கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2005.02

Page 1


Page 2
*********్య
深
3.
添 冷 PooBALASINGHAMš & BOOK DEPOT S.
深
交
IMPORTERS, EXPORTERS, SELLERS R. PUBLISHERS OF BOOKS,
Fé
STATIONERS AND NEws AGENTs. & هید KR Head office : Branches : t 8. 34), 212 Sea Sirigg, 309A-2/3, Galle Road, *5* .Cill Tibi li, Sri La Luka. Colombo 06, Sri Lanka( ہلاکھ දී” Tg] , 24,2232.1 Tel. ; 4-515775, 2504266 KK
K Fax. 2337 313 — ** .3 ,E-Tail ; borhofstellk 4A, Hospital Road خلافة Hi !
E.
---- බී $4% �) ཟ་ཐོག་
- نجی
(ဈ) 3.
罩 领 பூபாலசிங்கம் புத்தகசாலை : “ స్ట్" 濠 புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, 3 இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் 濠 濠 3. 'sk' gripagtip : ålór:
22 இல. 340,202 செட்டி பார் தெரு, இல. 309 A-2/3, காலி வீதி, 2දී *?) கொழும்பு 11, இலங்கை, கொழும்பு 08, இலங்கை ఛ தொ. பே. 2422321 G.Ag5 III. CELJ. 4 5157 75 :علاج 3) தொ. நகல் 2337313 — } IẾilriffT iš5 fräi : pbidhi Cliff'sitime!... lk; இல், AA, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பாணம். ※ %2^^^^2% 2^
శళ%ళ%%%%%%%%%
 
 

{ ବିଚ୍ଛିତ୍ତି । ::
ஞானம்
ஆசிரியர் : தி. ஞானசேகரன்
விரிவும்
ஆழமும்
பெறுவது
ஓவியர்கள் :
புஷ்பா
நா. ஆனந்தன் தலைமை அலுவலகம் !
1977, பேராதனை வீதி, கண்டி.ஜி
தொடர்புகளுக்கு. : தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3- B, 4 Rougi ஒழுங்கை, கொழும்பு - 05. தொபே, & தொ.நகல் 011-28013 செல்லிடத் தொபே. 1777-306806 i E-III till:gn:liniam, magivinicíoyahoo.coIII
ஒரனரி சஞ்சிதைமின் சிரசுரWyரி ரைகளின்கீதத்துக'து அதிேரை TOEWI y F7FFFÏNFTY FRYIJYKY VÝN/KA), lay fin. WD J73. III. TMJs. NeX:53ý,31:37327753ý8RIEŤ, முகவரி & ஆகியவற்றை ரோம் இணைத்தல் W 𠔵.
- ஆசிரியர் 2::::FE:f3s.:ES-23S---E3.r.
இதழினுள்ளே
நேர்கryள் ாள். பொ.
சிலுகதை
தீ - நீ.பி. அருளானந்தம் ČGI: Cogui TT
- இனங1வயூர் உருத்திரன்
கவிதைகள் அவதரிப்பு
- பாரிழந்து ரிவதும1 ... இல்,
- களிஞர் எ. எம். காம், ஆவி மீண்டும் வா அலையே.
-எான்றினர் நரீதரன்
மனிதநேயம் தூங்கி விட்டதா?
- தி, சாரிநாதன் சுனாமி
- நவஜோதி ஜோகிரட்ாணம் போப்விடு பேப் அனலயே!
ர. சந்திரகாந்தின் சுனாமி
- வாரை வாக்கான் ,
Ya TayAYS"Asia
ஸ். எம். கார்மேகம் எழுதிப.
- ஆ. முகம்மது சமீம் சொக்கன் என்ற படி31 ட்பாளி
- செங்காக ஆழியான் கவிதை உள்ளங்கள்
- ராஜா" "நாங் மீறப்படுகின்ற
பீாத ஆன்காந்த்
== ::= புதத் துண்டும் வ் என்ன.
நா. கோகார் தோட்டப்புறக் கதைகள்
ாாவ் நாடன் நான் பதிப் |63|| வ1ாகப் பேசுகிறார்
முகப்போவியம் : அமைதியும் அறலும் "
நா. ஆனந்தன்
பவித உரிமை.
3 si
41

Page 3
%\s,
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
ار .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
அனர்த்தமும் அநீதியும்
சுனாமி அனர்த்தம் அகிலத்தின் முன்னால் உலக மக்களின் பலவீனத்தை விளக்கிச் சென்றிருக்கிறது. உலகளாவிய ரீதியில் மக்களிடையே புது ஒத்துழைப்பொன்றை வெளிக்காட்டியுள்ளது. இந்த அனர்த்தம் தென்கிழக்கு ஆசிய நாடுகளை மட்டும் பாதித்துவிடவில்லை. உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7000 உல்லாசப் பயணிகள் உயிரிழந்திருக்கிறார்கள். 50 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மட்டும் 40 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். 40,000 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் தனிப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் மிகப் பெரியது. சர்வதேச உதவிகள் மிகவும் மெச்சக்கூடிய அளவில் அமைந்துள்ளன. சர்வதேசத் தொடர்பாடல் திறனின் பெறுபேறாக சுனாமி அனர்த்தத்தின் கொடுமையான காட்சிகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்டன. இதில் சி. என். என் பி. பி. சி. தொலைக்காட்சிகளின் பங்கு அளப்பரியது. அக்காட்சிகளைக் கண்ணுற்ற சிறியோர் முதல் பெரியோர்வரை இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் பாடசாலைச் சிறுவர்கள் தமது கைச்செலவுக்குக் (POCket MOney) கிடைத்த பணத்தை வரிசையில் நின்று நிவாரண உண்டியல்களில் போட்ட காட்சிகளைக்கூட ஊடகங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது. சர்வதேச சமூகம் முன்னென்றும் இல்லாத வகையில் உதவிக்கு ஓடி வந்துள்ளது. இலங்கை அரசாங்கம் பிரமிக்கும் வகையில் உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
2 ஞானம் - பெப்ரவரி 2005
 

இந்த மனிதாபிமான உதவிகள் உரியமுறையில் நீதியான வகையில் பாரபட்சமற்ற முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைகின்றனவா?
சுனாமி அனர்த்தத்தினால் வடக்கு கிழக்கு மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் உதவிக்கரம் நீட்டும் வெளிநாட்டு உயர் அதிகாரிகள் இப்பகுதிகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானின் இலங்கைக்கான விஜயத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகள் தவிர்க்கப் பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கான அவரது விஜயம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதாகத் தமிழ் பேசும் மக்கள் குமுறுகிறார்கள்.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்கரையோரப் பகுதிகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் துரித கதியில் மீளக்கட்டி யெழுப்பப்படுகின்றன. அரசும் அரச இயந்திரமும் தமது சக்திகள், வளங்கள் அனைத்தையும் ஒருங்கினைத்து வெளிநாடுகளிலிருந்து கிடைத்த பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு இக்கட்டுமான வேலைகளைச் செய்கின்றன. இடிபாடுகள் அகற்றப்பட்டு வீதிகள், பாலங்கள், கட்டிடங்கள் யாவும் புதுநிர்மானம் பெறுகின்றன. அவதிக்குள்ளான பெரும்பான்மையின மக்களின் வாழ்க்கையைப் பழைய நிலைக்குக் கொண்டுவரப் பெருமுயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால் வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தாம் புறக்கணிக்கப்படுவதாக ஒருமுகமாக உரத்தகுரலில் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிவாரணப் பொருட்கள் போதியளவு தமக்கு வந்துசேரவில்லை எனவும் இயல்பு வாழ்க்கைக்குத் தாம் திரும்பு வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் குமுறுகிறார்கள். இதேபோன்று தென்பகுதியில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களும் தமக்கு உரியமுறையில் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் கண்ணிர் வடிக்கிறார்கள்.
அரசாங்கம் பாரபட்சமற்ற முறையில் செயற்பட்டு தமிழ்பேசும் மக்களுக்கு உரியமுறையில் நிவாரண உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். இல்லையெனில் இலங்கையின் இனப் பிரச்சினைக்கான காரணத்தைச் சர்வதேச சமூகம் அறிந்து கொள்வதற்கு மீண்டும் வழிசமைப்பதோடு ஒரு வரலாற்றுத் தவறாகவும் இது அமையும்.
ஞானம் - பெப்ரவரி 2005 3

Page 4
நீ. பி. அருளானந்தம்
காய்ந்த தென்னம் மட்டையாக அந்தப் பாயிலே படுத்துக் கிடந்தாள் செல்லாயி. இரண்டு நாட்களாக உடலில் கொதித்துக் கொண்டிருந்த காய்ச்சல், இளகி விட்டிருக்கின்றது மாதிரித் தெரிந்தது அவளுக்கு.
அதனால் உடலில் இருந்த சிறிது பலத்தோடு, படுத்திருந்த பாயிலிருந்து எழுந்து அவள் உட்கார்ந்தாள். பிறகு அடுப்புப் பக்கமாகத் தன் பார்வையை அப்படியே அவள் திருப்பினாள். அவளது ஒரே மகள் கறுப்பாயி அங்குதான் இருந்தாள்.
அந்தப் பக்கம் மூலையில் கிடந்த மண்பானையை, ஊனமுள்ள தன்கையை வைத்துச் சரித்துப் பிடித்தவாறு தண்ணிரைக் கோப்பையில் அவள் ஊற்றிக் கொண்டிருந்தாள். பானையைப் பிடித்துச் சரித்திருந்த தினுசு தண்ணிரும் அதிலே காலியாகி வருவதை
அவள்
செல்லாயிக்குக் காண்பித்தது.
தன் எட்டு வயதுப் பிள்ளை பட்டினி யில் தண்ணிரைக் குடித்துக் குடித்து வயிற்றை நிரப்புகிறாளே என்று அதன் மூலமாகச் செல்லாயி மனம் வருந்தினாள். “ஊனப்பட்டுப் பிறந்த பிள்ளை சாப்பாடு மில்லாமல் காயுதே” என்று நினைக்க, நினைக்க இரத்தம் வற்றிப்போய் சாம்பல் பூத்த அவள் முகத்தில், வேதனையின் கருநிழல் படிந்தது.
4.
“கருத்தம்மா..! இங்கிட்டு ஒரு வாட்டி வந்துக்கிறியா தாயி.”
அவள் கூப்பிட்டதும்தான் தாமதம், உடனே தாயின் முகத்தை கறுப்பாயி பார்த்தாள்.
“எழுந்திருச்சிட்டியாம்மா! ஒனக்கு காச்சலு விட்டுடிச்சாம்மா..?”
குழந்தையவள் தாயைப் பார்த்தபடி ஆவலுடன் கேட்டாள்.
“இப்ப தேவலைப்போல உடம்புக் கிருக்குக் கண்ணு. தண்ணியை கொஞ்சமூண்டு எனக்கும் கொண்டாந்து தந்துக்கிறியாமா. தாகமாயிருக்கு.?” அவள் கேட்டதும் தான் தாமதம், அடுப்படியின் பக்கத்திலிருந்த அந்தக் குடத்தை நிமிர்த்திவைத்துவிட்டு, தண்ணீர்க் கோப்பையுடன் கறுப்பாயி தாயின் அருகிலே வந்து விட்டாள். "இந்தாம்மா குடிம்மா.” “ஒனக்குத் தவிக்கலியா?” "இல்லம்மா நீ குடிச்சிக்க." “நீ சாப்புட்டியா கண்ணு.? தவசி ஐயாவோட கடையில கடனுக்கு ஏதாச்சும் திங்கிறத்துக்குண்ணு கேட்டு வாங்கி யிருக்கலாமே..?”
“அவரு இனி ஒண்ணுமே தரமாட்டேனெண்ணுட் டாரும்மா. இருக்கிற கடனு பாக்கி எல்லாமே காசைக் கொண்டாந்து குடுத்து தீத்துப்புட்டு அப்புறமா இங்கிட்டுப்பக்கம் கடைக்கு நீ வந்துக்க. உங்க ஆத்தாகிட்ட போயி சொல்லு. எண்ணுகிட்டு என்னே ஏசி விரட்டிப் புட்டாரும்மா.”
தன் குழந்தை அப்படியே அதை யெல்லாம் கண்கலங்கியபடி சொல்ல, அதைப்பார்த்ததும் அவளுக்கு அழுகை வந்து தொண்டையை இறுக்கியது.
கடனேயில்ல
ஞானம் - பெப்ரவரி 2005

வுட்டயாப் (uu
லாந்தருக்கு கொஞ்ச மூண்டு எண்ணையை வாங்கிக்கிட்டு வந்து விளக்கை ஏத்தி வைச்சிக்கம்மா..!” சொல்லி விட்டு ஒலைத் தட்டியில் செருகி வைத்திருந்த சீப்பை எடுத்து, சிடுக்கு விழுந்த தன் தலை மயிரை ஒருவாறு அதனால் வாரி அவள் பின்னல் போட்டுக் கொண்டாள்.
இப்போ முகம் கழுவிக்கொள்ளவும், அவளுக்குத் தண்ணிர் அங்கில்லை பானையில்
பிள்ளை கொண்டுவந்து கொடுத்த தண்ணிரை வாங்கிக் குடித்துவிட்டு.
"நீ வூட்டீல இருந்துக்கிறியாம்மா. நான் வெளியில போயிட்டு வந்துக் கிறேன்” என்றதாய் அவள், ஒரு முடிவு எடுத்துக் கொண்டதுபோல முகத்தை வைத்துக் கொண்டு மகளைப் பார்த்துச் சொன்னாள்.
“காச்சலோட வெளிய எங்கிட்டம்மா போறே.?”
“எனக்கிப்ப காச்சலு இல்லம்மா! நீ ஒண்ணுக்கும் பயப்பிட்டுக்காம தைரியமா யிருந்துக்க. நான் போயி ராத்திரிக்கி ஏதாச்சும் ஒனக்கும் எனிக்கும் திங்கிறதுக்கு கடேல வாங்கிக்கிண்ணு வர்றேன். நீ பக்கத்து வீட்டு அங்கம்மா
ஞானம் - பெப்ரவரி 2005
இருந்த தண்ணிரும் காலியாகி விட்டது. அந்த இடத்திலிருந்து பொதுக்கிணற்றுக்கு, அதற்காகவென்று குடத்தைக் கொண்டு அவள் இனிமேல் போக வேண்டும். அதற்கெல்லாம் அவளுக்கு இப்போது நேரமில்லாத மாதிரியே இருந்தது.
பொழுதுபட்டுக் கொண்டு வருவ தால், நேரத்துக்கு அதிலே போய் இருட்டும் தருணத்திலிருந்து அவள் அங்கே நின்றாக வேண்டும்.
"இந்த நேரம் அம்மா எங்கே போகிறாள்?” - என்பது மகளுக்கு ஒன்றும் விளங்காமல்தான் இருந்தது. அவளுக்குக் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதலாய், இது போலத்தான் அவள் பொழுது சாயவும் குடிசையிலிருந்து வெளியே கிளம்பு
5

Page 5
கிறாள். நடு ராத்திரியானதும் வீடு திரும்புகிறாள். இரவு வீட்டுக்குத் திரும்பும்போது அவளுக்கும் நிறைய கடையிலிருந்து, சுவையான தீம்பண்டங் களைக் கொண்டு வருகிறாள்.
“இதுவெல்லாம் எப்படிக் கிடைக் கின்றது?” - என்று அவள் வியப்புடன் சிலவேளைகளில் தாயைக் கேட்பாள்.
இரவு வேளையில் அரிசி ஆலைக்கு, வேலைக்குப் போய் வருகிறதாகத்தான் செல்லாயி தன் மகளுக்கு அப்பொழு தெல்லாம் கூறுவாள்.
செல்லாயி தன் மகளுடன் வாழும் இந்தச் சிறு குடிசையைப் போன்றே இன்னும் எத்தனையோ குடிசைகள் அந்தக் காலனியில் காட்சியளிக்கின்றன. நகரின் ஒதுக்குப்புறமான 'கல்லுக்குழி என்று அழைக்கப்படும் இந்த இடம் பெரிய சேரிபோலத்தான் பலருக்கும் காண் பதற்குத் தெரியும். நொந்து நொடித்துப் போய் நகரிலிருந்து ஒதுக்கப்பட்டவ ரெல்லாம் வாழும் இந்தச் சேரி, ஏழமைப் பட்டவர்க்கென்றே வாழப்படைக்கப்பட்டது மாதிரியும் காணப்படும்.
இங்கே துன்பம், துர்நாற்றம், குப்பை கூளங்கள், அசுத்தம் முதலியவைகளின் மத்தியிலேதான் வாழ்ந்து வருகிறவர்கள். அதனால், அவற்றுடன் வாழப் பழகி விட்டவர்களாகவும் அவர்கள் யாவரும் இன்றளவில் ஆகியும் விட்டார்கள்.
உள்ளவர்களெல்லாம்
மலம்
தட்டுவாணி கொண்டையிலே தப்பாமல் பூவிருக்கும் என்பதற்கு பூவம்மா பொருத்தமானவளாகத்தான் இருப்பாள். அந்த அளவுக்கு அவளுடைய
கொண்டையை அழகு செய்வது, அக்கினிக் கொழுந்து போல் ஒளியுடைய செவ்வரத்தம் பூக்களாக இருக்கும். எப்பவும் பார்த்தால் சீவிச் சிங்காரித்து அச்சுக்கலையாதமாதிரி இருக்கின்றவள் அவள்.
தியேட்டர் முன் வாசலில் இருந்து கடலை வியாபாரம் செய்வதுதான் பூவம்மாவின் தொழிலென்று பலர் நினைக்கலாம். ஆனால், சிலருக்கு அவள் விபசாரத்துக்கு ஆள் சேர்ப்பவ ளென்று நன்றாகத் தெரிந்தவொரு இரகசியமாயிருந்தது.
பூவம்மா இருக்கின்ற இடத்துக்குச் செல்லாயியும் போனாள். இப்பொழு தெல்லாம் செல்லாயி தன்னிடத்துக்கு வருவதை பூவம்மா அதிகம் விரும்புவ தில்லை. எலும்புக் கூட்டில் வெறும் தோலைப் போர்த்தது போல் இருக்கும் அவள் இந்த வியாபாரத்துக்குத் தோதில்லை என்றே செல்லாயியைப் பார்த்து, முகத்துக்கு நேராகவும் பூவம்மா சொல்லத் தொடங்கி விட்டாள்.
“என்னடீம்மா. தோட்டக்காட்டில இருந்து புதுசு புதுசா யெத்தினை இளங் குடும்பங்க இங்கிட்டு வவுனியாவில வந்து கூலி வேலையின்னு செஞ்சுக் கிட்டுத் திரியுதுக. நெடுகவாட்டி அப்படீன்னு அதுங்களுக்கெல்லாம் நெரந்தரமா வவுனியாவில வேலைங்க கிடைச்சுக்குமா. மழை பெஞ்சுக் கிட்டிருந்தா மில்லிலயும் வேலைங்க இல்லாமப்பூடும் வெங்காய தழலு அறுக்கிறதெங்கிறதும் இல்ல. வூட்டு ஆம்பளைங்களுக்கும் நாட்டாம வேல பசாரில துங்கிப்புடும். இப்பிடி போய்க் கிட்டிருந்தா பட்டினி கிடந்துப்புட்டு அதுங்களெல்லாம் யேன் கிட்டத்தான்
ஞானம் - பெப்ரவரி 2005

வருதுக. அதுங்களை பாக்கவே எனக்குப் பாவமாயிருக்கும். என்ன செஞ்சிக்கிறது நானும் பாவமுண்ணு இப்பிடியா ஒரு வழிய அதுங்களும் பிழைக்கட்டுமுண்ணு காட்டுறேன். அவளைங்கெல்லாம் கொமரிகணக்கா நல்ல எளசுக. பாக்கிறதுக்கு குளிச்சியா இருக்காளுங்க. வர்ற ஆம்புளைங்க எல்லாமே அதுங்களைத்தானே பாக்கிறாங்க. அவளைங்களுக்கு முன்னாடி தரையில ஊருறாங்க. ஒடனயே வாரிக்கிட்டுப் போறமாதிரி காருங்களில கொண்டு போய்க்கிறாங்க. ஆனா ஒன்ன ஆருதான் கண்டுக்கிறாங்க.”
தன்னைப் பற்றி இப்படியெல்லாம் பூவம்மா சொல்வதைக் கேட்க செல்லா யிக்கும் மனவேதனைதான் என்றாலும், மீள முடியாத அளவு தன் உடம்பு மேலும் மேலும் கெட்டுவருவதை அவளும் உணராமலில்லை. தேரையை வைத்துக் கொண்டிருக்கும் கல்மாதிரி, அந்த நோய்களையெல்லாம் தான் வைத்துக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியா தென்றில்லை! இந்த நிலைமை விபசாரத்தால்தான் தனக்கு வந்த தென்றும், விபசார வாழ்க்கையே தன்னை இன்று மென்று எறிந்த சக்கையாக ஆக்கிவிட்ட தென்றும் இப்பொழுதுதான்
அதையெல்லாம் பாடம் படித்தாய்க் கொண்டாள்.
ஆனாலும், இதிலிருந்து ஏது
தனக்கு இனி மீட்சி இனிவருமா பழைய வசந்தத்தின் காட்சி என்று எண்ணி யெண்ணி வாடுவதை விட வேறெதும் அவளால் செய்யக் கூடுமானதாக இல்லை.
அவளது வாழ்க்கையிலே வசந்த காலம் என்று இருந்தது அவள் முன்பு
ஞானம் - பெப்ரவரி 2005
கணவனுடன் வாழ்ந்த அந்த மூன்று மாதங்கள்தான். வாழ்க்கையில் அவளுக்கு சொக்கழகாகவிருந்த அந்தச் சிறிய காலத்தை, அவளும் நினைவி லிருந்து தொலைத்து விடவில்லை. அந்த மூன்று மாதம் மட்டும் இல்லற வாழ்வின் விளிம்பை நுகர்ந்து விட்டுத் தான் விதவையாகியதை எப்படி அவளால் மறக்க முடியும்.
திருமணமான மறுவாரமே தேயிலைத் தோட்டத்திலிருந்து கணவனும் தானும் வவுனியாவுக்கு பிழைக்கவென்று வந்து சேர்ந்ததும், வவுனியாவுக்கு வந்து சேர்ந்த பிறகு கணவன் நாட்டாமை வேலை செய்து அதன் மூலம் மகிழ்ச்சி யாக குடும்ப சீவியத்தை நடத்தியதும் பச்சை கட்டி அழகாய்த் தளிர்த்திருக்கும் முருங்கைக் கிளையின் தளிர் இலைகள் மாதிரி இன்றும் அவளுக்கு பசுமை காட்டுகிறது. அந்த மரம் பசேலென்று இலைதளிர்த்து வெளேரென்று பூப் பூப்பது போல் இருக்கும் அந்த வாழ்க்கைக் காலம் கடந்து, அதற்குப் பிறகு தனக்கு நடந்த இழப்பை அவள் யாரிடமாவது சொன்னால்,
“ஒஎன்னபாவம்பரிதாபம் நீபிறந்ததே பரிதாபத்துக்குரிய விஷயம்தான்.”
என்று வேதனையுடன்தான் சுடறுவார்கள். அந்தளவுக்கு அவர்களது மனதையும்புண்படுத்தும் செய்திதானே இது "நாலு நாளு காச்சலில கெடந்து ஒரு மனுசனு செத்துப்புடுவானா. இது என்ன புதுசா ஒரு நோயி..?”
இப்படித்தான் அந்திச் சேரியில் வாழ்பவரெல்லாம் செல்லாயியின் கணவன் இறந்ததுபற்றி கேள்விக் தொடுக் கிறார்கள். தங்களது அறிவுக்கேற்றாப்
கணைகளை அவளிடம்
7

Page 6
போல அதைப்பற்றி அவர்கள் பல விதமான கருத்துக்களையும் அவள் முன் வைக்கிறார்கள்.
“அது ஏதோ சனியணு மூளைக் காச்சலாண்டி. என்ன யெழவு பிடிச்ச நோயோ அதெல்லாமே நமக்கு என்னாத்தான் தெரியுது.”
என்றதாய் அந்தச் சேரியிலுள்ள பெண்களெல்லாம் அதைப்பற்றி பலதும் பத்துமாய் தமக்குத் தெரிந்தவற்றை வைத்து கதைக்கத் தொடங்கி யிருந்தாலும் சேரியிலே இந்தக் கதை மட்டும் தனியே எத்தனை நாளைக் குத்தான் அவர்களிடையே நிலைநிற்கும். வெளியுலகம் பார்க்காத இருட்டு உலகில் தன்னை சிலநாட்களாக விதைத்துக் கொண்டவள், மரவட்டை யைப் போல் அந்தக் குடிசையின் உள்ளே சுருண்டு படுத்துக் கிடந்தாள். பசியில் வயிறு சுருங்கிச் சிறுத்துப்போய் உள்வாங்கத் தொடங்கியதும், வேறு வழியில்லாது கூலி வேலைக்கென்று வெளிக்கிட்டாள்.
கூலி தேடித்திரியும் அநேகமான பெண் தொழிலாளர்களை
வேலை
உள்வாங்கக்கூடிய இடங்களாக அரிசி ஆலைகள் வவுனியாவில் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தன. அங்கே ஒரு அரிசி ஆலையில் கூலி வேலைக்கென்று சேர்ந்து அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையையும் மிகவும் சிக்கலாக்கிக் கொண்டாள் செல்லாயி. ஒளவை மாதிரி மூப்பெய்திய பாட்டியாகி விட்டால்தான் ஒரு பெண்ணால் ஆண் துணையில்லாமல் தனித்து வாழ முடியும் - என்கிற இந்த நடை முறைக்குச் சாத்தியமான ஒர் உண்மையை அங்கு
வேலைக்குப் போய்ச் சேர்ந்த ஒரிரு நாட்களுக்குள்ளாகவே அவள் நன்கு உணர்ந்து விட்டாள்.
அங்கே இரவு வேலைக்குப்போய்ச் சேர்ந்த நாளிலிருந்து அங்கு வேலை செய்யும் ஆண்களெல்லாம் அவளை மரத்தில் நன்றாகப் பழுத்துத் தொங்கும் கனிகளைப் பார்ப்பதுபோல் காமப் பசியோடு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
எல்லோருக்கும் இராவண ஆசை அவர்களுக்குள்ளே சீதையாக இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்க வதற்கு எத்தனை நாட்களுக்குத்தான் அவளால் முடியும்?
முதன் முதலில் இந்த முறையில் பலாத்காரம் தான் அவளை விழுங்கியது. இதற்காக பொலிஸ் கோடு என்று ஏறுவதற்கு அவளுக்குத் துணிவு வரவில்லை! முதலில் அவளை - திருப்தியாக இரையெடுத்த பன்றிபோல கொழுகொழு’ என்று இருந்த அந்த மில்லின் மனேச்சர்தான் தன் காமத்தீக்கு இரையாக்கினான். காஞ்சொறியின் சுணை அடர்ந்த இலைகள் மீது தன் உடல் பட்டுவிட்டது மாதிரி அந்தநேரம் செல்லாயிக்கு இருந்தது.
அன்றுடன் அந்த மில் வேலையை தலை முழுக்குப் போட்டுவிட்டு வேறு ஒரு மில்லுக்கு அவள் இடம் மாறிச் சென்றாள். ஆனாலும், அவள் விரும்பியபடி எங்குமே அவளால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த மில்களிலே விபச்சாரம் தழைத் தோங்கியிருந்தது.
வியர்வை வழிய வழிய அவள் வேலை செய்யும்போது கூட யோனியும் முலைகளும் உள்ள சதைப்பிண்டமாக அவளைப் பார்த்து
ஞானம் - பெப்ரவரி 2005

