கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.09

Page 1


Page 2
r
邻 POOBALASING|HAM
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS SELLERS 8. PLBLISHERS OF BOOKS STATIONERS AND NEWS AGENTS.
Head Office Branches: 340, 202 Sea Street, 3 09 A-2/3, Galle Road, Colombo 11. Sri Lanka Colombo 06, Sri Lanka, Tel. : 2422321 Tgl. 4-515775 Fax : 2,337 313
E-mail: pbdhoositnet.lk 4A, Hospital Road.
Bus Stand, Jaffna,
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
golf.L.E.D.III Elenar: இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309 A-2/3 காலி வீதி, கொழும்பு 11, இலங்கை, கொழும்பு 05, இலங்கை தொ. பே. 2422321 தொ. பே. 4-515TTE தொ. நகல் 2337313 SS öldürcir(ördı : pbdhöğsltmet, ilk இல, AA, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
*墨墨露露墨墨墨墨墨墨墨意懿意墨意巫巫蟹壶蟹
鹹
 

விரிவும் ஆழமும்
பெறுவது
ஞானம்.
பிரதம ஆசிரியர் : தி. ஞானசேகரன்
இணை ஆசிரியர்: புலோலியூர் க. சதாசிவம் இணையம் பதிப்பு ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
ஓவியர்கள் : LỊCiuo I III நா. ஆனந்தண்
ajru l r I Li L II ஓவியம் புஸ்பா
நிர்வாகம் : கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு .
தி. ஞானசேகரன் 19", பேராதனை வீதி,
dióHIq.
Telephone - (81-247857O (Office)
(181-2234755 (Res) Mulik - 777-305) FilY - 18-34755
EMil g|AILAIn magazinesa yah00.com
 ̄ܩ
"۔۔۔۔
臀
"F="۔
!='+
فينتي
இதழினுள்ளே .
நேர்கானல்
பேராசிரியர் சிவத்தம்பி
சிறுகதை
அருகிவரும் தமிழ் விலங்கு
- முள்+பாரி ரிப்ஸ்
- கே. எஸ். சுதாகர்
கவிதைகள்
ஆத்மார்த்தம்
- இளைய ஒப்துள்ளான்) ஆட்காட்டி புற்சு ண்டில்
=: d'ITIllil மழை வாசல்
- துரிஞ்சி இாந்தென்றல் ஓர் கோலமோ!
- கல்வியல் வே. குமாரசாமி புரிந்து கொள்ளாத நீ
- கே. சங்கோ பேசு பேசாதே!
- டி. எஸ். எம். நாள் முதிப் விருட்சம்
காவத்தைச் சேர்ந்திரன்
கட்டுரைகள்
தமிழ் தொலைக்காட்சி.
- பானம் காரோதமான் பrரிவிழா . அந்த விஜீவா
- தீ. எனசேகரன் செ. கண்ேக விங்கன் .
- ஆ. முகம்மது சமீம் புனைகதை இலக்கியம் .
- செங்கை ஆழியான் எழுதத் துண்டும் எண்ணங்.
- துரை மனோகரன் மற்றுமொரு மாலையில் .
- வ. மகேர்யமான்
கேள்வி ஞானம் நூல் மதிப்புரை வாசகர் பேசுகிறார்
அட்டைப்பட ஓவியம் : цбіошп
.
f
-
菌慧
蔷直
岳草
55
f

Page 3
ിഭു\,
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம் محمدبرے .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
ஈழத்துக் கலை இலக்கியச் செழுமைக்கு அணி சேர்க்கும் கம்பன் விழா
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல். பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை’ எனவும், "புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' எனவும் கம்பன் புகழ் பாடியவன் பாரதி. கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும். என, மானிடத்தைப் புரியவைத்து வாழ்வியலை முழுமையுடன் எக்காலத்துக்கும் இசைவாக எடுத்தியம்பும் பண்புதனை கம்பகாவியத்தில் கண்டுணர்ந்து கூறியவன் பாரதி.
கலை இலக்கியம், வாழ்வியலில் பயனர் பெறும் வகையில் அமைவதற்குக் கம்பகாவியத்தைப் படித்தலும், சுவைத்தலும், ஆழ்ந்து நோக்குதலும், பகிர்தலும், பரிந்துரைத்தலும் பயனுடைய செயல்களாக அமையும். அவை போற்றத்தக்க கலை இலக்கியப் பணிகளுமாகும்.
கொழும்புக் கம்பன்கழகத்தினர் இப்பணியினை மிகவும் சிறப்பாகச் செய்துவருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன்விழா அவர்களது செயற்பாட்டின் சிகரமாக அமைகிறது. எட்டாவது ஆண்டாகக் கம்பனுக்கு விழா எடுத்துள்ள கொழும்புக் கம்பன்கழத்தின் பணி பன்முகப்பட்டது. இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள், இசை விழா, நாட்டிய விழா என முத்தமிழ் வளர்த்து, இளந்தலைமுறையினரிடையே இலக்கிய விழிப்புணர்வு ஊட்டி, தமிழ் மரபையும் பண்பாட்டையும் கட்டிக்காக்கும் நிறுவனமாக கம்பன் கழகம் நிமிர்ந்து நிற்கிறது.
இவ்வாண்டு ஜூலை 15, 16, 17ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற கம்பன்விழா, இலக்கிய இரசிகர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தது. இவ்விழாவில் நம்நாட்டு
2 ஞானம் - செப்டெம்பர் 2004
 

அறிஞர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். தமிழ் நாட்டுப் பல்துறை அறிஞர்கள், கவிஞர்கள், சொல்லின் செல்வர்கள் வருகைதந்து விழாவுக்கு மெருகூட்டினர். நாட்டிய அரங்கம், அறங்கூறல் அவையம், பட்டிமன்றம், இலக்கிய ஆணைக்குழு, கவியரங்கம், கருத்தரங்கம், வழக்காடுமன்றம் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை இலக்கிய ஆர்வலர்கள் கலா இரசனையில் முழ்கித் திழைத்தனர். கவியரங்கம் உன்னத நிகழ்வாக அமைந்தது எனலாம். தமிழ்நாட்டுத் தலைசிறந்த கவிஞர் தலைமை தாங்க, எமது நாட்டுக் கவிஞர்கள், ஈழம் கவிதைத்துறையில் உன்னதங்களைத் தொட்டுநிற்கிறது என்பதைத் தமது கவிதை ஆக்கத்திறனால் எடுத்துக்காட்டினர். விழாவில் கலை இலக்கிய சமுகத்துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஆறு அறிஞர்கள் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டமை சிறப்பானதோர் நிகழ்வாக அமைந்தது. கம்பகாவியத்தில் முத்துக்குளித்து ஆக்கிய இரு நூல்களை வெளியிட்டு வைத்தமையும், விழா மண்டபத்தின் நுழைவாயிலில் இலக்கிய நூல்களினதும், சஞ்சிகைகளினதும் கண்காட்சியும், விற்பனையும் இடம்பெற்றமையும் விழாவின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். விழா ஒழுங்குகள், நிகழ்வுகள் கனகச்சிதமாக அமைந்தன. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் அதிசிறந்த தலைமை விழாவெனக் கொழும்புக் கம்பன்விழாவினைக் கொள்ளலாம்.
இவ்விழா சிறப்புற நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்த கலை இலக்கியப் பிரக்ஞையுடன் கம்பன் பணிபூண்டுள்ள துடிப்பான இளைஞர்களையும், பின்னணியில் உந்து சக்தியாகச் செயற்பட்ட பெயரும் புகழும் விரும்பாத அந்தப் பெருமகனையும், பல்வகையில் பங்களித்த கம்பன் பற்றுடைய நலன் விரும்பிகளையும் கலை இலக்கிய நெஞ்சங்கள் சார்ப்பாக ஞானம் மனமாரப் பாராட்டுகிறது. மென்மேலும் அவர்களது பணி சிறக்க வாழ்த்துகிறது.
O O
சர்ச்சை - ரCரப்பு - கண்டனம்
மனந்திறந்து பேசுகிறார் ബം 670/7.
பேட்டித் தொடர் அடுத்த இதழின் .
a) sa b . Ga 67 ni 2004 3

Page 4
அருகிவரும்
தமிழ்
வினங்கு
முல்லைமணி
LD Trigliĝi மாதத்துக்
கடுங்குளிரையும் பாராது அதிகாலை யிலேயே அவர்
எழுந்து விட்டார். அவர் மனைவி பாவம் தொய்வுக்காரி - வெள் ளாப்பிலேயே எழுந்து காலைச் சாப்பாடு மத்தியானச் சாப்பாடு வெப்பக் குடுவையில்
தேநீர் எல்லாம் அடுக்குப் ப ண் ணு கி ற ர ன் “வேண்டாம் எதுவும்; போகிற இடத்தில் பாத்துக் கொள்ளலாம்” என்று அவர் சொல்லி யிருந்தார்.
“போகிற இடத்தில் கடைகண்ணி ஏதும் இருக்குதோ இல்லையோ நாள் முழுக்கப் பட்டினியாகவா இருக்கப் போறியள்?’ என்று சொல்லி விட்டுத் தொடங்கி விட்டாள்.
அழகேசன் - அதுதான் அவர் பெயர். ஒரு பட்டிமன்றப் பேச்சாள ராகவோ அரசியல்வாதியாகவோ இருந்திருந்தால் மொழிச் செம்மை பற்றிக் கவலைப்பட்டிருக்கத் தேவை இல்லை. ஒருமை பன்மை வேறு பாடோ, எழுவாய் பயனிலை இயைபோ
4.
mr.
i
真
를
翡
i
" (r-"
எதையும் பற்றிக் கவலைப்படாமல் ஆவேசப்பட்டுப் பேசினால் கை தட்டு அவர் ஒரு தமிழ் ஆசிரியர் அதாவது தமிழ் கற்பிக்கும்
வாங்கலாம். ஆயிற்றே, ஆசிரியர்.
எப்படி அவசரப்பட்டும் அவர் முதல் பேருந்தைத் தவறவிட்டு விட்டார். இனிச் செட்டிகுளத்துக்கு ஒன்பது மணிக்குத்தான் பஸ். அவர் தனது சேவைக் காலத்தில் என்றுமே பிந்தியதில்லை. இன்று பிந்த வேண்டியிருக்கிறது. மாற்றந் தொலைக்கோ
மனிதருள்ள ஊர்தாமோ ஆற்றைக் கடக்கும் அவதிகளும்
உண்டாமோ
ஞானம் - செப்டெம்பர் 2004
 
 
 
 
 
 
 
 

பள்ளி தளபாடம் உள்ள நல்ல
கட்டிடமோ பிள்ளைகளும் அங்கு படிக்க
வருவாரோ
என்று யாரோ தன்னைக் கேட்பது போன்ற பிரமை.
பிள்ளைகள் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என மிகத் தீவிரமாகச் செயற்படுபவர் அவர். அதுதான் வந்த வினை.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்பது என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பதுதான் பிரச்சினை. புதியன புகுதல் என்றால் என்ன? தமிழ் வாக்கியங்களின் இடையே ஆங்கிலப் பதங்கள் புகுவதைக் குறிக்கிறதா? தமிழைப் பிழையாக எழுதுவதைக் குறிக்கிறதா? பிழையாக எழுதுபவர்கள் புதியதைப் புகுத்திவிட்டோம் என்றுதானே சொல்கிறார்கள்.
பழைய நினைவுகள் அவர் உள்ளத்தை காவடிச் செடிலாகக் கொழுவி இழுக்கின்றன.
O
இன்று விசாரணை ; அவருக் கெதிராகக் குற்றச் சாட்டுக்கள்
விசாரணை செய்யப்படும் நாள். இன்னும் சில நிமிடங்களில் கல்வி அதிகாரி வந்து விடுவார். அழகேசன் பாஷையில் அவர் கல்வி அதிகாரி அல்லர், கல்வி அலுவலர் Education Officer 8,665. 996) Goff தானே. அதிகாரம் செய்ய யாருக்குத்தான் விருப்பம் இல்லை. அதனால் கல்வி அதிகாரியானார்.
இவர் தமிழ் கற்பிக்கும் எட்டு வகுப்புக்களைச் சேர்ந்த இருநூற்றுத்
குானம் - செப்டெம்பர் 2004
தொண்ணுாற்றொன்பது மாணவர்களும் மூன்று நாட்களாக (தவறு நாள்களாக) வகுப்புக்களைப் புறக்கணித்து விட்டனர்.
அதிபருக்கும் கல்வித் திணைக் களத்திற்கும் முறைப்பாடு செய்து விட்டனர். இவரால் அதிபருக்கும்
தலையிடி, திணைக்களத்திற்கும் தலையிடி, கல்வி அதிகாரி அலவாங்கு விழுங்கினவர் மாதிரித் தலையை அசைக்காமல் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு ஆசிரியரை ஏற இறங்கப் பார்க்கிறார்.
"நீங்கள் தானே அழகேசன்?” “ஓம் ஐயா”(அவர் சேர் என்ற ஆங்கில வார்த்தையை உபயோகிப்பதில்லை.)
“உங்களுக்கு எகையின்ஸ்ற்றாய் ஸ்ருடன்ஸ் டிப்பார்ட்மென்றிக்கு கொம் பிளையின்ற் பண்ணியிருக்கிறார்கள்.”
பண்ணுதல் என்ற தமிழ் சொல் ஆங்கில தமிழ் கலப்பு நடைக்கு உதவியாகத்தான் இருக்கிறது” என அழகேசன் நினைத்துக் கொள்கிறார்.
“என்ன பேசாமல் இருக்கிறீர்?” “என்னத்தை ஐயா பேசுவது? நீங்கள் பேசுவது தமிழா ஆங்கிலமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” ' அதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
“வட் இஸ் திஸ்?’ அதிபரையும் ஆசிரியரையும் பார்த்து முறைக்கிறார்.
“மன்னிக்க வேண்டும் சேர். ஆசிரியர் தமிழைத் திருத்தமாகப் பேச வேண்டும் என்று கருதுபவர்; இது அவர் சுபாவம். உங்களை அவமதிக்க வேண்டும் என்பது அவரின் நோக்கமல்ல” அதிபர் சமாளிக்கிறார்.

Page 5
“உங்கள் மாணவர்கள் வகுப்புக் களைப் பகிஷ்கரித்து வருகிறார்கள். அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது. நீங்கள் தான் விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும். “
“நீங்கள் வகுப்பிலை அசிங்கமாகப் பேசுகின்றீர்களாமே” “அசிங்கமா? அப்படியொன்றும் பேச எனக்கு வராது”
"புணர்ச்சி, வம்புப் புணர்ச்சி எல்லாம் தொடர்பான வார்த்தை யில்லையா?”
பாலியல்
"ஓ அதுவா? அவை இலக்கணம் தொடர்பானவை. நன்னூலில் உள்ளதைத் தான் சொன்னேன். பிள்ளைகள் சொற்களைப் புணர்த்தி எழுதும் போது பிழை விடுகிறார்கள்.
"புணர்த்தி எழுதுவதா?” கல்வி அதிகாரி சற்றுச் சிந்திப்பதுபோல் தென்படுகிறார். இது அவருக்கு விளங்க வில்லைப் போலும், “நன்னூலா? அது பாடப் புத்தகமாக
இருக்கிறதா?
“இல்லை” "அப்பிடி எண்டால் அதை ஏன் படிப்பிக்கிறியள்; பாடப்புத்தகத்தில் உள்ளதைப் படிப்பியும்”
"நான் நன்னூலைப் தில்லை; வேண்டியபோது நன்னூல் சூத்திரங்களை உதாரணம் காட்டுவேன். பிள்ளைகள் திருத்தமாக எழுத வேண்டும் என்றால் இலக்கண அறிவு அவசியம். ஆங்கிலத்தில் போல சொற்களைத் தனித் தனியாக எழுதுவதில்லை. கூடியவரை புணர்த்தித்தான் எழுத வேண்டும்”
“என்ன எனக்குப் படிப்பிக்கப் பாக்கிறியளா?”
6
படிப்பிப்ப
“இல்லை ஐயா, உங்கள் வினாவுக்கு விடையிறுக்கிறேன்”
“சரி பிள்ளைகள் விடும் பிழைகளை உதாரணத்துடன் விளக்கும் பார்க்கலாம்.”
அதனால் + தான் என்பது அதனாற்றான் என்றிருக்க வேண்டும். பிள்ளைகள் அதனால்த்தான் என்றோ அதனாற்தான் என்றோ எழுதுகிறார்கள். அதனாற்தான் என்பது அரைகுறைப் புணர்ச்சி. இதனை வம்புப் புணர்ச்சி என்று சொல்லலாம். புணர்த்தாமல் அதனால்தான் என்று எழுதுவதைவிட அரைவாசி புணர்த்தியெழுதுவது மிகப் பெருந்தவறானது. ஆறுமுகநாவலர் விளக்கம் கருதி அதனாலேதான் என எழுதினார்.
“வேறை என்ன பிழை?”
கஷ்டம் என்பதைக் கஸ்ரம் என்றும் கர்ப்பூரத்தைக் கற்பூரம் என்றும், அதற்கு என்பதை இடையில் க் கூடச் சேர்த்து அதற்க்கு என்று எழுதுகிறார்கள். வாக்கிய அமைப்பிலும் எழுவாய்பயனிலை இயைபில் பிழைகள் அதிகம். கந்தனும் நாயும் சென்றார்கள் என்பது தவறு
“பின்னர் எப்படி இருக்க வேண்டும்?
“கந்தனுடன் நாய் சென்றது அல்லது நாயுடன் கந்தன் சென்றான் என்றுதான் இருக்க வேண்டும்”
“இது எனக்குத் தெரியாதா? உம்மைச் சோதிச்சுப் பார்க்கத்தான் கேட்டேன். நீங்கள் வகுப்பிலை வாழைப் பழத்தைத் தின்னப் பண்ணி நேரத்தை வீணடிக்கிறியளாமே?”
“பிள்ளைகள் வாழைப்பழம் என்பதைச் சரியாக உச்சரிக்கிறார்கள் இல்லை. நன்றாகக் கனிந்த வாழைப் பழத்தை வாயில் இட்டுக் கொண்டு
2.
ஞானம் - செப்டெம்பர் 2004

உச்சரித்துப் பழகினால் சரியான உச்சரிப்பு வரும். இது நேரத்தை வீணடிப்பதாகாது.”
"பத்திரிகைகளையும் ரி. வி.களையும் கடுமையாகக் கண்டிக்கிறீர்களாமே?”
“அவற்றில் கண்டிக்கப்பட வேண்டி யவை நிறைய உண்டு. நான் மொழிப் பிரயோகத்தை மட்டும் கண்டிக்கிறேன்.”
R «A> tre அவை சக்திமிக்க சாதனங்கள்;
அவைகளால் ஒரு அரசாங்கத்தையே மாற்றியமைக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் கூட ஊடகங்களின் பிரசாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் பதவி துறந்தார்.”
“அதாவது என்னையும் மாற்றமுடியும் என்று சொல் கிறீர்கள்”
“உங்கள் கொள்கையை மாற்ற முடியாது; உங்களை இந்தப் பாடசாலை யிலிருந்து மாற்ற முடியும். சக்தி ரி. வி. யிலிருந்தும் உங்களுக்கு எதிராக முறைப்பாடு வந்திருக்கிறது.”
"இருக்கலாம் அவர்களின் சகோதர ஆங்கில ஒளிபரப்பு ஆங்கிலத்துடன் தமிழைக் கலப்பதில்லையே. அப்பிடி யிருக்க சக்தி மட்டும் தன் பெயரைக்கூட பெரிய எழுத்தில் ஆங்கிலத்திலும் தமிழை மட்டும் சிறிய எழுத்திலும் ஒளிபரப்பு கின்றதே. எபிசோட், நெக்ஸ்ட் எல்லாம் தேவைதானா? பேட்டி கொடுப்பவர்கள் கூட முக்கால் வாசி ஆங்கிலத்தில் பேசுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இப்படித் தொடர்ந்து போனால் மெல்ல அல்ல விரைவாகவே தமிழ் செத்து விடும்.”
"தமிழை உயிரோடு வைத்திருக்க உங்களால் மட்டும் முடியுமா?”
awb - 667 diouri 2004
“முடியும் என்று நினைத்துத்தான் செயற்படுகிறேன். எனது கருத்து மாணவர் பரம்பரையூடாக ஊடகங்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.”
“இப்பதான் விளங்குது; நீங்கள் காலத்தோடு ஒத்துப்போக மறுக்கிறியள். நான் எத்தனையோ பாடசாலைக்குப் போயிருக்கிறன். அங்கு தமிழ் ஆசிரி யர்கள் மாணவரோடு முரண்பட்ட தில்லை. நீங்கள் பழைய தமிழ் ஆசிரிய இனத்தைச் சேர்ந்தவர். இன்று மாணவர் மையக் கல்விதான் வேண்டும். ஆசிரியர் மையக் கல்வியை அல்ல. சரி போகட்டும். இரண்டொரு பிள்ளை யளையும் விசாரிச்சுப் பாப்பம்.”
“உங்கள் தமிழ் ஆசிரியரைப் பற்றி என்ன சொல்லுறியள்”
“சேர், நாங்கள் விஞ்ஞானம் போன்ற கடுமையான பாடங்களைப் படிப்பதற்கே நேரம் போதாமல் இருக்கு. இவர் அதுக்கு இடைஞ்சலாக இருக்கிறார். ஒரு கட்டுரை எழுதினால் அதில் வரிக்கு வரி பிழை பிடிக்கிறார். பிழைதிருத்தி மறுநாள் முழுக் கட்டுரையையும் எழுதிக்காட்ட வேண்டும். சூத்திரம் பாடமாக்கச் சொல்லுறார். இதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இல்லை.
"அப்ப நீங்கள் தமிழை நேசிக்க வில்லை. அதை முக்கியமான பாடமாகக் கருதவில்லை.”
“அதில்லை சேர் தமிழைக் குறைத்து நேசிக்கிறோம் என்பதல்ல; விஞ்ஞானத் தைக் கூட நேசிக்கிறோம். தமிழ் தாய்மொழி புள்ளடி போட்டுப் பாஸ் பண்ணிவிடுவோம்.”
“அதாவது ஆசிரியர் இல்லாமலே தமிழ் பாஸ் பண்ணுவியள். அப்பிடித்தானே

Page 6
‘ரியூட்டறியிலை பாஸ் பண்ணிற முறையெல்லாம் சொல்லித் தருகிறார்கள். அங்கே தமிழ் ஆசிரியர் எமக்குக் கரைச்சல் குடுப்பதில்லை. இவர் ஏதோ பழைய இலக்கணப் புத்தகத்திலிருந்து என்னவோ எல்லாம் சொல்லுறார்.
உயிர்வரின் உக்குறள்
மெய்விட்டோடும் நரிவரில் நண்டுகள் புத்துக்
கோடும். எண்டு ஏதேதோ சொல்கிறார். இதொண்டும் எங்களுக்குத் தேவையில்லை.”
“எங்கள் நாட்டிலை தமிழுக்காகத் தானே போராட்டம் நடக்குது. தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் தெரிய வேண்டாமா”
“அதுக்கு இப்ப நேரம் இல்லை; சோதினை முடிஞ்சபின் பாப்பம். தமிழ் உரிமைக்காகப் பாடுபடுவதற்கு நல்ல தமிழ் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. தமிழ் கட்சித் தலைவர்கள் கட்சிக் கூட்டத்திலை வட் இஸ் த நெக்ஸ்ட் ஐற்றம் இன்த அஜென்டா என்றுதானே கேக்கினம்” "சரி, இப்ப தமிழ் ஆசிரியரை டிஸ்மிஸ் செய்யப் போறன்; உங்களுக்குச் சம்மதமா? "ஐயோ சேர் பாவம்; பிள்ளை குட்டிக்காரன். எங்கையெண்டாலும் தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தி விடுங்கோ.”
கல்வி அதிகாரி கொடுப்புக்குள் சிரிக்கிறார்.
O
“அழகேசன், மாணவரையும் விசாரிச்சுப் பாத்திட்டன். நீங்கள் காலத்துக்கொவ்வாத கடும்பிடி பிடிக் கிறியள் எண்டு விளங்குது. ஒரு அளவுக்கு மாணவரை அனுசரிச்சுத்தான் போக வேணும். இளைய சமுதாயத்தைப் பகைச்சுக் கொள்ளிறது நல்லதல்ல.
8
நீங்கள் பிழைவிட்டிட்டியள். உங்களுக் கெதிராகப் பெட்டிசம் போட்ட பிள்ளை யளுக்கை பேப்பரிலை, ரி. வி யிலை வேலை செய்யிறவையின்ரை பிள்ளை யளும் இருக்கினம். ரி. விக் காரரும் தனியாக முறைப்பாடு செய்திருக்கினம். சரி எது பிழை எது என்பதல்ல பிரச்சனை. டிப்பாட்மெண்டுக்கு ஆரைப் பற்றியும் முறைப்பாடு வருவதை நாங்கள் விரும்பிறகில்லை. விசாரணையென்று வந்தால் ஏதும் நடவடிக்கை எடுத்துத்தான் ஆகவேணும். இல்லா விட்டால் எமது உத்தியோகத்துக்கும் ஆபத்து. என்ன சொல்லுறியள்?”
“நீங்கள் உங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன்.”
"நீங்கள் மாறிப் போறது உங்களுக்கும் நல்லது திணைக்களத்துக்கும் நல்லது” "நீங்கள் தானே மாற்ற வேண்டும்” “உங்களைத் தண்ணி யில்லாக் காட்டுக்கு மாற்றச் சொல்லித்தான் கேட்கினம். நான் அப்பிடிச் செய்ய விரும்பேல்லை. தண்ணியுள்ள ஊர்ப் பாடசாலைக்குத்தான் மாற்றப் போறம். பதவி உயர்வுடனான இடமாற்றம். செட்டிகுளத்திலை ஒரு சின்னப் பாடசாலைக்கு அதிபராக அனுப்பப் போறம் உதவி ஆசிரியரும் நீங்கள்தான். நீங்கள் தமிழ்ப் படிப்பிக்காமல் இருப்பது நல்லது. பிள்ளைகள் தாங்களாகப் படித்துக் கொள்வார்கள். திங்கட்கிழமை ஒடர் வரும் செட்டிக்குளம் பேருந்து இன்னும் வரவில்லை. பொழுது போக்கிற்காக ஒரு செய்தித் தாளை வாங்கி வாசிக்கிறார். இலங்கையில் கடல்ஆமை இனம் அருகிக் கொண்டு வருகிறது' என்னும் செய்தி தான் அவர் கண்ணில் படுகின்றது.
(யாவும் கற்பனை)
ஞானம் - செப்டெம்பர் 2004

esvosfossva
இளைய அப்துல்லாஹ்
அவன் தரமுடியாத எல்லாவற்றையும் நீதருகின்றாய். உள்ளுரமாக உன்னிலும் மேலானதை என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில் நான் திளைக்கும்படி.
என் எல்லா உணர்வுகளின் நேரங்கள் பவித்திரமானவை
அவை அவனுக்கானவை ஆனால் உன்னிடம் தான் இருக்கின்றன.
என்ஆகர்ஷிப்பைநீசுவாசமாக்கியதனால் ०६ என்னுள் நீபஸ்ப்பமானாய். உன்னை என்னுள் புகுத்தி அல்லது பத்திரப்படுத்தி எனக்குள்ளாகவே இருத்திக் கொள்வேன்.
எக்காலத்திலும் அவன் உன்னாக ஆக முடியாது. நெடுங்காலமான சிறுமைகளைவிட உன் நொடிப் பொழுதும் திருப்தியும் என்னோடு ஸ்பரிஸிக்கும்.
எனது சுயசிந்தனையின் தெளிவிலும் விகர்விப்பிலும் உன்னுள் என்னை செலுத்துவதை விரும்புகிறேன். அது உயிரில் உயிர் பமீதான ஒரு வகைக்
கேளிக்கை நான் எப்பொழுதும் நானாக இருந்தபடிக்கு உன் நேசங்களை e ஸ்லாப் பொழுதிலும் சுதந்திரமாக உணர்வேன். ஏனெனில் நான் சுதந்திரமானவன்.
bis 43 b - 67 6. touri 2004 '9

