கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்த்தூது

Page 1


Page 2


Page 3

தமிழ்த் தூ து
கட்டுரைக் கொத்து)
அறிஞர் தனிநாயக அடிகளார்
. . Luff2aouib

Page 4
திருத்திய மூன்றும் பதிப்பு: 1961
விஜல ரூ. 2-00
சாது அச்சுக்கூடம், மயிலாப்பூர், சென்னை-4

பதிப் புமை
ஆறுமுக நாவலர் அவர்களையும், விபுலானந்த அடிகளை யும், நவாலியூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களையும் தமிழுக்குத் தந்த ஈழத் திருநாடு, அறிஞர் தனிநாயக அடிகளையும் நமக்குத் தந்துள்ளது. ஈழத்தில் பிறந்த இப் பெருமகனர் தம்மைப் பிறர் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ; இளமையில் யாழ்ப்பாணத்தில் உயர் கிலைக் கல்வி பெற்று, பின்னர் உரோம் நகரில் திருமறைக் கல்வி பயின்று, வேத சாத்திரங்களில் டாக்டர் பட்டம் பெற்ருரர்கள் ; தமிழகத்தில் அண்ணுமலைப் பல்கலைக் கழகக் தில் தமிழ்த்துறையில் எம்.ஏ. பட்டமும் எம்.லிட். பட்டமும் பெற்ருரர்கள் ; இலண்டன் பல்கலைக் கழகத்தில் கல்விக் துறைப் பகுதியில் ஒப்பியற்கல்வி பயின்று அதிலும் டாக்டர் பட்டம் பெற்ருரர்கள்.
இவர்கள் அறிந்த மொழிகள் பல. ஆங்கிலம், இத்தாலி யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இலத்தீன், கிரீக்கு முதலிய மொழிகளில் இந்தப் பன்மொழிப் புலவருக்குப் பயிற்சியுண்டு. இவர்கள் வடமொழி, ரஷ்யமொழி, போர்ச்சுகீஸ், சிங்களம், ஹீப்ரு என்னும் மொழிகளும் ஒரளவு அறிவார்கள் ; உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி அங்கெல்லாம் தமிழ் மணக்கச் செய்துள்ளார்கள்; மலாயா, னேம், ஜப்பான், வடவமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, பாலஸ்தீனம், எகிப்து முதலிய நாடுகளுக்கும் ஐரோப்பாவின் u 6) நாடுகளுக்கும் பன்முறை சென்றுள் €ኽTዘ`ዘróm56ኽff •
அடிகளார் துறவு பூண்டிருப்பினும், தமிழ்ப் பற்றைத் துறக்கவில்லை ; ஈழத்தில் தமிழ் மொழி உரிமையை நிலை,

Page 5
நாட்டப் பல முயற்சிகள் செய்து வருகிருர்கள்; காம் செல்லும் நாடுதோறும் தமிழ்த் தூதராய் விளங்கித் தமிழின் மேன்மையையும் தொன்மையையும் பற்றிச் சொற் பொழிவுகள் நிகழ்த்தியும் கட்டுரைகள் வரைந்தும் வானுெலி வழியாகப் பேசியும் அக்காட்டு மக்களுக்குத் தமிழ் மொழி யிடத்து அன்பும் அக்கறையும் ஏற்படச் செய்துள்ளார்கள். உலகமெல்லாம் தமிழ் முழங்க, Tamil Culture என்ற ஆங்கில முத்திங்கள் இதழ் ஒன்றைத் தோற்றுவித்து, இப்பொழுது அதன் ஆசிரியராய்ப் பணி புரிகின்ருர்கள். வடமொழியின் பெருமையை மட்டும் அறிந்திருந்த உலக அறிஞர் பலருக்குத் தமிழின் பெருமையை எடுத்துக் கூறி, அதன் அருமையை உணரும்படி செய்துள்ள அடிகளாரின் தொண்டு தமிழ் மக்களால் என்றும் நன்றி உணர்வோடு பாராட்டப்படுவதாகும். அடிகளாரின் புலமையை அறிக்த பல்கலைக் கழகங்கள் பல சிறப்புச் சொற்பொழிவுகள் கிகழ்த்துமாறு அழைப்பு விடுகின்றன. இவ்வகையில் சென்னை, அண்ணுமலைப் பல்கலைக் கழகங்களில் அவர்கள் கிகழ்த்திய பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களால் கிறுவப் பட்ட சொர்ணும்பாள் சொற்பொழிவுகள் குறிப்பிடத் தக்கவை.
1952-ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தின் கல்வித் துறையில் அடிகளார் விரிவுரையாளராய்ப் பணி ஏற்ருர்கள் ; இப்பொழுது மலாயாவில் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழித்துறைப் பேராசிரியராய்ப் பொறுப்பேற் நூறுள்ளார்கள். இது வரை ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அவற்றுள் " The Carthaeinian Clergy ', 'Nature in Ancient Tamil Poetry , * தமிழ்த்தூது" என்பவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, இன்னும் பல ஆரல்களும் விரைவில் வெளி வர உள்ளன.

டு
* தமிழ்த்துளது? ஒரு சிறந்த கட்டுரைத் தொகுதி. முன்னர் இதன் இரண்டு பதிப்புக்கள் வெளி வந்தன. இப்பதிப்பில் சில கட்டுரைகள் நீக்கப்பெற்றும், புதிய கட்டுரைகள் பல சேர்க்கப்பட்டும் உள்ளன. அடிகளாரின் இனிய தமிழ் நடையும் தமிழைப் பற்றிப் பேசும்போது அவர்களிடம் காணப்பெறும் பெருமிகமும் ஆாலின் பொருட் செறிவும் படிக்கப் படிக்கச் சுவையூட்டுவன. "யாதும் ஊரே ; யாவரும் கேளிர், " என்ற சங்கப் புலவர்களின் மாண்பும், எல்லா நாடும் தம் நாடெனக் கொள்ளும் இதயமும் படைத்தவர்கள் அடிகளார். இவர்கள் தாம் இயற்றிய அரிய ஆாலை எமது நிலையம் வாயிலாக வெளியிட வாய்ப்பளித்து எங்களுக்குப் பெருமை தந்துள்ளார்கள்.
இவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன.
அடிகளார் இந்நூல் அச்சாகுங்காலை இலங்கையி லிருந்தார்கள். எனவே, மகாவித்துவான் - மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களின் மேற்பார்வையில் இந்நூல் அச்சாயிற்று. அன்புடன் உதவிய மகாவித்துவான்
அவர்களுக்கு எங்கள் நன்றி உரியது.
பாரி நிலையம்

Page 6

உள் ளு  ைற
பொருள் பக்கம்
க. தமிழ்த்துTது ... 1 'உ. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு ... 25 க. மலரும் மாலையும் ... 5 ச. காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் ... 69 டு. தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை. 84 சு. தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் ... 96 எ. தமிழ் கூறும் நல்லுலகம் ... 116

Page 7

க. தமிழ் த் தூ து
தமிழருள் பலரும், தமிழர் அல்லாதார் சிலரும், தத்தம் இயல்பிற்கு ஒவ்வும் வகையிலெல்லாம் தமிழுக் காக அரும்பணியாற்றி வருகின்றனர். இவருள், வேற்று மொழிகளுடனும், நாடுகளுடனும், மக்களுடனும் தொடர் புடைய என்னைப் போன்ற தமிழர், தமிழ் மொழி, நாடு, இனம் ஆகிய இவை மூன்றின் மாண்பை ஒப்பு நோக்கி அறிந்து, அதனைத் தமக்கிசைந்த அளவு பிறர்க்குக் கூற விரும்புவதில் யாதும் வியப்பின்று.
இத்தகைய தொண்டில் முதன்முதல் ஈடுபட்டவர், அந்தணரும், குறிஞ்சிப் பாட்டினை இயற்றி, ஐந்திணை இலக்கணம் ஆரிய மன்னர்க்குப் புகட்டியவருமாகிய கபிலராவர். வேற்று நாடுகளுக்கு ஒருவாறு தமிழின் பெருமையை அண்மையில் காட்டியவர், ஈழ நாட்டவரும், இந்தியக் கலைகளில் இணையற்ற தேர்ச்சி பெற்றவருமாகிய ஆனந்தக் குமாரசுவாமியாவர். இவரிருவருடைய காலத் துக்குள் இதே நோக்கத்துடன் பலர் உழைத்திருக்கின் றனர். இப்பலருடைய அறிவும் ஆற்றலும் படைத்தே னல்லேணுயினும், உலகச் செலவு செய்து, தமிழ்க் கலைத் தூது நிகழ்த்த நானும் வாய்ப்புப் பெற்றேன் என்று பெரிதும் உவந்து, அத்தொண்டினை மணமற்ற சிறு மலர் போன்று தமிழன்னையின் துணை மலரடிகளில் வைக் கின்றேன்.
இத்தொண்டு இக்காலத்து இன்றியமையாது வேண்டுமோவெனின், இன்றியமையாது வேண்டும்.

Page 8
2 தமிழ்த்தாது
உலக மொழிகளின் பிறப்பைக் கண்டும், அவை சிதையவும், மாறவும், வழக்கொழியவும், தான் என்றும் தன் கன்னித் தன்மையைக் காத்து வருகின்ற தமிழன்னைக்கு, இன்று இடுக்கணும் இடும்பையும் நேர்ந்துள்ளன. தமிழன்னை மீது பல்வேறு பகைவர் அறிந்தும், அறியாதும் படை யெடுத்துள்ளனர். இப்பகை எல்லாவற்றையும் புறங்
காணும் கருவி தமிழ்த்தூது முரசின் ஒலி ஒன்றே என நம்புகின்றேன்.
s
இனி, மேனுட்டு மொழியாராய்ச்சியாளரும் இலக்கிய ஆராய்ச்சியாளரும், இந்தியப் பண்பினை அறிவதற்கு வட மொழி இலக்கியப் பயிற்சியே சாலும் எனக் கருதி அதனை மட்டும் கற்று வருகின்றனர். தமிழ்க் கலையின் தனித் தன்மையை இவர் உணர்ந்திலர் : இவர்க்கு உணர்த்து வாரும் இலர். மேல் நாடுகளில் வெளி வந்துள்ள இந்திய இலக்கிய வரலாற்று நூல்களில், தமிழிலக்கியத்தைப் பற்றிய கருத்துச் சிறிதேனும் இல்லை : ஒரு சொல்லேனும் இல்லை. இந்திய நாட்டில் இந்தியக் கலைஞரால் யாக்கப் பெற்ற இலக்கிய வரலாற்று நூல்களிலும், தமிழுக் குத் தகுந்த இடமும் புகழும் அளிக்கப்படவில்லை. இந்தியக் குடியரசின் முதல் அமைச்சர் உயர்திரு. நேரு தாமும், தம் நூல்களில், தென்னுட்டிற்குச் சிறிதளவே இடம் ஈந்துள்ளார். 'இந்திய வரலாறு தென்னுட்டில் முதல் உறைவிடம் காணும்,' என்றும், ' தென்னுட்டில் மிகு பழைமை வாய்ந்த பொருள்களும் மக்களும் உண்டு,” என்று மட்டும் கூறி, மேலே செல்லுகின்றர்கள் இந்நூலா

தமிழ்த்துளது S சிரியர்கள். இம்மொழியின் சிறப்பியல்பை, இம்மக்கள் உலகிற்கு ஈந்த இலக்கியத்தின் தனித் தன்மையை, அவர் களுடைய பனுவல்களைப் புரட்டிப் புரட்டிப் பார்க்கினும் காண்டல் அரிது.
2.
நாட்டை விட்டுப் பெயர்ந்து ஏறக்குறைய ஈராண்டு கள் ஆகிய பின்னர், தமிழ்த் திருநாட்டை மீண்டும் என் கண்கள் பார்த்தன. இவ்வீராண்டுகளில் நான் மலாயா, சீனம், ஜப்பான், வடவமெரிக்கா, தென்னமெரிக்கா, நடு ஆபிரிக்கா, வடவாபிரிக்கா, இத்தாலி, பலத்தீனு, எகிப்து என்னும் இந்நாடுகளைக் கண்டு வந்தேன்.
தமிழைப் பொறுத்த வரை நான் அடைந்த பெரு வியப்பு, தமிழும் தமிழரும் உலகிற்பரவியிருக்கும் வகை கண்டு ஏற்பட்டதேயாம். பர்மாவில் தமிழ் மொழிக்குச் செல்வாக்குண்டு. நடு அமெரிக்காவின் தீவுகளாகிய திரி நாடு, ஜமேக்கா, அட்லாண்டிக்குத் தீவுகளாகிய மார்த்தி னிக்கு ஆபிரிக்காவின் பல பிரிவுகள், இன்னுேரன்ன இடங் களுக்குச் சென்ற தமிழர் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வரு கின்றனர். ஆயினும், மலாயாவிற்குச் சென்ற பொழுது நான் அடைந்தது போன்ற வியப்பு வேறு எவ்விடத்தி லும் நான் அடைந்தேன் அல்லேன். ஆங்குள்ள இந்தியர் களில் தமிழரே பெரும்பகுதியினர். அங்குத் தமிழ் நாட் செய்தித் தாள்கள் நான்கு ஐந்து வெளியிடுகின்றனர். சிங்கப்பூர், கோலாலம்பூர் முதலிய பேரூர்களின் வானுெலி நிலையங்கள், தமிழில் நாள்தோறும் ஒலி பரப்புகின்றன என்பது அறிந்தும், பெரிதும் மகிழ்ந்தேன். மேலும், நான்

Page 9
4. தமிழ்த்தூது
அங்குச் சென்றிருந்தக்கால், மலாயாவின் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவத் திட்டங்கள் வகுத்து வந்தனர். அப்பல்கலைக்கழகத்தில், தமிழிற்கும் ஒரு பேராசிரியக் கட்டில் நிறுவ வேண்டுமென்று இலங்கைத் தமிழரும் இந்தியத் தமிழரும் முயன்று வந்தது, என் களிப்பிற்கு, இன்னுமொரு காரணமாயிற்று.
fb
தமிழ் ஒலிகள், உரையாடுதலில் ஊர்தோறும் வேறு படுவது குறிக்கற்பாலது. மலையாளநாட்டின் எல்லையில் இருப்போர், மலையாளம் பேசுவதுபோலத் தமிழைப் பேசு வர். சிங்கள நாட்டில் இருப்போர், சிங்களத்தைப் போலத் தமிழை உச்சரிப்பர். இவ்வாறே, மலாயாவில் சீன மொழி யைப் போலவும், அமெரிக்கத் தீவில் ஆங்கிலத்தைப் போலவும் தமிழை ஒலித்து வருகின்றனர். எனினும், இத்தமிழ் ஒலி வேறுபாடுகளை நீக்கி, மேல் நாட்டு மொழி களுக்கு உள்ளதைப் போன்ற பொதுநிலை ஒலிப்பு ஒன்றைப் பரப்புவது, தமிழ்ப் பாதுகாப்பிற்குப் பெரு நலத்தினைப் பயக்கும். நம் வெள்ளித் திரை நடிகரும், வானுெலி உரையாளரும், இப்பொதுநிலை ஒலிப்பைக். கடைப்பிடிப்பாரெனின், இவ்வொலிப்பு எங்கும் எளிதில் பரவிவிடும். ஆங்கிலத்திற்கு B. B. C.இன் ஒலிப்புப் பொதுநிலை விதியாயிருத்தல் போல, தமிழிற்கும் யாதானு: மொரு பொதுநிலை ஒலிப்பு வேண்டும்.
g
தமிழன் தன் மொழியைக் காதலிப்பது போல, வேறெவரும் தம் மொழியைக் காதலிப்பதையோ, தமிழ்ப்

தமிழ்த்துளது 5
புலவர் தம் மொழியைப் போற்றுவது போல, வேறெவ் விலக்கியத்திலும் யாரேனும் தம் மொழியைப் போற்று வதையோ கண்டிலேன். சேக்கிழாரை விரித்துப் பார்மின். அவர் தமிழ் எனும் சொல்லைத் தம் செய்யுளில் அமைக்க வேண்டுமெனின், அதற்கு அடை இல்லாமல் எழுதப் பின் வாங்குவர் ; செந்தமிழ், இன்றமிழ், வண்டமிழ், தண்ட்மிழ், அருந்தமிழ், செழுந்தமிழ், தீந்தமிழ், உயர் தமிழ், கோதில் தமிழ், தேன் பொழியும் செந்தமிழ்-என் றெல்லாம் யாழினும் இனிதிசைப்பர். இனி, தேவாரங் களைப் பாடினுர் எனும் பொருளில், “ தமிழ் பாடி யறைந் தார்', ' தமிழ் மாலைகள் சாற்றினுர் ' என்று அப்புலவர் கூறுவதை யார்தான் நினைந்து நினைந்து இன்புற்றிலர் ? மேலும், திருமூலர், " என்னை நன்முக இறைவன் படைத் தனன், தன்னை நன்ருகத் தமிழ் செய்யுமாறே,’ என்று கூறுவதுபோலெல்லாம், பிற மொழிப் புலவர் தம் மொழி யைப் போற்றிக் கூறியதாகத் தெரியவில்லை. தமிழரின் இத்தமிழ்ப் பற்றுத்தான், மலாயாவின் தமிழர் என் விரி வுரைகளைக் கேட்க நெடுந்தொலைவிலிருந்து வருவதற்கும், நான் செய்த சிறு தொண்டைப் பெரிதாகப் போற்றுதற் கும் காரணமாய் இருந்தது. உலகிலிருக்கும் தமிழரனை வரும் தம் மொழிக்குத் தொண்டாற்ற ஒன்று கூடுவரேல், தமிழ் முரசு உலகெங்கும் முழங்கி நிற்கும் என்பதில் ஐயமும் உளதோ ? ஆயினும், இந்தியத் தமிழ் நாட்டி லுள்ள அரசியற்கருத்து வேறுபாடுகள் மலாயத் தமிழரை யும் பிரிக்கின்றன. இவர் அரசியல் துறையில் வேற்றுமை கள் உடையரேனும், தமிழ்த்துாதுத் துறையில் ஒற்றுமை பாராட்டி ஒன்று சேர்வது, தமிழுக்கு உறுதுணையாகும்.