விடவே அங்குள்ள ஆண்களில் அநேகம் பேர் முயற்சித்தார்கள். அவளது உடலை மென்று சுவைத்துச் சப்பி உறுஞ்சி நக்கி விட்டுப் போவதற்கு இரைக்காக ஒற்றைக் காலில் காத்து நிற்கிற கொக்கின் தாகத்துடன் அவர்கள் நின்று கொண் டிருந்தார்கள்.
இதிலே இருந்து விடுபட்டு தன்னைக் காத்துக் கொள்ள அந்த வேலைத் தலங்களுக்கு முழுக்குப் போட்டுக் கொண்டு திரிந்ததுதான் கடைசியாக அவளுக்கு மிச்சம்.
ஆனாலும், முன்பு அவளுக்கு நடந்த அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்னும் ஏற்பட்டு விட்ட சில தவறுகளின் நிலையால் பிறகு முழுகாமல் இருக்கும் படியான உடல் மாற்றமடைந்த ஒரு நிலைமையும் வந்து சேர்ந்து விட்டது அவளுக்கு.
“வ்வோஒ” என்று ஒரே சத்தி. அது எதனால் தனக்கு வந்தது என்று உடனே தெரிந்து விட்டது அவளுக்கு.
இல்லாதவளுக்கு வயிற்றிலே கருவா..? அவன் மனதை கருவறுத்தது இந்தக் கேள்வி
‘என்னை இந்தச் சமூகம் என்ன பாடெல்லாம் அதனால் படுத்தி வைத்து கொடுமைப்படுத்தும் என்று பயந்துபோய், உடனே அவள் அழித்தல் கடவுளைப் போலச் செயல்பட்டாள்.
அவளுக்குத் தெரிந்த பெண்கள் சொல்லிக் கொடுத்த மருந்துகள் விழுங்கி, கருவைக் கலைக்கப் பார்த்தாள். பலன் இல்லை!
அவைகளால் பலம் கொண்டிருந்த அந்தக் கருவைச் சிதைக்க முடியவில்லை
கணவன்
கண்டதையும்
ஞானம் - பெப்ரவரி 2005
மருந்துகளின் தாக்கத்தால் மரத்தில் கல்லடி வாங்கியும் விழுந்து விடாமல் கண்டலுடன் தப்பித்துக் கொண்ட ஒரு காயைப்போல ஒரு குறையை தன்னிடத்தில் கொண்டதாய் அந்தப் பிள்ளையும் பத்தாம் மாதத்தில் அவளுக்குப் பிறந்தது.
இதற்குப் பிறகு செல்லாயி திரும்பவும் வழமைபோல மில் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். ஆலையில் வேலை செய்யத் தொடங்கிய அநுபவத்திலிருந்து இப்போது அவள் ஆளே மாறி விட்டிருந் தாள். முழுக்க முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு என்று நினைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக ஏற்றுக்கொள்ளுமளவுக்கு வாழவும் பழகிவிட்டாள்.
என்றாலும் தான் பெற்ற செல்வத்தின் மேல் அவள் முழ் அக்கறையும் வைத்திருந்தாள். எப்பாடு பட்டாகிலும் நல்ல முறையில் பிள்ளையை வளர்த்து ஆளாக்கி விடவேண்டும் என்று பொழு தெல்லாம் அவள் தன் வியர்வை நிலத்தில் சிந்த வேலை செய்தாள்.
மாரிகாலம் வந்தால் அரிசி ஆலைகளிலே வேலைகள் குறைந்த அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். மில் வேலையை நம்பிச் சீவிக்கும் தொழி லாளர்களது மனசெல்லாம் அப்போது மாரி மேகங்கள் கறுத்துவிடும். ஏழ்மையின் தாழ் மட்டத்திலிருந்து சீவிப்பவருக்கு சேமித்து வைப்பதற் கெல்லாம் சந்தர்ப்பமேது? வயிற்றுக்கு ஒழுங்காக உணவில்லாத நிலையோடு, குடிசைக்குள்ளே வரும் மழைத்தண்ணி ருடனும் கிடந்து போராடிக்கொண்டு, அவர்கள் படுகின்ற பாட்டைப்போக்கு
போல்
வதற்கு யார்தான் முன் வருகிறார்கள்?
w 9

Page 7
குழந்தைக்குப் பால் கொடுக்க, அவள் தன் வயிற்றுப் பசியாற்ற வேண்டுமே? அவள் இவ்விதமாகத் தனக்கு வந்த கஷ்டத்திலே, சண்டமாருதப் புயலில் அகப்பட்டு சிட்டுக்குருவி போல் பரிதவித்து அலைந்த போதுதான் பூவம்மாவின் வலைக்குள் சிக்கினாள்.
முதலில் செல்லாயியின் உடலைத் தலை முதல் தாள் வரை பார்வையிட்டால் பூவம்மா. அவள் எதிர்பார்ப்பெல்லாம் செல்லாயி மீது ஒருங்கிணைந் திருப்ப தாய்த் தெரிந்தது அவளுக்கு.
தன் தொழிலுக்கு ஒரு கொழுத்தாடு பிடிபட்டாற் போன்றுதான் அவளைக் கண்டதும் பூவம்மா திருப்திப்பட்டாள். அவள் உடல் மீது இனி விழப் போகின்ற நெருப்புப் போன்ற முத்தங்களுக் கெல்லாம் எப்படி எப்படியெல்லாம் பேரம் பேசி கறாராகப் பணம் கறக்கலாம் என்றெல்லாம் நினைத்து அவள் திட்டம் போட்டுக் கொண்டாள்.
பூவம்மா வாயில் வைத்திருந்த தாம்பூலத்தை கொத்தாய்த் துப்பிவிட்டு,
புகையிலையின் சிறு கீறு ஒன்றை
எடுத்து வாயில் அதக்கினாள். புகையிலையின் சாறு காரமாய் தொண்டைக்குள் இறங்கிவிட அந்த லாகிரியின் சுகத்திலே செல்லாயியோடு பேச்சை ஆரம்பித்தாள்.
“இங்கிட்டுப் பாருடீம்மா கண்ணு. இதுக்கெல்லாம் போயி நீ பயப்பிட்டுக் கலாமா சொல்லு. எத்தினூண்டு பேரு இந்த ஒலகத்தில இப்பிடியா நடந்துகிட்டு சீவிச்சிக்கிறாங்க. அதால நீயும் ஒன்னோட கஸ்டமெலாமே தீர்த்துக்க - ஆமாண்ணு இப்ப சொல்லு. அடுத்த நிமிசமே பாரேன்! நீ ராசாத்திடீ”
10
அப்புடீல்லாம் கண்டபடியா நடந்துக்கிட்டா அதில ஏதோ ஒரு பெரிய நோயிதொத்திக்கிட்டு மாமே. நாலு பொண்ணுங்க சேர்ந்துப் பிட்டு அப்புடீல்லாம் கதைக்கிறப்ப கேட்டுக் கிறதுக்கு பயம்மாவில்ல இருக்கு.”
“அடி போடி இவளே. என்னிய விட பெரிசா இதெல்லாம் தெரிஞ்சுப்புட்டா அந்தப் பொம்மணாட்டிங்கல்லாம் இருக் காளுக.?”
“இல்லக்கா அந்த நோயி. டப்பிண்ணுகிட்டு தொத்திக்கிருமாமே. அப்பிடீல்ல அவளுங்கல்லாம் சொல்லு றாளுங்க.”
“என்னடி நோயி நோயி எண்ணு கிட்டு சும்மா நொண நொண எண்ணுக் கிட்டிருக்கே..? அது என்னடி நோயி புதுசா ஒரு நோயி..? தென்ன மரத்துல தேளு கொட்டுடிச்சின்னா பனே மரத்துல நேறி கட்டிக்கிறது மாதிரில்ல ஒன்னோட கதையிருக்கு.?”
இப்படியாக சர்க்கரையாகப் பேசி செல்லாயிக்கிருக்கும் பயத்தை முதலில் பூவம்மா போக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகும் அவள் விபசாரத்தை ஒர் புண்ணிய கைங்கரியமாக அவளிடம் எடுத்துரைத்தாள்.
“இங்க பாருடீம்மா. f நெனெச்சுக்கிற மாதி இதெல்லாமே பாவமுண்ணில்ல-இதை நீ நல்லாக் கண்டுக்க. இப்பிடீல்லாம் நாலு பேருங்களுக்கு நாமளும் நன்மையைத் தாண்டி செஞ்சிக்கறோம். மிருக சாதிங்களுக்கு வர்ற தெனவை தீத்துக் கிறதுக்கு சொறி கல்லுங்களை நட்டு வைச்சிருப்பாங்களே. அதை யில்லாம் பாத்திருக்கேதானே நீ. அப்புடித்தாண்டி
e O
யக்கோய்.
ஞானம் - பெப்ரவரி 2005

இதுவும். அறமுண்ணு சொல்லிக்கிற முப்பத்திரெண்ணு தருமத்தில இதுவும் ஒண்ணாமுண்ணு, அந்தப் பென்சனு ஐயா. அவருகூட முந்தி பொலிஸ் சார்ஜனுவா இருந்த வருடி. அந்த ஐயா கூட யேன்கிட்ட இதெல்லாம் அழகா சொன்னாரு. அவரும் நம்மளோட கஸ்டமருதான். பாத்துக்கிட்டியாடி - அந்த நாளுங்களில கூட எந்தாப் பெரிய மகானு கூட இதெல்லாத்தையுமா நல்ல மாதிரியாத் தானே சொல்லி வைச்சிருந் திருக்காங்க. அதுங்கமட்டுமா இன்னும் நெறைய இருக்கு கேட்டுக்க. பெண் போகம் வேணுமுண்ணுறவங்களுக்கு போகப் பொண்ணுங்க உதவிக்கிறது கூட புண்ணியமாம்டி. இப்ப தெரிஞ்சுக் கிட்டியா இதெல்லாம்.?”
இந்தக் கதைகளோடு பூவம்மாவிடம் சரணடைந்து விட்டாள் செல்லாயி. அன்றைய அரங்கேற்றத்துடன் ஆரம்ப மானதுதான் செல்லாயியுடைய இந்தச் சீர் கெட்ட வாழ்க்கை. அன்றிலிருந்து இன்று வரையாக விபசாரத்தை நம்பி வாழும் வாழ்க்கை தான் அவளுக்கு லயித்து விட்டது.
ஒரு பிணத்துக்கு அதைக் கொத்தி இழுக்கிற பறவைகளிடமோ, அரித்துத் தின்கின்ற புழுக்களிடமோ வெறுப்புத் தோன்றுவதுண்டா?
நாளடைவில் உடலும் மனமும் அப்படியாகி விட்டது போலத்தான், அவளுக்குமாறிவிட்டதைப்போல இருந்தது. இதன் தாக்கத்தால் முன்னம் செக்கச் செவேர் என்று செப்புச் சிலை மாதிரி இருந்தவள், கரி பிடித்த லாந்தர் மாதிரி உடல் மங்கினாள். அவள் முகம் , கழுத்து, கைகள் எல்லாவற்றிலும் தோல்
ஞானம் - பெப்ரவரி 2005
மீது வலைகளாக சுருக்கமும் விழுந்து விட்டன. கமல மலர் போல் விரிந்திருந்த அவளது அழகான கண்கள் எருக்க மலர் போல் ஒடுங்கியும் விட்டது.
இந்தத் தொழிலுக்கு கிராக்கியில்லா
திருக்கும் அவளைத் தன்னிடம் வரவழைத்து வைத்துக் கொள்ள, பூவம்மாவுக்கு இப்போதெல்லாம்
துண்டாக விருப்பமில்லை. தன் தொழில் அவளால் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தில் அவளை இதனால் வெறுக்கவும் ஆரம்பித்தாள்.
என்றாலும் அவள் இதயத்தில் செல்லாயி மீது இரங்கத்தக்கதான சிறிது ஈரக்கசிவும் இருந்தது.
“சரி சரி ஒரு டீயை வாங்கிக் குடிச்சிப்பிட்டு நிண்ணுக்கிறியா. அதுக்கு பணம் வேணுமிண்ணா தர்றேன்.”
“வேணாமுக்கா. யேன் பிள்ளையும் வூட்டில பட்டினி. பிள்ளையை விட்டுப் புட்டு நான் மட்டுமா எப்புடி.” s “அடி யெழவே, இப்பிடிப் போயிடிச் சாடி ஒண்ட நிலை. ம் இருந்துக்க எவனாச்சும் வந்திடுவான். அதான் காத்திய மாசத்து நாயுங்க மாதிரி இதுக்குண்ணு அலையுறவனுங்க இருக்காங்கதானே. எப்புடியாச்சும் முதலாட்டம் சினிமா முடியுறதுக்கு முன்னாடி கொத்திப்புடும் ஒனக்கு.”
அவளுக்கு முன்னால் ஒருவன் வந்து நின்றான். மிடாக் கணக்கில் சாராயத்தைக் குடித்துவிட்டு வந்து அதிலே நின்றபடி கண்களில் காமச் சிவப்புடன் செல்லாயியை அவன் பார்த்த பார்வையிலேயே பூவம்மாவுக்கு அவனது
தேவை இன்னதென்று விளங்கிவிட்டது.
11

Page 8
வந்தவன் பூவம்மாவின் கடலைப் பெட்டிக்கருகில் இருந்து, தாம்பூலம் வாங்கிப்போட்டுக் கொண்டான்.
செமித்த சாராய நாற்றத்துடன் சுருட்டின் சுடுநாற்றமும் சேர்ந்து மேலும் நாற, அருகில் இருந்து கொண்டு பூவம்மாவிடம் தன் தேவையை வார்த்தை களில் அவிழ்த்து விட்டான்.
“என்னம்மா. எதாச்சும் உண்டா?. "ஆமா ராசா. ஒங்களுக்கு தேவை யானதுங்க எல்லாமே இருக்குங்க ராசா. வெத்தில இருக்கு, பாக்கிருக்கு, சுண்ணாம்பிருக்கு. அதெல்லாத்தையும் நீங்க இப்ப போட்டுக்கிட்டீங்கதானே. இனிமேல பாருங்க ஒங்க வாயி சிவக்க பத்தினிப் பொண்ணுங்களெல்லாம் உங்களை சுத்திக்கிட்டு நிண்ணுக்கும்.” பூடகமாக இந்த முறையில் கதையைக் கொடுத்து வந்தவருக்கு தன் தொழிலை தெரியப்படுத்தி விடுவதில் பூவம்மா சமர்த்து.
தனக்குரிய தேவையை பூவம்மா தெரிந்து கொண்டாள் என்று வந்த வனுக்கு உடனே விளங்கிவிட்டது.
அதனால் வெட்ட வெளிச்சமாக அதை நேரே அவளிடம் கேட்டான்.
“வயசுக்காரியா இளசுக்காரியா.?” “எல்லாம் உனக்கு ஏத்தாப்புல இருக்குமய்யா. நீ விரும்புக்கிற மாதி யெல்லாமே குட்டி பக்குவமா நடந்துக்கும்.”
“சரி பெண்ணு எங்க..?” "நீ பாத்துக்கிட்டிருந்தியே அதாம்பா அந்தப் பொண்ணு. உரியைப் பாக்கிற
9.
கள்ளப் பூனை மாதிரி பாத்திக் கிட்டிருந்தியே ஒரு பார்வை.”
பூவம்மா இவ்விதம் சொல்லி
கதையில் அவனை மடக்கினாள். இந்தத்
12
தொழிலில் அப்படியெல்லாம் சொல்லித் தான் ஆளை மடக்கி வைத்து தன் காசை வாங்கிவிட வேண்டுமென்ற தந்திர புத்தி அவளுக்கு இருந்தது.
“ம். நேரமாயிட்டுதப்பா யேன் புறோக்கரு பணத்தை கொடுத்திடுங்க. இந்த ஆட்டம் சினிமா முடியுங்கிறதுக்கு முன்னாடி அவளை எங்கிட்டாச்சும் சாய்ச்சிக்கிட்டு போயிடு.”
அவள் அவசரப்பட்டுக் கொண்டு அவனிடத்தில் இதைச் சொன்னாள்.
‘எங்கிட்டுப் போறது.?” “எங்கனையாச்சும்.” "அப்படீன்னா..?” கொளத்துக்கட்டுப் பக்கமா கூட்டிக் கொண்ணு போயி தொலைஞ்சுக்கப்பா.” அவள் ஆத்திரத்துடன் சொன்னாள். அவன் காசைக் கையில் கசக்கி வைத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்பு அவளிடம் அதைக் கொடுத்தான்.
செல்லாயி இதெல்லாவற்றையும் பார்த்துவிட்டு எழுந்துநின்று கொண்டாள். அவன் சமிக்கை காட்டி விட்டு முன்னால் நடந்து செல்ல, அவனைப் பின் தொடர்ந்து செல்ல அவளும் தயாரானாள்.
“கவனம்டியம்மா. கொளத்துப் பக்கமிப்ப பொலிசுங்களெல்லாம் ராவழிய திரிஞ்சிக்கிட்டிருக்கு.”
பூவம்மாவின் அந்த எச்சரிக்கை யைத் தன் காதில் போட்டுக் கொண்டு அவனுக்குப் பின்னாலே சிறிது இடை வெளிவிட்டு அவளும் பின் தொடர்ந்து சென்றாள்.
குளக்கட்டில் காலை வைப்பவர் களுக்கு பொன் கொன்றை மரத்தின் கீழ் இருக்கின்ற பிள்ளையார் சிலையின்
ஞானம் - பெப்ரவரி 2005

ஆனைமுகதரிசனம்தான் முதன் முதலில் காணக்கிடைக்கும். இரவிலும் பிள்ளை யாரின் உருவைக் காண்பதற்கு, அழுது வடிந்து கொண்டிருக்கும் அந்தத் தெரு விளக்கு உதவி செய்யும்.
குளக்கட்டில் பார்வை புகமுடியாத அடர் இருள் அவர்களைச் சுற்றி நெருக்கமாக கவிந்திருந்தது. அந்த இருட்டு உள்ளில் பெரும் பொழுதைச் செலவழித்து அநுபவப்பட்டவர்களைப் போன்று, சற்றும் கிலேசமின்றி அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவன் வெறியில் எதை எதையோ வெல்லாம் அவளிடம் கேட்டு ஆபாசமாய் உளறியபடி இருந்தான். அவளுக்கு அது எல்லாம் முன்பு நெடுகிலும் பலரிடம் கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகள்தான்! அவன் கேட்டதுக்கெல்லாம் “க்கும்.” போட்டுக் கொண்டு அவளும் நடந்து கொண் டிருந்தாள்.
“எனக்கு தொடை விரிச்சிக்கிட்டது மாதிரில்ல அந்தத்தும்பறுந்ததேவடியாளு காசைப் புடுங்கிக்கிட்டா.
இன்னும் அவன் பூவம்மாவுக்கு கொடுத்த பணத்தை நினைவில் வைத்துக் கொண்டு அவளைத் திட்டியபடி பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்.
செல்லாயிக்கோ அவனது உளறலில் கவனம் செல்லவில்லை. தையை நினைத்துக் கொண்டு அந்த நேரம் அவள் இருந்தாள். கறுப்பாயி பசியுடன் குடிசை வாசலில் நின்றபடி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பது போல அவளுக்குச் சடுதியாக ஒரு நினைவு எழுந்தது.
அவன் வெறியில் தள்ளாடியபடி அவளுக்கு முன்னாலே போய்க் கொண்டிருந்தான்.
ஞானம் - பெப்ரவரி 2005
தன் குழந்
அவர்கள் நடக்கும்போது மண் நெறு நெறுப்பதை தவளைகள் கேட்டன. குளக்கட்டுச் சரிவில் இருந்த அந்தத் தவளைகள் எல்லாமே சட், சட் டென்று தாவி நீரில் குதித்தன.
குளத்துக்குள் முழுகிய நிலையில் இருக்கும் மருத மரங்கள் நிற்கின்ற இடத்துக்கு வந்ததும், அவர்கள் இருவரும் நடையை தரித்தனர். அவர்கள் நின்ற இடத்துக்குப் பக்கத்திலே மதகிலிருந்து வெளியேறும் தண்ணீரின் கள, கள ஒலி இடைமுறியாமல் கேட்டுக்கொண்டிருந்தது.
அங்கே மொத்த இலைப்பரப்பும் கருமை கொண்டிருந்ததுபோலத் தெரிந்த அந்த மருத மரத்துக்குக் கீழே நின்று கொண்டு அவளை அழைத்தான் அவன்.
அவள் விபச்சாரி என்ற இளப்பமான எண்ணத்தில், தூஷண வார்த்தைகளை வண்டை வண்டையாக அவள் முன் கொட்டினான். அவள் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவன் அருகில் போனாள். மரத்துக்குக் கீழே அவள் போன தருணம் அவளது உச்சி மீது சளாரென்று காகப்பீ விழுந்து சிதறியது. அந்த நரகலை அவள் தன் முந்தா னையால் துடைத்த வேளையில் அவன் அவளுக்குக் கிட்டவாக நெருங்கினான். குடி வெறியுடனும், மோகத்தின் வலிமை அனைத்துடனும் அவன் அவளைக் கட்டியணைத்து இறுக்கினான். அவள் புலியின் காட்டுப் பசிக்குத் தன்னைத்தீன் கொடுத்து திருப்தி செய்து விட்டு அந்த புற்தரையில் இருந்தவாறே தன் உடைகளைச் சரி செய்து கொண்டாள்.
இருவரும் சில நிமிடங்கள் கழிந்த பிறகு வந்த வழியே திரும்பியும் நடக்கத் தொடங்கினார்கள்.
1.

Page 9
அவளுக்கு நடக்கும்போது இப்பொழுது களைப்புக் கணத்தது. அவன் அவளை பார்த்துப் பார்த்து, அந்த வழி நெடுகிலும் நடந்து வரும்போது வாய் ஓயாமல் குறைகூறிக் கொண்டே இருந்தான். “திருப்தியில்லை திருப்தி யில்லை” என்று சொல்லிச் சொல்லி எச்சிலை கீழே 'தூ' என்று துப்பினான்.
“உன். உடலில் அடிப்பகுதியில் எழும் வாடை. சீ. மொச்சை நாற்றம். என்று இகழ்ந்தான்.
“கனல் மீது நீறு போல கிடந்த உன்னிலே நான் ஒரு சுகத்தையும் காணவில்லை’ என்றும் சொல்லி அவளை மேலும் மேலும் திட்டித் தீர்த்தான். இதையெல்லாம் கேட்டு மனம் சகித்தபடி வந்தவளுக்குப் பிள்ளையார் சிலை இருந்த பக்கமாய் வந்ததும் அழுகை வந்துவிட்டது. ஒருவாறு வந்த அழுகையைச் சகித்து அடக்கிக் கொண்டு.
“யேன் காசை எங்கிட்ட தந்துப் புடையா நானுயேன் வழியிலயாப் போய்க்கிறேன்.”
“என்னடி காசு ஒனக்கு. எதுக்கடி ஒனக்கு நானு காசு தந்துக்கணும். எம்முட்டுப் பேருங்க இதில யேன் காசைப் புடுங்கிக்கிறதுக்குண்ணு திரியுறீங்க.?” அப்படியென்று அவன் எரிந்ததாய் விழ அவளுக்கு திகைப்பெடுத்து நெஞ்சு கலங்கி விட்டது.
“யேன் காசைமுட்டும் யேன்கிட்டக்
என்றாள்.
குடுத்துப்புடய்யா. ஒன்னை கெஞ்சிக் கிண்ணு கேட்டுக்கிறேன். இந்தப் பட்டினியிலயுங் கூட ஒன்னோட படுக்கவுண்ணு வந்தவநானு. குடுத்துப் புடய்யா.?” அவள் கெஞ்சினாள்.
14
“கருவாடு மாதிரி ஒண்ணுமே இல்லாதமாதிரி தரையில கிடந்துப்புட்டு காசாடி கேக்கிறே. செத்து நாறின நாயே..”
"அப்புடீன்னு சொல்லிப் புடாதேய்யா. யேன் புள்ளயும் வூட்டில பட்டினியாக் கிடந்துக் கிட்டிருக்கையா.” "நீ கெட்ட கேட்டுக்கு புள்ளயுண்ணு வேற ஒண்ணா. நாத்தொம் புடிச்சவளே.”
அவன் ஏசியதோடு நிற்காமல் தன் பக்கத்தில் வந்து கொண்டிருந்த அவளைப் பிடித்துத் தள்ளினான். அதனால் நிலை தடுமாறி விட்டாள் அவள். நிற்க இயலாத நிலையில் இருந்தவள் அப்படியே சரிந்து கீழே விழுந்தாள். கீழே விழுந்து போனதன் பின்பு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் மண்புழுதியைக் கையி லெடுத்து “நீ நாசமாப் போவியடா பாவி..” என்று அந்த மண்ணைக் காற்றில் விரிந்து பரவ மேலே வீசித் திட்டினாள். அவனோ அந்த வேளையில் அந்த இடத்தைத் தாண்டி தூரவாய் நடந்து போய்விட்டான். அந்தப் புழுதியெல்லாம் காற்றில் பரவிப்போய் பிள்ளையார் சிலை மீதும் செம்பாட்டு நிறத்தில் படிந்தது.
'நீ மண்ணாப் போவியடா.” அப்படி அவள் ஏசுவதைக் கேட்காத மாதிரிப் போய்க் கொண்டிருந்தான் அவன்.
“நீ அழிஞ்சு போவீடா பாவி” அவன் இப்போது இன்னும் விரைவாக நடந்து கொண்டிருந்தான்.
“ஊறுகாயில பூஞ்சைக் காளான் பிடிச்சமாதிரி அந்த நோயிங்கெல்லாம் உனக்கும் பிடிக்கும்டா.”
ஞானம் - பெப்ரவரி 2005

அவன் தொலைவாய்ப் போய் இருளிலும் மறைந்து விட்டான். அவள் ஆத்தாக் கொடுமைக்குப் பிறகு அதிலே நின்று கொண்டு அவனுக்குச் சாபமிட்டாள்.
ஆனாலும், அவன் அவ்விடத்தில் இல்லாததால் அவளால் வெறும் காற்றைத்தான் பயமுறுத்த முடிந்தது.
அவள் பிற்பாடு பசியோடு இருக்கும் தன் மகளை நினைத்து விக்கி விக்கி அழத் தொடங்கினாள். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சும் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டே வந்தது.
அந்தக் குளத்தில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டால் அத்துடன் தன் துயரமெல்லாம் முடிந்து விடும் என்று கூட அப்பொழுது சிந்தித்தாள்.
ஆனாலும் அந்தப் பக்கமாகப் போவதற்கு அவளது மனம் பிறகு ஏவவில்லை.
கறுப்பாயி அந்தக் குடிசையில் கரி பிடித்த லாந்தருக்குக் கீழே இருந்து கொண்டு அழுது கொண்டிருப்பது மாதிரி ஒரு நினைவு வந்து அவளது அந்த எண்ணத்தை அப்போது தடுத்தது. அதனால் அவள் அதிலே பிறகும் நின்று கொண்டிராமல் மெது மெதுவாக அந்த வீதி வழியாக நடக்க ஆரம்பித்தாள்.
பசியில் தலை சுற்றுவது போலவும் மயக்கம் வருவது போலவும் அவளுக்கு இருந்தது.
அந்த உடல்தசைகளெல்லாம் காந்தலுடன் கூடிய வலியாயிருக்க எரிந்து காந்த, இடுப்புக்குக் கீழே மட்டும் குளிர்ந்து கொண்டு நச நச வென்று இருக்கிற மாதிரி ஒர் உணர்ச்சி.
வேதனைகளுக்குள்ளே
அந்த அருவருப்பை உணர்கையிலே நினைத்து
கண்கள்
தன் வாழ்க்கையை மனவேதனைப்பட்டதில் கண்ணிர்க் குளமாகிவிட்டது அவளுக்கு.
புத்தகக் களஞ்சியம்
N (நூல் மதிப்புரை)
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்கள்ை
穩
அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே பதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பு மாத்திரமே புதிய நூலகத்தில் இடம் பெறும். ྾། །སོ། ། 管了
ས་ ఎస్కీ, i. :::
ஞானம் - பெப்ரவரி 2005 15

Page 10
அவதரில்?
மாரிமுத்து சிவகுமார், ஹட்டன்.
உயிர்பறித்து உடல் விதைத்து -தரையில் புதர் படைத்த கடலே தரையுனக்குதரங்குறைந்த ه هoه ه?OTارل5
விலையுனக்கு நாம் குறித்து வீeடிலுன்னை உப்பாக்கினோம், உலைவைக்கவே உறையின்றி உருeடிக்கொண்டு போனாயே.
கடல் கடந்து செல்ல பஞ்சனையாய் நீ கிடந்தாய். கடல் பெறுக்கி - எம் உடல் சுருக்க கடல் கடந்தாய் ஏன்?. ~
மனமுருகி உன்னை வணங்கி மதித்து வந்த ஞாபகமேeeee பிணங்கிருக்கி மணம் வீசும் பிடிக்காத பிரளயம் ஏன்?. 960ంగిపీకింగిgరీ Uఐorరీ Uశీర్రరీ
es கேவலத்து மனிதரிங்கே வறுமையிலும் ஏலேலோ பாeடிசைத்து குவலயமே அழும்போது வாழ்க்கையிலும் துன்புத்தையே so s
குடிகெடுக்கும் உளமுமிங்கே (bé565.Telos. $9.
岛斧 2 59. e 5. تھی_2ع سےr
தலைவெடிக்க வந்ததேனோ?.ece åg 65fặaşSTGOTT
உன்வயிற்று மீன்களுக்கு இறையனுப்பிய எமனாய் நீயும்
எம் வயிற்றை கூறுபோeடாய் இயற்கை ஏனோ அவுதரித்தாய் ?. எம் வயிற்று பசிதீர்க்க - இனி யார் வயிற்றை கூறுபோடுவது?.ece O
16 ஞானம் - பெப்ரவரி 2005
 

குநர்ஆரிஜனற்
6 т6Жv. 6Ос устг. சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு
மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும்
எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம்பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி * சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, உருவகக்கதை Creative essays, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தி, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமைபெற்றன. * வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனைவிடை
தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். * 2000 பக்கங்களைக்கொண்ட 'வரலாற்றில் வாழ்தல்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட இவரது சுயசரிதையாகும். * அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் இவரது
கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
(5)
தி.ஞா : இலங்கைக் கலைக்கழகத்தின் நாடகக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளீர்கள் அல்லவா?
எஸ். பொ. : இந்த வாய்ப்பு ஒரு விபத்து என்றுதான் கூறவேண்டும். சாகித்திய மண்டலம், தமிழ்நாடகக்குழு போன்ற அரச நிறுவனங்களிலே அங்கத்துவப் பதவிகள் பெறுவதன்மூலம் கலை இலக்கியப் பணிகளிலே முன்னேற்றம் காணமுடியும் என்ற நம்பிக்கை அற்றவன் நான். ஆனால் ஒருநாள் நான் கொழும்புப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்து கொண்டிருந்த பொழுது நாடகத்துறையிலும் ஈடுபாடுடையவராக இருந்து
ஞானம் - பெப்ரவரி 2005 17

