கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2005.03

Page 1

ஆணலசிங்கர்

Page 2
影
影 POOBALASINGHAM
BOOKDEPOT
IMPORTERS, EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWSAGENTS.
羲
TI===
岛
s
影
烹
濠
棗
盛
|ள்
鞑
Head Office : Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo ll, Sri Lanka. Colombo 06, Sri Lanka, Tel. : 24.22321 Tel.: 4-515775, 2504266 Fax 2337 313 SS E E-mail: pbdho?sltnet. Ik 4A, Hospital Road,
湾 Bus Stand, Jaffna.
影
弘
-
-
* பூபாலசிங்கம் புத்தகசாலை
密 புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, TE இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
羲
鬍 தவிபிழை கினை :
இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309A-23, காலி வீதி, கொழும்பு 11, இலங்கை, கொழும்பு 05, இலங்கை : தொ. பே. 2422321 தொ. பே. 4-515775 ஜ் தொ. நகல் 2337313 接 ßlajăTaxiT (ĝ5F ĉio : pbdhoûîosiltnet.lk 30). 4A, ஆஸ்பத்திரி ແຫຼົ້າ, 懿 பஸ் நிலையம், யாழ்ப்பாணம். AeysyeyAyyyeiyyyeyyeyyyeeqeyyyyssyyyAyyeyyyyeyyyyyyyyyyyeyyeseeeYS
 
 
 
 
 
 
 
 
 
 
 

মুল্ল","ষ্কa":"ঙ্কস "ঙ্কR":"ঙ্খE":"ঙ্কH":"ঃপূঃ
OMS
ஞானம் ஒளி - 05 og Lữ — 10 ||
ஆசிரியர் : தி. ஞானசேகரன்
ஓவியர்கள் : LI (5iq. U IT நா. ஆனந்தன் ஜெயகாந்தன் தலைமை அலுவலகம் ! 197, பேராதனை வீதி, கண்டி.ஜி
தொடர்புகளுக்கு.: தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 466|| ஒழுங்கை, கொழும்பு - 08, தொபே, & தொ.நகல் 011-28013 x செல்லிடத் தொ.பே. 0777-306506g 2 E-Tail:gnanan Inagazineayahoo.com
ஒரனரி சஞ்சிதைfள் சிரசுரTதர் Wனர்களின் கருத்துககு அவர்ரை 7M:N JF7FFFřAGA77 FYRIWAYWFAIN * NawiJäii. WF37777/III* 37/3, ż
வர்கள்தாதுசேந்தர்யெர், ரகவரி
இதழினுள்ளே .
திேர்காரைன் வாள்). பொ.
சிறுகதை குளிரில் காயும் தாய்மை
- எஸ். முத்துமீரான் மையம் கொள்ளும் சூறாவளி 47
- வினை வேந்தன்
ஆவிதைகள் முடக்காகம்
அன்பன் எங்களூர் ஆச்சி GB: 1
- நமீழேந்தி நிலைதளராதெழுந்திடுவீர். 36
-ஜின்னாற்ற விடுதலையின் பறவை | - மாரிமுத்து சிவகுமார் நாளை
- ஆ. புனிதக்வா நைலோன் மனகம். 58
- தடவிைஸ்கiசரி
கதிரைகள் பூபாலபிங்கம் என்ற.
- பேராசிரியர் கா. சிவத்தம்பி பெண்ணுரிமை இயக்கங். - சந்திரகாந்தா இலங்கையில் தமிழ். 32
- மாவை வரோதயன் புனைகதை இலக்கியம்.
- செங்கை,ஆழியான் ஆழிப் பேரலைகள். 7
- நம்பு சிவா படைப்பும் படைப்பாளிகளும் 39
- கே. விஜயன் கிளிநொச்சியின் ஒரு கால. 43
- கலாபூஷணம் முல்லைIEரி கே. எஸ். சிவகுமாரனின். 61
-:3:-
எழுதத் தூண்டும் எண்ன. 55
- துரை. மனோகரன்
சமகாலக் கலை இலக்கிய. 5.
- செ. சுதர்சன் வாசகர் பேசுகிறார்
முகப்போவியம் : ஜெயகாந்தன்

Page 3
C
ീഗ്ഗ്
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
لـ .விழிபெற்றுப் பதவி கொள்வார் ܢܠ
சர்வதேச மகளிர் தினச் சிந்தனைகள்
பெண்சமூகம் பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கண்டுள்ள யுகம் இது. இப்பரிமாணம் பல்வேறு நாடுகளிலும் பலவடிவாகியுள்ளது. கல்வி வளர்ச்சி முதல் குடும்ப விவகாரங்களில் பெண்களின் அந்தஸ்த்து வரை இவ்வித்தியாசங்களின் முரண்பாட்டு எழுச்சிகள் சுனாமி அலை வீச்சாகியுள்ளன.
கல்வி, தொழில், அரசியல், கலை கலாசாரத்துறை, பல்வேறு சமூக விவகாரங்களில் ஈடுபடல், தலைமை வகித்தல், விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடல், விண்வெளிப்பயணம் மேற்கொள்ளல் என்ற பெண்ணினத்தின் சகலதுறைப் பரிமாணம் மூர்ச்சையடைக்கும் விதத்தில் உலகின் ஒருபாகத்தில் விரிவு கொண்டுள்ளது. அத்தனைக்கும் எதிர்மறைத்தன்மை இன்னொரு பகுதியில் உறைந்து போயுள்ளது. நாடுகளின் வெவ்வேறுபட்ட பொருளாதாரத்தன்மை, அமைப்பு என்பனவுக்கேற்ப அதன் குணவியல் புகளின் வெளிவீச்சே இது.
கல்வியின்மை, பெண்ணடிமைத்தன்மை, பாலியல் வன்முறை, பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்துதல் எனத் தொடருகின்ற கொடுரங்களுக்கும் அளவில்லை. இத்தகைய சமூக அமைப்புகளில் இவற்றிற்கெதிராக ஓங்காரித்து எழும் குரலும் போராடிவரும் பெண்ணியக்கங்களின் அமைப்பு ரீதியான கோஷங்களும் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. எழுத்து முதல் ஒலி, ஒளி ஊடகங்கள் மூலம் அவை முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் கருத்தோட்டங்களும் வெற்றிகரமாகவே அமைந்து உலகின் கவன ஈர்ப்பையும் சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றன. கொள்கை வரையறுப்பின் வளர்ச்சி இது என்றபோதிலும் நடைமுறைச் சாத்தியங்கள் வழுக்கல்பாறைகளாகவுள்ளன.
2 ஞானம் - மார்ச் 2005
 

அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் உலக நாடுகளில பெண்சமூகத்தின் நிலைப்பாடு உயர்வு கொண்டதான மாயத் தோற்றம் தருகிறது. கல்வி, தொழில் துறைகளில் ஏற்றமிகு நிலை தெரிவதாகத் தோன்றுகின்றபோதும் பெண்ணை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றி தன்மை முற்றாக விடுபட்டதாகத் தெரியவில்லை.
சுதந்திரப் பொருளாதாரக் கட்டமைப்புகளுக்கான முயற்சிகளும் அவற்றின் பிரவாகங்களுமான தொலைக்காட்சிகளின் பெருக்கங்களும், போட்டிமனப்பான்மையுடன் வெளிவரும் பத்திரிகைகளும், சஞ்சிகை களும் கணனிகளின் வர்ணங்களை வெளிக்கொணரும் இலகுவான தன்மையும் விழுமியம்மிக்க கலாசாரத்தினை விழுங்கிவிடும் விபரீத நிலைக்கு இட்டுச்செல்ல முயல்கின்றன. ஆண், பெண் நெருக்கமான காட்சிகள், விளம்பரங்கள் முதல் பெண் களை அரைகுறை ஆடைகளுடன் நடனமாடவைக்கும் பாடல்காட்சிகளும், சஞ்சிகைகளில் இத்தைைகய படங்களே பிரசுரமாவதும் செய்தி இதழ்களும் இவற்றையே பின் பற்றுவதும் நல்லவைகளுக்கான கோஷங்களை கேலிக் கூத்தாக்குவதோடு குடும்ப உறவுகளிடையே விஷப் பாய்ச்சலை ஏற்படுத்தி பெண்மையை கேலிப் பொருளாக இட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
பெரும்பாலான பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு இவையே மூலகாரணிகளாக அமைகின்றன.
யுத்தம், இயற்கை அனர்த்தம், மற்றும் குடும்பச் சூழல் என்பனவும் இந்நாடுகளில் பெண் சமூகத்தைப் பெரிதும் பாதித்து விடுகின்றன. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.
பொருளாதார விடுதலை, கல்வி விடுதலை என்பன முழுச் சமூகத்தினதும் தேவையாகும். சமூகக் கட்டுக் கோப்பிலிருந்து பெண்விடுதலை பெறுவது ஒரு தனித்த செயலல்ல. முழுச்சமூகத்தோடும் இணைந்து போராடும் செயலாகும் இது என்பது இன்று உணரப்பட்டு வருகின்றது. முழு உலகிலும் இன்று இடம்பெற்றுவரும் விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் அதிகமாக இடம்பெற்று வருகிறார்கள் என்பதை இது உணர்த்துகின்றது.
மகளிர் தினநாளில் இவ்வுறுதிப்பாட்டிற்கான திடசங்கற்பம் வெறும் அரசியல் கோஷமாக மரணித்து விடாமல், கலை இலக்கியம் மூலம் உறுதியான அடித்தளம் கட்டியெழுப்பப்படவேண்டும்.
O O O
ου παστιb -- το π ή ά 2005 3

Page 4
பூபாலசிங்கம் என்ற நிறுவனமும்
யாழ்ப்பானத்துப்புத்தகப்பண்பாட்டின்
பதியப்படாத சிலதரவுகளும்
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலை 1945ஆம்: ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பூபாலசிங்கம் தமது: புத்தகசாலையை வியாபார நிலையமாக மட்டுமன்றி ஓர் அறிவுக் கூடமாகவும் ஆக்கியவர். அறிஞர்கள் இலக்கியக்காரர்கள் : ஒன்றுகூடும் இடமாகவும் அவரது புத்தகசாலை விளங்கியது. காலத்துக்குக் காலம் அவரது புத்தகசாலை இனவாதிகளால் : மும்முறை எரியூட்டப்பட்டது. இறுதியாக எரியூட்டப்பட்ட அன்று இப்புத்தகசாலையுடன் யாழ். பொது நூல் நிலையமும்: எரியூட்டப்பட்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.இ இப்புத்தகசாலை ஆரம்பித்து அறுபது ஆண்டுகள் நிறைவில் இந்நிலையம் இப்போது பெருவளர்ச்சிகண்டு தலைநகரில் தன்னிகரில்லா ஸ்தாபனமாக மூன்று மாடிக்கட்டிடத்தில் நிமிர்ந்து நிற்கிறது. அமரர் பூபாலசிங்கத்தின் நினைவுகளை இங்கு பேராசிரியர் பகிர்ந்துகொள்கிறார். - ஆசிரியர்
பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பில் மிக நவீனமான தமிழ் நூல்களைப் பிரதானப்படுத்தும் ஒரு விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்துள்ளமை இந்த நிறுவனத்தின் வளர்ச்சிபற்றிய பல சிந்தனைகளை, பல நினைவுகளைக் கிளறிவிடுவதாக அமைகிறது. பூபாலசிங்கத்தினுடைய மூத்த மகனான ரீதரசிங், தகப்பனார் தொடக்கிவைத்த பயணத்தின் ஓர் உச்ச நிலையை எய்தியுள்ளார் என்பதற்காக அவரை வாழ்த்தும் அதே வேளையில் இந்தப் பயணத்தின் தொடக்கநிலை பற்றி மீள நினைப்பது யாழ்ப்பாணத்து இலக்கியப் பண்பாட்டின் இதுவரை பதியப்படாத இன்னொரு அம்சம்பற்றிய சில நினைவுகளை மற்றவர்களிடம் தூண்டிவிடுவதற்கான ஒரு தூண்டு கோலாக, சந்தர்ப்பமாக அமையும் என்ற எண்ணத்தின் காரணமாக இவற்றைச் சொல்லவிரும்புகிறேன்.
இப்படியான நினைவுகளைப் பொதுவாக மனிதர்கள் தங்கள் நிலைப்படுத்திக் கூறுவதுதான் மரபு. அப்படிச் சொல்கிற போதுதான் அந்த நினைவுகளுக்கு ஓர் உண்மைத்தன்மையும் அந்தச் சம்பவங்களுக்கு ஒரு வரலாற்று நேர்மைத்தன்மையும் உண்டு. இதனை நாங்கள் பின்னர் வரன்முறையான நெறிமுறையான வரலாறாக ஆக்கிக் கொள்ளவேண்டும். இப்படித் தன்னிலையாகச் சொல்வது மட்டுமே வரலாறாகிவிடாது.
證
4
ஞானம் - மார்ச் 2005
 
 
 

'ဒို့စ္
(იზm იortb ·
யாழ்ப்பாணத்து பூபாலசிங்கம் கடையை நினைக்கின்ற பொழுது இன்று எழுபத்து மூன்று வயதாகிக் கொண்டிருக்கும் எனக்கு முதன்முதலில் நான் பார்த்த பூபாலசிங்கம் கடைதான் ஞாபகம் வருகிறது. அந்தக்காலத்தில் யாழ்ப்பாண பஸ்நிலையத்திற்கு அருகாமையில் நிறைய சர்பத் கடைகள் இருக்கும். பஸ்ஸில் ஏறுபவர்கள், இறங்குபவர்கள், வந்து தங்கிப் போகின்றவர்கள் அங்கு விற்கப்படும் சர்பத்தை வாங்கிக் குடித்துச் செல்வார்கள். சர்பத்திற்காகவே சில இளைஞர்கள் பிற கிராமங்களிலிருந்து அங்கு போய்வருவதுமுண்டு. இப்போதுள்ள யாழ்ப்பாணப் பட்டினத்தின் புவியியல் அமைப்பல்ல அப்போதிருந்தது. இப்போது சுபாஸ"க்கு முன்னால் இருக்கும் இடம் நகரசபையினுடைய புதிய சந்தையாக மாறிவிட்டது. அதனால் முன்னைய அமைப்பு முற்றாக மாறிவிட்டது. பஸ் நிலையம் இப்பொழுது இருக்கும் இடம் ஆஸ்பத்திரியை அண்மித்ததாக இருக்கிறது; அப்பொழுது அப்படியல்ல. நெல்ஸன் பொடி பஸ்கள்’ என்று சொல்லப்படுகிற பஸ்களும், தட்டி பஸ்களும் சற்றுத் தொலைவில் ஏறத்தாழ கஸ்தூரியார் வீதி தொடங்குகின்ற மூலையிலேயே தரித்து நிற்கும். அதற்கு முன்னாலேயே சர்பத் கடைகள் இருக்கும். அந்தச் சர்பத் கடையின் வரிசையில் ஒரு சிறு கடையாக பூபாலசிங்கத்தின் புத்தகக்கடை இருந்தது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. பூபாலசிங்கம் கடைக் குப் பக்கத்தில் ‘தமிழ்ப்பண்ணை’ என்றொரு புத்தகக்கடையும் இருந்தது. அங்கு பத்திரிகைகளும் சிறிய புத்தகங்களும் சினிமாப்பாட்டுப் புத்தகங்களும் இருந்தன. பஸ் நிலையம் மாற்றப் பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டபொழுது தமிழ்ப்பண்ணைக்குக் கிடைத்த இடம் கவன ஈர்ப்பு உள்ளதாக அமையவில்லை.
நான் நெல்லியடியிலிருந்து முதலில் எனது தகப்பனாருடன் சென்று வருவது வழக்கம். பின்னர் எனது நண்பர்களோடு செல்வேன். பூபாலசிங்கம் கடைக்கும் செல்வோம். அங்கு பூபாலசிங்கம் நிற்பார். கடைக்குள் பத்திரிகைகள் வைக்கப்பட்டிருக்கும். பக்கத்திலே சிறிய சிறிய புத்தகங்கள் தொங்க விடப்பட்டிருக்கும். அந்தப் புத்தகங்கள் பெரும்பாலும் ஜீவானந்தம்பற்றி அல்லது கொம்யூனிச விஷயங்கள்பற்றி இந்தியாவிலிருந்து வருபவையாக இருக்கும். அவற்றினுடைய விலைகள் பத்து, பதினைந்து, அல்லது இருபது இருபத்தைந்து சதமாகத்தான் இருக்கும். யாழ்ப்பாணப் புத்தகங்கள் அங்கு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பொதுவுடமை இயக்கம் சம்பந்தமான, காங்கிரஸ் இயக்கம் சம்பந்தமான, சத்தியமூர்த்தி சம்பந்தமான சில சிறிய சிறிய புத்தகங்கள் அங்கே தொங்கும். அதிலே நாங்கள் பத்து பதினைந்து சதத்துக்குரிய புத்தகங்களை வாங்குவதே அந்தக்காலத்தில் பெரிய விஷயமாக இருந்தது. அவற்றை விடப் பத்திரிகைகளும் அங்கே இருக்கும். அந்தப்பத்திரிகைகளை
5 2005 & זחח ת)

Page 5
證
6
எடுத்துப் பார்க்கிற அளவுக்கு நான் அப்போது பெரியவனாக இருக்கவில்லை. அங்கே நீளமான ஒரு வாங்கு போடப்பட்டிருக்கும். அதிலே இருந்து பஸ்வரும்போது எழுந்து செல்லக்கூடிய வசதி தெரிந்தவர்களுக்கு இருந்தது. பூபாலசிங்கம் மிக அன்பாக நடந்து கொள்வார். எங்களை அப்போது அவருக்குத் தெரியாது. ஆனாலும் நாங்கள் அங்கு சென்றபோது ஒரு வரவேற்பு இருப்பது போலவே எனக்குப்பட்டது.
இதனை நீங்கள் பூரணமாக விளங்கிக் கொள்வதற்கு இன்னுமொரு அம்சம் முக்கியமாகிறது. 1942-1945 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த புத்தகப்பண்பாடு பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் அந்தக் காலகட்டத்தில் நவீன தமிழ் இலக்கியங்கள் விற்கிற இடமாக இருந்தது த. தம்பித்துரை அன்ட் சன்ஸ் தான். அதுவும் பஸ்நிலையத்திற்குக் கிட்டவாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக்கடை அமைந்திருந்த முறைமையிலும், அந்தக்கடை நிர்வகிக்கப் பட்ட முறைமையிலும் ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு மட்டுமே அந்தக் கடைக்கு ஒருவர் செல்லாமே தவிர, அங்கு வாசலில் நின்று கதைக்கக் கூடிய ஒரு முறையோ அல்லது உள்ளே நின்று கதைக்கக்கூடிய முறையோ இருக்கவில்லை. இதன்காரணமாக அங்கு புத்தகங்கள் வாங்குவதில் சிரமங்கள் இருந்தன. இவற்றைவிட சண்முகநாதன் புத்தகசாலை, பூரீலங்கா புத்தகசாலை போன்றவை கே.கே. எஸ். றோட்டிலேதான் இருந்தன. அவற்றில் விற்கப்படும் புத்தகங்களில் பெரும்பாலானவை பாடசாலைப் புத்தகங்கள்தான். அந்தப் புத்தகக்கடைகள் இருந்த அமைப்பின்படி வாசலில் நின்று புத்தகத்தின் பெயரைச் சொல்லிக் கேட்டால் அதனை எடுத்துத் தருவார்களே தவிர உள்ளே சென்று புத்தகங்களைப் பார்க்கமுடியாது. யாழ்ப்பாணத்தின் புத்தகவிற்பனை மரபு ஒன்றிருந்தது. அந்த மரபில் இவ்விதமான ஊடாட்டத்திற்கு இடமில்லை.
நாற்பதுகளின் நடுப்பகுதியும் பிற்பகுதியும் எங்களுக்கு ஒரு முக்கியமான காலகட்டம். இளம் எழுத்தாளர்கள் மேலுக்கு வந்த காலம். அது இப்பொழுதுதான் எங்களுக்குத் தெரிய வருகிறது. வரதருடைய எழுத்துகளுக்குப் பின்னர் மறுமலர்ச்சி' தோன்றியது. கம்யூனிஸ்ட் கட்சி 1942இல் தொடங்கி, யாழ்ப்பாணத்திலே கிளை நிறுவப்பட்டு அதனூடாகச் சில இளைஞர்கள் மேலுக்கு வந்தார்கள். இந்தச் சூழலில் தமிழை மாத்திரம் படித்த இளைஞர்கள் நவீன இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டு குறிப்பாக இந்திய விடயங்களை வாசிக்கின்ற ஒரு தன்மை ஏற்பட்டது. இவற்றிற்கு பூபாலசிங்கம் கடையினுடைய அமைப்பும் அது சர்பத்கடை வரிசையில் இருந்தமையும் வசதியாக அமைந்தன. எல்லாவற்றிற்கும் மேலாகப் பூபாலசிங்கம் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முக்கியமான அங்கத்தவர்களில் ஒருவராக இருந்தார். அவர் எல்லோருடனும் நன்றாகப் பழகுவார்.
ஞானம் - மார்ச் 2005

ဖွံ့ဖြိုး
வளர்ந்து வருகின்ற எழுத்தாளர் குழுவிற்கு அவர் ஏற்றவராக இருந்தார். இந்த இலக்கியக் குழுவினுடைய மேலெழும்புகையோடு பூபாலசிங்கத்தினுடைய எழுச்சியும் தங்கியிருந்தது. பூபாலசிங்கத் தினுடைய மிக முக்கியமான இன்னுமொரு அம்சம் என்னவென்றால், எழுத்தாளர்கள் பத்திரிகைகளை அல்லது சஞ்சிகைகளைத் தட்டிப்பார்க்கிற பொழுது அவற்றிலே உள்ளவற்றைப்பற்றிக் கதைத்தால், பூபாலசிங்கமும் தான் அவற்றிலே வாசித்த விடயங்கள் பற்றிச் சொல்வார். குறிப்பாக இந்திய அரசியல் பற்றிய விடயங்களைப் பேசும்போது அவரும் அதைப்பற்றிக் கூறுவார். அந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது.
பூபாலசிங்கத்தின் ஆளுமையைப்பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். பூபாலசிங்கம் ஆரம்பகால கம்யூனிஸ்ட் அங்கத்தவர் என்று சொல்லும்போது ஒருவருக்கு ஏற்படக்கூடிய மனப்படத்திலிருந்து அவர் சற்று வித்தியாசமான தோற்றத்தையுடையவா. நெற்றி நிறையத் திருநீறு பூசியிருப்பார். பொட்டுப் பெரிதாக இருக்கும். அவர் அணிந்திருக்கும் நஷனல் சிறிது மங்கலான நிறத்தில் இருக்கும்; துகில் வெள்ளையாக இருக்கமாட்டாது. கிண்டலும் கேலியும் கலந்த தொனியில் அவர் பேசுவார். அவருக்குக் கோடு கீறத்தெரியும். அதாவது இந்தளவுக்கு மேல் இதனைக் குழப்பக்கூடாது என்று கடுமையாகக் கூறவும் தெரியும். கட்டுக்கோப்புடன் பேசுவது, நன்றாகப்பழகுவது இவையெல்லாம் உண்மையில் நாங்கள் கலந்துறவாடுகின்றது போன்ற ஒரு நிலைமைதான் அங்கு இருந்தது.
இவற்றைப் படிப்படியாக அவர் வளர்த்துவந்தார். இந்தியாவிலுள்ள வாசிக்கத்தகுந்த எழுத்தாளர்கள் ரகுநாதன், எஸ். இராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களோடு இருந்த தொடர்புகள் காரணமாக ஜீவா, டானியல் போன்றோருடன் இருந்த தொடர்புகள் காரணமாக இவற்றையெல்லாம் படிப்படியாக அவர் வளர்த்து வந்தார்.
அவர் நிச்சயமாகப் புதிதாகக் கிளம்பி வருகின்ற இலக்கிய ஆர்வலர்கள் என்று சொல்லப்படுகின்ற குழுமத்தினருக்கு மையப்புள்ளியாக இருந்தார். மையப் புள்ளியாக இருந்ததற்கான தன்மையை யாழ்ப்பாணத்திலிருந்த மற்றைய புத்தகசாலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் பூபாலசிங்கத்தினுடைய ஆளுமை நன்குதெரியும். பூபாலசிங்கம் ஒரு கொம்யூனிஸ்ட்டாக இருந்ததனாலும் அவரது புத்தகக்கடைக்குள் போய்வரக் கூடிய ஒரு நிலைமை இருந்ததனாலும் அவரது புத்தகக் கடைக்குப் படிப்படியான ஒரு வளர்ச்சி நிலை ஏற்படுத்தியது. பத்திரிகைகளை விநியோகம் செய்வதும் ஜனரஞ்சக எழுத்துக்கள் சார்ந்த சஞ்சிகைகள் விநியோ கிப்பதும் இவையெல்லாம் அவரது புத்தக நிலையம் வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தன.
ஞானம் - மார்ச் 2005 7

Page 6
證
8
எழுபதுகளின் பிற்பகுதியில் நான் கொழும்பிலிருந்து அங்கு சென்றபோது மகன் ரீதரசிங் புத்தகக் கடையில் முக்கியமான ஓர் இடத்தை வகிப்பதை பார்த்தேன். ரீதரசிங்கிற்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய கொடை என்னவென்றால், இடைக்காலத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய சரிவுக்கும் ஏற்றமின்மைக்கும் முகம் கொடுத்த அதேவேளையில் தகப்பனார் வழியாக வந்த இந்த மனித உறவுகளையும் பேணுவது அவருக்கு ஒரு தேவையாக இருந்தது. மகன்மாரை முன்னுக்கு விட்டுவிட்டு அவர்கள் செய்வதில் பூபாலசிங்கம் அதிகம் தலையிடாது பின்னுக்கு நின்று பார்த்துக் கொண்டிருப்பார்.
ழரீதரசிங்கிற்கு ஒரு மிகப் பெரிய பயிற்சி இந்த அடிப்படையில் கிடைத்தது. நாற்பதுகளில் இருந்த இளம் எழுத்தாளர் பரம்பரை டொமினிக் ஜீவா, டானியல், கனக செந்திநாதன் , சொக்கன் இவர்கள் வந்துபோகக் கூடிய இடமாகவும், கிராமப் புறங்களிலிருந்து தமிழ் ஆசிரியர்கள் வந்து போகக் கூடிய இடமாகவும் இருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை பிற்காலத்தில் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் நவீன இலக்கிய கர்த்தாக்களும் ஊடாடுவதற்கான ஒரு மையமாகவும் விளங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளால் அவரிடம் இன்னுமொரு நல்ல பண்பும் இருந்தது. ஒருவர் புத்தகம் வாங்கும்போது ஐம்பது சதமோ ஒரு ரூபாவோ குறைந்தால், “சரி, அடுத்தமுறை வரும்போது தாருங்கள்” என்ற கூறுவார்.
தோழமை மாதிரியான உணர்வு, அங்கு பத்திரிகைகள் பார்ப்பது, எழுத்தாளர்கள் சந்திக்கும் மையம் இப்படியான பல விடயங்களால் அது ஒரு நிறுவனமாக வளர்ந்தது. பூபாலசிங்கம் கடை என்பது இலக்கிய நடவடிக்கைகளின் ஒரு விஸ்தரிப்பின் நிறுவனமாக வளர்ந்தது. அதனை இரண்டாவது தலைமுறை பாதுகாத்தது. பூரீதர சிங்கினுடைய மிகப் பெரிய கெட்டித்தனம் என்னவென்றால், அந்த உறவுகள் அழியாமல் கெட்டித்தனமாகக் கட்டி வளர்த்தெடுத்து அதனை முகாமைத்திறனுள்ள ஒரு மையமாக மாற்றியது.
பூபாலசிங்கம் இடதுசாரிக் கொள்கைகளிலிருந்து விலகாமல் இருந்தாலுங்கூட அவருடைய கால்கள் அந்த மண்ணுக்குள் நின்றன. அந்த மண்ணையே முழுவதுமாகக் கொள்ளாமல், அந்த மண்ணில் மாற்றங்கள் ஏற்படுவதையும் அந்த மண்ணிலே சிலபுதிய விடயங்கள் வருவதையும் அவர் ஏற்றுக்கொண்டார். மண்ணுக்குள்ளே நின்றார் என்று நான் குறிப்பிடுவதற்குக் காரணம் நெற்றியிலே திருநீற்றுப் பூச்சும் பொட்டும். அவர்களுக்கு நயினாதீவு நாகபூஷணணி அம்மன் கோயில் ஒரு முக்கிமானதாக விளங்கியது. கம்யூனிஸ்ட் என்றால் கோயிலோடு சம்பந்தமில்லாதவன், கோயிலை இடிக்கிறவன், கையிலே
ஞானம் - மார்ச் 2005

