கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.08

Page 1


Page 2
POOBALASINGHAM | BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS & PLIBLISHERS OF BOOKS STATIONERS AND NEWS AGENTS.
醫
Head Office: Balches :
34(), 202 Sea Stree||| 309 A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Coloi Tito OG, Sri Lanka. Tal. 2422:21 Te| : 415775 Fax 23.37313
E-mail; pbdhogs Line Lik AA, Hospital Road,
BLIS Stand, Jalila,
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி,
இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
"
鄒
ಕ್ರಿಸ್ಲೆಕ್ಪೋ॥p ; *7ewicz, * 窗 இல. 340,202 செட்டியார் தெரு, இல. 303 -2/3 காலி வீதி, துே கொழும்பு 11, இலங்கை, கொழும்பு 05, இலங்கை 隨 தொ. பே. 2422321 ITL.4-5 15775 தொ. நகல் 2337313 SS 魏 bliriģērā :pbdhoĪsliet, k இல, 4A, ஆஸ்பத்திரி வீதி, 爵
է:
பஸ் நிலையம், பாழ்ப்பாணம். L 0LLS S0LLL YY LLLLS Sk0E ZLS sE LS sY L SY OLSLS LSL SrYSL YY BuSuu u uuS uY ஐ.இ
引
 

" ,
', '',
". S.
விரிவும் ஆழமும்
பெறுவது
பிரதம ஆசிரியர் : தி. ஞானசேகரன்
இணை ஆசிரியர்: புலோலியூர் க. சதாசிவம் இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
ஓவியர்கள் : புஸ்பா நா. ஆனந்தன்
அட்டைப்பட ஓவியம் : புஸ்பா
நிர்வாகம் : கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு .
தி. ஞானசேகரன் 19", பேராதனை வீதி,
கண் டி.
Ikphone - (81-2-17857) (Office)
(8-223-1755 (Res) Millik: - 777-35(f Fily - 855
EMM
Enanian magazine ayah(M).com
SqSTSSMSSSLSS SeeSeS AeeeSATeAeAASAMeSeSeAMeASATeAeSeSASA AeMSeMASAeSMTSAeSe SMeSTTMeAe eeeS
இதழினுள்ளே .
நேர்காணல் பேராசிரியர் சிவத்தம்பி
சிறுகதை
ருத்ர வீணை
சாாங்கா காத்திருப்பு
- , முருகானந்தன்
கவிதைகள்
சிவப்பு விளக்கு
- வாகனாவானைன் இவன்தான் மனிதன்
- செ. ருக்காரத்தினம் குருட்டுப் பார்வை
- ஆ. ஜொசின் சித்தம் கலங்கியதெப்போது?
- விஞர் ஏ. இக்பாள் வாழேன்
= கவிஞர் புரட்சிபார்பன் மலையில் உதித்த நதி
ஆர8ரி
உறையுள் கூர்மையுறுகிறது.
- பூசூ பிரசாந்தின்
கட்டுரைகள்
புனைகதை இலக்கியம் .
செங்கப்ாழியான் இலக்கிபப் பணியில் இவர்
- ந. பார்த்தீபன் எழுதத்தூண்டும் எண்ணங்கள்
- துரை மனோகரன் கவிதை நயம்
- சபா. ஜெயராசா சமகாலக் கலை இலக்கிப.
- கி. சுதர்சன் விங்கள இனத்தவரின்
- கவிஞர் சக்தி பாப ஐயா விவாத மே1ை நூல் மதிப்புரை வாசகர் பேசுகிறார்
அட்டைப்பட ஓவியம் : புஸ்பா
f
{1
5
5
5
5.
3.

Page 3
每汀 ;>ޖަ ییز ۶
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் الري .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
செம்மொழியாகும் தமிழ்
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' எனப் பாரதி பாடினான். பாரதி பன்மொழி கற்றவன். பலமொழிகளின் சிறப்புகளை அறிந்தவன். தமிழ் மொழியின் தகைமைகளை உற்றுணர்ந்தவன். தெளிந்த சிந்தனையும் தீர்க்கதரிசனமும் கொண்ட பாரதி, தமிழ் மொழிக்கு இத்துணை சிறப்பளித்துக் கூறயமை, வெறும் தாய்மொழிப் பற்றால் அல்ல. உலக மொழிகளை அறிவு பூர்வமாக ஒப்புநோக்கியே கூறினாான்.
இன்று உலகில் தமிழ் வழங்குகின்ற மிகப் பெரும் நிலப்பரப்பினை ஒரு மாநிலமாகக் கொண்ட இந்திய உப கண்டத்தில், புதிய அரசின் அங்குரார்ப்பண வைபவத்தில், அரசின் வேலைத்திட்டத்தை வெளியிட்ட ஜனாதிபதி, தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஒரு மொழி செம்மொழியாவதற்கான தகுதிகளாக, அதன் தொன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மை, பண்பாட்டு வெளிப்பாடு, பிற மொழித் தாக்கமற்றதன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, மொழிவளம் போன்ற காரணிகள் கொள்ளப்படுகின்றபோதிலும், அம்மொழியில் உள்ள இலக்கியங்கள்தான் அடிப்படையாக அமைகின்றன. பண்டைய மொழிகளான கிரேக்கம், லத்தீன், போன்றவை முதலில் செம்மொழிகளாக அங்கீகரிக்கப் பட்டமைக்கு அவற்றில் உள்ள இலக்கியங்கள்தான் அடிப்படையாக அமைந்தன.
தமிழ் மொழிக்குச் செம்மொழியாகும் தகைமைகள் இருந்த போதிலும், சர்வதேசரீதியில் மொழி கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக மேலைத்தேயங்களில் தமிழ் மொழி ஒரு தனித்துறையாக இல்லாது
2 ஞானம் - ஆகஸ்ட் 2004
 
 

கீழைத்தேயமொழிகளில் - சமஸ் கிருதம் போன்ற மொழிகளுடன் - கிளைத்துறையாகவே இயங்குகிறது. தமிழ் செம்மொழியாகிய பின், அது தனித்துறையாக இயங்கும். ஆய்வுப்பணிகளை ஆய்வாளர்கள் முனைப்போடு மேற்கொள்வர். இதுவரை வெளிப்படாத தகவல்கள், ஆராய்ச்சிகள், முடிவுகள் வெளிக்கொணரப்படும். தமிழ் மொழியின் கலை இலக்கியப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் யுனெஸ்கோ’ போன்ற பன்னாட்டு அமைப்புக்கள் ஆவனசெய்யும். செம்மொழி என்ற வகையில் தமிழ்ப் படைப்புக்கள் உலக மொழிகளில் பெயர்க்கப்படும் வாய்ப்புகள் பெருகும்.
தமிழகத்திலும் உலகளாவிய ரீதியிலும் ஆரவாரமின்றி அர்ப்பணிப்போடு தமிழ்வளர்க்கும் பேரறிவாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த அங்கீகாரம் ஒரு உந்துசக்தியாக அமையும். ஈழத்தமிழர்கள் பலர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, விபுலானந்த அடிகள் போன்றோரும் இன்னும் பலரும் தமிழ் செம்மொழியாகத் திரண்டுவர வளம் சேர்த்தவர்கள். தமிழை உலகத்தமிழாக்கி, உலக மொழிகளின் புலமை மரபுகளுடன் தொடர்புபடுத்தி ஆய்வு முயற்சிகளுக்கு அளப்பரிய பணிபுரிந்தவர் தனிநாயகம் அடிகள். இன்று நம்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் அபிமானிகள் பலர் தமிழ்த் தூதுவர்களாக விளங்குகின்றனர். செம்மொழி ஆக்கச் செயற்பாட்டிற்கு இத்தூதுவர்களின் பங்கும் பணியும் அளப்பரியன. நவீன உலகில் அறிவியல் துறை பெருவளர்ச்சிகண்டுள்ள இக்காலகட்டத்தில், கலைச்சொற்கள் ஆக்கம் பற்றிய செயற்பாடுகளில் ஈழம்தான் இன்று முன்னணியில் இருக்கிறது.
செம்மொழித் தகைமை பெறும் தமிழியல் புதிய பரிமாணச் செழுமை பெறவெண்டும். இன்று இணையத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் தமிழ்படிக்கலாம். தமிழுக்குச் சேவை செய்யலாம். அறிவியல், தொழில் நுட்பம், தகவல்-கணினித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தமிழியல் வளர்ச்சி பெறவேண்டும். காலத்துக்கு ஏற்ற வகையில் சர்வதேசச் சிந்தனை நமது மொழியினுடாக வளர்த்தெடுக்கப்படவேண்டும்.
இவற்றையெல்லாம் செயல்வடிவமாக்கத் தமிழ் அறிஞர்கள், கல்விமான்கள், கலை இலக்கியவாதிகள் யாவரும் முனைப்புடன் செயற்பட்டுத் தமிழை உலக தரத்துக்கு உயர்த்தவேண்டும் என ஞானம் வேண்டுதல் செய்கிறது.
O. O. O.
பாகனம் - ஆகஸ்ட் 2004

Page 4
கிலை நிகழ்வு ஆரம்பமாகி யிருந்தது. மென்னொளி பரவிற்று. செந்நிறத்திரை மெல்ல மெல்ல விலகிற்று. இனிய வயலினிசை
மிருதுவாய்ச் செவி தழுவியது. மறு கணத்தில் பளீர் ஒளி மேடையில் விரிந்தது. அதன் மத்தியில் அழகிய பெண் ஒருத்தி செந்தீவர்ணப் புடைவை யில் தோன்றினாள். பச்சைக்கரை மயில் கழுத்தாய் மினுக்கம் காட்டியது. நாட்டியாஞ்சலி ஆரம்பம். வெண்மலர்கள் தூவியாடிய வரவேற்பு நடனம் முடிவுறப் பாடலுக்கு இறங்கியது பெண். அற்புதமான உடல் அசைவுகள். ஒவ்வொரு அசைவிலும் நளினம் தெறித்து விழுந்தது.
குயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம் - குமரன்
உடையின்
வரக் கூவுவாய்.”
இனிய தமிழின் ஆதிக்கம் மேடையின் பின்னணி இசையாய் எழுந்து சபையெங்கும் வழிந்தது. தமிழின் புதிய சந்ததி தமிழைக் கிறங்கிப் பாடி ஆட மயிர்க்கூச்செறிந்தது. கண்
புலம்பெயர்
களிமைக்க மறந்தன.
உரையாடல் குரல்களகன்ற அமைதியுள் திடீரெனப் புதைந்த செயற்கைச் சூடேறிய மண்டபம் அது. விரிந்து கிடக்கும் மென்னீல ஒளி, ஆண்கள். பெண்கள். இளமைத்துள்ளல். அவ்வளவுதானா உலகம்? வேறில்லையா? அங்குமிங்கும் பரந்திருந்தன சாப்பாட்டு மேசைகள்.
4
சாரங்கா விதவிதமான இரவுணவுகள் கண்களை வர்ணங்களால் கவர்ந்து கொண்டு
நாசிவழியையும் தம்வசப்படுத்தி யிருந்தன. தொடுகைக்கு விரல்களைத் தூண்டின. அருகே முள்கரண்டிகள். குடிபானங்கள் “தொடுங்கள் போதை யேற்றுவோம்” என்று மெளனமொழி பேசின. உணவுப் பொழுதில் ஏற்றப்படு வதற்காக மெழுகுவர்த்திகள் தியாக அர்ப்பணிப்புக்குத் தயாராய் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தன. மிகையான ஆடம்பரத்தின் பகட்டு ஒவ்வொரு மனித அசைவிலும் அசையாப் பொருட்களிலும் மிகையாக அப்பியிருந்தது.
"மலைமாங்கனிச் சோலையிலே
மருவி யெனப்பிரிந்த - குமரன் வரக் கூவுவாய்.”
சபையின் முழுக்கவனமும் தன்மீது குவியப்படுத்தியிருந்த பெண்ணின் கீத மொழி அங்கிருந்த மிகப் பலரால் வெறும் சங்கீதமாகவே உணரப்பட்டாலும் அவள் உடல் மொழியின் லாவண்யம் அக்
குறையை ஈடுகட்டியிருந்தது. நடனம்
நிறைவுற மீண்டும் செந்நிறத் திரை. நிகழ்ச்சி இடைவெளிகளை உதடுரசி விலகும் மென்சிரிப்பும் அறிமுக வார்த்தைகளும் நிரப்பின.
"ஹாய் ஐம் அமரந்தா.” சிங்களப் பாரம்பரிய உடையிலிருந்த ஒரு பெண் சினேகமாய் என்னோடு
கைகுலுக்கினாள். பட்டுப்புடைவையும்
ஞானம் - ஆகஸ்ட் 2004
 

நெற்றிக் குங்குமமும் என் தேசியத்தைப் பறைசாற்றியிருக்கக் கூடும். ஆனால்
காலகாலமாய் விரோதித்திருந்த இரு
சந்ததிகளின் கிளைகள் என்ற நினைப்பின்றிய, புலம்பெயர்ந்திருந்த ஒருதேசப் பிள்ளைகள் என்ற ஒற்றுமை கருதிய நெகிழ்வினை இணைந்த கைகளில் உணர்ந்தேன். சமாதானக் காலத்தின் சந்தோஷங்களை மகிழ்ச்சி யோடு பரிமாறிக் தன்னிருபது வயதுவரை இலங்கையில் வாழ்ந்திருந்தும் வடதிசையில் கால் பதித்ததில்லை என்று வருத்தத்தோடு சொன்னாள். தனது தந்தை ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்று அவள் சொன்னபோது புதிய சந்ததியில் புரிதல்கள் நிகழ்ந்திருப்பது பற்றிய மகிழ்வு என்னைக் கப்பென மூடிப் பரவிற்று.
மீண்டும் திரை விலகியபோது வீணையோடு அழகான பதுமைபோல அமர்ந்திருந்தாள் ஒரு பெண். பதினெட்டு வயது இருக்கும். சுருண்டகேசம் அலை யலையாய்க் கழுத்தின் கீழ் சிறிது இறங்கியிருந்தது. கூந்தலில் கூடையாய் வெண்மலர்மாலை சுற்றியிருந்தாள். நெற்றியில் சிந்துTரத் திலகம். கரு விழிகளில் சாந்தம். காதுகளில் இருசிறு வெண்கற்கள் சுடர்ந்தன. தங்கநிறக் கழுத்தில் கூர்ந்து பார்த்தால் மட்டும் தெரிவதாய் மெல்லிய சங்கிலி. வெண்பட்டு உடையில் ‘தேவி சரஸ்வதி தான் எழுந்தருளினாளோ என்றெண்ண வைக்கும் தோற்றம். யாரோ மெல்ல என் தோளில் தொட்டதுணர்ந்து திரும்பினேன்.
"நீங்கள் தமிழோ.?” இன்பத்தேன் வந்து பாய்ந்ததோ காதினில்? அருகிலிருந்த பெண்மணிதான் கேட்டார். நாற்பது வயது மதிக்கலாம்.
தானம் - ஆகஸ்ட் 2004
கொண்டோம்.
“ஒமோம்.” கிடைத்த ஒரேயொரு தமழ உறவைத் தவறவிட்டுவிடக் கூடாதென்று துடிப்பு என் பதிலின் வேகத்தில் இருந்தது. வழமைபோல அறிமுகமாகிக் கொண்டோம்.
'இந்த நாட்டிலையும் இப்பிடிப் பிள்ளையளை வளர்க்க முடியுதுதானே.” நானும் அதையே நினைத்திருந்ததில் ஆமோதிப்பாய்த் தலையாட்டினேன். தொடர்ந்த முப்பது நிமிடங்கள் வீணா கானப் பெருவெளியுள் அமிழ்ந்து அமிழ்ந்து திளைத்தோம். தியாகராஜ பாகவதரின் கீர்த்தனையில் உயிர் நெகிழ்ந்தது. வீணைப்பெண்ணின் விழிகள் சில பொழுதில் மூடியிருந்தன. அழகிய இசைத்தமிழின் பாடல் வரிகளில் மனமொன்றியிருக்கக்கூடும். நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
உணவுவேளை, இனிய மேற்கத்திய இசைப் பின்னணியில் மெழுகு வர்த்திகளின் மெல்லொளியில் புதுப்புது நட்புகளின் அறிமுகங்களோடு மிருது வான பாடலாய்க் கடந்து போனது. அப்போதுதான் நான் சற்றும் எதிர் பார்த்திராத அந்த நிகழ்வு நடந்தது.
"ஹலோ . ஐம் ஆர்த்தி .”
அறிமுகச் சிரிப்போடு அருகில்
வந்தமர்ந்தாள் அந்த வீணை வாசித்த
பெண்.
“ஹலோ. ஐம் கீதா.” "ஆர் யூ எ ரமில்.?”
ம். சிறீலங்கன் ரமில்.
சொன்னபடியே தொடர்ந்து கேட்டேன்.
"ஷால் வீ ரோக் இன் ரமில்.?”
१ ९ s

Page 5
“சொறி. ஐ கான்ற் ஸ்பீக் ரமில்.” ஒரளவு எதிர்பார்த்ததுதான். நீண்ட பல வருடங்களாய் நிலம் கடந்து வாழ்கின்ற தமிழ்க்குடிகளின் பிள்ளைகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
“இற்ஸ் ஒகே.” ஏமாற்றத்தை மென்புன்னகையால் மறைத்தேன். தொடர்ந்த பொழுதில் சிற்றுணவுகளைக் கொறித்துக் கொண்டே உரையாடல் தொடர்ந்தோம். பெற்றவர்கள் புலம் பெயர்ந்து முப்பது வருடங்களாகியதாக, தான் ஒற்றைப் பெண்பிள்ளை பெற்ற வர்களின் விருப்பிற்காக வீணை பயின்றதாகச் சொன்னாள். அவளின் பெற்றவர்களைச் சந்திக்க முடியுமா? என்று கேட்டபோது அவர்கள் ஒரு பிறந்ததினவிழாவிற்குப் போயிருப் பதாகவும் தான் டேவிட்டுடன் வந்திருப்ப தாகவும் சொன்னாள்.
என்பதாக,
நடனமாடிய பெண் நிலக்ஷி தன் சினேகிதி என்றும் அவளுக்கும் தமிழ் தெரியாதென்றும் அவள் சொன்னபோது அதிர்ந்தேன். பாடலுக்கான பாவனையை மொழி பெயர்ப்பின் உதவியோடு அறிந்து கொண்டு அதை இசைலயத்தோடு மனதில் ஒன்றவைத்து அதற்கேற்ப நளினம் சொரிய ஆடுவதென்பது உண்மையில் அபரிமிதமான கெட்டித் தனந்தான். வீணை வாசிப்பிற்காக நான் பாராட்டியபோது அவளது முகம் மலர்ந்து இன்னும் அழகோடு பிரகாசித்ததாய்த் தோன்றிற்று.
“எக்ஸ்கியூஸ் மீ. ஷால் வீ மூவ் ஆர்த்தி.”
ஒரு வெள்ளை' வாலிபன் இயல்பாய் அவளது தோள் சுற்றிய கரங்களுடன் கேட்டான்.
“மீற் மை (B) போய் பிரெண்ட் டேவிட்.”
ஞானம் - ஆகஸ்ட் 2004
 

சந்தித்துக் கொண்டதற்குச் சந்தோஷம் சொல்லிக் கைகுலுக்கிக் கொண்டோம். சிறிதுநேர உரை யாடலுக்குப் பிறகு விலகிப் போனார்கள்.
நிறைவு நேரம் அண்மித்திருந்தது. மேற்கத்திய மெல்லிசை இழையத் தொடங்கியது. வெள்ளிச்சரங்களை விசிறும் ஒரு சாரல் மழைய்ை யன்னலுTடு கைநீட்டி ஏந்திமகிழ்ந்த சிறுவயதுச் சந்தோஷத்தை மனம் மீட்டுணர்ந்தது. இசைச்சாரல் சொரியச் சொரிய இதமான நடனமும் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது. மெல்ல மெல்லக் கூட்டம் முழுவதும் இசை வழிப்பட்டு ஆடத் தொடங்கியது.
சந்தோஷங்களை முற்றுமாய்ப் பிழிந்துறிஞ்சும் வாழ்க்கைமுறை இவர்களது. சலிப்பில்லாத உழைப்பிலும் ஆடல்பாடலிலும் குடியிலும் கூடலிலும் கரைந்த வாழ்வு. கடமைப்பாடுகள் நிறைந்த பலவேளைகளில் ஒரு சுமையாய்க் கொண்டிழுக்கப்படுகின்ற என்தேசத்து நடுத்தர வாழ்க்கை முறையை மனம் ஒருகணம் சிந்தித்துப் பார்த்தது. இத்தனைக்கும் இடையில் என் உள் மனத்தில் அந்த மிருதுவான வீணாகாணம் இழைந்துகொண்டிருந்தது. எங்கே அந்தப் பெண்? தேடலில் இயல்பானேன்.
சோடிகளின் கூட்டங்களுள் அந்த சாத்விகம் பொழியும் அழகுமுகத்தைத் தேடத் தொடங்கினேன். அவள் என் விழிகளில் சிக்கிய பொழுதில் அதிர்வில் உறைந்தேன். இப்போது மிக மெல்லிய தேவதைச் சிறகாய் வெண்ணிறத்தில் நழுவியது அவளது ஊடுபுகவிடுந் தகவுடை மேலாடை. இசையூறிய அவளுடல் தாளலயத்திற்கேற்ப நளின மாய் அசைந்து கொண்டிருந்தது. உறுதியாய் ஊன்றமுடியாது துவஞம் கால்களும் துணையாக ஆடிய டேவிட்டில்
கதானம் - ஆகஸ்ட் 2004
அவள் சாய்ந்திருந்த விதமும் அவள் நன்றாகக் குடித்திருந்ததைச் சொல் லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. இசை இடைவெளிகளில் மதுக் கிண்ணத்தை நிரப்புவதில் கவனமாக இருந்தார்கள். சாரல் இசை இப்போது பெரும் ஊற்றாய்ப் பிரவகிக்கத் தொடங்கி யிருந்தது. இசையும் தன் மென் போக்கை முற்றுமாய் இழந்திருந்தது.
“கலைத்தேவியோ இவள்’ எனச் சற்றுமுன் வியந்து மலர்ந்திருந்த என்மனம் மஹாசக்தியின் ருத்ரக் கோலம் கண்டதாய் மெல்லக் கூம்பியது.
"சாம்பசிவனே வா! உகந்தாடுக ஊழிக்கூத்து! என்மனச்சுடலை உணதாடரங்கு” என்றோ வாசித்திருந்த கவிஞர் சு. வில்வரத்தினத்தின் அழகிய கவி வரிகள் சிந்தனையைக் குறுக்கறுத்தன. இப்போது பாகவதரின் கீர்த்தனை இழைகள் அழிந்திருந்த மயானவெளியாய்க் கிடந்தது. ஏனென்று புரியாத, ஒட்டுமொத்த சந்தோஷமும் வழித்தெறியப்பட்ட வெறுமையை உணர்ந்தேன். நிலக்ஷியின் நினைவு குறுக்கறுத்தாலும் அப்பெண்ணைத் தேடுவதை இயல்பாய்த் தவிர்த்தன என் கண்கள். “மென் வீணையே சுருதி தவறி ருத்ரவீணையாய் முகம் காட்டும்போது அந்த ஆடலே உயிரொன்றிய நங்கை என்ன செய்வாளோ! என்ற மனப் பயந்தான். வேறில்லை. வெறுமை படர்ந்த என் விழிகளில் ஒரு கலாச்சார வெளிறலின் பிரதிநிதியாகத் தன்னுணர்வு இழந்து கொண்டிருக்கும் அந்தத் ‘தமிழ்பெண்’ மிதந்து கொண்டிருந்தாள்.
O
என்மனம்

Page 6
சிந்திப்பவர்கள் சிவப்பு விளக்குகள்
ஆபத்தின்
அடையாளங்கள்
புத்தி ஜீவிகளுக்கு இந்த உலகம் பொருந்துவதே இல்லை.
ஆமாம்” எனும் சொல் இவர்கள் அறியாதது!
தலையாட்டத் தெரியாத தனிமரங்கள்
இலட்சியவாதிகள் எதையும் அலட்சியம் செய்பவர்கள்
இப்படித்தான் வாழ்வார்கள் எப்படியும் வாழத் தெரியாதவர்கள்
வாகரை வாணன்
உளரோடு ஒத்தோடமாட்டாதவர்கள்
அறிவு வெளிச்சத்தில் வாழும்
அபூர்வப் பிறவிகள்! இருள் இவர்களிடம் இல்லை.
ஏன் என்று கேட்பதே இவர்களின் தனிச்சிறப்பு
ஆளும் வர்க்கம் அஞ்சுவது இவர்களுக்குத்தான் அதனால்
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
எந்த நேரத்திலும் மரணம்
எதிர் கொள்ளும்
சாவு இவர்களுக்கு ஒரு சரித்திரம்!
ஞானி சோக்கிரட்டீஸ் நல்லதொரு சான்று
கவிஞன் பாரதியின் கதையும் இதுதான்!
O
ஞானம் - ஆகஸ்ட் 2004
 

நேர்காணல்
GLIDTITFfuLIń
கா. சிவத்தம்பி
சந்திப்பு : தி. ஞானசேகரன்
(& உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். N
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ் நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித் தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்கிலங் கைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் U பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ル
(13)
தி.ஞா. : நாடகத்துறை சம்பந்தமான உங்களது ஏனைய தொழிற்பாடுகள் யாவை?
கா.சி. : நாடகத்துறை சம்பந்தமான எனது கடைசித்தொழிற்பாடு நாடகம் upful 9,uj6 Qg5ITLs UT60Tg5. 6T66060)Lu PhD 9,ugh Drama in ancient Tamil Society தான். அது சுவாரசியமானது. பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் பற்றி ஆய்வு செய்தபோது, நாடகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன, ஆனால் நாடகங்கள் இல்லை. அதுபோய் எனது ஆராய்ச்சித் துறையை ஒரு சமூக வரலாற்றுத் துறைக்குக் கொண்டு சென்றது. அதேவேளை, நாடகம் பற்றிய விடயங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவு ஏற்பட்டது. இந்தத்தெளிவு
ஞானம் - ஆகஸ்ட் 2004 9

