கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.07

Page 1


Page 2
ಟ್ಜ-2,42:42:52 kkkkkk Lkkk kkk LOk kkk kkk kkkk L kkk kkk Lk kkkk kkk kkk kkS kkk Oek keke Ok keS e0S
POOBALASING|HAM | BOOK DEPOT IMPORTERs, EXPORTER5, SELLERS &
PLIBLISHERS OF BOOKS STATIONERS AND NEWS AGENTS.
Haad Office Branches : 310, 202 Sea 5 real, 309 A-2/3, Galle Road, Colf II bij 11, Sri Lanka, Colombio 06, Sri La F1 ka. T3|| - 1 Te 1.515775 Fax. 23.37313, E-mail : pobydlho (Cas|timet, lk. ČIA, Hospital Road,
Bis Stalid, Jaffna.
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
ஐ தலைமை: Μια και : இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309 A-23, காலி வீதி,
கொழும்பு 11, இலங்கை, கொழும்பு 05, இலங்கை
தொ. பே. 2422321 தொ. பே. 4-518775
தொ fiti 23373.13
kg (5lcit car Öger så. :pbdhoÕsllnet.lk இல, AA, ஆஸ்பத்திரி வீதி,
畿 பஸ் நிலையம், யாழ்ப்பாணம், 蠶
|8
 

பிரதம ஆசிரியர் : தி. ஞானசேகரன்
இணை ஆசிரியர் : புலோலியூர் க. சதாசிவம் x இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா. III Go äF - f5 VJ OSI ஓவியர்கள் :
I tiub U IT நா. ஆனந்தன்
%
அட்டைப்பட ஓவியம் : புஸ்பா
நிர்வாகம் ! கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு -
தி. ஞானசேகரன் 1gy, பேராதனை வீதி,
கண் டி.
Telephone - (1812-17857 (Office)
181-22-755 Res. у моlik - (777-306506 * Fay - S-2-755
E-Mail - gianian magazine ayahoo.coil
"-"#"=LFLPFLF- " نكتة" التي تقنيات = مسيس "هيت – ميسي قياسي بيت
இதழினுள்ளே .
நேர்கானல் பேராசிரியப் சிவத்தம்பி
சிறுகதை
ஊபைப்பெண்ணும் .
வீ.என். சந்திாாாக்கி
தங்க அப்பிள் jijiliäåll d'I'll
நெற்றித் தழுப்பு
- யோகேஸ் கஜோசtங்கம்
கவிதைகள் வாக்குறுதி பற்றி
- மாவை வரோதமான் உபதேசம் - சி. மெளனகுரு எது அழகு" - துராசரி கருக்கொள்ளல் - த ரீஜிதரன் எதிர்பார் ப்புக்கள் - கே. சங்கீகா தேர்வலம் - ஆ. புனித கஷா அபகரிப்பு - இளைய அப்துல்ாள் நாளைய முன்னைய வாழ். - வே. தினகரன் கருத்துச் சிதறல்கள்
- கம்பளாரிதி இ.ஜெயராஜ்
கட்டுரைகள்
தமிழில் முதலில் சிறுகதை :
- கார், ஜெயநேசன்
இன்றைய இலக்கிய கோட்.
- கல்வயல் வே. குமாரசாமி
ஞானம் ஞ்சிகையின் 4 ஆண்டு
-வ. இரானசமா
எழுதத் து ண்டும் எண் 391 ங்.
- துரை மகோகீரன்
பெர்னாட்வேரா எழுத்தான்." - புளோவியூயான்
FITII-II (s இலக்கிய நிகழ்வுகள்
- கே. சுதர்சன்
ஈழத்து நவீன கவிதை -
- , போசுரா
விவாத மேை
கேள்வி ஞானம்
நூல் மதிப்புரை
வாசகப் பேசுகிறார்
-
* |
T
f
.
f
出了 g, 5

Page 3
கல்ை இலக்கியச் சஞ்சிகை வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
ஈழத்து இலக்கிய உலகில் ஞானம்
உங்கள் கரங்களில் ஞானம் - 50 பொன்மலர் இதழ் விரித்துப் பொலிவுடன் தவழ்கிறது.
கலை இலக்கியம் வாழ்வியலின் ஓர் அங்கமாகப் பின்னிப் பிணைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், காலத்தின் தேவையை மனதில் இருத்தி ஒரு இலக்கியச் சஞ்சிகைக்குரிய தார்மீகக் கடமையை நன்குணர்ந்து, ஈழத்து இலக்கியம் பற்றிய பிரக்ஞையுடன், இலக்கிய தரம் பற்றிய சிரத்தையுடன் நமது பணியைத் தொடருகிறோம்.
எம்முன் விரிந்திருக்கும் பணிகள் பல. அவற்றை நிறைவேற்று வோமென்ற திடசங்கற்பமும், செயற்திட்டங்களும், அவற்றால் இதுவரை நாம் பெற்ற பெறுபேறுகளும் ஞானத்தின் 50இதழ்களிலும் பதிவாகியுள்ளன. வெகுசன ஊடகச் சாதனங்களில் ஒன்றான தேசியப் பத்திரிகைகள் தமது கட்டமைப்பாலும் பூகோளமயம் ஏற்படுத்தும் தாக்கத்தாலும் வர்த்தகநோக்கும் ஜனரஞ்சகத் தன்மையும் கொண்டு இயங்குகின்றன. கலை இலக் கிய உணர்வுகளை மலினப் படுத் தி இலக் கிய ரசனையையும் தாழ்த்தியுள்ளன. இவற்றுக்கெல்லாம் மாற்றீடுகாணச் சிற்றேடுகள் செயற்படவேண்டியுள்ளன. ஆரோக்கியமான இலக்கியச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கவேண்டிய கட்டாயமும், படைப் பாளிகளுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவைப் பேணவேண்டிய கடப்பாடும் சிற்றேடுகளைச் சார்ந்து நிற்கின்றன. இவற்றை நாம் மனங்கொண்டு செயலாற்றி வருகிறோம்.
2 ஞானம் - ஜூலை 2004
 

பல பிரதேச எழுத்தாளர்கள் ஞானத்துடன் இணைந்துள்ளனர். பல்கலை ஆய்வாளர்கள், இலக்கிய மாணவர்கள் தமது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இலக்கியத் தேடலுக்கு வேண்டிய புதிய இலக்கியச் சிந்தனைகள் ஞானத்தில் வெளியாகின்றன.
இளம் எழுத்தாளர்களுக்குக் களமமைத்துக்கொடுத்து வளர்த் தெடுக்கும் பணி மகத்தானது. ஞானம் பணிணையிலே புதிய பரம்பரையொன்று வளர்ந்து வருவதையிட்டு நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். நவீன இலக்கிய உருவாக்கத்திற்கு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகும் சூழலை ஏற்படுத்தி, நூல்களை விமர்சித்து, எழுத்தாளர்களை அறிமுகஞ்செய்து, படைப்பாளிகளுடனும், இலக்கிய ஆய்வாளர்களுடனும் நேர்முகங்கண்டு இலக்கிய மேம்பாட்டுக்கு வகை செய்துவருகிறோம்.
சில நேர் காணல் கள், வரலாற்றுத் தவறுகள் சிலவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
விவாத அரங்குகளை ஏற்படுத்தி மிகுந்த பொறுப் படனும் சிரத்தையுடனும் கருத்து வளர்ச்சியை உருவாக்கக் கருத்தாடல் முரண்பாடுகளை வெளிக் கொணர்ந்து சிந்தனைத் தெளிவுக்குக் களமமைத்து வருகிறோம். வாழும் சமூகத்தின் எரியும் பிரச்சினைகளை, போர்க்கால அவலங்களை உணர்வுபூர்வமாக வெளியிடும் ஆக்க இலக்கியங்களைப் பிரசுரித்து, சமூக அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதில் இலக்கியத்தின் பங்கினை “ஞானம்’ நிறைவேற்றிவருகிறது. புலம் பெயர் இலக்கியத்தையும் அதன் பரிமாணமான புகலிட இலக்கியத்தையும் அரவணைத்து தமிழிலக்கியத்திற்கு அவை அறிமுகஞ்செய்துள்ள புதிய புலங்கள், சிந்தனைகள், புதிய பொருள்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சாதனமாகவும் “ஞானம் செயற்படுகிறது.
நவீன இலக்கிய நாட்டத்திற்கு சர்வதேச மட்டத்தில் இலக்கியச் சிந்தனை விரிவடையவேண்டும். ஈழத்து கலை இலக்கியத்தரமும் தகைமையும் பேசப்படவேண்டும்; பேணப்படவேண்டும். வாசகர்களின் இரசனை மட்டத்தை வளம்படுத்தி - வெறும் பொழுது போக்காக மேலோட்ட வாசிப்பாக இல்லாது தீவர சிந்தனையும் வாழ்வியல் பயன்பாடும் உடைய ஆரோக்கிய இலக்கிய சிந்தனையை வளர்த்துவரும் எமது பணியையும் பக்கச்சார்பற்ற நடுநிலைமைச் செய்ற்பாடுகளையும் மதித்து இலக்கிய உலகம் எமக்களித்துவரும் ஒத்துழைப்பும் ஊக்கமும் எம்மை மனம் பூரிக்கச் செய்கின்றன; தொடர்வோம் எம்பணியை.
குரணம் பொன் மலர் 3.

Page 4
2006 DVDů4)vlajpg|Vyčb
ஊமையாகின 4)தஞ்சங்களும்
அலுவலகத்தின் கிழக்குத் திசையில் அமைந்திருந்த ஜன்னல் களினூடாக ஆதவன் அத்துமீறிக் கொண் டிருந்தான். எனது அலுவலக கண்ணாடி அறை மேற்கில் அமைந்திருந்தமையால் காலையின் வெம்மை சிறிது சிறிதாக ஏறி மாலையில் நன்கு சூடுபிடிக்கும். நிர்வாக விவகாரங்களும் ஏறத்தாழ அப்படித்தான் என்பதை அனுபவங்கள் எனக்கு உணர்த்தி நிற்கின்றன.
நான் எனது ஆசனத்தில் அமர்ந்த வுடனேயே “இன்ரகொம்” அலறியது. காலை வந்தனம் தெரிவித்து உரை யாடலை ஆரம்பித்து வைத்தேன்.
“குட்மோர்னிங் மோகன் குட்மோர்னிங். நான் வரவு செலவு திட்ட பணிப்பாளர் கதைக்கிறன்.”
“ஓம் சேர். சொல்லுங்கோ.” "நான் நேற்று நீங்கள் கேட்ட சண்டே ஒப்சேவர் பத்திரிகையை உங்கடை உதவி யா ள ன ட்  ைடக்
1. கொடுத்திட்டன். 浮て தந்தவரே?” - &කූ% வினாவினேன்.
鑫 “ஓம் மோகன்.ஓம் t மோகன் நீங்கள்
பத் தி ரி  ைக  ைய குடுத்திட்டு போனது எனக்குத் தெரியாது.
நான் கூட்டம் முடிஞ்சு ஆறு
மேசையை வந்து பார்க்க பத்திரிகை இல்லை. நான் கேட்டும் நீங்கள் தரேல்ல எண்ட கோபத்தில அந்த நேரம் நிண்ட அலுவலர்கட்கு உங்களைப் பற்றி குறையாக கூறி பேசிப் போட்டன். இண்டைக்கு காலையில நான் அலுவலகத்துக்கு வரத்தான் நீங்கள் பத்திரிகையை கொடுத்துவிட்டு சென்றதாகவும் அதை யாரோ கையாடி விட்டதாகவும் எனக்கு தகவல் கிடைச்சுது. ஐ ஆம் சொரி மோகன்.”
“பரவாயில்லை ஒருக்கால் பத்திரிகையை எடுத்தது ஆர் எண்டு விசாரிச்சு உங்களுக்கு எடுத்துத் தாறேன். ”
ஒலி வாங்கியை வைத்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அடுத்த விநாடி அலுவலக பணியாளர் என் முன்னால் பிரசன்னமானார்.
நிர்வாக அதிகாரி என்ற தோரணை யில் ஆனால் விடயத்தை தெரிந்து
சேர்.நான்
கொள்ளும் ஆதங்கம் உள் நோக்கமாக வினவினேன்.
“என்ன நடந்தது ராஜன்.?” அலுவலக பணியாளர்களுக்கு இந்த அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதிலிருந்து. என்ன நடந்து கொண்டிருக்கின்றது. என்ன நடக்கப் போகின்றது என்பது வரை அனைத்து விடயங்களும் மிக மிக துல்லியமாகத்
ம ணி க் கு K திருமலை வீ. என். சந்திரகாந்தி)
ஞானம் - ஜூலை 2004
 
 

தெரியும். ! அதிலும் மற்றவர்களைக் காட்டிலும் ராஜன் மிகவும் புத்திசாதுரிய முடையவன். எவர் எவர் எந்தெந்த
மொழியில் கதைத்தாலென்ன. அதுவும் ஏன். எங்கள் அலுவலகத்தில் வலது குறைந்த வர்களுக்கான ஒரு சத வீத தெரிவில் அலுவலக பணியாளராக நியமனம் பெற்று வந்திருக்கும் வாய் பேச இயலாத பிள்ளை சாந்தத்தினுடைய சைகை வழிப் பாஷை அனைத்தையும் அனைத்திற்கும் ஈடு கொடுத்து தனது சரியானதும், தவறானதுமான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதில் அவன் நன்கு தேர்ச்சியடைந்திருந்தான். “நான் சேர். நேற்று கூட்டம் முடியிறதுக்கு அரை மணிநேரம் முன்னரே அலுவலகத்தை விட்டுப் போயிற்றன்.”
கிரகித்து
நானும் விட்டுக் கொடுக்கவில்லை. அலுவலகப் பணியாளர்கள், தாமே தம்முடைய சூழ்ச்சிகளாலும் தந்திரங் களாலும் என்னையும் தேர்ச்சியடைய வைத்திருந்தார்கள்.
“gs) சொல்லும் பிறகென்ன நடந்தது?’ வினவினேன்.
ராஜனுடைய பிரதான வல்லமை அவரது மருட்டும் சிரிப்பு குற்றம் சுமத்தப் படுவதற்கு முன்பாகவே ஒரு சினேக பூர்வ சிரிப்பை முன்வைத்து விடுவதால் அவருடைய பதிலால் எனக்கு உண்டாகக் கூடிய கோபம் எடுபடாமல் போகும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டு அடிக்கடி தப்பி வந்தார்.
குாணம் பொன் மலர்
“இல்லை சேர். ’ சிரிக்கிறார். “சரி சரி சொல்ல வந்ததை சொல்லும். ”நான்.
5

Page 5
“அது சேர் பத்திரிகையைப் பற்றி
ஒண்டும் தெரியாது’. கூறிய பின் மீண்டும் சிரிப்பு.
“நான் பத்திரிகையைப் பற்றி
ஒண்டும் கேட்கேல்லையே!”
ஒருகணம் அதிர்ச்சியடைகிறார். மறுகணமே சமாளித்தபடி.
“இல்லை ‘சேர்’. நான் இப்ப வரவு செலவுத்திட்ட பணிப்பாளருடைய அறையிலை இருந்துதான் வாறன்.” “ஒஹோ..சரி.நீர் இப்ப என்ன செய்யிறீர் எண்டால் இந்த பத்திரிகைக்கு என்ன நடந்ததெண்டு அலுவலகம் பூரா விசாரிச்சுப் போட்டு வந்து எனக்கு தகவல் தரவேணும். ss
வரவு செலவுத் திட்டப் பணிப்பாளர் மற்றொரு திணைக்களத்தில் பதில் கணக்காளராக கடமை புரிந்து வந்தார்.
அத்திணைக்களம் சார்ந்த கேள்வி 9:565,556i (Tender Notice) gaito அவ் வார ‘ஒப்சேவரில் பிரசுரமாகி யிருந்ததால் அப் பத்திரிகை அவருக்கு மிக மிக அவசியமாக இருந்தது.
தினமும் மாலையில் அன்றாட ஆங்கில தமிழ் நாளிதழ்களை அலுவலர் களிடமிருந்து சேகரித்து திணைக்கள விடுதிக்கு அனுப்பி வைப்பதும் மறுநாள் அப் பத்திரிகைகள் அலுவலகத்திற்கு வந்ததும் அவற்றை சலுகை விலையில் பெற்றுக் கொள்ளும் அலுவலர்கட்கு விநியோகிப்பதும் சாந்தத்தினுடைய கடமைகளில் ஒன்று.
தலைவரின்
சாந்தம் முற்பணக் கணக்கு நடவடிக் கையின் கீழ் இயங்கும் மாகாண சபை அச்சகம் ஒன்றில் புக் பைண்டராக அமைய அடிப்படையில் சில வருடங்கள் பணிபுரிந்து பின்னர் அந் நிறுவனம் நஷ்டமடைந்து
நிர்வாகம் கைமாறியபோது எமது அலுவல கத்திற்கு அலுவலக பணியாளராக நிரந்தர நியமனம் பெற்று வந்தாள்.
அரச நியமனங்களில் ஒரு சதவீதம் வலது குறைந்தவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளமை அவளது பதவி நியமனத் திற்கு உதவியாக இருந்தது. கீழ்ப்படிவும் ஒழுக்கமும் கடமையில் சிரத்தையும் அவளது தகுதிகளாக இருந்தன.
சாந்தத்தினுடைய தகுதியீனம் வாய் பேச முடியாமை ஒன்று தான். இந்த குறைபாடு இல்லாமல் மறுபுறம் இரண்டாம் மொழி மூன்றாம் மொழிகளில் தாமும் வாய் பேச இயலாதவர்களாக இருந்த ஏனைய பெண் அலுவலர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக அவள் மிகுந்த பிரயத்தனம் எடுத்தாள்.
கணனி மயமாக்கப்பட்ட எமது அலுவலகத்தில் வேகத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. மனச்சாட்சி புதையுண்டிருந்தது.
இந்தச் சமுதாயம் எப்போதுதான் பிறர் பற்றி சிந்தித்தது. ஒருவன் தற்காலிகமாக கெட்டு நொந்து போனாலே அவனை காலால் தீண்டிப் பார்த்து தப்பி பிழைப்பானா மாட்டானா என்று எடை போட்டு பார்த்து விட ஆவலுறும் சமுதாயமல்லவா இது இந் நிலையில் புலனிழந்தவர் பற்றியும் வலது குறைந்தோர் பற்றியும் கவலைப்பட யார் இருக்கின்றார்கள்? எந்த ஒரு ஜிவராசியும் எமக்கு உணவாக பயன்படா விட்டாலும் எமக்கு போட்டியாக அல்லது எம்மை தமக்கு ஆகாரமாக்காமல் பார்த்து விட வேண்டியதுதானே இவ்வுலக ஜீவ வாழ்வின் நியதியாக இருக்கின்றது!
குானம் - ஜூலை 2004

தொலைந்து விட்ட பத்திரிகை பற்றி சாந்தத்தை அழைத்து விசாரிக்க வேண்டியிருந்தது. ஆனால் எனக்கு சைகை வழிப் பாஷை சுத்த சூனியம். சாந்தம் முகத்தில் பிரவாகிக்க கைகளை வேக வேகமாக அசைத்து பொருள் சேர்த்து தனது கருத்துக்களையும் தீர்மானங்களையும்
உணர்ச்சிகள்
வெளிப்படுத்துவாள்.
கைதடி நஃபில்ட்’ பாடசாலையில் அவள் பயின்றிருந்தாள். வெகு
அபூர்வமாக அவள் கூறுவது எனக்கு விளங்கி நான் சிறு குழந்தை போல கைதட்டி சிரித்தால் அவளது முட்டைக் கண்கள் மேலும் அகன்று வட்டக் கரிய முகம் தாமரை போல பொலிவுற்று அழகு காட்டும்.
என்று சைகையால் கூறி அவர்களை மட்டுமன்றி இந்த சமுதாயத்தையே சாடும் வல்லமை அவளிடம் இருந்தது.
சாந்தத்தை அழைத்து பத்திரிகை பற்றி விசாரித்தேன். நான் அப்படி விசாரித்தது அவளுக்கு திகைப்பை ஏற்படுத்தியது! அந்த பத்திரிகை பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்பதை வாய் மொழி மூலம் அடித்துக் கூற இயலாத நிலையில் சைகை மூலம் எனக்குப் புரியுமாறு புலப்படுத்தினாள். தனது மறுப்பினை நான் ஏற்றுக் கொள்கின்றேனா இல்லையா என்பதை எனது முகக் குறிப்பின் மூலம் அறிய முயன்றாள். அவள் கூறுவதை நான் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் அவள் மேல் எனக்கு சந்தேகம் இல்லையென்றும்
முயன்று கூறி ஆனந்தக் கண்ணிர் வடித்தும் அழுது 3ಜ್ಷ வி ள
வள் பேச முயற்சித்தாள். இதுவரை காலமும் பேச அனு பு இயலாதிருந்தமையை F()G)Jusu விழைந்தவள வைத்தேன்.
бТ Ш) 51 னந்தித்து குமுறினாள். Gur་་་་་་་་་་་་་་་་་ 蠶 பிரவாகத்தில் அனைவருமே அலுவலகதது 9H பிறவி ஊமைகளாக வாயடைத்து ஆ ங் கி லے ஒரு ಶಾಸ್ತ್ರ பத்திரிகைகள் நின்றார்கள . அ தி க ம்
அவளிடம் விவேகம் இருந்தது. உண்மையை துணிந்து கூறும் தைரியம் இருந்தது. நாற்பதாகியும் விவாகமாகாதிருந்தாள். தன்னொத்த வயதினையுடைய எமது அலுவலகத்தில் பணி புரியும் ஏனைய விவாகமாகாத பெண்கள் திருமணம் பற்றி பேசினால்
வயது
“இனி என்னத்துக்கு உனக்கு கலியாணம். பேசாமல் இரு.”
க சங்கு வது கிடையாது. எனினும் பொதி கட்டுதல் பாவனைகளுக்கு இவை
இருக்கும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக இருந்தது.
ஒரிரு பதவிநிலை உத்தி யோகத் தர்கள் ஆங்கில பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையாவது படிப்பதை
போன்ற
உபயோகமாக என்பது
நான் அறிவேன். உள்ளக தொலைபேசி
ஞானம் பொன் மலர்

Page 6
மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர்களுடைய ஏகோபித்த அபிப்பிராயம்.
அது உவங்கள் 'பியோன் மார் தான் கொண்டு போயிருப்பாங்கள் என்றவாறு இருந்தது.
அலுவலக பணியாளர்களை கடமைகளின் பொருட்டு நிர்வாகம் கட்டுப்படுத்த நேரிடுவதால் பதவி நிலை உத்தியோகத்தர்களது தனிப்பட்ட வேலைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்புக் கொடுக்காததால் உண்டான கோபம் அது
சற்று நேரத்தில் எமது பெண் அலுவலர் ஒருவர் சில தகவல்களுடன் வந்தார்.
“ ‘சேர்’. நேற்று நீங்கள் பற்றி குறையாகச் சொல்லி வரவு செலவு திட்ட
s
போட்டியள்.உங்களைப்
பணிப்பாளர் சரியான பேச்சு.
“ஏன்?. ’ வினவினேன். “நீங்கள் வேலையில ஒழுங்கோ
அக்கறையோ இல்லையாம். 905
காரியத்தைச் சொன்னால் செய்யி றேல்லையாம். அறளை பெயர்ந் துட்டுதோ தெரியாது எண்டும் சொன்னவர்.”
வரவு செலவுத் திட்ட பணிப்பாள ருடைய கருத்துக்களோடை அவாவும்
ஒத்துப் போகின்ற மாதிரி தான் அவாவினுடைய் கதை சொல்லும் ஆவல் இருந்தது.
“சரி . சரி. அவர் ஏற்கனவே என்னோடை கதைச்சிட்டார். நீர் இனி மேல் விசயங்களை இன்னும் வேகமாக முந்திக் கொண்டு சொன்னால்தான் நல்லது. அது போகட்டும் அந்த பத்திரிகையை ஆர் கொண்டு
போயிருப்பினம் எண்டு நீர் நினைக் கிறீர்..?’ விசாரித்தேன்.
அவா சிறிது நேரம் ஆழமாக யோசிப்பது போல பாவனை செய்தா. பின்னர் இப்படியான விடயங்களிலை கருத்துக் கூற விரும்பாதது போல தயக்கம் காட்டினா. பின்னர் அந்த நிலைப் பாட்டுக்கு முரண்பாடாகவும் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த விடையொன்றை கூறும் அவசரத் துடனும்.
“வேறை ஆர் சேர். சாந்தம்தானே பத்திரிகை சேகரிக் கிறவா. அவாதான் கொண்டு போயிருப்பா. ” என்று ஐயத்துக்கு இடமின்றி கூறினா.
எனக்கு சாந்தத்தின் அப்பாவித் தனமான முகம் மனதில் நிழலாடியது . “இல்லை மிஸ். இது வார இறுதி பத்திரிகை. நேரே திணைக்கள தலைவரின் விடுதிக்குத்தான் அனுப்பப் படுவது வழக்கம். வரவு செலவு திட்ட பணிப்பாளர் கேள்வி அறிவித்தல் ஒன்றை பார்ப்பதற்காகவே அதனை விசேடமாக கேட்டு எடுப்பித்தவர்.”
நான் விளக்கவும் அவள் எழுந்து சென்றாள்.
தொலைந்த பத்திரிகை பற்றி விசாரிப்பதற்காக நான் முன்னர் அனுப்பிய பணியாளர் ராஜன் வந்தார்.
“ ‘சேர். எல்லாரையும் விசாரிச்சுப் போட்டன். ஒருவரும் எடுக்கேல்லை எண்டு சொல்லுகினம் .”
தன்னையும் வேறெவரையும் காட்டிக் கொடுக்காத துமான பதில்!
“அங்கை பின்னாலை நாலைஞ்சு
பிடி கொடாமல்
பேர் எந்த நேரமும் கூட்டம் போட்டு குசு குசுத்துக் கொண்டிருக்கிறவை. சில
ஞானம் - ஜூலை 2004

வேளையிலை ஆங்கில பத்திரிகை களிலை வாற படங்களை பார்க்கிற துக்காக எடுத்திருப்பினம். அவையளை விசாரிச்சீரா?’ வினவினேன்.
“ ‘சேர்’. அவையளைப் பற்றி கதைக்காதையுங்கோ. அவையள் ஒரு குழுவாய் இயங்குகினை. நான் ஒராளை ஏதும் விசாரிக்கப் போனால் எல்லோரும் சேர்ந்து சண்டைக்கு வந்து விடுவினம்.” பயத்துடன் கூறினார்.
“மற்ற மற்றவைக்கு நீர் எண்டுறதாலை உண்மை ஒண்டை வெளிக்
Uuth
கொணராமல் இருக்க விடலாமே?”
“ஏன் சேர்’ அவையாலை பிரச்சனை
ஒண்டும் இல்லைத்தானே.”
GG
ஓம்.ஒம்.பிரச்சனை இல்லாத மாதிரித்தான் இருக்கும். அது கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு திடீரெண்டு நிர்வாகத்திற்கெதிரான குண்டொன்றை தூக்கிப் போடுவினை. இன்னுமொண்டு நீர் உணர வேணும். இண்டைக்கு எந்த அலுவலகத்தை எடுத்தாலும் பிரச்சனை இப்படியாக இயங்குகிற குழுக்களாலை தான். இவையளின்ரை கூட்டை உடைக்க தவறுகின்ற ஒரு தலைமைப் பீடத்தை இவர்கள் மறைமுகமாக எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள். தானும் வேலையும் எண்டு இருக்கிற ஒரு அலுவலர் எந்த விரோத செயலிலும் இறங்க மாட்டார். குழுக்களாக இயங்குகிறவை விளை யாட்டாகவே நிர்வாக விரோத செயல்களை செய்து போட்டு வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பினம்.”
ராஜன் ஆவலுடனும் அவதானத்துடனும் நான் கூறுவனவற்றை கேட்டுக்
கொண்டிருப்பதை அவதானித்த நான் திடீரென்றுகதையை நிறுத்திக்கொண்டேன்.
சாந்தம் ஒரு நாள் இவர் பற்றி என்னிடம் கூறிய விடயம் மனதில் உறுத்தியது.
“மற்ற மற்ற பணியாளர்கள் இலகுவாக மற்றவர்களோடு முரண்டு பட்டுவிட்டு உங்களுடைய தயவை எதிர் பார்த்து நிற்பார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. பழகுகிற மாதிரியே மற்றவையோடையும் நல்லாய் சிரிச்சு சிரிச்சு
உங்களோடை
பேசி தன்னுடைய நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வார்.”
அலுவலகம் எண்டால் எப்படி இருக்கும் என்பதை அதற்குள் நுழைந்து பார்த்தால் தான் தெரியும். நாள் சம்பளத்துக்கு கட்டு வேலை செய்யும் கூலியாள் ஒருவன் வெற்றிலை போட்டும் நிழலில் ஆறியுமே தனது நாளைப் போக்கிவிடுவது போல சில அலுவலர் மதிய போசன இடைவேளை தேநீர் இடைவேளை என்றே கடமை நேரத்தை வீணடித்து விடுவார்கள். இதற்கும் மேலாக காலை ஆகாரத்தை அலுவல கத்தில் வைத்துக் கொள்வார்கள். நீர். மின்சாரம். தொலைபேசி கட்டணங் களை கடமை நேரத்தில் செலுத்த குறுகிய சலுகை லீவு’ பெறுபவர்கள் என்று பட்டியல் நீளும்.
பணியாள் என்னைப் பார்த்த படியே நிற்கவும் நான் தொடர்ந்தேன்.
“சரி ராஜன். இனி ஆரை விசாரிக்க வேணும்?”
“சாந்தத்தை ஒருக்கால் விசாரி யுங்கோ 'சேர்’’
எல்லோருக்கும் அந்த வாய் பேச முடியாத பிள்ளை ஒரு போடதடி. மனதிற்குள் கறுவிக் கொண்டேன்.
ஞானம் பொன் மலர்

Page 7
“சாந்தத்தை ஏற்கனவே விசாரிச்சுப் போட்டன். அவா எடுக்கேல்லை.” ஏறத்தாழ அதட்டினேன்.
ஒரு வலது குறைந்த பிள்ளை மேல் இவர்களுக்கெல்லாம் பரிவே கிடை யாதா? அவள் இவர்களைக் காட்டிலும் பொறுப்புடனும் பொறுமையுடனும் கடமைகளைச் செய்யவில்லையா?
திணைக்கள தலைவரின் அலுவலக அறையை தூசு தட்டி கூட்டி. சுவாமி படத்திற்கு மலர்கள் சாத்தி சாம்பிராணி பற்றவைத்து குளிர் சாதனத்தை இயக்கி வைத்து. குடிநீர் வைப்பதுடன் ஆரம்பமாகும் அவளது பணிகள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெறும் அனைத்து கடிதங்களையும் பதிதல், அலுவலர் விடய எழுதுநர் மத்தியில்
விநியோகித்தல் வெளிச்செல்லும் கடிதங்களை முத்திரை இயந்திரப் பதிவு செய்து ஏட்டில் பதிந்து தபால்
அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் என நீடிக்கும் .
மதியத்தை நெருங்கும் நேரம் ஒரு சாரதி வந்தார். “ என் சேர். நேற்று சாந்தம் ஆங்கில பத்திரிகை ஒண்டை கொண்டு போனதை கூட்டத்திற்காக வந்திருந்த பணிப்பாளர்களின் சாரதிகள் கண்டிருக் கிறார்கள். இந்தப் பிள்ளை
வாசிக்குமோ
ஆங்கிலம் எண்டும்
என்னைக் கேட்டவங்கள்.”
இந்தச் செய்தி எனக்கு அதிர்ச் சியையும் அதே சமயம் மனக் கவலையையும் அளித்தது.
உடனேயே மற்றொரு அலுவலக பணியாளர் வசந்தனை அழைத்து அந்த பத்திரிகையை விலை கொடுத்து வாங்கி வருமாறு பணம் கொடுத்து அனுப்பி
வைத்துவிட்டு மதிய போசனத்திற்காக சென்று திரும்பினேன்.
முதலில் தகவல் தந்த பெண் அலுவலர் மீண்டும் எனது அறைக்கு வந்தார்.
“ ‘சேர்’ வார இறுதி பத்திரிகை எண்டதாலை ஒரு இடமும் எடுக்க முடியேல்லையாம். நாங்கள் அனுப்பின பணியாள் விலைக்கு பத்திரிகை கிடைக்காததாலையும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அவர்களை சந்தேகிப் பதாலும் தொலைந்த பத்திரிகையை கண்டு பிடிக்க வேணும் எண்டு முடிவெடுத்து சாந்தத்தின்ரை வீட்டை போய் சாந்தமே சொல்லி விட்டதாக கூறி தாயிடமும் சகோதரி யிடமும் பத்திரிகையை கேட்டிருக்கிறார். அவர்கள் அப்படி ஒரு பத்திரிகை அங்கு இல்லையெண்டும் போன மாத நாளாந்தப் பத்திரிகை ஒண்டு தான் கிடக்கு தெண்டும் கூறி இதை கொடுத்து விட்டிருக்கினம். இதிலை பாருங்கோ சேர்’ எங்கடை அலுவலக திகதி முத்திரை அடிபட்டிருக்கு. இதே மாதிரி 6j TIJ இறுதி பத்திரிகையும் போயிருக்கலாம் தானே?”
சாந்தம் மதிய போசன இடை வேளையை முன்னிட்டு வீடு சென்று திரும்பிய கையுடன் நேரே எனது அறைக்கு வந்தாள் .
நன்றாக அழுது களைத்த முகம். நிச்சயமாக மதிய உணவை எடுத்திருக்க மாட்டாள். ஒரளவு ஊகித்தேன். அவளது சைகை வழிப் பாஷை மூலம் மேலும் அவற்றை உறுதி செய்து கொண்டேன்.
அவளது தாயாரும் தங்கையும்,
எப்படியும்
நிலைமையை
ஞானம் - ஜூலை 2004

“உனக்கு தொழில் எதற்கு? நாங்கள் சாப்பாடு போடுகின்றோம். ஆடை உட்பட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றோம். வாய் பேச இயலாத நீ எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும். உலகம் இப்போ முன்னர் போல இல்லை. இது அவசர உலகம், அலுவலகங்கள் அனைத்துமே கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது. வேலையில் நேர சிக்கனம் முதன்மை வகிக்கின்றது. ஒடுபவர்களுடன் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு ஒட வேண்டும். உனக்காக எவரும் காத்திருக்கப் போவதில்லை. காத்திருக் கவும் முடியாது. வேலையை விட்டு விடு” என்று கூறி நிர்ப்பந்தித்திருப்பார்கள்.
சாந்தம் அன்றைய தினம் அடிக்கடி எனது அறைக்கு வந்து தனது பக்க நியாயத்தை என்னிடம் கூற எனது நம்பிக்கைக்கு பாத்திரமாவதற்கு அதீத பிரயத்தனங்கள் செய்தாள். அவனது பாஷை எனக்கு புரியாவிட்டாலும் அவளது வெள்ளை உள்ளம் பளிச்சென விளங்கக் கூடியதாக இருந்தது. எனது நெஞ்சு வலித்தது. எனது பிள்ளை ஒருத்திக்காக துயருற்றுகலங்குவது போல கவலையடைந்தேன்.
ஒரு சத வீத தெரிவில் நியமனம் பெற்று அலுவலகங்களில் பணி புரியும் வலது குறைந்தோர் அனைவர்க்காகவும் எனது மனம் கரைந்துருகியது.
அலுவலகம் முடிவடையும் நேரத்திற்கு சற்று முன்பாக சாந்தம் தனது கையில் அந்த வார இறுதி பத்திரிகையுடன் ஓடி வந்தாள். வரவு செலவு திட்ட பணிப்பாளரின் கோவை களுக்கிடையில் மேசையில் அது கிடைத்ததாக கூறினாள். ஒரு சிறு குழந்தையாக மாறி துள்ளிக் குதித்தாள்.
தன் மேல் சுமத்தப்பட்ட பழி அக்கணமே அகன்று விட்டமைக்காக அவள் புளகாங் கிதமடைந்தாள். அவளது உள்ளக் குமுறல்கள் அவள் முகத்தில் ஆயிரமாயிரம் அர்த்தங்களை உணர்த்தியது. பதவி நிலை உத்தியோகத்தர்களிடமும் அலுவலர் களிடமும், சக பணியாளர்களிடமும், வாகன சாரதிகளிடமும் வியந்து வியந்து பேசினாள். தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் தவறு என்பதை தானே நிரூபித்து விட்டதால் அவர்கள் அனைவருடையதும் நட்பைதான் அக் கணமே சம்பாதித்து விட்டதாக இறுமாப்படைந்தாள்.
ஆனந்தக் கண்ணிர் வடித்தும் அழுது தேம்பியும் அவள் பேச முயற்சித்தாள். இது வரை காலமும் பேச இயலாதிருந்தமையை ஈடு செய்ய விழைந்தவள் போல ஆனந்தித்து குமுறினாள்.
அவளது உணர்ச்சிப் பிரவாகத்தில் அனைவருமே ஒரு கணம் பிறவி ஊமைகளாக வாயடைத்து நின்றார்கள். பத்திரிகை கிடைத்து விட்டமையால் எனக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி.
மாலையில் அலுவலகம் முடிவடைந்து நான் வீடு திரும்ப முன்னர் வரவு செலவு திட்ட பணிப்பாளரை அவரது அறையில் சென்று சந்தித்து கதைத்தேன்.
தொலைந்த பத்திரிகை சம்பந்த மாகவும் எமது உரையாடல் தொடர்ந்தது. திணைக்கள கேள்வி அறிவித்தலை கட்டாயமாக பார்வையிட வேண்டி யிருந்ததால்வரவுசெலவு திட்ட பணிப்பாளர் அவ்வார இறுதி பத்திரிகையை மீண்டும் தானே நேரில் விலை கொடுத்து வாங்கியிருந்த உண்மை மட்டும் அவருக்கும் எனக்கும் மாத்திரம் தெரிந்த விடயமாக நெஞ்சில் நிறைவு பெற்றது.
ஞானம் பொன் மலர்
11

Page 8
?PIg.Geے کG|fa
(ஞானம் இதழ் 48ல் கவிஞர் செ குணரத்தினம் எழுதிய கடுஞ் செலவு’ என்ற கவிதைக்குப் பதிற் கவிதை இது - ஆசிரியா)
- ரூபராணி பக்கத்து வீட்டுக்காரி கதைகேட்டு
பாட்டெழுதிப் போட்டியளே அன்று வெக்கடமில்லைக் கொஞ்சமும் அவளுக்கு
வாய்திறந்தா வருவது பொய்தாங்க.
நெஞ்சுவலி வந்து செத்தவர் என்புருஷன்
நான்பட்ட வேதனை ஊரறியும்
பஞ்சுபடாப் பாடுபட்டன் உயிர்காக்க
பலனில்லை பறந்துபோனார் என்செய்ய.
செத்துப்போ என்று நானவரை திட்டினதா சிவசிவா என்ன பொய்யப்பா இது
எத்தனைபேர் இதை நம்பினரோ அறியேன் ஏனிந்த அவதூறு சொல்லவேணும்.
என்னவரைத் தாயாகப் பார்த்தாளாஅவள்
எவள் சொன்னாள் இந்தக் கதை
சொன்னவளைக் கொண்டுவாங்க நான்
சுடச்சுடரெண்டுகேள்வி கேக்கவேணும்.
பட்டுவேட்டி சால்வை சேட்டெல்லாம்
போட்டு அழகு பார்த்தேன் ஆசையாக
கட்டின தாலியையும் கழற்றிவைத்தேன் கண்ணிரும் தண்ணிராய் வழிகிறது.
கவிதைக்குப் பொய்யழகு என்று சொன்னார்
கவியரசு வைரமுத்து அப்போ நீங்க
செவிமடுத்த தெல்லாமே பொய்தானா
சொல்லிடுங்கோ கவிதைக்கு எது அழகு?
.2 ஞானம் - ஜூலை 2004

(jീ]["ഞ്ച്)
GLIUrIrafifuń
கா. சிவத்தம்பி
சந்திப்பு : தி. ஞானசேகரன்
.ே உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். N
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
* தலை சிறந்த விமர்சகள்.
* தமிழ்நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது அளிக்கப்பட்டுக்
கெளரவம் பெற்றவர்.
* வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப்
الصر .பணிபுரிந்தவர் ܢ
(12)
தி.ஞா: :நீங்கள் நாடகத்துறை சம்பந்தமான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளிர்கள். அந்த அநுபவங்கள் உங்களது ஆளுமை வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரிந்துள்ளன? கா.சி. : உண்மையில் இலக்கியத்தில் நான் ஈடுபடுவதற்கு முன்னர் எனது ஈடுபாடுகள் நாடகத் துறையிலேதான் இருந்தன. பின்னர்தான் படிப்படியாக இலக்கியத்துறைக்கு வந்தேன். இன்றுள்ள தலைமுறையினர் பெரும்பாலோர் என்னை ஒரு இலக்கியத்துறை ஆய்வாளன் அல்லது விமர்சகராகத்தான் அறிவார்கள். ஆனால் நாடகத்துறை சம்பந்தமான தொடர்புகள், ஈடுபாடுகள் வரலாற்றுச் செயற்பாடுகளோடு உள்ள ஈடுபாடுகள் பலவுள்ளன. என்னுடைய நாடகத்துறை ஈடுபாடுகளைத் தொகுத்துக்கூறுவது நல்லது என நினைக்கிறேன்
முதலாவது ஒரு நடிகனாக நாடகத்துறையில் எனது ஈடுபாடுகள்.
ஞானம் பொன் மலர் 13