ஞானம்
ஒளித்தாவது கடப்பாரையை வைத்திருப்பவன் என்று பொதுவான அபிப்பிராயம் உண்டு. அந்தக் குணம் பூபாலசிங்கத்திடம் இருக்கவில்லை. இராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஒரு மடத்திற்கும் பூபாலசிங்கம் குடும்பத்தினருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது இவற்றையெல்லாம் அவர் பேணியபோது, இவற்றுக்குள் அமிழ்ந்து போகாமல் ஒரு நவீன முற்போக்காக மேலே போகின்ற தன்மையையும் அவர் பேணிவந்தார்.
பூபாலசிங்கத்தினுடைய இயல்பைப் புரிந்து கொள்ளும் போதுதான் யூரீதரசிங்கினால் இவற்றை எவ்வாறு செய்ய முடிந்தது என்பது தெரிய வரும். "மண்ணுக்குள்ளேயே நீ நில், ஆனால் அந்த மண்ணில் வருகின்ற மாற்றங்களை நீ பிரதிபலித்துக்கொள். அந்த மண்ணுக்கு மாற்றம் தேவை என்பதை விளங்கிக்கொள்.” Tradition & Modernity என்பது இதுதான். Tradition ம் இருக்கும் Modernity யும் இருக்கும் அதனைப் பூபாலசிங்கம் மிகவும் இயல்பாகச் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரிய அறிவாளிகளில் ஒருவராக விளங்கிய அ. வைத்திலிங்கம் போன்றவர்கள் ஒருவிதமாகச் செய்தார்கள் பூபாலசிங்கம் இன்னொருவிதமாகச் செய்தார். அவர்களோடு சரிசமனாக நின்று பேசக் கூடிய இயல்பினை பூபாலசிங்கம் கொண்டிருந்தார். கால ஓட்டத்திற்கு ஏற்ப இந்த இயைபு எற்பட்டிருந்தது இந்த இடத்தில் இன்னுமொன்றைச் சொல்லவிரும்புகிறேன். Book Culture என்கிற புத்தகப்பண்பாடு. இந்தப் பண்பாடு என்பது பலநிலைகளைக் கொண்டது. அதனைச் சுருக்கமாகச் சொல்வதானால் சமூகத்தில் புத்தகத்தை ஒரு வன்மையான ஆற்றல் மிக்க ஒரு சாதனமாகப் பயில்கின்ற, அதனைப் பரப்புகின்ற, அதன் வழியாகச் சிந்திக்கின்ற, அதனை எங்களது வாழ்க்கையோடு உள்வாங்குகின்ற அது இல்லாமல் சீவிக்கின்ற தன்மையைக் குறைக்கின்ற ஒரு நிலை இன்றைய நிலையில் அது பலநிலைகளில் எங்களுக்கு உதவும் உதாரணமாக நீங்கள் எவ்வளவு தூரத்திற்குப் பாரம்பரியமாக வாழவிரும்புகிறீர்களோ அவ்வளவுக்குப் பஞ்சாங்கம் என்கிற புத்தகம் தேவை. அந்தப் பஞ்சாங்கத்தில் உள்ள விஷயங்கள் பழயவை. ஆனால் இன்று பஞ்சாங்கத்தின் அமைப்பு (Book Form) புதியது.
அச்சு ஊடகங்களில் முதலாவதாக எடுத்துப் பேசப்படுவது புத்தகங்கள். தொடர்பியல் துறையில் (Communication) அச்ச ஊடகங்கள் என்று நாங்கள் முதலில் பேசுவது புத்தகங்களையே. அதன் பிறகு Magazines அல்லது Journals. அதன் பிறகு புதினப்பத்திரிகைகள். அவற்றோடு சேர்த்துத்தான் Hand bills,Wal Posters பற்றியெல்லாம் பேசப்படலாம்.
புத்தகம் என்று சொல்லும் போது, அதற்குச் சில முக்கியமான தன்மைகள் உண்டு. அதில் உள்ளது உண்மை என்ற நம்பிக்கை.
Lori öF 2005 9

Page 7
證
1
O
இஸ்லாமிய மரபில் Kitab’ என்பர். எங்களுடைய மரபில் “கிரந்த
என்பர். புத்தகங்கள் பொய் சொல்லாது. புத்தகங்களில் இருக்கிற
அறிவு சாஸ்வதமானது; நிந்தரமானது. அது அறிவினுடைய கடல். Bible என்ற சொல் Bibilos’ என்ற சொல்லிலிருந்து வந்தது. Bibilos என்றால் -The Book. ஏன் நாங்கள் ஒன்றை நூல் வடிவமாகக் கொண்டுவர விரும்புகிறோம்? அதற்கான உளவியல் உந்தல்யாது? உண்மையில் அதனை நாங்கள் புத்தகமாகக் கொண்டுவந்து விட்டோமானால், சாஸ்வதமான, அறிவுத்தொகுதியாக அது இருக்கும். Book Culture என்பது பல படிநிலைகளைக் கொண்டது. எழுதுதல், அச்சுக் கோர்த்தல், புறுப் பார்த்தல், அச்சடித்தல், புத்தகமாக்குதல் பின்னர் வினியோகித்தல். ஒன்றை நாங்கள் தயாரித்து விற்கும்போது Sales என்று இப்போது சொல்வதில்லை. Marketting என்று சொல்கிறோம். இக்கால உற்பத்தி முறையில் சந்தைப்படுத்தல் முக்கியமாகிறது. ஏன் புத்தகக் கடை முக்கிமாகிறது என்றால் அங்கேதான் சந்தைப் படுத்தலுக்குரிய வளம் இருக்கிறது. வாசகர்களை வளர்த்தல் நிகழ்கிறது. அண்மைக்காலத்தில் Internet வந்துள்ளது Web site இல் உலகத்திலுள்ள சிறந்த இலக்கியங்களையெல்லாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. எல்லா அறிவுத் தொகுதிகளும் Web Site 36) 3(b.dd.6örp60T. Actually they are attention to the The BookThe Bibi lose.
நான் இன்று பல புத்தகங்களை வைத்திருக்கிறேன் என்று சொன்னால், எனது தகப்பனார் பல புத்தகங்களை வாங்கினார். அதன்பின்பு நான் வாங்கினேன். அவற்றை எனது பிள்ளைகள் பாவிக்கலாம். Book Culture என்பது தொடர்ந்து வருவது. அந்த மாதிரியான பண்பாட்டு எண்ணக்கருவுக்கு ஒரு புத்தக சாலையின் பங்களிப்பு முக்கியமானது. புத்தகப் பண்பாட்டின் சில நுணுக்கங்களை அறிமுகப்படுத்துகின்ற ஒன்றாக புத்தகத்தின் வடிவங்கள் இப்போது மாறுகின்றன. சில CD’S ஆக வருகின்றன. மாணவர்கள் முன்பு போலல்லாது Photo copy பண்ணலாம் இவற்றுக்கெல்லாம் இந்தப் புத்தகப் பண்பாடு முக்கியமானது. இந்த நூல்நிலையம் என்பது பல வெளியீட்டாளர்களுடைய புத்தகங்களை வரவழைத்து அந்த நூல்களோடு ஊடாடுகின்ற பண்பாடு வளர்க்கப்படுகின்ற ஒரு [b60d6Mdu u Liò. Lg5 g5 a5 Tb5 a56f6ð @(bů Ugi Preserved Knowledge. சஞ்சிகைகள் மூலம் பெறப்படுவது Developping Knowledge. இவற்றிகெல்லாம் முக்கியமான இடமாக, சந்தைப்படுத்துவதற்கான
மையமாக புத்தகசாலை விளங்குகிறது. அதற்காக இந்தப்
பூபாலசிங்கம் புத்தகசாலை நன்கு வளர வேண்டும் என வேண்டுகிறேன்.
O
ஞானம் - மார்ச் 2005

குளிரில் abղավծ
குங்குமப் பொடிகளைத் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு, மாலைச் சூரியன் அடிவானத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். சூரியனின் கோலத் தைப் பார்த்து செவ்வானம் சிரித்துக் கொண்டிருக்கிறது.
காலையில் எண்ணற்ற வண்ணப் பூக்களை உமிழ்ந்து, என்வீட்டு முற்றத்திற்கு எழிலூட்டிக் கொண்டிருந்த மல்லிகைச் செடி, பொட்டிழந்த விதவையைப் போல் வாடி வதங்கிச் சோர்ந்து நிற்கிறது. மல்லிகைச் செடியின்கீழ் என் நாய் பொட்டு, முன்னங் கால்களை சாவகாசமாக முன்னுக்கு நீட்டி, அமைதியாகப் படுத்துக் கிடக்கிறது. அந்திமாலை நேரத்தில் அமைதியாக வீசிக் கொண்டிருக்கும் வாடைக்காற்றின் ஸ்பரிசத்தில், விழித்துக் கொண்ட கூதல், சண்டித்தனம் காட்டுகிறது.
கூதலின் சண்டித்தனத்தை, எதிர்க்க முடியாமல் இயற்கை, வெறுப்போடு கிடக்கிறது. என்னுடைய வீட்டு விறாந்தையில் நான், என் பேரனின் அடிமையாக, அவனின் ஆணைகளுக்கு அடிபணிந்து அவனோடு விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
"அப்பா. தமிள் மாமா எங்களுக்கு வேணாம். தமிள் மாமாவப் போகத் தொல்லுங்க. தமிள் மாமா நீங்க போங்க. உம்மாட்டத் தொள்ளுவன். என்ட காறு. ஒடஞ்சிரும்.”
எட்டாம் ஆண்டில் படிக்கும் என் கடைசி மகன் சமீல், எங்கள் விளையாட்டில் பங்கு கொள்வதைப்
பொறுக்க முடியாமல், என் பேரன்
குானம் மார்ச் 2005)
தாய்மை
எஸ். முத்துமீரான்
சிணுங்கிக் கொண்டிருக்கிறான். இன்று காலை கொழும்பிலிருந்து வந்த அவன் தந்தை, வாங்கி வந்த சிறுவிளையாட்டுக் காரோடு, நானும் அவனும் ஒய்வின்றி மாரடித்துக் கொண்டிருக்கிறோம். பாசத்' தில், நான் அவனுக்கு கொத்தடிமை.
“சமீல், நீ போ மகன். இல்லாட்டி எனக்கிவன வெச்சிரிக்கேலா.”
"தமிள் மாமா, என்ட காரத் தொடாம நீங்க போங்க. உம்மா தமிள் மாமாவக்
கூப்புடுங்க.”
“சமீல், அவனத் தனகாம உட்டுப்போட்டு, வந்து நீ, ஒண்ட பொத்த கங்கள எடுத்துப் படி. நாளப்
பொறத்தைக்கு சோதின. இந்த மொற, கணக்க மாக்ஸ் எல்லாப் பாடத்திலயிம் எடுக்காட்டி, ஒன்ட மண்டயக் கிழிப்பன். அவன்ட இவன்ட மக்களோடக் கூடிக்கு, இவளவு நேரமும் கிரிக்கற்ரடிச்சுப் போட்டு வந்து, இப்ப அவனத் தனகிறாரு.” சகோதரியின் அதட்டலுக்குப் பயந்து போய், சமீல் கைகால்களைக் கழுவிக் கொண்டு, தன் பாடப் புத்தகங்களை எடுத்துப் படிக்கிறான். தாயின் அதட்டலுக்கு பயந்து போய், படித்துக் கொண்டிருக்கும் சமீல் மாமாவைப் பார்த்து, சிரிக்கிறான்.
“தமிள்மாமா. நள்ளாப்படிங்க. இல்லாட்டி உம்மா அடிப்பா.”
"இஞ்ச, அவன் படிக்கிறவன உட்டுப் போட்டு, நீங்க ஒங்கிட வேலயப் பாருங்க. இல்லாட்டி உம்மா
11

Page 8
ஒங்களத்தான் அடிப்பா. புள்ளேய் கடவல் லைற்றையெல்லாம் போட்டுடுகா.”
"அப்பா, காரத் தள்ளுங்க.. கார ஒடயாம உடுங்க. என்ர காறு புதுக்காரு. ஒடஞ்சா வாப்பா எனக்கு அடிப்பாரு.”
“ம். இப்ப நாம வெளயாடின போதும். நீங்க போய் உம்மாட்ட மில்க்க வாங்கிக் குடிங்க. புள்ளேய், ஒன்ட மகனக் கூப்பிட்டு பாலக் குடுகா.”
"அத்திக், மில்க் குடிக்க வாங்க.” மல்லிகைச் செடியின் கீழ்படுத்துக் கிடந்த என்நாய் பொட்டு, அணுகிக் குரைக்கிறது. “ங். நான்தான் சும்மா அணுகாமப்படு. அப்பாவும் சண்ட புடிக்கிற?”
re
என்ன பேரனும்
வா. ராத்தா இவன் கொழும் பிலரிந்துவந்தா எனக்குத்தான் பெரியபாடு. என்ன ஒரு வேலயிம் செய்ய உடமாட்டான்.
என்னேரமும் அவனோடு வெளயாடிக் கிட்டிரிந்தாச் செரி. இல்லாட்டி உம்மாவப்
போட்டு உரிச்சிப்போடுவான். “சும்மாண்டாலும்
(SuT6of66uT.?
யெல்லாம் இல்லாமலா போயிரும்.” பேரன்
ஒன்ட ஒன்ட வெசண்டி
பால் குடிக்கத் தாயிடம் போய்விட்டான்.
வீசிக் வாடையின் தாக்கம், மேலோங்கி நிற்பதால், இயற்கை கொடுகிக் கிடக்கிறது.
என் தூரத்து சொந்தக்காரியான செய்யது ராத்தா வந்து, சோகமே உருவாகிக் குந்திக் கொண்டிருக்கிறாள்.
“என்னராத்தா, கடும் ரோசினயோட இரிக்காய்..? என்ன வெசயம்?”
"ஒண்டுமில்லம்பி. ஒனக்கிட்ட ஒரு புத்தி கேப்பமிண்டு வந்தன்.”
"அதிலென்ன, எதப்பத்தி?” “என்ர பேரில இரிக்கிற, பேமிற்ரு வளவப் பத்தித்தான்.”
6.65 கொண்டிருக்கும்
12
ஒத “அதுக்கென்னப்ப.?
“அதயேன் கேக்காய். என்ர ஊட்ட ஒரு மாசமா ஒரே கொழப்பம் தம்பி. என்ர புள்ளயளெல்லாம் அந்த வளவ வித்துக் கேட்டுக்கு சண்ட புடிக்கிதுகள். வூட்டில நிம்மதியா இரிக்கேலாமக் கெடக்கு. என்னேரமும் கொம்பலும் கொழப்பமுமாக் கெடக்கு. என்ர கொடலுக்க சோறு தண்ணி போய், நாலஞ்சி நாளம்பி.”
“புள்ள ஹாஸ்னா மாமிக்கு தேயில போட்டுக்கா. என்னயிம் திங்கரிந்தாலும் கொண்டந்து குடுகா.” பனித்து வந்த கண்ணிர்த் துளிகளை முந்தானையால் துடைத்துக் கொண்டு, செய்யது ராத்தா நீண்ட பெருமூச்சொன்றை விடுகிறாள்.
மழை மறைக்கப்பட்டு மப்பும் மந்தாரமுமாகக் கிடக்கிறது.
மேகங்களால் வானம்
“சீ! என்ன புள்ளயள்றப்பா. பெத்த தாயிண்டும் பாராம, இப்பிடி நடக்கானுகளே. அது செரி, நீ இப்ப என்னயப் போறாய்.?”
ஞானம் - மார்ச் 2005
 

“நான் என்னயிறம்பி.? இந்தப் புள்ளயள வளக்க நான் எவளவெல்லாம் செலவழிச்சிப் போட்டன். இதுக்குள்ள இந்த வளவு மட்டும் என்ர பேரிலரிந்து எனக்கென்னம்பி வரப்போகுது?”
'நீங்க என்னயிறெண்டாலும் எங்கிட ஏஜியட கடிதம் எடுக்கணுமே. அரசாங்கம் தந்த வளவ, நீங்க நெனச்ச மாதிரியெல்லாம் விக்கேலா.”
"அதுக்குத்தான் தம்பி, ஒண்ட கையால, ஒரு கடிதம் எழுதிக்கு போக வந்த. லாவைக்கும் பகலைக்கும் என்ர ஊட்ட, இந்த வளவ விக்கிற கததான். நானும் என்ர புரிசனும் இந்தப் புள்ளயஞக்கு எவ்வளவத்தான் ஒழச்சிக் குடுத்திட்டம். ஒரு புள்ளைக்கும் நண்டி நலக்காரம் கெடயாம்பி. இப்ப, எல்லாப் புள்ளயஞக்கும், காசிதான் பெரிசாப் பெயித்து.”
செய்யது ராத்தா, தன் வாழ்வின் கசப்புகளைப் பற்றிக் கூறிவிட்டு, அடக்க முடியாத துயரங்களை, அனல் போன்ற பெருமூச்சுகளுக்கு இரை கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அப்பொழுது, என் மகள் ஹுஸ்னா, சீனிமாத்தட்டையும் தேனீர்க் கிளாசையும் கொண்டு வந்து செய்யது ராத்தாவின் பக்கத்தில் வைத்து விட்டு நிற்கும்போது, என் பேரன் தாயின் முந்தானையைப் பிடித்து, எதையோ கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறான்.
“எடு ராத்தா. நான்தான் சீனிமா திங்கச் சோட்டப்பட்டு செய்யச் சென்ன. புள்ளதான் செஞ்ச நல்லாரிக்கு தின்னுகா.” “ஒன்ட சீதவி மகளிரிக்கு மட்டும் ஒனக்கென்ன கொற? நீ சீமான். மகளார்ர அன்புக்கு என்ன குடுத்தாலும் தகுமா?”
ஞானம் - மார்ச் 2005
செய்யது மனநிறைவோடு சாப்பிட்டுக் கொண்
ராத்தா சீனிமாவை
டிருக்கும்போது, பூனை கத்திக் கொண் டிருக்கிறது.
கத்திக் கொண்டிருக்கும் பூனையை என் பேரன் சின்னக் கம்பொன்றை எடுத்து வந்து, அடித்து விரட்டுகிறான். அடியைப் பொறுக்க முடியாமல் பூனை ஒடிப் போய், வாசலில் நின்று கத்துகிறது. பூனையின் கத்தலில் சிந்தை குலைந்த நாய் பொட்டு, அணுகிக் குரைக்கிறது.
"தம்பி, கடிதத்த எழுதித்தா வாப்பா. வளவ வித்து காசி தராட்டி, என்ற காலயிம் கையமிம் முறிக்கிறெண்டு செல்றானுகள். எல்லாம் என்ர தலயெழுத்து.”
"சீ என்ன புள்ளயள் வயசி போன காலத்தில தாய் தகப்பன புள்ளயன்தான் வெச்சிப் பாக்கிற. இத உட்டுப் போட்டு, புள்ளயன் தலகீழா நடக்கிறதுகள். ம். ஈமான் இசுலாம் ஒழுங்காத் தெரிஞ்சா, பெத்த தாயப் போட்டுக்கு இப்பிடி யெல்லாம் சீரழிப்பானுகளா? நீயென்ன இவனுகளப் பெத்த குத்தமா? இந்த நண்டில்லாத நாயளப் பெத்தத, சும்மாரிந் திரிக்கலாம்.”
"நீ செல்றதெல்லாம் மெய்தான், தம்பி. என்ர சீதேவி மட்டும் உசிரோட இரிந்திரிந்தா, நெல வந்திரிக்கிமா? நான் கன்பொஞ்சாதி என்னால என்னம்பி செய்யேலும்?”
எனக்கிந்த
பொங்கி வந்த கண்ணிரை முந்தானைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு, அனல் போன்ற பெருமூச்சை விடும் செய்யது ராத்தாவின் பரிதாப நிலையில், நான் தடுமாறி நிற்கும்போது என் பேரன் வந்து, தன் அழுகையால், என்னை அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறான்.
13,

Page 9
"இஞ்ச வாமன. என்னமன கொளர்ற? உம்மா அடிச்சயா? அவக்கு நான் அடிக்கன். நீ வந்து அப்பாட மடில இரி.”
பேரன் அழுகையை நிறுத்திவிட்டு, என் மடியைச் சிம்மாசனமாக்கி கோலோச்சிக் கொண்டிருக்கிறான். வாடைக்காற்று கூதலோடு போராடிக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல், என் புறவளவிற்குள் நிற்கும் வேப்ப மரத்திலிருந்து, ஆந்தை ஒன்று அலறிக் கொண்டிருக்கிறது.
“பாக்கெட்டிய அடுப்புக்க வெக்கேன். பாக்கெட்டிய அடுப்புக்க வெக்கேன்.” அலறிக் கொண்டிருக்கும் ஆந்தையைத் துரத்த, என் மனைவி வாசலில் நின்று, தன் மூதாதையர்களின் வழி வந்த மந்திரமொன்றைச் சப்தமிட்டு கூறுகிறாள். "நல்லா மகரி பட்டுப் பெயித்தம்பி.” "அப்ப, லாவைக்கு நான் கடிதத்த எழுதி வெக்கன், நீ காத்தால வந்து வாங்கிற்ரு போ, லாத்தா. ஏதோ, வளவ விக்கிற எல்லாக் காசயிம் புள்ளயஞக்கு குடுத்திராத. கொஞ்சக் காச ஒன்ட மகுத்துச் செலவுக்கு வெச்சிக்க.”
“செரியம்பி. நீ செல்றாப் போலதான் நானும் நெனச்சிரிக்கன். அப்ப நான் எழும்பட்டா?”
“செரி லாத்தா. காலயில வாங்க.” செய்யது ராத்தா போவதைப் பார்த்து, மல்லிகைச் செடியின் கீழ் படுத்துக் கிடந்த நாய் பொட்டு, அணுகிவிட்டு, மீண்டும் படுக்கிறது. அப்பொழுது, ரகுமானியாத் தைக்கா மோதின், மஃரிப் தொழுகைக்கான பாங்கை ராகமெடுத்து விடுகிறார். பாங்கொலி கேட்டு, என் வளவிற்குள் இருக்கும் மாமரத்தில், கூதலில் கொடுகி இருந்த குயிலொன்று பாடிப் பறக்கிறது.
14
“புள்ளேய் ஒன்ட மகனைப் புடி. பள்ளிக்கு போயிற்ரு வாறன். என்ன ஆரும் தேடி வந்தா இரிக்கச் செல்லுகா.”
வானம் கறுத்துக் கிடக்கிறது.
వడ N響/ 7N ※
ஞாயிற்றுக்கிழமை. சூரியன் எட்டு மணியை விரசிக் கொண்டிருக்கிறான்.
நாளைய வழக்குக் கொப்பிகளை எடுத்துப் பார்த்து, தேவையான குறிப்புகளை எழுதிக் கொண்
டிருக்கிறேன். காலையில் குடித்து விட்டு, மேசையில் வைத்த தேனீர்க் கோப்பை எடுப்பதற்கு, யாருமில்லாமல், அநாதை யாக வைத்த இடத்திலேயே இருக்கிறது.
அப்பொழுது என் பேரன் வந்து என்னையும் என் காரியாலயத்தையும் கைப்பற்றி, அவனுடைய ஆட்சிக்குள் கொண்டு வந்த பின்னர், என் மடியில் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறான்.
'ம். அதெல்லாம் வெய் மன. அப்பாட வழக்கு கொப்பியெல்லாம் கிழிஞ்சி போயிரும். புள்ளேய்! ஒன்ட Ꮮ!ty Ꭶ5fᎢ . வழக்கு கொப்பிகளையெல்லாம் போட்டுக் கிழிக்கான். நீ, சும்மா இரிந்தாத்தான், நாளைக்கு அப்பா ஒனக்கு விக்கா
மகனப் என்ர
வாங்கித் தருவன்.” "அத்திக்கு படுத்தாம, உட்டுப் போட்டு இஞ்சால வா.
அப்பாவ கஸ்ரப்
நாம குட்டிம்பா பாக்கப் போவம் வா. சமீல்! நீ போய்த் தம்பியத் தூக்கிற்ரு 6.T..."
"நெக்கு குட்டிம்பா வேணாம். அப்பா நெக்கு ஏபிசிடி சொல்லித்தாங்க. தமிள் மாமா நீங்க போங்க.”
ஞானம் - மார்ச் 2005

என் கையிலிருந்த பேனையைச் சண்டித்தனத்தால் பறித்தெடுத்துக் கொண்டு, என்னுடைய வழக்குக் கொப்பிகளில், அவன் விருப்பப்படி யெல்லாம் கீறிக் கொண்டிருக்கிறான்.
"இஞ்ச, அதில எழுதப்புடா மன. அப்பாட கொப்பி பழுதாப் போயிரும். புள்ளேய் இவனத் தூக்கிற்ரு போகா.”
"அப்பா! ஆனா.” என் வழக்குக் கொப்பியில் தன் இஷ்டப்படி கிறிக்கி விட்டு, அதை ஆனா என்று கூறும் அவனை, ஆரத் தழுவி கொஞ்சி மகிழும் என்னைப் பார்த்து பேரனைத் தூக்கிப் போக வந்த என் மகள் ஹபிஸ்னா சிரிக்கும்போது, நானும் சிரிக்கிறேன்.
"வாப்பாதான் இவனப் பழுதாக்கின. ஒங்கட இழக்காரத்தாலதான் இவன் இப்பிடியெல்லாம் செய்யிறான். இவனுக்கு அடி குடுத்தாத்தான் அடங்குவான்.”
"ஓங்கா, நீ இப்ப அடிகா. பாவம், சின்னப்புள்ள. வழக்குக் கொப்பிர பெறுமதியெல்லாம் அவனுக்கென்ன தெரியப் போகிது..? அவனுக்கடிச்சா நமக்குத்தான் பாவம் வரும். செரி. செரி. நீ போய், அவண்ட பாலக்கல. நீ வாமன, நாம பால் குடிப்பம்.”
நாலு வயதைத் துரத்திக் கொண் டிருக்கும் என் பேரன், என்னுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, குசினிக்குள் அவனுக்கு பால் கலக்கும் தாயிடம் வருகிறான்.
எங்கள் இருவரையும் குசினிக்குள் கண்ட பூனை கத்துகிறது. இரவுச் சாப்பாட்டிற்கு, இடியப்பம் அவிக்கும் வேலையில் யந்திரம்போல் இயங்கும் என் மனைவியைக் கண்ட பேரன், என் கையை விட்டுவிட்டு, அவளுக்கு
ஞானம் - மார்ச் 2005
பக்கத்தில் ஒடிப் போய், இடியப்ப மாவைத் தொட்டு விளையாடுகிறான்.
"இஞ்ச, மாவத் தொடாம, உம்மாட்ட பால வாங்கிக் குடி. இந்த ஊட்டில ஒன்ன மேய்க்க, பத்துப் பேரு வேனும்போல கெடக்கு.”
என் மனைவியின் அதட்டலுக்குப் பயந்து போய், விறாந்தைக்குத் தன் தாயோடு வந்து, பேரன் பால் குடிக்கிறான். இளங்காலையை வரவேற்று, என் வீட்டு முற்றத்தில், செழித்துப் படர்ந்து நிற்கும் மல்லிகைச் செடி எண்ணற்ற பூக்களை உமிழ்ந்து தாய்மைப் பொலி வுடன் நிற்கிறது. என் புறவளவிற்குள் நிற்கும் மா மரங்களிலிருந்து, குயில்கள் கூவிக் கொண்டிருக்கின்றன.
பாலைக் குடித்து முடித்த பேரன், தன் காரை எடுத்து விளையாடுகிறான்.
அப்பொழுது, என்தூரத்து உறவுக் காரியான செய்யது ராத்தா, தலையில் இரத்தம் வழிந்த நிலையில் ஒடி வருவதைக் கண்ட என் நாய் பொட்டு, குரைக்கிறது.
செய்யது ராத்தா ஓடி வரும் கோலத்தைக் கண்ட என் பேரன், பயத்தினால் ஒடுங்கி, விளையாட்டை விட்டு விட்டுத் தன் தாயிடம் போய் ஒட்டி விட்டான்.
“ராத்தா. இதென்னகா?” “தம்பி.! என்ர அலியான், எனக்கு பொல்லால அடிச்சிப் போட்டு என்ர மகுத்து வெச்சிரிந்த எல்லாக் காசயிம் எடுத்துக்கு போயிற்
எளய மகன்
ரான் வாப்பா. என்ன ஒழுப்புளம் ஒன்ட காறில ஆசிவத்திரிக்கு கொண்டு போய், இந்தக் காயத்திக்கு மருந்தக் கட்டிடிரு. வாப்பா.”
15

