கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.10

Page 1
ஞானம் இ R é9LIDT LEGDIT
 

மியூர் க. சதாசிவம்

Page 2
ekTk L eOLL LekLzLL LLLLS TOOLL ekeke eTeL LLk TOLL kk OY OkSY eOkek Y Lk eOkL kk zO
邻 POOBALASINGHAM
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS SELLERS 8. PUBLISHERS OF BOOKS STATIONERS AND NEWS AGENTS.
Head Office : Branches : 340,202 Sea Street, 309A-2/3, (Galle Road, Colombo 11, Sri Lanka. Colombo 06, Sri Lanka. Tig : 2422321 Tel.: 4-515775, 2504266 Fax. 2337 313 SS E-mail : pbdho@sltnet. Ek 4A, Hospital Road,
Bus Stand, Jaffna,
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
•ಘೇಛಿlà: fissIjar: இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309 A-23, காலி வீதி, கொழும்பு 11, இலங்கை. கொழும்பு 08, இலங்கை தொ. பே. 2422321 தொ. பே. 4-515775 தொ. நகல் 2337313 Sleisroots fi : pbdho?stret.lk இல. AA, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பாணம்,
LTeSekL Y LkL Y seL zB skL zB sk Y kLk YL LkLk z Lek Y sukL Y kk YLkL z sk z sek zsskeLe
 

பகிர்தலின்
ιp oυ ί
விரிவும் ஆழமும்
பெறுவது
ஞானம்.
பிரதம ஆசிரியர் : தி. ஞானசேகரன்
இணையம் பதிப்பு ஆசிரியர் :
ஞா. பாலச்சந்திரன்
ஓவியர்கள் : цбіошп நா. ஆனந்தன்
அட்டைப்பட ஓவியம் ! цбіошп
நிர்வாகம் :
கெ. சர்வேஸ்வரன்
தொடர்புகளுக்கு .
தி. ஞானசேகரன் 197, பேராதனை வீதி,
5 000 Lt.
& Telephone - 081-2478570 (Office)
08-2234.755 (Rcs.) Mike - OTTT-3OGSOG
Fix - (31-2-755
EM gnanam magazineayahoo.com
Lజ్E.H.:PHహి..హ్హి..హ్హి..హ్హి.
இதழினுள்ளே
நேர்கானல்
பேராசிரியர் சிவத்தம்பி
ார்). பொ.
சிறுகதை
புளியங்குளம்
- இனாமா,அப்துல்iாண்
கவிதைகள்
நம்பிக்கைகள்
தாட்ா 13ரி கூச்சல் அடங்காத கூடு
- சி.விஞர் ஏ. எம். எம். தூபி இழப்பின் மீதான பாடல்
- முல்லை முள்ளிபா சரித்திர வழக்கு
- ஒட்டப் படிதம் எரிாவை உண்டாவது எப்படி?
- கவிஞர் ஏ. இக்ான் பாட்டி வருவாளா கதைகூற.
- நெவ்ான் போகாராஜ்
கட்டுரைகள்
என்னைக் காபப்படுத்திய.
-ழந்தக ரீவா இவைக ஆசிரியராக .
தி. ஞானசிேன் மு. பொ. வை எவ்வாறு. - சி, துள் புனைகதை இலக்கியம் .
- செங்கை ஆழியான் நிலவிலே பேச என்ளை.
- வ. சிதம்பரநாதன் எழுதத் துண்டும் வான்ெ வினை.
- துரை. மனோகரன் சமகாவி கலை இலக்கிய
- செ. சுதர்சன் நூல் மதிப்புரை வாசகப் பேசுகிறார்
H
5
3
.
53
5
fi |

Page 3
ജുബ്ബ്
ീഗ്ഗ
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம் .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
گر
மலையக இலக்கியம் புத்தூக்கம் பெறவேண்டும்
"இலங்கையின் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய இரத்தம் பாய்ச்சுவது மலையக இலக்கியமே” என்று குறிப்பிட்டார் பேராசிரியர் கைலாசபதி. 60களில் மலையகத்தில் எற்பட்ட விளிப்புணர்ச்சியையும் அதன் பேறாகத் தோன்றிய இலக்கிய எழுச்சியையும் அவதானித்த பின்னரே அவர் அவ்வாறானதொரு கணிப்பினை முன்வைத்தார். அக்காலத்தில் வெளிவந்த சிறுகதைகளே மலையக இலக்கியத்தின் செழுமைக்கும் அங்கீகாரத்துக்கம் ஆதாரமாய் அமைந்தன.
மலையக இலக்கியத்தின் முன்னோடி இலக்கிய கர்த்தாவாக தேசபக்தன் கோ. நடேசையர் கருதப்படுகிறார். அவர் 1931இல் எழுதிய திரு ராமசாமி சேர்வையின் சரித்திரம்’ மலையகத்தின் முதலாவது சிறுகதையாகக் கொள்ளப்படுகிறது. அடுத்து வந்த காலப்பகுதியில் சி.வி. வேலுப்பிள்ளை, கே. கணெஷ் ஆகியோர் மலையகத்தின் முக்கிய படைப்பாளிகளாகக் கணிக்கப்பட்டனர்.
1961இல் கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் திருச்செந்தூரன் எழுதிய 'உரிமை எங்கே? என்ற சிறுகதைக்குப் பரிசுகிடைத்தது. அந்நிகழ்வானது இலக்கிய ஆர்வலர்களை மலையகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தது. அச்சிறுகதைக்குக் கிடைத்த பரிசு மலையக எழுத்துலகிற்கு ஓர் உந்து சக்தியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இலக்கிய விளிப்பின் திடீர்க்குமுறலாகத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தோன்றினர்.
என். எஸ். எம். ராமையா, இரா. சிவலிங்கம், தெளிவத்தை ஜேசப், சாரல் நாடன், மு. சிவலிங்கம், மு.நித்தியானந்தன், மல்லிகை சி. குமார், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன்பன், மொழிவரதன், சி. பன்னீர் செல்வம், நூரளை சண்முகநாதன், பி. மரியதாஸ், நயிமா ஏ. சித்திக். பூரணி, ஏ.வி.பி.கோமஸ் கே. கோவிந்தராஜ், பரிபூரணன், அல் அஸ"மத், அந்தனி ஜீவா, சடகோபன் அன்புச்செல்வன், பாலா சங்குப்பிள்ளை எனப்பட்டியல் நீளும்.
தெளிவத்தை ஜேசப்பின் நாமிருக்கும் நாடே, என்.எஸ்.எம். ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து, மு. சிவலிங்கத்தின் மலைகளின் மக்கள், மலரன்பனின் கோடிச் சேலை ஆகிய மலையகச் சிறுகதைத் தொகுதிகள் சாகித்திய மண்டலப் பரிசில்களைப் பெற்றன.
2 ஞானம் - ஒக்டோபர் 2004
 
 
 
 
 
 
 

60களில் ஏற்பட்ட எழுச்சியின் இன்னொரு உடனடி விளைவாக 1965இல் குறிஞ்சிப்பூ என்ற கவிதைத் தொகுதி வெளியாகியது. இதுவே மலையகத்தின் முதலாவது கவிதைத் தொகுதியாகும். நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பிலே இடம்பெற்றன.
கவிஞர்களில் குறிஞ்சித்தென்னவன், சு.முரளிதரன், தமிழோவியன் பண்ணாமத்துக் கவிராயர், குறிஞ்சிநாடன், பானா தங்கம், லிங்கதாசன், மரியதாசன், புசல்லாவை இஸ்மாலிகா, இரா. நித்தியானந்தன், செல்வராஜ், அன்புச் செல்வன், இராகலை பன்னிர்செல்வம், ராம சுப்பிரமணியம், மூக்கன், ஈழக்குமார், மலைத்தம்பி, ராம்ஜி, உலகநாதன், வெலிமடை றபீக் இப்படியாக இன்னொருபட்டியல்.
தமிழோவியன் கவிதைகள்’ கவிதைத்தொகுப்பு சாகித்தியப் பரிசினைப் பெற்றது.
60களில் தோன்றிய இலக்கிய எழுச்சி 80களின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்து தற்போது கீழ்நிலையை அடைந்துள்ளது. 80க்குப் பின்னர் தோன்றிய சிறந்த மலையகப் படைப்பாளிகள் என்று ஒரு பட்டியலைத் தரமுடியாத நிலை தோன்றியுள்ளது. கடந்த இருபது வருட காலப்பகுதியில் மலையக மண்ணிலிருந்து ஒரு சிறந்த சிறுகதையாசிரியரோ கவிஞரோ தேன்றவில்லை. மலையக மண்ணிலிருந்து ஒருநாவல் வெளிவரவில்லை. இவை கசப்பான உண்மைகள். விரல்விட்டு எண்ணக்கூடிய புதுக் கவிதையாளர்கள் தோன்றியிருப்பினும் அவர்களும் வளர்ச்சியடைய வேண்டிய நிலை யிலேயே இருக்கின்றனர்.
இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இலக்கிய வளர்ச்சிப்போக்கு என்பது ஒரு சங்கிலித்தொடர். அஞ்சல் ஒட்டம் போன்றது. ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் அடுத்துவரும் தலைமுறையினருக்கு எழுத்தின் தொடர்ச்சியைக் கையளிக்கவேண்டும். இன்றைய மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டவோ ஊக்கங் கொடுக்கவோ எவ்வித முயற்சிகளும் எடுப்பதில்லை. தம்மைப்பற்றியே பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள் என்ற குரல் மலையகத்தின் இளந் தலைமுறையினரிடமிருந்து ஓங்கி ஒலிக்கிறது.
மலையகக் கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் இலக்கிய உணர்வை மாணவர் களிடையே வளர்த்தெடுக்கக்கூடிய தகுதியற்றவர்களாக இருக்கின்றனர் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. மலையகத்தின் மூத்த எழுத்தாளர்கள் பலருக்கு ஆசிரியர்களே இலக்கிய உணர்வை எற்படுத்தினார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது. ஒலி, ஒளி ஊடகங்களின் ஆதிக்கம் மலையகத்திலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பிறிதொரு குற்றச்சாட்டு. சமுதாயவளர்ச்சியில் தேக்கநிலை தோன்றும்போது இலக்கியத்திலும் களப்பிரர் காலம் தோன்றும் என்பது வரலாற்று நியதி.
எது எவ்வாறாயினும் மலையகப் படைப்பாளிகள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள் இது பற்றிச் சிந்தித்து, இதற்கான காரணங்களைக் கண்டறிந்து காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது என்பதை ஞானம் அழுத்திக் கூறவிரும்புகிறது.
O O O
ஞானம் - ஒக்டோபர் 2004

Page 4
*ஞானம் ? இணை ஆசிரியர் புலோலியூர் சதாசிவம் - நெஞ்சைவிட்டகலா நினைவுகள்
தி. ஞானசேகரன்
புலோலியூர் க. சதாசிவமும் நானும் நண்பர்கள். 1962ஆம் ஆண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பயிற்சிக்காக நாங்கள் தெரிவு செய்யப்பட்ட போது ஆரம்பித்த நட்பு கடந்த நாற்பத் திரண்டு வருட காலத்தில் எங்கள் இருவரிடையேயும் ஆழ்ந்த பிணைப்பினை ஏற்படுத்தியிருந்தது. f கடந்த செப்ரெம்பர் 15ஆம் திகதி அதிகாலை இரணர் டு மணியளவில் புலோலியூர் சதாசிவம் இறந்துவிட்டார் என்ற செய்தி தொலைபேசிமூலம் எனக் குத் தெரிவிக்கப்பட்டது. நான் அதிர்ந்துபோனேன். என்னால் அதனை நம்பவே முடியவில்லை. அதற்குப் பன்னிரண்டு மணிநேரத்திற்கு முன்னர்தான் சதாசிவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் கொழும்பு செல்வதாகவும் கொழும்பில் தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியிருந்தார். அவரது மரணச் செய்தி மின்னாமல் முழங்காமல் விழுந்த இடியாக எனது நெஞ்சிலே இறங்கியது.
சதாசிவத்தினுடனான எனது முதற் சந்திப்பு இன்றும் என்மனதில் பசுமையாக இருக்கிறது. அது ஒர் இலக்கியச் சந்திப்பாகத்தான் அமைந்தது. 1961ஆம் ஆண்டு "மரகதம்’ என்ற சஞ்சிகையின் ஆதரவில் இலக்கிய ரசிகர்குழு நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற அவரது ‘புதுவாழ்வு என்ற சிறுகதையை என்னிடம் தந்து, அக்கதையைப்பற்றிய விமர்சனத்தைக் கேட்டிருந்தார். அதுவே அவர் எழுதிய முதற் கதை. அக்கதையை எழுதியபோது அவருக்கு வயது பத்தொன்பது.
அன்று தொடக்கம் எனது படைப்புகளை அவரும் அவரது படைப்புகளை நானும் வாசித்துக் கருத்துக்கள் பரிமாறி, திருத்தங்கள் செய்த பின்னரே பிரசுரத்துக்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். இலக்கியப் பாரம்பரியங்கள், இலக்கிய உலகில் எற்படும் மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், கருத்தோட்டங்கள் போன்றவற்றையெல்லாம் நாங்கள் பேசிப் பேசித் தெளிந்து எங்களை வளர்த்துக்கொண்டோம்.
ஞானம் - ஒக்டோபர் 2004
 

சதாசிவம் 20-03-1942இல் புலோலியைச் சேர்ந்த புற்றளையில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியைப் புலோலி புற்றளை மகாவித்தியாலயத்திலும் பின்னர் புலோலி வேலாயுதம் பாடசாலையிலும் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பெற்றவர். தான் பிறந்த கிராமத்தின் பெயரைத் தன்பெயரின் முன்னால் சேர்த்து எழுத்துப்பணியில் ஈடுபட்ட சதாசிவத்திற்கு, அவர் இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்தில் நேரடி வழிகாட்டியாக யாருமே இருக்கவில்லை. அவரது சுய முயற்சியும், அவர் பிறந்து வளர்ந்த இலக்கியச் செழுமைமிக்க புலோலியூரின் பின்னணியும், அவர் இளம் வயதிலே எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி இழையோடிய வாழ்க்கை நிலையும், அவரது சிந்தனையில் சமூக முரண்பாடுகள் பற்றி எற்பட்ட தாக்கமும் அவரை எழுதத் தூண்டின. அன்று வடபுலத்தில் துலாவோடி நீர்பாய்ச்சி புகையிலை, உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, உழைப்பாளி களின் உதாரண புருஷனாக விளங்கி, நாலு பேரால் நாணயமான மனிதன் என மதிக்கப்பட்ட, தனித்துவ ஆளுமை கொண்ட அவரது தந்தையே அவரது ஆளுமைக்கு வித்திட்டவர்; தோன்றாத் துணையாக நின்றவர். இதனைச் சதாசிவம் அடிக்கடி நினைவு கூர்வார். அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான யுகப் பிரவேசம் 1973இல் வெளிவந்தபோது, அந்த நூலைத் தனது பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்த சதாசிவம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
உற்றமணற் குரமுட்டி விதைகள் நாட்டி
உயர்ந்தபனந் துலாவோடி நீரும் பாய்ச்சி மற்றோரை உண்பித்துத் தானு முண்டு
மைந்தரையும் அவையினிலே முந்த வைத்த நற்திறன்சேர் வேலப்பர் கந்தையா அன்னான்
நாயகியாள் அன்னையுமையாத்தைப் பிள்ளை பெற்றவருட் தெய்வமிவர் இவர்க்கிந் நன்னூல்
பெருமையுடன் சமர்ப்பணம்நான் செய்கின்றேனே.
1971இல் இலங்கைக் காப்புறுதிக் கூடடுத்தாபனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது 'பித்து' என்ற சிறுகதைக்கு முதற்பரிசான தங்கப் பதக்கம் கிடைத்தது. அதே போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அந்தக் காலகட்டத்திலேதான் சதாசிவத்தின் திருமணமும் எனது திருமணமும் நடந்தேறியிருந்தன. பரிசளிப்புவிழாவுக்கு நாங்கள் இருவரும் குடும்ப சமேதரராகச் சென்று ஒரே மேடையில் பரிசில்கள் பெற்று, அதன் பின்னர் சேர்ந்து நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தது இனிய நினைவாக இன்றும் என்மனதிலே பதிந்துள்ளது.
குரணம் - ஒக்டோபர் 2004

Page 5
தனது படைப்பு நோக்கம் பற்றி சதாசிவம் இவ்வாறு குறிப்பிடுவார். "வாழ்க்கையிலே காணப்படும் முரண்பாடுகளினடியாகத் தோன்றும் நசிந்து நலிந்து போகும் மக்களையும் அவர்களது மன நிலைகளையும் மனிதாபிமானத்துடனும் எதிர்கால வளர்ச்சியில் தெளிவும் நம்பிக்கையும் கொள்ளும் மனப்பான்மையுடனும் நோக்குகிறேன். யதார்த்த நோக்கே எனது கதைகளின் அச்சாணியான அம்சம் என்பேன். எனது ஆக்கங்கள் வெறும் பொழுது போக்குக்காகப் படைக்கப்படவில்லை.”
1964ஆம் ஆண்டில் மலையகப் பகுதியில் வைத்தியராகக் கடமையேற்ற சதாசிவம், திஸ்பனை, கற்ற பூலா, டயறபா ஆகிய பெருந்தோட்டங்களில் நாற்பது ஆண்டுகள் கடமையாற்றிய பின் சேவையிலிருந்து இளைப்பாறினார். அதன் பின்னர் தனியார் டிஸ்பென்ஸரி ஒன்றை நிறுவி இறக்கும்வரை மலையக மக்களுக்கே சேவையாற்றிக் கொண்டிருந்தார். மலையகத்திலே தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த சதாசிவம், மலையகத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள், துன்பங்கள், ஆகியவற்றை அனுதாபத்ததுடன் நோக்கினார். அம்மக்களது முன்னேற்றத்துக்காகப் பலவழிகளிலும் உழைத்தார். அம்மக்களில் ஒருவனாக வாழ்ந்து, அவர்களது வாழ்க்கையை ஆழமாகவும் நுணுக்கமாகவும் நோக்கி இலக்கியம் படைத்தார்.
1972ஆம் ஆண்டில் நாவலர் சபை நடத்திய சிறுகதைப் போட்டியில் சதாசிவத்தின் ஒருநாட் பேர்’ என்ற சிறுகதை முதற்பரிசு பெற்றது. மலையகப் பெண்தொழிலாளி ஒருவர் ஒரு நாள் சம்பளத்தைப் பெறுவதற்குப் படும் கஷ்டங்களையும், எதிர் நோக்கும் பிரச்சனைகளையும், பாலியல் ரீதியானதும் வேறுவகையானதுமான சுரண்டல்களையும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுவதாக அச்சிறுகதை அமைந்தது. சதாசிவம் படைத்த உன்னதமான சிறுகதைகளுள் அதுவும் ஒன்றாகும். அக்கதை பின்னர் ஜேர்மன், பிரான்ஸ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. மலையக மக்களின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு சதாசிவம் வேறும் பல கதைகளைப் படைத்துள்ளார். அச்சிறுகதைகள் அடங்கிய தொகுதி 1995ஆம் ஆண்டில் 'ஒருநாட் பேர்’ என்ற மகுடத்தில் வெளியாகியது. இத் தொகுதி மலையகத்தில் பிறக்காத பிறமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரால் வெளியிடப்பட்ட ஒருேயொரு மலையகச் சிறுகதைத் தொகுதி என்ற பெருமையைப் பெற்றது.
1973ஆம் ஆண்டு தமிழ் சாகித்திய விழா தொடர்பாக இலங்கை கலாசாரப் பேரவை நடத்திய இலக்கியப் போட்டியில் சதாசிவத்துக்கு ஓரங்க நாடக எழுத்துப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் பரிசில்கள் கிடைத்தன. இவற்றைவிட வானொலி நாடகப் பிரதியாக்கம் கட்டுரையாக்கம் என்பவற்றிற்கும் இவர் பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
ஞானம் - ஒக்டோபர் 2004

சதாசிவம் எழுதிய முதலாவது நாவல் நாணயம். 1980இல் வெளிவந்த இந்நாவல் வடமராட்சி வாழ்க்கையின் சில அம்சங்களை மிகத்திறமையாகப் படம்பிடித்துக் காட்டுகின்ற பிரதேசப் பண்பு வாய்ந்த நாவலாகும். சதாசிவம் தனது தந்தையைத்தான் இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமாக உருவகித்துள்ளாரோ என நான் நினைப்பதுண்டு. இந்த நாவலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.
அக்காலகட்டத்தில் தொடர்ந்து சிலகாலம் சாகித்திய மண்டலம் இயங்காமல் இருந்தது. மீண்டும் இயங்கத் தொடங்கியபோது, விடுபட்ட காலப்பகுதியில் வெளிவந்த நூல்களுக்கும் சேர்த்துப் பரிசுகள் வழங்கப்பட்டன. எனது "புதிய சுவடுகள், ‘குருதி மலை ஆகிய இரண்டு நாவல்களுக்கும் சாகித்தியப் பரிசுகள் கிடைத்தன. நானும் நண்பனும் ஒரே மேடையில் அரசகெளரவம் பெற்றது எங்கள் இருவரது வாழ்க்கையிலும் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்ததோடு எமது இலக்கிய வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது.
1983இல், மூட்டத்தினுள்ளே என்ற மலையக நாவலை சதாசிவம் எழுதினார். இந்நாவல் வீரகேசரி நடத்திய பிரதேச நாவல் போட்டியில் மலையகப் பிராந்தியப் பரிசு நாவலாக வெளிவந்தது. அத்தோடு அவ்வாண்டில் வெளிவந்த சிறந்த நாவலுக்கான இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுக் கொண்டது. மலையக LDist6ir இந்நாட்டுக்குள் அடியெடுத்து வைத்த நாள்தொட்டு அவர்கள் எதிர்கொண்ட சோதனையும் வேதனையும் நிறந்த வரலாறு இந்நாவலிலே இழையோடுகிறது. பிரதேச இலக்கியத்தின் ஒரு பரிமாணமாக சமூகவியல், மானுடவியல் ஆகிய அம்சங்களின் பகைப்புலத்தில் இந்நாவல் அமைந்துள்ளது.
1982ஆம் ஆண்டு அரச வர்த்தகக் கப்பற்றுறை அமைச்சின் ஆக்கவுரிமைப் பதிப்பகத்தின் சார்பாக நாடளாவிய ரீதியில் மும்மொழிகளிலும் இலக்கியப் போட்டி நடத்தப்பட்டது. தமிழ் மொழியில் ஆக்க இலக்கியத்துக்கான பரிசினை சதாசிவத்தின் சிறுகதைத் தொகுதி பெற்றுக்கொண்டது. ‘ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது என்ற தலைப்பில் அதனை நூலாகவும் அரசு வெளியிட்டுச் சிறப்பித்தது. பரிசாக ரூபா ஐயாயிரம் வழங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில், அதுவரையில் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகையுடைய பரிசு என அது கொள்ளப்பட்டது. 1983இல் பிரதேச அபிவிருத்தி அமைச்சு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. அப்போட்டியிலும் சதாசிவத்திற்கே முதற்பரிசு கிடைத்தது. 1993இல் கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுப் போட்டியிலும் 1995 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் தினகரனும் இணைந்து நடத்திய போட்டியிலும் அவரது கதைகளுக்குப் பரிசுகள் கிடைத்தன.
ஞானம் - ஒக்டோபர் 2004

Page 6
சதாசிவத்தின் இன்னுமொரு சிறுகதைத் தொகுதி ‘புதியபரிமாணம். இந்தத் தொகுதி வெளிவந்த பின்புலம் சுவாரஸ்யமானது. 1998இல் எனது 'அல் சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்' என்ற சிறுகதைத் தொகுதி மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்தது. நண்பர் சதாசிவத்தின் சிறுகதைத் தொகுதியொன்றும் அதே ஆண்டில் வெளிவரவேண்டுமென நான் விரும்பினேன். எனது விருப்பத்தைச் சதாசிவத்திடம் கூறியபொழுது, அவர் தயக்கம் அடைந்தார். வருடம் முடிவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் அது சாத்தியம் இல்லையென்றார். ஆனாலும் நான் விடவில்லை. ஒரு கிழமை லீவில் வந்து என்னுடன் தங்கியிருந்தால், நூலாக்கிவிடலாம் என்றேன். அது டிசம்பர் பாடசாலை விடுமுறைக்காலம். எனது மனைவி, பிள்ளைகள் எல்லோரும் வீட்டில் ஒய்வாக இருந்தார்கள். எனது மூத்த மகனும் இன்னொருவரும் கதைகளைக் கணனியில் பொறித்தார்கள். சதாசிவமும் எனது குடும்ப அங்கத்தவர்கள் யாவரும் சேர்ந்து “புறுாவ் பார்த்தோம். ஐந்தே நாட்களில் நூல் அச்சுக்குப் போகும் தயார் நிலையை அடைந்தது. அந்நூலின் முன்னுரையில் சதாசிவம் அதுபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இந்நூல் வெளிவருவதற்கு முழுமுதற்காரணமாய் இருந்து எனக்கு உத்வேகம் அளித்து நூலுருவம் பெற ஆவன செய்த உயிர் நண்பன் - நாடறிந்த நாவ லாசிரியர் திரு தி.ஞானசேகரன் அவர்களுக்கு எப்படி நான் நன்றி கூறுவது! எனது "புதிய பரிமாணம் எமது நட்பில் ஒரு புதிய பரிமாணம் - இலக்கிய உறவின் அழியாச்சின்னம்.”
அந்த ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் சிறந்தவை எனச் சதாசிவத்தின் ‘புதிய பரிமாணமும், எனது "அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் இலங்கை இலக்கியப் பேரவையால் தெரிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியப் பெருவிழாவில் நாம் இருவரும் ஒரே மேடையில் பரிசு வழங்கிக் கெளரவிக்கப்பட்டோம். இதுவே நாங்கள் இருவரும் கடைசியாகச் சேர்ந்து பெற்ற கெளரவமாக அமைந்துவிட்டது. ஆம்! இலக்கிய உறவின் அழியாச் சின்னம் என்று நண்பன் குறிப்பிட்டது எவ்வளவு அர்த்தமுள்ளதாகிவிட்டது.
எழுத்தையும் மருத்துவத்தையும் இணைத்து வாழ்வியலை நோக்குபவர் சதாசிவம். வைத்தியத் தொழில் தரும் அனுபவமும் பக்குவமும் அவரது கதைகளைப் படிக்கும்போது புலப்படுவதைக் காணலாம். "ஸ்டெத்தஸ்கோப்' மூலம் கேட்கும் தனிமனித இதய ஓசையின் பின்னால் ஒரு நுட்பமான கதையுண்டு என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். அவர் தனது தொழிலைத் தெய்வமென நினைப்பவர். தொழில் திறமைமிக்கவர். அவர் தொழில் புரிந்த
ஞானம் - ஒக்டோபர் 2004

மலையகப் பெருந் தோட்டங்களில் மட்டுமல்லாது சுற்றுப் புறக் கிராமங்களில் வாழும் பெரும்பான்மையின மக்களோடும் நன்கு பரிச்சயமாகி அவர்களால் மிக உயர்வாக மதிக்கப்பட்டவர். அவரது தொழில் திறமை காரணமாக 1991ஆம் ஆண்டில் ஐக்கியநாட்டுச் சனத்தொகைக் கட்டுப்பாட்டு நிதியம் அவருக்குப் புலமைப் பரிசில் வழங்கி, இந்தோனேசியாவில் நடைபெற்ற சுற்றுலாக் கரத்தரங்கில் பங்குபெற வழிசெய்தது. w
ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையை நான் ஆரம்பித்தபோது அவரை இணையாசிரியராகப் பணியாற்றும்படி வேண்டினேன். ஆனாலும் அவர் தொழிலிலிருந்து இளைப்பாறிய பின்னர் 2002ஆம் ஆண்டிலேதான் அவரால் ஞானம் சஞ்சிகையுடன் இணைந்து கொள்வது சாத்தியமாயிற்று. ஞானம் சஞ்சிகையின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு முக்கியமானது. ஒவ்வொரு இதழும் வெளிவரமுன்னரும் நாங்கள் கலந்து பேசுவோம். சேர்க்கப்பட வேண்டிய விடயங்களைத் தெரிவு செய்வோம். ஆசிரியத் தலையங்கங்கள் பற்றி விவாதிப்போம். எதிர்நோக்கும் பிரச்சனை களை அலசி ஆராய்வோம். இதழ்கள் வெளிவந்ததும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிப் பேசுவோம். ஞானம் இலக்கியப் பண்ணைகளை பிரதேசங்கள் தோறும் தோற்றுவித்து அவற்றினுடாக இலக்கிய ஆர்வலர்களையும் படைப்பாளிகளையும் நேரிலே சந்தித்து இலக்கிய மேம்பாட்டுக்கான பணிகளைச் செய்யவேண்டும் என்ற ஆலோசனையை முன்மொழிந்தவர் சதாசிவம்.
நீண்ட காலமாகவே இளம் எழுத்தாளர்களை ஊக்கி வளர்த் தெடுக்க வேண்டும் என்ற வேட்கையும், தான் புனைகதை இலக்கியப் போட்டிகளில் சாதனைகள் பல படைத்துப் பெற்ற பரிசுகளைச் சேமித்துவைத்த பணத்தை முதலீடாகக்கொண்டு இலக்கிய உலகம் பயன்பெறும் பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தன. அவற்றின் செயல் வடிவமே “ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டியாகும். அதற்கான பரிசுத் தொகையையும் பரிசுபெறும் தொகுப்பினை நூலாக வெளியிடும் செலவையும் வருடா வருடம் தானே வழங்க முன்வந்தார். 2003இல் சாரங்கா எழுதிய 'ஏன் பெண்ணென்று. என்ற சிறுகதைத் தொகுதி ஞானம் விருதினைப் பெற்றது. 2004இல் நூலாக வெளிவந்தது. அந்நூல் வெளியீட்டு விழாவினை யாழ்ப்பாணத்தில் சதாசிவம் அவர்களே முன்னின்று நடத்திவைத்தார்.
என்னுடன் அவர் கடைசியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, 2004 ஆம் ஆண்டுக்கான ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டிப் பரிசுத் தேர்வு முடிவடைந்துள்ளதாகவும் போட்டி முடிவினை ஒக்ரோபர் ஞானம் இதழில் வெளியிடவேண்டும் எனவும்,
ஞானம் ஒக்டோபர் 2004