Page 11
வாழ்ந்துகொண்டிருந்த பாலசுந்தரம், தமிழ் நாடகக்குழு உறுப்பினர் - அங்கத்தவர் நியமனம் நடப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிபார்சு செய்தால் நீங்கள் நியமனம் பெறலாம் என்றும் கட்டாயம் இந்தக்குழுவுக்கு அங்கத்தவராக வந்தால் ஒரு புதிய திசையைக் காட்டக்கூடிய உதவியாக இருக்கும் என்றும் என்னை மிகவும் வேண்டிக்கொண்டார். நான் அதைப்பற்றி யோசித்து நடந்து கொண்டிருந்தபொழுது சிராவஸ்த்திக்கு முன்னால் நிற்பதை உணர்ந்தேன். கலை இலக்கியத்தின் மூலம் முன்னேறிய முஸ்லிம் மாணவர்களுள் பரீட் மீராலெப்பையும் ஒருவர். அவர் அப்பொழுது மட்டக்களப்பின் இரண்டாவது பாராளுமன்ற அங்கத்தவராகப் பதவி வகித்திருந்தார். அவர் சிராவஸ்த்தியில் இருக்கிறாரா என்று விசாரித்தபோது, அவர் அங்கு இருந்தார். அவரிடம் சென்று இந்த நாடகக்குழு நியமனம் பற்றிப் பேசினேன். உடனே அவர், முதல்முழக்கம், வலை போன்ற நாடகங்கள் மூலம் எங்களுடைய மட்டக் களப்பு மண்ணின் மாணவர்களுக்கு நாடகத் துறையில் GL fu உற் சா
அநீத விழாவிலேதானி கனக) செந்திநாதனுக்கு "இரசிகமணி" என்ற பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. இதுவரையில்: கங்கள் ஊட்டியவர் தமிழ் அறிஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட
படடங்களுள கனக செந்திநாதனுக்குக் J கொடுக்கப்பட்ட பட்டம் போல் வேறொன்றும் நிச்சயமாக முஸ்லிம் up . டி நின்று நிலைக்கவில்லை. இன்றும் இரசிகமணி, என்ற பெயரைக் கேட்டதும் தமிழ் கூறும் : uUT85 əgərh85ğ5ğ56) ULD is வகிப்பது நியாய நல்லுலகில் இருவரே நினைவுக்கு வருகிறார்கள். மாகும் arai go. U905oIII டி.கே.சி, மறறவா கனக செந்திநாதன் சொல் லி sü பொழுது கலாசாரப் பேரவையின் அமைச்சராக இருந்த குருகேயுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டார். குருகே அதற்குச் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரிடம் தொடர்பு படுத்தியிருப்பதாகவும் உடனே என்னைப்பற்றிய முழு விபரங்களையும் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அவ்வாறுதான் நான் நாடகக் குழுவிலே நியமனம் பெற்றேன். எனது திறமைக்காக அரசு என்மீது பொழிந்த பதவி என்று பொய்யுரைக்க ஒப்பேன். கேட்டுப் பெற்ற ஒரு பதவி. ஆனால் அமைச்சருடைய தலைமையில் நாடகக்குழு கூடியபொழுது அனைவரும் இணைந்து அந்தக் குழுவின் செயலாளராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். தலைவராக ஆ கந்தையா அமைச்சரால் நியமிக்கப்பட்டிருந்தார். நான் கலாசாரக்குழுவின் செயலாளராக இருந்த காலத்திலேதான் பிராந்திய நாடக விழாக்கள் நடத்தப்பட்டன. மலைநாட்டிலும், கொழும்பிலும், மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாடகப் பிராந்திய விழாக்கள்
18 ஞானம் - பெப்ரவரி 2005
 

நடத்தப்பட்டன. இது நாடகக் கலையை பிராந்தியங்கள் தோறும் உள்ள தமிழரிடம் கொண்டு செல்வதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இரண்டாவதாக, யாழ்ப்பாணத்திலே நாடகம்பற்றிய முதலாவது கருத்தரங்கு ஒன்று நாடகக்குழுவின் சார்பாக நடத்தப்பட்டது. இது தவிர, நாடக நெறியாள்கை செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் நடிகர்கள், துணை நடிகர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற பல்வேறு நாடகத்துறையினருக்கும் தனித்தனியே பரிசுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்யப்பட்டதும் நான் அந்தக் குழுவின் செயலாளராக இருந்த காலத்திலேதான். இவை நாடகத்துறை சம்பந்தமாக எடுக்கப்பட்ட சில முன்னோட்டமான நடவடிக்கைகள். இலங்கையின் நாடக வரலாறு எழுதக் கூடியவர்கள் இவற்றையெல்லாம் ஏன் இருட்டடிப்புச் செய்கிறார்களோ நான் அறியேன். இந்த நாடகக் குழுவில் இருந்து நான் விலக்கப்பட்டேன். ஏனென்றால் ஆ.கந்தையா தன்னுடைய எண்ணங்களின்படி நாடகக் குழுவை நடத்த முடியாத அளவுக்கு அந்தக் குழுவிலே உறுப்பினராக இருந்த பலரும் எனக்குச் சார்பாகவும் பலமாகவும் இருந்ததினால், என்னை விலக்குவதன் மூலமே தான் எதேச்சாரமாக நடந்துகொள்ளலாம் என்பதற்காகவே அது நடந்தது. இதில் ஒரு குறிப்பு உங்களுக்குச் சொல்லவேண்டும். ஏ.இக்பால் வழக்கம் போல் ஒரு மோசடி செய்து, என்னைப்பற்றி ஒரு புனைகதை ஒன்றை அவிட்டு விட்டிருக்கிறார். நான் ஏதோ கலாசாரப் பேரவையில் இருந்தபோது, காசோலை மோசடி செய்தேன் என்று. உண்மையில் நாடகக் குழுவின் கொடுப்பனவுகளுக்கு அந்தக் காசோலைகளிலே இரண்டே இரண்டு பேர்தான் கையெழுத்து வைப்பார்கள். ஒருவர் அமரதாசா என்ற அரச நிர்வாகி. மற்றவர் தமிழ் நாடகக் குழுத்தலைவர். எனவே வேறு யாரும் காசோலையில் மோசடி செய்ய வாய்ப்பு இல்லை என்று இக்பாலுக்குத் தெரியவில்லை. மாறாக, கந்தையா செய்த சில திருகுதாளங்களினால், எனக்கு நாடகக் குழுவிலிருந்து கிடைக்கவேண்டிய ஆயிரம் ரூபாய் இன்னும் கிடைக்காமல் இருக்கிறது என்பது பதிவுக்குரியது.
தி.ஞா : மட்டக்களப்பு வாழ்க்கையில் கலை இலக்கியம் தொடர்பான முன்னெடுப்புக்களில் மட்டுமன்றி, சமூக நலன்களிலும் அக்கறைகொண்டு உழைத்ததாக அறிகிறேன். குறிப்பாகத் தொழிற்சங்க நடவடிக்கைகள். இதுபற்றிக் கூறுங்கள்.
எஸ். பொ. : முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு தொழிற்சங்கமாக நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை நான் எப்பொழுதும் வைத்துள்ளேன். ஆனால் நான் மட்டக்களப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அங்கத்தவனாக மாறிய காலத்திலே, நான் அங்குள்ள தொழிலாளர்களின் மத்தியிலே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும் என்பதை உணர்ந்தேன். யாழ்ப்பாணத்தில் பஸ் தொழிலாளர்
ஞானம் - பெப்ரவரி 2005 V, 19

Page 12
சங்கம் சுருட்டுத் ( தொழிலாளர் சங்கம், சீவற் தொழிலாளர் சங்கம் போன்ற பல சங்கங்களை கம்யூனிஸ்ட் கட்சி யினர் இணைந்து நடத்துவதை, குறிப்
பாக துரைராஜ சிங்கத்தினுடைய சுருட்டுத் தொழி லாளர் சங்கத்தை உடைத்து வி.வி.கந்தசாமி போட்டித் தொழிலாளர் சங்கம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்ததை நான் அனுபவப்பட்டிருந்தேன். எனவே மட்டக்களப்பிலே தொழிற்சங்க நடவடிக்கைகளிலே நான் ஈடுபடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நான் மட்டக்களப்புக்குப் போவதற்கு முன்னரே மஞ்சன்தொடுவாயிலிருந்த தச்சுத் தொழிலாளர் சங்கம் அரசுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டத்திலே, தச்சுத் தொழிலாளர்கள் போராடி வெற்றி ஒன்றைச் சம்பாதித்த பெருமை கிருஷ்ணக்குட்டிக்கு உண்டு. அவருடைய உதவியுடன் இந்தத் தச்சுத் தொழிலாளர் சங்கத்தினை மையமாகக்கொண்டு ஏனைய தொழிலாளர்களையும் இணைக்க முயன்றோம். அவ்வாறு முயன்ற ஒரு சந்தர்ப்பம் Hume pipe தொழிலாளர் சங்கத்தினால் திடீரென்று நடத்திய போராட்டமாகும். முன்னர் பின்னர் திட்டமிடாமல் திடீரென்று நிர்வாகத்தைப் பணியச் செய்ய வேண்டும் என்பதற்காக மின்னல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினோம். அந்த வேலை நிறுத்தத்தைத் தொடங்கி நடத்தியவர்கள் கிருஷ்ணக்குட்டியும் நானும். அந்தப் போராட்டம் வெற்றிபெறும் வரையிலே அந்தத் தொழிலாளர்களுடன் அந்தக் Humepipe கொம்பனியிலேயே வாழவேண்டியிருந்தது. கொழும்பில் உள்ள Hume pipe தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் அதே சலுகைகளும் உரிமைகளும் மட்டக்களப்புத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதுதான் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைக்கு மூன்று நான்கு நாட்கள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு சமரசம் ஏற்பட்டது. அந்த வெற்றி இலங்கையில் தமிழ் பிரதேசங்களிலே தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் பெற்ற வெற்றிகளில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். இந்தத் தொழிற்சங்க அனுபவங்களை வைத்துக்கொண்டு, 56ஆம் ஆண்டு அரசுக்கு வந்த பண்டாரநாயக்கா பஸ் கொம்பனிகளைத் தேசியமயமாக்கியபொழுது பஸ் தொழிலாளர் சங்கம் ஒன்றை உருவாக்கி அதனை கம்யூனிஸ்டுகள் வழிநடத்த வேண்டும் என்பதிலே
நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று காலத்தின் குரல்கள் நூலை வெளியிட்டு வைத்தேன். அப்பொழுது செங்கை ஆழியான், கலா பரமேஸ்வரன், அங்கையன் கைலாயநாதன் கதிர்காமநாதன், க. நவசோதி போன்றவர்கள் மாணவர் களாக இருநீ தார் கள் . இநீத மாணவர்களுடனும் எனக்கு இனிமையான தொடர்பு இருந்தது. இந்த மாணவர்களிலே பலரும் மார்க்சிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.
20 ஞானம் - பெப்ரவரி 2005
 
 
 
 

கிருஷ்ணக்குட்டி ஆர்வமாக இருந்தார். அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டீமெல் என்பவர் பதுளைப் பிராந்தியத்தின் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகப் பணிபுரிந்தார். தொழிற்சங்க நடவடிக்கைகளிலே நாங்கள் கொழும்பிலும் பார்க்க, யாழ்ப்பாணத்திலும் பார்க்க பதுளைக்குத்தான் மிக நெருக்கமாக இருந்தோம். ஏனென்றால் தூரமோ நூறு மைல்தான். அந்த டீமெல்லுடைய வேண்டுகோளுக்கு அமைய நான் இலங்கை மோட்டார் தொழிற் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் செயலாள்ராகப் பல ஆண்டுகள் பணியாற்றினேன். இது தவிர, ஆசிரியர் சங்க நடவடிக்கைகள். அந்தக் காலத்திலே அங்கு மெதடிஸ்த்த மத்திய தல்லூரி, செயின்ற் மைக்கல் கல்லூரி, வின்சன்ற் மகளிர் கல்லூரி, சிவானந்த வித்தியாலயம், கோட்டைமுனை வித்தியாலயம் ஆகிய ஐந்து கல்லூரிகள் முக்கியம் பெற்றன. இக்கல்லூரிகள் ஆங்கில மொழி கற்பிப்பவையாகவும் எஸ். எஸ். சி.க்கு கூடுதலான மாணவர்களை அனுப்புபவையாகவும் செயற்பட்டு வந்தன. அந்தக் கல்லூரிகளின் ஆசிரியர்களைக் கொண்டது மட்டக்களப்பு ஆசிரியர் சங்கம் என்று அழைக்கப்பட்டது(B.TA). இந்தச் சங்கத்திற்கும் நான் செயலாளராகப் பணிபுரிந்தேன். ஆனால் 1961ஆம் ஆண்டில் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் அனைத்தும் அரசாங்க உடமை ஆக்கப்பட்டதன் பிறகு, உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளில் இருந்த ஆசிரியர்கள் அரசாங்க ஊழியர்கள் ஆக்கப்பட்டபொழுது, அரச ஊழியர்கள் அரசியற் கட்சியில் பணியாற்றல் தடுக்கப்பட்டிருக்கிறது என்ற வியாக்கியானத்தை ஏற்று நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகினேன். வேறு எந்த, யாருடைய நிர்ப்பந்தத்தினாலும் நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகவில்லை. நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியதை எவ்வளவோதுாரம் கிருஷ்ணக்குட்டி
பிராந்தியச் செயலாளர் எதிர்த்த போதும், நான் மனச்சாட்சியின்படி நேர்மையாக நடக்கவிரும்பினேன். ஆனால் கிருஷ்ணக்குட்டி இறக்கும் வரையிலும் நான் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அனுதாபியாக, மாதாமாதம் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நிர்வாகத்திற்கு என்னுடைய நன்கொடையைக் கொடுப்பவனாக வாழ்ந்துகொண்டிருந்தேன் என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
தி.ஞா : தமிழ்விழாவைத் தொடர்ந்து வேறும் தமிழ் விழாக்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவதற்கு நீங்கள் காலாக இருந்தீர்களா?
எஸ். பொ. தமிழ் விழாவின் வெற்றியைத் தொடர்ந்து, தொடர்ந்தும் மத்திய கல்லூரியில் பணியாற்ற முடியவில்லை. 1964 ஆம் ஆண்டு நான் வந்தாறுமூலை மகாவித்தியாலயத்திற்கு ஆசிரியனாக மாற்றப்பட்டேன் மாற்றப்பட்டதற்குப் பிரதான காரணம் அப்பொழுது வந்தாறுமூலை மகாவித்தியாலயம் H.S.C கலைப்பிரிவு நடத்திக்கொண்டிருந்த படியால், அந்தக் கலைப்பிரிவுக்குத் தமிழ் படிப்பிக்கக்கூடிய ஒரு பட்டதாரி ஆசிரியர்
ஞானம் - பெப்ரவரி 2005 21,

Page 13
வேண்டும் எனவும் பலருடனும் தொடர்புள்ள ஒரு தமிழ் அறிஞனாக விளங்குவதினால் எஸ்.பொ.வைத் தனக்கு ஆசிரியராக அனுப்பி உதவும்படியும், அப்பொழுது வந்தாறுமூலை அதிபராக இருந்த இராசதுரை கேட்டுக் கொண்டதினால், நான் வந்தாறுமூலைக்கு மாற்றப்பட்டேன். வந்தாறுமூலை மகாவித்தியாலயம் கிழக்கு இலங்கையில் வடிகட்டி எடுத்த மிகச் சிறந்த மாணவர்கள் Scholors படித்துக் கொண்டிருந்த ஒரு பாடசாலையாக இருந்தது. அதிலே H.S.C வகுப்பிலே தமிழ் கற்க வந்தவர்கள் வடக்கே நிலாவெளி, குச்சவெளி, புல்மோட்டை தொடக்கம் தெற்கே பாணமை வரை வாழ்ந்து கொண்டிருந்த கிராமங்களிலே இருந்து தெரிவு செய்யப்பட்ட Scholors படித்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய வகுப்பிலே முஸ்லிம் மாணவர்களும் தமிழ் மாணவர்களும் படித்தார்கள். அவர்கள் காட்டிய ஆர்வத்தினால் உயர் வகுப்புகளிலே படிக்கக்கூடிய மாணவர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலே அதிகம் அறிவில்லாதவர்களாக வளர்ந்து கொண்டிருந்ததை அவதானித்தேன். இதனால் சங்ககால இலக்கியங்களிலே மாணவர்களுக்கு நியாயமான அறிவை ஊட்டுவதற்கான விழாக்கள் நடத்தப்படுதல் வேண்டும் என்று உணரலானேன். இது குறித்து நான் மகாவித்துவான் FX.C. நடராசாவுடனும் இரசிகமணி கனக செந்திநாதனுடனும் விவாதித்த பொழுது, ஆரயம்பதியில் காப்பியப் பெருவிழா ஒன்று நடத்தலாம் என்றும், வாய்பாட்டில் அமைந்த ஐந்து காப்பியங்கள் மட்டுமன்றி, பின்னர் தோன்றிய மதங்களினால் உருவாக்கப்பட்ட காப்பியங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஓர் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாக கம்பராமாயணம், பெரியபுராணம், சீறாப்புராணம், இரட்சணிய யாத்திரீகம், தேம்பாவணி ஆகிய ஐந்து காப்பியங்களையும் இணைத்து பெருங்காப்பியங்கள் பத்து என்று சொல்லி ஒரு விழா எடுத்தோம். அவ்விழா இரண்டுநாள் விழாவாக வந்தாறு மூலையில் நடந்தது. அது காப்பியப் பெருவிழா. பெரும்பகுதியாகக் கோறளைப்பற்று ஏறாவூர்பற்று ஆகிய பகுதிகளிலே வாழ்ந்த கிராமமக்களும் கலந்துகொள்ளக் கூடியதான ஒரு பெருவிழாவாக அது நடந்தது. அந்த விழாவிலே ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள் அனைத்தும் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு காப்பியச் சொற்பொழிவுகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அதை வெளியிட்டது கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கத்தினுடைய நூல் பிரசுரப் பகுதியாகும். தொடர்ந்து சங்ககால இலக்கிய நூல்கள் அகத்திணை, புறத்திணை எல்லாவற்றிற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் நடத்தி மக்கள் மத்தியிலே நூல்களாக்கி அதை இளைய தலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் இருந்தேன். வந்தாறுமூலை காப்பியப் பெருவிழாவின் இன்னொரு அம்சத்தை நான் பெருமையுடன் குறிப்பிட வேண்டும். அந்த விழாவிலேதான் கனக செந்திநாதனுக்கு இரசிகமணி என்ற பட்டம் கொடுத்துக் கெளரவிக்கப்பட்டது. இதுவரையில் தமிழ்
22 ஞானம் - பெப்ரவரி 2005

அறிஞர்களுக்குக் கொடுக் கப்பட்ட பட்டங்களுள் கனக செந்திநாதனுக்குக் கொடுக்கப்பட்ட பட்டம் போல் வேறொன்றும் நின்று நிலைக்கவில்லை. இன்றும் இரசிகமணி என்ற பெயரைக் கேட்டதும் தமிழ் கூறும் நல் லுலகில் இருவரே நினைவுக்கு வருகிறார்கள். ஒருவர்
இந்தக் கொழும்பு வாசத்தின் காரணமாகத் தானி பேராதனையிலி கைலாசபதி உருவாக்கிக் கொண்டிருந்த மார்க்சியம் சார்பாக ஏற்பட்ட பேராதனை இலக்கியச் சிந்தனைக்கு மாறாகப் பணிபுரிந்த சதாசிவத்தை மையமாகக் கொண்டு நான் அதை வழிநடத்தும் தத்துவக்காரனாக அமைந்து கொழும்புச் சிந்தனை - இலக்கியச் சிந்தனை தமிழில் உருவாயிற்று. &
டி.கே.சி., மற்றவர் கனக செந்திநாதன்.
இவ்வாறான விழாக்களை நான் திட்டமிட்டபொழுது என்னுடைய தமிழ் ஊழியத்தினால் கவரப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் என்னுடைய உதவியை நாடினர். அதுவரை காலமும் கைலாசபதியினுடைய ஆளுமையின் கீழ் இயங்கி இரண்டு சிறுகதைத் தொகுதிகளை பல்கலைக்கழகத்தின் சார்பாக வெளியிட்டவர்கள், மூன்றாவது தொகுதியாக காலத்தின் குரல்கள் என்ற தொகுதியை வெளியிட முனைந்தார்கள். அப்பொழுது அந்தத் தொகுதியை தொகுக்கப் பொறுப்பாளராக இருந்தவர் கலா பரமேஸ்வரன். கலா பரமேஸ்வரன் என்னுடைய எழுத்தின்மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். எனவே அவர், காலத்தின் குரல்கள் என்ற நூலுக்கு நான் முகவுரை எழுதித்தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுவரையில் நான் நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களுக்கு முன்னிடுகள் வழங்கியிருக்கிறேன் என நினைக்கிறேன். அந்த முன்னிடுகளுக்கு எல்லாம் முதல் முன்னிடாக அமைந்தது இந்த காலத்தின் குரல்களுக்கு அளித்த முன்னிடு. அந்த முன்னுரை காரணமாக பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு நான் வந்து வெளியிட்டு வைக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டேன். பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் மகா மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த கால கட்டம் அது. கணபதிப்பிள்ளை மறைந்து, வித்தியானந்தனும் சதாசிவமும் பேராசிரியராக வேண்டும் என்று போட்டிபோட்டு அதற்குமாறாக செல்வநாயகம் பேராசிரியராக நியமிக்கப்பட்ட காலம் அது. அந்தக் காலத்திலே முற்போக்கு மார்க்சியவாதிகளினுடைய குரல் சற்றே அடங்கிப்போய் இருந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று காலத்தின் குரல்கள் நூலை வெளியிட்டு வைத்தேன். அப்பொழுது செங்கை ஆழியான், கலா பரமேஸ்வரன், அங்கையன் கைலாயநாதன் கதிர்காமநாதன், க. நவசோதி போன்றவர்கள் மாணவர்களாக இருந்தார்கள். இந்த மாணவர்களுடனும் எனக்கு இனிமையான
ஞானம் - பெப்ரவரி 2005 23

Page 14
தொடர்பு இருந்தது. இந்த மாணவர்களிலே பலரும் மார்க்சிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். அந்த ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தவிர அதற்கு முன்னரோ பின்னரோ எக்காலத்திலும் பேராதனைப்பல்கலைக் கழகத்தில் ஒரு கூட்டத்திலும் நான் பேசவில்லை. ஆனால் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய டொக்டர் சதாசிவம், தனம் ஜெயராசசிங்கம், புவியியல் பேராசிரியர் செல்வநாயகம் ஆகிய பலரும் என்னுடைய நண்பர்களாக இருந்தபடியால் நான் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு அவர்களுடைய நண்பனாக வார இறுதியில் சென்று வந்திருக்கிறேனே தவிர அந்த விஜயங்களின்போது நான் இலக்கிய சல்லாபங்களிலே ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக் கூட்டத்தைத்தவிர நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்திருந்தேன் என்று யாராவது பதிவு செய்திருந்தால் அந்தக் கூட்டங்கள் நடந்த தேதியைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தி.ஞா : காப்பியப் பெருவிழாக்களைத் தொடர்ந்து மற்றும் சங்க இலக்கியங்கள் பற்றிய விழாக்களை ஏன் நடத்தவில்லை?
எஸ். பொ. : 1964ஆம் ஆண்டில் இலங்கை அரசியலில் ஒரு திடீர்த்
திருப்பம் ஏற்பட்டது. முதல் முறையாக சிறிமாவோ பண்டாரநாயக்கா, மார்க்சியம் பேசிய லங்கா சமசமாஜக் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடமளித்தார். இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகும். அமைச்சரவையிலே இரட்டைக்கலாநிதி என். எம். பெரேரா நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் பல்வேறு நடவடிக்கைகளிலும் சிரத்தை ஊன்றி உழைத்தார். அவற்றில் ஒன்று, பாடநூல் பிரசுர நிலையங்கள் பெருந்தொகையான ஆதாயங்கள் சம்பாதித்து முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு வாழிபாடும் ஒரு நிலையை ஏற்படுத்து வதாகவும் அவர்களுடைய ஏக போக உரிமைகள் உடைக்கப்படவேண்டும் எனவும் அவர் நினைத்தார். அத்துடன் காலம் காலமாக ஆங்கிலேயர் காலத்தில் சொல்லப்பட்ட முறையிலேயே கல்வி கற்பிக்கப்படுவதாகவும் குறிப்பாக அரசியல், சரித்திரம் சார்ந்த துறைகளிலே பழைய காலாவதியான கொள்கைகளும் நிலைப்பாடுகளும் போதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். எனவே ஒரு புதிய மாணவர் சமுதாயத்தை நல்ல ஆரோக்கியமான பங்களிப்புச் செய்யக் கூடிய பிரசைகளாக உருவாக்கவல்ல பாடநூல்களை அரசாங்கம் பொறுப்பேற்று எழுதி மாணவர்களுக்குச் சகாய விலையில் அளித்தல் வேண்டும் என்று ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார். அந்தத் திட்டத்தின் பிரகாரம் பாடநூல் சபைகள் நிறுவப்பட்டன.
24 ஞானம் - பெப்ரவரி 2005

இந்தப்பாடநூல் சபைகளிலே மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது சரித்திரம் பற்றிய பாடநூல்கள் ஆகும். சரித்திரம் புதிதாக, புதிய தேசியத் தேவைகளுக்கு ஏற்ற பார்வையுடன் எழுதப்படுதல் வேண்டும் என்பதை என்.எம். பெரேராவும் பாடநூல்சபைகளை வகுத்தமைக்கத் திட்டமிட்டவர்களும் நினைத்தார்கள்.
சரித்திரம் எழுதுவதற்கான பாடநூல் சபையில் பதினைந்து அங்கத்தவர்களைத் திரட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் ஒன்பதுபேர் சிங்கள சரித்திர ஆசிரியர்கள் மத்தியிலிருந்தும், ஆறுபேர் தமிழ்மொழி மூலம் சரித்திரம் கற்பிப்பவர்கள் மத்தியிலிருந்தும் திரட்டப்படுதல் வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பதினைந்துபேர்கள் கொண்ட குழு மூன்று உபகுழுக்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று சிங்களவர் இரண்டு தமிழர் என ஐவர் அடங்கிய மூன்று குழுக்கள் அமைத்து வெவ்வேறு பாட அலகுகளை எழுதுவதன் மூலம் துரிதகெதியில் பாடநூல்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று உணரப்பட்டது. இந்தப்பாடநூல் சபைகள் நிரந்தரமான ஒரு திணைக்களமாகவும் உருவாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்த அடிப்படையிலே ஆளணி திரட்டப்பட்டது. சரித்திரப்பாட நூல்களுக்கு உகந்த ஆசிரியர்கள் திரட்டப்படும் பொழுது, முதல் அங்கத்தவனாக நானே தெரிவு செய்யப்பட்டேன் என்பது மகிழ்ச்சிக்கு உரியது. இந்தப்பாடநூல் சபைக்கான ஆட்களை, பாடநூல் அமைப்பதற்கு அமைக்கப் பட்ட குழுவின் பிரதிநிதிகள் மாவட்டங்கள்தோறும் சென்று நேர்முகமாகச் சந்தித்து திரட்டினார்கள் என்றும் அறியக் கூடியதாக இருக்கிறது. மட்டக்களப்புக்கு வந்த மாணிக்கவாசகர் அவர்கள், என்னையும் மட்டக்களப்பிலே கற்பித்துக் கொண்டிருந்த தவமணி தியாகராசா என்பவரையும் பாடநூல் சபைக்கு ஏற்றவர்களாகத் தெரிவு செய்தார்கள். மட்டக்களப்பிலே என்னைச் சந்தித்தபோது மாணிக்கவாசகர் என்னுடைய தமிழ் இலக்கிய நூல்களைத் தான் வாசித்ததாகவும் என்னுடைய தமிழ் ஆற்றலைத் தான் விரும்புவதாகவும் எனவே என்னுடைய சேவை பாடநூல்சபைக்கு மிக உகந்ததாக இருக்கும் என்றும் பாராட்டினார். பின்னர் நான் சரித்திர பாடநூல் சபையின் அங்கத்தவனாக இருந்தபோதுதான் உண்மையை உணர்ந்தேன். இந்த மாணிக்கவாசகர் கலாபரமேஸ்வரனுடைய சித்தப்பா என்றும், கலாபரமேஸ்வரனுடைய ஆர்வங்களினால், என்னுடைய எழுத்தின்மீது அவர் பரிச்சயம் வைத்திருந்தார் என்றும் இதன் காரணமாகவே அவர் என்னைத் தெரிவு செய்தார் என்றும் அறிந்துகொண்டேன். ஆனால் பாடநூல்சபை கூட்டங்கள் கூடுவதற்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. திடீரென்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரு வாக்கு வித்தியாசத்தினால் அரசாங்கம் தோல்விகண்டு சிறிமாவோவுடைய அரசாங்கம் கலைக்கப்பட்டது. நடந்த தேர்தலிலே பாடநூல்கள் புதிதாக எழுதுவது சம்பந்தமான சர்ச்சைகளினால், குணசேனா போன்ற பெரும் பாடநூல் பதிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக யூ.என்.பி. க்கு ஆதரவாக பணமும் ஆளணியும் கொடுத்துச் செயற்பட்டார்கள். இதனால் எதிர்பார்த்ததற்கு மாறாக
ஞானம் - பெப்ரவரி 2005 25