Page 7
இல் லாமல் மாணவர்களுக்குப் படிப்பிக்க இயலாது. ரதிதரன் என்ற மாணவன் இப்போது ஹைதரபாத்தில் நாடகம் பற்றிப் படிக்கிறார். அவர் ஆரம்பத்தில் என்னிடம் வந்து கூறினார், நாடகம் படிப்பதுபற்றி எல்லோரும் எங்களைப் பகிடி பண்ணுகிறார்கள். அதனால் நாடகம் ஏன் படிக்கவேண்டும் என்பதுபற்றி ஒரு கருத்தரங்கு வைக்கும்படி என்னிடம் கூறினார். அதனால் கற்கைநெறியாக அரங்கு' என்று ஒரு கருத்தரங்கு செய்தோம் . அது ஒரு சிறிய புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. இந்தத் துறைபற்றிய ஒரு முக்கிய மான புத்தகம் அது. இந்தியாவில் அதுதான் ஒரேயொரு புத்தகம் - NCBH போட்டது. நாடகத்தை ஏன் படிப்பிக்கவேண்டும்? அது எவ்வாறு மனித அறிவுக்கு உதவுகிறது என்பது முக்கியம் . "மனித வாழ்க்கை எப்போதும் முரணி பாடுகளின் மோதுகைகளைக் கொண்டது. அந்த முரணி நிலைகளை - அந்த மோதுகைகளைச் சித்திரிப்பது நாடகம் என்கின்ற கலைவடிவம்தான்" வாழ்க்கையின் முரண் நிலைகளை
அந்தப் பாத்திரங்கள் மூலமாகவே
அந்த மோதுகைகளைக் காட்டுவ தென்கிறார் அரிஸ்டோட்டில். அவர் சொல் வார் , Agon, conflict இவைதான் நாடகத்தின் உயிர் நாடிகள் . வாழ்க் கையை ஒரு முரணி நிலை விடயமாகப் பார்ப்பதென்பது நாடகத்தின் அடிப்படையான அம்சம் . இது எங்கேயிருந்து வருவதென்றால்
10
சமயச் சடங்குகளின் அடியாக வருவது. Drama என்ற சொல் Dromenon 61 6ti p ash (3 Jas as j சொல்லிலிருந்து வந்தது. Dromenon 616 pitol) - The thing done - Gaulus பட்டது. என்ன செய்யப்பட்டது? - சடங்கு செய்யப்பட்டது - சடங்கி னடியாக வந்தது. இதை நான் படித்தது தொம்சனிடம். அந்தத் துறையில் அவர் உலகப் பிரசித்தி பெற்றவர். அவருக்குத் தமிழ்நாடகம் தெரியாது. ஆனால் கிரேக்க நாடகங்கள் தெரியும். அந்த ஒளியில் நான் தமிழிலே உள்ளவற்றைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இன்று நாங்கள் நாடகத்தை வைத்துக் கொண்டு மக்களுடைய மனதை அறிய விரும்புவது மாத்திரமல்ல, பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு களைக்கூட நாங்கள் மாற்றமுடியும்.
ஜேம்ஸ்சன் என்பவர் இங்கு வந்து Applied theatre 6T60T usTypijLIT6001556) Theatre workshop b i gó ġ56oT IT fi .. அப்போது எங்களுடைய மாணவர் களுக்கு அவையெல்லாம் ஏற்கனவே தெரிந்தவையாக இருந் தன. அதையிட்டு அவர் பெரும் ஆச்சரிய மடைந்தார். மெளனகுரு எமது Department dig 6...g55|Tit. 916.60) நாங்கள் முதலில் நுண்கலைத் துறைக்கு விரிவுரையாளராக எடுத்தோம். பின்பு நாடகத்துறை விரிவுரையாளராக அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அவர் மட்டக் களப்புக்குச் சென்றபின்பு அங்கு பல்கலைக்கழகத்தில் நாடகத்தை ஒரு பாடமாக்கினார். நாடக ஆராய்ச்சி
ஞானம் - ஆகஸ்ட் 2004

களை நான் செய்தது மாத்திரமல்ல, பல்கலைக்கழகம் மூலமாக ஒரு சிலர் தங்களுடைய ஆராயப் க் சிகளை என்னோடு சேர்ந்து செய்தார்கள். மெளனகுருவின் PhD ஐ முதலில் கைலாசபதிதான் பார்த்தார். கைலாஸ் ćH sI 6M) LDT 6Ö பின் னர் அந்த மேற்பார்வைப் பணியை நான் ஏற்க வேண்டுமெனப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்தது. நான் அதில் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை. அது புத்தகமாக வந்துள்ளது.
அதற்கு முன்னர், தனது ஆய்வுப் பணியை வித்தியானந்தனுடன் தொடங்கிய காரை. சுந்தரம்பிள்ளை, வட இலங்கை நாட்டார் கூத்துமரபு பற்றி ஆய்வு செய்தார். அவரும் என்னுடன் சேர்ந்து வேலை செய்தார். முற்றிலும் அரங்கவியல் கண்ணோட் டத்துடன் அதனைச் செய்தார். அதுவும் ஒரு நல்ல நூலாக வந்தது. மற்றது சிதம்பரநாதன் எம்.ஏ.க்கு மாற்றத்திற்கான அரங்கு’ என்ற நூலை எழுதினார். அண்மையில் பெண் ணிய அரங் கு’ என்ற ஆய்வினை ஜெயரஞ்சினி என்ற பெண் எம்.பில்.க்குச் செய்தார். அது எல்லோராலும் வரவேற்கப்பட்டது. இந்தியாவிலும் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நாடகம் பற்றிய ஒரு ஆய்வினை வளர்த்தெடுப் பதற்கான ஒரு தளத்தை நிறுவு
வதறகான வாய ப பு எனக குக கிடைத்தது ஒரு பெரிய விடயம். அப்படிச் சொல்கிறபோது நான் சொல்கிற, அல்லது நான் கண்டு பிடிக்கிற ஆராய்ச்சிகளைத்தான் ஏற்க
ஞானம் - ஆகஸ்ட் 2004
சமூக
வேணி டுமெனி பதல்ல. இந் தத் தளத்தில் நின்றுகொண்டு இவர்கள் செய்த ஆராய்ச்சி பிழை என்று சொல்வதைக்கூட நான் சந்தோசமாக ஏற்றுக் கொள் வேண் . அறிவு எவரோடும் நிற்பதல்ல, அறிவு வளர்ந்துகொண்டே போகும். அந்த அறிவு வளர்ச்சியின்போது முன்பு கண்டுபிடித்ததில் சில குறைபாடுகள் காணப்படலாம். அந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படலாம். அவைகள் வேண்டும். இன்னொரு கட்டத்திற்கு நாங்கள் செல்லவேண்டும். நான் அடிக்கடி சொல்வதொன்று - "நான்
என்னுடைய ஆசிரியரின் தோள்மேல்
நின்று பார்க் கிறேன் . அதன் காரணமாக என்னுடைய ஆசிரியருக்குத் தெரியாத பல விடயங்கள் என்கண்ணுக்குப்பட்டன. என்னுடைய மாணவர்கள் எனது தோள்களிலே நின்று பார்க்கிறார்கள். என்னுடைய கண்களுக்குப் படாதவை அவர்களுக்குப்படும்" பல்கலைக் கழகத்தில் படிப்பிப்பது அந்த மாதிரித்தான். என்னுடைய சீடன் என்று சொல் ல (էք լգ Ամ Ո Ցl. அப்படிச்சொல்வது முட்டாள்தனம்.
அவனுக்கும் எனக் கும் வயது
வித் தியாசமே தவிர, அறிவு வித்தியாசம் இல்லை. சிலவேளை அவன் என்னிலும் பார்க்க அந்தத் துறையில் ஒரு பெரிய கெட்டிக் காரனாக இருப்பான். பல்கலைக் கழகத்தில் எனது மாணவன் எனக் கூறிக்கொண்டு இரண்டாம் வகுப்பில் நடத் துவதுபோல அவர் களை நடத்தக் கூடாது. நான் அப்படி நடத்துவதில்லை.

Page 8
இவற்றையெல் லாம் விட இன்னொன்றை நான் கூறவேண்டும். நாட்டுக்கூத்து மரபை மீள் கண்டு பிடிப்புச் செய்து அதனை இன்றைய அரங்க வடிவமாக் கிய ஒரு முயற்சியில G3 Lu J (T &#ffurf வித் தியானந் தன் பேராதனைப் பல கலைக் கழகத்தில் அதில் ஈடுபட்டிருந்தபொழுது அவருக்கு அந்தப் பணியில் உதவி செயப் வதற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது ஒரு முக்கியமான விடயம். ஏனென்றால், இந்தக் கூத்து வடிவத் தை d 6i கண்டுபிடிப்புச் செய்தபோது அது
நாங்கள்
தமிழ்த் தேசியம் எவ்வாறு நாங்கள் சிங்களத்தினுடைய தாக்கங்களுக்கு முகங் கொடுத்து அதனுTடாக எங்களுடைய அடையாளத்தை வளர்த்துக்கொண்டோமோ அதே மாதிரித்தான் கலைத்துறையிலும் எங்களுடைய ஈழத்து அடையா ளங்களை நாங்கள் வளர்த்துக் கொள்வதற்கு இது உதவுகிறது. ஆனால் அரசியலில் எதிர்முகமாகப் பண்ணினோம். கலைவடிவத்தில் அவர்களோடு இணைந்து செய்தோம். ஏனென்றால் அதனைச் செய்தவர்க ளெல்லோரும் பெரிய மனிதர்கள். சரத்சந்திர ஒரு காலத்திலாவது தமிழ்
இருந்த நிலை, அந்தச்
"நான் என்னுடைய ஆசிரியரின் தோள்மேல் நின்று பார்க்கிறேன். அதன் காரணமாக என்னுடைய ஆசிரியருக்குத் தெரியாத பல விடயங்கள் என் கண்ணுக்குப்பட்டன. எனினுடைய மாணவர் கள் எனது தோள்களிலே நின்று பார்க்கிறார்கள். என்னுடைய கண்களுக்குப் படாதவை
சமூக மக்கள் எந்தளவுக்குப் ப ன ' த ள ஸா ப பட்டிருந்தார்களோ, அந்தப் பின்தள்ளுகைகளோடு அவர் களுடைய கலை வடிவமும் பபி ன த ள ஞ  ைக க கு
உட்பட்டிருந்தது. 1956இல்
அவர்களுக்குப்படும்".
“மனமே" நாடகம் போடப் பட்டது. அப்போது அவர்கள் சொன்னார்கள், இந்த யாதார்த்த நாடக மரபெல்லாம் வேண்டாம். லூடோவைக்கினுடைய அந்த நாடக மரபை யெல்லாம் விட்டுவிட்டு ஒரு Indigenous theatre g 3-J33-b géJ கண்டுபிடித்தார். சிங்கள மக்களைப் பொறுத் தவரை 1956 என்பது பண்டாரநாயக்க மாத்திரம் வந்த காலமல்ல. சரத்சந்திரவின் நாடகமும் வந்தது. ஒட்டுமொத்தமான ஒரு சிங்கள எழுச்சி இருந்தது. அது கலையிலும் தெரிந்தது. எங்களுடைய
12
நாடகத்தைக் குறைத்தோ அல்லது தமிழ் நாடகத்தின் மூல வளத்தைக் குறைத்தோ பேசியது கிடையாது. சிறப் பாகத் தான் சொல் வார் . அவற்றைப் பற்றி அவர் அறிய விரும்பினார்.
இந்தச் சூழலில் பாடசாலை நிலையில், நாடகப் போட்டி நிகழ்த்தி அதில் முக்கிய இடம்பெற்ற சிறந்த ஆட்டக்காரர்களாக அடையாளங் காணப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் குழாம் பல்கலைக் கழகத்திற்கு வந்தார்கள். அதிலே
ஞானம் - ஆகஸ்ட் 2004

மெளனகுரு ஒரு முக்கியமானவர். மெளனகுரு ஒரு அற்புதமான ஆட்டக்காரர். உடல்வாகு, ஆட்டம் அவரிடம் சிறப்பாக அமைந்திருந்தன. 'அரிச்சுனன் தபசு நாடகத்தை 57 இலி ஆசிரியர் பயிற் சிக் கலாசாலையில் நாங்கள் போட்டியை ஒழுங்கு செய்தபோது மெளனகுரு ஆடினார். அப்போது வித்தியரும் நாங்களும் காரில் திரும் பி வந்தபோது, வந்தாறுமூலைக்குப் போய் அங்குள்ள அதிபர் சவரி முத்துவைக் கணி டு அவரைப் பாராட்டிவிட்டுவந்தோம். மெளனகுரு மாத்திரமல்ல, பேரின் பநாயகம் என்றொரு பையன் சல்லியனுக்கு நடித்தவர் . கர்ணன் போரில்’ பிரமாதமாக ஆடினார். அவருடைய ஆட்டங்கள் மிகவும் தீர்மானத்துடன் வரும். கனகரத்தினம் என்பவரும் சிறப்பான ஆட்டக்காரர். இப்படி ஆட்டத்தில் கெட்டிக்காரர்கள் பலர் வந்தார்கள். பள்ளிக்கூடங்களில் 1956இல் போட்ட விதை - உயர் வகுப்பில் அப்போது படித்தவர்கள் 1961 இல் பல்கலைக்கழகத்திற்கு வந்தார்கள். அவர்களை வைத்துக் கொணி டு வித் தியான நீ தனி தொடங்கினார். முதலாவது கர்ணன் போர். இரண்டாவது நொண்டிநாடகம். மூன்றாவது இரா வனேசனி . அதன்பிறகு வாலிவதை செய்தார்கள். நான் அதிலே சம்பந்தப் படவில்லை; வெளிநாடு சென்று விட்டேன். கைலாசபதி அங்கு விரிவுரை அந்த மரீள் கண்டுபிடிப்பில் உள்ள ஆக்கப்பாடு
யாளராகினார் .
ஞானம் - ஆகஸ்ட் 2004
மிக முக்கியமானது. வித் தி யானந்தனிடம் உள்ள மிகச்சிறந்த பண்பு என்னவென்றால், 'அதனை அவன் கணி விடல " என்று திருக்குறளில் சொல்வதுபோல, ஒருவனால் முடியும் என அவர் நினைத்தால் அவனிடம் , அதனை விட்டுவிடுவார். இந்தக் கட்டத்தில் நாடகத்தை நாங்கள் எங்களுடைய கலை வலுமிக்க ஒரு படைப்பாகக் காட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலில் நாங்கள் கர்ணன் போர் நாடகத்தைப் போடத் தீர்மானித்தோம். கர்ணன்போரைத் தீர்மானித்ததற்குக் காரணம் கர்ணனுடைய வாழ்க்கை யில் ஒரு துன்பியல் தன்மை இருந்தது - ஒரு அவலம் இருந்தது. எங்களுக்கு முதற் சவாலாக இருந்ததென்ன வென்றால் , ஆட்டம் என்பது வெறுமனே டான்ஸ் அல்ல. இந்த ஆட்டம் நடிப்புக்கான ஒரு உத்தி. கூத்து கிராமங்களில் நடிக்கப்படும் போது அவர்கள் கூத்தின் ஆட்டத்தை ஆட்டமாகவே பார்த்தார்கள். ஆட்டம் 6T6oi Lug Dramatic qualities gas கொண்டுவருவதற்கான ஒரு Stepping. அதற்குள் மறைந்திருக்கின்ற Drama வை வெளிக் கொணரவேண்டும். அதை எப்படிச் செய்வது? அதைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புள்ள திறனுள்ள இளைஞர்கள் - நாங்கள் சொல்வதையெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான அண்ணாவியார் வந்தாறுமூலை செல்லையா - விசயம் தெரிந்தவர். தனி னுடைய கலையினுடைய வரையறைகளைக் கடந்துபோகாமல்
13

Page 9
அதற்குள் நெகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர். இவர்களை வைத்துக்; கொண்டு நாம் அவற்றைச்செய்தோம். நாங்கள் முதலில், இன்னும் சில இசைக் கருவிகளைப் பயன்படுத்த விரும்பினோம். அதிஷ்டவசமாக அளவெட்டிச் சிதம்பரப்பிள்ளையின் பங்களிப்பைப் பெறக் கூடியதாக இருந்தது. அவர் காவடி ஆட்டங் களுக்குப் பாட்டுப்பாடுவார். உடுக்கு அடிப்பார். சிரட்டையில் அடித்து வாசிப் பார் . சிதம் பரப் பிள்ளை மேடைக்கு வந்துநின்று தலையை ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்து - பாகவதர் கட் டோடு சிரித்துக் கொணி டு பாட்டுப்பாடி உடுக்கு அடிக்கும்போது, 9.g5 LD356Tgglig5 69(5 Antiposition. சணி டை நடக் கிறதுபோலவே
இருக்கும். குதிரை ஓடுவதற்கு - தவில் அடிக்கும்போது விரலுக்கு அணியும் உபகரணத்தை மாட்டிக்கொண்டு சிரட்டையில் அவர் அடிப்பாரானால், "கொறக் கொறக் என்றொரு சத்தம் வரும். அது குதிரை ஓடுகிறமாதிரியே
நாங்கள் பக்கப்பாட்டு பாடுகிறவர் களைக் கோரஸ் ஆக நினைத்துக் கொண்டு செய்தோம் . நாங்கள் அவர் களை பக் கப் பாட்டுக் காரர்களாகவே வைத்திருக்கலாம். 'கோரஸ்’ ஆக வைத்திருக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். அது இப்போது ஒரு வாய்ப்பாடாகவே வந்துவிட்டது. ‘கோரஸ்' இல்லாமலே இருந்திருக்கலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.
ஆட்டம் என்பது ஒரு நடிப்புமுறை. சண்டை நடக்கும்போது நடிகர்கள் முன்னுக்கு வந்து பின் னுக்குப் போவார் களர் , பக் கவாட் டி லி செல்வார்கள். நாங்கள் அதைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் சண்டை செய்கிறமாதிரி ஒருவரை ஒருவர் பார்த்து ஆடமுடியுமா என நடிகர்களிடம் கேட்டோம். பேரின்ப நாயகமும் மெளனகுருவும் மிக அற்புதமாக ஆடினார்கள். இப்படியாக படிப்படியாக அந்த ஆட்டத்திற்குள் இருக்கிற நாடகத்தை வெளியே
இருக்கும். அதோடு சரத்சந்திராவைப்
நான் அப்படி நடத்துவதில்லை.
பின் பற்றி ஒரு ‘கோரஸ் ஐ வைத்துக் கொண்டோம் . இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது உண்மையில் நாங்கள் “கோரஸ்" ன்வக்கக்கூடாது. "கோரஸ்' கிரேக்க நாடகங்களுக்கு உரியது; அதுவும் ஒரு காலகட்டத்திற்கு மாத்திரமுரியது.
4
பல்கலைக் கழகத்தில் எனது மாணவன் எனக் கூறிக் கொண்டு இரண்டாம் வகுப்பில் நடத்துவதுபோல அவர்களை நடத்தக்கூடாது.
கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது.
சில பெண்பிள்ளைகள் வந்து சேர்ந்தார்கள். முன்பு 7 ஆண்களுக்கு அரிதாரம் பூசி, பின்னலைக் கட்டி, அவனை ஆம் பிளை என்பதை மறைக்க முடியாமல் நடந்த கூத்து நிலை மாறி, பெண் பிள்ளைகள் அழகான காஞ்சிபுரம் சேலையைக் கட்டிக் கொண்டு - பரதநாட்டியம் தெரிந்த வர்கள், அந்த அடியோடு முன்னுக்குப்
ஞானம் - ஆகஸ்ட் 2004
 
 
 
 
 
 
 
 

பின்னுக்குப் போய்வரும் லளிதமே பிரமாதமாக இருக்கும். இந்தமாதிரிச் செய்தவுடன் கர்ணன் போர் மிகவும் வெற்றியாக அமைந்தது.
அடுத்தது ‘நொண்டி நாடகம். ஆட்டக்காத்திரத்தைப் பொறுத்த வரையில் அது முக்கியமானதல்ல. ஆனால் அது ஒரு சமூக அங்கதம். அதனுடைய ஓட்டம் வேகமாக இருக்கும்.
நெடுக, இந்த நாட்டுக்கூத்து மரபுக்குள் நாங்கள் தொடர்ந்தும் நிற்பதா என்ற பிரச்சினை வந்தது. "மனமேயில் ஒரு பழைய கதையைச் செய்த சரத்சந்திர சிங்கபாகுவில் 69(b 356002560)u 6 (65gs. He discussed it - ஒரு சம்பவத்தை இரண்டு மூன்று கண்ணோட்டங்களில் பார்க்கிறமுறை.
கைலாசபதிக்கும் எனக்கும் கம் பராமாயணத்தின் நாடகத் தன்மையில் பெரிய விருப்பு இருந்தது. Ebugoj60Lu Dramatic qualities - அதனுடைய தன்மையை மிகவிரிவாக, எங்களோடு கதைத்தவர் எழுத்தாள நண்பர் தொ.மோ.சி.ரகுநாதன். எங்களுடைய வளர்ச்சியில் அவருக்கு, முக்கியமான பங்குண்டு. ரகுநாதன், புதுமைப் பித் தன் வழியாக கம்பனுடைய ஒரு பெரிய ரசிகன். நாங்கள் இராவணனுடன் உள்ள
போரினை முக்கியப்படுத்தி நாடகம்
எழுத நினைத்தோம். மெளனகுருவின் உள்ளே ஒரு கவிஞன் இருக்கிறான் அதனைப் பயன்படுத்தி நாங்கள் இது இப்படியிருந்தால் நல்லாக இருக்கும் என்று கூற, அவர் அதனைப் பாட்டிலே போடுவார். ஆட்டத்தோடு உள்ள பாடல களை அவர்
ஞானம் - ஆகஸ்ட் 2004
எழுதினார். இப்படி உருவாகியதுதான் இராவணேசன். இராவணேசனுடைய ஆட்டங்கள் எல்லாம் மிகவும் பிரமாதமாக அமைந்தன.
கூத்தின் புத்தாக்கத்திற்கும் நவீன ஆக்கத்துக்கும் இவைகளெல்லாம் ஒரு எல் லைக் கல் லாகவும் உதாரணங்களாகவும் கொள்ளப் அதன் பிறகு பள்ளிக் கூடங்களில் ஆடப்படும் கூத்துக் களுக்கு இவைதான் உதாரண LDIT digOT. தி.ஞா.: இப்போது ஒரு வலுவான விமர்சனம் இருக்கிறது. கிராம நிலையில், கிராம மக்களிடையே ஒரு குறிப்பிட்ட சமூகப் பயன் பாட்டுக்கு, தொழிற்பாட்டுக்கு உதவிபணி னிய நாடகத்தை, அவர்களிடமிருந்து பிய்த்தெடுத்து அதை அவர்களுக்கு அந்நியமான ஒரு கலை வடிவமாக்கியது சரியா என ஒரு வினா இப்பொழுது எழுப்பப் படுகிறது. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்? கா.சி. இது சரியா பிழையா என்பதல்ல முக்கியம். நாங்கள் என்னசெய்தோம் - எங்களுக்கு என்ன idea இருந்தது என்பதுதான் முக்கியம். எங்களுக்கு அந்தக்காலகட்டத்தில் இருந்த மிகப்பிரதானமான நோக்கம் என்னவென்றால், ஈழத்துத் தமிழ் கூத்துக்கலையின் ஊடாக வருகின்ற ஒரு கலைவடிவம் எங்களுக்கான ஒரு கலைவடிவமாக இருக்கிறது. அந்தக் கலைவடிவம் பற்றிய பிரக்ஞை இல்லாதிருந்தது மாத்திரமல்லாமல் அந்தக் கலை வடிவத்துக்கு ஒரு
Lu L 60T.
15

Page 10
சமூகப் பின்னடைவு இருந்தது. அந்தச் சமூகப் பின்னடைவிலிருந்து அதனை மீட்டெடுத்து அதனை ஒரு பொதுப் படையான கலை வடிவமாக் க வேண்டிய தேவை இருந்தது. அது ஒரு காலத்தின் தேவை. இந்த மக்களுக்கு இந்தவடிவத்தைப் பற்றிய ஒரு பிரக்ஞை ஏற்படுத்துவதுதான் எங்களுக்கிருந்த சவாலாக இருந்ததே தவிர, இந்தக் கூத்தை நாங்கள் அவர் களிடமிருந்து பறித் து இன்னொருவரிடம் கொடுப்பது போன்ற உணர்வு எங்களுக்கு இருக்கவே இல்லை. சம்பந்தப்பட்ட வர்களுக்கும் இருக்கவில்லை. இந்த விடயத்தை அக் காலகட்டத்தில் எப்படிப்பார்த்தோம் என்றால், சமூகப் பின்னடைவாகப் போய் அதன் காரணமாகக் கவனிக்கபடாமல் இருந்த ஒரு கலை வடிவத்தை மக்களுடையதாக்குவதற்கான ஒரு நடவடிக் கையாக நாங்கள் பார்த்தோம். இனி, அவர்களுடைய என்ன பயன்பாடுகளுக்கு இருந்தது என்று சொன்னால் அந்தக் கலை வடிவத்தின் முக்கியத்துவத்தை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இருக்கவில்லை. அது ஒன்று. மற்றது ஒரு சமூகப் பின்னடைவோடு அது சம்பந்தப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் அந்தப் பிரச்சினை இருக்கவில்லை; உயர் சாதிக்காரன் கூத்தாடுவான்.
யாழ்ப்பாணத்தில் கூத்தாடுவது யார்?
- ஒடுக்கப்பட்ட மக்கள்.
ஆங்கில காலனித்துவத் தாக்கம்
காரணமாக ஒவ்வொரு பிரதேச
மாநிலங்களில கலைவடிவங்கள்
16
மேலுக்குக் கொண்டுவரப்பட - தமிழகத்தில் அல்லது சென்னையில் பிராமணருக்கு இருந்த ஒரு புலமை அல்லது புத்திஜீவித மேலாண்மை காரணமாக அவர் கள் பரத நாட்டியத்தை மேலுக்குக் கொண்டு வந்தார்கள். அப்படிக் கொண்டு வரும்போது அவர்கள் அதனை அந்த அந்தக் குடும்பங்களோடு - சம்பந்தப்பட்டவர்களோடு அவர்கள் வழியாக எடுத்து நவீன மயப்படுத்தி னார்கள். பாலசரஸ்வதியின் குடும்பம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். வழுவூர் இராமையா பிள்ளையின் பெயர் வழுவூர் பவானியம்மாள் இராமையாபிள்ளைதான். இப்படியாக இருந்ததை ஒரு உயர் மட்டக் கலையாக, எல்லோருக்கும் தெரிந்த 85 60) 6 UT 85 பெரிய இடத்துப் பிள்ளைகள், பிராமண வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். அதை வைத்துக் கொணர் டே கலாஷேத் திரம் நடத்தப் படுகிறது. அந்தக் கலைவடிவத்தை அதன் பின்னணியில் இருந்து எடுக்கக் கூடாது என்று விட்டிருந்தால், பரதநாட்டியம் வேண்டும் என்பதற்காக தாசி முறையும் வேண்டும் என்று சொல்லும் முறைதான் ஏற்பட்டிருக்கும். மார் கி சியத்தில் அடிப்படையான விசயம் என்ன G66 Dms), Historical materialism - historical dynamics - gust 8560 F6 -
உள் ள
அதாவது அந்தக்கால கட்டத்தில்
தேவைப்படும். இன்றைக்கு ஜனநாயக உணர்வு வந்து, எல்லா மக்களும்
ஞானம் - ஆகஸ்ட் 2004