Page 9
இரண்டாவது ஒரு நெறியாள னாக நான் நெறிப் படுத் திய நாடகங்கள், நண்பர்களோடு சேர்ந்து நெறிப் படுத் திய நாடகங்கள் , கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு நெறிப்படுத்திய நாடகங்கள் - இது இரண்டாவது அம்சம்.
மூன்றாவது அம்சம், 1956 முதல் பேராசிரியர் வித் தியானந்தன்
கலைக்கழகத் தமிழ்நாடகக்குழுவின்
தலைவராக இருந் த காலம் முழுவதும் 66ஆம் ஆண்டுவரை நான் அக் குழுவின் செயலாளராகக் கடமையாற்றி வந்திருக்கிறேன். செயலாளராகக் கடமையாற்றியதன் காரணமாக அவரது நாடகப் பணிகளிலே அவருக்குத் துணையாக நின்றதும், அவர் சில விடயங்களில் முழுக்கவனத்தைச் செலுத்த நான் சில விடயங்களில் முழுக்கவனத்தைச் செலத்துகிற சில பண்புகளும் இருந்தன. அதன்பின்னர் 72தொடக்கம் 75 வரை நானே இலங்கைக் கலைக்கழகக் குழுவின் தலைவராக இருநீ தேனி பேராசிரியர் வித்தியானந்தன் ஒய்வு பெற்றபின்னர்.
நான் காவது, பேராசிரியர் வித்தியானந்தன் பேராதனைப் பல கலைக் கழகத்தில் இந்தக் கலைக்கழக நடவடிக்கைகள் ஊடாக வந்த நாட்டுக் கூத்து மீள்கண்டு பிடிப்பினை ஒரு செவ்வையான நாடக வடிவமாக ஆக்கி அளிக் கை செயப் வதற்கு அதோடு ஈடுபட் டிருந்தமை அல்லது அதற்கு ஏதோவொரு வகையில் உதவியாக இருந்தமை அதுவும் 69 (5 முக்கியமான விடயம் என்று நம்புகிறேன். ஏன் என்றால் இன்று பின்னோக்கிப் பார்க்கிறபோது அது ஒரு முக்கியமான விடயமாகப்
படுகிறது. அந்தவடிவத்தில் நாங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் அல்லது அந்த வடிவத்தை இப்போதுள்ள ஒரு Prosceni um theatre aĖ (Gö 9,85 அமைக் கிறபோது ஏற்பட்ட மாற்றங்கள் - இவையெல்லாம் சரியா? எந்த முறையில் அவை பயன் பெற்றன? - இப்போது அவை பற்றிய ஒரு வாதவிவாதங்கள் இருக்கின்ற படியினால் அதனைப்பற்றிப் பேசுவது முக்கியமெனக் கருதுகிறேன்.
இதைவிட என்னுடைய பங் கென்று சொல் லக் கூடியது நாடகத்தை ஒரு கற்கைநெறியாக, 9 (b. Curricular course 9,35i படிப்பித்ததும், படிப்பிப்பதற்கான பாடவிதான ஒழுங்கமைப்புகளைச் செய்ததும் - இது இரண்டு நிலையில் செய்யப்பட்டது. ஒன்று Drama diploma course. 906353535 um pú பாணத்தில் நாடகத்தை ஒரு Theatre ஆகப் படிப்பித்தது. அதிலே பலர் எனக்கு உதவிசெய்தார்கள்.
அதன் பிறகு பல்கலைக்கழக நாடகம் மூலமாக நாங்கள் வளர்த் தெடுத்த நாடகம் பற்றிய ஆராய்ச்சி. Drama, Theatre dibugbg5LDIT60T 61601g சொந்த முயற்சிகளும் எனது மாணவர்கள் மூலமாக செய்யப்பட்ட முக்கியமான ஆராய்ச்சிகளும்.
முதலில் நடிகனாக இருந்தது என்பது, நான் எஸ்.எஸ்.சி. சித்தி யடைந்துவிட்டு 1948 - 1949இல் கொழும்பு ஸாஹிராவில் படிப்பதற்கு வந்தேன். அப்பொழுதுதான் நான் வானொலி நாடக நடிகனாக மாறினேன். இந்த வானொலி நாடக நடிகனாக நான் நடித்தபொழுது இரணர் டு துறைகள் என்னுள் முக்கியத்துவம் பெற்றன. முதலாவது, சானா - சண்முகநாதனோடு சேர்ந்து
14
ஞானம் - ஜூலை 2004

வானொலி நாடகங்களில் நடித்தது. வானொலி நாடகங்களில் நடிப்பது என்பது சில முக்கியமான பண்பு களைக் கொண்டது. அதாவது குரலாலேயே எல்லாவற்றையும் காட்டவேண்டும். அந்த நடிப்பு முறையிலே நான் இரணர் டு வகையான நடிப்புமுறைகளில் ஈடுபட்டேன். ஒன்று, யாழ்ப்பாணப் பாத்திரங்களைச் சித்திரித்தல் . இரணி டாவது குணசித் திரப்
பாத்திரங்களைச் செய்தல் - அது செந் தமிழிலும் வரும், பேச்சுத் தமிழிலும் வரும். இந்த நடை
முறையில் நான் தொழிற்பட்டிருக்கும் வேளையில வீ. என் . பாலசுப் பிரமணியமும், எம்.எஸ்.இரத்தினமும் என்னை இலங்கையர்கோன் எழுதிய விதானையார் வீட்டில்’ நாடகத்தில் நடிக்கும்படி கூறினார்கள் - இது இலங்கையர் கோனைக் கேட்டு நடந்தது. நான் விதானையாராக நடித்தேன். இது நான் பல்கலைக் கழகத்தில் படிக்கிற காலத்திலேயே நடந்த ஒரு விசயம். ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த நாடகம் ஏழு மணிதொடக்கம் ஏழு பதினைந்து மணிவரை நடக்கும். உண்மையில் இந்த வானொலி தொடர் நாடக முறைமைகளில் காலத் தாலி முந்தியதும் அக்காலத்தில் பல இரசிகர்களைக் கொண்டிருந்ததும் இந்த விதானையார் வீட்டில் நாடகம். அது வீ.என்.பி. தயாரித்தது. எம்.எஸ் .இரத் தினம் அதற்கு உதவிசெய்தார். அதில் சுந்தரலிங்கம், சரவணமுத்து மாமா, பரிமளாதேவி
விவேகானந்தா, செல் லத் தம்பி போன்ற பலர் நடித்தார்கள். அந்தத் தலைமுறையினர் பலர் என்னை
விதானையாராகத் தான் அறிந்
திருந்தனர். என்னை அவர்கள்
எல்லோரும் ‘அப்பு’ என்றுதான் அழைப்பார்கள் - இளைப்பாறிய விதானையார். உண்மையில் மிக
அண்மைக்காலம் வரை சுந்தரலிங்கம் என் னை அப் பு’ என்றுதான் அழைப் பார் . மயில் வாகனம் , பரராசசிங் கம் , செந்தில் மணி மயில்வாகனம் போன்ற குறிப்பிட்ட தலைமுறையில் என் னுடன் சேர்ந்தவர்கள் எல்லோரும் என்னை "அப்பு என்றுதான் சொல்வார்கள். யாழ்ப்பாணத்து வாழ்க்கையினுடைய மரபுகள் எல் லாவற் றையும் காட்டுகின்ற ஒரு பாத்திரமாக அதில் நான் நடித்தேன். பின்னர் “லண்டன் கந்தையா தொடங்கிய காலத்திலும் நான் சானாவோடு சேர்ந்து நடித்தேன். முதல் நான்கு ஐந்து வாரங்களில் நான் நடித்தேன். பின் னர் லண் டன் கந் தையா தனியானதொரு வடிவத்தை எடுத்தது. வானொலி நாடகம் என்னுடைய ஆளுமைக்கு மிகவும் உதவியது. ஆரம்பகாலத்தில் நான் ஒரு வானொலி நடிகனாகவே இருந்தேன்.
வானொலி நாடக நடிகனாக இருந்துகொண்டு வருவதினுடாக நான் படிப்படியாக ஒரு மேடை நடிகனாக மாறினேன். சானாவோடு முதலில் திருகோணமலையில் நடித்தேன். பின்னர் கொழும்பில் இருந்த குழுவைச் சேர்ந்தவர்கள் - சுந்தரலிங்கம், செந்தில்மணி, நான் சேர்ந்து சிறிய நாடகங்களை - Humorous episode 356061T biggs($gb|Tib. யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் அப்போது முக்கியஸ்தர்களாக இருந்த ஏ.ஆர். ஆர். தம்பிராசா, வி.எஸ்.நடராசன் போன்றவர் களோடு சேர் நீ து
குரணம் பொன் மலர்
15

Page 10
சுந்தாவுடைய தூண்டுதலினால் நாடகங்களை நடிக்கத் தொடங் கினோம். அது மிகவும் சுவாரஸ் யமான விடயம். 1956இல் Sinhala Only சட்டம் வந்தபொழுது நாங்கள் Bachelors only 6T65rp biTL3556095 நடித் தோம் . அந்த நாடகம் இருபத்தைந்து - முப்பது தடவைகள் நடைபெற்றது. எப்படி 'சிங்களம் மட்டும் சட்டம் வந்ததோ அதே போன்று இலங்கையில் Bachelors Only என்று ஒரு சட்டமும் வந்ததாக நாடகத் தை அமைத் தோம் . சிங் கப்பூரில் இருந்து இங்கு கலியாணம் செய்யவந்த ஒரு பையன் இங்கு வந்து இறங்கியதும் திடீரென Bachelors only 3 Lib 6.jbg565 Lg). அதனால் கல்யாணம் தடைப்பட்டுப் போனது. அப்போது அதிலே ஒரு 6.1360TLb 6 (bib Reasonable use of Tamil இருப்பதுபோல இந்தக் கலியான விஷயத்திலும் ஒரு Reasonable use S(Ibé ab (Upi9uffg5T என் றெல் லாம் கேட் பார் கள் . அந்தமாதிரியான நாடகங்கள் கொழும்பிலே பெரிய வரவேற்பைப் பெற்றன.
எனது நடிப்புத்துறையில் மிக முக்கியமான கட்டம், வானொலிக்கு மேலாக, அதன் தொடர்ச்சியாக அமைந்தது - நான் பல்கலைக்கழகத் தமிழ் ச் சங்க நாடகங்களில் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்தது. நாங்கள் கண்டிக்குச் சென்றபோது 52,53இல் உடையார் மிடுக் கு’ கணி டி திருத்துவக் கல்லூரியில் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் பல்கலைக் கழகத்தில் நாடக ஆற்றுகைக்காக ஒரு குழு இருந்தது. கைலாசபதி, பரமோதயம் , சிவகுருநாதன் ,
சிவப் பிரகாசம் , மட்டக் களப்பு தியாகராசா இப்படியாகப் பலர் இருந்தோம். அதனைப்பயன்படுத்தி வித்தியானந்தன் இந்த நாடகங்களை கொழும்பு, திருகோணமலை, கண்டி, யாழ்ப்பாணம் என எல்லா இடங் களுக்கும் கொண்டுசென்றார். முதலாவது ‘உடையார் மிடுக்கு கண்டி திருத்துவக் கல்லூரியில் நடித்ததோடு நின்றுவிட்டது. தவறான எண்ணம் இலங்கையில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் நடந்தது. அதன்பிறகு புதிய நாடகம் ஒன்றை பேராசிரியர் கணபதிப் பிள்ளை சொல்லச்சொல்ல நான் எழுதினேன். சுந்தரம் எங்கே? என்ற நாடகம். 1955 இல் அந்த நாடகத் தை
நடித்தோம். − 1956இல் அவர் எழுதிய துரோகிகள்’ என்ற நாடகம்
மிகப்பிரமாதமானது. அது தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றியது. அதில் ‘புலிநாடு, புலிப் போராட்டம் என் றெல் லாம் வசனங்கள் வருகின்றன. அந்த நாடகத்தில், ஒரு இளைஞர் குழாம் தமிழர்களுடைய போராட்டத்திற்காக - வெளியே தெரியாத மறைவுநிலையில் தங்களுடைய காரியங்களைச் செயப் கினி ற தங்களுடைய செய்திகளை அனுப்புகின் ற - போருக்குத் தயாராகின்ற - குறிப்பாக வன்முறைக்குத் தயாராகின்ற ஒரு இயக்கம் பற்றிய கதை. 1956இல் அதனை அவர் சொல்லச் சொல்ல எழுதிய வாய்ப்பு கைலாசபதிக்கும் எனக்கும் இருந்தது. அப்போது நான் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன். கைலாஸ் அப்போது தமிழ் விசேடதுறை இறுதியாண்டில் இருந்தார். நான் ஸாஹிராவில்
16
ஞானம் - ஜூலை 2004

படிப்பிக்கத் தொடங்கிவிட்டேன். சனி ஞாயிறுகளில் பேராதனைக் குச் செல் வேண் . பேராசிரியர் இப்படியாக அந்த நாடகம் எழுதி முடிக்கப்பட்டது. அதில் மட்டக்களப்பு மேயராக இருந்த தியாகராஜா நடித் தார் . குணரத் தினம் என்றொருவரும் நடித்தார். தடவையாக பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து கொணர் டு பல்கலைக்கழக நாடகம் ஒன்றிலே நடித்தது நான்தான். அந்நாடகம் பெரிய வரவேற்பைப் பெற்ற நாடகம். உண்மையில் ஒரு நாடக நடிகனாக இலங்கை மட்டத்தில் எனக்கு ஒரு பெயர் வந்ததற்குக் காரணம் பல்கலைக்கழக மட்டத்தில் நான் பெற்ற நாடக அனுபவங்கள்தான். கைலாசபதியும் நடித்தார். ஐபார் என்ற ஒரு முஸ்லிம் பையன் மிகவும் பிரமாதமாக நடித்தான்.
நடிகனாக இருப்பதென்பது ஒரு மனிதனாக இருக்கவிரும்புகிறவனுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை நான் இந்த இடத்தில் கூறவேண்டும். நடிகனாக இருப் பதினுடைய முக்கியத்துவத்தைக் கூறவேண்டும். நடிகனாக இருப்பதென்பது என்ன? - இன்னொருவருடைய உணர்ச்சிகளை இன்னொருவனாக நான் காட்டுவது. நான் இனி னொருவனுடைய உணர்ச்சிகளை - நான் என்னை மறக்காமல் எனது நிலைக்குள் நின்றுகொண்டு - இன்னொரு வனுடைய உணர்ச்சிகளுக்குள் சென்று அதனைச் சித்திரிக்கின்ற முயற்சி. இதுதான் அடிப்படையில் நடிப்பு என்று சொல்லப்படுவது. இதனை நான் செய்கிறபொழுது, நான் மற்றவர் களுடைய
சிலவேளைகளில் கொழும்பு வருவார்.
முதற்
(நடிப்பு
\உதவக்கூடியவை. X
கருத்துக்களை - மற்றவர்களுடைய உணர்ச்சிகளை - மற்றவர்கள்
உலகத்தைப் பார்க்கிற முறைமையை நான் பார்க்கிறேன். நடிப்பென்பது நானே அதாக மாறுவதல் ல. சிவத் தம் பி அருணாசலமாக நடிக்கிறபொழுது இந்த அருணாசலம் அந்தக்கட்டத்தில் என்ன செய்வார் என்பது சிவத்தம்பிக்கு நன்றாகத் தெரியவேணி டும் . அப் படிச்
செய்கிறபொழுது அருணாசலத்தை நான் காட்டவேண்டும். அதாவது சிவத் தம்பி முன் னுக்கு வராமல்
அருணாசலம் முன் னுக்கு வர வேணி டும் . இது எப் போது சாத்தியமாகுமென்றால் எனக்கு அருணாசலம் எப்படியிருப்பார் . அவரது உணர்வுகள் எப்படி இருக்கும் எண் பது தெரியவேணி டும் . என்பது உணர்வுகளை அறிந்து கொள்வது. மனிதர்கள்ை உணர்ந்து கொள்ளுதலி. அவர்களைப் புரிந்து கொள்ளுதல். அதாவது நகர்கள் நாட கத்தல், ஈடுபட்டால் இரண்டு அம்சங்கள் முக்கியமாக இருக்கும் ஒன்று இந்த உணர்வுகளைச் சித்தரிப்பது. மற்றது நாடகத்தல் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகிபாகம் உண்டு அது சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். சிறிது. பெரிது என்று நாகர்கள் பார்க்க இயலாது. அதனை நாங்கள் செய்யவேண்டும். இவை வாழ்க்கை பற்றிய விளக்கத்தற்கு மிகவும்:
என்னோடு நடிப்புத்துறையில் ஈடுபட்டிருந்த நண்பர்களை, பல அற்புதமான கலைஞர் களை எனினால் இன் றுமி மறக் க முடியவில்லை. வானொலித்துறையில்
ஞானம் பொன் மலர்
17

Page 11
பலர் நடித்தார்கள். பிலோமினா 3:6)LD6 என்ற பெண் மிகமிக நுண்ணியதான உணர்வுகளைச் சித்திரிக்கின்ற நடிகை. அவரைப் போன்ற சிறந்த நடிகையை நான் காணவில் லை. அந்தக் கால கட்டத்திலேதான் இராஜேஸ்வரி சணி முகமும் நடித்தார் . ஆணி நடிகர் களுள் என் னுடன் மிக நெருக்கமாக இருந்தவர் ரொசாரியோ பீரிஸ். அவருக்குச் சினிமாவைப் பற்றி அதிகம் தெரிந்திருந்தது. சினிமா பற்றிய அடிப்படை ஆர்வம் என்னுள் ஏற்படுவதற்கு ரொசாரியோ ஒரு காரணமாக இருந்தார். நானும் அவரும் சேர்ந்து ரொசி என்ற பெயரில் சினிமா விசயங்களை எழுதுவோம் . ரொசி என்பது ரொசாரியோ - சிவத்தம்பி என்பதைக் குறிக்கும். சுந்தரலிங்கம் மிகவும் முக்கியமானவர் . கொட்டாஞ் சேனையில் உள் ள | ] 6Ծ நண்பர்களை நான் அறிவதற்கான வாய்ப்பு - அவர்களுடன் நடிப்ப தற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஜபார் ஒரு நல்ல நடிகர். கைலாசபதியும் நடிப்பிலே ஆர்வம் கொண்டிருப்பவர். சிவகுருநாதன் நன்றாகப் பாடுவார். எங்களுடன் நடித்த பெண்கள் பலர் நல்ல குடும்பஸ்திரிகளாக மாறி நல்ல வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள் - சச்சிதானந்தீஸ்வரி போன்றவர்கள். இவர் மிக முக்கியமான நடிகையாய் இருந்தவர்.
பின்னர் நான் நாடகங்களை நெறிப் படுத்தத் தொடங்கினேன் . கொழும் புப் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் நாடகங்களை நெறிப்படுத்துகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் சரவணமுத்துமாமா செய்தார்.
படிப்படியாக
பின்னர் கே.எஸ். நடராசா செய்தார். பின்னர் மூன்று நான்கு வருடங்கள் அதனைச் செய்யும் வாய்ப்பு எனது கைகளுக்கு வந்தது. அந்த நேரத்தில் அ.ந.கந்தசாமி எழுதிய "மதமாற்றம் என்ற நாடகத்தை நான் தயாரித்தேன். அதன் பின்பு முத்துலிங்கத்தின் ஒரு நாடகம். பின்னர் சொக்கன் எழுதிய நாடகம் என மூன்று நாடகங்களை நெறிப்படுத்தினேன். அவை மூன்றும் அக்காலகட்டத்தில் மிகமுக்கியமான நாடகங்களாக விளங்கின. மதமாற்றம் ஒரு அற்புதமான நாடகம். ஒரு கத் தோலிக் கப் பையனும் ஒரு இந்துப்பெண்ணும் காதலிக்கிறார்கள். மதப் பிரச்சினை ஏற்பட்டு பெண் கன்னியாஸ் திரியாக மாறுவாள். பையன் சாமியாராக மாறுவான். அதனால் கலியாணம் நடக்காமல் தடைப்பட்டுப் போகிறது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு, "இப்படியான நாடகங்கள் தமிழர் மத்தியிலே மிக அவசியம் எனக் கடிதம் எழுதி யிருந்தார். அந்த நாடகத் தினுடாக நான் தெரிந்துகொண்ட தென்ன வென்றால் ஒரு நாடக நெறியாளர் என்பவர் பார்வை யாளருக்கு வாழ்க்கை பற்றிய ஒரு asTdf6ou 9iassassio -Presenting a Slice of life அதனைப் பார்ப்பவருக்கு அவரது மனதில் இதுவரை காலமும் தெரியாமல் இருந்த ஏதோவொரு விசயம் பளிச்சென்று தெரிய வேண்டும் இது பொதுவில் ஒரு கலையின் பண்பு, கலை அறிவைத் தருவதல்ல. அது அறிகையைத் தருவது. It doesn't teach - it cognizes. unufriu I6 Ibiss5 அவரோடு சம்பந்தப்பட்ட இன்னொரு விசயம் திடீரென்று வெளிச்சத்திற்கு வருவதுபோல் இருக்கும். அவ்வளவு காலமும் விளங்காதது விளங்கிய
18
ஞானம் - ஜூலை 2004

மாதிரி இருக்கும். அதுதான் அந்த Cognition. 6 rpdissoa56ouf Luibru ஒரு தெளிவு ஏற்படும். இது, கலை எல்லாவற்றுக்கும் பொதுவானது. இதில் நாடகம் முக்கியமானது. இது தயாரிப்பின் மூலம் நான் அறிந்து கொண்டது. இன்னொரு விடயம் என் னவென்றால் , ஒரு நெறி யாளனுக்கு அந்தக் கலைப் படைப்பைப் பற்றிய ஒட்டுமொத்தமான பார்வை இருக்கிறவேளையில் அதனை அவர் தனியாகச் செய்வதில்லை. நடிகர்கள் வேண்டும், ஒரு இசையமைப்பாளர் வேண்டும், ஒளியமைப்பாளர் வேண்டும், ஒரு காட்சியமைப்பாளர் வேண்டும். எனவே இவற்றையெல்லாம் சேர்த்துச் செயற்படவேண்டும். அதுவொரு பெரிய விடயம். மிகப்பெரிய சவால். "மதமாற்றம் இதனை எனக்குக் கற்றுத்தந்தது. அதனை எனது வாழ்க்கையில் மறக்கமுடியாது.
தினகரன் கலை விழாவில் நாங்கள் கம்பன்' என்ற நாடகத்தைப் போட்டோம். அதை நான் எழுதினேன். அது பெரியதோல்வியில் முடிந்தது. அதையும் நான் இங்கு சொல்லத் தான் வேண்டும். வானொலியில் நடித்ததனால் குரலுக்குள் ளால் பாவத்தைக் கொண்டுவருவதென்பது முக்கியம். குரலுக்குள்ளால் பாவம் வருவதென்பது உடலுக்குள்ளால் வருவது. இந்தமாதிரியான ஒரு நடிப்புமுறையில் பயிற்றப்படுகின்ற தன்மையொன்று ஏற்பட்டது.
அடுத்தது, இலங்கையின் நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான விடயம், இலங்கைக் கலைக்கழகம் தமிழ் நாடகக்குழு' என 1952-53இல் ஏற்படுத்தியது. முதலில் பேராசிரியர்
அந்தச் சவால்
கணபதிப்பிள்ளை அதன் தலைவராக இருந்தார். அதிலே சண்முகநாதன் இருந்தார். நடராசா இருந்தார். வித் தியான நீ தனும் அதிலே அங்கத்தவராக இருந்தார். 1956இல் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு, ஒரு கலாசார அமைச்சு நியமிக்கப்பட்டு அதனூடாக வந்த ஒரு அமைப் பினுாடாக இந்த நாடகக்குழு வந்தது. இந்த நாடகக் குழு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் , 1956இல்தான் பேராசிரியர் சரத்சந்திர "மனமேயை மேடையேற்றினார். அது 'நாடகம’ என்ற தமிழ் க் கூத்து வடிவத்தை எடுத்து பல்கலைக் கழகத்தில் அற்புதமான கலை வடிவமாக ஆக்கியிருந்தது. அந்தக் காலத்தில் நான் படித்துக் கொண் டிருந்தேன். அதில் நடித்தவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் எனது நண்பர்கள். வித்தியானந்தன் சரத் சந்திரவுடைய சக விரிவுரை யாளர். ஜ"பால் குணவர்த்தன, ஏ. ஜே. குணவர்த்தன, கலபதி இவர்கள் எல்லோரும் - அந்தத் தலைமுறையில் உள்ளவர்கள். எல்லோரும் எனது நண்பர்கள். இதனால் தமிழ் நாடகம் - சிங்கள நாடகம் பற்றிய ஒரு Interaction (9651O. 9(bsbgbgs). 91g) மிக முக் கியமானது. இந்தக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு வந்தவுடன் பேராசிரியர் வித்தியானந்தன் அதன் தலைவராக இருந்தார் . சணி முகசுந் தரம் , சோ.நடராசா, கே.எஸ் .நடராசா இவர் கள் அந்தக் குழுவில் இருந்தார்கள். அந்தக் குழுவுக்கு நான் செயலாளராக நியமிக்கப் பட்டேன். பேராசிரியர் வித்தி யானந் தன் நாட்டுக் கூத்தினை மீட்டெடுப்பதற்காகக் கிராமம்
ag Iravaruió QLU ITavör to øNDíř
19

Page 12
கிராமமாகச் செல்கிறபோது, அந்த நடவடிக்கையில் அவர் கவனஞ் செலுத் தியபோது, குழுவின் விடயங்களைப் பற்றிப் பேசுவதும் அலுவலக விடயங்களைக் கவனிப்பதும் அவரது பொறுப்பில் இருந்தன. நவீன நாடகங்களை நடத்துவதும், நாடக விழாக்களை நடத்துவதும் என்னுடைய பொறுப்பாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் இருந்த நாடகக் குழுக்கள் ஒரு அந்தஸ்து இல்லாமல் அவர்கள் தங்கள் பாட்டுக்கு நாடகங்களைப் போட்டுக் கொணி டிருந்தார் கள் . ராஜேந்திரா என்று ஒரு பெரிய மாஸ்டர் இருந்தார். அவர்கள் அக் காலத்தில் திரைப்படங்களைப் பின்பற்றி நாடகங்களை நடித்துக் கொண்டிருந்தார்கள். வானொலி நாடகங்களும் நடித்துக் கொண் டிருந்தார்கள். கலைச் செல்வன், சிரில் இப்படியாக அங்கு பலர் நாடகங் களைப் போட்டுக் கொணர் டிருந்தார் கள் . இவற்றோடு யாழ்ப்பாணத்தில் கலையரசு சொர் ன லிங் கம் , அரசையா, கிருஷ்ணாழ்வார் போன்றவர்கள் நாடகங்கள் போட்டுக் கொணர் டிருந்தார் கள் . மணி னாரிலும் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தன. இவற்றையெல்லாம் கொண்டுவந்து நாடக விழாவில் அரங்கேற்றுவது - அவற்றுக்குப் பொறுப்பாக நான் செயற் பட் டேனர் . மிகவும் சுவாரசியமான விடயம், முதலாவது நாடக விழாவிற்கு ஆமர்வீதியில் இருந்து நாடகம் பார்க்க வந்த குழுவினர் மாட்டு வண்டியிலேதான் வந்தார்கள். லயனல் வென்ற்’ தியேட்டரில் நாடகம் நடந்தது.
'6ou 16076ö G616Örsjö 9 uuïJ& Art galary. அவர்கள் வந்த மாட்டுவண்டிற் சில்லு அங்குள்ள புற்தரையை உழுது விட்டிருந்தது. மாடுகள் சாணிபோட்டு அந்த இடங் களையெல் லாம் பழுதாக்கிவிட்டது. அடுத்தநாள் நான் அங்கு சென்றபோது அவர்கள் என்னை ஏசத் தொடங்கிவிட்டார்கள். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம். ஆனாலும் சந்தோசம். அதற்குள்ளால் பல நடிகர்கள் படிப்படியாக வளர்ந்து வந்தார்கள். 1974இல் நாங்கள் சிங்களத்தோடு சேர்ந்து தேசிய நாடக விழா நடத்தியபோது, கலைச்செல்வன் போன்றவர்களுடைய பொறுக்கிகள்’ நாடகம் அகில இலங்கைப் பரிசு பெற்றது. அந்த வரலாறுகள் சரியான முறையில் பதிவு செயப் யப் படவில் லை. அவற்றோடு சம்பந்தப்பட்டதில் எனக்கும் மிகவும் சந்தோசம்.
நாடகப் போட்டிகள் நடத்தினோம் . சொக் கனுடைய நாடகம், தேவனுடைய நாடகம், அலங்காரரூபன் என்னும் கூத்து நாடகம் ஆகியவற்றை அச்சிட்டோம். வித்தியானந்தன் செல்லும் இடங்களுக் கெல்லாம் நானும் சென்றதால் அவர் மூலமாகப் பலரைத் தெரியவந்தது. சொர் ன லிங் கம் அப் போது யாழ்ப்பாணத்தில் மட்டும் நாடகம் நடித்துக்கொண்டிருந்தார். அவரை நாங்கள் கொழும்புக்குக் கொண்டு வந்து கலையரசுப் பட் டம் அளிப் பதற்கு பின் னின் று உழைத்தோம். அதன்பின்னர் அவர் மிகவும் பிரபல்யம் பெற்றார். அதே போன்று வைரமுத்துவின் மயானகாண்டம் நடிப்பைப் பிரபல்யப் படுத்தினோம். அவரது நடிப்பை நாங்கள் மீள் கணி டுபிடிப் புச்
20
ஞானம் - ஜூலை 2004

செயப் தோம் . அது வித் தியா னந்தனுடைய, சனி முகசுந் தரத் துடைய முக்கியமான செயற்பாடுகள். அதில் ஏதோவொரு வகையில் நானும் பங்குபற்றி யிருக்கிறேன் என்பதில் சந்தோசம்.
வெறுமனே நாட்டுக் கூத்துக் களை மட்டும் மீட்டெடுப்பதல்ல. வெவ்வேறு துறைகளில் செயற் பட்டோம். முக்கியமென்ன வென்றால், கலைக்கழகம் நாடகம் பற்றிய ஒரு பொதுவான உணர் வை மக்களிடையே ஏற்பட்டுத்திற் று. அதுவும் இந்த மட்டக்களப்பு நாடக வடிவம் அல்லது கூத்து வடிவ மென்பது எங்களுடைய பாரம் பரியமான கலைவடிவம் என்கின்ற கருத்தினை பாடசாலை மட்டங்களில் இருந்து ஏற்படுத்தி அதனூடாக அதனை வளர்த்தெடுத்ததில் கலைக்கழகத்திற்கு முக்கியமான பங்குண்டு. அன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தமிழருக்குரிய கலை வடிவம் கூத்துத்தான் என்பது இனங் காணப்படாமல் இருந்தது. ஆனால் இனி று எந்தவொரு தமிழ் தி தினவிழாவிலும் ஒரு நாட்டுக்கூத்து மரபில் உள்ள நாடகம் போடாமல் விடப்படுவதில்லை. இதுவொரு முக்கியமான விசயம்.
1972இல் இருந்து 76வரையில் நான் இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகக் குழுவில் இருந்தபோது வன் னியில் ஒரு கலை விழா நடத்தினோம் - வன்னிவளநாட்டுக் கலைவிழா. வன்னியில் உள்ள அத்தனை கலை வடிவங்களையும் பதிவுசெய்தோம். அவைதான் இன்று இலங்கை வானொலியில் இருக்கின்றன. அதே 74இல் தான் முதற்தடவைாக ஒரே மேடையில்
லும்பினி தியேட்டரில், ஒரு நாளைக்கு தமிழ் நாடகம், மறு நாளுக்கு சிங்கள நாடகம் என தேசிய நாடகவிழா நடத்தினோம். ஒட்டுமொத்தமான பரிசளிப்பில் எங்களுடைய நாடகங்கள் பரிசு பெற்றன. அதிலேதான் சுந்தாவுடைய "அபஸ்வரமும் மற்றது “பொறுக்கிகள் போன்ற நாடகங்களும் இடம்பெற்றன. இதற்குக் காரணம் சிங்களத் துறையில் இருந்த நாடகக் கலைஞர்கள் எல்லோரும் எங்க ளுடைய நண்பர்களாக இருந்தனர். பேராசிரியர் சரத்சந்திர மிகப்பெரிய மனிதர். அவர் என்னைக் குறிப்பிடும் போது My Student என்று கூறமாட்டார் My friend 6T66 plg5 T65, Jingp6. Its. நாங்கள் கலைக்கழகத்தில் நிறையவே தொழிற்பட்டோம். நாடகம் பற்றிய ஒரு ஒட்டுமொத்தமான பாடசாலைமட்ட, மக்கள்மட்ட உணருகைக்கு இந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவின. இதில் வித்தியானந்தனுடைய பங்கு மிகப்பெரியது.
இவற்றைவிட, எனக்கு முக்கிய மானதாய்ப்படுவது என்னவென்றால், நாடகத்தை ஒரு கற்கை நெறியாக ஆக்கியதில் ஏதோவொரு வகையில் பங்கு கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு இருந்தது.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகங்களை எழுதினார். நாடகத்தை ஒரு வன்மையான வடிவமாக்கினார். பேராசிரியர் வித்தியானந்தன் எமது நாட்டுக்கூத்துப் பாரம்பரியங்களை மீளக் கண்டுபிடித்தார். அந்தப் படிநிலையில் அவர் களுடைய ஆசியோடு, அதனை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டுபோகிற ஒரு பெருவாய்ப்பு எனக்குக் கிடைத்ததை
ஞானம் பொன் மலர்
21

Page 13
யிட்டு நான் சந்தோசப்படுகிறேன். அது என்னவென்றால் நாடகத்தை ஒரு கற்கைநெறியாக்கியது.
கற்கைநெறியாக்கியது இரண்டு நிலைகளில் நடந்தது. முதலாவதாக 75,76களில் கொழும்புப் பல்கலைக் கழகக் கல்விப் பீடத்திற்கான Post graduate diploma in education d(e) Drama and theatre 69(5 UTLLDFIdlugs. அதைச் செய்தது தம்மஜாகொட என்பவர். அவர் ஒரு நடிகர். சிங்கள நாடகத் துறையில் ஒரு முக்கிய மானவர் . அவர் இதனைச் செய்கிறபோது பல கலைக் கழகத்திலிருந்த ஏ.ஜே. குணவர்த் தனவின் உதவியைப் பெற்று சிங்கள நாடகத்துக்கு வேண்டியவற்றைச் செய்தார். ஏ.ஜே. என்னைத் தமிழ் நாடகத்திற்கு இழுத்துவிட்டார். தமிழ் Drama diploma course g bTirids6i ஒரு வருடம் நடத்தினோம். அதிலே பங்கு பற்றியவர்கள்தான், சண்முக லிங்கம், சுந்தரலிங்கம், சிவானந்தன், திருமதி. இராமலிங்கம், திருச் செந்தூரன், காரை. சுந்தரம்பிள்ளை, தாஸிஸியஸ், திருச்செல்வம், கவிஞர் கந்தவனம் ஆகியோர் . முதற் g5L606JuJITE 9 uur Postgraduate level இல் நாடகம் பற்றிய வரன்முறையான கல்வி இடம்பெற்றது. நாடகத் தினுடைய நடிப்பு அம்சம், நாடகத் தயாரிப்பு அம்சம் இவை பற்றி யெல்லாம் படிப்பித்தது இலங்கையின் மிகப் பெரிய சிங்கள நாடகத்துறைப் பேராசிரியர்கள், கலைஞர்கள், விற்பன்னர்கள். மேக்கப் படிப்பித்தது, தியசேன. நடிப்புப் படிப்பித்தது ஹென்றி ஜெயசேன, காமினி பொன்சேகா. இசை படிப்பித்தது 2ILDUG256). History of drama – western drama and Indian drama
இவற்றை நான் படிப்பித்தேன். எனக்கொரு சந்தோசம், இலங்கைத் தமிழ் நாடக வரலாறு பற்றிப் படிப் பிக் கும் படி பேராசிரியர் வித் தியானந் தனிடம் நான் கேட்டபோது அவர் உடனே வந்து செய்தார். நான் தமிழ் நாடகம் பற்றி சிங்கள மாணவர்களுக்கு விரிவுரை செய்தேன். ஏ.ஜே. குணவர்த்தன சிங்கள நாடகங்கள் பற்றித் தமிழ் மாணவர்களுக்குச் செய்தார்.
அடுத்தகட்டம் 1984இல் நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறைக்குத் தலைவராக ஆனபோது, நுண்கலை இரசனையும் வரலாறும் , நாடகம் ஆகிய பாடங்களைத் தொடங் கினோம். இரண்டாவது கட்டம் யாழ்ப்பாணப் பல் கலைக் கழகத்தில் முதற் தடவையாக Theatre as an undergraduate course $g g5ưốlgệ மொழியில் செய்தோம். அப்போது சிங்களத்துக்குக் கூடச் செய்யப் படவில்லை. 98,99வரை சிங்களத் துக்குச் செய்யப்படவில்லை. பின்பு எங்களுடைய பாடத்திட்டங்களை எடுத்துத்தான் அவர்கள் செய்தார்கள். இந்தியாவில் எம்.ஏ.க்கு இருக்கிறதே g565) First degree is(5 S6)606).
1978இல் இந்த நாடகக் கற் கைநெறியை நாங்கள் முடித்தவுடன் , தம் மஜா கொட
நாடகத்தை க.பொ.த.உயர்தரத்துக்கு ஒரு பாடமாக்கினார். அதற்குக் கேள்விகள் தயாரிக்க வேண்டி யிருந்தது. அதில் மூன்று கேள்விப் பேப்பர்கள் அடங்கும். ஒன்று Theory P6ði O History LDb og Practical. அதனைக் குழந்தை சண்முக லிங்கமும் நானும் செய்தோம்.
22
ஈனம் - ஜூலை 2004

குழநி தை சணி மு கலிங் கம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று நாட்டிய அரங்கக் கல்லூரியைத் தொடங் கினார். அதன் மூலமாக அங்கு ஏற்கனவே நாடகங்கள் செய்து கொண்டிருந்த ஏ.ரி.பொன்னுத்துரை, அரசையா போன்றவர் களையும் சேர்த்துக்கொண்டார். அங்குள்ள
பாடசாலைகளிலும் சிறிய சிறிய
நாடகங்களைச் செய்தார். 1979இல் தான் முதலில் உயர்தர வகுப்புச் சோதனைக்கு நாடகம் ஒரு பாடமாக வந்தது. அப்போது மூன்றே மூன்று பேர்தான் அந்தச் சோதனையை எடுத்தார்கள். ஆனால் இன்று 1500பேர்வரை நாடகத்தை உயர் தரத்துக்குப் பாடமாக எடுக்கும் நிலை வளர்ந்துள்ளது. இதற்கென்றே விசேடமான ஒரு Intake பல்கலைக் கழகத்தில் வருமளவுக்கு அது வளர்ந்துள்ளது.
உயர்வகுப்புக்குப் படிப்பித்ததால் அது பள்ளிக் கூடங்களுக்குப் பரவியது. அதிஷ்டவசமாக என்னிடம்
தமிழ் நாடகம் இறுதியாண்டில்
விசேடதுறையில் படித்த பலர் அந்தப் பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கி னாார்கள். அவர்களில் முக்கிய மானவர்கள் திருமதி சிவலிங்கராஜா, அம்மன்கிளி ஆகியோர். அதனால் 69 (5 Educational theatre 66ip வரத்தொடங்கியது. 84இல் நாங்கள் Undergraduate course (og5 m libi கினோம். அதன்பிறகு நாடகம் சிறப்பு துறையத் தொடங்கினோம். அதனால் மாணவர்கள் நாடகம் சிறப்புத்துறை செய்து, நாடக விரிவுரை யாளர்களாக, N.G.O. களில் மிக முக்கியமான பணிகளைச் செய்கின்ற வர்களாக மாறியிருக்கின்றார்கள். இது
விடயத்தில் சண்முகலிங்கத்திற்குப் பெரும் பங்குண்டு. சண்முகலிங்கம் தனது சொந்த நட்டத்திற்குள்ளும் இந்த வேலையைச் செய்தார். நாடகத்தின் பால் அவருக் கிருந்த ஆர்வம் காரணமாக இதனைச் செய்தார். சண்முகலிங்கம் இல்லாதிருந்தால் நான் இதனைச் செய்திருக்க முடியாது. அதனை நான் ஒத்துக் கொள்ள வேண்டும். இதனைவிட சண்முகலிங் கத்திற்கு ஒரு தனிப்பெயர் உண்டு. அது பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பிறகு இலங்கையின் மிக முக்கியமான தமிழ் நாடக எழுத்தாளர், தமிழ் நாடகத் தயாரிப்பாளர் என்பது. எனது அபிப்பிராயத்தின்படி இலங்கையின் ஒட்டுமொத்தமான நாடக வரலாற்றில் சண்முகலிங்கத்திற்கு ஒரு இடம் உண்டு. நாடகாசிரியர், நாடகங்களை நெறிப்படுத்தியவர் என்ற வகையில் மட்டுமல்லாது நாடகக் கற்கை நெறியை Organize செய்ய உதவியவர் என்ற வகையிலும் அவருக்கொரு இடமுண்டு.
எனக்கு ஒரு திருப்தியென்ன வென்றால், எங்களுடைய ஆசிரியர்கள் விட்ட இடத்திலிருந்து அதனை நாங்கள் எடுத்துக் கல்வித்துறையாக்கியது. கல்வித் துறையாக்குவதில் ஒரு சிக்க லிருக்கிறது. என்னவென்றால் , அதுவொரு பாடமாகிவிடும். அது கலைத்துறையாக இல்லாது போகலாம். அந்த ஆபத்து இருக்கிறது. இருந்தாலும், ஒரு மேல்மட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் நாடகத்துறை பயிற்றுவதாக ஒரு பெயர் வந்துவிட்டது.
தி.ஞா. : நாடகத்துறை சம்பந்தமான உங்களது ஏனைய தொழிற்பாடுகள் யாவை?
தொடரும்
தானம் பொன் மலர்
23