Page 10
“அட Lu T 6...! இதென்ன அநியாயத்தச் செஞ்சி போட்டான். இண்டைக்கு நாளைக்கு மவுத்தாப் போற இந்தக் கெழவியப் பாத்துக்கு, இப்பிடிச் செஞ்சவன, பெத்த புள்ளெண்டு எப்பிடிச் செல்ற? சீ! இவனெல்லாம் மனிசனு களா..? பண்டிகள்.” செய்யது ராத்தாவின் பரிதாப நிலையில் கட்டுண்ட என் பக்கத்து அல்லயக்காரர்கள் வந்து, பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாய் பொட்டு ஓயாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது. கிழவியைப் பார்த்து, என்மனம் வெந்து துடிக்கிறது. அமைதியான என் வீடு, அமைதியிழந்து அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது.
“லொக்கோ, எழும்புகா! முதல்ல பொலிசிக்கு போவம். இவனச் சும்மா உடப்புடா.இவனுக்கெதிரா ஒருமொறப்பாட்ட பொலிசில குடுத்துப்புடிச்சி, ரெண்டு தட்டுத் தட்டினாத்தான் செரி வரும்.”
என் முடிவை, கிழவியை வளைத்து நின்ற எல்லோரும் ஏகமனதோடு ஏற்று, என்னைப் பொலிசுக்குப் போகத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
“தம்பி. பொலிசிக்கு போ கொண்ணா வாப்பா. நான் பெத்த
வேதனையால்
புள்ளவன். ஏதோ., கோபத்தில செஞ்சி இவனப் பொலிசில செல்லிப்புடிச்சிக் குடுத்து, அஞ்சாறு அடிவாங்கிக் குடுத்தாப்போல, என்ர தலக்காயம் ஆறிறிருமா? அதிலயிம் இந்தச் சாகிற வயசில, கோடு கச்சேரி ஏறி எறங்க, எனக்கேலுமா தம்பி.? ஏதோ,
போட்டான்.
நான் பெத்த புள்ள. அவன் நல்லாரிந்து போகட்டும். தம்பி, என்ன ஆசிபத்திரிக்கு கொண்டு போய் மருந்த மட்டும் கட்டிரு வாப்பா. அவன்ட புத்தி அவளவுதான்.
16
அவன உட்டிரு, வாப்பா. அவனில எந்தப் புளயிமில்ல. எல்லாம் என்ர புளதான். அவன் எல்லாத்தையிம் மறந்து லாவெக்கி என்னப் பாக்க வருவான். ங், வாதம்பி போவம்.”
செய்யது ராத்தாவின்
தாய்மையின் முன்னால். உலகமே தலைகுனிந்து நிற்கிறது.
தாயின் அணைப்பில், சுகம் கண்டு கொண்டிருந்த என் பேரன், என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
O
தமிழினி பதிப்பகம் - லண்
I2 Bickley Street London SWI79NE, U.
சிறுகதைப் போட்டி 5 பக்கங்களுள் அடங்க வேண்டும். முடிவுத் திகதி : 15.04.2005
ஆய்வு நூல் ళ్ల இலங்கைத் தமிழ் முஸ்லீம் அறிஞர்கள் பற்றிய ஆய்வு நூல். கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. * ஆக்கங்களை 15.04.2005க்கு முன் அனுப்பி வையுங்கள்.
நூல் வெளியீடு :
வெளியிட வேண்டுமா? விபரங்கட்கு
எழுதுங்கள் : &::::::::::::
garisons : 61, Robert Goonawardana
Mawatha, Colombo 06.
: 112 Bickley Street v. 3
London SW179NE, U.K.
லண்டன்
தமிழ் மக்களின் உயிர்நாடி,
தமிழினிப்திப்பகம்
ஞானம் - மார்ச் 2005
 

goš ebCrbčo
- அன்பன் மட்டக்களப்பு.
அந்தக் காகம் ஜன்னல் கதவில் 6ng) తిrOగిర్రg *கா கா? என்று கத்தியது அவன் கையை ஓங்கினான் கைத்தடியை ஓங்கினான் காகம் அசையவே இல்லை. அfட நான் முடவின் என்பது இந்தக் காகத்திற்கும் ஒதரிந்து விeடதா? அவனுக்கு எரிச்சல் வந்தது 6egజీ లి_6r6Yr 6rఉ66ుmg6to அfவினை ஒரு கையாலாகாதவினாகவே Uréésé:D6o
இந்தக் காகமும் அப்படித்தானா? திரும்புகையில் பார்த்தான் அது ஒரு காலைத் தூக்கிக் கொண்டு நின்றது அவனுக்குள் ஒரு பச்சாதாபம் அட, இந்தக் காகமும் என்னைப்போலத்தான் நாம் இருவரும் ஒரே தளத்தில்தான் நிற்கிறோம். ஒரே காலில்தான் நிற்கிறோம்.
& réast3UeGésassrér afirst5Gsé Urraooflá) ஒரு துண்டைக்கிள்ளி காகத்தை நோக்கி எறிந்தான் காகம் அதை லபக்கிைன்று கிெளவிக் கொண்டது அவனுக்குள் மகிழ்ச்சி நாம் ஏன் இந்தக் காகத்தை சிநேகம் பண்ணிக் கொள்ளக்கூடாது. *రోగో 6Tణిpg erresడి ஓகோ அதற்கும் அரிவின் எண்ணம் புரிந்துவிeடதா?
ar b - ord 2005 17

Page 11
சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
* ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம்பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி
* சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, உருவகக்கதை Creative essays, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தீ, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமைபெற்றன.
* வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனைவிடை
தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். * 2000 பக்கங்களைக்கொண்ட 'வரலாற்றில் வாழ்தல்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட இவரது சுயசரிதையாகும். * அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் இவரது
கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
(5)
தி. ஞா : கொழும் பை மையமாகக் கொணர் டு உங்களுடைய எழுத்துப்பணிகளை எவ்வாறு முன்னெடுத்தீர்கள்?
எஸ். பொ. : 1960ஆம் ஆண்டிலே கொழும்புத் தொடர்புகள் இலக்கிய ரீதியாக ஏற்பட்டுவிட்டன. அதற்கு ஒரு காரணம் இளங்கீரன் மரகதம்' என்ற பத்திரிகையைத் தொடங்கியிருந்தார். இந்த மரகதத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியான சந்தாக்களை நான் கிராமம் கிராமமாகச் சென்று வசூலித்துக் கொடுத்து மரகதத்திற்கு உற்சாகப்படுத்தினேன். இதே காலத்தில் கணேசலிங்கத்தினுடைய திருமணம் நடந்தது. அதற்கு வருகை தந்த பகீரதனும் சரஸ்வதி பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் ஏற்படுத்திய
18 ஞானம் - மார்ச் 2005
 
 

சர்ச்சைகளுக்கு வித்திட்டவன் நான். அதனைத் தொடர்ந்து பல விவாதங்கள் ஏற்பட்டன. இதனால் கொழும்பை மையமாகக் கொண்டு நான் பணியாற்றுதல் தவிர்க்க முடியாததாயிற்று. மேலும் எம். ஏ. ரஹற்மானுடன் ஏற்பட்ட தொடர்பினால், அவர் அரசு வெளியீடு என்ற புத்தக நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நான் தோள்கொடுத்து உழைத்ததினால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் பெரும்பாலாகப் பிரசுரமாகாமல் இருக்கின்றன என்ற குறைபாட்டைச் சுட்டிக்காட்டி அரசு வெளியீடு பிரசுரங்கள் கிழக்கு மாகாண எழுத்தாளார்களுடைய நூல்களை முன்னுரிமை கொடுத்துப் பிரசுரிக்க வேண்டுமென்று வலியுறத்தி அதைச் செயல் படுத்தினேன். இவ்வாறு, ரஹற்மான் மூலம் அச்சிடப்பட்ட தோணி சிறுகதைத் தொகுதிக்கும், புலவர்மணியினுடைய பகவத்கீதை வெண்பா நூலுக்கும் அரசு வெளியீடு அல்லாமல் றெயின்போ அச்சகத்தில் ரஹமான் அச்சிட்டுக் கொடுத்த சலிமினுடைய நூலுக்கும் மற்றும் எனக்கு எப்பொழுதும் தமிழ் வழிகாட்டியாக இருந்த FXC நடராசா ஐயாவினுடைய நூலுக்கும் அந்த ஆண்டு சாகித்திய மண்டலப்பரிசுகள் கிடைத்தன. இந்தத் தமிழ் ஊழியம் அதாவது கிழக்கு இலங்கை எழுத்தாளார்களுடைய நூல்கள் இலங்கை வாசகர்களைச் சென்றடைதல் வேண்டும், சாகித்திய மண்டலம் போன்றவற்றால், மகிமைப்படுத்தப்படல் வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு என்னால் உருவாக்கப்பட்டது. துக்கம் என்னவென்றால் இந்த உண்மைகளைக்கூட. இன்றைய கிழக்கு இலங்கையில் வாழும் இலக்கியவாதிகள் ஒத்துக்கொண்டு பாராட்ட வேண்டாம் ஐயா, பதிவு செய்யக்கூட இல்லை என்பதுதான் துக்கம். பின்னர் ரஹற்மானுடன் இணைந்து ரஹற்மானின் ஆசைக்காக இளம்பிறை என்ற பத்திரிகை நடத்தப்பட்டது. இந்த இளம்பிறை பத்திரிகை முஸ்லிம் கோலங். கொண்டு நடத்தப்பட்ட போதிலும் என்னுடைய இலக்கியச் சிந்தனைகளை - மார்க்சியச் சிந்தனை முற்போக்குக் கொள்கைகளுக்கு மாறாக நான் முன்வைத்த தமிழ்த்துவம் சார்ந்த இலக்கியக் கொள்கைகளை - நான் விளக்குவதற்கு இளம்பிறை ஒரு தக்க பிரசுரமாக எனக்குப் பயன்படுவதாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு இவற்றை நான் செய்துகொண்டிருந்தது முற்போக்கு நலன்களுக்கு முரண்பட்டதாகத் தோன்றியது. இதன் காரணமாகத்தான் 1964ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய மண்டல விழாவைக் குழப்புவதற்காக டானியல், சமீம் ஆகியோருடைய தலைமையில் முட்டையடிவிழா நடத்தப்பட்டது. அந்த முட்டையடி விழாவிற்குப் பின்னர், அது பற்றி விரிவாக என்னுடைய வரலாற்றில் வாழ்தலிலே ஒவ்வொரு நிகழ்வாக எழுதியுள்ளேன். யார் யார் முட்டை அடித்தார்கள் என்பதைக் கூட நான் பதிவு செய்துள்ளேன். கூறியது கூறுதலைத் தவிர்ப்பதற்காக அதை விலக்குகிறேன். ஆனால் அந்த முட்டையடி விழாவுக்குப் பிறகு 1970ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா மீண்டும் அரசு ஏற்படுத்தி மார்க்சிய சார்பான எழுத்தாளர்களுக்குச் சாகித்தியமண்டலம் போன்றவற்றிலே பதவிகள் கொடுக்கும்வரையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடக்கப்
ஞானம் - மார்ச் 2005 19

Page 12
'?ரு தது (அன்று தொடக்கம் இன்று வரை எத்தனை பேர்) அப்பொழுது அந்த 3
இடைக் காலத்தில் I qዎ{ወ போக் 色 எழுத தாளா சங்கததுடன,
" |முரண்பட்டு இருந்தபோதிலும் கூட நேரடியாக லிருந்து சிறி அவர்களை எதிர்க்காமல் ஒரு முகமன் சொல்லி 。 தங்களைக் காப்பாற்றிக் கொண்ட எத்தனை: மாவோவின் ஆட்சி V வரையிலே நற் | எழுததாளரகளைத தெரியும். நான் அவ்வாறு போக்கு இலக்கியச் சிந்தனைகளும் அதை ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்களுடைய பங்களிப் புந் தான் பதிவுசெய்திருத்தல் வேண்டும். அவ்வாறு நிகழாதது துக்கம். ஆனால் இன்று இலக்கிய வரலாறு எழுதுபவர்கள் இந்த முட்டையடி வைபவத்திற்கும் 70ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த மரபு சார்ந்த தமிழ்த்துவம் சார்ந்த இலக்கியப் போக்குகள் உச்சம் பெற்றிருந்ததை மறைத்துச் சொல்வதற்காகவும், தாங்கள் செயலற்று நொந்து போய்க்கிடந்ததை மறப்பதற்காகவும் கம்யூனிஸ்ட் கட்சியிலே ஏற்பட்ட மாஸ்கோ சார்பு சீனச் சார்பு முரண்பாடுகளின் காரணமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற்படவில்லை என்று விளக்கம் தருகிறார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எப்பொழுதுமே பிரேம்ஜி என்ற புனைபெயரில் வாழ்ந்த ஞானசுந்தரனைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்தது. இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் பயன்பட்டவர்கள் என்று ஆறேழு பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வருகின்றனர். ஒன்று ஜீவாவும் டானியலும் முற்போக்கு எழுத்து இயக்கம் இருந்திருக்காவிட்டால் அவர்களும் எழுத்தாளர்கள்தான் என்று அங்கீகரிக்கப்படும் ஒரு சமூக நிலைமை இருந்திருக்காது. அதைச் செய்ததற்காக இன்றும் நான் முற்போக்கு எழத்தாளர் சங்கத்திற்கு ஒரு மரியாதை செலுத்துகிறேன். இரண்டாவது சிவத்தம்பி, கைலாசபதி ஆகிய படைப்பு இலக்கியத்திலே எதுவித சாதனையும் சாதிக்க முடியாத விமர்சகர்களாக இருந்தவர்கள் இலக்கியவாதிகளாக உயர்த்தப்பட்டு உயர்பதவிகள் வகிக்கக்கூடிய ஒரு சகாயச் சூழலை உருவாக்கியதும் இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று பதிவாகியிருக்கிறது. ஞானசுந்தரம் எப்பவுமே ஆரம்பகாலம் தொட்டு, இன்று வரைக்கும் அதன் பொதுச் செயலாளர் பதவியில் குந்திக்கொண்டு இருக்கிறார். அது யாரும் அறிந்த உண்மை. அவர் ரஷ்யத் தூதரகம் இருந்தபொழுது அவரே அதிகார பூர்வமான மொழிபெயர்ப்பாளராக தூதரகத்திலே வாழ்ந்து தன்னைச் செழிமைப்படுத்தி யிருக்கிறார். இவர்களைத் தவிர முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு தங்களை முன்னுக்குக் கொண்டுவந்து பிறர் அதிகம் ஆதாயம் அடைந்ததாக எனக்குத் தெரியாது. சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, ஈழத்துச் சோமு, நீர்வை பொன்னையன், இளங்கீரன் போன்ற பலரைச் சொல்லாம். ஆனால் இவர்கள் முன்னர் குறிப்பிட்டவர்களைப் போன்று காத்திரமான ஆதாயம் அடைந்தார்கள் என்று விமர்சனம் வைக்க முடியாது.
w
20 ஞானம் - மார்ச் 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி.ஞா : நீண்ட காலமாக கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் மீது காட்டமான விமர்சனங்களை நீங்கள் வைத்து வருகிறீர்கள். உங்களுடைய முதிர்ச்சிக்கும் உங்களுடைய இலக்கிய ஊழியத்திற்கும் இது பொருத்த மில்லை என்று பலரும் கூறுகிறார்களே?
எஸ். பொ. காட்டமான விமர்சனங்கள் வைத்து வருகிறேன் என்று சொல்வது சரியோ தெரியவில்லை. ஆனால் கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தில் நுழைந்ததினால் மட்டுமன்றி ஒரு காலத்தின் ஈழத்து இலக்கிய வரலாற்றின் தரம் தரமின்மை குறித்து நியாயம் வழங்கிய நீதிபதிகளாகத் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு பல தவறான முடிவுகளை ஒரு நான்கைந்து தசாப்தங்களாக நிலைத்து நிற்கச் செய்துள்ளார்கள். எனக்கும் கைலாசபதி சிவத்தம்பிக்கும் எவ்வித பகைமையும் கிடையாது. அவர்கள்மீது காட்டமான விமர்சனம் வைப்பதற்கு ஒரே ஒரு காரணம், ஈழத்து இலக்கிய தரநிர்ணயத்திலே நேர்மையற்ற சில அளவுகோல்களும் நேர்மையற்ற சில பார்வைகளும் புகுத்தப்படுவதற்கு அவர்கள் இருவரும் காரணராய் அமைந்தனர். எனவே அந்தக் காரணங்களைப் பின்பற்றக்கூடிய சீட கோடிகள் பல்கலைக் கழகத்தில் இன்றும் தமிழ்த்துறைகளிலே உயர்பதவிகளிலே இருப்பதனால் அவர்கள் தங்களது வகுப்புகளை உபயோகித்து அந்தத் தவறான கருத்துக்கள் இன்னொரு தலைமுறைக்கும் சென்றடைய ஊக்குவிக்கிறார்கள். எனவே இந்தக் கைலாசபதி சிவத்தம்பியினுடைய தவறான செய்திகளையும் தகவல்களையும் தர நிர்ணயங்களையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சாடி அல்லது மறுத்து வருகிறேன். உண்மை என்னவென்றால் கைலாசபதி சிவத்தம்பி யினுடைய கோட்பாடுகள் யாவும் சிதலமடைந்துவிட்டன. அவை காலத்தை எதிர்த்து நின்றுபிடிக்கவில்லை. அதை இன்று சிவத்தம்பி ஓரளவு ஒப்புக்கொள்கிறார். ஒப்புதல் Approver ஆக மாறியுள்ளார். நுஃமான்கூடத் தான் அந்தப் பாவத்தைச் செய்வில்லை என்றும் கைலாசபதியினுடைய கவிதை பற்றிய கணிப்புகளிலே தான் 1968ஆம் ஆண்டிலேயே முரண்பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இவர்கள் தங்களைக் காப்பாற்றுவது போல அசுக்கிடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும்தான்
அவர்களுடைய தவறுகளை உரக்கச் சொல்லி உணர்த்தி வருகிறேன். இன்று தமிழ் நாட்டிலே ஓரளவுக்குக் கைலாசபதி சிவத்தம்பி கூட்டாக சிலவேளைகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் நிறுவியிருந்த சில மாயைகள் நொறுங்கி வருகின்றன. மு. தளையசிங்கத்தினுடைய ஏழாண்டு இலக்கிய வரலாற்றில் உள்ள செய்திகள் பல தவறானவையாக இருந்த போதிலும், கைலாசபதி உருவாக்கப்பட்ட ஒரு நிழல் - He was just a Shadow அவர் சாரமற்ற ஒன்று என்ற நிலையை இன்று மற்றவர்கள் உணர நான் ஒரு துணையாக இருந்திருக்கிறேன். எனவே நான் அவர்களைச் சாடினேன். கடுமையாகத் தொடர்ந்து சாடுதல் என்னுடைய வயதுக்கு ஒவ்வாது என்று சொல்லுவது ஒரு வீண்பழியைப் போடுவதாக அமையும். நியாயங்களைச்
em oor tio — tom r & 2005 21

Page 13
சொல்வதற்கு வயசு இல்லை. கைலாசபதி சிவத்தம்பி ஆகிய இருவரும் பேராசிரியர்கள் என்ற பதவிகளை வைத்துக்கொண்டு அறிவு மோசடியில் ஈடுபட்டிருந்ததால் அந்த அறிவு மோசடியை எதிர்த்துக் கேட்கக் கூடிய ஒரு தைரியம் தத்துவார்த்தமாகவும் அறிவு ரீதியாகவும் அதே சமயம் இலக்கியத்திலே கொண்ட பக்தியின் காரணமாகவும் எனக்கு அந்த அதிகாரம் உண்டு என நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். இவர் கைலாசபதியையும் சிவத்தம்பியையும் சாடுகிறார் என்று ஒலம் விடுவதை விட்டு, நான் முன்வைக்கக் கூடிய கருத்துக்கள் தவறானவை என்பதை நிரூபித்து கைலாசபதி சிவத்தம்பி முன்னெடுத்துச் சென்ற இலக்கிய வழிகாட்டல்கள்தான் இன்றும் செல்லுமானது என்று சொல்லவேண்டிய கடமை சிவத்தம்பியும் கைலாசபதியும் உருவாக்கிய பல்வேறு சீடகோடிகளுக்கு உரியது. அதைவிடுத்து நான் சாடுகிறேன் என்று சொல்வதுமட்டும் அவர்களைப் பாதுகாப்பதாக அமைய மாட்டாது. எந்த வொன்றும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும். பூரணமான உண்மைகள் என்பது கிடையாது. நான் வரலாற்றில் வாழ்தல் என்ற நூலிலே சொன்ன தகவல்கள் சத்தியமானவை முழுமையானவை என்று சொல்லவில்லை. ஆனால் முழுமையான தகவல்களை நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்லக் கூடிய பதிவுகளை விட்டுச் செல்கிறேன். எனவே இந்தக் கூக்குரல் இடுபவர்களும் அந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியால்வந்து மீள்வாசிப்புக்கு ஒவ்வொருத்தரையும் உட்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
தி.ஞா : இந்தக் காட்டமான கருத்துக்களைப் பற்றிப் பேசியபோது, நீங்கள் ஆறுமுகநாவலர் பற்றியும் பல காட்டமான கருத்துக்களை முன்வைத்தது நினைவுக்கு வருகிறது. ஆறுமுகநாவலரை முதலாவது தமிழ்த் O தேசியவாதியென ஜீவாவும் டானியலும் முற்போக்கு எழுத்து
o * கைலாசபதி இனங் இயக்கம் இருந்திருக்காவிட்டால் அவர்களும் எழுத்தாளர்கள்தான் என்று அங்கீகரிக்கப்படும் ஒரு சமூக நிலைமை இருந்திருக்காது. எஸ். பொ. ஆறுமுக நாவலருக்கு இரண்டு முகங்கள் உண்டு என நான் பல சந்தர்ப்பங்களிலும் எழுதிவந்துள்ளேன். வசன நடையின் தற்காலப் போக்கிற்கு மிக ஆழமான, புத்திசாலித்தனமான, தமிழ்மரபில் நிலை கொண்ட அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் நாவலர். பண்டிதர் மாட்டுச் சிறைப்பட்டுப் படர்ந்திருந்த தமிழ் இலக்கணத்தை இலகு படுத்தியதிலே நாவலருடைய சேவை மகத்தானது. 'அதனாற்றான்' என்பதை விடுத்து அதனாலேதான்’ என்பதுபோன்ற தமிழ் நெகிழ்ச்சியை உருவாக்கியதற்கு நாவலருக்கு என்றுமே தமிழும் தமிழ்ச் சமூகமும் கடன்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தமிழ் வசனநடையை எவ்வாறு எழுதலாம் என்பதற்கு நாவலருடைய வசனநூல்கள் எத்தனையோ எடுத்தக்காட்டாக அமைந்துள்ளன. வெட்கத்தை விட்டுச் சொல்வதானால் என்னுடைய தமிழ் எழுத்து நடையின் உச்ச ஆதர்சம்
а, п L. 19. ша, п 60 п. அந்தத் தாக்குதல்?
22 ஞானம் - மார்ச் 2005

நாவலர் என்றுதான் சொல்லுவேன். இன்னுமொரு முகமுண்டு நாவலருக்கு. நாவலர் சைவத்தைப் பாதுகாப்பதற்காக கிறிஸ்தவ சமயப் பரம்பலை எதிர்த்து நின்ற ஒரு தூண். அவர் சைவம் என்ற உயிரை வளர்த்தபோது தமிழ் என்ற உடல் வளர்ந்தது போன்று பிற்காலத்தில் வியாக்கியானம் கொடுத்தது உண்மையாக நாவலர் பற்றிய ஒரு சரியான புரிதலாக எனக்குப் படவில்லை. இரண்டாவதாக இன்று சிங்களவர்கள் மத்தியிலே கிளர்ந்துள்ள சிங்கள இனவாத உணர்வுகளை முதலில் தாம்தான் தன் எழுத்துக்களினாலும் தன் வழிகளினாலும், தன் ஊழியத்தினாலும் ஊக்கித்தவர் அனகரிக தர்மபால. அனகரிக தர்மபாலதான் சிங்கள மொழியினதும் இனத்தினதும் பெளத்தத்தினதும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தேசிய பிதா என்று சிங்களவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மகிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். அந்த அளவுக்கு நாவலர் ஒரு தமிழ்த் தேசிய அடையாளம் என்று சொல்லி ஒப்பீட்டு ரீதியாக நிறுவ முயன்றவர் கைலாசபதி. எந்த முகாந்திரமும் இல்லை. ஏனென்றால் ஆறுமுக நாவலர் ஆங்கிலேயருடைய ஆட்சியை எதிர்த்துப் பிரசாரம் செய்ததே கிடையாது. ஆங்கில மொழியும் ஆங்கிலேயரும் அந்நியப்படுதல் வேண்டும், தமிழ் மீண்டும் மாட்சிப்படுதல் வேண்டும், தமிழ் மொழியின் மூலம் தமிழ் இனம் பெருமையுற வேண்டும் என்று நாவலர் பிரபந்தத் திரட்டிலேயோ அல்லது வேறு எந்த நூல்களிலேயோ நீங்கள் அறியவே முடியாது. அப்படியிருக்கும்போது அவருடைய பிரசாரங்களினால் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆட்சியாளராக உயர்ந்தார் என்றும் அவருடைய பிரசாரத்தினால்தான் இந்துக்கள் மத்தியிலே இந்துக்களால் நடத்தப்படக்கூடிய இந்துக்கல்லூரிகள் ஸ்தாபிதம் ஆவதற்கு வழிவகுத்தார் என்றும் பெருமை பேசும்போது ஆறுமுகநாவலர் எங்கே தமிழ்த் தேசியத்தைக் கண்டு பிடித்தார். அவர் ஆங்கிலத்துக்கு வாய் பாடியதனால் அல்லவா வட இலங்கையில் கிறிஸ்த்தவ மிஷனறிமார் நடத்திய பாடசாலைகளையும் மிஞ்சக் கூடியதாக இந்துக்கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும் தமிழ்த்தேசியம் என்பது தமிழருடைய உரிமைக்காகப் போராடும் ஒரு இயக்கமாகவும் எழுச்சியாகவும் அமைதல் வேண்டும். ஆறுமுகநாவலரால் உருவாக்கப்பட்டு சேர் பொன்னம்பலம் இராமநாதனாலும் பின்னர் ஜி.ஜி. பொன்னம்பலம் வரையிலும் தமிழ்த் தேசியம் என்றுமே முன்னெடுக்கப்படவில்லை. அவர்கள் ஆங்கில மொழிமூலம் sedu (861) brilas(6.60)Lu Urrié6060Tai (535 LTi 356ir. They did not fight for the rights of Tamils.They only agitated to get the share for the Tamils. 3605 உணர்ந்து கொண்டால், ஆறுமுகநாவலர் ஒரு தேசியத்தை வித்திட்ட முன்னோடி என்று சொல்லியிருக்கமாட்டார்கள். அடுத்ததாக ஆறுமுகநாவலரை ஐந்தாவது சமயகுரவர் என்றும் வழிபடுகிறார்கள். இது இரண்டும் முரண்பட்டது. ஒரு தேசியவாதி என்பவன் தமிழர்களுடைய மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழியை முன்னெடுகக்கூடிய தலைவனாக இருக்கவேண்டும். அவ்வாறு
em corb - um & 2005 23

Page 14
இல்லாமல் சைவத்துக்கு மட்டுமே பேசிய ஒருவன் தமிழர் தேசியத் தலைவனாக தேசிய உணர்வாளனாகவும் இருந்தார் என்று சொல்வது சிந்தனையில் குழப்பமான முடிவாகவே எனக்குப் படுகிறது. இன்னமொன்று நாவலர் அந்தக் காலத்திலிருந்த யாழ்ப்பாண சாதிமுறையை மிக அழுத்தமாக வற்புறுத்த முனைந்தார் என்பது. அவர் தென்னாட்டுக்குச் சென்று பல சாதனைகளையும் பல அபகீர்த்திகளையும் அடைந்தார் என்று பதிவாகியுள்ளது. ஒன்று ஆறுமுகம் என்பவரை நாவலராகத் தரிசிக்கச் செய்தது தமிழ் நாட்டிலுள்ள மடங்கள்தான். இன்றும் நாவலர் என்ற அவருடைய விருதைக் கொடுத்து மகிழ்ந்தது தமிழ் நாடு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதேபோன்று சைவத்தை வளர்த்த தில்லையம்பலத்திலே அவர் மடம் அமைத்து பாடசாலை நிறுவி பெரும் தொண்டுகள் செய்தார். அப்பொழுது அவர் இராமலிங்க சுவாமிகளுடன் முரண்பட்டார். அருட்பாவா மருட்பாவா என்று ஆர்ப்பரித்தார். ஆனாலும்கூட இந்த வழக்கு நடந்தபொழுது, நீதிபதியின் முன்னால் இராமலிங்க சுவாமிகள் வந்தபொழுது ஆறுமுகநாவலர் எழுந்து மரியாதை செய்தார் என்று பதிவாகியுள்ளது. இவை அனைத்தையும் வசதிக்காக காலஓட்டத்திலே மறந்துவிடுதல் கொடுமை. வித்துவகேசரி என்ற வடமராட்சியைச் சேர்ந்த ஒரு கரையான் எழுதிவிட்டான் என்பதற்காக பிரபந்தத்திரட்டிலே நாவலர் எழுதிய மறுப்பினை சிவத்தம்பி உட்பட ஏனைய தமிழ்ப் பேராசிரியர்கள் படித் துப் பார்க்க வேண்டும். "பறைய 1964ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த ருள்ளும் இவ்வாறு சாகித்திய மண்டல விழாவைக் குழப்புவதற்காக ஒரு வித்துவ கேசரி டானியல், சமீம் ஆகியோருடைய தலைமையில் தோன்றி பறை (முட்டையடிவிழா நடத்தப்பட்டது. யாரோ? பறை iaikassaää யினும் பறைவர். எனவே இந்தக் கரையாருள் தோன்றிய வித்துவகேசரி கரையாது இருக்கக் கடவர்” இப்படிப் பறையர் கரையார் என்று சாதிகளை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அநாகரிகமாக எழுதிய இந்த நாவலர் அன்றைய காலத்தில் இருந்த ஜாதிமுறைகளைப் பேணினாரே ஒழிய அதை அழுத்தமாகச் சொல்ல விரும்பவில்லை என்று சொல்வது தப்பு. அது மட்மல்ல ஆறுமுக நாவலர் ஸ்தாபித்த பள்ளிக்கூடங்களிலே சிறுபான்மை என்று ஒதுக்கப்பட்ட சாதியார் என்று சொல்லப்பட்ட யாருக்குமே இடம் கொடுத்தது கிடையாது. இவை அனைத்துமே நாவலர் முழுக்க முழுக்க சைவர்களுக்கும் அது மட்டுமல்லாமல் கார்காத்த வேளாள சைவர்களுக்காக மட்டுமே குரல் கொடுத்து வாழ்ந்த ஒரு சமூகத்தொண்டன். எனவே அவருடைய சமூகத் தொண்டினை தேசியமாக மாற்றிச் சொல்வது அறிவு மோசடியின்பாற்படும் என்பதற்காகவே ஆறுமுகநாவலரை எதிர்த்தேன். ஆறுமுகநாவலரை இலக்கிய வாதியாகத் தரிசியுங்கள். ஆறுமுகநாவலர் வசன நடையைத் தந்தார் என்பதற்காகத் தரிசியுங்கள். ஆறுமுகநாவலர் தமிழ் நாட்டிலே சென்று
24 ஞானம் - மார்ச் 2005

