கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.06

Page 1
珍) «ZŤ}}h
鑫麟
逍 학력
 

--------T ||
「榮
武)
-舞蹟平燕双缝 椰)樊 哑 )Ķ]臣挖
圈 *
Hos:·
飞靶
要诀
密●

Page 2
தரமான தங்க நகைகளுக்கு .
NAGALINGAMS
101, COLOMBO STREET
KANDY TEL : ()81 – 2232545
J
 

விரிவும் ஆழமும்
பெறுவது
ஞானம்.
தி. ஞானசேகரன்
பிரதம ஆசிரியர் :
R இணை ஆசிரியர் :
புலோலியூர் க. சதாசிவம் இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
ஓவியர்கள் :
LGIQUIT
நா. ஆனந்தன் அட்டைப்பட ஓவியம் : புஸ்பா
நிர்வாகம் :
கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு .
தி. ஞானசேகரன் 19T, பேராதனை வீதி,
கண்டி.
(81-247857O (Office) (81-34755 (Res)
777-3506
Fix (S-34755 EM gnanam magazinesayahoo.corn
eA ST ATei ASASASATATeTS TeeTTeMTeSSeMSLLMSASASeAeSASSAASS S eSATS
8.
Mille -
இதழினுள்ளே
நேர்காணல் புதுவை இரத்தினதுரை
சிறுகதை
பாரிடம் நோவேன்?
- சந்திரகாந்திா
ஆத்மவிசாரம்
- ry ř. ''Třrál I |
கவிதைகள் ஊழின் மீதான பாடல்
- செ. சுதர்சன் மாறுதல்
- துரிஞ்சி இளந்தென்றல் நான் T?
- வேயினி நிமிர்சு என் மலைத்தோழி
=பா, மகேந்திரன் மனித மூளை மகா பெரியது
- கவிரும் $1. இக்பால் விடியும் வரையான கருக்கவில்
- பாவறஞ்சளி மழை உபாசகன்
- த.ஜெயசின்
கட்டுரைகள் கைலாசபதியும் முற்போக்கு.
-அ.முஹம்மது சமீம் கலை இலக்கிய ஆக்கமும். - சபா ஜெயராஜா எழுதத் தூண்டும் எண்ணங்.
- துரை மனோகரன் முல்லை மணியின் மழைக். - புவோளியூர் சு. சதாசிவம் சமகால இலக்கிய நிகழ்வுகள்
செ. சுதர்சன்
கேள்வி ஞானம் நூல் மதிப்புணர வாசகர் பேசுகிறார்
g
때
f
57
33
R7
9
| 7
5.

Page 3
லெபள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும். கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
கதிராமிய மட்டத்தில் நாட்டுக் கூத்துக்குப் புத் துயிரளிப்போம்.
எமது நாட்டில் பாரம்பரிய பண்பாட்டம்சங்களைப் பேணிக்காக்கும் பெருமை கிராமங்களுக்குரியதாகவே இருந்துள்ளது. மண்ணுடன் இணைந்த கிராம மக்களின் வாழவியலின் கலை இலக்கிய வெளிப்பாடாகக் கிராமிய நாடகம் மிளிர்கிறது. இது நாட்டுக் கூத்தென நயம் பட அழைக்கப்பட்டது. காலவோட்டத்தில் மேலைத்தேயக் கல்வி, பண்பாட்டு கலாசாரத் தாக்கத்தால் நாட்டுக்கூத்துக் கலைவடிவம் களையிழந்து, பூகோளமயமாகும் சூழுலில் காலத்தோடு முரண்பட்டு நிற்பதாகக் கொள்ளப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்Sாது. இன்று பூகோளமயத்தின் எதிர்விளைவான கலாசாரச் சீரழிவைத் தடுக்க ஒவ்வொரு இனமும் புதிய சிந்தனையை உருவாக்கிச் செயற்பட வேலண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
நம் நாட்டில் பதவியேற்றுள்ள புதிய கலாசார அமைச்சின் கருத்தியல் கிராமிய மட்டRத்துக்கலைகளை, நாட்டாரியலை ஊக்குவிக்கும் பணியினைக் கொண்டது. நாட்டாரியலில் நல்லதோர் அம்சமான நாட்டுக்கூத்தின் கலை மதிப்பும் நாடs உலகில் இவற்றுக்குள்ள முக்கியத்துவமும் உணரப்பட வேண்டியுள்ளது. ஆட்டக்கலை, இசைக்கலை, ஒப்பனைக்கலை, நாடகக் கலை ஆகியவற்றின் அம்சமாக உள்ளது கூத்துக்கலை. இன்று நம்நாட்டில் நாட்டாரியல் கற்கை நெறியாகவும், கலை இலக்கியச் சிந்தனையாளருக்கு மறுவாசிப்பினை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் சூழலில் கூத்துக்கலையை வளர்த்தெடுக்கக்கூடிய வாய்ப்புண்டு.
its
2
 
 

சென்ற வருட இறுதியில் வடபுலத்தில் திருமறைக் கலாமன்ற ஏற்பாட்டில் நடந்த நாடகப் பெருவிழாவும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரம்பரியக்கலைகள் மேம்பாட்டுக்கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி 500க்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொண்டு 11நாட்கள் நடைபெற்ற கிராமியக் கலையிசை நாடக கூத்துப் போட்டியும் நம்பிக்கைதரும் முயற்சிகளாகும். நாடகப் பெருவிழாவில் பகலில் கருத்தரங்கும் இரவில் வெவ்வேறு பிரதேசங்களின் கூத்து அளிக்கைகளும் நடந்தன. இதேகாலத்தில் கொழும்பில் தேசிய சமாதானக் கவுன்சிலின் அனுசரணையில் திரிகோணக் கலாஷேத்திரம் லயன்ஸ்வென்ற் திரையரங்கில் நடத்திய கூத்து நாடக விழாவும், கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்ற பாரம்பரிய கூத்துநாடகம் பற்றிய நாடகப் பயிற்சிப்பட்டறையும் கருத்தரங்கும் ஆரோக்கியமான கலையிலக்கிய நிகழ்வுகளாகும். (இந்நிகழ்வில் ஆய்வரங்குகள் வெறும் ஆய்வுக் கட்டுரை வாசிப்பதாக இருக்காது களநிகழ்வுகளுடன் நடைபெற்றமையும், நாடகங்கள் வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இல்லாது செயல்முறை ஆய்வு செய்யும் நிகழ்ச்சியாக இருந்தமையும் சுட்டிக்காட்டப்படவேண்டியவை. தலைநகரில் நடைபெற்ற கலைநிகழ்வில் சிறப்பான அம்சம் சிங்களக் கலை இலக்கிய சோதரர்கள் நிகழ்வுகளில் பங்குகொண்டமையும் பெருமளவு சிங்கள ரசிகர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியமையுமாகும். சிங்களக் கூத்து நாடக வடிவங்கள் தமிழில் இருந்து வந்தன என்பதைப் பெருந்தன்மையுடன் மனங்கொண்டு ஆய்வுசெய்து ஏற்று, நமது நாடக மரபு உத்திகளைப் புகுத்தி சிங்கள நாடகக் கலையைச் செழுமைப்படுத்தியவர் சிங்கள நாடக உலகின் தந்தை எனப்போற்றப்படும் மறைந்த பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர என்பதனை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லியது அன்றைய நிகழ்வுகள். தமிழ் சிங்கள கூத்துகளில் ஒற்றுமையை இரு இனக்கலைஞர்களும் மொழியை மறந்து கலையால் இணைந்து கலைமொழியே இனத்தைக் கடந்தது என்பதை உணர்ந்து நின்றனர். இந்நிகழ்வினை நினைவுபடுத்தி தேசிய ரீதியில் கலை இலக்கியவாதிகள் சமாதானம், புரிந்துணர்வு ஆகியவற்றுக்கு தமது ஆக்கங்களையும் செயற்பாடுகளையும் பயன்படுத்த வழிசமைக்கவேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மை இன்றி தமிழ்க்கலை இலக்கிய முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டுமென கலாசார அமைச்சினை வேண்டி நிற்கிறது ஞானம்.
OO
ஞானம் - ஜூன் 2004 3.

Page 4
சிறுகதை
யாரிடம் நோவேன்?
衚鬣褒雲 經醬 *リ அக்கினித் திரவத்தை அள்ளி அள்ளி யாரோ ஊற்றுவதுபோல உடல் கொதித்தது. உடல் கட்டுப்பாட்டை இழந்து நடுங்கத் தொடங்கியது. இழுத்துப் போர்க்க வேண்டும்போல், அந்தக் கடும் காய்ச்சலிலும் உடல் குளிர்ந்து விறைத்தது. தலையிலே நூறு கிலோ பாரத்தை வைத்து அழுத்துவதுபோல் மிகவும் சிரமப்பட்டான் சிவகுமார்.
தேநீரைக் கொண்டு வந்த சியாமளா, “எழும்புங்கோ. மத்தியானக் குளிசையும் போடயில்லை’ என்று பரிவோடு கூறினாள்.
படுக்கையிலிருந்து எழும்ப எத்தனித் தான். முடியவில்லை. யாரோ அவனைப் பாயோடு ஒட்டிவிட்டதாக உணர்ந்தான்.
கண்களை விழித்து மனைவியை நோக்கியபோது ஒருவர் இருவராகத் தெரிந்தது.
சியாமளாவின் கண்களில் நீர் கோத்துவிட்டது. கணவனின் நெற்றியில் கை வைத்தாள். கையே கொப்பளித்து விடும் போலிருந்தது. “காய்ச்சல் விடேல்லையே அத்தான்?’ அன்புடன் கணவனிடம் கேட்டாள். அவனது பதிலை
4
சந்திரகாந்தா
எதிர்பாராமலே பழைய சேலையொன்றை எடுத்துப் போர்த்தினாள்.
60Ꭰ ᏧᎦ காலெல்லாம் குத்தி முறிக்கிதப்பா.” அவனது குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்தது.” மருந்தைக் குடியுங்கோ.” என்றபடி அவன்
எழுந்திருக்க உதவினாள் சியாமளா,
கைவசமிருந்த கடைசி இரண்டு பனடோலை யும் கொடுத்துவிட்டு, அவனுக்குப் புளிக்கஞ்சி காய்ச்ச
அடுப்படிக்குச் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து அவள் திரும்பி வந்தபோது குலப்பன் அடிப்பது அடங்கிப் போயிருந்தது. ‘அத்தான்.” என்ற அவளது அழைப்பில் அவன் கண்களைத் திறக்க முயன்றான். முடியவில்லை. அவன் பதில் சொல்வான் என்று அவள் சிறிதுநேரம் பார்த்திருந்தாள்.
சிவகுமார் பதிலேதும் சொல்லாமல் துவண்டு போயிருந்தான். கையும் காலும் போட்டது போட்டபடியேயிருந்தது. அரசாங்க ஆஸ்பத்திரியில் நேற்று எடுத்த மருந்துக்கு துளிகூட குணம் தெரிய வில்லை. தனிப்பட்ட வைத்தியரை நாட கையிலும் காசிருக்கவில்லை. இடப் பெயர்வின் பின்னர் எவ்வளவு கஸ்டப்பட வேண்டியுள்ளது என நினைத்துக் கொண்டாள் சியாமளா. முன்பு கரண வாயில் சொந்த வீட்டில் இருந்தபோது இவ்வளவு கஸ்டமில்லை. பொருளாதாரத் தடைகளினால் சில கஸ்டங்களைச் சந்தித்தாலும் கூட வாழவழியிருந்தது.
ஞானம் - ஜ"ன் 2004
 
 

தோட்ட மண்ணைக் கொத்தி, பயிர்வைத்து வியர்வை சிந்தினால் நல்ல பலன் கிடைக்கும். தோட்ட வரும்ப்டி ஒருபுறமிருக்க வீட்டுவளவின் வரும்படியும். ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் கிடைக்கும் வரும்படியும் அடுப்பை மூன்று நேரமும் புகைய வைத்தது. ஆனால் இங்கு.?
சிவகுமார் தினக்கூலியாக ஏதாவது உழைத்து வந்தால்தானுண்டு. இல்லாது விட்டால் அடுப்பு, பூனையின் வதிவிட மாகிவிடும். அதிலும் இப்போது சில நாட்களாக சிவகுமாருக்கு அடிக்கடி காய்ச்சல் வர ஆரம்பித்த பின்னர் சியாமளாவும் அடிக்கடி கூலி வேலைக்குப் போகவேண்டி ஏற்பட்டது. அவர்களால் முடிந்தாலும், குழந்தைகளால் பசி கிடப்பதென்பது லேசான காரியமா என்ன?
சிவகுமார் துவண்டு போய்ப் படுத்திருக்கையில் சியாமளாவிற்குக் கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை.
“வாட்டிலை நிப்பமே அத்தான்?” என்று
பரிவோடு அவனை நோக்கினாள். அவனும் சம்மதித்து தலையசைத்தான்.
இப்போது ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போவது? நேற்று நண்பன் சூரி சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்று வந்தான். இன்று சயிக்கிளில் இருந்து பயணம் பண்ணக்கூடிய நிலையில் அவனில்லை. எனினும் இன்றும் சூரியிடம் ஓடினாள். சூரி உடனேயே மோபைக் பிடித்துவரப் புறப்பட்டான். சூரியும் கஸ்ரப்பட்டவன்தான். எனினும் நண்பனுக்காக அவன் துடிக்கையில் அவள் மனது உணர்ச்சி வெள்ளத்தில் சிலிர்த்தது.
ஒருவாறு சிவகுமாரை வைத்திய சாலையில் சேர்த்தாயிற்று. வெளி
நோயாளர் பகுதியில் இருந்த மருத்துவர் அவனைப் பரிசோதித்தார். “மூளைக்
ஞானம் - ஜூன் 2004
பதறித்
காய்ச்சல் போல இருக்கு” என்று கூறியபடி சில பரிசோதனைகளுக்கும் எழுதி, மருந்துகளும் எழுதி வாட்டுக்கு அனுப்பினார். பெரும் திரளான நோயாளர்களைப் பார்க்கும் அவரைப் பார்க்க மனதில் பெருமிதமேற்பட்டது.
வாட்டுக்கு வந்ததும் சிவகுமாருக்குக் கட்டில் கிடைக்கவில்லை. தாதிமார் தமது இருக்கையில் அமர்ந்துகொண்டே விசாரித்தனர். ஒரமான ஒரு பாயில் அவனைப் படுக்கச் சொல்லிவிட்டு ஒரு தாதி அவனருகே வந்து அன்பாக உரையாடி காய்ச்சல் பார்த்தாள். நூற்றி மூன்று என்று துண்டில் பதிந்துவிட்டு இரண்டு பனடோல் வில்லைகளைக் கொடுத்தாள்.
வாட் பார்க்கும் மருத்துவர் இன்னமும் வரவில்லை. சிவகுமாருக்கு வேறு மருந்து ஏதும் கொடுக்கப் படவில்லை. வெளிநோயாளர் பகுதியி லிருந்த மருத்துவர் கன மருந்துகள் எழுதியது போல சியாமளாவுக்குத் தென்பட்டது. “வேற மருந்தில்லையே அம்மா?” என்று தாதியிடம் கேட்டாள்.
“பெரிய டொக்டர் வந்து பார்க்க வேணும். பிறகுதான் மற்ற மருந்துகள். குழுக்கோஸ் எல்லாம் ஏற்றலாம்.
என்றாள்.
e s ஏனம்மா? “இப்ப மருந்தெல்லாம் தட்டுப்
ருநolத 5
பாடெல்லே? பெரிய டொக்டர் பார்த்த பிறகுதான் ஏற்றலாம்.”
“டொக்டர் எப்ப வருவார்?" “வருவார். நேரம் சொல்லேலாது?” சியாமளாவுக்கு அந்தரமாக இருந்தது. சிவகுமாரின் அருகில் சென்றாள். "டொக்டர் வந்த பிறகுதான் குளுக்கோஸ் ஏத்துவினமாம்."
“பாவம் டொக்டர்மாருக்கும் கடும் வேலை. இங்கயிருந்து படிக்கப் போன பொடியனே இங்க சேவைசெய்ய வருகுது
5

Page 5
களில்லை. தலை மண்டை பிளக்கிற
மாதிரி இருக்கப்பா. நாக்கும் வரஞது.
குடிக்க ஏதும் தாரும்.”
அவள் அவனுக்குத் தேநீர் போட்டுக்
கொடுத்துக் குடிக்க வைத்தாள். “ஆம்பிளை வாட்டிலை பொம்பிளை நிற்கக் கூடாதம்மா. கெதியிலை
போங்கோ’ அற்ரெண்டன் அவளை விரட்டினான். "டொக்டர் வரப் போறார்.” அவன் விரட்டினாலும் டொக்டர் வரப்போறார் என்ற சேதி அவளுக்கு இனித்தது. சியாமளா வெளியே சென்று நீண்ட நேரத்தின் பின்தான் மருத்துவர் வாட்டுக்குப் போனார்.
சிறிது நேரத்தின் பின்னர் வாட்டி லிருந்து திரும்பிய சூரியிடம் எதுவும் கேட்காமல் ஆவலாக அவனை நிமிர்ந்து பார்த்தான் சியாமளா,
“கட்டில்ல விட்டிருக்கினம் சேலைன் ஏற்றியிருக்கு மூளை மலேரியா என்று தான் பெரிய டொக்டரும் சொல்லுகிறார். இரத்தம் எடுத்துச் சோதிக்க அனுப்பி யிருக்கு.”
மதியம் பார்வையாளரை அனுமதிக் கும் நேரத்தில் சியாமளா வாட்டுக்கு விரைந்தாள். சேலைன் இன்னமும் ஏறிக்கொண்டிருந்தது. சிவகுமார் கண்களை மூடியபடி படுத்திருந்தான். இவளது வரவு ஏற்படுத்திய சலசலப்பில் அவன் விழிக்கவில்லை.
“இஞ்சாருங்கோ.” கணவனுக்கு அருகே நின்று குனிந்து சுடப்பிட்டாள்.? சிவகுமார் இமைகளை வெட்டினான். சிரமத்துடன் கண்களைத் திறந்து பார்த்தபோது சியாமளாவின் இனியமுகம் இரண்டாகத் தோன்றியது. கடும் சுரத்திலும் கூட அவனது இதழோரம் புன்னகை அரும்ப முகம் மலர்ந்தது.
“எப்படி இருக்குங்கோ?”
“எனக்கொண்டும் இல்லை. பயப்படாதையும்.” கதைக்கும்போது மூச்சு வாங்கியது.
“இளநீர் வெட்டிக்கொண்டு
போத்தில்லை விட்டுக்கொண்டு வந்திருக் கிறன், கொஞ்சம் குடியுங்கோ.”
“இப்ப வேண்டாம். பிள்ளையள் தனியவே?”
“பவளம் அக்காவோட விட்டுட்டு வந்தனான்.”
“பசிகிடக்க மாட்டுதுகள். நீ போய்ச் சமையன்.”
'நீங்கள் இப்படிக் கிடக்க நான் விட்டுட்டுப் போகட்டே? முதல்ல ஏதாவது குடியுங்கோ. மாக்கரைச்சுத் தாறன்.”
“வேண்டாம். பிரட்டிக் கொண்டு வருகுதப்பா.”
"ஒரு முரடென்றாலும்.” என்றபடி இளநீரைத் பருக்கினாள் சியாமளா, அது நெஞ்சைப் பிளந்துகொண்டு போவதாகப் பட்டது.
“நீ சாப்பிட்டனியே?. கிடக்காத, பிள்ளைத்தாச்சி வயிறு. தனது வருத்தத்திற்கு மத்தியிலும் அவன் அன்போடு கேட்கையில் அவளது மனது விம்முகிறது.
பார்க்கிற நேரம் முடியப் போகுது. நீர் வெளிக்கிடும்” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காவலாளி, “பார்க்க வந்தவை எல்லாம் போங்கோ.” என்று பெருங்குரலெடுத்தபடி வந்தான். இதற்கிடையில் தாதி அவளை அழைத்து ஒரு மருந்துச் சிட்டையக் கொடுத்து இந்த மருந்தை வாங்கிவாரும். ஏத்த வேணும்.” என்றாள்.
“என்ன விலை வரும் அம்மா?” சியாமளா கேட்கவே, பனடோலே பத்து ரூபா விற்கிறது. விலை இருக்கட்டும். மருந்து கிடைத்தால் அது பெரிய காரியம்.” என்றாள்.
வீட்டில
பட்டினி
33
ஞானம் - ஜூன் 2004

இதற்கிடையில் வேர்க்க விறுவிறுக்க வந்த சூரி, ‘சுணங்கிப் போச்சு. மனிசி பாயாசம் காச்சித் தந்தவா. இப்ப எப்படி இருக்கு? என்று அன்போடு கேட்டான்.
காய்ச்சல் இறங்குதில்லை. வெளியில மருந்து வாங்கத் தந்தவை.” என்றபடி சியாமளா அவனிடம் நீட்டினாள். மருந்துத் துண்டை வாங்கிக் கொண்டு தனியார் பாமசிக்கு விரைந்தான் சூரி இதற்கிடையில் காவலாளி, ‘என்னக்கா, சொல்லுறது கேட்கவில்லையே? என்றபடி வந்தான்.
அருகே வந்த அற்ரெண்டன் ஆறுமுகம் அன்போடு அவனை நோக்கியபடி, "நீங்க போங்கோ பிள்ளை. ஆள் வரும்வரை நான் பார்க்கிறன்.” என்றான்.
அந்த ஆறுதல் வார்த்தைகள் தந்த
தெம்புடன் நன்றிப் பெருக்கோடு அவனை
நோக்கியபடி சியாமளா வெளியேறினாள். மருந்து வாங்கச் சென்ற சூரி வெறுங்கையோடு
அனுப்பாட்டிலும், தனியாரையாவது கொண்டுவர விடலாமே! அரசாங்கம் திட்டமிட்டு எங்களைக் கொல்லுது” சூரி சீற்றத்துடன் கூறினான்.
சியாமளா விக்கித்துப் போனாள். “கடவுளே. எனக்கு எதுவும் வேண்டாம். அவர் தப்பிப் பிழைச்சால் அது போதும்.”
என மனமுருக இறைவனை வேண்டி
னாள். தவிக்கும் மனதோடு வீட்டிற்குச் சென்று பிள்ளைகளுக்கு உணவு செய்து கொடுத்துவிட்டு மறுபடியும் வைத்திய சாலைக்கு விரைந்தாள்.
“மருந்து ஓரிடமும் கிடைக்காததால் வவுனியாவுக்குத்தான் அனுப்ப வேணு மாம்” சூரி ஆதங்கத்தோடு கூறினான். "அம்புலன்ஸ் எப்ப போகும்?”
ஞானம் - ஜ"ன் 2004
ஏமாற்றத்துடன் திரும்பினான். “ஒரு கடையிலும் மருந்தில் லையாம் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு
"இன்றைக்குக் காலமை போட்டுது. நாளைக்குத்தான் திரும்பி வரும். நாளையிண்டைக்குத் தான் போகேலும்.” "அதுவரைக்கும் மருந்தில்லாமல்.? அவள் விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். சூரி அவளைத் தேற்
றினான்."முதல்ல பாஸ் எடுக்க வேணும்.
பிணை வேணும். ஐசி வேணும்.
“பிணைக்கு எங்க போறது?’ சியாமளா தவித்தாள்.
ஒழுங்கு செய்யுறன். நோயாளியை மட்டும்தான் அம்புலன்சில் ஏத்துவினம். நானும் நீங்களும் பாஸ் எடுத்துக் கொண்டு பஸ்சில் போவம்.” நட்புக்காகச் சூரி செய்யும் உதவிகள் புல்லரிக்க வைத்தன.
மறுநாள் பாஸ், பிணை என்று அலைந்து திரிந்து களைத்துப் போ னார்கள். மாலையில் வந்து பார்த்தபோது சிவகுமார் நினைவிழந்து போயிருந்தான். இஞ்சாருங்கோ ஒருக்காக் கண்ணை முழிச்சுப் பாருங்கோ. உங்கட சியாமளா வந்திருக்கிறன். கதையுங்கோ.”
அவன் அசையவில்லை. மூச் செடுப்பது மட்டும் நெஞ்சில் தெரிந்தது. குழுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது.
அற்ரெண்டன் ஆறுமுகம் அருகே வந்து ஆறுதல் சொன்னான். பயப்படா தையுங்கோ கடவுள் கைவிட மாட்டார். வவுனியா போனால்
ck w
நான
நாளைக்கு சுகமாயிடும்.”
சியாமளா சிவகுமாரின் தலை மயிரைக் கோதியபடி அழுது கொண் டிருப்பதைப் பார்க்க சூரிக்கும் அழுகை வந்தது. ‘கடவுளே! எங்களுக்கு ஏன் இந்தச் சோதனை?. இந்த வேதனை களுக்கு முடிவே இல்லையா?’ என்று ஏங்கினான்.

