் இவர் களுடைய வேலையும்.
இப்ப நாங்கள் சொல்வது என்ன
வெனில், உண்மையான பிரசவம், உண்மையான பிரசவிக்கக் கூடிய தாயால்தான் பிரசவிக்க முடியும்.
அப்படித்தான் உலக மகா கவிகள் உலக இலக்கியங்களை உருவாக்கியிருக் கின்றனர். இவர்களுக்குத்தானே சீன, ரஷ்ய இலக்கியங்களைப்
களம்தான் எழுத வேண்டும் என்று இல்லையே. ஐயோ! அதைவிட எழுது வதற்குத் தானே நிறை உண்டு. ஆனால், போர்க்களத்தை எழுதுவதற்குக் கட்டாயம் போர் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் எழுத முடியாது. ஒரு போராளியினுடைய உரு மறைப்பினுடைய ஒரு உலாவல் தெரியாமல் எப்படி ஒரு உறங்காத கண்மணிகளைப் பற்றிப் பாடமுடியும்? கரும்புலிகளை ஒரு நாளாவது கண்ணாற் காணாதவர்கள் எப்படிக் கரும்புலியைப் பற்றி எழுத முடியும்? ஒரு வேவுப் புலியைப் பற்றித் தெரியாமல் வேவுப் புலி பற்றி எப்படி எழுத முடியும்? நான் புலிகளை மட்டும் சொல்லவில்லை. அல்லது எந்தவொரு போராட்டமாயினும் போராடுபவர்களுக்கு வாழ்த்துப்பாடலாம் அல்லது வசை பாடலாம். இரண்டும் செய்யலாம். அதாவது களத்தைத் தெரியாமலே இந்தப் போராட்டத்திற்கு வாழ்த்துப் பாடு பவர்களும் உண்டு. களத்தைத் தெரியாமலே வசைபாடுபவர்களும் உண்டு. இது இரண்டும் செய்யலாம். ஆனால் களத்தைப் பாடமுடியாது. அது பாடுவது கஸ்ரம். அது பாடமுடியாதது மட்டுமல்ல பாடக்கூடாது. அது தப்பு, ஏன்
பற்றி அதிகமாகத் தெரியும். உலகமெங்கும் போராட்ட இ லக் கி யங் க  ைள இவர்கள்தானே அதிகம் பறை சாற்றுபவர்கள். இவர்களுக்கு விளங்காதா களம் தெரியாமல் கவிதை எழுதக் கூடாதென்று சொல்லி. அல்லது எழுத முடியாது என்று தெரியாதா? ܢ
14
வென்னி இலக்கியம்' என்று ஒரு புறம்பான
இலக்கியப் -- விமர்சகர்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.
அதுவும் புத்தி பூர்வமாகத்தான் செயற். படுத்தி இருக்கிறார்கள். கொண்டு வந்து சேர்க்கத் தயாராக இல்லை. ஈழத்து இலக்கியத்திலே அது வன்னி இலக்கியம். வன்னி இலக்கியம் என்றால் அது விடுதலைப் புலிகள் இலக்கியம். அது: கெட்டித்தனமான ஒரு பகுப்பொன்று.
பகுப்பையே இவர்கள்,
தங்களுடன்
لري
ஞானம் - மே 2004

என்றால் ஒருவர் போராட்டத்தைப் பற்றி, களத்தைப் பற்றி பிழை, சரியா ஏதாவது கவிதையை எழுதிப் போட்டால் பத்து, இருபது, இருபத்தைந்து வருடத்திற்குப் பிறகு மச்சான் இவரும் போருக்கு நின்றிருக்கிறார் என்று வாசிப்பவன் நினைப்பான்.
போராட்டக் களத்தைத் தெரியாமல் ஆனையிறவைப் பற்றி நானும் நின்றேன். என்றோ அல்லது அதில போனேன் என்றோ ஒருவர் பத்திரிகைச் செய்தியைப் பார்த்து எழுதிப் போட்டால், புத்தி பூர்வமாக பத்திரிகைச் செய்தியைப் பார்த்து ஒருவர் எழுதிப் போட்டால் ஐம்பது வருடத்திற்குப் பிறகு அவருடைய பேரப்பிள்ளையஸ் சொல்லும் என்ரை அப்பப்பாதான் ஆனையிறவுப் போருக்கு ஒரு பக்கத் திற்குப்படைநகர்த்திக் கொண்டு போனவர் என்று. அது ஒரு வரலாற்றுத் துரோகமாயும் இருக்குமல்லவா?
ஆனபடியால் அப்படி எழுதுவதைப் பிழையாகத்தான் என்னால் கருதமுடியும்.
கேள்வி - களக்கவிஞர் என்ற வகையில் நீங்கள் கவிதை எழுதும் போது ஏற்பட்ட அனுபவப்
பதிவுகள் பற்றிக் கூறுங்கள்?
பதில் :- நானும் ஒரு களக் கவிஞன்தான். களத்திலும் நின்றிருக்கிறேன்தான். ஆனால் நான் பீத்தக் கூடாது. நானும் படை நகர்த்திக் கொண்டு போனனான் அல்லது படைகளுடன் நானும் சென்றனான் என்று பீத்திக் கொள்வ தெல்லாம் பொய்த்தன்மை. ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆகின்றன. நான் இந்தப் போராட்டத்தில் இணைந்து பல போராட்டங்களுடைய ஆரம்ப வேலைகள் அல்லது அதன் பின் தளவேலைகள் எல்லாத்திலும் நின்றிருக்கின்றேன்.
ஞானம் - மே 2004
போருக்குப் போகும்போது போராளிகளை உற்சாகப் படுத்துகின்ற நிலையிலும்
நின்றிருக்கின்றேன். இன்னும் அவர்களுக்கு மிக நெருக்கமாக நின்றிருக்கின்றேன். பலவேலைகள்
செய்திருக்கிறேனே தவிர, நான் படை நகர்த்திக் கொண்டு போனனான் மற்றது படையணிகளில் ஒருவராக நின் றிருக்கின்றேன் என்பதெல்லாம் பொய்த் தன்மையானது.
ஆனால், எனக்குக் களம் தெரியும், அந்த உணர்வு தெரியும், போராட்டக் களத்தை நான் கண்ணாற் பார்த் திருக்கின்றேன். அவர்களுடன் நான் நின்றிருக்கின்றேன். ஆனால் அதுவும் பாதுகாப்பான இடத்தில்தான் அதைநான் ஒத்துக் கொள்கின்றேன். இந்தப் போராட்டக் களத்தின் அனுபவம் என்பது மிகவும் மிகவும் அற்புதமானது. அல்லது மனதிற்குக் கொடுமையானது. ஒன்று நாங்கள் அந்தப் போராட்ட களத் துக்குள்ளே போராளிகள் நுழையும்போது நாங்கள் அவர்களுடன் சிரித்துக் கதைத்துப் போட்டு ‘போய்வா மச்சான்’ என்று சொல்லிவிடும்போது வென்று வரப் போகிறார்கள் என்ற சந்தோசம் இருக்கிறது. இவர்களில் சிலபேர்தான் திரும்பி வருவார்கள் என்ற சோகம் இருக்கிறது.
நிலவன் என்ற ஒரு கரும்புலி இருந்தார். அவர் இப்பொழுது வீரச்சாவு அடைந்துவிட்டார். இவர் தனது கைப்பையை ஒருவரிடம் ஒப்படைத்தார். நான் இறந்த பின்னர் இதைப் புதுவை அண்ணனிடம் கொடுக்கவும் என்று கூறிவிட்டு அவர் ஆனையிறவுச் சமரிலே கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார். அதற்குப் பிறகு அந்தக்
கைப்பை எனக்கு வந்தது. அதற்குள்
5

Page 10
ஆயிரம் ஆயிரம் உணர்வுகளை சந்தோசத்தில் நானும் இணைந்து, வெளிப்படுத்தக்கூடிய அரிய பொக் சந்தோசப்பட்டு, அவர்களுடைய கிசங்கள் எல்லாம் கவிதைகளாக இழப்பிலே நானும் என்னைக் கரைத்து. இருந்தன. பாடல்களாக இருந்தன. நான் புதுவை இரத்தினதுரை எப்பவும் மானுடம் அவருடன் நெருக்கமாகப் வதைபடும் இடத்திலே நின்று அதற்கு பழகியிருக்கின்றேன். | எதிராகக் குரல் கொடுத்தவன் என்பதை கவிதைகள் மிக
அற்புதமாக இருந்தன. நாலுவரித் துணுக்கும் போதும் இந்த உயரியல் இலக்கியம் என்று சொன்ன வர்களை யெல்லாம் ஊதித் தள்ளுவதற்கு அதுபோல் நிறைய.
நான் நினைக்கிறேன். எனக்குக் கரும்புலிகளுடன் நிறைய நெருக்க முண்டு. அதனால்தான் கரும்புலிகளைப் பற்றி மிக அதிகமாக நான் எழுதி யிருக்கிறேன். அவர்களைப் பற்றிய அதிகமான பாடல்களை நான்தான் எழுதியிருக்கிறேன். கரும்புலிகள் பாகம் ஒன்று, பாகம் இரண்டு பாடல்கள் நான்தான் எழுதினேன். ஏன் என்று சொன்னால் கரும்புலிகளுடன் மிக நெருக்கமான உறவு எனக்குண்டு.
அதுபோல் நான் இந்தப் போராட்ட களத்திற்கு வரும்போது வீரச்சாவை எய்திய போராளிகளின் தொகை ஆகத் தொண்ணுாற்றியேழு. இன்று வீரச் சாவை அடைந்தவர்களின் தொகை ஏறக்குறைய பதிணெண்ணாயிரம். இந்தக் காலப்பகுதியில் நான் எவ்வளவு தூரம் அவர்களுடன் பழகியிருப்பேன். நான் அவர்களுடன் பழகாமல் எங்கயோ ஒரு உப்பரிகையில் ஏறியா உட்கார்ந்து இருக்கிறோம்? இல்லை. நாங்கள் நல்லாப் பழகியிருக்கிறோம். எத்தனை பேரோடு. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் . அனுபவம் என்று வெளிக்கிட்டால் அவர்களுடைய
சொல்ல
16
யாரும் மறுக்க முடியாது.
அது சொல்ல முடியாத அனுபவம். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நாங்கள் .
ஆனையிறவு வெற்றியை வெற்றி பெறுவதற்கு முன்னமே வெற்றி பெற்றதாக எழுதியவன் நான். எனக்கு நல்ல நம்பிக்கை. அந்தக் களத்திலே நாங்களும் நின்றபடியால், பார்த்தபடியால் ஆனையிறவின் மேனிதடவிப் போனது போனது பூங்காற்று என்று எழுதினேன். அப்பொழுது ஆனையிறவு வெற்றி பெறவேயில்லை. ஆனால் எனக்குத் தெரியும் வெற்றி பெறும் என்று சொல்லி. அப்போது இந்தப் பாடலை “றெக்கோடிங்' செய்து கொண்டு இருக்கேக்கை ஒரு போராளி கேட்டார் என்ன துணிவிலை அண்ணை அடிக் கிறியள்?’ என்று, நான் சொன்னேன் நிச்சயமாக அது வெற்றி கொள்ளப்படும். அந்தப் பாட்டுச் செய்து ஒரு மணித் தியாலத்தில் அது வெற்றி பெற்றதாக எங்களுக்குத் தகவல் வந்தது. ஆனையிறவு வெற்றி பெற்ற செய்தியே இந்தப் பாடலூடாகத்தான் வெளியே
போகின்றது.
என்னென்று சொன்னால் வெற்றி நிச்சயம் என்பது எங்களுக்கும்
தெரியும்தானே. களநிலைமைகள் எங்க ளுக்கும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்ததுதானே. அப்ப. இப்படி ,
ஞானம் - மே 2004
 
 

நிறையச் சம்பவங்களை நாங்கள் சொல்லலாம். ஒன்று இரண்டு அல்ல. நிறையச் சம்பவம். இந்தப் போருக்குள் வாழ்ந்து அதுவும் இந்த ஆறு வருடம் அரை அஞ்ஞாதவாசம் வன்னியில் இருந்தனாங்கள். அந்த அரை அஞ் ஞாதவாசத்திலே அந்த வன்னி மக்களுடைய அந்தப் போர்ப் பங்களிப்பு, அவர்கள் தாங்களே போராளிகளாக நின்ற விதம், இந்தப் போரைத் தங்களுடையதாக, தங்களுடைய தோள்களிலே அவர்கள் சுமந்தவிதம். "ஒன் த ரொப் மெடிசின் ஒன்லி த பனடோல் அதற்குள்ளே சாவுக்கு உயிர்களைக் கொடுத்தும், அதற்கும் தளராமல் நிமிர்ந்தும் நின்றோம்.
இன்றைக்கு யாரும் விடுதலைப் புலிகளைப் பேசிவிட்டுப் போகலாம். யாரும் . எங்களுக்கு அப்பவே தெரியும் என்று சொல்வதற்குக் கண்பேர் இருக் கிறார்கள். ஆனால் அன்று எங்களுடைய குரல் வளைகள் எல்லாம், யாவும் நெரிக்கப்பட்டு ஒரு குறிக்கப்பட்ட காட்டுக்குள்ளே மட்டும் நாங்கள் சிறைப்பட்டு இருந்தபோது யாரும் பேசவில்லை. ஆனால் இந்தக் கவிதைகள்
பேசின. இந்தப் பாடல்கள் பேசின. எங்களுடன் நின்ற கவிஞர்களும், படைப்பாளிகளும் எல்லோருமே
எழுதினார்கள். ஆனபடியால்தான் இன்று 'வன்னி இலக்கியம் என்று ஒரு புறம்பான இலக்கியப் பகுப்பையே இவர்கள், விமர்சகர்கள் ஏற்படுத்தி விட்டார்கள். அதுவும் புத்தி பூர்வமாகத்தான் செயற் படுத்தி இருக்கிறார்கள். தங்களுடன் கொண்டு வந்து சேர்க்கத் தயாராக இல்லை. ஈழத்து இலக்கியத்திலே அது வன்னி இலக்கியம். வன்னி இலக்கியம்
ஞானம் - மே 2004
என்றால் அது விடுதலைப் புலிகள் இலக்கியம். அது கெட்டித்தனமான ஒரு பகுப்பொன்று. நான் தப்பிச்சுக் கொள் ளலாம்தானே? கேட்டால் சொல்லுவார்கள் இங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று. இது உங்களது கேள்விக்கு அப்பாற் பட்டதாயிருக்கும். ஏன்? உங்களுடைய படைப்பு எல்லாம் நாங்கள் தேடித்தேடி வன்னிக்கு எடுத்தமே? உங்களுடைய உயரியல் இலக்கியம், உன்னத இலக்கியம் என்று நீங்கள் சொல்லுகின்ற எல்லாவற்றையும் விற்றுத் தாருங்கோ என்று வன்னிக்கு அனுப்பினீர்கள் தானே? எங்களிடம் இருந்து ஒரு பிரதி நீங்கள் வாங்கியிருக்கலாம்தானே? நாங்கள் புத்தகக் கடை ஒன்று திறந்தம். எல்லோரும் அங்கு அனுப்புகிறார்கள். எல்லாம் வாங்குங்கள். அற்புதம் அற்புதம் என்று எங்களுக்கு அனுப்பி வைப்பீர்கள். நீங்கள் எல்லாரும் உடையாரும் முதலாளிமாரும். நாங்கள் எல்லாம் கீழ இருக்கிற அந்த ஆண்டையர். உங்க ளுடைய இலக்கியம் எல்லாவற்றையும் நாங்கள் தேடித்தேடி வாசித்தனாங் கள்தானே? அனுப்பினிங்கள் தானே? அனுப்பேக்க ஒன்று கேட்டிருக்கலாம் தானே உங்களுடைய படைப்பிலேயும் ஒன்று தாருங்கோ என்று. ஆ. ஆ. ஐயோ அங்கு வைத்திருக்கக் கூடாது. ஆமி பிடிச்சுப்போடுவான். அதைச் சொல்லிவிட்டு இப்ப வந்து நிண்டு வன்னி இலக்கியம் எங்கே? ஏ9 பாதை எங்கே? இதோ ஆனையிறவு? இதையோ அடிச்சனியள்? இதோ முல்லைத்தீவு இதையோ அடிச்சனியள்? இதோ ஒட்டிசுட்டான்? போராட்ட இலக்கியம் எழுதப் போறீங்களோ நீங்கள்?
(தொடரும் .)
17

Page 11
பழுது வண்டிப் பயணத்தில்
சோலைக்கிளி இந்த நெடும்பாதை ஒடி தூர இரு கிளையாக வெடித்துப் பிரிகிறது எதிர் எதிராய் ஒன்று ஒர் ஊர் போக மற்றையது மற்றோர் உளர்
போகத்தான் வேண்டும் கிளை வெடித்தால்தான் காய் காய்க்கும் ஒரு தெருவை வைத்து அனைத்து ஊரின் முகங்களையும் தரிசிக்க முடியாது இந்தச் சந்தியிலே வந்து நின்றேன்.
ஒரு பாதை முகம் கறுப்பு ஒரு பாதை முகம் சிகப்பு
ஒரு பாதை ஒரத்தில் செடி கொடிகள் ஒரு பாதை ஒரத்தில் எதுவுடயில்லை.
ஆக இரு பாதைகளும் இந்தப் பெரும் பாதை வாய்க் குருத்து நீ போல
நான்போல
நாம் எல்லோரைப் போலவும் பிரிந்து பொடியாகி இந்தப் பேரூந்து போகாத சிறு
வழிகள் என்று பெயரெடுத்து
எனக்கெதையோ விளக்கியன நான் காய் ஆய விரும்பவில்லை உடன் திரும்பிப் போக வேண்டும் வந்த வண்டி பழுது தள்ளுவோமா?
18 ஞானம் மே 2004
 

ஈழுத்துப் புதுக்கவிகுைத் துறையின் புதிய பிரதேசம்
அஸ்வகோஸின்
வனத்தின் அழுைப்பு குறித்து.
- தேவகாந்தன் -
கிடந்த நூற்றாண்டின் தொண்ணுாறுகள் ஈழக்கவிதை வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இரண்டாயிரத்துக்கும் மேலான ஆண்டுகளின் பழைமை சார்ந்த இலக்கண இலக்கிய மரபுடைய ஒரு தொல்மொழியில் கவிதை அதன் உச்சத்தை இக்காலகட்டத்தில் அடைந்ததாய்க் கொள்ளமுடியும். உலகத் தரமுடைய பல கவிதைகள் மொழியப்பட்டன. அகம்-புறம் சார்ந்த தொல்மரபு நம்மிடையே இருந்தது. ஆனாலும் இப் புதிய புறம் புதிய பிரதேசங்களைத் தொட்டது. தொண்ணுாறுகளுக்கு முன்னரே ஸ்தாபிதமாகியிருந்த கவிஞர்களான சேரன், வ. ஐ. ச ஜெயபாலன், சு. வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம் போன்றோரைத் தவிர்த்துப் பார்த்தால், இக்காலப்பகுதியானது சோலைக்கிளி, கி. பி. அரவிந்தன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஆழியாள், புதுவை இரத்தினதுரை, பா. அகிலன், ஒளவை போன்ற சிலரையே ஞாபகம் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்தக் கவனிப்பு முக்கியமானதுதான். எனினும், வரலாறு மறந்த சில பிரதிகள் இப்போது கண்டெடுக்கப்படுவதை வைத்து நோக்குகையில், அந்த ஞாபகத்தின் குறைபாட்டையும் புரிய முடிகிறது. அந்த வகையில் விடுபட்டுப்போன ஒரு பெயர் அஸ்வகோஸ்; அவரது கவிதை நூல் “வனத்தின் அழைப்பு. அதுவே இப்போது இங்கே விசாரணையாகிறது.
பிரதி குறித்து ஒர் அகல்விரிவான பார்வையின் முன், கவிதை பற்றிய சில வரையறுப்புகள் மீது சிறிது கண்ணோடிச் செல்வது நல்லதெனத் தோன்றுகிறது. கவிதை பற்றிப் பெரும்பாலும் எல்லாரது விவரிப்பும் ஒரே மாதிரியானதாகவே இருந்தாலும், கவிதைத் தேர்வில் பொதுவாக ஒத்த முடிவு அடையப்படுவதில்லையென்பது நிதர்சன உண்மையே. அதனால் இப்பிரதியின் தாரதம்மியத்தை அலசுமுன் என் அளவுகோல்களை நான் வாசகனுக்குக் காட்டியே ஆகவேண்டும்.
கவிதையின் படைப்புநுட்பங்களைச் சிறுகதைப் படைப்பாக்கத்தோடு ஒரளவு பக்கம் பக்கம் வைத்து விளங்கப்படுத்தலாம்போல் தோன்றுகிறது. சிறுகதையானது எழுதி முடிக்கப்பட்டதும் அதை மேலும் மேலும் செப்பனிட்டு பூரணத்தை, உன்னதத்தை நோக்கி நகர்த்திச் செல்லவேண்டுமென்பது ஒர் எழுதாத விதி. படைப்பு என்பது கருவிற்
ஞானம் - மே 2004 19