அங்குள்ள மரபுக் கவிதை களுடைய உருபுகளை உடைத் தெறிந்து தமிழ் வசனம் இவ்வாறு தானி அமைதல் வேண்டும் என்று ஒரு கலங்கரை விளக்க மாக நின்றார் என்று பெரு  ைம யாக ச சொல லுங் களர் . அதை விடுத் து ஐந்தாவது குரவர் என்றோ, தேசியத் தலைவர் என்றோ அவருக்குச் சாயம் பூசுவது அறிவுக்கு முரண்பட்டது என்பதற்காகத்தான் நான் அவ்வாறு காட்டமாக எழுதிவந்தேன்.
(ஈழத்து இலக்கிய தரநிர்ணயத்திலே நேர்மையற்ற சில அளவுகோல்களும் நேர்மையற்ற சில பார்வைகளும் புகுத்தப்படுவதற்கு அவர்கள் இருவரும் காரணராய் அமைந்தனர். எனவே அந்தக் காரணங்களைப் பின்பற்றக்கூடிய சீட
இருப்பதனால் அவர்கள் தங்களது வகுப்புகளை உபயோகித்து அந்தத் தவறான கருத்துக்கள் இன்னொரு தலைமுறைக்கும் சென்றடைய ஊக்குவிக்கிறார்கள்.
தி.ஞா : இவ்வாறான காட்டமான கருத்துக்களை நீங்கள் முன்வைப்ப தினாலேதான் இலக்கிய உலகில் உங்களைப்பற்றி பிரதிகூலமான அபிப்பிராயங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றா சொல்லுகின்றிர்கள்?
எஸ். பொ. : என்னைப் பற்றிப் பிரதிகூலமான அபிப்பிராயங்கள் நிலவுவதற்கு அடிப்படையில் காரணங்களை நான் அறியேன். இதற்குப் பலருக்கும் பலவிதமான காரணங்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை பட்டத்திற்காக, பதவிக்காக, ஒரு அரசாங்க ஊழியத்திலே ஏற்படும் உயர்வுக்காக, ஒருவனைப் பிரீதி செய்யவேண்டும் என்பதற்காக, முகமனுக்காக நான் சரியெனக் கருதியவற்றிற்கு மாறாக எழுதியோ பேசியோ வந்ததில்லை. பிறிதொரு வழியிலே சொல்வதானால் சமரசங்களுக்கு நான் என்றுமே அடிமையானது இல்லை. 1956ஆம் ஆண்டு தொடக்கம் எனக்கு அரச உயர் பதவி தருவதென்று எதிர்மன்னசிங்கம் ஆசை காட்டியதிலிருந்து இதுவரையிலே நான் எந்த ஆட்களுக்கும் எந்தப் புழுவுக்கும் எந்த அரசியல் நிர்ப்பந்தத்திற்கும் விலைபோகாமல் வாழ்ந்திருக்கிறேன். இன்னுமொன்று, 'அவன் தன்பாட்டில் செய்து கொண்டிருக்கட்டும் எனக்கென்ன என்று விவகாரங்களிலிருந்து ஒதுங்கி வாழ்ந்த வாழ்க்கையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சரி அல்ல தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்று எனக்குப் பட்போதில் அந்தக் கருத்துக்கள் சரியல்ல என்று சொல்லி உரத்துக் குரல் கொடுத்தவன் நான். அன்று தொடக்கம் இன்று வரை எத்தனை பேர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டு இருந்தபோதிலும் கூட, நேரடியாக அவர்களை எதிர்க்காமல் ஒரு முகமன் சொல்லி தங்களைக் காப்பாற்றிக் கொண்ட
(c35 mrooTub - Lom ir ë- 2005 25

Page 15
எத்தனை எழுத்தாளர்களைத் தெரியும். நான் அவ்வாறு செய்யவில்லை. அடுத்தது நான் இலங்கையில் பழகிய எழுத்தாளர் வட்டத்தைப் போன்று வேறு எவரும் பழகியது கிடையாது. ஒன்று ஆரம்ப காலத்திலிருந்த சோ.சிவபாதசுந்தரம், நா. பொன்னையா, வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், அ.செ. முருகானந்தம், அ.ந.கந்தசாமி, சு.இராசநாயகம், சு. வேலுப்பிள்ளை, கனக செந்திநாதன், பண்டிதமணி கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன், என்று பலரை எடுத்துக்கொண்டாலும், ஈழகேசரிப் பரம்பரையி லிருந்து மறுமலர்ச்சிப் பத்திரிகையைத் தொடங்கி இந்த சிறுகதை இலக்கியத்திற்கு உருப்படியான நாற்றங்கால் அமைத்துத்தந்த முன்னோடிக் கதைஞர்கள் அனைவரையும் நான் தேடிச் சென்று உறவு வைத்து மரியாதையாகப் பழகி அவர்களுடைய காலத்துச் சாதனைகளையும் பலவீனங்களையும் உள்வாங்கிக்கொண்டேன் என்று தைரியமாக நான் கூறுவேன். முற்போக்கு எழுத்தாளர்கள் இத்தகைய ஒரு தேடலுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாவதாக, நான் மலைநாட்டில் வாழ்ந்திருக்கிறேன். இவர்கள் எல்லோரும் சாதி ஒற்றுமைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைத்தமிழர் மகாசபை கோலாகலமான கெளரவ விருதுகள் வழங்கிய காலத்தில் எல்லாம் இந்த எஸ்.பொ.வை மறந்துவிட்டார்கள். நான் கிழக்கு மாகாணத்தில் கலப்பு மணம்செய்து கிழக்கு மாகாணத்தையே என்னுடைய பிள்ளைகளுடைய தாய்வீடாக மாற்றி வாழ்ந்தேன். சாதி விட்டுச் சாதி மட்டுமல்லாமல், மாகாணம் விட்டு மாகாணம் விட்டும் நான் வாழ்ந்தேன். பெரும்படிப்புப் படித்துப் பெரிய மார்க்சியக் கொள்கை பேசியவர்களுடைய வரலாறுகளை எடுத்துப்பாருங்கள். அவர்கள் அத்தனைபேரும் கொழுத்த பணத்திற்காக ,கொழுத்த சீதனத்திற்காக கலியாணம் முடித்தவர்கள். யாராவது தங்களுடைய கொள்கைக்காக மணம் செய்தோ அன்றேல் பிற மாவட்டத்துக்குச் சென்றோ வாழ்ந்து காட்டக் கூடிய தைரியம் அவர்களுக்கு இருக்கவில்லை. உண்மையில் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வந்தபடியால், யாழ்ப்பாணத் துக்காரன் என்னை ஏசினான். நான் மட்டக்களப்பிலே சென்று சாதனைகள் செய்யத் தொடங்க மட்டக்களப்பு நலனுக்கு அவர்கள் காலம் காலமாக ஒம்பிய சோம்பேறித்தனத்துக்கு எதிராக இருந்தபடியால் அங்கேயும் என்னை ஏசினார்கள். ஏனைய அரசியல் வாதிகள் எல்லோரும் என்னை கம்யூனிஸ்ட் என்று கூறினார்கள். 1956ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டுவரை தமிழர்களிடம் நீங்கள் கேட்டுப் பார்த்தால் சொல்வார்கள், என்னை இரண்டு அடைமொழிகளால்தான் அழைப்பார்கள். ஒன்று, பி.ஏ. பொன்னுத்துரை என்பார்கள். இல்லாவிட்டால், கொம்யூனிஸ்ட் பொன்னுத்துரை என்பார்கள். இதில் ஒரு குறிப்பு பி.ஏ. பொன்னுத்துரை என்று சொன்ன காலத்தில், பி.ஏ.
26 ஞானம் - மார்ச் 2005

படித்து ஆசிரியர்களாக இருந்தவர்களை கைவிரல்களிலே எண்ணிக் கொள்ளலாம். கிராமங்களிலே சென்று பி.ஏ. என்றால் தெரியாது. அந்த நேரத்தில் என்னுடைய நண்பர்கள் நல்லையா மாஸ்டருடைய படிப்பு என்று சொன்னால்தான் தெரியும். அப்படிப்பட்ட மட்டக்களப்பிலே நான் வாழ்ந்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை உசுப்பி வந்ததினால் நான் இல்லாத காலத்திலே என்னை ஏச வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு. அதே போன்றுதான் இந்த ஆறுமுகநாவலர் தமிழ்கூறும் நல்லுலகு
ஈழத்தில் என்று சொல்லியது தெற்கே மன்னார் திருகோணமலையில் வரையில் தான். அவர் மறந்தும்போய் மட்டக்களப்பு தமிழர் வாழும் பிரதேசமாகப் பதிவு செய்யவில்லை. அந்தத் தமிழர் வாழும் பிரதேசமாகப் பதிவு செய்த நான்கு பேர்களில் விபுலானந்தர் தொடங்கி இன்று வரையில் நான்கு பேர்களில் என்னையும் ஒருவனாகக் குறிக்கவேண்டும். அதைக் குறிக்காது விடுவதற்காகவும் என்னை எதிர்ப்பார்கள். இன்னுமொன்று நான் எந்தக்காலமும் சிறுபான்மைத் தமிழன் எனக்குச் சிறுபான்மைத்தமிழன் என்ற முறையில் பதவி தாருங்கள், சாகித்திய மண்டலத்தில் ஓர் உறுப்பினர் ஆக்குங்கள் என்று பிச்சை கேட்டதே கிடையாது. நான் 1955ஆம் ஆண்டே நியாயமாவும் தைரியமாகவும் அறிக்கை செய்தேன். என்னுடைய சாதியின் பெயராலும், நான் பிறந்த பிரதேசத்தின் பெயராலும் கலை இலக்கியத் திருத்தவிசிலே எந்தக்காலமும் நான் ஒரு ஆசனம் யாசிக்கமாட்டேன். என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்த வார்த்தையைக் காப்பாற்றி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னொன்று தென்தமிழ் நாட்டிலே சென்று திராவிட இயக்கங்கள் தமிழை முன்னெடுக்கத் தவறி விட்டன என்றும் தமிழ்த்துவத்தை அவர்கள் நேசிக்கவில்லை என்றும் ஆரிய மாயை மட்டுமல்ல திராவிடமும் ஒரு மாயைதான் என்றும் துணிந்து எழுதிப் பிரசாரம் செய்தவன் நான். எனவே நான் திராவிடர்களாலும் எதிர்க்கப்படும் ஒரு மனிதனாகத்தான் வாழ்கிறேன். ஆனாலும் இன்னும் ஒன்றை நிச்சயமாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும். ஆறுமுக நாவலருக்குப் பின்னர், சி.வை. தாமோதரம்பிள்ளைக்குப் பின்னர் நூறு வருஷங்களுக்குப் பின்னர் தமிழ் நாட்டிலே மையம் வைத்து, ஈழத்தமிழர்களுடைய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுடைய எழுத்து வல்லபங்களுக்கு ஒரு கேந்திரம் அமைத்துக்கொடுத்த தமிழன் நான். அதனாலும் நான் வெறுப்பைச் சம்பாதிக்கின்றேன். உண்மையாக, உண்மைபேசி, உண்மைக்காக உழைத்து, தமிழை நேசித்து, தமிழை இறக்கும்வரை மூச்சாகக்கொண்டு தமிழ்ப்பணி செய்து வருவது தப்பானால், நான் அந்தத் தப்பைச் செய்துகொண்டே சாவேன். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும்.
(தொடரும்.)
ஞானம் - மார்ச் 2005 27

Page 16
பெண்ணுரிமை இயக்கங்களின் செயற்பாடுகள் வெற்றி அளித்துள்ளனவா?
- சந்திரகாந்தா
சர்வதேச மகளிர் தினத்தையைாட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
பெண்ணியக் குரல்கள் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்த பின்னர் நவீன பெண்களின் வாழ்நிலையில் திருப்திகரமான திருப்பங்கள் எந்தளவுக்கு ஏற்பட்டுள்ளன என்பது பற்றிய மதிப்பீடு இன்றைய காலத்தின் தேவையாகும்.
பெண்ணுரிமைச் சட்டங்களும், பெண்ணிய இயக்கங்களும் ஜனனித்த பின்னர் பெண்களின் தற்போதைய நிலை ஓரளவுக்கு மேம்பட ஆரம்பித்துள்ளமை தெம்பூட்டுகின்ற போதிலும், பெண்களின் குறைகள் பலவும் இன்னமும் தீர்க்கப்படாத நிலை இருந்து வருகிறது. சர்வதேச அளவில் பெண்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, அங்கீகாரம் என்பன பெண்ணியச் சிந்தனையாளர்களின் விடுதலை முன்னெடுப்புக்களால் உயர்வடைந்துள்ளமை உண்மைதான்.
எனினும் குடும்பத்தில் பெண்ணின் நிலையும் சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாடுகளும் இன்னமும் வளர்ச்சி காணவேண்டிய நிலையிலேயே உள்ளன. பெண்ணிலைவாதிகள் தொலை நோக்குடன் தமது நடவடிக்கைகளைத் திட்டமிடாமல் போனதில் சில எதிர்மறையான விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.
நவீன பெண் விடுதலை தொடர்பான பண்புகள், விழிப்புணர்வுகள், புரிதல்கள், அறிதிறன்கள், ஆய்வுகள் என்பனவற்றில் இத்துறையிலான அறிவூட்டல் பரம்பலான அளவுக்கு, பெண்ணிலைவாதிகள் எதிர்பார்த்தமாதிரியான சமூக மட்டத்திலான பெண்கள் பற்றிய மனோபாவத்திலும், நடத்தையிலும், சிந்தனையிலும் வியத்தகு பெரு மாற்றங்கள் ஏற்படவில்லை. ஏற்படுத்த முடியவில்லை. அதாவது சமூகத்தில் பெண் விடுதலை பற்றிய தேவை பற்றிய விழிப்புணர்வும், இதன் விளைநிறனான பண்பு மாற்றமும், சமூக சிந்தனையில் மாற்று மனப்பான்மையும் உருவாகவில்லை எனலாம்.
பெண்கள் இன்னமும் வெறும் குடும்பத் தலைவிகள் என்ற மகுடம் சூட்டப்பட்ட போலித் தகுதிக்குள் மட்டுமே குறுங்கிப் போயிருக்கும் சுருக்க நிலையில் ஏற்படும் தளர்வுகள் மெத்தனமாகவே நிகழ்கின்றன.
பெண்ணியச் சிந்தனைகளை இளம் பெண்கள் மத்தியில் வினைத்திறனுடன் விதைத்து, விளைதிறனுடன் அறுவடை செய்தளவுக்கு, சமூக மட்டத்தில் ஆணாதிக்கப் பாற்பட்ட இருபாலாரின் மத்தியினும் விதைப்பதில் தேக்கமும், அறுவடையில் பூச்சியமும் என்கிற நிலையையே தரிசிக்க முடிகின்றது. பெண்ணியம் பற்றிய புரிதல், புரிய வைத்தல்
28 ஞானம் - மார்ச் 2005
 

என்பன இன்று நேற்று முன்னெடுக் கப்பட்ட விடயமல்ல. கடந்த இரு நூற்றாண்டுகளாக கட்டம் கட்டமாக, காலம் காலமாகத் தொடர்ந்துவரும் முன்னெடுப்பு ஆகும். எனினும் இன்று வரை பெண் விடுதலை என்பது முழுமை யாக மானுட சமுதாயத்திற்குப் புரிய வைக்கப்பட்ட பிரச்சினையாகவோ, புரியவைக்கக்கூடிய பிரச்சினையாகவோ கருத முடியாமலிருக்கிறது. இதற்கான காரணம் அறியப்பட வேண்டும். புரிதல் என்கிற பிரச்சினையே ஒன்றை அறிதல் தொடர்பாகவே ஏற்படுகிறது. அறிதலில் அக்கறையுள்ளவனே புரிதலில் ஊக்கம் கொள்கிறான். இங்கு மரபு ரீதியாகவும், ரீதியாகவும் தீர்க்கமாக ஆணாதிக்கச் சிந்தனையில் ஊறிய சமூகம் மாற்றுக் கருத்துக்களை செவிமடுக்கவோ, உள்வாங்கவோ தயாராக இல்லை என்கிற கருத்து நிலைப்பாடு பெண்ணியத்திற்கும் சாலப் பொருந்தும். இதுவே பெண்ணியச் சிந்தனை எழுச்சியின் ஆர்முடுகலுக்கும் ஆப்பு வைக்கிறது.
இன்னொரு புறம் நோக்குவதானால் நெல்லுக்கு இறைத்த நீரில் புல்லு செழித்து வளர்ந்து நெல்லையே அழித்ததுபோல், பெண்ணியத்திற்கு எதிர்வினையான அம்சங்களும் தலை தூக்கியுள்ளமை தெரிகிறது. இதனால் சில முன்னெடுப்புக்களினால் எழுச்சி ஏற்படுவதற்குப் பதில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்நிலை உருவாக்கத்திற்கும் சில பெண்ணிலை
வளர்ப்பு
வாதிகளே காரணமாகி விடுகின்றனர்.
பெண்கள் தமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் குறைந்து, உரிய அந்தஸ்தும், அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று போராடுவதற்குப்பதிலாக,
ஞானம் -- மார்ச் 2005
ஆண்களுக்கிருக்கின்ற மாதிரியே எல்லாவகைச் சுதந்திரமும், ஒப்பீட்டள விலான சமத்துவமும் அடைவதுதான் பெண் விடுதலை என்கிற மாதிரியான அர்த்தம் பொதிந்த தவறான கருத்தை வலியுறுத்த முற்பட்டமைதான் இவ்வீழ்ச்சிப்
பாதைக்கும் எதிர்வினை விளைவு களுக்கும் அடிகோலியதாக சிலர் கருதுகிறார்கள்.
ஒரு பெண்ணுக்கும் ஓர் ஆணுக்கு மிடையில் என்ன ஆளுமை வேறுபாடு வேண்டிக் கிடக்கிறது? ஒர் ஆணைப்போல் எல்லாவற்றிலும் சரிநிகராக நிற்கப் பெண்ணும் சளைத்தவளல்ல என்ற ஒப்பீட்டு வாதமே தப்பிதமான ஒன்று. ஆண்களோடு போட்டி போட்டு சமத்துவம், பெண்ணுரிமை என்று ஏட்டிக்குப் போட்டியாக போராடுவது தவறு.
பெண் விடுதலைக்கான மார்க்கம், ஆண்களோடு போட்டி போடுதல், எதிர்த்து நிற்றல் என்பவையல்ல. பெண்களுக்குரிய் உரிமைகள் அவர்களுக்கு வெளியே இல்லை. அவர்களிடம்தான் இருக்கின்றன. தமது சுயத்திலுள்ள, தமக்கு உயர்வைத் தரக்கூடிய உரிமைகளையும், உத்தமங் களையும் அவர்கள் வளர்த்துக் கொண் டாலே, தமது உரிமைகளைப் பெறுவதில் வெற்றிகண்டு விடுவார்கள். அதைவிடுத்து ஆண்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அவர்களோடு போட்டி போட்டு சமஅந்தஸ்து கோரி உரிமைப் போராட்டம் நடாத்தும் நவயுகப் பெண்களின் செயற் பாடுகளினால் சமூகத்தில் பலவித பிரச்சினைகள் உருவாகி குடும்பம் என்ற அலகுகூட ஈடாட்டம் காண்கிறது.
மரபு ரீதியில் வந்த பழமைச் சித்தாந்த அடிமைத்தனத்தில் ஊறி, மாறி வரும் சமூகத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல், பண்பாட்டுப் போலிகளில் கட்டுண்டு போய், பெண் என்பவள் தாழ்ந்தவள் என்ற
29

Page 17
புரையோடிப்போன கருத்துக்களிலிருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்பதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை. மனிதருக்கிருக்கும் சகல உரிமைகளும் பெண்களுக்கு மறுக்கப்படக் கூடாது என்பதும் உண்மையே. சிந்தனைத் தெளிவும் விடுதலை முனைப்பும் உரிமை நிலை நாட்டலுக் குமான போராட்டமாகவே பெண் விடுதலைப் போராட்டம் இருக்க வேண்டும்.
பெண் விடுதலைப் போராட்டமானது சரியான தடத்தில் முன்னெடுக்கப் படும்போது, பெண்ணியம் பற்றிய விளக்கமும், விரிவாக்கமும் பன்முக ரீதியில் வளர்ச்சிப் பாதையில் சென்றிட முடிகிறது. குடும்ப நலனில் மட்டுமன்றி, சமூக அபிவிருத்தியிலும், மனித மேம்பாட்டிலும் இதனால் உருவாக்கம் பெற்ற பெண்களின் செயற்பாடுகள் முதன்மையான முன்னணியான இடத்தைப் பெற்று வருகிறது.
எனினும் இளமையில் உத்வேகம் பெற்றிடும் பெண்கள் கூட, திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் அவர்களது செயற்பாடுகளில் தேக்கம் மாத்திரமன்றித் தேய்வுகளும் ஏற்படுகின்றன. குடும்பச் சுமையின் அழுத்தம் ஒருபுறம் இருப்பினும், அறிதிறனிலும் ஆளுமையிலும் ஏற்பட் டளவு மாற்றம், செயற்பாட்டளவில் எட்டப்படாமையும் இன்னொரு காரண மாகின்றது. மாற்றுச் சிந்தனைகள், செயற்பாட்டளவில், ஆணாதிக்க விலங்கை உடைத்துக் கொண்டு முன்னேற முடியாத முட்டுக் கட்டைகளாக இருக்கின்றமையும் பிறிதொரு காரணமாகச் சுட்டப்படுகிறது. பொதுவாக பெண்ணியச் சிந்தனை மேம்பாடு பற்றிய வளர்ச்சிக்கேற்ப, பெண்ணின் நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படாததற்கான காரணிகளில் பெண்களின் மரபு ரீதியான சிந்தனை
30
களில் பூரணமான மாற்றம் ஏற்படாமையும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எழுச்சி காணும் முயற்சிகளில் பல பெண்கள் முயலாமையும், ஆணாதிக்கச் சிந்தனை யாளர்களின் எதிர்வினைகளையும் முக்கிய தடைக்கற்களாகக் குறிப்பிடலாம். எனவே இவற்றைக் கவனத்தில் கொள்ளாதவிடத்து, பெண்ணிலை வாதம் வெறும் மேடைப் பேச்சாகவும், கனவுப் பொருளாகவுமே போய்விடும் அபாயமுண்டு.
எதிர்காலத்திற்கான பெண்ணியச் சிந்தனைகளை உருவாக்கும் போது இக்குறைபாடுகளை வெற்றி கொள்ளத் தக்கதான குறிக்கோள்களுடனான பெண்ணியச் செயற்பாட்டுத் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும். இந்த மாற்றமானது, நடைமுறையிலுள்ள குறைபாடுகள் களையப்பட்டு, பெண் விடுதலைக்கான ஆண்களின் பங்களிப் பையும் இன்னமும் அதிகரித்து, அவர்க ளையும் அரவணைத்துச் செல்லுமாற் போல் திட்டவடிவங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு வகுக்கப்பட வேண்டும். ஆகவே இன்று பெண்ணியம் பற்றிய புதியதொரு பார்வையும், சிந்தனையும், தேடலும், செயலூக்கமான செயற்பாடும், பன்முகப் பங்கு கொள்ளலின் அவசியமும் அவசரமாகவும், துரிதமாகவும் எட்டப்பட வேண்டும்.
சமூகப் பிரக்ஞையுள்ள பெண்ணிலை வாதிகள் அனைவரும் தெளிவானதும், ஏற்புடையதுமானதும், மிகவும் இறுக்கமாகப் பின்பற்றக் கூடியதுமானதுமான விதிமுறை களை வடிவமைத்து, இதன் செயற்பாட்டு நடவடிக்கைகளில் சமூகத்தின் ஒத்துழைப் பையும், பங்கு பற்றலையும் ஒருமித்த சார்புநிலை நின்று பெற்றுக் கொண்டு சுபிட்சமான பெண்விடுதலையை எட்ட வேண்டும்.
O
ஞானம் - மார்ச் 2005

எஞ்கள்) உளூர் ஆச்சி
எங்கள் ஊர் ஆச்சி இப்போதும் இருக்கின்றாள் తిrరిu peఉ6ు6మిగి 9rsi 6Urf6.geri எங்கள் ஊர் ஆச்சி இப்போதும் இருக்கின்றாள்
ஆச்சியை நினைத்தால் ஒரே ஆச்சரியந்தான் ஆச்சி ஊருக்கு நல்ல உபதேசம் சைய்திடுவாள் ஊர் ஒற்றுமை பற்றி ஓங்கிக் குரல் கொடுப்பாள் மூச்சுக்கு மூச்சி gpbgpురోగ్రా6Ogరీ afecorazób aferriboy6os refr
نشتین
ஞானம் - மார்ச் 2005
- தமிழேந்தி
ஆயினும்
sostrf66 சண்டைகள் தோன்றிட ஆச்சி பங்காற்றுவிாள்
ஊருக்கு ஊர் உடுப்பையும் மாற்றுவாள் நேருக்கு நேர் நித்தம் பொய் சொல்லுவாள்
ஆச்சிக்கு மறதி அதிகம் அதனாலே நேற்றுச் சொன்னதை இன்று மறந்திடுவிாள் இன்று சைால்விதை நாளை மறுத்திடுவிாள்
(E66ుagణి 6nerసిa6్మgరి6Umమీ நாக்கைத் திறந்திடுவாள் நாலுபேர் உறுக்கினால் நோன் சைால்லவில்லை”
ergius reir
ஆச்சியைப் பார்ப்பவர் பேச்சிலே மயங்குவீர் ஆயினும்
கீபடமே
ఆgశ్రీశ్రRUSణిr 2 -6f6faê 2 gee)umgõeff
31

Page 18
இலங்கையில்
தமிழ்த் ஒதாலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா ćočЈUČJU GolineU Užadšla»dih மாவை வரோதயன்
ஆழிப்பேரலை எழுந்து வந்து ஊழித் தாண்டவம் ஆடிய மார்கழிப் பெளர்ணமி இன்னமும் மனதை விட்டு அகலாத நிலை, எனது எழுத்துப் பணிகளும் ஆற்றமுடியாத சுழிக்குள் அகப்பட்டுக் கிடந்தன. ஆனாலும் அந்த உளப் பாதிப்புகளில் இருந்து விட்டு விடுதலையாகி எழுத முனைகிறேன்.
மகாராஜா தொலைக்காட்சி நிறுவனத்தின் சிங்கள மொழி அலைவரிசையே சிரச ஆகும். அதனைச் சிங்களத்தில் சியலு ரச சமக’ என்பர். அதாவது அனைத்துச் சுவைகளுடன் என்று பொருள்படும் அதே பெயரில்தான் அவர்களது வானொலியும் இயங்கி வருகின்றது. அதுவே4இலங்கையின் மூத்ததனியார்வானொலிஎன்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சிரச'தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி கஜமற்றிக்ஸ்’ (Gadjemetics) அதாவது நவீன விஞ்ஞான வளர்ச்சியின் பிந்திய கண்டுபிடிப்பு உபகரணங்களை (முந்தி) அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி
இதில் காட்சிக்குரிய திரை அல்லது கலைக்கூடப் பின்னணி ஒரு நவீன இலத்திரனியல் சார் சூழலைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சியைத் தொகுப்பவர் கையில் ஒரு இலகுவான, கணனி இணைப்புடனான நுண் புலனுள்ள கமரா - படப்பிடிப்புக் கருவி இருக்கும். இவர் வருகைதரு விருந்தினருடன் உரையாடியபடி, அன்று அறிமுகப்படுத்தும் உபகரணத்தையும் நுணுக்கமாக அலசுவார். இவர்களை வேறு 3 கமராக்கள் வேறு வேறு கோணங்களில் படம் பிடித்து காட்சித் திரையில் தந்தவண்ணம் இருக்கும்
இங்கு அறிமுகப்படுத்தப்படும் உபகரணம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் உதாரணம் இன்ரநெற் வசதி உள்ள செல்லூலர் தொலைபேசி அதன் பல்வேறு பரிமாணங்களும் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் அதன் விபரங்கள் கணனி மயப்படுத்தப்பட்ட கமரா ஊடாக தரப்படும்
வருகை தரும் அதிதி - அந்த துறையில் அல்லது அந்த உபகரணத்துடன் துறைபோனவராக இருப்பார். அதுபோலவே சில நேரங்களில் தமிழ் மொழி பேசுபவர்களும் அதிதிகளாக அங்கு சிங்களத்தில் உரையாடுவதுண்டு. கூடவே நிகழ்ச்சியை நடத்துபவரும் சாதாரண பார்வையாளரின்நிலையில் இருந்து தனது பரந்த இலத்திரனியல் அறிவின் உதவியோடு பார்வையாளர்களின் பங்கை நிறைவு செய்வார். ஆனால் எமது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோ, பணிப்பாளர்களோ அப்படி ஏதும் சிரம சாதகம் உள்ள ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பிலோ, தேடலிலோ, வழங்கலிலோ இறங்குவதில்லை.
குறைந்த பட்சம் சக்திரி வி நடத்தும் குட்மோனிங் பூரீலங்கா'நிகழ்ச்சியில் தரும் நுகர்வோராக நாம் என்ற அம்சத்தில் கூட அத்தகு நுண்ஆற்றலை அல்லது அலட்டல் இல்லாத விடய நேர்த்தியை வழங்குவதில்லை.
தம் இருக்கைகளைப் பலப்படுத்தும் விடயத்தில் காட்டும் அக்கறையைப்போல காத்திரமான நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் கொஞ்சம் வெளியே வந்தால் என்ன? O
32 ஞானம் - மார்ச் 2005