Page 7
நேர்காணல்
GLIUTITFfuLIń கா. சிவத்தம்பி
சந்திப்பு : தி. ஞானசேகரன்
(& உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். N
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ் நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித் தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் المـ .பேராசிரியராகப் பணிபுரிந்தவர் ܢܠ
(14)
தி.ஞா. வெகுஜன ஊடகங்களின் பாதிப்பு முனைப்புப் பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு காத்திரமான எழுத்தாளன் எவ்வாறு தனது எழுத்துப்பணியை முன்னெடுக்கலாம் என்பதைச் சற்று விரிவாகக் கூறுங்கள்?
கா.சி. : உண்மையில் நீங்கள் கேட்கிற கேள்வி, ஆங்கிலத்திலே சொல்வார்கள் Iceberg என்று. வடதுருவத்திலும் தென்துருவத்திலும் உள்ள ஆறுகள் எல்லாம் பனிக்கட்டியாக மாறிவிடும். மேலே ஒரு சின்னத் துண்டுதான் தெரியும். அந்தத் துண்டைப் பார்த்தால் ஒரு சிறிய பனிமலையாகத் தெரியும். உண்மை அப்படியல்ல. கீழே போனால் கடலே உறைந்து பனிக்கட்டியாக மாறியிருப்பதைப் பார்க்கலாம். நீங்கள் என்னைக் கேட்ட கேள்வி அந்த Ice berg உடைய
0. ஞானம் - செப்டெம்பர் 2004
 

நுனியைப் போன்றது. இன்றைய உலகினுடைய நடைமுறையை நாம் பார்க்கிறபொழுது எங்களுடைய பணி பாட்டு நிலை முற் றாக ஊடகங்களின் செல் வாக்கிற்கு உட்படுவதைக் காண்கிறோம். அந்த ஊடகங்களை ஏதோ ஒரு வகையில் தொற்றிக் கொண்டுதான் நாங்கள் உலகத்தையே தரிசிக்கின்றோம். அவற்றின் மூலம்தான் உணருகிறோம். We feel, We sence, We see the out side through the media. Sps 5 மூன்றுமே மீடியா மூலம் தான் நடைபெறுகிறது. ஆனால் இந்த மீடியா என்பது எங்களுக்கென்று தனியாக வருவதில்லை. எங்களுக்கு மாத்திரம் £ 6ft 6ilgil 916)61). 355 Mass media ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் பொதுவானது. அதற்குள்ளேதான் எங்களுடைய தேவைகளும் வருகின்றன. இந்த MaSSmedia என்பது இந்த யுகத் தினுடைய ዩ9 (Uă வெளிப்பாடு. அது Print மீடியத்தில் வரும். Electronic மீடியத்தில் வரும். தொலைக் காட்சி, வானொலி, பத் திரிகைகள் , இப் பொழுது ஓரளவுக்கு Computer க்குள்ளாலும் அது வரத்தொடங்கிவிட்டது. இந்த வெகுஜன ஊடகங்கள் ஒரு திரளுக்காகச் செய்யப்படுபவை. மக்களைத் திரள் நிலையாகப் பார்ப்பவை. தனியொருவருக்காக இல்லாமல் மனிதர்களை அவரவர் களுக்கான தேவைகளுக்கான ஓர் அடிப்படையாகப் பார்த்து நடைபெறும் ஒரு தொடர்பாடல்தான் இந்த MaSS media. Mass 616trugbibg $j6irfloods) தான் நேரடி மொழி பெயர்ப்பு. இதனூடாக எங்களுக்கு ஒரு MaSS
கதாகம் - செப்டெம்பர் 2004
Culture 6 (535pg. 3bgs Mass Culture இன் தன்மை என்ன? நாங்கள் பாவிக்கின்ற உடுப்புகள், நாங்கள் பாவிக்கின்ற பொருட்கள், எங்க ளுடைய கலைகள் இவற்றை யெல்லாம் பார்க் கிறபொழுது, அதற்குள் தமிழ்நாட்டுக்குரியது தமிழ்நாடாகவும், சிங்களத்துக்குரியது சிங்களப் பகுதியிலும், குஜராத்திற் குரியது குஜராத்துக்கு உரியது போலவும் அது தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுது உலகப் பொதுவான சில விஷயங்கள் இருக்கும். இங்கு உங்களுக்குச் சங்கர் மகாதேவன் பாடுவது போல இருக்கும் . ஆனால் உலகப் பொதுவாக மைக்கல் ஜாக்சன் போலவும் இருக்கும். உண்மையில் நீங்கள் பார்ப்பீர்களானால், இந்த மைக்கல் ஜாக்சனுடைய அவதார வடிவங்கள் தான் மற்றவர்கள் . அந்தந்தப் பண்பாட்டுக்கேற்ப மைக்கல் ஜாக்சன் வருவார். அந்தந்தப் பண்பாட்டுக்கேற்ப லூ லூ வருவார், Beatles 6u([56u Tĩ . 995 U6)ộ ụ JIT சைனாவைக்கூடப் பாதித்துவிட்டது. உண்மையில் காரணம் என்ன வென்றால் முதலாளித்துவத்தின் உலகப் பொதுவான வளர்ச்சி. அந்த (upg56)st6flig56. Lib 9(5 Market Culture ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது உலக முதலாளித்துவம் பண்ட உற்பத்தியைச் செய்ய, அந்தப் பண்ட உற்பத்தியின் விற்பனை முக்கியத் துவம் பெற, அந்தச் சந்தைப் படுத்தலைத் தளமாகக் கொண்டு இயங்க, இந்த Globalaisation என்று நாங்கள் பேசிக் கொண்டிருப்பதன் இன்னொரு பரிமாணம், இந்த Market

Page 8
Culture - சந்தைப்படுத்தல் நிலைமை - Market Economy. Sibgs Market Economy யினுடைய ஒரு பிரதான அம் சம் Consumer culture. இதிலிருந்து நாங்கள் தப்ப முடியாது. ஆனால் அதேவேளையில் இந்தப் பண்பு அந்தந்தப் பிரதேசத் துக்குரிய பண்பாகவும் வரும் . அதனுடன் இணைந்துகொண்டு வரும். இது நடக்கும்பொழுது இதற்கு முன்னர் அலி லது இதனுடன் சேர் நீ து இன்னொரு விஷயமும் நடந்து இருக்கிறது. குறிப்பாகக் காலனித் துவத்தை அனுபவித்த நாடுகளில் உண்மையில் இந்த அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பொழுதுதான் ஒரு ஜனநாயகப்படுகை ஏற்பட்டது. Democratization ஏற் பட்டது. அது கால வரையில் GLIg Lj படாதவர்கள், அதுகால வரையில் எழுதப்படாதவை கலை இலக்கியத் துக்குள் வருகின்ற நிலைமை ஏற்பட்டது. முந்திய எழுத்தாளர்கள் வேறு, முந்தி எழுதப்படுபவை வேறு. இப்பொழுது எழுதப்படுவதெல்லாம் வேறு. எங்களுக்குரிய பிரச்சனை என்னவென்றால், தமிழ் அல்லது இந்திய மொழிகள் அல்லது தென்னாசிய மொழிகள் அல்லது ஆபிரிக் கமொழிகள் எண் று வருகிறபொழுது அரசியல் சமூக மாற் றங்கள் காரணமாக ஒரு ஜனநாயக மயப் படுகை, ஒரு அரசியல் மயப் படுகை இவை யெல்லாம் ஏற்பட்டு எழுத்துக்கு ஒரு பரந்துபட்ட முக்கியத்துவம் ஏற்படு கின்ற காலகட்டத்தில் அரசியல் போராட்டங்கள், சமூகப் போராட் டங்கள் காரணமாக அந்த
12
எழுத்துக்களுக்கு ஒரு வலுவந்து, அந்த எழுத்துக்கள் சிலவிடயங் களுக்குக் காலாக இருந்த அந்த நிலை ஏற்பட்டுக்கொண்டு போகிற அந்தத் தடத்தில் இப்பொழுது இந்த Mass culture 61 (535.jpg. 55 356i இதனைப் பார் க் கிற தானால் , தமிழகத்து அல்லது இந்திய அநுபவம் சிறந்த அநுபவமாக இருக்கும். இந்தியாவில் வந்த சஞ்சிகைகள் எல்லாமே சுதந்திரப் போராட்டத்தின் பின் வந்தன. வியாபார நோக்கத்தை முதன்மை யாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆனந்தவிகடன்கூட இந்தச் சுதந்திரக் கட்டுக்கோப் புக்குள்ளேதான் நின்றது. சுதந்திரம் கிடைத்தபின்பு என்னமாதிரி என்று தெரியாது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. நான் அடிக்கடி சொல்வது போன்று, அந்த நிலைமைக்குப் பிறகு வந்ததுதான் (5(yp25Lb. 91g.jég, 69(b Political Goal இல் லை. அது அரசியல் குறிப்புகளைச் சொல்லும் . அது அரசியல் அவதானிப் புகளைச் சொல்லும். ஆனால் அது அரசியலுக் காகப் பாடுபடுவது அல்ல. ஆனந்த விகடன், கல் கி, கலைமகள் , பிரசணி டவிகடன், மணிக் கொடி இவையெல் லாம் அப்படியல் ல. இந்திய சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ், காந்தி என இவை யெல்லாம் வரும். இங்கால் சிறுகதை வளர்ச்சி அங் கால தாயினி LD600fti, Gastgustiff. Political Goal இருந்தது. இப்போது அது இல்லை. இந்தச் சந்தைப் பண்பாட்டால் படிப்படியாக மாறிவிட்டது. எங்களுக்கு ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு
ஞானம் - செப்டெம்பர் 2004

நபி  ைல  ைம ஏற்படுகிறது. JADI 5 T 6 gól எங்களுடைய Lu 60 U T L (6 ஐ ன நா ய க (8 up Lo u T (6
இன்னும் எங்களுக்கு வெகுஜனப் போராட்டங்களை மக்கள் போராட்டங்களை நடத்தவேண்டிய தேவைகள் உள்ள நாங்கள் இந்த வெகுஜனப் பண்பாட்டை எவ்வாறு ஊடறுப்பதற்கு முகம் கொடுப்பது என்பதைப் பற்றி மிக ஆழமாக பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
வருக றது . அரசியல் மயப்பாடு வருகிறது. அதே வேளையில் நவீன மயப்பாடும் வருகிறது. ஒரு புதிய முறைமை வருகிறது. இது தொடங்கி வளர் நீ துகொணர் டு போகிற அந்தக்கட்டத்தில் இந்த Market capitalism, gp55 Market Economy ஓர் உலகச் சந்தைக்குப் போகிற தன்மை, அதற்கு உதவுகிற MaSS culture 6 (bapg). Spig, Mass culture 9 6oLu g56ö 6oLd மிக நுண்ணியதாக இங்கு ஆராயப் படவில்லை. அது என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி, இந்த முரண்பாட்டைப்பற்றி நாங்கள் இன்னும் சரியாக ஆராயவில்லை. அது இலங்கையைப் பொறுத்த வரையில் பெரும் பிரச்சனையான விடயமாக எங்களுக்கு இருக்கிறது. மற்றைய நாடுகளில் என்ன நடந்தது என்று பார் க் கிற பொழுது, தெளிவாகத் தெரிவது என்ன வென்றால், எழுத்து - இதற்குப் பிறகு இலக்கியம் என்கின்ற பேச்சுக்கே இடமில் லை. Writings தான் . எழுத்துத்தான். அது வருகிறபோது மூன்று நான்கு Stages இல் -
படிமுறைகளில் வரும் . ஒன்று சகலரும் வாசிப் பது. அந்த வாசிப்பிற்காக எழுதுவது. அந்த வாசிப் பைப் பயனர் படுத் தி
யூானம் - செப்டெம்பர் 2004
வியாபாரத்தை, அந்தச் சந்தைப் பொருளாதாரத்தை மேற்கொண்டு போவது. அது ஒரு வகையான நிலை. அதற்கும் பார்க்கச் சற்று மேலானது அந்தவாசிப்பினுடாக ஓர் அறிவினை வழங்குவது. அது கொஞ சம் Educative ஆனது. ஓர் அறிவுப் போதனை அதற்குள் இருக்கும். LD) pg5 gp5 g5 Media technology வந்ததினால் அந்த அந்தத் துறையினர் தாங்கள் தாங்கள் Specialized ஆன ஒரு தொகுதியபாக வருகின்ற தனி மை ஒன்று உண்டாகின்றது. இதன்காரணமாக காத்திரமான இலக் கியம் , காத்திரமான கலை இவற்றைப்பற்றிப் பேசுபவர்கள் தொகுதிவாரியாக Clusters ஆக பூங்கொத்துகள்போல கொத்தணிகளாக இருப்பார்கள். அது 69(5 Minority culture. Gissis(Sibis(85 இப்பொழுதுதான் இந்தப் பிரச்சனை வருகிறதே தவிர இங்கிலாந்தில் இவையெல்லாம் 40, 50 களிலேயே வந்துவிட்டன. இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்தவுடனேயே வந்துவிட்டது. அங்கே Major critisism அதுகள் எலி லாம் இன்னொருவகையாக இருந்தன. ஆனால் பொதுவான நாவல்கள் துப்பறியும் கதைகள், சாதாரண கதைகள், பிள்ளைகள் வாசிப்
3.

Page 9
பதற்கான கதைகள் போன்றவை அவற்றைப்பற்றி எழுதப்படுபவை எல்லாம் பிறிதாக இருக்கும்.
எங்களுக்கு வந்த பிரச்சனை என்னவென்றால், எந்தக் கலைமகள் எங் களது நவீன இலக் கிய வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததோ அந்தக் கலைமகள் இன்று வெறுமனே வாசிப்புக்காக வரத்தொடங்கிவிட்டது. எந்தக் கல்கி, ஆனந்த விகடன் அந்த வளர்சிக்குக் காரணமாக இருந் தனவோ அவை வேறு விதமான எழுத்துக்களைத் தரத்தொடங்கி விட்டன. எழுத்தாளனுடைய பகுதி என்ன, அவனுடைய வகிபாகம் என்னவென்று நீங்கள் கேட்கிறீர்கள். உண்மையில் இவையெல்லாம் மாறிவிட்டன. இநீ நிலையில் Specialized ஆக அவரவர்களே அந்தத் தன்மைக்கு ஏற்ற வகையில் ஒருங்கு சேருகிற ஒரு தன்மை ஏற்படுகின்றது. அது எங்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. இதனாலேதான் இந்தச் சிற்றிதழ்கள் இலக்கியச் சஞ்சிகைகள் இலக்கியத்துக்கு மாத்திரம் சேவை செயப் ய முயல் கின்றன. உங்களுடைய "ஞானம் இதற்கு நல்ல உதாரணம். இது யாருக்குக் Cater பண்ணுகிற தென்றால் அந்த வட்டத்திற்குக் Cater பண்ணுகிறது. அந்த வட்டத்திற்கு வெளியில் ஞானம்
சாதாரண சராசரியான வீட்டுக்கு ஞானம் சஞ்சிகை சென்றால், அந்த ஞானம் Lugi juu ஈடுபாடு உள்ளவர்கள் அந்த வீட்டில் ஓரிருவர் தான் இருப் பார்கள் . எல்லோருக்கும் ஞானம் பற்றித்
4
என்றால் யாரென்று கேட் பார்கள் . ஒரு
தெரியாமல் இருக்கும் . அது அவர்களுக்குத் தேவையானது அல்ல. தினக்குரல் வீரகேசரியை எடுத்துக்கொண்டால், அதற்குள் எல்லோருக்கும் தேவையான எல்லாம்
இருக்கும் . இந்த நிலைமை எங்களுக்கு வந்ததன் பிறகும் எங்களுக்குச் சிற்றிதழ் களின்
வளர்ச் சிகளெல் லாம் வந்து கொண்டிருக்கின்றன. சில சிற்றி தழ்கள் அங்காலும் இல்லாமல் இங்காலும் இல்லாமல் இருப்பதும் உண்டு. கோமல் சுவாமிநாதன் போன்றவர்கள் கெட்டித்தனமாக அந்த இலக்கிய சஞ்சிகையை ஓர் அகன்ற தளத்திற்குக் கொண்டு சென்றார்கள். அந்த அகன்ற தளத்திற் குச் சென்றபோதும் அது இலக்கிம் பற்றிப் பேசகிறதாகவும் இருக்கும். அல்லது குமுதம் போன்று Popular ஆன விஷயங்களைச் சொல்லிவிட்டு தீராநதியில் இலக்கியம்பற்றி எழுதுகி றார்கள். குமுதத்துக்குள்ளேயே Specialization இருக்கிறது. அந்த Specialization ais (g5 SD 6 G36 TG8uu pressi Syb5 Mass culture got தன் மை யைப் Li II tỉ & 5 6ò T Lổ . சோதிடத்துக்கு ஒன்று, கோயில் கும்பிடுவதற்கு ஒன்று, யந்திரங்கள், ஆஞ்சநேயரை வணங்குவது எப்படி, விஷ்ணுவை வணங்குவது எப்படி என்றெல்லாம் வரும். குமுதத்தில் சினிமா பற்றிய கிசுகிசுக்கள் வரும். எந்தெந்தக் கோயில் களில் என்னென்ன இருக்கின்றன என் றெல்லாம் வரும். பக்தி சஞ்சிகையில் வரும். இவை யாவற்றிற்கும் முதலீடு ஒன்றுதான். ஒரே கொம்பனி இப்படிப் பல்வேறு முறைகளில் Specialize
ஞானம் - செப்டெம்பர் 2004

பண்ணுகிறது. இந்த நிலையில் எழுத்தாளன் என்பவன் எல்லா வற்றிற்கும் பொதுவானவனாக இருப்பான் என்று தொடர்ந்து நாங்கள் நம்புவதுதான் பிழை. அது எல்லோருக்கும் புரியப்போவதும் இல்லை. எங்களைப் போன்ற அரசியல் நிலைமை உள் ள நாடுகளில் இதுவொரு மிகப் பெரிய பிரச்சனை. இன்னும் எங்களுக்கு வெகுஜனப் போராட்டங்களை மக்கள் போராட்டங்களை நடத்தவேண்டிய தேவைகள் உள்ள நாங்கள் இந்த வெகுஜனப் பண்பாட்டை எவ்வாறு ஊடறுப்பதற்கு முகம் கொடுப்பது என்பதைப் பற்றி மிக ஆழமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. 6G60TGirpT6) Sib5i Global capitalism உடைய உலகப் பொதுவான பூகோள மயமாக்கும் முதலாளித் துவத் தினுடைய ஓர் அம் சம் என்னவென்றால் அது பூகோள
மாகுதல் அகல அகல, விரிய விரிய இன்னுமொன்று நடைபெறுகிறது.
என்னவென்றால் அந்த அந்தப் பண்பாடுகள் பற்றிய சிரத்தையும்
கூடிக் கொண்டே போகிறது. அது
அடையாளத்துக்கானது. உலகப் பொதுவான சண்டையும் நடக்கும். சேபியாவிலும் இனச் சண்டை நடக்கும். உலகப் பொதுவான சண்டையும் நடக்கும் பாலஸ் தீனத்திலும் சண்டை நடக்கும். உலகப் பொதுவான பிரச்சனைகள் இருக்கும் சிங்களம், தமிழ், குஜராத்தி, மலையாளம், என்கிற அடையாள ங்களும் வரும். இப்போது உள்ள முரண்பாடு என்னவென்றால், உலகப் பொதுவானது அதற்கிடையில் இந்த Cultural Identity. Sg, gy60 (665
கதாரம் - செப்டெம்பர் 2004
மிடையில் எவ்வாறு இணக்கம் காணுவது? இது மிகவும் ஆழமான பிரச்சனை. தமிழகத்தில் இதனை இலகுவாகக் கணி டுபிடித் து விட்டார்கள். எப்படியென்றால் Serious Writings எல்லாம் ஒரு புறத்திலே ஒதுங்கி விடுதல். அதுவும் எவ்வளவு Serious 6T666T6 Serious g6)606) என்று கோடு கீறமுடியாது. ஜெயகாந்தன் Serious இலிருந்து ஒரு படி விலகினார். அதனால் அவர் பாதிக் கப்பட்டார் என்று சிலர் கூறினார்கள். இல்லையில்லை அவர் gp595& Serious g f60Tssistsbdisgds கொண்டு சென்றார் என்றார்கள். 9Igbgs Popular level gas g(bibgs வர்கள் இதற்குள்ளே வந்தார்களோ என்று பார்த்தால் மிக மிகக் குறைவு. பாலகுமாரன் நல்ல எழுத்தாளனாக இருந்து Popular ஆக மாறி திரும்பவும் பழைய நிலைக்கு வருவதற்கு அவரால் முடியவில்லை. இதிலே, இது கறுப்பு இது வெள்ளை என்று சொல்ல முடயாது. கோடு போடமுடியாது. ஆனால் மேலோட் டமாகப் பார்க்கும் போது இந்த வேறுபாடு எங்களுக்குக் காணப் படுகிறது. எழுத்தாளன் இதற்கு என்ன செ ய ய வேண டு மென றா ல இரண்டுவிஷயங்களை மனதிற் கொள்ளவேண்டும். எழுத்தாளனுக்கு ஒரு Ideology தேவை. அவனுடைய கருத்து நிலை என்ன? நான் ஏன் எழுதுகிறேன்? என்னுடைய எழுத்தி னுடைய பயன்பாடு என்ன? நான் ஏன் எழுதாமல் இருக்க முடியாது உள்ளது? என்னுடைய எழுத்தி னுடைய இலக்கு என்ன? அதனால் வரப் போகிற சேமலாபங்கள், தேட்டங்கள் என்ன? என்பதைப்
S

Page 10
பற்றிய ஒரு தெளிவு அவனுக்கு அவசியம் . அதனைத் தான் கருத்துநிலை என்கிறோம். அது வந்துவிட்டால் அதற்கேற்ற முறையில் எழுதவேண்டிய முறைமை உண்டு. காதலைப்பற்றி எழுதலாம், ஆனால் கிளுகிளுப்பை ஊட்டுவதற்காகக் காதலைப் பற்றி எழுதமுடியாது. மனிதப் பிரச்சனைகளை எடுத்து ஆராய்வதற்காக காதலைப்பற்றி எழுதலாம். அப்படி எழுதுகிறபோது கூட மிகக்கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் மற்றைய ஊடகங்களோடு சேர்த்துப் பார்க்கிறபோது இதற்குரிய இடமெனி ன? உதாரணமாக தொலைக் காட்சியில் பலரும் தொடர் நாடகங்களைப் பார்க்கிறார்கள். யார் யார் பத்துவருடங்களக்கு முன்னர் ஆனந்தவிகடன் கல்கியில் உள்ள தொடர் கதைகளை வாராவாரம் விழுந் தடித்து வாசித்தார்களோ அவர்கள் இன்று தினமும் இந்தத் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கிறார்கள். ஊடகம் மாறிவிட்டது. நாங்கள் வாழ்க்கையைப் பார்க்கிற முறைமையும் மாறிவிட்டது. இந்தத் தொலைக் காட்சித் தொடர்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு சமகால உண்மையைக் காட்டு கின்றன. என்னவென்றால் வாழ்க் கையை முழுமையாகப் பார்க்கிற தன்மையை நாங்கள் படிப்படியாக இழந்துகொண்டு வருகின்றோம். நாங்கள் வாழ்க்கையைக் காட்சிகள் காட்சிகளாகச் சம்பவம் சம்பவமாகப் பார்க்கிறோம். அத்தோடு சேர்ந்து நாங்கள் போகிறோமே தவிர அது ஏன் அப்படிப் போகிறது என்பதைப் பார்ப்பதில் லை. உதாரணமாக ‘அண்ணாமலை தொலைக்காட்சி
16
நாடகத்தை எடுத்துக் கொண்டால், அது நாவலாக இருந்தால் அதனை ஒருவரும் வாசிக்கமாட்டார்கள். ஏனென்றால் அண்ணாமலையின் கதை தொடங்கியது எங்கேயோ. அது இப்போது போவது எங்கேயோ. தொலைக்காட்சி ஊடகத்தில் உள்ள ஒரு குணம் என்னவென்றால் , அதனை முறுக்கி ஒரு சனலில் விட்டு விட்டு அதிலே என்ன வருகிறதோ அதனை நாங்கள் பார்த்துக் Qassigorg(b(SuTib. We just watch it. இரண்டு நிமிடங்கள் பார்த்த பின்னர் ஏன் அதனை மாற்றுவான் அப்படியே இருக் கட்டுமன் என்று விட்டு 6 (S(36JTib. That is psychology of television. 6T 6oi 6OT 60o Lu u LD &5 6i வேறுமாதிரிச் செய்வாள். விளம் பரங்கள் வரும் போது அவை தேவையற்றவை என்று சொல்லி சனல்களை மாற்றி மாற்றி நான்கு நாடகங்களை ஒரே தடவையில் பார்ப்பாள். நாடகம் பார்ப்பதானால் ஒருநாடகத்தை அல்லவா பார்க்க வேண்டும் . இதில் முக்கியம் 6T660TG6u6ör OFT6ò Patern is the same. இதற்குள் ஒரு Serious ஆன ஒன்று வரவேண்டுமானால் எப்படி வரும்? இது என்னவென்றால் வாழ்க்கையை அப் படிக் காட் டிவிட் டு ஒரு ஒரத் துக் குக் கொணர் டுவந் து விட்டுவிடுதல். இன்றைய வாழ்க் கையே அப்படித்தான். இன்றைய வாழி க் கை துணி டாடப் பட்ட Fragmented life. s 5 T J 600TLDT as நீங்கள் ஒரு தனிவீட்டில் அதற்குரிய காணியோடு இருக்கிற அந்த வாழ்க்கை இருக்கிறது. ஆனால் தொடர் மாடிகளில் இருக்கும்போது வேறு விதமான வாழ்க்கை. தொடர்
ஞானம் - செப்டெம்பர் 2004