Page 7
10
போட்டிக்கு வந்த கதைத் தொகுப்புகளைத் தான் கொழும்புக்கு எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். அவர் கொழும்புக்குப் பயணம் செய்வதற்கு வேறு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. லண்டனில் இருந்து இயங்கும் ‘பூபாள ராகங்கள்’ என்ற அமைப்பு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. இவ்வாண்டுக்கான போட்டியில் சதாசிவத்திற்கு இரண்டாவது பரிசான பத்தாயிரம் ரூபா வழங்கப்படவிருந்தது. அதனைத் தினக்குரல் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே அவர் கொழும்புப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். கொழும்புக்கு வரும்வழியில் காலன் அவரைக் கவர்ந்து விடுவான் என்பதை யார் கண்டார்கள்!
சதாசிவத்தின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி பல நிறுவனங்கள் அவரைக் கெளரவித்திருக்கின்றன. இந்து சமய தமிழ் அலுவல்கள் அமைச்சு 1991ஆம் ஆண்டில் ‘இலக்கிய வித்தகர்’ என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்தது. ஊவாமாகாண இந்து கலாசார அமைச்சு இலக்கியச் செம்மல்" என்ற பட்டத்தினை வழங்கியது. 1996இல் மலையக இலக்கியப் பேரவையும், 1999 இல் கண்டி மக்கள் இலக்கிய ஒன்றியமும் இவரது நீண்டகால மலையக இலக்கியச் சேவையினைப் பாராட்டிக் கெளரவித்தன. மல்லிகை தனது 1991 நவம்பர் இதழ் அட்டையில் இவரது படத்தைப் பொறித்து கட்டுரையும் வெளியிட்டுக் கெளரவித்தது.
இவரது, அக்கா ஏன் அழுகிறாய்? என்ற சிறுகதை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிங்களச் சிறுகதைத் தொகுதியொன்றிலே இடம் பெற்றுள்ளது. ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது என்ற கதை 'உழைக்கப் பிறந்தவர்கள் தொகுதியிலும், சந்தனக்கட்டை என்ற கதை மலையகப் பரிசுக்கதைகள் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் இலக்கிய தரம் வாய்ந்த சஞ்சிகை களான தாமரை, தீபம் ஆகிய இதழ்கள் இவரது கதைகளை விரும்பிப் பிரசுரித்துள்ளன.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்துப் புனைகதைத் துறைக்குக் கணிசமான பங்களிப்பினைச் செய்த சதாசிவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் 'அக்கா ஏன் அழுகிறாய்? என்ற மகுடத்தில் 2003இல் மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்துள்ளது. தனது மணிவிழாப் பரிசாக சதாசிவம் இந்நூலை வாசகருக்கு வழங்கியுள்ளார்.
மலையக மக்களின் முழுமையான வரலாற்றைப் பிரதிபலிக்கும் நாவல் ஒன்றை 'பத்திலொரு பங்கு என்ற தலைப்பில் எழுது வதற்கான ஆக்க வேலைகளில் ஈடுபட்டிருந்த சதாசிவம் அதனை எழுதுவதற்கு முன்னரே காலமானது மலையக இலக்கியத்திற்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலையாகும்.
ஞானம் - ஒக்டோபர் 2004

சதாசிவம் ஒரு சிறந்த இலக்கியவாதியாக மட்டுமன்றி, ஒரு சிறந்த வைத்தியனாக மட்டுமன்றி, ஒரு நல்ல குடும்பத் தலைவனாகவும் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார். அவரது மனைவி இலட்சுமிப்பிள்ளை அவரை மணந்த பின்னரே ஆசிரியை யானார். அவரது மகன் கலையழகன், மகனின் மனைவி குமுதினி, மகளின் கணவர் அருட்செல்வன் இவர்கள் எல்லோருமே டாக்டர்கள். அரசாங்க வைத்தியசாலைகளில் பணிபுரிகிறார்கள். அவரது மகள் கலைவாணி ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. சதாசிவத்திற்கு மகள் வழியாக கீர்த்திராஜ், ஸ்வேதிகா என இரண்டு பேரப்பிள்ளைகள். குடும்பம் என்ற தேரைச் சரியான முறையிலே இழுத்துவந்து சரியான இடத்திற்குக் கொண்டுவந்தவர் சதாசிவம்.
ஓர் ஏழையாகப் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, சிறந்த இலக்கியவாதியாக மிளிர்ந்து, ‘மிதிச்ச புல்லும் சாகாத மனிதனாக வாழ்ந்த சதாசிவம் மிகவும் அமைதியானவர், எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர்.
அவரது மறைவு இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும். நானும் சதாசிவமும் ஒரே கல்லூரியில் உயர்கல்வி பெற்றோம். ஒரே தொழில் புரிந்தோம். ஒரே பிரதேசத்தில் வாழ்ந்தோம். ஒன்றாக இலக்கியங்கள் படைத்தோம். ஒன்றாகப் பரிசில்கள் பெற்றோம். இதழியலில் ஒன்றாக இணைந்தோம். பரஸ்பரம் இன்ப துன்பங்களில் பங்குகொண்டோம். அவரது மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து, அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஞானம் கண்ணிர் அஞ்சலி செலுத்திப் பிரார்த்திக்கிறது.
பிரபல தொழிலதிபரும் இலக்கியப் புரவலரும்
ஞானம் சஞ்சிகையின்ஆதரவாளருமான லக்கிலாண்ட் எஸ். முத்தையா ஜே.பி. அவர்களின் பெற்றோர்கள் இருவரும் அண்மையில் இறைபதம் அடைந்தனர். அவர்களின்குடும்பத்தினருக்கு ஞானம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஞானம் - ஒக்டோபர் 2004
11

Page 8
\infபங்குmடு
அந்தப் புளியமரத்தை இப் பொழுது நினைத்தாலும் பயம். கன்னங்கரேலென்ற அடி. அடி வேர்ப்பகுதி உறுதியாய் மிக உறுதியாய் திரண்டு பருத்துப்போய்.
அதன் மேல் வைரவர் வீற்றி ருந்தார். எங்கே? எப்பொழுது என்றில்லாமல் வைரவர் கறுப்பாய் ஆ. வென்ற வாயுடைய நாயோடு
வீற்றிருந்தார். தெய்வானை ஆச்சியை வைரவர் அடிச்சுப் போட்டார். புளியமரத்துக்கு கீழே
ஆச்சி செத்துக் கிடந்தா.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது “சட்டி உடைச்ச ரீச்சர்” சொன்னா "புளியமரத்துக்கு கீழே இருக்கக் கூடாது அது கரியமல வாயுவை வெளியாக்கும்’ ரீச்சர்
பகலில்
சொன்னது எங்களுக்கு விளங்க வில்லை. சுகாதார ரீச்சர் அப்பிடித் தான் சொல்லுவா, ஏனென்றால் அவ படிச்சது அப்படி,
ஒரு நாள் சுகாதார ரீச்சர் “ஹோம்சயன்ஸ்” பாடம் எடுக்கும் போது சமைக்கும்போது மண்சட்டி ஒன்று உடைந்து போய்விட்டது. அதற்குப் பிறகு அவவுக்குச் சட்டி உடைச்ச ரீச்சர் என்றுதான் பெயர்.
நல்ல மனிசி. எங்களுக்கு ஒரு நாளும் அடித்தது கிடையாது.
12
இளைய அப்துல்லாஹ்
புளியங்குளம் அருமையானது. அதில் தண்ணிர் நிறைந்து நிற்கும்போது பார்ப்பதற்கு வலு சோக்காக இருக்கும். மானுருவிப்பக்கத்து வான் பாயும். தண்ணீர் வான்னிற்கு மேலால் போட்டு வைக்கும் மண் மூடைகளையும் மேவி பாயும். அதில் ஜப்பான், ஒட்டி, கெளுத்தி, விரால் மீன் குஞ்சுகள் துள்ளிப்பாயும்.
மானுருவி, கூழாமுறிப்பெல்லாம் எங்கள் குளத்துத் தண்ணிர் பாய்ந்து செழிப்பாக்கும். குளக்கட்டால் நடப்பது ஒரு தனி அழகு. கையை ஸ்ரேறிங் மாதிரி பாவித்து ட்றாக்டர் ஒடுவதில் யார் முந்துவது என்ற போட்டி எங்களுக்குள்ளே நடக்கும். மணிவண்ணன், சேகர், புஷ்ப்பராஜன், வவா, வவி, பிரேமா, நான் என்று ஒடுவோம். சிலநேரம் நான் முந்துவன். சிலநேரம் புஷ்ப்பராஜன்.
புளியமரத்துக்கு கீழால் ஒடுவதற்குப் பயம், வைரவர் அடித்துவிட்டாரென்றால் என்ன செய்வது. அம்மாவுக்கு நான் மட்டும் ஒரேயொரு ஆம்பிளைப்பிள்ளை.
புளியமரம் ஒரு காலத்துக்கு பூப்பூவாய் பூத்திருக்கும். ட்றைவர் மணியண்ணை முத்துமுத்தான பூவை ஆய்ஞ்சு கொண்டு வந்து மரஉரலில் போட்டு அளவா உப்புப் போட்டு புளியம்பூவை துவையலாக்கித் தருவார். ச். 5FIT・・・・・・ இப்பொழுதும் வாயெல்லாம் நீர் ஊறுகிறது.
புளியங்குளத்தினுடைய கட்டில் புளியமரம் இருப்பது ஒரு இராசபாட்டைதான். புளியமரம் நிற்பதனால்தான் புளியங்குளம் என்னும் காரணப்பெயர் வந்திருக்கும். எங்களது ஊரில் புளிய மரங்கள் நிறைய.
ஞானம் - ஒக்டோபர் 2004

குளக்கட்டில் கணேசன் வீட்டடியில், பொன்னம்பலம் வீட்டடியில், கனகர் வீட்டடியில் என்று பார்க்குமிடமெல்லாம் புளியமரம்.
கூழா மரத்துக்கும் பெயர் போன இடம் எங்களூர். சந்திமரத்தில் கொத்துக் கொத்தாய் கூழாம் பழம் காய்க்கும். ருசி தனி ருசி. கூழாம்பழம் சாப்பிட்டால்தான் அதன் ருசியை அனுபவிக்க முடியும். சொல்வதென்றால் இனிப்பும் புளிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு அமிர்தம்.
பள்ளிக்கூடக் காலங்களில் கூழாம்பழம், வீரப்பழம், காரப்பழம் என்று தெருவில் உள்ள இரண்டு மைல் நீளத்துக்கு பழங்களாகத் தின்று கொண்டு வருவோம்.
ஞானம் - ஒக்டோபர் 2004
இரண்டு பாலமரம் தான் நின்றது. ஒன்று குருவிச்சை ஆற்று மதகடியில். மற்றது முதலைப்பால மதகடியில். ஆனால் இரண்டுமே எப்பொழுதும் காய்த்த சரித்திரமே கிடையாது. அதிலும் குருவிச்சை ஆற்று மதகடியில் நின்ற பால மரத்தினில் யாரோ ஒருத்தர் கோடரியால் சூலம் கீறி விட அது பட்டை கிளம்பி ஒரு பெரிய சூலமாகி விட்டது.
பாடசாலைக் காலங்களில் குரு விச்சை ஆற்று மதகடியில் தனியப் போவதற்கு குலைப்பயம். இப்பவும் நினைக்கும்படி பயம். தனிய அல்லது மையல் இருட்டில் நிற்கவே மாட்டம். நடக்கவும் மாட்டம் ஒட்டம்தான். வேர்க்க விறுவிறுக்க, அப்பிடிச் சரியான பயம்.
1.

Page 9
பெரிய அலையுமில்லாமல் ஒரு தழம்பல் லயக் கட்டோடு குளக்கட்டில் முட்டி முட்டி எழும் தண்ணிரைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கும். அது ஒரு சரித்திரம். புளியங்குளம் யாரை யாரை விழுங்கியதோ ஆனால் குமாரண் ணையைத் தாட்ட பின்பு எனக்கு அதன்மீது வெறுப்பு. ஏன் அப்பிடிச் செய்தாய்? ஏன் அப்பிடிச் செய்தாய் என்று நான் குளக்கட்டில் நின்று கூவிக் கூவிக் ஆனால் அது பதில் சொல்லாமல் அமசடக்கனாய் கிடந்தது. குளம் நன்மை மட்டும்தான் செய்யும். அதுதான் எங்கள் வரம். அதுதான் எங்கள் சீவியம். அது எங்கள் நண்பன். அது எங்கள் அன்னை.
ஆனால் அன்னை ஒரு மகனைக்
கேட்டேன்.
கொல்வாளா? கையை முறித்து, கழுத்தைத் திருகி, நீரில் மூழ்கி கொல்வாளா? கொன்றது. என்
கண்முன்னால். இது சரித்திரம்.
அதனைப் பார்க்க பார்க்க ஒரு வெறுப்பு மேலிட இதுதான் காரணம். ஒரு பிரயாசைக்காரனை ஒரு உழைப்பாளியை ஒரு நல்ல மிக நல்ல மனிசனை யாரோடும் சண்டைக்குப் போகாத சிறந்தவனைக் கொன்றது புளியங்குளம். குமாரண் ணைக்கு இரண்டு சோடி உழவு மாடுகள். இழுப்பு வந்து படுக்கையில் தகப்பன் செல்லையாண்ணை படுத்திருந்தாலும், வருத்தம் வந்து அவர் வாச்சர் வேலைக்குப் போகாமல் விட்டாலும், வீட்டில் உள்ள மாமரத்துக்குக் கீழே கண்ணாடி விரியன் கொத்தி அண்ணன் செல்வராசண்ணை செத்தாப்பிறகும் குமாரண்ணை ஏழு பேரை குடும்பத்தைக் கண் போல காத்து வந்த நடுவில்,
14
ஒன்பது பிள்ளையஞக்கு நடுவில் பிறந்தவர் அவர். சோம்பிக் கிடந்ததை நான் பார்த்ததே இல்லை. நெல்லுக் காலத்தில் நெல்லு கொத்துக் கொத்தாய் செழித்து நிற்கும்.
ஒரு போகம் நெல்லும் பிறகு மிளகாய், கச்சான் என்று அவரின் தறை செழித்தே இருக்கும். குமாரண்ணையின் தறைக்கும் புளியங்குளம் தான் தண்ணியீந்தது.
எனது காணி முழுக்க வயல்வெளி எல்லாம் வேலியோரமாகப் பனங் கொட்டை நட்டேன். 10 அடிக்கொரு பனங்கொட்டை 20 வருடத்துக்கு முந்தி. முதல் சின்னக் காலத்தில் ஷேட் குலையாமல் புதுச் ஷேட்டினுள் வரும் ஹாட்போட் மட்டை, பொலித்தீன் பை, ரொபித்தாள், பேப்பர், சவர்க்கார உறை, சிக்னல் முடிஞ்ச ரியூப், போல்பொயின்ட் பேனா இவையெல்லாம் சேகரித்து வைத்து அம்மாவிடம் ஏச்சு வாங்குவேன்.
“உதென்ன கோதாரிக்குச் சேகரிக் கிறாய்! குப்பையளைக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளை குவிக்கிறான்”
இந்த அம்மாவின் ஏச்சு சகஜம். சேர்த்த மில்க் வைற் சோப் உறைகளுக்கு பனங் கொட்டைகளை ஊர் ஊராய்க் கொண்டு வந்து கொடுத்தார். கற்ப தருக்களை வன்னிப்பக்கம் பரவச் செய்ததிலை கனகராசர் முக்கியமானவர். நல்ல மனிசன். குமாரண்ணை நட்ட பனை மரங்களெல்லாம் நல்ல செழிப்பா வளர்ந்து நிற்கின்றன. குமாரண்ணை செத்துப் போனார்.
செல்லையாண்ணை வயல் வரம்பால் நடந்து போகிறார். மாங்குளம் - முல்லைத்தீவு றோட்டில் வலது பக்கமும்
கனகராசர்
ஞானம் - ஒக்டோபர் 2004

இடதுபக்கமும் பார்க்க அழகாக இருக்கும் நெல்கதிர்கள். புரட்டாதி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் பெரும் போகக் காலங்கள். தைப்பூசத்துக்கு வயலில் புது நெல்லுப் பிடுங்கி உரலில் போட்டு குத்தி புது அரிசிச் சோறு சமைத்து அம்மா தருவா. ஊரில் உள்ள எல்லோரும் அப்படித்தான். புது நெல்லு அரிசிதான் அன்று சாப்பாடு. மரக்கறி காச்சி வலு சந்தோஷமாக இருக்கும்.
செ ல்  ைல யா ண்  ைண யி ன் வயலுக்குள் இருக்கும் குளக்கட்டு விநாயகருக்கு பொங்கல் நிறைமணி போடுவார்கள். நிறைமணி என்றால் எல்லோருக்கும் குதூகலம்தான். புக்கை, வாழைப்பழம், மோதகம், வடை . பாய்விரித்து அரிசிமா பிசைந்து மோதகம் சுட எல்லாப் பெண்களும் கூடி விடுவார்கள். உதவி ஒத்தாசைக்கு.
பால் புக்கை பொங்கி, மணி அடித்து, கற்பூரம் காட்டி விக்கினமில்லாமல் மழை தண்ணிரை அளவோடு தந்தவர் என்று நம்பப்படும் வயல் பிள்ளையாருக்கு குளிர்த்தி. குளக்கட்டோடு இருக்கிறார் விநாயகர். சீமெந்தால் கட்டி கல்லில் செதுக்கிய கடவுள். கல்லையும் கடவுளாய் கண்டவன் தமிழன்.
குளக்கட்டு விநாயகருக்கு குளிர்த்தி என்றால் எங்களுக்கு வலு புழுகம். புக்கை, வடை, வாழைப்பழம், கற்கண்டு, மோதகம் என்று வயிறு முட்ட முட்டத் தின்னுவோம். செல்லையாண்ணை அள்ளி அள்ளித்தருவார். வள்ளி ஆச்சியும் தருவா. சிலநேரம் நிறை மணிக்கு முள்ளியவளையில் இருந்து பண்டாரம் வருவார். நாலுமூலை வெள்ளை கட்டி படையல் செய்து காவல்
ஞானம் - ஒக்டோபர் 2004
தெய்வங்களை சாந்தி செய்வார். குளத்தையும் பல ஏக்கர் வயல்களையும் பாதுகாப்பவைகளை குளிர்ச்சி செய்ய வேண்டும்தானே.
ஆனால் இவ்வளவு குளிர்த்தி செய்த தெய்வங்களும் புளியங்குளமும் குமாரண் ணையைக் கொன்று விட்டன.
கொன்றவை அவைகள்தான். உண்மையாக. அவர் என்ன வேணு மெண்டு போயா விழுந்தவர். உழவு மாடு பகல் முழுக்க உழுது உழுது களைத்துப் போன உழவு மாடுகளை குளிப்பாட்ட ஆருக்கு மனம் வராது. இரண்டு மாடுகளையும் பிரித்து ஒவ்வொரு மாடாக நீளமான கயிற்றில் கட்டி கையில் இறுக்கமாகச் சுருட்டி வைத்துக் கொண்டு குளத்தில் மாடுகளை இறக்கியிருக்கிறார்.
புளியங்குளத்தின் வடக்குக் கரையில் பன்றி, மான், குழுமாடு, மரை போன்ற மிருகங்கள் தண்ணிர் குடிக்க வரும். பூபதி போய் வேட்டையாடி வருவார். வேட்டை இறைச்சி வலு ருசிதான். அந்தப்பக்கம் சேறு.
தெற்குப் பக்கத்தில் எந்தப் பயமும் இல்லாமல்தான் இருந்தது. (5LOT ரண்ணை தாளமுதல். பெரிசாக சேறு சகதியுமில்லை. குளக்கட்டுக்குப் பக்கத்து வீட்டில் குமாரண்ணை இருந்த காரணத்தால் நீச்சலிலும் அவர் விண்ணன். நீந்தத் தெரியாமல் அவர் சாகவில்லை.
தன் மடியில் நீந்தி விளையாடிய மகனை குளம் கொன்றுவிட்டது.
மாடுகள் லாவகமாக. நீந்தி நீந்தி போனபோது குமாரண்ணை வலு அவதானமாகக் கயிற்றை இழக்கி இழக்கி
UT 6.Lh.
15

Page 10
விட்டிருக்கிறார். மாடுகளும் குளிப்பில் சந்தோஷித்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அனர்த்தம் அந்தக் கொடுமை, அந்த அநியாயம், நடந்தது. ஒரு பெரிய முதலை சிவலை மாட்டை வலது காலில் கெளவி இழுத்தது. தண்ணிருக்குள் அழுத்தி மூழ்கடித்தது. சிவலை திணறியது. சிவலையின் செங்கட்டி ரத்தம் குயீர் குயீர் எனத் தண்ணிரில் கொப்பளித்தது. மாடு அல்ல அது உழைப்பாளி. உழும் உழைப்பாளி. வயல் அதனால்த்தான், நெல், பயறு, மிளகாய், எல்லாம் அதனால்த்தான். சாப்பாடு அதுகளாால்தான்.
அது ஒரு மனிதனை விட. உழைப்பாளி. அது மூழ்கும்போது குமாரண்ணையால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? பலம் கொண்ட மட்டும் இழுத்தார். மற்ற வெள்ளைமாடு திமிறித் திமிறி கரைக்கு வந்து விட்டது. சிவலை தாண்டு கொண்டு போனது. சிவலையை
கச்சான்
பணம், செல்வம்,
உள்நாடு
தனிப்பிரதி (in 30/= ஆண்டுச் சந்தா ரூபா 360/= 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/= 3 ஆண்டுச் சந்தா ரூபா 1000/= ஆயுள் சந்தா ரூபா 15000/-
சந்தா காசோலை மூலமாகவோ மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனைக் கண்டி தபால் நிலையத்தில்
16
*ஞானம் சந்தா விபரம்
விடாமல் தொடர்ந்து உன்னி உன்னி இழுத்தார் குமாரண்ணை.
ஒரே உன்னலில். கயிறு கையில் சிக்கி. குமாரண்ணை சேத்துக்குள் வழுக்கி குளத்துக்குள் விழுந்து விட்டார். முதலைக்கு மாட்டிறைச்சி. பிறகு மனித இறைச்சி. குமாரண்ணையை இழுத்துக் கொண்டு தனது பாழிக்குள் போய் விட்டது.
தேடினோம். தேடினோம். அந்த உழைப்பாளி கிடைக்கவில்லை. இரவிரவாக அந்த நல்ல மனிதனை முதலை வைத்திருந்தது. அதிகாலையில் கடிகடி என்று கடித்த உடலை பிரேதத்தை. கையில்லாமல் கூழை யாகிப்போன சிதிலத்தைக் கொண்டு
வந்தோம்.
கறுப்பாய். திரண்டு போய். கொலைகாரனாய்.
புளியங்குளம் பரந்து கிடந்தது.
O O O
மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய பெயர், முகவரி.
T. Gnanasekaran
19/7 Peradeniya Road
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$
: 300 US$
ஆயுள் சந்தா
ஞானம் - ஒக்டோபர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ded 0. gPGക്
தாட்சாயணி
எனது நம்பிக்கைகளின் 품 三三一 இழைகளை = = جسسےت سے == சமுத்திரத்தில் 三 三 三 سس۔-- மிதந்து கொண்டிருக்கும் E* = E* = E தீபங்களோடு சேர்த்து 三 千目 手_三 மிதக்க விடுகிறேன் 手=_言エ_ 丁言
ைெது. ਛੈਵੈ ਛੇ
-609. 높 출을극음_들
曲 鱼 ത്ത : Tri se i së T = 7 இன்னும் சொல்லவியலாத ܚܝܝܫܫܒܫܒܚܚܒܫܒܚ--܀ ܝܫ̈ܝ̈ܒܲܒܒܒ 孟磊手“
எத்தனையோ நம்பிக்கைகளை இழை இழையாய்ப் பிரித்து அனுப்பி வைக்கிறேன்
யார் கரம் சேரக்கூடும்.? யார் வசம் இசையக் கூடும்.?
ഖീകnഖകൃ . யார் கையிலாவது . எனது நம்பிக்கைகள் வாழட்டும்
எனது கையிலிருப்பதால், அந்த நம்பிக்கைகளின் «Քեա-Gh,
குறையக்கூடும்
குானம் - ஒக்டோபர் 2004
புரிந்து போதைால். எதுை நம்பிக்கைகள் ஒவ்வொன்றையும் மெதுமெதுவாய் கழற்றி.
ஆற்றில் மிதக்க விடுகிறேன்
இதோ எனது கடைசி நம்பிக்கை இழையும் ஆற்றுக்குப் போகிறது
O

Page 11
நேர்கானல்
பேராசிரியர் கா. சிவத்தம்பி
சந்திப்பு : தி. ஞானசேகரன்
N
s& உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர்.
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ்நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். الصر
தி. ஞா. பொது வாழ்க்கையில் நீங்கள் செய்த பங்களிப்பு கலை இலக்கிய உலகில் உங்களுடைய ஆளுமை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியது?
- ܢܠ
கா.சி. நான் சிறுவயதிலிருந்து அரசியலில் ஆர்வம் கொண்டவன். மார்க்சியத்தில் ஆர்வம் கொண்டவன். மார்க்சியத்தில் ஆர்வம் கொள்வது என்பது அரசியலில் ஆர்வம் கொள்வதற்கு ஒரு வாயிலாக அமைகின்ற ஒரு விடயம். மார்க்சிய இலக்கியம் முற்போக்கு இலக்கியத் தடங்கள் காரணமாக நான் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து தொழிற்பட்டிருக்கிறேன். கட்சி அங்கத்தவனாக இருக்கும் அளவுக்குத் தொழிற் பட்டிருக்கின்றேன். அந்த அம்சங்களையெல்லாம் என்னுடைய பொதுவாழ்க்கையின்
18 ஞானம் - ஒக்டோபர் 2004
 

அம்சமென்று கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது என்னுடைய கருத்துநிலை. சம்பந்தமான விடயங்கள். அது எனக்கு நான் விதித்துக் கொள்கின்ற ஒரு Discipline என்றுகூடச் சொல்லலாம். எனவே அந்த Discipline படி பல காரியங்களை அரசியல் நிலையிலே பார்த்துக்கொண்டு வந்தேன். கால ஒட்டம் மாறுவதும் அந்த ஓட்டங்களுக்கு ஏற்ப சமூக அரசியல் பார்வைகள் மாறவேண்டும் என்பதும்கூட மார்க்சியத்தினுடைய ஓர் அடிப்படையான தன்மை. எனவே அந்த மார்க்சியக்கண்ணோட்டத்தில் ஆழமாகப் போகப்போக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நான் பார்த்து என்னுடைய கண்ணோட் டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். இது ஒருபுறம் இருக்க, இந்த அரசியல் ஈடுபாடுகள் 1956 இலிருந்து 1965 வரையும் ஒரு தன்மையினதாகவும் 1970 இல் இருந்து 1982வரை இன்னொரு தன்மையினதாகவும் என்னுடைய வாழ்க்கையிலேயே அமைந்ததுண்டு. 1956 தொடக்கம் 1967, 68 வரையில் நான் சாஹிராக் கல்லூரி ஆசிரியனாகவும் பாராளுமன்றத்தின் சமநேரமொழி பெயர்ப்பாளனாகவும் வித்தியோதயவில் உதவி விரிவுரையாளனாகவும் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் ஒட்டு மொத்தமான, கொம்யூனிஸ்ட் கட்சியின் பொது நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தேன். 72 இன் பின்னர் குறிப்பாக நண்பர் ஞானாவினுடைய உந்துதல், அவருடைய வேண்டுதல், அவருடன் இணைந்து தொழிற்பட்டமை காரணமாக இலக்கியத்தோடு மட்டும் நில்லாமல் அதற்கு மேலேயும் போய் இலக்கியம் சார்ந்த துறைகளில், அரசியல் கொள்கைகளை வளர்ப்பதற்கு குறிப்பாக ஒலிபரப்புத்துறையில் வளர்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தேன். ஞானா ஒர் அற்புதமான நண்பர். நான் அவருடைய நட்பையும் அவருடைய நல்ல குணங்களையும் என்றும் மதிப்பவன். 78 இல் நான் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அங்குள்ள நிலைமைகளைப் பார்க்கின்றபோது நிலைமை சற்று வித்தியாசமாக இருந்தது. இருந்தாலும் நான் தொடர்ந்தும் பொதுவுடைமைக் கட்சிக்கண்ணோட்டத்துடனேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். 82 இன் பின்னர் நிலைமை சற்று மாறுகிறது. குறிப்பாக 83இலிருந்து இலங்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் 83 இல் அவர்கள் இலங்கையின் மற்றப்பகுதிகளிலிருந்து வடகிழக்கிற்கு அனுப்பப்பட்டார்களே தவிர, வடகிழக்கில் அவர்களது இருப்புக்குப் பிரச்சனை ஏற்படத் தொடங்கியது 84 இலேதான் அது ஒரு முக்கியமான அம்சம், 84இல் இருந்து அங்குள்ள இளைஞர் எழுச்சிகள் காரணமாக வடகிழக்கிலுள்ள சாதாரண மக்களுடைய வாழ்க்கைக்கான அச்சுறுத்தல்கள் பல ஏற்பட்டன. அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தமிழ் எம். பி.க்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டது. அதனை ஆறாவது சட்டமூலத்திருத்தம் என்று சொல்வார்கள். அதன் பிறகு ஒர் இடைவெளி, வெற்றுநிலை ஏற்பட்டது. இதற்காகச் சிலர் பிரஜைக் குழு என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். அது முதலிலே யாழ்ப்பாணத்திலேதான் ஏற்பட்டது. நான் 83, 84 இலே கேம்பிறிட்ஜ்க்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது இந்தப் பிரஜைகள் குழுக்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் ஏற்பட்டிருந்தன. வல்வெட்டித்துறையில் ஒரு பிரஜைகள் குழு தோற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு நான் தலைமை தாங்க வேண்டும் எனவும் அங்குள்ள ஊரவர்கள்
som ord – 8å Su-nust 2004 1.