Page 15
( இவை நாடகத் துறை சம்மந்தமாக யூ.என்.பி. அதிக எடுக்கப் பட்ட சில முனி னோட் மான ஆசனங் களை ப நடவடிக் கைகள். இலங்கையின் நாடக பெற்றது. ஆனாலும வரலாறு எழுதக் கூடியவர்கள் இவற்றை I அரசை அமைப்பதற்கு யெல்லாம் ஏன் இருட்டடிப்புச் செய்கிறார்க்ளோ போதிய வாக்குகள் நான் அறியேன். இல்லாமல் இருந்தது. V κ. இந்தக் கட்டத்திலேதான் முதல் முதலாக தமிழ் அரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் நிலைப்பாட்டினை எடுத்து மு. திருச்செல்வம் அமைச்சர் அவையில் சேர்ந்தார். இது இவ்வாறு இருக்க, சரித்திர பாடநூல்சபையில் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் அனுகூலமானவை. பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அப்பொழுது சரித்திரத்துறைப் பேராசிரியராக இருந்தவருடன் பல்வேறு கட்டங்களிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். எத்தகைய பாடப்பகுதிகள், எவ்வித அழுத்தங்கள் கொடுத்து எழுதப்படவேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்கப்படும் புதிய அழுத்தங்கள் எவ்வாறு தேசிய உணர்வு மாணவர் களுக்கு ஏற்பட உதவும் என்றும் விவாதிக்கப்பட்டுச் சொல்லப்பட்டது.
முதலாவது பாடத்தை எழுதும் பொறுப்பு நான் அங்கத்துவம் வகித்த குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இருந்த சிங்கள அங்கத்தவர்களும் என்னுடைய ஆர்வத்தினையும் எழுத்துத் திறனையும் அறிந்தவர்களாக, மாதிரிக்கான பாடத்தை நானே எழுதலாம் என்றும் பின்னர் அதனைச் செப்பமிட்டு எடுக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக சரித்திர நூலின் முதலாவது அத்தியாயம் எழுதப்பட்டது. அந்த முதலாவது அத்தியாயத்திலே இந்தியாவிலிருந்து இரண்டு பண்பாட்டுக் கிளைகள் இலங்கை வரலாற்றினைத் தாக்கின என்றும் அந்த இரண்டு கிளைகளில் ஒன்று இந்துமத கலாசாரம் என்றும் இரண்டாவது கிளை பெளத்த கலாசாரம் என்றும் கூறப்படும் வகையில் அந்தப்பாடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப்பாடம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது ஒன்பது சிங்கள உறுப்பினர்களும் அது எழுதப்பட்ட விதத்தைச் சாடினார்கள். என் தமிழ்த் தோழர்கள் யாரும் என் உதவிக்கு வரவேயில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு நான் தன்னந்தனியனாய் பதிலிறுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து பெளத்த நாகரிகம் பரந்து வந்தது என்று எழுதப்படுவது உகந்ததல்ல என்பது அவர்களுடைய நிலைப்பாடு. இந்திய ஆதிக்கத்தின்கீழ் பெளத்தம் இலங்கைக்கு வந்தது பெளத்த சிங்களவர்க்கு எற்றதாக இருக்காது என்றும் சொல்லப்பட்டது. அத்துடன் மிகக் கெட்டித்தனமாக தர்க்க நியாயங்களைக் கற்பித்து, புத்தம் பிறந்தது நேபாளத்தில் என்றும் நேபாளம் இந்தியாவைச் சேர்ந்த நாடு அல்ல என்றும் எனவே இந்தியாவிலிருந்து வந்ததாக எழுதாமல், நேபாளத்திலிருந்து வந்ததாக எழுதலாம் என்றும் ஒரு சிலர் அபிப்பிராயம் தெரிவித்தனர். அப்பொழுது நான், வரலாற்று நூல் எழுதுகிறோம் இந்த நேபாள நாடு எப்பொழுது எத்தனையாம் நூற்றாண்டில்
26 ஞானம் - பெப்ரவரி 2005

உருவானது? புத்தர் வாழ்ந்த காலத்தில் நேபாளம் இருந்ததா? அதுதான் இல்லாவிட்டாலும் இன்று உலகத்திலுள்ள ஒரேயொரு இந்து சாம்ராஜ்யம் நேபாளமாக இருக்கும்பொழுது, அதிலிருந்து உங்களுடைய பெளத்தமதம் பரவியது என்று எழுதுவதை உங்கள் மாணவர்கள் கற்றுத்தேற வேண்டுமென விரும்புகிறீர்களா? இவ்வாறான கேள்விகளை வைத்து நான் கேட்டேன் gdisg(p65Lub, Are we recruted here to write Ceylonese history of Ceylon or nine Sinhala members to write the Sinhala history of Ceylon and six Tamil members to write a Tamil history of Ceylon 616örp bit Git (Basi' (BL61. 9, IGLITQpg இது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு மேல்மட்டக் குழுவுடன் நாங்கள் இணைந்து விவாதிக்கவேண்டும் என்று கூறப்பட்டது. அந்த மேல்மட்டக் குழுவுக்குத் தலைவராக இருந்தவர் டாக்டர் குருகே. டாக்டர் குருகேயினுடைய தலைமையில் கூடியபொழுது மீண்டும் என்னுடைய நியாயங்களை முன்வைத்தேன். அவர் பொறுமையாகக் கேட்டபின்னர் சொன்னார், பொன்னுத்துரை சொல்வது சரி. நாங்கள் பதினைந்து பேரும் எதற்காகத் gyllius (3LT GLD6örprisi), To write a Ceylonese history of Ceylon. 915(36) மனப்பதிவுகள் ஏற்படாமல் வார்த்தைகளையும் மொழியையும் கையாளலாமே தவிர உண்மையான சரித்திர நூல்கள் சமரசம் செய்யப்படல் ஆகாது என்ற பொன்னுத்துரையினுடைய நிலைப்பாட்டை நான் எற்றுக்கொள்ளுகிறேன் என்று குருகே சொன்னார். அந்தக் குருகே அந்தக் கூட்டத்திற்குப்பிறகு என்னுடன் மிகுந்த நேசம் பாராட்டியதுடன் கல்வி சம்பந்தப்பட்ட தன்னுடைய Papers பலவற்றை தமிழ் படுத்துவதற்கு என்னுடைய உதவியையும் என்னுடைய உழைப்பையும் நாடி நான் மகிழ்வுடன் செய்து கொடுத்தேன். இவ்வாறு நடந்து கொண்டிருந்த பொழுது யூ.என். பி. ஆட்சி அமைத்து ஐ.எம்.ஆர்.ஏ. இரியகொல்லை கல்வி அமைச்சராக வந்ததும் முதல் பணியாக என்.எம்.பெரேராவின் சிபார் சிலே திரட்டப்பட்ட பாடநூல் சபைகள் கலைக்கப்பட்டன. கலைக்கப்பட்ட பின்னர் நான் சிறிது காலம் கொழும்பை மையமாகக் கொண்டு விவேகானந்தா வித்தியாலத்தில் ஆசிரியராகப் பணியாற்றினேன். இந்தக் கொழும்பு வாசத்தின் காரணமாகத்தான் பேராதனையில் கைலாசபதி உருவாக்கிக் கொண்டிருந்த மார்க்சியம் சார்பாக ஏற்பட்ட பேராதனை இலக்கியச் சிந்தனைக்கு மாறாகப் பணிபுரிந்த சதாசிவத்தை மையமாகக் கொண்டு நான் அதை வழிநடத்தும் தத்துவக்காரனாக அமைந்து கொழும்புச் சிந்தனை - இலக்கியச் சிந்தனை தமிழில் உருவாயிற்று. இந்த நிகழ்வுகளை ஓரளவு அக்கறையுடன் மு.தளையசிங்கம் எவ்வளவு அவசரத்தில் எழுதியபோதிலும் ஏழாண்டு இலக்கிய வரலாறு ஒரு அவசரக் குறிப்பில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொழும்பு வாசத்தின் காரணமாகவும் புதிய அக்கறைகளின் காரணமாகவும் இலக்கியத்துவம் பற்றிய புதிய கோட்பாடுகளை செயற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நான் மட்டக்களப்பில் சங்ககால இலக்கிய நூல்களைப்பற்றிய விழாக்கள் நடத்தும் ஒரு நிலையில் இருக்கவில்லை.
(தொடரும்.)
ஞானம் - பெப்ரவரி 2005 27

Page 16
:: 656ے سر مجھے eOO سر ta2 سر 6.e
கவிஞர் ஏ.எம். எம். அலி
உலகத்தின் இருeடையெல்லாம் விரeடிக் கொண்டு உதித்தெழுந்தான் செம்பருதி 26-72-2OO4 - இல் புளாகத்தைத் தம்வாழ்விற் தேடிக் கொள்ளும் 6UTegu_ఉr 66ర్నాల్ గో856r tom్నర్తోగో రోహి-J84_bl
அப்போது மானைான்றைச் சிறுத்தை யைான்று அடித்துண்டு ருசிப்புதற்குப் பாய்வ தேதி போல் தப்பாது பாய்ந்தது;பே ஐாசை யோடு குன்றுநிகர் சுேனாமிகள்’ எதிர்பாராது வீரத்தை விவேகத்தைக் காeட வைாண்ணா விதத்திலே நீதி நிகழ்த்தி விeடுப் போன கோறத்தை தன்பிடியிற் சிக்கிக் கொண்ட குடும்புத்தின் அrவிலத்தைக் கூறல் எங்ாAsன்?
உயிரிழப்பு பொருளிழுப்பு:இழுப்பி ழப்பு ஒல்வைான்றாய்க் குடும்புத்திற் பேரி டிப்பு மறுபிறப்புக் கிடைத்ததுபோற் சிலபேர்க் கன்று உயிர்பிழுைப்புக் கிடைத்ததுவிோ பெரும்வி யப்பு நகரத்தைக் கிராமத்தை நாசஞ் செய்த நச்சலையே! சுனாமியே! இலங்கைத் தீவின் எதற்கென்றும் கிழக்கைன்றும் வடக்கு என்றும் சுக்கு:நூறாக்கியதைச் சொல்லப் போனால் - பாவங்கள் மலிந்திeட காரணத்தால் படிைத்திவின் பைாறுக்கவில்லை கோபப் பeடான் இப்பழியை ஆத்திகர்கள் இறைவன் மீது இவ்விாறு இeடுள்ள இந்த வேளை - நாத்திகிறோ இப்பழியை இயற்கை மீது போeடுள்ளார் எவரைன்ன சொன்ன போதும்சோகிமைனுங் கடலுக்குள் ஆழ்ந்து போன சோதரரைக் கரையேற்றும் உள்ளம் வுைத்தல் -
அனைவர்க்கும் பைாறுப்பான கடமை யாகும் அனர்த்தத்தின் விடுக்களும் அழிந்தே போகும் ஆதலினால் மீதியுள்ள விாழ்வை பாதல் లిగోశ్రీggp6remశిశR(B€6మిmbg తిr66ు తీగిరి6umb}
O
28 ஞானம் - பெப்ரவரி 2005

øvssto- øvdb. 6/777Øupøvb øvozeBu a5azõweg upazõvazozifasøör ஒரு விமர்சனக் குறிப்பு
அ. முகம்மது சமிம்
மலையகம் தந்த மூத்த பத்திரிகையாளரான எஸ்.எப் கார்மேகம் 18.01.2005 அன்று சென்னை அப்பலே மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அவை அறிந்த பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
எஸ். எம். கார்மேகம் கொட்டகலை கல்மதுரைத் தோட்டத்தில் பிறந்தவர். அட்டன் சென். ஜோன் பொஸ்கோ கல்லூரியில் கல்வி கற்றவர். 1960ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை வீரகேசரி ஆசிரிய பீடத்தி பணியாற்றியவர். 1964 ஆம் ஆண்டு வீரகேசரி ஞாயிறு இதழில் ஆரம்பிக்கப்பட்டதோட்டமஞ்சரி மூலமாக மலையக எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியவர். மலையகச் சிறுகதைப் போட்டிகளை நடத்தியவ மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர். பல சமூகப் பணிகளிலு ஈடுபட்டு உழைத்தவர். 1983 ல் தமிழகம் சென்று சென்னை தினமணியில் ப6 வருடங்கள் பணியாற்றியவர். இலங்கை இந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் இந்தியப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்தவர். ኃ
கண்டி மன்னர்கள், ஈழத்தமிழர்கள் எழுச்சி, ஒருநாளிதழின் நெடும்பயண (வீரகேசரிவரலாறு)ஆகியவை இவர் எழுதிய நூல்களாகும்.
அவரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவர் எழுதிய கண்டி மன்னர்கள் நூலின் விமர்சனக் குறிப்பினைப் பிரசுரித்து ஞானம் அஞ்சலி செலுத்துகிறது. 3.
- ஆசிரியர்
இது இலங்கை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் கூறும் ஒரு வரலாற்று நூல். இலங்கையின் கரையோரப் பகுதிகள் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தபிறகு, அவர்களுடைய தாக்குதல்களை முறியடிக்க, 350 வருடங்களாக (1474 - 1815) சுதந்திரமாக இருந்த ஒர் இராச்சியத்தை ஆண்டு வந்த மன்னர்களின் வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். இலங்கையின் வரலாற்றை அனுராதபுரிக்காலம், பொலன்னறுவைக் காலம், கோட்டைக்காலம் என்று, அவ்வக் காலங்களில் தலைநகர்களாகக் கொண்ட அரசுகளின் வரலாற்றைக் குறிப்பதாக அமைந்தது. கோட்டை அரசு ஐரோப்பிய நாடான, போர்த்துக்கீசரின் ஆட்சிக்குக் கீழ் வந்த பிறகு, இலங்கையின் மலைப் பிரதேசத்தை மையமாக வைத்து எழுந்த சுதந்திர இராச்சியம் தான் இக்கண்டி இராச்சியம். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் சுதந்திர நாடாக இருந்த இலங்கை 1815ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்தது,
ஞானம் - பெப்ரவரி 2005 29

Page 17
கண்டி ஆட்சியில் முக்கிய பதவிகளை வகித்த சிங்கள பிரதானிகளிடையே இருந்த உட்பூசல்களும், போட்டியும், பொறாமையும், மென்ற பதவி ஆசையும்தான் கண்டி இராச்சியம் தனது சுதந்திரத்தை இழக்கக் காரணமாயிருந்தன. கடந்த கால நிகழ்வுகள் நடந்ததற்குரிய காரணங்களை ஆய்வோமானால், அதன்ால் நாம் பெறக்கூடிய அறிவு எமது இன்றைய பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக இருக்குமானால், வரலாறு கற்பதன் பலனை அடைவோம். “சென்ற கால நிகழ்வுகளை மறந்தவர்கள் அதே பிழையைச் செய்து துன்புறுவார்கள்” என்ற ஒரு வரலாற்றாசிரியர் கூறியிருக் கிறார். இன்றும் நாட்டில் போட்டியும், பொறாமையும், பதவி மோகமும் தலை விரித்தாடுகிறது. அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கு நாட்டைப் பின்னோக்கிச் செல்ல செயல்படுகிறது.
இவ்வரலாற்று நூல், கண்டி அரசின் மன்னர்களைப் பற்றியும், கண்டி சிங்களப் பிரதானிகளின் சதித்திட்டங்களைப் பற்றியும், அவர்களிடையே நிலவிய போட்டியும் பொறாமையும் பதவி ஆசையும், இலங்கைக் கரையோரத்தை ஆக்கிரமித்த, ஐரோப்பிய எதிரிகளின் தாக்குதல்களையும், அத்தாக்குதல்களை முறியடித்த கண்டி மன்னர்களின் யுத்த தந்திரத்தையும் கூறுகிறது. அரசர் களையும் அவர்களை அண்டி இருந்த மேட்டுக் குடியினரிடையே நடந்த நிகழ்வுகளை மட்டும் கூறுவது தான் வரலாறா? அப்படியென்றால் வரலாறு என்பது என்ன? "ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களைக் கூறுவதுதான் வரலாறு” என்று ஓர் அறிஞன் கூறினான்.
30
அரசனாக வேண்டு
வரலாறு என்பது 'மனித சமுதா யத்தின் வரலாற்றில் ஏற்பட்ட சம்பவங்களின் கோர்வை, அச்சமூகங் களில் ஏற்பட்ட மாற்றங்கள், அம்மாற் தோன்றுவதற்குரிய கருத் தோட்டங்கள், இக்கருத் தோட்டங் களினால் ஏற்பட்ட சூழலின் மாற்றங்கள், இம்மாற்றங்கள் எவ்வளவு தூரம் மனிதனுடைய வளர்ச்சிக்கு உதவியது, எவ்வளவு தூரம், அவன் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தியது என்பதேயாகும்"
இச்சம்பவங்களுக்கு மனிதன் கொடுத்த விளக்கங்கள், வரலாற்றா சிரியர்கள் எதிர் நோக்கிய கேள்விகள் - ஏன் இச்சம்பவங்கள் நடந்தன? எப்படி நடந்தன? என்ற கேள்விகளுக்கு விடை காண்பதில் அவர்கள் கொடுத்த தத்துவார்த்த விளக்கங்கள் இவைகளை ஆராய்வதுதான் வரலாறு.
மனித சமுதாயத்தின் வரலாற்றை பலர் பல கோணங்களிலிருந்து பார்த்திருக்கிறார்கள். வரலாற் றாசிரியர்கள் முதலில் மன்னர்களைப் பற்றியும், அவர்களுடைய ஆட்சியைப் பற்றியும், அவர்கள் நடத்திய யுத்தங் களைப் பற்றியும் அவ் யுத்தத்தின் காரணமாகத் தோன்றிய சாம்ராஜ் யங்களைப் பற்றியுமே எழுதினார்கள். இதில் பாமர மக்களைப் பற்றியோ இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியோ எவ்விதத் தகவல்களும் இவர்களுடைய வரலாற்று நூல்களில் இருக்கவில்லை. இங்கிலாந்தில் நடந்த இரு அரசபரம்பரையினரிடையே நடந்த GITT FIT LOGloff uġigh” — Wars of the ROSeS - ஆங்கில மன்னர்களுக்கும் பிரெஞ்சு மன்னர்களுக்குமிடையே நடந்த
றங்கள்
ஞானம் - பெப்ரவரி 2005

'நூறு வருட யுத்தங்கள், ஐரோப்பாவில் நடந்த 'முப்பது வருட சமய யுத்தங்கள், இந்தியாவில் மெளரிய சக்கரவர்த்தி களின் யுத்தங்கள், குப்த சாம்ராஜ்ய விஸ்தரிப்பில், குப்த மன்னர்கள் நடத்திய யுத்தங்கள், பல்லவ மன்னர்களிடையேயும் சளுக்க மன்னர்களிடையேயும் இடையே நடந்த யுத்தங்கள். தென்னிந்தியாவில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே நடந்த யுத்தங்கள், இவைகளைப் பற்றித்தான் நாம் வரலாற்றுக் குறிப்புக் களில் காண்கிறோம். மக்களைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லை.
ஆரம்பத்தில் கிரேக்க வரலாற்றை எழுதிய ஹிரடோட்டஸ் இதே பாணியில் தான் எழுதினார். இச்சம்பவங்களை - ஏதென்ஸ் றிறோய் நகரங்களுக்கிடையே நடந்த யுத்தத்தைக் காவியமாக படைத்தார் ஹோமர் உரோம சாம்ராஜ்யத்தைப் பற்றி எழுதிய 'கிப்பன்', 'உரோமாபுரியின் வீழ்ச்சி என்ற வரலாற்று நூலில் யுத்தங்களைப் பற்றித்தான் எழுதினார். ஐரோப்பாவின் மத்திய காலப் பகுதியைப் பற்றி எழுதிய புனித ஆகஸ்டின், புனித அக்வைனாஸ் போன்ற கிறிஸ்தவ பாதிரிமார்களும் கிறிஸ்தவப் பின்னணியை வைத்தே எழுதினார்கள். நேமியர் போன்ற வரலாற்றாசிரியர்கள் கதை சொல்லும் பாணியில் எழுதினார்கள். வரலாற்றை வரலாறு என்று கூறுமளவிற்கு முதன் முதலில் எழுதியவர் இப்னு கல்தூன் என்ற வரலாற்றாசிரியர். இவர் எழுதிய வரலாற்று விளக்கங்களை வைத்தே பின்னர் வந்த வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதினார்கள்.
அரச உரிமையின் பூர்வீகத்தை ஆராய்ந்த சில அறிஞர்கள் மக்களுக்கும் ஒரு தலைவனுக்குமிடையே ஏற்பட்ட
ஞானம் - பெப்ரவரி 2005
ஒப்பந்தம்தான் அரசனுக்கு அதிகாரங் களைக் கொடுத்தது என்றார்கள். அரசனுடைய அதிகாரம் தெய்வீகமானது, அது ஆண்டவனால் அருளப்பட்டது. ஆகவே அரசனை மக்கள் எதிர்க்கக் கூடாது என்றார்கள் சிலர். அரசன் சர்வ வல்லமையுடையவன் என்று ஹோப்ஸ் என்ற (Hobbes) ஆங்கிலத்தத்துவஞானி கூறினான். இக்கருத்தை எதிர்த்த இன்னொரு ஆங்கில தத்துவஞானி மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அரசன் தவறுவானே யானால், அவன் அகற்றப்படல் வேண்டும் என்று 'லொக் (Lock) என்ற அறிஞன் கூறினான். இதை அடிப்படையாக வைத்துத்தான் அரசனுக்கும் பாராளு மன்றத்துக்குமிடையே ஏற்பட்ட மோதலை விளக்கினார்கள். அரசன் சிரச்சேதம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை நிலை நாட்டினான் குரொம்வெல். பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்கள், "வோல்டேயர் ரூசோ’ போன்ற தத்துவ ‘சோஷலிச சமுதாய ஒப்பந்தத்திற்குக் கூறிய விளக்கத்தை மையமாக வைத்து வரலாறு எழுதி னார்கள். பதினேழாம், பதினெட்டாம் நூற் றாண்டுகளில், வரலாற்றாசிரியர்கள் தேசத்தைப் பற்றியும் தேசியத்தைப் பற்றியும் எழுதினார்கள். ஜெர்மன் நாட்டின் உதயம், இத்தாலியின் தோற்றம் என்று புதிய பாணியில் வரலாற்றைப் படைத்தார்கள். ஜனநாயகம், தேசியவாதம் என்ற கருத்துக்கள் பரவலாயின. இதற்கு எல்லாம் மேலாக, மக்களுடைய வாழ்க்கை பொருளாதாரத்தில் தங்கி உள்ளது; இம்மாற்றங்களுக்குக் 5T 600TLs)
ஞானிகள்
3.

Page 18
பொருளாதார மாற்றங்கள், உற்பத்தி யினால் ஏற்பட்ட மாற்றங்கள், வர்க்கப் போராட்டம் என்று கார்ல்மார்க்ஸ் என்ற தத்துவ ஞானி கூறினான். இவனுடைய இந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்துத்தான் பின்னர் வந்த வரலாற்றாசிரியர்கள் மார்க்சியக் கண் கொண்டு பார்த்தார்கள். வரலாறு இப்பொழுது இந்தப் பாணியில்தான் எழுதப்படுகிறது. ஆனால் இலங்கை வரலாறு, மகாவம்சம் எழுதிய ஆசிரியர் முதற்கொண்டு, இன்றுவரை அரசர்களைப் பற்றியும் அரச குடும்பங்களைப் பற்றியுமே எழுதி வருகிறார்கள். இதே தொனியில் தான் ஆசிரியர் கார்மேகம் கண்டி இராச்சியத்தின் வரலாற்றை எழுதி யிருக்கிறார். ஆனால் கார்மேகம் எழுதிய வரலாற்றுக்கும், வரலாற்றாசிரியர்கள் எழுதிய வரலாற்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கார்மேகம் ஒரு பத்திரிகை யாளர்; வரலாற்றாசிரியர் அல்லர். பத்திரிகையாளர்களும் இலக்கிய வாதிகளும், வரலாறு சம்பந்தமாக எழுதிய நூல்கள் சுவாரஸ்யமாகவும், வரலாற்று நூல்களில் காணமுடியாத சில உண்மைத் தகவல்களும் அவைகளில் அடங்கி
யிருக்கின்றன. சில சம்பவங்கள் நடந்ததற்குரிய காரணங்கள், வரலாற்று நூல்களில் இல்லையென்றாலும் அவைகளை வெளிச்சத்திற்குக்
கொண்டுவந்த பெருமை இவர்களையே சாரும். பிரெஞ்சுப் புரட்சிக்குப்பிறகு பிரான்சில் தோன்றிய படைத்தளபதி களின் சர்வாதிகார ஆட்சி வீழ்வதற்குரிய காரணங்களை, 'டிரெய்ஸ்பஸ் கேஸ் (Dreyfus case) 6T6arr) (BJT66ir epGuth எடுத்துக் காட்டியவர் எமிலி ஜோலா என்ற
32
நாவலாசிரியர். பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் பிரான்சில் நடந்த அக்கிரமங்களுக்கும் அரசவையில் நடந்த சதித்திட்டங் களுக்கும் காரணமாயிருந்த பிரதம கார்டினல் றிச்சலு', மசாறைன், போன்றவர்களைப் பற்றிய உண்மைகளை நாம் விக்டர் ஹியூகோ என்ற நாவலாசிரியரின் நாவல்களில் தான் காணலாம். கிரேக்க, உரோம நாகரிகங்களைப் பற்றி எழுதிய வரலாற் றாசிரியர்கள் ஓர் உண்மையை விளக்க மறந்து விட்டார்கள். அல்லது மறைத்து விட்டார்கள். இந்நாகரிகங்கள் அரேபிய சமுதாயத்தின் அத்திவாரத்தில் எழுதப்பட்டவை என்ற உண்மையை எடுத்துக் காட்டியவர் ஹோவர்ட் பாஸ்ட் என்ற நாவலாசிரியர். ரஷ்யப் புரட்சிக்கு முன் இருந்த மக்களின் அவல நிலையை எடுத்துக் காட்டியவர்கள் கார்க்கி, செக்காவ் போன்ற எழுத்தாளர்கள், சார்ள்ஸ் டிக்கன்ஸ், தோமஸ் ஹார்டி போன்ற நாவலாசிரியர்கள்தான் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கில சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் காட்டினர்.
பத்திரிகையாளர்களும், தாம் எழுதிய வரலாற்று நூல்களில் சிறந்த உண்மைகளை எழுதியிருக்கிறார்கள். எட்கார் ஸ்நோ என்ற பத்திரிகையாளர் எழுதிய ரெட்ஸ்டார் ஓவர் சைனா என்ற நூல் சீனப் புரட்சியின் வரலாற்றை மிகவும் விரிவாக அறிவதற்கு எமக்கு எட்வர்ட் சைய்யித்
அமைச்சர்
வாய்ப்பளிக்கிறது. என்ற ஆசிரியர் பாலஸ்தீன மக்களின்
தனது நூலில் இரண்டாவது உலக
போராட்டத்தைத் சித்தரிக்கின்றார். மகாயுத்தத்தின் யுத்த நிரூபராக இருந்த
ஞானம் - பெப்ரவரி 2005

வில்லியம் ஷைரர் என்ற பத்திரிகையாளர் அன்றைய ஜெர்மன் நாட்டின் வரலாற்றை 'மூன்றாவது றைச்சின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலில் எழுதுகிறார். அரேபிய மக்களின் எழுச்சியைப் பற்றிய வரலாற்றை இந்தியப் பத்திரிகையாளர் கரஞ்சியா தனது 'அரேபிய விடிவுகாலம் (Arab Dawn) 6T sit p BTGólso எழுதுகிறார். பிறகு எகிப்திய அதிபர் நாசரின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற கரஞ்சியாவைப் பார்த்து நாசர் அரேபியர் களின் விடிவுகாலமா? அல்லது அரேபியர் களின் இருண்ட காலமா? என்று தமாஷாகக் கேட்டார். கரஞ்சியாவின் அடுத்த நூல் வெளி வருகிறது, அரேபியர் களின் விடிவு காலமா? அல்லது அரேபியர்களின் இருண்ட காலமா? என்று.
கார்மேகத்தின் இந்த நூல் எந்த வகையிலும், ஒரு வரலாற்று நூலுக்குச் சளைத்தது அல்ல. வரலாற்று நூல்களில் காணமுடியாத சில தகவல்களை நாம் இந்நூலில் காண்கிறோம். இத்தகவல் களை எங்கிருந்து பெற்றிர்கள் என்று நான் கேட்டதற்கு, ஆசிரியர், தென்னிந்தியாவில் இப்போது வசித்து
வரும் கடைசி கண்டி மன்னனின் பரம்பரையினரிடமிருந்து பெற்ற ஆவணங்களிலிருந்து பெற்றேன்
என்றார். மேலும் அவர்கள் கூறிய சில தகவல்களும் இந்நூலில் சேர்த்துள்ளேன் என்று கூறினார். இவ்வாவணங்களை நூலின் கடைசிப் பகுதியில் ஆசிரியர் சேர்த்திருக்கிறார். கண்டி அரச சபையில் நடந்த சதித்திட்டங்களையும், அன்னி யருக்கு நாட்டைத் தாரை வார்த்துக் கொடுப்பதில் செய்த தேசத் துரோகத்
ஞானம் - பெப்ரவரி 2005
தையும் விரிவாக எழுதியிருக்கிறார். மேஜர் டிஒயிலி, டேவி போன்ற ஆங்கிலத் தளபதிகளின் நாட்குறிப்புக்களிலிருந்தும், கடிதங்களிலிருந்தும் கிடைத்த தகவல் களை இந்நூலில் சேர்த் திருக்கிறார். கண்டியில் போர்த்துக்கீசர், டச்சுப் படைகளின் தோல்வியையும் ஆங்கிலப்
LJ 6DL விரிவாகவும், சுவையாகவும் எழுதி யிருக்கிறார் ஆசிரியர்.
சில சிங்கள வரலாற்றாசிரியர்கள்
நிர்மூலமாக்கப்பட்டதையும்
நாயக்கத் தமிழ் மன்னர்களின் ஆட்சியை ஆட்சியாகவும், மக்களைத் துன்புறுத்திய ஆட்சியாளர் களாகவும், காட்டியதோடு மக்களின் எதிரிகளாகக் காண்பித்தனர். இங்கேயும் அவ்வாசிரியர்களின் இனத்துவேஷம் இழையோடிச் செல்கிறது. ஆனால் கார்மேகம், அம்மன்னர்களின் நல்லாட்
கொடுங்கோன்மை
சியைப் பற்றியும், மக்களின் அன்பையும் நன் மதிப்பையும் பெற்றிருந்திருந்தார்கள் என்ற உண்மை நிலையைக் காட்டுகிறார். பெளத்த சமயத்திற்கு இம்மன்னர்கள் குறிப்பாக கீர்த்தி சிறி ராஜசிங்கன் ஆற்றிய தொண்டுகளைக் கூறுகிறார். மக்களின் பேராதரவைப் பெற்ற இம்மன்னன், பெளத்த அறநூல்களையும், (சயாம்) பிக்குகளையும் வரவழைத்தான். இவர்களின் வருகைக்குப் பிறகு, மல்வத்த'அஸ்கிரிய ஆகிய மதபீடங்கள் அமைக்கப்பட்டன. இவ்வளவு சேவை செய்த மன்னனை சில சிங்கள அரச பிரதானிகள் மன்னன் தமிழன்’ என்று கூறி அவனது ஆட்சியைக் கவிழ்க்கப் பார்த்தார்கள். பிலிமதலாவாவின் சதி, அவனுக்குப் பிறகு எஹெல பொலவின் சதி ஆகியவைகளை மிகவும் விரிவாக
33.