மாடிக்குள் நீங்கள் இருக்கிறீர்கள். அது உங்களுடைய வீடுதான். ஆனால் கதவைத் திறந்தவுடன் அந்தத் தொடர்மாடி உங்களுடைய 6L6)6). 955 Sence of privacy and sence of Publicness segbibgb6f brT6 எங்கே இருக்கிறேன் என்ற நிலைமை இருக்கிறதல்லவா. இது வாழ்க்கை முழுவதிலும் தெரியும். Culture முழுவதிலேயும் தெரியும். இதனை நாங்கள் நிறுத்தவியலாது.
அதிஷ்டவசமாக எங்களுக்கு 60களில், 70களில், இருந்த அரசியல்
இலக்கியம் ஒரு புறமாகவும், காத்திரம் அல்லாதவை வெறும் வாசிப்புக் கானவை ஒன்றாகவும், இடைநடுவில் உள்ளவற்றை ஒரு வகையாகவும் பார்க்கவேண்டும். இதைப்பற்றிய ஒரு கவனம் , இதைப் பற்றிய ஒரு வழிநடத்துகை கட்டாயமாகத் தேவை. ஆனால் அப்படியான ஒரு வழிநடத்துகையை இன்றைக்குள்ள பத்திரிகை அமைப்பு தாங்காது. வீரகேசரி, தினகரனை எடுத்துக் கொண்டீர்களானால் இந்த வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளின் வரலாறு தானி எங்க
இநீததி தொலைக் காட்சித் தொடர்கள்
எங்களுடைய வாழ்க்கையில் ஒரு சமகால உண்மையைக் காட்டுகின்றன. என்னவென்றால் வாழ்க் கையை முழுமையாகப் தன்மையை நாங்கள் படிப்படியாக இழந்து
கொண்டு வருகின்றோம்.
·
போக்கு அதற்கான எழுத்துக் களுடைய திசைமுகம் பற்றிய ஒரு விமர்சனம் இருந்தது. இப்போது அது இல்லை. இப்பொழுது அப்படிச் செய்யவியலாது. அது சிங்களத்திலும் இல்லை. குஜராத்திக்கும் இல்லை. மிகவும் Strong ஆக வளர்ந்த மலையாளத்திலே கூட இல்லை. 6jQ60T6örpsT6) Mass Culture s 60Lu
தாக்கம் அப்படி. மிக நல்ல படங்கள்
வருகிற மலையாளத்திலே இப்பொழுது மிகவும் மோசமான செக்ஸ் படங்கள் வருகின்றன. மூன்றாவது உலக நாடுகளில் குறிப்பாக காலனித்துவ நாடுகளில் Mass culture ஏற்படுத்தியுள்ள தாக்கம் இது. இதற்கு நாங்கள் முகம் கொடுக்கிறபொழுது காத்திரமான
A, T at b - 67 ay 67 - to 2004
(656)Lu Rupög5 இ ல க' கபி ய வ ர ல |ா று . ஆனால் கடந்த பத்து வருட கால வரலாற் றை 6T(g函
Gf R எண்பதுகளுக்குப் பிற்பாடுவருகிற இலக்கிய வரலாற்றை எழுதுகிறவர் ஞாயிறு தினகரனையும் ஞாயிறு வீரகேசரியையும் வைத்து எழுத இயலாது. ஏனென்றால், அரசியல் மாற்றங்கள் கொழும்பை மையமாகக் கொண்டது என்பது ஒரு புறம். மற்றது 91606), Mass culture S60i பாதிப்புகளுக்கு ஆளாகிவிட்டன. இவை பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த வளர்ச் சிகளை மாணவர்கள் விளங்கிக் கொள்கிற முறைமையில் எங்களு டைய கற்பித்தல் முறைகளும் சரியாக அமையவில்லை. அதுவும் ஒரு சிக்கல். இரசனை முறை மாறி விட்டது, பார்க் கிற முறை மாறிவிட்டது. இதன் காரணமாக
17
பார்க்கிற

Page 11
இலக்கியத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற கற்பித்தல் முறைமைகளில் குறிப்பாக இலக்கிய விமர்சன முறைமைகளில் சில மாற்றங்கள் ஏற்பட வேண்டும். துரதிஷ்டவசமாக அவை இன்னும் எற்படவில்லை.
நான் நம்புகிறேன், நாங்கள் S (3LT gl Mass culture is g56i இருக்கிறோம். நாங்கள் எழுதுவதில் Massage 3-lbubg5LDIT60T did 36(856ir இருக் கின்றன என்ற அந்தப் பிரச்சனையை நாங்கள் உணருகிற திலேயே எங்களுக்கு ஒரு சந்தோஷம். நாங்கள் உணர்ந்து கொள்கிறோம் என்ற சந்தோஷம். மார் க் சியச் Y பயன்படுத்திச் சொல்வதானால், இப்போது மேலோங்கி இருப்பது பொது மக்களால் நிறைய வாசிக்கப்படுகிற இலக்கியமே தவிர
ஒரு மக்கள் இலக்கியம் அல்ல. Itis not peoples' literature. It is populist. literature. சனவிருப்பமான இலக் கியமே தவிர மக்கள் இலக்கியம்
அல்ல. இப்போது அது Mass இலக்கியமாக மாறிவிட்டது. People என்பது மக்களுடைய அரசியல்
சமூக Identity உடன்தான் அந்தச்
சொல் வருகிறது. என்று மார்க்ஸ்
சொல்லியிருக்கிறார். இப்போது இருப்பது Mass தான்.
நீங்கள் குமுதம், ஆனந்த
விகடனில் வரும் சிறுகதைகளைப் பாருங்கள். வெகு சுவாரஸ்யமாக இருக்கும். சிறு சிறு கதைகளாக அவை யாரையும் குறிப்பதில்லை. வாசிக்கும்போது ஒரு சந்தோஷம்.
18
சொற் களைப்
அவ்வளவுதான். இந்த நிலைமை வந்துவிட்டது. இது தவிர்க்க முடியாதது. இதனை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதுதான் பிரச்சனை. இங்கிலாந்து அமெரிக் காவில் இது பிரச்சினையல்ல. இங்குதான் பிரச்சனை. ஏனென்றால் சுதந்திரகாலத்தில் எழுதியவர்கள், அரசியல் போராட்ட காலத்திலே எழுதியவர்கள் இப்போது இந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கு எழுதுகிற முறையில் வித்தியாசம் இருக்கிறது. அந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கூடாகப் போராடுகிற போது இருக்கிறது. இதனால், இது பற்றி எவ்வாறு கணிப்பீடு செய்வது, மதிப்பீடு செய்வது பற்றிய பிரச்சனை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் உங்களது ஞானம் போன்ற இலக்கிய சஞ்சிகையில் இந்த விஷயம் பற்றி விமர் சனக் கட்டுரைகளைப் பலரையும்கொண்டு எழுதுவித்தால் பிரயோசனமாக இருக்கும். இன்றைய இலக்கியச் சந்தைகளினுடைய தன்மைகள் என்ன? இலக்கு வாசகர் யார்? அந்தமாதிரியான கேள்விகளை எழுப்பவேண்டும். இதில் எல்லோரும் பங்கு பற்றுகிற முறையிலே செய்யவேண்டும். ஏனென்றால், என்னுடைய அபிப்பிராயப்படி இது இனிமேலும் உணரப்படாமல் போகலாம். உண்மையில் இது எங்களுடைய கற்பித்தல் முறையிலே வந்து மாணவர்களுக்குப் போகிற போதுதான் அது சரியான முறையில் வரும்.
மற்றது எழுத்தாளன் தான் எழுதியதைப் புத்தகமாகப் போட்டு
ஞானம் - செப்டெம்பர் 2004

விடுவதற்கு ஆசைப்படுகிறானே தவிர அந்தப் புத்தகம் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. இதிலே இன்னொரு விஷயம் இருக்கிறது. இலக்கிய உற்பத்திக்கான தொழில்நுட்பம் மாறிவிட்டது. யாரும் விரும்பினால் ஒரு புத்தகம் போடலாம். D.TPயில் புத்தகம் போடுவது பெரிய கஷ்டமில்லை. ஒரு நூறு அல்லது நூற்றைம்பது பிரதிகளைப் போட்டு நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு சந்தோஷம் அடையலாம். Book 6T6iraip Concept 36ip Devalued ஆகிறது. வித்தியாசப்படுகிறது. இந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் நாங்கள் நோக்கவேண்டும்.
இந்த விடயங்கள் பற்றி மேற்கு நாடுகளிலே பலர் ஆராயப் நீ திருக்கிறார்கள். தமிழகத்திலே இந்த ஆய்வு ஒரு நுட்பமான முறையைப் பெறவில்லை. ஈழத்திலே அந்த வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்தும் சமூக அரசியல் போராட்டங்கள் இன்னும் எங்களுக்கு இருக்கின்றன. அந்த அரசியல் போராட் டங்களோடு இதனை நாங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டும். இலங்கையில் தமிழ் எழுத்துக்கள் சம்பந்தமாக படிப் படியாக ஏற்பட்டுவருகிற நிலைப்பாட்டைப் பாருங்கள். பத்து வருடங்களுக்கு
முதல் வந்த எழுத்துக் கள் எழுத்தாளர்கள் எழுதியவை. தங்களை எழுத்தாளர் களாக
இனங்கண்டவர்களே எழுதியவை. அணி மைக் காலத்தினுடைய கண்டுபிடிப்புகளான ரஞ்சகுமார் அல்லது திருக்கோவிலூர் யுவன் போன்றவர்கள் எழுதுகிறார்கள். புதுக்கவிஞர்கள் பலர் வந்திருக்
mi) - 67 67 b d 2004
கிறார்கள் . எழுத்தினுடைய நேர்மையைப் பார்க்கிறதுக்குப் பொதுவான எழுத்துலகத்துக்குள் மாத்திரமல்லாமல், பலர் போராளி களாக இருக்கிறார்கள். இதிலும் பெண்கள் கூடுதலாக இருக்கிறார்கள். எழுத்தினுடைய நேர்மை, அது போகிற தன்மை போன்றவற்றிற் கெல்லாம் எழுத்தின் தன்மை மிகவும் Specializedஆகிக்கொண்டு வருகிறது. இப்போது வருகின்ற கவிதைகள் பலவற்றில் அல்லது பெரும்பாலான நாவல்களில் போராட்டம் ஒரு பின்புலமாகத்ததான் வருகிறது. அம்புலி என்கிற பெண்ணுடைய கவிதைத் தொகுதியில் அந்தப் பெண் ணினுடைய இருப்பு - துவக்கையும் பிடித்துக்கொண்டு அந்த இடத்தில் இருக்கும்போது, தான் ஒரு பெனி என்று உணரும் போது அவளுக்கு ஏற்படும் உணர்வுகள்தான் எத்தகையன என்பது தெரிகிறது. இப்பொழுது எழுத்தாளர் என்பவர் யார்? அவள் அல்லது அவன் யார்? அந்த எழுத்தாளரது அநுபவங்கள் என்ன? இவற்றை நாங்கள் வெறுமனே தூக்கியெறிய இயலாது. அங்கு வந் திருக் கிற கவிதைகள் எல்லாவற்றையும் வெறும் பிரச்சாரம் என்று தூக்கியெறிய இயலாது. நான் ஒரு விமர்சகனாக நின்று பார்க்கிறேன். இதற்குச் சார்பாக வருவதையும் எதிராக வருவதையும் நான் சொல்கிறேன். அந்த அநுபவத் தினுடைய உணர் மைத் தன் மை நேர் மை பேணப் படவேணி டும் . அவற்றை யார் யார் உணர முடிகிறது, யார் யாரால் உணர முடியவில்லை என்பது முக்கிய மானது. Mass cluture S65 முக்கியத்துவம் என்னவென்றால் அது

Page 12
எல்லோருக்கும் விளங்குகிறமாதிரி, எல்லாரையும் தொடுகிறமாதிரி இருக்கும். இதற்கு நல்ல உதாரணம், சினிமாக் கவிதைகள். வரைவிலக் கணத்தின்படி சினிமாவில் வருவது கவிதையாக இருக்கமுடியாது. அது ஒரு குறிப்பிட்ட Situation னுக்காக எழுதப்படுகிற விஷயம். இருப்பினும் அது எல்லோருக்கும் பொதுவான அநுபவங்களைச் சொல்வதுபோல் இருக்கும். ஆனால் அது மேலோட்ட மானதுதான். ஆழமாகப் போவ தில்லை. அநுபவம் இல்லாமல் எழுதவியலாது. MaSS Cluture க்குள் போவதென்பது, சிங் களத்தில் சொல வதுபோல பொலொங் கத்தாவ' போல சும்மா அதனைச் செய்யவியலாது. துரதிஷ்டவசமாக இந்த பொலொங் கத்தாவவுக்குத் தமிழ்ப்பதம் இல்லை. பொலங் கத்தாவ என்பது Calf love என்று ஆங்கிலத்தில் சொல் வதைப் போன்றது. விடலைக் காதல். ஓர் இளைஞன் யுவதிக்கு இடையே அவர்களுக்கு மாத்திரம் தெரிந்த விடயங்களைப் Lu T L L T ab Li போட்டவுடன் அதனை எல்லோரும் கேட்கிறார்களே என்ற உணர்வே யில்லாமல் நாங்களும் கேட்கிறோம். Mass cluture 6T 6i 60T Ghafui aslip தென்றால் அது ஒரு பொதுப் படையான தன்மையை ஏற்படுத் துகிறது. எங்களுடைய அந்தரங் கங்களை இல்லாமல் செய்கிறது. gl எங்களுடைய மனிதگہ ஆளுமைகளை அரித்துக் கொண்டு 6 (5alpg. 69 (5 Mass cluture எழுத்தாளனாக இருப்பதென்பது இலே சுப் பட்ட காரியமல் ல. அதுக்கொரு திறமை வேண்டும்.
20
ஏனெனில் அவனது எழுத்தை வாசித்து முடித்தவுடன், வாசகனுக்கு தான் ஏதோ வாழ்க் கையைப் பற்றி வாசித்தமாதிரி இருக்கவும் வேண்டும். ஆனால் அந்த வாசிப்பு வாசகனை ஆழமாகவும் பாதிக்கவுங் கூடாது. ஆழமாகப் பாதிக்குமென்றால் அவன் அதனை வாசிக்கமாட்டான். நீங்கள் சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்குப் போகிறபோது பார்த்திருப்பீர்கள். எத்தனையோ பேர் சிங்கப்பூரில் ஒரு நாவலை வாங்கி வாசித்துவிட்டு சிட்னியில் இறங்கும்போது அதனை இருக்கையிலேயே விட்டுவிட்டுப் போவார்கள். ஒரு காலத்தில் நான் இப்படி விடப்பட்ட நாவல்களை எடுத்து எனது பையில் போட்டுக் கொணர் டு வருவது வழக்கம் . இதைப்பார்த்து என்மனைவி என்னை ஏசுவார். ஆனால் இப்போது நானும் சிலவேளைகளில் நாவல்களை அப்படி வாசித்துவிட்டு இருக்கை யிலேயே விட் டுவிட்டு இறங்கி விடுறேன். வாசிப்பு மரபு மாறிவிட்டது. இதுகளைப் பற்றி ஆழமான ஒரு ஆய்வு தமிழுக்கு இன்னும் வர வில்லை. இதனாலேதான் எழுத் தாளனை ஒரு பெரிய Personality ஆக, பழைய புலவனுக்குரிய ஒரு Personality 2 L6'i 960) 6001ğ gölü பார் க் கிறோம் . இப் போது எழுத்தாளனே மாறிவிட் டான். அவனுடைய சந்தை மாறிவிட்டது. அவனுடைய நோக்கு மாறிவிட்டது. ஆனால் அதே வேளையில் எங்களுடைய நாடு இருக்கிற நிலையில் இந்தப் பின்காலனித்துவ சமூகம் இருக்கிற வரையில் எங்களுக்குப் பிரச்சினை களும் இருக்கும். இதற்குள் இதனை எப்படி Balance பண்ணுவ தென்பதுதான்
ஞானம் - செப்டெம்பர் 2004

பிரச்சினை. பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எழுதுகிறவர்களுக்கு அந்தப்பிரிவு மிகவும் சுலபமானது. . அங்காலும் இங்காலும் போகலாம். நடுவிலே ஒரு கோடுபோடலாம். அதாவது இது populist literature 6T 6oi gol Lò gbi Serious literature 616ögpjuib ArfīG3H5IT (6 போடலாம் . ஆனால் இங்கு எங்களுக்கு ஒரு கோடு கீற இயலாது. எங்களுடைய politics மாறவில்லை. எங்கள் சமூகம் மாறவில்லை. அதனாலேதான் இந்தச் சோகம் எங்களுக்கு ஏற்பட்டது. 69 (5 lu & ab gö gG36) Mass cluture வந்துகொணி டே இருக்கிறது. இன்னொரு பக்கத்திலே எங்களுடைய வாழ்க்கை மாறாது இருக்கிறது. தமிழ் சினிமாவைப் பாருங்கள். அது மாற்றம் அடைந்து வருகிறது. Title தமிழிலே போடுவதில்லையே. Youthclutureக்கு அவர்கள் Caterபண்ணி தமிழிலே Title போடுவதில்லை. இந்த Mass cluture பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். அது ஒரே நேரத்தில் இப் படியான கதைகளையும் தரும்; ஒரு கோயில் இயந்திரத்தையும் போட்டுத்தரும். இதனைச் சரியாகப் புரியவில்லை என்றால் பிரச்சினைதான். எழுத்தாளன் 9(b LDT pTg5 Personality 6T 6õi gol நினைக்காதீர்கள். அவன் மாறி விட்டான். அவனது எழுத்து மாறி விட்டது. எல்லாமே மாறிவிட்டன.
தி.ஞா.:அப்படியானால் விமர்சகர் களுடைய பார்வையிலும் இத்தகைய அம்சங்களை உள்வாங்கிய தன்மை இருக்க வேண்டுமல்லவா? அப்படி இருக்கிறதா?
ஞானம் - செப்டெம்பர் 2004
Φπ. εί. துரஷ்டவசமாக இந்த நடைமுறைகள் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டதற்கான அல்லது இவற்றைத் தமிழ் நிலைப்படுத்தி ஆராய்வதற்கான விமர்சனங்கள் எதுவும் அண்மையில் வந்ததாக எனக்குத் தெரியவில்லை; வந்திருக் கலாம். காலச் சுவடு போன்ற சஞ்சிகைகளிலே வந்ததோ தெரியாது. ஆனால் இந்த மாதிரியான ஒரு விமர்சன முறைமை வராமல் இவற்றை நாங்கள் புரிந்துகொள்ள இலயாது. Post modernism 6T6i (pi GafT6b gy கிறோம். அது முடிந்து வெகு ET6)LDTaipg. Post modernism is dead. நாங்கள் அதிலேதான் நின்றுகொண்டு பார்க்கிறோமே தவிர இந்த மாற்றங்களுக்கூடாகத்தான் இதனைப் பார்க்கவேண்டும் என்ற நிலைமைக்கு நாங்கள் வரவில்லை. நீங்கள் கேட்ட கேள்வி ரெம்ப ஆழமான கேள்வி. Ice burg என்று நான் ஆரம்பத்தில் கூறியதுபோல அந்தப் பனிக் கட்டி அப்படியே இருக்கிறது. நாங்கள் அதை உணரவில்லை. Iceberg இல் உள்ள தன்மை என்னவென்றால் கடலிலே போகிறவர்களுக்குத்தான் அது தெரியும் . மேலே தெரிகிற முனைதானே அது என்ற நினைத்து பாரிய கப்பல்கள் போய் அதிலே மோதி உடைந்துபோன சந்தர்ப் பங்களும் உள்ளன. இந்த Mass cluture 6T6i go Ice berg g. 65 எங்களுடைய வாழ்க்கை என்கிற கப்பல் உடைகிறதற்கான ஆபத்து உண்டு. அது பற்றிய ஒரு தெளிவினை, எடுத்துக்கொடுக்க வேண்டிய தேவை நிச்சயமாக இன்றைய விமர்சகள் களுக்கு உண்டு.
2

Page 13
\g v easArts. Vற்கூண்டில் வசிக்கின்ற இதWe
த. சாரங்கா திருநகரே உந்தன் திசைதொழுங்கால் மகிழ்கின்ற என் உயிரின் இசை கேட்கிறதா? எழுந்து வான்தொடும் கட்டிடங்களிடையே விழுந்து ஊருகின்ற புழுதிகானாப் பெருந்தெருக்களில் அழுந்தாது பாவும் என் சப்பாத்துக்களுள் வசிக்கின்ற பாதங்கள் உன் வெண்மேனி அணைந்திருந்த விபரிக்கவியலா சுகத்தினை பமீட்டு இரவுகளைக் கனதியாக்குகின்றன. நிரவப்பட முடியாத நீண்ட இடைவெளிக்கப்பால் நின்று கொண்டிருக்கின்ற அன்னியக் கலாச்சாரத்தின் வால்பற்றி இழுபடும் உன்பிள்ளைகளுக்காய் ஒருமுறை இரங்குவாயா நீ? உன்னிடத்தில் வாழ்க்கையிலே . மரங்கொஞ்சிய தென்றல் மஞ்சள் வண்ணத்து வயிறு மேடிட்ட சிறுபறவை நெஞ்சு குளிர இறங்கும் மழை நிதமும் ஒளிகாலும் சூரியன் என எல்லாவற்றையும் ரசித்திருந்த என் மனம் இயந்திர வாழ்வில் நசிபட்டிறந்த நாளெனக்கு மறந்து போயிற்று.
22 ஞானம் - செப்டெம்பர் 2004

என்னருமைத் தாய்நாடே! உன்னிடத்தில் ஒன்று கேட்பேன் புலம் பெயர்ந்த அந்நாளில் புல்பரந்த வெளி ஒன்றில் ஆட்காட்டிப் பறவை ஒன்று அடைகாத்திருக்கையிலே அக்கூட்டின் முட்டை யொடு என் உயிர் துடிக்கும் சின்னஞ்சிறு இதயத்தை விட்டுவிட்டு வந்திருந்தேன் &lrhւնւլ முழுதும் 000 000 AO AKO சிலிர்க்கும் உயிர்ச் சந்தோஷம் எல்லாமும் . சேர்த்திறுகப் பூட்டிய சிறு இதயம். கண்டாயா? கனிவோடு அதைக் காப்பாயா? பொறியகன்ற ஒரு பொழுதில்
நான் பமீளும் நாள்வரைக்கும்?
O
|- W---.' ' ' ' - - - - - - - - - “ஞானம்* சந்தா விபரம் உள்நாடு மாற்றக்கூடியதாக அனுப்பவேண் i, தனிப்பிரதி ரூபா 30/= அனுப்ப வேண்டிய பெயர், முகவரி ஆண்டுச் சந்தா ரூபா 360/= < 2 ஆண்டுச் சந்தா : ரூபா 700/= T. Gnanasekaran 3 ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= 19/7 Peradeniya Road, ஆயுள் சந்தா : ரூபா 15000/= Kandy.
சந்தா காசோலை மூலமாகவோ வெளிநாடு மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
ஆண்டுச் சந்தா : 25 US$ ஆயுள் சந்தா 300 USS
சுருகனம் - செப்டெம்பர் 2004 2

Page 14
தமிழில் தொலைக்காட்சி ஊடகங்கள்
as DJT851JJ 66Jaguj Jaisassis6
- சில இரசணைக் குறிப்புகள்
மாவை வரோதயன்
ஞானம் இதழ் 42ல் இலங்கையில் தொலைக்காட்சிச் சேவைகளில் தமிழ் நிகழ்ச்சிகளின் பின்தங்கல் பற்றிச் சில குறிப்புகளை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் சில கருத்துப் பதிவுகளை இங்கு தர விரும்புகின்றேன். இவை தொலைக்காட்சி ரசிகர்கள் தமது ரசனை மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும், வரும் காலத்தில் நமது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஒளிபரப்பாளர்கள் நல்ல தரமான நிகழ்ச்சிகளைத் தர முயலவும் உதவும் என்பது எனது நப்பாசை.
தொலைக்காட்சி ஊடகமானது உச்சப் பயன்பாடு உள்ள ஒரு சமூகக் கல்வி ஊடகம் என்பது எனது கருத்து. அதனை வெறுமனே களிப்பூட்டல்களுக்காகவும் விளம்பர வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்துவது என்பது அபத்தமாகும். அவற்றை உரிய அளவில் கையாண்டு தரமான நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் சிங்கள மொழிமூல தொலைக்காட்சிகள் வெற்றியடைந்துள்ளன என்பதில் மறு கருத்துக்கு இடம் இல்லை.
அங்ங்ணம் எனது கவனத்தை ஈர்ந்த சில நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.
1. மக்கள் பிரச்சனைகளுக்கான களம்.
சுயாதீன தொலைக்காட்சியில் பிரதி சனிக்கிழமை தோறும் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அனாவரணய அதாவது வெளிப்படையாதல்’ என்று வைத்துக் கொள்ளலாம். மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சனையைக் கொடுக்கும் ஒரு விடயம் பற்றிய தெளிவை பார்வையாளர்களுக்கு ஒளி பாய்ச்சிக் காட்டும் நிகழ்ச்சி இது.
அண்மையில் நுகர்வுப் பொருட்களில் காலாவதியாகும் தேதி பற்றிய விழிப் புணர்வைத் தரும் நிகழ்ச்சி, சட்ட விரோத மது பாவனை பற்றிய சட்டத் தெளிவுகளைத் தரும் நிகழ்ச்சி என்பன எனது கவனத்தை ஈர்ந்தன. இவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடலை நடத்துவதன் மூலம் பல புதிய விடயங்கள் வெளிக் கொணரப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியை நடத்தும் ஊடகவியலாளனின் நுண் மாண்பு, ஆளுமை வியந்து பாராட்டத்தக்கது. அதாவது சாதாரண பார்வையாளனின் உள்ளத்தில் எழத்தக்க நியாய மான கேள்விகளை ஒர் ஒழுங்கு முறையில் படிப்படியாக உரிய அதிகாரிகளிடம் கேட்டு அவற்றின் விளக்கத்தைத் தரும் பாங்கு ஒரு முன்னுதாரணமான தன்மை எனலாம்.
24 ஞானம் - செப்டெம்பர் 2004

அந்த நிகழ்ச்சியின் ஊடாக ஒரு தீர்வை உடனடியாகப் பெறப் பொதுமக்கள் அறிவுறுத்தப் படுவது அந்த நிகழ்ச்சியின் ஊடக வெற்றி எனலாம். 2. பெண்ணியம் பற்றிய
நிகழ்ச்சி
சுவர்ணவாஹினியில் பிரதி புதன் கிழமைகளில் இரவு 9.30ற்கு ஒளி பரப்பாகும் நிகழ்ச்சி யெஹேலியே என்பது. தமிழில் 'நண்பியே' என்று வைத்துக் கொள்வோம்.
பெண்களின் சமூக அந்தஸ்த்து, சமூக இயக்கத்தில் பெண்கள் பலிக் கடாக்கள் ஆக்கப்படும் கேவலம், பெண்களின் உரிமைகள், சமத்துவம், முன்னேற்றம், விடுதலை என்று பல விதமான ஆய்வுகளை, கட்டுரைகளை, நூல்களை, சஞ்சிகைகளைப் பெண் ணிலைவாத அமைப்புகள் வெளிப்படுத் துகின்றன. ஆனால் அவை எல்லாம் சமுதாயத்தின் சகமாந்தர்களின் கவனத்துக்கு வருகின்றனவா? தீர்வைத் தேடுகின்றனவா? என்றால் அதற்கான பின்னூட்டல் மிகமிகக் குறைவாகவே இருக்கும்.
ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படி அல்ல. இதனை ஒரு இளம் பெண் ஊடகவியலாளர் தொகுத்தளிக்கின்றார். நமது சமூகக் கூடாரத்துள் பாதிக்கப்பட்ட பெண்களை சுமுகமாக அணுகுகின்றார். அப்பெண் பாதிப்புக்கு உள்ளாவது குடும்பத்தில் உள்ளவர்களால், உறவினர் களால், ஊராரால், சமூக விரோதிகளால், பொருளாதார நெருக்குதலால் . என்று எது பற்றியதோ அந்தப் பிரச்சனையின் ஆழத்தை, அடிவேரை அளந்தெடுக் கின்றார்.
syst to - Saty 6. touf 2004
அவ்விடயத்தை நடிகர்களின் ஊடாக வெளிப்புறப் படப்பிடிப்பின் மூலமாக ஒரு ஒளிப்படச் சித்திரமாகத் தயாரிக்கிறார். அந்த நிகழ்ச்சியின் ஒவ்வோர் கட்டத் திலும் பார்வையாளர்களைப் பார்த்து கேள்விகளை எறிகிறார் அந்தத் தொகுப்பாளர்.
மற்றுமொரு உண்மைக் கதை என்று தொடங்கும் நிகழ்ச்சி - இது முடிவல்ல என்று முடியும். பிரச்சனையில் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று பிரச்சனைக்குக் காரணமான சமூகக் கூறு அடையாளம் காணப்பட்டு அம்பலப் படுத்தப்படுகின்றது. அது பற்றிய தேடல், விடைக்கான கேள்வி பார்வையாளர் களிடம் முன் வைக்கப்படுகிறது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே சமூகப் பிரதிநிதிகளை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படுகின்றன. இந் நிகழ்ச்சிகளின் இடையே வரும் விளம்பரங்கள் கூட பல முன்னணி வர்த்தக ஸ்தாபனங்களால் தரப்படு கின்றன. எனவே அதன் சாதகத் தன்மையை எந்த அளவிலும் குறைத்து மதிப்பிட முடியாது.
இத்தகைய அறிவூட்டும், உணர்வு பூர்வமான கல்வி நிகழ்ச்சிகள் ஏன் தமிழ் மொழி மூலத் தொலைக்காட்சிகளில் தயாரிக்க முடியாது? என்பது எனது ஆதங்கம். தமிழர்களுக்கு பிரச்சனை களைக் காட்டக் கூடாது. அவர்கள் களிப்புடன் இருந்தால் போதும் என்பதா ஊடகங்களின் நிலைப்பாடு?
இன்னும் தொடரும்)
25