சமமென்ற ஜனநாயக முறையில் இந்த மக்கள் தங்கள் கலை வடிவத்தைப் பார்க்கிறதுக்கும் 1950களில் அந்த
மாதிரியான உணர்வு இல்லாமல்,
தங்களுடைய பின் ன டைவின்
உதாரணமாகக் கூத்தைப் பார்க்கிற தன்மை இருந்த காலகட்டத்தில் இது செயப் யப் பட்டது. அணி னா வி செல்லையா பெனியன் போட்டுக் கொண்டு மேடையில் ஏறியதற்கே அப் படிச் செயப் ய லாமா என்று கேட்டகாலம். அந்தமாதிரியான காலகட்டத்தில் இருந்து அதனை
எடுக்கவேண்டிய தேவை இருந்தது.
அந்தக்காலகட்டத்தில் எடுக்காமல், விட்டிருந்தால் இந்த ஜனநாயக மயப்பட்ட நிலையில் ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு உள்ள வடிவத்தில் நாடகத்தை எடுத்திருக்க இயலாது. எங்களுடைய சமுதாயம் ஒரு Hierarchy சமுதாயம். மட்டக்களப்பில்தான் உயர்மக்கள் ஆடினார்களே தவிர மற்ற இடங்களில் அல்ல.
பறை வாத்தியத்திற்கு நடந்ததை மறந்துவிடமுடியாது. இன்றைக்கு மட்டக் களப் பிலே கூடப் பறை மேளக்கூத்தைச் சரியான முறையிலே 2, L (Up 9 uum LD 65 இருக்கிறது. இன்றைக்கு யாழ்ப்பாணத்தினுடைய மிகப்பெரிய பாரம்பரியம் பறையரோடு இல்லாமல் போகிறது. ஆனால் அதை அவர்கள் தமது நிரந்தரமான சாதியடையாளமாக வைத்துக்; கொள்வதிலும் அவர்களுக்கு ஒரு ஜனநாயகப் பிரச்சினை இருக்கிறது.
ஞானம் - ஆகஸ்ட் 2004
இன்றுகூட நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் வயலின் வீணை மாதிரி எல்லோராலும் பயிலப் படுவதில்லை.
எடுத்தது சரியா பிழையா என்பதல்ல வாதம். எடுத்ததினால் அந்த நாடகத்திற்கு ஒரு பாரிய பாதிப்பு ஏற்பட்டது என்பதல்ல வாதம். எடுக்கவேண்டிய தேவையிருந்தது. இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், அந்த நிலையில் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதுபற்றிய அந்த நிலை நின்று பார் க் கிற ஆயப் வுகள் வேண்டும். கூத்தினுடைய மீளுரு வாக்கம் அல்லது கூத்தினுடைய நவீன மயப்பாடு என்பது நடந்த வரலாற்றுப் பின்புலம், அதனுடைய கலைக் கொள்கை சம்பந்தமான வரலாற்றுப்பின்புலம் இவைகளைப் பற்றி நான் சொன்னேன். அதிலே எனது தொழிற்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றி மிகக் குறைந்த பட்சமான தரவுகளைச் சொன்னேன். இவையெல் லாம் எங்களோடு நின்றுவிடுவதில்லை. நாங்கள் விட்டதன் பின்னர் மெளன குரு அதனை எடுத்துக் கூத்திலே
புதிய விசயங்களைச் சேர்த் திருக்கிறார் . அதன் பின் பு கூத் துவடிவத் தை நவீன
நாடகங்களுடைய ஒரு உத்தியாக தாசீசியஸ், சுந்தரலிங்கம் போன்றோர் பயன்படுத்தினார்கள். அப்படியாகப் போய் இன்று அது 'மண் சுமந்த மேனியரில் இன்னொரு வடிவத்தை எடுத்திருக்கிறது. இன்னொரு விசயம் என்னவென்றால் கூத்துப் போன்ற
7

Page 11
மக்கள் நிலையில் , அதுவும்
காலனித்துவங்கள் காரணமாக, சாதியமைப்பு காரணமாக ஒரு ஒதுங்கல் நிலைப்பட்ட மக்களிடையே அந்தக் கலைவடிவங்கள் இருக்கிற பொழுது அந்தக் கலைவடிவத்தி னுடைய வரலாற்றை, நிலையை அந்த Situation ஐ அவர்கள் இருக்கிற நிலையில் சொல் லமுடியாது. ஏனென்றால் அவர்களுடைய வறுமை, நிலையும் அதற்குள் சேர்ந்துவிடும். அதுபற்றிய ஒரு நல்ல ஆய்வு எங்களுக்கு வேண்டும். ஜெயராமன் என்பவர் காமன்கூத்து மலையகத் தினரிடையே என்ன Role play பண்ணியிருக்கிறது என்று ஆய்வு செயப் திருக்கிறார் . அதுபோல எங்களுக்கு எவரும் செய்யவில்லை. இப்பொழுதுதான் நாடக வடிவங்கள் இவை இவை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறோம். எங்களுக்கிருக்கிற பிரச்சினைகள் காரணமாக நாங்கள் அதனைப் பயன்படுத்தி அதனை ஒரு சமூகத்தொடர்பாக்கி, அதனை ஒரு அரசியல்தொடர்பாக்கி மண்சுமந்த மேனியர் போன்ற நாடகங்களைக் கொண்டு வந்தோம் . சண்முக லிங் கத்தின் நாடகங்களைக்
கொண்டு வந்தோம். அதுமாத்திர மல்லாமல் இப்போது சிகிச்சை முறையான அரங்காக சிதம்பரநாதன் மாற்றுவதற்கு முனைகிறார். அது சம்பந்தமான வாத விவாதங்கள்
இருக் கினி றன. இந்த ஒட்டு மொத்தமான பின்புலத்தில், நடந்தது சரி என்று நான் சொல்லவரவில்லை.
ஆனால் இதை மக்களுடைய பொதுவான பிரக்ஞைக்குள் கொண்டு
18
வந்ததென்பது முக்கியமான விசயம். அதனாலேதான் இன்று தமிழ்த்தினம் என்று சொல் லு கிறபோது நாட் டுக கூ த துப் போ டுவது முக்கியமாயிற்று. இன்று கூத்தாடுகிற பிள்ளை என்பது ஒரு அசாதாரண பிள்ளையல்ல. 1957ஆம் ஆண்டு மெளனகுரு பாடசாலையால் வந்து அரிச் சுனன் தபசு நாடகம் போட்டபோது அந்தச் சந்தர்ப்பத் திலேதான் பல்வேறு சாதிகளைக் கொண்ட பாடசாலை மாணவர்கள் ஒரு கூத்தில் நடிக்கிறதாக இருந்தது. அதுவரையில் ஒரு கூத்து ஆடினால் எல்லோரும் அந்தச் சாதிக்காரர் களாகவே இருப்பர். ஏன் என்றால் எங்களுடைய சமுதாயத்தில் ஒரு Community art also becomes a cast art. ஒருமுறை சி.சுந்தரலிங்கத்தின் மகன் சத்தியலிங்கம் ஒரு மேடையில் நடனத்துக்குப் பாட்டுப்பாடினார். அந்தவேளையில் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். நட்டுவாங்கம் பற்றிப் பேசப் பட்டது. அப் போது ஜி. சண்முகானந்தம் எங்களிடம் நக்கலாகக் கூறினார், "சுந்தரலிங் கத்தின் மகன் செய்தால் நட்டுவாங்கம் - நாங்கள் செய்தால் நட்டுவர்” என்று. நட்டுவர் என்பது சாதியைக் குறிக்கும். நட்டுவரிலிருந்துதான் நட்டுவாங்கம் வந்தது. நட்டுவர் நட்டுவனார் ஆகி, பிறகு நட்டுவாங்கம் என வந்தது. நட்டுவாங்கம் என்று வரும்போது ஆள் முக்கியம் இல்லை. நட்டுவனார் என்றால் ஆள் முக்கியம். இந்தப் ProceSS ஒன்று எங்களுடைய கலை வளர்ச்சியில் இருக்கிறது. இன்றைக்கு இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுகள்
ஞானம் - ஆகஸ்ட் 2004

இல்லாத நிலையிலேயே நாங்கள் இதனைப் பேசுகிறோம் - சந்தோசம். நாங்கள் சிலவேளை பிழைகள் விட்டிருக்கலாம். அந்தப் பிழைகளைத் திருத்தவேண்டியது அடுத்துவருகின்ற சந்ததியின் கையிலேதானி இருக்கிறது. தமிழகத்திலே நடந்த ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தப் பிரித்தானிய காலனித் துவத்துக்கெதிரான ஒரு ஒட்டு மொத்தமான மக்கள் எழுச்சியின் பொழுது அந்த அந்தப் பிரதேசத் தினுடைய மக்கள் நிலைப்பட்ட கலைவடிவங்கள்தான் முன்னுக்கு வந்தன. கதகளி, யக்சகான, ஒடிசி இவையெல்லாம் வந்தன. தமிழ் நாட்டிலே வந்தது பரத நாட்டியமும் கர்நாடக சங்கீதமும்தான். அங்கே தெருக் கூத்து வந் திருந்தாலி பிரச் சினை இருநீ திருக் காது. தெருக்கூத்தில் தி.மு.க. கூடக் கை வைக் கவில் லை. தி.மு.க.
கைவைத்த நாடகம் ஒரு Urban
theatre - 9(b Discussion theatre. 9.g. அண்ணாத்துரைக்கு இருந்த அறிவு காரணமாக வந்தது. எங்களுக்கு இந்தப் பிரச்சினை இங்கும் இருந்தது. இதனாலேதான் மிக அண்மைக்காலம் வரையில் கூத்துவேறு, நாடகம் வேறு என இருந்தது. எல்லாக் கிராமங் களிலும் இருந்தது.
மீட்டுருவாக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக சிலவற்றைச் செய்யக் கூடியதாக இருந்தது. அவற்றுக்கான நியாயப் பாட்டையும் நான் சொன்னேன். ஒட்டுமொத்தமாகச் சொல்லும்பொழுது ஒரு நடிகனாக, ஒரு நெறியாளனாக, கலைக்
(தானம் - ஆகஸ்ட் 2004
கழகத்தினுடைய நாடகத்துறை - குறிப்பாக நகர் நிலைப் பட்ட விடயங்களைச் செய்கின்ற ஒருவராக, நான் தலைவராக இருந்த காலத்தில் செய்த பணிகள், கலைக் கழக நாடகங்களில் பேராசிரியர் வித்தியானந்தன் செய்த நாடகக் கூத்து மீட்டெடுப்புமரபில் சம்பந்தப் பட்ட முறை, நாடகத்தை ஒரு கற்கை நெறியாக்குவதில் செய்த பங்களிப்பு என நான் நாடகத்திலே இத்துறைகளில் தொழிற்பட்டிருக்கிறேன். இதிலே சநீ தோசம் என்னவென்றால் இவற்றுக்கூடாக இந்நாட்டினுடைய எங்களுடைய காலத்து நாடக வளர்ச்சியின் சில முடிச்சுகள் அங்கு வருகின்றன. சொர்ணலிங்கத்தோடு, எம்.வி. கிருஷ்ணஆள்வாரோடு உள்ள தொடர்புகள், இராவணன் கந்தன் அண்ணை என்று சொல்லப்படுகிற எங்களுடைய தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த ஒருவரோடு இருந்த உறவுகள், வைரமுத்துவோடு இருந்த உறவுகள் இவைக ளெல் லாவற்றுக் கும் ஊடாகவும் இந்த நாடகத்துக்கூடாகவும் வரமுடிந்தது. இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நாடகத்தை ஒரு வரன்முறையான பாடமாக்கிற அந்த ஒரு பெருவாய்ப்பு சண்முகலிங்கத்தின் உதவியோடு எனக்குக் கிடைத்தது. இவையெல்லாம் ஒரு வரலாற்றின் தேவைகளை காலகட்டத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்தவர்களாக நாங்கள் பார்க்கப்படவேண்டுமே தவிர எங் களுடைய தொணி டுகள் , பங்களிப்புகள் என்று பார்ப்பது சரியல்ல.
(இன்னும் வரும்.)
19

Page 12
இவன்தான் மனிதன்!
கவிஞர் செ. குணரத்தினம்
பொதுக்கினறு கட்டுவான்! அதைச் சுற்றி வேலி போட்டு பூட்டித் திறப்பெடுப்பான்!
இறந்தவர்கள் வெளியே வரமாட்டார் இருப்பவரும் உள்ளே போவதற்கு விரும்ப மாட்டார்!
என்றாலும்கூட சுடலையைச் சுற்றிவர மதில்கட்டி, கேற்போட்டு
இரவுபகல் காவல் செய்வான்!
குடும்பத்தோடு ஆற்றில் மூழ்கிவிட்டால் கட்டிய மனைவி பாசமுள்ள பிள்ளைகள் எவர்தான் பாய்ந்து கட்டிப் பிடித்தாலும் கைகளில் கடித்துவிட்டு தன்னுயிரை மட்டுமே
தப்பவைக்க முயல்வான்
இவன்தானப்யா
இன்றைய நேற்றைய நாளைய மனிதனும்!
O
ஞானம் - ஆகஸ்ட் 2004
 

புாைண்காத இNக்கியம் :
அறிவோம், கற்போம், படைப்போம்.
செங்கை ஆழியான் க. குணராசா 1.1. இலக்கியம் என்றால் என்ன?
இலக்கியம் என்றால் என்ன என்ற வினாவிற்கு அதிக தூரம் விடைதேடி அலைய வேண்டியதில்லை. வெகு சுருக்கமாகவே விடையறியலாம். பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்தவையாக எழுத்துக்களும் சொற்களும் உள்ளன. ஆனால் எழுத்துக்களின் இணைப்பால் உருவாகின்ற சொற்களை எத்தனை பேருக்கு அர்த்தம் செறிந்ததாக ஒழுங்குபடுத்தத் தெரிகிறது? அவன், ஏகபத்தினி, சகோதரர், பாசம் எனச் சொற்களை அடுக்கிவிட்டு இவற்றில் அர்த்தம் செறிந்துள்ளதெனக் கூறிவிடமுடியாது. எனவே இலக்கியம் வெறும் சொற்களின் கூட்டன்று. சொற்களின் அர்த்தம் செறிந்த ஒழுங்கமைப்பால் உருவாகுவதே இலக்கியம் ஆகும்.
அவன் இராமனைப்போல ஏகபத்தினி விரதனாகவும், சகோதரர்மீது பாசங்கொண்ட அண்ணனாகவும், பெற்றோரைக் கனம் பண்ணியும் வாழ்ந்தான். ஆனால் அவன் மனைவியோ அவனுக்கேற்ற பதிவிரதையாகவில்லை உலக ஆசை சகலதினதும் உறைவிடமாக இருந்தாள். - இங்கு சொற்களில் அர்த்தம் செறிந்திருக்கின்றது. ஆனால் ஏகபத்தினி, கனம், பதிவிரதை போன்ற வழக்கொழிந்த சொற்கள் விரவி வருகின்றது. எனவே நவீன இலக்கியம் என்பது பாசாங்கற்ற அர்த்தம் செறிந்த பழகு சொற்களின் ஒழுங்கமைப்பால் உருவானதாக இருக்க வேண்டும்.
'அவன் இராமனை ஒத்தவன். மனைவியைத் தவிர வேறொருத்தியையும் கண்ணெடுத்தும் பாரான். தம்பிமார் மீது அளவற்ற பாசம். அவன் பெற்றோரின் கண்ணிமை. அவன் மனைவியோ அவனுக்கு நேர் எதிர். உலக ஆசாபாசங்களின் அடிமை. - இங்கு பாசாங்கற்ற பழகு சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் கலையழகில்லை. இச்சொற்கள் தரும் நேரடி அர்த்தத்தால் வாசகனின் தேடலிற்கு அவசியமில்லாமற் போய் விடுகின்றது. எனவே நவீன இலக்கியம் என்பது அர்த்தம் செறிந்த சொற்களின் ஒழுங்கமைப்பிலானது பாசாங்கற்ற பழகு சொற்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
அவன் இராமனாக வாழ்ந்தான். அவன் மனைவியோ சீதையாக இருக்கவில்லை. - அர்த்தமுள்ள இச்சொற்கள் பலபல அர்த்தங்களைத் தருகின்றன. வாசகனின் தேடலிற்கு இவற்றில் நிறைய இடமுள்ளது. சொன்னதிலும் பார்க்கச் சொல்லாது விட்டவை அநேகம். அவற்றில் ஒரு கலையழகிருக்கின்றது. எனவே அர்த்தம் செறிந்த பழகு சொற்களைக் கலையழகோடு ஒழுங்கமைக்கும்போது உருவாகுவதே நவீன இலக்கியம் ஆகும்.
ஞானம் - ஆகஸ்ட் 2004 21

Page 13
1.2. இலக்கியப் பிரிவுகள் 1.2.1. வாய்மொழி இலக்கியம்
எங்களுடைய பாட்டிமார் சிறுவயதில் எங்களுக்கு எடுத்துக்கூறிய எண்ணற்ற கதைகளை எண்ணிப்பார்ப்போம். அவற்றில் பலகதைகள், காலம் காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாய் மொழி மூலம் சொல்லப்பட்டு வருவனவாம். இன்று அந்த வாய்மொழிக் கதைகளிலும் பாட்டுகளிலும் பல அச்சுவாகனமேறிவிட்டன. நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள், பிரார்த் தனைகள், கட்டுக்கதைகள் என்பன நீண்ட காலமாக வாய்மொழியாகவே வழங்கி வந்திருக்கின்றன. இன்றும் என் தாயார் எனக்குச் சொன்ன ஏராளமான கதைகள் நினைவிலுள்ளன. ஏழு கடல்கள் தாண்டி எண்ணற்ற தடைகளை வென்று அரக் கனைக் கொன்று அரசகுமாரியைக் காப்பாற்றிய அரசகுமாரனை இன்னமும் நான் மறக்கவில்லை. விக்கிரமாதித்தன் கதைகளையும் அராபிய இரவுக் கதை களையும், பஞ்ச தந்திரக் கதைகளையும் அரிச்சந்திரனையும், சத்தியவான் சாவித்திரியையும் எனக்கு வாய்மொழி மூலம் முதன் முதலில் அறிய வைத்தவர் என் அன்னை. அதன் பின்னர் தான் நூல்களில் வாசித்து வியந்தேன். என்ன கற்பனை வளம்? இன்றும் உலக நாடுகள் பலவற்றில் வாய்மொழி மூலமாகப் பல கதைகள், பாடல்கள் உள்ளன. எனவே 6 JITLiIGLDITyl gewäséâuLJih (Oral Literature) என்பது இலக்கியத்தின் ஒரு முக்கியபிரிவு. இன்றும் தமிழகத்தில் நாட்டுப் பாடல் களையும் கதைகளையும் தேடி ஆய்வாளர் அலைகின்றனர். இராஜ நாராயணன் போன்றோர் அவற்றினைப் புனைகதை களாக்கிப் பெயர் வாங்கி விட்டனர்.
22
1.2.2. எழுத்திடப்பட்ட இலக்கியம்
அச்சுயந்திரங்களின் வருகையால் வாய்மொழி இலக்கிய ஆக்கங்களும் எழுத்தாளர்களின் புத்திலக்கியப் படைப்புக்களும் நூலுருப் பெற்றன. உலக நாடுகள் எங்கும் கணினியின் வருகையால் புற்றீசல்கள் போல அச்சு நூல்கள் கணத்திற்குக் கணம் பிரசவமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அசுரவேக வருகை இலக்கியத்தின் பலமா பலவீனமா என்பதைக் காலம் நிச்சயம் நிர்ணயிக்கும். அவ்வகையில் எழுத்திடப்பட்ட இலக்கிய வகைகள் பலவாம். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், பயணவிபரணம், சுயசரிதைகள் என அவை பல வகைகளாக விரியும். இவற்றில் நாவல், சிறுகதை, நாடகம் என்பன புனைகதை (Fiction) இலக்கியமாம். ஏனைய அனைத்தும் புனைகதைசாரா இலக்கியமாம். (NonFiction). இன்று புனைகதை சாரா நாவல் (Non Fiction Noval) 6TsiTO 6606, 9 sus இலக்கியப் பரப்பினை ஆக்கிரமித் திருக்கின்றது. இவற்றினை வகைசார் இலக்கியம் எனவும் குறிப்பிடுவர். இவற்றில் கவிதை, காவியம் தவிர்ந்த 660)6OTu இலக்கிய வடிவங்கள் உரைநடையில் எழுதப்பட்டிருக்கின்றன. நாடகங்கள் சிலவிடத்து உரைநடையிலும் சிலவிடத்துக் கவிதை நடையிலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. அச்சு வாகனமேறி நூலுருப் பெற்ற அனைத்தும் எழுத்திடப்பட்ட இலக்கியம் (Written Literature) எனப்படுகின்றன.
7.2. 3. இலக்கியப்
Uffo/4567
இலக்கிய ஆய்வாளர்கள் பகுப்
பாய்வுத் தேவைகளுக்காகக் காலம்சார்
GJGØD GØTU
ஞானம் - ஆகஸ்ட் 2004

இலக்கியம், நாடுசார் இலக்கியம், கருப்பொருள் சார் இலக்கியம், மொழிசார்
இலக்கியம், எனப் பல்வேறாகப் பிரித்தாராய்ந்து வருகின்றனர். தமிழிலக்கியங்களைச் சங்ககால
இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், பல்லவர் கால இலக்கியம், சோழர்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என வகுப்பது பொது வழக்கு. மேலைத்தேச இலக்கியவாளர்கள் ஆண்டுகளை எல்லைகளாகக் கொண்டு வகுத்துள்ளனர். இலக்கியங்களை அவை தோன்றிய நாடுகளின் அடிப்படையில் வகுப்பர். கிரேக்க இலக்கியம், பிரித் தானிய இலக்கியம்,அமெரிக்க இலக்கியம், பிரான்சிய இலக்கியம், தென்னாபிரிக்க இலக்கியம், இந்திய இலக்கியம், இலங்கை இலக்கியம் என நாடுகளின் பெயரால் வகுக்கப் படுகின்றன. காதல் இலக்கியம், சமூக இலக்கியம், துப்பறியும் இலக்கியம், விஞ்ஞான இலக்கியம், வரலாற்றிலக்கியம், தத்துவ இலக்கியம், மார்க்சிய இலக்கியம், தலித் இலக்கியம் எனக் கருப்பொருள்சார் இலக்கியங்களுள்ளன. ஆங்கில இலக்கியம், பிரான்சிய இலக்கியம், சீன இலக்கியம், தமிழ் இலக்கியம், சிங்கள இலக்கியம் என மொழிசார் அடிப் படையிலும் இலக்கியங்களை வகுக்க முடியும். எவ்வாறாயினும் இலக்கியம் UooLúum ofluslóðr
UбоL-Uugo பவங்களை வாசக மக்களோடு
என்பது உன்னதமான
பகிர்ந்து கொள்ள உதவும் ஓர் ஊடகமாகும். என்பது படைக்கப்படுவதோடு நின்று விடுவதன்று. அது
வாசிக்கப்பட வேண்டும்.
ஞானம் - ஆகஸ்ட் 2004
இலக்கியம்
1.2.4. இலக்கியம் வாசிக்கப்படுகிறது?
ஏன்
ஒரு கனியின் பயன் அது உண்ணப் படும்போது நிறைவு பெறுகின்றது. அதுபோல ஒர் இலக்கியத்தின் பயன் அது வாசிக்கப்படும் போதே பூரணப் படுகின்றது. படைப்பாளியின் கருத்துக் களை அல்லது நோக்கங்களை வாசகன் எவ்வளவு தூரம் புரிந்து செயற் படுகிறான் என்பது கணிப்பீட்டிற்குரியது. பெரும்பாலான வாசகர்கள் பொழுது போக்கிற்காகவே இலக்கியங்களை வாசிப்பதாகக் கூறுகின்றனர். மையில் அது தவறு. தமது மகிழ்ச்சிக் காகவே (Pleasure) வாசிக்கின்றனர். சிலர் புதிய அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக இலக்கியங்களை நாடுகின்றனர். சிலர் வாசினை மூலம் தம் அறிவினை விலாசப்படுத்திக் கொள்ள விழைகின்றனர். பெற்றுக் கொள்வதற்காக வாசிப்பவர்கள் பலருள்ளனர். தாம் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தாம் வாசிக்கின்ற இலக்கியங்களில் ஏதாவது ஒளிப்புள்ளி கிடைக்கின்றதா எனத் தேடி வாசிக்கின்றனர் சிலர். நிஜவாழ்க்கையில் அறிய முடியாதவற்றினை இலக்கியங் களிலிருந்து அறிந்து கொள்ளச் சிலர் வாசிக்கின்றனர். தாம் வாழ வேண்டிய மார்க்கத்தினை நிர்ணயிக்க இலக் கியத்தில் வழி தேடி வாசிப்பவர் களுமுள்ளனர். சமூக விடுதலைக்காக இலக்கியங்களில் போராட்ட வழி நாடி வாசிப்பவர்கள் இல்லாமலில்லை. அவ் வகையில் புரட்சியாளர்களை இலக் கியங்கள் உருவாக்கியிருக்கின்றன.
O
உண்
புதிய தகவல்களைப்
23

Page 14
குருட்டுப் பார்வை
த. ஜெயசீலன்
ஆனையினைப் பார்த்த அதிசயக் குருடர்களாய் நீவிர் திகழ்கின்றீர்
நினைக்கச் சிரிப்புத்தான்
வருகிறது!
உங்கள் அறிவு வரட்சி எண்ண, தெரியாத்தனம் நினைக்கத் திகைப்பும் எழுகிறது. தடவித் தடவி நீவிர்துருவித் தரிசித்த உடற்பகுதி தன்னை
உருவகித்தீர் யானையென! சுழகு வடிவு யானை சொன்னான் ஒரு குருடன். உலக்கை வடிவென்றும், உரல்லின் வடிவென்றும்,
சுவரின் வடிவென்றும், சுள்ளி வடிவென்றும், ஒவ்வொருவர்
சொல்ல உணர்ந்தேன் நான் . - யானையதோ -
யானையாயே நின்றிருக்கும்; குருடரது சொல்கேட்கும்
ஏனையோர்க்கு. யானை யானையை தெரிந்திருக்கும்?
எனது கவிதையெனும் யானையை நான் பார்க்கின்றேன்.
தனது ‘வடிவோடே அது தரையில் மேய்கிறது. தடவித்தடவி அதைத் தரிசித்த குருடர் சொன்ன முடிவுகளால் உலகமதை முழுமையாகிக் காணாத
பொழுதும் அது தனது முழுமையோடே வாழ்கிறது.
O
24 ஞானம் - ஆகஸ்ட் 2004