Page 12
திருவுடையார்க்கே ஆகுமென்பதும், அது ஒரு தேவகடாட்சத்தின் விளைவு என்பதும், மாய தரிசனங்களில் பிறப்பெடுப்ப தென்பதும் அமைப்பியலின் வருகையோடு உடைபட்டுப்போன கருத்துக்கள். படைப்பு ஒருவரின் முயற்சியினதும் பயிற்சியினதும் என்றே இப்போது நம்பப்படுகிறது. அதாவது படைப்பு இவ்வுலகத்துக்கான, இவ்வுலகம் பற்றியதான மனித சிருஷ்டி என்பது பெறப்பட்டாயிற்று. எனவே பூரணமோ, உன்னதமோ பயிற்சியாலும் முயற்சியாலும் ஆகும் அடைதல்களே படைப்பு என்று துணிந்து சொல்லலாம். ஒரு சிற்பத்தில் எவ்வாறு எந்தவொரு உறுப்பின் அளவும் அதன் முழு உருவத் துக்குத்தகவாய் அமைந்திருக்குமோ, அதுபோல சிறுகதையின் அம்சங்கள் அமைந்திருக்க வேண்டுமென்பது ஒரு சரியான விளக்கமே. சிற்பத்தில் எந்தவொரு கல் முகையும் உளியின் பொழிவில் சிதைந்தழிகிறது. சிறுகதையும் அவ்வாறு முழுமை பெறவேண்டும். கவிதையும் இந்த நிலைமைக்கு விதி விலக்கில்லை. ஆனால் கவிதையில் செப்பனிடுதல் என்பது மீண்டும் மீண்டுமாய்த் தொடர்ந்துவிடக் கூடாது. அது கவிதைத்தன்மையையே கொன்று விடும். இந்த எச்சரிக்கையோடு கரும மாற்றும் பொழுது தக்கசொல் தக்க விடத்தில் அமைந்து, உணர்வுக்கு வேண்டாத விவரங்களும் விவரணங்களும் நீக்கப்பட்டுச் சிறந்த கவிதை பிறக்கிறது.
கவிதையை ஆக்குவன இரண்டு விஷயங்களெனக் கவிதை விமர்சகர்கள் கூறுவர். ஒன்று, அதன் சொல்லாட்சி. அடுத்தது, அதன் அமைப்பு. அமைப்பு என்பதை இங்கே கவிதையின் வடிவ
20
மென்று கொள்ளலாம். புதுக் கவிதை ஒவ்வொன்றும் தன்தன் வடிவத்தைத் தான்தானுமேதான் தீர்மானிக்கிறது. கட்புலனுக்குரிய ஒரு வடிவமே புதுக் கவிதையாய் இருக்கிற வகையில், அது தன் (இங்கே வரிகள், வரிகளின் சொல் அளவுகள் என்று கொள்ள வேண்டும்) இசையை தானே உருவாக்குகிறது. வெவ்வேறு நீள அகல வடிவங்களுடைய கொள்கலனில் வார்க்கப்பட்ட நீர்போல் புதுக்கவிதை அமைப்பெடுக்கிறது எனக் கொஞ்சம் தயக்கத்துடனெனினும் சொல்லமுடியும். காற்றசைவால் நீர்ப் பரப்பின் மேல் இயல்பில் எழும் சலனம். அதுபோல் கவிதையில் சலனமெழுகிறது. சலனம்
சொல்கள் வரிகளால்
அதன் உணர்வு. அதுவே கவிதையின் ஜீவன். இச்சலனம் வாசக மனத்தில் அசைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தின் அக்கவிதையைச் சிறந்த கவிதையெனச் சொல்லலாம். இந்த அசைவையும் அதிர் வினையும் கிளர்த்தும் வல்லபத்தின் அளவுக்கே, கவிதையொன்றின் தரம் கணிக்கப்படுகிறது.
கவிதை நன்கமையத் தடையாகும் சில விஷயங்களையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வடிவம், சொல் ஆகிய இவையிரண்டும் கவிஞன் GFTiig, gubeFrie56it. Printer's Devil எனப்படுகிற ஒரு அசுரப் பிறவியும் அல்லது அச்சுப் பிசாசும் உண்டு. அந்த அசுரகணத் தலையீட்டிலும் கவிதை குழம்பும். அதன் பாதிப்பு புனை கதையைவிட புதுக்கவிதையில் அதிகம். எழுத்துக் அச்சடித்த காலத்தில்தான் அத்தவறுகள் நேர்ந்தன என்றில்லை. இன்றைய கணினி
கோர்த்து
ஞானம் - மே 2004

யுகத்திலும் அவை சம்பவிக்கின்றன என்பது பெரிய துர்ப்பாக்கியம். எப்படி யாவது எங்கோ ஒரு எழுத்துப் பிழை ஓடிவந்து விழுந்து விட்டுவிடலாம். ஆனால் வரியின் இறுதியில் வரும்
கவிதையில் விடுவதைத்தான்
சொல்லின் எழுத்துக்களை உடைக்கக் கூடாதென்று, சந்திகளின் ஒற்றெழுத்துக்களை நீக்கி விடுவது அநாயாசமாக நடக்கிறது.
அந்த வரியிலுள்ள
இதனால் சேர்ந்திருக்க வேண்டிய சொற்கள் தனித்தனியாக நின்று அர்த்தம் குறைவுபடும். மேலும், நீளமான ஒரு கவிதை வரியில் சொற்கள் அனைத்தும் அடங்காது என்பதற்காய் அவ்வரியின் இறுதிச் சொல்லையோ, சொற்களையோ கீழ் வரியில் சேர்த்துவிட, அது அல்லது அவை அர்த்தத்தைக் குதறிக் கொண்டும், இசையொழுங்கை விழுங்கிக் கொண்டும் பல்லிழித்தபடி நிற்கிற நிலைமையும் சகஜம். கவிதையின் ஒரே பந்தி, பாரத்தின் (format) பக்க நலன் கருதிப் பல பந்திகளாகும் கொடுமையை அனுபவபூர்வமாகவே பலரும் உணர்ந் திருக்க முடியும். இவ்வாறான பிழைகள் கவிதையை நலிவுபடுத்துகின்றன; சேதப்படுத்துகின்றன; சிலவேளை சிதைவே செய்து விடுகின்றன. கவிதை வாசிப்பு இவற்றைக் கடந்தே செல்ல வேண்டுமென்பது ஒரு அறிவுறுத்துகை. இத்தகைய பிழைகள் இப்பிரதியில் இல்லையென்று திடமாய்ச் சொல்ல முடியாது. ஆயினும் வாசகமனம் இவை கடந்து செல்லவே செய்கிறது. இதன் பெறுபேறே கீழே விமர்சனமாய்.
ஞானம் - மே 2004
'வனத்தின் அழைப்பு 1997இல் நிகரி வெளியீடாக வந்தது. 1987 - 1996 வரை வெளிவந்த அஸ்வகோஸின் இருபத் தொரு கவிதைகளின் தொகுப்பு இது. தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்கள், அவலம், காண்டாவனம், வனத்தின் அழைப்பு ஆகிய நான்கும் நெடுங்கவிதைகளெனச் சொல்லத் தக்கவை. ஒரு வகையில் அஸ்வ கோஸின் முக்கியமான கவிதைகளாக இவற்றைக் கொள்ளல் பொருந்தும். அதேவேளை சிறிய அவரது புதுக்க விதைகளும் புதிய பிரதேசங்களின் பிரவேசம் காரணமாய் புறந்தள்ளப்பட முடியாதவையே. நெடுங்கவிதைகளின் செழுமைக்கான கவிஞனின் பயில் தளமாக அவை திகழ்ந்தன என்பது இன்னொரு பிரதான விடயம். அவற்றை இனி விளக்கமாய்ப் பார்க்கலாம்.
‘எதையும் தீண்டாமல் / இதயம் பரிந்ததிரும் / என் கவலையெல்லாம் / மொழி பெயர் சூட்டி / கொச்சைப் படுத்திவிடும் என்பதுதான்’ என்று தொடங்கும் செவல் என்ற கவிதை, காதலுணர்வின் மிகவுயர்ந்த தன்மை யொன்றை மிகவும் நளினமாய்ப் பேசுவது. இதயத்தை அதிரவைத்தெழுந்த உணர் விற்கு அது காதலென்று பெயர் சூட்டப்படுவதையே விரும்பாது நிற்கிறது. (என் வேதனையை / ஒரு சொல்லாக ஏவுவேன் / மலராகச் செல்லட்டும் / என்பொருட்டு / அவள் துயரப்படுவதை / நான் விரும்பவில்லை என்று காதலின் சோகமும் மென்மையும் பேசப்படுகிற இடம் அருமையானது. அதோ / செவல்
2

Page 13
தெரிகிறது/எனக்குரிய வள்ளமும் நானுமாய்.” என்று அக் கவிதை முடிவுறுகையில் அக் காதலனின்
சோகமும், ஒருவகை விரக்தியும் எவரது இதயத்தையும் கலங்க வைக்கும். உணர்வு ரீதியான பாதிப்பைச் செய்வதின்மூலம் படைப்பின் உயர்ந்த தளத்துக்கு இக்கவிதை சென்றுள்ளதென நிச்சய மாய்ச் சொல்ல முடியும். என் வசந்தம் வராமலே போய்விட்டது' என்பதும் ஏறக்குறைய இம்மாதிரியே காதலைச் சொல்லி சாகாவரம் பெறுகிற கவிதை 'இன்னுமென் உள்ளத்தில்/ நகரத்தின் போலிகள் ஊறவில்லை/ உனை இழந்தவன் ஆயினன்/ என்ற போதும் நேசிப்புக்குரிய என் பெண்ணே/ இன்னமும் நான்/ நேராக நின்று பேசவே விரும்புகிறேன்’(- என் வசந்தம் வராமலே போய்விட்டது) என்பதெல்லாம் தமிழ்க் கவிதைப் பரப்பில் பிரிவும் புணர்வும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் சொன்ன பாரம்பரியத்துள்ளிருந்து அகம் சுட்டியெழுந்த மணியான வரிகள்.
முதலில் ஒன்று சொல்ல வேண்டும்.
தான்.
நிறைந்த வகைமைகள் கொண்ட கவிதைகள் இத் தொகுப்பில் இல்லை. ஈழத்தில் நிகழ்ந்த உள்நாட்டு
யுத்தத்தினதும், வெளிநாட்டு யுத்தத் தினதும் பாதிப்பில் மனம் அடைந்த அவலங்களும், அதிர்வுகளும், வெளி அடைந்த மாற்றமும் வெறுமைகளுமே அதிகமான கவிதைகளினதும் பாடுபொரு ளாகியிருக்கின்றன. குறிப்பாக ‘அந்த நாட்கள் நெருங்கிவிட்டன'சூரியகாந்த, இருள்','காலத்துயர் போன்ற கவிதைகள் இவ்வகையினவே. நட்சத்திரம்', அவலம்', 'காண்டாவன’மெல்லாம் சொல்கிற சேதியும் இவைகளே.
22
கருணையுள்ளோரே கேட்டீரோ/ காகங்கள் கரைகின்றன / சேவல் கூவுகின்றது/ மரங்கள் அசைகின்றன/ மரணங்கள் நிகழ்கின்றன (-இருள்) என்ற வரிகள் வெளிப்படுத்தும் மரணம், எவ்வளவு இயல்பாக, வழமையாக, தினசரி நிகழ்வாக இருக்கிறது என்பது மனத்தை நடுங்கவைக்கிற உக்கிரம் கொண்டது. மேலும், கவிதைகள் போலவும்/ மனிதர்கள் கடந்து போகையில்/ நான் நெகிழ்ந்தேன்’ என்ற மாதிரியெல்லாம் சுலபத்தில் வந்துவிடாது. இவ்வாறு கற்பிதம் செய்ய வெகு ஆற்றல் வேண்டும்.
இனி அஸ்வகோஸின் பொதுவான கவிதைப் போக்குகள் பற்றி.
எந்தவொரு சுமாரான கவிதை யிலும்கூட மேலே காட்டப்பட்டவாறு போல் அதிரவைக்கும் சில எடுத்துக்காட்டுகள் இருக்கவே செய்யும். யுத்தத்தினால் விளைந்த மானிட சோகத்தை மிக நேர்த்தியாக வேறு கவிஞரும் பாடியுள்ளனர் என்பதையும் மறுப்பதற் கில்லை. ஆனால் அஸ்வகோஸின் தனித்த முகம் இவற்றில் எங்கே நிற்கிறது என்பதே பார்க்கப்பட வேண்டியதாகும். அதற்கு முழுப் பிரதியூடாகவும் நாம் பயணம் செய்யவேண்டும். இரண்டு தசாப்த காலங்களாக இந்தத் தேசத்தில் நடைபெறும் யுத்தமானது விளைவித்த அனர்த்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஏற்பட்ட மனிதாயத சேதத்தைக் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. பொருளாதாரம், இயற்கை வளங்களின் அழிவு இதனோடு ஒப்பிடுகையில் ஒரு பொருட்டே இல்லையென்று தயங்காமல் கூறலாம். இந்தக் காலகட்டத்தில் பாசிச
ஞானம் - மே 2004

வகையான கொடுமைகள் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்தப் பயங்கரத்திலிருந்து தப்பிக்கவே தமிழர்கள் ஓடினார்கள். அகப்பட்டவர்கள் அழிந்தார்கள் அல்லது இருப்பு அறியா நிலையடைந்தனர். உறவுகளின் பிரிவு பல வழிகளில், பல முனைகளில் நிகழ்ந்தது. அகதி முகாம்கள் அமைக்கப் பட்டிருந்த இடங்களிலெல்லாம் தமிழரின் சோகம் காட்டாறாய் ஒடிற்று. இந்த மனித அவலம் தமிழ்க் கவிதைப் பரப்புக்குப் புதிது. இத்தகைய வாழ்வழிவுகளைத் தொண்ணுாறுகளின் கவிஞர்கள் அனுபவ பூர்வமாய் உக்கிரத்தோடு கூறினர்.
இதனால் தமிழ் வழங்கும் தேசமெல்லாம்
ஈழத் தமிழ்க் கவிதை மெச்சப்பட்டது. சோலைக்கிளியின் பாம்பு - நரம்பு - மனிதன்', பா. அகிலனின் பதுங்குகுழி நாட்கள், கி. பி. அரவிந்தனின் கனவின் மீதி போன்றவை இதுவரை தமிழ்ப் புலம் கானாப் பொருளைப் பேசின. இவை பேசிய கவிஞர்கள் கவனம் பெற்றனர். ஆயின், இக் காலப் பகுதியில் எழுந்த அஸ்வகோஸின் கவிதைகள் ஏன்
பிறபோல் கண்டு கொள்ளப்படாது
போயின? இவற்றின் தன்மைகள்,
வெளிப்பாட்டு முறைமைகள் பேறுபட்டிருக்
கின்றனவா? அவ்வாறில்லையெனில் வனத்தின் அழைப்பு விதந்துரைக்கப்பட வேண்டிய காரணம் என்ன? இவற்றிற்குப் பதிலை இனி கண்டாக வேண்டும்.
III
இருபதாம் நூற்றாண்டின் பின் அரையில் மூன்றாம் உலக நாடுகளில் இலக்கியப் போக்கு, குறிப்பாக கவிதைத் துறையில், எப்படி இருந்தது? புனை
ஞானம் - மே 2004
கதையளவுக்கு கவிதையில் வீச்சு இங்கெல்லாம் இருந்ததில்லை என்பது ஒரு சரியான பார்வையே. ஆனாலும் பொதுவான இலக்கியப் போக்கின் கணிப்பு அவசியமானது.
அமெரிக்க வல்லரசு தன் கழுகுக் கால்களின் கொடூர நகங்களுக்கிடையில் இந் நாடுகளை இறுக்கிக் கொண்
டிருந்தது நிஜமே எனினும், அது பொருளாதார ரீதியிலானதாகவே இருந்தது. அப்படியானால் இந்
நாடுகளின் மனித அவலம் எப்படி நேர்ந்தது என்ற சுவாரஸ்யமான வினா எழுகிறது. ஆபிரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களிலேயே இந்த மனித அவலம் பாரியவளவு இருந்தது. இக்கண் டங்களில் பல நாடுகளின் ஆட்சியும் சர்வாதிகாரத்தனமானது. எழுச்சிகள் கிளர்ச்சிகளை முளையிலேயே அழித்து விடுதற் பொருட்டு மனித உரிமைகள் முற்றாக அழிக்கப் பெற்றிருந்தன இந் நாடுகளில். உதாரணமாக உகண்டா, கானா, ருவாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் இன மத ரீதியிலான பேரினவாதக் கலவரங்கள், உள்நாட்டு யுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட் டிருக்கின்றன. மாபெரும் மனிதத் தொகை அழிக்கப்பட்டிருக்கிறது. பல ஆபிரிக்க கண்டத்து தொல்லினங்கள் அழிநிலைக்கே தள்ளப்பட்டிருக்கின்றன. கொலம்பியா, ஆர்ஜென்டீனா, சிலி, நிகராகுவா போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும், பாகிஸ்தான், போன்ற ஆசிய நாடுகளிலும், பாலஸ்தீனத்திலும் கொடுரம் இயல்பாகி விட்டிருக்கிறது. மக்கள் வாழ்நிலை அழிப்புக் கலாசாரத்தினால் அச்சப்
ஈரான்
23

Page 14
படுகுழிக்குள் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றின் கொடூரங்களையும், அவலங் களையும் எப்படி ஒரு படைப்பாளி வெளிப்படையாய்ப் பேசிவிட முடியும்? அதனால் இவற்றின் இலக்கியப் போக்குகள் மீமெய் வாதம், படிமவாதம், குறியீட்டு வாதம் போன்ற வகை யினங்களுள் தஞ்சமடைய வேண்டி யதாயிற்று. அர்த்த வெளிப்பாடுகள்
D616), பூரணமாக, மறைக்கப்பட்டன. ஒரு பூடகத்தனத்தை நவீன இலக்கியங்கள் போர்த்திக் கொண்டன. மூன்றாம் உலக நாடுகளில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மனித அழிவு/ பெயர்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது. இதை எழுதிக்
சிலவேளை
கொண்டிருக்கும் கணத்திலேயே எங்கோ ஒரு மூன்றாம் உலக நாட்டில் ஒரு மனித அழிவு/ பெயர்ச்சி நிகழ்வு நடந்து முடிந்திருக்கலாம்.
இந்த மனித அழிவு/ பெயர்ச்சி இன இருப்பின் அடையாளமானதும் ஆதார
மானதுமான மண்ணை வெறுமை யாக்கிற்று; வாழிடத்தைப் பாழிட மாக்கிற்று; இயற்கை வளத்தையும்
பசுமையையும் அழித்தது. மூன்றாம் உலக நாடுகளின் கவிஞர்கள் இதையே பிரதானமாகப் பாடினர். WOLESOYINKA என்கிற நோபல் பரிசு பெற்ற நைஜீரியக் கவிஞன், ஆபிரிக்காவின் தன் இனக்குழு மொழியிலேயே எழுதி சர்வதேச புகழீட்டிய ANTIE KROG 616öTp Glg,6ür60TITISlflš5 JBIT (618, 8,65656öT, MXOLIS NYEZWA என்ற அவனது இன்னொரு சகநாட்டுக் கவிஞன் ஆகியோரின் பாடுபொருள்கள் பெரும்பாலும் இவைசுற்றியே இருந்தன.
24
MXOLISI NYEZWA 96MT 6qësgjë 556T பிரதேசத்து மலைவளத்தை மூடிய மனித துயரத்தை உலகில் வேறெக் கவிஞனும் பாடியதில்லையென்று கூறுவார்கள். மூன்றாம் உலக நாடுகளின் மீகவி பாடுபொருள் மனித அகற்சியும், புலவெறுமையும்.
தொண்ணுாறுகளின் அக்காலப் பகுதிக்கு முந்திய கவிஞர் களும்கூட, ஒருவகையான யுத்த பெண்களின்
ஞர்களின்
கவிஞர்,
சோகத்தையே பாடினர். மேல் புரியப்பட்ட பால்ரீதியான வன்முறை, யுத்த அழிவின் இன்னொரு பரிமாணம், அவர்கள் போராளிகளாகியது இன் னொன்று. பெண் அதிகமாகவும் இக்காலப் பகுதியில் தோன்றிய காரணத்தை இப்போது விளங்கிக் கொள்ள முடியும். ஆனாலும்
கவிஞர்கள்
பெயர்வும் விளைந்த நிலம் சார்ந்த பாதிப்பு அதிகமாக இவர்களிடத்தில் எழவில்லை.
அதை ЦТу Шgl தான் அஸ்வகோஸின் கவிதைகளின்
இடப்பெயர்ச்சியும், புலப்
விசேஷமென நினைக்கிறேன். இந்த புரிந்து கொள்ள முடியாச் சூழலே அவர் 6905 urf&sujLálypt'L! (DEFAMILIARIZE) & சூழலுள் விழக் காரணமாகியிருந் திருக்கிறது. இது ஏன்?
அஸ்வகோஸ் கவிதைகளின் பொதுப்பண்பு அவற்றின் பூடகத்தனம்; வெளிப்படையின்ம்ை. உம்மைத் தொகை களையும், வேற்றுமை உருபுகளையும், உரிச் சொற்களையும் அவை சாத்தியமற்ற அளவுக்கே தவிர்த்திருக்கும். கருத்துக் களுக்கான தொடுப்பை அது தன் வாசகனது பொறுப்பில் நிர்தாகூரண்
ஞானம் - மே 2004

யமாய் விட்டுவிடும். வாசகனுக்கு இயலும் / இயலாது, புரியும் / புரியாது போன்ற எந்தக் கரிசனையுமின்றி அது தன் கவிதைக் கவனத்தில் நுழைந்துவிடும். படிம அடுக்குகளாய் அஸ்வகோஸின் சில
குறிப்பாக அழிந்தபோது', 'சுலோ', போன்றவை அமைவது இதே காரணம் குறித்தே. புரிதலை முதல் வாசிப்பில் ஒரு தீவிர வாசகனுக்குக் கூட இவை இலேசாக்கி விடுவதில்லை. மீண்டும் மீண்டும் வாசிப்புள் நுழைந்து உணர்வுகளுள் ஆழும்போதே இவற்றின் அர்த்தம் பிடிபடும். நகுலன், பிரமிள், சி. மணி ஆகியோர் இவ்வகைக் கவிதை வகையால் தமிழில் முத்திரை பதித்தவர்கள். அஸ்வகோஸின் பாதை அவர்களைப் போலவே
கவிதைகள், கீதங்கள்
பின்தொடர்கிறது தென்படுகிறது. தன் சிறுகவிதைகளில் மட்டுமன்றி நெடுங்கவிதைகளிலும் அஸ்வகோஸின் இக் கவிதைப் போக்குத் தொடரும். ஒரு காவியத்தின் பரிமாணத் தையே தன்னுள் கொண்டிருக்கிற நெடுங்கவிதை வனத்தின் அழைப்பு, தத்துவத்தைப் பேசும் கவிதைகள்போல், திருமந்திரம்போல், சிவஞான சித்தியார் மற்றும் சிவஞானபோதம் போன்ற சைவ மதத்தின் சித்தாந்த விளக்கப் பாடல்கள்
போல் தன்னுள் இடையீடற்ற இறுக்கத்தை வனத்தின் அழைப்பு கொண்டிருக்கிறது.
அந்த வாசலில் அவன் நின்றான்/ மரணத்தின் சிரிப்பு/ உயிர்ப்பற்ற செய்தியை ஈய்ந்தவன்/சிரித்தான்’ என்று வனத்தின் அழைப்பு கவிதையின் இரண்டாம் பகுதியான தவம் சொல்கிறது.
ஞானம் - மே 2004
இந்தச் சிரிப்பு கொடுமையுடையதாக, அச்சம் தருவதாகத்தான் படுகிறது. நீட்ஷேயின் THUS SPAKE ZARATHUSTRA 6lä 6J(5.h 96OLu6öT, ஜராதுஸ்ராவின் சொற்படி தன் வாயில் தொங்கிய பாம்பைக் கடித்துத் துப்பிவிட்டு பேரொளி எழச் சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு அப்போது வாசகனுக்கு ஞாபகம் வராது போகாது. ஆனால் நீட்ஷேயின் அந்த நூலை எத்தனை வாசகன் படித்திருக்கப்போகிறான்?
மேலும், அஸ்வகோஸின் கவிதைத் இடங்களில் வெண்ணிரவு என்கிற சொற்பிரயோகம் வரும். இது சோவியத் இலக்கியத் தாக்கத்தில் கவிஞன் மனத்தில் விழுந்த படிமமாய் இருக்க வேண்டும். அதில் தப்பில்லை. ஸ்தொப்பி வெளியின் பணிப்
தொகுப்பில் ઈી60
பரப்பின் இரவை, அது பிரதிபலிக்கும் வானத்து வடிவை ரஷ்யக் கவிஞன் வெண்ணிரவென வர்ணிப்பான். அதுபோல் ஈழத்தின் மருத நில, நெய்தல்நில வெளிகளின் வெண்ணிலா இரவை அஸ்வகோஸ் வெண்ணிரவென வர்ணிப்பது விநோதமாக, அதேவேளை ரசிக்கும்படியாயே இருக்கிறது. இந்த அழகின் சட்டங்களை உணர்ந்து கொள்ளும்போதே கவிதை மேலும் இன்பம் பயக்க முடியும். எத்தனை வாசகன் இந்த நெகிழ்ச்சி / அறிதற் பரப்பைக் கொண்டிருக்கப் போகிறான்?
காண்டாவனம்’ கவிதை தன் எடுத்துரைப்பு முறையால் விகாசம் பெறுவது. பாரதத்தில் அர்ச்சுனனாலும் கிருஷ்ண
25
காண்டாவனம் மஹா