Page 15
VZ7Goype GoragardVo
தள்ளுவண்டிக்காரன் முதல் தனிமை விரும்பியவன் வரை அனைவரின் உள்ளத்தையும் தடுமாற வைத்து விட்டது இந்த மழை.
இருந்த ஒரு உடுப்பும் மழையில் நனைய
மழையை சாபமிட்டுச் சென்றான்
தெருப்பிச்சைக்காரன்
வீதியோரங்களில் பழங்கள் விற்பவன் பொழப்பும் பரிதாபமாக போயிற்று
மழையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள கடைவாசலிலும் வாகனத்தின் உள்ளேயும் நிறைந்து வடிகின்றன மனிதத்தலைகள்
தலையின் ஈரம் சொட்டச் சொட்ட நிதானமாக நடந்து வந்தார்கள் இரு காதலர்கள்
தாவாரத்தின் வழியாக வந்து விழுகின்ற மழை நீரை ஏந்தி விளையாடுகிறார்கள் பள்ளிச் சிறார்கள்
26
குறிஞ்சி இளந்தென்றல்
குழந்தை மீது
தெறித்த சாரலைத் துடைத்து
முந்தானையினால்
முகத்தை மூடினாள் பெண்ணொருத்தி
சேறு பூசிய முகங்களோடு
வந்து போகின்றன வாகனங்கள்
தன் மேல் விழுகின்ற
மழைநீரைச் சேகரிப்பதிலேயே
குறியாய் இருக்கின்றன சாலையோரம் போடப்பட்டிருந்த சாக்கடைப் பள்ளங்கள்
மண்ணைக் குழைத்து தனக்கு நிறத்தைச் சேர்த்துக் கொண்டது மழை நீர்
மழை விட்டபின் வீசுகின்ற ஈரக்காற்றை சுவாசித்தபடி அவரவர் பாதையில் அவரவர் பயணங்கள்.
O
ஞானம் - செப்டெம்பர் 2004

மணிவிழாக் கானும் இலக்கியச் செயற்பாட்டாளர், நாடகக் கலைஞர், பத்தி எழுத்தாளர்
அந்தனி ஜீவா
தி. ஞானசேகரன்
மலையகக் கலை இலக்கிய வளர்ச்சிக்காக மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்து வருபவர் அந்தனி ஜீவா. அவரை நான் சந்தித்த வேளைகளிலெல்லாம் மலையகக் கலை இலக்கியமே அவரது பேச்சாகவும் மூச்சாகவும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். மலையகக் கலை இலக்கியத்திலே அவர் கொண்டுள்ள ஆத்மார்த்தமான பற்று அவர் மேல் எனக்குப் பெரும் அபிமானத்தை ஏற்படுத்தியது. அவரை நான் முதல் முதலில் சந்தித்து உரையாடிய நிகழ்வு என்மனத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. கண்டியில் நடந்த இலக்கியக் கூட்டம் ஒன்றுக்கு நான் சென்றிருந்தபொழுது அவர் என்னைத் தேடிவந்து என்னருகே அமர்ந்து கொண்டார். "உங்களுடைய ‘குருதிமலை’ நாவலை தமிழக அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ. வகுப்புக்குப் பாடநூலாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த நாவலின் பிரதிகள் தேவைப்படுகின்றன. அவற்றைத் தேடி அனுப்பும்படி எனக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். உங்களிடம் பிரதிகள் இருந்தால் தாருங்கள்” என்று கேட்டார். அவர் பேசிய தொனியில் மலையக இலக்கியம் ஒன்றிற்கு தமிழகத்தில் கிடைக்கும் கெளரவத்தினால் அவர் அடைந்த பெரும் மகிழ்வும், அந்த நாவலில் முடிந்தவரை அதிக பிரதிகளைச் சேகரித்து அனுப்பிவைத்துத் தனது பங்களிப்பினைச் செலுத்தவேண்டும் என்ற ஆர்வமுமே மேலோங்கி யிருந்தன. அந்தச் சந்திப்பின் முன்னரும் நான் அவரைப் பல இலக்கியக் கூட்டங்களிலே பார்த்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சம்பிரதாயமாக இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே நாங்கள் பேசிக்கொண்டோம்.
அந்தனி ஜீவாவுக்கும் தமிழக கலை இலக்கிய வாதிகள் பலருக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்புகள் இருந்தன. பிரபல எழுத்தாளர் களுடனும், தமிழ் அறிஞர்களுடனும், ஓவியர்களுடனும் ஏனைய கலைஞா 'களுடனும் அவர் கடிதத் தொடர்புகளைப் பேணிவந்தார். மலையகத்திலிருந்தும் ஈழத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் வெளிவருகின்ற சிறந்த நூல்களை அவர்களுக்கு அனுப்பி அறிமுகம் செய்துவந்தார். தமிழகத்தில் இலக்கிய விழாக்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அங்கு சென்று விழாக்களிலே
கருானம் - செப்டெம்பர் 2004 27

Page 16
பங்கு பற்றித் தனது உறவினைப் பலப்படுத்தியும் வந்துள்ளார். அதே போன்று தமிழகத்திலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் இலங்கைக்கு வரும் வேளைகளில் அவர்களை வரவேற்று மலையகத்தின் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று இலக்கியக் கூட்டங்களில் பங்குகொள்ளச் செய்து ஏனைய எழுத்தாளர் களையும் கலைஞர்களையும் சந்திக்கவைத்து மகிழ் வது அவரது பணியாக இருந்தது. இத்தகைய தொடர்புகள் காரணமாகவே தமிழகத்திலிருந்து அவரிடம் ‘குருதிமலை’ நாவலின் பிரதிகளைச் சேகரித்து அனுப்பும்படி கேட்டிருந்தார்கள்.
26- 05- 1944இல் கொழும்பில் பிறந்த அந் தனி ஜீவா தனது இளமைக்காலத்தைக் கொழும்பிலே கழித்தவர். கொழும்பில் உள்ள பாடசாலைகளில் எஸ்.எஸ்.ஸி. வரை கல்விகற்றவர். ஆனாலும் குழந்தைப் பருவத்திலே தாயார் அவருக்குப் பாலூட்டியபோது பாடிய தாலாட்டுடன் மலையக நாட்டார் பாடல்களின் கவிதா வரிகளும் சேர்ந்திருந்தன. 960D6] பரம்பரை அலகுகளாக அவரது இரத்தத்திலே சேர்ந்து விட் டனவோ என்று நான் எண்ணுவதுண்டு.
சதுரகிரி மலையேறிச் சாதிலிங்கக் கட்டை வெட்டி ஈழத்துக் கப்பலிலே ஏற்றிவரும் தேக்கு மரம்
எழத்தச்சன் ஆசாரி இழைப்பு இழைக்கும் கம்மாளர்
28
சேர்த்துப் பணிப்படுத்திச் சித்திரத்தால் (ஒப்பமிட்டு.
தனது தாயார் L {j մlա நினைவுகளிலே திளைத்த அந்தனி ஜீவா கட்டுரை ஒன்றிலே மேலே உள்ள பாடல்வரிகளைப் பதிவு செய்துள்ளார்.
ஏடு தூக்கிப் பள்ளிக்குச் செல்லும் காலத்திலேயே அந்தனி ஜீவாவுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. கொழும்பு நூலகத்திலே சஞ்சிகைகள், நூல்கள் பலவற்றைத் தேடி வாசிக்கத் தொடங்கினார். அந்தக்காலத்தில் தமிழகத்திலிருந்து வந்த கரும்பு 'கண்ணன்', 'கல்கண்டு', 'அணில்’ போன்ற சஞ்சிகைகளை ஆர்வமுடன் வாசித்தார் . சிறுவயதிலேயே எழுதவேண்டும் என்ற ஆர்வமும் துளிர்த்தது. இவரது பதினைந்தாவது வயதில் சுதந்திரன் வார இதழின் மாணவர் பக்கத்தில் இவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து வீரகேசரி, தினகரன், ஈழநாடு போன்ற பத் திரிகைகளின் மாணவர் பக்கங்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன. ஜெயகாந்தனின் கதைகள் இவரை ஆகர்ஷித்தன. “தேவன் வருவாரா” என்ற அவரது சிறுகதைத் தொகுதியைத் திரும்பத் திரும்ப வாசித்தார். அவரது எழுத்துக்களே ஜீவாவுக்குப் புதுமைப் பித் தனையும் பாரதியையும் அறிமுகப்படுத்தின.
அந் தனி ஜீவாவின் கலை இலக் கிய முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக, இருந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. அவரது தொடர்பால் அந் தனி ஜீவா முற்போக் குச் சிந்தனையுள்ளவராக முகிழ்ந்தார்.
ஞானம் - செப்டெம்பர் 2004

அத்தோடு இலக்கிய உலகின் ஒரு சகாப்தத்தின் பிரதிநிதிகளான படைப்பாளிகள், விமர்சகர்கள், கல்விமான்கள் பலரையும் அறிந்து கொண்டார்.
அறுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியப் பிரவேசம் செய்த அந்தனி ஜீவா ஆரம்ப காலத்தில் சில சிறு கதைகளையும் எழுதியுள்ளார். தமிழருவி, மாணவன், கலைமலர் ஆகிய பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார். மலடு(ஈழநாடு), விதி (சிந்தாமணி), புறுட் சலட் (சிரித்திரன்), தவறுகள் (அமுதம்) நினைவுகள் (தேசபக்தன்) ஆகியன அந்தனி ஜீவா எழுதிய சிறுகதைகளில் குறிப்பிடத் தக்கவையாகும்.
மா வனப் பருவத் திலேயே எழுத்துத் துறையில் மட்டுமல்லாது பேச்சுப் போட்டிகளிலும் இவர் பரிசுகள் பெற்றுள்ளார். சுவாமி ஞானப்பிரகாசர் பேச்சுப் போட்டியில்
முதற்பரிசும் சுதந்திரன் பேச்சுப் போட்டியில் பாராட்டுப் பரிசும் பெற்றார்.
சஞ்சிகை வெளியிடவேண்டும் என்ற ஆசை இவரைச் சிறு வயதிலேயே பற்றிக் கொண்டது. அதன்காரணமாகக் கரும்பு என்ற சஞ்சிகையை முதன் முதலில் தனது நணி பர் களுடன் வெளிக் கொணர்ந்தார். இதழ்கள் மட்டுமே அவரால் வெளிக் கொணர முடிந்தது. 1962இல் கலைத் தாசனி என் பவருடன் இணைந்து ‘தேசபக்தன்' என்ற பத்திரிகையை வெளியிட்டார். கலை, இலக்கியம், அரசியல் பகுதிகளைத் தாங்கிவந்த இந்தப்பத்திரிகை ஆறு
டிருரீனம் - செப்டெம்பர் 2004
சேர் நீது இரண்டு
இதழ்களிலேயே நின்றுவிட்டது. பின்னர் இடதுசாரி இயக்கம் ஒன்றிலே தொழிற் சங்க ஊழியனாகச் செயற்பட்டபோது, அங்கு வெளியிடப்
’ பட்ட ஜனசக்தி என்ற மாத இதழின்
ஆசிரியராகப் பணியாற்றினார். சிலகாலம் எஸ்.டி.சிவநாயகத்தின்கீழ் 'தினமணி, ‘சிந்தாமணிப் பத்திரிகை களிலே பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து கொழுந்து என்ற மலையக இலக்கியச் சஞ்சியைக் கொண்டு வந்தார். கொழுந்து மலையகக் கலை இலக்கியத்திற்குக் கணிசமான பங்களிப்பை நல்கியது. தோட்டப் பிரதேசக் கூட்டுச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட ‘குன்றின் குரல்’ என்ற காலாண் டிதழின் ஆசிரிய ராகவும், தேசிய கிறிஸ்தவ ஆணைக் குழுவினால் வெளியிடப் பட்ட "செங்கோல்’ என்ற பத்திரிகையின் இணையா சிரியராகவும் சிலகாலம் இவர் பணியாற்றியுள்ளார். 1978ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருப்பூரில் நடைபெற்ற தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியதும் "ஜெய காந்தனைக் கண்டேன்’ என்ற தொடரை ஞாயிறு தினகரனில் எழுதினார் . அதனி பின் னர் அவ்வப்போது தினகரனில் பத்தி எழுத்துக்களை எழுதி வருகிறார். யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் கொழும்பு நிருபராகவும் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகையியலில் டிப்ளோமா பட்டம் பெற்ற அந்தனிஜிவாவின் பத்தி எழுத்துக் கள் பல பயனுள் ள தகவல் களைத் தருபவையாக, அமைந்தன. நினைத்துப் பார்க்கிறேன்,
29

Page 17
'அறுசுவை, "படித்ததும் பார்த்ததும் கேட்டதும், சிலநேரங்களில் சில கலைஞர்கள் போன்ற இவரது பத்தி எழுத்துக்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவரது பதினெட்டாவது வயதிலேயே பாடசாலை வாழ்க்கை நீங்கிய பின்பு பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த "லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன்' என்ற தொழிற் சங்கத்திலே முழுநேர ஊழியனாகப் பணியாற்றத் தொடங் கினார். அப்பொழுது கலாநிதி என் .எம் . பெரேரா, தோழர் எஸ்.நடேசன், கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந் தலைவர் களின் தொடர்புகள் இவருக்கு ஏற்பட்டன. இதன் மூலம் இவர் இடதுசாரிச் சிந்தனைகளை ஆழமாகப் பெற்றுக் கொண்டார்.
மலையகத்தில் தொழிற்சங்க ஊழியனாக வாழ்ந்த காலத்தில் அவர் மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை, எதிர் நோக்கும் பிரச்சினைகளை விபரமாக அறிந்து கொண்டார். மலையக எழுத்துத்துறை முன்னோடிகளான சி.வி. வேலுப்பிள்ளை, கே.கணேஷ் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பமும் இவருக்குக் கிடைத்தது. சி. வி. வேலுப்பிள்ளை அவர்களை,
அவர் வாழ்ந்த காலத்திலேயே விழாவெடுத் துப் பெருமைப் படுத்தியவர் ஜீவா. மலையகத்
தொழிற்சங்கவாதியும் மலையக எழுத்துலக முன்னோடியுமான தேசபக்தன் நடேசையர் அவர்களது பணிகளை அறிமுகம் செய்வதிலும் இவர் கணிசமான பங்களிப்பினை நல்கியுள்ளார்.
30
80 களிலிருந்து மலையகத்தைத் தனது வாழ்விடமாக்கிக் கொண்ட அந்தனி ஜீவா, மலையகக் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பினை நிறுவி அதன் செயலாளாராக மலையகக் கலை இலக்கியத்திற்காக உழைக்கும் பணியினை மேற்கொண்டார். கடந்த இருபத்துநான்கு வருட காலமாக இந்த அமைப்பு இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலம் இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடுகள், இலக்கியப் பயிற்சி பட்டறைகள், நாடகப் பயிற்சிப் பட்டறைகள், தமிழில் தொலைக்காட்சிப் பயிற்சிப் பட்டறை, போன்றவற்றை நடத்தி வருகிறார். அத்தோடு ஈழத்து எழுத்தாளர்கள் கலைஞர்களை இனங்கண்டு இந்த அமைப்பின் மூலம் கெளரவித்தும் வருகிறர்ர். இதுவரை ஏறத்தாழ இருபத்தைந்து நுால் களை மலையகக் கலை இலக் கியப் பேரவை வெளி யிட்டுள்ளது. இந் நூல்களில் பெரும்பாலானவை மலையகப் பெரியார்கள், நாடகம், மலையக இலக்கியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவை. இவர் வெளியிட்ட சாரல் நாடனின் “தேசபக்தன் நடேசையர் என்ற நூல் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. ‘இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலையகம்" இவர் எழுதிய ஆங்கில நூலாகும். 1978இல் தமிழ் நாட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் இலங்கைப் பிரதிநிதியாக இவர் கலந்து கொண்டு ஆற்றிய உரை "ஈழத்தில் தமிழ் நாடகம்' என்ற பெயரில் நூலாக வெளிவந்தள்ளது. சென்னையில் 'எண்பதுகளில் இலக்கியம்’ என்ற
ஞானம் - செப்டெம்பர் 2004

தலைப்பில் நடந்த கருத்தரங்கிலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் , திருச்சி ஹரீபிர் கல லுரியிலும் LD 606u) uas Lif சம்பந்தமாக இவர் ஆற்றிய உரைகள் மலையகமும் இலக்கியமும்’ என்ற தலைப் பில் நுாலாக வெளி வந்துள்ளன. இந்நூல் 1996இல் அரச கரும மொழித் திணைக்களத்தின் பரிசினைப் பெற்றது. மலையக இளந்தலைமுறை எழுத்தாளர்களின் ஆற்றல் களை வெளியுலகம் அறிந்துகொள்ளும் வணி ணம் 'குறிஞ்சி மலர்கள் என்ற சிறுகதைத் தொகுதி, ‘குறிஞ்சிக் குயில்' என்ற கவிதைத் தொகுதி ஆகியவை சென்ற ஆண்டிலே இவரால் வெளியிடப் பட்டன. அந்தனி ஜீவா எழுதிய திருந்திய அசோகன்’ என்ற சிறுவர் நாவல் சமீபத்தில் இவரது மணிவிழா வெளியீடாக வெளியாகியுள்ளது.
மலையகக் கலை இலக்கியப் பேரவை அதன் பதினைந்தாவது ஆண்டு விழாவைக் கண்டியில் பெருவிழாவாகக் கொண்டாடியது. அப்போது தமிழக எழுத்தாளர்களான வலி லிக் கணிணன் , தாமரை மகேந்திரன், தமிழக சாகித்திய விருது பெற்ற பொன்னிலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மலையக எழுத் தாளர்கள் கலைஞர்கள் பலர் கெளரவிக்கப்பட்டனர். இந்தப் பதினைந்தாவது விழாவிலே தமது அமைப்பின் பதினைந்தாவது நூலாக ஒரு மலையக இலக்கிய நூலை வெளிக்கொணர வேண்டும் என்று கருதி, தமிழக சுபமங்களா நடத்திய குறுநாவல் போட்டியிலே பரிசு பெற்ற எனது ‘கவ்வாத்து' என்ற நூலை
டிருவம் - செப்டெம்பர் 2004
வெளிக்கொணர்ந்தார். அந்நூலை அந்த விழாவிலே பொன்னீலனைக் கொண்டு விமர்சித்து, வெளியிட வைத்து என்னைப் பெருமைப் படுத்தினார். அத்தோடு பொன் னிலனை கண்டியில் உள்ள எனது இல் லத்திற்கு அழைத்து வந்து இரவுப் போசனம் அளித்து மகிழவும் வகை செய்தார். எனது ‘லயத்துச் சிறைகள்’ என்ற நாவலும் இந்த அமைப்பினாலேயே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தனி ஜீவா சிறந்த ஒரு
நாடகக் கலைஞர். 70களிலேயே அவரது நாடக முயற்சிகள் தொடங்கிவிட்டன. இவரது
முதலாவது நாடகமான 'முள்ளில் ரோஜா 23.8.70 இல் லும்பினித் தியேட்டரில் அரங்கேற்றப்பட்டது. நாடகம் எழுத வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அறிஞர் அ.ந. கநீ தசாமி அவர் களாலேயே எற்பட்டது. சிங்கள நாடகமேடையில் புகழ்பூத்த கலைஞரான தயானந்த குணவர் த் தன, (நரி பேனா’ நாடகத்தைத் தயாரித்து வழங்கியவர்) அந்தனி ஜீவாவின் நாடக முயற்சி களுக்கு உந்து சக்தியாக விளங்கினார். அவர் சிங்கள நாடகக் கலைஞர்களுக்கு அளித்த பயிற்சி களிலே பங்கு பற்றி, நாடகம் பற்றிய பல நுட்பங்களைக் கற்றுணர்ந்தார். அத்தோடு ஹென்றி ஜெயசேனா, சுஹைர் ஹமீட் போன்றோரது தொடர்புகளும் இவரது நாடகத்துறை மேம்பாட்டுக்குத் துணை நின்றன. தனக்கு அரங்கியல் அரிச்சுவடியைப் போதித்த ஆசான் தயானந்த குணவர்த்தனவுக்குத் 'அக் கினிப் பூக்கள்’ நாடக நூலினைச்
3.

Page 18
சமர்ப்பணம் செய்துள்ளார் அந்தனி ஜீவா. இதுவரை பதின் நான்கு நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றிய அந்தனி ஜீவாவின் சாதனை தமிழ் நாடகத்துறையில்
கணிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
இவரது ‘வீணை அழுதது' என்ற நாடகம் அரசியல் வாதிகளின் திருகுதாளங்களைத் தோலுரித்துக் காட்டியதால் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது. 1978இல் இவரது 'அலைகள் என்ற நாடகம் தேசிய நாடக விழாவில் இரண்டு விருது களைப் பெற்றுக் கொணர் டது. ‘ஆராரோ ஆரிவரோ என்ற நாடகம் 1994இல் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் விருதினைச் சுவீகரித்துக் கொண் டது. அந் தனி ஜீவா கொழும்பிலும் மலையகத்திலும் பல வீதி நாடகங்களை அரங்கேற்றி அத்துறையின் முன்னோடியாகவும் திகழ்கிறார். 1980இல் இதற்கான பயிற்சியையும் அறிவையும் தமிழ் நாட்டின் வீதி நாடக முன்னோடியான திரு. பாதல் சர்க்காரின் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிச்சம்’, ‘சாத்தான் வேதம் ஒதுகிறது ஆகிய இவரது வீதி நாடகங்கள் பல தடவைகள் அரங் கேற்றப்பட்டவை.
சிங்கள மொழியை வெகு சரளமாப் பேச வல்லவரான அந்தனி ஜீவா சிங்கள மொழி ஊடகங்களிலும் தோன்றிப் பலதடவைகள் தனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். பல சிங்களக் கலை இலக்கிய வாதிகள் இவருக்கு நண்பர்களாகவும் இருக்கின்றனர்.
32
மலையக இலக்கிய நூல்க ளையே வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கிவரும் அந் தனி ஜீவா தனது நாடகப் பிரதிகள் எதனையும் வெளிக் கொணராதது எனக் குப் பெரும் குறையாகப்பட்டது. எனவே எனது "ஞானம் பதிப்பகத்தின் மூலம் அவரது 'அக்கினிப் பூக்கள்’ என்ற நாடகப் பிரதியினை நூலாக்கி வெளிக் கொணர்ந்தேன். 1973இல் மேடை ஏறிய இந்த நாடகம் தொழிலாள வர் க் கத்தின் பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்த நாடகமாகும். இநீத நாடகம் பணி னிரணி டு தடவைகள் மேடையேறிய சிறப்பினை யுடையது. இந்த நாடகநூல் 1999ஆம் ஆணி டிற்கான சிறந்த நாடக நூலாகத் தெரிவு செய்யப்பட்டு இலங்கை சாகித்திய விருதினைப் பெற்றது. அத்துடன் ஞானம் பதிப்பகத்துக்கு, சாகித்திய விரு தினைப் பெற்ற ஒரு நூலை வெளி யிட்ட பெருமையையும் தேடித்தந்தது.
ஞானம் சஞ்சிகையின் ஆரம்ப காலம் தொட்டே அந்தனி ஜீவா ஞானம் சஞ்சிகையுடன் நெருங்கிய
ஞானம் - செப்டெம்பர் 2004
 

தொடர்பினைப் பேணிவந்தார் . ஆரம்பத்தில் ‘புதிய நூலகம்' என்ற பகுதியில், புதிதாக வெளிவந்த நூல்கள் பலவற்றை அறிமுகப் படுத்திவந்தார். இதன் மூலம் மலையக இலக்கியம் சார்ந்த பல நூல்களும் ஏனைய முக்கிய நூல்கள் பலவும் உடனுக்குடன் இவரால் அறிமுகப் படுத்தப்பட்டன. ஞானம் சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டிலே அந்தனி ஜீவா அதன் துணை ஆசிரியராகப் பதவியேற்றார். இந்தப் பதவியை வகிப்பதன் மூலம் அவர் மலையக இலக்கியத்திற்குச் செய்து வரும் பணியினை விரிவுபடுத்துவதற்கான ஒரு களமாக ஞானம் சஞ்சிகை அமையும் என எதிர்பார்த்து அந்தப் பதவியை அவருக்கு வழங்கினேன். மலையக எழுத்தாளர்கள் பலருடனும் தொடர்பு கொண்டு அவர்களது இலக் கியப் படைப் புக் களை ஞானத்தில் வெளியிடுவதற்கு அவருக்கு வழிசமைத் துக் கொடுத்தேன். அவர் தந்த அத்தனை படைப்புக் களையும் ஒன்றையும் நிராகரிக்காமல் ஞானத்தில் வெளியிட்டேன். அவர் துணை ஆசிரியராக இருந்த காலப்பகுதியில் 'திரும் பிப் பார்க்கிறேன்" என்ற தொடரையும் பின்னர் ‘நேற்றைய கலைஞர்கள்’ என்ற தொடரையும் எழுதிவந்தார். இந்தத் தொடர்கள் ஜீவாவின் கடந்தகால கலை இலக்கியப் பணிகளையும் அவருக்கு இருந்த கலைஞர் களின் தொடர் புகளையும் நாடகம் சம்பந்தமான அரிய தகவல்களையும் தருவனவாக அமைந்தன. கொழுந்து என்ற அவரது சஞ்சிகையை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் அவர்
தாகமை - செப்டெம்பர் 2004
ஈடுபட்டபொழுது அவருக்கு ஞானம் சஞ்சிகையில் பணியாற்ற முடியாத ஒரு நிலை இருந்த காரணத்தினால் துணை ஆசிரியர் பதவியிலிருந்து விலக வேணி டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
அந் தனி ஜீவா 2003இல ஐரோப்பிய நாடுகளுக்கு ஓர் இலக்கியப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஊடகங்களில் நேர் முகங்கள் அளித்தும் பல இலக்கியக் கூட்டங்களில் பங்குபற்றியும் தனது இலக்கியச் செயற்பாடுகளை விரிவு படுத்தி வந்துள்ளார். பாரிஸ் டி.டி.என். ‘தமிழ் ஒளி தொலைக் காட்சி, லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் அளித்த நேர்முகங்கள் முக்கியம் வாய்ந்தவை யாகக் கருதப்பட்டன.
éE5 6) T gF IT U aF LD u u 6hf6nI 85 T J அமைச்சின் ‘மலையக கலாசார மேம்பாட்டுக் குழு உறுப்பினராக 90களின் நடுப் பகுதியில் பணியாற்றியவர் அந்தனி ஜீவா. இவரது பணிகளைப் பாராட்டி இந்து கலாசார தமிழ் அலுவல் கள் இராஜாங்க அமைச்சு ‘தமிழ் மணி என்ற பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது. இலக் கியச் சஞ்சிகைகளான "ப்ரியநிலா மார்ச் 1995 இதழிலும், 'மல்லிகை பெப்ரவரி 2004 இதழிலும் இவரது அட்டைப் படத்தைப் பிரசுரித்து கட்டுரைகள் வெளியிட்டுக் கெளரவித்தன.
மலையகக் கலை இலக்கியம் பற்றிப் பேசும்போது ஆவேசமாகவும், சில வேளைகளில் உணர்ச்சி வசப்பட்டும் தனது கருத்துக்களைத் தெரிவிப்பவர் அந் தனி ஜீவா. அவரைப் போன்று மலையகக் கலை
y
33

