கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2005.01

Page 1
மணிவிழா
"இலக்கிய வித்தக
 
 

நாயகன
)' 9-NOGObnL-60)

Page 2
岛 вооконрот
IMPORTERS, EXPORTERS, SELLERs & PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
裘
Head Office : Branches : 340, 202 Sea Street, 309 A-2/3, Galle Road,
Colombo 11, Sri Lanka. Colombo 06, Sri Lanka. Tel: 2422321 Tel.: 4-515775, 2504266 Fax 23.37313 SS is é E-mail: pbdhoositnet.lk 4A, Hospital Road,
Bus Stand, Jaffna.
බී.
43WW
::
*
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
فه
தலை ை: கினை :
,இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309 A-2/3, காலி வீதி ف9&
* கொழும்பு 11, இலங்கை. கொழும்பு 08, இலங்கை தொ. பே. 2422321 தொ. பே. 4-51575
ீ தொ. நகல் 2337313
* மின்னஞ்சல் :pbdhosேlnet.lk இல, AA, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
#*్కల్లో 曹参
*ಿ
3.
2^^^^2 xxxx xxxx xxxxx
兖
器
|ING|HAM.
ధ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sஇந்தோ னசியர்
7 A
இயற்கை
அனசூத்தினால் :::::::: ஆளான து மக்களுக்கும் ஞானத்தின்" ཨོ་7
தண்ணீர் அன அஞ்சலி

Page 3
இயற்கையின் சிற்றம்
இ7ற்பகுத்திய அனர்த்தம்
26.12.2004 அன்று, ஆண்டின் இறுதிப் பகுதியில் நமது நாட்டில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்புக் காரணமாக 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். பலகோடி பெறுமதிமிக்க பொருட்கள் சேதமடைந்துள்ளன.
கடலில் எழுந்த இராட்சத அலைகள் நாட்டுக்குள் புகுந்து எண்ணற்ற உயிர்களைக் காவுகொண்ட வேளையில், ‘இறைவா இதுவென்ன சோதனை? எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்று இறஞ்சிக் கதறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் மனிதகுலம் தத்தளித்தது.
இந்த இயற்கை அனர்த்தம் மலேசியா, சிங்கப்பூர், மாலைதீவு, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் கரையோரப்பகுதிகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி இலங்கையில் ஏற்பட்ட அழிவுகளே அதிகமானதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவின் வடபகுதியில் தரையிலிருந்து ஏறத்தாழ 150 கிலோமீற்றர் தூரத்தில், 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக உருவாகிய 'சுனாமி’ என்னும் இராட்சதக் கடலலைகள் இந்தப்பாரிய அழிவுகளுக்குக் காரணமாயின.
(தொடர்ச்சியின்பகுதியில்.)
 
 

இதழினுள்ளே .
நேர்கானத்
8 எஸ். பொ.
്മബg്
சிறகு
- சாரங்கா கட்டமொய் s - சிவனு மனோகரன் R asa?agasaf : வரம்
R - கனிவுமதி
签 எனக்கும் பசிக்கும்
- வே. தினகரன்
签 மலப்புழுக்கள்
-ஜின்னாஹ்
சமத்துவங்கள் உருக்.
- மகேந்திரன் s தி. ஞானசேகரன் : அரைத்த மாவு s ஓவியர்கள் : 密 - ச. முருகானந்தன் 6qьш п கூர்மதி 3. կ e O R - கவிஞர் ஏ. இக்பால் நா. ஆனநதன · ge
zsz6a2,72567
தலைமை அலுவலகம : சிவத்தமிழ்ச் செல்வி.
19/7, பேராதனை வீதி, !!!!!-ဇ္ဇီ - கலாநிதி க. நாகேஸ்வரன் Qsm.Cu.081-2234755,081-2478570 இலங்கையில் தமிழ்.
தொடர்புகளுக்கு. : - மாவை வரோதயன் தி. ஞானசேகரன் மணிவிழா நாயகன். ; ஞானம் கிளை அலுவலகம் * - தி. ஞானசேகரன்
3-B, 46வது ஒழுங்கை, புனைகதை இலக்கியம் w w w is கொழும்பு - O6. - செங்கை ஆழியான் தொ.பே.01.2586013,0777-306506 சாரதா கவனிக்கப்படாத. ? E-mail:gnanam magazihesayahoo.com - கலாநிதி செ. யோகராசா
-డS -assiss
எழுதத் தூண்டும் எண்ண.
- தரை. மனோகரன்
சமகால கலை இலக்கிய
- செ. சுதர்சன்
தோட்டப்புறக் கதைகள்
:
தி ஞானம் சஞ்சிகையில் ரிரசுரமாகும் படைப்புகளின்கருத்துகட்கு அவற்றை * எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை யவர்கள். /னைIெரின் எழுது
:
* பவர்கள்தமது சொந்தப்பெயர் முகவரி ۔ - சாரல் நாடன் : ஆழரை வேர7க இணைத்தல் : நூல் மதிப்புரை
ff, வாசகர் பேசுகிறார்
- ஆசிரியர்
డణ s so s శిషి.డ8వ முகப்போவியம் L64 UIT

Page 4
ادا چھ چیچے ۶
або6) இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம் محرک .ഖിറ്റിബ பதவி கொள்வார் ܢܠ
அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே.
ஞானம் வாசகர்கள், படைப்பாளிகள், விளம்பரதாரர்கள், நலன்விரும்பிகள் யாவருக்கும் எமது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஞானம் தனது ஐந்தாவது வருடத்தில் நடைபயின்றுகொண்டிருக்கிறது. ஞானத்தின் வளர்ச்சி பற்றியும் அதன் தரம்பற்றியும் இன்று இலக்கிய உலகில் பெரிதும் பேசப்படுகிறது. ஒரு சஞ்சிகையின் வெற்றி தனிமனித உழைப்பில் தங்கியிருப்பதில்லை. அதற்கு ஒரு கூட்டுமுயற்சி தேவை என்பதனை நாம் நன்கு உணருகிறோம். ஞானத்தின் இன்றைய வளர்ச்சி நிலையை எய்தப் பங்களிப்பு நல்கிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மலரும் புத்தாண்டில் ஞானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை வாசகர்களுக்கு அறியத்தருவதில் மகிழ்வடைகிறோம். இலக்கியத் திற்காகத் தமது வாழ்நாளில் பெரும் பங்காற்றிய முதுபெரும் படைப்பாளிகளின் படங்களை அட்டையில் பொறித்து, அவர்கள் பற்றிய கட்டுரைகள் வெளியிடுவதோடு அவர்களுக்கு விழாவெடுக்கவும் தீர்மானித்துள்ளோம். பிரதேசவாரியாக இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு அப்பிரதேசங் களிலுள்ள வாசகர்களுடனும் நேரடி உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.
ஈழத்தமிழர்கள் இன்று புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழ்கிறார்கள். பரந்துவாழும் அவர்களுக்கான சஞ்சிகையாகவும் ஞானத்தின் பரவலாக்கத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு ஞானத்தின் பிரதிகள் யாவற்றையும் முதலில் இருந்து சமீபத்திய இதழ்வரை இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இத்தகைய முயற்சிகளுக்கு வாசகர்கள், படைப்பாளிகள், விளம்பரதாரர்கள், நலன் விரும்பிகள் யாவரும் தொடர்ந்தும் தமது ஆதரவினை நல்கவேண்டும் என வேண்டுவதோடு மலரும் புத்தாண்டில் சகலரும் நலம்பெறப் பிரார்த்திக்கின்றோம். - ஆசிரியர்
2 ஞானம் - ஜனவரி 2005
 

uz72672/7/25/7uasar இக்ைகிய வித்தகர்”சரன்/காடன்
- தி. ஞானசேகரன்
அறுபதுகளில் மலையகம் தரிசித்த இலக்கிய விழிப்புணர்வினால் பிரக்ஞை பெற்று எழுச்சியுற்றவர்களில் சாரல் நாடனும் ஒருவர். அவருடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்கு 1994ல் கிட்டியது. அப்போது நான் கடமையாற்றிக் கொண்டிருந்த நியூபிகொக் பெருந் தோட்டத்திற்கு அவர் மாற்றம் பெற்று தொழிற்சாலை அதிகாரியாக வந்திருந்தார். சாரல்நாடன் அங்கு கடமை ஆற்றியது பத்தே மாதங்கள்தான். அந்தப் பத்து மாத காலத்தில் நாங்கள் இருவரும் பெற்ற அனுபவங்கள் புதுமையானவை; பயன் மிக்கவை. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பங்களாக்கள் அருகருகாக அமைந்திருந்தன. நாங்கள் இருவரும் தினமும் மாலை வேளைகளில் சந்தித்து மணிக்கணக்காக இலக்கியம் பேசி மகிழ்வோம். சில நாட்களில் நேரம் கழிவதே தெரியாது நீண்டநேரம் பேசிக் கொண்டிருப்போம். இந்தச் சந்திப்புக்களால் நாங்கள் இருவருமே ஒருவரால் ஒருவர் தூண்டப் பெற்றுப் புத்துக்கம் பெற்றோம்.
நல்லதொரு படைப்பிலக்கியவாதியாகத் தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய சாரல்நாடன் அந்தக் காலகட்டத்தில் ஓர் ஆய்வாளராக முகிழ்ந்திருந்தார். மலையகம் தொடர்பான ஆய்வு முயற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, மலை யகத்தின் மறைந்து போயிருக்கும். பக்கங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஏனைய மலையக எழுத்தாளர்களை விட ஆய்வுத் துறையில் அதிகமாக ஈடுபட்டு தன்னிகரில்லாத ஓர் ஆய்வாளனாகத் தன்னை இனங்காட்டியிருந்தார். சி. வி. சில சிந்தனைகள்(1986), தேசபக்தன் கோ. நடேசையர்(1988), மலையகத் தமிழர் (1990), மலையக வாய்மொழி இலக்கியம் (1993) ஆகிய நூல்களை அக்காலப்பகுதியில் அவர் வெளியிட்டிருந்தார். இவற்றுள் மலையக வாய்மொழி இலக்கியம் மத்திய மாகாணச் சாகித்தியப் பரிசினைப் பெற்ற நூலாகும். சாரல்நாடனின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் ஆய்வுத் திறனையும் வெளிக்காட்டும் நூலாக தேசபக்தன் கோ. நடேசையர் திகழ்ந்து சாரல்நாடனுக்கு அரச தேசிய சாகித்தியப் பரிசினைப் பெற்றுக் கொடுத்தது. இந்த
ஞானம் - ஜனவரி 2005

Page 5
நூல் மூலம் மலையக மக்களின் புதிய விழிப்பிற்கும், மலையக இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயிற்கும் மூலகர்த்தாவாக விளங்கியவர் கோ. நடேசையர் என்ற உண்மையைத் தெட்டத் தெளிவாக வெளிக்கொணர்ந்திருந்தார் சாரல்நாடன்.
சாமிமலை சிங்காரவத்தைத் தோட்டத்தில், மதுரை வேலூரைச் சேர்ந்த கருப்பையா கணக்குப்பிள்ளை - சிவகங்கையைச் சேர்ந்த வீரம்மா தம்பதியினருக்கு 09-05-1944ல் மகனாகப் பிறந்த சாரல் நாடனுக்குத் தாய்தந்தையர் இட்ட பெயர் நல்லையா. இவருடன் பிறந்த ஐவரும் சகோதரிகள். இவர் சங்க இலக்கியத்திலிருந்து தேர்ந்தெடுத்த புனைபெயர் சாரல்நாடன்.
தனது ஆரம்பக் கல்வியை அப்கொட் மின்னா தோட்டப் பாடசாலையிலும், இடைநிலை - உயர்இடைநிலைக் கல்வியை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் பெற்ற சாரல்நாடன், கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் கவிதை எழுதும் ஆர்வம் கொண்டிருந்தார். ஹைலன்ஸ் கல்லூரியின் சுவர்ப் பத்திரிகையான தமிழோசையிலும் அக் கல்லூரியின் விடுதிப் பத்திரிகையான ‘தமிழ்த் தென்றலிலும் இவரது ஆரம்பகாலக் கவிதைகள் இடம்பெற்றன. அக்கல்லூரியில் கல்வி கற்பித்த நாடகாசிரியர் நவாலியூர் நா. செல்லத்துரை, ந. அ. தியாகராஜன், இர. சிவலிங்கம், நயினாதீவு வே. குலசேகரம் ஆகியோர் இவருக்கு நல்லாசான்களாக அமைந்து இவரது இலக்கிய ஆர்வத்தை வளர்த்து வழிநடத்தியதை சாரல்நாடன் அடிக்கடி நன்றியறிதலுடன் நினைவுகூர்வார். கல்லூரி நாட்களிலிருந்தே சாரல்நாடன் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்கின்றார்.
சாரல்நாடனின் அச்சு வாகனம் ஏறிய முதற்கவிதை "ஐயோ பாவம் 273-1962ல் வீரகேசரியில் வெளிவந்தது. தொடர்ந்து தினகரன் பாலர் கழகத்தில் பல ஆக்கங்களை வெளியிட்டுத் தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.
பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டதும் சாரல் நாடனுக்கு கண்டி அசோகா வித்தியாலய விடுதியில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. அக்காலகட்டத்தில் தனது ஆய்வு ஆற்றலை மேம்படுத்தக் கூடிய பல நூல்களைக் கற்றுத் தேறினார். அத்தோடு மாற்றுச் சிந்தனைகளைத் தரவல்ல பலகட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதினார். அக்காலகட்டத்தில் மலைநாட்டு நல்வாலிபர் சங்கம் மேற்கொண்ட கல்வி எழுச்சிப் பணிகளிலும் ஈடுபட்டார். தன்னை ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் வளர்த்துக் கொண்டார்.
1963ல் வீரகேசரியின் தோட்ட மஞ்சரி தனது முதலாவது சிறுகதைப் போட்டியை நடத்தியது. அதில் சாரல்நாடனின் கால
ஞானம் - ஜனவரி 2005
 

ஒட்டம் என்ற சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றது. இச் சிறுகதை சாரல்நாடனை ஒரு சிறந்த படைய்பாளியாக இனங்காட்டியது. அதனைத் தொடர்ந்து வீரகேசரி, தினகரன், சிந்தாமணி பத்திரிகைகளிலும் கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த க.ப.சிவம் நடத்திய மலைமுரசு’ பத்திரிகையிலும் மலையக இலக்கியத்திற்கு அணிசேர்க்கவல்ல பலசிறுகதைகளை எழுதினார். யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய "இலக்கியம் ஏன்? என்ற கட்டுரைப் போட்டியில் இவருக்கு இரண்டாம்பரிசு கிடைத்தது. 1965 காலப்பகுதியில் குடும்பச் சூழல் காரணமாக சாரல் நாடனுக்குத் தனது தொழிலை மாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இதன்காரணமாக தேயிலைத் தொழிற்சாலை உத்தியோகத்தராக மின்சிங்லேன் தோட்டத்தில் பயிற்சிபெற்று பின்னர் டன்சினேன் தோட்டத்தில் பணிபுரியத் தொடங்கினார். அங்கு தலைமைத் தொழிற்சாலை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று ஏறத்தாழ மூன்று தசாப்த காலம் பணிபுரிந்தார். அதன்பின்னர் நியூபிகொக், டிரெய்டன், கெலிவத்தை ஆகிய பெருந் தோட்டங்களில் பணிபுரிந்து 2000ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பணிபுரிந்த காலத்தில் நான்கு ஆண்டுகள் தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தார். தேயிலை ஆராய்ச்சி நிலையமும் தேசிய தேயிலை முகாமத்துவ நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்வில் அகில இலங்கையிலும் முதலாவதாகத் தேறி இவர் தனது தொழில் திறமையை நிரூபித்தார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் இவரது ஆய்வு சார்ந்த எழுத்து முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தவர் அந்தனிஜிவா. மலையகத்தின் முக்கிய இலக்கியச் செயற்பாட்டாளரான அவர் கொடுத்த உந்துதல் காரணமாக சாரல்நாடனின் முதலாவது ஆய்வு நூலான சி.வி. சில சிந்தனைகள் வெளியாகியது. இந்நூல் பெற்ற முக்கியத்துவத்தினைத் தொடர்ந்து மேலும் ஆய்வுத்துறையில் சாரல்நாடன் ஈடுபடுவதற்கு ஊக்கசக்தியாகத் தொடர்ந்து இயங்கியவர் அந்தனி ஜீவா.
ஆய்வு நூல்களையே வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய சாரல் நாடனின் படைப்பிலக்கியத் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் நூல்கள் வெளிவரவேண்டும் என்பதை நான் அவரிடம் Α சுட்டிக் காட்டினேன். உண்மையில் அவருடைய கால ஓட்டம் 翼 சிறுகதை என்னுடைய மனதிலே ஏற்படுத்திய தாக்கமே எனக்கு அவ்வாறு அவரது சிறுகதைத் தொகுதி வெளிவரவேண்டியதன் if முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்தது. என்னுடைய கோரிக்கையை fr அவர் ஏற்றுக் கொண்டார். 1994ல் எழுத்தாளர் நா. சோமகாந்தனின் பெருமுயற்சியுடனும் குமரன் பதிப்பக ஆதரவுடனும் மலைக்
wit: "கொழுந்தி சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. அந்நூல்
ஞானம் - ஜனவரி 2005

Page 6
அவ்வாண்டுக்கான மத்திய மாகாண சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக் கொண்டது. இதுவே சாரல் நாடனின் நூல்களுள் முதலாவது படைப்பிலக்கியம் சார்ந்த நூலாகவும் திகழ்கிறது.
மலையகம் சார்ந்த தரமான இலக்கியங்கள் வெளிவரவேண்டும் என்பதிலே சாரல்நாடன் மிகவும் ஆர்வத்துடன் செயற்படுவார். எனது குருதிமலை நாவல் வெளிவந்தபின் ஏறத்தாழ நான் பதினைந்து வருடகாலம் எழுத்துலகில் அஞ்ஞாதவாசம் புரிந்து கொண்டிருந்தேன். அவர் என்னைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் “நீங்கள் உடனடியாக ஒரு மலையக நாவலைப் படைக்கவேண்டும். மலையகத்தின் சிறந்த நாவலான குருதிமலையைப் படைத்த உங்களால் அது முடியும்" எனத் தினமும் என்னை நிர்ப்பந்திப்பார். அதன் காரணமாகப் புத்துக்கம் பெற்று, அவரது வேண்டுகோளுக் கிணங்க நான் "லயத்துச் சிறைகள் என்ற நாவலை எழுதினேன். இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாங்களையும் எழுதிமுடித்தபின் அவரிடம் காட்டுவேன். அவ்வேளைகளில் திருமதி புஷ்பம் சாரல்நாடனும் அவற்றை வாசித்துத் தனது விமர்சனங்களை முன்வைப்பார். திருமதி சாரல்நாடனும் ஒரு நல்ல இலக்கிய ஆர்வலர், இரசிகள் என்பதை நான் அப்போதுதான் அறிந்துகொண்டேன். சாரல்நாடனின் அத்தை மகளான புஷ்பம் அத்தகையதொரு ஆர்வத்தைக் கொண்டிருந்ததில் வியப்பில்லைத்தான். சாரல் நாடனின் எழுத்து முயற்சிகளுக்கு அவரே ஆதாரசுருதியாகவும் விளங்குகின்றார். சாரல்நாடன் புஷ்பம் தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். ழரீகுமார், ஜிவகுமாரி. சிறிய சந்தோஷமான குடும்பம். குடும்பச் சூழலும் சாரல்நாடனின் எழுத்துப் பணிகளுக்கு உறுதுணையாக அமைந்திருப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
லயத்துச் சிறைகள் நாவலின் இரண்டாவது பதிப்பு வெளி யாகியபோது அதற்கு ஒரு முன்னுரை எழுதித்தரும்படி நான் சாரல்நாடனை வேண்டினேன். அந்த முன்னுரையில் சாரல்நாடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "லயத்துச் சிறைக்கான இரண்டாம் *பதிப்பின் முன்னுரையை எழுதுகையில் இந்த நாவலை மூன்றாண்டுகட்கு முன்பு அவர் எழுதும்போது, நாடோறும் அந்திநேரத்தில் அவரும் நானும் எனதில்லத்தில் சந்தித்து இலக்கியம் சம்பந்தமாகத் தர்க்கித்தும் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டும் பயன் பெற்றது நினைவுக்கு வருகிறது. 韩 பெருந்தோட்டத்துறையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள - தனியார் கம்பனி நிருவாகக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நாங்கள் % . A மகிழ்ச்சியோடிருந்தது அது போன்ற நேரங்களில்தான்”
yx,ʻ % மலையகம் வளர்த்த தமிழ் என்ற சாரல்நாடனின் கட்டுரைத் *து * தொகுப்புநூல் துரைவி பதிப்பக வெளியீடாக 1997ல் வெளியாகியது.
6 ஞானம் - ஜனவரி 2005
 

ஞானம் -
தொடர்ந்து 1998ல் 'பத்திரிகையாளர் நடேசையர் என்ற ஆய்வு நூல் வெளியாகியது. இந்நூல் மீண்டும் இவரது ஆய்வுப் புலமைக்குச் சான்றாக அமைந்து அவ்வாண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்து பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் சார்பாக இவரது இன்னொரு நூற்றாண்டுக்காய் என்ற நூல் வெளியாகியது. சாரல்நாடனின் இன்னுமொரு கட்டுரைத் தொகுப்பான மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூல் 2000ஆம் ஆண்டிற்கான மத்தியமாகாண சாகித்திய விருதினைப் பெற்றது. பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற இவரது மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி 2002ல் வெளியாகியது.
சாரல்நாடனின் படைப்புக்கள் பல்வேறு தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன. சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்(1998) தொகுப்பில் 'அழுது கழித்த இரவுகள் என்ற சிறுகதையும், "இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் (1994)தொகுப்பில் கால ஒட்டம் என்ற சிறுகதையும், வீரகேசரி வெளியீடான கதைக்கனிகள் தொகுப்பிலும் துரைவி வெளியீடான மலையகச் சிறுகதைகள்(1997) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட தமிழ் நாட்டார் வழக்காற்றியல்(1995)
நூலில் இவரது மலையக நாட்டார் பாடல்கள் என்ற கட்டுரை
SQLub Guibgpj6iT6TTg5. Lanka and the Ramayana 66öp é6ÖTLDuUIT 6696öt வெளியிட்ட ஆய்வு நூலில் (1966) மலையகத்தில் “இராம வழிபாடு என்ற இவரது ஆங்கிலக் கட்டுரை வெளியாகியுள்ளது. இவற்றைவிட மத்தியமாகாணம் வெளியிட்ட சாகித்திய மலர்களிலும் இவரது அனேக கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சாரல்நாடன் மலையக இலக்கியம் மேன்மையுற வேண்டும் என அல்லும் பகலும் சிந்திப்பவர். அதற்காக உழைப்பவர். பொருத்தப்பாடு கருதி இங்கு ஓர் உதாரணத்தைக் குறிப்பிட விளைகிறேன். 1994ல் இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையும் தமிழக சுபமங்களாவும் இணைந்து ஓர் ஈழக் குறுநாவல் போட்டி நடத்தியது. அதன் முழு விபரங்களையும் என்னிடம் கூறி கட்டாயம் அந்தப் போட்டியில் என்னையும் பங்கு பற்றும்படி வேண்டினார். அந்தப் போட்டி சம்பந்தமான விபரங்களை வேறு நான்கு மலையக எழுத்தாளர்களுக்கும் அனுப்பிவைத்து அவர்களையும் பங்கு பற்றும்படி வேண்டியிருந்தார். ஈழத்துக் குறுநாவல் போட்டியில் மலையகப் பிரதேசத்தின் முக்கியத்துவம் உணரப்படுதல் வேண்டும் என்பதே அவரது முழு நோக்கமாக இருந்தது. சாரல்நாடனின் வற்புறுத்தல் காரணமாகவே நான் அந்தப் போட்டியில் பங்குபற்றினேன். எனது கவ்வாத்து என்ற மலையகக் குறுநாவலுக்குப் பரிசு கிடைத்தது. அது குறித்து அதிகம் மகிழ்ச்சியடைந்தவர் சாரல்நாடன்தான்.
கொட்டகலை இலக்கிய வட்டம், மலையகக் கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றின் தலைவராகவும் சாரல் வெளியீட்டகத்தின்
goor of 2005 7

Page 7
உரிமையாளராகவும் விளங்கும் சாரல்நாடன் இவ்வமைப்புகள் மூலம் தமது இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருவதோடு மலையக எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளியிடுவதிலும் முனைப்புடன் உழைத்து வருகிறார். மல்லிகை சி. குமார், மொழிவரதன், சிக்கன் ராஜ், சு.முரளிதரன் ஆகியோரின் நூல்கள் சமீப காலத்தில் இவரால் வெளிக்கொணரப்பட்டன. அத்தோடு சி.வி. வேலுப்பிள்ளை தினகரனில் தொடராக எழுதிய ‘வாழ்வற்ற வாழ்வு நாவலின் அத்தியாயங்களைத் தேடி எடுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார்.
மத்திய மாகாண கல்வி அமைச்சர் மாண்புமிகு வே. இராதா கிருஷ்ணன் அவர்கள் சாரல்நாடனின் திறமையைக் கருத்தில் கொண்டு மலையகத் தமிழர் வரலாறு என்ற நூலினை எழுதும்படி பணித்தார். 2003ல் வெளியாகிய இந்நூல் சாரல்நாடனுக்கு மூன்றாவது முறையாகவும் சாகித்திய மண்டலப் பரிசுபெறும் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தது. இந்நூலினைத் தனக்குக் கல்லூரி நாட்களில் வரலாறு கற்பித்த திரு பி. ஏ. செபஸ்டியன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் சாரல்நாடன்.
சாரல்நாடனின் இலக்கியப் பணியினை பல இலக்கிய நிறுவனங்கள், ஊடகங்கள் பாராட்டிக் கெளரவித்துள்ளன. பல அறிஞர்கள், விமர்சகர்கள் அவரது படைப்புக்கள் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளனர்.
பெ.சு. மணி அவர்கள் எழுதிய "விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள் (மணிவாசகர் பதிப்பகம் 1998, பக். 76), “தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும்" (பூங்கொடிப் பதிப்பகம் 1995 பக்.289,270) ஆகிய நூல்களில் சாரல்நாடன் தொடர்பான குறிப்புகளைத் தந்துள்ளார். தாமரை சி. மகேந்திரன் எழுதிய தொடர்கட்டுரையிலும், சுபமங்களாவில் கோமல் சுவாமிநாதன் எழுதிய கட்டுரையிலும், ஆ.சிவசுப்ரமணியம் காலச்சுவட்டில் எழுதிய கட்டுரையிலும் சாரல்நாடனின் இலக்கியப் பணி குறித்துச் சிலாகிக்கப்பட்டுள்ளன. “புறக்கணிக்கப்பட்டு வந்த மலையக எழுத்தாளர்களின் ஆற்றலைப் பறைசாற்றி வருபவர்களில் முக்கியமான ஓர் ஆய்வாளர் என கே.எஸ். சிவகுமாரன் குறிப்பிடுகிறார்.(வீரகேசரி 202-2002)
இவரது, பிணந்தின்னும் சாத்திரங்கள், நம்பியவருக்காக என்ற இரண்டும் குறிப்பிடத்தக்க சமகால அரசியற் கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார் பிரபல எழுத்தாளரான செ. யோகநாதன்.( வீரகேசரி 24-11-2002)
நாவலப்பிட்டி எழுத்தாளர் சங்கம் 1991லும், இலங்கை மக்கள் பொதுப்பணி மன்றம் 1999லும் சாரல்நாடனைக் கெளரவித்துப் பெருமை கொண்டன. மட்டக்களப்பு நகரசபை அன்புமணி மூலம் 1990ல் பாராட்டும் தீர்மானம் மேற்கொண்டது. "மல்லிகை 1991 ஆகஸ்ட் இதழில் சாரல்நாடனின் அட்டைப்படத்தைப் பிரசுரித்து கட்டுரை வெளியிட்டுக் கெளரவித்தது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
8 ஞானம் - ஜனவரி 2005
 

தமிழுக்கென ஓர் அலைவரிசையை 27-39ல் ஆரம்பித்தபோது அதன் முதல்நாள் நேரடி ஒளிபரப்பிலேயே சாரல்நாடனை அழைத்துப் பேட்டி கண்டது. அதே போன்று 17-11-2004ல் ஐ சனலில் முதலாவதாக மலைச்சாரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டபோது அதிலே கலந்துகொண்ட பெருமை சாரல்நாடனுக்கே உரியது.
இலங்கை அரசினால் இலக்கிய வித்தகர் என்ற பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்ட சாரல்நாடன், ஓர் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.
மலையக மக்களது வரலாறு, அவர்களது இலக்கியம் மேன்மையுற உழைத்தவர்களில் சாரல்நாடனின் பங்களிப்பு அபரிமிதமானது. மணிவிழாக்காணும் சாரல்நாடனின் பணிகளைப் பாராட்டி, கெளரவித்து, விழாவெடுப்பதோடு மென்மேலும் அவர் பல சாதனைகள் புரிந்து சிறப்புறவேண்டுமென ஞானம் வாழ்த்துகிறது.
亥妾移
வரம்
புற்றுக்கு Umపోసి బ్రాgrnరeormటీసి குழுந்தை பிறக்கும் urrényt 6a-rrásgueör 6 Defen Teổfesofres desofesoT
புற்றுள்ள கோவிலாக & சுற்றி வருகிறாள் 6yత్రకెగి 6ge(B 656262-rfeudstocéP)
gPఅr 6Pఉeరా6ుత్ర 9rరUrrఉు
eణిr 6మngeరిuరి €umeు அலைகின்றன பாம்புகள் O
ஞானம் - ஜனவரி 2005