இலக்கிலம் மைைல் இஒர் .
வுெனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஆரம்ப கர்த் தாக் களி ல்
ஒ ரு வ ரு ம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரை
யாளராகப் பணிபுரிபவரும் நாடகம், கவிதை, சிறுகதை, விமர்சனம் போன்ற துறைகளில் தன்னை இனங் காட்டிக் கொள்பவரும் எனப் பன்முகப்பட்ட செயற்பாட்டாளர்தான் திரு. கந்தையா பூரீ கணேசன்.
இணுவில் கலை இலக்கிய வட்டச் செயலாளர், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டச் செயலாளர், வவுனியா ஆங்கில மன்ற இணைச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்து காத்திர மான, கனதியான பங்களிப்புக்களை இடையறாது நிறைவேற்றி கலைஇலக்கிய உலகிற்குத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டிருப்பவர்.
1997இல் யாழ்ப்பாண தமிழ் நாடக அரங்கு (விமர்சனக் கட்டுரைகள்), 2001ல் நிதர்சனத்தின் புத்திரர்கள் (அரங்க எழுத்துருக்கள்) ஆகிய நூல்களைத் தந்ததோடு, ஈழத்துப் பண்டிதமணி (பேராசிரியர் ச. சுசீந்திரராசா) நாடக வழக்கு (குழந்தை ம. சண்முகலிங்கம்) ஆகிய நூல்களின் தொகுப்பாசிரிய ராகவும் இருந்துள்ளார். இந்தத் தொகுப்பு
ஞானம் - ஆகஸ்ட் 2004
ஒஇெைலஜல் கங்குைலன் (டூ கணேசன்
ந. பார்த்திபன்
முயற்சியில் மெளனகுருவின் நாடகங்கள், (பேராசிரியர் சி. மெளனகுரு) பாலையும் சோலையும் (மூத்த எழுத்தாளர் சொக்கன்) ஆகிய இரு நூல்களும் வெளிவர இருக்கின்றன என்ற தகவல்
தமிழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு இனிப்பாயிருக்கும்.
மேலும், யாழ். பல்கலைக்கழக
வவுனியா வளாக கலை கலாசார மன்றப் பெரும் பொருளாளராக இயங்கி 'தடம் என்ற கலை இலக்கியச் சஞ்சிகையின் நிறைவான வரவுக்கு காரண கர்த்தா வாகவும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் சமூக, கல்வி, கலை,இலக்கிய சஞ்சிகையான மாருதம் வருகைக்காக இணை ஆசிரியராக நின்று செயலாற்றியும் வருகிறார்.
நாடக நடிகராகவும், நாடக எழுத்துரு வாக்காளராகவும், நாடக நெறி யாளராகவும், குறிப்பாக நாடக ஆர்வலர்களை இனங்கண்டு இணைப் பாளராகவும் செயற்பட்டு வருகிறார். பேராசிரியர் சி. மெளனகுரு 1975 - 1990 எனக்குக் கிடைத்த நல்ல துணைகளுள் ஒருவராகவும், தொல்லைதரும் விமர்சக ராகவும் அமைந்தவர் பூரீ கணேசன்’ என்று கூறியது இங்கு கவனத்திற் குரியது. "சக்தி பிறக்குது”, “புதியதொரு வீடு” போன்ற நாடகங்களைத்தான் நெறியாள்கை மlசய்தபோது, பயிற்சிப்
25

Page 15
பட்டறைகளில் ஆர்வமுடன் பங்கேற்று பிரகாசித்ததுடன் அவற்றை வெற்றி கரமாக நடத்தத் துணையாகவும் இருந்தவர் எனப் பேராசிரியர். சி. மெளனகுரு குறிப்பிட்டதைப் பார்க்கிறோம்.
இதே போன்று குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நெறியாள்கையில் பல நாடகங்களில் நடித்ததுடன், V. M. குகராஜாவின் நெறியாள்கையில் மஹாகவியின் “புதியதொரு வீடு", முருகையனின் “வெறியாட்டு” என்ற நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்த அனுபவங்கள் இவரை நல்ல நெறியாள ராகவும் பரிணமிக்கச் செய்தன. இப் பயிற்சி காரணமாக பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலை, இயக்கச்சி அ. த. க. பாடசாலை, வேரவில் இ.த.க. பாடசாலை, யாழ். இந்துக் கல்லூரி, யாழ். பல்கலைக் கழக வவுனியா வளாகம், வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆகிய களங்களில் அங்கு பயின்ற மாணவர் களை, ஆசிரிய பயிலுனர்களை, ஆசிரியர்களை பயிற்றுவித்து நெறி யாள்கை செய்து தன் நாடகங்களை மேடையேற்றியுள்ளார். பாரம்பரியத்தின் சிறப்பு அதன் பழமையிலன்று. அதன் தொடர்ச்சியில்தான் தங்கியுள்ளது. என்ற வகையில் பாரம்பரிய அரங்கினை இன்னொரு வகையில் வாழும் அரங்காக வளர்க்கும் முயற்சியில் பூரீ கணேசன் தனது நாடகங்களைப் படிப்பதற்கும் நடிப்பதற்கும் உருவாக்கினார்.
இன்றைய காலத்தில் கால இலக்கிய ஈடுபாடு கொண்டுள்ளோரது பெரிய குறைபாடு ஆங்கிலப் புலமையின்மையே இந்நிலையில் பூரீ கணேசனின் தனித் துவத்திற்கு ஆங்கில மொழிப் புலமை
26
உந்துசக்தி எனக் கூறுவது பொருத்த மெனலாம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பயின்றதோடு ஆங்கிலப் புலமையாளர் தொடர்பும் ஆங்கிலத் தினூடாக உலக நாடக அரங்கை விஸ்தாரமாக அறியும் வாய்ப்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்ததோடு, கலை இலக்கிய அறிவையும் வளர்க்க உதவின. சோ. பத்மநாதன், ஏ. ஜே. கனகரத்தினா போன்ற விமர்சகர்கள் தொடர்பும் விமர்சன அறிவையும் வளர்த்தன. இதன் காரணமாக மொழிபெயர்ப்புத் துறையிலும் காலூன்றி பல நல்ல முயற்சிகளைச் செய்துள்ளார். குறிப்பாக ஆங்கிலக் கவிதைகளை, ஆராய்ச்சிக் கட்டுரைகளை மொழி பெயர்த்தத னுாடாகத் தமிழை மட்டும் வாசிக்கத் தெரிந்த ஆர்வமுள்ள வாசகர்கள் பயனடையச் செய்தார்.
இன்று Oasis - (ஒயாசிஸ்) (பாலைவனச் சோலை) எனும் ஆங்கிலச் சஞ்சிகையின் இணையாசிரியராகச் செயற்பட்டு வவுனியா பிரதேசத்தின் ஆங்கில ஆர்வத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறார். மேலும் வவுனியா ஆங்கில மன்றத்தினூடாக பல்வேறுபட்ட பணிகளை ஆர்வத்துடனும் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தின் - வவுனியா வளாக கலை காலாசார மன்றத்துடன் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து வன்னி ஒடை, வன்னி அருவி, வன்னி ஊற்று என்ற மூன்று இசை நாடாக்களை உருவாக்கி அதில் வளர்ந்து வரும் இளைய தலை முறையினரின் கவிதை களையும் சேர்த்து இசையமைத்து வெளியிட,
ஞானம் - ஆகஸ்ட் 2004

நிகழ்ச்சி வடிவமைப்புப் பொறுப்பை பூரீ
கணேசன் ஏற்றிருக்கிறார். ஈழத்திற்கான
இசை மரபைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்.
1996ம் ஆண்டு வவுனியா நகரசபை ‘நெறியெழில்’ என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. வவுனியாவும் இலக்கிய வளர்ச்சியும்’ என்ற தொகுப்பு நூலில் இலக்கிய விமர்சகர் பூரீ கணேசன் எனும் தலைப்பில்
கெளரவப்
இவருடைய புகைப்படத்தையும் பிரசுரித்து வவுனியாவின் இலக்கிய வளர்ச்சிக்கு இவராற்றிய பங்களிப்புகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டது. இவருடைய நிதர்சனத்தின் புத்திரர்கள்' என்ற நாடக எழுத்துருக்கள் தேசிய, மாகாண சாகித்தியப் பரிசுகளைப் பெற்றது. இவருடைய சுறுசுறுப்பும், எதையும் கேள்வி கேட்கிற இயல்பும், துருதுரு என்ற குணாதிசயமும் இன்னும் பல பரிசுகளையும் கெளரவிப்புக்களையும் இவர் பெற வழிவகுக்கும் என்று துணிந்து கூறலாம்.
இறுதியாக, பூரீ கணேசனது ஆதங்கத்தில் உள்ளபடி "பல கலை இலக்கியப் பணியாளர்களுடைய கட்டுரைகள், நேர்காணல்கள், ஆக்க முயற்சிகள் எல்லாம் தொகுப்பார் இல்லாது, வரலாற்றுப் பதிவும் இல்லாது காலத்தால் காணாமல் போய்விடுமோ 6T նմ: அஞ்சுகின்றேன்.” என்ற கூற்றுக்கமைய கலை இலக்கிய ஆர்வலர்களிடம் இவருடைய ஆதங்கத்தைக் கூறி, இதனைத் தவிர்க்க அவர்கள் வளர்த்து விட்ட தொடர்புள்ள உலகும், மாணவர்களும் அவர்கள் பணியைத் தொடர்வதோடு அவர்கள் காட்டிய பாதைகள் பற்றிய ஆவணங்களைப் பதிப்பிப்பது பற்றியும் சிந்திக்க வேண்டுமெனக் கேட்கும் இவருடைய மனப்பாங்கையும் இவருடைய தொகுப்பு முயற்சிகள் தொடர்பான முன்மாதிரியையும் யாவரும் பின்பற்ற வேண்டும். பூரீ கணேசன் போன்ற பன்முகச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகள் தொடர்ந்தால் தமிழ் கலை இலக்கிய உலகு இன்றும் பயன்பெறும் என்பதில் ஐயமில்லை.
உள்நாடு தனிப்பிரதி ரூபா 30/= ஆண்டுச் சந்தா ரூபா 360/= 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/- 3 ஆண்டுச் சந்தா ரூபா 1000/= ஆயுள் சந்தா ரூபா.15000/=
சந்தா காசோலை மூலமாகவோ மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடர் அனுப்புபவர்கள்
அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
*ஞானம் ? சந்தா விபரம்
மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய பெயர், முகவரி
T. Gnanasekaran
19/7, Peradeniya Road Kandy.
வெளிநாடு
gigs gigst : 25 US$ ஆயுள் சந்தா 300 USS
- ஆகஸ்ட் 2004

Page 16
சித்தம் கலங்கியதெப்போது?
28
கவிஞர் ஏ. இக்பால்
சூரியன் உதித்தது உதித்ததுதான் சந்திரன் வரஇடமளிக்கவில்லை வானிருள் சூழ்ந்திடச் சூரியனின் வல்லமை ஒளியெங்கும் நீங்கவில்லை! யாரினி இயற்கையை மாற்றிடுவார் யாருமே பொறுப்பில்லை என்பதுண்மை நாபமினி இதற்கொரு முடிவெடுக்கும் நாட்டமே கொண்டிட இயலவில்லை!
அற்பமாய் ஒரிரு நாட்களிலே ஆண்டிடும் வல்லமை நிலைபெறுமா? உட்பொருள் உணர்வுகள் அற்றதெல்லாம் உடனடி நிலைத்திடா உருப்படிகள் இப்படி இயல்புகள் இருப்பதினை ஏற்றிடாக் காரியம் செய்வதற்கு எப்படி எண்ணங்கள் தோன்றியதோ இடரதில் ஒருமையே காணவில்லை!
கண்ணுக்கு எட்டாத தொலைவினிலே காண்பதைக் கற்பனை மனதினிலே எண்ணி ஒருநிலைக் காக்குவதை எப்படி ஏற்றிடச் செய்திடலாம்! அண்மையில் உள்ளதை அறிந்திடவே ஆட்டமே கண்ட இடம்டமனித குலம் தன்னுணர்வில் செய்யும் காரியங்கள் தகைமை உடையதாய் ஆகிடுமா?
அண்ட சராசரம் யாவையுமே அற்பமென எண்ணும் அறிவினுக்கு கண்னொளி காதொலி மட்டுமுள்ள கற்கைகள் எதிலுமே பயனேயில்லை!
ஞானம் - ஆகஸ்ட் 2004

எல்லை யகற்றி இடம் விலக்கி இயற்கை இயல்புகள் தான் பொறுக்கி Q) u @ib 6lU 6ö)LD Go)L u ffbfr5?L l/ T LD6öfôgg5 g56ULb வறுமைகொண் டெதிலுமே தத்தளிக்கும்!
வண்ண நிலவே நீ வந்ததெப்போ வல்லமைச் சூரியன் மறைந்ததெப்போ எண்னத்தி லாழ்ந்தோர் உறங்கிவிட ஏற்ற இயற்கை பெற்றதெப்போ கண்ணும் கருத்தும் கதிகலங்கி கற்பனை யாவும் சீரழிந்து எண்னு மளவுக்கு மனித னில்லை எப்போது சித்தம் கலங்கியது?
அறிவுடையோருக்கே இவ்வுலகின் அற்புதம் யாவையும் அறிந்திடலாம் தெளிவுடை யோருக்கே தெரிவதுள்ளே திறனுடைப் பொருட்களைக் கண்டிடலாம் அறிவு திறன் தெளி வாவையுமே அகத்துள் நிறைத்த நிறைடமனிதன் ஒருவனே யாகினும் இருப்பதினால்
உலகை உருப்பெறச் செய்திடலாம்!
பமனிதனை மையமாய்க் கொண்டுலகை பமதிப்பிடல் முக்கியம் என்பதல்ல பமனிதனைவிட இதிலடங்குவதை மதிப்பிட மனிதனுக் காயுளில்லை பமனிதனுக்குரிமையே பற்றவைகள் மனிதனே தனக்கெனக் கொள்வதினால் மனிதனின் மடமையே நீங்கவில்லை மனிதன் யார் உலகெது புரிகிறதா?
O O
ஞானம் - ஆகஸ்ட் 2004 29

Page 17
கவிதை நயம்
- மறு மதிப்பீடு
செய்யுள், கவிதை என்ற இரு
எண்ணக் கருக்களுக்குமிடையே வேறுபாடு துணியப்படுகின்றது. வரையறை செய்யப்பட்ட யாப்புக்
கட்டமைப்புக்களைத் தழுவி எழுதப் படுவது செய்யுள் (Verse). ஆனால் கவிதை (Poetry) என்பது அவ்வாறான வடிவக் கட்டமைப்புக்களின் அடிப் படையில் விளக்கப்படக் கூடியதன்று. புறவரையறைகள் இன்றி விளங்கிக் கொள்ளப்படக்கூடியதுதான் கவிதை.
மொழியில் உட்பொதிந்துள்ள படிமவாக்கத்துடனும் (Imagery) ஒசை உள்ளிட்டுடனும் கவிதை இணைந்து நிற்கும். கவிதையாக்கத்தின் பிரதான கருவியாக அமையும் படிமம் தனித் துவமான உளத்தொழிற்பாட்டைத் தூண்டிவிடுகின்றது. மொழியில் அமைந்துள்ள எல்லாச் சொற்களும் ‘ஓசை’ என அழைக்கப் படுமாயினும், கவிதையில் இடம்பெறும் ஒசை "ஓசையின் ஒசை” என அழைக்கப்படும். அத்துடன் தனக்குரிய ஒரு தருக்க ஒழுங்கமைப்பைக் கவிதை கொண் டிருக்கும். கவிதையில் இடம் பெறும் சொற்கள் அகராதியில் இடம் பெறும் கருத்துக்களைவிட்டு விலகி நின்றாலும் வியப்பில்லை.
கவிதையின் சிறப்பார்ந்த பண்பு களுள் ஒன்றாக அமைவது உள்ளத்தை அருட்டிவிடலாகும். ஒய்வு நிலையில் இருக்கும் உள்ளம் கவிதையால்
30
JLIT. Oegu UTJFIT
அருட்டிவிடப்படும் அல்லது அருட்டல் நிலையிலிருக்கும் உள்ளத்தில் கவிதை மேலும் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தும். இந்நிலையிலே கவிதை உளநிலைப்பட்ட பயிற்சியைக் கொடுக்கும் மொழிச் சாதனமாகின்றது. மொழி என்ற கருவியால் துணியும் உயரங்களை எட்டுவதற்கு முயலும் ஒரு வடிவமே கவிதையாகின்றது.
கவிதை ஒருவித மீஇயற்கைப் பளிச்சீட்டினைக் (Epiphany) கொண்டது. திடீரென்ற உதைப்புடன் அசாதாரண உணர்வுகள் கவிதையால் தூண்டி விடப்படுகின்றன. மீஇயற்கைப் பளிச்சீடு ஒருவித மாயைத் தோற்றத் துடன் தொடர்புடையது. இது வியப்புச் சுவை என்பதிலும் பார்க்க மேலான ஒரு நிலையாகும்.
ஒருவித மனோவசியச் செறிவுநிலை (Hypnotic Concentration)56)flsinguirrôù ஏற்படுத்தப்படுகின்றது. இவ்வாறான மனோவசியம் அல்லது கருத்தேற்றம் சுயமனோவசியமாக இருக்கலாம் அல்லது கவிதையை ஏற்றி விடப்பட்ட மனோவசியமாக இருக்கலாம்.
ஆக்கியவரால்
தமிழ் மரபில் கவிதையை மாயவித்தை” என்றும் கூறும் மரபு காணப்படுதல் குறிப் பிடத்தக்கது.
ஒசை இயங்கமுடியாத இடங்களில் படிமங்கள் இயங்குதலும் படிமங்கள் இயங்கமுடியாத இடங்களில் ஒசை
ஞானம் - ஆகஸ்ட் 2004

இயங்குதலும் இருதரப்பு இணக்கத்தில் தொழிற்படுதல் கவிதையின் ஒரு பரிமாணம். ஒசையும் படிமங்களும் சமாந்தரங்களாக இயங்குதல் அதன் இன்னொரு பரிமாணம். அருவநிலைப் பெயர்ச்சி உருவநிலைப்பெயர்ச்சி என்ற இரு நிலைகளுக்கும் ஈடு கொடுக்கக் கூடியவாறு ஒசையும் படிமங்களும் சமாந்தரங்களாக இயங்குதல் அதன் இன்னொரு பரிமாணம். அருவநிலைப் பெயர்ச்சி, உருவநிலைப்பெயர்ச்சி என்ற இருநிலைகளுக்கும் ஈடுகொடுக்கக் கூடியவாறு ஒசையும் படிமங்களும் நீந்தியவண்ணமிருக்கும்.
கவிதையின் படிமங்கள் கற்பனை யோடு இணைந்தது. கற்பனைக் காப்பியங்களாக அமையும் படிமங்கள் ஆக்க மலர்ச்சியின் வெளிப்பாடுகளாகத் தொழிற்படும். உளப்பகுப்பு உளவிய படிமவாக்கத் தொழிற் சாலையாக நனவிலி உள்ளம் அமைந் துள்ளதென்று குறிப்பிடுவர். புறச் சூழலின் அழுத்தங்களால் அமுங்கிய உணர்வுகள் படிமங்களாக வெளி என்பது உளப்பகுப்பு
லாளர்கள்
வருகின்றன உளவியலாளரின் கருத்து.
Ly. Lo பற்றிய பிறகருத்துக்கள் வருமாறு : 1. படிமங்கள் பண்பாட்டு விளை நிலத்திலிருந்து உருப்பெறுகின்றன. அதாவது கலாசார சூழலும் இயல்பும் படிமவாக்கத்தைத் தூண்டி நிற்கின்றன. 2. மொழியியல் நோக்கிலே படிம ஆக்கத்தை விளக்குவோர் படிமங்கள் செறிவாகவும்
ஆக்கங்கள்
சிக்கனமாகவும் உணர்ச்சிகளைப் பரிமாற்றம் செய்யும் தொடர்பாடற் சாதனம் என்பர்.
ஞானம் - ஆகஸ்ட் 2004
இந்நிலையில் படிமத்துக்கும் மொழிக்குறியீட்டுக்குமுள்ள துல்லியமான வேறுபாடுகளை இனங்காணுதல் முக்கியமானதாகும். கலைப்படிமங்கள் உளஅருட்டல்களுடன் தொடர்புடையவை. மொழிக்குறியீடுகள் புறநிலைச் சுட்டல் களுடன் இணைந்தவை. 'கவிதைப் படிமங்கள் கவிதையின் உள்ளார்ந்த ஒருங்கிணைப்புடன் இணைந்திருக்கும். கவிதைப் படிமங்களின் பணி பொருள் குறித்து நிற்றலோடு மட்டும் முடி வடைந்துவிடமாட்டாது. அவை பொருளை இயக்கிய வண்ணமிருக்கும் வாகன மாகவும் ஊடகமாகவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும். விஞ்ஞானக் குறியீடு களில் அறிகைப் பண்புகள் மேலோங்கி
யிருக்கும். ஆனால் கவிதைப் படிமங் களில் உணர்வு எழுச்சிகள் மேலோங்கி யிருக்கும் கவிதைப் படிமங்களில்
அருவநிலை மேலோங்கலும் கற்பனையும் தலைதூக்கி நிற்கும்.
கவிதை உள்ளுணர்வுத் தூண்டலின் (Intuition) வெளிப்பாடாகக் கொள்ளப் படுகின்றது. உள்ளுணர்வுத் தூண்டல் வெளிப்பாட்டுக்குரியதாக மாற்றப்படும் பொழுது கவிதை மலர்கின்றது. உள்ளுணர்வுத் தூண்டிலைப் பாது காத்தல் மற்றும் பராமரித்தல் என்ற இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு புறநிலைப்படுத்தல் நிகழ்த்தப்படுகின்றது. மேற்கூறிய கருத்துக்கள் காலங் காலமாகக் கவிதை பற்றிக் கூறப்பட்டு வரும் உளக் கவர்ச்சிநிலை அணுகு முறையின் பாற்படுகின்றன. மார்க்சிய நவமார்க்சிய அணுகுமுறைகள் புதிய பரிமாணங்களையும் புதிய தேடல்களையும் கவிதை ஆய்வுகளுக்குத் தந்துள்ளன.
31

Page 18
மார்க்சிய அழகியல் கவிதையைப் பல பரிமாணங்களில் நோக்கும் பன்முகமான அணுகுமுறைகளைத் தந்துள்ளது. ஆனால் அந்த அணுகுமுறைகள் அனைத்துக்கும் ஆழமான கருத்தியல் தளம் உண்டு. அதாவது, மனித இருப்பிலிருந்து உணர்வுகள் முகிழ்ந் தெழுதலும், அவ்வகையான உணர்வு முகிழ்ப்பிலிருந்து கவிதைகள் தோன்று தலும் மார்க்சிய அணுகுமுறைகளின் அடிப்படைகளாகும்.
கவிதைக்கும் நாளாந்த வாழ்க் கைக்குமிடையேயுள்ள அறிகை மார்க்சிய அழகியலில் வலியுறுத்தப்படுகின்றது. கவிதையின் வழியாக யதார்த்தப் பிரதி நிதித்துவப்படுத்தலின் கிரகிப்புக்கு இடமளிக்கப்பட வேண்டியுள்ளது. கவிதை நுகர்வோர் வினைப்படுவோராய் மாற்றப் படுவதற்குரிய வீச்சும் மார்க்சியத் திறனாய்வில் நோக்கப்படுகின்றது.
சமூகம் பற்றிய தவறான பிரதிநிதித் துவப்படுத்தலை மார்க்சிய அழகியல் நிராகரிக்கின்றது. சமூகப் பிரச்சினை களைத் திரையிட்டு மறைக்காது இனங் காணலும் வெளிப்படுத்தலும் கவிதைக் குரிய பரிமாணங்களாகின்றன. இந்த இனங்காணல் துல்லியமாகும்பொழுது இருப்பை நிலைமாற்றுவதற்குரிய கட்டற்ற தொழிற்பாடுகளாகக் கவிதை வெளிப் பாடுகள் எண்ணிறந்த உருவாகிய வண்ணம் இருக்கும். கட்டற்ற 6360)6OTum Glassir (Free Actions) விதம்விதமான கவிதையாக்கங்களுக்குரிய வீரியத்தைக் கொடுக் கின்றன.
உணர்வுகளை மாற்ற வேண்டியுள்ளது. வாழ்வியல் உணர்வு
வகையில்
கவிதையாக்கம் விழிப்புள்ள உணர்வுகளாக
32
களை மீள்அனுபவிக்கக்கூடிய (Reexperienciable) வாய்ப்பு கவிதையின் வாயிலாகக் கிடைத்தல் வேண்டும். யதார்த்த நிலைகளின் தெறிப்பை இனங்காணக்கூடிய வாசகருக்குக் கிடைத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. கவிதையைச் சுவைப்பவர்.
தரிசனம்
வெறுமனே சுவைஞராக மட்டுமல்லாது, சிந்திக்கும் நிலைக்குத் தூண்டப் படுபவராகக் கவிதையாக்கம் மலர்ச்சி கொள்ளல் வேண்டும். திறனாய்வற்ற துலங்கல் கொண்டவராகச் சுவைப்போர் ஆக்கப்படாதிருத்தல் வற்புறுத்தப் படுகின்றது. அதாவது கவிதை தூண்டற் 560) au J560)L60)Lué (Gestic Style) கொண்டிருத்தலே சாலச் சிறந்தது.
கவிதையை உயர் முதல்வர் (Elite) நிலையில் நின்று விளக்க முடியாது. அல்லது பொய்ம் மைக் கருத்தியல்களின் அடிப் படையாகக் கவிதையின் அழகியற் பரிமாணங்களைத் தரிசிக்கவும் முடியாது. அறிவி னதும், உணர்வுகளினதும், வாழ்நிலை நெருடல்களின் விளிம்புகளையும் புடமிட்டுத் தருதல் கவிதையாக்கத்தின் “ஒன்றிணைந்த’பணியாகின்றது.
O
கேள்வி ஞானம் அடுத்த இதழிலிருந்து தொடரும். தவிர்க்க முடியாத காரனத் தால் இவ்இதழில் இடம் பெறவில்லை.
- ஆசிரியர்
ஞானம் - ஆகஸ்ட் 2004
 
 
 
 

வாழேன்
கவிஞர் புரட்சிபாலன்
தாள்பணிந்து வாழேன், தரணியில்
தமிழ்மறந்தார் கால்பிடித்தும் வாழேன்; ” கோள்சொல்லி வாழேன்; கொஞ்சு தமிழைக்
கொலைசெய்தும் வாழேன், நன்மைசெய்ய நாள்பார்த்து வாழேன், சுவையுணராது
நாசெத்தால் வாழேன், நன்றியிலார் வாள்முனையில் வாழேன், கொடிய
வறுமையிலும் வாழேன் இறைவா!
இரந்துண்டு வாழேன், பிறரை
இகழ்ந்திங்கு வாழேன், தமிழை மறந்திங்கு வாழேன், மாசுற்றோர்முன்
மண்டியிட்டும் வாழேன், மதியிலார் கரம்பிடித்தும் வாழேன், கற்பிலாள்
கைப்பிடியில் வாழேன், புகழுக்காய் தரபIழந்து வாழேன், பெற்ற
தாய்வெறுக்க வாழேன் இறைவா!
காசுக்காய் வாழேன், கற்ற
கல்வியிழந்து வாழேன், மனம் கூசும்படி வாழேன், பிறர்மேல்
குறைகூறி வாழேன், குணம்மாறி மாசுண்டால் வாழேன், மனையாள் மனம் மாறுண்டால் வாழேன்) வீசும்புயல்போல மானம் போயின்
வீழ்ந்திறப்பதன்றி வாழேன் இறைவா!
O
ஞானம் - ஆகஸ்ட் 2004 33