Page 6
மறுநாள் காலையிலும் அவனுக்குச் சுயநினைவு தோன்றவில்லை. அம்புலன் சில் ஏற்றுவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தாதியர் ஊழியர் அனைவரும் பம்பரமாகச் செயற்பட்டனர். அம்புலன்ஸ் நிறைந்த நோயாளர்கள். சிவகுமார் நடுவே படுத்திருந்தான்.
சியாமளா எட்டிப் பார்த்தாள். இப்பொழுதும் அவனிடம் அசைவில்லை. அம்புலன்ஸ் புறப்பட்டது. சிறிது நேரத்தில் பஸ் வரவே சூரியும், சியாமளாவும் ஏறிக் கொண்டார்கள்.
பஸ் பொயின்ரை அடைந்தபோது அங்கே பெரும் சனத்திரள் காத்திருப் பதைக் கண்ட சியாமளா விக்கித்துப் போனாள். இன்றைக்குப் போன மாதிரித்தான்.
அவர்கள் பஸ்சிலிருந்து இறங்கிய
போது, “இன்று பாதை மூடியிருக்கு. இராணுவம் போகவிடவில்லை” என்ற தகவல் காதுக்கு எட்டவே அவர்கள் பதறினார்கள்.
"அப்ப அம்புலன்ஸ்.?” சுற்று முற்றும் நோட்டம் விட்டான் சூரி. ஒன்றன்பின் ஒன்றாகப் பல வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அங்கே அவர்களது அம்புலன்ஸ்சும் நின்றது.
சூரியும் சியாமளாவும் அங்கு விரைந்து சென்றார்கள். ‘அம்புலன்ஸ் சையும் விடாங்களோ?”
“ஒரு வாகனமும் முடியாதாம். -
“gsär...?” "ஆருக்குத் தெரியும்.” சியாமளாவிடமிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் போய் விட்டது. அவள் துடிதுடித்து ம்யலன்ஸ்சுள் கோச் கினாள். நடமாடக் கூடிய நோயாளர்கள்
போக
8
வெளியே சிவகுமார் இன்னமும் சுயநினைவின்றி
இறங்கி நின்றார்கள்.
மூச்சிழுத்துக் கொண்டிருந்தான். சியாமளா ஏறி உள்ளே சென்று அவனது தலையைத் தனது மடியிலே வைத்துக் கொண்டு அழுதாள்.
அவனது தேகம் மறுபடியும் அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. ஏறிக் கொண்டிருந்த குளுக்கோசும் முடிந்து விட்டது. வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் இல்லாத போதிலும் கிளினர் வந்து குளுக்கோசைக் கழற்றினார்.
“மூன்று நாளைக்குப் போக்குவரத்து இல்லையாம்” தகவல் அறிந்துவந்த சாரதி கூறவே சியாமளா புெருங் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
எல்லோரையும் ஏற்றிக் கொண்டு திரும்பிய அம்புலன்ஸ்சில் சாரதி சியாமளாவையும் அனுமதித்தான். அம்புலன்ஸ்சில் பயணிக்கையிலே, மடியிலேயே சிவகுமாரின் ஆவி பிரிந்ததையறியாத சியாமளா இன்னமும்
கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள்."
ஞானம் - ஜூன் 2004
 

நேர்காணல்
கவிஞர் புதுவை இரத்தினதுரை
சந்திப்பு - நுதல்விழி இமையவன்
ஈழத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவர்
கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர்: நினைவழியாநாட்கள், இரத்த புஷ்பங்கள், : ஒரு தோழனின் காதல் கடிதங்கள் : &:8:"ঃ: வானம் சிவக்கிறது உலைக்களம் ஆகிய நூல்களுக்குச் சொந்தக்காரர்.
பல ஆயிரக்கணக்கான எழுச்சிப்பாடல்களின் ஆசிரியர் பக்திப் பாடல்கள் பல படித்தவர் கவிதை சொல்லுகை முறையில் மிகவும் கைதேர்ந்தவர் ஈழத்தமிழர் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்த கவிஞர்
*தாமரைப் பூவினால் மாலைகட்டி - எங்கள்
தாயக பூமிக்குச் சாந்துங்கடி : பாமழையால் நிலம் பண்பட்டுப் போகவே ப7ழயே கும்மிகள் கொட்டுங்கடி
கேள்வி - நீங்கள் நீண்ட காலமாக ஒரு போராளிக் கவிஞர் என்ற
வகையில், மக்களின் அனுபவங்களை உங்கள் கவிதைகள் எவ்வளவு தாரம் பதிவு செய்துள்ளன?
பதில் :- நான் கவிதை எழுதத் தொடங்கி ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன. நான் இந்தப் போராட்டத்துடன் இணைந்து கொண்டது ஆக இருபது வருடங்கள்தான். அந்த இருபது வருடத்திற்கு முன்னரும் நான் கவிதை எழுதிக் கொண்டுதான் இருந்தனான். நான் நினைக்கிறேன். நான் போராட்டத்திற்கு இணைந்த காலமும், போராட்டம் உயிர்ப்புப் பெற்று ஒரு சரியான நிலைக்குப் போன காலமும் சமகாலமாகத்தான் இருக்கவேண்டு மென்று. அதற்குமுதல் நான் சமூகத்தைப் பாடியவன்தான். இந்தக் கவிதை வகுப்பிலே, இந்தக் கவிதையைக் காலம் காலமாகப்
ஞானம் - ஜூன் 2004 9

Page 7
பிரித்துக் கொண்டு வந்து விமர்சனம் செய்பவர்கள் இதுபற்றிச் சொல்லுவார்கள்.
இந்தப் என்னை இணைத்துக் கொண்டதற்கு
போராட்ட காலத்தில்
முற்பட்ட காலத்திலும் நான் கவிதை எழுதியிருக்கிறேன். அப்பவும் நான் அந்தச் சமூகத்துடன் நின்று சமூகத்தை முற்பக்கமாகப் பார்த்துத்தான் கவிதை சாதி ஒழிப்புகள் பற்றி எழுதியிருக்கிறேன். நாங்கள் அப்பொழுதும் காதல் எழுதவில்லை.
எழுதியிருக்கிறேன்.
கவிதை சமூகத்தின் பிரச்சி னையுடன், சமூகத்தின் உணர்வுடன் சமூகத்துடன்தான் நான் நின்றிருக் கின்றேன். இதில் யாரும் நல்ல கவிதையோ கூடாத கவிதையோ என்றதைப் பற்றி அவர்கள் எதுவும் செய்து கொள்ளட்டும். ஆனால் எப்பொழுதுமே மானுடம் வதைப்படும் இடமெல்லாம் புதுவை இரத்தினதுரையின் குரல் கேட்கும் கேட்டது
எங்களுடைய கவிதையிலே போரை ஒரு வரியிலே பாடும்போது சமுதாயத்தின் பிரச்சினைகள் எப்பொழுதுமே இருந் திருக்கின்றன. அதை யாருமே மறுக்க முடியாது. இப்பொழுது போரைப் பாடும்போது போர் என்பது தீண்டப்படாது ஒதுக்கப்பட வேண்டிய மாதிரி இல்லை. போராட்டம் என்பதுவும் சமூகத்தின் ஒரு அங்கம். போராடாமல் எதுதான் வாழப் போகின்றது. போர் வேறு.? போராட்டம் வேறு. இவர்களுக்கு விளங்காமல் இருப்பதும் இதுதான். போராட்டத்தின் ஒரு அம்சம்தான் போர். போராட்டம் என்பது உயிர் எடுத்த எல்லாத்துக்கும் இருக்க வேண்டியது. இயங்குகின்ற ஒரு சக்தி. போராட்டத்தின் ஒரு அம்சம் போர், நாங்கள் இப்பொழுது போர் செய்து கொண் டிருக்கிறோம். ஆனால் அதுபோராட்டத்தின் ஒரு அம்சம்தான். சமூகத்தில் வாழுகின்ற எல்லாமுமே போராடுகின்றன. ஆனால் அது போராட் டத்தின் ஒரு அம்சம்தான்
என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். நல்ல கவிதை, கூடாத கவிதை என்பதை அப்புறம் பேசிக்
நான் கொமினிஸ்ராக இருக்கும்போது, உலகம் தழுவிய பார்வை எனக்கிருந்தது. இப்பொழுதும் எனக்கு உலகம் தழுவிய பார்வைதான் இருக்கிறது.
கொள்வோம். அதைத் தீர்மானிப்பதற்கு நான் முதலில் சொன்னதுபோல எந்தத் தராசுப்படியும் இல்லை, அளவுகோல், லீற்றர், மில்லி மீற்றர் வைத்திருப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது. ஆனால், புதுவை இரத்தினதுரை எப்பவும் மானுடம் வதைபடும் இடத்திலே நின்று அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
O
ஆகவே சமூகக் கவிதைகள் யாவுமே போராட்டக் கவிதைகள் தான். போர்க்கவிதை என்பது வேறு. அது தனியே களத்தைப் பாடுவது. இந்த வித்தியாசம் தெரியாமல்தான் இப்ப கனபேர் வில்லங்கப்பட்டுக் கொண்டு இருக்கினை. அவைக்கும் போருக்கு வித்தியாசம் தெரியேல்லை. போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியேல்லை. போராட்டம் என்பது உண்மையானது. இன்றுகழிய
கரும்ை - ஜூன் 2004
 
 

நாளை. அது போராட்டம். நாளைகழிய நாளை மறுதினம் அது போராட்டம் சமூகம் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதில் ஒரு அம்சம் போர்.
போர் இப்படித்தான் இருக்கும். சத்தம் கேட்கும். ரத்தம் சிந்தும். உயிர் போகும். அதுபோர்.
இது போராட்டம். மனுசருக்குப் போராட்டம் இல்லாமல் என்ன மனுசர்? போராடும் சமூகத்தின் இயக்கமே போராட்டத்தினூடாகத்தான் இயங் குகின்றது. எனவே நான் போராட் டத்துடன் இயங்குவதால் சமூகத்துடன் இயங்குபவன் என்றுதானே கொள்ளப் படும். ஆனபடியால் எனது கவிதைகள் சமூகம் சார்ந்ததாகத்தான் இருக்கும்.
கேள்வி :- ஆரம்பத்தில் பொது
வுடைமை சார்பாகக் கவிதை
எழுதிய தாங்கள் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு தமிழின எழுச்சிப் பாடல்கள், கவிதைகள்
எழுதி வருகிறீர்கள். இந்த இரண்டு.
கட்சிகளின் தாக்கங்களில் உங் களுக்கு அதிகமானதொரு வீறைத் தந்தது எந்தக் கட்சியின் தாக்கம் என்று நினைக்கிறீர்கள்?
பதில் :- இந்தக் கேள்வியே முதலில் பிழை. நான் ஒரு கொமினிஸ்ராக இருந்தது உண்மை. ஆனால் கொமினிஸ் கட்சியில் இருக்கவில்லை. நான் இப்பொழுது விடுதலைப் புலிகள் அமைப்பிலே இருக்கிறேன். விடுதலைப் புலிகளும் ஒரு கட்சி இல்லை. கட்சி என்பது இங்கே நடைமுறையில் ஒரு தேர்தலுக் காக, அல்லது பிரபலத்துக்காக
ஞானம் - ஜூன் 2004
அல்லது மந்திரி ஆவதற்காக, எம். பி. ஆவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. கட்சியாக கொமினிஸ் கட்சி இருக்கிறது. அதில் நான் எப்போதுமே இருந்தது இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒரு கட்சியாக இல்லை. எங்களுக்கு அந்த நம்பிக்கையும் இல்லை. ஆனபடியால் நான் இரண்டு இடமும் இருந்தது, இருக்கிறது என்பது உண்மைதான். நான் கொமினிஸ்ராக இருக்கும் பொழுதும் எனக்கு ஒன்று மனதில் இருந்தது. இந்த மானுடம் வதைபடுகின்றதைப் பார்த்து என்னால் பொறுக்க முடியாது.
இப்பொழுதும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் பொழுதும் எனக்கு இருப்பது இந்த மானுடம் வதைபடு கிறதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் இருப்பது. இரண்டிற்கும் கனக்க வித்தியாசம் இருப்பதாக இல்லை. நான் நினைக்கிறேன். நான் இப்பவும் அந்த கொமினிஸ்ராகத்தான் இருக்கிறேன் என்று. ஒரு நல்ல மனிதன் நல்ல கொமினிஸ்ராகத்தான் இருப்பான். அதில் எந்த மாற்றமும் இல்லை. முதல் எல்லா வற்றையும் விடுவம். ஒரு நல்ல தமிழன் நல்ல சிங்களவன் எல்லாவற்றிலும் ஒரு நல்ல மனிதன் நல்ல கொமினிஸ் ராகத்தான் இருப்பான். ஒரு கொமினிஸ் ராக இருக்கின்றவன், அங்கு எங்கு மக்கள் வதைபடுகிறார்களோ கொடுமை எங்கு நடக்கின்றதோ அதைப் பார்த்து அவன் அந்தரப்படுவான், கோபப் படுவான் அதற்கு எதிராக அந்தக் கொடுமைக்கு எதிராக அவன் குரல் கொடுப்பான். நான் கொமினிஸ்ராக இருக்கும்போது உலகம் தழுவிய பார்வை

Page 8
எனக்கிருந்தது. இப்பொழுதும் எனக்கு உலகம்தழுவிய பார்வைதான் இருக்கிறது.
இலங்கையிலே கொமிஸ்ராக இருந்தவன், ஒரு காலத்தில் சிங்கள, முஸ்லிம், தமிழ் பாட்டாளிகள் இணைந்து ஒரு வர்க்கபேதமற்ற, ஒரு பொது வுடைமைச் சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்று விரும்பினான். எங்களுக்கு அப்பொழுது தமிழ்த் தேசியம், சிங்களத் தேசியம் என்ற எதுவுமே கிடைக்கவில்லை. எங்களுக்கு ஒரு கனவு இருந்தது. அது ஒரு வெறுங்கனவு. சிங்களப் பாட்டாளிகளும் தமிழ் பாட்டாளிகளும் சேர்ந்து இலங் 6) is 6. பேதமற்ற ஒரு பொதுவுடமைச் சமூகமாக மாற்றி விடுவோம் என்று ஒரு கனவு இருந்தது. உது கனபேருக்கு இருந்தது. அந்தக் கனவு நிறைவேறாது என்பதைக் காலம் பிந்தித்தான் நாங்கள் அறிந்தோம். ஏனென்று சொன்னால் இந்தச் சிங்களப் பாட்டாளிகளையும் தமிழ்ப் பாட்டாளி
வர்க்க
களையும் இணைப்பதிலும் பார்க்க, இணைப்பதற்கு இடைஞ்சலாக இங்கு
அவர்களைச் சுற்றி இருபக்கமுமே பேரினவாதம் அவர்களை மூடித் திரையிட்டு இருப்பதை நாங்கள்
காலப் போக்கில் அந்த வனைவு பெரிய கொங்கிறீற்றாகி இறுகிவிட்டது. எனவே சிங்களப் பாட்டாளிகளையும் தமிழ்ப் பாட்டாளிகளையும் இணைப்பதற்கு இந்தப் பேரினவாதம் இரண்டுமே எங்களுக்கு இடம்தர முடியவில்லை. காலம் நகர்ந்தது.
நான் இலங்கையன் இலங்கையன் என்று சொல்லச் சொன்னேன். சிங்களப் பேரினவாதம் சொல்லிச்சிது இல்லை நீ தமிழன் தமிழன் என்று. நான் திரும்பச் சொன்னேன் இல்லையப்பா நான் இலங்கையன், இலங்கையன் என்று. நான் சிவனொளிபாத மலையில்தான் சூரிய உதயத்தைக் காணவிரும்புகிறேன். களனி கங்கையில் தான் கொஞ்சம் உடல் ஆற குளிக்க விரும்புகின்றேன். கட்டு நாயக்காவில் இருந்துதான் விமானம் எடுத்து பறக்க விரும்புகிறேன் என் றெல்லாம் எழுதினேன். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப என்னை நீ கீரிமலைக்கு உரியவன். நீ திருகோணமலைக்கு உரியவன், நீ வன்னிக்கு உரியவன், நீ மட்டக்களப்பிற்கு உரியவன் என்று என்னைப் புறந்தள்ளினார்கள். என்னை தமிழ்ச் சமூகத்தையே தள்ளினார்கள். பிறகு
மட்டுமல்ல
நாலுவரித் துணுக்கும் போதும் இந்த உயரியல் இலக்கியம் என்று சொன்ன வர்களை யெல்லாம் ஊதித் தள்ளுவதற்கு
நாங்கள் சொன்னம் அப்படியோ? நான் தமிழன் என்று சொன்னேன்.
சொன்னார்கள்
காணத்தவறிவிட்டோம். தேசியத்திற்குள் சிங்களப் பாட்டாளி களுக்கு முன்னால் எங்களுக்குத் தெரியாமலேயே சிங்களப் பேரினவாதம்
இலங்கைத்
அவர்களை வனைந்து கொண்டு வந்தது.
12
இனவாதி என்று. நான் இலங்கையன் என்று சொன்ன போதும் என்னை இலங்கைத் தேசியத்துக்குள் அடக்க வில்லை. நான், சரி அப்படியில்லை என்று சொல்லிப்போட்டு எனது பக்கத்திற்கு
ஞானம் - ஜூன் 2004
 
 

வந்து நின்று “தமிழன்’ என்று கூறினேன். அவர்கள் சொன்னார்கள் “நீ இனவாதி” எனக்கு இனவாத முலாம் பூசினார்கள். இப்பொழுது நான் தமிழன் என்று நிமிர்ந்தேன். இப்ப சொல்லு கிறார்கள் இல்லை நீ இலங்கையன் என்று. (சிரிப்பு) இங்கே நான் குறிப்பிடும் நான்’ என்பது முழுத்தமிழ்ச் சமூகத்தின் அடையாளம் தான். நான் தமிழன் என்று நிமிர்ந்த போது இப்போது திரும்ப வந்து கொண்டு இருபத்தைந்து வருடத்திற்குப் பிறகு என்னைப் பேந்தும் இலங்கை யனாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
நான் விடுதலைப்புலிகள் இயக்கத் திலும் சரி ஒரு கொமினிஸ்ராக இருக்கும் பொழுதும் சரி என் கண்முன்னால் இருந்தது இந்த மானுடம்தான். மானுடம் வதைபடும் இந்த அவலக்குரலுக்கு ஆதரவாக மானுடத்தை அதன் கழுத்தை நெரித்து வந்த அந்த அரூப கரங்களுக்கு, வெளியே தெரிந்த கரங்களுக்கு எதிராக அந்த விலங்கு உடைக்கும் போராளி யாகத்தான் என்னைக் காட்டிக் கொண் டிருக்கிறேன். எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. ஒரு சமூகத்தை நேசிக்கும் கவிஞர் எல்லோருக்குமே இது இருக்கும். அது உலகம் தழுவியதாக இருக்கும் நாடு தழுவியதாக இருக்கும், இனம் தழுவியதாக இருக்கும் ஏன் ஒரு மதம் தழுவியதாக இருக்கும் அதில் எந்த வேறுபாடும் இருக்காது. தேவை கருதி சில பேர் எல்லாவற்றையும் வகைப் படுத்திக் கொண்டு போவார்கள். அப்படி இருக்கக்கூடாது. ஒரு கவிஞனை கவிஞனாகவே இருக்க விடுங்கோவன். அவன், அந்த பாரதி சொன்னது போல
ஞானம் - ஜூன் 2004
பிறர் ஈனநிலை கண்டு துள்ளும் கவிஞராக விடுங்கள் என்னையும் விட்டுவிடுங்கள். . ,
ஒருவனை
கேள்வி :- இலங்கையில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வேண்டி மொழி யுரிமைக்காகக் குரல் எழுப்பிய வர்களில் எழுதியவர்களில் தாங் களும் ஒருவர். தனித் தமிழ்க் கோசத்தை எழுப்பிய தங்களுடைய
கவிதைகளில் 6on L- சிங்களம், ஆங்கிலம் போன்ற பிறமொழிக் கலப்புக்ள் காணப்படுகின்றனவே.
இது மொழித்தூய்மையைப் பாதிக்க வில்லையா? பதில் :- இது அற்புதமான கேள்வி, ஆனந்தமான கேள்வி. மிகமிக அற்புதமான கேள்வி.
என்னுடைய கவிதைகளிலே சிங்கள
மொழி, ஆங்கில மொழிக் கலப்புகள்
வருகின்றன என்றீர்கள். எனக்குச் சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது. சுட்டுப் போட்டாலும் சிங்களம் வராது. ஒரு வார்த்தை எனக்கு ஆங்கிலத்தில் தொட ராக எழுத முடியாது. ஒரு வார்த்தை எனக்கு சிங்களத்தில் தொடராக எழுத முடியாது. இச் சொல்லுகள் வருகின்றன என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அது உண்மையாக இருக்கலாம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஒரு நல்ல கவிஞன், ஏன் என்னையும் நல்ல கவிஞனாக ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் விடட்டுமன். நானாவது ஏற்றுக் கொள்ளுவமே. நல்ல
3

Page 9
கவிஞனுக்கு ஒரு கவிதையை எழுதிப் பார்த்து விட்டு இதில் இந்தச் சொல்லு வந்துவிட்டது அந்தச் சொல்லு வந்து விட்டது என்று சொல்லி மாற்றி எழுதுவதென்பது பொருத்தமில்லாதது என்று நான் நினைக்கிறேன். கவிதையை உணர்வின் மொழி கொண்டும் அறிவின் மொழி கொண்டும் எழுதலாம் என்று சொல்லுவார்கள். இப்போது சில அறிவு ஜீவிகள் அறிவின் மொழி கொண்டு எழுதவேண்டும் என்று குறிப்பிடு கின்றார்கள். அவர்களுக்கு அறிவும் புரியவில்லை. உணர்வும் புரியவில்லை. பாவம் அப்பாவிகள் விட்டுவிடுவம். கவிதை உணர்வின் மொழிதான். இல்லையென்றால் கவிதை தேவை யில்லை. வசனம் எழுதிவிட்டுப் ஏன்? அறிவின் மொழி யாகத்தான் கவிதை எழுதலாம் என்றால் கட்டுரைக்கும் கவிதைக்கும் அவர் களுடைய மொழியிலே பிரச்சினை வந்துவிடும். கவிதை உணர்வின் மொழி தான். ஆனால் உணர்ச்சியின் மொழி அல்ல. அதை நான் ஏற்றுக் கொள் கின்றேன். உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் கனபேர்
போகலாம்.
தான் உணர்ச்சி. ஆகவே உணர்விற்கு அப்பாற் கடந்ததுதான் உணர்ச்சி. அது சன்னதம் கொள்வது போல, கலை ஆடுவதுபோல இருக்கும்.
ஒருவனுக்கு உணர்வு வேணும், எல்லா வகையான உணர்வும் தேவை, எல்லாத்திற்கும் பின்னால். இது வரும், பாருங்கள், போர் உணர்வு என்றார்கள்: பால் உணர்வு என்றார்கள். எல்லாத் திற்கும் உணர்வு தேவை. உணர்வு இல்லாமை எந்தக் காரியமும் செய்ய முடியாது. உணர்வு இல்லாவிட்டால் ஜடம் என்று சொல்லுவார்கள். நான் உணர்வின் வசப்பட்டவன்தான். நான் எப்பவும் உணர்ச்சி வசப்பட்டவன் அல்ல.
நான் உணர்வுவசப்பட்டு எழுதும்போது வார்த்தைகள் வந்து தவங்கிடக்கும். என்னை எடு, என்னை எடுஎன்று ஒரு நல்ல கவிஞனுக்கு முன்னால் சொற்கள் வரிசையில் நிற்கும். அதிலே வைத்து நான் தனித்து எடுக்க ஏலாது. நீ சிங்களம் அங்காலபோ. நீ ஆங்கிலம் இங்கால போ என்று தப்பே லாது, தள்ளேலாது.
மற்றது நாங்கள் மக்களுக்காக எழுதும்போது மக்களின் பாவனையில் இருக்கும். அது இப்ப மொழித் தூய்மைக்கு இடைஞ்சலானதுதான்.
வில்லங்கப்பட்டுக் ଜୋଗ ଥ, ୮ ଫେir Gର இரு க் கி ன் ற rா ர் க ள் . છે. 600r f કં ઈી
கிழவன்
வசப் படுதல் என்பது வேறு
ஒரு சாதாரண பாடசாலைப் பிள்ளை யிலிருந்து ஒரு சாதாரண
வரையும் இலக்கியக்காரரிடம் நின்றது கொஞ்சம். சமூகத்தில் நிற்பதுதான் கூட. ஒரு இலக்கியம் தனிய இலக்கியக்காரரின் மதிப்பீட்டுக்காகக் காத்திருப்பதில்லை. விமர்சகர்களுக்காக மட்டும் காத்திருப்
... "ఖ్య:
அக்கவிதைகள் நிற்கின்றன.
உ ண ர் வின் வசப்படுதல் என்பது வேறு. உணர்ச்சி வசப்படுதல் சன்னதம் கொள்வது. உணர்வில் இருந்து பிறப்பது
என்பது
4
ஆனால் ஒரு நல்ல கவிஞன் மக்களின் பாவனையில் உள்ள சொல்லைத்தான் பயன்படுத்துவான்.
ஞானம் - ஜ"ன் 2004
 
 
 
 
 
 
 
 

இது 'மொழித்தூய்மை மட்டும் என்று சொல்லிப்போட்டு பாவனையற்று வழக்கொழிந்த சொல்லைத் தூக்கிப் போட முடியாது. ஆனால், சமஸ்கிருதச் சொல்லையும், சிங்களச் சொல்லையும், ஆங்கிலச் சொல்லையும் போட்டால் இதனை எனக்குத் தெரியுமென்று, மற்றவர்கள் நினைப்பார்கள் என்பதற் காகத் தேடிப்பிடித்தும் வைக்கேலாது. அது தன்ர பாட்டில Folow பண்ணி வரும்
கவிதை. நான் கவிதை எழுதுவதை
நீங்கள் பார்த்தீர்களானால் தெரியும். அதில் வெட்டித் திருத்துதல் ஒன்றுமே
இருக்காது. அது, மற்றவர்கள் எப்படிச்
சொல்கிறார்களோ தெரியவில்லை. சிலர் சொல்லுவார்கள் கவிதை எழுதி, திரும்பி பேந்து வெட்டி எழுதி, பேந்து வெட்டி எழுதி பேந்து திருத்தி எழுதி, பேந்து அழித்து எழுதி பிறகு அழித்து எழுதி கவிதை கொண்டு வரலாம் என்று. ஐயோ உது என்னால முடியாத காரியம் ஐயா என்னை விட்டுடுங்கோ. அப்படிச் செய்ய முடியாது.
சிலபேர் கவிதை எழுதினால் மச்சான் எழுதிப் போட்டன். மச்சான் ஒருக்காத் திருத்திப் போட்டு, எழுதிப் போட்டுத் தாறன். உதென்ன இது, நீங்க என்ன கட்டிடமா கட்டிக் கொண்டிருக்கிறியள்? ஒரு கொஞ்சம் வளைஞ்சு போச்சுது. பொறு நான் திருத்தித் தாறன். கட்டிடம்
கட்டிற தொழில் இல்லை. இது சீமேந்துத் சொத்தி, நெளிவு
தொழில் இல்லை. பார்த்து நிமித்திப்பார்க்கிறதுக்கு. கவிதை சொத்தி, நிமிர்த்திப் பார்க்கிற காரியமே அல்ல. அப்படியானால் விட்டுவிட வேணும் அத்தொழிலை. கவிதை ஆற்றொழுக்காக
வரும் சொல். எங்கள் காலடியில் நின்று
வரிசையில் நிற்கும். அது ஒரு நிலையில்
ஞானம் - ஜூன் 2004
இருந்து எழுதப்பட வேண்டும். அதுவேற ஆக்கள் இருக்கினம் வெட்டித் திருத்தி, அதைத் திருத்தி, நாலு பேரிடம் கொடுத்துச் சரிபார்த்து, நீ இந்தச் சொல்லை மாத்து, அந்தச் சொல்லை மாத்து என்று சொல்லி விருப்பம் விருப்பமான இடத்தில் மூக்கு வைத்து, விருப்பம் விருப்பமான இடத்தில் காது வைத்து, விருப்பம் விருப்பமான இடத்தில் கை வைத்து ஒரு உருவத்தை உருவாக் கினால் எப்படியிருக்குமோ அப்படி யிருக்கும் அந்தக் கவிதை. கவிதை கவிதை உருவமாக இருக்க வேண்டும். அப்படியொன்றும் செய்ய முடியாது.
நாளாந்தம் பாவனையில் உள்ள சொற்களும், இந்தச் சமூகம் பயன் படுத்துகின்ற சொற்களும் கவிஞனின் படைப்பிலிருக்கும். வரும் ஓரிரண்டு அப்படி வரும், சுட்டுப் போட்டாலும் சிங்களம் தெரியாது. சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் தெரியாது. அதை நான் எப்படிப் பயன்படுத்துவது? அது மக்கள் பாவிக்கின்ற சொல்லாக இருந்திருக்க வேண்டும். பாவிக்கின்ற சொல்லை நான் பயன்படுத்தியிருப்பேன். இப்ப இந்திய இராணுவம் என்பதை யாரும் எழுதாமல் 1. P. K. F என்றால் எல்லோருக்கும் தெரியுமல்லவா? அதனால் 1, P. K. F என்றுதான் போட்டால் அதில் என்ன பிழை இருக்கு? அதுக்கேன் பிறகு இந்திய இராணுவம் என்று நான் சொல்ல வேண்டும். பாவனையில் இருக்கு. எல்லோருக்கும் தெரியும். பாவனையை நாங்கள் பாவிப்பதில் என்ன பிரச்சினை இருக்கு? மொழித்துய்மை என்பது சில வேளை களில் தெரியாமல் இருக்கலாம். நான்
மக்கள்
5

Page 10
இந்த 1. P. K. F என்ற சொல்லை ஆங்கிலம் தெரிந்து போடவில்லை. மக்கள் பாவனையில் இருந்ததால் நானும் பாவித்தேன்.
அப்படித்தான் சிங்களத்தில் நங்கி, மகே அம்மே முதலிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன். அது சாதாரண ஆட்களுக்குத் தெரிந்த சொற்கள். தமிழருக்கும் சிங்களவருக்கும், எல்லோ ருக்கும் தெரிந்த சொல். களமுனையில் நிற்கும் போராளிக்கு இது கூடத் தெரியும். ஏனெனில் காயப்பட்ட சிங்கள ஆமி கத்தியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். மகே அம்மே - என்ரை அம்மா எனக் கத்தியதை நான் கேட்டிருக்கிறேன். அதிலே இன்னுமொரு வீராய்ந்த தன்மை இருக்கிறது. இச்சொல் கவிதையில் வரவேண்டும். வந்தால் வீறுவரும் என்பதற்காய்ப் பயன்படுத்தினேன். மகே அம்மே” என்பதற்கு அர்த்தம் கள முனையில் தான் அறிந்து கொண்டேன். மக்கள் பாவித்த சொல்லைப்பாவித்தேனே தவிர சிங்களம் தெரிந்தோ, மொழித் தூய்மையைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவோ இதைப் பாவிக்க வில்லை. ஒரு கவிஞன் அப்படித்தான் பாவிப்பான்.
ஏன் ஹிந்திச் சொற்களைப் பாவித்திருக்கிறோம். 1. P. K. F. நேரத்திலிருந்த இலக்கியங்களிலே
நாங்கள் "சலோச்சலோ’ பாவித்திருக் கிறோம். இலக்கியம் அப்படித்தான்.
காலத்தைப் பிரதிபலிக்கின்ற இலக்கியம் சமூகத்தைக் காட்டும். அது தவிர்க்க முடியாது. இது ஒன்றுக்கும் சேராமல் கொஞ்சப்பேர் இருக்கினம். இப்படி எழுதினால் இப்படிச் சொல்
6
கிறாங்கள். அப்படிச் சொன்னால் இப்படி எழுதுறாங்கள். இப்படிச் சொன்னால் மொழித்துய்மை என்கிறாங்கள். அப்படிச் சொன்னால் பிரச்சாரம் என்கிறாங்கள். எப்படி இதுக்குள்ள நாங்கள் நின்று ஆப்பிட்டுக் கொண்டம் என்று எங்களுக்கு விளங்காமல் இருக்குது. இவங்களுக்கு நல்ல இலக்கியம் செய்யவும் தெரியவில்லை. கவிதையும் தெரியவில்லை. ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் ஏதோ ஒரு போக்கில் போகிறார்கள். அந்தப் போக் குடன் இணைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். ஐயோ! எங்களை விட்டு விடுங்கள். கேள்வி :- உங்களைக் காசி ஆனந்தன் என்ற கவிஞருடன் ஒப்பிட்டால் எப்படியிருக்கும்? பதில் :- இதுவும் ஒரு நல்ல கேள்வி. இப்படியொரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமெனப் s திருக்கிறேன். நன்றி.
காசி ஆனந்தன் என்ற அந்தக் கவிஞர் எனக்கு மிகவும் நெருக்க இருவரும் நீண்டகால நண்பர்கள். இனிவரும் காசியானந்தன்
எங்களையும்
பலகாலம் காத்
மானவர்.
என்றதை காசி அண்ணை என்று சுருக்கிக் கூறுகிறேன்.
நான் காசி அண்ணையின் அன்பின் அணைப்பில் நீண்டகாலம் இருந்தனான். பலபேர் சொல்லுகிறார்கள். நான் காசி அண்ணையின் வாரிசு என்று, அப்படி யில்லை. எங்கள் இருவரின் கவிதை களையும் நீங்கள் எடுத்துப் பார்த்தால் தெரியும் நிறைய வித்தியாசம் இருக்கு. காசி அண்ணையை நீங்கள் என்னுடன் ஒப்பிடவே கூடாது. அவர் இந்தத் தமிழ் மக்களுக்குச் செய்த தியாகம் அளப்
எானம் - ஜூன் 2004