Page 8
வெண்மை என்றால் அப்படி ஒரு வெண்மை. மென்மினுக்கத் தூய்மை. உயிர்த்துடிப்பான கண்கள். பார்ப்பவர் கண்களை வலிந்து சிறைப் பிடிக்கத்தக்க அழகு. மெல்ல மெல்லத் தத்தி நடக்கும் போது அப்படியே கைகளில் அணைத் தெடுத்து தூக்கி மடிமீது வைத்துக் கொள்ளத் தோன்றும் எவருக்கும். அவனுக்குப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷ மாக இருந்தது. வீட்டுக்கு எவர் வந்தாலும் அவர் கவனம் திருப்பி ஒருமுறை தன்னைப் பற்றிக் கதைக்க வைக்காமால் விடாது அந்த வெள்ளைப் புறா.
கூடென்று ஏதுமில்லை. வீட்டினுள் பலகாலம் வசித்து வருவதில் தனது வாழ்விடம் அதுவென்று அதற்குப் படினப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வகையில் அது முட்டாள்தனமுடைய தாக இருப்பினும்கூட சில பொழுதுகளில்
இந்தப் புறாவே உலகிலுள்ள சகல
புறாக்களிலும் அதி புத்திசாலியெனத் தோன்றும் அவனுக்கு. அதன் சில செயல்களைப் பார்க்கும்போது எப்படி இத்தனுTண்டு சின்னப் பறவைக்குள் இத்தனை அறிவு வந்ததோ என்று வியப்பான் - ஒருவேளை அவ்வெண்ணம் காக்கைப் பொன் குஞ்சோ' என்னமோ?
இந்தப் புறா அவனுக்குக் கிடைத்த விதம் இப்போதும் அவனது நெஞ்சில் நிற்கிறது. வாடகைக்கிருந்த பக்கத்து வீட்டுக்காரர் வேறு வீடு மாறிப் போகும் போது விற்கமுடியாது தேங்கிப்போன பொருட்களாக நல்ல தமிழ் இலக்கண நூல்களும் ஒரு புறாக் கூண்டும் அவரிடம் மிஞ்சியிருந்தன. அவற்றை அவனிடம் அவர் கொடுத்தார் என்பதற்காக அவன்
புறாவை வாங்கவில்லை. புறாவானது
10
މހަeރލިޒަނަލަع>
சாரங்கா தயாநந்தன், கேம்பிறிட்ஜ்.
அவனது குடும்பத்தில் நிம்மதியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாய்ப் போய்விட்டதனால் அவன் அதை வாங்கினான்.
பக்கத்து வீட்டுக்காரர் தன் தனிமை போக்க ஒரு புறாவை வளர்த்துவந்தார். கறுப்பும் வெள்ளையுமான அந்தப் புறாவில் சொல்லமுடியாத பிரியம்
அவருக்கு. புறாவும் கூட்டினுள் அப்பாவித்
தனமாய்த் தன் முகத்தை வைத்துக்
கொண்டு அவர் கொடுக்கும் உணவுகளை உண்டுவிட்டு அல்லது உண்பதாகப் பாவனை பண்ணிவிட்டு வாழ்ந்து வந்தது. மென்மாலைப் பொழுதுகளில் அவர் அதனைத் திறந்து விடுவார். திறந்து விடும் பொழுதுகளில் தோட்டத்துக் கதிரையிலிருந்து புத்தகம் படித்தபடி,
பெரும்பாலான
புறாவிலும் ஒரு கண் வைத்தபடி இருப்பார். புறா அவரது காலடியில் இருந்து ஏதாவது தானியத்தைப்
பொறுக்கி உண்டபடி இருக்கும். அவர்
அந்தப் புத்தகத்தை மூடி எழும்பப் புறா தானாகவே போய்க் கூட்டருகே நிற்கும்.
அதைக் காணும் போதெல்லாம் தானாகவே சிறைப்பட விரும்பும் பறவைகளும் உலகில் வசிப்பதை
எண்ணி அவனுக்கு வியப்பாக இருக்கும். பறக்கும் நோக்கமற்ற சிறகுகளைக் கொண்ட அந்தப் புறா பின்னேரப்
ஞானம் - ஜனவரி 2005

பொழுதுகளில் குழந்தை ரம்யாவின்
- R -A
குறும்புகளைக் குறைக்கப் பெரிதும் உதவியாக இருந்தது.
சில நாட்களின் பிறகு ஒருநாள் அந்தப் புறாவின் நளினமாகக் கொத்தியுண்ணும் நாடகம் தோட்டத்தில் அரங்கேறவில்லை. அவன் வியப்போடு மதிலெட்டி விசாரித்தபோது அந்தப் புறா அவரிடம் மிகுந்த வசவுகளை வாங்கிக் கட்டவேண்டியிருந்தது. அதன் உடல் மனம் சகலமும் அலசிய அந்த வசவுகளின் முடிவில், ஒரு தரக்குறைவான புறாவுடன் அது பறந்து போய் விட்டதாக அவர் சொன்னார். அத்துடன் பெண்களையும் புறாக் களையும் நம்பக்கூடாது என்று அவனுக்கு இலவச ஆலோ சனையும் வழங்கினார். அது அவரது வழக்கம்தான். பெண்களின் சகவாசமே அற்று 'பிரமச்சாரியாக' வாழ்ந்து வருகின்ற அவர் இல்லறவாதி களையும் விட அதிகமாகப் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் நடையுடை பாவனைகளையும் விமர்சித்து வருவது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். இல்லறவாதிகளின் நடப்பியல் வாழ்வின் மீது இரகசியமாய் அவர் கொண்டுள்ள ஈர்ப்புத்தான் அவரது உணர்வுகள் முழுவதையும் பெண்களின் உலகம் மீது குவியப்படுத்தி எந்நேரமும் அவர்களை அலச வைக்கிறதோ என நினைத்தாலும் அதனை நேரடியாகக் கேட்டுவிடாத சமூகத்தில் ஒருவனாகவே அவனும் இருந்தான். பலவருடங்களாக மனங் கலந்திருந்து, இதய அன்பின் சுவை
ஞானம் - ஜனவரி 2005
SVK 塑壁
பிழிந்து மணம்முடித்த அவனே மனைவி என்ற பெண்மூலமாய் அறிந்து கொள்ள முடியாதிருக்கும் அவர்களின் உடலியல் ஆசை பற்றிய உள்மனக்கொதிப்புக்களை அவர் தன் மனக்கண்ணில் கண்டு அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதென்பது சாதாரண விடயமல்லத்தான். எப்படித் தான் இது அவருக்கு முடிகிறதோ? எது எப்படியிருந்தாலென்ன, அது அவனுக் குத் தேவையும் இல்லை. குழந்தைக்குப் புறாக் காட்டப் போகும் பொழுதுகளில் அவரது “பெண்களின் உலகு பற்றிய ஆராய்ச்சிகளைக் கேட்கும் சகிப்புத் தன்மை மட்டும் இருந்தால் போதும்.
சுதந்திரவாழ்வின்பால் ஈர்க்கப்பட்டுத் துணையோடு பறந்தோடிவிட்ட அந்தப் புறாவின் நியாயங்களை அயல் வீட்டுக்
11

Page 9
காரர் புரிந்து கொள்ளாது இருந்தது போலவே ரம்யாக்குட்டியும் புரிந்து கொள்ளவில்லை. புறா பார்க்கப் போவோம்’ என்று அவள் பிடிக்கும் பிடிவாதம், வேறு எந்தப் போக்குக் காட்டலிலும் மறைந்து போகாதபடி யிருந்தது. அந்தப் புறா பறந்து போய் விட்டதாகச் சொல்லி, குழந்தையின் மேலதிக விளக்கத்துக்காகத் தூரப் பறந்து பார்வையிலிருந்து விலகும் ஒரு காகத்தைக் காட்டினான் அவன். அந்தப் பொழுதுக்கு குழந்தை அமைதியானாலும் மறுநாள் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த காகத்தைக் காட்டி அதுபோலப் புறா எப்போது திரும்பி வரும் என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கிவிட்டாள். வேறொரு புறா வாங்கித் தருவதாகப் பேரம்பேசிக் குழந்தையுடன் சமாதானம் ஆகியாயிற்று. ஆனால் பிறகு தினமும் இவன் அலுவலகம் போகும்போது எதிர் பார்ப்பைத் தேக்கி ஏமாந்து போகத் தொடங்கினாள் குழந்தை. அது அவனது நிம்மதியைக் குலைத்தது. அது போதா தென்று அவன் அதைப் புரிந்து கொள்ளவே இல்லையென்று மனைவியும் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டாள். அலுவலகத்தால் களைத்து வருபவனை வார்த்தைகளால் உலுக்கினாள். ரம்யாக் குட்டி எங்கை?” கேட்டபடி வருவது அவன் இயல்பு.
“ரம்யாவும். குட்டியும். பெரிய பாசந்தான்.”
“என்னப்பா. என்ன சொல்லுகிறீர் fi.?”
“என்ன சொல்லுறது.? என்ரை பிள்ளை எந்தநாளும் புறா வருமெண்டு நினைச்சு ஏமாந்து போகுது.”
12
பெண்கள்தான் எவ்வளவு வேகமாகப் பிள்ளைகளை முற்றும் தமது உரிமை யாக்கி விடுகிறார்கள். அவனும் முயற்சிக்காமல் இல்லை. ஆனால் குழந்தையின் ஏமாற்றத்தின் முன்பாக அவனது எந்த நடைமுறைப் பிரச்சினை களையும் பொருட்படுத்த மனைவி தயாராக இல்லை.
“கொஞ்ச நேரம் சிலவழிச்சுப் பிள்ளையின்ரை சிரிச்சமுகத்தைப் பார்க்க விருப்பம் இல்லை.”
அவனது தந்தைமையைத் தாக்கும் அவளது வார்த்தைகளில் நிறையவே காயப்பட்டுப் போனான். தொடர்ந்து வந்த சனிக்கிழமையில் புறா வாங்கியே விடுவ தென்ற தீர்மானத்தோடு ஊரின் ஒதுக்குப் பக்கமாயிருந்த கொலனிப் பக்கம் போனான். சேரிக்குடிகளின் பிள்ளைகள் கூட்டமாய் டிருந்தார்கள். இவனது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளின் உறுமல் ஒலியில் இலகுவாய்க் கவனம் திரும்பி, இவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் ஓடிவந்து குழுமினார்கள். இடுப்பில் நிற்காத காற்சட்டையைக் கைகளால் பிடித்தபடி ஒடிவந்த அவர்களைப் பார்த்த அவன் மனம் பரிதாபப்பட்டது.
“தம்பியவை. இஞ்சை புறா ஒண்டு வாங்கலாமோ..?”
“என்னவாமெடா..?” சற்றே பெரிய பையன் ஒருவன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு முன்னால் வந்தான்.
“ஒரு புறா தேவைப்படுது தம்பி.” “என்ன மாதிரிப் புறா அண்ணே.” பையன் இயல்பாய் உறவு கொண்
விளையாடிக் கொண்
டாடினான்.
ஞானம் - ஜனவரி 2005

“வெள்ளைப் புறா எண்டால் நல்லது. என்ன விலையெண்டாலும் பறவா யில்லை.”
“கொஞ்சம் நில்லுங்கோண்ணை.” பறந்தான். திரும்பி வந்தபோது அவனது கையில் தேமேயென்று உட்கார்ந்திருந்தது வெள்ளைப்புறா. ஆனால் கூர்ந்து பார்த்தால் புறாவின் கால்களில் ஒன்றைப் பையன் தன் விரலிடுக்கில் கொடுத் திருந்தது தெரியும். சில புறாக்களின் நிலை அப்படித்தான். வெளியே தெரியாமல் நுட்பமாய்ச் சிறைப்பிடிக்கப்
பையன் காற்றாய்ப்
பட்டிருக்கும். புறாவை நிலத்தில் 6SLITGiT.
'அண்ணைக்கு வணக்கம் சொல்லு.”
பையனின் வார்த்தைக்குப் புறா தன் மூக்கு நிலத்தில் படப் பணிந்து முதுகுப்புற வெண்சிறகை இருபக்கமும் பரத்தியது. பையன் சொன்ன விலையைச் சந்தோஷ மாகக் கொடுத்தான்.
“ஒற்றைப்புறா போதுமே அண்ணை.”
பேரம் பேசாத, விலையில் வாக்கு வாதப்படாத நல்ல மனிதனைக் கண்டு சந்தோஷத்தில் பையன் மெய்க்கரிசனத்தோடு கேட்டான்.
“மகள் விளையாடத்தானே.
கொண்ட
போதும்.”
“சோடிப்புறா தேடிவரச் சொல்லிபுறா எறியிற வேலை வைச்சிடாதேங் கோண்ணை.”
இவன் மோட்டார் உதைக்கவும் பையன் சொன்னான்.
சைக்கிள்
புறாவளர்க்கும் பையன்களிடம் இருக்கும் புறா எறியும் பழக்கம் அவனுக்குத் தெரியும். ஒரு புறாவை நன்றாகப் பழக்கப்படுத்திய பிறகு தனிப்புறாவாய்
ஞானம் - ஜனவரி 2005
உயர எறிந்து விடுவார்கள். அது பறந்து போய் இணை’யோடு மீண்டு வரும். ஏதோ ஒரு இடத்திலான இழப்பு எறிந்தவர்களின் வரவாய்ப் போய்விடும். இவன் திரும்பிக் கேட்டான்.
“ஏன் தம்பி.” பையன் தன் கூட்டத்தவரைப் பார்த்து ஒருமாதிரிச் சிரித்தான்.
"அதுக்கு உள்ச்சிறகு ஒண்டுமில்லை
அண்ணை. எல்லாம் வெட்டி விட்டிட்டன்.”
முன்புறக் கூடைக்குள்ளிருந்த
புறாவின் முதுகுப்புறச் சிறகிரண்டும் விரித்தான். உள்ளே சிறகு கத்தரிக்கப் பட்டிருந்த புறாவின் உடம்பு வெறும் தோலாய்த் தெரிந்தது.
“எறிஞ்சால் பிடரியடிபட விழுந்திடும் அண்ணை.”
வரதட்சணையின் பின்னும் மகனில் உரிமை கொள்ளும் பெற்றவராய்ப் பையன் புறாவை விற்றபிறகும் கவனம் சொன்னான். “நான் அப்பிடிச் செய்யமாட்டன் தம்பி.”
“இடைக்கிடை பார்த்துக் கத்தரிச்சு விடுங்கோ அண்ணை. சிலவேளை பறந்து போகவும் பார்க்கும்.”
பையனின் குரல் அவனது மோட்டார் சைக்கிளைத் துரத்தியது. ரம்யாக் குட்டிக்கு கரை காணமுடியாத சந்தோஷம். மனைவிக்கும்தான். அவள் தான் சொன்ன வார்த்தைகளையெல்லாம் மறந்து போனதுபோல நடந்து கொண் டாள். வழமையான புருஷ இலக்கணத் துக்கமைய அவனும் அதைக் கிளற விரும்பவில்லை. புறா வந்த பொழுதி லேயே வணக்கம் சொல்லும் வித்தையால், சகலரையும் கவர்ந்து விட்டது.
1

Page 10
உடனடியாகப் புறாக்கூண்டினுள் தான் அதனை விட்டான். திறந்துவிடும் பொழுதில் புறா வீடெங்கும் தத்தித் திரிந்தது. விரும்பினாலும் அதனால் பறக்க முடியாதென்ற உண்மையை மனைவியிடம் சொல்லி பெரும்பாலான வேளைகளில் அதைத் திறந்தே விட்டான். பையன் சொன்னபடி, புறா புத்திசாலி தான். கழித்தலுக்கும் உண்பதற்கும் மட்டும் கூண்டை வைத்திருந்தது அது. ஈரத்துணி நனைத்து அதன் மேல்சிறகு ஒற்றியதில் பளிர் வெண்மையாய் ஒளிர்ந்தது. இப்போது புறா வந்து மூன்று மாதங்களாகி விட்டது. அதுவும் வீட்டின் தவிர்க்கமுடியாத அங்கத்தவராய் ஆகிவிட்டது.
பலமுறை பறக்க முயன்று தோற் றத்திலோ என்னமோ புறா பறப்பதற்கான எத்தனிப்பையே கைவிட்டிருந்தது. அவன் மெல்லப் புறாவைப் பிடித்து உள்ச்சிறகு விரித்துப் பார்த்தபோது அவை சற்றே வளர்ந்திருக்கக் கண்டான். ஆனால் அது பற்றிய பிரக்ஞையே புறாவுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. எனினும் மனைவிக்கு விஷயம் தெரியவந்ததி லிருந்து அவளுக்கு அதே நினைப்புத் தான். அதன் உள்சிறகைக் கத்தரித்து விடும்படி அல்லும் பகலும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
ரம்யாக்குட்டி கட்டமிட்ட ஊஞ்சலில் இருக்க, புறா அவளின் முன்பாக நின்று தன் வெளிர்ச்சிறகு பரத்தி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. குழந்தையின் குலுங்கல் சிரிப்பில் வீடு மகிழ்ந்திருந்தது. “என்னப்பா. உள்ச்சிறகை இண்டைக்கு வெட்டி விடுறது எண்டு
நேற்றுச் சொன்னிங்கள். வெட்டி விடுறியளே.”
14
புறாவுக்குத் தானியந் தூவியபடியே கேட்டாள் மனைவி. மொழி புரியாத அப்பாவித்தனத்தோடு புறா தானுண்ணும் தானியத்தில் கவனமாயிருந்தது. அந்தப் பொழுதில் தான் வெளியே அழைப்புக் கேட்டது.
"அக்கா நிக்கிறாவோ.”
மென்மையான பயந்தது மாதிரியான குரல். மாதங்கிதான். நாலாம் வீட்டுப் பிராமணப் பெண். பதினேழு வயதில் மணம் முடித்துக் கொடுத்துவிட்டார்கள். புருஷன் பெரிய சிவன் கோவில் குருக்களய்யா. அவரது கடைசி மகள் என்று சொன்னாலும் நம்பலாம். ஆனால் அந்தப் பொன்னிறத்திலும் பெரிய விழிகளிலும் தாயைக் கொண்டிருப்ப தாகச் சேர்த்துச் சொல்ல வேண்டும். லட்சுமிநாதர் ஐயாவின் ஒன்பது பிள்ளைகளில் நடுப்பெண்ணாக, ஆறு பெண்களில் ஒருத்தியாகப் பிறந்து விட்டதில், அழகு ஒன்றே குருக்களப்யா வீட்டுக்கு வரும் தட்சணை' யாகக் கொண்டு இத்தனை சிறிய வயதில் தாலிக் கொடிக்குள் கழுத்தைப் புதைத்துக் கொண்டு விட்டிருந்தது அந்தப் பெண்.
துணிமணிக்குக் குறைச்சலில்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு. பிராமணப் பெண்கள் பலரும் படித்துப் பட்டம் பெற்று பெரிய பதவி வகிக்கின்ற இந்தக் காலத்திலும் அதிகாலையில் தலைக்குக் குளித்து ஈரக்கூந்தல் முடிந்தபடி முன் வாசலில் கோலம் போடுகின்ற தீவிர ஆசாரம். அவ்வாறான ஒரு காலையில் இவனது பார்வையில் தற்செயலாக அந்தக் காட்சி விழுந்திருந்தது. கோலமாவைக் கையில் வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போகின்ற உயர்தர வகுப்பு மாணவியை ஏக்கத்துடன்
ஞானம் - ஜனவரி 2005

பார்த்துக் கொண்டிருந்தது இந்தப் பெண். இவன் புன்னகைத்த போதிலும் பதிலுக்குச் சிரிக்கவில்லை. ஆனால் அடிக்கடி வீட்டுக்கு வந்து கீதாவுக்காக இவன் வாங்குகின்ற மாத இதழ்களை இரவலாக வாங்கிப் போகும். வரும் பொழுதுகள் பெரும்பாலும் குருக்களப் um 685 (5& “சேவகம்’ செய்யத் தேவையற்ற, இவன் வீட்டில் இல்லாத பொழுதுகளாய் இருக்கும். மாத இதழ்களின் விட்டு விடுதலையான” பெண்களைப் பார்த்துப் பெருமூச் செறியுமோ என்னமோ? ஏன் சில பெண்களின் வாழ்க்கை மட்டும் நம்ப முடியாதபடி நிகழ்வுப் பொழுதின் சற்று முன்பதான காலப்பகுதியிலேயே உறைந்து நின்று விடுகிறதோ தெரியவில்லை.
“கீதா.”
உள்ளே திரும்பிக் கூப்பிட்டான். பதிலாய் வெளிப்பட்ட கீதா, மாதங்கி கொண்டு வந்திருந்த மாத இதழ்களை வாங்கி முக்காலியில் போட்டுவிட்டு அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். பெண்கள் இருவர் கூட்டு சேர்ந்து விட்டால் பொழுதுகள் பொருள் இழப்பது உண்மை எனினும் மாதங்கி விடயத்தில் அது மெய்ப்படவில்லை. கீதாவின் மற்றைய சிநேகிதிகள் போக மாட்டார்களோ?’ என்று நினைக்கும்வரை இருந்து கதைப்பார்கள். இடையிடையே படீர்ச் சிரிப்பு வேறு. அப்படி எதைத்தான் கதைத்துத் தீர்க்கிறார்களோ? கீதாவிடம் கேட்டால் அதெல்லாம் எங்கடை விஷயம். உங்களுக்கெதற்கு?’ என்று வெட்டுத் தெறித்தாற்போலச் சொல்லு வாள். ஆக, அவன் ஏதும் கேட்பதில்லை.
"அந்தப் புறாச் செட்டையை வெட்ட வேண்டாமப்பா..”
ഞrt - ഇങ്ങrഖfി 2005 G &
மாதங்கி போனதும் அவனருகில் வந்து மெல்லிய குரலில் சொன்னாள் மனைவி.
“ஏன்.? ஏன் திடீரெண்டு இப்பிடிச் சொல்லுறீர்..?”
“அந்த மாதங்கிதான் கேட்டுது. தனக்காய் ஒரு உதவி செய்வியளோ எண்டு சொல்லிப் பெரிய பீடிகையெல்லாம் போட்டுப் பிறகுதான் கேட்டுது.”
“ஏனாம்.?” “நான் கேக்கேலை. பிராமணக் குடும்பம் தானே. அதுதானாக்கும்.”
“சிறகு வெட்டிறது பறவைக்கு வலியில்லைத்தானே.”
“சொன்னன். சிறகு வெட்டின பறவை செத்ததுக்குச் சரிதானே எண்டு சொல்லிச்சுது.”
அவன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
“திருப்பித் திருப்பிக் கேட்டுதப்பா. விடுங்கோ. புறா நிக்குமட்டும் நிண்டிட்டுப் போகட்டும். எனக்குப்
புரியேல்லை ஏன் மாதங்கி இதைக் கேட்டுதெண்டு.”
சொன்னபடியே கீதா சமைய லறைக்குப் போனாள். ஒரு புறாவின் சிறகு பற்றிய புரிதல்கள் இரு பெண் களிடமும் வேறுபடும் விதம் பற்றி அவனுக்குச் சிந்திக்காதிருக்க முடியவில்லை. மனைவி சொல்லியது போல மாதங்கிக்கு எழுத வாசிக்க மட்டுமன்றிச் சிலவற்றைச் சிந்திக்கவும் முடியும் என்று தோன்றியது அவனுக்கு. கூடவே கீதாவுக்குப் புரியாத அந்தக் காரணமும் அவனுக்குப் புரிந்து போய் விட்டிருந்தது.
O
15

Page 11
எனக்கும் பசிக்கும்
நிறை போதையில் மயங்கிய கண்களால் மின் விளக்கிeடு உற்று நோக்கும் உன் முறிeடு முற்றுகையிடம் பல்லைக் கடித்துநிமிர்ந்த என் பெண்மை நிலைதளிந்து துவிண்டு ஒளியும்.
நம் விாழுகையின் முதலாறு மாதங்களாய் என்தேகத் தெருவில் ஒவ்வொரு விளைவுகளிலும் திரித்து பிரமிக்கும் உன்கூர்விழிகள் திேன் சுவைகண்ட சிந்தை சிதறிய மனநோயாளி தேன்கூeடை இமை விரித்து ஏற இறங்கப் பார்ப்பது போல் இன்று எதையோ நிர்வினாப்படுத்தப்பeட என்னில் அலைந்து அலைந்து தேடும்.
ഞങ്ങ്(ഇിധ Uങ്ങgധ புகழ்மொழிகளின்தளும்புகள் உலர்ந்து, வரண்டு வெடித்தாவது கழன்று விழாதா எனும் எதிர்பார்ப்பு, பeடினியாளரினின் த94gல் வீழ்ஒற்றைப் பருக்கையாய் ஏமாற்றி எக்காளமிeடு
நகரும்.
16
வே. தினகரன், பத்தனையூர்.
உன்னில் கலந்த ஒராண்டிற்குள்தான் எத்தனை (ஏ) மாற்றங்கள் என்னிலும், உன்னிலும்
உன் உள்மூச்சின் கதகதப்பு தேடும் என்முகமும் போலி முரண்டுபிடித்தலின் சுகத்திற்கான சாத்தியமின்மையும் ஏங்கி, ஏங்கி பொறுமையுடைந்து உன் மார்பில் வலிந்து சாயும் வற்றி விடாத வாலிபக் கொதிப்பின் தீவிரமுணராமல் எங்கோ கலவித்த களைப்பில் என்னிலிருந்து ஒதுங்குவிாய்,
முதிர்வின் மைல்லணுகலால் இப்போது ஒவ்வொரு அசைவின்நகர்விற்கும் அடையாளத்தின்நிரந்தரங்கள் என்னில் அப்பிக் கொண்டாகின்றன.
எல்லாக் கிளரீவுகளுக்குப் பின்னாலும்
5 5. åŋ 5.
பழைய இளைஞனாய்
ஊர் பவனியில் இன்னும் நீ.
ஞானம் - ஜனவரி 2005

இதை அடிக்கடி மறந்து பார்த்து அன்பனேநீ துஞ்சுதல் துறந்து, அந்தரங்கச் செயலாற்றும் முன் soos o o நினை 6 O d O. o எதானமதசதனைவுகளை அந்த அங்கத்தின் 968కి 6UTe(శ్రీశ్రీగ్రాత్రupaరాలuమీeం 으. L. 의 . L C》 0 - 9 0 few d அசிங்கங்கள் அறிந்தும் உறக்க கிலக்கத்தில் O. O. நிலை மறந்தநி விலான உனது எதிர்க்க முடியா இயலாமையோடு பழையதழுவுகையால் உன்னிடம் வருகிறேன். ஒற்றைக் கணம் மெய் சிலிர்ப்பினும்
శ్రీకి 6కిarరీక86ణిr. sééuur
ஆடைகளைப் போர்த்தி 6766ంr@g:శ్రీశ్రీuజీr நிர்வீாணமாய் நிற்கும் உடலாய் பெயரை என்னோடு முனகும் o ed Ο 0.
O y C 18 கு அறியப்பeட அவலம் மறைக்கிறாய். உன்னிதழின் முத்தம் பருகி C) d மோகம் தீர்க்க ༄༅་ என తిరిగ్గాల புருஷா
&விாறிய&gსზ ? ? ? எனக்கும் பசிக்கும்
O = *ஞானம் ? சந்தா விபரம்
உள்நாடு 9|gtiLUG) is gir T. Gnanasekaran, தனிப்பிரதி ரூபா 30/= HNB Pussellawa, நடைமுறைக - -- கணக்கு இலக்கம் - 26014 என்ற ஆண்டுச் சந்தா ரூபா 360/= 556, ñdé6:Téo 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/= ட்டு வங்க ரசதை அனுப 3 ஆண்டுச் சந்தா ரூபா 1000/- புதல் வேண்டும். ஆயுள் சந்தா ரூபா 15000F அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
சந்தா காசோலை மூலமாகவோ வங்கிக் கணக்கு மூலமாகவோ, மணியோடர் | மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும். வங்கிக் கணக்கு மூலம்
T. Gnanasekaran Gnanam Branch Office 3.B. 46 "Lane, Colombo-06.
வெளி நாடு
gator(63 digit : 25 US$ ஆயுள் சந்தா 300 USS
ஞானம் ஜனவரி 2005
17

Page 12
6 г6žu. 6)corг. சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
* ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம்பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி. * சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, உருவகக்கதை Creative essays, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தீ, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமைபெற்றன. * வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனைவிடை
தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். * 2000 பக்கங்களைக்கொண்ட 'வரலாற்றில் வாழ்தல்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட இவரது சுயசரிதையாகும். * அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் இவரது
கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
(4)
தி.ஞா : அக்காலத்தில் இந்த எழுத்துத் தோழமைகளை சங்க ரீதியாக ஓர் அணியில் சேர்க்க முயன்றதுண்டா?
எஸ். பொ. ; உண்மையிலேயே எழுத்துச் சம்பந்தமாக எனக்கு ஆரம்பம் தொடக்கமே தெளிவான ஒரு கருத்து இருந்தது. இந்தத் தெளிவான கருத்துக்கள் அண்ணாமலையில் நான் படித்த காலத்திலும் பின்னர் சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் படித்த காலங்களிலும் ஏற்பட்ட தமிழ்நாட்டு இலக்கிய உறவுகளினாலும் அந்தத் தெளிவு பிறந்ததாக இப்பொழுது நிதானிக்க முடிகிறது. கட்சிரீதியாக நான் மார்க்சிய வாதியாகவும் கம்யூனிஸ்ட் கட்சி
18 ஞானம் - ஜனவரி 2005
 