Page 10
6 தமிழ்த்தாது
டு
வேற்று நாடுகளில் குடியேறியிருக்கும் தமிழர், தமிழை ஒருவாறு மறப்பதற்கு அவர்கள் சூழ்நிலை காரணமாய் இருப்பதால், அந்நாடுகளின் மொழிகள் வாயிலாகவும் தமிழின் புகழைப் பரப்புவது நம் கடமையாகும். வேற்று நாடுகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கல்வியின்பொருட் டும் வாணிகத்தின்பொருட்டும், அரசியலின்பொருட்டும் செல்லும் தமிழரனைவரும், தமிழ் வரலாற்ை றயும், தமிழ் இலக்கியங்களையும் நன்குணர்ந்து செல்வாராயின், அவரும் தமிழ்க் கலைத் தூதைப் பெரிதும் நிகழ்த்துவதற்கு வழிகளைக் காண்பர். சென்ற நூறு ஆண்டுகளில் மேல் நாட்டார் சிலர் தமிழைப் பற்றி ஒருவாறு அறிந்திருக் கின்றனர். ஆயினும், பண்டைப் பண்பு படைத்த சீனம் ஜப்பான் முதலிய நாடுகளிலும், தமிழ்க் கலைகளும் பண்பும் பரவியிருந்த சாவகம், புட்பகம் போன்ற நாடு களிலும், தமிழினது புகழை எடுத்துக் கூறும் தொண்டை ஆற்றுவார் இலர். நாம் சென்ற பல ஆண்டுகளாக மேற் றிசை நோக்கியே நம் எண்ணங்களைச் செலுத்தி வந்திருக் கின்றனம். ஆசியப் பரப்பில் நடு நாட்டவராயிருக்கும் தமிழர் நாற்றிசையிலும் தம் எண்ணங்களைச் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றுவது இன்றியமையாதது. இக்கீழ்த் திசை நாடுகளுக்கெல்லாம், முன்னுெரு கால், தமிழர், புத்த சமயத் தொண்டாற்றுதற்கும் தம் வாணிகத்தைப் பெருக்கு தற்கும் சென்றிருந்தனர். இங்ங்ணம் உண்டாகிய பண்புத் தொடர்களை நாம் இழப்பது எதற்கு?

தமிழ்த்தூது 7.
守
ஜப்பான் நாட்டில் பல்கலைக் கழகங்கள் பல இருக் கின்றன. அக்கழகங்களில், வடமொழிப் பயிற்சி சிறிதளவி லேனும் உளது. ஆயின், தமிழ்ப்பயிற்சியோ, அறவே இல்லை. ' திராவிடக் கலைகளைப் பற்றியும், பண்பைப் பற்றியும், யாம் அறிய விரும்புகின்றனம். ஜப்பானிய மொழியில் அவற்றைப் பற்றி அறியத் தக்க நூல்கள் எமக்குக் கிடைத்தில. ஆங்கிலத்திலும் மிகக் குறைவே,” என்று, ஜப்பானில், கீழ்த்திசைக் கலைமொழியாசிரிய ரொரு வர் எனக்குக் கூறினர். ஆயினும், பல நூல் நிலையங் களில், போப்பு ஐயருடைய தமிழிலக்கணக் கைச்சுவடி (EHand Book of Tamil Grannmar) 6T6árgoli g2.jor நூலினைக் கண்டேன்.
தோக்கியோப் பேரூரில், மாரூசென் என்பது ஒரு புத்தக விற்பனைக் கடை, அங்குப் புது நூல்களையும், பழைய நூல்களையும், விலைக்குப் பெறலாம். அங்குப் பழைய நூல் விற்பனை நிலையத்திற்குச் சென்றக்கால், போப்பு ஐயருடைய பல நூல்களையும், தீட்சிதரின் சிலப்பதி
கார மொழி பெயர்ப்பையும் கண்டேன்.
செய்தித் தாள்கள் ஜப்பானிய நாட்டில் மிக்குயர்ந்த வளம் பெற்றுள்ளன. மைனிச்சி, அஸாஹி எனும் செய்தித் தாள்களுள் ஒவ்வொன்றும், முப்பது நூருயிரம் படிகளுக்கு மேல், நாள்தோறும் செலவாகின்றன. இவற்றின் ஆசிரி யர்கள், தங்கள் செய்தித் தாள்கள் வழியாக ஜப்பானிய மக்களுக்கு நற்சொற்கள் சில கூறுமாறு என்னை வேண்டி ஞர்கள். அப்பொழுது, "மேற்றிசை கீழ்த்திசைவேற்றுமை கள் ஒழிந்து, உலக மாந்தர், தமிழ்ப் புலவரின் யாதும்

Page 11
8 தமிழ்த்துளது ஊரே யாவரும் கேளிர்,” எனும் மனப் பான்மையை வளர்க்க வேண்டும்,” என்று கூறினேன். இனி, இவ் வாறே, உலகின் வேறு பல இடங்களிலும், என் நற் சொல்லையும் கையெழுத்தையும் விரும்பியவர்க்கும், விருந் தினரின் நூல்களிலும், சங்கப் புலவரின் இவ்வழகிய அடியினைத் தமிழ் எழுத்தில் பொறித்து, ஒத்த மொழி பெயர்ப்பையும் கேட்பார் மொழியில் வரைந்தனன். ஆங்கிலத்திலும், ஸ்பானிய மொழியிலும், இனியவாய் ஒலித்தன அச்சொற்கள்:
Every country is my country Every man is my kinsman.
Todos los pais son mi pais Todos los hombres son mis hermanos.
பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழைப் பற்றிய ஆங்கில நூல்கள் இல்லாமையை அறிந்து, அண்ணுமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் உயர்திருவாளர் மணவாள இராமானுசம் அவர்கள்,என் வேண்டுகோளுக்கு இசைந்து ஜப்பானியப் பல்கலைக் கழகங்களுக்குப் பல நூல்களை நன்கொடையாக அளித்தார்கள். இவ்வாறு, நன்கொடை யாக நூல்களை உலகெங்கும் அனுப்பித் தமிழின் உரிமை களை நிலை நாட்டவும் கூடும். தமிழ் நாட்டு வள்ளல்கள் தங்கள் தமிழ்த் தொண்டை இம்முறையில் நிகழ்த்தலாம்.
நான் தமிழ் நாட்டை விட்டுத் தோக்கியோவை அடைந்து இரண்டு கிழமைகளாயின பின், நண்பரொரு வர் என்னை விருந்துக்கு அழைத்தார் ; அவ்விருந்தில் எனக்குப் பெருமகிழ்வூட்ட எண்ணி, ஜப்பானிய

தமிழ்த்துTது 9
உணவை வழங்காது, தமிழ் உணவாகிய சோறும் கறியும் வழங்கினுர். உண்ணும் பொழுது, அவர் தம் வானுெலிப் பெட்டியை அணுகி, அதனை இயக்கினுர். உடனே புது டில்லியிலிருந்து தமிழ்ப்பாட்டுக் கேட்டது. நான், ‘இவ் வளவு தொலைவிலும் நாவுக்கும் செவிக்கும் தமிழ் விருந்து கிடைத்ததே!" என எண்ணி மகிழ்ந்தேன். ஆயினும், புது டில்லியிலிருந்து வந்த தமிழ்ச் செய்தியும் இசையும், வட மொழி ஒலிப்புடையனவாகவே இருந்தன. தமிழில் இல்லாத ஒலிப்புக்களையும் தோற்றங்களையும், இந்திய வானுெலி நிலையத்திலிருந்து இடை விடாது பரப்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் ஒலி பரப்பு, தமிழ் ஒலிப்புடையதாகவே அமையுமாறு தமிழர் கடைப்பிடியாய் நிற்றல், நம் மொழியின் பாதுகாப்பிற்கு ஒர் அடிப்படை யாகும். −
ஜப்பானிய மொழி திராவிட மொழிகளுடன் தொடர் புடைய மொழியன்று ; ஆயினும், தமிழைப் போல ஒட்டு நிலை வகுப்பினைச் சார்ந்தது. ஜப்பானியச் செய்யுட்களில், இறைச்சி போன்ற சில பண்புகள் உள. நம் சங்க இலக்கிய அகப் பாடல்களின் உரையாசிரியர், அப்பாடல்களுக்குக் கொளு எழுதியிருப்பது போல, ஜப்பானியப் பாடல் களுக்கும், அந்நாட்டுப் புலவர் கொளு எழுதியுள்ளனர். சிறப்பாக, ஜப்பானிய இலக்கியத்தில் தங்கா எனப் படும் செய்யுள் முப்பத்தோரசைகளைப் பேரெல்லையாகக் கொண்டு, நம் குறுந்தொகைச் செய்யுட்களைப் போல, கருத்திலும் கொளுவிலும் இனிது விளங்குகின்றது.
ஜப்பானியர் இயற்கையின் எழிலில் பெரிதும் ஈடு பட்டு வளர்பவர். மலர்களைச் செப்பில் ஒழுங்குபடுத்தி வைப்பதில், அவர் தம் பெண்மணிகளுக்குச் சிறப்பான

Page 12
10 தமிழ்த்துளது
பயிற்சி அளித்து வருகின்றனர். ஆயினும், ஹாவாய்த் தீவுகளில், மலர்களையும் மாலைகளையும் இன்னும் சிறக்கப் பேணுகின்றனர். ஹாவாய்த் தீவுகளுக்கு யான் சென்ற பொழுது, சங்க இலக்கியக் காலத்தின் நினைவு என்னை யறியாமலே எனக்குத் தோன்றிற்று. ஏனெனில், அங்குத் துறைமுகத்திற்கு வந்தவர் அனைவரும், கண்ணியும், மாலையும், தாரும், கோதையும் அணிந்தே வந்தனர்; விருந்தாக வந்தவர்க்கு மாலைகளைச் சூட்டினர்; வழி யனுப்புவோர்க்கும் மாலைகளைச் சூட்டி விடையளித்தனர்; பாடினர்; அலோஹா என்னும் ஹாவாய் இசையினைப் பண்ணுடன் இசைத்தனர். சிலர் தழையுடைகளை அணிந்து வந்திருந்தனர். இப்பெண்டிரும் ஆடவரும் சங்க காலத் தமிழ் மக்களைப் போல எனக்குத் தோன்றினர் என்பதில் சிறிதேனும் உயர்வு நவிற்சியின்று.
T
ஹாவாய்த் தீவில், விண்ணும் மண்ணும் எழில்படைத் திருக்கின்றன. தெளிவான நீல வானம், நிலத்தைச் சூழ்ந்த பசுமையான ஒலி கடல் நீர், பறவைகள், பூக்கள், மரஞ்செடிகள், இவை யாவும், நான் கண்ட வேறு ஊர் களில் இல்லா நிறத்தையும் மணத்தையும் படைத்தன வாய் இருந்தன. என் உலகச் செலவில், நான் கண்ட நாடுகளில், ஹாவாய்த் தீவுகளே எழிலிற்சிறந்தவை. இங்குள்ள தட்ப வெப்ப நிலைகள் அஞ்சத்தக்கன அல்ல; என்றும் உடல் நலத்துக்கு உறு துணையானவைகளே.
பசிபிக்குப் பெருங்கடலின் நடுவிலிருக்கும் இத்தீவுகள், கீழ்த்திசை நாடுகளையும், மேற்றிசை நாடுகளையும் இணைக்

தமிழ்த்தாது 1.
கும் பாலமாய் விளங்குகின்றன. ஹாவாய்த் தீவில் நான் தங்கிய போது, அங்குக் கீழ்த்திசை மேற்றிசைத் தத்துவப் பேரறிஞர் மாநாடு நிகழ்ந்தது. இத்தகைய பேரவையைக் கூட்டுவதற்கு இதைவிடப் பொருத்தமான இடத்தைத் தெரிந்தெடுப்பது அரிது. ஹாவாய்த் தீவுகளிலும், பொதுவாகப் பசிபிக்குப் பெருங்கடலின் தீவுகளிலும், நம் சங்க காலப் பழக்க வழக்கங்களிற்சில இடம் பெறுவது தோன்றுகின்றது. மலர்களை அகவொழுக்கத்திற்கும் புறவொழுக்கத்திற்கும் அறிகுறிகளாகக் கையாண்டு வரு, கின்றனர். இந்நாட்டவர், முற்காலத்தில், பெரும்பாலும் இந்திய நாடுகளுடன் தொடர்புடையவராகவே இருந். திருப்பர் போலும் 1 இவர்களின் வரலாற்றை மேலும் அறிய விரும்புபவர், ஆசிரியர் பீற்றர் பக்கு (Peter Buck) 6T6i Lu 6Ji 6T(pgu Vikings of the Sunrise 6T6it gojlisநூலைப் படித்து அறிக.
ஹாவாய்த் தீவில் வாட்டுமல் எனும் இந்திய வணிகர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். அவர் சிந்து மாகாணத்திலுள்ள ஹைதராபாது எனும் ஊரவர்; ஹாவா யில் பெருஞ்செல்வம் படைத்த வணிகராய் விளங்குகின்ற னர். அவர் அமெரிக்கப் பெண்மணியை மணம் செய்தனர், இம்மணத்தால் நிகழ்ந்த இந்திய - அமெரிக்க உறவின் பயணுக, அவ்விருவரும் தம் செல்வத்தின் ஒரு பகுதியை முதற்பணமாக நிறுவி, இந்தியாவில் அமெரிக்கக் கலை களைப் பற்றியும், அமெரிக்காவில் இந்தியக் கலைகளைப் பற்றியும், ஆசிரியர் வழியாக அறிவு பரப்பி வருகின்றனர். இத்தொண்டிற்கு அவர் ஒதுக்கிய முதல், பதினைந்து நூருயிரம் வெண்பொற்காசுகள் (பதினைந்து இலட்சம் ரூபாய்). இவ்வாறு, தமிழ்ச் செல்வர் அனைவரும் முதல்

Page 13
重2 தமிழ்த்தூது
திரட்டித் தமிழ்த்தூது நிகழ்த்துவராயின், நம் கலைகள் tபாரெங்கும் பரவுதற்கு வழி காண்பர்.
ஹாவாய்த் தீவுகளில் மொலோக்காய் என்பது தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் தன்மை வரலாற்றில் பெயர் பெற்றது. இங்கேதான், அருள்மறைத் திருவாளர் தமியான் அடிகள் என்பார், தொழுநோயினர்பொருட்டுத் தம் வாழ்க்கையை வேள்வி செய்தார். இவர் வாழ்ந்த இல்லத்தையும், சூழ்நிலையையும் காணுமாறு, ஆங்குச் சென்றேன். அவண் வதியுந் தொழுநோயாளரைப் பேணி மேற்பார்த்து வரும் கன்னியர், தமிழ் நாட்டின் தொழுநோய் மருத்துவ நிலையங்களைப் பற்றி நன்கறிந் திருந்தனர். மொலோக்காய்க்குச் சென்ற முதற்றமிழன் நான் எனக் கருதி, அன்னுர், நான் மீண்டும் வந்து வான் உஊர்தி இவரும் வரைக்கும் தமிழ்நாட்டின் பற்பல பொருள்
பற்றி என்னை இடை விடாது உசாவலாயினர்.
Hسے
ஹாவாய்த் தீவுகளை ஐக்கிய அமெரிக்காவின் வாயில் என்று கூறுவர். இத்தீவுகளிலிருந்து ஐக்கிய அமெரிக் காவின் மேற்குக் கரை இரண்டாயிரம் கல் தொலைவிலிருக் கின்றது. எனினும், ஹாவாய்த் தீவினர் அதனை அக் கரை (Mainland) என்று வழங்குகின்றனர். நண்பகலில் வானூர்தி ஏறினுல், அன்று மாலை, சன்பிரான்சிஸ்கோ எனும் பேரூர்க்குப் போய்ச் சேரலாம். ஐக்கிய அமெரிக் காவிலிருப்பவர், பிற நாடுகளைப் பற்றியும், பிற மக்களைப் பற்றியும், பிற இலக்கியங்களைப் பற்றியும் அறிய அவா உடையவர். அவர்களுடைய பல்கலைக் கழகங்களிலும், அகல்லூரிகளிலும், கூட்டங்களிலும், வேற்று நாட்டுச் சொற்

