கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.11

Page 1


Page 2
జ్ఞాః
SS ಹಣಾಷ್ಣ
邻 POOBAASNGHAM
| BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PLIBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWSAGENTS.
隱
Head Office : Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colornbo (06, Sri Lanka. Tg 24.22321 Tel. : 4-515775, 2504266 Fax : 2,337 313 SS E-mail; pbdhoositnet.lk 4A, Hospital Road,
Bus Stand, Jaffna,
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி,
இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
தனrறிை : àæär: இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309 A-2/3, காலி வீதி, கொழும்பு 11, இலங்கை, கொழும்பு 08, இலங்கை தொ. பே. 2422321 தொ. பே. 4-51575 தொ. நகல் 2337313 SS Lfiloirs ESA-so ; pbdhoÖstnet.lk இல. AA, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், பாழ்ப்பாணம்.
ܚܧܐ
ssessessessex essessex essex essex exio
 

: '' :
ஒளி - 05 Ji Li - OES
(σ5 ΙΙσοτιD
-Illi: gll: 11111garinessyah), con
ராசரர் சஞ்சிதைரிஸ் கிரசுரWதுர் Wர்கனின்கீதத்துக'து அவர்ரை ஈWதி ஆசிரியர்களே துெை WWதன். இன்திரில் எழுது WWதது சேர்த்தர் கிரி, துகவரி 8 WWதிரை சீராக இWைத்தல்
(WWSW.
辩
莺
: ஆசிரியர் : : தி. ஞானசேகரன் 3
ஓவியர்கள் : 影 II ti III
நா. ஆனந்தன் 3. தலைமை அலுவலகம் :
19", பேராதனை விதி, П. быio! Iч.- : (lit.G. (18-223.4755, 18-247.857)
தொடர்புகளுக்கு. : 签 தி. ஞானசேகரன் : k 3-1 46வது ஒழுங்கை,
கொழும்பு - 05. GII.C. (Il-2586013,0777-3065(k,
- ஆசிரியர் s LLLLLS TMLLS ALLLLLLLSMS ekLSkSMSMAe0rSMAeLS0OeMS AAL0L0OLLSS
இதழினுள்ளே .
நேர்காப்னை ஸ்
பராசிரியர் வினத்தப்பி
1ள். பொ.
சிறுகதை
Fil flag,
- சுநர்மகாராஜன் பொன் வண்டு
- ஆ. சாபங்கா
கவிதைகள்
ங்ாழுத முடியாத உங்ாது .
த. ஜெயசீபன் "நான்கள் பலவிதம்
- சிற்பி சூரியனே நம் குறி.
- ஆகாசன்
பொன்னன்னை கொஞ்சம்.
- சிங்பாங் ,ே துபாரா?
இலங்கை வானொலி தமிழ்.
- பட் எனத்தடிகள் மாறி வரும் நான்.
- முச்சார் 4ார், எரிபார்
கட்டுரைகள்
தமிழ்க் கவிதையின் எதிர் .
== I፡ክHIff።ዙ፡ ﷽ነT} }II &፡ ነዞIIቼ፡15ዘŠ1 I புஷ்கர்ஷ்காக டி3த இலக்கிய ம் .
- செங்கே ஆழியான் இலக்கிபத்தின் மொழி
ואי:JT. ווולי 51 ,I ווו. - எழுதத் துண்டும் வேண்டின.
- துர, மனோகரன் சபகால கலை இலக்கிய
- செ. சுதர்சன்
நூல் மதிப் புஷ்கர வாசகர் பேசுகிறார்
அட்டைப்பட ஓவியம் :
LouUIT
TA
3.
si
55
3
5.
5
临望

Page 3
0.
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம் لد .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
அரச சாகித்திய விருதுகள் படைப்பாளிகளுக்கு உயர்ந்த கெளரவத்தையும் அங்கீகாரத்தையும் அளிப்பனவாக அமைதல் வேண்டும். அவை படைப்பாளிகளைப் பெருமைகொள்ளச்செய்தல் வேண்டும். அவ்வாறான ஒரு நிலைமை ஆரம்பகாலத்தில் இருந்தது. 1961ல் முதல் முதலில் படைப்பிலக் கியத்திற்கான சாகித்திய விருதைப் பெற்ற பெருமை முதுபெரும் எழுத்தாளரான டொமினிக் ஜீவாவுக்கு உரியது. அவர் தனது விருதினைப் பெற்று யாழ் புகையிரத நிலையத்தில் வந்திறங்கியபோது, அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க அன்றைய யாழ் நகர மேயர் உட்படப் பல பிரமுகர்களும் படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டிருந்தனர். யாழ் நகர மேயரின் மாலை மரியாதைகளுடன் ஜீவா வரவேற்கப்பட்டார். பத்திரிகைகள் இது தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ஜீவாவைப் பேட்டிகண்டு அவரது கருத்துக்களை வெளியிட்டன.
தொடர்ந்து வந்த காலப்பகுதியிலும் சாகித்தியப் பரிசு பெறுவது படைப் பாளிகளின் சாதனையாகக் கருதப்பட்டு இலக்கியக் குழுக்களினாலும் படைப்பாளிகளின் சொந்தக் கிராம மக்களினாலும் விழாக்கள் எடுத்துக் கெளரவிக்கப்படுதல் வழக்கமாக இருந்தது.
படிப்படியாக நிலைமை மாறியது. பரிசுத் தேர்வுகளில் அரசியல் தலையீடுகள், பாரபட்சம், குழுநிலைச்சார்பு ஆகியன தலையெடுக்கத் தொடங்கின. நடுவர்களின் தீர்ப்புகளுக்கு மாறாக உயர்மட்டத் தீர்ப்புகள் அமைந்தனவெனக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. தமக்குத்தான் பரிசு என்று முதல்நாள் எடுக்கப்பட்ட தீர்மானம் மறுநாளில் மாற்றப்பட்டதாக பல எழுத் தாளர்கள் மனம் நொந்து கூறியிருக்கிறார்கள். தனிப்பட்ட கோபதாபங்கள், அழுக்காறுகள் செயற்பட்டன என்றுகூடச் சிலர் பதிவு செய்துள்ளனர். மறுபுறத்தில் சகோதர எழுத்தாளர்கள் வெட்கித் தலைகுனியும் விதத்தில்
2 ஞானம் - நவெம்பர் 2004
 

முறைகேடான வழிகளில் சிலர் பரிசுபெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பட்டம் பதவியாலும் இலக்கிய உலகில் மேலாதிக்கம் செலுத்துபவர்களின் சிபார்சுகளினாலும் சில நூல்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. பின் கதவுகள் மூலம் தரங்குறைந்த நூல்கள் பரிசுகளைத் தட்டிச்செல்ல நல்ல தரமான நூல்கள் ஓரங்கட்டப்படுவதாய் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.
இவ்வாண்டுக்கான சாகித்தியப் பரிசுத் தேர்வுகள் பல கேள்விக் குறிகளுடன் நிறைவேறி முடிந்துள்ளன. வழக்கமாகத் தமிழுக்கெனத் தனியான இலக்கியக் குழு இயங்கிப் பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இவ்வருடம் தமிழுக்கெனத் தனியான குழு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவில்லை. தேசிய இலக்கியக்குழு நியமிக்கப்பட்டு அதில் தமிழ் பகுதியின் நலன்களைக் கவனிக்க நால்வர் நியமிக்கப்பட்டனர் எனவும் அவர்களில் தலைவர், உப அங்கத்தவர்கள் எவரும் இருக்கவில்லையெனவும் தெரியவருகிறது. இந்த நால்வர் யாவர் என்பதுகூடப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த நால்வரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றுகூடி, குழுக்கூட்டம் நடத்தி முடிவுகளை எடுக்கவில்லை. தேசிய இலக்கியக்குழு என்ற உயர்மட்டக்குழு கூடிய பொழுதும் இவர்கள் தமது பிரசன்னத்தை அனேக சந்தர்ப்பங்களில் தவிர்த்துள்ளனர். மனமொப்பி இவர்கள் இயங்கவில்லை எனவும் தெரியவருகிறது.
வழக்கமாகச் சாகித்திய விருதுகளுக்கான நூல்கள் தெரிவுசெய்யப்படும் பொழுது, ஒவ்வொரு துறைக்கும மூன்று நடுவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களால நூல்கள் வாசிக்கப்பட்டு புள்ளிகள் இடப்பட்டு அவற்றின் அடிப்படையில் குழுமட்டத்தில் தேர்வுகள் நடப்பது வழக்கம். இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை. நடுவர்கள் நியமிக்கப்படவுமில்லை. குழுமட்டத் தேர்வு நடைபெறவும் இல்லை.
பல்துறைகள் சார்ந்த ஏறத்தாழ அறுபத்தைந்து நூல்கள் பரிசுத் தேர்வுக்குக் கிடைத்தனவென்றும் இந்நூல்களில் பரிசுக்குரியனவற்றை ஒருவரே தேர்ந்தெடுத்தார் எனவும் அறியவருகிறது. இத்தகைய செயற்பாடுகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
தமிழுக்குத் தனிக் குழு அமைக்கப்படவில்லை என்பது அரசியல் ரீதியாகச் சிங்களத் தேசியத்திற்குள் தமிழை அடக்கிவிடும் ஒரு முயற்சியாகும் என்பதைப் புறந்தள்ளிவிட்டு, வளைந்து நெளிந்து மெல்லமுடியாதவற்றை மென்று விழுங்கிக் கொண்டு செயற்படாவிடின் தமிழுக்குரிய பரிசுகள் கிடைக்காமல் போயிருக்கும் என்ற ஒரு காரணத்தை ஏற்றுக்கொள்வது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. சாகித்திய விருதுக்குரிய சிறப்பினையும் பெருமையையும் மீளவும் கட்டி யெழுப்பக்கூடிய விதத்திலும் படைப்பாளிகள் பெருமைப்படக் கூடியவிதத்திலும் எதிர்க்காலச் செயற்பாடுகள் அமையவேண்டும் என ஞானம் வலியுறுத்துகிறது. இவ்வாண்டு சாகித்திய விருது பெற்ற இலக்கிய கர்த்தாக்களை ஞானம் மனதாரப் பாராட்டி, அவர்களது இலக்கியப்பணி சிறக்க வாழ்த்துகிறது.
O O O
pod oor b -- pod GauJub uit 2u04 3

Page 4
3 Curt அடைந்தபோதே அவரது முகத்திலிருந்த இறுக்கம் ஏதோ ஒரு சோகச் செய்திக்கான அறிகுறியைக் காட்டியது. விடியற் காலையில் வேலைக்குச் பாதியில் அவர் வீடு திரும்பியதேயில்லை. அப்படியும் திரும்பினாரென்றால் அறை வேலை காரணமாகத்தான் திரும்புவார். நான் அறிந்து, சுகயினம் என்றெல்லாம் வீடு வந்ததில்லை. இன்றைய அவரது பாதித்திரும்பலில் உற்சாகமற்ற, இறுகிய முகம் என்னுள் ஏதோ செய்தது.
வாசற்படியருகே வந்தவர், வீட்டு முகப்பினுள் நுழையாது, சற்று மெளனமாக நின்றுகொண்டு யோசித்தார். நான் கதிரையில் உட்கார்ந்திருப்பது அவர் கண்ணில்பட்டிருக்கும். ஆனால் என்னைக் கவனியாததுபோல் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண் டிருந்தார்.
நான் அப்பாவோடு அவ்வளவு அதிகமாகப் பேசுவதில்லை. தேவை யிருந்தால் மட்டுமே எங்களுக்கிடையே பேச்சு. வாழ்க்கை என்னை அப்படிப் பழக்கி விட்டதோ என்னவோ?, சிலநேரம் அப்பா என் படிப்பைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் விசாரிப்பார். நானும் கேள்விக்கேற்ற மாதிரி ஒரு சில வார்த்தைகளில் பதிலை முடித்துக் கொள்வேன். மற்றப்படி வீட்டில் இருக்கும் நாட்களில், நான் ஒரு புறமாக புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பேன். ஒருபுறமாக பத்திரிகையோ அல்லது ஒரு புத்தகத்தையோ வாசித்துக்
4.
6)JT8F6)6)
என்னுடைய ஹொஸ்டல்
அப்பா
சென்று
சுதர்மமகாராஜன்
கொண்டிருப்பார். வாசிக்கும் நூல்கள் என்றால் மகா பாரதமும், இராமாயணமும்தான். பலமுறை சலிக்காது வாசித்துக் கொண் டிருப்பார். சிலநேரம் யாருக்கும் அறிவுரைகள் சொல்லும்போது அவற்றி லிருந்து உதாரணங்களை அள்ளி விடுவார்.
அப்பா பேச்சில் வல்லவர். அவரோடு
அப்பா அநேகமாக
யாரும் பேச்சுக்கு மாட்டுப்பட்டால், இலகுவில் விடமாட்டார். அதிகமாய் அவரது பேச்சு, ஒன்று அரசியலாக இருக்கும், இல்லாவிடின் தன் சுய புராணமாக இருக்கும்.
அரசியல் என்றால், ஆளும் கட்சியை வாங்கு வாங்கென்று அவரோடு பேசிக் கொண்டிருப்பவன் ஆளும் கட்சிக்காரனா? எதிர்க் கட்சிக்காரனா? யோசிக்கமாட்டார்.
வாங்குவார்.
என்றெல்லாம் தன்னுடைய பேச்சுத்தான் முக்கியம். இதைப்பற்றி அடிக்கடி பேசும்போது வார்த்தையை அளந்து பேசும்படி
சுயபுராணம் என்றால் தன் கடந்தகால வாழ்க்கையைப் பற்றித் தற்பெருமை அடிப்பார். அவற்றோடு சில பொய்களும் கலப்பதற்குத் தவறுவதில்லை. சில வேளைகளில் இடையிடையே என் படிப்புக்களையும், தகுதிகளையும் பற்றிக் கதையளப்பதில் வல்லவர். என்னுடைய
அம்மாகூட எச்சரிக்கை செய்வார்.
நண்பர்கள் சிலர் கூறுவார்கள்.
ஞானம் - நவெம்பர் 2004
 

அப்பாவோட பேசத்
R r
ஒங்க
தொடங்கினா ரப்பர்டா” என்று. எனக்குச் சிலநேரம் சிரிப்பாக இருக்கும்.
என்னோடு அதிகமாகப் பேசாத அப்பா, மற்றவரோடு அதிகம் பேசும்போது எனக்கு இருக்கும். இருந்தாலும் அப்பாவுடனான என் உறவு, எனக்குள் மிகவும் நெருக்கமானது. எனது முன்னேற்றத்தில் அவரது உழைப்பும், பங்களிப்பும் அளப்பரியது.
திடீரென்று வீட்டில் செலவுகள் வரும்போது, அப்பா சற்று டென்ஷனாகி விடுவார். அப்படியான நேரங்களில் ஒரு முறைக்கு, இருமுறை யோசனை செய்துதான் செலவழிப்பார். பின் அந்தச் செலவை மனதில் வைத்துக் கொண்டு வேறு ஏதாவது சிறு காரணத்திற்காக அம்மாவைச் சிடுசிடுப்பார். எனக்கு
எரிச்சலாக
mh II or ub pola ubuh 2004
அப்பாவிடம் பிடிக்காத குணமே இதுதான். செலவுகளே இல்லாது காரியங்களை முடிக்க நினைக்கும் அப்பாவை நினைத்தால் எனக்கு ஆத்திரம் வரும்.
வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மடக்கி, மேசைமேல் வைத்துவிட்டு, அப்பாவைப் பார்த்தேன். யோசனை யோடே வீட்டினுள் நுழைந்தவர் அப்படியே கதிரையில் அமர்ந்தார். இறுகிய அவரது முகம் சற்று வியர்த்திருந்தது.
மகே அவர் எப்போதும் என்னை அப்படித்தான் அழைப்பார். நான் “ஏன்’ என்பதாய் அப்பாவைப் பார்த்தேன்.
“பாட்டி தவறிப் போய்ட்டாங்களாம்.” மனம் திக்கென்றது. இருந்தாலும், பாட்டியின் இறப்பு, நாம் அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஏனெனில் கடநத
5

Page 5
ஆறு மாதமாக பாட்டி சித்தப்பா வீட்டில் படுத்த படுக்கையாக நோய்வாய்ப் பட்டிருந்தார்.
இந்நேரத்தில் அம்மாவும் வீட்டி லில்லை. அக்காவைப் பார்ப்பதற்காக வவுனியா சென்றிருக்கிறாள். வீட்டில் நானும் அப்பாவும் மட்டும்தான். இந்தத் துக்கச் செய்தியை அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இறுதியாய், நான் பாட்டியைப் பார்த்து ஒரு வாரம் இருக்கும். நானும், அப்பாவும், அம்மாவும், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் தான் பாட்டியைப் பார்ப்பதற்காகச் சித்தப்பாவின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அன்று போலவே, அப்பாவின் சொந்தங்கள் பலர் அங்கு கூடியிருந்தார்கள். நாம் உள் நுழையும் போதே தாச சித்தப்பா, அப்பாவின் பிடித்துக்கொண்டார். அப்பாவின் சகோதரங்களில் அவர் மட்டுமே அப்பாவோடு நெருங்கிய பாசம் வைத்திருந்தவர்.
அப்பாவின் குடும்பம் மிகப் பெரியது. ஐந்து பெண்களும், ஆறு ஆண்களுமாக மொத்தம் பதினொரு பேர். ஆண்களில் மூத்தவர் அப்பா. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை.
எனக்கு விபரம் தெரிந்த காலத்தி லிருந்து அப்பாவின் உறவுக்காரர்கள் ஒருவருக் கொருவர் முரணாகவே இருந்தார்கள். வெளிப்படையாய் பேசிக்
எம்மைப்
கைகளைப்
கொண்டாலும், ஏனோ? மனதுக்குள் பகையோடு உறவாடினார்கள். குறிப்பாக அப்பாவுடன் அவ்வளவாக, அவர்கள் உறவு வைத்துக் கொள்வதில்லை. அவர்களை விட அப்பாதான் ஒதுங்கிக் கொண்டார் என்று எனக்குத் தோன்றுகின்றது.
உடனடியாக
அப்பா தன் இளமைக் காலத்தில் தன் சகோதர, வளவோ உழைத்திருக்கிறார் என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பாட்டாவின்
சகோதரிகளுக்காக எவ்
மறைவின் பின், பாட்டி அப்பாவை குடும்பத்துக்காக உழைக்கும் செக்கு மாடாக பயன்படுத்தினார் என அம்மா அடிக்கடி கூறுவார். அப்பா, அம்மாவைத் திருமணம் முடித்ததைக் கூட பாட்டி தடுக்கப் பார்த்தாளாம்.
அப்பா குடித்திருந்த பல இரவுகளில் பாட்டி, தனக்குச் செய்த கொடுமைகளை சொல்லிச் சொல்லி பாட்டியைத் திட்டிக் கொண்டிருப்பார். என்னவோ பாட்டி அதிக நாட்கள் எங்கள் வீட்டில் இருப்பதில்லை.
பாட்டிக்கு மாதாமாதம் பாட்டாவின் பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அந்த தைரியத்தில் அவர், மாறி மாறி ஒவ்வொரு பிள்ளை வீட்டிலும் தங்குவார். இதனாலேயே அப்பா, பாட்டியைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டதில்லை. அந்தப் பென்ஷன் அப்பாதான் முன்னின்று அனைத்துக் காரியாலயங்களுக்கும் அலைந்து, பாட்டிக்கு எடுத்துக் கொடுத்ததாக அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். அப்பா பாட்டியின் இந்தப் பணத்திற்காகத்தான் தன் மற்றைய சகோதரங்கள் தம் வீடுகளில் பாட்டியை
அதனால்தான்
பணத்தைக்கூட
சொல்வார்.
வைத்துக் கொண்டிருக்கிறார்களென்று. பாட்டியின் வங்கிக் கணக்கில் கணிசமான தொகைப் பணமிருப்பதாகவும் அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவரின் சில நடவடிக்கைகளில் பாட்டியின் பென்ஷன் பணத்தில் ஒரு பங்கு தனக்குக் கிடைக்காத கோபம்
ஞானம் - நவெம்பர் 2004

இருப்பதாக எனக்குச் சந்தேகமா யிருந்தாலும், அவர் எப்போதும் பாட்டி கயைத் தன் வீட்டில் வைத்துப் பார்க்க வேண்டு மென்ற அக்கறை கொண்ட தில்லை. ஆனால் பாட்டி மற்றவர்கள் பீட்டில் இருந்தால், அது பிடிக்காத மாதிரி, அவர்களை அடிக்கடி குறைகூறிக் கொண்டேயிருப்பார்.
நினைவு தெரிந்த காலத்திலிருந்தே பாட்டி தன் பிள்ளைகள் எவருடைய வீட்டிலும் ஐந்தாறு மாதத்திற்கு மேல், நிரந்தரமாகத் தங்கியதில்லை. எவருடனாவது ஏதோ ஒரு காரணத்திற்காக, ஒரு சண்டையைப் பிடித்துக் கொண்டு வெளியேறி விடுவார். அவருடைய இந்தத் தைரியத்திற்கு முக்கிய காரணம் அவருக்குக் கிடைக்கும்
எனக்கு
பென்ஷன் பணம்தான்.
இப்படித்தான் ஒருமுறை பாட்டி, அப்பாவின் இரண்டாவது தங்கை கமலா மாமியின் வீட்டிலிருந்தபோது, அங்கு வீட்டாருடன் சண்டை பிடித்துக் கொண்டு நேரடியாக டவுனில் இருக்கும் ஒரு சொகுசான வயோதிபர் இல்லத் திற்குச் சென்று தங்கி விட்டார். எத்தனையோ பேர் எவ்வளவு வற்புறுத் தியும் அவர் அங்கிருந்து வரச் சம்மதிக்க வில்லை. ان ஒரு வருடம்போல் அங்கிருந்த பாட்டிக்கு திடீரென்று உடல்நலம் குன்றத் தொடங்கியது. அதன்பின்தான் அப்பாவின் கடைசித் தம்பியான ராஜு சித்தப்பா அழைத்துச் சென்று அவர் வீட்டில் தங்க வைத்துக் கொண்டார்.
அன்றிலிருந்து, இன்றுவரை பாட்டியின் இறுதி வாசஸ்தலமாக ராஜு சித்தப்பாவின் வீடு அமைந்து விட்டது.
gebrf mos b • - p Gloutb Uit 2U04
ராஜூ சித்தப்பாவுக்கும், அப்பாவுக்கு மிடையிலான உறவு அவ்வளவு சுமுகமாய் இருந்ததில்லை.
ராஜூ சித்தப்பா ஒரு சிங்கள இனப் பெண்ணைத் தான் திருமணம் முடித்தி ருந்தார். அதனால் அவருடைய அன்றாட வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் தமிழ் கலாசாரத்திலிருந்து விடுபட்டு தன் மனைவியின் வழியில் சிங்கள கலாசாரத்தையுடையனவாகவே இருந்தன. அப்பா அவருடன் அதிகளவு தொடர்பு வைத்துக் கொள்ளாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ராஜு சித்தப்பா மாத்திரமல்ல, அப்பாவின் சகோதரங்களில் அரைவாசிப் பேர் சிங்கள இனத்தில் கலப்புத்திருமணம் தான் முடித்திருந்தார்கள். அப்படி மணமுடித்த அனைவருமே சொல்லி
வைத்தாற்போல், சிங்களப் பழக்க வழக்கங்களிலேயே வாழ்க்கையை நடத்தினார்கள்.
இந்தக் கலப்புத் திருமணங்கள் கூட, ஒரு சில நேரம் அப்பாவை அவர் சகோதரர்களிடமிருந்து ஒதுங்கியிருப் பதற்குரிய ஒரு காரணமாக இருக்கலா மென தோன்றுகிறது. ஏனெனில் அப்பா தமிழ் கலாசாரங்களிலும், இந்து சாஸ்திரங்களிலும் நம்பிக்கையும், அதீத பற்றும் கொண்டிருப்பவர்.
O
முற்றத்தில் தொங்கவிடப்பட்டிருந்த வெள்ளைக்கொடி மரணவீட்டிற்கான பறை சாற்றியது. இறுகிய முகத்துடன் மரண வீட்டை நோக்கி நடந்த அப்பாவைப் பின்
அடையாளத்தை
தொடர்ந்தேன்.