புனைகதை இNக்கியம் : அறிவோம், கற்போம், படைப்போம்,
செங்கை ஆழியான் க. குணராசா
3. 8. கருத்தியற் கோட்பாடுகள் :
புனைகதை இலக்கியம் அதன் படைப்பாளியின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் தன்னுள் அடக்கிய படைப்பாகப் பிரசவிக்கப்படுகின்றது. ஒரு படைப்பாளியின் சிந்தனைகள் உயர்ந்த கல்விப் புலமையால் சிறப்புறும். ஆனால் அதேவேளை ஒரு படைப்பாளியின் கருத்துக்கள் அனுபவப்புலமையால் உருவாகும். தகுந்த கல்விப் பின்னணியில்லாத நல்ல படைப்பாளிகள் இலங்கையின் தமிழ்ப் படைப்புலகத்தில் உள்ளனர். அவர்களுக்குக் கல்விப்புலமையோடு கூடிய சிந்தனை இருக்கில் உலக உயர்ந்த இலக்கியத்திற்கு நிகரான புனைகதைகளை தந்திருப்பார்கள். அதேவேளை உயர்ந்த கல்விப்புலமை உள்ள சிலரால் சிறந்த கருத்துக்களைப் பெய்து படைப்பிலக்கியம் தர முடிந்துள்ளதெனவும் கூறிவிடமுடியாது. சிந்தனையில்லாத கல்வி ஆபத்தானது. அதேவேளை கல்வியில்லாத சிந்தனை மிக ஆபத்தானது, என ஒர் அறிஞர் கூறியுள்ளார். படைப்பாளியின் கருத்துக்கள் சிறப்புற்றுச் சமூகத்திற்குப் பயன் அளிப்பதாக மாறுவது படைப்பாளியின் சிந்தனைத் தெளிவினால்தான் என்பதை உலகின் சிறந்த புனைகதைகள் நிரூபித்துள்ளன.
புனைகதையின் கருத்தியல்புகள் படைப்பாளிக்குரியவை. படைப்பாளிகளின் கருத்தியல்களை அவன் வாழ்கின்ற சமூகந்தான் உருவாக்குகின்றது. (1) வறுமையில் வாடுகின்ற சமூகம், வறுமையை உணராது வாழ்கின்ற சமூகம், (2) உழைப்பவர் சமூகம், அந்த உழைப்பின் பயனை ஒய்வாக இருந்து உண்பவர் சமூகம். (3) சமூக அடக்குமுறைக்குள்ளாகிய சமூகம், இன மத மொழி சாதியச் சமூக அடக்குமுறைகளைத் திணிக்கும் சமூகம் (4) சமத்துவமில்லாத அடக்கு முறைகளைக் கையாளும் ஆளும் சமூகம், அந்த அடக்குமுறைகளைக் களைந்தேறிய போர்க்குரல் எழுப்பும் சமூகம் (5) முதலாளித்துவ சமூகம், பாட்டாளி சமூகம் என உலகப்பந்தின் மக்கள் இருமைத்தன்மை கொண்ட சமூகப் பிரிவுகளுள் அடங்கி விடுகின்றனர். இவ்வாறான சமூகச் சூழல் படைப்பாளியின் சிந்தனையில் உருவாக்குகின்ற கருத்துக்கள் புனைகதையில் படைப்பாகின்றது. ஆனால் உலகின் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிகள் அனைவரும் சமூக அநீதிகளுக்கு எதிராகவே தங்கள் புனைகதைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
சமூக மக்களிடையே நிலவும் கலாசார வேறுபாடுகள் வெவ்வேறு கருத்தியல்புகளை ஏற்படுத்தும், சில கலாசாரத்திற்கு ஏற்றதாகவும் நல்லதாகவும் இருக்கின்ற கருத்தியல்புகள் சில கலாசாரத்திற்குத் தவறானதாகவும் ஏற்றதற்றதாகவும் இருக்கும்.
ஞானம் - மார்ச் 2005 33

Page 19
மேலைத் தேய ஆண் பெண் உறவுகள், குடும்ப இணைப்பு சம்பந்தமான நடத்தைகள் மேலைத்தேய சமூகத்திற்கும் கீழைத்தேய சமூகத்திற்கும் வித்தியா சமான சிந்தனைகளையும் கருத்துக் களையும் கொண்டுள்ளன. பிரித்தானிய இளவரசி டயானாவின் ஒழுக்கம் பிறழ்ந்த வாழ்க்கைக்கு மேலைத்தேசம் தருகின்ற விளக்கமும் அர்த்தமும் சமூக மதிப்பும் உன்னதமானவை. அதேபோன்றதொரு பெண் கீழைத்தேசத்திற்குரியவளாயின் அவளை ஒழுக்கம் தவறியவளென ஒரு வார்த்தையில் ஒதுக்கிவிடும். இங்கி லாந்தின் படைப்பாளியான டி. எச். (sumpsit Grösör Women in Love ST6arp நாவல் சுட்டுகின்ற பாலியல் கலந்த சமூகத் தீட்டுக்களை கீழைத்தேசத்தின் கருத்தியல்புகளாக்க முடியாது போய் விடுகின்றது. கீழைத்தேசச் சமூகத்தில் சமூக மரபுகளுக்கும் சமய நம்பிக்கை களுக்கும் மாறான சமூகக் கட்டவிழ்ப்புப் புனைகதைகள் பிரச்சினைக்குள்ளாகி யுள்ளன. e56fully usig)60Lu Saternic Verses' என்ற நாவல் இஸ்லாமிய இறைத்தூதர் மொகமட் அவர்களை விமர்சிக்கும் பாணியிலமைந்ததால் இஸ்லாமிய நாடுகளில் தடைசெய்யப்பட்டது. அதனை எழுதிய படைப்பாளிக்கு மரண ஈரான் விதித்தது. தஸ்லிமாநஸ்றின் எழுதிய TLaja' என்ற நாவலும் இவ்வாறான பிரச்சினைக் குள்ளாகியது.
பண்டைய புனைகதை ஆசிரியர் களின் கதைகளுக்கான கருத்தியல் சமூக ஒழுக்கம் சார்ந்ததாக இருந்தது. நல்லொழுக்கங்களையும் நல்ல வழிமுறை களையும் சமூகத்திற்குச் சொல்வதாக
உதாரணமாக சால்மன்
தண்டனையை
34
அமைந்தது. கி. மு. 620-560 களில் கிரேக்க எழுத்தாளரான Aesop என்பார் இந்த மரபினை ஆரம்பித்து வைத்தார். எயிசொப்பின் கதைகளான ஆமையும் முயலும், நரியும் திராட்சையும் முதலான கதைகளை அறியாதவர் உலகில் எவருமில்லை. கி. பி. 300 இல் விஸ்ணு சர்மா சமஸ்கிருதத்தில் படைத்தளித்த பஞ்சதந்திரக் கதைகள் இவ்வாறான நல்வழிக்கதைகளாகவே விளங்கின. அதன் பின்னர் புனைகதை இலக்கி யத்தின் கருத்தியல் அம்சங்கள் பின்வரும் விதங்களில் அமைந்தன:
(1) வீரதீரக்காதலியம் (Romantism)
(Realism) (2.1) குடும்ப உறவியல் (22) மார்க்சிய யதார்த்தவியல் (2,3) சாதியவியல் (2.4) சூழலியம் (3) இயற்பண்பியம் (4) குறியீட்டியம் (Symbolism) (5) 95 Lip65ujuh (Existentialism) (6) மாயாஜால யதார்த்தம்
(Magical Realism) (7) அமைப்பியல்வாதம்
(Structuralism) (7.1) பெண்ணியம் (7.2) தலித்தியம் (8) நவீனத்துவம்
(2) யதார்த்தவியல்
(Naturalism)
(Modernism) (9) பின் நவீனத்துவம்
(Post Modernism) (10) புது நவீனத்துவம்
(Neo Modernism) புனைகதைத்துறையில் இவ்வளவு கருத்தியல்புகள் இருக்கின்றனவா? இவற்றையெல்லாம் அறிந்தால் தான்
ஞானம் - மார்ச் 2005

புனைகதை படைக்கலாமா? என்ற பயம் இக்கட்டுரைத் தொடரைப் படிப்பவர் களுக்கு இலக்கியத்தில் இப்படியான இசங்களை
ஏற்பட்டுவிடக் கூடாது.
உருவாக்கிப் புனைகதைகளை வகுத் துள்ளனர் என்றே கூறவருகின்றேன். இவற்றினைத் தெரிந்து கொண்டு எவரும் புனைகதை படைத்தவரல்லர். இலக் கணத்திற்கு இலக்கியம் எழுதப் படுவதில்லை. இலக்கியத்திற்குத் தான் இலக்கணம் கூறப்படுகின்றது. றொமான் ரிசத்திலிருந்து நியோ மொடோனிசம் வரை இதுதான் விதி.
ஆரம்பப் புனைகதைகள் வீரதீரச் செயல்களையும் காதலையும் பேசுவன வாக அமைந்தன. அவற்றினை வீரதீரக் காதலியம் சார்ந்த புனைகதைகள் எனலாம். 1700 களில் பெரும்பாலான ஆங்கில நாவல்கள் இவ்வாறானவையாக அமைந்தன.
(1) ஆங்கில நாவலாசிரியரான டானியல் டிபோர் என்பவரின் றொபின்சன் குருசோ (1719), சாமுவேல் றிச்சார்ட்டின் பமிலா (1740) என்பன இவ்வகையான
புனைகதைகளாகும், கற்பனாவாதம் இவ்வாறான புனைகதைகளடங்கிய தாயிருக்கும்.
(2) புனைகதைத்துறையில் 1800 களில் யதார்த்தவாதம் புகுத்தப்பட்டது. சார்ள்ஸ் டிக்கின்ஸ் ஜோர்ஜ்எலியற், தோமஸ்ஹாட்லி என்போர் யதார்த்த வியலைப் புனைகதைகளில் புகுத்திச் தாம் சமூகத்தின் நடத்தைகளை உள்ளவாறும் உணர்ந்த
சித்திரித்துள்ளனர்.
வாறும் சித்திரிப்பனவாக யதார்த்தப் புனைகதைகள் அமைந்தன. சமூகத்
(ο παστώ - ιο πήό 2005
தினை அவை அப்படியே படம் பிடித்துக் காட்டின. கலிபோர்னியக் கமக்காரன் பாதை அமைப்பதற்கு எதிராகப் போராடியதைச் சித்திரிப்பதாக Symril 3, G Empilafisit The Octopus அமைந்தது. தமிழில் வெளிவந்த முக்கிய நாவல்கள் அனைத்தும் (1998 களுக்கு
புகையிரதப்
முன்) யதார்த்த நாவல்கள் தாம். கல்கி (அலையோசை), பார்த்தசாரதி (குறிஞ்சி மலர்), அகிலன் (பாவை விளக்கு), ஜானகிராமன் (மோகமுள்), எஸ். பொன்னுத்துரை (சடங்கு) முதலியன குடும்ப உறவியல் சார்ந்த யதார்த்தப் புனைகதைகளாம். மார்க்சிய யதார்த்த வியல் அல்லது மார்க்சியம் சார்ந்த நாவல்களை ரகுநாதன் (பஞ்சும் பசியும்), செ. கணேசலிங்கன் (நீண்டபயணம்) ஆகியோர் படைத்தனர். சாதியம் சார்ந்த யதார்த்த எழுதிய படைப்பாளிகள் ஈழத்தமிழ் இலக்கியத்திற்
நாவல்களை
குரியவர்கள். அவ்வகையில் கே. டானியலின் பஞ்சமர் வரிசை நாவல் களை விதந்துரைக்கலாம். கானல், தண்ணீர் என்பன அவரின் முக்கியமான சாதிய நாவல்களாக விளங்குகின்றன. சூழலியத்தினை சித்திரிக்கின்ற நாவல்கள் எண்ணிக்
யதார்த்தமாகச்
கையில் குறைவானவை. ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் கடல்வாழ்க்கையையும் செங்கை ஆழியானின் காட்டாறும் செ. யோக நாதனின் கிட்டியும் குடியேற்றக் காட்டுக் கிராமத்தையும் சித்திரிக்கின்றன.
(மிகுதியை அடுத்த ஞானத்தில் தொடர்வோம்)
35,

Page 20
இைைகுலnஏன் குைழுத்திகுவின்
66peo69&soyess
- ஜின்னாஹ்
இழுந்துவிeடோம் அத்தனையும் சுனாமியினால் என்றொடிந்து இழுந்துவிeடோம் நிம்மதியை எதிர்கால விாழ்வுதனை இழுந்துவிeடோம் என்றெண்ணி ஏங்குகின்றீர் சோதரர்காள் இழுந்தவைகள் இழுந்தவுைதான் இனிவிருமா அழுைதிகொள்வீர்.
போனசொந்தப் பிரிவிெண்ணிப் புண்ணுண்ட மனங்கொண்டோர் தானாகப் போமுயிரைத் தாமாகப் போக்குவதால் €Umaraju9గి (రీgrశిreరి 9టిrgr86mగి వాmద్రి6)వాణిraరిగి வீணான முடிவுக்குள் விாறாதீர் பொறுமைகொள்வீர்.
தலைக்குமேலே போனவெள்ளந்தனைப்போல சோகங்கள் தலைக்குமேலே போனதனால்தவிக்கின்றீர் சோதரரீநீர் அலைகிாலன் வடிவினிலே அழித்தபைருங் கோலங்கள் நிலைக்காது மீண்டெழுவோம் நிலைதளரா இதழுந்திடுவீர்.
நமக்குமeடும் வந்ததல்ல நாடுபல சுனாமியினால் இமைப்பொழுதுள் இலாதழிந்து இறந்தவுயிர்த் தொகையறியாச் சமர்க்களத்தின் நிலை; அலைகள் செய்திபழி கீரைப்புலத்தில் எமக்குரிய கடனினியிக் கொடூரநிலை மாற்றுவதிேe
உயிர்தவிர வீடுபொருள் உடைமைகளைத்தாம்விளைத்த பயிர்பலவும் அழிந்ததனால் பஞ்சைகளாய்ப் போனவர்கள் செயவறியார் செய்வதைது தாமைனவே அன்னவிர்க்குச் சையுழுதவிதனில்முதன்மை செய்திடுவிோம் தோள்தருவிோம்.
மனத்தளிவில் பாதித்தோர் மிகஅதிகம் அவர்தம்மின் மனத்துயரை மாற்றுவழி முதன்மைபைற வேண்டும்இனி இனடிதமோ மொழிகுலமோ எமக்கில்லை எனும்புரிதல் தனைத்தொடர வேண்டும்நாம் தாயைாருத்தி பிள்ளைகளே. வந்தவினைதனையெண்ணி விருந்துதலை மறந்திடுவோம் வந்தெதிர்க்குங் காலத்தை விளப்படுத்த முயன்றிடுவோம் சிந்திப்போம் செயற்படுவிோம் தீதகலத் துணைபுரிவோம் புந்தியுள்ள பேர்கள்நாம்புத்துலகம் படைத்துயர்விோம். O
36 ஞானம் - மார்ச் 2005

எனக்குத் தெரிந்தவை :
ஆழிப்பேரலைகளின்
கோரத் தாண்டவம்
- தம்பு சிவா
2004 டிசம்பர் 26ஆம் திகதி தென்கிழக்கு ஆசிய நாடுகளை உலுக்கிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுமத்திராவின் மேற்குக் கரையிலுள்ள இந்து சமுத்திரத்தின் ஆழத்தில் உருவாகியது. ஆழிப் பேரலைகள் (சுனாமி என்று யப்பான் மொழியில் அழைக்கப்படுவது) பல நாடுகளின் கரையோரங்களை அழித்து நாசஞ் செய்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டுவிட்டது. 12 நாடுகளைத் தாக்கிய ஆழிப் பேரலைகள் சுமார் இரண்டு இலட்சம் பேரைப் பிணமாக்கிவிட்டது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மியன்மார், மாலைதீவு ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானவையாகும். மிகக் கூடிய பாதிப்புக்குள்ளான நாடு இந்தோனேசியாவாகும். அதற்கு அடுத்த இடத்தில் 40 ஆயிரம் வரையிலான மக்களை இழந்து நிற்கும் நாடு இலங்கை.
இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கில் அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகள் அனர்த்தத்தைச் சந்தித்துள்ளன. கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பெரும் எண்ணிகையிலான தமிழ், முஸ்லிம் மக்கள் மரணத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இது கடந்த மூன்று மாதங்களுக்குமுன் நடந்த ஒரு சம்பவம். எல்லோரும் நன்கு அறிந்த விடயம்.
மக்கள் வீடு, வாசல்களை, சொந்தங்களை இழந்து இன்றும் நிர்க்கதியாக நிற்கின்றார்கள். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வறுமைப் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த விடயமும் பெரும்பாலான மக்களுக்குத் தெரியும், பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆழிப் பேரலைகளின் (சுனாமி) பாதிப்புக்களைக் காட்டி பல நாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகள் ஏராளம் பெறப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி குவிந்த வண்ணம் உள்ளன.
சுனாமிக்கு முன் ரூபா 104/ ஆக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி தற்பொழுது குறைந்து ரூபா 96/ வரை வந்து விட்டது. இதனால் இங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. வெளிநாட்டு உதவிகளால் மட்டுமே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் பொருளாதார வல்லுனர்கள் அதிசயமாகக் கண்டுபிடித் துள்ளார்கள். இதை அவதானிக்கும்போது இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதென தலைநகர் வாசிகள் தம்பட்டம் அடிக்கிறார்கள். பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தில் ஆண்டி அரண்மனை கட்டின கதையாகப் போச்சு.
ஞானம் - மார்ச் 2005 37

Page 21
* கரையோரப் பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகி, மக்கள் உடைமைகளை இழந்து அநாதரவாக நிற்கின்றார்கள். தொழில் இல்லாமல் அகதி வாழ்க்கை வாழுகின்றார்கள். மீன்பிடிக் கைத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுக்கிடக்கின்றது. * உல்லாசப் பயணத்துறை வருமானம் அடிபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
உண்மையிலேயே சேடம் இழுக்கின்றது. * மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் சென்றவர்கள் ஈராக் யுத்தம் காரணமாகவும்,கொடுமைகள் காரணமாகவும் நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். * தைத்த ஆடைகளின் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டதனால் பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் - ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
* ஆழிப் பேரலைகளின் காரணமாக உப்புநீர் உட்புகுந்து பல்லாயிரம் ஏக்கர்
விளைநிலங்கள் பயிர் செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளன.
இறக்குமதிகள் அதிகரிப்பு (அரிசி, சீனி, பருப்பு, கிழங்கு, மாவு போன்றன.)
7.
\
ఎడ
இதன் தாற்பரியங்களை புரிந்து கொள்ளாமல் எம் நாட்டவர்கள் பலர் வெட்டிப் பேச்சு வீரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இலங்கையின் இன்றைய நிலை.
“நாட்டின் உற்பத்திகள் பெருகி, ஏற்றுமதிகள் அதிகரித்தால்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியை நாம் காணமுடியும்.” இதுதான் யதார்த்தமான உண்மையும்கூட
حصحیح ہے
*ஞானம் ? சந்தா விபரம்
950), Lju6)i&isit T. Gnanasekaran,
உள்நாடு ሗ ‹
HNB – Pussellawa, 560)Ly60)Mé,
தனிப்பிரதி கணக்கு இலக்கம் - 26014 என்ற ஆண்டுச் சந்தா : ரூ. கணக்கிலிட்டு வங்கி ரசீை 2 g96.ڑg0[
ஆண்டுச் சந்தா : ரூபா 700/= புதல் வேண்டும்: 3 ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= த 酸 : ஆயுள் சந்தா : ரூபா 15000/= அனுப்ப வேண்டிய பெயர் முகவரி: சந்தா காசோலை மூலமாகவோ வங்கிக் T. Gnanasekaran கணக்கு மூலமாகவோ, மணியோடர் Gnanam Branch Office
மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபால் வெளிநாடு நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப ஆண்டுச் சந்தா : 25 US$ வேண்டும். வங்கிக் கணக்கு மூலம் ஆயுள் சந்தா : 300 US$
3B, 46. Lane, Colombo-06.
38 ஞானம் - மார்ச் 2005
 
 
 
 
 
 
 
 

படைப்பும்
படைப்பா ளிகளு ம்
- கே. விஜயன்
நமது கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட 7 குறுந்திரைப்படங்களின் விழாவொன்று
டிசம்பர் 19ம் திகதி (2004) ஞாயிற்றுக் கிழமை வெள்ளவத்தை, பெண்களுக்கான கல்வி ஆய்வு நிறுவன மண்டபத்தில் இடம் பெற்றது. விபவி மாற்றுக் கலாசார் மையமும் பெண்களுக்கான கல்வி ஆய்வு நிறுவனமும் இணைந்து இவ்விழாவினை ஒழுங்கு செய்திருந்தன. விழா, மற்றும் கலந்துரையாடல் குறித்த சிறு குறிப்பு இது.
குறுந்திரைப்படங்களின் காட்சி நிறைவு பெற்றது. சூடான கலந்துரை யாடல் ஆரம்பமானது.
அதிகாலை இருள் அழுத்தம், ஒளித்துப் பிடித்து தடை, செருப்பு, மூக்குப் பேணி, போருக்குப் பின்.
“ஆகா! இத்தனைப் படைப்புகள். நம்மவரால் உருவாக்கப்பட்டவையா? நம்ப முடியலியே”
“நம்ப முடியலியா. தூள் பரத்திட் டாங்களே”
"அப்படீங்கிறே” உம்ம். ஆனால் கலந்துரையாடல் அவர்களை அம்போ! வென காலைவாரி விட்டது.
வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் வாழ்கின்ற தமிழ், சிங்கள கலைஞர்களின் கூட்டு முயற்சிகள்.
யுத்தகாலம், அதன் பின்னரான
காலம் கருக்களின் பின்புலம்.
சிறுவர்களே அனைத்திலும் பிரதான
பாத்திரங்கள். w
அதிகாலை இருள், சிங்களக்
கலைஞரான ஆனந்த அத்தநாயக்காவின் படைப்பு. யுத்தத்தினால் சிதைக்கப்பட்ட ஒரு கிராமம் பாதிப்பிற்குள்ளான ஒரு
ஞானம் - மார்ச் 2005
சிறுவன். வெற்றுத் துப்பாக்கி ரவை குழாய்களை ஊது குழலாக்கி அதில் லயசுகத்தை அனுபவிக்கிறான்.
காசி நாதர் ஞானதாசின் அழுத்தம் புதிய படைப்புகளை கண்டு பிடிக்கும் மனத் துடிப்புக் கொண்ட சிறுவனையும், பாரம் பரியக் கல்வியின் ஆக்கிரமிப்பிற் குள்ளான தந்தையின் கதையையும் கூறுகின்றது. ஷெல்லடிகளின் மத்தியிலும் மகனின் எதிர்கால கல்வி குறித்து சிந்திக்கும் தந்தையின் மனப்போக்கின் சித்திரமாகக் கதை திகழ்கிறது.
சிங்களக் கலைஞரான டிலோன் வீரசிங்கவின் 'ஒளித்துப் பிடித்து' பிந்துனுவ வேவ புனர்வாழ்வு முகாம் சம்பவத்தின் பின்னணியில் உருவானது. முகாமில் தாக்குதல் இடம் பெற்ற வேளையில் அங்கிருந்து தப்பி வந்த தமிழ் இளம் பையனுடன் சிங்களச் சிறுமி யொருத்தி நட்புக் கொள்கிறாள். முகாமில் தாக்குதல் நடத்துவதில் அவனுடைய தந்தையே பிரதான அங்கம் வகிப்பதான கதை இது.
தடை அல்பேட் பிரதியாக்கத்திலும் நெறியாள்கையிலும் உருவானது. -
போல்ஸின்
39

Page 22
வட - கிழக்கு எல்லையில் அரச படைகளினால் கடைப்பிடிக்கப்படும் மருந்து வகைக்கான தடை காரணமாக பாம்புக் கடிக்கு பலியான தமது மகனைக் காப்பாற்ற முடியாமல் பரிதவிக்கும் ஒர் இளம் பெற்றோரின் துயரச் சுமையின் வெளிப்பாடு.
‘செருப்பு கெளதமனின் பிரதி யாக்கம் மற்றும் நெறியாள்கையில் உருவானது. ஒரு சோடி செருப்புக்காக அல்லல்படும் சிறுமி அரும்பாடுபட்டு தனக்குச் செருப்பு வாங்குவதற்காக பணம் சேர்க்கின்றாள். அது கிடைத்த போது, யுத்தம் கொண்டு வந்து விட்ட மிதிவெடி அவள் காலை கொண்டுபோய் விடுகிறது.
இராகவனின் விளையாட்டுப் பொருட்களை வாங்கு வதற்காகத் தாத்தாவின் மூக்குப் பேணியைத் திருடும் சிறுவனின் கதை. அதன் காரணமாகத் தாத்தாவின் உயிரிழப்பையும், அதனால் அவன் கற்றுக்
மூக்குப்பேணி,
கொள்ளும் பாடத்தையும் சித்தரிக்கிறது. ஜெயரஞ்சனி ஞானதாஸின் போருக் குப் பின்’ என்பதும் ஒரு சிறுவனின் கதைதான். தனது தந்தை கொழும்பில் தொழில் புரிவதாக நினைத்து வாழும் அவனுக்குத் தந்தை இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட வரலாறு தெரிந்ததும் துடித்துப் போவதே கதை.
கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தி யாலத்திற்குச் சின்னத்திரையில் காட்சியளித்த இத்திரைப்படங்கள் அங்கு கூடியிருந்த இரசிகர்களை நிசப்தத்தில் ஆழ்த்தி விட்டது. கமராவோட்டம், கதை நகரும் தன்மை, உரையாடல், பாத்திரங் களின் உணர்ச்சி வெளிப்பாடுகள், நடிப்பு அனைத்துமே உயர் மட்டம்.
40
“அடடா" ஒலி, ஒளி போதாமை வெளிப்படுத் தப்பட்ட போதும், தரமான சினிமா எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற எண்ணக்கருவை இந்தக் கலைஞர்கள் உள்வாங்கியிருப்பது வானத்து மின்ன லாகப் பளிச்சிடுகிறது. ஆரம்ப முயற்சியே இராஜ நடை போடுகிறது.
இத்திரையாக்கங்களுக்கான பெரும் பங்கு ஞானதாஸ் என்ற கலைஞரைச் சேரும்.
கலந்துரையாடலின் போது இத்திரைப் படங்களின் தயாரிப்பிற்கும், அவை வெளியிடப்படுவதற்கான 5Tij600T காரியங்களையும், சூழலையும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சில் நிதி உதவி, மற்றும் உபகரண உதவி, பயிற்சி என்பனவற்றை வழங்கியிருக்கிறது.
இவற்றையெல்லாம் சொன்ன கலைஞர் தனது சினிமா ஈடுபாடு குறித்த நோக்கம் சம்பந்தமாகவும் கொஞ்சம் தெளிவுபடுத்தினார்.
'நீங்கள் நெருப்பில் வீழ்ந்தீர்கள் என்பதற்காக எங்களையும் அத்தீயில் தூக்கிப் போட முயற்சி செய்தீர்கள்”
சபையிலிருந்து ஒரு சிங்களக் குரல் ஓங்காரமாக ஒலித்தது.
ஏழு படங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு எதிராகச் சொல்லப்படுபவை என அவர் ஆத்திரமாக வாதிட்டார்.
ஞானதாஸ் ஆடிப்போய் விட்டார். "அரசியல் பிரச்சாரம் எனது நோக்கமல்ல, சினிமாத்துறையில் முன்னேறுவதே எனது நோக்கம். இத்தகைய கதைகளை தயாரித்தால் கலையுலகின் உயர் மட்டத்தில் எடுபடும் என்பதற்காக இவற்றைத் தயாரித்தேன். அந்த நண்பரின் கருத்தை,
ஞானம் - மார்ச் 2005