தமிழ்த்தாது S.
பொழிவாளரை அழைப்பது பெருவழக்காம். சொற் பொழிவுகள் கேட்பதிலும், விருந்துகளுடன் கூட்டங்களைக். கூட்டுவதிலும், விருந்தோடு விரிவுரைகள் நிகழ்த்து வதிலும், ஐக்கிய அமெரிக்கா பிற நாடுகளைவிடத் தேர்ச்சி பெற்றது. ஆதலால், ஐக்கிய அமெரிக்காவில், ஒராண்டில், நான் தமிழைப்பற்றி இருநூறு விரிவுரைகள் நிகழ்த்தியது" பெருவியப்பன்று. பல்கலைக் கழகங்களிலும், கல்லூரி களிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும், கிழமைக்கு ஒரு. முறை மாணவர் பொதுக்கூட்டம் (Convocation) கூட்டி, ஆசிரியரையும் பேரறிஞரையும் வரவழைத்து, விரிவுரை கள் நிகழ்த்துவிப்பர். அங்ங்ணம் அழைக்கப் பெறுபவர் களுக்கு இருநூறு அல்லது முந்நூறு வெண்பொற்காக" களைச் சம்பளமாகக் கொடுப்பர். அங்குச் சொல்வன்மை யுடையவர் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலேயே தம் வாழ் நாட்களைக் கடத்தலாம். இப்பல்வேறு கழகங்களுக்குச் சொற்பொழிவாளரை அனுப்ப இதற்கென வணிகக் குழுக்கள் (Agencies) இருக்கின்றன.
இனி, தமிழ்த் தொண்டாற்றுதற்கு அமெரிக்க வானுெலி நிலையங்களும் எனக்குப் பெருந்துணையாய் இருந்தன. ஒவ்வொரு பெரிய நகரிலும், இரண்டு மூன்று: வானுெலி நிலையங்கள் உண்டு. அங்கு என்னை அழைத் துப் பேட்டி வழியாகப் பத்துப் பதினைந்து வினுடிகள் என்னைப்பற்றியும், தமிழ் நாட்டைப் பற்றியும், தமிழ்க் கலைகளைப் பற்றியும், இந்திய அரசியலமைப்பைப் பற்றி யும் வினவினர் ; ஒளிக் காட்சி வழியாகவும் என்னை மக்க ளுக்குக் காட்டினர். அயலாரொருவர் ஓர் ஊருக்குச் சென் ருல், அவ்வூர்ச் செய்தித்தாட்செயலாளர் அவரைத் தேடிப்பிடித்து, தம் செய்தித்தாளுக்குவேண்டிய பொருள்

Page 14
4. தமிழ்த்தூது
பற்றிக் கேட்டெழுதுவதில், மிக்க ஆர்வம் காட்டுவர். இவ் வாறு, விரிவுரை வாயிலாகவும், வானுெலி மூலமாகவும், செய்தித்தாள் வழியாகவும், தமிழ்த்தூது நிகழ்த்துவது அமெரிக்காவில் எளிதாகும்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழைப் பற்றி *யும், தென்னுட்டைப் பற்றியும் அறிந்தவர், ஒரு சிலரே. பென்சில்வேனியாப் பல்கலைக் கழிகத்தில் தமிழ் கற்பிக்க வல்ல ஆசிரியரொருவரைப் பெற முயன்றனர்; ஆயினும், ஒருவரைக் கிடைக்கப் பெற்ருரோ, பெற்றிலரோ, நான் அறியேன். நியுயார்க்கில் இருக்கும் மொழிப் பயிற் ful Lusits fligi, L-gisi) (Berlitz School of Languages) என்னை ஆசிரியராக இருக்கும்படி கேட்டனர். சில பல்கலைக் கழகங்களில் தொடர்ந்து மூன்று திங்கள்காறும் பாடம் நடத்த அழைத்தனர். எனக்குப் பல ஊர்களில் விரிவுரை நிகழ்த்துவதுடன் ஓரிடத்தில் கற்றுக்கொடுப் பது அரிதாதலின், நான் உடன்படவில்லை. கொலம்பியா, ஹாவார்டு, கலிபோர்னியாப் போன்ற பல்கலைக் கழகங் களில் கீழ்த்திசை நாடுகளைப்பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆயினும், தமிழைப்பற்றிய ஆராய்ச்சி மிகக் குறைவேயாம். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில், இந்தியக் கலைகளைப் பற்றி விரிவுரை நிகழ்த்தும் ஆசிரிய ரொருவருக்கு P. T. பூரீநிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாற்றைக் கொடுத்தேன். அவர் அந் நூல் தமக்குப் புதியதோருலகைக் காட்டியதாகப் பேரு வகையுடன் கூறினர். மொழி நூலைக் கற்ற சிலர், திராவிட மொழிகளின் தனித்தன்மையை ஒருவாறு உணர்ந்திருந் தனர். ஆயினும், இந்திய மொழி என்ருல், சம்ஸ்கிரு தம் என்றும், இந்தியக் கலைகள் என்றல், வடகலைகள்

தமிழ்த்துளது 15
என்றும், இந்திய நாடு என்ருல், சிந்து கங்கைப் பெரு வெளி என்றும், இந்தியப் பேரூர்கள் என்ருல், பம்பாய், டில்லி, கல்கத்தா என்றும் நினைக்கும் அளவிற்கு, இந்தியா வின் வடபிரிவினது பெருமையையே இதுகாறும் மாறு பட உணர்ந்துள்ளனர்.
இந்நாடுகளில் நான் ஆற்றிய விரிவுரைகளில், பெரும்பாலும், தமிழைப்பற்றிய சில பொதுக் குறிப்புக் களே அமைந்துள்ளன. தமிழைப்பற்றி ஏதேனும் அறி யார்க்கு, ஆராய்ச்சியுரை நிகழ்த்துதற்கு இடமின்று. பல்வேறு கழகங்களிலும், ஊர்களிலும், வெவ்வேறு குழுவி -னர்க்கு உரை நிகழ்த்தியதால், ஏறக்குறைய நான்கு ஐந்து விரிவுரைகளையும், அதே கருத்துக்களையும், மீண் டும் மீண்டும் கூற வேண்டுவதாயிற்று. அமெரிக்கா இற்றை ஞான்று தோன்றிய நாடு ; இன்னும் இளமை நிலையில் இருக்கின்றது. ஒரு நூற்ருண்டு இரு நூற் ருண்டுகள் படைத்த இடங்கள் அல்லது பொருள்கள் என்ருல், அமெரிக்கருக்கு மிகப் பழைய பொருள்களாகவும், இடங்களாகவும் தோன்றுவன. ஆதலால், அவர்கட்குத் தமிழர் பழமையையும், தமிழரின் பண்டை வாணிகத்தை யும், இயவனர், உரோமர் போன்றேருடன் தமிழ் நாட்டு நட்பையும் கூறிய போது, அவர்க்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று, அவருட்பெரும்பாலார் இந்தியஇலங்கை வறுமை பற்றியும், உடல் நலம் குன்றிய மக்கள் பற்றியும், நோயுற்ற ஊர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருந் தனர். எனினும், தமிழ் நாட்டின் கலைகளை, தமிழ் இலக் கிய நிதிப்பெருக்கை, தமிழ் மொழியின் சிறப்பியல்பை,

Page 15
6 தமிழ்த்து து
பழந்தமிழ்க் காதற்பாக்களை, பத்தி மாலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டவர் அல்லர். அவர்கட்குத் தமிழிலக்கியத்தி லிருந்து நான் மொழி பெயர்ப்புடன் கூறிய சில பகுதிகள் * : ננכ(טג (9) திருக்குறளில், " அகர முதல வெழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே யுலகு,” என்னும் குறள் வெண்பாவை, விவிலிய நூலில் வரும், ' நானே அகரமாயிருக்கிறேன்,” என்னும் திருமொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி கேட் டேன். மேலும், "யாம் இரப்பவை பொன்னும் பொரு ளும் போகமும் அல்ல '; ' தீயினுள் தெறல் நீ; பூவினுள் நற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய் மையும் நீ,” என்ற பரிபாடற்பகுதிகளை இசையுடன் உரைத்து விளக்கினேன் இனி, தமிழ் மொழியின் வியத் தகும் இயல்புகளையும், தமிழரின் இயற்கை ஈடுபாட்டினை யும், ஐந்திணை இலக்கணத்தையும், மலர் மாலைகளை நம் முன்னுேர் கையாண்ட முறைகளையும் எடுத்துக் கூறி னேன் தமிழன்னையின் எழில் வடிவத்தைப்பற்றி, இன் னும், எனக்கு அமெரிக்கர் ஒலைகள் விடுத்துத் தெளிந்து
கொள்கின்றனர்.
தமிழைப்பற்றி மேடை உரைகளை ஆங்கிலத்தில் நடாத்திய எனக்குத் தமிழில் உரையாடுவதற்கோ வாய்ப் புக் கிடைத்ததே இல்லை. வானுெலிப் பேட்டிகளில், யாதே னும் தமிழிற் சொல்லும்படி கேட்டால், பாரதியாரின் * செந்தமிழ் நாடு’, ‘யாமறிந்த மொழிகளிலே ” என்ற தலைப்புப் பெற்ற செய்யுட்களில் ஒன்றைக் கூறுவேன். பன்முறை பேட்டியின் பதிவை (Recording) நானே தமிழொலி கேட்பதற்காக மீண்டும் ஒர்ந்து கேட்டின்புறு வேன். தேநீர் விருந்துகளிலும், பிற நண்பர் கூட்டங்களி

தமிழ்த்துளது 17
லும், என்னைத் தமிழிற்பாடக் கேட்கும் பொழுது, தமிழ் இசைப்பயிற்சி மிகுதியாகப் பெருத யான், ' தமிழ் மணம் கமழ வேண்டும் ", "வெண்ணிலாவும் வானும் போலே” என்ற பாட்டுக்களைப் பாடுவேன். 'செந்தமிழ் நாட்டை’க் கும்மியாய்ப் பாட மீண்டும் மீண்டும் கேட்பர். நான் பாட, அவர் கை தட்டித் தாளம் போடுவர். தமிழிசை அறியார் மாட்டுத் திடமுடன் பாடுவது எளிதெனச் செயலில் அறிந்துள்ளேன்.
அமெரிக்காவில் நான் கண்ட தமிழர் ஒரு சிலரே ஆயினும், நான் அமெரிக்காவில் கண்ட தமிழ்ப் பற்று டைய தமிழர்களுள், நூற்கூட இயக்கத்தின் தலைவராகிய திருவாளர் அரங்கநாதனும், தமிழிற் புத்தகங்கள் இயற்றிய திருவாட்டி உருக்குமிணி அம்மையாரும் சிறந்த வர். இவர் இருவரும், என்னைப் போல உலகில் தமிழ்த் தூது நிகழ்த்தும் இன்றியமையாத் தன்மையை நன்குணர்ந்தோர். உருக்குமிணி அம்மையார் இந்தியக் கலைகளைப் பற்றிப் பல விரிவுரைகள் அமெரிக்காவின் பல பகுதிகளில் நிகழ்த்தி வருகின்றனர்.
5O
பிற நாட்டில் வைகுங்கால், சிறிதேனும் தமிழ் மணம் கமழ்ந்தால், நாம் மட்டற்ற மகிழ்ச்சி எய்துவது இயல் பன்ருே? ஒருகால், இலாகுவாடியா வானூர்தி நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் என் முகவெட்டைக் கண்டதும், என்னை அணுகி, " நீவிர் தமிழ் நாட்டவரோ ?” என்று வினவினுர். அவ்வினு என் செவிக்குத் தேனுயிருந்தது. கீற்றே எனும் எக்குவதோரின் தலைநகர்க்கண் உள்ள
2

Page 16
18 தமிழ்த் தூது
அரசியற்கலைச் சாலையில், எனது சொற்பொழிவு முடிந்த தும், ஒருவர் ஓடி வந்து, தமிழில் விவிலிய நூலைக் காட்டி, “உங்கள் நாகரிகத்தைப் பற்றிக் கேள்வியுற்றே இந்நூலை வருவித்தேன். இனிமேல் தமிழ் பயின்று, இந்நூலைத் தமிழிற் படிக்கப் போகிறேன்," என்ருர், வேறேர் இடத்தில், திருத்தொண்டாற்றும் ஆங்கிலக் கன்னியர் ஒருவர், “ வணக்கம், அடிகாள் ! நீங்கள் எந்த ஊர் ?” என மழலைத் தமிழிற் கேட்டார். இவர், முன் ஒரு காலம் நாகர்கோவில் மடத்தில் இருந்ததாகவும், இப்பொது மணிலாவில் திருத்தொண்டு செய்து வருகிறதாகவும், அங்குக்கூடத் தமிழை இன்னும் பயின்று வருகிறதாகவும் அறிந்தேன். வேருெரு நாள் ஐக்கிய நாட்டுப் பேரவையி 65.1555th g5Tg5i Ji, gigsbe (Delegates lounge) G. Firp பொழுது, தமிழ் நாட்டுத் தமிழ்ச் செய்தித் தாள்கள் சில அங்கிருக்கக் கண்டு, அவற்றை விரைவாகத் திறந்து படித்தேன். என் கண்கள் முதன்முதல் பார்த்த கட்டுரை, பெரும்பேராசிரியர் உ. வே. சாமிநாதையர் நினைவு நாளைப் பற்றியதாயிருந்தது. நியுயார்க்கில், ஐக்கிய நாட்டுப் பேரவைத் தூதர் கூடத்தில், சுதேச மித்திரன் செய்தித் தாளிலிருந்து, சாமிநாதையரின் சங்க நூற் பதிப்புக்களைப் பற்றிப் படிக்கிறதென்றல், தமிழன் உள்ளம் இறும்பூதினை எய்தாது நிற்பது எங்ங்ணம் ?
நியுயார்க்கிலும், லொஸ் அஞ்சலிஸிலும், சன் பிரான் சிஸ்கோவிலும், இந்திய உணவுச் சாலைகள் உள. நியு யார்க்கில் இருப்பவை நான்கு. அவற்றின் பெயர்: R jah, Prince, East India. Curry Sin op, Indo-Ceylon I in என்பன. இங்கு இவர்கள் பரிமாறும் கறிகள் பல.இவற்றின் உணவு நிரலில் (menu) 'கண்டி சம்பல்", "சிங்கள மிளகு

தமிழ்த்தூது 19
தண்ணீர்", "சென்னைக் கறியும் சோறும்', 'தமிழ் இனிப்பு என்றெல்லாம் விளம்பரஞ் செய்திருக்கின்றனர். இந்தியா உலகுக்கு ஈந்த நலங்களில் கறியே சிறந்ததென்று ஒர் ஆசிரியர் இடக்காகச் செப்பினராயினும், ஒரு நாட்டவரின் நாகரிகத்தை அறிவதற்கு, அவரின் உணவும் ஒரு வாயிலாவது உண்மை. என் அமெரிக்க நண்பரோடு அமைதியாய் உரையாட விரும்பும் போதெல்லாம், அவரை இவ்விந்திய உணவுச் சாலைகளுக்கு என் விருந்தாக அழைப்பேன். அமெரிக்கரைச் செவிக்குணவு தருதலால் மட்டுமன்றி, வயிற்றுக்குணவு தருதலாலும் வெல்ல முடி யும். நான் முதன்முதல் ' இராஜா” எனும் உணவுச் சாலைக்குச் சென்ற பொழுது, என்னைத் தென்னுட்டவ ரென்று உணர்ந்த ஊழியன், ஹிந்தி இசைத் தட்டுகளை நீக்கி, " தெருவில் வாராண்டி ” என்ற தமிழ் இசைத் தட் டைப் போட்டான். நியுயார்க்கில் "தெருவில் வாராண்டி” கேட்டதை நினைக்கையில், இன்னும் நகையாகின்றது.
வேற்று நாடுகளில் வாழும் பொழுது, தமிழ்ப் பற்றும் ஆற்றலும் மிகுவது, வேற்று நாடுகளில் வாழ்ந்துள்ள தமிழர் உண்மையென உணர்வர். உரோமை மாநகரில் நான் உறைந்த குரு மடத்திலும், திருமறை நூற்கல்வி பயின்ற பல்கலைக் கழகத்திலும், நாற்பத்து மூன்று வெவ் வேறு நாடுகளிலிருந்து வந்தோர் என்னுடன் மாணுக்க ராய் இருந்தனர். அவருடன் ஐந்து ஆண்டுகள் (19341939) வாழ்ந்ததன் பயணுகவே, பரந்த உலக மனப் பான்மை படைத்தேனுயினேன். அவரிடை வதியுங்கால், என் தமிழ்ப் பற்று மிகுந்ததே அன்றிக் குறைந்திலது. அயல் நாட்டுத் தொடர்பாலும், அயல் மொழிப் பயிற்சியா லும், நம் நாட்டு மொழிப் பற்று நனி சிறந்து வளர்கின்

Page 17
20 தமிழ்க்அாது
றது; பிற மொழிகளுடன் தமிழைச் சீர்தூக்கிப் பார்க் கும் பெரும்பேற்றினேயும் அடைகின்ருேம்.
அவ்வாண்டுகளில் உரோமை மா நகரில் ஒருங்கு வாழ்ந்த தமிழர் எண்மர். நாங்கள் "வீரமாமுனிவர் கழகம் * என ஒன்று குரு மடத்தில் நிறுவி, தமிழை ஆண்டும் ஒரு சிறிது பயின்று வந்தனம்; வத்திக்கான் வானுெலி நிலை யத்திலிருந்து தமிழில் ஒலி பரப்பும் வாய்ப்பும் பன் முறை பெற்ருேம் ; அங்ங்ணம் ஒலி பரப்புந்தோறும் * தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை " செய்தோம் எனக் கருதிக் களிப்புற்ருேம். ஆங்கு வதியும் காலத்தேதான், அயல் நாடு செல்லும் தமிழ் மாணவர் தமிழ்ப் பயிற்சி மிக்குளரேல், எத்துணை உயரிய தமிழ்த் தொண்டு இயற்றுதல் கூடும் என்பது இனிதுணர்ந்தேன். இலண்டன் மாநகரிலும், தமிழ் மாணவர் ஒருங்கியைந்து தமிழ்க் கழகம் நிறுவியுள்ளனர் என்பது இதனைப் படிப் போர் அறிந்திருத்தல் கூடும்.
etc.
தமிழ்த்துாதிற்கென வேற்று நாடு செல்வோர், திருவள்ளுவர் கூறும் மூன்று பண்புகளில் முதன்மை சான்றவராய் இருத்தல், இன்றியமையாது வேண்டப் படுவதொன்றும்.
* அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு."
இயற்கையாகிய அறிவும், கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும், பலரோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும்