Page 15
னாலும் எரியூட்டப்படுவது மட்டுமில்லை,
எதுவெல்லாம் அழித்தொழிப்பின்
பொருட்டு எரியூட்டப் பெறுகிறதோ
அதுவெல்லாம் காண்டாவனமே என்று தெரிவிக்கிறது. கோடையின் ஒரு
தான் கவிதை அப்பெயரில் காலகட்டமும் உண்டு. 'கொதிக்கும்
வெயில்/ வீசியடிக்கும் செம்மண் புழுதி/
குடம்குடமாய் குடித்தும்/ அடங்கா
விடாய்/ காட்ட மரச் சிற்றிலைகள்/விடும் அனல்மூச்சு என காண்டாவன காலம் ஆ-1 பகுதியில் வர்ணிக்கப் பெற்றிருக்
கிறது. இந்தக் காண்டாவனம் எடுத் துரைத்த பொருளும் பூடகமாகவே
இருக்கிறது. ரசிக்கிறது.
ரசிப்புத்தனம்தான் மிகமிக அவசிய
LDT 60T ġl.
o e ரசனையின் அம்சங்களை காண்டா
வனம்’ நிச்சயமாய்க் இருக்கிறது. ‘புரிந்துகொள்ளுமட்டும்/ காத்திருக்கச் சொல்லி போய்விட்டது/ கவிதை என்று இதே கவிதையின் முடிவுப் பகுதியில் சொல்லப்படுவதுபோல்தான் நிஜத்திலும் நிகழ்கிறது. ஆனாலும் புரியும்வரை காத்திருக்க காண்டாவனம் பொறுத்தவரை ரசிகனின் சம்மதிக்கும். ஆனால் காண்டாவனம்
மனம்
புரியாதென்றுமில்லை. மீளமீள வாசிக்க கவிதை தன் உணர்வுகளூடாயே தெளிவைத் தரும். இந்த கவிதைக்கான பூடகத்தனம், படிமத்தனங்கள் அஸ்வ கோஸின் என்றால் தப்பில்லை. அது உடனடிக் கவனத்தை வாசகனிடத்தில் ஏற்படுத்தி
26
பண்புகள்
கவிதையின்
ஆனாலும் கவிதை கவிதையில் புரிதலைவிட
அந்தவித கலா-கவிதா
கொண்டே
விடாது. அந்த வகையில் ஒரு புரிதற்
காலத்துக்காய் அது காத்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறது.
சிலபல கால நிலைமைகளில்
எவருமேதான் தன் அரசியலைப் பேசிவிட முடியாது. குறிப்பாக படைப்பாளிகளால் பேசிவிடவே முடியாது. படைப்பாளி யானமையினால் அந்த நிர்ப்பந்தம் அதிகம். விஷயத்தை - சேதியை - பிரசாரம்
ஏனெனில் அவன் ஒரு
செய்வதோடு பதிவாக்கமும் செய்கிறான். இலங்கையின் அவசரகாலம் அமுலாக்கப் பட்டிருந்த காலப்பகுதி தமிழருக்கு சொல்லொணாத் துன்பமளித்ததை யாரால் மறக்கக்கூடும்? அதனால் ஒரு பூடகத்தனத்துள்ளிருந்து கவிஞன் தன் கருத்தை வெளிப்படுத்துவான். அல்பேர் 55 Typ 560T gi THE PLAQUE 6T 6óT) நாவலில் கொள்ளைநோய் பற்றியே வெளிப்படையாய்ப் பேசுகிறாரெனினும், ஜேர்மனியின் ஆக்கிரமிப்பில் பிரான்ஸ் தேசம் அகப்பட்டிருந்த பொழுது அது அடைந்த இன்னல்களையே கூறினார். அம்மாதிரி உத்தியாகவே அஸ்வகோஸின் பூடகத்தனத்தை, படிம உத்திகளைக் கொள்ள வேண்டும். காண்டாவனமும் பூடகத்திலேயே எல்லாம் பேசுகிறது. அது மனிதாயதமென்று அனைத்து அரச பீடங்களும் ஒப்புக் கொண்ட ஒரு சுலோகத்தைத் தன்னில் ஒட்டிக் கொண்டு நடக்கப் பிடிவாதமாய் மறுத்திருக்கிறது; அது அரச பயங்கரவாதத்தைப் பேசியது;
முஸ்லீம்களின் வடபகுதி வெளி யேற்றத்தைப் பேசியது; எம் யுத்த நியாயத்தைப் பேசியது; மனித
ஞானம் - மே 2004

அவலத்தைப் பேசியது; அதேவேளை
வெளிநாடு ஒடுதலை எள்ளவும் செய்தது.
'இருள் கவிதை பலஹீனமானது. ஆனாலும் அது பேசுகிற உணர்வு அற்புதமானது. சிதைந்துபோன
மைந்தரின் வேதனை ஒலங்கள் என்னை உறுத்தின/நான் வேதனையுற்றேன்’ என்று 95] கூறுகிறபோது வேதனை வாசகனிலும் படர்கிறது. அக்கவிதை வெளிப்படுத்தும் ஒரு தந்தையின் துயரம் எவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் பூடகமாகவும் எமது யுத்தத்தின் நியாயத்தைப் பேசி விடுகிறது என் மகள் போயிருந்தான்/ தன்னை அர்த்தப் படுத்தவென்று.
IV
அஸ்வகோஸின் ஒரு காலகட்டக் கவிதைகள் இவை. அவரது மனநிலை, அவர் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் இக்கவிதைகளின் ஊற்றுக்கண் என்று நிச்சயமாய் நாம்
எல்லா மேதான்
கொள்ளலாம். பல்துறைக் கவிதைகளை எழுதாவிட்டாலும், அஸ்வகோஸ் எழுதிய யுத்தத்தினால் ஏற்பட்ட வாழிடவெளியும் அழிவும் ஆகிய அம்சங்கள் அவரது கவிதைகளைத் தமிழிலக்கியத்தில் தனியாய் நிறுத்துகின்றன. இந்த வழியிலேயே அவரது கவிதைகள் பார்க்கப்பட வேண்டும்; விமர்சிக்கப் கவிதையின் உள்ளீடு களைக் காலம் கருதிக்கூட விமர்சகன் பேசாது இருந்துவிடக் கூடாது. அரச நிறுவனங்கள் சார்ந்தே நம் பிரபல
படவேண்டும்.
விமர்சகர்களெல்லாம் இருப்பதினால், அவ்வளவு விமர்சன நேர்மையை அவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியுமா வென்பது கேள்விக்குறிதான். ஆனாலும் புதிய தலைமுறையின் வாசகப் பரப்பு, தன் வாசக விமர்சன முறை மூலமாக வேனும் நற்பிரதிகள் காலப் புழுதி படிந்து மறைந்து போகாது காப்பாற்றும் என்பதுதான் மீதமாயிருக்கிற நம்பிக்கை.
உள்நாடு
தனிப்பிரதி ரூபா 30/= ஆண்டுச் சந்தா ரூபா 360/= 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/= 3 ஆண்டுச் சந்தா eg5urr:1000 f= ஆயுள் சந்தா eլbւյr 15000/=
சந்தா காசோலை மூலமாகவோ
மணியோடர் அனுப்புபவர்கள் அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
* ஞானம் ? சந்தா விபரம்
மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம் :
மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய பெயர், முகவரி.
T. Gnanasekaran 19/7, Peradeniya Road, Kandy. s
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$
ஆயுள் சந்தா : 300 US$
ஞானம் - மே 2004
7 ל

Page 16
(']]'ഞ്ട്)
GLIgrIrafifuń கா. சிவத்தம்பி
சந்திப்பு : தி. ஞானசேகரன்
N
(8. உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர்.
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
* தலை சிறந்த விமர்சகள்.
* தமிழ்நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது அளிக்கப்பட்டுக்
கெளரவம் பெற்றவர்.
* வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப்
பணிபுரிந்தவர். ノ ܢܠ
(11)
தி. ஞா. : ஞானம் கலை இலக்கியப் பண்ணை 17-03-04 அன்று வரதருக்கு நடத்திய பாராட்டு விழாவில் சிறப்புரை வழங்கிய நீங்கள், மறுமலர்ச்சி காலத்திலேயே ஈழத்து இலக்கியம், மண்வாசனை போன்ற எண்ணக் கருக்கள் இலக்கியத்திலே தோன்றிவிட்டன எனக் கூறினிர்கள். இக்கூற்று முற்போக்காளர்கள்தான் இவற்றிற்கு வித்திட்டார்கள் என்ற உங்களது முன்னைய நிலைப்பாட்டிற்கு முரணாக இருக்கிறதே!
கா. சி. : உண்மையில் இது ஓர் இலக்கிய வரலாற்று அறிவு சம்பந்தமான பிரச்சினையாக நான் கருதுகிறேன். 1954, 55இல் புத்துக்கம் பெற்று, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அணி கொழும்பில் செயற்படத் தொடங்கியபொழுது அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில், மட்டக்களப்பில், மலையகத்தில்,
28 ஞானம் - மே 2004
 

முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு புதிய தலைமுறையினர் தோன் றி யிருந்தனர். அதாவது இலவசக் கல வி ஒரு புறமாகவும் சுய மொழிக்கல்வி இன்னொரு புறமாகவும் தொழிற்பட, மேல்வந்த ஒரு இளைஞர் குழாமொன் று இலங் கையில் படிப்படியாக மேலே வருகிறது. இந்தக் கட்டத்திலே தான் இலங்கை முழுவதற்குமான ஈழத்து இலக்கியம் என்ற கோட்பாடு - இந்தியாவிலிருந்து இலங்கை இலக்கியத்தைப் பிரித்துப் பார்ப்பதற்கு நாவலர் காலத்தில் அல்லது அதற்குச் சற்றுப்பின்னர் ஈழத்து இலக்கியம் என்று பயன் படுத்தப்பட்ட அந்த நிலைப்பாடு, இப்பொழுது ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகின்ற ஒட்டுமொத்தமான இலக்கியங்களின் வெளிப்பாடு என்ற கருத்திலே வரத் தொடங்குகிறது. அந்தக் கட்டத்திலே, யாழ்ப்பாணத்திலிருந்து சாதிப் பிரச்சினை சம்பந்தமாக, மட்டக் களப் பிலிருந்து பித்தன் போன்றவர் களர் இனி னொரு நிலையாக, வன்னிப் பிரதேசத் திலிருந்து, சற்றுப்பிந்தி மலையகத் திலிருந்து, தென்னிலங்கையிலிருந்து என ஈழத் திண் தமிழ் பேசும் பிரதேசங்களில் இருந்தும் எழுதத் தொடங்குகிறார்கள் . அந்தக் காலகட்டத்தில் நாங்கள் ‘மண் வாசனை’ என்று எதனைக் கருதி னோமென்றால், அந்தப் பிதேசத்தினது வாழ்க்கையினைச் சொல்லுகின்ற தளமாக் கொணர் ட கதைகள் - வெறுமனே அந்தப் பிரதேசத்தில் வழங்குகின்ற சொற்களை எழுதினால் அது மணி வாசனை ஆகாது. உண்மையில் மண்வாசனை எப்போ
ஞானம் - மே 2004
வருமென்றால், அந்தப் பிரச்சனை அந்த மண் ணுக்குள் ளால் வர வேண்டும். - அப்போது அந்தக் காலகட்டத்தில் அதனை மணி வாசனை என முனைப்புப் படுத்தி - அது ஈழத்து இலக் கியத்தின் மண்வாசனை என்று சொன்னோம். இந்த இடத்தில் ‘ஈழத்து இலக்கி யத் திண் மணி வாசனை’ என்ற தொடர்கள் பற்றிய தெளிவு வேண்டும். முதலாவது, ஈழத்து - என்பது இந்தியாவில் இருந்து பிரித்து நோக்கப்படுகிறது மாத்திரமல்லாமல், இலங்கையில் உள்ள தமிழ் பேசுகின்ற பல்வேறு பிரதேசங்கள், பல்வேறு கூறுகளுடன் வெளிப் படுகின்ற ஒருமைப் பாடான வெளிப்பாடு. இரண்டாவதாக, அந்த அந்தப் பிரதேசங்களில் உள்ள பிரச்சனைகளை எழுதுவது. இவ்வாறு எழுதப் பட் டு வந தாலுமி கூட உண்மையில் நாங்கள் அந்தக் காலகட்டத்தில் இந்த முற்போக்கு இலக்கியத்திற்கு முன்னர் இருந்த இலக்கியப் போக்குகள் பற்றி - குறிப்பாக நவீன இலக் கியப் போக்குகள்பற்றிய ஒரு வரலாற்றுத் தெளிவு இருந்ததாகச் சொல்ல முடியாது. நாங்கள் ஒட்டுமொத்தமாக எவற்றைப் பேசினோ மென்றால் , இலங்கையர்கோன், வைத்திலிங்கம் போன்றவர்களின் வரவு என்பதனைப் பற்றிப் பேசினோம், ஈழகேசரியை மையப்படுத்திப் பேசினோம். அதே வேளையில் அந்த ஈழகேசரியைத் தொடர்ந்து வருகின்ற தினகரன், வீரகேசரியைப் பேசினோம் . இவற்றைப்பற்றிப் பேசினோமே தவிர இந்த 'மறுமலர்ச்சி இயக்கத்தைப் பற்றியும், கணேஷினுடைய 'பாரதி
29

Page 17
பற்றியும் ஒரு மேலோட்டமான அறிவுதான் நமக்கு இருந்தது. உண்மையில் அந்தக்காலகட்டத்தில் அந்த அளவில் நாங்கள் இருந்தோமே தவிர, இதில் மிக ஆழமாக உற்று நோக்கவில்லை. அந்தக் கால கட்டத்தில் , ஏற்கனவே இந்த மறுமலர்ச்சியுடன் தொடர்புள்ள வரதரோ அல்லது சொக் கன் போன்றவர்களோ உண்மையில் அந்தக் காலகட்ட இலக்கிய முயற்சிகளை அதிகம் மிகைப்படுத்த வில்லை. அதைப்பற்றி எழுதவும் இல்லை. நண்பர் சொக்கனோடு பேசுகின்றபோது அந்த வளர்ச்சியைப் பற்றி அவர் என்னிடம் பலதடவை சொல் லியிருக்கிறார் . மற்றது, அந்தக்காலகட்டத்தில் முக்கியமாக இருந்தது இன் னு மொன் று. என்னவென்றால், இந்த முற்போக்கு இலக்கியத்தின் வளர்ச்சிகாரணமாக, சமூக நோக்கில் பிற்போக்குத்தன மானவர்கள் பலர் இந்தப் புதிய இலக்கிய வகைகளை எதிர்க்கத் தொடங்க அந்த மறுமலர்ச்சிக் காலத் தவர் களும் அந்த எதிர்ப்புக்கெதிராக எங்களுடன் சேர்ந்துகொண்டார் கள் . ஒட்டு மொத்தமாக இந்த மறுமலர்ச்சி பற்றிய, அதனுடைய ஆழ அகலம் பற்றிய - அது எங்கே இருக்கிறது, எத்தகைய கதைகள் வந்தன, என்னமாதிரி வந்தன என்கின்ற விஷயங்கள் தெரியாமல் இருந்தன. அதை ஒத்துக்கொள்ள வேண்டும் - இதில் வெட் கப் படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த மறுமலர்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமே தவிர, அதைப் பற்றி ஆழமான
30
வேலைகளை நாங்கள் ஒருவரும் செய்யவில் லை. உண்மையில் பல கலைக் கழக மட்டங்களில் நாங்கள் போயிருக்கவேண்டும். ஆனால் அந்த மட்டங்களில் போவதற்கும் உண்மையான சில கவர் டங்கள் இருந்தன. என்ன வென்றால் , அந்த இதழ் கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. மயிலங்கூடல் போன்றவர்களிடம் இருந்தால் தான் எடுக் கலாம் . இல்லாவிடில் எடுக்கவியலாது. இந்தக் கட்டத்திலேதான் செங்கை ஆழியான் - தான் நாவல் எழுதுகின்ற அந்த வேகத் தோடு அலி லது அந்த வேகத்துக் குச் சமமான ஒரு கடப்பாட்டு உணர்வோடு இந்த மறுமலர்ச்சிக் கதைகள் என்கிறவற்றை வெளியிலே கொணர்ந்தார். அவற்றை வாசித்தபொழுது நான் ஒரு புதிய உலகத்துக்குள் போகக்கூடியதாக இருந்தது. பாரதி என்ற சஞ்சிகையை கணேஷ் கொண்டுவந்தபொழுது, அந்த சஞ்சிகை ஒரு சமதர்ம நோக்குடைய - கம்யூனிச சித்தாந்த நோக்குடைய ஒரு முன்னோடிப் பத்திரிகை என்பது ஏற்கனவே தெரியவந்தது. நாங்கள் அதைப்பற்றி கணேஷினுடைய விழாக்களிலே விரிவாகப் பேசியிருக்கிறோம். ஏறத்தாழ இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. ஆனால் கணேஷினுடைய பாரதி தனி ஒருவரின் பத்திரிகை இயக்கமாக, இநீ தியர் , இலங்கையரை முற் போக் குக் கோட்பாட்டில் இணைத்தும் பேசுகின்றதும், தமிழில் இந்த இலக்கியத்தின் வளர்ச்சி வேண்டுமென்றும் எடுத்துக் கூறுவதாக
ஞானம் - மே 2004

அமைந்தது. பாரதி என்னும் பெயரே இந்த நோக்கைக் காட்டுகிறது. இது ஜனரஞ்சகமாகப் போனது எண் றும் சொ ல ல முடியாது. ஆனால் செங் கை ஆழியான் கொண்டு வந்த தொகுப் பைப் பார்த் தபொழுது -
(ஒட்டுமொத்தமாக இந்த மறுமலர்ச்சி பற்றிய, அதனுடைய ஆழ அகலம் பற்றிய - அது எங்கே இருக்கிறது, எத்தகைய கதைகள் வந்தன, என்னமாதிரி வந்தன என்கின்ற விஷயங்கள் தெரியாமல் இருந்தன. அதை ஒத்துக் கொள்ள வேணி டும் - இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த மறுமலர்ச்சிபற்றிப் பேசிக் கொண்டிருந்தோமே தவிர, அதைப்பற்றி ஆழமான வேலைகளை
Uநாங்கள் ஒருவரும் செய்யவில்லை. :
மறுமலர்ச் சிச் சஞ்சி கைகளில் ஒவ்வொருவரும் எழுதிய கதைகளைப் பார்த்தபொழுது - முக்கியமாகப் பெரியசாமி என்பவரின் கதையைப் பார்த்தபோது அவர் ஓர் ஆசிரியர்- உண்மையில் அந்தப் பிரதேசங்களைப்பற்றி எழுதுகின்ற தன்மை- முருகானந்தம் போன் றவர்கள், இவர்கள் எல்லோரும் அநீதப் பிரதேசங் களிலுள்ள பிரச்சனைகளைப் பற்றி எழுத வேண்டும் எண் ற நோக்குடன் எழுதுகின்ற தன் மை- அந்தப் போக்கின் தொடக்கம் முளை விடுகின்ற தன்மை இந்த மறு மலர்ச்சிக்கால எழுத்தில் இருக்கிறது என்பதனை நாங்கள் கண்டோம். அதன் பின்னர்தான் இதனை நான் சற் று ஆழமாகப் பார் கி கத் தொடங்கினேன் என்று சொல்லலாம். எனக்கு முன்னர் இருந்த மிகப் பிரதான விடயம் என்னவென்றால், எங்களிடம் ஏற்கனவே இருந்த தரவு. ஈழகேசரி யாழ்ப்பாணத்தில் ஒரு மை ல கல லாக அமைகிறது. முப்பதுகளில் வருகிறது. சிவபாத சுந்தரம் அதனைப்பற்றி மிகவும் சிறப்பாகச் சொல்கிறார். பொன்னை யாவின் பங்களிப்புப் பற்றி நிறையப்
ஞானம் - மே 2004
பேசுகிறார் கள் . ஈழகேசரி தமிழகத்திற்கும் இலங்கைக்கும் ஒருபாலமாக இருந்தது. ஏறத்தாழ அந்தக் காலகட்டத்தில் இலங்கையர் கோன், வைத்திலிங்கம் போன்றோர் எழுதுகிறார்கள். அவர்களுடைய கதைகள் கலைமகளில் பிரசுர மாகின்றன என்ற இந்தத் தகவல்கள் எல்லாம் வருகின்றபொழுது, ஒரு கேள்வி பிறக்கின்றது. மறுமலர்ச்சி எண் ற சஞ் சிகை - அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து இவ்வளவு சாதனைகள் செய்ததாகச் சொல்லப் படுகின்ற ஈழகேசரி "ஜே ஜே என்று ஒடுகின்றபோது, ஏன் தோன்றிற்று? இதனைத் தோற்றுவிக்க விரும்பியவர்கள் யார்? என்கின்ற கேள்விகள் எனக் கு முக்கியமாயின. அப்பொழுதுதான் தெரிந்தது, நவீன இலக்கியம் வருவது மாத்திரமல்ல - சிறுகதை, நாவல் வருவது மாத்திரமல்ல - நாவல்கள் ஏற்கனவே வரத் தொடங்கிவிட்டன. நொறுங் குண்ட இதயம் நல்ல நாவல். நாவல் வடிவிலே எழுதப்பட்ட அல்லது நாவலின் தன்மைகளைக் கொண்டு எழுதப்பட்டவை போய், உண்மையிலே ஒரு நல்ல நாவல். எந்தமட்டத்தில் பார்த்தாலும் ஒரு
21