Page 6
முற்றம் துக்கம் விசாரிக்க வந்தவர் களால் நிறைந்து காணப்பட்டது. சிலர்
கதிரைகளில் அமர்ந்தும், சிலர் குழுக்களாக நின்று கொண்டும் தமக்குள்ளே கதைத்துக்கொண் டிருந்தார்கள்.
நாம், முற்றத்தை அடைந்தபோது அநேகமானோரது பார்வை அப்பாவைத் தான் பார்த்தது. சிலர் ஏதோ குசுகுசு வென்று பேசிக் கொண்டார்கள். குடும்பத்தின் மூத்த மகன் என்ற உரிமை, அப்பாவை அங்கு எல்லோருடைய பார்வைக்கும் உட்பட வைத்தது. சிலர் சிநேகப் புன்னகை உதிர்த்தார்கள். அப்பாவுடன் நெருங்கிய சிலர் முன்வந்து அவரது கரம் பற்றி துக்கம் விசாரித்தார்கள்.
அப்படி நெருங்கியவர்களில் அப்பாவுடன் மிகவும் நெருக்கமானவர், அப்பாவின் நான்காவது தங்கை மணி மாமியின் கணவர் நடவு மாமா. முற்றத்து மூலையில் யாருடனோ பேசிக் கொண் டிருந்தவர் அப்பாவைக் மாத்திரத்திலேயே, உடனடியாக முன்னே வந்து அப்பாவின் கரங்களைப் பற்றிக் அவரது கண்கள்
சோகமான
கண்ட
கொண்டார். கலங்கியிருந்தன.
"லோகா. அம்மா போயிட்டாங்கடா” விம்மலுக்கிடையே நடவு மாமா கூறிய வார்த்தைகள் அப்பாவின் செவிகளுக்கு எட்டவில்லைபோலும். அவர் எதுவுமே பேசாது இறுகிய முகத்துடன் வீட்டினுள்
நுழைந்தார். நானும் வாலாகப் பின் தொடர்ந்தேன்.
முன்ஹாலின் வலப்பக்கமாகப்
பாட்டியின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. சவத்தின் அருகே அமர்ந்திருந்த
8
அப்பாவின் கடைசித் தங்கையான, கல்யாணி மாமி, அப்பாவைக் கண்டவுடன் ஓடிவந்து அவரைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினார். கல்யாணி மாமியைப் பின்தொடர்ந்து அப்பாவின் ஏனைய சகோதரிகளும் ஒருவர் பின் ஒருவராக குழுமத் தொடங்கினார்கள்.
அவர்களை அணைத்த பாட்டியின் நானும்
அப்பாவைக்
அப்பா, படியும், தவிர்த்தபடியும் சவத்தினருகே சென்றார். மெதுவாகப் பின் தொடர்ந்தேன்.
பாட்டியின் உயிரற்ற உடல் வேலைப் பாடு போடப்பட்ட ஒரு சவப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தது. அணிவித்து இறுதிப் பயணத்திற்காக பாட்டி ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தார்.
பாட்டியின் முகத்தைப் பார்த்தேன். உயிரோடு இருந்ததைவிட, இன்று அவரின் முகம் மிகவும் சாந்தமாய் இருப்பதாகப்படுகிறது. அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். சோகமே உருவாக இறுகிய முகத்துடன் நின்று கொண் டிருந்தார். அழுவார் என எதிர்பார்த்தேன். ஏனெனில் இதற்கு முன் அப்பா அழுது நான் பார்த்ததேயில்லை. ஆனால் இன்றும் அப்பா அழவில்லை. அவரது முகத்தில், மனதிலிருந்த பாரிய துயரம் முழுமையாய் வெளிப்பட்டுக் கொண் டிருப்பதை, அவரது இறுகிய முகம் உணர்த்தியது.
ஒரு வகையில் அப்பாவைப் பற்றிச் சிந்திக்கையில், பாட்டா இறந்தபின், குடும்பப்பாரத்தை சுமக்கப் பாட்டிக்கு அப்பா பெரும் உறுதுணையாக இருந் திருக்கிறார். சகோதர சகோதரிகளைப் படிப்பித்து, திருமணம் முடித்துக்
மலர்மாலை
ஞானம் - நவெம்பர் 2004

கொடுத்து, பாட்டிக்குப் பாட்டாவின் டென்ஷன் பணத்தையெடுத்துக் கொடுத்து, என்று அப்பா தன் கடமை கமலகாச் சரியாகத்தான் செய்திருக் கிறாரென்று தோன்றுகிறது.
பாட்டியின் இறுதிக் காலத்தில் பார்க்காவிடினும் அவரது ஆரம்ப கால சுமைகளில், அப்பா அளவுக்கதிகமாகவே பங்கேற்றியிருப்பது, அவரது சகோதரங் களின் நிலைமையைப் பார்க்கப் புரிகிறது. அப்பாவின் குடும்பத்தில், அவர் மட்டும்தான் ஐந்தாம் வகுப்பு மட்டும் படித்தவர். மற்ற ஆண்சகோதரர்கள் அனைவருமே ஓரளவு நன்கு படித்திருக் கிறார்கள். அந்தப் படிப்பின் காரணமாக அவர்கள் நல்ல அரசாங்க உத்தியோகத்தர்களாகக் கூட இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பாட்டியுடன் உறுதுணையாக இருந்த அப்பாதான் என்று ஒருமுறை அம்மா கூறக் கேட்டிருக்கிறேன்.
பாட்டியின் சவம் அமைதியாகக் கிடக்கிறது. அதைச் சுற்றி உறவினப் பெண்கள் சோகம் மட்டுமே வெளிப்பட
வேலைகளிலும்,
அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நான்
மெளனமாக மார்புக்குக் குறுக்கே கைகளை கட்டியவாறு பாட்டிக்கு மெளன அஞ்சலி செலுத்திக்கொண்டு சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். அப்போது தான் ஒன்றைக் கவனித்தேன்.
பாட்டியின் சவம் வைத்திருந்த விதம், அதை அலங்கரித்திருந்த ஒழுங்கு அனைத்துமே சிங்கள முறைப்படிதான் செய்யப்பட்டிருந்தன. என் மனம் திக்கென்றது. தமிழச்சியாய் பிறந்து வளர்ந்து ஒருத்தி எப்படி சிங்களத்தியாய் இறுதிப் பயணம் செல்வாள். இதை யார்
ருமணம் - நவெம்பர் 2004 "
அனுமதித்தாலும் அப்பா அனுமதிக்க மாட்டாரே! நான் அப்பாவைப் பார்த்தேன். அவர் முன்பு நின்ற இடத்தில் இருக்க வில்லை. என் கண்கள் அவசரமாய் அவரைத் தேடின.
வந்திருந்தவர்களில் பாதிக்கு மேல் சிங்களவர்கள். அனைவருமே எமக்குச் சொந்தமாகத்தான் இருக்க வேண்டும். இன ஐக்கியத்திற்கு எடுத்துக் காட்டான குடும்பம். ஆனால் ஐக்கியம்தான் இல்லை. அந்தத் துக்க நிலையிலும் எனக்குச் சிரிப்பு வந்தது.
அப்பாவைத் தேடினேன். அவர் வெளியே முற்றத்தில் ஒரமாக, நடவு மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு இருந்தவர்களில் யாரும் என்னுடன் அதிகம் பேசவில்லை. சிறு புன்னகை தான். பலருக்கு என்னுடனான பரிச்சய மின்மைதான் காரணம்.
தாச சித்தப்பாவும் கல்யாணி மாமியும் மாத்திரம் அம்மாவைப் பற்றி விசாரித் தார்கள். அம்மாவுக்கு விபரம் கூறி போன் பண்ணியிருப்பதாக கூறினேன். இந் நேரம் அம்மா விபரமறிந்து இடையில் வந்துகொண்டிருக்கலாம்.
நான் மெதுவாய் வெளியே சென்று அப்பாவின் பின்னால் நின்று கொண் டேன். அப்பா நடவு மாமாவுடன் ஏதோ முக்கியமான விடயம் பற்றி பேசிக் கொண்டிருப்பது புலப்பட்டது. அவர்களிரு வருடைய பேச்சினிடையிடையே கொள்ளி வைப்பதைப் பற்றி ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, என் மனதில் ஒரு விடயம் ஞாபகம் வந்தது. குடும்பத்தில் மூத்த ஆண்மகன் அப்பா. எங்களது குடும்ப

Page 7
வழக்கப்படி தாய்க்கு மூத்தமகன் கொள்ளி வைப்பது வழக்கம். அப்படியானால் அப்பாதான் பாட்டிக்கு கொள்ளி வைக்க வேண்டும். ஆனால் இங்கு சிங்கள வழக்கங்கள் அல்லவா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவர்களிருவருடைய வாக்கு வாதத் தினிடையிடையே அப்பாவின் குரல் ஓங்கிக் குறைந்தது. அது அங்கிருந்த சிலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்நேரங்களில் அப்பாவின் முகம் கடுமைக்கு மாறிச் சாந்தமாகியது. நடவு
மாமா ஏதேதோ வார்த்தைகளால் அப்பாவைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரோடு தாச
சித்தப்பாவும் சேர்ந்து கொண்டார்.
அன்று மாலை மூன்று மணிக்கு பாட்டியின் இறுதிக் காரியங்கள் செய்ய ஏற்பாடாகியிருப்பதாக நடவு மாமா கூறினார்.
அப்பாவின் முகம் முன்னையதைவிட இப்போது இறுகிப் போய் கண்கள் சிவந்து கோபம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. மனம் ஒரு வகையான கலக்கத்திற்கு உள்ளானது. அப்பாவுக்கு கொள்ளி வைக்க விடுவார்களா? ஏனெனில் சிங்கள வழக்கப்படி மூத்த மருமகன் தான் கொள்ளி வைப்பது மரபு
O
பாட்டியின் சவ ஊர்வலம் மிகவும் அமைதியாகப் பெரும் சனத்தோடு சென்று முடிந்தது. சவத்தை மின் சாரத்தின் மூலம் எரிப்பதாக ஏற்பாடாகி யிருந்தது. ஊர்வலத்தின் இறுதி நேரத்தில் அம்மா எம்மோடு கலந்து
O
கொண்டார். ஆனால் அம்மாவால் பாட்டியின் முகத்தைக் கடைசியாய் ஒரு தடவை பார்க்க முடியாமல் போயிற்று. பாட்டியின் மூத்த மருமகள் அம்மா முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு சிறிது நேரம் கண்ணிர் விட்டாள்.
நான் எதிர்பார்த்ததைப் போலவே அப்பாவுக்குக் கொள்ளி வைக்கக் கிடைக்க வில்லை. இந்த நவீன யுகத்தில் இப்போ பதிலாக "ஸ்விட்ச்"ஐ தான் தட்ட வேண்டும்.
தெல்லாம் கொள்ளி இல்லை.
அப்பா அதை எதிர்பார்த்ததைப் போல ஸ்விட்சின் அருகே சற்றுத் தள்ளி நின்று
கொண்டிருந்தார். அந்தத் தருணத் திற்காக அவரைப் போலவே நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
அத்தருணமும் வந்தது. ஆனால் அப்பாவுக்குப் பதிலாக அப்பாவின் மூத்த சகோதரி வசந்த மாமியின் கணவர் பிரேமே மாமா "ஸ்விட்ச்’ஐத் தட்டி கொள்ளி வைத்தார்.
அப்பா, ஆடாது அசையாது கல்லு மாதிரி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது ன்னக்கு அதிசயமாக இருந்தது. அவரின் அந்த அமைதி நான் எதிர்பாராதது. ஏதாவது செய்து கலாட்டா பண்ணிப் பிரச்சனை ஏற்படுத்துவாரென அம்மா கூட இறுதி நேரத்தில் அப்பாவினருகே நிற்கும்படி எச்சரிக்கை பண்ணியிருந்தார்.
ஆனால், அப்பாவின் அந்த அமைதி, என்னைப் போலவே அம்மாவையும்
நினைத்தேன்.
ஆச்சரியப்பட வைத்தது.
O
ஞானம் - நவெம்பர் 2004

பாட்டியின் அனைத்து இறுதிக் காரியங்களும் முடிந்து நாம் மூவரும் மயானத்திலிருந்து எம் வீட்டுக்கு வந்து சேரும்போது, இரவு ஏழு மணியைத் தாண்டி இருந்தது. இடைநடுவிலே அப்பா ஒரு வார்த்தைகூட பேசவில்லை. வளவள வென்று பேசும் அவரது அந்த அமைதி, என் மனதை நெருடியது.
மூவரும் கொல்லையில் இருந்த
குளித்து, நுழைந்தோம். அம்மா இரவு உணவு தயார் செய்வதற்காக சமையலறைப் பக்கம்
கிணற்றில் வீட்டினுள்
சென்றாள். நான் ஏதாவது படிக்கலாம் என்று என் புத்தக மேசையினருகே அமர்ந்து கொண்டேன். அப்பா அதே இறுகிய முகத்துடன் முன் ஹோலில் அமர்ந்து யோசனை செய்து கொண் டிருந்தார்.
ஏதோ ஒரு நேர விரயத்திற்காக புத்தகமொன்றை புரட்டிக் கொண் டிருந்தேன். சிறிது நேரத்தில் சாமியறை யினுள் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டது. முன்ஹாலில் அப்பாவைப் பார்த்தேன். அவர் அமர்ந்திருந்த கதிரை காலியாக விருந்தது.
புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு, மெதுவாய் சாமியறையினுள் நுழைந்தேன். அப்பா சாமிப் படங்களின் முன்நின்று கொண் டிருந்தார். அவரின் உடல் குலுங்கியது. அப்பா அழுகிறாரா? ஆச்சரியமாய் அருகே சென்றேன். அவருக்கு என் வருகை புரியவில்லை. கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணிர் வடிந்து கொண் டிருந்தது. வாழ்க்கையில் முதல் தடவையாய் அப்பா அழுவதைப் பார்க்கிறேன்.
அந்தக் கண்ணிரில், ஒரு மகன் தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமையைத் தவறிய வருத்தமும், குற்ற உணர்வும் வெகுவாய் இருப்பதை உணரக் கூடியதாகவிருந்தது.
அப்பாவின் கண்ணிரைக் காணச் சகிக்காத நான் பார்வையை சாமிப் படத்தின் பக்கம் திருப்பினேன். அப்படியே படத்தின் வலது மூலைப்பக்கம் என் பார்வை நகர்ந்தது. அங்கு என்ன ஆச்சரியம்! இதுவரை நான் கண்டிராத பாட்டியின் ஒரு புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை நன்றாக உற்றுப் பார்த்தேன். அந்தப் புகைப்படத்திலிருந்த பாட்டியின் மெல்லிய புன்னகை என்னைப் பயமுறுத்தியது.
3-B,
வாசகர் கவனத்திற்கு .
தி. ஞானசேகரன்
46°ச ஒழுங்கை, கொழும்பு - 06
(கண்டியில் இயங்கும் தலைமை அலுவலக முகவரியில் மாற்றம் இல்லை)
ஞானம் - நவெம்பர் 2004
O
ஞானத்தின் புதிய தொடர்பு முகவரி:
11

Page 8
எழுத முடியாத உனது முழுமை
த. ஜெயசீலன் எப்படித்தரின் உன்னை எழுதுவது கவிதையிலே என்ற வியப்பில் இருந்து. ஓர் நொடிப் பொறியில்’ உச்ைகுவமை ஒன்றைச் சொல்லி ஒருகவிதை எனைமறந் தெழுதிவிட்டு என்பாரம் இறக்கி வைத்தேன் கவிதை திறமென்றும், உவமை சிறப்பென்றும் நண்பர்கள் சொன்னார்கள், மீண்டும் படிக்கையிற்தான் . உனக்கும் என் கவிதைக்கும் Yn y ፻፯/፩ ஓர் பெரிய இடைவெளியே 多 இருப்பதுவும்: N 22 என்பாரம் மீண்டும் இதயத்தில் ஏறியதும் விளங்கிற்று எத்தனை கவிதைகள் எழுதிக் கிழித்தாலும் அதற்கும் - உனக்கும்’ உள்ள இடைவெளியோ பெரிதாய் . குறைய மறுக்கிறது. உைைவியக்கும் என்பாரம் எனை நசித்தே கொல்கிறது.
ஞானம் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான)
தொகுப்பு : **கனவின் கைப்பிடிக்குள்." பரிசு பெறுபவர் : தாட்சாயணி 羲 $25, பெரிய g/Taffy வீதி, 囊》′ did 76D67 భీ?్మ 2უჯუ: ν ܥܳܒ݂ܸܪ அமரர் புலோலியூர் க. சதாசிவம் நினைவுப் பரிசு ரூபா 5000.00 வழங்கப்படுவதோடுதொகுப்பு நூலாகவும் வெளியிடப்படும்.
※ eSeSeeSeSS S ek SAMASTTO O MkLDL mDtD ulMkDkTLLML LTTTTTDTDTTT MMLMMMMMMD DTL TLSLkLDiDkTS MMLS XX“.,xx'XXX;-X
.« ، ج+'.بچډN***ھه»x*RM?*
12 ஞானம் - நவெம்பர் 2004
 
 
 
 

நேர்காணல்
பேராசிரியர்
கா. சிவத்தம்பி
சந்திப்பு : தி. ஞானசேகரன்
Y.
(8. உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர்.
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ் நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்கிலங் கைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில்
أص .பேராசிரியராகப் பணிபுரிந்தவர் ܢܠ
தி. ஞா. : இலக்கியகாரன் என்ற நிலையில் பொது
வாழ்க்கையில் நீங்கள் செய்த பங்களிப்பு எந்த வகையில் உங்களைப் பாதித்தது என்று கூறுங்கள்?
கா.சி. எனக்கு ஏற்கனவே நாடகத்துறையில், இலக்கியத்துறையில் இருந்த ஆர்வம்,
விமர்சனத்துறையில் இருந்த ஈடுபாடு ஆகியன இவற்றால் மேலும் ஆழப்படுகின்றன. நான் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு பாத்திரமாகப் பார்க்கின்றேன். அல்லது பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அவரவர்க்குரிய மனித நிலையில் நின்று பார்க்கிறேன். அவன் இங்கே ஒன்று சொல்கிறான், அங்கே ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது.
ராணம் - நவெம்பர் 2004 13

Page 9
அவனை ப் (: ಭಜ್ಜಿ ം பொறுத்த இந்த நாட்டிலிருக்கும் தமிழர்களுக்கு குழும வரை யில் அடிப்படையில் அவர்களது உரிமைகள் அரசியல்: அது சரி ரீதியாக ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும்:  ேப ா ல | எவ்வாறு சிங்கள மக்களுடைய குழும உரிமைகள்: இருக்கிறது. மொழி மூலம் அவர்களது மதத்திற்குக் ஏன் அவன் கொடுக்கப்பட்ட இடங்கள் மூலமும் ஆட்சி அ ப் ப டி ப், யாப்பில் இடம் பெற்றுள்ளதோ அதேபோல, பார்க்கிறான்? ஆட்சி யாப்பில் தமிழர்களுடைய முஸ்லீம்: இப்படி அவன் களுடைய குழும உரிமைகள் ஊர்ஜிதப்படுத்தப் சொல் கிறI படவேண்டும் என்பதை உணர்ந்தேன். இப்படி: போது, அவன் நான் கூறுவது எந்த வகையிலும் மார்க்சிசத்துக்கு எ ன க் கு எதிரானது அல்ல. இது : ஒரு பண்பாட்டு: எ திரா கச் །མ༧༠༧)t-tu"༠rt பிரச்சனை. 。
என்பதற்காக அவனுடைய திறமையை இல்லை என்று சொல்லக் கூடாது; ஏசக் கூடாது.
அவன் தன்னுடைய திறமையினால் உண்மையை மாற்றுகிறான். அவனுடைய திறமைக்கு நான் முகம் கொடுக்கவேண்டியவனாகின்றேன். இந்த மாதிரியான ஆழமான முறையிலே நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டியதேவை ஏற்படுகிறது. எல்லாமே வெறும் புத்தகங்கள் அல்ல, படைப்புக்கள் அல்ல. அவற்றிற்குப் பின்னால் மனிதன் இருக்கிறான். அவனுடைய சமூக அனுபவம் இருக்கிறது. அந்தச் சமூக அனுபவம் எப்படி ஏற்படுகிறது என்று பார்க்கவேண்டும். எல்லாவற்றிற்கும் வாய்ப்பாடுகளை வைத்துக் கொண்டு பார்க்க இயலாது. உண்மையில் பொது விதிகளைத்தான் வைத்துக் கொண்டு அது எப்படி இங்கே வேலை செய்கிறது, அங்கே வேலை செய்யவில்லை என்று பார்க்க வேண்டுமே தவிர வாய்பாடுகளை வைத்துக் கொண்டு பார்க்கக்கூடாது. இது எனக்கு மாத்திரமல்ல. இந்தத் துறையிலே ஈடுபட்ட பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. மார்க்சிய எழுத்தாளர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
பண்பாட்டின் முக்கியத்துவத்தையும் நான் இந்தக் காலகட்டத்திலே கூறவேண்டும். CULTURALSTUDIES என்ற துறை வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது. ஆனால் எங்களுடைய பண்பாட்டில் இந்தத் துன்பங்கள் எல்லாம் உள்வாங்கப்படுகிறது. நாங்கள் எவ்வாறு அதனைப் பார்க்கிறோம் என்கிற விஷயம் மிக முக்கியமானது. நான் என்னுடைய பண்பாட்டை அனுதாபத்துடன் பார்க்க முடியவில்லை என்றால், நான் மனிதர் களுடைய சஞ்சலங்களை, அவலங்களைப் புரிந்து கொள்ளமுடியாது. நான் அவர்களுடைய சஞ்சலங்களைப் புரிந்து கொள்வதனால் என்னுடைய பண்பாட்டினுடைய உந்துதல்களைப் பற்றிய ஒரு தெளிவு எனக்கு வேண்டும். அவர்களுடைய அடிப்படை வாழ்க்கைப் பற்றிய தெளிவு எனக்கு வேண்டும்.
14 ஞானம் - நவெம்பர் 2004
 
 
 
 
 
 
 
 

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தில் நான் வேலை செய்தபோது ஒரு தடவை ஐம்பதினாயிரம் ரூபாயைத் தொலைத்து விட்டேன். அந்தத் தாக்கத்திலிருந்து நான் விடுபட முடியவில்லை. அங்கு என்னை அதிகமாக விமர்சிக்கின்றவர்தான் சொன்னார், "பேராசிரியரை நீங்கள் இந்த இக்கட்டிலிருந்து நீக்கவேண்டும்” என்று. இதிலிருந்து தான் மனிதர் யார் என்று தெரியவருகிறது. இதெல்லாம் மறக்க முடியாத உதாரணங்கள். அதேவேளையில் பிறிகேடியர் காலோன் சொன்னார் "நீங்கள் இந்த நிறுவனத்தின் காரை உங்களது பாவனைக்கு வைத்துக் கொள்வதற்காகத்தான் கந்தசாமியை இல்லாமற் செய்து விட்டீர்கள்” என்று. நான் ஏங்கிப் போனேன். நான் நம்புகிறேன் அவர் என்னைச் சீண்டுவதற்காகக் சொல்லியிருப்பார். இப்படிப் பல அனுபவங்கள். சில நண்பர் சொன்னார்கள் உனது வாழ்க்கையை இதற்குள் வீணடிக்கிறாய் என்று. இப்படி நடக்கும்போது நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்று காலச்சுவடு சஞ்சிகையைப் பார்த்தபோது தமிழகத்திலே இருந்த வளர்ச்சிகள் எல்லாம் தெரிந்தன. நான் 84 முதல் 90 வரை அந்தத் தொடர்புகளே இல்லாமல் இருந்து விட்டேன் என்பது அப்போதுதான் தெரியவந்தது.
பொது வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களில் முக்கியமானவை, அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திலே வேலை செய்தபோது ஏற்பட்டவை. 95இல் தேசிய கல்வி நிறுவகத்தில் ஒன்பது மாதங்கள் ஒர் ஆலோசகராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது பி. பி. சி. யில் சிங்கள சேவையில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாழ்ப் பாணத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டார்கள். நான் நடப்பவற்றைக் கூறினேன். அப்போது அவர்கள் இதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். நான் சொன்னேன் “மே யுத்தே நவத்தண்டோன” இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று சொன்னேன். இது ஒரு வெள்ளிக்கிழமை சொல்லப்பட்டது. திங்கள் காலை நான் தேசிய கல்வி நிறுவகத்துக்குச் சென்றேன். அன்றுதான் பல்கலைக்கழக உபவேந்தர் துரைராஜா நீாவேலியில் ஒரு கட்டிடம் அமைத்தது கண்டு பிடிக்கப்பட்டது என்று லங்காதீபா பத்திரிகையிலே செய்தி வெளிவந்திருந்தது. அங்கு சென்ற சிறிதுநேரத்தில் ஒரு செய்தியை டொக்டர் உடகம நண்பர் சோமசுந்தரத்துக்குச் சொன்னார். “அங்குள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் சொல்கிறார்கள், இங்கும் ஒரு யாழ்ப்பாணத்துப் பேராசிரியர் வருகிறார். அவர் சென்ற வெள்ளிக்கிழமை இந்த யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர். அப்படியானவர் இங்கு வருவது எங்களுக்கு விருப்பமில்லை. இந்தக் கட்டிடங்களுக்கும் ஆபத்து' என்று. இப்படிச் சொன்னவுடன் நான் டொக்டரிடம் சென்று, எனக்கு நடக்க முடியாது நான் போவதற்கு ஒரு வாகனம் ஒழுங்குசெய்து தாருங்கள் என்று கேட்டேன். அரைமணி நேரம் கழித்து ஒரு வான் வந்தது. அந்த ாைன் சாரதி ஒரு வயரைப் பிடுங்கிவிட்டு ஒரு முக்கியமான இடத்தில் நின்று வானை ஸ்ராட் செய்வது போலப் பாசாங்கு செய்தான். அதனை நான் கவனித்துவிட்டு அந்த Iர் கழன்று இருக்கிறது என்று கூறினேன். அவன் உடனே இறங்கிப் பக்கத்தில்
poh artib - pvela tibur 2004 15

Page 10
இருந்த கடைக்குள் சென்றான். அந்தக் கடைக்குள் இருந்தவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நல்லகாலம் ஒரு ஓட்டோ வந்தது. நான் உடனே அதில் ஏறி, நுகேகொடைக்கு வந்து, பயத்தில் வேறு ஒரு ஒட்டோவுக்கு மாறி வீடு வந்து சேர்ந்தேன். அதன் பிறகு நான் ஒரு மாதம் தேசிய கல்வி நிறுவனத்துக்குப் போகவேயில்லை. இந்த அனுபவம் என்னைத் தாக்கிய மிகப்பெரிய அனுபவங்களில் ஒன்று. அதிலிருந்து விடுபடுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்தக் கணம் எனக்கு, நான் 82இலிருந்து ஈடுபட்டுவந்த வேலைகளினுடைய முத்தாய்ப்புக் கணம்போல இருந்தது. அன்றிலிருந்து நான், இந்த நாட்டிலிருக்கும் தமிழர்களுக்கு குழும அடிப்படையில் அவர்களது உரிமைகள் அரசியல் ரீதியாக ஊர்ஜிதப்படுத்தப் படவேண்டும். எவ்வாறு சிங்கள மக்களுடைய குழும உரிமைகள் மொழி மூலம் அவர்களது மதத்திற்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் மூலமும் ஆட்சி யாப்பில் இடம் பெற்றுள்ளதோ அதேபோல, ஆட்சி யாப்பில் தமிழர்களுடைய முஸ்லிம்களுடைய குழும உரிமைகள் ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும் என்பதை உணர்ந்தேன். இப்படி நான் கூறுவது எந்த வகையிலும் மார்க்சிசத்துக்கு எதிரானது அல்ல. இது ஒரு பண்பாட்டு அடையாளப் பிரச்சனை. பொது வாழ்க்கை என்பது சாதாரண பல்கலைக்கழகப் பேராசிரியருக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அல்ல. எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்கள் என்னுடைய ஆளுமை வளர்ச்சிக்கு திசைமுகத்திற்கு நிட்சயமாக உதவி யுள்ளன. அதன் பிறகு நான் சற்று ஒதுங்கி எனது பல்கலைக்கழக விஷயங்களில் படிப்படியாக ஈடுபாடு கொண்டு வேலை செய்யத் தொடங்கினேன்.
இவற்றின் மூலம் நான் ஒன்றைக் கற்றுக் கொண்டேன். எந்த அளவுக்கு நாங்கள் கொடுக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நாங்கள் பெறுகிறோம். எனக்கு வாழ்க்கையில் கிடைப்பது நான் வாழ்க்கையில் கொடுப்பதற்கு சமமானது. அதற்குள் ஒரு விகிதாசாரம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். எந்த அளவுக்கு நான் மனம் வைத்துக் கொடுக்கிறேனோ அந்த அளவுக்குத்தான் எனக்குக் கிடைக்கும், இது என்னுடைய வாழ்க்கையினூடாக நான் படித்த உண்மையாகும். இப்படிப்பார்க்கும்போது எல்லாம் சேர்ந்துதான் மனிதன் உருவாகிறான். ஏதோ ஒருவகையில் எல்லாரும் எங்களைப் பாதிக்கிறார்கள். மார்க்ஸ் சொல்வார், மனிதனுடைய பிரக்ஞை என்பது அவனுடைய சமூக இருப்பினால் தீர்மானிக்கப்படுகிறது' என்று ஒட்டுமொத்தமாக எல்லாம் சேர்ந்துதான் நான். வாழ்க்கை என்பது இயங்கசைவு கொண்டது. அந்த இயங்கசைவினூடாக ஒரு விதி ஒன்று தொழிற்படும். சடப்பொருளாக இருப்பதுகூட சக்தியாக மாறும். அது ஒரு முக்கியமான தளம்.
நான் முன்பு நாடகம் பற்றிச் சொன்னபோது, இந்தியத் தொடர்புகள் பற்றிக் கூறவேண்டியது தவறிவிட்டது. அதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் எனக்கு தமிழ் நாடகம் சம்பந்தமான தொடர்புகள் உண்டு. பேராசிரியர் ராமானுஜம், ராமசாமி, தேசிய நாடகப் பள்ளியில் உள்ள ராஜேந்திரன், பாண்டிச்சேரியில் இருக்கும் குணசேகரன் போன்ற பலருடன் உத்தியோக ரீதியாக எனக்குப் பழக்கம்
16 ஞானம் - நவெம்பர் 2004

உண்டு ராம்நாசன் (இவற்றின் மூலம் நான் ஒன்றைக் கற்றுக் ஏ. எஸ். ராமன் கொண்டேன். எந்த அளவுக்கு நாங்கள் போன்ற வர்கள் |கொடுக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் எனக்குத் தெரிந்த நாங்கள் பெறுகிறோம். எனக்கு வாழ்க் வர்கள். பத்மா கையில் கிடைப்பது நான் வாழ்க்கையில் சுப்பிரமணியத்தினுடைய கொடுப்பதற்கு சமமானது. அதற்குள் ஒரு ஒரு "த"-? | விகிதாசாரம் இருக்கிறது என்று நான் சு ததும நடனமும நம்புகிறேன். பற்றிப் பேசுமாறு V, မ္ပိ என்னைக் கேட்டிருந்தார்கள். எங்களுடைய வளர்ச்சிகளை அவர்கள் நன்கு பார்க்கிறார்கள். அதனுடைய பல அம்சங்களை அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இதில் முக்கியம் என்னவென்றால், நாடகத்துறையைச் சேர்ந்த ஒருவருடைய பணிகள் இலங்கையில் அதிகம் தெரியாமல் இருக்கிறது. இளைய பத்மநாதன் என்கிற பத்தண்ணாவின் பணிதான் அது. தமிழகத்தில் அண்மைக்கால நாடக வளர்ச்சி பற்றி எழுதுகிறபோது, நாடக வளர்ச்சி பற்றிய கண்ணோட்டங்களை விரிவடையச் செய்ததில் பத்தண்ணாவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பேராசிரியர் அரசு அவரது மனைவி மங்கை ஆகியோரது பலகலை அரங்குக்கு பத்தண்ணா செய்த பங்களிப்பும் அதனால் அவர்கள் பெற்ற பலனும் மிகமுக்கியமானவை. தீனிப்போர் என்ற நாடகம் முக்கியமானது. இலங்கையில் ‘கந்தன்கருணை' என்ற நாடகத்தில் பத்தண்ணா சம்பந்தப்பட்டிருந்தார். அவர் நெல்லியடியைச் சேர்ந்தவர். நாடகத்துறையில், அவர் பற்றிய ஒரு நல்ல குறிப்பு இன்னும் இலங்கையில் சொல்லப்படவில்லை. அது கட்டாயம் சொல்லப்பட வேண்டும். எனக்கு ஒரு சந்தோஷம் என்னவென்றால், பத்தண்ணாவும் அரசுவும் சந்திப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன் என்று அரசு சொல்லிக் கொள்வார். அந்தவகையில் சந்தோஷம்.
வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்கள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது, இவையெல்லாம் ஏற்படுத்திய ஒட்டுமொத்தமான தாக்கம்தான் நான். ஏன் நான் மாறினேன் அல்லது ஏன் நான் மாறவில்லை என்றால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான் இதற்குக் காரணம். சில நண்பர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். சில நண்பர்கள் நான் முன்பு இருந்த நிலையிலிருந்து விடுபட்டதற்காகச் சிலாகித்துச் சொல்பவர்களும் இருப்பார்கள். நான் சொல்வது என்னவென்றால் மனிதனைப் புரிந்து கொள்ளப் 1ாருங்கள். அது இலக்கியக்காரனுக்கு, கலைஞனுக்கு அடிப்படையான தேவை. நான் மீண்டும் சொல்லுகிறேன், படைப்பாளியாகச் சொல்லுகிறேன், ஒரு சமூகப்பொது மனிதனாகச் சொல்லுகிறேன். நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவைக் கொடுக்கிறோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக் கொள்ளமுடியும்.
(நிறைவு பெறுகிறது)
prToDo tio -- Ab GolcmJ übuń, 2094" 17