தமிழ்த்துளது 2.
என, நன்கு மதித்தற்கேதுவாய இம்மூன்றன் செறிவு உடையவன், அவ்வினைக்குச் செல்லுதல் வேண்டும். அவ்வண்ணம், அப்பண்பு அமையப் பெற்ற தூதர், அவ் வேற்று நாடுகளில், அவ்வேற்று மொழியை நன்ருகப் பேச அறிந்த மேடைக் கலை வல்லுநராய் இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. வேற்று நாட்டினரிடை, அவர் முறையில், அவர் பழக்க வழக்கங்களின்படியே, அவர் பேசுவது போல அவர் மொழியைப் பேசி, அவர் உண்பது போல அவர் உணவை உண்டு, அவருடன் பழகுதல் வேண்டும்.
tiss
அமெரிக்காவில், மூன்று திங்கள், தமிழர் எவரையும் காணும் வாய்ப்புப் பெருத நான், தமிழின் ஒலி இன்பத்தை நுகரக் கருதி, ஒரு நாள் திருக்குறளை எடுத்து, வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினேன். நூலைத் திறந்ததும் முதன்முதல் நான் கண்ட குறட்பா,
* இருவே றுலகத் தியற்கை திருவேறு;
தெள்ளிய ராதலும் வேறு."
என்பது. அந்நேரத்தில், இச்செய்யுளின் ஆழ்ந்த கருத் தொன்று எனக்குத் தோன்றிற்று. அஃது உரைகாரர் கருத்துமன்று ஊழைப் பற்றிய கருத்துமன்று என் அருள் மறையின் கருத்தொன்று அச்சொற்களில் பொதிந் திருப்பது கண்டேன்; அவ்வடிகளின் மென்மையையும் இனிமையையும் நுகர்ந்தேன். அப்பொழுதும், இத் துணைச் சிறப்புப் பெற்ற இலக்கியத்தையும், இதனைத்

Page 18
22 தமிழ்த் தூது
தோற்றுவித்த மொழியையும் பரப்புதல் வேண்டுமெனும் துணிவும் மிகுதியாய் ஏற்பட்டது. திசை நோக்கி இயேசு வின் கோவிலையும், தமிழ் மொழியை எனக்குத் தாய் மொழியாகத் தந்த இறைவனையும், கைகூப்பி வணங்கி னேன்.
தமிழ்க் கலைகளை விரிவுரைகளோடு வெள்ளித் திரை வாயிலாகவும் விளக்குவதற்குத் துணையாக, என்பால் இரு சினிமாப் படச் சுருள்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று, தமிழ் நாட்டின் கட்டடங்களையும், மாளிகைகளையும், கோயில்களையும் காட்டுவது ; பிறிதொன்று, தமிழ் நாட்டி யக் கலையை உணர்த்துவது. அவ்விரு படங்களையும், மேல்நாட்டினர் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பன்னி ராட்டைப் பெதும்பை தில்லாணு ' ஆடிய படத்தைக் கண்ணுற்று மகிழாதார் இலர். "நீங்கள் காட்டிய நடனப் படம், இள அருவியின் சலசலவெனும் ஒட்டம் போன்று இருந்தது 1’ என்று அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் அழகாக எனக்குக் கூறினுர்.
வடவமெரிக்காவில் மாந்தர் தமிழ்க் கலைகளைப் பற்றி அறியப் பெரிதும் அவாவுடையராயிருக்கின்றனர். தென் னமெரிக்காவிலோ, பண்டை நாகரிகம் படைத்தவரும் பழங்குடிகளுமான இலத்தீன் வழித்தோன்றல்கள், இந்தி யாவின் பெருமையை நன்ருய் அறிந்திருப்பதாகத் தெரிந் தது. இலத்தீன் - அமெரிக்க நாடுகளில் பழைய நாகரிகங் கள் அரும்பி மலர்ந்து வாடின. மெக்ஸிகோவில் அஸ்தெக் கரும், தோல்தெக்கரும், பெரூவில் இன்காகரும், வரலாற்று நூல்களில் பெயரும் புகழும் பெற்ற மக்கள். அவர் களுடைய கோட்டைகளையும் மாளிகைகளையும் நான் கண்டபோது, திராவிட மக்களின் கட்டடத் திறன் என்

தமிழ்த்தூது 23
நினைவிலே தோன்றியது. இவர்கள், இத்திறனில், கட்டடக் கலைஞருடைய வியப்பையும் புகழையும் பெற்றவராயினும், இலக்கிய நூல்களை யாத்தவர்களல்லர். இப்பண்டை நாகரிகங்களுடன் தமிழ்ப் பண்பு நிலையைப் பிணைத்துப் படித்து ஆராய்ச்சி செய்வதும், தமிழாராய்ச்சியின் புதிய தொரு துறையாகும்.
தென்னமெரிக்காவில் ஒரு திங்களாகப் பல நாடு களுக்குச் சென்று விரிவுரைகள் நிகழ்த்தி வந்தேன். ஆங் குள்ள செய்தித் தாள்கள், தமிழையும் என் கருத்துக்களை யும் பற்றிய என் உரைகளை, விரிவாக எடுத்துக் கூறின. அவர்கள் தங்கள் ஊர்களில் நான் பல திங்கள் தங்க வேண்டுமென்று என்னைக் கேட்டார்கள். அங்குச் செல் லும் தமிழர் மிகு சிலராகலின், என்னிற் பழைமையையும் புதுமையையும் ஒருங்கே கண்டனர். தம் மொழியாகிய இஸ்பானிய மொழியில் நான் தமிழ்ப் பண்பினை எடுத்துக் கூறியது, அவர்கட்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. தென்னமெரிக்க நாடுகளில், ஆர்கெண்டீனு என்னும் குடியரசு, முன்னேற்றத்தில் சிறப்புற்று வளர்கின்றது. ஆங்குள்ள பல்கலைக் கழகங்கள் இந்தியக் கலைகளை அறிய விரும்புகின்றன. ஆங்கெல்லாம், நம்மவர் தமிழ்த்துதாகச் சென்று, விரிவுரைகள் நிகழ்த்துதல் வேண்டும். நிலப் பிரிவையும், மக்கள் தொகையையும் ஒருங்கே ஆராயும் பொழுது, இஸ்பானிய மொழி ஆங்கிலத்தைப் போல உலகில் முதன்மை பெற்றிருப்பதால், ஆங்கிலத்தில் நம் நூல்களை மொழி பெயர்ப்பது போல, இஸ்பானிய மொழி யிலும் அவற்றை மொழி பெயர்த்தால், உலகிற்பலர் நம்மைப் பற்றி அறிய வழி காண்போம்.

Page 19
24 தமிழ்த்தாது
வடவமெரிக்காவிலும், தென்னமெரிக்காவிலும், பதி ணுன்கு திங்கள் நான் தங்கினேணுதலின், பின்னர்த் தொண்டியற்ற நேரமின்மையால், விரைந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டுவதாயிற்று. எனவே, இரு திங்களுக் குள், வடவாபிரிக்காவின் பழைய ஊர்களையும், எகிப்து நாட்டையும், பலத்தீன் சீரியா போன்ற இடங்களில் பண்டை நாகரிகங்களின் நிலைக்களங்களையும் பார்த்துத் திரும்பினேன்.
இதற்கு இடையில், கலைக்கு உறைவிடமாய் விளங்கும் உரோமாபுரிக்கு, புனித ஆண்டின் வரங்களைப் பெறுமாறு மீண்டும் சென்றேன். நீலக்கடலாகிய நடு நிலக் கடலை உடுத்திய நாடுகள், என்றும் பண்பாட்டில் சிறந்தவை. அவற்றை இன்னும் கூர்ந்து ஆராய்ந்து, ஆங்குள்ள மக்க ளுக்கு எதிர் காலத்தில் தமிழ்த்தூது நிகழ்த்துமாறு எனக்குப் பல அழைப்புக்கள் வந்து சேர்ந்தன. அத் தொண்டை ஆற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பது எதிர்கால மறைபொருள்.
(கட்டுரை ஆசிரியர் 1934-இல் ஐரோப்பாவிற்குச் சென்று ஐந்து ஆண்டுகள் இக்காலிய நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் கல்வி பயின் ருர். 1949-1950-இல் நிகழ்த் திய உலகச் செலவின் பின் எழுதப்பெற்றதாகும் இக் கட்டுரை.)

உ. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு'
தொல்காப்பியரது நூலுக்குப் பாயிரம் எழுதப் போந்த ஆசிரியர், ஈழநாடென்பது இன்றமிழ் நாடென் பதை முற்றும் மறந்து,
* வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம் எனத் தமிழக எல்லை வகுத்தோதியொழிந்தார்.* தொன்று தொட்டு ஒன்ருயிருந்த தமிழ் நாடு பற்பல கடல் கோள் களின் பின் இரண்டுபடவே, ஈழநாடு ஏனைத் தமிழகத்தி னின்றும் துணிப்புண்டு, தனி நாடாயிற்று. எனினும், தமிழ்த் தாயின் தவப் புதல்வரே ஈண்டுமுளராதலின், இவ்வீழ எழில் நாட்டை இந்தியத் தமிழ் நாட்டுடன் இணைக்கும் பாலம் என்றும் இருந்தே வந்துள்ளது. அணு மன் குமுதன் ஆதியோர் குலவரை முதலியவற்ருல் நலமுறு பாலம் அமைத்தனர். ஆயினும், அன்னுர் அன்று அமைத்த மலைப் பாலம், இன்று தமிழ்ப் பெருமக்கள் இத்துணைத் திரளாய்க் கூடி அமைக்கும் கலைப் பாலம் போல், பெருமையும் வன்மையும் பெற்றதாகுமோ ? இக்
》影
1. யாழ்ப்பாணத்தில் கிகழ்ந்த நான்காம் தமிழ் விழா வில் நிகழ்த்திய உரை-1951.
*பனம்பாரனர் பாயிரத்திற் குறிக்கப்பட்ட ‘தென் குமரி என்ற சொல் இப்பொழுதுள்ள கன்னியாகுமரிக் துறையையன்றிக் கடல் கொள்ளப்பட்டு மறைந்த பழைய குமரியாற்றையே குறிக்குமெனக் கொள்ளுங்கால் ஈழ காடும் தமிழ் நாட்டின் பழைய எல்லேயுள் அடங்கும் எனக் கருதலாம். w

Page 20
26 தமிழ்த்துTது
கவின் கலைப் பாலத்தை நிறுவ முன்வந்த பெரியோர் பல ருடன், யானும், சேது என்னும் அவ்வணைக்குதவிய சிறு அணிலே போலச் சேர்ந்து, சங்க இலக்கியத் தண்கடல் மூழ்கி, ஆராய்ச்சித்துறை என்னும் அழகிய கரையின் அருமணலிலே புரண்டு, அரிதாய் என்மீதொட்டிய சிறு மணல் மணிகளைச் சிதறி உதவும் சிறு தொண்டினைச் செய்து மகிழ விழைந்தேனேயன்றி வேறன்று.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில், சென்ற ஆண்டு, நான் தமிழின் பெருமை பற்றிய விரிவுரைகள் பல நிகழ்த் தும் வாய்ப்பினைப் பெற்றேன். அக்காலை, தமிழின் தொன்மையைப்பற்றி நான் குறிப்பிடுந்தோறும், அமெ ரிக்க மக்கள் அடைந்த வியப்பிற்களவில்லை. ஐக்கிய அமெ. ரிக்கா இக்கால நாடு. அதன் இடங்களோ, பொருள்களோ, ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளே பழைமையுடையன. ஆயினும், அவை அமெரிக்கருக்குக் கழிபேருவகையூட்டும். பெரும்பழைமைப் பொருள்களாய்த் தோன்றுகின்றன. இத்தகைய மனப்பான்மை மிகுந்து காணும் நாட்டிலே, நானூறு ஐந்நூறு ஆண்டுகள் அல்ல, நாலாயிரம் ஐயா யிரம் ஆண்டுகட்கு முன்னமே நிலவியிருந்ததென நிலை நாட்டப்பட்டுள்ள நமது சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றியும், நாம் இன்று பொன்னே போலப் போற்றும் தொன்னூலான தொல்காப்பியத்தைப் பற்றியும், சங்க இலக்கியங்களைப் பற்றியும் நான் கூறிய பொழுது, அங் குள்ளோர் அடைந்த வியப்பினை நான் என்னென்று உரைப்பேன் !
* தொன்மையவாம் எனும்எவையும் நன்ருகா; இன்று
தோன்றிய நூல் எனும்எவையும் தீதாகா.”
என்ற சித்தாந்தப் புலவர் கூற்று உண்மையாயினும்,

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 27
உலக இலக்கிய வரலாற்றில், இலக்கியத் தொன்மையி லிருந்து பல்லாயிர ஆண்டுகளாகப் பண்புயர்வும், கலை வளர்ச்சியும், கலைச் சிறப்பும், ஒப்பற்ற முறையில் நிகழ்ந் தமைந்து கிடந்தனவென்று காட்டப்படுமாயின், அத் தொன்மையானது இலக்கியத்தின் பெருமைக்கு ஒர் உண்
மைச் சான்று என்பதை மறுத்தற்கியலுமோ? வெர்ஜில்
என்னும் பெருமைவாய்ந்த இலத்தீன் புலவரை என் இரு கைகளாலும் எடுத்து ஏந்திப் படித்து மகிழ்ந்துள்ளேன்: எகிப்து நாட்டின் தொன்மை வாய்ந்த ஏடுகளையும், எகிப்து நாகரிகத்தின் எழில் வாய்ந்த பழம்பெருஞ்சின் னங்களையும் புரட்டிப் பார்த்து வியந்துள்ளேன். நடு அமெரிக்கர் தென்னமெரிக்கராகிய இன்கா, அஸ்தெக்கர் பண்பிற்கு அறிகுறிகளான கோட்டைகளையும், கட்டடங் களையும், என் இரு கண்ணுரக் கண்டு களித்துள்ளேன்.
எனினும், தொல்காப்பியரை என் கைகளில் ஏந்தி விரிக் கும் பொழுது எனக்கு ஏற்படும் அத்தகைய உள்ளக். கிளர்ச்சி, வேறு எந்நூலாலும் ஏற்படுவதின்று என்பது: உண்மை. நம் பண்டைத் தமிழ் நூல்களைத் தொட்டதும், பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து பண்பில் வளர்ந்து திருந்திய இலக்கிய இலக்கணப் பயிற்சி, நம் மனக்கண்
முன், நிழற்படம் போல எழுந்து நிற்பதே இதற்குக்
காரணம்.
நாம் இருப்பது இப்பெருஞாலத்தின் ஒரு சிறு மூலை. இஞ்ஞாலத்து மூலை முடுக்கின்கண்ணே, இத்துணைச் சிறந்த நாகரிகமும் வளமார்ந்த இலக்கியமும் தோன்றி வளர்ந்து செழித்து விளங்கிய புதுமை, சில வேளை களில் நாமே நம்புதற்கியலாது போகின்றது. வானுற வோங்கி வளம்பெற வளர்ந்துள்ள இப்பனந்தோப்புக்

Page 21
28 தமிழ்த்தூது
களின் சூழ்நிலையில், உலகில் சிறந்து விளங்கிய இலக் கியம் ஒன்று இடம்பெற்று, எழுந்து, வளர்ந்து, உருவா *யிற்று என்று நம்புவது, எளிதன்று. இது "மிகைபடக் கூறுதல்', 'உயர்வு நவிற்சி” என்று, இகழ்ந்தொதுக்கு வாருமுளர். எமது இந்த ஈழநாட்டு நிலையையே பார் மின், வேற்று மொழியினரும் வேற்று நாட்டவரும் இக் கடல் சூழ் இலங்கையில் கால் வைக்குமுன்னரே, தமிழர் இங்கு வாழ்ந்தனர்; தமிழ் மொழி இங்குப் பரவிப் பண் புயர்ந்து நின்றது. ஆயினும், இன்று எழுதிக் குவிக்கப் பெறும் எண்ணற்ற வரலாற்றுச் சுவடிகள், தமிழர் இலங் கையில் பிற்காலத்தில் குடியேறிய மக்கள் என்றே பிழை :படக் கூறி வருகின்றன.
இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின், TDiscovery of India 6Tsirb, History of Indian Literature என்றும் பலபடப் புனைந்து வெளிவரும் ஏடு களை விரித்துப் பார்மின், மாக்ஸ் முல்லர், வின்றர்னிட்ஸ் போன்றவர் முதலாகப் பலரும், வடமொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். அவ்விந்திய இலக்கி யங்களின் வரலாற்றிலே, தமிழ் இலக்கியத்தைப்பற்றியோ, திராவிட நாகரிகத்தைப்பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு கருத்தேனும், காணக்கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவனவெல்லாம், திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட மொழிகள், இவற்றையே அடிப்படையாகக் கொண்டவை. ஆயினும், பல்லாண்டுகளாக, நடுவுநிலை. கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஓழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று இவ்வுண்