பரியது. ஒரு கவிஞருக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதனாக நான் வைப்பேனாக இருந்தால் தமிழினத்திற்கு அவர் செய்த தியாகம் அளப்பரியது.
அவருடைய இளமைக் காலங்கள் யாவுமே அதிகமாகச் சிறையிலேயே கழிந்தது. தமிழ் தலைமைகளால் அவர் ஏமாற்றப்பட்ட வரலாறே அவருடைய வரலாறாக மாறியது. அவர் ஒரு காலத்தில் நம்பியிருந்த அவரது கட்சியான தமிழரசுக் கட்சியோ பேந்து கூட்டணியோ அவருக்குச் செய்ததுபோல துரோகம் வேறு ஒருவருக்கும் செய்ததில்லை. இன்று யார் யாரோ எல்லாம் அந்தத் தலைமையினைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது காசி ஆனந்தன் என்ற அற்புதமான தமிழு ணர்வான கவிஞனை யாருமே கெளரவிக்கத் தவறினார்கள். அவர் தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்ட பிறகுதான். அவருக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன் அவர் செய்த தியாகங்கள் யாவுமே காற்றில் கரைந்து போயின.
துரோகம் இழைத்தார்கள் அவருக்கு. அவர் ஒரு காசநோயாளி ஆகும் வரையும் சிறையிலே, அந்தக் கருங்கூடத்துக் குள்ளேயே கிடந்து அழுந்தியவர்.
அப்படி ஒப்பிடும்போது அவரைப் போல நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை. அது எனக்குத் தெரியும். ஆனால் காசி அண்ணையை என்னுடைய குருவாகவோ என்னை அவருடைய சிஷ்யனாகவோ கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் இருந்தே இந்தப்
ஞானம் - ஜூன் 2004
போராட்டத்தில் இணைந்து கொண்டோம். காசி அண்ணையின் படைப்பிலே கூடுதலாக மொழியுணர்வு மேலோங் கியிருக்கும். எனக்கே அது தெரியும். என்னுடையதிலே மொழியுணர்வு மேலோங்கி நிற்காது. தமிழ்த் தேசியத்தின் அந்த விடுதலையின், மண்ணின் அம்சங்கள் கூடுதலாக இருக்கும். இது இந்த இருவருடைய கவிதைகளையும் ஒப்பிட்டால் தெரியும். ஆனால் இரண்டும் போராட்டத்தை நோக்கியே நகரும். ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் இரட்டை வழிகள். ஒரே வழியில்தான் நாங்கள் இருவரும் நடப்போம். ஆனால் கவிதைப் பாதைகள் வேறாக இருக்கலாம் உணர்வுஒன்றாகவே இருக்கும். என்னுடைய கவிதையின் நடையும் போக்கும் வடிவமும் வேறாக இருக்கும். இரண்டும் விடுதலையை நோக்கி தமிழ்த் தேசியத்தை நோக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் இலக்கை நோக்கி நகர்வது உண்மை. ஆனால் இரண்டும் இரண்டு வித்தி யாசமாக இருப்பதை நன்கு தேர்ந்த வாசகன் தெரிந்து கொள்வான். உணர்வு ஒன்றாக இருக்கும். எங்களுடைய மொழி நடையும் கவிதை நடையும் வேறாக இருக்கும். காசி அண்ணையின் படைப்பில் உணர்வு அதிகமாக இருக்கும். உணர்ச்சிக் கவிஞர்' என்று அவரே தன்னை ஏற்றுக் நான் பெரிதாக இந்த உணர்ச்சியைப் பாடியதில்லை. எழுதிய தில்லை என்று நினைக்கிறேன். ஆனால் விடுதலையை நோக்கிய பாடல்களில் கவிதைகளில் இருவரும் ஒன்றாகவே செய்கிறோம். செய்து
கொண்டவர்.
ULL 600TLh கொண்டிருக்கிறோம்.
7

Page 11
நல்ல நண்பனாக நான் மதிக்கின்ற பெருங் கவிஞராக காசி அண்ணை காட்சியளிக்கிறார். ஆனால் அவருடைய
செல்லும் வழி ஒன்றுதான்.
வித்தியாசங்கள் நிறைய உண்டு. ஒற்றுமைகள் அதிலும் அதிகம் உண்டு.
வாரிசாக நான் எப்பொழுதுமே இருந்ததில்லை. இருக்கக் கூடாது. கேள்வி :- உங்களுடன் சேர்ந்து இருக்க மாட்டேன். கவிதையைப் யுத்த சூழ்நிலையைக் கவிதை யாக
பொறுத்த வரையில் அதைப் போலத்தான் காசி அண்ணையும்.
இருவரும் நெருக்கமானவர்கள். எனக்கொன்றென்றால் அவர் துடிப்பார். அவருக்கொன்றென்றால்
து டி ப் பேன். அது வேற. இரண்டுபேரும் மாறாத ஒரே இ ல க்  ைக க் கொண்டவர்கள். இருவரும் நல்ல
ஆ ன ல் க வி  ைத ப்  ேப ா க் கு வித் தி யா ச
ம ர ன து . நி  ைற ய வித்தியாசத்தை வாசகர் கள்
கண்டுபிடிப்பார்கள். கவிதைப் போக்குத் தவிர்ந்த மற்றைய எதிலும் நாங்கள் இருவரும் இணைந்த வர்கள்தான். அவருடைய கவிதைகளில் மொழியின்
கூடுதலாக என்னுடைய கவிதைகளில் மொழியின் உணர்வு குறைவு. வித்தியாசமாக இருப்பேன். எனக்கு இந்த மண், அழகு தாய் நிலம் இப்படியான போக்கு இருக்கும். ஆனால் இருவரும்
உணர்வு
18
வடித்த வேறு போராளிக் கவிஞர்கள் அவர்கள் வெளியிட்ட கவிதைத் தொகுதிகள் அவற்றிலே காணப்பட்ட அம்சங்கள் என்பன பற்றிச்
நான் சுருக்கமாகக் கூற முடியுமா?
நிற்பதில்லை. ஈழத்து இலக்கியத்தில் 20ம் நூற்றாண்டு என்று.
அனுப்பின ஆக்கள், தனக்கு முருங்கக்காய் அனுப்பின ஆக்கள்,
ܢܠ
ཚོ་བོད་༽ இவைதான் அந்தக் கொடுமுடியைத் தீர்மானிப்பவை அல்ல நல்ல கவிதைகள் நிற்பது சமூகத்தில் இலக்கிய மேடையில் மட்டும்
இவை புத்தகம் எழுதுவதற்காகவே நல்ல கவிதை நிற்கப்போகுது? இவை எல்லாம் பெரிய முற்றும் துறந்த முனிவர்களாக விருப்புவெறுப்பு இல்லாமல்தானே விமர்சனம் செய்யினை. புத்தகம் எழுதுகினம். எல்லாம் தனக்கு வேண்டிய வர்களுக்குத்தான். ܝ --
தனக்குக் கடிதம் எழுதின ஆக்கள், தனக்கு வெங்காயம்
பதவி உயர்வுக்கு உதவின ஆக்கள், இவர்களுக்காகத்தானே இவைகளின் புத்தகம் வருகிறது. இவை எங்க நல்ல கவிதை பாத்தவை. தனக்கு வேண்டியவர்களுக்குத்தானே நல்ல கிரீடம் சூட்டினவை. w ` ဒွါ ဒွိ မွိုင္ငံ : ဒုံး’’့် ... ႏွစ္ထိမ္ပိ လှိုင္မ်ားႏွစ္ထိမ္ပိ
பதில் :- இப்ப என்னுடன் இணைந்து நூற்றுக்கணக்கான போராளிக் கவிஞர்கள் உருவாகி விட்டார்கள். 90ம் ஆண்டளவில் இதன் தொடக்கம். அதாவது 90ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின்பின் நாட்டிற்குள்ளே வருகிறோம். 90ம் ஆண்டிற்குப் பின் நாங்கள் சில நிர்வாகக் கட்டமைப்புக்களை இங்கே உருவாக் குகிறோம். அன்றிலிருந்து 12 வருட கால
இருக்கும்.
நான் வேறொரு
ஞானம் - ஜூன் 2004
 
 
 
 

இடைவெளிக்குள்ளே நிறையப் போராளிக் கவிஞர்கள் உருவாகி யிருக்கிறார்கள். பெயர்களைக் கூடச் சொல்ல முடியும், கானகன், மலைமகள், தமிழவள், உலகமங்கை,அலகிசை, ஆதித்தநிலா, புரட்சிமாறன், தமிழ்மாறன். இப்படிப்பட்டியல் நீண்டு கொண்டே அதுவும் பெண் போராளிக் ஏனெனில் அவர்
போகும். கவிஞர்கள் கூட. களுக்கு இரட்டைப் பணி உள்ளது. ஒன்று, களமுனையில் அவர்கள் நின்று மண் விடுதலைக்காகப் போராடுவது. மற்றையது இதற்கும் மேலாக இச் சமூகத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பெண் அடிமை என்பது அவர்களுக்கு முன்னே இன்னுமொரு முக்கிய பொருளாக உள்ளது. அதனால் பெண் கவிஞர்களின் வருகையும் தோற்றமும் கூடுகிறது. அவர்களுடைய கவிதைத் தொகுதிகள் நிறைய வெளிவந்துள்ளன. எழுதாத என் கவிதை, கனவுக்கு வெளியான உலகு முதலியன குறிப் பிடத்தக்கன.
நாங்கள் 95ம் ஆண்டு இப்பழைய இடப்பெயர்வுக்குப்பின் வன்னிக்கு நகர்கிறோம். வன்னிக்கு நகர்ந்தவர்கள் அடியழிந்து போய்விடுவார்கள் என நம்பியிருந் ஏனெனில் அது நமக்கு நன்றாகவே தெரியும், நாங்கள் வெறும்
தார்கள்.
குருடர்கள் அல்ல வெறும் செவிடர்கள் அல்ல. கிளாலி கடந்தவுடனே எங்களைப் பற்றிப் பேசுவதை அனைவரும் நிறுத்தி விட்டார்கள். “சக்தி” என்ற படை மூலம் கிளிநொச்சி கைப்பற்றப்படுகிறது. "எரிமலை’ என்ற
நடவடிக்கை
படைநடவடிக்கை மூலம் மன்னார் பாதை
ஞானம் - ஜூன் 2004
எல்லா விதத்திலும்
மூடப்படுகிறது. “ஜயசிக்குறு” என்ற நடவடிக்கை மூலம் மாங்குளம் வரை கைப்பற்றப்படுகிறது. நாங்கள் குண்டுச் சட்டி போன்ற அளவுக்குள் மட்டும் குடியிருக்கத் தொடங்கிவிட்டோம். எல்லோரும் நினைத்தார்கள். புலிகளின் கதையும் இந்தப் போராட்டத்தின் கதையும் முடிந்து விடும் என்று. அவ்வேனை எங்களை யாரும் பேசவில்லை, எழுதவில்லை, பார்க்கவில்லை, பாடவில்லை, எங்களை யாரும் ஆட்டவில்லை. இந்த இடை வெளியை நிரப்புவதற்கு நாங்களே எழுத
எங்களை யாரும்
வேண்டியிருந்தது. நாங்களே பாட வேண்டியிருந்தது. நாங்களே ஆட வேண்டியிருந்தது. அப்போதுதான் இந்தப் போராளிக் கவிஞர்களின் தேவை ஏற்பட்டது.
எங்களைப் பற்றிப்
ஒருவருமில்லை என்று நாங்கள் பேசாமல் இருக்க முடியுமா? எங்களைப் பற்றிப் பேச யாருமில்லையென விட்டுவிடாது போராளிகளே அந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் எழுதத் தொடங்கினார்கள். தேவை கருதிப் பிறக்கத் தொடங்கினார்கள். தேவை கருதி நூற்றுக் கணக்கில் பிறந்தார்கள். இந்த நூற்றுக் கணக்குத்தான் வரலாறாகும். யாருமற்றுப்
போக இந்த வெற்றிடத்தை காற்று
நிரப்பும் அல்லவா? அதுபோல அவர்களே போராடிக் கொண்டு, போரின் சுமையைச் சுமந்து கொண்டு இந்தப் பணியையும் செய்யத் தொடங்கினார்கள், பிறந்தார்கள். நூற்றுக் கணக்கில் பிறந்தார்கள்.
இன்று வன்னி இலக்கியம் என்று ஒரு வகுப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு
9

Page 12
வன்னி இலக்கியம் என்பது முழுக்க போராட்டம்
அவர்கள் வளர்ந்தார்கள்.
சார்ந்தது. போராளிகள், பொதுமக்கள், எல்லைப் படைகளில் ஆயுதம் தரித்து நின்றோர் எல்லோரும் எழுதத் தொடங் இன்று ஈழத்து இலக் கியத்தின் மையம் வன்னியாம், முன்னர்
கினார்கள்.
ஈழத்து இலக்கியத்தின் மையம் யாழ்ப்பாணம் என்று சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து தாங்கள்
கொஞ்சப்பேர் மட்டக்களப்பு சென்றபின் மையம் மட்டக்களப்பு என்றார்கள். ஏனென்றால் தாங்கள் மட்டக்களப்பில் தானே. பின்னர் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக இடம்பெயர்ந்தபின் மையம் கொழும்பு என்றார்கள். தாங்களே
பிரித்து, தங்களைச் சுற்றி மையம் அமைத்து தாங்களே தங்களுக்குத் தலைப்பாகை
தங்களுக்கை கன்னை
கட்டித் தாங்களே மொனிற்ரராக, பிறிபெக்ராக இருக்கினம். இதுதானே நடக்குது. பிறகு இவங்கள் எல்லாத் தையும் மீறி அதை அடிச்சு இதை அடிச்சு எல்லைகளைப் பெருப்பித்துக் கொண்டு வந்திட்டாங்கள். இப்ப புயல் மையம் வன்னியாம். இதுதானையா நடக்குது. ஆர் பலவானோ அவனுக்குப் பக்கத்தில (சிரிப்பு) இதுதானே நடந்தது. இனிப் புது இலக்கியத்திலும் இதுதானே நடக்குது.
கொஞ்சக்காலம் சிவத்தம்பியும் கொடுமுடி எண்டாங்கள். அவையின்ரை ரோன்
கைலாசபதியும்தான்
குறைந்த பின் காலாவதியானதெல்லாம் திரும்பி வந்திட்டுது. A 40கள் எல்லாம் திரும்பி இப்ப றோட்டில ஒடுது. முன்பு கைலாசபதிதான் உண்மை. அது.
20
இது. என்று இப்ப சொல்லுறாங்கள். கைலாசபதியும் சிவத்தம்பியும் மறைச்ச தாம். இல்லையப்பா, நீங்கள்தான்
அவங்களை மறைக்கச் செய்தது. நீங்கள்
அவைக்குப் பக்கத்தில போய் நிண்டு
அவைக்கு உசார் கொடுத்து காத்து அடிச்சு
அந்த பலூனை ஊத வைத்து அதைமேல
விட்டு அதில தொங்கிக் கொண்டு
போனியள். போனவை இப்ப அந்த
பலூனுக்குள் காற்றுப் போனபின் இந்த
பலூனைப் பிடிக்கினை. இப்ப அவை
இரண்டுபேரும் போயிட்டினம். சிவத்
தம்பிக்கும் ஏலாது. கைலாசபதியும் செத்துப்
போச்சுது. திரும்பப் பேந்து தளையசிங்கம்
வருகுது. பேந்து திரும்பமஹாகவிவருகுது.
யாரப்பா மஹாகவியை நல்ல கவிஞன்
இல்லை என்று சொன்னது. ஒருதரும்
செல்லேலை அற்புதமான கவிஞன். யார்
தளைய சிங்கத்தை மறுத்தது. அது நல்லாத்
தானே எழுதின மனுசன். பேந்து இப்ப
வந்து நிண்டுகொண்டு பேந்து இப்ப
தளையசிங்கமாம். ஏன் கைலாசபதி
இருக்கேக்கை தளையசிங்கத்துக்கு ஒரு
மணிமண்டபம் கட்டியிருக்கலாம்தானே.
உச்சமெண்டு சொல்லியிருக்கலாம் தானே.
கொடுமுடியென்று சொல்லி யிருக்கலாம்
தானே. பேசாம இருந்திட்டு செத்தாப்பிறகு
இப்ப தொடங்கி விட்டினம். இப்ப
நீலாவணனின் பிள்ளை வந்து ஒரு புத்தகம்
போட்டவுடன் இப்ப நீலாவணனாம். பேந்து
இன்னும் கொஞ்ச நாளையால வேறை
யொருவர் என்றால் அவராம். இதுதானே
நடக்குது இலக்கிய உலகத்தில பலவான். புத்திமான் அதிலையும் பலவான். நல்ல
வியாபாரம்தான் நடக்குது. வித்துத் திரியுங்கோ.
ஞானம் - ஜூன் 2004

கேள்வி :-
கஞ்சிக்காம் உழைக்கும் மாந்தர் கடல்மடி தவழ்ந்த சென்று குஞ்சிரால் ஒர7, ஒட்டி கூடைமின் 47காணர்வோர், தேகப் பஞ்சி7ேயன் றெதுவுமின்றிப் L/60o607 zion/co Zuas 60//if 6a//iz76/L//w/if சஞ்சலம் தரடைக்கப் பாவில் சரித்திரம் எழுதும் தீரர் என்று உங்களை நீங்களே முன்னுணர்ந்து பாடினிர்கள். அதுபோல, போர் நீங்கி, நீடிய சமாதானம் நிலைக்கின்றபோது போராட்டகாலக் கவிதைகள், போராளிக் கவிஞர்கள், அவர்
களின் சிந்தனைகள் எதிர் காலத்தில் எதிர்நோக்கும் மாற்றங்களைப் பற்றித் தங்க
ளால் எதிர்வு கூற முடியுமா? பதில் :- போராட்ட இலக்கியங்கள், போரின் இலக்கியங்கள் போராட்டம் முடிந்தபின் என்ன ஆகும் என்று நீங்கள் ஆதங்கப்படுவதைப் போலவே நாங்களும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தப் போராட்டக் கவிதைக் குரிய பணி பேராட்டத்துடன் முடிந்து விடும் என்று நீங்கள் நினைக் கிறீங்களா? போராட்ட காலக் கவிதை களுக்கு இரட்டைப் பணி உண்டு. இரட்டைச் சுமை உண்டு. ஒன்று பேராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற காலத்திலேயே அது போராளிகளை உருவாக்கும். போராட்டத்துடன் மக்களை இணைக்கும் போராட்டத்தை வெற்றியின் திசைநோக்கி நகர்த்தும். அந்தக் கவிதையும் சேர்ந்து களமுனைக்குப் பயணிக்கும். அங்கு மாவீரர் விழும்போது
ஞானம் - ஜூன் 2004
கவிதையும் அழும். வெற்றிகள் வரும் போது கவிதையும் சந்தோசிக்கும். இது அந்தக் காலத்திலேயே கவிதை தன் பணியைச் செய்து கொண்டேபோகும். இத்துடன் இந்தக் கவிதையின் பணி முடியாது. போராட்டம் வெற்றிபெற்று அதன் செல்வழி திசை திரும்பும் பொழுது அந்தக் கவிதைக்குப் பணியிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு இந்தப்போரை எப்படி நடத்தினோம், இப்போராட்டத்தை வெற்றி கொள்வதற்கு நாங்கள் எத்தனை விலை கொடுத்தோம். எத்தனை வதை சுமந்தோம். நீங்கள் நினைப்பதுபோல இது றோட்டில் கிடந்து கிடைத்த விடுதலையல்ல. இதற்கு உன் அப்பனைப் பலிகொடுத்து நான் பெற்ற விடுதலை என்று ஒரு தாயும், உன் அண்ணனைப் பலிகொடுத்துப் பெற்ற விடுதலை என்று ஒரு தங்கையும் சொல்லுகிற ஒரு பணியையும் இந்த இலக்கியம் செய்யும். இதற்கு இரட்டைப் பணி. ஒன்று போராட்ட காலத்திலேயே அது தன்னை மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்தைப் போராட்டத்திற்குத் தயார்படுத்தி வழி நடத்தும். அழைத்துச் செல்லும். வெற்றி பெறும்போது விழும் வித்துடல்களுக்கு அஞ்சலி செய்யும். அதற்குப் பிறகு, எப்படி விடுதலையைப் பெற்றோம் என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும். இப்பிடித்தான். இப்பிடித் தான். என்று சொல்லும்.
இவ்வாறுதான் விடுதலைக் கவிதைகள் எல்லாம் உலகமெங்கும் இருக்கின்றனவே. மற்றக் கவிதை களுக்கு ஒற்றைப் பணி போராட்டக் கவிதைகளுக்கு இரட்டைப் பணி. அந்தக்
2

Page 13
காலத்திலும் பயணம் செய்து அதுக்கு அடுத்த காலத்திலும் பயணம் செய்யும். இப்படியான கவிதைகள்தான் நீண்ட காலம் நிற்கப் போகின்றன. உந்த உலக இலக்கியம் உன்னதமான இலக்கியம் என்றொரு சனியனும் கிடையாது. காலத்தை மீறிய இலக்கியமாக இருந்தால் அது தன்னுடைய பிறந்த காலத்துக்குத் துரோகம் செய்துவிட்டதாகத்தான் இருக்கும்.
திருக்குறளை வைத்துக் கொண்டு காலத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? வள்ளுவர் பிறந்ததை வைத்துக் கொண்டுதானே காலத்தைக் கண்டு பிடிக்கினம். 1330 குறளையும் வைத்துக் கொண்டு அதன் காலத்தைச் சொல் லுங்கள் பார்ப்பம். அது காலத்தை மீறி நிற்குதாம். காலத்திற்குத் துரோகம் செய்துவிட்டது அது எழுந்த காலத்துக் குள்ளேயே காலத்தைப் பிரதிபலிக் கின்றதா? இல்லையே? காலத்தை மீறி ஒரு கவிதை நிற்கக்கூடாது. நிற்க முடியாது.
ஆனால் ஒரு உன்னதமான இலக்கியம் காலத்தை மீறிநிற்கும். அந்தக் காலத்தைப் பிரதிபலித்தபடி எப்படி விடுதலையைப் பெற்றோம் என்பதை அடுத்த தலைமுறைக்கு ஒப்புக் கொடுப் பதற்காக அது நிற்கும். அது ஒரு அஞ்சலோட்டம். தடி கொடுப்பதற்காகக் காத்துநிற்கிறது. அவ்வளவும்தான் செய்யும். அது தன்குறையைத் தான் செய்யும் செய்து விட்டு நிற்கும் அல்லது சாகும்.
அது என்னென்று காலத்தை மீறி நிற்கிற உயரிய இலக்கியம் அதற்கு யார் கட்டளையிட்டது. மாற்றம்தானே மாற்ற மில்லாதது. அடுத்த காலத்திலும் அறிந்து
22
கொள்வதற்கு அந்தக் காலத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். காலம்மாறும்போல அதற்கேற்ப கவிதை களும் இலக்கியங்களும் மாறவேண்டும். மாறும். அப்படியில்லையென்று சொன்னால் அப்படியொரு உடுப்பும் இல்லை, அப்படியொரு சாப்பாடுமில்லை. இதில நான் சொல்லுறது சிலருக்குச் சிரிப்பாக இருக்கும். ஆனல் இதுதான் உண்மை. காலம்தான் அதை அவைக்கு உணர்த்தும்.
உண்மையாகக் காலத்தை மீறிப் போராட்டக் கவிதைகள் நிற்கும். அதை யாருமே தடுக்க முடியாது. சிலவேளை இலக்கிய உலகில் நிற்காமல் போகலாம். நான் கேட்கிறேன் பாரதியின் பாடல் இலக்கியக்காரரிடம் நிற்காததைவிடப் பெரும்பாலும் பொதுமக்களிடம்தான் நிற்கிறதுதானே கூட. உங்கை இலக்கியக்காரர் என்று சொல்லு றவையின் வீட்டை போய்ப் பாருங்கோ பாரதியின் கவிதைத் தொகுதி ஒன்றும் இருக்காது. அவை ஒரு நாலு, ஐந்து கவிதை வைத்துக் கொண்டு பிரசங்கம் செய்து கொண்டிருக்கினை. ஆனால் ஒரு சாதாரண பாடசாலைப் பிள்ளை யிலிருந்து ஒரு சாதாரண கிழவன் வரையும் அக்கவிதைகள் நிற்கின்றன. இலக்கியக்காரரிடம் நின்றது கொஞ்சம். சமூகத்தில் நிற்பதுதான் கூட. ஒரு இலக்கியம் தனிய இலக்கியக்காரரின் மதிப்பீட்டுக்காகக் காத்திருப்பதில்லை. விமர்சகர்களுக்காக மட்டும் காத்திருப்
பதில்லை.
கம்பராமாயணம் நிற்கிறதுக்குக் காரணமென்ன அதுதணிய இலக்கியக் காரரிடம் மட்டுமா நிற்கிறது. இலக்கியக்
ஞானம் - ஜ"ன் 2004

காரரிடம் மட்டும் நிற்கவில்லையே. அது எங்கையெல்லாம் போட்டுது. தனிய இலக்கியக்காரரிடம் மட்டும் அது நிற்கவில்லை. ஏனென்றால் இலக்கியக் காரருக்கு இராமாயணத்தில் ஒரு பாடல் கூடத் தெரியாது என்றுதான் நான் நினைக்கிறன். இன்றைக்கு ஒரு கவிதை சொல்ல மாட்டினம். அவையிற்ற அது இருக்காது. அவை பாடநூலை மாத்திரம் படிப்பிப்பதற்கான விரிவுரையாளர்கள் போன்றவர்கள். அவர்கள் இலக்கியத் திற்கு உரியவர்கள் அல்ல. ஒரு காலமும் நல்ல கவிதை இலக்கியத்திற்குரியது மட்டுமல்ல அது சமூகத்திற்கும் உரியது. சமூகத்தால் தாங்கப்படும். சமூகத்தால் ஏற்கப்படும். சமூகத்தின் சகல அலகுகளாலும் அது உயர்த்தப்படும்.
இவை நினைக்கினம் என்னென் றால் இலக்கியக்காரரிடம் நிற்கிறதுதான் நல்ல இலக்கியம் என்று. ஒருநாளும் இல்லை. இலக்கியக்காரரிடம் நிக்கிறது எல்லாம் இலக்கியக் கவிதைகள்தான்.
என்பது தனியே
அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை நிறுப்பார்கள் மற்றவர்களை வரிசையிலை வா என்று சொல்லுவார்கள். இவை ‘ரோக்கிண்’ குடுக்கிறவை. இவை காலமை எழும்பி ஆஸ்பத்திரிக்கு உள்ளுக்க போக யார் யாரை விடவேண்டு மென்று தீர்மானிப்பினமாம். அது அவைய வைச்சுக் கொள்ளச் சொல் லுங்கோ. எங்களிட்ட வேண்டாம். ரோக்கிணை,
இவைதான் அந்தக் கொடுமுடியைத் தீர்மானிப்பவை அல்ல நல்ல கவிதைகள் நிற்பது சமூகத்தில் இலக்கிய மேடையில் மட்டும் நிற்பதில்லை. ஈழத்து இலக்
ஞானம் - ஜூன் 2004
கியத்தில் 20ம் நூற்றாண்டு என்று இவை புத்தகம் எழுதுவதற்காகவே நல்ல கவிதை நிற்கப்போகுது? இவை எல்லாம் பெரிய முற்றும் துறந்த முனிவர்களாக விருப்புவெறுப்பு இல்லாமல்தானே விமர்சனம் செய்யினை. புத்தகம் எழுதுகினம். எல்லாம் தனக்கு வேண்டிய வர்களுக்குத்தான்.
தனக்குக் கடிதம் எழுதின ஆக்கள், தனக்கு வெங்காயம் அனுப்பின ஆக்கள், தனக்கு முருங்கக்காய் அனுப்பின ஆக்கள், பதவி உயர்வுக்கு உதவின ஆக்கள், இவர்களுக்காகத்தானே இவைகளின் புத்தகம் வருகிறது. இவை எங்க நல்ல கவிதை பாத்தவை. தனக்கு வேண்டியவர்களுக்குத்தானே நல்ல கிரீடம் சூட்டினவை. இவர்களுடைய புத்தகத்தைத்தானே பாத்துக்கொண்டு சமூகம் காத்து இருக்கிறது. இவர் சொல்லட்டும் இவர் ஒரு அற்புதமான விமர்சகர். இவர் அதில ஒரு கொடுமுடி இவர் சொல்லுறதுக்காக இந்தச் சமூகம் காத்துக் கொண்டு இருக்குது. இவர் யேசுதானே. இவர் புத்தர் தானே. இவர் மார்க்ஸ்தானே. இவர் சொல்லுறதுக்காக இந்தச் சமூகமும் இலக்கிய உலகும் காத்துக் கொண்டு இருக்குது. அடபோங்கடா அங்கால. 9ے[gl தன்ரைபாட்டில இருக்குது நீங்கள் உங்கடபாட்டில இருக்கிறியள் ஆன படியால் போராட்டக் கவிதைகள் நல்ல கவிதைகளாக இருந்தால் வாழும். நல்ல கவிதை இல்லையெண்டால் சாகும். இதிலை என்ன கிடக்குப் பிரச்சினை. ஒரு பிரச்சினையும் இல்லை.
う3