Page 11
"நான்”கள் பலவிதம்
மண்ணெய்யின் வாசத்தை மனதுக்குள் தேக்கி ஈராக்கு நாட்டினைச் சீராக்கும் சாக்கிலே மக்களின் கண்களில் மண்துவும் - "நான்’
கருக் கட்டிக் கொண்டுவரும் சமாதாச்ை சூழ்நிலையை உருக்குலைக்க நினைக்கின்ற அதிகார -
அதிகார -
பிடிவாத - "நான்’
தலையிடாக் கொள்கையே தலையாய கொள்கையாம் தமுக்கடித்துக் கொண்டே இலட்சமாய்
G&nlquiniuஇரகசியத் தெட்சிணையாய்பேரினப் பிசுரிசுகளை 'உரு’ ஆடச் செய்யும் அயல் வீட்டு - "நான்’
நான் மட்டும் வாழ முடிந்தால் .
அனைவரையும் - அனைத்தையும் - அடக்கி, ஒடுக்கி அனுபவிக்க முடிந்தால் .
18
சிற்பி
ஆசையைக் காசால் போர்த்துபொங்கி எழுபவரை - எதிர்த்துக் கதைப்பவரை - அன்புடன் இழுத்து அந்தப் போர்வைக்குள் அணைத்துநல்லவனாய் -
நண்பனாய் -
நாட்டின் நலன்
கரிக்கும் தலைவnைய் நடிக்கும் - "நான்’
கருவில் இருந்தபோதே கற்பனைகள் செய்தவன் நான் குழந்தையாய்த் தவழ்ந்த போதே - குறு நடை நடந்த போதே - கொள்கைக்காய் வாழ்வதென்று குரலெழுப்பியவன் நான் சுயசரிதையாய்த்தொடங்கி-அதைப் புனைகதையாய் முடித்துப் பெருமிதங் கொள்ளும் பிரபல -"நான்’
உண்மைக்குத் திரைபோட்டு உலகுக்குக் கதை அளிக்கும்
இந்த"நான்’கள் ஒழிவதெப்போ? "நாங்கள்’’ மலர்வதெப்போ?
ஞானம் - ந்வ்ெம்பர் 2004

6 Jesiuo.6) 1JT.
சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
* ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம்பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி * சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை , உருவகக்கதை Creative essays, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தீ, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமைபெற்றன. * வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனைவிடை
தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். * 2000 பக்கங்களைக்கொண்ட 'வரலாற்றில் வாழ்தல்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட இவரது சுயசரிதையாகும். * அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் இவரது
கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
(2) தி.ஞா : கைலாசபதியினுடைய தலைமைத்துவத்திற்கு எதிர்வினையாகத்தான் நீங்கள் முற்போக்குச் சங்கத்திலிருந்து விலகினிர்களா அல்லது மு. தளைய சிங்கம் பதிவு செய்ததுபோல யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிபெற்ற கைலாசபதியின் தலைமைத்துவம் உங்களைக் கட்சியிலிருந்தும் முற்போக்கு இலக்கிய இயக்கத்திலிருந்தும் விலக்கியதா?
எஸ். பொ. உண்மையில் முதளையசிங்கம் அவசரக் குறிப்புகள்தான் எழுதினார். எனவே அவை வரலாற்றுக்கு உண்மையான தகவல்கள்தானா என்று சரிபார்த்துக்கொள்ள அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. கேள்விச்
(or) Ir aro b - bol ou ibuň 2OU4 19

Page 12
செவியன் ஊரைக் கெடுத்தது போல ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியிலே பல கேள்விப்பட்ட விஷயங்களை வரலாற்று ஆதாரங்களாக மு.தளையசிங்கம் கையாண்டிருப்பது சோகமானது. அதிலே மு.தளையசிங்கம் ஏ. ஜே. கனகரத்னா பற்றி எழுதியுள்ள மதிப்பீட்டினை இன்று மு. பொன்னம்பலங் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார். மு.பொ.வின் தவறான தகவல்களுள் ஒன்று கட்சியிலிருந்து நான் விலக்கப்பட்டது பற்றியது. யாழ்ப்பாணக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்கும் மட்டக்களப்புக் கிளைக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது. யாழ்ப்பாணக் கிளையின் மேலாதிக்கத்தினை என்றும் மட்டக்களப்புக் கிளை ஏற்றுக் கொண்டதும் இல்லை. மட்டக்களப்புக் கிளை நேரடியாக கொட்டா றோட்டில் உள்ள தலைமைக் காரியாலயத்துடன்தான் உறவும் தொடர்பும் வைத்து இயங்கியது என்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட்வேண்டிய ஒன்று. மட்டக்களப்பு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயலாக்கங்களிலே கிருஷ்ணக் குட்டிக்கு அடுத்தபடியாக தொழிற்சங்க ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் தலைமை தாங்கியதினால், மட்டக்களப்புப் பிராந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளிலே NumberTwo ஆக நான் கணிக்கப்பட்டேன்; மதிக்கப்பட்டேன். அக்காலத்தில் தேசாபிமானியின் வளர்ச்சிக்காகவும் நீண்டகாலமாக நான் பணியாற்றி வந்தேன். அதற்கும் என்னுடைய இலக்கிய நடவடிக்கைகளுக்கும் தொடர்புகள் இருந்ததில்லை. கலைத்துறையில், நாடகத்துறையில், நான் ‘புதிசுகளை மட்டக்களப்பிலே மேடையேற்றியபோது, கிருஷ்ணக்குட்டி மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சியினரும் எனக்குத் துணையாக நின்றார்கள்.
எனக்கும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும பிரிந்து செல்லும் அளவுக்கு முனைப்பான முறுகல்நிலை வந்தது 1961ஆம் ஆண்டு ஸாகிராவில் கூட்டப்பட்ட மகாநாட்டின்போதுதான். அந்த மகாநாட்டு விசேட மலரிலே என்னுடைய கட்டுரை இடம்பெற்றுள்ளது. அந்த விழா அமைப்பாளர்கள் மகாநாடு நடத்தும் அன்றைய தினம் வரையும் என்னை முற்போக்கு எழுத்தாள இயக்கத்தில் ஒருவனாகவே கருதிக் கொண்டார்கள். இந்தக் கட்டத்தில் ஒன்றை மிக அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். நான் எந்தக்காலத்திலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கத்தவனாக இருந்தது கிடையாாது. நான் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவனாகவே இருந்தேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து என்ற நிலையை மாற்றி, சிங்களம் மட்டும் என்ற கொள்கையை ஏற்று, கெளரவமான இரண்டாம் இடம் தமிழுக்குக் கொடுப்பது இலங்கையின் அன்றைய அரசியல் வெப்ப தட்பங்களுக்கு உவப்பானது என்று, கொழும்பிலே கூடி எடுத்த மகாநாட்டின்போது சமூகம் அளித்திருந்த மட்டக்களப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருவனாக நான் கலந்து கொண்டேன். என்னுடன் கிருஷ்ணக்குட்டியும் கலந்து கொண்டார். யாழ்பாணத்திலிருந்து கார்த்திகேசனும் இராமசாமி ஐயருமே கலந்து கொண்டார்கள். அந்தக் கட்டத்திலேகூட கைலாசபதியோ சிவத்தம்பியோ கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மொழிக் கொள்கைகள் பற்றிய விளக்க விவாதங்களிலே கலந்து கொண்டது கிடையவே கிடையாது. அந்தக்காலத்தில்
2O ஞானம் - நவெம்பர் 2004

கைலாசபதி தினகரனிலே சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் அரசியல் ரீதியாக கம்யூனிச ஆதரவாளன் என்கிற நிலைப்பாட்டுடன் ஏரிக்கரைப் பத்திரிகையில் பணியாற்றி இருக்கவும் முடியாது.
தி.ஞா கைலாசபதி தினகரனை விட்டு விலகியபோது அவரது இடத்துக் உங்களை அவர் சிபார்சு செய்தார் எனக் கூறப்படுகிறதே. I
எஸ். பொ. : அது உண்மை. ஆனால் சில விஷயங்களை மு.தளையசிங்கங் கூட வரலாற்றுக் காலங்களின் பிரக்ஞையின்றியே எழுதியிருக்கிறார். 60ஆம் ஆண்டுக்குப்பின்னர் கைலாசபதி தினகரனை விட்டு வெளியேறிய அந்தக் கட்டத்திலே அவருடைய பதவிக்குப் போட்டியிட்டவர்களுள் மு.தளையசிங்கம், தில்லைநாதன் ஆகிய பலரும் அடங்குவர். இறுதியிலே ஆறுபேர் நேர்முகத்தேர்வுக்குத் தோற்றினோம். அந்த நேர்முகத்தை நடத்தியவர்கள் எஸ்மெண்ட் விக்கிரமசிங்காவும் கைலாசபதியும். கைலாசபதி என்னை வைத்துக் கொண்டே எஸ்மெண்ட் விக்கிரமசிங்காவுக்கு அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் வசன நடையில் எஸ். பொ. மற்றவர் களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராக வாழ்கிறார் என்று என் பெயரைப் பரிந்துரை செய்தார். அடுத்த நாளே எனக்குத் தினகரனில் நியமனம் கிடைப்பதாக இருந்தது. எஸ்மெண்ட்
கைலாசபதி என்னை வைத்துக்கொண்டே எஸ்மெண்ட் விக்கிரமசிங்காவுக்கு அன்றைய விக்கிரமசிங்க எனக்கு காலகட்டத்தில் இலங்கையில் மட்டுமல்ல '9qLDTg5b Probationary இந்தியாவிலும் 6F6 நடையில் 6T6Irð. Gust. period இல் வைத்து மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராக தினகரனில் பலதுறை வாழ்கிறார் என்று என் பெயரைப் பரிந்துரை களிலும் பயிற்சி செய்தார். அடுத்தநாளே எனக்குத் தினகரனில் தரப்படும் என்றும் , நியமனம் கிடைப்பதாக இருந்தது.
நீங்கள் கைலாசபதியின் இடத்தைப் பூர்த்திசெய்வீர்களானால், தினகரனின் ஆசிரியராக நியமிக்கப் படுவீர்கள் என்றும் கூறினார். இதைக் கொண்டாடும் முகமாகச் சில்லையூர் செல்வராசன் எனக்குத் தகவல் தந்தபோதுதான் நான் தெரிவு செய்யப் பட்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவந்தது. கைலாசபதி உண்மையில் நான் தனக்கு வாரிசாகத் தினகரன் ஆசிரியராக வருவதை விரும்பினார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுவரையில் கைலாசபதிக்கு என்னுடைய எழுத்துத் திறமையின்மீது பரிபூரண மரியாதையும் நம்பிக்கையும் இருந்தன. அவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சென்றபோதுதான், இந்த முற்போக்கு எழுத்தாளர்களுடைய எழுத்து இயக்கத்தின் தலைமைத் துவத்தைத் தான் பெற்றுக்கொள்ளலாம் என்று கருதியபொழுதுதான், படைப்பு இலக்கியகாரனாக விளங்கும் நான், அந்தத் தலைமைத்துவ உயர்வுக்குத்
podml eog tid pQ a Jib Uử 2004 21

Page 13
தடையாக இருக்கக் கூடுமோ என்ற அச்சத்திலே என்மீது விரோதம் பாராட்டியிருக்கக்கூடும் என்றே என்னால் அனுமானிக்க முடிகிறது. ஆனால் அந்த தினகரன் ஆசிரியர் பதவிக்கு நான் நியமிக்கப்படுவதற்கு முன்னரே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளன் நான் என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எஸ்மெண்ட் விக்கிரமசிங்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. தேசாபிமானியில் நான் எழுதிய கட்டுரைகள் பலவும் Photostat எடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. தேசாபிமானியில் எழுதிய கட்டுரைகளை ஒரேநாளில் பிரதி எடுக்கக் கூடியவர் களாக இருந்தால், அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். என் நினைப்பு தப்பு அல்ல. ஆனால் தேவையில்லாமல் வேறு பலரைச் சந்தேகப்பட்டேன். 1994ஆம் ஆண்டிலேதான் அவ்வாறு எனக்கு எதிராக தினகரன் ஆசிரியர் பதவி எனக்குக் கிடைக்கக் கூடாது எனச் செயற்பட்டவர்களுக்குத் தலைமை தாங்கியவர் வி. பொன்னம்பலம் என்ற உண்மையை அறிந்து அதிர்ந்தேன்.
தி.ஞா : ஸாகிரா மாநாட்டு நிகழ்வுகளின் பின்னர் நீங்கள் முற்போக்கு இலக்கிய இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டது மட்டுமன்றி, அதற்கு எதிராகவும் செயற்பட்டீர்கள் என்று பலரும் பதிவு செய்துள்ளார்கள். இது D 60f 60LDust?
எஸ். பொ. : உண்மை. ஆனால் அது சடுதியாக ஏற்பட்டதுபோலப் பதிவு செய்திருப்பது முழு உண்மையல்ல. சில காலமாகவே முற்போக்கு இயக்கம் மரபினை நிராகரித்து மார்க்சியத்தை மட்டும் பிரசாரம் செய்யும் இலக்கியந்தான் முற்போக்கு இலக்கியம் என்ற கருதுகோளை நான் நிராகரித்தேன். சரியென எனக்குத் தோன்றுவதைப் பகிரங்கப்படுத்த நான் தயங்கியது கிடையாது. தமிழ்க் கூறின் அவசியம் பற்றிய தெளிவு எனக்கு அப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. என்னை அவர்கள் புரிந்துகொள்ளத் தயங்கினார்கள். அந்தக் கட்டத்தில் அவர்கள் என்னை ஓர் அளவுக்கு உருவவாதி என்றும், Stylist - நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றும் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். அதுவல்ல உண்மை. உண்மை என்னவென்றால் மார்க்சியக் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு செயற்பட்ட அளவுக்கு, தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிப் படைப்புக்கூறு உண்டு என்பதைக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள் உணரத் தவறிவிட்டார்கள் என்று நான் விமர்சனம் வைத்தேன். எனவே ஸாகிரா மகாநாட்டிலே அவர்களுடைய நடவடிக்கைகளின் உண்மைகளைப் புரிந்து கொண்டேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு இலக்கிய இயக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதையும், அது கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர்களுடைய தொழிற்சங்கமாக இயங்குகின்றது என்பதையும் நிதர்சனமாகக் கண்டு கொண்டேன். இத்தகைய ஒரு தொழிற்சங்க நடவடிக் கையில் என்னைப்போன்று எழுத்துச் சுதந்திரத்தை நேசிக்கும் ஓர் எழுத்தாளனால் தொடர்ந்து இயங்கமுடியாது.
22 ஞானம் - நவெம்பர் 2004

மரபு சம்பந்தமான தேடலிலே நான் தீவிர அக்கறை செலுத்தினேன். பலராலும் தமிழறிஞராக மதிக்கப்பட்ட மகாவித்துவான் FXC. நடராஜாவை அணுகினேன். அவர் பல விஷயங்களை எனக்கு விளக்கினார். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் பாரம்பரிய மரபுகள் இணையாது ஆரோக்கியமான தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்தல் சாத்தியம் இல்லை என்பதை உணரலானேன். கம்யூனிஸ்ட்டுகளின் தேசிய இலக்கியம் பற்றிய கோஷம் மிக அபத்தமான, தவ்வல்தனமான ஒரு கோஷம் என்பதையும் நான் உணரலானேன். அதற்கான காரணம், ஒரு தேசிய இனமாகத் தமிழ் இனம் பிரேரிக்கப்படாத ஒரு நிலையில், ஓர் அடிமைப்பட்ட இனத்திற்குத் தேசிய இலக்கியம் தோன்றும் எனப் பிரேரிப்பது சிந்தனைக்குழப்பம் நிறைந்ததாக இருந்தது. எனவேதான் நான் நற்போக்கு இலக்கியம் என்ற ஒரு கோட்பாட்டை முன்வைத்தேன். இந்த நற்போக்கு இலக்கியம் என்ற சொல் சாகித்திய விழாவில் முட்டை எறிந்தபோது, சு. நடேசபிள்ளை வாய்தவறி உச்சரித்தாகச் சொன்னார்கள். இந்த நற்போக்கு என்ற சொல்லுக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை. நற்போக்கு இலக்கியம்’ பற்றி நான் வீரகேசரியில் எழுதிய கட்டுரைத் தொடரின் ஆரம்பத்திலேயே பெயர் சூட்டல் ஒரு லேபள் விவகாரம் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன். விமர்சகர்கள் இந்தக் குறிப்பினை வசதிக்காக மறந்து விட்டார்கள். ஆனால், பிற்காலத்திலும் இந்தச் சிந்தனைகளின் நீட்சியாகப் பலகட்டுரைகள் எழுதினேன். கணையாழியின் உரத்த சிந்தனைக் கட்டுரைகளிலே என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்து அந்தக் கருத்துகள்பற்றி இந்தியாவில் வாழும் எழுத்தாளர்களுடனும், Accadamic people உடனும், இலக்கியத்தில் பேணக்கூடிய தமிழ்க் கூறுகள் எவை என்பதைத் தெளிந்து, தமிழ்த்துவம் பேணப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். உண்மையில் நற்போக்கு இலக்கியத்தின் பரிமாண வளர்ச்சிக்கட்டத்திலே முன்வைக்கப்பட்ட ஒரு விளக்கமே தமிழ்த்துவம் என்று சொல்லலாம். நற்போக்கு இலக்கியத்தினுடைய உண்மையான விதை இந்தத் தமிழ்த்துவம் என்ற கருத்துத்தான் என்பதை இன்றளவும், மார்க்சிய விமர்சகர்கள் எனப்பெயர் பண்ணுவோர் விரும்பியோ விரும்பாமலோ மறந்தும் மறுதலித்தும் எழுதி வருகிறார்கள். நற்போக்கு இலக்கியத்தை இன்று சிவத்தம்பி ஒத்துக்கொள்ளுகிறார். நுட்மான் ஒத்துக்கொள்கிறார். இவர்கள் எப்படி ஒத்துக் கொள்கிறார்கள் என்றால், தமிழ் இலக்கியத்துக்கான ஒரு கூறும் இணைந்ததுதான் தமிழ் இலக்கியப் படைப்பாக இருத்தல் வேண்டும் என்பதை விக்கித்தக்கி ஏற்றுக் கொள்கிறார்கள். இதை இனங்காணவேண்டும் என்று முதலாவது வைக்கப்பட்ட குரல்தான் நற் போக்கு இலக்கியம். இதனைப் புரிந்து கொள்ளாமல், அது பொன்னுத்துரையால் முன்வைக்கப்பட்ட ஒரு கோஷம் என்பதற்காக ஆய்வும் தெளிவுமின்றி அதனை நிராகரித்து வந்துள்ளமை விசனிக்கத்தக்கது. இந்தத் தெளிவையும் விளக்கத்தையும் முன்வைப்பதற்கும் ‘வரலாற்றில் வாழ்தல்" உபகாரியாய் அமைந்தது என்றுஞ் சொல்லலாம்.
தி.ஞா : நீங்கள் குறிப்பிடும் தமிழ்த்துவத்திற்கும் பேராசிரியர் கைலாசபதி ஆய்வு செய்துள்ள Tamil Heroic Poetryக்கும் தொடர்பு இருக்கிறதா?
GM sorb - pGlauoust 2004 2.

Page 14
எஸ். பொ. : இல்லை. ஆளுடைய அளவை வைத்துச் சட்டை தைப்பதுதான் முறை. யாராவது சட்டைக்காக உடலை வெட்டி எறிவதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Tamil Heroic Poetry என்ற நூலைப் பலதரம் திரும்பத்திரும்ப வாசித்தபொழுது எனக்கு இத்தகைய ஓர் உணர்வுதான் ஏற்பட்டது. பாடாண்திணை என்ற சங்ககால கலைமரபுகள் அனைத்தையுமே உள்வாங்கிக் கொள்ளாது, திணை வகுத்து, பெரும்பொழுது, சிறு பொழுது ஆகியன வகுத்து, சங்ககால இலக்கியம் படைக்கப்பட்டிருந்தது என்பதை உணராது, திணைமயக்கம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகச் சில சொற்றொடர்கள் மீண்டும் மீண்டும் வருவதை அக்காலக் கவிஞர்கள் பயின்றதை மட்டும் வைத்துக்கொண்டு, அது நாட்டார் கவிதைக்குரிய இலக்கணமாகக்கொண்டு சங்ககால இலக்கியம் அனைத்துமே கொச்சைப்படுத்தப் பட்டிருக்கிறது. சங்ககால இலக்கியத்தின் உயிர்ப்பினை அறியாத பேதையராகக் கைலாசவதி இலக்கிய வியாபாரம் செய்துள்ளார் என்பதும் என் குற்றச்சாட்டு.
கிரேக்க Heroic Poetry என்பது காலம் காலமாக மேட்டுக்குடியில் வாழும் தலைவனைப் போற்றுவதற்காக மரபு ரீதியாக, வாழையடிவாழையாக Folk lore ஆக, நாட்டார் பாடலாக வந்ததுதான் வீரயுகத்து கிரேக்கக் கவிதைகள். ஆனால் சங்ககாலத் தமிழ்க் கவிதைகள் அவ்வாறு அமைந்தனவல்ல. கிரேக்க கவிதைகளைத் தந்தவர்கள் மகிழ்விக்கும் கலைஞர்கள்! -They were entertainers! அவர்கள் மேட்டுக்குடி மக்களை மகிழ்விப்பதற்காக புனைந்ததுதான் Heroic poetry. ஆனால் சங்க காலத் தமிழ் மக்களுடைய செய்யுள்கள் அன்றைய
வாழ க  ைக  ைய சி (a ^N செப்பமாகச் சித்திரிக் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு கின்றன. அவற்றை இலக்கிய இயக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை இயற்றியவர்கள் பாணர். என்பதையும், அது கம்யூனிஸ்ட் கட்சி எழுத் பாணன் மகளிர், பாடினி தாளர் களுடைய தொழிறி சங்கமாக எனவும் விரலியர் இயங்குகின்றது என்பதையும் நிதர்சனமாகக் எனவும் அழைக்கப் கணி டுகொணி டேனி. இத்தகைய ஒரு பட்டனர். They Were தொழிற்சங்க நடவடிக்கையில் என்னைப் Creaters. அவர்கள் போன்று எழுத்துச் சுதந்திரத்தை நேசிக்கும் படைப் பாளிகள் . ஓர் எழுத்தாளனால் தொடர்ந்து இயங்க அதற கு ப பரிறகு UT85. gej 6) ] T 5 6T LJ 60) L Li ಆ9 35 ./ பாளிகள் மட்டுமன்றி மதங்கராகவும், கூத்தராகவும், பொருநராகவும் மாறிய பொழுது They Were performers. அவர்கள் புரவலர்களை நாடிச் சென்று அங்கு தங்களுக்கு வாகாகிய ஆடல்பாடற்கலைகளினாற் கூடியிருந்தவர்களை மகிழ்வித்து, அதனால் பொருள்பெற்று வாழ்க்கை நடத்தியதினால் They were entertainers. இந்த மூன்று பண்புகளுடனும் சங்ககாலத் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ளது
24 ஞானம். - நவெல்பர் 2004

என்பதை மறுதலிப்பது போல, கிரேக்க இலக்கியத்தில் ஞானம் பெற்ற ஓர் ஆசானுக்குப் பிரீதி செய்வதற்கு எழுதப்பட்ட ஆய்வு நூல்தான், அதாவது தமிழருடைய இலக்கியப் பாரம்பரியத்தைக் கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட ஒரு b|T6) g5T6 Tamil Heroic Poetry. (3DgjLib சங்க காலத்திலே கலை இலக்கியப்படைப்பில் ஈடுபட்டவர்கள், பாணர்கள், விறலிகள், மதங்கள் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் மேட்டுக்குடி மக்கள் அல்லர். அவர்கள் பாணர் சேரியிலே வாழ்ந்தவர்கள். இந்தப் பாணர் சேரிகள் மேட்டுக்குடியினருடைய குடியிருப்புகளுக்கு ஒதுக்குப் புறமாக அமைந்திருத்தல் சாத்தியமென ஊகிக்க முடிகிறது. சங்ககாலத்து இலக்கியப் புலவர்களில் கார்காத்த வேளாளர் ஜாதியைச் சேர்ந்த படைப்பாளிகள் இருந்ததேயில்லை. கார்காத்த வேளாளர்களையும் உள்ளடக்கிய அதிகாரம் சுகித்த மேட்டுக் குடியினரை மகிழ்வித்தோர்களாகவே பாணர்கள் இலக்கியத்தையும் கலையையும் படைத்தார்கள் என்பதை நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்திலே, இந்த ஆடல்பாடல் கலைகளைப் போற்றிய அந்தப் பாணர் கூட்டத்தினர் கவனிப்பாரற்று, புரவலர்களின்றி, வள்ளல்களுடைய தயவு இன்றி இழிநிலை அடைந்து விபசாரத்திலே ஈடுபடும் இழிநிலை அடைந்திருத்தலும் சாத்தியம். பின்னர் சோழர்காலத்திலே, தமிழ் இசையும் கலையும் கோயில் ஆராதனைக்கு உரியனவாக சமஸ்கிருத மந்திரங்களுடன் பிணைக்கப்பட்ட காலத்திலே, இந்தத் தேவதாசிகள் அல்லது சதிர் ஆடுபவர்கள் வருகிறார்கள். அவர்கள் மட்டுமன்றி அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த மிருதங்ககாரர், மத்தளகாரர், நாகஸ்வரகாரர் வருகிறார்கள். இவர்கள் அனைவருமே மேட்டுக்குடி மக்கள் அல்லர். அவர்கள் சங்ககாலத்திற்குப் பிறகு புறக்கணிக்கப்பட்ட, அந்த சேரிமக்கள் பாதுகாத்துப் பேணிய கலைகளுக்குப் புதிய வடிவங்கள் கொண்டுவந்தவர்கள். சோழர்காலத்திலே அவற்றை மகிமைப்படுத்தினார்கள். தேவதாசிகள் சட்டத்தினால் ஒழிக்கப்பட்ட பிறகு, அவர்கள் பயின்ற சதிராட்டம் அழிந்தொழிந்து போகுமோ என்ற கவலையினால் தமிழ் நாட்டிலுள்ள கிருஷ்ணையர், ருக்மணி போன்ற பிராமணர்கள் தத்தெடுத்து அதைப் பரதநாட்டியம் என்று புனிதப்படுத்தி இன்றைக்கும் பயின்று கொண்டிருக்கிறார்கள். எனவே, தமிழ் இலக்கியமும் தமிழ் ஆடற்கலையும் சங்ககாலம் தொடக்கம் இன்றுவரை நீட்சியாக வந்துள்ளது என்ற ஒரு வரலாற்றுப்பதிவை மறுதலிப்பது போலவும் எத்தனையோ இடங்களிலே கைலாசபதி ஆய்வுக் குறிப்புகள் கொடுத்துள்ளமை சோகமானதாகும். அறிவுக்குப் புறனான இந்தப் பதிவுகளை எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். ஓரளவு பாடாண்திணை என்ற ஆய்வு நூல் - இந்திய ஆசிரியர் ஒருவரின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூல், கைலாசபதி விட்ட பல ஆய்வுத் தவறுகளைக் சுட்டிக்காட்டுவது சிறிது ஆறுதல் தருவதாக உள்ளது.
தி.ஞா : அப்படியானால் சதிர் ஆட்டம்தான் பரதநாட்டியம் என்று கருதுகிறீர்களா?
on arb - pGlaubust 2004 2.