Page 19
மலேசிய மடல் (ஆ. குணநாதன், பத்தாங் பெர்சுந்தை)
தமிழ் நேசன் நடத்தும் பவுன் பரிசு சிறுகதைப் போட்டி
மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான 'தமிழ் நேசன் இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பங்கும் மாபெரும் பவுன்பரிசு சிறுகதைப் போட்டியை நடத்தி வருகிறது.
தமிழ் நேசன் நிர்வாக வாரியத் தலைவர் மதிப்புமிகு மகளிர்மாமணி டத்தின் பூரீ இந்திராணி சாமிவேலு அவர்களின் முழு முயற்சியில் இப்போட்டி தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் கிடைக்கப்பெறும் சிறுகதைகளைத் தகுந்த நடுவர்களைக் கொண்டு ஆய்வு செய்து பரிசுக்குரியதைத் தேர்வு செய்யப்படுகிறது.
இதன்வழி மலேசிய மண்ணின் மணம் கமழும் சிறுகதைகள் உருவாகும்; மேலும் எழுத்தாளர்களுக்குப் புதிய உத்வேகமும் நல்ல தரமான படைப்புகள் வெளிவரவும் இப்போட்டி ஒரு களமாக அமையும்.
அந்த வகையில் கடந்த 18.04.2004 இல் கோலாலம்பூரிலுள்ள கிராண்ட் பசுபிக் விடுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் வெற்றிபெற்ற பிரபல எழுத்தாளர்களான சீ. முத்துசாமி (காட்டாறு), சை. பீர்முகமது (அந்த மரமும் பூப்பதுண்டு), வ. முனியன் (நீ வருவாயென.) ஆகியோர் தலா மூன்று பவுன் பெறுமானமுள்ள தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். மேலும் இரண்டாவது நிலையில் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளைப் படைத்த திருமதி ந. மகேஸ்வரி, திரு. முருகையா முத்துவீரன், திருமதி நிர்மலா பெருமாள் ஆகியோர் பரிசுகள் பெற்றனர்.
இவ்விழாவில் மலாயாப்பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் பரிசு பெற்ற சிறுகதைகளை ஆய்வு செய்தார். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் ரெ. கார்த்திகேசு மலேசியத் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி உரையாற்றினார்.
மகளிர்மாமணிடத்தின் பூரீ இந்திராணி சாமிவேலு வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் நேசன் பவுண்பரிசுப் போட்டியைத் தொடங்கியிருப்பது பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. நிகழ்ச்சிகள் ஒருங் கிணைப்பாளராகத் தமிழ்நேசன் ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியர் மூத்த எழுத்தாளர் ப. சந்திரகாந்தம் பணியாற்றினார்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசளிப்பு விழா நடைபெறும். அடுத்த விழா ஜூலை மாதத்தில் நடைபெறும். நல்ல தரமான சிறுகதை இலக்கியம் மலேசியாவில் வளர இப்போட்டி துணைபுரியும் என்பது வெள்ளிடைமலை!
34 எஞானம் - ஆகஸ்ட் 2004

மலையில் உதித்த நதி!
ஆரணி
(ஞானம் 49இல் வேயினி எழுதிய நான் யார்? என்ற கவிதைக்குப் பதில்)
முப்பது வயதில் மரணத்தை யாசித்து நிற்கும் முதிர் கன்னிக்கு!
நான் உன்னுள் இருந்து பேசுகின்றேன்! உன்னைச் சிதைத்தவர் யார்?
உன் மழலைப் பாடத்தில் அப்பா, அண்ணா, தம்பி, மாமா, அத்தான். இதெல்லாம்
சொல்லிக் கொடுத்தது யார்?
அண்ணாவுடன் பள்ளிக்குப் போ, அவனிடம் கேட்டுப்படி அப்பா உழைத்துத் தருகிறார், அண்ணா உழைத்துத் தருவான், தம்பி உழைத்துத் தருவான், அவர்கள் தான் பார்க்க வேணும். எல்லாம் சொல்லிக் கொடுத்தது யார்? நீ அவர்களை நம்பியா இறுமாந்து இருந்தாய்?
உன் கல்வி, உன் உழைப்பு,
உன் வெளிப்பாடு
உன் எண்ணம்
எதற்கும் உயிர் தராத சமூகத்திடம் எதை நீ யாசித்துக் கிடக்கிறாய்?
கோட்டை மதில்களை உடைத்துக் களம் புகும் வீரம் உன்னில் உண்டு! மோதிர அழகு பார்க்கும் விரல்களால் சமர் நடத்தும் நுண்மை உன்னில் உண்டு! சுதந்திரத்தின் எல்லைகளை சம்பிரதாய வேலிகளை உன் சாமர்த்தியத்தால் அகட்டிப் போடு, உனக்கு ஒரு வாழ்க்கை உன்னிடம் உண்டு. இன்றே புறப்படு நீ ஒரு மலையில் உதித்த நதி,
ஞானம் - ஆகஸ்ட் 2004 35

Page 20
விவாதமேடை
“க. கை. - மு.த இவர்களைத் தாண்டிச் செல்லாது தேங்கிநிற்கும் ஈழத்து நவீன தமிழ் இலக்கியம்”
- வைஸம்பாயனர்
அடையாளப்படுத்தலுக்கு நேர்ந்த அபத்தம்
- மு.பொ. "கம்பன், மஹாகவி, புதுவை ஆகியோரை வெறுமனே யாப்புக்காகச் சொல்லுப் போடுகிற செய்யுள்காரர் என்று மு.பொ. சொல்லுகிறாரே என்று மு.பொ வின் விமர்சனத்தன்மைடையே திரித்துக் கேள்விகேட்டு, அதற்குப் பதிலாக, 'அங்கீகரிக்கப்பட்டவர்களை அசிங்கப்படுத்துவதன் மூலம் தங்களை அடையாளப்படுத்தச் சிலர் விரும்புகின்றனர் என்றும் அதையே பொன்னம்பலம் போன்ற வறுமைப்பட்ட கவிஞர் செய்கிறார் என்றும் உங்கள் கேள்விஞானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதில் உள்ள முரண் நகை என்னவென்றால், அத்தகைய Cheap Publicity யையும் அடையாளப்படுத்தலையும் உம்பால் திருப்பவே க.கை - மு.த விவாத மேடையை ஆரம்பித்ததாகக் கூறி, அவர்கள் பற்றியும் இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றியும் ஆழமான அறிவில்லாத ஒருவரைக் கொண்டு - அல்லது நீங்களே வைஸம்பாயனராகவும் இருக்கலாம் - அவர்கள் பற்றி அபத்தமான கேள்விகளைக் கேட்க வைத்திருக்கிறீர்கள் என்பதே. ஆகவே தன் மனநிலையை மற்றவரில் ஏற்றிப்பார்க்கும் இலக்கியனுக்கும் ஏதோ பெரிய இலக்கியக் கோட்பாட்டு ரீதியான கேள்விகளைக் கேட்பதாக மருட்சியை ஏற்படுத்தும் வைஸம்பாயனருக்கும் ஒரே நேரத்தில் பதில் அளிக்க வேண்டியவனாய் உள்ளேன்.
முதலில் இலக்கியனுக்குரிய பதில்: மு.பொ மஹாகவிக்கு எதிராகவும் யாப்பு நிலைப்பட்ட செய்யுளுக்கெதிராகவும் எழுதிய விமர்சனம் 1970 களில் இற்றைக்கு 35 வருடங்களுக்கு முன்னர் மல்லிகையில் வெளிவந்தது. அது தொடர்பாக கவிஞர் நுஃமானும் மு.பொ.வும் எதிர் வினைகளாற்றியதும், அதுபற்றி முருகையன் மு.பொ வுக்கும் கடித மூலம் பாராட்டுத் தெரிவித்ததும் பழங்கதை. இன்னும் மஹாகவியையும் நீலாவணனையும் ஒப்பிட்டு மஹாகவியின் போதாமைகளைச் சுட்டி எழுதிய யதார்த்தமும் ஆத்மார்த்தமும் என்னும் கட்டுரை இன்னும் முக்கியமானது. நீலாவணனின் ஒத்திகை முன்னுரையில் இக்கட்டுரை பற்றியே நுட்மான் சிலாகித்துச் செல்கிறார். இக்கட்டுரைகள் அனைத்தையும் உள்ளடக்கி 1990ல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்ட யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்னும் எனது நூல் பலரால் பாராட்டப் பெற்றது. இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘கவிதை என்றால்
36 ஞானம் - ஆகஸ்ட் 2004

என் ன?’ என்ற சிறுநுாலினி வெளிக்கோடுகளே தினக் குரல் பனுவலில் வெளிவந்தவை. ஆகவே இப்பொழுது தான் இலக்கியத்தில் "ஞானஸ்நானம் பெற்றுத் தன்னை அடையாளப்படுத்த 'ஆலாய் பறந்து கொண்டிருக்கும் இலக்கியனுக்கு இவைகள் தெரிந்திருக்க நியாய மில்லை. அதனால் இலக்கியனே தன்னை அடையாளப் படுத்த, கடந்த கால இலக்கிய வரலாறு ஒன்றும் தெரியாமல், ‘இலக்கியன்’ என்று பெயர் வேறு போட்டுக்கொண்டு மு.பொ வை அசிங்கப்படுத்தி
யிருக்கிறார் என்று சொல்வதுதான்
சரி இல்லையா? இந்நிலையில் நான் மஹாகவிக்கு எதிராகவும் , வெற்றோசை நிரப்பிகளை எதுகை "மோனை' என்ற பேரில் பாவிப்பதற்கு எதிராகவும் காட்டியவற்றை தக்க ஆதாரங்கள் காட்டி நிராகரிப்பதற்கு வக்கற்று "ஐயோ இங்கே பாருங்கள் இவன் பொன்னம்பலம் அங்கீகரிக் கப் பட்ட மஹாகவியையும் கம் பனையும் அசிங் கப் படுத்துகிறானே!” என்று ஒப்பாரி வைக்கும் இலக்கியனா மு.பொ வின் கவிதைகளின் தராதரம் பற்றி சொல்ல வருவது? இலக்கியரே நீங்கள் பயப்பட வேணி டாம் . உங்களோடு கூட்டுச் சேர இனி னொரு பேரறிவாளரும் இருக்கிறார். மு. பொ.வின் நூலை விமர் சிக் கப் போயப் , தனி அறியாமையை அம்பலப்படுத்திவந்த மு.பொ.வின் எதிர் வினையை பிரசுரிக்கத்’தைரியமற்று, பத்திரிகை
ஞானம் - ஆகஸ்ட் 2004
தர்மத்தையே குழிதோண்டிப் புதைத்து
அதை அமுக்கிவிட்ட ஜனநாயக இடது சாரி’, ‘கவிதையும் மரபும்’ பற்றிச் சொல் லத்திராணியற்று
எதையோ எல்லாம் அலட்டி மீண்டும் நழுவல் விமர்சனம் செய்துள்ளார்! அவரும் உங்களுக்கு உதவுவார். உண்மைதான் மு.பொ. ஏழ்மைப்பட்ட கவிஞர்தான். ஆனால், “ஏழை சொல் கூரிய வாளை ஒக்கும்” என்பது ஆன்றோர் வாக்கு. இன்னும் சில அரைகுறைகள் பேரறிவாளராய் வேஷம் போடும் போது அது நெருப்பாகவும் மாறும். இது எம் போன்ற ஏழைகளின் ‘ட்ரேட் மார்க்'. சரி இனி வைஸம்பாயனர் என்பவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப் போம். அவர் எட்டுப் பிரதான குற்றங்களை க.கை. - மு. த. ஆகியோாக்கெதிராக வைக்கிறார்.
(1) எடுத்த எடுப்பிலேயே அபத்தமான குறை ஒன்றை முன்வைக்கிறார். அதாவது க.கை. மு.த. இருவரும் சார்பு நிலைப்பட்ட அரசியல் பேசியமையாம். இந்த உலகத்தில் உள்ளவரைக்கும் எல்லாமே சார்பு நிலைப்பட்டது தான் என்பது வைஸம்பாயனருக்குத் தெரியாமல் போயிற்றே! இந்த உலகத் தைப் படைத் த "பூரணமான கடவுளே வந்து இங்கே எது சொன்னாலும் அதுவும் சார்பு நிலைப் பட்டதாகவே இருக்கும். ஆகவே குற்றம் சுமத்திய வைஸம்பாயனர் தன் வாக்கியத்தில் உள்ள
37

Page 21
(2)
38
சார்புநிலையை தவிர்க்கக் கூடியவராயப் இருந் தாலி மாத்திரமே அவர் கேள்வி அா த த மு  ைடய தா கு ம . அல்லாவிடில் அபத்தமே.
இருவரும் தமது துறைக் கானவர் களை LDL (6 (SLD உருவாக்கியமையாம். இதுவும் படுஅபத்தமானது. எவனொருவன் ஒரு துறையில் சிறப்பாக இருக்கிறானோ அதையே அவனோடு பழுகுபவர்களோடும் விவாதிக்கிறான். காந்தியிடம் கணித மேதை ஒருவனை உருவாக்குவதை எதிர்பார்க்க முடியுமா? பாவம் வைஸம் பாயனர். அவர் தனது கேள்வியை இப்படி அமைத்திருக்க வேண்டும். இவ்விருவரும் பன்முகப்பார்வை உடையவர்களை உருவாக்க வில்லை என்று. மு.த. வின் நூல்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும் அவர் பண் முகப் பார்வையுடையவராய் இருந்தாரா, இல்லையா என்று. ஒரு புதிய கருத்தியலை முன்வைப்பவன் தன் காலத்துக்குரிய F866) துறைகளது போக்குகளையும் அறிந்து அவற்றை தனது கருத்தியலுக் கேற்ப வியாக்கியானப்படுத்த வேண்டும். அதை மு.த.வில் காணலாம். இனி மு.த.வின் நூல்களைப் படிக்கும் ஆற்றல் உள்ள ஒருவன் , அவரது வியாக்கியானங்களைக் கொண்டே அவரது கருத்தியலின் போதாமைகளை உடைத் து
(3)
(4)
அதை வளப்படுத்தலாம். இதுவே மார் சிஸத்துக்கும் நடந்தது. ஏனைய கருத்தியல்களுக்கும் நடப்பது. இவ்வாறே பன்முகப் பார்வைகள் உருவாகின்றன. இயந்திரப் பாங்கான இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டமை. ஒரு வேளை ‘சோஷலிஸ்ற் றியலிஸம்" என்ற சட்டகத்தை முன்வைத்த க.கை. க்கு இது பொருந் தலாம் . ஆனால் மு.த.வுக்கு இது பொருந்தாது. கட்டமைக்கப்படுகிற, இன்றுள்ள இலக் கிய உருவங்கள் அனைத்தும் செய்யப்படுகிற செய்யுள் என்கிறார் மு.த. மெய்யுள் இவற்றை உடைத்தெறிந்து புதிய விடுதலை இலக்கிய உருவங்களை அவாவி நிற்பது. விடுதலைக்கு எந்த அடை மொழியும் அபத் தமானது. எங்கெங்கும் எந்தெந்த யுகத்திலும் தேக்கத்தை உடைத்து புதியவை எழும் போது அது மெய்யுள் ளாகிறது. மெய்மை என்றைக்கும் விடுதலையானது. சாதியத்தை தமது தேவைக்காக எதிர்த்து மறைமுகமாக ஏற்றுக் கொண்டமை. இந்த ஆதாரங் காட்டப் படாத ஒற்றை வாக்கியங்கள். மீண்டும் ஒரு அபத்தம். ஸ்ரண்ட் வேலை. இலக்கியத்தில் சாதியம் சம்பந்தமா க. டானியல் எழுதினார் என்றால் அது சாதியத்தை ஆதரித்ததாகுமா? அவர் எழுத்து முற்போக்கானதா என்று பார்க்க வேண்டும்.
ஞானம் - ஆகஸ்ட் 2004

(5) இரு சர்ராரும் தமக்குள்ளேயே
(6)
மோதிக் கொண்டமை. மோதிக்
கொண்டது பிழையென்றால்
மீண்டும் இக் குற்றச் சாட்டு அபத்தமானது. கருத்தியல் ரீதியான மோதல் களர் இல் லையென்றால மனித வளர்ச்சியே இல்லாமல் போய் விடும் என்பதை அறியாத குற்றச்சாட்டு. உலகின் பெருங் கோட்பாட்டு வளர்ச்சிகள் இந்த மோதல் களாலேயே ஏற்பட் டுள்ளன என்பதற்கு இதோ பல உதாரணங்கள். கொட்ஸ்கியும்
லெனினும் ԼD IT i &՞ եւյլն தொழிலாளர் சர்வாதிகாரம் தொடர் பாக மோதிக்
கொண்டமை. சி. பி.ஸ்னோவும் எ.ப் ஆர். லுவிசும் இரு 356) To IT Jub(Two culture contest) தொடர் பாக மோதிக் கொணி டமை. சாதி தரும் கிளோட்சைமனும் இலக்கியம் தொடர் பாக மோதிக் கொண்டமை. கார்ல் பொப்பரும் விகின் ஸ்ரீனும் மெய்யியல் தொடர்பாக மோதிக் கொண்டமை உலகப் பிரசித்தம். இத்தகைய மோதல்களால்தான் அரசியல், மெய்யியல், கலை இலக்கியக் கருத்தியல்கள் வளர்ச்சியுற்றன. தாம் கூறுவதுதான் இலக்கியம் மதிப்பீடு என்று தம்மை இலக்கிய உலகின் சர்வாதிகாரிகளாகக் காட்ட முனைந்தமை. இவ்வாறு
அவர்கள் எழுதியதுமில்லை,
பேசியதுமில்லை. அப்போ
ஞானம் - ஆகஸ்ட் 2004
(7)
(8)
இக்குற்றச்சாட்டு ஏன் வைக்கப் படுகிறது? இது ஒரு வெற்று அனுமானம் . அவர் களர் எழுதியதை எதிர் கொண்டு அதற்கெதிராக ஆதாரங்காட்டி எழுத ஆற்றலற் றவர் களர் அவர்கள் மேல் ஏற்றிய பிரமை, மற்றவர்களுடைய எதிர் க் கருத்தியலை அங்கீகரிக்காமை. இது மு.த. வைப்பொறுத்தவரை பொருந்தாது. க.கை.யை மு.த. விமர்சித்தபோது, க.கை. ஆற்றிய நல் ல வற் றை வெளிக் கொணர்ந்து அதற்கு தலை சாய்கிறோம் என்றே கூறிச் செல் கிறார் . (பார் க்கவும் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி) ஆனால், மு.த.முன்வைத்த கருத்தியலுக்கு க.கையோ வேறு எவருமோ அவர் உயிருடன் இா # கும் வரை பதில் அளிக்கவில்லை. ஆகவே எதிர்க் கருத்தியலை அங்கீகரிக்காமை என்பது மு. த.வுக் குப் பொருந்தாது. இன்னும் எதிர்க் கருத் தியலை எல் லாரும் அங் ககரித் து * 9, LD : போடுவதென்பது கடைசியில் எல்லாமே வளர்ச்சியற்ற STREO TYPE 66ja5TJLDTab (piququib
அபத்தம். ஏதோவொரு வகையில் சமூகப் புரட்சியை எறி படுத் த
இலக்கியத்தை கையேற் ற் இவர்கள் சமூகத்தில் சென்று
சேரா மை. இவ் விரு வரும் சேரா மை இருக் கட்டும் ,
39

Page 22
எழுத்தைக் கையேற்று சமூகப் புரட்சியை ஏற்படுத் தி சமூகத்தைச் சென்று சேர்ந்த வர்கள் யாராமோ? ஏன் அபத்தக் குற்றச் சாட்டுகள்?
ஆரம் பத்தில் இருந்து முடியும் வரை அபத்தக் குற்றச் சாட்டுகளே வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பற்றி அறிந்த ஆழமான கருத்தியல் சார்ந்த கேள்விகள் ஒனறுமில் லாததே ஏமாற்றம் . இதற்கிடையில் இவ்விரு போக்கு களையும் தமிழகம் தாண்டிச் சென்று கொண்டிருக்க ஈழத் தமிழ் இலக்கியம் தாண்டாது தேங்கி நிற்கிறதாம்! எப்படித் தாண்ட முடியும், "ஐயோ இங்கே பாருங் களர் இவன் பொன்னம்பலம் அங்கீகரிக்கப்பட்ட கம் பனையம் மஹாகவியையும் அசிங்கப்படுத்துகிறானே” என்று கூக் குரல் வைக்கும் இலக்கிய மேதைகள் இருக் கும் போது? தமிழகமும் பெரிதாகத் 'தாண்டிச் செல்கிறது என்பதும் ஒரு பிரமைதான். அண்மையில்தான் மு.த. பற்றித் தமிழகத்தில் இடம் பெற்ற கருத்தரங்கில் மெய்யுள் பற்றி தீவிரமான கருத்தாடல்கள் நடந்தன. சுந்தரராமசாமியின ஜே. ஜே. குறிப்புகள் மு.த.வின் கலைஞனின் தாக் கத்தின் பாதிப் பால் ஏற்பட்டதே.(பார்க்கவும் எனது குறிப்பு தீராநதி ஜூலை 2003)
சு.வி.மெய்யுள் எழுதாவிட்டால்
என்ன? எழுத வேண்டும் என்று
கட்டளை போட ஸ்ரலின் காலத்தில்
40
வாழ்ந்த சடனோவா மு.த.? தேவையும் அதற்குரிய உந்துதலும் ஏற்பட்டால் எங்கெங்கோ இருந் தெல்லாம் எழுதுவோர் எழுதுவர்.
இநீ த அரை குறைக் கேள்விகளால் வைஸம் பாயனர் புத்திஜீவியென்ற அங்கீகாரத்தைப் பெற முடியாது. நிறைய கலை இலக்கிய நூல்களைப் படித்தபின் இந்த வேலைக் கு வரட் டும் . சமன்பாடுகளை முன் வைக் கும் கணிதமல்ல மெய்யியலும் கலை இலக்கியமும் என்று தெரிந்தால் சரி. இது விளங் காவிட்டால் பேரறி வாளரோடு ஆலோசனை கேட்டியங்குவதே உகந்தது.
விவாத மேடைக்கு சில தரவுகள்: (1) 1960களில் சமூக யதார்த்தத்தை சோஷலிஸ்ற் யதார்த்தம் என முறி போக கெழுத தாளர் மாறாட்டம் செய்தமைக்கு க.கை. எவ்வகையில் பொறுப்பாகிறார். (2) மு. த. வின் சர் வோதயப் பொதுவுடமையும் சரி, மார்க்சின் மார்க்சியப் பொதுவுடமையும் சரி, எயப் த முடியாத கற்பனா வாதமானவை (utopia). ஆனால் மார்க்ஸ் தனது பொதுவுடமையை எட்ட வழிமுறைகள் காட்டுகிறார். மு.த. விடம் வழிமுறைகள் உள்ளனவா? (3) கலை இலக்கிய அழகியலுக்கு க.கை.யினதும் மு.த.வினதும் பங்களிப் பென்ன? இவர்கள் காட்டிய அழகியல் ஸ்ரலின் கால சடனோவ் வகைப்பட்டதா?
ஞானம் - ஆகஸ்ட் 2004

(4) க.கை. நாவலரை விமர்சிக்க வில்லை. மு.த.விமர்சித்தார். முன்னவர் விமர்சிக்காமைக்கும் பின்னவர் விம் ர் சித்ததற்கும் உரிய காரணம் என்ன? (5) மு.த. உயிரோடு இருக்கும்வரை அவர் வைத்த கருத்தியலை முற்போக்காளர் எவரும் எதிர் கொள்ளவில் லை. இறந்த பின்னரே எழுதினர். இதற்குக் காரணம் அவர்கள் கருத்தியல் வறுமையா? பரந்த வாசிப்பின் மையால் எற்பட்ட பயமா? (6) மு.த. வர்க்கவியலும் குண வியலும் கட்டுரையில் பேசும் சாதியம் முற்போக்கானதா, இந் துத் துவத் தை எடுத் து நிறுத்தப்பார்க்கிறதா? (7) “மேற்கத்தேய சமய, சமூக, கலாசார அணுகுமுறைகளின் அடிப்படையில் கீழத்தேய சமய சமூக கலாசார நடவடிக் கைகளைப் பார்த்ததின் மூலம் க.கை. தவறு செய்துள்ளார்". இது சரியா?
(மு. பொ. அனுமானித் ததைப் போல "கேள்விஞானம்" பகுதியில் பதில் எழுதும் இலக்கியன் என பவரும் , als. 6D 65. - (p. 25.
விவாதத்தை ஆரம்பித்த வைஸம்
பாயனர் என்பவரும் ஒருவரல்லர். இலக்கியனின் வேண்டுகோளுக்கு இணங்க விவாதத்துக்குரிய கட்டுரை எழுதப்படவும் இல்லை. விவாதம் திசை திரும்பிவிடும் என்பதால் இந்த உணர்மையை இங்கே தெரியப் படுத்துகிறோம் - ஆசிரியர்)
O. O.
ஞானம் - ஆகஸ்ட் 2004
விமர்சகர்களால் IDஉரும் இலக்கியப் போக்கைத் தீர்மானிக்க முடியாது.
- பிரகலதா ஆனந்த்
படைப்பாளிகளை உருவாக்குவது திறனாய்வாளர்கள் அல்ல. படைப்புகளை ஆய்வுசெய்பவர்களே அவர்கள். அவர்களை இலக்கியப் போக்கின் வழிகாட்டிகள் என்று சொல்வது எந்தளவுக்குப் பொருந்தும் என்பது கேள்விக்குறியே.
க. கை. - மு. த. இவர்களைத் தாண்டிச் செல்லாது தேங்கி நிற்கும் ஈழத்து இலக்கியம் என்பதே தவறான கூற்றாகும். படைப்புகளையும், பிற மொழிப் படைப்புக் களைத் தேடிப் படிப்பதன் மூலமும், தான் வாழும் சமூகத்தை ஆழ்ந்து நோக்கி இலக்கியம் படைக்கும் போதும் புதிய பாதைகள் தானாகத் திறக்கின்றன. சர்வதேசத் தரம் என்பதும் ஒருவகை
ஒரு படைப்பாளி பிற
மாயையே.
விமர்சகர்களையும், களையும் நான் முற்று முழுதாகப் புறந்தள்ளவில்லை. இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்படுத்துவதில் அவர்களது பங்கு இல்லாமலில்லை. எனினும் அவர்கள் தான் இலக்கியப் போக்கை மாற்றுகிறார்கள் என்பது அபத்தமானது. க,கைக்கும்; மு. தவுக்கும் முன்பு வந்த திறனாய்வாளர்களும் சரி, பின்பு
ஆய்வாளர்
வந்த திறனாய்வாளர்களும் சரி, சார்பு நிலைப்பட்டவர்களாகவே இருந்தனர். நடுநிலைத் திறனாய்வு செய்தவர்களாக கே. எஸ். சிவகுமாரன் போன்ற ஒரு
41