Page 14
24
ஊழின் மீதான பாடல்
செ. சுதர்சன் இரு கிளைகளின் கேண்மையைச் சந்தேகிக்காத மரத்தின் கீழ் பாணனின் யாழ் பமீட்டல்
இசைக்கு இசைவாகுமுன்னே கூடுகலைக்கப்படாது நேரங்கள் பமீதான வரையறுத்தலுடன் வெளியேற்றப்பட்டன குருவிகள் ஒரு கிளையில் கூட்டின் குடியிருப்பு மட்டுமே. குருவிகளை .? “வெளியேற்றம்” தொலைத்து விட்டது.
நேசக் குருவிகளின் வெளியேற்றுகைக்கான அழுகையை மெளனமாய் நிகழ்த்தின மறு கிளைக் குருவிகள் உயிரின் பமீதா பற்றுதலுரடு . வெறுமைகளைத் தம் இருத்தல்களால் நிரப்பின. உறவுக் குறுணிகளைப் பெருக்க கிழக்கின் பமீதான பறத்தலை நிகழ்த்தின
நாட்களின் உருட்சி ஊழைக் கூட்டிற்று வெளியேற்றுதலை மறுபடியும் மீட்டுப் செய்ய .
“டமின்பாடும்” பாடலை குறுணிக்காய் பயணம் வைத் குருவிகள் பொறுக்கு முன்பே • கூடுகள் கலைப்பற்று நேரங்கள் பமீதான வரையறுத்தலுடன் வெளியேற்றப்பட்டன.
அப்போது மட்டும் . மறு கிளைக் குருவிகளின் ஒலம், மெளனத்தை மறைத்த அழுகை. பாணனின் யாழ்கூட அபசுரம் பமீட்டிற்று.
ஞானம் - ஜூன் 2004

கைலாசபதியும் முற்போக்கு இயக்கமும்
(இலங்கை முற்போக்குக் கலையிலக்கிய பெருமன்றத்தினர், 21.12.03ல், தர்மராமையில் உள்ள பெண்கள் கல்விக்கூடத்தில் நடத்திய 'கைலாசபதி நினைவுப் பேருரையில் "ஆற்றிய சொற்பொழிவின் சாராம்சம்)
அ. முஹம்மது சமீம்
தமிழ் இலக்கியச் சிந்தனைமரபும் கைலாசபதியும்.
தமிழ் இலக்கியச் சிந்தனை மரபு என்றால் என்ன? இதற்குப் பல கோணங்களில் இருந்து பல கருத்துக்களைக் கூறலாம். தமிழ் இலக்கியம், ஹிந்து மதத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண் டிருக்கிறது. இதை நாம் இந்தியப் பண்பாடு, என்றும் கூறலாம். இந்தியப் பண்பாடு பல பண்பாட்டு அமைதிகளையும், பலதரப்பட்ட மக்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் கொண்டது. இந்தியப் பண்பாட்டில் தோன்றிய இந்திய சிந்தனை பல மரபுகளைக் கொண்டது. ஆரியர் ஆதிக்கம் இந்தியாவில் தோன்றியபோது, | ஆரியர் பண்பாடும் வளர்ந்தது. ஆரியர் பண்பாட்டினைத்தான் உபநிஷதங்களும், வேத ஆகமங்களும் பிரதி பலிக்கின்றன.
இதனைப் பிராமணர் சிந்தனைகள் என்றும் கூறலாம், என்பது ஒரு கூட்டத்தாரின் கருத்து.
ஆனால் இந்திய வரலாறு ஒரு சமயத்தை மட்டும் சார்ந்தது என்று கூற முடியாது. இந்திய உபகண்டத்தில் பல அரசுகள், சாம்ராஜ்யங்கள் தோன்றின. வெளியிலிருந்து எத்தனையோ படையெடுப்புக்கள் நிகழ்ந்தன. இதில் இஸ்லாமியரின் படையெடுப் புக்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதனால் இஸ்லாமியக் கருத்துக்களும், சிந்தனைகளும் இந்தியச் சிந்தனையோடு இரண்டறக் கலக்கின்றன. இந்தப் பரந்த சிந்தனையோட்டத்தில் இந்தியாவின் பலதரப்பட்ட சாதனைகளைக் காண்கின்றோம். இந்தச் சாதனை களங்கள் சார்ந்த பல்லாயிரம் அனுபவங்களை உள்ளடக்கிய பார்வைகளாகவே இந்தியச் சிந்தனை மரபை நாம் காணமுடியும்.
ஞானம் - ஜூன் 2004 25

Page 15
இந்திய பண்பாட்டின் பின்னணியில் வைத்துத்தான் தமிழ் நாட்டின் பண் பாட்டையும், தமிழ் இலக்கியச் சிந்தனை யையும் நாம் அணுக வேண்டும். ஆரிய பண்பாட்டுக்கு நேர் மாறானதாகத் திராவிட பண்பாடு அமைந்திருந்தாலும், அடிப்படையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம்.
மரபு' என்று சிலர் கூறுவதைக் கூர்ந்து அவதானித்தால் இவை பண்பாடு, சிந்தனை என்ற தோன்றியது என்பதை நாம் உணரலாம். இச்சிந்தனை வளர்ச்சியை சமுதாய இயக்கங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டும். இவை ஒவ்வொன்றும் சமுதாய வரலாற்றில் எந்நிலையில் தோன்றியது, வரலாற்றை ஒட்டி எவ்வாறு வளர்ச்சி பெற்றது, வளர்ச்சி பெற்ற பின்
அடிப்படையில்
சமுதாய மாற்றப் போக்குகள் இவற்றை எவ்வாறு பாதித்தன என்பதனை நாம் அறிந்து கொண்டால்தான் இக் கொள்கைகளைத் தவறில்லாமல் நாம் அளவுகோல்களாக இலக்கியப் படைப்பு களை மதிப்பிடப்பயன்படுத்த முடியும்.
தமிழ் இலக்கியப் போக்கைச் சமுதாய வளர்ச்சியின் பின்னணியில் வைத்துத் தான் பேராசிரியர் கைலாசபதியும் பார்க்கிறார். ஒவ்வொரு கால கட்டத் தையும் பிரதிபலிப்பனவாகத்தான் அக்காலகட்டங்களில் தோன்றி இலக் கியங்களும் அமைகின்றன. சமூக மாற்றங்களுக்குப் பொருளாதார மாற்றங்களே காரணம் என்ற மார்க்சியக் கோட்பாட்டைக் கடைப்பிடித்த கைலாச பதியும் இக்கண்ணோட்டத்தில்தான் தன்னுடைய இலக்கியப் பார்வையை செலுத்தினார். இப்பொருளாதார
26
மாற்றங்களும் அச் சமூகத்தின் உற்பத்தி சாதனங்களில் ஏற்படும் மாற்றம் தான் காரணம். இவ்வுற்பத்தி சாதனங்களின் மாற்றத்தின் விளைவாகச் சமூக உறவுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, ஏற்றத் தாழ்வுகள் தோன்றுகின்றன. வர்க்க பேதங்கள் தலையெடுக்கத் தொடங்குகின்றன. இவ்வர்க்கங்களின் பிரதிபலிப்பாகவே இலக்கியங்கள்.
கைலாசபதி தேசிய இலக்கியம்,
அமைகின்றன
மண்வாசனை என்ற கருத்துக்களை முன் வைத்ததோடு, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற் றத்திற்காக இலக்கியம் வேண்டும் என்பதில் அசையா நம்பிக்கை கொண்டவர்.
பயன்பட
தமிழ் இலக்கிய வரலாற்றில் கைலாசபதி.
தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்ந்தவர்கள் பல கோணங்களி லிருந்து ஆராய்ந்தார்கள். இவர்கள் காலத்தை வைத்தே இப்பாடல்களைக் கணித்தார்கள். சங்க காலத்திற்கு முற்பட்ட காலம், சங்க காலம், சங்க மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் என்று காலத்தை வைத்துக் கணித்தார்கள். வேறு சிலர் தமிழ் இலக்கியப் பரப்பை இயற்கை நெறிக் காலம், அறநெறிக்காலம், சமய நெறிக் காலம் எனப் பண்பாட்டுக் கருத்தியலின் அடிப்படையில் வகைப்படுத்தினார்கள். பொருளாதாரச் சமூக சூழ்நிலையிலிருந்து தான் சம்பவங்கள் என்ற மாக்சிய
மக்களின்
தோன்றுகின்றன
- ஈனம் - ஜூன் 2004

தத்துவத்தை தன்னுடைய இலக்கியப் பார்வையில் முன் வைத்தார் கைலாசபதி, பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம்,
தொன்மையான இனக்குழு,
நிலவுடைமைச் சமூகம் முதலாளித்துவ சமூகம் என்று வகுத்தார்.
இந்தப் பார்வையில் தான், வீரயுகப் பாடல்கள் என்ற தனது கலாநிதிப் பட்டத்தைப் பெறுவதற்காக ஆராய்ச்
நடத்தினார். கைலாசபதி, சில முக்கிய கருத்துக்களை
சியை
முன்வைத்தார். 1. எந்தவொரு
தோன்றும் இலக்கியங்கள் அவ்வக்
காலகட்டத்திலும்
காலத்திய மக்களின் பொருளாதார சமூக சூழ்நிலையை பிரதிபலிப் பனவாக அமைகின்றன.
இவ்விலக்கியங்கள் மூலம் சமூக மாற்றங்களை நாம் காணலாம். இப்பாடல்களைப் பார்த்து வெறும் ரசனையில் ஈடுபட்டிருந்த இலக்கியத்
திறனாய்வாளருக்கு கைலாசபதியின் கருத்து ஒரு புதிய பாதையைக்
காட்டியது. 11. வரலாற்றில் ஏற்படும் எந்தவொரு
சம்பவமும் மக்களின் பொருளாதார
சமூக வாழ்க்கையில் ஏற்படும்
கொந்தளிப்பின் பிரதிபலிப்பே என்ற
மார்க்சிய கருத்தை நிலை நாட்டினார். I. மக்களின் அன்றாட வாழ்க்கையை
பிரதிபலிப்பதுதான் இலக்கியங்கள். IV. ஒரு சமூகத்தில் இருக்கும் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அச்சமூகத்தின் அமைப்பையும், சூழ்நிலையையும் பொறுத்தது. V தமிழர் வரலாற்றில் “வீரயுகம்’
எஞானம் - ஜூன் 2^^
இவ்வாய்வில்
ஆரம்பகால சமுதாயத்தைப் பிரதி பலிக்கிறது. அன்றைய தமிழ்ச் சமூகம் குலமரபுக் குழுக்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. இக் குழுக்கள் கூட்டு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தன. மருத நில மக்களின் உற்பத்திப் பெருக்கத் தோன்றிய சமுதாய மாற்றங்களும் அரசியல் மாற்றங் களும் வணிக சமுதாயத்தின் எழுச்சியும் பண்டைய மக்களின் வாழ்க்கையைப் பாதித்துப் புதிய இலக்கியங்கள் தோன்றின. VI. வீரயுகத்தின் ஆரம்பகால பாடல் களான வாய்மொழிப் பாடல்கள் மறைந்து வணிக சமுதாயத்தின்
தினால்,
மேன்மையை பறைசாற்றும் சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் தோன்றலாயின. சிறுதெய்வ
வணக்க வழிபாடும் இவ்விலக் கியங்களில் தொனித்தது. “மணி மேகலை’ போன்ற காவியங்கள் தோன்றின. VII வணிக சமுதாயத்தின் எழுச்சி, அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றுவதூஉம்' என்று ஆட்சியாள ருக்கு மறைமுகமாக எச்சரித்தது. வணிக சமுதாயம் ஊழ்வினைக் கருத்தை மக்கள் மத்தியில் புகுத் தியதன் மூலம் வர்க்க வேறுபாட்டை வளர்த்தது. கைலாசபதியின் இக்கருத்துக்கள் அவருக்கு பிறகு வந்த ஆய்வாளர் களினதும், விமர்சனர்களினதும் எழுத் துக்களில் செல்வாக்குப்பெற்றதைக் காணமுடியும்.
27

Page 16
முற்போக்கு இயக்கமும் கைலாசபதியும்.
கைலாசபதி சர்வகலாசாலையில் இருக்கும் முற்போக்கு இயக்கத்தில் தன்னை சம்பந்தப்படுத்திக் இரண்டாவது உலக
போதே
கொண்டார். மகாயுத்தம் முடிவடைந்து மேற்கே ஜேர்மனியும், இத்தாலியும், கிழக்கே ஜப்பானும் தோற்கடிக்கப்பட்டு, முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும், உலக நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் சுரண்டப்பட்ட கீழத்தேய நாடுகளுக்கும், ஏழைத் தொழிலாளர்க்கும் விவசாயி களுக்கும் விடிவெள்ளியாக விளங்கியது சோவியற் யூனியன். சோவியத் யூனியனின் மார்க்சிய கருத்துக்கள்,
ர்ள தாழ்த்தப் பட்டவர்களுக்கிடையே பரவியது. ஒன்றன் பின் ஒன்றாக கீழத்தேய நாடுகள், சுதந்திர நாடுகளாக மாறின. இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பர்மா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளில்
உலகமெங்கும் உள்ள
சுந்திரக் கொடி வீசியது. சீனாவைத் தவிர ஏனைய நாடுகளில், ஏகாதிபத்திய நாடுகளுக்குச் சேவகம் செய்த வர்க்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் 1956ம் ஆண்டு இலங்கையில் ஒரு பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் உதவியுடன் தேசிய மத்திய தர வர்க்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். இடதுசாரிக் கொள்கைகளை அரசாங்கம் ஆதரித்தது.
28
இடதுசாரிக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவியது. இலக்கியத்திலும் இது செல்வாக்குப் பெற்றது. இக்கால கட்டத்தில்தான் கைலாசபதியும் ஒரு பட்டதாரியாகச் சமூகத்தில் காலடி வைக்கிறார். இடதுசாரி இயக்கங்கள் தோன்றின. இதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஒன்று, இலங்கையின் முற்போக்கு எழுத் தாளர்களை இவ்வியக்கம் ஆதரித்தது. மக்களுக்காக இலக்கியம் படைத்தார்கள் இவ்வெழுத்தாளர்கள் மரபு' என்று சொல்லிக் கொண்டு வர்க்க வேறு பாட்டினை வளர்க்க முயன்ற பழை மையைப் பாதுகாக்க வேண்டுமென்ற பிற்போக்குச் சக்திகளை முறியடித்து, இலக்கியத்தில் ஒர் உத்வேகத்தை ஏற்படுத்தினர். முற்போக்கு எழுத்தாளர். இவர்களின் தத்துவ மேதையாக விளங்கினார் கைலாசபதி,
கைலாசபதி சர்வகலாசாலையில் விரிவுரையாளராகப் பதவியேற்றபின் சர்வகலாசாலை மாணவர் மத்தியிலும் முற்போக்குக் கருத்துக்களையும் எண்ணங்களையும் பரப்பினார். இந்நிலை எழுபதுகள் வரையிலும் நீடித்தது. 70க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் இலக் கியத்தையும் வெகுவாகப் பாதித்தது. உலக முதலாளித்துவம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. சோவியத் யூனியனும் கிழக்கே ஐரோப்பிய நாடுகளும் பின்னர் கம்யூனிஸ்ட் சீனாவும் ஒன்றன்பின்
அரசியல்
ஒன்றாக உலக முதலாளித்துவப் பிடியில் சிக்கின. பொருளாதாரத்தில் தாராள LDLULDTg56i, p 6b5LOLLjLost 5856b (globalization)
ஞானம் - ஜ"ன் 2004

போன்ற கொள்கைகள் உலகமெங்கும் பரவியது. செல்வந்த நாடுகள் மேலும் மேலும் செல்வந்த நாடுகளாக வளர்ந்தன. ஏழை நாடுகள் மேலும் ஏழ்மையாயின. வடக்கு தெற்கு என்ற பிரிவினை தோன்றியது. முதலாளித்துவப் பொருளாதார சங்கங்கள் கடன் உதவி கொடுக்கும்
உலக வங்கி போன்ற
போர்வையில் ஏழை நாடுகளைத் தம் பொருளாதாரப் பிடியில் வைத்து வதைத்தனர்.
இதைக் காரணமாக வைத்துச் சில பிற்போக்குச் சக்திகள் முதலாளித்துவ, காலனித்துவ எஜமானர்களுக்கு அடிவருடிகளாக மாற்றமடைந்தன. உலக முதலாளித்துவத்தை பிரதிபலித்தது. சாதி, சமய இன வேறு பாடுகளை அது வளர்க்க முற்பட்டது. சுதந்திரத்திற்காகவும், இந்த எதேச் சதிகாரத்தை எதிர்த்துப் போராடு பவர்களை பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தினர். பயங்கரவாதத்தை எதிர்க்கும் போர்வையில், நாடுகளைக் கைப்பற்றவும் அந்நாடுகளின் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதிலும் இப்பொழுது முனைந்திருக்கின்றன. எண்ணெய் வளங்கள் நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை நேரடியாக கைப்பற்றியது. அமெரிக் காவின் ஏகாதிபத்தியேகமும் அதன் முதலாளித்துவ கொள்கைகளும் பரவத் தொடங்கின. மார்க்சியத்தின் எதிரி களுக்கு அதாவது ஏற்றத் தாழ்வுமற்ற, சரணடைவுமற்ற ஓர் உலகையும் மனித சமுதாயத்தையும் உருவாக்க வேண்டும் என்ற கருத்தின் எதிரிகளுக்கு -
அமெரிக்கா
ஞானம் - ஜூன் 2004
கொண்டாட்டமான காலம். பொதுவுடமைத் தத்துவத்திற்கு எதிரான வாசகங்களை எழுதுவதில் முனைப்பாய் இருக்கின்றனர். மார்க்சியம் மரணத்தைத் தழுவி விட்டது, பொதுவுடைமைத் தத்துவம் காலவதியாகிவிட்டது, சோஷலிசமும் ஜனநாயகமும் ஒன்றாயிருப்பது சாத்தியமில்லை.” என்று பிற்போக்கு வாதிகள் பறைசாற்ற முற்படுகின்றனர். மார்க்சியம் காலவதியாகி விட்டது என்று கூறுபவர்கள் கூட மார்க்சியத் தத்துவம் இன்னும் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். ஸ்டாலி னிக்குப் பிறகு வந்தவர்கள் திரிபுவாத பாதையில் சரிந்ததே இன்றைய நெருக் கடிகளுக்குக் காரணம்.
ஆனால் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியம் உண்மையிலே காலாவதியாகி விட்டால் நாம் அதுபற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்பது தான் அது. காலத்தின் தேவையை யொட்டியே எந்த ஒரு தீர்வும் உருவாகிறது. தேவை பூர்த்தி செய்யப் படும் போது அந்தத் தீர்வு அதன் பயன்பாட்டை இழக்கிறது. ஏனென்றால் அதன்பின் தோன்றுகின்ற புதிய பிரச்சினைகள் சகல அம்சங்களிலும் பழைய பிரச்சினைகளிலிருந்து வேறு பட்டிருப்பதால் பழைய தீர்வுகள் பயன்படாது போகின்றது. இதனை மார்க்ஸ் தெளிவாக உணர்ந்திருந்தார். மார்க்சின் சிந்தனை முறையின் அடிப் படையில் பிரச்சினைகளை அணுகுவதே பொருள்பட
ஒருண்மையை நாம்
e
மார்க்சியம் எனற மொழிந்தார் எங்ல்ஸ்.
29

Page 17
“மார்க்சியம் செத்துவிட்டது” என்று கூறுபவர்கள் கூட மார்க்சியம் முன் வைத்த அரசியல் பொருளாதாரத்தையோ மெய்யியல் கோட்பாடுகளையோ, சமூக உருவாக்கம் பற்றிய சிந்தனைகளையோ கொள்கையளவில் தவறு என்று நிறுவியதில்லை.
சமுதாயம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே வருகிறது. சமுதாயப் DIT Ó வருகின்ற இச்சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இம்மாற்றங்களை எதிர்த்து நிற்பவர்கள் சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை மாற்றாமல், அப்படியே நிலை நிறுத்தி வைப்பதில் ஆர்வம் காட்டு பவர்களை நாம் இன்றும் பிற்போக்கு வாதிகளாகத்தான் கணிக்கின்றோம். சமூக மாற்றத்திற்கேற்ப இலக்கியங் களைப் படைப்பவர்களை நாம் இன்றும்
பிரச்சினைகள் மாறுகின்றன.
முற்போக்கு வாதிகளாகவே தான் பார்க்கிறோம். இன்றைய இலங்கையில் உள்ள முரண்பாடுகள் என்ன? இனவெறி பெரும்பான்மை மக்களிடையே தலை விரித்தாடுகிறது. இலங்கையின் நீர் நிலவளத்தை உலக முதலாளித் துவத்துக்கு அடகு வைப்பதில் இலங்கை முதலாளித்துவம் முனைந்திருக்கிறது. பெரும்பான்மை சர்வதிகாரம், சிறு பான்மை அடக்கியாள முற்படுகிறது. இதை எதிர்த்து ஏற்றத் தாழ்வில்லாத இனவெறியில்லாத, ஒடுக்கு முறையில்லாத ஒரு சமாதான சூழலை உருவாக்குவதுதான் இன்றைய முற்போக்குவாதிகளின் கடமையாகும். இதைத்தான் இன்று முற்போக்குக் கலை இலக்கிய பெருமன்றம் செய்து வருகிறது.
மக்களை
30
மாறுதல்
குறிஞ்சி இளந்தென்றல்
இரவின் முடிச்சுக்குள் இறுகிக் கொண்டது வெளிச்சம்
இறுகித் திணறும் வெளிச்சத்தை வெளியேற்ற புதிய வெளிச்சம்
உருவாக்கினேன்
முடிச்சுக்களை அவிழ்த்துக் கொண்டு முன்னே நின்றது வெளிச்சத்தின் உருவம்
வெளிச்சத்தை இறுக்கியதற்கு மன்னிப்பு வேண்டி இருள்
நிழலாய் கால்களின் கீழே
பணிந்தது
வெளிச்சம்
முன் நிற்க
விழுந்து கிடக்கிறேன்.
ஞானம் - ஜூன் 2004

சிகரம்
அன்று ஒரு நாள்.
மட்டுநகர் ஏரன்ஸ் ஒழுங்கை வழியாக நடந்து கொண்டிருக்கிறேன். நான்கு வயது மதிக்கத்தக்க சின்னஞ்சிறுவன் ஒருவன் பனை மட்டை ஒன்றினால் ஒரு பந்தை அடித்துக் கொண்டிருந்தான். ஒடி ஒடி பந்தைப் பொறுக்குவதும், அவனே வீசுவதும் அடிப்பது மாயிருந்தான். அவனுடைய விளையாட்டு ஆர்வத்தை நின்று நான் ரசித்தபோது பந்து என் கன்னத்தை முத்தமிட்டுச் சிறுவன் பச்சரிசிப் பல் தெரியச் சிரித்தான். “உன் பெயரென்ன?’ என்றேன் நான். வெட்டொன்று துண்டு இரண்டாய் முரளிதரன் என்று சத்தமாய்ச் சொன்னான் அவன். உன் அப்பா பெயரென்ன? என்று இன்னொரு கேள்வியையும் கேட்டேன். முத்தையா என்றானே பார்க்கலாம். ஆச்சரியத்தின் உச்சிக்கே நான் போய் விட்டேன். வியப்பில் சிக்கிய எனக்கு விளக்கம் தந்தார் அவன் அப்பா. என் மகன் தான் இவன். பெயர் தினேஷ் என்று அவர் சொன்னதும் முரளிதரன் என்றானே. அவசரமாய்க் கேட்டேன். திணேஷின் அப்பா பெரிதாக வாய்விட்டுச் சிரித்தபின் சொன்னார். “இவன் கிரிக்கட் முரளியின் பரம ரசிகன். இதனால் யார் கேட்டாலும் தன்னை முரளி என்கிறான். அத விடுங்க என் பெயர் சிவநாதன். அதைக் கூட முத்தையாவா மாத்திக்கிட்டான்.” சொல்லி விட்டு அவர் மறுபடியும் சிரித்தார். இந்த நிகழ்வு என் மனதை விட்டு அகலவில்லை. அந்தச் சிறுவனின் இதயத்தைக் கிரிக்கட் முரளி ஆக்கிரமித்திருப்பதை எண்ணும் போதெல்லாம் என் மனதில் மகிழ்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுக்கிறது.
சமீபத்தில் ஆறாம் வகுப்பு மாணவி தான் எழுதிய கட்டுரையை என்னிடம் காட்டினாள். அதன் தலைப்பு. “நான் விரும்பும் பெரியார்” அந்த மாணவி மனதில் பட்ட பெரியார் யார் தெரியுமா? முரளிதான். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
கொழும்புவீதியில் ஒருநாள். பல்லுப்போன தாத்தா ஒருவரை நடைபாதை ஒரத்தில் பார்த்தேன். வெற்றிலையை வாயில் குதப்பியபடி அருகே இருந்த செருப்புத் தைப்பவனிடம் ஒரு கசங்கிய பேப்பரில் எதையோ காட்டி “நம்ம முரளிப்பா என்னா கெட்டி பார்த்தியா?” என்றார் பொக்கை வாய் சிரிப்போடு. இதப் பாத்துத்தான் தெரிஞ்சிக்கணுமா. அதுதான் ஒலகம் பூராக்கதைக்குதே என்று வீறாப்பாய் சொல்கிறான் செருப்புத் தைப்பவன்.
சின்னஞ்சிறுவன் முதல் பொக்கை வாய்த் தாத்தா வரை முரளியை இதயத்தில் சுமக்கிறார்களென்றால்.அவருடைய பெருமையும் புகழும் எவ்வளவு பரந்தது. வரலாறு படைத்தது. பெற்றவர்களுக்கும் பிறந்த பொன்னாட்டுக்கும் முடிசூடிய மன்னனாகத் திகழ்கிறார் முரளி
மலையகம் பல சிறப்புகளின் பிறப்பிடம். இதன் சிகரம் முரளி அல்லவா?
சென்றது.
ரூபராணி
ஞானம் - ஜூன் 2004 31

Page 18
32
606ðr (U/rð? வேயினி
தளிர் நடையில் - நான் தவறிப் போகவில்லை. பள்ளி செல்கையில், “பொம்பர்” அடிக்கையில் பாடையில் போகவில்லை. "மல்டி பரலில்’ கூட மரணம் நெருங்கவில்லை.
காதல் தோல்வியில் காலன் கவரவில்லை நித்திரைக் குளிசையிலும் காயபமிது பொய்க்கவில்லை
பிறவியின் நோக்கமென்ன? புரியவில்லை! - பயிக்க சலிப்புடன் வானாளைச் செலுத்துகிறேன்.- ஏனெனத் தெரியவில்லை.
கூற்றுவனுக்கும் காசு மேல் தான் ஆசை போலும் கைப்பிடிக்க வருகிறானில்லை.
அன்று என் விதி தெரிந்திருந்தால் கருவறையிலேயே கல்லறை சமைத்திருப்பேன்!
இன்று நான் விதியை நொந்தபடி
ஒரு முப்பது வயது முதிர்கன்னி!
ஞானம் - ஜ"ன் 2004
 