Page 15
எஸ். பொ. : சதிர் ஆட்டம்தான் பரதநாட்டியம் என்றல்ல. இன்று பரதநாட்டியம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கண்டு மேல் சாதிக்காரர் மத்தியிலும் பயிலப்படும் ஆடற்கலையாகப் பர்ணமித்துள்ளது. இது மறுப்பதற்கில்லை. புலம்பெயர்ந்த நாடுகளிலே, தமிழர் கலைத்துவ அடையாளமாகத் தக்கவைப்பதற்காக பெண்களுக்குத் தமிழ் இசை மட்டுமல்லாமல் சில வேளைகளிலே தமிழ் ஆடற்கலையில் பயிற்சி கொடுக்கும் ஒரு போக்கு நிலைத்து வருகிறது. உண்மை என்னவென்றால், தேவதாசிகள் கோவில்களிலே ஆடிய சதிர் ஆட்டம்தான் இன்றைய பரதநாட்டியத்திற்கு ஆதாரம். அதை யாராலும் மறுக்கமுடியாது. ஏன் பிராமணர்கள் இதைத் தத்தெடுத்தார்கள் என்பதற்கான காரணங்கள் பலபடக் கூறப்படுகிறது. இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஒரு நாவலிலே இந்த ஆடற்கலையில் சிறந்த ஒருவள்மீது கொண்ட மயக்கம்பற்றி எழுதப்படுகிறது. 'உச்சி வெய்யில் என்ற அந்த நாவலை எழுதுவதற்கு தன்னுடைய வீட்டிலே பரணிலே தூங்கிக் கொண்டிருந்த பழைய சில செய்திகளே நாவலை எழுதுவதற்கான உந்திவிசையாக அமைந்ததாக இ. பா. எனக்குச் சொல்லியுமிருக்கிறார். தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற இடங்களிலே வாழ்ந்த பிராமணர்கள் மிரசுதாராகவும் வாழ்ந்தார்கள். இந்த நிலங்களும் பண்ணைகளும் சோழ மன்னர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. பின்னரும், மராட்டியர் ஆட்சிக்காலத்திலும், பிராமணர் அதிகார சலுகைகள் சுகித்தனர். அத்தகைய பிராமணர்கள், கோவில்களிலே நர்த்தனம் ஆடிய இந்த சதிர்க்காரிகள் அல்லது தேவதாசிகளது வீட்டிலே அவர்களுடைய இசையிலும் அவர்களது ஆடலிலும் மயங்கி பொருள்களை இழந்த வரலாறுகள் உண்டு. எனவே இந்தப் பிராமண நில ஆதிக்கத்தில் செழித்த கலைச் சுவைஞர்கைைள வீட்டிலே உட்காரவைப்பதற்கு இசையும் ஆடலும் உகந்தன எனப் பிராமணப் பெண்ணினம் இனங்கண்டு கொண்டது. இதன் காரணமாகத்தான் இன்று தமிழ்நாட்டில் கர்நாடக இசையும், பரதநாட்டியமும் பிரதானமாக பிராமணப் பெண்களுடைய சொத்தாக இருக்கிறன. இந்தப் பரத நாட்டியம்பற்றிய ஆய்வினால் முனைவர் பட்டம் பெற்றவர் பத்மா சுப்பிரமணியம். அவருடைய தாயார் எஸ்.டி.சுப்புலசஷ்மி. தகப்பன் பழம் பெரும் இயக்குநர் கே. சுப்பிரமணியம். அவர் இந்த பரதநாட்டியம் என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கிலே தோன்றிய தாகக்கூடச் சொல்லியிருந்தார். ஆனால் உண்மையில் பரதநாட்டியம் தமிழ் நாட்டுக்குரிய ஒரு ஆட்டம். அந்த தமிழ்நாட்டுப் பாணர் சேரியிலே உறங்கிக் கொண்டிருந்த, முடங்கிக்கிடந்த கலை ஆர்வலர்களின் புத்தெழுச்சியாக சோழர் இந்திய சமுத்திரத்தை தெப்பக்குளமாக மாற்றி பெருமை பெற்ற அந்த உச்சத்திலே, அது சதிர் ஆட்டமாக, நாட்டிய சாஸ்திர நுட்பங்களைப் பேணுவதாகவும் இசையுடன் இணைந்ததாகவும், இசைக்கருவிகளினுடைய இணைந்த ஆட்டமாகவும் இருந்தது என்பதுதான் உண்மை.
தி.ஞா : உங்களுடைய எழுத்துப் பணிகளிலே - உங்களுடைய பாஷையில் எழுத்து ஊழியத்தில் - இணைந்திருந்த நண்பர்கள் பலரையும் வெவ்வேறு கட்டங்களிலே அவர்களைப் பாவித்துவிட்டு கறிவேப்பிலை போலத் தூக்கி எறிந்ததாக உங்களைப்பற்றி ஒரு விமர்சனம் இருக்கிறதே.
26 ஞானம் - நவெம்பர் 2004

எஸ். பொ. அத்தகைய ஒரு விமர்சனம் இருப்பதை நான் அறிவேன். அண்மையிலேகூட நான் நீண்ட நாட்களுக்கு நண்பர்களை உபாசனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை என் செவிபடவே கேட்டுள்ளேன். எழுத்து ஸ்ளழியத்திலே நான் நண்பர்களைச் சம்பாதிக்க விரும்பவில்லை. எழுத்து pளழியத்திற்கும் நண்பர்களுக்கும் தொடர்பு கிடையாது. நட்பு என்பது எனக்குத் தெய்வீகமாக அமையாத, ஆனாலும் உணர்வுகளைப் புரிந்துணர்வுடன் பங்கிடும் ஓர் உந்நதமாக இருப்பதுதான் நட்பு நட்பு பராமரிக்கப்பட வேண்டிய ஒன்று. மனைவியைப் போல, குடும்பத்தைப் போலப் பராமரிப்பது. ஒத்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் நட்பின் அடிப்படையாக அமைதல் வேண்டும் என்பது அவசியமுமல்ல. பல சந்தர்ப்பங்களிலே ஆசைகளும், பலவீனங்களுங்கூட நட்பு வளர்வதற்குப் பண்ணையாக அமைந்தமை நமது அநுபவமாகும். என் எழுத்து ஊழியத்திலே நான் எப்பொழுதும் சகாக்களையே நாடித் திரிகின்றேன். ஏனென்றால் எழுத்து ஊழியம் என்பது எனக்குத் தெய்வீகமாக அருளப்பட்டது அல்ல. அது பரம்பரையாக, சங்ககாலத்தில் தோன்றிய இலக்கியத்திலிருந்து தொடர்ச்சியாக வந்த ஒரு முதுசொம். இந்த முதுசொத்தை இருபத்தோரம் நூற்றாண்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்குச் சகாயித்து வந்தவர்கள் அனைவருமே எனக்குச் சகாக்கள். இதனால்தான் எனக்கு இளங்கோ அடிகளும் வள்ளுவனும் கம்பனும் பாரதியும் புதுமைப்பித்தனும் இன்றளவும் சகாக்களாகச் சகாயித்துக் கொண்டிருக்கிறார்கள். சகாக்கள் என்பவர்கள் ஒத்த கருத்தை உடையவர்களாக, ஓர் இயக்கத்தினை இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லக் கூடியவர்களே சகாக்கள். இந்த சகாக்கள் தங்களுடைய பலவீனங்களுக்காக, அன்றேல் தங்களுடைய உத்தியோக உயர்வுகளுக்காக, அன்றேல் தங்களுடைய புகழ்ச்சிக்காக, அன்றேல் தங்களுடைய சில பதவிகளுக்காகச் சரசர்களாகிவிட்டால் அவர்கள் என்னுடைய நண்பர்கள் என்று கருதி அவர்களுடைய பராக்குகளிலே மிலாந்தும் இயல்பு எனக்கில்லை. நதி கடலை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. அப்படி ஓடிக்கொண்டிருக்கும் போது கிளை நதிகள் பல வந்து அந்த நதியிலே விழலாம். அந்தக் கிளை நதிகள் அனைத்தும் சகாக்களே. இந்தச் சகா ஒருவனுடைய முகம் என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு இயக்கத்தின் குரலாகக்கூட இருக்கலாம். சத்தியத்தின் வழிபாடாகக்கூட இருக்கலாம். அந்தச் சகாக்களை விரும்பும் ஒரு கலைஞன், நட்புக்காக, அந்த இலக்கிய புனிதத்துவத்தைத் தரந்தாழ்த்த விரும்பவில்லை. நான் இலக்கியத்தைப் புனிதம் என்றுதான் கருதுகிறேன்; அதுக்குமேல் அதனைச் சுட்டுவதற்குத் தோதான வார்த்தை சட்டென்று தடடுப்படவில்லை. அந்தப் புனிதத்துவத்தை மாசுபடுத்தும் வகையில் நட்பின் உறவுகள் குறுக்கிடுவதற்கு நான் அனுமதித்ததே இல்லை. எனவே, என்னைப்பற்றிய இந்த விமர்சனம் என்னை நோகடித்துக் கொண்டிருந்தாலும்,
என் பயணத்தின் இலக்குத் தெளிவாகவே இருத்தல் ஆறுதல்.
(தொடரும்.)
O
nh II miror b b Gloob tu ir 2004 27ኦ

Page 16
தமிழ்க் கவிதையின் 65 siressrooiba?
бош паъ болот боп болотбыт
ந்ெத மொழியிலும் கவிதை எனும் இலக்கியமே முதலில் தோன்றியது என்பர். இதன் காரணமாகக் கலைகளுக்கெல்லாம் தாய் எனும் பெரிய அந்தஸ்து கவிதைக்கு வழங்கப்பட்டது. இச்சொல் (கவிதை) பல்லவர் கால ஆழ்வார் இலக்கியங்களிலிருந்து முகிழ்த்ததாகத் தெரிகின்றது. கவிதை, பா, பாட்டு, செய்யுள் என்னும் சொற்கள் ஒத்த கருத்துடையதாகத் தோன்றினும் கவிதை மற்றவற்றில் இருந்து வேறுபட்டது என்பது தெளிவு.
இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழ்க் கவிதை பற்றிய விளக்கங்களும் வரைவிலக்கணங்களும் பல்வேறு வகையின. இதனால் அவை ஒன்றுக்கொன்று முரண்படுதல் இயல்பு. இந்நிலையில் கவிதை என்றால் என்ன என்று கேள்வி எழுப்பி, அதற்கு இதுதான் சரியான விளக்கம் அல்லது வரைவிலக்கணம் என்று தரமுற்படுதல் எந்த விதத்திலும் அறிவுடைமையாகாது.
கவிதையைப் படிப்பது அல்லது சுவைப்பது என்பது ஒரு பெரிய அனுபவம். இந்த அனுபவமும் ஒருவருக்கொருவர் வேறுபடும். ஏனென்றால், மனித மனங்கள் அப்படி, மிகக் குறைந்த, தெரிந்தெடுத்த சொற்களில் நிறைந்த பொருளை, கற்பனை வளத்தை, அழகியலை, ஆனந்தத்தை அள்ளித் தருவது கவிதை. இந்தப் பண்பு நலன்களையே கவிதையின் பயன்பாடாக நாம் கொள்ள முடியும்.
தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்த எழுத்தாளரும் கவிஞருமான பிச்சமூர்த்தி அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் அவருக்கிருந்த பயிற்சி காரணமாக புதுக்கவிதை என்னும் ஒரு வகைக் கவிதை இலக்கியத்தை 1934ல் கு.ப. ராஜகோபாலுடன் இணைந்து, தமிழ் உலகிற்கு தரமுன்பு யாப்பமைதி கொண்ட செய்யுள் வடிவங்களே வழக்கில் இருந்தன. இச்செய்யுள் வடிவங்களும் கால ஓட்டத்தில், உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றம் பெற்றமையினை யாப்புக்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் எடுத்துக் கூறுவர்.
தமிழ் இலக்கியம் தோற்றம் பெற்றதாகக் கொள்ளப்படும் சங்ககாலத்தில் அகவல், கலிப்பா ஆகிய செய்யுள் வடிவங்களே பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்தன. இவற்றின் பின் வெண்பா (கி. பி. 1ம், 2ம் நூற்றாண்டு) விருத்தம் கி. பி. 6,7,8ம் நூற்றாண்டு) என்னும் செய்யுள் வடிவங்கள் தோற்றம் பெற்று செல்வாக்குடன் விளங்கின. இவை இரண்டிலும் விருத்தம் அதன் இயல்பு காரணமாக இன்றும் நிலைத்து நிற்கின்றமையை இங்கு சுட்டிக் காட்டுதல் தகும்.
யாப்பமைதி பெற்ற பாவடிவங்களைக் கொண்டு தமிழ் இலக்கியங்கள் புனையப்பட்டாலும் அவற்றில் நாட்டார் பாடல்களின் செல்வாக்கு இருப்பதை அறிஞர் எடுத்துக் காட்டுவர். (பார்க்க : மு. வ. வின் தமிழ் இலக்கிய வரலாறு) சங்க
28 ஞானம் - நவெம்பர் 2004

இலக்கியங்களில் இருந்து, இன்று பிரபல்யம் பெற்றுத் திகழும் கவியரசு வைரமுத்துவின் கவிதைகள் வரை, நாட்டார் பாடல்களின் தாக்கத்திற் குட்பட்டே தமிழ் இலக்கியம் வளம் பெற்று வருகின்றமை ஒரு தனி வரலாறு.
இதற்கான காரணந்தான் என்ன? ஓசை இன்பமே என்று இரண்டு சொற்களில் நாம் இக்கேள்விக்குப் பதில் சொல்லிவிட முடியும். ஆம்! காதிற்கினிய ஒசைக்குக் தமிழன் கடவுளையே ஒசையாகவும், இசை யாகவும் கண்டு மகிழ்ந்தவன். (ஒசை ஓர் ஒழுங்கிற்குள் கொண்டு வரப்படும்போது அது இசையாக வடிவமெடுக்கின்றது.)
ஒசையையும், உணர்ச்சியையும் கவிதையின் இருபெரும் இலட்சணங் களாக ஏற்றுக் கொண்ட பண்டையக் கவிஞர் பெருமக்கள் அவற்றை நன்கு புலப்படுத்தும் யாப்பமைதிக் கவிதைகளில் கட்டுண்டு கிடந்தமை ஒன்றும் வியப்புக்
கட்டுப்பட்ட
குரியதல்ல.
கம்பன், இளங்கோ, சயங் கொண்டார், பாரதி முதலான கவிச் சக்கரவர்த்திகள் கவிதையின் ஒசை உணர்ச்சி இன்பத்தில் திளைத்துக் கிடந்தமைக்கு அவர்களின் படைப்புக் களே தக்க சான்று. பாரதி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது அவரது வசன கவிதைகளில் அன்றி இனிய சந்தம் நிறைந்த சிந்துகளிலும் கண்ணிகளிலும் தான் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.
தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை யையும் சிறப்பையும் தந்து கொண் டிருக்கும் இந்தக் கவிஞர்களே கருவில்
திருவுடையவர்கள். கவிஞன்
mhr mor tb -- GoodJubuňr 2004
பிறக்கின்றான் என்னும் புகழ் பூத்த வாக்கியத்திற்கு இவர்களே மிகமிகப் பொருத்தமானவர்கள். வார்த்தைகள் எப்போதும் இவர்களுக்கு வசப்பட்டவை. கற்பனையும் அழகும் பொருட்சிறப்பும் இந்தப் பெருங்கவிஞர்களின் கவிதை களில் கட்டுண்டு கிடக்கும்.
இரசிகமணி டி.கே. சி. கம்பனிடமும் முத்தொள்ளாயிரம் முதலான இலக்கியங் களிலும் தன்னை முற்றாக இழந்தமைக்கு இதுதான் காரணம். கவிதைகள் அவரைப் பொறுத்தவரையில் செவி நுகர் கணிகளே. இதனைப் பெரிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் அமைச்சர் (AMATEURE) (p6MgO 6T6Tg 6T6T6If நகையாடியமையை இலக்கிய அன்பர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தில்லை. (பார்க்க, பேராசியர் கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும்)
செய்யுள், காரிகை இலக்கணத்திற் கேற்ப செய்யப்படுவது என்றும், கவிதை அதில் இருந்து மாறுபட்ட ஒர் வடிவம் என்பதும் கற்றவர் அறிந்ததுதான். எனினும், கம்பன் செய்யுள் மரபை மீறி கவிதை படைத்தவன் என்பார் பேராசிரியர் கே. கே. பிள்ளை அவர்கள். (பார்க்க, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்) பேராசிரியரின் இக்கூற்று கம்பனின் படைப்புக்கள் செய்யுள் வடிவில் இருந்தாலும் அவை எப்போதும் சுவைக்கக் கூடிய இறவாக் கவிதைகளே என்பதை உறுதி செய்கின்றது.
பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை கம்பராமாயணம் பற்றிப் பேசும்போது இக்காவியம் தமிழரது கவித்துவத்தின் பேரெல்லையை உணர்த் துகிறது. எத்தனை முறை இவ்வுண்
29
அவர்கள்

Page 17
மையை வற்புறுத்திக் கூறினும் தகும் என்று குறிப்பிடுவார். (கம்பன் காவியம் பக்கம் - 9)
பாரதியின் ‘வசன கவிதை' பிச்ச மூர்த்தியின் ‘புதுக்கவிதை' என்பன தமிழ்க் கவிதை எடுத்த புதிய அவதாரங் கள்தான். இவ்வவதாரத்திற்கு அமெரிக்கக் கவிஞன் வால்ட்விட்மனின் (1855)'புல்லின் நுனிகள் எனும் கவிதைத் தொகுப்பு ஆதர்ஸமாக இருந்திருக்கலாம் என்பார் சி. சு. செல்லப்பா அவர்கள். (ந. பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் - பக்கம் 144) எனினும் இந்நவீன கவிதைகளை ஒட்டித் தோன் றியவைகளில் மிகப் பல கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழிகளாகவே காட்சி தருகின்றன. எல்லாம் கையில் பேனா எடுத்ததன் விளைவு என்று இதனைச் சுருக்கமாகக் கூறிவிடலாம்.
இலக்கிய வரலாற்றாசிரியர்கள், தமிழ் கவிதையின் வரட்சிக்கு நாயக்கர் காலச் (கி. பி. 16ம் 17ம் நூற்றாண்டு) செய்யுட் களை எடுத்துக் காட்டுதல் வழக்கம். ஆயினும் அது போன்றதோர் வரட்சி மகாகவி பாரதியின் காலத்திலும் நிலவியமையை அவன் மிகுந்த மனவேதனையோடு இப்படி எடுத்துக் காட்டுகிறான்.
இங்கே கவிஞர்கள் இக்காலத்தில் இருக்கின்றார்கள்? கம்பனைப் போன்ற கவிஞர் அடிக்கடி தோன்றுவதில்லை
கம்பனைப் போன்ற
Lunt 6) Jff
என்பதைச் சிலர் ஆட்சேபமாகக் கொண்டு வரலாம். கம்பனுடைய பெருமையில் நூற்றிலொரு பங்கு
கொண்டார் யாவர் இருக்கின்றார்கள்?
30
கண்டவன் நின்றவன்.
பாண்டித்தியம் உடையோர்களும், பாண்டித்தியம் இருப்பதாக நினைத்துக் கொள்வோர்களும் கவிகள் கூறத் தொடங்கி விடுகின்றார்கள். கவித் திறமை இருப்பதற்குப் பாண்டித்தியம் ஒருவாறு அவசியம் என்றாலும், பாண்டித்தியம் இருப்போர்களுக்கெல்லாம் கவிதாசக்தி இருப்பதில்லை என்பதை நம்மவர்கள் மறந்து விட்டார்கள்.
இலக்கண வித்வான்கள் கூடத் தாம் கவி பாடாமலிருந்தால் அது மதிப்புக் குறைவென்று நினைத்துக் கொள் கிறார்கள்.
இங்ங்ணமாக, உண்மையான கவிதை நாட்டிலே மறைந்து போய்விட்டது. (ந. பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் பக்-13)
பாரதியின் இந்த எழுத்தைப் படிப்பவர்களுக்கு இன்று தமிழ்க்கவிதை உலகில் தாண்டவமாடும் மிக மோசமான கவிதை வரட்சி நிச்சயம் நினைவிற்கு வரும். புதுக்கவிதை என்ற பேரில் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அடியும் முடியுமில்லாத வெற்று வசனங்கள் அன்றைய காகிதச் செய்யுட் களையும் விடப் பல மடங்கு தரம் குறைந்தவை.
இந்தத் துர்ப்பாக்கிய நிலையில் இருந்து தமிழ்க் கவிதை உலகை மீட்டெடுக்க, ஒரு கம்பனோ, பாரதியோ தான் நமக்குத் தேவை. காலம் கை கொடுக்குமா?
O
ஞானம் - நவெம்பர் 2004

கரியனே நம் தறி, நட்சத்திரங்களல்ல.
விழுகின்ற சம்மட்டி அடிகளில் ஆகாசன
நட்சத்திரங்கள் உதிரும் ஒலிகேட்டுத் துடித்துப் பதைத்துத் துயில் கலைந்த என் செந்தோழனே
செல்லறித்த கம்பங்கள் மீது பறந்து களைத்தசெங்கொடிகள் அறுந்து வீழ்ந்த காரணம் புரியமறுத்துத் திகைத்து உன்வீட்டுப் பரண்மீது விட்டெறிந்தாயே ஒரு சம்மட்டி அதுவல்ல இது.
சோர்வுற்ற உன்னை ஆசுவாசப்படுத்தித் தொடர்ந்து அடி நட்சத்திரங்கள் உதிருமென்றுரைத்துச் சொந்தமாய்ச் செய்த சம்மட்டியைத் தந்தோம் நீயோ திருவிழாத் தொடக்க நாளில் கச்சான் கடலை கொறித்துக் காப்பு வாங்கி அணிந்து கானிவல் பார்த்துக் கரும்பும் வாங்கிச் சாப்பிட்டு கண்ணயர்ந்து துங்கிப் போனாய் கல்யாணக்கால் நட்டு வவைாசம் போய் மஞ்சளும் குளித்துத் தீ மிதிப்பு நிகழமுன்னர் வந்ததொரு நெடிய இரவு மிகக் கரிய இரவு
கெளரவர்கள் வந்தனர்
அகுனிகள் வந்தனர் துச்சாதர்ைகள் களி நடனம் புரிந்தனர் துகிலுரிப்புகளும் வவைாசங்களும் நிகழ்ந்தேறிை ஆயினும் ஆயிரமாயிரம் சாரதிகள் அணிவகுத்தனர் சின்ச்ை சின்னக் குருஷேத்திரங்கள் பெரிய பெரிய குருவேடித்திரங்கள் பார்த்தனின் பயணம் தொடர்ந்தது கொல்லர் பட்டறைகள் நாமம்மாறி உலைக்களங்களென்றாகின அதில் செய்த சம்மட்டி இது புரிகிறதா? அந்த அடியில் உதிர்கிறது நட்சத்திரங்கள்.
பார்த்தபடியிரு
சூரியனும் கழன்று கைகளுக்குள் வரும்
நம் குறியும் அதுவே அப்போது தோன்றுமொரு பிரகாசமான பகற்பெnழுதில் மிகக்கறிய நெடிய இரவு நிறுத்திச் சென்ற தீப்பள்ளியத் திருவிழா தொடரும். O
ருடனம் - நவெம்பர் 2004 31

Page 18
புனைகதை இNக்கியம் : அறிவோம், கற்போம், படைப்போம்,
செங்கை ஆழியான் க. குணராசா
3. 3. உத்தி : (4)
புனைகதையை வாசகனுடன் பகிர்ந்து கொள்வதற்கு எழுத்தாளன் ஒரு கதை சொல்லியாக மாறவேண்டியுள்ளது. அக்கதையைச் சொல்வதற்கு அவன் கையாளும் முறைமையை உத்தியெனலாம். உத்தி என்பது ஒரு வகை கதை சொல்லும் நுட்பம் எனலாம். ஒவ்வொரு எழுத்தாளனும் ஒவ்வொரு கோணத்திலிருந்து தான் சொல்ல விரும்பும் கதையை விபரிக்கின்றான். புனைகதையை விபரிக்கக் கையாளுகின்ற உத்திகள் பலவிதமாகப் படைப்பாளிகளின் கதைகளில் பயின்று வந்துள்ளன. அவை :
3.3.1. நான் என்ற கதாபாத்திரம் சொல்லும் கதை உத்தி :
சில நாவல்களில் ஒரு கதாபாத்திரமே கதைசொல்லும். டாக்டர் மு. வரதராசனின் பெரும்பாலான நாவல்களில் ஒரு பாத்திரமே தன்மையில் கதைசொல்லும். சுப்பிரமணிய பாரதியார் தனது "காக்காய்ப்பார்லிமெண்ட” என்ற கதையை இவ்வாறு ஆரம்பிக்கிறார். "நேற்றுச் சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். 'உம்முடைய பெயர் என்னவென்று கேட்டேன். என தன்மையில் கதை விபரிக்கப்படுகின்றது. “அண்ணாந்து பார்த்தேன். ஒரே மேகக் கூட்டம். வானம் பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருள் மூண்டு வருகிறது. மழை பெய்யுமோ?” என ஆர். சூடாமணி தனது நான்காம் ஆசிரமம்' என்ற சிறுகதையை தன்மையில் சொல்கிறார். இவ்வகை உத்தியைக் கையாளும் புனைகதைகளில் கதாசிரியன் பங்காளியாக இருப்பதுபோல உணர்வு காணப்படும்.
3.3.2. படர்க்கையில் கதை சொல்லும் உத்தி :
மாக்சிம் கோர்க்கி தனது புகழ்பூத்த 'தாய்' என்ற நாவலைப் படர்க்கையில் சொல்லி முடிக்கிறார். “புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில், தொழிலாளர் குடியிருப்புக்கு மேல், நாள் தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியைத் தூக்கத்தால் மீண்டும் பெறாத தொழிலாளர்கள் ஆலைச் சங்கின் அழைப்புக்குப் பணிந்து அழுது வடியும் வீடுகளிலிருந்து.” என அவரின் நாவல் விரியும். பாத்திரங்களைப் பேசவிட்டு மூன்றாவது மனிதனாக வெளியே நின்று கதையைப் புனைந்துள்ளார். 'ஒரு கலியாணம் செய்து கொள்ள வேண்டியது தான்' என்று ஒரு வருஷமாகவே யோசித்துக் கொண்டிருந்தான் பாக்ஸர் கந்தசாமி. அவனுக்கு முப்பத்தைந்து வயதாகிறது எனப் படர்கையில் ஜெயகாந்தனின் குரு என்ற குறுநாவல்
32 ஞானம் - நவெம்பர் 2004