Page 12
விரும்பினார்கள். அதனை நான் மறுக்கமுடியாத நிலையில் ஏற்றுக் கொண்டேன். அதன்பின்பு யாழ்ப்பாணத்திலுள்ள பிரஜைகள் குழுவோடு தொடர்புகள் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது ஆர். பாலசுப்பிரமணியம், அருமைநாயகம் போன்றவர்களோடு மிக நெருங்கிய உறவு ஏற்பட்டது. பாலா மிக நல்ல மனிதர். அற்புதமான மனிதர். அருமை நாயகம் எதற்கும் படபடப்பில்லாமல் எதனையும் ஆறுதலாகப் பார்க்கின்ற தன்மையுள்ளவர். இவர்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. இந்தப்பிரஜைகள் குழு என்பது அக்காலத்தில் s: உள்ளூர் மட்டத்திலேயோ (பல நண்ப் ர்கள்" எனக்கு எதிராகச் அல்லது மத்திய அரசு | சொல்கிற குற்றச் சாட்டு, சிவத்தம்பி மட்டத்திலேயோ தமிழ் அங்கேயொன்றைச் சொல்வா மக்களுக்கு எந்தவிதமான இங்கேயொன்றைச் சொல்வா பிரதிநிதித்துவம் இல்லாத I என்பது. சிவத்தம்பி எந்தெந்த நிலையில், மக்கள்படுகின்ற இடத்திற்கு எது எது தேவையே
备注
கஷ்டங்களை எடுத்துச் அதைத்தான் சொல்வா சொல்வதற்கு ஏற்படுத்தப் மனைவியிடம் பேசுவதை மகளிடம் பட்ட அமைப்பு அக்காலத்தில் சொல்லமாட்டார். மகளிடம் பேச : அரசாங்க அதிபருக்கு வேண்டியதை மாணவரிடம் சொல்ல : 610ђgiji Clairieligijeja, 5. || || шоп I. L. пrт. மாணவரிடம் சொல் ஒர் உத்தியோக பூர்வமான வதைத் துணைவேந்தரிடம் சொல்ல: ஒரு நிறுவன அமைப்பு மாட்டார். அந்த அந்த இடத்திலே இருக்கவில்லை. குறிப்பாகப் | தான் அதையதைச் சொல்ல : படைகளுக்குப் பொறுப் வேண்டும். ஆனால் எந்த இடத்திலும் பாகவுள்ள စုပ္ဖါးဖုံ[ ဓါးမှီ சொல்லக் கூடாது.
அல்லது ஆணைக்கு N 3. உரியவரிடம் சென்று இன்ன இன்ன இடங்களில் பிரச்சனைகள் இருக்கின்றன என்று சொல்லவேண்டிய தேவை இருந்தது. அந்த நேரத்தில் வல்வெட்டித்துறைப் பகுதி கடற்கரை ஓரம் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது பருத்தித்துறையில் பேராசிரியர் வி. கே. கணேசலிங்கமும் வல்வெட்டித்துறையில் நானும் இருந்தோம். அப்போது கிழக்கிலும் பல பிரச்சனைகள் தோன்றியபோது பிரஜைகள்குழு ஒன்றியம் ஒன்றினைத் தோற்றுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பாலசுப்பிரமணியம்தான் அதனை முன்னின்று செய்தார். அவ்வாறு செய்தபொழுது, அந்தப் பிரஜைகள் குழுவின் ஒன்றியத்திற்கு என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த நிலையில் நாங்கள் யாழ்ப்பாணத்திற்குள்ளே மாத்திரமல்லாமல், மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ளவர் களோடு பேசி நிலைமைகளை ஆமிக்காரருக்குச் சொல்வதுடன் அரசமட்டத்திலும் எடுத்துச் சொல்லவேண்டிய நிலைமை இருந்தது. 86 வரையில் அந்த நிலைமை இருந்தது. இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான காலகட்டம் ஏனென்றால் அப்போதுதான் போர் மிகமோசமாக வளர்ந்து, அரசாங்கம் ஒரு யுத்தத்தை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு வந்திருந்தது. உள்ளூர் யுத்தம் என அதனை ஏற்கவேண்டிய
lišilmuk
20 ஞானம் - ஒக்டோபர் 2004
 
 
 
 
 
 
 
 
 

நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. இதனுடைய ஒரு வெளிப்பாடுதான் 1985இல் நடந்த திம்பு மகாநாடு. இந்தக் காலகட்டத்திலேதான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று செய்து அதற்கென உள்ளூரில் உள்ளவர்களைக் கொண்டே ஒரு கண்காணிப்புக்குழு ஒன்றை நியமித்திருந்தார்கள். அது ஆறேழு மாதங்கள்தான் தொழிற்பட்டது. திம்பு மகாநாட்டுக்குச் சற்று முன்னர்தான் அதனைச் செய்திருந்தார்கள். அதிலே பிரஜைகள் குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றவர்கள் என்ற வகையில், திருகோணமலை இந்துக் கல்லூரியில் முன்பு அதிபராக இருந்த, திரு சிவபாலனும் நானும் தெரிவுசெய்யப்பட்டோம். இதனை ஏற்பதா விடுவதா என்பது பற்றியெல்லாம் சிக்கல்கள் இருந்தன. ஆனால் அந்தக் காலகட்டத்தில் பிரஜைகளினுடைய தேவைகள் குறித்தும் இளைஞர் இயக்கங்களுடன் நாங்கள் தொடர்புகள் வைத்திருந்தோம். இவர்கள், இதனை நாங்கள் ஏற்பதே சரியென்று கூறினார்கள். இந்தப் பிரஜைகள்குழு மட்டத்தில் என்னுடைய மக்கட் பொதுநிலை நடவடிக்கைகள் மிகமுக்கியமானவை என்று கருதுகிறேன். ஒன்று படையினரால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு ஏதாவது ஒரு மாற்றுவழி காணவேண்டும் என்று அவர்களுடைய தளபதிகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய தேவையிருந்தது. குறிப்பாக ஆட்கள் காணாமல் போகும்போது படையினரிடம் சென்று அவர்களிடம் காணாமல் போனவர்கள் பற்றி கேட்க வேண்டியிருந்தது. அது நெருடலான பிரச்சனையாகச் சிலவேளைகளில் இருக்கும். நாங்கள் நடந்துபோகும்போது கைகளை உயர்த்தியபடி அரை மைல் தூரம் செல்ல வேண்டியிருக்கும். அந்த முறையிலேதான் பாதுகாப்பு நிலை ஆமிகாம்ப்பில் இருக்கும். அது மிகவும் Tension க்கு உரிய விடயம். மற்றது கொழும்புக்கு நாங்கள் சென்று அங்குள்ள உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து சில விடயங்களைச் சொல்லவேண்டியிருந்தது. அதற்கு நான் பாலா, அருமைநாயகம், குணரட்ணம் போன்றவர்கள் அந்தக் குழுவிலே இருந்தோம். நாங்கள் பிரேமதாஸா, ஜே. ஆர். போன்றவர்களைச் சந்தித்தோம். லலித் அத்துலத்முதலியைச் சந்திக்கவில்லை. இடதுசாரிக்கட்சியில் உள்ளவர்கள், S. L. M. P யில் உள்ளவர்கள் ஆகியோரையும் சந்தித்தோம். பிரேமதாஸாவைச் சந்தித்தபோது அவர் சொன்னார், இது சம்பந்தமாக நீங்கள் கட்டாயம் ஜே. ஆர். ஜயவர்த்தனவைச் சந்திக்க வேண்டும் என்று. அதற்கு அவர் ஒழுங்கு செய்தும் தந்தார். நாங்கள் ஜே. ஆரைச் சந்தித்தபோது லலித்தும் கூட இருந்தார். ஜே. ஆர். கேட்டார் “நீங்கள் ஏன் லலித் மூலம் வரவில்லை. இவர்தானே இதற்குப் பொறுப்பான அமைச்சர்” என்று. அது ஒரு மிக இக்கட்டான நிலை. அந்தக் கட்டத்திலே அந்தக் கூட்டம் உடைந்து விடுமோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. நான் அப்போது, "நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி, மக்கள் தெரிவின் மூலம் வந்த ஜனாதிபதி எனவே இந்த நாட்டின் வாக்காளர்கள் என்ற முறையில் எங்களுக்கு நேரடியாக உங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய உரிமை உண்டு என்ற அடிப்படையிலேதான் வந்துள்ளோம். அந்த உரிமை எங்களுக்கு இல்லையென்று தாங்கள் கருதுவதானால் எங்களால் எதுவும் செய்யமுடியாது” என்று சொன்னேன். அந்தக் கட்டத்திலே எனக்கு சைவ சித்தாந்தத்திலே சொல்லப்படுகின்ற ஒரு கருத்து நினைவில் வந்தது. அதாவது பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும் பெருந்தெய்வமாகச் சிவபெருமான் இருக்கிறார் என்று கருத்தினை மனதிலே வைத்துக் கொண்டுசொன்னேன். நிச்சயமாக என்னுடைய மார்க்சிய
ஞானம் - ஒக்டோபர் 2004 21

Page 13
யாழ்ப்பாணத்திலுள்ள கஷ்டங்களை இங்கு வந்து சொல்கிறபோது நாங்கள் அங்கு நடப்பவற்றையெல்லாம் நியாயப்படுத்து
ந ண் பர் க ள் இதனைத் தவறாக விளங்கப் போகி றார்கள்; பரவா
யில்லை. இப்படி |வதாக ஒரு குரல் படிப்படியாக எழுந்தது. நான் கூறியபோது யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் செய்யும் ஜே. ஆர். அதனை விஷயங்களை நாங்கள் வெளியால் ஏற்றுக்கொண்டார்.
சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கின. நாங்கள் விளங்கப் படுத்தினாலும் அவர்கள் நம்பவில்லை. &
பல காரியங்களைச் செய்வதாக க் கூறினார். யாழ்ப் பாணத்தில் மக்கள் படுகின்ற கஷ்டங்களை கொழும்பிலே சென்று சொல்வதாகிய அந்தக் கருமம் ஒரு மிக முக்கியமான மைல் கல்லாக அமைந்தது. அந்தக் கட்டத்தில் எங்களுக்கு பின்புலமாக நின்று ஆலோசனைகளைத் தந்தவர்களில் நீதியரசர் மாணிக்கவாசகர் ஒருவர். எங்களுடைய பல்கலைக்கழக வேந்தராக அவர் இருந்தவர். இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக முக்கியத்துவம் பெறுவது, நான் கண்காணிப்புக் குழுவில் அங்கத்துவம் வகித்ததாகும். அது மிகவும் நெருடலான பிரச்சனை. அந்தக் கண்காணிப்புக் குழு, திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பல இடங்களுக்கும் சென்றுமுறைப்பாடுகளைக் கேட்டு அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும். இந்தக் குழுவுக்கு உதவுவதற்கென 96) fissir Attorney General Department goi) g(5igil (5 6...g58, fles60) Tugh அனுப்பியிருந்தார்கள். அவர் சிலவேளைகளில் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார். நாங்கள் மக்களுடைய துன்பங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய நிலைமை இருக்கின்ற சூழலில் ஒரு விஷயம் தெரிந்த சட்டத்தரணி அதனைத் திசை திருப்புகின்ற நிலைமை ஏற்படுகின்றபோது அதற்கு முகம் கொடுப்பது எங்களுக்கு மிகவும் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஏன் அப்படியான சூழலில் எங்களுடைய கடமைகள் மிக மிக நெருடலாக இருந்தன. இறுதியாக நாங்கள் அதிலிருந்து இராஜினாமாச் செய்வ தென்று தீர்மானித்தோம். அதன்பிறகு அக்குழு இயங்கவில்லை. அந்த இராஜினாமாக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். "இந்தக் கண் காணிப்புக்குழு இலங்கையர்களைக் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழு. இதன் பின்னர் இப்படியான இலங்கையர் மட்டத்திலே பார்த்துத் தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்புக்கிட்டுமோ தெரியவில்லை. நாங்கள் இதனைச் சரியாகச் செய்யவில்லை என்ற பயம் எனக்கு ஏற்படுகிறது. இதனால் இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் தங்களுடைய கடமையில் தவறுகளோ என்ற பயம் இருக்கிறது. அந்த அனுபவம் ஒரு மிகப் பெரிய அனுபவம். ஒன்று மக்கள் படுகின்ற கஷ்டங்களை நேரிலே பார்ப்பது. மகன் உயிரோடு இருக்கின்றான் என்று தாய் நம்பிக்கொண்டு இருப்பாள். ஆனால் எங்களுக்குத் தெரியும் அவன் உயிரோடு இல்லையென்று. ஆனால் அதே வேளையில் அதனை ஒரு சட்டமூலமான முறைப்பாடாகக் கொண்டு போனால், அதனை ஒரு வழக்குப்போல எடுத்து, மறுதலித்து அந்த முறைப்பாட்டைக் கொண்டுசெல்கிறவரைக்
22 ஞானம் - ஒக்டோபர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேலிக்கிடமாக்கி அவர் பொய் சொல்கிறார் என்ற நிலைமை ஏற்படுத்துகிற சூழல் ஒன்று இருந்தது. இதற்கு முகம் கொடுப்பது உண்மையில் மிக மிகக் கஷ்டமான சவாலாக இருந்தது. படுகிறகஷ்டம் ஒருபுறம் இருக்கும்போது அதனை நாங்கள் வேண்டுமென்று சிருஷ்டித்துக் கூறுகிறோம் என்று சொல்லும்போது அது பெரிய உளரீதியான தாக்கமாக இருக்கும். அரசு யந்திரம் எவ்வாறு தொழிற்படுகிறது. - அது எவ்வாறு தொழிற்படும் என்கிற நிலைமை எங்களுக்குத் தெரியவந்தது. அவற்றைப் பற்றி நாங்கள் மிக வன்மை யாக எடுத்துக் கூறியிருக்கிறோம். அதாவது அந்தத் துன்பங்களை அந்தக் கஷ்டங்களைப் பார்த்ததன் பின்னர் அப்படியான கஷ்டங்கள் இலங்கையில் இல்லை என்றோ அல்லது இலங்கை அரசு என்ற நிலையில் அந்த நிறுவனம் மக்களின் தொல்லைகளை எவ்வாறு பார்க்கின்றது என்ற விடயமோ மனதைப் பெரிதும் தாக்கிய விடயம். இது நிச்சயமாக என்னுடைய இலக்கியம், நான் மற்றவற்றைப் பார்க்கின்ற தன்மை போன்றவற்றிலே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காலகட்டத்திலேதான் நாங்கள் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தைத் தொடங்கியிருந்தோம். சிங்கள நண்பர்கள் சாள்ஸ் அபயசேகர, நியூட்டன் குணசிங்க, குமாரி ஜயவர்த்தனா, லால் ஜயவர்த்தனா போன்றவர்கள் இந்த விடயத்துக்கு நாங்கள் எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுடைய உதவி எங்களுக்குப் பெரிதாக இருந்தது. இன்னுமொன்று கொழும்பில் வந்து பேசுவதன் காரணமாக யாழ்பாணம் மட்டக்களப்பு பிரதேசங்களில் நடக்கும் விடயங்களை எடுத்துக் கூறுவதற்கு அந்தப் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் என்கின்ற வகையில் இங்குள்ள வெளிநாட்டுத் தூதரங்களுடன் எங்களுக்குத் தொடர்புகள் ஏற்பட்டன். அதில் இந்தியத் தூதரகத் தொடர்பு மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். யாழ்ப்பாணத்தில் அப்போது நான்கு இளைஞர் இயக்கங்கள் இருந்தன. அவற்றோடு நாங்கள் யாழ்ப்பாணததுக்கு வருவதற்கு முன்னரும் சந்திப்போம். அதற்குப் பிறகும் கொழும்பு நிலைமைகளைக் கூறவும் சந்திப்போம். இவை பிரஜைகள் குழுமட்டத்திலே எனக்கு ஏற்பட்ட அனுபவங்கா. பிரஜைகள் குழுவில் வேலை செய்யும்போது நாட்டு நிலைப்பட்ட அனுபவம் ஒருபுறம் இருக்க நெருங்கியவர்களிடமிருந்து, உங்களுக்கு எந்தநேரம் அவர்களுடைய விருப்பு வெறுப்புக்களினால் பிரச்சனைகள் வரும் என்பதையும் காணவேண்டிய ஒரு ஆள்நிலைப்பட்ட அனுபவம் ஏற்பட்டது. அதானால் நான் இராஜிநாமா செய்தேன்.
இதனால் ஒட்டுமொத்தமாக ஓர் அரசியல் பார்வைக்குள் நான் என்னையறியாமல் ஒருவனாகிவிட்டேன் என்று நம்புகிறேன். என்னுடைய நண்பர்கள் சிலர் அதுபற்றி மிகவும் சுவாரஸ்யமாகக் குறிப்பிடுவார்கள். சேனக பண்டாரநாயகா என்னை எப்போதும் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளனாகத்தான் பார்ப்பார். அவர் ஒருமுறை, “வரலாற்று ஆராய்ச்சி யாளர்களே வரலாற்றின் பக்கங்களில் வருவது பார்ப்பதற்குச் சந்தோஷமாக இருக்கிறது. கவனமாக இருங்கள்” எனக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பேராசிரியர் கைளிாசநாதக் குருக்கள் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர். அவர் ஒருமுறை சொன்னார், “சிவத்தம்பி கவனமாக இரு. நீ இந்தக் காலங்களில் நெருப்புக்குள் உலாவுவாய்” என்று நான் அதற்குச் சொன்னேன். “நீங்கள் சொல்வது உண்மை. நான் நெருப்புக்குப் பக்கத்தால் தான் போய்வருகிறேன்” என்று. அவர் ஒரு தகப்பன் மாதிரி அவர் சொன்னது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
(e) IT or tib - gdiāGSL-Im U it 2oo4 23

Page 14
பொதுப்பணியிலே மிக முக்கியமாக நான் கருதுவது,இந்தியத்தூதரகத்தொடர்புகள் காரணமாக, இந்திய மட்டத்தில் பெரும் உத்தியோகத்தர்களைச் சந்தித்து எமது நிலைப்பாடுகளைச் சொல்லக்கூடியதாக இருந்தது. அந்த நிலையில் நாங்கள் பண்டாரி வெங்கடேஸ்வரன், பார்த்தசாரதி போன்ற பெரிய உத்தியோகத்தர்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. கொழும்பிலே அவர்களைச் சந்தித்துச் செல்வோம். இக்கட்டான நிலைமைகளில் இந்தியாவுக்குச் சென்றும் சொல்லியிருக்கிறோம். அதுவும் ஒரு முக்கியமான அனுபவம். இலக்கியம் சார்ந்த ஒரு விடயத்தைச் சொல்லவேண்டும். பார்த்தசாரதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், “நீங்கள் இப்படிச் செய்வது சரியல்ல. சிங்கள மக்கள் கொலை செய்யப்படுவது சரியல்ல” என்று. அப்போது நான் கூறினேன், வல்வெட்டித்துறையில் எழுபத்திரண்டு பேர் கொலை செய்யப்பட்ட பின்பே இவை நடந்தன. இப்படியான கொலைகள் நடப்பதைத் தமிழ் மக்கள் விரும்புவதில்லை. அதற்கு உதாரணமாக அண்மையில் ஒர் இளைஞர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். “இந்தக் கைகளை எந்தக் கங்கையில் கழுவ" என்றொரு வரி அதில் வருகிறது. இளவாலை விஜேந்திரன் என்பவர் அதை எழுதியிருக்கிறார் என்று கூறினேன். உடனே பார்த்தசாரதி தமது மலையாள நண்பர் தாமோதரனை அழைத்து, நான் கூறுவதைக் கேட்கும்படி சொன்னார். எனக்கு அப்போதுதான் தெரியும் பார்த்தசாரதி ஒரு பாரதிபக்தன் என்பது. இந்த மாதிரியான அனுபவங்களும் கிடைத்தன.
இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க தூதராலயங்கள் சேர்ந்து தென்கிழக்கு ஆசிய இலக்கியங்கள் பற்றிப்பேசுவதற்குக் கராச்சியிலே ஒரு கூட்டம் கூட்டியிருந்தார்கள். அதிலே இலங்கைத் தமிழ் இலக்கியம்பற்றி நான் பேசினேன். கராச்சியிலுள்ள பாகிஸ்தானியர்கள் இலங்கைத் தமிழர் போராட்டம்பற்றி அதிகம் தெரியாதவர்கள். ஆனால் தமிழர்களுடைய நிலைப்பாடுகள் பற்றி - இந்தியப் பொது அமைப்பினுள் தமிழர்கள் தனித்துவத்தைக் கோருகின்றவர்கள் என்பது அங்கு தெரியும். இவைபற்றி அவர்கள் கேட்டார்கள். இவைகள் எல்லாம் இலக்கியத்தையும் பாதிப்பவைதான். இலக்கியப்பார்வை ஆழப்படுத்துவதற்கு உரிய விஷயங்கள்தான். ஆனால் இவற்றின் மூலம் மனித அனுபவத்தைப் பெறக் கூடியதாக இருந்தது. நாங்கள் எவற்றைப் பேசவேண்டும். எப்படிப் பேசவேண்டும். நாங்கள் சொல்லவேண்டியவற்றை அவர்களுக்கு உடனே சொல்லவும் வேண்டும். அவர்கள் கேட்கக்கூடிய முறையிலே சொல்லவும் வேண்டும். பின்போடாமல் சொல்லவும் வேண்டும் எல்லாவற்றிலும் முக்கியம், மூன்று நான்கு பேர் சென்றால் ஒருவரே எல்லாவற்றையும் பேசாமல் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு விடயத்தைக் கூறவேண்டும். ஒருவர் இணைப்பாளராக இயங்கலாம். அந்த மாதிரியான ஒரு நடைமுறையைக் கூடநாங்கள் பயிலக்கூடியதாக இருந்தது. இன்னுமொன்று எந்தக் கடிதத்தையும் எழுதும் போதும் நீண்ட கடிதமாக எழுதாமல் ஒரு பக்கத்தில் எழுதி விட்டு ஏனையவற்றைப் பின்னிணைப்பாகப் போட்டு, இந்தப்பின்னிணைப்பில் இந்த விடயங்களைக் கூறியிருக்கிறோம் என்று குறிப்பிட வேண்டும். இப்படிச் செய்வது ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவற்றைவிட, மனித இன்னல்களைக் கண்டதும் அவற்றால் ஏற்பட்ட துன்பங்களும் சொல்லிமாளாது. தங்களுடைய பிள்ளை இறக்கவில்லை என்று சொல்வார்கள். ஆமிக்காரர் தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்பார்கள். ஆல்ை
24 ஞானம் - ஒக்டோபர் 204

எங்களுக்குத் தெரியும் ஆமிக்காரர்கள் இதனைச் செய்திருப்பார்கள் என்பது. இப்படியான சம்பவங்கள் ஒன்று இரண்டல்ல. ஒருமுறை பிரஜைகள் குழுவுக்கு யார் யாரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற பெயர்களைக் கூறுவதாகச் சொன்னார்கள். பின்னர், தளபதியாக இருந்தவர் கூறினார். "நாங்கள் கூறப்போகும் பெயர்களை நீங்கள் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். வெளிவிடக்கூடாது” என்றார். அப்போது நான் எழுந்து கூறினேன்"ஒரு ஏழைத்தாய், என்னுடைய மகனின் பெயர் அதிலே இருந்ததா என்று கேட்டால் நான் அதற்குப் பொய் சொல்லமுடியாது. ஆனபடியால் நான் வெளியே போகிறேன். நீங்கள் சொல்லுங்கள்” என்றேன். அதன் பிறகு அந்தத் தளபதி அந்தப் பெயர்களை வாசிக்கவே இல்லை. இப்படி பல மனித நிலைகள் - மனிதப் பிரச்சனைகள் ஏற்பட்டன. அந்த Tension மிகத் தாக்கமானது.
86இல் நான் அந்தக் குழுவிலிருந்து இராஜினாமாச் செய்த பின்னர், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. அதில் நானும் இடம்பெற வேண்டும் என்று அப்போது அதன் தலைவராக இருந்த விஸ்வலிங்கம் என்னைக் கேட்டுக் கொண்டார். பார்ப்போம் என்று கூறி வைத்தேன். ஆனால் திடீரென்று விஸ்வலிங்கம் ஐயா காலமாகிவிட்டார். அந்தத் தலைவர் பதவியை நான் ஏற்கவேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டார்கள். நான் சம்மதித்து ஏற்றுக் கொண்டேன். அந்த நிறுவனத்தில் இருவர் மிக முக்கியமான இடத்தை வகித்தார்கள். ஒருவர் கந்தசாமி. மற்றவர் ஜேம்ஸ் பத்திநாதர் என்கின்ற கத்தோலிக்க அடிகளார். வடகிழக்கினுடைய மிகப் பிரதானமான, அரச சார்பற்ற நிதி வழங்கும் ஸ்தாபனமாக அது விளங்கியது. அதிலே இருந்தபோது, பலரது துன்பங்களை நேரிலே காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. விதவைகள், குழந்தைகள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோரின் கஷ்டங்களை அறியக் கூடியதாக இருந்தது. நாங்கள் நொறாட், சீடா போன்ற நிறுவனங்கள் மூலம் பணத்தைக் கொழும்பில் இருந்து பெறுவோம். சமாதான ஒப்பந்தம் வந்தவுடன் இங்குவந்த கந்தசாமி திடீரெனக் காணாமல் போய் விட்டார். அது பெரிய பிரச்சனையாகி விட்டது. அந்தக் காலகட்டத்தில் நான் எதிர்நோக்கிய மிகப்பெரிய சவாலாக அது அமைந்தது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துக்கும் கந்தசாமியின் மறைவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அப்போது பலர் பேசிக் கொண்டார்கள். இன்றும் பலர் அந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக தினமுரசு பத்திரிகையில் ரமேஷ் எழுதிய கட்டுரைகள் மூலம் அது சம்பந்தமான நிலைமை இரண்டு வருடத்துக்குப் பின்பே தெரியவந்தது. ஜூன் மாதத்தில் அவர் காணாமல் போனார். செப்டெம்பர் மாதத்தில் நானும் கணபதிப்பிள்ளையும் கொழும்புக்குச் சென்றபோது அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமொன்றில் ஏறத்தாழ, எங்களைக் குறுக்குவிசாரணை செய்தார்கள். இந்தியன் ஆமிக்காரர்கள் கூட கந்தசாமி எப்படி இறந்தார் என்று எங்களை விசாரணை செய்தார்கள். அவர்கள் தெளிவான பதிலைப் பெறும்வரை எங்களை விடவில்லை. இவையெல்லாம் எனது தனிப்பட்ட ஆளுமைமீது பல தாக்கங்களை ஏற்படுத்தின என்று சொல்லவேண்டும்.
அப்போது கொழும்புக்கு வந்து திரும்புவது மிகவும் கஷ்டமான பயணமாக இருக்கும். மாதத்தில் ஒரு தடவை கிளாலிக்குள்ளால் கஷ்டப்பட்டு வரவேண்டியிருந்தது. திரும்பி வருவதும் போவதும் சோதனைக் சாவடிகளுக்குள் வருவதும் கஷ்டமான பிரயாணமாக
ஞானம் - ஒக்டோபர் 2004 25