கலை இலக்கிய ஆக்கமும் உளமொழியிலும்
சபா ஜெயராஜா
மொழியும் கலை இலக்கியமும் பற்றி நோக்கும் பொழுது முதலில் இலக்கிய மயப்படல் (LiterarineSS) எண்ணக்கரு விதந்து பேசப்படுகின்றது. குறித்த சூழலும், பண்புகளும் பாத்திர இயல்புகளும் அவற்றுக்குப் பொருத்தமான மொழித் தளத்தை இறுகப் பற்றிநிற்றல் இலக்கிய மயப்படலாகின்றது. மொழியால் ஆக்கப்படும் உரைநடை கவிதை, நாடகம் போன்ற வடிவங்கள் எந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நோக்குதல் உரையம் (Narrative) எனப்படும் இலக்கியத் திறனாய்வில் மேற்கூறிய இரண்டு எண்ணக்கரு ஆழ்ந்து நோக்கப்படுகின்றன.
“கலை ஒரு கைவினையாக அமைதல்” என்ற தொடரில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் (Shkovsky) கலை இலக்கிய மொழிக்குரிய தனித்துவத்தைக் குறிப்பிட்டுள்ளன. சாதாரண மொழியிலிருந்து வேறுபட்ட வகையில் எழும் இலக்கிய மொழி பொருள்களையும் காட்சிகளையும் வித்தியாசமான புலக்காட்சிகொள்ள வழியமைகின்றது. ஒருவிதமான பழக்கக் குலைப்பை (Defamiliarisation) அது ஏற்படுத்தி விடுகின்றது. பரிசோதனை நிலையில் அல்லது ஒரு புத்தாக்க நிலையில் இக்கருத்துப் பொருந்துமாயினும் இதனை ஒரு விதியாகக் கொள்ளமுடியாது. கலை இலக்கியங்களில் அந்நியமாதல் விளைவைக் கொடுப்பதற்கு இதனை ஒரு நுட்பவியலாகக் கொள்ள முடியும். தமிழ் மரபில் உருவ நிலைப்பாட்டின் சிறப்புக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் அறிந்தோ அறியாமலோ இவ்வகையான அந்நிய மயப்பாட்டு மொழி நடையை முன்னெடுத்தனர்.
மொழி என்பது சமூக விளைபொருளாகவும் வரலாற்று விளைபொருளாகவும் இருத்தலைக் கலை இலக்கிய ஆக்கங்கள் மனங்கொள்ள வேண்டியுள்ளது. மொழிப்பொருள் பன்முகமாகியும், விவாதிக்கப்படத்தக்கதாயும் மாற்றமடைந்து கொண்டேயிருக்கும். கலை நுகர்வோரது வாழ்நிலைக்கும் சூழமைவுக்கும் ஏற்றவாறு சொல்லின் பொருள் மாற்றமடைந்தும், விரிவடைந்தும் குறுக்கமடைந்தும் செல்லும். சில சமயங்களில் குறிப்பிட்ட சொல்லின் எதிரான கருத்தையும் அது தரலாம். “மைய ஈர்ப்பு விசை” “மைய நீக்கல் விசை” என்ற நிலைகளில் சொல்லின் பொருள் விரிந்தும் சுருங்கியும் செல்லும்,
மொழியிற் பொதிந்துள்ள உள்ளார்ந்த பொருள் வளத்தையும் பன்முகமான குறிகாட்டிகளையும் உள்ளடக்கி கலை இலக்கிய ஆக்கம் முன்னெடுக்கப்படுதல் இலக்கிய ஆக்கத்துக்கும் மொழிக்குமுள்ள உறவைப் புலப்படுத்தும். அனைத்து மொழிகளும் இயல்பாகவே கருத்தாடல் இயங்கமைவை (Dialogic) கொண்டவை. ஆற்றல்மிக்க எழுத்தாக்கங்கள் மேற்கூறியவற்றை நன்கு வெளிப்படுத்தும். வலிதாக அமைக்கப்பட்ட நிரலமைப்புக் கட்டுக்கோட்டுக் கோப்புக்களில் இருந்து நெகிழ்ந்து விரிந்து செல்லும் போக்கு கலை இலக்கிய மொழியின் வலிமையாகின்றது.
இலக்கிய மொழியியலை சீர்மிய உளவியல் நோக்கில் ஆராய்ந்தவர்களுள் ஜக்கோப்சன் சிறப்பிடம் பெறுகின்றார். உளநோய்வாய்ப்பட்டு மொழி குழம்பிய நிலையில் உள்ளோரை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். அந்த ஆய்விலிருந்து மொழியின் இருதுருவ நிலைகளை அவர் இனங்கண்டார். அவையாவன:
ஞானம் - ஜூன் 2004 33

Page 19
1. சொற்பதிலீடு (Metonymy) 2. 9 (56) J35th (Metaphor) முதலாவதாக, சொற்பதிலீட்டுக்கு உதாரணங்களாக மலையை முகடு என்று கூறுவதையும் அரசனை முடி என்று கூறுவதையும் குறிப்பிடலாம். இரண் டாவதாக, துல்லியமான உளப்படிமங்களை உருவாக்குவதற்கு உருவகங்கள் பயன் படுத்தப்படுகின்றன.
உளப்பிணியாளர்களின் மொழியிற் காணப்பட்ட பிறிதொரு பண்பு “ ஒப்புமை ஒழுங்குக் குலைவு” ஆகும். இதற்கு உதாரணங்களாக தண்ணிரைப் பழரசம் என்றும் பென்சிலைப் பேனாவென்றும் கூறுதலாகும். முதலாவதாகக் குறிப்பிட்ட சொற்பதிலீட்டு முறைமை இதனோடு தொடர்புடையதாகும். இங்கு ஒப்புமைப் பண்புகளால் தொடர்புகள் வலியுறுத்தப் படுகின்றன.
உளப்பிணியாளர்களது மொழிக் கோலங்களிற் காணப்பட்ட பிறிதொரு பண்பு “மொழித் தொகுப்பு ஒழுங்குக் குலைவு” ஆகும். எழுந்தமானமாகச் சொற்களைத் தொடுக்கும் பாங்கு இங்கே காணப்படும். உளப்பிணியாளர் களிடத்துக் காணப்பட்ட இந்தப் பண்பு உருவகச் செயற்பாட்டுடன் தொடர் புடையது. உதாரணமாக மனிதரை மரம் என்று உருவகப்படுத்தும் பொழுது மொழித்தொடுப்பு ஒழுங்குக் குலைவைக் காணலாம். அதாவது மனிதனுக்கும் மரத்துக்கும் நேர்த்தொடர்புகளே இல்லை. யதார்த்த இலக்கியங்களில் பெரு மளவிலே சொற்பதிலீட்டு வகை சார்ந்த மொழியைக் கொண்டிருக்கும். யதார்த்த மற்ற எழுத்தாக்கங்களில் மொழித் தொடுப்புச் சிதறியிருக்கும். ஆயினும் உருவகங்கள் புதிய கருத்துக்கள் உருவா வதற்குரிய வீச்சுக்களை ஏற்படுத்தும்.
34
இலக்கியமும் மொழியும் பற்றிச் சிந்திக்கும்பொழுது உரையவியல் (Narratology) என்பதை நோக்குதல் வேண்டும். நாட்டார் கதைகளின் மொழியமையம் எவ்வாறு இருந்த தென்பதை ஆராயத் தொடங்கிய ரூசிய நாட்டு ஆய்வாளர் புறொப் வழங்கிய கருத்துக்கள் உரையவியல் ஆய்வுகளுக்கு உற்சாகம் தந்தன. உள்ளடக்கம், கரு, பாத்திரங்கள், தொழிற்பாடுகள், சூழமைவு முதலியவை உரையவியல் ஆய்வுகளில் முன்னெடுக்கப்பட்டன.
பாரம்பரியமான திறனாய்வாளர்கள் உருவம், உள்ளடக்கம் என்ற பிரிவுகளில் இலக்கிய வடிவங்களை நோக்கினார்கள். ஊரையவியல் ஆய்வுகள் உரையத்தின் ஒன்றிணைந்த கூறுகளைப் பகுத்து இனங்காணலை மேற்கொள்ளுகின்றன. உரையச் செயல்முறையின் ஆக்கம் இங்கு ஆழ்ந்து நோக்கப்படுகின்றது. உரையச் செயல்முறையை விளங்கிக் கொள்வதற்கு உளமொழியியல் இன்றியமையாத புலமாக இருத்தல் குறிப்பிடத்தக்கது.
உளமொழியியலும் 5606) இலக்கியமும் தொடர்பான சிந்தனை களுள் அடுத்ததாகக் குறிப்பிடத்தக்கது. N6öT NumijLygh (Post – Freudism) தொடர்பான ஆய்வுகளாகும். கலை இலக்கியங்களுக்குரிய மொழிவளத்தின் களஞ்சியமாக நனவிலி உள்ளம் அமைந்துள்ளதாக பிராய்ட் குறிப்பிட்டார். பிராய்ட்டின் பின்வந்த ஜாக்குவிஸ் லக்கான் மனித இனங்காணல் ஆக்கத்துக்கும் மொழிக்குமுள்ள தொடர்புகள் பற்றி உளப்பகுப்பு நோக்கில் விரிவாக ஆராயலானார். மொழியின் வழியாக தனிமனிதர் தமக்குரிய 9j356.JUULDT6IOT (6606060)LLUů (Subject Position) பெற்றுக்கொள்கின்றனர். நனவிலி
எானம் - ஜூன் 2004

உள்ளத்தின் மொழி குறிப்பான நிலையில் (Signifier) அமைகின்றதேயன்றி, குறிப் பீடாக அமைவதில்லை. குறிப்பான் என்பது சுட்டும் சொல். குறிப்பீடு என்பது சொல் குறிப்பிடும் பொருள். நனவிலி நிலையில் குறிப்பான்கள் கட்டற்ற முறையிலே தொழிற்பட்டுக் கொண் டிருக்கின்றன. வரையறுக்கப்பட்ட கருத்தைக் கொண்ட வெளிப்பாடு நனவு உள்ளத்தின் தொழிற்பாடுகளுடன் இணைந்தது - சமூக இயல்புகள் மொழிக்குரிய வரையறுக்கப்பட்ட கருத் துக்களைக் கட்டமைப்புச் செய்கின்றன.
இரண்டு முக்கியமான படிநிலைகள் வழியாக குழந்தை நிலையில் ஒருவர் தம்மைப்பற்றிய அகவயமான படிமத்தை
முதலாவது படிநிலை குழந்தையின் ஆறுமாத வயதில் நிகழ்கின்றது. தனது உருவத்தை குழந்தை கண்ணாடியில் பார்க்கும் பொழுது தன்னைப்பற்றிய படிமத்தை உருவாக்கிக் கொள்கின்றது. புறச் சூழலில் இருந்து வேறுபடுத்தித்தன்னைப் பற்றிய தனித்துவமான காட்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்தக் “கண்ணாடிப் பருவம்” துணை செய்கின்றது. இரண்டாவது பருவம் பருமட்டாக ஒர் ஆண்டு கழித்து ஏற்படுகின்றது. இப்பருவத்தில் சமூகத்தின் மொழிக்குள் குழந்தை நுழைகின்றது. இது “ குறியீட்டு ஒழுங்கமைப்பு” பருவமாகும். இப் பருவத்தில் குழந்தை தனக்குரிய சுயபடிமத்தை வெளிப்படுத்துவதற்குச் சமூகத்திலிருந்து சொற்களைப் பெற்றுக் கொள்ளுகின்றது. இந்நிலையில் மொழி ஒருவித கட்டுப்படுத்தும் செயலைப் புரியத் தொடங்குகின்றது.
உண்டாக்குகின்றார்.
ஞானம் - ஜூன் 2004
ஆண் பெண் வேறுபாடுகளை வெளிப்படுத்த சமூகத்தால் உருவாக்கப்பட்ட மொழி சமத்துவமான செயற் பாட்டைப் புரியவில்லை. ஆண் என்ற எண்ணக்க ருவை நேர்முகமான இனங்காணலுக்கு உரியவாறு சமூக நியமங்கள் உருவாக் கியுள்ளன. பெண் என்ற எண்ணக்கரு அதிலிருந்து வேறுபடும் எதிர் முகமான இனங் காணலைக் கொண்டதாக சமூகம் வலியுறுத்தியுள்ளது. கலை இலக்கியங் களுக்குரிய மொழி தனிமனிதரின் பல்வேறு நனவுநிலைக் கட்டங்களுடன் தொடர்புபட்டு நிற்கின்றது. அது நனவிலி உள்ளத்தின் அழுத்தங்களை தம்மைப் பற்றிய சுயபடிமத்துடன் தொடர்புபடுத்தி வெளிப் படுத்தி நிற்கின்றது. சுயபடிமம் தொடர்பான மொழியும் சமூகத்தால் உருவாக்கப்படும் மொழியும் கலை இலக்கிய மொழிகளும் பாலியலை நிலைக்களமாகக் கொண்டு கட்டமைப்புச் செய்யப்படுகின்றன என்பது லக்கானுடைய வாதம்.
பூர்விக நடன மொழியையும் தற்கால நடன மொழிகளையும் ஆராயும் பொழுது மேற்கூறிய கருத்தின் தொடர்புகளை விளங்கிக் கொள்ளமுடியும் பரத நடனத்தில் இந்த உள்ளடக்கம் தெய்வீக நிலைப்பட்ட ஆண் பெண் இயல்புகளாக நெறிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பக்தி இலக்கியங்களில் இது நாயகன் நாயகி பாவங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயபடிமம் தொடர்பான உணர்வுகளே பாத்திரவார்ப்பை உருவாக்கும் மொழிக் கட்டமைப்புக்களைக் கொடுக்கின்றன.
சுமுக நிபந்தனைப்பாட்டை உளப்பகுப்பு இயல் பாலியற் கண் ணோட்டத்திலும் மார்க்சிசம் சமூக இயங்கியற் கண்ணோட்டத்திலும்
விளங்குகின்றன. இந்த இரண்டு ஆய்வு
முறைகளுக்குமிடையே சிலதளங்களில் இணக்கப்பாடுகளையும் காணமுடியும்.
35

Page 20
நிமிர்க என் மலைத்தோழி
காவத்தையூர், பா. மகேந்திரன்
வெள்ளையன் முதல் கறுப்பு வெள்ளையன் வரை நசுக்கி நசுக்கி ஆளுகை புரியும் பூட்ஸ் கால்கள் முறிந்து விழ நிமிர்க என் மலைத்தோழி
எமை உறிஞ்சி உறிஞ்சியே உரமான ஒரு வர்க்கம் அடர் கயிறால் - நம்
கரம் கட்டியதும் ۔۔۔۔۔ பொய்மை புழுதிக்குள் - நம்மை புரள விட்டதும் வெய்யிலில் கருமையுற்ற, எம் திரேகமாய் . வாழ்வையும் கறுப்பாக்கியது
இத்தேசத்தின் எல்லார் உணவிலும் - எம் வியர்ப்பின் சூடிருந்தும் - நாம் உணரப்படாதவர்களாய் . தேசத்தோர் காண மறுக்கும், நம் வளக்கொதிப்பை வெடித்து எரியும் மிளாராய் ஒன்றித்து கரம் பற்றி, உணர்வு நரம்பு தட்டி விடிவுக்காய்கூவுகைஇடுவோம்-எம் சப்தங்களின் நியாயிப்பில்-நாளைய 3.
கிழக்கும் வெளுக்கட்டும்.
ஞானம் - ஜூன் 2004
 

எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை மனோகரன்
எதிர்பாராத இழப்புக்கள்
அண்மையில் இரு எதிர்பாராத இழப்புக்கள் இலங்கையில் ஏற்பட்டன. இலக்கியவுலகில் தமது பன்முகச் செயற்பாடுகளினால் பலரின் மனங்களிலும் கொலு வீற்றிருந்த ராஜழரீகாந்தனும், மருதூர்க்கொத்தனும் காலமானமை, ஈழத்து இலக்கியவுலகின் சோகங்களாக அமைந்துவிட்டன.
ராஜழரீகாந்தன் பத்திரிகைத்துறையிலும், மொழிபெயர்ப்புத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டு உழைத்தவர். தினகரன் ஆசிரியராக விளங்கியபோது, அப்பத்திரிகையின் இலக்கியத்தரத்தைப் பேண முயன்றவர். மொழிபெயர்ப்புத்துறையில் அவரது பணிகள் விதந்துகூறத்தக்கன. அழகு சுப்பிரமணியத்தின் ஆங்கிலச் சிறுகதைகளைத் தமிழ் வாசகருக்கும் அறிமுகப்படுத்துமுகமாக, அவற்றைத் தமிழிற் கொணர்ந்தவர், அவர். வதிரிப் பெரியார் ஒருவரின் ஆக்கங்களைப் பதிப்பிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பழகுவதற்கு ராஜழரீகாந்தன் மிகவும் இனியவர். என்னைக் காணும்போதல்லாம் தினகரனிலும் எழுதுங்கள் என்று அன்போடு தெரிவிப்பார்.
மருதூர்க்கொந்தன் கிழக்கு இலக்கியவானில் மட்டுமன்றி, ஈழத்து இலக்கியவுலகிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தவர். பல்வேறு இலக்கிய முயற்சிகளில் தம்மை இனங்காட்டிக் கொண்டவர். சிறுகதைத்துறையில் தமது பெயரைச் சற்று ஆழமாகவே பதித்துக் கொண்டவர்களில் ஒருவராக அவர் விளங்குகிறார். மருதூர்க்கொத்தனின் சிறுகதைகள், அவரது படைப் பாற்றலை இனங்காட்டுகின்றன. அவரது மகள் ஒருவர் பல்கலைக்கழகத்தில் எனது மாணவியாவும் இருந்தவர்.
எதிர்பாராத இழப்புக்களை இருவரும் ஈழத்து
இலக்கியவுலகுக்கு விட்டுச் சென்றாலும், அவர்களின் இலக்கியப் பணிகள் அவர்களை என்றும் நினைவு கூரத்திக்கவையாக அமையும்.
ஆச்சரியமான திருப்பம் அயல்நாட்டில் ஆச்சரியமான ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவின் கூட்டணி, ஆட்சி அரங்கிலிருந்து அகற்றப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ளது. மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி அதிகாரம் மாறியிருப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்கதே. எதிர்பாராத அரசியல்
ஞானம் - ஜ"ன் 2004 37

Page 21
மாற்றத்துக்கு, இந்திய மக்கள் பழைய அரசுமீது கொண்டிருந்த அதிருப்தி முக்கிய காரணமாக விளங்கியுள்ளது. அதேவேளை, தனது அரசில் அங்கம் வகித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலருக்கும் தமிழக முதல்வரால் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அத்தகைய அநீதிகளுக்கு எதிராக எத்தகைய ஆக்கபூர்வமான முயற்சிகளிலும் இறங்காமல், பாரதீய ஜனதா அரசு சும்மா பார்த்துக் கொண்டு இருந்தது. மிக மோசமான மதவாதியான அத்வானி, தமிழக முதல்வருடன் கூட்டுச் சேர்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். தமதுரத யாத்திரை மூலம் அவர் இந்திய மக்களை ஏமாற்ற முனைந்தபோதும், அவர்கள் அதனை ஒரு வேடிக்கையான பொழுது போக் காகவே கருதிவிட்டனர்.
பாரதீய ஜனதாவின் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்தபோது, இலங்கைத் தமிழரின் பிரச்சினைகளில் அந்த அரசு அதிக அக்கறை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந் நாட்டுத் தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக, இலங்கைப் பேரினவாதிகளுடன் அந்த அரசு கைகோர்த்து சல்லாபித்தது. போதாக் குறைக்கு, அயல்நாட்டு அரசின் இலங்கைக்கான முக்கிய பிரதிநிதி, இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எதிரான கடும் கண்டனங்களை வெளியிட்டார். தமிழ்ப் பத்திரிகைகள் அயல்நாட்டின் நயவஞ்சகத்
அண்மையில்
தன்மையைத் தோலுரித்துக் காட்டுவதை, அந்த “உயர்ந்த”மனிதரால் ஜீரணிக்கவே
38
முடியவில்லை. ஒரு காலத்தில் உள்ளத் தால் உயர்ந்த மனிதர்கள் வாழ்ந்த நாட்டில், தற்போது உயரத்தால் மட்டும் “உயர்ந்தவர்கள்’ தங்களை மேதாவி களாகக் கருதி, இலங்கைத் தமிப் பத்திரிகைகளுக்குக் “கீதோபதேசம்’ செய்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, ஆணவமும், அராஜகமும் அண்மைக் காலங்களில் அரசோச்சி வந்துள்ளன. அரச ஊழியர்கள், விவசாயிகள் உட்படப் பலதரப்பாரின் அதிருப்தியை ஜெய லலிதாவின் அரசு பெற்றிருந்தது. இலங்கைத் தமிழருக்குச் சார்பாகப் பேசினார்கள் என்பதற்காக வை. கோ. வையும், நெடுமாறனையும் சிறையில் பூட்டி அராஜகம் செய்தார்.அவர். அவரது ஆட்சியில் சில நல்ல அம்சங்களும் இல்லாமல் இல்லை. ஆயினும் மொத் தத்தில் நிலையை அவர் ஏற்படுத்தி விட்டார். வெகு விரையில் ஜெயலலிதா அலை
மக்கள் வெறுக்கக்கூடிய
ஒயப்போகிறது.
தமிழ் நாட்டைத் தமது ‘இமேஜைக் கொண்டும், தமது ரசிகர் பட்டாளத்தின் ஆதரவைக் கொண்டும் ஒரு கலக்குக் கலக்கிவிடலாம் என்று கனவுகண்டு கொண்டிருந்த நடிகர் ரஜனிகாந்தைத் தமிழ் நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கவே யில்லை. "நீயாச்சு, உன் ரசிகர்களாச்சு” என்று மக்கள் அவரைக் கைகழுவி விட்டுவிட்டனர். இது சகல சினிமா நடிகர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் சினிமா அலை ஒய்ந்து விட்டதென்பதையே இது காட்டுகிறது எனலாம். அண்ணாத்துரை
ஞானம் - ஜூன் 2004

காலத்திலிருந்து, தமிழ்ச் சினிமாவோடு தொடர்பு கொண்டவர்கள் தமிழ் நாட்டில், அரசோச்சும் நிலை ஏற்படத் தொடங் கியது. எம். ஜி. ஆர். காலத்திலிருந்து தமிழ்ச் சினிமா நடிக நடிகையர் தமிழ் நாட்டில் முதுல்வர் பாத்திரம் ஏற்கும் நிலை அமையத் தொடங்கியது. எம். ஜி. ஆர். தமது திரைப்படங்களில் தமது நடிப்பைக் (விதிவிலக்காகப்
பெற்றால்தான் பிள்ளையா? திரைப்படப்
காட்டாவிடினும்
பாத்திரம், எங்கள் தங்கம் படத்தில் கதாகலாட்சேபம் செய்யும் பாத்திரம் போன்ற ஒருசிலவற்றில் எம். ஜி. ஆரின் நடிப்பாற்றலைக் காணமுடிந்தது.) நடிக்கத் தெரிந்தவர். இலங்கைத் தமிழர் பிரச்சினைமீது உண்மையான அக்கறை கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். மத்தியிலும், தமது ஆளுமை காரணமாக அவரால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. திரைப்பட நடகர் என்ற முறையில், எம். ஜி. ஆரை விட ரஜனிகாந்த் ஆற்றல் வாய்ந்த நடகர். ஆயினும், தமது ரசிகர்களுக்காகப்
அரசியலில்
குறைகள்
பாமரத்தனமான (ஒருசில திரைப்படங்களைத் தவிர) பெரும்பாலும் தமது ஒரே விதமான நடிப்பையே திரையில் காண்பித்து, தமது தரத்தைக் குறைத்து வந்திருக்கிறார். தமது ரசிகர் பட்டாளத்தை நம்பி, தமிழ்நாட்டு அரசியலில் தாம் ஒரு முடிசூடா மன்னர் என்று தமக்குள் தாமே ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார், ரஜனிகாந்த். அதனால், தமது ரசிகர்கள், ராமதாஸின் பா. ம. க. போட்டியிட்ட
ஞானம் - ஜூன் 2004
தொகுதிகள் அத்தனையிலும், அவரது கட்சியினரைத் தோற்கடித்துக் காட்டுவார்கள் எனச் சபதம் பூண் டிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் ரஜனிகாந்தை மூலையில் ஒதுங்க வைத்துவிட்டன. அவர் இனிச் செய்யக் கூடிய உருப்படியான காரியம், தமது அடுத்த படத்துக்கான ஆயத்தங்களைச் செய்வதே.
ஜெயலலிதாமீது தமிழ்நாட்டு மக்கள் கொண்ட வெறுப்புணர்வு, கருணா நிதிக்கும், அவரது கூட்டணியினருக்கும் மிகவும் வாய்ப்பாகப் போய் விட்டது. கருணாநிதி அரசியலில் பெரும்பாலும் ஒரு புத்திக்கூர்மையுள்ள சந்தர்ப்ப வாதியாகவே இயங்கி வந்துள்ளார். அவரை ஜெயலலிதா அரசு அவமானப் படுத்தியதும், அதனை மத்திய அரசு பெருமளவிற் கண்டுகொள்ளாமல் விட்டதும் அவரைப் பொறுத்தவரையில் வேதனைக்கு உரியவையே. ஆகவே, பா. ஜ. க. கூட்டணியிலிருந்து அவர் மெது மெதுவாக விலகத் தொடங்கி, தகுந்த சந்தர்ப்பத்தில் தொடர்பை அறுத்து விட்டார். அவ்வாறு விலகியமை, அவருக்கும், அவரது கூட்டணிக்கும் நன்மையாகவே முடிந்து விட்டது.
புதிய அரசு வழக்கம்போல இலங்கைத் தமிழர்
அயல்நாட்டின்
விடயத்தில் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கும் என்றே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. முன்னைய அரசும், இலங்கைப் பேரினவாதிகளைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிக்குரிய தாகவே அமைந்தது. புதிய அரசு
39

Page 22
இப்பேரினவாதிகளை மேலும் மகிழ்ச்சிப் படுத்தும். ஆயினும், புதிய அரசின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கோபதாபங்கள், பொறுப்பு வாய்ந்த ஒர் அரசில் ஆதிக்கம் செலுத்த முடியாது. அது எந்த வகையிலும் நியாயமானதும் அன்று. அதனால், பேரினவாதிகள் எதிர்பார்ப்பதும் நடக்கப் போவது இல்லை; தமிழ் மக்களின் அபிலாசைகளும் அயல்நாட்டு அரசால் நிறைவேற்றப்படப் போவதும் இல்லை. புதிய அரசுக்கு ஆதரவு வழங்கும் கருணாநிதி வழமைபோல் நழுவல் போக்கினைக் கடைப்பிடிப்பார். வை. கோ. வெளியில் இருக்கும் நெடுமாறன் போன்றோர் தொடர்ந்தும் குரல்
ராமதாஸ்,
இலங்கைத் தமிழருக்காகக்
கொடுப்பர். ஜெயலலிதா மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிப்பார்.
உள்நாடு தனிப்பிரதி ரூபா 30/= ஆண்டுச் சந்தா ரூபா 360/= 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/=
ஆயுள் சந்தா ரூபா 15000/=
சந்தா காசோலை மூலமாகவோ
மணியோடர் அனுப்புபவர்கள் அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
40
3 ஆண்டுச் சந்தா : ரூபா 1000/=
*33*
மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம்:
இலங்கையின் புதிய அரசின் விருப்பமும், பேரினவாதிகளின் ஆதங் கமும் அயல்நாடு இந்நாட்டின் இனப் பிரச்சினை தொடர்பாக முக்கிய இடம் வகிக்கவேண்டும் என்பதே. வெள் ளைக்காரர்கள் விடயத்தை விளங்கி, அதற்கேற்ப நடந்து கொள்ளப்பார்ப்பர். ஆனால், அயல்நாட்டு அரசு விடயத்தை விளங்கியும், விளங்காமலும் தனது சொந்த இலாபங்களுக்கு ஏற்பப் பேரினவாதிகளுக்குச் சார்பாக நடந்து கொள்ளும் என்னும் எதிர்பார்ப்பு நமது நாட்டு ஆட்சியாளருக்கும் பேரினவாதி களுக்கும் உண்டு. வார்த்தையில் சம்பந்தப்பட்ட ஒரு
எனினும், பேச்சு
சாராரைத் தனது நாட்டில் தடைசெய்து
விட்டு, பேச்சு வார்த்தை மேசையில் எந்தப் பாத்திரம் ஏற்பதற்கும் அயல் நாட்டுக்கு உரிமையும் கிடையாது.
எவ்விதத் தார்மீக
*ஞானம் ? சந்தா விபரம்
மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய பெயர், முகவரி.
T. Gnanasekaran 19/7, Peradeniya Road, Kandy.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$
: 300 USS
ஆயுள் சந்தா
ஞானம் - ஜூன் 2004
 
 
 
 

சிறுவர் அறிவியற் பாடல் ر
மனித மூளை மகா பெரியது!
கவிஞர் ஏ. இக்பால்
உலகிலுள்ள உயிரினங்கள் யானை மூளை நிறையிலே கடலில் ஒன்று காட்டில் ஒன்று ஐந்நூறில் ஒரு பங்குதான் மிகப் பெரிய உருவமுள்ள ஐந்நூறில் ஒரு பங்குதான் இவற்றின் பெயர்கள் கூறுவீர் திமிங்கிலத்தின் மூளையோ இவற்றின் பெயர்கள் கூறுவீர்! பனிரெண்டாயிரத்தில் ஒரு பங்கு
பனிரெண்டாயிரத்தில் ஒரு பங்கு கடலில் அலையும் திமிங்கிலம் காட்டில் வாழும் யானையும் மனித உடம்பின் நிறையினில் உலகில் நிறையில் பெரியதாம் e Φ o
னே அறிவீர் பிள்ளைகாள் நாற்பதில் ஒரு பங்குதான் Pll - >9یH மனித மூளை நிறையென
C ଗର୍ଦft l ଦୁର୍ଗ irl உடனே அறிவீர் பிள்ளைகாள் மதித்து அறிவீர் பிள்ளைகாள்
Tr I உண்மை இவற்றின் மூளைதான் மதித்து அறிவீர் பிள்ளைகாள்
உலகில் நிறையில் அதிகமாம்
உலகில் நிறையில் அதிகமாம்! உலகின் உயிரினங்களில்
மனித மூளை மட்டுமே
நிறையில் அதிகம் உண்மைதான் பன்மடங்கு பாரமாம் உடலின் அளவில் சிறியதாம் படித்து அறிவீர் பிள்ளைகாள்
உடலின் அளவில் சிறியதாம்! படித்து அறிவீர் பிள்ளைகாள்!
புத்தகக் களஞ்சியம் (நூல் மதிப்புரை) புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந் நூல் பற்றிய சிறு குறிப்பு மாத்திரமே புதிய நூலகத்தில் இடம் பெறும்.
ஞானம் - ஜூன் 2004 4.

