கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.12

Page 1

SY இ))
u/ 40z
*、

Page 2
邻 POOBALASINGHAM
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head Office : 340, 202 Sea Street, Colombo 11, Sri La Tulka. Tel: 2422321 Fax. 23.37313 E-mail : poblhof) slnet.llk
Branches : 309 A-2/3, Galle Road, Colombo 06, Sri Lanka. Tel. : 4-515775, 2504266
4A, Hospital Road, Bus Stand, Jaffna,
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
தவிவிறுே :
இல. 340,202 செட்டியார் தெரு,
கொழும்பு 11, இலங்கை, தொ. பே. 2422321 தொ. நகல் 2337313
číslaciisgazsaĝ5 ZFĝo : pbdhoo@siltried.lk
ಇಂr ; இல. 309 A-23, காலி வீதி, கொழும்பு 08, இலங்கை தொ. பே. 4-51575
இல, 4A, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
 

பகிர்தலின் Up Gouř
விரிவபும்
ஆழமும்
பெறுவது
ஞானம்.
:
தி. ஞானசேகரன்
ஓவியர்கள் : Lyssto LJ I நா. ஆனந்தன் தலைமை அலுவலகம் : 1977, பேராதனை வீதி, கண்டி:
GII.(gu.081-2234755,081-2478570
தொடர்புகளுக்கு.: 邱
தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-8, 48வது ஒழுங்கை,
கொழும்பு - 08, R Gign.(Eu.011-2586013,0777-306,506 E-Iail:granam magazincaryaliowcom R
ஒானம் சஞ்சிகையில் பிரசுரமாகும்* IMAJI Iir:Sálfið Sjöğ/GLỳy-MGMEÜRETY g * 3378łfial &HIMEJ). W Atsausisi. I/67 JI&IIII fall 67 GEJI (IMEDaisits. Eij, (8 FIF, 56.17 ஆதிவர்ரை சீராக இனைத்தின் (NRWSW,
- ஆசிரியர் தீ
LLLMCLSASASLLLLSMSMLL0LSSSMSSSMe0L0LMS Me0LTeMSeSqeTTeMqqeLSOOO
இதழினுள்ளே .
நேர்காணல் ார். பொ.
சீதுரகீதை கட்டை விரல்
- நாட்சாபகாரி டிரழ்மை அவனுக்கோரு துவி! 40
- முத்துமீரான்
விவிதைகள் | l R - இன4ாம அப்துல்யாஸ் புதுப் பஞ்ச தாண்டகம் 표
- கல்வபள். கே. ஆர்ாரசாமி முரண் 3.
- பிஆார்கள் மானிடராப்ப் பிறந்து .
- வினைவேந்நன் வீசியெறிகிறேன்.
போப்பியடிகரிபச் செல்வன் டிரவிந்தக் கிறுக்கு
- கவிஞர் பி. ஆனாத்தினம்
3.திரைகள் ஈழத் தின் வடபுலப் பெயர்வும். 18
- காஸ், செல்வராஜா
புனைகதை இலக்கியம் . 艺其
- செங்கை ஆழியான்
ーリーகலாசாரத் தினனைக் களத்
நிருப்பூங் பர்பி ராமநாபா கானாமிப்தம். 3.
நடrாதேவி பாவச்சந்திரஐயர் எழுதத் துண்டும் எண்ண.
- துரை, நோகரன் சமகால கலை இலக்கிய
- செ. சுதர்சன் தோட்டப்புறக் கதைகள்
- சாரல் நாடன் நூல் மதிப்புரை 55 புதிய நூலகம் 岛事 வாசகர் பேசுகிறார் 酯塑
முகப்போவியம் : புஸ்பா

Page 3
WZA2
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விமரிபெற்றுப் 6շի 6) f. محمدرسے 7/ழிபெற்றுப் பத B/76776) IIT ܢܠ
கொழும்புக் கம்பன் கழகத்தினரின் இசைவேள்வி கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் கம்பன் கழகத்தினர் கடந்த சில ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் என்னும் தமிழின் முப்பிரிவுகளுக்கும் தனித்தனியாகத் தலைநகரிலே விழாவெடுத்துச் சிறப்பித்து வருகின்றனர். இவ்விழாக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் முன்னைய ஆண்டுகளை விட ஒரு படி மேலாக அமைவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
முன்னரெல்லாம் கர்நாடக இசையில் மூழ்கித் திளைப்பதற்கு இசைப்பிரியர்கள் தமிழகத்தை நோக்கிப் படையெடுப்பர். அத்தகைய நிலைமையை மாற்றி தமிழக இசை ஜாம்பவான்களை நமது நாட்டுக்கு அழைத்து வந்து இசைமழை பொழிய வைத்து, தமிழ்நாடு செல்ல வசதியற்ற இசைப்பிரியர்களையும் ஏனையோரையும் இசையிலே திளைக்கும் வகைசெய்து வருகின்றனர் கம்பன் கழகத்தினர். இவ்வாண்டு நடைபெற்ற இசைவிழாவில் தமிழ் நாட்டிலிருந்து யூரீமதி. சுதா ரகுநாதன், ரீமதி குலபூஷணி கல்யாணராமன், நெய்வேலி ஆர். சந்தானகோபாலன், ரி.வி. சங்கரநாராயணன், திருச்சூர் வி. இராமச்சந்திரன், பூரீமதி.பம்பாய் ஜெயறி, திரு. ஓ.எஸ். தியாகராஜன், மதுரை ரி.என்.சேஷகோபாலன் ஆகியோர் தத்தமக்கே உரிய தனித்தன்மையுடன் தமது வித்துவத்தை வெளிக்காட்டினர். வயலின் வித்துவான் ராகவேந்திரராவ், மிருதங்க வித்துவான் நெய்வேலி எஸ். ஸ்கந்த சுப்பிரமணியன் ஆகியோர் இவர்களது கச்சேரிகளுக்கு மெருகூட்டி சபையோரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றனர். நம் நாட்டு இளங்கலைஞர்களும் தாம் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்தனர்.
இன்று நம் இளம் சந்ததியினர் மேலைநாட்டு இசைகளினால் கவரப்படுவதற்கு கர்நாடக இசை பற்றிய போதிய அறிவும் ஈர்ப்பும் இல்லாமையையே காரணமாகக் கொள்ளலாம். கம்பன் கழகத்தினரின் இசைவிழா கர்நாடக இசையின் சிறப்பையும் பெருமையையும் அதன் வல்லபத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. சங்கீத மும்மூர்த்திகளென தியாகராஜையர், முத்துச்சாமிதீஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் கர்நாடக இசைப் பிரியர்களால் போற்றப்படுவர். கர்நாடக இசை தமிழ் மொழி மூலமே தோற்றம் பெற்றது. தேவார முதலிகளே முதன் முதலில் கர்நாடகப்
2 ஞானம் - டிசம்பர் 2004
 

பண்களிலே தமிழோடு இசை பாடினார்கள். பழந்தமிழ் இசையில் வழங்கிய 106 பண்களின் தோற்றத்தினையும் தேவாரத்தின் பண்களையும் சுவாமி விபுலானந்தர் தமது யாழ்நூலிலே விளக்கியுள்ளார். இசை இறைவனை, மனிதனை, விலங்குகளை மட்டுமன்றி இயற்கையையும் வசப்படுத்த வல்லது. இசை மனிதனுக்கு மனச்சாந்தி தருவது. இசையைக் கேட்பதினால் சில நோய்கள் கட்டுப் பாட்டுக்குள் வருகின்றன. இன்று புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாலேயே கர்நாடக இசை உலகளாவிய ரீதியில் வியாபகம் பெறுகிறது போன்ற இன்னோரன்ன கருத்துக்கள் அவ்வப்போது தொடக்கவுரை நிகழ்த்திய அறிஞர்களால் எடுத்தியம்பப்பெற்றன.
வடபுலத்தில், 50களில் ரசிகரஞ்சனசபாவும், 70களை ஒட்டிய காலப்பகுதியில் அண்ணாமலை இசைத் தமிழ்மன்றம், இளங்கலைஞர் மன்றம் ஆகியனவும் ஆற்றிய இசைப்பணிகள் குறிப்பிடத்தக்கவை. அக்காலகட்டத்தில் நம்நாட்டு இசைக்கலைஞர்கள் சிலர் தமிழகம் சென்று இசைக் கச்சேரிகள் செய்து அங்குள்ளோரின் பாராட்டைப் பெறும் தகைமை பெற்றிருந்தனர். இன்று நமது நாட்டில் இராமநாதன் இசைக்கல்லூரி, விபுலாநந்தர் இசைக்கல்லூரி, பல்கலைக்கழகங்களின் நுண்கலைத் துறைகள் உருவாக்கும் இசைப்பட்டதாரிகளால் உருப்படியான கச்சேரி செய்ய முடிவதில்லை. அவர்கள் பெறுவது வெறும் ஏட்டுக் கல்வியாகவே முடிந்து விடுகிறது. அத்தோடு இந்நிறுவனங்கள் ஆற்றி வரும் இசைப்பணியென்பது தமக்குள் தாம் என்பதாகவே அமைந்து விடுகிறது. பொது மக்களைச் சென்று சேர்வதில்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் சில பணத்தினை முதன்மைப்படுத்தியே இசைப்பணியாற்றுகின்றன. இவ்வகையில் கம்பன் கழகத்தினர் இலவசமாக மக்கள் அனைவரும் பயனடையத்தக்கவகையில் பணியாற்றுவது போற்றுதற்குரியதாகும்.
இராமநாதன் இசைக் கல்லூரி, விபுலானந்தர் இசைக் கல்லூரி முதலியனவும் பல்கலைக்கழகங்களின் நுண் கலைத்துறைகளும் தமிழ்நாட்டு இசை மேதைகளிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பலவிடயங்கள் இருக்கின்றன. காலத்துக்கு காலம் தமிழ்நாட்டிலிருந்து இசை மேதைகளை வரவழைத்து கருத்தரங்குகள் நடத்தியும் அளிக்கைகள் மூலமும் நமது நாட்டின் இசைத் தரத்தினை மேம்படுத்திக் கொள்ளவேண்டிய தேவையை கம்பன் விழாவில் மதுரை ரி.என்.சேஷகோபாலன் ஆற்றிய சிறப்புரை உணர வைத்தது. சங்கீத சாகரம்' என்ற தலைப்பிலான அவரது உரையும் அதனைத் தொடர்ந்து நிகழந்த - ஐயம் தெளிதல் நிகழ்வும் சங்கீத மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும், நம்நாட்டு இசைக் கலைஞர்களுக்கும் மிகவும் பயனுடையதாக அமைந்தன.
எட்டு நாட்களாக நடந்த இசைவிழாவில் கலந்து கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் பயண ஏற்பாடுகள், தங்குமிட வசதி, உணவு, ஏனையவசதிகள் ஆகியவற்றைக் கவனித்ததோடு பல்லாயிரக் கணக்கான இசைரசிகர்களின் வசதிகளையும் கவனித்து உரிய நேரத்தில் நேரக்கட்டுப்பாட்டுடன் விழாவினைத் திறம்பட நடத்திமுடித்த கம்பன் கழகத்தினரின் செயல்திறன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கம்பன் கழகம் ஒன்றுதான் நமது நாட்டில் இத்தகைய பணியினை பாரிய அளவில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கம்பன் கழகத்தினர் அனைவரையும் ஞானம் பாராட்டுவதோடு மென்மேலும் அவர்களது பணிசிறக்க வாழ்த்துகிறது.
O O. O.
ஞானம் - டிசம்பர் 2004 3.

Page 4
அவனது ஆற்றலை
Co) கு யெல்லாம் அவர் காலடிக்குச் KGSo [೨೧ சமர்ப்பிக்கப் போகிறான்
தாட்சாயணி
கெலைவன் மகிழ்ச்சிப் பூரிப்பில் நனைந்திருந்தான். எவ்வளவு நாளாகக் காத்திருந்தானோ, எவ்வளவு காலமாக இந்த நாள் வருமோ..? வருமோவென்று தவியாய்த் தவித்திருந்தானோ அந்த நாள் வந்துவிட்டது. அந்த நாளை அவன் தரிசிக்கப் போகிறான். இதோ. இதோ அவன் மனதுள் வைத்துப் பூசித்த அவன் Gö (5. . . . . . அவனது வில்வித்தைகளை மானசீகமாய் அவனுக்குக் கற்றுத் தந்த குரு. துரோணாச்சாரியாரை அவன் கண்குளிரக் காணப் போகிறான். கண்முன் இருந்தால்தான் குருவின் ஆற்றல் அவனுள் உட்படியுமா..? மனதுள் மானசீகமாய் வரித்துக் கொண்டால், குருவின் ஆற்றல் அவனுள் பிரவகிக் காதா..? அவன் தன் மனதுள் வளர்த்த கனவின் சாட்சியாய் அவனுள் பெருகி யிருக்கிறது வில்வித்தை. அவன் தன் ஆற்றலை உள்ளார்ந்த குருபக்தியோடு வளர்த்துக் கொண்டான். அதீதமான ஆற்றல். அதை மெருகூட்டும் குருபக்தி. அந்த குரு வரப்போகிறார். இந்த நாள் அவன் வாழ்வில் மறக்கப்பட முடியாத நாளாகப் போகிறது. துரோணர் என்ன செய்வார்? அவர் பெயர் சொல்லி வளர்ந்திருக்கின்ற அவனது ஆற்றலை மெச்சுவாரா..? அவனது குரு பக்தியில் திளைத்துத் திக்குமுக்காடிப் போவாரா.
மனப்பட்சி என்ன ஆனந்தமாய்க்
கூத்தாடிற்று. இவ்வளவு நாளும்
அவனுக்குள்ளேயே வளர்ந்துவிட்ட
4.
அவன். அவனது கனவுகளெல்லாம் ஒரு நொடிக்குள் சிதறிப் போயின. அந்த நாள் அவனது ஆர்வத்தையெல்லாம் பொசுக்கிப் போட்டது. அவன் ஆவலோடு எதிர் பார்த்த அந்த குருநாதர் அவனது வாழ்வின் அர்த்தத்தையே கேள்விக்
குறியாக்கினார்.
துரோணா. எதைக் கேட்டாய் நீ அந்தச் சிறுவனிடம்.? தன்னையே மனதுக்குள் பூத்துச்சொரிந்து, வழிபட்டுத் தனக்குள் உன் ஆற்றலை வளர்த்துக் கொண்டானே ஏகலைவன், அவனிடம் நீ எதைக் கேட்டாய்...? அதுவும் நீயா நீ கேட்டிருக்கலாமா கேட்டாய்.
கேட்டாய்...?
9605..... ஆனாலும் ஏனென்றால் உனக்கு அர்ச்சுனன் முக்கியப்பட்டுப் போனான். அர்ச்சுனன் யார்.? அந்த அரசபரம்பரை இளவலிடம் தான் உனக்கு அக்கறை பிறக்குமா?. இந்த ஏழைச்சிறுவன் எப்படிப் போனால் உனக்கென்ன..? ஆனால், அதற்காக, அந்த ஏகலைவனின் உயிர்நிலையென இருந்த கட்டைவிரலையே கேட்டுவிட வேண்டுமா..? அதுவும் @@ தட்சணையென. கேட்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது. அவன் உன்னிடம் வித்தை கற்க வந்தபோது கற்றுக் கொடுக்க மாட்டேன் என்று மறுத்தவன்தானே நீ.? அவன் தன் திறமையால் முன்னேறிய பிறகு உன்னால் எப்படி அவன் ஆற்றலை உரிமைகோர முடியும்.? அர்ச்சுனா இப்படி உன்னால்
ஞானம் - டிசம்பர் 2004

முடியுமா..? ஏகலைவனின் தியாகத்தின் முன் சிறிதுகூட நிற்கத் தகுதியற்றவனே கண்முன் நிற்காதே அப்பால் போ.
கட்டைவிரல் துடிதுடிக்கிறது. அவனது கையை விட்டுப் பிரிந்த வேகத்தில் அப்படியும் இப்படியுமாய் அசைகிறது. இன்னும் இரத்தப் பெருக்குப் போகவில்லை. ஏகலைவன் அதிர்ந்த விழிகளில் அலைவு தோன் றாமல் அப்படியே இருக்கிறான். அவனது நிலைத்த விழிகள் உலகினையே கேள்விக்குறியாக நோக்குகின்றன.
இனி எல்லாவற்றினதும் அர்த்தம் என்னவாகப் போகிறது.?
குருபக்தி என்று மனதுள் பூசித்த அந்த ஒன்றின் மகிமை இல்லாமலே போய்விட்டதா..?
ஞானம் - டிசம்பர் 2004
மானசீகமாய் அவன் கொண்ட அந்த ஆத்மார்த்த உணர்விற்கு அர்த்தமே இல்லையா..?
உலகில் எதுவும், எந்த உன்னதமும் உண்மையில்லையா..? எல்லாம் பொய்யா..? எல்லாம் மாயையா?
இனியொரு வேளையை இதற்கு முன்பிருந்த உற்சாகத்தோடு, நம்பிக்கை யோடு எதிர் கொள்ளமுடியுமா?
ஏற்கனவே வில்வித்தை கற்றுத்தர மறுத்தவரை அவன் இவ்வளவு நம்பிக் கையோடு எதிர்பார்த்தது.அவனது தவறா..? உச்சபட்ச நம்பிக்கையே சிதறிப் போகிறபோது அவனால் என்னதான் செய்ய முடியும்.?
இனி இவனால் அம்பெய்ய முடியாது. கட்டை விரலை இழந்து விட்டதனால் அல்ல. குரு சொல்லித் தராமலே வித்தை
5

Page 5
கற்றுக் கொண்ட அவனால் கட்டை விரலின்றி அம்பெய்ய முடியாமலா போகும்.?
ஆனால் துரோணர், அவனது கட்டை விரலையே காணிக்கையாகக் கேட்டாரே.
அந்தக் கணத்தில் அவனது உள்ளம் உடைந்து சிதறிப் போயிற்று அவனது வைராக்கியம் தளர்ந்து போயிற்று.
எவரை மிக உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றினானோ? எவரால் தன் ஆற்றல் மிகுந்து வரக் கண்டு மகிழ்ந்தானோ..?
எவரைத் தன் மனதில் குடியிருத்தி வைத்தானோ..? அவரே அந்த 'உன்னதத்தைச் சிதறடித்தபிறகு இந்த உலகில் எதன்மீதுதான் அவனால் நம்பிக்கை வைக்க முடியும்.
இந்த ஆற்றல். இது
மில்லை.
ஒன்று
அவன் அவர் மேல் கொண்ட குரு பக்தி. அதற்கு அர்த்தமில்லை.
இந்த உலகில் எதுவும், எதுவுமே உண்மையில்லை. எல்லாமே 'பொய் ஆயிற்று.
இவன் கட்டை விரலைக் கொடுத்ததற் காக இவனது புகழ் காலாதிகாலத்திற்கும் நிலைத்து நிற்கும். ஆனால் அவனது உடைந்து போன உள்ளத்தை ஒட்ட வைக்க எந்தக் காலத்திலாவது, எந்தத் துரோணராலாவது முடியுமா?
அவனது உயிர்நிலை அறுந்து போயிற்று.
எந்த வழியில் அவன் தன் வித்தை கற்றானோ அந்த வழியிலேயே அவனது வித்தை நழுவிப் போயிற்று.?
6
துரோணர் போய்க்கொண்டிருக் கிறார். கண்ணாடிப் வெட்டப்பட்ட அவனது கட்டைவிரல், குரு காணிக்கை.
கட்டைலிரல் அவரைப் பார்த்துச் சிரிக்கிறது.
இதைமட்டும் தானே உன்னால் எடுத்துக் கொள்ள முடியும்.?
அவன் கைகளை மட்டும்தானே உன்னால் கட்டிப்போட முடியும்.?
ஆனால் அவன் மனதில் வியாபித்து நிற்கின்ற அவனது ஆற்றல், அதீதமான குரு பக்தியின் ஆவணமான, அவனது நான்கு விரல்கள். இவற்றையெல்லாம் உன்னால் பறித்துவிட முடியாது. துரோணர் சிலிர்க்கிறார். உறுத்தல் உள்ளோடுகிறது. பாவியாகி விட்டேனா..? பாவிதான். பாவிதான். கண்ணாடிப் பெட்டிக்குள் கட்டை விரல் துடித்துக் கிடக்கிறது.
துரோணா ஏன் இப்படிச் செய்தாய். ஏன் இப்படிச் செய்தாய்..?’ உள்ளே கிடந்து படபடக்கிறது கட்டைவிரல்.
நீ . அர்ச்சுனன். உங்கள் இருவருக்குமிடையில் ஏகலைவன் எங்கே வந்தான்.? தனக்கு வில்வித்தை பழக்கித்தரக் கேட்டான் நீ மறுத்தாய். அவன் தானாகவே பழகிக் கொண்டான். இதிலென்ன வந்தது உனக்கு.?
உனது மாணவனை வேறொருவன் விஞ்சிவிடக் கூடாது என்பதுவே உன் எண்ணமா..? இதுதான் உன் ஆசிரிய
பெட்டிக்குள்
தர்மமா..?
உன்னை அவன் தன் மனதில் இருத்தி குருவாய் வரித்ததற்காகவே அவனது கட்டை விரலைக் கேட்ட நீ, உண்மையிலேயே அவனுக்கு நீ வித்தை
göT 6örüb - Lq-&Füb Ur 2004

கற்றுக் கொடுத்திருப்பின் என்னென்ன கேட்டிருப்பாயோ..?
நீ அவனுக்கு வில்வித்தை சொல்லித் தர மாட்டேன் என்றதோடேயே உனக்கும், அவனுக்குமிடையில் எதுவுமே இல்லாமல் போயிற்று. அதன் பின் அவன் உன்னை மனதில் வைத்துப் பூசித்தால் உனக் கென்ன வந்தது.? நீ உன்பாட்டில் போகவேண்டியதுதானே! அவன்தான் சிறுவன். இன்னும் உன் மீதான மரியாதையோடு இருக்கிறானென்றால், நீ வேறு அதைப் பயன்படுத்தி அவன் ஆற்றலைச் சாய்க்க வேண்டுமா. ? எங்கேயிருந்து வந்தது உன் நீதி.? எங்கேயிருந்து வந்தது உன் திடீர் ஞானோதயம்.? அவன் மனதில் உன் ஆற்றல் பிரவகித்து வழிந்தது உனக்குப் பிடிக்க வில்லையெனில், அவனால் எட்டமுடியாத் தொலைவிற்கு நீ போக வேண்டியது தானே!
நீ ஏன் அங்கு சென்றாய்..? உனது செவியில் ஏகலைவன் எனும் பெயர் ஏன் சிக்கிற்று.? நீ ஏன் அவன் வழியில் குறுக்கிட்டாய்...? நீ உன் பாட்டில் பாண்டவர்களுக்கும், கெளரவர் களுக்கும், அரசகுமாரர்களுக்கும் மட்டுமே உன் வித்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கலாம். யாரோ ஒர் ஏழைச் சிறுவன் தன்பாட்டில் வித்தை பழகிக் கொண்டிருந்தால் உனக்கென்ன வந்தது..?
உனது கர்வம் அவனது வாழ்வை அழித்தது. அர்ச்சுனன் மீதான உனது அபிமானம், ஏகலைவன் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியது. துரோணா. உன் வாழ்வு வீரத்துடனிருக்கலாம். நீ எத்தனையோ வீரர்களை உருவாக்கி யவனாய் இருக்கலாம். பாரதப் போரிலே
ஞானம் - டிசம்பர் 2004
உனது பெயர் அழியாது பொறிக்கப்பட விருக்கலாம். ஆனால் உனது மனதின் ஒரு மூலையில் அழியாத பதிவாய் சஞ்சலித்துக் கொண்டிருக்கப் போகிற அந்த நினைவு ஏகலைவனுடையது என்பதை நீ ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். உனது இதயத்தை நீ கல்லாக்கியிருப்பினும், ஏதோ ஒரு கணத்தில் அந்தக் கல் கசியத்தான் போகிறது. ஆனால் அதற்குப் பிரயோ சனமே இல்லாதபடி நீ அவனது கட்டை விரலை எவ்வித இரக்கமுமின்றி குரு தட்சணை என்ற பெயரில் பறித்துக் கொண்டு விட்டாய். அதை நீ பெற்றிரா விட்டாலும் கூட, நீ கேட்ட அந்த ஒரு வார்த்தையிலேயே நீ அவனை ஒன்று மில்லாதவனாக்கி விட்டாய். இனி நீயாய் நினைத்தால் கூட அவனது உடைந்து போன உள்ளத்தை ஒட்டவைக்க முடியுமா..? கட்டைவிரல் துடிதுடித்துப் பதைக் கிறது. சிலிர்த்துக் கிடக்கும் அந்தக் கட்டை விரல் கேட்கின்ற கேள்விகளுக்குத் துரோணரால் எப்படிப் பதில் சொல்ல முடியும்.?
எங்கோ ஒரு கானகத்தின் மையத்தில் உயிர்ப்பிழந்து போன அவனது குரல் காற்றில் அலைகிறது.
"நான் இறந்தவுடன், எனது கட்டை விரலையும் என்னோடு சேர்த்துத் தகனித்து விடுங்கள். எல்லாமே என்னோடு முடிந்து போகட்டும்.”
காற்று அலைந்து, அலைந்து அந்தச் செய்தியைக் காவிக்கொண்டு போகிறது. வெகுதொலைவில் துரோணரும், அர்ச்சுனனும் நடந்து போய்க் கொண் டிருக்கிறார்கள். அவர்களது இரண்டு சோடிக் காலடித்தடங்களில் கட்டை விரலின் குருதி ஒழுகிக் கிடக்கிறது.
O
7

Page 6
அது
இளைய அப்துல்லாஹ்
அந்த உற்பவிப்பு எல்லோருக்கும்
வாய்க்காதது.
ஒரு முகிழ்த்தல் போலத்தான்.
முகிழ்த்தல் என்பது எவ்வளவு
அற்புதம்,
பூக்கள், விதைகள்,
குழந்தை, மனம், எண்ணம்
என்றபடிக்கு முகிழ்த்தல் அகலும்,
ஒரு மெளனத்துள் ஆழ்வதும்
அதனை ஸ்டறிலிப்பதும் ஒரு முகிழ்த்தல்தரின்.
ஒரு சூழலுக்கு இயைவதும் சூழல் எமக்குள் புகுவதும் இன்பம், மென்புல் வெளியில் மெதுவாய் இறகசைத்து சிறு குருவி நுழைவதும் மென்மை,
மனத்திடை சில நேரம் உதிர்த்தும் மென் இழைகள், நெகிழ்வுகள், மெல்லிய காதல், ஒரு பச்சாதாபம் எல்லாமே அற்புதம் நிகழ்த்தும் முகிழ்த்தல்கள்.
எரியும் தீயிடை ஊடனுருகுவதுமாகி எந்த ஒப்பனையுமற்றதும் எதிர்கால அச்சமின்மை பற்றிய உறுதியும் உள் மனதில் அது பற்றிய பீங்காரமும் எப்பொழுதும் ஒரு வகை உச்சாய்ப்பில் கிளர்வதும்
வெண் பணியிடை மெல்லிதழ் தொடுவதாய் உணர்வதும் எல்லாக் காலங்களும் எல்லாப் பாதைகளும் நந்தவனத்தை நோக்கியதாய் அமைவது போலவும்
இருப்பது ஒன்றெனில்
Segol........ காதல்தானே. O
co85 mr oortb - tqerrib U fi 2004

சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
* ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம்பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி * சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை , உருவகக்கதை Creative sேsays, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தி, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமைபெற்றன. * வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனைவிடை
தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். * 2000 பக்கங்களைக்கொண்ட வரலாற்றில் வாழ்தல்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட இவரது சுயசரிதையாகும். * அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் இவரது
கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
(3) தி. ஞா : உங்களுடைய "வி" என்ற சிறுகதைத் தொகுதிக்கு சாகித்தியமண்டலப் பரிசு கிடைக்காதது பற்றி பல கதைகள் உண்டு. ஆசிரியன் என்ற வகையில் உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கலாம். உண்மை என்ன?
எஸ். பொ. : 1965ஆம் ஆண்டு வெளிவந்த புனைகதைத் தொகுதிகளுக்குள் ‘வி சிறுகதைத்தொகுதிக்கு அவ்வாண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு கொடுக் கப்படுதல் வேண்டும் என்று நடுவர்கள் ஒருமனதாகத் தீர்மானித்திருந்தார்கள். எனவே என்னுடைய வீ, சிறுகதைத் தொகுதிக்கு
om er uio - qaf b U ir 2004 9