Page 15
இருந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள கஷ்டங்களை இங்கு வந்து சொல்கிறபோது நாங்கள் அங்கு நடப்பவற்றையெல்லாம் நியாயப்படுத்துவதாக ஒரு குரல் படிப்படியாக எழுந்தது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் செய்யும் விஷயங்களை நாங்கள் வெளியால் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கின. நாங்கள் விளங்கப்படுத்தினாலும் அவர்கள் நம்பவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு வரும்போது அரச சார்பற்ற நிறுவனங்கள் எடுக்கின்ற நிலைப்பாட்டிற்கும் அவை கொழும்புக்கு வந்தால் எடுக்கும் நிலைப்பாட்டிற்கும் பெருத்த வேறுபாடு இருக்கும், நாங்கள் கொழும்புக்கு (sறதால் ஒரு குற்றவாளிக் கூண்டில் நிற்பதுபோன்று இருக்கும். சில நிறுவனங்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தன. நொறாட், சீடா போன்ற நிறுவனங்கள் அப்படிச் செய்யவில்லை. படிப்படியான ஒரு எதிர்க்குரல் எங்களுக்கு எதிராகக் ஏற்பட்டு ஒரு முக்கியமான கட்டத்தை எய்தியது. 95ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்து அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக கொழும்பு வந்து இங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்களில் மன்றத்தில் மக்களின் கஷ்டங்களைக் கூறவேண்டும் என்று சொல்லியபோது, என்னைப் பேச இடங்கொடுக்கக் கூடாது என்று தடுத்தார்கள். நான் ஒளிவுமறைவாகத் தீவிரவாத இளைஞர்களுக்காகப் பேசுகிறேன் என்றார்கள். இப்படியாக வாக்குவாதப்பட்டபோது அங்கிருந்த ஒரு பொலிஸ்காரர் வந்து இங்கு நீங்கள் இருப்பது பிழை. நீங்கள் போய்விடுங்கள் என்றார். அன்று என்னை அடித்திருப்பார்கள். நல்ல காலமாக ஒரு ஒட்டோ வந்தது அதில் நான் ஏறி வந்துவிட்டேன். நாங்கள் தமிழ் மக்களுடைய எல்லாவிடயங்களையும் சொல்வதில்லை என்ற எதிர்ப்புக்குரல் ஒன்று வந்தது. அதனால் சிங்கள நண்பர்களிடையே எனக்கிருந்த இடம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவையெல்லாம் தனிப்பட்ட ஆளுமைகளைப் பலமாகப் பாதிக்கிற விடயங்கள். இவை ஏதோ ஒரு வகையில் என்னைத் தாக்குகின்றன. நான் நானாக இருக்கிற தன்மை காரணமாக நான் வகிக்கிற பதவி நிலையும்கூட அதனால் பாதிக்கப்படுகிறது. பல நண்பர்கள் எனக்கு எதிராகச் சொல்கிற குற்றச்சாட்டு, சிவத்தம்பி அங்கேயொன்றைச் சொல்வார் இங்கேயொன்றைச் சொல்வார் என்பது. சிவத்தம்பி எந்தெந்த இடத்திற்கு எது எது தேவையோ அதைத்தான் சொல்வாரே தவிர மனைவியிடம் பேசுவதை மகளிடம் சொல்லமாட்டார். மகளிடம் பேசவேண்டியதை மாணவரிடம் சொல்ல மாட்டார். மாணவரிடம் சொல்வதைத் துணைவேந்தரிடம் சொல்ல மாட்டார். அந்த அந்த இடத்திலேதான் அதையதைச் சொல்லவேண்டும். ஆனால் எந்த இடத்திலும் பொய் சொல்லக்கூடாது. இது ஒரு அடிப்படையான விஷயம். நான் எனது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக இனி எனக்கு ஆச்சரியம்' என்ற ஒரு சொல்லுக்கு இடமில்லை என்று. குறிப்பாகக் கந்தசாமி பற்றிய குற்றச்சாட்டு வந்தபோது, நான் அதிலிருந்து விடுபட்டபொழுது நான் எனது நண்பர்களுக்குச் சொன்னேன், “ஒரு மனிதனுக்கு எதிராக எதுவும் சொல்லப்படலாம், எதுவும் செய்யப்படலாம் ஆச்சரியம் இல்லை” என்று.
தி.ஞா. இலக்கியகாரன் என்ற நிலையில் இவை எந்த வகையில் உங்களைப் பாதித்தன என்று கூறுங்கள்?
(அடுத்த இதழில் நிறைவுபெறும்)
26 ஞானம் - ஒக்டோபர் 2004

அவச்சல அடங்கAத கூடு
கூட்டுக் குருவிகளின் கூச்சல் - என் கவிஞர் ஏ.எம்.எம்.அலி
குழந்தை குட்டிகள் போடும்
வீட்டுத் தலைவியின் பnய்ச்சல் - ஒரு வேங்கைப் புலிகூடத் தோற்கும்
கூச்சல் அடங்காத கூடு - என் குடும்பம் வாழ்கின்ற வீடு கீச்சுக் கீச்சென்று கத்தும் - என்
கிபிள்ளைச் செல்வங்கள் நித்தம் ஆட்டுக்குட்டியென்று கேட்பன்-பையன்
அடம்பிடித் தழுதே தீர்ப்பான் போட்டு வதைக்காதே போடn - எனப் புகன்று துரத்துவேன் சூடா? மூத்த மகள்வந்து போட்டு " நாள்
முழுதும் வானொலியிற் பாட்டு வீட்டிற் சந்தடியைக் கூட்டும் " அபு து
விகர்சிப்பை மேலுங் கூட்டும்! கவிதை எழுதிடப் பேனை - நான்
கரத்தில் எடுத்திட மோனை மறுகி ஓடும்; என் மக்கள் - நிதம் வந்து தருவதாற் சிக்கல் நல்ல "மூடிலே’ திளைப்பேன் - என்
நாயகி வந்ததைக் கலைப்பnள் "வள்ளு” என்று நான் குறைப்பேன் - போதும்
வாங்க சாப்பிடவென முறைப்பாள்
"கவிதை எழுதிநான் காசி - நின்
கரத்தில் தந்ததை யோசி
கழுதை போல் நீயுங் கத்தி - கவிதைக்
கருவை அழிப்பதா புத்தி?”
என்று கவிதையிற் திட்டி - நான் ஏசி அவளோடு முட்டி
சென்று தொலையெனச் சொல்வேன் - முழுச்
சிந்தை கவிதைமேற் கொள்வேன்
لا
ரூானம் - ஒக்டோபர் 2004 27

Page 16
66V-6)VAf
சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
* ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம்பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி. * சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை , உருவகக்கதை Creative essays, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தீ, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமைபெற்றன. * வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனைவிடை
தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். * 2000 பக்கங்களைக்கொண்ட 'வரலாற்றில் வாழ்தல்" என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட இவரது சுயசரிதையாகும். * அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் இவரது
கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
(1)
தி.ஞா : தமிழில் வெளிவந்த சுயசரிதை நூல்களில் அதிக பக்கங்களை - இரண்டாயிரம் பக்கங்களைக்கொண்ட நூல் ‘வரலாற்றில் வாழ்தலி. இத்தகைய ஒரு பாரிய நூலை ஈழத்து இலக்கியவாதிகள் எவரும் எழுத முயலவில்லை. இதனை நீங்கள் எழுதியதற்கான நியாயங்கள் எவை?
எஸ். பொ. :வரலாற்றில் வாழ்தல்' என்ற நூலை நான் எழுதுவதற்கான நியாயங்கள் பல. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகத்தில் என்னைப் போன்று அநியாயமான வசைபாடல்களுக்கு உட்படுத்தப்பட்ட படைப்பாளி யாருமிலர்.
28 ஞானம் - ஒக்டோபர் 2004
 
 

என்னைப்பற்றியும் என் எழுத்துக்கள் பற்றியும் முழு இருட்டடிப்புகள் நிகழ்ந்துள்ளன. தவறான கருத்துக்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. இன்றும் ஈழத்தமிழ் இலக்கிய உலகில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலும் என்னைப்பற்றிய தவறான பதிவுகளே மிகவும் புழக்கத்தில் உள்ளன. ஈழத்தின் தமிழ் எழுத்தாளர்களுள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முதலில் தொடர்பு வைத்து, அதன் ஊழியனாகப் பணியாற்றிய பெருமை எனக்கே உண்டு. கே. இராமநாதன், கே.கணேஷ் எனக்கும் முன்னோடிகளாக இருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு தமிழன் என்கிற முறையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் முற்போக்கு எழுத்து ஊழியத்திலும் ஈடுபட்ட முதலாவது மார்க்சிஸ்ட் நான் என்பதுதான் உண்மை. ஆனால் பிற்காலத்தில் இலங்கையிலிருந்து இந்தியா சென்ற பல முற்போக்கு எழுத்தாளர்கள், எஸ்.பொன்னுத்துரை கொம்யூனிஸ்ட் என்பதை மட்டும் மறுக்கவில்லை. அவர் கம்யூனிஸ்ட் விரோதி என்றுகூடப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் சம்பந்தப்பட்டுள்ள உண்மை களை ஆவணப்படுத்தி வைத்தால்தான் இலங்கையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த தமிழ் இலக்கியம் பற்றிய உண்மையான வரலாறு பதிவு செய்யப்படும் என்பது என்கருத்து. என்னுடைய வரலாற்றை மட்டும் நான் முதன்மைப் படுத்தி எழுதவில்லை என்பதை அந்த நூலை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். என்னுடைய புகழை, என்னுடைய பெருமைகளைப் பதிவு செய்வதற்காக நிச்சயமாக வரலாற்றில் வாழ்தல் எழுதப்படவில்லை. மாறாக ஒரு காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பலருடைய பங்களிப்புகள், எதிர் வினைவுகள் எல்லாவற்றையும் இணைத்துத்தான் ஈழத்தில் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்த வரலாற்று உண்மைகளை ஒரு சரி ல ரு  ைடய s: பு க  ைழ யு ம | யாழ்ப்பாணத்தின் வேளாளத் தலைமைத்துவத்திை கருத்துக்களையும் நிலைநிறுத்த வேண்டும் என்பதைப் பகிரங்கம் தக்கவைக்கும் படுத்தப்படாத உள்ளார்ந்த ஒரு கொள்கையாகக் முயற்சியாக, I கடைப்பிடித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கைலாசபதி பக்கச் சார்பு போன்ற மாற்றுக் குறையாத வேளாளர் ஒருவரை களை நியாயப் இலக்கியத் தலைமைத்துவத்திற்கு வரச்செய்வது டு த து ம | தோதான அரசியல் சாதுரியமாகவும் இருந்தது. அவர் வந்தபோது அவருடைய 'சின் போலவும் உதவியாளர்
வகையில் பதிவு - . . . a ... 8 א செய்யப்படுதல் போலவும் சிவத்தம்பி ஒட்டிக்கொண்டார். 荔
லரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகமாகும். ‘வரலாற்றில் வாழ்தல் என்
நூலை வாசிக்கும் வாசகர்கள் அதை ஒரு காலத்தின் வரலாறாகவும் ஈழத்தின் இலக்கியத்தின் முதன்மையான உண்மையான வரலாற்றுப் பதிவுகளைத் தேடிய ஒர் ஆவணமாகவும் கொள்ளுதல் வேண்டும். மேலும் இலங்கையிலுள்ள,
குானம் - ஒக்டோபர் 2004 29

Page 17
தமிழ்த்துறைகளைப் பரிபாலனஞ் செய்யும் பல்கலைக்கழகங்களில் உள்ள வரலாற்றுப் பதிவுகளின் செப்பம் பேணவேண்டியவர்கள் கூட, உண்மையான வரலாற்றுப் பதிவுகள் செய்யாது காலங்காலமாகக் கையளிக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகளை அன்றேல் வியப்புரைகளை மட்டும் வரலாற்று ஆதாரங்களாக வைத்துக்கொண்டு புதியவரலாறு ஒன்று சிருஷ்டித்து வருகிறார்கள். செஞ்சோற்றுக் கடனுக்காகச் செய்யப்படும் இந்த வரலாற்றுப் புரட்டுகளினால் இளந்தலைமுறையினருக்கு எது உண்மை எது பொய் என்ற மயக்கத்திலிருந்து விடுபட முடியாதிருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு மேலான ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். எத்தனையோ அனுபவங் களினுடாக என்னுடைய இலக்கிய ஊழியம் நிலைத்துள்ளது. என்றும் சாகாவரம் பெற்ற கருத்துக்கள் என்பது இலக்கியப் படைப்பாளிக்கு உவப்பானதல்ல; உரியனவல்ல. அவனுடைய அனுபவங்களின் மாற்றங்களுக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பவும் அவனுடைய தேடல்களின் அனுகூலங்கள் பிரதிகூலங்களுக்கு ஏற்பவும் அவன் இலக்கியங்களிலே கொண்டுள்ளபற்று, பற்றின்மை முதலியவற்றினாலும் அவனுடைய இலக்கியப் பார்வைகள் மாறுபடும். எனக்கு மட்டும் இது பொதுவல்ல. எந்தப் படைப்பாளிக்கும் இது பொது. என்னுடைய ஆரம்பகால எழுத்துக்களுக்கும் இன்றைய எழுத்துக்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள. இந்த வேறுபாடுகள் எதனால் சம்பவித்தது என்பதைப்பற்றி நாளைய ஆய்வாளர்கள் ஆராயவேண்டும். அந்த ஆய்வுகளுக்கு ஆதாரம் உண்மையான தகவல்கள். என்னைப்பற்றிய உண்மையான தகவல்கள் இதுவரையில் மிக மிக அற்பமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதனால் நான் விரிவாக எழுதியுள்ளேன். உண்மைகளென்று சொல்லாமல், உண்மைகளைத் தேடிப்பெறுவதற்கான தகவல்கள் என்று உரிமை பாராட்டி ‘வரலாற்றில் வாழ்தல்' என்ற நூலை எழுதியுள்ளேன். சத்தியத்தினைத் தர்மஞ் சார்ந்து தேடும் படைப்பிலக்கியமாகவும் 'வரலாற்றில் வாழ்தல் வடிவங்கொண்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும்.
தி. ஞா : ஆரம்பகாலத்தில் யாழ்ப்பான கம்யூனிஸ்ட் கட்சியுடனான உங்கள் தொடர்புபற்றிச் சொன்னிர்கள். அதுபற்றி இன்னும் சற்று விரிவான தகவல்களைத் தரமுடியுமா?
எஸ். பொ. ; உண்மையிலேயே மார்க்சிய சிந்தனையாளர்கள் 'சூரியமல் - சூரியகாந்திமலர் - இயக்கத்திலிருந்து சமசமாஜக் கட்சி பிறந்ததுவரை ஆரம்பகால மார்க்சிய வரலாறாகச் சொல்வர். மார்க்சியக் கட்சியாகப் பரிணமித்து வளர்ந்துகொண்டிருந்த சமசமாஜக் கட்சியிலே, இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ரஷ்யாவும் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் சமசமாஜக் கட்சித் தலைவர்களிடையே அபிப்பிராய பேதங்கள் முளைக்கலாயிற்று. இதன்
30 ஞானம் - ஒக்டோபர் 2004

காரணமாக சோவியத் அனுசரணையான மூன்றாவது சர்வ தேசியத்தை ஏற்றவர்கள் பிரிந்துவிட, ரஷ்யாவிலிருந்து விரட்டப்பட்ட ட்றொஸ்க்கி ஏற்படுத்திய நாலாவது சர்வதேசியத்தில் தங்களுக்கு சம்மதம் உண்டு என்று கூறியவர்கள் சமசமாஜக் கட்சியிலே பெரும்பான்மையினராய் இருந்தனர். எனவே சிறுபான்மையினராக விரட்டப்பட்ட சோவியற் யூனியன் சார்பான மார்க்சியச் சிந்தனையாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்கள். இது நடந்தது இரண்டாவது உலகமகாயுத்தத்தின்போது. இவைபற்றி இலங்கையின் கொம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றிலே உத்தியோகபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. பீட்டர் கெனமன் அவற்றின் அம்சங்கள் சிலவற்றை அவ்வப்போது விரிவாக எழுதியிருக்கிறார். எனவே அதைப்பற்றி நான் அதிகம் சொல்லத் தேவை யில்லை. ஆனால் 1947ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழுவின் சிபார்சு களின்படி நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் முகமாக யாழ்ப்பாணத்திலே, ஐம்பதுக்கு ஐம்பது கோஷம் போட்ட ஜி. ஜி பொன்னம்பலம் உச்ச செல் வாக்கு
அ  ைட ந த ரு நத ( க ர ல த" த ல' , கம்யூனிஸ்ட் கட்சியின் um g கிளை
ஒரு கால கட்டத்தின் அரசியல் நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த பலருடைய பங்களிப்
எதிர்வினைவுகள் எல்லாவற்றையும்:
உருவாக்கப்பட்டது. அந்த யாழ் கிளை
- - - வளர்ந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க உருவாக்கப்பட்டபொழுது முடியாது. இந்த வரலாற்று உண்மைகளைக் அதில் 'பந்த" | ஒரு சிலருடைய புகழையும் கருத்துக் பட்டவர்களில் "2" | களையும் தக்கவைக்கும் முயற்சியாக ஒருவி* அந்த "9 பக்கச்சார்புகளை நியாயப்படுத்தும் வகையில் கிளையின் இயக்க பதிவு செய்யப்படுதல் லரலாற்றுக்குச் சக்திகளாக ஆரம் | செய்யப்படும் துரோகமாகும். பத்தில் உழைத்தவர்கள் yeeS e ke eSeSkSSeSeeeS eSSuyS SeSeeS S SySkk ky y eke Tuq kykSe SyyuyTu ee eq tS ee ee qeeyy ee ey மு.கார்த்திகேசன் ,
ஆர்.ஆர். பூபாலசிங்கம் - புத்தகசாலை உரிமையாளர், சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த எம். சி. சுப்பிரமணியம், மற்றும் நல்லூரில் புத்தகக் கடை வைத்திருந்த இராமசாமி ஐயர் இவர்களே முக்கியமான தொண்டர்களாக இருந்தார்கள். அதன் பின்னர் ஐ. ஆர். அரியரட்ணம் வந்துசேர்ந்தார். அவ்ரைத் தொடர்ந்து சுதுமலைப் பேராயிரவர் வந்தார். அந்தக்காலத்தில் கந்தையா, வைத்திலிங்கம், சண்முகதாஸன் மூவரும் கொழும்பார்! அந்தக் காலத்திலே இளைஞர் மத்தியிலே கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஓர் உத்வேகத்துடன் தோழர் கார்த்திகேசன் பல துறை
ஞானம் - ஒக்டோபர் 2004 31

Page 18
களிலும் உழைத்தார். அதில் ஒன்று, இளைஞர்களை மார்க்சிய சிந்தனையில் புடம்போட்டு எடுக்கப்பட்ட எழுத்தாளர்களாக மாற்றுவது. அவருடைய ஆளுமையின் கீழ் வந்ததினால் நான் மார்க்சியப் பார்வையுள்ள எழுத்தாளனாக வந்தேன். ப. ஜீவானந்தத்தின் யாழ் வருகை இந்த எழுச்சிக்கு ஊக்கியாக அமைந்தது. எனக்குப் பின்னர் டானியல், டொமினிக் போன்றவர்களும் கார்த்திகேசனின் ஆளுமையின் ஊழியத்தினால் மார்க்சியப் பார்வை பெற்றார்கள். அதுமட்டுமன்றி பிற்காலத்திலே மார்க்சிய விமர்சன சிந்தனை யாளராய் பெயரெடுத்த கைலாசபதிகூட ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலே கற்றகாலத்தில் கொம்யூனிச அனுதாப எண்ணங்களைப் பெற்றது மு. கார்த்திகேசனுடைய ஆளுமையினால். எனவே ஆரம்பகால முற்போக்கு இலக்கிய எழுத்துக்கள் அனைத்தும் மு.கார்த்திகேசனை மையமாகக் கொண்டு நடந்தன என்ற பதிவு இதுவரையில் செய்யப்படவில்லை. ஆனால் உண்மை அதுதான்.
அதுமட்டுமன்றி 1950ஆம் ஆண்டில் மு.கார்த்திகேசன் இலக்கியச் சிந்தனைகளை விரிவுபடுத்துவதற்காக மார்க்சிய நூல்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்று, "பாரதி நூல் நிலையம்' என்ற புத்தகக்கடை நிறுவப்படக் காரணராய்ச் செயற்பட்டார். கொம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர் களுடைய பண முதலீட்டிலேதான் இந்தப் புத்தகக்கடை நிறுவப்பட்டது. அந்தப் புத்தகக்கடையின் முதல் முகாமையாளராக நானே நியமிக்கப்பட்டேன். 1950ஆம் ஆண்டில் மார்க்சிய இலக்கியச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட என். கே.ரகுநாதன், டானியல், டொமினிக் போன்ற பலரும் ஒன்றுகூடி இலக்கியம் பற்றிப் பேசுவதற்கான களத்தை இந்தப் பாரதி புத்தகசாலை ஏற்படுத்தித் தந்தது. இந்தப் புத்தகசாலை கே.கே.எஸ்.றோட்டில் தியாகராஜா புத்தகக்கடைக்குப் பக்கத்தில் உள்ள முருகன் புத்தகசாலைக்கு எதிர்த்தாற் போல் சீதா சோடாக் கொம்பனிக்கு நேர் எதிராக இருந்த கட்டிடத்தில் அமைந்திருந்தது. அக்காலத்திலே யாழ்க் குடாநாட்டில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் தோழர்களுடைய சந்திக்கும் இடமாகவும், தகவல் விட்டுச் செல்லக் கூடிய InformationCentre ஆகவும் பாரதி புத்தகசாலை செயற்பட்டு வந்தது. ஒன்றை இங்கு நான் நினைவுகூர விரும்புகிறேன். பாரதி புத்தகசாலை காலத்தில் டானியல், ஜீவா போன்றவர்கள் தங்களுடைய கதைகளைச் செப்பனிடுவதற்கும், அவைபற்றி உரத்துச் சிந்தித்து ஆலோசனை பெறுவதற்கும் இந்தப் புத்தகசாலைதான் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பிரசித்தத்தினால் அவர்களது எழுத்து ஆளுமையையோ, பிற்காலத்தில் அவர்கள் அடைந்த எழுத்து வளர்ச்சிகளையோ கொச்சைப்படுத்தப்படுவதாக மாட்டாது. மார்க்சிம் கோர்க்கியினுடைய தமிழ் மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் முதல்முதலாக அவர்கள் படித்துத் தேறியதும் இந்தப் பாரதி புத்தகசாலையிலே கிடைத்த நூல்களின் மூலமாகத்தான். ஒருமுறை டானியல்
32 ஞானம் - ஒக்டோபர் 2004

எழுதிய சிறு கதையை நான் செப் பனிட்ட  ெப ா ழு து , கை தடுமாறி அது டொமினிக் ஜீவாவுடைய கதையென்று அவரிடம் கொடுத்து விட்டேன். இந்தச்சம்பவம் நடந்தது 1950ஆம் ஆண்டில். ஆனால் அந்தக் கதை பிற்காலத்தில் 1955ஆம் ஆண்டு அளவிலே வீரகேசரியில் 'சக்கரம் சுழன்றது என்ற தலைப்பில் டொமினிக் ஜீவா எழுதிய கதையாக வெளிவந்தது. இவை அனைத்தும் மறக்கப்படும் பழங்கதைகளாகிவிட்டன. இந்தப் பாரதி புத்தகசாலை என்பது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த முதலாவது மார்க்சிய எழுத்து எழுச்சியின் சின்னம் என்பதுகூட இதுவரையில் யாராலும் பதிவு செய்யப்படவில்லை.
இன்னுமொன்று வட இலங்கையில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மத்தியிலே, அவர்கள் மூலம் அவர்களுடைய வீடுகளிலே மார்க்சியம் பற்றிய ஒரு சாதகமான அபிப்பிராயம் கொண்டுசெல்லப்படுதல் வேண்டும் என்பதிலே மு.கார்த்திகேசன் ஊன்றிய அக்கறையினால் வட இலங்கை இளைஞர் சம்மேளனம் என்ற ஸ்தாபனம் உருவாக்கப்பட்டது. இது 1948இல் நிறுவப்பட்டது. அதன் முதலாவது இணைச் செயலாளர்களாக நானும் பின்னால் தமிழில் கலாநிதியாகப் புகழ்பூத்த தனஞ்ஜயராஜசிங்கமும் இணைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். உரும்பராயைச் சேர்ந்த குலவீரசிங்கம் அதன் பொருளாளராகச் செயற்பட்டார். இந்த வட இலங்கை இளைஞர் சம்மேளனம் அகில இலங்கை இளைஞர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டு கம்யூனிஸ்ட். கட்சியினுடைய Youth Front ஆகச் செயற்பட்டது. 1949ஆம் ஆண்டு கொழும்பிலே நடந்த இந்த இளைஞர் சம்மேளனத்தின் அகில இலங்கைக் கூட்டத்தில் நானும் குலவீரசிங்கமும் யாழ் பிரதேசத்தின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டோம். இவைதான் ஆரம்பகாலத்தில் மார்க்சிய இளைஞர் களுடைய சில நடவடிக்கைகளாக இருந்தன. இது பற்றிக்கூட இதுவரையில் எவ்வகையான வரலாற்றுப் பதிவுகளும் இடம்பெறவில்லை. இவற்றையெல்லாம் சொல்லவேண்டிய நிர்ப்பந்தத்தினாலும் வரலாற்றில் வாழ்தல் எழுத நேர்ந்தது.
ஆரம்பகால முற்போக்கு இலக்கிய எழுத்துக்கள் அனைத்தும் மு.கார்த்திகேசனை மையமாகக் கொண்டு நடந்தன என்ற பதிவு இதுவரையில் செய்யப்படவில்லை. ஆனால் உண்மை அதுதான்.இ
தி. ஞா. : அப்படியாயின் யாழ் பிரதேச மார்க்சிய இலக்கியத் தலைமைத்துவம் எவ்வாறு கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் தலைமையை ஏற்றுக்கொண்டது?
எஸ். பொ. : இது பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகள். உண்மையில் பிற்காலத்தில் முற்போக்கு இலக்கிய சிறுகதை ஆசிரியர்கள் என்று சொல்லியபோது ஒரு வாய்பாடாக டானியல், டொமினிக், செ.கணேசலிங்கம் என்று மூன்று பேர்களைக்
ஞானம் - ஒக்டோபர் 2004 33