Page 19
இலக்கியம் பற்றி உணர்ச்சிகரமாகக்
கருத்துக் களைத் தெரிவிக்கும் வேறொரு மலையகக் கலை
இலக்கியவாதியை நான் சந்திக்கவே
இல்லை. அவர் இவ்வாறு உணர்ச்சி வசப் பட்ட ஒரு நிகழ் வினைப் பொருத்தப் பாடு கருதி இங்கு
குறிப்பிடுகிறேன் . தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் ‘மானிடத்தின்
தமிழ்க் கூடல் 2002 என்ற விழாவை மிகப் பிரமாண்டமான அளவில் நடத்தியது. தமிழகத்திலிருந்து கவிஞர் இன்குலாப், திரைப்பட இயக்குனர் புகழேந்தி, ஒவியர் மருது, எழுத்தாளர் செயப் பிரகாசம் ஆகியோர் இவ்விழாவிற்கு வந்திருந்தனர். இவர் களோடு அந் தனி ஜீவா ஏற்கனவே நெருங்கிய உறவைப் பேணிவந்தார். இவ் விழாவில் இலங்கையின் சகல பகுதி களிலிருந்தும் மூவின மக்களையும் சேர்ந்த மூவாயிரம் கலைஞர்கள் பங்குபற்றினார்கள். விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நாவல் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. அந்த அரங்கிற்குத் தலைமைதாங்கும் அரிய சந்தர்ப்பத்தை அமைப் பாளர் களர் யிருந்தார்கள். அந்த ஆய்வரங்கில் கட்டுரை வாசிப்பவர்களாக, செங்கை ஆழியான், கலாநிதி செ.யோகராசா ஆகியோரும், குறிப்புரை வழங்கு பவராக முதுபெரும் எழுத்தாளர் நந்தி அவர்களும் வீற்றிருந்தனர். அந்த ஆய்வு அரங்கின் முடிவில் தலைவர் என்ற முறையில் எனக் கிருந்த உரிமையைப் பயன்படுத்தி சபையோரும் கருத்துக் கூறுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை
34
எனக் கு வழங் கி.
ஏற்படுத்தினேன். மற்றைய ஆய்வு அரங்குகளில் சபையோர் கருத்துக் கான நேரம் ஒதுக்கப் படவில்லை. அந்தச் சந்தர்ப்பத்திலே கருத்துக் கூறும் படி அந் தனி ஜீவாவை மேடைக்கு வரும்படி அழைத்தேன். அப் பொழுது மேடையிலேறிய அந்தனி ஜீவா, "மலையக மக்களின் வாழ்வியலை இலக்கியமாக்கித் தந்த இருவர் இந்த மேடையிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு மலையகம் என்றுமே கடமைப் பட்டுள்ளது. மலையக மக்கள் இந்த நாட் டின் மேம்பாட்டுக் காக உழைப்பவர்கள். ஆனால் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொட்டும் மழையிலும் அட்டைக் கடியிலும் இரத்தஞ் சிந்தி உழைத்த போதிலும் வறுமைப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள். பல கஷடங்களை அனுபவிக்கிறார்கள், பல பிரச் சினைகளுக்கு முகங் கொடுக் கிறார்கள். அவர்கள் பாவப்பட்ட மக்கள். அவர்களின் பிரதிநிதியாக நான் இங்கு அழைக் கப்பட்டி ருக்கிறேன்”. இவ்வாறு மலையக மக்களின் கஷ்டங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது அவரது தொண்டை கரகரத்தது. வார்த்தைகள் தடுமாறின. நாத் தழதழத்தது. கண்களில் நீர்முட்டியது. அவரது வார்த்தைகள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி வெளிவந்தன. அந்தப் பெரிய சபையிலே அவர் குழந்தைபோல் விம்மினார். சபை திடீரென மெளனமாகியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த என் உடல் புல்லரித்தது. அங்கிருந்த பலருக்கும் அப்படியான அநுபவம் ஏற்பட்
ஞானம் - செப்டெம்பர் 2004

டிருக்கலாம். அந்தனி ஜீவா மலையக மக்களின் மீதும் அவர்களது கலை இலக்கியத்தின் மீதும் வைத்துள்ள பற்று ஆத்மார்த்தமானது, அப்பழுக் கற்றது, புனிதமானது.
அந்தனி ஜீவா ஓர் இலக்கியப் போராளி. அவரிடம் சில குறைபாடுகள் இருக் கலாம் . ஆனாலும் அந்தக் குறைபாடு களையும் மேவி, அவரது பன்முகச் செயற்பாடுகள் அவரைத் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய கலை இலக்கியப் பிரமுகராக உயர்த்தி நிமிர்ந்துநிற்கச் செய்துள்ளன.
ஈழத்தின் இலக்கிய முன் னெடுப் பிலே மலையக இலக் கியத்திற்கு ஒரு கணிசமான பங்குண்டு என்பதைப் பரந்துபட்ட ரீதியில் - நாட்டின் உள்ளேயும் நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் எடுத்துச் சென்றவர் களிலி முன்னணியில் இருப்பவர் அந்தனி ஜீவா. அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து, மணிவிழாவைத் தொடர்ந்து மேலும் பல விழாக்கள் கண்டு, தனது பணியைத் தொடரவேண்டும் என ஞானம் உளமார வாழ்த்துகிறது.
ஒர் கோலமோ !
கல்வயல் வே. குமாரசாமி
ஒட்டைக் குடைக்குள் ஒழுகும் நீர் ஒன்பது பேர். (அக்குடைக்குள்) வீட்டுக்குத் தூரம் வெகுதூரம் மாரியோ! வாட்டி எடுக்கும் வர வரக் கொட்டு மழை மூட்டை நனைத்து; முதுகுமுழு தும் நனைந்து போட்டிருந்த தெல்லாம் நனைந்த புதி. ராய் ஒருத்தி வேட்டை நாயாகி விழிகள்; பதை பதைத்தாள் ஆட்டை, யோ; நாய்கள் அருகுவைத் தா தரிக்கும்! வெட்டிற்று மின்னல் விறுவிறுப்போடு;
முகில் முட்டிற்று! காற்று முறுகித் திருகிற்று; சடடுச் சட்டென்று சடசடென்று
ருவம் - செப்டெம்பர் 2004
ഗ്ഗ്ല്ല ,"ށާލާއާ ഗ്ലൂ 多 هي
%
އަހަ
ޙައި
بهم."2 必シ
ހަހި
ހަ
ރަހަ
ހައިރަޗި
ހަހަ
.
محمم
%
ހަހިމަ
مسير
ダイ
参
ހިހަ
交
参
ހިޑާ
ހަހި
ރަށި ކަ
多ミ
ހަހިކަ


Page 20
செ. கணேசலிங்கன்
— dRoо நினைவுகள்
அ. முகம்மது சமீம்
1957ம் ஆண்டு சர்வகலாசாலை படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு சாஹிராவில் மே மாதம் ஆசிரியராகக் கடமையேற்றேன். அப்போது என்னோடு சர்வகலாசாலையில் கல்வி பயின்ற சிவத்தம்பியும் அங்கே எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பே ஆசிரியராகக் கடமையேற்றிருந்தார். என்னோடு கல்வி பயின்ற இன்னொரு சக மாணவரான கைலாசபதி, அதே ஆண்டில் தினகரனில் பதவியேற்றார். நாங்கள் மூவரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவர்களாகச் சேர்ந்து, பிறகு தலைமைக்குழு அங்கத்தவர்களாக சங்கத்தை வளர்த்தோம். அப்பொழுது தலைமைக்குழுவின் இன்னொரு அங்கத்தவராக இருந்த செ. கணேசலிங்கத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. நானும் கணேசலிங்கமும் மிகவும் அந்நியோந்நியமாகப் பழகினோம். எல்லோருடனும் சகஜமாகப் பழகுவார். முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட அவர், சோஷலிச யதார்த்தவாத அடிப்படையில் சிறந்த சிறுகதைகளைப் படைத்துக் கொண்டிருந்தார்.
1958ம் ஆண்டளவில் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டு சிறுகதையும், நாவலாசிரியருமான, அகிலன் இலங்கை வந்தார். அவருடைய 'பாவை விளக்கு தமிழ் நாட்டு இலக்கிய உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்பொழுது சோழர் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசனாக அண்டை நாடுகளைக் கைப்பற்றி, சோழர் சாம்ராஜ்ஜியத்திற்குப் புகழைத் தேடிக் கொடுத்த ராஜேந்திர சோழனின் வரலாற்றை மையமாக வைத்து, வேங்கையின் மைந்தன்' என்ற வரலாற்று நாவலை எழுதிக் கொண்டிருந்தார். ராஜேந்திரன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றிய பிறகு ருகுணு ரட்ட' என்ற தென்னிலங்கையிலும் படையெடுத்தான். அவன் படையெடுத்த ருகுணு ரட்ட' என்ற பிரதேசத்தையும், சோழர்களின் இராஜதானியான பொலன்னறுவையையும் பார்க்க வேண்டுமென்று அகிலன் ஆசைப்பட்டார். அத்தோடு கதிர்காமத்தையும் தரிசிக்க விரும்புவதாகவும் கூறினார். இவ்விடங்களுக்குக் கூட்டிக் கொண்டு செல்வதற்கு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக கணேசலிங்கன் முன் வந்தார். அவருக்குத் துணையாக நானும் சென்றேன். நாங்கள், தென் னிலங்கையின் காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்ட என்ற ஊர்களைப் பார்வையிட்டு
36 ஞானம் - செப்டெம்பர் 2004
 

அன்றிரவு, கதிர்காமத்தில் தங்கினோம். காலியிலும், மாத்தறையிலும், ஒல்லாந் தரினால் கட்டப்பட்ட கோட்டைக் கொத்தளங்களைப் பார்வையிட்டு வியப்படைந்தார். அக்கோட்டைகளின் வரலாற்றையும், ஒல்லாந்தரின் ஆட்சி யைப் பற்றியும், அவருக்கு எடுத்துரைத் தேன். கதிர்காமத்தில் நாம் தங்கியிருந்த போது, வேங்கையின் மைந்தன்' என்ற தொடர் நாவலின் அடுத்த அத்தி யாயத்தை எழுதிக் கொண்டிருந்தார். அங்கிருந்து, எனது சொந்த ஊரான பதுளைக்கு அவரை அழைத்துச் சென்றோம். போகும் வழியில் இராவணன் சீதையைச் சிறைவைத்த இடமான ராவனெல்ல" என்ற பெரும் குகையையும் அவருக்குக் காட்டினோம். பதுளையில் துட்ட காமினியினால் கட்டப்பட்ட ‘முத்தியங்கன’ புகழ்பெற்ற விகாரையையும் பார்வை யிட்டார். அங்கிருந்து நுவரெலியா வினுாடாக கண்டிக்குச் சென்றோம். நுவரெலியாவில் 'சீதை நீராடிய இடமான, சீதா எலியட் என்ற இடத்தையும் காண்பித்தோம். இங்குள்ள மண் கறுப்பு நிறமாக இருந்ததைக் கண்டு அகிலன் கேட்ட கேள்விக்கு அனுமார் இலங்கை யைத் தகனம் செய்தபோது பெரும்பாலும் இவ்விடத்தை எரித்த காரணத்தினால், இங்குள்ள மரங்களெல்லாம் எரிந்து சாம்பலாகிய காரணத்தினால் இம்மண் கறுப்பு நிறமாக மாறியது என்பது ஐதீகம் என்று கூறினேன். பிறகு கண்டியின் கண்டி மன்னர்களின் மாளிகையான தலதா மாளிகையையும் காண் பித்தோம். இந்தப் பயணத்தல் கணேசலிங்கனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
6? ag i 6 Louis 2004
என்று
தானம்
பள்ளிக்கூட மாணவனாயிருந்த காலத்தில் காண்டேகருடைய நாவல்களை ரசித்த ஒருவர்தான் கணேசலிங்கள். அவர் இந்தியா சென்று காண்டேகரரை நேரில் சந்தித்து, அளவளாவி வந்திருந்தார். அவருடைய பயணத்தில் நடந்த சம்பவங்களைப் பந்நியும் காண்டேகருடன் அவர் சம்பாஷித்த விஷயங்களைப் பற்றியும் எனக்கு விவரமாகக் கூறினார். இலக்கியத்தைப் பற்றிய ஒரே சிந்தனையைக் கொண் டிருந்த நாமிருவரும் அடிக்கடி சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். கல்வி இலாகாவில் உயர்பதவி பெற்று வெளி மாகாணங்களுக்கு மாற்றப் பட்டேன். அப்பொழுது எங்களின் சந்திப்பும் குறைந்தது. கொழும்பு வந்த பொழுதெல்லாம் அவருடைய வெள்ள வத்தையில் இருந்த புத்தகக் கடையில் சந்திப்போம். பிறகு அவரோடு தொலைபேசியில் கதைத்த பொழுது புறக்கோட்டையிலுள்ள டாம் வீதியில் 'குமரன் அச்சகம்’ என்ற ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண் டிருப்பதாக எனக்குக் கூறினார். சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நானும் வெளிநாடு சென்று விட்டேன்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய நான் திரும்பவும் எழுதத் தொடங்கினேன். 'ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச் சினைகள்' என்ற எனது தொடர் கட்டுரை தினகரனில் வெளிவந்து கொண்
டிருந்தது. இத்தொடர் கட்டுரையை நூல்
வடிவத்தில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில், நான் சென்னை சென்றிருந்த போது, திரும்பவும் கணேசலிங்கனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னுடைய ஆக்கங்களையெல்லாம் தான் பதிப்பிப்பதாகக் கூறினார்.
37

Page 21
'இஸ்லாமிய கலாச்சாரம்' , 'இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிர 5 Turil 56ir', 'Problems of Minority Community' 6T6öTp 6T GOT:ğl b/T6ü6606T ஒன்றன் பின் ஒன்றாகப் பதிப்பித்தார். கடைசியாக எனது 'ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்’ என்ற கட்டுரைத் தொகுதியை நான்கு பாகங் களாக வெளிக்கொணர்ந்தார். இதற்கு நான் அவருக்கு என்றைக்கும் கடமைப் பட்டிருக்கிறேன். சமீபத்தில் இலங்கையில் வெளியான எனது படைப்பாளிகளும் ஆய்வாளர்களும்' என்ற நூலை மறு மதிப்புச் செய்தார். இந்த நூலின் 700 பிரதிகளைத் தமிழ் நாட்டு, நூல் நிலையத்தார், வாங்கு வதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார். கணேச லிங்கனுடன் இப்பொழுதும் நான் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறேன்.
செ. கணேசலிங்கன் 9 (5 முற்போக்கு இலக்கியவாதி. பல சிறு கதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். அன்று முற்போக்கு எழுத் தாளர்கள், ‘தேசிய இலக்கியம், மண்வாசனை', 'சோஷலிச யதார்த்த வாதம், மக்கள் இலக்கியம்' என்ற பல கொள்கைகளின் அடிப்படையில் இலக் கியங்களைப் படைத்துக் கொண் டிருந்தனர். அதில் முக்கியமானவர்களில் ஒருவர்தான் கணேசலிங்கன். கணேச லிங்கன் இலங்கைச் சமுதாயத்தின் முக்கியமாக யாழ்ப்பாணச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் பாமர மக்களின் அபிலாஷைகளையும் ஆசாபாசங் களையும், அவர்களின் ஏக்கங்களையும் தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல் களிலும் கொண்டு வந்தார். சிறு
கதைகளும் நாவல்களும் மக்களின்
வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும்
38
என்பது அவரது அசையாத நம்பிக்கை. கணேசலிங்கன் கூறுவதைப் பார்ப்போம். “சிறுகதை என்பது ஒரு குறிக்கோளை விரிக்கும் கதை. எவ்வாறு சிறுகதை என்ற கலை வடிவத்துக்கு இலக்கணம் கூறினாலும், மற்றைய கலை வடிவங்கள் போலவே அதன் அமைப்பு மட்டுமல்ல அக்கதை எழுப்பும் சமுதாய உணர்வே முதன்மையானது.
எக்கதையும் சமகால வரலாற்றின் ஒரு துணுக்குத் துண்டாகவே இருக்க முடியும். அவ்வேளை தனிப் பட்ட தனிமனிதரின் பிரச்சினையைத் தொடாது பரவலான சமூகத்தைப் பிரதிபலிக்கத்தக்கதான மாதிரிக் கதை மாந்தரை, பாத்திரங்களைத் தேர்ந்து சிறுகதைக்கலை வடிவத்தில் ஆக்குவதே சிறந்த கலைப் படைப்பாகும். கலையின் சமூகப் பணியும் அதுவேயாகும்.”
கணேசலிங்கனின் இந்தக் கருத்துக்கள் அவருடைய சிறுகதைகளில் விரவிக் கிடப்பதைக் காணலாம். அவரு டைய தமிழ் நாவல்களைப் பொறுத்த வரையில் இதே கருத்துக்களைத்தான் கொண்டிருந்தார். நாவல் சமுதாயத்தைப் பிரதிபலிக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சி, அச்சமுதாயத்தின் பிரச் சினைகள், ஏற்றத்தாழ்வுகள், அடக்கி யாளும் வர்க்கத்தின் ஏதேச்சாரத்தை எதிர்த்துப் போராடும் தாழ்த்தப்பட்டோரின் போராட்டம், இனங்களைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள் அடங்கியதுதான் சமூக நாவல் என்பது முற்போக்காளர்களின் தத்துவம். மார்க்சியக் கருத்துக்களில் ஊறிப் போயிருந்த கணேசலிங்கன் தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும்
ஞானம் - செப்டெம்பர் 2004

இக்கருத்துக்களை தன்னுடைய பாத்
திரங்களின் மூலமும் சம்பவங்களின் மூலமும் எடுத்தாள்கிறார்.
கார்ல் மாக்சின் கருத்துக்களைப் பற்றிக் கூறும் போது கணேசலிங்கன்.
“மார்க்சில் கண்ட இயங்கியல் என்பது இயற்கைச் சமூகம். சிந்தனைகளின் தொடர்ந்த இயக்கத் தையும் அவற்றிடை ஏற்படும் முரண் பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. சமூக மாற்றம் ஏற்படும் போது, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை மறுப்ப வர்கள் மார்க்சின் இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை மறுப்பவர் களாவர். என்கிறார். மேலும் அவர்,
“தொடர்ந்த வர்க்கப் போராட் டத்தின் மூலமே இன்றைய கருத் தியல்கள் அகற்றப்பட்டு விஞ்ஞான பூர்வமான கோட் பாடு களை மனித இனம் நிலை நாட்டிக் கொள்ளமுடியும். பாட்டாளிகள் அரசியல் ஆதிக்கத் தைக் கைப்பற்றிய பின்னரும் மக்கள் சிந்தனையைக் கைப்பற்றும் காலம் மிக நீண்டதாவும் இருக்கலாம்.” என்கிறார்.
புத்தகக் களஞ்சியம் (நூல் மதிப்புரை) புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை'
இவருடைய இக்கருத்துக்கள் இவரின் நாவல்களில் இழையோடி யிருப்பதை நாம் காணலாம்.
சமுதாயத்தில் வர்க்க வேறு பாடுகளும், அடக்கியாளும் வர்க்கம் ஒரு பக்கமும், அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அல்லலுறும் மக்கள் மறுபக்கத்திலும் இருக்கும்வரை கணேசலிங்கன் போன் றோரின் இலக்கியப் படைப்புக்கள் காலத்தால் அழியாதது. காலத்தின் கோலத்தால் அழியாது என்றென்றைக்கும் நிலைத்து, மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் விடி வெள்ளியாகத் திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மக்களைப் பற்றி எந்நேரமும் சிந்தித்து மக்களின் நன்மைக்காகவும், அவர்களின் நல்வாழ்வுக்காகவும் தனது காலத்தைக் கடத்தி எழுத்துக்களில் வடித்த கணேசலிங்கன் மக்களின் நினைவில் என்றென்றைக்கும் நிலைத் திருப்பார்.
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள்
வைக்கப்படும்.
岁岁
அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே
மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். 'மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறு குறிப்பு
ՎւOng, ܥܬܐ܃ 7
محددة
ஒரு பிரதி
புதிய நூலகத்தில் இடம் பெறும்.
20

Page 22
நிந்து கொள்ளாதநீ
தே. சங்கீதா
நிரம்பல்களற்றும் தேவைகளின்றிக் கிடக்கிறது
OG Scr.
என்னை நிறைவாக்குவாயென நினைத்தேன், நினைவுகளைத் தந்து அதில் நிறைவாகச் சொல்லிச் சென்றாய் நீ,
அந்த வாகைமரத்தின் கீழ் உதிர்ந்திருக்கும் பூக்களுக்கிடையில் தேடுகிறேன், உன்னுடைய மிச்சமும் என்னுடைய இதயமும் எங்காவது கிடக்கிறதாவென்று,
புரிந்து கொள்ளுதல்பற்றி விரித்து விரித்துச் சொல்லியும் புரிந்து கொள்ளவில்லை நீ புரிந்து கொள்ளுதலையும்
என்னையும்.
எங்கிருந்தாலும் நன்றாயிரு வாழ்த்தமாட்டேன் நான் எப்போதாவது உணர்வாய் என்னுடைய இந்தத் துடிப்பை நீயும்.
40
 

புாைகாத இNக்கியம் : அறிவோம், கற்போம், படைப்போம். செங்கை ஆழியான் க. குணராசா 2. 1. படைப்பவன் - வாசகன் (2)
இலக்கியம் வாசிக்கப்பட வேண்டும். எனவே எந்த ஒரு படைப்புக்கும் வாசகர்கள் தேவை. எழுத்தாளன் தனது படைப்பினை வாசகர்கள் படிக்கவேண்டும், தன் படைப்பிலிருந்து தனது படைப்பின் நோக்கத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் என அவாவுகிறான். படைப்பவன் - வாசகன் என்ற இணைப்பில் நான்கு வகை யானவர்களை இனங்காணலாம்.
1. பரந்த வாசகர்களைக் கொண்ட படைப்புக்கள் o புனைகதைகளை வாசிக்க வேண்டும் என்ற அவாவினை அல்லது ஆர்வத்தினை தமிழ் வாசகர்களிடையே உருவாக்கிய பெருமை கல்கி என்ற படைப்பாளிக்கே உரியது. கல்கியின் எழுத்துக்களைப் படிக்காமல் இன்றைய எந்த ஒரு எழுத்தாளனும் உருவாகியிருக்க முடியாது. அவ்வாறு கூறுபவர்கள் எவராவது இருக்கில் அவர் இலக்கியத்தின் அகரத்தினைப் புரியாதவர் என்பேன். கல்கியின் பரந்த வாசகப்பரப்பினை மனங்கொள்ள முடியாத மணிக்கொடிக் கூட்டத்தினர் தமது குறுகிய வாசகர் பரப்பினை மனதில் கொண்டு கல்கியை ஒதுக்கப் பார்த்தனர். ஆனால் கல்கியின் வாசகர்கள் கற்றவர்களும் கல்லாதவர்களுமெனப் பல்திறப்பட்டவர்களாக விளங்கினர். கல்கியின் அடியாக அகிலன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன்,ஜெகசிற்பியன், விக்கிரமன்,ஜெயகாந்தன், சுஜாதா முதலானோர் பரந்த வாசகர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். இலங்கையில் செங்கைஆழியானின் வாசகர் கூட்டம் விரிந்தது. பிரான்சிய எழுத்தாளரான அலெக்சாண்டர் டூமாஸ் என்பார் தனக்கென விரிந்த வாசகர் கூட்டத்தைக் கொண்டிருந்தார். இவர்களைப் படிக்காமல் புனைகதைத்துறையுள் காலடி வைக்கக் கூடாது.
2. பரந்த வாசகர்களைக் கொண்ட எழுத்துக்கள் : துப்பறியும் கதைகள், பேய்பிசாசுக் கதைகள், அதீத கற்பனைக் கதைகள் என்பனவும் பரந்த வாசகர்களைக் கொண்ட எழுத்துக்களாக விளங்கின. இலக்கியப் படைப்புக்கும் படைப்பு எழுத்துக்கும் இடையில் இலக்கியத் தரத்தில் வேறுபாடுண்டு. அதனைப் பின்பொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். 18ஆம் நூற்றாண்டில் ஆங்கில இலக்கியத்தில் ஹொதிக் நாவல்கள்' (Gothic Novels) அதாவது பேய் பிசாசு பற்றிய பயங்கரக் கதைகள் பெரும் வாசகர்களின் பெரும் நேரத்தை ஆக்கிரமித்திருந்தன.
ஞானம் - செப்டெம்பர் 2004 4.