Page 7
சாகித்தியப் பரிசு கிடைக்கும் என்கிற செய்தி ஈழத்து இலக்கிய உலகில் பரவலாகக் கசிந்தது. இதனை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரும் அறிந்திருந்தனர். அப்பொழுது சாகித்திய மண்டலத்தில் தமிழ் உறுப்பினராக இருந்தவர் என் நண்பர் பேராசிரியர் சதாசிவம். நடுவர்கள் என்னுடைய நூலுக்குச் சாகித்திய மண்டலப்பரிசு வழங்கச் சிபார்சு செய்துள்ள தகவலையும் நண்பன் என்ற முறையிலே அறியத் தந்திருந்தார். ஆனால், இறுதியிலே அதற்குச் சாகித்திய மண்டலப் பரிசு கொடுக்கப்படவில்லை. அந்த வர்த்தமானத்தை மிகவும் சோகத்துடன் சதாசிவம் எனக்குப் பின்னர் சொல்லிக் கண்கலங்கியதை இப்பொழுதும் என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. இந்தச் சாகித்திய மண்டலத்தில் மத்தியகுழு உறுப்பினராக அப்பொழுது இருந்தவர் சோ. நடராசா. தங்கத்தாத்தாவுடைய மகன். அவரும் அப்பொழுது கல்வி அமைச்சராக இருந்த 1.M.R.A. இரியகொல்லவும் இலங்கை வானொலி ஆரம்பமான காலத்தில் ஒன்றாகவே பணிபுரிந்ததினால் நண்பர்களானவர்கள். இந்த நட்பின் காரணமாகத்தான் சோ. நடராசா சாகித்திய மண்டலத்தின் மத்தியகுழு உறுப்பினராக நியமனம் பெற்றிருந்தார். முற்போக்கு எழுத்தாளர்கள் அவரது தயவை நாடி, தமிழ்க்குழுவின் பரிந்துரைக்கு மாறாக, உச்சக்குழு நிலையில் அப்புத்தகத்திற்கான பரிசை நிராகரித்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். அவரும் அந்தப் பணியைச் செய்வதாக வாக்களித்தார். வீ சிறுகதைத் தொகுதியில் வரும் "வீடு என்ற பெளத்த கோட்பாடுகளைச் சொல்லும் கதையைக்காட்டி அந்தக்கதை பெளத்தத்தையும் சிங்களவரையும் இழிவுபடுத்தும் தன்மையாக அமைந்துள்ளது என்று கூறி உண்மைக்குப் புறம்பான முறையில், சிங்களவர்களுக்கு ஆத்திரம் ஏற்படக் கூடிய வகையில் சில பகுதிகளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். அதனால் ஆத்திரம் அடைந்த சிங்கள உறுப்பினர்கள் அத்தொகுதிக்குப் பரிசு வழங்கக் கூடாது என்று சன்னதம் ஆடியதினால் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. வீடு சிறுகதைத் தொகுதி மீண்டும் பிரசுரமாகியுள்ளது. அந்த வீடு என்ற சிறுகதை ஓர் அட்சரம் கூடத் திருத்தம் பெறாமல் முதற்பதிப்பில் உள்ளது போலவே பிரசுரமாகியுள்ளது. உண்மையில் தமிழில் இதுவரையில் பெளத்த போதனைகளை உச்சமாக எடுத்து விளக்கும் கதைகளிலே வீடு போன்ற ஓர் சிறுகதை அமைந்ததில்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதையை எழுதுவதற்கு மூலமாக அமைந்த ஜாதகக் கதைகளை எனக்குப் பாளி மொழியிலிருந்து கற்பித்த ஏ.பி. குலசிங்க தமிழ் அறிந்தவர். வீடு சிறுகதையை வாசித்துவிட்டு அதைச் சிங் களத்தில் மொழிபெயர்த்து, சிங்கள பெளத்தர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அப்படிப்பட்ட ஒரு கதையை சாகித்தியவான்கள் அமைந்த குழுவிலே மிகக் கேவலமான முறையில் என்னுடைய எழுத்து ஆன்மாவையும் ஓர்மத்தையும் சிதைத்து, ஆபாசமாகவே சோ. நடராசா மொழி பெயர்த்தமை அறிவுக்குச் செய்த மானபங்கமாகும். இதனாலே சினமுற்று சோ. நடராசாவுக்கு நான் கடிதமே எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தை நான் திரும்ப ? என்ற அங்கத நூலின் முதற் பதிப்பிலே அனுபந்தமாகக் கூடச் சேர்த்திருந்தேன். ஒரு சினிமா சான்ஸ"க்காக, தமிழ்
10 ஞானம் - டிசம்பர் 2004

வித்துவத்தின் ஊற்றாக விழங்கிய நவாலியூர் சோமசுந்தரனாருடைய புதல்வன் இவ்வாறு தாழ்ந்து போனமை ஈழத்து இலக்கிய உலகில் நடந்த ஒரு சோகமான நிகழ்வாகும். அவருடைய வாழ்க்கையின் இறுதிக்காலம் மிகவும் துன்பமானதாக அமைந்ததாக அறிந்து துக்கப்பட்டேன்.
தி.ஞா : இவ்வாறு ஒரு தவறான மொழி பெயர்ப்பினாலேயே வீரகேசரியில் பிரசுரமான உங்களுடைய "யோகம் என்ற நாவல் இடையில் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் உண்மையை அறியத்தாருங்கள்.
எஸ். பொ. சிவப்பிரகாசம் தினகரனில் இருந்து, வீரகேசரி ஆசிரியராக வந்த பிறகு, அவருடைய காலத்தில், யோகம் என்ற பத்து அத்தியாயத்தில் அமைந்த நாவல் வீரகேசரி பிரசுரத்திற்காகக் கொடுக்கப்பட்டது. ஏலவே பிரசுரமான சடங்கு, தேடல் போன்ற நாவல்கள் முழுமையாக எழுதிப் பிரசுரத்திற்குக் கொடுக்கப்பட்டவை அல்ல. அவை வாரா வாரம் எழதப்பட்டவை. அதற்கு மாறாக யோகம் முழுமையாகவே எழுதப்பட்டது. யோகம் கதையினுடைய பிரதான நிகழ்வுகள் இரண்டு கட்டங்களாக உண்டு. ஒன்று கண்டி இராச்சியத்திலே சேனரதன் ஆட்சிக்கு வருவதற்கு முற்பட்ட நிலையிலுள்ள அரசியல் நிலைகளைக் கொணி டதாக ஐந்து அத்தியாயங்களும், 1965ஆம் ஆண்டில் டட்லி சேனனாயகாவினுடைய தலைமையில் ஒரு தேசிய அரசாங்கம் அமைப்பதற்குத் திருச்செல்வத்தினுடைய ஆலோசனையின் பெயரில் தமிழரசுக்கட்சியினர் துணை நின்ற நிகழ்வுகளை ஐந்து அத்தியாயங்களாகவும் இணைத்து எழுதப்பட்ட நாவல்தான் யோகம். உண்மையிலே அந்த யோகம் நாவல்தான் முதல்முதலாக அரசியல் பாத்திரங்களை வைத்து முயலப்பட்ட முதலாவது தமிழ் நாவலாகும்.
இரண்டு அத்தியாயங்கள் பிரசுரிக்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தினசரியாக வந்த ‘அத்த பத்திரிகையின் முன்பக்கத்திலே ஜே. ஆர். ஜெயவர்தனாவுடைய பத்திரிகையான வீரகேசரி, பெளத்த சிங்கள இனத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக ஒரு நாவலைப் பிரசுரித்துக் கொண்டிருக்கிறது என்ற தகவலைப் பிரசாரப்படுத்திச் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியிலே, அந்தக் கதையில் கையாளப்பட்ட சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தருவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக ஜே. ஆர். உடைய அறிவுறுத்தலின்படி உடனடியாகச் சிவப்பிரகாசம் அதன் பிரசுரத்தை நிறுத்தியதுடன், அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளையும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அனுப்பிவைத்தார். அதற்குப்பிறகு யோகம் நாவலுடைய கையெழுத்துப் பிரதி எனக்குக் கிடைக்கவேயில்லை. அதை எழுதியபோது உபயோகித்த குறிப்புகள் அனைத்துமே சூறாவளியின் வெள்ளத்திலே அழிந்துபோயின. எனவே நான் படைத்த படைப்புகளிலே யோகம் காணாமல் போயிற்று. அத்தவில் வந்த முதற்பக்கச் செய்தி குறித்து அத்தவினுடைய ஆசிரியரை நான், வீ.ஏ.சிஞானம் - அப்பொழுது இலங்கை வானொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்தார் - அவர்களுடன் சென்று சந்தித்தேன்.
Irr oor tib - lqaf ibu ir 2004 11

Page 8
ஏனென்றால் சிவஞானத்தினுடைய நல்ல நண்பர் அத்த ஆசிரியர். இன்றும் நல்ல ஞாபகம் இருக்கிறது. பொரளையில் உள்ள Bar இலே மூவரும் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது, 'ஏன் உங்களுடைய தமிழ்த் தோழர்கள் இப்படிக் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தாங்களே மொழிபெயர்த்து இப்படியாகப் போடவேண்டுமென்று சொல்லி, கட்சி மேலதிகாரிகளைக் கொண்டு என்னை நிர்ப்பந்தப் படுத்தியதனால்தான் நான் அந்தச் செய்தியினைப் பிரிசுரித்தேன். I am Sorry. எனக்கு வேறு வழி இருக்க வில்லை. ஏன் இப்படி உங்கள் தோழர்கள் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்? ஒரு காலமும் சிங்களத்தில் வந்த எந்த இலக்கியமும் ‘அத்த பத்திரிகையின் முன்பக்கச் செய்தியாக வந்ததேயில்லை. இப்படி நிகழ்ந்ததற்கு நான் வருந்துகிறேன் என்று சொன்னார். இந்த நிகழ்வுகூட ஒவ்வொரு கட்டத்திலேயும் எவ்வாறு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னை இலக்கிய நொண்டியாக்கவும், என்னுடைய எழுத்துக்கள் பிரசுரமாவதைத் தடுத்து நிறுத்தவும் மிகக் கேவலமான சதிகளை மேற்கொண்டார்கள் என்பதை நிறுவும். இந்தச் சதி தொடர்ந்து இன்றுவரை நீடித்துக் கொண்டு வருவதுதான் எனக்கு விசனம் தருகிறது. இவர்களுக்கு அறிவே வராதா? ஞானமே பிறக்காதா? விமர்சன ரீதியில் என்னை எதிர்கொள்ளவோ, பொதுவான விவாதம் ஒன்றுக்கு என்னை அழைக்கவோ அச்சங் கொண்டவர்களாகவே அடிநாள் தொட்டே வாழ்கிறார்கள். இது மிகவும் கோழைத்தனமான செயல்.
தி.ஞா : “வார இறுதியில் மனைவியை அடைய யாழ்ப்பாணம் சென்று அவளை அடைய முடியாமல் அவதியுறும் பச்சை மஞ்சள் கதைதான் இது" என்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே நடத்தப்பட்ட ஆய்வரங்கு ஒன்றிலே 'சடங்கு நாவல் பற்றிக் கூறப்பட்டது. இது பற்றிய உங்கள் விளக்கம் எனன?
எஸ். பொ. : இந்த ஆய்வில், மேற்படி நாவல் வீரகேசரியில், சங்கரினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்று ஏ. இக்பால் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் பிரசுரிக்கப்பட்டது சுதந்திரனில். அப்பொழுது, சங்கள் சுதந்திரனில் இலக்கியப் பகுதி ஆசிரியராய் பணிபுரிந்தார். சுதந்திரனில் இது தொடராக வெளிவந்து முடிந்த பொழுது, ‘இந்த நாவல் ஒரு காலகட்டத்தின் பதிவு: இலங்கை கிளறிக்கல் சேவன்ற் ஒருவன் ஒரு காலத்தில் எவ்வாறு தன் ஆசைகளையும் தன்னுடைய ஏக்கங்களையும் மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய ஒருவனாய் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு Social document இது என்றும், வ.அ. இராசரத்தினம், செம்பியன் செல்வன், கவிஞர் கந்தவனம், கே. இராமசாமி, மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் ஆகியோர் இதற்கு விமர்சனம் எழுதியிருந்தார்கள். அப்படி இருந்தும் இக்பாலுக்கு, "இது ஒரு வார இறுதியில் மனைவியை அனுபவிக்கச் சென்றவனுடைய கதை என்று படுகிறது. இரசனைகள் பலவகை. அந்த இரசனையிலே தேனையும் மலரின் சுகந்தத்தையும் மலப்புழுக்கள் சுவைப்பதில்லை. இக்பாலின் இலக்கியச் சுவைப்பின்
12 ஞானம் - டிசம்பர் 2004

நேர்த்திக்கு இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று போதாதா? சடங்கு நாவலுக்குப் பல பெருமைகள் உண்டு. ஒன்று, அது தொடர்கதையாக வந்த ஓராண்டிலேயே, நூலாக வெளிவந்தது. முதற்பதிப்பில் பிரசுரமான இரண்டாயிரம் பிரதிகளும் ஆறு மாதத்தில் விற்பனையாகிவிட்டன. விற்பனையிலும் அது ஒரு சாதனை. ராணிமுத்துப் பத்திரிகையிலே இந்திய எழுத்தாளர்களுடைய நாவல்கள் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கை, மலேசிய எழுத்தாளர்களுடைய நாவல்களும் பிரசுரமாக வேண்டும் என்று கொடுக்கப்பட்ட குரலின் காரணமாக, இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு நாவல் சடங்குதான். இந்த சடங்கு நாவலை வாசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், அந்த நாவல் வடமாகாணத்தில் குறிப்பாக வடமராட்சியில் பருத்தித்துறைப் பகுதியில் கையாளப்படும் பேச்சுத் தமிழில் அமைந்த நாவல். அப்படி இருந்தும் தென்னிந்திய வாசகர்களுக்கு அது மறுபிரசுரமாகக் கொடுக் கப்பட்டபொழுது, ஒரு இலட்சத்து நாற்பத்தையாயிரம் பிரதிகள் விற்பனையாகின என்று அதன் ஆசிரியர் ஆ.மா. சாமி குறிப்பிட்டது பெருமையாக இருக்கிறது. அந்த நாவலிலே அவர்களுடைய கோரிக்கைக்காக எந்தவொரு யாழ்ப்பாண வழக்குச் சொல்லாவது நீக்கப்படாமல் அவ்வாறே பிரசுரமாகியும், அதன் விற்பனை 145000 ஆக இருந்தது. இதனுடன் இன்னுமொன்றை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். டானியலுடைய பஞ்சமர் இலங்கையில் பிரசுரமாகி, பின்னர் அந்தப் பஞ்சமர் கதையை இந்தியாவில் பிரசுரிக்கவேண்டுமென்று கருதி தஞ்சாவூரில் தங்கியிருந்த காலத்திலே, என் நண்பன் தஞ்சைப் பிரகாஷ் மூலம் அதனைப் பிரசுரித்தார். பிரசுரித்தது ஆயிரம் பிரதிகள். ஆனாலும் அவர் பஞ்சமர் நாவலிலே பயன் படுத்தப்பட்ட யாழ்ப்பாண வழக்குச் சொற்களை இந்திய வாசகர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என நினைத்து நாவலின் பிற்பகுதியில் யாழ்ப்பாண வழக்குச் சொற்களுக்கு ஏற்ற இந்தியச் சொற்களைப் பின்னிணைப்பாகச் சேர்த்தார். நான் எந்தக்காலமும் இந்திய வாசகர்களுடைய பிரீதியைச் சம்பாதிப்பதற்காக, இயல்பான என் படைப்பு முனைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய யாழ் மண்ணின் வேர்சார்ந்து முகிழ்ந்துள்ள தமிழ்ச் சொற்களை நிராகரித்தது கிடையாது. அந்தப் பெருமை சடங்கு நாவலாலும் நிலை நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல இலக்கிய வாதிகளினுடைய வேண்டுகோளின் காரணமாக மீண்டும் மூன்றாவது பதிப்பாகச் சென்னையில் சடங்கு வெளியிடப்பட்டது. மூன்று பதிப்புகளிலே ஒன்றரை இலட்சம் பிரதிகள் விற்பனையான ஒரு நாவல்பற்றி ஏ.இக்பால் இவ்வாறு ஒரு அபிப்பிராயத்தைக் கூறியதை தமிழ் உலகம் அறிந்து கொண்டால், அவர் என் மீது பாராட்டக் கூடிய, சிலசமயம் அது முற்போக்கு இலக்கியகாரருடைய தூண்டுதல்தானோ யானறியேன், அவர் கொண்டுள்ள விரோதத்தை அம்மணமாக உணர்ந்து கொளும்.
சடங்கு நாவல்பற்றி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விமர்சனம் என்ற பெயரால் அவதூறுகளைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், கனடாவில் உள்ள தமிழ் இலக்கியச் சுவைஞர்கள்,
n) ar b - q- a- ibu ir 2004 13

Page 9
வாரந்தோறும் சடங்கு நாவல் நடிக்கப்படுவதைக் கேட்டு இன்புற்று மகிழ்ந்தார்கள். நான் கனடா சென்றிருந்தபொழுது தமிழ் வானொலி சுவைக்கும் பலர், இந்தச் சடங்கு நாவலின் தரத்தையும் தன்மையையும் அதில் உள்ள உணர்ச்சிப் பெருக்கையும், உணர்வு முடிச்சுகளையும் அற்புதமாகக் கையாண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். இதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். தரத்திற்கு அப்பாலாகவும் சடங்கு ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றிலே முதன்மைகள் பலவற்றையும் சாதித்துள்ளது.
தி. ஞா : கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வுகள் தொடர்பாகக் கேட்பதற்கு முன்னர் மட்டக்களப்பு வாழ்க்கையில் உங்கள் எழுத்து அனுபவங்களை அறிய விரும்புகிறேன்.
எஸ். பொ. : நான் 1955ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பட்டதாரி ஆசிரியனாக வேலையிற் சேர்ந்தேன். அந்தக் காலத்தில், மட்டக்களப்பில், சிவநாயகம் சுதந்திரன் மூலம் பெரும் பத்திரிகை ஆசிரியரைப்போல பேர்பண்ணிக் கொண்டிருந்தார். சுதந்திரன் மூலம் கிழக்கு இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த எழுத்தாளர் பண்ணை ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தார் என்றும் சொல்லப்பட்டது. அதே சமயம் கே.எம்.ஷா - பித்தன், செ. இராசதுரை (பின்னர் பாரளுமன்றப் பிரதிநிதியாக இருந்தவர்) ஆகியோர் சிறு சஞ்சிகை ஒன்றை நடத்தியதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் மட்டக்களப்பு எழுத்தாளர்கள் ஒரு சங்கரீதியாக தங்களுடைய பிரச்சினைகளைக் கலந்து ஆலோசிக்கும் வகையற்றவர்களாக - யாழ்ப்பாணத்திலே ஈழகேசரி வட்டம், மறுமலர்ச்சி இலக்கிய இயக்கம், யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகிய பலவும் தோன்றிய பின்னரும், மட்டக்களப்பில் ஒரு எழுத்தாளர் சங்கம் தோன்றவில்லை என்பது எனக்கு ஒரு குறையாகப்பட்டது. இது சம்பந்தமாக மூத்த எழுத்தாளராக, கலைஞனாக மட்டக்களப்பில் வாழ்ந்த பித்தனுடன் தொடர்புகொண்டு பேசினேன். அதே காலத்தில் கோபு என்று அழைக்கப்படும் ஈழநாட்டிலே சேவை செய்த கோபாலரத்தினத்துடைய சகோதரனான அருள்பிரகாசம் என்பவர், மட்டக்களப்புச் சிறைச்சாலையிலே பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் ஒரு நல்ல கவிஞர். இவர்களுடன் இணைந்து ஒரு மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கத்தைக் கூட்டவேண்டுமென்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டம் கோட்டைமுனையில் உள்ள சிவானந்தா வாசிகசாலையிலே நடந்தது. ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், நான் அறியாத வகையில் பத்திரிகைச் செய்தியொன்று வந்தது. மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது என்றும், அதன் தலைவராகப் பாக்கியநாயகமும், அதன் செயலாளராக எஃப்.ஜி. ஜெயசிங்கமும் தெரிவுசெய்யப்பட்டனர் என்றும் செய்தி வெளியாகியிருந்தது. இந்தச் சங்கம் 1955ஆம் ஆண்டிலே நிறுவப்பட்டது. அதுவும் எஸ். பொ.வின் ஆலோசனையில் கூடி, அவர் இன்றியே
14 ஞானம் - டிசம்பர் 2004

திரைமறைவில் எழுத்தாளர் சங்கம் தேன்றியது! பிரச்சினைகள் என் கூடப்பிறந்தன போன்றே நிலைத்துவந்துள்ளன. கொம்யூனிஸ்ட்டாக இருந்தபோதிலும் இவர் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகச் செயல்பட்டார் எனக்குற்றம் சாட்டப்படுவது ஒருபக்கம். நான் யாழ்ப்பாணத்திலே பிறந்தவனாக இருந்தாலும், யாழ்ப்பாணத்து எழுத்தாளர் மத்தியிலே மட்டக்களப்பான் என்று நான் நோக்கப்படுவதும்; மட்டக்களப்பு எழுத்தாளர் மத்தியிலே முற்று முழுக்க நான் யாழ்ப்பாணத்தான் என்று ஒதுக்கப்பட்துமான விசித்திரமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன.
இந்த மட்டக்களப்பு எழுத்தாளர்கள், இன்றுகூட நான் மனவருத்தத்துடன் சொல்லுகிறேன், தற்கால இலக்கிய முனைப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் பல ஆண்டுகள் பிற்பட்டு நிற்பதாக எனக்குத் தோன்றுகிறது. 1994ஆம் ஆண்டு நான் மட்டக்களப்புக்குச் சென்று மட்டக்களப்பு எழுத்தாளர் பலருடனும் சந்திப்புகள் நடத்தி பல்கலைக்கழகத்திலும் உரையாடி வந்தேன். அந்த உரையாடல்களின் போதெல்லாம் மட்டக்களப்பைச் சேர்ந்த படைப்பாளிகள் அனைவரும் மிகவும் ஆதர்ஷத்துக்குரிய படைப்பாளிகளாக கல்கியையும் நா. பார்த்தசாரதியையும் கொண்டாடுவதைக் கண்டேன். இவர்கள் ஒரு தலைமுறைக்கு முன்னர் கொண்டாடப்பட்ட படைப்பாளிகள் ஆவர். அதற்குப் பின்னர் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, தி.ஜானகிராமன் போன்ற எத்தனையோ படைப்பாளிகள் வந்தபின்பும் இன்னும் மட்டக்களப்பு எழுத்தாளர்கள் இலக்கிய உறக்கத்தினால், கல்கிதாசர்களாக வாழ்ந்துகொண்டிருப்பது என்னை நோகடிக்கச் செய்தது. இதற்குப் பிரதான காரணம் மட்டக்களப்பு எழுத்து ஆர்வலர்கள் புதிய தேடல்களை உள்வாங்காது, பரம்பரை பரம்பரையாக விட்டுச்சென்ற சில வழிகாட்டல்களை, அதுவும் தவறான வழிகாட்டல்களை மட்டும் வைத்துக் கொண்டு, சிந்திப்பதாகும். விபுலானந்த அடிகளாரால் இலங்கையின் தமிழும் தமிழ் வித்துவமும் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் பிரகாசம் அடைந்தது. அவரது யாழ் நூலும், மதங்கசூளாமணியும் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் பிரசுரங்கண்ட முக்கியமான இலக்கிய நூல்கள் என்பதிலே சந்தேகம் இல்லை. யாழ் நூலும் மதங்கசூளாமணியும் இன்றும் எங்களுக்குப் பெருமை தேடித்தருவதாக இருக்கின்றன. இந்த விபுலானந்தரினால் ஆரம்பிக்கப்பட்ட இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம் மட்டக்களப்பு அறிஞர்களாலும் படைப் பாளிகளாலும் உரிய முறையிலே உள்வாங்கப்படாதது மகா துக்கமானதும் வெட்கக்கேடானதுமாகும். முதன்முதலில் பாரதியை உலக மகாகவிஞன் என்று ஒப்புக்கொண்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் விபுலானந்தர் என்பதை நாங்கள் மறந்து விடலாகாது. அத்தகைய விபுலானந்தர் தமிழ் செய்த மட்டக்களப்பிலிருந்து, அவருடைய கவித்துவ நாடக விளக்கங்களை உள்வாங்கிக்கொண்டு, தமிழ்ப்படைப்பு ஓர்மங்கள் முன்னேறாதது இன்றைக்கும் எனக்குத் துக்கம் தருகிறது. விபுலானந்தருடைய அற்புத இலக்கியப் பங்களிப்பும் கல்விப்பணியும் உரிய முறையிலே ஆராயப்படவில்லை. இன்றும் நாட்டார்பாடல்களும், நாட்டுக் கூத்துக்களுமே ஆய்வுக்குரிய பண்டங்களாக கிழக்குப்பல்கலைக்கழகம் மயங்கிக்கிடக்கிறது. அந்த அளவில் எஸ்.எல். எம். ஹனிபா, எம்.ஏ. நுஃமான்
குானம் - டிசம்பர் 2004 15

Page 10
போன்ற முஸ்லிம் இளைஞர்கள் அந்தக் காலத்தில் மட்டக்களப்பு இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பாடுபட்டார்கள். அன்புமணி என்னுடைய நல்ல நண்பன். அவர் மலர் பத்திரிகை வெளியிட்ட காலத்திலே மலர்ப் பத்திரிகையிலே அவருக்காக கதை எழுதிக்கொடுத்திருக்கிறேன். அவர் கல்விக் கந்தோரிலே துணை கணக்காளராக இருந்தபொழுது எத்தனையோ சகாயங்கள் எனக்குச் செய்திருக்கிறார். மட்டக்களப்பிலே பழகுவதற்கு இனிய ஓர் எழுத்தாளன் அன்புமணி. ஆனால் இளைய மட்டக்களப்பு ஆர்வங்களைச் சரியான பார்வையிலே நடத்திச் செல்ல அவர் தவறிவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அவர் என்ன செய்வார்? எஸ்.ரி. சிவநாயகம், செ. இராஜதுரை ஆகியோரின் அணுக்கச் சீடராகவே அவர் இலக்கிய உலகைத் தரிசிக்கின்றார்.
தி. ஞா. : இந்தச் சூழலில், புதிய திசையில் மட்டக்களப்பு ஆர்வங்களை வகைப்படுத்த நீங்கள் முயற்சி எடுத்ததுண்டா?
எஸ். பொ. : நிச்சயமாக எடுத்தேன். என்னுடைய நடவடிக்கைகள் காரணமாக மட்டக்களப்பில் கலை - இலக்கிய அணுகுமுறையில் புதிய தலைமுறையும் சிந்தனையும் உருவாகியது என்பதை நான் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். எஸ்.எஸ்.பாலு என்ற ஒரு வயலின் வித்துவான்தான் முதன்முதலில் மட்டக்களப்பு மக்களுடைய பேச்சுத் தமிழில் நாடகம் எழுதலாம் என்பதை அறிமுகப்படுத்தினார். அவருடைய நட்பையும் அறிமுகத்தையும் எனக்குச் 'சானா ஏற்படுத்தித்தந்தார். அவரைத் தவிர மற்றைய அனைத்து மட்டக்களப்புப் படைப்பாளிகளும் இந்தியச் சொல்லாடல்களையே உபயோகித்தார்கள். நான் யாழ்ப்பாணத்தில் பிறந்ததினால், அதுவும் கல்வி அறிவற்ற பெற்றோருக்குப் பிறந்ததினால், யாழ்ப்பாணத்து மண்ணின் மைந்தர்கள் பேசிய தமிழைக் கேட்டு, என் தமிழ்ச் சொல்வளத்தைப் பெருக்கிக் கொண்டதினால், மட்டக்களப்புக்குச் சென்று அங்கே விவாகம் செய்து அங்கேயே குடும்பத்தவனாக வாழத்தொடங்கிய காலத்தில், மட்டக்களப்பு மக்களுடைய நாவிலே வாசஞ் செய்த செந்தமிழ் சொற்களுடைய வலிமையையும் அழகையும் கண்டு வியந்தேன். அந்தச் சொற்களைத் தமிழ் இலக்கியத்திற்குக் கொண்டுவராது நிராகரிக்கும் கொடுமையைக் கண்டு துக்கித்தேன். இதனால் மட்டக்களப்பு பழகு தமிழ் சொற்களை என் கதைகளிலும், மட்டக்களப்பு மாப்பிள்ளை' என்று நான் எழுதி 26 வாரங்கள் வானொலியில் ‘ஒலிபரப்பாகிய நாடகத்திலும் தாராளமாகப் பயின்றேன். மட்டக்களப்புப் பேச்சுத்தமிழை தமிழ் இலக்கியப் படைப்பிற்கு ஆகுமான மொழியாகப் பிரகடனப்படுத்துவதிலே என்னுடைய ஊழியம் முதன்மை பெற்றிருந்தது. அது மட்டுமன்றி, நீலாவணனுடன் எற்பட்ட தொடர்பினால் கல்முனை எழுத்தாளர் சங்கத்திலே அப்பொழுது மருதூர்க்கொத்தன், நுட்மான், சத்தியன், மற்றும் மருதூர்க்கனி, மருதமுனை மஜீத் போன்ற பல எழுத்தாளர்கள் மத்தியிலே மட்டக்களப்பு பழகு தமிழ் சொற்களிலே எழுதுவது ஒரு பெருமை
16 ஞானம் - டிசம்பர் 2004