Page 23
சிலரைக் கூற முடியும். எனினும் அவர்களிலும் கூட சில குறைநிறைகள் கூறப்பட்டன.
விவாதத்திற்குரிய இரு திறனாய் வாளர்கள் மட்டுமன்றி முன்னைநாள், பின்னைநாள் ஆய்வாளர்கள் கூட தாம கூறுவதுதான் இலக்கியம், மதிப்பீடு என்று தம்மை இலக்கிய உலகின் ஜம்பவான்களாகப் பிரகடனப்படுத்துவது செயற்படுவது தொடர் கதையாகவே இருக்கின்றது.
வைஸம்பாயனரின் கூற்றுக்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது விட்டாலும், அவரது கட்டுரையில் கூறப்பட்ட பல விடயங்கள் இவர்கள்
போல
இருவருக்கும் மட்டுமின்றி பெரும்பாலான ஆய்வாளருக்குப் பொருந்தி வருகின்றது. இவ் ஆய்வாளர்களை விட வாசக விமர்சகர்கள் இலக்கியப் போக்கைச் செழுமைப் படுத்துவதில் ஆற்றும் பங்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல.
இலக்கியவாதிகளுக்குப் பல்வேறு பட்ட இலக்கியப் போக்கினைச் சர்வதேச இலக்கிய நிலையினை உணர வைத்ததில் இரு ஆய்வாளர்களுமே குறை சொல்ல முடியாதவர்கள்தான். ஆளுமைமிக்க ஆய்வாளர்கள்தான். எனினும் இவர்களது ஆளுமைகள் அடிவருடிகளுக்காகச் சோரம் போயிகள் பக்கச் சார்பினால் இதுவே இவர்களது வீழ்ச்சியுமாகும். எதிரணியை இருட் டடிப்பது அல்லது கண்டிப்பது, நமது அணிக்கு குடை, கொடி, ஆலவட்டம் பிடிப்பது என்பவற்றினால் இவர்களது அதீத திறமைகள் கூட குறிப்பிட்ட
பயனிழந்தன.
42
இலக்கை எட்ட முடியவில்லை. இவர் களுடன் ஈழத்து இலக்கியம் போக்கு ஸ்தம்பித்து விட்டது என்ற கூற்றினை ஏற்க முடியாதுள்ளது.
இவர்களுக்குப் கா. சிவத்தம்பி, சபா. ஜெயராஜா, சந்திர சேகரன், துரைமனோகரன், சிவசேகரம்
பின்னர்
போன்ற திறனாய்வாளர்களும், அந்தணி ஜிவா,
கானந்தன், சாரல் நாடன், மு. பொ.,
செங்கையாழியான், முரு
கமால், ஆப்டீன் முதலான வாசக விமர்சன மதிப்பீட்டாளர்களும், நுஃமான், குழந்தை சண்முகலிங்கன், யேசுராசா, தெளிவத்தை யோசேப், செ. யோகநாதன் போன்ற படைப்பாளி விமர்சக ஆய்வா ளர்களும் தோன்றியுள்ளனர். இவர்களில்
புதிய போக்கினை அவ்வப்போது படம்பிடித்துக்
ઈી6of சர்வதேச இலக்கியப்
காட்டியுள்ளனர். எனினும் இவர்களில் பலரும் முன்னைய இருவரின் ஆளுமைக்
குட்பட்டவர்களாக இனம் காணப் பட்டுள்ளனர்.
பேராசிரியர் சிவத்தம்பி சற்று
மேலோங்கி முற்றுமுழுதான ஆய்வு நோக்கில் புதிய இலக்கியப் பாதையை உருவாக்கிடப் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவரிடம் கூட முன்னையவர்களின் குறைபாடுகள் சிலவும், கடும் தமிழ்ப் பிரயோகமும் இருப்பது கண்கூடு.
கட்டுரையாளர் இறுதியில் குறிப்பிடப் பட்டுள்ளது போல மேற்குறிப்பிட்ட இருவருக்குப் பின்னரும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் புதியதொரு போக்கைப் பெற்றுள்ளமை மறுக்க முடியாததொன்று.
ஞானம் - ஆகஸ்ட் 2004

இந்திய இலக்கியப் போக்கு காத்திரமாக, குறிப்பிட்ட ஆய்வாளர்களின் போக்கி னையும் தாண்டிச் செல்வதாகக் குறிப்பிட் டுள்ளமையும் ஏற்கத் தக்கதேயாகும். எனினும் இன்னொருபுறம் நலிவுற்ற போக்கும் அங்கு காணப்படுவதையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
நாச யுத்த கொடூரங்களின் தாக்கத்தின் மத்தியில் போர்ப் பிரதேசங் களிலிருந்து நல்ல பாதை தெரிகிறது. கலைத்துவ வரட்சியின் மத்தியிலும் இலட்சிய இலக்கு இவ் இலக்கியங்களில் எட்டப்படுவதற்கு சுய அனுபவங்களே முதற் இப்பகுதி களிலிருந்தும் கலைத்துவம் மிக்க சில
காரணியாகும்.
படைப்புகளும் உருவாகின்றன. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல் அனைத்திலும் சில நல்ல அறுவடைகள் எனினும் வன்னிங் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது போலவே, அங்கு
வந்துள்ளன. போர்க்கள நிலைகள்
உருவாகும் புதிய இலக்கியப் போக்கும் கூட சரியாக மதிப்பிடப் படவில்லை என்பது கண்கூடு.
வெளிச்சமும், வெள்ளி நாதமும் பல நல்ல படைப்புகளைத் தாங்கி வெளி வருகின்றன. இவர்கள் தமிழ்த் தேசியம் என்ற இலட்சிய நோக்கோடு எழுவதாகத் தோன்றுகிறது. இவர்களில் பலர் மிகவும் இளையவர்களாகவே இருப்பதால் குறை பாடுகள் சுட்டப்படுகின்றன. தமது படைப்புக்களை இலக்கிய வடிவத்தின் உச்ச நிலைக்கு எடுத்துச் செல்வதை விட, தம் கருத்துகளை வாசகர்களிடம் எடுத்துச் செல்வதே இவர்களது முக்கிய
ஞானம் - ஆகஸ்ட் 2004
இலக்காகத் தெரிகிறது. எனினும் இவர்களது எளிமையான நடை இலகு சாத்தியமாக்குகிறது. இதனால் இவர்களது படைப்பு எல்லா
வாசிப்பைச்
விதமான வாசகர்களையும் எட்ட
முடிகிறது. படைப்புக்களேனும்
இவர்களின் ஒரு சில உயர்வாசிப்பு அனுபவங்களையும் கொடுப்பது கவனிக்கத்தக்க,
காலந்தோறும் நவீன இலக்கியக் கோட்பாட்டுக்கு அமைவாக தமிழ் இலக்கியங்கள் பயணிக்க வேண்டியது அவசியம்தான். இல்லாவிட்டால் இவை கவனிப்பாரற்றுப் போய்விடும்தான். பிற கவனிப்பு என்பதற்கு முன்னதாகக் கலை
தமது சென்றடைய வேண்டும். இலக்கியத்தின்
இலக்கியங்கள் மக்களைச்
முதல் நோக்கம் உயர் அழகியல் இரசனை என்றிருந்தாலும். அதன் இறுதி நோக்கம் என்ன என்பதைச் சிந்திக்கும் போது, வன்னி இலக்கியங்கள் இலட்சிய நோக்கோடு இலக்கை அடையும் வெற்றியைப் புறம் தள்ள முடியாது. வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து, நாச யுத்தக் கொடுமையின் அனுபவங்களின் மத்தியில் மலரும் இப்படைப்புகளைப் பல விமர்சகர்கள் கண்டு கொள்வதில்லை.
யோ. கர்ணன், அ.இரவி, தாமரைச் செல்வி, தாட்சாயினி, யோகேந்திரநாதன், பொன். கணேசமூர்த்தி, கருணாரவி, புதுவை அன்பன், ச. முருகானந்தன், கேசவராசா, ஞானரதன், கருணாகரன், இளந்திரையன், வேலணையூர் சுரேஸ், ஆதிலட்சுமி, மற்றும் பல போராளிப் படைப்பாளிகள் என்று இப்பட்டியலின்
43

Page 24
பக்கம் எத்தனை ஆய்வாளர்கள் திரும்பிப் பார்த்திருக்கிறார்கள் என்பது கேள்விக் குரியது.
இலத்திரனியல் ஊடக களினாலும் இலக்கியப் மாறுகிறது. தாயகத்திலும், ஞானத்திலும், மல்லிகையிலும் சில வாரமலர்களிலும்
6) J6) போக்கு
அவ்வப்போ இன்னும் சில நல்ல படைப்புகள் தரிசனமாகின்றன.
இலக்கியப் போக்கைத் தீர்மானிப் பதில் திறனாய்வாளர்களையும் மதிப் பீட்டாளர்களையும் விமர்சகர் களையும் விட, உண்மையான வாசகர் களும், படைப்பாளிகளுமே முக்கிய பங்காற் றுகிறார்கள் என்பதே என் கருத்து.
சர்வதேச தரம் என்ற அளவுகோல் தான் என்ன? அதை யார் நிர்ணயிக் கிறார்கள். உலகமயமாதலினாலும், சர்வதேசப் பயங்கரவாதத்தினாலும் உலக மனிதத்தையே சீரழிக்கின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தானா உலக தரத்தை நிர்ணயிக்க வேண்டும்? எமது திறனாய்வாளர்களால் அது முடியாதா?
எமது ஆக்கங்கள் சர்வதேச எல்லையைத் தொடாமைக்கு முக்கிய குறைபாடுகளாக மொழி பெயர்ப்பின் மையையும், திறனாய்வாளர்களின் பங்களிப்பின்மையையுமே குறிப்பிட வேண்டும். க. கை. மு. த. உட்பட
எமது புதியவர்களின் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். இன்றைய இலக்கியப் போக்கோடு இணைந்து இவர்களது திறனாய்வு வேண்டும்.
திறனாய்வாளர்கள்
செல்ல
44
மற்றவர்களுடைய எதிர்க் கருத்தியலையும் அலசி ஆராய்ந்து அங்கீகரிக்கின்ற குழுச் சண்டைகளையும், உட்பூசல் களையும்
பக்குவம் வேண்டும்.
தவிர்க்க வேண்டும்.
சிவத்தம்பி போன்று இன்னும் புதிய திறனாய்வாளர்கள் உருவாக வேண்டும். இன்று மதிப்பீட்டு திறனாய்வாளராக இனம் காணப்பட்டு வரும் செங்கை ஆழியான் சிறந்த மட்டுமல்ல, நல்ல திறனாய்வாளர் என்பதும் தெரிகிறது. இவர் தமிழ் இலக்கியப் போக்கின் பல திசைகளையும் புதியவர் பார்வை
படைப்பாளி
பார்க்கும் அசுர உழைப்பாளி. களின் பக்கமும் இவரது படர்கிறது. இவர் ஒரு சிறந்த திறனாய் வாளராகி வருவது தெரிகிறது. இப்பட்டியலில் இடம் பிடிக்க இன்னும் சிலரும் கூட உழைக்கிறார்கள்.
க. கை. - மு. த. வுடன் எமது திறனாய்வு மழுங்கிவிடவில்லை. சிவத்தம்பியின் பங்கு இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளது. ஈழத்திலக்கியம் துரதிஷ்ட வசமான நிலையில், க. கை, மு. த. முதலானவர்களிடம் வீடு பேறடைந்த போக்கே இன்று காணப்படுவது என்பது தவறு. இவர்களது பெயர் தெரியாத சில
இளசுகள் இலக்கியத்தில் உச்சம் பெற்றுள்ளனர். இருபது வயதிலேயே மண்ணுக்கு வித்தான படைப்பாளி
மலரன்பன் போன்று இன்றும் உருவாகி
வருகிறார்கள். எனவே ஊக்கம்
பெறுவோம்.
O O
ஞானம் - ஆகஸ்ட் 2004

உறையுள் கூர்மையுறுகிறது
வாள்
பூனி பிரசாந்தன்
நட்புடன் குலுக்கிய கரங்களிடை
உறைந்திருந்த குரூரம் துயில் நீத்துக் கொண்டது.
முகங்களைத் திருப்பிக் கொள்ளச் சொல் வதான உத்தரவை எந்தவித நடுக்கமுமற்றுச் சொல்லியது, போர்க் களத்து ருசிகண்ட வோக்கி’.
புன் சிரிக்க விரிந்த இதழ் களைப் பல் அழுத்த
இறுகிப் போயிற்று, தீர்ப்புக்கான இறுதி வாய்ப்பும் . கீரி, பாம்புகளை சமாதானச் சந்திப்புக்கு அழைத்துவந்த அப்பாவி வெள்ளைப் புறா அகப்பட்டுப் போயிற்று, யுத்தத்தின் கரங்களிடை. நகக் கணுக்களிடையே குருதி உறைந்துள்ள யுத்தத்தின் கரங்களிடை.
அற்ப நிமிடங்கள் தாண்டவமாடின.
பேச்சுவார்த்தைப் பந்தியில் புறா கறி ஆனது.
அதைச் சப் பிப் பார்த்தபடி சிப் பாய் ஒருவன் சொல்கிறான், இந்த இறைச்சி இனிதுதான், இதைவிடவும்
நாளைய சமரில் நாம் பிடுங் கப் போகிற குழந்தையுடையதோ/குமரியுடையதோ இறைச்சியின் சுவை இன்னும் அதிகம்
ஞானம் - ஆகஸ்ட் 2004 45

Page 25
சி/7ம்பல் மேகங்கள் வான்பரப்பைச்
சூழ்ந்தன. ஜில் என்று மெல்லிய கூதல் காற்று உடலை வருடிச் செல்கிறது. மப்பும் மந்தாரமுமாக அப்பிரதேசம் அமுக்கப்பட்டுக் கிடந்தது. களைப்புற்றிருந்த போதும்கூட அவன் விடாமல் பெடலை வலித்துக் கொண்டு செல்கிறான். உடலிலேற்பட்ட கசிவுபின் வியர்வையாய் வடிய ஆரம்பித்தது. மழை வருவதற்கான அறிகுறிதான் இந்தப் புழுக்கம் என்பதை உணர்ந்து கொண்ட லோகன் சையிக்கிளை வேகமாக்க முயன்றான். கிறீஸ் காணாத சைக்கிள் கிறீச், கிறீச் என்று ஓசை எழுப்பியது.
அவனைப் போலவே இன்னும் மூன்று பேர் சைக்கிள் கரியரில் பெரும் சுமையாக விறகு கட்டிக்கொண்டு வந்து கொண் டிருந்தார்கள். அவர்களது ஜீவனோபாயம் விறகு வெட்டிச் சீவிப்பதுதான்.
மழைத்துளிகள் மெலிதாய் அங் கொன்றும் இங்கொன்றுமாக உடலைத் தழுவின. நேற்றுப் பின்னேரமும் இப்படித் தான், மழை தூறியது. தூறிய சுவடு தெரியாமல் நிலம் நீரை உறிஞ்சிக் கொண்டது. இப்போதும் அப்படியே தூறிப் பார்க்கிறது. மண், தூறலைப் பெற்று புழுதியை வெளிவிட்டது. மண் எழுந்து மூக்கைத் தழுவி மணந்தது. சுவாசம் தும்மலாய் அதை வெளியேற்ற மு6ை0 ந்தது. கமலாவுக்கு இதுதான் பெறுமாதம். மடந்தையிலே குழந்தை தங்கி விட்டதால் திகதிக் கணக்குத் தெரியாது. இந்த மாத
46
ச. முருகானந்தன் நடுக்கூறு என்று கிளினிக்கில் மருத்துவ மாது கூறியிருந்தார். பிரசவச் செல வுக்குக் கையிலே பணமில்லை. ஐந்தாறு நாள் தொடர்ந்து ஓடினால்தான் இரு நூறோ, முன்நூறோ மிஞ்சும் என்பதனால் கடந்த ஒரு வாரமாக விடாமல் ஒடிக்கொண்டிருக்கிறான் லோகன்.
அதிகாலைப் பொழுதில் கமலா தந்த தேனீருடன் புறப்பட்டுப் போனவன். குடத்தனை நாகர்கோயில் பகுதிகளி லுள்ள பரட்டைக் காடுகளில் புகுந்து விறகு வெட்டிக் கொண்டு வருகிறான். இதைக்கொண்டு போய் வசதி படைத்த வர்கள் வீடுகளில் விற்றால்தான் அவனது வீட்டில் அடுப்பு எரியும்.
மூன்றாவது முறையாகவும் இடம் பெயர்ந்தபின் கடந்த சில மாதங்களாக லோகனுக்கு இதுதான் தொழில். காலையிலே புறப்பட்டபோதுகூட கமலா லேசாக நாரி உழைவதாகக் கூறினாள். இப்போது கமலா அவனது வரவுக்காகத் தவித்துக்கொண்டிருப்பாள் என்ற எண்ணம் வேகத்தைக் கொடுத்தது.
சொந்த மண்ணிலேயே அகதி களாக்கப்பட்டு அல்லற்படும் ஆயிரக் கணக்கானோரில் அவனும் ஒருவன்.
இன்று இந்த மண்ணில் பெரும் பாலோருக்கு இது ஒரு சாபக்கேடு. வீதியில் போக்குவரத்துச் செய்து
கொண்டிருந்தோர்களின் முகங்களிலே ஒரு சோகம் களைத்துப்போன உடல்களில்
ஞானம் - ஆகஸ்ட் 2004
 

முகங்களில் எஞ்சியிருப்பதெல்லாம் சிறு நம்பிக்கைக் கீற்றுத்தான், சோதனை மிகுந்த வாழ்க்கைப் பயணத்தில் ஒடிக் களைத்துப் போன இவர்கள் அயராது உழைத்தால் தான் பசி, பட்டினியின்றி வாழ முடியும்.
லோகன் கமலாவைக் கைப்பிடித்த நாட்தொட்டு ஒரளவு திருப்தியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு தேவதை போல் அவன் வாழ்வில் கலந்த கமலா, அவனுக்கு ஊக்கியாகச் செயற்பட்டான். அன்பு நிறைந்த அவளது வழிகாட்டலில் அவன் வீட்டோடு கடைபோட்டு நாலு காசைத் தேடினேன். வீட்டைப் புதுப்பித்தேன். ஆசையோடு அவளது காது, கழுத்தை மின்ன வைத்தான். பரஸ்பர அன்பு வெள்ளத்தில் அவர்கள் ஆனந்தமாய், ஆசைக்கொரு
ஞானம் - ஆகஸ்ட் 2004
ஆணும், ஆஸ்திக்கொரு பெண்ணுமாகப் பெற்று இல்லற சாகரத்தில் மிதந்தனர்.
இவ்வேளையில்தான் இராணு வத்தின் கெடுபிடிகளும், கைதுகளும், ஊர்ப் பையன்களின் தொலைந்து போதலும் தொடர்கதையாகின. மீண்டும் மீண்டும் தொடரும் சுற்றி வளைப்புக்கள், முகமூடியணிந்த தலையாட்டிகளின் தரிசனங்கள்,கடலிலிருந்து கூவிவரும் பீரங்கிகள், இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் ஷெல்கள், கெலிகளிலிருந்து வரும் ஆட்டிலறிகள், கிபிர், அவ்ரோ, பொம்பர் விமானங்களிலிருந்து எதிர் பாராமல் வரும் குண்டு வீச்சுக்கள் என்று ஊரே அல்லோல கல்லோலப்பட
ஆரம்பித்தது.
47

Page 26
கமலா கலங்கத் தொடங்கினாள். கண்நிறையச் சிரிக்கின்ற அந்தச் சிரிப்பு மறையத் தொடங்கியது. எந்நேரமும் கண்களில் கலக்கம். வீட்டை விட்டு வெளியே நடமாட முடியாமல் தெரு வெங்கும் சோதனைச் அவற்றைத் தாண்டிப் போவதென்றால் ஜீவ மரணப் போராட்டம்தான். அடையாள
சாவடிகள்.
அட்டை கொண்டுவர மறந்துவிட்டால் அதோ கதிதான். இதனிடையே பெண் களின் மார்புகளில் குண்டுகளைத் தேடும் அரும்பு மீசைச் சிப்பாய்கள்.
சோகம் ததும்பும் நெஞ்சுடன், மாறாவலி தினமும் திகிலாய்த் தொடர்ந்தது. மனதின் நசிவில் தினமும் தூக்கம் கேள்விக்குறியாகியது. பகலில் மாத்திரமன்றி இரவிலும் தலைக்கு மேலால் போர்விமானங்கள் பறந்தன. பதுங்கு குழிகள் பல இரவுகளில் படுக்கை யறையாகின. மனிதர்களின் இயல்புநிலை கேள்விக்குறியாகியது.
அவர்களது தலைக்கு மேலால் அவ்ரோக்கள் பறந்தன. வீட்டிலும், அலுவலகங்களிலும், தெருவிலும் அடிக்கடி படுத்து எழுப்பினார்கள். போவதும், வருவதும், குண்டு பொழிவதுமாக அவைகள் அச்சுறுத்தின. தொலைவில் குண்டுகள் பெருஞ் சத்தத்துடன் விழுந்து வெடிக்கும் போதெல்லாம் பிள்ளைகள் கமலாவைக் கூட்டிக் கொண்டு அலறினர். குண்டு போடுவதும் வெடிப்பதும் தொடர்கதையாகிவிட்டதால் பெரியவர்கள் அதற்குப் பழக்கப்பட்டுவிட்டனர். ஆனால் அவை
உயிர்கள் சாவு கொள்ளப்பட்டன். உடமைகள் சின்னாபின்னப்பட்டன.
48
விழுந்து வெடிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்’
ஒரு நாள் மதிய நேரம் மெலிதான உறுமல் சத்தம் வான்பரப்பில் கேட்டது. அண்ணார்ந்து பார்த்தபோது மிக உயரத்தில் சீப்பிளேன் சுற்றுவதை லோகன் கண்டான். படம் எடுக்கிறான். நாளைக்கு வந்து குத்தப் போறான்' என்று கமலாவிடம் கூறினான். அடுத்தநாள் அது அவர்களது வீட்டையே தாக்கப் போகிறது என்பதை அவன் கனிவிலும் நினைத்திருக்கவில்லை.
மாலையில் கமலாவின் தம்பி கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன செய்தியை அப்பா வந்து கூறியபோது அவள் பெருங்குரலெடுத்து அழுதாள். அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி யிருக்கலாம்.
இரவு தூக்கம் வரவில்லை. தம்பியின் பிரிவு ஏற்படுத்திய மனத்தாக்கம் ஒரு புறம். அண்மையிலே வீழ்ந்து வெடித்துச் சத்தமெழுப்பும் குண்டுளின் அச்சுறுத்தல் மறுபுறம் என்று மனம் ஒரு நிலையின்றித் தவித்தது. சாமத்தில் சன்னங்களைப் படபட என்று ஏவியபடி கெலி வட்டமிடவே லோகனும் அருண்டான். நிலைமையை ஊகித்து அவர்கள் பங்கருக்குள் ஓடினார்கள். விடியும்வரை பங்கருக்குள் புழுங்கி அவிந்தபடி அவஸ்தைப்பட்டனர். குழந்தைகள் இருவரும் மூச்சும் திணறி அழுதாாகள.
பிள்ளைகள் கத்துதுகள். வெளியில போவமப்பா. என்று கமலா கணவனிடம் வேண்டினாள். “கொஞ்சம் இரும் . இன்னும் சத்தம் ஒயேல்லை. அருகில் கேட்கிறது. என்று லோகன் மறுத்தான். சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அவ்ரோக்கள் சுற்றிவந்து குத்தி குண்டு தள்ளியது. காதே அடைத்துவிடும் போல் வெகு அருகில் குண்டுகள் வீழ்ந்து
ஞானம் - ஆகஸ்ட் 2004

வெடிக்கிறது. பங்கருக்கு மேலால் சன்னங்கள் பறந்து பீதியை ஏற்படுத்தவே கமலா அவனைக் கட்டிப் பிடித்தாள். இந்தப் பீதியிலும் அந்த சுகம் அவனுக்கு இதமாயிருந்தது. குழந்தைகள் வீறிட்டு அழுதனர்.
விடிந்ததும் சற்று சத்தங்கள் ஒயவே, பங்கரை விட்டு அவர்கள் வெளியே வந்தபோது, அவனது வீடு இருந்த இடம் கற்குவியலாய் வரவேற்றது. "ஐயோ எல்லாம் போச்சுதே' என்று கமலா குழறி அழுதாள். லோகன் அழக்கூடத் திராணி யற்று சிலை போல் நின்றான்.
மின்னலும் இடியும் போல் நிகழ்ந்து விட்ட அனர்த்தம் அவனது வீட்டை மாத்திரமன்றி, வாழ்வையே சின்னா பின்னப்படுத்தி விட்டதே!
அன்று தொடங்கிய அஞ்சலோட்டம். ஒவ்வொரு அடிபாட்டையும் தொடர்ந்து மரதனோட்டமானது.
ஊருக்குத் திரும்பி, உடைந்து சிதைந்த வீட்டை, சிறிது சிறிதாகத் திருத்தம் செய்து, மீளக் குடியேறலாமென்று யோசிக்கும்போது இன்னொரு இராணுவ நடவடிக்கை அடுத்த ஊருக்கு விரட்டும்.
இன்றுவரை தொடரும் அகதி வாழ்வில், வாழ்வின் வசந்தங்கள் எல்லாம் தொலைந்து போயின. வாழ்க்கைச் சக்கரம் சுழல முடியாது தொடர் அனர்த் தங்களால் லோகன் திணறிப் போனான். நொடிந்து கருகிப்போன அவனது வாழ்வில் அன்பைப் பொழியும் கமலாவும், பாசமிகு குழந்தைகளும் இன்னமும் வாழ்வில் பற்றுதலை ஏற்படுத்தினர். இந்தக் கையும் காலும் இன்னமும் இருப்பதால் முப்பது கிலோ மீற்றர் தொலைவு சென்று விறகாவது வெட்டிச் சீவிக்க முடிகிறது.
ஞானம் - ஆகஸ்ட் 2004
பலவித யோசனைகளுடன் சயிக்கிளை மித்தபடி வானத்தை நோக்கினான் லோகன். அது இன்னமும் இருண்டு கொண்டு வந்தது. கமலாவுக்கு குத்து எழும்பியிருக்குமோ? மழைக்குமுன் போய் விடலாமோ?’ என மனது அடித்துக் கொண்டேயிருந்தது. அவன் புறாப் பொறுக்கி ஆலடியைத் தாண்டிக் கொண்டிருந்தபோது மீண்டும் மழைத் துளிகள் விழுந்தன. உப்பு றோட்டுச் சந்திக்கு வந்து வல்லை வெளிக்குள் பிரவேசித்தபோது மனதில் வழமைபோல் சிறிது பயம் எட்டிப் பார்க்கிறது.
ஒரு காலத்தில் இந்த வீதியில் இரவு வேளையில் பிரயாணம் செய்ய யாரும் துணியமாட்டார்கள். வல்லை முனிபற்றி ஆச்சி கூறிய கதைகள் லோகனுக்கு இப்பவும் கூட ஞாபகம். பின்நாளில், அது முனியல்ல, திருடர்களினதும், வழிப்பறிக் கொள்ளையர்களினதும் அட்டகாசம் என்று அப்பா விளக்கிக் கூறியிருக்கிறார். யாழ்ப்பாணப் பாதையிலே, வடம ராட்சியின் எல்லையிலே பரந்து கிடக்கும் இந்த வெளியில் நீண்டுசெல்லும்றோட்டின் குறுக்கே உவர்நீராக பெருக்கெடுத்து ஒடும் தொண்ட மனாற்றிற்கு மேலாக ஒரு நீண்டபாலம் இருக்கிறது. மாரிகாலத்தில் அலையடித்துப்பாயும் ஆற்றிலே களம் கட்டி இறாலும், நெத்தலியும், சள்ளை மீனும் பிடித்து சிலர் சீவியம் நடத்துவார்கள். இராணுவ வரவுக்குப் பின்னர் இது பழங்கதையாகிவிட்டது. புளி மாங்காய் போட்டு தீயல் செய்து அம்மா தரும் உணவை வாய்க்குள் ருசியாக உண்டது ஒரு காலம். இப்போது மீனும் இல்லை. அம்மாவும் இல்லை. ஒரு இரவில் பலாலியிலிருந்து கூவிக் கொண்டு வந்த ஷெல் அவரது வாழ்வுக்கும் சடுதியில்
முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
49