Page 23
முல்லை மனியின்
மழைக் கோலம்
ஓர் அறிமுகமும் சில அவதானிப்புகளும்
புலோலியூர் க. சதாசிவம்
பிழத்தின் இருபதாம் நூற்றாண்டு இலக்கியச் செல்நெறியில் தேசிய இலக்கியப் பரிமாணமாக மறுமலர்ச்சிக் காலத்தில் ஊற்றெடுத்து அறுபதுகளில் பிரவகித்தது பிரதேசப் பண்பு. மண்வாசனை என்ற முக்கிய குணங்குறியைச் சுட்டிநிற்கும் பிரதேசப் பண்பு. ஈழத்தின் பல பிரதேசங்களின் வாழ்வியலின் உள்ளார்ந்த உட்கட்டமைப்பின் வெளிப்பாட்டுச் சாதனமாகி ஆக்க இலக்கியத்தில் புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்தது. இந்த வகையில் வன்னி மண்ணின் பங்கு ஒப்பீட்டளவில் ஆரம்பத்தில் வீரியம் குறைந்ததாக இருந்தபோதும், நிலக்கிளி நாவலின் தோற்றமும் காட்டாறு நாவல் காட்டிய கள அறிமுகமும், முல்லைமணியின் இலக்கிய ஆய்வும் அன்னாரின் ஆக்க இலக்கிய முயற்சிகளும் இன்னும் பல எழுத்தாளர்களின் உதிரிப்பங்களிப்புகளும் இன்று விதந்துரைக்கக் கூடிய அளவு வீறு கொண்டுள்ளன.
வன்னி மண்ணின் ஒரு காலகட்டத்து (1945 - 1960) கிராம வாழ்க்கையைக் காட்டும் நாவலாகிய முல்லைமணியின் மழைக்கோலம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. வன்னிப் பிரதேச ஆக்க இலக்கியப் படைப்பில் பெரிதும் பேசப்படும் நாவல்களாகிய அ. பாலமனோகரனின் நிலக்கிளி செங்கை ஆழியானின் காட்டாறு ஆகியவற்றில் இருதரப்பட்ட வெளிப்பாடுகளை இனங்காண முடிகிறது. ஒன்று இயல்பாக உள்ள அனுபவங்களின் பங்காளியான பற்றுணர்வுடன் திளைத்து எழுதியது. மற்றது தேடிச் சென்று தேவை ஒன்றை நிறைவேற்றும் திட்டம் போட்ட எண்ணத்தின் விளைவாக வெளிக் கொணர்ந்தது. முன்னைய வகைக்கு நிலக்கிளியையும் பின்னைய வகைக்கு காட்டாறையும் கூறலாம். முல்லைமணியின் பிறப்பு, வளர்ப்பு வாழ்க்கை அனுபவம் வன்னி மண்ணுடன் ஆழமாக இணைந்தது. பங்காளியின் பற்றுணர்வுடன் பிணைந்தது. உயிர்ப்புடையது. ஊறித்திளைத்தது. வன்னி மண்ணைப் பற்றிக் கூறும் ஏக உரிமையுடையது அவரது ஆளுமைத்தகமை, இது அவர் காட்டும் களங்களின் தத்ரூபமான சித்திரிப்பு தரும் தகவல்களின் நம்பிக்கைத் தன்மை ஆகியவை உறுதிப்படுத்தப்படத் தேவையற்ற சத்திய தரிசனங்களாக நிதர்சன ஆவணங்களாக அவரது சிருஷ்டி உலகைச் சிக்கலின்றிப் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவத்தை எம்மை அடையச் செய்கிறது. வன்னி மண்ணைப் பிரதிநிதிப்படுத்தும் குரலாக அவரது படைப்பு அமைகிறது.
வன்னியின் கன்னிமை கழியாத இயற்கையுடன் இணைந்த வாழ்வு காடு சார்ந்த சூழல், களனி விவசாயிகளின் வாழ்வியல் கூட்டுக்குடும்ப சமூக அமைப்பு ஆகியவற்றின் அதிர்வு ஏற்படும் காலகட்டத்தில் மழைக்கோலத்தின் கதை ஆரம்பமாகிறது. விவசாயம் என்ற வட்டத்துள் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் கட்டமைப்பில் மாற்றம் தோற்றமளிக்கிறது. ஆனால் வன்னிப் பிரதேசத்தில் நிலப் பிரபுத்துவ நிழல் படிந்திருந்தபோதும் அதன் தாக்கம் அதிகம் இருக்கவில்லை. அவ்வாறே ஈழத்தில் 42 ஞானம் - ஜூன் 2004

ஏனைய பிரதேசங்களில் படித்த மத்திய தரவர்க்கத்தினரின் தோற்றமும் வளர்ச்சியும் ஏற்படுத்தியது போன்று வன்னியில் சமுதாயக் கட்டமைப்பில் பிறழ்வினை ஏற்படுத்தவில்லை. அதிர்வை மட்டுமே ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியிலேயே மழைக்கோலம் நாவல் நகர்கிறது. முல்லை மணி வன்னிக் கிராமத்திற்கு எம்மை அழைத்துச் செல்கிறார். பழக்கப்பட்ட வரம்புகளிலே அவர் நிதானமாக முன் செல்கிறார். நாம் வரம்புகளில் தட்டுத் தடுமாறிப் பின் செல்கிறோம். நாம் வரம்புகளில் சறுக்கி பெறும் அனுபவத் தைச் சுயமாகச் சுவைக்க முன், கையில் பிடித்து இழுத்து வரம்பில் விடுகிறார். கிராமத்துப் பாடசாலை இயங்குவதை, கிராமத்து வீடுகளின் அமைப்பினைக் காட்டுகிறார். குளக்கட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பல்சுவைக் காட்சிகளைக் காட்டுகிறார். விவசாயத் தொழில் சம்பந்தமான விதைப்பு, அறுவடை, காடுவெட்டு ஆகியவற்றின் நடை முறைகளை சில நுட்பமான விபரங் களுடன் நேரில் காண்பது போலக் காண்கிறோம். வன்னிக் கிராமத்து மக்களின் உறவுமுறைகள், நம்பிக்கைகள், பேச்சுவழக்கு பழமொழிகள், பண்பாட்டுக் கோலங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிகிறோம். திருவிழா, கல்யாணம் இவற்றிலும் கலந்து கொள்கிறோம். பலவித குணவியல் புகளைக் கொண்ட மக்களைச் சந்திக்கிறோம். நாவலைப் படிக்கும்போது பாத்திரங்களுடன் பரிச்சியமாவது மட்டுமல்ல படித்து முடிந்தவுடன் எங்கள் நெஞ்சில் நிலைத்து விடுகின்றன. உம்முனிவர் கைலாய உடையார், செல்ல நாச்சியார், காராளசிங்கம், கடைக்காரர்
ஞானம் - ஜூன் 2004
தில்லயர், பதஞ்சலி, ஏரம்பன், வெகுளிச் சின்னையன், சீத்தை மணியன்! இவர்கள் எல்லோரும் சேர்ந்து வன்னியின் ஒரு காலகட்டத்துக் கதையை அழகாகக் கூறுகிறார். நாவல் கதை சொல்வதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அதே வேளை கதை சொல்லப்படாமலும் விடுவதில்லை. கதைக்கு அப்பாலும் நாவல் சிலவற்றைச் சொல்ல வேண்டும். என்ற முன்னுரையில் வரும் முல்லை மணியின் கூற்று, நாவல் பிரக்ஞையுடன் மழைக் கோலத்தை எழுதியுள்ளார் என்பதைத் தெளிவாகிறது. 69 (5 கதையைப் பின்னி, மண்ணுக்குரிய பாத்திரத்தை உருவாக்கி, அம்மண்ணில் காணும் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து சிலவற்றுக்கு அழுத்தம் கொடுத்து பாத்திரப் படைப்பிலும் கதையின் இயல்பான வளர்ச்சியிலும் தன் வாழ்வியற் கோட்பாட்டை உணர்த்தி நாவலை ஆக்கியுள்ளார். நாவலாசிரியர் சில நிகழ்வுகளை நெஞ்சில் பதியும் வகையில் சித்திரித்துள்ளார். ஏழ்மை கலந்த வாழ்க்கையைப் பிரதேச யதார்த்த நிகழ்வுகளாகக் கலை நேர்த்தியுடன் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். ஓர் உதாரணம் ஏரம்பன் ஆசிரியத் தொழில் நேர்முகப் பரீட்சைக்குப் புறப்படும்போது, காது மடலுக்குள் புகுந்தவை எருமை வாலாலே சுழற்றியடித்தபோது புகுந்து விட்ட கரியைப் பகீரதப் பிரயத்தனம் செய்து அகற்றுவது, உடுப்பதற்கு வேட்டியை விரித்தபோது பென்னம்பெரிய பொத்தல் ஒன்று தெரிய அதனை உள்ளுக்குள் விட்டுக் கட்டுவது. இன்னும் ஒன்று, ஏழை விவசாயிகள் இடைஞ்சல் வரும்போது பொருளாதார நெருக்கடி யைத் தீர்க்க கழுத்தையும் காதையும் பார்ப்பது. இன்னும் பல உதாரணங்கள்
43

Page 24
சொல்லலாம். அவசியமற்ற வர்ண னைகள், நீண்ட செயற்கை உரை யாடல்கள், தத்துவ விசாரங்கள் இன்றி நாவலை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்திச் செல்கிறார். மண்ணுக்கே உரிய உவமான உவமேயங்களைக் கையாண்ட ஆசிரியர் ஏனோ சில இடங்களில் புளித்துப்போன பழந்தமிழ் வசனக் கோவைகளை எழுதியுள்ளார். அவரை யறியாமலே அவரது பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் ஆட்கொண்டு விட்டதோ! பாத்திரப் பண்புகள் எல்லாமே யதார்த்தப் பண்பாக அமைய ஏனோ வெருளிச் சின்னையன் மேல் செயற்கையான இலக்கியச் சுமையை ஏற்றி விடுகிறார்!
இந்நாவலின் கதையம்சம் வன்னியின் சூழலுக்கேற்ற பாத்திரப் பண்புடன் உருவாகி மங்கள முடிவை நாடி காதல் சுவையூட்டப்பட்டு இனிது முடிவடைகிறது. கனகசெந்தில்நாதன் எழுதிய 'விதியின் கை’ என்ற நாவல் எவ்வாறு ஒரு காலகட்டத்து யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வின் உயிர்மூச்சை வெளிக்கொணர்கிறதோ அவ்வாறே மழைக்கோலம் வன்னிக் கிராமிய வாழ்வின் அக்கால கட்டத்து உயிர் மூச்சை வெளிக்கொணர்கிறது. சமூக இயக்கப் போக்கினைக் காட்டாத நிலக்கிளி நாவலில் காணும் அதிருப்தி மழைக்கோலத்தில் இல்லை. இந்த வகையில் நிலக்கிளியை உச்சி நிற்கிறது மழைக்கோலம் காட்டாறு நாவல் மக்கள் சுரண்டப்படுவதை மக்கள் முன்காட்ட
வேண்டுமென்ற சத்திய ஆவேச முனைப்புடன் எழுதப்பட்டதாலும், வன்னியின் பண்பாட்டம்ச வெளிப்
பாட்டில், தேடிப் பெற்ற தகவல்களில் செயற்கைத் தன்மை கலந்திருப்பதாலும் மண்ணோடியைந்த வாழ்க்கையின்
44
இயல்பான உணர்வுகளை வெளிப் படுத்துவதில் மழைக்கோலம் காட் டாறிலும் உயர்ந்து நிற்கிறது. 16 அத்தியாயங்களில் 136 பக்கங்களுக்குள் 1960 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 15 ஆண்டுகளின் வாழ்வியல் படிமகங்கள் சிலவற்றைத் திறம்பட முல்லை மணி கோடிகாட்டியுள்ளமையை மெச்சிப் பாராட்டலாம். முல்லைமணியின் எழுத் தாற்றல் வீரியம் கொண்டது. அவர் கையில் ஆக்க இலக்கிய ஆற்றல் ஆய்வுத்திறன் ஆகிய இரட்டைக்குழல் துப்பாக்கியுள்ளது. அவர் பேனா வலிமையால் பல களவெற்றிகளைக் கண்டவர். ஆக்க, ஆய்வு இலக்கியத் திறனால் வன்னி மண்ணைப் பாவித்துக் கொண்டவர். பண்டார வன்னியன்’ (வரலாற்று நாடகம் 1970) தந்து வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமன்றி அடிமையுற்றுத் தளர்ந்திருந்த தமிழ்த் தேசியத்திற்கு நம்பிக்கையும் தேசப்பற்றும் உரிமைக்குரல் ஒங்கப் பயன் நின்றவர். வன்னி மண்ணின் வரலாற்றுப் பெருமையில் திளைத்து அவற்றை இலக்கியமாக 'வன்னியர் திலகம் (வரலாற்று நாவல் 1998) ‘கமுகஞ் சோலை பாரம்பரிய வரலாற்று நாவல் 2002) அளித்து வன்னி மண்ணுக்கு வளம் சேர்த்தவர். 1935 - 45 காலப் பகுதியின் வன்னியின் வாழ்வியலை மண் வாசனையுடன் சமூக நாவலாகப் படைத்தவர். (மல்லிகை வனம் 1985). வன்னியின் வாழ்வையும் வளத்தையும் ஆய்வு செய்து வன்னியற் சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு 2001) யாக ஆவணப்படுத்தியவர். “அரசிகள் அழுவதில்லை (1977) என்னும் சிறு கதைத்தொகுதி தந்து ஈழத்துச் சிறு கதைக்கு வனப்புச் சேர்த்தவர். கவிஞர்
ஞானம் - ஜூன் 2004

பல பதிகங்கள் மேல் பாமாலையும் திருவூஞ்சலும் ஆக்கி அளித்தவர். கோப்பாய், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைகளில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்தில் ஆசிரியர் களிடையே இலக்கிய வேட்கையை விதைத்து - தமிழ் இலக்கியம் கற்பிக்கவல்ல தரமான பல ஆசிரியர் களை உருவாக்கியவர். தமிழ் மொழிப் பயிற்சி (1975) பாடநூலும் வெளி யிட்டுள்ளார். நவீன இலக்கிய விமர்சனத்துறையில் இவரது முயற்சி குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஒன்றாகும். இலக்கியப் பார்வை' என்ற நூலை 1999 அளித்த இவர் சமீப காலமாக ஆழமான விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகிறார். கடந்த நான்கு தசாப்தங் களாகத் தொடர்ந்து எழுதிவரும் மூத்த எழுத்தாளர் முல்லைமணி தனது நூல்களுக்கான தேசிய சாகித்திய மண்டல விருது உட்பட பலவிருதுகளையும் கெளரவங்களையும் பெற்றவர். வன்னி மண்ணின் மைந்தனாக வரலாற்றுப் பெருமையும் 66) 56)|TFT) விழுமியங்கள் நிறைந்த காடுகளும் களனிகளும் கனத்த ஒட்டுசுட்டான் முதுகிராமத்திலிருந்து முகிழ்ந்து வந்தவர். தொழிற்துறையில் சாதாரண ஆசிரியராக ஆரம்பித்துப் பட்டதாரியாகி S. L.E.A.S. ஆக உயர்ந்தவர் சமூகப் பணியில் J. P ஆக கெளரவம் கண்டவர். பரந்த வாழ்க்கை அனுபவம் கொண்டவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர். கவிஞர் கலாரஸிகர் எழுத்தையும் எழுத்தாளர் களையும் இதய பூர்வமாக நேசிப்பவர். இக்குண இயல்புகள் இவரது ஆக்க ஆளுமைக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. முல்லை மணியின் ஆக்க ஆளுமை தனித்துவமானது. அதீத தத்துவ
ஞானம் - ஜூன் 2004
அழுத்தமோ SJ somTJ6hJT6NLGuur சிக்கலான உணர்ச்சிச் சுழிப்புக்களோ இன்றிச் சொல்லவரும் தகவல்களை வாழ்க்கை அனுபவ முதிர்ந்த நோக் குடன் கனிந்த உணர்வுடன் கதையை ஊடகமாக்கி எளிதில் புரியும் வண்ணம் பொருளமைதியுடன் ஆழமாக மனத்தில் படியும் வண்ணம் கூறும் , அவரது தனித்துவப் பண்பு 'அரசிகள் அழுவ தில்லை என்ற சிறுகதையிலிருந்து மழைக்கோலம் வரையும் உள்ள நாவல்வரை காணலாம். மழைக்கோலம் முல்லைமணியின் அச்சில் வெளியாகும் பன்னிரண்டாவது நூலாகும். இன்னும் சில படைப்புக்கள் நூல்வடிவம் பெறாது கையெழுத்துப் பிரதிகளாகவும் பத்திரிகைத் துணுக்குகளாகவும் உள்ளன. இவை அனைத்தும் நூல் வடிவம் பெற்றால் இவரது பன்முக ஆய்வ 960)(5(Up60p (MULTI DECIPLINARY APPROACH) gau5, flu o Guébe நன்கு புலப்படும். எதிர்காலச் சந்ததி யினருக்கும் சமூக அமைப்பை ஆய்வு செய்பவர்களுக்கும் உதவியாகத் தன் எழுத்துக்கள் ஆவணப்பதிவாக இருக்க வேண்டும் என்ற இவரது இலக்கிய வேட்கையை ‘மழைக்கோலம்' நாவல், வடிவில் இனிது நிறைவு செய்கிறது. நாவலில் பாத்திரங்கள் வளர்க்கப்படாது வார்க்கப்பட்டிருப்பதால் நாவலாக்கப் பண்பில் நிறைவு காணமுடியவில்லை. ஈழத்தமிழ் நாவலியக்கத்திற்கு புதுவளம் சேர்க்க மழைக்கோலத்தை விடத் தரமான நாவல்களை முல்லைமணி இனிப் படைக்க வேண்டும். இதற்குரிய பன்முகப்பட்ட படைப்பாற்றலும் இலக்கிய ஆர்வமும் சிரத்தையும் அன்னாருக்கு நிறையவுண்டு.
45

Page 25
விடியும் வரையான கருக்கலில்
கூழ் குடித்து கூழுக்காக. கூவி நிற்கும் கூட்டைக் காக்க.
கூடை தூக்கி கூவி நின்றேன்
விலையை கேட்கும் வேளையிலே . விரசப் பார்வை தாங்கலையே.
கிழிசல் கிழிக்கும் கத்திப் பார்வை குத்தி குத்தி ரனக்கும் இதயம் .
வீதி வந்தாள். விளக்கும் இல்லை, உரசிப் பார்த்தால் . தவறும் இல்லை,
ஜெ. பாலறஞ்சனி, ஹட்டன்.
என்னும் சிந்தை உளறி நிற்க, உரச வந்தார் பொறிகள் பட்டு.
ஒடும் தூரம் தெரிய வில்லை வாழ்வும் எங்கள் வசத்தில் இல்லை,
வீதி வந்தால் நான் விறகு . வாரா விட்டால்
வயிர் விறகு .
விடியும் என்றே எரிந்து ஒளிர்ந்தேன் . விடியவில்லை கருகிப் போனேன்.
அந்தனிஜிவாவின் பங்களிப்புத் தொடரும் .
மீண்டும் துளிர்த்துள்ளது “கொழுந்து அந்தனி ஜீவாவைப் | பிரதம ஆசிரியராகக் கொண்டுள்ள கொழுந்து காலம் தோறும் மலைக் கொழுந்தாக அரும்பு வெடித்து துளிர்விட வேண்டுமென வாழ்த்துகிறோம். அவர் எடுத்த கருமத்தை இனிது நிறைவு செய்ய | வேண்டியிருப்பதால், ஞானம் துணை ஆசிரியர் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் ஞானம் வளர்ச்சிக்கு அந்தனி ஜீவாவின் பங்களிப்பு என்றுமுண்டு.
- oldfusi ஆசாயார ܢܬ
46 ஞானம் - ஜூன் 2004

கேள்வி ஞானம்
-இலக்கியன் பதில்கள் స్టోక్ట
கேள்வி : கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை இவற்றுள் இலக்கிய வடிவங்களுக்கான தலைமையை எதற்கு வழங்கலாம்?
த. மகேஸ்வரன், கண்டி.
பதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை. கவிதைதான் கலைவடிவங்களின் அரசி.
அழகு, ஐயத்திற்கு இடமில்லாத நம்பிக்கை (சீசர் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்.) அரசனையே ஆளுந்தன்மை, மற்ற அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரம், கண்டதும் மரியாதை செய்யத் தோன்றும் வடிவம், மற்றவர் நெருங்க முடியாது தனக்கெனத் தனித்து வைத்திருக்கும் இருக்கை, உயர்ந்த அரசனால் மட்டும் முழுதும் அனுபவிக்கப்படும் தகைமை, முழுமையாய் விளங்காதவர்களையும் பணிய வைக்கும் ஆளுமை இந்தக் குணங்கள் அரசிக்கும் கவிதைக்கும் பொதுவானவை.
ஆனால், பரிதாபம்! அரச காலத்தில் பட்டத்தரசிக்கு இருந்த மரியாதை ஜனநாயகம் வந்தபிறகு இல்லை. எல்லோரும் தம்மை அரசியர் என்று சொல்லிக் கொள்வதால், உண்மை அரசியைக் கண்டுபிடிப்பதில் இன்று பெருஞ்சிரமம் இருக்கிறது. உண்மை அரசியை இனங்காட்ட வேண்டியவர்களும் தம் விருப்பத்திற்கு அடிபணி கிறவர்களை எல்லாம் அரசியராய் இனங்காட்டி வஞ்சனை செய்வதால், உண்மை அரசியரும் பரத்தையரின் நடுவில் அகப்பட்டுபடாதபாடு படுகின்றனர். எங்காவது ஒரிரு நடுவுநிலைமையாளர்கள் மட்டும் உண்மை அரசியரை இனங்கண்டு மகிழ்கிறார்கள். பொய்யான இன்றைய இலக்கிய உலகில் அந்நடுவு நிலைமையாளர்களின் உண்மை இனங்காட்டல்கள் எடுபடுவதில்லை.
முடிவு, உலக அழகு ராணிப் போட்டியில் எல்லா நாட்டுப் பெண்களும் ஒன்றாய் மேடையில் வருவதுபோல் ஆகிவிட்டது. தேர்வில் ஆடைகளைவிட, நிர்வாணத் திற்குத்தான் இன்று அதிக முக்கியத்துவம்.
கேள்வி : சிற்றிலக்கிய இதழ்கள் பெரும்பாலும் அற்ப ஆயுசில் முடிந்து போவதன் காரணம் என்ன?
வ. சிற்றம்பலம், புத்தளம். பதில் : பல சொல்லலாம். சிற்றிலக்கிய இதழ்களை நடத்துகிறவர்கள் பெரும்பாலும் அறிஞர்களின் அங்கீகாரத்தையே எதிர்பார்க்கின்றனர். பொதுமக்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. பொதுமக்களின் ஆதரவில்லாத எம்முயற்சியும் வென்றதாய் வரலாறில்லை. சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். அறிஞர்களில் பெரும்பாலோர் புத்தகங்களைக் காசுகொடுத்து வாங்குவதில்லை எனுங்கொள்கையில் உறுதியாய்
ஞானம் - ஜூன் 2004 47

Page 26
இருக்கின்றனர். அவர்களை நம்பி முதலிடுகிறவர்கள் எத்தனை நாள் நின்று பிடிக்க முடியும். இது ஒன்று.
இத்தகைய இதழ்களில் எழுதுவோர், மற்றவர்க்கு விளங்காமல் எழுதுவது என்பதில் உறுதியாய் இருக்கின்றனர். விளங்காமல் இருந்தாற்தான் உயர்ந்த அறிவாம். (யார் வகுத்த சட்டமோ?) விளங்காத விசயத்தை விளங்காதவன் விளங்கியதுபோல எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாய்ப் படிப்பான்? முடிவு சஞ்சிகை உயிர்விடுதலாய் இருக்கும். இது இரண்டு.
கல்லுக் கடலைக்கு இரும்பில் கோதிட்டால்போல விளங்காத இவர்தம் ஆக்கங்களுக்கு இடப்படும் தத்துவ முலாம் உருசி பார்க்க நினைப்பவன்ரின் பல்லைப் பெரும்பாலும் பெயர்த்துவிடும். தொடர்ந்து பற்களை உடைத்துக்கொள்ள மற்றவன் என்ன பைத்தியக்காரனா? இது மூன்று.
இப்படிக் காரணங்களை எண்ணிக் கொண்டே போகலாம். தம்மைவிடத் தாழ்ந்தவர்களை உயர்த்த வேண்டும் என்னும் விருப்பைவிட, தம்மைவிட உயர்ந்தவர்களிடம் அங்கீகாரம் பெறவேண்டுமென்பதே பெரும்பாலான சிறுசஞ்சிகை ஆசிரியர்களின் விருப்பமாய் இருக்கிறது. மற்றவர்களைவிட நான் மேலானவன் எனும் ஆணவமே, பெரும்பாலும் அவர்கள் ஆக்கங்களின் அடிப்படையாய் இருக்கிறது. தரமற்ற இலக்கியங்கள்’ என மற்றவர்களை நையாண்டி செய்து தாம் தரமான இலக்கியங்கள் மட்டுமே செய்வோம் எனவும், சிறு சஞ்சிகைகள் தவிர மற்றையவற்றில் எழுதமாட்டோம் எனவும் கொள்கைகள் பேசி பீற்றிக் கொண்ட பல சிறு சஞ்சிகை எழுத்தாளர்கள், சாராயக்கடையில் விமர்சன நிகழ்வு’, ‘சாக்கடையில் எறிந்து நூல் வெளியீடு, ஆளுக்காள் மேடையில் செருப்படிபடுதல்’ என இன்று படும்பாட்டைப் பார்த்தால் அருவருப்பாய் இருக்கிறது. எழுத்தில் மட்டுந்தான் அவர்கள் தரத்தை எதிர்பார்க்கிறார்கள் போலும். வியாபார சஞ்சிகைகளைத் திட்டித் தம்மைத் தனித்த இனங்காட்டியவர்கள், இன்று அத்தனித்துவத்தைப் பயன்படுத்தி வியாபார சஞ்சிகைகள் என அவர்கள் நையாண்டி செய்தவற்றிலேயே இடம் பிடித்துப் போட்டிபோட்டு எழுதுவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
முடிவாய் ஒன்றைச் சொல்லலாம். உண்மைகள் என்றும் வெல்லும், பொய்ம்மைகள் என்றும் தோற்கும்.
கேள்வி : எழுத்தாளர்கள் அணி சேர்வது நல்லதா?
ம. இரகுபதி, மானிப்பாய் பதில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு எழுத்தாளர்கள் அணி சேர்வது நல்லது. ஆனால் எமது நாட்டிலோ நிலைமை வேறு. அணியில் உள்ள ஒரு எழுத்தாளரின் படைப்பை அந்த அணியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எல்லோரும் கட்டாயம் வாசிப்பர். அந்தப் படைப்பின் சொந்தக்காரர் நினைத்துக்கூடப் பார்க்காத பல சிறப்புக்களை வலிந்து கண்டுபிடிப்பர். பின்னர் அவற்றை ஊதி ஊதிப் பெருப்பிப்பர். மடுவை மலையென்பர். எழுதப்படாத கனவான் ஒப்பந்தத்தோடு பரஸ்பரம் ஒருவருக்கொருவர் முதுகு சொறிவர். தமது அணிசேராத எழுத்தாளர்களின் படைப்பைக் கண்டால் பாரா முகம் காட்டுவர். அதுபற்றி பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்பூந்து விளையாடுவர். குறுக்கு வழியில் பிரபல்யம் பெறவேண்டுமெனில் அணி சேருங்கள். தரமான படைப்புகளைத் தராமலே அணிசேர்ந்து பிரபல்யம் பெற்றுள்ளார்கள் பலர்.
48 ஞானம் - ஜூன் 2004