Page 23
42
இங்கிலாந்தின் கைவிடப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், மாளிகைகள் என்பவற்றில்
இவ்வாறான கதைகள் நிகழ்வதான கற்பனை எழுத்துக்கள் வாசகனைத் திகிலோடு படிக்க (இன்றும் அப்படியான எழுத்துக் களுக்குக் குறைவில்லை.) மத்தியூ TuSoft) 6T6öTU6 (560LL) The Monk என்ற நாவல் பல பதிப்புக்கள் கண்டு லட்சோப லட்சம் வாசகர்களைத்
வைத்தன.
தனதாக்கியிருந்ததாம். பேய் பிசாசுக் கதைகளுக்கு அப்பால் ஒருபடி மேற்சென்று மனித சடலங்களின் உறுப்புக்களை வெட்டிப் பிரித்துப் பொருத்தி உருவாக்கிய பயங்கரப் பூதங்கள் புரியும் அட்டகாசங்களும் கொலைகளும் வாசகனை அக் கதைகளின் பால் ஈர்த்திருந்திருக் கின்றன. மேரி சொல்லே என்பவ (560LLFrankenstein' 6T6irp இவ்வாறான பூதம் வாசித்தவர்களை உறங்கவிடவில்லையாம். பிறாம் ஸ்ரோக்கர் என்பவர் உருவாக்கிய ட்றக்குலா (Dracula) என்ற நாவலில் இரத்தம் குடிக்கும் பிசாசு வம்பயர் என்ற வெளவாலாக உருமாறி செய்த கலவரத்தால் இங்கிலாந்தே கலங்கிப் போயிருந்ததாம். இவ்வகை எழுத் துக்களைத் தொடர்ந்து ஏராளமான
எழுத்துக்கள் வெளி வந்து பரந்த
வாசகர்களைத் தம்பால் வைத் திருந்தன. தமிழ் நாட்டில் இவற்றின் தாக்கத்தால் ஆரணி குப்புசாமி, ரங்கராஜூ போன்றோர் ஆரம்ப காலத்திலும், சிரஞ்சீவி, மாயாவி போன்றோர் இடைக் காலத்திலும்,
3.
ராஜேந்திரகுமார், இலங்கை ஜி. நேசன் போன்றோர் இக்காலத்திலும் இவ்வகைக்கதை எழுத்துக்களால்
பரந்த வாசகர் களைக் கொண்டுள்ளனர். இவை மலின எழுத்துக்களாகவே ஆரம்பத்
திலிருந்து கருதப்பட்டு வருகின்றன.
குறுகிய எண்ணிக்கை LT6 வாசகர்களைக் கொண்ட படைப்புக்கள் : ஒரு எழுத்தாளனுக்கு அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் இருக்கில் அவனது நூல் தரமற்ற தென முடிவு கட்டி விமர்சித்து விடுகின்ற சக எழுத்தாளர் உள்ளனர். மிகச் சிலரால் வாசிக்கப்படுகின்ற நூலே தரமான இலக்கியப் படைப்பு என்பது அச்சிலரின் கருத்து. இவ்வகையில் மிகத் தரமான படைப்புகளும் அதேவேளை மிகமிகத் தரமற்ற எழுத்துக்களும் ஒரு சிலராலேயே வாசிக்கப்படுகின்றன. பொதுவாக தம் மகிழ்ச்சிக்காக (Pleasure) நூல்களை வாசிக்க
விரும்புவோர் தம்மைக் களைக்க
வைக்காத எழுத்துக்களை விரும்பு கின்றனர். தமக்குப் பரிச்சயமான மொழி நடையையும் தாம் நித்தம் சந்திக்கின்ற பாத்திரங்களையும், பகைப்புலத்தையும் கொண்ட எழுத்துக்களை நாடுகின்றனர். ஒரு எழுத்தாளனின் படைப்பு அல்லது எழுத்து அவனைத் தன்வசப்படுத்தி யிருந்தால் அவனது நூல்களைத் தேடி வாசிப்பவனாக அவன் மாறிவிடுகிறான். இறுக்கமான
ஞானம் - செப்டெம்பர் 2004

மொழி நடை, தேர்ந்தெடுத்த சொல்லாடல், கலைத்துவமான உவமைகள், தானறியாப் புதிய களம், கருத்துச்செறிவு, சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டிய தத்துவங்கள்,
ஆழ்ந்த மனமொப்பிய வாசினை
மூலம் தெரிந்து கொள்ளும் கதைப்பின்னல், மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலம் புரிந்து கொள்ளும் படைப்பனுபவம் போன்ற வற்றினைக் கொண்ட படைப்புக்கள் தரமான வாசகனைக் கவர்ந்து விடுகின்றன. அவன் வாசிப்பது அவனது அறிவுப்பசிக்காக ! இலக்கியப் பசிக்காக எனலாம். இவ்வகைப் படைப்புக்கள் செம் மொழி (Classics) இலக்கியங்களாக மாறிவிடுகின்றன. மேலைத் தேய இலக்கியங்களில் குறுகிய வாசகர் களைக் கொண்ட நூல்கள் என இனங்காண்பது கடினம். அங்கு செம்மொழி இலக்கியங்களும் பரந்த வாசகப் பரப்பினையே கொண் டிருக்கின்றன. அவ்வாசகர்களின் கல்வியறிவு இரசனை என்பன வற்றின் உயர்ந்த நிலை அதற்குக்
காரணமாம். ஆனால் தமிழ் வாசகர்கள் அவ்வாறில்லை. சிறுகதைப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், கு. ப. ராஜ கோபாலன், வல்லிக்கண்ணன்,
சிறுகதை எழுத்தாளரும் நாவலா சிரியருமான லா. ச. ராமாமிர்தம்,
தி. ஜானகிராமன், நீலபத்மநாதன்,
சா. கந்தசாமி, ஜெயமோகன் எனக் குறுகிய வாசகர்களைக் கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீளும்.
ஞானம் - செப்டெம்பர் 2004
நம்மோடு இன்று வாழ்ந்து வரும் பேரறிஞர், பல்மொழி வல்லுநர் பண்டிதர் க. சச்சிதானந்தன் ஆக்கிய காவியங்களான யாழ்ப்பாணக் காவியம்,பருவப் பாலியர் படும்பாடு ஆகியனவற்றின் வாசனைப் பரப்பு மிகமிகக் குறுகியதாகும்.
தம்மை வாசகனாகக் கொண்டு தமக்காக எழுதும் படைப்புக்கள்
ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை ஆசிரியரான சம்பந்தனை ஒரு தடவை நானும் செம்பியன் செல்வனும் சந்தித்தோம். அன்னா ருடைய சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடும் விருப்போடு அவரிடம் உரையாடினோம். அவற்றினைத் தொகுத்து வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால்
இவ்வாறான உரைநடை புனை
கதைகள் நிலைத்து வாழா. கவிதை இலக்கியமே சாகாதவை என்றார். அவரோடு வாதாடி அவர் மனதைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை. அற்புதமான சிறுகதைப் படைப்பாளி
அவர். தோஸ்தோவஸ்கியின் (Dostoevsky) g sit (5bpyph தண்டனையும் (Crime and
Punishment), Gighsh) Glgriefsir (James Joyce) Finnegans, ரோல்ஸ்ரோயின் அன்னாகரினா, ஹெமிங்வே, பேர்ல்பக். வேர்ஜினா வூல்ப் முதலானோரின் படைப்புக்கள் இன்றும் பேசப்படுகின்றன என எடுத்துரைக்கலாம். சம்பந்தன் அவர்கள் அக்காலவேளை
43

Page 24
44
‘சாகுந்தல காவியம்’ எழுதிக் கொண்டிருந்தார். அதனை அவர் அறியத்தந்தபோது, ‘நவீன ஈழத் திலக்கியத்தின் பிதாமகரில் ஒருவராகிய நீங்கள் பாடுகின்ற காவியப் பொருளை சமகாலத்திற் குரியதாக எடுத்திருக்கலாமே?” என்றேன். அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ஏளனமான சிரிப்பு நான் உங்களுக்காக காவியம் பாடவில்லை. வேறு எவருக்காகவும் பாடவில்லை.
எனக்காகப் பாடுகின்றேன். என்னுடைய வார்த்தைகள் என்னைச் சமாதானப்
படுத்த எனக்குத் தேவைப் படுகின்றன.’ என்றார். எனவே தமக்காகவே எழுதுகின்ற எழுத்தாளர்கள் உள்ளனர். அவர் களுக்கு வாசகர்கள் அவர்களே. தமது மனமுட்டுக்களை இறக்கி வைக்கும் வடிகாலாக எழுத்தினை அவர்கள் கைக்கொள்கின்றனர். எனினும் அவர்களது எழுத்துக்கள் படைக்கப்பட்டு முடிந்ததும் அவற்றினை மக்கள் முன்கொண்டு வரும் விருப்பம் அவர்களுக்கு இல்லாமல் போகாது. இவ்வாறு கூறிய சம்பந்தர் தனது சாகுந்தல காவியத்தினை நூலுருவில் கொண்டு வரப் பல முயற்சிகள் மேற்கொண்டார் என்பதும் குறிப் பிடத்தக்கது. தனக்காக எழுதி வைத்திருக்கின்ற அத்தனைபேரும் இலக்கிய அறிஞர்களுமல்லர். அவர்களுடைய எழுத்துக்கள் எல்லாம் செம்மொழி இலக்கியங் களுமல்ல.
எனவே படைப்பாளியின் எழுத்
துக்கள் வாசிக்கப்படும்போதும் அவை பற்றிப் பேசப்படும் போதும் தாம் அவை
இலக்கியமாகின்றன.
ஈழத்து எழுத்
துக்கள் பலவும் நூல்களாக வெளிவந்தும் அவற்றில் ஒரு நூறு பிரதிகள் புத்தக சாலைகளிலும், நூல் நிலையங்களிலும் உறங்க மிகுதியானவை எழுத்தாளனின் வீடுகளில் கட்டிவைக்கப்பட்டிருக்கின்ற நிலை இங்குண்டு. ஏன்?
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
அவை வாசகரின் இரசனைக்கு
ஏற்றனவாகவில்லை. அவற்றினை இலக்கியத்தரத்தினைப் புரிந்து கொள்ளும் (?) திறன் வாசகனிடமில்லை.
அவ்வாறான நூல் வெளிவந்த விபரம் வாசகனுக்குத் தெரிவ தில்லை. போதிய விளம்பரமில்லை. பத்திரிகைகள், சஞ்சிகைகள் இந்நூல்களின் வரவு பற்றி குறிப் பிடுவது குறைவு. எவரைக் கொண்டாவது மதிப்புரை எழுது வித்தனுப்பில் மட்டும் அதனைப் பிரசுரிக்கும் கண்ணியம்.
ஈழத்து விற்பனையாளர்கள் இந்திய
நூல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஈழத்து நூல் களுக்குக் கொடுப்பதில்லை.
கொடுப்பதாயின் இந்திய நூல் களுக்குக் கிடைப்பதுபோன்று 50 சதவீதக்கழிவினை எதிர்பார்த்து 35 - 40 சதவீதக்கழிவினைக் கோருகிறார்கள். அவ்வாறு கொடுத் தாலும் துலக்கமாக வாசகர் கண்களில் பட வைப்பதில்லை. ஏனைய ஊடகத் தொடர்புச் சாதனங்களால் இயல்பாக ஏற்பட்ட வாசனை வீழ்ச்சி.
- இவ்வாறு பட்டியலிடலாமா?
ஞானம் - செப்டெம்பர் 2004

“esvær - 6vaFgresso
அவர் பேசப்போகிறாராம்.! புதுப் புது மேடைகள். பொன்னாடைகள் சில.
பேசுகிறார் இன்னும் . இனிமை இல்லைஇரக்கம் இல்லைஅழகும் இல்லை
பேசு. பேசிக்கொண்டிரு! உன் முன்னால் உட்கார்ந்திருக்கும் முகங்களை
உற்று நோக்கி கவனித்துப் பேசு. கவனித்துப் பேசு.
உன் மேடையோ உன் ஒலிவாங்கியோ அல்ல எவரோ கொடுத்த இரவல். யாவா ராயினும் நா காப்பது மேல்.
கவிதையில்கதைசொல்லாதே! கதையை கவிதையாக்கு எளிமை தரும் உன் பேச்சு எம்மோடிருக்கும்.
குருானம் - செப்டெம்பர் 2004
6J. GTGru). 6TLAD.
つづ
مسی
تحسيسي
ހަހި
محصے
ހަ
李 李っ つ ރައި つ つー 二つ صحیح 家封季毛 多三 * て つ 参多 家 つ チ っ ラ多参多封 条 三」条多条「毛 キ考でキー柔ご参
* صے مسی っ 季 季 毛- 参 条 条っ っ 条
づ سمعت عی
எல்லை மீறின் போச்சு நாற்காலிகள் மட்டுமே உனக்காய் காத்திருக்கும்.
உன் பேச்சில் உன் சரிதை உன் பெருமை உன் குடும்பம் அகற்று.
இரு வரிகளேனும் நீ இறந்தபின் இருந்து கேட்டவர் மனதில் நிலைக்க வேண்டும்.
நான் சொன்னது கேட்கவில்லை .? பேசுகிறார்.
பேசிக் கொண்டே இருக்கிறார்.
O
45

Page 25
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை மனோகரன்
உலகப் புகழ் பெற்ற சாசனவியல் அறிஞர்
உலகப் புகழ் பெற்ற சிறந்த தமிழ் ஆய்வாளருள் ஒருவராக விளங்குபவர், ஐராவதம் மகாதேவன் அவர்கள். சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற சாசனவியல் அறிஞராக அவர் திகழ்கிறார். சாசனவியல் ஆய்வில் நீண்டகாலமாக ஆர்வத்துடன் அவர் பணியாற்றி வந்துள்ளார். இத்தகைய ஆய்வில் அவரை ஈடுபடுமாறு தூண்டி உற்சாகம் அளித்தவர், பிரபல வரலாற்று ஆய்வாளரான பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி ஆவர்.
சாசனவியல் அறிஞரான ஐராவதம்மகாதேவனின் நான்கு தசாப்த உழைப்பின் பயனாக முந்து தமிழ் கல்வெட்டுக்கள் என்ற நூல் வெளிவந்துள்ளது. இதுவரையில் இலக்கிய ஆதாரங்களைக் கொண்டே பண்டைத் தமிழரின் பண்பாடு பற்றியும், சங்ககால வரலாறு பற்றியும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. ஆரம்பத்தில் கி. பி. முதலாம் நூற்றாண்டு முதல் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே சங்ககாலம் எனக் கொள்ளப்பட்டு வந்தது. காலப் போக்கில் கி. மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் சங்ககாலம் எனப்பட்டது. தற்போது ஐராவதம் மகாதேவனின் சாசனவியல் ஆய்வுகளின் விளைவாகச் சங்ககாலம் என்பது கி.மு, கி. பி. யை உள்ளடக்கிய ஐந்து நூற்றாண்டுக் காலப்பகுதி என உறுதி செய்யப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களைப் புதிதாகக் கண்டறிந்து, அவற்றை ஆய்வு செய்து, புதிய கருத்துக்களை ஆதாரங்களோடு மகாதேவன் தமது நூலில் தந்துள்ளார். கி. பி. 1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற தமது ஆங்கில ஆய்வு நூலின் (சில குறைகள் இருந்த போதிலும்) மூலம், வடமொழியினின்றும் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் வேறுபட்டது என்பதைக் கால்ட்வெல் அறிவுலகின் முன் வெளிச்சம் போட்டுக் காட்டினார். தமிழ் தனித்துவமான ஒரு மொழி என்பதனையும் தமது ஆய்வின் மூலம் கால்ட்வெல் வெளிப்படுத்தினார். அதனையடுத்து, தமிழியல் ஆய்வு பரந்தும், விரிந்தும், ஆழ அகலம் பெற்றும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அவ்வளர்ச்சியின் இன்னொரு கட்டமாக ஐராவதம் மகாதேவனின் முந்து தமிழ் கல்வெட்டுக்கள் என்ற நூல் வெளி வந்துள்ளது.
வழமையாக வடமொழி தொடர்பான நூல்களுக்கே முன்னுரிமை அளித்துவந்துள்ள அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேயத்துறை, முதன்முதலாகத்
46 ஞானம் - செப்டெம்பர் 2004
 

தமிழர் வரலாறு தொடர்பான ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூலுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை, அவருக்குக் கிடைத்த பெரும்பேறாகும். தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞரும், சங்க இலக்கியங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்டவருமாகிய பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் பேரால் இயங்கும் அறக்கட்டளையினர், 2004ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் வி. செல்வ நாயகம் அறக்கட்டளை விருதினை ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வழங்கி, அவரைக் கெளரவித்துள்ளனர்.
சர்வதேச ஆய்வுலகமும், தமிழ்கூறு நல்லுலகமும் அறிஞர் ஐராவதம் மகாதேவனைப் போற்றுவதில் பெருமைப் படுகின்றன.
அபாய அறிவிப்பு
இலங்கையின் பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் காலங்காலமாகக் கபடத்தனத்தையும், அற்ற நிலைப்பாட்டையுமே கொண் டவர்களாக விளங்கி வந்துள்ளனர். ஒருபோதும் நம்பவே முடியாது என்பதை ஒவ்வொரு
நம்பகத்தன்மை
அவர்களின் பேச்சை
சந்தர்ப்பத்திலும் தாமாகவே அவர்கள் நிரூபித்து வந்துள்ளனர். பல்லில் மாத்திரம்தான் விஷம். எமது அரசியல்வாதிகளுக்கு மூளை முழுவதும் விஷம். தமிழர்களின்
பாம்புக்குப்
பேரினவாத
அபிலாசைகளைக் கபடத்தனமாக எவ்வாறு கருவறுக்கலாம் என்பதையே காலந்தோறும் பொறுப்புள்ள அரசியல் வாதிகள் கணக்குப் பண்ணி
Ab 17 aín - 6 a ’67. ún. i 2004
வந்துள்ளனர். பொய்யாகப் புன்னகைத்து, பொய்யாகப் பேசி, பொய்யாக நடித்து, பொய்யிலேயே அவர்கள் காரியமாற்றி வருகின்றனர். சமாதான விடயத்தில் ஒர் அடி பாய்ந்தால், ஒன்பதடி சறுக்கு வார்கள், நமது பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் தமக்கு என்று ஒரு முதுகெலும்பு கூட இல்லாமல், கூட்டுச் சேர்ந்தவர்களின் தாளத்துக்கெல்லாம் ஆடிக் கொண்டிருந்தால், அரசியல் வாதிகளுக்குரிய பொறுப்பு என்னாவது? பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகளிடம் துணிச்சலில் துளியளவு கூட இல்லா திருப்பது நாட்டின் சாபக்கேடே யாகும். அவர்களது பேச்சுக்களும், செயற் பாடுகளும் என்பதைத் தமிழ் அறிந்துள்ளபோதிலும், வெளிநாட்டுக் காரர்கள் இன்னமும் ஏமாந்தவண்ணமே இத்தகைய அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுக்கள்,
கவைக்குதவாதவை மக்கள் நன்கு
உள்ளனர்.
செயற்பாடுகள் காரணமாக போர் அபாயச் சூழலே ஏற்படுகின்றது.
போதாக்குறைக்கு, வாய் திறந்தால் விஷம் கக்கும் பிரதிப் பொறுப்பு வாய்ந்த பேரினவாதி ஒருவரின் கூற்றுக்களும் போருக்கான அறைகூவல் போல அமைந்திருக்கின்றன. வேட்டைக்காரத் தலைவர்களும்போர் அபாயத்திற்குத் தூபம் போடுபவர்களாகவே விளங்குகின்றனர்.
பேரினவாதி களுக்கும், குருக்கள் வேடப் பேரின வாதிகளுக்கும் சமாதானத்துக்கு எதிராகக் குரல் கொடுக்காவிடின் தின்றது சமிக்காது. தங்களை
சிவப்புச் சட்டைப்
47

Page 26
அறியாமலே இரு சாராரும் போர் அபாயத்தின் விளிம்பில் நின்று கொண்டு பிதற்றுகின்றனர். நாட்டின் மிகப் பெரும் பேரினவாதிகள் தாங்கள்தாம் என்று “மக்களுக்கு’க் காட்டுவதற்கு, இரு சாராரும் கடும் முயற்சி செய்து
வருகின்றனர். இவர்களின் கூக்குரல்
களால் நாட்டுக்குத்தான் அபாயம்
என்பதை மக்கள் உணர்வதற்குத் தடையாக அவர்களின் "அரசியல் அறிவு” விளங்குகிறது.
சிவப்புச் சட்டைப் பேரினவாதி களுக்காக வக்காலத்து வாங்குகின்ற, அவர்களைச் சார்ந்த தமிழ் அரசியல் வாதிகளின் போக்குகள் நகைப்பிற் கிடமானவை. ஒழுங்காகத் தமிழையே உச்சரிக்கத் தெரியாத இவர்கள்,
ee e ss உப்பிட்டவரை உள்ளளவும் நினை
என்பதற்கிணங்க, தங்களுக்குப் பதவிப்பிச்சை கொடுத்தவர்கள் சார்பாகப் பேசிவருகின்றனர். தாம் சார்ந்த
பேரினவாதிகள் சிங்களத்தில் சொல் வதை, தமிழில் சொல்ல மட்டுமே இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரே விடயத்தையே கிளிப்பிள்ளை போல எங்கும், எப்போதும் திரும்பத் திரும்பச் சொல்லி அவர்கள் பொழுது போக்கிக் இத்தகைய வர்களின் சேவை, பேரினவாதிகளுக்குத் தேவை. போர் அபாயத்தை ஏற்படுத் துவதில், இவர்களும் தங்களை அறியாமல் பங்களிப்புச் செலுத்தி வருகின்றனர். ஏன் நமது தமிழ் அரசியல்
கொண்டிருக்கின்றனர்.
C
48
O
கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகள் சிலரும்கூட, பேரின சிங்களத்தில் சொல்வதைத் தமிழில் கூறும் “ஆற்றலை”த்தானே பெற்றிருக் கின்றனர்? போரின் அபாயம் பற்றி இவர்களுக்கெல்லாம் அக்கறை இல்லைப் போலும்
தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும்கூடத் சில வக்காலத்து
வாதிகள்
தமது பொழுது போக்காகச் அரசியல்வாதிகளுக்கு வாங்கத் தொடங்கியுள்ளனர் போலும்! அண்மையில் ஓர் அரசியல்வாதி, தமது பதவியொன்றிலிருந்து விலகியதை அடுத்து, குறிப்பிட்ட அரசியல்வாதியின் ஆதரவாளர்களான சட்டத்தரணிகள் உட்படச் சிலர், அவரின் பதவி விலகல் சமாதானத்துக்கான அறிகுறி என அரச தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தனர். அது அவர்களது அரசியல் ஆதரவினதும், ஆசைகளதும் வெளிப்பாடு. ஆயினும், சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் தமது சிந்தனைத் திறனை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ள தமிழ்ப் பேராசிரியர் ஒருவரும், குறிப்பிட்ட அரசியல்வாதியின் பதவி விலகல் சமாதானத்தை மேற் கொள்வதற்கான அவரின் ஆவலின் அடையாளம் என்பது போலத் தெரிவிக்க முயன்றதன் தாற்பரியம் என்னவோ? நாடும், தமிழ் மக்களும் எவ்வாறு போனாலும் பரவாயில்லை, போர் அபாயம் ஏற்பட்டாலும் தமது நலன்கள் மாத்திரம் பாதுகாக்கப்பட்டால்
பரவாயில்லை,
போதும் என்ற சுயநலப் போக்கின் பிரதிபலிப்பே இது எனலாம்.
O
எானம் - செப்டெம்பர் 2004

ஒன்றை நினைத்து - முற்று முழுதாக நம்பி - அதுவே கதியென்று தஞ்சமடைந்து - பின்னர் அது கிடைக்காமல் மனம் புழுங்கிற கொடுமை இருக்கிறதே அதைச் சொல்லிமாளாது. அந்தக் கதிதான் இப்போ நடேசனுக்கும்.
வேலை பறிபோய்விட்டது. எந்தவித மின்னலுமில்லாமல் இடி முழங்கிவிட்டது.
பரடைஸ் ஹோட்டலில் சாப்பிடிற அளவு இப்ப காசுப்புழக்கம் இல்லை. வந்தாயிற்று. சாப்பிட்டாயிற்று. சர்வர் பில்லைக் கொண்டு வந்து வைத்தான்.
குானம் - செப்டெம்பர் 2004
O O ரிப்ஸ்
கே. எஸ். சுதாகர்
ரிப்ஸ் வைக்க காசு காணாத கலவரம். பொக்கற்றுக்குள் துளாவியபோது ஒரு 50 சதம் கொஞ்சம் கறுத்துப் போனது கண் முழித்தது. அதனுடன் சேர்ந்து ஒரு 25 சதம் - ரிப்ஸ்.
கவலையின் கனம் - அதன் பரிமாணம் - அவனை மெதுவாக கீழிறங்க வைத்தது. பரடைஸ் பாமஷி - சாப்பாட்டுக் கடைக்கு கீழே 'மெடிக்கல் ஷொப் இருப்பதில் ஒரு சில செளகரி யங்கள் இருக்கத் தான் செய்கிறது. சாப்பிட்டு விட்டு அரக்கி, அரக்கி ஸ்டெப்பில் இறங்கி வரேக்கை வயிறு அசமாத்தம் காட்டிச்சுது எண்டால், சோக்காக 2,3 பில்ஸ்சைப் போட்டு அமுக்கிப் போடலாம். கடலும் நதியும் கை கோக்கிற மாதிரி வயிற் றுக்குள் ஒரு கலக்கல்.
“ உணவு அஜிரணமாக usT6Susilé56ir ............ יי - விளம்பரம். காசுதான் இல்லை. வாசலில் வண்டில் ஒன்று தண்ணிர் சுமந்து கொண் டிருந்தது. வண்டில் - நாலு மரப்பலகைகள் கயிறுடன் கோத்து டொயோட்டா' என நாம மடித் திரு ந் த து . அதற்குக் கீழே சிறிதாக 'fully inSured” 6T6ürụi (3ử.y எழுத்தில் வேறு. குனிந்து
49

Page 27
வேடிக்கை பார்க்க, முதுகினில் பளிர் என முட்டி மோதி தெறித்தது. பில்லைக் கசக்கி கடாசிவிட்டு ஜன்னலுக்குள் மறைந்தான் சர்வர்.
பறந்து வந்து தோளோடு உரசியது - அந்த செல்லாக்காசு
". . ரிப்ஸ் காணாதோ?. இயல்பாக நடக்க முடியவில்லை. போய் படுக்கையில் சரிந்தான். நண்பன் சிவபாலன் 8ஆம் வகுப்புப் புத்தகம் ஒன்றை ஆற அமர இருந்து படித்துக் கொண்டிருந்தான்.
அவமானம் . பெருத்த அவமானம். முதுகினில் விழுந்து சன்னமாக எழுப்பிய ஒலி. நீங்காத வடுவாகியது.
“என்ன நடேசன் ஏதாவது வேலை.” “பிரைவேட் ரியூசன் ஏதாவது அரேஞ் பன்னித்தரட்டுமா. கொஞ்சமாவது றென்ற், சாப்பாட்டுக்கெண்டு மனேஜ் பண்ணலாம்.” - (á é மனதுக்குள் பூட்டி மறுகிக் கொண் டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று மடையைத் திறந்து விட்டான் நடேசன் தோளோடு உரசியது - அந்த செல்லாக் காசு.
“எனக்கும் ரியூசனாலை பெரிய வரும்படி எண்டில்லை. ஏதோ தனிக்கட்டை. பண்ணித் தொலைக் கிறன் நீதான் பிள்ளை குட்டிக்காரன்.”என்று தேற்றினான் சிவபாலன். அதிகாலை 4 மணி 12 நிமிட சுப வேளையில் - அந்த அதிரடி யோசனை திருவாளர் சிவபாலனது மூளையில் உதயமானது.
“ஏய் . நடேசன் . ஏய் நடேசன்.” துடித்துப் பதைத்து எழுந்தான். “நாளைக்கு சீதேவி
92
நடேசன்
50
ஹோட்டலுக்குப் போவோம்.” மெதுவாக வெளிச்சம் படர்ந்தது
எழுந்து வகுப்பிற்கு ரியூசன் குடுக்க புறப்பட்டான். ஒரு வீட்டில் இரு பெண்கள். போன வாரம் மூத்தவள் கார்க்காரனுடன் ஒடிப்போய் விட்டாள். வழக்கமாக பாடசாலைக்கு பத்திரமாக கூட்டிச் செல்பவன். பத்திரம் காற்றில் பறக்க பறந்து விட்டார்கள்.
சிவபாலன் வீடு வர மதியமாகி விட்டது. இன்னும் நடேசன் படுக்கையில் இருந்து எழும்பவில்லை. அவமானம் - பெருத்த அவமானம்.
“காலமை சாப்பிட்டாச்சா.?” “இல்லை !”
சீதேவி ஹோட்டலை'அண்டினார்கள்.
சிவபாலன் எட்டாம்
ஒதுக்கிடமாக அமர்ந்தார்கள்.
“சேர் சாப்பிட என்ன வேணும் . ?
ஒடித்திரிந்தார்கள். ஏமாறக்கூடிய ஒரு சோணகிரி வரும் வரையும் பொறுமையாக இருந்தார்கள். “தம்பீ. தம்பி. இஞ்சை வாரும். முதன் முதலாக இந்த ஜன்மத்தில் அவனை 'தம்பி’ என்று கூப்பிட்டவர்கள் இவர்களாகத்தான் இருக்க வேண்டும். தம்பி - தேங்காய் கொப்பரை போல இருப்பான். ஸ்லோ மோசனில் வந்து நின்றான்.
“தம்பிக்கு என்ன பெயர்?” பெயரைக் கேட்டதும் பொக்கற் றுக்குள் கையைப் புகுத்தி, நாடியை நிமிர்த்தி அரை வட்ட சேர்க்கிளில் திரும்பினான். நெற்றிக்குள் கை வைத்து கோதாத குறை.
“அழகு . அழகராசு குபேரன் . சுருக்கமா அழகு.”
ஞானம் - செப்டெம்பர் 2004
99
- சர்வர்மார்