Page 19
குறிப்பிடுவார்கள். சிலவேளைகளில் நீர்வைப் பொன்னையன், இளங்கீரன் ஆகிய பெயர்களையும் சேர்த்துச் சொல்லிக் கொள்வார்கள். என். கே. ரகுநாதனுடைய பெயர் அதிகமாகப் பிரபலப்படுத்தப்படவில்லை. ஆனால், எனக்கும் மூத்தவனாக மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கியும் வாங்காமலும் முற்போக்கு இலக்கியச் சிந்தனைகளை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் கொண்டுவந்த பெருமை என்.கே. ரகுநாதனுக்கே உரியது. இந்த என். கே.ரகுநாதன், டானியல், டொமினிக் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தை, அது முற்போக்கு இலக்கியம் என்ற பிரக்ஞையின்றி எடுத்துச்சென்று கொண்டிருந்தபொழுது நான் ஜாதியின் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பாடசாலைகளிலே ஆசிரியனாக இருக்கமுடியாது கம்பளையில் ஆசிரியனாகச் சேர்ந்தேன். அதுமட்டுமன்றி என்னுடைய சொந்த சில நிர்ப்பந்தங்களினால் - அந்த நிர்ப்பந்தங்களை விரிவாகவே வரலாற்றில் வாழ்தலில் எழுதியிருக்கிறேன். தற்காலிகமாக எழுதுவதை நிறுத்தியிருந்தேன். அந்தச் சபதம் முறித்தது 1955ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள். அதுதான் என் திருமணநாள். விவாகம் நடக்கும்வரையில் நான் சிறுகதைகள் என் பெயரில் எழுதுவதில்லை என்ற சபதத்தை ஏற்றிருந்தேன். இந்தக் கட்டத்திலே பல பிரச்சினைகள் நிகழ்ந்தன. அவை அரசியல் நிகழ்வுகள். அதில் ஒன்றுதான் SWRD பண்டார நாயக்காவின் தலைமையிலே சிங்களத் தேசியவாதிகள் - அவர்கள் தேசியவாதிகள் என்றோ இனவாதிகள் என்றோ அடையாளப்படுத்தப்பட்டவர்கள் - ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தபொழுது, சிங்களத்தில் உள்ள கலை இலக்கியங் களை வளர்ப்பதற்காக சாகித்திய மண்டலம், கலைக்கழகம் போன்ற நிறுவனங்களைத் தொடக்கினார்கள். இதன் காரணமாக தமிழிலும் அத்தகைய நிறுவனங்கள் தோன்றி, தமிழ் வளர்ச்சிக்கும் பரிசுகள் கொடுக்கவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியது. இந்தப் பரிசுகளும் அரசாங்க நிறுவனங்களும் ஏற்பட்டபொழுது பட்டதாரிகளாக இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர்கள் வெளியேறினார்கள். கைலாசபதியும் சிவத்தம் பியும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் ஆகியோருடைய பிரீதியை, அவர்களுக்கு அடிபொடிகளாகச் செயற்பட்டுச் சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்களுடைய இலக்கிய வணிகத்திற்கு இத்தொடர்புகளே மூலதனமாக அமைந்தன. பின்னர் மார்க்சின் மூலதனம் படித்துத் தேறி மார்க்சிய சிந்தனைகளின் வழியில் நடப்பவர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இந்த நிலைப்பாடும் அவர்களுக்கு உதவிசெய்தது. குறுகிய யாழ்ப்பாண அரசியலுக்குள் பிசங்காத அறிவு ஜீவிகளாகப் பவனி வருவதற்கு உதவியது. அவர்கள் இலக்கிய உலகிற்கு வந்ததுகூட விமர்சகர்களாகவே தவிர படைப்பாளிகளாக அல்ல. கைலாசபதி
34 ஞானம் - ஒக்டோபர் 2004

ஆரம்பத்தில் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் நனவோடை உத்தியில் எழுத வேண்டும் என்ற பிரக்ஞையுடன் எழுதியவர் கைலாசபதி, His creative writing ended in disaster. gigbg55 (85.T6)6 assig, isor 60Ti அவர் முழுக்க முழுக்க விமர்சகராகவே மாறிவிட்டார். யாழ்ப்பாணத்தின் வேளாளத் தலைமைத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதைப் பகிரங்கப் படுத்தப்படாத உள்ளார்ந்த ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கைலாசபதி போன்ற மாற்றுக் குறையாத வேளாளர் ஒருவரை இலக்கியத் தலைமைத்துவத்திற்கு வரச்செய்வது தோதான அரசியல் சாதுரியமாகவும் இருந்தது. அவர் வந்தபோது அவருடைய “சிண் போலவும் உதவியாளர் போலவும் சிவத்தம்பி ஒட்டிக்கொண்டார். ஆரம்பத்திலேயே நான் கைலாசபதி சிவத்தம்பியினுடைய தலைமைத்துவத்தினால் முற்போக்கு இலக்கியம் ஒரு சரியான திசையைப் பெறமுடியாது என்றும், இலக்கியப் படைப்பாளியாலன்றி விமர்சகர்களால் இலக்கிய இயக்கம் வழிநடத்தப்பட்டு செழுமை அடையமுடியாது என்றும் 1956ஆம் ஆண்டிலேயே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பலரிடம் எச்சரிக்கை செய்தேன். ஆனால் இன்று என்னுடைய எச்சரிக்கைகள் மிக நியாயமானவை என்பதை வரலாறு எண்பித்துள்ளது. கைலாசபதிக்கு என்றுஞ் செஞ்சோற்றுக் கடன் செலுத்தி வாழவேண்டிய டொமினிக் ஜிவாகூட இந்த உண்மைகளை உங்கள் ‘ஞானம்' பத்திரிகையின் நேர் காணலிலே ஒத்துக்கொண்டிருக்கிறார். எத்தனை வருஷங்கள் கடந்த ஒரு ஞானஉணர்வு 1956ஆம் ஆண்டு சொன்ன என்னுடைய கருத்தை அவர் உணர்வதற்கு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஓடிமறைய வேண்டி யிருந்தது. உங்கள் கேள்விக்கு ஒரு சுருக்கமான விடையும் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இயலாமையும், ஜாதியப்பற்றுமே கைலாசபதியின் எழுச்சிக்குக் காரணமாய் அமைந்தன. கம்யுனிஸ்ட் கட்சி இயலாமை பற்றியும் சற்றே விளக்க வேண்டும். அந்தக்காலத்தில் பண்டிதர்களும் தமிழ்ச் சட்டம்பிமாருமே தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும் தத்துவக்காரராக யாழ்ப்பாணத்திலே வலம் வந்தார்கள். அவர்கள் ஜீ.ஜீ.யின், பின்னர் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர் களாகவே செயற்பட்டார்கள். இவர்களுடைய ஆதரவு கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கிடைக்கவில்லை. ஆங்கிலம் படித்த தலைமைத்துவமும், தமிழை முறையாகப் படிக்காத எழுத்தாளத் தோழர்களும்! இந்நிலையில், தமிழிலே சிறப்புப் பட்டம் பெற்ற கைலாசபதிக்குப் பரிவட்டம் கட்டுதல் அவசியமான அரசியல் தந்திரமாக விளங்கியது என்பதையும் நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். கைலாசபதியின் மறைவினால், சிவத்தம்பியார் காட்டில் நல்ல மழை.
(தொடரும் .)
O O O
ஞானம் - ஒக்டோபர் 2004 35

Page 20
சிறுவர் அறிவியற் பாடல்
எலிசலை உண்டnவது எப்படி?
கவிஞர் ஏ. இக்பால் எரிமலைகள் தோன்றுவது எவ்வாறு? எடுத்துறைப்பேன் கேளுங்களேன் தப்பnது புவியின் மேற்பரப்பிருந்து கீழேதான் போகப் போக வெப்பம் கூடிச் செல்லுமாம்
முப்பது கிலோ மீற்றர் ஆழத்தில் வெப்பம் இரும்பை உருக்கும் சிறு நேரத்தில் அப்போ துள்ளே இருக்கும் பாறை உருகுமாம் உருகிப் பாறைக் குழம்பு அங்கே நிறையுமாம்
உலகின் சில பாகமுள்ள மலைகளை உள்ளே பெயர்த்து இடைவெளிகள் ஆக்கிடும் பல திசையில் மேலே அமுக்கம் கூட்டியே பாறைக் குழம்பு திடப்பொருளை நிரப்பிடும்
திரவ வாயு திடப் பொருட்கள் அவட்டுடன் துளை மலையில் ஆக்கிக் கூம்பு வடிவமாய் எரிமலை வாய் என்ற பெயரைப் பெற்ற பின் எழுந்து குழம்பு மேலே சீறும் எரிமலை
புத்தகக் களஞ்சியம் (நூல் மதிப்புரை) புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்கை அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே திப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி ட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறு குறிப்பு மாத் ஒரடிேபுதிய நூலகத்தில் இடம் பெறும்.
`ად:
** .* ܫܝܼܣܬ̇ܬ̇
36 ஞானம் - ஒக்டோபர் 2004
 
 
 
 
 
 
 
 

புாைகாத இNக்கியம் : அறிவோம், கற்போம், படைப்போம்,
செங்கை ஆழியான் க. குணராசா
3. இலக்கியத்தின் மூலக்ககூறுகள் : (3)
ஆரம்ப இலக்கியப் படைப்புகள் தமக்கென ஒரு இலக்கணத்தினை வகுத்துக் கொண்டு படைப்பாளிகளின் சிந்தனையிலிருந்து படைக்கப்படலில்லை. தமக்குச் சரியெனப் பட்ட வடிவத்தில் தமத உள்ளக் கருத்துக்களை வெளியிட வாய்ப்பான உரைநடையில் அல்லது செய்யுளில் அவை படைக்கப்பட்டன. அந்த இலக்கியம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதும் அவ்வகையில் இன்னொரு இலக்கியம் தோன்றுவதற்குரித்தான இலக்கணத்தை அறிஞர்கள் வகுத்தனர். இலக்கணத்திற்கு இலக்கியமேயொழிய இலக்கியத்திற்கு இலக்கணமல்ல என்ற வாதம் ஆரம்பத்திலிருந்து பேசப்பட்டாலும் ஒரு வகையொட்டி இன்னொன்று அல்லது பல படைப்புகள் வெளிவந்ததும் அவை தாமாகவே ஓர் இலக்கண வரம்பினை அமைத்துக்கொண்டன. அவ்வகையில் புனைகதை இலக்கியப் படைப்புக்கள் பின்வரும் மூலக்கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாகி விட்டது.
3.1 உள்ளடக்கம் (Theme) 3.2 கருப்பொருள் (Plot)
3.3 உத்தி (Technic) 3.4 நடை (Style) 3.5 உருவம் (Image) 3.6 பாத்திரவார்ப்பு (Characterization) 3.7 களமும் சூழலும் (Place & Situation) 3.8 ஒசை (Rhythm) 3.9 கற்பனை (Imagination) 3.10 கருத்தியற்கோட்பாடுகள் (Idealism) 3.11 கலைநேர்த்தி (Perfection) 3.12 கதையம்சம் (Story)
3.1 உள்ளடக்கம்
ஒரு படைப்பின் மூலாதாரக் கருத்து உள்ளடக்கமாகும். ஒரு கைத்தொழில் நகரத்தின் குரூரங்களைச் சித்திரிப்பதனை உள்ளடக்கமாகக் கொண்டு ஆங்கில எழுத்தாளரான சார்ள்ஸ் டிக்கின்ஸ் தனது Vanity Fair (1885) ஐப் படைத்தார். பிரான்சியச் சுரங்கங்களின் தாங்கொணாத் துயரங்களை மக்களுக்கு எடுத்துரைக்க பிரான்சிய எழுத்தாளரான எமிலிஜோலா Germinal (1885) நாவலைத் தந்தார். அமெரிக்க சேரிப்புறமொன்றின் தீய ஒழுக்கங்களையும் குரூரங்களையும் அமெரிக்க
நானம் - ஒக்டோபர் 2004 37

Page 21
எழுத்தாளரான ஸ்ரீபன்கிறேன் தனது A Girl of the Street (1893) 6Tsarp நாவலின் உள்ளடக்கமாகக் கொண்டார். பாலியல் சம்பந்தமான கட்டவிழ்ப்புக் களையும், பாலியலோடிணைந்த சமூகத் É'Gése,6061Tuth Women in Love (1920) என்ற நாவலின் உள்ளடக்கமாக ஆங்கில எழுத்தாளரான டி. எச். லோறன்ஸ் எடுத்துக்கொண்டார். நெப்போலியனின் படையெடுப்யினால் ருசிய மக்கள் அடைந்த இடர்களையும் எதிர்மறையாகப் பெற்றுக்கொண்ட எதிர்ப்புணர்வையும் உள்ளடக்கமாகக் கொண்டு லியோ ரோல்ஸ்ரோயின் War and Peace (1869) 6T Girp it 6) si) அமைந்தது. அமெரிக்க நாவலாசி ரியரான பேர்ல் எஸ். பக் என்பார் ஆசிய மக்களுக்கும் மேற்குலக மக்களுக்கு மிடையிலான புரிந்துணர்வை வெளிப் UG55 560Tg. The Good Earth (1931) என்ற நாவலைப் பயன்படுத்தியுள்ளார். முதலாவது உலக மகாயுத்த சம்பவங் களை ஒரு காதல் கதையில் இணைத்துச் சொல்ல ஏர்னஸ்ட் ஹெமிங்கேவே தனது Fairwell to Arms 6Tsip BT6656iT உள்ளடக்கமாகக் கொண்டார். கம்யூனிச ருசியாவின் இரும்புத் திரைக்குள் அடங்கிய உள்ளம்சங்களை வெளிக் கொணருவதை உள்ளடக்கமாகக் கொண்டு பொறிஸ்பஸ்ரநாக் என்ற படைப்பாளி Dr Zhivago என்ற நாவலை எழுதியுள்ளார். இஸ்லாமியத்தை விமர்சிக்கும் நோக்கை உள்ளடக்கமாகக் கொண்டு சல்மான் ருஷ்டி என்பார் Satanic Verses 6T 6ôTyp (SJ & éf னைக்கான நாவலை எழுதியுள்ளார். அவ் வகையான உள்ளடக்கத்தை வைத்து தஸ்லிமா நஸ்றின் Laja என்ற நாவலை ஆக்கியுள்ளார்.
38
சோழர்கால சமூக நிலையையும் தமிழரசின் விரிவையும் ஆட்சிச் சிறப்பையும் பெருமைகளையும் வெளிப் படுத்தக் கல்கி தனது வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனைப் பயன்படுத்திக் கொண்டார். கடலாஞ்சிக் கிராமத்தின் புராதன வன்னி மக்களதும் குடியேறிய மக்களதும் நலன்களைச் சுரண்டுகின்ற வர்க்கத்தினைச் சித்திரிக்கும் உள்ளடக்க நாவலான செங்கை ஆழியானின் காட்டாறு அமைந்தது. மலையக மக்களின் குறிப்பாகத் தொழிலாளரின் துயரங் களையும் போராட்ட்ங்களையும் விளக்க தி. ஞானசேகரன் குருதிமலை’ நாவலையும் தெளிவத்தை ஜோசப் காலங்கள் சாவதில்லை’ நாவலையும் தெரிந் துள்ளனர். யாழ்ப்பாணக் குடா நாட்டின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் அவர்கள் கொதித் தெழுவதையும் உள்ளடக்கமாகக் கொண்டு கே. டானியல் தனது பஞ்சமர் நாவல்களைப் படைத்துள்ளார். கற்பு சம்பந்தமான கருத்தியல்பினை மாற்றும் வகையிலான உள்ளடக்கத்தைக் கொண்ட சிறுகதைகளைப் புதுமைப்பித்தன் (சாபவிமோசனம்), வரதர் (கற்பு) என்போர் படைத்துள்ளனர். கரிசல் கிராம மக்கள் வேள்ாண்மைக் கூலிகளாகப் படும் துயரங்களை விபரிப்பதை உள்ளடக் கமாகக் கொண்டு பொன்னீலன் கரிசல் என்ற நாவலை ஆக்கித் தந்துள்ளார். தேயிலைத் தோட்ட மக்களின் போராட் டங்களை எடுத்துரைப்பதை உள்ளடக்க மாகக் கொண்டு டி. செல்வராஜ் 'தேனீர் என்ற நாவலை எழுதினார். ஏழை நெசவுத் தொழிலாளரின் போராட்டங்களை முன்னிறுத்தும் நோக்குடன் சிதம்பர ரகுநாதன் பஞ்சும் பசியும் நாவலைத் தந்துள்ளார். சினிமா மோகத்தையும்
ஞானம் - ஒக்டோபர் 2004

சாதாரண அடித்தட்டு மக்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு ஜெயகாந்தன் சினிமாவுக்காகப்போன சித்தாளு” என்ற நாவலை படைத்தார். தஞ்சை மாவட்டப் பழக்க வழங்கங்கள், ஆண்பெண் பாலுணர்வே சமூக ஒட்டத்தை நிர்ணயிக்கும் என்ற அம்சங்கள் என்பனவற்றினை உள்ளடக்கமாகக் கொண்டு தி. ஜானகி ராமனின் நாவல்கள் அமைந்துள்ளன.
எனவே உள்ளடக்கம் இல்லாமல் எந்தப் படைப்பும் உருவாக முடியாது. ஒரு படைப்பினை உருவாக்குவதற்கு முன் அப்படைப்பின் உள்ளடக்கம் எனப்படும். Theme ஐ எழுத்தாளன் முடிவு செய்து கொள்கிறான். இலக்கியத்தின் உள்ளடக்கம் சமூக நல நோக்கற்றதாக இருக்க முடியாது. வாசகனை அவன் வாழ்கின்ற வாழ்க்கையிலும் மேலான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அந் நோக்கு அமையவேண்டும். வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகப் படைப்பின் உள்ளடக்கம் இருக்கவேண்டும். ஒரு படைப்பின் உள்ளடக்கம் படைப் பாளியின் சமூகப் புரிந்துணர்வையும், அவன் வரித்துக்கொண்ட கருத்தியல் பையும், அவன் நம்பும் அரசியல் நம்பிக்கை களையும் பொறுத்த விடயமாகும். படைப்பாளி சமூகத்திற்குத் தன் படைப்பின் மூலம் எதைச் சொல்லவிரும்புகிறான் என்பதும் படைப்பின் மூலம் முன்வைக்கும் செய்தி யாது என்பதும் (Massage) உள்ளடக்கத்தில் தான் இருக்கின்றன.
3.2 கருப்பொருள்
உள்ளடக்கத்தையும் (Theme) கருப்பொருளையும் (Plot) புரிந்து கொள்வதில் நிறைய இடர்பாடுகள் இருக்கின்றன. ஈழத்து நாவலாசிரியர் கே. 16ளிபலின் பஞ்சமர் நாவலில் அடக்கி பொடுக்கப்பட்ட மக்களின் துயரங்
ரூானம் - ஒக்டோபர் 2004
களுக்கான காரணிகளை அறியவைத்து அவர்களைக் கிளர்ந்தெழத் தூண்டுதல் என்பது அந்த நாவலின் உள்ளடக்கமாகும். சாதியம் ஏற்படுத்திய வறுமையும் அறியாமையும் வர்க்க முரண்பாடுகளும் குறித்த பாத்திரங்களை எவ்வாறு எவ்வெவ் வழிகளில் பாதிக்கின்றன என்பதும் அவற்றிலிருந்துவிடுபடச் சில பாத்திரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பன வற்றினைச் சம்பவங்களின் அடிப்படையில் விபரிப்பது கருப்பொருளாகும். எனவே பாத்திரங்களுக்கு யாது நடக்கின்றன என்பதைக் கருவிபரிக்கின்றது. ஒரு குறித்த காலவெல்லைக்குள் பாத்திரங்களோடு இணைந்து நிகழ்ந்த சம்பவங்களை விபரிப்பது கருவாகும். Frtisitsu டிக்கின்ஸின் ஒலிவர் ருவிஸ்ற்றின் பிரதான பாத்திரம் ஒரு கைத்தொழில் நகரத்தில் அவன் படும் துன்பங்களைக் கருவாகக் கொண்டது. ஒரு கிராமிய டாக்டரிடம் வாழ்க்கைப்பட்டு அதிருப்தியுற்ற பெண்ணொருத்தி இன்னொருவரிடம் காதல் வயப்படுவதும் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதும் பிளான்பேட்டின் Madam BOVary நாவலின் கருவாகும். (Espinsit Gunsi)6SauroSlsit Moby Dick (1851) என்ற நாவலில் தன் காலொன்றினைக் காவுகொண்ட திமிங் கிலத்தை வேட்டையாட அகாப் என்பவன் புறப்படுகிறான். அந்தப் போராட்டத்தில் அவன் இறக்கிறான். இது அந்த நாவலின் கரு. ஏனெஸ்ட் ஹெமிங் வேயின் கடலும் கிழவனும் என்ற நாவலில் சுறா வேட்டைக்குப் புறப்பட்ட கிழவன் வெற்றி யுடன் திரும்பி வருகிறான். இரண்டிலும் இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டம் உள்ளடக் கமாகும். மார்க்ருவினின் Adventures of Hucklebery Finn (1884) என்ற நாவலில் ஹக் என்ற வெள்ளைக்காரப் பையனும் தப்பி ஓடிவரும் ஜிம் என்ற அடிமையும் மிசிசிப்பி நதியில் படகொன்றில்
39

Page 22
பயணப் படுகிறார்கள். அதனால் ஏற்படும் மானிட நேயம் கருப்பொருளாகிறது. வெள்ளைக்காரப் பையனும் கறுப்பனும் கொள்கின்ற நல்லுறவு இந்த நாவலின் உள்ளடக்கமாகிறது.
இலங்கையர்கோனின் வெள்ளிப் பாதசரம் சிறுகதையில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் ஏற்படும் ஊடலும் கூடலும் கருவாகின்றது. செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவலில் மீன்பிடித் தொழிலிற்காக இடம் பெயர்ந்துவரும் மீனவச் சம்மாட்டி மாருக்கும் உள்ளூர்ப் பெண்களுக்கு மிடையிலான உறவின் நெருக்கமும் பிரிவும் சம்பவங்களூடாகவும் பாத்திரங் களூடாகவும் சித்தரிக்கப்படும் கருவா கின்றது. கொழும்பில் எழுதுவினை ஞராகக் கடமையாற்றும் செந்தில்நாதன் விடுமுறையில் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார். மனைவியிடம் அனுபவிக்க விருக்கும் உறவுக் கனவுகளுடன் வந்து சந்தர்ப்பச் சதியால் ஏமாற்றத்துடன் மீள்வதைக் கருவாகக் கொண்டு எஸ். பொன்னுத்துரை சடங்கு என்ற நாவலைத் தந்துள்ளார். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மருத்துவமாதாகப் பணிபுரியும் மலையகப் பெண்ணின் உணர்வுகளைக் கருவாக்கி எழுத்தாளர் நந்தி தங்கச்சியம்மா’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
கருப்பொருளானது பொதுவாகப் படைப்புகளில் தொடக்கம் - வளர்ச்சி - முடிவு என்ற படிநிலைகளைக் கொண் டமைந்திருக்கும். பாத்திரம் ஒன்றின் அல்லது பலவின் பிரச்சினையால் ஏற்படும் சிக்கல் படிப்படியாகச் சம்பவங் களின் நிகழ்வால் வளர்ச்சி காணும். ஒரு கட்டத்தில் உச்சத்திணை (Climax) அடைந்து பின்னர் கருவின் சிக்கல் சீர்படுத்தப்பட்டு ஒரு முடிவினை அடையும். ஒரு படைப்பினை எங்கு ஆரம்பித்து எப்படி வளர்த்து எப்படி உச்சமாக்கி முற்றுப்பெற வைப்பதென்பது
40
எழுத்தாளனின் ஆளுமையைப் பொறுத்த விடயமாகும். திருமணமான மூன்றாம் மாதமே மனைவியையும் அவள் வயிற்றில் சிசுவையும் விட்டுவிட்டு தங்கைகளுக்கு சீதனம் உழைக்க வெளிநாட்டிற்கு ஒடும் ஒருவன் தொலைந்துபோன வாழ்க் கையை அனுபவிக்க ஐந்தாண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்திற்கு வருகிறான். அவனை வரவேற்க மனைவியோ மகனோ விமான நிலையத்திற்கு வரவில்லை. பிரச்சினை ஆரம்பமாகின்றது. 'உங்கள் தங்கைகளின் கலியாணப் பிரச்சனை தீரும் வரை நான் உங்களுடன் உறங்க மாட்டேன். மீண்டும் ஒரு பிள்ளையைத் தந்தை அருகில் இல்லாமல் வளர்க்க நான் தயாராகவில்லை' என மனைவி ஒதுங்கிக் கொள்கிறாள். சிக்கல் வளர்கிறது சம்பவங்களின் நிகழ்வில் வாசகர்கள் அவர்கள் இருவரினதும் சிக்கலை நீக்கி இணைப்பினை எதிர்பார்த்து தவியாய்த் தவிப்பார்கள். பிரச்சினைகள் தீர்ந்த கட்டத்தில் உச்சமான கிளைமாக்ஸ் நிகழ்ந்து அவன் மரணமடைய நேரிடும். தமிழில் வெளிவந்த பெரும்பாலான படைப்புகள் தொடக்கம் - வளர்ச்சி - உச்சம் - முடிவு என்ற படிமுறையிலேயே அமைந்துள்ளன என்பேன். தகழி சிவசங்கரம்பிள்ளையின் 'செம்மீன்' எஸ். பொன்னுத்துரையின் சடங்கு' என்பன இவற்றிற்குத் தக்க உதாரணங்களாம். புறநடைகளில்லாமலில்லை. யானை' என்ற நாவலின் தொடக்கத்திலேயே கதாநாயகி யானையின் காலடியில் பலியாகிறாள். அந்த யானையைத் தேடிப் பழிவாங்கக் கதாநாயகன் காடுமே டெல்லாம் அலைகிறான். இறுதியில் அவன் எண்ணம் நிறைவுறுகிறது. உச்சத்திலேயே கதை நடந்து முடிகிறது.
ஒரு படைப்பின் முக்கிய அம்சமாகக்
கருப்பொருள் அமைந்து விடுகின்றது.
ஞானம் - ஒக்டோபர் 2004

என்னை காயம்Uடுத்திய)
இரு நிகழ்வுகள்
அந்தனி ஜீவா
இத்தனைக்கும் lp്ബ இனி ஒன்று ஐயா, நான் செத்ததற்கு பின்னால் நிதிகள் திரட்டாதிர் நினைவை விளிம்பு கட்டி கல்லில் வழத்து ഞഖuffള്
வானத்து அமரன் வந்தான் கான், வந்தது போல் போனான் காண்’ என்று புலம்பாதிர் அத்தனையும் வேண்டாம் அழயேனை விட்டுவிடும். இப்படிக்கு சிறுகதைச் சிற்பி புதுமைப் பித்தன் குறிப்பிடுகின்றார். எழுத்தாளர்களின் மறைவின்போது இந்தக் கவிதா வரிகள் எனக்கு நினைவுக்கு வருவதுண்டு.
அண்மையில் இரண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். அந்த நிகழ்வுகளில் கலந்து திரும்பி வரும்பொழுது எனது ம்னம் மிகவும் காயப்பட்டுப்போயிருந்தது.
ஒன்று . மலையக மக்கள் கவிமணி என மதிக்கப்பட்ட சி. வி. வேலுப்பிள்ளை யின் துணைவியார் கடந்த செப்டம்பர் 02ம் திகதி காலமானார். இவரது இறுதிச் சடங்கு கொழும்பு கனத்தை மயானத்தில் நடைபெற்றது.
அந்த இறுதி நிகழ்வின்போதுஅவரது ஒரே மகள் கண்ணிர் வடித்தபடி, எனது கரத்தைப் பற்றி “எங்கே எனது தந்தையின் நண்பர்கள்?” என்று கேட்டார்.
ஆம். அந்த நிகழ்வில் தமிழ் எழுத்தாளனோ கவிஞனோ கலந்து கொள்ள வில்லை. சி. வி. யுடன் ஒன்றாகப் பணியாற்றிய தொழிற்சங்கவாதிடி. அய்யாத்துரையை மாத்திரமே காண முடிந்தது.
சி. வி. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய மனித நேயமிக்கவர். அவர் மனைவியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சி. வி. யைப்பற்றி எழுதி, சி. வி. எழுத்தை மொழி பெயர்த்து, தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட எழுத்தாளர்களோ, அல்லது கொழும்பில் வாழ்ந்த எழுத்தாளர்களோ அங்கு வராதது என் மனதைக் காயப்படுத்தியது. அடுத்தது செப்டெம்பர் 1ம் திகதி,மலையகத்தில் பலபட்டதாரிகளை உருவாக்கிய கல்வி, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை நல்கிய ஏ. பி. வி. கோமஸ் அமரானார். இவரது இறுதிச் சடங்கு 12ம் திகதி ஞாயிறு மாத்தளையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கொழும்பிலிருந்து கவிதாயினி அவ்வை, எழுத்தாளர் ரஞ்சக்குமார், விக்னேஸ்வரன், போன்றவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் மாத்தளையை தம்
தானம் - ஒக்டோபர் 2004 41