Page 14
தமிழில் முதலில் சிறுகதை எழுதியவர்
ge t coĩatấũc >457ấfo)(ãớafizoerturo
- கலாநிதி பேராயர் எஸ். ஜெயநேசன் தமிழிலே சிறுகதை தோன்றியது எப்போது என்பது இலக்கியவாதிகளிடையே இன்றும் முடியாத சண்டையாகும். சிறுகதை என்பது தமிழுக்குப் புதியதல்ல அது தமிழில் சங்ககாலம் தொட்டே இருந்து வருகின்றது என்றும் சிறுகதை என்ற பெயர் மட்டுமே இக்காலத்திலே எழுந்தது என்றும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்காலத்தின் நடைமுறையில் வழங்கும் சிறுகதை நவீன இலக்கிய வடிவம் என்றும் இக்கலையுரு இருபதாம் நூற்றாண்டின் உற்பத்தியேயாகும் என்றும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாதவஐயர், வ. வே. சு. ஐயர், சுப்பிரமணியபாரதி முதலியோர் மேனாட்டுப் பாணியிலே சிறுகதைகள் எழுதினார்கள். இவர்களின கதைகள் பெரும்பாலும் சமூகச் சீர்கேடுகளையும் பழக்க வழக்கங்களையும் சித்திரிப்பனவாக அமைந்தன. எனவே 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேதான் தமிழிற் சிறுகதை, இலக்கியம் தோன்றியது என்று நம்பப்படுகின்றது. வ. வே. சு. ஐயரின் “மங்கையர்கரசியின் காதல் முதலிய கதைகள்’ என்ற தொகுப்பு பிற்கால எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது என்று கொள்ளப்படுகின்றது.
ஆனால் 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்த ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை 'நன்னெறிக் கதாசங்கிரகம் என்றவொரு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். இந்த நூலினுடைய முதலாவது பதிப்பு கி. பி. 1869ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்பொழுது அமெரிக்கன் மிஷன் அச்சகம் Strong and Asbury என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்தது. Strong and Asbury தாபனத்தார் முதலாவது பதிப்பினை வெளியிட்டனர். இதனுடைய இரண்டாவது பதிப்பு 1893ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது அப்பொழுது அமெரிக்கன் இலங்கை மிஷன் அச்சகத்தை மீண்டும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. இரண்டாவது பதிப்பின் பிரதி ஒன்று இப்பொழுது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கின்றது. இதனைச் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் கண்டேன். 1/8 அளவினதாய் 324 பக்கங்களைக் கொண்டதாக நன்னெறி கதாசங்கிரகத்தின் இரண்டாம் பதிப்பு விளங்குகின்றது. இதன் எழுத்துக்கள் 8 புள்ளி அளவினதாய் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஏறத்தாள 8 பக்கங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. இதன் ஆசிரியர், ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை 1820 ஆம் ஆண்டு நவாலியில் பிறந்தவர். உடுவில் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, டிறிபேக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தமிழ் கற்பித்தவர். உதயதாரகைப்பத்திரிகைக்கு ஏறத்தாழ 40 வருடங்கள் ஆசிரியராக இருந்தவர். இலக்கிய வரலாறு, சரித்திரம், கவிதை, வானசாஸ்திரம் முதலியவற்றில் அரிய நூல்களை எழுதியவர். இவருடைய மிகச் சிறந்த நூல் 'பாவலர் சரித்திர தீபகம்”. 1895 ஆம் ஆண்டு ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை இவ்வுலக வாழ்வை நீத்தார்.
24 ஞானம் - ஜூலை 2004

நன்னெறி கதாசங்கிரகத்தின் முதலாவது பதிப்பின் முன்னுரையில் (பாயிரம்) இக்கதைகள் எழுதப்பட்டதன் நோக்கத்தை ஆசிரியர் விளக்கிக் கூறுகின்றார். "தமிழில் இதுவரை காலமும் எழுதப்பட்டும், வாசிக்கப்பட்டும் இருக்கின்ற கதைகள் சாதாரணமாய் சிற்றின்ப துராசைகளை எழுப்பி வாலிபர் மனங்களைக் கறைப்படுத்தும் காமரசம் வாய்ந்தவையன்றி, ஞானரசம் சார்ந்தவையல்ல". "கதைகளில் ஆயத்தமானவற்றில் சிலவற்றை நன்னெறி கதாமாலை என்ற முகவுரையுடன் உதயதாரகைப்பத்திரிகையில் தோற்றச் செய்து மறுபடி பக்தி போதனைக்குரிய வேறு சிலவற்றையும் எழுதி வந்தோம்’ "இக்கதைகளை இங்கிலீசில் இருந்து மொழிபெயர்த்து வேட்டை வாளியானது புழுக்களின் உருவைப் பேதப்படுத்தினாலொப்ப எமதிஷ்டப் பிரகாரம் கூட்டிக் குறைத்துப் பேதப்படுத்தி வேற்றுருவாக்கிக் கொண்டோம். எம் ஊர்ப் பெண்கள் ஆதியாய் பழமொழிப் பிரீதியர் ஆதலால் அவற்றில் சற்றும் ஒறுப்பின்றி தாராளமாகச் சேர்த்துக் கொண்டோம்”
இரண்டாம் பதிப்பு 1893 - இல் வெளிவந்தது. இதன் முகவுரையினால் முதலாவது பதிப்பிற்குப் பெரும் வரவேற்பு இருந்தது என்பது தெரிகின்றது. இதன் முகவுரையில் (பாயிரம்) ஆசிரியர் "நவமான சிலகதைகளை கூட்ட யோசித்தும் புத்தகம் பெருக்கும் காலம் எடுக்கும் என்ற அச்சத்தால் அந்த எண்ணத்தை விடுத்து உள்ளவற்றையே திருத்தி, காடினியசந்திகளைத் தவிர்த்து அரும்பதத் தொடர்களை மாற்றி யாவரும் விளங்க இலகுவாக்கினோம்” என்று குறிப்பிட்டுள்ளார். நன்னெறி கதாசங்கிரகத்தில் 40 கதைகள் இருக்கின்றன. பிள்ளைகளுக்கான சிறுகதைகள் எழுதுகின்றபோது இங்கிலாந்தின் ஆசிரியர்கள் அந்தக் கதை குறிக்கும் படிப்பினை, பயன் முதலியவற்றையும் தெளிவாகக் கூறுவார்கள். கதையின் முடிவில் படிப்பினை (Moral) என்று ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு விடுவார்கள். ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும் அது குறிக்கும் செம்பொருளையும், ஒவ்வொரு கதையின் முடிவிலும் அவை குறிக்கும் போதனையையும் தெளிவாகக் கூறியுள்ளார். ஆசிரியர் குறிக்கும் செம்பொருளும் போதனைகளும் வருமாறு:
1. சிதட கண்ட பீவரன் கதை
செம்பொருள் : இணக்கம் வாழ்வு தரும் Union is Strength படிப்பினை இதனால் இணக்கம் வாழ்வு தரும் என்று உணர்க.
2. வீம்பாகரன் கதை
செம்பொருள் : அகங்காரம் அருமை குலைக்கும் Prioe before fall படிப்பினை இதனால் தத்தம் ஒழுக்கமும் தகுதியும் நீங்கி வீம்படித்து தம்மினத்தை இகழ்ந்து மேலினம் நாடி நடப்பர். (அன்னநடை நடக்கப்போய், காகம் தன் நடையும் கெட்டாற் போல) உள்ள கற்கையும் சலாக்கியமும் அழிந்து போவாரென்றுணர்க.
ஞானம் பொன் மலர்

Page 15
3.
4.
மூடசிகாமணிக் கதை
செம்பொருள் வீண் எண்ணம் சிரிப்புக்கிடம் Selling the skin before catching bear படிப்பினை ; இதனால் மனோரதம் ஏறி ஆகாயக்கோட்டை கட்டுவார் பாடு சிரிப்புக்கிடமாம் என்றுணர்க.
பேரவலம்பிரிவுக் கதை செம்பொருள் அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு. As the fool thinks the bell clinks படிப்பினை இதனால் யோசனையும் பகுத்தறிவும் இன்றி நடப்பார்க்கு இலச்சையும் திகிலும் நேரிடும் என்றுணர்க.
. “பொன்னைந்த பெருமான் கதை
செம்பொருள் வறுமை நிலை நில்லாது Today to me tomorrow it belongs to you. படிப்பினை இதனால் வறுமை நிலை நில்லாது என்றுணர்க.
வினையளந்த பெருமான் கதை செம்பொருள் : பொறாமை நட்டம் விளைவிக்கும் Shame to him who evil thinks படிப்பினை இதனால் அயலார் வாழப் பெறாமல் அவர் வாழ்வில் பொறாமை கொள்வார்க்கு பொருள் நட்டமொன்றோ உயிர் நட்டமும் வரும் என்று உணர்க.
கண்ட துண்டங் கண்ட கதை செம்பொருள் தீமைக்கு நன்மை செய்ய வேண்டும். Render good for evil படிப்பினை தீமை செய்தார்க்கும் செய்ய நினைத்தார்க்கும் நன்மை நினைப்பதும் செய்வதுமே பதில் உபகாரம் என்று உணர்க.
உபய சுந்தரி கதை
செம்பொருள் விவேகம் தீமை தடுக்கும். Good counsel is abode all price படிப்பினை ; இதனால் விவேகம் எந்தப் பெரும் காரியங்களையும் சரிக்கட்டி நடத்தும் என்றுணர்க.
37. தனுசரார்வன் கதை
செம்பொருள் : பிள்ளைகளின் நன்றியீனம் My Son is my son till he has got him a wife படிப்பினை ; இதனால் பிள்ளைகள் செய்நன்றி துரோகிகளாய் பெற்றோரை அன்பின்றி நடத்துவார்கள் என்று உணர்க.
26
ஞானம் - ஜூலை 2004

38. இலஞ்ச பூபதி கதை
செம்பொருள் : வழக்காடல் இருகட்சியாருக்கும் நஷ்டம் Agree for the law is cost படிப்பினை : இதனால் பரிதானம் நியாயத்தைப் புரட்டும் என்றும் வழக்கு நட்டம் வகுலிக்கும் என்று உணர்க.
39. சத்திய மான்மியன் கதை
செம்பொருள் பொய்மை கனமுடையது Honesty is the best policy படிப்பினை இதனால் பொய் நட்டம் வகுலிக்கும் என்றுணர்க.
40. புத்திர சிகாமணி கதை
செம்பொருள் இல்லறம் அறங்களைக் கொண்டது. Married is honourable but house keeping is a shrew படிப்பினை ; இதனால் நல்விவாகம் கனம் தரும் என்றுணர்க. இவ்வாறு ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நாற்பது கதைகளும் ஒவ்வொரு பாடத்தைப் போதிக்கின்றன என்று தெளிவுபடுத்தியுள்ளார். சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிலே பூரணமான வடிவு பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் இவர் தமது சிறுகதைகளை எழுதினர். பிற்காலத்தில் சிறுகதைகள் எழுதிய புதுமைப்பித்தன், அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றாருடைய ஆக்கங்களுடன் இந்த நாற்பது கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றில் சிறுகதைகளுக்குரிய பண்புகள் முயற்கொம்பாகவேயுள்ளன என்பது தெளிவு.
ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளையின் கதைகளில் பஞ்சதந்திரக் கதைகளின் சாயல் தென்படுகின்றது. ஒரு கதைக்குள்ளேயே பல கதைகள் வருகின்றன. மிருகங்கள், பட்சிகள் பேசுவது போல தென்படுகின்றன. இதனை ஆசிரியர் தமது பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“சிறுவிதையிலிருந்து கப்பு விட்டு கிளைத்தெழும்பும் பெருவிருட்சங்களைப் போல பொதுப்பட சிறிய கதைத் தொடக்கத்திலிருந்து பெரிய கதைகளை வருவித்துக் கொண்டோம்.”
ஆசிரியர் பல போதனைகளை வழங்க வேண்டும் என்ற ஆசையினால் தாம் பல இடங்களில் வாசித்து அறிந்த கதைகளை உள்ளடக்கியிருக்கின்றார். 29வது கதையாகிய சதுமூடர் கதை பல சிறிய சிறிய கதைகளை உள்ளடக்கியது. இதனால் அக்கதையின் இறுதியில் "இக்கதைகளால் மூடன் காரியம் எப்பொழுதும் நகைப்பிற் இடமாம்” என்று உணர்க என்று எழுதினார். சில கதைகளில் பறவைகளே கதாபத்திரங்களாக இருக்கின்றன இதற்கு 35வது கதையாகிய 'அனுசந்தான புரவி' சிறந்த உதாரணமாகும். பல கதைகள் ஐரோப்பிய அராபிய கதைகளின் தழுவல்களாக இருக்கின்றன. இதனால் ஆசிரியருடைய கற்பனை வளத்தை மதிப்பிட முடியாது இருக்கின்றது. உதாரணமாக பொன்னைந்த பெருமான் கதை, வினையளந்த பெருமான் கதை, கண்ட துண்டங் கண்ட கதை, உபாய சுந்தரி கதை, மெளட்டிய கதுமன் கதை, மாவுத்தர் மூவர்
ஞானம் பொன மலர் 27

Page 16
தலையிழந்த கதை, எண்ணெய்ச் சாடி பேசிய கதை, என்பன “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” என்ற அராபியக் கதையின் தழுவல் ஆகும். அக்கதையிலே வரும் மார்ஜியானா உபாய சுந்தரியாகவும் அலிபாபா பொன்னளந்த பெருமான் ஆகவும் மாற்றப்படுகின்றனர். ஏழு கதைகளுக்கு "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” கரு வழங்குகின்றது.
நாற்பதாவது கதையாகிய புத்திர சிகாமணி கதைதான் ஒரளவு கற்பனைத் திறனும் மண்வாசனையும் கட்டுக்கோப்பும் உடையதாகக் காணப்படுகின்றது.
ஆசிரியருடைய நடை பெரும்பாலும் வினாதரச மஞ்சரி எழுதிய வீராசாமிச் செட்டியாரின் நடையை ஒத்திருக்கின்றது. நீண்ட வசனங்களில் பழமொழிகளைப் பெய்து மக்கள் சுவைத்துப் படிக்குமாறு எழுதியவர் வீராசாமிச் செட்டியார். இந்த நடையையே ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை அவர்களும் கையாண்டுள்ளனர். பழமொழிகள் அக்காலத்தில் பெண்கள் உட்பட எல்லாருக்கும் விருப்பமாக இருந்தது என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். புத்திர சிகாமணி என்ற கதையிலே தகப்பன், திருமணம் செய்ய மறுக்கும் மகனுக்கு பின்வருமாறு ஆலோசனை கூறுகின்றார். இதனை ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை கூறுகின்ற முறையில் சொற்சுவையும் பொருட்சுவையும் காணப்படுகின்றன.
கேள், என் மகனே! சற்குணஸ்திரியா? ஆ! மாணிக்கம், முத்து முதலான நவரத்தினங்களிலும் மேலான விலை பெற்றவள். அவள்,
குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகுமழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாமென்ற நடுவு நிலைமையாற்
கல்வியழகேயழகு.”
என்னும் வாக்கியப்படி கல்வி கற்றவளாய், அக்கல்விச் சிறப்பாலே விசேஷங்
கொண்டவளாவாள். “குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்” என்ற ஆன்றோர் வாக்குப்படி தன் நாயகனை அருமைப் பெருமையாய்ப் பேணித் தான் தொழுந்தேவனுக்கு இரண்டாந் தேவன் தன் கணவன் என்றாற் போற்பாவனை பண்ணி நடப்பாள். தன் கணவன் தன் அன்பிற்கிலக்கான சுந்தரரூபியல்லாத போதினும் அவனை அதி சுந்தரனாய் எண்ணிப் பாவிப்பான். அவன் விடா நோயனாய்த் துர்ப்பலப்பட்டிருந்த போதினுஞ் சுகதேகி போல அவனைச் சீராட்டிப், பாராட்டிப் பராமரித்து நடத்துவாள். அவன் நாலெழுத்துக் கூட்டிவாசிக்கத் தெரியாத திருமூடனாய்க் கற்றார் சபையில் நிற்க அஞ்சுங் கோழையனாயினும்,
"கவையாகிக் கம்பாகிக் காட்டகத்தே நிற்கு மவையல்ல நல்லமரம் - சபையகத்து நீட்டோலை வாசியா நின்றான்” என்னும் முதுமொழி வாக்கிற்கு மேற்கோள் போல் பாலனாயினுந்தன் பார்வைக்கோ சகல கலைக்கியான் சாகரக் கரை கடந்த பண்டிதனைப் போல அவனை நினைந்து பூசிப்பாள். அவள் குடியிருக்க வீடு வாசலில்லாத வெறுவிலியாயினும், கல் என்றாலும்
28 ஞானம் - ஜூலை 2004

கணவன், புல் என்றாலும் புருஷன்’ என்று நினைந்து நிதித்தலைவனாகிய குபேரராசனைப் போல அவனை எண்ணி வருவாள். அவன் வயோதிபனாயிருந்த போதும் அவனை வாலிபனாய் மதித்து வருவாள். கற்புக்கிருப்பிடமுஞ் சற்குணத்துக்கு உறை விடமுமாகிய நற்பெண்டானவள் தன் கணவனுக்குத் தாசி போற் பணிவிடை செய்து, வேசி போல் அவனைப் பாராட்டி மந்திரிபோல் அவனுக்கு நல்ல உணவு ஊட்டுவாள். ஆர்னல்டின் நடை வீராசாமி செட்டியாரின் நடையை பெருமளவில் ஒத்திருப்பதைக் காணலாம்.
"அப்படியிருக்கையில் மார்கழி மாதத்திற் சம்புகேதரர் சந்நிதியில் மேற்படி தாசிக்கும் திருவெம்பாவை பாடும் முறை வந்த பொழுது “உங்கையிற் பிள்ளை” என்னும் பாட்டு பாடுகையில் அதில் “எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேர்ந்த” என்ற தொடரை அவள் வாயினாற் சொல்லித் தலைகுனிந்து கொண்டதைப் பார்த்து அவளுடனே கூடவிருந்த மற்றத் தாசிகளெல்லாம் புன்சிரிப்புச் சிரித்து தங்களுக்குள்ளே "இவள் சிவன்கோவில் தாசியாய் இருந்தும் பெருமாள் கோவிற் சுயம்பாகியுடனே சம்பந்தப்படுகிறாளே இஃதென்? படிக்கிறது திருவாசகம் இடிக்கிறது சிவன்கோவில் என்பதாக வாயினாற் பேசுகிறதொன்று நடக்கிறதொன்றாயிருக்கிறதே" என்று அவளைப் பரிகாசம் பண்ணினார்கள்” - வினோதமஞ்சரி.
ஆர்னல்டின் நடை பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குரியது. ஆனால் அவரை ་་ சிறுகதை எழுத்தாளன் என்று குறிப்பிடலாமா என்பது கேள்விக்குரிய விடயம். அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்கள் சிதகண்டீவரன், வீம்பாகரன், சத்தியமான்மியன், புண்ணிய கோபன் முதலியன. சம்பவங்களும் வாழ்க்கையில் காணப்படாத அதீத கற்பனையும் புனைவுகளும் கொண்டவை. ஆனால் ஆர்னல்ட் சதாசிவம் பிள்ளைக்குத் தமிழ் சிறுகதை வரலாற்றில் ஓர் இடமுண்டு என்பதனை எவரும் மறுக்க முடியாது.
நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் கந்தசாமிப்பிள்ளை, பிரநாயகம்பிள்ளை, முருகதாசர், திரேசா மருதநாயகம் போன்ற பாத்திரங்களையும், யதார்த்த நிலைபரங்களையும் காண முடியாவிட்டாலும் சிறுகதையின் அம்சங்கள் சில இவரின் கதைகளிலும் உண்டு என்பதனையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
சிறுகதையின் தொடக்கத்தைப் பற்றிக் கூறும் திருமதி மீனாட்சி முருகரத்தினம் (புதுமைப் பித்தன் சிறுகதைக்கலை) “முன்னர் வழங்கிய கதைகளைத் தழுவிக் கூட்டியும் குறைத்தும் புதியதாகக் கதைகளை புனைவது அன்று தொட்டே இருந்து வரும் மரபு. பெரும்பாலும் பண்டைக் காவியங்கள் இவ்வாறு தோன்றினவே” என்று குறிப்பிடுகின்றார்.
ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளையும் தமது காலத்தின் தேவையை நிவிர்த்தி செய்ய இவ்வாறு எழுதினார். அவரைத் தமிழ் சிறுகதையின் தந்தை என்று கூறமுடியா விட்டாலும், முதல் முயற்சியாளர்களில் ஒருவர் என்று குறிப்பிடலாம்.
ஞானம் பொன் மலர் 29

Page 17
குட்பைகள் குட்பைகள் குப்பைகள்
இரு மாதங்களின் பின் கேற்றைத் திறக்கிறேன் வளவை நிறைத்துக்குப்பைகள் கிடந்தன குப்பைச் சருகுகள் இசைப்பின்னணியில் அவற்றின் மேல்நடந்து வாசலை அடைகிறேன் ਥਣੀ5,
ਠਣੀ5,
5,
5,
வாசலில் நின்று வளவை ஒரு தரம் நோட்டம் விடுகிறேன். பார்க்கும் இடமெல்லாம் gol 6OLeón
குப்பைகள்
குப்பைகள்
மாமரத்தின் கீழ்மாவிலைச் சருகுகள் வேம்பு மரத்தின் கீழ் வேப்பிலைச் சருகுகள் கொய்யா மரத்தின் கீழ் அவ்விலைச் சருகுகள் தென்னைமரத்தின் கீழ் தென்னோலைச் சருகுகள் சருகுகள்
சருகுகள்
குட்பைகள்
குட்பைகள்
வீட்டு வாசல்முன்செய்த பூந்தோட்டமும் குப்பைநிறைந்து அழகிழந்திருந்தது. மல்லிகை இலைகளும் பூக்களும் மரவடி நிறைத்து அதனுடைய அழகைக் குறைத்தன. றோசாப்பூக்கள் உதிர்ந்து கிடந்தன
30
ஞானம் - ஜூலை 2004

வாழை இலைகள் வரண்டு கிடந்தன புற்களே வளர்ந்து நிறைந்து கிடந்தன. தளிராய் அழகைத் தந்து மனதைத் தடவிய மாவிலைகள் சருகாய்க் கிடந்தன குளுகுளு பச்சையாய்க் குதூகலம் ஊட்டிய கொய்யா இலைகள் வரண்டு கிடந்தன.
தென்னைப் பச்சோலைகள் நிறம் மாறிக் கிடந்தன பூத்து உளம்நிறைத்தமல்லிகை மலர்களும் புத்துனர்வுட்டிய றோசா மலர்களும் வாடிக் காய்ந்து வரண்டு கிடந்தன.
வாசலில் நின்ற நான்மகனிடம் கூறினேன் குப்பைகள்
குட்பைகள்
குப்பைகள்
geoustón வளவை நிறைத்துக்குப்பைகள் குப்பைகள்
மறுநாள், நானும் மனைவியும் மகனும் குப்பைகள் அகற்றத் தொடங்கினோம் நாள் முழுவதும் நல்ல வேலை. முறிந்த கிளைகளை வெட்டினோம் - பின்னர் வரண்ட இலைகளை வாருகல் கொண்டு கூட்டிக் குவித்தோம் - கைவாள் ஒன்றினால் வளர்ந்த புற்களை வெட்டிச் சிரைத்தோம். குப்பைகள் அனைத்தையும் கூட்டிக் குவித்து மடு பெரிதாக வெட்டி, அதனுள் அனைத்தையும் போட்டு மூடினோம். அதன் மேல் மனைவி அழகான செடி ஒன்று நட்டாள்
குப்பையின் மேலே அச்சிறு செடியோ குதுகலமாக நிமிர்ந்துநின்றது. அச்சிறு செடியின் அழகைப்பார்த்து என்னுடைய மகனோ இப்படிக் கூறினான்.
“குப்பை என்றெதனையும் கூறுதல் தவறு குப்பையின் பலமெலாம் பெற்று இச்சிறு செடி மாபெரும் மரமாய் மாறும் ஒருநாள்”
ஞானம் பொன் மலர் 31

Page 18
6airavapur இலக்கியக் கோட்டrடுகள்
●
G கவிஞர், கல்வயல் வே. குமாரசாமி)
பDக்கள் வாழ்வியல் நெருக்கடிகளிலிருந்தேதான் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியத்தின் முதல் நோக்கம் அழகியல் இரசனையாக இருந்தாலும் அதன் இறுதி நோக்கம் மனித விடுதலையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும். ஆனால் ஒரு கூற்றோ படைப்போ (Uttevance or Work) அது எழுகின்ற சமூக, அரசியல், சமயம் முதலிய பண்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்பவே பொருள்தரும் இயல்பினைக் கொண்டிருக்கும். அது பிறிதோர் சூழலிலே அதே பொருளைத்தான் தரும் என்று கூறமுடியாது. அது அதிலிருந்தும் மாறிய, மாற்றமடைந்த பிறிதொரு பொருளையும் தரும் தன்மையுடையது. பல்துறைச் சூழலில் எழும் ஒர் ஆக்கம் அல்லது அதன் பொருள் அச்சூழலின் பிற கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே ஒன்றை ஒன்று அவாவி நிற்பனவே பண்பாட்டுக் கூறுகள் (Dialogism). படைப்புச் சூழலின் முழுமையை எந்த ஒருகூறும் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது. ஒரு கூறு முழுமையின் ஒரு பகுதியே. எனவே எந்த ஒரு கூறு பற்றிய கோட்பாடும் பிற கோட்பாடுகளின் கூறுகளையும் தழுவியே செல்லும். இந்நிலையில் ஒரு கோட்பாட்டைப் பற்றிச் சிந்திக்கின்ற போதே பிற கோட்பாடுகளும் இயல்பாகவே வந்து தலையிடும். எனவே கோட்பாடுகளுக்கு ஆதியோ அந்தமோ இல்லை. தொடர்ச்சியே அதன் நிலைபெற்ற பண்பாகிறது.
மானுடவினை நிகழ்ச்சியே (Chrono tope) இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாகிறது. உலக இயற்கை நிகழ்ச்சி இலக்கிய நிகழ்ச்சியாக உருவெடுக்கிறது. அது பின் இயற்கை நிகழ்ச்சியோடு தொடர்பு கொள்கிறது. ஆனால் இவை ஒரே தன்மை உடையனவாக இருப்பதில்லை. தோற்றத்துக்கு ஆதாரமான இயற்கை நிகழ்ச்சி உலகம், மானுட வாழ்க்கை முறைகள், அறிவுத்துறைகள், படைப்பாளி முதலிய பல கூறுகளை உடையது போல் படைப்புடன் தொடர்புகொள்ளும் இயற்கை நிகழ்ச்சியும் உலகம், மானுட வாழ்க்கை முறைகள், அறிவுத்துறைகள், வாசகன் முதலிய பல கூறுகளையும் கொண்டிருக்கும். இக்கூறுகள் காலதேச நடைமுறையால் வேறுபட்டன ஆதலின் படைப்பின் பொருண்மையும் வேறுபடும்.
இலக்கியக் கோட்பாடுகளைப் பொறுத்தமட்டில்கூட படைப்போன், படைப்பு, படிப்போன்’ஆகிய கூறுகளை ஆராயும்போது உலகம், மனிதர், மொழி முதலியவற்றைப் பற்றியெழுந்துள்ள, எழுகின்ற தத்துவக்கோட்பாடுகளும், உளவியல், சமயம், சமுதாயம், அரசியல் பற்றி எழுந்துள்ள - எழும் கோட்பாடுகளும் இலக்கியக் கோட் பாடுகளின்
32 குானம் - ஜூலை 2004

தோற்றப்பரிமாணத்தை மிகவும் ஆழமானதாகவும் சிக்கலுடைய தாகவும் மாற்றிவிட்டன. அவற்றின் ஆழமும், அகலமும் சிக்கலுமே மானுட அறிவுத் துறைகளின் வளர்ச்சியால் அழகியல், மெய்யியல், நவீனத்துவமென முருகியல் சார்ந்த 35(555G (Aesthetic Construct) gas உருப்பெற்றுள்ளது. இன்றைய இந்தக் கோட்பாடுகளை மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி நோக்கிவிடுவது எளிமைக்கும் தெளிவுக்கும் வழிவகுக்கக் கூடும். புதுத்திறனாய்வுக் கோட்பாடுகள் (New Criticism) (EssTurt Glasgir (Structuralist theroies) அமைப்பியல் மருவிய கோட்பாடுகள் (Post Structuralist Theories) gélu இந்த மூன்றுக்குள்ளேயும் கூட மாறியும், மருவியும் முரண்பட்டும் உடன்பட்டும் ஒலிக்கும் குரல்களையும் இனங்கான முடியும். இவை பற்றி இந்தச் சிறு கட்டுரைக்குள் முற்றுமுழுதாகக் கூறிவிட முடியாது என்பது மட்டும் உண்மை.
நவீனத்துவம், பின்
அமைப்பியல்
மேற்கூறியனவும், கூறப்படுவனவும் எல்லாம் இலக்கியக் கோட்பாடுகள் பற்றியன என்றால் “எது இலக்கியம்?” என்ற வினாவிற்கு ஆனவிடையைத் தேடுவதன் மூலம் கிடைக்கும் விடைகளை ஆராய்வதனால் சரியான தோர் தெளிவைப் பெறலாம். ஆனால் இந்தக் கேள்வி இங்கேதான் முதன் முதல் எழுகின்றது என்பதல்ல. எமக்கு முன்பே காலங்காலமாகப் பல அறிஞர்களாலும் எழுப்பப்பட்டு அதற்குரிய விடைகள் தரப்பட்டுச் குரியனவாகவும் உருவெடுத்துள்ளன.
பல்வேறு சர்ச்சைக்
அவற்றையெல்லாம் இங்கே வரலாற் றடைவில் நிரலிடும் நோக்கமில்லை. கடந்த இருபதாம் நூற் றாண்டிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இலக்கிய ஆய்வில் நாட்டமுள்ள அறிஞர்கள் இத்தகைய வினாக்களுக்கு எவ்வாறெல்லாம் அவை எந்த அளவிற்குப் பொருந்துகின்றன. எந்த அளவுக்குப் பொருந்தவில்லை என்பதை மட்டும் கோடிட்டுக் காட்டுவதே இங்கு எனது நோக்கமாகும். அதாவது அவற்றின் சாராம்சங்களைச் சுருக்கிக் கூறமுனைவதாகவே இது அமைகிறது.
இன்று இலக்கியக் கோட்பாடுகள் பல்துறைப் பன்முகத்தினவாக வளர்ந்து
மாறாக,
விடையளித்துள்ளனர்.
விட்டன. எனவே அவை பல தம்முள்ளே எதில் ஒன்றுபடுகின்றன என்றோ எதில் வேறுபடுகின்றன என்றோ திட்டவட்ட மாகக் கூறமுடியாது. சில வேளைகளிலே இவை எதைப்பற்றி விவாதிக்கின்றன அறிய இயலாதவாறு அமைந்துள்ளன. மேலும், இலக்கியம் தவிர்ந்த பிறதுறைப் பொருண்மைகளை அறிந்திராமையால் ஏற்படும் இருண்மை; சில குறிப்பிட்ட கோட்பாடுகளை மட்டும் தமக்கு உரியனவாகத் தம்வயப்படுத்திக் கொண்ட நிலையில் பிறிதொன்றை வரவேற்க விரும்பாத மனநிலை. இத்தகைய மனநிலையுடைய அறிஞர்கள் தற்கால இலக்கியப் படைப்புகளையும், இலக்கியக் கோட் பாடுகளையும் வரவேற்பதிலே காட்டும் தயக்கம் எதிர்ப்பாகவும் நிராகரிப்பாகவும் மாறி விடுகிறது. இவற்றையெல்லாம் கடந்து நின்று நிற்கும் ஒரு சில
என்றே
முன்னரே
ஞானம் பொன் மலர்
33

Page 19
முன்னோடித் திறனாய்வாளர், கோட் பாட்டாளர், ஆராய்ச்சியாளர் ஆகியோரிடம் மட்டும் விவாத நிலையிலும், சிற்சில தளங்களில் பயன்பாட்டு நிலையிலும் இவை தொழிற்பட்டு வருகின்றன.
அறிஞர்கள் கடந்த இருபதாம் நூற்றாண்டைக் கோட்பாட்டுக்காலம் (Age of Theories) என வரையறுக்கின்றனர். அரிஸ்ரோற்றல், ஆரஸ், கோலரிச்ஜ், ஆரனல்ற், தொல்காப்பியர், கூேடிமேந்திரர், ஆனந்தவர்த்தனர், தண்டி, பாமகர் போன்றோரின் குரல்கள் இதற்கு முந்திய நூற்றாண்டுகளில் கோட்பாட்டுக் குரல்களாக ஒலித்துக் கொண்டு இருந்தாலும் அவை தம் உடன் காலக் கோட்பாடுகளின் முழுமையைப் பிரதி பலிப்பனவாய் இருக்கவில்லை. அக் குரல்கள் ஒலிக்கும் சிற்சில தனிப்பட்ட நூல்களையே சுட்டி நின்றன. ஆனால் இருபதாம் நூற்றாண்டுக் கோட்பாடுகள் அறிவியல், அரசியல் - மக்கள் அரசுக்காலம் என்பனவற்றுக்கு உரியன ஆதலினாலே வலியன, எளியன என்ற வேறுபாடின்றி ஓங்கி ஒலிக்கும் உரிமை பெற்றன.
இருபதாம் நூற்றாண்டின் இருபது முப்பதுகளிலே தோன்றி நாற்பது ஐம்பதுகளிலே ஆட்சிப்பட்டுத் தான் ஏற்றுக்கொண்ட மாற்றங்களினாலே அறுபது எழுபதுகளிலே சிறுபான்மை வழக்காகித் தொடர்ந்து எண்பது தொண்ணுாறுகளில் பரிணமித்து நின்ற இலக்கியக் கோட் பாட்டரங்கையே புதுத்திறனாய்வுக் கோட்பாடெனச் சுட்டுகின்றனர். 1920, 30 களில் ரி. எஸ். எலியற். ஐ. ஏ. ரிச்சாட்ஸ் என்பவர்களால் பெரிய பிரித்தானியாவில்
வரலாறாகப்
34
உருவாக்கப்பெற்ற புதுத் திறனாய்வு அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து போனதும் வளம் பெற்று வலுவடைந்தது. அமெரிக்கப் புதுத்திறனாய்வாகவே மாற்றம் பெற்றது.
யோன்குரோ ரான்சும், கிளியந்த் புறூக்ஸ், அலன்ரேற், வாறன், விம்சத் ஆகியோர் புதுத்திறனாய்வுக் கோட் பாடுகள் பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர். அடுத்த கட்டத்தில் றொபேற் பென்வாறன், ஆர். பி. ப்பிளாக்மூர், றெனிவெஸ்லாக், கென்னத் பேர்க், ஆகியோர் முற்குறிப்பிட்டோரின் இக்கோட் பாடுகளிலே சிற்சில மாற்றங்களைக் கொண்டுவந்து செப்பனிட்டு அதன் தொடர்ச்சிக்குத் தொண்டாற்றினர்.
புதுத்திறனாய்வு அமெரிக்காவில் ஆரம்பித்தபோது தத்துவ உலகில் தோமஸ் ஹாப்ஸ், ஜான்லாக், டேவிட் ஹியூம் போன்ற அறிஞர்களின் அநுபவக் கோட்பாடு (Empiricsm) என்ற தத்துவக் கோட்பாடு காணப்பட்டது. மனிதன், புலன்கள் மூலம் உலகியலை அநுபவங் களாகப் பெற்று மனதில் பதிய வைத்து அவ்வுணர்வுகளைச் சிந்தித்துக் கருத்து களாக நிலைபெறச் செய்கிறான். அக்கருத்துகளை மொழிக் குறிகளினால் (Linguistic Signs) Spiösej, g505épstair. இதுவே அநுபவக்கோட்பாடு எனப்பட்டது. இதனை இலக்கியப் படைப்பு, மொழிக் கோட்பாடு, பொருண்மைக் கோட்பாடு, ee போன்ற
ஜான்எல்லிஸ்
கலை கலைக்காகவே” தலைப்புகளின் கீழும் ஆராய்ந்துள்ளனர். இக்கோட் பாடுகளின் அடியூற்றாக இலக்கிய மென்பது தன்னிறைவு பெற்ற தன்னியலான ஒர் உயிரியம்; செதுக்கிச்
ஞானம் - ஜூலை 2004

செப்பனிடப் பெற்ற மொழியின் ஓர் வடிவம் தன்வடிவ அமைதியாலேயே தன்பொருளை விளக்கும் தன்மையது, தன்பொருண்மைக்குப் பிறபுறத்து உறுப்புக்களாகிய படைப்போன், அவன் வாழ்க்கை வரலாறு அவன் காலச் சமுதாயச் சூழல், அதனை நுகரும் வாசகன் பெறும் பாதிப்பு போன்றவற்றின் துணையில்லா மலேயேதன்னை வாசகனுக்கு விளக்கும் ஓர் உயிரியப் பொருள் - என்பன (புதுத் திறனாய்வுக் கோட்பாட்டிக் கருத்தாக) அமைந்தன எனலாம்.
அதாவது இலக்கியமென்பது மானுட அநுபவத்தின் சாரம் மொழிவாயிலாக வெளிப்படும் ஒரு சொல்லோவியம்; இதனை அநுபவிக்க அதுவே போதும் அது ஒர் வரலாற்றுச் சாசனமன்று என்னும் கருத்தை வலியுறுத்தி, இலக்கியத்தைப்பற்றி ஆராய்வதைவிட இலக்கியத்தையே ஆராய்வதுதான் நமது தலையாய பணி என்றும் புதுத்திறனாய்வு உலகிற்கு உணர்த்தி நின்றது. (Literature is not Social Document, But Social Monument) அதேவேளை அறிவியல் அடிப்படையில், முற்சாய்வோ, பிற்சேர்க்கையோ இல்லாமல் அதனை ஆராய வேண்டுமென, இலக்கிய ஆய்வுக்கு அறிவியல் அடிப்படைகளைக் கொள்ள வேண்டும் என்று கூறியதுடன் செயற்படுத்தியும் காட்டியது புதுத் திறனாய்வுதான். இவ்விருகோணங்களும் இன்று சிறுபான்மையாகவேனும் செயற் பட்டு வருகின்றது என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். Վ.
இனி அமைப்பியல்வாதக் கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகளை நோக்கலாம். இருபதாம் நூற்றாண்டின்
அறுபது எழுபதுகளில் இலக்கியக் கோட்பாட்டு ஆய்வையும் இலக்கியத் திறனாய்வையும் பெரிதும் பாதித்தது அமைப்பியல் வாதக் கோட்பாடுகள் (Literery ஆகும். இவ்வாய்வு அணுகுமுறையின் தோற்றம் பிரான்சு நாட்டிற்கு உரியது. ஆயினும் இதன் பரவலான ஆட்சிக்கும் இலக்கிய ஆராய்ச்சி உலகப் புகழுக்கும் களமாக விளங்கியது அமெரிக்கா வேயாகும்.
Structuralism)
éests 6565 - 6ioimoiu (Claude Levi - Strauss) என்ற மானுடவியல் அறிஞரே
இவ்வணுகு முறையைப் us படுத்தினார். இவரைத் தொடர்ந்து ரொடொறொவ் (Todrow) ஜெனற்
(Genette) என்போர் இலக்கிய ஆய்வுக்குப் பயன்படுத்தினர்.
இந்த அமைப்பியல்வாத அணுகு முறையானது மொழியியல், உளவியல், மானுடவியல், சமூகவியல் எனப் பல்வேறு துறைகளிலே பரவலாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளமையை அவதானிக்கலாம்.
கல்வி இயலிலும் கூட இதன் செல்வாக்கு
வெளிப்படவே செய்தது.
மானுட வாழ்க்கை அமைப்பு அகம், புறம் எனஇருவகை அமைப்புகளைக் கொண்ட முழுப்பொருண்மையுடையது. புறவாழ்க்கை நிலைக்கு ஏற்றதோர் அகவாழ்க்கை உண்டு. புற அமைப்பினது செயற்பாடு அக அமைப்பின் வெளிப் பாடேயன்றி தன்னிச்சையாக இயங்க வல்லதன்று. அதேவேளை புற வெளிப் பாடும் அவ்வப்போது மாறி இயங்கும் காலதேச நடைமுறைகளுக்கு அமைய அக அமைப்பின் கூறுகளை மாற்றி அமைக்கும் இயல்பினது. மானுடத் துறைகள் அனைத்துமே அக அமைப்பு
குாணம் பொன் மலர்
35

Page 20
க்கும் புறவெளிப்பாட்டுக்கு மிடையேயான வேறுபாடுகளின் தொடர் வளர்ச்சியே வரலாறாகிறது. புராதன வரலாற்றை ஆராய்வதற்கும் சமகால நிகழ்ச்சியை ஆராய்வதற்கும் இத்தகைய அணுகுமுறை பயன்படுகிறதென்பதே அமைப்பியல் வாதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.
இக்கோட்பாட்டின் அடிப்படையில் மொழியமைப்பை ஆராய்ந்தவரான பேர்டினன்ற் B. சசூர் என்பார் கொள்கைப்படி மொழி இருவகை வழக்குகளைக் கொண்டது. ஒன்று அதன் அக அமைப்பாகிய இலக்கண வடிவம், மற்றையது அதன் புறவடிவாகிய தொழிற்படுவழக்கு. இதற்கு அடிப்படை இலக்கண வடிவமே. இந்த நுண் பொருளாக உள்ள இலக்கண வடிவத்தின் அடிப்படையிலேதான் செவிக்கும் புலனாகின்ற புறவடிவாகிய தொழிற்படு வழக்கு அமைகின்றது. ஆனால் இலக்கண வடிவத்தை நேரே ஆராய இயலாது. புற வடிவத்தை வைத்துக் கொண்டே அதனை ஆராயலாம். அகவடிவாகிய இலக்கணம் அம்மொழி பேசும் அனைத்து மக்களு க்கும் பொதுவானது. ஆனால் தரப்பட்ட புறவடிவமே தனிமனித வெளிப்பாடு. இது பல்வேறு தளங்களில் வெளிக் கொணரப்படலாம். ஆயினும் அகவடி வாகிய இலக்கண அமைப்பிலிருந்து வேறுபடாதது. இவ்வாறு விளக்கிய சசூர் அக வடிவாகிய இலக்கணத்தை "The Langue" என்றும் தொழிற்படு வழக்கை “The Parole” 6T6Tpò 960)gg55ri.
கண்ணுக்கும்
என்பதாகும். இக்கோட்பாட்டின் உள்பொருள் ஒர் அகவடிவைக் கொண்டு எண்ணிறந்த புறவடிவங்கள் தோன்றலாம் என்பதே. புறவடிவங்கள் எல்லாம் மொழி இனப்பொதுமையாகிய அகவடிவத்தின் தனிமனித வெளிப்பாடுகள்’ (Individual Expressions of The Langue Which is Common to all the Speakers of that Language.)
உளவியல் அறிஞரான சிக்மன்ற் பிராயட் மனித மனத்தின் இயல்புகளை ஆராய்ந்தவர். அவர் மனித மனம் அடிமணம் / ஆழ்மனம் (Unconscious அறிமனம் / ஆள்மனம் (Conscious) என்னும் இரண்டு வகை அமைப்புக்களை உடையது; அடிமனம் பாகம்பட்டு இனப் பொதுமையாக இயங்குவது என்றும், அடிமனம் சமுதாயத்தால் உருவாக்கப் பெற்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாகத் தொழிற் படுவதென்றும், அடிமனத்தின் பொதுப் பண்பிற்கேற்பவே அடிமணம் இயங்கும் அடிமனத்தை நேராக ஆராய இயலாது என்றும், அடிமனச் செயற்பாடுகளின் அடிப்படை யிலேயே இதனை ஆராயலாம் என்றும் பலமுறைகளில் நிறுவினார். இவ்வாறு துறையும் மனத்தின் அமைப்புக்களைப் பாகுபாடு செய்து மனிதன் உளவியல் செயற்பாடுகளை ஆராய்ந்தது.
பேரறிஞர் கார்ல்மாக்ஸ் மானுட வாழ்க்கையின் சமூகவியற் கூறுகளை
mind),
கற்காமலே
தன்மையது என்றும்,
உளவியல்
f6】 வ்வொ ம் ர்ை நன்கு ஆராய்ந்தவர். அதற்கான 9|岛 ಎi: o:ಆ: அடிப்படைகளைச் சரியாகக் கண் அகவடி T வவ வறு தாழிற்படு டறிந்தவர். அவரும்கூட இவ் வழக்கே அல்லாமல் பிறிதில்லை
36 ஞானம் - ஜூலை 2004