Page 18
நல்ல நாவலாக இருபப்து நொறுங் குண்ட இதயம். அந்த மாதிரியான நாவல்கள் வரத் தொடங்கியதன் பின்னர் - அது உண்மையிலே ஒரு யாழ்ப்பாணக் குடும்பத்தில்- அதாவது நவீனமயப் பாட்டுக்குள் வருகின்ற, கிறீஸ்த் தவத்தின் வழியாக வருகின்ற ஒரு குடும்ப - கிராமப் பின் சூழலில் வருகின்ற ஒரு வரலாற்றை அதன் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்தப் பின் புலத்தில் 1940 களின் தொடக் கத்தில் மறுமலர் ச் சி எழுத்தாளர்கள் இந்த யாழ்ப்பாணத்து மண்ணினுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள். அது ஒரு முக்கியமான விடயம். அதிலும் பார் கி க முக்கியம் என்னவென்றால், இந்த மறுமலர்ச்சிக் குழுவினர் எண் று சொல் லப் படுபவர்கள் யார் ? . வரதர் , பஞ்சாட் சரசர் மா, நாவற் குழியுர் நடராஜன், சோ. தியாகராசா,
சரவணமுத்து - இவர்கள் எல்லோரும்
தமது எழுத்தின் தொடக்கத்துக்கான உந்துதலை ஆங்கிலக் கல்விவழி பெற்றவர்களல்ல. இந்த மறுமலர்ச்சி எண் ற சொல் லுக்கு அந்தக் காலகட்டத்தில் - நாற்பதுகளில் ஒரு முக்கியமான அரசியல் சமூகப் பின்புலம் இருக்கிறது. பாரதியை மதிக்கிறவர்கள், பாரதிகாட்டிய வழியில் நவீனதமிழ் இலக்கியத்தை வளர்த் துச் செல் ல விரும் பு கின்றவர்கள் - அந்த எண்ணமுள்ள அறிஞர்கள்தான் தமிழில் மறுமலர்ச்சி என்ற பதத்தைப் பிரயோகித்தார்கள். வையாபுரிப் பிள் ளையின் ஒரு கட்டுரைத் தொகுதிக் குப் பெயர் தமிழின் மறுமலர்ச்சி. முன்னர் இருந்த
32
மலர்ச்சியை மீண்டும் கொண்டு வருதல். அநத மலர்சசியை நவீன வடிவங்களில் கொண்டுவருதல். புதிய தேவைகளுக் கேற்பக் கொண்டு வருதல். தமிழ் மீட்பு வாதம் அல்ல. முந்தியிருந்த பெருமைகளைச் சொல் கிண் ற வாதம் அலி ல. உண்மையில் திராவிடக் கருத்து நிலை என்ற Ideology யிலிருந்து வேறுபட்டு ஒரு மீட்பு வாதமாக இல்லாமல், நவீன அடிப்படையில், நவீனத் தேவைகளுக்காகத் தமிழைப் பயன்படுத்துவதாகிய ஒரு இயக்கம். இதனை யார் செய்கிறார்கள்?- ஏறத்தாழ இந்தத் தமிழ் மொழிவழிக் கல்வி படித்த இளைஞர்கள். இந்த விடயம் எனக்கு மிக முக்கியமாகப் படுகிறது.
தி. ஞா. இவர்களைப் பண்டித வர்க்கத்தினர் என்று சொல்லலாமா? கா. சி. பண்டிதர்கள் இருக் கிறார்கள். பஞசாட்சரசர்மா பண்டிதர். எலி லாப் பணி டிதர் களையும் சொல் ல முடியாது. இது ஒரு முக்கியமான இடத்தை உடைக்கிறது. பிற்காலத்தில் பண்டிதர்கள் என்றால் பழமையுடன்தான் நிற்கவேண்டும் என்று சொல்லும் நிலைமையை இல்லாமல் செய்தவர்கள் இரண்டு பண்டிதர் மார். ஒருவர் பஞ்சாட்சர சர்மா மற்றவர் பண்டிதமணி கணபதிப் பிள் ளை . ஈழத்து இலக் கிய வரலாற்றில் ஏற்பட்ட மிகத் துக்ககரமான சம்பவங்களிலொன்று பண்டிதமணியை முற்றுமுழுதான பழமைவாதியாகக் கூறுவது அவருடைய 'தம்பியர் இருவர் போன்ற கட்டுரை, சிவகாமியின்
y
ஞானம் - மே 2004

சபதத்தைப் பற்றி வரும் கட்டுரைகள் எல்லாவற்றையும் பார்த்தீர்களானால் தெரியும் - அவர் சிறுகதை வடிவில் பல விடயங்களைச் சொல் லி யிருக்கிறார். அவருடைய நடை முற்றிலும் நவீனமான தமிழ்நடை. சொல்லும் உத்திகளும் நவீன மானவை. அந்தக் காலகட்டத்தில் ஒரு பணி டிதர் நவீன தமிழ் இலக்கியத்திற்கு வருவது பிரச் சினயான விடயமாகக் கருதப் படவில் லை. எப்பொழுது பிரச் சனையான விடயமாகக் கருதப்பட்ட தென்றால், 61இல் மரபுப் போராட்டம் வந்தபோது. ‘அசையாத குட்டை
நீரல்ல மரபு என்று நான் எழுதிய
போது - இளமுருகனுக்கு எதிராக எழுதியபோது, அந்தச் சண்டையில் பண்டிதர்கள் ஒரு புறமும் மறுபுறத்தில் புதிய எழுத்தாளர்களும் நின்றார்கள். அந்தக்காலகட்டத்தில் நிச்சயமாக பண்டிதர்கள் ஒரு புறத்தில் மாத்திரம் நிற்கவில்லை. அவர்கள் தமிழை மிக விரிவாகப் பார்க்கின்ற ஒரு தன்மை இருந்தது. பஞ் சாட் சர சர் மா சமஸ் கிருதம் தெரிந்தவர் . சுவாரஸ்யமான விடயம் என்ன வென்றால், நாவற்குழியூர் நடராஜன் இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் அவர்களோடு சேர்ந்த ஒருவர். அவர்களுடைய இலக்கிய முன் னெடுப்புக்கு அவர் உதவியுள்ளார். அதே நாவற் குழியூர் நடராஜன் பின்னர் நிலைமைகள் ' காரணமாக முற்போக்குக்கு எதிராக மாறினார். அணி மையில் நான் பார்ப்பது என்னவென்றால், இது முற்போக் கினுடைய முக்கியத்தைக் குறைப்
ஞானம் - மே 2004
பதாக நண்பர்கள் நினைக்கக் கூடாது. நான் ஒரு வரலாற்று ஆசிரியர் என்ற வகையில் பார்க்கிறேன். எனக்குள்ள பிரச்சினை என்னவென்றால், இந்த முற்போக்கு இலக்கியத் தளத்திற்குத் தளமாக - காலாக அமைந்தது என்ன? அதற்குக் கீழே இருந்த பசளை என்ன? அடித்தளமென்ன? இந்தப் பிரச்சனையை 61இல் ஒரு ஆழமான இலக்கியப் பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. ஒரு இலக்கிய வரலாற்று ஆசிரியன் என்ற வகையில், ஒரு ஆய்வாளன் என்ற வகையில் எனக்கு ஒரு கடமை இருக்கிறது - என்னவென்றால், இந்த முற்போக்கு இயக்கம் இவ்வளவு மிகச் செழிப் பாகத் தொடங்கி வளர் வதற்குக் காரணமாக இருந்தது என்னவென்றால், ஏற்கனவே இருந்த ஒரு சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கத்தினால் ஏற்பட்டது. அது ஈழகேசரிக்குள்ளால் வரவில்லை. இதுதான் முக்கியம். ஒரு காலத்தை மீள் கண்டுபிடிப்புச் செய்துள்ளோம். எவ்வாறு சோழர் காலத்தில் வாழ்ந்த நாதமுனி, நம்பியாண்டார் நம்பி மூலமாக நாங்கள் பல்லவர்காலத்துப் பக்தி இலக் கியங்களை மீள் கணி டுபிடிப் புச் செயப் தோ மோ அதேபோல இந்த முற்போக்கு இலக்கிய வரலாற்றை எழுதி முடித்ததன் பின்னர் நாங்கள் அதற்கு முன்னர் உள்ள மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் எவ்வாறு வந்தது, எவ்வாறு வளர்ந்தது என்பதைப் பார்க்கிறோம். நான் இப்போது ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். முன்னர்
33

Page 19
ஈழத்தில் தமிழ் இலக்கியம் என்றுதான் எனது கட்டுரைத் தொகுப்புக்குப் பெயர் வைத்திருந்தேன். ஈழத்துத்தமிழ் இலக்கியம் என்று சொல்லும்போது எதைக் கருதுகிறேன் என்றால், தமிழ் இலக் கியம் இலங்கையில் . இலங்கைத் தன்மையுடையதாக எவ்வாறு வளர்கிறது. கடந்த ஐந்தாறு மாதமாக இதைப்பற்றி யோசித்துக் கொணர் டிருக் கிறேன் . கவிதை வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், ஈழத்துக் கவிதை மரபு என்று ஒன்றை நாங்கள் இனங்காட்டலாமா? அப்படி
இனங்காட்டுவதானால் யார் யார்
அதில் மைல்கல்கள்? எந்த எந்தப் போக்கு அதில் மைல் கல்கள்? ஒட்டு மொத்தமான தமிழ்ச் சிறுகதை வரலாறு இருக்கிறது. அதில் ஈழத்துச் சிறுகதை என்ன என்ன கட்டங் களைக் கொண்டு வருகிறது? அப்படிப் பார் க் கும் போது, செங் கை
ஆழியானின் இந்தப் புத்தகத்தின் பிறகு, இலங்கையர் கோனி வைத்திலிங்கம் ஆட்களுடன் தொடங்கி, பின் வரதர்போன்றோரைச் சொல்லி, பின்னர் ஜீவா, டானியல், ரகுநாதன் என்று வருவதற்கு முதல் - இந்த வரதர் ஆட் களைச் சொல் கிறபொழுது மறுமலர்ச்சி இயக்கத்தைக் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கவேணி டியுள்ளது. அந்த நேரத்தில்தான் ஈழத்தின் தன்மை களைக் கொண்டு வளருகின்ற ஒரு நிலைமையைக் காண்கிறோம். ஒரு வரலாற்று ஆசிரியன் என்ற வகையில் இது ஒரு முக்கியமான விடயமாகப் படுகிறது. இரண்டாவதாக இது ஆங்கிலப் பயில் வின் மூலமாக வராமல், தமிழ் கற்றலின் மூலம் வந்தவர்கள் ஊடாகவே இந்த நவீனப் போக்கு, இந்த நவீனப்பார்வை, இந்த நவீனத்துக்கான முனைப்பு வருவ
தெனி பது மிக மிக
முற்போக்கு இலக்கியத் தளத்திற்குத் தளமாகி :காலாக அமைந்தது என்ன? அதற்குக் கீழே:
முக்கியமான விடயம். ஏனென்றால் ஏறத்தாழ இதேகாலப் பகுதியில்
இருந்த பசளை என்ன? அடித்தளமென்ன? இந்தப் பிரச்சனையை 61இல் ஒரு ஆழமான இலக்கியப் பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. ஒரு இலக்கிய வரலாற்று ஆசிரியன் என்ற வகையில்,
கடமை இருக்கிறது - என்னவென்றால், இந்த முற்போக்கு இயக்கம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்குக்
ஏற்கனவே இருந்த ஒரு சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கத்தினால் ஏற்பட்டது. அது ஈழகேசரிக்குள்ளால் வரவில்லை. இதுதான் முக்கியம். ஒரு காலத்தை மீள் கண்டுபிடிப்புச்
Mill
34
ஒரு ஆய்வாளன் என்ற வகையில் எனக்கு ஒரு
காரணமாக இருந்தது என்னவென்றால்,
செய்துள்ளோம். V, ノ
கிழக்கு மாகாணத்திலும் தமிழ் தெரிந்த ஒரு தமிழ் இளைஞர் இயக் கம் ஒன்று வருகிறது. அது யாழி ப் பாணத தரி லி
எடுத்ததுபோல மறு மலர் ச் சி எண் ற வடிவத் தை எடுக் க
வில்லை. அந்த வரலாறு இன்னும் சரியாக எழுதப் படவில்லை. அந்தக் காலகட்டத்தில் கிழக்கில் எஸ். டி. சிவநாயகம், கமலநாதன், ராஜதுரை
ஞானம் - மே 2004
 
 

சிவநாயகம் , கமலநாதன் , ராஜதுரை போன்றவர்கள் எல்லோரும் வருகிறார்கள். சமஷ்டிக் கட்சிக்கு முதலில் இருந்த பேச் சாளர் களர் எ ல லோரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அங்குள் ள
வாசித்தபொழுது நான் ஒரு புதிய
செங்கை ஆழியான் - தான் நாவல் எழுதுகின்ற அந்த வேகத்தோடு அல்லது அந்த வேகத்துக்குச் சமமான ஒரு கடப்பாட்டு உணர்வோடு இந்த மறுமலர்ச்சிக் கதைகள் என்கிறவற்றை வெளியிலே கொணர்ந்தார். அவற்றை
உலகத்துக்குள் போகக் கூடியதாக
நிலைமைகள் காரணமாக அது
இருந்தது.
ஒரு திராவிடக் கருத்து நிலையோடு வருகிறது. பகுத்தறிவுவாதம் முதலியவை வருகினி றன. அதற்குள் ளால் வந்தவர் தான் காசி ஆனந்தன். பாரதிதாசனிடம் போய்விடுகிறார். அதிலிருந்து விடுபட்டு நின்றவர்கள் நீலாவணன் போன்றவர்கள்.
இந்த மறுமலர்ச்சி சஞ்சி கையின் வருகையும் , LD Qi மலர்ச்சியின் போக்கும் எனக்கு ஈழத்து இலக் கிய வரலாற்றில் ஒரு முக்கியமான கால கட்டமாகப் படுகிறது. இதனை நாங்கள் முன்னர் அழுத்திச் சொல்லவில்லை. ஆனால் இப்போதுள்ள நிலையில் பல்கலைக் கழகத்தில் செய்யவேண்டிய ஒரு ஆராய்ச்சிக்கான முழுத் தளத்தையும் செங்கை ஆழியான் செய்திருக்கிறார். இது சம்மந்தமாக யோகராசா போன்றவர்கள் பேசியிருக்கிறார்கள். தரவுகளுக்கு மேலே சென்று ஆழமாகப் பார்த்ததனால் இந்த வளர்ச் சி வந்தது. இப் படிச் சொல்வதன் மூலம் முற்போக்கு இலக்கியத்தினுடைய முக்கியத் துவத்தை நான் எந்தவகையிலும் குறைக் கவில்லை. மறுமலர்ச்சி என்கின்ற இயக்கம் யாழ்ப்பாணச் சூழலில் இலக்கிய ஜனநாயகத்
ஞானம் - மே 2004
தக்கான ஒரு விதையைத் தூவுகிறது. அதை வளர்க்க முனைகிறது. அந்த இலக் கிய ஜனநாயகத்தின் வழியாகத்தான் முற்போக்கு இலக்கிய இயக்கம் சமூக ஜனநாயகத்தைப் பேசுகிறது. மிக வன்மையாகப் பேசுகிறது. முற்போக்கு இலக்கியத்தை நான் குறைப் பதாகவோ அல்லது ë94 g560j60)L-UL முனைப் பைக் குறைப்பதாகவோ கருதக் கூடாது. ஆனால் இந்த வரலாற்றில் இந்த மறுமலர்ச்சி என்கிற கட்டம் மிக முக்கியமானது. ஏன் வரதரும் சொக்கனும் எங்களோடு நின்றார்கள், அங்கால் போக வில்லை? முற்போக் காளர்கள் கூட்டத்தில் முட்டை அடித்த பின்பு, சொக்கனுக்கு இடமாற்றம் வந்தது. அந்தக் கஷ்டங்களோடும் அவர்கள் எங்களோடு நின்றார்கள். காரணம் அவர்கள் மறுமலர்ச்சி இயக்கத்தோடும் சம்பந்தப் பட்டவர்கள். இதனைத் துரதிஷ்ட வசமாக அவர்கள் சொல்லவில்லை. நாங்கள் பார்க்கிற போது எங்களுக்குத் தெரிகிறது. அந்த அளவில் மறுமலர்ச்சி இயக்கம் எங்களுடைய வளர்ச்சிக் கட்டங்களில் மிக முக்கியமானது. எங்களுடைய ஈழத்தின் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அது ஒரு பிரதான கட்டம்.
(இன்னும் வரும் . )
35

Page 20
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை மனோகரன்
சாதனை வீரர்
விளையாட்டுத்துறையில் பெரிதாகஆர்வம் எதுவும்’ எனக்குக் கிடையாது. கலை, இலக்கியத்துறைகளிலேயே எனது ஆர்வம் அதிகம். ஆயினும், எத்துறையிலாயினும் சாதனை படைப்பவர்களை நான் மதிப்பதுண்டு. அண்மையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் பிரையன் லாரா இங்கிலாந்துக்கு எதிரான கிறிக்கெற் போட்டியில் ஆட்டமிழக்காது நானுாறு ஓட்டங்களை எடுத்து உலக சாதனையை நிகழ்த்தியமை பாராட்டுக்குரியது. மேற்கிந்தியத் தீவுகளின் கன்டாரா என்ற சிறிய கிராமத்தில் பிறந்த லாரா, சிறுவயதில் தென்னைமர மட்டைகளில் துடுப்பாட்டம் பயின்று கிரிக்கெற் துறையில் தம்மை வளர்த்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவராகி, 1994இல் முந்நூற்று எழுபத்தைந்து ஓட்டங்களைப்பெற்றுச் சாதனையாளரானார். 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அவரின் சாதனையை, முந்நூற்று எண்பது ஓட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹைடன் முறியடித்தார். ஹைடனின் சாதனையை சிலமாதங்களிலேயே முறியடித்துச் சாதனை நிகழ்த்தியுள்ளார் லாரா. சாதனை வீரர் பிறையன் லாரா, தமது பெயரைத் தவிர்த்துவிட்டு உலகக் கிரிக்கெற் வரலாற்றை எழுதமுடியாத நிலையை ஏற்படுத்திவிட்டார்.
புதிய கொட்டகைக் கூத்து
கொட்டகைக் கூத்துக்கான நடிகர்களின் தேர்வு ஒருவாறு முடிந்துள்ளது. ஆட்டம் போடுவதற்கு பல்வேறு நாடகக் கம்பனிகள் தயாராக உள்ளன. இம்முறை பெரிய நாடகக் கம்பனிகள் இரண்டிற்கும் நடிகர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. அதனால், பிரதான ஆட் டக் காரக் குழு பிறநாடகக் கம்பனிகளிலிருந்தும் ஆதரவைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நீலச் சிவப்புச் சாயம் பூசிய நாடகக் கம்பனி நாடகத்தை நடத்தும் வாய்ப் பைப் பெற்றிருக்கிறது. பல்வேறு அவசர வாக்குறுதி களாலும், சமாதானக் கதை - வசனம் பற்றிய திரிவுபடுத்திய பிரசாரத்தினாலும், ரசிகர்களைப் பெரிதும் கவலைப்படுத்திய விலைவாசி ஏற்றம், உரம், நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்திய கடும் வரட்சி முதலானவற்றினாலும் ஒரு நாடகக் கம்பனியை ரசிகர்கள் பெரிதும் விரும்பி வரவேற்றுள்ளனர். மறுபுறத்தில்
36 ஞானம் - மே 2004
 

யானைப் பாகர்கள் நிரம்பிய நாடகக் கம் பணி சமாதானக் கதை - வசனத்தைக் கச்சிதமாகக் கையாளத் தெரியாத கையாலாகாத் தன்மை, யுத்த காண்டத்தை நிறுத்துவதில் தாம் மேற் கொணி ட முயற்சிகளைச் சாதாரண சிங்கள ரசிகர்களும் புரிந்துகொள்ளத்தக்க முறையில் கிராம மேடைகளுக்குக் கொண்டு செல் லாமை, ரசிகர் களைப் பொதுவாக துன்பப் படுத்திய சோகக் காட் சிகளைத் தவிர்ப்பதற்கு முயலாமை யானைப்பாகர்கள் சிலர் ஊழல் சக் கரவர் த் திகளாகப் பாத்திரமேற்ற நிலை முதலியவைகள் அந்நாடகக் கம்பனியைப் பெரிதும் பாதித்துவிட்டன. தமிழ், முஸ்லிம் ரசிகர் களின் ஆதரவு இல் லா திருந்தால், அந்த நாடகக் கம்பனியை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
கொட்டகைக் கூத்தை நடத் துவதற்குப் பிரதான ஆட்டக் காரரைத் தெரிவு செய்வதில், நடிகர்கள் தேர்வில் வெற்றிபெற்ற நாடகக் கம்பனிக்குப் பெரும் பிரச்சினைகள்
ஏற்பட்டன. கோட்டுச் சூட்டுக் கழற்றாத நாடக நடிகர், தமக்குப் பிரதான ஆட்டக்காரர் பாத்திரம்
கிடைக்குமென நாவைச் சப்புக் கொட்டிக்கொண்டிருந்தபோதிலும், பேரினவாத ஆட்டக்காரர்களும் அவர் களை ஆசீர் வதிக் கும் குருக்கள்மாரும் அதனை விரும்ப வில்லை. திறமை உள்ளவரும், குருக் கள் மாரின் மனமார் நீத ஆசியைப் பெற்றவருமான நடிகர் பிரதான ஆட்டக்காரராகப் பாத்திரம் ஏற்றுள்ளார். கோட்டுச் சூட்டுக் கழற் றாத நாடக நடிகர் இப் போதாவது தமது நாடகக் கம்பனியில்
ஞானம் - மே 2004
உள்ள பேரினவாத ரசிகர்களைப் புரிந்துகொண்டிருக்கக் கூடும் . ஆயினும் , செஞ்சோற்றுக் கடன் மறவாத கர்ணன் பாத்திரத்தை பவ்வியமாக ஏற்றிருக்கும் அந்தக் கூத்தாடி இவற்றைப் பொருட் படுத்துவதில்லை.
நடிகர் தேர்வுக்கு முன்னர் கை கோர்த்துத் திரிந்த நீலச் சிவப்புச் சாயம் பூசியவர்கள் மத்தியில் தேர்வு முடிந்த பின்னர் பாத்திரத்தேர்வு தொடர்பான இழுபறிகள் ஏற்படத் தொடங்கி இதை எழுதுவது வரை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பற்பல கனவுகளோடு பழைய கூத்துக்கொட்டகையைக் கலைத்த பெரிய அண்ணாவிக்குத் தலைமீது கை வைத் துக் கொணி டு கதறி அழவேண்டும்போல இருக்கிறது. புதிய கூ த து க கொ ட ட  ைக க குள புதுவகையான நடிகர்களும் புகுந்து கொண்டுள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு எதிராக அதர்ம இராச்சிய நாடகக் கதைக் கருவை மேடை ஏற்றவே இவர்களது நாடகக் கம்பனி விருப்பம் கொணி டுள்ளது. பல காலமாக வெளியில் இருந்து நடித்துவந்த இவர்கள், இருப்புக்கொள்ளாமல், தமக்கு மிகவும் பிடித்த குருக்கள்மார் வேடத்தில் புதிய கொட்டகைக்குள் புகுந்துள்ளனர். நாட்டு ரசிகர்கள் நல்ல காட்சிகள் எதனையும் கண்டு ரசித்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். தாம் விரும்பும் முறையிலேயே கூத்தின் காட்சி யமைப்புகள் அமையவேண்டும் என்பதே இவர் களது விருப்பம். இவர் களை வெளியரி லரிரு ந து ஆட் டிவைக் கும் தாடிக் கார அண்ணாவி, பக்குவமாகத் தமது கடமையைச் செய்து கொண்டிருப்பார்.
37