 

அங்கத்தினனாகவும் இருந்தபோதிலும் - இடையில் ஒரு குறிப்புச் சொல்ல விரும்புகிறேன் - நான் சென்னையில் படித்த காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தடை விதிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. அப்பொழுதுகூட அந்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியத்திலே நான் இணைந்திருக்கிறேன். அவ்வாறு இணைந்திருந்தவர்களில் தோழர் வி. பொன்னம்பலமும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தலைமறைவு காலத்திலேதான் மோகன் குமாரமங்கலத்தை நான் சந்தித்ததுண்டு. பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலிலே போட்டியிட்டு வெளியரங்கத்துக்கு வந்தபோது 1953ஆம் ஆண்டு அவர்கள் சென்னையில் மிகக் கோலாகலமாக நடத்திய சமாதான மகாநாட்டிலேகூட என்னுடைய கலைப் படைப்புத்தான் மாணவர்களின் சார்பாக முதன்மைப்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ பதிவு செய்யப்படவில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நான் அங்கத்தவனாக இருந்ததில்லை என்று முன்னர் ஓர் இடத்தில் சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. நான் உண்மையிலே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பகாலம் தொடக்கம் அங்கத்தவனாக இருக்க விரும்பவில்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் எழுத்தாளர்களை கட்சிக்கு அடங்கிய கட்சியிலே பிணைத்து விடுதல் ஆகாது என்பதிலே தெளிவாக இருந்தேன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் 1955ஆம் ஆண்டு மட்டக்களப்பு வாசியாக மாறிய பிறகு கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்கூட மட்டக்களப்பிலே உள்ள எழுத்து ஆர்வங்களை அணிதிரட்டி ஒரு முற்போக்கு சங்கம் ஏற்படுத்தினால் என்ன என்று என்னைக் கேட்டார்கள். என்னை மட்டுமலல முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஒரு ஜனநாயக ரீதியாகக் கிளைகள் நிறுவாமல், திருகோணமலைக்கு வ.அ. இராசரத்தினம், தென்மட்டக்களப்புப் பகுதிக்கு அ.ச. அப்துல்சமது என்று நியமனங்கள் மூலம் கிளைகளை உண்டாக்கினார்கள். இந்தப்போக்கு ஆர்வமான எழுத்தை வகைப்படுத்தி வழிநடத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவேதான் நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே அங்கத்தவன் இல்லாமலே இருந்தேன். ஒரு கட்டத்திலே எனக்குக் கல்முனை எழுத்தாளர் சங்கத்தினர் தமிழ் நாடகப்பிரதி ஆக்கத்திற்கு - சொக்கனுக்கு முதற்பரிசும் எனக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தபொழுது, அந்தப்பரிசின் மூலம் மட்டக்களப்பு எழுத்துக்கு நான் கெளரவம் சம்பாதித்துத் தந்ததால், பாராட்டி விழாவெடுத்துக் கெளரவித்தார்கள். அந்த மட்டக்களப்புக்குத் தென்பால் இருந்த கல்முனை எழுத்தாளர் சங்கத்துடன் நெருங்கிப்பழகி அவர்களுடைய சங்க நடவடிக்கைகள் மூலம் சிலகாலம் நான் இலக்கிய முன்னெடுத்தலுக்கு உதவினேன். அந்தக் கட்டத்திலேதான் நீலாவணனுடன் சேர்ந்து மரபு போன்ற பரிசோதனைக் களங்களை நடத்தக் கூடியதாகவும் இருந்தது. அது மட்டுமல்லாமல் சிறுகதை ஆசிரியர் இலங்கையர்கோனின் நினைவாக நடத்தப்பட்ட இலங்கையர்கோன் சிறுகதைப்போட்டி நடவடிக்கைகளிலேகூட நான் இந்தக் கல்முனை எழுத்தாளர் சங்கத்திற்கு உதவியாளனாக இருந்தேன்.
ஞானம் - ஜனவரி 2005 19

Page 13
தி. ஞா ; ஆனால் 1963ஆம் ஆண்டு மட்டக்களப்பில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட தமிழ்விழா ஓர் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாகத்தான் நீங்கள் நடத்தியதாக அறிகிறேன். அந்த எழுத்தாளர் சங்கத்தினுடனான தொடர்பு என்ன?
எஸ். பொ. : மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தமிழ்விழா உண்மையில் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். காரணம் அதனைத் தொடர்ந்து மூதூரில், நீர்கொழும்பில், சிலாபத்தில், கிண்ணியாவில் , என்று பல இடங்களிலும் தமிழ் விழாக்கள் கொண்டாடப்பட்டன. இந்த மாவட்டங்களிலுள்ள பிரிவுகளிலேகூட தமிழ்விழா ஏற்படுத்தி நடத்தி தமிழ் எழுச்சியை உண்டாக்கவேண்டும் என்ற எண்ணத்தினை இந்த மட்டக்களப்பில் - 1963 ஆம் ஆண்டு (உண்மையில் துட்டகைமுனுவினுடைய வீரம் ஓகஸ்ட் திங்கள் என்று வென்றது கிடையாது. விகாரமாதேவியினுடைய நினைக்கிறேன் நடத்தப் சாகசம்தான் வென்றது என்பதை அந்த 'முதல் பட்ட தமிழ்விழாவால் முழக்கம் மிகத் தெளிவாகச் சொல்கின்றது. ஏற்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல இன்று அல்ல, சமகாலத்தில் அல்ல, 1962ஆம் ஆண்டில் அ? தொட்டே புத்தபிக்குகள்தான் சிங்கள அரசியல் நடவடிக்கைகளை வழிநடத்தினார்கள் நடநத ஸாகரா ம A s .'... ü நாட் டி லி நடந்த எனபதையும அநத நாடகம சொல்கின்றது. அரு வருக் கதி தக் க நிகழ்ச்சிகளுக்குப் பிறகு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு வெளியே இருந்த சகல எழுத்தாளர்களும் ஓர் அணியிலே திரளவேண்டும் என்ற எண்ணம் பொதுவாகவே எழுந்தது. கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும், திருகோண மலையிலும், இந்த எழுச்சிகள் பரவலாகத் தோன்றி இருந்ததை நான் அறிந்தேன். எனவே முற்போக்கு எழுத்தாளர் வட்டத்துக்கு வெளியே இருந்த அனைத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒரு விழாவை மட்டக்களப்பிலே ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானம் ஆயிற்று. அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த வேண்டுமானால், அதற்கான ஒரு சங்கம் - ஒரு ஸ்தாபனம் - ஒரு நிறுவனம் உத்தியோக ரீதியாகச் செயற்படவேண்டும் என உணரப்பட்டது. இந்நிலையில் மகாவித்துவான் FXC நடராசா அவர்களுடைய வீட்டில் ஐவர் கூடினோம். FXC. நடராசா, ஆர்.பாலகிருஷ்ணன், கல்குடாவைச் சேர்ந்த சண்முகநாதன், நான், கொழும்பிலிருந்து வந்த எம். ஏ. ரஹற்மான் ஆகியோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்திலே கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற ஒன்றை நிறுவி அதன் ஆதரவிலும் அதன் முகாமையிலும், தமிழ்விழா நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தச் சங்கத்திற்கு விழாத்தலைவராக விளங்கவேண்டிய மகாவித்துவான் FXC. நடராசாவே தலைவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் அபிப்பிராயப் பட்டோம். செயலாளராக நான் நியமிக்கப்படவேண்டும் எனப் பலரும் சொன்னபோதிலும் ஆர். "பாலகிருஷ்ணனையே அதன் செயலாளராகப் பணிபுரியும்படி வேண்டிக் கொண்டேன். பொருளாளராக ஆ. சண்முகநாதன் தெரிவு செய்யப்பட்டார். இவ்வாறு நிறுவப்பட்ட ஒரு சங்கம்தான் கிழக்கிலங்கை
2O ஞானம் - ஜனவரி 2005
 
 
 
 
 
 
 

எழுத்தாளர் சங்கம். ஆனால் குறுகிய காலத்துக்குள் இது தமிழ்விழாவை நடத்துவதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேட்கத் தொடங்கினார்கள். எனவே FX.C. ஐயா என்னைக்கூப்பிட்டு Organizing executive, நிறைவேற்று அதிகாரம் உள்ள அதிகாரி என்ற ஒரு பதவியை, தமிழ்விழா நடந்து முடியுமட்டும் நான் வகிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். இவ்வாறுதான் நான் தமிழ் விழாவை நடத்தும் சூத்திரதாரியாக மாறினேன். கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டபோதிலும், கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கத்திலேகூட நான் பதவிகள் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தி. ஞா : இந்தத் தமிழ்விழா மட்டக்களப்புப் பிரதேசத்தில் ஒரு தமிழ்எழுச்சி தோன்றுவதற்கு வழிசமைத்தது எனக் கூறப்படுகிறது. இது பற்றிய விபரம் தாருங்கள்.
எஸ். பொ. : உண்மையிலேயே இலங்கையின் சகல பகுதிகளிலும் இருந்து வந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு மாபெரும் விழாவாக மட்டக்களப்புத் தமிழ்விழா அமைந்தது. இப்போதும் நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. மலைநாடு, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, சிலாபம் போன்ற அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் முந்நூறு பேர்களுக்கு மேல் இரண்டு மூன்று நாட்கள் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலே தங்கி அந்த விழாவிலே பங்கு பற்றினார்கள். அவர்கள் மகாநாட்டிற்கு வந்து போவதற்கு - மகாநாடு நடந்த இடம் நகரசபைமண்டபம். அவர்கள் தங்கியது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை. அதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை விசேஷமாக பஸ்சேவையை ஒழுங்கு செய்திருந்தது. தமிழ்விழா நடந்த காலத்திலே வெளிவந்த தினகரன், வீரகேசரி பத்திரிகைகளை யாராவது எடுத்துப்பார்த்தால், இந்த நிகழ்வுகளைப்பற்றி முன் பக்கச் செய்திகளே பிரசுரித்தார்கள் என்பதும் அவர்கள் ஆசிரியத் தலையங்கம் எழுதியிருந்தார்கள் என்பதும் இந்த விழாவினுடைய எழுச்சியைக் குறிப்பதற்கு உதவும். அத்துடன் இந்தத் தமிழ்விழாவுக்காகவே இலங்கை எழுத்தாளர் சங்கம் ஒரு சிறுகதைப்போட்டியை நடத்தியது. அதுவரையில் அவ்வளவு பெருந்தொகைப் பரிசுத்தொகை கொடுத்துச் சிறுகதைப்போட்டி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தச் சிறுகதைப் போட்டியிலே பரிசுபெற்ற கதைகள் பின்னர் இலங்கை எழுத்தாளர் சங்கத்தினரால் ஒரு தொகுதியாகவும் வெளியிடப்பட்டது. மலைநாட்டிலிருந்து இரா. சிவலிங்கத்தாலும் திருச்செந்தூரனாலும் கொண்டுவரப்பட்ட மலைநாட்டின் கலை நிகழ்ச்சிகள் முதல் முதலாக மட்டக்களப்பு மக்களுக்கு பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதும் அந்தத் தமிழ்விழாவிலேதான். தங்கம்மா அப்பாக்குட்டி போன்ற பெரும் பேச்சாளர்கள் முதல் முதலாக யாழ்ப்பாணத்திற்கு வெளியே வந்து மேடை ஏறியதும் அந்தத் தமிழ்விழாவிலேதான். இன்றும் எனக்கு அது பசுமையாக ஞாபகம் இருக்கிறது. தமிழ்விழா ஒரு கோலாகலமான விழாவாகக் காட்சி அளித்தல் வேண்டும் என்பதற்காக வாணவேடிக்கை விளையாட்டுக்களும் நடத்தப்படவேண்டும் என்று
குானம் - ஜனவரி 2005 21

Page 14
நான் யாழ்ப்பாணம் தேவனிடம் சொல்லியிருந்தேன். யாழ்ப்பாணம் தேவன் அப்பொழுது இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகப் பணிபுரிந்தார். அவர் கல்கிபீடி நிறுவனத்துடன் மிக ஐக்கியமான நெருங்கிய தொடர்பை வைத்திருந்தபடியால், அவர்களுடன் பேசி இந்த வாண வேடிக்கை மட்டக்களப்பில் நடத்தப்பட்டது. மட்டக்களப்பில் இதுவரை அந்தத் தமிழ் விழாவில் நடத்தப்பட்டதுதான் ஒரே ஒரு வாணவேடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்பு மக்கள் ‘புறாஅவுட் என்ற வாணவேடிக்கையை அதுவரை கண்டதில்லை. இந்தப் புறாஅவுட் என்பது உயிருள்ள புறாவை வாணத்தில் வைத்து வெடிக்கப்பண்ணி உயிருள்ள புறா ஆகாயத்தில் சிறகடித்துப் பறக்கச் செய்வதாகும். அதைக்கண்டு மட்டக்களப்பு மக்கள் பெரும் சந்தோஷப்பட்டு, இத்தகைய ஓர் அபூர்வமான வித்தையையும் தமிழர்கள் பயின்று கொண்டிருக்கிறார்கள் என்று வியந்ததும் அந்தத் தமிழ்விழாவின் போதுதான். மூன்று நாட்கள் தங்கியிருந்த அனைத்துப் பேராளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் மூன்றுநேர உணவும் இலவசமாக வழங்குவதற்கு மட்டக்களப்பு பெருந் தனவந்தர்கள் முன்வந்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தக் கலை நிகழ்ச்சிகளுள் எனது நண்பனும் இலங்கை வானொலியில் நாடகப்பிரிவிலே வேலை பார்த்தவரும் பின்னர் சிங்கள சினிமாவிலே பிரகாசித்தவருமான தயானந்த, நரிபேனா' என்ற சிங்கள நாடகத்தை - அவர்களது நாடக குறுப்பில் மொத்தம் 28 பேர்வந்து - அந்த மட்டக்களப்புத் தமிழ்விழாவிலே அதனை அரங்கேற்றி மகிழ்வித்துச் சென்றார்கள். அந்தத் தமிழ்விழா சிங்கள தமிழ்க் கலைஞர் களுக்கிடையில் எவ்விதமான வேறுபாடும் இல்லை என்பதை ஒரு முகமாக நிறுவியது என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. இளங் கலைஞர்களுக்கு ஒரு தனிக் கவியரங்கம். முத்திரை பதித்து அங்கீகரிப்பட்ட கவிஞர்களுக்கு இன்னொரு கவியரங்கம். இலங்கை தமிழ் எழுத்தாளர் களையும் இலக்கியத்தையும் எதிர்நோக்கியிருந்த பிரச்சனைகள் பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. தினந்தோறும் அதிகாலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் இவ்விழா முடிவதற்கு இரவு பத்து மணியாகிவிடும். இவ்வாறு இன்றளவும் இதுவரையில் வேறு இடத்தில் ஒரு தமிழ்விழா நடத்தப்பட்டதாக - சில சமயம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தமிழ் ஆராய்ச்சி மகாநாடு இதிலும் பார்க்கக் கூடியதாக நடத்தப்பட்டிருக்கக் கூடுமோ அறியேன். ஆனால் நான் அறிந்த வரையில் இதுவே பெரிய விழாவாக இருந்தது.
தி. ஞா : கலைக்கழகம் நடத்திய முதலாவது நாடகப் பிரதி ஆக்கப் போட்டியிலே நீங்கள் கலந்து கொண்டு உங்கள் பிரதியான ‘முதல் முழக்கத்திற்கு இரண்டாம் பரிசு பெற்றதைத்தான் கல்முனை எழுத்தாளர்கள் பாராட்டினார்களா?
எஸ். பொ. ஆம். உண்மையில் நாடகத்துறையில் கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்கள் செய்துவந்த புதுமைகள் என்னைக் கவர்ந்தன. இதனால் நான் பேராசிரியரைச் சந்திக்க வேண்டுமென நினைத்திருந்ததும் உண்டு. அவரைச்
22 ஞானம் - ஜனவரி 2005

சந்திப்பதற்கு உபகாரியாக விளங்கியவர் சிவத்தம்பி. அந்தக் காலத்தில் சிவத்தம்பிதான் இலங்கை நாடகக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் கைலாசபதிக்கும், சிவத்தம்பிக்கும் எனக்கும் இடையில் மிக ஆரோக்கியமான நட்புறவு நிலவியது. சிவத்தம்பி எழுதியுள்ள நாடக வரலாறுகளிலேயோ அவர் நுண்கலைப்பிரிவிலே நாடகம் சம்பந்தமாக எடுத்த முன்னெடுப்புக்களிலேயோ அல்லது இலங்கையின் தமிழ் நாடக வரலாற்றி லேயோ என்னுடைய பெயர் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முதல்முழக்கத்திற்கான பரிசு பெற்றதுகூட எங்குமே பதிவு செய்யப்படவில்லை.
தி. ஞா ! உங்களுடைய நாடகத்துறை அனுபவங்களைப்பற்றிக் கூறுங்கள். அவைபற்றிச் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்.
எஸ். பொ. : உண்மையில் என்னுடைய நாடகத் தொடர்பு சம்பத்திரிசியார் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபொழுது நான்காம் வகுப்பில் அங்கே தயாரிக்கப்பட்ட ஆங்கில நாடகத்தில் நடிப்பதன் மூலமே நான் முதன்முதலில் மேடை ஏறினேன். ஆனால் தொடர்ந்து மேடை ஏறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சன்மார்க்க சங்கத்தினர் வாலிபர் பிரிவாக இயங்கிய மாணவர் தேர்ச்சிக் கழகங்கள் நடத்திய நாடகங்கள் சிலவற்றிலே நடித்ததாகச் சிறு நினைவு உண்டு. ஆனால் அதே சன்மார்க்க வாலிபர் சங்கத்திலே நாடகம் ஒன்றிலே நான் நடிக்கவேண்டும் என வற்புறுத்தி நடேசன் கேட்டுக் கொண்டதினால் நான் நடித்தேன். இந்த நடேசன்தான் கலைப்பேரரசு பொன்னுத்துரையுடன் இணைந்து பரமேஸ்வராக்கல்லூரியில் நடாத்தப்பட்ட 'வேலி என்ற நாடகத்தில் நடித்தவர். பின்னர் இந்த நாடக ஈடுபாடுகளிலிருந்து நான் விடபடுபவன்போல் வாழ்ந்தபோதிலும் தென்தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோது அங்கு திராவிடக் கழகத்தினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் நாடக மேடைகளை அரசியல் பிரசாரமேடைகளாக மாற்றி ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தபொழுது அந்த நாடகங்களில் ஏற்பட்ட மாற்றங்களை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இந்தக் கட்டத்திலேதான் 1953இல் சென்னையிலே உலக சமாதான மகாநாடு நடத்தப்பட்டது. உலக சமாதான மகாநாட்டிற்கு பல்கலைக்கழகங்களின் சார்பாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படவேண்டும் என்று நிர்வாகிகள் விரும்பிக் கேட்டார்கள். அந்தக் கலை நிர்வாகக் குழுவில் அப்பொழுது எம்.ஜி. ராமச்சந்திரன், பெரிய நடிகையாக இருந்த ஜி.வரலட்சுமி, சிவதாணு என்ற ஹாஸ்ய நடிகர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கலைஞராகவும் கவிஞராகவும் விளங்கிய முகவை இராஜமாணிக்கம் ஆகியோர் இருந்ததாக நினைவு. இந்த நாடகப் போட்டியிலே நான் பிரதியாக்கம் செய்யவேண்டுமென்று என் நண்பர்கள் பலரும் வற்புறுத்தினார்கள். முக்கியமாகக் கிறிஸ்த்தவக் கல்லூரியில் இருந்த சுடலையாண்டி, கறுப்பையா, தினத்தந்தியிலே சென்னை நிருபராக இருந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வற்புறுத்திக் கொண்டதினாலும் நான் ஒரு நாடகப்பிரதியை எழுதிக் கொடுத்தேன். அந்த நாடகப் பிரதிக்குப் பெயர் ‘சாவு. அந்தப்பிரதி எதனைச் சொல்கிறதென்றால், தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது நடுநிலை
ஞானம் - ஜனவரி 2005 23

Page 15
மையைப் பேணுவதாகக் கூறிய பாரதப்பிரதமர் தென் கொரியர்களுக்கு அனுசரணையாக ஒரு மருத்துவப்படையை அனுப்பிவைத்தார். அந்த மருத்துவப் படையைச் சேர்ந்த ஒரு டாக்டர் குண்டடிபட்டுக் கிடக்கும் வடகொரிய வீரன் ஒருவனுடைய தாய் இந்திய வைத்தியனைத் தன் மகனுக்கு உதவி அளிக்கும்படி மன்றாடுகிறாள். ஆனால் அரசின் கட்டளையைத் தலைமேற் கொண்ட இந்திய வைத்தியர் அவ்வாறு வைத்திய உதவியை மறுக்கின்றார். அவன் மரணிக்கின்றான். பின்னர் அவனுக்கும் அவனது மனச்சாட்சிக்கும் இடையில் நடக்கும் போராட்டம் மனிதநேயம் பற்றிய விசாரணையாக விரிவுபெற்று நாடகம் முடிகிறது. இந்த நாடகவிழாவிற்குத் தலைமைதாங்கிய எம்.ஜி. இராமச்சந்திரன் அந்த நாடகம் மிக அற்புதமானது என்றும் மாணவ உலகில் இருந்து புதிய நாடகச்சிந்தனைகளைக் கொண்டுவந்த அந்த நாடகத்தைத் தயாரித்து அளித்தவருக்குப் பாராட்டு என்றும் சொன்னார். இந்தப்பிரதியை நான் எழுதியது மட்டுமல்லாமல், அதனை நெறிப்படுத்தித் தயாரித்து அளித்தவனும் நானாகவே இருந்தேன். அந்தப்பணி என்மீது சுமத்தப்பட்டது. இந்த வெற்றிகளுக்குப் பிறகு நாடகம்பற்றி விரிவாக நான் வாசிக்கவும் செய்தேன். ஆனால் நாடகம் தயாரிக்கவேண்டும் என்ற ஒரு சந்தர்ப்பமோ வாய்ப்போ ஏற்படவில்லை. ஆனால் மட்டக்களப்புக்கு வந்த பிறகு மட்டக்களப்பு மெதடிஸ்த்த கல்லூரியிலே ஆண்டுதோறும் பரிசளிப்புவிழா நடைபெறுவதுண்டு. அந்தப் பரிசளிப்பு விழாவிலே அதுவரையில் ஆங்கில நாடகம் ஒன்றே அரங்கேற்றப்பட்டு வந்தது. ஆனால் நான் சென்ற ஆண்டிலே மாறாக ஆங்கில நாடகம் மட்டுமன்றி ஒரு தமிழ் நாடகமும் மேடையேற்றப் படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. சக ஆசிரியர்கள் என்னைப்பற்றி அறிந்திருந்ததினாலும் இலக்கிய உலகத்துடன் எனக்குச் செழுமையான உறவுகள் இருந்ததினாலும் ஒரு நாடகம் பரிசளிப்பு விழாவுக்கு எழுதித் தயாரித்துத் தரும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறு நான் எழுதித் தயாரித்த நாடகம் அந்த நாள். அந்தநாள் என்பது சரித்திர நிகழ்ச்சி. விஜயன் குவேனியை விவாகம் செய்து அரசனாக முடி சூடுவதற்கு அவனுடைய மந்திரி பிரதானிகளுடைய ஆலோசனையின் பேரில் பாண்டி நாட்டின் இளவரசியை வரவழைத்து, மனைவியை நிராகரிப்பதை மையமாகக் கொண்டது அந்த நாடகம். அந்த நாடகத்தின் வெற்றி என்ன வென்றால், நாடகம் முடிந் த பின்புகூட பார்வை யாளர்கள் சபையை விட் டு கலை நீ து போக வரி ல  ைல . இந்தக் காலத்திலே தான் செ. இராசதுரை அவர்கள் மட்டக் களப்புத் தொகுதிக்குப் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நல்ல மேடைப் பேச்சாளர். மக்களைக் கவரக் கூடிய விதத்தில் பேச்சுகள் பேசி மக்கள் வாக்குகளைச் சம்பாதித்தவர். தமிழ் அரசுக்கட்சியாக இருந்தபோதிலும்
நான் உண்மையிலே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலி ஆரம்பகாலம் தொடக்கம்: அங்கத்தவனாக இருக்கவிரும்பவில்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் எழுத்தாளர்களை கட்சிக்கு: அடங்கிய கட்சியிலே பிணைத்து விடுதல் ஆகாது. என்பதிலே தெளிவாக இருந்தேன்.
24 ஞானம் - ஜனவரி 2005
 
 
 
 
 
 
 
 

அவர் அடிப்படையாக திராவிடக்கழக கலைஞர்களும் பேச்சாளர்களும் கையாண்ட பாணிகளையே அவர் மட்டக்களப்பில் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் ‘சங்கிலியன் என்ற நாடகத்தை பாராளுமன்ற அங்கத்தவனாக இருந்தபோதிலும் மேடையேறி நடிக்கவும், அந்தப்பிரதியை எழுதவும் அதை நெறிப்படுத்தியும் இருந்தார். அவருடைய சங்கிலியன் நாடகம் வெகுவாகப் பிரசாரம் செய்யப்பட்டு கிழக்கிலங்கையிலேயே ஒருநாடக மரபின் நுழைவாயிலாக அமையும் என்று பேசப்பட்டது. அந்த நாடகத்தை நான் சென்று பார்த்தேன். அந்த நாடகத்தின் பிரதியை மிக மிகக் குழந்தைத்தனமாக அவர் அமைத்திருந்தார். வரலாற்றுச் சம்பவங்களை அவருக்கு நிரலாகச் சொல்ல முடியவில்லை. சங்கிலியன் வாழ்ந்தது 18ஆம் நூற்றாண்டின் முதல் கந்தாயத்தில். அந்தச் சங்கிலியன் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டப்பொம்மனுடைய பரம்பரையைச் சேர்ந்தவன் என்று வசனம் பேசுகிறான். போர்த்துக்கீச மாலுமிகள் மேடையிலே நடித்தபொழுது அவர்கள் திறீறோஸ் பக்கற்றுகளை வைத்துக்கொண்டு அதைப் புகைத்தார்கள். திறீறோஸ் சிகரெட் என்பது இலங்கையில் 1942- 43 ஆண்டு அளவிலேதான் முதன் முதலாகச் சந்தைப்படுத்தப்பட்டது. இதை 18ஆம் நூற்றாண்டின் முதற்கந்தாயத்தில் உபயோகித்தார்கள் என்பது எப்படிப் பொருந்தும்? இவ்வாறு பல சரித்திர விகற்பங்களை நான் எடுத்துச் சொன்னதுடன் நாடகத்தன்மையே. இல்லாத பல இடங்களையும் சுட்டிக்காட்டி இராஜதுரை தயவுசெய்து நாடகத்துறையைத் தொடாமல் இருந்தால் மட்டக்களப்பு நாடகத்துக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும் என பல மேடைகளிலே கூறினேன். அப்போது நான் இராசதுரைக்கு எதிரான பிரசாரகனாக இருந்தபடியாலும் நான் கொம்யூனிஸ்ட்-கட்சியினுடைய முக்கிய பேச்சாளனாக இருந்து தமிழரசுக்கட்சியினுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாலும் பேச நேர்ந்தது. அப்பொழுது இராசதுரை, 'பொன்னுத்துரை இப்படியெல்லாம் எனக்குச் சவால் விடுகிறார். ஒரு சரித்திர நாடகத்தை எழுதி, தயாரித்து, மக்கள் மன்றத்தில் ஆட்டுவித்தல் என்பது இலகுவான காரியம் அல்ல. அவரால் அது முடியுமா? என்று சவால்விட்டார். இந்த சவால்விட்ட அதே நேரத்திலே மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக வந்திருந்த ஞானசூரியம், ஆசிரியர் கூட்டமொன்றில் பள்ளிக் கூடத்திற்குப் புதிதாக ஒரு கட்டிடம் போடவேண்டும் என்றும் அதற்கான ஒரு நிதியைத் திரட்டுவதற்கு நாடகம் ஒன்றைத் தயாரித்து அதை மேடை ஏற்றுவதற்கு ரிக்கற்றுகள் விற்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். அந்த ஆசிரியர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலரும் அத்தகைய ஒரு நாடகத்தை எழுதி நெறிப்படுத்தி ஆட்டவல்ல ஆற்றல் எஸ்.பொ.வுக்கு உண்டு என்றும் அவருக்கு முழு ஆதரவையும் நாங்கள் கொடுத்தால், அத்தகைய ஒரு நாடகம் மேடை ஏற்றப்படலாம் என்றும் அவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். எனவே எனக்கு ஒய்வு அளிக்கப்பட்டு நாடகத்திலேயே முழுமையாக ஈடுபடும்படி பணிக்கப் பட்டேன். அந்த வாய்ப்பு அற்புதமான ஒரு வாய்ப்பு. அப்பொழுதுதான் இந்த முதல் முழக்கம் என்ற நாடகத்ததை எழுதினேன். அந்த முதல்முழக்கம் நாடகம் எல்லாளனுக்கும் கைமுனுவுக்கும் நடந்த யுத்தம். அந்தக் காலத்திலே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட முதலாவது இனப்போர் என்று அது சித்திரிக்கப்பட்டிருக்கிறது. மகாவம்சத்தில் அந்தப் போர் நடவடிக்கைகளை
ஞானம் - ஜனவரி 2005 25