Page 23
பெயருக்கு முன்னால் சூட்டிக் கொண்ட மண்ணின் மைந்தர்களைக் காண முடியவில்லை. இரா. அ. இராமன், கவிஞர் பண்ணாமத்துக் கவிராயர், இலக்கிய ஆர்வலர் பீர்முகம்மது, பாடகர் ரகுநாதன், அதிபர் எழில்வேந்தன், மாத்தளை இலக்கிய வட்டத்தின் நமசிவாயம் ஆகியவர்களைக் காணக்கூடியதாக இருந்தது.
இரவு வீடு திரும்பிய பின்னர் - தொலைபேசி மூலம் பல மலையக எழுத்தாளர்களை தொடர்பு கொண்டபொழுது, ஐயோ! நாங்கள் பத்திரிகை பார்க்கவில்லையே என்றார்கள். மூன்று ஞாயிறு தேசிய பத்திரிகைகளிலும் செய்திகள் சிறப்பாக வெளியிடப்பட்டிருந்தன. ஒருவேளை எழுத்தாளர் கோமஸ் கண்விழித்து பார்க்கப் போகிறாரா? என எழுத்தாளர்கள் நினைத்திருப்பார்கள். ܢ
என்னே..கொடுமை. எழுத்தில் மட்டும் மனிதாபிமானத்தைப் படைக்கும் படைப்பாளிகள் இவர்கள்.
ஒன்று மாத்திரம் கூற ஆசைப்படுகிறேன். எழுத்தாள நண்பர்களே! அதுவும் தமிழ் பேசும் எழுத்தாள நண்பரே தயவுசெய்து எனது மரணத்திற்கு மாத்திரம் 'அஞ்சலி செலுத்த வந்துவிடாதீர்கள்.
கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வருவதை என்னால் பார்க்க முடியாது, அதனால் யாரும் வரவேண்டாம்.
O
இழுப்பின் மீதான UAடேெ மின்னிப் புதர் கவ்வ நீராவியூற்றுத் தூர்ந்து போயிற்று
நீந்தி விளையாடிய விராலும் கச்சலும் வாழ்விழந்த தவிப்பில் மூழ்கின
Cup6üoooo Cupoforflu II
எதுைம் நண்பதுைம் சிறு சோடிப் பாதங்களில்
சேறள்ளிப் பூசிய ஒற்றையடி வழிப்பாடும் சிதைந்து அழிந்திற்று.
என்றோ முடமான வீட்டின் ஒற்றைப் பனையிலுறையும் செட்டை கழன்ற சிட்டுக் குருவியது கீதம் காற்றில் சோகம் நிறைத்த வண்ணம் இன்னும் மீதமிருக்கிறது.
மின்னித் தளிர் விலக்கி <>/項 நல்ல தண்ணி நான் குடிக்கும் 32 அச்சிறு ஊற்றுக் குழி மட்டும் ഥ് 2
என் நெஞ்சுக்குள் தாகித்துக் கிடக்கிறது. O
42 ஞானம் - ஒக்டோபர் 2004
 
 
 

O- 62CVW- 6Oæ2/ ബീബ് ബ്രബ0 677ീബ്
க. ரகுபரன்
அண்மையில் தினக்குரல் பத்திரிகையில் மு. பொ. யாப்பிலக்கணக் கவிதைகளுக்கு எதிரான தன் கருத்தை முன்வைத்து, கம்பன், மஹாகவி முதலானோரது கவிதைகளும் சோரம்போனவையே என்று கூறியிருந்தார். அதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பாகவும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த மறுப்புக் கட்டுரையில், மு. பொ. எழுதிய விடயமொன்றில் உள்ள தவறினைச் சுட்டிக் காட்டவே இக்கட்டுரை எழுதப்படுகிறது; அல்லாமல் அவர் முன்வைத்த கவிதைக் கோட்பாட்டுக்கு எதிராக அல்ல.
அவரது கவிதைக் கோட்பாட்டுக்கு எதிராக எழுதாமல் விடுவதற்கு பல காரணங்கள் உண்டு. வேண்டுமானால் அக்காரணங்களை மாத்திரம் சொல்லி விடுவோம்.
(1) கவிதையின் ஆக்கக்கூறுகள் பலவற்றில் ஒன்றைமாத்திரம் வைத்துக் கொண்டு கவிதையின் தாரதம்மியத்தை நிருணயிக்க முயலும் மு. பொ.வுடன் கவிதை பற்றி விவாதிப்பதற்கும் யானை பார்த்த குருடர்களிடம் யானை பற்றி விசாரிப்பதற்கும் இடையில் அதிக வேறுபாடு இருக்கமுடியாது. (2) அதுவுமன்றி கவிச்சக்கரவர்த்தி என்ற விருது தமக்கே பொருத்தமானதென அவர் மெய்யாகவே நம்புகிறார் போலத் தெரிகிறது. அந்த நம்பிக்கையோடு தமக்குள்ளே ஒரு சுயதிருப்தி காணும் அவரை ஏன் குழப்ப வேண்டும்? (3) தமிழறிந்த (தமிழரும் தமிழர் அல்லாதவரும்) விமர்சன உலகு கம்பனது படைப்பைக் கவிதையுலகின் உந்நதங்களுள் ஒன்றாகக் கண்டு கொள்கிறது. பின் கம்பனுக்காக ஏன் மு. பொவுடன் சண்டைக்குப் போகவேண்டும்? உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும்’ (குறள் : 850) (4) மு. பொ. வால் இகழப்பட்டவர்களும் மு. பொ. வால் ஓரளவில் யாரியாக நிற்கத்தக்கவர்களுமான புதுவை இரத்தினதுரை, சோ.ப. முதலானவர்கள் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் தாமாகவே நின்று பிடித்தவர்கள்; இன்னும் நிற்கத்தக்கவர்கள்; தம்மைத்தாம் நிறுவவும் வல்லவர்கள்; அல்லாமல் உயிரோடும் (உயிர்ப்போடும்?) இருப்பவர்கள் . எமக்கேன் தேவையில்லாத வேலை? முன்பே குறிப்பிட்டதுபோல வேறு ஒரு தவறைச் சுட்டிக் காட்டவே இக்கட்டுரை. அதுவும் மு. பொ. வைக் கருத்திற் கொண்டல்ல. பொதுவாக - இலக்கிய உலகத்தையும், சிறப்பாக தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும் கற்கும் மாணவர்களையும் கருத்திற் கொண்டே இது எழுதப்படுகிறது. அதற்கு முன்பாக மு.பொ. வின் கட்டுரையில், குறித்த தவறுள்ள பகுதியை மீள நோக்குதல் (அதை வாசித்தவர்கள் வாசியாதவர்கள் எல்லோருடைய தெளிவு கருதி) நல்லது.
ஞானம் - ஒக்டோபர் 2004 43

Page 24
"கம்பன் இந்த விடயத்தில் பலவீனப்பட்ட பிறவி, எங்கெங்கு அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எவ்வித நுணுக்க உளவியல் நோக்கற்று எதுகை மோனை தரும் வாய்ப்பால் அள்ளுப்பட்டுத் தன் விரச உணர்வுகளுக்கு வாய்க்கால் வெட்டுகிறான். இதோ மற்றொரு உதாரணம் : இராமனைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு வந்த பெண்கள் பற்றி இவ்வாறு கூறுகிறான்.
பாகியல் பவளச் செவ்வாய் பணைமுலைப் பரவையல்குல் தோகையர். இங்கே பெண்கள் பவளச் செவ்வாய் பருத்த முலை உடையவர்கள்’ என்று விபரிக்கும் கம்பன் அத்தோடு நிற்காது 'ப' மோனைக்கேற்ப இன்னொரு பவில் தன்னையே மறந்து, கடல்' போன்று பரந்த யோனி உடைய பெண்கள் என்கிறான். பவளச் செவ்வாயையும் பணைமுலை யையும் நாம் கண்டு ரசிக்கலாம். ஆனால் மறைந்து போயிருக்கும் யோனிகள் கடல் போன்றவையா, கைப்பிடியள வுள்ளவையா என்று எப்படிக் கண்டு ரசிப்பது? ஒருவேளை உடலெங்கும் யோனி தரித்த இந்திரன் போல் இருந்திருந்தால் அது வேறு விடயம். அல்லது இன்றைய பின் நவீனத்துக்கு முந்திய (modermist) ஹென்றிமலர் தனது நாவலில் ரோட்டில் போகும் பெண்களை யன்னல் வழியே பார்த்து இவளுடைய குறி எப்படி யிருக்கும்? அவளுடைய குறி எப்படி யிருக்கும்? என்று கற்பனை பண்ணுவது போல் நாமும் கற்பனை பண்ணினால் தான் சரி. இதனால்தான் கம்பரா மாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று அண்ணாதுரைதீ பரவட்டும்' என்ற நூலை எழுதினார்.” மு. பொ. இவ்வளவையும் எழுதியதற்குக் காரணம் 'அல்குல்' என்ற சொல்லின் பொருளை அவர் அறியாததே. அவர் மாத்திரமல்ல இன்று தமிழிலக்கிய வுலகில் சஞ்சரிக்கின்ற 99.9 வீதமானவர்கள் இது விடயத்தில் மு. பொ. வை ஒத்தவர்களே.
அல்குல் என்ற தமிழ்ச் சொல் மனித உடற்கூறு ஒன்று குறித்த ஒரு சொல்லே. ஆனால் இவர்கள் கருதுவது போல் பெண்குறி (யோனி) அல்ல அந்த உடற்கூறு. மனித உடலில் இடைக்குக் கீழும் தொடைக்கு மேலும் காணப்படும் அகன்ற உடற்பகுதியே (Waist/ Pelvis) அல்குல் என்ற சொல்லாற் சுட்டப்படுவது. ஆடை அணிந்த நிலையிலும் அதன் பரிமாணத்தைக் கண்டு கொள்ளலாம். பெண்களின் அல்குல் பகுதியில் (ஆடைக்கு மேலாக) அணியப்படும் ஆபரணமே மேகலை எனப்படுவது. ஒடுங்கிய இடைப்பகுதிக்குக் கீழே அகன்று தொடைப்பகுதியில் மீண்டும் படிப்படியாக ஒடுக்கும் தன்மை கண்டே நாகத்தின் படத்தையும் தேரையும் அல்குலுக்கு உவமையாக்கினார்கள் கவிஞர்கள். நாகத்தின் படம் தலைப் பகுதியில் ஒடுங்கி விரிந்த படப்பகுதியில் அகன்று அதன் கழுத்துப் பகுதியில் மீண்டும் ஒடுங்குகிறது. அதுபோலவே தேர், உச்சியிலும் அடியிலும் ஒடுங்கி அதன் தட்டுப் பகுதியில் அகன்று தோன்றுவதால் அல்குலுக்கு உவமையாயிற்று. (இவ்வாறே பெண்களின் இடையை வர்ணிக்கும்போது கவிஞர்கள் உடுக்கை - துடியை - அதற்கு உவமையாக்கினார்கள். (மேலே மார்புப் பகுதியும் கீழே அல்குற்பகுதியும் அகன்று தோன்ற இடை ஒடுங்கி உடுக்கின் தோற்றம்
44 ஞானம் - ஒக்டோபர் 2004

பெறுவதால்) அல்குலின் அகற்சி காரணமாகவே பரந்த கடல் (பரவை) அதற்கு உவமையாகிறது. சேக்கிழாரும் பரவையாரின் அல்குலைப் பரவையாக உருவகித்தது அந்த நோக்கிலேயே (பெரிய, புரா. 294). கம்பன், சேக்கிழார் மட்டுமல்ல பெண்ணழைைகப் பாடிய பழந்தமிழ்க் கவிஞர்களுள் பெண்களின் அல்குலைச் சிறப்பித்துப் பாடாதவர் அருமையிலும் அருமை.
பெண்களின் அழகியல் அம்சங்களில் அல்குலின் அகலப்பாடு மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. பெண்ணுடலில் அதிக சுற்றளவு எதிர்பார்க்கப்படும்பகுதி அல்குற் பகுதியே இன்றைய உலக, பிரபஞ்ச அழகிப் போட்டிகளும் இதற்கு விதிவிலக்கானவையல்ல. அல்குல் ஆண் உடலிலும் உள்ளதோர் உறுப்பே. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் மார்புப் பகுதியின் அகலமே விதந்து பேசப்படுகிறது. அதனால் ஆண்களின் மார்பைத் தனியே அகலம் என்றே சுட்டுவதும் உண்டு
தமிழிலக்கிய உலகில் அல்குல் என்ற சொல்லின் தாற்பரியம் மறக்கப்பட்டு நெடுநாளாகிவிட்டது. ஆரம்பகால அகராதிகள் - குறிப்பாக ஐரோப்பியரால் ஆக்கப்பட்ட அகராதிகள் அல்குலுக்குப்பெண் குறி'என்றே பொருள் தருகின்றன. வணக்கத்துக்குரிய J. P. Rotler அடிகளாரின் அகராதி ஒருபடி மேலே போய் An immodest term (ஒரு இழிவான / பண்பற்ற சொல்) என்று விளக்கமும் தருகிறது. கல்விக் கூடங்களிற் கற்பிப்பவர்களில் கூச்ச சுபாவங் கொண்ட சிலர் அல்குல் என்ற சொல்லைக் கண்டவுடன் கண்டுங் காணாதது போல் விட்டு விடுகிறார்கள். பலர் அப்பாற்போக மனமின்றி அதிலேயே நின்று ‘தாளித்து இளமட்ட மாணவர்களுக்குத் தமிழ்ச் சுவை ஊட்டுகிறார்கள். தமிழை ஆழக்கற்றவர்கள் என்று கருதப்படுபவர்களுள்ளும் பலர் அல்குல் விடயத்தில் இந்த அறியாமை நிலையில்தான் உள்ளார்கள்.
இவர்கள் யாரும், 'அல்குல் என்பது பெண்குறியைக் குறித்த சொல் அல்ல' என்றால் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அந்த எண்ணத்திலேயே ஊறி விட்டார்கள். அல்குல் என்ற உறுப்பு ஆண்களுக்கும் இருப்பதாகக் கூறியது கண்டு பதறித் துடித்திருப்பார்கள். ஆனால் அதற்கு இடம் இல்லாமல் ஆணுக்கும் அல்குல் இருப்பதற்கான புலமைச்சான்றுகளைக் காட்டிவிடுவோம்.
சான்று - 01
பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுடைய தளர் நடை யைப் பாடுகின்றபோது கண்ணனுடைய அல்குலானது பக்கங்களிலே அசைகின்றது என்றும் கறுத்துத் திரண்டு பரந்து அசையும் அந்த அல்குலின்மீது இடையிலே கட்டிய முத்து மாலையின் தொங்கல்கள் தாழ்கின்றன என்றும் அத் தாழ்ச்சியானது கரும்பாறையின் பக்கமாக அருவி வீழ்வது போலத் தோற்ற மளிக்கிறது என்றும் பாடுவார்.
பக்கம் கருஞ்சிறுப் பாறைமீதே அருவிகள் பகர்ந்தனைய அக்குவடம் இழிந்து ஏறித்தாழ அணி அல்குல் புடை பெயர மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி உருவின் தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.”
(பெரிதிருமொழிமுதற்பத்து:78)
ஞானம் - ஒக்டோபர் 2004 4.5

Page 25
சான்று - 02
இராமனைப் பாடும் குலசேகராழ்வார் தம்மை அவன் தந்தை தசரதனாகப் பாவனை பண்ணிப்பாடுகிறார். பூக்கள் சூட்டப்படுகின்ற அழகிய குஞ்சியைச் சடையாகப் புனைந்தும், பூம்பட்டாடையை அணியும் அல்குலிலே மரவுரிதரித்தும், ஆபரணமெதுவும் அணியாதவனாய், இராமன், தான் செல்ல வேண்டிய காட்டுக்குத்தான் சென்றானே! இது தக்கதோ! என்று தசரதன், சுமந்திரன், வசிட்டன் முதலானோரை வினவி வருத்துவதாய் அமையும் இப்பாடலில் இராமனாகிய ஆணின் அல்குல் பற்றிப் பேசப்படுவதே எமக்கு வேண்டியது. பூமருவு நறுங்குஞ்சி புன்சடையாய் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழலுடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி ஏமருதோள் என் புதல்வன் யான் இன்று செல்லத்தக்க
வனம் தான் சேர்தல் துரமறையீர் இது தகவோ சுமந்திரனே,
வசிட்டனே சொல்லீர் நீரே.”
(பெருமாள்திருமொழி 97) இச்சான்றுகள் போதவில்லையானால் தொன்மையான வேறொரு சான்று இதோ.
சான்று 0 3
திருமால்மேற் பாடப்பட்ட பரிபாடல் ஒன்றில் புலவர், திருமாலை நோக்கி திருமாலே உன் மார்பும் அல்குலும் உன் சிந்தையும் பாரித்தவை'என்கிறார்.
"மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை”
(பரிபாடல் 13:54) மார்பகலம், அல்குலகலம் என்பவற்றோடு அவனது எண்ணத்தின் அகலத்தையும் கூறிவிடும் புலவனின் உத்திச் சிறப்பல்ல இங்கு எமக்கு வேண்டுவது. ஆணுக்கும் அல்குல் உண்டு என்ற உண்மை உணரப்படுவதே எமக்கு வேண்டியது. அதை விடவும் வேண்டியது ஆணுக்கும் அல்குல் உண்டு என்பதை அறிந்த அளவில் அல்குல் என்ற சொல் பெண்குறி (Valva) யைக் குறித்த சொல் அல்ல என்பதை உணர்வதேயாம்.
அல்குல் என்ற சொல்லுக்கு மனித உடற்கூறு ஒன்று குறித்த பொருள் மட்டுமன்றி, பக்கம் (side) என்ற பொருளும் உண்டு.
பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவிக் கவைத்தாம்பு தொடுத்த காழுன்று அல்குல்”
(பெரும்பாணாற்றுப்படை 2434) பெருமைமிக்கபசுக்கள் ஈன்ற ஒசிந்த நடையினை உடையகன்றுகளைக்கட்டியகயிறுகள் தொடுத்ததறிகள் ஊன்றப்பட்டபக்கம்என்பதுபொருள். உண்மையில் பக்கம் என்பதே அல்குல் என்பதன் அடிப்படைப்பொருளாக இருத்தல் கூடும் பக்கங்கள் அகன்ற உறுப்பு என்ற காரணத் தினாலேயே மனித உடலின் அகன்ற பகுதி அல்குல் எனப்பட்டதாகலாம்.
46 ஞானம் - ஒக்டோபர் 2004

இவ்வுண்மைகளை உணரும் அதேவேளை இக்காலத்தார் கூறுவது போல, அல்குலைப் பெண்குறி என்ற பொருளில் சிலர் பாடியிருப்பதையும் ஒத்துக் கொள்ளவே வேண்டும்.
எனக்கென்று விம்மிப் பெருத்த தனக்குன்றில் ஏறி வீழ்வேன் நான் அல்குல் தடாகத்திலே
என்றவாறாகப் பாடியவர்கள் மிகப் பிற்பட்ட காலத்து மூன்றாந்தரக் கவிஞர்கள் என்பதை மனங்கொள்ள வேண்டும். அங்கெல்லாம் 'அல்குல்' (இட) ஆகுபெயராகவே பெண்குறி என்ற பொருளைப் பெறுகிறது. (அல்குல் என்ற சொல் இருமடி ஆகு பெயராக பெண்குறியில் ஏற்படும் ஒருவகை நோயைச் சுட்டுவதாகவும் தமிழ் மருத்துவ நூல்களிற் கையாளப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.)
பிற்பட்ட காலத்து இச்சிருங்காரக் கவிகளின் செல்வாக்கே அல்குல் என்றால் பெண்குறி என்று மயங்கும் தற்கால நிலைமைக்குக் காரணமாம். இத்தகைய சூழ்நிலையிலேயே அகராதி முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான அகராதிகள் அல்குலுக்கு ‘யோனி என்றே பொருள் கொள்ள 'அல்குலின்'தாற்பரியத்தை முழுமையாக உணர்ந்து பொருள் எழுதிய பெருமை தமிழ் லெக்ஸிகனுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பெருஞ்சொல் அகராதிக்குமே உரியது. மிக முற்போக்கான எண்ணங்களோடு தயாரான ‘கிரியாவின் அகராதி யும் அல்குலுக்குப் பெண் குறி என்றே பொருள் கொண்டது - அது தற்காலத் தமிழகராதி' என்பதனாற் போலும்,
அல்குல் பற்றிய உண்மை அறியாதவர்களாக - அல்குலைப் பாடிய காமக்கவிகள் என்பதைப் பிரதானப்படுத்தியவர்களாகவே பெரியாரும் அறிஞர் அண்ணாதுரையும் அவர்தம் இளவல்களும் தமிழிலக்கியங்களில் தீ பரவச் செய்தார்கள். அந்தப் பகுத்தறிவுக் காரர்களின் பக்தர்கள் இன்று தமக்குத்தாமே தீமூட்டிக் கொள்ளுகிறார்கள்! அண்ணாதுரை முதலான வர்கள் சுயமரியாதைக் காரர்களும் கூட பிறர் மரியாதையைக் கருதுவார்களோ? அதனால் தமிழ்ப் பெருங்குடி மக்களது அறியாமையையே துணைக்கொண்டு உயர்கவிகளுக்கு இல்லாத மாசினைக் கற்பித்தார்கள். கம்பராமாயணம், பெரியபுராணம் முதலானவற்றைப்பார்ப்பனீய இலக்கியங்கள் என்று பழிதூற்றினார்கள். சங்க இலக்கியங் களே எங்களிலக்கியம் என்று தூக்கிப்பிடித்தார்கள்; அவற்றுள்ளும் ஏராளமான'அல்குல்கள் இருந்ததை அவர்கள் அறிந்திருந்தார்களா? அவற்றின் பொருள் என்னவென்று அறிந்தார்களா? அவர்களும் அறியவில்லை; பெரும்பான்மைத் தமிழ்ப் புலமையுலகும் அறியவில்லை. முறையாக இலக்கண இலக்கியங்களைக் கற்றவர்கள் கூட அண்ணாதுரையின் அல்குல் வியாக்கியானத்தில் அள்ளுண்டு போனார்கள். அப்படியிருக்கையில் இலக்கிய இலக்கணத் துறைகளில் முறைசார்ந்த கல்வி (Formal Education) யைப் பெற்றுக் கொள்ளாதவரான மு. பொ. வை எவ்வாறு குறை சொல்வது? நீண்ட காலமாக மனதிற் கிடந்து அரித்த ஒரு விடயத்தை எழுதத் தூண்டுதல் அளித்த மு. பொ.வுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். பிற்குறிப்பு:தினக்குரலில்மு. பொ. எழுதிய கட்டுரைக்குப்பதிலாக இக்கட்டுரை பனுவல்பகுதிக்கு அனுப்பப்பட்டது. இக்கட்டுரைபனுவலில்பூரணமாகப்பிரசுரிக்கப்படாமையால்இங்கு மீள்பிரசுரமாகிறது
O O
ஞானம் - ஒக்டோபர் 2004 47

Page 26
6GaoGÁRGGuo Guar
கைலாசபதி அழைக்கவில்லை
- பல வினாக்களை எழுப்பிநிற்கும்
புதிய தகவல்
நிலவிலே பேசுவோம் என்ற என்.கே. ரகுநாதன் எழுதிய சிறுகதைக் கருக்களம் பற்றி நீண்டகாலமாக ஒரு கணிப்பீடு நிலவிவந்துள்ளது. அது பற்றி ரகுநாதன் 12-9-2004 தினக்குரலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
"நிலவிலே பேசுவோம் என்ற சிறுகதையின் கருக்களம்பற்றி நீண்டகாலமாக ஒரு தவறான கணிப்பீடு நிலவிக்கொண்டிருக்கிறது. அண்மையில் அதன் வெளிப்பாடு அதிகரித்து வருவதால் அதன் உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
ஒரு காந்தி பக்தர் மது ஒழிப்புப் பிரசாரக் கூட்டத்தில் மதுவின் கொடுமைகளைப் பற்றிக் காரசாரமாகப் பேசிவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் காந்தி பக்தரானதால் மதுவருந்துவதினால் ஏற்படும் தீமைகள் பற்றி விபரித்துக் கூறினார். வீட்டுக்கு வந்தவர் உணவருந்துவதற்குத் தயாரான வேளையில், வீட்டுப் படலைக்கு வெளியே நாலைந்து இளைஞர்கள் வந்து நின்று, "ஐயா..! என்று அழைப்பதை அவதானிக்கிறார். அவர்கள் படலையைத் திறந்து முற்றத்தில் நின்று, 'மதுவினால் எற்படும் தீமைகளைப் பற்றி மட்டும் பேசினீர்கள். மது ஒழிப்பதால் கள் இறக்கும் தொழிலாளர்களாகிய எங்களது கதியென்ன? நாங்கள் எப்படிப் பிழைப்பது? எங்களுக்குக் கூலிவேலைகூடத் தரமாட்டீர்களே! ஒரு இரும்புக் கடையில்கூட, இரும்பிலும் தீட்டுப்பட்டுவிடுமென்று வேலை கொடுக்க மாட்டீர்களே! என்று ஆவேசமாகக் குரல் எழுப்புகிறார்கள். காந்தி பக்தரின் பாடு தர்ம சங்கடமாகியது. அவர்களை உள்ளே அழைத்து ஆசனங்களில் இருத்திக் கதைக்க முடியுமா? மிகவும் பதற்றமுற்று, “வாருங்கள் வெளியே நல்ல நிலவு அங்கு போய் இருந்து கதைக்கலாம்” என்று கால்களை நகர்த்தி வெளியே வர எத்தனிக்கிறார். வந்தவர்கள் கோபாவேசத்துடன், “காந்தியின் பெயரைச் சொல்லி மது ஒழிக்கக் கிளம்பிவிட்டீர்கள். முதலில் தீண்டாமையை ஒழிக்க வேண்டாமா? என்று அழுத்தமாகக் கூறிவிட்டு வெளியே நடந்தார்கள். இதுதான் நிலவிலே பேசுவோம் கதை.
கதையில் வரும் காந்தி பக்தராக கைலாசபதியை உருவகப்படுத்தி கதை பரப்புவதற்குப் பின்னணியாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
1962இல் கைலாசபதிக்குத் திருமணம் நடந்திருக்க வேண்டும். இக்காலத்தில் ஒருநாள் மாலை கைலாசபதியையும் அவர் துணைவியாரையும் சந்தித்து வருவதற்காக வெள்ளவத்தைக்குப் போனேன். வெள்ளவத்தை 42 ஆவது ஒழுங்கையில்தான் அவர்களது வீடு. அதாவது சர்வமங்களத்தின் வீடு. நான் அங்கு சென்றபோது வீட்டு வாசலுக்கு முன்பாகவுள்ள போட்டிக்கோ முகப்பில்
48 ஞானம் - ஒக்டோபர் 2004

உள்ள அரைச் சுவரில் (3 அடி உயரமிருக்கும்) இருவரும் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். சர்வத்துக்கு என்னை முன் பின் தெரியாது. கைலாஸ் என்னை அன்போடு வரவேற்றுக் கதைத்ததும் சர்வம் உடனே எழுந்து எனக்கு இருக்க இடம் கொடுத்தார். நானும் கைலாசபதியும் கதைத் துக் கொண்டிருக்க உள்ளே போய் தேநீர் தயாரித்துக்கொண்டுவந்து தந்தார். சிறிது நேரம் உரையாடிவிட்டு நான் திரும்பிவிட்டேன்.
அந்த நாட்களில் நான் யாழ்ப்பாணம் போன சந்தர்ப்பத்தில், எழுத்தாளர்கள் வந்துபோகும் முக்கிய
இடமான டொமினிக் ஜீவாவின் கடைக் குப் போனேன். அங்கு கதையோடு கதையாக கைலாசபதி
வீட்டுக்குப் போனதையும் போட்டிக்கோ முகப்புத் திண்ணையிலிருந்து கதைத்து வந்ததையும் சொல்லி விட்டேன். அவ்வேளை நிலவிலே பேசுவோம் என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்து விட்டது. கைலாசபதியின் வீடு கடற்கரையோரமாக இருந்தபடியால், என் கதையில் வரும் காந்திபக்தராக கைலாசபதியைக் கற்பனைபண்ணி எல்லோருக்கும் சொல்லிக் கதை பரப்பிவிட்டார்கள். கதைபரப்பிய முக்கியஸ்தர்களில் ஒருவரை அணுகி, இதன் உண்மையைச் சொல்லித் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்றும் கூறினேன். 40 வருடங்களைத் தாண்டிவிட்டது. கதை அடிபட்டுக் கொண்டே இருக்கிறது.
சொல்ல வந்த முக்கியமான
விடயத்தை இங்கு சொல்கிறேன். கைலாசபதியை அவருடைய வீட்டில் போய் ச் சந்தித்தது 1962இல் .
ரூானம் - ஒக்டோபர் 2004
என்னுடைய நிலவிலே பேசுவோம் சிறுகதைத் தொகுதி வெளிவந்ததும் 1962 இல்தான். ஆனால் அந்தக்கதை 1951இல் சுதந்திரனில் பிரசுரமானது. சிறுகதைத் தொகுதியில் வெளிவந்த கதைகளின் அடியில் கதை பிரசுரமான ஆண்டுகளை இணைத் திருக்கிறேன். நிலவிலே பேசுவோம் கதையினடியில் 1951 என்று பிரசுரமாகியுள்ளது. 40 ஆண்டு களுக்கு மேலாக நிலவி வரும் ஓர் அபத்தப் பிரசாரத்துக்கு முத்தாய்ப்பு வைக்கப்படுகிறது.” - இவை என்.கே. ரகுநாதன் கொடுத்த விளக்கத்தின் முக்கிய பகுதிகள்.
நிலவிலே பேச கைலாசபதி அழைக்கவில்லை என்பதைச் சான்றா தாரத்துடன் கூறியிருக்கிறார் ரகுநாதன். ஆனால் அவரது விளக்கம் புதிய கேள்விகளை எழுப்பி நிற்கிறது. (1) கைலாசபதி பற்றிய இந்த வெளிப்பாடு மீன்டும் மீண்டும் 40 வருடகாலமாகப் பலராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்துள்ளது. நாற்பது வருடம் என்பது ஒரு நீண்டகாலப்பகுதி. அணி மையில் தான் அதன் வெளிப்பாடு அதிகரித்து வருகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல் ல. ஒரு பெரும் மனுஷனைப் பாதிக்கக் கூடிய இந்த விடயத்தை 40 வருட காலமாக ரகுநாதன் தெளிவு படுத்தாதது ஏன்? தேடல் என்ற நூலில் தமிழகத்தவரான வெங்கட் சாமிநாதன் எழுதும் அளவுக் குப் போகும் வரை கைலாசபதி இந்தப்பழியைச் சுமக்க வேண்டும் என அவர் விரும்பினாரா? அல்லது தனது
49