Page 21
இதுவரை காலமும் சகல கொட்டகைக்கூத்துகளிலும் மந்திரி பிரதானி பாத்திரங்களையே ஏற்று நடித்துவந்த இரு நாடகக் கம்பனிக் காரர்களுக்கு, புதிய கொட்டகைக் கூத்தில் சாதாரண பாத்திரங்களை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மலைமீதும், கீழ்வானத்தின் தாழ் வாரத்திலும் தனித்தனியாகத் தமது நாடகக் கம்பனிகளை நடத்தும் இருசாராரும் காலப்போக்கில் மந்திரி பிரதானி பாத்திரங்களை ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மந்திரி பிரதானி பாத்திரங்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் இரு நாடகக் கம்பனிக்காரரும் தமது பாத்திரத்தேர்வுக்கு ஏற்றமுறையில் கதைக் கருவை மாற்றிக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்.
வடக்கு - கிழக்கைச் சேர்ந்த நாடகக் கம்பனிக்காரர்கள் தமிழ் ரசிகர்களின் ஆதரவோடு புதிய கொட் டகைக் கூத்துக் கென வந்துள்ளனர். இவர்கள் பாத்திரத் தேர்களில் ஆர்வம் காட்டாது கதைக் கருவிலேயே கவனஞ் செலுத்துவர் என்பது தமிழ் ரசிகர்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இதனிடையே சூரியன் உதிக்கும் திசையில் கடந்த ஒரு காலமாகத் தமிழ் ரசிகர்களை வேதனைப் படுத்திய வெளியரங்கு
(குறி
SX, . '. సిxళ.
was awa&:ww.ww
xxళకో:
38
(நூல் மதிப்புரை) }; புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை ஜஅனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். *, ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந் நூல் பற்றிய சிறு
ப்பு மாத்திரமே புதிய நூலகத்தில் இடம் பெறும்.
நிகழ்ச்சியொன்று கலைக் கப் பட்டுவிட்டது. இந்த வெளியரங்கு நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு உறுதுணையாகச் செயற்பட்டதில் வேட்டைக்காரர்களின் அதிபதிக்கும் முக்கிய பங்குண்டு என்று கலைஞர் வட்டாரங்களிற் பேசப்படுகிறது. வெளியரங்கில் நடைபெற்ற ஆட்ட நிகழ்ச்சியின் போது, ஆட் டக் காரர்களின் சலங் கையொலி சிறிதுகாலம் பேரினவாத ரசிகர் களையும் ஓரிரு தமிழ் நடிகர்களையும் பரவசப் படுத்தியது. ஆயினும் , அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆட்டம் ஓய்ந்துவிட்டதில் அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
புதிய கொட் டகைக் கூத்து நிகழ்ச்சிகளில் அயல்நாடு ஒன்றும் புதிய ஆர்வத்தோடு திரைமறைவில் பின்னணி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட அயல்நாடு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாது பார்வையாளராக மாத்திரம் இருந்தால் போதும் என்ற கருத்தே நிலவுகிறது. அது புதிய கூத்து நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டு ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடக்கூடாது என்பதே தமிழ் ரசிகர்களின் பிரார்த்தனை.
"స్వో" དར་ ༥༽ ཆོས་
V. ན་ ༣་ 德菱接
புத்தகக் களஞ்சியம் '%': '
5:... سے محور
EEELLrSLLSLLSLLSLLLLLLGLkrLCLGGGLGEGGrrLEccSBBSSSLHrrrLSGSkGGGS S CLCEECLEEcSLLMkCCGcLcreELcSLGSLLSS
ஞானம் - மே 2004
 
 
 
 
 
 

இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியம்
இலங்கைத் தமிழ் நூல் பதிப்பு முயற்சிகளை ஒழுங்கு படுத்தவும், வழிகாட்டவும் உதவும் வகையில் பதிப்பாளர் ஒன்றியம் ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பாய் கடந்த 14-3-2004 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வினோதன் கேட்போர் கூடத்தில் கூட்டம் ஒன்று பதிப்பாளர்கள், ஆசிரிய பதிப்பாளர்களால் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் "இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியம்” எனும் பெயரில் ஈழத்து தமிழ் நூல் பதிப்புத் துறையினை வளம்படுத்தும் நோக்கில் ஒன்றியம் ஒன்று ஊருவாக்கப்பட்டது
இலங்கை பதிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய பதிப்பாளர்களிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துதல், இலங்கைத் தமிழ்நூல் முயற்சிகளுக்கு தேசிய மட்டத்தில் தலைமைத்துவத்தினை வழங்குவதுடன் பதிப்பு மற்றும் விற்பனை தொடர்பாய்க் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்குத் தீர்வுகாணப்படும் முயற்சிகளில் ஈடுபடல், ஈழத்துத் தமிழ் நூல் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்குதல், ஈழத்துத் தமிழ் நூல் தொடர்பான முழுமையான தகவல் பேணும் அமைப்பாய் செயற்படல், பொதுவாய் இலங்கை சூழலில் “புத்தகப் பண்பாட்டை” மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடல் ஆகிய நோக்கங்களைக் கொண்டதாக இவ் ஒன்றியம் இயங்குவதெனவும் வருடாந்தம் ஈழத்து நூல் கண்காட்சி ஒன்றினை நாடளாவிய ரீதியில் நடத்துவதையும் நூல்விமர்சன காலாண்டிதழ் ஒன்றை வெளியிடுவதனையும் தனது ஆரம்ப செயற்திட்டங்களாகக் கொள்வதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பின்வருவோர் இவ் ஒன்றியத்தின் பதவி தாங்குநர்களாக இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர்:
காப்பாளர்கள்: உடுவை. எஸ்.தில்லைநடராஜா, ஜனாப் எஸ். எம். கமால்தீன், பேராசிரியர் சோ. சந்திரசேகரம், பேராசிரியர். சி. மெளனகுரு, திரு. தெ. ஈஸ்வரன், ஜனாப் ஹாசிம் உமர். தலைவர்: திரு பூ பூரீதரசிங், செயலாளார்:'திரு க. குமரன், பொருளாளர்: ஜனாப் ஜின்னாஹற் ஷரிபுத்தீன். உறுப்பினர்கள்: திருவாளர்கள். டொமினிக் ஜீவா, இராஜ ரீகாந்தன், சோ.தேவராஜா, வி.ராஜ்பிரசாத், அந்தனி ஜிவா, மேமன்கவி, சுதாராஜ், இரத்தினவேலோன், நா. சோமகாந்தன்.
ஒன்றியத்தின் தொடர்பு முகவரி: 340, செட்டியார்தெரு, கொழும்பு-11
வேண்டுகோள் தமிழ் மகள் ஆசிரியை மா. மங்களம்மாள், திருமதி நடேசையர் மீனாட்சி அம்மாள் ஆகியோரது படங்கள் எமது கல்வி ஆய்வு நிறுவனத்திற்குத் தேவைப்படுகிறது. வைத்திருப்போர் படங்களைத் தந்து உதவவும். பாவனையின் பின் திருப்பி அனுப்பிவைப்போம் - நூலக ஆசிரியர், பெண்கள் கல்வி ஆய்வு நிலையம், இல. 58,தர்மராம வீதி, கொழும்பு -06 (தொலைபேசி: 2595296)
ஞானம் - மே 2004 39.

Page 22
முறிந்து தொங்கும்நட்பின் ஞாபகம்
- தானா. விஷ்ணு
இழந்து போன எனது வீட்டுச் சுவரில் உன் நினைவாக ஒரு பல்லி ஒட்டிக் கொண்டே இருக்கிறது.
வளமான என் வாழ்வுடன்
பற்றிக் கொண்டிருக்கும் சோகத்திலும் உன் ஞாபகம் ஊறிக் கொண்டே இருக்கிறது.
யதார்த்தம் அறுந்து போன ஒரு கேள்வியுடன் நீ என்முன் முகம் நீட்டுகிறாய் உன் முகப்புள்ளியில் இருந்து விலகி உன்னில் இருந்து தொடர்பு அறுத்துப்போய் Λ விழுகிறேன் ஒரு வெளிச்சம் அற்றுப்போன புள்ளியின் மீது
சொல் நீ எந்தன் விம்பத்தை இரு கூறாக்கி எதற்காய் ஒரு பூச்சிய வெளியில் தொங்க வைத்திருக்கிறாய்
நிஜங்கள் இல்லாதுபோன உனது மனக்குறிப்பை எதற்காய் அடிக்கடி எனக்கு அவிழ்த்துப் போடுகிறாய் போ, தூரம் போ
என்னில் இருந்து உன்னை விலக்கி
இழந்து போய்க் கிடக்கும் என் வீட்டுச் சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பல்லி
உன்னை ஞாபகமூட்டுவது எனக்குப் போதுமானது.
40 ஞானம் - மே 2004
 

கேள்வி ஞானம் ఢ
○
-இலக்கியன் பதில்கர் శిక్ట
கேள்வி : ஞானம் 44 ஆவது இதழில், கம்பவாரிதியின் சிறுகதை 12 பக்கங்களை எடுத்துவிட்டது. வசனநடையிலும் புதுமையில்லை. சிறுசஞ்சிகையில் இப்படிப் பக்கங்களை வீணாக்குவது கட்டுப்படியாகுமா? எனக் கேட்டுள்ளாரே மாவை வரோதயன்! த. மகேஸ்வரன், கண்டி, பதில் இதேபோன்ற கருத்தினை கிழக்கிலிருந்து வாகரைவாணனும் எழுதியிருந்தார் - கம்பவாரிதியின் பிரபலத்தைக் கருதியா அதிகபக்கங்களை ஒதுக்குகிறீர்கள் எனக்கேட்டிருந்தார். இவர்களது கருத்துக்கள் பற்றிய சரி, பிழை விமர்சனங்கள் போன்றவற்றிற்கு அப்பால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் உள்ளன.
முதலாவதாக, கம்பவாரிதியின் ஆக்கங்கள் வாசகர்களால் ஆர்வமுடன் வாசிக்கப்படுகின்றன. எவற்றை வாசிக்காமல் விட்டாலும் கம்பவாரிதியின் ஆக்கம் என்றவுடன் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
இரண்டாவதாக, அவரது ஆக்கங்கள் வாதப்பிரதிவாதங்களை விமர்சனங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றால் இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுகின்றது. மூன்றாவதாக கம்பவாரிதியின் ஆக்கங்கள் வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் மறுபிரசுரம் செய்யப்பட்டு உலகளாவிய ரீதியில் பரம்பல் பெறுகின்றன. இது அவரது ஆக்கங்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. மேற்கூறியவற்றைக் கருத்திற் கொண்டே கம்பவாரிதியின் ஆக்கங்கள் ஞானத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. சிறுசஞ்சிகைச் சூழலுக்கு இவையெல்லாம் முக்கியமானவை. முன்னர் சிறுசஞ்சிகைகள் நடத்திய கலைச்செல்வி - சிற்பி அவர்களும் மறுமலர்ச்சி - வரதர் அவர்களும் கம்பவாரிதியின் வசனநடை, ஆக்கத்திறன் ஆகியவை பற்றி இதழ் 42, 43இல் 'வாசகர் பேசுகிறார் பகுதியில் எழுதிய பகுதியையும் பார்க்கவும்.
கேள்வி : தேர்தல் முடிவுகள் பற்றி . 2
ந. பரசுராமன், நாவலப்பிட்டி, பதில்:அப்பத்திற்காய்ச்சண்டைபிடித்தபூனைகள்,குரங்கின் கையில் அதை ஒப்படைத்துள்ளன. அப்பந்தான் நாடு பூனைகளும், குரங்கும் யார் யாரென நீங்களே ஊகியுங்கள்.
கேள்வி : தி ஜானகிராமன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் வரிசையில் இடம்பெறக்கூடிய எழுத்தாளர்கள் நம் நாட்டில் தோன்றாதது ஏன்?
கந்தவனம் பிரபாளினி, சாவகச்சேரி
ஞானம் - மே 2004 4.

Page 23
பதில் : ஆழமான புலமை, பழைய இலக்கியங்களில் பயிற்சி, நம் பண்பாட்டுத் தடங்களில் தெளிவு, சுயசிந்தனை, அற்புதமான வெளிப்பாட்டுத் திறன், தன்னம்பிக்கை, புலமைச் செருக்கு, புரட்சி மனப்பான்மை, இவற்றோடு மற்றவர்களை அட்ஜஸ்ட் பண்ண நினையாத நிமிர்வு என்பவைதான் நீங்கள் சொன்ன எழுத்தாளர்களின் தனித்தன்மைக்குக் காரணம் என்னால் இவ்வளவுந்தான் சொல்லமுடியும். உங்கள் கேள்விக்கான பதில் இதற்குள் இருக்கிறதா? என்று தேடுங்கள். உங்கள் கேள்வியை அடிப்படையாய்க் கொண்டு ஞானத்தில் வெளிவந்த கிளாக்கர் புத்தி என்ற கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைக் கண்டபிறகும், மேற்சொன்ன கேள்விக்கு வெளிப்படையாய் பதில் சொல்ல எனக்குப் பைத்தியமா? என்ன.
கேள்வி நம் நாட்டில் ஆக்ககர்த்தாக்களைவிட, விமர்சகர்கள் அதிகம் மதிக்கப்படுகிறார்களே! இது சரியா?
க. இராசையா, கொழும்பு பதில் சரியா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். விமர்சகர்கள் தருகிற முன்னுரையில்தான், தங்கள் ஆக்கத்தின் வெற்றி இருக்கிறது என்று நினைக்கும் ஆக்ககர்த்தாக்கள் இருக்கும்வரைக்கும், இந்நிலை தொடரத்தான் செய்யும்.
விமர்சகர்கள் காட்டுகிற இலக்கியத் தத்துவப் பூஞ்சாண்டிகளைக் கண்டு மிரண்டு, அவற்றைத் தாம் விளங்கிக் கொண்டதாகவும், தம் ஆக்கங்களும் அதனடிப்படையில்தான் வந்தவை என்றும், பித்தலாட்டம் செய்யும் பொய்ம்மையாக்க கர்த்தாக்கள் இருக்கும் வரைக்கும் இந்நிலை தொடரத்தான் செய்யும்.
தம்மிடம் இருப்பது கழுதை என்று சொல்லும் துணிவில்லாமல், குதிரை என்றால்தான் அதற்கு மதிப்பென விமர்சகர் சொல்வதை நம்பிதம் கழுதைக்குக் குதிரையெனப் பெயரிட்டு பொய்யாய் மகிழும் ஆக்க கர்த்தாக்கள் இருக்குமட்டும் இந்நிலை தொடரத்தான் செய்யும்
மக்கள் மத்தியில் தம் ஆக்கங்கள் மாற்றம் செய்கிறதோ? இல்லையோ? பல்கலைக்கழக ஆய்வுகளில் தம் பெயர் பதிவானால் போதுமென நினைக்கும் ஆக்ககர்த்தாக்கள் இருக்குமட்டும் இந்நிலை தொடரத்தான் செய்யும்.
இத்தகைய ஆக்க கர்த்தாக்களைப் பார்க்கும்போது, ஆயிரம் மனிதப்பலமிருந்தும் அது தெரியாமல், ஒரு மனிதன் கையில் வைத்திருக்கும் அங்குசத்திற்குப் பயந்து, மிருகக் காட்சிச் சாலையில் அடைபட்டு, வித்தைகாட்டும் யானைதான் என் நினைவிற்கு வரும். யானை மிரண்டால்பாகனாவது? அங்குசமாவது? அத்தனையும்பறக்கவேண்டியதுதான். தன் பலமறியா யானைகள் இருக்கும் வரைக்கும் பாகனுக்கும், அங்குசத்துக்கும் மதிப்பிருக்கத்தான் செய்யும்
அந்தப் புரத்து அலிகள் - இது விமர்சகர்கள் பற்றி மேற்கு நாட்டு அறிஞர் ஒருவரின் கருத்து. இக்கூற்றில் அவ்வறிஞரின் மிக நுட்பமான நையாண்டி வெளிப்படுகிறது. அந்தப்புரத்தில், பட்டத்தரசிகளின் கற்பினைக் காவல்செய்ய அலிகள் நியமிக்கப்படுவார்களம் அந்தப்புரத்தில் நடப்பவையெல்லாம் அவ் அலிகளுக்குத் தெரியும். ஆனால், பாவம் அவர்களால் அதில் ஒன்றைத்தானும் செய்ய முடியாது. கிண்டல் என்றால் இதுவல்லவோ கிண்டல்
கேள்வி : ஞானம் முற்போக்கை ஆதரிக்குமா? பிற்போக்கை ஆதரிக்குமா?
எம். நளிம், புத்தளம்
பதில் : உண்மையை ஆதரிக்கும்.
42 ஞானம் - மே 2004

இலக்கிய வானில் பிரகாசித்த நட்சத்திரம் உதிர்ந்து விட்டது!
உணர்வு பூர்வமாக என்னை நேசிக்கும் நண்பனாக, முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் என்னுடன் இணைந்து செயற்பட்ட இனிய தோழனாக எம்மத்தியில் சுறுசுறுப்பாக-எமது ஊக்கசக்தியாக விளங்கிய ராஜழரீகாந்தன் அவர்களின் மறைவினால் ஏற்பட்ட | அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீண்டுகொள்ள: முடியவில்லை. முப்பத்தைந்து வருடமாக அவருடன் பழகிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எண்ணி எண்ணி, எனது மனம் வெம்புகிறது.
அவருக்குச் சுகமில்லை எனக் கேள்வியுற்று அவரைப் பார்க்க நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, நான் மீண்டும் சுகவீனத்தின் கோரப்பிடியில் சிக்கிவிடக் கூடாதே என அக்கறைப் பட்டாரே தவிர தன்னைப் பற்றிக் கவலைப்படவேயில்லை!என்ன அற்புதப்பிறவி அவர்
எழுதுவது, சக எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து உற்சாகப்படுத்தும் வகையில் பாராட்டிப் பேசுவது மொழி பெயர்ப்பு வேலைகளில் மூழ்கி விடுவதென அண்மைக்காலத்தில்சுறுசுறுப்பாகஇயங்கிவந்தமனிதநேயவாதிஇன்றும் எம்முடன் இல்லை!என் மனம் நம்பவேமறுக்கிறது!
சித்திரைப் புத்தாண்டு உதயவேளை, தொலைபேசியூடாக வாழ்த்துத் தெரிவித்து என் துணைவி பத்மாவின் 'ஈழத்து மாண்புறு மகளிர்நூலைப் படித்து முடித்து அதன் சிறப்பை வானளவுக்கு புகழ்ந்து பாராட்டிய அந்த இனிய உற்சாகக் குரலை இனிநாம் கேட்க முடியாது! என்மனம்நம்பமறுக்கிறது.
வதிரிப்பெரியார் சூரன் அவர்களின் ஆக்கங்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய முகவுரையையும் தனது பதிப்புரையையும் பத்துநாட்களுக்கு முன் கொண்டு வந்துதந்து, என்னுடன் கலந்துரையாடிச் சென்ற அந்த இனியவனை - சித்திரைப் புதுவருஷம் கழித்து மகளுடன் விருந்துக்கு வருவதாகக் கூறிச்சென்ற,என்மனதின் ராஜசிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்ராஜழரீகாந்தன்இனிவரவேமாட்டார்எனஎண்ணும்போதுமனம் கதறித்துடிக்கிறது.
தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் பதவியில் இருந்தபோது, ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறை புதிய எழுத்தாளர்களுக்கு அளித்த ஊக்கம், மூத்த எழுத்தாளர்களை நேரில் சந்தித்து மீண்டும் இலக்கிய உலகுக்கு இழுத்து வந்து எழுத வைத்த கெட்டித்தனம் முதலியவற்றால் பேராசிரியர் கைலாசபதிக்குப்பிறகு அப்பதவிபெருமை பெற்றதாக விளங்கியது.
அன்புத் தம்பி ராஜ்! நீ இன்று இல்லை என்பது நிஜம். ஆனால்என்றும் உமது புன்முறுவல்பூத்த முகம்,நீதிக்காக எதிர்த்துப் போராடும் உமது உறுதி பரிசுகள் பல பெற்ற உமது எழுத்துக்கள், பக்கஞ் சாராத் தன்மை, சுறுசுறுப்பான செயற்பாடுகள், ! இதமான உற்சாக வார்த்தைகள்,பணிவும் இனிமையும் கொண்ட சுபாவம் முதலிய பண்புகள் என்றும் எம்மோடுவாழும்,வழிகாட்டும்!
22. O4.2OO4 என். சோமகாந்தன்
ஞானம் - மே 2004 43

Page 24
மூன்றாவது
گیجی
கும்மிருட்டுல தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு இப்ப எனக்கு விளங்குது. மனுஷ வாசமே இல்லாம இந்த கொஞ்ச நாளா நா பட்ற அவஸ்த சொல்லிமாளாது. ரா, பகலு வித்தியாசமே தெரியாம, ஒரு மூலையில செவுத்துக்கு சாஞ்சி, இப்ப அம்மய் வரும், இப்ப அம்மய் வருன்னு, காத்திருந்து, காத்திருந்து சலிச்சி போயிருச்சி.
எனக்கிருந்த ஒரே ஒறவு அம்மய் மட்டும்தான். அம்மய்க்கும் அப்படி தா. ஒறவுன்னா, அவளுக்கு நா இல்லாம ஏலாது. வெளில போறதுல இருந்து, அவ எங்க போறதுன்னாலும் என்னுரட்டு ஒதவி வேணும். அம்மய் . அவ இல்லாம, இந்த காம்பராவே இருட்டடஞ்சி, பாழடஞ்சி போய், தனியா நாபட்ற வேதனை எனக்கு மட்டும்தா தெரியும். அவளோட நா கழிச்ச நாட்கள் ஏ நினைவுகள்ள இருந்து எப்பயுமே அகலாதவை. ஒரு ஊன்று கோலாய் கிட்டத்தட்ட ஐந்தாறு வருட காலமாய், அம்மய் கூட வாழ்ந்து சேவ
செஞ்சிருக்கே.
கருப்பையா, கருப்பையான்னு ஒரு ஆளு இருந்தாரு. அந்த ஆளுதா
அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி, என்னய அம்மய்கிட்ட கொண்ணாந்து சேர்த்தாரு மனித சஞ்சாரங்களிலிருந்து விலகி, ஒரு உயிரற்ற ஜடமாய் வாழ்ந்து கொண்டிருந்த என்னை, கருப்பையா, மனிதர்கள் நடமாடும், உறவுகள் உலவும், இந்த வீட்டுக்குகொண்டுவந்து சேர்த்தார்.
44
சிறுகதை
/கால் - சுதர்மமகாராஜன்
முதன்முதலாய் அம்மய்யை நான் கண்டது, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, முற்றத்தில் காயப்போட்டிருந்த செத்தல்களை கொத்தவரும் கோழிகளை, குச்சி கொண்டு விரட்டும், உயிர்கள் மீது இரக்கமற்ற ஒரு மனுஷியாய்த்தான்.
அடியே அந்த கோழிய வெரட்டு இல்லன்னா தாச்சிக்குத்தான் போகும்’ என்று கோழிகளின் உயிர்களுக்கு கர்ஜனை விட்டுக் கொண்டிருக்கும் போதுதான் கருப்பையா என்னுடன் வீட்டு முற்றத்தில் நின்றார். தலைமுடி நரைக்காத, சுருக்கங்கள் விழுந்த முகத்துடன், கூனியபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தவளை பார்த்தபோது, இவளொரு பொல்லாத மனுஷியாக இருப்பாளென்று தோணிச்சுது.
கருப்பையாவிடமிருந்து என்னை வேண்டா வெறுப்பாகக் கையிலெடுத்துப் பார்த்தவள், "இதென்ன தடிடா” என்று திண்ணையில ஒரு பக்கமா வீசி யெறிஞ்சப்போ, அவளப்பத்தி எனக் கிருந்த எண்ணம் ஊர்ஜிதமாச்சி.
கிட்டத்தட்ட அன்னைக்கு நாள் முழுக்க, நா அநாதரவா திண்ணை யோரமா விழுந்து கெடந்தே. என்ன நினைச்சாளோ ஏது நினைச்சாளோ தெரியல, அம்மய், திண்ணையிலயிருந்து என்னயெடுத்து, அவளோட ஊன்று கோலாய் நிறுத்திப்பார்த்தா. அன்னைல
ஞானம் - மே 2004
 