Page 16
. அந்த மகாவம்சம் மட்டுமல்ல மகாவம்சத்தின் விளக்கவுரையாக இருந்த மகாவம்ச தீகாவில் எப்படி எழுதப்பட்டது என்ற தகவல்களையும் கொண்டு அந்த நாடகம் எழுதப் பட்டது. அதுக்கு இன்னொரு விளக்கம் என்னவென்றால் கச்சாதித்தன்கோட்டை என்ற இடத்தில் தம்பன் என்ற ஒருவன் முறியடிக்கப்படுகிறான் கச்சாதித்தன் கோட்டை என்பது பொலனறுவ. அந்த மகாநதியைத் தாண்டினால்தான் உறுகுணையில் இருக்கக்கூடிய போர்வீரர்கள் இராஜரட்டைக்குள் அதாவது அநுராதபுரம் நோக்கி முன்னேறிவர முடியும். எனவே இந்தக் கச்சாதித்தன்கோட்டை மிக முக்கியமான கோட்டை. அந்தக் கோட்டையைக் காவல் காத்த தம்பன் என்பவனை எவ்வாறு கைமுனு வெற்றியடைந்தான் என்று மகாவம்சத்தில் சொல்லப்படாவிட்டாலும், மகாவம்ச தீகவில் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த விரிவாகச் சொல்லப்பட்ட தகவல் இதுதான். துட்டகைமுனுவுடன் அவனுடைய தாயான விகாரமாதேவியும் படையெடுப்பு சமயத்திலே போர்வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக புத்தபிக்குகளுக்குத் தலைமைதாங்கி நடந்துவந்தாள். அப்பொழுது கச்சாதித்தன்கோட்டையிலே தமிழ் தளபதியினுடைய எதிர்ப்பினை எதிர்த்துத் தாக்கி வெற்றி கொள்ளமுடியாத நிலை உணரப்பட்டது. அந்த நேரத்தில் விகாரமாதேவி தனது உடலை விருந்துபடைத்து அந்தத் தளபதியை மயக்கத்தில் வைத்திருந்து கொன்றாள் என்பது வரலாறு. அங்கே உண்மையில் துட்டகைமுனுவினுடைய வீரம் வென்றது கிடையாது. விகாரமாதேவியினுடைய சாகசம்தான் வென்றது என்பதை அந்த ‘முதல் முழக்கம் மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அதுமட்டுமல்ல இன்று அல்ல, சமகாலத்தில் அல்ல, அன்று தொட்டே புத்தபிக்குகள்தான் சிங்கள அரசியல் நடவடிக்கைகளை வழிநடத் தினார்கள் என்பதையும் அந்த நாடகம் சொல்கின்றது. அதற்கு மேல், அந்த இக்கட்டான நிலையிலேகூட எல்லாளன் போன்ற ஒரு நெஞ்சு உறுதியுள்ள ஒரு தமிழ்த்தலைவன் தங்களுடைய வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு பொதுமக்கள் ஏன் சாகவேண்டும் இரண்டு மன்னர்களும் தனிச்சமர் செய்து முடிவைக் காண்போம் என்று சொல்லக்கூடிய அந்தப் பெரும் வீரமும் அந்த நாடகத்திலே சித்திரிக்கப்பட்டிருந்தது. அந்த நாடகத்திலே காசி ஆனந்தன் எல்லாளனாக நடித்தார். பின்னர் மட்டக்களப்பிலே நகைச்சுவை நாடகங்கள் மூலம் பெரும் புகழ் பெற்றிருந்த நவரட்ணம் நடித்தார். பத்திரிகையாளனாகவும் அரசியல் வாதியாகவும் மட்டக்களப்பு மாநகர மேயராகவும் இருந்த செழியன் பேரின்பநாயகம் கலை இலக்கியத் துறைக்கு வந்தது அதன் மூலம். அவ்வாறு பல முஸ்லிம் கலைஞர்கள் - சின்ன லெப்பே காலிட் இஸ்மெயில் போன்றவர்கள் வந்தார்கள். அந்த நாடகம் மட்டக்களப்பில் இரண்டு முறையும் கல்முனையில் ஒரு தடவையும் மேடையேற்றப்பட்டு நிகரலாபமாக அந்தக்காலத்தில் பன்னிரண்டாயிரத்துக்கு மேல் சம்பாதித்தது. இன்று அதன் மதிப்பு பல லட்சங்கள். அதற்குப் பிறகு நான் நாடகங்கள் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தபோதும் கூட அரசியல் காரணங்களால் நான் நாடகங்கள் தயாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டேன். ஆனால் மட்டக்களப்பில் புதிதாக நாடகக் குழுக்கள் தோன்றி புதிய நாடகங்களை சமமாக நடத்திக் கொண்டிருந்த பொழுது அந்த இளைஞர் குழுவினருக்கு ஆலோசனை கூறிவந்துள்ளேன். இந்தக்கட்டத்திலே முதல்முழக்கம் மூலம் மட்டக்களப்பிலே
26 ஞானம் - ஜனவரி 2005

புதிய நாடக மரபை ஏற்படுத்தினேன். அதாவது நாட்டுக் கூத்துகள் மரபு இருந்ததற்கு மாறாக தற்கால நாடக மரபை - அந்த நாடக மரபை ஏற்படுத்துவதற்கு வின்சன்ற் மகளிர் கல்லூரியில் இருந்த திரவியம் இராசம்மா என்ற ஆசிரியையும் பெரும் பங்கு கொண்டார் என்பதையும் நான் இந்த இடத்திலே குறிப்பிடவேண்டும். அப்படியிருந்தும் தமிழ்விழாவின்போது பலர் சொல்லியும் நான் நாடகம் தயாரிக்கவில்லை. வேலைப்பழுக்களுக்கு மத்தியிலே இந்தச் சுமையை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. அப்பொழுது நீலாவணன் எழுதி இயக்கிய மழைக்கை என்ற கவிதை நாடகம் இடம்பெற்றது. மட்டக்களப்பு நாடக வரலாறு எழுதப் படும்பொழுது இந்த மழைக்கையும் குறிப்பிடப்படவேண்டிய தொன்றாகும். இந்த மழைக்கை நாடகம் மேடையேற்றப்
பட் ட த னா ல தா ன எனக் கும் நீலா
சிவத்தம்பி எழுதியுள்ள நாடக வரலாறுகளிலேயோ அவர் நுண்கலைப்பிரிவிலே நாடகம் சம்பந்தமாக - எடுத்த முன்னெடுப்புக்களிலேயோ அல்லது ಎಣಕೆ ಅಡ್ದಿ இலங்கையின் தமிழ் நாடக வரலாற்றிலேயோ 1. ர ண மா யபிற நு . என்னுடைய பெயர் வேண்டுமென்றே நிராகரிக்கப் அதற்கான காரணம், பட்டிருக்கிறது. சிங் கள நரி பேனா நாடகக்காரர்கள் வெளியூரிலிருந்து வந்தபடியால் அவர்களுடைய செளகரி யங்களை - அவர்கள் சிங்களவர்களாக இருந்தபடியால் தமிழ் தெரியாதவர்களாக இருந்தபடியால் - அவர்களுடைய செளகரியங்களை நான் அதிகமாகக் கவனித்தபடியால், தங்களை நான் கவனிக்கவில்லை என்று குறைபடக்கூடியதாக நீலாவணனுககுப் பின்னால் இருந்து இயங்கிய மருதமுனை எழுத்தாளர்கள் சிலர் சொல்லி அவருடைய மனதைக் குலைத்ததாக நான் அறிகிறேன். அது எவ்வாறு இருந்தபோதிலும் நீலாவணன் இறக்கும்வரையிலும் எனக்குப் பேச்சுத் தொடர்புகள் இல்லாதபோதிலும் ஒருவருக்கொருவர் இருந்த இலக்கியப்படைப்புகளை கெளரவமாக மதிக்கும் பெரும் பண்பை நாங்கள் பயின்றுகொண்டோம்.
தி. ஞா : பின்னர் "முறுவல்’ நாடகம் கொழும்பில் மேடையேற்றப்பட்டு நூலாகவும் வந்துள்ளதே.
எஸ். பொ. : முதல்முழக்கத்தைத் தொடர்ந்து நாடகங்கள் தயாரிப்பதை நிறுத்திக் கொண்ட்ேன் என்று நான் சொல்வது முற்றிலும் சரியல்ல என்று நினைக்கிறேன். பின்னர் "வலை" என்ற ஒரு நாடகத்தை மாணவர்களுக்காக எழுதித் தயாரித்திருந்தேன். இந்த வலை நாடகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவதற்காக அனுப்பப்பட்டது. அந்தப் பிரதியைப் பார்த்த சானா நிச்சயமாக இதனை மேடை ஏற்றவேண்டும் என்று தீர்மானித்து அந்த நாடகத்தை மேடைக்கு ஏற்றதாக அமைக்கும் பணியில் என்னுடன் சேர்ந்து அவரும் தனது நாடக அனுபவங்களைச் சொல்லி அந்த வலை நாடகத்தைத் திருத்தி அமைத்தார். அந்த வலை நாடகம் மூன்று தடவைகள் சானாவின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்டது. அந்த வலை நாடகம்தான் பின்னர் நிர்மலா தயாரித்து ஏ.ரகுநாதன் அவர்களால் தத்தெடுக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பல்வேறு இடங்களிலிருந்த கல்லூரி மண்டபங்களிலே நிகழ்த்தப்பட்டது. நான் நம்புகிறேன் என்னுடைய
രൂ ഞrt - ജൂഞ്ഞ് ഖfി 2005 27

Page 17
நாடகங்களுள் அதிக முறை மேடையேற்றப்பட்ட நாடகம் இந்த வலை நாடகம்தான். வலை நாடகத்திற்குப் பிறகு நான் நாடக உலகிலிருந்து விலகியிருந்தேன் என்று சொல்ல முடியாது. புதிய நாடக முறைகளை மிக ஆழமாகக் கற்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பம் வந்தது சுஹைர் ஹமீட் என்பவருடைய நாடக மேடையினால். அந்தக்காலத்தில் கொழும்பு தெற்கு மேட்டுக் குடியினருடைய நாடகப்பண்ணையாகவும் கொழும்பு வடக்கு இழிசனர்களுடைய நாடகப் பண்ணையாகவும் கருதப்பட்டது. கொழும்பு வடக்கிலே இருந்தவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள், இந்திய வம்சாவழியினர் ஆகிய நாடகக் கலைஞர்கள். கொழும்பு தெற்கிலே வாழ்ந்தவர்கள் வானொலியுடனும் பல ஊடகங்களினுடனும் தொடர்பு உள்ளவர்கள் என்ற படியினாலும் ஆங்கில அறிவு மிக்கவர்களாகவும், அவர்கள் மேட்டுக் குடியான ஒரு கலை ஜாம்பவான்களாகக் கருதப்பட்டார்கள். அத்துடன் இ. இரத்தினம் போன்றவர்கள் நாட்டியநாடகம் எழுதி, கொழும்பு தெற்கிலுள்ள நாட்டியத் தாரகைகளுடன் தொடர்புபட்டு அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். இந்தக் கட்டத்திலேதான் கொழும்பு வடக்கிலிருந்த கலைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு ஒரு புதிய திசையைக்காட்டி, நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் சுஹைர் ஹமீட். சுஹைர் ஹமீட் செய்த பங்களிப்பு, நான் நிச்சயமாக நம்புகிறேன் தாசிஸியஸ் செய்துள்ள நாடகப் பங்களிப்புக்கு முந்தியது என்பது பதிவு செய்யப்பட வேண்டும். அவர் மேலை நாட்டு நாடக உத்திகளையும் முறைகளையும் உள்வாங்கிக்கொண்டு இலங்கையின் நாடகத் தேவைகளுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்தி புதுக்கி மக்களைச் சிறந்த கலைஞர்கள் ஆக்கினார். ராஜபாண்டியன், ஜெயந்தி, ஜெய கெளரி, அபு நானா என்று சொல்லக்கூடிய ஜவாகர், இப்படிப் பல கலைஞர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் பல வெற்றி நாடகங்கள் - முக்கியமாக 'சாதிகள் இல்லையடி பாப்பா போன்ற நாடகங்களை அவர் எழுதி நெறிப்படுத்தினார். அந்த சுஹைர் ஹமீட் முறையாக இசை கற்றவர். முறையாக உடல் அசைவுகள் பற்றிய நுணுக்கங்களை சாத்திர ரீதியாகக் கற்றவர். எனவே இவை எவ்வாறு நாடகத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்ற புதிய ஞானங்களைப் பெறக்கூடிய நூல்கள் எல்லாவற்றையும் எனக்குத் தந்தார். இந்தப் புதிய அனுபவங்களினாலும் ஞானங்களினாலும் முறுவல்’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதினேன். இந்த முறுவல் நாடகம் கொழும்பில் செயின்ற் மத்தியூஸ் கல்லூரியில் அந்தக் கல்லூரியின் நாடக நிதிக்காக மேடையேற்றப்பட்டது. ஆனால் அதை நெறியாள்கை செய்து தந்தது சுஹைர் ஹமீட். பின்னர் இலங்கை இந்திய நட்புறவுச் சங்கத்தினர் அதைக் குமரேசன் ஹோலிலே மேடையேற்றினார்கள். சுஹைர் ஹமீட் இறந்தபொழுது அவரை எல்லோரும் மறந்துவிட்டது போன்ற நிலையில், அந்தச் சுஹைர் ஹமீட்டுக்குச் சமர்ப்பிக்கவேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காக முறுவல் நாடகப் பிரதியை எடுத்து அதை நூலாக்கினேன். அந்த நூலுக்கு ‘பாரத் பாங்க் நிறுவத்தினர் மிகச்சிறந்த நாடக நூலுக்கான பரிசைத் தந்து கெளரவித்தார்கள்.
(தொடரும். )
ஞானம் - ஜனவரி 2005

மலப்புழுக்கள்
“ஜின்னாஹ்"
சான்றோர் தமைச்சாடித் தம்பைருமை பேசுபவர் ஈன்ற குலத்திற்கும் ஈனர்கான் - தோன்றுங் குலத்தளவே ஆகுங் குனமைன்றார் ஆன்றோர் மலப்புழுக்கி எரிமே அவர்,
விைண்சுவரில் தோன்றும் விடுசிறிதா யாகிடிலும் வெண்சுவரை விஞ்சும் விடுவிவிர்க்கு - கிண்சீர் @6ుmd56*86r తిrఉ6ు66గో 8mప్రేరu60ంగో6 68meru மலப்புழுக்க ளாமைன் றறி.
குற்றங் குறைதேடிக் கொண்டிருப்பர் காண்பவற்றில் குற்றங் குறையிலாத போழ்தும்தம் - அற்பப் uమే6ుర6మmమే €dరాmగి UguaరాgరిUmగి తిrణిraormగి (O6ురి gā86r 6Um6ుmరీ 9్కరం
பல்லாண்டு திண்டாடிப் பார்த்தும் பலன்கானார் 6ఉ6ు6గిurrజీ 66కి.గ్రాడి U8ఫ్రికె6f(B - 6ఉ66ుmగే புலங்காய்வார் பேடிப் பவிவினைஞர் கூறின் மலப்புழுக்கி எரிாமே இவர்.
காய்தல் உவுத்தலின்றிக் கூறும் விமர்சனங்கள் வாய்த்தில் உவப்பாம் இலக்கியுத்தில் - காய்தல் இலக்காகக் கொண்டு இயம்பிடுங்கால் அஃது மலப்புழுக்கள் செய்கைக்கு நேர்.
O
ஞானம் - ஜனவரி 2005 29

Page 18
சிவத்தமிழ்ச் செல்வி, பண்டிதை,
h கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 80வது அகவை முத்துவிழா
வாகீச கலாநிதி க. நாகேஸ்வரன் (சிவத்தமிழ்ச்செல்வி, பண்டிதை, கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் திகதி 80ஆவது அகவையை எய்துகிறார். அன்று அவரது பிறந்ததின அறக்கட்டளை விழா தெல்லிப்பளையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அவரது சமய சமூகப்பணிகளைப் பாராட்டி லண்டன், கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் விழாக்கள் நடைபெறவுள்ளன. அம்மையாரைக் கெளரவிக்கும் முகமாக இக்கட்டுரையைப் பிரசுரித்து நாமும் பெருமைகொள்கிறோம் - ஆசிரியர்)
ஓயாத முயற்சியும், புன்முறுவலும், கல்வியிலும், சமயத்திலும் அசையாத பற்றுறுதியும் வாய்ந்தவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். 1925ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் திகதி பிறந்த தங் கம்மா அப்பாக் குட் டி அவர்கள் ஆரம்பக்கல்வியை மல்லாகம் அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும் பின்னர் விசாலாட்சி வித்தியாலயத்திலும் பெற்றார். 1940இல் எஸ்.எஸ்.ஸி. பரீட்சையில் சித்தியடைந்ததுடன் பிரவேசப் பண்டித பரீட்சையிலும் சித்தி பெற்றார். பின்னர் இராமநாதன் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்றார். 1946இல் மட்டக்களப்பு புனித சிசிலியா ஆங்கிலப்பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக நியமனம் பெற்றார். 1949 இல் கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியரானார்.
1953ஆம் ஆண்டிலே பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தத் ( தொடங்கினார். 1957இல் இலங்கை வானொலியில் மாதர் பகுதியில் རྙི༔
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பேச்சுகள் நிகழ்த்தினார். அக்காலத்தில் சென்னை சைவசித்தாந்த சமாஜம் நடத்திய சைவப்புலவர் பரீட்சையில் சித்தியடைந்தார். 1961இல் தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தில் திருப்பணிச்சபை அங்கத்தவராகச் சேர்ந்தார். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு இடமாற்றம்பெற்று வந்தார். 1965இல் தமிழ்நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உரைகள் ஆற்றினார். 2) 1966ஆம் ஆண்டில் மதுரை ஆதீனத்தால் 'செஞ்சொற்செம்மணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1970இல் ஈழத்துச் சிதம்பரத்தில் و)
S)
30 ஞானம் - ஜனவரி 2005
 
 
 
 
 
 
 
 
 

'சிவத்தமிழ்ச் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1971, 72, 74களில் ' மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அங்கு திருவாசகக்கொண்டல்' என்ற பட்டம் பெற்றார். 1973இல் தென்னிந்தியாவில் திருவிடைமருதூரில் நடைபெற்ற திருமுறைக் கருத்தரங்குக்குத் தலைமை தாங்கினார். அகில இலங்கை இந்துமாமன்றம் கொழும்பில் 'சிவஞானவித்தகள் என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்தது. தெல்லிப்பளை பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் துர்க்காதுரந்தரி என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. 1977இல் பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபைத் தலைவர் பதவியை ஏற்றார். 1978ல் இவரது கந்தபுராணச் சொற்பொழிவு நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. 1980ம் ஆண்டில், தமிழ்நாட்டிலே ஆரணியென்னும் இடத்திலே மங்கையர் மாநாடுக்குத் தலைமை வகித்தார். இவரது மணிவிழா நிகழ்வு 1985ஆம் ஆண்டு நடைபெற்றது. 1986இல் துர்க்காபுரம் மகளிர் இல்லம் இரண்டுமாடிக் கட்டிடத் திறப்புவிழா நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு இலண்டனுக்குப் பயணம் செய்து சொற்பொழிவுகள் ஆற்றினார். /, 4.10.1998இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் , 5 “கெளரவ கலாநிதி என்ற பட்டத்தை வழங்கியது. 1999இல் கனடா சைவ சித்தாந்த மன்றக் காப்பாளர்களில் ஒருவராகவும், 'அன்புநெறி சிறப்பாசிரியர்களில் ஒருவராகவும் தெரிவானார். 2000ஆம் ஆணி டிலே பவள விழாவை முன் னிட் டு 'சிவத்தமிழ்ச்செல்வி அன்னையர் இல்லம் திறப்புவிழா இடம் பெற்றது. 2001ஆம் ஆண்டில் இவர் எழுதிய “பெண்மைக்கு இணை யுண்டோ என்னும் நூல் வெளியிடப்பட்டது. 2004இல் 79ஆவது இ) பிறந்த தினத்தை முன்னிட்டு வன்னிமாவட்ட மாணவர்களுக்கு 影 அறக்கொடை வழங்கப்பட்டது.
பெரியபுராணமும், திருவாசகமும், கம்பராமாயணமும், மகாபாரதமும், திருமுறை அமுதமும், கந்தபுராணமும், அபிராமி அந்தாதியும், திருவிளையாடற் புராணமும், திருக்குறளும், தொல் காப்பியமும், அறநூல்களின் விழுமிய சாராம் சங்களும் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அவர்களின் சொற்பொழிவுகளில் கேட்பவர்கள் பெறும் தமிழின்பம் விபரிக்கமுடியாத இனிமை பயப்பன.
திருமுறை ஒதுதல், சைவச்சிறார் இல்லம், நூலகம், அறக் கொடை, கலைஞர் அறிஞர்கள் கெளரவம், போட்டிகள், கலை நிகழ்வுகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு S உதவுதல், வைத்தியசாலைகளுக்கு அறக்கொடை வழங்குதல்,
அன்னதானப்பணி, சிவாச்சாரியார் கெளரவம், நூல் வெளியீடுகள், மாநாடுகள் ஆகிய பெரும் பணிகளினுடே மிளிருபவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
ஆசிரியையாயும், அறக்கொடை நாயகியாயும், அம்பாள் ஆலயத்துத் தலைவியாயும், சமாதான நீதிபதியாயும், தாய்க்குத் தாயாயும் மிளிரும் அன்னை அவர்கள் ப.றுளியாற்றின் பெருமணல் போல வாழிய நீடு வாழிய வாழியவ்ே!
O O O
(E
ஞானம் - ஜனவரி 2005
y

Page 19
Deepa DL6)
எழுத்தாளர் கணபதி கணேசன் நினைவு
குறுநாவல் போட்டி
1J fis-eof jliq efógp T
ஆ. குணநாதன், (பத்தாங் பெர்சுந்தை, மலேசியா)
மலேசியாவில் வெளிவரும் 'செம்பருத்தி' மாத இதழ் அதன் துணையாசிரியர் அமரர் கணபதி கணேசன் நினைவுக் குறுநாவல் போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழாவை கடந்த 13.11.2004 இல் கோலாம்பூரிலுள்ள கண்பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் நடத்தியது.
அமரர் கணபதி கணேசன் 3.3.1955 இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பயின்றவர். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'மேகம்' என்ற சிறுபத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து, சிறுகதை, கவிதை, ஆய்வுக் கட்டுரைகள் படைத்தார். 1980 களில் தமிழகம், மலையகம், போன்ற இடங்களில் வாழ்ந்து, 1998 முதல்'செம்பருத்தி இதழின் துணையாசிரியரானார். இவர் பல இளம் செய்தியாளர்களை உருவாக்குவதில் துணை நின்றவர். மிகச் சிறந்த மனித நேயப் பண்பாளர்.
அவர் மறைந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது நினைவாகச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வும், பரிசளிப்பும் நடைபெற்றது. இலக்கியம், பொருளாதாரம், சமூகவியல் ஆகிய தலைப்புகளில் பா. அ. சிவம், அகிலன் லெட்சுமணன், தமிழேந்தி, தீபமலர், பூங்குழலி வீரன் ஆகியோர் உரையாற்றினர்.
குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செம்பருத்தி ஆசிரியர் குழுவின் ஆலோசகர் வழக்கறிஞர் பசுபதி மற்றும் எழுத்தாளர் டாக்டர் மா. சண்முகசிவா ஆகியோர் பரிசில்கள் வழங்கினர்.
முதல் பரிசான 2,000 வெள்ளியை ஆ. குணநாதன் (போராட்டம்) பெற்றார். 2 வது பரிசான 1,000 வெள்ளியை வ. முனியன் (இரவுகள் விடிவதற்கு) பெற்றார்.
3வது பரிசான தலா 500 வெள்ளியை சாந்தா காளியப்பன் (இலட்சியம்) கல்யாணி மணியம் (கருகும் மொட்டுகள்) பெற்றனர்.
200 வெள்ளி ஆறுதல் பரிசுகளை எஸ். பி. பாமா (அவர்களால் மட்டும் எப்படி), டாக்டர் எஸ். சுப்பிரமணியம் (ஒர் ஆத்மாவின் ஆராதனை), ஜனகாசுந்தரம் (நிதானம்), கி. சுப்ரமணியம் (விடியல் எட்டும் தொலைவில்), சுந்தரி பொன்னையா (அம்மா) ஆகியோர் பெற்றனர்.
32 ஞானம் - ஜனவரி 2005

சமத்துவங்கள் உருக்கொள்ளப் போவதெப்போது?.
இருண்ட இதயங்கிள் காவத்தையூர் மகேந்திரன்
விெளிச்சமுற occ கரிய போதனை செய்த சித்தார்த்திா) இச்சிறுதீவில் உனதின் சிகர சிந்தனை கருகுதல் காண்பாய்ce மனித மன எழுகைக்காய் விஞ்ஞானம் போதித்தவனே) 9 é5 a 62SGB Uñó
NZANZAVZANŹKNKN3 $写 闰 宫 目 23
جمعیت
சிருவிம் பூண்டு
சிரசு கேசமகற்றி
காவியணிந்திeட
2 Goiáér éJuñUTño coo o
சீலமறிந்த சிலரின்னும்
இதயச் சீஜ் துடைக்க மறந்து ప్రశః சேறுபடுத்தினருன்னைoce لے 《ར་ காயப்பgeடதென்னிதயம் ಔಷಜಣ್ಣ உனக்கு இனவாதி சிறையிeடதில் எருடிைத் தோல்களுக்குள் இரத்த ஆறுகண்ட இல்விசோகர்கள் ஊடுருவுவது எங்ாssனம் இன்றுஇம் உயிர்குஜக்கி விேஷங்கள் விலகிய மானுடமாய் ஏனிந்துத் தாகம்ceae மனிதப் பாய்விரித்துப் Uni56Urb அறமறிந்த தர்மாவிாதியரே எல்லா அடக்குகையிலும் அழிவுக்காய் இயக்கிமுறும் கிழிபடும் மனிதத்தைe உம் கோச தீர்மம். மீeகும் சமத்துவிங்கள்
அழுைதிக்காய் வியாபிக்கeடும் లి_గ్రాకీ6)కిmbrరి 6umకా6్నర6yrgy56? UScr எநgயில் விஜந்த cosifoofair తిraDQశ్రీ తిraDJuణిdrరిరg6600fb O
ஞானம் - ஜனவரி 2005 33

Page 20
புனைகதை இNக்கியம் : அறிவோம், கற்போம், படைப்போம்,
செங்கை ஆழியான் க. குணராசா
3. 7 களமும் சூழலும் :
எழுத்தாளனின் அகவுலகம் அவன் வரித்துக்கொண்ட கருத்தியற் கோட்பாட்டின் தளத்தில் இருந்தாலும் அதனைப் புனைகதையாக மேடை ஏற்றுவதற்கு அவனுக்கு ஒரு களமும் சூழலும் தேவைப்படுகின்றது. பண்டைய தமிழ்க் கவிஞர்கள் கூடத் தமது படைப்புகளுக்குரிய களத்தையும் சூழலையும் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகைப் புவியியற் களத்தில் அவற்றிற்கேற்ற சூழலில் வைத்துப் படைத்திருக்கிறார்கள். அவ்வாறாகவிருந்தும் தமிழ்நாட்டின் விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலானோரின் புனைகதைகளை எந்தக் களத்திலும் எந்தச் சூழலிலும் வைத்துக் கூறிவிட முடியும். ஏனெனில் அவர்கள் மானிடத்தின் பொதுமைப்பண்புகளான காதல் உறவுகளையும் குடும்ப உறவுகளையும் தமது புனைகதைகளின் கதைப்பொருளாகக் கொள்கின்றனர்.
பொதுமைப் பண்புகள் கூட களத்திற்கும் சூழலிற்குமிணங்க வேறுபடுமெனச் சூழலியலாளர்கள் கருதுகின்றனர். காதல், குடும்பம், சமூக உறவுகள் என்பனவற்றின் உணர்வுகளும் நடத்தைகளும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடும். எனவே பொதுப் பண்புகளைப் புனைகதையின் கருவாகக் கொள்ளும்போதுகூட களமும் சூழலும் இவற்றின் இயக்கத்தில் வகிக்கும் செல்வாக்கினை ஒதுக்கிவிட முடியாது. புதிய படைப்பாளிகள் இவற்றினைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தகழியின் செம்மீனில் கறுத்தம்மாவிற்கும் பரீக்குட்டிக்கும் ஏற்படும் காதலையும் உணர்வுகளையும் நடத்தைகளையும் சென்னை நகரப் புறத்தில் வைத்துச் சித்தரித்துவிட முடியாது. அதற்குக் கடலும் கடல்சார்நிலமும்தான் தேவை. உலகில் வெற்றிபெற்ற புனைகதைகள் அனைத்தும் நிஜமான கதைக்களத்தையும் சூழலையும் கொண்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. புனைகதையின் யதார்த்தப் பண்பு என்பதில் சமூகவியலின் பண்பாடு, கலாசாரம், நடத்தை, சடங்குகள், கிரியைகள், உணர்வுகள் என்பன மட்டுமல்லாது யதார்த்தமான களமும் சூழலும் அடங்கும். சூழல் மனிதனுடைய நடத்தைகளை நிர்ணயிக்கின்றது. மலைநாட்டின் மானிடன் இயல்பாகவே சமவெளி மனிதனிலும்பார்க்க மூர்க்கமானவனாக இருப்பான். வன்னிக்காட்டின் மானிடன் கொங்கிரிட் காட்டின் (நகரம்) மானிடனிலும் பார்க்கச் சுதந்திர உணர்வுமிக்கவனாக இருப்பான். கடலும் கடல் சார் நிலத்திலும் வாழும் மனிதன் இரக்ககுணமுடையவனாகவும் அதேவேளை எவருக்கும் எதற்கும் அச்சப்படாதவனாகவும் இருப்பான். மானாவாரி கமக்காரனுக்கும் குளநீர்ப்பாசனக் கமக்காரனுக்கும் உணர்வுகளில் வித்தியாசம் இருக்கின்றது. மானாவாரிக் கமக்காரன் எந்த இடரையும் சர்வசாதாரணமாக ஏற்றுத் தன்னைத் தேற்றிக் கொள்ளச் சூழல் அவனைத்தயார்ப்படுத்தியிருக்கின்றது. குளநீர்ப்பாசனக் கமக்காரனால் சிறுதோல்வியையும்
34 ஞானம் - ஜனவரி 2005