சேர்க்கக்கூடிய விடயம் என்பதை எடுத்துச் சொன்னேன். எது எப்படி இருந்த போதிலும், மட்டக்களப்புப் பழகு தமிழிலே எஸ்.எல்.எம். ஹனிபா தடம்பதித்துள்ளமை பெருமையான விஷயம்.
அது மட்டுமன்றி, இலக்கியத்திலே ஒரு புரிந்துணர்வும் கூட்டு முயற்சிகளும் தேவை என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வாழ்ந்தவன் நான். இலங்கையில் பிரசுரமான முதலாவது கூட்டு முயற்சி மத்தாப்பு. இரசிகமணி கனக செந்திநாதன், இ.நாகராஜன், சு. வேலுப்பிள்ளை, குறமகள் ஆகிய நால்வருடன் நான் எழுதிய குறுநாவல்தான் மத்தாப்பு. அதன் பிறகு அதைப் பின்பற்றி, அதன் எழுச்சியினால் தினகரன் ஒரு தொடர்கதையை பத்து எழுத்தாளர்களைக் கொண்டு எழுதுவித்ததாக நினைவு. பின்னர் ‘மணிமகுடம் என்ற தலைப்பில் இரசிகமணி செந்திநாதனுடனும் இ. நாகராஜனுடனும் நான் இலங்கை வரலாற்று நிகழ்வுகளை கதை நிகழ்வுகளாகக்கொண்ட ஒரு நாவல் எழுதினேன். மணிமகுடம் இதுவரையில் நூலாக வெளிவரவில்லை. காரணம் விரகேசரியிலே பிரசுரமான அதன் பிரதி கைவசம் இல்லை. அதை மீட்டுத் தருபவர்கள் தமிழ் இலக்கியத் தேடலுக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தவராவர். அதேபோல மட்டக்களப்பு எழுத்தாளர்களையும் பயன்படுத்திக் கூட்டு முயற்சிகள் செய்யவேண்டும் என நினைத்து “கோட்டை முனைப் பாலத்திலே என்ற ஒரு தொடரை தினகரனில் வெளிவர நான் எற்பாடு செய்திருந்தேன். அந்தத் தொடரை எற்பாடு செய்வதற்கு உதவியவர் எனது நண்பர் எம்.ஏ.ரஹற்மான். அந்தக் கோட்டை முனைப்பாலத்திலே என்ற தொடரிலே அறிமுகமானவர்தான் எழுத்துலகில் பிரபலமான செழியன் பேரின்பநாயகம். அதே தொடரில் அறிமுகமான இன்னொரு எழுத்தாளர் அப்பொழுது கல்முனை எழுத்தாளர் சங்கச் செயலாளராகப் பணியாற்றிய மருதூர்க்கொத்தன். இவர்களைத் தவிர கல்முனை எழுத்தாளர் சங்கத்துடன் எனக்குத் தொடர்பு இருந்த காரணத்தினால், தினகரனில் ஐவர் பங்குபற்றி நடத்தப்பட்ட ஒரு இலக்கியப் பரிசோதனை - ஒரு சிறுகதை, ஒரு கவிதை, ஓர் உருவகக்கதை, ஓர் ஓரங்க நாடகம், ஒரு குறுநாவல் ஆகிய ஐந்து இலக்கிய வடிவங்களை - ஏனென்றால் அப்பொழுது நான் மரபு பற்றிய சிந்தனைகளை நற்போக்கு இலக்கியச் சிந்தனைகளுடன் இணைத்துச் சொன்னதினால், ஏற்படுத்தப்பட்ட அந்த இலக்கியப் பரிசோதனைக் களத்திலே கல்முனை எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த அதன் தலைவர் நீலாவணனுக்கும் அதன் செயலாளர் மருதூர்க்கொத்தனுக்கும் இடம்கொடுத்து அந்தப் பரிசோதனைக்களத்தைப் பூர்த்தி செய்தேன்.
இவற்றிலிருந்து மட்டக்களப்பு எழுத்தாளர்களுடன் உறவை மட்டுமல்லாமல் அவர்களுடைய இலக்கியம் பற்றிய அல்லது புனகதை பற்றிய வடிவங்கள், அதன் மொழியாடல்கள், அதன் உரையாடல்கள் ஆகிய சகலவற்றிலும் பற்றி புதிய பார்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலையை உருவாக்கினேன். தெற்கே பொத்துவில் தொடக்கம் வடக்கே மிராவோடை, வாழைச்சேனை வரை எஸ்.எல்.எம்.ஹனிபா, வை.அகம்மது ஆகிய சகல எழுத்தாளர்களுடனும் ஓர் இனிய உறவு இருந்தது. அந்தக்காலம் என்னுடைய எழுத்து ஊழிய வாழ்க்கையில் மிகப் பயனுள்ள பசுமையான காலம் என்று பதிவு செய்ய விரும்புகிறேன்.
(தொடரும். )
Em coTub - LiqeF ubu ir 2004 17

Page 11
Azazó6762/-/600 67/w//762/cip
c92/6Mør7z–såvsyvær Sao6&væJazeBIGab
என். செல்வராஜா நூலகவியலாளர்,இலண்டன்.
ஈழத்தின் வடபகுதியில் தளம்கொண்டு பலாலி இராணுவ முகாமிலிருந்து பெருமெடுப்பில் வலிகாமம் பிரதேசத்தை நோக்கிய படை நகர்வொன்றை நடத்தத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு முகம்கொடுக்க இயலாமல் 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பகுதியிலிருந்து மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த வீடு வாசல்களையும் தேடிய தேட்டங்களையும் கைவிட்டு பயத்தோடும் பரிதவிப்போடும் குடாநாட்டைவிட்டு பாரிய இடப்பெயர் வொன்றை மேற்கொண்டார்கள். உலகின் எந்தவொரு இனத்திற்கும் வரலாற்றில் ஏற்பட்டி ராததும் பாரிய எடுப்பில் இடம் பெற்றதுமான இந்த அவல நிகழ்வில் ஏறத்தாழ ஐந்து இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மக்கள் கையில் எடுக்கக்கூடிய பொருட்களுடன் குடும்பம் குடும்பமாக ஒரே நாளில் புறப்பட்டு சேரிடம் அறியாது மூன்று நாட்களாக உண்ண உணவின்றி மரநிழல்களில் தங்கிக் கூட ஒய்வெடுக்கும் வாய்ப்பின்றி ஒரு வழிப்பயணத்தை மேற்கொண்ட அந்தக் கையறு நிலை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் மாத்திரமன்றி ஏராளமான கல்வியியல் நிறுவனங்களும் கூட இந்தப் புலப்பெயர்வால் கைவிடப்பட்டு பாரிய பாதிப்புக்குள்ளாயின. படைப்பாளிகள் பலர் தமது படைப்புக்களையும் சேகரித்துக் காத்து வைத்த நூல்களையும் இக்காலகட்டத்தில் பெருமளவில் இழந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆயிரம் ஆவணங்கள் இவ்விடப் பெயர்வின் பயனாகக் கவனிப்பாரற்று கறையான்களின் பசிக்கு உணவாகி அழிந்தொழிந்துவிட்ட செய்தி மனதை வருத்துவதாகவுள்ளது. கிராமம் தோறும் கட்டிக்காத்த சனசமூக நிலையங்களில் நூலகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட நூல்களின் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த வரலாற்று அவல நிகழ்வையும் அதற்கு முன்னரும் பின்னருமான வேறும் பல தமிழரின் முடிவில்லாத இடப்பெயர்வுகளையும் ஈழத்து இலக்கியங்களாக நம்மவர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். போரின் விளைவாக ஏற்பட்ட இந்த உள்ளக இடப் பெயர்வுகளினைச் சித்திரிக்கும் ஈழத்து இலக்கியங்கள் சிலவற்றைப் பற்றிய குறிப்புரையாக இக் கட்டுரை அமைகின்றது.
1995 இன் பாரிய இடப்பெயர்வினைப் பற்றிய முதல் நூலாக எம்மை வந்தடைந்தது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். வசந்தராஜா அவர்கள் இலண்டனிலிருந்து Tamil Exodus and Beyond என்ற பெயரில் எழுதி வெளியிட்ட அந்த நூல் இலங்கையின் தேசியப் போராட்டம் குறித்த பகுப்பாய்வுக்குக் கண்ணோட்டமாக அமைந்திருந்தது.
18 ஞானம் - டிசம்பர் 2004

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்தின் உயரதியாரியாக இருந்த வேளையில் சேகரித்த பல தகவல்களின் அடிப்படையில் இவர் இந் நூலைத் தயாரித்திருந்தார். இந்த நூல் பின்னர் 1996 இல் 'தமிழர் வடபுலப் பெயர்ச்சி: அவலமும் அதற்கு அப்பாலும்’ என்ற பெயரில் எஸ். சங்கரமூர்த்தி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு இலண்டன் வாசன் அச்சகத்தால் அச்சிடப்பட்டு G66fluSLCULg). London N 19 3TY: Rajah Publishers, 56 Iberia House, New Orleans Walk. 180 Llẻ,5ử, Qẽ5IT6üTL gìị5 நூல் விரிவான முறையில் தமிழர் புலப்பெயர்வினையும் அதன் பின்னணி யையும் அரசியல் ரீதியில் அலசி ஆராய்வதாக அமைந்திருந்தது.
“யாழ்ப்பாண இடப்பெயர்வு” என்ற மற்றுமொரு ஆய்வு நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையைச் சார்ந்த கார்த்திகேசு குகபாலன் அவர்களால் எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் குடித் தொகைக் கல்வியில்
சிறப்புப்பட்டம் பெற்றவர் கலாநிதி
குகபாலன். தனது முதுகலைமாணி,
கலாநிதி, முதுகலைமணி டிப்ளோமா பட்டக்கல்வி ஆகியவற்றில் குடித்தொகைக் கல்வியை, குறிப்பாக இடப்பெயர்வு சம்பந்தமான ஆய்வினையே தொடர்ந்தும் மேற்கொண்டவர் என்ற வகையில் கலாநிதி குகபாலனின் இந்நூல் மிக ஆழமான
ஆய்வுநூலாக இன்றுவரை கருதப் படுகின்றது.
கொழும்பில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்
புவியியல்துறை வெளியீடாக நவம்பர் 1996 இல் வெளியிடப்பட்ட இந்நூல் 160
(m) i aoruh tq... er tiblU iir 2004
பக்கங்களைக் கொண்டது. 1995ம் ஆண்டு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நிகழ்ந்த மக்கள் இடப் பெயர்வு பற்றிய இந்த நூலினை யாழ்ப்பாண இடப்பெயர்வு பற்றி குடிப்புள்ளியியல் ரீதியாக மட்டுமன்றி சமுகவியல் கண்ணோட் டத்திலும் குகபாலன் ஆய்வு செய், துள்ளார். 10 நாட்களுக்குள் இடம்பெற்ற இந்த இடப்பெயர்வு 5 இலட்சத்து 25 ஆயிரம் மக்களது பாரிய இடப்பெயர் வாகும். இவ்விடப் பெயர்வின் அடிப்படைக் காரணி அரசியலாக இருப்பினும், இந் நூலின் அடிப்படை நோக்கம் கருதி அதற்கு முக்கியத்துவம் வழங்காது ஆய்வுத்தேவை கருதி இடப்பெயர் வினால் மக்கள் அனுபவித்த, அனுபவித்துவரும்
சமூக, பொருளாதார கலாசாரப் பிரச்சினைகளைப் பற்றியே விரிவாக அலசப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணத்திலே அந்த ஆ மாதங்கள்” என்றொரு நூல் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை எழுதப்பெற்றது. நவம்பர் 1997 இல் இந்நூல் யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மணிஓசை அச்சகத்தினால் அச்சிடப் பெற்று 90 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
1995 இல் வலிகாமத்தில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு இந்த நூலிலும் பதிவுக்குள்ளாகின்றது. பிறந்த மண்ணில் ஆழ வேரோடியிருந்ததால் வலிகாமத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வில் பங்கேற்காது யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்ட வகையில் அங்கு எஞ்சியிருந்த 2000 பேரில் அராலியூர் சுந்தரம்பிள்ளையும்
அவர்களால்
அவரது மனைவியும் அடங்குவர். அவர்களது அந்த ஆறுமாத வெளி
19

Page 12
உலகத் தொடர்பற்ற வாழ்க்கை அனுபவம் இங்கு பதிவாகியிருக்கின்றது. பாரிய இடப்பெயர்வை வித்தியாசமான பார்வையில் அணுகும் அனுபவம் இந் நூலாசிரியருக்குக் கிடைத்த தனித் துவமான வாய்ப்பாகும். காலத்துக்குக் காலம் இவர் கொழும்பு, வீரகேசரி
பத்திரிகையில் எழுதிய தனது அனுபவக்
குறிப்புகளையே இங்கு “யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள்” என்ற நூலில் தொகுத்திருக்கின்றார்.
“யாழ்ப்பாணத்தார் கண்ணீர்” என்ற கவிதை நூல் முதுபெரும் எழுத்தாளர் வரதர் அவர்களால் யாழ்ப்பாணம். வரதர் வெளியீடாக, ஜூன் 1997 இல் வெளி வந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்தது. ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்ட 32 பக்கம் மட்டுமே கொண்ட இச்சிறு நூல் உருவில் சிறிதாயிருந்தபோதிலும், காட்ட மானதொரு புதுக்கவிதை நூலாக அமைந்துள்ளது. பதினான்கு ஆண்டு காலக் கண்ணிர்க் கடலிலிருந்து ஒரு சிறு துளி என்ற குறிப்புடன் வெளியாகிய புதுக்கவிதை இது. வீரகேசரி வார இதழில் 26.5.1996 அன்று முதல் வெளியாகியது.
1995 ஒக்டோபர் 30 ம் திகதி யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின் அவலங்களை “யாழ்ப்பாணத்தார் கண்ணீர்” என்ற இந்நூலில் ஆசிரியர் ஒரு கண்ணிர்க் கவிதையாக்கியுள்ளார். சத்திய ஆவேசம் கொண்ட ஒரு கவிஞனின் ஆழ்மனத்தில் உறங்கிக் கிடந்த மானிட நேயம் இங்கு கவிதாபுலம்பலாக விரிந்துள்ளதை அவதானித்து ரசிக்க முடிகின்றது. ஒவ்வொரு வரியும் தாம் அனுபவிதித்த
20
அவலத்தினையும் இழப்புக்களையும் ஏமாற்றங்களையும் எடுத்துக் கூறு கின்றது. இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள செங்கை ஆழியான் அவர்களது உரையின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன்.
“அந்தச் சோக நாடகத்தின் சமூகப் பயன் ஈழத்து வரலாற்றில் ஒரு கறை. கட்டியெழுப்பிய சுதந்திர மாளிகையின் தாங்குநிலையை ஜயறவைத்துள்ள பூகம்ப அலை ஆயிற்று. அந்த சோக நாடகம் ஆரம்ப கட்டத்திற்கே திரும்பவும் மீண்டு விட்டது. இந்த நாடகத்தில் நடித்த இலட்சோபலட்சம் மக்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள். இழந்து விட்ட சொர்க்கத்திற்கு மீண்டுவந்த உணர்வு செத்துப் பலகாலமாகின்றது. எல்லாமிருந்தும் எதுவுமேயில்லாத உணர்வு. இந்த நாடகத்தின் ஒவ்வொரு அசைவிலும் மனுக்குலம் அகெளரவப் படுகின்றது. இடிபடுகின்றது. மனுக் குலத்தின் இருதயம் குத்தப்பட்டுக் குருதி வடிகின்றது. ஒடியபோது இருந்த பயமும் பரிதவிப்பும் திரும்பி வந்தபோது பயமும் அவமானமுமாக மாறிவிட்டன. வீடுகளுக்குள் முடங்கிச் சிறைப்படுத்திக் கொள்வதன் மூலம் வீதிகளில் சந்திக் கின்ற அவமதிப்புக்களையும் மனக் காயங்களையும் குறைத்துக் கொள்ளும் தந்திரோபாயத்திற்கு குடாநாட்டு மக்கள் வந்துவிட்டனர்.”
இப்படியாக ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களால் 1997 ஏப்ரலில் எழுதப்பட்ட இந்த முன்னுரை புலப்பெயர்வின் வடுக்களை உணர்வு பூர்வமான பதிவு களாக்கியிருக்கின்றன.
யாழ்ப்பாணக்
ஞானம் - டிசம்பர் 2004

தமிழரின் பாரிய புலப்பெயர்வின் அவலத்தைப் பதிவு செய்துள்ள சிறு கதைகள் ஏராளம் வெளிவந்திருக்கின்ற போதிலும் சிலவே தனித் தொகுப்புக் களாக்கப்பட்டுள்ளன. வேறும் பல சிறுகதைகள் அவற்றின் ஆசிரியர்களின் சிறுகதைத் தொகுதிகளுக்குள் இரண்டறக் கலந்து தனித்துவமான அடையாளத்தைப் பெறத் தவறி விட்டன. இவற்றில் சில கதைகள் வலிகாமம் இடப்பெயர்வில் பங்கேற்காது புகலிடத்தில் இருந்த வண்ணம் கற்பனையில் ஊற் றெடுத்து எழுதப்பட்ட புனை கதைக ளாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இவற்றைத் தவிர்த்து உண்மை நிலை யினை உணர்ந்து அனுபவித்த எழுத் தாளர்களின் புலப்பெயர்வு அவலங்களை கதைக்களமாகக் கொண்டு வெளிவந்த சிறுகதைகள் தாயகத்தில் தொகுக்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும்.
“யாழ்ப்பாணம்’ என்ற தலைப்பில் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1999 இல் மற்றொரு நூலை சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணம் மேனகா அச்சகத்தில் வெளியிடப்பட்ட 10 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இதுவாகும். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் சமகாலச்சூழலைப் பிரதி பலித்து இலக்கியம் படைத்தவர்களில் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை முக்கிய மானவர் என்று அடையாளம் காணப் பட்டவர். வாசகர்களோடு நேரடியாக உறவைக் கொள்ளும் எழுத்து நடையில் மெல்லிய கிண்டல் ஒடுபரவ, சமகால வாழ்க்கையனுபவங்களையும் அவலங் களையும் தக்க விவரணப் பாங்கில் இவர் படைத்து வந்துள்ளார். 60 கதைகள் வரையில் எழுதியிருந்தும், நூலுருவில்
(mon an h - to artbu i 2004
இவர் வெளியிட்ட ஒரேயொரு சிறுகதைத் தொகுதி “யாழ்ப்பாணம்” என்ற நூலாகும். சமகால நிகழ்வுகளைப் பகைப்புலமாகக் கொண்ட 10 கதைகள் இதில் உள்ளன. வன்னி, மலையகம், யாழ்ப்பாணம், கொழும்பு என்று இவரது கதைத்தளங்கள் விரிகின்றன. இதிலுள்ள யாழ்ப்பாணம் என்ற கதை இன்றைய கட்டுரைக்கு முக்கியமானது. 1995 இடப்பெயர்வுக்குப் பிந்திய யாழ்ப்பாணச் சூழலை இந்தத் தலைப்புக்கதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அக்கால கட்டத்தில் அவரது வாழ்ந்துபட்ட அனுபவங்கள் இக்கதையில் தரிசனத்திற் குள்ளாகின்றது.
அழுவதற்கு நேரமில்லை என்று மற்றொரு சிறுகதைத் தொகுதியும் அண்மைக் காலத்தில் வெளி வந்துள் ளது. தாமரைச் செல்வி என்ற ஈழத்தின் குறிப்பிடத்தக்கவொரு வன்னி எழுத் தாளர் எழுதிய சிறுகதைகள் இவை. பரந்தன் குமரபுரம், சுப்ரம் பிரசுராலயம் டிசம்பர் 2002 இல் கிளிநொச்சி. நிலா பதிப்பகத்தின் வழியாக பதிப்பித்துள்ள 96 கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு முற்று முழுதாக 1995 இன் பாரிய இடப்பெயர்வின் அவலங்களையே சித்தரிக்கின்றது. தாமரைச் செல்வியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும்.
“அழுவதற்கு நேரமில்லை” கதைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒரு சிறுகதை தவிர மற்றைய 11 கதைகளும் இடப் பெயர்வின் பின்வந்த நாட்களில் எழுதப்பட்டவை என்பதால் அதன் கதைக் களங்கள் அந்த நிகழ்வின் அவலங் களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன.
பக்கம்
21

Page 13
1995 இல் ஏற்பட்ட வடப்புலப்பெயர்ச்சிவன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரில் பின்னாளில் ஏற்படுத்தியது. இதனுா டாகவும் இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை அங்கு மோசமடைந்து மிக உக்கிரமான நிலையை தாயகத்தில் கண்டிருந்தது. இந்தப் புதிய நிலை மையைச் சுட்டிக் காட்டும் வகையில் இதிலுள்ள அனைத்துத் கதைகளும் அமைந் துள்ளன. 11 சிறுகதைகளும் ஒருங்கு சேர வாசிப்பவர்களுக்கு 1995 இன் வடப்புலப் பெயர்வின் அவலத்தை மாறுபட்ட கோணங்களில் தொடர்ச் சியாகத் தரிசிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியிருப்பதுடன், அனுபவப் பகிர்வாக வெளியான கதாசிரியரின் வார்த்தை ஜாலமற்ற வசன அமைப்புக்கள், போன்ற வற்றால் வாசகர்களை தாயகத்தில் அந்த நீண்ட பயணத்தில் நீண்டநேரம் ஆத்மார்த் தமாகச் சஞ்சரிக்க வைப்பதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்.
நாவல்களைப் பொறுத்தவரை இலங்கையின் பிரபல படைப்பிலக்கிய வாதியான செங்கை ஆழியான் அவர்கள் எழுதிய ‘போரே நீ போ” என்ற நாவல் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகம், ஜூன் 2002 இல்
கொழும்பு சக்தி என்ரர்பிரைசஸ் மூலம் அச்சிட்டு இந்நூலை வெளியிட்டுள் ளார்கள். 194 பக்கம் கொண்ட இந் நூல் தாயகத்தின் சமகாலப் பிரச்சினைகளை ஒரு பாமரக் குடிமகனின் பார்வையில் கூறும் நாவலாகும். 1995 இல் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின்போது, இடம் பெயர்ந்த மக்களையும், இடம்பெயராத மக்களையும் இணைத்த ஒரு நூலாக - நாவலாக இது அமைகின்றது. மானிட வாழ்வின் பெறுமதி வாய்ந்த உயிர் களையும் இளமைக் கனவுகளையும் போரும், அதன் வெளிப்பாடாயமைந்த புலப்பெயர்வும் எவ்வளவு தூரம் நாசப் படுத்தி வருகின்றதென்ற அவல நிலைகளை “போரே நீ போ” சித்திரிக் கின்றது. யாழ்ப்பாணம், உதயன் பத்திரி கையில் தொடராக இது வெளி வந்தபோது மிகுந்த ஆர்வத்துடன்
வாசிக்கப்பட்டது.
தாயகத்தில் இடம்பெற்ற 1995 இன் பாரிய இடப்பெயர்வினைப் பற்றிய இலக்கியங்கள் ஈழத்து இலக்கியப் பரப்பில், குறிப்பாக ஈழவிடுதலைப் போராட்ட இலக்கியங்களுக்குள் தனித் துவமானதொரு இடத்தினை வகிக்கும் என்பது நிச்சயம்.
O
வாசகர் கவனத்திற்கு .
P B {R}
ஞானத்தின் புதிய தொடர்பு முகவரி:
தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம்
3-B,
46°து ஒழுங்கை,
கொழும்பு - 06
(கண்டியில் இயங்கும் தலைமை அலுவலக முகவரியில் மாற்றம் இல்லை)
22
ஞானம் - டிசம்பர் 2004

ஆருக்குச் சொல்லிநம் அவலம் திர்ப்போம்
அரையன்டப் படுகின்றோம், அடுத்தார் விட்டுக் கோடிக்குள் குசினிக்குள் கொடுங்கிக் கொண்டு
கோபத்தைத் தாபத்தை அடக்கி இந்தப் பாருக்குச் சுமையாகிப் பகிடிக் காள7ய்ப்
பார்ப்பாரைப் பார்ப்பாரைப் பார்த்துப் பார்த்து பல்லினித்து 77'என்று கேட்க வைத்த
படுகொடுமைப் போர்செய்த பழிய7 ஏற்பார்
வயல்வழிய மிதிவெழகள் விதைத்து வைத்து.
வாழ்க்கைக்குப் பொறிக்கிடங்கு தோன்டிமக்கள்
செயல் அழிய நெல் அறுத்த கழனி எங்கும்
சிவனேஇவ் வறுப்பாற்றை வேலை யாலே
அயலட்டை அநுசரணைகூடஇன்றி
அங்கங்கே எங்கெங்கோஅள்ளுப் பட்டே
இயல்பழிந்தோம் இருப்பிழந்தோம் எச்சில்நக்கி
ஏடம்பவித்துத் திரிகின்றோம் ஏழையாகி
விதானைம77 விடுகளில் பாதி நேரம் விதிவழி ஆமியிடம் மிதி நேரம் உதாசீனம் செய்கின்ற மனேச்சர் முன்ன77ல்
ஒருவாறு மின்டாலும் சாமான் வாங்க கதாகால ஷேபங்கள் நிறுப்பார் செய்ய
காதுக்குள் பஞ்சில்லாக் குறையாய்க் கேட்டே இதாதந்தான் என்று வர விட்டார் கேட்க
ஏன் பிறந்தாப்தமிழன7ய் என்னுமாறே
இர7விழய இழவிழுவார் அடித்த ஷெல்லால்
இருப்பிழந்து விடிழந்து எல்லாமற்றே பராமரிப்டார்இன்றித்தாப் மார்கள் பாவம்
L/76öG5/2567 62fffs, G)5 55.5710/7u/ சராசரிக்கு மேலானோர் கொழும்பு போனார் சம்பந்தம் உள்ளே77 மேல்நாடு போன777 தராதரங்கள் இல்லாதோர்கலங்கி ஏங்கி
தமிழன7ய்ப் பிறக்கச் செய்தவந்தான் என்னே?
இந்தியாதிர்த்துவைக்கும் இருந்து பாரன்'
இனி நோர்வே விடமாட்டான் இஞ்ச77 அன்னை கந்தையா "கதிர7மன் விடவே மாட்டான்
கட்டுறன்நான் பந்தயம் இருந்து பாரன்' சந்தியிலே சலசலப்பு வாக்கு வாதம்
பஸ் வந்தால் சரி எல்லாம் தனிஞ்சு போகும் இந்தளவு தான் எங்கள் பேச்சு வார்த்தை
இதற்குமேல் ஏதேனும் நடப்பதுண்டோ? O
eobm oor b — Lq-8f tíbUír 2004 23

Page 14
கலாசாரத் திணைக்களத்தின் இலக்கிய விழாவும் ஒரு இறாத்தல் பானும்
நெய்தல் நம்பி
டெக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கலாசாரப்பிரிவு வருடா வருடம் நடாத்திவரும் இலக்கியவிழா இம் முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. (யாழ் இந்து மகளிர் கல்லூரி 9, 10, 11- ஒக்ரோபர், 2004) வழமைபோல் காலையில் ஆய்வரங்கும் மாலையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இம்முறை விழாவின் ஆய்வுப்பொருள் ஈழத்தின் கல்வி அறிவியல்சார் எழுத்துக்கள் - வரலாற்று விமர்சனநோக்கு என்பதாகும். வழமைபோல் பல்கலைக்கழக புத்திசீவிகள் தாங்களே தெரிவு செய்த தலைப்புகளில் தாங்களே முழக்கித் தள்ளினர். தயவுசெய்து மேற்படி தலைப்பிற்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பென்று கேட்கவேண்டாம். அப்படியே நீங்கள் கேட்டாலும், அவர்கள் வசம் சில விளக்கங்கள் உண்டு. நாங்கள் கல்விப்பரப்பின் பாடவிதானத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது புதிய கல்வி முறைகளைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது என்பர். இந்த இடத்தில் நீங்கள் சற்று பின்நோக்கிப் பயணிக்கலாம். 1998 ம் ஆண்டின் இலக்கியவிழா, அரசகரும மொழியாகத் தமிழ் - இலங்கை நிலையும் நிலைமைகளும் என்ற தலைப்பில் நடைபெற்றது. பின்னர் அது ஒரு தொகுப்பாகவும் வெளியிடப்பட்டது. நான் நினைக்கிறேன் அத்தொகுப்பு இப்பொழுது பல அதிகாரிகளின் வீட்டு அலுமாரிக்குள் முடங்கிக் கிடக்கலாம். இன்றும் சிங்களம் தெரியாததன் காரணத்தால் எத்தனை தமிழர்கள் சிங்கள நீதிமன்றங்களில் அவஸ்த்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் அறிந்திருக்க நியாயமில்லை. இங்கு கலாசார திணைக்களத்தின் அதிகாரிகளும் அவர்களை கட்டுப்படுத்தக் கூடிய மேலதிகாரிகளும் ஒரு முக்கியமான விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. அது என்னவென்றால், வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை இளைஞர் விவகார அமைச்சு என்பது சிறிலங்கா அரசின் உப நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். சிறிலங்காவின் நிர்வாகப் பிரிவொன்றின் ஊடாக, சிறிலங்காவின் கட்டமைப்புகளை கேள்விக்குள்ளாக முடியுமா? ஆகவே இந்தக் கட்டமைப்பை எங்களது இலக்கிய வளர்ச்சிக்கும் கலாசார மேம்பாட்டிற்கும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திப்பதுதான் உசிதம். அதற்காக கல்வியியல் சார்ந்த சிந்தனைகள் அறவே கூடாது என்பதல்ல வாதம். அதுவும் ஒரு சில தலைப்புகளாக இருக்கட்டும். அதுவே முழுமையாக இருப்பதுதான் பிரச்சனை. இலக்கிய விழா NGOக்களின் செமினார் போலாகி விடுதல் கூடாது. இலக்கியம் குறித்து ஆய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக போர்க்கால இலக்கியங்கள் குறித்து எத்தகைய ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன? வன்னி எழுத்துக்கள் பற்றிய எங்கள் மதிப்பீடுதான் என்ன?
24 ஞானம் - டிசம்பர் 2004