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 2୫ ।
மையை எடுத்துக் கூறுவதும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது. அங்ங்ணம் எடுத்துக் கூறு: தற்கும், பெரிதும் மனத்துணிவு வேண்டற்பாலதாயிற்று. தமிழராகிய நாமும், நமது இந்திய மொழிகளிலேனும், நம் தமிழைப்பற்றிய உண்மைகளை இதுகாறும் கூறினேம் அல்லேம்.
* மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே."
" பொய்யுடை யொருவன் சொல்வன் மையினுல்
மெய்போ லும்மே மெய்போ லும்மே."
ஆதலின், உலகம் நம்மை உணராமலும், நாமே நம்மையுணராமலும், பாமரராய், விலங்குகளாய், உலக னைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழர் எனக்கொண்டு, இங்கு உயிர் வாழ்ந்து வந்துள்: ளோம். இன்று இத்தமிழ்க் கோயிலில் நிகழும் தமிழ் விழா, உலகில் தமிழ் நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலை நாட்டும் புதியதோர் இயக்கத்தை உண்டாக்க வல்லதாயின், அது தமிழ் மக்க ளுக்கே பெருமை தருதலால், நாம் அனைவரும் நமக்கே நன்மை பல பயக்கும் நற்ருெண்டைச் சொய்தோ மாவோம். 救 、
நமது கைக்கு எட்டியுள்ள நூல்களில், கடைச்சங்க நூல்கள் எல்லாம், தமிழ் இலக்கியக் காலத்தின் உயர்வு நிலையில் இயற்றப்பட்டனவெனக் கூறுவாருளர். எனினும், பற்பல சான்றுகளிலிருந்து, அவ்விலக்கியமெல்லாம் தமிழ் உயர்வு நிலையிலிருந்து குன்றிய ஒரு காலத்தின் இலக்கியமென்றே கருதுதற்கு இடமுண்டு. குன்றுங் காலையில் தோன்றிய இலக்கியமே இத்துணைச் சிறப்புடன்

Page 22
130 தமிழ்த்துளது
விளங்குமெனின், தலைக்கால உயர்வு நிலையில் மலர்ந்த இலக்கியப் பண்பு எத்துணைச் சிறப்பினதாய் இருந்திருத் தல் வேண்டும் !
t
இனி, சங்க இலக்கியச் சிறப்பியல்புகளுள், நம் கருத் தைக் கவரும் சிறந்த பண்பு, 'ஒன்றே உலகம்’ என்ற உயரிய மனப்பான்மையாம். வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ஒரே உலகம்' (One World) என்னும் நூலை மக்கள் இனிது வரவேற்ருர்கள். அந்நூலில் அவர் எழுதியுள்ளன வாகிய “ வருங்காலத்தில் நம் சிந்தனை உலகாங்குப் Lujib.fc5555i) G35) 165TGli ' (In future our thinking must be world-wide) ST6ör SOub (apaböGFT bassir, இற்றைய இருபதாம் நூற்றண்டில், ஏனையோர்க்குப் பெருமகிழ்வு அளிப்பது பற்றி, தமிழராகிய நாம் சிறு புன்முறுவல் அரும்பி நிற்கின்ருேம். ஏன் ? இந்த இருபது நூற்றண்டுகட்கு முன்னமே தமிழறிஞர் இதனை இனிதுணர்ந்திருந்தார்கள் ; உணர்ந்ததனை உயர்ந்த சொல் வடிவில் உரைத்துமுள்ளார்கள்.
* யாதும் ஊரே,யாவரும் கேளிர்." (புறம். கக உ) * பெரிதே உலகம்; பேணுநர் பலரே.” (புறம். உOஎ) * எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே." (புறம், உOசு)
* யாதானும் நாடாமா லூராமா லென்னுெருவன்
சாந்துணையும் கல்லாத வாறு?” (குறள். க.க.எ) என்றெல்லாம் சங்க கால நூல்கள் யாண்டும் வலியுறுத் துரைத்தல் காண்க.

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 31
இவ்வுயர்பண்பு தமிழர்க்கு எங்ங்ணம் அமைந்தது?
யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னுெடு வந்து கறியொடு பெயர்ந்த”
அதன் பயணுகவும், மொழி பெயர் தேயங்கட்கும், கடல் கடந்து வேற்று நாடுகட்கும் சென்றதன் பயணுகவும், மூவேந்தருடன் குறுநில மன்னர்க்கும், பிற நாட்டு மன் னர்க்கும் உண்டாய தொடர்பின் பயணுகவுமே, அவர் இத் தகைய பரந்து விரிந்த மனப்பான்மையையும், நோக்கங் களையும், பயின்றறிந்து வளர்த்துக்கொண்டனராதல் வேண்டும்.
பெருமை வாய்ந்த நம் சங்க இலக்கியத்தின் பிறிதோ ரியல்பியாதெனின், அஃது எத்துணைத்தொன்மை வாய்ந்த தாய் இருப்பினும், எக்காலத்தும், எந்நாட்டவர்க்கும், இலக்கியச் சுவை அளிக்க வல்ல தன்மையாகும். நாம் ஷேக்ஸ்பியர், காளிதாசன், கம்பன் போன்ற புலவர்களைப் படித்து, அன்னுர் நமது காலத்தினர் போலத் தோன்று வது கண்டு, இன்புற்று வருகின்ருேம். இப்பண்பை "முக் காலத்தினும் ஒத்தியல் தன்மை" எனும் பண்டையாசிரிய ரின் சொற்ருெடரால் குறிக்கவும் கூடும். இக்காலத்திற் கேற்ப, நாம் அதனை ‘இக்காலத் தன்மை" (Modernity) என்ற சொல்லால் குறிப்போம். இக்காலத் தன்மை என்ற சிறப்பியல்பு உள்ளதணுலேயே, சங்க இலக்கியங்கள் என் றும் குன்ரு இளமையுடன், புதுமையும், பசுமையும், அழ கும், பொலிவும், புதிய கருத்தும் பெற்று,
* முன்னைப் மழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப்
பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியவாய் ?
என்றும், எங்கும், எவரும், தம் சீரிளமைத் திறம் வியந்து

Page 23
32 தமிழ்த்தாது
செயல் மறந்து வாழ்த்துமாறு, இன்பம் பெருக்கி வருகின் றன.
2
மேலே எடுத்துக் காட்டிய ஒருலக மனப் பான்மையும், அதற்கு அடிப்படையான பரந்த நோக்கமும், நமது பண்பின் மற்ருெரு சிறப்பியல்பிற்குக் காரணமாயின. இது கண்ணுேட்டம்" (Tolerance) எனப்படும். இதனைப் பொறை எனலும் பொருந்தும். நம் தொகை நூல்கள் பல்வேறு சமயக் கோட்பாடுகளையும், அரசியல் தத்துவக் கொள்கைகளையும், தம்முள் முரண்படும் பழக்க வழக்கங் களையும் காட்டுவன. இச்செய்யுட்களை இயற்றியவர் ஒரு குலத்தார் அல்லர்; ஒர் இனத்தார் அல்லர்; ஓர் இடத்தார் அல்லர். அந்தணர் சிலர்; அரசர் பலர்; வணிகர் பலர்; வேளாளர் பலர்; இரவலரும் உளர்; புரவலரும் உளர். ஆண் பாலாரும் உளர்; பெண் பாலாரும் உளர். ஐந்தி ணைத் தலை மக்களும் உளர்; நிலை மக்களும் உளர்; வெவ் வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உள்ளனர்; வெவ் வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உள்ளனர்; கூடல், உறையூர், கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர்; அரிசில் ஆலங்குடி முதலாக, வெள்ளூர் வேம்பற் றுார் ஈருக, சிற்றுார்களில் திகழ்ந்தவரும் உளர்.
இன்று கண்ணுேட்டம் (Tolerance) என்னும் பண்பி னுக்குச் சான்ருக, இலண்டன் நகரிலிருக்கும் ஹைட் 96tudyist ep2a) (Hyde Park Corner) 6T6irgili (3-5. தினைச் சுட்டிக் காட்டுவர். ஆங்குப் பல்வேறு அரசியல் வகுப்பினர், சமயப் பிரிவினர், கொள்கை வேறுபாட்டினர்.
ஆகிய கூட்டத்தவரின் சொற்பொழிவாளர், தத்தம் கருத்

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 33.
துக்களைத் தடையின்றி வெளியிடுவதையும், மக்கள் கேட் பதையும் காணலாம். 1800 ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டுச் சமய வாதிகள் தத்தம் கொடிகளை நிறுவி, தத்தம் சமயங்களைப் பரப்பிய முறையைக் காணப் பெறின், இக்கால மக்கள் என்ன கூறுவார்கள் ? தமிழ் நாட்டுச் சமயவரலாறு நம் மக்களின் ஒப்பற்ற பெருந்தன்மைக்குச் சான்ருய் விளங்குகின்றது. இப்பெருந்தன்மைக்கு அணி கலன்களாகவே நம் இலக்கியத்தில் பற்பல சமயங் களின் நூல்கள் அமைந்துள்ளன. இலத்தீன் மொழி மேல் நாட்டுச் சமயங்களின் மொழியாய் விளங்கி வந்தது. சம்ஸ்கிருதத்தில் இந்தியாவின் சமயங்களைப் பற்றிய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆயினும், தமிழிலக்கியத் தில் சிறந்து விளங்கும் பல்வேறு சமய இலக்கியங்களைப் போல, வேறு எம்மொழியிலும் இல்லை. சைவரும், வைணவரும், பெளத்தரும், சமணரும், மகம்மதியரும், கத்தோலிக்கரும், புரோட்டஸ்டாண்டாரும் ஒருங்கே, இலக்கியவுரிமை பாராட்டக் கூடிய ஒரு மொழி உண் டெனின், அம்மொழி தமிழ் மொழியேயாம். ஆதலின், பெரிய புராணம், கம்ப ராமாயணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீருப்புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பாய பல்வேறு சமயங்களுக்குரிய நூல்கள், வேறு எந்த ஒரு மொழியின் இலக்கியத்திலும் இல்லை என்று துணிந்து கூறலாம்.
இவ்வாறே, பத்தியில் கலித்த செய்யுட்கள் தமிழில்
அரும்பி மலர்ந்தது போல வேறு எம்மொழியிலும் மலர்ந்
தில. அளவிலும், சுவையிலும், தமிழிலுள்ள திருப்பாடல்
கள் போல, பிற இலக்கியங்களில் இல்லை. எனவே, மொழி
நூல் முறையில் எத்துணை வழுவுடையதாய் இருப்பினும்,
3

Page 24
34 தமிழ்த்தூது ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட் டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என் றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழி என்றும் கூறுவது, ஒரு புடை ஒக்குமெனின், தமிழ் இரக்கத்தின் மொழி’ எனக் கூறுவது இனிது பொருந் தும்; பத்தியின் மொழி எனலுமாம். இரக்கமும் பத்தியும் மனமுருகுதலால் தோன்றும் பண்பாதல் கண்டுணர்க. தமிழில் இரங்குவதுபோல வேறு எம்மொழியிலும் இரங்கு வது அரிது. தமிழில் இரப்பது போல, வேறு எம்மொழியி லும் இரப்பதும் அரிதே. எனவே, பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருவாய்மொழி, திருப்புகழ், திருவருட்பாப்பனுவல்கள், தமிழ் இலக்கியத் தில் இடம் பெற்றது இயற்கையேயாம். சங்க இலக்கியத் தின் அகத்துறைத் தொகுதிகளிலும், தமிழரின் முழுமுதற் கடவுள் வழிபாட்டினுல் பொங்கி எழுந்த அன்பிற்குச் சான்றுகள் உள. தமிழரின் தன்மையைக் காட்டுவதற்குக் கல்லையும் கரைக்கும் இப்பரிபாடல் அடிகளே சாலும் :
* யாம் இரப்பவை,
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்." (பரி. டு: எக, அO)
fE
மேலும், தமிழருடைய நீதி நூல் தொகுதிகளும், நீதி மொழிகளும், நீதிக் கருத்துக்களும், சங்க இலக்கியத்தைப் பயின்று வருவோர் கருத்தைக் கவர்கின்றன. தமிழ் நாட்டு மலைகள் மிளகும், சந்தனமும், பிறவும் தந்தன.

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 85
தமிழ் நாட்டுக் கடல்கள் முத்தும், பவழமும் அளித்தன. தமிழ் நாட்டுக் காடுகள் யானைக்கொம்பும் தேக்கு மரமும் வழங்கிண். தமிழ் நாட்டு வயல்கள் நெல்லும், கரும்பும் உதவின. தமிழ் நாட்டுக் கனியறைகள் வெள்ளியும், பொன் னும், மணிகளும் நல்கின. பெற்றமும், எருமையும், யாடும் தகரும், கரியும், பரியும், மான் முதலாய வன விலங்குகள் எண்ணிறந்தனவும் ஈந்த வளங்கள் எண்ணில. ஆதலால், தமிழன் திசைகள் எங்கும் சென்று, தமிழ் நாட்டின் பெரு மையை நிலை நாட்டினுன். சீரியா, மெசப்பொத்தேமியா, எகிப்து, பலத்தீன், இத்தாலி, கிரீசு, சீனம், கடாரம், சாவகம் முதலிய நாடுகள், தமிழ் நாட்டுப் பொருள்களைப் பெற்றுத் தழைத்தோங்கின. இவற்றுடன் தமிழன் போரில் ஈடுபட்டுத் தன் வீரத்தையும் ஆண்மையையும் வளர்த்து வந்தான். போரும், தூதும், வாணிகமும் விளங்கும் நாட்டில், நீதியும் ஒருங்கே விளங்கும். நேர்மை, நடுவு நிலைமை, உண்மை, வீரம் போன்ற நல்லியல்புகள் போரிலும் வாணிகத்திலும் தலை சிறந்து நிற்றல் ஒருதலை. இரக்கம், அன்பு என்பன, செல்வமும் வீரமும் உடையவர் பால் சுரக்கும் இரு பண்புகளாம். எனவே, நீதிநூல்கள் நம் இலக்கியத்தின் பெரும்பகுதியாய் விளங்குதற்கு, நம் முன்னேரின் வாழ்க்கை அமைப்பு முறையே காரணமாய் இருந்தது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
* நாடா கொன்ருே, காடா கொன்றே,
அவலா கொன்றே, மிசையா கொன்றே, எவ்வழி நல்லவர் ஆடவர்? அவ்வழி நல்லை, வாழிய நிலனே!" (புறம். க அஎ)
என உலகத்தியற்கை கூறிய அழகைப் பாருங்கள் !
(இதன் பொருள்: 'நிலமே, நீ நாடு ஆணுலும் ஆகுக ;

Page 25
86 தமிழ்த் தூது
காடு ஆணுலும் ஆகுக. பள்ளம் ஆணுலும் ஆகுக ; மேடு. ஆணுலும் ஆகுக'. எவ்வாறயினும், எவ்விடத்து நல்லவர்
கள் ஆண் மக்கள் ? அவ்விடத்து நீயும் நல்லை, வாழ்க!”
என்றவாறு.) தீய நிலமேயானுலும், நல்லோர் உறையின்,
நல்ல நிலம் என்றும் ; நல்ல நிலமேயானுலும், தியோர்
உறையின், தீய நிலம் என்றும் ; தன்னிடத்து வாழ்வோர்
இயல்பே அல்லாது, தனக்கென ஓர் இயல்பு உடையது அன்று என, நிலத்தை இழித்துக் கூறுவது போல
உலகத்தின் இயற்கை கூறியவாறு காண்க. ஆடவர்
என்ற சொல் அமைத்திருத்தலும் ஆராயத் தக்கது.
இன்னும், அரசன் ஒருவனது செங்கோன்மை அல்லது கொடுங்கோன்மை, அவன் நாடு செழிப்பு, நீர் வளம் நில வளம் உண்மை, அல்லது இன்மையாற் கண்டு தெளியப்படும் எனும் மெய்ம்மை, சங்கத் தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளது போல, வேறு எம்மொழியிலும் கூறப் பட்டிலது. பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, புறநானூறு முதலான நூல்களில், இக்கருத்தைப் பலவிடங்களில் பரக்கக் காண்க. மன்னனைப் புகழ்வது என்பது, அவன் நாடு, மலை, ஆறு ஆகியவற்றின் வளத்தையும், வனப்பு மிகுதியையும் கூறுவதாகவே கொள்ளப்பட்டது. இளந் திரையனது நாட்டைப் புகழும் புலவர்,
* அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்; உருமும் உரருது: அரவும் தப்பா ; காட்டு மாவும் உறுகண் செய்யா ; வேட்டாங்கு
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கிச் சென்மோ, இரவல! சிறக்கநின் உள்ளம்!”
(பத்து: பெரும்பாண். க.க-சடு)