Page 19
ஆசிரியர் கூறுகிறார். 1815ம் ஆண்டில் கண்டி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட பிறகு 1818ம் ஆண்டில் சிங்கள வரிடையே ஒரு புரட்சி தோன்றுகிறது. இது தேச சுதந்திரத்திற்காகக் செய்யப் பட்ட புரட்சி என்று சிங்கள வரலாற் றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
இழந்த அரச பதவிகளையும், மன்னன் பதவியையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் என்று மார்க்சிய வாதியான சண்முகதாசன் விளக்க மளிக்கிறார்.
இவ்வரலாற்று நூலையும், சிங்கள ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்களையும் நாம் பார்க்கும்போது, சிங்கள பிரதானிகளின் சதித்திட்டம்தான், கண்டி இராச்சியம் அந்நியர்களின் கையில் வீழ்வதற்குரிய காரணங்கள் என்ற கருத்து வெளிப்படுகிறது. உண்மை அதுவல்ல, இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒரு நவீன அரசு, நவீன முறையில் நிர்வாகத்தை நடத்தும் அதேவேளையில், அதன் பக்கத்தில், பண்டைய பிரபுத்துவ ஆட்சி முறையைப் பின்பற்றிய கண்டி இராச்சியம் அதிககாலம் நிலைத்து நிற்கமுடியாது. கரையோரப் பகுதிகளில் மக்கள் சுதந்திரமாக இயங்கி வந்த அதே வேளையில் கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த மக்கள் தாம் அடிமைகளாக நடத்தப்பட்டதை எதிர்த்துப் போராட அதிககாலம் செல்லாது. கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வு கல்வியினாலும், வளர்ச்சியினாலும், மேம்பட்டு வருவதைக் கண்ணுற்ற கண்டி மக்கள், தாம் கல்வியின்மையாலும், வறுமையினாலும்
பொருளாதார
34
வாடுவதற்கு இப்பிரபுத்துவ ஆட்சி முறையே காரணம் என்று உணர்வதற்கு அதிக காலம் செல்லாது. ஆகவே கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சியைக் காலம்தான் நிர்ணயிக்கும்.
இன்னொரு முக்கிய கருத்தும் இந்நூலில் வெளிப்படுகிறது. 1818ம் ஆண்டில் அந்நிய ஆங்கில ஆட்சிக்கு எதிராகத் தோன்றிய கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய கெப்பிட்டி பொல என்ற சிங்கள அரச பிரதானியை தேசத் துரோகி’ என்று குற்றம் சாட்டி கழுவிலேற்றியது எந்த வகையில் நியாமானது. சதித்திட்டத்தினால் நாட்டைக் கைப்பற்றிய ஆட்சிக்கு அடிவருடிகளாய்ச் சேவை செய்து, நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்த சுயநலவாதிகளின் செய்கை தேசத்துரோகமா? அல்லது மக்களின் சுதந்திரத்திற்காக போர்க்கொடி எழுப்பிய மக்களின் செய்கை தேசத்துரோகமா? மொல்லிகொட, மஹவலதென்ன போன்ற நயவஞ்சகர்கள் நாட்டைக் கொடுத்ததற்கு வெகுமதியாக பதவி களையும், நிலப்பரப்புகளையும், சலுகை களையும் இவர்களுக்கு ஆங்கில ஆட்சி அளித்தது. நாட்டிற்காகவும், மக்களின் சுதந்திரத்திற்காகவும் போராடிய தலைவர்கள், உயிரை இழந்ததோடு தமது உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்தனர். இச்சுதந்திரத் தியாகிகளின் பிள்ளைகள், வறுமையில் வாடிய அதே நேரத்தில், நாட்டைக் காட்டிக் கொடுத்த வர்களின் வாரிசுகள் பல பதவிகளுடனும், செல்வாக்குடனும் வாழத் தலைப்பட்டனர்.
காட்டிக்
O
ஞானம் - பெப்ரவரி 2005

Véaérbvio arrercov6vo o o
வாஹினி பூநீதரன்
ஞாயிற்று உதயுத்தை அஸ்தமனமாக்கினாய் 6U6rfeoff 65sgueodou அமாவாசையாக்கினாய்3 பாலன் பிறந்தவேளை U6lo60pč U606nesmery_rft சுனாமியே! உன்னைச் rசும்மாதனும் திeடாதவீரில்லை. ஆயினும்oceae
õeofG3õ 6S g9feop6béuUeoo el 6éਲੇD 634gజీ
கைாள்ளி சைருகும் స్టో స్విజ్జీ
*ჯჯ2 კჯ శనైశ్య fposeo defgăsascoes ఖ
s a 0 a '.', ് cổeắöf(Bồ 65órr co9feơ>Go6u_) l స్ట్మో
அகதி முகாம்களில் அபலைகளை அழிக்கின்றனர்3 சிப்பி பொறுக்கிய சிறுவர்களின் அங்கங்களை அறுத்துத்
சிரிப்பைப் பறிக்கின்றனர்; தங்கங்கள் சேர்க்கிறார்கள் பைாய்யுரைத்துப் பலர் மனித நேயம் யாரிடமுமில்லை. நிவாரணம் பெறுகின்றனரீ3 எல்லாமே வைளிப்பூச்சுத்தான், பண்டங்களை விற்றுப் போலி நாடகங்கள்தான். பனமாக்குகின்றனர்; cổ6ởf(Bö sórr c9feơDGo6u J-->

Page 20
விசாக்கன் என்கிறபடைப்பாளி
தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய
வசாக்கலிங்க நாவலர்
செங்கை ஆழியான்
ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் சொக்கன் என்ற படைப்பாளியின் பங்கினை மதிப்பிடுவதாயின் அன்னாரின் பல்துறைப் பரிமாணத்தினையும் இணைத்துக் கவனத்திற்கு எடுக்க வேண்டிய அவசியமிருப்பதாக நான் எண்ணுகிறேன். நவீன தமிழிலக்கியத்தில் சொக்கனின் பேனை தடம்
பதிக்காத துறை எதுவுமேயில்லை. சொக்கன் யாது எழுதினார் எனக்கணக்கிடுவதிலும் எதனை எழுதவில்லை எனக் கணக்கிடுவது இலகுவாகவிருக்கும். சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரையியல், சமயம், வானொலிச் சித்திரங்கள், பாடநூல்கள், பாடநூல் வழிகாட்டிகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல துறைகளிலும் அகலமாயும் ஆழமாயும் கால்களை ஊன்றியுள்ளார். அவருடைய பல்துறை இலக்கியப் பங்களிப்பில் சிறுகதைத்துறைக்கு ஆற்றியிருக்கும் பணி ஆறு தசாப்தங்களைக் கடந்ததாகும்.
அச்சுவேலி ஆவரங்காலில் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி பிறந்த கந்தசாமிசெட்டி சொக்கலிங்கம் யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டினைத் தன் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் சொக்கனால் நாயன்மார்க்கட்டு பெருமை பெற்றது. 1935 இலிருந்து இறுதிவரை அவர் கற்பதை நிறுத்தவில்லை. பண்டிதர், பட்டதாரி, முதுகலைமாணி, கலாநிதியென அவர் தன் கல்விப் புலைமையை விரித்துக் கொண்டார். யாழ். இந்துக் கல்லூரி ஆரம்பப் பாடசாலை, நாவலர் பாடசாலை, ஸ்ரான்லிக் கல்லூரி, பலாலி ஆசிரிய கலாசாலை, பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பன சொக்கனைக் கல்வியாளனாக உருவாக்குவதில் பெரும் பங்கும் அதனால் பெருமையுமடைந்தன. ஆசிரியராக (1952 - 1972), அதிபராக (1973 - 1982), இலங்கைக் கல்வி நிர்வாக சேவையாளனாக, கொத்தணி அதிபராக (1982 - 1990) விளங்கியுள்ளார். அரசினர் பாடநூல் வெளியீட்டு ஆலோசனைக்குழு உறுப்பினராகக் கடமையாற்றி தமிழ், சைவநெறி ஆகிய துறைகளுக்கு அளப்பரிய பங்காற்றியதோடு சைவநெறி பத்தாம் பதினோராம் பாடநூல்களின் எழுத்தாளராகவும் இருந்துள்ளார். இடையாற்று விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியகலாசாலை, (1976 - 1979), பலாலி ஆசிரியகலாசாலை (1982 - 1983) என்பனவற்றிலும் இடைவரவு விரிவுரையாளராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலும் (1992-1993) பணிபுரிந்துள்ளார். பொதுச்சேவைகளில் அகில இலங்கைத் திருமுறை மன்றத்தின் தலைவராகவும் (1989
36. ஞானம் - பெப்ரவரி 2005
 

- 1994), யாழ்ப்பாணத்தமிழ் எழுத்தாளர் சங்கம் (1959), இலங்கைக் கம்பன் கழகம் (1963 - 1966), அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் (1966 - 1973), முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் (1977 - 1990), யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் (1990 - 1997) என்பனவற்றின் செயலாளராகவும் தனது பணியினை ஆற்றி அவற்றினைப் பெருமைப்படுத்தியுள்ளார். அவர் கரங்களும் சிந்தையும் செயற்பட்ட சமூக நிறுவனங்கள் தம்மளவில் செழித்தோங்கி கலை இலக்கிய சமய வரலாற்றில் தம் முத்திரைகளைப் பதித்துள்ளன.
சொக்கன் என்ற இந்தப் படைப் பாளியை உருவாக்கியவர்களென அவர் நன்றியுடன் நினைவுகூரும் நாடகாசிரியர், நடிகர் அமரர் எஸ். பி. நாகரத்தினம், அமரர் சு. சுப்பிரமணியம், கட்டுரையாளரான த. இராஜகோபாலன், சொக்கனின் நண்பராக விளங்கிய அமரர் கவிஞர் மதுரகவி இ. நாகராஜன், இலக்கியக் கலாரசிகர் சோ. இராமச்சந்திர ஐயர், ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி முதலான பத்திரிகைகளின் ஆசிரியராக விளங்கி ஈழத்தின் இலக்கிய கர்த்தாக்கள் பலரை உருவாக்கக் காரணராக விளங்கிய அமரர் இராஜ அரியரத்தினம், அமரர் பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை என ஒரு
பெருமக்கள் கூட்டத்தை அவர் போற்றினார். தாமே சுயமென்று ஏற்றிவிட்ட ஏணியை உதைத்துத்
தள்ளிவிடும் கலை இலக்கியவாதிகளி டையே சொக்கன் தன்னை உருவாக்கிய வர்களை மறக்காது நினைவு கூருவது பெருமைக்குரிய பண்பும் பணிவுமாகும்.
ஞானம் - பெப்ரவரி 2005
அவ்வகையில் சொக்கனிடம் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் எங்களுக் குள்ளன.
856) 60 இலக்கிய உலகில் க. சொக்கலிங்கம் பல்வேறு புனைப் பெயர்களில் தன்னை இனங்காட்டி யுள்ளார். சொக்கன், வேனிலான், திரிபுராந்தகன், ஆராவமுதன், சுடலையூர் சுந்தரம்பிள்ளை, சோனா, சட்டம்பியார், திருவள்ளுவர், பரிமேலழகர், தேனி, கற்றுக்குட்டி, ஞானம்,
பேய்ச்சாத்தன்,
சாம்பவன், எதார்த்தன், பாலன் எனப் பல அவதாரங்களில் எழுதிக் குவித்துள்ளார்.
சொக்கனின் கவித்துவ ஆற்றல் வியப்பிற்குரியது. கவிதைக்கு ஒசையும் கற்பனையும் மரபுவழிக் கவித்துவ
ஆற்றலும் அவசியமான அம்சங்கள் என்பதை சொக்கனின் கவிதைகளைப் படிக்கும்போது உணர்ந்து கொள்ள (Մtջ պւն.
மீறுகின்ற சொக்கனின் கவிதைகளைப் படிக்க வேண்டும். படித்துப் பார்த்து உணர்ந்த பின் மரபை மீறிப் புதுக்கவிதை படைக்க எண்ண வேண்டும். வீரத்தாய், நசிகேதன், முன்னிச்சர வடிவழகாம்பிகை அந்தாதி, நல்லூர் நான்மணிமாலை, அப்பரின் அன்புள்ளம், நெடும்பா - 3, நல்லூர்க் கந்தன் திருப்புகழ், சைவப் பெரியாரின் சால்பை உரைத்திடுவோம் முதலான கவிதை நூல்களின் ஆசிரியர். நெடும்பா - 3 என்பது கதைப்பாடற் றொகுதியாகும். இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச் சான்றிதழை 1986 இல் பெற்றுக் கொண்டது. தமிழும் அவற்றின் தூய்மையும்
மரபு தெரியாமலே மரபை இளங்கவிதையாளர்கள்
சைவமும்
37

Page 21
வளர்ச்சியும் சொக்கனின் கவிதா தரிசனத்தின் உள்ளடக்கமாகவுள்ளன. “சொக்கன் நூலறி புலவர். ஆகையால் செய்யுள் வடிவம் பற்றிய முழு விளக்கம் அவரிடம் உண்டு. யாப்பின் வழுக்களைச் சொக்கனின் ஆக்கங்களில் காண்பது அரிது. ஒசை வழுக்கள் மாத்திரமன்றி வாக்கிய வழுக்களையும் சொக்கனின் எழுத்துக்களில் காணமுடியாது” என்பது கவிஞர் முருகையனின் கணிப்பீடாகும்.
கட்டுரையியல் கைவரப் பெற்ற வல்லுநர் சொக்கனாவார். அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமாம். தொகுப்புகளாகப் பத்துத் தொகுதிகள் வரையில் வெளிவந்துள்ளன. அவை
அவரது கட்டுரைகளின்
பொது விடயங்கள், ஆய்வுகள், பாடநூல், வழிகாட்டிகள் எனப் பல்வகைப்பட்டன. அவை பாரதி பாடி பராசக்தி, பைந்தமிழ் வளர்த்த பதின்மர், நல்லை நகர் தந்த நாவலர், சேர் பொன் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், படிப்பது எப்படி?, ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வரலாறு, விபுலானந்த கவியமுதம், இருபெரும் நெறிகள், இலக்கணத் தெளிவு, இந்து நாகரிகம் எனப் பலவாறாக விரியும். நீண்ட காலமாக ஈழத்தில் நிலைத்து வரும் சமயமரபினைத் தமது காலத்தில் தொடர்ந்து பேணும் வகையிலும் சமயக் கருத்துக்களை யாவரும் விளங்கும் வகையிலும் எழுதச் முடியுமென்பது பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன் கருத்தாகும். சொக்கனின் 'ஈழத்துத்தமிழ் நாடக இலக்கிய வரலாறு மிக ஆழமான
சொக்கனால்தான்
ஆய்வு நூலாகக் காணப்படுகின்றது.
38
ஈழத்தின் நாடக வரலாற்றினை ஆராய் வோர் சொக்கனின் இந்த நூலைத் தாண்டிக் காலடி எடுத்து வைக்கமுடியாது. இந்த ஆய்வு நூல் 1978 ஆம் ஆண்டுக் குரிய இலங்கை சாகித்ய மண்டலப் பரிசினைப் பெற்றுக் கொண்டது.
நடிப்பதற்கும் படிப்பதற்குமுரிய கலை இலக்கியமாக
நாடகங்களை
எழுத்திட்ட நாடகாசிரியர் சொக்கனாவார். வரலாற்றுக் கதாபாத்திரங்களையும் இலக்கியக் கதாபாத்திரங்களையும் தன் நாடகப் பிரதிகளில் உயிரோட்டமாக நடமாடவிட்டவர் சொக்கனாவார். அவரது வரலாற்றுப் படைப்புகளில் அழகு தமிழும் கம்பீரமான தமிழும் செந்தமிழும் விளையாடும். அலுப்புக் களைப்பின்றி ஆற்றொழுக் காகத் தமிழைத் தன் நாடகங்களில்
பொதுவாக
உரையாடவிட்டுள்ளார். சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக்காவலன், தெய்வப் பாவை, மாருதப்பிரவல்லி, மானத்தமிழ்மறவன் என்பன அவரது நாடக நூல்களாம். தமிழ் நாடகக்குழுவின் முதற்பரிசினை 1960
இலங்கைக் கலைக்கழகத்
இல் சிலம்பு பிறந்தது என்ற நாடகப் பிரதியும், 1961 இல் சிங்ககிரிக்காவலன் பிரதியும் பெற்றுக் கொண்டன. மானத்தமிழ் மறவன் என்ற நாட்டுக்கூத்து நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இன்னொரு நூலாகும். துரோகம் தந்த பரிசு என்ற நாடகத்தினை எனது காலத்தில் தினகரன்
என்ற நாடகப்
மாணவக் வாரமலரில் வாசித்து வியந்துள்ளேன்.
ஈழத்து நவீன நாவல் வரலாற்றில் சாதியத்தினைக் கருவாகக் கொண்டு ஞானம் - பெப்ரவரி 2005

முதன் முதல் படைத்த பெருமை சொக்கனுக்கேயுரியது. அவரது 'சீதா' அவ்வாறு சிறப்புப் பெறும் நாவலாகும். செல்லும் வழி இருட்டு, ஞானக்கவிஞன், சலதி என்பன சொக்கன் படைத்தளித்த நாவல்கள். சலதியில் அன்னாரின் உரைநடை மிகவும் கம்பீரமானது. வர்ணனைகள், உரையாடல்கள் என்பன மிக எளிமையாகவும் அதேவேளை கவிதைக்குரிய ஓசையும் கற்பனை வளமும் கொண்டவையாகவும் விளங்கு கின்றன. சலதி நாவல் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினை 1987 இல் பெற்றுக் கொண்டது. சத்திய ஜித்ரேயின் பத்திக்சந்த்' சொக்கனால் தமிழாக்கப்பட்டுள்ளது, ஈழத்து வாசக னுக்குப் புதியதொரு களத்தை அது அறிமுகப்படுத்தியது.
ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் சொக்கன் முன்னோடிச் சிறுகதையாளர்களில் ஒருவராவார். பழைய இலக்கியப் பரிச்சயமும் நவீன இலக்கியத்தெளிவும் கொண்டவர். அதனால் அவரது சிறுகதைகளில் அவ்வாற்றல் காணப்படும். ஈழகேசரியில் 1947 இல் 'கனவுக் கோயில்’ என்ற வரலாற்றுக் கதையுடன் அறிமுகமாகும் சொக்கன், அதனைத் தொடர்ந்து கவிஞன் பலி, குட்டைநாய், மாணிக்கம், கற்பரசி, தீர்ப்பு, கூனல், பனித்துளி, தாமரையின் ஏக்கம், மறுபிறவி, காதலும் உரிமையும், வினோதநண்பன், பிள்ளைப் பாசம் முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவை அனைத்தும் ஈழகேசரியிலேயே வெளிவந்துள்ளன. மறுமலர்ச்சியில் பொன்னுச்சி என்றொரு சிறுகதை வெளிவந்துள்ளது.
ஞானம் - பெப்ரவரி 2005
இவை ஆரம்பச் சிறுகதைகளாயினும் அக்கால கட்டத்தில் பலராலும் விதந் துரைக்கப்பட்ட கதைகளாகவுள்ளன. கனவுக்கோயில், கவிஞன் பலி, ஞாபகச் சின்னம், தீர்ப்பு, கற்பரசி ஆகியன சரித்திரக் கதைகளாகவும் ஏனையவை சமூகக் கதைகளாகவும் இவற்றில் கனவுக்கோயில், குட்டைநாய்
உள்ளன.
என்பன குறிப்பிடத்தக்கவை. தனது பதினேழாவது வயதில் ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் காலடி எடுத்து வைத்த சொக்கன் பழைய எழுத்தாளர் சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர் கோன், சு.வே, வரதர், கனகசெந்திநாதன் வரிசையில் இடம் பெற்றவர். பின்பு பொன்னுத்துரை, டானியல், டொமினிக் ஜிவா சந்ததியோடு ஒன்றானவர். அதைத் தொடர்ந்து யோகநாதன், பெனடிக் பாலன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் காலத்தில் அவர்களுடன் நின்றவர். இப்போதும் புதிய இளமை யுடன் எழுதிக் கொண்டிருப்பவர் எனப் பேராசிரியர் நந்தி குறிப்பிட்டமை முற்றிலும் ஏற்புடையவை. நல்ல சிறுகதைகள் எப்படி இருக்கவேண்டு மென்று யாராவது கேட்டால் அதற்கு வரைவிலக்கணம் தேடி மண்டையை உடைத்துக்கொண்டிராமல் சொக்கன் எழுதிய தபாற்காரச் சாமியார், குரு, ஆசிரியர், பிரியாவிடை, இருவரும் அழுதனர், உறவுமுறை போல இருக்க வேண்டும் என்று சுலபமாகச் சொல்லி விடலாம் எனச் சொக்கனின் கடல்' என்ற சிறுகதைத் தொகுதிக்கான விமர் சனத்தில் 'சிற்பி குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடாதது சொக்கனின் சிறு கதைகளில் 'கடல் மிக முக்கியமானது
39

Page 22
என்பதாகும். இச்சிறுகதைத் தொகுதி 1972 ஆம் ஆண்டிற்கான இலங்கை சாகித்யமண்டலப் பரிசிற்குரியதாகியது. கதாசிரியரின் படைப்பனுபவத்தினையும் சமூகப் பார்வையையும் ஆழமாகப் புலப்படுத்தும் சிறுகதை கடலாகும். அச்சிறுகதைக்காகச் சொக்கன் என்றும் பேசப்படுவார்.
சொக்கனின் சிறுகதைத் தொகுதியான 'கிழவரும் கிழவியும் என்ற தொகுதியில் 1998 - 2004 காலகட்டத்தில் ஆக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன. படைப்பாளி தன் வாழ்க்கையில் சந்தித்த மாந்தரின் வாழ்வுத் துயரங்களும் தன் வாழ்வில் சந்தித்த உறவுப் பிரச்சினை களும் துயரங்களும் அவமானங்களும் அவனையறியாமல் அவன் ஆழ்மனதில் நிரம்பிக் கணக்க வைக்கின்றன. அந்த அழுத்தத்தை மனதிலிருந்து இறக்கி வைக்கச் சொக்கன் என்ற படைப் பாளனுக்குத் தெரிந்த வழி எழுத்தில் இட்டு இறக்கிவிடுவதுதான். சொக்கனின் இச்சிறுகதைகளின் மூலாதார உள்ளடக்க மாகவும் கருப் பொருளாகவும் அமைந்த முதியோரின் துயரங்கள் சிறுகதைகளாக மாறி வாசகனின் மனதினைக் கணக்க
அண்மையச்
வைத்து விடுகின்றன. சொக்கனின் மனப் பாரங்கள் படிப்போரின் மனப்பாரங்களாக ஏறிவிடு கின்றன. அவ்விடத்தில் சொக்கனின் படைப்பனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள முடிகின்றது. அது படைப்பின் வெற்றி. முதியோர்களுக்கு இவ்வளவு துயரங்களா? பதினேழு வயதில் சிறுகதைத்துறையில் சொக்கன் புகுந்தபோது முதிரா இளைஞனின் இனிமையான கனவுகளும்
இச்சிறுகதைகளைப்
40
பரந்த கற்பனை உலகமும் அவர் சிறுகதைகளில் விரிந்திருந்தன. ஆனால் எழுபத்தைந்து அகவையடைந்து பவளவிழாக் காண இருந்த சொக்கனின் சிறுகதைகளில் அனுபவ முதிர்ச்சியும் சமுகத்தின் தவறான நடத்தைகளையும் அவற்றினை மிகுந்த இரக்கத்தோடு நோக்கிக் கவர்கின்ற உணர்வுகளையும் காணலாம். சமூகத்தினையும் உறவு களையும் அவர் வையவில்லை. இவ்வாறு நடக்கக் கூடாது. எவ்வாறு நடக்க வேண்டும் எனச் சுட்டுகிறார்.
சொக்கன் பல்வேறு பரிசில்களும் விருதுகளும் பெற்றுத் தன் இலக்கிய ஆளுமையை நிலைநாட்டியவர். கடைசி ஆசை (1946) மின்னொளிச் சஞ் சிகையின் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசினையும் தபாற்காரச் சாமியார் (1966) வீரகேசரிச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினையும் தமதாக்கிக் கொண்டவை. பூரீலழரீ ஆறுமுகநாவலர் சபை தமிழ்மாமணி என்ற பட்டத்தையும், இந்து கலாசார அமைச்சு இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தினையும், நல்லூர் தமிழிசைச் குகழரீ என்ற பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இலக்கியக் கலாநிதி என்ற பட்டத்தையும் இலங்கை அரசு சாஹித்திய இரத்தினம் என்ற பட்டத்தையும் வழங்கித் தம்மைக் கெளரவப்படுத்திக் கொண்டன. சொக்கன் எங்களது முதுசொம். எங்களுக்கு வழிகாட்டி. தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சொக்கலிங்க நாவலர்.
öቻ6û)L!
ஞானம் - பெப்ரவரி 2005

ஆவிதை உள்வாங்கள்
ராணி சீதரன்
கவிஞன் என்பவன் சமூகத் தேவையை உணர்ந்து அதற்காகக் குரல் கொடுப்பவன். “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்.” என்ற இதய நாதம் ஒவ்வொரு கவிஞனுக்கும் இயல்பாகவே அமைந்திருக்கும். அத்தகைய கவிதை உள்ளத்தின் அழகு அதுவாதல் அல்லது ஒன்றித்தல் எனலாம். ஒரு கவிஞனின் ஒன்றித்த நிலையில்தான் சிறந்த கவிதை பிரசவிக்கப்படுகின்றது. வெண்ணிலாவைப் பற்றிப் பாடிய பாரதி, மெல்லிய மேகத்திரை வந்து மூடியபோது யவனப் பெண்களின் அழகைப் பெற்று விளங்குவதாகக் கூறியவர் கரிய முகில்கூட்டம் அதனை மறைத்துவிட
“சொல்லிய சொல்லில் நாணுற்றனை போலும்
நின் சோதி வதனம் முழுவதும் மறைத்தனை - வெண்ணிலாவே
புல்லியன் செய்த பிழை பொறுத்தேயருள்.” என்று வெண்ணிலாவோடு பாரதி உரையாடுகின்றார். இதே போன்று கம்பன் இராமனின் அற்புதக் கோலத்தைப் படம் பிடித்துவிட முயல்கின்றான். சொற்களைத் தேடுகின்றான். "மையோ, மரகதமோ, மறிகடலோ மழைமுகிலோ.” என்று வர்ணித்தவன் தனக்குப் பொருத்தமான சொற்கள் கிடைக்கவில்லையே என்ற ஆவேசமோ, அல்லது தன்னால் அதனைத் தத்ரூபமாகச் சொல்ல முடியவில்லையே என்ற அவசரமோ தெரியாது. "ஐயோ” என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தி விடுகின்றான்.
அற்புதப் படைப்பாற்றல் வாய்ந்த கவிஞர்களிற்கு அரும்பெரும் சொத்தாக வாய்த்தது அவர்களின் கவிதை உள்ளம் என்றுதான் கூற வேண்டும். சமூகத்தின் கட்டுக்கள் தடைகள் அனைத்தையும் அறுத்தெறிந்து விட்டு கவிதாவேசத்தோடு தன் மனதில் பட்டவற்றுக்கு உருவம் கொடுத்து விடும் வல்லமை கவிஞனுக்கு மட்டும்தான் உரியது. அத்தகைய பிரசவிப்பினைத் தோற்றுவிக்கக் கூடிய சிந்தனைச் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆண்களிற்கு இருக்கின்ற பொறுப்புக்கள், சமூகத் தேவைகள் என்பவற்றை விட பெண்களுக்கே இவை அதிகமாகவும் பாதிப்பை ஏற்படுத்துவனவாகவும் அமைந்துவிடுகின்றன. அதனால் கவிஞனின் கற்பனை விரிவடைந்து செல்லவும் கவிஞை ஒருத்தியின் அதேவிதமான சிந்தனை நம்பிக்கை வரட்சியும், ஏமாற்றமும் கலந்ததாக மண்ணோடு மண்ணாக மட்டுமன்றி அதையும் கடந்த பாதாளத்திற்குள் அமுக்கப்பட்டு விடுவதாகவும் பெண்ணே தன் இருப்பை எண்ணிச் குரல் கொடுக்கும் நிலையைக் காணமுடிகின்றது. சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட பெண் கற்பனைச் சுதந்திரமும்கூட இல்லாதவளாக ஆக்கப்பட்ட கொடுமையை ஒப்பீட்டுரீதியாக நோக்குவது பொருத்தமாக இருக்கும்.
ஞானம் - பெப்ரவரி 2005 41,