ഗZശ്ര ബഗ്
ശബബ ക്ര് ബഗ്ഗ്ലൂ"
-பார்வையும் பதிவும் -
'நினைவுமலர் புலம்பல்களின் தொகுப்புஎன்ற எண்ணப்பதிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெளி வந்த சில நினைவு மலர்கள் புதிய பல உள்ளடக்கங்களைக் கொண்டு அமைந் துள்ளன. அவற்றுள் ஒன்று அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழத்துக் கலை இலக்கிய வரலாற்றில் பேணத்தக்க ஒன்றாகவும் அமைந்துள்ளது. அமரர் வல்லிபுரம் கந்தசாமி அவர்களின் நினைவு மலராக 10.03.2004 அன்று வெளிவந்த கா. சூரன் (தேவரையாளிச் சூரன்) அவர்களின் பராசக்தி படவிமர்சனமே அதுவாகும். இம்மலர்22+ Iபக்கங்களைக் கொண்டது. நூலின் உள்ளே தொகுத்தவன் நோக்கு (இ.இராஜேஸ்கண்ணன்), பொடி சின்னராசா. ஒரு சிறுகுறிப்பு (இரா. கண்ணன்) பராசக்தி படவிமர்சனம் (காசூரன்)பராசக்திபட விமர்சனத்திற்கான பத்திரிகை அறிமுகக் குறிப்பு (தெணியான்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கா. சூரன் (1881-1956) சைவப் பெரியார், மரபுவழிக்காவலர், பதிகங்கள் 6 யாத்தவர், தேவரையாளிக் கல்லூரியின் பிதாமகர். இவர் எழுதிய பராசக்தி படவிமர்சனம் ஈழத்தில் முதன் முதலாக வெளிவந்த ஒரு படவிமர்சன
நூலாகும். 1953களில் தமிழில் விமர்சனத்துறை வளர்ச்சியடைய வில்லை. இக்காலத்தில் பராசக்தி
படவிமர்சனம் என்ற பெயரைத்தாங்கி வெளிவந்த இந்நூல் ஈழத்து அறிஞர்
ஞானம் - ஜ"ன் 2004
മല്ക്ക്
களால் முக்கியத்துவம் உடையதாகக் கருதப்படுகிறது. சூரன் தான் சார்ந் திருந்த இந்துசமய தத்துவக் கருத்துக் களின் மீள்தெறிப்பாகப் பராசக்தியை பார்த்துள்ளார். சூரனுடைய நூல் வெளிவந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு தெணியான் 06.10.1925 இல் ஈழமுரசு வாரமலரின் சூரனுடைய நூலுக்கான அறிமுகக் குறிப்பை எழுதினார். சூரனின் வாழ்வியற் பின்புலம், கருத்து நிலை? பராசக்தி படம் வெளியாகிய காலத்து அரசியல் கலைச் சூழல் என்பவற்றின் பின்னணியில் வைத்து சூரனுடைய விமர்சனத்தை பார்ப்பதாக அது அமைந்தது. “கா. சூரனின் பராசக்தி படவிமர்சனம்’ என்னும் இச்சிறுநூல் 8 பக்கங்களைக் கொண்டதாக வெளி வந்திருக்கிறது. 1953ல் வெளி வந்திருக்கும் இச்சிறு பிரசுரத்தின் விலை 15 சதம் மாத்திரமே. அக்காலத்தில் தீவிரமாக நாத்திகம் பேசிய மு.கருணா நிதியின் “பராசக்தி” படத்துக்கென வெளிவந்திருக்கும் விமர்சன நூலின் முன் அட்டையில், ஒரு பிள்ளையார் சுழியும் சிவமயமும் அதன் கீழே பராசக்தியின் திருவுருவமும் இடம் பெற்றுள்ளது. பக்தி என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. இதனைத் தொகுத் தவர் எழுத்தாளரும், கவிஞரும், சமூக வியல்துறை விரிவுரையாளருமான இ.இராஜேஸ் கண்ணன் ஆவார். பேணிப்
49

Page 27
பாதுகாக்க வேண்டிய இத்தொகுப்பைத் தந்த அவருக்குகலைஉலகின்பாராட்டுக்கள் என்றும் உரியவை.
விவித வித்யா- இது ஆன்மீகம் அறிவியல் கலை இலக்கியம் மொழியியல் என்பன தாங்கி வெளிவரும் காலாண் டிதழ். இதன் ஸ்தாபக ஆசிரியர் மறு மலர்ச்சி ஆசிரியர் குழுவில் இருந்த மறுமலர்ச்சிப் பண்டிதர் ச. பஞ்சாகூடிர சர்மா. நிர்வாக ஆசிரியர் கலை இலக்கிய உலகிற்குத் தன்னாலான பங்களிப்பை ஆற்றி வரும் மறுமலர்ச்சிப் பண்டிதரின் மகனான ப. சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்). இதுவரை ஆறு இதழ்கள் வெளி வந்துள்ளன. தொடர்ந்தும் வெளிவரும் இச்சிற்றிதழ் சமயம், சமூகம், தமிழ், இலக்கண, இலக்கியங்களின் வரலாறு வடமொழி முதலிய துறைகள் சார்ந்த கட்டுரைகள், செய்திகள், தகவல்கள் முதலியவற்றைத் தேடித் தொகுத்து வாசகர்களுக்குத் தருகிறது. கல்வி உலகில் இருக்கும் அனைவருக்கும் பயனளிக்கும் இச்சிற்றிதழ் 'இன்று புதிதாய் பிறந்தோம். பழமையில் காலூன்றி நின்று புதுமைகளை வரவேற்போம். வேற்றுமையிலிருந்து ஒற்றுமையை நாடுவோம். முரண் பாடுகளை முன்வைத்து ஒருமைப்பாடு காண்போம் என்ற மகுட வாசகத்தைத் தாங்கி வெளிவருகிறது. இன்று வெளிவரும் சிற்றிதழ்களிலிருந்து உருவம் உள்ளடக்கம் என்பவற்றில் வித்தியாசமாக அமைந்துள்ளமை இதன் சிறப்பு எனலாம். சீமாட்டி வெளியீடான புலோலியூர் க.தம்பையா எழுதிய ஐம்பதிலும் ஆசைவரும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. விழாவில் வெளியீட்டுரை நிகழ்த்திய செங்கை ஆழியான் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் முதன் முதலில் 1875 ஆம் ஆண்டில் ஈழத்தி
50
லிருந்து வெளியான உதயதாரகைப் பத்திரிகையில் வெளிவந்தது. அதன் பின்னரே 1915 ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் தமிழ் சிறுகதை இலக்கியம் வெளிவந்தது எனக்குறிப்பிட்டார். தமிழ்ச்சிறுகதைக்கு அத்திவாரமிட்டது ஈழம் என்ற அக்கூற்று சிறுகதை ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். ஒயஸிஸ் (Oasis) வவுனியாவி லிருந்து வெளிவரும் ஆங்கிலச் சஞ்சிகை. வவுனியா ஆங்கிலக் கழகத் தினால் வெளியிடப்படும் இச்சஞ்சிகை ஆங்கில வாசிப்பு எழுத்து முயற்சிகள் என்பவற்றை மேம்படுத்தும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நேர்காணல் என்ற பல அம்சங்களைத் தாங்கிய இவ்விதழ் ஆ.இராசையாவின் அழகான ஒவியத்தை அட்டையில் தாங்கி வெளிவந்துள்ளது. க. ழரீகணேசன், எஸ். சிவபாலன் ஆகியோர் இதன் ஆசிரியர்கள். இவ்விதழ் தொடர்ச்சியான வரவினால் பல ஆங்கில மொழிப் படைப்பாளிகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
1988 ஆம் ஆண்டு நோர்வேயிற்குப் புலம்பெயர்ந்த பொன்னரசி கோபால ரத்தினம் நோர்வே மொழியில் வழங்கும் சிறுவர் கதைகளை மொழிப்பெயர்த்து சிறு நூலாக வெளியிட்டுள்ளார். நூலின் பெயர் கர்ச்சிக்க முடியாத சிங்கம் 15 கதைகளைக் கொண்டமைந்த இந்த நூல் ஒவியர் ரமணியின் ஒவியங்களையும் தாங்கி வெளிவந்துள்ளது. இந்நூலை முத்தமிழ் வெளியீட்டு மன்றம் வெளியிட்டுள்ளது. குழந்தை இலக்கியத் துறைக்கும் மொழிப்பெயர்ப்பு இலக்கியத் துறைக்கும் சிறப்பு சேர்க்கும் இந்நூல் புலம்பெயர் இலக்கியத்தில் மொழிப்பெயர்ப்புஇலக்கியம் என்ற வகைக்கும் சிறப்பு சேர்க்கிறது.
ஈழத்தில் அண்மைக் காலத்தில் வெளிவந்த இசை நாடாக்களில் வன்னி ஊற்று குறிப்பிடத்தக்கது. சோ. ஜெயச்சந்திரனின் இசையமைப்பில்
ஞானம் - ஜ"ன் 2004

உருவான வன்னி ஊற்று என்ற ஒலிப்பதிவு நாடாவிற்கான பாடல்களை சோ. ப.
அகளங்கன் முதலிய பல ஈழக்கவிஞர்கள்.
எழுதியுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக் கழக வவுனியா வளாக கலாமன்றமும், கலை இலக்கிய நண்பர் வட்டமும் இணைந்து இதனை வெளியிட்டுள்ளது. போர் முகம் கொண்ட ஈழத்தின் சோகத்தினை இசையாக வார்த்துள்ளதாக இந்நாடா பற்றி விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். ஈழத்து வாழ்வியல் தெறிக்கும் கவிதை வீச்சுக் களைப் பாடல்களிற் காணமுடியும்.
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி ஆசிரியரும் சிறந்த இசை கலைஞருமான ஏ. ஆர். விஜயகுமாரின் இயக்கத்தால் நன்றியினால் பாடுகிறேன்' என்ற ஒலிநாடா வெளிவந்துள்ளது. போராளிக்கவிஞர் வீராவின் முதன்முதலாய் என்ற கவிதைத் தொகுப்பும் அதற்கான ஒலி இறுவட்டும் வெளி வந்துள்ளமையும்
குறிப் பிடத்தக்கதாகும்.
கொழும்புக் கம்பன் கழகம் பழந்தமிழ் இலக்கியங்களை இளைய தலை
முறையினரும் அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட இலக்கியங்களில் புலமை உள்ளவர்களை அழைத்து தொடர் விரிவுரைகளை நடாத்தி வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் அண்மை யில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ருக்மணியின் மகாபாரத தொடர் விரிவுரை நடைப்பெற்றது. பழந்தமிழ் இலக்கியமான பாரதக்கதையை சமகால சமூக மரபுகளோடு ஒப்பிட்டு நிகழ்த்திய அவரது விரிவுரை தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. அன்ரன் பாலசிங்கம் எழுதிய விடுதலை (கட்டுரைத் தொகுப்பு) அண்மையில் வெளியாகியுள்ளது. பிரம்மஞானி என்ற பெயரில் வெளிச்சம் சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகளும், சமீபத்தில் சில கட்டுரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள்
ஞானம் - ஜூன் 2004
அரசியல், சமூகவியல், உளவியல், மானிடவியல் முதலிய பல அறிவுத் தளங்களைச் சார்ந்து காணப்படுகின்றன. பல்வேறு தத் துவங்கள் தொடர்பான ஆழமான வாசிப்பும் புதுமைத்தன்மையும் இக் கட்டுரைகள் வாயிலாகத் தெரிகின்றன. தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் தத்துவ விசாலத்தை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது.
அது, காவிலிலை, ஊஞ்சல் ஆடுவோம், பொறியில் அகப்பட்ட தேசம் முதலிய நூல்களைத் தந்த மு. பொ. சமீபத்தில் சூத்திரர் வருகை என்ற நூலைத் தந்துள்ளார். 18.04.2004 அன்று இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற இக்கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்திய கதிரவேலு ரமணேஷ் பின்வருமாறு குறிப்பிட்டார். “மு. பொ வின் கவிதைக்கு நேர்வது இதுதான். அவரது வசனப் பாங்கான, சுலோகப்பாங்கான விஞ்ஞான விபரிப்பிலான ஆக்கம் அவர் எதிர் பார்க்கும் உள்வெளிச்சத்துடன் வாசகன் இராத போது அவர் எதிர் பார்க்கும் ஆத்மார்த்த அருட்டலை (ஒரு வகையில்
பரவசத்தை) தருவதற்குத் தவறி விடுகிறது. பொது வாசகனிடம் ஞானியரின், சித்தர்களின் உளப்
பாங்குகளை எதிர்பார்ப்பது எந்தளவிற்கு சாத்தியமானது? எனவேதான் மு. பொ வின் சில கவிதைகள் வாசகனில் எதிர்பார்க்கும் துலங்கலை ஏற்படுத்தத் தவறுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியவர்களாக இருக்கின்றோம்" இதுவரை 41 நூல்களை எழுதியுள்ள பண்டிதர் ச.வே.ப.வின் சின்னப்பாப்பா பாட்டு என்ற சிறுவருக்கான நூல் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தக் கவிதை நூல் குழந்தைகளின் உளவியலை நன்குணர்ந்து படைக்கப்பட்டதாகும்.
5

Page 28
ஆத்மவிசாரம்
அமானுஷ்யமான சூழல்களில் தான் மனிதனுக்கு ஞானம் பிறக்கு மென்பதையும், மனிதனின் வாழ்க்கை வட்டமே மிகமிகச் சிறியது தானென் பதையும் நானிப்போதுதான் முதன் முதலாக உணர்கிறேன்.
மன்னம்பிட்டிப் பிரதான வீதியி லிருந்து தெரியாதவன் தலைவகி டிழுத்தாற் போலமைந்த, ஒடுங்கியவோர் ஒற்றையடிப் பாதையின் அந்தத்தி லிருக்கும் சேனைத் திடலில், கடந்து போன என் இருபது வருட வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருப்பதே ஒரு சுகந்தான்.
எனது குடும்பம், பிறந்த களிமண் வீடு, வேலியற்றவளவு, பேர, தெம்பிலி மரங்கள், இரண்டு பெட்டி நெல்விதைக்கும் பள்ளத்துப் பனங்களித்தரை, சிறிசேன, புந்துல என்கிற உயிருள்ள உயிரற்ற பிண்டங்களென்று சுருங்கி, அன்பு பாசம் என்கிற சராசரி உணர்வுகளோடு என் சாதாரண வாழ்க்கை முடியப்போகிறதே என்பதை நினைத்தால் வேதனையாகவும் வெட்கமாகவுமிருக்கிறது.
முரட்டுப் பச்சைக் காக்கித் துணிக்குள் வியர்வையில் மசமசத்துப் போகுமுடலில் ஏ. கே.47ஐயும் 'கோல்ற்ஸ் (ரவைக்கூடு) யையும் ஏந்திக் கொண்டு நாணிந்த வன்னிக்காட்டில் நிற்பதில்கூட எனக்கு உடன்பாடில்லைத்தான். யாரோ வொரு பஞ்சத்திலடிபட்ட தொத்தல் ஆமிக்காரனென்று என்னைப் பார்க்கும் எந்தவொரு தமிழனும் கேலி செய்வான்.
52
சிறுகதை
g). F. Urtij6 Jrf
இந்த விமர்சனங்கள் 5. அவனுக்கு எங்கள் சிங்கள இராணு வத்தின்மீது இயற்கையாய் ஏற்பட்ட வெறுப்பாலும் சலிப்பாலும் கூட இருக்கலாம். ஆனால் தோளிலே சுமந்து கொண்டிருப்பது, வெறுமனே துப்பாக்கி மட்டுமல்ல என்குடும்ப வறுமையுந்தான் என்பதை என்னைப் புரிந்தவர்களைத் தவிர வேறு எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நானும் இவைகளை யெல்லாம் பற்றிக் கவலை கொள்ள முடியாதுதானே.
ஒட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, ஹாமதுறுவினால் வரைந்து ஒதிக் கொடுக்கப்பட்டுக் கறுத்த நாடாவில் கழுத்தில் தொங்கும் செப்புத் தகட்டுக் கூடு. வெல்லநாரால் கோர்த்து இடுப்பில் கட்டப்பட்ட, 'கோள்பீ திறந்த நிலையில் அரைக்காற்சட்டை, பருவ காலத்திற் கேற்ப மாங்காயோ, விளாங்காயோ, சுட்ட தாமரைக்கிழங்கோவென ஏதோ வொன்றைக் கார்ந்து கொண்டு
ஞானம் - ஜூன் 2004
 

பந்துலவுடனும் குளத்திலோ
சிறிசேனவுடனும் ஊர்மனையிலுள்ள
வாய்க்காலிலோ நீச்சலடித்தல், எருமை.
யேற்றம், கள்ளப்பால் கறத்தலெனக் கடந்துபோன என் சிட்டுக் குருவி வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன்.
இவ்வாறானதோர் கோலத்தில்தான் என்னையும் பந்துலுவையும் சிறிசேன வையும் சேர்த்து, எங்களூரில் ஏதோ ஆராய்ச்சிக்கு வந்த சுத்தா ஒருத்தன் (வெள்ளை நிறமான எல்லோருமே எங்களுக்குச் சுத்தாதான்) எடுத்த புகைப்படமொன்று ஏதோவொரு ஆங்கில நாளேட்டில் அவனுக்குப் பரிசு பெற்றுக் கொடுத்ததாக எங்கள்'ஸ்கோலமாத்தயா' சொல்லக் கேட்டுப் பெருமைப்பட்டோம். ஆனாலந்தச் ‘சுத்தா’ எங்களைப் பற்றியென்ன எழுதியிருப்பானென்று இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. அவனுக்கு நாங்கள் விநோதப் பிராணிகளாய்த் தெரிந்திருப்போம்போல. ஆனாலிப்போது எனது கழுத்தில் கிடப்பதோ, அந்தப் பழைய கறுத்த நாடாவில் கோர்த்த செப்புத் தகட்டுக் கூட்டுக்குப் பதிலாக மற்றெல்லா இராணுவ வீரர்களையும்போல தங்கச் சங்கிலியில் கோர்த்த தங்க வெள்ளரசு இலை. ஆனாலும் எனது அப்பா மிகுந்த நம்பிக்கை விசுவாசத்தோடு எனது கழுத்தில், ஒரு நிறை "பொசன்' தினத்தன்று கட்டிவிட்ட அந்தச் செப்புத் தகட்டுக் கூட்டை நினைத்தால் எனக்கிப் போதும் கண்களில் நீர் முட்டும்.
அது பார்வைக்கு ‘சயனைட் குப்பியைப் போலிருந்ததால், நண்பர்கள் நாங்கள் மூவரும் சேர்ந்து 'அந்த விளையாட்டு விளையாடுவோம். அந்த விளையாட்டும் சலித்துப்போன ஒருநாள் கிறெனைட்' விளையாட்டு விளையாடு
ஞானம் - ஜ"ன் 2004
வோமென்று பந்துல கொடுத்த யோச னைதான் அதற்கு எமனாயிற்று.
எல்லைக் கிராமங்களைக் கொட்டி தாக்கப்போவதாகக் கூறி எங்களூரில் முகாமிட்டு இராணுவம் இளைஞர் களுக்குக் கொடுத்த பயிற்சியின்போது பார்த்ததைப்போல, கிளிப் எறியும்போது ‘டு.ம். என்று, எறிந்தவர் சப்தமிட்டுத் தரையில் நிலையெடுக்க வேண்டும் (Position) என்பதே நிபந்தனை. செப்புத் தகட்டுக் கூட்டின் மூடிக்கு மேலே நாடா கோர்ப்பதற்காக வைக்கப்பட்ட கொழுக் கியை வாயில் வைத்துக் கடித்து மூடியைக் கழற்றி எறிந்து விளையாடிய அன்றே அது தொலைந்துவிட்டது. அதன்பிற்கு அப்பாவிடம் வாங்கிய அடிகள், அவரதைத் தேடித் திரிந்த நாட்கள், தாயத்துக்கூட்டை அவமதித்ததன் பரிகாரமாக விகாரைக்குக் கொடுத்ததான என யாவும் நினைவுக்கு வருகின்றன.
அதுமட்டுமா, மன்னம்பிட்டிப் பாலத்தினடியில், வரண்டு கிடக்கும் மாவலித்தாயின் மடியில் அருங்கோடை காலங்களில் எங்களுக்குள் நாங்கள் நடத்தும் தென்னைமட்டை காட்டுத் தேங்காய் கிரிக்கட் போட்டிகளையும், மாரி காலங்களில் பாலத்தின் மேல் நின்று வியந்த அந்த சலப்பிரவாகத்தையும், எண்ணிப் பார்க்கிறேன். காலந்தான் எவ்வளவு பொய்யானது. நிரந்தர மென்பதே ஒன்றுமில்லையா! அப்படி
யென்றால் எதற்காக இந்தயுத்தம்
புரியவில்லையே புத்த ஹாமுதுறுனே.
★ ★
அதென்ன தேவையோ, குடும்பப் பற்றோ, ஏதோவொன்று என்னைப் பிடித்துப் பலவந்தமாய்த் தள்ளி விட்டாலும், இராணுவத்தில் சேர எனக்கு
.53

Page 29
எவ்வித அடிப்படைத் தகைமைகளும் இருந்ததில்லைதான். சமூக பரிகூடிண (நேர்முகப் பரீட்சை) யின்போதுதான் தெரிந்தது, எனது உண்மையான உயரம் ஐந்தடி இரண்டங்குலமென்று.
விசுக்கோத்துக்காகவே சில நாட்கள் ஸ்கூலுக்குப் போன எனக்கு, அப்பா எப்படியோ ஸ்கோல லொக்கு மாத்தயா'வைக் கெஞ்சிக் கூத்தாடி, இரண்டுபெட்டி நெல்லுக்கும் தெம்பிலிக் குலைக்கும், நான் ஐந்தாம் வருடம் சித்தியடைந்தவனென்று விடுகைப் பத்திரத்தில் எழுதி வாங்கித் தந்தாலும், நான் அதிகமாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதே இராணுவத்தில்தான். படிப்பின்றி நானெப்படி சங்கிலி, சப்பாத்தென்று அணியமுடியும் ஏனைய சிப்பாய்களைப் போல.
இத்தனைக்குமப்பால், இராணுவத்தின் கட்டுப்பாடுகள் எனக்கு விசித்திர மாயிருந்தன. இதயமற்ற வெறும் கட்டளை களுக்காக எதையுஞ் செய்யப் பழக்கப்பட்ட இயந்திர மனிதர்களுடன் கடந்த ஒரு வருட காலமாக வாழும் நான் முதல் நியமனம் பெற்று வவுனியாவுக்கும் முருங்கனுக்கும் இடைப்பட்ட இந்தப் பிரதேசத்தின் நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் காடுகள் அழிக்கப்பட்டு இருநூறு யாருக்கொன்றாய் இரண்டு பேர் கொண்ட சிறுசென்றிகள் சகிதம் நிறைந்திருந்த அந்த ஆளரவமற்ற பிரதேசத்தில், இன்னும் எத்தனைநாள் நான் வாழவேண்டும் தெய்யனேட நான்கடிக்கு நான் கடியிலான பள்ளம், நான்கைந்து பனையோலையிலான கூரை, ஏழெட்டு மணல் மேடைகள், அவைகளுக்கிடையே துப்பாக்கியுடன், காற்றின் சிறு அதிர்வையும் எதிரியாயெண்ணிக் குறிவைத்தபடி, ஆபத் தின்றிக் கடந்துபோகும் ஒவ்வொரு விநாடியையும் வாழ்வதற்காய்க் கிடைத்த கணங்களாக எண்ணி அற்ப சந்தோஷத் துடன் நாங்கள்.
54
இந்தப் பிரதேசத்தின் இயற்கை வளங்கள், வீடுகள், குடியிருப்புகள், கோவில்கள்தான் என்ன பாவஞ் செய்தன? எங்களை அழிவுக்குப் பயன்படுத்தி அதிலிருந்து பெற்ற லாபங்களை உயரதிகாரிகள் அனுபவிக் கிறார்களென்பதும் நாமறிந்த விடயம். ஒருவன் இரத்தத்தை வியர்வையாய்ச் சிந்தி உழைத்ததை இன்னொருவன் அடக்கு முறையால் அபகரிப்பதைப் புத்தபகவான் எவ்வாறு அனுமதிப்பார்? நாங்க ளெல்லாம் பெளத்தர்களென்று சொல்லவே வெட்கமாயிருக்கிறது.
என்னை மிகவும் பாதித்ததும், மனித அநாகரிகங்களுக்குச் சிகரம் வைத்தாற் போலமைந்ததுமான இன்னொரு விடயம், எங்கள் சென்றிக்கும், தூர்ந்துபோன குழாய்க் கிணற்றுக்குமிடையிலமைந்த பழமைமிக்க அந்தச் சின்னஞ்சிறிய பிள்ளையார் கோவில்தான். இந்த அழகிய கோவில்தான் இவர்களுக்கு என்ன செய்தது. ஒரு கொடூரமன ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே இதைக் கருதுகிறேன்.
காலங்காலமாக அரசோச்சிவந்து, பூசை புனஸ்காரங்களால் மகிமையுற்று, எத்தனையோ பக்தர்களின் வேண்டுதல் களையெல்லாம் தன்னுட் சுமந்துநின்ற பிள்ளையார் சிதைந்து புழுதியில் கிடக்க, நேற்று வந்த புத்த பகவானைப்பிரதிஷ்டை செய்தது என்ன நியாயம். கிராமத்தில் சேனையை அழிக்கவரும் யானையைக்கூட கணதெய்யோ வென்று அம்மா கையெடுத்துக் கும்பிடுவாளே.
இராணுவத்திலுள்ள அநேகர் பின் தங்கிய ஏழைக்கிராமங்களிலிருந்து வந்தவர்கள்தானே. இவர்களால் கூட இந்தப் பண்புகளை எவ்வாறு நிராகரிக்க முடிந்தது. இல்லை. வேறெதனைத்தான் சாதித்து விட்டார்கள்? புத்தர் சிலை களைத் தாம் கைப்பற்றிய இடங்களில்
ஞானம் - ஜூன் 2004
எங்கள்

பிரதிஷ்டை செய்துவிட்டால் எல்லாரு மென்ன பெளத்தர்களாகி விடுவார் களென்ற எண்ணமா, இல்லை, எல்லாமே பெளத்த பிரதேசமாகிவிடுமா?
யுத்தத்தில் கூட தர்மம் கடைப் பிடிக்கப்பட்டதாமே ஒரு காலத்தில். எங்கள் 'ஹாமதுறுகூட சில் ஒதும்போது கொலை செய்யக்கூடாது. அது பாவமென்பார். ஆனாலிங்கு என்னதான் நடக்கிறது? ஒரு வேளை பெளத்தர்கள் பெளத்தர்களைக் கொலை செய்யக் கூடாது. ஆனால் ஏனையவர்களைக் கொலை செய்யலா மெனத் தவறாய்ப் புரிந்து கொண் டார்களோ, என்னவோ? நாங்கள் புரிவதுகூட நியாயமற்ற யுத்தந்தானே உரிமைகளை மறுப்பதுகூட பாவமல்லவா? தனிமையென்பதே ஒருவனுக்குக் கிடைத்த மகத்தான தண்டனை தானென்பதை நான் முற்றாக உணர்கிறேன். காலையிலும் மாலையிலும் பவுசரில் தண்ணிர் கொண்டுவரும் இரண்டு கிழக்கோப்ரல்கள், சாப்பாடு கொண்டுவரும் அருவருப்பான சமையல் காரன், ஒருநாளைக்கு இரண்டுதடவை 'ட்ரக்" வண்டிகளில் கையசைத்துச் செல்லும் முகந்தெரியாச் சகவீரர்கள், காய்ந்து வரண்ட வனாந்தரச்சூழல், புழதிபடிந்த வானம், தார்வீதியில் காணலாய் வெம்பி நெளிந்து காற்றில் கலந்து முகத்திலறையும் உஷ்ணம், இதற்குமேல் வாசிப்பதற்கு ஒருவரியு மில்லையென்றாகிப் போன பழைய பத்திரிகையென சலித்துப்போன இவைகளை விட்டால் மனதுக்கு ஆறுதல்தரும் ஒரேயொருவிடயம், எனது சென்றிக்கு நேரே நீண்டுவளர்ந்த இரண்டு நாணற்புற்களை இணைத்து, ஆபத்தான அதன் விளிம்பில் கூடுகட்ட எத்தனிக்கும் அந்தப் பெயர் தெரியாத சிறிய சிட்டுக்குருவிச் சோடிதான்.
ஞானம் - ஜூன் 2004
இப்போது என்னுலகமோ, மணல்மூடை இடுக்குகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் மரணத்தைத்சுடட
அறியாது, கடந்த ஒருவாரமாக அவை யிரண்டும் அந்த இரண்டு நாணல்களை யுமிணைத்துக் கூடுகட்டச் செய்யும் முயற்சிகளையெண்ணி வியந்து கொள்வதுதான். இரண்டு நாணல் களையும் இணைக்கும் முயற்சியில் அவை தோற்றுப்போன ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாகக் கொண்டு வந்த மூலப் பொருள்களைச் சேர்த்தால் மூன்று நான்கு கூடுகள் கட்டலாம். சளைக்காத இந்தப் போராட்டத்துள் அவை தமக்குள் என்னதான் பேசி யிருக்குமோ. ச்சே. பறவைகளின் மொழி
புரியாதுபோனதேயெனக்கு.
நான்கூட ஒரு தடவை, அந்த இரண்டு நாணல்களையும் சிட்டு களுக்குத்
தெரியாமல் இணைத்து வைப்போமாவென எண்ணியதுண்டு. ஆனால் சிட்டுகளின் கூட்டில் மனிதர்களின் கைமணம் பட்டால் அவை மீண்டுமந்த இடத்துக்கு வராதென அம்மா கூறிய ஞாபகம்.
அதேவேளை இரண்டு நாணல் களையும் இணைப்பதிலவை வெற்றிகண்ட அந்த நாளைத்தான் எப்படி யென்னால்