Page 27
கதை பிரபல்யமடைவதற்கு உந்துசக்தியாக அந்தப் பெரும் மனிதரின் பெயர் அடிபடுவதை ரகுநாதன் பக்கத்துணையாகப் பயன்படுத்தினாரா? இந்தக் கதை வெளிவந்தபின் கைலாசபதி 20 வருடங்களுக்குமேல் உயிருடன் இருந் தாரே. கைலாசபதி உயிருடன் இருக்கும் போதல்லவா அவர் மேல் கற்பிக் கப்பட்ட களங்கம் களைந்திருக்கப்பட வேண்டும். அல்லது ரகுநாதன் இப்போது வெளிப்படுத்தியிருக்கும் தகவலுக்கும் புறம்பாக அன்றைய சூழலில் ரகுநாதன் மெளனம் சாதிக்கக் கூடியவகையில் வேறும் ஏதாவது காரணங்கள் இருந்தனவா? (2) கதை பரப்பிய முக்கியஸ்த்தர்களில் ஒருவரை அணுகி இதன் உண்மையைச் சொல்லித் தவறான தகவலைப் பரப்ப வேண்டாமென்று கூறியதாக ரகுநாதன் கூறுகிறார். அது உண்மையானால் அந்த முக்கியஸ் த்தரின் பெயரை ரகுநாதன் ஏன் வெளியிடவில்லை. அந்தப் பெயரை வெளியிடுவது உண்மை நிலையை அறிந்து கொள்ள உதவுமல்லவா. அந்த முக்கியஸ்த்தரே ரகுநாதனின் கூற்றை உறுதிப்படுத்த உதவு வாரலலவா. (3)டொமினிக் ஜீவாவின் கடையி லிருந்துதான் கதை பரப்பப்பட்டது என்கிறார். அக்கூற்று உண்மை யானால் உண்மை நிலை டொமினிக் ஜீவாவுக் குத் தெரிந்திருக்கும். கைலாசபதியால் வளர்க்கப்பட்ட டொமினிக் ஜீவா கைலாசபதி மேல் வீண்பழி சுமத்தப் படுவதை அனுமதித்திருப்பாரா?
50
(4) தவறான தகவல் என்பதை அக்காலத்திலேயே ரகுநாதன் சொல்லிய போதும், கைலாச பதியால் வளர்த்தெடுக்கப்பட்ட உணி மை தெரிந்த மற்ற முற் போக் காளர் கள் ஏணி மெளனமாக இருந்தார்கள்? ஏன் உண்மையைக் கூறவில்லை. எழுதவில் லை? அவர் கள் அந்தரங்கசுத்தியோடு தான் ஒரு வருடன் ஒருவர் தமது அணியினரோடு பழகினார்களா? (5) கைலாசபதிக் கும் அக் கால கட்டத்தில் தன்மேல் ஏற்பட்ட வீண்பழி தெரிந்திருக்கும். அவரும் மெளனம் சாதித்தது ஏன்? தனது விமர்சனங்களிலே நிலவிலே பேசுவோம் கதைபற்றி அதிகம் எடுத்துக் காட்டாதது ஏன்? (6) கைலாசபதியின் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டை மற்றவர்கள் நம்பக்கூடிய விதத்திலேதான் அவரது நடவடிக் கைகள் இருந்தனவா? மூத்த தலைமுறை முற்போக்கு அணியினர் தான் இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விடயத்தில் மெளனம் சாதிக்காது தமது அணியின்மேல் ஏற்படக்கூடிய சந்தேகத்தைத் தெளிவுபடுத்த வேணி டும் . இல் லையெனில் கைலாசபதியை இழிவுபடுத்திய பழியை - உண்மை தெரிந்திருந்தும் எல்லோருமாகச் சேர்ந்து மூடி மறைத்ததை - கைலாசபதியின் மேல் சேறு பூசுவதற்கு உடந்தையாக இருந்ததை - முற்போக்காளர்கள் கூட்டாகப் பொறுப்பேற்கவேண்டும்.
வ. சிதம்பரநாதன், மானிப்பாய்.
ஞானம் - ஒக்டோபர் 2004

oബ് ക്രിബ്മിശ്ചിമബ്രി
ബ്രം Z ബ മOര ബoന്നു്
மலையகத்தின் சிறந்த கல்விமானாகவும் இலக்கிய வாதியாகவும் திகழ்ந்த ஏ.பி.வி. கோமஸ் காலமானார் என்ற செய்தி இலக்கிய நெஞ்சங்களைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஞானம் சஞ்சிகை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதன் வாசகனாக இருந்து ஆலோசனைகள் கூறித் தனது கருத்துக்களையும் ஞானத்தில் எழுதிவந்தவர் கோமஸ்.
1954ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, குறுநாவல், நாடகம், நாட்டாரியல், கவிதை, சமயம், கல்வி, கலாசாரம், சொற்பொழிவு, நெறியாள்கை, விளையாட்டு ஆகிய பல்துறைகளிலும் தமது திறமையை வெளியிட்டு வந்தார்
1932 ஜூன் 29ஆம் திகதி கொழும்பிலே பிறந்த இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று பி.ஏ. பட்டதாரியாகி முதலில் எட்டியாந்தோட்டை புனித கேபிரியர் கல்லூரியில் பணிபுரிந்தார். பின்னர் கல்லூரி அதிபராக அவிசாவளை, கண்டி, மாத்தளை என மலையக நகர்ப்புறப் பாடசாலைகளில் பணியாற்றினார். மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும் சிலகாலம் பணியாற்றினார். கடைசியாக மாத்தளை கிங்ஸ்டன் இன்ரநஷனல் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார். மாத்தளையைத் தனது வாழ்விடமாக்கிக் கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் "துரோகி என்ற நாடகத்தில் வில்லனாக நடித்துள்ளார். அந்த நாடகத்தில் கைலாசபதி கதாநாயகனாக நடித்தார். சிவத்தம்பியும் அதிலே நடித்துள்ளார். கைலாசபதி இவரது நண்பராக இருந்தார்.
இவரது 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ‘வாழ்க்கையே ஒரு புதிர் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
மலையக நாட்டார் பாடல்களை மையமாகக் கொண்டு ‘அங்கமெல்லாம் நெறைஞ்ச மச்சான் என்ற தலைப்பில் குறுநாவல் ஒன்றை இவர் எழுதியுள்ளார். பின்பு அது நூலுருவம் பெற்றது. இவர் கவிதைகள் பலவற்றைத் தனது சொந்தப் பெயரிலும், ‘ஜெயம்' என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார்.
இவரொரு கத்தோலிக்கராக இருந்தபோதும் சைவக் கோயில்களில் சைவ சமயத்தைப்பற்றி பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்களை எழுதியுள்ளார். இவை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவராக வாழ்ந்தார்.
“பல்கலைச் செல்வர்' என்ற பட்டத்தை தினகரன் வாரமஞ்சரி இலக்கிய உலகமும், தமிழ் மணி என்ற பட்டத்தை இந்து கலாசார அமைச்சும் வழங்கி இவரைக் கெளரவித்தன.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஞானம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஞானம் - ஒக்டோபர் 2004 51

Page 28
அலத்தற்
உனக்கும்
எனக்குமான
வழக்கு தரிக்கலாகியது
மாபியா வான நீயே தயாரானnய விசாரணைக்கென
வழக்கு நடந்தது
எதைான இருப்பை நெருப்பாக்கிய R பாதகன் நீயென்றேன்
இல்லை என் ராஜ்யத்தில் யாரேனும் வரியின்றியும் என் நெறியின்றியும் மூச்சு விடமுடியாது என்றாய்.
என்னவரின் உதிரம் குடித்து உயிர் உறுஞ்சி மயானத் தெருவாக்கி அலைந்து திரிகிறாய்
அதற்கு
என் ராஜாங்க கட்டளை
மீறி நடக்கும்
மிருகத்திற்கும்
மரண தண்டனை தானென்றாய்
என் வாழிடங்களை பொருளியலை பொறுக்கி தீயில்
52
வழுக்கு
ஓட்டமாவடி நளிம்
கடnவியும் ரவுடி கவசமணிந்து ரகளை செய்கிறாயே
ஆம். என் பேnரnட்டம் ஜெயிக்கும் வரை ன்ெ இறுதி புல்லட் முடியும் வரை என் பெளர்ணமி புலரும் வரை காற்றைக் அவட ரத்தம் பூசியே அனுப்பி வைப்பேன்
விசாரணை ஜூலையில் ஒத்திப் போடப்பட்டது
ஜூனிலும் ஜூலையிலும் கொலையுதிர் காலமாய் கொட்டிச் சிதறுகிறது
ଗରff
ராஜ்ஜியத்தில்
ஒரு பூச்சியேனும்
புகுந்திடல் முடியாது
என்ற முடியாத
முடிவுகளுடன்
நீதிமன்றம் கலைகிறது
நீதி தற்கொலை செய்து கொண்டது.
ஞானம் - ஒக்டோபர் 2004
 

எழுதத் தூண்டும் எண்ணங்கள்
கலாநிதி துரை. மனோகரன்
இலக்கியத் துறையின் இழப்புக்கள் அண்மையில் ஈழத்து இலக்கிய உலகில் இடம் பெற்ற இரு சோகச் சம்பவங்கள் இலக்கிய நெஞ்சங்களுக்குக் கவலை தரக்கூடியவை. எழுத்தாளர்கள் புலோலியூர் க. சதாசிவம், ஏ.வி.பி. கோமஸ் ஆகியோரின் மரணங்கள் சோகச்சூழலை ஏற்படுத்திவிட்டன.
புலோலியூர் சதாசிவம் சிறுகதை, நாவல் படைப்புகள் மூலம் தமக்கென ஒரு தனியிடத்தை ஈழத்து இலக்கியவுலகில் ஏற்படுத்திவைத்தவர். மலையக இலக்கிய வளர்ச்சியிலும் தமது பங்களிப்பைச் சிறப்புறச் செய்தவர்களுள் ஒருவர். மலையகப் புனைகதை பற்றிச் சிந்திக்கும் எவராலும் அவரது பெயரை மறந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். ஏ.வி.பி. கோமஸ் மலையக எழுத்துக்கு உரம் பாய்ச்சிய இன்னோர். இலக்கியவாதி. அறுபதுகளில் வீரகேசரி நடத்திய மலையகச் சிறுகதைப் Oo போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் பலரது Չ o கவனத்தை ஈர்த்துக் கொண்டார். கவிதை, சிறுகதை, நாட்டார் இலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டவராக அவர் விளங்கினார். இனிய சுபாவம் கொண்ட ஓர் எழுத்தாளர் அவர் . மலையகத்தின் சிறந்த கல்விமான்களுள் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார். இருவரதும் மறைவு பொதுவாக ஈழத்து இலக்கியத் துறைக்கும் குறிப்பாக மலையக இலக்கியத் துறைக்கும் பெரும் இழப்பாகவே அமைந்து விட்டது.
பின்னணிக் கலைஞர்கள் - அன்றும் இன்றும்.
தமிழ்த் திரையுலகம் பல சிறந்த பின்னணிப் பாடகர், பாடகிகளைக் கண்டிருக்கிறது. காலந்தோறும் புதியவர்களும் அறிமுகமாகி வந்துள்ளனர். ஆரம்பகாலத்தில் நடிக நடிகைகளே பாடி நடிக்கவேண்டியிருந்தது. இவ்வகையில் தண்டபாணி தேசிகர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், தியாகராஜ பாகவதர், பி. யூ. சின்னப்பா எம்.எஸ். சுப்புலட்சுமி, ரி.ஆர். ராஜகுமாரி போன்றோர் தமது நடிப்புத் திறனையும் குரல்வளத்தையும் பயன்படுத்தித் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினர். இவர்களுள் எம்.கே. தியாகராஜ பாகவதர் தமது நடிப்புத் திறனாலும் குரல் வளத்தாலும் திரையுலகின் முடிசூடா,
ஞானம் - ஒக்டோபர் 2004 53

Page 29
மன்னனாகத் திகழ் நீ தார் . பி.யூ.சின்னப்பா குரல் வளம் உடையவரேனும் அவரது நடிப்புத் திறனே முக்கியத்துவம் பெற்றது. நடிகைகளில் சுப்புலட்சுமி இனிய
சாரீரத் தால் புகழ் பெற்று விளங்கினார். இவர்களோடு கே.பி. சுந்தராம்பாள், கே.ஆர். ராமசாமி, ரி.ஆர்.மகாலிங்கம், பி. பானுமதி,
என்.எஸ் கிருஷ்ணன் - மதுரம், எஸ்.
வரலட்சுமி, ஜே.பி. சந்திரபாபு, எஸ்.பாலச் சந்தர் , மனோரமா போன்றோரும் பாடி நடித் து
வந்துள்ளனர்.
ஐம் பதுகளின் தொடக் கத் திலிருந்து பெரும் பாலும் பாடி நடிப்பவர்களின் தொகை குறைந்து, நடிக நடிகைகளுக்குப் பின்னணிப் பாடல் பாடும் முறை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இந்த நிலையில் சிறந்த பின்னணிப் பாடகர், பாடகிகள் முன்னணிக்கு வரத் தொடங்கினர். இவர்கள் ஒவ்வொரு வரின் குரலிலும் ஒவ்வொருவகைத் தனித்துவம் மிகுந்து காணப்பட்டது. ஐம்பதுகளின் நடுப்பகுதி முதல் எண் பதுகளின் நடுப் பகுதிவரை திரையிசையின் இன்னொரு முடிசூடா மன்னனாக ரி.எம். செளந்தரராஜன் விளங்கினார். கம்பீரமான இனிய குரல், சிறந்த உச்சரிப்பு, நடிப்புக்கு ஏற்ற பாவத் தைக் குரலில் வரவழைக்கும் திறமை முதலிய வற்றைக் கொண்ட மிகச் சிறந்த பின்னணிப் பாடகராகச் செளந்தர ராஜன் திகழ்ந்தார். இவரையடுத்து, கம்பீரத்தோடும் இனிமையோடும் பாடக் கூடியவர்களாகத் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்த ராஜன், சிதம்பரம் ஜெயராமன், பின்னர் மலேசியா வாசுதேவன்
54
முதலியோர் விளங்கினர். சீர்காழி கோவிந்தராஜனிடத்தில் கம்பீரமான குரல் வளம் இருந்தபோதிலும் நகைச்சுவைப் பாடல்கள் பாடுவதி லேயே அவரது திறமை பளிச்சிட்டது. சிலவேளைகளில் அவர் ‘டுயட்' பாடும்போது பக்திப் பாடல் பாடுவது போலவும் இருப்பதுண்டு. சில காதல் பாடல்களை அருமையாகப் பாடியு முள்ளார். சிதம்பரம் ஜெயராமன் தமக் கெனத் தனித்துவமான குரல்வளத்துடன் உச்சஸ்தாயியில் பாடக் கூடியவர் . ஏறத்தாழ ரி.எம்.எஸ்.யைப் போலவே பாடக்கூடிய மலேசியா வாசுதேவனை இளைய ராஜா பயன்படுத்திக் கொண்டார். இப்போதெல்லாம் சங்கர் மகாதேவன்
எவ்வளவுதான் சத்தம் போட்டாலும்
இவர் களது குரல் வளத் துக் கு 360o60OTuUTTabLDTLT.
மென் மையான பாடகர்கள் வரிசையில் ஏ.எம்.ராஜா, கண்டசாலா, ரீநிவாஸ், ஏ.எல். ராகவன், எஸ்.பி. பாலசுப் பிரமணியம் , கே. ஜே. ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மனோ முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் ஏ. எம். ராஜாவினதும், பாலசுப்பிரமணியத்தினதும் குரல்கள் மிக இனிமையானவை. இருவரும் தத்தம் பாணியில் குழைந்து குழைந்து பாடும் போது, செவிகளுக்குத் தேனாமிர்தமாக இருக்கும்.
நகைச்சுவைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்களாக விளங்கியவர்கள் எஸ். வி. கிருஷ்ணன், சீர்காழி கோவிந்த ராஜன், ஏ.எல். ராகவன், சாயிபாபா, ஜமுனாராணி, ஜிக்கி, மனோரமா முதலியோர். இவர்களுள் கிருஷ்ணனும் கோவிந்தராஜனும் பெரும்பாலும் கே.ஏ.தங்கவேலுவுக்குப் பின்னணி வழங்கியுள்ளனர்.
ஞானம் - ஒக்டோபர் 2004

பின்னணிப் பாடகிகளில் பி. சுசீலா இனிய குரல், சிறந்த உச்சரிப்பு,
நடிப்புப் பாவத்துக்கு பாடும் திறமை, முதலியவற்றைக் கொண்டவர் . ஜிக்கியின் குரல் தனித்துவமான
இனிமையைக் கொண்டது. பாடகி களில் கம்பீரமாகப் பாடக் கூடியவர் களாக இருவரைக் கூறலாம். ஒருவர் ஜிக்கி, மற்றவர் எல். ஆர். ஈஸ்வரி. பி.லீலாவின் குரல் கட்டைக் குரலாக இருந்தாலும் இனிமையும் அதனுள் செறிந்திருக்கிறது. ரி. வி. ரத்தினத்தின் குரல் போலக் கரடு முரடானது அன்று. கே. ஜமுனா ராணியின் இயல் பாகவே இனிமையும் , பாற் கவர்ச்சியும் கொணி டது. ஜமுனாராணியின் வாரிசுகளாக எல். ஆர். ஈஸ் வரி, எஸ் ஜானகி, சுவர்ணலதா, அனுராதா பூரீராம் முதலியோர் விளங்குகின்றனர். எஸ். ஜானகி இனிய குரல்வளம் உள்ள திறமையான பாடகி. எத்தகைய பாடல்களையும் பாடக்கூடியவர். ரி.எஸ். பகவதி பராசக்தியினாலும், கே. ராணி தேவதாஸினாலும் புகழ்பெற்ற இனிய பாடகிகள். தெளிந்த, மென்மையான இனிய நீரோட்டம் போன்று பாடக்கூடிய பாடகி, பாலசரஸ் வதி தேவி. ஐம்பதுகளில் ஓரளவு புகழ்பெற்று விளங்கிய சரோஜினி, சற்று ஜமுனாராணியின் குரலையொத்த குரல் கொண்ட பாடகி. மென்மை யாகப் பாடும் ஏ.பி. கோமளா ஐம்பதுகளில் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். வாணி ஜெயராம் எம்.எஸ் . விஸ்வநாதனின் இசையில் புகழ் பெற்றுத் திகழ்ந்த தனித்துவத் திறமைகொண்ட பாடகி. எம்.எல். வசந்த குமாரி , ராதா ஜெயலட்சுமி, குலமங்கலம் ராஜலட்சுமி முதலியோரும் ஐம்பது, அறுபதுகளில்
ஞானம் - ஒக்டோபர் 2004
குரல்
புகழ் பெற்றுத் திகழ்ந்த இனிய குரல்வளம் கொண்ட பாடகிகள். இத்தகைய பாடகிகளிலிருந்து வேறுபட்டு, இனிய குழந்தைக் குரல் கொண்ட பாடகி, எம்.எஸ். ராஜேஸ்வரி. இத்தகைய பாடகர், பாடகிகளில் உச்சரிப்புத் தவறு விடுபவர்களும் உளர். இவர்களுள் முதலிடத்தை வகித்தவர் இனிய குரல்வளமுள்ள கண்டசாலா. அடுத்தவர் ஜேசுதாஸ். பாடகிகளில் ஓரளவு ஜானகி. இப்போதைய பாடகர், பாடகிகளைப் பொறுத்தவரையில் உச்சரிப்புத் தவறுதான் அவர்களது முதலாவது தகுதி. இவர்கள் என்ன மொழியில் பாடுகிறார்கள் என்பதே புரிவதில்லை. இன்றைய பாடகர்களில் உன்னி (கிருஷ்ணன், ஹரிகரண் , ஹரீஸ் ராகவேந்திரா, பூரீநிவாஸ் போன்ற ஒரு சிலரே சிறந்த பாடகர்களாகத் தம்மைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாடகிகளில் சித்ரா, சுஜாதா, சுவர்ணலதா, அநுராதா பூரீராம், நித்யறி முதலான ஒரு சிலர் மாத்திரமே சிறந்த பின்னணிப் பாடகிகளாக விளங்கு கின்றனர். பெரும்பாலான இன்றைய பின்னணிப் பாடகர், பாடகிகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்குத் தொண்டைக்குள் இருந்து குரல் வெளியே வரவே கஷ்டப்படுகிறது. குளியலறையில் மட்டுமே பாடக் கூடியவர்கள்கூட இன்று பின்னணிப் பாடகர், பாடகிகளாக விளங்கு கின்றனர். ஏறத்தாழ எல்லாக் குரல் களுமே ஒரே மாதிரியாக விளங்குகின்றன. பழைய இனிய தெளிவான குரல்களைக் கேட்டுப் பழகிய நம் செவிகளுக்கு இப்புதிய வர்களின் குரல்கள் கர்ணகடுரமாக
இருக்கின்றன. இசையும்தான்.
O
55

Page 30
ശ്മശ്രീശ്
(~ ശബബ ക്ര ബഗ്ഗ്ലൂറ
മല്ലൂര്
-பார்வையும் பதிவும் -
அகவிழி ஆசிரியத்துவ நோக்கு - ஆசிரியருக்கு அவசியமானது சமகாலத் தமிழ்ச் சூழலில் பெருமளவிலான சஞ்சிகைகள் வெளிவந்தவாறு உள்ளன. அவை பலதரப்பட்ட வாசகரை மனதிற் கொண்டு வெளிவருகின்றன. அவற்றுள் அண்மையில் வெளியாகிய அகவிழி’ ஆசிரியர்களுக்கான இதழாக அமைந்துள்ளது.
“உலகளாவிய ரீதியில் ஏற்படும் சிந்தனை மாற்றங்களையும் அறிவுத் துறையில் ஏற்படும் புதிய வளர்ச்சிகளையும், பாய்ச்சல்களையும் கல்வித்துறையில் ஏற்படும் புதிய விருத்திகளையும் புரிந்து கொண்டு அவற்றை உள்வாங்கி “ஆசிரியர் சமூகம்’ தன்னை ஒவ்வொரு கணமும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளது. காலாவதியான ஆசிரியர் என்ற நிலையிலிருந்து உயிர்ப்புமிகு ஆசிரியர் என்ற தகுதியை நோக்கிப் பயணிக்கக் கூடிய வலுவுள்ளவர்கள்தான் எதிர்கால ஆசிரிய சமூகத்தின் ஆதாரத்தளமாக இருப்பார்கள்” என்று அகவிழியின் முகப்புப் பகுதியில் கூறப்படுகிறது.
மாத இதழான இவ்விதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும்.
சந்திப்பிலிருந்து.
ଜୋ தரிதல் பத்திரிகை (வெளியீடு - 5) பகிர்வுப் பகுதியில் பிரசுரமான விடயம்.
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம் ஆகிய முக்கிய நூல்களை நேர்மையற்ற தொகுப்புக்கள் என அண்மையில் ஒருவர் குறிப்பிட்டுள்ளாரே!” என்று யாழ்ப்பாணத்திலிருந்து மகேஷ் என்பவர் கேட்ட கேள்விக்கு அப்பகுதியின் ஆசிரியர் பின்வருமாறு பதில் எழுதியிருந்தார்.
“ஆம் பட்டிமன்றப் பாணி" யில் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார். இன்றைய புதுவை இரத்தினதுரை இடம்பெற்றதை முன்வைத்தே அவரது குற்றச் சாட்டும் உள்ளது. இரண்டு நூல்களும் முறையே 1984, 1985ஆம் ஆண்டுகளில் வெளி வந்தன. எனவே அக்காலச் சூழலை வைத்து நோக்குவதே முறையானது.”
ஈழத்தின் முக்கிய கவிஞரும், திருமலையிலிருந்து வெளியான ஆகவே சஞ்சிகையின் ஆசிரியருமான ஜபார் அவர்களுடன் அண்மையில் (23.09.2004 காலை 10.00 மணி) பல்வேறுவிடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியபோது மேற்குறிப்பிட்ட கேள்வி, பதில் தொடர்பாக அவர் கூறியதாவது :
“. உண்மையில் மரணத்துள் வாழ்வோம்’ 31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகளின் தொகுப்பு என்ற நூலின் முதற்பதிப்பு கார்த்திகை 1985ஆம் ஆண்டு வெளியானது. இந்நூல் மயிலங்கூடலூர் பி. நடராசன், இ. பத்மநாபஐயர், அ. யேசுராசா, உ. சேரன் என்போர்களால் தொகுக்கப்பட்டது.
56 ஞானம் - ஒக்டோபர் 2004
 
 
 
 
 

பி. நடராசனை நான் ஒரு போதும் சந்தித்ததோ அவருடன் பழகியதோ கிடையாது. அதனால் அவருடைய அரசியற் பின்னணி பற்றி எனக்குத் தெரியாது. பத்மநாப ஐயரை அவருடைய கலட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டில் ஒரு சில தடவைகள் தனியாகவும், நண்பர் யேசுராசாவுடனும் சந்தித்திருக்கிறேன். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர், அவர். யேசுராசாவுடனும் சேரனுடனும் எனக்கு இலக்கியத் தொடர்பும், நட்பும் நிறையவே இருந்தது. அந்த வகையில் இருவருக்கும் ஒரு உறுதியான - சார்ந்த தன்மை உள்ள அரசியற் பின்னணி அப்போது இருக்கவில்லை. (பின் நாட்களைப் பற்றி எனக்குத் தெரியாது.) இருப்பினும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அக்கறை உள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் விடுதலைக் கெனப்புறப்பட்ட எந்தவொரு அமைப் பிலும் தங்களை முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ இணைத்துக் கொள்ள வில்லை. என்னுடைய கணிப்பில் போட்டியில் முதலாவதாக வரும் வீரர் ஒருவரை கைகுலுக்கிக் கெளரவிக்கும் ஒரு வகைப் பொதுவர்களாகவே இருந்தார்கள். இந்நால்வருக்கும் அதிக பட்சம் ஒருமித்ததொரு கருத்துப் பின்னணி இருந்திருக்க வேண்டும். அப்பின்னணியிலேயேதான் இத்தொகுப்பு நூலுக்கான கவிதைகள் தேர்ந் தெடுக்கப்பட்டன என்பதும் அரசியல் கவிதைகள் என்ற தேர்வின் அளவு கோலாக ட்றக், ஜீப், துப்பாக்கி, ரவை, பூட்ஸ்கால் என்பவைகளே இருந்திருக் கிறது என்பதும் நூலை வாசிக்கும் சாதாரண வாசகனினதும் பொதுப் புத்திக்கே உறைக்கும் விடயங்களாகும்.
8 நூலில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலம், அவை பிரசுரமான
ஞானம் - ஒக்டோபர் 2004
காலம், தொகுக்கப்பட்ட காலம், மூன்றையும் நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் கவிதைகள் எழுதப்பட்ட காலம் ஒரு தசாப்தப் பரப்பைக் கொண்டவை எனலாம். 1977, 1978, 1980, 1981, 1983, 1984, 1985 காலங்களில் மல்லிகை, அலை, புதிசு, தீர்த்தக்கரை, மார்க்சியம் இன்று, சக்தி, தீப்பொறி, படிகள் போன்ற இதழ்களிலும் மற்றும் சில கவிதைத் தொகுப்புகளிலும் பிரசுரமானவை களிலிருந்தே தொகுப்புக்கான கவிதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்காலப் பகுதியிலேதான் தளிர், சமர், சுவர், ஆலம், பொங்கும் தமிழமுது, சுடர், விடுதலைப் புலிகள் கீதம், புதியபாதை, தாரகை, தோழி, செந்தணல், சட்டென ஞாபகத்திற்கு வர மறுக்கும் இன்னும் பல இதழ்களும் வெளிவந்தன என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
a இன்னும் தொகுக்கப்பட்ட காலத்துக்கு வருவோம். 1985ஆம் ஆண்டு காலம் (அதுவும் கார்த்திகை மாதம்) என்பது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான காலம் என்பதை எந்தக் கொம்பனும் மறுக்க முடியாது. தமிழ்த் தேசிய அரசியலில் ஏராளமான மாறுதல்கள் நிகழ்ந்த காலம் அது போட்டி விடுதலை அமைப்புக்கள் நிறைந்திருந்த காலம்; கருத்து முரண் பாடுகள், உட்கட்சிப் பூசல், உட்படு கொலைகள் நிகழ்ந்து அமைப்புகள் உடைந்த காலம். பெரும்பாலான இடங்களில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டகாலம். ஏராளமான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள், நூல்கள் வெளி வந்த காலம். பிராந்திய, உலகளாவிய ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்கள் அப்பட்டமாக அடையாளம் காணப்பட்ட காலம். வாய்ப் பிரசாரங்களால் கசப்பை நிராகரித்தும் செயல்கள் மீது நம்பிக்கை வைத்தும்
57