Page 23
கவிஞன் எம். ஏ. நுஃமானின் கவிதை உள்ளம் என்ற அழகிய கவிதையோடு கவிஞை சங்கரி "சொல்லப்படாத செய்தி” என்ற தொகுப்பில் எழுதிய கவிதையும் இங்கு ஒப்பு நோக்கப்படுகின்றது. இரண்டு கவிதைகளும் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றுதான். அதைச் சொல்லு வதற்கு உள்ள தடைதான் சொல்லவந்த செய்தியையே மாற்றிவிடுவதைக் காாணலாம். கவிதை உள்ளத்தால் செய்யக் கூடியவை இவை என்று கவிஞன் தனது நிலையில் நின்று இவ்வாறு கூறுகின்றார்.
"வெண்முகிலோடு நாமும் மிதக்கலாம் வீசுகின்ற தண்ணிய தென்றலுTடும் தளிர்களின் மென்மையூடும் பண்ணுடன் உணர்வைப்பெய்யும் பசுங்கிளைக் குயில்களோடும் தண்ணிரும் தண்ணிரும் போலக் கலந்துற வாடலாமே.” இயற்கையோடு ஒன்றித்துக் கலந்துற வாடுவதற்குக் கவிஞனுக்கு எதுவிதத் தடைகளும் இருக்கவில்லை. கவிதை உள்ளம் இவற்றோடு தண்ணிரும் தண்ணீரும் போல பிறரின் கண்ணுக்குத் தெரியாத ஐக்கியத்தை அடைந்து விடுகின்ற தன்மையைக் கவிஞர் அழகாகச் சொல்லி விடுகின்றார்.
சங்கச் செய்யுளிலே காதல் கொண்ட இரண்டு உள்ளங்களின் ஐக்கியத்தை அதன் சங்கமத்தைப் புலப்படுத்துவதற்குப் புலவன் “செம்புலப் பெயல்நீர் போலாங்கே அன்புடை நெஞ்சந்தாங்கலந்தனவே” என்ற தொடரைப் பயன்படுத்துகின்றான். செம்மண்ணிலே தண்ணீர் கலந்து விட்டால் மண்ணின் செம்மைத் தன்மையான இயல்பு தண்ணிருக்கும் வந்துவிட இரண்டும் ஒன்றாகிவிட்ட
42
தன்மையை மிக நுட்பமாக எடுத்துக் காட்டுகின்றார். இரண்டு வேறு பொருள்களின் இணைவு அதுமற்றவர் களின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் கவிதை உள்ளத்தின் ஐக்கியம் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாதது. “முல்லையில் காதல் பெண்ணின் முறுவலைக் காணும் வல்லமை கவிஞனுக்கே தனித்துவமாக உரியது என்று கூறலாம். அதனால்தான்
தண்ணீரும் தண்ணீரும் போலக் கலந்துறவாடலாம் எனக் கவிஞர் சொல்லுவது நயக்கக் கூடியதாக உள்ளது. அதுமட்டுமல்ல,
கொட்டைப்பாக்கன்ன
சின்னக் குருவிகளோடு
நாமும் ஒட்டலாம்." அவற்றோடு சேர்ந்து தேனைக் கூட நுகரலாம். இது கவிதை உள்ளத்தால் முடியும் என்கிறார்.
நான்
கல்லாய் மாறிய பூ
பாறையாய் இறுகிய காற்று
பணியாய் உறைந்த நீர்.” இது கவிதை உள்ளம் கொண்ட பெண்ணின் குரல். அவள் இயல்பான நிலையில் இருந்து, கல்லாய், பாறையாய், பணியாய் உறைந்த மாற்று நிலையில் அவளின் செயற்பாடுகளும் இயக்கமற்று விடுகின்ற தன்மையை உணருகின்றோம். பெண் குடும்பம் என்ற வட்டத்திற்குள் எல்லைப்படுத்தப்படுகின்றாள். குழந்தை கள், கணவர், வீடு, உறவு என அவளின் பொறுப்புகள் விரிவடைந்து செல்கின்றது. கவிஞர் நுஃமான் சொல்ல விரும்பும் அதே செய்தியைத்தான் கவிஞை சங்கரி சொல்ல வருகிறார் என்பது வெளிப் படையாக விளங்கினாலும் கூட அதில் காணப்படும் வேறுபாட்டை உணராம லிருக்க முடியாது.
ஞானம் - பெப்ரவரி 2005

"எனது ஓராயிரம் சிறகுகளை விரிக்கவும் விண்ணிற் பறக்கவும் ஏங்கினேன் வானின் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொட்டுப் பார்க்க அவாவிற்று என் ஆன்மா பூமியின் பரப்புக்கு அப்பால் அண்ட வெளியில் ஸ்பேஸ் ஒழசியின் விண்கலம் போல எல்லையின்றிச் சுழலவும் எண்ணினேன். வானிற் பறக்கும் புள் எல்லாம் நானாக மாறவும் எண்ணினேன். கவிதை உள்ளம் கொண்ட ஒரு பெண்ணிற்கு ஏங்கவும் எண்ணவும் அவாவவும் மட்டும்தான் முடிகிறது. ஆனால் ஆணிற்குக் கலந்துறவாட, ஒட்டிக்கொள்ள, தெளிவு பெற எதுவித தடைகளும் இல்லாத நிலையில் கவிஞனின் கற்பனை உலகியல், இயற்கை சார்ந்த இன்பங்களில் மறந்து மகிழ்ந்து தத்துவத்தேடலாக விரிவடைகின்றது. இயற்கையின் அசைவு தோறும் இன்பத்தை நுகரலாம் - விண் வயல்களில் உலக வாழ்வின் மறைபொருள் தெளியலாமே” இவ்வாறெல்லாம் (փգպԼՈn 5 இருக்கும்போது வாழ்வின் கயமைகளைப் போக்குவதற்கு ஏன் காவியம் பாட முடியாது என்ற எண்ணம் கவிஞருக்கு ஏற்படுகின்றது. சமூகம் திருந்த வேண்டும் என்ற நோக்கோடு கவிஞர் காவியம் படைக்க முனைகின்றார். அது அவரால் செய்யக்கூடிய சாத்தியமும் உள்ளது.
ஆனால் கவிஞையின் நிலை அதற்கு மாறாக இருக்கின்றது.
ஞானம் - பெப்ரவரி 2005
எதை
யெல்லாமோ விரும்பியவளின் எதிர் பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறாத வெறும் நம்பிக்கை வரட்சியையும் ஏமாற்றத்தையும் தருவதாகத்தான் இருந்தன. பெண்ணின் கவிதை உள்ளம் கற்பனை வரட்சியோடு கட்டிப் போடப்பட்டிருக்கும் அவலம் இவ்வா றிருக்கிறது.
காலிற் பிணைந்த இரும்புக் குண்டுகள் அம்மியும் பானையும் தாலியும் வேலியும் என்னை நிலத்திலும் நிலத்தின் கீழே பாதாள இருட்டிலும் அழுத்தும். இவளால் கற்பனைச் சிறகை விரித்துப் பறக்க முயன்றபோது கால்களில் இரும்புக் குண்டுகளைப் பிணைத்து விட்டிருக்கின்றார்களே. அவளால் எப்படி முடியும்? வெண்முகிலோடு மிதக்க, விண் வயல்களில் உலக வாழ்வின் மறை பொருளைத் தெரிந்து கொள்ள அவளால் முடியுமா? ஒன்றுமே முடியாதவளாய் பாதாள இருட்டிலே அல்லவா அழுத்தப் பட்டிருக்கின்றாள். அவளின் எழுச்சியை எண்ணிப் பார்ப்பதே இயலாத கனவாய்த் தெரிகிறது. கவிஞனின் பாதையும் நோக்கமும் தெளிவாகத் தெரிவதால், சொல்ல விரும்பியதைத் தெளிவாகச் சொல்லுவதும், சொல்லும் முறையிலே கவித்துவம் பொதிந்து விளங்குவதும் இயல்பாக அமைந்து விடுகின்றது. ஆனால் சங்கரியின் கவிதை தான் அனுபவிக்க விரும்பியதை அடையாமல் போன ஏக்கத்தை வார்த்தை ஜாலங்களால் வர்ணிக்க முடியாது சுட்டிப்பாகச் சொல்ல
முனைகின்றார். அவரின் ஆசைகள் கற்பனையில்கூட நிறைவேறாது.
43

Page 24
போய்விட்ட நிலையில் காவியம் படைப்பது என்பது நடக்கக் கூடிய விடயமல்ல. தனது அழுத்தங்கள் தடைகள் எவையோ அவற்றுக்குள் சரணடைந்து அவற்றுக் குள் சுழலுவதே வாழ்க்கையாய் ஆக்கிக் கொண்ட எத்தனையோ பெண் பிரமாக்கள் இலைமறை காயாய் மட்டு மல்ல தனது இருப்பினையே நிர்ணயிக்க முடியாதவர்களாய் மறைந்துபோவது மர்மமான விடயமல்ல.
எனவே பெண் என்பவள் இயலுமையில் ஆணைவிட எந்த விதத்திலும் குறைந்தவளாக இல்லாத போதிலும் கூட சமுதாயம் ஆணைத் தட்டிக்
$8$众※冠毫冠$8š幻洛
மனிதநேCதாங்கிவிட்டதா?”
சுழன்று வந்த சுனாமியினால் சுற்றமிழுந்து சொத்திழுந்து உறவிழுந்து உடையிழுந்து
தப்பிப் பரிதவிக்கும் வேளையிலே
கொடுத்து முன்னேற்றி வந்ததுவும், பெண்ணை அவனது வளர்ச்சியின் அத்திவாரமாக நோக்கியதும் ஒரவஞ்ச னையான செயல்தான். அதன் பிரதி பலிப்புத்தான் அவளின் முன்னேற்றத்தை நோக்கிய பாய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தடைக்கற்களாக “காலிற்பிணைத்த இரும்புக் குண்டுகளாக” விளங்கு கின்றன. இவற்றை அறுத்தெறிவதற்குப் பெண் துணிவு கொள்ளும்போதுதான். கவிஞன் நுஃமான் விரும்புவதுபோல வாழ்வின் கயமைகள் கழிய நாமும் ஒர் காவியம் பாடலாம் என்று தெளிந்த சிந்தனையோடு கூறமுடியும்.
O
தி. சாமிநாதன்
காப்பாற்றுபவர்கள் போல் சில காமுகர்களின் செயல்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல் பாலியல் வில்லுறவு கொண்டதை நினைக்கையில் மனிதநேயம் தூங்கிவிeடதா? மிருககுணம் ஓங்கிவிeடதா?
மிருகங்கள் கூட மனிதர்களைக் காப்பாற்றியதுண்டு மனிதர்களில் சிலர் மிருகமானதை நினைக்கையில் மனவேதனை கொள்ளாமல் இருக்கமுடியவில்லை மனிதநேயம் தூங்கிவிeடதா? மானிடரே!
உயிர்தப்பி உறவினர்களைத் தேடிப் பரிதிவிக்கும் வேளையிலே சிறுவர்கள், சிறுமிகளின்றோ பெண்களின்றோ பாராமல் இரக்கமின்றி கடத்தியே காசு கறக்கும் கயவர்களே உங்கள் மனச்சாeசி செத்து விeடதா? மனித நேயம் தூங்கிவிeடதா? 0
44
ஞானம் - பெப்ரவரி 2005
 
 

தோட்டப்புறக் கதைகள்
- சாரல்நாடன்
கவ்வாத்துக் கத்தி
தேயிலைத் தோட்டங்களில் கவ்வாத்து மிகவும் பிரபல்யமானது. கவ்வாத்துக் காட்டில் நின்றிருந்த கங்காணியார் வெட்டப்பட்ட மரங்களை நோட்டம் பார்த்துக் கொண்டு வந்தார்.
கவ்வாத்தில் நிபுணத்துவம் காட்டுகிற தொழிலாளர்கள் வெகுதூரம் முன்னேறி போய்விட்டிருக்கிறார்கள். அவ்வளவு பழக்கமில்லாதவர்களும் இப்போதுதான் கவ்வாத்து பழகுகிறவர்களும் இன்னும் வெகுதூரம் வெட்டி வர வேண்டியிருக்கிறது.
தோட்டத்தில் கவ்வாத்து ஆரம்பிக்கப்பட்டால் ஒரு சிலருக்கு புதிது புதிதாக தோட்டத்து டாக்டரை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும். அவருடைய சிபார்சு கடிதம் இருந்தால்தான் அவர்கள் கவ்வாத்து வேலைக்குப் போகும் தன்டணையிலிருந்து தப்பிப்பார்கள். இருந்தும் புது ஆட்கள், கவ்வாத்து வேலையைப் பயின்று, நிரந்தர கவ்வாத்துக்காரர்கள் ஆகும் சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டிருப்பதுமுண்டு.
ஒவ்வொருவருடமும் பத்து சதவீதமான புதியவர்களை அறிமுகப்படுத்தி தமது கவ்வாத்துக்காரர்களை’ அதிகரித்துக் கொள்வதை ஒவ்வொரு தோட்டமும் கடைப்பிடித்து வருகிறது.
தமது தோட்டத்தில் ஆமை வேகத்தில் வயோதிபம் பெற்று வரும் தேயிலைச் செடிகளை கவ்வாத்துக் கத்திகள் மீண்டும் முயல் வேகத்தில் இளமையடையச் செய்து வருவதை அவைகள் உணர்ந்திருக்கின்றன.
ஓரிடத்தில் மாத்திரம் ஐந்தாறு தொழிலாளர்கள் ஒன்று கூடி பதட்டத்துடன் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருக்கின்றனர். கங்காணியார் மெதுவாக அவ்விடத்துக்கு நடந்தார். புதிதாக இந்த வருஷம் அறிமுகப்படுத்தப்பட்ட பத்து சதவீதம்தான் அங்கிருந்தது. கவ்வாத்து செய்பவன் முதல் நம்பர் தொழிலாளியாக கருதப்படுபவன். அவனுக்கு சம்பளத்தில் 'ரேட்டும் அதிகம். கைதேர்ந்த ஒருவன் கவ்வாத்து வெட்டுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பதினெட்டடிக்கு பரந்து மேசை விரிந்திருக்கும் தேயிலை மரத்தை அதன் கிளைகளைக் கவ்வாத்து பண்ணி ஐந்தடிக்கு கொண்டு வருவது ஒரு கலைதான். தேயிலை மலையிலே காணக்கிடைக்கும் 'வெங்கச்சான் கல்லை நொறுக்கி எடுத்து, தீட்டுக்கல்லில் வைத்து கவ்வாத்துக்கத்தியை அழுத்தி மேலும் கீழுமாக இழுத்தால் கத்தியின் ஒரம் பளபளக்கும்; கைவைக்கப் பயம், கவ்வாத்துக்குப் பயன்படும் கத்தியை வேறெதையும் வெட்டுவதற்குப் பயன்படுத்துவது இல்லை. அதைச் சாமியாகப் பாவித்து, தொட்டுத் தூக்கி வழிபடுவதற்கு அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. கவ்வாத்துக் காட்டில் வெட்டிய செடிகளைப் பின்னே விட்டு முன்னே போய்க் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். அவர்கள் கையிலுள்ள வளைந்த கத்தி சில மணி நேரங்களுக்கு முன்னால் பசும் போர்வையாகக் காட்சியளித்த செடிகளை வெட்டிக் கிழித்தெறிந்திருக்கின்றன.
ஞானம் - பெப்ரவரி 2005 45

Page 25
ஆடையகற்றப்பட்ட குழந்தையைப் போல செம்மண் வெளியில் தெரிகிறது.
புதிதாக கவ்வாத்து மலைக்குப் பழக வந்த பத்துசதவீதத்தினரில் ஒருவனுக்கு, கவ்வாத்து பண்ணிக் கொண்டிருக் கையில் ஈ ஒன்று மூக்கில் உட்கார்ந்து விட்டது. வழமையாகச் செய்வதைப்போல தன் கையை உயர்த்தி, கையில் கத்தி இருப்பதை மறந்து, விசிறி இருக்கிறான். பலன் அவனது மூக்கு மூளியாகி விட்டது.
அதெப்படி வெட்டி இருப்பான்? கங்காணியாருக்கு அதைக் கேட்கவே விநோதமாக இருந்தது. அங்கு நின்றிருந்த தொழிலாளிகள் எல்லோருமே புதியவர்கள். அவர்களில் ஒருவனைப் பார்த்து"சுண்டான், நீதான் பக்கத்திலே இருந்த, எப்படி இது நடந்தது காட்டு பார்ப்போம்” என்றார். “இப்படித் தாங்க கங்காணியரே' என்று கூறி, தனது வலக்கரத்தில் ஈயை விரட்டுமாப்போல அவனும் தன் மூக்கின் மீது கத்தியை விசிறினான்.
அவனது மூக்கு நுனியும் கவ்வாத்துக் கத்தியால் சீவப்பட்டு கீழே விழுந்தது.
கவ்வாத்துக் கத்தியை கையிலெடுப் பதற்கும் ஒரு சிலருக்குத்தான் தகுதி இருக்கிறது.
மூக்கை
O
பீவாரி கண்டக்டர் பிச்சமுத்துவுக்கு நம்பமுடியவில்லை.
பூட்ஸ் போட்ட கால்களும், தொப்பி வைத்த தலையும் தன்னில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்னையே
46
“இங்க பாரு மேன், ஒனக்கு நான் புதிசா கண்டக்டர் வேலை கொடுக்கிறது. முந்தி மாதிரி வெறுங்காலுடன் வெளியில் வந்தேனா யாரும் மதிக்க மாட்டார்கள்' ரொபின்சனின் வார்த்தைகள் இன்னும் பிச்சைமுத்துவின் காதுகளில் ரீங்கார மிடுகின்றன.
ரொபின்சன் அந்தத் தோட்டத்துக்குத் துரையாக வந்ததிலிருந்து அவரது நடையும், உடையும், வெள்ளைநிறமும், கட்டுக்கடங்காது நெற்றியில் வந்துவிழும் கேசமும் பார்ப்பவர்களிடையே ஒரு பயத்தை உண்டு பண்ணியிருந்தது.
முழுத் தோட்டமும் அவரைக் கண்டு பயந்தது.
முதல்நாள் ஃபீல்ட் ரவுண்ட்லேயே (மலைச் சுற்றி வருவது) பிச்சமுத்துவை அவருக்குப் பிடித்து இருந்தது. கணக்கப் பிள்ளையாகத் தொழில் பார்க்கும் அவரை கண்டக்டராகப் பதவி உயர்வு கொடுத்து தனக்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்று தீர்மானித்து விட்டார். பிச்சமுத்துவுக்கு அதற்கான எடுப்பான தோற்றம் இருக்கிறது. ஆளும் செவலையாக சுறுசுறுப்பாக இயங்கு கிறான். சுமாராக இங்கிலிசு பேசுகிறான். கணக்குப்பிள்ளை வேலை செய்வதால் கண்டக்டர் வேலை பார்ப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஆனால், அவனிடம் காலுக்குச் சப்பாத்து அணியும் பழக்க மில்லையே!
அவனிடம் ஒரு சோடி பூட்ஸை கொடுத்து அணியச் கர்நாடிக் கோட்டை கொடுத்து உடுத்தச் செய்தார்; டேர்பனை எடுத்துவிட்டு டாக்டர் தொப்பியை அணிவித்தார். உடுத்திப் பார்த்த ரொபின்சன் மனசுக்குள் சிரித்துக் கொண்டார். 'வெரிகுட்
சொன்னார்;
ஞானம் - பெப்ரவரி 2005

நாளைக்கி இதே உடையில்தான் நீ வரவேண்டும்’ என்று பிச்சமுத்துவுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
டக். டக். டக் நடந்து பார்க்கையில் முதலில் கொஞ்சம் சிரமமாகத் தானிருக்கிறது.
வீட்டுப் படிகளில் இறங்கிவரும்போது சிரமப்பட்டான். நடைபாதைக்கு வந்து நின்று நிதானித்துப் பார்த்தான். பத்தடி தூரம் நடந்திருப்பான். எதிலே "தோட்டக் கூலிகள்'இரண்டு பேர் வருவது தெரிந்தது. அவர்களின் கவனத்தில் தான்பட வேண்டும் என்ற நினைப்பே பிச்சமுத்து கண்டக்டருக்கு இருந்தது.
கால்சட்டைப் பொக்கட்டுக்குள் கைகளிரண்டையும் போட்டுக் கொண்டு தலையை நேராக வைத்துக் கொண்டு
எதிரே பாதையில் பாக்குமாத்தோல் காய்ந்து கிடந்தது. பொக்கட்டுக் குள்ளிருந்து கைகளை எடுக்காமலே பிளடிசிட்' என்று இங்கிலிஸில் பேசிக் கொண்டு அதை வலக்காலால் எத்தி உதைத்தார்.
உலர்ந்த பட்டை உதைக்கு தாங்குமா?
உயர்ந்து பறந்து அவரது தலைமீதே பின்னோக்கி விழுந்தது.
அதிலிருந்து நாய் மலம் அவன் தலையிலும் சட்டையிலும் விழுந்து அசுத்தப்படுத்தியது.
எதிரே வந்த இரண்டு கூலிகளுக்கும் வாய்விட்டுச் சிரிக்க முடியவில்லை. அவரைக் கவனிக்காததைப் போல நடந்து போயினர்.
நடந்தார் பிச்சமுத்து கண்டக்டர் பீவாரி
டக். டக். டக். டக். நடை கண்டக்டரான கதை இதுதான். குதிரைக்காரனைப் போலிருந்தது.
صحیح ہے
*ஞானம் ? சந்தா விபரம் உள்நாடு 91g.ju6 si656ir T. Gnanasekaran, னிப்பிர 30/= HNB – Pussellawa, B60)-Up60pé, ఫినో+ : 360/- கணக்கு இலக்கம் - 26014 என்ற 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/= கணக்கிலிட்டு வங்கி ரசீதை அனுப் 3 ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= புதல் வேண்டும். ஆயுள் சந்தா ரூபா 15000/= அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
சந்தா காசோலை மூலமாகவோ வங்கிக் கணக்கு மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும். வங்கிக் கணக்கு மூலம்
T. Gnanasekaran Gnanam Branch Office 3.B. 46" Lane, Colombo-06.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$ ஆயுள் சந்தா 300 USS
ஞானம் - பெப்ரவரி 2005
47

Page 26
aGurvé
நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.
6aeornró சைால்கிறாள் சுமாத்திராவில் - தான் அழுைதியான விாழ்க்கை நடத்தியவிளாம்
எங்கள்
பூமிதான் நடுங்கிப் பிளந்து விைப்பக் காற்றை கக்கியதாம் அதனால்த்தான் கோபம் கொண்டு கொந்தளித்து கைாதித்தெழுந்தாளாம். జీprశీ6namerumarrరీం --
தப்பிக்க முயல்கிறாள்
afeoffrcó
கeசிக்காறி eయాణిrg_ణి 6ుగొణికిeశ్రీశ్రీ జీr கeசியால் வந்தவள் போல் ملكع 6emgణుmorrh 6ఋగికిeశ్రీeరాgurr? எதிரிந்தெடுத்து எதாலைத்தெறிந்தாய் எங்கள்
ஆசிய நாடுகளில் co60orfgs65uJéasefires மனித மரணங்கள் கூக்குரல்கள். தவிப்புக்கிள்.
48
தாங்கமுடியவில்லை.
இந்தோனேசியா. இறந்து கிடக்கிறது. இதயம் வெடிக்கிறதே! இலங்கைக்கு இப்படி ஒரு விதியா? இது கொடுமை அம்மா.
6a-sorró gరిurణాగిత ఆpe66mb
ஜெகத்தையே உலுப்பி எங்கள்
ஜனத்தையே dergégy667ge4_fruur? முடியாது உன்னை மன்னிக்கவே முடியாது.
6Usrs.g. மந்திர வித்தைக்காரி
நம்பிக்கையை 6ayer36UsTib 6p 6ndsmణిr(B - perrgpరీ
రీడాr6
எழுந்து cಾrréécಾrò? மனிதநேயம் 6ass reifs புதுயுகம் கண்டு வாழ்வோம்.
O
ஞானம் - பெப்ரவரி 2005

மிறப்படுகின்ற மனித உரிமைகனான்
பாதிக்கப்படுகின்ற UബLീUസ്ക് ൬ിതമ0്സ്ക്
பிரகலாத ஆனந்த்
போர் நடக்கின்ற நாடுகளில் மனித உரிமை மீறப்படுதல் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. மற்ற நாடுகளைத் தட்டிக் கேட்கின்ற சர்வதேச பயங்கரவாத நாடான அமெரிக்காவும், ஜீவகாருண்ணியத்தைப் போதிக்கின்ற பெளத்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் எமது நாடான இலங்கையும், அகிம்சையை உலகுக்கு எடுத்துரைத்த காந்தி பிறந்த பாரத தேசமும் மனித உரிமைகள் மீறும் நாடுகளாக இருப்பதுதான் வேடிக்கையானது.
மனித உரிமை மீறல்கள் குடும்ப மட்டத்திலும், சமூக மட்டத்திலும், அரச மட்டத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் உண்மையிலேயே அரச பயங்கரவாதமே சாதாரண பொதுமகனைப் பெரிதும் பாதிக்கின்றது. உலகின் மனித உரிமை மீறும் அரசாங்கங்களில் சிறிலங்கா அரசாங்கமும் கடந்த இரு தசாப்தங்களாக முன்னணியில் நிற்கிறது. இங்கு, உலகத்தில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, மனிதன் சுதந்திரமாக வாழுகின்ற உரிமை கூட மறுக்கப்பட்டே வருகிறது. வாழும் உரிமையை வழங்க முடியாத அரசாங்கம் ஏனைய உரிமைகளான சுயநிர்ணய உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்வியுரிமை, பெண்ணுரிமை, தொழிலாளர் உரிமை உட்பட ஏனைய உரிமைகளை வழங்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்?
வாழும் உரிமை சிறிலங்காவினுடைய அரசியல் யாப்பில் இல்லாததால் எந்த ஒரு மனித உரிமையும் இலகுவில் மீறப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. காரணமின்றி கைது செய்தல் , கைது செய்தோரைக் காலவரையின்றி வைத்திருத்தல், கைதானோரின் விபரத்தை மறைத்தல், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல் தண்டித்தல், மீளக் குடியேறும் உரிமை மறுக்கப்படல் பத்திரிகையாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எதிரான வன்முறை, ஊடகங்களின் சுதந்திரச் செயற்பாட்டிற்கு ஆப்பு வைத்தல் என்பன போர்க்கால உரிமை மீறல்களில் சிலவாகும். மரண தண்டனைகள் முதல் சிறைவாசம் வரை தண்டனைகள் சிறுபான்மையினருக்குச் சட்டத்திற்குப்புறம்பாக வழங்கப்படுகிறது. படைப்பாளிகளினதும், ஊடகவியலாளர்களினதும் நிலை பரிதாபத்திற்குரியது. சுதந்திரமாக எதையும் எழுத முடியாத நிலை ஒரு புறம். போராடுமிருதரப்பினரையும் விமர்சிக்க முடியாத நிலை மறுபுறம் எனப் பல எழுத்தாளர்கள் தமது பேனாவையே மூடி வைத்து விட்டார்கள். மீறி எழுத முனைபவர்களுக்கு பலவித அச்சுறுத்தல்கள். கடந்த ஒரு தசாப்தத்தில் கொலை செய்யப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர் பட்டியல் நீண்டு செல்கிறது. இவ்வாறான தாக்குதல்களுக்கு பாதாள உலகினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ஞானம் - பெப்ரவரி 2005 49