“. உம் . ஒரு நாளைக்கு என்ன
சம்பளம் உனக்கு வரும்?”
“என்ன சேர் பிழைப்பு இது? மூணு வேளை சாப்பாடு. ஒரு 50 ரூபா. படுக்கை அவ்வளவுந்தான். வேலைக்கு எண்டு வந்தாச்சு. என்னா செய்யிறது.?”
“என்னா தம்பீ. ரிப்ஸ் எதாவது கிடைக்குமா?” “எவன் போடுறான் ரிப்ஸ் . 1 ரூபா
. 2 ரூபா . சில வேளையிலை கிடக்கிறதையும் பிடுங்கிட்டுப் போயிடுறான்.”
சிவபாலனும் நடேசனும் அதிரடியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் உசாரானார்கள். அவனின் காதிற்குள் குனிந்தனர்.
“டேய். அழகு 1. உங்கை என்ன செய்கிறாய்? . ஒரு கஸ்டமரோடை இவ்வளவு நேரமும் மினக்கெட்டால் என் பிழைப்பு என்ன ஆகிறது?’- கவுண்டரில் இருந்த சிறிதேவி கத்தினாள்.
“அம்மா. இதோ வந்திட்டேன்மா. உள்ளே போய் ஒரு ரவுண்ட்’ அடித்துவிட்டு மீண்டும் சுழண்டு அவர்களண்டை வந்தான் அழகு. இனியும் தாமதம் கூடாது என நினைத்து மந்திரத்தை கக்கி விட்டனர்.
“தம்பி. எங்களுக்கு 2 பிளேட் சிக்கன் பிரியாணி, எக்ஸ்ராவா 2 காக்கோழி, 2 முட்டை, 2கப் டெலேற். கொண்டு வந்து தந்தால் ஒரு குத்துமதிப்பா எவ்வளவு பில்.” கொஞ்சம் நேரம் மனதுக்குள் போராடினான். கூட்டிக்கழித்தான். அழகுக்கு கணக்கில் ஒரு இழவும் தெரியாது. “80 ரூபா வரும் சேர்.”
ஞானம் - செப்டெம்பர் 2004
“தம்பி அழகு என்ன செய்யிறான். 40 ரூபாக்கு பில் எழுதி வாங்கி வாறான். மிச்சம் 40 ரூபாவிவை பாதிபாதி-50 வீதம் எங்களுக்கு 20. உனக்கு ரிப்ஸ் 20.”
அழகின் கண்கள் அகல விரிந்தன. என்ன ரசவாத வித்தை இது. 20 ரூபா ரிப்ஸ். அதுவும் உடனே. கணப் பொழுது. மப்பும் மந்தாரமுமாக மைம்மலில் நின்றான். ஒரு முறை கவுண்டரைப் பார்த்தான். மற்ற சர்வர்மாரை நோட்டம் விட்டான்.
“கொஞ்சம் இருங்க. வாறன்’ ரொயிலற் பக்கமாக போனான் அழகு. அவனுக்கு ஏதோ பிசகிற மாதிரியும். பிசகாத மாதிரியும். வேலை போயிடுமோ என்று பயமாக இருந்தது. உயர உயரப் பறப்பது போல. முகம் மலர்ந்தது. மெல்லிய சீழ்க்கை குரலுடன், நடேசனுக்கு அருகில் வந்து டேபிளை துடைத்து வித்தை காட்டினான்.
“தம்பி . நாங்கள் வந்து எவ்வளவு நேரமாயிட்டுது.”
2 ஃபுல், 2 காக்கோழி. 2 முட்டை. சீக்கிரம் கொண்டு வாதம்பி. நேரம் போட்டுது. நல்லா ஆவி பறக்க வேணும்.” - ஹை - பிட்ச் ல் கத்தினார் சிவபாலன். உச்சஸ்தாயி கவுண்டர் வரையும் போனது. “அழகு. அவங்களைக் கொஞ்சம் கவனி.” கவுண்டர் மீள எதிரொலித்தது. தம்பி சுறுசுறுப்படைந்தான். கவனித்தான். அன்று தொடங்கிய கவனிப்பு. இன்று வரை சுமாராகத் தானிருக்கிறது. நடேசனுக்கும் சிவபால னுக்கும் தற்காலிகமாகக் கவலை போய் பொழுதுகள் அமிழ்ந்து கொண்டு போயின.
5.

Page 28
Ké
தம்பி. எப்பிடி இருக்கிறாய். லைட்டாக 40 இடியப்பம், பொரிச்ச கோழி. ஆட்டுக்கறி சூப்பு நல்ல கட்டைச்சம்பல்.ல்.ல்” an சிவபாலன், நடேசன் “உங்கடை தயவாலை சுகம்மா
இருக்கிறேன்.”
கொப்பரா போய், சாரம் பெனியன்.
பாட்டா சிலிப்பர். சகிதம் குளிர்ந்து
மொழுப்பாக நின்றான் அழகு.
O
"லைட்டா 20 இட்லி, கோக் 2, சாம்பார்.” - நடேசன்
சேர்ந்து வந்தாலென்ன, தனித்து வந்தாலென்ன கவனிப்பு கவனிப்புதான். “அதென்னா சேர். எப்ப பாத்தாலும் லைட்டா.”
“லைட்டாக சாப்பிடுறதிலை இருக்கிற சுகமே தனிதான். என்னவா இருந்தாலும் அழகு. நீ எனக்கு கஸ்டமர். நான் உனக்கு கஸ்டமர்.” இப்பெல்லாம் சிறீதேவி - எஜமானி ஒரு சுற்று மெலிந்தேவிட்டா. இங்கே ஒரு சுற்று பெருத்து விட்டது. அழகுவின் போக்கு, புரிந்து கொள்ளும் தன்மை இவர்களை திணறடித்தது. 3 TJb பெனியன் போய் ஜின்ஸ், கலர் கலர் உடுப்புகள். கழுத்திலை மைனர் செயின்
நாலு இங்கிலிசும் பேசத் தொடங்கி
விட்டான்.
O
நடேசனுக்கு அதிக சம்பளத்துடன் ஒரு வேலை கிடைத்திருந்தது. அவன் மனைவி,2பிள்ளைகளையும் கொழும்புக்கு கூட்டி வரலாம் என நினைத்தான்.
52
“எட்டாம் வகுப்பு படிப்பிக்கேக்கை காலை அடிக்கடி சுரண்டுது” என்றான் சிவபாலன்.
நடேசன் அவனை மேலும் கீழும் பார்த்தான். திடீரென ஏதோ ஒன்று புலப்பட்டாற் போலிருந்தது.
“எத்தனை கோடி . இன்பம் வைத்தாய்” . பாட்டுடன் சிவபாலனும் நடேசன் ஹோட்டலுக்குப் போனார்கள்.
“என்ன அழகு. சாப்பாடு அவ்வளவு ருசியில்லை. 6Surturyth படுத்திட்டுதோ.”முட்டை பரோட்டா கிடைக்குமா..? - சிவபாலன். “என்ன முந்தினமாதிரி கவனிப்பு ஜோரா இல்லை.?” - நடேசன். “மற்றவங்களையும் கவனிக்கணும் இல்லையா..? இல்லை. இல்லை. சேர். Ꭶ56tᎠ1 நட்டத்திலை போகுதாம். அம்மா சொல்லுறா. அது சரி சேர், வருசக்கடைசி எனக்கு போனஸ் இல்லையா?.” மழுப்பினான்.
அழகுவின் போக்கில் இப்போ சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டன. ஸ்ப்ரே சென்ற் நாத்தம் வேறு. இடுப்பிலை இப்போ வாழைப்பொத்தி போல் ஏதோ சுத்தி இருக்கிறான். முழங்கால் அடிபட விழுந்தவன் மாதிரி கிழிச்சு விட்டி ருக்கிறான். V−
நடேசன் லிவிற்கு மனைவி பிள்ளைகளை அழைத்து வர போய் விட்டான். சிவபாலனுக்கு விசராக இருந்தது. ஹோட்டலுக்குப் போனான். அழகு இரு வாரங்கள் லிவு என அறிந்தான். அன்றுதான் உண்மையிலே லைட்டாக 2 தோசை, பிளேன்ரீ சாப்பிட்டான். அழகின் அருமை தெரிந்தது. சீதேவி ஹோட்டல் - சீதேவி
ஞானம் - செப்டெம்பர் 2004

ஹோட்டலாகி மூதேவியாகிவிட்டது. நாள் முழுக்க ரியூசன் குடுத்தான். கடைசியில் மற்றக் கிளியைக் கொத்தி முடிக்கும் கைங்கரியமும் நடத்தி வைத்தான்.
நடேசன் குடும்பம் மூட்டை முடிச்சுகளுடன் கொழும்பு வந்து இறங்கினார்கள். பழைய வீட்டில் நின்று கொண்டு வீடு தேடும் படலம், ஹோட்டல் கிட்ட இருந்தால் cost of livingகுறைவாக இருக்கும். போகும் வழியில் சிவ பாலனைக் கண்டான். பின்னால் பின்னிப் பிணைந்து. அந்தக் கிளி.
“நடேசன் எப்படி ஊர்.? நீ போய் வாறதுக்குள்ளை நடந்து போச்சு. மனிசி வீட்டிலைதான் இருப்பு.” “றுாம் வெளிச்சது. ஒரு வகை யிலை நல்லதுதான். ஹோட்டல் எப்படிப்போகுது.?” “மனிசி வந்தாப்போல ஹோட்டல் என்னத்துக்கு. இப்ப புது நிர்வாகம் போல கிடக்கு. அங்கை பார். பெயரையும் மாத்திப் போட்டான்கள்.” கெட்டுது போ. என்று சொல்லிக்கொண்டு ஹோட்டலை எட்டிப்பார்த்தான் நடேசன்.
வடை - பாயாசத்துடன் சாப்பாடு தயார்’ என்று ஒரு போர்ட் காத்துக்கு ஆடியது. சிறுசுகள் குதியாய்க் குதித்தார்கள். நகரத்தைப் பார்க்கின்ற பெருமிதம். மனைவி உள்ளிட்டு அவர்கள் சாப்பாட்டுக் கடைக் கொண்டு வருவது இதுவே முதல் தடவை.
அழகு கவுண்டரில் நின்றான். திருநீற்றுப்பட்டை, சந்தனப்பொட்டு, வேட்டி சகிதம்.
உந்த முட்டாளை யார் கவுண்ட ரிலை விட்டது. கடையையே கவிட்டுப்
ஞானம் - செப்டெம்பர் 2004
போடுவான். எங்களைப் போக விட்டிட்டு புது நிர்வாகம் புறமோஷன் குடுத்திருக்கு போல. கையிலையும் ஏதோ பெட்டி வைச்சு கூட்டிக் கழிச்சு விளையாடுறான். அழகு கவுண்டரிலை நிக்கிறதாலை இண்டைக்கு விளாசிப் போடலாம். கேட்கிறதெல்லாம் வாங்கிக் குடுக்க வேணும்.
‘என்ன அழகு கவுண்டரிலை இப்ப.
அழகுவிடம் வரவில்லை.
இருந்து பதில் கேட்கவில்லையோ. அல்லது கவுண்டரிலை நிக்கிறதாலை கேட்கவில்லையோ தெரியவில்லை. சர்வர் ஒருவன் வந்து நோட்டம் விட்டான். “ஏய். கேட்கிறதெல்லாம் குடுப்பா. நல்லாச் சாப்பிடட்டும்.”
கடையை சுற்றிப் பார்த்தான் நடேசன் அழகு இருப்பிடத்தை விட்டு அசைவதாகக் காணோம்.
“என்னங்க பெரியவரே!. ஐஞ்சி லொரு பங்குக்கு குறைவா நாங்கள் ரிப்ஸ் வாங்கிறதில்லை. இதைப் பற்றி எங்கடை சங்கம் அறிக்கை விட்டதை வாசிக்கேல் லையோ.” யாரோ ஒருவனுக்கு பேச்சு விழுந்து கொண்டிருந்தது. “விருப்பமெண்டா உதைக் கொண்டு
போய் கவுண்டரிலை 'பொஸ்’ இருக்கிறார். குடுத்திட்டுப் போங்கோ.”
கவுண்டரிலை பொஸ் எண்டவுடன் அரை குறைச் சாப்பாட்டுடன் எழுந்தான் நடேசன்.
“இஞ்சாருங்கோ. காசை எடுத்து
வைச்சிட்டுப்போங்கோ. என்ரை
S3

Page 29
பேர்ஸ் அடியிலை பேக்குக்குள்ளை
கிடக்கு”
‘பேர்ஸை மனைவியிடம் எறிந்து விட்டு, வீர நடை நடந்து அழகுக்கு முன்னால் காட்சி கொடுத்தான். அழகு
இவரைக் கவனிப்பதாக இல்லை. சப்ளை' பண்ணும் சாமான்களை சர்வர்மாரின் பெயருக்கு கணக்கு
வைத்து, அவர்கள் குடுக்கும் காசை குறித்து கிறடிற் - டிபெற்’ என்று குத்துக்கரணம் போட்டான்.
“லைட்டா ஒரு 80 இடியப்பம். குருமாக்கறி கிடைக்குமா..?”
“கிடைக்கும். குருவுக்கு குரு மாக்கறி முழு விலைக்கு கிடைக்கும். டேய். யார்ரா இந்தக் கஸ்டமரை கவுண்டருக்கு அனுப்பினது. ஐயா இப்ப நான் ஒனர் ஐயா. தமிழிலை சொல்லுறதெண்டால் உரிமையாளர். போங்க . போங்க. போய் முன்னுக்கு வாற வழியைப் பாருங்க” −
வந்த வேகத்திலை டேபிளுக்கு திரும்பினார். மற்றவங் களையும் கவனிக்கணும் இல்லையா..? மற்றவன்கள் .50 வீதத்திலை ஒரு 4 பேர், 60 வீதத்திலை ஒரு 2 பேர். ஏன் 70 வீதத்திலையும் - அந்த மற்றவங்கள் இருக்கலாம். −
மேசையில் பில் இருந்தது. 120 ரூபா. இருபதா நூற்றியிருபதா எண்டு இவ்வளவும் நடந்த பின்னும் ஒரு சந்தேகம் - பழக்கதோசம். காசை
நடேசன்
சர்வரிடம் சுளையாகக் குடுத்தான்.
“எடுங்கோ பெட்டி படுக்கையளை. போய் வெளியிலை நில்லுங்கோ. நான் ஒருக்கா ரொயிலற் போட்டு
54
வாறன். சில்லறை எதாவது இருக்கா வசந்தி. ரிப்ஸ் குடுக்க.” வழிச்சுத் துடைத்து சில்லறையை எடுத்து கை நீட்டினாள். வசந்தி. படக்கெனப் பறித்து, “உந்த மனிசனுக்கு என்ன வந்ததோ” என்று நினைக்கும் வண்ணம் மேசையில் விட்டெறிந்தான். வசந்தி பிள்ளைகளையும் தள்ளிக் கொண்டு வெளியே ஒடினாள். “அம்மா மேசையிலை தொப்பியை விட்டிட்டு வந்திட்டன்.”கத்திக்கொண்டே உள்ளுக்கு ஒரு வட்டம் ஒடி வெளியே வந்தான் நடேசனின் புத்திரன்.
அவசரத்தை முடித்து வெளியே வந்தான் நடேசன். ஏதோ ரிப்ஸ்' என்று முணுமுணுத்துக் கொண்டே விலகிப் போனான் சர்வர். நடேசனுக்கு பொத்துக் கொண்டு வந்தது. விறுவிறெண்டு கைகளை வீசிக் கொண்டு வெளியேறினான்.
கோயில் வர, தருணம் பார்த்திருந்த கடைசி மகன் கொஞ்ச சில்லறையை
கொடுத்து
கோபம்
நடேசனிடம் பேச்சுக்
கொடுத்தான்.
“அப்பா. உங்களுக்கு இப்ப சரியான மறதி அப்பா. கொஞ்சக் காசை வந்திட்டியள் அப்பா.” “அட கடவுளே. அது சர்வருக்கு
வைச்ச ரிப்ஸப்பா.”
கடைக்குள்ளை விட்டிட்டு
மனைவியும் பிள்ளைகளும் ஆளுக்கு ஆள் முழுசினார்கள்.
‘ரிப்ஸ் எண்டால் என்னப்பா.”
O
ஞானம் - செப்டெம்பர் 2004

கேள்வி ஞானம்
40
-இலக்கியன் பதில்கள் స్టో
கேள்வி : மல்லிகை ஆசிரியர் தனது கடைசி மல்லிகை இதழின் தூண்டில்’பகுதியில் பேராசிரியர் சிவத்தம்பியை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறாரே! பார்த்தீர்களா? முற்போக்காளர்களின் முரண்பாடு பற்றி உங்கள் கருத்து? (இருவரும் உங்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர்கள்)
செ. கந்தசாமி, புத்தளம் பதில் : எல்லாம் காலம் செய்யும் வேலை. இதுதான் சாறும் சதையும் என்று, தான் முன்சொன்னதை இப்பொழுது சக்கை என்கிறார் பேராசிரியர். புகழப்பட்டவருக்கு இகழப்படும்போது கோபம் வருகிறது. மற்றவரைக் குறிவைத்த கூழ்முட்டைகள் இப்பொழுது எய்தவர்களை நோக்கியே“பூமராங்” ஆகித் திரும்பி வருகின்றன."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று பழைய பண்டிதர்கள் பகிடி பண்ணப் போகிறார்கள். இனி என்னுடைய கருத்து. “பண்டிதரின் மகனான பேராசிரியர்” போன்ற மறைமுகத் தாக்குதல்கள் ஜீவா போன்ற முதிர்ந்த எழுத்தாளரிடருந்து வரத்தேவையில்லை. பேராசிரிரை நேரே பெயர் சொல்லிக் குற்றம் சாட்டியிருந்தால் இன்னும் கெளரவமாக இருந்திருக்கும். இத்தகைய மறைமுகத் தாக்குதல்களால் உண்மை வெளிவருவதைவிடப் பகையுணர்ச்சியே அதிகரிக்கும். ஒன்றாய் நின்றவர்கள் வேறு வேறாகிக் குற்றம் சாட்டுகின்றனர். ஜீவாவின் பதிலிலுள்ள குற்றச் சாட்டுகள் :
1. எமதுஉழைப்பிலும் வியர்வையிலும் தனது கனதியை உயர்த்திக்கொண்டார்பேராசிரியர் 2. விமர்சனம் என்ற போர்வையில் இளம் தலைமுறையினருக்கு பேராசிரியர்
பிழையான தகவல்களைச் சொல்லி வருகிறார். 3. பேராசிரியர் அரசியல் - இலக்கியக் கருத்துக்களுக்கு எந்தக் காலத்திலுமே
நம்பகத்தன்மையுடன் நடந்தவர் அல்லர். 4. முற்போக்குப் பேசினாலும் எங்களுடன் தொடர்ந்து இவர் வரமாட்டார் என்பது
ஏற்கனவே எமக்குத் தெரியும். 5. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தற்காலிகமாகவே செயற்படவில்லை. ஆனால்
அதன் பணி தொடரும். கைகோர்த்து நின்ற ஜீவாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலுரைக்க வேண்டியது பேராசிரியரின் கடமை என்றே கருதுகிறேன். கேள்விகள் தம்மை நோக்கி நீளும்போது அவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் பதிலுரைக்க வேண்டியது இலக்கியவாதிகளின் கடமை. கூட இருந்தவரின் குற்றச்சாட்டுக்கு உடன் பதில் சொல்லவேண்டியது பேராசிரியரின் கடமை. பேராசிரியர் மல்லிகைக்கே தன் பதிலை எழுதலாம். மல்லிகை
ஞானம் - செப்டெம்பர் 2004 SS

Page 30
ஆசிரியர் இச்சர்ச்சையைத் தொடரத் தன் சஞ்சிகையிலேயே சில பக்கங்களைத் தொடர்ந்து ஒதுக்கலாம். உண்மையைச் சமூகம் தீர்மானிக்கும். என் புகழ்ச்சியை இவ்விருவரும் உண்மையாக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். கேள்வி : என்ன ஆகஸ்ட் இதழில் இலக்கியனாரைக் காணவில்லை? மு. பொ. வின் பதிலடிக்குப் பயந்து ஒளிந்து விட்டாரா?
ச. சந்திரசேகரம், கொழும்பு. பதில் : இலக்கியனாவது பயப்படுவதாவது? ஒய்வுக்காக வெளியூர்ப் பயணம் சென்றதால் எழுதத் தாமதமாயிற்று. விஷயம் அவ்வளவே. வேறு என்ன சொன்னீர்கள்? மு. பொ. வின் பதிலடிக்குப் பயந்தேனா? மு. பொ. தந்தது பதிலடியா? அதை முதல் சிந்தியுங்கள். கொஞ்சம் கிண்டல், இப்பொழுதுதான்இலக்கியத்தில் ஞானஸ்ஞானம்’பெற்று தன்னை அடையாளப்படுத்த ஆலாய்ப்பறந்து கொண்டிருக்கும் இலக்கியன்) கொஞ்சம் ஒப்பாரி (உண்மைதான், மு. பொ, ஏழ்மைப்பட்ட கவிஞர் தான்) கொஞ்சம் தற்புகழ் (மு. பொ. வை முருகையன் பாராட்டினார். நுஃமான் சிலாகித்தார்) இவ்வளவும் தான் இலக்கியனுக்கு மு. பொ. சொன்ன பதிலில் இருந்த விடயங்கள் . இதைப்போய் பதிலடி என்கிறீர்களே? தன்னை ஏழையென்று அறிமுகப்படுத்தி அனுதாபம் சம்பாதிக்கப்பார்க்கிறார் மு. பொ. தடுமாற்றத்தின் முதல் அடையாளம் இது. கம்பனோடு மு. பொ. வை ஒப்பிட்டு நான் குறிப்பிட்டது கவித்துவ ஏழ்மை பற்றித்தான். அந்தக் குறிப்புக் கூடவா கம்பனிலேயே பிழை கண்டுபிடிக்கும் பெரிய கவிஞருக்குத் தெரியவில்லை. தினக்குரலில் வெளிவந்த இரண்டாவது பதிலில் மு. பொ. வின் தடுமாற்றம் மேலும் அழகாய்த் தெரிந்தது. (பார்ப்பதற்கு இனியவள்பாச்சியில் தைத்ததுவே - ஆக்கம் பெரும் கவிஞர்மு, பொ) முருகையனாலும் நுஃமானாலும் புகழப்பட்ட தன்னை நான் குற்றம் சாட்டுவது தவறு என்று மு. பொ. கொதிக்கிறார். பழைய விஷயங்கள் தெரியாமல் தன்னைப் பற்றிப் பேச முற்பட்ட என்னை ஞானஸ்ஞானம் பெற ஆலாய்ப்பறப்பவன் என்று ஆத்திரப்படுகிறார். எனக்கு ஒன்று புரியவில்லை. முருகையனாலும் நுஃமானாலும் புகழப்பட்டவரையே குற்றம் சாட்டக்கூடாது என்றால், தனக்குப்பின் வந்த அத்தனை கவிஞர்களாலும் புகழப்பட்ட கம்பனை மு. பொ. தான் என்ன தகுதியில் குற்றம் சாட்ட விளைகிறார்? முருகையனும், நுஃமானும் தன்னை முன்பு புகழ்ந்தவற்றைத் தெரிந்து கொள்ளாததை எனது குற்றமாய்க் கூறும் மு. பொ. வுக்கு, அன்றைய புலவர் தொட்டு இன்றைய புலவர் வரை அத்தனை பேராலும் புகழப்பட்ட கம்பனைத் தெரியாதது தன் குற்றம் என்பது ஏனோ தெரியவில்லை. “ஞானஸ்ஞான”த்திற்கு "ஆலாய்’ப் பறப்பவர் யாரென்று இலக்கியவுலகத்திற்கு இப்போது தெரிந்து விட்டது.
ஒன்று மட்டும் உண்மை. மு. பொ. இவ்வளவு காலமும் எழுதிப் பிரபலமானதைவிட அதிகமாக கம்பனில் கைவத்ததால் பிரபலமாகிவிட்டார். கேள்வி : கம்பன்விழா பார்த்தீர்களா?
அ. தங்கேஸ்வரி, வத்தளை. பதில் : அருமையான ஒருங்கமைப்பு. ஆச்சரியமான நிர்வாகம். ஆடம்பரமான மேடையமைப்பு. ஆயிரமாய்க் கூடிய கூட்டம். அணி பிரிந்த அறிஞர்களின் ஒன்றிணைப்பு அனைத்துப் பிரமுகர்களின் அணிவகுப்பு அற்புதமான விவாதங்கள், ஆரவாரம் என அத்தனையும் அற்புதம். ஆனால் . அளவற்ற இம்முயற்சிகளின் அறுவடை.?
56 ஞானம் - செப்டெம்பர் 2004

wzig2/62/277G25.2/76060276io
aga/766072/6627.602056762/6777
வ. மகேஸ்வரன்
கவிஞன் என்பவன் வெறுமனே சொல்லேர் உழவன் அல்லன்; அவன் சமூகத் துடிப்பினையுடைய உயிர்நாடி, அவன் சமூக அவலங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்த போதும் அந்த அவலங்களைக் கலையாக்கும் கைவண்ணம் மிகப் பெற்றவன்.
சமூக நடப்புக்களை அவற்றின் யதார்த்தம் குன்றாது கலைவடிவம் ஆக்குவது எழுத்தாளர் யாவர்க்கும் பொதுவானதெனினும் ஒரு கவிஞனுக்கு அவ் அவலங்களை உணர்வுடன் சொல்லக்கூடிய மகத்தான வாய்ப்புக் கிட்டிவிடுகிறது. இதனாலேயே கவிதைகளில் உணர்வு நிலை என்பது அடியாதாரமாக அமைந்திருப்பதைப் பாரதி முதல் செ. சுதர்சன் வரையான கவிஞர்களின் கவிதைகளில் அவதானிக்க முடியும்.
உறுதிகோரல்’ என்ற கவிதை தொடங்கி காற்றின் காதலி வரையிலான சுமார் 25 கவிதைகளடங்கிய இத் தொகுதியில், இன்றைய காலத்து இருப்புக்களும், இழப்புக்களும், சமூக அவலங்களும் அவற்றின் விளைவுகளும் ஆங்காங்கே வெளிக்கொணரப் பட்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களாக வடகிழக்குப் புலங்களிலே நிகழ்ந்த இனமோதல்கள், அரச பயங்கரவாதம் அவற்றின் விளைவுகள் ஆகியனவே பெரும்பாலான கவிதைகளின் பாடு பொருளாக அமைந்துள்ளன.
குளிர்காய்தல்', 'இரவுபோதும்', 'அபலை', 'கல்வாரிப் பயணம்', 'உறக்கத்தின் ஒசையிலே, சுயம், நாங்கள் பைத்தியங்கள்', 'நெடும் பகல் நோக்கி' 'சடத்திலும் ஜீவன்', தக்காரை வாழவைப்போம்' ஆகிய கவிதைகளில் பேரினவாதம், அதனால் ஏற்பட்ட போர், அதன் பின்விளைவுகள் ஆகியவற்றை மிகவும் நிதானத்துடனும் மிக்க அவதானத்துடனும் பிரதிபலிக்கிறார்.
இரவுபோதும்' எனும் கவிதை கறுப்பு ஜுலை பற்றி வசனிக்கிறது. "சுடலைக் குருவியின் தேசிய கீதத்தோடு எனது தேசம் பாய் சுருட்டுவதா?” என்ற சோகக் குரலை அது முன்மொழிகிறது. அபலை - Vதில்
“வாழ்க்கை” மறுதலிக்கப்படுகிறது. இந்த தேசத்தின் புத்திரி' ஆகையால்”
நாகனம் - செப்டெம்பர் 2004 57.