Page 31
மக்கள் விடுதலையின்பின் அணிதிரண்ட காலம். சுருங்கக் சொன்னால் விடுதலைப் போராட்டத்தின் செல்நெறி திசைமாற்றம் பெற்ற காலம்.
இவ்வாறான ஒரு காலத்தில் தனித்து அரசியல் கவிதைகளுக்கு எனத் தொகுக்கப்பட்ட நூல் என்ற வகையில் இது ஆலையில்லா ஊரின் இலுப்பைப் பூவாக இருந்ததுதான் உண்மை. தவிர இக்காலத்தில் வெளிவந்த தாக்கமான அரசியற் கவிதைகளை உள்ளடக்கிய கனதியானதொரு தொகுப்பென்று இதனைக் கூறமுடியாது. ஏனெனில் தொகுப்பில் சேர்க்கப்படாத பல பொருத்தமான கவிதைகள் குறித்த காலப்பகுதியில் வெளிவந்துள்ளன என்பதையும், கவிதை அல்லாதவையும், பயில் நிலையில் உள்ளவையும் முகமனுக் காக தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிடலாம்.
தெரிதல் இதழில் பகிர்வு பகுதியில் பதில் அளிக்கும் வேல் என்பவர் யார் என்ற ஆய்வு நமக்கு அவசியமில்லைத்தான். இருப்பினும் ஆவணி-புரட்டாதி 2004இதழ் பகிர்தல் பகுதியில் ஐந்தாவது கேள்விக்குப் பதில் கூறப்பட்டுள்ள விதம் இதழின் ஆசிரியரும், வேல் என்பவரும் ஒரே நபர் என்பதை இலகுவாகப் புரிய வைக்கிறது. குறித்த பகுதியின் நான்காவது கேள்விக்கான பதிலில் இன்றைய புதுவை இரத்தின துரை என்ற குறித்துரைப்பில் ‘இன்றைய' என்ற சொல்லுக்கு ஒற்றை மேற்கோளிட்டு அழுத்தம் தந்ததன் மூலம் புதுவை இன்றைய கவிஞரே அன்றி நேற்றைய கவிஞர் அல்ல என்று வேல் நமக்குக் குறிப்புணர்த்துகிறார். இது அப்பட்டமானதொரு இருட்டடிப்பு. ஒர வஞ்சகம் நிறைந்தது போல் உள்ளது. வானம் சிவக்கிறது, இரத்த புஷ்பங்கள் போன்ற தொகுப்புக்களைத் தந்த அதே புதுவைதான் இதே புதுவையும்.
என்னுடைய வாசக அறிவுக்குட்பட்ட வகையில் மரணத்துள் வாழ்வோம்’
58
தொகுக்கப்பட்ட காலத்தில் புதுவையின் அரசியற் கவிதைகள் பல பிரசுர மாயிருந்தன. எனக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வரும் ஒரு கவிதையை உங்களுக்குக் கூறலாம் என நினைக் கிறேன். (ஜபார் நினைவில் உள்ளதை உச்சரிக்கிறார்) மீண்டும் ஒரு முழு நிலவில் கூடிக் கலைவோமா? இது நான் இப்போது கூறிய கவிதையின் தலைப்பு. எனது பார்வையில் விரிவான அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்ட கவிதை இது. பெப்ரவரி 1984 மல்லிகை இதழில் பிரசுரமானது. 41வது பக்கம் என நினைக்கிறேன். சூழலின் யதார்த்தம் என்ற யேசுராசாவின் கவிதை, தொகுப்பில் இடம்பெற முடியும் என்றால் புதுவையின் குறித்த கவிதை ஏன் இடம்பெற முடியாது? மு. பொ. வின் காலனின் கடைவிரிப்பு, தா. இராமலிங்கத்தின் கொடியேற்றம், சு. வில்வரத்தினத்தின் புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக் குரல், ஊர்வசியின் நான் எழுதுகிறது புரிகிறதா உங்களுக்கு, இளவாலை விஜேந்திரனின் ஆண்ட பரம்பரைக்கு, மைத்ரேயியின் முகம் மறுக்கப்பட்டவர்கள், கீதப்பிரியனின் எல்லாம் தெரிந்தவர்கள், செழியனின் பெர்வினுக்கு ஒரு கடிதம், நிலாந்தனின் கடலம்மா, அருளின் தோழிஉனக்குத்தான் போன்றவை 1985ஆம் ஆண்டு பிரசுரமானவை முன்னர் நான் கூறிய புதுவையின் கவிதை 1984இல் பிரசுரமானது. இது தொகுப்பாளர்களின் கண்களுக்கு அகப்படாததே ஒருமர்மம்தான். seas இன்னொரு விடயம் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எம். ஏ. நுஃமானின் புத்தரின் படுகொலை என்ற கவிதை சுந்தரன் என்ற புனைபெயரில் புறப்பாடு எனும் சிற்றிதழிலும் பிரசுரமானது. இது தொகுப்பின் இதழ்களின் பட்டியலில் குறிப்பிடப்படவில்லையே .
O
ஞானம் - ஒக்டோபர் 2004

?...62Gb62menM 4G09862% ویت\ہ محم
விடியலின் விழிப்பில் சேவலின் கூவுகை சிவப்பு நிறப் பூச்சுகையின் ஜன்னல் கம்பிகளின் இடையில் திம்ை வந்து பாடும் சிட்டுக்குருவி . அயல் வீட்டு சின்ைையாவின் ரேடியோ பnட்டுச் சத்தம் எழும்பு மகனே நேரமnச்சி திசைரி அம்மாவின் விடியல் தாலாட்டு அவளைத் தவிர்த்து யாரும் ஊற்றாத ஊற்றமுடியாத சுவைத் தேநீர் ஒட்டைகளையே கதவாக்கிய - என் வீட்டுக் கக்கூஸ்
நண்பர்களுடன் கூத்தாடிய காட்டுப் பீலி ஒடி ஒழிந்து குச்சி கீறி கள்ளின் பொலிஸ் விளையாடிய தேயிலைத் தோட்டம் என் கல்லெறிகைக்காய் காத்திருக்கும் முச்சந்தி மாமரம்
ஒப்பைையற்ற முகம் இடை தெரியாத உடை என்னை அதிகம் நேசிக்கும் மாலn டிச்சர்
ஞானம் - ஒக்டோபர் 2004
இரா. நெல்சன் மோகராஜ்
须
M
M
படிக்கையில் அண்டை பிடிக்கையில் கிட்டியடிக்கையில் ஒன்றாய் இருந்த என் நண்பர்கள் என் விழித் திரையில் திம்ை வரும் சில கண்ணிர் துளிகள் உலர்ந்து விழும் .
அதோ மணியடித்தாயிற்று இரn உணவுக்காய் நகர பாடசாலையில் மாணவர் விடுதியில் பாட்டி வருவாளா കഞ്ഞുകൃ eഖp? காலையிலும் மணியடிக்கிறார் எழுவதற்காய் .
C
59

Page 32
நூல் ; நெஞ்சுறுத்தும் கானல்
(நாடகத் தொகுதி) க்கம் : தே. தேவானந்த்
வெளியீடு: அகதிகள் புனர்வாழ்வு
நிறுவ்னம்.
விலை : ரூபா 100/-
இலங்கையின் நாடக அரங்கு இதுவரை பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளது. இவற்றுள், புதியதோர் அரங்கான சமூக மாற்றத்துக்கான அரங்கு க.சிதம்பர நாதனின் முயற்சிகளினால் வளர்க்கப் பட்டு வருகின்றது. மக்கள் தொடர் பான பிரச்சினைகளை மக்கள் மத்தியிலேயே அரங்க வடிவில் ஆற்றுப் படுத்தும் முயற்சிகள் இத்தகைய அரங்கினால் செயற் படுத்தப்பட்டு வருகின்றன. சிதம்பர நாதன் காட்டிய வழியில் இன்னொரு மைல் கல்லாகச் செயற்படுபவர் தே. தேவானந்த். அவரது இரு நாடகங் களின் தொகுதியாக நெஞ்சுறுத்தம் கானல் (2003) வெளிவந்துள்ளது. இந்நாடகத் தொகுதியில் நெஞ் சுறுத்தும் கானல், முடக்கம் ஆகிய இருநாடகங்கள் இடம் பெற்றுள்ளன.
இரண்டும் மிதிவெடிகள், அமுக்க வெடிகள் போன்றவற் றால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்
பற்றிக் கலாபூர்வமாகப் பேசுகின்றன.
60
போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும் மக்களின் மீள் குடியமர்வின்போது அவர்கள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர் வைத் தூண்டும் முறையில் இந் நாடகங்கள் அமைந்துள்ளன.
நெஞ்சுறுத்தும் கானல் பதினாறு வயது இளம்பெண் சுபா மிதிவெடியால் பாதிக்கப்பட்ட சோக வரலாற்றையும் அவளது சோகம் கலந்த உணர்வு களையும் புலப்படுத்துகின்றது. ஒடியாடி உற்சாகமாகத் திரிந்த அந்தப் பெண்பிள்ளை மாங்காய் உண்ணும் ஆசையினால் உந்தப்பட்டு, மிதி வெடியில் சிக்கிக் காலை இழக்கிறாள். மாடு கட்டப்போன மாமா ஒருவரின் மாடும் மிதிவெடியில் சிக்கிக் காலை இழக்கிறது. இந்நாடகத்தில் சுபாவின் கனவாக மிருக பாத்திரங்களைக் கொண்ட குறு நாடகமும் இடம் பெறுகிறது. அதன் வாயிலாக மனித குணாம்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன. சிறுவரது விளையாட்டுகளும் நாடகத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
மழை விட்டும் து வானம் போகாததுபோல் போர் நிறுத்தம் இடம்பெற்றும், மரணங்கள் இல்லாமற் போய்விடவில்லை என்பதை இந்நாடகம் உணர்த்துகிறது. இந்நாடகம் சமுதாயப் பணி யொன்றைச் செய்யும் அதே வேளையில், கலையம் சங்கள் பாதிக் கப்படாத முறையிலும் படைக் கப்பட்டுள்ளமை இதன் பெருந்தகுதியாகும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள இன்னொரு நாடகம் முடக்கம். இநீ நாடகமும் மிதிவெடியின் பாதிப்புகள் பற்றிப் பிறிதொரு கோணத்தில் நோக்குகிறது. நந்தன் விறகுத் தேவைக்காக மரம் வெட்டச் சென்றபோது மிதிவெடியில் சிக்கிக்
ஞானம் - ஒக்டோபர் 2004
 

காலை இழக்கிறான். மனைவி தவத்தின் உற்றார் உறவினரும் அவர்களுக்கு உதவ முன் வர வில் லை. உழைப்பதற்கும் வழியில் லை . அரசியல் வாதி, அதிகாரிகளின் சொல் ஒன்றும் செயல்
ஒன்றுமான போக்கினால் அவர்களது
வாழ்க்கையே முடங்கிப் போகிறது
முடக்கம் நாடகத்திலும் தேவானந்த் தமது நாடக அரங்க ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்துகிறார். இந்நாடகத்தில் புளியமரத்தையும் நாடக ஆசிரியர் நடிக்க வைத்துள்ளார். சமதாய விமர்சன மாகவும் பார்வை யாளரின்/வாசகரின் உணர்வுகளைத் தொடக் கூடிய வகையாகவும்
நாடகத்தை நாடகாசிரியர் படைத் துள்ளார். முடக்கம் நாடகத்திலும் நாடகாசிரியர் தமது திறமையை முடக்கி வைக்கவில்லை.
நெஞ்சுறுத்தும் கானல், முடக்கம் ஆகிய இரு நாடகங்களிலும் நாடகாசிரியர் / இயக்குனர் தே. தேவானந்த் தமது நாடகப் படைப் பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இநீ நாடகங்களைப் போரினர் பின்னரான சமுதாயப் பணியாகவும் மேற் கொணர் டு செயற் பட்டு வருவதுடன் நாடகத்துக் குரிய கலாரீதியான பெறுமானங்கள் தொய் வடையாமலும் பார்த்துக்கொண்டு ள்ளார். நாடகக் கதையம்சம், பாத்திர வார்ப்பு உரையாடல்கள் முதலான வற்றில் அவர் அதிக அக்கறை யெடுத்துச் செயற்பட்டுள்ளார். இருநாடகங்களிலும் கவிஞர் இ.முருகையனின் பாடல் கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முடக்கம் நாடகத்தில், “நயினார் செத்தது நல்லது நல்லது நல்லது நல்லது
ஞானம் - ஒக்டோபர் 2004
நமக்கு நல்லது" என யாழ்ப் பாணத்தில் வழங்கிவந்துள்ள நாட்டார்பாடல் வடிவத்தை அரசியல் வாதி, அதிகாரி ஆகியோரின், சுயநலத்தைப் புலப்படுத்துவதற்காக முருகையன் புதிய கற்பனையோடு பயன்படுத்தியிருப்பது சிறப்பாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஈழத்துத் தமிழ் நாடக வரலாறு பற்றி எழுதும்போது தே. தேவனந்த்தும் அதில் இடம்பெறுவார் என்பதற்கு, நெஞ் சுறுத்தும் கானல் என்ற இந்நாடகத் தொகுதி ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
- நக்கீரன்
O நூல் : முகங்களும் முடிகளும்
(சிறுகதைத் தொகுதி) க்கம் : கோகிலா மகேந்திரன் வெளியீடு: கலை இலக்கியக் களம்,
தெல்லிப்பழை. விலை : ரூபா 200/-
இலங்கையின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளருள் ஒருவராக விளங்குபவர், கோகிலா மகேந்திரன். புனைகதை, நாடக எழுத்தாளராக வளர்ச்சிபெற்றுள்ள அவர், பல்வேறு சிறுகதைகளையும் நாவல்களையும் நாடகங்களையும் எழுதி, தமக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத் துள்ளார். 1986 -2003 காலப்பகுதியில் எழுதப்பட்ட அவரது சிறுகதைகள் பதினெட் டைக் கொணி டதாக முகங்களும் மூடிகளும் (2003) என்ற சிறுகதைத் தொகுதி விளங்குகிறது.
இத் தொகுதியில் கோகிலா மகேந்திரனின் பல்பரிமாணங்களைக் கொண்ட சிறுகதைகளைத் தரிசிக்க முடிகிறது. அவற்றுள் சில சிறு
61

Page 33
கதைகள் எழுத்தாளரின் ஆளுமை யைத் திறம்பட எடுத்துக் காட்டுகின்றன. சில பலவீனமான படைப்புகளாக விளங்குகின்றன. முகங்களும் மூடிகளும், முகாமுக்குப் போகாத அகதி, பெண்பனை, நெருஞ்சி, ஏ. 9 பாதை, கூறானது மனம், பிறழ்வின் தோற்றம், உயர்ந்து செல்லும் சீரழிவுமானி ஆகிய படைப்புகள் கோகிலா மகேந்திரனின் எழுத்தாற்றலை இனங்காட்டுகின்றன. முகங்களும் மூடிகளும் என்ற சிறுகதை ஓர் அருமையான படைப்பு போராளிகளை அவர் களது திறமைக் காகவும் தியாகத்துக்காகவும் பாராட்டும் சமூகம் தனது சுயநலத் துக்காக அவர்களுக்குச் சாபத்தை வழங்குவதற்கும் முனைகிறது என்பதை இச்சிறுகதை காட்டுகிறது. தனிமனிதர்களின் பல்வேறு சுபாவங்களை முகாமுக்குப் போகாத அகதி என்ற சிறுகதை கலா பூர்வமாகப் பிரதிபலிக்கின்றது. பெண் பனை’ ஆணாதிக்கத்தின் போக்கினைப் பெண்ணிய நிலைநின்று நோக்குகிறது. ‘நெருஞ்சி இன்னொரு வகையில் அற்புதமான படைப்பு. யாழ்ப்பாணச் சூழலில் பஸ் நடத்துநர் ஒருவரின் உளவியல் போக்கினை யதார்த்த பூர்வமாக அது இனங்காட்டுகிறது. முழுக்க முழுக்க உரையாடல் மூலமாகவே கதை நகர்த்தப்படுகிறது. உளநல வைத்தியரும் பஸ்நடத்துநரும் பேசிக்கொள்ளும் இறுதிக்கட்டம் சுவாரசி யமானது. ‘ஏ-9 பாதை’ என்ற சிறுகதையில் ஒரு பஸ்சாரதியின் பிறழ்வான மனப்போக்கு இனங்காட்டப் படுகின்றது. கதையின் இறுதியில் “இரவுச் சாப்பாட்டிற்கு வீடு போனால் போதும் வீடு இருந்தால் தானே” என்று கூறுவதுமூலம் கதைகூறும் பெண்பாத்திரத்தின் நிர்க்கதிநிலை இனங்காட்டப்படுகின்றது. ‘கூறானது மனம்’ என்பதும் சிறப்பாகப் படைக்கப்பட்ட ஒரு சிறுகதை, பிறழ்வின்
62
தோற்றம்’, ‘உயர்ந்து செல்லும் சீரழிவுமானி ஆகியவை முறையே பிறழ்வு பட்ட மனோநிலை கொண்ட பத்து வயதுப் பையன் ஒருவனையும், இளம் பெண் ஒருத்தியையும் கதா பாத்திரங்களாகக் கொண்டுள்ளன. இருகதைகளிலும் குறிப்பிட்ட இருவேறு பாத்திரங்களும் தத்தம் கதையை எடுத்துரைப் பதான உத்தி கையாளப்பட்டுள்ளது. யதார்த்த பூர்வமான முறையில் அப்பாத் திரங்களின் பிறழ்வுநிலை மனப் போக்கினை உரையாடல் வடிவில்
கதாசிரியை புலப்படத்துகின்றார்.
இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 'மெத்தென்ற மனம், 'நெருக்கீட்டின் பின். ஆகிய இரு சிறுகதைகள் கடிதவடிவில் அமைந்துள்ளன. இவற்றுள் முதலாவது கதை, எத்தகைய கலாரீதியான பெறுமானமும் இல்லாமல் வெறும் பிரசங்கமாகவே அமைந்து விட்டது. இந்நூலில் உள்ள மற்றைய படைப்புகள் சாதாரண கதைகளாகவே அமைந்துவிட்டன.
கோகிலா மகேந்திரன் என்ற தரமான படைப்பாளியின் ஒரு பகுதி ஆளுமையையே இச் சிறுகதைத் தொகுதி இனங்காட்டுகிறது. கதாசிரியை தாம்பெற்ற சீர்மிய உளவியல் பயிற்சி அனுபவத்தைக் கொண்டு எழுதிய சில சிறுகதைகள் தரமாக உள்ளன. சில சீராக அமையாத அவியல்களாக உருவாகி விட்டன. அவற்றில் கலைத்துவம் தூரவிலகிவிட்டது. பூசி மெழுகாமல் விமர்சன வார்த்தைகளால் கூறுவதாயின் இத் தொகுதியில் இடம்பெற்ற பதினெட்டுச் சிறு கதைகளுள் ஏறத்தாழ எட்டுச் சிறுகதைகளே கோகிலா மகேந்திரனின் பெயரைக் காப்பாற்ற வல்லன. மற்றவை நூலின் பொலிவுக்காக மட்டும் இடம் பெற்றவை.
ஞானம் - ஒக்டோபர் 2004

*鷺曾*醬鷲警畫崙] , /Fجخ DICTACURABIC ടൂ GIJagorfir Š
ஞானம் ஆசிரியர் அவர்களுக்கு,
இளையோர் உங்களுக்கு “ஞானம்’ எதற்கென்று ஏளனம் செய்வோரைப் புறக்கணித்து, இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைக்கும் அதேவேளை வளமிக்க, நல்ல ஆக்கங்களை இலக்கிய ஆர்வலர்களுக்கு அளிக்கின்ற ஞானத்தைத் தவறாது படித்துவரும் நல்மாணவி நான்; பொன்மலராய் மலர்ந்த ஞானம் பொலிவுபெற இலைமறை காயாயிருந்துழைத்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக. திருமலை வீ. என். சந்திரகாந்தி அவர்களின் சிறுகதை ஒருகணம் எனது நெஞ்சத்தையும் ஊமையாக்கிவிட்டது. நடைமுறை வாழ்வில் நிகழ்ந்திடக் கூடிய ஒரு சிறுநிகழ்வைச் சொல்லோவியமாக்கி, இன்றைய சமுதாயத்தின் தவறான சிந்தனையைச் சாடி, சாந்தம் என்ற பாத்திரத்தினூடாகக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் மோனையாக வருமென்பதாலோ என்னவோ “ஊமைப்பெண்.” என்று தலைப்பிட்டிருக்கிறார். சாந்தம்- தனது “உணர்ச்சிப் பிரவாகத்தில் எம் அனைவரையும் ஒருகணம் ஊமைகளாய் வாயடைத்து நிற்க வைத்துவிட்டவள்- அவளை "ஊமை” எனக் குறிப்பிட்டது நியாயமல்ல என்பது எனது கருத்து. சாந்தம் என்ற கதாபாத்திரம் உண்மையான ஒரு சமூகத்தில் வாழக் கூடிய சாத்தியம் உண்டு. அவள் இக்கதையைப் படிக்க நேருமென்பதை நாம் ஒருகணம் சிந்திக்க வேண்டுமல்லவா.
வேதனைப்பட்ட அவளை மேலும் நாம் வேதனையுற வைக்கலாமா .
என்றும் அன்புடன், குறிஞ்சித் தேன்மொழியாள்.
வணக்கம். 52வது மலர் கைவரப்பெற்றேன். மனங்கவர் நிறத்தில் மயங்கும் ஒவியத்துடன் கனதியாக உள்ளது. அருமையான ஆக்கங்கள் பல ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன. முல்லைமணியின் தமிழ் ஆதங்கம் ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கவேண்டிய விடயம். பேசும்போது ஆங்கிலச் சொற்கள் கலப்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. எழுதும் போதாவது சீரிய தமிழைப் பேணவேண்டும். இங்கு ஆசிரியர்களதும் ஊடகத்துறையினரதும் பங்களிப்பு மிக அத்தியாவசியமானது. இன்று பாடசாலைகளில் தமிழ்ப்பாடத்தில் மட்டுமே எழுத்துப் பிழைகள் இருக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனைய கணிதம், விஞ்ஞானம், கற்றாடல் போன்ற பாடங்களில் எழுத்துப் பிழைகளைத் திருத்த வேண்டியதில்லை 6lன்று கருதுகிறார்கள். இந்நிலை மாறவேண்டும். ஏனைய பாடங்களிலும் தமிழ் தன்
தரத்தை விட்டுத் தாழக்கூடாது என்பதே என் பணிவான அபிப்பிராயம்.
பூரீவாகினி, தெகிவளை.
தானம் - ஒக்டோபர் 2004 63

Page 34
திரு. சிவத்தம்பியினுடைய செவ்வி ஒரு அனுபவப் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அதனை உடனடியாக ஒரு நூலாக்குங்கள். பேராசிரியருடைய வார்த்தைகளை அச்சொட்டாய் அப்படியே அவர் மொழியிலேயே எழுதியிருக் கிறீர்கள். மிகவும் சுவாரஸ்யமாகவும் அவர் பேசுவதுபோலவும் இருந்தது. உண்மையில் அந்தப் பேட்டித் தொடரை வாசிக்கும்பொழுது சிவத்தம்பி அவர்களின் குரல் எனது காதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது. மிகச் சரியாகச் செய்திருக்கிறீர்கள். எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு.
புஸ்பாவின் அட்டைப்படங்கள் மிகவும் கதை சொல்கின்றன. கலர் கலவையில் கை நன்றாகவே அவருக்கு வாலாயப்பட்டிருக்கிறது. சாரங்காவின் கவிதை மிகவும் அற்புதம், புலம்பெயர் நாடுகளில் இருந்தால் தெரியும் உணர்வுகளின் கஷ்டமும் வேதனையும். அவரின் மொழி, புதிய உத்திகள் அற்புதமாக இருக்கிறது. முல்லைமணி ஒரு நல்ல தமிழ்க் கதையைத் தந்திருக்கிறார். "ரிப்ஸ் அருமையான கற்பனை, "ஞானம் எமது இலக்கிய உலகுக்கு ஒரு நல்ல வரவு. தரம் பேணுகிறீர்கள். தொடர்ந்தும் பல்லாண்டுகளாக ஞானம் வெளிவரவேண்டும். "லே அவுட், எழுத்துக்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன.
இளைய அப்துல்லாஹ், வத்தளை.
எஸ். பொ. பேட்டித்தொடர் வருவது வரவேற்கத்தக்கது. சர்ச்சைகள், பரபரப்பு கண்டனங்கள் என விளம்பரப்படுத்தியுள்ளிர்கள். அவர் பல நூல்களை வெளிநாடுகளில் வெளியிட்டிருக்கிறார். அதிலே பல விஷயங்கள் சர்ச்சைக் குரியதாகவும் தெரிகிறது. அவை இங்குள்ள வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தச் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்குக் களம் கிடைக்கவில்லை. ஞானம் அதனைச் செய்யவேண்டும். ஒரு விமர்சகரின் - சிவத்தம்பியின் பேட்டி தொடராக வந்தது போல, ஒரு படைப்பாளியின் பேட்டி தொடராக வருவது நல்லது. ஞானம் பத்திரிகா தர்மத்தைக் கடைப்பிடித்து பேட்டித்தொடரை முழுமையாக வெளியிடுவதோடு சம்பந்தப்பட்டவர்களின் பதில்களையும் முழுமையாக வெளியிடவேண்டும். வாசகர்கள் உண்மையைத் தீர்மானிப்பார்கள். சிறிது காலத்துக்கு முன்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், எஸ். பொ. பற்றிய பல சர்ச்சைகள் வெளியிடப்பட்டன. அவரது "இத்தா என்ற கதை மருதூர்க்கொத்தனால் எழுதப்பட்டது என்று மருதூர்க் கொத்தனே கூ முன்பு ஞானத்தில் துரைமனோகரன் எழுதியிருந்தார். இது பற்றிய விளக்கத்தையும்
எஸ்.பொ.விடம் கேட்டு அவரது நேர்காணலில் வெளியிடவேண்டும்.
க. தம்பிராசா, பருத்தித்துறை. ஒரு வைத்தியனாகத் தனது பணியை ஆரம்பித்த க.சதாசிவம் அவர்கள், 'அக்கா ஏன் அழுகிறாய் என்ற நூலுடன் தனது பணியை நிறைவு செய்திருக்கிறார். ஆனாலும் அவரது படைப்புக்களும் பணிகளும் என்றென்றும் மக்கள் மத்தியில் நின்று நிலவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்று பாரதிதாசன் கூறியதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே சதாசிவம் சாகமுடியாது. ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனாலும் அவரின் இழப்பால் புலோலிமணன் ஒள் இலக்கியச் சுடரை இழந்து தவிக்கிறது என்பது உண்மைதான். புலோலி மக்கள் மட்டுமல்ல நாடு முழுவதிலும் உள்ள பல்லாயிரம் பேர் அவரின் மறைவால் துயருறுவர்.
அவர்களில் நானும் ஒருவன். அவரின் ஆத்மா சாந்தியடைவதாக,
பெ. ஐங்கரன், புலோலி,
s ஞானம் - ஒக்டோபர் 2004

గొంగింగింగింగిలొంగింగింగిల్డ్ర ÉÐ CENTRALESSENCE. SUPPLIERS (3
DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES, FOOD COLOURS AND SCENTS ETC,
76/B, KING STREET, KANDY.
TEL : 081 - 2224187, 081 - 4471563
T AAS ASAMAS AMAMA SAe MS eAMM SAAeMMSeASAeASAeAqAeAeiOi
CARSONS MEGA
乾
曹
o Importers & Distributors of ( (4. Wall Tiles, Floor Tiles, High Quality
Sanitary wares, Bathroom. Accessories, P. V. C. بلی 8. And Hot Water Pipe Fittings
الي
A-74, Colombo Street
邸 Kandy, Sri Lanka.
Tel: 081 - 4476760, 081 - 2200052
Fax : 081 - 2200052
\.\,\:\;\&\&\&\&\ം

Page 35
C Phong ; O81
O81
O81 N Fax O81ܘ݂ E-Mail : Luci!
షో
GF இச் சஞ்சிாேக தி. ஞானசேகான் அவர்களால்
புளி ஆர்ட்ஸ் நிறுவனத்தில் அச்

=ি খ্রিস্তু N ds GBiscuit
Ctulho ezho’S
asale.
- \d 証k
C 露
- 242O217
- 242O574
- 222704
- 242O740 അ kyland(shnet.ik.
റ്റ്
இல, 48 பி. புளூமெண்டாக் வீதி, கொழும்பு 13
சிடப்பட்டு வெளியிடப்பட்டது.