இழப்பையும் ஏற்றுத் தேறிக்கொள்ளும் மனப்பக்குவமில்லை. இவ்வாறு எவ் வளவோ உதாரணங்களைச் சொல்ல முடியும். புனைகதைப் படைப்பாளிக்கு இவை தெரிந்திருக்கத்தான் வேண்டும்.
குறித்த பிரதேசத்தின் களமும் சூழலும் தாம் கதை நிகழ்கின்ற நாடகமேடையாகும். அறிவியற் புனைகதைகளுக்கும் வரலாற்றுப் புனைகதைகளுக்கும் மாத்திரம் களமும் சூழலும் கற்பனையானதாக இருக்கின்றன. ஏனைய அனைத்துப் வகைகளும் நிஜமான களத்தினை எடுத்துக் கொண்டுள்ளன. களத்தின் விபரணை களும் வர்ணனைகளும் படைப்பாளியின் அவதானிப்புத் திறனால் செழுமை பெறும். செங்கை ஆழியானின் காட்டாறு, டானி யலின் தண்ணீர் ஆகிய நாவல்களில் இவற்றினைச் சிறப்பாகக் காணமுடியும். வன்னிக் காட்டினையும் குடியேற்றத் திட்டத்தையும் காட்டாறு நாவல் களமாகவும் சூழலாகவும் கொண்டுள்ளது. வடமராட்சிக் கிராமத்தை தண்ணீர் நாவல் களமாகக் கொண்டுள்ளது. கதை நிகழ்கின்ற பிரதேசத்தின் உண்மைப் பெயரைக்
புனைகதை
கற்பனைப் பெயராகப் பல எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டாலும் பிரதேசப்புவியியல்
விபரங்களும் விபரணைகளும் யதார்த்த மானவையாகவிருக்க வேண்டும் காட்டாறு நாவலில் வரும் பிரதேசம் செட்டிகுளமாகும். ஆனால் அது கடலாஞ்சிக்கிராமம் என்ற பெயரில் சித்திரிக்கப்படுகிறது.
களத்திற்கும் சூழலிற்கும் மேலைத்தேயப் படைப்பாளிகள் கொடுக்கின்ற முக்கியத்துவத்தினைப் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் வழங்குவதில்லை. உண்மையில் அதன் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவ தில்லை. ஆனால் கி.ராஜநாராயணின்
புனைகதைகளில்
ஞானம் - ஜனவரி 2005
படைப்புகளில் கரிசல் காட்டுப் பிரதேசக் களமும் தி.ஜானகிராமனின் படைப்புகளில் திருநெல்வேலிப் பிரதேசக் களமும் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளன. அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணினைக் கற்பனையின்றித் தம் படைப்புகளில் சித்திரித்துள்ளனர். ராஜம்கிருஷ்ணன் தனது படைப்புக்களுக்கான களங்களில் போய்ச் சிலகாலம் வாழ்ந்து அவதானித்துத் தன் படைப்புகளைத் தந்துள்ளார். அண்மையில் வெளிவந்த வைரமுத்துவின் நாவலான கரிசல்காட்டுக் காவியத்தின் வெற்றிக்குக் காரணம் அவர் எடுத்துக் கொண்ட களமும் சூழலும் தான். நந்தியின் மலைக்கொழுந்தினை மலைநாட்டின் களத்தில் தான் அவர் சித்திரித்துள்ளார். அவரின் நம்பிக்கைகள் இலங்கையின் பல பிரதேசக் களங்களைக் கொண்டுள்ளது. செங்கை ஆழியான் யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும் வன்னிப் பிரதேசங்களில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் கடமை நிமித்தம் கழி(ளி)க்க நேர்ந்தமையால் அவரது படைப்புகளில் காடு, கழனி, நதிகள், நீர்ப்பாசனக் குளங்கள், புலவுகள் என்பன களங்களும் சூழலுமாகியுள்ளன. தம்பல காமத்திலிருந்து அருவியாற்றங்கரை வரை வடகுவிவுவளைவாகச் செல்கின்ற யானைகள் வழித்தடத்தினை (Elephant Corridor) களமாகக் கொண்டது யானை என்ற நாவல். தன் காதல் மனைவியைக் கொன்ற யானையைத்தேடி அதன் தடத்தினைப் பின்பற்றிக் காடுமேடெல்லாம் அலைந்து அதனைப் பழிவாங்கும் மனிதன் ஒருவனின் விலங்குக் குணத்தினை யானை நாவல் சித்திரிக்கும்போது காட்டின் அழகு பகைப்புலமாகின்றது. கதை சித்திரிக்கின்ற பிரதேசத்தின் பரிச்சயமும் இயற்கைச் சூழல் அவதானிப்பும் இல்லாமல் புனைகதை
35

Page 21
களைப் படைத்துவிடமுடியாது. வாசகர்கள் புனைகதைகளில் கதையை மட்டுமே படிக்க விரும்புகிறார்கள். அவர்கள் கதையின் போக்கில் குறுக்கிடும் களவிபரங்களைத் தவிர்த்துவிடுகிறார்கள்’ என்ற வாதம் இலக்கியத்திற்கு உகந்ததன்று. கதையின் ஓட்டத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதற்காக சுஜாதா இவ்வகைக் களவிபரணைகளைக் கூடியவரை தவிர்த்துவிடுவதுண்டு. எனினும் அவரின் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற நாவலில் களச் சித்தரிப்பு அற்புதமாக விழுந்துள்ளது. ஏனெனில் அதனை அவர் 'ஆம்செயர் எழுத்தாளராக ஓய்வாக இருந்து கற்பனை செய்து எழுதவில்லை. கதை நிகழ்கின்ற களத்துக்கே சென்று ஆராய்ந்து படைத்துள்ளார்.
எனவே முன்னணிப் படைப்பாளிகள் தமது புனைகதைகளுக்கேற்ற களத் தினையும் சூழலையும் தேடிக் கொள்வ தில்லை. அவர்களின் தரிசனத்தில் படும் பாத்திரங்கள் வாழ்கின்ற களத்தினையே தமது புனைகதைக்குரிய பகைப்புலமாகக் கொள்கிறார்கள். கல்கி தனது பொன்னி யின் செல்வன் வரலாற்று நாவலை எழுதுவதற்காக அந்த நாவலின் பாத்திரங்கள் உலாவியதாகக் கருதப் படுகின்ற இலங்கையின் அனுராதபுரப் பகுதியிலும் பொலநறுவைப் பகுதியிலும் அலைந்துள்ளார். புனைகதைசாரா நாவல் களில் முக்கியமான ஒரு படைப்பாகக் கொள்ளப்படும் அலெக்ஸ் ஹெலியுனுடைய Roots என்பது ஆபிரிக்கக் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவில் குடியேற்றப் பட்டு பட்ட அவலங்களை விபரிப்பது அவ்வடிமைகள் பரம்பரையில் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவராகிய அலெக்ஸ்ஹெலி தனது மூதாதையரின்
36
ஆபிரிக்கக் கிராமத்திற்குச் செல்கிறார். தனது பரம்பரையின் அடிவேரை அங்கு காண்கிறார். அங்கிருந்து கப்பலில் அண்ட வெயர் மட்டும் தரித்து அக்காலக் கப்பல் ஒன்றில் வெறுந்தளத்தில் படுத்து அமெரிக்காவை வந்தடைகிறார். தன் மூதாதையர் எப்படி விலங்குகளிலும் கேவலமாக அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்திவரப்பட்டனர் என்பதை அனுபவரீதியாக உணர்ந்து அந்த வலியுடன் தனது நாவலை எழுதி முடித்தார். படைப்பனுபவத்தின் உச்சம் அதுதான். களமும் சூழலும் கற்பனைகளல்ல. நிஜம். அந்த நாவலின் வெற்றியும் அவற்றில்தான்
தங்கியுள்ளது.
இன்னோர் உதாரணத்தினையும் UTi556 Tin Hotel, News Paper, Air Port, Strong Medicine (pg56)It60T BIT66)5606iT எழுதிய ஆர்தர்ஹெய்லி தனது நாவல்களை எழுதுவதற்காகக் குறிப்பிட்ட களங்களில் வாழ்ந்து பெற்ற அனுபவம் ஒரு தனி நூலாகும். அதற்காக அவர் சேகரித்த தகவல்கள் ஏராளம் ஏராளம். அமெரிக்க நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஏர்னெஸ்ட் ஹெமிங்வே இரண்டு களங்களில் அனுபவம் பெற்றவர். ஒன்று யுத்தகளத்தில் அம்புலன்ஸ் றைவராகப் பணியாற்றியதால் பெற்ற அனுபவம் A Farewell to Arms, For Whom the Bell Tolls ஆகிய யுத்த கள நாவல்களைப் படைக்க வைத்தது. இரண்டு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதில் ஹெமிங்வேயுக்கு மிகுந்த ஈடுபாடு. அதனால் கடல் களத்தில் அவர் U60)L55 The Old Man and the Sea (EBITU6) பரிசினைச் சுவீகரித்துக் கொண்டது. எனவே புனைகதைகளுக்குக் களமும் சூழலும் மிகமிக முக்கியமான இலக்கிய
அம்சங்களாம்.
O
ஞானம் - ஜனவரி 2005

O O இலங்கையில்
O O O O O தமிழ்தொலைக்காட்சி நிகழ்ச்சித்
O தயாரிப்பாளர்களின் கமரா
O O O O திருப்பப்பட வேண்டிய பக்கங்கள் மாவை வரோதயன் இலங்கையின் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய ரசனைக் குறிப்புகளை ஞானம்' சஞ்சிகையில் தொடர்ந்து எழுத வேண்டும் என்று துணிந்திருந்தேன். அதற்கு இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா திருப்பப்பட வேண்டிய பக்கங்கள்’ என்பது நான் இட்டுக் கொண்ட தலைப்பு அதன் நோக்கங்கள் இரண்டு வகையானவை 1 தொலைக்காட்சி ரசிகர்களிடத்தில் எது நல்லநிகழ்ச்சி என்பதைச் சுட்டிக் காட்டுவது 2 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நல்ல தரமான நிகழ்ச்சிகளைத் தரும் வகையில் கோடி(ட்டுக்) காட்டுவது
காரணம் தொலைக்காட்சி என்ற ஊடகம், அதன் வெளிப்பாட்டு முறைகள் என்று பார்க்கும்போது இலங்கையில், தமிழ் மொழியினூடாக வரும் தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் மிகுந்த பின்னடைவில் இருப்பது கண்கூடு அதற்குரிய காரணகாரியங்களை எழுதுவது ஆராய்வது விமர்சிப்பது என்பது மிகமிகச் சங்கடமான விடயம்
எனவேதான் எந்த வழியால் போவது உசிதம்’ என்று சொல்வதன் மூலம் எங்கே நிற்கிறோம் என்பதை உணரவைக்க முடியும் என்ற பணியில் இறங்கினேன். அந்த முயற்சியில் எனது இரு கட்டுரைகள் ஞானம் இதழில் சற்று நீண்டகால இடைவெளியில் பிரசுரமாயின.
1 தொலைக்காட்சி நாடகங்கள் பற்றியது. 2 விவரண நிகழ்ச்சிகள் பற்றியது. தொடராக எழுத்தில் இறங்குவதற்குத் தடையாக உள்ள பிரதான காரணம் வாசகர்களின் பின்னூட்டல் ஆகும். ஆனாலும் ஞானம்'ஆசிரியர் தொடர்ந்து எழுதும்படி வற்புறுத்துவார்.
அண்மையில் அரசசார்புத் தொலைக்காட்சி ஒன்றின் தமிழ் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியை நேரில் சந்திக்கக் கிடைத்தது. அவர் ஞானம்’ இதழில் வந்த கட்டுரைகளைப் பாராட்டியதோடு அது பற்றிய கவனத்தை நிர்வாக பீடத்தின் கவனத்துக்கு இட்டுச் சென்றமை பற்றியும் குறிப்பிட்டார்.
அதுபோல் இன்னொரு தொலைக்காட்சியின் இளம் ஊடகவியலாளர் என்னைச் சந்தித்து அக்கட்டுரை தன்னைப் பாதித்த விடயம் பற்றிக் கூறி என்னை மேலும் தொடர்ந்து எழுதும்படி கேட்டுக்கொண்டார்.
அந்த உற்சாகத்துடன், இனி தொடர்ந்து எனது விடயதானத்தை நான் முன்குறிப்பிட்ட எல்லைகளுக்குள்நின்று ஞானம் இதழில் தொடர்ந்துதர விரும்புகின்றேன்.
ஞானம் - ஜனவரி 2005 37

Page 22
'அட்டப்பட்டம’
சஞ்சிகை நிகழ்ச்சி சுயாதீன தொலைக்காட்சியில் பிரதி புதன் கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி-அட்டப்பட்டம 'எண் கோணச் சட்டகம்' என்று தமிழில் அதனைத் தொகுத்து வழங்குபவர் ஹஸந்த பூரீ லால் ஹெற்றியாராச்சி என்ற இளம் ஊடக
வைத்துக் கொள்வோம்.
வியலாளர்.
(இவர் தொகுத்தளிக்கும் தொற மண்டலாவ' என்ற நிகழ்ச்சிக்காக அண்மையில் 'சுமதி - விருது பெற்றவர். அந்த நிகழ்ச்சி பற்றிய பார்வை மற்றொரு சந்தர்ப்பத்தில் தருவேன்.)
அட்டப்பட்டமவின் உள்ளடக்கம் இதுதான் அவ்வப்போது நடைபெறும் அபூர்வமான
‘உலகில், இலங்கையில்
விடயங்கள் தொலைக்காட்சிக் கமரா ஊடாக பார்வையாளர்களுக்குத் தருவ தாகும். உதாரணமாக பூனை அம்மாவிடம் அணில் பிள்ளை பால் குடிப்பது. எலியும் பூனையும் இணைபிரியா நண்பர்களாக இருப்பது. வலது குறைந்த ஒருவன் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத் Ց16:19յl.... இடம்பெறும் நிகழ்வுகளே இடம் பெறும்.
9,60TT6) Believe it or not GUITGörg அல்லாது இவர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துத்தரும் லாவண்யம் விசேட
இவ்வாறு எதேச்சையாக
மானது. அந்தக் காட்சியின் சந்தர்ப் பங்களை விளக்க அதில்வரும் பாத்திரங் களுக்கு செல்லமான பெயரிட்டு அந்த “running Commentary” JELġbg6JTff.
38
நிகழ்ச்சியை மேலும் வலுவுள்ள தாக்கும் வகையில் சிங்கள மொழியின் ஆழ அகலங்களைத் தொட்டு விளையாடி அந்த நிகழ்ச்சியை ரசிப்பது ஒரு சுகானுபவம்.
வாரம் ஒரு சொல்லைப்பிடித்துக்
நீச்சலடிப்பார்.
கொள்வார். அந்தச் சொல்லுடன் வரும் அனைத்து உரிச் சொற்கள், வினைச் சொற்கள், பெயர்ச் சொற்கள், பகுதிகள், விகுதிகள், மொழி வழக்குகள், பழ மொழிகள், இலக்கிய உதாரணங்கள், விளக்கக் கதைகள் என்று பலவற்றையும் வெகு விரைவாக லாவகமாக, நகைச் சுவையாக வெளிப்படுத்துவார்.
நிகழ்ச்சி முடியும்போது அந்த ஒளிப்படங்கள், தகவல்கள் தந்து உதவியவர்களுக்கும் சிங்கள மொழியியல் அறிஞர்களுக்கும் நன்றி தெரிவிப்பார்.
நடப்பது இதுதான். அந்த அரைமணி நேர நிகழ்ச்சியை நடத்த அவர் தேடித் தொகுக்கும் விடயங்களின் கனதி அதிகம். துறைசார்ந்த அறிஞர் களுடன் உசாவி உரிய தகவல்களைச் சேகரித்து, எழுதித் தொகுத்து, பயிற்சி செய்து, பட்டியல்படுத்தி - செழுமைபடத்
தருகின்றார்.
நமது தமிழ் நிகழ்ச்சி சார்ந்த ஊடகவியலாளர்கள் எவராவது
அத்தகைய அர்ப்பணிப்புடன் செய் கிறார்களா? என்றால் மருந்துக்கும் இல்லை. எனவே அப்படியான நிகழ்ச் சிகளைப் பார்ப்பதன் மூலமே அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.
O
ஞானம் - ஜனவரி 2005

இலக்கிய உலகின் இழப்புக்கள்
எழுத்தாளர் சொக்கன் இறந்துவிட்டார் என்ற செய்தியை முதுபெரும் எழுத்தாளர் நந்தி தொலைபேசியில் “ஞானம் காரியாலயத்திற்குத் தெரிவித்தபோது நான் அதிர்ந்துபோனேன். 2005 பெப்ரவரி மாதத்தில் சொக்கனுக்குப் பவள விழா கொண்டாட ஞானம் தீர்மானித்திருந்தது. இதுபற்றிச் சொக்கனுக்கும் தெரிவித்திருந்தோம். அவரது அட்டைப்படத்துடன் பெப்ரவரி இதழை வெளிக்கொணர்வது என்றும், செங்கை ஆழியான் ஞானம் சார்பில் விழா ஒழுங்குகளை யாழ்ப்பாணத்தில் செய்வதாகவும் தீர்மானித்திருந்தோம். சொக்கன் பற்றிய கட்டுரையை செங்கை ஆழியான் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை தீர்மானித்தபடியே அடுத்த இதழில் இடம்பெறும்.
எழுத்தாளர் புத்தொளி சிவபாதம் இறந்த செய்தியை எமக்குத் தெரிவித்தவர் செங்கை ஆழியான். நீண்ட காலமாக யாழ். இலக்கிய வட்டத்தின் முக்கியஸ்த்தர்களில் ஒருவராக விளங்கியவர் புத்தொளி. எனது கால தரிசனம் என்ற முதலாவது சிறுகதைத் தொகுதி 1972ல் வெளியாகியபோது நான் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பத் தவறியபோதும் எழுத்தாளர் சிற்பி அவர்கள் மூலம் அதனை அறிந்து வாழ்த்துச் செய்தி அனுப்பி மகிழ்வித்தவர். 2003ல் ’சுதந்திரன் சிறுகதைகள் அறிமுகவிழா ஞானத்தின் அனுசரணையுடன் கண்டியில் நடந்தபோது, அவரும் செங்கை ஆழியான் குடும்பத்தினரும், பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும், செம்பியன் செல்வனும் எனது இல்லத்திலே தங்கியிருந்து இலக்கிய உலகின் பலதும்பத்தும் பேசி மகிழ்ந்தபோதுதான் புத்தொளி பற்றி நன்கு அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. ஞானத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டிவந்த புத்தொளி ஈழத்து எழுத்தாளர்களைப் பெரிதும் நேசிப்பவர். கடைசிக் காலங்களில் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய விபரநூல் ஒன்றினை புகைப் படங்களுடன் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
எழுத்தாளர் கே.வி.நடராஜன் ஈழத்து முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். இவரது சிறுகதைகள் ஒரு காலகட்ட யாழ்ப்பாணத்தைப் படம்பிடித்துக் காட்டுவன. "யாழ்ப்பாணக் கதைகள்’ என்ற இவரது சிறுகதைத் தொகுதி யாழ்ப்பாணச் சமூகத்தின் முகமூடிகளைக் கிழிக்கின்றன.
கவிஞர் தில்லைச் சிவன் ஈழத்தின் தரமான மரபுக் கவிதையாளர்களில் ஒருவர். தமிழ்த் தேசிய உணர்வோடு’தமிழன் என்ற பத்திரிகையை நடத்தியவர். 1963ல் இலங்கைத்தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகியபோது அதில் அங்கம் வகித்து முக்கிய செயற்பாட்டளாராக விளங்கியவர்.
மருதூர்க்கனி சிறந்த கவிஞரும் சிறுகதையாளரும் நாடக ஆசிரியருமாவார். அங்காடிவியாபாரியாக, நெசவாளராக, மீன்பிடித் தொழிலாளியாக, ஆசிரியராக, அரசியல்வாதியாகப் பல்துறை அனுபவம் பெற்றவர்; முற்போக்குச் சிந்தனை யாளர். மண்பூனையும் எலிபிடிக்கும் என்ற சிறுகதைத் தொகுதி, ‘அந்த மழை நாட்களுக்காக என்ற கவிதைத் தொகுதி ஆகியன இவரது நூல்கள்.
இவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் ஞானம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
O
ஞானம் - ஜனவரி 2005 39

Page 23
“Figgj : கவனிக்கப்படாத
கவனிக்கப்பட வேண்டிய
நவீன கவிதை முன்னோடி
கலாநிதி செ. யோகராசா
19ழத்து நவீன இலக்கியம் சார்ந்த ஆய்வுகள் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்று வந்துள்ளன; நடைபெற்று வருகின்றன. படைப்பாளி ஒருவரது தொகுப்பு காலந்தப்பி வெளிவருகின்றபோது அதனை ஆய்வுக்குட்படுத்தின் முன்னர் குறிப்பிட்ட கருத்துக்கள் மாற்றமுறவோ விரிவுபெறவோ வாய்ப்பு ஏற்படுவதுண்டு. சிறுகதை எழுத்தாளர் பித்தனது கதைத்தொகுப்பு இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகவுள்ளது. கவிதையைப் பொறுத்தவரையிலேகூட ஈழகேசரி மறுமலர்ச்சிக் கவிஞருள் ஒருவராகிய சாரதா வின் கவிதைத் தொகுப்பு (காலச்சுவடு) காலங்கடந்தே (1993) வெளியானது. இதனாலேயே, "இவர்களுள் நாவற்குழியூர் நடராசன். அ. ந. கந்தசாமி, மஹாகவி ஆகிய மூவரும் இக்காலப் பிரிவில் தோன்றிய முக்கியமான கவிஞர்களாவர்” என்ற அபிப்பிராயம் எழலாயிற்று. எனினும், இன்று சாரதாவின் கவிதைத் தொகுப்பினைக் கவனிக்கின்றபோது அவரும் அக்காலப் பிரிவிலே தோன்றிய முக்கியமான கவிஞரென்பது புலப்படுகின்றது. இதுபற்றி சுருக்கமாக எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
-2-
சாரதாவின் இயற்பெயர் வித்துவான் அ. சரவணமுத்து என்பதாகும். ஏனைய
மறுமலர்ச்சிக் காலக் கவிஞர்களுக்கு முன்னரே எழுதத் தொடங்கிய சாரதா, அவ்வேளையில், அவர்களைவிட தமது கவிதா ஆற்றலை வெளிப்படுத்தியவர் என்று கூறலாம். தமிழகத்திலுள்ள 'கலாமோகினி, கிராம ஊழியன்’ என்பவற்றிலே அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவ்விதத்தில், பலருமறிந்திருக்கமுடியாத சுவாரஸ்யமான விடயமொன்றினைக் குறிப்பிடுவது பயனுடையது. புதுமைப்பித்தனுக்கும் தமிழகத்திலிருந்த, கவிஞரென்று தம்மைப் பிரபலப்படுத்திக் கொண்ட ஒருவருக்குமிடையில் இலக்கியச் சர்ச்சையொன்று ஏற்பட்டபோது ஈழத்தவரான ‘சாரதா புதுமைப் பித்தனுக்குச் சார்பாக,
ஒய் கானும் வர்த்தகரே
உமக்கேனித் தலைக்கிறுக்கு
நாப் போலக் குரைக்கின்றி7, நல்லவரோ நீர் சொல்லும்’
40 ஞானம் - ஜனவரி 2005

என்று ஆரம்பிக்கும் கவிதையொன்றினை கிராம ஊழியனில் எழுதியிருந்தமையே அவ்விடயமாகும்.
மேலும் மஹாகவி, அ. ந. கந்தசாமி முதலான சமகாலக் கவிஞர் களுடனும் சாரதா நெருக்கமான உறவு கொண்டிருந்தமையும் கவனத்திற்குரிய விடயமாகும்.
-3-
சாரதா, தமது சமகாலக் கவிஞர் களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சமூக நோக்குடைய கவிதைகளை அதிகமெழுதி யுள்ளமை புலப்படுகின்றது. இத்தகைய சமூக நோக்கு ஆரம்ப நிலையில் ஈழகேசரி’க் கவிஞர்கள் போன்று குடி, உயிர்ப்பலி, ஆங்கில ஆட்சியாலேற்பட்ட விளைவுகள் (ஆங்கில மொழி ஆதிக்கம், நாகரிக ஆதிக்கம்), பழம்பெருமை முதலியன பற்றியனவாக வெளிப்படினும் கால ஓட்டத்தில் மாற்றம் பெறலாயிற்று, எடுத்துக் காட்டாக 'துயிலெழுச்சியின் ஒரு பகுதி கவனத்திற்குரியது :
பழந்தமிழர் அது செய்தார். இதுவும்
செய்தார் பண்ணாததவர்கணக்கில் இல்லை'என்று குழந்தைமொழி வழங்களிலோர்
கொள்கையில்லை குவலய மெல்லாம் புரட்சிக் கூச்சல் கேட்டும் விலங்குகளாய் உணர்விழந்துஅறிவும்மங்கி வேதாந்தம் பேசுகிறோம் விழல்
வேதாந்தம்! இளந்தமிழா! எழுத்துலகம்
எல்லாம் சுற்றி எங்கள் நிலை கண்டுநவ எழுச்சி
காண்டாய்”
ஞானம் - ஜனவரி 2005
இங்கே, பழந்தமிழ்ப் பெருமையானது அகக் கலப்பின்றி ஆக்கபூர்வமான நிலையில் அணுகப்படுவது கவனிக்கத் தக்கது.
பெண்கள் நிலைபற்றி கவிதைகளில்
சாரதா "வண்ணாரக் குலத் துதித்தும் வடிவழகால் வாலிபரைப் புண்ணாக்கி மனம் பறிக்கும் புதுமை யளோர் போக்கிரிப் பெண்”, தன்னிடம் முத்தங்கேட்ட பெண்ணாசைப் பித்த னொருவனுக்குப் பதிலடி கொடுப்பதை விவரிக்கும் 'சூடுகண்ட பூனை இவ்வழி கவனத்திற்குரிய தொன்று. எனினும், இவ்வாறான கவிதைகளை விட, காவியப் பெண்களான சீதை (நியாயவாதம், பரதன் சீற்றம்) சகுந்தலை முதலானோர் நிலை பற்றியெழுந்த கவிதைகள் கவனத்திற்குரியன. 'சீதையைக் காட்டுக் கனுப்பியது தவறு என்று இராமனிடம் சீறுகின்றார், வான்மீகி
'மாடாடு வாங்கி விற்கும் வழக்கமென, மங்கையரை சோடாக வைத்து இன்பந் துய்த்துமணங் கைத்துவிட்டால் கூடாதென் றோட்டுதற்கோர் கொள்கையுண்டோ ஆடவர்க்கு?
s
சகுந்தலை, துஷ்யந்தனிடம் இவ்வாறு எடுத்துரைக்கின்றாள் :
"மன்னவனே உண்மைகளை
மறைப்பதென்றால், மற்றவர்கள் என்னசெய்யார்? என்னையொத்த ஏழைகளுக் கெங்குபுகல்? பெண்குலமே காமுகராற்
பீடழியப் போகுதையோ? என்ன செய்வேன்? நம்பினதற்(கு)
இரண்டகம் செய்திட்டனையோ?"
4.