இருந்து அம்மயின் மூன்றாவது காலாய் நா சேவையாத்த தொடங்கினேன். ஆரம்பத்துல பொல்லாத மனுஷியா விளங்கின அம்மய், போகப் போக எவ்வளவு புலப்பட தொடங்கிச்சி.
அம்மய்க்குன்னு, ஒரு காம்பரா, இந்த வீட்ல ஒதுக்கியிருச்சி. ஒரு நாளின் அதிகமான நேரங்கள, அவ அதுக் குள்ளதான் கழிச்சா. காலைப்பொழுதுல மட்டும் திண்ணையில குந்தி வெயில் காய்வா. காலை வெயில்ல, கூத காயிறது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். நானும் அவளோட பக்கத்துல நின்னுக்குன்னு அம்மய்க்குத் துணையா இருப்பேன். இந்த வீட்லடாசன்’னு ஒரு நாய் இருக்கு. அதுக்கு அம்மய்னா ரொம்ப உசுரு போல, காலடியிலேயே
நல்லவன்னு
எப்பவும் சுருண்டு படுத்திருக்கும். அம்மய் பாசமா அதோட தலைய தடவைல எனக்குப்
அம்மய்ட
பொறாமையா இருக்கும். என்னையும் அப்படி தடவ மாட்டாளான்னு ஏங்குவேன். இந்த வீட்ல, அம்மய்க்குச் சாப்பாடு கொடுக்கிறது, குளிப்பாட்றதுல இருந்த மத்த வேலையெல்லாம் செய்றது, அவளோட மகவயித்து, மூத்த பேத்தி சுபத்ராதான். சுபத்ரா ஒல்லியா, ஒசரமா இருப்பா. குடிகாரன். அவ மூணு புள்ளைகளையும் வச்சுக்கிட்டு, குடிகாரப் புருஷனையும் சமாளிச்சு கிட்டு, அம்மய்யையும் கவனிக்கிறத பார்த்தா, பாவமா இருக்கும், “இவளோ கஷ்ட பட்றாளேன்னு" ஆனா, சில நேரம் அம்மய்யை கண்ட மாதிரி ஏசுவா. அந்த நேரம் மட்டும் அவமேல எரிச்சல் எரிச்சலா வரும்.
அவ புருஷன் மொடா
ஞானம் - மே 2004
ஆரம்பத்துல அம்மய், அவவேலைகள், கொஞ்சம் கொஞ்சமா அவளாவேதான், செஞ்சுகிட்டா. ஆனா போகப்போக அவளுக்கு ரொம்ப முடியாமப் போய், ஒரே இடத்துல மொடங்கி பொய்ட்டா.
கடைசி ஒரு வருஷமா அம்மய் படுத்த படுக்கையா இந்தக் காம்பராவுள்ளுக்கே தான் காலத்த கழிச்சா. வெளிக்கிக் கூட போக முடியாமகஷ்டப்பட்டா. சில நாட்கள்ள திடீர்ன்னு ஒரு கையால என்னைய பிடிச்சிகிட்டு, மறுகையால செவுத்த பிடிச்சிக்கிட்டு மெது மெதுவா வெளில போவா. ஆனா வாசபடியிலேயே ஒன்னுக்கு இருந்துருவா. பிறகு அத மறைக்க அவ பட்றபாடு, நா ஒதவி செய்ய இயலாதவனா பார்த்துகிட்டு இருப்பேன். சாக்க இழுத்து போடுவா, இல்லன்னா அவளோட பழைய சீலையால தொடப்பா. தொடச்ச சீலைய ஒரு மூலையில வீசுவா. தப்பித்தவறி, இத வீட்ல யாரும்பார்த்துட்டா, “கெழட்டு சனியே, மூத்திரம் பேய வெளிய போனா என்னா, வீட்டையே நாறடிக்கிற” ன்னு ஏச்சுவிழும். அம்மய் தன் தவறு புரிந்தவளாய் கூனிக்குறுகும் போது, நானும் குறுகி விடுவேன். சுபத்திரா எவ்வளவு ஏசினாலும், ஏசி, ஏசியே எல்லாத்தையும் சுத்தப்படுத்துவா. ஆனா அவ புருஷன் தான் குடிச்சிட்டு வந்து ஒன்னு சத்தம் போடுவான்.
"அடியே இந்த கெழவிய வீட்ட விட்டு வெரட்டு, வீடே நாறுது’ன்னு, ஊரே கேக்க கத்தி சண்டை போடுவான். இதெல்லாம் கேட்டு, அம்மய் தன் இயலாமைனாலும், தன்னை மீறி நடக்கும் செயல்களினாலும் வெட்கத்தினாலும், கூனிக் குறுகுவாள். சில நேரம், நான் நினைப்பதுண்டு, அவளது கூன்,
45

Page 25
ஆரம்பத்தில் பார்த்தத விட இப்ப அதிகரிச்சி இருக்கிறது இப்படி ஏச்சு கேட்டதால தான்னு.
அம்மய் காம்பராவுள்ளுக்கே ஒன்னுக் கிருக்கவும், மலம் கழிக்கவும் செய்றதால அவளோட சாப்பாட்டின் அளவு போகப் போக கொறஞ்சிகிட்டே வந்திச்சி. ஆனா அம்மய்க்கு சிறுபிள்ளை மாதிரி ஏதாவது
வாய்ல போட்டு கொறிச்சிகிட்டே இருக்கணும்.
இப்படித்தான் ஒருநள்ளிரவு அம்மய்க்கு
படுக்கைய விட்டு மெதுவா எழுப்பினவ, என்னையும் ஊனி, ஊனி மறுகையால செவுத்த பிடிச்சிக்கிட்டே சத்தமில்லாது, குசினிக்கு வந்து சட்டி யெல்லாம் தொறந்து பார்த்தா. ஆனாசாப்பிட எதுவுமே இல்ல. குசினி மூலையில் ஒரு பெரிய பானைல அரிசி இருந்திச்சி ஒரு புடி அரிசியெடுத்து வாயில போட்டு கொறிக்கத் தொடங்கினா. அன்னைக்கு ஆரம்பிச்ச அரிசி திங்கிற பழக்கம், களவுல அரிசிய அள்ளி இடுப்புல சொருகி வச்சிக்கிட்டு,
அம்மய்க்கு கறுத்தமுடி மாதிரியே, பல்லு நல்ல உறுதி. அந்தக் காலத்துச் சாப்பாட்டின் மகிமைன்னு எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க. அரிசி திங்கிற பழக்கம் ஒருநாள் சுபத்திராகிட்ட மாட்டிருச்சு. அன்றையோட அம்மய்க்கு அரிசியும் இல்லாம போயிருச்சி.
செவுத்துல சாஞ்சி, கால நீட்டியபடி நெலத்தில ஒக்காந்து, ஏதாவது கொறிச்சிகிட்டு இருக்கிறதுன்னா, அம்மய்க்கு ரொம்பப் பிடிக்கும். அவ கால்களுக்குச் சமாந்தரமா, தள்ளி நெலத்துல படுத்துகிட்டு பார்த்துகிட்டே இருப்பேன்.
46
ரொம்பப் பசிபோல.
அவ முகத்துல இருக்கும் சுருக் கங்களில் தேங்கிக் கெடக்கும் ஏக்கங்கள, அவ தனக்குள்ளேயே பேசிக்குவா. அம்மய்ட ஒரே மக வடிவு. அவ தன் மகனோட படிப்புக்காக வேறொரு ஊர்ல இருக்கா. அஞ்சாறு மாசத்துக்கு ஒருக்கா அம்மய்ய பார்க்க வருவா. அம்மய் அவமேல உசுரயே வச்சிருந்தா. தன் மக வந்தா அம்மயின் முகம் சந்தோஷத்துல பிரகாசிக்கும். கண்ணுல இருந்து கண்ணிர் பொலபொலன்னு கொட்டும். அது சந்தோஷத்துலயா, இல்ல துக்கத்துலயான்னு புரியாம தடுமாறுவேன். அடுத்ததாக அம்மய்க்கு ரொம்பப் பிடிச்ச மனுஷ உசுரு, வடிவோட மகன் தொர. தொர பெரிய காலேஜ்ல படிக்கிறான். தன் பேரன் தன்னப் பார்க்க வரமாட்டானான்னு அம்மய் ஏங்கிகிட்டே இருப்பா. தொர லீவுக்கோ, இல்லாட்டி விஷேச நாட்களுக்கோதான் இந்த வீட்டுக்கு வருவான்.
அவன் வந்துட்டா போதும், அம்மய்க்கு கொண்டாட்டம்தான். பேரனக்கிட்ட எடுத்து, நடுங்கும் தன் இரு கைகளாலும் அணைச்சி முத்தம் கொடுப்பா.
“என்னடா
இவ்வளவு எலச்சிப்
பொய்ட்ட’ன்னு அவன் நலத்துல அக்கறைப்படுவா.
அம்மய்க்கு of F மாசம்
அரசாங்கத்தால புண்ணிய சம்பளம் கெடச்சிச்சி. அந்த பணத்த அப்படியே தன் இடுப்புல முடிச்சி வச்சிருந்து, தொர வந்தா “செலவுக்கு வச்சுக்க’ன்னு, அவன் கையில திணிப்பா.
தனக்குள் இருக்கும் குமுறல்களையும், ஏக்கங்களையும், அவ தொரகிட்ட சொல்ல எத்தனிக்கும் போதெல்லாம், அவன் அதை அலட்சியப்
மனக்
ஞானம் - மே 2004

படுத்தி விலகி, விலகி போகும்போது அவன் மீது எனக்குக் கோபம் கோபமா வரும். அம்மய் அவன் மேல எவ்வளவு பிரியம்னு எனக்குத் தெரியும். ஆனா அவன் அம்மய்க்குன்னு ஊர்ல இருந்து
எதுவுமே ஆசையா வாங்கியாந்து கொடுத்தது இல்ல.
வடிவோ, தொரயோ வந்துட்டு
போனபின் அம்மய் பல நாட்கள் அவர்கள் நினைவுகளிலேயே, சாப்பிடாது காலம் கழித்ததுண்டு. எந்நேரமும் ஏதாவது கொறித்துக் கொண்டிருப்பவள், இப்படி இருப்பதைப் பார்த்து நா ஆச்சரியப் பட்டிருக்கே.
மாசத்துக்கு மூணு நாலு தடவை தான் அம்மய் குளிக்கும். ஆரம்பத்துல அம்மய்க்கு கெழமைல மூணு தடவ சுடுதண்ணில குளிக்கணும். ஆனா
ஞானம் - மே 2004
i_בש=שנת
Nܬ݂ܶܛܛ
போகப் போக அவ ஒடம்பு ஏலாமப் போனதால கெழமைக்கு ஒரு தடவ தா சுபத்திரா குளிப்பாட்டுவா.
இப்படித்தான் ஒரு நா குளிக்கைய, அம்மய்யோட ஒரு அடி போல நீண்டிருந்த கறுத்த முடிய, கத்தரியெடுத்து ஆம்பல பையனுங்க வெட்றத போல கட்டயா வெட்டியுட்டுட்டா. அம்மய் குளிக்கிறது கொறவுனால, அவ தலைல பேன் புழுத்திடுச்சாம். அதனாலதான் அப்படி செஞ்சேன்னு புருஷன்கிட்ட சொல்லிட்டு இருந்தா. முடிய கட்டையா வெட்டி, ஆம்புள பய மாதிரி, அம்மய் கூனிக்குறுகி ஒக்காந்து இருக்கைல பார்க்கப்பரிதாபமா இருக்கும்.
இருட்டு காம்புராவுல, கிழிஞ்ச பாய்ல, அம்மய் நாலா குறுகி படுத்திருக்கும் போது, நானும் அவளுக்கு சமாந்தரமாய்
47

Page 26
நெலத்துல படுத்திருப்பேன். கண்கள் மூடியபடியே, வாய் அவளது ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் அசைபோடும். அவளது நினைவுகளெல்லாம் தன் கடந்த கால வாழ்க்கையை மீட்டிப் பார்ப்பதைப் போல் முகச் சுருக்கங்கள் சுருங்கி விரியும். இடுப்புக்குக் கீழே சீலையால் சுற்றி மறைத்து, மேலுடம்பில துணியில்லாது, சுருங்கி வீரியமற்ற மார்புகளோடும், உடம்பில் தோள் சுருங்கி, செதில் செதிலா வெடித்திருக்கிறதப் பார்த்து என் மனசு பதறும். அம்மய் வரவர ரொம்பவும் ஏலாம பாயோடேயே ஒண்டிக்கிட்டா.
நானும் வேலையற்றவனா,
அவளோடயே நெலத்துல படுத்துகிட்டு
இருப்பேன். சிலநேரம் அவ மேல மொய்க்கிற ஈக்கள் வெரட்றதுக்காக என்னய தூக்கியெடுத்து தன் ஒடம்பயே தட்டிக்குவா.
தூங்கிக் கொண்
டிருந்தாலும் அவ கண்கள் மட்டும்
வடிவயோ, தொரயயோ எதிர்பார்த்து வாசலையே பார்த்துகிட்டு இருக்கும்.
ஒரு நா, அவ எதிர்பார்த்த படியே, வடிவு திடீர்ன்னு வந்தா. வடிவோட பேச்சுச் சத்தம் கேட்ட அம்மய்க்குத் தெம்பு வந்திரிச்சி. . வடிவு"ன்னு குரல் கொடுத்தா.
வடிவு, 'அம்மான்னு’ ராக்குள்ள வந்து அம்மய்ய கட்டி அம்மயின் கண்ல
ஒடனே
e
(6 والح6
காம்ப
அணைச்சுகிட்டா. இருந்து முந்தி மாதிரியே பொல பொலன்னு கண்ணிர் கொட்டிச்சி.
அம்மய் குடிக்கத் தண்ணி கேட்டா. படுத்திருந்த அவள ஒழுங்கா ஒக்கார வச்சி, என்னய வடிவு இந்த செவுத்துல சாத்துன்னா. அம்மய் தண்ணி
48
கேட்டதுக்கு, குடிக்கல. பதிலா வடிவ பார்த்துகிட்டு பொல பொலன்னு கண்ணிர் விட்டு அழுதா. அவ கண்கள் மேலயும், கீழயும் அலைஞ்சி, அலைஞ்சி திடீர்ன்னு நின்னுருச்சி.
கொஞ்ச நேரம், அந்த இடம் ரொம்ப அமைதியா இருந்துச்சி. அப்புறம், திடீர்ன்னு "ஐயோ அம்மா பொய் டியா'ன்னு வடிவு கதறினா. நான் பதறிப் பொய்ட்டேன். வடிவோட சுபத்ராவும் சேர்ந்து கத்துனா. எனக்கு ஒன்னுமே புரியாம அம்மய்ய பார்த்துகிட்டே இருந்தே. அந்தியானதும், அம்மய்ய அழகா, உடுப்பாட்டி வெளிய கொண்டு போனாங்க. என்னய யாரும் கண்டுக்கவே இல்ல. வெளியில வடிவு "அம்மா என்ன விட்டு பொய்ட்டியான்னு” கத்துற சத்தம் கேட்டிச்சி. ரெண்டு மூணு நாளா இந்த வீட்ல மனுஷ நடமாட்டம் அதிகமா இருந்திச்சி. தொர கூட வந்திருந்தான்போல, அவனோட பேச்சு குரல் கேட்டுச்சு.
ஆனா, என்ன மட்டும் யாருமே கண்டுக்கல. போகப் போக மனுஷ நடமாட்டம் கொறஞ்சி வீடே அமைதி யாயிருச்சி. பழையபடி சுபத்திரா, அவ புருஷன், புள்ளைகன்னு ஆயிருச்சி. நான் மட்டும் இந்த இருட்டுக் காம்பறாவுல இருந்துகிட்டு, அம்மய் வருவான்னு வாசலையே பார்த்துகிட்டு இருக்கேன். அவ வரவேயில்ல. ஆனா, அவ கை பிடிக்கிற என்னுடைய மேல் பிடியில, அம்மய்யோட உள்ளங்கை உஷ்ணம் மட்டும் இன்னும் இருந்துகிட்டே இருக்கு.
O O
ஞானம் - மே 2004

விண்ணில் எழுதல் - கல்வயல் வே. குமாரசாமி -
மண்ணில் எழுத மலர்ந்த தமிழ் இன்று கண்ணில் கவினாய்க் கவிகிறது
எண்ணில் இனி வருந்தேன் அன்பே நீ ஏங்காதே இன்பத் தனி விருந்து வைக்கும் தமிழ்
கவி அரங்கு செத்ததெனக் கப்சா விடுகின்ற G?afGof?Z56ofGaa) G?#Gö7qQ/ G#/if GgsGa07( ́uÖu) «35oռմայւb இதழிடையே ஊறும் இனிமை நுகர மது ஊற்றும் செந்தா மரை
உள்ளிகிடைத்தவிடம் பிள்ளை பெற நினைக்கும் கள்ளி என வா நீ கருதி னாய் - அள்ளி இறைக்கும் தமிழில் அமுதம் சொரிந்து நிறைக்கும் நிமிர்ந்த நிறை.
அகமும் புறமும் அழுக்கற்ற ஞான
Frá5 gpdžo áWIJáżsóbb ár, GoɔGO VG3F7f
g5695 G)/Go) U l uUV/7uÖ/ கண்ணே கடைக்கண் திற கவிதை முத்தை நீ எண்ணி எடு வைத்தேன் இதோ!
எங்கள் முதுசொம் இதுபோற் பிறிதில்லை தாங்கத் தமிழே தலைநிமிர
பொங்கும் புதுமைத் துறைமுகத்தில் பொன் இறக்கி ஏற்ற
DébëáJE UD/7 áF'GapudáÉS D/Titogpy.
U/TG)//760 454 q. U Ug/6 G) / G79PGüb gö932//75/3507 Go//7 ஆடை மாற்றும் புதுப் பெண்ணாய் eypG)/760U
கட்டி வந்து நின்றாய் நீ காண்பதற்குக் கண்ணில்லார் எட்டி நின்றார் отбодтбоотер ст/Р.
ஞானம் - மே 2004 49

Page 27
50
9/6037Googooz -9/A45p/7/f 9/gpégpaig/ GU/76077 u //7(b. திண்ணையிலே சின்னம்மா சிறுகிறா பெண்ணை வ7ைர்க்கத் தெரியாத பேயராம் எம்மை
இளக்காரம் தீர்ப்பேன் இனி
தொல்காப்பியத்தைச் ág, gooGo uuuopo G?øGö7gpvGu/7uĖvŬ iu GöGč5%7f7u/7/io U/7G)/(b, L/áFuU/To -9/GöGa)/7é5 4F/7545Good - (5/ic9/6}76rfo
FATTU JATOBS GM-Fučué6Görgp/Tzi சிக்குப் பிடித்த சிலர்.
p "Gol - ou Fil F(Ervá முட்டையிலே பேன் பார்த்துக் கொட்டாவி விட்டுவரும் கட்டம் அதை - விட்டுவிட்டுக், கட்டச்சிகரத்தைக் கைகொடுப்பாய் வாலிபமே எட்ட நிற்கலாமோ இணை.
மாலை மதகு அடியில் மங்கைமார் காண்பதற்குக் (25/76/7/25pg52Gb as Goa - G7Gö70p/ வேலை மினைக் கெட்டு நிற்கும் மிலேச்சரல்ல நாங்கள்
நினைக்கட்டும் நீ வா நிறு.
விண்ணில் எழுதல், விசும்பு கிழித்தேகல் எண்ணுவன எல்லாமே ஈடேறும். மண்ணிலே கால்பதித்து நின்று நம் கைகோத்து Guout/Ga/igg5/76b LJ/TGib árGoG)Jé45U LVG54F 5%ibGogdú L/1/i:
ஞானம் - மே 2004

நூல் உயரப் பறக்கும்
காகங்கள். (சிறுகதைத் தொகுதி)
ஆக்கம் : ஆ. சி. கந்தராஜா
ஆய்வுரை: கலாநிதி க. குணராசா
67சங்கையாழியான்)
ஆசி.கந்தராஜாவின் சிறு கதைகள் வெளிப் படுத்துகின்ற படைப்பனுபவம், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் பாரம்பரிய வரன் முறையில் வழங்கிவந்த சங்கதி களுக்கு முற்றிலும் வேறுபட்டவை என்பேன். புலம்பெயர்ந்த எழுத் தாளர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளை பெறுகின்ற அனுபவங் களின் வெளிப்பாடாகத் தம் மன அவசத் தினைப் படைப்புகளாக வெளியிடும் போது அவை அழகிய உள்ளடக்கம் என்பனவற்றில் முற்றிலும் புதிய செய்திகளைக் கொண்டனவாக மாறிவிடுகின்றன. ஈழத்துப் படைப் பாளிகள் என ஏற்கனவே ஆழமாகத் தம் முன்னைய படைப்புகளால் காலூன்றிவிட்ட எஸ்.பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், செ.கணேசலிங்கன் ஆகியோர் புலம்பெயர்ந்த பின்னர் படைத்தளித்த ஆக்கங்கள் சர்வதேச
ஞானம் - மே 2004
அதனால் அச்
மட்டத்துச் சமூக வெளிப்பாடுகளாக விளங்குகின்றன என்ற வியப்பினை மீறி அவர்களால் புலம்பெயர் நிலையில் எழுதப்பட்ட ஈழத்து நிலைக்களத்து ஆக்கங்கள் பார்வையாளனின் பகள்வுகளாக மாறிவிட்ட மெய்ம்மையை மறுக்க வியலாது. வாழ்கின்ற களம் மாறும் போது புனைகதைகளின் படைப்பனுபவம், தான் பிறந்த மண்ணின் காலமாற்றம் ஏற்படுத்தி யிருக்கும் கருத்து மாற்றத்திற்கு அந்நியப் பட்டுவிடுகின்றது. அவ்வகையிலும் அவ்வரிசையிலும் ஆசி.கந்தராஜாவும் இணைந்து கொள்கிறார் என்பது மறுப்பதற்குரியதன்று.
இச்சிறுகதைத்தொகுதியில் உள்ள
சிறுகதைகள் யாவும் கோள மயம் தழுவியவை. கந்தராஜா என்ற பேராசிரியர் அவுஸ்திரேலியப்
பல்கலைக்கழகமொன்றில் பணிபுரிவதும் அதனால் உலகின் பலபாகங்களுக்கும் பயணஞ் செய்யும் வாய்ப்பினைப் பெற்றமையும் ஆசி.கந்தராஜா என்ற படைப் பாளியைத் தமிழுக்குத் தந்துள்ளது. அவரது சிறுகதை களுக்கான ஊக்குகை அல்லது இன்ஸ்பிரேஷன் தான் பயணித்த நாடுகளில் தரிசித்த ஒழுக்கநெறி சார்ந்தவையாக இருக்கின்றன. ஆனால் அவை மானிடத்தையும் மானிட நடத்தை வேறுபாடுகளையும் மானிட நேசத்தையும் தம் பேசும் பொருளாகக் கொண்டுள்ளன. சிறுகதைகள் உள்ளடக்கத்தில் தமிழ் வாசகன் அறியாத கருக்களையும் புதிய அநுபவங்களையும் அறிமுகப் படுத்துகின்றன. சர்வதேச மானிடத் தினைப் பேசும் ஊடகமாகத் தமிழ் மொழியைப் பரிணமிக்க வைத்துள்ளன.
5.