ஏற்றுக் கொள்கிறேன்’ என உளறலின் எல்லைக்கே போய் விட்டார்.
"ஆமா, கதை, நெறியாள்கை இப்படி இத்தியாதி விசயமெல்லாம் தூள்! தூள் அப்பிடின்னு ஆடினிரே”
'ஆரு இல்லேன்னா? நல்லா செஞ்சிருக்காங்க, கலையுலகில் அங்கீ காரம் கெடைக்குங்கிறதுக்காகத்தானே செஞ்சிருக்காங்க.
சமூகபிரக்ஞையோடும் தெளிவோடும் செய்யவில்லையே, அப்புடி தானே சொன்னாங்க. அப்புடி செஞ்சிருந்தா உண்மைக்குப் புறம்பான ஒரு பிற்போக்கு கருத்து முன்வைக்கப் பட்டபோது சாடி பாய்ஞ்சிருக்கனுமில்ல, அட, அது கெடக்கட்டும் தமது படைப்பில் நம்பிக்கை வைத்து அது பற்றி தெளிவாவது படுத்தியிருக்கலாமே. உண்மைக் கலைஞ னுடைய நிலைப்பாடு அதுதானுங்களே”
"அப்புடி போடு” “பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தபோது குய்யோ முய்யோ வென நாட்டை விட்டு ஓடினவங்க, டொலரிலும், பவுணிலும் சுகம் கண்டு கொண்டே யுத்தம் பற்றி நாவல், சிறுகதை, கவிதைன்னு எழுதுராங்களே இப்புடிப்பட்ட
வங்களுக்கும், இவங்களுக்கும் என்னங்க வித்தியாசம்.”
“தலித்துகள்தான் தலித்துகள் பிரச்சினையை எழுதணும் என்ற கோஷத்தை முன் வைக்கிறீங்க."
“அட, ஆமாங்க. போராளிகள்தான் கள நிலைமையை சொல்லனும், அதுலேதான் சத்தியம் இருக்கும், சமூக பிரக்ஞை இருக்கும்.”
"அப்ப இவங்க?” நல்ல திறமை இருக்கு. படங்களைப் பார்த்தா பளிச்சிடுது. ஆனால் அங்கே உண்மையான சமூகப் பிரக்ஞை இல்லை. மனித நேயம் கொஞ்சம்கூட இல்லாதவர் களெல்லாம் சுனாமி அனர்த்தம் குறித்து கவிதை பாடி சமூக அந்தஸ்த்து தேடிக் கொண்டிருக்கிறார்களே அதுபோலத் தான் இதுவும்.”
"அப்ப இந்தத் திறமையாளர்கள் எல்லாம்?”
“முன்னேறுவார்கள்! அதற்குப் பிறகு தமிழ்நாடு ஒடுவார்கள். அரைகுறை ஆடையோடு பெண்களைக் காட்டி நல்ல மசாலாக்களைத் தயாரிப்பவர்கள். அவை சக்கை போடு போடும்"
"அடக்கடவுளே’ O
*
(நூல் மதிப்புரை) A
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்கள்ை: அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி * மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பு
ஞானம் - மார்ச் 2005 41

Page 23
ീEകൃഭാഭf ത്ര6്ട് ! ...
42
கண்னைன்று பைண் உன்னை தe3ஐக்கைாடுத்த போதும் 6hU6óreoofa5goy sourtrayase bugó 6)Ugogas6r grešto
கருவிறையுள் பைண்ணைன்று கணனி சைான்ன போதே as-ged 65&ibg5S 65-yeag54-st 6U6šf 6assrobeodcou563rgoyl
கதவருகே நின்று நின்று வரன் வருவானைன்று கeடுக்கeடாய் சீதனங்கள் கண்ணிர் விடுது இன்று
6U6öseoofs.g60dco 6Uc pray6 assrobeOdco அதையறுப்போம் என்ற கவிவரிகள் கல்லறைக்குள் குவியுதிங்கே குன்றாய் !
விதவிைக்கைாரு வாழ்வுமையம் விதைத்திடுவோம் முயன்று விeடுக்கைாடுத்து வாழ்வமைப்போம் பைண்மையோடு உறவை)
பegக்குள்ளே அடைத்துவிைக்கும் பைண்மையுதன் உணர்விை விeடுஇனி கைாடுப்பூதனால் - அவள் விடுதலையின் பறவிை
- மாரிமுத்து சிவகுமார், ஹட்டன்.
S
s
༤
ஞானம் - மார்ச் 2005
 

கிளிநொச்சியின் ஒரு கால கட்டத்தைப்
பதிவு செய்யும் நாவல்
- கலாபூஷணம் முல்லைமணி
நூல் பச்சை வயல் கனவு (நாவல்)
ஆசிரியர் : தாமரைச் செல்வி
வெளியீடு : சுப்ரம் பிரசுராலயம்
77. குமரபுரம், பரந்தன்.
விலை ரூபா 250.00
‘வசனவடிவிலே குறிப்பிடத்தக்க அளவு நீளமுடையதாகவும் புனைந்துரைக்கப் படுவதாகவும் பாத்திரங்களின் பண்புகளையும் செயல்களையும் வாழ்க்கையில் உள்ளபடியே இயல்பான கதைப் பொருளில் அமைத்து அவற்றின் உணர்ச்சி மோதல்களைச் சித்தரிப்பதாகவும் அமைவது நாவல்” என்பது அகராதியில் இடம் பெறும் வரைவிலக்கணம்.
நாவல் என்னும் இலக்கிய வடிவம் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இந்த வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. எனினும் தமிழ்நாட்டிலும் சரி ஈழத்திலும் சரி ஆரம்பகால தமிழ் நாவல்கள் நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டாத இயற்கை இகந்த நிகழ்ச்சிகளையும் வீரசாகசப் பண்புகளையும் கொண்டு அமைந்தன.
கதையை மட்டும் கூறுவது நாவலாகாது. நாவலில் கதையும் இருத்தல் வேண்டும். ஈழத்தில் மண்வாசனை இலக்கியம் படைக்கும் மரபு அறுபதுகளில் முனைப்புப் பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. வன்னிப் பிரதேசத்தைப் பொறுத்தவரை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்திலே (1902) மண்வாசனை இலக்கியம் தோன்றிவிட்டது. முல்லைத்தீவு ரேகு என்றிக் கிளார்க் த. கைலாசபிள்ளை அவர்கள் எழுதிய 'இன்பவதி என்னும் நாவல் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கச் சஞ்சிகையான 'கலாநிதியில் தொடராக வெளிவந்துள்ளது.
அவரின் முன்னோடி முயற்சியைப் பின்பற்றி வன்னிப் பிரதேசத்தில் பல எழுத்தாளர்கள் மண்வாசனை இலக்கியம் படைத்து வருகின்றனர். இந்த வரிசையில் தாமரைச்செல்வி அவர்களின் பச்சைவயல் கனவு நாவல் விதந்தோதத்தக்கது. இவரது சிறுகதைகளும் நாவல்களும் கதைமாந்தர் கால்பதித்து உலவும் மண்ணின் வாசனை வீசுவதை அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணம் தென்மராட்சிப்பிரதேசத்திலிருந்து வளமான வாழ்வைத்தேடி இடுப்பில் நாலு முழமும் தோளில் ஒரு துவாயுமாய் வெறுங்கையுடன் யானைகளும், பாம்புகளும், நுளம்புகளும் உலவும் கிளிநொச்சி காட்டுப் பிரதேசத்துக்கு மிகத் துணிச்சலுடன் வந்த மக்களின் வகைமாதிரியான பாத்திரங்களே ‘பச்சைவயல் கனவு’ நாவலில் உலா
ஞானம் - மார்ச் 2005 43

Page 24
வருகின்றனர். தாமரைச் செல்வியின் தந்தையும் பச்சைவயல் கனவுடனேயே கிளிநொச்சிக்கு வந்தவர் உழைப்பின் மூலம் வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர். இவரைப் போன்றவர்களே கிளிநொச்சியைக் கட்டி எழுப்பியவர்கள். தென்மராட்சியைச் சேர்ந்த வேலாயுதம், சிவம், கார்த்திகேசு, அன்னம் என்போரைச் சுற்றியே கதை நகர்கிறது. மரியகண்டு, விநாசி, வெற்றிவேலு விதானையார், பண்டா அருநோசு, தாமோதரி முதலானோர் பிரதான கதைமாந்தரின் குணவியல்புகளைத் துலக்கும் துணைப் பாத்திரங்களாகத் திகழ்கின்றனர்.
நாவல் இவர்களின் வரலாறாகத் திகழும் அதே சமயத்தில் கிளிநொச்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், தமிழ் ஈழ விடுதலைப் பயணத்தின் வரலாற்றையும் சித்திரிக்கின்றது. ஒரு வகையில் சொன்னால் இது கிளிநொச்சியின் கதையுடன் விடுதலைப் போராட்டத்தின் கதையாகவும் திகழ்கின்றது.
ஒரு குடியேற்றத் திட்டமாக ஆரம்பித்த கிளிநொச்சி நகரின் சாதாரண மனிதனுடைய வியர்வையையும் குருதியையும் அவலத்தையும், தியாகத் தையும் ஆசிரியர் அனுபவ பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.
காடு வெட்டிக் கழனியாக்கல், நெல்விதைத்தல், காவலிருத்தல், அரிவி வெட்டுதல், சூடு வைத்தல், மாட்டினால் சூடு மிதித்தல், புதிர் எடுத்தல், புதிதுண்ணல், இனமத வேறுபாடின்றி வயல்வேலையில் பரஸ்பரம் உதவுதல் முதலான விவசாய நிகழ்ச்சிகள் நுணுக்க விபரங்களுடன் பதிவு செய்யப்படுகின்றன. கிளிநொச்சியின் வளத்துக்கு மூலாதாரமாகத் திகழும் இரணை
44
மடுக்குளம் வெள்ளைக்காரரால் ஆரம் பிக்கப்பட்டு இலங்கை அரசினால் பூர்த்தி செய்யப்பட்டது. குளங்கட்டுவதற்கு இந்தியாவிலிருந்து கூலியாட்களைக் கொண்டு வந்தமை, வயல் வேலைக்கு ‘கரிக்கோச்சியில் யாழ்ப்பாணத்திலிருந்து கூலியாட்களைக் கொண்டு வந்தமை, கிடுகுவண்டில் பிரயாணம் கரிக்கோச்சுப் பிரயாணமாக மாறியது, சேர். பொன். இராமநாதனின் ஆயிரம் ஏக்கர் வயல் செய்கைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கரிக்கோச்சியில் கட்டணமற்ற பிரயாணம் முதலான பல நிகழ்ச்சிகளை இந்த நாவலில் தரிசிக்கலாம்.
தென்மராட்சி மக்களின் வாழ்க்கை முறைகள், தொழில் முறைகள், பொழுது போக்கு அம்சங்கள், உணவுப் பழக் கங்கள், மனப்பாங்குகள் என்பவற்றுடன் கிளிநொச்சியில் குடியேறிய மக்களின் வாழ்க்கை முறைகளும், வாழ்க்கை நோக்குகளும், தொழில் முறைகளும், உணவுப் பழக்கங்களும் சிந்தாமல் சிதறாமல் இந்த நாவலில் ஆவணப் படுத்தப்படுவதை அவதானிக்கலாம். கிளிநொச்சிப் பிரதேசத்தின் சமூக வியலை ஆராயப்புகும் ஆய்வு மாண வனுக்கு தேவையான எல்லாத் தகவல்களுமே இந்த நாவலில் உண்டு.
தென்மராட்சிக் கிராம மக்கள் ஒடியல்பிட்டு, குரக்கன்பிட்டு, பயற்றங்காய் பிட்டு, ஒடியல் கூழ், தினையரிசிச் சோறு என்பவற்றை விரும்பி உண்பதையும் கிளிநொச்சி மக்கள் பச்சை அரிசிச் சோறு, மான் இறைச்சி, மரை இறைச்சி, பன்றி இறைச்சி, காட்டுத்தேன் முதலானவற்றை இரசித்து உண்பதையும் இந்த நாவல் சித்திரிக்கின்றது.
நாவலின் பிற்பகுதி விடுதலைப் போராட்டத்தின் சில அம்சங்களைத்
ஞானம் - மார்ச் 2005

தொட்டுக் காட்டுகின்றது. இளைஞர் களின் தியாகங்கள், ஊர் மக்களின் ஆதரவு போராட்டத்தில் வெற்றி தோல்விகள், அரச பயங்கர வாதத்தால் மக்களின் துன்ப துயரங்கள் உயிர் உடைமை இழப்புக்கள், இடப் பெயர்வு அவலங்கள் முதலானவை மிக நுணுக்க விபரங்களுடன் சித்திரிக்கப்படுகின்றன.
நாவலின் கதைப்பின்னல் பாத்திர வார்ப்பு என்பன கச்சிதமாக அமைந் துள்ளன. சிவம் என்னும் சிவப்பிரகாசம் கிளிநொச்சியிலிருந்து இடம் பெயர்ந்து அல்லற்பட்டு ஸ்கந்தபுரத்தில் தளர்ந்த நிலையில் urti யாருடையதோ
வயல்களின் பசுமையை ஏக்கத்துடன்
நோக்குவதுடன் கதை ஆரம்பமாகின்றது. இளைஞனாக அவர் தென்மராட்சியில் வாழ்ந்த வாழ்க்கை, மிகத் தயக்கத்துடன் கிளிநொச்சிக்கு வந்து சொந்தக் காணி பெற்று முயற்சியால் முன்னுக்கு வருதல், பராசக்தியைத் திருமணம் செய்தல், வீடுகட்டுதல், கார், உழவு மெசின் வாங்குதல் என்பவற்றால் வளமான வசதியான வாழ்க்கை வாழ்தல், போர் அநர்த்தங்களால் எல்லாவற்றையும் இழத்தல், பாசமிகு தமையன் வேலாயுதத் தையும், தங்கை அன்னத்தையும் இழந்து துயருறல். இறுதியில் மீண்டும் கிளி நொச்சிக்குத் திரும்புதலுடன் கதை நிறைவடைகின்றது.
“முன்புறம் குனிந்து இரண்டு உள்ளங்கைகளையும் மண்ணில் ஊன்றிக் கொண்டார்.
வீடுவாசல் கட்டடங்கள் வாழ்வு வளம் எல்லாமே அழிந்து விட்டது. ஆனாலும் இந்த மண் மட்டும் திரும்பவும் எங்களிடமே வந்து விட்டது. இந்த மண்ணிலிருந்துதானே எல்லாம் வந்தது. இனியும் வரும். இந்த மண் மறுபடியும்
(σΦ πσοτώ -- το π ή ά 2005
எல்லாவற்றையும் தரும்” என மிகவும் உருக்கமான வாசகங்களுடன் கதை நிறைவுறுகின்றது.
சிவம், வேலாயுதம், அன்னம், மரியகண்டு, கார்த்திகேசு, பராசக்தி முதலான பாத்திரங்கள் எம்மனதில் பசையாக ஒட்டிக் கொள்கிறார்கள்.
கிளிநொச்சிக் காட்டுக்கு வந்து கஷ்டப்பட முடியாது என்று ஆரம்பத்தில் மறுத்த சிவம் ‘உனக்குச் சொந்தமாகக் காணி கிடைக்கும்’ எனத் தமையன் வேலாயுதம் கூறியதும் மனத்தை மாற்றிக் கொள்கிறான். உழைப்பால் உயர்ந்த அவன் உள்ளம் பராசக்தியினால் கவரப்பட்டு, அன்னத்தின் முயற்சியினால் திருமணம் செய்கிறான். “பரந்தனில் எனக்குக் காணி கிடைச்சிருக்கு வீடுகட்ட ஒரு வருசம் எண்டாலும் செல்லும். அதுக்குப் பிறகு நீ அங்கே வந்து இருப்பாய்தானே?’ எனச் சிவம் பராசக்தியைக் கேட்டபோது அவள் தலையசைத்தாள். அந்தத் தலையசைப் புத்தான் உலகத்திலே மிகவும் அழகான தாக இருந்தது.
கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்த சிவம் பராசக்தியிடம் காதலுடைய வனாகவும் சகோதர சகோதரிகளின் மீது பாசமுடையவனாகவும் ஊரவர்களுக்கு உற்ற நண்பனாகவும் திகழ்கிறான். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்காத பாத்திரம் சிவம். சிவத்தின் தங்கை அன்னம் தென்ம ராட்சியிலே வாழ்ந்து திருமணம் செய்து வாழ்ந்தவள், தமையன்மார் மீதும் பெற்றோர் மீதும் அளவற்ற பாச முடையவள் குறிப்பறிந்து சிவத்தின் திருமணத்தை ஒப்பேற்றும் திறமை பெற்றவள்.
கார்த்திகேசுவும் பச்சை வயல் கனவுடன்தான் கிளிநொச்சி சென்றவர்.
45

Page 25
ஆனால் அவரால் வன்னி மண்ணில் உறுதியாகக் கால்பதிக்க முடியவில்லை. அங்கு சம்பாதித்த செல்வத்தில் சாவகச்சேரியில் ஆடம்பரமான வீடு கட்டுவதன் மூலம் தன்னை உயர்த்திக் கொண்டார். இறுதியில் அவருடைய வீடும் குண்டுவீச்சால் தரைமட்டமாகி விடுகிறது. கார்த்திகேசுவைப் போன்ற மனப்பாங்குடையவர்களும் தென்ம ராட்சியில் இருக்கிறார்கள்.
மரியகண்டு இந்தியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வந்து கமஞ் செய்து வாழ்கின்றான். பல ஆண்டுகளாகக் குடும்பத்தைப் பிரிந்து வாழ்கின்ற சோகம். ஏனைய விவசாயிகளுக்கும் உற்ற நண்பனாக ஒத்தாசை புரியும் பண் புடையவன். இளமை முழுவதையும் கிளிநொச்சி மண்ணில் உழைக்கின்றான். இப்படி ஒவ்வொரு பாத்திரமும் எமது கண்முன் நிற்கும் விதத்தில் படைக்கப் பட்டுள்ளனர்.
ஆற்றொழுக்கான சுவாரஸ்யமான மொழி நடை வெகுசன வாசிப்பிற்கேற்ற முறையில் அமைந்துள்ளது.
"இந்தக்குளம் எங்களுக்குக் கடவுள் தந்த வரம். கிளிநொச்சி மண்ணையே வாழ வைக்கிறது இதுதான்”
"கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல் மாதிரித் தண்ணீர்தான்”
“என்னதம்பி செய்யிறது; எங்கேயோ பிறந்து எங்கேயோ வந்து இருக்கிறம். ஏதோ இந்த மட்டில் குளத்து வேலைக்கு எண்டபடியால் எங்களுக்கு இங்கே ஒரு பதிவிருக்கு. இல்லையெண்டால் கள்ளத் தோணி எண்டு பிடிச்சு இந்தியாவுக்கு அனுப்பிப் போடுவினம்.”
என்னும் வசனங்கள் ஆசிரியரின் கதை சொல்லும் முறைக்கு எடுத்துக் காட்டு
தமிழன் சாம்பல் மேட்டில் நின்று கொண்டே மீண்டும் உயரவல்லவன்.
46A
நிலத்துடன் பிணைக்கப்பட்ட விவசாயி என்றுமே நம்பிக்கை இழப்பதில்லை. வயது முதிர்ந்த நிலையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் சிவம் மீண்டும் பச்சைவயல் கனவுடனேதான் இருக்கிறார்.
முடிவாகக் கூறுமிடத்து கிளிநொச்சி மக்களின் வாழ்க்கை முறைகள் எதிர் பார்ப்புகள், போராட்டங்கள், நம்பிக் கைகள், நலந்தீங்குகள், கலைகள், விழாக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் சுவாரஸ்யமான நாவல் இது என்று கூறலாம்
ଓ6ଏ୮ୱ୦୦ ରେ/1
— es .. UHGofg5&56Dont இன்றைய ஏமாற்றங்களின் சமாதானம்
சோம்பேறித்தனத்தின் af-Taafé acortsföu
துயரத்தின் ஏக்கம்
இலeசியங்களின் கனவு
ஏழைகளின் விாழ்வு
இளமையின் 6aferresö
முதுமையின் CUJහි
வாழ்வில் இது இன்றேல்
நாம் ஏது?
O
ஞானம் - மார்ச் 2005
 
 

மையம் கொள்ளும்
நான் அம்மாவைப் போல வடிவாக நிறமாக இருக்கிறதாலைதான் அப்பா என்னை தனியார் வகுப்புகளுக்கும் கோவிலுக்கும் வேறு எங்கெங்குமே செல்லவிடாமல் தடுக்கின்றார் போலும், ‘எங்கடை கலாச்சாரம்’ எங்கடை கலாச்சாரம்' என்று வாய் ஓயாமல் அவர் சொல்வதெல்லாம் என்னுடைய ஆசை அம்மாவை சிறைவைத்து வேலை வாங்குவதற்காகத்தான்.
நல்ல வேளையாக அம்மாதான் அப்பாவை கெஞ்சிக் கேட்டு நான் பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொடுத்திருந்தாள்.
அன்றுதான் இரண்டாம் வருடம் அரையாண்டு இறுதிப் பரீட்சை எழுதிவிட்டு இல்லம் வந்திருந்தேன்.
அதன் பின்னர்தான் தெரிந்தது வெளிநாட்டில் உள்ள மாமியும் அவளது மகளும் விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வர இருப்பதான செய்தி.
“பிள்ளை நித்தியா. உனக்குத் தெரியுந்தானே உங்கடை அப்பாவிலை மாமிக்கு உயிர் எண்டு. அப்பாவை ஒருக்கால் தலை நகரிலை உள்ள தனியார் வைத்தியசாலையிலை மருத்துவப் பரீட்சைக்கு உட்படுத்தவேண்டுமாம். அத்தோடை தானும் மகளும் அப்பா வோடை ஊருக்குப் போய்ச் சொந்தக் காரர் எல்லோரையும் பார்க்கவும் வேணுமாம். அதுதான் வருகினை” - அம்மா விபரித்தா.
"அப்ப. வெளிநாட்டிலை மாமி இருக்கிற இடத்
ஆறாவளி
- வீணை வேந்தன்
பார்க்க யோசிக் கேல்லையோ” - நான் வினாவினேன்.
"அப்பாவிற்கு பிறசர்’ இருக்கிற மாதிரி தெரியுதெண்டு வைத்தியர் சொன்னவுடனேயே அந்த மனுஷன் பிறசர் ரெஸ்ரிங் மெசினை செல வெண்டும் பாராமல் விமானத் தபாலிலை அனுப்பி வைச்சவர். அப்பாவிலை சகோதரங்களுக்கு கரிசினை இல்லாமல் இல்லையே!”
எனது உள்ளுணர்வுகளை தகர்க்கும் நோக்கிலான அம்மாவின் பதில்
அப்பாவிற்கு தங்கச்சி வருகின்றா என்றவுடன் சரியான சந்தோசம். அண்ணாவை அலுவலகத்திற்கு ‘லிவு' போடெண்டு சொல்லி கூலி ஆட்களையும் ஒழுங்கு செய்து விட்டுப் பராமரிப்பு வேலைகள் அனைத்தையும் தடல்புடலாக நடாத்திக் கொண்டிருந்தார்.
அம்மா பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள்.
அப்பா அம்மாவுக்கு கட்டளைகள் வழங்கிக் கொண்டிருந்தார்.
"தங்கச்சிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதெண்டு போனமுறை அவள் வந்து அவதானிச் சனிதானே. இனி இம்முறை மருமகளும் வாறா. ஒரு குறையும் வைக்கக் கூடாது.
நிற்கேக்கை
திலேயே வசிக்கிற சித்தப்பா அப்பாவைப்
சர்வதேச ozaff gobardo சிறுகதை)
ஞானம் - மார்ச் 2005
47

Page 26
அப்பாவின் கதை சுமாராகவே அதட்டுகின்ற மாதிரித்தான் இருக்கும். தங்கச்சி வருகிறதாலை அவருடைய குரல் இன்னும் ஒருபடி ஓங்கியே ஒலித்தது. அம்மா, அப்பாவிற்கு பயந்து பயந்தே வாழப் பழகிவிட்டா.
நாலு வருடங்கள் முன்னராக மாமி மாமாவுடன் வந்து நின்ற நேரம் மாமாவுடைய நீரிழிவு பரிசோதிக்கும் கருவி அம்மாவிற்கு நீரிழிவு இருப்பதை வெளிக்காட்டியது. மாமா அக்கருவியை அம்மாவிற்கே வழங்கிவிட்டு தனது தேசம் திரும்பி விட்டார்.
அன்றுமுதல் அம்மா அடையாளம் காணப்பட்ட நீரிழிவு நோயாளி ஆகி விட்டார்.
அப்பா படுக்கையால் எழும்புவதற்கு
முன்னர் ‘பெட்காபி கொடுக்க வேண்டும். அம்மா கொஞ்ச நேரம் முந்தி எழுப்பினால் 'உன்ரை நேரத்திற்கு நான் எழும்ப வேணுமோ? என்று கேட்பார். கொஞ்சம் பிந்தி எழுப்பினால்.
இவ்வளவு நேரமும் என்ன செய்தனி?’ என்று கேட்பார். நாள் பூராகவும் அவருக்கு சேவகம் செய்வதே அம்மாவின் தலைவிதியாக அமைந்து விட்டது.
அம்மாவும் அப்பாவும் ஒற்றுமையாக இருந்துள் ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ஆதாரம் அண்ணாவினதும் எனதும் இருப்பே. மற்றப்படி அம்மாவில் அப்பாவிற்கு
48
எவ்வித கரிசனையையும் காணவில்லை!
"நித்தியா. இஞ்ச வா பிள்ளை.” அம்மா அழைக்கவும் கொடியில் துணிகளை விரித்துக் கொண்டிருந்த நான் ஓடிவருகின்றேன்.
'பிள்ளை. மாமி நாலு வருசத் திற்குப் பிறகு வருகின்றா. அவவை நான் நன்கு கவனித்து உபசரிப்பன். வெளிநாட்டிலையே பிறந்து அங்கேயே வளர்ந்து இப்ப எங்களைப் பார்க்க எண்டு மனமொப்பி வாற மருமகளை நீதான் பிள்ளை மனம் கோணாமல் கவனிக்க வேணும்.”
- அம்மாவின் பரிதவிப்பு “உங்கடை கதையைப் பார்த்தால் அம்மா, நீங்கள் அப்பாவிற்கு பயந்து கருமமாற்றுகிற மாதிரி கிடக்குது.
நான்
எங்களைப் பற்றி எந்த அக்கறையு
ஞானம் - மார்ச் 2005
 

மில்லாமல் வெளிநாட்டிலை சுக சீவியமே கருமம் எண்டு இருப்பினை. அவையள் இஞ்சை வாற எண்ட உடனை நாங்கள் தலையிலை தூக்கி வைச்சுக் கொண்டாட வேணுமோ..?”
- நான் எனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினேன்.
"அப்படிச் சொல்லாதை பிள்ளை. அப்பாவுக்கு ஐம்பது வயதிற்கு மேலையாய் போச்சு. அவர் உடம்பிலை கவனமில்லாமல் இருப்பார். தான் நேரிலை வந்து நிண்டு அவரை அழைச்சுப் போய் பூரண மருத்துவ பரிசோதனை செய்ய வேணுமெண்டநல்ல நோக்கத்திலையெல்லே மாமி வாறா.”
- அம்மா பரிவுடன் பேசினாள். ‘மாமிக்கு அப்பாவிலை கரிசனை இல்லையெண்டு ஆர் சொன்னது. மாமிக்கு எங்களிலைதான் கரிசனை இல்லை”-நான் “ஏன் பிள்ளை. உனக்கு என்ன வேணுமோ நீ மாமியை கேளன். அவா இல்லையெண்டு சொல்ல மாட்டா.”
அம்மா அப்படிக் கூறவும் பிறரிடம் கையேந்தி நிற்கும் அவளது சுபாவத்தை எண்ணிக் கவலையுற்றேன்.
"அப்ப அம்மா. எனக்கு ஒரு சோடி ‘பான்ற்ரும் ரீசேட்டும் வாங்கித் தரச் சொல்லி மாமியைக் கேட்கட்டே?”
நான் ‘பான்ற் ரீசேட் அணியக் கூடாதென்பது அப்பாவின் கட்டளை.
அம்மா தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
கைத்தறி சேலைக்குள் தன்னை மறைத்துக் கொண்டது போலவே அம்மா இந்த வீட்டுக்குள்ளும் தன்னை ஒடுக்கிக் கொண்டு விட்டாள்.
மாமியின் வருகை காரணமாக வீட்டுப் பராமரிப்பு வேலைகள் பூர்த்தியாகி வீடு பிரகாசமடைந்தது.
ஞானம் - மார்ச் 2005
அப்பா வீட்டை ஒவ்வொரு கோணத்தில் நின்று பார்த்து திருப்தி அடைந்தார்.
“விமான நிலையத்திற்குப் போற வானுக்கு ஏ. சி. இருந்தால்தான் நல்லது. ஆயிரம் ரூபா போலதான் கூடவாம். அதுகளுக்கு செளகரியமாய் இருக்கும். காசைப் பார்க்கேலாது.”
அம்மாவினுடைய காரியங்களுக்கு காசைப் பார்க்கேலாது என்று எப்போ தாயினும் ஒரு தடவை கூடச் சொல்லாத அப்பாவா அப்படிக் கூறு கின்றார் என்று எண்ணி எனது மனம் மலைத்தது.
இருபது வருடங்களாக சிகரட்டை தொடராக ஊதித் தள்ளி சிறார்களாக இருந்த என்னையும் அண்ணாவையும் சாப்பாட்டு விடயத்தில் கூட ஒறுத்த அப்பா திடீரென்று ஒருநாள் சிகரட் புகைத்தலை நிறுத்திக் கொண்டதும் அம்மா அப்பாவைத் தெய்வம் என்றே போற்றிக் காலில் விழுந்து வணங்கினாள். அப்பா சிகரட் குடியை நிறுத்தியதற்கு காரணம் தனது உடல்நலனில் ஏற்பட்ட அதீத அக்கறையே என்பது அடுத்தடுத்த தினங்களில் வெளிப்பட்டது.
உண்மையிலே
“தங்கச்சி தொலைபேசியிலை கதைக்கேக்கை சொன்னவா ரெட்வைன்’ கட்டுப்படுத்தும் எண்டு. தங்கச்சி சொல்லேக்கை நான்
'கொலஸ்ரோலை
தட்டவும் ஏலாதெல்லே.?”
அதன் பின்னர் எமது குளிரூட்டியில் சிவப்பு வைன் போத்தல்கள் நிரை நிரையாகக் காணப்பட்டன.
அப்பா தனி வாகனம் கொண்டு போய் மாமியை விமான நிலையத் திலிருந்து அழைத்து வந்து விட்டார்.
49