Page 24
சமகாலப் பிரச்சினைகள் சில (எ-டு: பட்டதாரிகளின் வேலையற்ற நிலை, நகர வாழ்வின் அலங்கோலம்) சாரதாவினால் இனங்காணப்பட்டுள்ளன. அரசியல் மாற்றங்கள் கவனத்திற்குள்ளாகின்றன. பழைய கவுன்சில் கலைந்து, புதுத் தேர்தல் நடக்கின்ற சூழ்நிலை உருவானபோது கவிஞர் பாடுகின்றார்:
"கத்தை கத்தையாகக் காசு கட்டிக் கொண்டுநீர் - பெருங் கணக்குவிட்டுத் திரிகிறீர் கடையைக் கட்டுங்கள்; மெத்த வீரம் பேசியென்ன வெட்டி விழுத்தினர்? - வெளி வேஷமெல்லாம் போதும் வீட்டை விட்டு விலகுங்கள்’ இரண்டாவது உலக யுத்த காலச் சிந்தனை இதுவாகும் :
இருபது சதத்துத் துணிக்குவிலைபார்
இரண்டு ரூபாயாம் சரிசரி அதுவும் வருவது இன்று
சட்டென நின்றுவிட்டால். (கட்ட)
எடுத்ததற் கெல்லாம் அன்னியர் கையை
எதிர்பார்த் தேங்காதே; கெடுத்திடும் இந்தக் கேவலபுத்தி
கேள்கேள் தூங்காதே!. (கட்ட)
அற்பமானவை என்று பிறர் கருதுகின்ற விடயங்கள் சிலவும் சாரதாவின் கவிதை களுக்குப் பொருளாகியுள்ளன. அன்புடன் வளர்த்த அரிக்கன் ஆடொன்று அகால பற்றியும் (விதி யிழைத்த சதி), வீட்டைக் காவல் காக் கின்ற நாய்கள் (காவல்) பற்றியும் பாடியுள்ளவை இவ்விதத்தில் கவனத்திற் குரியவை.
மரணமடைந்தமை
42
சாதாரண அனுபவங்களும் கவிஞரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தெகியங்கை என்ற இடத்திற்குச் நினைவுப் பகிர்வினை வெளிப்படுத்தும் போது இவ்வாறு ஆரம்பிக்கின்றார்.
சென்றுவந்த
பிரயாணஞ் செய்வதென்றால் எனக்கோர் ஆசை பேசாமற் போய் வருவேன், எங்கென்றாலும் அரைநாளின் மேலாக ஒருவர் வீட்டில் ஆறநிற்ப தென்னியல்புக் கடுக்காதப்பா சிரந்தாழ்த்தி வணங்கிடவுஞ் செய்வேன்; ஆனால் செட்டுவிடும்முட்டர்களைச் சேரமாட்டேன்; பிரவேசப் பரீட்சையிலே கண்டேன், உங்கள் பிரமாத அடக்கமெல்லாம் பிறப்புவாசி!
வரவேற்றிர் உபசரித்தீர் வளைத்துப்பேசி வந்த கருத்தாளாளாய் வலிந்து கேட்டீர் பரதேசம் வந்தொருநாள் ஆவதற்குள் பாசத்தாற்பிணிப்பதற்கும் பார்த்திர் உங்கள் பிரதேசம் முழுவதையும் கூட்டிக் காட்டிப் பிடிப்பறிய ஏதேதோ பிரித்துக் கேட்டீர் உரமான மனமுடைய பெரியோர்க்கென்றும்
y:59
உவமான மாயொளிரும் மலையும் உண்டே!
ந. பிச்சமூர்த்தி, தாம் எழுதுவதை நிறுத்திவிட்டதாகக் கலைமகளில் எழுதியபோது அதனைத் தாங்கவியலாது, பதிலெழுதுகின்றார், சாரதா "கலைமகளிற் சிலநாளின்
முன்னர்தான், நீர்க் காக்கை”யெனுந் தலைப்பிலொரு கடிதங் கண்டேன்; புலமையுள்ளம்படைத்தநண்பர்பிச்சமூர்த்தி புதிர்போட்டு எழுதி வைத்தார் - புதிய
செய்தி!
ஞானம் - ஜனவரி 2005

எழுதுவதை நிறுத்தி விட்டேன்;
இனிமேற் சும்மா இருப்பதிலே சுகங்கான
இருக்கின்றேனாம்; முழுவதையும் படித்தபின்னர், நண்பர்
செய்த முடிவெமக்குப் பெருங்கவலை மூட்டிற்
றன்றே!
ஆனாலும் அவரொன்றை மறந்துவிட்டார் அவரெழுத்தை அனுபவிக்கும் அன்பர்
வேறு, தானாகப் பிடிக்கவில்லை'என்று சொல்லித் தனதுகலா சிருஷ்டிகளைச் சாம்ப ராக்க ஏன7க்குந் துணிந்திட்டார்? இந்தச் செய்தி இலக்கிய நண்பர்களுக்கு
இடிபோலத்தான் வீணாக, அவர் செய்ததைப்போல், வேறு மேதைகளுஞ் செய்துவிட்டால் மிச்சமேது
சாரதாவின் கவிதை உள்ளடக்கம் மேற்கூறியவாறெல்லாம் அமைய, கவிதை வெளிப்பாட்டு முறைபற்றியும் முக்கிய தொரு குறிப்புரைக்க வேண்டும். ஏனைய ஈழகேசரி / மறுமலர்ச்சிக் கவிஞர்கள் போன்று ஆரம்பத்தில் மரபு சார்ந்த ஒசை,
கவிதைகளையும் சாரதா எழுத முற்பட்டார். ஆரம்பத்திலே குறிப்பிட்ட, புதுமைப்பித்தனுக்குச் சார்பாக எழுதப் பட்ட கவிதையும், இறுதியாக மேலே குறிப்பிட்ட, ந. பிச்சமூர்த்திக்குச் சார்பாக எழுதப்பட்ட கவிதையும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகின்றன!
- 4
இதுவரை கூறியவற்றை நினைவு கூர்கின்றபோது, மறுமலர்ச்சிக் காலக் கவிஞருள் சாரதாவும் கவனத்திற் குரியவரென்பது ஒரளவு புலப்படலாம்; சில விதங்களில், மஹாகவியோடும் ஒப்பிடக் கூடியவராகலாம். மஹாகவியின் கவிதை களில் ஐம்பதுகளின் பின்னர் அதிகளவு முகிழ்க்கின்ற விடயங்கள், சில சந்தர்ப்பங் களிலே, ஐம்பதுகளுக்கு முன்பே சாரதாவிடம் முகிழ்த்திருக்கலாம் - எனினும், இவை யாவும், சாரதாவின் கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்ட பின்பே உறுதி செய்யப்பட வேண்டியவை. ஆயினும், முன்னோடிக் கவிஞர்களுள் சாரதாவும் ஒருவரென்பதை இவ்வேளை உறுதி செய்ய
கவனிக்கப்பட வேண்டிய,
சந்தம் என்பவற்றுக்கு முதன்மை d O M. v. கொடுத்தாலும் அவர்கள் சிலர் போன்று முடியுமென்றே கருதுகின்றேன்! பின்னர் பேச்சோசைப் பாங்குடைய O
வாசகர் கவனத்திற்கு .
ஞானத்தின் புதிய தொடர்பு முகவரி:
தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 46°து ஒழுங்கை, Gole5 IT GUglblq - O6 (கண்டியில் இயங்கும் தலைமை அலுவலக முகவரியில் மாற்றம் இல்லை)
ஞானம் - ஜனவரி 2005 4.

Page 25
அரைத்த மாவு
egaõrgeguseõr தொலைந்து போன பசுமைப் பிரதேசங்களாக தரிசனமாகிறது
எங்கள் கிராமம்.
பனை விடலிகளினுரிடே செம்மண் காவிவரும் புழுதிக் காற்றில் என் தாயக மண்ணின் சுகந்தம் தொடருமா?
சமாதானப் புறாக்களை
ஜனநாயகப் பயங்கரவாதிகள்
திசைமாறிப் பறக்க
விழி நடாத்துகிறார்கள்.
தொப்புள் கிைாடியறுப்பில் UShan 65mgరీ உறவு வளரும் தாய் சேய் பிணைப்பாக
೨cofré இங்கே அறுபடாமலே இழுபடுகிறது போலி உறவு,
இன்னும் எத்தனை காலம்தான் அfறைத்த மாவையே அfரைத்துக் கொண்டிருப்பது?
44
ச. முருகானந்தன்
கதவு திறக்குமைன்று காத்திருந்தது போதும். éa56aSrrrö Ugé8asèb Umrgg திறக்க வுைத்திட திருஞானசம்பந்தர்களாலும்
cups guesešeodeoதிறக்கும் கதிவையும்
తిrరిuగొ86 లpgయ(Bఈpmగిణితం
வேறு விழியில்லை உடைத்து வெளியேறுவதைத் தவிர
O
ஞானம் - ஜனவரி 2005
 

தோட்டப்புறக் கதைகள்
சாரல்நாடன்
பட்டென்று அடித்தால் புறப்படு
அந்தப் பகுதியில் "ஆஸ்டின்” கார் தோட்டத்துக் கங்காணியார் ஒருவரிடம் தானிருந்தது. தோட்டத்துரைகூட மோட்டார் சைக்கிளும், குதிரையுந்தான் வைத்திருந்தார்.
அந்த ஆஸ்டின் காரை கிழமைக்கு ஒருநாள் வீட்டைவிட்டு வெளியே எடுத்து, பக்கத்தில் உள்ள தலவாக்கொல்லைக்கு போவார், இருந்திருந்து அட்டனுக்குப் போவார். மற்ற நாட்களெல்லாம் லயத்தில் - லயத்தில் நான்கு காம்பராக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டவை. அவருக்கென்று இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள காய்கறித் தோட்டம் வேறு, அதற்குள் கட்டப்பட்ட'கார் கரேஜ் காரை வெளியே எடுத்து, துடைத்து, சூரிய வெளிச்சம்பட வைப்பதற்கு ஒரு டிரைவர். மற்ற நேரங்களில் அவரது காய்கறித் தோட்டத்தில் டிரைவருக்கு வேலை.
அந்த டிரைவருக்குக் கங்காணியிடம் கார் டிரைவராயிருப்பதை விட காய்கறித் தோட்டத்தில் வேலை செய்வதே பிடித்திருந்தது. கார் ஒட்டுவதற்கு தெரிந்தால் மட்டும் போதுமா? கங்காணியாரின் மூட் தெரிந்து ஒட்ட வேண்டும்; வழியில் தெரிந்த யாரையும் காரில் ஏற்றக்கூடாது; என்று இப்படிப் பல எழுதப்படாத சட்டங்கள்.
காரை ஸ்டார்ட்' பண்ணினால் போய்க் கொண்டே இருக்க வேண்டும். எங்கே நிற்பாட்ட வேண்டும் என்பதைக் கங்காணியார்தான், அதுவும் இடம் வந்தவுடன்தான் சொல்லுவார். நடுவில் எதுவும் பேசக்கூடாது, பின்னால் திரும்பிக் கங்காணியாரைப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனை வேறு.
ஒருநாள் இப்படித்தான் காலை ஏழரை மணிக்கே வந்து கங்காணியார் வீட்டிலிருந்து ஒன்பதரை மணிக்கு புறப்பட வேண்டி வந்தது. அன்றுதான் கங்காணி டிரைவரிடம் சொன்னார். இனிமேல் நல்லா நினைவு வைத்துக் கொள். காரிலே உட்கார்ந்து கதவைப் பட்டென்று அடித்தால் புறப்படு என்று அர்த்தம். எங்கே போகிறோம். எப்போது வருகிறோம் என்பதெல்லாம் உனக்குத் தேவையில்லாத சங்கதி. அதற்குமேல் அவரிடம் பேசவா முடியும்?
அப்படியே ஒரு வருஷம் ஓடி மறைந்தது. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஆஸ்டின் கார் குஞ்சுபொரி தோட்டத்தைவிட்டு போய்க் கொண்டிருந்தது. பின்னால் பெரிய கங்காணி மாத்திரம் அமர்ந்திருந்தார். முப்பது மைல் வேகத்தில் மெதுவாக ஒடிக் கொண்டிருந்த கார், லோஹி தோட்டத்தில் ஸ்டோருக்கருகில் வந்ததும், கொஞ்சம் சைட் எடுத்து நிற்பாட்டும் படி கூறினார்.
காரிலிருந்து இறங்கிக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு லோஹி தோட்டத்து ஸ்டோரு கணக்கப்பிள்ளையிடம் கதைக்கத் தொடங்கிவிட்டார். அவர்களிருவரும் நெருங்கிய உறவினர்கள். எப்போது கதைத்து முடியுமோ? டிரைவர் சீட்டில் எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்திருப்பது?
ஞானம் - ஜனவரி 2005 45

Page 26
ஐந்து நிமிஷம், பத்து நிமிஷமானது, பதினைந்து நிமிஷமானது. டிரைவருக்கு லேசாக கண்கள் தூக்க மயக்கத்தில் மூட ஆரம்பித்த நேரத்தில், கார் கதவு பட் டென்ற சப்தத்துடன் மூடப்பட்டது. ஸ்டார்ட் பண்ணிய டிரைவர் காரை முப்பது மைல் வேகத்தில் ஒட்ட ஆரம்பித்தார்.
வெளியே நின்று தன் உறவினருடன் கதைத்துக் கொண்டிருந்த கங்காணியார் கதையின் சுவாரசியத்தில் தன்னை யறியாமலே கதவை பட்டென்று அடித்து விட்டார்.
கார் புறப்பட்டுப் போய் விட்டது. சொன்னபடி செய்யும் சுப்பன் கதை கங்காணியாரின் நினைவுக்கு வந்தது.
சேவல் கூவவில்லை
சேவல் கூவித்தான் விடிகிறது என்று நம்புபவர்கள் தமிழர்கள். உண்மையில், விடிகிற வேளையில்தான் சேவல்கள் கூவ ஆரம்பிக்கின்றன என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக் கிறார்கள்.
ஆனால் ‘குஞ்சு பொரி தோட்டத்தில் அதிகாலையில் சேவல்கள் கூவுவதில்லை. கங்காணியார் சண்முகம் காலையில் ஐந்து மணிக்கு எழுந்தபிறகுதான் சேவல்கள் சத்தம், கோழிகள் சத்தம் தோட்டத்தில் கேட்கும். இது அங்கு ஆண்டுக் கணக்கில் நடந்து வந்த கதை. அதற்குப் பிறகு எழுந்து, காலைக் கடன்களை செய்து, வீட்டு வேலைகளை முடித்து, ஆறுமணிக்கெல்லாம் தொழி லாளர்கள் மலைகளில் இருக்க வேண்டும். இந்த எழுத்தில் வடிக்காத சட்டம் சமீப காலங்களில் மீறப்படுவது போன்ற ஒரு தோற்றம் கங்காணியாருக்கு எழுந்தது.
கவ்வாத்துக் காட்டில் வெட்டப்படும் தேயிலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் ஒரு கோரிக்கை,
46
கொழுந்துக் காட்டில் பெண்கள் எடுக்கும் தேயிலையின் ராத்தல் குறைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை, கானு வெட்டுதலில் கணக்கை குறைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை,
‘புல்லு வெட்டுதலில் தரப்படும் கொண்ட்ரக்ட் காசை உயர்த்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கை. அன்று, தோட்டத்தில் மீறப்படுகின்ற கோரிக்கை உயிர்ப்பு பெறுவது போன்ற ஒரு நினைப்பு. கணக்கப்பிள்ளை பின் தொடர கங்காணியார் வந்து கொண்டிருக்கும் மாலை நான்கு மணி.
"கொக்கரக்கோ. சப்தம் கேட்டது. நின்று நிதானித்து செவி மடுத்தார்.
கொக்கரக்கோ. சப்தம் வருவதில் எவ்வித மாற்றமுமில்லை.
“என்ன இது? என்றுமில்லாத விதத்தில் புதிதாகச் சேவல் கூவுகிற சத்தம்” கணக்கப்பிள்ளையிடம் கங்காணி கேட்டார். கணக்கப்பிள்ளையால் பதில் எதுவும் தர முடியவில்லை. இரண்டு நாளைக்கு முன்னர்தான், தன் வீட்டில் வளர்கிற கோழியும் சேவலும், ஒன்றை ஒன்று இணை சேர்த்துக் கொண்டு தமது காய்கறித் தோட்டத்தில் கம்பீரமாக நடக்க ஆரம்பித்திருப்பதைக் கண்டார். கண்ணை உறுத்திய அந்தச் சேவல் தான் இன்று கூவ ஆரம்பித்துவிட்டது.
கணக்கப்பிள்ளையால் வெளியே சொல்ல முடியவில்லை. திருதிருவென்று
“நாளைக்கு அந்தச் சேவல் கூவக் கூடாது”என்ற கங்காணியாரின் கட்டளை அவர் காதில் தொடர்ந்து ஒலித்தது. அன்றிரவு அவரது வீட்டில் சேவல் அடித்து சமைக்கப்பட்ட கோழிக்கறி தான் இரவுச் சாப்பாடு.
அடுத்த நாள் ‘குஞ்சுபொரி' தோட்டத்தில் வழக்கம்போல் சேவல் கூவவில்லை.
O ஞானம் - ஜனவரி 2005

நான் கண்ட பேராசிரியர்
சோ. சந்திரசேகரன்
அகவை அறுபதில்
- தி. ஞானசேகரன்
கிடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகக் கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அகவை அறுபதை எய்தி மணிவிழாக் காண்பது அவரை அறிந்த சகல தரப்பினருக்கும் மகிழ்வினைத் தரும் நிகழ்வாக அமைகிறது.
பேராசிரியருடைய பெருந்தன்மையையும் மனித நேயப் பண்பையும் நான் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்கு 1991 ஆம் வருடத்தில் கிட்டியது. அக்காலகட்டத்தில் எனது குருதி மலை என்ற நாவல் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. பட்டப்படிப்பிற்குப் பாடநூலாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அக்கல்லூரியின் பேராசிரியர் திரு. போத்திரெட்டி, அந்த நாவலில் முடிந்தவரை அதிகமான பிரதிகளை அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் தமிழகம் செல்ல வேண்டிய தேவை இருந்தது. அவரிடம் நாவலின் பிரதிகளைக் கொடுத்தனுப்பலாம் எனக் கலை இலக்கியச் செயற்பாட்டாளரான அந்தனிஜிவா என்னிடம் கூறினார். அப்போது பேராசிரியருக்கும் எனக்கும் தொடர்பு இருந்ததில்லை. முகப்பழக்கம்கூட இருந்ததில்லை. இந்நிலையில் ஒரு பெரிய மனிதரிடம் ஒரு சுமையை எப்படிக் கொடுத்தனுப்புவது என்று நான் தயங்கினேன். அதனால் அந்தனிஜிவாவே பேராசிரியரைக் கண்டுபேசி அவற்றைத் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பேராசிரியர் மிகவும் சந்தோஷத்துடன் அந்த நூற்பொதியைத் தமிழகத்திற்கு எடுத்துச் சென்றதோடு, பேராசிரியர் போத்திரெட்டி இருக்குமிடம் தேடிச் சென்று அந்த நூல்களைக் கையளித்தார். பேராசிரியர் சந்திரசேகரனுக்குள் ஒரு கலைஞன் இருக்கிறான் என்பதனையும் அவர் சீரிய பண்புகளைக் கொண்ட ஒரு சிறந்த மனிதன் என்பதனையும் நான் அதன்மூலம் அறிந்து கொண்டேன். அவரைச் சந்திக்க வேண்டும் எனப் பெருவிருப்புக் கொண்டு அந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.
1994ல் எனது லயத்துச் சிறைகள்' என்ற நாவல் வெளியாகியது. அதன் அறிமுக
விழாவை கேகாலையில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. பேராசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை அந்த நாவலுக்கு விமர்சன உரை நிகழ்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அவர் உடனே மிகவும் சந்தோஷமாக அதனை ஏற்றுக் கொண்டார். கேகாலையில் நடந்த அந்த நூல் அறிமுகவிழாவிலேதான் பேராசிரியரைச் சந்திக்கும் பெரு வாய்ப்பு எனக்குக்கிட்டியது. அவரது பல்துறைச் செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் முடிந்தது.
ஞானம் - ஜனவரி 2005 47

Page 27
பேராசிரியர் சந்திரசேகரன் தனித்தன்மை வாய்ந்தவர். வெறும் கல்வியாளராகப் பல்கலைக்கழகச் சமூகத்துடனும் உயர் கல்விச் சமூகத்துடனும் தனது ஊடாட்டங்களைச் சுருக்கிக் கொள்ளாது சமூகத்தின் சகல மட்டத்தினருடனும் சமமாகப் பழகுபவர். அரசியல், கல்வி,கலை கலாசாரம், இலக்கியம், சமூகம் எனத் தனது நடவடிக்கைகளை விசாலித்தவர்.
அவருக்கு இருக்கும் மும்மொழிப் புலமை காரணமாக அவர் மூவின மக்களுடனும் தனக்கான புரிதலை முன்வைத்துச் செயற்படுபவர். அவர் பேசும்போது அங்கே ஒரு கலகலப்புத் தோன்றும். எனது அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி 1998ல் வெளியாகியது. கண்டியில் நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவுக்கு அப்போது கலாசார அமைச்சராக இருந்த மாண்புமிகு லசுஷ்மன் ஜெயக்கொடி பிரதம விருந்தினராக வருகைதர ஏற்பாடாகியிருந்தது. அந்த விழாவுக்குத் தலைமை தாங்கப் பொருத்தமானவர் யார் என எண்ணியபோது பேராசிரியரே எனது மனக்கண்முன் தோன்றினார். அந்த விழாவிற்கு கொழும்பிலிருந்தும் மலையகத்திலிருந்தும் வருகைதந்த அத்தனை எழுத்தாளர்களையும் தனித்தனியாக அவர்களைப் பற்றிய விபரங்களுடன் பேராசிரியர் அமைச்சருக்கு அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியபோது நான் பெரிதும் வியந்துபோனேன். அவர் எழுத்தாளர்கள் பற்றிய அத்தனை விபரங்களையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். அத்தோடு நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும் உரைகளின் சாராம்சங்களையும் அமைச்சருக்கு விளக்கி அந்த விழாவை ஓர் சிறந்த விழாவாகப் பரிமளிக்க வைத்தார். எனது நூல் வெளியீடுகளிலேயே மிகவும் சிறந்த நூல் வெளியீடாக அதனை அமைத்த பெருமை பேராசிரியரையே சாரும்.
ஞானம் சஞ்சிகை தொடங்கிய காலத்திலிருந்தே அதன் வளர்ச்சியில் பெரிதும் அக்கறைகாட்டி வேண்டிய ஆலோசனைகள் வழங்குபவர் பேராசிரியர். ஞானம் கலை இலக்கியப் பண்ணை கொழும்புக் கிளையின் அங்குரார்ப்பண வைபவத்தில் முக்கிய பேச்சாளராகக் கலந்து சிறப்பித்தவர் பேராசிரியர்.
பல்துறைச் செயற்பாட்டாளரான பேராசிரியர் சோ. சந்திரசேகரனது அறிவு, நண்பர்கள் சந்திப்பு, உரையாடல், தேடல், வாசிப்பு இவையாவும் அவரது ஆளுமைச் செழுமைக்கு ஆதாரசுருதியாய் அமைந்துள்ளன.
பேராசிரியர் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நலம்பெற வாழ்ந்து கல்வி உலகிற்கும் சமூகத்திற்கும் நீண்ட சேவையாற்ற வேண்டுமென ஞானம் வாழ்த்துகிறது.
O
།༽ புத்தகக் களஞ்சியம் :༣༽ (நூல் மதிப்புரை)
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்கள்ை
அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி /மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பு {{மாத்திர புதிய நூலகத்தில் இடம் பெறும்.
يستخدمتها سفين يخلفهد ح\
48 ஞானம் - ஜனவரி 2005
 
 

சிறுவர் அறிவியல் பாடல்
கூர்மதி
கவிஞர் ஏ. இக்பால்
6numgరి Uగీge6లాe geరేర66ు 6).Ugoy q2áFSQUUrčồ SD UUñ- U-6řresrf? தேசம் முழுவதும் முதலைனத் தேர்ச்சி பைறுதல் உயர்வுதான் !
மக்களுக்குப் பயன்தரும் (O85mణిraరాecomరి 8&recorరి cupse;5r cupg565és 6 affas6ass முயற்சி வியப்புக் குரியுதாம்!
மனிதன் போற்றும் சாதனை மகா அறிவின் கருவிகள் புனிதம் புதிதாய்த் தந்தவிர் புத்திக் கூர்மை உடையவர் 1
6asu_J606 633a5 soff-g_{fs வறுமை அறிவி லானதால் உயர்வாய்க் கற்று விரைவிலே 8D_60ంగిg P_ugరీ తిgypతemణిr
U్మశ్రీకెతికి లోూ.గోeరాuం 6గొణిresణిrEpmరి புகழும் சையல்கள் போற்றுறோம் அத்தனையும் ஆக்கிட
sofsgtsu60d.-6LU egpeoderfuffs l
மற்றவர் களை விட
déSeoco 2 use egpeo6futeb
6)QåşaSÖ 6DUFNuUi esrmfuluvčò மிகைத்துச் சைய்தோர் உயர்ந்தனர்)
கூர்மதியே உடையவர் குவிலபடத்தில் பிறந்ததால் பேர் புகழும் சாதனை பெற்று உலகம் உயர்த்துமாம்!
O
ஞானம் - ஜனவரி 2005 46

Page 28
SCC e coro
சிவனு மனோகரன், ஹட்டன்.
ன்ெ காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. இந்த செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா? கடவுள் ஏன் நல்ல உள்ளங்களை இப்படி அல்லல்படுத்திப் பார்க்கிறானோ தெரியவில்லை. மனிதருக் குள்ளேயே உயர்வுகளும், தாழ்வுகளும் காணப்படுவதுபோல வசந்தங்களும் வசீகரங்களும் கூட சிலருக்குத்தான் வாய்க்கப்பட்டுள்ளது போல, யோகா வாழ்க்கையில் சந்தோஷங்களை உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. ஒட ஒட துரத்தும் விதியின் விளையாட்டு களுக்கு ஈடு கொடுக்க முடியாமலே அந்த ஆத்மா அமைதியாகி விட்டது போலும். வேதனைகளும் விம்மல்களும் அளவைத் தாண்டும் போது ஆடிப்போகும் மனங்கள் தன் நிலையில் அப்படியே தளர்ந்தும் போகிறது. அதிகமான கனவுகள் ஏராளமான எதிர்பார்ப்புகள் எல்லாம் நொடிப் பொழுதில் உடைந்து நொருங்க யோகா இடிந்து போனாள். சில தவங்கள் முழுமை பெறாமல் முடிந்து போகும்போது வாழ்க்கையின் மீதான பிடிப்பும் தளர்ந்து போகிறது. அப்படித்தான் யோகாவிற்கும் உறவுகள் என்று சொல்லிக் கொள்ள அவளுக்கு யாரும் கிடையாது. அதனால் தானோ என்னவோ சுமை சொல்லி சுகம் காண பாலுவின் உறவு கிடைத்த பெருமிதத்தில், அவனின் உள்ளிடை உயரங்களை உரசிப் பார்க்க தவறிப் போனாள் யோகா.
தம்பதிகள் யாரிடம் வேண்டுமாலும் கேட்டுப் பாருங்கள், ஆரம்ப நாள் தாம்பத்தியத்தில் ஏதாவது குழறுபடிகள்
50
நடந்திருக்கிறதா என்று. பதில் இல்லை யென்றுதான் வரும். கால ஓட்டம்தான் சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் சினந்து கொள்ளச்செய்கிறது என்று நினைக்கிறேன். சூழலும் பின்னணியும் ஒரு மனிதனின் மனோ பாவங்களில் அதிகமாய் செல்வாக்குச்
செலுத்துகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. என் எதிர்பார்க் கைகளும் சிந்தனைகளும் இங்கு
நடக்கும் அவலங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிறது. எத்தனையோ சந்தர்ப்பங் களில் என்னையும் மீறி அவர்களின் பிரச்சனைகளில் மூக்கு நுழைத்திருக் கிறேன். உங்களிடம் சொல் வதற்கென்ன அப்போதெல்லாம் நிறையவே அசிங்கப் பட்டிருக்கிறேன். இருந்தாலும் அவளுக்காக நிறையவே வேதனைப் பட்டிருக்கிறேன். திருமணம் மனைவியை துன்புறுத்துவதற்கு உரிமையை கொடுக்க வில்லை என்பதை உணரும்வரை பாலுவின் நடத்தையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் அவர்களின்
பிரச்சனை களில் தலையிடுவதே இல்லை. உடல் கவர்ச்சியினால் உரசிக் கொண்ட பாலுவும், யோகாவும்
இதயங்கள் சதை பிண்டங்களுக்கு கொடுத்த சந்தோஷங் களால் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தனர். பாவம் முரண்பட்ட இந்த இதய சமருக்குள் சிக்கி சின்னா பின்னமாகிப் போகும் அவலம் புரியாத சிசுக்கள் அவை. நாளுக்கு நாள் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே போயின. ஓர் அயல்வீட்டுக் இருந்து எவ்வளவோ விடயங்களை அவதானித்து விட்டேன்.
காரனாய்
ஞானம் - ஜனவரி 2005