வாறானதோர் இரட்டை அமைப்பு நிலையூடாகவே சமுதாயத்தை ஆராய்ந்தார். அவர் வகுத்த கோட்பாடு மானுட சமுதாய வாழ்க்கையை gyuj60)unlu (basic structure) 6T6öTOth (ểL06u60)LnủLj (Super structure) 6T6öT[[]]ủ இரண்டாக நோக்கிற்று. மேலமைப்பிற்கு ஆதாரமாக நிற்பது அடியமைப்புத்தான். அரசியல், சமுதாய வழக்குகள், கலைகள், இலக்கியங்கள், பொருளாதார வாழ்க்கைப் படிநிலைகள், வர்க்க அமைப்புக்கள் ஆகிய சமூகவியற் கூறுகள் அனைத்துமே பொருளாதாரம் என்னும் அடியமைப்பை ஒட்டி நிகழும் புறவமைப்பு வெளிப் பாடுகளே. பொருளாதாரம் என்னும் அடியமைப்பில் காலதேச, நடைமுறை வேறுபாடுகளால் தோன்றும் மாறுதல்கள் ஏற்படும். மார்க்ஸ் அவர்கள் இந்த அடியமைப்பையே வாழ்வியல் பார்வை (Ideology) என்னும் சொல்லால் குறிப்பி டுகின்றார். சமுதாயத்தின் வாழ்வியல் பார்வை மாற மாற அச் சமுதாயத்தின் மேலமைப்புக்களாகிய அரசியலிலும், ஆட்சி அதிகார அமைப்பிலும், கலை இலக்கியங்களிலும், அம் மாற்றத்தின் சாயல் வெளிப்படும் என்பதே அவர் கருத்தாகும். மாற்றங்களின் தொடர் ச்சியே சமுதாய வரலாறாகிறது. ஒரு சமுதாயத்தின் அமைப்புக்களை ஆராய்ந்தால் அதன் அடிநாதமாக விளங்கும் வாழ்வியற் பார்வையைக் கண்டு உணர முடியுமென்றார்.
இனி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றி வளர்ந்த புதிய g60p8515ir Longol6shLisi) (Anthropology)
மொழியமைப்புக்
G5ITbp55ibe, plushifugi) (Life Sciences) துறையையும் தன் வளர்ச்சிக்கு சமூகவியல் துறையையும் (Sociology) பற்றுக்கோடாகக் கொண்டு எழுந்தது. பல்வேறு மானுடச் சமுதாயங்களின் புராதன மரபுகளை ஆராய்வதில் ஆர்வம் மிக்கவராக விளங்கிய கிளற்லி விஸ்றஸ் (Cluade - Levi-Strauss) 6Tsip Syngirsu நாட்டு மானுடவியலறிஞர் அமைப்பியலை
வேறோர் கோணத்தில் அணுகி ஆராய்ந்தார். மானுடச் சமுதாயங்கள் மேற்கொண்டொழுகிய பழக்க வழக்கங்கள் சடங்குகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், அவர்
களிடையே வழக்கிலிருந்த தொன்மங்கள் (Myths) என்பன பற்றி ஆராய முற்பட்ட வேளை தனக்குச் சிறிது முற்பட்ட காலத்தில் இத்துறையில் ஈடுபட்டிருந்த பேரறிஞர்களான ஜேம்ஸ்பிறேசர் (James Frager), LissioQ6, Ishoy sit (Miss Weston), 6516TTylfilffüLGlpTü (Vladamir propp) போன்றவர்கள் ஆராய்ந்து பல்வேறு மானுட இனங்களின் ஒழுகலாறுகளைத் திரட்டித் தொகுத்த தரவுகளை லிவி ஸ்ராஸ் சரியானதோர் அணுகு முறையை தேடிக் கொண்டிருந்தபோது சசூரின் கோட்பாடுகள் புதுவழியை அவருக்கு காட்டுவ தாயமைந்தன. எனவே அவர்தம் ஆய்வு அணுகு முறைக்கு அமைப்பியல்வாத 91sopes(p60p (Structuralist approach) எனப்பெயரிட்டார். இதிலிருந்து 960Loui)6]rth (Structuralism) என்னும் ஆய்வணுகுமுறை பல்துறை ஆய்வாளரிடையே பரவிப் பயன்படத்
துறையும் முக்கியத்துவம் வாய்ந்த தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் வொன்றாக விளங்குகின்றது. இது தன் அறுபது எழுபதுகளில் ஐரோப்பா
ஞானம் பொன் மலர் 37

Page 21
விலிருந்து அமெரிக்காவரை பரவிபரந்து ஆய்வு முறையாக அனைத்துத் துறைகளிலும் பெரும் புகழ் பெற்றது.
இனி, இவர்களுக்குப் பின்வந்த அமைப்பியல்வாதிகள் புதுத் திறனாய் வாளரின் கருத்துகள் ஆய்வுக் குறைபாடு உடையன என்ற கருத்தை முன்வைத்த தோடு அமெரிக்கப் புதுத் திறனாய்வாளர் தமக்கு அடிப்படையாகக் கொண்ட அநுபவ வழித் தத்துவத்தையும் (existentialism) 6Tipé, G8, motioTL6GTri.
பட்டதொரு
இதுவே இலக்கிய அமைப்பியல்வாதமாக உருவாகிற்று. மானுடவியல், சமூகவியல் போன்றதுறைகளுக்குப் பயன்பட்ட சசூரின் கோட்பாடுகளே இவர்களுக்கும் பயன்பட்டன. ஆனால் இந்த இலக்கிய வாதிகள் முழுக்க முழுக்க மொழியாலேயே படைக்கப்பெறும் இலக்கியத்திற்கும் சசூரின் கோட்பாடுகளை அடிப் படையாகக் கொண்டனர்.
இங்ங்ணம் மொழியியல் ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டு வந்ததைக் கண்ட இலக்கியத் திறனாய்வாளர்கள் இலக்கியத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய முனைந்தனர். ஐம்பூதங்களையும் அவற்றின் கலப்பாலும், மயக்கத்தாலும் தோன்றிய பிரபஞ்சத்தின் பொருள் களையும் ஆராய்வது அறிவியலின் பணியாயிற்று. பொருள்களையும் பகுத்தும் தொகுத்தும் "இன்னது இன்ன தன்மைத்து" என்னும் வாய்பாட்டில் விளக்கிக் காட்டுவதாயும் “இன்ன தன்மைத்து’ காட்டுமிடத்து அதன் இருப்பு நிலை,
பஞ்ச பூதங்களையும்
எனக்
இயக்க நிலை ஆகியவற்றுக்கு அடிப் படையாக விளங்கும் தத்துவங் களைக் கோட்பாடுகளாக வகுத்துக் காட்டு வதாயும் இவை அமைந்தன.
மேலும், பூதங்களினதும் பொருள் களினதும் இருப்புநிலை, இயங்குநிலை இரண்டிற்கும் அடிப்படையான தத்துவங் களையும் தத்துவங்களாக வடித்துக் காட்டுவதாகும். இத்தத்துவங்களே இவற்றுக்கு மூலகாரணமான பொதுவிதி. giGung, 6S556061T6 (General Law) கண்டறிவதே அறிவியலின் இரண் டாவதும் இன்றியமையாததுமான பார்வை - அறிவியலின் இவ்விரு செயற் பாடுகளுள் முன்னது பருப்பொருள் நுண்பொருளாகவுள்ள தரவுகளை விளக்க, மற்றையது இத்தரவுகளின் நிகழ்வுக்கான அடிப்படைக் காரணி களைக் கண்டறிந்து விதிகளாக வரையறுத்துக் காட்டுவதாகும். அறிவியலின் இவ்விருவகை அணுகு (p60p8565th Texonomic Approach and Theoretical Approach 6T60T 960p855 படுகின்றன. முதல்வகை ஆய்வுக்கு டார்வினின் கூர்தலறக் கோட்பாட்டையும் மற்றவகை ஆய்வுக்கு ஆர்க்மிடிசின் தத்துவம், நியூற்றணின் இயக்க விதிகள் போன்றவற்றையும் சான்றுகளாகக் கூறலாம். நோர்த்துறப்ஃப்றை North rop Frye) என்றும் மானுடவியலறிஞரே முதன் முதலில் இத்தகைய அறிவியல் அடிப்படை யிலான இலக்கியத் திறனாய்வை அமெரிக்காவில் தொடக்கி வைத்தார். ஐரோப்பிய அறிஞர்களான ஜொனாதன் கல்லர், தொடரோவ், ஜெனற், பார்திஸ் ஆகியோரின் அமைப்பியல் வாதக் கோட்பாடுகளும் மொழி, இலக்கியப்
38
ஞானம் - ஜூலை 2004

பொருண்மை குறித்த சிறுசிறு கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இலக்கிய அமைப்பியல் வாதத்
திறனாய்வுக்கு வழி வகுத்தன. இவர்களுக்குப் பின் வந்தவர்கள் இலக்கியமல்லாத பிறதுறைசார் அறிவியல்துறை சார்ந்தவர்களாகக்
காணப்பட்டனர். இவர்கள் அறிவியல் இலக்கியத்தை ஆராய முற்பட்டு பொது விதிகளைத் தேடுவதில் ஈடுபட்டனர். அவர்கள் தமது கண்டறிதலுக்கு அடிப்படையாக ஒவ்வோர் இலக்கிய வகைமைக்கும் ஒர் இலக்கண
பார்வையில்
வடிவம் உண்டு என்றனர். அவ் அகவடிவைக் கவிதையியல் (Poetics)
இதுவே பின்பு அமைப்பு வாதக் கவிதையியல் (Structuralist
என்றனர்.
Poetics) என்றாயிற்று.
( மொழியினால் ஆக்கப்படும் இலக்கியம் அதனோடு தொடர்புடைய உளவியல், மொழியியல், மானுடவியல், சமூகவியல் துறைகளும் இலக்கியத்தை அமைப்பியல்வாத நோக்கில் ஆராயத் தலைப்பட்டதனால் மேலும் பல்வேறு வகையான இலக்கிய ஆய்வுகள் தோற்றம் பெற்றன. உளவியல்" திறனாய்வு, மார்க்சியத் திறனாய்வு, மொழியியல் திறனாய்வு, மானுடவியல் திறனாய்வு என்பன இவ்வடிப்படையில் செய்யப்படும் பல்வேறு அமைப்பியல் \வாதத் திறனாய்வுகளாகும்.
இனி, அமைப்பியல்
கோட்பாடுகள் அல்லது மீ அமைப்பியல் வாதக் கோட்பாடுகள் (Post - Structuralism) upgólu 50555ió5606T அவதானிக்கலாம். அமெரிக்காவில் வாதக்கோட்பாடுகள்
மருவிய
அமைப்பியல்
செல்வாக்குச் செலுத்திய அதேவேளை ஏறக்குறைய இதே காலகட்டத்தில் இக்கோட்பாட்டின் குறைகள் பலவற்றை ஐரோப்பிய அறிஞர்கள் எடுத்துக் கூறத்தவறவில்லை. அவற்றையே அமைப்பியல் மருவிய கோட்பாடுகள் அல்லது மீ அமைப்பியல் கோட்பாடுகள் என்கின்றனர்.
மானுடமொழி, மனிதமனம் ஆகிய இரண்டையும் பற்றி அமைப்பியல் வாதிகள் கொண்ட கருத்துகளே பொருத்தமற்ற அம்சங்களாகக் காட்டப் படுகின்றன. இத்தகைய குறை பாடுகளைப் பல அறிஞர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து எடுத்துக் காட் டுகின்றனர். இவர்களுள் தெரிதா, பேர்த், லக்கான், ஃபூக்கோ, கிறித்தவர் ஆகியோரின் கருத்துக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன.
பிரெஞ்சு நாட்டுத் தத்துவ அறிஞரான ggTë GgfgIT (Jacquos Derrida) gGJIT'uhu தத்துவ வரலாற்றை ஆராய்ந்தவேளை அதில் இருவகைக் குறைபாடுகள் இருப்பதாகக் கண்டார். ஆனால் அவை அமைப்பியல் வாதத்தின் தனிக்குறைகள் அல்ல, அவை ஐரோப்பியத் தத்துவங்களில் தொடர்ந்து நிலவிவந்தவையே எனக் குறிப்பிட்டார். அவற்றை உட்கொண் டெழுந்த அமைப் பியல், மொழியியலிலும் அமைப்பியல் வாத அணுகுமுறைகளிலும் தொடர்ந்து நிலைபெற்றன என்றும் கருதினார். ஒலி முதல் வாதம் (Phorocentricism) மூலப்பொருள் (upg56b6)IT 5th (Logocentricism) 6TsiTp இவ்விரு ஐரோப்பியத் தத்துவக் கோட்பாடுகளையும் குறையுடையவையாக இனங்கண்டார்.
ஞானம் பொன் மலர்
39

Page 22
மீ அமைப்பியல்வாதம் குறி (Sign), பொருள் (Referent) என்னும் சசூரின் சொற்களுக்குப் பதிலாகக் குறிப்பான (Signifiar) (5sûUGGuT(56îT (Signified) குறியீடுகளைப் புதிய விளக்கங்களோடு பயன்படுத்துகிறது. மனிதனின் ஆய்வுக்கு அடிப்படை அவனது சிந்தனை. அது மொழியின் செயற்பாட்டால் விளைவது சிந்தனையின் மறுபெயர்தான் மனம். மனம் என்பது மொழிதான். மொழிவாயிலாகத்தான் உலகத்துப் பொருள்களை அறிகிறோம். ஆயினும் மொழி எவ்வாறு பொருண்மை கட்டுகிறதென்பதைத் தெளிவாகக் கூற இயலவில்லை. எவ்வளவுதான் ஆழ்ந்து நோக்கினும் மொழிப் பொருண்மையும் குறியீட்டு முறைமையும் சுழற்சித் தன்மைத்தாய் இருக்கின்றனவேயன்றி ஆதிமுதற் காரணத்தை அறிய அதனால் இயலவில்லை. அதாவது மொழியாக உள்ள மனத்தால் மொழியின் மூலத்தை ஆராயமுடியாது. மனிதனுக்கு மனத்திற்கு மொழியன்றி வேறு விழியுமில்லை. எனவே முழுமுதற் காரணம் எனக் கருதுகின்ற மூலப்பொருளை அறியவேறு வழியுமில்லை. இத்தகைய சிந்தனை யோட்டமே தெரிதாவின் புகழ்மிகு திறனாய்வுப் பார்வையாகப் போற்றப் படுகிறது. அவர் இப்பார்வையை "Deconstructive reading" Tirpiti. பொருள்களை மிகமிக நுணுகி ஆராயும் இத்தத்துவப் பார்வை தத்துவவாதிகளின் நோக்கில் “சூன்யவாதம்" (Skepticism) எனப்படுகிறது.
மனித மனத்தின் தனித்தன்மையை அல்லது சூழலுக்கேற்ப வேறுபடும் மனப்பாங்கினை மீயமைப்பியல்
என்னும்
புறக்கணித்தமையால் இக்கோட்பாடுகள் பெரும் எதிர்ப்புகளுக்கு உள்ளாயின. இவை படைப்பாளியின் ஆளுமையைப் பற்றி அதிகம் கவலைப்படாத அதேவேளை வாசகரின் இன்றியமையாமையை மிகுதியும் வற்புறுத்தின.
நிறைவாக, மேலைத்தேசத் தத்துவ வரலாற்றையே தடமாகக் கொள்ள விரும்புகின்றபோக்கு இன்று முனைப் பாகக் காணப்படுகிறது. எனவே அதனை ஒரளவாவது அறிந்திருத்தல் அவசியம். அவற்றுள் பண்டைய தத்துவம், மத்திய காலத் தத்துவம் பற்றிய செய்திகளை அடுத்து நவீனத்துவம், அல்லது நவீன தத்துவம், பின் நவீனத்துவம் பற்றியும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
நவீனத்துவம் (Modernism) என்ற கோட்பாடுகள் முற்றிலும் தர்க்க வகைப்பட்டது. புறநிலைக்கும் (Object)
956606)&sh (Subject) உறவைப் பற்றி விவாதிக்கும்போது கருத்து முதல்வாத நிலை (Idealism) கொண்டோரும் சரி, பொருள் முதல்வாத நிலை கொண்டோரும் சரி (Materialism) தத்தம் நிலையைத் தர்க்க வழியில் நிறுவ முயல்வதே நவீனத் துவத்தின் அறிதல் முறையாக இருக்கிறது. இத் தர்க்கவகை அறிதல் முறை அல்லது கருத்துக் குவிப்பை, கருத்து ஒற்றுமையை, கோட்பாட்டு உருவாக்கும் சாத்தியம் என்பதனை,
உள்ள
பொதுமைப்படுத்தலாகிய பகுத்தறிவை, (Ufu6pso (Macro - Politics), [5] Gior600TIJéfluu Go) 6a) (Micro - Politics), பரந்துபட்ட செயற்பாட்டை கட்டமைப் பாகக் கொண்டது.
4)
குானம் - ஜூலை 2004

பின் நவீனத்துவம் (Post - Modernism) பகுத்தறிவு தர்க்க வகைச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் நவீன வெறும்
நிலைகொண்டிருக்கும்
சிந்தனையை எதிர்த்து
“விமர்சனப் பார்வையாக வந்துள்ள ஒரு
போக்காகக் கருதப்படுகிறது. பின் - நவீனத்துவத்தின் முன்னோடியாக விளக்கியவர் நீட்ஷே. இக்கோட்பாட்டின் போக்கு இன்று சத்திகளுக்கு நடைமுறையில் துணை போவதாகவும், போராடும் மக்களை ஒன்றிணையவிடாமல் சீர்குலைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும்
D6)
ஆதிக்க
இம்மூன்றும் இல்லை எனினும் ஒவ்வொரு கோட்பாட்டுக்குரலும் ஏதோ ஒர் அரங்கில்
இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது என்பது மட்டும் மறுக்கொணா உண்மை. வரலாற்
றடைவில் வளர்ந்துள்ள இக்கோட் பாடுகள் மனித மனம், மொழி, இலக்கியப் பயன் ஆகிய மூன்று பொருள்களைப் பற்றி பல்வேறு அறிஞர் பெருமக்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகளே இவ்வாறு பல்கிப் பெருகக் காரணமாயின என்பதையும் உய்த்துணர முடிகிறது. மேலும் மானுட அறிவுத் துறைகள் பலவாய்ப் பெருகி வளர்ச்சி
அவ்வப்போது
குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் யுற்றமையும் தனித்துறை ஆய்வுகள் செயற்படுகின்றது. ஒடுங்கிப் பல்துறைப் பன்முக ஆய்வுகள் சுருங்கக்கூறின் இக்கோட்பாடுகள் கிளைத்தமையும் இலக்கியக் கோட் ஒவ்வொன்றும் நடைமுறையில் பாடுகள் செறிவடைந்து சிக்கலுற இருப்பதாகவே தோன்றுகின்றன. ஏதுவாயின என்றாலும் மறுப்பதற் ஓரிடத்தில் ஒரு நாட்டிலேயே வழக்கில் கில்லை. Y- மொழிகளின் பாகுபாடுகள் : N
ஆங்கிலம் - வர்த்தகம் பிரெஞ்சு - அரச உறவு இத்தாலி - காதல் ஜேர்மனிய மொழி - தத்துவார்த்தம் ار தமிழ் - பக்தி விசுவாசம் ܢܠ
இடம் பெறும்.
புத்தகக் களஞ்சியம் (நூல் மதிப்புரை)
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்பவேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந் நூல் பற்றிய சிறு குறிப்பு மாத்திரமே புதிய நூலகத்தில்
ஞானம் பொன் மலர்
41

Page 23
குங்க அப்பிள் சிறுகனிசி
திக்குவல்லை கமால்
சிம்ரினாவின் உடலுக்குள் ஏதோ மகிழ்ச்சியலை பரவி நிற்பதை அவளது துடிதுடிப்பு எடுத்துக் காட்டியது. வெள்ளி விழா கடந்து அவளோடு வாழ்ந்து பழகிய அனுபவத்தில் அஸார்தீன் அதனைக் கண்டுகொண்டான்.
“சந்தோஷமொன்டீந்தா எங்களோ டெம் செல்லுங்கோ’ அவளுக்கு விளங்கி விட்டது.
ஒரு சிரிப்போடு சரி. எந்தப் பதிலும் சொல்லவில்லை. “வாப்பா.ஸலிம்மாம மக்கத்துக்கு போகப்போறாம்” அஸ்வினா தகவல் ஒலிபரப்பிக்கொண்டு வந்தாள். “மெய்யா.அதுதாம் ஓங்கடும்மக்கு நல்ல
ப்பு. ம். இரீ மகள்”
வாப்பாவும் மகளும் அக்கம் பக்கமாக
அடுத்த வேலை பார்ப்பார். அதை ரசிக்கத் தயாரானாள் அஸ்வின.
“ரெண்டு பைணம் போனது போதாத்துக்கு இனமொருக்கப் போகப் போற. 6), Li போகப்போக ஆசப்பாட்டுக்கு கொறச்சலில்லை.”
வாப்பாவின் கிண்டலுக்கு உம்மா என்ன சொல்லப் போகிறாவென்று வாய்பார்த்தபடி நின்றாள் அஸ்வினா.
“அல்லா”குடுத்தீக்கி. போறாரு. மத்தவங்களும் தெண்டிச்சா போகேலுந் தானே” தன் வேலையைச் செய்தபடியே சொன்னாள் சம்ரினா.
“ஓவாப்பா.நீங்களும் மக்கத்துக்கு போங்கோ’ ஒரே பாய்ச்சலில் உம்மாவோடு சேர்ந்து கொண்டாள் அவள்.
மனைவிக்கும் மகளுக்கும் பொருந்தக் கூடியதொரு பதில் சொல் வதில் சங்கடம் தலைகாட்டியது போலும்,
“இன்ஷா அல்லா” என்று லேசாக முடித்துக் "9 -thunn மாமூட்டுக்கு போமே” அஸ்வினா வேடிக்கைக்கு தயாராகி விட்டாள்.
“ம். மக்கத்துக்கு போறதும் ஒரு கூத்தாகிட்டு” அவனது அடிமனதி லிருந்து புறப்பட்ட வார்த்தைகளைப் புறுபுறுத்தபடியே முன் வாசலுக்கு நடந்தான்.
எங்கு போனாலும் இப்பொழுது அதே கதைதான். யார் யார் ஹஜ்ஜுக்குப் போகிறார்களென்ற பட்டியல் நாளும் பொழுதும் வளர்ந்து சென்றது. இன்னொரு பக்கம் ஏஜென்ஸிகள். புரோக்கர்கள் ஆள்பிடிக்கப் பறந்து திரிந்தனர்.
女 女 女
கொண்டார்.
ஸலிம்ஹாஜி ரொம்பவும் உற்சாக மாகத் தயாராகிக் கொண்டிருந்தார், அனுபவப்பட்ட பயணி அல்லவா?.
அஸார்தீனுக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது. ஆறு வருடத்திற்கு முன்பு ஸலிம்ஹாஜி முதன் முதலாகப் போக வெளிக்கிட்ட போது.
“எனக் கெண்டா. பிளேனில
போறெண்டச் செல்லே பயம். தல
சுத்திய மாதிரி.”
“ம் நீங்க ஆம்புள. இப்படிச் செல்லியா. இன்டக்கி சவுதிக்கும்
அங்கேம் இங்கேம் பொம்புளயளே
42
குரனம் - ஜூலை 2004

போறேம் வாரேம்” அவரது மனைவி ஆமினும்மா தட்டிக் கொடுத்தார்.
“அது தான் ஆமினா இவ்வளவு நாளும் நானும் பாத்துப் பாத்து நின்ட ம். இண்டக்கி நேத்து மொளச்ச பொடியன்மாரே மக்கத்துக்கு போகச் செல்ல நானும் போகாமேலுமா”
*th............ இந்தக் காலத்தில கணக்கெடுக்கியல்லேன் . எவ்வளவு சல்லிந்தும் வேலில்ல. எப்படிச் சரி இந்த வருஷம் ஒங்கள அனுப்போனுமெண்டு கூட்டம் குடும்பத்தில பேசிக்கொண்ட”
“வெளங்கிய வெளங்கிய. நீங்க துஆ செஞ்சிக்கோங்கொ. அடுத்த பைணம் ஒங்களேம் கூட்டிக் கொணு பொக ஹாஜத்து வெச்சீக்கி”
“சரி சரி அல்லா நாடீந்தா போகேலேன். நீங்க போகப் போறது மகளியள் மருமகனியஞக்கெல்லாம் செரிப் பெருமயேன்”
“வெளங்கினா? அஞ்சி நேரமும் தொழுது கொண்டு துஆச் செஞ்சி கொண்டு நில்லுங்கோ’
1NaN
கணவனுக்காக அவள் எதைத்தான் செய்யத் தயாராக இல்லை.
கட்டுநாயக்காவிலிருந்து அவரைச் சுமந்து கொண்டு விமானம் பறந்த திலிருந்து ஆமினாவின் மனநிலையும் நடவடிக்கைகளும் அப்படியே மாறிப் போய்விட்டது.
திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று அவர்களைக் கட்டிக் கொடுத்த பின்பும், இப்படியொரு பிரிவு இதற்கு முன் ஏற்பட்டதேயில்லை என்ற வேதனை வேறு. ஆமினா வீட்டைவிட்டு எங்குமே வெளிச் ஒதுவதும் தொழுவதுமாகவே நாட்கள் நகர்ந்தன. வேளாவேளைக்கு சாப்பாடு, தேநீ ரெல்லாம் வீட்டார் வழங்கிய வண்ண மிருந்தனர்.
ஹஜ்ஜை முடித்துக் கொண்டு அவர் வீடு வந்து சேரும்வரையில் அவள் அதே துஆவுடனேயே காத்திருந்தாள். கண் குளிரக் கண்டபின்பு தான் பழைய
செல்லவில்லை.
நிலைக்கு ஆமினா மீண்டாள்.
ஞானம் பொன் மலர்
43

Page 24
அதற்கு நான்கு வருடம் கழித்துத் தான் இரண்டாம் முறையாக மக்கா சென்றார். மனைவியையும் கூட்டிக் கொண்டு. முதற் தடவை போன்று பயம், சோர்வு எதுவும் காணப்படவில்லை. மிகுந்த உற்சாகத்துடனேயே இயங்கினார்.
இந்த முறை தண்ணிர் பட்டபாடாகி விட்டது அவருக்கு.
大 ★ ★
அஸார்தீன் ஆறுதலாக அமர்ந் திருந்தான். இன்று ஜூம்ஆவின் பின் நாற்பது பேரளவில் ஸலாம் சொல்ல எழுந்துவிட்டார்கள். பக்தியோடும் பயத்தோடும் பல முகங்கள் காட்சி யளித்தாலும் சில முகங்கள்.
“இவங்கெல்லாருக்கும் அல்லா குடுத்தீக்கி”
இப்படிப் Lu J 660 TG5 பேசிக்
கொள்வார்கள். பிரசங்கிப்பார்கள். இதன் அர்த்தம் என்ன வென்றே அவனுக்குப் புரியவில்லை.
“ஆ. எனத்தியன் யோசின?” என்றவாறே அருகே வந்தாள் சமரினா.
“யோசினயா?” அவன் திரும்பக் கேட்டான்.
“அடுத்தவருஷம் போகவா?”
மக்கத்துக்கு
“அல்லா நாடிந்தாப் போகேலும்”பெரு மூச்சோடு அவன் தனக்குள் கிளர்ந்த வார்த்தைகளை முடக்கிக் கொண்டான்.
“அது சரி இந்தப் பைணமாலும் நாங்க மாமக்கு சாப்பாடொண்டு குடுக்காட்டி பஸந்தில்லேன்”
அவளது நெருக்கத்தின் அர்த்தம் அவனுக்குப் புரிந்துவிட்டது.
“கட்டாயம் குடுக்கோணுமா?”
அவனுக்கு விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளது குடும்பம் சார்ந்த விடயங்களில் இப்பொழுதெல்லாம் அவன் தன் கருத்தை அதிகம் அழுத்துவதில்லை.
“நல்லந்தானே ஒரு சந்தோஷமேன்” “ဈ) ..................... இனி பெரிசாய் போட்டுக் கொழப்பிகொளாம லேசாச் செஞ்சி போடப்பாருங்கோ’ அஸார்தீன் அங்கீ காரமளித்து விட்டான்.
இனியென்ன, அவளது குடும்பம் சுற்றுவட்டாரமென்று ஒவ்வொரு வருக்குச் சொன்னாலும் ஒரு பத்து
ஸஹனுக்குக் குறையாமல் செய்ய முடியாதுதான்.
அவள் பம்பரமாக இயங்க ஆரம்பித்தாள். பிள்ளைகளுக்கும் சாப்பாடென்றால் தலைகால் புரியாது.
அடுத்த இரண்டே மணித்தி
யாலத்தில் மூத்தமகன் முஸாதிக் சாப்பாட் டுக்குச் சொல்ல லிஸ்டோடு புறப்பட்டு விட்டான்.
அஸ்வினாவும் ரிஸ்வி னாவும் கோழிக் குருமாவா? கோழிப் பொரியலா? என்ற விவாதத்தை தொடர்ந்து நடாத்திக் கொண்டிருந்தார்கள்.
★ ★ ★
தங்கை
காரசாரமான
“அல்ஹம்து லில்லாஹ்'
எல்லோர்க்கும் கேட்கும்படியாக ஸலிம்ஹாஜி சொல்லிக் கொண் டெழுந்தார். சாப்பாட்டு களரி கலகலப்பாக நிறைவடைந்தது.
“ஒரு கெழமையா ஊட்டில சாப்பாடு தின்னல்ல செலவங்களுக்கு வெளனே கடயாப்பத்துக்கும் டைம் குடுத்தீக்கி”
44
ஞானம் - ஜூலை 2004

இத்தனை வரவேற்பு தனக் கிருப்பதை ஸலிம்ஹாஜி சொல்லியா மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
“ஒரு நேரச் சாப்பாடு பெரிசாம் மனிசனத் தேவயென்டேன் போறது” பக்கத்தில் நின்ற பைரூஸ் தட்டிக் கொடுத்தான்.
“சரி சரி வேலிக்கி. அப்ப நான் பெய்த்திட்டு வாரனே.”
ஸ்லிம் மாமா விடைபெற்று காரில் ஏறும் வரை சப்ரினாவும் பிள்ளைகளும் கண்களை அசைக்கவில்லை. பொங்கும் பூம்பொய்கையாய் அவர்களது மனங்கள். அதைப் பார்க்க அஸார்தீனுக்கும் ஆனந்த மாயிருந்தது.
கலகலப்பு ஒய்ந்து வீடு வழமைக்கு திரும்பிய பின்பு.
“ஒங்கட மாம வந்தா எங்களுக்கு வேறொண்டும் தேவில்ல. மக்கத்து அப்ஸைக் ஒண்டு தந்தாப் போதும்” மனைவியின் காதுக்குள் சொன்னான் அஸார்தீன்.
“அதென அப்படிச் செல்லிய?” “எங்கட சாப்பாட்டுக்குச் செலவு சரியாகும். ம் .
மக்கத்து அப்லிஸ்கேக்குள்ள தங்கப் பவுணிக்காமேன்”
அவளுக்கு ஒன்றும் பேசவரவில்லை. இந்தக் குத்துவலி மெல்ல மெல்ல அவளுடலில் பரவ ஆரம்பித்தது.
മരശ്ശ്രീമൂല
கொடுப்பதற்காக பமட்டுமே,
செயற்படுத்த அல்ல!
அவசரத்துக்கு கைபDாறாக
வாங்கிய சில்லறை!
முடியாது என்று தெரிந்தும்
முட்டிடயுடம் என்ற கனவுக்கு அழைத்துப் போகும் நிலாமுற்றம்!
நிறைவேறினால் சுவாசம், இல்லையேல், வெறும் கானல்!
லொத்தர்களுக்குடம் இப்போது இதுதான் வேத வாக்கு!
எழுத்தில் விழுந்தவைகளே காற்றோடு போகும் போது வாய்ச் சொற்கள் எடம்மாத்திரம் ?
தேர்தல் காலமும் காதல் காலமும் இதற்கு வசந்தம்!
கோடை வர
கானாபமற் போய்விடும் 6)Vp6OL O Gš r6 .
ஞானம் பொன் மலர்

Page 25
“ஒானம்" விருத 2005 பெற்ற சாரங்காவின் “ஏன் பெண்ணென்று? சிறுகதைத் தொகுதி வெளியீடீருவிழா
- மு. கனகலிங்கம் விரிவுரையாளர், கல்வித்துறை யாழ் பல்கலைக்கழகம் செயலாளர் ஞானம் இலக்கியப் பண்ணை.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்குடன் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைத் தொகுதிப் போட்டியில் பரிசு பெற்ற சாரங்காவின் ஏன் பெண்ணென்று நூல் வெளியீட்டு விழா, ஞானம் இலக்கியப் பண்ணை. யாழ் கிளை ஏற்பாட்டில் 06.06.2004 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் சிற்பியின் தலைமையில் நடைபெற்றது.
அன்று காலையில் அதே மண்டபத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய நிகழ்வாக தென்னிலங்கை, மலையகம், கிழக்கிலங்கை, வன்னி ஆகிய பிரதேசங்களிலிருந்து வருகை தந்து, இலங்கை இலக்கியப் பேரவையும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய தலைசிறந்த படைப்புகளுக்கான பரிசையும் கெளரவத்தையும் வழங்கும் பெருவிழா நடைபெற்றது. ஈழத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் பிரசன்னமாயிருந்த பேரும் புகழும் வாய்ந்த எழுத்தாளர்கள் சூழ்ந்திருந்த சபையிலே இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற பெருநோக்குடன் உருவாக்கப்பட்ட ஞானம் விருது நூல் பரிசுத் திட்டத்தின் முதல்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது மிகப் பொருத்தமாக இருந்தது.
மூதறிஞர்களும் ஈழத்து எழுத்தாளர் திலகங்களான சொக்கனும், நந்தியும் விசேடமாக வருகை தந்திருந்தது விழாவை மேலும் சிறப்பித்தது. மூத்த எழுத்தாளர் சிற்பியின் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு மலையக எழுத்தாளர் சாரல் நாடன் வாழ்த்துரை வழங்கினார். அறிமுக உரை வழங்கிய ஞானம் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் தோற்றம், குறிக்கோள், செல்நெறி பற்றி விபரமாக எடுத்துரைத்து ஞானம் பண்ணையிலே ஒரு புதிய இலக்கியப் பரம்பரையை வளர்த்தெடுப்போம் எனச் சூழுரைத்தார். நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றிய ஞானம் இணையாசிரியர் புலோலியூர் க. சதாசிவம் தன்னுரையில் ஞானம் ஆக்க இலக்கியத்துறைக்கு ஆற்றி வரும் பணியையும் அதன் பெறுபேறுகளையும் குறிப்பிட்டு இளம் தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்து, வளர்த்தெடுக்கும் ஞானத்தின் பணியின் ஒரு பரிமாணமாக வருடந்தோறும் நடைபெறும் ஞானம் விருது' பரிசுத் திட்டமும் நூல் வெளியீடும் ஞானத்தின் இலக்கியப் பயணத்தின் ஒரு மைல்கல் எனவும் முதல் அறுவடையாக ஆக்க இலக்கிய ஆற்றல் மிகுந்த சாரங்காவின் படைப்பு இன்று வெளியிடப்படுகிறது எனவும் கூறினார்.
தொடர்ந்து செங்கை ஆழியான் தலைமையில் ஆய்வரங்கு நடைபெற்றது. கோகிலா மகேந்திரன், செம்பியன் செல்வன், சோ. பத்மநாதன் ஆகியோர் ஆய்வுரை
46 குானம் - ஜூலை 2004

நிகழ்த்தினர். 'ஏன் பெண்ணென்று என்று
குறிப்பிட்ட ஒரு சிறுகதையை விமர்சித்த
கோகிலா மகேந்திரன், “பாலியல் துஷ் பிரயோகத்தை வைத்து எழுதப்பட்ட சாரங்காவின் இக்கதை பெண்ணியத்தின் வெளிப்பாட்டை சிறுகதைக் கட்டமைப் புடன் காலத்துக்கேற்றவாறு எழுதப் பட்டுள்ளது. கதையின் கருத்து வெளிப் பாட்டில் கூறப்படுபவை கதாபாத்திரத்தின் கூற்றா அல்லது ஆசிரியரின் கூற்றா என்ற மயக்க நிலை காணப்படுகிறது. ஆயினும் குறியீடுகள் மூலம் பாத்திரத்தின் உணர்வுகளை கலாபூர்வமாக வெளிப் படுத்தி கதைக்கு மெருகேற்றியுள்ளார்" எனக் குறிப்பிட்டார். சோ. பத்மநாதன் அவர்கள் கதாசிரியரின் கதை சொல்லும் திறனைப் பெரிதும் பாராட்டினார். செம்பியன் செல்வன் தனது உரையில் சாரங்காவின் படைப்புக்கள் அனைத்தும் சிறுகதைப் பிரக்ஞையுடன் எழுதப்பட்டவை எனவும், ஒவ்வொரு கதையிலும் அவரது அணுகு முறை வேறுபட்டதும் அற்புதமான தாகவும் அமைந்திருப்பதாகவும் குறிப் பிட்டு, வருடம் தோறும் வழங்கும் - ஞானம் விருது பரிசளிப்பு நூல் வெளியீட்டுத் திட்டத்தையும், நிறுவனம் ஒன்று செய்ய வேண்டிய செயலினை தனி ஒரு
உள்நாடு தனிப்பிரதி ரூபா 30/- ஆண்டுச் சந்தா eum 360/= 2 ஆண்டுச் சந்தா : ரூபா 700/= 3 ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= ஆயுள் சந்தா ரூபா 15000/= சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடர் அனுப்புபவர்கள் அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
*ஞானம்* சந்தா விபரம்
மனிதனாகச் செய்யும் ஞானம் இணை யாசிரியரின் இலக்கிய தியாகச் சிந்தனையையும், பணியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனவும் கூறினார். செங்கை ஆழியான் தனது உரையில் சாரங்கா ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர் களின் முன்னணியில் நின்றவர். ஆற்றல் நம்பிக்கை தருபவராக மிளிர்ந்தவர். இன்று புலம் பெயர்ந்து சென்றுள்ளார். எழுத்துலகிற்கு இது ஒரு இழப்புத்தான். ஈழத்து இலக்கியம் படைத்தவர் இனி ஈழம் பற்றிய இலக்கியமே படைக்க முடியும். ஆயினும், அவரது இலக்கிய வேட்கைக்கு ஏற்ப சர்வதேசச் சிந்தனையுடன் ஆக்க இலக்கியம் படைத்து ஈழத்துஇலக்கியத்திற்குப்புதியபரிமாணமும் வளமும் சேர்ப்பார் என மனப்பூர்வமாக நம்பலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். பலாலி ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் அவர்களின் நன்றி யுரையுடன் நிறைவு பெற்ற இந்நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட காத்திரமான ஒரு நூல் வெளியீட்டு விழாவாக அமைந்தது எனலாம்.
மிக்கவர்.
மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும் அனுப்ப வேண்டிய பெயர், முகவரி
T. Gnanasekaran 19/7, Peradeniya Road. Kandy.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$ gusir sign : 300 US$
ஞானம் பொன் மலர்

Page 26
கருக்கொள்ளல்
தவ சஜிதரன்
வானம்அழ, முரசதிர வாகை கொண்டு
வாரியெழும் கடலலைகள் கூத்திட்டாடத் தேனமிழும் கனிமரங்கள் தலைய சைக்கத்
தென்றலுரு மாறி, வெகுண்(டு) உயிர்விழிக்க வான்உமிழும் தீயின்அனல் தணிதல் கண்டால்
வையஇருள் துடைத்துவிடும் வேட்கை நெஞ்சில் கானமெழும்! கவிதைவரும் கால வெள்ளம்
கடுகுமதன் சுவாசத்தில் மூர்க்கந் தள்ளும்!
புழுதியிலே புதையுண்ட சித்திரம்போல்
புதுமழையின் மேகத்துள் சூரியன்போல் விழுதடர்ந்த மரத்தின்இலை மறைக்கும் காய்போல்
வெட்கத்தில் விடலைப்பெண் எழில்மு கம்போல் எழுதரிய புதுமையெலாம் கருவில் சேர்த்தே
எழுங்கவிதை மறைந்திருக்கும் மனுக்கு லத்தின் அழுந்துயர ஒலங்கள் கேட்ட போதில்
அனலாகிச் சுடராகி வெளிக்கு திக்கும் !
உயிர்நாதம் கலந்தொலியில் புதிது தோன்றும்!
உணர்வாலே உளம்நனையும் புலன்கள் ஒயும்! அயர்வின்றித் தொய்வின்றிப் பலயுகங்கள்
அமரநிலை எய்துகின்ற திடம்மி குக்கும் ! புயம் புடைக்கும்! விழிகதிர்க்கும் பொங்கும் மார்பு
புறந்தள்ளிச் செம்மையிலே பொலிவு காணும்! ஜெயம் பிறக்கும் பயம்மரிக்கும்! ஜெகத்தை மேன்மை
செய்கின்ற ஒருகவிதை நெஞ்சில் வந்தால்!
48 ஞானம் - ஜூலை 2004
 