Page 27
போர் உக்கிரகமடைந்த காலத்தில் முற்று முழுதாகப் பயந்து போய் ஒடுங்கி யிருந்த படைப்பாளிகள் பலர் தற்போது ஒரளவு தமது அமைதி காத்தலைக் கைவிட்டுள்ளதாக அண்மைக் காலப் படைப்புகள் பகர்கின்றன. போரின் நியாய அநியாயங்கள், போரின் கொடுமை, இடப்பெயர்வு, அகதி வாழ்வு, யுத்தத்தி னாலான தனிமனித மற்றும் சிறுபான்மை இனங்களின் பாதிப்பு முதலானவற்றை இன்றைய சில நாவல்களும், சிறுகதை களும், கவிதைகளும், கட்டுரைகளும் சொல்லி நிற்கின்றன. எனினும் இவற்றைப் படைப்பவர்கள் வெகு சாதுரியமாகவே பேனாவைப் பயன்படுத்துகிறார்கள். எழுத்துச் சுதந்திரம் முழுமையாக இல்லாதபோது நடுநிலை நின்று சுயமாக முற்று முழுதாக நினைத்தவற்றை எழுதிட முடியாதல்லவா?
போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது பல நல்ல காத்திரமான படைப்புகள் உருவாகி வருகிறது. சில போராளிப் படைப்பாளிகளும் சுய அனுபவங்களை எழுத்தில் வடிக்கிறார்கள். சர்வதேசத் தரம்மிக்க இலக்கி யங்கள் பல நாடுகளிலும் போர்க் காலத்திலேயே முகிழ்ந்துள்ளமை வரலாறு காட்டி நிற்கும் உண்மை. மனித உரிமை மீறல்களையும், முரண்பட்ட போக்கு களையும், ஏமாற்றுகளாலும் பாதிப்பு களாலும் வாழ்வு வடுப்பட்டுப் போனமை யையும் விடுதலையின் வீறையும் இப்படைப்புகள் சுட்டி நின்றன.
இன்று எமது நாட்டில் போர்க்கால இலக்கியப் படைப்புகள் நிறையவே வருகின்றன. ஆனால் இவற்றில் பல அவசரப்படைப்புகளாகவும், சில உண்மை க்குப்புறம்பான, அல்லது மூடிமறைக்கின்ற படைப்புகளாகவும் இருக்கின்றன.
50
இவற்றிடையே சில நல்ல படைப்புகளும் தரிசனமாகின்றன. நாவல்களில் மலரவனின் போர் உலா, செங்கை ஆழியானின் போரே நீபோ, தமிழ்க்கவியின் இனி வானம் வெளிச்சிடும் போன்ற இன்னும் ஒரு சில நாவல்களும் குறிப்பிடக் கூடியனவாக அமைந்துள்ளன. கவிதை களில் கவித்துவம் இருக்கிறதோ இல்லையோ சிறந்த பல படைப்புகள் தரிசனமாகின்றன. சிறுகதைத் தொகுதி களும் அவ்வாறே. தாமரைச் செல்வியின் ஒரு மழைக்கால இரவு, ச. முருகானந்த னின் ‘இது எங்கள் தேசம்’ போன்ற இன்னும் சில தொகுதிகளில் சில முத்தான கதைகள் தரிசனமாகின.
கடந்த ஆண்டு சிறந்த நூல்களுக் கான சாகித்திய விருது பெற்ற நூல்களைப் பார்க்கும்போதுகூடமுல்லை முஸ்ரிபாவின் கவிதை, செங்கை ஆழியானின் நாவல், ச. முருகானந்தனின் தரைமீன்கள் சிறுகதைத் தொகுதி என்பன போர்க்கால அவலங் களை படம் பிடித்துக் காட்டிநிற்கின்றன. போரைத் திணிக்கின்ற அரசே, போரின் அவலங்களையும், அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் எழுத்தில் வடித்த இந்தப் படைப்புகளுக்கு விருது வழங்கியிருப்பது ஆச்சரியமூட்டுகிறது. எது எப்படியோ தரமான படைப்புகள் பரிசு பெற்றிருக்கின்றன.
சிங்கள ஆங்கில மொழிப் படைப்புகளில் கூட போரின் விழுமியங்கள் gifts GOTLDITésirpatt. Road From Elephant Pass என்ற ஆங்கில நாவல் குறிப்பிடத் தக்கது.
பத்திரிகையாளரும், படைப்பாளி களும் சுதந்திரமாக எழுத முடிந்தால் இன்னும் காத்திரமான படைப்புகள் வெளிவரலாம்.
O
ஞானம் - பெப்ரவரி 2005

எழுதத் தூண்டும் எண்ணங்கள்
கலாநிதி துரை. மனோகரன்
ஒரு நல்ல பேராசிரியர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களைப் பற்றி எழுதுமாறு எண்ணங்கள் என்னைத் தூண்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அளவுக்கு நல்ல உள்ளம் படைத்தவர் அவர். நான் பல்கலைக்கழகம் புகுந்த காலத்திலிருந்து அவரை அறிவேன். தாம் பெற்ற அறிவைப் பலருக்கும் பகிர்ந்தளிப்பதில் அதிக உற்சாகம் கொண்டவராக எப்போதும் அவர் விளங்கி வந்துள்ளார். தமக்குப்பிடிக்காத விடயங்களைக் கடும் கோபத்துடன் கண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.
சந்திரசேகரன் அவர்கள் கல்வித்துறைக்கு ஆற்றிவந்துள்ள பணி மகத்தானது. பல்கலைக்கழகப் பேராசிரியராக விளங்குவது மாத்திரமன்றி சளைக்காமல் கல்வித்துறை தொடர்பான தமது எழுத்துப் பணியையும் எப்போதும் செய்து வந்துள்ளார். நூலாசிரியர் என்ற முறையிலும் அவர் பணி போற்றத்தக்கது. இவற்றோடு பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, ஒரு கலகலப்பான மனிதராக அவர் விளங்குகிறார். சமுதாயத்துக்கும் பயன்பட வாழும் பல்கலைக்கழக ஆசான்களுள் ஒருவராக அவர் திகழ்கிறார். பேராசிரியர் அவர்கட்கு அறுபது வயதென்பதை நம்ப முடியாமல் இருக்கிறது. தொடர்ந்து எதிர் காலத்திலும் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றுவார் என்று அவரை அறிந்த சகலரும் நம்புவதைப் போலவே நானும் நம்புகிறேன்.
ஓய்ந்த அலைகளும் ஓயாத அலைகளும் யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு பேரிழப்பு ஏற்பட்டு ஒய்ந்துவிட்டது. கடற்கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களது மனங்களையும் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வருவதென்பது சாதாரண விடயமன்று. அவர்களது துன்பம் துடைப்பதற்கு உண்மையாக முன்வந்தோரும், முன் வருவோரும் போற்றுதலுக்கு உரியவர்கள். அதேவேளை, கடற் கொந்தளிப்பு ஒரு சாராரைப் புதிய பணக்காரராக்கிக் கொண்டிருக்கிறது. முன்னர் நாட்டின் அறிவு ஜீவிகளில் ஒருசாராருக்கு புரொஜெக்ற் தயாரித்துப் பணம் பண்ண மக்களின் வறுமை, நாட்டின் போலியான சமாதான முயற்சிகள் போன்றவை பயன்பட்டன. இப்போது கடற்கொந்தளிப்பு அனர்த்தங்கள் அதற்குத் தாராளமாக உதவிக் கொண்டிருக்கின்றன. "அறிவு ஜீவிகள்” விழுந்து விழுந்து புரொஜெக்றுகள்” தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஞானம் - பெப்ரவரி 2005 51

Page 28
பாதிக்கப்பட்ட மக்கள் சொல் லொணாத் துயரத்தில் வெந்து நொந்து கொண்டிருக்கின்றனர். கடற் கொந்தளிப்பு அவர்களை அனாதரவாக்கிவிட்டது. ஒரு குழந்தைக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரியமை பற்றிக் கதையில் படித்திருக் கிறோம். இன்றோ கல்முனையில் ஒரு குழந்தைக்கு ஒன்பது தாய்மார் உரிமை கோரும் உண்மைக் காட்சியைக் காண்கிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களில் கடற்கொந்தளிப்பு ஏற்படு வதற்கு முன்னர் இருந்த நம்பிக்கை நட்சத்திரங்கள், தூரத்து விடிவெள்ளிகள், கனவுகளில் தெரிந்த விடியல்கள் எல்லாம் அவர்களை விட்டுத் திக்குத்திசை தெரியாமல் ஒடியொளிந்து கொண்டன. கால் வைக்க நிலமும், அண்ணாந்து பார்க்க ஆகாயமும் மாத்திரம் தான் அவர்களின் கண்களுக்குத் தெரிகின்றன.
கடற் கொந்தளிப்பு ஏற்பட்டபோது, மக்கள் ஒருவருக்கொருவர் உதவிய மனப்பாங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தமது இயல்பான மனிதாபிமான உணர்வினை உண்மையாகவே மூவின மக்களும் பரிமாறிக் கொண்டனர். தமிழ்ப் பிரதேசங்களில் ஆங்காங்கு வேட்டைக் காரரும் மக்களின் உயிர்களைப் பாதுகாத்து உதவியுள்ளனர்.
கடற் கொந்தளிப்பு ஏற்படுத்திய அனர்த்தங்கள் ஒருபுறம் இருக்க, அது தொடர்பான வேடிக்கை வினோதங் களுக்கும் நாட்டில் குறைவில்லை. காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உட்படத் தென்னிலங்கையும் கடற் கொந்தளிப் பினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், முல்லைத்தீவுப் பிரதேசம் பாதிக்கப்பட்டமை பேரினவாதிகளுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. தென்னிலங்கையின் அனர்த்தங் களுக்கு இடையிலும் முல்லைத்தீவு
52
பாதிக்கப்பட்டமை குறித்துப் பேரினவாத ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரித்ததாகக் கூறப்படுகிறது. இது உண்மையாயின், சம்பந்தப்பட்டவர்களின் வக்கிர மனோபாவத்தையே இச்செயல் உணர்த்துகிறது. அத்தோடு, செய்தி ஒலிபரப்பைப் பொறுத்தவரையில், மிகவும் தரம் குறைந்த நிலையில் செயற்படும் இலங்கை வானொலி தேவையற்ற ஒரு "செய்தியை’ ஒருநாள் காலை ஒலிபரப்பி அன்று மத்தியானம் அதனை உறுதிப் படுத்த முடியவில்லை எனத் தெரிவித்து, தனது தலையில் தானே குட்டிக் கொண்டது. இப்படித்தான் முன்னொரு காலத்தில் உலகத்தில் உள்ள ஒரு நாடு, இவ்வாறான “செய்தி’யினைப் பரப்பி, மூக்குடைபட்டுக் கொண்டது.
கப்பல் கப்பலாகவும், விமானம் விமானமாகவும் நிவாரணப்பொருட்களும், பண உதவியும் இந்நாட்டுக்கு வந்து சேர்ந்த வண்ணம் உள்ளன. தாம் “விரும்பியபடி” செயற்படுவதற்குத் தடையாக இருந்த பொருளாதாரப் பிரச்சினையைக் கடற்கொந்தளிப்பு மிகச் சுலபமாகத் தீர்த்து வருகிறது என்பதில் பேரினவாதப் பெருந்தலைவர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சியே. தங்கள் கைகளுக்கு எட்டாத தமிழ்ப் பிரதேசங் களைத் தமது ஆணையின் கீழ்க் கொண்டு வருவதற்கு ஏற்ற பொருளாதார பலத்தையும், அதனால் கிடைக்கக்கூடிய வேட்டைக் கருவிகளின் பெருக்கத்தையும் கடற் கொந்தளிப்பு ஏற்படுத்துகிறது என்பதால், கடற்கொந்தளிப்புக்கு அவர்கள் மிகக் கடமைப்பட்டவர்களாகவே விளங்கு கின்றனர். தொலைந்த வேட்டைக் கருவிகளை ஒருபுறம் வேட்டைக்காரர் பொறுக்கிக் கொண் டிருக்க, கடற்கொந்தளிப்பு தந்து
ஞானம் - பெப்ரவரி 2005

கொண்டிருக்கிற பொருளாதாரப் புரிந்துணர்வினால் பெரிய மட்டத்தினர் அங்கும் இங்கும் வேட்டைக் கருவி உதவிகளைப் பெறுவதற்காக ஒடித் திரிகின்றனர்.
பொதுவாக எல்லா விடயங்களையும் போலவே நிவாரண உதவி வழங்கு
வதிலும் தமிழ்ப்பிரதேசங்கள் திட்டமிட்டுப்
புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பிரதேசங்களுக்குக்கிள்ளித் தெளிக்கிற” வழக்கம் இன்னமும் சம்பந்தப்பட்டவர்களை விட்டுப் போகவில்லை. தனிப்பட்ட ஆர்வலர்களினால் கொண்டு செல்லப்படும் நிவாரண உதவிப் பொருட்களையும் ஆங்காங்கே சில இடங்களில் வேட்டைக் காரர் தடுத்து நிறுத்தியும், பறிமுதல் செய்தும், திசை திருப்பியும் ‘கடமை” புரிகின்றனர். வெளிநாட்டுப் பிரமுகர்கள் தமிழ்ப்பிரதேசங்களைத் தரிசிக்கவிடாமல் திசைதிருப்புவதில் பேரினவாத அரசியல்
வாதிகள் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகின்றனர்.
இந்த இலட்சணத்தில், தமிழ்த்
தலைவர்கள் என்று தலைப்பாகை கட்டிக் கொண்டு, தமிழ் மக்களின் ஆனந்தத் தைச் சங்கரிப்பவர்களும், தமிழ்மக்கள் மீது கருணை உள்ளவர்களாகக் காட்டிக் கொண்டு, பிரதேசவாதத்தைக் கிளப்பி, அதில் குளிர்காய நினைப்பவர்களும் மக்கள் படும் துன்பங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாது தமது “செஞ் சோற்றுக் கடனை” யாருக்கோ செலுத்திக் கொண்டிருக்கின்றனர். எடுத்ததற்கெல்லாம் அறிக்கை விடும் சில தமிழ் அரசியல்வாதிகள், வழமைக்கு மாறாக அடக்கி வாசித்துக் கொண்டு, சில நல்ல பணிகளைச் செய்து வருகின்றனர். தமிழ்பேசும் மக்கள்
ஞானம் - பெப்ரவரி 2005
போதிய நிவாரணமின்றித் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, தமிழ்பேசும் பிரதேசங்களின் அரச அதிகாரிகள், பழைய பள்ளு இலக்கியங்களில் கதைத் தலைவன் பண்ணைக்காரனுக்கு விதை வகை, மாட்டு வகை, கலப்பை வகை இவ்வளவு இவ்வளவு என்று கணக்குக் காட்டுவதைப் போல், தங்கள் மேலிடத் துக்குக் “கணக்கு’க் காட்டிக் கொண் டிருக்கின்றனர். ஓர் அலட்சியப் போக்கும் அரச அதிகாரிகள் சிலரிடம் தென் படுகிறது.
அகதிகளின் நிலையங்களில் அவற்றின் பாதுகாவலராக வேட்டைக் காரர் நியமிக்கப்பட்டிருப்பது அப்பிர தேசங்களில் அவர்களின் ஆதிக்கத்தை மெதுமெதுவாக நிலைநாட்டுவதற்கே என்பதில் சந்தேகமில்லை. வெளி நாடுகளில் இருந்து போர்க்கப்பல்களுடன் வேட்டைக்காரரும் வந்துள்ளனர். அவர்கள் தெற்கில் சிரமதானமும், வடக்கு கிழக்கில் உளவு வேலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்துவருகின்றனர். தூரத்து அந்நிய நாடு ஒன்று, தனது வேட்டைக்காரர்கள் தேவைக்கு மீறி ஒருபோதும் இங்கு தங்கமாட்டார்கள் என்று திருவாய் மலர்ந்தருளியது. அந்தத் “தேவை” என்ன என்பது காலப் போக்கில் தெரியவரும். இது அப்பட்ட மான கபடத்தனம். தமிழ் அரசியல் வாதிகள்தாம் இவ்விடயத்தில் கவனமாக இருந்து, ஒய்வொழிவு இல்லாமல் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
கடற் கொந்தளிப்பினால் ஏற்பட்ட அலைகள் ஒய்ந்துவிட்டன. ஆனால் மேலும் பல அலைகள் நாட்டைக் குட்டிச் சுவராக்குவதற்குக் காத்துக்கொண் டிருக்கின்றன.
O
53

Page 29
G3o:Gazurro
இணுவையூர் உருத்திரன்
அந்தச் சைவக்கடையில் கடந்த ஐந்து வருடங்களாக நான் ஒரு வாடிக்கை யாளன். தினமும் மதிய போசனத்துக்காக அந்தக் கடைக்கு போவேன். அங்கே சர்வர் முதற்கொண்டு காசாளர் வரை எல்லோருமே எனக்குப் பரீட்சயமான வர்கள். என்னிடம் பணம் இல்லாவிட் டாலும் கூட உழுந்து ஆட்ட வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட மாட்டாது.
அன்றைய தினம் நானும், எனது அலுவலக மேலாளர் திரு. ஆசீர்வாதம் அவர்களும் மதிய போசனத்திற்காக அந்தக் கடைக்கு விஜயம் செய்தோம். இப்படி என்னுடன் சாப்பிடுவதற்கு மேலதிகாரி ஆசீர்வாதம் வருவது இதுதான் முதல்தடவை. தினமும் அவர் வீட்டில் இருந்துதான் சாப்பாடு கொண்டு இன்று என்ன நடந்ததோ மதிய போசன இடை
வருவார். தெரியவில்லை. வேளையின்போது என்னை அழைத்த ஆசீர்வாதம் “உம்முடன் நான் சாப்பிட வரலாமா?” என்று கேட்டார்.
“ஓம் சேர், அதுக்கென்ன வாங் கோவன்.” என்று நான் பதிலளித்தேன்.
“காலையிலை வீட்டிலை சமைக்கிற திற்கு கொஞ்சம் நேரமாகிப் போச்சு நான் கடையிலை சாப்பிடுவதாக கூறிவிட்டு வந்திட்டன். சரி ஒரு நாளைக்குத்தன்னும் கடையிலை சாப்பிட்டா என்ன?’ என்று கூறிக் கொண்டு என்னுடன் புறப்பட்டார்.
54
re
சேர்’
ஆங்கிலத்தில் என்ற வார்த்தை மிகவும் கெளரவமான வார்த்தை. சும்மா தெரிந்தவர்கள்
எல்லாரையும் சேர் போட்டுக் கூப்பிடக்
கூடாது. அது ஆசிரியராக இருந்தாலும் கூடத்தான் என்ற கொள்ளையுடையவன்
நான். தனியே படிப்பும், பதவியும் இருந்தால் மட்டும் போதாது. மனித நேயமும், மற்றவர்களை மதிக்கத்
R • ዓን
தெரிந்திருக்கவும் வேண்டும். “சேர் என்று அழைப்பதற்குரிய அனைத்துத் தகுதியும் ஆசீர்வாதத்திடம் இருப்ப தாகவே நான் கருதினேன்.
ஆசீர்வாதம் மிகவும் நல்லதொரு மனிதர். மனிதநேயம் மிக்கவர். தனக்குக் கீழே வேலை செய்பவருடன் நட்புடன் பழகுபவர். கம்யூனிசச் சிந்தனையை உடையவர். மற்றவர்க்கு உதவக்கூடியவர். இவற்றைவிட நல்ல புரிந்துணர்வு உடையவர். ஆசீர்வாதம் ஒரு விடை யத்தை அணுகுகின்ற விதம் குறித்து எல்லோருமே பாராட்டுவார்கள். எங்கள் அலுவலக ஊழியர் எல்லோருக்குமே ஆசீர்வாதத்தைப் பிடிக்கும். எல்லோருமே அவர்மீது நல்ல அபிப்பிராயத்தை வைத்திருந்தார்கள்.
நாங்கள் இருவரும் அந்தச் சைவக் கடைக்குள் போய் ஒரு மேசைக்கு முன்னாள் உட்கார்ந்தோம். அங்கே உணவு பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் (5ம் இலக்கம்) எங்களிடம் ஓடி வந்தான். எங்களுக்கு மரியாதையாகத் தண்ணிர் வைத்து, இலை வைத்து சாதத்தைப் பரிமாறத் தொடங்கினான். எனக்கு நாட்டரிசிச் சோற்றை வைத்தான். “தொரைக்கு எந்தச் சாதம் வேணும்?” என்று ஆசீர்வாதத்தைக் கேட்டான்.
ஞானம் - பெப்ரவரி 2005

அவரும் சம்பா அரிசிச் சர்தத்தை காண்பிக்க அவருக்கும் பரிமாறினான். “உமக்கு சர்வரை நல்ல பரீட்சம் போலை இருக்கு” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ஆசீர்வாதம்.
தினமும் இங்கைதான் சாப்பிடு றனான். இந்த சர்வரின்ரை பெயர் சுவாமிநாதன். எனக்கு நல்லாய்த் தெரியும்.” என்று கூறினேன்.
"அப்படியா? இந்த சர்வர்களை யெல்லாம் நாங்கள் நல்லாய் கவனிக்க வேணும். ஒரு தாய், மனைவி செய்கிற பரிமாறுகின்ற சேவையைச் செய்பவர்கள் இவர்கள் தானே?’ என்றார் ஆசீர்வாதம். நானும் அதை ஆமோதித்தேன். நாங்கள் சாப்பிடத் தொடங்கினோம். எங்களை ஒடி ஒடிக் கவனித்தான் சுவாமிநாதன்.
அனேகமான நாட்களில் 5ம் இலக்க சுவாமிநாதன்தான் எனக்கு உணவு பரிமாறுவான். என்னைப் பொறுத்தவரை சாப்பாட்டுக் அதிக நேரத்தைச் செலவு செய்ய முடியாது. விரைவாகச் சாப்பிட்டு விட்டு வரவேண்டும். அது சுவாமிக்குத் தெரியும். கதிரையில் வந்து அமர்ந்த உடனேயே சாப்பாடு தண்ணிர் எல்லாம் எனக்கு எது
“ஓம் சேர்.
பாவம்
கடைகளிலை
மேசைக்கு வந்து விடும். பிடிக்கும்? எது பிடிக்காது?, எவ்வளவு சாப்பிடுவேன்?, என்ற விபரமெல்லாம்
சுவாமிக்கும் தெரியும். அன்பாக
ஞானம் - பெப்ரவரி 2005
Atrof) , SIL 3.
జమానమయిప్ప
WWA Z MASM AV . KNV V WINTIRN WXXXXXX, S. MWWWW NSNIS
W; . ་་་་་་་་་་་་་་་་་་་་་་ཆེས་
MINHSM WW
ད་དག་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
8
እAዩ
VR
Ye AVVA
تكللها
fi کھے iliki ܬܐܵܐ݇
W
அக்கறையோடு பரிமாறுவான். ஏதாவது உணவு கெட்டுப் போயிருந்தால் கூட “தொரை இது சரியில்லை. இதைச் சாப்பிட வேண்டாம்.” என்று இரகசியமாக காதிற்குள் கூறுவான். அவனுக்கு நான் தினமும் இரண்டு ரூபா டிப்ஸ் கொடுப்பேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான். தவிர வருடத் தொடக்கத்தின்போது ஏதாவது கலண்டர், டயறியும் கொடுப்பேன் பெற்றுக் கொள்வான்.
சாப்பிட்டு முடிந்ததும் நான் இலையை எடுத்துக் கொண்டுபோய் போட்டுவிட்டு, கொண்டேன். என்னைத் தொடர்ந்து ஆசீர்வாதமும் கை கழுவ எழுந்து வந்தார். அப்போது அவரை நோக்கிய
கைகளைக் கழுவிக்
55

Page 30
சுவாமிநாதன். “தொரை உங்கடை இலையையும் கொஞ்சம் எடுத்துப் போடுறீங்களா?” என்று கேட்டுவிட்டான். ஆசீர்வாதமும் அவனை ஒரு தடவை முறைத்துப் பார்த்தார். பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இலையை எடுக்காமலே கைகழுவிக்கொண்டுவந்தார். இலை மேசைமீது அப்படியே இருந்தது.
என்னுடைய மனதில் ஆசீர்வாதம் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருவேளை இது அவருக்குப் பழக்கப்பட்ட 69 (5 செயலாகவும் இருக்கலாம். சாப்பிட்ட தட்டைக் கழுவு வதற்கு என்னுடைய மனைவியைக் கூட நான் அனுமதிப்பதில்லை. ஒருவேளை இதை ஒரு மரியாதைக் குறைவான விடையமாக சுவாமிநாதன் நினைத் திருக்கலாம். அவனுடைய தன்மானம் இதற்கு இடம் கொடுக்க வில்லை. அந்தக் கடையிலே சாப்பிடுபவர்கள் தங்களின் இலைகளை,தங்களின் தட்டுக்களின் மீது விரிக்கப்பட்ட ரிசூக்களை தாங்களே எடுத்துப் போடுவதை நான் அவதானித்து இருக்கின்றேன். ஆசீர்வாதமும் இலையை தூக்கிப் போட்டு இருக்கலாம். அவருடைய இந்தச் செயல் எனக்கும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.
நாங்கள் மீண்டும் மேசைமுன் வந்து உட்கார்ந்தோம். சுவாமிநாதன் சாப்பாட்டுக்குரிய பில்லைக் கொண்டு வந்து தந்தான். என்னுடைய பங்கையும் சேர்த்து ஆசீர்வாதமே பணம் செலுத் தினார். மிகுதிப் பணம் வந்ததும் அதிலிருந்து ஒரு பத்து ரூபாவை எடுத்து சுவாமிநாதனுக்கு டிப்சாக மேசை மீது வைத்தார். 'பாவம் சர்வர்” என்று என்னைப் பார்த்துக் கூறிக்கொண்டார். இருவருமாக எழுந்து கடையைவிட்டு வெளியே வந்தோம்.
56
நான் கடையை விட்டு வெளியே வந்தாலும் என்னுடைய நினைவெல்லாம் அந்தச் சாப்பிட்ட இலை மீதுதான் இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை. சுவாமிநாதன் போன்றதொரு அடிமட்டத் தொழிலாளி வருந்துகின்ற அளவிற்கு சேர் நடந்து கொள்ளக் கூடாது. “சேர் பேனாவை கடைக்குள்ளை விட்டுவிட்டு வந்திட்டன் ஒடிப்போய் எடுத்துக் கொண்டு வாறன்.” என்று ஒரு பொய்யைக் கூறிவிட்டு அவருடைய பதிலையும் எதிர்பாராமல் கடைக்குள் ஒடினேன். மேசையிலே அவர் சாப்பிட்ட இலை அப்படியே இருந்தது. கூடவே அவர் வைத்த பத்துரூபா டிப்சும்தான். தாமதிக்காமல் அந்த இலையை எடுத்துக் கொண்டுபோய் குப்பைத் தொட்டிக்குள் போட்டேன். “தொரை தொரை என்ன காரியம் செய்தீர்கள்?’ என்று கூறிக்கொண்டு சுவாமிநாதன் ஓடிவந்தான். பரவாயில்லை சுவாமி” என்று கூறிவிட்டு மீண்டும் கடைக்கு வெளியே வந்தேன்.
“யானை படுத்தாலும் குதிரையளவு” என்று கூறுவார்கள். சேர் அப்படி யொன்றும் தவறு செய்பவரல்ல! அதை நான் அனுமதிக்கப் போவதும் இல்லை. எந்த ஒரு பெரிய மனிதனிடமும் சிறிய ஒரு குறை தன்னும் இருக்கத்தான் செய்யும். மகாகவி பாரதியாரிடம் கூடப் போதைப் பழக்கம் கொஞ்சம் இருந்ததாகப் படித்திருக் கின்றேன். அதை மறந்து விடவேண்டும்.
மறந்து விட்டேன். நான் காப்பாற்றியது
ஆசீர்வாதத்தையோ, அல்லது என்னுடைய கெளரவத்தையோ அல்ல, ஆசீர்வாதத்தின் மீது நான் வைத்திருந்த பெரும் நம்பிக்கையை, மதிப்பைத்தான். இப்போது மனதும் நிறைந்திருந்தது. வயிறும் நிறைந்திருந்தது.
ஞானம் - பெப்ரவரி 2005

6Vrwefub>6VvNr. 49gamev6w
மனது
கவிலைகளில் தோய்ந்து :
கன்னிர் விeடு விeடு
வற்றிப் போய் விeடது.
இன்னும் இன்னும் கடல் அலைகளின் கைாடு நினைவுகள் மனக் கிரையுைத் త్రaof Barb அரிக்கின்றன.
இழுப்புக்களால் எழும் €6566orUS)కు துடித்து துடித்து வாழ்க்கிை விரக்தியாகி விeடது.
பிஞ்சுக் குழுந்தைகள் சின்னஞ் சிறுசுகள் இளைஞர் யுவுதிகள்
மூத்தோர் முதியோர்கள்
Urréö 66osgDSUTGBas6ñr sreog o6ooréasтрif உற்றார் மற்றார்
மு. சந்திரகாந்தா உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்கிற பேதங்கள் எதுவுமின்றி உன் ஊழித் தாண்டவுத்தில் உயிற்றுப் போயினர்
ஊதி வெடித்த உடல்கள் உருக்குலைந்து நாறி மனத்து நாய்களுக்கு உணவிாகி இன்னமும் இgபாடுகளுக்குள் ஈக்களால் மைாய்க்கப்படுகின்றன.
சுடு கலன்களுக்கு புதில்
*60ff00; 9r606ుకిer தூக்கத்திலும் வந்து மிரegப் போகின்றன.
துன்ப அலைகளை
தந்து துடைத்துப் போன
கடலே போய் விடு 6rణిr 86&fupణిr86or Barreg}
செங்கை ஆழியானின்
புனைகதை இ5Nக்கியம் :
Әї00)Couтф,
ஞானம் - பெப்ரவரி 2005
கற்போம், படைப்போம்.
அடுத்த இதழில் தொடரும்.
57