இவையெல்லாம் ஆய்வுப் பொருளாக வேண்டாமா, இதனைப் புரிந்து கொள்ளக் கூடியளவிற்கு கலாசாரத் திணைக் களத்தில் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதை நாமறியோம் பராபரமே.
இந்த விழாவின் ஒழுங்கமைப்பையும் மனதிற்கு சங்கடத்தைத் தந்தது. குறிப்பாக உணவு படு மோசம். இவன் சிறுபிள்ளைத்தனமாக உணவைப் பற்றியெல்லாம் பேசுகிறான் என்று நீங்கள் எண்ணக்கூடும். இந்த விழாவிற்கு செலவழிக்கப்பட்ட பணம் அதிகாரிகள் சிலரின் பாட்டன் சொத் தல்ல. மக்களின் பணம், மக்களது பணம் செலவழிப்பது தொடர்பில் கேள்வி கேட்கும் உரிமை, ஒவ்வொரு குடிமக னுக்கும் உரித்தானது என்பதை கருத்தில் கொள்க. ஆனால் நாம் எவரும் கேட்பதில்லை. உண்மையில் எமது மெளனம்தான் அதிகாரிகளின் பலம். இதில் வேடிக்கையானதும் ஆதங்கத்துக் குரியதுமான ஒரு விடயமிருக்கிறது. அது பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கு பாண் வழங்கிய கைங்கர்யம் தொடர் பானது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்
என்னடா
பாண் கேட்டிருக்கிறார். ஒரு சொப்பின் பேக்கில் கட்டியவாறு ஒரு இறாத்தல் பாண் அவரது கட்டிலில் வந்து விழுந்தது. அவர் பாணை வெட்டுவதற்கு கத்திகேட்டு, அவரது நண்பரொருவரை தொலை பேசியில் அழைத்திருக்கிறார். பேரா சிரியர். சிவத்தம்பி அவர்கள் தமிழர் தேசத்தின் ஒரு சொத்தாகக் கருதப் படுபவர். தேசமும் அவரை மிகவும் உயர்ந்த இடத்தில் தான் வைத்திருக்கிறது. அவரது நிலையைக் கொண்டே ஏனைய பேராளர்களின் நிலைமை என்னவாக
Om oor uio -- q- ar bU 2004
இருந்திருக்கும் எள்னபதை விளங்கிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் பேராசிரியருக்கும் இது தேவைதான் என்றும் சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது.
நான் எவரையும் விமர்சிக்கும் நோக்கிலோ அல்லது ஒரு பந்தியை எழுதிவிட வேண்டுமென்று அவசரத் திலோ எனது கருத்துக்களை வெளிப் படுத்தவில்லை. கலாசாரத் திணைக்கள வாதிகளும் மாகாணசபை அதிகாரிகளும் சில விடயங்களை புரிந்துகொள்ள முன்வர வேண்டும். மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக பேரா சிரியர்களின் ஆலோசனைச் சட்டகங் களிலிருந்து விடுபட வேண்டும். அதற் காக பேராசிரியர்களை நிராகரிக்க வேண்டுமென்று நான் கூறவில்லை. இலக்கியவிழா குறித்து இலக்கிய வாதிகளுடனும் இலக்கியச் செயற் பாட்டாளர்களுடனும் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கிய வாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆய்வரங்கில் இடமளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்தவர் களுக்கும் இடமளிக்கலாம். ஆனால் நடைபெற்ற ஒவ்வொரு விழாவையும் எடுத்து நோக்கினால் அது வடக்கு கிழக்கு மாகாண இலக்கியவிழா என்றல் லாமல் ஒரு பல்கலைக்கழக விழா என்பதற்கான அடையாளத்தைத்தான் கொண்டிருக்கிறது. உண்மையில் கலாசார திணைக்களம் என்ற அமைப்பு ஒரு பிரச்சனையல்ல. ஆனால் நாம் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் பிரச்சனையிருக்கிறது. இனியாவது கலாசாரத் திணைக்கள
25

Page 15
அதிகாரிகளும் அவர்களுக்கு ஆணை யிடும் அதிகாரிகளும் தங்களை மாற்றிக் கொள்வார்களென நம்புவோமாக.
நான் இந்த விழாவிற்காக கிழக்கிலிருந்து பயணித்தவன். இந்த விழாவால் எனக்கு கிடைத்த பயன்தான் என்ன? ஒமந்தையில் சிறிலங்காவின் எல்லைக் கோட்டைத் தாண்டி தமிழர் ஆட்சிப் பரப்புள் நுழைந்ததும் ஏற்பட்ட தொரு மகிழ்ச்சி, சிறிலங்காவின் நீதிமன்றங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் (எங்களுக்கான) உச்ச நீதிமன்றத்தை கண்டவுடன் ஏற்பட்ட புளகாங்கிதம். நீண்டகாலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்றதால் இலக்கிய நண்பர்கள் பலரைக் கண்ட திருப்தி. அதிலும் கடிதங்கள் வாயிலாக மட்டுமே உறவாடிக் கொண்டிருந்த சில இலக்கிய நண்பர்களை காணமுடிந்தது. இதற்கப் பால் சொல்லுவதென்றால் சில கலை நிகழ்ச்சிகளைப் பார்த்த திருப்தியையும்
உள்நாடு
தனிப்பிரதி : eisur 30/=
ஆண்டுச் சந்தா : ரூபா 360/= 2 ஆண்டுச் சந்தா : ரூபா 700/= 3ஆண்டுச் சந்தா eüjum 1000/=
ஆயுள் சந்தா et5unt 15000/=
சந்தா காசோலை மூலமாகவோ வங்கிக் கணக்கு மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும். வங்கிக் கணக்கு மூலம்
*ஞானம் ? சந்தா விபரம்
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
குறிப்பிடலாம். கண்ணனின் இசை நிகழ்வு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய ஈழக்கூத்து என்பவை சிலாகிக்கத்தக்கன. ஆனால் ஈழக்கூத்து முடிவில் பேராசிரியர் மெளனகுரு சொன்னதொரு விடயம் எரிச்சலை யூட்டியதையும் சொல்லி விடுகிறேன். கிழக்கு பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து ஈழத்தமிழர்களுக்காக நடன மொன்றை உருவாக்கப் போவதாக பேராசிரியர் மெளனகுரு பிரகடனம் செய்தார். நானும் இந்த பிரகடனத்தை பத்து வருடங்களுக்கும் மேலாகக் கேட்டு வருகிறேன். பிரகடனங்கள் செய்ததைத் தவிர எதுவும் உருப்படியாக பேராசிரியர் மெளனகுருவானவர் செய்ததாகத் தெரிய வில்லை. இனியாவது அவர் செயலில் இறங்குவாராக. இவ்வாறன சில நன்மை களுக்கு வாய்ப்பளித்த கல்வி அமைச்சின் பெரியோர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுதல் பெரும் பாவமாகும். நன்றி.
O
g)gyúju6.Jf356TT Gnanasekaran, HNB - Pussellawa, 560)L-Cp60)spš, கணக்கு இலக்கம் - 26014 என்ற கணக்கி லிட்டு வங்கி ரசீதை அனுப்புதல் வேண்டும். :
T. Gnanasekaran Gnanam Branch Office 3.B. 46" Lane, Colombo - 06.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$ ஆயுள் சந்தா 300 USS
26
ஞானம் - டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

36 DL6)
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்பூணீ மாணிக்கவாசகம் - புத்தகப் பரிசளிப்பு விழா
ஆ. குணநாதன், (பத்தாங் பெர்சுந்தை, மலேசியா)
கிடந்த 3.10.2004 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் டான்பூரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் துணைத்தலைவரும், முன்னாள் துணையமைச்சருமாகிய டத்தோ சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மலேசியாவை ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் டான்பூரீ வெ. மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினர் பரிசுத்தொகையை வழங்கி வருகின்றனர்.
ஏழாவது ஆண்டாக தொடரும் இவ்விழா ஈப்போ மாநகரில் நடைபெற்றது. இம்முறை 11 கட்டுரை நூல்கள் போட்டிக்கு வந்திருந்தன. அவற்றுள் பிரமானந்த சுவாமி எழுதிய “மனமே சுகமே” என்ற நூல், ஏழாயிரம் மலேசிய ரிங்கிட் பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றது.
சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்து மறைந்த தலைவர்களை மறக்காமல் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பண்பை அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்று டத்தோ. சி. சுப்பிரமணியம் கூறினார். ஆண்டுதோறும் இந்நிகழ்வை நடத்திவரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தையும் அவர் பாராட்டினார்.
2003 ஆம் ஆண்டின் சிறந்த புத்தகத்திற்குரிய பரிசளிப்பு விழா நடுவர்களின் முடிவை, மலாயாப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் முல்லை ராமையா ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தார்.
இவ்விழாவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். செயலாளர் கவிஞர் கா. இளமணி நிகழ்வை வழி நடத்தினார்.
enzym door tb - Laartbuff 2004 27

Page 16
புனைகதை இNக்கியம் : அறிவோம், கற்போம், படைப்போம்,
செங்கை ஆழியான் க. குணராசா
(5)
விட்யத்திற்கு வருமுன் சில வாசகர்களின் ஐயங்களுக்கு விளக்கம் தருவது அவசியமாகின்றது. இக்கட்டுரைத் தொடரில் புனைகதை இவ்வாறுதான் படைக்கப்பட வேண்டுமெனவலியுறுத்துகிறீர்களா?அதற்கான இலக்கணத்தைச்சுட்டிக்காட்டுகிறீர்களா? எனப் பலர் என்னைக் கேட்டனர். நிச்சயமாக அவ்வாறான எண்ணம் எனக்கில்லை. இப்படியெல்லாம் புனைகதை படைத்திருக்கிறார்கள். அவ்வாறு படைத்ததன் மூலம் புனைகதைக்கான ஒரு இலக்கணத்தினை வகுத்துள்ளனர். இலக்கணத்திற்காக அவர்கள் புனைகதை படைக்கவில்லை. ஆனால் அவர்களின் புனைகதைகள்இலக்கணமாகிவிட்டன. அவற்றினைத் தெரிந்து கொள்வதன் மூலம் நமக்கென ஒரு தனிவழியை அமைக்கமுடியுமா என உங்களை உணர வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் அவ்வளவுதான்.
உள்ளடக்கமும் (Theme) கருப்பொருளும் (PO)ஒன்றுதான். நீங்கள் இரண்டையும் வெவ்வேறென மயங்குகிறீர்கள்’ எனச் சாடுகின்றனர். இரண்டும் வெவ்வேறு தான் என்பதில் எனக்கு இரண்டு கருத்தில்லை. உத்திகளில் வேறு சில பாங்குகளுள்ளன. உரைநடைப்பாங்கு உத்தி முன்னிலைப்பாங்கு உத்தி குறியீட்டுப்பாங்கு உத்தி உருவகப் பாங்கு உத்தி எனவுமுள்ளன’ எனச் சுட்டிக் காட்டியுள்ளனர் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்தாம். மேலும் Fiction என்பதைப் புனைகதை என்கிறோம். புனையப்பட்ட கதை என்பது அதன் அர்த்தம். அதேபோல உண்மை நிகழ்வுகளைக் கதைபோல எழுதப்படுகின்ற NON FICTION களை புனையாக்கதை எனலாம் என ஒருவர் சுட்டியுள்ளார். இவ்வாறான உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
3. 5. உருவம் :
புனைகதை இலக்கியத்தில் சிறுகதை, உருவகக்கதை, நாவல், குறுநாவல் (Novelette), L606OTLLTö5605 (Non-Fiction) 5T66uTé55ùUL'LL606OTLTö56og5 (Non-Fiction Novel) எனப் பல வகைகள் உள்ளன. எவ்வாறாயினும் புனைகதைகள் சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுள் அடங்கி விடுகின்றன. சிறுகதை என்பது வடிவத்தில் சிறியது. ஒரு சில பக்கங்களுள் அடங்கிவிடும் பாங்கினது. ஒரிரு சம்பவங்களையும் குறித்த சில கதாமாந்தர்களையும் குறுகிய காலத்தையும் சிறுகதைகள் சித்திரிக்கின்றன. சொற்ப நேரத்துள் வாசித்து முடித்துவிடக் கூடியன. ஓர் இலக்கிய வடிவம் என்ற வகையில் நாவலுக்குச் சில பிரதான அம்சங்களுள்ளன. ஒன்று சிறுகதையிலும் பார்க்க நாவல் வடிவில் பெரிதாக இருக்கும். நாவல் 60 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேற்பட்டதென்பர். இரண்டு நீண்டகாலச் சம்பவங்களை உள்ளடக்கியிருக்கும். மூன்று ஏராளமான கதாமாந்தர்களைக் கொண்டதாக விருக்கும். எனவே புனைகதைகளின் பக்க எண்ணிக்கை,
28 ஞானம் - டிசம்பர் 2004

கதைநிகழும் காலநீளம், கதாமாந்தர்களின் தொகை, கதைசித்திரிக்கும் சம்பவங் களின் எண்ணிக்கை, கதை நிகழும் பிரதேசப்பரப்பு என்பனவற்றினைப் பொறுத்து அவற்றின் வடிவம் சிறுகதை யாகவோ நாவலாகவோ அமைகின்றது.
ஜெயகாந்தனின் புகழ்பூத்த சிறுகதையான 'அக்கினிப் பிரவேசம்' இருபது பக்கங்களைக் கொண்டது. செங்கை ஆழியானின் பேசப்பட்ட நாணயத்தின் இரு பக்கங்கள் சிறுகதை பத்துப்பக்கங்களைக் ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளியான ஆனந்தனின் தண்ணீர்த்தாகம்' என்ற சிறுகதை ஐந்து பக்கங்களைக் கொண்டது. சிறுகதைமன்னன் புதுமைப் பித்தனின் ‘பொன்னகரம் இரண்டரைப் பக்கங்களைக் கொண்டது. ஹெமிங் வேயின் கடலும் கிழவனும் என்ற நூற்றி முப்பது பக்க நாவலை நீண்ட சிறுகதை யெனவே சில விமர்சகர்கள் கருதுகின் றனர். அக்கினிப் பிரவேசத்தில் அவன்அவள்-தாயார் ஆகிய மூன்று பாத் திரங்கள் வருகின்றனர். ஒரு மாலைப் பொழுதில் கல்லூரி முன்றலில் ஆரம்பமாகிய இச்சிறுகதை முன்னிரவு வேளையில் அக்கிரகாரத்தில் முடிவடை கின்றது. நாணயத்தின் இரு பக்கங்களில் அவர்-அவள்-சில பொதுமக்கள் ஆகிய மூன்று பாத்திரங்களுடன் நிகழும் சிறுகதை ஒரு மாலைப் பொழுதில் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகி பிரம்படியில் முடிவடைகிறது. தண்ணிர்த் தாகத்தில் அவர்-அவள் ஆகிய இரு பாத்திரங்கள். இளம் வயதில் நிகழ்ந்த சம்பவத்தின் பச்சாதாபம் L6) வருடங்களின் பின்னர் ஆஸ்பத்திரியில் மரணப் படுக்கையில் மன்னிப்புடன் நிறைவு பெறுகிறது. இச்சிறுகதையில் கதை நிகழும் காலம் நீண்டதாகவுள்ளது.
r) m oor ub -- qaf b U ňr 2004
கொண்டது.
நாவல்கள் தம் வடிவில் நீண்டன வாகப் பொதுவாகக் கூறப்பட்டாலும் அவை படைப்பாளியின் எழுத்தாக்கத்திறனில் தம் அளவினை நிர்ணயித்துக் கொள்கின்றன. செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப்பனை நாவல் ஐம்பது பக்கங் களைக் கொண்டது. ஜெயகாந்தனின்கரு என்ற நாவல் நூற்றியெட்டுப் பக்கங் களைக் கொண்டது. டானியலின் 'தண்ணீர்’ என்ற நாவல் இருநூற்றி யெட்டுப் பக்கங்களைக் கொண்டது. தகழி சிவசங்கரன்பிள்ளையின் 'செம்மீன்’ முன்னூற்றியறுபத்தெட்டுப் பக்கங்களைக் கொண்டது. கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது. இந்த நாவலாசிரியர்கள் பல சம்பவங்களை, பல்வேறு பிரதேச நிலைக்களன்களை, பல்வகைக் கதாபாத்திரங்களை, நீண்ட கால எல்லைக்குள் தமது நாவல்களில் சித்திரித்துள்ளனர். நாவல்கள் பாகங்கள், அத்தியாயங்கள் எனப்பிரித்து எழுதப்பட்டு வருகின்றன. முற்றத்து ஒற்றைப் பனை பதின்னான்கு உப பிரிவுகளைக் கொண்டது. ஜெயகாந்தனின் கரு நாவல் எந்தவிதமான அத்தியாயப் பிரிவுகளையும் உள்ளடக்கியில்லை. தண்ணிர் நாவலில் இருபத்தைந்து அத்தியாயங்கள் இருக் கின்றன. செம்மீனில் பத்தொன்பது அத்தியாயங்களுள்ளன. கல்கியின் பொன்னியின் செல்வனில் ஐந்து பாகங்களும் நூற்றுக்கணக்கான அத்தியா யங்களுமுள்ளன. எனவே புனைகதை வடிவத்தின் எல்லை விரிவு பல்திறப்படும்.
மனிதர்களின் அனுபவங்களையும் கற்பனைகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புனைகதைகளில் கொண்டு வரும்போது அவற்றின் உருவம்
29

Page 17
தாமாகவே நிர்ணயமாகின்றது. எனினும் ‘என்ன வகையில் சிறுகதையாகவா நாவலாகவா புனைகதை தரப்பட்டுள்ளது எனக் கூறுவது மட்டும் உருவமாகாது. புனைகதையொன்றின் உருவம் என்பதைத் தனித்த ஒரு பண்பினடியாக நோக்கவும் முடியாது. உருவம் என்பது இலக்கியம் ஒன்றின் முழுமை. இலக் கியத்தின் மூலக்கூறுகளில் உள்ளடக்கம், கரு, உத்தி, பாத்திரவார்ப்பு, முழுமையான நேர்த்தி தான் புனை கதையின் உருவமாக அமையும் எனவும் கூறலாம்.
களம்
3. 6. பாத்திரவார்ப்பு :
பாத்திரங்களின் நடமாடல் நடவடிக் கைகளெனப்படும் நடிப்பே புனைகதை யாகும். எழுத்தாளனின் கருத்துக் களையும் சம்பவங்களையும் புனைகதை யாக விபரிப்பதற்கு அவனுக்குக் கைகொடுப்பவை பாத்திரங்களாம். ஒவ்வொரு பாத்திரங்களின் குண வியல்புகள், உணர்வுகள், உரையாடல்கள், சிந்தனைகள் என்பவை எழுத்தாளனால் புனைகதைகளில் காட்டப்படுகின்றன. படைப்பாளியின் மிகச் சிறந்த அவதானிப் பின் முழுமையை அவனால் படைக்கப் படும் பாத்திரங்களில் காணவேண்டும். சமூகத்தின் வகை மாதிரிப் பிரசைகளாக அவர்களின் பலத்தோடும் பலவீனத் தோடும் பாத்திரங்கள் உருவாக்கப் படுகின்றன.
நடை, உடை, பாவனைகள், உரையா டல்கள் பாத்திரங்களின் குணவியல் புகளுக்கு இணங்கவே புனை கதைகளில் உருவாக்கப்படுகின்றன. பாத்திரங்களின் குணவியல்புகள் வெற்றுவாக்கியங்களால்
30
விபரிக்கப்படக்கூடாது. அவர்களின் நடத்தைகளும் ஏனைய பாத்திரங்களின் அப்பாத்திரத்தின் குணவியல்புகளை வாசகனுக்குக் காட்ட வேண்டும். அவன் கோபக்காரன்’ எனப் புனைகதையில் ஆசிரியர் கூற்று அமையக்கூடாது. அவன் நடத்தையால் அந்த இயல்பு வெளிப்படுத்தப்பட வேண்டும். காற்றில் கலக்கும் பெரு மூச்சுக்கள்'என்ற நாவலின் தொடக்கத்தில், கதாநாயகி தலையை வாரச் சீப்பினை எடுக்கிறாள். தலைமயிர்களிடையே ஒரு நரை மயிர் தெரிகிறது. திகைப்பும் கவலையும் எழத் தன் தங்கையை அந்த நரைமயிரைப் பிடுங்கிவிட அழைக்கிறாள். பின்னர் அப்படியே இருக்கட்டும் என்கிறாள், முடிவெடுப்பதும் உடன் மாற்றிக் கொள்வது மான அக்குணவியல்பு கதையின் உச்சம் வரை அப்படியே தொடர்கிறது. பாத்திர முரண்பாடு நல்லதொரு புனைகதையில் காண முடியாது.
பாத்திரங்களின் முரண்படா வார்ப் பினை தகழியின் முக்கிய நாவலான செம்மீனில் மிகச் சிறப்பாகக் காணலாம். கறுத்தம்மா, பரீக்குட்டி, செம்பன்குஞ்சு என ஏராளமான பாத்திரங்களை அந்த நாவலில் முரண்பாடின்றி அவரவர் தத்தமது குணவியல்புகளோடு இயங்கு மாறு சித்திரித்துள்ள சிறப்பினை செம்மீனில் பரக்கக் காணலாம். வெற்றி யடைந்துள்ள புனைகதைகளில் பாத்திர வார்ப்புகள் மிகச் சிறப்பாக அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது. தி. ஞானகி ராமனின் 'மோகமுள் ஜெய காந்தனின் பாரிசுக்குப்போ’ என்பன அவ்வாறான புனைகதைகளில் குறிப்பிடத்தக்கவை.
O
உரையாடல்களும்
எல்லாம்
GIT oor tio - q-Fub Ut 2004

veger
முரண்பாடுகளால் முதன்மைபெறத் துடிக்கிறது மதுை.
எதையும் ஏற்றுக் கொள்ளலில் மறுதலித்தல் மகிழ்ச்சிஅளிக்கிறது. விதிகள் பின்பற்றப்படுதலில் அல்ல மீறப்படுதலில்தான் இதயம் இன்பமாய் உணர்கிறது.
நல்லை நnடப்படுவதிலும், கெட்டை பரீட்சித்துப்பார்ப்பதில் ஆர்வம் அதிகரிக்கிறது.
கதாநாயகர்களை விடவும், வில்லன்களையே ரசிக்கப்பிடிக்கிறது.
Slg5muoasoisr வெற்றிகளை அல்ல தோல்விகளையே நிைைவுகள் சுமக்கின்றன.
இத்தனை முரண்களும் என் மனத்
தவறா?
ஏமாற்றுக்களாலும் இழப்புக்களாலும் - என் வnழ்வை
வடுப்படுத்திய காலத்தின் தவறா?
சிந்தித்ததில்,
மீண்டும் முரண்பாடுகளே முதன்மை பெறுகின்றன.
O
ரடே
: ཡིNརི༽།། புத்தகக் களஞ்சியம்
(நூல் மதிப்புரை) புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒரு பிரதி
குா என:ம் - டிசம்பர் 204
மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறு குறிப்பு (གས་པ་ :புதிய நூலகத்தில் இடம் பெறும். W سجاد، غ
3.

Page 18
கொழும்புக் கம்பன் கழகம் நடாத்திய و
'ഫ്രം ഗുഡ്വൈ കന്നിക്ര്
- 62Scoao Gão2/o727 ஒரு ரசிகையின் நோக்கில் உவஷாதேவி பாலச்சந்திரஐயர், திருகோணமலை.
நவம்பர் மாதம் என்றால் இலங்கை இசைப்பிரியர்கள் எதிர்நோக்குவது கம்பன் கழகத்தாரின் இசை வேள்வியைத்தான். 'கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழகத்தார் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விழாக்கள் நடாத்துவது தமிழர்க்கு ஒரு வரப் பிரசாதமாகும். ஈழத்து, தமிழகத்து அறிஞர்கள் பலர் கலந்து கொள்ளும் சொற்போர், வழக்காடு மன்றங்கள் எனப் பல களங்கள் கொண்ட இயற்றமிழ் விழா, நாடகம் +நடனத்தை ஊக்கும் பொருட்டு நாட்டியாஞ்சலி, இசையை மேம்படுத்தும் இசை வேள்வி என்று ரசிகர்களின் பசியாற்றும் பெரும் பணியைக் கம்பன் கழகம் மேற்கொள்ளுகிறதென்றால் அது மிகையாகாது.
இந்த இசைவேள்வியின் அழைப்பிதழிலிருந்து விழாவின் முடிவு வரை ஒவ்வொன்றும் பாராட்டுக்குரியதாகும். வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும் இந்த இசை வேள்வியின் மேடையே அசத்தலாக அமைகிறது. நாத கணபதி மூலஸ்தானத்தில் வீற்றிருக்க, அவரது இடப்புறத்தில் ராமர், சீதா, லட்சுமணன், அநுமன் அமைய, வலப்பக்கத்தில் நாதப்பிரம்மம் தியாகராஜ் ஸ்வாமிகள் என மேடையே தெய்வீகமாக ஜொலிக்கிறது.
இசைவிழாவில் நம்நாட்டின் வளர்ந்து வரும் கலைஞர்களும் தமிழ் நாட்டின் மிகப் பிரபலமான அகில உலகப் புகழ்பெற்ற கலைஞர்களும் பங்கு பற்றுகின்றனர். இப்பெரும் கலைஞர்களை இலங்கை ரசிகர்களுக்காக வருவித்துக் காணமழையில் திளைக்க வைக்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பெரும்பணி போற்றுதற்குரியது. சென்னையில் நடைபெறும் இசைவிழாவிற்கு வசதி படைத்தோர் - (நேரவசதியும் படைத்தோர்) சென்று கலந்து கொள்வதுண்டு. இலங்கையில் இசைக்காக ஏங்கும் ஏழைகள் பலரது ஏக்கத்தைத் துடைப்பது இந்த இசைவேள்வியேயாகும்.
இம்முறை இசைப் பேரரங்கை அலங்கரித்த இந்தியக் கலைஞர்களான திருமதி சுதா ரகுநாதன், திருமதி குலபூஷணி கல்யாணராமன், நெய்வேலி ஆர். சந்தானகோபாலன், திரு. ரி. வி. சங்கரநாராயணன், திருச்சூர் வி. இராமச்சந்திரன், திருமதி பம்பாய் ஜெயழரீ, திரு. ஓ. எஸ். தியாகராஜன், மதுரை ரி. என். சேஷகோபாலன் மற்றும் இவர்களுக்கு அணிசெய் கலைஞர்களாக திரு. பி. வி. ராகவேந்திரராவ் (வயலின்), நெய்வேலி எஸ். ஸ்கந்தசுப்பிரமணியன் (மிருதங்கம்) ஆகியோரது கச்சேரிகளை நாம் இலகுவாக மட்டுமல்ல - இலவசமாகவும் ரசிப்பதற்கு ஒழுங்கு செய்த கம்பன் கழகத்தை எவ்வாறு பாராட்டுவதென்று தெரியவில்லை.
நம் நாட்டு வளர்ந்து வரும் கலைஞர்களின் வளர்ச்சியையும் நாம் அவதானித்து மகிழ்ச்சியடையும் வாய்ப்பை அளித்துள்ளது இவ்விழா. நம் நாட்டுக் கலைஞர்கள்
32 ஞானம் - டிசம்பர் 2004