கே. கணேஷ், என்ற மலைவிளக்கு அணைந்தது
மலையகத்தின் முதுபெரும் எழுத்தாளரான கே.கணேஷ் 05-6-2004 அன்று காலமானார். அவரது மரணம் ஈழத்து இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத பெரும் இழப்பாகும். ஞானம் சஞ்சிகையின் ஆரம்ப காலந்தொட்டே கே.கணேஷ் எம்முடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தார். ஒவ்வொரு இதழும் வெளிவந்ததும் அதனை வாசித்துவிட்டு, அந்த இதழ் பற்றிய விமர்சனத்தைத் தொலைபேசியில் தெரிவிப்பார். ஞானத்தின் வளர்ச்சிக்கான ஆலோ சனைகளை அவ்வப்போது கூறுவார். இந்தியாவிலுள்ள தனது இலக்கிய நண்பர்கள் சிலருக்குத் தானே ஞானத்துக்கான சந்தாவைச் செலுத்தி அவர்களும் ஞானத்தைப் பெற்று வாசிக்கும்படி செய்வார். தனது ‘எழுத்தும் வாழ்க்கையும் பற்றிய தொடரை ஞானத்தில் எழுதவேண்டும் என்ற பெருவிருப்புக்கொண்டு அதுபற்றி எம்மிடம் விரிவாகக் கூறியிருந்தார். அவருடைய உடல்நிலை காரணமாக, அத்தொடரை எழுதுவதில் தாமதம் ஏற்பட்டபோதிலும் முதல் இரண்டு அத்தியாயங்களைத் தமது கைப்படவே எமக்கு எழுதி அனுப்பியிருந்தார். அத்தொடர் முழுமையாக எழுதப்படாதது ஈழத்து இலக்கிய உலக்குக்குப் பெரிய இழப்பு என்றே கூறவேண்டும்.
கே.கணேஷ் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்த முன்னோடி. தமிழின் முதல் முற்போக்கு சஞ்சிகையான "பாரதியை வெளியிட்டவர். உலகத் தமிழ்க் கலாசாரப் பேரவையின் நிறைவேற்றுக் கவுன்சில் உறுப்பினராக இருந்த கணேஷ், 1958ல் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த தினத்தையொட்டி அகில உலகரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பரிசுபெற்று, அரசவைக் கவிஞர்கள் பாராட்டு விருதைப் பெற்றவர், இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச் சபை, றோயல் ஏஸியாற்றிக் சொசைட்டி, "பென் சர்வதேச ஸ்தாபனம் ஆகியவற்றில் உயர்மட்ட உறுப்பினராகப் பணிபுரிந்தவர். உக்ரேனிலும் பல்கேரியாவிலும் நடைபெற்ற உலக மொழிபெயர்ப்பாளர் மாநாடுகளில் இரண்டுதடவைகள் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர். இந்து சமய கலாசார அமைச்சின் ‘இலக்கியச் செம்மல், இலங்கை அரசின் ‘கலாபூஷணம்' ஆகிய விருதுகளைப் பெற்றவர். உலக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்து 22 மொழிபெயர்ப்பு நூல்களை வெளிக் கொணர்ந்தவர். கனடிய இலக்கிய விருது பெற்றவர்.
ஞானம் பொன் மலர் 49

Page 27
ஞானம் தனது 31ஆவது இதழை எழுத்தாளர் கே.கணேஷ் சிறப்பு மலராக வெளியிட்டுப் பெருமை கொண்டது. இம்மலருக்கு அவர் அளித்த விஷேடபேட்டி பல முக்கிய இலக்கிய வரலாற்றுத் தகவல்களைக் கொண்டதாக அமைந்ததோடு அம்மலர் கணேஷ் பற்றிய ஒரு முழுமையான தகவல்களைக் கொண்டதாகவும் வெளிவந்தது.
06-06-2004ல் ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் யாழ் கிளை, "ஞானம் விருதினை வென்ற சாரங்காவின் 'ஏன் பெண்னென்று என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. அந்த வெளியீட்டு விழாவில் மலையகம், தென்மாகாணம், கிழக்குமாகாணம், யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இலங்கையின் பலபகுதிகளையும் சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் குழுமியிருந்தார்கள். அந்த விழாவின் ஆரம்பத்தில் கே.கணேஷ் அவர்களின் மறைவையொட்டி அவரது ஆத்மா சாந்தியடைய ஞானம் செலுத்திய மெளனாஞ்சலியில் எழுத்தாளர் பலரும் கலந்துகொண்டனர்.
அவரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் ஞானம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
67gé2nfulfil 7 yeasoir
தே. சங்கீதா, புத்தளம்.
நான் சொல்லுவதை எனக்காக. காத்திரு . மட்டுமல்ல எனக்காக வாழ் நினைப்பதையெல்லாம் செய்.
என்ன வேண்டுமோ . என்னைக் கேள்
எள் என்னுமுன்
நீயாக எதுவும்
ண்ணெயாக . எணolணயாகு செய்துகொள்ள முற்படாதே. என் தவிர என்னிடம் எதிர்பார்ப்பது பிறன் நோக்காதே . இவைகளையே எனின்
என்னைவிட்டு
என் முன் மற்றோர்க்கு எண்பதுவருடம் மதிப்பளியாதே «» sama a A 14 முற்பிறந்தவளை பெற்றோர் உட்பட கைப்பிடியேன் காதலா .
50 ஞானம் - ஜூலை 2004

*ஞானம் சஞ்சிகையின்
நான்கு ஆண்டு அறுவடை
ஞானம் சஞ்சிகை இரண்டாயிரமாவது ஆண்டு ஜூன் மாதம் தனது முதலாவது இதழை விரித்தது. அன்றிலிருந்து மாதந்தோறும் தவறாது இதழ் மலர்த்தி, இப்பொழுது தனது ஐம்பதாவது இதழைச் சிறப்பு மலர் வடிவில் தருகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தச் சஞ்சிகையின் பணிகளையும் வளர்ச்சியையும் மீள நோக்குவது பயன் தருவதாக அமையும்.
இந்த மீள்நோக்கு ஒரு விமர்சனப் பார்வை அல்ல. மென்மையான ஒரு மதிப்பீடு; தாய் தனது குழந்தையை ஆர்வத்தோடு அணைத்துக் கொள்வதும் அதன் பிஞ்சு உடலின் கை, கால், முகம் முதலிய ஒவ்வோர் உறுப்பையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து நயப்பதும் போன்ற ஒரு நோக்கு.
சமுதாயத்தில் செல்வம் சமதர்ம அடிப்படையில் பங்கிடப்படும்போது ஒரு பகுதியில் வரவும் இன்னொரு பகுதியில் இழப்பும் ஏற்படுகின்றது. ஆனால், அறிவு மக்களிடையே பகிரப்படும்போது இழப்பு என்பது இல்லை; வரவு தான் ஏற்படுகிறது. கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருபகுதியாரும் பெறுகிறார்கள். இதனால் அறிவு விரிவடைகின்றது. இந்தத் தத்துவத்தையே பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம் எனத் தனது இலட்சிய வாசகமாகப் பொறித்துக்கொண்டிருக்கிறது, ஞானம் சஞ்சிகை. இந்தக் குறிக்கோள் இதுவரை வெளிவந்திருக்கும் ஞானம் இதழ்களில் எவ்வாறு, எவ்வளவு நிறைவேறியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை நோக்கும். இங்குள்ள அறிவு ஊற்றுக்களில் ஒன்றாகிய நேர்காணல் என்னும் அங்கத்தை முதலில் எடுத்துக் கொள்ளலாம்.
நேர்காணல்
நமது கலை இலக்கியத் துறைகளில் முன்னோடிகளாக விளங்கும் சிலருடன் நடத்தப்பட்ட செல்விகள் நேர்காணல் என்னும் பகுதியில் தரப்பட்டுள்ளன. எல்லாமாகப் பதினெட்டு நேர்காணல்கள். இந்த அறிஞர்களது தனித்துவமான இலக்கியக் கோட்பாடுகள் இவற்றில் நன்கு வெளிப்படுவதை வாசகர்கள் இலகுவில் உணர்ந்து கொள்ளலாம். செவ்வி வழங்கும் ஓர் இலக்கிய கர்த்தாவிடமிருந்து எவ்விடயங்களை வாசகன் அறிய விரும்புவானோ, அறிந்து கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த நேர்காணல்கள் வெளிக் கொணர்ந்திருக்கின்றன.
நேர்காணலில் எஸ். பொ. தாம் வகுத்துக்கொண்ட நற்போக்கு இலக்கியம் பற்றிச் சொல்கிறார். உருவகக் கதை என்னும் சிறுகதை வடிவத்தை விளக்குகிறார். தமிழ்க் கவிதை இலக்கிய விமர்சனத்துக்கு முன்னோடியாகவுள்ள கலாநிதி எம். ஏ. நுஃமான்,
ஞானம் பொன் மலர் 51

Page 28
மாக்சியச் சிந்தனை முறைக்கும் பின் நவீனத்துவம் முதலிய சிந்தனை முறைகளுக்குமிடையேயுள்ள பேதங் களைத் தமது நேர்காணலில் முக்கியமாக எடுத்துப் பேசுகிறார். பேராசிரியர் சி. தில்லைநாதனது நேர்காணலில் நமது இலக்கியக் களத்தில் நடைபெற்ற மரபு - முற்போக்கு - நற்போக்கு போராட்டம் பற்றிய விபரங்களை அறிகிறோம். புயல்வேக எழுத்தாளர் செ. யோகநாதன் தமது பத்திரிகைத் துறை எழுத்துக்கள் பற்றி விபரிக்கிறார். ஈழத்து மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் சங்கம் நிறுவியமை பற்றிய செய்தி வரதரது செவ்வியிலும், கலைச் செல்வி சஞ்சிகை வெளியீட்டு அனுபவம் அதன் ஆசிரியர் சிற்பியினது செவ்வியிலும் கூறப்படுகின்றன. மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் அவர்கள், இலங்கையில் முற்போக்கு இலக்கியம் முளைகொண்ட விபரத்தைச் சொல்கிறார். இவ்வாறே ஞானம் தந்துள்ள நேர்காணல் ஒவ்வொன்றும் நமது இலக்கிய கர்த்தாக்களது சிறப்பான பணிகளை எடுத்துக்காட்டுகின்றன.
போர்ச்சூழல் என்னும் எரிதழலில் நின்றுகொண்டு, அங்கு நிகழும் அழிவுகளையும் அர்ப்பணிப்புகளையும் உணர்வுபூர்வமாகக் கண்டு பாடிய கவிஞர் புதுவை இரத்தினதுரை. அவருடன் நடத்தியிருக்கும் நேர்காணல், ஞானம் இதழ்களில் வெளிவந்திருக்கும் மற்றைய நேர்காணல்களிலும் வித்தியாசமானது. இதிலே புதுவை தரும் புதிய பார்வை நமது கவிதைப் புலத்துக்குப் புதிய ஒளி பாய்ச்சுகிறது. இந்த நேர்காணலை
பேராசிரியர் கா. சிவத்தம்பி யவர்களுடன் நடைபெற்ற நேர்காணல் ஞானம் 26 ஆவது இதழில் தொடங்கி வந்து கொண்டிருக்கின்றது. பேராசி ரியரது ஆழ்ந்தகன்ற அறிவுப் புலத்தையும் கலை இலக்கியத் துறை சார்ந்த பரந்த தேடல் அனுபவத்தையும் விரிந்து செல்லும் சிந்தனையையும் இந்த நேர்காணல் நமக்குக் காட்டுகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலப் பகுதியில் நமது இலக்கியத் துறையில் நிகழ்ந்த எழுச்சிகள் முரண்பாடுகள் என்பவற்றை யெல்லாம் அனுபவ இங்கே பேராசிரியர் சொல்லிச் செல்கிறார். ஈழத்துப் புதிய இலக்கியத் துறையின் பிதாமகராக விளங்கும் பேராசிரியர் தரும் விபரங்கள் பல நமக்கு வரலாற்றுப்
அடிப்படையில்
பதிவுகளாக உள்ளன.
ஞானம் தந்துள்ள நேர்காணல் பதிவுகள் யாவும் ஈழத்து இலக்கியச் செல்நெறிக்கு உரம் ஊட்டத்தக்கவகை என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும்.
ஞானம் இதழ்களில் வெளியாகி யுள்ள 'எனது எழுத்துலகம்' என்னும் பகுதியையும் இந்த நேர்காணல் என்னும் அங்கத்துடன் சேர வைத்து நோக்குதல் பொருத்தமாயிருக்கும். 'நேர்காணல் செவ்வி காண்பவரது வழிநடத்தலில் பெறப்பட்ட கருத்துக்களாயிருக்க, 'எனது எழுத்துலகம் படைப்பாளியினது சுயமான வெளிப்பாடாக அமைகிறது. இந்தப் பகுதியில், படைப்பாளி கட்டவிழ்த்துவிட்ட கன்று போலத் துள்ளித் திரியும் சுதந்திரம் பெறுகிறான்.
தெளிவத்தை ஜோசப், முல்லைமணி,
நுதல்விழி இளையவன் நடத்தி அன்புமணி, தி. ஞானசேகரன், யிருக்கிறார். வெ. முருகபூபதி, ரூபராணி யோசப்,
52 ஞானம் - ஜூலை 2004

வாகரைவாணன், தெணியான், தமிழோவியன், சுதாராஜ், மொழிவரதன் ஆகியோர் தமது எழுத்துலகம் பற்றிச் சொல்கிறார்கள். இவர்கள் எழுத்துலகில் புகுந்த வகை, வளர்ந்த வகை, செய்த சாதனைகள் இங்கே கூறப்படுகின்றன. எழுத்துத்துறையில் இவர்கள் கொண் டிருந்த ஈடுபாடும் பெற்ற மகிழ்ச்சியும் இக்கட்டுரைகளில் நன்கு வெளிப் படுகின்றன. இக் கட்டுரைகளின் உள்ளார்ந்த சாரமாக இவர்களது ஆளுமை காணப்படுகிறது. அநாவசியமான விபரிப்புகள் காரணமாக இவற்றுள் சில கட்டுரைகள் மித மிஞ்சி நீண்டிருக்கின்றன.
ஞானம் தந்துள்ள நேர்காணல், எனது எழுத்துலகம் ஆகிய இரண்டு அங்கங்களும் இளம் படைப்பாளிகளுக்கு பயனளிக்கத்தக்கவை. அவர்களுடைய இலக்கிய முயற்சிகளுக்கு இவை வழிகாட்டத்தக்கவை.
என்பன
சிறுகதைகள்
நமது சிறுகதைத்துறைக்கு ஞானம் சஞ்சிகை பாராட்டத்தக்க வகையில் வளம் சேர்த்து வருவதை வாசகர்கள் நன்கு அறிவார்கள். இதுவரை ஞானம் இதழ்களில் 97 கதைகள் பிரசுர மாகியுள்ளன. சராசரியாக ஒவ்வொரு இதழுக்கும் இரண்டு கதை ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் இளைய சந்ததியினர் என எல்லோருமே எழுதியிருக்கிறார்கள். புதிய எண்ணக் கருக்கள், சிந்தனையோட்டம், கற்பனை வளம் என்பன இக்கதைகளில் வெளிப் படுகின்றன. தமிழரது வாழ்வில் இதுவரை எழுத்தாளர்கள் தொட்டுப்
பார்க்காத சில அங்கங்களை இங்கே படைப்பாளிகள் தொட்டு கதை புனைந் திருக்கிறார்கள். ராணி சீதரன் எழுதிய மீண்டும் நளாயினி” வீ. என். சந்திர காந்தி எழுதிய ஸ்திரீ லட்சணம், காதலே மெளனமானால், இந்திரர்கள் நாடும்’ அகலிகைகள் சரயு எழுதிய அவன் என்ன செய்வான்? என்னும் கதைகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். தான் பெற்று வளர்த்த இரு பிள்ளைகளும் வெளிநாடு சென்றதால் தனிமையுற்ற தாய் ஒருத்தியின் மனத்தில் எழும் புதிய நம்பிக்கையொன்றை எடுத்துக் கூறும் படர்கொம்பு என்னும் கதை நலமானதாக இருக்கிறது. பிறநாடுகளில் குடியேறி வாழும் நமது இனத்தவரிடையே ஏற்பட்டு வரும் பண்பாட்டு மாற்றத்தின் ஒரு கசப்பான காட்சியை ஞானசேகரன் படைத்துள்ள 'மண்புழு கதை காட்டுகிறது.
சங்கத்தானை தாட்சாயணி எழுதியுள்ள ‘காணாமற் போனவனுக்கு ஒரு கடிதம்' என்னும் கதை ஒரு அருமையான படைப்பு போர்ச் சூழலில் காணாமற் போய்விட்ட கணவனை எதிர்பார்த்து ஏங்கியிருக்கும் ஒரு குடும்ப பெண்ணின் சோகத்தை இந்தக் கதையிலே தேக்கி வைத்திருக்கிறார், தாட்சாயணி. இந்தக் கதையைப் போலவே நமது நாட்டுப் போரின் தாக்கங்களைச் சித்திரிக்கும் கதைகள் சில ஞானம் இதழ்களில் 'அடையாளம்’ (தாமரைச் செல்வி),
பிரசுரமாகியுள்ளன.
சீனவெடி', 'காங்கேயம் (செங்கை ஆழியான்), ஈழத்தீ (ராணி சீதரன்), புழுதி (சுதர்ம மகாராஜன்), என்பன அவற்றுள் சில.
ஞானம் பொன் மலர்
53

Page 29
கம்பவாரிதி ஜெயராஜ் எழுதியுள்ள நான்கு படைப்புகள் ஞானம் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அவை படைப்பிலக் கியத்திலே என்ன வடிவங்கள் என்னும் சர்ச்சை வாசகரிடையே நடந்திருக்கிறது. அந்தப் படைப்புகள் கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு புதிய வடிவமாகவோ இருக்கலாம். இலக்கியத்தில் புதிய புதிய வடிவம் தோன்றுவது தடுக்கப்பட வேண்டியது அல்ல. ஆனால், ஜெயராஜ் தரும் படைப்பு ஒவ்வொன்றும் ஞானம் சஞ்சிகையில் அதிகமான பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறதே. இதுதான் பிரச்சினை. இந்த அபகரிப்பைத் தவிர்க்க வேண்டாமா?
கவிதைகள்
ஞானம், கவிதைக்கு நிறையவே இடம் வழங்கியிருக்கிறது. இருநூற்றுக்கு மேற்பட்ட கவிதைகள் இதுவரை பிரசுரிக்கப் பட்டுள்ளன. மூத்த கவிஞர்கள், இளைய தலைமுறையினர் ஆகிய எல்லோரும் எழுதியிருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த போரினால் விளைந்த அநர்த்தங்கள், சமாதானப் பேச்சுடன் சம்பந்தமான எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் முதலியவை கவிஞர்களது உணர்வுகளில் ஏற்படுத்திய சலனம் இக்கவிதைகளில் நன்கு வெளிப்படக் காணலாம். இக்கவிதை களைத் தனித் தனியாகவோ, வகைப் படுத்தியோ இந்த மதிப்பீட்டுக் கட்டுரையில் விபரித்தல் சாத்தியமன்று. ஆயினும் ஒருசில படைப்புகளை எடுத்துக் காட்டாக இங்கு தரலாம்
உலகப் பொலீஸ் உத்தியோகம் (வாகரை வாணன்), கூட்டைக் கலைத்துவிடு பெண்ணே (மல்லிகா
மனோகரன்), சொல்லி விடுங்கோ (திக்க வயல் தர்மு), கிராமத்துக் கனவுகள் (சுதர்சன்), மறுபக்க மனிதம் (மாவை வரோதயன்), காயம் சுமந்த காற்று (த. ஜெயசீலன்), பொய்கள் (சி சிவசேகரம்), (ஏ. இக்பால்), அழைப்பு (சோ. பத்மநாதன்), பாக்கு (சி.மெளன
இலவசம்
குரு), விடியல் (சோலைக்கிளி) - இவை எடுத்துக் காட்டுகள்.
நான்கு வருட ஞானம் இதழ்களில் வெளிவந்த கவிதைகளில் ஒரு சில வற்றைத் தவிர ஏனையவை எல்லாம் புதுக்கவிதைகள், மரபுக்கவிதை புனைய வல்ல சில கவிஞர்களும் புதுக் கவிதை வடிவிலேயே தமது கருத்துக்களைச் இப்புதுக் கவிதைகளில் அவற்றுக்கு இருக்க வேண்டிய மிடுக்கையும் வீச்சையும்
சொல்லியிருக்கிறார்கள்.
காண்பது அரிதாயிருக்கிறது. கவிஞர் என்ன சொல்கிறார் என்பதை சில புதுக் கவிதைகளில் கண்டுகொள்ள முடிய வில்லை. கூறப்படும் பொருளைப் பிடித்துக் கொள்வதற்குரிய துப்புகள் அவற்றில் அகப்படவில்லை. சில மரபுக் கவிதைகள் துண்டம் துண்டமாக முறித்து புதுக்கவிதையின் உருவில் தரப் பட்டுள்ளன. கவிஞர் வே. குமாரசாமியின் விண்ணில் எழுதல் என்னும் பொருளில் அமைந்த வெண்பாக்கள் இவ்வாறு அமைந்திருக்கின்றன.
கலாநிதி நுஃமான் அவர்களும் சி. சிவசேகரமும் அவர்களும் பிற மொழிக் கவிதைகள் சிலவற்றைத் தமிழில் மொழி
பெயர்த்துத் தந்திருக்கிறார்கள்.
54
ஞானம் - ஜூலை 2004

எழுதத் தூண்டும்
(o (ÖÖ 6ÖÖT F. db (6):
கட்டுரை வடிவிலே ஞானம் சஞ்சிகை தந்திருக்கின்ற படைப்புக்களில் நான் மிக ஈடுபாடுகொண்டு படிக்கும் தொடர் எழுதத் தூண்டும் எண்ணங்கள் என்பது. இந்த பத்தியெழுத்திற் கூறப்படும் கருத்துக்களிற் பெரும்பாலானவை எனது மனத்தின் பிரதிபலிப்புகள் போல இருப்பதால், இவற்றைப் படிக்கும்போது எனது எண்ணங்களை நானே ஒருமுறை
மீட்டுப் பார்ப்பது போன்ற உணர்வு
எனக்கு ஏற்படுகின்றது.
கலாநிதி துரை மனோகரன் நமது மொழி, கலை இலக்கியம், பண்பாடு, நாட்டு அரசியல், சமுதாயத்தின் அசைவுகள் முதலியவற்றையெல்லாம் மனதிற்கொண்டு, இந்தப் பத்தியை எழுதுகிறார் என்பது தெரிகிறது. திறமைகள் எங்கு வெளிப்பட்டாலும் அவர் அவற்றைப் பாராட்டுகிறார். சாதனைகள் எட்டப் பட்டாலும்
எத்துறையில்
அவற்றைப் புரிந்தவர்களைப் போற்று
கிறார். தவறுகள், சமூக அநீதிகள் என்பனவற்றைச் சுட்டிக்காட்ட அவர் தவறுவதில்லை. மானுட நேயம் அவரது எழுத்தின் அடிநாதமாக விளங்குகிறது.
கலாநிதியவர்கள் இந்தப் பந்தி எழுத்தில் கையாளும் உத்திகள் எடுத்துக் கொண்ட பொருளின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. அவர் சில விடயங்களை, தேவை நோக்கி, பூடகமாகவே சொல்லுகிறார். மற்றும் சிலவற்றை எள்ளல் கலந்த நடையிலே எழுதுகிறார். "எழுதத் தூண்டும் எண்ணங்கள்” ஞானத்துக்கு
வலுவூட்டும் பத்தி. இதை வாசகர்கள்
விரும்பிப் படிப்பார்கள் என்பது உறுதி
நேற்று - இன்று - நாளை
அந்தனி ஜீவா, ‘நேற்றைய கலைஞர்கள்’ என்னும் ஒரு தொடர் கட்டுரையை ஞானம் இதழ்களில் எழுதியிருக்கிறார். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், மலையகம், கொழும்பு ஆகிய இடங்களிலே பிரபலமாயிருந்த நடிகர்களையும் நாடகத் தயாரிப்பாளர் களையும் இக்கட்டுரைகளில் மீண்டும் நாம் சந்திக்கிறோம். அந்தனி ஜிவா, திரும்பிப் பார்க்கிறேன்’ என்னும் மற்றொரு தொடர் கட்டுரையில், கலை இலக்கியத் துறை சார்ந்த தம்முடைய அனுபவங்களைச் சொல்கிறார். ஜீவா தருகின்ற இந்தச் செய்திகளில் எங்கள் முந்திய சந்ததிக் கலைஞர்களாகிய சுஹைர் ஹமீத், இராஜேந்திரம் மாஸ்ரர், ஏ. ரகுநாதன், நடிகை ஜெயகெளரி முதலியவர்களது திறமைகளும் கலை யுலகப் பணிகளும் பாராட்டப் படுகின்றன. ‘இலக்கியப் பணியில் இவர்’ என்னும் தொடரை ந. பார்த்திபன் ஞானம் இதழ்களில் எழுதி வருகிறார். இதுவரை பதினேழு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இன்று ஈழத்திலே தமிழிலக்கியப் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெரு மக்களை இக்கட்டுரைகள் வாசகருக்கு அறிமுகம் செய்கின்றன. இவர்களது அறிவுப் பரப்பு, தமிழ்ப் பணிகள், இலக்கியப் படைப்புகள் முதலிய முக்கியமான விபரங்களை யெல்லாம் திரட்டி, மனங்கொள்ளும் வகையில் தருகிறார், பார்த்திபன்.
அடுத்ததாக, 'ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள்’ என்னும் தொடர் நமது
ஞானம் பொன் மலர்
கவனத்தைக் கவருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியப் பண்ணையில்
S5

Page 30
தோன்றிவரும் புதிய சந்ததியை - இளம் பயிரை - ஞானம் வாசகராகிய நாம் இக்கட்டுரைகளில் சந்திக்கிறோம். “நமது மறுமலர்ச்சி கண்ட இலக்கியக் குடும்பத்தின் ஆறாவது சந்ததி' என, செங்கை ஆழியான் பெருமையுடன் இவர்களை அறிமுகம் செய்கிறார். இவர்களது கல்விப் பலம், இலக்கிய நாட்டம், இலக்கிய ஆக்கங்கள் என்பவை இக்கட்டுரைகளில் தரப்படுகின்றன. செங்கை ஆழியான், அன்புமணி, ஏ. இக்பால் மூவரும் இந்த இளஞ்சந்ததியை நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். இதுவரை 12 பேரை இத்தொடரில் கண்டு கொண்டோம்.
( Gun Galo காட்டப்பட்டெ ‘நேற்றைய கலைஞர்கள், இலக்கியப் பணியில் இவர் கள்', 'ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் என்னும் etyp Görgy) கட்டுரைகளையும் நிரைத்து வைத்து, நேற்று - இன்று - நாளை என நோக்கும்போது, ஞானம் சஞ்சிகையினது பணியின் இலக்குப் புலப்படுகிறது
Uஅல்லவா! ار
பலவகைக் கட்டுரைகள்
ஈழத்தமிழரது வாழ்வியலையும் சிந்தனைகளையும் ஞானம் இதழ்களில் வெளிவந்திருக்கும் கட்டுரைகள் முக்கி யமாக எடுத்துச் சொல்லுகின்றன. தென்னிந்தியாவை நமது இலக்கியச் சிந்தனையின் மையமாகக் கொண்டிருந்த நமது முன்னைய எண்ணப் பாங்கு ஞானம் சஞ்சிகையில் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. ஈழத்து இன்றைய அறிவுப்புலம் இங்கே விரிவாக எடுத்துப் பேசப்படுகிறது. கைலாசபதி பதித்த இலக்கியத்தடம், கைலாசபதியின் வீரயுகப் பாடல்கள் பற்றிய ஆய்வு என்னும் இரண்டு கட்டுரைகள் கைலாசபதியின் ஆய்வுத் திறனைக் கூறுகின்றன. இவை தவிர, பேராசிரியர் சிவத்தம்பியின் பன்முக ஆய்வு, பேச்சுத் தமிழ்ப் பிதாமகர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, ஈழத்துப் பூராடனாரது இலக்கியப் பணி, தமிழ்ப் பாரம்பரியத்தில் கல்வி, தமிழ்ச் சூழலில் அறிவுத் தேடல், ஈழத்து நூல் வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டு களின் பங்களிப்பு என்னும் கட்டுரைகளும் சிந்தனைக்கு விருந்து ஊட்டுவனவாக அமைந்திருக்கின்றன. எமது படைப் பிலக்கிய முயற்சிகளுக்கு ஊட்டமளிக்கத் தக்கவையாக இலங்கை இலக்கியத் திறனாய்வின் ஆழக்குறைவும் கனதி வீழ்ச்சியும், திறனாய்வு நெருடல்கள், ஏ. யதீந்திராவின் ‘இலக்கியத்தில் பின் நவீனத்துவம், நிலாந்தனின் படைப் பாக்க முயற்சி’ என்னும் கட்டுரைகள் அமைந்துள்ளன.
ஞானம் கட்டுரைகளில் சில நமது கலைத்துறை சார்ந்த சிந்தனைகளை நமக்குத் தருகின்றன. இவற்றுள் யதீந்திரா எழுதிய ‘எங்களுக்கொரு சினிமா வராமை குறித்து. என்னும் கட்டுரை குறிப்பிடத்தக்கது. இது தவிர, மட்டக்களப்புப் பிரதேச நாடக வளர்ச்சி, சமயச் சடங்குகள், தமிழ்ச் சினிமா ரசனை, இலங்கைத் தொலைக்காட்சி ஊடகம் என்பனவும் நமது கவனத்தைக் கவருகின்றன.
56
ஞானம் - ஜூலை 2004

கலாநிதி எம். எஸ். எம். அனஸ், 1883 - கொட்டஹேனக் கலவரமும் சமய எழுச்சிகளும்' என்னும் கட்டுரையை ஞானத்தில் தந்திருக்கிறார். இது ஒரு வரலாற்று ஆவணமாக அமைந் திருக்கின்றது. இனக்கலவரம் நமது சமூகத்தைப் பீடித்த பரம்பரை வியாதி போலும் தவறாமல் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது.
உரைகல் - நெற்றிக் கண்
நூல் மதிப்பீடு கலை இலக்கியத் துறைகளில் முக்கியமான ஒர் அங்கம். தங்கத்தை உரைத்துப் பார்த்து அதன் மாற்றைக் கணித்து அறிவது போன்ற பணி. படைத்த இலக்கியத்தை வெளியிடுவது மாத்திரமன்றி, அதன்
தரத்தைக் கணித்துக்கூறி, படைப் பாளியை இலக்கிய சஞ்சிகைகள் நெறிப்படுத்தவும் வேண்டும். இந்தப்
பணியை ஞானம் சஞ்சிகை தொடர்ந்து செய்து வரக் காண்கிறோம்.
ஞானத்தில் நெற்றிக் கண்’ என்னும் தலைப்பிலே நக்கீரன் விமர்சனம் செய்து வருகிறார். புதிய நூலகம்' என்னும் பகுதியில் நூல் அறிமுகக் குறிப்புகள் வருகின்றன. இவை தவிர, ஒவ்வொரு நூலுக்குத் தனியான விரிவான விமர்சனங்களும் ஞானத்தில் அவ்வப் போது எழுதப்படுகின்றன. இவற்றுள்
நெற்றிக்கண் பகுதியில் நக்கீரன் நூல்களின் தரத்தைக் கணிக்கும்முறை நன்றாக இருக்கிறது. அவரது
பார்வையில் நுணுக்கமும் நிதானமும் வெளிப்படுகின்றன. சொல்ல வேண்டி யவற்றைப் பக்குவமாக, படைப்பாளியின் ஊக்கத்தை மேம்படுத்தும் நோக்கில்
கூறிச் செல்கிறார். நக்கீரன் அல்லாத மற்றும் சிலருடைய விமர்சனங்களும் இந்தப் பகுதியில் வருகின்றன. அவற்றுட் சில, நூலின் பொருட் பரப்பினுள் ஆழ்ந்து நோக்காமல், வெளியே நின்று நுனிப்புல் மேய்வது போல இருக்கின்றன. இத்தகைய மதிப்புரைகளோ, விமர் சனங்களோ தவிர்க்கப்பட வேண்டியவை. நூல் விமர்சனம் என்பது படைப் பாளியையும் வாசகனையும் சந்திக்க வைக்கும் பாலம். இந்தப் பாலம் பலமானதாக இருத்தல் வேண்டும்.
ஞானம் - அட்டைப்படச் சித்திரங்கள் பற்றி ஒரு அவதானிப்பு :
ஞானம் இதழ்களின் முகப்புப் படங்கள் நவீன ஓவிய அமைப்பில் இருக்கின்றன. நவீன ஒவியங்களுக்குப் பெரும்பாலும் விளக்கக் குறிப்புத் தரப்படுவதில்லை. அச்சித்திரங்கள் உணர்த்தும் பொருள் பார்வையாளனது தேடலுக்கே விடப்படுகிறது. ஆயினும், இங்கேயுள்ள சித்திரங்களின் உள்ளடக் கத்தை வாசகர் இலகுவில் புரிந்து கொள்வதற்காக இவற்றுக்குச் சுருக்க மான தலைப்பு அல்லது குறிப்பு எழுதப்படுவது நல்லது.
படைப்பாளிகளுக்குப் பாராட்டு
ஈழத்துத் தமிழ்த்துறை சார்ந்த படைப்பாளிகளுக்கும் சான்றோர்க்குப் பேரும் புகழும் கிட்டிய போதெல்லாம் ஞானம் மகிழ்ச்சிகொண்டு அவர்களைப் பாராட்டியிருக்கிறது. பேராசிரியர் கா.சிவத்தம்பியவர்களுக்குத் தமிழக அரசு திரு. வி. க. நினைவுப் பரிசினை 2000 ஆவது ஆண்டு வழங்கி அவரைக்
ஞானம் பொன் மலர்
57

Page 31
கெளரவித்தது. ஒரு இலட்சம் இந்திய ரூபாவும் தங்கப் பதக்கமும் விருதும் உள்ளடக்கிய பரிசு, அது இந்த அரிய பெரிய நிகழ்வினை எடுத்துக் காட்டி, பேராசிரியரை வாழ்த்தி ஞானம் ஆசிரியத் தலையங்கம் எழுதியிருக்கிறது.
இலங்கை அரச அமைப்பான கலைக்கழகம் நாட்டின் சிறந்த படைப்பாளிக்கு வழங்கும் அதிஉயர் விருது 'சாகித்திய இரத்தினம் என்பது. இந்த விருது தமிழ்ப் படைப்பாளி களிடையே முதன் முதலாக நமது மூத்த எழுத்தாளர் வரதருக்கு 2002இல் வழங்கப்பட்டது. இந்த உயர் கெளரவம் பெற்ற வரதரை ஞானம் வாழ்த்தி எழுதி, அவருடன் நடத்திய நேர்காணலையும் வெளியிட்டது.
க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள் அறுபது, ஆண்டுகளுக்கு மேலாக நமது இலக்கியத்துறையில் எழுதிக் கொண்டிருப்பவர். சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வுக் கட்டுரை, பாடநூல் எனப் பலதுறையிலும் சாதனை புரியும் மூத்த எழுத்தாளர். இவர் கலைக்கழகம் வழங்கும் அதியுயர் விருதான ‘சாகித்திய இரத்தினம்’ விருதினை 2003ஆம் ஆண்டு பெற்றார். இதனைப் பாராட்டி தனது மகிழ்ச்சியை ஞானம் வெளியிட்டிருக்கிறது.
கம்பவாரிதி થ્રિી. ஜெயராஜ் அவர்களுக்குத் தமிழகத்தில் இரு பெரும் விருதுகள் கிடைத்தன. இவை ஜெயராஜினது இலக்கியப் புலமைக்காகவும் தமிழ்ப் பணிக்காகவும் வழங்கப்பட்ட விருதுகள். இதனைப் பாராட்டி எழுதிப் பெருமை கொண்டது.
$ 6,0) 6ს)
ஞானம்
அஞ்சலி
இலக்கியப் படைப்பாளியாகிய ச. பஞ்சாட்சர சர்மா, கலைத்துறை வித்தகர் பிரம்மழரீவீரமணி ஐயர் என்னும் இரு பெருமக்களும் இறைவனடி சேர்ந்தபோது ஞானம் அவர்களது அருமை பெருமைகளை எடுத்துக் கூறி, அஞ்சலி செலுத்தியிருக்கிறது. பண்டிதர் பஞ்சாட்சர சர்மா தமிழ், சமஸ்கிருதம் என்னும் இரு மொழிகளிலும் பாண்டித் தியம் பெற்றவர்; ஈழத்தில் மறுமலர்ச்சி இலக்கியக் குழுவிலே இயங்கி இலக்கியம் படைத்தவர் என்பதையெல்லாம் எடுத்துக் காட்டியிருக்கிறது.
பிரம்மழரீ வீரமணி ஐயர் ஒரு புகழ் பெற்ற சாகித்திய கர்த்தா, கர்நாடக இசை வித்துவான்; இசையமைப்பாளர்; இசை நாடகங்களை அரங்கேற்றியவர் என அவருடைய திறமைகளை ஞானம் நயந்து வியந்து எழுதியது.
சிறப்பிதழ்கள் ஞானம் சில சிறப்பிதழ்களை மலர்த்தியிருக்கிறது. இவற்றுள் இரண்டு ஆண்டு மலர்களாகும். ஆண்டு நிறைவைக் குறிக்கும் இதழை ஆண்டு மலர் எனக் கொள்ளாது, புதிய ஆண்டின் முதலாவது இதழே இங்கு ஆண்டு மலராகக் கொள்ளப்படுவதைக் காண்கிறோம். இவ்வகையில் ஞானத்தின் 13ஆவது இதழ் இரண்டாவது ஆண்டு மலராகும். ஒரு நேர்காணல், மூன்று சிறுகதைகள், மூன்று கட்டுரைகள், ஐந்து
கவிதைகள் என்பனவற்றுடன் 48 பக்கங்களில் இம்மலர் அமைந் திருக்கிறது.
58
ஞானம் - ஜூலை 2004

ஞானத்தின் 25ஆவது இதழ் மூன்றாவது ஆண்டுச் சிறப்பிதழாகும். பக்கம் 84. பேராசிரியர் மா. தில்லை நாதனுடன் நடத்திய நேர்காணல்,மூன்று சிறுகதைகள், ஏழு கட்டுரைகள், பத்து கவிதைகள் என்பன இதில் உள்ள முக்கிய அம்சங்கள். ஞானம் சஞ்சிகை ஒன்றே இன்று ஈழத்தில் மாதம் மாதம் ஒழுங்காக வரும் சஞ்சிகையாக இருக்கிறது’ என்னும் மகிழ்ச்சியை ஆசிரியர் இந்த இதழிலே வாசகர் களுக்குத் தெரிவிக் கிறார்.
ஞானத்தின் 37ஆவது இதழ் நான்காவது ஆண்டுச் சிறப்பிதழ் என்ற பெயருடன் வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வரவில்லை. ஒவ்வொரு புதிய ஆண்டிலும் ஞானத்தின் உள்ளடக் கத்திலும் உருவ அமைப்பிலும் ஏற்படும் வளர்ச்சி இங்கும் காணப்படுகிறது.
ஆண்டு மலர்கள் தவிர வேறு மூன்று மலர்களையும் இங்கு காண்கிறோம்.
(1) எழுத்தாளர் கே. கணேஷ் சிறப்பு.
மலர் (இதழ் 31): எழுத்தாளர் கணேஷினது எழுத்துத்துறை சார்ந்த ஆளுமையையும் சாதனைகளையும் பல கோணங்களின் நோக்கும் ஐந்து கட்டுரைகள் இதில் தி. ஞானசேகரன், முதுபெரும் எழுத்தாளர் கே. கணேஷ் என்னும் தமது கட்டுரையில் கணேஷ் பற்றிய முக்கியமான விபரங்களையெல்லாம் தந்திருக்கிறார். (2) ஆஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா - சிறப்பிதழ், இதழ் (45) : பாலசிங்கம் பிரபாகரன், லெ. முருகபூபதி ஆகியோருடன் நடத்திய நேர்காணல்கள் இந்த
உள்ளன.
மலரில் முக்கிய அம்சமாக உள்ளது. மற்றும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் களது கட்டுரைகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகள் விரிகின்றன. (3) சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழ் (46) மகளிரது விடுதலை உணர்வும் உரிமைக்குரலும் பத்திரிகை முதலிய மலினப்படுத்தப் படுவதை எடுத்துக்கூறி, அவர்களது இலட்சியங்கள் ஆக்க இலக்கியங்
ஊடகங்களிலே
களில் அர்த்தபுஷ்டியுடன் வெளிக் கொணரப்படல் வேண்டும் என இங்கேஆசிரியர் வலியுறுத்துகிறார். பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் கொண்ட படைப்புகள் பல இதில் உள்ளன.
வாசகர் பேசுகிறார்
வாசகர் பேசுகிறார் என்னும் பகுதி ஞானம் சஞ்சிகையிலே பத்திரிகாசிரியரும் வாசகர்களும் சந்தித்துக் கொள்ளும் அரங்கமாக இருக்கின்றது. ஞானத்தின் உயிர்த்துடிப்பைக் கணித்தறியும் ஸ்தெ தொஸ்கோப் என்றும் இந்த பகுதியைக் குறிப்பிடலாம். வாசகர்கள் ஞானம் இதழ் ஒவ்வொன்றையும் பற்றிய தங்களது கருத்தைத் தயங்காது மனந்திறந்து இங்கே வெளியிடுகிறார்கள். நிதானமும் நடுநிலையும் இங்கே பேணப்படுகின்றன. இது வாசகர்களது கலை, இலக்கிய அறிவையும் ரசனையையும் வளர்ப்பதாக இருக்கிறது. அத்துடன் ஞானம் சஞ்சிகைக்கும் வாசகர்களுக்குமிடையே இதமான, ஏற்படுத்துகின்றது.
6) LT 6T உறவையும்
ஞானம் பொன் மலர்
59