Page 27
வல்லை வீதியில் பெரும் எண்ணிக் கையில் சயிக்கிள்கள் எதிர்பட்டன. அந்த வீதி இப்பொழுது சயிக்கிள் ஓடும் விதி. போக்குவரத்துச் சீர் குலைந்த பின் வேறு வாகனங்களைக் காண்பது அரிது. இப்போதெல்லாம் எல்லோருக்கும் பொதுவான வாகனம் சயிக்கிள்தான். பெண்கள் கூட என்ன வேகமாகச் சயிக்கிள் ஓடுகிறார்கள்! முப்பது வருடங்களுக்கு முன்னர் அவனது அக்கா முதன்முதலாகச் சயிக்கிள் ஒடியபோது பலர் விண்ணாணித்தது லோகனுக்கு இப்பவும் சிரிப்பை ஏற்படுத்துகிறது.
லோகன் வேகமாகப் பெடலை மிதித்தான். சயிக்கிள் செயின் பெருஞ் சத்தமெழுப்பியது. திருத்தலாம் என்றால் பாட்ஸ்யானை விலை. குதிரை விலை ரயர் ரியூப் ஆயிரம் ரூபாய் அவனது உழைப்பில் பாதியைச் சயிக்கிளே விழுங்கிவிடும்.
அவன் வல்லை முனியப்பர் ஆலயத்தில் வந்து நின்றான். சயிக்கிள் ஓடிவந்த களைப்பில் சேட்டு வியர்வையில் நனைந்திருக்கிறது. முகத்தை அழுத்தித் துடைத்து விட்டு விபூதியை பூசிக் கொண்டு உண்டியலில் சில்லறையைப் போட்டு உருகி வழிபடுகிறான். அவனது வழிபாடு இன்று கமலாவின் சுகப் பிரசவத்திற்காகத்தான்.
மீண்டும் சயிக்கிளில் தாவி ஏறிய லோகன் சிறிது தூரம் போயிருக்க மாட்டான், கெலி ஒன்று இராணுவமுகாம் இருக்கும் திசையிலிருந்து பறந்து வந்தது. ஆர்ப்பாட்டமாக அப்பகுதியில் சுழன்று, சுழன்று சரமாரியாக வேட்டுக் களைத் தீர்த்தது. சிலர் முனியப்பர் கோயில் பக்கமாகவும், இன்னும் சிலர் அச்சுவேலிச் சந்திப் பக்கமாகவும் விரைந்தனர். லோகனும் சயிக்கிளை உன்னி மிதித்தான் சடார் என்று ஒரு
50
சத்தம். செயின் அறுந்து போய் விட்டதை உணர்ந்த லோகன் இடைநடுவில் அகப்பட்டுக் கொண்டான்.
பலர் அவனோடு சயிக்கிளைப் போட்டுவிட்டு வீதியோரத்துப் பற்றை களுக்குள் குப்பறப்படுத்துக் கொண் டார்கள். உடலும், உடைகளும் முட்கள் கீறி கிழிந்து போயின.
இதே நேரம், வயிற்றுவலி ஏற்பட்ட கமலா, பக்கத்து வீட்டு ஆச்சியுடன் அச்சுவேலி ஆஸ்பத்திரிக்கு வந்து, பிரசவ வேதனையில் துடித்துக் கொண் டிருந்தாள். வல்லைப் பகுதியிலிருந்து கேட்கும் சத்தம் அவளைக் கிளிகொள்ள வைக்கிறது. கடவுளே, அவர் வாற நேரம் . அவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது' என்று வேண்டினாள். பிரசவ வலியிலும் கணவனின் நினைப்பு.
பன்னீர்க்குடம் உடைந்து தண்ணிர். சீறவே மருத்துவமாது அவளது கால்களை அகட்டி முக்கும்படி வற்புறுத்தினாள். ஐயோயி என்ற அலறலுடன் குழந்தை இப்புவியை முத்தமிட்ட அதேவேளை.
வானத்தில் பறக்கும் கெலியிலிருந்து ஏவப்பட்ட ஆட்டிலறிலோகன் படுத்திருந்த பக்கம் சீறிப்பாய்ந்து கொண்டு வருகிறது.
அடுத்த கணம் . விறகுக்குச் சென்ற லோகனும் இன்னும் இருவரும் சிதறிப்போய் குருதி வெள்ளத்தில் மிதந்தனர். ஆங்காங்கே சிதறிப்போன தசைகள்! - அதே நேரம். ஆம்பிளைப்பிள்ளை என்றால் மருத்துவமாது.
அவர் விரும்பினபடியே ஆம்பிளைப் பிள்ளைபிறந்திருக்குஎன்றுபூரித்தாள்கமலா கணவன் இனி வரமாட்டான் என்ற சேதி தெரியாமல் அவள் கணவனின் வரவுக்காகக் காத்திருக்கிறாள்.
O O
ஞானம் - ஆகஸ்ட் 2004

எழுதத் தூண்டும் எண்ணங்கள் |
கலாநிதி துரை மனோகரன்
சான்றோர் விருது பெறும் பெருந்தகை
இலங்கையின் தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் தமிழின் வளர்ச்சிக்கும், தமிழியல் வளர்ச்சிக்கும் பல்வேறு பணிகளை ஆற்றி வந்துள்ளனர். அவர்களுள் ஒருவராகப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் விளங்குகின்றார். இயல்பாகவே கலை இலக்கியத்துறைகளில் ஆர்வமும் ஆற்றலும் கொண்ட பேராசிரியர், பல்கலைக்கழக மாணவராக இருந்த போது கவிதை, சிறுகதை போன்ற ஆக்க இலக்கியத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். நாட்டுக் கூத்துத்துறையிலும் நாட்டார்: இலக்கியத்திலும் தமது திறமையையும், ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தி வந்துள்ளார். காலப் போக்கில் இலங்கையின் மொழியியல் அறிஞர்களுள் ஒருவராகத் தம்மை அவர் உயர்த்திக் கொண்டார். அவரும், திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் தமிழ் - யப்பானிய மொழிகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பேராசிரியரின் பல்வேறு நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் அவரது ஆய்வுப் பங்களிப்பினை இனங்காட்டுகின்றன.
பேராசிரியர் சண்முகதாஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எனது ஆசானாக விளங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது, நான் துணை விரிவுரை யாளராகக் கடமையாற்றியுள்ளேன்.
பேராசிரியர் அவர்கள் தமது கணிரென்ற குரலில் விரிவுரைகள் நிகழ்த்தும்போது, அவை செவிகளுக்குப் பெருவிருந்தாக அமையும். இயல்பாகவே எளிமையான போக்கும், பிறரை மதிக்கும் பண்பும், மனித நேயமும் கொண்டவர், அவர். இலங்கையில் எந்தவொரு பேராசிரியரும் செய்யாத பணியொன்றையும் சண்முகதாஸ் தம்பதியினர் செய்து வருகின்றனர். அநாதரவான பாலகர், பாலகிகளை அரவணைத்து, அனாதை இல்லமொன்றை அவர்களுக்காக நடத்தி வருகின்ற அந்த அரும்பணி, அவர்களது மனிதநேயத்தினை இனங்காட்டுகின்றது. இந்தப் போற்றத்தக்க பெரும்பணியை எவராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அண்மையில் கொழும்புக் கம்பன் கழகம் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களுக்குச் சான்றோர் விருது’ வழங்கிக் கெளரவித்துள்ளது. பேராசிரியர் அவர்களின் பணி
மேன்மேலும் தமிழ் உலகுக்குத் தேவை.
ஞானம் - ஆகஸ்ட் 2004 51

Page 28
இரட்டை வேடம்
எமது நாட்டு அரசியலில் இரட்டை வேடம் என்பது மிகச் சாதாரணமானது. மாறிமாறி வரும் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கென்றே காலங்காலமாக இரட்டை வேடம் தாங்கி நடித்து வந்துள்ளன. நமது நாட்டில் இதுவரை ஆட்சி புரிந்து வந்துள்ள சகல அரசுகளுக்கும் இருமுகங்கள் உள்ளன. ஒன்று சமாதானம், தமிழ்மொழியை நடைமுறைப்படுத்தல், தமிழ்ப் பிரதேச அபிவிருத்தி பற்றி வாய்கிழியப் பேசும் முகம்; தமிழருக்காகப் பாடுபடுவது போன்று காட்டும் அழகிய முகம்; வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெளிநாட்டுக்காரர்களுக்கென்றே செய்யப்பட்ட முகம். இன்னொன்று தமிழருக்கெதிரான அடக்கு முறைகளைச் சிந்தும் அவலட்சணமான பேரினவாத முகடி அதுவே இந்நாட்டு அரசுகளின் உண்மைமுகம். இந்த அவலட்சணமான முகத்தை அடிமைச் சிறுமதியும் பதவி மோகமும் கொண்ட கோட்டுச் சூட்டுக் கழற்றாத சேவகர்கள் சிலர் வெளி உலகுக்கு அழகான காட்டுவதில் ஆறாத அக்கறை கொண் டுள்ளனர். இத்தகைய சேவகர்களின் சேவை இரட்டை வேடம் போடும்
முகமாகக்
அரசியல்வாதிகளுக்கு மிகவும் அவசிய மானது. ஒரு புறத்தில் சமாதானம் பேசுவதும் இன்னொரு புறத்தில் போர்ச் சூழலைத் தூண்டுவதும் வாய்ந்த அரசியல்வாதிகளின் இயல்பான இருந்து வருகிறது. சமாதானம் பேசிக் கொண்டே வேட்டைக்
பொறுப்பு
போக்காக
52
சாரர்களை மேலதிகாரம் செய்வதற்குப் பிரதிப் பொறுப்பாளராக கடைகெட்ட பேரினவாதி ஒருவரை நியமித்துள்ளமை, பொறுப்புள்ளோரின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. தமிழர் விடயத்தில் யானைப் பாகர்களும் நீல வர்ணத்தாரும் கொழுக்கட்டையும் மோதகமும் போன்றவர்களே. இரு சாராரும் நெஞ்சில் நஞ்சும் வாயில் தேனும் நிலைமைகளைச் சமாளிப்பவர்களாகவே
கொண்டு அவ்வப்போது
உள்ளனர்.
சிவப்புச் சட்டைப் பேரினவாதிகள் ஒருபுறத்தில் மார்க்சுக்கும், ஏங்கல்சுக்கும், லெனினுக்கும் வீரவணக்கம் செலுத்திக் கொண்டு, மறுபுறத்தில் கேடுகெட்ட பேரினவாதிகளாக வலம் வருகின்றனர். அவர்களது ஒரே அரசியற் கொள்கை தமிழருக்கு எதை வழங்கினாலும் அதைத் தடுத்து நிறுத்துவதேயாகும். மார்க்சியம் பேசும் முகத்தையும் அதற்கெதிரான படுபிற்போக்குப் பேரினவாத முகத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர். சிவப்புச் சட்டைப் பேரினவாதிகளோடு ஒப்பிடும் போது, அம்பு - வில்லுப் பேரினவாதிகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் தங்களது கொள்கை பேரினவாதம்தான் என்று வெளிப்படையாக இனங்காட்டிக் கொள்கின்றனர்.
வேட்டைக்காரர்களும் அரசியல் வாதிகளைப் போன்று இரட்டை வேடம் போடப் பழகிக் கொண்டுள்ளனர். பேச்சு வார்த்தையில் முக்கியதரப்பாக உள்ள ஒரு சாராரோடு சமாதான முகத்தைக் காட்டி, சமாதானக் கைகுலுக்கி விட்டு, அவர்களுக்கெதிரானவர்களுக்கு
ஞானம் - ஆகஸ்ட் 2004

உறுதுணை புரிந்து வருகின்றனர். தமிழர் தரப்பு பலவீனப்படுவதே வேட்டைக் காரர்களுக்கு மிகப் பிரியமான விடயம்.
தமிழ் அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் தாங்குவதில் சளைத்தவர்கள் அல்லர். முன்னொரு காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்கெனப் புறப்பட்ட இன்று மிக GLOT FLDT 6MT பேரினவாதிகளின் உதவிகளோடு செயற்படுகின்றனர். வெளி உலகுக்கு ஜனநாயக முகத்தையும், உள்ளூரத் தமது 'எதிரிகளை’ப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளையும் கொண்டு விளங்குகின்றனர்.
வர்களில் ஒருசாரார்
என்றும் இனிக்காதவை இலங்கை வானொலியின் தென்றல்
பல்வேறு நிகழ்ச்சிகளைத் தருகிறது. அவற்றுள் காலை 5.45 முதல் 6.30 வரை ஒலிபரப்பப்படும் “என்றும் இனியவை”
என்ற நிகழ்ச்சி என்போன்ற பழைய
பாடல் பிரியர்களை (அதற்காகப் புதிய பாடல்கள் மீது வெறுப்பு என்று இல்லை. பல மோசமான புதிய பாடல்களுக் கிடையில் சில அருமையான பாடல்களு முண்டு) கவரும் ஒன்று. இந்த நிகழ்ச்சி மிகச் சிறந்த பழைய பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒலிபரப்புவதற்காகவே அமைந்தது. முன்னர் ஒரளவு இந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வந்தது. காலப்போக்கில் ஒடும் செம்பொன்னும் ஒப்ப மதிக்கும் அறிவிப்பாளர் சிலரால் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் பொருட் படுத்தப்படாமலே போகத் தொடங்கி
ஞானம் - ஆகஸ்ட் 2004
யுள்ளது. கையில் அகப்படும் பாடல்களை ஒலிபரப்பி எப்படியாவது முக்கால் மணி நேரத்தைச் சமாளித்தால் சரி என்ற தோரணையில் கணிசமான அறிவிப்
அருமை யாகவே சிலவேளைகளில் என்றும்
பாளர்கள் செயற்படுகின்றனர்.
இனியவற்றை ஒலிபரப்பு கின்றனர். பெரும்பாலும் இடைக்காலத்தில் வெளி வந்த உப்புச் சப்பற்ற நிகழ்ச்சியை நிரப்புகின்றன. சில இந்த அருமையான நிகழ்ச்சியை ஒரே பொருளில் அமைந்த ஒரு தொகுப்பு நிகழ்ச்சி போலக் கருதி பாடல்களை ஒலிபரப்புவதும் உண்டு. இது ஒரு தொகுப்பு நிகழ்ச்சியன்று. பாமரத்தனமான சில ரசிகர்களின் புகழ்
பாடல்களே
அறிவிப்பாளர்
மொழிகளை உச்சிமேற்கொண்டு நமது அறிவிப்பாளர்கள் சிலர் பாமரத்தனமாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அவற்றுள் இதுவுமொன்று. அதனால் எத்தனையோ அருமையான திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்புவாரின்றி வானொலி நிலையத்தில் முடங்கிக் கிடக்கின்றன. செளந்தரராஜன் உட்படப் பல பாடகர், பாடகிகள் பாடிய மிகச் சிறந்த பாடல்கள் இருக்க, இந்நிகழ்ச்சியில் அவர்களது சாதாரண பாடல்களை ஒலிபரப்புவது என்ன நியாயம்? தியாகராஜபாகவதரைத் தென்றல் வசதியாக மறந்தே விட்டது. எதிர்காலத்திலாவது இனியவை'யாக நிகழ்ச்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன். "இனிய உளவாக இன்னாத கூறல் கணியிருப்பக்
“என்றும்
காய் கவர்ந்தற்று”
53

Page 29
ഗZഗുര ബഗ് s
^\ A கைை இசைக்தி2ை7
മല്ലൂര്
வைஸம்பாயனருக்கு வந்த வருத்தம்
யூலை ஞானத்தில் க.கை. - மு. த. இவர்களைத் தாண்டிச் செல்லாது தேங்கி நிற்கும் ஈழத்து நவீன தமிழிலக்கியம் என்ற தலைப்பில் வைசம்பாயனர் என்பவர் கண்டனம் ஒன்றை எழுதியிருந்தார். எதுவித ஆதாரமுமில்லாது அவர் முன்வைத்த கருத்துக்கள் ஆழமற்றனவாகவும் இருந்தன. வாசகர் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்திய வைசம்பாயனர் க. கை. - மு. த. ஆகிய இருவரும் தமிழுக்கு ஆற்றிய பெரும்பணியை எடுத்துரைக்காது தேவையற்ற அபத்தங்களை முன்வைத்தமை கண்டிக்கப்பட வேண்டியது. ஏனோ தெரியவில்லை ஈழத்து இலக்கிய உலகைப் பொறுத்த வரையில் இலக்கியத்திற்கு பணியாற்றியவர்களுக்கு வைசம்பாயனர் போலச் சிலர் கரிபூசுவது வழமையான செயலாகி வருகிறது. பெரியவர்கள் இலக்கியத்திற்கு ஆற்றிய நன்மை சார்ந்த பணிகளைப் பற்றிப் பேசாது அவர்களில் குறைகண்டு பிடிப்பதும் விமர்சனம் என்ற போர்வையில் கண்டனங்கள் எழுதுவதும் நம் நாட்டில் சிலருக்கு வருத்தமாகவே போய்விட்டது. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அவசியமானவை. அநாவசியமான அலட்டல்கள் இலக்கிய உலகுக்கு எப்பயனையும் விளைவிக்காது. இதனை மனத்திற் கொண்டு வைசம்பாயனர் போன்றவர்கள் செயற்படுதல் நன்று.
கொழும்புக் கம்பன் விழா
கொழும்புக் கம்பன் கழகத்தில் 2004 ஆம் ஆண்டிற்கான கம்பன் விழா அணமையில் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ் நாட்டு, நம்நாட்டுக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். விவாத அரங்கு, பட்டிமன்றம், இலக்கிய ஆணைக்குழு, கவியரங்கம், கருத்தரங்கம் முதலான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவியரங்கமும் விருது வழங்கும் வைபவமும் மிகச் சிறப்பாக அமைந்தன. எண் சுவையை எடுத்து நம்வாழ்வை நயம்பட வடித்த கவிஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தலைமை வகித்த கவிஞர் கவிமணி பேராசிரியர் அப்துல்காதர் தனக்குரிய பொறுப்பை மிகச் சிறப்பாக ஆற்றினார். விருது வழங்கும் நிகழ்வில் கம்ப காவலர் விருதை தமிழ் நாட்டைச் சேர்ந்த கோவிந்தசாமி முதலியாரும், சான்றோருக்கான விருதுகளை பேரரிசிரியர்களான அ. சண்முகதாஸ், ம. செ. மூக்கையா, சிவசூரியா
54 ஞானம் - ஆகஸ்ட் 2004
 

ஆகியோரும், கலாநிதி க. குணராசா, பண்டிதர் க. பொ. இரத்தினம், சுப்பிரமணியம் செட்டியார் ஆகியோரும் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவிய ஏற்றமிகு இளைஞருக்கான சிறப்புப் பரிசை தாட்சாயிணி என்ற புனைபெயரில் எழுமி ஈழத்து இலக்கிய உலகை அவ்வவ்போது ஆச்சரியப்படுத்தும் செல்வி பிரேமினி பெற்றுக் கொண்டார். இடுதி தீ என்ற நூலும் வெளியிடப்பட்டது. சீதையும் அக்கினிப் பிரவேசமும் தொடர்பான சர்ச்சை யான கருத்துக்கள் அடங்கிய
பெற்றுக் கொண்டனர்.
இந்நூலை பூரீபிரசாந்தன் பதிப்பித்
துள்ளார்.
என் தேசத்தில் நான்
என் தேசத்தில் நான் எனும்
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் களின் கவிதைத்தொகுதி 23.06.2004 அன்று பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா வெளியீட்டு உரையையும், கலாநிதி துரை மனோகரன் அறிமுக உரையையும் நிகழ்த்தினர். நுல் விமர்சனத்தினை பேராசிரியர் சி. சிவசேகரம், விரிவுரையாளர்வ மகேஸ்வரன், தமிழ்த்துறை மாணவி செல்வி ஜே. இல்ஹாம் ஆகியோரும் பதிலுரையினை நூலின் தொகுப்பாசிரியர் செ. சுதர்சனும் ஆற்றினர். 24 கவிஞர்களின் 37 கவிதைகளைக் கொண்டுமல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் தற்காலக் கவிதைப் போக்கின் ஒரு வெட்டு முகத் தோற்றமாக அமைகிறது.
ஞானம் - ஆகஸ்ட் 2004
மலையக ஜீவாவின் மணிவிழா
மலையக ஜிவா என்று சிறப்பிக்கப் படும் அந்தனி ஜீவா மணிவிழா சிறப்பாக நடைபெற்றது.
அவர்களின்
(L எம். சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருந்திய அசோகன் என்ற நூல் வெளியிடப்பட்டது. உலகப் பெயர் பெற்ற முத்தையா முரளிதரன், அவரது பெற்றோர் முதலி யோருக்கான கெளரவமும் நடைபெற்றது.
சாதனையாளர்
அத்துடன் கண்டி மாவட்டத்தில் பல்துறைப் பணியாற்றிய இருவருக்கு விருது வழங்கப்பட்டதுடன் அம்மாவட்டத்திலுள்ள 60 பாடசாலை மாணவ, மாணவியருக்கு நூல்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன. இவ் விழாவை ஏற்பாடு செய்த மணிவிழாக் குழுவினரும் மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் இராமனும் பாராட்டுக்குரியவர்கள்.
தலைவர்
பிரெஞ்சுத் திரைப்பட விழா
யாழ்ப்பாணத்தில் பிரெஞ்சுத் ஒன்று பிரெஞ்சு நட்புறவுக் கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் The horseman in the roof (Jean - Paul Rappeneau)The Fabulous destiny of Amelie Poulain (Jean-Pierre Jeunet) one Suallow brought spring (Christian Carion) Taxi 3 (Gerard Kraweqyk) venus Beauty (Tonnie Marshall) The room of the officers (Franco is
திரைப்பட விழா
Dupeyron) முதலிய படங்கள் திரையிடப் பட்டன.
55

Page 30
ஆங்கிலத்தில் சுயசரிதை
டொமினிக் ஜீவாவின் 78 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு "Undrawn Portrait For Unwritten Poetry 6Tsarp நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' என்ற ஜீவாவின் சுயசரிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பே. இதனை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கந்தையா குமாரசாமி என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.
எனக்கு மரணம் இல்லை
பெரிய ஐங்கரன் எனக்கு மரணமில்ல என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். அகில இலங்கை இளங்கோ கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில்
நூலாய்வை கல்வயல் வே. குமாரசாமி நிகழ்த்தினார். சொல்லினால் ஒரு மாளிகை என்ற தலைப்பில் சோ. பா. தலைமையில் கவியரங்கம் ஒன்றும் சிறப்பாக நடைபெற்றது. ஐங்கரனின் முதலாவது நூலான இத்தொகுதியில் சில கவிதைகள் சிறந்த கவிதைகள் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. உதாரணத்திற்கு பின் வரும் கவிதையைக் குறிப்பிடலாம்.
"சொந்த நாட்டில் வாழ யாருக்குத்தான் விருப்பமில்லை இந்த நாட்டை விட்டுப் போக எனக்குந்தான் பிரியமில்லை
நாட்டை விட்டு நான் நகர்வதற்குக் காரணம் நானல்ல நாடுதான்!”
5
6
“ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள் :
பூபாலசிங்கம் புத்தகசாலை -340 செட்டியார்தெரு, கொழும்பு-I பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A, காலிவீதி, வெள்ளவத்தை. பூபாலசிங்கம் புத்தகசாலை - 4ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம், ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி திரு. சித்தி அமரசிங்கம் - 27, ஒளவையார் வீதி,திருகோணமலை, திரு.வீ.என். சந்திரகாந்தி - 5724, ஏகாம்பரம் வீதி,திருகோணமலை எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 487, பார் வீதி, மட்டக்களப்பு. கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி ந. பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா, லங்கா சென்றல் புத்தகசாலை - 8. கொழும்புவீதி, கண்டி சாஹித்திய புத்தக நிலையம், இல, 4 குருனாகல் வீதி, புத்தளம் மெடிக்கல்ஹெல்த் கிளினிக்இல4 டயரபாசந்திமிரஹாவத்தை (PO L. Murugapoopathy, PO Box : 350 Cage Burn, Victoria 3064, Australia. G. Balachandran, 21 Hudson Street, Wentworthville, N. S. W 2145, Australia.
المكتب
ஞானம் - ஆகஸ்ட் 2004

சிங்கள இனத்தவரின்
ஆதிப்பாரம்பரியமும் தோற்றமும்
கவிஞர் சக்தீபால - ஐயா
உயிரினத் தோற்றம் முதல் தமிழினத் தோற்றம், மொழி, வளர்ச்சி ஆகியன 1965ம் ஆண்டிலிருந்து எனது ஆய்வுக்குள் அமைந்தன. சிங்கள இனத்தவர் ஆதியில் திராவிட இனத்திலிருந்து தோன்றியவரென்பதையும் அவர்களின் பாரம்பரியம் திராவிடக் கலப்புடையது என்பதையும் எனது ஆய்வுகள் புலப்படுத்தின. சிங்கள இனத்தவர் குறித்து எழுதப்பட்டுள்ள சரித்திரங்கள் யாவும் பெளத்த மதத்தின் சாயலில் ஆரியவம்சத்தவர் எனக் கருதப்படுவதாகவே எழுதப்பட்டுள்ளன. உண்மையான சரித்திர வெளிப்பாடு பேணப்படாமையே காரணமாகும்.
ஆயினும் இலங்கை புதைபொருள் ஆராய்வுக் கழக வேந்தர் கலாநிதி சிறான் தெர்னியாகல அவர்கள் 1997ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை தேசிய நூலகத்தின் இயக்கச் சபையில் சிங்கள இனத்தவரின் தோற்றம் குறித்துப் பேசுகையில் சிங்கள இனம் ஒரு கலப்பினம் என்பதை வலியுறுத்தினார். (குறிப்பு - டெய்லி நியூஸ் 12.02.1997) இந்தக் கருத்து அவர் உரையாற்றிய தேவேந்திர ஞாபகக் கூட்டத்தில் கூறப்பட்டது. அதன்படி இலங்கையின் ஆதிக்குடிகள் பற்றிய எனது ஆய்வு சரியானதே என்பதும் எனக்குத் தெளிவாகியது. எனவே எனது ஆய்வுக் குறிப்புகளடங்கிய அச்சேறாத தொகுப்பிலிருந்து இச்சிறு கட்டுரையைத் தொடர்கிறேன்.
ஏறத்தாழ 10,000 ஆண்டுகளின் முன்னர் வேதகாலத்தில் இலங்கைத்தீவு இந்திய மண்ணுடன் இணைந்த ஒரே நிலமாகவே இருந்தது. தென்குமரி நாட்டின் ஓரங்கமாகவே இலங்கைத்தீவு இருந்ததென்பது வரலாற்றுச் சான்று. இரு பெரும் நதிகளான ப.றுளி ஆறும், குமரி ஆறும் இடையே பாய்ந்தமையால் இலங்கை ஒரு தீவாகக் கருதப்பட்டு ‘அலங்கம் என்று அழைக்கப்பட்டது.
அலங்கம் என்ற சொல் ஆற்றிடைக் குறிஞ்சி நிலத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அலங்கம் என்ற சொல் காலப்போக்கில் "லங்கா - இலங்கை’ என வழக்கில் வரலாயிற்று. அக்காலத்தில் இலங்கையில் பாரம்பரியமாகக் குடியிருந்தவர்கள் திராவிட மக்களேயாவர். இவர்கள் யாவரும், தமிழர், மலையாளர், தெலுங்கர், கன்னடர் என்பாராவர்.
இலங்கைத் தீவு அக்காலத்தில் இராவணேஷ்வர வம்சத்தவரால் ஆளப்பட்டது எனலாம். பத்தாம் தலைமுறையான இராவனேஸ்வரர் ஆட்சியின் போதே சைவ சித்தாந்தமே தென்னாடு இந்தியாவிலும் இலங்கைத்தீவிலும் நிலவியது. ஏறத்தாள 9500 ஆண்டுகளுக்கு முன்னர்
ஞானம் - ஆகஸ்ட் 2004 57