பங்குபற்றுவதற்கும், தமது திறமையை நிலை நாட்டுவதற்கும் ஏற்ற ஒரு தரமான அரங்கு கம்பன் விழா அரங்குதான் என்று அடித்துக் கூறலாம். ஏனெனில் தரமான சங்கீத ரசிகர்கள் நிரம்பிய அரங்கு இந்த அரங்கு ஆகும். ரசிகர்கள் இல்லாவிடில் விழா ஏது?
தமிழ் நாட்டில் கூட இளைஞர்கள் இவ்வளவு ஆவலுடன் கர்நாடக இசையை ரசிப்பார்களா என்பது ஐயமே. ஆனால் இங்கே முதியோர் மட்டுமன்றி இளைஞர், யுவதிகளும் ஆர்வத்துடன் ரசித்ததை மறுக்க முடியாது.
அடுத்ததாக கண்ணைக் கவர்ந்த ரசிகர்கள்! மட்டுநகர் விபுலானந்தர் இசைக்கல்லூரி மாணவமணிகள்!பாங்குற அமர்ந்து தாளம் போட்டு ரசித்தது கண்கொள்ளாக்காட்சி. இவர்களுக்குத்
தங்குமிடம், உணவு ஆகிய வசதிகள்
அளித்து ஊக்கப்படுத்தி இந்த விழாவை ரசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரி நிர்வாகத்தினரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
ரசனை - இதைப்பற்றிக் குறிப்பிடு கையில் ஒரு சம்பவம் மனத்தை நெருடுகின்றது. தற்போது பாட சாலையில் சங்கீத ஆசிரியர்களாக இருப்பவர்களில் பலர் கச்சேரிகளைக் கேட்பதிலோ, ரசிப்பதிலோ நாட்டம் செலுத்துவதில்லை. தமது பாடத் திட்டத்திற்கு அப்பாலுள்ளவற்றைப் பயிலுவதற்கும் விருப்பமில்லாதவர் களாயிருப்பது வருத்தத்திற்குரியது.
கொழும்பில் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு பிரபல பாடகியின் கச்சேரி. அதற்கு நான், எனது மகள் கண்டியிலிருந்து செல்வதாக ஏற்பாடு. தன்னுடைய பிள்ளைகளுக்கு சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியையும் மகள் கூட்டிச் செல்வதாகக் கேட்டிருந்தாள். ஆனால் அந்த ஆசிரி பையோ இந்தக் கச்சேரி கேட்பதால் எந்தப்
(obm egortb – Lq.ór thUit 2004
பிரயோசனமுமில்லை என்றும் பாடத் திட்டத்தில் (Syllabus) உள்ள பாட்டுக்கள் பாடமாட்டார்கள் என்றும் வர மறுத்து விட்டார். எவ்வளவு குறுகிய மனப்பான்மை என்று பாருங்கள். அனேகமாக சங்கீத ஆசிரியர்கள் இவ்வாறுதான் இருக் கிறார்கள்- ஆனால் அன்றைய கச்சேரியில் எங்கள் பாடத்திட்டத்தில் உள்ள திருப்புகழை அந்தப் பிரபலபாடகி பாடியது வேறு விடயம் - சங்கீதத்தைத் தாங்களும் ரசித்து மாணவரையும் ரசிக்கப் பண்ணுவது சங்கீத ஆசிரியர்களது கடமையாகும். பாடத் திட்டத்திற்குள்ளேயே தம்மை அடக்கிக் கொள்ளும் அடக்கமான ஆசிரியர்களால் மாணவர்க்குத்தான் நட்டம்.
கம்பன் விழாவிற்கு வருவோம். வான்மழை பெய்திடினும் பொருட் படுத்தாது காணமழையில் நனைய ரசிகர் கூட்டம் அரங்கை நிரப்பியது. விழா ஏற்பாடும், குறித்த நேரத்தில் ஆரம்பித்து, குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஒழுங்கும் சிறப்பானது. உரையாற்ற வந்தோரையும் கலைஞர் களையும் தமது நேரக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கம்பன் கழகத்தாரை - குறிப்பாக திரு. சிவசங்கர் - இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
விழாவிற்கு உதவியோரைக் கெளரவிக்கும் பாங்கும் போற்றுதற் குரியதாகும். இவ்வாறு சகல நிகழ்வு களையும் பாராட்டும் வண்ணம் அமைந்த இசைவேள்வி பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.
கம்பன் கழகத்தாரையும், கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களையும் பாராட்டு வதுடன் அவர்களின் பணி மேலோங்க இறைவனை வேண்டி நன்றியுடன் வாழ்த்துவோம்.
O
33

Page 19
O O Op T8g9sr123:Loir Isibéis sideogbeibGir
சாரல் நாடன் இந்திய தொழிலாளர் சமூகம் இலங்கையின் கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கண்டு வந்த காலங்களில் மறக்க முடியாத காலம் ஒன்றுண்டு. பெரிய கங்காணி காலம், அவர்கள் காலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்களிவை, அவைகளுள் சிலவற்றை தோட்டப்புறக் கதைகள்’ என்ற தலைப்பில் தொடர்ந்துதரமுயற்சிக்கிறேன்.)
1. தண்ணிருக்குள் தலையை மறைத்தவர்கள்
காதிலே பொன் கடுக்கன் ஆட, தலையிலே சரிகை வேட்டி கையில் தங்கக் காப்பு பத்துவிரல்களிலும் பொன் மோதிரம்மினுங்ககாலிலே கிறீச்சிடும் செருப்பு போட்டுகையிலே கறுப்புக்குடைபிடித்து கறுப்புக்கோட்டுடன் பெரியகங்காணி மெதுவாக அசைந்து நடக்கிறார். பின்னால் மூன்றடி தள்ளி கணக்கப்பிள்ளை நடந்து வருகிறார். நேரம் பதினொன்றை நெருங்குகிறது. இப்படியே மெதுவாக நடந்து போனால் இன்னும் பதினைந்து நிமிடத்தில் வீடு போய் சேர்ந்து விடலாம்.
பெரிய கங்காணி கேட்பதற்கு ஆமாங்க என்றும் இல்லிங்க' என்றும் பதில் அளித்துக் கொண்டு கணக்கப்பிள்ளை பின்னால் நடக்கிறார். தண்ணிக்கானுக்கருகில் - உண்மையில் ஆற்றோரத்தில்
“இரண்டு ஆட்களை புல்லுவெட்ட போடச் சொன்னேனே' “போட்டிருக்கேனுங்களே.” அந்தி ஆறு மணிக்குள்ள முடிச்சிருவானுங்க” பதில் சொல்ல கணக்கப்பிள்ளை, தமக்கு பக்கத்தில் ஒடுகிற ஆற்றங்கரை யோரத்தில் கண்ணுக் கெட்டும் வரை பார்க்கிறார். ஊஹூம். யாரையுமே காணோம்.
“என்னனே, போட்டிருக்கிறேன் என்கிறீர். ஆளை யாரையும் காணலியே. என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு நடக்கிறார். கங்காணியாரின் நடையில் ஒரு வேகம், கண்களிலே ஒரு தேடுதல், கணக்கப்பிள்ளையின் நடையிலே ஒரு மிரட்சி.
எதிரே தெரியும் முடக்கில் திரும்பிய வேகத்தில் ஆட்கள் இருவர் ஆற்றங்கரையில் உட்கார்ந்து, ஆசுவாசமாக தமது மூக்கு மயிரைப் பிடுங்கிக் கொண்டிருக்கின்றனர், கணக்கப்பிள்ளையால் கானு ஒரத்தில் வேலைக்குப் போடப்பட்டவர்கள் தாம்.
“அடேய், அங்கே என்ன செய்கிறீர்கள்.” கங்காணியின் சிம்மக் கர்ச்சனை கேட்டது தான் தெரியும், அவர்களிருவரும் ஆற்றுக்குள் பாய்ந்தனர்.
கங்காணியார் சுற்றும் மற்றும் பார்க்கிறார். ஆட்களிருவரும் அமர்ந்திருந்த இடத்தில் இரண்டு போத்தல்கள், இரண்டிலும் சாயத் தண்ணிர் முழுவதுமாக இருக்கின்றது. பக்கத்தில் வெற்றிலைப் பை பிரிக்கப்படாமலிருக்கிறது. கங்காணிக்கு விளங்கிவிட்டது. உச்சி வெய்யில் நேரம், உழைத்து அலுத்து உட்கார்ந்த கையோடு தாம் அங்கு வந்து விட்டது.
கங்காணியார் ஆற்றையே உற்று நோக்குகின்றார். ஆழமான ஆறுதான். ஐந்தடி ஆழமிருக்கும். ஆனால் உள்ளே இரண்டுபேர் தம் பிடித்துக் கொண்டிருப்பது வெளியே இருந்து பார்த்தால் தெரிகிறது.
99
34 ஞானம் - டிசம்பர் 2004

ஒன்று. இரண்டு. மூன்று ஊகும். மேலே வருவதாகக் காணோம். கங்காணியாருக்குச் சிரிப்பு வருகிறது. நான்கு. ஐந்து. அதே நிலைமைதான். கங்காணியாருக்குப் பதற்றமாகியது. “கணக்கப்பிள்ளை. ஐஞ்சு நிமிடமாகிறது. தண்ணிக்குள்ள போனவர்கள் அங்கேயே இருக் கிறான்கள். இனியும் நான் இங்கேயே நிப்பது சரியில்லே. அப்படியே அவர்கள் செத்துப் போவார்கள்.” கூறிவிட்டு நடையைக் கட்டினார். . எட்டாவது நிமிஷம் தண்ணிருக்குள் தலையை மறைத்தவர்கள் மேலே வந்தார்கள். கணக்கப்பிள்ளைக்கு உயிர் வந்தது. 2. கழுத்தளவு நீரில்
மலைநாட்டில் கோப்பி பயிரிட்ட நாட்கள், கோப்பி பரியிடுவதில் பேர் போனவர்கள் அவர்கள். அதனால்தான் அவர்களுக்கு 'கோப்பி காட்டான்'கள் என்ற பெயர் வந்தது. அவர்களிடம் வேலை பார்ப்பதற்கு வாய்த்திருந்த வெள்ளைக் காரத் துரைமார்கள் ஈவிரக்கமற்றவர்கள்.
காட்டு மிராண்டித்தனத்திற்கு பேர் போனவர்கள். கருணையற்ற தண்டனை களை நிறைவேற்றுகிற இறுக்கமான மனம் கொண்டவர்கள். 'கோப்பிக் காட்டான்களை பணியவைப்பதற்கு கூலித் தமிழைகொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து வைத்திருந்தார்கள். தெரியாத மிச்சத்துக்கு குதிரை சவுக்கு தான் பரிசு. ஒரு முறை செய்த வேலை போது மானதாக இல்லை என்பதற்காக கோப்பி காட்டான் ஒருவனிடம் குதிரையிலிருந்து கொண்டே சவுக்கால் பேசினார் துரை. நான்கைந்து அடிகள் விழுந்திருக்கும். சவுக்கடியிலிருந்து தப்புவதற்காக ஒடியவன், அருகிலிருந்த சிற்றோடையில்
ஞானம் - டிசம்பர் 2004
விழுந்து கழுத்தளவு நீரில் நின்று கொண்டான்.
“மூன்று எண்ணுவதற்குள் வெளியே வராவிட்டால் சுட்டுக் கொன்று விடுவேன்" என்று துரை மிரட்டினார். காட்டு மிருகங்களைச் சுடுவதற்கு கையோடு அவரிடம் துப்பாக்கி எப்போதுமிருக்கும்.
'ஒன்று எண்ணப்பட்டது. ஆற்றில் நின்று கொண்டிருந்தவன் அங்கேயே நின்றான்.
இரண்டாவது மூன்றாவது முறையும் எண்ணப்பட்டது. அப்போதும் பதில் ஒன்றும் இல்லை.
துரை எதுவும் பேசவில்லை. எவரிடம் கலந்து ஆலோசிக்கவுமில்லை. தன் கீழ் அடிமை போல வேலை செய்யும் ராமசாமிக்கு இன்னொரு சந்தர்ப்பம் அனுமதிக்கவில்லை. துப்பாக்கியை தனது முகத்துக்கு நேரே உயர்த்தி எதிரில் தெரியும் தன் இலக்கைத் துல்லியமாக குறி பார்த்தான்.
பாவம் ராமசாமி. அடுத்த நொடியில் பிணமானான். அவனது சிதைந்த உடல் மூழ்கி மறைய, நீரில் அவன் நின்ற இடத்தை ரத்தமும், மூளைச் சிதைவுகளும் அடையாளப்படுத்தி மிதந்தன.
கோப்பி காட்டில் சுற்றியிருந்த மற்ற கூலிகளிடம் அந்த பயங்கரத்தின் வாதை மின்னலிட்டது.
துரையிடம் எந்தவிதமான மன உளைச்சலுமில்லை. தனது கட்டளைக்கு கீழ்படிய மறுத்த கூலியை இல்லாது ஒழிப்பதன் மூலம், தோட்டத்து விதிமுறை களும் ஒழுங்குகளும் இல்லாது போய்விடும் சந்தர்ப்பமும் இல்லாது போய்விட்டது.
ஆபத்தான உதாரணமாக முன்னெடுப் பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இல்லாது செய்த திருப்தி அவருக்கு.
சுற்றி நின்ற கூலிகள் வேலையில் கவனமாக இருந்தனர்.
O
35

Page 20
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை. மனோகரன்
விடுதலை உணர்வின் சின்னம்
யசீர் அரபாத் என்ற பெயர் உலக விடுதலை உணர்வுகளின் ஒரு சின்னமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. அவரது ஆளுமையும், ஆற்றலும் நீண்ட காலமாகவே அவரைப் பாலஸ்தீனர்களின் மாரிபடும் தலைவராக ஆக்கி வைத்திருந்தன. மிதவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடைப்பட்ட போக்கினைக் கொண்டவராக யசீர் அரபாத் திகழ்ந்தார்.
பல சந்தர்ப்பங்களில் மறைந்த தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தைப் போல, மறுபக்கத்துத் தலைவர்களை நம்பி ஒப்பந்தம் செய்வதும், பின்னர் ஏமாறுவதுமாக நடந்து கொண்டுள்ளார். இவ்விடயத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் நல்ல பண்பை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதுபோன்றே யசீர் அரபாத்தின் அரசியல் பண்பையும் குறைத்துக் கூறமுடியாது. யசீர் அரபாத் சமாதான சகவாழ்வின்மீது இருவரும் கொண்டிருந்த உண்மையான ஆர்வமே அவர்களுக்குப் பிரச்சினைகளையும் தந்தது, புகழையும் தந்தது.
ஒரு நிதானமான விடுதலைப் போராளியான யசீர் அரபாத்தை இஸ்ரேலும், அமெரிக்காவும், அமெரிக் காவின் வால்களும், "பயங்கரவாதி” எனப் பட்டம் சூட்டி அவமானப்படுத்தி வந்துள்ளன. அவரது இறுதிக் காலத்தில் சில ஆண்டுகள் அவர் இஸ்ரேலினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தமை மனிதாபிமானத்துக்கு விரோதமானது.
பாலஸ்தீனம் பற்றிய யசீர் அரபாத்தின் கனவு,
எதிர்காலத்தில் மெய்ப்பட வேண்டும். அதற்கு விவேகமும், துணிச்சலும், நிதானமும் மிக்க எதிர்காலத் தலைமைத்துவம் பாலஸ்தீனர்களுக்குத் தேவை. பிறரை நம்பிப் பொறுப்புக்களை ஒப்படைக்க மறுக்கும் குணம், நிதி தொடர்பாகக் கணக்கு வழக்கின்றி நடந்து கொள்ளும் இயல்பு போன்ற முறைகள் சிலவற்றைத் தவிர்த்துப் பார்க்கும்போது, யசீர் அரபாத் ஒரு பெருந் தலைவராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். நீண்ட நெடுங்காலத்துக்குப் பாலஸ்தீன மக்களின் உள்ளங்களில் யசீர் அரபாத் வாழ்ந்து கொண்டிருப்பார்.
மனிதாபிமானத்தை மறைக்கும் மதவெறி தமிழ் நாட்டில் இன்று அதிகமாகப் பேசப்படும், விவாதிக்கப்படும், உணர்ச்சிவசப்படும் விடயமாகக் காஞ்சி மடத்தின் அதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கைது விளங்குகிறது. தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவிலும், உலகில்
36 ஞானம் - டிசம்பர் 2004
 

வாழும் இந்துக்கள் மத்தியிலும் ஒரு முடிசூடா மன்னரைப் போல் விளங்கிய சுவாமிகள், இன்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர ராமனின் கொலை தொடர்பாகச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கும், அவரது ஆருயிர்த் தோழி சசிகலாவுக்கும் ஆசி வழங்கி வந்தது மட்டுமன்றி, மத்திய அரசிலிருந்து தம்மைக் காணவரும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் அருளாசி வழங்கிப் 'பெருமை பெற்றுக் கொண்டிருந்தார் சுவாமிகள். ஆனால், இன்றோ விளக்க மறியல் கைதியாகச் சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார், அவர்.
பொதுவாகவே தம்மை ஒரு “பெரியவாளாகவே” கருதிக் கொண் டிருக்கும் ஜெயேந்திர சரஸ்வதி
சுவாமிகள், தம்மை யாராலும் ஒன்றும் முடியாது என்ற நிலைப் பாட்டிலேயே இருந்து வந்துள்ளார். தம்மைத் தட்டிக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாது என்ற தோரணையிலேயே அவர் இவ்வளவு காலமும் இயங்கி வந்துள்ளார். அந்தத் தோரணையிலேயே சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முனைந்தபோதும் நடந்து கொண்டுள்ளார். தமக்கு எதிராகத் தமிழக அரசினதோ, தமிழகக் காவல்துறையினதோ கரங்கள் நீளாது என்றே அவர் நினைத்திருந்தார். ஆனால், அவரே ஆச்சரியப்படும்படியாக, அவரைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, தமிழக அரசும், காவல்துறையும் சட்ட ரீதியான
செய்ய
errorib - Leribui 2004
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். சுவாமிகளுக்கு மட்டும் விதி விலக்கு இல்லையே.
சுவாமிகளின் கைது ஒருபுறம் இருக்க அது தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்று வரும் நிகழ்ச்சிகள் மிகவும் வேடிக்கையானவை. சுவாமிகள்மீது சுமத்தப்பட்டிருப்பது பாரதூரமான ஒரு கொலைக்குற்றச்சாட்டு. நீதிமன்ற விசாரணையின் போது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குத் தண் டனை கிடைக்கும். இல்லையேல் விடுவிக்கப்படுவார். இதனை உண ராதவர்கள் போல் இந்தியாவில் ஒரு சாரார் (குறிப்பாக மதவெறியர்கள்), அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டின் பாரதூரத்தன்மையை மனங் கொள்ளாது அவரைக் கைது செய்தது தவறு எனக் கூக்குரல் இடுகின்றனர்; ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், அது இது என்று
கிளர்ச்சிகள் செய்து கொண் டிருக்கின்றனர். இவர்களது எதிர்ப் புகளை நோக்கினால், ஜெயேந்திர
சரஸ்வதி சுவாமிகள் என்ன செய்தாலும் அவரைத் தட்டிக் கேட்கக் கூடாது என்ற தோரணையிலேயே முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. குருக்கள் ஏதோ செய்தால் குற்றமில்லை என்ற பழமொழிக்கேற்பவே இவர்களது போக்கு அமைந்துள்ளது. கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் அதனால் அல்லலுறும் அவரது குடும்பத்தவர் பற்றி இவர்கள் யாரும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. மதவெறிக்குள் மனிதாபி மானம் சுக்குநூறாகிப் போயுள்ளது.
37

Page 21
இந்தியாவில் நிலைமைகள் இவ்
வாறிருக்க, சிவாச்சாரியார்
இலங்கையைச் சேர்ந்த
ஒருவர் அனைவருக்கும் ஒரு படி மேலே சென்று,
இவர்கள்
பத்திரிகைகளுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். மகாபுருஷருக்கு இழைக்கப்பட்ட துன்பம் தமிழ் நாட்டிற்கும், ஏன் உலகத்திற்கே என்னென்ன அனர்த்தங்களைக் தெரிய வில்லை” என்று அவர் தமது அறிக் கையில் அங்கலாய்த்திருக்கிறார். பார
“இப்படியான
கொண்டு வரப்போகிறதோ
தூரமான படுகொலை வழக்கொன்றில் முதலாம் எதிரியாகக் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் ஒருவரை "மகா புருஷர்” என்று குறிப்பிடும் சிவாசாரியாரின் அறியாமையை என்னென்பது அறிவீனம் தானே மதவெறியின் அடிப் படையும்கூட. கைது செய்யப்பட்ட சுவாமிகள் ஒரு தனிமனிதர் மட்டுமே. அவர் கைது இந்துமதத்துக்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. மதவெறியர்கள்தான்
மதங்களிலும்) பெயரைக் கெடுக்கின்றனர்.
செய்யப்பட்டமை,
(சகல
மதங்களின்
வேண்டாம் வேண்டாம்
நமது அரசுகள் ஒருபுறத்தில்
சமாதானம் பேசுவதும், மறுபுறத்தில் போர்
முரசு கொட்டுவதும் போய்விட்டன. முன்னர் அரசு கட்டில் ஏறியவர்களும் அயல்நாட்டுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள் வதற்குத் துடியாய்த் துடித்தனர். இப்போதுள்ளவர்களும் அதே கைங்
வழக்கமாகப்
38
கரியத்தை அதிவேகமாகச் செய்வதற்குப் படாதபாடுபட்டனர். ஆயினும், நல்ல வேளையாகத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் சிலரது முட்டுக்கட்டை முயற்சிகளால் இந்நாட்டுப் பேரின வாதிகளின் ஆசையில் இப்போதைக்கு மண் விழுந்துவிட்டது. அயல்நாட்டைப் பொறுத்தவரை, அதற்கும் இவ்வாறான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதன் மூலம் சில பல அனுகூலங்கள் கிடைக்கும் என்ற நப்பாசையும் உண்டு. இந்நாட்டுத் தமிழ் அரசியல்வாதிகளில் 69 (5 சாராருக்கும் இத்தகைய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்படுவதில் பூரண
சம்மதம் உண்டு. இவர்கள் தமிழ் மக்களைப் பாதுகாப்பதை விடத் தங்களைப் பாதுகாப்பதில்தானே
ஆவலாய் இருக்கிறார்கள்!
ஆனால் பெயரளவிலேனும் ஓரளவு ‘சமாதானம்’ நிலவுகின்ற இக்கால கட்டத்தில் இரு நாடுகளும் இத்தகைய ஒர் ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதற்கான வேற்று நாட்டுப் பகைமை, ஆக்கிரமிப்புப் போன்றவை
தேவை என்ன?
இடம் பெற்றால் இவ்வாறான ஒப்பந்தம் செய்து கொள்வதில் நியாயம் உண்டு. ஆனால், தனது நாட்டு மக்களில் ஒரு சாராருக்கு எதிராக யுத்தம் மேற்கொள் வதற்காக அயல்நாட்டுடன் பாதுகாப்பு மேற்கொள்வதற்காக அயல்நாட்டுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதில் எத்தகைய நியாயம் உண்டு? இத்தகைய உத்தேச ஒப்பந்தத்துக்கு எதிராகத் தமிழ் அரசியல்வாதிகள் ஓயாமல் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.
O
Gömt oor tib -- q- Fuibuir 2004

மானிடரால் விறந்துவிஸ்டோம்
வீனை வேந்தன்
மானிடராய் பிறந்துவிட்டோம்
பூமியிலே நாம் மnண்புடனே வாழக்கல்வி
கற்றிடுவோம் நாம் மக்கள்அேவை மகேசன்சேவை
என்றறிவோம் நாம் மகிழ்ச்சியோடு இருக்கும்வரை
சேவைசெய்வோம் நாம்.
நாளைஉலகை ஆளப்போகும்
மன்னர்கள்தான் நாம் நல்லபண்பு தைைநன்றாய்
கற்றிடுவோம் நாம் நாட்டில்கல்வி பஞ்சந்தனை
களைந்திடுவோம் நாம் நல்லதொரு சமுதாயத்தைப்
படைத்திடுவோம் நாம்.
கற்றகல்வி உணர்ந்துவnழ்க்கை
அமைத்திடுவோம் நாம்
கல்லmறைக் கண்டால்மனம்
நெகிழிந்திடுவோம் நாம்
முற்றுமுழுக்கக் கற்றவர்கள்
பnறிலில்லையே மூடர்னை யாரும்இங்கு
இருந்ததில்லையே.
உலகில்உள்ள மக்களெல்லாம்
படைப்பால் ஒன்றுதான் உயர்வுதாழ்வு பேதமெலாம்(எம்)
மனத்தின் உணர்வுதான் கற்றறிந்த மக்கள் இந்த
உலகின் கண்கள்தான் கற்றும்பண்பு இல்லாவிட்டால்
உடலின் புண்கள்தரின்,
(ου ποΟτώ - ιο σώυ ή 2004 39

Page 22
ஏழ்மை? அவனுக்கெAரு துnசி
நோன்புப் ஊருக்கு வந்த என் மகளும், மருமகனும் இன்னும் கொழும்புக்கு போகவில்லை. என் மருமகன் கொழும்பில் பொறியிய
பெருநாளைக்கு
லாளராக வேலை செய்கிறார். இவர் களுக்கு மூன்று வயது கூட நிரம்பாத ஆண் குழந்தை இருக்கிறான். இவனுக்கு எந்த நேரமும் நான்தான் வேண்டும். நான் போகுமிடமெல்லாம் என்னோடு ஒட்டிக் கொள்வான். எங்கள் வீட்டில், அவன் சொற்படியெல்லாம் கேட்டு நடக்கும் ஒரே ஒரு ஜீவன் நான் மட்டுந்தான். அவன் நினைத்த நேரமெல்லாம் என்னை மாடாகவும், குதிரையாகவும் ஆக்கி சவாரி செய்வான். அதில் அவனுக்கு அலாதி விருப்பம். கதைகள் கேட்பதில் அவன் சூரன். அவன் கேட்கும் போதெல்லாம், நான் கதை சொல்ல வேண்டும். என் கதைகளில் அவனுக்கு அலுப்புத் தட்டினால் என்னை வெளியில் தூக்கிக் கொண்டு போகச் சொல்லுவான். நானும் அவனுடைய ஆசைக்குத் தடை போடுவதில்லை. அவன் ஆசை தீருமட்டும் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியில் சுற்றித் திரிவேன். அப்படித் தூக்கித் திரியும்போது நாய், பூனையைக் கண்டால் வவ். வவ். மியாவ். மியாவ். என்று கத்திச் சிரிப்பான். ஒரு சில நேரங்களில் எங்கள் வீட்டிலுள்ள பூனையை சிறு கம்பொன்றை கையில் எடுத்துக் கொண்டு விரசித் திரிவான். எங்கள் நாய் பொட்டோடு இவனுக்கு நல்ல
Af
எஸ். முத்துமீரான்
விருப்பம். கையிலிருக்கும் சாப்பாட்டுச் சாமான் எதுவாக இருந்தாலும் அதை நாய்க்கு கொடுத்துவிட்டு அது சாப்பிடும் வரை பார்த்துக் கொண்டிருப்பான். என் நாயும் அவனோடு பாசத்தோடு நடந்து கொள்ளும். இவனுக்கு பசுமாடுகள் என்றால் கொள்ளைப் பிரியம். என் ஆமவட்டை வயக்காரன் குத்தியன்ட மம்மாக்காசீம் பசுமாடுகள் வளர்க்கிறான். என் பேரன் மாடுகள் பார்க்க ஆசைப் பட்டால் இவனுடைய வீட்டிற்கு அடிக்கடி தூக்கிப் போவேன். நாலஞ்சி வருடங் களுக்கு முன்னால், நான் காசி கொடுத்துத்தான் மாவடிப் பள்ளியி லிருந்து ஒரு பசுவும் கன்றும் வாங்கி வந்தான். இன்று மம்மக்காசீமிடம் பத்து பதினைந்து உருப்படிகளுக்கு மேல் இருப்பது அவனுடைய விடாமுயற்சி என்றுதான் கூற வேண்டும். இவனுடைய குடும்பச் செலவுகள் யாவும் இந்தப் பசுமாடுகளின் ஊதியத்திலிருந்துதான் ஒழுங்காக போகின்றன. இவனுக்கு பாரப்பட்ட மூன்று குமருகளோடு ஒரு பையனும் இருக்கிறான். என் குடும்பத்திற்கு இவனும், இவன் குடும்பமும் நல்ல உதவி. எங்கள் வீட்டில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் மம்மக்காசீமும் அவன் மனைவி மக்களும் நேர காலத்தோடு வந்து உதவி ஒத்தாசை செய்வார்கள். மம்மக்காசீம் நல்ல உழைப்பாளி. பத்து வருடங்களுக்கு மேலாக என் ஆமவட்டை வயலைச் செய்கை பண்ணி வரும் அவனிடம் பொய்,
ஞானம் - டிசம்பர் 2004

களவு மருந்துக்கும் கிடையாது. எத்த னையோ தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு மானமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனொரு மனிதநேயமுள்ள மனிதன். எங்கள் ஊரில் யார் இறந்தாலும், இறந்தவரின் வீட்டுக்கு முதலில் சென்று, அவரின் இறுதிக் கடமைகளுக்குரிய எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பான். இதனால் எங்கள் ஊர் மக்கள் எல்லோரும் இவனோடு நல்ல அவனும் எங்களூரிலுள்ள வர்களுடன் வயது வித்தியாசமில்லாமல் அன்போடு பேசுவான், பழகுவான். சொல்லப் போனால் அவனொரு முழு மனிதன்.
“அப்பா. இம்பா பாப்பம் வா.” என் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் பேரன், மம்மக்காசீம்
பாசம்.
வளர்க்கும் பசுமாடுகளைப் பார்ப்பதற்கு விடுத்த அழைப்பை முழுமனதோடு ஏற்று, அவனைத் தூக்கிக் கொண்டுபோகிறேன். என் வாசலில் படுத்துக் கிடந்த நாய் பொட்டும் எங்களோடு வருகிறது.
"அப்பா. வவ். வருது.” “ங். அதொண்டும் செய்யமாட்டா, நீ போசாம வா.”
எங்களோடு வந்த நாய் பொட்டு, பூனையொன்றைக் கண்டு துரத்திப் போகிறது.
“இந்த நாய்க்கு வேலல்ல. சும்மா வந்த பூனய என்னத்திற்கு தெரத் திதோ?.”
நாய்க்குப் பயந்து பூனை பக்கத்தி லிருந்த பூவரசு மரத்தில் ஏற, ஒடிக் களைத்த நாய் நாக்கால் வீணி வழிய சோர்ந்து வருகிறது.
(ob m oor b — tqaf ubu ñi 2004
“என்ன தம்பி, காலத்தால பேரனோட எங்கோப்புறாய்?”
வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பாத்தும்மா ராத்தா, அவசரமாக வந்து எங்களைக் கண்டு நிற்கிறாள்.
"பேரன் மாடு பாக்கணுமாம்.
எங்கள்
அதான் நம்முட மம்மாக்காசீம்ட ஊட்ட போறம். அது செரி, இந்த நேரத்தோட நீ எங்க போப்புறாய்?”
“எங்கிட விதானட கந்தருக்கு ஒழுப்பிளம் போப்புறன், தம்பி. போன வரிசம் நீ எழுதித் தந்த பித்திசத்திக்கு, இப்பதான் பிச்சச் சம்பளக் காட்டு வந்திரிக்காம். லாவு, வெதான வந்து செல்லிப் போட்டுப் போனாரு.”
“கவுமந்து வேலயெல்லாம் அப்புடித் தான் ஏதோ, கெடச்சது பெரிசி. வகுறுTதினவனுக்கு குசுப்போன மாதிரி ஒன்ட வெத்திலப் பாட்டுக்காவது ஒதவும்.
“ஓம் தம்பி. எல்லாம் பெரிய கஸ்ரமாக்கிடக்கு. எல்லோருக்கும் புள்ள குட்டிகள் கனத்துப் பெயித்து. அதால ஒரு புள்ளயஞம் இப்ப நல்லாக் கவனிக்கிறல்ல. ஏதோ, அவள் எளயம்மா மட்டும் தான் ஒழுங்காப்பாக்கிற. என்ன செய்யலாம், அவள்ள பண்ணயிம் பெரிசாப் அவளுக்கும் பாரப்பட்ட ரெண்டு கொமருகள், கொறு வான் பொட்டியப்போல ஊட்டுக்கரிக்கு. அவரு மருமகனுக்கும், இப்ப ஒண்டுக்கும் ஏலம்பி. எந்நேரமும் மூச்சித்தான்.” “அது அவகிட பரம்பர நோய்தான். அவகு வாப்பாக்கும் அவருமெளத்தாகு மட்டும் அந்த நோய்தானே இரிந்த. அத எதாலையிம் மாத்தேலா.”
பெயித்து.
41