Page 27
மாமி இருந்தவாறே இருந்தாள். மச்சாள் சிலிம்’ ஆக நிறமாக வடிவாக
இருந்தாள். தலைமயிரை 'ஸ்ரெயிற்றிண்' பண்ணி தமிழச்சி அல்லாதோருடைய
தோற்றத்தை எட்டியிருந்தாள். அவளோடு
நெருங்கிப் பழகியதில் எங்களுடைய 856u TeFITJh மாமியால் அவளுக்கு புகட்டப்பட்டிருந்தது தெரிந்தது. ஆனால் வாழ்க்கை முறை முற்றாக மாறியிருந்தது. ஆங்கிலம் அழகாகப் பேசினாள். தமிழை விளங்கிக் கொள்ள கஷ்டப் பட்டாள்.
அப்பா தனது மருமகளைத் தங்கை வளர்த்திருக்கும் முறை பற்றி வியந்து பேசினார்.
எனக்கு தடை செய்யப்பட்ட ‘பான்ற்ரும் ரீசேட்டும் அவளுக்கு எப்படிப் பொருந்துகின்றது என்று நான் வியந்து கொண்டிருந்தேன்! மச்சாளை அருகிலிருந்து பார்த்தாலும் தூர இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே அழகாக இருந்தாள். புருவங்கள் வரைந்தது போலவும் உதடுகள் பிடித்து வைத்தது போலவும் கண்கள் அகன்று நாசி கூர்மையானதாகவும் அங்கங்கள் எல்லாம் அழகுக்கு அழகூட்டு வனவாகவும் கவர்ச்சி காட்டின. அதற்கெல்லாம் 'மேக்கப் ஒத்துழைத்த தென்பதையும் மறுக்க முடியாது.
“ஏன் மச்சாள். உங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கை பற்றி கொஞ்சம் சொல்லுங்கோவன்.”
எனது கேள்வியை விளங்கிக் கொள்ள அவளுக்குச் சிறிது நேரம் பிடித்தது. கேள்விக்கான பதிலை மனதில் ஆங்கிலத்தில் சிந்தித்து பின்னர் எனக்கு விளங்கும்படியாக தமிழில் அதனை மொழி பெயர்த்துக் கொள்ள மேலும் சில
அப்பாவால்
50
நிமிடங்கள் எடுத்தன. பின்னர் உதடு களைக் கூட்டி கூட்டி அழகாகப் பேசத் தொடங்கினாள்.
"நித்தியா. நாங்கள் படிக்கும் இடம் என்றாலும் சரி வேலை பார்க்கும் இடம் என்றாலும் சரி எங்கும் எவரையும் வயது வேற்றுமையின்றி பெயர் சொல்லித்தான் அழைப்போம். போலி கெளரவங்களுக்கு அங்கு இடமில்லை. வீட்டில் அப்பா அம்மாவினை நாம் மதித்து நடந்தாலும் அவர்களும் அதே அளவு மதிப்பினை எங்களுக்குத் தரவேண்டும் என்பது கட்டாயம். விடயங்கள் பற்றி நாங்களே தீர்மானிப் போம். அம்மாவும் அப்பாவும் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களாதலால் இந்நாட்டுக் கலாச்சாரம் இன்னும் கொஞ்சம் அவர்களிடத்தில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. அப்பா இப்போதும் அம்மாவை அதட்டுகின்றார்; ஆட்சி செய்கின்றார். அதனால் அம்மா மனமுடைந்து பல சமயங்களில் வருந்துவது எனக்குக் கவலையைக் கொடுக்கின்றது. அம்மா அப்பா சம்பந்தப்பட்ட விடயங்களில் நாங்கள் தலையிடாவிட்டாலும் எங்களுடைய விடயங்களில் அவர்கள் இடையூறு செய்யாதபடி பார்த்துக் கொள்வோம்.” அப்படிக் கூறிவிட்டுச் சிரித்தாள். நானும் அவளும் ஒத்த வயதினராக இருந்ததால் சில விடயங்களை அவளிடம் நேரடியாகவே வினாவினேன்.
'பாலியல் விடயங்களில் நீங்கள் அதிக அளவு சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுகிறியள் போலை.?
மச்சாள் என்னைக் கவலையுடன்
எங்கள் எங்களுடைய
உற்றுப் பார்த்தாள். எனக்கு ‘திக் என்றிருந்தது. பாலியல் வேட்கை
ஞானம் - மார்ச் 2005

ஒரு மிருகத்தின் ஸ்தானத்தில் வைத்து அவளைப் பார்த்து விட்டதான குற்ற உணர்வு எனது மனதை
கொண்டலையும்
தைத்தது.
“நித்தியா. எங்களுக்கெண்டு எல்லா விடயங்களிலும் சுதந்திர
முண்டுதான். ஆனால் அம்மா வாயிலாக இந்த நாட்டுக் கலாச்சாரம் பற்றி நாம் அறிந்து கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒப்புமையற்ற கருத்தியலை ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்னர் உடலாரோக் கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் இச்சமுதாய கலாச்சாரம் வழங்கும் உத்தரவாதத்தைப் புறக்கணிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக் கின்றோம்.”
மச்சாள் அப்படிக் கூறவும் நான் வேகமாக எழுந்து அவளை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தேன். உடல் புல்லரித்தது. ஆனந்தக் கண்ணிர் பெருக்கெடுத்தது.
மச்சாள் சிலிம்’ ஆக இருந்தாள். அதற்கு காரணம் அவள் தற்காப்புக் கலையை நன்கு பயின்றிருந்தாள். எதிரிகள் பற்றிய அச்சம் அவளுக்கு இல்லாதிருந்தது. அவள் தங்கியிருந்த நாட்களில் எனக்கும் அக்கலையைப் புகட்டினாள். உடலாரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் அது எனக்கு வழங்கியது.
மாமி வருவதற்கு முன்னமே அம்மா ஆகாரத்திற்குத் தேவையான அனைத்து மா வகைகளையும் தூள் வகைகளையும் ஆயத்தம் செய்திருந்தாள். ஆனால் சமையல் அறைத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வசதி அற்றவையாக இருந்தமையால் அவள் கஷ்டப்பட்டே கருமங்களை ஆற்ற வேண்டி இருந்தது.
ஞானம் - மார்ச் 2005
‘அண்ணி. உங்களிட்டை மைக்ரோவ்வேவ் அவண்' இல்லையோ? பிரஷர் குக்கர்’. றைஸ்குக்கர்’ பிளென்டர். எதுவுமே இல்லையோ? அங்கையெல்லாம் நாங்கள் ஒரு கிழமைக்கு ஒருக்காத்தான் சமைக் கிறனாங்கள். சாப்பாட்டு வகைகளை பிறிஜ்ஜில் போட்டு வைச்சுவிட்ட மெண்டால் அவை அவை தாங்கள் விரும்பிய நேரம் விரும்பிய அளவு சாப்பாட்டை மைக்ரோ வேவ் அவனில் வைச்சு சூடுகாட்டிச் சாப்பிட்டு விட்டுப் போடுவினம்.”
மாமி கூறுவனவற்றை அம்மா வியந்து வியந்து கேட்கும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.
அப்பா தனி 'வான்’ பிடித்து தங்கையையும் மருமகளையும் உறவினர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றார்.
மாமி வீட்டிலேயே அப்பாவின் இரத்த அழுத்த நிலை, இரத்தத்தில் 'குளுக் கோசின் அளவு மற்றும் உடல் எடை ஆகியனவற்றையும் பரீட்சித்துப் பார்த்தாள். பின்னர்.
'அண்ணி. நீங்கள் அண்ணாவை கவனிக்கிறேல்லையா? எல்லா ரெஸ்ற் ருமே போடர் லைனைக் காட்டுது. ஆனபடியா கொலஸ்ரோலும் கூடவாகத் தான் இருக்கும். கடைசியாக நீங்கள் எப்ப அண்ணாவை வைத்தியரிடம் காட்டின னிங்கள்? 'ஈ. சி. ஜி எடுத்துப் பார்த்தனிங்களா?”
அம்மா முழிகள் பிதுங்க ஒன்றுமே புரியாமல் மாமியைப் பார்த்தாள். அவளுக்கு தலையிடி, காய்ச்சல், கை கால் வாதை, இப்படியான வருத்தங்கள் பற்றித் தான் தெரியும். எனவே அண்ணி என்ன
51

Page 28
சொல்கின்றார்? மனதைக் குழப்பிக் கொண்டாள்.
நாளைக்கு நான்
என்று யோசித்து
‘அண்ணி. அண்ணாவை தலைநகருக்குக் கூட்டிப் போறன். முழுமையான மெடிக்கல் செக்கப் ஒண்டு செய்தால்தான் அண்ணாவிற்கு எந்த வருத்தமும் வராமல் காப்பாத்தலாம்.”
மாமி அப்படிச் கேட்டதும் அம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இறுகப் பிடித்தபடி கண்ணிர் சொரிந்தாள்.
அவருக்கு ஏதாவது நடந்தால் எங்களுக்கு ஆர் மச்சாள் துணை? நான்
சொன்னதைக்
மச்சாளின் கைகளை
உயிரை மாச்சுப் போடுவன்.
அம்மா அழுவதைப் என்னால் தாங்க முடியவில்லை. எனது கண்களும் நீரை உகுத்தன.
அம்மாவிற்கு அப்பா மேல் இவ்வளவு பாசம் இருக்கக் காரணம் என்ன?
பார்க்க
அப்பாவைக் காட்டிலும் பத்து வயது குறைந்த அவளது சிறுபிள்ளைத்தனமா? அல்லது தலைமுறை தலைமுறையாக தாலிமேல் ஏற்பட்ட பதிபக்தியா?
எனது சிந்தனையைச் சரி என நிரூபிப்பது போலவே அவள் தாலியை கைகளில் ஏந்திக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
மாமி கட்டணம் செலுத்தப்பட்ட தொலைபேசிகாட்வாங்கி வெளிநாட்டில் வாழும் சகோதரனுக்கு அப்பாவின் வருத்தங்களை மிகைப்படுத்திக் கூறினாள். அவரும் தொலைபேசி வாயிலாக எவ்வளவு பில் வந்தாலும் தான் பணமனுப்புவதாகவும் உடனடியாக அப்பாவை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவ பரிசோத னைகளைச் செய்யும்படியும் கூறிவிட்டார்.
52
மறுநாளே அப்பா மாமி மகள் மூவருமே தனி வானில் தலைநகர் சென்று விட்டனர். அண்ணாவும் சென்றுவிட நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் எஞ்சினோம்.
அம்மாவிற்குச் சிறிது ஒய்வு கிடைத்தது. நான் வீடு வளவு, உடுதுணிகள் என்று அனைத்தையும் சுத்தம் செய்தேன்.
மாமிக்காக
வேலைக்குச்
அம்மா தயாரித்த சுவையான பண்டங்களும் சாப்பாட்டு வகைகளும் குளிரூட்டியில் நிறைந் திருந்தன. சமையல் செய்வதைத் தவிர்த்து அவற்றை உண்டு சமாளித்தோம்.
gjiblot மெலிந்து Göfffff வடைந்திருந்தாள். நான் அருகிலிருந்து அவளை தடவிக் கொடுத்தேன். அவளது தந்தை தொலைவில் உள்ள அவர்களது சொந்தக் கிராமத்தில் நோய்வாய்ப்பட்டு இறுதி மூச்சிற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.
ஏழ்மை அங்கு அரசோச்சிக் கொண்டிருந்தது.
'அம்மா. நீங்கள் ஒருக்கால்
ஊருக்குப் போய் அம்மப்பாவினுடைய சுக பார்த்துவிட்டு வாங்கோவன். அம்மப்பா உங்களைப் பார்க்க ஆசைப்படுவாரெல்லோ? அவருக்கு ஏதாவது கொண்டு போய் கொடுத்தாலும் நல்லது.”
அம்மாவின் கண்களிலிருந்து 'பொலு பொலுவென நீர் வடிந்தது. எனக்கெங்காலையம்மா நேரம்? என்று
சேமங்களைப்
அவளது வழமையான வார்த்தைப்
பிரயோகமே இப்போதும் வந்தது.
தனது கால நேரத்தையெல்லாம்
தனக்குத் தாலி கட்டி வாழ்க்கை வழங்கிய
ஞானம் - மார்ச் 2005

தனது கணவனுக்கே தாரை வார்த்த பின். அவளுக்கென்றேது கால நேரம், அவளுக்கென்றேது உற்றார் உறவி னர்கள்.
மூன்றுநாட்கள் தலைநகரில் ஆடம்பரம் மிக்க தனியார் வைத்திய சாலையில் தங்கி வைத்திய அறிக்கை பெற்றதில் அப்பாவிற்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை என்பது உறுதியாயிற்று
அம்மா, தான் அப்பாவிற்காக நேர்த்தி வைத்து வணங்கும் தெய்வங்களுக் கெல்லாம் கைகூப்பி நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
நோயுடன் அவளது தந்தை சொந்தக் கிராமத்தில் எதுவித வைத்திய வசதியு மின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் கொடூரத்திற்காக வருந்த நேரமின்றி நோயற்ற தனது கணவனுக்காக பெறப்பட்ட வைத்திய அறிக்கை பற்றி ஆனந்தம் கொள்ளும் அம்மாவை என்னென்பது.?
அம்மா புதுத்தென்பு பெற்று மாமியை உபசரிக்கத் தொடங்கினாள். அவளுக் காகக் கடமைகள் அனைத்தையும் தானே நிறைவேற்றினாள். அம்மாவின் உயிருக்கு அனுக்கிரகம் செய்த தேவதையல்லவா அவள்
மாமியின் பயண நாள் அண்மிக்க அண்மிக்க வேலைப்பழு காரணமாக அம்மா சோர்வடையத் தொடங்கியதை நான் மட்டுமே அவதானித்தேன்.
திடீரென அன்று காலை அறிவற்று விழுந்தவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். நீரிழிவு நோய் அதிகரித்ததாலும் அச்சமயத்தில் களைத்து வேலை செய்ததாலும் உரிய நேரத்தில் வைத்தியப் பராமரிப்பு வழங்கப் படாததாலும் அம்மா கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள்.
ஞானம் - மார்ச் 2005
வைத்தியர் கைவிரித்து விட்டார். “அவளை மீட்க முடியாது. அவள் இன்றோ இன்னும் பல நாட்கள் கழித்தோ மரணிக்க கூடும்”
நான் தலையிலடித்து ஒலமிட்டு அழுது குளறினேன்.
வைத்தியசாலையில் இருந்து வந்த அப்பா, மாமியிடம்.
“அவா தனக்குள்ள வருத்தம் பற்றி யோசித்து சாப்பாட்டு விசயத்திலை கட்டுப்பாடாய் நடக்கிறேல்லை. நாங்கள் இல்லாத நேரத்திலை உங்களுக்குச் செய்த இனிப்பு திண்பண்டங்களை யெல்லாம் நல்லாய்ச் சாப்பிட்டிருப்பா” என்று அபாண்டமாகப் பழி சுமத்தினார்.
அந்த வார்த்தை எனது செவிகளில் நாராசமாகப் பாய்ந்தது.
எனது விழிகளிலிருந்து நீர் பெருக்கெடுத்தது.
நெஞ்சிலிருந்து கிளம்பிய விம்மல் தொண்டைக்குழி வரை மேலெழுந்து மேலெழுந்து மீண்டும் மீண்டும் அமுங்கியது.
தலை நிமிர்ந்து பார்க்கின்றேன். தொலைவில் மாமியும் அப்பாவும் சர்வ சாதாரணமாக போய்க் கொண் டிருந்தார்கள்.
வீட்டின் துடிப்பு அடங்கி விட்டது. எல்லாமே சூனியமாகி விட்டது!
'அம்மா என் அம்மாவே' என்ற அண்ணாவின் ஒலம் தொலைவில் ஆரம்பித்து அருகருகாகக் கேட்கின்றது. மச்சாள் மட்டுமே என்னருகே வந்து நின்று என்னை பரிவுடன் பார்த்துக் கண், கலங்கி நிற்கின்றாள்.
அவளுடைய 'பான்ற்ரும் f சேட்டும் முன்னரைக் காட்டிலும் இப்போ எனக்கு அழகாகத் தெரிகின்றது!
53

Page 29
*கலாபூஷணம்’, ‘இலக்கிய வித்தகர்" சாரல்நாடன் மணிவிழா
ஞானம் கலை இலக்கியப்பண்ணையின் ஏற்பாட்டில் பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரல்நாடன் அவர்களின் மணிவிழா 30-01-05 ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் தமிழ்ச் சங்கமண்டபத்தில் நடைபெற்றது. ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் கொழும்புக்கிளை தலைவர் திரு என். சோமகாந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் சி. தில்லைநாதன், கம்பவாரிதி இ. ஜெயராஜ், திரு தெளிவத்தை ஜோசப், திரு ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, திரு அந்தனிஜீவா ஆகியோர் சிறப்புரை வழங்கினர். தமிழ்மணி திரு வெள்ளைச்சாமி, கவிஞர் மேமன்கவி ஆகியோர் கவி வாழ்த்து வழங்கினர். ஏராளமான எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் இவ்விழாவில் கலந்து விழாநாயகன் சாரல்நாடனையும் திருமதி சாரல்நாடனையும் கெளரவித்துச் சிறப்பித்தனர். ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் செயலாளர் திரு ஆர்.பி. யூரீதரசிங் அவர்களின் சார்பில் கவிஞர் கனிவுமதி நன்றியுரை வழங்கினார்.
}{G୯୦୫ 疑 6/76ógva7 to/iaiovvil
தி. ஞானசேகரனின் படைப்புகள்
ல் குருதிமலை (நாவல்-மூன்றாம் பதிப்பு. மணிமேகலைப்பிரசுரம்)
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஏம். ஏ. வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. தற்போது கனடா வைகறை பத்திரிகையில் தொடராக மீள்பிரசுரம் பெற்றுவருகிறது. விலை ரூபா: 225/-
69 վélայ சுவடுகள் (நாவல் - இரண்டாம் பதிப்பு. மணிமேகலைப் பிரசுரம்)
இலங்கை சாகித்திய மண்டலப்பரிசினைப் பெற்றது. சாதியத்திற்கு
எதிரான நாவல் . இந்நாவலில் யாழ்ப் பாணக் கிராமியத்தின்
மண்வாசனையை நன்றாகவே உணரமுடியும். விலை ரூபா: 180/-
9 அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்
(சிறுகதைத் தொகுதி. மல்லிகைப்பந்தல் வெளியீடு) இந்நூல் தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. விலை ரூபா. 100/-
தபாலில் பெறவிரும்புவோர்
தபாற் செலவு ரூபா 25/- சேர்த்து அனுப்பவேண்டும். தி.ஞானசேகரன், 3-B, 46வது ஒழுங்கை, கொழும்பு- 06 浸○○※B効ー※宅※※※※※※※B盗※※※E※※※※※※※宅※宅※宅※宅※江○翼
54 ஞானம் - மார்ச் 2005
 
 

எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை. மனோகரன்
நல்ல மனம் படைத்த மனிதர்
கண்டியில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் என்றதும், சட்டெனப் பலருக்கும் ஞாபகம் வருபவர், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர், இரா. அ. இராமன்தான். எந்த நிகழ்ச்சியையும் அழகாகவும், ஒழுங்காகவும், திறமையாகவும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பவர் எனப் பெயர் எடுத்தவர், அவர். அமைச்சர்கள் முதல் அடிமட்டத்து மக்கள் வரை அனைவருடனும் பழகக்கூடியவராக அவர் விளங்குகிறார். இராமன் இயல்பாகவே கலை இலக்கிய உள்ளம் படைத்தவர். கலை இலக்கியவாதிகளை நேசிக்கும் பெருமனம் கொண்டவர். இளைய தலைமுறையினரை மேடைக்கு அறிமுகப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்குப் பெறுவதற்கு அவர் உதவி வந்துள்ளார். நல்லவற்றைப் பாராட்டும் நல்ல உள்ளம் அவருக்குரியது. பிரதேசவாதம் சிறிதுமில்லாத ஒருவராகவும் அவர் விளங்குகிறார்.
அயோத்தி இராமன் தோளில் வில்லுப் பூட்டியவன்; கண்டி இராமன் எப்போதும் காலுக்குச் சில்லுப் பூட்டியவர் என்று, அவரது சுறுசுறுப்புக் குறித்து நான் எப்போதும் சொல்லிக் கொள்வதுண்டு. ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களும், கண்டி மக்களும் இணைந்து அவரைப் பாராட்டி விழாவெடுத்து பட்டமளித்து, பொற்கிழியும் வழங்கினர்.
இராமன் அம்மா, பூரணி, கண்டி இலக்கியச்
செய்திமடல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து, அவற்றை வெளியிட்டு, தமது கைகளை நன்றாகவே சுட்டுக் கொண்டவர். அவரது கண்டி இலக்கியச் செய்திமடல் என்ற சஞ்சிகையில், அநேகமாக ஒவ்வோர் இதழிலும் நான் எழுதி வந்திருக்கிறேன்.
நல்ல உள்ளம் படைத்த இராமன், பொருளாதார ரீதியில் வாழ்க்கைச் சிக்கல்களை நாளாந்தம் அனுபவித்து வருபவர். அறுபது வயதை அடைந்து, மணிவிழா நாயகராக அவர் விளங்குகிறார். நல்ல உள்ளங்களின் கடைக்கண் பார்வை அவர்மீது பதிய வேண்டும். இராமனின் பணிகள் மேன்மேலும் தொடரவேண்டும்.
ஒரு கலையரசி "நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை” என்று சி. என். அண்ணாதுரையால் பாராட்டப்பட்ட நடிகை, பானுமதி. தமிழ்த் திரையுலகில் தமது நடிப்பாற்றலால் புகழ்பெற்ற சில நடிகைகள் இருந்துள்ளனர். அவர்களுள் தன்னம்பிக்கையும் தன்முனைப்பும் கொண்டவராக விளங்கும் பானுமதி, நடிப்பிலும், பாட்டிலும் தமக்கென ஒரு
ஞானம் - மார்ச் 2005 55

Page 30
தனித்துவத்தைக் கொண்டவராகத் திகழ்கிறார். திரையிசையில் பலவிதமான பாடல்களை அவர் பாடியிருந்தாலும், இயல்பாக அவரது ஈடுபாடு சாஸ்திரீய சங்கீதத்திலேயே ஆகும். ஆரம்ப கட்டத்தில் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும்போது, ஒவ்வொரு படத்திலும் ஒரு தியாகராஜர் கீர்த்தனையோ அல்லது ஒரு கர்நாடக இசைப்பாடலோ பாடிவிட வேண்டுமென்று துடித்தவர் அவர்.
ஆணாதிக்கம் கோலோச்சும் திரைப்படத்துறையில், தமது தனித் துவத்தை இழந்துவிடாமல் தமது திறமையை வெளிக்காட்டி வந்தவர், பானுமதி. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் கூடத் தம்முடன் நெருங்கி நடிக்க அச்சப்படுவர் என்று பானுமதி ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். கள்வனின் காதலி (1955) திரைப்படத்தில், சிவாஜி கணேசன் தம்முடன் தொட்டு நடிக்கக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த போது, பானுமதியே இயக்குநரிடம் சென்று, சிவாஜி தம்மைத் தொட்டு நடிக்கலாம் என்று கூறினார். பானுமதியோடு தாம் நடிக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் மிகவும் விரும்பியவர், சிவாஜிகணேசன் இலங்கையில் தமக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு வருகை தந்திருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் அவர் பானுமதியைப் பற்றியும் குறிப்பிட் டிருந்தார். “கொஞ்சம் அசந்துட்டா, நடிப்பிலே அந்த அம்மா அப்பிடியே தூக்கிச் சாப்பிட்டிடுவா” என்று அவர் கூறியிருந்தார். அத்தகைய ஒர் ஆற்றல் வாய்ந்த நடிகை, பானுமதி.
பானுமதியின் நடிப்புச் சிறந்ததா, அவரின் பாடல்கள் சிறந்தனவா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தக்கூடிய முறையில், அவர் இரண்டிலுமே சிறந்து
56.
அவர் பாடாமல் நடித்தார்.
விளங்கினார். அவர் பாடாமல் நடித்த சில படங்கள் நன்றாக ஓடவில்லை. ராஜபக்தி, பூவும் பொட்டும் போன்ற சில படங்களில் படங்களும் சரிவர ஓடவில்லை.
திரைப்படங்களில் பானுமதி சிறப்பாக நடித்திருந்தாலும், சில படங்களில் வயதைக் காட்டும் அவரது தோற்றம் எடுபடாமலும் போனதுண்டு. அம்பிகாபதி (1957) திரைப்படத்தில் சிவாஜி கணேசனும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித் தார்கள். ஆனால், அத்திரைப் படத்தில் சிவாஜியைவிட வயதால் கூடிய பானுமதியின் தோற்றம் (அப்போது அவருக்கு 33 வயது) ஒர் இளவரசிக் குரியதாக அமையவில்லை. அதனால், படமும் சரியாக ஓடவில்லை. அன்னை (1962) என்ற திரைப்படம் பானுமதியின் நடிப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது எனலாம். பானுமதியின் கலைத் திறமையை மெச்சி, அவருக்கு ஒரளவுக்கு இளம் வயதிலேயே கலைமாமணி என்ற விருது கிடைப்பதாக இருந்தது. ஆனால், வயதானவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய அவ்விருதை இளம் வயதிலேயே தாம் பெறமுடியாது என்று பானுமதி மறுத்துவிட்டார். பின்னர், தமது அகம்பாவத்துக்காக அவர் வருந்தினார்.
நடிகை," பாடகி, இசையமைப்பாளர், இயக்குநர் என்று பல வழிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வந்த பானுமதி, இன்று நோய்வாய்ப்பட்டுப் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். வாழ்வின் கடைசி அந்தத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார், எண்பது வயது பானுமதி. தமிழ், தெலுங்குத் திரைப்பட வரலாற்றில் பானுமதிக்கு நிரந்தரமான ஒர் இடம் உண்டு.
ஞானம் - மார்ச் 2005

வாழ்த்தும் விமர்சனமும்
கடற் கொந்தளிப்பு ஏற்படுத்திய அனர்த்தங்களுள் ஒன்று, அபிலாஷ் என்ற நான்கு மாதக் குழந்தையையும், அதன் பெற்றோரையும் பிரித்து வைத்தமை UT(5th. நல்ல வேளையாகப் பெற்றோருடன் குழந்தை இப்போது சேர்ந்து விட்டது. கடற்கொந்தளிப்பு அப்பெற்றோருக்கு ஏற்படுத்திய உள்ளக் கொந்தளிப்பு சொற்களில் வடிக்க
முடியாதது. அண்மைக்காலத்தில் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து கொண்ட அந்தச் சின்னஞ்சிறு
அபிலாஷக்கு எனது வாழ்த்துக்கள்!
நமது நாட்டில் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களைக் காண்பது என்பது ஒரு பகற்கனவு. பொறுப்புள்ள அரசியல் வாதிகளாக விளங்க வேண்டிய சிலர், உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசுவதும், பின்னர் ஒரிரு நாட்களில் தாங்கள் கூறியதைத் தாங்களே மறுப்பதும், இந்நாட்டின் மிகக் கேவலமான அரசியலாகிவிட்டது. துணிச்சல் இல்லாத
கலாபூஷணம
அமரர் புலோலியூர் க. சதாசிவம்
வர்கள் அரசியல் பேசாமல் இருப்பதும், அரசியல் விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதும் நன்று.
நாடு நடக்கிற இலட்சணத்தில், அரச தொலைக்காட்சியொன்று புதிய “கண்ணோட்டம்’ ஒன்றைத் தொடங்கி யுள்ளது. குறிப்பிட்ட தொலைக்காட்சி அண்மைக்காலங்களில் சில நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால், அது வழங்கும் “கண்டோட்டம்” ஒற்றைக் கண் பார்வையுடனேயே செயற்படுகிறது. அந்த நிகழ்ச்சிக்கான பிரதியை எழுதுபவர், தமது அளவற்ற இராசவிசுவாசத்தைக் காட்டப்போய், அவ்வப்போது தமிழ் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறார். அறிந்தோ, அறியாமலோ அவர் எழுதுவது கடைகெட்ட பேரினவாதிகளுக்குச் சார்பாகவே அமைந்து விடுகிறது. இந்தக் “கண்ணோ ட்டம்”குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு இருக்கின்ற கொஞ்சநஞ்சமரியாதையையும் கெடுத்து விடுகிறது. O
ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி
முதற்பரிசு இரண்டாவது பரிசு மூன்றாவது பரிசு
ebuT 5000/- ரூபா 3000/- ரூபா 2000/-
ஏனைய ஒன்பது சிறுகதைகளுக்கு ஞானம் பரிசுச் சான்றிதழ்கள்
வழங்கப்படும்.
ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் போட்டிக்கு அனுப்பலாம். ஏற்கனவே பிரசுரம்பெற்ற கதைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாது. போட்டி முடிவுதிகதி
15-04-2005
தேர்வுபெற்ற சிறுகதைகள் ஞானத்தில் பிரசுரம் பெறுவதோடு
தொகுப்பாகவும் வெளியிடப்படும்.
ஞானம் - மார்ச் 2005