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 37
என்று கூறுகின்றர். (இதன் பொருள் : "அவன் நாட்டில் வழிப்பறி செய்யும் கள்வர் இரார். இடியும் அங்கே ஒசை காட்டாது ; பாம்புகளும் தீங்கு புரியா ; காட்டு விலங்கு களும் துன்பம் செய்யா. இளைத்தவிடத்தே இளைப்பாறி, தங்கிப் போகவேண்டுமென்று விரும்பியவிடத்தே தங்கி யிருந்து செல்வாயாக 1’ என்றவாறு.) இங்ங்ணம் குடி மகன் ஒருவன் வழிப்போக்கனுக்குக் கூற வேண்டுமாயின், அவ்வரசனது செங்கோன்மைக்கண்ணே அவனுக்கிருந்த நம்பிக்கையின் அளவு புலணுகின்றதன்றே?
நீதி நூல் தொகைகளைத் தவிர, மற்றும் பிற இலக்கி யங்களிலும். தமிழனின் நீதி நெறி முறைகளும், அன் புடைமையும் காணப்படுகின்றன. அகப்பொருள் துறைச் செய்யுட்களேயாயினும், இயற்கை அழகை எடுத்துக் கூறும் பொழுது, தமிழ்ப் புலவர் நீதியை அடிப்படைக் கருத்தாகக் காட்டத் தவறர். மலர்கள் நறுமணங் கமழு தற்கும், ஆற்றிடை நீர் தெளிவுற்றிருப்பதற்கும், இன்னும் இவை போன்ற இயற்கை நலங்கள் எல்லாம் சிறப்பதற் கும், மன்னன் செங்கோன்மையே காரணம் என்பர் சங்க நூற் புலவர் பெருமக்கள்.
" ஈதலிற் குறைகாட்டா தறனறிந் தொழுகிய
தீதிலான் செல்வம்போல் தீங்கரை மரம் நந்த "
(கலி. உஎ)
என்ற பாலைக்கலிச் செய்யுட்பகுதியில் எடுத்துக் காட்டி யுள்ள நீதி எத்துணை அழகுடையது என நோக்குக. (இதன் பொருள் : “ ஈயுமிடத்துத் தன் பொருட்குறைவு காட்டாது ஈந்து, இல்லறம் நிகழ்த்தும் முறைமையை அறிந்து ஒழுகிய நன்மையுடையவன் செல்வம் தழைப்பது

Page 26
33 தமிழ்த்துளது
போன்று, இனிய நீரையுடைய ஆற்றங்கரையில் மரங்கள் தழைக்க " என்றவாறு) தனது சொல் தவறிய தலைவனது நாட்டில் இயற்கை தன் வளம் குன்ருதிருப்பது எத்துணை வியப்பிற்குரியது எனத் தலைவி தோழியிடம் குறை கூறுவ தாக உள்ள பகுதிகள் அறிந்து இன்புறற்பாலன. தம் புகழுரை கேட்ட சான்றேர் போன்று தலையைச் சாய்த்து மரங்கள் துஞ்சின என்று கூறுவதையும், காந்தள் மலர் களைக் கூப்பிய கைகளுக்கு ஒப்பிடுவதையும், வேறு எந்த இலக்கியத்தில் கண்டு சுவை துய்ப்போம் ? இவ்வாறு, நமது இலக்கியங்களில், நீதி நெறிக்கருத்துக்கள் செறிந் திருப்பதை உணர்ந்த மேனுட்டாசிரியர் ஒருவர், " உள்ள வாறே இத்தமிழ் மக்களுக்கு இறைவனின் அருளும் வாழ்த்துரையும் சிறப்பாக அமைந்திருத்தல் வேண்டும்!” என வியந்து மகிழ்ந்து கூறுகின்றர். இறைவனது அருளும் வாழ்த்தும் அமையப் பெருதார்க்கு, இத்துணைச் சிறப்பான உவமையும், கருத்தும், நீதி நெறியும், நல்லொழுக்கமும், மெய்ப்புலமையும் வாய்க்கப்பெரு என்பது அவர் குறிப்பு.
சங்க இலக்கியம் கூறும் நீதியொழுக்கத்திற்கு, அதனை இயற்றிய நல்லிசைப் புலவரும், அவர் போற்றும் பெரியாரும், எடுத்துக்காட்டாய் நிற்கின்றனர். கபிலர், பரணர், காவற்பெண்டிர், பாரி, சாத்தனுர், கோப் பெருஞ்சோழன் இன்னுேரன்ன பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள், நீதிக் குணங்களைக் குணியாகக் காட்டுவன.
‹፵”
நிறையும், நீதியும், நம் மக்கள்பால் நிறைந்து நிலவு தற்குக் கல்வியறிவே அடிப்படைக் காரணமாய் இருந்தது.

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 39
செல்வத்தையோ, செல்வரையோ, தமிழர் பெரிது போற்றிலர். * சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் ” என வும், “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள,” எனவும், முற்காலம் தொட்டுப் பிற்காலம் மட்டும் அவர் கருத்து அதுவே. அவர் அறிந்து போற்றிய செல்வம், அருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம், ஆண்மைச்செல்வம், பெருந்தன்மைச்செல்வம், ஈகைச் செல்வம் என்பனவே. உள்ளவாறு பெருமிதம் கொள்ளு தற்கும் இவையே காரணம் என்பர்.
* அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.” (குறள். உசக)
* செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் : அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை." (குறள், சகக)
" கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.' (குறள். சoo)
என முதற்பாவலர் திருவள்ளுவரும்,
* கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.” (தொல், கஉ0க.)
என ஒல்காப் புலமைத் தொல்காப்பியரும்,
* உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே : பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மணம் திரியும் ;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னுது, அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

Page 27
40 தமிழ்த்தூது
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.” (புறம் கஅ2)
எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய னும், பிறரும், இவற்றின் பெருமையை எங்ங்ணம் போற்றிப் புகழ்கின்றனர் என்பது காணலாம். இவற்றிற்கு எதிராக அன்பு, அருள், கல்வி, கேள்வி, ஆண்மை, ஈகை, ஒழுக்கம் இல்லாதாரை வற்றல் மரம், நல்ல மரம், நாய், விலங்கு, பேய், பதர், பதடி என அப்பெரியார்தாமே தம் திரு வாயினுல் இகழ்ந்து கூறியிருத்தலும் அறியலாம். அகப் பாட்டிலும் புறப்பாட்டிலும், மேற்கூறிய நற்பண்புகள் படைத்த ஆடவர் மகளிர் புகழ் முரசு முழக்கமே எங்கும் கேட்கலாம்.
* புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுஉடன் பெறினும் கொள்ளலர்." (புறம் கஅங்)
டு
இலக்கிய ஆராய்ச்சியாளர் எம்மொழியிலும் சுவை யைப் பெரிதும் விரும்புகின்றனர். தமிழ் நூலார் அச் சுவையை எட்டு, பதினுறு, முப்பத்திரண்டு எனத் தொகுத் தும், வகுத்தும், விரித்தும், இலக்கணம் கூறிப் போந்தனர். சங்க இலக்கியங்களும் பிற்காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்களும், இச்சுவைப் பண்புகள் பெருகி நிறைந்து ததும்பி நிற்பன. அச்சுவைகளில் அழுகைச் சுவை அல்லது அவலச் சுவை ஒன்று. அதனைக் கிரேக்க மொழி யில் பேதொஸ் (Pathos) என்பர். இதற்குச் சங்கச் செய்யுள் இரண்டொன்று எடுத்துக் காட்டுவோம் :

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 41
* அற்றைத் திங்கள், அவ்வெண் ணிலவின்,
எந்தையும் உடையேம்;எம் குன்றும் பிறர்கொளார்: இற்றைத் திங்கள், இவ்வெண் ணிலவின், வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே!" (புறம். ககஉ)
இது பாரி என்னும் வள்ளல் இறந்த போது, அவன் புதல்வியர் பாடிய கையறுநிலைப் பாட்டு. அவனுக்கும் மூவேந்தர்க்கும் நடந்த போரில், அவர் அவனை வஞ்சித் துக் கொன்று, அவன் நாட்டையும் கவர்ந்தனர் என்னும் செய்தி, இங்கு அறியத் தக்கது. வஞ்சித்துக் கொன்ற மையால், வென்றெறி முரசின் வேந்தர் ' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இறந்தாலும், பாரி வென்றனன் : இருந்தாலும், வேந்தர் தோற்றனர் என்க.
* அளிய தாமே சிறுவெள் ஆம்பல்; இளைய மாகத் தழைஆயினவே; இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது இன்னு வைகல் உண்ணும் மறுத்து அல்லிப் படுஉம் புல்ஆ யினவே." (புறம், உச அ)
இது ஒக்கூர் மாசாத்தியார் என்னும் நங்கையர் பாடிய தாபத நிலைப்பாட்டு. (இதன் பொருள்: 'சிறிய வெண்ணிற முள்ள ஆம்பற்கொடிகள் எம்மைப் போலவே இரங்கத் தக்க நிலைமை உடையன. எவ்வாறெனின், யாம் மங்கைப் பருவமுடையேமாயிருந்த காலத்தில், எம் காதலர் எமக்குத் தந்த தழை ஆடையாக அவை உதவின. பெரிய செல்வத்தையுடைய எம் கணவர் இறந்து போக, யாம் கைம்பெண்ணுய் இருக்கின்ற இக்காலத்தில், எமக்குத் தம் பூவிதழில் உண்டாகும் புல்லரிசியால் உணவாக உதவின

Page 28
42 தமிழ்த்துTது
என்றவாறு.) இன்புறுங்காலத்தும், துன்புறுங்காலத்தும் தனக்குத் துணையாய் உதவினவாதலான், ஆம்பல் அளிய வாயின எனக் கூறினுள்.
*இளையோர் சூடார், வளையோர் கொய்யார்,
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி அணியாள், ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை, முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?” (புறம். உசஉ)
இது ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்த போது, குடவாயிற்கீரத்தனுர் பாடிய கையறுநிலைப்பாட்டு. (இதன் பொருள் : முல்லைக் கொடியே, நின் கொடுமை. தான் எத்தன்மைத்து ! நமது தலைவன் பெருஞ்சாத்தன் வலிய வீரன். தன் ஆண்மை வெளிப்பட யாவர்க்கும் தோன்றுமாறு, வீரர்களை எதிர் நின்று போர் செய்து கொன்று வென்ற வலிய வேற்படையுடையான். அவன் இது போழ்து இறந்து பட்டான். ஆதலால், உன் மலர் களை இளைய வீரர் சூடார் ; வளையணிந்த இளைய மகளிர் கொய்யார் : பாணன் தன் நல்ல யாழ் மருப்பினுல் மெல்ல வளைத்துப் பறித்துச் சூடிக்கொள்ளான் ; பாடினி அணி யாள். இந்நிலையில் நீ பூக்கின்றயோ? அவனை இழந்தும், உயிர் நீங்காமல், இன்னும் வாழ்ந்து வருகின்ற என் வாழ்வு போலவே, அவன் வாழ்ந்த ஒல்லையூர் சூழ்ந்த நாட்டில் நீ பூக்கின்ற பூப்பும் கொடுமையேயாகும். என்னை ஆதரிப்பார் இன்மையால் என் வாழ்வு பயன் படாமை போல உன் பூவைச் சூடுவார் இன்மையால், உன் பூப்பும் பயன் படாது. இங்ங்ணம் கொடுமையும், பயன் படாமை
யும், அறியாமையும் கலந்த வாழ்வினையுடைய நாம் இரு

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 43.
வேமும் பெரிதும் இரங்கத் தக்கேம் !" என்றவாறு) இத் தகைய செய்யுட்களை இலக்கிய மன்றங்களிற் பொன்னிற் பொறித்துப் போற்றின், மிகை என்பாரும் உண்டுகொல்?"
ஆங்கிலத்தில் Tenderness என்பது, தமிழில் மென்மை, ஈரமுடைமை, நீரன்ன சாயல் எனப்படும். இவ் வரிய பண்பு அகத்துறை இலக்கியத்தில் வரும் காதற் பாக்களில் அழகாகக் கூறப் பெற்றிருத்தல் காண்கின் ருேம். உதாரணமாக ஒரு செய்யுள் இவண் எடுத் துரைககலாம :
' கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி,
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீ யறியும் பூவே ?"
(குறுந்தொகை, உ}
இச்செய்யுள் முதலடியில் தும்பியை விளித்தலிலும், ஈற்றடி யில் அதனை வினுதலிலும் தோன்றுகின்ற மென்மை, இனிமை, அன்புடைமை முதலாய நலங்களை, வாயினுல் ஒலித்தும், உள்ளத்தில் உய்த்துணர்ந்தும், ஆராய்ந்து காண்க. இரண்டாவது அடியில் தமிழிற்கு இயற்கை யாகிய ஓசையினிமை சிறப்பாகத் துலங்குகின்றது.
GT தென்னிந்தியாவில் முப்பது ஆண்டுகளாகக் கல்லூ" ரிப் பேராசிரியராய் விளங்கிய மேல் நாட்டவர் ஒருவர், "இந்திய இலக்கியத்தில், உயர்ந்த காதல் அல்லது பெண்மை ஒவியம் இல்லை,” என்று கூறியுள்ளார்.

Page 29
தமிழ்த்தூது 4ܛܳܘ̇ܢ
தமிழிலக்கியப் பகுதிகளை அறிந்திருப்பின், அவர் இங்ங்ணம் கூறியிருப்பாரோ? தமிழிலக்கியத்திற் காணும் காதற்பகுதி யின் உயர்வைத் தமிழர்தாமும் அறிந்தார் அல்லர். அன் பினைந்திணை இலக்கணம் வகுத்து, நிலத்திற்கு ஒழுக்கம் நிறுவி, உள்ளுறை இறைச்சியென்ற குறிப்புப் பொருளை நயம்பெற உள்ளே புகுத்தி, தமிழரின் தலைசான்ற காதல் வாழ்க்கையைக் கூறும் இலக்கியம் யாத்த பெரியாரைஅறிவாற்றலிலும் ஒழுக்க நெறி முறைமையிலும் சிறந்த செந்தமிழ்நாவலரை-யாம் எங்ங்ணம் போற்ற வல்லோம்! மறையாசிரியராய் இருப்போரும், ஒழுக்க நீதி முறைகளைக் கற்பிக்கும் பொறுப்புடையோரும், சங்கத் தமிழ் இலக்கி யங்களில், தம் தொண்டினுக்கேற்ற தலையாய சான்றுகளை யும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், வழி வகை களையும் காண்பர். தமிழனின் இவ்வுயர்ந்த பண்பினை உலகம் முழுவதுமே அறிவதற்காக, அறிந்து கடைப் பிடிக்கச் செய்வதற்காக உழைப்பது, தமிழரது தலையாய கடமையாகும். மேல் நாட்டவரிடையே வழக்காற்றிலிருக் கும் களவியல் ஒழுக்கமுறை, பிற்றை ஞான்று பிறந்த மேல் நாட்டு வழக்கம் என்று பெரிதும் போற்றுவர். அன்னுர் நம் அகத்துறை இலக்கியங்களை ஆராய்ந்தறிவா ராயின், அகத்துறை இலக்கியங்களில் எல்லாம் உலகி லேயே ஒப்பற்று விளங்குவது, தமிழில் உள்ள அகத்துறை இலக்கியமே என்று உணர்வது உறுதி.
/ے இலக்கியம் வளர்ந்தெழுவதற்கு நிலைக்களனுக உத வும் பொருள்கள், மக்களும் இயற்கையுமே. இவ்விரு :பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத்து மக்களைப்

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 48y
பற்றியும், அல்லது மக்களை விடுத்து இயற்கையைப் பற்றி யும் புலவர் பாடுவரேல், அவ்விலக்கியம் குறைவுள்ள இலக். daul DIT35(5) 67 Trigli. (There are two great subjects. of poetry; the natural world and human nature. It is a terrible business for poetry when it is. wholly employed on men, or wholly employed on: nature-Sop:/ord Brooke), தமிழ்ப் புலவரோ, தம், புலமைத் திறனைக் காட்டுதற்கு, முதற்பொருளாக மக்களை யும், துணைப்பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர். இயற்கையைத்தானும், தமிழ்ப்புலவர் கையாண்ட முறையில், வேறு எம்மொழிப் புலவரும் கையாண்டிலர். தமிழரின் இயற்கை ஈடுபாட்டைப் பற்றி ஆராயுந்தொறும், எந்நாளும் புதிய கருத்துக்களையும், வியத்தற்குரிய உண்மைகளையும் கண்டு வருகின்றேன். மொழி பெயர்ப்பு வல்லுநர்தாமும், பின் வரும் அடிகளை வேற்று மொழியில் எவ்வாறு பெயர்த்துரைப்பார் ?
" செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை யங்கை யவிழத் தோடார் தோன்றி குருதி பூப்ப ”
(பத்து முல்லை. காட-கசு) மலராயினும், இலையாயினும், மரம் செடி கொடி எதுவாயி னும், தமிழர் தம் வாழ்க்கையில் பயன்படுத்திய முறையை நுணுகி ஆராயுமிடத்து, வேறு எந்த மக்கட்குழுவினரும் இவ்வாறு அமைத்துப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தோன்றவில்லை.
பேராறுகளின் கரைகளிலே, பெரிய பல நாகரிகங்கள் வளர்ந்திருக்கின்றன ; பேரூர்களும் வளர்ந்துள்ளன.