Page 32
ஞானம் இதழ்களில் வெளியான படைப்புகள் சார்ந்த கருத்து மோதல்கள் அவ்வப்போது நடந்திருக்கின்றன. செ. யோகநாதனது நேர்காணல் பற்றிய பேராசிரியர் நுஃமானது கருத்து முரண்பாடு; சமயச் சடங்குகளிலிருந்து நாடகம் தோன்றியது என்னும் கலாமணியின் கருத்துக்கு வாகரை வாணனது மறுப்பு பேராசிரியர் சதாசிவம் பத்தாம் பசலியா என்பதற்கு இரா. வை. கனகரத்தினம் கிளப்பிய எதிர்வினை; பூலோகசிங்கத்தோடு நடத்தப்பட்ட நேர்காணல் பற்றிய சி. சிவசேகரத்தின் கருத்துநிலை; மருதூர்க்கொத்தனது ஆற்றல்கள் செப்பனிடப்படுவதற்கு எஸ். பொ. உதவினாரா என்னும் சர்ச்சை - எனக் கருத்து மோதல்கள் பல கடந்த நான்கு ஆண்டுகளில் இதழ்களிலே பதிவாகியுள்ளன.
மேலே கூறப்பட்டவை தவிர மேலும் இரண்டு சர்ச்சைகளை இங்கே குறிப்பிடல் வேண்டும். அவற்றுள் ஒன்று கம்பவாரிதி ஜெயராஜ்எழுதிய'கிளாக்கர்ப் புத்தி என்னும் படைப்புப் பற்றியது. அவர் படைத்திருப்பது இலக்கியத்துறையில் எந்த வகையைச் சேர்ந்தது என்று வாசகர்கள் தேடினார்கள். அது கதையா, கட்டுரையா, விவரணமா, கதையும் கட்டுரையும் அல்லாத மசாலாவா, கிண்டற் கட்டுரையா என்றெல்லாம் தேடல் நடந்தது. பயனுள்ள சர்ச்சை. இன்று இலக்கிய உலகில் புதுப் புதுத்துறைகள் தோன்றிக் கொண் டிருக்கின்றன. ஜெயராஜின் படைப்பு அப்படியர்ன ஒரு புதிய வகை ஆக்கம் எனக் கொள்ளலாமே. இந்தப் புதிய கன்று இலக்கியக் களத்தில் வேர் விட்டு வளருமானால் அதற்கு ஒரு பெயர் சூட்டிக் கொள்ளலாம்.
ஞானம்
ஞானம் இதழ்களில் காரமாகப் பேசப்பட்ட மற்றொரு விடயம் நாவலர் கந்தபுராணக் கலாசாரம் என்பது. வாகரைவாணன், பூரீ பிரசாந்தன், கே. யதீந்திரா முதலியோர் இதில் பங்கேற்று பயனுள்ள கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள்.
கருத்துப் பரிமாற்றம் நமது அறிவைக் கூர்மைப்படுத்தும். ஆதலால், வாசகர் பேசுகிறார் என்னும் பகுதி ஞானம் இதழ்களில் தொடர்ந்து வெளிவரல் வேண்டும்.
அன்பார்ந்த கலை இலக்கிய நெஞ்சங்களே!
ஞானம் ஆசிரியர் தாம் எழுதும் ஆசிரிய வசனங்களில் இந்தச் சஞ்சிகையின் செயற்பாடுகள் பற்றிக் கூறுவதோடு, தமிழ்க் கலை இலக்கியத் துறை சார்ந்த பயனுள்ள பொதுக் கருத்துக்களையும் முன்வைத்துச் செல்கிறார். இத்துறையில் மாற்றுக் கருத்துக்களைச் செவிமடுப்பதும் மதிப்பதும் சனநாயக முறையில் முக்கியம் எனக்கூறி, அதுவே ஞானம் செல்லும் வழி எனக் காட்டுகிறார். தமிழ் சிங்கள் இலக்கியப் பரிவர்த்தனை நடைபெற வேண்டும்; அது ஒரு வழிப் பாதையாக இருத்தல் ஆகாது என்கிறார். இவ்வாறு பயனுள்ள பல விடயங்கள் கூறப்படுகின்றன. "அன்பான கலை இலக்கிய நெஞ்சங்களே” என அழைத்து அவர் இங்கு எழுதுவன ஞானம் சஞ்சிகைக்கும் வாசகர், படைப்பாளிகள்
ஆகியோருக்கும் இடையே நிலவும் உரிமையுணர்வையும் அன்னியோன்னியத் தையும் காட்டுகின்றன.
"புதிய எழுத்தாளர்கள் பலர் ஞானம் சஞ்சிகைக்கு எழுதுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்குக் களம்
60
ஞானம் - ஜூலை 2004

அமைத்துக் கொடுத்து வளர்த்தெடுப்பது நமது முக்கிய கடமையாகும். ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு புதிய எழுத்தா ளருக்கு இடமளிக்க எண்ணியுள்ளோம் என ஞானம் ஆரம்ப காலத்தில் இனிய செய்தியொன்றை ஆசிரியர் வெளியிட் டிருந்தார். இதன்படி கடந்த நான்கு ஆண்டுகளுள் புதிய எழுத்தாளர்களை ஞானம் வளர்த்தெடுத்திருக்கிறது. இவ்வகையில் ஞானம் பண்ணையில் பத்தனையூர் வே. தினகரன், புத்தளம் சங்கீதா, ஜமுனா, செல். சுதர்சன் ஆகிய கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். சுதர்த மகாராஜன் (கெங்கல்ல), திருமலை வீ. என். சந்திரகாந்தி, ஜமுனா ஆகிய சிறுகதைப் படைப்பாளிகள் தோன்றி யிருக்கிறார்கள். ஞானம் சஞ்சிகைக்கு
அட்டைப்படம் வரையும் ஆனந்தன்
(யாழ்ப்பாணம்), புஸ்பா (மலையகம்)
ஆகியவர்களும் ஞானம் பண்ணையில்
வளர்ந்துவரும் கலைஞர்களே.
ஞானம், வயதில் சிறிய சஞ்சிகை யானாலும் ULL 60f6) பெரிதான காரியங்களைச் செய்கிறது. அவற்றுள் ஒன்று சிறுகதைத் தொகுதி பரிசுத் திட்டம். இத்திட்டத்தில் பரிசு பெற்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை ஞானம் அண்மையில் வெளியிட் டிருக்கிறது.
ஞானத்தின் மற்றைய திட்டம் ஞானம் கலை இலக்கியப் பண்ணை' ஈழத்துக் கலை இலக்கியத் தனித் துவத்தை பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து மேலும் வளஞ்சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த அமைப்பு.
ஞானம், கலை இலக்கியம் பற்றிய தெளிந்த சிந்தனையுடனும் தூரி நோக்குடனும் திட்டமிட்டுச் செயற்பட்டு, வருகின்றது. இதன் வளர்ச்சி - கடந்த நான்கு வருட அறுவடை-ஈழத்துக்கலை இலக்கியத்துறைக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது
தேர்வலம்
அலங்கார வீதியிலே அம்மன் பவனி ஆயிரம் கண்களும் அஸ்தமித்துப் போயினவோ?, 'அடியவள் கேட்கிறாள், ஒய்யாரத் தேரேறி உலாப் போகும் காளிக்கு, பெண்மையைக் காக்க :
நேரந்தானில்லையே இளைஞன் வடமிழுக்கிறான், யுவதியர் தொடை தொட்டு! மெல்லியர் இடை தொட்டு !!
ஆ. புனிதகலா,
வட்டவணை7,
எட்டியுதைக்காமல்
பொருமிச் சிணுங்குகிறாள் - நீர்
முட்டிய கண்களுடன்
புன்னகைத்த தெய்வ நங்கை புதுமொழி கூறுகிறாள் உன் கைவளையல் நொறுக்கி வலிமை பூட்டாத வரை தேரிழுக்கவும் - இந்த ஊர் திருத்தவும் தனி உலாப் போகவும் உன்னால் முடியாது!
ஞானம் பொன் மலர்
61

Page 33
எழுதத் துண்டும் எண்ணங்கள்
கலாநிதி துரை மனோகரன்
வித்தியாசமான பாத்திரங்கள்
தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, நாற்பதுகளில் தமது நடிப்புத்திறமையால் திரையுலகிற் செல்வாக்குப் பெற்றுத்திகழ்ந்தவர், பி.யூ, சின்னப்பா. ஐம்பதுகள் முதல் எழுபதுகள் வரை தமது அபாரமான நடிப்பாற்றலால் உச்சத்தில் நின்றவர், சிவாஜி கணேசன். பின்னரும் அவர் நடித்தபோதும் ஒருசில திரைப்படங்களைத் தவிர, அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய படங்கள் அமையவில்லை. இந்தியத் திரையுலகிலேயே மாறுபட்ட பல்வேறு பாத்திரங்களைத் தாங்கி நடித்த நடிகர் சிவாஜி கணேசன் ஒருவரே. ஆங்காங்கு மிகை நடிப்புக் காணப்பட்டாலும் பாத்திரத்துக்கு ஏற்றமுறையில் தமது நடிப்பாற்றலை அவர் வெளிக்கொணர்ந்தார்.
சிவாஜி கணேசனை அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் கமலஹாசன். பதினாறு வயதினிலே படத்தில் அவர் ஏற்றிருந்த சப்பாணி பாத்திரம், இந்தியன் திரைப்படத்தில் அவர் தாங்கிய முதியவர் பாத்திரம் உட்படச் சில திரைப்படங்களில் அவர் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று, தமது நடிப்பாற்றலைப் புலப்படுத்தியுள்ளார். சில திரைப்படங்களில் பாத்திரம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதில் மட்டும் கருத்துச் செலுத்திக் கதையம்சத்தில் போதிய அக்கறை காட்டாத நிலையும் அவருக்கு ஏற்படுவதுண்டு.
அவருக்குப் பின் விக்ரம் அசாத்தியத்துணிவோடு சில படங்களில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று, தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வந்துள்ளார். அவர் ஏற்ற சில பாத்திரங்களில் அவரது நடிப் புத் திறமை நன்கு வெளிப் படு கின்றபோதிலும், அவருக்கான பாத்திர வார்ப்புகள் சிலவேளைகளில் அவரது உழைப்பை வீணாக்கி விடுகின்றன. உதாரணமாக, பிதாமகன் திரைப் படத்தில், அவரது பாத்திரவார்ப்பின் குறைபாட்டினால், அவரது அபார உழைப்பு வீணாகி விடுகின்றது. நம்பகத் தன்மையற்ற பாத்திரமாக அது அமைந்து விட்டது. இது நடிகரின் குறையன்று; இயக்குநரின் தவறேயாகும்.
பிதாமகன் திரைப்படத்திலிருந்து சூர்யாவின் நடிப்புத்திறன் குறிப்பிடத்தக்க அளவு வெளியாகத் தொடங்கியிருந்தது. அதன் ஒரு வளர்ச்சிக்கட்டத்தை, அண்மையில் வெளிவந்த பேரழகன் படம் சிறப்பாக இனங்காட்டுகின்றது.
62 ஞானம் - ஜூலை 2004
 

தந்தை சிவகுமார் ஒரு பண்பட்ட நடிகராகத் (அவரது இயல்பும்
அவ்வாறுதான்) திரையுலகில் தம்மை
எப்போதும் இனங்காட்டிவந்துள்ளார். சூர்யா தந்தைக்கும் மேலாகத் தமது முழுத்திறமையையும் பேரழகன் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இரு பாத்திரங்களை அத் திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த போதிலும் குரூபியான கூனன் பாத்திரத்தில் நடிப்பில் அசத்தி யிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் இனி னொரு வித் தியாசமான பாத்திரமாக அது அமைந்துள்ளது. அந்தப் பாத்திரத்தை வேறொருவர் செய்திருந்தாலும், அந்தளவுக்குச் சித்தித்திருக்குமா என்று கருதக்கூடிய அளவுக்குச் சிறப்பாகவும், நம்பகத் தன்மை வாய்ந்ததாகவும் அதனை அவர் செய்திருக்கிறார். அப்பாத்திரத் திற்கான ஒப்பனையிலும் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இயக்குநரும் இயன்றவரை தமது பொறுப்பை நன்றாக நிறைவேற்றி யிருக்கிறார். இப்பாத்திரத்தில் முதலில் நடிப்பதற்குப் புகழ்பெற்றுவரும் ஓர் இளம் நடிகரை அணுகியதாகவும், அவர் இப் பாத்திரத்தில் தான் நடித்தால், தமது ‘இமேஜ் போய்விடும் என்று கருதி, நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. இமேஜைப் பார்த்து நடித்த நடிகர்கள் திரையுலகில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய தில் லை. வித் தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்தவர் கள்தான் சாதனையாளர்களாகத்
ஏன் இந்தக் கூத்து?
சிறுவயதில் குழ நீ தைப் பிள்ளைகளைத் தாய்மார் அல்லது பாட்டிமார் மடியில் வைத்துக்கொண்டு, “கூத்துக் கூத்து கும்மட்டிக் கூத்து” என்றோ, அல்லது இதுபோலவோ பாடி அசைந்து, அவர்களையும் ஆடச் செயப் வார்கள் . இவற்றை யெல்லாம் மறந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. ஆனால் , அண்மையில் கொட்டகையொன்றில் நடந்த கூத்து வாழ்நாளில் மறக்க முடியாதது. இனிமேல் நகைச்சுவைக் காட்சிகளைத் திரைப்படங்களில்தான் பார்த்து மகிழவேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை. இதற்கென்று இருக் கினி ற கொட் டகையில தாராளமாக இவற்றைப் பார்த்து இரசிக்கலாம். தர்மத்தை உபதேசிக்க வேணி டிய குருக் களர் மார் கொட்டகையில் பட்ட அவஸ் தைகளை, அவர்களின் முன்னோர் களை இந்நாட்டுக்கு முன்னொரு காலத் தில் அனுப் பிவைத் த அயல் நாட் டில் அரசோ ச் சிய சக்கரவர்த்தி உயிரோடு இருந்து பார்த்திருக்க வேண்டும். கலிங்கத்துப் போரில் இடம்பெற்ற உயிரிழப் புகளைக் கணி டு, புத் தரின் மார்க்கத்தில் செல் லத் துணிந்த அச்சக்கரவர்த்தி, கொட்டகையில் நடைபெற்ற அகோரங்களைக் கண்டிருந்தால், தமது தவறுக்காகக் கண் ணிர் விட்டு அழுதிருப் பார் .
திகழ்கின்றனர். சூர்யாவும் எதிர் மகாபாரதத்தில் இடம்பெற்ற துகிலுரி காலத்தில் மேன்மேலும் சாதிப்பார் காட்சி மணி டும் ஒருமுறை என்று எதிர்பார்க்கலாம்.
ஞானம் பொன் மலர் 63

Page 34
அரங்கேறியது. தெருச்சண்டைகளும் அக் கூத்துக் கொட்ட கைகளில் இடம்பெற்றன. எந்தளவுக்குத் தமது தரத்தைக் கீழ் இறக்கமுடியுமோ அந்தளவுக்குக் கூத்துக்கொட்டகை நடிகர்களில் ஒருசாரார் நடந்து கொண்டனர். ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்தர் எப்போதோ சொல்லிவிட்டார். ஆனால், அவரையும், தர்மத்தையும் வசதியாக மறந்து சங்கத்தை மட்டுமே தமது வயிற்றுப்பிழைப்புக்காகக் கொணர் டுள்ள அவரது சிஷய கோடிகள், அரசியல் ஆசையினால் படும் அவஸ்தைகள் சொல்லில் அடங்கா. பேரினவாதத்தின் உச்சியில் நிற்கும் குருக்கள்மார் நாட்டையும் கெடுத்து, தங்களையும் கெடுத்துக் கொள் கிறார் கள் . "கெடுகுடி சொற்கேளாது" என்பது இவர்கள் விடயத்தில் மிகவும் பொருந்தும். குருக்கள் மார் உணர் மையான தர்மவான்களாக இருந்தால் இந்நாடு ஒரு தர்மதுவீபமாக விளங்கும். அதற்கு நாடு கொடுத்துவைக்க வில்லை.
இன்னொரு கூத்து கந்தப்பளை தொடர் பானது. அணி மையில் கந்தப்பளை விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் வடக்கு - கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதி நிதிகளும் , மலையகக் கட்சி யொன்றைச் சார்ந்த பிரதிநிதிகளும் தமது எதிர்ப்பைக் காட்டுமுகமாகக் கறுப்புப் பட்டியணிந்து கலந்து
கொண்டனர். ஆனால், மலையகத்தின் அரசியல் வாதிகளுள் ஒருசாரார் கந்தப்பளை விவாதத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதை ஒரு சாதாரண விடயம் போலவே அவர்கள் கருதிக் கொண்டனர் போலத் தெரிகிறது. அப்போதைய நிலையில் தமக்கு ஏதாவது மந்திரி பிரதானி பதவிகள் கிடைக்கலாம் என்ற நப்பாசை சிலருக்கு இருந்தது. அந்த ஆசையில் அந்தவேளையில் அவர்கள் அவ்வாறு நடந்து கொண். டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவர்கள் சார்பாக ஒருவர் மட்டுமே விவாதத்தில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. மலையகப் பிரச்சினைகள் மலையகத்திற்கு வெளியே உள்ளவர்கள் யாரும்
தொடர்பாக,
சம்பந்தப் படக் கூடாது என்று கருதினால் அதைப்போன்ற கவலைக் குரிய விடயம் வேறு எதுவுமில்லை. தமிழருக்கு எங்கு எந்தப் பிரச்சினை நடந்தாலும், தமிழ்மக்கள் அனைவரும் ஒருமித்துக் குரல் எழுப்பும்போதுதான், அந்தக் குரல் மாறிமாறிவரும் செவிட்டு அரசாங்கங்களின் காதில் ஓரளவாவது விழும். தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இத்தகைய ஒற்றுமையுணர்வு பலப்படவேண்டும். யாருக்கு எது நடந்தாலும் தட்டிக் கேட்கும் திராணி இருதரப்பாரிடமும் இருக்கவேண்டும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு" என்ற உணர்வு வேண்டும்.
64
ஞானம் - ஜூலை 2004

ΌπΙά60Fη Τεθωρηκ எழுத்தாளருக்குக் கூறும் புத்திமதி
சர்வதேச மட்டத்தில் இலக்கிய உலகில் பிரபல்யமானவர், பெரிதும் பேசப்படும் இலக்கிய கர்த்தா பெர்னாட்ஷா. எதனையும் நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் நோக்குவார். அவரது கருத்துக்கள் சுவாரஸியமாக இருப்பதுடன் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். அன்னாரின் பிரபல்யமான ஒரு நகைச்சுவை இது :- இஸ்டோரா டங்கன் என்ற புகழ்பெற்ற அழகி ஒருமுறை பெர்னாட்ஷோவைக் கண்டபோது தான் அழகில் சிறந்திருப்பதாலும் ஷா அறிவில் சிறந்திருப்பதாலும் இருவரும் மணந்தால் அழகிலும் அறிவிலும் இணையற்ற குழந்தை பிறக்கும் எனக் கூறினாளாம். அவள் வாய் மூடுவதற்கு முன்பே "ஆனால் என்னுடைய அழகும் உன்னுடைய அறிவும் அந்தக் குழந்தைக்கு அமைந்து விட்டால் என்ன செய்வது?" என்று கேட்டு அவளைத் திணறடித்து, அந்த அழகி அறிவற்றவள் என்பதையும் சூசகமாகத் தெரிவித்து விட்டார் பெர்னாட்ஷோ.
பெர்னாட்ஷோ ஒருதடவை எழுத்தாளர்களுக்குச் சில புத்திமதிகள் சொன்னார். 'உன் மகனோ மகளோ இலக்கிய கர்த்தா ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டால் ஊக்கமூட்டாதே தடுத்துவிடு' என்றும் “கலைகளில் அபார ஈடுபாடு கொண்டவளாக உன் மகள் இருந்தால், அவளை கலைவாசனை கொஞ்சமும் இல்லாத ஒரு வியாபாரிக்குக் கல்யாணம் பண்ணிக்கொடு” என்றும் கூறினாராம்.
எதற்காக பெட்னாட்ஷோ இவ்வாறு கூறினார்?
பழக்க தோஷமும் பட்டறிவு அனுபவத்துணையும் கொண்டு தந்தையின் தொழிலைப் பிள்ளைகள் தொடர்ந்து வாரிசு போலச் செய்வதையும், இக்காரணத்தால் அத்தொழில் பிரபல்யம் அடைவதையும் காண்கிறோம். உதாரணத்திற்கு பிரபல்ய வர்த்தகர்களைக் கூறலாம். தந்தையைத் தொடர்ந்து தனயன் புகழ்பூத்த வழக்கறிஞர்களாகத் திகழ்வதையும் காண்கிறோம். இவை போன்ற தொழிலாக படைப்புத் தொழில் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே பெர்னாட்ஷோ இவ்வாறு கூறினாரோ?
தந்தை தான் செய்யும் தொழிலைப் பிள்ளைகள் செய்வதைச் சில அக புறக் காரணிகளால் விரும்புவதில்லை. ஊக்குவிப்பதில்லை. இது ஒரு யதார்த்த நிலை. இருந்தும் சில பிள்ளைகள் தந்தையின் கருத்தை உதறித்தள்ளி, எதிர்ப்புக்களைத் தாண்டி இலக்கியவாதிகளாக மிளிர்வதுண்டு. ஆனால் அவர்களது படைப்பாற்றல் சத்திய தரிசனமாக, போலித்தனமற்றதாக காத்திரமானதாக இருக்கும். இதனை உட்கருத்தாகக் கொண்டுதான் இவ்வாறு கூறினாரோ?
ஞானம் பொன் மலர் 65

Page 35
ஒரு கலை இலக்கியவாதியின் ஈடுபாட்டால், தாக்கத்தால் அவரது உறவினர் கலை இலக்கியவாதியாக உருவாவது, இருவரது குடும்ப உறவின் ஊடாட்டத்தால் படைப்பாற்றல் உருவாக் கப்படுவது போலித்தனம் கொண்டது. அடைவதற்கு வலிந்து தேடிக்கொள்ளும் ஒரு முயற்சி எதிர் நீச்சலடிக்க விட்டு தேறுபவர்களே தக்கார் என்ற ஆழ்ந்த கருத்தைப் புதைத்தே ஷோ அவ்வாறு கூறியிருக்க வேண்டும். கவிஞர் வைரமுத்து தனக்குப்பின் தனது மகன் கபிலர் வாரிசாக வரவேண்டும் வலிந்து எடுக்கும் கவிஞர்களிடத்து
பிரபல்யம்
என்பதற்காக முயற்சிகள் சக வெறுப்பையும் விமர்சனத்தையும் அவரது ஆளுமையில் அருவருப்பான உணர்
வினை ஏற்படுத்தின என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது
பொருத்தமானது.
புனை கதை இலக்கியம்: அறிவோம், கற்போம், படைப்போம்.
செங்கை ஆழியான்
எழுதும் தொடர் அடுத்த இதழில் ஆரம்பமாகிறது.
கலை இலக்கிய உலகில் படைப் பாற்றல் ஒருவருக்கு இன்னொருவரின் பாதிப்பால் தூண்டுதலால், குருசீஷ உறவால் உருவாகுவதல்ல, இவற்றைக் கடந்து உள்ளத்திலிருந்து வரவேண்டும். தடை உத்தரவு என்னும் தாண்டி வெளிவர வேண்டும் என்ற மறைபொருளைப் பொதித்து இலக்கியவாதிகளுக்கு ஷோ அந்தப் புத்திமதியைக் கூறினாரோ? உள்ளம் கனிந்து குருவை மிஞ்சிய சீஷர்களும், தந்தைக்கு இணையான புதல்வர்களும் இருக்கிறார்கள் எழுத் துலகில். உதாரணத்திற்கு ஒன்றுமஹாகவி சேரன். உண்மையில் பெர்னாட்ஷோவின் கருத்துக்கள் சிந்திக்கச் சிந்திக்க ஆழமான உட்கருத்துக்களை சுழியோடி முத்துக் குளிக்க வைக்கும் ஆற்றல் கொண்டன.
கனிந்து
தீக்குளிப்பைத்
66
ஞானம் - ஜூலை 2004
 
 
 
 
 

கருத்துச்
ஒற்றுமை
கேட்டவனும் சுடுகிறான்.
மறுத்தவனும் சுடுகிறான். இருவர் கையிலும் துப்பாக்கி.
பிராந்திய வல்லரசு
திறந்த முதலையின் வாய்க்குள் இரைதேடும் சிட்டுக்குருவி.
நாத்திகன்
கண்மூடி ஒளி மறுக்கும் கைக்குழந்தை.
Ց5fiյԿ
தாவும் மனம் தளர்ந்த அறிவு கொதிக்கும் உடல் குமுறும் உணர்வு எல்லைகள் தாண்ட ஏங்கும் நெஞ்சம் தடுக்கும் மனமதில்.
blušFarmfl
கடப்பாறையால் பிளவுண்டு கணப்பொழுதில் கதியிழந்த, சிலையாக விரும்பி சிற்றுளி தேடிய கருங்கல்.
பரீட்சை
மனனத் தரம் காணும் உரைகல்.
சிதறல்கள்
(கம்பவாரிதி இ. ஜெயராஜ்)
கதாநாயகி
துகிலுரியும் வில்லனின் கைபட்டு
துடிதுடிக்கும் அரைநிர்வாணி.
அரசியல்வாதி
நல்வழி செல்லாது நாட்டைப் பாதுகாப்பவன்.
விஞ்ஞானம்
இன்றைய மெய் நாளைய பொய்.
களமம்
சூக்குமச் சுடர். உள்ளிருந்து வதைக்கும் எதிரி. பிரிவில் பிறக்கும் நெருப்பு. கூடப் பிறக்கும் குளிர் நினைவிலும் சுகம்தரும் நிழல். மண்ணைப் பொன்னாக்கும் மந்திரம்.
சமரச சங்கீதம்.
ஆணாதிக்கம்
குத்தும் மீசையால் குமுறும் உதடுகள். பற்றும்வலிய கரத்தில் பதைபதைக்கும் மென்முலைகள். ஆண்பாரம் தாங்கிய அடிவயிறு.
ஞானம் பொன் மலர்
67

Page 36
-இலக்கியன் பதில்கர்ஐ
கேள்வி : கம்பன், மஹாகவி புதுவை ஆகியோரை வெறுமனே யாப்புக்காகச் சொல்லுப்போடுகின்ற செய்யுள்காரர் வரிசையில் வைத்திருக்கிறாரே விமர்சகர் மு. பொன்னம்பலம் தினக்குரலில் அவர் கட்டுரையைக் கவனித்தீர்களா?
எஸ். மயில்வாகனம், சாவகச்சேரி பதில் : படித்தேன், பரிதாபப்பட்டேன்.
அங்கீகரிக்கப்பட்டவர்களை அசிங்கப்படுத்துவதன் மூலம் தங்களை அடையாளப் படுத்த சிலர் விரும்புகின்றனர். மு. பொன்னம்பலமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார். சாதாரண மனிதனொருவனும் மு. பொ. சொன்ன மூவரது “குறையுள்ள” கவிதைகளில் ஒன்றையேனும் தெரிந்து வைத்திருக்கிறான். என்ன செய்வது? மு. பொவின் “நிறைவான” கவிதைகளுக்கு ஏனோ அந்த அங்கீகாரம் இல்லை. கவலை வரத்தான் செய்யும். கவலை பின் கோபமாக மாறும். கோபத்தை வேறெப்படித்தான் தீர்ப்பது. தனக்குத்தெரிந்த வகையில் மு. பொ. தீர்த்திருக்கிறார்.
ஒர் ஏழை கட்டிய வீட்டில் கூரையும் சுவரும்தான் இருக்கும். அதில் தவறில்லை. ஒரு செல்வன் கட்டிய வீடும் அதேபோல்தான் இருக்க வேண்டும் என்பதுதான் தவறு. வசதியுள்ளவன் வாழும் தேவையை நிறைவேற்றி, பின் வடிவும் செய்கிறான். அது அவன் வளத்தைக் காட்டுகிறது. இயலாதவன், வசதியுள்ளவனும் தன்னைப்போலவே வளமின்றி இருக்க வேண்டும் என நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
கேள்வி : மட்டக்களப்பில் பத்திரிகையாளர் நடேசன் சுடப்பட்டிருக்கிறார். இன்றைய நிலையில் உளடகத்துறையினர் பற்றித் தங்கள் கருத்து என்ன?
ம. கயிலைநாதன், மட்டக்களப்பு பதில் ஆயுதங்கள் அரசாட்சி செய்யும் இந்த நாட்டில் இனி நடுவு நிலைமையோடு இருப்பதும், எழுதுவதும் சிரமம்தான். கேள்வி : அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து நாடகமும் அரங்கியலும் துறை மாணவர்கள் தமது ஆய்வு முடிவொன்றை இங்கே யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்கள். விரிவுரையாளர்கள் எல்லா மானவர்களையும் சமமாகக் கருதுவதில்லையென்றும் சில வேளைகளில் மாணவர்களது புள்ளிகளை வேண்டு மென்றே வெட்டுகிறார்களென்றும் விரிவுரைகளால் தங்கள் கல்விப்பரப்பு அதிகரிக்கவில்லையென்றும் கூறியிருக்கிறார்கள்!
இச்செய்தி தங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா?
கா. மதிவதனன், நல்லூர்
68 ஞானம் - ஜூலை 2004
 

பதில் துளியளவும் இல்லை.
இது ஊரறிந்த இரகசியம். அருவருக்கும் இவ் அறிவுலக இரகசியத்தை அனைவரும் அறிவார்கள். தடுப்பார் இல்லையென்னும் தைரியத்தால் இப்பிழை தொடர்கிறது.
பூனைக்கு யார் மணிகட்டுவது? தாக்கப்படும் எலிகளும் தாம் பூனைகளாக விரும்பி மெளனம் காத்து வந்தன. எலிகளின் சுயநலமறிந்த பூனைகளுக்கு அபார தைரியம். பின் கேட்கவா வேண்டும், வேட்டைதான். அப்பாவி எலிகள் பல அழிக்கப்பட்டன. அறிவுள்ள எலிகள் அனுசரித்துப் பூனைகளாயின. தொடர்ந்தும் புதிய பூனைகளின் எலிவேட்டை. இவ்வஞ்சலோட்டத்தில் முதன்முதலில் விழுந்திருக்கும் விரிசலே பத்திரிகையில் வந்துள்ள ஆய்வு முடிவு.
இதுவும் பூனை இராச்சியத்தைப் பெரிதாய் ஒன்றும் பாதிக்கப்போவதில்லை. "அப்படியா! யாரந்தப் பிழை செய்த பூனை?” என அதிர்ந்து கேட்டு எல்லாப்பூனைகளும் தம் பரிசுத்தத்தைப் பறைசாற்றிக்கொள்ளும். அவற்றின் அதிர்ச்சி நடிப்பை அங்கீகரிக்க சமூகத்துள்ளும் சில பூனைகள் இருக்கின்றன. பத்திரிகையில் வாய்திறந்த எலிகளுக்கு வகுப்பறைகளில் வாலறுபடும். காட்டிக்கொடுத்த எலிகள் பூனைகளால் கெளரவிக்கப்படும். நடக்கப்போவது இவ்வளவுந்தான்.
இந்த இலட்சணத்தில் அதிர்ச்சியாவது மண்ணாங்கட்டியாவது
கேள்வி : இந்தியாவே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார்களே. அப்படி என்னதான் ஜனநாயகம் அங்கு இருக்கிறதாம்?
எஸ். மயில்வாகனம், கண்டி, பதில் : தனிநாடு கேட்ட இனத்திலிருந்து ஒருவரைப் பிரதமராக்கியிருக்கிறார்களே அது போதாதா? அது மட்டுமா சீக்கியரால் சுடப்பட்ட ஒரு தலைவியின் கட்சியே ஒரு சீக்கியரைப் பிரதமராக்கியிருக்கிறது. இதைவிட ஜனநாயகத்தை வெளிப்படுத்த வேறென்ன வேண்டும்.
கேள்வி : "எல்லா அறிதல்களுடனும் விரிகிறது என் யோனி” என்றும் முலைகள், விதை என்றும்தம் கவிதைகளில் பாலுறுப்புகளை வலு சாதாரணமாகப் பெண்கவிஞர்கள் பாவிக்கிறார்களே?
கவிப்பித்தன், கந்தரோடை,
பதில் : சில பெண்கள் அங்கங்களைக்காட்டிக் கவர நினைக்கிறார்கள். சில பெண்கள் அங்கங்களைப் பேசிக் கவர நினைக்கிறார்கள். இரண்டுமே மற்றவர்களால் மதிக்கப்படாது. மறைமுகமாய் இருக்கும் வரைதான் இரண்டும் மற்றவரைக் கவரும்.
"நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்.” எனும் பாரதி வரிகளை இவர்கள் தவறாய்ப் புரிந்திருக்கிறார்கள். புதுமை என்ற பெயரில் பண்பாட்டுச் சுவர்கள் தகர்க்கப் படுகின்றன. வெறிநாய்கள் வீறுடன் உள்ளே புகும்போதுதான் வேதனை புரியும்.
எங்கள் ஊரிலிருந்த சின்னாச்சிக் கிழவிக்குக் கோபம் வந்தால் இதைவிடத் திறமான கவிதைகள் பிறப்பதுண்டு. இவர்களுக்கும் அக்கிழவிக்கும் ஒரே வித்தியாசம் - பாவம் அது பாமரக்கிழவி என்பதுதான்.
ஞானம் பொன் மலர் 69

Page 37
ഗമഗ്ര ബഗ്
ശബബ് ബ്ര ബഗ്ഗ്ലൂറ
മല്ലൂര് -பார்வையும் பதிவும் -
இலங்கை இலக்கியப்பேரவையின் பரிசளிப்பு விழா(6.6.2004) மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாழ். நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கியப் பேரவைப் பரிசு, கனகசெந்தி கதாவிருது ஆகியன வழங்கப்பட்டன. ஆய்வு, நாவல், சிறுகதை, கவிதை, காவியம், நாடகம், சிறுவர் இலக்கியம், பல்துறை முதலிய படைப்புகளுக்காக 44க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் இலக்கியப் பேரவையின் பரிசைப் பெற்றனர். இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாக வழங்கப்படும் கனக செந்தி கதாவிருது நால்வருக்கு வழங்கப்பட்டது. கருவேலங்காடுகள் (எம்.என்.அமானுல்லா), ஜலசமாதி (ஏ.எஸ்.உபைத்துல்லா), வீடு (சி.கதிர்காமநாதன்), வேட்டை (புலோலியூர். ஆ.இரத்தினவேலோன்) ஆகியவற்றுக்கே கணகசெந்தி கதாவிருது வழங்கப்பட்டது. ஈழநாட்டின் பல பாகங்களில் இருந்தும் இனமத பேதம்பாராது இலக்கியவாதிகள் பலர் சங்கமித்த விழாவாக இது அமைந்தது. அத்துடன் சமாதானம் நிலவிய பின்னர் பெருந்தொகையான இலக்கியவாதிகள் கலந்துகொண்ட விழா என்ற பதிவினை இது பெற்றுக்கொள்கிறது. இவ்விழா சிறப்புற அமைய ஒழுங்கமைப்பை மேற்கொண்ட செங்கை ஆழியான் பாராட்டுக்குரியவரே.
பேராதனைப் பல்கலைக்கழக சிங்கள விசேடதுறையைச் சேர்ந்த தம்மிக்க ஜயசிங்க நமது எழுத்தாளர்கள்/அப்பே லேக் ககயோ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் பற்றி பேராசிரியர் எம்.ஏ.நு.மானின் கூற்று குறிப்பிடத்தக்கது. “தம்மிக்க ஜயசிங்கவின் இந்நூல் ஓர் அரிய முயற்சி. பத்து சிங்கள அறிஞர்கள், எழுத்தாளர்களைத் தமிழ் வாசகர்களுக்கும் பத்துத் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிங்களவாசகர்களுக்கும் ஒரே நூலில் இருமொழிகளிலும் அறிமுகப்படுத்த அவர் முயன்றிருக்கிறார். இதுவும் ஒரு அபூர்வமான முதல் முயற்சிதான். இவர் அறிமுகப்படுத்த எடுத்துக் கொண்டவர்கள் சிங்கள சமூகத்திலும் தமிழ்பேசும் சமூகங்களிலும் நன்கு பிரபலமானவர்கள். மொழி இலக்கியப் பண்பாட்டு வளர்ச்சியில் முக்கிய பணியாற்றியவர்கள்’ நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இத்தகைய பல நூல்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதே.
யாழ்க்குடாநாட்டுப் பாடசாலைகளில் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் "பஞ்சவர்ணநரியார் மேடையேற்றப்பட்டு வருகிறது. Active theatre movement இனரால் தயாரிக்கப்பட்ட இச் சிறுவர் நாடகம் சிறுவர் அரங்கின் வளர்ச்சிநிலையைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இந்நாடகத்தினைக் குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதி நெறியாள்கை செய்கிறார். தவநாதன்
70 ஞானம் - ஜூலை 2004

ரொபேட் இசையமைக்கிறார். குழந்தையின் ஏனைய சிறுவர் நாடகங்களைப் போலவே பஞ்சவர்ண நரியாரும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுவரைச் சிறந்தமுறையில் வளர அனுமதிக்கும் சிறுவர் அரங்க முயற்சிகளை நாம் மேற்கொள்ளுவோமாக. சிறுவர் அரங்க முயற்சிகள் சீரிய சமுதாயத்திற்கான முதலீடுகள் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம்’ என்கிறார், குழந்தை.
ஈழத்தில் கலைஞர்களின் கலைச்சுவடுகள் பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் ஈழத்தின் கலை வரலாறு எழுதப்படாததாக நீண்டுவருவது யாவரும் அறிந்ததே. ஒவ்வொரு கலைஞனின் சுவடுகளும் சமூகத்தின் கலை வரலாறு. அத்துடன் அமையாது கலையினது தன்வரலாறாகவும் அமைந்துவிடுகிறது. யாழ்ப்பாணத்தில் மிக அண்மைக்காலமாகத்தான் கலைஞனின் சுவடுகளைப் பதிவு செய்யும் பழக்கம் நடமுறைக்கு வந்துள்ளது. இதற்கொரு எடுத்துக்காட்டாக கலைஞான கேசரி கணபதிப்பிள்ளை பரஞ்சோதி அவர்களின் ஞாபகார்த்த வெளியீடாக மலர்ந்துள்ள "கலையின் சுவடு” என்ற நூலைக் குறிப்பிடலாம். மூத்த இசைநாடகக் கலைஞர் பரஞ்சோதி அவர்களின் வாழ்வியலைக் கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் முதலியவற்றின்மூலம் கலையின் சுவடு பதிவு செய்கிறது. கலைஞர் பரஞ்சோதியின் கலைப்பயணத்தின் முழுமைத் தன்மையையும் வடமராட்சி இசைப்பாரம்பரியத்தின் ஒரு கூறையும் சிறப்புறக் காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலிற்கான ஆக்கங்களை ஆய்வறிஞர்கள் ஆய்வு மாணவர்கள், கவிஞர்கள் முதலியோர் வழங்கியுள்ளனர். இந்நூலின் பதிப்பாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைச் சேர்ந்த பரா. ரதீஸ் அவர்கள். இவர் ஒருசில மாதங்களுக்கு முன்பு அவனொரு மெழுகுவர்த்தி’ என்ற கவிதைத் தொகுதியியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சாரங் காவின் ‘ஏன் பெண் னென்று என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா ஞானம் இலக்கியப் பண்ணையின் யாழ். கிளையின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிற்பி தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவின் ஆய்வரங்கத்திற்கு செங்கை ஆழியான் தலைமை தாங்கினார். அவர் “கோகிலா மகேந்திரனுக்குப் பின்னர் ஒரு சிறந்த பெண் எழுத்தாளராக சாரங்கா திகழ்கிறார்” எனக் குறிப்பிட்டார். செங்கை ஆழியான் இவ்விடத்தில் தாமரைச்செல்வி, தாட்சாயினி முதலிய தரம்மிக்க பெண் படைப்பாளிகளையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். கோகிலா மகேந்திரன் உட்பட்ட அனைவரையும் விட மலைமகள் என்ற பெண் படைப்பாளியின் படைப்புகளின் உயர்தரம்பற்றி ஈழத்து இலக்கிய உலகில் சமகாலத்தில் அதிகம் பேசப்படுவது பற்றியும் நாம் அவதானித்தல் நன்று. சாரங்காவின் ‘ஏன் பெண்னென்று 2003க்குகான ஞானம் விருதினைப் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோல சிறந்த படைப்புக்கள் மூலம் அவரது தொடர்ச்சியான பங்களிப்பைத் தமிழ் இலக்கிய உலகு அவரிடம் எதிர்பார்க்கிறது.
பேராசிரியர் என்.சண்முகலிங்கம் ‘என் அம்மாவின் கதை என்ற சிறுநூலை வெளியிட்டுள்ளார். 1988இல் அவரது தந்தையார் காலமாகிபோது ‘என் அப்பாவின் கதை என்ற நூலை வெளியிட்ட இவர் இவ் ஆண்டு தன்னுடைய தாயின் நினைவாக ‘என் அம்மாவின் கதையை வெளியிட்டுள்ளார். தனிமனிதன் ஒருவனுக்குத் தாயின் மீதுள்ள பாசத்தையும், தனிமனித உருவாக்கத்தில் தாய் என்ற ஆளுமை வகிக்கின்ற இடம்பற்றியும் தன் வரலாற்றோடு இணைத்து கலைப்பெறுமானச் செறிவுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது.
ஞானம் பொன் மலர் 71

Page 38
ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியின்
ஆரம்பகால வரலாற்றில் ஈழகேசரிக்கவிதைகள்
(- கலாநிதி செ. யோகராசா
முன்னுரை :
நவீன இலக்கிய வளர்ச்சி என்பது இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றுடன் பிணைந்துள்ளதொன்று. ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப் போக்கிலும் இதனை நன்கு அவதானிக்க முடிகின்றது. இவ்விதத்தில் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் ஈழகேசரிப் பத்திரிகை முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு அதன் ஆரம்ப நிலையில் அது பிரசுர களமாக விளங்கியமை நாமறிந்ததே. அதேவேளையில், ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிக்கும் இது கணிசமான பங்காற்றியுள்ளது. இது பற்றி முன்முதலாகச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
‘ஈழகேசரி :
ஈழகேசரிப் பத்திரிகை 1939 தொடக்கம் 1958 வரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்துள்ளது. காந்தியவாதியும் அரசியல் நாட்டமும் கொண்டவரான நா. பொன்னையா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை 1946ம் ஆண்டில் மறுமலர்ச்சி சஞ்சிகையும் 1947ல் சுதந்திரனும் வெளிவரத் தொடங்கும் வரை ஈழத்து எழுத்தாளர்களதும் கவிஞர்களதும் முக்கியமான பிரசுர களமாகவும் இளந்தலைமுறையினருக்கான வளர்ப்புப் பண்ணையாகவும் ஈழகேசரி கோலோச்சி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழகேசரிக் கவிஞர்கள் :
இவ் ஈழகேசரியில் கவிதை எழுதியோர் மனுப்புலியார், அகிலேஸ்வரசர்மா, மு. நல்லதம்பி, அல்வையூர் மு. செல்லையா, நவாலியூர் நடராசன் (சத்தியநாதன்), யாழ்ப்பாணன், சோமசுந்தரப் புலவர், வேந்தனார், (பிற்காலத்தில்) மஹாகவி, வரதர், அ. ந. கந்தசாமி சாரதா எனப் பலராவர்.
ஈழகேசரிக் கவிதைகள் :
மேற்கூறிய கவிஞர்களது கவிதைகள் அவர்தம் நோக்கத்திற்கும் காலச் சூழலுக்கும் ஏற்பப் பல்வகைப்பட்டிருந்தன.
72 ஞானம் - ஜூலை 2004
 