Page 30
மறக்க முடியும். நானடைந்த சந்தோசத்தை, சென்றியிலிருந்த என் சகாவிடம் கூறியபோது முகத்தை அஷ்ட கோணலாக்கி, ‘உம்பட்ட வெடக் நே ஒய். மந்தவசக் மேகுருல்ல ஹித்த
தெக்கம மரணவா (உனக்கு வேலையில்ல ஓய். ஒருநாளைக்கு இந்தக் குருவி ரெண்டையும்
கொல்லுவன்) என்று கெட்ட வார்த் தையில் சலித்துக் கொண்ட அவனைப் போன்ற ஏராளமான சடங்களின் நடுவில் நான் வந்து மாட்டிக் கொண்டதே துரதிஷ்டவசமான நிகழ்வுதானே.
உண்மையிலென்னால் நம்ப முடியவில்லை. எனது சகா இவ்வளவு முர்க்கனாய் நடந்து கொள்வானென்று. சிட்டுக்களின் கீச். கீச் சப்தம் தனது பகல் கோழித் தூக்கத்துக்குப் பங்கம் விளைவிப்பதாய்க் கூறி, முற்றுப் பெறாத அதன் கூட்டை, முந்தையதினம் என்கண் முன்னேயவன் பிய்த்தெறிந்தபோது, அவையிரண்டும் தூரத்திலிருந்தும் கூட்டினருகில் வந்தும் இரண்டு நாட்களாய் அவல ஒலியெழுப்பிப் பறந்து போனதும், ஒற்றை நாணலில் பிய்ந்து தொங்கிய அந்தப் பாதிக்கூடும், என் மரணபரியந்தம் என் நினைவை விட்டுப் பிரியப்போவதில்லை.
நமது இராணுவம் நாச வேலை களுக்குப் பேர்போனதென்கிற உண் மையை மெள்ள மெள்ள என்மனம் உள்வாங்கத் தொடங்குகிறது. மூர்க்க னான சகாவின் முன் கோழையாகிப் போனதில் வெட்கமும், ஒருவேளை இவ்வாறான தனிமை எனக்குள் விரக்தியையும், என் சகாவைப் போன்றே என்னையும் ஆக்கி விடுமோவென்கிற பயமும் என்னை ஆட்கொள்கிறது.
இவ்வாறந்தச் சிட்டுக்களைப் போல்தானே இந்தத் தமிழர்களும் வேதனைப்படுவார்கள். திக்கொன்றும்
S6
திசைக்கொன்றுமாய்ச் சிதறி, எங் கெல்லாமிருந்து தங்கள் வீடுகளை யெண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகி றார்களோ. இந்தப் பாவமும் பழியு மெல்லாஞ் சேர்ந்தொருநாள் என்னையு மென் சந்ததியையும் கருவறுக்கத்தான் போகிறதோ? அதற்குள் நான் விடுதலை யாகவேண்டும்.
அன்றைய கடமை முடிந்து சீருடை களைக் கழற்றிவிட்டு, முகாமில் எனக்குத் தந்த கஹட்டா' வைப் பருகுகிறேன். இருள் சூழ்ந்த வனாந்தரத் துக்கும், வழித்துத் துடைத்துவிட்டதைப் போன் றிருந்த வானத்துக்குமிடையே, அழித்தல் தான் கருமமென் றில்லாதவொரு புதிய பாதையைத் தேடுகிறேன். நிர்மலமான என் மனத்திரையுள் அது நன்றாகவே தெரிகிறது.
என்ன விலை கொடுத்தாகிலும் இதிலிருந்து நான் விடுதலையாக வேண்டும். என் பெற்றோர்களும் நிட்சயமாய் என்னுணர்வுகளைப் புரிந்து கொள்வார்களென மனம் நம்புகிறது. மாவலியில் நீந்திச் சேற்றுமணம் குடிக்க வேண்டும் போலிருக்கிறது. இதுவுமென்ன. ஒருவகை நிஷ்கரண அவஸ்தையோ?
அந்திவானத்துக் கரைசலுக்கு மேலும் மெருகூட்டிக் கறுப்புப் புள்ளி களாய் இரண்டு சிட்டுக்கள் பறக் கின்றன. அவைகளேன் என் சிட்டுக் களாயிருக்கக் கூடாது? இங்கில்லா விட்டாலும் அவை வேறெங்கோவொரு பதுகாப்பான சூழலில், ஏன். துப்பாக்கிச் சனியன்களின் சுடுகுழல்களுக்குள் கூட ஒருநாள் கூடுகட்டி அமைதியாய் வாழுமென்ற நம்பிக்கை பிறக்கிறது.
எழுந்து மங்கிய சிமினி விளக்கின் முன்னமர்ந்து எழுதத் தொடங்குகிறேன். ஆதரனிய அம்மா தாத்தா வெத்தட்ட.
ஞானம் - ஜூன் 2004

மழை உபாசகன்
த.ஜெயசீலன்
கரிய முகில்களெனும் பூதங்கள். தரையிறங்க வரிசையாய்த் தூறற்
காலுரன்றி வந்தகதை .
மழையாச்சு!
ஊரெல்லாம் மாரி பிறந்ததெனப் புழுதி விதைப்புக்குப் புறப்படும் ஏர்ப்பாட்டோசை' இடியும் செவிடாக
என்னயலிற் கேட்கிறது. தொடர்ந்து மழையடிக்கும்; தோய்ந்து நிலம் முழுகும்; மழைக்கால உறவுகளாய் வந்து இதம்பரப்பி அழகழகாய் அணிவகுக்கும்
தம்பலப் பூச்சிகளின்’ ப்ட்டுச் செம்மேனியிலே படர்ந்துமனம் பரவசிக்கும். இளமைக்கதகதப்பில் \. ஏங்கும் உயிர்களுக்குக் குளிரிரவு சுமையாகும்; கூடல் சுமையிறக்கும். W புலன்களிலே சாரல் பூப்பூக்க வைக்கும். நான் .
நேற்றும் இவை இரசித்தேன். இன்றும் இரசிக்கின்றேன். நாளையும் இதைஇரசித்த படிதான் நான் 'காலமாவேன்'
ஞானம் தொகுப்பு (1 - 48)
1முதல் 48 வரையான நான்காண்டு ஞானம் இதழ்கள் மூன்று தொகுப்புகளாக பைன்ட் செய்யப்பட்டு விற்பனைக்குள்ளன. தேவைப்படுவோர் (பைன்டிங், தபாற்செலவு உட்பட) ரூபா 1500/= அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
ஞானம் - ஜூன் 2004 57

Page 31
“ஞானம் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தொகுப்புப் போட்டி
ஞானம் விருது 200
முடிவுத் திகதி 30.06.2004 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றலை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்குடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் வருடந்தோறும் நடத்துகிறது.
நிபந்தனைகள்:
1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 30-04-2004 அன்று நாற்பது
வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2) எழுத்துப் பிரதியிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நூலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசுரம் பெற்ற கதையெனின் அக்கதை எங்கு எப்போது பிரசுரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும். 3) தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் அடங்கியிருத்தல் வேண்டும். 4) அதிசிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூபா
ஐயாயிரம் பரிசாக வழங்கப்படும். l 5) இரணி டாவது பதிப் பின் பதிப் புரிமை الاقة
கதாசிரியருக்கு வழங்கப்படும் 6) பரிசுக்குரிய தொகுதியை, ஞானம் ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஓர் எழுத்தாளரும் இணைந்து தேர்ந்தெடுப்பர். அவர்களின் முடிவே இறுதியானது. 7) போட்டி முடிவு திகதி 30-06-2004. அதன்பின்னர் வந்துசேரும்
படைப்புகள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் “ஞானம்", 19/, பேராதனை வீதி, கண்டி என்ற விலாசத்துக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்படவேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் "ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டி எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம். 9) நிபந்தனைக் கு உட்படாத தொகுப்புகள் போட்டியில்
சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. 10) “ஞானம் விருது ஓர் எழுத்தாளருக்கு ஒரு தடவைதான் வழங்கப்படும்.
5000
குறிப்பு :- ஓர் இலக்கிய அன்பரின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இப் போட்டி வருடந்தோறும் நடைபெறும் ܢܬ
Z//
58 ஞானம் - ஜூன் 2004
 
 
 

நூல் மலையகம் வளர்த்த கவிதை ஆக்கம் : அந்தனி ஜீவா
வெளியீடு: மக்கள் கலை
இலக்கிய ஒன்றியம்.
விலை : 75. OO
10லையகக் கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகத் திகழும் அந்தனி ஜீவா எழுதியுள்ள மலையகம் வளர்த்த கவிதை புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஈழத்து இலக்கியத்துக்கு மலையக இலக்கியம் புதிய இரத்தம் பாய்ச்சியது என்று கலாநிதி கைலாசபதிவியந்து பாராட்டியது என்பது உண்மை. அந்த இலக்கியத்தில் கவிதை இலக்கியம்பற்றி ஆராய்ச்சியாக இல்லாவிடினும் ஆராய்ச்சி செய்கின்ற மாணவர்களுக்கு ஒர் உசாத்துணை நூலாக துணை நிற்கக் கூடிய ஒர் நூலாகக் காணப்படுகிறது.
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக கவிதை இலக்கியம் வளர்த்தவர்கள் பற்றி ஒரளவு வளமாக வரையப்பட்டுள்ளது. காப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்யக் கொண்டுவரப்பட்ட
கூலிகள்' என்று அழைக்கப்பட்ட எழுதாக்"
"ானம் - ஜூன் 2004
கவிதையாகிய நாட்டார் பாடலுடன் தொடங்கி இன்றைய கவிஞர் வரையுள்ள கவிஞர்கள் பரம்பரை பரம்பரையாக வளர்த்த கவிதை இலக்கியம் பற்றி எழுதியுள்ளார். இக்கவிஞர்கள் படைத்த கவிதைகள் பலவற்றை இடைக்கிடையே எடுத்துக் காட்டியுள்ளார்.
தேச பக்தர் சு. நடேசர் பற்றி எழுதி அவர் வெளியிட்டுள்ள பதினான்கு புத்தகங்களைத் தொடர்ந்து கவிஞர் எஸ். ஆர். எஸ். பெரியாம்பிள்ளை, கோவிந்த சாமித்தேவர், பி. ஆர். பெரியசாமி எஸ். எஸ். நாதன் போன்றோரின் விளக்கம் தந்து அறிவுறுத்தியுள்ளார்.
கோ. நடேசையரின் துணைவியார் திருமதி மீனாட்சி அம்மை தோட்டங்கள் தோரும் சென்று பாடிய - காட்டைத் திருத்தினது இந்தியனாலே
-நீங்கள் கற்றுக்கொண்டு பேசுவது இந்தியனாலே நாட்டைத் திருத்தினதும் இந்தியனாலே
- இப்ப நன்றி கெட்டுப் பேசுவதாகாது சொல்
ീp് - போன்றபாடல்களைத்தந்துவிளக்கியுள்ளார். இதைப்போல நல்ல கவிஞர் சி. வி. வேலுப்பிள்ளை பற்றி மிக விளக்கமாகவும் பின்னால் அருள்வாக்கி அப்துல்காதர் புலவர் போன்ற முன்னோடி கவிஞர் பற்றிக் கூறுகிறார். தொடர்ந்து கவிக்கோ கி. மு. நல்லதம்பி போன்றோர் பற்றிக் கூறுகிறார். அதைத் தொடர்ந்து வரகவி குறிஞ்சித் தென்னவன் பற்றிய விபரமான குறிப்பு காணப்படுகின்றது. இவர் குறும்பாக்கள் எழுதுவதிலும் கைவரப் பெற்றவர். உதாரணமாக ஒரு குறும்பா தரப்பட்டுள்ளது.
59

Page 32
தொழிற்சங்கத் தலைவர் தண்டபாணி தொழிலாளர் இவர்கள் ஒரு ஏணி விழி சிவக்க முகஞ் சிவக்க மேடைகளில் பேசிடுவார்
தலைவர் இவர் இன்று கங்காணி வாசித்து சிந்தித்து சுவைக்கக் கூடியதாயுள்ளதல்லவா.
ஆம், சில பெயர் பதித்த கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சு. முரளிதரன், தமிழோவியன், க. ப. லிங்கதாசன் போன்றவர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழோவியன் நாட்டார் பாடல் மரபில் ஏராளமாக எழுதினார். இதற்கு ஒர் உதாரணம் :
பாதையிலே வீடிருக்க பழனிச் சம்பா சோறிருக்க எரும தயிரிருக்க ஏண்டிவந்த கண்டிச் சீமை? எப்படி கேள்வி - பதிலுண்டா?
பிறகு சில பெண் மலையகக் கவிஞர் பற்றி எழுதியபின், அறுபதுக்குப் பின் இன்றுவரை எழுதிக் கொண்டிருப்பவர் பட்டியல் ஒன்று கொடுக்கிறார் - இது பூரணமானது என்று கூறிவிட முடியாது. எது எப்படி இருப்பினும் உயர்தர வகுப்புத்ர தமிழ் படிக்கும் மாணவர் களுக்கு ஒர் உசாத்துணை நூலாக உபயோகப்படலாம் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
ஏ. பி. வி. கோமஸ்
o o
நூல் சிறுகதை ஆக்கம் : சி. சுதந்திரராஜா விலை : 20.00
நலின் தலைப்பைப் பார்த்து விட்டு,
சிறுகதை என்றால் என்ன? எப்படி அதை எழுத வேண்டும்? என்பதை விளக்கும்
60
கட்டுரை நூல் என்று வர்சகர்கள் நினைக்கக் கூடும். ஆனால் நூலாசிரியர் ஏற்கனவே சஞ்சிகைகளில் எழுதிய 15 சிறுகதைகளை70 பக்கங்களில் திணித்து சிறு பிரசுரம் போல இதனை வெளிக் கொணர்ந்து இருக்கிறார்! இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
சமூகத்தில் நிகழும் பல சம்பவங் களை நுட்பமாக அவதானிக்கும் திறமை ஆசிரியரிடம் காணப்படுகிறது. சுற்றி வளைப்புகளின்றி கலையம்சத்துடன் கூறும் ஆற்றலும் கைவந்திருக்கிறது. ஆனால் நடிக்காத சுதேசிகள், வருணி யின் விலாசம், கவிதையின் ஒளிநகல், நவாலியும் லுமாலாவும், புதியன விரும்புதல், குறுக்கு வழி, விதேச விசித்திரம், மனப்பால், கதைகளைத் தவிர, ஏனைய வற்றில் ஆசிரியர் கூற வந்த செய்தி வாசகர் மனதில் ஒற்றிக் கொள்ள வில்லையே .
கவிதையின் ஒளிநகல், புதியன விரும்புதல் ஆகிய கதைகள் முறையே ஒலிபரப்பாளர் றிச்சர்ட் டீ சொய்சா, ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸ் படுகொலைகள் பற்றி மறைமுகச் சித்தரிப்புகள் பெயர்களைக் குறிப்பிடாமல் கலைநயத்துடன் உண்மைச் சம்பவங் களை ஆசிரியர் நேர்த்தியாக கையாண் டிருக்கிறார்.
நூல்களின் வடிவமைப்பு இன்று எவ்வளவோ முன்னேறியுள்ள நிலையில், நியூஸ் பிரிண்ட் தாளில் ஒரு கதை முடிந்த அதே பக்கத்தில் கொஞ்சங் கூட இடைவெளி விடாமல் அடுத்த கதையை ஆரம்பித்து. சிறு கதைத் தொகுதி என்பதென்ன படித்து விட்டு கசக்கி
ஞானம் - ஜ"ன் 2004

வீசிவிடுகிற தேர்தல் பிரசுரமா? குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற
பிரசுரங்கள் கூட எவ்வளவு சிறப்பாக
வெளிவருகின்றன. நூலகங்களில் பலரால் படிக்கப்படுகின்ற சிறுகதைத் தொகுதி ஒன்று எப்படி வெளியிடப்படக் கூடாது என்பதற்கு, இந்நூல் நல்ல உதாரணம்.
O O
நூல் : நாளையைத் தேடும்
மனிதர்கள்
ஆக்கம் திருமலை சுந்தா
வெளியீடு: அம்மா பதிப்பகம்,
திருகோணமலை.
சிறுகதை சிறுகதை எழுத்தாள ராகவும், கவிஞராகவும் விளங்கும் திருமலை சுந்தா, திருகோணமலையில் தோற்றுவித்த எழுத்தாளர்களுள் ஒருவர் திருகோணமலையில் சிவநெறி என்ற சஞ்சிகையில் அவர் எழுதிய சிறு கதையின் தொகுப்பு நாளையைத் தேடும் மனிதர்கள் (1999). முதலில் இத் தொகுதிக்குச் சிவநெறி சிறுகதைகள் எனப் பெயரிட உத்தேசிக்கப்பட்டிருக் கலாம் எனத் தோன்றகிறது.
இச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதற் கேற்ப, கதைக்கருக்களும், பாத்திர வார்ப்புகளும், சம்பவக் கோவைகளும் அமைந்துள்ளன. ஆயினும், யதார்த்தமாக அமைய வேண்டும் என்பதில் கதாசிரியர் போதிய அக்கறை செலுத்தியுள்ளார் என்பது, சிறுகதை களைப் படிக்கும் போது புலனாகிறது. தொடக்கு முதல் நாளையைத் தேடும்
அவை
ஞானம் - ஜூன் 2004
மனிதர்கள் என்ற சிறுகதை வரை பதினொரு படைப்புக்கள் இத் தொகுதி யில் இடம்பெற்றுள்ளன. சமய உணர் வெளிப்படுத்துவதாகச் சுந்தாவின் சிறுகதைகள் அமைந்த போதும், இத்தொகுதியிலுள்ள அவரது அனைத்துச் சிறுகதைகளிலும் அவரது எழுத்துத் திறன் புலப்படுகிறது.
அதேவேளை, இவரது சிறுகதை களிற் காணப்படும் முக்கிய குறையையும் குறிப்பிடவேண்டும். பல்வேற சிறுகதை களிலும் ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச்செல்லும் போக்கு இவரிடம் உண்டு. இத்தகைய தேவையற்ற பயிற்சியில் ஈடுபட்டு, வாசகருக்கு அலுப்பைத் தருகிறார். உதாரணமாக, “எங்கும் நிறைந்த.” என்ற சிறு கதையில் இடம்பெறும் பின்வரும் பகுதியைக் காட்டலாம்: “இப்படித் தான்.இப்படித்தான்.நான் எல்லாக் காரியங்களுக்கும் அவரின் சொல்லோடு ஒத்துப் போகும் போது. கண்ணிர் மல்க.கண்ணிர் மல்க. நின்ற இடத்தில்
வினை
நின்றே என்னைக் கட்டியணைத்து ஆனந்தப்பட்டு.ஆனந்தப் பட்டு.” இவ்வாறு பல சிறுதைகளில் இடம் பெறுவது, அவற்றின் சுவையைக் கெடுக்கிறது.
திறமை வாய்ந்த எழுத்தாளரான திருமலை சுந்தா, அத்தகைய குறை களைக் களைந்து எழுது வாரேயானால்,
ஈழத்துச் சிறுகதைத் துறையில் தமது
பெயரையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
- நக்கீரன்
61

Page 33
மதிப்பிற்குரிய "ஞானம்'ஆசிரியருக்கு,
ஞானம் 48ஆவது சஞ்சிகை கிடைக்கப்பெற்றது. நன்றி. அந்திமழை, மூன்றாவது கால் ஆகிய சிறுகதைகள் சிந்தனைக்குரியவை. கலாநிதி துரை மனோகரனின் புதிய கொட்டகைக் கூத்து இரசிக்கத்தக்கதாயுள்ளது. கவிதைகளும் கருத்தைக் கவர்கின்றன. - பூரீ. வாஹினி, கொழும்பு.
ஞானம் கனதியான ஆக்கங்களுடன் மிகவும் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல இலக்கியச் சிற்றேடுகள் மறைந்துவிட்ட சூழ்நிலையில் ஞானம் தொடர்ந்து வெளிவருவதே அதன் சிறப்பை நிரூபிக்கிறது. மலையகத்திலிருந்து தலை நகர் வரை தான் இலக்கியக் கரத்தை நீட்டியுள்ள ஞானம் பாராட்டுக்குரியது. தொடர்க தங்கள் இலக்கியப் பணி
- இரா. நாகலிங்கம், மட்டக்களப்பு.
சென்ற 48ஆவது இதழில் கேள்வி ஞானம் பகுதியில் கம்பவாரிதியின் ஆக்கங்களைப் பிரசுரிப்பதற்கான காரணங்களைக் கூறியிருந்தீர்கள்.
கம்பவாரிதி திரு. இ. ஜெயராசா அண்மையில் பத்திரிகை வாயிலாகக் கூறியது முழுக்க உண்மையே.
சில நாட்களுக்கு முன் கம்பவாரிதி ஜெயராசா பத்திரிகையில் கூறும் பொழுது இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்து இங்கு வருபவர்களின் ஒரு சிலரின் நடத்தை பற்றி கூறியிருந்தார். அவர்கள் எங்கள் கலாச்சாரத்திற்கு முரணாக நடக்கிறார்கள். அதனால் கலாச்சார சிதைவு ஏற்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கவலை தெரிவித்திருந்தார். அதில் எவரும் குறை காண மாட்டார்கன் என்பது திண்ணம்.
ஆனால் தனிப்பட்ட இருவர் கம்பவாரிதியைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அவர்கள் கம்பவாரிதியைப் பற்றி நன்கு அறியாமல் எழுதி விட்டார்கள் போலும். இங்கு நான் கம்பவாரிதி பற்றிய சில முக்கிய கருத்துக்களை எல்லோருமறியவைக்க விரும்புகிறேன் .
கம்பவாரிதி ஒரு சாதாரண மனிதனல்ல. காலத்துக்குக் காலம் எமது மண்ணில் இறைவனால் சைவத்தையும் தமிழையும் வளர்க்கத் தோற்றுவித்த மனிதர்கள் வரிசையில் தோன்றியவராவார். இவர் தன் இளம் வயதிலேயே சமயம் பற்றியும் கம்பராமாயணம் பற்றியும் மேடைகளில் சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். அன்று ஒரு சில அறிஞர்களுக்கு மாத்திரம் தெரிந்திருந்த கம்பராமாயணத்தின் ஆழ்ந்த கருத்துக்களையும் பண்பாடுகளையும் சகல மக்களுக்கும் புரியக் கூடியதாக பட்டி தொட்டிகளெல்லாம் எடுத்துச் சென்றவர், செல்பவர் கம்பவாரிதியே. கம்பன் கழகத்தை யாழ்ப்பாணம்
62 ஞானம் - ஜ"ன் 2004
 
 

கொழும்பு போன்ற இடங்களில் ஸ்தாபித்து விழாக்களை எடுப்பதன் மூலம் கம்பராமாயணத்தில் செறிந்துள்ள அரிய கருத்துக்களை மக்களிடையே பரப்பி அவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் கம்பராமாயணத்துடன் பெரிய புராணம் போன்ற சைவ நூல் கருத்துக்களிலும் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார். இது அவருடைய சைவப் புலமையைக் காட்டுகின்றது. அது மட்டுமன்று திருக்குறளை இளைஞருக்கும் முதியோருக்கும் விரிவாக போதித்து வருகிறார். இதனால் நாம் எல்லாம் அவரை பாராட்ட வேண்டும்.
காய்க்கிற மரம் தான் கல்லெறி படும் என்பர். அப்படியே மக்களுக்காக உழைக்கும் கம்பவாரிதி மேலும் குறைகள் கூறுவர். இது அவர்களின் அறியாமையை குறிக்கும். இவர் வைஷ்ணவ சமயத்தைப் பரப்புகின்றார் என்ற கருத்தும் பரப்பப்படுகின்றது. அவரைப் பொறுத்தளவில் அதிகாலையில் சிவ சின்னங்களை அணிந்து சிவனை வழிபட்டுத்தான் ஏனைய காரியங்களில் ஈடுபடுவார். கம்பராமாயணத்தை அச்சுவேறு ஆணிவேறாக பிரித்தறிந்து படித்து அப்படியே மக்களுக்கு அறிவுறுத்தும் ஆற்றல் வாய்ந்தவர்.
சமயங்கள் எல்லாம் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை வழிகாட்டி இறைவன் பாதத்தை அடைவதற்குப் படிக்கற்களாகவும் அமைகின்றன. எனவே கம்பன் விழாவில் இராமனை வணங்கி விழாவை ஆரம்பிப்பதில் என்ன தவறு. இதனால் கம்பவாரிதியை வைஷ்ணவர் என்று கூறலாமா?
கம்பவாரிதி சொகுசு வாழ்க்கை நடத்துவதாகவும் ஒரு தனிநபர் குற்றம் சுமத்தினார். அவர் ஒரு இலட்சியத்திற்கு அமையவே நடக்கின்றார். அதாவது அவரது குருவான காரைக்குடி கம்பன் கழக அமைப்பாளர் பேராசிரியர் ராதா கிருஷ்ணனின் பணிப்புக்கமைய விழாக்களுக்கு நலன் விரும்பிகளால் கொடுக்கப்படும் பணத்தை அவ் விழாக்களுக்கே செலவு செய்து விடுவார். அவர் மேல் பண மோசடி சுமத்துவது இறைவனுக்கு ஒவ்வாவது. அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்துவது அவரைப் பார்ப்பவர்களுக்கும் பழகுபவர்களுக்கும் நன்கு தெரியும்.
நான் கம்பவாரிதியின் குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்தவன் எனவே நான் உள்ளதைக் கூறுகின்றேன். இறுதியாக நான் கூறும் உண்மை என்னவெனில் இறைவனின் படைப்பில் ஒரு சிலரே அவரின் கருவிகளாக பிறக்கின்றார்கள். அவ்விதம் தோன்றியவரே கம்பவாரிதியாவார்.
- சி. சிவயோகநாதன், கொழும்பு -06
ஞானம் 48ஆவது இதழ் கிடைத்தது. எழுதத் தூண்டும் எண்ணங்கள் பகுதியில் கலாநிதி துரைமனோகரன் அவர்கள் தென்னைமரம் எனப் பயன்படுத்துவது தவறாகும்.
தென்னமரம் என்பதே சரியான பதம்.
- தேவ முகுந்தன், கொழும்பு.
இதழ் 48 - மே மாத இதழ் கிடைத்தது. இதுவரை வெளிவந்த பேராசிரியர் சிவத்தம்பியின் பேட்டியை முதலாம் பாகம் புத்தகமாக வெளியிடுங்கள். இலக்கிய உலகில்
விற்பனை சாதனை படைக்கும்.
- சி. குமாரலிங்கம், நல்லூர்.
ஞானம் - ஜூன் 2004 63

Page 34
அன்பார்ந்த வாசகர்களே !
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
- ஆசிரியர்
|"ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள் :
கொழும்பு :
பூபாலசிங்கம் புத்தகசாலை -340, செட்டியார் தெரு கொழும்பு -1 பூபாலசிங்கம் புத்தகசாலை - 309 A, காலிவீதி, வெள்ளவத்தை,
யாழ்ப்பாணம்
ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி,
திருகோணமலை திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. திரு. வீ. என். சந்திரகாந்தி - 572, A, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை,
மட்டக்களப்பு ! எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 481, பார் வீதி, மட்டக்களப்பு. (வடக்கு-கிழக்குமாகாணபிரதேசசபைகளுக்குவிநியோகம்செய்யும்முகவர்)
கிளிநொச்சி : கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி.
வவுனியா : ந. பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
கண்டி : லங்கா சென்றல் புத்தகசாலை - 81, கொழும்பு வீதி, கண்டி புத்தளம் ! சாஹித்திய புத்தக நிலையம், இல, 4, குருனாகல் வீதி, புத்தளம்.
பண்டாரவளை : மெடிக்கல் ஹெல்த் கிளினிக், இல, 1 டயரபா சந்தி, மிரஹாவத்தை (PO)
அவுஸ்திரேலியா L. Murugapoopathy, P. O. Box: 350, Craigie Burn, Wictoria 3.064 G. Balachandran, 21 Hudson Street, Wentworthville, N.S.W. 2145.
பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
༽
ر
ஞானம் - ஜூன் 2004

වරවල්වරවල්වරවල්වරවලීටරවල්වරවල්වරවලීටරවලීවරවල්වරවල්වරවූ
SO Q) 8 CENTRAL ESSENCE 8 (6. SUPPLIERS s
ଜୋ S) 器 DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES, 選 (9 FOOD COLOURS AND SCENTS ETC. 6 (9. 76/B, KING STREET 9. (6. KANDY ○ TEL : 08 - 222.4187 ○
O81 - 4471.563 (O 9.
LO 9Meaa iš 8 Carsons Mega 6 曹 S. (9. Ceramics 9. (6. Importers & Distributors of 8 Wall Tiles, Floor Tiles, High Quality S) Sanitary wares, Bathroom. Accessories, P. W. C. 6 And Hot Water Pipe Fittings 9) A-74, Colombo Street S. Kandy, Sri Lanka. 9. Tel: 081 - 4476760, 081 - 2200052 Fax : 081 - 2200052

Page 35
-ത്ത -
III, I | III
VIII
 

M
- TT بط نیلمپک کھیلنجلمامور | = | ti || || " 4 1 , 11 11