Page 30
தமிழ்த்தூது 46ھہ
தெம்ஸ், சீன், தைபர், நைல் முதலாய ஆறுகளைப் பற்றி எழுந்த செய்யுட்டொகுதியைப்பார்க்கிலும், நம் தமிழக ஆறுகளாகிய வையையைப் பற்றியும், காவிரியைப் பற்றி யும் இயற்றப்பெற்ற செய்யுட்டொகை பெரிது. மேலும், அதனிலும் சிறந்தது என்பேமெனின், அது சிறிதும் மிகைபடக் கூறியது ஆகாது. ஏட்ரியாற்றிக் கடற்கரையில் எழுந்த வெனிஸ் நகர மாந்தர் அக்கடலினைத் தம் நகரின் தலைவியாகப் பாராட்டியது போலவே, நம் தமிழ் மன்ன ரும், தமிழக மக்களும், நம் ஆறு, கடல், ஊர் முதலிய வற்றை அன்புடன் பாராட்டி வந்துள்ளனர்.
go
இயற்கையை ஆழ்ந்தாராய்ந்தறிவதுடன், மக்கள் உள்ளத்தையும் மிக நுண்ணிதாக ஆய்ந்து, உளநூற் பயிற்சி மிக்காராய் மிளிர்கின்றனர் நம் புலவர். அகத் திணைத் துறைகள் அனைத்தும் உள்ளத்தின் இயல்பைப் புலப்படுத்துவன. மெய்ப்பாட்டியலோவெனின், அதனை ஆழ்ந்து அகன்று நுணுகி ஆராய்ந்து செல்லுகின்றது. அகம் என்பதற்கு உள்ளம் என்பதே முதன்மையான பொருள் என நிகண்டு நூலுடையார் கருதியுள்ளதும், ஈண்டுக் கருதற்பாலது. “பெண்ணின் இயல்பை ஷேக்ஸ் பியரைத் தவிர வேறு எவரேனும் அறிவரெனக் கூறுவா ரெனின், அவர் அறிவிலர் : அன்றேல் பேரறிஞர்,” என்ப. பெண் உள்ளத்தை நன்கறிந்து பாடிய செய்யுட்களால், நம் சங்கப் புலவர் பேரறிஞர் என்பது துணியப்படும்.
EO
உள்ளதை உள்ளவாறே கூறுதல் சங்க காலத்துத் தமிழர் பண்பின் வேருெரு சிறந்த இயல்பாகும். தமிழ்

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 4
நாட்டுச் சங்க இலக்கியத்திற்கும், இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திற்கும் உள்ள பெரியதொரு வேற்றுன்ம யாதெனின், இந்தோ-ஐரோப்பிய மொழிகளி லுள்ள இலக்கியங்கள் கற்பனையில் மலிந்து, வாழ்க்கை யுடன் ஒட்டிய வரம்பைக் கடந்து செல்லும் இயல்புடையன, * உலகொழுக் கிறவா உயர்புகழ் காந்தம்,” என்னும் இலக்கண நூற்பாவில், இறவா என்னும் சொல்லை, வட மொழிப் பயிற்சி மிக்கோர் செய்யாவென்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சமெனவும், தனித் தமிழ்ப் பயிற்சி மிக்கோர் ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்ச மெனவும் கொண்டு, தத்தம் கொள்கைக்கேற்ப இலக்கிய மும் எடுத்துக் காட்டுவர். அது மேலே காட்டிய வேற்றுமை பற்றி எழுந்த கொள்கையேயாம், நமது கொள்கையே தமது கொள்கையாகக் கொண்டுள்ள பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், தமது நாடக நூலில், தமிழ்த் தெய்வ வணக்கங் கூறுமிடத்து,
'பத்துப்பாட் டாதிமனம் பற்றினர் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம்இல் கற்பனையே?”
எனக் கூறியுள்ளார்.
நாட்டின் சிறப்பியல்புகளைச் செய்யுளில் விரித்துக் கூறப் புகுந்த தமிழ்ப் புலவர், சந்தேசம் என்னும் முறை யில், பறவைகளையும், முகில்களையும் தூது போக்கினுர் அல்லர் : மக்களையே மக்களைக் கொண்டு ஆற்றுப்படுத் தும் அரும்பெரு முறையையே பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நாட்டு மலைகளும் ஆறுகளும் தேவ கணங்களுடனுே, பிறவுலகங்களுடனுே, தொடர்புடையனவாகக் கூறப்பட் டிருப்பதைச் சங்க இலக்கியத்திற்காண்பது அரிது. தமிழ்

Page 31
48 தமிழ்த்து து
நாட்டு அரசரோ, பிறரோ, தேவ குல அவதாரங்கள் எனக் கூறியுள்ளதுமில்லை. பழந்தமிழ்ப் புலவர் யாண்டும் மெய் யுணர்வாளர் (Realists) ஆகவே காட்சியளிக்கின்றனர் என்பது தேற்றம்.
இவ்வாறு சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைப் பல்வேறு முறைகளில் ஆய்ந்து செல்வதற்கு இடமுண்டு. பண்டைக்கால இலக்கியச் செல்வங்களை எடுத்து நோக் கும் பொழுது-நம் முன்னுேர் கொண்டொழுகிய வாழ்க்கையமைப்பின் சிறப்பியல்புகளை ஆராயும்பொழுது -அவர்களது இயற்கையீடுபாடு, அழகோடு இரண்டறக் கலத்தல், தூய கொள்கைகள், வாழ்க்கையின் மேலான குறிக்கோள்கள், நீதியும் ஒழுக்கமும் ஒருங்கமைந்த உயர்ந்த அரசியல் அமைப்பு முறைகள், இவை அனைத் தையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது, இற்றை ஞான்று தமிழர் என வழங்கப்பெறும் நாம், உண்மையில் நம் முன்னேரின் வழித் தோன்றல்கள்தாமோ என்னும் ஐயம், என்னையும் அறியாமலே என் உள்ளத்தில் உதிக் கின்றது. ஐரோப்பிய நாகரிகம் அனைத்திற்கும் அடிப் படையாய் இருந்த கிரேக்க நாட்டிற்கு ஏற்பட்ட வரலாறே தமிழகத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும், அத் துடன் தோன்றுகின்றது. பைரன் என்ற ஆங்கிலப் புலவர் கிரேக்க நாட்டின் நிலையைக் கண்டு கண்ணிர் சொரிந்தது போலவே, தமிழ் நண்பர் நம் நிலையையும் கண்டு இரங்குவதற்குக் காரணங்கள் பல உள என்பதற்கு ஐயம் இல்லை.
தமிழ் விழாக் கொண்டாட நாம் இங்கே கூடியிருப்பது, தமிழரின் சென்ற காலப் புகழை மீண்டும் நாம் பெறு தற்கும், அதனை உலகில் என்றும் நிலை நாட்டுதற்குமே

சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 49
யாம். ஆதலால், "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.” தமிழ் நாட்டில் உண்மை யான கல்வியும், உண்மையான குறிக்கோள்களும் உண்மையான கோட்பாடுகளும் நிலைபெற்று விளங்கினுல் மட்டுமே, நம் முன்னுேர் அடைந்த சிறப்பு நிலையை நாமும் அடைவோம். வள்ளுவரை வானளாவ வாயினுல் புகழ்தல் மட்டும் போதாது ; வள்ளுவர் வகுத்த நெறியின்படியே தமிழர் அனைவரும் வாழ வேண்டும்.
இன்று நம் தமிழ் நாட்டிற்கு வேண்டுபவர் யாரெனில், ஆன்றமைந்தடங்கிய கொள்கைச் சான்றேராகிய ஆராய்ச்சியாளர் பலரே. நான் உலகின் பல்வேறு நாடு கட்குச் சென்றதன் பயணுகவும், பிற மொழிகளையும் அவற் றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றறிந்ததன் பயணுக வும், தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பு, தமிழ்க்கலை, தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்ப வேண்டுமென்று, ஒரு சிறிது உணர்ந்துள்ளேன். ஹோம ரின் ஒடிசியையும், வெர்ஜிலின் இலியதையும் மக்கள் போற்றுவது போல, இளங்கோவடிகளின் சிலப்பதி காரத்தை-ஒப்புயர்வற்ற முத்தமிழ்த் தொடர்நிலைச் செய் யுளை-உலகம் போற்றுமாறு நாம் செய்தல் வேண்டும். கொன்பூசியஸ், செனக்கா முதலாய நீதி நூல் ஆசிரியர் களை உலக மாந்தர் எங்ங்ணம் அறிந்து படிக்கின்றனரோ, அங்ங்ணமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக்குமாறு நாம் செய்வித்தல் வேண்டும். சாபோ, எலிசபெத்து பிரெளனிங், ஷேக்ஸ்பியர் முதலானுேரின் காதற்பாக்களை மக்கள் காதலித்துப் படித்து இன்புறுவதே போல, நம் அகத்துறை இலக்கிய நூல்களையும், அன்னூர் படித்து இன்புறும் புதிய நாள் உதிக்கவேண்டும். உலக
4.

Page 32
50 தமிழ்த் தூது
இலக்கியத் திரட்டு (World Classics) என்னும் பெருந் தொகை நூல்களில், நம் இலக்கிய நூல்களும் இடம் பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும் மேற்றிசைக் கண்ணும், கீழ்த்திசைக்கண்ணுமுள்ள பல்கலைக் கழகங் கள், தமிழ்க்கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும். தமிழறிஞர் தமிழை அன்புடன் தனித்தமிழ், செந்தமிழ், முத்தமிழ். தீந் தமிழ், தேன்தமிழ், தண்டமிழ், வ்ண்டமிழ், கோதில் தமிழ், தீதில் தமிழ் என்றெல்லாம் போற்றுகின்றனர். அவ்வன்பிற் பிறரும் பங்கு பெற்று, உலகம் பெருவாழ்வு அடையுமாறு நாமனைவரும் ஒருங்கு சேர்ந்து உழைப்பதே, இவ்வழ கிய மொழியை நமக்குத் தாய் மொழியாகத் தந்த இறைவ னுக்கு நாம் காட்டும் நன்றித் தொண்டாகும்.
என்னை நன்முக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ்செய்யு மாறே."-திருமூலர்

ந. மலரும் மாலையும்
தென்னுட்டு மக்கள் மலர்களையும் மாலைகளையும் மிகு தியாய் விருப்புற்றுத் தங்கள் வாழ்க்கைக்குப் பயன் படுத்தி வந்தார்கள் எனும் உண்மையைப் பிற நாட்டார் பலர் குறித்துள்ளனர். அப்துல் இரசாக்கு விசயநகரத் தைப் பற்றி விரித்துரைக்கும் பொழுது அந்நகரின் மக்கள் மலர்களைப் பெரிதும் விரும்புகிறர்கள் என்றும், அந் நகரின் பல இடங்களில் பூக்கடைகள் பரவியிருக்கின்றன என்றும், குறிப்பிட்டுள்ளார். காளிதாசரின் இயற்கை ஈடு பாட்டையும், அவர்தம் நாடக பாத்திரங்கள் மலர்களையும் இலைகளையும் பயன்படுத்தும் முறையையும், அவர் உவமை களைக் குறிப்பிடும் திறனையும் நோக்குமிடத்து, 8 அன்னுர் ஐந்திணை இலக்கியத்தையும் தமிழ்ப் புலவரையும் அறிந் திருப்பரோ?” எனும் கடா எழுகின்றது. மேலும், சாகுந்தல நாடகத்தின் நான்காவது காட்சியில், சகுந்தலை தன்னைத் தன் தந்தையிடமிருந்து பிரிக்கும் செயல் மலையாள மலைத் தொடரின் சந்தன மரத்தில் படர்ந்துள்ள கொடியை அம் மரத்திலிருந்து பிரிக்கும் செயல் போன்றது எனக் கூறு தலால், அவர் தென்னுட்டினை நன்கு அறிந்திருத்தல் வேண்டும் என்பது புலனுகின்றது.* ஆயினும், காளி தாசரது இயற்கையைப் பற்றிய அடிப்படைக் கருத்து, தமிழ்ப் புலவரது கருத்தினும் வேறுபாடுடையது. அவரது சகுந்தலையுடன் மரங்களும் செடிகளும் பேசுவன போல, தமிழ்த் தலைவியருடன் அவை பேசுவனவல்ல. அன்றியும், * மேகதூதம் ? போன்ற ஆற்றுப்படைகளைச் சங்கப்
* அக்காலத்தில் மலையாளம் கமிழ் காட்டின் ஒரு பிரி வாய் இருந்தது.

Page 33
52 தமிழ்த் தூது
புலவர் இயற்றினர் அல்லர். "இருது சம்ஹாரா'வில் பருவங்களைக் காதல் வாழ்க்கைக்குப் பின்னிலைக் களனுகக் காளிதாசர் கூறும் முறை, அவர் சங்கப் புலவரின் கோட் பாடுகளுக்கு நெடுந்தொலைவில் இருப்பவர் என்பதைக் காட்டுகின்றது.
தென்னுட்டில் மட்டும் அன்று ; மேற்றிசையிலும், நாகரிக மாந்தர் ஆகிய கிரேக்கர் உரோமர் முதலியோர், தம் வழிபாட்டு முறையிலும், தம்மை அணி செய்யும் வகை யிலும், மலர்களைப் பெரிதும் பயன்படுத்தினர் ; வேள்விக் குரிய காளைகளுக்கும், பிற விலங்குகளுக்கும், மாலை இட்டே வேள்வி நடத்தினர். விருந்தினர் கண்ணி சூடியே விருந்துண்டனர். மரதன் பந்தய ஓட்டத்தில் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக இலைகளால் ஆக்கிய முடி ஒன்றையே கிரேக்கர் சூட்டினர். இன்றும், மேல் நாடு களில், மலர்கள் மீது அன்பு பூண்டு, அவற்றை மிகுதி யாய்ப் போற்றி, அழகுற வழங்கி வருகின்றனர். எனினும், சங்க காலத்தில், தமிழ் மக்கள் அவற்றை வாழ்க்கையின் பல துறைகளுக்குப் பயன்படுத்தியது போல, வேறு எவரும் பயன்படுத்தினர் என நாம் அறிந்திலேம். பொது வாகப் பசிபிக்குத் தீவுகளிலும், சிறப்பாக ஹாவாய்த் தீவுகளிலும், பொலினீசிய மக்கள், தமிழ் மக்களைப் போல, கோதையும், மாலையும், தாரும், கண்ணியும், தழையுடையும் அணியும் பழக்கம் உடையவர்களாயிருக்கின்றர்கள். அப் பழக்க வழக்கங்களால், அன்னர் இந்தியாவின் தென்னுட் டிலிருந்து ஆங்குச் சென்று குடியேறியவர் ஆவார் எனக் கருதுதற்குப் பெரிதும் இடம் உண்டாகின்றது.

மலரும் மாலையும் 53
உல்க இலக்கியங்களைப் பயில்பவர், வெர்ஜில், உவோர்ட்ஸ்-உவொர்த்துப் போன்ற மேல் நாட்டுப் புலவரின் இயற்கை ஈடுபாட்டைப் பெரிதும் போற்று கின்றனர். பேராசிரியர் இரைடர் (Ryder) என்பார், காளி தாசரின் மேகதூதத்தைப் பற்றி ஆராயும் பொழுது அச் செய்யுளில் தோன்றும் இயற்கை ஈடுபாட்டின் தன்மை பிற இலக்கியங்கள் எவற்றிலும் இல்லை என வியந்து வற்புறுத்துகின்றர். அன்னுர் கபில பரணர் முதலானுேர் இலக்கியங்களைக் கண்ணுற்றிருப்பரேல், அதனினும் சால வியத்தற்குப் பல காரணங்களைக் கண்டிருப்பர். ஏன் எனின், தமிழ் மக்கள் வரலாற்று முறைமை எட்டாத காலந் தொட்டு நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அதன் இயற்கையே பண்பாட்டின் அடிப்படை என உணர்ந் திருந்தார்கள். மக்கள் இயல் வல்லுநர் ஆகிய இலெப்லே (Le Ply) என்னும் பெரியார் கூறிய இவ்வுண்மையைத் தமிழ் மக்கள் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே இனி துணர்ந்தவர்கள் ஆவார்கள். மலை நிலத்திலும், கடல் நிலத்திலும், அவ்வச்சூழ்நிலைக்கு ஏற்ற பண்பாடே இயற் கையாய் அமையும் எனவும், ஆற்றங்கரையை அடுத்துள்ள கழனி நிலங்களில் வேறு பண்பாடு தோன்றும் எனவும் உணர்ந்து நிலத்தினை ஐந்திணையாகப் பிரித்தனர்.
அவ்வத்திணைகட்கு அவர் இட்ட பெயர்கள் அவரது இயற்கை அன்பினை நன்ருகத் தெளிவுறுத்துகின்றன. நாகரிகமற்ற மக்கள் அவ்வந்நிலங்களில் தோன்றும் பயிர் அல்லது உணவுப் பொருளின் பெயரை அத்திணை களுக்குக் கொடுத்திருப்பர். அவ்வாறு செய்தார் அல்லர்

Page 34
54 தமிழ்த்து து
பண்புடைப் பண்டைத் தமிழர். மலை நிலத்திற்கும் மலை சார்ந்த நிலத்திற்கும், அவர் கொடுத்த பெயர் குறிஞ்சி. Gğ5665fA (strobilanthus kunthanius) 6T6öfLug5I மலை நாட் டில் பன்னிராண்டுகட்கு ஒரு முறை பூக்கும் ஒரு செடி. நீலகிரி பழனி மலைகளில் அதனைக் காணலாம். அச்செடி பூக்கும் காலத்தில், மலைச்சாரல் எல்லாம் ஒரே நீலநிறமாய் மிக்க அழகுடன் விளங்கும். அப்பூக்களில் தேனும் மிகுதி யாகக் கிடைக்கும். அவ்வாண்டில் கிடைக்கும் தேனைப் பெருந்தேன்’ என்பர். குறுந்தொகை மூன்ரும் பாட் டில,
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனுெடு நட்பே.'
எனத் தேவகுலத்தார் எனும் புலவர் கூறுதல் காண்க.
தொல்காப்பியர் காலத்திற்குப் பன்னூழுண்டுகள் முற்படத் தமிழ் மக்கள் மலை நாட்டிற்குக் குறிஞ்சி நிலம் எனப் பெயரிட்டார்கள். அதற்கு எத்துணைக் காலத்திற்கு முன்னர், அக்குறிஞ்சிச் செடி மலை நாட்டில் மிக்க சிறப் புடையது எனக் கருதி அவர்கள் ஆராய்ந்திருத்தல் வேண்டும்? அவர்கள் நுண்ணறிவுதான் என்னை ! காந்தள், வேங்கை, ஆரம், அகில் என்ற இவற்றில் ஒன்றின் பெயரால் அதனைக் கூறியிருத்தல் கூடாதோ? குறிஞ்சிப் பூவே சிறப்புப் பூவாதலால், குறிஞ்சியென மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறித்தார்கள்.
அவ்வாறே, பிற நிலங்கட்கும் முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனப் பெயர் வைத்ததற்கும் சிறந்த காரணங்