சமூகச் சீர்திருத்தம் இவர்கள் சிலரது கவிதைகளில் முக்கிய இடம் பெற்றிருந்தது. இவ்விதத்தில் சாதி, மதுபானம் அருந்துதல், கோயில் பலியீடு முதலியன முதன்மை பெற்ற விடயங்களாய் இருந்தன. பின்வருவது சத்தியநாதன் எழுதிய சாதிப் பிரச்சனை
பற்றிய கவிதையொன்றின் பகுதி !
6T-(6 :
தீண்டப்படாதாரென்று - உலகில் திசைமுகன் செய்ததுண் டோ? வேண்டப் படுவதி தோ? - ஐயோ, வீண்கதை பேசுகிறீர்?
உரிமை உரிமை யென்பீர் - உங்கள் எளிய சோதரர் தங்கள் உரிமை உரிமை யென்றால் - வேத ஏடுவிரிப் போமென்மீர்!
சாத்திரங்கள்கற்றிர் - நல்ல சமயக் கலைகள் கற்றிர் குத்திரங்கள்கற்றிர் - போதும் தூய உண்மை காண்பீர்
பண்டிதராவிரே - யன்றிப் பகுத்தறிவுடையாராகிர் நொண்டிக் குழந்தையைத் - தூக்க நூல்விதி பாரான் பதோ?
சமூக முன்னேற்றம் வேறு சிலரது கவிதைகளின் பொருளாகியது. பொருளாதார நோக்குச் சார்ந்து குடிசைக் கைத்தொழில் உணவு பயிரிடல் முதலிய விடயங்கள்
இவ்விதத்தில் முக்கியம் பெற்றிருந்தன. எ-டு : மனுப்புலியார் எழுதியவை.
‘தேசியம்' பற்றியும் ஈழகேசரிக் கவிஞர்கள் பாடியுள்ளனர். பின்வரும் பாடல்
அல்வையூர் மு. செல்லையாவின் பாடலொன்றின் பகுதியாகும்.
இலங்காதேவி
தேர்ந்திடும் இலங்கா தேவி நின் வாழ்வு தினமுங் குறைந்திடுதல் மைந்தர் செய்யும் தாழ்வு
ஞானம் பொன் மலர்
73

Page 39
சார்ந்திடும் சிங்களரும் தக்கத மிழ்ச் சனமும் சகோதர நேயம் பெறல். என்று வரும்?
பாரத நாட்டினைக் கண்டு பகர் தொண்டு திரமுடன் கைக்கொண்டு திகழுத லென்று?
எனினும், இவர்களது தேசியம் என்பது ஒருவகையான இரட்டைத் தேசியம்' என்று கூறத்தக்கது. ஏனெனில் இலங்கைத் தேசியம் பற்றிப் பாடிய எமது இலங்கைத் தமிழ்க் கவிஞர்கள் அதற்குச் சமமாக இந்திய/தமிழக தேசியம் பற்றியும் கிலாகித்துப்பாடியுள்ளனர்; ஒரு நிலையில் இலங்கைத் தேசியம் பற்றிச் சிந்திப்பவராகவும் இன்னொரு நிலையில் அதற்குச் சமமாக இந்திய / தமிழக தேசியம் பற்றிச் சிந்திப்பவராகவும் காணப்பட்டனர். அவர்களால் ஆறுமுகநாவலரைப் போற்றவும் மகாத்மா காந்தியை வாழ்த்தவும் முடிந்தது. ஈழத்தவர் பாரதத் தாயை மறக்கலாமா?” என்று கேட்கவும் முடிந்தது.
ஈழகேசரி'யில் நவீன பிரபந்தங்களும் அவ்வப்போது வெளிவந்துள்ளன. இவ்விதத்தில் நவாலியூர் நடராஜன் இயற்றிய மருதக் கலம்பகம் குறிப்பிடத்தக்கது. இது கொழும்பிலுள்ள களனி கங்கைக் கரையோரத்தில் - சேரியில் - வாழ்கின்ற ஏழைமக்கள் பற்றியது. அதன் ஒரு பகுதி !
களனிக்குப் புல்லுவெட்டப் போக வேண்டாம் - மச்சான் காமாட்சி வந்தால் நின்று பார்க்க வேண்டாம் பழனிப் பெரியான் வந்தாற்சேர வேண்டாம் - மச்சான் பாழாகிக் கள்குடித்து மாளவேண்டாம்.” நாற்பதுகளில் ஈழத்தில் பரிசோதனை நோக்குடன் புதுக்கவிதை முயற்சி இடம்பெறுவதற்கும் ஈழகேசரி வழிவகுத்துள்ளது. எ-டு '
ஓர் இரவினிலே - வரதர் இருள்! இருள் இருள்! இரவிலே நடு ஜாமத்திலே என்கால்கள் தொடும் பூமி தொடங்கி கண்பார்வைக்கெட்டாத மேக மண்டலம்வரை இருள்! இருள்! பார்த்தேன் பேச்சு மூச்சற்று பிணம்போல் கிடந்தது பூமி
74 ஞானம் - ஜூலை 2004

மேலும் ஆரம்பத்திலே குறிப்பிடப்பட்டது போன்று, பின்னர் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ள மஹாகவி, அ.ந. கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், சாரதா முதலானோரின் வளர்ப்புப் பண்ணையாகவும், அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களது பிரசுரகளங்களுளொன்றாகவும் ஈழகேசரி திகழ்ந்தமை மனங்கொள்ளத்தக்கது.
தவிர ஈழகேசரி பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை ஆகியோர் பாடல்களை மறுபிரசுரம் செய்ததனூடாக, ஈழத்து இலக்கிய ஆர்வலர் மத்தியில் அவர்கள் நன்கறியப்பட வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பாரதியார் பாடல்களை பெருமளவு பிரசுரித்ததனுாடாக, ஈழத்தில் பாரதியார் புகழ் பரப்பியதில் ஈழகேசரிக்கு முக்கியமான பங்குள்ளது என்பது பலருமறியாததொன்று. அவ்விதத்தில்; சமகால ஈழத்துக் கவிஞர்கள் மத்தியில் பாரதியாரின் செல்வாக்குக் கணிசமானது பன்முகப்படுத்தப்பட்டது. எ-டு : பாரதியார் கவிதை ஒன்றின் நேரடிச் செல்வாக்கிற்குட்பட்ட கவிதைப் பகுதி இங்கு இடம்பெறுகின்றது.
"கொடிதாங்குவோம்’
- வேந்தனார்
ஆட்சிப் படைபெறு மாங்கில ராட்சின்ய
அஞ்சிடோம் - இனித் - துஞ்சிடோம்
மாட்சி கொளிலங்கை வாழச் சுதந்திரம்
வாங்குவோம் - கொடி - தாங்குவோம்
மதிப்பீடு :
எவ்வாறாயினும் ஈழகேசரியில் வெளியான (வரதர், அ.ந.க,மஹாகவி முதலானோர் தவிர்ந்த பிறர் எழுதிய) மேற்குறிப்பிட்ட கவிதைகள் எவ்வளவு தூரம் நவீன கவிதைகளாக முடியும் என்றொரு கேள்வி எழுவதற்கு இடமுண்டு உண்மைதான் ஈழகேசரியில் வெளியான அனைத்தும் முழுமையான நவீன கவிதைகளன்று. எனினும் இவை நவீன கவிதைக்குரிய அம்சங்கள் கொண்டவை என்று கூறுவதில் தவறில்லை. எவ்வாறாயினும், ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியின் ஆரம்பகால வரலாறு
ஈழகேசரிக் கவிதைகளைக் கவனத்திற்கொள்ளாமல் முழுமையடையாதென்பது தெளிவானது. ஏனெனில், வெவ்வேறு நோக்கும் போக்கும் கொண்ட இருதலைமுறை சார்ந்த (ஒருசாரார் பழமையிலும் புதுமையிலும் ஈடுபாடுள்ளவர்; மற்றொரு சாரார் புதுமையில் மட்டும் ஈடுபாடுள்ளவர்.) கவிஞர்களுக்கு ஈழகேசரி களமமைத்துக் கொடுத்துள்ளமை மறுதலிக்க முடியாததொன்றாகும்!
ஞானம் பொன் மலர் 75

Page 40
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலை இலக்கியமாக்கிய
மருதுர்க்கொத்தன்
மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல முற்போக்கு எழுத்தாளர் மருதூர்க்கொத்தன் அண்மையில் காலமானார் என்ற செய்தி இலக்கிய நெஞ்சங்களைக் கலங்கவைத்தது.
தனது பிறந்த ஊரிலேயே பலகாலம் ஆசிரியராகக் கடமையாற்றிய மருதூர்க்கொத்தன், மகாவித்தியாலயம் ஒன்றின் அதிபராக பதவி உயர்வுபெற்று மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்த இவர், சிறந்த சமூக சேவையாளருமாவார்.
1985ல் மருதூர்க்கொத்தன் கதைகள்’ என்ற இவரது சிறுகதைத் தொகுதி வெளியானது. இஸ்லாமிய சமூக வாழ்வின் அவலங்களையும் இனிமைகளையும் பிரதேசமணத்தோடு வரைவதில் அவரது எழுத்துக்கள் முன்னின்றன. இஸ்லாமியப் பேச்சுவழக்குத் தமிழ்நடை அவரது சிறுகதைகளுக்கு உயிரூட்டு வனவாக அமைந்தது. அதர் குழி, 'இருள், ‘உரிமை', 'சங்கிலித் தொடர்கள் அறுகின்றன, ‘வெட்டுமுகம்' என்பன இவரது சிறப்பான சிறுகதைகள். இவரது சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்துவரும் தாமரையிலும் பிரசுர மாகியுள்ளன. மட்டக்களப்பின் சிறுகதைத்துறைக்குப் பெருமைசேர்த்த முஸ்லிம் சிறுகதை யாளர்களுள் பித்தனுக்குப் பிறகு மருதூர்க்கொத்தன் முக்கியமானவர்.
மருதூர்க்கொத்தன் ஒரு கவிஞருமாவார். ஒசை நயம், சொல்நயம், கருத்துக்களை வெளிப்படுத்தும் முறை ஆகியவற்றில் கவனஞ் செலுத்தும் மரபுக் கவிஞரான இவர், புதுக்கவிதைகளைச் சாடுபவர். நாடகம், ஆய்வுக் கட்டுரை ஆகியன இவரது ஏனைய துறைகள்.
இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது பணம் பண்ணுவதற்கோ பயன்படுத்தாமல் சமூக மேம்பாட்டுக்காகவே இதனைப் பயன் படுத்தவேண்டும். ஆக்க இலக்கியம் சிருஷ்டிக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் அதை ஒரு சமூகப்பணியாகக் கருதவேண்டும்’ என்ற கருத்தினை எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் மூச்சிலும் கொண்டவர் மருதூர்க்கொத்தன்.
‘கலாபூஷணம்’, ‘தாஜூல் அதீப் ஆகிய பட்டங்களைப் பெற்ற மருதூர்க்கொத்தன் என்ற வி.எம்.இஸ்மாயில், ஆளுநர் விருதையும் பெற்றவர். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் ஞானம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
76 ᏯᏃ//627/b - 2 ᏯᏜo26Ꭰ 2004

ཀྱི་ விவாதமேடை
கீழே உள்ள கட்டுரை விவாதத்திற்குரியது. வாசகர்களிடமிருந்து இதுபற்றிய அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறோம்.
- eleFrfuufr 566O56 = UD656 இவர்களைத் தாண்டிச் செல்லாது தேங்கிநிற்கும் ஈழத்து நவீன தமிழ் இலக்கியம்
- வைஸம்பாயனர்
நவீன தமிழ் இலக்கியபோக்கில் புதிய பாதை வகுத்தவர்களாக க.கைலாசபதி, மு.தளையசிங்கம் ஆகியோர் விளங்குகின்றனர். ஒட்டுமொத்தமான தமிழ் உலகுக்கு இவர்கள் உருவாக்கிய இலக்கியப்போக்கு குறிப்பிடத்தக்கதெனினும், தமிழகம் இப்போக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியம் இவ்விருவரையும் தாண்டாது தேங்கிநிற்பது வருத்தத்திற்குரியதே.
காலந்தோறும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்கமைவாகத் தமிழ் இலக்கியம் பயணக்கவேண்டியது அவசியமானது. அப்போதுதான் உலக இலக்கியப் போக்குகளுடன் ஒத்துச் செல்லமுடியும். ஆனால் துரதிஷ்டவசமான நிலையில் ஈழத்து இலக்கியம் இன்று காணப்படுகிறது. ஈழத்தவர்களிடம் க.கை, மு.த. முதலானவர்களிடம் வீடுபேறடைந்த போக்கே இன்று காணப்படுகிறது. க.கை. - மு.த. ஆகிய இருவருமே பின்வரும் அபத்தங்களை நவீன தமிழ் இலக்கியப்போக்கில் உருவாக்கினர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. *. சார்புநிலைப்பட்ட இலக்கிய அரசியல் பேசியமை *. இருவரும் தமது துறைக்கானவர்களை மட்டுமே உருவாக்கியமை *. சாதியத்தைப் தமது தேவைக்காக எதிர்த்து மறைமுகமாக ஏற்றுக்
கொண்டமை *. இயந்திரப்பாங்கான இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டமை *. இருசாராரும் தமக்குள்ளேயே மோதிக்கொண்டமை. அதேவேளையில் க.கை. குழுவினர் தமக்குள்ளேயே மோதிக்கொண்டனர் ; *. தாம் கூறுவதுதான் இலக்கியம், மதிப்பீடு என்று தம்மை இலக்கிய உலகின்
சர்வாதிகாரிகளாகக் காட்டமுனைந்தமை *. மற்றவர்களுடைய எதிர்க்கருத்தியலை அங்கீகரிக்காமை. *. ஏதோவொரு வகையில் சமூகப் புரட்சியை ஏற்படுத்த இலக்கியத்தைக் கையேற்ற இவர்கள் இருவருமே சமூகத்தில் சென்று சேராமை (பரவலான நிலையில்) க.கை.யின் அடியார்கள் கூட்டம் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியது. கடவுளை அங்கீகரிக்காத மார்க்சீய அணியினர் க.கை.யைக் கடவுளாக்கினர். இது மிகவும் விநோதமானது. க.கை.யும் அவர்களுக்கு அருள்பாலிப்பதன்மூலம் சிறந்த ஒரு கடவுளாக விளங்கினார். அரசியல் ரீதியான புரட்சியை ஈழத்தில் ஏற்படுத்த முடியாது என்ற நிலையிலேயே சாதியத்தைக் கையிலெடுத்து
ஞானம் பொன் மலர் 77

Page 41
இலக்கியத்தின் ஊடான சமூகப் புரட்சியைச் செய்யலாம் என்று இவர்கள் துணிந்தார்கள். ஆனால் அவர்களது இலக்கியத்தின் அரசியலில் சாதியத்தை அவர்கள் மனப்பூர்வமாக அங்கீ கரித்தார்கள். இல்லையெனில் மஹாகவி போன்ற பெருங் கவிஞர்களின் விலத்தல்களுக்குக் காரணம் யாது?
க.கையோ அல்லது அவருடைய அடியார் கூட்டமோ இலக்கியத்தின் முக்கிய அம்சமான அழகியலைக் கைவிட்டு வெறுங் கருத்துக்களை விமர்சனக் கண்களால் மேய்ந்தனர். மு.த.வின் மெய்யுள் என்பதை க.கை.யினர் அர்த்தமற்றவொன்றாகக் கருதினர். மு.த.வினரும் தம்முடைய கருத்தியலே சரியானது, அர்த்தம் பொதிந்தது என்று காட்ட முயற்சித்தனர். இதனால் இவர்களும் தாம் சார்ந்த வற்றை மட்டுமே அங்கீகரித்தனர்.
க.கை, மு.த. இருவரும் ஈழத்தில் தோன்றிய மிகப்பெரும் ஆளுமைகள் என்பது மறுக்கமுடியாததுதான். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்தான். அதற்காக அவர்கள் மீது விமர்சனத்தை முன் வைப்பதை அவர்களுடைய அடியவர்கள் இயற்கையழிவாகக் கருதினர். அவர்கள் மீதான விமர்சனம் இயற்கைக்குச் சீற்றம் உண்டாக்கும் என்பதில் உரமாயிருந்தனர். பாரம்பரிய இலக்கிய மரபை முற்றாக நிராகரிக்கும் போக்கு இவர்களிடம் காணப்பட்டது. இதனால் இலக்கியவரலாறு குறிப்பாக ஈழத்து இலக்கிய வரலாறு அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. ரஷ்ய அணியாகவும் சீன அணியாகவும் பிரிந்துகொண்ட ஈழத்து மார்க்சீய வாதிகள் அதற்குள்ளும் பல அணிகளாகப் பிரிந்துகொண்டனர். முற்போக்குப் பற்றி அதிகம் பேசிய இவர்கள் தமது காலத்தில் வேறு சிலர் மேற்கொண்ட சிறந்த முயற்சிகளை இருட்டடிப்புச் செய்தனர்.
முகம்மது சமீம், சி.சிவசேகரம், சோ.தேவராசா முதலிய கைலாசபதி யின் பெருந்தொண்டர்கள் பெரும்பாலும் கைலாசபதி செய்த சிறந்த பணியைக் கூடச் செய்யவில்லை (க.கை.செய்த இருட்டடிப்பை மட்டும் அவற்றோடு தொடர்பானவையை மட்டும் பெருவிருப்போடு செய்தார்கள், செய்து வருகிறார் கள்). இதுபோலவே சு.வில் வரத்தினமும் தமது ஞான குருவான மு.த. வை பூஜித் து வருவதுடன் அவர்சார்ந்த இலக்கியக் காரர்களையும் வணங்கியும் வருகிறார். சமூகம் பற்றிய அரைப்பார்வையுடைய மு.த.அணியினர் அழகியல் பற்றிய அரைப்பார்வையுடைய மார்க்சீய அணியினரை எதிர்த்தனர்; எதிர்த்துக
’கொண்டிருக்கின்றனர்.
க.கை., மு.த. இருவருக்குப் பின்னும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் புதியதொரு போக்கைப் பெற்றது என்பது மறக்கமுடியாதுதான். பெரிய சாதனைதான். ஆனால் அப்போக்கு எவ்வளவு துரம் வெற்றிகரமாகியது என்பது கேள்விக்குரியதே குறிப்பிட்ட இருவரைத் தவிர இருவரைச் சார்ந்த அணியினரும் இருவரைப் பற்றித் திருப்புகழ் பாடினரே தவிர அவர்களது “போக்கு" பற்றி சிரத்தை கொள்ளவில்லை. ܨ ( இவ்விருவரையும் தாண்டாது பயணிக்கும் ஈழத்தமிழ் இலக்கியம் சமகாலத்திலும் எதிர்காலத்திலும், புதிய பாய்ச்சல்கள் எதனையும் இலக்கியப் போக்கில் நிகழ்த்தாது; என்பது திண்ணம். இவ் விரு வரையும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தல் வேண்டும். இன்று பேசப்படும் புதிய கோட்பாடுகளை தமிழ் மரபுக்கேற்ப உள்வாங்கிக் கொண்டு இலக்கியச் செயற் பாடுகள் தொடரவேண்டும். தனியே கருத்தியலாக மட்டுமல்லாது இலக்கியத்துக்கான அழகிய
லோடும் அவை நடைபெறல் நன்று
78
ஞானம் - ஜூலை 2004
 
 
 
 
 
 

வி மா ன ம்
புறப்படுவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. தனியே பயணம் செய்த விஜியின் மனதில் ஒரே குழப்பம். கனடாவில் இருந்து கிளம்பும் போது கணவன் நடந்த வாதமும், அதனால் வீட்டில் ஏற்பட்ட குழப்பமும் அவள் கண்முன் வந்து கொண்டேயிருந்தது. என்ன மனுசன்? பெண் சாதியின் அருமை தெரியாத பிறவி, வருடம் முழுக்க வீட்டுவேலை, கந்தோர் வேலை என்று ஓடி, ஒடி உழைத்தும் நன்றியில்லாத பிறவி யாயிருக்கிறார்.
அவரைச் சொல் லிக் குற்றமில்லை. இந்த ஆண்களே இப்படித்தான். பெண்கள் என்றாலே ஒரு இளக்காரம். இந்த முறை ஊரிலை ஒரு மாதம் நின்றிட்டு வர வேணும். அப்பத்தான் நான் இல்லாமல் பிள்ளைகளும், அவரும் இயங்க முடியாது என்ற உண்மை அவருக்குத் தெரியும். மனதிலே கறுவிக் கொண்டே விமான நிலையத்தைச் சுற்றி வந்தாள் விஜி.
அழகாகவும், அம்சமாகவும் கட்டப்
്തൃ
சுரேஷடன் வாக்கு
t:
என்று கேள்விப்பட்டிருந்த
விமான நிலையம். மிகப் பெரிய விமான நிலையம்
D
எவரும் முகம் தெரியாத 85
பயணிகள், அதிகார . மிடுக்குடன் நடக்கும் தை அதிகாரிகள், விமானம் புறப்படுவது பற்றிய அறிவுப் புக்கள் ஒன்றுமே அவள் மனதில் பதியவில்லை. மனதிலே ரீவைன் பண்ணிய கசற் மாதிரி கணவனுக்கும், தனக்கும் நடந்த வாய்ச்சண்டைதான் வந்து கொண்டே
இருந்தது.
எவ்வளவு ஆசைகளைச் சுமந்து
விஜி ஒரு சுற்று சுற்றிப் பார்க்க எண்ணினாள்.
கொண்டு எங்கடை ஊருக்குப் போறேன். எத்தனை வருடமாக நடக்காத கோவில் திருவிழா, குலதெய்வம் பல வருடங் களின் பின் தேரேறி வருகிறார். மனங்குளிர பார்க்கப் போறன் என்னைத் தடுக்க வேண்டாம் என்று சொல்லச், சொல்ல போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்தாரே கந்தோரிலை வேலையாம். தனக்கு பிள்ளைகளைப் பார்க்க நேரமில்லையாம். விஜி நீர் இந்த வருஷம் போக வேண்டாம். எனக்கு வேலையிலை சரியான பொறுப்பான நேரம். அடுத்த வருஷம் போனால் என்ன? மிகவும் சகஜமாக சுரேஷ் கேட்டது விஜியின் கோபத்தைக் கிளறி விட்டது.
பல மாதங்களாக ஆயத்தம் செய்து, லிவு எடுத்து, பயண அடுக்குகள் செய்த
e LS ப்படிச் ப ட டி ரு ந த து ー、リ கோலா லம்பூர் G யோகேஸ் கணேசலிங்கம்)
எப்பிடி? அவள்
ஞானம் பொன் மலர் 79

Page 42
மனதிலை கணவன் மீது ஒரே கோபம். கோபத்திலே ‘உங்களுக்கு நான் போறது பிடிக்கலை. நீங்கள் சரியான ஒரு சுயநலக்காரன்’ வெடுக்கென்று சொல்லி விட்டாள் விஜி “உமக்கு கனடாவுக்கு வந்த பிறகு சுதந்திரம் கூடிப் போச்சுது உம்முடைய கதையள் வர, வர நல்லாயில்லை” சுரேஷம் தன் பங்குக்கு மனதிலை பட்டதைச் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டான்.
சுரேஷக்கு விஜி போவது பிடிக்க வில்லை போவதை நிறுத்த எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் விஜியோ பிடிவாதமாகக் கிளம்பி விட்டாள். என்ன தான் ஒரு அசாதாரண துணிவோடு விஜி புறப்பட்டபோதும் அவள் மனம், ஒரு நிலை இல்லாமல் குழம்பிக் இருந்தது. என்ன செய்கிறோம் என்ற சிந்தனையின்றி விமான நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு தனது பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவது போல ஒரு பிரமை,
“ குஞ்சு. குஞ்சு” குஞ்சு என்பது விஜியின் வீட்டுப்பெயர் அவளோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்குத்தான் அந்தப் பெயர் தெரியும். இப்போ கனடா
கொண்டே
சென்ற பின்னர் விஜயலக்ஷமி என்ற அவளுடைய பெயர் குறுகி விஜி ஆகிவிட்டது. குஞ்சு என்ற வீட்டுப் பெயர் மறைந்தே போய்விட்டது.
குஞ்சு. மெல்லிய சத்தமாக அவள் காதில் விழுந்தது. குரல் வந்த திக்கைப் பார்த்தாள் விஜி.
ஒரு வயது முதிர்ந்த மாது தன்னை நோக்கி நாற்சக்கர வண்டியில் வந்து கொண்டு இருந்தாள். ஆஜானுபாகுவான
அதே மெல்லிய குரல்.
ஒரு இளைஞன் வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தான்.
மிரள விழித்தபடியே நின்ற விஜியின் அருகில் வந்த மாது.
“தங்கச்சி குஞ்சு தெரியவில்லையா? நான்தான் பக்கத்து
என்னைத்
வீட்டிலை இருந்த ரெத்தினத்திடை அம்மா” பாசத்தோடு விஜியை அணைத்தபடியே பணிவோடு
சொன்னாள் கண்மணி,
ஒ. கண்ணு மாமியா? எனக்கு உண்மையிலை உங்களைத் தெரிய வில்லை. இப்ப எங்கை இருக்கிறியள்? ஆர்வத்தோடு விஜி கேட்டாள். கண்ணு விமான
மாமியைக் கோலாலம்பூர்
நிலையத்தில் பார்த்ததில் விஜிக்கு ஒரே ஆச்சரியம். பக்கத்து வீட்டில் அவ வாழ்ந்த வாழ்க்கையும் பட்ட கஷ்டங்களும் இன்றும் விஜியின் நெஞ்சில் பசுமையாக இருந்தன. தியேட்டருக்குச் சென்று அழுது அழுது தமிழ் படம் பார்த்துவிட்டு வரும் போதெல்லாம் விஜிக்கு அக் கதைகள் கண்ணு மாமியின் கதைகள் போல இருக்கும். குடிகாரக் கணவன், வருடம் ஒரு குழந்தை, நாள் முழுவதும் உழைப்பு இதுதான் கண்ணு மாமியின் வாழ்க்கை. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த மாமி இன்று பழுத்த பழமாகச் சீர்திருத்தமுள்ள ஒரு வயோதிப மாதாக விஜி முன் நின்றா. ‘மாமி. எங்கை இருந்து வாறியள்? வியப்போடு விஜி கேட்டாள்.
“பிள்ளை. நான் இப்ப பத்து வரியமாக அவுஸ்திரேலியாவில இருக்கிறன். என்ரை கடைக்குட்டி
பதிதான் என்னை இப்ப ஊருக்கு கூட்டிக் கொண்டு போறார். பாத்தியே ஆளை? எப்படி வளர்ந்திட்டான் என்று சொல்லிக்
80
குரணம் - ஜூலை 2004

கொண்டே பெருமையுடன் அண்ணாந்து பார்த்தாள் கண்ணு மாமி.
அழுக்குப் படிந்த, தெறிகள் இல்லாத அரைக்காற்சட்டை, சேட் போடாத மேனி, ஒடி ஒடி தாயாருக்கு உதவி செய்வதும் கடைகளுக்கு அவ செய்யும் பலகாரத் தைப் பெட்டியில் கொண்டு செல்வதும்
“அம்மா அக்காவோடை கதைச்சுக் கொண்டு இருங்கோ பிளேன் வெளிக்கிட இன்னும் மூன்று மணித்தியாலம் இருக்குது” இப்படி ஒருக்கால ஒரு சுத்துச் சுத்திக் கொண்டுவாறன். பதி சொல்லிக் கொண்டே இருவரிடமும்
விடை பெற்றான்.
என்று வாழ்ந்த சிறு பையன் பதி. இன்று நவநாகரீகம் பொருந்திய அழகான ஒரு இளைஞனாக என் எதிரில் நிற்கிறானே? அண்ணாந்து பார்த்த விஜிக்கு சந்தோஷமாக இருந்தது.
“வாங்கோ மாமி இப்படி இருந்து கதைப்பம். உங்களைக் கண்டது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கெண்டு தெரியுமா? சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த நாற்காலி ஒன்றில் விஜி
உடகாாநதாள.
‘ எனக்கு தங்கச்சி உம்மோடை இருக்கேக்கை என்ன பயம்? எனக்கு உயிர் கொடுத்த குஞ்செல்லே, அன்புடன் சொன்ன கண்ணுமாமி விஜியின் கைகளைத் தன் கைகளோடு சேர்த்து இறுக்கமாகப் பிடித்தாள். மாமியின் பாசம் அந்த இறுக்கத்தில் புலப்பட்டது. குஞ்சுமீது மாமி கொண்டிருந்த அன்புப் பிணைப்பும், நன்றிக் கடனும் அந்த மெல்லிய கைகளில் இருந்து வெளி வருவதான ஒரு உணர்வு விஜிக்கு
ஞானம் பொன் மலர்
81

Page 43
ஏற்பட்டது. இருவரும் ஒன்றுமே பேசாது சில விநாடிகள் இருந்தனர். இருவர் முகத்திலும் நிறைவு. எதிர்பாராமல் ஒருவரை ஒருவர் கண்டு கொண்ட பேரானந்தம்.
என்ன மாமி? என்ன யோசிக்கிறியள். இப்பிடி 65iuTUTuo6o கண்டதிலை சந்தோசம். அதுதானே?” விஜி அன்போடு கேட்டாள்.
“பிள்ளை என்ன பிள்ளை? பத்து
என்னை
வரியத்துக்குப் பிறகு ரெண்டுபேரும் ஒண்டாக ஊருக்குப் போகிறம் எண்டால் அது அந்தப் பிள்ளையாற்றை கிருபை தானே? அந்த வரியம். அதுதான் உமக்குத் தெரியுமே . அதுக்குப் பிறகு திருவிழாவும் நடக்கவில்லையாம். எல்லாரும் ஊரைவிட்டுப் போயிற்றம். இப்ப கோயில் கொடியேறி திருவிழா நடக்குது. என்ரை பிள்ளையஸ் என்னை வலுக்கட்டாயமாகத் தேர் பார்த்திட்டு வரச் சொல்லி அனுப்பியிருக்குதுகள்.”
அந்த வருஷம். கடைசியாக தேர் நடந்த வருஷம் அப்போது நடந்த நிகழ்ச்சிதான் கண்ணுமாமியையும் விஜியையும் நெருக்கமாக்கியது. பின்பு அநர்த்தங்களால் பெயர்ந்திட்டம்.
ஊரில் ஏற்பட்ட எல்லாரும் இடம் எங்கடை ஊரார் எல்லாரும் காற்றுக்குப்
பறந்த பஞ்சாக எங்கெங்கோ சிதறி
விட்டார்கள். ம். ஆர் இப்பிடி ஊரைவிட்டுக் கிளம்புவம் எண்டு நினைச்சம். கண்ணுமாமி விஜிக்கு
மட்டும் கேட்கக் கூடியதாகச் சொல்லிக் கொண்டு இருந்தா.
பத்து எட்டில் இருந்த கோவில் திருவிழாவைப் பார்க்க முடியாத வாழ்க்கை வாழ்ந்த கண்ணுமாமி இன்று பத்தாயிரம்
கடந்து விமானமேறி கோவிலுக்கு வருகிறா. இப்பிடியும் ஒரு மாற்றமா? தனக்குள் நினைத்தபடியே தனது கைகளை மாமியின் பிடியில் இருந்து தளர்த்தினாள்.விஜி மெதுவாக மாமியின் கலைந்திருந்த கூந்தலைக் கோதினாள். மாமியின் க்ருட்டைமுடி எப்பவும் நெற்றியில் விழுந்திருக்கும். இப்போதும் அதே கோலம்தான். நரைத்த வெண்முடிகள் கட்டுக்கடங்காமல் பறந்து கொண்டு இருந்தன.
‘மாமி! உங்கடை தலைமுடியே உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும். பாருங்கோ முடி நரைத்தாலும் அதே கோலம்தான்.” சிரித்தபடியே முடியைக் கோதிய விஜியின் முகம் மாறியது. முகத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு கணத்தில் பறந்து போய் முகத்தைச் சொல்ல முடியாத ஒரு சோகம் கவ்விக் கொண்டது. “தங்கச்சி என்ரை நெற்றித் தழும்பு உமக்கு பழைய ஞாபகத்தைக் கொண்டு வந்திட்டுது. உம்முடைய முகத்திலை அது அப்படியே தெரியுது. நான் எல்லாத்தையும்
மைல்கள்
மறந்திட்டன்’ விரக்தியோடு மாமி சொன்னாள்.
மாமியின் நெற்றியில் இடது
கண்ணுக்கு மேல் ஒரு பெரிய தழும்பு, காயம் ஆறிப் பல வருடங்கள் ஆனாலும் தழும்பும் அதில் இருந்த தையல் அடையாளங்களும் அன்று அது ஒரு பெரிய காயமாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.
“என்ரை முகத்தைக் கண்ணாடி யிலை பாக்கிற நேரமெல்லாம் உம்மை நினையாத நேரமில்லை. அண்டைக்கு எங்கடை கொட்டிலுக்கை ஒடிவந்து நீர் என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு
82
ஞான்ம் - ஜூவை 2004

போயிருக்காட்டில், நான் அண்டைக்குச் செத்திருப்பன். எனக்கு உயிர் குடுத்த பிள்ளையை சாகமுதல் பாக்க வேண்டும் எண்ட என்ரை ஆசையை அந்தப் பிள்ளையார்தான் நிறைவேற்றி விட்டார். நாத் தழுதழுக்க கண்ணுமாமியின் உள்ளத்தில் இருந்து வார்த்தைகள் வெளிவந்தன.
‘மாமி இப்ப ஏன் அந்தப் பழைய கதையைக் கதைக்கிறியள்’. மாமிக்கு ஆறுதலாக விஜி சொன்னபோதும் விஜியின் மனதில் அந்தச் சம்பவம் பசுமையாக இருந்தது.
அன்று விநாயகர் கோவில் தேர்த்திருவிழா. தேரேறி வரும் விநாயகரிடம் வரம் வேண்ட சாரி, சாரியாக மக்கள் சென்று கொண்டு இருந்தனர். வீதியெல்லாம் ஒரே சனக் கூட்டம். வீடுகளில் யாருமில்லை. எல்லோரும் கோவிலில் திரண்டிருந்தனர். விஜிக்கு அன்று கோவிலுக்குச் செல்ல முடியாத நேரம். பொழுது போவதற்காக ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தவளுக்கு கண்ணு மாமியின் அழுகுரலும் அதைத் தொடர்ந்து அவள் ஏதோ புலம்புவதும் காதில் விழுந்தது.
இண்டைக்கு எண்டாலும் என்னை ஒருக்கால் கோயிலுக்குப் போக விடுங்கோ என்னாலை இந்த வெடுக்கை வெட்டிச் சமைக்க ஏலாது. ஒவ்வொரு நாளும் சமைக்கிறனான் தானே.” வெறிகாரக் கணவனுக்குத் துணிந்து சொல்லி விட்டாள் கண்ணுமாமி.
“என்னடி? என்ன சொன்னாய்? நான் கொண்டு வந்த மீனைச் சமைக்க உன்னாலை ஏலாது. அப்பிடித்தானே? கோயிலுக்கு ஆரைப்பாக்கப் போறாய்?
வேலையில்லாதவங்கள் பிள்ளையாரைத் தேரிலை வைச்சு இழுக்கிறாங்கள். நீ போகப்படாது. நீ எனக்கு மீன்குழம்பும் பொரியலும் செய்து போட்டு எங்கை யெண்டாலும் போ” - கந்தையாவின் வெறிக்குரல் உச்சஸ்தாயில் விஜியின் காதில் விழுந்தது.
என்றுமில்லாதவாறு மனைவி மீனைச் சமைக்க மறுத்ததை அவனாலை ஏற்க முடியவில்லை.
'நீ சமைக்காமல் போனால் பிறகு இங்கை வரமாட்டாய். நீ போனது போனதுதான்” கந்தையா கத்தினான்.
"இங்கை எனக்கு என்ன சுகம் இருக்குது. நான் அப்படியே போகப் போறன்" கண்ணுவின் குரல் தெளிவாகக் கேட்டது.
என்ன இது? மாமிக்கு இப்பிடி ஒரு துணிவு எப்பிடி வந்தது? விஜி ஒரு கணம் சிந்திப்பதற்குள்,
ஐயோ. என்ற மாமியின்அவலமான குரல் அதைத் தொடர்ந்து “அம்மா, அம்மா’ என்று இளையமகன் பதி பெரிதாக ஒலமிட்டு அழும் குரல். அடுத்த வீட்டு விவகாரம். அதற்குள் நான் ஏன் தலையிடுவான் என்று இருக்க விஜிக்கு மனம் வரவில்லை. உடலில் ஒர் அசாத்தியத் துணிவு ஏற்பட்டது. அவர்களுடைய ஒலைப் படலையைத் திறந்து கொண்டு அந்தக் கொட் டிலுக்குள் கால் வைத்தாள்.
நெற்றியில் இருந்து ரெத்தம் பீறிட கண்ணுமாமி தரையில் சரிந்து விழுந்து கிடந்தாள். பக்கத்தே சிறுவன் பதி ஒன்றும் விளங்காமல் அம்மா, அம்மா என்று அழுது கொண்டு நின்றான். மாமி விழுந்து கிடந்த நிலத்தின் அருகே ஒரு
ஞானம் பொன் மலர்
83

Page 44
சீமெந்து பக்கற் பையிலிருந்து மீன், வெங்காயம், பச்சைமிளகாய், எலுமிச்சம் பழம் என்பன சிந்தியிருந்தன என்ன நடந்திருக்க வேண்டும் யூகிக்கப் புத்திசாலியான விஜிக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
என்பதை
வெறிகார கந்தையா மனைவியை நோக்கி கோபத்தோடு ஏதோ ஒரு பொருளை எறிந்திருக்கிறார். இமைக்கு மேல் அந்தப் பொருள் பலமாகத் தாக்கியிருக்கிறது.
மாமியைத் தூக்கி, நிறுத்தி நெற்றியில் கட்டுப் போட்ட விஜியைக் கண்ட கந்தையா விறுவிறு என்று படலையைக் கடந்து சென்று விட்டார்.
அடுத்த வீட்டுப் பெண். தங்களிலும் அந்தஸ்தில் கூடியவள் இப்பிடி நடந்து கொள்வாள் என்று அவர் எதிர்பார்க்க வில்லை. தான் செய்தது தவறு என்பது தெரிந்திருக்க வேண்டும். அவ்விடத்தை விட்டுச் செல்வது மேல் என்று அந்த
வெறிகாரன் வெளியேறிவிட்டான்.
மனைவியை என்ன எது என்று கேட்கக் கூட அவன் எண்ணவில்லை. பதியைக் கூட்டிக்கொண்டு விஜி டாக்டரிடம் சென்றதும், மாமிக்கு ஊசி போட்டு மருந்து கட்டியதும், காயம் ஆறப் பல நாட்கள் ஆனதும் எல்லாம் பழங்கதையாய் எல்லாரும் மறந்து விட்டார்கள். ஆனால் மாமியின் நெற்றித் தழும்பு மட்டும் எல்லோரும் பார்க்கும் வண்ணம் மறையாமல் பளிச்சென்று இருந்து வந்தது.
"தங்கச்சி நீங்கள் பழசை நினைக் கிறியள் போலை” அமைதியாக இருந்த குஞ்சுவைப் பார்த்து கண்ணுமாமி கேட்டாள்.
கண்
‘மாமி எனக்கு உங்களைப் பாக்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கெண்டு G5sful on? பிள்ளையன் உங்களைத் தலையிலை வைச்சுக் கவனிக்குதுகள். உங்கடை தோற்றம் நீங்கள் வசதியாக வாழறதைக் காட்டுது. நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு இப்பிடி ஒரு வாழ்வு கிடைத்திருக்கிறது. எனக்கு மனநிறைவைத் தருகுது’ விஜியின் உள்ளத்தில் இருந்து உண்மையாக வார்த்தைகள் வெளிவந்தன.
“என்ன குஞ்சு? என்ன இருந்தும் இப்ப நான் வாழிற வாழ்க்கையிலை அவர் இல்லையெண்டது எனக்குப் பெரிய கவலை. நான் அனுபவிக்கிற சுகத்திலை ஒரு கடுகு அளவென்றாலும் அவர் அனுபவிக்கவில்லையே. இதை நினைக் கேக்கை என்னாலை தாங்க ஏலாமல்
உங்கடை
வருகுது” கண்களில் இருந்து கண்ணிர் பொல, பொல என வடிய கண்ணுமாமி கூறினாள்.
“என்ன மாமி? உண்மையாச் சொல்லுறியளா? தினமும் குடிச்சிட்டு வந்து உங்களை அடிக்கிறது, பிள்ளை யளை அடிக்கிறது. சமைக்க காசு தராமல் அதிகாரம் போடுறது. இதெல்லாம் செய்த உங்கடை கணவரை நினைச்சா கண்ணிர் வடிக்கிறீங்கள்?” ஆச்சரியத்துடன் விஜி கேட்டாள்.
“என்னதான் நடந்திருந்தாலும் அவர் என்ரை மனுசன். அவருக்குப் பிறந் ததுகள் தானே இந்த நாலு பிள்ளைகளும். மூத்தவன் நோர்வேயிலை. மகள் சுமதி ஜேர்மனியிலை. மூன்டாவது டென் மார்க்கிலை, இளையவன் பதி அவுஸ் திரேலியாவிலை. எனக்கு மாறி, மாறி போன் போட்டுக் கதைக்கிறதும், என்னை
84
ஞானம் - ஜூலை 2004