ஆரம்பித்து விபரிக்கப்படுகின்றது. டானியலின் அனைத்து நாவல்களும்
தான்
படர்கையில் கதை
படர்க்கையில் சொல்லப் பட்டிருக்கின்றன. சொல்கின்ற உத்தியைத்தான் பெரும் பாலான கதாசிரியர்கள் விரும்பிக் கைக்கொள்கினறனர். இவ்வாறான புனைகதைகளில் எழுத்தாளன் பெரிதும் பர்வையாளனாகவே புனைகதையில் தெரிவான். ஆனால் தனித்திறன் வாய்ந்த படைப்பாளிகளின் படர்கையில் சொல்லப்படுகின்ற விடத்தும் கதையோட்டத்தில் பாத்திரங்கள் நானாகவும் சித்திரிக்கப்பட்டு விடுகின்ற திறனைக் காணலாம். ஜெயகாந்தனின் பாரிஸி க்கும்போ, தி.ஜானகிராமனின் மோகமுள்' நீலபத்மநாதனின் தலை முறைகள் ஏர்னஸ்ட்ஹெமிங்வேயின் கடலும்
புனைகதைகளில்
கிழவனும் என்பனவற்றினை உதாரணங் களாகக் குறிப்பிட முடியும். செங்கை ஆழியானின் மரணங்கள் மலிந்த பூமி” நாவலில் படர்கையில் விபரிக்கப்படும் கதையூடே நான’ என்ற கதாசிரியரின் பாத்திரமும் கதைசொல்லும்.
3.3.3 தனித்தனிப் பாத்திரங் கள் கதை சொல்லும் உத்தி :
ஆரம்பகால மேலைத்தேய நாவல் களிலும் தமிழ் நாவல்களிலும் தனித் தனிப்பாத்திரங்கள் தம் கதையைக் கூறும் உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறுகதையாளன் புதுமைப்பித்தனின் மனநிழல்' என்ற சிறுகதையில் அவள், அவன் என்ற இரண்டு பாத்திரங்கள் கதை சொல்வதான உத்தியுள்ளது. 1ழத்தின் மூத்த இலக்கியப் பத்திரிகை Iான ஈழகேசரியில் புதுமைலோலன்
pt fl aol tio நவெம்பர் 2004
எழுதிய குறுநாவலான 'அவள், அவன், அவர் என்பதில் இம்மூன்று பாத்திரங் களும் கதை சொல்கின்றன.
3.3.4 கடிதங்கள் மூலம் கதை சொல்லும் உத்தி:
ஆங்கில நாவலாசிரியரான சாமுவெல் றிச்சார்ட்சன் என்பார் தனது உலகப்புகழ் பெற்ற நாவலான பமீலா'வை கடிதங்கள் மூலம் சித்திரித்துள்ளார். கடிதங்கள் மூலம் விபரிக்கும் உத்தியை முதன் முதல் பயன்படுத்தியவர் சாமுவேல் றிச்சார்ட்சன்
புனைகதையை
(1740) ஆவார். அவளின் எஜமானன் அவளைப் பெண்டாள எடுக்கும் முயற்சிகளை பமீலா எவ்வாறு
முறியடிக்கிறாளென்பதைக் கடிதங்கள் மூலம் றிச்சார்ட்சன் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து 1771 இல் Tobios Smollett GT situiti Teg flu The Expedition of Humphry Clinker 6T6öTp ஆங்கிலக் கடலோடிகள் சம்பந்தமான நாவலும் கடிதங்கள் மூலமே கதை சொல்லும் உத்தியைக் கொண்டுள்ளது. ‘பாற்கடல்' என்ற சிறுகதையை லா.ச.ராமாமிர்தம் ஒரு பெண் தன் கணவனுக்கு எழுதும் கடிதம் மூலமாக விபரித்திருக்கிறார். ‘நமஸ்காரம், சேஷமம், சேஷமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணம் இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும்போதே வாய் கொப்புளிக்க செம்பிலே ஜலத்தை என் கரத்திலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப பார்வை, ஆயிரம் நாணல்
33

Page 19
கோணல். நீங்களா கட்டிய மனைவிக்குக் கடிதம் எழுதப் போகிறீர்கள்?’ எனப் பாற்கடல் சொல்லப்படுகின்றது. ஒரு கடிதத்தின் மூலமோ பல கடிதங்கள் மூலமோ அக்கதாசிரியர்கள் புனைகதை யைச் சொல்கின்ற உத்தியைக் கை யாண்டுள்ளனர்.
3.3.5 நனவோடை உத்தி :
நவீன நாவலிலக்கியத்திற்கு புதிய தொரு உத்தியை அறிமுகமாக்கிய பெருமை அயர்லாந்து எழுத்தாளரான ஜேமஸ்ஜொய்ஸ் (1900) என்பாரைச் (FIT(5th. Stream of Consciousness என வழங்கும் நனவோடை உத்தியை நாவலில் அறிமுகப்படுத்தி வைத்தார். பிரதான பாத்திரத்தின் மனதில் மறைந்திருக்கும் சம்பவங்களையும் உணர்வுகளையும் மீள நினைவுபடுத்தும் காட்சி, காலம் (மழை, வெயில், பணி எதுவாயினும்), மனிதர், உயிரினம், சூழல், சம்பவம் எதிர்ப்படும் போது அப்பாத்திரம் அவற்றினை நினைவு கூரத் தொடங் குகிறது. கதை சீராகவோ ஒழுங்காகவோ தொடக்கம் வளர்ச்சி - முடிவு எனச் செல்லாது நனவின் வழி கூறப்படும். புனைகதையின் உச்சத்தில் அல்லது முடிவில் நின்று கொண்டு அம்முடிவிற்கு வந்தமைக்கான சம்பவங்களை அல்லது உணர்வுச் சிக்கல்களை நனவோடை உத்தி விபரிக்கும். கடந்தகால நனவோடைச் சம்பவங்கள் நிகழ்காலச் சம்பவங்களுக்கு உணர்வு பூர்வமான அழுத்தத்தையும் கலை நேர்த்தியையும் கொடுக்கும். நனவோடை உத்தியின் பிதாமகரான ஜேம்ஸ் ஜொய்ஸ் தனது புகழ்பெற்ற 'Ulysses (1922) என்ற நாவலில் இந்த உத்தியை அற்புதமாகப்
34
பயன்படுத்தினார். அவரைப் பின்பற்றி ஆங்கில நாவலாசிரியையான வேர்ஜினி LIT,6% g60Tg. To the Light House' (1927) என்ற நாவலில் நனவோடை உத்தியை மிகச் சிறப்பாகக் கையாண் டுள்ளார். இவர்களுக்குப் பின்வந்த நாவலாசிரியர்கள் அனைவருக்கும் நனவோடை உத்தி நவீன நாவலாக் கத்திற்குக் கை கொடுத்தது. நீலபத்ம நாதனின் தலைமுறைகள்', ஜெய மோகனின் 'விஷ்ணுபுரம், சுந்தர ராம சாமியின் ஜெஜெ, லா.ச.ராமாமிர்தத்தின் புத்ர முதலான நாவல் களில் நனவோடை உத்தி சிறப்பாக விழுந்துள்ளது. செ. யோகநாதனின் 'சோளகம், செங்கை ஆழியானின் கங்கு மட்டை முதலான சிறுகதைகளில் நனவோடை உத்தி நன்கு கையாளப் பட்டுள்ளது.
3. 4. மொழி நடை
/னைகதையைப் படைக்கும்போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் ஒழுங்கு முறையை புனைகதையின் நடை எனலாம். வார்த்தைகளையும் அவற்றி சொற்களையும் தேர்ந் தெடுக்கும் திறன் படைப்பாளிக்குப் படைப்பாளி வேறுபடும். புனைகதையைப் படைப்பதற்கு வளமான மொழி அறிவு தேவை. அம்மொழி காலத்திற்குக் காலம் தம்மளவில் வேறுபடும். கிரேக்க, ஆங்கில, தமிழ் ஆகிய மொழி சார்ந்த இலக்கியங்களுக்கு செய்யுளே ஆரம்ப நடையாகவிருந்தது. பண்டைய கவிஞன்
6T66
தன் புனைகதைகளைச் செய்யுளிலேயே காவியமாகத் தந்துள்ளனர். கிரேக்க ஒடிசி, இலியட் என்பனவும் தமிழில்
ஞானம் - நவெம்பர் 2004

கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என் பனவும் அவ்வாறானவை. ஆனால் நவீன புனைகதைகளான நாவல், சிறுகதைகள் என்பன உரை நடையிலேயே எழுதப் படுகின்றன.
3.4.1 செம்மொழி நடை :
மேலைத்தேய புனைகதை யாசிரியர்கள் தமது ஆரம்பப் படைப்புக் களைச் செம்மொழிகளில் அவதானமாகப் 1700 களில் எழுதப்பட்ட றொபிசன்குருசோ (1719), பமீலா (1719) என்பனவும், 1800 களில் வால்ராஸ்கொட், சார்ள்ஸ்டிக்கின்ஸ், அலெக்சாண்டர் டூமாஸ் ஆகியோரின் நாவல்களும் சுத்தமான அப்பழுக்கற்ற செம்மொழியில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாவலின் முன்னோடிகளாகக் கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், ராஜமையரின்
படைத்தளித்துள்ளனர்.
வேதநாயகம்பிள்ளையின்
கமலாம்பாள் சரித்திரம், மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் என்பனவும் பின்னர் கல்கி, அகிலன் என்போரின் நாவல்களும் கூடியவரை தூயமொழி நடையைக் கைக்கொண்டுள்ளன.
3.4.2 பேச்சுமொழி நடை :
புனை கதையில் செம்மொழியைப் பயன்படுத்தும் முறையை மாற்றியமைத்த பெருமை அமெரிக்க நாவலாசிரியரான instié, (15606isit (Mark Twain) 6Tsirust 600& es Terbühl. GLosto0)u (Colloquial) 560Tg. The Adventure of Huckleberry Finn'sTsirp
முதன்முதல் மக்கள் பேச்சு
நாவலில் பயன்படுத்தினார். பின்பற்றி அவர்
அவரைப் பின்னால் வந்த
ரூாணம் நவெம்பர் 2004
புனைகதை ஆசிரியர்கள் தம் புனைகதையில் மொழியை நெகிழ்த் தினர்.
பாசாங்கற்ற மொழி புனைகதைகளில்
மக்களுக்குப் பரிச்சயமான
விரவி வருவதாயிற்று. மக்கள் மொழி இலக்கிய மொழியாயிற்று. ஈழத்தின் புனைகதையாசிரியர்கள் 1950 களி லிருந்தே பேச்சுமொழியைக் கையாண்டு புனைகதைகளைப் படைத்து வருகின்றனர். பொன்னுத்துரை, டானியல், டொமினிக் ஜீவா முதலானோரின் புனைகதைகளில் மக்களின் பேச்சு வழக்கு மொழி மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “இல்லை நாச்சியார் உதிலை ஒரு செத்த
செண்டு டானியலின் பாத்திரம் இயல்பாகப் பேசும் மக்களின்
வீட்டை போனாப்போல
O O s போச்சாக்கும்.” என
பேச்சு மொழிப் பிரதேசத்திற்குப் பிரதேசம் வட்டா ரத்திற்கு வட்டாரம் வேறுபடும். ஜானகிராமனின் புனைகதைகளில் திருநெல்வேலிப் பிரதேச மொழியும்
ராஜநாராயணனின் புனைகதைகளில்
கரிசல்காட்டு வட்டாரமொழியும் நடை பயிலும். பெரும்பாலான படைப்பாளிகள் பாத்திரங்கள் பேசுமிடங்களில் பேச்சு மொழியையும் ஏனைய விடங்களில் செம்மொழியையும் கையாளுவர். இதுவரை அதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி நடையாக விளங்கி வருகின்றது. இன்றைய தமிழகச் சஞ்சிகைகளில் செம்மொழியுமின்றி பேச்சுமொழியுமின்றி இங்கிலிஸ் - தமிழ் மொழியை எதுவித
சுரணையுமின்றித் தாராளமாகக் கையாளுகின்றனர்.
3.

Page 20
பொன்னாண்ணை கொஞ்சம் பொறு
கல்வயல் வே. குமாரசாமி
(மு. பொ. வின் கவிதை குறித்த சர்ச்சைக்கான கவிதைப் பதில்)
சின்னப் பெnடியள் சிலவேளை கால்சறுக்கும் இன்னும் அறியலையேn; ஏன்?
என்ன கரைச்சல், இழுத்திழுத்துக் குட்டுகிறாய் சொன்னாலும் கேளnயாம் ஏன்என்று - முன்nைள்நீ கொன்ைைதட்டிக் கொண்டு குழறித் திரிஞ்சகதை என்னைக்கேள் சொல்வேன் இதேml
பன்னாடைத் தட்டாnைய் பழைய சரித்திரத்தில் என்னானாய் இன்றைக் கெழுத்துலகில் - மின்மினியாய் போன புழுக்கம்; புறணி, புசத்தாதே மானத்தைப் பேணு மதி.
வாழ்வோருக் கெல்லாம் வருமின்ப துன்பம் போல் சூழ்வார் செயலிலுஞ் சூத்தைவரும் - தாழ்வாய் அதைக் கருத மnட்டார் அயரா துழைப்பர் பதைப்பிலா நெஞ்சத் தவர்.
நொட்டை பல சொல்லி நுண்மை அறிந்தார்போல் பெட்டைப் புலம்பல் புலம்பாதீர் - வெட்டி விழுத்திய தென் ைவிருத்தி உரைக்கப் பழுத்தவர்கள் உள்ளார் படி,
நோயுடை நெஞ்சத்து நொய்ம்மை நிலைபோக்கித் தாயுடை நெஞ்சத் தகைமை பெறும் - வாயில் திறக்கும் புதிசாய் திசைகள் வெளிக்கும் சிறக்கும் பல செயலும் சேர்.
36 ஞானம் - நவெம்பர் 2004

கம்பனையே நொட்டும் கவிராச பேரெடுக்க நம்பொடியைக் குட்டி நலஞ்சேர்மோ? - வம்பிலே மாட்டிக் கிடவேண்டாம் மாலை வருகிறது
போட்டி பொறாமை விடும்.
சோட்டைக்கு ரெண்டிந்தச் சொல்எழுதி விட்டிருக்கு அேட்டை விடுவnயேல் சிம்மங்கள் - போட்டுக் குதறி எடுக்கக் குறிவைத் திருக்குப்
பதறnதே பாயைச் சுருட்டு.
பிஞ்சிலே காயடிச்சுப் பேய்க்கூத்தை ஆடிவரும் வஞ்சனையை விட்டு வழிவnரும் - நெஞ்சத்து நல்லேைவ எண்ணி நடத்தலே ஆன்மிகம் பெரில்லாப்பைக் கைவிட்டுப்போம்.
வெண்பா எனப்போட்டு விட்டிருந்தால் அப்பிழையை நண்பரில் நலக்குறைவை நாவnர - பண்பார் பெரியர் பகர்வnர்கள் பேதை - அது’ பாடும்
உரியர் உரியரன்றென் றோர்.
சின்னப் பொடியள் சிலவேளை கால் சறுக்கும் பொன்ண்ைணை கொஞ்சம்பொறு
حے افتتاح ہے
உள்நாடு தனிப்பிரதி ரூபா 30/- ஆண்டுச் சந்தா ரூபா 360/= 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/= 3 ஆண்டுச் சந்தா ரூபா 1000/= ஆயுள் சந்தா ரூபா 15000/-
சந்தா காசோலை மூலமாகவோ மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள்
அதனை வெள்ளவத்தை தபால்
"ஞானம்" சந்தா விபரம்
நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran
3-B, 46" Lane, Colombo - 06.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$ ஆயுள் சந்தா 300 USS
ød nærib – pGlatbust 2004,
37

Page 21
இலக்கியத்தின் மொழி
உளப்பகுப்பு அணுகுமுறை மற்றும் மார்க்சிய அணுகுமுறை ஆகியவற்றின் வளர்ச்சி இலக்கிய ஆக்கத்துக்குரிய மொழிக்கட்டமைப்பின் மீது மாற்று வகையான புலக் காட்சிகளை ஏற்படுத்தின. உளப்பகுப்பு ஆய்வு முறை இலக்கிய மொழியை நனவிலி மனத்துடன் தொடர்புபடுத்தி நோக்குகின்றது. மார்க்சிய ஆய்வுகள் சமூக உளவியலுடன் தொடர்புபடுத்தி இலக்கிய ஆக்கத்திற்குரிய மொழியை விளக்குகின்றன.
இலக்கிய ஆக்கத்திற்குரிய மொழி பற்றிய ஆய்வின் நவீன புலக்காட்சியை ஏற்படுத்தியவர்களுள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பேர்டினட் டி சசூர் (1857 - 1913) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். இலக்கிய ஆக்க நோக்கில் அவர் மொழிப் பண்பினை மொழியம் (Langue) என்றும் குறித்தியம்பல் (Parole) என்றும் வகைப்படுத்தினார். மொழியின் கூட்டு மொத்தமான பண்பை 'மொழியம்' என்ற எண்ணக்கரு புலப்படுத்தும். குறிக்கப்பட்ட மொழி சார்ந்த செயற்பாட்டினை மேற்கொள்ளுதல், “குறித்தியம்பல்” எனப்படும். இலக்கிய ஆக்கம் இவ்வாறான குறித்தியம்பல் வகையைச் சார்ந்ததாகக் கருதப்படுகின்றது. இவ்வாறாக இலக்கிய மொழி என்ற தனிப் பிரிவை எடுத்தாள முயற்சித்தல் மொழியை நியம நிலையில் அல்லது அமைப்புச் சார்ந்த நிலையில் விளக்கும் ஒரு நடவடிக்கையாக இருப்பதுடன் மொழியாக்கத்தின் வரலாற்று அழுத்தங்களைப் புறந்தள்ளி விடுகின்றது.
சசூரின் விளக்கங்களிலே பல மட்டுப்பாடுகள் இருந்தாலும், பொது மொழியிலிருந்து இலக்கிய மொழி எவ்வாறு வேறுபடுகின்றது என்பதைப் பற்றிய ஆய்வுகளுக்கு அவரது சிந்தனைகள் தூண்டுதல்களைத் தந்தன. ரூசியாவில் முகிழ்ந்தெழுந்த கலைக் கோட்பாடகிய உருவரன் முறையியல் (FORMALSM) இலக்கிய மொழிக் கட்டமைப்பின் மீது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தியது. இந்த மரபில் வளர்ந்த சிக்லோவ்ஸ்கி (SHKLOVSKY) அவர்கள் இலக்கிய மொழிப் பழக்கக் குலைப்பின் (DEFAMILIARIZATION) வழியாக எழுகின்றது என்ற கருத்தை முன் வைத்தார்.
பொதுவான மொழிப் பாங்கிலிருந்து இலக்கிய மொழி ஏதோ ஒரு வகையில் வேறுபட்டதாகவும் நியமமான மொழியமைப்பின் நிலையை அது ஒரு வகையிலே தளர்த்தி விடுவதாகவும் குறிப்பிட்டார். இந் நிலையில் இலக்கிய மொழி விநோதமான மொழியாகி விடுகின்றது. ஒரு பொருள் அல்லது செயலின் கலைப் பாங்கினை அனுபவிக்கச் செய்தலே இலக்கிய மொழியில் முக்கியத்துவப் படுத்தப்படுகின்றது.
மேற்குறித்த கருத்து எல்லா இலக்கியங்களுக்கும் பொருத்தமானதன்று. ஆனால் இலக்கியப் பரிசோதனைகளின் பொழுது அத்தகைய “மெர்ழி விநோத மயமாக்கல்’ ஏற்புடையதாக விளங்குகின்றது. ஆனாலும் இலக்கிய மொழி தொடர்பான பழக்கக் குலைப்பு அல்லது பழக்கமின்மைக் கருத்துக்கள் கலையாக்கங்களை
38 ஞானம் - நவெம்பர் 2004

மேற்கொள்பவர்களுக்கு 66T6T காட்சிகளை ஏற்படுத்தின. (இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது எனது அருகில் இருந்த நண்பர் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா அவர்கள் பாரதியாரின் 'அக்கினிக் குஞ்சு” என்ற தொடர் மொழியின் பழக்கக் குலைப்புக்கு நல்லதோர் உதாரணம் என்று சுட்டிக் காட்டினார்.
இலக்கிய மொழியின் பழக்கக் குலைப்பைத் தமது அரங்க ஆட்சியிலே
பயன்படுத்திய பிறெச்ற அவர்கள் அதனை
விளக்குவதற்கு “அந்நியமாதல் விளைவு” என்ற தொடரைப் பயன் படுத்தினார். அரங்கச் செயற்பாடுகளை பாரம்பரியமான நிலைகளில் இருந்து வேறுபடுத்தி வித்தியாசமான முறையிலே தரிசிப்பதற்கு "அந் நியமாதல்” விளைவு உபாயத்தை அவர் பயன் படுத்தினார். நடிகர்கள் தாம் ஏற்ற பாத்திர
நிலைகளில் இருந்து தூர விலகி நிற்பதன்
வாயிலான விமர்சனத்தெறிப்புக்களை அவர் மேடையிலே எற்படுத்தினார்.
வெவ்வேறு வகையிலே புலக் காட்சிகளை ஏற்படுத்துவதற்கும், உரை யாடல்களை முன்னெடுப்பதற்கும், கருத்துப் புலப்பாடுகளை உருவாக்குவதற்கும்
மொழியின் பழக்கமற்ற பிரயோகங்கள்
வழியமைத்துக் கொடுத்தன.
இலக்கிய மொழி தொடர்பான
ஆய்வுகளில் பக்தின் அல்லது வொலொ சினோ என்பவரது கருத்துக்களும் முக்கியமானவை. மொழி என்பது பல்துறை இயக்கமும் பலநிலைச் செயற்பாடுகளும் கொண்டது என்று அவர் விபரித்தார். மொழியமைப்பில் ஒரே வித கருத்தைப் புலப்படுத்தும் மையத்தை நோக்கிய விசையும் பன்மை இயல்புகளை ருவாக்கும் மைய நீக்க விசையும்
(oom agor ub - p GlamJdb Uñir 2004 v,
மோதிக் கொள்ளுகின்றன என அவர் மேலும் விபரித்தார். இந்த மோதலின் விளைவாக மொழியாள்கை பல்வேறு புதிய வடிவங்களையும், மாற்று வடிவங்களையும் எடுத்து மேலெழுகின்ற தென அவர் கருதினார். இவ்வாறானா பன்முகச் சொல்லியம் (HETERO GLLOSIA) என்ற பண்பு இலக்கிய ஆக்கத்துக்கு வலுவாகவும், வளமாகவும் அமைந்து விடுகின்றது.
இலக்கிய ஆக்கத்துக்குரிய மொழி பற்றி விளக்க வந்த ஜக்கோப்சன் உளநலம் பாதிக்கப்பட்டு விலகல் நடத்தை கொண்டோரின் மொழி பற்றி ஆராயலானார். சிறப்பாக அப்பாசியா (APHASIA) என்ற பேச்சுக் குழப்பமுடைய உள நோயாளர்களை அவர் ஆய்வுக்கு உட்பட்டுத்தினார். இவற்றின் அடிப் படையில் உருவகம் (METAPHOR) 9 (56u5 6Srf6 (METONYMY) 6T6örp இரண்டு எண்ணக்கருக்களை அவர் இவற்றை உதா ரணங்கள் வாயிலாகப் பின்வருமாறு விளக்கலாம். அரசனை முடி’ என்று குறிப்பிடுதல் உருவக விரிவுக்கு உதாரணம். “வீட்டு முற்றத்தில் வெண் பஞ்சுக் கோலமிட்டாள்’ என்ற கோலமிடும் வெள்ளை மா பருத்திப் பஞ்சுடன் இணைக்கப் பட்டுள்ளது. இது உருவகவிரிவு.
உள நலம் குன்றிப் பேச்சுக் குலைவு கொண்டோரின் மொழியில் இரண்டு
விளக்கலானார்.
வகையான இயல்புகளை அவர் இனங்கண்டார். அவையாவன : (1). Lé, (560606) (SIMILARITY
DISORDER) உதாரணமாக அவர்கள் கத்தி என்பதற்கு ஒப்புமையாக முள்ளுக் கரண்டியைக் குறிப் பிட்டார்கள்.
30

Page 22
(2). 96ooT60)Lné, (56psu6 (CONTIGUITY DISORDER) பேச்சிற் பயன்படுத்தும் வாக்கியங்களுக்கிடையே ஒழுங்குக் குலைவு காணப்படல். உதாரணம் : புத்தகம், காற்று, தேன், பூசிய ரொட்டித் துண்டு, இருமல்.
இலக்கிய ஆக்கங்களுக்குரிய மொழி யில் மேற்கூறிய பண்புகள் இழையோடி நிற்றலும் அவதானிக்கப் பட்டுள்ளது.
இலக்கிய மொழியில் ஒருவித புத்தாக்கப் பண்பு மேலோங்குதல் உண்டு. இந்தப் புத்தாக்கச்செயல் முறையைப் புரிவதில் உருவகங்கள் சிறப்பார்ந்த செயல்களைப் புரிகின்றன. மொழியில் மேற்கொள்ளப்படும் மகிழ்ச்சி தரும் தந்திரோபாயமே உருவகம் என்று கொள்ளப்படும். மொழி கலை மயப்படும் பொழுது உருவகங்கள் பிறப்பெடுக் கின்றன. உருவங்கள் மொழியின் எண்ணக் கருக்களை மீள் பரிசீல னைக்கு உட்படுத்துகின்றன.
இரண்டு எண்ணக் கருக்களின் இடைவினைகளால் உருவாக்கப்படும் உருவகமானது ஒரு சொல்லால் அல்லது தொடரால் வெளியிடப்பட்டு நிற்கின்றது. இந்த இடைவினைச் செயல், கலை யாக்கத்துக்கு மெருகுதருகின்றது. இருநிலை எண்ணக் கருக்கள் சங்கமமாகும் பொழுது புதிய புலக் காட்சிக்கு இட்டுச் செல்கின்றது. இந்தப் புதிய புலக்காட்சி நடையியலை வளம்படுத்தவும் துணை செய்கின்றது. உளவியலடிப் படையில் நோக்கும்பொழுது உருவகம் "இணைந்த வரவுச் சிந்தனைக்கு” CO-PRESENT THOUGHTS) glt (Slij Glasi 6ид)та, брih அமைகின்றது. இரண்டு எண்ணக் கருக்களின் இடைவினைகளின் சங்கமத்தால் உருவாகும் சிந்தனையே இணைந்த வரவுச் சிந்தனையாகும். இணைந்த கருத்துக்களை உள்ளடக்கியும்,
40
இணையாத பொருளை மெளனமாக்கியும் நிற்கும் ஆற்றல் உருவகங்களுக்கு உண்டு மனிதரது சிந்தனைப் போக்கின் கலை வடிவப் பரிணாமமாகத் தோன்றிய உருவகம், மனோரதியப் பாங்கான கலையாக்க வளர்ச்சிக்கு உறுதுணையான மொழி அலகாக அமைந்தது. சமூக நோக்கிலே பார்க்கும்பொழுது இரு பொருள்களை ஒன்றிணைத்துப் புதிய பொருளாகவும், புதிய காட்சியாகவும் உருவாக்கும் செயல் முறையிலிருந்து உருவக ஆக்கம் தோன்றியிருத்தல் வேண்டும். இதற்குச் சமாந்தரமாக இரு எண்களை ஒன் றிணைத்து இரு எண்களினதும் பண்பு களையும் நழுவ விடாது புதிய எண்களை உருவாக்கும் செயல் வளரலாயிற்று
உவமையும் உருவகமும் கற்பனையின் வெளிப்பாடுகளாகின்றன. அனுபவங் களிலே ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து கற்பனைகள் எழுகின்றன. வாழ்நிலை சார்ந்த முரண்பாடுகள் மொழியில் நெருக்குவாரங்களை ஏற்படுத்த அவற்றி லிருந்த விடுபடும் உபாயமாகக் கற்பனை வளர்ச்சியடைகின்றது. கற்பனை என்பது ஒருவித மாயவித்தை நடவடிக்கை. இந்த வித்தைக்குரிய அறிகை அலகுகள் மொழியிலிருந்து கிடைக்கப்பெறுகின்றன. கற்பனையின்போது பழக்கப்பட்ட பொருள் களை பழக்கமற்ற நிலையை நோக்கி நகர்த்துவதற்கு மொழி துணை நிற்கின்றது. தனக்கென உரிய பல்வேறு சிறப்புக் களை மொழி கொண்டிருந்தாலும் அது தனக்குரிய மட்டுப் பாட்டினையும் புலப்படுத்திக் கொண்டிருக்கும் "கண்டவர் விண்டிலர்.” என்ற தொடர் தமிழ் மரபில் இந்த மட்டுப்பாட்டை அறிந்தமையைப் புலப்படுத்தும் மொழி பற்றிய இந்த மட்டுப்பாட்டின் அறிவு கலையாக்கத்துக்கு விசை தருகின்றது. O
ஞானம் - நவெம்பர் 2004

ஆ. குணநாதன், பத்தாங் பெர்சுந்தை
Dessay DL 6
மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் இலக்கியப் பணி
மலேசியாவின் மூத்த பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவரும் தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
மலேசியாவில் பல அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் இருந்த போதிலும், கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே தமிழ்ப்பேரவை' இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1986ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பேரவை, இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவோடு சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மேலும் வெற்றி பெற்ற சிறுகதைகளை நூல் வடிவில் வெளியிட்டும் வருகிறது.
1999 ஆம் ஆண்டு முதல் உயர்கல்விக்கூட மாணவர்களுக்குத் தனியே போட்டி நடத்தி, வளரும் எழுத்தாளர்களைத் தமிழ்ப்பேரவை ஊக்குவித்து வருகிறது.
பொதுப்பிரிவில் 12 சிறுகதைகளும், மாணவர் பிரிவில் 10 சிறுகதைகளும் தெரிவு செய்யப்பட்டு பேரவைக் கதைகள் - 19' எனும் பெயரில் தொகுப்பாக வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவில் 2000 வெள்ளி முதற் பரிசை மு. அன்புச் செல்வனும், 1500 வெள்ளி இரண்டாம் பரிசை வ. முனியனும், 1000 வெள்ளி மூன்றாவது பரிசை நிலாவண்ணனும் பெற்றனர். மேலும் 9 எழுத்தாளர்களுக்கு தலா 200 வெள்ளி ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுப்பிரிவிற்கும், மாணவர் பிரிவிற்கும் சேர்த்து மொத்தம் 8000 மலேசிய வெள்ளி பரிசாக வழங்கி தமிழ்ப் பேரவை சாதனை புரிந்தது. பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு மலேசிய பொதுப்பணி அமைச்சர் மாண்புமிகு டத்தோழரீ ச. சாமிவேலு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆற்றும் பணி பாராட்டுக்குரியது; 19 ஆண்டுகளாக விடாமல் நீண்ட காலத்திற்கு நடத்தப்படும் இலக்கியப் போட்டி இதுதான்.
மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் இலக்கியப் பணியைப் பாராட்டி ாண்புமிகு அமைச்சர் டத்தோழரீ ச. சாமிவேலு ரிங் 2000 நன்கொடையாக வழங்கினார்.
barb - p Glaubuf 2004 . 4.