Page 23
”அப்படித்தான் தம்பி, நம்முட ஜாவிரு லாக்குத்தரும் சென்னாரு. இத ஒரு மருந்தாலையிம் லேசாக்க ஏலாதாம். ங்,
என்ன செய்யிற எல்லாத்தையிம் அந்த
அல்லாதான் லேசாக்கி வெக்கணும். அவரால தான், எங்கிட கனாயத்தெல்லாம் ஒரு மாதிரிப் போன. அவரு படுக்கயில உழுந்த பொறகுதான், எல்லாம் சிக்கலாப் பெயித்து.”
“அது செரி, ஒன்ட பேத்தியொன்ட இன்னா எல்லாரும் அனுப்புறாப் போல சவுதிக்கு அனுப்பினா, ஒரு மாதிரிப்பாரம் கொறயிமில்லியா”
“ஓம் தம்பி, அதுக்காகத்தான் நம்முட லெவ்வக்கனி சப்புட கையில, புள்ளைக்கு பாஸ்போட்டு எடுக்க, காசோட எல்லாச் சாமானும் குடுத்திட்டம். வாறமாசம்
42
போறத்திக்கு G6).JFIT
வருமென்டு லெவ்வக்கனி செல்லிரிக்காரு.”
“அல்ஹம்ந்துவில்லா, எல்லாம் ஹயறா வரும். சும்மா செல்லப்புடா அவன் சவுதிக்காரண்ட காசுக்கு பொறகு தான் எல்லாக் காசும்.”
“அப்பா. இம்பா.” “th...... ஒன்ட பேரன் ஒன்ன உட மாட்டான். கொண்டு போய் மாட்டக் காட்டு.”
“கொஞ்ச நேரமாவது, ஒரு மணிச ரோட கதக்க உடமாட்டாய்.”
என் பேரனைக் கடிந்துக் கொண்டு மம்மக்காசீமுடைய வீட்டை நோக்கிப் போகிறேன். நான் போவதற்கு முன்பே என் நாய் பொட்டு போய், அவனுடைய வளவிற்குள் நிற்கும் இளந்தென்னங் கன்று ஒன்றின் அடியில் பின்னங்காலைக் கிளப்பிக் கொண்டு மூத்திரம் பெய்கிறது. “சீ. நாயே. எங்க போனாலும் ஒன்ட புத்தி ஒன்ன உட்டு போகாது. மூத்திரம் பேய வேற எடமில்லாம வந்திற்ராறு. மம்மக்காசீம்.”
“வா காக்கா. என்னாக்கா? ஒரு வெசகளம் சென்னா வரமாட்டனா?”
“எனக்கொரு வேலயிமில்ல. என்ர பேரன்தான் ஒன்ட மாடுகளைப் பாக்கணு மிண்டு வந்திரிக்கான்.”
“அவளுக்கென்ன கொழும்பாக்கள். வாங்கம்பி, இம்பாக் காட்றன். ஒரு குட்டிம்பாவும் கெடக்கு.”
“என்ன கறுப்பி, கன்டீண்டிட்டா?” “ஓங்காக்கா நேத்து லாவு ஈண்டு போட்டு.”
“அப்ப இனி பாலுக்கு பஞ்சமில்ல. அல்லா ஒன்ட பண்ணயையிம் பெரி சாக்கிப் போட்டான்.” VA
ஞானம் - டிசம்பர் 2004
 

“அதெல்லாம் மெய்தான் காக்கா. ஆனா, இதுகள வளக்கிறதான் பெரிய கஸ்ரமாக் கிடக்கு. வட்டயெல்லாம் செஞ்சி போட்டான். அதால இதுகள மேய உட இடமில்லாமக் கெடக்கு. இப்ப இதுகள நம்முட களப்புக்கதான் மேய உர்ற. களப்புக்கயிம் புல்லு இல்ல. மழயில்லாம எல்லாம் கரியிப் பெயித்து. இந்த மில்காரனுகள் இப்ப தவுட்டுக்கும் வெலய கூட்டிப் போட்டானுகள். இதால இப்ப மாடுகள் வளக்கிற பெரிய செலவாக் கிடக்கு.”
“இப்ப என்னத்திக்குத்தான் வெல இல்ல?. மில்லுக்கரிந்து சும்மா கொட்ற உமிக்கும் காசாப் பெயித்து. இப்ப உமியாலதானே செங்கல் லெல்லாம் சுர்றானுகள். கல்லுப் போர்ணைக்குள் உமியப் போட்டுத்தான் பத்தவெக் கானுகள்.”
“அதாலதான் காக்கா, இப்ப வாற கல்லெல்லாம் வயிரமில்லாமக் கிடக்கு. ஒழுப்புளம் கைதவறி உழுந்தாப் போதும் கல்லு மாவும், தூளுமாப் போகுது.”
“கல்லு நல்லா வேகாட்டி, அப்பிடித்தான் ஒடயிம். அந்தக் காலத்தில கல்லுப் போறணைக்கு, வீரக்கொள்ளி போட்டுத்தான் பத்தவெக்கிற. அப்பிடி சுர்ற கல்லு, கருங்கல்லையிம் பாக்க வயிரமா இரிக்கும். அந்தக் காலத்தாண்ட வேலக்கு, பின்னாலயிம் இந்தக் காலத்தாண்ட வேல நிக்கேலுமா?”
“மெய்தான் காக்கா இப்ப எல்லாம்
XO w s பகட்டுத்தான்.
9 s "அப்பா, இம்பாக்குட்டி காட்டு. “டே தம்பேய் வாடா ஒன்ட
கறுப்பிரகுட்டியப் பாப்பம். என்ன நாகா, நாம்பனா?
ஞானம் - டிசம்பர் 2004
கென்டா
“நாகு தான் காக்கா.” “அப்ப பரவாயில்ல. ச்சா. நல்ல உசாராத்தான் நிக்கிது. எதுக்கும் இப்பதய பால கறக்கத் தொடங்கிராத.” கறுப்பிர கன்றுக் குட்டியைப் பார்த்து என் பேரன் மகிழ்ச்சியில் மூழ்கித் தன்னையறியாமலே கை கொட்டிச் சிரிக்கிறான். வாளி பாயும் கன்றை அனைத்து பசு கறுப்பி பாசத்தோடு ந்க்கிக் கொண்டிருக்கிறது.
“குட்டிம்பாவா. அப்பா, குட்டிம்பாவ புடிங்க.”
“குட்டிம்பாவப் புடிச்சா. பெரியம்பா நமக்குக் குத்தும். செரி இனிப் பாத்த போதும் நாம ஊட்ட போவம். உம்மா மில்க் குடிக்கத்தேடுவா. அப்ப மம்மக்காசீம் நாங்க வாறம்.”
“இஞ்ச! ஒங்களத்தான்! தேத்தண்ணி கலந்திற்ரன், போடியார வந்து குடிச்சுப்போட்டு போகச் செல்லுங்க.”
“எனக்கு வேணாம்புள்ள. இந்தச் சீனி வருத்தத்தால தேயில குடிக்கிறது இப்ப கொஞ்சம் கொறச்சிக்கிற்ரன். அது செரி, மகள்ள கலியாண வெசயம் என்ன மாதிரிக் கெடக்கு?”
“லாவு கூட, நானும் அவரும் ஆதங்காக்காட ஊட்ட போய்த்தான் வந்த. அவக புடிச்ச புடியில தான் நிக்காக.” “கடசியா என்ன செல்றாங்க?” “சீதன பாதினம் இல்லாட்டியிம், இரிக்கிற ஊட்ட கல்லால கட்டி ஒடு போட்டுத்தரட்டாம்.”
“அதுக்கு நீங்கென்ன சென்னிங்க?” வெட்டி செஞ்சி தாறெண்டு செல்லிரிக்கம். எங்களுக் செய்யிறென்டே
“வெள்ளாம
என்ன
43

Page 24
தெரியல்ல. ஊட்டக்கட்டி முடிச்சா வாற அச்சிமாசம் கலியாணத்த முடிக்கலா மெண்டு செல்றாங்க. இனி எல்லாத் துக்கும் அல்லாரிக்கான்.”
“படச்சவன் படியளக்காமலா உட்ருவான்..? எதுக்கும், இந்த மாட்டிலரெண்ட வித்துப்போட்டு, கல்லச் சீமெந்த வாங்கி ஊட்டுவேலயத் தொவங்கு. செய்வம் செய்வமின்டா ஒண்டும் நடக்காது.”
“அத நல்லாச் செல்லுங்க. நானும் இதச் செல்லி செல்லி அலுத்துப் பெயித்தன். பாரப்பட்ட மூணு கொமருகள், கொறுவான் பொட்டிகளப் போல, ஊட்டுக்கு இரிக்கிற கவல. ஆருக்குத் தான் இரிக்கு? என்ர செல்ல இவரு எப்பதான் ஒழுங்காக் கேட்ட.”
“இஞ்ச விடிய விரிச்சிற்ரியா ஒன்ட கொப்பிய.?”
“டே தம்பி, நீ என்னடா அந்தப் புள்ளயோட கோவப்பர்ற? அது செல்றதும் செரிதானடா. பாரப்பட்ட கொமருகள ஊட்டுக்க வெச்சிரிக்கிற பொறுப்பு, ஒனக்கெங்க தெரியப் போகுது? அதிர கஸ்ரம் பெத்தவளுக்குத்தான் தெரியும்.” “இத நான், ஒழுப்புளம் சென்னாப் போதும். எனக்கு ஒரே ஏச்சிம் பேச்சிம் தான். இன்னா. இந்த ஊருக்க மத்தவனுகள் புள்ளயள சவுதிக்கு அனுப்புறாப் போல, நாமளும் ரெண்டு புள்ளயள அனுப்பினா நமக்கென்ன கஸ்ரம் இரிக்கப் போகுது? அதுகள் போய் ஏதோ கொஞ்சக் காச அனுப்பினா நமக்கிரிக்கிற இட்ற முட்ற கொறயி மில்லியா? என்ர எந்தச் செல்லத்தான் இவரு கேக்காரு.”
“இஞ்ச புள்ள! நீ செல்றதான் செரி. எப்பயிம் மொடத்திக்குத்தான் கால்ல
44
அரும தெரியிம். முன்னிட்டிக்கு ஒன்ட எளய புள்ளய சவுதிக்கு அனுப்புற வேலயப் பாப்பம்.”
“இவன் நம்முட சப்பு லெவ்வக்கனி, எத்தின தரம்தான் ஊட்ட வந்தான். அவன்கேட்ட நேரம் அனுப்பிரிந்தா எங்கிட முடுமயெல்லாம் எப்பயோ போயிரிக்கும். சும்மா வந்தவன் போனவண்ட செல்லக் கேட்டுக்கு எல்லாத்தையிம் திண்டு போட்டாரு. இத நாம புத்தியாச் சென்னா அடிக்கவாறாரு.”
“புள்ள. இந்த வெசயத்த இனி என்னோட உடு. அவன் லெவ்வக் கனியோட நான் பேசி, புள்ளய வாற மாசத்துக்குள்ள அனுப்புறவேலயப் பாக்கன்.”
"அப்பா. ஊட்ட போவம் வா.” “இனி நிக்கேலா. இவன் பால்குடிக்கிற நேரம் வந்திட்டு நீ ஒன்ட புள்ளட பொறப்புச்சாத்து பத்திரத்த எடுத்துக்குடக்கெண்டு ஊட்ட வா. இவன் லெவ்வக்கனிக்கிற்ர போய் வருவம். சொணங்காம வா.”
“செரி காக்கா. தம்பி! போப் புறீங்களா..? செரியா இவரு நம்முட தம்பி சமீல் மாதிரித்தான்.”
“அப்ப நான் வாறன் புள்ள.” மம்மக்காசீமுடைய பசு மாடுகளைப் பார்த்து விட்டு வரும்போது எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள சிற்றொழுங் கையால் வந்த கட்டாக்காலி மாடுகள் சிலதைக் கண்டு எங்களோடு வந்த நாய் பொட்டு குரைத்துக் கொண்டோடுகிறது.
“அப்பா. லொள்ளு, வவ்.வவ்.” நாயின் சண்டித்தனத்தைக் கண்டு என் பேரன் சப்தமிட்டுச் சிரிக்கிறான். அப்பொழுது, எங்கள் சிற்றொழுங்கையால்
ஞானம் - டிசம்பர் 2004

ரகுமானியாத் தைக்காமோதின் உதுமா லெவ்வை அவசரமாக வருகின்றார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் போடியார்” “வா அலைக்குமுசலாம். என்ன, மோதின் மாமா, போlங்க.”
“இன்டைக்கு நம்முட தைக்காப் பள்ளிஅவுதக்கழுவப் போறன். இப்ப கழுவினாத்தான் லொகருக்கு தண்ணி நெறப்பி வெக்க செரியா வரும். ஆருமில்லாம எல்லா வேலயிம் என்ர தணிக்கையாலதான் செய்யணும். பள்ளி லெவ்வ சும்மா பேருக்குத்தான் இரிக்காரு. இப்படியான வேல செய்யிற நேரம் திரும்பியும் பாக்கமாட்டாரு. இப்ப எனக்கு ஒண்டுக்கும் ஏலா தம்பி. வயசிம் எழுபதுக்கும் மேலயாப் பெயித்து. இப்ப கண்ணெல்லாம் நல்லாப் பொகஞ்சிம் பெயித்து. தூரத்தில வாற ஆக்களை 9[]06nل மதிக்கேலாமக் கிடக்கு. என்னால இந்த மோதின் வேல இனிப் பாக்கேலா, தம்பி.”
“இப்ப நீங்க எவ்வளவு காலமா இந்த மோதின் வேல
எங்க அவசரமாப்
பாக்கிங்க?”
“கிட்டத்தட்ட முப்பது
வரிசத்துக்கு மேலயாப்
பெயித்தம்பி. நம்முட
குண்டுக்கோப்ப மோதின் மெளத்தான கையோட நான் மோதினா வந்த. பாருங்க தம்பி பாவம்! இன்டைக்கும் அவர்ர குடும்பம் நக்கயிம் தவிடில்லாமத் தான் கெடக்கு. அதப் போலதான்
ஞானம் - டிசம்பர் 2004
என்ர குடும்பமும், கெடக்கம்பி. இந்தக்கத்தம், பாத்தியா ஒதிற காசி என்னத்திக்கு தம்பி, காணும்.? பள்ளில மோதின் வேல பாத்தா எங்களுக்கு பள்ளிய உட்டுப் போட்டு ஒரு பக்கமும் போகேலா, ஒழுப்புளம் பிந்தினாப் போதும். நம்முடாக்கள் பள்ளிய மத்தப் பக்கம் பிரட்டி எடுத்திருவானுகள். ஏதோ நாங்க அல்லாக்குப் பயந்து இந்தக் கடமயச் செய்யிறம். எங்கள இந்த ஊரான்
வாங்குடப்
எவளவு கேவலமா நெனக் கானுகள். கத்தத்து பூனெண்டு எங்கிட மொகத்திலேயே செல்றானுகள். எங்கிட மனம் கொதிக்கிதம்பி.”
“அவன் கெட்டான் புழுக்க. அவனுக்கு தெரியிமா இந்த மோதின் வேலட மகிம? எங்கிட நபிகள் நாயகத்திர கூட்டாளி பிலால்றலி செஞ்ச வேல இது.
45

Page 25
இதெல்லாம் இந்தக் கழிசறயளுக்கு எங்க தெரியப் போகுது.”
“ம். எல்லாத்துக்கும் அந்த அல்லாதான் போதுமானவன். அவன் மட்டும் எங்கிட பணிய ஏத்துக்கிட்டாப் போதும். அவன் எங்களுக்கு உர்ற எந்தக் கஸ்ரத்தையிம் நாங்க பெரிசா நெனக்கமாட்டம்.”
“மோதின் மாமா. இந்த மடயணுகள் கதைக்கிறதப் பத்தி நீங்க எதயிம் யோசியாம, உட்டுத்தள்ளுங்க. இஞ்செல் லாட்டியிம், ஆகிறத்தில அல்லா ஓங்களுக்கு நல்ல கூலியத் தருவான்.” “தம்பி! ஒங்களப் போல நாலஞ்சி சாலியான சீதவிகள் இந்த ஒலகத்தில இரிக்கிறதால தான் ஒழுங்கா மழயிம் பெய்யிது. இந்த ஊரில நான் எத்தன பேரத்தான் என்ர கையால குளிப்பாட்டி, அடக்கிப் போட்டன். ஆனா, என்ர மய்யத்த ஆருதான் குளிப்பாட்டி அடக்கப் போறாகளோ? அதுதான் எனக்கு பெரிய கவல தம்பி.”
“மாமா. நாங்கெல்லாம் உசிரோட இரிக்கக்கிள நீங்க இப்பிடிக் கதைக்க லாமா..? நீங்க மெளத்தானா, ஒங்கிட ஒடம்பில இரிக்கிற சூடார்றத்திக்கிடயில கொண்டடக் கிருவம். இன்சால்லா நீங்க எதயிம் யோசியாம சந்தோஸமா இரிங்க. ”
“தம்பி, இந்தக் கிழவனுக்கு சொந்தமா ஒலகத்தில இரிக்கிற சொத்தெல்லாம் ரெண்டு சட்டயிம், ரெண்டு சாறனும், ஒரு தொப்பியிம் தான். மத்த சொத்தெல்லாம் அல்லாட ஈமான் மட்டும்தான் இரிக்கு.”
“மாமா! ஒலகத்தில மனிசனுக்கு அந்தச் சொத்துத்தான் பெரியசொத்து.
46
அது இரிந்தா ஆருக்கும் பயப்புடத் தேவயில்ல.”
"அப்ப நான் வாறன் தம்பி.” “அல்லாட காவலாப் போயிற்ரு வாங்க, மாமா.”
"அப்பா, பசிக்கிது.”
“செரி, போவம் வா.”
ஊட்ட போவம்
உதுமாலெவ்வை மோதின், அவரின் அந்திம காலத்தோழனான பூண்போட்ட கருங்கல்லிப் பொல்லை உறுதியுடன் ஊன்றி, ரகுமானியாத் தைக்காவை நோக்கி அமைதிய்ாக நடந்து கொண் டிருக்கிறார். இன்றும் வாழ்க்கையின் அடிமட்டத்திலேயே கிடந்து கொண்டு, அதன் இனிய சுகங்களில் துளியைக் கூடக்காண முடியாமல் சதா ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊதுமா லெவ்வை மோதினின் மனவுறுதியையும் இறை பக்தியையும் எண்ணிக் கசிந் துருகிப் போகும் எங்கள் முன்னால் கட்டாக்காலி மாடுகளுக்கு சண்டித்தனம் அவைகளைத் துரத்திவிட்ட பெருமிதத்துடன் நாய் பொட்டு தலை நிமிர்ந்து போகிறது. எங்கள் வளவிற்குள் கிளை பரப்பி, பூத்துக் குலுங்கி நிற்கும் வேப்ப மரத்திலிருந்து குயிலொன்று, ராகமெடுத்து கூவிக் கொண்டி ருக்கிறது. எங்கள் இருவரையும் வீட்டு கடவலடியில் எதிர்பார்த்து நிற்கும் மகள் ஹாஸ்னாவைக் கண்டு என் பேரன் தாவிக் குதிக்கிறான்.
“உம்மா, குட்டிம்பா பாத்த. கனக்க பெரியிம்பா. வவ். வவ். பாத்த.”
“இன்னம்மா, ஒன்ட மகனப்புடி. கையெல்லாம் செத்துப்பெயித்து.இந்தக் கெழவனத் தூக்க எனக்கேலுமா..? கைய உட்டு எறங்கல்ல.”
காட்டி,
ஞானம் - டிசம்பர் 2004

"அப்பா பாவம். அப்பாக்கு கையெல்லாம் நோகுதாம். வாங்க மில்க் குடிப்பம்.”
மகனைத் தூக்கிக் கொண்டு
போகும் என் மகளுக்கு பின்னால், நாய் பொட்டு குழைந்து கொண்டு போகிறது. “என்ன ஒங்கு வாப்பாக்கு தண்ணிச் சோறு திங்க இன்னம் நேரம் கெடக்காமா..? மகள், கையக்கால கழுவிற்ரு வாப்பாவ வரச்செல்லுகா. எனக்கும் பசிக்கிது.”
“செரி வாறன், நீ எல்லாத்தையிம் எடுத்து வெய். கொஞ்சம் தயிரும், சீனியும் சேத்து வெய்.”
கிணற்றடியில் கை, கால் முகத்தைக் கழுவிக் கொண்டு என் மனைவி வத்திபாவின் ஆணையை நிறைவேற்று வதற்காக, குசினிக்குள் போகிறேன். என்னைக் கண்ட வுடனேயே எங்கள் பூனை மூச்சுப் பிடித்து கத்துகிறது.
“ங். வந்திற்ரியா? ஒனக்கு எவ்வளவு போட்டாலும், இந்தக் கத்துவய உடமாட்டாய். சீ! அங்கால போ.”
“நீ, அத உட்டுப்போட்டு, அந்தத் தண்ணிக்கோப்பய இஞ்சால எடுத்து வெய். தயிரு நல்லாரிக்கா?”
“அதுக்கென்ன, முதியாங்கண்டுத் தயிரு. நல்லாரிக்கு. நேத்து வாத்த தயிரில, இவளவுதான் மிச்சம். எல்லாத் தையிம் நக்கிற்ராக. நீங்க தின்னுங்க நான் போய் இந்தச் சோத்த நம்முட பொட்டுக்கு வெச்சிற்ரு வாறன். அதுவும் நம்மளப் போல ஒரு உசிரு தானே.?”
என் மனைவி நாய் பொட்டுக்கு சாப்பாடு கொடுத்த பின்பு தான் சாப்பிடுவது வழக்கம். அதன் மீது அவளுக்கு அவளவு விருப்பம், பால்
ஞானம் - டிசம்பர் 2004
குடிமாறாத சின்னக் குட்டியாகக் கொண்டு வந்த பொட்டு பத்து வருசமாகியும் எங்களோடுதான்
இருக்கிறது. இரவு நேரங்களில் எங்கள் வளவிற்குள் ஒரு பூச்சிகூட வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்.
இதனால் பொட்டைக் கண்டாலே எல்லோருக்கும் பயம்.
“பொன்னங்கணி எலக்கறி இரிக்கியோஒ.”
“புள்ளேய் அன்னா எலக்கறிக்காறி வாறா, கூப்பிட்டு வாங்குகா.”
“வாப்பா, பொன்னங்கணின்டா உசிர உட்றுவாருலெக்கோ! எலக்கறியக் கொண்டாகா.”
“முதல்ல ஓங்கிட நாயப்புடி புள்ள.” “அது, அங்கால கெடக்குநீ உள்ளுக்கு வா.”
“வெள்ளத்தில் ஆஞ்ச வள்ளலும், ஆத்தில வடிச்ச கூனியும் வெச்சிரிக்கன் புள்ள. புளிப்போட்டுக் கடஞ்சா ரெண்டகப்பச் சோறு கூடத் திங்கலாம். வேணுமாகா.? பொன்னங்கணிக்குள்ள கூனி போட்டு ஆக்கினா, சோக்கரிக்கும் புள்ள, என்ன தரயா..?”
“அதெல்லாம் வேணா. ரெண்டு தட்டு பொன்னங்கணி மட்டும் தா. வாப்பா, பொன்னங்கணி மட்டும் தான் திம்பாரு”
"அப்ப கூனி வேணாதா?” "பரவாயில்ல, அரக்கொத்து கூனிபோடு. இன்னா, காசி.”
வாங்கிய இலைக்கறியையும், கூனியையும் தட்டோடு கொண்டு வந்து குசினிக்குள் வைத்து விட்டு, மகள் ஹ ஸ்னா, நான் சாப்பிட்ட பிங்கான் கோப்பைகளைத் துப்பரவு செய்யும் போது
47

Page 26
பூனை எச்சிலுக்காகக் தொடர்ந்து கத்திக்கொண்டிருக்கிறது. எங்கள் கிணற்றடியில் நிற்கும் வாழை மரத்திலிருந்து காகமொன்று எச்சித் தண்ணிருக்காக ஏங்கித் தவித்து கரைகிறது. என் மனைவி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். நான் சாப்பிட்ட களைப்புத்தீர விறாந்தையில் கிடக்கும் சாய்மணக்கதிரையில் வந்து குந்திருக் கிறேன். அப்பொழுது, பாலைக்குடித்த கையோடு என் பேரன் வந்து, என் மடியில் ஏறி இருந்து கொண்டு கதை சொல் லும்படி அடம்பிடிக்கிறான்.
எங்கள் வீட்டு வாசலில், எண்ணற்ற பூக்களை உமிழ்ந்து நிற்கும் மாதுள மரத்தில், கொட்டப் பாக்கான் குருவி களிரெண்டு அங்குமிங்கும் பறந்து பூக்களில் தேன் குடித்துக் கொண்டிருக் கின்றன. சாப்பிட்டு முடிந்த என் மனைவி அவசர அவசரமாகத் தன் கையையும் வாயையும் முந்தானையால் துடைத்தபடி, என்னிடமிருந்து எதையோ எதிர்பார்த்து வந்து நிற்கிறாள்.
“என்னயாம், ஒங்கிட கலியாணம் முடிக்கிறலியாமா? அவரு செலயிமான் காக்காவும், அந்திவிடிஞ்சி அலஞ்சிக்கு திரியிறாரு. எதாரிந்தாலும் அவருக்கு ரெண்டிலொண்டச் சொன் னாத்தானே அவர்ர புள்ளைக்கு வேறாரையிம் பாப்பாரு.”
“இஞ்ச. அவன் செலயிமா னிட்டயிம் நான் செல்லிற்ரன். ஒன்ட மகனுக்கு வெளிநாட்டுக்கு போன பொண் வேணாதாம். இதுக்கு நாமென்ன அடிச்சா தீத்திற?”
“அவரு செலயிமான் காக்காட ரெண்டேக்கர் காணியிமா வெளிநாட்டுக்கு போன.?”
மகன்
48
“அது செரி. இந்தக் காணிக்காற மடயன் என்னத்திக்கு மகள சவுதிக்கு அனுப்பின? பணமின்டா பீயத்திங்கிறயா?” “புத்திகெட்ட மனிசன் அனுப்பிற் ராரு.”
"அப்ப உட்டுப்போட்டு ஒன்ட வேலயப் பாரு.”
“இவ்வளவு ஆதன பாதனத்த, சீதனமாக இவனுக்கு ஆரு குடுக்கப் போறா? பொண்ணுக்கும் நல்ல வடிவான செற. தலயால வாற சீதவிய காலால அடிச்சா, பொறகு நாமதான் கைசேதப் படனும். நான் செல்றத்த செல்லிற்ரன்.” “இஞ்ச, ஒன்ட குத்துக்கதய உட்டுப்போட்டு ஒழுங்காக் கத. அவன் பொக்கெட்ற செலயிமான்ட மகள கலியாணம் முடிச்சிக்கு வாழப்போற நீயா இல்ல ஒன்ட மகனா? கலியாணம் முடிச்சிக்கு வாழப்போறவனுக்கு விருப்ப மில்லாட்டி நாமென்ன அடிச்சப்பமா தீத்திற? இந்தப் பொண் போனா இன்னொரு பொண் அவனுக்கு வராமலா போயிரும்? அவன் ஆம்புளயிலயிம் அழகான ஆம்புள. அதிலயிம் இந்த ஊர ஆண்ட அச்சிமரைக்காண்ட பூட்டன். அவன்ட பரம்பரயக் கேட்டாலே பொண்னெல்லாம் கதறிக்கு வரும்.”
“உம்மாக்கு வேலல்ல. அவனுக்கு வெளிநாட்டிக்கு போன பொண் வேணாண்டா. வெளி நாட் டிக்கு போகாத பொண்ணாப் பாத்துப் பேசி முடிச்சி வெக்கிறதானே. இத உட்டுப்போட்டு, நீங்க ரெண்டு பேரும் என்னத்திக்கு, வீணாச் சண்ட புடிக்கீங்க..? காணி பூமி இல்லாட்டி, கலியாணம் முடிக்கிறல்லியா?” “அத ஒறப்பாச் சொல்லு மகள். ஒன்ட கததான் ஒங்கும்மாக்கு நல்லா ஏறும்.
ஞானம் - டிசம்பர் 2004