Page 31
என்ற வார்த்தைக்குள் ஒரு முன்னைநாள் பெண் போராளியின் உள்மனச் சோகம் வெளிப்படுகிறது. அதேபோல'அபலைVI தினம்தினம் நடக்கும் இன அழிப்பினால் தமிழின அடையாளமே இல்லாமற் போகும் என்பதை,
நாளையும் நாளை மறுதினமும் அதன்பின்பும் யாருமில்லை அழுவதற்கும் இறப்பதற்கும்” என்ற வார்த்தைகள் பெரிய சோகத்தைத் தாங்கி வெளிவந்துள்ளன.
“கிராமத்துக் கனவுகள்” என்ற கவிதையில் போரினால் சிதைந்த பண்பாட்டுத் தடயங்களின் நேற்றைய செழிப்பையும் இன்றைய அழிவையும் ஒரு சேர அவதானிக்க முடிகிறது.
‘சுயம்' என்ற கவிதை இன்னோர் விதமான பரிமாணத்தைத் தருகிறது. பேரினவாத அடக்குமுறை மாத்திரமல்ல போராட்ட சூழலும் மக்களை அமுக்கி வைத்துள்ளது என்பதை,
“இருத்தல் இயல்பற்றுப் போயிற்று
A7732356) ருசித்தல் நுகர்தல் உணர்தலும் கூட
சிலர் இயக்கத்தில். என்ற வரிகள் சில சொல்லாத சேதிகளை எமக்குப்புலப்படுத்துகின்றன. போராட்டத் தினால் ஏற்படும் பின் விளைவுகளை சமனிலையில் நோக்கும் தன்மை கவிஞரிடம் மேலோங்கிக் காணப் படுகிறது. இதை “ஊழின் மீதான பாடல்” என்ற கவிதையிலும் காண முடிகிறது. இது வரவேற்கத்தக்கது.
58
சடத்திலும் ஜீவன்’ என்ற கவிதை இந்திய அமைதி யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டபோது நடாத்திய அடாவடித் தனங்களுக்கு ஒர் பதச்சோறாக அமைகிறது. வேட்டைக்கு ஏகும் குருதானச் சிஷ்யர்கள் இங்கே படிமமாக குறிப்பிடப்பட்டாலும் அந்த வார்த்தைகள் ஆழ்ந்த கருத்துப் புலப் பாட்டிற்குத் தளம் அமைப்பவை.
கவிதை
காக்கும் படை
வழியே தொன்மங்களும் பண்பாட்டுக் கோலங் களும் ஆழமாகக் கால் பதித்துள்ளதை அவதானிக்கலாம். குளிர் காய்தல்' என்ற கவிதையில் யாககுண்டமும், ஆகுதி களும், அவிப்பாகங்களும் பூடகமாகக் கையாளப்பட்டுள்ளன. 'காத்திருப்பு என்ற கவிதை இன்னோர் சுட்டுகிறது. அன்னை ஒருத்தி தனது போராளி மகனுக்காக உணவோடு இரவிலே வீட்டில் காத்திருக்கிறான்.
"மகனுக்காய்
சுதர்சனின்
பண்பாட்டைச்
மண் சட்டியில் அவித்த மரவள்ளிக் கிழங்கோடு இந்த இரவிலும் வழமைபோல்
ச்ச்ச்.’ பல்லி மட்டும் சொல்லியது இனி படைக்க வேண்டியதுதான்" இங்கே படைத்தல் என்பது பண்பாட்டுடன் தொடர்புடையது. இறை வனுக்கும் நிவேதனம் படைக்கலாம். இறந்தோருக்கும் படையல் படைத்து வழிபடலாம்.இங்கேபோராளிமகன்தெய்வீக
நிலையில் வைத்தெண்ணப்பட்டாலும்
ஞானம் - செப்டெம்பர் 2004

அவனுக்கு இடுவது படையல் எனவும் அவன் வீரமரணம் அடைந்ததனால் அவனைப் பிதிர் எனக் கருதிப் படைத்தலும் நிகழலாம். இங்கு படைத்தல்' என்ற பண்பாடு இருவேறு கருத்து நிலைகளில் வாசகரை ஊகிக்கத் தூண்டுகிறது.
அபலை என்ற கவிதைகளும் இவ்வாறான பண்பாட்டுத் தளத்தில் எழுதப்பட்டவை. குங்கும அழிப்பு, தாலி இழப்பு, அபசகுனம் என்ற பண்பாடுகள் இங்கே அவலங்களின் வழியே மீள வலியுறுத்தப்படுகின்றன.
“சதி” என்ற தொன்மமும் இங்கே அவலத்துடனும் ஆக்ரோசத்துடனும் மீள வலியுறுத்தப்படுகின்றது. தமிழரின் திரு நாட்களான தைப்பொங்கலும், சித்திரைப் பிறப்பும், தீபாவளியும் கொண்டாடப்பட்ட நாட்களாக மட்டுமல்லாது துக்க தினங் களாக மாறிவிட்டதை,
'தார் ஊற்றி எரிக்கப்பட்ட தந்தையின் நினைவு தினமாய்
தைப்பொங்கல் ஒவ்வொன்றும்”
fiafavouraiastial பள்ளித் தோழரின் நினைவுதினமாய் தீபாவளி ஒவ்வொன்றும்”
“சித்திரவதையில் உயிர்நீத்த
அண்ணனின் நினைவு தினமாய்
சித்திரைப் பிறப்பு ஒவ்வொன்றும்” எனும் கவிதை அடிகள் புலப்படுத்து கின்றன.
இது போலவே கள்ளுக் கபாலம்
என்ற கவிதையும் இன்னோர் பண் பாட்டினைப் படிமமாக்குகிறது.
ஞானம் - செப்டெம்பர் 2004
“ஊழிக் கூத்துக்காக கள்ளுக் கபாலம் அவர்கள் கையில் உறவுக்காரர்கள் மடத்து மூலையில் கையில் கத்தியுடன் வெள்ளை மொட்டாக்கினுள்
eģilu ie எரிந்துபோன சுமந்த
தோளினதும் தாலியற்றுப் போன கழுத்தினதும் நினைவுகளுள்
நான்”
என்றவாறு அக்கவிதை நம்பிக்கை யூட்டுகிறது. ‘உறக்கத்தின் ஒசையிலே என்ற கவிதையில் வலக்கை வீணை யோடு வாணி இறங்கி வருகின்றாள். நோர்வேயின் சமாதான முயற்சிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டபோது,
"தோள் பிடித்துத் தலையரிந்து தொங்கவிட்ட நாட்கள் போய் கால்மடித்துக் கச்சிதமாய்த் தூங்குவதற்கு
வாணி” நாட்டு நரம்புகளை நல்லபடி இழுத்து இவன் கோட்டில் வளைத்துக் கொழுவிப் பிரதிருகி ஒரு பாட்டு வடித்தான்.
ரோட்டிலே கொண்டாட்டம் போட்டதாகக் குறிப்பிடுகிறார். வாணி என்கிற தொன்மம் சமாதானத்தை மீட்கின்றஇசைவாணியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
59

Page 32
“நெடும்பகல்நோக்கி’ என்ற கவிதை
முற்றத்துப் பலாவின் பன்முகப்பட்ட பண்பாடுகளை விபரிக்கிறது. கொடிகாமச் சந்தையில் பலாக்காய் விற்றதும்
வளைகாப்புக்கு விட்ட நெடுங்கிளையும், ஆடியிலே பிறக்கும் மகள் பெடியன் ஆடிக்களிக்க. ஊஞ்சலுக்காய் உச்சி யிலிட்ட கொப்பும் பண்பாட்டின் வேர்களை இனங் காட்டுவன.
ஆனால் அவற்றின் அராஜக அழிவில் பேரன் பிறந்து மீண்டும் முனைவான் என்ற நம்பிக்கையும் அப்பண்பாட்டி னடியாக முகம் காட்டுகிறது. “ இன்று'நலிந்து இனிப்பிறக்கும் நாளையிலும் பிஞ்சுகள் விழலாம் பூக்கள் உதிரலாம் கஞ்சியும் இன்றி வாழ்க்கை ஒடலாம் நெஞ்சுகள் நிமிர்த்தவென் பேரன் பிறப்பான் நின்றும் இருந்தும் நீட்டிப்படுத்தும்
நேர்த்தியின் நினைவுடன்
多罗
நெடும்பகல் நோக்கி. என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. சுதர்சனது கவிதைகளில் அவனது வயதின் இயல்பூக்கத்திற்கேற்பக் காதல் பற்றிப் பாடியவையும் உள்ளடக்க மாயுள்ளன. ‘அனலெனமனதும்” என்ற கவிதையில் தோற்றதும் இல்லை வென்றதும் இல்லை எனக் காதல் பற்றிப் பேசுகிறார். “மற்றுமொருமாலை” என்ற மகுடக் கவிதையில் போராளியாகப் பிரிந்து போன தனது காதலி பற்றி ஆதங்கப்படுகிறார். மணமாலைக்
60
குப்பதிலாக மற்றுமொரு மாலை அவள் கழுத்தில் விழக்கூடும். அது புகழ் மாலையா? பிணமாலையா? பெரும்பாலும் பிணமாலைதான். இது சுதர்சனின் குரல் மட்டுமல்ல எத்தனையோ தமிழ்ப்புலத்து இளைஞர்களின் சோகம் சுமந்த குரல்.
சுதர்சனின் கவிதைகளில் ஒரிரு கவிதைகள் அவரது பாடுபொருள் போல இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளன. மரபை மீற முடியாமலும் புதிய தடத்தில் கால்பதிக்க முடியாமலும் சிறிது திண்டாடுவதை அவதானிக்கலாம். தக்காரை வாழ வைப்போம், அனலென மனதும், உறக்கத்தின் ஒசையிலே ஆகியவற்றில் இத்தன்மையை இரண்டும் தேர்ந்த நல்ல கவிஞனாகவும் இனங் காட்டுகின்றது. கொள்கைப் பிரகட னங்கள், பிரசார வசனங்கள் ஆகியவை கவிதையின் அழகியலைக் குறைத்து விடும் என்பதைக் கவிஞர் மனங்கொள்ள வேண்டும். ‘உறுதி கோரல்’, ‘எழுது கோலுக்கு ஒர் ஏற்றப்பாட்டு கிராமத்துக் கனவுகள்', 'கல்வாரிப் பயணம்' ஆகியவை இவ்வாறான பிரகடனங்களில் ஒரளவு கலையிழந்து போயின.
முடிவாக சுதர்சனது கவிதை வெளி பரந்தது. இளைஞனுக்குரிய இயல்பூக்கமும், சமூக யதார்த்தமும், பண்பாட்டுப் பின்புலங்களும் அவனது கவிதையின் அடித்தளங்கள். ஆயினும் சுதர்சனது நெடும் பயணத்துக்கு தனித்த வழிதேவை. அவனது கவிதைவெளி இன்னும் வியாபிக்க வாய்ப்புண்டு.
O O O
ஞானம் - செப்டெம்பர் 2004

நூல் கைகளுக்குள் சிக்காத
காற்று (கவிதைத் தொகுதி)
ஆக்கம் : த. ஜெயசீலன்
வெளியீடு: அருணன் பதிப்பகம்,
நல்லுரர்.
இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதை
பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் த. ஜெயசீலனின் கவிதைகள் பற்றிய ஞாபகமும் வரவே செய்யும். அவரது
முதலாவது கவிதைத் தொகுதி வெளி வந்து, பேசப்படும் கவிஞராக அவர் விளங்கத் தொடங்கிய காலகட்டத்தில், அவரின் இரண்டாவது கவிதைத் தொகுதியான கைகளுக்குள் சிக்காத காற்று (2004) வெளிவந்துள்ளது. அவரது வளர்ச்சியின் பிறிதொரு பரிமாணத்தை இத்தொகுதி இனங்காட்டி நிற்கின்றது.
இத்தொகுதியிலுள்ள கவிதைகளிற் பெரும்பாலானவை, தனிமனித உணர்வு களின் வெளிப்பாடுகளாக விளங்கு கின்றன. அவை கவித்துவ அழகோடு வெளி வந்துள்ளன. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு கவிதைத் தொகுதிகளிற் கணிசமானவை வெள்ளைத் தாள்களில் அச்செழுத்துக்களைப் பதித்த வையாகவே விளங்குகின்றன. அவை தரமான வாசகருக்குச் சலிப்பையே ஊட்டு கின்றன. ஒரு சில கவிதைத் தொகுதிகளே
ஞானம் - செப்டெம்பர் 2004
தரம் பேணி வெளிவருகின்றன. அவற்றுள் த. ஜெயசீலனின் கைகளுக்குள் சிக்காத காற்று என்ற நூலும் ஒன்றாகும். அவரது கவிதைகளைப் படிக்கும் போது, இனிய குளிர் நீர் அருவியிலே குளித்தெழுகின்ற அநுபவம் ஏற்படு கின்றது. அவரது கவிதைகள் வாசகரின் உள்ளங்களை நிறைக்கின்றன. மனம் போன போக்கிற் செயற்படும் கவிஞர்களிற் சிலரைப் போல அல்லாது, ஓசை வழிப்பட்ட கவிதை களைப் பொருளாழத்துடன் இலாவகமாகப் படைத்தளிக்கிறார்.
இத்தொகுதிக் கவிதைகளில் கண்ணிரின் பாடல், வேர், துணை, துயர அனல், ஓமமும் வேள்வியும், அபிமான வீரன், வெளிப்பு, மனக்காயம், பாட்டனும் பேரனும், வெளிநாட்டுப் பறவைகள், நீ இட்ட சாபம், ஒர் அறிவு நட்பு, ஆறுதல், நின்னைப் புரிதல், மேலாண்மை, மனஅவதாரம், வாழ்க்கைப் புதிர், பாசக்கயிறு, நிஜம், குரு முதலான கவிதைகள் சிறந்து விளங்குகின்றன. இக் கவிதை களில் அநுபவ வெளிப்பாடுகளுடன் இணைந்து தனிமனித உணர்வுகள் முதன்மை பெற்றுத் திகழ்கின்றன. இவற்றுள் பாட்டனும் பேரனும், நிஜம் முதலானவை அநுபவச் செழுமையை அருமையாகப் புலப்படுத்துகின்றன. இத்தொகுதியிலுள்ள வேறு சில கவிதைகள் ஜெயசீலனைச் சரிவரக் காட்டவில்லை; சாதாரணமாகவே அமைந்துவிட்டன.
ஈழத்தில் சில கவிஞர்கள் விமர்சகர் களின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கு இப்படிப்பட்ட கவிதைகள்தான் பிடிக்கும் எனத் தப்பாகக்
கற்பனை செய்து, செயற்கையாகக் கவிதைகள் பண்ணுவது உண்டு. அவர்களது உணர்வுகளுக்கும்,
6l

Page 33
அவர்களின் கவிதைகளுக்கும் எத்தகைய தொடர்பும் இருப்பதில்லை. ஜெயசீலனின் கவிதைகளில் அத்தகைய செயற்கைப் பின்னல்கள் இடம் பெறுவதில்லை. அதனால், அவரால் சுயமாகப் பிரகாசிக்க முடிகிறது. ஈழத்துக் கவிதைக்குத் தேவையானதும் அதுதான்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுத்துப் பிழையின்றி எழுதுவது முக்கியமானது. ஜெயசீலனின் கவிதைகளிலும் ஆங்காங்கு எழுத்துப் பிழைகள் சில இடம் பெற்றிருக் கின்றன. உதாரணமாகக் கைகோர்ப்பு,
தன்னிஷ்ட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கைகோப்பு, தன்னிஷ்டம் என்றுதான் அந்தச் சொற்கள் இருக்க வேண்டும். வளர்ந்து வரும் கவிஞர், இச்சிறு குறைகளைத் தவிர்த்துக் கொள்வதே நல்லது.
எதிர்கால ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு ஜெயசீலனின் கவிதைகளையும் சேர்த்துப் பேசப் போகிறது. ஆனால், கவிஞர் தடம் புரளாமல் கவனமாக நடை பயில வேண்டும்.
- நக்கீரன்
முதிர்விருட்சலம்
காவத்தையூர்
இளமை உதிர்ந்த - இந்த முதிர் விருட்சம் முன்பொருநாள் - தன் நாற்றுகள் நலம் கொழிக்க எடுத்த முயல்தல்கள்
- மகேந்திரன்
கரங்களில் இன்றும் இறுகிப்போய்.
முதுமை தவ முடிவுவரை செழுமையாய் வாழ்ந்துவிட,
உதவுமென்ற உணர்கையெலாம்
சிதைவுற்ற துகள்களாய்.
நடத்தலுக்கான வரம் இழந்தும்
இருத்தலுக்காய் - தினம் மகன், மகள் வீடழைந்து களைத்துக் கிடக்கும், இந்த கிழக்குதிரை மெளனமாய் அழுதது நாளைய முதிர்வில் தீபட போகும் தன் சிசுக்களுக்காய்.
O
ஞானம் - செப்டெம்பர் 2004
 

2) வாதஆா
yırır ---Alnarır.Fırı (gII-Jia30IIfi
அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு,
வணக்கம் ஞானம்' (50 வது இதழ்) பொன்மலர் உரிய காலத்தில் கிடைக்கப்பெற்றேன். அனுப்பியதற்கு நன்றி. மகிழ்ச்சி ஞானம் இலக்கியச் சஞ்சிகை, நல்ல தரமான இதழாக, 50 இதழ்கள் மலர்ந்து, பொன் மலரை பொலிவோடும் மணத்தோடும் வெளிக்கொணர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. ஞானம் ஈழத்து இலக்கியம் பற்றிய உணர்வோடும், தரம் பற்றிய அக்கறையோடும் தயாரிக்கப்பட்டு வருவது உங்கள் இலக்கிய ஆர்வத்தையும் இலட்சிய தாகத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இம் முயற்சியில் நீங்கள் நல்ல வெற்றி கண்டிருப்பதை ஞானம் இதழின் மலர்ச்சியும் வளர்ச்சியும் புலப்படுத்தும். பொன் மலரில் இடம் பெற்றுள்ள ஞானம் சஞ்சிகையின் நான்கு ஆண்டு அறுவடை' என்ற வ. இராசையா கட்டுரை ஞானம் இதழின் சாதனைகளை நன்கு எடுத்துக்காட்டுகிறது. 'நேர்காணல் மூலம் ஞானம் நற்பணி ஆற்றி வருகிறது. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் கருத்துக்களை வரலாற்றுப் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருவது மிகமுக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந் நேர்காணல் பதிவுகள் மூலம் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, ஈழத்தின் (இலங்கையின்) கலை இலக்கிய நாடகங்களின் வளர்ச்சி தற்கால நிலைமைகள் பற்றி எல்லாம் அரிய செய்திகளை வாசகர்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது. வேறு எந்தத் தமிழ் சஞ்சிகையும் இப்படி ‘நேர்காணல் ஒன்றை தொடர் அம்சமாக வெளியிட்டதில்லை. இது ஞானம் இதழுக்கு தனிப் பெருமை சேர்ப்பதாகும். இன்றைய இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய அறிமுகக் கட்டுரை பயனுள்ளது. ஞானம் இலக்கிய நண்பர் கே. கணேஷ் பற்றி சிறப்பிதழ் வெளியிட்டு, அவரது நேர்காணலை விரிவாகப் பதிவு செய்தது ஒரு நற்பணி ஆகும். அம்மலை விளக்கு அணைந்தது பற்றிய குறிப்பு உள்ளத்தைத் தொடுகிறது. கவிதைகள் நன்று. இதர கட்டுரைகளும் சிறுகதைகளும் படித்து ரசித்து பாராட்டப்பட வேண்டியவை. ஞானம் தனது கலை இலக்கியப் பணியில் மேலும் சிறப்புடன் முன்னேறுவதற்குக் காலம் துணைபுரியட்டும். வாழ்த்துக்கள்.
ஞானம்' சஞ்சிகைக்கு எழுதும்படி கேட்டிருக்கிறீர்கள். நன்றி. ஆகஸ்ட் இறுதிக்குள் எழுதி அனுப்புவேன். காலம் மிகு வேலைப்பழுவை என்மீது சுமத்தியவாறு நகர்கிறது. என்னால் இயன்றதை செய்து கொண்டிருக்கிறேன். தாமதம் தவிர்க்க இயலாதது ஆகிவிடுகிறது. அதனாலேயே உங்களுக்குக் கடிதம் எழுதுவதிலும் தாமதம்,
நலமாக இருக்கிறேன். நலமே நாடுகிறேன்.
அன்பு, வல்லிக்கண்ணன்
கானம் - செப்டெம்பர் 2004 6

Page 34
ஞானம் ஆசிரியர் அவர்களுக்கு.
இந்த வருடத்திவிருந்து சஞ்சினிகளபப் படித்து வருகின்றேன். தரபான படைப்புகளைத் தாங்கி வருகின்றது. மகிழ்ச்சி.
50 ஆவது இதழ் பொன் மலர் இதழாக கூடிய பக்கங்களுடன் வந்துள்ளது. வ. இராசையாவின் "ஞானம் சஞ்சிகையின் நான்கு ஆண்டு அறுவடை” என்ற கட்டுரை மூலம் ஞானம் பற்றிய முழுத் தகவல்களையும் அறியக் கூடியதாக இருக்கிறது. ஓரிரு சிறுகதைகள், கவிதைகள் தரமிழந்து காணப்படுகின்றன. புதியவர்களை அறிமுகப்படுத்தும் அதேவேளை தரமும் பேணப்பட வேண்டும்.
மேலும் சிறப்புற எனது வாழ்த்துக்கள்.
அன்டர்ன், ஸ்ருதி, அவுஸ்திரேலியா.
ஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட் 2004இல் வெளிவந்த 5i-வது இதழில் "சமகாலக் கலை இலக்கிய நிகழ்வு" என்ற தலைப்பில் செ. சுதர்சன் எழுதிய குறிப்பில் "மலையக ஜீவாவின் மணிவிழா” என்ற தலைப்பில் இடம் பெற்ற தகவலில் பேராசிரியர் எம். சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றிய எழுதிய குறிப்பில் - உலகப் புகழ்பெற்ற வீரர் முத்தையா முரளிதரனின் பெற்றோர் கெளரவிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வில் அந்த நிகழ்ச்சி இடம்பெறவில்லை. காரணம் முத்தையா அவர்களின் தாயாரும் கிரிக்கெட்விரரின் பாட்டியும் ஓரிரு தினங்களுக்கு முன்னர் அமாத்துவம் அடைந்து விட்டார்.
அந்தரிஜீவா, கண்டி.
'ஞா னம் ஒரு கனதி மிகுந்த சிற்றிலக்கிய மாசிகை என்பதை அதன்கண் பிரசுரமாகும் ஆக்கங்கள் அனைத்தும் நிரூபித்திருக்கின்றன. படித்து முடிக்கும்போது பரபதிருப்தி ஞானம் ஈழத்து இலக்கியவுலகில் அழிக்கவியலாத தடம் பதிக்கும் நாம் விழுந்து விழுந்து படிக்கும் சில இந்தியச் சஞ்சிகைகள் போல ஆழமான தடம் பதிக்கும் நமது ஞானம் என்கின்றேன் நான்,
தொடர்ந்து ஞானம் நல்லிலக்கியச் செய்திகளுடன் வெளிவர மேலோனின் துணைமிகத் தேவை. ஞானத்திற்கு மட்டுமல்ல நமது நல்வாழ்வுக்கும் தேவைப்படும் அவ்வருளைக் கேட்டுப் பெறுவோம்.
என்றும் அன்புடன், ஏ. எம். எம். அவி
குரானம் ஆசிரியர் அவர்களுக்கு,
ஒரு காலத்தில் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள் தேட வேண்டிய தாற்பரியம் எம் வாசகர்களிடம் இருந்தது. அத்தேவையை "ஞானம் பூர்த்தி செய்வதையிட்டு உண்மையிலேயே புளகாங்கிதம் அடைகிறேன்.
என்றும் அன்புடன், பெரிய, ஐங்கரன்
. ஆாரம் - செப்டெம்பர் 2004

༧༽ /”ཚོ་ཉི/ པོ༽/ཡོ་ཚོ༽/ ༧༽/་ཚོའི་ཉེ་gf ༧༽ / ཡི་ཚོ་དེ་(॰)
R t (SÈ CENTRAL ESSENCE, t
SUPPLIERS c. c -് : DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES, 8 FOOD COLOURS AND SCENTS ETC. Sts 52 g 76/B, KING STREET, KANDY. s g TEL : 081 – 2224187, 081 - 1471563 ඉර්ට් رهf-\رچيچfرېيمهمf-\رچينو چارټيچf-\چاربي ༩ཞི་༼ཞི་༼དི་ཉི་
ᎦyᎵ*ᏙᎵᏉvᎵ°ᏙᎵᏉvᎵ*vᎵᏉvᎵ*vᎵᏉvᎵᏉvᏰ.
CARSONS MEGA
(
o CERAMICS
艇C) Inporters & Distributors of - Wall Tiles, Floor Tiles, High Quality 患 萎 । Sanitary wares, Bathroom. Accessories, P. V. C. 邸 And Hot Water Pipe Fittings
A-74, Coloninbo Street
Kandy, Sri Lanka.
O) Tel: 081 - 4476760, 081 - 2200052
Fax : 081 - 22OOO52
C
it - ہے ۔ (offرچينېf\رچينه همکارتونfرچينېf\ريږي همکارتونfA

Page 35
GNANAM
ഴ്ച് Rest Corps interris
Gluckyland Manufa CKuy1dc
c Phong O81
OS
O31
GN Fax O81 షో LLuck
இச் சஞ்சிகை ಕೌಟ್ಸ್ಟ அவர்களால் :
" என் ப்ளாக்கிங் பாவச்

SEPTEMBER
سي٣٦"]
۵))(ال
- N
cܓܶ s (Biscuit 3 Citu 1721”S
Isac.
242O217
- 242O574
222 WO41
- 212O74O (ε
yland Oshnet.ik.
ஜ. டிங் & புரூமெண்டான் வீதி, கொழும்பு 3
" " . வெளிாபி ப்பட்டங்