Page 23
இலங்கை வானொலிதமிழ்த்தேசிய சேவைக்கு ஒரு இரங்கற்பா/ஒப்பாரி
நாடகம் கேட்கவென்று நேரத்தில் முறுக்கினேனே! பாடையில் போற பெட்டி பதிலேதும் கூறவில்லை ஆரிடம் சொல்வேைென்று அன்பரைக் கேட்ட போது கூறினார் செய்தி உன்னைக் கொன்றனர் என்பதாக
நட்சத்திரமாயுன்னை நாமிருத்திப் பார்க்கையிலே பொட்டைச் சித்திரமாய் மெலிந்து பேnயழிந்த மாயமென்ன? கான்சரோ கசமோ உந்தன் கழுத்தினை நெறித்த தம்மா வீண்செல வென்றோ முந்தி வீரியம் தறிக்கலானnறி
தேசிய சேவை யென்று தோள் நிமிர்ந்த காலமெல்லாம் பேசிய பேச்சு வெள்ளம் பொய்யாகிப் போன தென்ன? மாதா என இருந்தீர் மண்ணுலகின் தமிழ் ஒலிக்கும் போதாத காலமன்றோ பிச்சை கேட்கும் விதியாச்சு
உருத்திரர் வந்து மென்,ை ஊழியமும் புரிந்து மென்ன; பருத்திருந்த உன் சிறப்பு பஞ்சாகிப் போன தென்ன? இரவல் தாய் வளர்ப்பு என்றால் இப்படித்தானே துன்பம். பொறுமைக்கும் எல்லையென்றோ பாசாணம் குடித்து மாண்டnய்
42
பட்டனத்தடிகள் செய்தியேயானால் என்ன சோகமாய் இழவு சொல்லும் செய்தியும் நீசொன்னால்தாே செவிகளுக்கேறுமென்பறி உய்யஆர் விட்டார் கண்ணே உன்னையும் வெட்டி வீழ்த்தி செய்ததும் சரியோ தாயே செந்தமிழும்பெறுக்குமாமே
விடியும் வேளை தோறும் வாலாட்டிக் குறைத்து மென்ன முடியும் காலம் வந்துன் கோள்மூட்டிக்காரரோடும் கைகோர்த்துத் தமிழ் பரப்பி ஆள்காட்டிக் கொடுத்ததனை ஆற்றாமல் தறித்தனரே
காசுகள் கொடுத்துப்பதித்த கலையுருப்படிகள் எல்லாம் தூசுகள் பட்டுத்தெறித்தறுந்து தாசியர் வீடnய்ப்போவதென்ன? எழுதுவார் எழுதவும் நடிப்பை ஆற்றுவர் கதைக்கவும் என்று கழுவிய வயிறுகள் எல்லாம் காய்ந்திடக் காலமுமnமோ?
அறுபதைக் கடந்த பின்பு அறளையும் பெயர்ந்த தாமேn பெரும்வதைபுரிந்தார் உன்னைப் படுகொலை செய்தார் ஏைேn அமரசிங்கத்தார் ஆண்டும் சலித்ததோ ஏழைப்பாண்டம்? அமரnய்ப் போனிர் தாயே ஆற்றுவோம்எழுநாள் அதற்காய்
ஞானம் - நவெம்பர் 2004

மெல்லத் தழுவியது சீதளத் தென்றல். யன்னலுக் U ୭1] கப்பால் தூரத்து வாகை لات |
மரத்தை நோக்கியிருந்தாள்
சித்திரா. அது கிளைகளை
அகல விரித்திருந்தது. அதன்
வயது பற்றி அவள் அறிந்தாளில்லை. எனினும் சின்னப் பெண்ணாய் அவள் ஒடித் திரிந்த பருவத்திலேயே வாகைமரம் அவளுக்குச் சினேகமாய் இருந்தது. சின்னஞ்சிறு இலைகள் சுமந்த கிளை களை அசைத்தசைத்துச் சிரிக்கின்ற அதன் அழகு அவளுக்கு மிகப்பிடிக்கும். காய் தாங்கிய பொழுதுகளில் காற்றோடு இசைந்து கிலுங்கும் அதன் இன்னமும் மிருதுவாய் அவள் மனதில் வசித்து வருகிறது. இவ்வாறான அழகுகளை வளர்ந்த பின்னரே வகைபிரித்தறிய முடிந்திருப்பினும்கூட மிகச் சிறு வயதி லேயே வாகை மரத்தடி அவளது குதிப்புக்களால் நிறைந் திருந்தது. அப்போது அவன் இருந்தான். அவளது உலகில் சினேகிக்கத்தக்க சகல இயல்புகளுமுடைய அவன் அவளைவிட
ustL6)
மூன்று வயது பெரியவனாக இருந்தான். அவள் வீட்டிலிருந்து நான்காவது வீட்டில் வசிப்பினும் அயல்வீட்டுப் பையனை விட அவளது மனங்கவர்ந்தவனாக இருந்தான். அவனது பெயர் சிவா என இருந்ததற்கான சந்தோஷத்தை ஏனோ அவளது பருவ வயதுகளில் உணர்ந்தாள். வாகை மரத்தோடு அவன் பிரிக்க முடியாது இணைந்திருப்பதாகத் தோன்றியது. அம்மரத்திலிருந்து கண் களை விலக்கி தன் முன்பாகக் கிடந்த முடிக்கப்படாத கவிதையில் படர்த்தினாள்.
quộm nurtb - bQì outbuử 2004
த. சாரங்கா
உதிரிலைகளில் உரசி மோதுகிறது என் மசுை உற்சாகம் தொலைத்து வதிவிடமற்ற ஒரு நாடோடியாய் உரிமை கொள்ளப்பட்ட ஒட்டகமாய் அலைகிறது அது முன்பொருநாள் குதிரைகளாய்க் குதித்திருந்த என் கனவுகள் இன்று கடிவாளத் தேவையற்று மெல்லக் கால்பெயர்ப்பதால் கழுதைகள் ஆயின.
அவளது விரல்களில் வழிந்த வரிகள் தான். ஏனோ வாசிக்கும்போது விழிகளை ஈரமாக்கின.
"சித்திரா . அம்மாவின் குரல் நினைவிழையைக் குறுக்கறுத்தது.
"ஒமோம். வாறன் அம்மா.” சொன்னபடியே எழுந்து போனாள் அவள். சமையலறையில் வேலை முடித்து வெளிவிறாந்தையில் இருந்தாள் அம்மா.
s
சித்திரா அருகில் அமர்ந்தாள். இன்னும்
அப்பா வந்திருக்கவில்லை. தம்பியும் தங்கைகளும் கூட வீட்டில் இல்லை. வெளியே படிக்கப் போயிருக்க வேண்டும். "உனக்கு முழுச்சம்மதமோபிள்ளை?-” அவள் அகன்ற விழிகளை மலர்த்தி அம்மாவைப் பார்த்தாள். அக்கணத் திலேயே தாயின் சின்ன விழிகளில் மகளின் ஆமோதிப்புக்கான ஏக்கம் நிரவியிருந்ததைக் காண்பாள்.
43

Page 24
தாய் மகளை உற்றுப் பார்த்தபோது அழகான பொன்மஞ்சள் நெற்றியின் கீழ் மலர்ந்திருந்த கதை பேசும் கண்கள் இப்போது எதையும் பேசாதிருந்தன. சிவந்த உதடுகள் துடிப்பதை மறைப் பதற்காக அவள் பேசினாள்.
“வேறை வழியும் இல்லைத்தானே அம்மா .”
“ம். ஏதோ இருக்கிறதை வைச்சு உன்ரை வழியைப் பார்த்திட்டா மனதுக்கு நிம்மதி.”
தாய் சொல்லும் வழி தங்கை களுக்கும் தம்பிக்குமான கிளை வழிகளையும் கொண்டிருப்பதான தாயின் நம்பிக்கையை இவள் அறிவாள்.
‘உன்னைவிடப் பதினைந்து வயதுதான் கூடவாம். நல்லாய் உழைச்சுச் சேர்த்த ஆளாம். உன்னை வசதியாய் வைச்சிருப்பார்.”
அவளின் பதிலை எதிர்பார்க்காது தொடர்ந்து சொல்லிக் கொண் டிருந்தாள் தாய்.
“காசு குடுத்துக் கட்டுறதெண்டா நினைச்சுப் பார்க்கேலாதம்மா. அவருக்கு உன்ரை வடிவு பிடிச்சுக் கொண்டுதாம். உனக்கும் வயது ஏறுது பிள்ளை. தங்கச்சியவையும் வளர்ந்திட்டுதுகள். உண்மைதான். அதற்காகக் காலத்தை
99 a
ല്ല
参
. سمحس۔محمبر
م އާކި
என்ன கயிறு கொண்டா கட்டிவிட
முடியும்? அது சாத்தியமாகி இருந்தால் சின்னச் சிறுமியாய் ஒடித்திரிந்த காலத்தை கட்டி வைத்திருக்கலாம் என்ற நினைப்பு மனதில் ஒடி அவளது முகத்திலை மலர்வு பூசிற்று. அச்சிறு மலர்வு தாயின் மனத்தை மகிழ்விப்பதை உணர்ந்தாள்.
44
ހ.
ރާ
シイ
سست
அம்மாவும் தான் என்ன செய்வாள்? அப்பாவுக்கு வாழ்க்கைப்பட்ட பிறகு மூன்று பெண்குழந்தைகளையும் ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையையும் வெளியே தெரியாமல் வறுமையையும் தள்ளிக் கொண்டிருந்தது தவிர வேறெதும் இல்லை அவள் வாழ்வில். அப்பா குடியோடு குடித்தனம் நடத்தக் கூடியவராய் இருந்தார். எதிர்த்து வாய்பேசாத அம்மாவால் அப்பாவுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதில்லை. இரவில் குடும்பப் பொறுப்புக்களை, வீட்டைவிட்டு நான்கு வருடங்களின் முன் விலகிய தங்கை துர்க்காவை நினைத்து விசித்தழுகின்ற அம்மாவை மெல்லிருட்டிலும் உறுத்துப் பார்த்து அடக்கவல்லவர் அப்பா.
*دور
۔۔۔۔
a
އި
ஞானம் - நவெம்பர் 2004
 
 
 
 
 

வெளியே செருப்புச் சத்தம் கேட்டது. அப்பா வந்திருக்க வேண்டும்.
“என்னைத் தேடி ஆரும் வந்தவையோ? .”
வழமையான கேள்வியோடு
உள்நுழைந்தார் அப்பா. அம்மா எழுந்து போனாள்.
அவள் மீண்டும் யன்னலோரக் கதிரைக்கு வந்து அமர்ந்தாள். பார்வை வாகை மரத்தை நோக்கித் தாவிற்று. அந்த மரத்தின் கீழ் நினைவுப் படத்திலான இருவர் விரிந்தார்கள். சிவப்புச் சிறுபூக்கள் சிதறிய பாவாடைச் சிறுமியாய் அவள் நின்று கொண் டிருக்கிறாள்.
“வேண்டாம் .வேண்டாம் சிவா." சிவா வேகமாக மரத்தின் மீது ஏறிக் கொண்டிருக்கிறான். கிளைக்கு கிளை விரைவாய் மாறுகின்ற அவனுக்கு அவளது பதட்டம் வேடிக்கையாக இருந்தது. "கொண்டு வந்தாலும் நான் பார்க்க மாட்டன். நான் போறன். இந்தா போய்க் கொண்டிருக்கிறன்.”
அவள் போவதுபோல போக்குக் காட்டிய பொழுதில் அவன் உரத்துக் கத்தினான்.
“சித்திரா. கண்டிட்டன். சித்திரா. மெல்லமாய்ப் பிடிச்சிட்டாச் சரி.” வேறென்ன பொன்வண்டு வேட்டைதான். கிளையொன்றின் பசுஞ்சிற்றிலைகளுள் பாதி மறைந்திருந்த பொன்வண்டு அகப்பட்டு விட்டது. மிருதுவாய் ஒரு குழந்தையைத் தூக்கும் கவனத்தோடு அதை எடுத்து சிறு பெட்டியுள் வைத்தான் அவன். மெல்ல இறங்கினான். அவளது இதயம் மிக வேகமாய்த் துடிக்கத் தொடங்கியது.
ஞானம் - நவெம்பர் 2004
“சிவா பொன்வண்டு பிடிச்சிட் டானடா. டோய்.”
வேறொரு சிறுவனின் குரலில் சிறுவர் கூட்டம் திரண்டு விட்டது.
வியப்பில் 6il fuqh அவளது விழிகளைப் பெருமிதமாய்ப் பார்த்தபடி பெட்டியைத் திறக்கிறான் அவன். மரகதப் பொன் வர்ணத்தில் பொன்வண்டு மினுங்கியது. அபரிமிதமான தன் அழகில் அவளை வாயடைக்கச் செய்தது. சில நாட்களின் முன் இவளது சினேகிதி கீதா அவளது அண்ணன் பொன்வண்டு கொண்டு வந்து தந்ததாகச் சொல்ல அதையே விளையாடும்போது சிவாவிடம் சொல்லியிருந்தாள். அன்றிலிருந்து பொன்வண்டுத் தேடல்தான். இப்போது தான் கிடைத்திருந்தது.
உள்ளே வாகைத் தளிர்கள் மீது உல்லாசமாய் உட்கார்ந்திருந்தது பொன் வண்டு. தான் சிறைப்பிடிக்கப் பட்டதை உணராமல் அத்தளிரிலைகளில் நளினமாய் நடைபயின்றது. சற்று நேரம் உற்றுப் பார்த்தால் அதன் பொருளற்ற அசைவு வேடிக்கைக்குரியதாக இருக்கும். சற்றகன்ற அச்சிறுபெட்டி பறத்தலுக்கு எத்தனிக்க முடியாது, கட்டுப்படுத்தப்பட்ட அதனது உலகம் என்பதை அது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. “பாவம். என்ன.” அவள் சொன்னாள். “பாவம் எண்டா தாங்கோவன் நான் வளர்க்கிறன்.”
பாலாதான் சொன்னான். அவள் ஏதும் பேசாதிருந்தாள். சிவா ஒருமுறை பாலாவை முறைத்துப் பார்த்தான்.
“நிறமீன் தரலாம். தாடா இதை . மீண்டும் பாலா கேட்டான்.
என்னட்டைத்
4.

Page 25
“போடா.” அவர்கள் போன பிறகும் அவர்கள் பொன்வண்டைப் பார்த்துக் கொண் டிருந்தார்கள்.
"பாவம்.” அவள் இரங்கினாள். “வடிவாய் இருக்கிறது ஆபத்தாய்ப் போச்சுது. என்ன?”
அவள் ஏதும் சொல்லாதிருந்தாள். “பார்த்திட்டியா? திரும்பக் கொண்டு போய் விடப்போறன்.”
“ggir?” “சுதந்திரமாய் இருக்கட்டுமன்.” இப்பிடித்தான். சிலசமயம் விளங் காதபடி பேசி தன் பெரிய மனுஷத் தனத்தைக் காட்டுவான் சிவா. சிறிது நேரத்தின் பின் அந்தப் பெட்டியோடு மரத்தில் தாவி ஏறினான். மெல்ல அந்தப் பொன்வண்டினை அடர்த்தியான கிளைகளுக்கிடையில் வைத்துவிட்டு இறங்கிவரும் அவன் அவளது மனதில் அன்பின் முழு உருவமாகப் பதிந்து போனான். இப்படி எத்தனையோ சம்பவங்கள் அவனை மனதுக்கு இனியவனாகச் செய்தன.
அவள் வயதுக்கு வந்தபிறகு முன்பு போலச் சிவாவுடன் பழக முடியவில்லை. சில பொழுதில் வீதியில் எதிரும் புதிருமாகச் சந்தித்துக் கொண்டால் மனத்துமகிழ்வு முழுவதும் முகத்தில் ஒளிர அவளைப் பார்த்துச் சிரிப்பான். அவளும் மெல்லப் புன்னகைத்துவிட்டு வேகமாய் விலகிவிடுவாள். ஆண் பிள்ளைகளுடன் சினேகம் வைத்துக் கொள்வது அவளது அப்பாவுக்குப் பிடிக்காது. ஒருமுறை ஆண்டிறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டதைச் சொல் வதற்காக வீதியில் வைத்து இவளுடன்
46
கதைத்ததற்காகக் கண்ணனின் கன்னத்தில் அறைந்தவர் இவளது தந்தை.
சிவாவின் மூத்தசகோதரி சாதிதவறி மணமுடித்தபிறகு நிலைமை இன்னும் சிக்கலாகிப் போயிற்று. நடுத்தரவயது தாண்டிய அப்பெண்ணின் வாழ்வுக்கு வழி சொல்லமுடியாத சமூகத்தின் வாயில் அக்கதை அவலாகிற்று. சிவா தலை குனிந்து நடந்தான். அவனுடன் ஆறுதலாய்ச் சிலவார்த்தைகள் கதைக்க மனம் விரும்பினாலும் அவள் அதைச் செய்யவில்லை.
சின்னவயது நிகழ்வுகளை தங்கத் துகள்களாய் அவள் தன்னிதயத்தில் சேமித்துள்ளதை அவன் அறிவானோ என்னமோ? அவளுள்ளே யாரும் அறியாமல் 'மலர்ந்த இதய அன்பு முற்றுமாய்க் கருகுமோ? அவள் மனதில் அதிகமாய் உலவிய ஆண்மகன் அவன் எனினும் அதை ஒரு சிறு கண்ணசைவில் கூடச் சுட்டியதில்லை அவள். அது அவளது தங்கைகளின் வாழ்வையும் பாதிக்கும் என்பதை அவள் அறிவாள். ஆகக் குழந்தை அன்பிலிருந்து முகிழ்த்த இதய அன்பு மெளனமாய் அவள் இதயத்தினுள்ளேயே நடமாடி வந்தது. யாருமறியாத அதனது சந்தம் அவளது இதயத் துடிப்போடு கலந்திருந்தது. பின்னர் அவன் கொழும்பு மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பிறகு அவனைப் பற்றிய செய்தி எதுவுமே கிடைக்கவில்லை.
ஆனாலும் அவன் தனது அழகிய மனச்சிமிழை ஒருநாள் இவளிடம் திறந்தான். ஒரு மென் மாலைப் பொழுதில் வீதிவழி நடந்து வந்த இவள் யாரோ அழைப்பதாய் உணர்ந்து
ஞானம் - நவெம்பர் 2004

சடுதியாய்த் திரும்பினாள். சிவாதான் நின்றான். உடல் முழுதும் பதட்டம் பரவியது. எத்தனை காலங்களின் பின் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறான் அவன். “என்ன?”கேள்வி அவளுக்கே கேளாமல் தொண்டைக்குள் முடங்கியது.
“சின்ன வயசிலை நாங்கள் சேர்ந்திருந்தம், இனியும் அதை நான் கேக்கலாமா?”
அவள் மெளனமாய் அவனைப் பார்த்து விட்டு எதுவும் பேசாது திரும்பி நடந்தாள்.
“சித்திரா. உனக்கும் விருப்பம்
எண்டா அதைச் சொல்லக்கூட வேண்டாம். நாளைக்கு அந்த வாகை மரத்தடியாலை நடந்து போனாக் காணும் பிறகு காலம் வரக் கதைப்பம்.”
அவனது தணிந்த குரல் அவனைத் துரத்தியது. அவள் வேகமாக நடந்தாள். அப்பா வரும் நேரம் அது.
மறுநாள் அவள் அந்த மரத்தடிப் பக்கமே போகவில்லை. மனம் அங்கேயே வசித்துக் கொண்டிருந்த போதிலும் மரபின் வழிப்பட்ட அவளது உடல் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண் டிருந்தது. பின்வந்த எந்த நாளிலும் அவனை அவள் எதிர் கொண்டதில்லை. படிப்பு முடிந்த பின் மருத்துவ சேவைக்கே அவன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக அறிந்தாள். போரும் வறுமையும் நிறைந்த மண்ணில் அவனது வாழ்வு ஒன்றிப் போனது. அவளது வாழ்வும் தட்டெழுத்துக்களுடன் தட தடக்கப் பழகிக் கொண்டு விட்டது. மாற்றமற்ற ஒரே போக்கிலமைந்த வாழ்வுக்கு அவன் இசைவாகிக் கொண்டு விட்டாள்.
அருவியாய்ப் பாய்ந்தோடிய அவளது
ஆனாலும் முன்பெல்லாம்
ரூானம் - நவெம்பர் 2004
வாழ்வு ஒரு குளமாகத் தேங்கிப் போனதை அவள் உணர்வாள்.
“பிள்ளைக்கும் எப்ப வேளை வரப்போகுதோ?. வயசும் முப்பதுக்கு வரப்போகுது.” எங்கு போனாலும் அவள் கேட்கத்தக்க வழமையான கேள்வி இதுவாகப் போய் விட்டது. (5 ஆண்மகனிடம் இழக்கப்படாதிருக்கிற ஒரு பெண்ணின் கன்னிமை பற்றிக் கவலைப்படுகிற சமூகம் அதற்கான வழிவகைமைகளைப் பற்றிச் சிந்திக் காதிருப்பதேன்? லட்சங்களில் தங்கள் விலைகளை நிர்ணயித்துள்ள ஆண்களின் சமூகம் காயாதுதிரும் கன்னிமலர்கள் பக்கம் தம்கண் திருப்பாததேன்? விடைகளற்ற கேள்விகளை விசிறிவிட்டு மனம் அமைதி யற்றுத் தவித்துக் கொண்டிருந்தது.
“இன்னும் ரெண்டு கிழமை தானே இருக்குது. கலியாணத்துக்கு.”
வெளியே அப்பாவின் குரல் கேட்டது. மூத்த தங்கை வருவாளோ? அவள் தனது பாதையைத் தேசத்துக்கானதெனத் தேர்ந்து வீட்டை விட்டு விலகிய பிறகு ஒரே ஒருமுறை வீட்டுக்கு வந்து போனாள். உறுதியான உடலோடு ஒளி வழியும் விழிகளோடு வந்திருந்த அவளால் மீறமுடிந்த பல சமூகத் தளைகளால் இன்னமும் தான் பிணிக்கப் பட்டதை உணரினும் கூட உணராதவள் போல வாழ்ந்தாக வேண்டும். ஒரே குடும்பத்திலிருந்து கிளைக்கத்தக்க இருவேறு பெண்முகங்களுக்கான இடைவெளி மிகநீண்டதாகவே தோன்றியது.
நியாயமான கனவுகளைக் கூட நனவுநிலைக்கும் பெயர்த்தத்தக்க துணிவின்மைக்காக அவள் தன்னையே வெறுத்தாள். ஒடிப்போய் வாகைமரத்தின்
47

Page 26
கீழ் நின்று கொள்ள வேண்டும்போல உயிர் துடித்தது. மெளனமாய் எழுந்து சென்று பெட்டிக்குள் பத்திரப் படுத்தி யிருந்த சிறு வெள்ளிச் சிமிழ் திறந்தாள். அதனுள்ளே என்றோ ஒருநாள் வாகைமரத்தடியில் இவள் கண்டெடுத் திருந்த பொன்வண்டின் ஒற்றைச் சிறகு இருந்தது. மீண்டும் மூடினாள். சொல்லவியலாத துயரம் அவள் மனதில் மோதிற்று. முடிக்கப்படாத கவிதை காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.
O O. O.
அவளது திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகி விட்டன. அவர் மிகவும் அன்பானவராய்த்தானிருந்தார். உயர்ந்து பருத்த அவரது தோற்றமும் வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகளும் அவளுக்குப் பழக்கமாகி விட்டன. திருமணத்தின் முன்பே சொல்லி யிருந்தபடி அவள் வேலையிலிருந்து விலகி விட்டாள்.
அந்த வீடு அழகியது. பெரியது. அதில் அழகுப் பொருட்களோடு ஒன்றாய் அவள் வசித்து வருகிறாள். ஒருநாள் இவளது வெள்ளிச் சிமிழ் திறந்து பொன்வண்டுச் செட்டையைப் பார்த்தார். சின்னவயது ஞாபகமாக வைத்திருப் பதாக இவள் சொன்னது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. உரத்துச் சிரித்தார். சிறுகுழந்தை என அவளைக் கருதுவது போல அருகில் வந்து ஆதரவாய் அணைத்துத் தலைவருடினார். பின்னர் நண்பர்கள் வந்தபோது அதைச் சொல்லிச் சிரிக்கவும் செய்தார்.
அந்தப் பெரிய வீட்டின் மென்னிலக் கம்பளத் தரையில் முதன் முதல் கால்பதித்து நடந்தபோது வாகைத்
48
தளிர்களில் அசைந்த பொன்வண்டின் நினைப்பு எழுந்தது. இந்த வீட்டுக்கு வந்த நாளில் முடித்திருந்த கவிதையை எடுத்துப் பார்த்தாள்.
அழகிய வாழ்வு பற்றிய கவுைகளை இழந்த பின்னும் சுவாசிக்க முடிகிறது எனக்கு இன்னும் கூட பொய்த்துள்ளேன் இன்பங்களின் உச்சியில்
வசிக்கிறேைெ.ை இப்போது பார்த்தபோது ஏனோ அதில் வெறுப்பு எழுந்தது. செயல் நிலைப்படாத கனவுகளைத் தேக்கி வைத்திருக்கும் தேவை பற்றி முதன்முதலாகக் கேள்வி எழுந்தது. மனதில் கணவரின் நினைப்பு வந்தது. ஒய்வு ஒழிச்சலற்ற வேலையுள் மூழ்கிய நடைமுறை வாழ்வு அவரது. சற்றுநேரம் அக்கவிதையையும் வெளியே எடுத்து வைத்திருந்த வெள்ளிச் சிமிழையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மனதினுள் நீண்ட கனவுலகிலிருந்து வெளிப்படுவதான பிரேமை.
“சித்திரா.” வெளியே கேட்டது.
எழுந்து வெளிப்புறமாக நடந்தாள். திறக்கப்பட்டிருந்த வெள்ளிச் சிமிழ் இப்போது வெறுமையாகக் கிடந்தது. அறைக்குள்ளிருந்த கழிவுப் பொருட் பெட்டியுள் கசங்கிய கவிதையும் ஒற்றைப் பொன்வண்டுச் செட்டையும் கிடந்தன. கம்பளத் தரையில் அவளது கால்கள் உறுதியாய்ப் படிந்தன. பொழுது வெளியே வெளித்துக் கிடந்தது.
அவரது அழைப்புக்
O
ஞானம் - நவெம்பர் 2004

எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை. மனோகிரன்
புகழ்பூத்த சிங்களத் திரைப்படக் கலைஞர் இலங்கையின் புகழ்பூத்த சிங்களத் திரைப்பட நடிகராக விளங்கியவர், காமினி பொன்சேகா. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் எனப் பல்வகையிற் சிங்களத் திரையுலகுக்குப் பங்களிப்புச் செய்தவர் அவர். சிங்களத் திரைப்படங்களில் பல சாதாரண பாத்திரங்களை அவர் ஏற்று நடித்திருந்தாலும், சில குறிப்பிடத்தக்க பாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர், அவர்.
காமினி பொன்சேகா நடித்த சருங்கலே (1979இல் வெளிவந்ததென நினைக்கிறேன்) என்ற திரைப்படத்தைப் பார்த்தபின், அவர்மீது எனது மதிப்பு உயர்ந்தது. அந்தத் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராஜா என்ற பாத்திரத்தில் காமினி பொன்சேகா நடித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சாதி வெறியுடன் நடந்து கொள்ளும் நடராஜா, தென்னிலங்கையில் சிங்கள இனவெறியர்களால் தமிழர் என்பதற்காகப் Qò பாதிக்கப்படுவதை அத்திரைப்படம் சித்தரித்தது. Ο o அத்திரைப்படத்துக்குப் பேராசிரியர் சுனில் ஆரியரட்ன கதை - வசனம் எழுதியிருந்தார். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில் சில ஆண்டுகள் அங்கிருந்த சிங்களத்துறையில் கடமையாற்றியவர். சிங்கள - தமிழ் உரையாடல்களைக் கொண்ட அத்திரைப்படத்தில் காமினி பொன்சேகா தமிழிலும் பேசி நடித்திருந்தார். அவரது தமிழ் உச்சரிப்பில் குறைகள் இருந்த போதிலும், நடராஜா என்ற பாத்திரத்தை யதார்த்தத்துக்குப் புறம்போகாத முறையில் திறம்படச் செய்திருந்தார். அப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தமை காரணமாக, குறிப்பிட்ட ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதையும் அவர் பெற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீலத்திரைக்கடல் ஒரத்திலே (1978) என்ற திரைப்படத்திலும் காமினி பொன்சேகா கதாநாயகனாக நடித்துள்ளார்.
திரைப்பட நடிகராக இருந்துகொண்டு, அரசியல் தளத்திலும் காலூன்றியவர் அவர். பொதுவாகத் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் அனுதாப உணர்வுடனேயே அவர் நடந்து கொண்டுள்ளார். சிற்சில காலகட்டங்களில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் இறக்குமதிக்கு எதிராகவும், இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவதற்கு எதிராகவும் (1978 அளவில் பைலட் பிரேம்நாத் தயாரிக்கப்பட்டபோது) எதிர்க்குரல்களை எழுப்பியும் இருக்கிறார்.
(pno)ri emor ub , ~r pbQ6QI tibuir 2004 49

Page 27
சிங்களத் திரையுலகைப் பொறுத்த வரையில், காமினி பொன்சேகாவின் மறைவு, உண்மையிலேயே ஒரு பேரிழப்பு அவரின் நினைவாகச் சிங்களத் திரையுலகம் பெறுமதிமிக்க முறையில் ஏதாவது செய்ய வேண்டும்.
சகிக்க முடியவில்லை
நமது இலங்கையிற் செயற்படு கின்ற பற்றிச் சிந்திக்கும்போது, சற்றுச் சிரிப்புத்தான் வருகிறது. குறைகள் இருந்தபோதும், இலங்கை வானொலியின் தென்றல் சற்று
வானொலிகளைப்
உற்சாகமாகச் செயற்படுகிறது. அதே வேளை, தனியார் வானொலிகளைக் கேட்டு, சிலகெட்ட பழக்கங்களையும் அது பழகி வைத்திருக்கிறது. இலங்கை வானொலியின் தேசிய சேவை தூங்கி வழிகிறது. பற்றிப் பேசவே வேண்டாம். தட்டிக் கேட்க
தனியார் வானொலிகள்
சண்டப்
தமது இஷ்டப்படி கும்மாளம் போடுகின்றன.
ஆளில்லாவிட்டால் தம்பி
பிரசண்டன் என்பதுபோல்,
ஒரு தனியார் வானொலியும் தனியார்
சக்தி' தமிழில் உச்சரிக்கத் தெரியாமல், ஷக்தி
தொலைக்காட்சியும் என்று
என்று உச்சரித்து, நமது காதுகளைக் கடும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன. இவர்கள் என்றைக்குச் சக்தி' என்று அழகாக உச்சரித்து, நாங்கள் கேட்கப்
சக்தி என்று தமிழில் அழகாக உச்சரிப்பதற்கு, இவர்களுக்குச் “சக்தி கொடு” என்று ஆண்டவனை வேண்டுவதைத் தவிர
போகிறோமோ தெரியவில்லை.
வேறு வழியில்லை.
50
தனியார் வானொலிகளில் ஏன்தான் கத்திக்குளறி அறிவிப்புச் செய்கி றார்களோ தெரியவில்லை. மனநோய் பிடித்தவர்கள் போல் பெரும்பாலும் அறிவுப்புகளைச் செய்கிறார்கள். தங்களது வானொலி
அறிவிப்பாளர்கள்
நிகழ்ச்சிகளைக் கேட்கும் நேயர்கள் செவிப்புலன் அற்றவர்கள் என இவர்கள்
தீர்மானம் எடுத்துவிட்டார்களோ தெரியவில்லை.
போதாக்குறைக்குத் தொலை
பேசிகளில் "நேயர்களோடு” அலறுவது, உளறுவது மக்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு சோதனைக் கட்டம். அப்போ தெல்லாம் தொலைபேசியைக் கண்டு பிடித்தவர் மீது அளவுக்கு அதிகமாகக் கோபம் வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் இரவுச் செய்தியைச் செவிமடுப்பதற்காக ஒரு தனியார் வானொலியைத் திருப்பினேன். செய்தி ஒலிபரப்பப்படுவதற்கு முன்னதாக ஒரு தொலைபேசி உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. படிக்கும் ஒரு சிறுமி தொலைபேசி
எட்டாம் வகுப்புப்
உரையாடலில் பங்குபற்றிக் கொண் டிருந்தார். ஆண் அறிவிப்பாளர்கள் இருவர் அந்தச் சிறுமியுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட வானொலியின்
உரையாடலின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட சிறுமி, அறிவிப் பாளர்களின் அலட்டல் களினால் சற்றுப் பொறுமையிழந்து, "நீங்கரண்டுபேரும் ஜொள்ளு விடுறீங்க” அதற்கு, அறிவிப்பாளர் இருவரும் மாறிமாறி,
என்று சொன்னார்.
ஞானம் - நவெம்பர் 2004

“ஜொள்ளு என்றால் என்ன?’ என்று அந்த எட்டாம் வகுப்புச் சிறுமியிடம் கேட்டார்கள். எத்தகைய அறிவுபூர்வமான உரையாடல்கள்! இவற்றையெல்லாம் மேலதிகாரிகள் கவனிப்பதே இல்லையா?
இப்போது இலங்கை வானொலியில் செய்தி வாசிக்கும் ஒருவருக்கு 'த் என்ற எழுத்து வாய்க்குள் நுழையவே நுழையாது. “பெளத்தமதம்” என்பதைப் “பெளதமதம்” என்று செய்தியில் வாசிப்பார். ‘சமுர்த்தி’ என்பதைச் ‘சமுர்தி’ என வாசிப்பார். குரல்வளம் இருந்தபோதும், அவர் விடும் உச்சரிப்புத் தவறுகளைச் செவிகளால்
அவரிடம்
சகிக்க முடியவில்லை. மேலதிகாரிகள் செவிகளை மூடிக் கொண்டா செயற் படுகிறார்கள்? பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வானொலியில் செய்தி வாசித்த மூத்த செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு இளைஞர் என்ற சொல்லை இருந்தது.
எப்போதும் அச்சொல்லை இளையர்
உச்சரிக்க முடியாமலே
என்றே வாசிப்பார். உச்சரிப்புச் சுத்தம் இல்லாதவர்கள் வானொலி, தொலைக் காட்சிகளில் இடம்பெறவே கூடாது.
வேடிக்கை வினோதங்கள் அண்மையில் அரசியலில் மிகச் சுவாரசியமான விடயங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. அம்பு - வில்லுப் பேரினவாதிகளுக்கும் குருக்கள் வேடப் பேரினவாதிகளுக்கும் இடையில் கடும் சர்ச்சைகள் இடம்பெறத் தொடங்கி
ஆானம் - நவெம்பர் 2004
யுள்ளன. அம்பு - வில்லுப் பேரின வாதிகள்தான் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தவர்கள். இப்போது அனுபவிக்கிறார்கள். குருக்கள் வேடப் பேரினவாதிகளுக்குத் திரை மறைவில் இருந்து அரசியல் ஆசையை ஊட்டி, உற்சாகமளித்து, ஊக்கமூட்டி அரசியல் அரங்குக்குக் கொண்டு வந்தவர்கள் அவர்களே ஆயினும், பிந்திவந்த கொம்பு முந்தி வந்த கொம்பை மறைப்பது போலவும், தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போலவும் குருக்கள் வேடப் பேரின வாதிகள் நடந்து கொள்ளத் தொடங்கி யுள்ளனர். தாங்கள் புதிதாகப் புகுந்துள்ள கூத்துக் கொட்டகையின் கதிரைகள் அவர்களை மிகவும் கவர்ந்துவிட்டன. தர்மத்தை மறந்து தொலைத்துவிட்ட அவர்களுக்கு, அரசியல் வாசனை நன்கு பிடித்துள்ளது.
எப்போதோ
குருக்கள் வேடப் பேரினவாதிகளுள் ஒருவர் நிலையும் தோன்றியுள்ளது. அந்த மகான் இவர்களின் கூத்துகளையெல்லாம் இருந்து பார்த்திருக்க ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று தாம் சொன்னதற்கு மாறாகத் தமது சிஷ்யகோடிகள் எல்லா ஆசைகளையும்
அமைச்சராகும்
வேண்டும்.
சுமந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கதறிக் கண்ணிர் வடித்திருப்பார்.
அம்பு - வில்லுப் பேரினவாதிகளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று கூறிய அந்த மகாகவியின் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.

Page 28
ഗZശ്രബശ്
~\ 4 ശത്രെബ് ബ്ര ബഗ്ഗ്ലല്ല"
മല്ലൂര് -பார்வையும் பதிவும் -
அகம் - புறம் : சமகாலக் காண்பியக் கலைக் கண்காட்சி
சேது காண்பியக் கலைக்கான கற்கைப் புலமும் தீர்த்த சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பும் இணைந்து “அகம் - புறம்” என்ற தலைப்பில் சமகாலக் காண்பியக் கலைக்காட்சி ஒன்றை செப்ரெம்பர் 5 முதல் அக்ரோபர் 5 வரை யாழ். பொதுசன நூலகத்தில் வழங்கியது. இக்காட்சியில் 60க்கு மேற்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும், தாபனப் படைப்புக்களும் வைக்கப்பட்டிருந்தன. 'அறம் பிறழ்ந்த நிகழ்காலத்தின் அர்த்தங்களைத் தேடுகிற முயற்சியே இக்கண்காட்சியின் ஒரேயொரு நோக்கம்” ஆகும். சங்ககாலத்தில் அகம் - புறம் என்பதற்குக் கொடுக்கப்பட்ட கருத்தமைப்பு இன்று கால நீட்சியில் எவ்வாறு பொருள் மாறுபட்டுக் கொள்ளப்படுகிறது என்பதை இக்காட்சி உணர்த்தியது. இது தொடர்பாக ஜெகத் வீரசிங்க, தா. சனாதனன் ஆகியோர் தமது குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கின்றனர். "இலங்கைப் பண்பாட்டின் மையமாக இருந்து வந்த அகமும் புறமும் இன்று ஒன்றின் விம்பம்தான் மற்றயது என்ற வகையில் மாற்றம் பெற்று விட்டன. வேறு வார்த்தைகளால் சொல்வதானால் அகத்தின் இருப்பும், அர்த்தமும் புறத்தில் தங்கியிருக்கிறது மட்டுமல்ல அகமே புறத்தையும் உள்ளடக் கியுள்ளது. எனவே அகத்தின் நுண்புலங்களைப் புரிந்து கொள்ள முற்படுகையில் அது புறத்தை நோக்கி எங்களை இட்டுச் செல்கிறது. புறத்தை எதிர்கொள்ளும்போது எமக்கு ஏற்படுகின்ற சஞ்சலமும் சந்தேகங்களும் அகத்தின் அர்த்தங்களை எமக்கு உணர்த்துகின்றன” சுமார் 27 க்கு மேற்பட்ட கலைஞர்களின் படைப்புகளை இக்காட்சியில் காணக்கூடியதாக இருந்தது.
இக்காட்சியின் இன்னொரு பகுதியாக “வரலாறுகளின் வரலாறு” என்பது அமைந்திருந்தது. யாழ் குடாநாட்டில் உள்ள 500 வீடுகளிலிருந்து பொருள்களைச் சேகரித்து அரும் பொருகை வடிவத்தில் அப்பொருள்கள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்தன. இப்பொருட்கள் அனைத்திற்கும் பின்னால் ஒரு அனுபவம், சோகம் கலந்த கதை எனப் பெருகும் ஒரு தளம் உள்ளது. சிதைக்கப்பட்ட பொருட்களிலிருந்து சிதைக்கப்பட்ட சமூகத்திற்கான வரலாற்று ஆக்கமாக இதனைக் கருத வேண்டும். அத்துடன் சிதைக்கப்பட்ட யாழ் நூலகத்தில் இதனை வைத்திருந்ததும் ஒட்டு மொத்தமான ஒரு அனுபவத்தைப் பெறமுடிந்தது.
52 ஞானம் - நவெம்பர் 2004
 
 
 

மெல்லிசைப் பாடல் வரிசையில் இரு ஒலி
நாடாக்கள்
லண்டன் ஈலிங் கனக துர்க்கை யம்மன் இந்து இளைஞர் பேரவை அண்மையில் வாசலில் ஒளிவீசு, சரணம் துர்க்கையே என்ற இரு ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளது. இதற்கான பாடல் களைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இலக்கியனின் இசை யமைப்பில் வெளியாகிய இப் பாடல்களை நித்தியழரீ, எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா, உன்னிக்கிருஷ்ணன்,
சுஜாதா, ஹரிணி, பூரீனிவாஸ், திப்பு, மகாநதி க்ஷோபனா, மஹதி, பிரியங்கா
ஆகியோர் பாடியுள்ளனர்.
பக்திப் பாடல்களாக இருப்பினும் இந்த மண்ணின் சோகம் கலந்த கதையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் துன்ப மீட்சிக்கான வேண்டுதலும் இசையோடு இணைந்து காணப்படுகிறது. புதுவையின் கவிதை, புரட்சிப் பாடல் முதலிய போலவே புதுவையின் பக்திப்பாடலும் ஈழத்து மெல்லிசைப் பாடல் வரிசையில் முக்கியமான இடத்தில் வைத்து எண்ணப் படுவது யாவரும் அறிந்ததே. சிறந்த சந்தங்களோடும், செறிந்த கருத்துக் களோடும் இலக்கியச் சுவையோடும்
அம்சங்களைப்
இப்பாடல்களைத் தரப் புதுவை முயன் றுள்ளமை பாடலைக் கேட்கும்போது தெள்ளெனப் புலப்படுகிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வழிபடும் துர்க்கை அம்மனுக்காக வெளியிட்ட ஒலி நாடாவில் புதுவை புலம் பெயர்ந்த
(n)'ı ertb - pG 6.JbUfi 2004
தமிழர்கள் வேண்டுவது போலவே வேண்டுகிறார். உதாரணத் திற்குப் பின்வரும் அடிகளைக் குறிப்பிடலாம்.
இந்தக் குருவிகள் கூடு திரும்புமோ? சொல்லம்மா! துர்க்கையம்மா! இனி சொந்த நிலத்தினில் வசந்தம்
விசுமோ? சொல்லம்மா துர்க்கையம்மா!
ஆகுமோ துர்க்கையம்மா!
எம் அன்னையர் பூமியில் இன்றும் நம் காலெல்லாம் ஆடுமோ துர்க்கையம்மா!”
துர்க்கையம்மனுக்குரிய பாடல்கள் என்பதால் இசையமைப்பாளர் அத் தெய்வத்தின் பண்பு, அதனை வழிபடும் முறை என்பவற்றுக்கேற்ப இசைக் கருவிகளைப் பயன்படுத்தியுள்ள மையையும் கேட்க முடிகிறது.
கொட்டுக் கடப்பு
முகமாலை சேகர் எழுதிய கொட்டுக் கடப்பு என்ற சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது. சேகர் “தூரப்போன வசந்தங்கள்’ என்ற தினகரன் சிறுகதையுடன் 1997 இல் இலக்கிய உலகில் பிரவேசித்தவர். சிறுகதை, கவிதை, கட்டுரை ஆக்கம் என்ற பல்வேறு துறைகளிலும் தனது ஆற்றல்களை அவ்வப்போது பதித்தவர். மிருதங்க வித்தகர். கைதடி நபீல்ட் பாடசாலையின் பழைய மாணவராகிய இவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் உளவியல் சிறப்புக் கலை இறுதியாண்டு
53

Page 29
மாணவராக விளங்குகிறார். தனது
எழுத்துநிலை அனுபவங்கள் பற்றிச்
சேகர் பின்வருமாறு கூறுகிறார்.
“வாழ்க்கையில் ஏற்படும்
சவால்களைக் கையாளும் திறனை இந்த
எழுத்துநிலை அனுபவங்கள் வழங்கு
கின்றன எனக் கூறலாம். என்னால் “பிறயிலி’ மூலம் உருவாக்கப்படும் சிறுகதைகள் என் சகோதரர் திரு. க. சோமசுந்தரம் அவர்களால் சாதாரண எழுத்தில் பிரதி செய்யப்பட்டுப் பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும்” "துன்பம் எட்ட முடியாத தூரத்தே மனம் வீற்றிருத்தலே உண்மையில் அமைதியாம் என்று இடிபசு மன்னன் கூறியதாக எங்கோ
நிலைக்க எனக்கு எழுத் துலக அனுபவம் நிறையவே துணை செய்திருக்கிறது. அந்த அனுபவத்தில் பரிமாணம்தான் இந்தக் “கொட்டுக்கடப்பு”
முறை என்னவோ
விளைந்த
மாணவன்
இவரது கதைகளில் உளவியல் சாயல் படிந்
உளவியல் என்பதாலோ
துள்ளது. சேகர் தான் கண்டவற்றைச் சிறுகதையாக்கவில்லை. கேட்டவற்றை, அறிந்து உணர்ந்தவற்றை அனுபவம் கலந்து சிறுகதை ஆக்கியுள்ளார். சேகரின் இத்தொகுப்புப் போல பல தொகுப்புக்களை அவரிடமிருந்து இலக்கிய உலகு எதிர்பார்க்கிறது. அவருக்கு இலக்கிய உலகின் பாராட்
படித்த ஞாபகம். அவ் அமைதியில் டுக்களும் வாழ்த்துக்களும்.
O O O
7 N “ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள் :
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு-1 * பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A, காலிவீதி, வெள்ளவத்தை, * பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் * ப.நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி * திரு. சித்தி அமரசிங்கம் - 27, ஒளவையார் வீதி,திருகோணமலை, * திரு.வீ.என்.சந்திரகாந்தி - 5724, ஏகாம்பரம் வீதி,திருகோணமலை * கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி * ந. பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா, * லங்கா சென்றல் புத்தகசாலை - 87 கொழும்பு வீதி, கண்டி * மனேஜர்,26, சிட்டிபிளாஸா, ஹற்றன். * சாஹித்திய புத்தக நிலையம்,இல4 குருனாகல் வீதி, புத்தளம்
k L. Murugapoopathy, PO Box : 350 Cage Burn, Victoria 3064, Australia. is G. Balachandran, 21 Hudson Street, Wentworthville, N. S. W 2145, Australia. * Paris Arivalayam, Z, Rve Peradonnet – 75010, paris.
54 ஞானம் - நவெம்பர் 2004

என் வாசல் வந்து தட்டுகிறது . முதுமை
வாலிபத்தின் கொல்லைப்புறத்தில் நான் !
് விஷம் போல் துமை, மெல்ல மெல்ல ஏறுகிறது.
எனக்குள் !
எனது வாலிபம் ஒரு குதிரை.
அதில்,
ஏறிக் குதித்து எகிறிக்களித்து பயணித்தவன் நான் இப்போது - நானொரு கழுதை . வாழ்க்கை என்மேல் தன் அமைகளை ஏற்றத் தொடங்குகிறது!
ஒரு மெல்லிய கொடி போல் மெல்லப்படர்ந்து எனைப் பற்றி வளரும் இந்த முதுமை . மலைப்பாம்பாய் மாறி, என்தசை முறுக்கி,
ைைனக் "கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கும்!
மெதுமெதுவாய்ப் பீடித்துக் கொள்ளும்
இந்த முதுமையிலிருந்து
nondo
தப்பிக்க முடியும்?
(not m th நவெம்பர் 2004
வாலிபம், வாழ்க்கைக்குத் தயார்படுத்தியது
போய்,
Cypg|60OLD மரணத்துக்காய்ச் செப்பனிடுகிறது
16 – இலிருந்து வாலிபம் தொடங்குகிறது. 61- இலிருந்து முதுமை தொடங்குகிறதுமுதலாவதின்
மறுபக்கமாய் இரண்டாவது
ஒவ்வொன்றாய்த் திறந்து கொண்ட, வாழ்க்கையின் ஒவ்வொரு கதவுகளும், ஒவ்வொன்றாய் மூடிக் கொள்ளும் சத்தம் துரத்தில் கேட்கிறது!
எனக்குள் நிகழ்ந்த கூர்ப்பு எதற்கென்ற அர்த்தம் இப்போது புரிகிறது!
தாண்டி வந்ததாய், அப்போது மார்தட்டிய, அத்தைைசுவர்களும். திரும்பிப் பார்க்கையில் தரைமட்டமாய்த் தெரிகிறது!
புதிய பாலைவனத்தின் தண்ணிர்ப்பைகளாக
ઠીco பழைய நினைவுகள் மட்டும் மகிழ்விக்கின்றன!
போதும் இனிஎனக்காகவே வாழ்ந்தது
இதுவரை இனியேனும் வாழ வேண்டும்
யார் யாருக்காகவாவது
55

Page 30
துன்ப அலைகள் செ. குணரத்தினம் வெளியீடு: தேசிய கலை இலக்கியப்
பேரவை, கொழும்பு. ரூபா 125/-
நூல்
ஆக்கம்
விலை
கவிஞர், சிறுகதையாசிரியர், நாவ லாசிரியர், நகைச்சுவை எழுத்தாளர் என்னும் பல்வேறு பாத்திரங்களை வகித்துத் தொடர்ந்து எழுதி வருபவர் செ. குணரத்தினம். சுபமங்களாவும், தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து 1994இல் நடத்திய ஈழத்துக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற செ. குணரத்தினத்தின் துன்ப அலைகள், 1995 இல் சுபமங்களாவில் தொடராகப் பிரசுரமாகி, பின் நூல்வடிவம் (2002) பெற்றது.
தொண்ணுரறுகளின் கிழக் கிலங்கைக் கிராமம் ஒன்றினைப் பகைப் புலமாகக் கொண்டு, ஒரு குடும்பத்தின் வாழ்வியலைச் சித்திரிப் பதாக இக் குறுநாவல் அமைந்துள்ளது. போர்ச் சூழல் ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதித்தது என்பதை உணர்த்துவது நாவலாசிரியரின் நோக்கமாக விளங்கு கிறது. போர்ச் சூழற் பின்னணியுடன் இணைந்து கதை நகர்வது, நாவலுக்குப் பொலிவை ஏற்படுத்துகிறது.
56
இந்நாவலின் பாத்திரங்கள் அனைத்தும் யதார்த்த பூர்வமாகப் படைக்கப்பட்டுள்ளன. பூபாலன், மாலதி, அவர்களது மூன்று பிள்ளைகள் தொடர்பாகவே கதை நகர்ந்து செல்கிறது. செ. குணரத்தினத்துக்கு இயல்பாகக் கைவந்த நகைச்சுவை நடை, இக்குறு நாவலின் கதை கூறும் முறையிலும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. ஆயினும், கதை கூறும் போக்கில் மேலும் கலைத்துவம் தேவை என்பதையும் இப்படைப்பு உணர்த்தி நிற்கிறது.
மட்டக்களப்புப் பேச்சுவழக்கைச் சிறப்பாகக் கையாளக்கூடியவர் குணரத்தினம் என்பதை, இக்குறுநாவல் காட்டி நிற்கும் அதேவேளை, சிற்சில இடங்களில் பாத்திர உரையாடல்களில் அவர் செந்தமிழைக் கையாண்டிருப்பது பொருத்தமாக இல்லை. பாத்திர உரையாடல்களின் எல்லாச் சந்தர்ப்பங் களின்போதும் பேச்சு வழக்கைக் கையாண்டிருக்க வேண்டும். இக்குறு நாவலின் முற்பகுதி நிதானமாகவும், பிற்பகுதி அவசரமாகவும் அமைந்து விட்டது போலத் தோன்றுகின்றது. இத்தகைய சில குறைகளை நாவ லாசிரியர் தவிர்த்திருக்கலாம்.
ஆயினும், இக்குறைகளை மீறிய ஒரு தரமும் இப்படைப்புக்கு உண்டு. இக்குறு நாவல் வாசகரின் உள்ளத்தைத் தொடு கிறது. இதுவே இப்படைப்பின் மிகச் சாதகமான அம்சம் எனக் கூறலாம். செயற்கைப்பாங்கு இன்றி, நாவலாசிரியர் கதையை நடத்திச் செல்வது இதற்கான முக்கிய காரணம் ஆகும். எதிர்காலத்தில் எழுத்தாளர் செ. குணரத்தினத்திடமிருந்து மேலும் காத்திரமான நாவல்கள் வரலாம் என்பதற்கு, இக்குறுநாவல் கட்டியம் கூறுகிறது எனலாம்.
- நக்கீரன்
ஞானம் - நவெம்பர் 2004
 

நூல் : கடலில் மிதக்கும்
மாடி வீடு ஆக்கம் : ஜின்னா ஹ் வெளியீடு: அன்னை
வெளியீட்டகம்,
மருதமுனை. விலை : ரூபா 100/-
கவிஞராகவும், காவியகர்த்தா
வாகவும், புனைகதை எழுத்தாளராகவும் விளங்கும் ஜின்னாஹ்வின் சிறுவர் இலக்கிய முயற்சியின் முதல் அறுவடை யாக விளங்குவது, கடலில் மிதக்கும் மாடிவீடு, (2002). இந்நூலில் பதின் மூன்று சிறுவர் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
ஜின்னாஹ்வின் கடலில் மிதக்கும் மாடிவீடு என்ற இந்நூல், அவர் சிறுவர் இலக்கியத்தின் ஆரம்பப்படியில் நிற்கிறார் என்பதை உணர்த்துகிறது. இத்துறையில் அவர் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகமுள்ளது. ஆசை பற்றி இத்துறை யிலும் அவர் கால் பதித்துள்ளார். ஆயினும், அவர் தொடர்ந்து முயற்சித்தால், இத் துறையிலும் அவர் சாதிக்கலாம். இந்நூலில் இடம் பெற்றுள்ள எந்தப் பாடலையும் விதந்து குறிப்பிட முடிய வில்லை. பாடல்களை விட இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவியங்கள் சற்றுக் குறிப்பிடும்படியாக உள்ளன.
ஓரிடத்தில் அடையாளம் என்ற சொல்லுக்குப் பதிலாக அடயாளம் என்று இடம் பெற்றுள்ளது. இது அச்சுப் பிழையா அல்லது நூலாசிரியரின் பிழையா என்பது தெரியவில்லை.
இலக்கியத்துறையில் இயல்பாகவே ஆர்வம் அதிகம் கொண்ட ஜின்னாஹ் அவர்கள், சிறுவர் இலக்கியத் துறையில் இதைவிடத் தரமான நூல்களை ஆக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
- நக்கீரன்
em ao tb - Glen buf 2004
நூல் வாலறிவு பேசுகிறது
(சிங்கப்பூரின்கதை) மூலம் : லி குவான் யூ
மீளாய்வு : டாக்டர் கே. சிவம் வெளியீடு: ஏசியன் ரேடிங் ஹவுஸ்,
கொழும்பு-12.
உலக நாடுகளின் வர்த்தக மையமாகவும், கனவுப் பூமியாகவும்
விளங்கும் சிங்கப்பூரினதும் அதனைக் கட்டி எழுப்பிய முன்னைப் பிரதமர் லு குவான் யூ வினதும் ஊடுபாவாகக் கொண்டு சிங்கப்பூர் பற்றிய கதையைப் பேசுவதாகக் குறிப் பிடுகிறது இந்நூல்
தலைப்பில் என்னவோ சிங்கப்பூரின் கதை என்றிருந்த போதும் அது லீ குவான் யூவின் கதையாகவே உள்ளது. எனினும் அவரது வாழ்க்கை, சிங்கப்பூரின் வளர்ச்சியின் நகமும் சதையுமாக அமைந்திருப்பதால் அது சிங்கப்பூரின் கதையுமாகிறது. லீ குவான் யூவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று தொகுதிகளாக வெளிவந்த வரலாற்றையே டாக்டர் மு. சிவம் மொழியாக்கம் செய்துள்ளார். மொழியாக்கம் எனும்போது இது நேரிடையாகச் செய்யப்படவில்லை. மூலத்தின் சாரமாகவே எழுதப்பட்டுள்ளது. பொதுவாகவே வாழ்க்கை வரலாற்று நூல் எனும்போது பிறப்பு, இளமைக் காலம் என ஆரம்பித்து மலரும் நினைவு களாக அது எழுதப்பட வேண்டுமென்ற வரன்முறை ஒன்றிற்குப் பழக்கப்பட்ட எமக்கு இந்நூல் இன்னோர் மாற்று வடிவத்தைத் தருகிறது. சிங்கப்பூர் என்ற தேசத்தைக் கட்டியெழுப்பிய லீ குவான் யூவினது பண்புகள் எனத் தொடங்கி
57
வரலாற்றை