ஏன் இப்படி செக்கு மாட்டுத் த ன ம ன ன வாழ்க் கையில் உழன்று உயிர் வதைத்துக் கொள் கிறாள் என்பது மட்டும் இன்னுமே புரியாத தத்துவம் எனக்கு. 6 மா ற் ற ங் க ள் அவளுக்கு சில அறிவூட்டல்களை செய்திருக்கிறது என்று நினைக் கிறேன். அதனால் தான் அவளால் இப் படி யொ ரு முடிவை எடுக்க முடிந்துள்ளது.
வழமைபோல அன்றும் இதயம் வருடும் இரவின் மடியில் இதயம் நனைத்துக் கொண்டிருந்தேன். திடீரென அதே அலறல். “ஐயோ யாராவது என்ன காப்பாத்துங்களே காப்பாத்துங்களே” என்று. எனக்கு இது ஒன்றும் புதிய சமிக்கை கிடையாது. மறுபடியும் இரவின் மடியில் இணைந்து கொள்கிறேன். சில நிமிட நிசப்தங்களுக்குப் பின் அதே அலறல் “ இங்க பாருடி ஒன்னு இல்லாத கழுதை ஒனக்கு. எவ்வளவு ஏத்தம் இருந்தா எனக்கு தெரியாம இப்படி செய்வ? நல்லா கேட்டுக்க இப்ப நமக்கு சல்லிதான் வேணும். ஒழுங்கு மரியாதயா நான் சொல்றத கேளு. இத புள்ளயாதான் பெத்து எடுக்கிற, அப்பதான் தோட்டத்துல சல்லி கெடைக்கும். ஏதோ ஒலகத்துலயே நீ மட்டுதான் புள்ள பெத்துக்கிற மாதிரி’ என்று பாலுவின் பக்க நியாயங்கள்.
ஞானம் - ஜனவரி 2005
“இங்க பாருயா எனக்கு மட்டும் என்ன புள்ள பெத்துக்கிறதுல இஸ்டம் இல்லைனா நெனைக்கிற? என்னோட ஒடம்பு இருக்கும் நெலையில என்னால புள்ள பெத்துக்க முடியாதுனு நம்ம மிஸி கண்டிப்பா சொல்லிட்டாங்க.” ・.
"அவ கெடக்குறா பொச கெட்ட சிறுக்கி. நீ புள்ள பெத்துக்கிறதுல அவளுக்கு என்ன அவ்வளவு கஸ்டம்” என்று வாயடைத்தான் பாலு.
“இங்க பாருங்க என்னால ஒங்க இஸ்டத்துக்கு ஆட முடியாது. இந்த முடிவில இருந்து நான் மாற போறது கெடையாது' என்று மறுதலித்தாள் யோகா.
காலமாற்றங்கள் காலமாற்றங்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் மனிதங்கள் கொஞ்சம் தலைசாய்த்துக் கொள்ளட்டும். ஒப்பனை வார்த்தைகளில் மட்டுமே உலகை அளக்கும் மாற்றங்கள் கொஞ்சம் மனிதமனங்களையும் தொட்டுப் பார்க்கட்டும். குழந்தை பெற்றுத் தரும்
51

Page 29
இயந்திரமாகவே சபிக்கப்பட்ட எம் சமூகத்து பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் வரட்டும். அப்போது நானும் மார்தட்டிக் கொள்கிறேன். மாற்றங்கள் மனிதங்கள் வளர அவசியமானது என்று. கட்டத்துக்குள்ளேயே விளையாடிப் பழகிப் போன யோகாவால், கட்டம் தாண்டி வெளியே வரமுடியவில்லை. இப்போது
அவள் மூன்றாவது பிரசவத்திற்கு
தயாராகி விட்டாள். உலகிலேயே கொடு
மையான விடயமாக நான் கருதுவது என்ன தெரியுமா, சிந்தனையாலும் எண்ணத்தாலும் கொஞ்சம் வளர்ச்சி அடைந்த உள்ளங்கள் பாமரத்தனங் களின் உயர்ச்சிகளில் சிக்கி உருமாறிப் போவதுதான். ஏனென்றால் அந்த அனுபவங்களை அதிகமாய் நான் உள்வாங்கி இருக்கிறேன். பாலுவிற்கும் யோகாவிற்கு இடையில் அநேகமான நேரங்களில் சமாதான தூதுவராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். உண்மையை சொல்கிறேன் அப்போதெல்லாம் என் மனச்சாட்சி மரண வேதனையை அனுபவித்திருக்கிறது. ஏனெனில் பாலுவின் பக்க அநியாயங்களுக்காக நியாயமாக வாதாடியிருக்கிறேன். கணவனின் வார்த்தை அம்புகள் துளைத்து துவண்டுபோன அவளின் இதயம் சமூக வார்த்தை அம்புகளுக்கு தாக்குப் பிடிக்காது என்ற நல்லெண் ணத்துடன், கனவுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக இப்படியும் கூட ஈனத்தனமான கனவுகள் வருமா என்பதை புரிய வைத்தவனே பாலுதான்.
ஒரு நாள் பாலு அடுப்படிக்குள், “ஏன்டி யோகா இந்த முறை ஏழு ஆயிரம் கெடைக்கும் இல்ல. நெறைய செலவு இருக்கு அதனால நீ ஒரு கெழம ஆஸ்பத்திரியில இரு. பொரவு வரலாம் ஏன்னா நம்ம செலவு கம்மியாகும் இல்ல”
52
என்றவுடன் என் மனம் ஒரு கணம் ஆடி நிசப்தம் கண்டது ஏன் மனித மனங்கள் ஒன்றும் இல்லாத விடயங்களுக்கெல்லாம் இப்படி குழம்பிப் போகிறதோ தெரியவில்லை. ஒரு வாரம் கழிந்தது. இரவு 11 மணி, அந்த லயமே தூங்கவில்லை. இடுப்பு வலி தாங்க முடியாமல் யோகா போட்ட கூச்சல் அந்த லயத்தையே அதிரவைத்தது. என்னால் இருப்புக் கொள்ள முடிய வில்லை. நொடிப்பொழுதில் கடவுளுக்கு ஒராயிரம் மனுக்கள் அனுப்பி இருப்பேன். கடவுளே அவளுக்கு எந்தவித குறையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்று. எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விட்ட பெருமிதத்திலும் பத்திரமாக அவளை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்ட சந்தோஷத்திலும் பாலு விடும் குறட்டை ஒலி என்னைத் தூங்கவிடாமல் தொல்லைப்படுத்தியது. அன்றைய இரவும் விடிந்து போனது.
காதுகளுக்கு எட்டிய செய்தி என்னை கதிகலங்கச் செய்தது. பாவம் யோகா, இந்த உலகை விட்டே போய் விட்டாள் என்பதுதான் அந்த செய்தி. சில முடிவுகளுக்கு நம்மால் விளக்கம் தரமுடிவதில்லை அதில் இதுவும் ஒன்று. எனக்கு நானே சமாதானம் செய்து கொண்ட போதும் அவளின் இழப்பு என்னை பாடாய்படுத்தியது. இந்த இழப்பின் துயர் என்னைவிட்டு அகலும் முன்பே, “சேர் நம்ம தோட்டத்துல படிச்சவங்க நீங்க மட்டுதான். கொஞ்சம் வந்து இந்த கட்டமொய் கணக்கை முடிச்சி கொடுத்தா நல்லா இருக்கும்” என்றதும், என் ஜிவன் இற்று உதிர்ந்தது. சுதாகரித்துக் கொண்டு சில்லறை களை எண்ணுகிறேன். அதில் யோகாவின் முகம் வந்து வந்து போகிறது.
என்னையும் அறியாமல் கண்கள் கண்ணிரைப் பணிக்கிறது.
O
ஞானம் - ஜனவரி 2005

எழுதத் தூண்டும் எண்ணங்கள்
கலாநிதி துரை. மனோகரன்
மலையகம் தந்த பெருமகன் இலங்கையின் மலையக இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் எவரது உள்ளத்திலும் இடம்பெறும் முக்கிய பெயர்களுள் ஒன்று, சாரல்நாடன். நல்லையா என்ற இயற்பெயரைக் கொண்ட சாரல்நாடன், சிறுகதை எழுத்தாளராக இலக்கியக் களத்தில் புகுந்தார். மூன்று குறுநாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதி, புனைகதை எழுத்தாளராகத் திகழ்ந்த சாரல்நாடன், இடையிலே ஏறத்தாழப் பத்தாண்டுக்காலம் இலக்கிய அஞ்ஞாதவாசத்தை அனுபவித்தார். அவரது அஞ்ஞாத வாசத்தைக் குலைத்து, சி. வி. வேலுப்பிள்ளை பற்றிய ஆய்வு முயற்சியில் அவரை ஈடுபடத் தூண்டியவர் அந்தனி ஜீவா.
ஆய்வாளராகப் புதுப்பிறவி எடுத்த சாரல்நாடனின் பங்களிப்புகள் மலையக ஆய்வுத்துறையில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தின. மலையகம் தொடர்பான அவரது ஆய்வு முயற்சிகள் இடம்பெறாமலே இருந்திருப்பின், பலருக்குத் தெரியாத புதிய விடயங்கள் பல வெளிச்சத்துக்கு வராமலே போயிருக்கும் அவரது சி. வி. வேலுப்பிள்ளை, கோ. நடேசய்யர் தொடர்பான நூல்களும், மலையகத் தமிழர் வரலாறு பற்றிய நூலும், மலையகம் சம்பந்தமான பிற நூல்களும் மலையகம் பற்றிய பார்வை விசாலிப்புப் பெற உதவியுள்ளன. இந்நூல்களின் பின்னணியில், சாரல் நாடனின் கடும் உழைப்பும், ஆய்வு ஆர்வமும் தெரிகின்றன. சாரல்நாடனின் இன்னொரு பரிமாணத்தை இனங் காட்டுவது, அவரது சாரல் வெளியீட்டகம். கணிசமான மலையகப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் நூலுருவம் பெறுவதற்கு அவரது வெளியீட்டகம் உதவி வந்துள்ளது. ^. அதனுடன் இணைந்ததாகக் கொட்டகலை இலக்கிய
.அமைப்பொன்றும் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது "جحصا மணிவிழா நாயகரான சாரல்நாடன் இன்றும் ஒர் இளைஞருக்குரிய உறுதியும், உற்சாகமும், உழைப்பார்வமும் கொண்டவராகவே விளங்குகின்றார். அவர் தொடர்ந்தும் மலையக இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பான தமது பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருப்பார் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. மேலும் அவரது பல்லாண்டு காலச் சேவை மலையகத்துக்குத் தேவை.
இசைக்கு ஒரு பேரரசி
இனிய இசையை விரும்பி ரசிக்கும் ரசிகர்களால் மறக்க முடியாத பெயர்களுள் ஒன்று, எம்.எஸ். சுப்புலட்சுமி. பத்து வயதிலேயே அவர் பாடிய பாடல் இசைத்தட்டில் வெளிவந்துவிட்டது. பதினான்கு வயதளவில் கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்யத்
ஞானம் - ஜனவரி 2005

Page 30
தொடங்கிவிட்டார், சுப்புலட்சுமி. அவரது பாடல்கள் பல இசைத்தட்டுகளிலும்
அவரது தனித்துவமான இனிய குரல்வளம்
வெளிவரத்தொடங்கின.
எண்ணற்ற ரசிகர்களைக் கவர்ந்தது; இன்றும் கவர்கிறது.
இசைப் பேரரசியாக விளங்கத் திரைப் சேவா
தொடங்கிய சுப்புலட்சுமி,
படங்களிலும் நடித்துள்ளார். சதனம் (1938), சகுந்தலை (1940), சாவித்திரி (1941), மீரா (1945) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் அவர் நடித் துள்ளார். ஹிந்தியில் சுப்புலட்சுமி நடித்த மீரா (1947)இல் வெளிவந்தபோது, அகில இந்திய அங்கீகாரத்தை அவர் பெற்றுக் கொண்டார். திரைப்படங்களில் அவரது நடிப்பை விட, பாடல்களே மக்களை மிகவும் கவர்ந்தன என்பது திரைப்பட சகுந்தலை திரைப்படம் தயாரிக்கப்பட்டுக் கொண் டிருந்தபோது, அதன் தயாரிப்பாளரும், ஆனந்தவிகடன் விளம்பர மேலாளரும்,
விமர்சகர்களின் கருத்து.
பின்னர் கல்கி அதிபருமாக விளங்கிய சதாசிவம் கதாநாயகி சுப்புலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார்.
பலரையும் போலவே மீரா திரைப் படத்தில் இடம் பெற்ற காற்றினிலே வரும் கீதம் என்னையும் மிகவும் கவர்ந்த பாடல்.
எழுத்தாளர் கல்கி எழுதிய பாடல் அது.
வங்காளப் பாடலொன்றின் மெட்டில் அமைந்த இப்பாடலுக்குப் பழைய இசை யமைப்பாளர் எஸ். வி. வெங்கடராமன் சிறந்த இசை சேர்த்திருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய திரையிசைப் பாடல்களில் முதலிடத்தைப் பெறுவது இப்பாடலே.
54
அவர் பாடிய சுப்ரபாதம் இற்றைவரை செவிகளுக்கு இனிமையைத் தருகிறது. சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதம் எதிர் காலத்தில் வேறு எவராலும் பாடப்பட்டுப் பதிவு செய்து கொள்ளப்படக் கூடாது என்று பிரபல பாடகி பி. சுசீலா அண் மையில் தெரிவித்திருப்பது நியாய மானதே. சுப்ரபாதம் என்றால் சுப்புலட்சுமி என்ற நிலையே இன்றும் நிலவுகிறது.
எம். எஸ். சுப்புலட்சுமியின் மறைவு, இசையுலகைச் சேர்ந்தவர்களையும், இசை ரசிகர்களையும் பாதிக்கும் பேரிழப்பு ஆகும்.
புதிய புராணம் முன்னொரு காலத்தில் தேவர் களுக்கும், அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி கடும்போர் மூண்டது. இதனால் சலிப்படைந்த படைப்புக் கடவுளான பிரமா, பூவுலகில் புதிதாக ஒரு நாட்டைத்
தோற்றுவிக்க எண்ணி, தமது தாமரை
மலராசனத்தில் தியானத்தில் அமர்ந்து, புதிய நாட்டைக் கற்பனை செய்தார். புதிய நாடு ஒன்று தோன்றியது.
பிரமா புதிய நாடொன்றைத் தோற்று வித்துள்ளார் என்பதை எப்படியோ அறிந்த காட்டுவாசிகளும், மந்திர மாயாஜால வித்தைக்காரர்களும் அந்நாட்டுக்குள் புகுந்து அட்டகாசங்களைச் செய்யத் தொடங்கினர். மந்திர தந்திர மாயாஜால வித்தைக்காரர், மக்கள் தங்களை இலகுவில் இனங்கண்டு கொள்ளாதிருப் பதற்காகக் குருக்கள் வேடத்திலேயே புதிய நாட்டுக்குள் புகுந்தனர்.
ஞானம் - ஜனவரி 2005

திடீரென அந்தப் புதிய நாட்டில் பிரமாவின் கற்பனையில் உதித்த புதிய தேவதை ஒருத்தியும் தோன்றினாள். பிரமாவின் கற்பனைக்கேற்றவிதமாகப் புதிய நாட்டை உருவாக்கப் போவதாகத் தேவதை தெரிவித்தாள். ஆயினும், அத்தேவதை தனது மாயாசக்தியால் தேவைக்கேற்பப் புதிய புதிய உருவங்களை எடுக்கத் தொடங்கினாள். அத்தோடு, நாளுக்கு நாள், வேளைக்கு வேளை விதம்விதமாகப் ஆச்சரியப் படத்தக்க அற்புத சக்தியையும் பெற்றுக் கொண்டாள். அராபிய நாடுகளுடன் குதிரை வர்த்தகத்தில் ஈடுபடும்போது அதற்கேற்ற உருவத்துக்குத் தன்னை மாற்றிக்கொள்வாள். மேலைத்தேயங் களுக்கு வாசனைத் திரவியங்கள் பெறச் செல்லும்போது வேறொரு விதமான உருவத்தில் செல்வாள்.
பிரமா உருவாக்கிய அந்தப் புதிய நாட்டில், காட்டு வாசிகளும், மாயாஜால மந்திர தந்திர வித்தைக்காரரும் முதன்மை இடத்தைப் பெறத் தொடங்கினர். காட்டுவாசிகள் தமது பழக்க தோஷத்தினால் புதிய நாட்டுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை களை ஏற்படுத்தி வந்தனர். மாயாஜால மந்திரவித்தைக்காரரும், புதிய நாட்டில் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நல்ல நிகழ்ச்சிகள் நடந்தால், தமது மந்திரதந்திர சக்தியால் அவற்றை எதிர்த்து அழிப்போம் எனக் சூளுரைத்தனர்.
ஒரு நாள் பிரமா படைத்த புதிய நாட்டைப் பார்ப்பதற்காகத் துருவாச முனிவர் வேகமாக அரசவைக்கு வந்தார்.
பேசும்
காலப்போக்கில்
அப்போது அங்கிருந்த காவலாளியான கடம்பன் என்பான், அவரைப் பொருட்
ஞானம் - ஜனவரி 2005
படுத்தாமல் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கண் ணுற்ற துருவாச முனிவருக்கு மூக்கு நுனியில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கடம்பனைப் பார்த்துத் துருவாச முனிவர் கூறினார். “முன்பொரு நாள் சகுந்தலை என்னை மதியாமல் நடந்து கொண்டமையினால் துஷ்யந்தனை மறந்து போகுமாறு சாபமிட்டேன். நீயும் இன்று என்னை அலட்சியப்படுத்தி நடந்து கொண்டாய், அதனால் உனக்கும் நான் சாபம் இடுகிறேன். நீ உன் தாய் மொழியையும் இனத்தையும் மறந்து, மொழிக்கும், இனத்துக்கும் எதிராகவே எப்போதும் நடந்து கொள்வாய். உன் இனத்துக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படும் போதெல்லாம் நீ அதற்கு எதிராகவே செயற்படுவாய், காட்டுவாசிகளுக்கும், மந்திர தந்திர மாயாஜால வித்தைக் காரர்களுக்கும், உனக்கும் எந்த வேறுபாடும் இனிமேல் கிடையாது” கடம்பன் திகைப்படைந்து உதடுகளைப் பிதுக்கியபடி, “சுவாமி, எனக்குச் சாபவிமோசனமே இல்லையா?” என்று வேற்று மொழியில் கேட்டான். துருவாச முனிவர் கோபம் மாறாதவராக மீண்டும் கூறினார். “உனக்காவது விமோசன மாவது வசிட்டர் போன்ற மாமுனிவர்கள் கூட உன்னை மன்னிக்க மாட்டார்கள். எலும்புத்துண்டுகளே உனது நாளாந்த உணவாக இருக்கட்டும்”. துருவாச முனிவர் கோபத்துடன் வேகமாகப் புதிய நாட்டைவிட்டு வெளியேறினார். பிரமா தாம் படைத்த புதிய நாட்டை எண்ணிக் கவலைக் கடலில் மூழ்கினார்.
O
55

Page 31
ഗZശ്ര ബഗ്
ശ്രൈബ് ക്ര് ബഗ്ഗ്ലീഗ്
മല്ലൂര് -பார்வையும் பதிவும் -
பழமை - புதுமையினது அற்புதக் கலவை
வித்துவான் சொக்கனின் மறைவையொட்டி வெளியிட்ட செய்தியில் பேராசிரியர் கா. சிவத்தம்பி பழமை-புதுமையினது அற்புதக் கலவை சொக்கன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சொக்கன் பல புனைபெயர்களில் எழுதியவர். கெளரவ கலாநிதி, சாகித்திய ரத்னா போன்ற பல பட்டங்களுக்குப் பெருமை சேர்த்தவர். ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராகத் தனது பணிகளால் தன்னைப் பதிவு செய்து கொண்டவர்.
சிறந்த பேச்சாளராகவும், பாடநூல் எழுத்தாளராகவும், நடிகராகவும், நெறியாளராகவும் விளங்கிய சொக்கன், இந்த மண்படும் அவல நிலைகண்டு தன்னாற் செய்யவேண்டிய பங்களிப்புக்களையும் காலமறிந்து செய்தவர். நாட்டுப் பற்றும், மொழி ஆர்வமும் மிக்க அவர் மரபில் ஆழமான அறிவுடையவராயினும் நவீனத்தையும் நிராகரிக்காது அதிலும் தனது அறிவை விரிவடையச் செய்தவர். நம்நாடு இழந்த நடமாடும் பல்கலைக் கழகங்களில் சொக்கன் ஐயாவும் ஒருவர் என்றால் அது மிகப் பொருத்தமானது ஆகும். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.
பேராசிரியர் ராஜன் குருக்களின் சிந்தனைக்கினிய உரை
பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்கு மண்டபத்தில் மஹாத்மா காந்திப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜன் குருக்கள் அவர்கள் அண்மையில் உரையாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் ராஜன் குருக்கள் Understanding Early Historic society in South India 6T60th 5606) Slái) &ris85ITG) இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார். அகழ்வாய்வு முடிவுகளைக் கொண்டு சமூகவியல் நோக்கில் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பாக அமைந்தது எனலாம்.
புண்ணியாமீனின் இருநூற் திரட்டுக்கள்
எழுத்தாளர் புண்ணியாமீன் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், ஊடக வியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு என்ற நூலை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார். சிந்தனை வட்டத்தின் வெளியீடுகளாக இந்நூல்கள் அமைகின்றன. முதலாம் பாகத்தில் 36 பேரில் விடயங்கள் அடங்குகின்றன. அதில் 24 எழுத்தாளர்கள்,10ஊடகவியலாளர்கள்,2கலைஞர்கள் பற்றிய அம்சங்களைக் காணமுடிகிறது. இரண்டாம் பாகத்தில் 41 பேரின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 32 எழுத்தாளர்கள், ! பத்திரிகையாளர் 7 ஊடகவியலாளர்கள், 1 கலைஞர் முதலியோரின் விபரங்களைக்
56 ஞானம் - ஜனவரி 2005

காணமுடிகிறது. 77 எழுத்தாளர்களின் விபரங்களை நூல்களாக வெளியிட்ட புண்ணியாமீன் பாராட்டுக்குரியவரே.
பாரிஸ் மாநகர் நாடகவிழா
பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமும், சிறின் கிங்ஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி விழாவானது புலம் பெயர் தமிழர்களுக்குச் சில நாடகங்களைப் பார்வைக்களித்தது. நாளைய அறுவடை கள், கடிவாளம், தம்பட்டம், விளம்பரம், சங்கடம், மாறாத மாற்றங்கள் முதலிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. "நாடக அறுவடைகள்” என்ற கலைஞர்களின் வாழ்த்துரைகளும் உள்ளக் கிடக்கைகளும் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
(SU WII á lúlu fr சோ. சந்திரசேகரன் மணிவிழா
கெ ாழும்புப் பல்கலைக்கழகக்
கல்வியியற்பீடப்பேராசிரியர்சோ.சந்திரசேகரன் ஈழத்துக் கல்வி வளர்ச்சிக்காய் உழைத்தவர்.
புதிய கல்விச் சிந்தனைகள், நூற்றாண்டுக் கல்வி முதலிய பல நூல்களை எழுதியவர்.
மலையக சமுதாயவளர்ச்சி மலையகக் கல்வி
இலங்கை இந்திய வரலாறு முதலிய நூல்களையும் 500க்கு மேற்பட்ட கட்டுரை
களையும் எழுதியவர். ஆங்கிலத்தில் New Trendsin Education6T6ôTAO AT69) I'LLéfkou நூல்களை எழுதியவர். மணிவிழாக் காணும் பேராசிரியர் நீண்டகாலம் வாழ்ந்து கல்வி உலகிற்கு அரிய பல சேவைகள் செய்ய வேண்டும்.
Bunka 6íSlo5š5j
ஜப்பான் அரசு வருடந்தோறும் கலாசாரத்துக்காக Bunka என்ற விருதை வழங்கி வருகிறது. இம்முறை இலங்கை யைச் சேர்ந்த தாளவாத்தியக் கலைஞர் ரட்ணம் ரட்ணதுரைக்கு Bunka விருது வழங்கப்பட்டுள்ளது. ரட்ணம் ரட்ணதுரை நாடறிந்த சிறந்த தாளவாத்தியக் கலைஞர் ஆவார். அவர் மேலும் முன்னேறி கலைத் துறையில் சாதனைகள் பல புரிய வேண்டும்.
சடாகோபன் கவிதைகள் நூல் வெளியீடு
- மாவை வரோதயன்
2004.12.05 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மண்ணில் தொலைந்த மனது தேடி. எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கவிஞர் அ. சடாகோபனின் கவிதை களின் தொகுப்பான இந்நூல் தேசிய கலை இலக்கியப் பேரவையின் நூல் வெளியீட்டு வரிசையில் 105வது நூலாகும்.
ஞானம் - ஜனவரி 2005
வெறுமனே ஒரு நூலின் வெளியீடாக அமையாமல் அந்த நூலின் சில பாடல்கள் இசையுடன் கலந்த ஒலி வடிவமாக்கப்பட்டு CD - இறுவட்டு வடிவிலும் வெளியிடப் பட்டமை சிறப்பம்சம் ஆகும்.நிலாக்கீற்று என்பது அந்த ஒலி வடிவத்தின் பெயர். பாடகர் M மகிந்தகுமார் இசை அமைக்க, முற்றிலும் உள்ளூர் இளம் கலைஞர்களின் படைப்பாக அந்த இறுவட்டு அமைந்து - பலரதும் பாராட்டைப் பெற்றது.
நூல் வெளியீட்டு நிகழ்வும் இயல், இசை, கலந்து முத்தமிழ் நிகழ்ச்சியாக அமைந்தது. சடாகோபனின்
நாடகம்
57

Page 32
கவிதைகளுக்கு மகிந்தகுமார் குழுவினர் இசை வழங்க நாட்டிய ஷேத்திரா நடனக் கல்லூரி மாணவிகள் அபிநயம் செய்து நாட்டிய வடிவம் வழங்கினர். கூடவே 'ஒரு பொழுது தருவாயா என் அருமைத் தாய் நாடே' என்ற கவிதையின் கவிதா நிகழ்வும் இடம் பெற்றது.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சி. தில்லை நாதன் அவர்கள் தலைமை தாங்க
திரு. அ. இ. வாமலோஷனன், திரு. சோ. தேவராஜா, கவிஞர் சோ.பத்மநாதன், திரு. இ.தயானந்தா ஆகியோர் உரையாற்றினர். நல்ல கவிதை பற்றிய சிந்தனையும், கருத்துக் களமாகவும், புத்தகப் பண்பாட்டுப் பவனியில் புதுமை படைப்பதாகவும் நூல் வெளியீடு அமைந்திருந்தது. இந்த நிகழ்வு நமது ஈழத்து இலக்கியத் துறைக்கு மற்றொரு மைல்கல் எனலாம். O
பேராசிரியர் க. கைலாசபதியின் 22வது நினைவுப் பேருரை
கைலாசபதியின்
பேராசிரியர் நினைவுப் பேருரையும் கவியரங்கும் எனும் நிகழ்வு கடந்த 14.12.2004 அன்று மாலை கொழும்பு, வெள்ளவத்தை, இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் இடம் பெற்றது. தேசிய கலை இலக்கியப் பேரவை இதனைப் பேராசிரியர் கைலாசபதியின் 22வது நினைவு நிகழ்வாக நடத்தியது. கல்வி கலைச் செயற் பாட்டாளரும், பூரீபாத கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான சிவ இராஜேந்திரன் அவர்களின்தலைமையில் திருஅநவரதராஜ் அவர்கள் ஆய்வுரையை நிகழ்த்தினார்.
“புதிய பண்பாட்டு விருத்திக்கான அடிப்படைகளும், பேராசிரியர் கைலாச பதியும்” என்ற மகுடத்தில் நினைவுச் சொற்பொழிவு இடம் பெற்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் ஆய்வுத்துறையில் புதிய சிந்தனைகள் உருவாக வழிவகுத்தவர். அவை சமூக மாற்றத்துக்கான, பண்பாட்டு மாற்றத்துக்கான நடைமுறைச் சாத்தியங் களை நோக்கி வழி நடத்துவதாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவராக இருந்தார். அதுவே இன்றைய அரசியல் சமூகப் பொருளாதாரப் போக்கில் மிக
58.
அத்தியாவசியமானதாகப்படுவதை நாம் காணலாம் என்று சிவ இராஜேந்திரன் குறிப்பிட்டார்.
சிறப்புரை வழங்கிய ஆசிரியர் அ. ந. வரதராஜ் அவர்கள் தமது உரையில், “பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தமது ஆய்வுகளிலும், கருத்துரைகளிலும் புதிய பண்பாட்டு மாற்றத்துக்கான தேவை ஏன் அவசியம்என்பதைவலியுறுத்திவந்தவராவார். காலத்துக்குக் காலம் மாறி மாறி வந்த ஆதிக்க சக்தி, வர்க்க முரண்பாடுகளைப் புதிப்பித்தபடி மனிதப்பண்பாட்டுத்தளத்தை சிக்கலுக்கு உள்ளாக்கியபடியேவந்துள்ளன. இந்தப் பின்னணியில் காலனித்துவ ஆட்சிகளுக்கு எதிரான எழுச்சிகளாகவே ‘தேசியம்' என்ற கருத்தியல் எழுந்தது. அதனைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியவர் பேராசிரியர் கைலாசபதி ஆவார். அது இன்று குறுகிய நோக்கங் களுக்காகக் கையாளப்படுவதுதான் வேதனையான விடயம்”என்றுகுறிப்பிட்டார். இடையிடையே செல்விகள் மிருதுளா, கெளரி ஆகியோர் பாரதி பாடல்களைப் பாடி சபையின் கவனத்தைக் கவர்ந்தனர்.
தொடர்ந்து எங்கே போகும் உலகு என்ற தலைப்பில் கவிஞர்மாவை வரோதயன் தலைமையில் கவியரங்கம் இடம் பெற்றது. கவிஞர்கள் ஆ. சடகோபன், ஆ, இ, வாமலோஷணன், தெ. ஞாலசீர்த்தி, மீநிலங்கோ ஆகியோர் கவிதை ஆக்கிப் படித்தனர். O
ஞானம் - ஜனவரி 2005
 

எண்ண ஊர்வலம்
நூல்
(கவிதைத் தொகுப்பு) ஆக்கம் : ஜெ. மதிவதனி வெளியீடு: ஈழத்து இலக்கியச்
சோலை, திருகோணமலை. விலை : ரூபா 100.00
அண்மைக்காலமாகப் பல புதிய பெண் கவிஞர்கள் தமது கவிதைகளைத் தொகுதிகளாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அவர்கள் வெளியிடும் கவிதைத் தொகுதிகள் பல அவசர வெளியீடுகளாக அமைவது கசப்பான உண்மையே. அண்மையில் வெளிவந்த பல தொகுதிகளில் ஒரிரு கவிதைகளே தேறியுள்ளன. கவிதை, கவிதை நூல் வெளியீட்டு ஆர்வம் தொடர்பாகச் சம காலத்தில் பல சாதாரணமான கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு கவிஞரதும் முதலாவது நூல் என்பதால் அங்கீகரிக்கக் கூடிய தாகக் காணப்படுகின்றன.
அந்த வகையில் தான் ஜெ. மதிவதனி யின் எண்ண ஊர்வலம்' என்ற கவிதைத் தொகுதியும் அமைந்துள்ளது. இத் தொகுதியில் 36 கவிதைகள் உள்ளன. இதில் உள்ள பெரும்பாலான கவிதைகள் தனிமனித உணர்வின் உளைச்சல்களை
ஞானம் - ஜனவரி 2005
விபரிப்பனவாக அமைகின்றன. அத்துடன் ஒரிரு கவிதைகளில் இந்த மண்ணின் பிரச்சினையும் பேசப்படுகிறது. சில கவிதைகள் கோசங்களாகவும், தகவல் களைக் குவித்துப் பட்டியலிட்டு வழங்குவன வாகவும் காணப்படுகின்றன. உலகை உய்விக்கும் உத்தமரே ஆசிரியர் என்ற கவிதை உரைநடை போலவே அமைந் துள்ளது.
இத்தொகுதியில் இருக்கும் எது நிச்சயம்? அழகு, மனப்போராட்டம், நேசிப்பில் உன் இடம், 1998, வலி முதலிய பல கவிதைகள் மிகச் சாதாரணமாகவே காணப்படுகின்றன. மறுக்கப்படுபவை என்ற கவிதை வித்தியாசமானதாக அமைந்துள்ளது.
ஒரு வெள்ளைத்தாமரை கறுப்பு உடை அணிகிறது ஒரு வீணையின் நாதம் குடத்தினுள் முடக்கப்படுகிறது ஒரு பறவையின் இறகு ஆராய்ச்சிக்காக வெட்டப்படுகிறது’ என்ற வரிகள் மிகவும் அற்புதமாக அக்கவிதையில் அமைந்துள்ளன.
கவிஞை ஜெ. மதிவதனி கவிதைத் தொகுப்பிற்கான கவிதை பற்றிய தெளி விலும், கவிதைச் செம்மை யாக்கத்திலும் அதிக கவனம் செலுத்தி யிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். 6) கவிதைகளில் கவித்துவ வீச்சே இல்லாமல் சாதாரணமான உரைநடையே காணப்படுகிறது. இன்று இருக்கின்ற ஏனைய இளம் கவிஞர்களைப் போலவே இவரும் வரி ஒடிப்பில்’ கவனம் செலுத்தியிருக்கிறார். இவ் வரி ஒடிப்பு பொருள் நோக்கிச் செய்யப்படுவது, நன்று. எதிர்காலத்தில் அவரிடமிருந்து நல்ல கவிதைகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அவரது இந்த
5.