எங்கள பொண்ணுக்கு மகரக் குடுத்துப் போட்டுத்தான் கலியாணத்த முடிக்கச் செல்லிரிக்கு. ஆனா சீதனத்த வாங்கிற்கு கலியாணம் முடிக்க எங்கிட மம்மது நபி சொன்னாங்களா? நாங்க முஸ்லிமெண்டு மட்டும் சென்னாப் போதுமா..?”
ஓங்களோடப் பேச
6 TILLT 6)
“என்ரம்மா, எனக்கேலாம்மா. என்னடும்மா. நான் ஒண்டும் தெரியாத மடச்சி. இந்த ஒலகத்தில எனக்கு மட்டும்தான் காணி பூமில ஆச. மத்த ஒருவருக்கும் ஆசல்ல. ஏனெண்டா ஒங்களுக்கு மட்டும்தான் ஈமான் இசிலாம் தெரியிம். எங்களுக்கு அதெல்லாம் தெரியா. நாங்கெல்லாம் அளிக்கம்பயில இருந்து வந்த கொறக்கூட்டம்தானே. இனி நான் ஒங்கு தம்பிர கலியாணத்தப் பத்திப் பேசினா, ஒங்கிட பழஞ்செருப்பால அடிங்க. வாப்பாவும் புள்ளயஞம் வந்து சேந்து தான் இரிக்காங்க.”
வாழ்வியலின் யதார்த்தத்தைப் புரிந்து அதன் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளச் சக்தியில்லாமல் என் மனைவி, என்னையும் என் மகளையும் திட்டித் தீர்த்துக் கொண்டு, கோபமாகக் குசினிக்குள் போகிறாள். அவளுக்கு பின்னால் என் மடியிலிருந்து இறங்கி என் பேரன் எதையோ கேட்டுக்கொண்டு போகிறான்.
“உம்மம்மா! விக்கா, தா.”
மாதுளமரத்தில் கொட்டப் பாக்கான் குருவிகளிரெண்டும் குலுங்கி நிற்கும் பூக்களைத் தங்கள் விருப்பப்படி எல்லாம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக் கின்றன. வீட்டு முற்றத்தில் நிற்கும் இளங்கன்றுத் தென்னோலையில்
(sbr oor tid — Liq. FbUńr 2004
கார்த்திகை மாதக் கானலைத் தாங்க முடியாமல் காகமொன்றிருந்து கரைந்து கொண்டிருக்கிறது. தென்னையின் பக்கத்தில் பொட்டு முன்னங்கால்களை சாவகாசமாக நீட்டி அமைதியாகப் படுத்துக் கிடக்கிறது. என் மனைவியின் பின்னால் போன பேரன் தன் இரண்டு கைகளிலும் விஸ்கோத்துடன் வந்து மீண்டும் என் மடியை சண்டித்தனத்துடன் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான்.
“காக்கா! ஓங்களப் பேரன் உடமாட்டாரு போலதான் கெடக்கு.”
“வா மம்மக்காசீம். அவன்
கொழும்புக்கு போனாத்தான் நம்மள உடுவான். அப்ப நாம லெவ்வக்கனிர ஊட்ட போவமா?”
“காக்கா நீங்க கோவிச்சிக்கப் போடா. என்ர புள்ளயள வெளிநாட்டுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லகா.”
வேலக்கு
“ஏன்ரம்பி, என்ன வெசயம்?”
“நம்முட கஸ்ரத்திக்காக நாம பெத்த புள்ளயளக் கொண்டுபோய் ஆரோ ஒருவனுக்கு அடிமயா விக்கலாமா? பெத்த புள்ளயஞக்கு சோறு கறி குடுக்க ஏலாத எங்களுக்கு என்னத்திக்கு காக்கா இந்த வாழ்க்க? காசி பணமில்லாட்டி நாம வாழ ஏலாதா..?”
“அப்ப ஒன்ன நம்பிரிக்கிற ஒன்ட புள்ளயள்ள வாழ்க்க?”
“காக்கா! அவங்க என்ன நம்பிரிக்கல்ல. அவகளப்படச்ச அல்லாவத் தான் நம்பிரிக்காங்க. அவகளப் படைச்ச அல்லா, அவகளுக்கு சோடி சேக்காமலா உட்றப் போறான்?”
“எதுக்கும் நல்லா யோசிச்சிக்க. புள்ளயஞக்கும் வயசி அடிச்சிக்கு
49

Page 27
போகுது. ஒன்ட பொண்டாட்டியிம் ஒரு மாதிரி கொளம்பிக்கு கெடக்கா.”
“அவள் கெடக்காள் மடச்சி. இவன் சவுதிக்காரன்ட காசில்லாட்டி நாம வாழ்றெல்லியா? மொதலாவது என்ர புள்ளயஞக்கும் சவுதிக்கு போறத்திக்கு விருப்பமில்ல. நம்முட பெத்த புள்ளயள இந்தச் சவுதிச் செயித்தானுக்கு அடிமயாவித்துப் போட்டு, அவன் போர்ற பிச்சக் காசில, இந்த ஊட்டக்கட்டி ஒசத்தியா இரிக்கிறதப் பாக்க, கஞ்சக் குடிச்சிக்கு குடிசயில வாழ்றதான் பெரிசி. காசி பணமில்லாட்டியிம் மானம் மரியாதையோட வாழ்றதத்தான் என்ர புள்ளயள் விரும்புது, காக்கா.”
“நீ, செல்றதெல்லாம் செரிதான். ஆனா நம்முட பொம்புளயஞக்கு அவன்ட காசிலதானே பெரிய ஆசயாக்கெடக்கு.” “அல்லாட பயமில்லாத பொம்புளயள் அப்பிடித்தான் இரிப்பாங்க. இப்ப ஒலகம் செயித்தானத்தான் பெரிசா நம்புது. சும்மா முன்பின் தெரியாத அந்நியனோட, நம்முட குமருப்புள்ளயள தனியா சவுதிக்கு அனுப்பலாமா? அப்புடி அனுப்புற சுத்த அறாமென்டு எங்கிட மொம்மது நபி, எத்தின தரம் செல்லிரிக்காங்க. நாங்கெல்லாம் முஸ்லிமா இரிந்துக்கு இதச் செய்யலாமா? நான் ஏழதான். அதுக்காக எங்கிட நபி சென்னத மறந்திரலாமா..? ”
“இத ஒரமாச் செல்லாத. சவுதிக்கு போக சப்புக்கு பின்னால திரியிற பொம்புளயள்ள காதில பட்டா, நாம இரிந்த பாடில்ல.”
“காக்கா, உண்மயச் செல்ல என்னத்திக்கு நாங்க பயப்புடனும். நாம, முழுப்பூசணிக்காய சோத்துக்க மறைக்
50
கேலுமா? நம்முட சனங்களெல்லாம் இப்படிப் போனத்திக்கு காரணமே, எங்களுக்குள்ள இரிக்கிற பணக்காரனும் படிச்சவனும் தான். இவனுகள் ஒழுங்கா சக்காத்தையிம், சதக்காவையிம் ஏழயளுக்கு குடுத்து எங்கிட நபி சென்னமாதிரி, அல்லாக்கு ஒவப்பா நடந்தா ஆருக்கு என்ன கஸ்ரம் வரப்போகுது..? இத உட்டுப்போட்டு லாவைக்கெல்லாம் வட்டிக் கணக்குப் பாத்துப் போட்டு விடியச்சாமத்தில் சுபகுத் தொழுகைக்கு பள்ளிக்குப் போனா செரியாயிருமா? தாடி தொப்பியோட போற வாற இடத்தில யெல்லாம் தஸ்பக்கோருவய கையில வெச்சிக்கு உறுட்டினாப் போல அவரு எல்லாக்கு உவப்பான ஈமான்தாரியா..? இப்ப, எல்லாரும் நல்லா அல்லாவ ஏமாத்தப் பழயிற்றானுகள்.”
“எங்கிட மம்மக்காசீம் மாமா செல்ற நூத்துக்கு நூறு இப்ப எல்லோரும் முஸ்லிம் எங்கிற பேரிலதான் வாழ்றான். சும்மா காசின்டாப் போதும்.
எல்லாம்
உண்ம.
அல்லாட கொறுவானையிம் மத்தப்பக்கம் மாத்தி எழுதிருவானுகள்.”
“ஓம் புள்ள. ஒங்கட வாயில சீனி போடணும். இதயெல்லாம் அண்டைக் கண்டைக்கு ஒழச்சித்திங்கிற என்னப் போல ஏழ வயற்காரன் சென்னா ஏத்துக்குவாகளா? ஆராவது ஒருவன் தாடி தொப்பியோட பெரிய ஜுப்பாவும் போட்டுக்கிட்டு வந்து அறபால ஒரு
பூனைக்கு அஞ்சி காலெண்டா, எல்லோரும் எரஞ்சி ஆமின் செல்லு வானுகள். ஒலகமே பித்துனாவாப் பெயித்து.”
“செரியாச் சென்னிங்க மாமா.”
ஞானம் - டிசம்பர் 2004

“நீயென்ன வேலிக்கு ஒணான் சாட்சியா..? அவனுக்கு சப்போட் பண்றாய்.”
“பொறகென்ன காக்கா. இப்ப பாருங்க. ஒரு கலியாணம் முடிக்கப் போனா, சீதனம் டாக்குத்தருக்கு ஒரு றேட்டு, இன்சினியருக்கு ஒரு றேட்டு. கடசில இப்ப, ஆனாண்டு எழுதத் தெரியாம சவுதிக்கு போய் அவன்ட குப்பகூழனப் பொறக்கி, கழிவினவனுக் கெல்லாம் ஒரு றேட்டு இப்பிடி இரிந்தா, எப்படி இஸ்லாம் தளைக்கப் போகுது..? இந்தப் பாவமெல்லாம் இந்தப் பணக்
கக்கூடசி
காரனயெல்லாம் சும்மா உடமாட்டா.”
“மம்மக்காசின், என்னயிம் சேத்தா செல்றாய்? நான் ரெண்டு தரம் அச்சிக்கு போன ஆசியாரு, அறபா மைதானத்தில் என்ர பொழ பொறுக்க நான் கேட்ட தொவாவ, இப்ப நெனச்சாலும் எனக்கு கொளறுவ வருகிது.”
“காக்கா, நீங்கென்ன எங்களப்போல மாடு மேய்க்கிற மடயனா? இங்க ஊருக்குள்ளேயே நீங்கதானே ஆகப் பெரிய சீமான். நீங்க மட்டும் நெனச்சா, நம்முட ஊருக்கரிக்கிற ஏழக்குமரு களுக்கெல்லாம் ஊடும் கட்டிக் கலியாணமும் முடிச்சி வெச்சிருவீங்க. ஒங்களுக்கு பின்னால ஆரும் வர ஏலுமா?”
“அது செரி, என்னப்பத்தி ஒனக்குத் தான் தெரியிமே. சும்மாவா பத்து வரிசத்துக்கு மேலே, என்ர உப்பத்தானே நீயும் ஒன்ட குடும்பமும் திண்டுக்கு வாறிங்க. ஒலகத்தில எல்லாத்துக்கும் ஒரு தகுதி தரம் வேணும்.”
“காக்கா, தகுதியும் தரமும் அல்லாட்டச் செரி வருமா? எல்லோ
om oor b -- Liq. af b U ir 2004
ருக்கும் அந்த அல்லாதானே றிஸ்க் களக்கான். அவன்ட றிஸ்க்க எங்கிட றிஸ்க்கெண்டு நாங்க செல்லேலுமா? அல்லா இத மன்னிப்பானா, ஈமானும் இசுலாமும் பணம்தானா?”
புடம் போட்ட ஈமானின் ஒளியில் பத்ர்’ போர்க்களம், பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. போர்க்களத்தில் முன்னேறிச் செல்லும்
களைகட்டிப்
வயற்காரன் மம்மக்காசீமுடைய பாதச் சுவடுகளுக்கிடையில் என் பூர்ஷ்வாப் பெருமை நசுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பேரன் கைகொட்டிச் சிரிக்கிறான். உழுத்துப்போன என் போடித் தத்துவம் குற்றுயுராகிக் கொண்டிருப் பதைக் கண்டு, பொறுக்க முடியாமல் என் மனைவி பொங்கி வடியும்போது வீட்டிற்குள் அமைதியாக குந்திக் கொண்டிருந்த என் மூத்த மகன், வெற்றிப் புன்னகையோடு வீட்டிலிருந்து வெளி யேறிச் செல்கிறான். போர்க்களத்தில் ஏழ்மையைத் தோற்கடித்து, ஈமானின் உறுதியில் தடம் பதித்து, எங்கள் வளவின் கடவலைக் கடந்து கொண்டிருக்கும் வயற்காரன் பின்னால் நாய் பொட்டு நன்றியோடு குழைந்து செல்கிறது. வாழ்வில் எண்ணி லடங்காச் சுமைகளை யெல்லாம் தூசாக மதித்து, துணிவோடு சென்று கொண்டிருக்கும் அவனை, என் மகள் ஹாஸ்னா இமை வெட்டாமல் எதற் பாசத்தோடு கொட்டப்
பார்த்துக் கொண்டிருப்பது காகவோ? பாக்கான் குருவிகளிரெண்டும் மாதுள மரத்தில் விளையாடிக் கொண்டிருக் கின்றன.
O
51

Page 28
ഗZശ്രബശ്
(~ ശബബ ക്ര ബഗ്ഗ്ലല്ല"
മല്ലൂശര് ட்பார்வையும் பதிவும் -
தொல்காப்பிய மகாநாடு
கொழும்புத் தமிழ்ச் சங்க, தமிழறிஞர் பொ. சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஈழத்துப் பூதந்தேவனார் அரங்கிலே நவம்பர் 20, 21 ஆகிய இரு தினங்களும் தொல்காப்பிய மகாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் நாட்டு அறிஞர்களும் ஈழத்து அறிஞர்களும் கலந்து கொண்ட இந்த மகாநாட்டினுடைய அமைப்பாளர் தமிழவேள் இ. க. கந்தசுவாமி ஆவார்.
பேராசிரியர் எஸ். அகத்தியலிங்கம், பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியன், முதுமுனைவர் ம.சா. அறிவுடை நம்பி, முனைவர் மு. சதாசிவம், முனைவர் காந்திமதி லட்சுமி முதலிய பல தமிழ் நாட்டு ஆய்வாளர்கள் இம்மகா நாட்டில் கலந்து கொண்டனர். ஈழத்தைச் சேர்ந்த பேராசிரியர் சி. தில்லைநாதன், பேராசிரியர் க. அருணாசலம், கலாநிதி செ. யோகராசா, கலாநிதி வ. மகேஸ்வரன், திரு. க. இரகுபரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இன்னும் பல தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்த விழாவாக இம்மகாநாடு அமைந்தது.
தொல்காப்பியச் சுவடிகளும் பதிப்புகளும், தொல்காப்பிய இலக்கண நுட்பங்கள், தொல்காப்பியரும் திருக்குறளும், தொல்காப்பியப் பார்வையில் உவமை, பொருளதிகாரப் புதையல், தொல்காப்பியமும் நாட்டுப்புற இலக்கியமும், தொல்காப்பியத்தில் பாட வேறுபாடுகள், தொல்காப்பியத்தில் யாப்பும் அணியும் முதலிய பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றைவிட பேராசிரியர் எஸ். அகத்தியலிங்கம், பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரைகளையும் நிகழ்த்தினர். இவர்களது உரைகளில் வித்துவான் கணேசையர், சி. வை. தா. முதலிய ஈழத்தவர்கள் இலக்கணத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகள் விதந்து பேசப்பட்டன.
மகாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த நூலின் அறிமுக உரையை கலாநிதி வ. மகேஸ்வரன் ஆற்றினார். ச. வே. சுப்பிரமணியன் எழுதிய 'தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்த நூலின் வெளியீட்டுரையைப் பேராசிரியர் சி. தில்லைநாதன் நிகழ்த்தினார். ச. வே. சுப்பிரமணியன் எழுதிய தொல்காப்பியம்தெளிவுரை என்ற நூலும் அறிமுகம் செய்யப்பட்டது.
பதிப்பகச் செம்மல் மெய்யப்பனார் அவர்களுக்கான அஞ்சலியும் இடம் பெற்றது. அத்துடன் சிறப்புப் பரிசில்களும், நூற்பரிசில்களும் வழங்கப்பட்டன.
தொல்காப்பிய நூற் காட்சியானது சிறப்புற அமையவில்லை. அரிய பல நூல்கள் எவற்றையும் அங்கே காண முடியவில்லை. அதிக விலையில் விற்க வேண்டும்
52 ஞானம் - டிசம்பர் 2004
 
 
 

என்பதற்காக நடைபெற்ற புத்தக விற்பனை போலவே நூற்காட்சி’ அமைந்திருந்தது.
இத்தகையதொரு மகா நாட்டினைத் தனது முதுமைக் காலத்தில் மிகுந்த சிரமத்துடன் பெருவிழாவாக எடுத்து ஈழத்து, தமிழக அறிஞர்களை ஒன்று கூட வைத்து, மக்களுக்குப் பல அரிய கருத்துக்களை வழங்க வேண்டும் என்றநோக்கில் முன்னின்று உழைத்த மகாநாட்டு அமைப்பாளர் தமிழவேள் இ.
க. கந்தசுவாமி அவர்கள் பாராட்டப்பட
வேண்டியவர். அவருக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டது.
இசை வேள்வி கொழும்புக் கம்பன் கழகம் வருடந் தோறும் எடுக்கும் இசைவேள்வி' பெருவிழா இவ்வாண்டு6.11.2004 - 13.11.2004 வரை கொழும்பு வெள்ள வத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்ட பத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இவ் இசை வேள்வியில் தமிழ் நாட்டிலிருந்து சுதா ரகுநாதன், குலபூஷணி கல்யாணராமன், ஆர். சந்தான கோபாலன், ரி. வி. சங்கர நாராயணன், வி.இராமச்சந்திரன், பம்பாய் ஜெயழரீ, ஓ. எஸ். தியாகராஜன், ரி. என். ஷேசகோபாலன் ஆகியோரும் ஈழத்தி லிருந்து பல இசைக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். இசை தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் ரி. என். சேஷகோபாலன் சிறப்புரை நிகழ்த்தினார்.
பிரதேச கலாசாரப் பெருவிழா வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச கலாசாரப் பேரவை பிரதேச கலாசாரப்
დატm Gorub — სg-&r th uit 2004
பேரவை பிரதேச கலாசாரப் பெருவிழா வினை 30.10.2004, 31 10.2004 ஆகிய இரு தினங்களும் சிறப்புற நடாத்தியது. கலைஞானகேசரி மன்னவன் கந்தப்பு அரங்கு, பேராசிரியர் அ. துரைராஜா அரங்கு, பண்டிதர் இ. வீரகத்தி அரங்கு ஆகிய மூன்று அரங்குகளில் கரவெட்டிப் பிரதேசசபை மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது. நடனம், இசை, தனி நடிப்பு, நாட்டார் இசை நிகழ்ச்சி, ஆய்வரங்கு முதலானவை நடைபெற்றன. இப்பெருவிழாவில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவர்கள் தென்மோடி ஆட்டக் கூத்தினை வழங்கினர். இவ் விழாவில் கண்காட்சியும் இடம்பெற்றது. கரவெட்டிப் பிரதேச மறைந்த கலைஞர் களது உருவப் படங்கள், ஆக்கங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியனவும் தற்காலக் கலைஞர்களது ஆக்கங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கே சிவசம்புப் புலவர்(படம் இல்லை) கிருஷ்ணாழ்வார், சிரித்திரன் சந்தர், நெல்லை க. பேரன், பண்டிதர் வீரகத்தி முதலிய பலரது படங்கள் வைக்கப் பட்டிருந்தன.
O 21.11.2004 அன்று மாலை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்மண்டபத்தில்சூரன் சுயசரிதை என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டில் பேராசிரியர் கா. சிவத்தம்பி யாழ்ப்பாணத்தின் இன்னொரு கல்விப்பாரம்பரியம்” என்ற தலைப்பில்உரை யாற்றினார்.
கலைஞர் கே. செல்வராஜன் “என் நினைவுகளும் நிஜங்களும்” (ஒரு கலைஞனின் அனுபவப் பதிவுகள்) என்ற நூலை வெளியிட்டுள்ளார். பொலிகையூர் சு. க. சிந்துதாசன் ஒரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.
O
53

Page 29
வீசிலuறிகிறேன்
வே. சுப்ரமணியச்செல்வன்
உன்மீது தோன்றிய காதலை துக்கியெறிகிறேன் ஒரு மலையுச்சியிலிருந்து இனி எனக்கு மறுபடி கிடைக்காதபடிக்கு
மலையுச்சியின் குளிர்த்தென்றலில் மறந்து போகின்றேன் உன்னை கண்களை இறுகமூடி - மனதில்
நீ பதிந்து கொண்ட உன் கடிதங்கள் நினைவின் தடயங்களை எப்போதோ நீயெனக்கு தந்த மெல்ல அழித்தவாறு அழகான ரோஜmப்பட கலண்டர்
உச்ைகுத் தெரியாமல் மீண்டும் மீண்டும் உன்னிடமிருந்து திருடிய
உன் கைக்குட்டை உன் நெற்றிப்பொட்டுக்கள் யாவற்றையும் வீசியெறிகிறேன்
குளிர்காற்றை உள்ளிழுத்து என் அவnசப்பையை நிரப்பிக் கொள்கிறேன்
அதில் நீ காற்றில் ది - உன் நிைைவுகளல்லாத இடமில்லாதவாறு என்னைப்போல
ண்களின் மீ என் கைப்பையும் என கணகளான மது பாரமற்றதாக நீ பதிந்ததாய் அறிகிறேன் ஆைைதயெண்ணி ஆதலால் கண்ணிர் விட்டழுது மகிழ்ச்சிக்கிறேன்.
அதையும் அகற்றுகிறேன்
சிரித்தழுது சிரிக்கிறேன்
உன் பெயரையினி நேற்றுவரை உச்சரிக்கக்கூடாதென்று என்னை பைத்தியமாக்கிவிட்ட நாக்கைக் கடித்துக் கொள்கிறேன் உன்னை நினைத்து
கோபம் கொண்டு
O
நறுக்கென்று - முன்பற்களால்
54 Gömt 6oTub - Lą-8F buñ 2004
 

நூல் பாலையும் பயணமும்
ஆக்கம் : வைரமுத்து சுந்தரேசன்
வெளியீடு: பசுபதி சிவநாதன்,
யாழ். பல்கலைக்கழகம்.
யாழ்ப்பாணப் ஆங்கிலத்துறையைச் சேர்ந்த வைரமுத்து சுந்தரேசனின் முதல் நூலாகப் பாலையும்
பல்கலைக்கழக
பயணமும் (2001) என்ற கவிதைத் தொகுதி விளங்குகிறது. அவரது படைப்பார்வம் வரவேற்கத்தக்கது. இவரது கவிதைகளில் அகதி வாழ்வு, இடப் பெயர்வு போன்ற மனித அவலங் களைப் புலப்படுத்தும் கவிதைகளும் உண்டு. வாழ்வு பற்றிய தத்துவத் தேடல் முயற்சியும் இவரது கவிதைகள் சிலவற்றிற் காணப்படுகின்றது. இத் தொகுதியிலுள்ள இவரது கவிதைகளிற் பெரும்பாலும் ஆட்சி செய்வது, பிராணி கள் மீதும், இயற்கைப் பொருள்கள் மீதும் இவர் காட்டும் இயல்பான ஆர்வமாகும். அவை பற்றிய விடயங்களில் கவிஞர் அதிக அக்கறை செலுத்துவதும், அவற்றைக் கவிதையாக்கும் முயற்சியும் அவரது கவிதைகளுக்கு ஒரு புதிய பண்பை ஏற்படுத்துகின்றன எனலாம்.
ஞானம் - டிசம்பர் 2004
இத்தொகுதியிலுள்ள கவிதைகளில் ஊஞ்சலும் உருவு தடமும், அஞ்சலி, வெறுமை, தோலும் துளையும், கானல், இரணம், பற்று, வேஷம், ஞாபகம், வதை, கொடுமை, விதி, உதயம், பிளவு, இரைப்பொறி என்பவை குறிப்பிடத்தக்க கவிதைகளாக விளங்குகின்றன. சில கவிதைகள் ஒசைச் செம்மை உடையன வாகப் படைக்கப்பட்டுள்ளன. சில புதுக்கவிதைகள் வெறும் வசனங்களாக விரிந்து கிடக்கின்றன. புதுக் கவிதை எழுதும்போது பலருக்கு ஏற்படும் பலவீனம் இது. புதுக்கவிதை எழுதக் கூடிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பலரும் எழுதித் தள்ளு கின்றனர். வைரமுத்து சுந்தரேசனிடமும் ஒரளவுக்கு இந்தக் குறை காணப் படுகிறது. அதேவேளை, ஒரளவு கவித்துவமும் காணப்படுகிறது. அதனை
வசனங்களாகவே
மேலும் வளர்க்கும் முயற்சியில் அவர் ஈடுபட வேண்டும்.
"ஆள்பாதி ஆடை பாதி” என்ற பழமொழி நூல்களுக்கும் பொருந்தும். இந்நூலின் அட்டை அமைப்பு, அச்சு அமைப்பு என்பனவற்றில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நூல் மேலும் அழகாக வெளிவந்திருக்கலாம். இலங் கையில் நூல் அமைப்பு முறையில் காணத்தகும் துரித வளர்ச்சி நிலையை இந்நூலின் அமைப்பு பிரதிபலிக்க வில்லை.
ஒரு வார்த்தையில் சொல்வதானால், வைரமுத்து சுந்தரேசன் எதிர்காலத்தில் வளரக் கூடிய ஒரு கவிஞர்.
- நக்கீரன்
55

Page 30
நூல் 613/iu/1/iմվ ஆக்கம் : செ. ஞானராசா வெளியீடு: அன்பு இளைஞர் கழகம்
அன்பு வழிபுரம், திருகோணமலை,
கவிஞர் செ. ஞானராசாவின்
எதிர்பார்ப்பு (2001) என்ற கவிதைத் தொகுதி அவரது கவிதா ஆர்வத்தை இனங்காட்டுகின்றது. நாற்பத்து மூன்று பக்கங்களைக் கொண்ட இக்கவிதைத் தொகுதியில் இடம் பெறும் கவிதைகளிற் சில கவிஞரை ஒரளவு இனங்காட்டத் தக்கவையாக உள்ளன. அவள் என் காதலியல்ல!, கடவுளே தஞ்சம், மலர்ந் திருப்பாய், இல்லாமையாலே! நாங்களும் மனிதர்கள்! ஆகிய கவிதைகள் சற்றுக் குறிப்பிடும்படியாக உள்ளன.
ஞானராசா கவிதைத் துறையில் மேலும் முன்னேறுவதற்குத் தரமான கவிதைகளை மேன்மேலும் தேடிப் படிக்க வேண்டும். நண்பர்களின் பாராட்டுகள் போன்றவை மாத்திரம் நல்ல கவிஞனை உருவாக்கி விடமாட்டா. ஞானராசா முயன்றால் ஒரு தரமான கவிஞராக எதிர்காலத்தில் உருவாகலாம். இத்தகைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முறையில் அவரது எதிர்காலக் கவிதைகள் அமைய வேண்டும்.
- நக்கீரன் O நூல் ஊருக்குத்தான் .
/சிறுகதைகனர்/ ஆக்கம் : கலைநிலா
வாகரை வாணன் வெளியீடு: ஆரணியகம்,
புதிய கல்முனை விதி
நாவற்குடா, மட்டக்கரைப்பு.
விலை : ரூபா 75.00
56
Uடசாலைகளில் மாணவர் களாக இருக்கும் காலத்திலே இலக்கியப் பிரவேசம் செய்த பலர் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர்களாக விளங்குவது கண்கூடு. ஆனால் பாடசாலைக் காலத்திலேயே தமது படைப்புகளை அவர்கள் நூலாக அச் சிட் டு வெளியிடவில் லை. பயிற்சியும் அனுபவமும் சேரும்வரை அவர் களால் பொறுத் திருக்க முடிந்தது. ஆனால், இன்றோ தமது கண் ணி ஆக்கங்களைப் பல மாணவர்கள் நூல்களாக வெளியிட்டு வருவதைக் காண முடிகிறது. அவ்வாறானதொரு தெகுதிதான் இந்நூல். இதனை எழுதியிருப்பவர் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 13ஆம் வகுப்புப் படித்துக் கொணி டிருக்கும் கலைநிலா. இத்தொகுதியில் ஆறு சிறுகதைகள் அடங்கியுள்ளன.
“ஊருக்குத்தான் கதை, சீர் திருத்தம் பேசும் தகப்பன், தனது மகன் காதலிக்க முயன்றவளைக் கைப் பிடிக்க முனைந்தபோது, சீதனத்தை வலியுறுத்திக் கலியாணத் துக்கு எதிர்ப்புக் காட்டுவதையும், மாற் றம்’ போதை வஸ் த் துப் பாவனையின் ' பாதிப் பையும் , ‘மின்னுவதெல்லாம். காதல் என்று நடிப்பவன் அவளின் சொத்துக் காகவே என்பதையும், ‘நீதியே நீ கேள்’ கடத்தல் கும் பலினால் பொலிசார் சுட்டுக் கொல்லப் படுவதையும் ஊஞ்சல் ஊதாரிச் சகோதரனால் தங்கை மட்டுமல்ல குடும்பமே ஏமாற்றப்படுவதையும், தேடல் பெற்றோர் சணி டை
ஞானம் - டிசம்பர் 2004