Page 31
அவர் பற்றிப் பிற தலைவர்கள் கூறிய கருத்துக்களையும் அவர் அந்நாட்டைக் கட்டியெழுப்புவதில் எதிர் கொண்ட சவால்களையும் அவற்றை அவர் வெற்றி கொண்ட முறைமையையும், நாடு, மக்கள், வர்த்தகம், முகாமை, ஜனநாயகம், சர்வதேச உறவுகள், பிரஜைகள், இளைஞர்கள் என்ற அம்சங்களின் மீதெல்லாம் எந்தவிதமான கருத்தியல் களைக் கொண்டுள்ளனர் என்பது தொடர்பாக அவரது கருத்துக் களை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இடையிடையே, மொழியாக்கம் செய்தவர் படர்க்கை நிலையில் லீ குவான் யூ பற்றிய தமது மனப் பதிவையும் தருகிறார். 'வைரத்தின் பல முகங்கள்” என்ற முதலாம் அத்தியாயத்தில் தொடங்கி 8unub, ஆன்மீகம் வரையிலான பத்தொன்பது தலைப்புகளில் பல விடயங்களை இது பலபட விரித்துப் பேசுகிறது அல்லது லீ குபான் யூவின் கருத்துக் குவியல்களை ஆங்காங்கே தருகிறது. பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியாளரிடையே காணப்படும் சுயசிந்தனையற்ற, பக்கச் சார்பான, மதவாத, இனவாத, வாரிசு உரிமையை, ஒட்டுப் பொறுக்கி, அரசியல் முறைமைகளிலிருந்து வேறுபட்டு பல்லின மக்கள் வாழும் நாடொன்றைக் கட்டி யெழுப்புவதற்கான லீ குவான் யூவின் சிந்தனைகள் நம்மைப் பிரமிக்க வைப்பன. "ஆனால் ஒரு விடயத்தை நான் உங்களுக்கு கூற வேண்டும், பல இன சமூகங்கள் வாழும் முன்மாதிரியான தேசம் ஒன்றை நாம் உருவாக்கினோம். இந்த நாடு எந்தவொரு சமூகத் திற்கும் சொந்தமானதல்ல. இது எங்கள் எல்லோருக்கும் சொந்த
58
மானது. இதனை உருவாக்க நீங்கள் உதவினிர்கள் உங்களது தந்தையார், உங்களது பாட்டனார் என்லோரும் இதனைக்கட்டியெழுப்ப உதவினிர்கள்” என்ற அவரது சிங்கப்பூர் பற்றிய கூற்றினை நமது தேசத் தலைமைகளும், மதத் தலைமைகளும் சற்றே நிதானித்துக் கேட்க மாட்டார்களா? என்ற ஆதங்கமே மேலெழுகிறது. இவ்வாறு பல இடங்களில் அவரது முன்மாதியான கருத்தியல்கள் நூல் முழுமையும் செறிந்து காணப்படுகிறது.
நூலை மொழியாக்கம் செய்த டாக்டர் K. சிவம் அதனைத் தன் வரலாறாகவும் தரமுடியாது, அவரது கூற்றுப்படி ஒரு மீளாய்வாகவும் தரமுடியாது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தடுமாறியிருக்கிறார். அதன் பிரதிபலிப்பை நூல் முழுக்கக் காணலாம். வரலாறாகப் பார்ப்போம் என்று வாசிக்க ஆரம்பித்தால், வரலாறு இடை நிறுத்தப்பட்டு, கருத்துக் குவியல்களாகி விடுகிறது. சரி, மீளாய்வாகப் பார்ப்போம் என்றால் லீ குவான் யூவைச் சரியான தளத்தில் நிறுத்தி அதனூடாக வாழ்க்கை வரலாற்றையும் சிங்கப்பூரின் கதையையும் கூறியிருக்க வேண்டும். அதுவும் நிறை வேறவில்லை.“கருத்தையே பிரதானமாகக் கொண்டு தாவிச் செல்லும் நடை யொன்றைக் கையாண்டேன்” என்று புதுமைப்பித்தன் குறிப்பிடுவது போல - கருத்தொன்றையே பிரதானமாகக் கொண்டு மொழியாக்கக்காரர் தாவிச் செல்லும் பண்பையே காணமுடிகிறது. இதனால் நூலின் ஒருமைப்பாடு சிதைந்து போய்விட்டது.
இலகுவாக வாசிக்கக் கூடிய முறையில் எழுதப்பட்டுள்ளது என்று முகவுரையில் கலாநிதி P. இராமானுஜம் குறிப்பிட்ட போதும் மொழி பெயர்ப்பு
ஞானம் - நவெம்பர் 2004

நூலொன்றின் மொழிக் கடினம் ஆங் காங்கே புலப்படுகின்றது. மேலாக மொழியாக்கக்காரர் செய்து அளித்துள்ள மேற்கோள்களின் இடையீடு சலிப்புத் தட்டுபவை. "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சாலமிகுத்துப் பெயின்” என்ற குறளும் மொழி ஆக்கக்காரருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
உயர்ந்த சிந்தனைகளையும் கருத்துக்களையும் தூர நோக்கையும் கொண்ட ஒரு தலைவனால்தான் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நல்லெண்ணத்தைக் கூறும் நூல் ஒன்றைக் காலமறிந்து மொழியாக்கம் செய்த டாக்டர் K. சிவம் பாராட்டுக் குரியவர். எனினும் மத, இன, மொழி பேதமற்ற நாடொன்றைக் கட்டியெழுப்பிய லீ குவான் யூவின் வரலாற்று நூலை “குலக் கல்வித் திட்டத்தை”தமிழ்நாட்டில் புகுத்தப் பெரிதும் முனைந்த மூதறிஞர் இராஜாஜிக்கு சமர்ப்பணம் செய்திருப்பது முரண் நகை.
- வ. மகேஸ்வரன்
O
: தமிழகத்தில் முருக
வழிபாடு (ஆதிகாலம் முதல்கி பி
13ம்நூற்றாண்டுவரை)
அம்பிகை ஆனந்தகுமார் தமிழ்த்துறை விரிவுரையாளர், பேராதனைப் ப. க. கழகம்
1 ரூபா 100/-
நூல்
ஆக்கம்
விலை
கிறீஸ்து பிறப்பதற்குப் பல நூற் றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மத்தியில் முருக வணக்கம் நிலவி
ஞானம் - நவெம்பர் 2004
வந்துள்ளது என்பதை தொல்காப்பியர் குறிப்பிடும்“கொடி நிலை கந்தழி, வள்ளி” பாடல் மூலமும் சங்ககால திருமுரு காற்றுப்படை, பட்டினப்பாலை முதலிய வற்றில் காணப்படும் பாடல்களி னுாடாகவும் நூலாசிரியை இந்நூலில் நிறுவியுள்ளார்.
கி. மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னரே முருக வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் வழக்கில் இருந்ததென்பதையும் பெளத் தாயன தர்ம சூத்திரம் நூலில் இருந்து உதாரணங்களைக் காட்டி ஆசிரியை வெளிப்படுத்தியுள்ளமை பாராட்டுக் குரியது.
வட இந்தியாவில் மிகப் பழங்காலந் தொட்டு முருகனை ஸ்கந்தன், குமரன், மகாசுவாமி என அழைத்து வணங்கும் வழக்கம் வேத, உபநிடதங்களிலும் காணப்படுவதை விளக்கியுள்ள ஆசிரியர், ராமாயணம், மகாபாரதம், மச்சபுராணம், பத்மபுராணம், வாயு புராணம் என்பவற் றிலிருந்து உதாரணங்களைக் காட்டி முருக வணக்கத்தின் புராதனத்தை இந்நூலில் விளக்கியுள்ளார். 6 இந்தியாவை ஆண்ட முதலாம் குமார குப்தன் தனது நாணயங்களில் மயிலைப் பொறித்து தனது முருக பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். குப்தர் காலத்து மகாகவி காளிதாசப் புலவர் குமார சம்பவம் என்னும் காவியத்தைப் பாடி முருகனை வர்ணித்து மகிழ்ந்தார்.
முருகனின் தோற்றம், பெருமை, அருளும் பாங்கு முதலியவற்றை பழந்தமிழ் இலக்கிய நூல்களான எட்டுத் தொகை பத்துப்பாட்டு தொல்காப்பியம் சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை,
59

Page 32
குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை, பரிபாடல் முதலியவற்றிலிருந்தும் பல மேற்கோள்களை நூலாசிரியை எடுத்துக் காட்டியுள்ளார்.
தமிழருடைய பழம் பெரும் தெய்வ மான முருகனின் வழிபாட்டு முறைகளில் வட இந்தியச் செல்வாக்கு காரணமாக மாற்றங்கள் நிகழ்ந்தன. மரங்களின் கீழ் வேல் நாட்டி வழிபடும் ‘கந்து வழிபாட்டு முறையாகவே ஆரம்பகால முருக வழிபாடு தமிழர்களிடம் காணப்பட்டது. வைதீக வளர்ச்சியோடு தனிக்கோவில் அமைத்து வணங்கும் வழக்கம் பின்னரே ஏற்பட்டது.
காலத்தில் வைணவமும் மேலோங்கியிருந்தமையால், சிவனும் திருமாலும் முக்கியப்படுத்தல் பெறறனர். சிவனின் மகனாக முருகன் சித்தரிக்கப்பெற்றார். பழந்தமிழர் போற்றி வளர்த்த முருக வழிபாடு சைவத்துள் கலப்புற்றது.
“முருக வழிபாடு பற்றிப் பல வரலாற்றா சிரியர்கள் நூல்களை எழுதியுள்ள போதிலும் 5ம் நூற்றாண்டுக்கும் 13ம் நூற்றாண் டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அது பெற்றிருந்த இடத்தைக் கவனிக்கத் தவறி விட்டனர். நூலாசிரியையின் ஆய்வு தமிழகத்தில் முருக வழிபாட்டின் முழுமை யான வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் புதிய பரிமாணமொன்றை ஏற்படுத்தி யுள்ளதெனப் பேராசிரியர் எஸ். தில்லை நாதன் கூறியுள்ளமை முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சி வார்த்தை களல்ல.
பல்லவர் சைவமும்
நூலாசிரியை இவ் ஆய்வு முயற்சிக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்.
- நா. சோ.
O
60
நூல் எனக்கு மரணம்
இல்லை (கவிதைத் தொகுதி)
ஆக்கம் : பெரிய ஐங்கரன்
வெளியீடு: அகில இலங்கை
இளங்கோ கழகம்,
புலோலி தெற்கு. விலை : ரூபா 125/-
ஒரு சமுதாயத்தில் அடக்கு
முறையும் ஒடுக்கு முறையும் கட்டறுத்துக் கொண்டு அநீதியான வகையில் தாண் டவமாடும்பொழுது, அச் சமுதாயத் தைச் சேர்ந்த போராளிகள் ஆயுதம் ஏந்தி எதிர்ப்பர். புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமது கரங்களிலுள்ள பேனா என்ற ஆயுதத்தால் இக்கொடுமைகளைப்
பல்வேறு இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துவர்.
'பகவத்கீதை, பாண்டவர்களில்
ஒருவரான அர்ச்சுனன் கிளர்ந்தெழு வதற்காகச் சொல்லப்பட்டது. மார்க்சியம் பாட்டாளி வர்க்கமே கிளர்ந்தெழு வதற்காக எழுதப்பட்டது. இதனால்தான் நான் பகவத் கீதையை விட அதிகமாக மாக்சியத்தை நேசிக்கிறேன்’ எனப் பிரகடனஞ் செய்து கொண்டு பேனா வைத் தூக்கியுள்ள இவ்விளங் கவிஞர் தமது புதுக்கவிதைகளின் மூலம் அநீதி களைச் சாடியுள்ளார்.
புதுக்கவிதை
புதுக்காற்றல்ல.
புயல் காற்று!
புதுக்கவிதை
தலைகுனியும் மனைவியல்ல .
ஞானம் - நவெம்பர் 2004

பொங்கியெழும் மகள்!
புதுக்கவிதை 5, 607(6)aiafaflL1656). சுதந்திரக் கிளி இவ்வாறு புதுக்கவிதை விளக்கத்தை தெளிவுபடுத்திக் கொண்டு, கவிதைகளை
பற்றிய
ஆவேசமாகப் பல
இந்நூலில் வடித்துள்ளார். உதாரணமாக
எங்களது இரவும் ஒருநாள் விடியும்! உங்களது பகலும் ஒருநாள் இருளும்!
Z/6265 62/7...... ஊதியத்திற்காக அல்ல. உரிமைக்காய் என்பதை உனர்ந்து கொள்!
என்ற கவிதையிலும்,
பூதங்களே. எங்களை ஆள விடுங்கள்! அடக்கி ஆள்வதற்கு நாங்கள் வன விலங்குகள் அல்ல ஆட்சிபுரிவதற்கு நீங்கள் வனராஜன்கள் அல்லர்! இது போன்ற இன்னும் பல கவிதைகளிலும் ஒரு கவிஞனுக்குரிய இந்நூலில் இவ் விளைஞர் வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் நன்றாக விளையக்கூடிய பயிர்.
தர்மாவேசத்தை
எதிர் காலத்தில் மேலும் சிறப்பான
அறுவடை இவரிடமிருந்து கிடைக்குமென
நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
- வாதராயணன்
புத்தகக் களஞ்சியம்
(நூல் மதிப்புரை)
மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறு குறிப்பு மாத்தி ரே ழ்,புதிய நூலகத்தில் இடம் பெறும்.
ܨ ܟܠܝ ܐ̄ܢܬܬܝ ܠܳܠܽܠ .
ኣç
( புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே
ரூானம் - நவெம்பர் 2004
61

Page 33
型 ge
ആrr: ീക്ഷ** பேதங்கத்றுப்
(3)
ஞானம் 53 ஆவது இதழ் வாசித்தேன். சூடு கிளப்பும் விடயங்கள் பல இருந்தன. இவைகள் சிந்தனைக்குரியனவாகவும், ஆர்வத்தைத் தூண்டுகின்றனவாகவும் உள்ளன. பேராசிரியரின் நேர்காணலில் - இவ் இதழில் அவரது சமூக சேவைகள் தொடர்பான விடயங்கள் வந்திருந்தன. அதில் ஒருபக்கம் தெளிவாக இருக்கின்றது. மறுபக்கம்? பேராசிரியருக்கும் மங்கலாகத்தான் இருகின்றதா? ரகுபரன் எழுதிய 'அல்குல்' சர்ச்சை சம்பந்தமான இலக்கிய ஆராய்ச்சி பதில் கட்டுரை அருமை, இதைப் பார்த்தபொழுதுதான் எனக்கும் அல்குல் தொடர்பில் இதுவரை இருந்த மயக்கம் தெளிந்தது, அத்துடன் நிலவிலே பேசுவோம்’ சிறுகதை தொடர்பில், ரகுநாதன் அண்மையில் வழங்கிய கட்டுரை தொடர்பில் ஞானம் வாசகர் வ. சிதம்பரநாதன் வரைந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணித்தரமானவை - முற்போக்கு உலகம் அந்தக் கேள்விகளுக்கு பதிலிறுக்கக் கடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பதில்வருமா? நம்பிக்கையுடன் காத்திருப்போம். எஸ். பொவின் நேர்காணலில் முதல் பகுதியிலே பல்குழல் தாக்குதலுடன் ஆரம்பமாகி உள்ளது. போகப் போகத் துப்பறியும் நாவல் வாசித்தது போலிருக்குமோ?
ம. தஷ்யந்தன், புன்னாலைக்கட்டுவன்
இச்சஞ்சிகை இலக்கிய ஆர்வலர்களை, மகிழ்ச்சிக்கும், தங்கள் முயற்சிகள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சி. கிருஷ்ணானந்தன், பிரதிச் செயலாளர்,
திருகோணமலை.
அன்புள்ள ஞானம் ஆசிரியர் அவர்களுக்கு, ஞானம் இதழ் தவறாமல் கிடைக்கிறது. மகிழ்ச்சி. வரவர மெருகேறுகிறது. உரிய காலத்தில் வந்துவிடுவது மேலும் சிறுப்புக்குரியது.
எஸ். பொவின் பேட்டி எமது இலக்கிய உலகில் சலசலப்பை ஏற்படுத்தவே செய்யும். சிவத்தம்பி அவர்களின் பேட்டி முடிந்தபின் எஸ். பொவின் பேட்டியைப் பிரசுரித்திருக்கலாம். புலோலியூர் சதாசிவத்தின் மறைவு பெரும் கவலைதருகிறது. செங்கை ஆழியானின் தொடர்கட்டுரை அருமை. எழுதத் தூண்டும் எண்ணங்களில் பாடகர்கள் பற்றி துரை மனோகரன் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது.
நானும் ஞானத்துக்கு ஆக்கங்கள் எழுதி அனுப்ப ஆவலாயுள்ளேன். விரைவில் அனுப்புவேன். உங்கள் முயற்சி மேலும் வளம்பெற வாழ்த்துகிறேன்.
அன்புடன், தம்பிஐயா தேவதாஸ்
62 ஞானம் - நவெம்பர் 2004
 
 

என்றும் மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்கட்கு,
53ஆவது ஞானமும் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. மூத்த எழுத்தாளரும் உங்கள் நண்பருமான புலோலியூர் சதாசிவத்தின் இழப்பினால் தாங்களும் அவர்தம் குடும்பத்தினரும் படும் துயரத்தில் நாமும் கலந்துள்ளோம். அவரை நேரிலே அறியாத போதிலும், தங்கள் அனுபவங்களைக் கட்டுரையாய் தந்து, ஏற்கனவே அமரர் பற்றி இருந்த மனப்பதிவுகளை மேலும் திடப்படுத்தியுள்ளிர்கள். நண்பரை இழந்திருக்கும் உங்களுக்கு ஆறுதல் கூற கடமைப்பட்டுள்ளோம்.
“ஞானம்' சஞ்சிகை தங்கள் விடாமுயற்சியால் நன்றாகவும் தொடர்ந்தும் வருவது எல்லோரும் பாராட்டும் முயற்சியாகும். மானசீகமாக ஞானத்தோடு இணைந்தவர்களில் நானும் ஒருத்தன். நான் படிக்காத ஞானம் பிரதி ஒன்று இல்லை என்பதில் எனக்கு மிகுந்த பெருமை. தாங்கள் நலமுற வாழ்ந்து ஞானம் பணியைத் தொடர இறையருள் நிச்சயமுண்டு.
ஞானம் சஞ்சிகையின் ஆயுள் வரை கலந்திருக்க மிகவும் விருப்பம். தாங்கள் ஞானத்தை வெளிக் கொணர்வதிலுள்ள பொருள்சார் இழப்புக்களை நீங்கள் சொல்லாமலே உணர வேண்டியவர்கள் வாசகர்கள் ஒவ்வொருவரும். என்றும் ஞானத்தின் பணி தொடர வாழ்த்துக்கள்.
என்றும் அன்புள்ள, இ. இராஜேஸ்கண்ணன்
ஞானம் முழுதும் படித்து விட்டேன். இலக்கியச் சர்சைகள் கிளப்பிவிட்டுள்ளீர்கள். காலத்தின் தேவை. மலைகள் முட்டிமோதுகின்றன. சமூகத்து ஜீவாதாரப் பிரச்சினைகள் பறறி அலசப்படுகின்றன. எழுத்தாளர் புலோலியூர் க. சதாசிவம் அவர்களது 'இருதயம் நின்றமை பற்றிய உங்களது கட்டுரை நீண்ட பயணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது; நீங்களும் சிவத்தம்பி, கைலாசபதி போல இலக்கிய இரட்டையர்கள் என்று சிறியவர்களாகிய நாங்கள் அறியுமாறு செய்திகளைத் தந்தது உங்கள் ஞானமே. இணைந்தும், பிணைந்தும், ஒன்றியும், விலகியும் தானே இலக்கியத்தடம் ஒடும்; சீவிக்கும்; நிலைக்கும்; மொழியின்பந் தரும். இதன் நிதர்சனத்திற்கு நீவிரிருவருமே நடைமுறைச் சாட்சி. சஞ்சிகை இல்லாமற் பேர் எழும்பாது. மக்கள் மட்டத்தில் நிலவாது. நின்று நிலைக்காது என்பதும் உண்மை. எனவே உங்கள் பணிகள் நிலைப்பவை. கவிதைகள் கனதியானவையல்ல. உங்கள் ஆசிரிய முன்னுரையிலே எழுத்தாளர்கள் தமிழைப் படிக்கவும், தமிழிலக்கணத்தின் நுட்பங்களை அறியவும் தெரியவும் புரியவும் வேண்டும் கான்று வலியுறுத்தி எழுதுவது காலத்தின் தேவை. மொழியின் செம்மை நலனும், சூட்சுமும் தெரியாதவர்களாலே எப்படி நிலைத்த, கனத்த, தகுதியான, தரமான, பாராட்டத்தக்க இலக்கியம் கவிதை படைக்க முடியுமா என்ற வினாக் கிளம்புகின்றது. தமிழறியாதார் சஞ்சிகையில் எழுதுவதுதான் தற்றுணிபு. எனவே தமிழைப் படிக்க முனைய வேண்டும். தமிழின் நெளிவு, சுளிவு, நுட்பம், திட்பம் என்பவற்றை அறியவும் தெளியவும் முதலில் 'உணர்ச்சி வரவேண்டும். ஆகவே தமிழ் நூல்களைப் படிப்பதும், இலக்கியப் பரிச்சயம் செய்வதும், தம்மைத் தமிழ்க் காவியங்கள், பேரிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,திருமுறை, பிரபந்தங்களிலே தாடனப்படுத்துவதும் மிகமிக அவசியம். தமிழ் மலட்டு மொழியல்ல.
(nதானம் - நவெம்பர் 2004 63

Page 34
தாய்வினாபும், செழுMபயும், வனப்பும், வலிAைIம், அறிவியலும், கற்பனையும், வருனாகளையும்
இன்னும் பேரறிவாளர் கண்டு பிடிக்க முடியாத இலக்கங்க விற்பன்னமும் கொண்ட மொழி.
இவற்றை முதலில் தெளிந்து தேர்ந்தபின் சொற்களைத் தீட்டுவது பொருந்தும்
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
அன்புடையீர், வணக்கம், இணை ஆசிரியரை இழந்துவிட்டஞானத்தின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம். எதிர்பாராத அவரது பாணம் எம்பை அதிர காவத்தது. "உண்மைதானா?” என்று விசாரித்து உறுதிப்படுத்தும் வரை அச்செய்தியை நம்ப முடியாதிருந்தது.
அவரது மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தனது சிறந்த இலக்கியப் படைப்புகளை எமக்குத் தந்தது மட்டுபான்றி வேறு பல வகைகளிலும் அவர் தமிழிலக்கிபத்திற்குப் பணியாற்றி வந்தார். உதாரணமாக இளம் எழுத்தாளனா ஊக்குவிக்கும் முகமாக சிறுகதைத் தொகுப்புப் பரிசுப் போட்டிக்குரிய பரிசை வழங்க முன்வந்து "ஞானம் ஊடாக அப்போட்டியை நடத்தியதைக் கூறலாம்.
அவரது ஆத்மா சாந்திInடபப் பிரார்த்திக்கின்றோம்.
தங்கள் துயரில் பங்கு கொள்ளும்
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
'ஞானம் சஞ்சிகையின் உதவியாசிரியரான வைத்திய அதிகாரியும் இலக்கியப் படைப்பானியுமான புலோலியூர் ச. சதாசிவம் அவர்களின் மறைவு பற்றிய செய்தி பத்திரிகையின் மூலம் அறிந்து மிகவும் கவனAIடந்தேன்.
04. 01:2004 அன்று திருகோணமலை நகரசனபண்டபத்தில் திருகோணமலை இலக்கிய ஒன்றியத்தினால் மூன்றாவது தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அவ்வெளியிட்டு விழாவில் புலோலியூர் சதாசிவம் அவர்களும் கலந்து கொண்டதோடு சிறப்புப் பிரதியையும் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார். அவ்வேளையில் கவிஞர் புரட்சிபாலன் ஆவார்கள் ஆவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் எங்களது ஞானம் சஞ்சிகைக்கும் கதைகள் எழுதி அனுப்புங்கள் சேர்த்துக் கொள்கின்றேன் எனக் கூறினார்.
மேலும் அவருடைய சிறுகதைகள், பருத்துக் கட்டுரைகள் சிஸ் படித்திருக்கின்றேன். அன்னாரும் இலக்கிய உலகில் குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய ஒருவரே!
இலக்கிய வாதிகளைப் பொறுத்தவரை இறந்தாலும் தமது இலக்கியப் படைப்புகள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதாணிருப்பார்கள். அவர்கள் ஒரு போதும் மரணிப்பதேயில்லை.
அவரது பாணச் செய்தி மிகுந்த கவன:Iகவும். அதிர்ச்சியுமாகயும் இருந்தது. அதனையிட்டே இவ் ஆறுதாப வை வரைகின்றேன். அவர் தங்காது ஞானம் சஞ்சிகையின் இணையாசிரியர் என்றாகயில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.முகம் தெரியாத அன்னாரது குடும்பத்தினர்களுக்கும் நீளது ஆழ்ந்த அறுதாங்கள் .
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இலக்கியப் படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனைப் பிரார்த்திப்போபாக!
என்றும் அன்பு ன் லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி
6회 ஆாரம் - நவெம்பர் 2004

画 V_ *గి লিস্টfলণ্ড °ሊof°°ሊcf° \fنئی(
* JANALANKA 3
ENTERPRISE
MANUFACTURERS, WHOLESALERS AND RETAILERS OF QUALITY BAGS & PURSES 3 + STATIONERS 4. FANCY GOODS 3 چه BULK ORDERS ACCEPTED شکل
艺 No. 60, Kotugodella Velediya, C
d Kandy. SE gia.A.A. a A.A.A.A. de 亡”曹已ö E -T 3:&:P +
EGA CERAMICS
Importers & Distributors of Wall Tiles, Floor Tiles, High Quality
Sanitary Wares, Bathroom. Accessories, P. W. C. And Hot Water Pipe Fittings
A-74, Colombo Street Kandy, Sri Lanka. Tel: 081-4476760,081-2200052 Fax: 081 - 2200052

Page 35
CJ Phone : 081 - O81 -
O81 -
Fax 081 - E-Mail : Lucky
இச் சஞ்சிாக தி ரூானசேகரன் அவர்களால் இ LLMLL S LLLLL TS TM MLLMM TSTLL H LLLLLL
 

NOWEMBER OHO
- ༦་
No (CBiscuit cturers
Isale.
畿
C
2420217
242O574
2227,041
2420740 ീ
plandashnet.ik.
.ை 48 மீ. புருமெண்டால் வீதி, கொழும்பு 13 சிடப்பட்ங் வெளியிடப்பட்டது.