Page 28
இச் சிறுகதைத் தொகுதியில் உள்ள முதலாவது கதையான தவக் கோலங்கள் இலங்கை மண்ணினைக் களமாகக் கொண்டது. துர்கா தாண்டவம், வெள்ளிக்கிழமை விரதம், பாலன் பிறக்கிறான் ஆகிய சிறுகதைகள் ஆபிரிக்கப் பகைப் புலத்தினைச் சித் திரிப்பனவாக உள்ளன. ஒட்டுக்கன்றுகளின் காலம், முன்னிரவு மயக்கங்கள், உயரப் பறக்கும் காகங்கள், கோபுர தரிசனம் ஆகியன அவுஸ் திரேலியப் பின் னணியைக் கொண் டவை. யப்பானியப் பின்னணியில் தேன் சுவைக்காத தேனீக்களும், வங்காள தேசத் துப் பின் னணியில் அந் நியமாகுதலும் எழுதப் பட்டுள்ளன. இந்தப் பத்துச் சிறுகதைகளில் துர்கா தாண்டவம், பாலன் பிறக்கிறான் ஆகிய இரு சிறுகதைகளும் தான் கண்டு கேட்ட அனுபவத்தினை எவ்வாறாயினும் ஒரு கதை வடிவில் சரிக்கட்டி விடவேண்டும் என்ற தேவை கருதி சமைக் கப்பட்டவையாக எனக்குப் படுகின்றன. இவற்றின்மூலம் கதாசிரியர் சமூகத்துக்கு யாது கூற விரும்புகிறார் என்பது புலனாக வில்லை. நல்லதொரு சிறுகதையின் கட்டமைப்பினையும், நலல்தொரு சிறுகதையின் பேசாப்பொருளையும் இச்சிறுகதை ஆசிரியர் அறியாதவர் என இவ்விரு சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டு முடிவு செயப் வோமா கில் சிறுகதைத் துறைக்குப் பெருமை சேர்க்கின்ற ஏனைய எட்டுச் சிறுகதைகளையும் இவரால் எப்படிப் படைக்க முடிந்தது என வியப்பு ஏற்பட்டுவிடும். ஒரு நாட்டின் சமூகமொன்றின் வியப்பான
4
நடத்தைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் சொல்லுவதன்மூலம் ஒரு சிறுகதை நிறைவு பெறுவ தில்லை. அவற்றோடு மனிதனை மேம்படுத்தும் சமூகச் செய்தி ஒன்றினைச் சுட்டும் தன்மையினால் மட்டுமே ஒரு புனைகதை கலைப் படைப் பாகும் தரத்தினை பெற்றுக் கொள்கின்றது என்பது கந்தராஜாவுக்குத் தெரியாத
தன்று.
தவக்கோலங்கள், யாழ்ப்பாணத்து இன்றைய அவலத்தையும் முன்னைய இனிமைகளையும் இரை மீட்கும் சிறுகதை. வெளிநாட்டில் இருந்து வெகுகாலத்திற்குப் பின்னர் கைதடி என்ற தான் பிறந்த மண்ணுக்கு வெளிநாட்டில் பிறந்த மகனுடன் வரும் ஒருவனின் உணர்வுகளை ஒப்பீட்டு அடிப்படையில் இச்சிறுகதை விவரிக்கின்றது. புலம் பெயர்ந்த வர்களின் தாயக ஏக்கம் இச்சிறு கதையில் நன்கு விழுந்துள்ளது. பூமணி ரீச்சர் ஊடாக ஆசிரியர் யாழ்ப்பாணத்தின் சின்னத்தனங்களை இச்சிறுகதையில் பதிவு செய்துள்ளார். ஒரு மையத்தெழும் உணர்வாக இச்சிறுகதையை வளர்க்கும் திறன் உளவியல் ரீதியான விவரணை, எளிமையான சொற்கோவை என்பன இச் சிறுகதையின் சிறப் பிற்கு உதவுகின் றன. இச் சிறப் பான பண்புகளை ஆசிரியரின் ஏனைய சிறுகதைகளிலும் பரக்கக் காணலாம். குறிப்பாகத் தேன் சுவைக் காத தேனீக்களில் தக்கதொரு சிறுகதை எவ்வாறு வளர்க்கப்படவேண்டும் எண் பதற்கான உரைநடைப் பாங்கினைக் காணமுடியும், தேன் சுவைக்காத தேனீக்கள், வெள்ளிக்
aħbub li C9 u 2 ()()4

கிழமை விரதம் ஆகிய இரண்டு சிறுகதைகளும் இத்தொகுதியிலுள்ள உச் சமான புனை கதைகளாக எனக்குப் படுகின்றன. முன்னதில் மரணத்திற்கு யப்பானியர் தருகின்ற இடமும் பின்னதில் கற்பிற்குக் கிழக்காபிரிக்க மாசாய் இன மக்கள் தருகின்ற விளக்கமும் வாசித்து முடிந்ததும் எஞ்சும் உணர்வுகளாகி நிமிர் நீ தமர வைக் கிண்றன. மானிடத்தின் புதிய சங்கதிகளாகவும் விழுமியங்களாகவும் அவை எமக்கு அமைந்து விடுகின்றன. நாம் கட்டிக் காக்கின்ற மரணம் சம்பந்தமான சோகங்களும், கற்பு சம்பந்தமான ஒழுக்கங்களும் ஆசிரியர் சுட்டும் யப்பானிய, ஆபிரிக்கச் சிந்தனை களால் மீள் பரிசீலனைக்குள்ளாகி விடுகின்றன. இவ்விரு சிறுகதைகளும் உணர்ச்சிபூர்வ எழுத்துக்களாக இல்லாது அறிவுபூர்வ சிந்தனை களாக விளங்குகின்றன.
புலம் பெயர் நீத நாடுகளில் வாழ் கினி ற நம் ம வர் களால் துடைத்தெறிய முடியாத யாழ்ப் பாணத்து பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், முரண்படுகின்ற தன்மைகள், யாழ்ப்பான குடும்ப உறவில் ஒப்பில்லாத பெருமை என்பன கந்தராசாவின் கோபுர தரிசனம், ஒட்டுக்கன்றுகளின் காலம், முன்னிரவு மயக்கங்கள், உயரப் பறக்கும் காகங்கள் ஆகிய நான்கு சிறுகதைகளிலும் சாணமுடிகின்றது. இச் சிறுகதைகள் வெளிநாட்டு மண்களில் வாழும் நம்மவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும், பணி பாட் டுச் சவால் களையும் பேசுகரினர் றன. ஆரிரியர் இச்
akla sa h - araan na
சிறுகதைகளில் ஒரு பங்காளியாக விளங்குவதால் மிகச் சிறந்த அவதானிப்பும், உளவியல் ரீதியான அணுகுமுறையும் அனைத்திற்கும் மேலாக முரணற்ற பாத்திரவார்ப்பும் நன்கு இச்சிறுகதைகளில் உள்ளன. யாழ்ப்பாணத்து பணி பாட்டினை சிலவிடத்துக் குறியீடுகளாக ஆசிரியர் முன்வைக்கும் பாங்கு அச்சிறுகதை களை கலா பூர் வப் படைப் பு களாக்கிவிட்டன. உதாரணமாக ஒட்டுக்கன்றுகளின் காலம் என்ற சிறுகதையின் யாழ்ப்பாண இளந் தலைமுறையும் அவுஸ்திரேலிய இளந்தலைமுறையும் பழகும்போது ஏற்படுகின்ற கலாசார ஒருங் கிணைப்பும் அதனை ஜீரணிக்க முடியாத யாழ்ப்பாணப் பெற்றோரின் மன நிலையும் சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. யாழ் ப் பாணத் து அடையாளங் களுடன் அவுஸ் திரேலியாவில் வாழ விரும் பி அடிவளவில் வளர்த்த யாழ்ப் பாணத்துக் காய்கறிச் செடிகளில் புடலைக் கொடி யூக் கலிப் ஸ் மரத்தினை சுற்றிப் படர்ந்திருப்பதை யாழ்ப்பாணத்துத் தாய் காண்கிறாள். நல்ல குறியீடு. ஆசிரியர் இச்சிறு கதையில் சொல் லியவற்றிலும் சொல்லாமல் விட்ட விடயங்கள் பலவாகும். கருவை நெகிழ்த்தாது வாசகனின் உயப் த் துணர்வுக்கு விடுவதன் மூலம் ஓராயிரம் அர்த்தங்களைத் தருவது சிறந்த தொரு சிறுகதையின் பண்பாகும். இச் சிறுகதையின் யாழ்ப் பாண வழக்குமொழி இயல்பாக பயன் படுத்தப்பட்டிருப்பது இக்கதையின் இனி னொரு சிறப்பம் சமாகும் .
53

Page 29
அதேபோல உயரப் பறக் கும் காகங்கள் சிறுகதையில் வரும் கதாநாயகன் மேலைத் தேயக் கனவுகளுடன் வெள்ளைநிறப் பெண்களுடன் வாழ்ந்துபட்ட அனுபவ வீழ்ச்சியால் யாழ்ப்பாணப் பெண்ணின் குடும்பப் பாங்கினையும் பெருமை யையும் உணர்கிறான். இச் சிறு கதையின் ஆரம்பத்திலேயே அக்கதாநாயகனின் குணவியல்பினை ஆசிரியர் மறைமுகமாகச் சுட்டி விடுகிறார். தமிழ்மொழிமூலம் கல்வி கற்று ஒரு பயனும் கிட்டப் போவதில்லை என முடிவு செய்து ஆங்கிலமொழிமூலம் கல்வியைத் தொடர்ந்து தோல்விகாணும் அவன், திருமண வாழ்க்கையிலும் வெள்ளைக் காரப் பெணி களை மணந்து ஏமாற்றமும் தோல்வியும் அடைகிறான். அவனுடைய வாழ்க்கை யாழ்ப்பாணப் பெண்ணொருத்தியால் பூரணம் பெறுகிறது. ஆடி ஓய்ந்த விரக்தியின் மடியில் தவிக்கும் எம் இளைஞர்களை மன்னித்து வாழ்வழிக்கும் கருணை யாழ்ப்பாணப் பெண்களிடம் தான் இருக்கின்றது என்பது சமூகஞ்சார்ந்த யதார்த்தப் பார் வையாகும் . பாசாங் கற்ற மொழியில் வெகு அற்புதமாக அச்சிறுகதைகளைக் கந்தராஜா தந்துள்ளார்.
கந்தராஜாவின் சிறுகதைகளில் வரும் விவரணைகள் அவரின் சிறப்பான சமூக அவதானிப்பினைப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக வங்காள தேசத்தினையும் கிழக்கா பிரிக் காவையும் களமாக்கிய சிறுகதைகளில் அவ்வாறான சிறப்பினைக் காணமுடிகிறது. அவற்றின் மூலம் பல தகவல்களைப்
54
பெற்றுக்கொள்ளமுடிகின்றது. சிறந்த சிறுகதைகள் மானிட உணர்வு களையும் மானிட விடுதலையையும் மட்டும் சித்திரிப்பனவாக இருக்கக் கூடாது. அவற்றின் நிலைகளனான பகைப் புலத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் முழுமையான ஆவணமாகில் அல்லது ஆசிரியன் தனக்குத்தெரிந்த அனைத்தையும் கொட்டித்தீர்க்கும் தளமாகப் புனைகதையைப் பயன் படுத்தினால் அது கலைப்படைப்பு என்ற வடிவத்தை இழந்து வாசகனின் மனதைத் தொடாது போய்விடும். கதை பேசும் பொருளும், கதாபாத்திரங்களின் மூலமான கதாவளர்ச்சியும் அவை நிகழ்கள ஆவணமும் ஆனந்தனின் தண்ணித்தாகம், இலங்கை யர்கோனின் வெள்ளிப்பாதசரம், எஸ்.பொன்னுத் துரையின் தேர் போன்ற எடுத்துக் காட்டான சிறுகதைகள் போல அமையவேண்டும் . கந்தராஜா அவற்றினை நன்குணர்ந்த வராகத் தன் சிறுகதைகளைப் படைத்தளித்துள்ளார் என்பது நான் விதந்துரைக்கும் எட்டுச் சிறுகதைகளாலும் தெள்ளெனப் புலனாகின்றது.
ஆசி கந்தராஜாவின் இச்சிறு கதைத்தொகுதி தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு இன்னோர் அணிகலனாகும் என்பேன்.
Ο Ο
பாரதப் போரில் மீறல்கள் ஆக்கம் : அகளங்கன் வெளியீடு: எழுத்தாளர் ஊக்குவிப்பு
மையம்,
நூல்
மட்டக்கரைப்பு.
ஞானம் - மே 2004

கவிஞராகவும், நாடக ஆசிரிய ராகவும் பல்வேறு நூல்களின் ஆசிரியராகவும் விளங்கும் அகளங்கன் (நா.தர்மராஜா) துடிப்புடன் செயற்படும் எழுத்தாளர். ஏறத்தாழ இருபத்தேழு நூல்களின் ஆசிரியரான அவரது நூல்களில் வாலி சிறந்த ஆய்வு நூலாக விளங்குகிறது. பழந்தமிழ் இலக்
களோடு பொருத்திப் பார்த்துக் கட்டுரைகள் எழுதுவதில் வல்ல வராகவும் அகளங்கன் விளங்குகிறார். அவர் எழுதி, ஏற்கனவே நூலாக வெளிவந்த மகாகவி பாரதியாரின் சுதந்திரப் பாடல் கள் (1994), இவ்வகையிற் குறிப்பிடத்தக்க ஒரு நூலாகும். அதையடுத்து, அவரது பாரதப் போரில் மீறல்கள் (2003) என்ற நூல், மகாபாரதச் சம்பவங்களையும், அது பத்திரிகையொன்றில் எழுதப்பட்ட காலத்து (1985,1986) இலங்கையின் அரசியல் சம்பவங்களையும் ஒப்பிட்டு
எழுதப்பட்டுள்ளது.
இந் நூல் வியாசரின் மகா பாரதத்தையும், வில்லிப்புத்தூரின்
வில்லிய ரதத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பாரதப் போரில் இடம்பெற்ற யுத்தமீறல்களை இனங்காட்டி எழுதப்பட்டுள்ள இந்நூல், வாசகருக்குச் சுவாரசியமாகவும் அமைந்துள்ளது. இராசசூய யாகம், சூதாட்டம், கிருஷ்ணன் தூது போர் ஆயத்தம், போர் நிகழ்ச்சிகள் முதலியவற்றைப் பின்னணியாகக் கொண்டு, யுத்தமீறல் முயற்சிகளையும், யுத்தமீறல்களையும் நூலாசிரியர் விளக்கிச் செல்கிறார். சில வல்லரசுகள் யுத்தம் நடக்கும் நாடுகளில் இரு தரப்புக்கும் நாசம் ஏற்படுத்துவதைப் போன்று, கிருஷ்ணனும் பூமியில் உள்ள
ஞானம் - மே 2004
மக்கள் தொகையைக் குறைப்பதற்காகப் பாரதப்போரில் இரு தரப்புக்கும் உதவி செய்வதை அகளங்கன் எடுத்துக் காட்டுகிறார். கிருஷ்ணன் படையைச் சேர்ந்தவர்களாகவும் , அவனது ஒப்பந்தத்துக் குக் கட்டுப் பட்டவர்களாகவும் இருந் திருக்க வேண்டிய பலராமன், சாத்யகி ஆகியோர் யுத் தமிறல் களைச் செய்துள்ளனர். கிருஷ்ணனும் பாண்ட வர்களுக்குச் சார்பாகப் பல யுத்த மீறல்களைச் செய்திருந்தான் என்பதைப் பல இடங்களிலும் நூலாசிரியர் விளக்கிச் சொல்கிறார். கள்ணன், பீஷ்மர், துரோணர், சயத்திரதன், துரியோதனன் முதலியோர் கிருஷ்ணனின் யுத்தமீறல் முயற்சி யிலேயே கொல்லப்பட்டனர். மறுபுறத்தில், அபிமன்யு விடயத்தில் துரோணர், கள்ணன், சயத்திரதன் முதலியோர் யுத்த முறைகளை மீறி நடந்துள்ளனர். பாரதப்போர் முடிவுற்ற பின்னர், அசுவத்தாமா இரவில் திட்டத்துய் மனையும், பாஞ்சாலியின் ஐந்து புத்திரர்களையும் கொன்று, பாசறையைத் தீயிட்டுக் கொளுத்தியதும் யுத்தமீறலாகும். நூலின் இறுதிக் கட்டத்தில் அகளங்கன் பின்வருமாறு எழுதுகிறார் “பாரத யுத்தம் தொடங்கும்போதிருந்த நிதானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென் றிருக்கிறது. பதினெட்டாம் நாள் இறுதிப்போர் நிதானம், தர்மம், நியாயம் எதுவுமே இல்லாத நிலையில் முடிக்கப்பட்டது.” மகாபாரதம் மனிதர்களது பலங்களதும், பலவீனங்களதும் தொகுப்பு என்பதை இந்நூல் மூலம் அவர் இனங்காட்டுகிறார். அகளங்கனின் பாரதப்போரில் மீறல்கள் என்ற இந்நூல், அவரது
குறிப்பிடத்தக்க இன்னொரு நூல்.
- நக்கீரன்
55

Page 30
ஞானம்’ புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான
சிறுகதைத் தொகுப்புப் போட்டி ஞானம் விருது 2004
முடிவுத் திகதி 30.06.2004 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றலை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்குடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் வருடந்தோறும் நடத்துகிறது.
நிபந்தனைகள்:
1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 30-04-2004 அன்று நாற்பது
வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா
ஐயாயிரம் பரிசாக வழங்கப்படும். 5) இரணி டாவது பதிப் பின் பதிப் புரிமை آلارم
கதாசிரியருக்கு வழங்கப்படும் 6) பரிசுக்குரிய தொகுதியை, ஞானம் ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஓர் எழுத்தாளரும் இணைந்து தேர்ந்தெடுப்பர். அவர்களின் முடிவே இறுதியானது. 7) போட்டி முடிவு திகதி 30-06-2004. அதன்பின்னர் வந்துசேரும்
படைப்புகள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் “ஞானம்", 19/, பேராதனை வீதி, கண்டி என்ற விலாசத்துக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்படவேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் “ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி’ எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். 9) நிபந்தனைக்கு உட்படாத தொகுப்புகள் போட்டியில்
சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. 10) “ஞானம் விருது ஓர் எழுத்தாளருக்கு ஒரு தடவைதான் வழங்கப்படும்.
$oდO!
குறிப்பு :- ஓர் இலக்கிய அன்பரின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இப் போட்டி .வருடந்தோறும் நடைபெறும் -ܠ
56 ஞானம் - மே 2004
 
 

ഗമശ്രീശ്
தமிழில் அண்மையில் வெளி வந்த இருநூல்கள் இலக்கியத் தூடான இனபரஸ்பரத்தை வலுப் படுத்துவனவாய் உள்ளன. ஒன்று, சோ.ப.வின் தென்னிலங்கைக் கவிதை (மொழிபெயர்ப்பு). ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தென்னிலங்கையைச் சேர்ந்த கவிஞர்கள் எழுதிய 53 கவிதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பான இந்நூலைத் தூண்டி வெளியிட்டுள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அணிந்துரையோடு அமைந்துள்ள இந்நூலைத் தமிழ் சிங்கள உறவுக்காய், கலைஞர் சங்கமத்தை ஏற்படுத்திய ‘ஹறிறு குழுவுக்குப் படையல் செய்துள்ளமை வரவேற்கத்தக் கது. மற்றையது, செங்கை ஆழியான் தொகுத்த சிங்களச் சிறுகதைகள் (மொழி பெயர்ப்பு). 25 சிறுகதைகளைக் கொண்ட இந்நூல் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ளது. நாட்டில் சமாதானத்துக்கான அவசியப் பாடுகள் வலுவடையும் சமகாலத்தில் வெளிவந்த இவ்விரு நூல்களும் அயல் மொழி சமூக, இலக்கிய, பணி பாட்டுப் ஒப்பியலாயப் வுக் குமி பெரும் பயனளிக்கும். இவ் வேளையில் அயல்மொழி இலக்கியக்காரர்களும்
ஞானம் - மே 2004
புரிதல் களுக்கும் ,
ശ്രൈബ് ക്ര് ബിശ്ശ
മല്ക്ക്
தமிழ்ப் படைப்புக்களைத் தமது மொழியில் மொழிபெயர் க்க வேணி டியதன் அவசியத் தைப் புரிந்துகொள்ளல் வேண்டும்.
நாடக அரங்கியல் துறைக்காகக் 'கூத்தரங்கம்' என்ற ஏடு இதழியல் வரிசையில் புதிய அளிக்கையை நிகழ்த்தியுள்ளது. 'திறந்த மன மொன்று வேண்டும்’ என்ற மகுட வாசகத்தைத் தாங்கிய இவ் ஏட்டை * Active Theatre Movement வெளியிட்டுள்ளது. நாடகத்துறைசார் பல்வேறு அம்சங்களைக்கொண்ட இவ்வேடு 'ஆற்றுகைக்கு அடுத்த படியாக முதன்மை பெறுகிறது. இது நவீன நாடகச் சிந்தனைகளைச் சமூகத்தின் சகல முனைகளுக்கும் கொன டு செ ல லு மெ ன ல வரவேற்கத்தக்கதே. அளிக்கையோடு உணர்வுகளில் கரைந்துபோகும் ஆற்றுகைகளை அச்சுப்பதிவினுடாக இது பத்திரப்படுத்தும்.
ந.கேசவராஜனின் ‘அம்மா நலமா’ என்ற திரைப்படம் சினிமா மொழியில் அதிக அக்கறைகாட்டாது யதார்த்தத்தைப் பதிவு செய்கிறது.
57