Page 33
முதலாவது தொகுதி தந்துள்ளது. ஈழத்தின் சிறந்த பெண் கவிஞர் என்ற கணிப்பைப் பெற கடின உழைப்புடன் பயணிக்க வேண்டும்.
- யுகந்தினி O
நூல் காமன் கூத்தும்
மலையகப் பாரம்பரியமும் ஆக்கம் : சோதிமலர் ரவீந்திரன்
காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் என்ற மூன்று கலை வடிவங்களும் மலையகத்துக்கே உரியவை. இவற்றில் காமன் கூத்துப் பற்றிப் பலரும் தமது வசதிகளுக்கேற்ப அவ்வப்போது சிறிய கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஆய்வு நெறி முறைக்கு அமைவாகவும் இதுவரை எவரும் காமன் கூத்தைப் பற்றி எழுதப்படாத நிலைமையே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை விரிவுரையாளர் சோதிமலர் ரவீந்திரன் எழுதிய “காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும்” என்ற நூல் நீண்டகாலமாக எழுதப்படாத கலை ஒன்றின் வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது எனலாம். இலங்கையில் காமன் கூத்துப் பற்றி ஆய்வு நெறி முறைக்கமைய வெளிவரும் முதலாவது நூல் என்ற வகையில் நூலாசிரியையின் முயற்சி பாராட்டுக்குரியது. நூலானது 142 + XI பக்கங்களைக் கொண்டது. நூலுக்கான முன்னுரையைக் கலாநிதி துரை. மனோகரனும் அணிந்துரையைப் பேராசிரியர் க. அருணாசலமும் அளித்துள்ளனர்.
60
ஐந்து இயல்களைக் கொண்டமைந்த இந்நூல் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராய்கிறது. காமன், காமன் பண்டிகை முதலிய செய்திகளைத் தக்க இலக்கிய ஆதாரங்களைக் கொண்டும், கர்ண பரம்பரைக்கதைகளைக்கொண்டும் ஆராயும் போக்கினை நூலிற் காணமுடிகிறது. இந்நூலிற் கூறப்பட்ட கருத்துக் களைக் கொண்டு நோக்கும் போது இலக்கியம், கர்ணபரம்பரைக் கதை முதலியவற்றின் கதையாடல் தளத்தில் கட்டப்பட்ட கலை வடிவமாக காமன் கூத்தை முன் மொழிய முடிகிறது. இதனை இந்நூலின் முக்கிய
இந்நூலின்கண் வருகின்ற சில பகுதிகள் மறுபரிசீலனைக்கு உரியவை “இன்றைய நிலையில் மலையகக் கூத்துக் களைப் பொறுத்தளவில் கரகம், காவடி, கோலாட்டம், கும்மியாட்டம், அருச்சுனன் தபசு, காமன்கூத்து என்பனவே முக்கியமாக நடைபெற்று வருகின்றன.’ (ப34) நூலில் வரும் இப்பகுதியில் கரகம், காவடி, கோலாட்டம், கும்மியாட்டம் என்பனவற்றை கூத்தாகக் கருதுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது? என்ற வினா எழுகிறது. ஆடுதல், கதைகூறல் என்ற அம்சங்கள் எல்லா நாட்டாரியற் கலைகளுக்கும் பொது எனிலும் கூத்து ஏனைய நாட்டார் கலை களிலிருந்து வேறுபடுகிறது. கூத்தினையும் ஏனைய நாட்டார் கலைகளையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்க்கும் மரபு இல்லை. நாட்டார் கலைகள் ஒவ்வொன்றும் தனித்தனிக் கலை வடிவங்களே. கரகம், காவடி முதலியவற்றைக்கூத்தாகக் கொள்ள முடியுமெனில் வில்லுப் பாட்டு, பொய்க் காலாட்டம், குதிரை ஆட்டம் முதலிய வற்றையும் கூத்தாகக் கருதவேண்டிய ஆதாயமான கலைச்சூழல் ஒன்று
ஞானம் - ஜனவரி 2005

உருவாகிவிடும். கூத்தினை ஏனைய நாட்டார் கலைகளில் இருந்து பிரித்துவிடும் சில முக்கிய அம்சங்கள் உள. அவற்றுள் முதன்மையானது "பாத்திர நிலைப்படுதல் (Impersination)" gejib. gigi Gol கூத்தினையும் ஏனைய நாட்டார் கலை களையும் பிரிக்கும் முதன்மைக் கூறாக விளங்குகிறது எனலாம். ஆகவே மலையகக் கூத்துக்கள் பற்றிபேசும்போதுகாவடி,கரகம், கும்மி, கோலாட்டம் என்பவற்றைத் தவிர்த்தல் வரவேற்புக்குரியது.
பக்கம் 34 இல் ஆசிரியர் கூறும் மேற்குறிப்பிட்ட கூற்றும், பக்கம் 9 இல் “எல்லாவித ஆடல் பாடல்களுக்கும் கூத்து என்று பெயர்” என்ற கூற்றும் பக்கம் 2இல் “கூத்து என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது” என்ற கூற்றும் ஒன்றுடன் ஒன்று இயைபற்றுக் காணப்படுகின்றன. இதுபோல நூலில் மேலும் சில இடங்கள் பரிசீலனைக்கு உரியனவாய் அமைவதை நூலை நுகர்வோர் உணர்வர்.
காமன் கூத்தினை காமன் சடங்கு என்று கூறுவதே பொருத்தமுடையது. என்பது சமீப காலத்தில் ஒரு சாராரால் முன்வைக்கப்படும் கருத்தாக அமை கிறது. “காமன் கூத்து”, “காமன் சடங்கு” என்ற பதப் பிரயோகங்களின் பின்புலத்தை அறியும்போது அக்கலைக் குரிய சரியான தளநிலையை நிர்ணயிக்க முடியும். "சடங்கு” என்ற பேச்சின்போது செய்பவர், பங்குபற்றுபவர், நம்பிக்கை என்ற மூன்று அம்சங்களும் அவதானிப் புக்குரியவை. சமயச் சடங்குகளின் செயல்முறைகளுக்கு அடிப்படை இதிகாச புராண, கர்ணபரம்பரைக் கதைகள் எனலாம். பல்வேறு காரணங்களால்
ஞானம் - ஜனவரி 2005
சடங்கின் மீதான நம்பிக்கை இழப்பின் போது சடங்கிலிருந்து நாடகம் மேற் கிளம்புகிறது. அப்போது அது ஆற்று பவர், பார்வையாளர், ஆற்றுகை என்ற அம்சங்களைப் பெற்று Ritual என்பதில் gobiigi Performing Art 9,5 Lonföph அடைகிறது. சடங்கிலிருந்து நாடகம் மேற்கிளம்பும்போது ஒர் இடைமாறுகட்ட வடிவம் உருவாகிறது. இந்த இடை மாறுகட்ட வடிவத்தை முழுமையாகச் சடங்காகவோ அல்ல முழுமையாக நாடகமாகவோ கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. சடங்கு, நாடகம் என்ற இரண்டின் தன்மைகளும் அந்த இடைமாறுகட்ட வடிவத்தில் காணப்படும். இந்த நிலையிலேதான் அது (காமன்) கூத்து, (காமன்) சடங்கு என்ற இரு பதங்களில் அடையாளப்படுத்தப் படுகிறது. சடங்கிலிருந்து நாடகம் நோக்கிப் பயணிக்கின்ற இடைமாறுகட்ட வடிவமாகவே காமன் கூத்தைக் கருத முடிகிறது. இந்நூலை வாசிக்கும்போது அத்தகைய ஒரு மனப்பதிவே ஏற்படுகிறது. காமன் கூத்து நடிகன், பார்வையாளன், நடிப்பு என்ற தன்மையில் நிகழ்த்தப் படுவதில்லை என்பதை நூலின் மூலம் அறியமுடிகிறது. அது அதிகபட்சம் சடங்கையே சார்ந்து நிற்கிறது. சிறியளவு நாடக அம்சங்களைக் கொண்டுள்ளது.
கூத்தை மேடைக்கலையாக ஆக்குவது பற்றிய நூலாசிரியையின் கருத்துக்கள் வரவேற்புக்குரியவை.
மலையகத்தின் ஏனைய கலைகள் தொடர்பான ஆய்வு நூல்களையும் நூலாசிரியையிடம் இருந்து இலக்கிய உலகு எதிர்பார்க்கிறது.
O
61

Page 34
VI ܘܚܬܐ ܕܐܡܝܪ ܕܡܫܝܕ ܕܪ
(S)''j''Es'''
سرع... . . . . . () (SI Iaidänoiltic
i
“ஞானம்” தனக்கேயுரித்தான மிடுக்கோடு 55 ஆவது இதழும் மலர்ந்திருக்கிறது.
முதலில் ஒவியர் புஷ்பா தனது திறமையை இவ்விதழிலும் பதிய வைத்திருக்கிறார். அட்டைப்படம் அதன் நேர்த்தி வண்ணத்தேர்வு என்பவற்றோடு ஒவ்வொரு கோடுகளாலும் என்னை ஆகர்ஷித்திருக்கிறது. ஏகலைவன் படம் மூலம் தனது முத்திரையை இதிலும் இட்டிருக்கிறார் புஷ்பா. புஷ்பா எதிர்காலத்தில் ஒரு தலை சிறந்த ஒவியராக வருவார். இன்னும் நிறைய அவர் சாதிப்பார்.
எஸ். பொ. தனது மனந்திறந்த கருத்துக்கள் மூலம் இளம் எழுத்தாளர்களை தூண்ட வைத்திருக்கிறார். தி. ஞானசேகரனின் திறமை சந்திப்புகளின் வினாக்கள் மூலம் இன்னுமொரு முறை பளிச்சிடுகிறது. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் “ஞானம்” எதிர்காலத்தில் இலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் உரியதாகி விடுகிறது. எழுத்தாளர்களின் கனதியான ஆக்கங்கள் எமது மனதை பாரப்படுத்துகின்றன.
என். செல்வராஜா நூலகம், நூல் தொடர்பான பாரிய பங்களிப்பைச் செய்கிறார். நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.
எஸ். முத்துமீரான் என்னை ஆட்கொண்டு விட்டார். அவரது “ஏழ்மை அவனுக்கொரு தூசி”ஒரு தகவல், ஒரு நிஜம், ஒரு சமூகத்தின் ஆழ் கிளர்ச்சி. சிறுகதை பற்றி மனதில் படும் எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும் என நினைக்கிறேன் உண்மையில் என்னால் முடியவில்லை.
நிந்தவூர் குடும்பங்களின் தரிசனமது.
அதனுடைய அங்கதச் சுவை மிக உருசியாக உள்ளது. ஒரு நாவலுக்கான கதை அது. மொழிச் செழுமையை ஊற ஊறப் பருகினேன். உண்மையில் இப்படி எழுதுபவர்கள் எம்மில் கொஞ்சப் பேர்தான் இருக்கினம்.
எழுத்துப் பிழை வராமல் அந்தப் பேச்சு வழக்கை அருமையாகத் தந்திருந்தீர்கள். புருப் ரீடருக்கும் தனிப்பட்ட பாராட்டுக்கள்.
“சூடார்றத்திக்கிடயில கொண்டடக்கிருவம்”
"முதியாங்கண்டுத் தயிரு”
“ஒலகமே பித்துனாவாப் பெயித்து”
ஒவ்வொரு அழகியலையும் பார்த்துப் பார்த்து ரைப் செய்திருக்கிறீர்கள்.
ஒரு இதழுக்கு, பத்திரிகைக்குப்பின்னால் இருக்கும் உழைக்கும் அன்பர்கள் எத்தனை பேர். ரைப்பிஸ்ட், லேஅவுட் செய்பவர், புரூப் பார்ப்பவர், பார்சல் பண்ணுபவர் என்று எத்தனை உழைப்பாளிகள். அவர்கள் எல்லோரையும் இந்த நேரம் நினைத்துப் பார்க்கிறேன்.
“ஞானம்” பார்க்கும் போதெல்லாம் மனம் நிறைகிறது. இது முகஸ்துதி அல்ல பாராட்டுக்களும் - உண்மையும்.
- இளைய அப்துல்லாஹ்
62 ஞானம் - ஜனவரி 2005
 
 

அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு, சென்ற இதழில் (நவம்பர் - 2004) ਨਾ கவிதையான “மாறிவரும் நான்” கவிதை கண்டேன். நன்றி. இருந்தும்கூட, என்னால் பூரண சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் இருந்தது. அதற்குக் காரணம், கவிதையில் செய்யப்பட்டிருந்த ஒரே ஒரு மாற்றமே. நான் கையளித்த கவிதையில்
“13 இலிருந்து
வாலிபம் தொடங்குகிறது.
31 இலிருந்து s
முதுமை தொடங்குகிறது. என்ற வரிகளுக்குப் பதிலாக.
“16 -இலிருந்து வாலிபம் தொடங்குகிறது
61 - இலிருந்து முதுமை தொடங்குகிறது” என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
ஆசிரியர் அவர்களே, தெரிந்ததோ தெரியாமலோ இடம்பெற்றுவிட்ட இந்த மாற்றம், கவிதையில் ஒரு கருத்துச் சிதைவையும் ஒரு முன்பின் முரண்பாட்டையும் உணர்த்துவதாகவும் மாறி இருந்தது.
31 - இல் காலடி வைத்திருக்கும் எனது உணர்வுகளின் ஆதங்கங்களுக்கான ஒரு வடிகாலாக இருந்த எனது இந்தக் கவிதை, நான் எதிர்பார்த்த சந்தோஷத்தை எனக்குத் தராமல் போய்விட்டது போல் ஓர் உணர்வு தோன்றுகிறது. வெறுமனே, கவிதை அழகுக்காகவே - 13.31 என்று நான் சொல்லத்துணிந்ததாக என்னால் நினைக்க முடியவில்லை. வாழ்க்கையைக் கூர்ந்து பிழிந்த சாரம் அது.
கவிஞன் - சொல்ல வந்த கருத்தை, மாற்றிவிடாத திருத்தங்களை, ஒரளவு அனுமதித்தாலும் கூட, சொல்ல வந்தவனின் கருத்தை தலைகீழாய் மாற்றிவிடும் திருத்தங்கள் மனசுக்கு மிகுந்த வலியையே தருகின்றன.
ஞானம் வெறுமனே ஒரு சாதாரண இலக்கிய சுவைஞர்களால் வாசிக்கப்படும் இதழ் அல்ல என்பது, எல்லோருமே மிகத் தெளிவாய் அறிந்த ஒரு விடயம். இதனால்தான், எந்த வகையிலுமே இத்தகைய கருத்துச் சிதைவுகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. பெரியோர்களின் அங்கீகாரமும் ஆசீர்வாதமும் எனது எழுத்துக்களுக்குக் கிடைத்தாக வேண்டும்.
- மடவளை அன்சார் எம். வஷியாம்
55 ஆவது ஞானம் கிடைக்கப் பெற்றேன். பொதுவாக எல்லா அம்சங்களுமே சிறப்பிற்குரியவை. ,
கல்வயலாரின் "புதுப் பஞ்ச தாண்டகம்” அருமையிலும் அருமை.
சராசரிக்கு மேலானோர் கொழும்பு போனார் சம்பந்தம் உள்ளோர் மேல்நாடு போனார் தராதரங்கள் அல்லாதோர் கலங்கி ஏங்கி
தமிழனாய்ப் பிறக்கச் செய்தவந்தான் என்னே?” என்ற அடிகளில் யாழ். மக்களின் புலப்பெயர்வுகளையும் துன்பியல் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.
ஞானம் - ஜனவரி 2005 83

Page 35
விதானையார் வீடுகளில் பாதிநேரம் விதிவழி ஆமியிடம் மீதிநேரம் உதாசீனம் செய்கிற மனேச்சர் முன்னால்
ஒருவாறு மீண்டாலும்.” என்ற அடிகளில் யாழ் மக்கள் அடுக்கடுக்காய் படுகின்ற துன்ப துயரங்களையும் கெடுபிடிகளையும் தீட்டியிருக்கிறார்.
"சந்தியிலே சலசலப்பு வாக்குவாதம்
பஸ் வந்தால் சரி எல்லாம் தணிஞ்சு போகும் இந்தளவு தான் எங்கள் பேச்சுவார்த்தை
இதற்குமேல் ஏதேனும் நடப்பதுண்டோ?” இவ்வடிகளில் கவிஞரின் கவித்துவம் நெஞ்சைத் தொடுகிறது. "இந்தளவு தான் எங்கள் பேச்சுவார்த்தை” என முத்தாய்ப்பு வைக்கும் கவிஞர் “இதற்கு மேல் ஏதேனும் நடப்பதுண்டோ?” என்ற வினாவுடன் கவிதையை முடிக்கிறார். இங்கு "நடப்பதுண்டோ” என்பதில் வரும் ஒகாரம் இனி எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறதோ? இதோடு “நறியவும் உளவோ நீ அறியும் பூவே” என்ற சங்கத்தமிழ் கவியடியை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்னும் சுவை பயக்கும். (கூந்தலைவிட நறியமலர் இல்லை என்பது இதில் இருந்து பெறப்படும்).
- பெரிய ஐங்கரன்
தங்கள் ஞானம் மாதா மாதம் எமது இலக்கிய சிந்தனைக்கு உரமூட்டிக் கொண்டே இருக்கின்றது. 54 இதழ்‘சுதர்ம மகாராஜனின் "கிரிகை”சிறுகதை வாசித்தேன். "ஒரு சிறு புள்ளி வைத்து பெரிய வட்டத்தை வாசகர் நெஞ்சில் புதைத்து விட்டார்”தமிழர் தம் கலாசார பண்பாடு எப்படி எல்லாம் சீரழிந்து போகின்றது என்பதைப் புடம் போட்டுக் காட்டி சுதர்சன் ஓமக் கிரிகை செய்துள்ளார். முற்போக்குக் கருத்துக்களைத் துணிந்து எழுதும்
ஆசிரியருக்கும், அதை வெளியிடும் ஞானத்திற்கும் எனது துணிகரப் பாராட்டு.
- நா. ஆனந்தன்
ஞானத்தில் செங்கை ஆழியானின் (க. குணராசா) எழுதிவரும் கட்டுரைத் தொடர் வெகு பிரமாதம். இவ்வாறான பயிற்சி நெறிகள் போன்ற கட்டுரைத் தொடர்களை வெளியிடுவது நல்ல முயற்சி. வாசகரின் ஆற்றலை, ரசனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் புதிதாக எழுத்தாளர்களை உருவாக்குவதாகவும் பயிற்றுவிப்பதாகவும் இவ்வாறான கட்டுரைகள் மிளிர்கின்றன. அதிலும் புனைகதையியலில் செல்வாக்குச் செலுத்தும் அதன் கூறுகளின் பல்வேறு வடிவங்களைக் காட்டுவதற்குச் செங்கை ஆழியான் காட்டும் உதாரணக் கதைகள் அப்புனைகதைகளை வாசிக்கத் தூண்டுகிறது. இதன் மூலம் அத்தகைய புனைகதை இயல்புகளின் அறிவைப் பெறக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் செங்கை ஆழியான் பயன்படுத்தும் எளிய தமிழ் வடிவம், அவரது நடை அவரே முன்னின்று பயிற்சிப்பட்டறை நடத்துவது போல் அமைந்து உள்ளது. ஞானத்திற்கும் செங்கை ஆழியானுக்கும் எமது பாராட்டுக் கலந்த நன்றிகள்.
- வே. சதீஸ்குமார், திருகோணமலை.
64 ஞானம் - ஜனவரி 2005

கரையோர மாவட்டங்களான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை, மூதூர், களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை போன்ற கரையோரக் கிராமங்களிலேயே அதிக அழிவுகள் ஏற்பட்டுள்ளன. தெய்வாதீனமாக சிலாபம், மன்னார், புத்தளம் போன்ற கரையோரக் கிராமங்கள் இந்த அழிவிலிருந்து தப்பியுள்ளன.
இப்பேரழிவினை நாட்டின் ‘தேசியப் பேரழிவு என ஜனாதிபதி பிரகடனப் படுத்தியுள்ளார். அத்தோடு இயற்கையைப் போன்று இனபேதங்களை மறந்து செயற்படுவோம்; நாட்டு மக்களைக் காப்போம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனம்,மதம், மொழிகளைக் கடந்து எல்லோரும் ஒற்றுமையாக இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையை அவரது கூற்று உணர்த்தியுள்ளது.
மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் நாடளாவிய ரீதியில் மக்களால் ஒற்றுமையாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நிவாரணம் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகின்றது எனவும், தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்லும் நிவாரணம் ஒரு சிலரால் திசை திருப்பப்படும் எத்தனிப்பு முயற்சியும் நடைபெறுவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் தமிழ்த் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது நிதியத்திலிருந்து முப்பது கோடி ரூபா பணத்தை நிவாரணப்பணிக்காக அளித்துள்ளார். தக்க தருணத்தில் கொடுத்துதவிய இந்தப் பெருநிதி மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், வரவேற்கக் கூடியதுமான விடயமாக அமைந்துள்ளது.
இயற்கையின் அழிவுக்கு எதிரான போராட்டமே மனிதகுலத்தின் போராட்டமாக அமைய வேண்டும் என்பது யாவராலும் உணரப் பட்டுள்ளது. பல்வேறு நாடுகளும், பல்வேறு நிறுவனங்களும் பாராட்டக்கூடிய வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளன. பாதிப்பற்ற பகுதிகளில் உள்ள மக்களின் சேவைகள், உதவிகள் அளவுக்கதிகமாகக் கிடைத்துள்ளன. இதில், சக்தி - சிரச ஊடகங்களின் பணிகள் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
இத்தகைய கடற்கோள்களால் ஏற்படும் பேரழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் ஏற்பட்டதாகப் பழந்தமிழ் இலக்கியங்களான புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் சான்றுகள் உள்ளன. ஆதிகாலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள், அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா யாவும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன எனவும், இதனை லெமூரியாக் கண்டம் என அழைக்கப்பட்டது எனவும், இது 'கடல்

Page 36
கொண்ட தென்னாடு' எனவும் குறிப்புகள் உள்ளன. லெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்கள் காரணமாக கடலில் அழிந்து போயின. இவ்வாறான கடற் கோள்கள் முன்னர் நான்கு தடவைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றால் 49 நாடுகள் அழிந்து போயுள்ளன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறானதோர் கடற்கோள்தான் இம்முறைபம் ஏற்பட்டதோ என எண்னத் தோன்றுகிறது. இம்முறை ஏற்பட்ட அனர்த்தத்தில் பர்மாவின் நிலப்பரப்பு 40 அடி உயர்ந்து விட்டது எனவும், சுமத்திரா தீவு தெற்கு நோக்கி 100 அடி நகர்ந்து விட்டது எனவும் கூறப்படுகிறது.
இத்தகைய பாரிய அழிவுகளை முன்கூட்டியே அறிவதற்கு இப்போது நவின கருவிகள் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேஷியா, கனடா உட்பட உவகின் 28 நாடுகளில் இத்தகைய கருவிகள் உள்ளன. இக்கருவிகளின் உதவியால் அந்நாட்டினர் தமது நாடுகளைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். நமது நாட்டிலும் இத்தகைய கருவிகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கடலை ஞானம் இப்போதுதான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஏற்பட்ட அழிவுகள் இதுவரை சரியான முறையில் கனக்கிடப்படவில்லை, இன்னும் அதிகமாக இருக்குமோ என்று ஆஞ்சும் நிலையே கானப்படுகிறது.
நம் நாட்டிலும், மற்றும் இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளிலும் இப்பேரழிவால் பாதிப்புக்குள்ளான அத்தனை மக்களின் துயரங்களிலும் ஞானம் பங்குகொள்கிறது. அழிந்துபோன உயிர்களுக்காகக் கண்ணிர் அஞ்சலி செலுத்துகிறது.
புதிய ஆண்டை நாம் எல்லோரும் ஒரு சவாலான ஆண்டாகவே எதிர்கொள்ள வேண்டியநிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். பேரழிவால் தவித்து நிற்கும் நம் மக்களுக்கு எம்மாலான உதவிகளை வழங்கவேண்டும், ஆதரவுடன், இன, மத பேதமின்றி எல்லோரும் கைகொடுக்க வேண்டும், மீண்டும் நமது மக்கள் பழைய வாழ்க்கை நிலைக்கு வர எம்மாலானா உதவிகள் புரிய வேண்டும். இதுவே புதிய ஆண்டின் சங்கற்பமாக அமைய வேண்டுமென ஞானம் பாவரையும் பணிவன்புடன் வேண்டுகிறது.
(இந்த இதழின் அச்சு வேலைகள் யாவும் முடிந்தபின்னரே இப்பகுதிஞானத்துடன் இணைக்கப்பட்டது)

గౌ53 - 32కిళ్లె
JANALANKA
ENTERPRISE
".
:
RETAILERS OF QUALITY BAGS & PURSES - STATIONERS -- FANCY GOODS
BULK ORDERS ACCEPTED
No. 60, Kotugodella Weediya, Kandy.
3.
ac33333333333333333333333333&c.
T--
劃
2.
শ্ৰেীক্ষা *
မ္ဘီ CARSONSMEGA Š%% CERAMICS
Importers & Distributors of Wall Tiles, Floor Tiles, High Quality Sanitary wares, Bathroom. Accessories, P. V. C. And Hot Water Pipe Fittings
A-74, Colombo Street Kandy, Sri Lanka. Tel: 081-4476760,081-2200052 Fax: 081 - 2200052
i.
է:
颜

Page 37
GANANAM
স্ত্রী
臀ff、t【 "orri polirrera Es 'Y
8. Luck) 篮 Bisc Ở Manufa
ඵ2දී
Q Kunda
Q PH) OS
OE
Q O81
O81
Fax : 081
E-Mail : Lu
SV23 kగన్ల
Sy
浴 s

ylland 8 Cuit 0. cturers Ở
asale. 0.
() 2420217 ? 2420574 S. 2227041 篮 2420740 Q
:kyland Gshnetik.