Page 31
ஏற் பட்ட ஐநீ தாவது கடல் வெள்ளத்தின் முன் இந்து மதம் தெற்கே பரவவிடவில்லை. இயற்கை வழிபாடே நிகழ்ந்தது.
இராமாயணக் காலம் ஐந்தாம் கடல் வெள்ளத்தின் பின்னர் எனலாம். ஆறாவது கடல் வெள்ளம் கி.மு 3000ல் ஏற்பட்டது. ஐந்தாம் கடல் வெள்ளப் பெருக்கிற்கும் ஆறாவது கடல் வெள்ளப் பெருக்கிற்கும் இடைப்பட்ட காலம் 5000 ஆண்டுகள் எனலாம். இக் காலத்தில்தான் இராம இராவணக் காலமும் இந்து மதத்தின் ஊடுருவலும் தென் நாட்டுக்குப் பரவலாயிற்று.
அரச குமாரன் இராமனின் சேனைத் தளபதியாக அநுமான் என்ற வீரன் இருந்துள்ளான். கி.மு. 3200ன் முன் இலங்கை, தமிழ் நாட்டின் (குமரி நாட்டின்) நிலமாகவே இருந்தது. இடையில் பாய்ந்த ப.’றுளி ஆறு, குமரி ஆறுகளைக் கடந்தே இராமனின் சேனைகள் அநுமான் தலைமையில் இலங்கையில் போர் தொடங்கின.
அநேகமாக ஆய்வுப்படி இந்தப் படைகள் ஆபிரிக்க நீக் ரோ இனத்தவராக, காட்டு வாழ்வை மேற் கொண்டவர்களாக இருந்தமையால், கம்பர் தனது கம்பராமாயணத்தில், தமிழ்மன்னன் இராவனேஸ்வரனை அரக்கள் இன மெனவும், சேனைகளை குரங்குப்படை எனவும் வருணித் துள்ளார்.
பத் தாம் தலைமுறையான இராவண மன்னனை பத்துத் தலை இராவணன் எனவும் கம்பரின் கற்பனைக் காவியம் கூறுவதுடன் இராமனைத் தெயப் வமாகவும்
58
காட்டுவிக்கிறது. அக்காலத்திய திராவிடமக்கள் தம்மை ஆளும் அரசர் களைத் தெயப் வமாகவே போற்றினர் என்பது இதிலிருந்து புலனாகிறது. கம் பராமாயணம் கிருஷ்ணதேவராய அரசன் காலத்தில் எழுதப்பட்டது. - இந்து மதம் வீர வணக்கத்தை மேற்கொண்டது. முன்னர் வாழ்ந்த சக்கரவர்த்திகளையும் ராஜாக் களையும் வீரர்களையும் தெய்வப் பிறவிகளாகவே இந்து மதம் இன்றும் மேற்கொண்டுள்ளது. ஆயினும் இயற்கை இசைவிலிருந்து தோற்றம் பெறும் சக்தியே எல்லாம் வல்லது என சித்தாந்த ஞானிகள் அறிந்த தத்துவமே தெற்குப் பகுதியில் ஞானவழி விளிப்புணர்வை மேற் கொண்டு விளங்கியது. இன்று சைவ சித்தாந்தமும் இந்து மதம் என கருதப்படுகிறது.
கி. மு. 3000ல் ஏற்பட்ட ஆறாவது கடல் வெள்ளமே இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தது எனினும் இலங்கையில் திராவிட இனத்தவரே சகல பிரதேசங்களிலும் வாழ்ந்த வராவர். இவர்களின் வாழ்க்கை இந்து மதம் , வைணவ மதம் எனும் கோட் பாடுகளில் பிராமணிய ஆக்கிரமிப்புடன் சாதிபேத வேற்று மைகளில் மிகுந்த இடுபாடுடன் இலங்கையில் பரவலாயிற்று. இதன் தாக்கம் மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
கி.மு. 245ல் தேவநம்பி என்ற தெலுங்கின அரசன் அநுராதபுரத்தில் அரசாண்ட காலத்தில்தான் பெளத்தம் இலங்கையில் புகுந்தது. தமிழ் நாடு
ஞானம் - ஆகஸ்ட் 2004

காஞ்சிபுரத்திலிருந்து புத்த தத்த என்ற பெளத்த பிக்கு சிங்கள மொழியையும் தோற்றுவித்தவராவார். கி.மு. 245 - 249ல் தோற்றம் பெற்ற சிங்கள மொழியும் தமிழ் எழுத்துக்களையே அரைவட்ட வடிவமான தெலுங்கு எழுத்துக் களுக்கு ஒப் பாக அமைந்தது. புத்த தத் தர் தெலுங்கினத் தவராதலால் தமிழ் மொழியே சிங் கள வட் டவடி வெழுத்துக் களாகின. தெலுங் கெழுத்தும் அரைவட்ட வடிவான தாகும்.
மன்னன் தேவநம்பிய திஸ்ஸன் (தேவநம்பியார்) திராவிடர்களின்
சைவ சித்தாந்தத்தின் நலனறிந் தவராக எல்லாரும் ஓரினம் எல்லாரும்
தம் குடிமக்கள் என்றபடி சைவ சித்தாந்தம் தழுவிய பெளத்த தர்மத்தையும் தமது ஆட்சியில் பரவச் செய்தார். பிராமணிய ஆக்கிரமிப்பில் நொந்த தமிழர், மலையாளர் தெலுங்கள், கன்னடர் ஆகிய மரபினர்
பெளத்த தர்மத்தைத் தழுவியும் ஆக்கப்பட்ட சிங்கள மொழியைக் கற்றும் ஒரு புதிய இனத்தவராகினர்.
எனவே சிங்களம் தோன்றி இது வரையில் கி.மு. 249 - 2003 கி.பி. வரையான காலம் 2252 ஆண்டு களாகும். சிங்கள மொழியைக் கற்று பெளத்தத்தைத் தழுவிய திராவிடத் தவர் சிங்கள இனமாகினர். ஆயினும் ஆதியில் புகுந்த சாதி, குல வேறு பாடுகள் பெளத்த தர்மத்தைத் தழுவி வளர்ந்தாலும் இன்றும் அதுவே பெளத்த சமயத்திலும் பெளத்த சிங்கள மக்களினதும் வாழ்வில் ஆழமாகப் பதிந்திருப்பதைக் காண லாம் . இநீ த சாதி - குல வேறுபாடுகள் யாவும் இந்து மதத்தின் மூலம் பரவியதென்பதும், திராவிட இனத்தவரையும் அன்று சிங்களவர் களாக மாற்றம் பெறக் காரணியாக இருந்ததென்பதும் ஒரு சான்றாக அமையப் பெறுகிறதும் புலனாகிறது.
г
淡演
གི་N 河
ལྷ་སྐུ། ܢܬܠ ܐ
புத்தகக் களஞ்சியம் ே
(நூல் மதிப்புரை) ' á
அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
ஆமாத்திர ༦《ܠܢ
ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே
மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
/ மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறு குறிப்பு
புதிய நூலகத்தில் இடம் பெறும்.
ஒரு பிரதி
நானம் - ஆகஸ்ட் 2004
59

Page 32
நூல் : இது எங்கள் தேசம் (சிறுகதைத் தொகுதி) க்கம் : ச. முருகானந்தன்
வெளியீடு: கலை ஒளி வெளியீடு, கரவெட்டி.
ஈழத் துத் தமிழ்ப் படைப் பிலக்கியங்களுக்குப் பாடுபொருள் குறித்த பஞ்சம் இல்லை என்பது அண்மைக்கால வரலாறு. தமிழர் களது உரிமைப் போராட்டமானது அரசியல் என்ற தனித்துறையாக வளராது, அது மக்கள் போராட் டமாக மாறியபோது தமிழ் ப் படைப்பிலக்கியத்துக்குத் தேவைக் கதிகமான புதிய கருவும், களங்களும் கிடைத் தன. இந்த வகையில் ச.முருகானந் தனது ‘இது எங்கள் தேசம்’ என்ற இருபது சிறு கதைகள் அடங்கிய தொகுப் பும் கதைக் களங்களை உள்ளடக் கியதாக வெளிவந்துள்ளது.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகளை தமிழர் போராட்டம், அது குறித்த பின் விளைவுகள், சாதியம், முதலான வேறு பொதுவிடயங்கள் என இரு பிரிவுள் அடக்கிவிடலாம். வன்னிப் பெரு நிலப் பரப் புள் பிரச்சினைக்குரிய காலகட்டங்கள் முழுமையும் தொடர்ந்து வாழும் சூழல் ஆசிரியருக்கு வாய்த்ததால் தமிழர்
60
புதிய
போராட்டம் பற்றிய கருவே அவருக்குப் பிரதானமாக அமைந்தது வியப்பில்லை. இது எங்கள் தேசம், ஒா பிடி சோறு, இந்த மண், முதலான கதைகள் போராட்டத்தின் எதிர் விளைவான அரச பயங் கர வாதத்தால் ஏற்பட்ட சிதைவுகளைக் குறிப்பிடுகின்றன. மனச்சாட்சி உள்ள இராணுவச்சிப்பாய் குறித்த புதைகுழி, பலப் பெயர் வில் ஏற்பட்ட சமூக அவலத்தைக்குறிக்கும் ‘மண்ணின் மைந்தர்கள், போராட் டத்தை நியாயப்படுத்தி அதை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தும் 'இந்த மண் இவற்றுட் குறிப்பிடக் கூடியவை.
பொதுவான கதைகள் எனப் படுபவை மனிதர து பொது நடத்தைகள், சாதியம், சமூகமாற்றம், உழைக்கும் மக்களின் எழுச்சி, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. “மனிதர்கள்’, ‘தீர்க்க சுமங்கலி" ஆகியவை இன்னமும் தமிழர் சமூகத்தில் ஆழவேரூன்றி யுள்ள சாதியம் பற்றிப் பேசுகின்றன. போராட்டமும் புலப்பெயர்வும், சமூக அவலங்களும் அதனை ஒன்றும் செய்துவிடமுடியாது. அது நித்தியவரம் பெற்றது என்பதை தீர்க்கசுமங்கலி என்ற தலைப்பில் படிமமுறையில் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடக்
கூடியது. ஏனைய கதைகள் இடைவெளி நிரப் புவனவாகவே காணப்படுகின்றன.
இத்தொகுப்பில் காணப்படுகின்ற பிரதான குறைபாடு கதைத்தேர்வில் ஒருமுகத் தன்மை இல் லாததே. மிகவும் கனதியான விடயத்தைப் பேசும் கதைகளினுாடே மிகவும் எளிமையான, பல படைப்பிலக கியகாரர் பேசிப் பேசி சலித்துப்போன கன தி குறைவான கருவினை உள்ளடக்கிய கதைகளையும் இது
ஞானம் - ஆகஸ்ட் 2004
 

கொண்டுள்ளது. அரச பயங்கர வாதத் தால் ஏற் பட்ட சமூகச் சிதைவினை மிகவும் அவதானத் துடனும் , அனுதாபத் துடனும் சித்திரிக்கும் ஆசிரியர் தொடர்ந்தும் தமிழ் மக்கள் போராட் டச் சூழலிலேயே வாழ்தல் வேண்டும் என்ற கருத்து நிலையைத் தான் பிரதானமாகத் திணிக்க முற்படு கிறாரா? என்றும் எண் ணத் தோன்றுகிறது. இக்கருத்து நிலைக்கு அவர் வாழும் சூழல் முக்கிய பங்கு வகிப்பதை நிராகரிக்க முடியாது. அதேவேளை எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய மனோதர்மத்தையும் கவனத்திற் கொள்வது அவசிய மானது. எவ்வாறாயினும் தமிழ்பேசும் மக்களது வாழ்வியலில் ஏற்பட்ட பல வேறு பிரச் சினைகள் இத்தொகுப்பில் தடம்பதிப்பதால் ஒரு காலத்தின் ஆவணமாக இவை விளங்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
- வ. மகேஸ்வரன்
OO நூல் புதிய கதைகள்
(சிறுகதைத்தொகுதி) க்கம் மலைமகள் வெளியீடு: கப்டன் வானதி
வெளியீட்டகம், கிளிநொச்சி. விலை : ருபா 150.00
ன்றைய நிலையில் தமிழில் போரியல் இலக்கியம் என்பது இலங்கையில் மட்டுமே வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக வன்னியில் இருந்து வெளிவரும் பல்வேறு ஆக்கங்கள் போரியல் இலக்கியத்தின் பன்முகப் பரிமாணங் களை இனங் காட் டுகின்றன. இப்போரியல் இலக்கியங்களிற்
ஞானம் - ஆகஸ்ட் 2004
கணிசமானவை பெண்போராளிகளின் வாழ்வியல் அனுபவங்களோடு தொடர் பானவை. இப் பெணி போராளிகளினி ஆக்கங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள் ளன. இவ் வகையில் அண்மையில் வெளிவந்த நூலாக மலைமகளின் புதிய கதைகள் (2004)
என்ற சிறுகதைத் தொகுதி விளங்குகின்றது.
இத்தொகுதியில் பதினைந்து
சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றுமே பெண்போராளிகளின் போரியல் அனுபவங்களை மிக அற்புதமாகக் காட்டுகின்றது. மலைமகள் தம்மளவில் ஒரு போராளி யாகவும் திகழ்ந்துகொண்டு, வீரியம் மிக்க எழுத்தாளராகவும் விளங் குகிறார். இத்தகைய போராளி + எழுத் தாளி சங் கமம் தமிழ் இலக் கியத் துக் குப் புதிய வளத்தையும், வனப்பையும் சேர்க் கின்றது. இதுகாலவரை எண்ணப் பட்டுவந்த, சொல்லப்பட்டுவந்த பெண்பற்றிய கருத்துருவங்களைச் சுசி குநுாறாக உடைத் தெறியும் முறையில் பெண் போராளிகளின் வாழ்வியலும் , எழுத்துக் களும் அமைகின்றன. பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்கள் இலங்கையில்தான் உருவாகியிருக்கிறார்கள்.
இத்தொகுப்பிலுள்ள சிறு கதைகளை வாசிக்கும்போது, வாசகருக்குப் புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன.
சிறு கதைகளையும் ஒருசேர வாசிப் பவர்கள் ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துள் கால்பதித்து மீண்டதான உணர்வைப் பெற்றுக் கொள்வார்கள்” என்று இந்நூலில் தாமரைச்செல்வி குறிப்பிடுவது நூறுவீதம் சரியானது. இந்நூலில் உள்ள
61

Page 33
படைப்புகள் பிறர் அறியாத பெண்போராளிகளின் வாழ்வனுபவத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
இந் நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில் பெரும் பாலன, போர்ச்சூழலில் பெண் போராளிகளின் செயற் பாடுகள் பற்றியதாக அமைந்துள்ளன. ‘புதிய கதைகள்' என்ற சிறுகதை, வரலாறு படைக்கும் புதிய பெண் சமுதாயத்தை இனங் காட்டுகின்றது. “ஆங்கோர் காட்டிடைப் பொந்திலே...' என்ற படைப்பு இன்னொரு வகையில் புதிய இளைய பெண் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கதவுகள் திறந்துதான் உள்ளன என்ற சிறுகதை வித்தி யாசமானது. பெண்ணிய நோக்கில் அமைந்த இப்படைப்பில் கைதேர்ந்த சிறுகதைப் படைப்பாளி ஒருவரின் கைவணி ணம் பளிச் சிடுகிறது. மலைமகளின் கல்வி/ வாசிப்புப் பின்னணி இந்த ஆக்கத்தில் தெளிவாகப் புலப்படுகிறது.
பெண்போராளிகளின் போர் அனுபவத்தின் முழுச்சித்திரத்தை ‘யார் உன்னை அழைத்தார்’ என்ற சிறுகதை அப்படியே வாசகர் முன் கொட்டுகிறது. இந்தச் சிறுகதைப் படைப் பில் மலைமகள் என்ற போராளியும் , எழுதி தாளரும் கைகோத்துச் செல் கின்றனர் . அனுமதி என்ற சிறுகதையில் சொந்த இடத்துக் குப் போவதற்கே படையினரின் அனுமதி பெறவேண்டிய துர்ப்பாக்கியச் சூழ்நிலை கலைத் துவத் தோடு காட்டப் படுகிறது. * முற் றுகை’ என்ற படைப் பை வாசிக்கும்போது வாசகருக்கு நெஞ்சு பதறுகிறது. இறுதி வணக்கம்' என்ற சிறுகதையில் வாசகரின் மனம் வெந்து வேதனைப் படுகிறது. ‘விலை', மலைமகளின் விலைமதிப் பற்ற
62
படைப்புகளுள் ஒன்று. 'முருங்கையை விட்டு இறங்காதவர்கள்’ என்ற சிறுகதை, படையினரால் பெண் களுக்கு ஏற்படும் வன்முறைகளைச் சித்திரிக்கிறது. “பயணம்’ என்ற படைப்பும் போராட்டச் சூழலின் இன்னொரு பக்கத்தைக் காட்டு கின்றது. ‘எதுவரை', 'ஒருகோப்பைத் தேநீர்’ என்பன பெண் போராளிகளின் இயல்பு வாழ்க்கைப் போக்கைப் படைப்புகளாகத் தருகின்றன. எனது மனிதர்கள் - 1, எனது மனிதர்கள் - 2 என்பனவற்றில் முதலாவது
of Dui ust 35 அமைந்துள் ளது. இரணி டாவது அந்தளவுக் கு அமையவில்லை.
மலைமகள் ஒரு போராளி என்ற முறையில், அவரது அனுபவங்கள் அவரது எழுத்துக்கு வலிமையும், வளமும் சேர்க்கின்றன. தட்டுத் தடுமாறாது, அனாயாசமாகவும், ஆற்றலுடனும் சுவையாகவும் எழுதிச்செல்லும் போக்கு அவரிடம் காணப்படுகிறது. அலுப்புச் சலிப்பின்றி வாசகர் வாசிக்கும் முறையில் சுவாரசியமாக எழுதிச் செல்லும் நடை மலைமகளுக்குக் கைவந்திருக்கிறது. ஏற்கனவே கனவுக்கு வெளியே யான உலகு என்ற சிறுகதைத் தொகுதிமூலம் மலைமகள் என்ற ஆற்றல் வாய்ந்த படைப்பாளியை இனங்காண முடிந்தபோதிலும் புதிய கதைகள் என்ற இத்தொகுதியில் அவரின் பன்முகப்பட்ட தரிசனங் களையும், எழுத்தாற்றலையும் முழுமையாக அனுபவிக்கமுடிகிறது. இத்தொகுதியில் உள்ள பெரும் பாலான சிறுகதைகள், ஆங்கிலத் திலும் வெளிவருமாயின் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியின் ஒரு பக்கத் தை வெளியுலகம்
இனங்காண வாய்ப்பு ஏற்படும்.
- நக்கீரன்
ஞானம் - ஆகஸ்ட் 2004

பூபதுகிறார் ஆ.
முல்லைமணியின் மழைக்கோலம் நூலுக்குப் புலோலியூர் க. சதாசிவம் எழுதிய விமர்சனம் நன்றாகவே உள்ளது. இருப்பினும் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புறோம். வன்னியின் சமீபகால இலக்கியத்தில் செங்கை ஆழியான், முல்லைமணி, பாலமனோகரன் ஆகியோருடன் அதிக ஆண்டுகளாக வன்னியின் திறமையை வெளிக்காட்டி வரும் திரு. காவியமாமணி அகளங்கனை ஏன் கட்டுரையாசிரியர் சேர்த்துக் கொள்ளவில்லை. அவரைப் பற்றியும் சொல்லிக் கட்டுரையைக் கொண்டு சென்றிருக்கலாம் !
செங்ககை ஆழியான் யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்தாளராக இனம் காண்பதைவிட அவர் எழுதிய காட்டாறு நாவலில் வன்னி மணமும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேணும். பெர்னாட்ஷோ ஆங்கில எழுத்தாளர்; ஆனால் அவரை ஐரிஸ்காரர் என எவரும் பிரித்துப் பார்ப்பதில்லை.
- திக்கவயல் சி. தர்மகுலசிங்கம்
நீங்கள் அனுப்பிவைத்த ஞானம் இதழ்கள் கிடைத்தன. “பொன்மலர்' ஞானம் இதழ் உட்பட 50 இதழ்கள் என்ற பிரமிப்பில் மலைப்பு வருகிறது. நேர்த்தியும், தொடராகவும், இலக்கிய கனதியைப் பேணியபடி ஒரு சிற்றிதழின் தொடர்வருகை ஈழத்தைப் பொறுத்தவரை சாதனையிலும் சாதனை. பேராசிரியர் சிவத்தம்பியின் நாடக அனுபவங்கள் சுவாரஸ்யமாகவும், அறிவு ஞானமாகவும் என்னை ஆகர்ஷித்தது. இவ்வாறான ஊற்றுக் கண்களை திறந்துவிடும் உங்களுக்கு நன்றிகள்.
தமிழின் ஞானத்தைப்பருக்கி உன்னத முக்தி அடையும் பரவச நிலை உங்களுக்கு.
வழக்கம்போல் ஆக்கங்கள் நிறைவாகவும் சிற்சில குறைபாடுகளுடனும் ஞானத்தில் நிறைந்துள்ளன. விமர்சனங்கள், விவாதங்கள் ஆரோக்கியம். இலக்கியம் மாயாஜாலங்களின் உறைவிடமாக அன்றி, மக்களின் ஆயுதமாக இருக்கவேண்டும் என்ற ஞானத்தின் குரலில் அபார நம்பிக்கை தெரிகிறது. அந்தக்குரல் நைந்து போகாதிருக்க நாம் பலமாக நிற்கவேண்டும். நிற்போம் என்ற உறுதிமொழிகளுடன்,
அன்புடன் ஒட்டமாவடி அறபாத்.
ஞானம் - ஆகஸ்ட் 2004 63

Page 34
'ஞானம்' சஞ்சிகை பல இலக்கிய உள்ளங்களின் கலை இலக்கிய அபிலாஷைகளை நிறைவேற்றும் களமாய் அமைந்திருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சமுகம் சீரழிவை நோக்கி போகும் போதெல்லாம் அதை திருத்தி நல்வழிப்படுத்தும் கடமை இலக்கியத்திற்கும் உண்டு என்ற ரீதியில். ஞானத்தை வாசிக்கும்போதெல்லாம் அன்று இலக்கியத்தின் குழந்தையாய் சமூகம் உற்பவித்த அந்த சங்கமருவிய கால சுவடுகள் சிந்தையின் முன் விரிகிறது. ஞானம் ஓர் தாயாகி சீரிய சிந்தனைகளை ஊட்டி நன் சமுக குழந்தையை வளர்க்க முனைந்து நிற்கக் கண்டு மகிழ்கிறேன். மென்மேலும் தங்கள் பணி தொடரவும், வளரவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஜெ.பாலரஞ்சினி, ஹட்டன்
பொன்மலர் நினைவில்
துங்கிக் கிடந்த தமிழ்இலக்கியத்தின் கண் துடைக்க ஓங்கி எழுந்த “ஞான (ம்)’க் கையே! வாங்கி நாம் அனைக்கும் போதெல்லாம் இலக்கிய வாசத்தைத் தாங்கி நாமை நனைக்கும் சஞ்சிகையே! பாங்காகப் பலகவிதை கட்டுரைகள் கதைகளிலே நீந்த எபை வைக்கின்ற நிர்பாலமே! செங்கோலை இலக்கியத்தில் செம்பைபுறக் கடைப்பிடித்து ஐந்தோடு அகவை ஆனவளே! ஈழத்து இலக்கியத்தின் இாைன பற்ற மகாவலி நீ! நரகழைத் தமிழ் உலகுக்குப் பிச்சை இடும் அட்சயம் நீ! "வளர்ச்சி பெற்று வாழ்வாய் வைபம் இருக்கும்வரையும் நீ வருவாய் என் நயனம் கண்பளிக்க நீ ஏற்றமுற வாழ்த்துகிறேன்.
- வெள்ாவத்தை இலட்சுமி
நானம் - ஆகஸ்ட் 2011

'(\'\'\'\'\'\'\'\'\')
(SÈ CENTRALESSENCE.
SUPPLIERS
O EE DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES, B. FOOD COLOURS AND SCENTS ETC.
76/B, KING STREET, KANDY.
TEL : O81 - 2224187, 081 - 4471563
ീംൂൾ
.o് రోగి (రోగి (రోగి /రోగి (రోగి స్త్ర
CARSONS MEGA
CERAMICS
Importers & Distributors of Wall Tiles, Floor Tiles, High Quality
Sanitary wares, Bathroom. Accessories, P. V. C. And Hot Water Pipe Fittings
A-74, Colombo Street
Kandy, Sri Lanka. O
枋 Tel: 081 - 4476760, 081 - 2200052
Fax : O81 - 22OOO52
_', AC) 鳢 惠_站 KM), K.
夏工真工。 YSaSLSSAS SKSJS S SAAAA S S SLS SAS ا_T_T_T_=.*?" ": __TILIT__آ

Page 35
"I F Corripsirrere,
%
C Phone : O81 - O81 -
O81 - GN Fax ; 081 -
E-Mail : Lucky
இச் சஞ்சிகை தி. ஞானசேகரன் அவர்களால்
புவி ஆர்ட்ஸ் நிறுவனத்தில் ஆச்சி
 

di CMBiscuit
|cture”S
asale.
霹
242O217
242O574.
2227O41
2420740
landashnetik. ശ്ര
?*(ترکي 6.
1. 48 பி. புரூமெண்டாங் ரீதி, கொழும்பு 3 டப்பட்டு வெளியிடப்பட்டது.