Page 31
இறந்தகாலத்து நிகழ்வுகளை மீட்புச் செய்யும் முற்பகுதியின் கலைத்துவத்தைவிட பிற்பகுதி அதிகளவு வீழ்ச்சி யுற்றுள்ளது. வீராவின் பாடல் அழகானதாயினும் இசைப்பிரியனின் இசை எடுப்பாக அமையவில்லை. பாத்திரங்களில் ரஞ்சி, உதயா, தாய் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவ்விடத்தில் தா.சனாத னனின் கூற்று ஒன்றை நினைவு படுத்தலாம். "இலங்கைப் படம் என்பது இன்று இயக்கப்படம் என்று மாறி உள்ளதே ஒழிய அடிப்படையான சிந்தனை மாற்றம் எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை”. (இந்துதருமம் - 2004 பக்.46)
மிலிந்த மொர கொட விண் இதமான இதயம், நிதானமான நோக்கு, ஆழமான சிந்தனை என்ற நூல் வெளிவந்துள்ளது. 2000 - 2003 காலப்பகுதிகளில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இது அமைந்துள்ளது. தமிழில் வெளி வந்துள்ள இந்நூலைத் தொகுத்தவர், தே.செந்தில்வேலவர். இலங்கையின் பொருளாதாரச் சிக்கல்கள், தீர்வுகள் தொடர்பான வாதப் பிரதிவாதங் களுக்கு இந்நூல் பெரிதும் உதவும், ஹோட் டல் தாஜ் சமுத்ராவில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவிற்குப் பிரதம அதிதியாக எழுத்தாளர் சுஜாதா வருகிறார் என்பதை அறிந்தவுடன் அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட நாலுவார்த்தை பேசவும், இணைந்து போட்டோ எடுக்கவும் அழைப்பினைத் தாமே கேட்டுப் பெற்றுக் கொண்டு விரைந்தமை ஆச்சரியம். அவரைப்
als
gü ULgs தில் 9
பார்க்கவந்தவர்கள் எல்லோரும் நிகழ்ச்சி முடியும்வரை பார்த்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இலங்கையின் அரசியல் சூழ் நிலையால் சுஜாதா வரவில்லை.
கனவுகளின் எல்லை’ என்ற கவிதைத் தொகுதியைத் தந்த இலங்கையின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான த.ஜெயசீலன் சமீபத்தில் கைகளுக்குள் சிக்காத காற்று என்ற தொகுதியைத் தந்துள்ளார். கவிஞர் இ. முருகையன் தலைமையில் நடைபெற்ற இத்தொகுதி வெளியீட்டு விழாவில் சாவேய. வாழ்த் துரையையும், பேராசிரியர் அ.சண்முகதாஸ் அறிமுக உரையையும் க.வேல்தஞ்சன், எஸ். ஜெபநேசன், சோ.ப. ஆகியோர் ஆய்வுரையையும் வழங்கினர். சுமார் எண்பதிற்கு மேற்பட்ட கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில்
“எவர் எப்படிச் சொன்னாலும் எவர் எப்படி நிறுத்தாலும் என்கவிதை இப்படித்தான்
இருக்கும் என்பதில் என்கவிதை இப்படித்தான் என்னை வெளிப்படுத்தும் என்பதில் எனக்குத் தெளிவு இருக்கிறது’ என்கிறார், ஜெயசீலன். இவ்விழாவில் உரையாற்றிய அ. சண்முக தாஸ் “கவிதை கவிதைதான். மரபுக் கவிதைக்கு மட்டுமல்ல புதுக்கவிதை, நவீன கவிதைகளுக்கும் ஒரு மரபு உள்ளது” என்றார். சோ.ப.வின் ஒப்பியல் ரீதியான விமர்சனம் சிறப்பாக அமைந்தது. வேல்தஞ்சனின் விமர்சன வாசிப்பும் குறிப்பிடத்தக்கதுதான்.

போராளிக் கவிஞர் அம்புலியின் மீண்டும் துளிர்க்கும் வசந்தம் என்ற கவிதைத்தொகுதி மகளிர் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது. சுகந்தி நடராஜா என்ற இயற்பெயரைக் கொண் ட இப் பெண் போராளி உதயலட்சுமி, அணங்கு, அரியாத்தை, மனுசி, கங்கை, ந.சாரங்கா ஆகிய புனைபெயர்களைத் தாங்கியவர். 35 கவிதைகளைக் கொண்ட இத் தொகுப் பில் விடுதலைக் கான நேசிப்பையும், தேசவிடுதலை - பெண் விடுதலை என்ற இரு அம்சங்களின் இணைவையும் தரிசிக்கமுடிகிறது.
"அக்கினிச் சருகுகளின் மேல் அயர்ந்துறங்கினும் இமைகள் சேர மறுத்த
இரவுகளிலும் ஓர் இனிய வாழ்வே கனவாய் விரிகிறது, தடைப்பட்டுப்போன குருதிக்
குழாய்களில் நெருப்பை நிரப்பியுள்ளேன் வேதனைகளில் இருந்து வெளிப்பட்டவையெல்லாம் என்னுள் புதிய வீச்சுக்களாயின’ இத்தகைய அழகிய பலவரிகளை அவரது கவிதைகளில் காண முடிகிறது. இவர் எழுதிய விடுதலைப் பாடல்களும் பிரபல யமானவை. அவற்றுள் "அலையே நீயும் பொங்காதே, என் இலக்கை நீயும் மறைக்காதே என்ற பாடல் சிறப்பானது.
ఎ4 వ% వడ 7N YSX 25\,
யாழ். பல்கலைக்கழகம் நடிகமணி வி. வி. வைரமுத்து, கலா சூரி என்.கே.பத்மநாதன் ஆகியோருக்கு
ஞானம் - மே 2004
கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கி யுள்ளது. நடிகமணி வைரமுத்து குரல் வழியே உடல் வழி என்ற வகையில் அரங்கியல் பயணத்தை மேற்கொண்டவர். ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சியில் "வைரமுத்துவின் அரங்கு' என்று குறிப்பிடத்தக்க அளவுக் குப் பணியாற்றியவர் . என்.கே.பத்மநாதன் நாதஸ்வரக் கலை நிபுணர். அதையே தனது வாழ்வாகக் கொண்டவர். ‘லயஞான பூபதி என்ற சிறப்புப் பட்டத்துக் குரியவர். பட்டம்பெற்ற இவ்விருவரும் இறந்தபின்னர் பட்டம் வழங்கப் பட்டவர்களின் பட்டியலில் இறுதி யிடத்தைப் பிடித்துள்ளனர்.
மிக நீண்டகாலத்திற்குப் பிறகு ‘தூண்டி’ காலாண்டிதழாக வெளி வந்துள்ளது. மிகக்காத்திரமான கலை வடிவமைப்போடு வெளிவந்துள்ள இவ்விதழ் நேர்காணல், கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை என அனைத் து அம் சங் களையும் கொண்டமைந்தது. இவ்விதழில் சட்டநாதன் தனது செவ்வியில் மணிரத்தினத்தின் தவறான அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்ட படங்களின் பட்டியலில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற படத்தையும் இணைத் துள்ளார் . இதற்கான கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
O O
காரணத் தைக்

Page 32
பதிவுகள் எழுதியவர் :
அ. யேசுராசா வெளியீடு அலை வெளியீடு,
ஒடைக்கரைவீதி,
யாழ்ப்பாணம். முதற்பதிப்பு : மார்கழி, 2003. விலை ரூபா 130/=
1975 இன் இறுதிப் பகுதியில் அலை இதழை வெளியிடுவதற்குரிய ஆயத்த வேலைகளில் ஈடுபட்டவேளை, பதிவுகள் என்ற பெயரில், கலை-இலக்கியம் சார்ந்த பத்தியினை அவ்விதழில் தொடர்ந்து எழுதவேண்டுமென எண்ணினேன் .
கவர்ந்தவை, மாறு பாடானவை, எதிர்வினைக்குரியவை எனப்
மனதைக்
பலவற்றை எழுதினேன். அன்று இலங்கை யிலும் தமிழகத்திலும் நிலவிய சிறுபத்திரி கைச் சூழலின் தாக்கம் - தவிர்க்க வியலாதவாறு இப்பத்தியிலும் படிந்திருக்கிறது. சரி - தவறு என்ற ரீதியில் தார்மீக நிலைப்பாட்டில் செயற்பட்டிருக் கிறேனே தவிர, குற்றஞ்சாட்டும் நோக்கு எனக்கு இருந்த தில்லை. ஆயினும், சுமார் பதினைந்து ஆண்டுகளிற்கு முன்னர் எழுதப்பட்ட இப்பத்திகளில் - சில இடங்களை (அடிப்படைக் கருத்தை மாற்றாமல்) தற்போது மென்மைப்படுத்தியுள்ளேன். சில விடயங் களுடன் தொடர்புபட்டவர்கள் மீது இன்றும் மதிப்பு வைத்துள்ளேன். எனவே, அவர்கள் சம்பந்தப்பட்ட மாற்றுக் கருத்துக்களை குறித்த விடயங்கள் மீதான எனது பார்வை என மட்டுமே கொள்ள வேண்டும்.
என்னுரையில் . - அ. யேசுராசா
O O
60
யார்மீதும் வலிந்து
ஒரு டாக்டரின் டயரியில்
இருந்து . எழுதியவர் : டாக்டர்.
எம். கே. முருகானந்தன் வெளியீடு மல்லிகைப் பந்தல்,
201-1/1றுரீகதிரேசன் வீதி, கொழும்பு. முதற்பதிப்பு : பெப்ரவரி, 2004. விலை ரூபா 140/-
நோயாளிக்கும் வைத்தியருக்கு மிடையே நிலவும் நல்லுறவும்,
ரகசியங்கள் நிச்சயம் காப்பாற்றப்படும் என்ற திடமான நம்பிக்கையும்தான் திறந்த மனதுடன் எல்லாம் சொல்லப் படுவதற்குக் காரணங்களாகும்.
இந்த அனுபவங்கள் வைத்தியர் களின் நெஞ்சத்திலே கீறல்களையும்
கிறுக்கல்களையும் நெருடல்களையும் அடிக்கடி வரைந்து விடுகின்றன. அவை அவர்களது நெஞ்சத்திலே நீறுபூத்த நெருப்புக்களாக அடங்கிக் கிடப்பது முண்டு. ரணங்களாகி இரத்தம் கசியச் செய்வது முண்டு.
ஞானம் - மே 2004
 
 

எனது அனுபவங்கள் என்னோடு மங்கிப் போகாது பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆதங்கம் நான் தொழில் ஆரம்பித்த காலத்திலிருந்து எனக்கு இருந்திருக்கிறது. அத்தகைய படைப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு அந்நியமான புது வரவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துட்ன் பலருக்குப் பிரயோசமாக இருக்கக் கூடும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
என்னுரையில் . - டாக்டர் எம். கே. முருகானந்தன். оо
கலப்பை - 38
மனித மனத்தை உழுகின்ற
“கலப்பை”
உலகத் தமிழர்தம் உணர்வை
உயர்த்தி நிற்கும். "கலப்பை', 'அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளி வரும் காலாண்டுச் சஞ்சிகை.
38 ஆவது இதழில் கீழ்வரும் விடயங்கள் அடங்கியுள்ளன.
உழவன் உள்ளத்திலிருந்து .
இயலிசைவாரிதி - ந. வீரமணி ஐயர்,
நத்தார் வருகின்றார், தெரிந்த பழ மொழிகளும் தவறான கருத்துக்களும், வாசிப்போமா!, தந்தப் பேழை, Yet Another Day, 9 6b5560) g g gp65u பொல்லாத ஒரு நாள், நீங்காத நினைவுகள், அந்தக் கால யாழ்ப்பாணம், நோய்களும் வைத்தியமும், இராமநாதன் கல்லூரி, தாவரங்கள் பேசின.
O O
ஞானம் - மே 2004
கடுஞ் செலவு
கவிஞர் செ. குணரத்தினம்
நேற்று முருகேசர் நெஞ்சடைத்து மாண்டு
GLIT60T stril கூற்றுவனின் கூட்டாளி கூப்பிட்டான்,
போய்விட்டார்!
சீற்றமுடன் இத்தனைநாள் "செத்துப்போ!” எனத்திட்டி தூற்றிய மனைவி மக்கள் துடித்துப் புலம்புகிறா;
"எல்லாம் பொய் நடிப்”பென்று எதிர்வீட்டுச் செல்லம்மா சொல்லத் துடிக்கிறாள் சோகம் அவளுக்கே!
பிள்ளைகளும் பெண்டிலும் “போ வெளியே” என்றவரைத் தள்ளிவிட அவள்தானே தாயாக அரவணைத்தாள்)
பட்டுவேட்டி, சேட்சால்வை பளபளக்க அவருடலும் கட்டிலிலே கிடக்கிறது கடுஞ்செலவு சாவீட்டில்?
இத்தனையும் ஏன்செய்தார்? இருக்கின்ற போதுமவர் செத்துத்தான் கிடந்தார் செல்லம்மா இதையறிவாள்!
61

Page 33
~.
'AA (Braa,pri Š
خضعت
ஞானம் 46ஆவது (மார்ச்சு 2004) இதழ் படித்தேன். மகளிர் தினத்திற்காக மகளிா சிறபபிதழாக வெளியிட்டுள்ளீர்கள். இது தேவையற்றது. வழமையான இதழ்களில் பகளிரின் ஆக்கங்கள் கணிசமான அளவில் வெளிவருகினறபோது இப்படிச் சிறப்பிதழ்களை வெளியிட்டு ஞானத்தின் கனதியைக் குறைத்துக் கொண்டிருக்க வேண்டாம். பெண்ணிலைவாதிகளின் பாராட்டு வேண்டுமானால் இல்லாது விட்டுப்
போகட்டும். உருவமைப்பில் மட்டுமன்றி உள்ளடக்கத்திலும் கவனத்தைச் செலுத்துங்கள். ஞானம் 47 வது இதழ் படித்தேன். சொக்கனின் என்தோல் தடித்த கதை அருமையாகவுள்ளது. இலக்கியன் பதில்கள் நன்றாகவுள்ளது. ஆனால் சொக்கனைப் பற்றி இப்பகுதியில் மீண்டும் இடம் பெறுவதும் முரளிதரனைப் பற்றி எழுதத் தூண்டும் எண்ணங்களிலும் இலக்கியன் பதில்களிலும் இடம் பெறுவதும் குறுகிய வட்டத்தினுள்
ஞானம் நிற்பதனைப் போலுள்ளது.
- தேவமுகுந்தன், கொழும்பு - 06.
ஞானத்தின் வளர்ச்சியைப் பாராட்டி எழுத எண்ணினேன். நேரம் கிடைக்கவில்லை. இந்த மனோநிலையில் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களின் சுவாலை என்னை மிகவும் கவர்ந்தது.
பெப்ரவரி , மார்ச் சிறப்பிதழ்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழில் பல பயனுள்ள கட்டுரைகள இடம் பெற்றுள்ளன. மகளிர் தின அம்சங்களைவிட வேறுபட்ட கட்டுரைகள் இடம்பெற்றது மலரைக் கனதியாக்கியுள்ளது.
கம்பவாரிதியை இராமாயணத்தைவிட்டு மகாபாரதத்திற்கும் கிரிக்கட்டுக்கும் போகவைத்தவர்களை வாழ்த்த வேண்டும். ஞானம் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.
- திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம், யாழ்ப்பாணம்.
பி.கு.:கேட்க மறந்து விட்டேனே. 'ருபராணியின் எனக்கொரு ஆசையை கவிஞர் செ. குணரத்தினம் வாசித்திருப்பாரல்லவா?. யோ. சி
ஞானம் (45) அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாச் சிறப்பிதழ் என் பார்வைக்குக் கிடைத்தது. 92 பக்கங்களுடன் பொருத்தமான அட்டையுடன் மிக அழகாக வெளிவந்துள்ள இவ்விதழ் உள்ளடக்கத்திலும், கனதியாகத் திகழ்வது வரவேற்கத் தக்கதாகவே இருக்கின்றது. அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள எம்மவர்களின் கலை இலக்கிய சாதனைகளை வெளியுலகிற்கு
62 ஞானம் - மே 2004
 
 
 
 

உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ள பல தகவல்கள் மிகவும் பயனுடையவை. மண்புழு, காங்கேயம் இரண்டு சிறுகதைகளுமே இதழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன. 'மண் புழு சிறுகதையில் "GAYS பற்றிய தகவலை முழுக்கருப் பொருளாகக் கொள்ளாமல், அருவருக்காத வகையில் ஒரு சிறப்புத் தகவலாக நாசூக்காக வெளிப்படுத்தியிருப்பது ஆசிரியரின் திறமையை வெளிப்படுத்துகிறது.
- கவிஞர் புரட்சிபாலன், வன்கூவர், கனடா.
கம்பவாரிதி - சலனம் வேண்டாம் சான்றோனே !
“வாராதே வரவல்லாய்” இற்கு “வாழ்க்கைக் கிரிக்கெட்டில்” எடுத்த வசை பாடிய அன்பர்கள் இறுதி "சிக்சர் சிறப்பானது. உன் கட்டுரையில் கருத்தைக் யார் எது கூறினும்- நீ காணவில்ல்ை; உன் விளையாட்டைத் உன்னைக் கட்டுரையாய்க் கண்டனர் தொடர வேண்டும் "பகையும் உறவே”- நீ வாழுங் காலத்தில் தூற்றும் பகர்ந்த முத்துத்தான் வையகம் இது! நண்பனை விட பாரதிக்கும் நடந்தது தானே! எதிரி சிறந்தவன். எந் என்றோ ஒருநாள் நேரமும் உன்னைச் இருந்து பார்! சிந்தித்துக் கொண்டிருப்பான் துாற்றிய வாய்களே உள்ளத்தால் கூடிய பிணைப்பு உன்னைப் போற்றும்! அவனுக்கு உன்னிடம் - வாஹினி பூரீதரன், வெள்ளவத்தை.
தென் கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விசேட துறை மாணவன் "ஞானம்’ நான் காண்டு இதழ் தொகுப்பு கோரல்
மேற்படி பல்கலைக்கழக தமிழ் விசேட துறை மாணவனான நான் “ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை ஒரு நோக்கு” எனும் தலைப்பிலான கலைமாணிப் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரை ஒன்றினைச் சமர்ப்பிக்கவுள்ளேன். எனவே அது சம்பந்தமான நான்கு வருட ஞானம் இதழ் தொகுப்பினைத் தந்துதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். அத்துடன் இத்தொகுப்பினை 2004 டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் மீளக்கையளிப்பேன் என்பதையும் அறியத் தருகிறேன். - எச். எம். எம். மன்சூர்.
கேள்வி ஞானம் புதிய பகுதி சுவாரஸ்சியமாகவுள்ளது. இலக்கியன் பதில்கள் இலக்கியத்தரமாக இருக்கின்றன. ஆனாலும் பதில்கள் சற்று நீண்டு விட்டது போல் தெரிகிறது. சிறிய பதில்களாக அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சென்ற இதழில் ஏன் கவிதைகளைக் குறைத்து விட்டீர்கள்? எல்லா இதழ்களிலும் ஆசிரியர் தலையங்கம்
மிகவும் கனதியாக அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்.
- வை. லலிதா, வட்டுக்கோட்டை,
ஞானம் - மே 2004 63

Page 34
அன்பார்ந்த வாசகர்களே !
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர்
சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
ஆசிரியர்
| r
ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்
கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11 பூபாலசிங்கம் புத்தகசாலை - 309 A, காலினீதி, வெள்ளவத்தை
யாழ்ப்பானம் பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பானம், ப, நோ. சு. சங்கம், கரவெட்டி - நெல்விபடி.
திருகோன மலை திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. திரு. வீ. என். சந்திரகாந்தி - 572, A ஏகாம்பரம் விதி திருகோன மலை,
1ாட்டக்களப்பு எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 181, பாப் வீதி, மட்டக்களப்பு. வடக்கு-கிழக்கு மாகான பிரதேச சபைகளுக்குவிநியோகம்செய்யும்முகனர்
கிளிநொச்சி :
கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி.
வவுனியா ந. பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
கண்டி :
லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி
புத்தளம் சான்றித்திய புத்தக நிலையம், இல, 4 குருனாகல் விதி, புத்தளம்.
பண்டார வன எா மெடிக்கல் ஹெல்த் கிளினிக், இல, 1 டயாபா சந்தி, மிரஹாவத்தை (P) அவுஸ்திரேலியா L. MLILigapoopathy, P. O. Box: 350, Craigie Buri, Victoria 3064 G. Balachandran, 21 Hudson Street, Wentworthville, N., S.W. 2145 |
آئینی ܚܢܠ ܐ
i, i hii iiij It is

ନିକ୍
Χ5)(OO) ίτόλι εκεί σε και CENTRAL ESSENCES
SUPPLIERS 8
DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES,
FOOD COLOURS AND SCENTSETC,
76/B, KING STREET KANDY
TEL : 081 – 222.4187
O81 - 447.1563
Carsoms 9Mஜரa Ceramics
Importers & Distributors of C) Wall Tiles, Floor Tiles, High Quality 凌 Sanitary wares, Bath room. Accessories, P. W. C. And Hot Water Pipe Fittings
A-74, Colombo Street Kandy, Sri Lanka. Tel: 081-4476760, 081 - 2200052 Fay : ()81 - 2200052

Page 35
闵行觅运y擎
Molli Best CorpsÎrrerils Front
LUCKYLAN
MANUFA
KN
: OS
(SI
OS1
: (81
: Lப ါး=မ
இச் சஞ்சிகை தி. ஞானசேகரன் அவர்களால்
i 1 mai ir i fi i rin || 4. limur,

*エリ
R
D BSCUT CTURERS
|ASANA,
- 242O2.17
- 242O574
- 2227 (41
- 2420740 :kyland (ashnet.ik.
نامی چیلنجھے$
இ. 48 பி. புளூமெண்டான் விதி, கொழும்பு 13 ர்தி " " ("lடப்பா" ம