உபசாரம் செய்யிறதும்தான் அதுகளுக்கு வேலை. ரெயில் ஏறிக் கொழும்புக்கு
கூடப் போகாத என்ரை மனுசனுக்கு
இப்பிடி ஊர்கள் இருக்குது, மனுசர் இருக்கினம் எண்டது தெரியாமல் போயிற்றுது. பழக்கத்தில் இருந்து மீளாமலே மடிந்து போனார். அவரும் இப்ப என்னோடை இருந்து இதுகளை அனுபவிக்கக் குடுத்து வைக்கவில்லை. அதுதான் எனக்கு ஆறாத கவலை. எப்பவோ மடிந்து போன
தனது ö6ûûI6)ህ60)6ü፫ நினைத்து கண்ணுமாமி கூறினா.
அவவுடைய வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அவ உள்ளத்தில் இருந்து உண்மையாக வந்தன என்பதை முகம் உணர்த்தியது. வாயடைத்துப் போய் அவமுன் உட்கார்ந்
கடைசிவரை குடிப்
உதவாக்கரை
கண்ணீர் விட்டபடியே
அவவுடைய
திருந்த விஜிக்கு அந்த விமான நிலையம் தன்முன் தலைகீழாகச் சுற்றுவது போல இருந்தது. ( கணவரோடு ஒத்துவரவில்லை என்றதும் விவாகரத்துக் கோரும் இக்காலப்பெண்களைப்பார்த்துப்பழகிய விஜிக்கு, கணவன் தந்த நெற்றித் தழும்பைச் சுமந்து கொண்டு தன்முன் வீற்றிருக்கும் மாமி தெய்வமாகத் தென்பட்டாள். சுரேஷடன் தான் போட்ட சண்டைகளையும், குழப்பங்களையும் நினைத்து தனக்குள் கூனிக் குறுகி னாள். விநாயகப் பெருமானைத் தரிசிக்கக் கிளம்பியதனக்குஎதிர்பாராது அம்பாள் அருள்பாலிப்பதாக ஒரு எண்ணம் மனதிலே தோன்றியது. அந்த மனநிறை வோடு மாமியின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் விஜி)
::
“ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள் :
பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு-11 பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A, காலிவீதி, வெள்ளவத்தை. பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம், ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி திரு. சித்தி அமரசிங்கம் - 27, ஒளவையார் வீதி,திருகோணமலை, திரு.வீ.என். சந்திரகாந்தி - 372, 4, ஏகாம்பரம் வீதி,திருகோணமலை எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 487, பார் வீதி மட்டக்களப்பு. கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி ந. பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா லங்கா சென்றல் புத்தகசாலை - 8, கொழும்பு வீதி, கண்டி சாஹித்திய புத்தக நிலையம், இல, 4 குருனாகல் வீதி, புத்தளம் மெடிக்கல் ஹெல்த் கிளினிக்,இல4 டயரபாசந்திமிரஹாவத்தை (PO L. MurugapOOpathy, P O Box : 350 Craigie Baum, Victoria 3064. Australia. G. Balachandran, 21 Hudson Street, Wentworthville, N. S. W. 2145. |
ஞானம் பொன் மலர்
85

Page 45
el Id.““I I
தலைகுனிந்தபடி நடக்கின்றேன். என்னைச் சுற்றிலும் ஒலிகள். மனித அழுத்தங்களை இறுக மூடியபடிக்கு சுதந்திரமாக என்னை நடக்க விடுங்கள்.
என்னை கேள்வி கேட்க ஒருவர் வருகிறார். கண்னை மூடிக் கொள்கிறேன் தொந்தரவு செய்வதற் கென்றே வருகிறார்கள்.
ஒரு நிமிடமும் என்னைத் தனிமையில்
ஏகாந்தமாய்
என் மனதோடும் அந்தரங்கங்களோடும் இருக்க விடுகிறார்களில்லை.
மெளனம் எனது மொழியாய் இருக்கையில் . தொந்தரவு அவர்கள் மொழிகளாய் இருக்கின்றன.
ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் பரம பிதாவே இவர்களை சபியும். என்னை தொந்தரவாளர்களிலிருந்து இரட்சியும்.
அழுத்தங்களற்ற ஒழுங்கான சுதந்திரபமான பூடமியொன்றை நோக்கிய பயணத்தில் என்னை நோக்கியபடிக்கு பயணிக்க விடுங்கள்.
86 ஞானம் - ஜூலை 2004
 

நூல் : 4F/Túbu6)f' ஆக்கம் : செங்கை ஆழியான் வெளியீடு: கமலம் பதிப்பகம்,
யாழ்ப்பாணம். முதற்பதிப்பு: ஏப்ரல் 2003 விலை : ரூபா 150.00 விற்பனை: பூபாலசிங்கம் புத்தகசாலை.
ஏறத்தாழ நாற்பத்தைந்துக்கு
மேற்பட்ட படைப்பு இலக்கிய நூல்களைத் தந்த பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியானின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பு சாம்பவி. இத்தொகுப்பில் அடங்கியுள்ள மீண்டும் ஒரு சீதை' அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது. கிராமம் ஒன்று', கணையாழி அமரர் தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. ‘சாம்பவி' கணையாழியின் இரு இதழ்களில் வெளிவந்து பலராலும்
கலைமகள்
யாழ்ப்பாணக்
பேசப்பட்ட குறுநாவல். மூனறு குறுநாவல்களுமே போர்க்கால அவலங்களில் பிறந்தவை. செங்கை
ஆழியானின் முன்னைய குறுநாவல் களிலிருந்தும் வித்தியாசமானவை.
ஆமிக்காரரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் ஸ்டேசனில் ஒரு இரவு முழுவதும் தடுத்து காயத்திரியை அவளது காதலன் - திருமணம் செய்யப் போகிறவன் "அங்கு உன்னை ஆமிக்காரர் சும்மா விட்டிருப்
வைக்கப்பட்ட
பாங்களா?’ என்று எழுப்பும் கேள்வி மீண்டும் ஒரு சீதை கதையின் மையம். சீதையை இராமர் அக்கினிப் பிரவேசத் திற்குப்பின்னர்தான் ஏற்றுக் கொண்டார். சந்தேகம் என்பது ஒரு முடிச்சு மாதிரி : எப்பொழுதும் உறுத்திக் கொண்டுதான் இருக்கும். அக்கினிப் பிரவேசத்திற்குப் பின்பும் இராமனின் மனதில் அது உறுத்திக் கொண்டுதான் இருந்தது. காயத்திரி அக்கினிப் பரீட்சைக்கு - டாக்டரிடம் பரிசோதனைக்கு உட்படு வதற்கு சம்மதிக்கிறாள். தனது கன்னித் தன்மையை நிரூபித்த பின்னர் தனது காதலனுக்கும் சமூகத்திற்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்கிறாள். ஆணாதிக்கம் காலந்தோறும் தொடரும் என்பதனைக் காட்டுவதோடு பெண்ணின் மன மாண்புகளை நிலை நிறுத்தும் கதை. பாத்திர வார்ப்பிலும், சிக்கலின்றிச் சரளமாக நகர்த்திச் செல்வதிலும் செங்கை ஆழியான் தான் ஒரு அனுபவம் மிக்க எழுத்தாளர் என்பதை நிரூபித்துள்ளார்.
இனப்போராட்டம் பல மக்களது
கதையைச்
வாழ்க்கைப் போராட்டமாக மாறிவிட்டதை, தனக்குப் பழக்கமான கொட்டடி கிராமத்தைத் தளமாக வைத்து யாழ்ப் பாணக் கிராமம் ஒன்று குறு நாவலைப் பின்னியிருக்கிறார் செங்கை ஆழியான். ஒரு கிராமம் தனது போர்க்கால அவலங்களைக் கூறுவதாக இக்குறு
ஞானம் பொன் மலர்
87

Page 46
நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தின் ஆத்மா அங்கு வாழும் மக்கள்தான். கொட்டடி வாழ் மக்கள் போர்ச் சூழலில் எதிர்கொண்ட அழிவுகள் இடப்பெயர்வுகள் உணவுக்காகப் பட்ட தொழில் கஷ்டங்கள், மரணங்கள் முதலிய
வற்றை இக்குறுநாவல் சித்திரிக்கிறது.
இத்தொகுப்பில் உள்ள மற்ற இரு குறுநாவல்களுடன் ஒப்பிடுகையில் இக்குறு நாவல் தரத்தில் குறைந்து நிற்கிறது. இக்குறுநாவலின் கட்டுக் கோப்புச் சிறப்பாக அமையவில்லை. இது கதையோட்டத்திற்கு இடறல்களை ஏற்படுத்துகிறது. கலையழகு குறைந்து விடுகிறது.
சாம்பவி ஒரு பெண் போராளியின் கதை. போரினால் ஏற்படும் பாதிப்புகள்
எவ்வாறு போராளிகள் உருவாவதற்குக்
காரணமாய் அமைகின்றன என்ற பின்னணியை விபரிக்கும் அதேவேளை வரலாற்று ரீதியாகத் தமிழர்கள் மேல் தொடுக்கப்பட்ட இன ஒடுக்கல்களையும் தமிழர் போராட்டங்களையும் இக்குறு நாவல் விபரித்து ஒரு சிறந்த வரலாற்றுக் குறுநாவலாகப் பரிணமித்துள்ளது. போராளிகளின் மனத்திடம், அவர்களின் யுத்த தந்திரோபாயங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள், அவர் களின் தியாகங்கள் முதலியன கதையூடு கச்சிதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாத்திர வார்ப்பும், சூழல் விவரணங்களும் கள நுட்பங்களும் கதையோட்டத்திற்கு வலுவூட்டுகின்றன. ஆற்றொழுக்கான நடையில் நிறைவான வாசிப்பை இக் குறுநாவல் தருகிறது. சாம்பவி, செங்கை ஆழியானுக்கு நிச்சயம் பெருமை தரும் குறுநாவல் தொகுதி. இந்த நல்ல குறுநாவல் தொகுதியின் அச்சுப் பதிப்புச் சிறப்பாக அமையவில்லை.
- ஞாதி
நூல் தரை மீன்கள்
(சிறுகதைத் தொகுதி) ஆக்கம் : ச. முருகானந்தன்
இன்று இந்த நாட்டில் அதிகம் அதிகமாக எழுதி வரும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்' என மல்லிகை ஆசிரி யரால் குறிப்பிடப்பட்டவர் எழுத்தாளர் ச. முருகானந்தன். இவர் ஒரு வைத்தி யரும் கூட. இந்த நாட்டு இன யுத்தத்தின் மிகமோசமான கோரமுகத்தை எதிர் கொண்ட வன்னி மண்ணில் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக வைத்த காலை இழுத்தெடுக்க மனமின்றி, மேலும் ஆழப் புதைத்து இன்று தன்னலமற்ற பணி யாற்றி வருகிறார்.
இவரது புதியநூல் தான் தரை மீன்கள். மல்லிகைப் பந்தல் வெயியீடாக அண்மையில் வெளிவந்து இருக்கிறது.
மருந்துத் தட்டுப்பாட்டினாலும் பொருளாதாரத் தடையினாலும் நோயுற்று வாடித் தவிக்கும் அம் மக்களுக்கு முழு நேர பணிபுரியும் இவர் அந்த மக்களோடு மக்களாக இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்று நிற்கிறார். அங்கு தான் கண்டும், கேட்டும் அனுபவித்ததுமான விடயங்களை கருத்தாழம் மிக்க சிறு கதைகளாக எம் முன் விரிக்கிறார். சில வேளைகளில் பத்திரிகைச் செய்திகள் கூட அவரது கதைகளுக்கான கருவாகி விடுவதை அவதானிக்க முடிகிறது.
யானை, கரடி, பன்றி போன்ற காட்டு
மிருகங்களினதும், மனித விலங்குகளான இலங்கை ராணுவத்தினதும் அச்சுறுத் தல்களுக்கும், ஈவிரக்கமற்ற தாக்குதல் களுக்கும் ஆளாகும் மக்களது இழப்பு
88
ஞானம் - ஜூலை 2004

களையும், சோகங்களையும் பெரும் பாலான கதைகள் பேசுகின்றன. ஆனால் ஒப்பாரி வைப்பதுடனும், சோக கீதம் இசைப்பதுடனும் அவர் தனது கதைக ளுக்கு முற்றுப் புள்ளி இட்டு விடுவ தில்லை. அதற்கு மேலாகவும் அவரது கதைகள் பேசுகின்றன. அவரது பாத்திரங்கள் இழப்புகளால் மனம் சோர்ந்து விடவில்லை, கவலைகளால் துவண்டு விடவில்லை. மாறாக அக் கிரமங்களுக்கு எதிராக அணி திரள்கிறார்கள், போராட முன்வருகி றார்கள். அவர்கள் தமது இருப்பிலும்,
இன்றைய வாழ்விலும், எதிர்கால வசந்தங்களிலும் நம்பிக்கை கொள் கிறார்கள். இவ்வாறு நம்பிக்கை
கொள்ளச் செய்வது என்பது மோசமான போர்ச் சூழலில் மிகவும் முக்கியமானது என்பேன். வாழ்வின் பறந்து போன பக்கங்களை இரைமீட்டு, எதிர்கால சுபிட்சக் கனவுகளில் ஆழவைக்கும் ச.மு வின் சிறு கதைகளில் வாசகர்கள் தங்களை அடையாளம் கண்டு ஆறுதல் கொள்வது ஆசிரியரின் வெற்றியாகும்.
பேரினவாதம், சாதிப் பிரச்சனை, மத வேறுபாடு, வர்க்க முரண்பாடு, தமிழ் தேசியம், போலி இயக்கங்கள், கற்பு எனப் பல்வேறு விடயங்கள் பற்றி அவரது சிறுகதைகள் பேசுகின்றன. எழுத்தாளனுக்கு எதையும் எழுத உரிமையுண்டு என்பதை மறுப்பதற் கில்லை. ஆனால் வாழ்வில் தான்
சிங்களப்
ஆழ்ந்தனுபவித்த கணங்களின் கீறுகளை, சத்தியமான அனுபவப் பகிர்வாக வரையும் போதே வாசகர்களின் மெல்லுணர்வைத் தொட்டுவிட முடியும். இந்த வகையில் பார்க்கும் போது அப்பாவும் நானும் என்ற
ச.மு வின் சிறுகதை அற்புதமானது. அவர் அப்பாவென எழுதியது என் ஆழ்மனதில் அம்மாவாக பரிமணித்த போது அது எனது கதையெனவே உணர்ந்தேன். நீங்களும் இக்கதைக்குள் உங்களை இனம் காண முடியும் என நம்புகிறேன். இது ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான ஆழமான
பிணைப்பையும் நெருக்கத்தையும் காட்டுகிற கதை. அதற்கு மேலாக அப்பா, அம்மா, மகன், மருமகள், பேரக்
குழந்தைகள் என்று முழுக் குடும்பமும் பாசத்தால் பிணைந்து நிற்பதை, எளிமையாக படரும் சிறு சிறு சம்பவங் களால் கட்டியெழுப்பும் படைப்பு. ஆனால் அதன் முடிவு அதிர்ச்சியளிப்பது. மு. பொ தனது கவிதை ஒன்றில் நம் இருப்புக்குள் புகுந்துள்ள மரணத்தின் முடிச்சறிய, உட் சுடர்ப்பெட்டியின் குச்சிகிழிக்க முடியாமல் போனதற்காக கழிவிரக்கம் கொள்வது போல கதையின் இறுதி எம்மையும் ஆற்றாமையால் அழுத்துகிறது.
விவசாய மற்றும் காடு சார்ந்த பிரதேசங்களைப் பற்றி எழுதும்போதும் வைத்தியத் துறை பற்றிப் பேசும்போதும் இவரது எழுத்துக்களில் பிரகாசிக்கும் களத் தெளிவும், அனுபவ தேறலும் மீனவர்களையும் கடற் தொழிலையும் சித்தரிக்கும் போது பின் தங்கி விடுவதை அவதானிக்க முடிகிறது. அதேபோல சிங்கள இராணுவ வீரனான பியசேன பாத்திரம் சிங்கள தோல் போர்த்திய தமிழனது வெளிப் படுவதாகவே உணர முடிகிறது.
கணவன் மனைவி மற்றும் உறவுகள் பற்றி எழுதும் போது இவரது பேனா கசிந்து இளகி உயிர் மை சிந்தும் அதே
பார்வையாக
ஞானம் பொன் மலர்

Page 47
நேரம் காடு, காட்டு மிருகங்கள், வேட்டை என வரும் போது கிளர்ந்தெழுந்து ஆச்சரியங்களும் திகிலும் நிறைந்த உலகிற்குள் உள் நுழைய விட்டு வேடிக்கை பார்க்கின்றன. காட்டுக்
எம்மை
கரையோரமாக ஒழி கட்டுவதும், காட்டுப் பன்றிக் கூட்டம் ஆக்ரோசமாக தாக்க வரும் போது துணிப்பந்தில் எண்ணையூற்றிக் கொழுத்தி எறிந்து தப்புவதும், காட்டுத் துவக்கிற்கு இடையன் அடைச்சு வைப்பதும் எம்மை மிரமிக்க வைக்கின்றன. வேட்டை மற்றும் தாத்தா சுட்ட மான்' ஆகிய சிறு கதைகள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை. அதிலும் தாத்தா சுட்டமான்'மனதில் நிற்கிறது. அது காட்டு வேட்டைக்கு அப்பாலும் பேசுகிறது. ஒரு ஆணின் மனதில் ஆண்மையை இழப்பது என்பது, அது வயது முதிர்ந்த பருவத்தில் என்றால் கூட எத்தகையதன்மான இழப்பாக கருதப்படுகிறது, தன்னுள் கூனிக் குறுகி சிறுமைப் படவைக்கிறது, அதிலிருந்து மீள வேண்டும் எனச் சதா அவாவுகிறது என்பதை மிக அற்புதமாக இக்கதை பேசுகிறது. ஆனால் ஆபாசமாகவோ, வெளிப்படையாகவோ பேசவில்லை. வேட்டையில் குறி பார்த்து சுடுவதை குறியீடாக முன் வைத்து மறைபொருளாகப் பேசுவது ஆசிரியரின் பண்பாட்டைப் பேணும் அக்கறையையும் படைப்பனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.
யாருக்கும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற போர்ச் சூழலில் கருத்தடை அவசியமா என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன? ஆசிரியரின் பதில்கள் பாத்திரங்கள் ஊடாக இவ்வாறு வருகின்றன. 'சோதனை மேல் சோதனை என்ற கதையில் இராணுவ சூட்டிற்கும்,
நோயின் கொடுமைக்கும் தன் இரு குழந்தைகளையும் இழந்த தாயான பராசக்தி நாம் இருவர் நமக்கு இருவர் என்ற போஸ்டரை கிழித்தெறிந்து விட்டு ஆயிரம் பிள்ளைகள் பெற வேண்டும். நான் பெறுவன், எல்லோரும் போய் பிள்ளை பெறுங்கோ என பைத்தியமாக கத்துகிறாள். வேட்டை கதையில் கருத்தடை செய்ய வைத்தியர்கள் மறுத்து விட ஊசியும் குளிசையும் ஒத்துக் கொள்ளாததால் புவனம் நாலாவது முறையும் கர்ப்பமாகி
திணறுகிறாள்.
போர்ச் சூழலில் கருத்தடை என்ற விடயத்தில் ச.மு விற்குத் தெளிவான தீர்க்கமான பதில் கிடையாதா? தானும் குழம்பி வாசகரையும் குழப்புகிறாரா? இல்லை வைத்தியர்கள் ஒரு நோய்க்கு சிகிச்சை ஒன்றே என்ற முறையில் சிகிச்சை அளிப்பதில்லை. மாறாக ஒரே நோயாக இருந்தால் கூட ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற விதமாகவே சிகிச்சை அளிப்பார்கள். மருத்துவ கல்வியானது மருத்துவர்களுக்கு கற்றுக் கொடுத்த படிப்பினை இது வைத்தியரான கதாசிரியர் அதே தத்துவத்தை தனது சிறுகதைகளிலும் பரப்புகிறார். சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை கருத் தரிப்புக்கும் விஸ்தரிக்க
முடியாது. ஒவ்வொரு தனிப்பட்ட நபரினதும்,
அக் குடும்பத்தின் தேவைக்கும் ஏற்ற விதத்திலேயே அதனைச் செய்ய வேண்டும்
என்பதை தனது படைப்புகள் ஊடாக
தெளிவு படுத்துகிறார் என்றே எண்ணுகிறேன்.
இருபது சிறுகதைகளைக்
கொண்ட இந்த நூலைப் படித்து முடித்த தும் அவர் தனது சிறு கதைகளை தமிழ்
90
ஞானம் - ஜூலை 2004

தேசியம் என்ற இலட்சிய நோக்கோடு எழுதுவதான உணர்வே தோன்றுகிறது.
தனது படைப்புகளை சிறு கதை என்ற
இலக்கிய வடிவத்தின் உச்ச நிலைக்கு எடுத்துச் செல்வதை விட தன் கருத்துக் களை வாசகர்களிடம் எடுத்துச் செல்வதே அவரது முக்கிய இலக்காகப் படுகிறது. வேட்டை போன்ற ஒரிரு கதைகளை விட ஏனைய சிறு கதைகளை நேரடியாகவே சொல்கிறார். சிக்கலற்ற எளிமையான நடை, இலகு வாசிப்பைச் சாத்திய மாக்குகிறது. கதையோட்டம் ஆற்றொழுக்காக பிசிறின்றி நகருகிறது. இதனால் எல்லா விதமான வாசகர்களையும் எட்ட முடிகின்ற அதே நேரம் வேட்டை, தாத்தா சுட்ட மான், அப்பாவும் நானும்', 'அலியன் யானை போன்றவை உயர் வாசிப்பு அனுபவங் களையும் கொடுப்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் தான் இவரது கதைகள் பல போட்டிகளில் இலகுவாக பரிசுகளைத்தட்டிக் கொண்டன. அத்துடன் கணையாழி போன்ற தமிழக பத்திரிகைகளில் வெளியானதுடன், பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பெருமையையும்
பெறுகின்றன.
- டாக்டர் எம். கே. முருகானந்தன்
OO
நூல் சின்னப்பாப்பா பாட்டு ஆக்கம் : ச. வே. பஞ்சாட்சரம் வெளியீடு: கல்விவள நிலையம்,
கிளிநொச்சி.
விலை : ரூபா 150.00
பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கும் பண்டிதர் ச. வே. பஞ் சாட் சரம் அவர் கள் 45நூல்களின் சொந்தக்காரராகத்
திகழ்கிறார். அவரது புதிய நூலாகச் சிறுவர் இலக்கியம் சார்ந்த சின்னப் பாப்பா பாட்டு (2004) வெளி வந்துள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள் ள அறுபத்து மூன்று பாடல்களில் ஐம்பத்தேழு பாடல் களுக்கு இராக, தாளக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நூலை விரித்துப் பார்த்தபோது, நான் சிறுவயதில் தினகரனில் படித்த ச.வே.பஞ்சாட்சரத்தின் “சக்குப் புக்கு வண்டி சத்தம் போடும் வண்டி” என்ற பாடல், சற்று விரிவு பெற்று, “சக்குப் புக்குச் சக்குப் புக்கு சத்தம்போடும் வண்டியாம்! கக்கிக்கொண்டு காற்றில் புகையை கடுகிச்செல்லும் வண்டி யாம்!” என இடம் பெற்றதைக் காணமுடிந்தது. தினகரனில் (60களில் என்று நினைக்கிறேன்) அப்பாடல் இடம்பெற்ற வடிவத்தைவிட இப்போது அது இன்னும் நன்றாக அமைந் திருக்கிறது. "சக்குப் புக்குச் சக்குப் புக்கு” என்ற வார்த்தைகள் தொடர் ஊர்தியின் சத்தத்திற்கு ஏற்ப அமைந்திருப்பது இந்தப் பாடலின் சிறப்புக்கும் வெற்றிக்கும் ஒரு காரணம். இந்த ஒரு பாடலுக்காகவே ச.வே.ப.வை மனமாரப் பாராட்டலாம். இந்நூலில் இடம்பெற்றுள்ள பிறபாடல்களில் ஆட்டுக்குட்டி, பட்டம், தூண்டிற்காரா, பட்டணத்து வீதி, பூக்கள், நாய்வால் , ஒதுங்கி வாடா தம்பி, திண்ணைப்பாட்டி, பாவம் வெளவால் போன்ற சில பாடல்கள் சிறுவர்க்கு ஏற்ற முறையில் குறிப்பிடத்தக்க வையாக விளங்குகின்றன. கணிசமான பாடல்கள் சிறுவர் பாடல் எழுத வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவைபோல் தோன்றுகின்றன.
ஞானம் பொன் மலர்
9.

Page 48
சிறுவர் இலக்கியங்களில் ஒவியங்கள் இடம்பெறுவது அவசிய மானது. இந்த நூலிலும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளமை வரவேற்கத் தக்கது. ஆனாலும் சில ஒவியங்கள் கணி களையும் மனத் தையும் வதைக்கின்றன. அட்டைப்படத்தில் பாரதியார் , ஆறுமுகநாவலர் , திருவள்ளுவர் , ஒளவையார் ஆகியோரின் ஒவியங்கள் உள்ளன. பாரதியாரின் ஓவியம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு அந்தப் பூரிப்பில் மகிழும் ஒருவர் போலத் தோற்ற மளிக்கிறது. ஆறுமுகநாவலர் உருத்திராட்சம், விபூதி அணிந்த ஒரு வில்லன் போல காட்சிதருகிறார். திருவள்ளுவர் படிப்பறிவில்லாத ஒரு பாமரன் போன்று காணப்படுகிறார். ஒளவையார் ஒரு பெண் சாமியார் போலத் தோன்றுகிறார். அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்போரின் பின்புறத் தோற் றம் வளர் நீ த ஆணி , பெண்ணின் தோற்றமாக அமைந் துள்ளது. ஆணின் பின்புறத் தலைப் பகுதியில் ஆங்காங்கு சிறுசிறு வழுக் கையும் காணப்படுகிறது. சிறுவர்கள் என நினைத்துக்கொண்டு பெரியவர் களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நூலின் உள்ளே சில ஓவியங்கள் நன்றாக இருக்கின்றன. சில ஓவியக் கலை யுணர்வு இன்றி அமைந்து விட்டன. 'மாடு மேய்க்குஞ் சிறுவன்’ என்ற பாடலுக்கு வரையபட்ட ஓவியத்தில் சிறுவனைக் காண வில்லை; ஒரு
ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் சில பாடல்கள் சிறுவர் இலக்கியத் திற்குச் சேவை செய்யவல்லன. அவற்றுள் தலையாயது புகைவண்டி என்ற தலைப்பில் உள்ள "சக்குப் புக்குச் சக்குப் புக்கு சத்தம் போடும்
வண்டியாம்” என்ற பாடல்.
- நக்கீரன்
நூல் தார்மீகக் கோபங்கள்
(சிறுகதைத் தொகுப்பு) ஆக்கம் : கோப்பாய் சிவம்
வெளியீடு: இணுவில் கலை
இலக்கிய வட்டம்
நாடறிந்த பல்துறை எழுத்தாளர் கோப்பாய் சிவத்தின் பதினெட்டுச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. ஆசிரியர் 1975முதல் 1986வரையான காலகட்டங்களில் எழுதிய சிறு கதைகளே இவ்வாறு ‘தார்மீகக் கோபங்கள் என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. பொதுவாக ஆக்க இலக்கியங்களில் முக்கியமான தன்மை அவை படைப்பிலக்கியம் என்ற பெரு வட்டத்திற்குள் அடங்கிவிடும் அதேவேளை அவை எழுந்த காலத்தினது பின்புலங்களை பதிவு செய்யும் ஆவணங்களாக அமைந்து இருப்பதுமாகும். அந்த வகையில் சுமார் இரு தசாப்தங்களுக்கு முற்பட்ட ஈழத்து இலக்கியப் போக்கினை சமூக
வளர் நீ த மனிதன் தான் மாடு அசைவியக்கத்தினை அடையாளங் மேயப் க் கிறான் . இத்தகைய காட்டுவனவாக இதில் இடம் குறைகளை நுாலிற் களைநீ பெற்றுள்ள சிறுகதைகள் திருக்கலாம். அமைகின்றன.
92 ஞானம் - ஜூலை 2004

இச்சிறுகதைகளைப் பொதுவான கருத்தியல் அடையாளங் கொண் டவை, யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பண்புகளை இனங் காட்டுபவை என இருவகையாகப் பாகுபடுத்தலாம். எனினும் பொதுவான கதைப்பின்புலம் யாழ்ப்பாண மாவட்டத்தையே மையம் கொண்டுள்ளது. சமூகம் என்பது அதனது சகல கட்டுமானங்களுடனும் ஒரே சீரான பாதையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் அதில் ஏற்பட்ட சிறுசிறு சலனங்களே ஆசிரியரின் கதைக் களங்களாக வுள் ளன. தானி , தனி னைச் சூழ்ந்திருக்கும் உலகு ஆகியவற்றில் ஏற்பட்ட சிறுசிறு சம்பவங்கள்தான் இக் கதைகளுக்கான அடித்தளம். குழந்தைத் தொழிலாளியான ஒரு சிறுமியின் பாசம் (பிள்ளைத் தமிழ்), முதன்மைப் படுத்தப்படாத ஆனால் திறமையுள்ள மாணவனின் மீதுகொண்ட பரிவு (தார் மீகக் கோபங்கள்), ஒரு குழந்தையின் முகதரிசனத்தால் ஏற்பட்ட நெகிழ்ச்சி (குழந்தை), ஆளாளுக்கு வேறுபடும் இரசனைகள் (ரசனை), சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியானவர்கள் மீது கொண்ட சமூக மதிப்பீடு (எனக்குரிய இடம்), சீதனம், சாதியம், இவற்றால் ஏற்படும் இழப்புகளும் ஏமாற்றங்களும் (அரங்கேற்றம், கூனல்), வறுமை (அம்மன் சிரித்தாள்) ஆகிய பல விடயங்கள் இச்சிறுகதைத் தொகுப்பில் அலசப்பட்டுள்ள்ன. பொதுவாக பல படைப்பிலக்கியக் காரர்களால் அலசப் பட்ட பல விடயங்கள் இவரது சிறுகதை களுள்ளும் பேசப்பட்டுள்ளன. எனினும் சில சிறுகதைகள் அவரைத் தனித்து
இனங்காட்டுகின்றன. உதாரணமாக ‘அம்பாள் சிரித்தாள்’, ‘கூனல்" முதலானவற்றைக் குறிப்பிடலாம். கால காலமாகப் பிராமணச் சமூகத்தை மேலாதிக்கச் சிந்தனை கொண்ட சமூகம் என்ற தமிழ்நாட்டுச் சிந்தனை மரபுக்குப் புறம்பாக, இங்கு வாழும் பிராமண சமூகம் கோயி லுடனான ஊடாட்டத்தில் மாத்திரம் தங்கியிருப்பதால் அவர்கள் இட்டுள்ள மேலாதிக்க சமூகமான வேளாள சமூகத்தினரால் எவ்வாறு அடக்கு முறைக் குள் ளாகிறார்கள் என் பதையும் , அவர்களது வறுமை நிலை யையும் சிறப் பாகப் படைத்துள்ளார். தேர்ந்த எழுத்தாள னுக்குரிய அடையாளங்கள் ‘அம்பாள் சிரித்தாள் எனும் சிறுகதையினுடாகப் புலனாகிறது. சாதியம் என்ற கட்டுமானத்தை இறுக் கமாகக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்திலிருந்து கலகக் குரல் வருவது வரவேற்கத் தக்கது.
பொதுவாக இத்தொகுதி யிலுள்ள சிறுகதைகள் ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல அகவயப்பட்ட வையாகவும், தார்மீகக் கோபங் கொணி டவையாகவும் காணப் படுகின்றன. எம்மீது கால காலமாய் கட்டமைக்கப்பட்ட தொன்மங்கள், அறப்போதனைகள், சமூக விழுமியங் களின் அடிப்படையில் நின்று பார்க்கும்போது சிறுசிறு மீறல்களும், ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளும் தார்மீகக் கோபத்தை ஏற்படுத்து வனதான். ஆயின் சமூக அமைப்பும், அதன் போக்கும் நேர்கோட்டில் செல் லாது என்பதுதான் சமூக யதார்த்தம். முற்றுப்பெறாத ராகங்கள்
ஞானம் பொன் மலர்
93.

Page 49
என்ற கதையில் வெளிப்படும் மனோரதியப் பாங்கான கற்பனை, மெளனங்கள் உடைகின்றன என்பதில் வெளிப்படுத்தப்படும் சுயவிசாரம், தந்தை மகட்காற்றும் உதவியில் வரும் போதனை, முதலியவை சிறுகதைக்குரிய கட்டுக்கோப்பை அல்லது அதற்குரிய கலாபூர்வ தன்மையைச் சிதைத்துவிடுகின்றன. சம்பவங்கள் அல்ல சிறுகதைகள். சம்பவங்களின் அடியாகப் பிறக்கும் மனோ நிலைகளின் வெளிப்பாடே
அவை. மேலும் , சிறுகதை தொடர் பான உருவத்திலும் கவனச் சிதைவும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. மூத்த எழுத்தாளர் சிற்பியின் கனதியான முன்னுரையுடன் வெளிவந்துள்ள இத் தொகுப்பு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னான தமிழ் சமூகத்தின் மலரும் நிகழ்வு களை நெஞ்சில் நிறுத்துபவை.
- வ. மகேஸ்வரன்
னைலைnக்கு முன்சைரஸ் விழ்ைக்கை
கீழிருந்து அதிகாரம் கோலோச்சும், திடுமெனப் பொழியும்
மழை, சடசவுக்குக் கூந்த துக்குள்
இராட்சதக் கோதலிட்டு,
சீரின்றி கடக்கும் , . . ; s ....-ژان
பிள்ளைச் சூறாவளி /
& &
சுழன்றடிக்கும் சாரல் y μ : நிறப்போர்வை தாண்டி :
ஏக்கமுடைமுகத்தையும், "g.
தேயிலைகளில் தேங்கிய நீர் படங்கு மீறி தொடை வரையும் நனைப்பித்து விறைப்பூட்டும் கரங்களும், கால்களும் உறைநிலை ஜடமாகி
வே. தினகரன், பத்தனையூர்.
மரங்களிடையே கூடைக்கனம் கீழ் இழுக்க শ্ৰী-পুর্ণ சவாலுடைத்து, 『ゾイ வேலிகழுடுருவி மலையேறத்துடிப்புறும்
༦ ༦ பாதங்கள்
நனைந்த குளிரின் ܝ கொடூரம் உலகத்துயரைத் 3) திட்டி மலைச்சாரலில் ';. மேயவிடும்
இருதயக்குருதியே உறையும் நிலையில் šķ சுரக்கும் வியர்வையின் அடர்த்திக்கு நிகரிலா வேதனம் எதிர்ப் பொழுதுகளை பட்டினியாக்கும்.
உருவிலா கனவிற்காக மீளவும் பாரமாய்
பின்னும் இயங்கும் நகரத் தொடங்கும் பேய்பிடித்தாடும் நாளைக்கு முன் வாழ்க்கை.
94 குானம் - ஜூலை 2004
 
 
 
 
 
 
 

--.ー 8ᎦᏳᎵᎦsᏕ. en ø opfost () ஒமாதது
やエイ 石 ‘ஞானம்' இதழ் 48 கிடைத்தது. தன் கனதியாலும், கருத்துக்களாலும் ஞானம் தரமான சஞ்சிகை என்பதை நிலை நாட்டி வருகின்றது. மகிழ்ச்சி.
கேள்வி ஞானம் பகுதியில் என்னைக் கோடிட்டு த. மகேஸ்வரன், (கண்டி) ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இலக்கியன் தந்த பதில் நியாயப்படுத்தலாக இருந்தாலும் எனக்குள் இடறுகின்ற ஒரு கேள்வி உள்ளது.
அதாவது கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் நவீன இலக்கியத்தையும், படைப்பாளர்களையும், வெளியீடுகளையும் வெளிப்படையாக கிண்டல் அடித்து வருபவர். சங்க இலக்கியங்களில் எல்லாம் சொல்லி ஆயிற்று. இவர்கள் எதை புதிதாகச் சொல்ல எழுதுகிறார்கள், இப்போது எல்லோரும் எழுதுகிறார்கள். எதையெல்லாமோ எழுதுகிறார்கள், புத்தகமாக்கி வெளியிடுகிறார்கள், . என்று மேடைகளிலும், வானொலிகளிம் கருத்துக் கூறுகிறார்கள்.
அதேவேளை சில நவீன எழுத்தாளர் தம் நூல் வெளியீட்டுக்கு உரையாற்றச் சென்றால் எழுத்தாளன், கவிஞன், சமூகத்தில் ஞான நிலையில் உயர்ந்து நிற்கிறான். என்று பாராட்டும் சூட்டுகின்றார்.
அப்படியான நிலைப்பாட்டில் இருக்கும் இவர் நவீன இலக்கியத்தில் எதைச் சொல்ல வருகிறார் என்பதுதான் எனது கேள்வி.
பெரியபுராணம், திருக்குறள், இராமயணம், மகாபாரதம், கந்தபுராணம் . எல்லாம் எல்லாவற்றையும் சொல்லி விட்டன என்றால் இவர் எதற்காக புனைகதை, இலக்கியத்தில் மல்லுக் கட்ட வேண்டும்.
முடியுமானால் அகநானூறு, புறநானூறு, பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள் என்பவற்றின் தொடர்களைப் பாடிப் பாடி நூல்களை ஆக்க வேண்டும் என்பது அடியேனின் ஆசை.
வெறுமனே சபையின் கரகோசத்தைப் பெறுவதற்காக இடம் அறிந்து பேசலும், ஞானம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளை விற்றுக் கொடுப்பதற்காக எதையாவது சப்புக்கொட்டி எழுதுவது என்பதெல்லாம் சமூக மாற்றத்துக்கான இலக்கியங்கள் அல்ல, அவை சந்தர்ப்பவாத இலக்கியங்கள்.
அதற்குத் தான் இந்திய மண்ணில் வேண்டிய ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையில் நொந்து போய் இருக்கும் மக்களுக்கு இலக்கியத்தில் மூலம் ஏதும் நல்ல வழியைக் காட்டலாமா என்று வாரிதியார் நிமிர்ந்து சிந்திக்க வேண்டும் என்பதே எனது அவா. - மாவை. வரோதயன்.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
தங்கள் கலை இலக்கியச் சஞ்சிகையின் ஆண்டு நிறைவையிட்டு அகம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
மேலும் "ஏன் பெண்ணென்று." வெற்றிப் படைப்பினை மிகச் சிறந்த முறையில் யாழ், மண்ணில் நிகழ்த்தி, என் எழுத்தினை வெளிச்சப்படுத்தி, எழுதும் கரங்களை ஊக்கப்படுத்தும் தங்களுக்கும் சக ஆசிரியர் பீடத்தினருக்கும் என் மன நன்றிகள் உரித்தாகும்.
- த. சாரங்கா
yn m/ம் பொன் மலர் 95 ጦሂ

Page 50
டேWாற்றல் மித் தோனத்திற்கு!
f8 வது இதழ் பார்த்தேன் கதர்ம மகாராஜனின் "மூன்றாவது கால்" சிறுகதை படித்துச் சுவைத்து புளகாங்கிதம் அடைந்தேன். ஆசிரியரின் ஒவ்வொரு வரியும் ஜான்றுகோலுக்கு உயிர் கொடுத்த பாதிரி உணர்வுகளிள் பெருக்காக இருந்தன. இப்படிப்பட்ட சிறந்த முத்துக்களை ஞானம் வெளிக்காட்டிக் கொண்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
அட்டைப் I ஓவியங்களும் ஒவ்வொரு இதழுக்கு இதழ் அற்புதாக வித்தியாசமாக அமைந்து வருகின்றன. "கிக்கோ" புஸ்பாவிற்கும் எனது பாராட்டுக்கள்.
நன்றி
ஒவியர் 1. ஆகசாக்சன்
பதிப்பிற்குரிய ஞானம் 'ஆசிWர் ஆலர்களுக்கு,
'குளம் (ஆணி இதழ்) கிடைத்தது. பெத்த நன்றி. உணர்வு அறிவு, உளர்ச்சி ஆகிய சொற்களின் பொருள் தொடர்பில் கவிஞர் புதுவை இரத்தினதுiாா அவர்கள் தெளிவற்றிருக்கின்றாம (ஞானம் 49) நன்கு புலனாகின்றது.
2 விார்பு, அறின்பு ஆகிய சொற்களின் பொருள் வேறு வேறு என்று கவிஞர் கருதுவாரா பிள் அது தபிறு என்று தயங்காமல் சொல்ல முடியும். எனெனில் இவ்விரண்டு சொற்களும் ஒரே கருத்துஈடயவை. இதனை, பழம்பெரும் நூல் தொல்காப்பியத்தில் இடம்பெறும் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பிள்றை (பொருளதிகாரம், களவியல்) என்றும் பார்படி எடுத்துக் காட்டும். திருக்குறளிலும் மெய் உணர்தல் எனும் தலைப்பில் ஓர் அதிகாரம் உண்டு. இதன் பொருள், உண்மைக்ாய அறிதலாகும்.
இவற்றிலிருந்து உணர்வு அறிவு என்னும் இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் கொண்டாs iாள்பது தெளிவு. ஆங்கில பொழியில் அறிவு அல்லது உ6ார் எ Kப்wledge என்று குறிக்கப்படும் (இவ்வாங்கிலச் சொல் (பgi) என்னும் லத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும்.) இது போன்று. உணர்ச்சி எனும் சொல் ஆங்கிலத்தில் F:Ig அல்லது FIOlit11 என்று கிழங்கப்படும்,
மேலும், கவிஞர் குறிப்பிட்டுள்ளது போன்று கவிதை உணர்வின் பொழி அன்று. மாறாக அது உனர்ச்சியின் மொழி. இன்னும் சொல்லப் போக I ல் கவிதையை உணர்ச்சியின் வெளிப்பாடு ப்ான்று சொல்வதே பொருத்தமாகும். பல்லவர்கI வ இவக்கியங்கள், பாரதிதாசன் கவிதைகள் பல இதற்கு நல்ல சான்று.
சன்னதம், அல்லது ஆவேசம் அவ்வது வெறி மனித உணர்ச்சியின் உச்சக் கட்டம் உாார்ச்சியின் பிடியில் பனிதன் உள்ளதென அறிவு அவளை அணுகுவதே இல்,
களிஞர் புதுவை இரத்தினதுன இதhான ஆழ்ந்து சிந்திப்பாராக.
- வாசன் 1 ன்.
த சார் : அர '.

"k"'^^^^^^^
CENTRALESSENCE.
SUPPLIERS
DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES, FOOD COLOURS AND SCENTS ETC.
3
76/B, KING STREET, KANDY.
TEL: 081 - 2224187, 081 - 4471563 *్చ
3. = - 3_ے * , F_% 闾。_、 臀上、 羈了 نشي.\له لارې تړي) لارې بېلا لارې پېچلندلارېږي) لري. په \ fرچږي**ريږ\-لارې بي\*/چړې؟
《ff /་མ་ ༣ / ༧ ༣ fo لأدوية" ج " وتم%
(as CARSONSMEGA ... \o/ CERAMICS ||||||||||
--
Importers & Distributors of
Wall Tiles, Floor Tiles, High Quality Sanitary wares, Bathroom. Accessories, P. V. C. And Hot Water Pipe Fittings
A-74, Colombo Street ס,
Kandy, Sri Lanka. Tel: 081 – 4476760, 081 - 2200052
- Fax : 081 - 22OOO52 }AAAAAAAA; \/=\}0
آتے
3.

Page 51
}}{ 廖 }}ằằ δηρδη
širilis
seus Manufa Kundi
 
 
 
 

f Biscuit () icturer’S
aSaíc. Is
- 2420217 - 2420574
-2227 O41
- 2420740 kyland Gishnetik.
இ.ை 48 பீ. புருமெண்டால் வீதி, கொழும்பு 3 ச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.