யிடுவதினால், பிள்ளையின் படிப்பும் மனமும் பாதிக்கப்படுவதையும் சித்திரிக்கின்றன. நூலாசிரியை ஒரு மாணவி என்பதால் சமூகத்தைப் பற்றிய பரந்த பார் வையும் அனுபவமும் அவருக்குக் கிடைத் திருக்க முடியாது.
மேலும் பல கதைகளை எழுதிப் பயிற்சி பெற்றால், இவரிடமிருந்து நல்ல கதைகளை எதிர்பார்க்கலாம்.
- நா. சோ.
O நூல் : துப்பாக்கிகளின் காலம்
/சிறுகதைத் தொகுதி/ ஆக்கம் : இளைய அப்துல்லாஹ் கிடைக்குமிடம் : 1273 B,
ஆனந்த மாவத்தை, ஹ"னுப்பிட்டி, வத்தளை. விலை : ரூபா 150.00
ஈழத்தில் நிலவிய கொடிய போரின் காரணமாக அந்த மண்ணில் இருந்து பிடுங் கி எறியப் பட்ட லட் சக் கணக் கான மக் களில் ஒருவரான இளைய அப்துல்லாஹற் அவர்களின் இத் தொகுதியிலுள்ள பத்துச் சிறுகதைகளும் மிருகத் தனமான யுத்தம் ஏற்படுத்திய பேரழிவுகளையும் , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய சீரழிவு களையும் சித்திரிக்கின்றன. இடப் பெயர்வு புலப் பெயர்வுகளினால் அப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகள், கொடுமைகள் எத்தனை எத்தனை? பிறந்த மண்ணை எண்ணி எண்ணி ஏங்கித்தவிக்கும் மனித உள்ளங்களின் தவிப்பை மிக அற்புத மாகச் சித்தரித்திருக்கிறார்.
ஞானம் - டிசம்பர் 2004
இடப்பெயர்வு, புலப்பெயர்வுகளின் அவதிகளை அனுபவித்தவர்களில் இவரும் ஒருவர் என்னபதனால், ஒவ்வொரு சம்பவதி தையும் உள்ளத்தையும் உணர்ச்சிகளையும் தொடும் வகையில் எழுதியுள்ளார்.
துப்பாக்கிக் கலாசாரம் இன்று எமது நாட்டில் சர்வசாதாரணமாகி விட்டது. கொடிய மிலேச்சத்தனமான செயல் களினால் மனித உயிர்கள் நுழம்பிலும் பார்க்க மலிவற்றனவாக மதிக்கப் படுகின்றன. இதற்கான பயிற்சியை வளர்த்த பெருமை, பேரினவாதம் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழினத்தின் மீது மேற்கொண்ட இரக்கமோ, மனித நேயமோ அற்ற காவாலித்தனமான காட்டுமிராண்டிச் செயல்களுக்கே உரியது.
பேரினவாதத் தலைமைகளின் பதவி ஆசை காரணமாக மீண்டும் ஓர் போர் வெடித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகின்ற வேளையிலே, கெட்ட போர் எவ்வித அழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை, ஏற்கனவே நடந்த போரின் கோரங்களையும் கொடுரங்களையும் உறைக்கக்கூடிய வகையில், தமது சிறுகதைகளின் மூலமாக உலகத் தின் மனச் சாட்சியைத் தட்டியெழுப்பியுள்ளார் இளைய அப்துல்லாஹற்!
தமிழில் வெளிவந்துள்ள இளைய அப்துல்லாஹற்வின் இச்சிறுகதைகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளிவர வேண்டும்.
சென்ற தொண்ணுாறுகளின் பின் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தோன்றிய விரல் விட்டு எண்ணக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவரான
37

Page 31
இளைய அப்துல் லாஹர் வின் இத்தொகுதியை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.
இளைய அப்துல்லாஹற்விடமுள்ள அனுபவங்களை நேரில் நாம் காண்பதுபோல சிறுகதைகளில் அவர் வடித்துள்ள நேர்த்தி பிரமிக்க வைக்கின்றது.
- வாதராயணன்
O
நூல் ஆமைக்குணம்
/சிறுகதைத் தொகுதி/ ஆக்கம் ! நீ பீ. அருளானந்தம்
வெளியீடு: திருமகள் பதிப்பகம்,
2ஆம் குறுக்குத்தெரு, 62/6/60/1/17. ரூபா 200.00 ஆண் டொன்றுக் கு 9 (5 சிறுகதைத்தொகுதியை வெளியிடு வதென்று வைராக்கியத்துடன் வேக வேகமாக எழுதிவருபவர் நீ.பி. அருளானந்தம். இவ்வாண்டில் இவர் வெளியிட்டிருக்கும் தொகுதி ‘ஆமைக்குணம். ஏற்கனவே 2002ல் அவரின் 'மாற்றங்கள் மறப்பதற் கில்லை சிறுகதைத் தொகுதியும், 2003ல் ’கபளfகரம்’ சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. ஆமைக்குணம் என்ற இத்தொகுதி 22 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இலக்கியம் காலத்தைப் பிரதிபலிப் பதென் பர் . பேரினவாதத்தால் ஏவிவிடப்பட்ட இருபதாண்டுகாலக் கொடிய யுத்தம் இந் நாட்டின் தமிழினத்தைச் சின்னாபின்னப்படுத்தி ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை கொடுமைகளை ஏற்படுத்திவிட்டது,
விலை
58
மாறாத தழும்புகளாகத் தமிழர்களின் மனதிலும் பலரின் உடம்புகளிலும் அவை காணப்படுகின்றன. நீ. பி. அருளானந்தமும் அவ்வாறான போர்ச்சூழலில் வாழ்ந்தவர் என்பதால், 'மாபெரும் புறப்பாடு, ‘விட்டில்’, ‘ கொந்தல் கோரம் முதலிய கதைகளில் தமிழ் மக்களின் உள் ளக் கொதிப்புகளையும் வேதனைகளையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி யுள்ளார்.
இலக்கியம் வெறும் பொழுது போக்கான சுவைப்பண்டமல்ல அது மக்களுக்கானது. அவர்களிடமிருந்து பெற்ற அனுபவங்களை கலைத் தன்மையேற்றி அவர்களிடமே நடமாட விடவேண்டும். சமூகப் பிரக்ஞை யில்லாத படைப்புக்கள் நிலைத்து நிற் கமாட் டா. அருளானந்தம் சமூகத்தை ஊன்றி அவதானித்து எழுதத்தலைப்பட்டிருப்பது மகிழ்ச் சியைத் தருகிறது. ‘சிலந்தி துன்பக் கேணி’, ‘சடங்கு கதைகள் பெண்களின் உள்ளத்து உணர்வு களை வெகு இலாவகமாகச் சித்திரிக்கின்றன. 'பறையொலி, வடு சமூக சீர்திருத்த நோக்கிலானவை. ஆக்க இலக் கியத் தைப் படைப்பதற்கு பயிற்சியும் அனுபவமும் கூரிய பார்வையும் தேவை. இடை விடாது வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்த அருளானந்தம் , 'ஆமைக்குணம் தொகுதியில் காணப் படும் பல சிறுகதைகளின் மூலம், நல்ல சிறுகதைகளைப் படைக்கக் கூடிய எழுத்தாளர் எனத் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்.
- நா. சோ. O
ஞானம் - டிசம்பர் 2004

புதிய O
நூலகம
○ (్యపా
LD Göj5 lq(சிரித்திரன் சுந்தர் பதில்கள்)
வெளியீடு : தேனுகா பதிப்பகம் 583 அனுராதபுரம் வீதி
புத்தளம், முதற் பதிப்பு: செப். 2004 விலை ரூபா 140.00
1969முதல்1995 வரை வெளியான சிரித்திரன் சஞ்சிகைகளில் தெரிவு செய்யப்பட்ட 54 இதழ்களிலிருந்நு சுமார் 820 கேள்வி பதில்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மகுடி பதில்கள் காலத்தை வென்று நின்றன. சுந்தர் அவர்கள் அவ்வப்போது சிரித்திரனில் வரைந்த கருத்தோவியங்கள் சில இந்
நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன.
- சுதாராஜ்
O
பெண்கள் சந்திப்பு Looff - 2004
(51 Gluczör UozoLÚUIrofesafiair ஆக்கங்கள் அடங்கிய தொகுப்பு) வெளியீடு : பெண்கள் சந்திப்புக்குழு
som oor tib - Liq-8F tib Uň 2004
விநியோகம் : விடியல் பதிப்பகம்
11, பெரியார் நகர், மஸ்க்கலிபாளம் (வடக்கு கோயம்புத்தரர் - 641015 இந்தியா.
1990இல் முதன் முதலாக ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதி லிருந்து இதுவரை இச்சந்திப்புகளில் ஆராயப்பட்ட, விவாதிக்கப்பட்ட விடைகாணா விடயங்கள் ஏராளம. ஆனால் இவைகள் பெண்களால் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. விவா திக் கப்பட்டிருக்கின்றன. ஆண் சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ள பெண்ணின் மீளுருவாக்கம் பற்றிய கேள்விகள், பெண் பெண்ணாகவேஒரு மனிதராக இல்லாததை விமர்சிக்க சந்தர்ப்பங்களை இச் சந்திப்புக்கள் உருவாக்கிக் கொடுத்தன. ஆக்கச் செயல் திறனுக்கு ஊக்கமளித்தன. புலம் பெயர் பெண்களை எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தது.
- பெண்கள் சந்திப்பு சிறுகுறிப்பு
கல்விக் கோட்பாடுகளும் இலக்கியக் கோட்பாடுகளும்
நூலாசிரியர் : பேராசிரியர்
சபா ஜெயராசா கல்வியற் துறை, யாழ். பல்கலைக்கழகம்.
முதற் பதிப்பு: 2004
விலை ரூபா 200.00
கல்வித்துறையிலும் இலக்கியத் துறையிலும் மேற்கிளம்பிய கோட் பாடுகளைத் தமிழ் மொழியில்
59

Page 32
விளக்கும் நோக்கத்துடன் இந் நூலாக்கம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பல வேறு துறைகளையும் உள்ளடக்கிய அகல்விரியாக்கப் பண்பு கொண்ட அமைப்பியல் வடிவத்தை இந்நூல் பெற்றுள்ளது. கல்வியியலிற் கூறப் பட்டுள்ள கோட்பாடுகள் இலக்கியத் திறனாய்வுப் புலத்திலும் இடம்பெறும் ஒப்புமை இத்தகைய ஒரு நூலாக்கத்தை மேற்கொள்வதற்குரிய குவியப் படுத்தலாயிற்று. இத் துறை
யில் மேலும் தேடுதல் களை மேற்கொள்வதற்குத் துணையயாக ஆங்கில எண்ணக் கருக்களும் தரப்பட்டுள்ளன.
- சபா ஜெயராசா O
பஞ்சாகூடிர தீபம் (அமரர் பிரம்மபூரீ ச. பஞ்சாகூஷர சர்மாவின் வருவடிாப்திக ஞாபகார்த்த வெளியீடு)
தொகுப்பாசிரியர்:
கோப்பாய் சிவம் கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம்.
முதற் பதிப்பு: 12.09.2004
இச்சிறுநூல் ஐந்து பிரிவுகளாக அமைகிறது. 1. சுடர் ஏற்றல் : நிவேதனமாக ஆரம்பிக்கிறது. 2. நெய் வார்த்தல்: அன்பர்கள், அறிஞர்களின் அஞ்சலிகளாகத் தொடர்கிறது. 3. திரி தூண்டுதல்: அமரர் அவர்களின் வாழ்நாளில் அவர் பெருமை இருந்த வற்றை விபரிக்கிறது. 4: ஒளிவீசுதல்: ஐயா அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் பட்டியல் களாகத்
60
தொகுத்து ஒரே பார்வையில் காண் பிக்கிறது. 5: சர விளக்கு: மரபுத் தொடர்ச்சி என்பதற்கிணங்க அமரர் ச.ப. சர்மா அவர்களின் முந்தையோர் வரலாறும் வம்சத் தொடர் வளர்ச்சி யுமாக விரிகிறது.
அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்
வாகீச கலாநிதி க. நாகேஸ்வரன் முதுநிலைவிரிவுரையாளர்
y P ouagaoayzooxagpita முதற் பதிப்பு : புரட்டாதி, 2004 விலை ரூபா 190.00
ஆசிரியர்
இந்நூலில் திரு நாகேஸ்வரன் அறுபத்து நான்கு கலைகள் எவை என்பதை எடுத்துரைத்து, அவற்றுள் முக்கியமானவை எனக்கருதப்படும் இருபத்தைந்தினை விளக்கியுள்ளார். அவை சம்பந்தமாக அவரால் திரட்டி விபரிக்கப்பட்டுள்ள பல தகவல்களும் பயனுள்ளவையாகக் காணப்படுகின்றன. - பேராசிரியர்
சி. தில்லைநாதன்
O
மனித ஏணிகள் (கவிதைகள்) ஆசிரியர் : கலா விஸ்வநாதன் முதற் பதிப்பு: ஜ"ன். 2003 வெளியீடு : 1/46, டி. மல்லிகைத்
தோட்டம், மட்டக்குளி, கொழும்பு-15.
ஞானம் - டிசம்பர் 2004

'மனித ஏணிகள்’ எனும் நெடுங் கவிதை முதற் கொண்டு தனித் தனியாக எழுதப்பட்ட கவிதைகள் வரை மலையக மண்ணின் அவல சூழலைப்பற்றிய, போராட்ட உணர்வு களைப் பற்றிய தனது ஆத்ம சுத்தமான அக்கறையை மீண்டும் மீண்டும் பதிவாகி இருக்கிறார் கலா
விஸ்வநாதன்.
- மேமன் கவி
O
வட இலங்கையில் சக்தி பீடம் நயினை பூநீ நாகபூஷணி அம்மன் (தல வரலாற்றாய்வு)
ஆசிரியர் : வாகீச கலாநிதி
க. நாகேஸ்வரன் வெளியீடு : திருக்கேதீச்சரம் றுரீ சபாரத்தின சுவாமிகள் நூற்றாண்டுவிழாச்சபை முதற் பதிப்பு: 15/10/2004 விலை ரூபா 200.00
வட இலங்கையின் சக்தி பீடம் எனத் திகழ்வது நயினை பூரீநாகபூஷணி அம்மன் தேவஸ் தானம். குண்டலினிற் தொழிற்பாடும் பூரீ சக் கர பூசை வழிபாட்டு மேன்மையும் உடையது இத்திருத்தலம். சக்திவழிபாடு நாகபாம்பு வழிபாட்டோடு தொடர்பு கொண்டமைவது. இன்றும் உலக மக்களிடையே பேதமற்ற முறையில் நயினை அம்மன் திருத்தலம் கீர்த்தி பெற்றுமிளிருவது.
- க. நாகேஸ்வரன்
O
ஞானம் - டிசம்பர் 2004
ஏனிந்தக் கிறுக்கு?
கவிஞர் செ. குனரத்தினம்
இந்த மழைக்குதைக்க எவனுமே இல்லையா? முந்திரிகை, மாபூத்தால் மூத்திரம் பெய்கிறதே
பnடுபட்டு வயல்காட்டில் பட்டகடன் இறுப்பதற்கு சூடுபோடும் வேளையிலn சோவென்று பொழியவேண்டும்?
சீட்டுக் காசைவnங்கி, செப்பனிடக் குடிசையிலே மோட்டிலேறி வேயும்போதா முழுகவார்த்துப்போக வேண்டும்?
குடையைத் தவறவிட்டு குழம்பிப்போய்க் கவலையுடன் நடைபேnடும் வேளையிலே நனைத்துச் சிரிக்கிறதே
சந்தையில் விலைபோகாத 'சள்ளல்’, 'சூடை’மீனை கொண்டுவந்து வெய்யிலில்பேnட கொட்டுவதேன் இந்தமழை
ஏனிந்த மழைக்குஎன்மேல் இத்தனை பகுடி, சேஷ்டை? நானிதன் கிறுக்கடக்க நாளெல்லாம் யோசிக்கின்றேன்
81

Page 33
அன்புடையீர், நிலவிலே பேச கைலாசபதி அழைக்கவில்லை எனும் தலைப்பில் ஒக்ரோபர் ஞானம் இதழில் வெளியான கட்டுரையைப் படித்தபோது எனக்குப் பழைய ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
1950 அல்லது 1960 களில் என நினைக்கிறேன். காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் கொமியூனிஸ்ட் கட்சியின் சார்பில் V. பொன்னம்பலம் அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட காலம். அவர் நம் தமிழ்ச் சமூகத்திலுள்ள சாதிபேதங்களைப் பாராட்டாதவர் என்றாலும் ஒருமுறை என் (நான் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் என்று சொல்லப்படும் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன்). உறவினர் ஒருவர் V. பொன்னம்பலம் அவர்களை ஒரு அலுவல் சம்பந்தமாகக் கண்டு பேச அவர் வீட்டுக்குப் போயிருந்தார். அப்போது திரு. பொன்னம்பலம் தன் வீட்டு விறாந்தையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாராம். என் உறவினர் போய்ப் பொன்னம்பலம் அவர்களின் கேற்றைத் திறப்பதைக் கண்டதும் பொன்னம்பலம் தன் நாற்காலியிலிருந்து சட்' என இறங்கி விறாந்தை நிலத்திலே உட்கார்ந்து விட்டாராம். தன்னிடம் வரும் அன்பருக்குச் சமாசனம் கொடுத்து உபசரிக்க வேணுமே என்ற நோக்கத்தில். எங்களுக்குத் தெரிந்த அளவில் திரு. பொன்னம்பலம் தனிப்பட்ட முறையில் சாதி பேதம் பாராட்டும் இயல்புடையவராய் இருக்கவில்லையாயினும் தன் வீட்டிலுள்ள பெற்றோர் உறவினர் முதலியோரைத் தன் வழிக்குக் கொண்டு வருவதற்குத் திராணியற்றவராகவே இருந்திருக்கிறார்.
இதைச் சொல்லும்போது இன்னொரு சம்பவமும் நினைவிற்கு வருகின்றது. 1940களில் என நினைக்கிறேன் சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் பெரும்பான்மைத் தமிழரின் அடக்கு முறைகளுக்கு எதிர்த்துப் போராடிய காலம். பெரும்பான்மையினத் தமிழ்ப் பிரமுகர்கள் சிலரின் ஆலோசனைப்படி இரு பகுதியினரும் சேர்ந்து பெரிய கூட்டம் ஒன்று நடத்துவதென்றும் அதில் பெரும்பான்மையினப் பேச்சாளர்கள் தீண்டாமையின் தீமைகள் பற்றி எடுத்துரைப்பது என்றும், அதில் இரு பகுதியினரும் ஒரே பந்தலில் சமபோசனம் அருந்துவதென்றும் விளம்பரம் செய்து கூட்டம் நடத்தி வாய் கிழியப் பேசி ஒரே பந்தலில் சமபோசனம் உண்டார்களாம். குறைந்த வகுப்பினர் உட்கார்ந்திருந்தது கதிற்பாய்களிலேயாம் (குரக்கள் கதிர்களை வெட்டி வெய்யிலிற் காயப்போடுவதற்கு உபயோகிக்கும் மண்பிடித்த பெரிய பாய்). மேல் வகுப்பினர் உட்கார்ந்திருந்தது கதிற்பாயின் மேல் விரிக்கப்பட்ட வண்ணப் புற்பாய்களிலாம். பின்பு சமபோசனம் உண்டார்களாம். சமமாயிருந்து அருந்திய போசனம் என்ன தெரியுமா? சோடா! சோடா மட்டுமே! அசல் Elephant House சோடா! இரு பகுதியினருமே
62 ஞானம் - டிசம்பர் 2004
 

போத்தல்களில் நாதஸ்வரம் வாசித்தார்களாம் சமமாக, அந்நாட்களில் Straw வினால் சோடா குடிக்கும் முறையில்லை. இருந்திருந்தால் எல்லோரும் சமமாகக் குனிந்தபடி 'ஒத்து ஊதியிருப்பார்கள். (ஒத்து என்பது அக்காலத்தில் நாதஸ்வரத்திற்குச்சுருதிவாத்தியமாக ஊதப்படும் ஒரு குழல் அதை உயர்த்திஊதுவதில்லை ஊதுபவர்குனிந்தபடியே ஊதுவார்)
பிற்காலத்தில் இலங்கையின் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் Reasonable use of Tamil என்றொரு சட்டம் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றியதை ஒத்ததாக இல்லையா மேற்சொன்ன சமபந்தி போசனம்?
பஞ்சமன், யாழ்ப்பாணம்.
தங்களின் 53 ஆவது ஞானம் பார்வையிட்டேன். பொருள் பொதிந்த கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் எல்லாம் தரமாக இருந்தன.
திரு. க. ரகுபரன் எழுதிய “மு. பொ. வை எவ்வாறு குறை சொல்வது?” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வாசித்தேன். 50 வருடங்களுக்கு முன்பு நான் மாணவனாக இருந்த காலத்தில் நான் படித்த வகுப்பில் ஒரு சம்பவம் எனது நினைவுக்கு வந்தது.
தமிழ் ஆசிரியர் இராமாயணத்தில் ஒரு கவிதையைக் கற்பித்துக் கொண்டிருந்தார். அதில் சீதையைக் கம்பன் வர்ணிக்கும்போது “பரந்த அல்குல் உடையவள்” என்ற ஒரு பதம் வந்தது. உடனே ஒரு மாணவன் பரந்த அல்குல் என்றால் என்ன சேர்? என்று கேட்டான். ஆசிரியர் உடனே ஒவ்வொருவராக அழைத்து காதுக்குள் “பெண்கள் குறி” என்று சொன்னார். வகுப்பில் கிட்டத்தட்ட 35 மாணவர்கள் இருந்தார்கள். அத்துடன் அன்றைய பாடம் முடிந்தது.
நானும் இதுநாள் வரை ஆசிரியர் சொன்ன கருத்தையே கொண்டிருந்தேன். சரியான கருத்தை எடுத்துக் காட்டிய திரு. ரகுபரனுக்கு நன்றி.
கா. நடராஜா
கனம் ஐயா!
ஞானத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே நான் அதன் வாசகன். அத்தோடு அப்போதிருந்தே ஆக்கங்கள் எழுதி வருகிறேன். தங்களின் ஒக்டோபர் மாத சஞ்சிகையின் ஆசிரியர் உரையில் மாணவர் இலக்கிய வளர்ச்சி நிலையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி தொடர்பாகச் சொல்லப்பட்டிருந்தது. இது தொடர்பாகவே எமது இலக்கிய வட்ட விவாதம் இடம் பெற்றது.
இந்நிலையை மாற்றப் பாடசாலையிலிருந்தே அடிப்படை வழங்கப்பட வேண்டும். அது நடைமுறையில் இல்லை. எனினும் இவ்வாறான முயற்சிகள் ஆங்காங்கே இடம் பெற்ற வண்ணம்தான் உள்ளன. அவ்வகையில் மலையக தோட்டப்புறப் பாடசாலையொன்றில் மிகுந்த பொருளாதார சிக்கல்களுக்கிடையில் வெளியிடப்பட்ட நூல்தான் “அவை புதிது" எனது வகுப்பு மாணவர்களுக்கு நான் ஊட்டிய இலக்கிய ஆர்வத்தின் வெளிப்பாடாக இது இருக்கிறது.
வே. தினகரன், கெலிவத்தை, பத்தoன.
(g) mressor tib - tqeFitbu it 2004 6.

Page 34
கடந்த இரு இதழ்களும் கடந்த வாரத்தில் கிடைக்கப் பெற்றேன். ஞானம் இணையாசிரியர் புலோலியூர் க. சதாசிவம் அவர்களது மறைவு தந்த ஆழ்ந்த துயரம் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. கன்னில் மிதக்கும் தங்கள் நெஞ்சை விட்டகலா நினைவுகள் காம் இதயம் பிழிகின்றன. மலையக உலகிற்கு மட்டுமன்றி முழுத் தேரத்தையும் அழவைக்கும் இவ் இலக்கிய இழப்பு ஈடு செய்ய முடியாதது. ாரங்கா தயாநந்தன், பிண்டன்,
மிகச் சிரமமான ஒரு இலக்கியப் பணியை தொடர்ந்து ஓய்ந்து விடாமல்
மேற்கொண்டு வரும் தங்கள் பனிக்கு எனது ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு. தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
ஞ்ானம் 54 இதழ் கிடைத்தது. கூடளே தங்கள் கடிதமும், எழுத்தாளர் களைக் கெளரவித்து இதுவரை ஞானத்தை இனமாக அனுப்பிவைத்த தங்கள் தயாள மனம் எல்லோருக்கும் வாய்க்குமா என்பது ஐமிச்சம். இது மிகைப்படுத்தல் அல்ல சத்தியம்.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நேர்கானல் நிறைவுற்றதை அதிருப்தியுடன் செமிக்கவேண்டியுள்ளது. இன்னும் கேட்டால் தருவார் என்ற எதிர்பார்ப்பு மிகைக்கும் தருணம் கபம் ஆகிவிட்டது. இருந்தும் என்ன அடுத்த ஜாம்பவானின் வாயைக் கிளறியுள்ளீர்கள். இனிவரும் காலத்தில் ஞானத்தில் விவாதச் சூடு பறக்கும்.
சிறுகதைகளில் சாரங்காவின் மொழிபோட்டம் இடைவிடாமல் வாசிக்கும் படியுள்ளது. செங்கை ஆழியான் அவர்களின் புனைகதை இலக்கியம் எம்போன்ற இலக்கிய மானவர்களுக்கு அருமையான தினி,
ஒட் பாவடி அரபாத்
அமரர் புலோலியூர் ஆ. சதாசிவம் அவர்களோடு நான் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தும் இங்கு ஒரு நூல் வெளியிட்டுவிழாவின்போதுதான் முதல் தடவையாகச் சந்திக்கும் பிாய்ப்பு ஏற்பட்டது. அவரை நான் இனம் காணாதபோதும் என்னை அவர் இனங்கண்டு எந்தவித பந்தாவும் இன்றி ஒரு சாதாரண - எழுத்தாளன் என்று காட்டிக் கொள்ளாமல் - ஒருவராக என்னோடு இன்முகத்தோடு உறவாடி தான் இன்னார் என்று எளிமையாகத் தள் நானே அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, எனது வெளியீட்டின் சில பிாதிகாாத்தானே ஞானம் நூல் மதிப்புரைக்கு கேட்டுப் பெற்றுக் கொண்ட அந்தப் பெருந்தன்மையை என்னால் மறக்க முடியவில்லை.
பழகிய பொழுது சொற்ப நிமிடங்களே. இருந்தும் அதன் பதிவு மிக ஆழமானதே. இன்றும் அந்தக் காட்சி என் மனதில் நிழலாடுகின்றது. அப்பேர்ப்பட்ட ஒரு உயர்ந்த ஆத்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றே,
திருக்கோனமலை கலை இலக்கிய ஆர்வலர் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். “ஞானத்தின் துயர்வில் நாமும் பங்கு கொள்கின்றோம். குடும்பத்தினருக்கும் எமது பருத்தத்தை அறியத் தரவும்.
து. ரித்தி அரசிங்கம்
ஞானம் - டிசம்பர் 2004

ಫಿಟ್ಟಿಟಿ: JANALANKA 3
ENTERPRIS 毅
MANUFACTURERS, WHOLESALERS AND X.
RETALERS OF QUALITY HAGs. URSES :
స్టో STATIONERS is FANCY GOODS
BULES ORDERS ACCEPTED
Sy? C
4 No. 60, Kot Lugo della Velediya, 濠
Kandy. 8:
ές εξ
R
:
}
*]
%
r
漆
CARSONS MEGA
2ද්දී CERAMICS ::
2ඨාදී
*న్స్ట్రల్డ్ : Insporters & Distributors of r 藥 `ყ???, Wall Tiles, Floor Tiles, High Quality Sanitary wares, Bathroom. Accessories, P. V. C. ፵፰öጅ ثلاث أن * 1-晶晶甲 F 赣 And Hot Water Pipe Fittings
""» . *కి ::
: :
A-71, Colombo Street 3. Kandy, Sri Lanka. εις : "E ---- 3R. Tel: O81-447676O, O81 – 22OOO52 3. *L్కకో *LF 3දී Fax: 081 - 22 OOO52
:::ಜ್ಜೀ:

Page 35
IGNANAM
%
ቘዯtff Exኛr Con
Luck
Man Ufa
Kunda
Phone
Fax
E-Mail
081 -
O8 -
0.81 -
081 -
Luck
SFS 22,
இச் சஞ்சிகை தி. ஜானசேகரன் அவர்களால் இசி
புவி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அச்சி

DECEMBER2OO
pfirefits. Fron
ylland uit : Cturers
sale.
24.20217
2420574
222.741
2420740 yland Gshnetik. >
3. 3.
التي
பி. 48 மீ. புளூமெண்டல் ಪೌà, ಓlärgiu til 3. டப்பட்டு வெளியிடப்பட்டது.