Page 31
திறனாய்வு என்றால் என்ன? கே. எஸ். சிவகுமாரன்
நூல்
ஆக்கம்
இன்றைய ஈழத்து விமர்சன வளர்ச்சியில் தமது பங்களிப்பை ஆரவாரமின்றி அடக்கமாகச் செய்து வருபவர் கே. எஸ். சிவகுமாரன். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும், இலக்கியவாதிகள் பற்றியும், பல்வேறு படைப்புகள் பற்றியும் அவர் விமர்சன பூர்வமாக எழுதி வந்துள்ளார். ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குப் பற்றி அவ்வப்போது ஆங்கில வாசகருக்கு உணர்த்தும் முறையிலும் அவரது எழுத்துப்பணி இடம் பெற்று வந்துள்ளது.
மேலைப்புலத்துக் கலை இலக்கியத் துறைகளில் இடம்பெறும் வளர்ச்சிப்
போக்குகள், கருத்து நிலைகள் பற்றியும் அவர் தமிழ் வாசகருக்கு அறியத் தருகிறார். திரைப்பட விமர்சகராகவும் விளங்கும் சிவகுமாரன், உலகத் திரைப்பட வளர்ச்சிபற்றியும் தமிழ் வாசகருக்கும் அறிமுகப்படுத்தி வந்துள்ளார். பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் தமது பங்களிப்பை அவர் நிகழ்த்தி வருகின்றார். தற்போது இலங்கை வானொலியின் ஆங்கில
58
வர்த்தக சேவையில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
ஏற்கனவே இரண்டு ஆங்கில நூல்கள் உட்படப் பதின்மூன்று நூல்களின் ஆசிரியரான கே. எஸ். சிவகுமாரன், ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பான சில விபரங்களைச் சுருக்கமாக இரு ஆங்கிலக் கலைக் களஞ்சியங்களில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் திறனாய்வு என்றால் என்ன? (2004) என்ற அவரது நூல், சென்னை மணிமேகலைப் பிரசுரமாக வெளி வந்துள்ளது. இந்நூலில் திறனாய்வுப் பார்வைகள் (1996), மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (1999), மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (2001) ஆகிய தமது நூல்களிலிருந்து தெரிவு செய்த முப்பத்திரண்டு கட்டுரை களைக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. இவற்றுள் ஒன்று, கே. எஸ். சிவகுமாரனுடனான செவ்வியாகும். சிவகுமாரனது பல கட்டுரைகளை ஒரே தொகுப்பில் பார்க்கக்கூடிய வாய்ப்பும், வசதியும் வாசகருக்கு இந்நூல் மூலம் கிடைக்கின்றதாயினும், 17ஆம் நூற்றாண்டில் மேனாட்டு விஞ்ஞானம் முக்கிய செய்திகள், 17ஆம் நூற்றாண்டு கண்ட ஐரோப்பிய விஞ்ஞானப் போக்கு, 18 ஆம் நூற்றாண்டு பெருந்தத்துவ ஞானிகளின் யுகம், 18 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம்: மதமும் அறிவியலும் தர்க்கித்த காலம், 19ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம் முக்கியமான சிந்தனைப் போக்குகள், 19ஆம் நூற்றாண்டுத் தொழில் நுட்பம் ஆகிய ஆறு கட்டுரை களும் வாசகருக்குப் பயனுள்ள தகவல் களை வழங்கினாலும், நூலின் தலைப்புடன்
ஞானம் - பெப்ரவரி 2005
 

நேரடியான தொடர்பு கொண்டவை அல்ல. அக்கட்டுரைகளை இந்நூலில் தவிர்த்திருக்கலாம்.
முப்பத்தேழாம் பக்கத்திலிருந்தே நூல் தனது பெயருக்கேற்பத் தொடங்குகின்றது. திறனாய்வு: சில பொதுப் பண்புகள், திறனாய்வு அணுகுமுறைகள், திறனாய்வு: செய்முறை, திறனாய்வு: கலைநயம், திறனாய்வு ஈழம், சில ஈழத்துத் திறனாய்வு நூல்கள், திறனாய்வு கவிதை, திறனாய்வு: நாடகம், திறனாய்வு சமூகவியல் போக்கு ஆகிய ஒன்பது கட்டுரைகளும் திறனாய்வு பற்றிய பொது விபரங்களைத் தருகின்றன. ஒரளவுக்கு நூலாசிரியர் பத்தி எழுத்து முறையை இக்கட்டுரைகளில் கையாள்
கிறார் எனலாம். இவை நூலின் நுழைவாயில் போல விளங்குகின்றன.
திறனாய்வாளர் கைலாசபதியும்
நூலாசிரியரும் என்ற கட்டுரை முதல் எஸ்ரா பவுண்ட் ரெஜி சிறிவர்த்தன - மேர்வின் த சில்வா வரையிலான பதினைந்து கட்டுரைகளிலும் கே. எஸ். சிவகுமாரன் என்ற தரமான விமர்சகர் ஒருவரைத் தரிசிக்க முடிகிறது. இக்கட்டுரைகள் சில கைலாசபதி, விபுலாநந்தர், சுப்பிரமணிய பாரதி, மெளனி, சுந்தரராமசாமி, சிதம்பர ரகுநாதன் ஆகியோர் பற்றிய தரமான விமர்சனங்களாக உள்ளன. கைலாசபதி பற்றிய கட்டுரைகளில், அவரின் திறனாய் வுகளில் காணப்படும் சிறப்பம்சங்களையும், முறைகளையும் விரிவாக விளக்கிச் செல்கிறார். அழகியல் பற்றிய கைலாச பதியின் கருத்துகள் விமர்சன பூர்வமாக அழகியலும் சமூகப் பண்பும் என்ற கட்டுரையில் அலசப்படுகின்றன.
விபுலாநந்தர் தமிழ்த்திறனாய்வு முன்ன்ோடி என்ற கட்டுரையில், தக்க ஆதாரங்கள் காட்டி அவரை ஈழத்துத்
குானம் - பெப்ரவரி 2005
தமிழ்த் திறனாய்வின் முன்னோடி எனச் சிவகுமாரன் நிறுவுகிறார். இதுவும் ஒரு சிறந்த கட்டுரை. இன்னொரு குறிப்பிடத் தக்க கட்டுரை, சி. சுப்பிரமணிய பாரதி: புனைகதையாளர் என்பது. பாரதியின் பற்றிய தரமான மதிப்பீடாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மெளனியின் அழியாச் சுடர் என்ற சிறுகதையையும், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை என்னும் நாவலையும், சிதம்பர ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் என்ற விமர்சன நூலையும் சிவகுமாரன் விரிவாக விமர்சனப்பாங்கில் நோக்கியுள்ளார்.
தொல்காப்பியரின் தொனிக் கோட்பாடு, இரு திறனாய்வு நூல்கள் ஆகியவை நூல் விமர்சனங்களாக விளங்குகின்றன. இவற்றுள் பின்னைய விமர்சனம் நன்றாக இருந்தபோதும் கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்கி யிருக்கலாம். பின் அமைப்பியல்வாதமும் திறனாய்வும், உளவியல் இலக்கியத் திறனாய்வு ஆகிய கட்டுரைகள் திறானப்வுக் கோட்பாடுகள் தொடர்பான விமர்சனக் கட்டுரைகளாக விளங்கு கின்றன. வெறும் தகவல்களாக அன்றி,
புனைகதைகள்
விமர்சன பூர்வமாகச் சிவகுமாரன் விடயங்களை இக்கட்டுரையில் அணுகியுள்ளார். நூலின் இறுதிக்
கட்டுரையாக விளங்கும் எஸ்ரா பவுண்ட் ரெஜி சிறிவர்த்தன - மேவின் த சில்வா என்ற கட்டுரை மிகச் சிறந்த கட்டுரை களுள் ஒன்றாக விளங்குகின்றது. இருபெரும் விமர்சகர்கள் மூலமாக வாசகர்களுக்கு மேலைத்தேய இலக்கிய அனுபவத்தைச் சிவகுமாரன் இக்கட்டுரை மூலம் வழங்கியுள்ளார்.
59

Page 32
தரமாக விளங்கும் திறனாய்வு என்றால் என்ன? என்ற இந்நூலில், களையப்பட வேண்டிய சில குறைகளும் உள்ளன. நூலாசிரியர் சகல இடங்களிலும் சம்பந்தம் என்ற சொல்லுக்குப் பதிலாகச் சம்மந்தம் என்றே எழுதிச் செல்கிறார். அது தவறு. சி. தில்லைநாதன் எழுதிய நூல் பாரதி முதல் பாரதிதாசன் வரை (ப.105) என்று குறிப்பிடப்படுகிறது. அந்நூல் வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை என்பதாகும். ஆங்காங்கு அச்சுப்பிழைகளும் தம் குடியிருப்பைக் கூச்சமின்றி வெளிப்படுத்துகின்றன. “தொல்காப்பியத்தின் பொருளாதாரம்” (ப.241), “பொருளாதாரத்தில் காணப்படும் இலக்கியக் கொள்கைகளை.’ (ப. 244) என்று வரும் இடங்களில், பொருளதிகாரம் என்பதற்குப் பதிலாக பொருளாதாரம் என்று அச்சிடப்பட்டுள்ளது. வேறோரி டத்தில் “காமம் செப்பாது.” என்பதற்குப் பதிலாகக் “காமம் செய்யாது.” (ப. 247) என்று காணப்படுகிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே. அச்சுப் பிழைகள் உயிர்க்கொலைக்குச் சமம். அடுத்த பதிப்பில் இக்குறைகளை நிவர்த்தி செய்தல் நலம்.
வெவ்வேறு நூல்களில் கே. எஸ். சிவகுமாரன் எழுதி வெளியிட்ட கட்டுரைகளாக இருப்பினும், அவற்றை ஒருங்குசேர்த்துப் பார்க்கும் வாசகருக்கும், விமர்சகருக்கும் அவர் பற்றிய தெளிவான புரிந்துணர்வினை ஏற்படுத்தக்கூடிய முறையில் நூல் அமைந்துள்ளது. இலக்கியத் திறனாய்வு பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள விரும்பும் பொது வாசகருக்கும், உயர்தர வகுப்பு மாணவர் களுக்கும், பட்டதாரி மாணவர்களுக்கும் பயன்படும் முறையில் நூல் விளங்கு கின்றது. அதுவே நூலாசிரியரின்
60
நோக்கமாகவும் இருக்கக் கூடும் என நினைக்கிறேன். இந்நூலைப் படிக்கும் வாசகர்கள், இந்நூலிற் குறிப்பிடப்படும் பல்வேறு நூல்களையும் வாசிப்பதற்குத்
தூண்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு தூண்டப்படுவார்களாயின், 9||5|l
இந்நூலின் வெற்றிக்குச் சான்றாக அமையும். இந்நூலிலுள்ள சில கட்டு ரைகள் பொதுவான தகவல்களைத் தரமுயன்றபோதிலும், கணிசமான கட்டுரைகள் கே. எஸ். சிவகுமாரனின் ஆழமான விமர்சன நோக்கையும் புலப்படுத்தத் தவறவில்லை.
- கலாநிதி தரை மனோகரன்
O : பிணம் செய்யும் தேசம் (கவிதைத் தொகுதி) ஆசிரியர் : இளைய அப்துல்லாஃ வெளியீடு: உயிர்மை இமேஜ் &
இம்ப்ரஷன், சென்னை.
இலங்கையில் கிடைக்குமிடம்: எம்.என்.எம். அனஸ்
2738,ஆனந்தமாவத்தை
ஹ"றுைப்பிட்டி, வத்தளை, ரூபா 250.00
நூல்
விலை
எம்.என்.எம். அனஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இளைய அப்துல்லாஃ, வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகை ஆகிய ஊடகங்களில் சிறந்த அனுபவம் மிக்கவர். சென்ற ஒரு தசாப்தத்திற்கும் கூடுதலாக இலக்கிய உலகில் மிகவும் நன்கு அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக விளங்குபவர். அவர் பொழுது போக்
குக்காக எழுதுபவரல்ல. சமுதாய
ஞானம் - பெப்ரவரி 2005

அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் எதிராக தமது ஆக்க இலக்கியப் படைப்புகள் மூலமாக தர்மாவேசக்குரலை ஓங்கி ஒலித்து வருபவர். அவரின் படைப்புகளைப் படிப்பவர்களின் மனங்கள் கொடுமைகளைச் சுட்டெரிக்க வேண்டு மெனக் கொந்தளித்து எழும்.
இளைய அப்துல்லாஃ, மானுட புத்திரன், ஹரீரா அனஸ் முதலிய புனை பெயர்களில், இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகளிலும், மற்றும் மனிதம், தூண்டில், அ.ஆ. இ. சுவடுகள், அம்மா, காலம், பனிமலர், உயிர்ப்பு, மெளனம், தாகம், ஒசை, எக்சில், உயிர்நிழல், தேசம், தமிழினி முதலிய புலம் பெயர் சஞ்சிகை களிலும் இவர் எழுதியுள்ள 117 கவிதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
பேரினவாத யுத்த அரக்கர்கள் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களை இரு தசாப்த காலமாக நரகத்தில் தள்ளி எத்தனை வகையான கொடுமை களையும், அக்கிரமங்களையும், நிஷ்டூரங் களையும் அவர்கள் மீது புரிந்தனர்! அந்த அதிர்ச்சிப் பயங்கரத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. சுடுகாடாகிப் போன அந்த மண்ணை செழுமையுறச் செய்ய நடவடிக்கை எடுக்காமல், தென்னிலங்கைப் பேரினவாதம், பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதுபோல, மற்றொரு போருக்கு யுத்த சன்னதம் கொண்டு நிற்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், இந் நூல் வெளியாகியிருப்பது மிகவும் பொருத்தமானது.
ஏதோ இரைஞ்சு கேக்குது’/ஒருவர் பங்கர் எங்கை கிடக்குது/மற்றவர். வேட்டி அவிழ/சீலை உரிய/
பாவடை தடக்குப்பட/ திண்டவை/பேசினவை/கூடி இருந்தவை/
ஞானம் - பெப்ரவரி 2005
மூத்திரம் பெய்ஞ்சவை/எல்லோரும் ஒழ ஆம்பிளை பொம்பிளை/ ஒரேகுழியில். ஒரே பங்கரில்/ குமரி எங்கே?/ குதிர்ந்தவள் எங்கே?/
வானத்து இருட்டை /
இரண்டாய்க்கிழித்து/ ஒரு ஒளி வெள்ளம்/குண்டு விழுந்து / வெடித்தது/
அடுத்த நாள் காலை/ பங்கர்விட்டு/வெளியில் வந்தனர் நேற்றுப் பெரிய பிள்ளையானவள் மணவறைச் சோடினையில் பிரேதமாய்க் கிடந்தாள்.
இப்படி எத்தனை கவிதைகள் ? இந்நூல் இளைய அப்துல்லாவின் வெறும் கவிதைத் தொகுதியல்ல. கொடுமை களை கொழுத்திப்பொசுக்க வேண்டுமென சுவாலித்து எழுந்துள்ள கொடுந்தணல்,
ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டும்.
- நா. சோ.
O
நூல் மருதத்திணை ஆசிரியர் : வாசுகி சொக்கலிங்கம்
வெளியீடு: பூரீ சுப்பிரமணிய
புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
விலை : ரூபா 300.00
படைப்பிலக்கியங்கள் பற்றிய பார்வை முடிந்தமுடிவான நேர்கோட்டுத் தன்மை உடையதாக இருக்க முடியாது. அது காலத்திற்கேற்ற வகையிலும் நுகர்வோனது மனோ நிலைக்கேற்ற வகையிலும் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தப்படலாம். அல்லது,
61

Page 33
புதிய நோக்கில் புதிய களங்களை விரித்துச் செல்லலாம் என்பதற்கு சங்க இலக்கியங்கள் பற்றிய அண்மைக்கால நோக்குகள் பதச்சோறாக விளங்குகின்றன.
சங்க இலக்கியங்கள் பற்றிப் பல்வேறு விதமான ஆய்வுகள் காலம், அரசு, பாடுபொருள், சமூகம், பண்பாடு என்ற பல்வேறு படிநிலைகளில் வெளி வந்துள்ளன. ஆனாலும், அவை யாவும் சங்க இலக்கியங்களை இலக்கியமாக நோக்கிய இடைநிலை ஆய்வு அணுகு முறைகளாகவே வெளிவந்துள்ளன. ஆனால், சங்க இலக்கியங்கள் பற்றி அதன் சமூகத்தளம், அதன் சமூகப் பின்புலம், சமூக அசைவியக்கம் பற்றிய மார்க்சிய சித்தாந்த அணுகுமுறைகளுடனான பார்வைகள் மேற்கிளம்பியபோது சங்க காலம், இலக்கியம், சமூகம் பற்றிய நோக்குகள் மிகவும் தெளிவானவையாக வெளிவரத் தொடங்கின. பேராசிரியர்கள் நா. வானமாமலை, கா. சிவத்தம்பி, பி. எல். சாமி, நா. சுப்பிரமணியன் ஆகியோர் இவ்விடயத்தில் மிகவும் அக்கறை உடையவர்களாக இருந்தனர். பேராசிரியர் சிவத்தம்பியின்"திணைக்கோட்பாடுபற்றிய கட்டுரை சங்கச் சமூகத்தினை மானிடவியல், பொருளியல் அணுகுமுறை களினூடாக இனங்காட்டியது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பெ. மாதையன் அண்மையில் எழுதிய 'சங்க இலக்கியத்தில் தொன் மங்களும் பழமரபுக் கதைகளும் எனும் நூல் இவ்விடத்தில் விதந்து குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு சமூகவியல் ஆய்வுத் தடத்தின் அடியாகவே வாசுகி சொக்க லிங்கத்தின் நூலையும் இனங்காண முடிகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணிப் பட்டத்திற்கான இவ்வாய்வு,
62
ஆய்வு நோக்கங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றை நிறைவு செய்தல் என்பதற்குப் புறம்பாக ஆய்வாளரது ஆய்வுப் புலமையையும் ஆய்வு நோக் கையும் ஒருங்கே இனங்காட்டுவதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங் களினது இயங்குதளம், மருதத் திணையில் இடம்பெறும் பாத்திரங்களின் உணச்சி நிலைகள், திணைக்கோட் பாட்டின் சமூக அடிப்படைகளும் இலக்கிய வெளிப்பாடுகளும் சமூக மேலாண்மைக் கொள்கைகளும், களவு - கற்பு என்பனவற்றின் நியமங்களும் பெறுமா னங்களும், சமுதாய மாற்றமும் பரத்தையர் தோற்றமும், முல்லை சான்ற கற்பு என்னும் ஆறு இயல்களில் இந்நூல் கட்டமைக்கப் பட்டுள்ளது.
ஆய்வின் தேவைகளுக்கு இணங்க முதலாவது இயலில் சங்க இலக்கியங் களின் கால எல்லை பற்றி விவாதித்து அது தொடர்பான கருத்தியல்களை முன்வைக்கின்றார். இரண்டாவது இயலில் மருதத்திணையின் பாத்திரங் களும் அவர்களது உணர்ச்சி நிலைகளும் விவரண முறையினூடாக விவரிக்கப் படுகின்றது. இந்த விவரிப்பின் அடிப்படை மருதத்திணைப் பாடல்கள் மட்டுமே.
மூன்றாவது இயல் நிலைக் கோட்பாட்டின் சமூக இயங்குதளம் இலக்கிய வெளிப்பாடு, சமூக மேலாண் மைக் கொள்கைகள் என்பன தொல் காப்பிய நெறிநின்று ஆராயப்பட்டுள்ளது. பின்னைய மூன்று இயல்களும் வெவ் வேறு தலைப்பைக் கொண்டவை யாயினும் (களவு - கற்பு, பரத்தையர், முல்லை சான்ற கற்பு) அவற்றின் அடிப்படையாக அமைவது பெண் ணிலைச் சிந்தனையே ஆகும். ஆணாதிக்கச் சமூக அமைப்பானது
ஞானம் - பெப்ரவரி 2005

பெண்ணுக்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகளை எவ்வாறான அணுகு முறைகளுடன் நிலை நிறுத்தியது என்பதும் சமுதாய மாற்றத்தில் பரத்தமை என்பது பெண்ணை வீட்டிற்குள்ளும் வெளியேயும் நுகர்பொருள் ஆக்கியது என்பதையும் காலமுறையின் அடிப் படையில் விளக்க முற்படுகின்றார். முல்லை சான்ற கற்பு என்பது மருதத் திணையில் இடம்பெற்ற ஆணாதிக் கத்தின் உச்ச நிலைப்பாட்டின் வெளிப் பாடே என்று விவாதித்து அதன் தொடர் விளைவுகளையும் சுட்டிக் காட்டுகின்றார். பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் ஆகியோர் வாசுகியை நெறிப்படுத்தியுள்ளனர். அவர்களது ஆய்வு அணுகுமுறையின் கனதி, ஆய்வின் பகுப்பு முறையிலும் பிரச்சினை களை எடுத்தாளும் திறனிலும் வெளிப் படுகின்றது. வாசுகியும் அவர்களுடன் ஒத்தோடியுள்ளார் என்பது நூலில் வெளிப்படுகின்றது. எனினும், மரபு நிலைப்பட்ட ஆய்வு நெறிமுறைகளின் விம்பமும் ஆங்காங்கே புலப்படுகின்றது. அவரது பரத்தையர் பற்றிய நோக்கு, சமூக மேலாண்மை பற்றிய விடயங்கள் மேலும் ஆழமான விவாதத்திற்குரியன. இவை சமூகவியல், மானிடவியல் நிலைப்பட்ட கண்ணோட்டத்துடன் விவாதிக்கப் படும்போதுவாசுகியின் ஆய்வு முடிவுகளுக் கான பலம் அதிகரித்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
அண்மைக்கால ஆய்வேடுகளின் நூலாக்க முயற்சிகளுள் வாசுகி சொக்கலிங்கத்தின் 'மருதத்திணை' என்னும் நூல் கவனத்திற்குள்ளாகும். என்பதில் ஐயமில்லை.
- வ. மகேஸ்வரன்
O
ஞானம் - பெப்ரவரி 2005
аавгчА7
опа, бог бипоото от
afeoffróurrë சுமத்திராவில் இருந்து 6ుర్తిరీmb656666 சொல்லுகிறார்கள்.
உயிர்க் கொலை செய்ய இல்விளவு துறத்தில் இருந்தா ஓடிவர வேண்டும்? அதுவும் gజీpr? @pణిrLr? ஆயிரக் கணக்கில் மனித உயிர்கள்.
அதர்மத்தின் உச்சம்)
O C 9. அதிகம் பிரியம் போலும் assifypéreo
6.a5Oé dayldo soo எழுத்தில் எப்படிக் காeடுவது?
ஈழத்தின் இரண்டு கரைகளும் இப்போது 8ff-(6 &ßr TT6So oo o கனியப் பிரதேசமாக.
சோகம் எங்களுக்கு மeடும்தான் சொந்தம் போலும்
O
63

Page 34
ශීප් بی۔بی۔بی۔......... حیحہ lگے۔۔۔۔۔۔ (8II IartaiéroIII fit" so,
பிறந்துள்ள புதிய ஆண்டின் முதல் மலராக 56ஆவது "ஞானம் கைவரப் பெற்றேன். நன்றி. சஞ்சிகையின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக சாரங்காவின் 'சிறகில் வரும் பெண் பாத்திரமான மாதங்கியும், தினகரனின் 'எனக்கும் பசிக்கும் கவிதையில் வருபவரும் நெஞ்சினில் சுமையை ஏற்றுகின்றனர்.
மேலும், செங்கை ஆழியானின் புனைகதை இலக்கியத் தொடர், அது பற்றிய அறிவைப் பெறுவதற்கான ஒரு பாடப் பரப்பாகவே விளங்குகிறது. மாவை வரோதயன் எழுதவிருக்கும் 'இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா திருப்பப்பட வேண்டிய பக்கங்கள்' எனுந் தொடர் அத்தியாவசியமான ஒன்று. சினிமாவையும், நாடகங்களையும் மட்டும் சார்ந்திருக்கும் ரசிகர்களையும், ஒளிபரப்பாளர்களையும் இது நிச்சயம் மாற்றியமைக்கும் என்று நம்புகிறேன்.
ஞானம் சஞ்சிகை மேலும் பல ஆக்கங்களுடன் இவ்வாண்டிலும் சிறப்புடன் மிளிர எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
- வாஹினி பgதரன் razYzkeeeETKrEYKYaLzKaLaaaLLaELEL0YKYzLJGLLeLLeeeLELKaeKKLar0Yz0LLLLLL0LeELEELzJKkesee0aL0eLeLLLK0EEL "ஞானம்' 55ஆவது இதழில் வெளியான எஸ். பொ. வின் நேர்காணல் வாசித்தேன். தனது "வீ என்ற சிறுகதைத் தொகுதிக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்காமல் முற்போக்கு எழுத்தாளர்கள் தடுத்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை வாசித்தபோது, தனது 'யானை' என்ற நாவல் 'பாடிப்பறந்த பறவை என்ற திரைப்படமாக வெளியாகவிருந்ததை அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் அங்கத்தவராக இருந்த எஸ்.பொ.தடுத்ததாக செங்கை ஆழியான் தனது நானும் எனது நாவல்களும் என்ற நூலில் குறிப்பிட்டிருந்தது ஏனோ எனக்கு நினைவில் வந்தது.
மேலும் எஸ். பொ. தனது 'சடங்கு என்ற நாவல் 145,000 பிரதிகள் இந்தியாவில் விற்பனையானதாகவும் இதனால் இது சிறந்த நாவல் என்பது போலவும் கூறுகின்றார். சடங்கு சிறந்த நாவல்தான். ஆனால் கூடுதலான பிரதிகள் விற்பனையாகும் நாவல்களைச் சிறந்த நாவல்கள் எனக் கூறுவதானால் ரமணிசந்திரன், புஷ்பா ரங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் நாவல்களையும் சிறந்த நாவல்கள் என்று கூறவேண்டி வருமே? - தேவமுகுந்தன் ፵፫﷽(፻፵፭፻፺፰፻፺፱ጃ(I(፰፻፵፬ጃኗኗ (muo(ቒ(፭፻ዛ፶፪'ድ¶ሄዳኟÉS(&ቛኛ8£ãጎና ዴቭ(oሲቋ(ሚሄጃ፲ሣ(፰ ( ..&&ኛ8£ጄኖኜ፰ጎ°itቫ((ኗዳ£ዳኞ(ዴጂ(°(፲፰፻፺፰፻፷፭፥፯ (ናዮቑûቛ&&ቛ' மலையக ஆக்க இலக்கிய முன்னோடிகளின் வரிசையில் கே. கணேஷ் இலக்கிய செயற்பாட்டாளர் அந்தனிஜிவா போன்றவர்களின் குறிப்புகளை மிகத் தெளிவாகவும் விபரமாகவும் பிரசுரித்திருந்தீர்கள். விரைவில் ஆய்வாளர் சாரல்நாடன் அவர்களின் மணிவிழாவையும் நடத்த இருப்பதையும் நான் அறிவேன். பாராட்டுகள்.
மலையகப் படைப்பாளிகளில் இன்னும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அதி மூத்தவர். திரு. சக்திபால ஐயாவின் விபரங்களையும் பிரசுரித்தால் - மலையக இலக்கியம் சம்பந்தமாக ஆய்வு செய்யும் இளம் சந்ததியினருக்கு பெரிதும் உதவும்படியாக அமையும். - கே. பொன்றுத்துரை
54 g5 IT cxar ili» — Gil LI ÛT GJ ń 2005
 
 

ན ”་ ASeS eOeSeeSKKKSeS0S SL S SYS0SS0SYSS S S S S0S0S0S0STSTYS0eL0SL0SA SAAS
MANUFACTURERS, WHOLESALERS AND RETAILERS OF QUALITY BAGS & PURSES
: STATKONEERS : FANCY GOOS
UL, ORDERS ACCEPTED : No. 60, Koltuggorella Wesediya, :
Kandу. శీలత ଧ୍ମାଣ୍ତ୍ତ୍ଵ
སྐུ་ལྷ་ཙམ་ 發餐醫嗲-鶯-囊-隱-韃-鑿鑿-營-韃-鑿-營-韃-醬爭競-贊 "醫
à CARSONSMEGA
CERAMICS
Importers & Distributors of Wall Tiles, Floor Tiles, High Quality Sanitary wares, Bathroon Accessories, P. V. C. And Hot Water Pipe Fittings
A 74, Color:ibo Street :
Kandy, Sri Laennska. Te1:081 - 4476760, 081 - 2200052 Fa: O31 - 22 MO5.
E.-------------- 萎爵、铬、爵

Page 35
“Mጎf፻፭ TBgኛt Complimerits
8
8
O
O 081
Phone
1
8
O
Fax
%
!
L
E-Mail
% sae
No+门)
戀密也熱熾熱密也激密幾
%%so:|(│ │ │ │ │¿
|×\, ,|- / - ** ******
) } %
 
 
 

s/% () 熔
衞料)珂)國驢|- 爵)
|- * |× *
Lae 魔疑Ë 释2* 絮■■粥 藏---- 密E3Ë 了清f。工行,慨----雌者
■ !(&)|×张骁 引川和也 &zį e : , );전 S SS S 정 地戏软感想 > E _ 怒“ , 水《Y,感蟹