Page 31
epocasSeoareèr coeEye3rò
UseQQ2O (SCrepog S5EMò
- உவைஸ் கனி பழுத்த எறிகதிர் கோடுகளாய் நைலோன் விலைகளில் எந்த நாரைகளும் இன்று சிக்குவதில்லையென்றாலும் குளங்கள் வற்றிய கிராமத்திலோர் நாள்.
பொதுவிடுதியில் திங்கிப்படித்த காலத்தில் பேய்வேடம் போeட பாவுத்திற்காக பகிடிவிதை முடித்து வீடுசேர முடியாமல் பேய் மிரeடிகளும், ஊமத்தைகளும் அடர்ந்த காeடில்
தேன்குடித்த செeடைஎறும்புகள் இராeஷதபேயாகி கெeட போதிையில் செம்மண் வீeடை சுற்றுமைன்றெண்ணி இரா குளிரில் நடுங்கும்போது
நான் அடித்த மணிக்காக அரசபேருந்தில் இருந்து இறங்கிப்போகும் பலருடன் தனியனாய் போகும் சிறுவனிடம் என்னுள் சிதைந்த கம்ரேம் இருந்தது இருமடங்காக
கள்ளப்பேயை எண்ணி கனநாள்பeட கவிலையை போக்கிடும் வகையில் வளர்ச்சியின் பெயரால்
என் காடுகள் அழித்து சிதைத்தினர் மின்சார கம்புகள் நeடும்போது விானைத் தொடுமைன்றெண்ணி தின் பeடத்தை கeg பறக்கவிeடான் அச்சிறுவின்
சண்டைகள் நடந்து நாடழுததால் விளக்குகள் எரிவதை காணாமலேயே விமானம் ஏறிப்போனான் - என்னில் எப்போதோ பேய் விரeடிய அச்சிறுவின்
ஒல்லாந்தில் ஒதுங்கிப்போன அதிதுயரோடு புலம்விeடகன்ற சினேகிதச் சத்தம் எனது காதுகளில் அதிர்ந்தெழுந்தாலும் தாய்மண்ணில் சிறுகூeடையேனும் இன்றுவரை மனசுக்குள் கeடியதில்லை விேeடையாடிய
வெற்றிடத்தில்,
58 ஞானம் - மார்ச் 2005

ഗZശ്രബശ്
ശബ്ബ് ബ്ര ബല്ല്ല്
്യമല്ലൂര് -பார்வையும் பதிவும் -
சுன்னாகம் குமாரசாமிப் புலவர் 150 ஆவது ஆண்டு நினைவு
சுன்னாகம் குமாரசாமிப்புலவர் 150 ஆவது ஆண்டு நினைவு விழா கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய பேராசிரியர் சி. தில்லைநாதன் குமாரசாமிப் புலவர் பற்றிய தனது உரையில் பின்வருமாறு தெரிவித்தார். “தமிழ் மொழி உரிமை குறித்தும் எமது நீண்ட இலக்கியப் பண்பாட்டுப் பாரம்பரியங்கள் குறித்தும் உறுதியோடு இன்று எம்மால் பேசமுடிகிறது என்றால் அதற்கான அடித்தளத்தை அமைத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களே எனலாம். அவர்களுள் விதந்து குறிப்பிடத்தக்கவர் சுன்னாகம் குமாரசாமிப்புலவர் ஆவார். கல்வியறிவினைத் தேடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தன் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்தவர் அப்புலவர் பெருமான்” சிறப்பான பல கருத்துக்கள் பரிமாறப்பட்ட இந்த நிகழ்வில் பல்சுவை அரங்கம் என்ற நூலும் வெளியிடப்பட்டது.
ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழா
அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக் கல்லூரி மண்டபத்தில் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியச் சுவைஞர்கள் கூடியிருந்த இந்த விழாவில் கருத்தரங்கம் தொடக்கம் கலைநிகழ்ச்சிகள் வரையான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இவ்விழாவில் புலம் பெயர்ந்தோரின் புலம் பெயரா நெஞ்சங்கள், மெல்லத் தமிழினி வாழும் என்ற இரு கவிதை நூல்களும் வெளியிடப்பட்டன. அத்துடன் சூரன் சுயசரிதை, (possile,615th eyply 565th, uglos,6ir, Undrawn portrait for Unwritten poetry (p565u ஈழத்து நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அம்பி தலைமையில் கவியரங்கமும் மேலும் பல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவ்விழாவினைச் சிறப்புற அமைத்த விழா அமைப்பாளர் லெ. முருகபூபதிக்கு இலக்கிய உலகின் பாராட்டுக்கள் என்று உரியவை.
பூபாளராகங்கள் - சிறுகதைத் தொகுதி கம்பர் மலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க ஐக்கியராச்சியச்
கிளையானது வருடந்தோறும் லண்டனில் பூபாளராகங்கள்’ என்னும் பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சியை நடத்திவருவது யாவரும் அறிந்ததே. புலம் பெயர்ந்த தமிழர்களால்
ஞானம் - மார்ச் 2005 59

Page 32
நடத்தப்படும் பெருமைமிக்க விழா வாகவும் இது அமைந்து வருகிறது. இம்முறை சர்வதேச ரீதியில் சிறுகதைப் நடைபெற்றது. பூபாளராகங்கள் 2004 விழாக்குழுவும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய இந்த உலகளாவிய தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் 233 சிறுகதைகள் போட்டிக்கு வந்திருந்தன. அவற்றி லிருந்து 13 பரிசுக்குரிய சிறுகதைகளை நடுவர் குழு தெரிவு செய்தது. அவற்றைப் பூபாளராகங்கள் - சிறுகதைத் தொகுதி 2004” என்ற பெயரில் விழா அமைப்பாளர் மகாலிங்கம் சுதாகரன் பதிப்பித்துள்ளார்.
வருடந்தோறும் போட்டியில் தெரிவு செய்யப்படும் கதைகளும், அமைப்பாளரின் சிந்தனை வரவேற்கத் தக்கது. இத்தகைய பதிப்பு முயற்சியை சிறந்த அடைப் படத்தோடு உருவாக்கித் தந்த விழா அமைப்பாளருக்குக் கலை உலகின் கைகுலுக்கல்கள்.
போட்டியொன்றும்
நடைபெறும்
நூலாக்கப்படும் என்ற
தவிர
நினைவுள் மீள்தல் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தானா விஷ்ணு தவிர என்ற கவிதைக்கான இதழை ஆரம்பித்துள்ளார். இன்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ் நிலையில் கவிதைக்கான இந்த இதழும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. கவிதை தொடர்பான அனைத்து அம்சங்களை உள்ளடக் இவ் இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பது
கியதாக வெளிவரும்
60
வாசகர்களின் பெருவிருப்பாகும். “தவிர” வழமையாகவே இலக்கிய உலகு தவிர்த்து விடும் என்பதில் ஐயமில்லை.
பலரை வெளிக்கொணரும்
‘புத்தக பூமி"
- பூபாலசிங்கம் புத்தகசாலை
ஈழத்துத் தமிழ்கல்வி உலகு என்றும் நன்றியுடன் நினைவு கூர வேண்டிய ஒரேயொரு புத்தகசாலையாகப் பூபாலசிங்கம் புத்தகசாலை அமைந்து விட்டது. இப்புத்தகசாலை வழமையாக இருந்த இடத்தைவிட்டு நூல் விற்பனையின் பலதொகுதிகளை உள்ளடக்கிய புதிய இடத்திற்கு (இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11) மாற்றப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவிற்கு (06.02.2005) பிரதம விருந்தினராக முன்னாள் உச்சமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தெ. ஈஸ்வரனும் கலந்து கொண்டார்கள். எஸ். ராகவன் புதிய கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்தார். வாழ்த்துரையினைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் டொமினிக் ஜீவா அவர்களும் வழங்கினர்.
இப்புதிய கட்டிடத் தொகுதியில் நூல் வெளியீடு செய்வதற்கும், எழுத்தாளர்கள் சந்திப்புக்கும் என ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான புதிய, அரிய நூல்களைக் கொண்டு தமிழ்ப் புத்தக சாலையாக, புத்தக பூமியாகப் பூபாலசிங்கம் புத்தகசாலை காட்சி யளிக்கிறது.
O
ஞானம் - மார்ச் 2005

கே. எஸ். சிவகுமாரனின்
(3%LĩGor$rofì6óì915yỉ5g)ĩ-----
ஞானம் (57) இதழில் அடியேனின் "திறனாய்வு என்றால் என்ன?” என்ற நூலின் மதிப்புரையைப் பிரசுரித்தமைக்கு நன்றி. பேராசிரியர் துரை மனோகரனின் கணிப்புக்கு நன்றி. தவறுகளை இங்கிதமாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். "அச்சுப் பிழைகள் உயிர்க் கொலைக்குச் சமம்” என்று அவர் எழுதியிருப்பது மனங்கொள்ளத்தக்கது. பேராசிரியர் தில்லைநாதனின் நூலின் பெயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டமைக்கு வருந்துகிறேன். துரை மனோகரன் அவர்கள் எனது நூலில் இடம்பெற்ற 1-36 ஆம் பக்கக் கட்டுரைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று அபிப்பிராயப்படுகிறார். அந்தக் கூற்றில் நியாயம் இருப்பதுபோல தோன்றினாலும், எனது முக்கிய பொருளுக்கான பின்னணித் தகவல் பெரிதும் உதவும் என்று கருதியே சேர்த்திருந்தேன். ஆயினும், ஏனைய திறனாய்வாளர்களும், அவ்வாறு கருதாவிட்டால், பேராசிரியரின் கூற்றை நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஆழமான விமர்சன நோக்கு இருப்பதாக கல்மிஷமின்றி துரை மனோகரன் குறிப்பிட்டிருப்பது எனக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. நன்றி.
பல்கலைக்கழக மட்டத்திறனாய்வாளர்களுள் துரைமனோகரன் “ஞானம்’ இதழில் எழுதும் இலகு நோக்கு / நடை பத்தி என்னை நெடு நாட்களாகப் பரவசப்படுத்தி வருகிறது. உடனிகழ்கால எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களையும் அவர் தனது பத்தி மூலம் தருவது, சாமான்யமான என்னைப் போன்றவர்களுக்குத் தகவல்களையும், கணிப்பையும் ஒருங்கே தருகின்றன. பாராட்டுகள்.
எஸ்.பொ. தொடர்பான நேர்காணல் மூலம் எளிதில் மறக்கப்பட்டுவிட்ட பல தகவல்களைத் தருகின்றன. பேராசிரியர் சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை போன்ற மேதைகளை நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் பேட்டி காண்பது பெரிய பங்களிப்பாக அமைகிறது. இத்தகைய பேட்டிகள் மூலமே, உண்மை விபரங்களை எம்போன்ற வாசகர்கள் அறிந்து கொள்கிறார்கள். சிலவேளைகளில் எம்போன்ற சிறிய பத்தி எழுத்தாளர்களும் சில விபரங்களைத் தத்தமது பார்வையில் தரக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். இது ஏனெனில், சில வேளைகளில் இருட்டடிப்பும் முழுமையான விபரங்களும் “ஆய்வாளர்’களுக்குத் தெரியாமல் போய்விடுகின்றன.
எஸ். பொ. கூட்டிய மட்டக்களப்பு மகாநாட்டில் மு. தளையசிங்கம், கனக செந்திநாதன், சிற்பி சிவசரவணபவன் போன்ற பெரிய எழுத்தாளர்களுடன், பத்தி எழுத்தாளனாகிய அடியேனும் கலந்து கொண்டேன். அந்த மகாநாடு பற்றி மு. த. எழுதிய 'வீரகேசரிக் கட்டுரையில், அன்னார் எழுதிய நற்குறிப்புகளைச் செய்தியாளர் தியாகராஜா முற்றாகவே நீக்கியிருந்தார். இதனை மறைந்த மு.த.பின்னர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இன்னுமொரு விபரம்: எஸ்.பொ. கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருடையமுறுவல்” என்ற பரிசோதனை மேடை நாடகம் பற்றிய எனது கணிப்பை "சிலோன் டெய்லி நியூஸ்” பத்திரிகையில் எழுதியிருந்தேன். இது சுமார் 35 வருடங்களுக்கு முன் பிரசுரமாகியது. எல்லோரும் கூறுவதுபோல"ஞானம்’ இதழில் பயனுள்ள பல விஷயங்கள் வெளிவருகின்றன என்பதனை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். கதை, கவிதை ஆகியனவற்றுடன் கட்டுரைகளும் வெளிவந்தாலும் பின்னையவையே என்னைக் கவருகின்றன.
ஞானம் - மார்ச் 2005 61

Page 33
வரலாற்று மாணவனாகவும், "ஆழமுள்ள விமர்சகராகவும் கருதப்படும் முகம்மது சமீமின் மதிப்புரை 'வரலாற்றுப் பார்வை' எனப்படுவது எவ்வாறு காலங்காலமாய் அமைந்து வருகிறது என்பதை விபரித்ததுடன் அமரர் எஸ். எம். கார்மேகம் எழுதிய "கண்டி மன்னர்கள்” என்ற நூலின் பத்திரிகைத் தன்மையைச் சுட்டிக்காட்டி, அதனை வரவேற்பது நியாயமாகப்படுகிறது.
பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை, ஆக்க இலக்கிய முக்கியஸ்தரும், ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான “செங்கை ஆழியான்’ இப்பொழுதுதெல்லாம் செய்து வருவதையிட்டு நாம் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும். அவருடைய அண்மைக்கால நூல்கள் தனிச்சிறப்பு டையவை அமரர்'சொக்கன்பற்றிய விபரத் திரட்டும் கணிப்பும் எம் போன்ற வர்களுக்குப் பெரிதும் பயனுள்ளவை. "சொக்கன்’ அவர்கள் எனது நூலொன்றிற்கு அருமையான மதிப்புரையை 'உதயன்' பத்திரிகையில் எழுதியிருந்தார். வெளிவாரியாக நான் கலைமாணிப் பட்டம் பெறத் தமிழ் இலக்கணமும் சீரிய முறையில் கற்க வேண்டியிருந்தது. சொக்கனின் “இலக்கணத் தெளிவு” என்ற நூலைப் படித்த பின்னரே நான் புத்தறிவு பெற்றேன்.
ரசிக விமர்சனம்' என்ற பதம் சிலவேளைகளில், நமது பல்லைக்கழக ஆழமுள்ள விமர்சகர்களால் பயன் படுத்தப்படுவதுண்டு. அதாவது, சிலரது எழுத்துக்களை மட்டந்தட்ட இப்பிர யோகத்தைப் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, 'ஈழத்துத் திறனாய்வு முன்னோடி” சுவாமி விபுலானந்தரே என்று நான் கருதினால், விபுலானந்தர் ஒரு ரசிக விமர்சகர்' என்று அவரைக் கீழிறக்கச் செய்வர் சிலர்.
62
ராணி சீதரன் மிகமிக ரசிக்கும் படியாக ஒரு ஒப்பீட்டுக் கட்டுரையை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. கவிதை பற்றியறிய விரும்பும் இளைய பரம்பரையினர் இக்கட்டுரையைப் படித்துப் பயன்பெற ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று வெளியாகும் ஆக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தையும் படிக்கும் வாய்ப்பும் நேரமும், பொறுமையும் இல்லாத வேளைகளில் என் போன்ற முதியவர்கள், பிரகலாத ஆனந்த் போன்ற இளைஞர்கள் தரும் தகவல்களிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. எனவே அவர்தம் கட்டுரைகள் எனக்குப் பலனளிக்கின்றன.
துரை மனோகரன், நா. சோ., வ. மகேஸ்வரன் ஆகியோர் எழுதிய புத்தக மதிப்புரைகள் செம்மையான முறையில் எழுதப்பட்டுள்ளன. விளக்கமும், பார்வையும் கொண் டனவையாய் அவை அமைந்துள்ளன.
கே. பொன்னுத்துரை தெரிவித்த ஆலோசனை நிச்சயமாகக் கவனிக்கத் தக்கது. சக்தி பாலையா அவர்களுடன் நீண்ட நேர்காணலை நீங்கள் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரை கடந்த ஆண்டு "டெயிலி நியூஸ்” பத்திரிகையில் வெளியாகியிருந்தது. தமிழர் பற்றிய அருமையான கட்டுரை அது. பல விபரங்கள் அடங்கியிருந்தன. வாஹினி பூரீதரன் கூறியதுபோல் மாவை வரோதயனின் தொடர் பத்தியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஞானம் இதழைச் சிறப்பாகக் கொண்டுவரும் உங்களுக்கு பகுப்பாய்வு செய்து பயனடையக் கூடிய என் போன்ற வாசகர்கள் நன்றி செலுத்துகின்றனர்.
O
ஞானம் - மார்ச் 2005

மேதுகிறார் ஆ ஒர் இலக்கியச் சஞ்சிகையை வெளியிடுவதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை நானறிவேன். தரமான ஆக்கங்களைப் பெறுவது வெளியிடுவது செலவிட்ட பணத்தை மீளப் பெறுவது என்ற செயற்பாடுகளுக்கிடையேயுள்ள சிக்கலான அனுபவங்கள். மனச் சோர்வைத் தருகின்ற சங்கதிகள் என்று யாவற்றையும் கடந்து ஞானம்' சஞ்சிகையை ஒர் இலக்கிய வேள்வியாக நடாத்திக் கொண்டிருக்கிறீர்கள். வெறுமனே பெயருக்கு ஒரு சஞ்சிகை என்றில்லாமல் நேர்காணல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கியச் செய்திகள் என்று பல்தரப்பட்ட அம்சங்களையும் தேர்ந்தெடுத்துக் கனதியான சஞ்சிகையாக வெளிக்கொணரும் தங்கள் பணி இலக்கிய உலகில் பாராட்டுக்குரியதாகும். எடுத்த உடனேயே வாசித்து முடித்துவிடும் அளவுக்கு ஞானம் தேர்ந்தெடுத்த ஆக்கங்களைத் தாங்கி வருகின்றது. இருப்பினும் ஒருகுறை. நல்ல பல கவிதைகளைச் சுமந்து வரும் ஞானம் சிலவேளைகளில் சற்றுச் சறுக்கி விடுகின்றது. இந்தக் குறையையும் நிவர்த்தி செய்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
- மண்டூர் அசோகா Y33AYS323AY338 gsgsgぎ嫁ぎgs嫁s@sgsgs嫁やgg\さ露ぎgs@S@さ嫁ぎgぎぶや3gs気sgsgsgや巡。 லண்டனில் பேராசிரியர் மு. நித்தியானந்தன் அவர்கள் இரண்டு “ஞானம்” சஞ்சிகைகளைத்தந்தார். ஆர்வமுள்ளவர்களை மிகவும் உற்சாகப்படுத்துபவர் மு.நித்தியானந்தன். ஞானம் தரமான கட்டுரைகள் உட்பட நேர்காணல்கள், சிறுகதைகள், கவிதைகள் என விரிந்திருந்தன. தொடர்ந்து ஞானத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. தற்போது இலங்கையில் வாழும் எழுத்தாளர் ஒருவரிடம் ஞானம்' அனுப்பி வைக்க முடியுமா? என்று கேட்டிருந்தேன். எதற்கும் மறுப்புத் தெரிவிக்காத அவரால் அதனை அனுப்பி வைக்க முடியவில்லைப்போல். நேராகவே ஞானம்' ஆசிரியருடன் தொடர்பு கொண்டேன். எனது ஆர்வத்தைக் கண்டு தொடர்ந்து ஞானத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறார். சந்தோஷப்பட்டுக் கொள்வேன்.
இதுவரையில் ஐந்து ஞானம்' சஞ்சிகைகளைப் படிக்க முடிந்தது. பயன்பெறக்கூடிய அருமையான சஞ்சிகை. நவீன அட்டைப்படத்தோடு 56ஆவது இதழும் கிடைத்தது. மகிழ்ச்சியில் மூழ்கினேன். கலாநிதி துரைமனோகரனின் எழுதத் தூண்டும் எண்ணங்கள், செ. சுதர்சனின் சமகாலக் கலை இலக்கிய நிகழ்வுகள், கலாநிதி செ. யோகராசாவின் சாரதா'. போன்ற பல விதமான தகவல்களை அள்ளித் தந்தன. லண்டனில் இயந்திரம்போன்ற வாழ்க்கையில் ஞானம் எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகின்றது. எனக்கும் பசிக்கும் வே. தினகரனின் கவிதையைப் புசித்தேன். பொதுவாக எல்லாமே, கவிதைகள், சிறுகதைகள் வெவ்வேறு வடிவங்களில் அமைந்து சிறப்பிக்கின்றன.
லண்டனுக்குப் புத்தகங்கள் அனுப்பும் செலவை எண்ணுகிறேன். இதனை மனதிற் கொள்ளாது தொடர்ந்தும் ஞானம் சஞ்சிகையை அனுப்பிக் கொண்டிருக்கும் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களை மனதிருத்திப் பார்க்கிறேன். இப்படியும் இருக்கிறார்கள்! மனது நிறைந்து மகிழ்கிறது.
- நவஜோதி ஜோகரட்ணம், லண்டன்.
ஞானம் - மார்ச் 2005 63

Page 34
"ஞானம்' சஞ்சிகை காலம் பிந்தாமல் ஒழுங்காக வருகிறது. சஞ்சிகையின் நிர்வாகம் பற்றிய நம்பிக்கையை வளர்க்க இது மிக அவசியம். கார்மேகத்தின் நூல் பற்றிய அ. முகம்மது சமீம் அவர்களின் விமர்சனக் குறிப்பு நன்றாக அமைந்துள்ளது. வரலாற்றை எழுதும் முறையியல் பற்றிய நல்ல குறிப்புகள் அவர் தமது கட்டுரையில் சொல்லியிக்கிறார். காலம் சென்ற எழுத்தாளர் சொக்கனின் பன்முக ஆளுமையை செங்கை ஆழியானின் கட்டுரை எடுத்துக் கூறியிருக்கிறது.
"ஞானம் அடைந்து வரும் வளர்ச்சி கண்டு மகிழ்கின்றேன்.
- க. சண்முகலிங்கம், கச்சேரி, முல்லைத்தீவு.
ጛጳ..ሶዲ፥፶(ሢዕ፰፻፺፭፻፵ቇኾ(LÑÉL&8ዴ፪(ûቛኗኗኗኗዛ&ጃYሚሄ..(II(((Š(&&ቋ፳፬imiÑÉ..(£፷ኗኗ፻፹፯ሳ፻፵ቕlÑ፰ጃ(H£(ጎoi፲፰Ñ፲፯፻፵፯ጃ(ሚ፴ኝ8Éጎጂû(፫ጃ፴፪ኗ(ና‛ 'கடந்த மாசிமாத ஞானம் சஞ்சிகையில் தீ என்னும் சிறுகதையில் கூறிய கருத்துக்கள் மீள்பரிசீலனை செய்யப்படுகின்றன. எனது கருத்தின்படி இது விபசார நோக்கில் எழுதப்பட்ட சிறுகதையா அல்லது இலக்கிய வளர்ச்சிகருதி எழுதப்பட்டதா? மற்றும் இவர் பெண்களை இவ்வளவு இழிவு படுத்துவதால் பெண்கள்மீது வெறுப்புடையவரா? எதற்கு இப்படியான கீழ்தரச் சிந்தையுள்ள சிறுகதைக்கு ஞானம் இதழ் அனுமதி வழங்கியது? ஞானமும் இதன் வழியில் செல்லத்திட்டமிட்டு அடியெடுத்து வைக்கின்றதா?
- மருதலுரான்.
ஞானத்தின் வாசகள் பேசுகிறார் பகுதியை வாசிக்கும்போது ஞானத்தின் வாசகர்கள்மீது எனக்கு நம்பிக்கை குறைந்து விடுகின்றது. ஏனெனில் சிறுகதை குறித்து எவரும் எழுதுவதில்லை. சும்மா ஒரு வாடிக்கைக்காக, நாம் வாசிக்கின்றோம் என்பதைக் காண்பிப்பதற்காக கதைகள் தரமாக இல்லை, தெரிந்தவர்களின் கதையாக இருந்தால் ஆஹா ஓகோ என இரண்டு புகழ் வரிகளோடு முடித்து விடுவதோடு தம்மை இனங்காட்டிக் கொண்டு ஓர் அவசரக் கிறுக்கலோடு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள். உண்மையிலே ஞானத்தின் பெரும்பாலான வாசகர்கள் அதில் வெளிவரும் சிறுகதைகளை வாசிப்பதில்லை என்பது என் அபிப்பிராயம். சிற்றேடுகளை விழுந்து விழுந்து படிக்கிறோம் என கதையளக்கும் இவர்கள் நம்ம பயலுக என்ன எழுதப்போறானுவே என்று சிறுகதைப்பக்கங்களைத் தட்டிக்கழித்துக் கொண்டு போய்விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதன் காரணமாகவே ஞானத்தில் பிரசுரமாகும் பெரும்பாலான நல்ல கதைகள், பிரச்சினைக்குரிய கதைகள், "ஆழ்கடலுக்குள் பாறையாக அம்போ வாகிவிடுகின்றன. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த கல்விச் சீமான்கள் இலங்கையர்கோன், வைத்திலிங்கம், சம்பந்தன் இவர்களை விட்டால் ஆளில்லை என்று பைலா பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. தரமான சிறுகதைகள் உருவாக உளமார்ந்த காத்திரமான விமர்சனங்கள் தேவை. ஞானத்தின் தாரக மந்திரமும் இதுவாகும்
என்றே கருதுகிறேன்.
- சஞ்சாரி, கொழும்பு.
E ரூானம் - மார்ச் 2005

at JANALANKA
ENTERPRISE
MANUFACTURERS, WHOLESALERS AND LLLLLLLLLLL0La LLLLLL LLLLLLLELLL LLLLLL GG LLELL E LLLLLaLLLLLLL0L
STATIONERS ck FANCY GOODS
BULXORDERS ACCEPTE)
No. 60, Kotugodella Veediya,
Kandy. སྙིང་༽
'?"
R
Druggists, Chemists & Grocers
No. 100, Dalada Weedya, Катdу. Tel: 08-229168 08232289. *
| LSLALATLTLTTTLTLLTLLTLTLTTLTLTLTLLTTLALSLTLLLLSSLLLL0LSLLLSLLLLLSL0SL0S00SL0LASLALASA

Page 35
GNANAM
5. ༥. -- ---"--- ="F_-_-_T*==
ياسية -- هي في تقنية ශ්‍රීර්‍*శ్రీ Fಿ? * རྒྱུ་སྔོ1་3gg འདི་ཙམ་
'With Best Complirtients from
Zo Goat5 &FIESGOOGOT ŐTT
பிஸ்கட்டிலு
LUIck)
Bis ManUfa
ܒ
演
g
Phone: 031
OS
O81
Fil* :08.1
E-Mail : Lu
墨
H
t
[ଟ୍ରୁܗ݂ܵܐ
3.
=ల్లో వై._Bడ్జ్ శైవ్లో. స్ట్ E. కెల్ట్ E
A、
இச் சஞ்சிகை தி. ஞானசேகரன் அவர்கால்
பு: ஆர்ட்ாள் நிறுவளத்திங் சு:

MARCH OO
=== ."بيت في تلقة ." :* థ్రోసోల్షకోవ్లోథ్రెగోబ్లాస్గ
୍
ங்கள் பாரம்பரியம்
片
றும் தான் !
1
yllandi cuit
CURIOS
艇
鹉
i
s
- 242O217
- 242()574 繼 - 2227.041
2420740 卷 :kyland@shnet.ik. 鶯 :
嵩 ܀
බ්‍රිපූ 1 ≤....<ද්‍ය 13-.......=&13=.....ප්&138;" ஜ்ேஆன்ஜ்ஜஜ்ஜிடித்தில் இr 4H பி. புளூமெண்டால் *****ួr 13
சிடப்பட்டு கொளியிடப்பட்டது.