மலரும் மாலையும் 55
கள் உள்ளன. பாலை மரம் (Wrightia tinctoria) இன்று தென்னிந்தியாவில் காண்டல் அரிது ; ஈழ நாட்டின் காடு களில் மிகுதியாக வளர்கின்றது; கோடைப் பருவத்தில் மாவும் மக்களும் விரும்பி உண்ணும் பழங்களை நல்குகின் றது. பழைய உரைகாரருள், உரையாசிரியர் எனச் சிறப் புப் பெயர் பெற்ற இளம்பூரணர் ஒருவரே பாலை மரத்தைப் பற்றிக் கூறியுள்ளார்; 'பாலை என்பதற்கு நிலம் இன்றே னும், வேனிற்காலம் பற்றி வருதலின், அக்காலத்துத் தளி ரும் சினையும் வாடுதலின்றி நிற்பதாம் பாலை என்பதொரு மரமுண்டாகலின், அச்சிறப்பு நோக்கிப் பாலை என்று குறியிட்டார்,” என்பது அவர் கூற்று. பாலை மரத்தின் காய்கள் பற்றுக் குறட்டின் வாய் போன்ற வடிவின என் கின்றர் புலவர் ஒருவர். " கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலை' என்பது நற்றிணை (கoஎ).
முல்லை நிலத்திற்கு முல்லை மலர் அடையாளமாய் இருப்பதுடன், அது கற்பு எனும் பண்பினைக் குறித்தற்குப் பெரிதும் பொருந்திய பூவாகவும் விளங்குகின்றது. 4 முல்லை சான்ற கற்பினள்" எனவும், 'முல்லை நாறும் கதுப்பினன் ” எனவும், பன்முறை வருதல் காண்க. மேல் நாட்டினர் இலிலி மலரைப் போற்றியது போல, முல்லை யைப் போற்றினர் தமிழர். வெண்மையான நிறமும், சிறப்பான மணமும் உடைய பூவினைக் கற்பிற்கு அறிகுறி யாகத் தமிழர் நிறுவியது வியப்பன்று. தமிழர் ஏனைய பூக்களினும் முல்லையைப் பெரிதும் விரும்பி, அதனைத் தமக்கும், தம் இசைக் கருவிகட்கும், வழிபாட்டிற்கும் பயன்படுத்தினர் என்பதற்குப் பல சங்கப்பாடல்கள் சான்ருவன.

Page 35
56 தமிழ்த்தூது
Ol
தமிழ்ப் புலவர், இயற்கையை நன்றகப் பயின்ற பின் னரே செய்யுள் செய்யத் தொடங்கினர். ஐந்திணை நிலம், பெரும்பொழுது, சிறு பொழுது என இயற்கை வனப்பு அவர் அகப்பாடல்கட்கு இன்றியமையாத பின்னிலைக் களனுக விதிக்கப் பெற்றது. பிற இலக்கியங்களில் இத்தகைய கோட்பாடுகள் இருக்கக் காண்கிலேம்.
சங்கப் பாடல்களில் மட்டுமே அன்றி, சிறிய வரிப் பாடல்களிலும், தமிழ்ப் புலவர்களின் இத்தகைய ஈடுபாடு வெளிப்படுகின்றது. சிலப்பதிகாரக் கானல் வரியில்,
* பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி ! காமர் மாலை அருகசைய நடந்த தெல்லாம் நின் கணவன் நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி !”
என இசைக்குமிடத்து, காவிரியாறு பூவணிந்து, பூமாலை யும் தழையுடையும் புனைந்து செல்லும் காட்சியை, சிறிய எளிய இனிய சொற்களில் பேரழகுடன் ஒவியமாகத் தீட்டியுள்ளனர் இளங்கோவடிகள். அப்புலவரே, வையை யாற்றையும், அத்துணைத் திறமையும் அழகும் திகழப் பாடி யுள்ளார் ; வையை எனும் நங்கை கண்ணகிக்குப் பின் நிகழும் தீங்கினை முன் அறிவாள் போல, பூவாடையால் தலையை மூடிக்கொண்டு, கண்ணிர் சொரிந்தாள் எனக் காட்டுகின்றர்.
* கரைநின் றுதிர்த்த கவிர்இதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிர்அறற் கூந்தல்

மலரும் மாலையும் 5
உலகுபுரந்தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி ன்வயை யென்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள்போல் புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென’
(புறஞ்சேரி. கசு ச-களச)
என அவர் அவ்யாற்றினை உருவகப்படுத்தி, அழகுறப் :புனைந்து, புகழ்படப் போற்றிக் கூறியிருத்தல் நினைக் குந் தோறும் இன்பம் பயக்கின்றது. இம்மலராற்றின் வர லாற்றை இனிது ஆராய்வார் பரிபாடல் எனும் தொகை நூலைப் பார்க்க, கரையிலுள்ள மரங்கட்கு வையை ஆருயிர் கொடுத்து வளர்ப்பதால், அம்மரங்கள் எதிர் விருந்தாக மலர்களைச் சொரிந்தன எனப் புலவர் ஒருவர் 4புகல்கின்றர். தமிழ் நாட்டுக் கடலே ' இறவொடு வந்து கோதையொடு பெயர்கின்றது ?? என்கிறர் வேருெரு புலவர்.
-
ஒவ்வொரு திணையின் கருப்பொருளையும் தமிழ்ப் புலவர் நன்ருய் ஆராய்ந்ததால், மிகவும் வியக்கத் தக்க உவமைகளைக் கூறியிருக்கின்றனர். தமிழ் நாட்டின் இயற்கை வனப்பையும், நுண்ணிய பொருள்களையும் ஆராய்வார், புகை வண்டி, விசை வண்டி, மிதி வண்டி இவற்றில் செல்லுங்கால், அவற்றைக் காண்டல் அரிது. அவர் காவிரி யாற்றின் கழனிகளுடே நடந்து செல்லுதல் வேண்டும். மருத மரங்கள் கரைகளில் நெருங்கி அடர்ந்து

Page 36
58 தமிழ்த்துளது .
நிழலிட்டு, தம் கொம்புகளையும் கிளைகளையும் தெளிந்த
நீருக்கு மேலே தாழ்த்தி அழகு செய்யும் குளங்களில்,
நீராடிக் களித்தல் வேண்டும். " மந்தியும் அறிய்ா மரம்
பயில் அடுக்கம் ' சென்று, வானுறவோங்கி வளம்பெற வளர்ந்திருக்கும் பெரிய மரங்களையும், அவற்றிற்கு அடியில்
எண்ணிறந்த பல்வகைச் சிறிய மரங்கள் செறிந்து விரிந்த
காடுகளையும், அவற்றின் கீழே தரையில் ஒன்றன்மேலொன் ருகக் கிடந்து, படர்ந்து, தழைத்து, தம்மிடையே எவரும்
புகவொட்டாத கொடிகளையும், செடிகளையும், புதர்களையும், அச்சம் என்பது சிறிதும் அறியாது ஆங்காங்கு உலாவித்
திரியும் அழகிய வன விலங்குகளையும், மரக்கிளைகளில்
அமர்ந்து மகிழ்ந்து பாடும் வனப்பு மிக்க பறவைகளையும், குன்றுகளின் உச்சியிலிருந்து பளிங்கு போலத் தெளிந்
தோடும் அருவிகளையும், ஒடைகளையும், நீர் நிலைகளையும்
கண்ணுற்றுக் குறிஞ்சி நிலத்தின் மாண்பினை உணர்தல்
வேண்டும். முல்லை நெய்தல் முதலான நிலங்களின்
இயற்கை வளங்களையும், வனப்புக்களையும், ஆங்குச்
சென்று அந்நில மக்களுடன் உறைந்து, கண்கூடாகக்
கண் டால் அன்றி வேறு வகையாய் அவற்றினை உள்ள
வாறு அறிந்துகொள்ளல் அமையாது.
தமிழ்ப் புலவரின் உவமைகள் பல வியக்கத் தக்கன. வேப்பம்பூவை நுட்பமாய்ப் பார்த்த புலவர், அது இருல் மீன் கண்போல இருக்கின்றது என்றனர். வேறெருவர், கலைமான் " இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பு” உடை யது என்றர். இன்னுெருவர், பாடினியின் சிவந்த மெல் லிய உள்ளங்கால், வேட்டைக்குச் சென்று நீர் வேட்கை மிக்கு இளைப்புற்ற நாயின் நாவினை ஒக்கும் எனக் கூறி னர். பின்னுெருவர், வாகைப் பூவை மயிலின் சிகைக்கு

மலரும் மாலையும் 593
உவமித்தார். மற்ருெருவர், நெல்லிக் கனி முயலின் கண் சணிற்கு நிகர் என நிகழ்த்தினர். பிறர் ஒருவர், நாரையா னது 'பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் ' உடையது என உரைத்துள்ளார். காந்தள்
மலரைக் கண்ட புலவர் களிப்புறும் வகைதான் என்னை ! காந்தள் இதழ்கள் குவிந்திருப்பது, இறை வழிபாடு செய்யும் இனிய மகளிரின் குவிந்த கைபோலக் கவின்
செய்கின்றது என்றர் ஒருவர். மாலைப் பொழுதில், அதன்
தோற்றம், இயற்கை மகள் ஏற்றும் விளக்குப் போல
விளங்குகின்றது என விளம்பினர் மற்ருெருவர். முறுகி யிருக்கும் அதன் இதழ்களைக் கண்டவர் உடைந்த அரக்கு வளைகளை அவற்றிற்கு ஒப்புமை கூறினர். அதன் இலைகளை
உற்று நோக்கியவர், கள்ளை மிகுதியாக உண்டு: மயங்கித் தடுமாறித் திரியும் களியர்க்கு அவற்றினை ஒப்பிடு: கின்றர். இங்ங்ணம், மலர்களையும், மரங்களையும், செடிகளை
யும், கொடிகளையும், எண்ணிறந்த இயற்கைப் பொருள்
கள் பிறவற்றையும் தத்தம் மதி நுட்பத்தினுல் கையாண்டு. அவர் கூறியுள்ள உவமைத் திறன்கள் மிகச் சிறப்புடை
யன. அன்னுர் யாப்பியல் நன்குணர்ந்த கவிஞர் ; உள நூல் கற்று வல்ல அறிஞர் ; செடி நூல் வல்லுநராயும், விளங்கினர்.
p
தமிழர் தம் வழிபாட்டு முறைக்கு மலர்களையும், மாலை களையும், இயற்கை வனப்டையும், பயன்படுத்தி வந்தனர். மலர்களால் வழிபடும் முறை திராவிடச் சிறப்பு முறை: எனக் கூறுவாருமுளர். வைதிக வழிபாட்டில் மலர் வழி
பாடு இல்லை என்பதும், ஆரியர் திராவிடரிடமிருந்தே

Page 37
$60 தமிழ்த்அாது
மலர் வழிபாட்டு முறையைக் கற்றனர் என்பதும், அவர் துணிபு. “பூஜை' என்னும் வட சொல், "பூ செய்’ என் னும் தமிழ்ச்சொல்லின் திரிபு என்பாருமுன்ார். அதற்குத் தக்க சான்றுகளும் உள. பூ வழிபாடு வேத காலத்தில் ஆரியர்கண் இன்மையாலும், ' பூஜை' எனும் அடிச் சொல் ஆரியத்தில் தவிரப் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் காணுமையாலும், ' புஷ்ப கர்ம பூஜை' திராவிட மக்களின் தனிப் பண்பாட்டிற்கு இசைந்தது என நம்புதற்கு இடமுண்டு.*
முருகன் வழிபாடு இயற்கையுடன் கலந்த வழிபாடு. அவன் விரும்பும் இடங்கள் யாவை எனின், இயற்கை வனப்புத் தோன்றும் இடங்கள் அனைத்துமேயாம்.
* காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் *S. K. CHATTERJ 1, Race Movements and Prehistoric Culture in the Vedic Age. London, 1951, p. 160.
“The characteristic offerings in the Puja rite Wiz, flowers, leaves, fruits, water, etc., are not known to the homa rite, except in instances where it has been influen ced by the puja. It has been suggested with good reason that puja is the pre-Aryan, in all likelihood the Dravidian form of worship, while the homa is the Aryan; and throughout the entire early Wedic Literature, the puja ritual with flowers etc., offered to an image or sym sbol is unknown. The word puja, from a root puj. appears, like the thing it connotes, to be of Dravidian origin also. This word or root is not found in any Aryan «Cor Indo-European language outside India."
g

மலரும் மாலையும் 6聪
எனத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறுகின்றர். முருகனை வழிபடுவோர் சிவந்த மலர்கள் கொண்டே வழி பட்டு வந்தனர். கடம்பின் மலர் மாலை அணிபவன் அவன் ; வெட்சி மாலையும் விரும்புவான். அவனை வழி படும் ஆடவரும் மகளிரும், அவனைப் போல, சிவந்த மலர் களை அணிந்தே வருவர். இவ்வாறே, முல்லை நிலத்தில், திருமாலை முல்லை மலர் கொண்டு வழிபட்டு வந்தனர். நிலத்தின் தெய்வத்தை வழிபடுதற்கு, நிலத்தில் தோன் றிய மரம் செடிகளின் மலர்களையும், தழைகளையும், கை
யாண்டனர்.
தமிழ் நாடு வெப்பம் உடையது. நிழலை நம் மக்கள் விரும்புவது இயற்கையே. ஆதலால், நம் புலவர் குளிரை யும் தண்மையையும் குறிக்கும் அடைமொழிகளைப் பெரிதும் கையாளுகின்றனர். வெப்பத்தைப் போருக்கும் துன்பத் திற்கும் உரிய பண்பு எனக் கருதுகின்றனர். புலவர் ஒருவர் தம் புரவலரைப் போற்றுமிடத்து, * மாரி அன்ன வண்மையிற் சொரிந்து, வேனில் அன்ன என் வெப்பம் நீங்க?" எனக் கூறுகின்ருர், மற்றுமொருவர், " அடுப்பில் சோறு அடும் வெப்பமும், ஞாயிற்றின் வெப்பமுமே அன்றி, வேறு வெப்பம் உன் நாடு அறியாது,” என்கின்றர்.
நிழல் என்பதனை நன்கு ஆய்ந்து, அதன் திறங்களை வகுத்துள்ளனர். ' கொழு நிழல்', ' புள்ளி நிழல் ’, * புகர் நிழல் ”, 'தண்ணிழல்', ' மென்னிழல் ", 18 வரி நிழல் ’, ‘இன்னிழல்", " மாநிழல் ” என்று, வெயிலில் வருந்திய மக்கள் நிழலின் அருமையைக் கண்டார்கள். * கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல் ” என்றும், “கயம் கண்டன்ன பெருமரக் குழாம் ' என்றும், நிழலைக்

Page 38
52 தமிழ்த்தூது
குளிர்ந்த நீருக்கு உவமை கூறுதலால், நிழலைப் பற்றிய உணர்ச்சிகளை அவர் மிக்குணர்ந்தவர் என்பது போதரும்.
டு
மேலும், மலர்கட்கும், மரங்கட்கும், தமிழில் உள்ள பெயர்கள் இன்னுேசை உடையவை. வெர்ஜில் எனும் இலத்தின் புலவர், மலர்ச்செடிகளின் பெயரைக்கொண்டு இன்னுேசை படைத்த பல அடிகள் யாத்துள்ளனர் என்ப. தமிழ்ப் புலவரும், தமிழ்ப் பெயர்களைக் கொண்டு, செவிக் கினிய பல அடிகள் யாத்துள்ளனர்.
* மெல்லிணர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும்
புல்லிலை வெட்சியும் பிடவும் தளவும் குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்"
என்பது கலித்தொகைப் பாட்டு. இப்பாட்டின் அடிகள் எத்துணை ஒசை இனிமை உடையன என்பதைக் கலிக் குரிய துள்ளல் ஓசையுடன் படித்துப் பார்க்க. கபிலர், குறிஞ்சிப் பாட்டில், தொண்ணுாற்றென்பது பூக்களின் பெயர்களை வைத்து, முப்பத்தைந்து அடிகள் யாத்துள் ளார். அவற்றை விரைவின்றி மெல்லப் படிக்கும் பொழுது, தமிழ் மக்கள் மலர்கட்கும் மரங்கட்கும் இட்ட பெயர்கள், எத்துணை அழகு வாய்ந்தன என்பது இனிது விளங்கும். சிறுபாணுற்றுப்படையில் வரும் சில அடிகள் ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கற்பாலன :
* அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும் கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும் நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும் "

மலரும் மாலையும் 63
fir
தமிழ்ப் புலவர், தம் பாடல்களில், தலைவர் தலைவியர் மலர்களை மிகவும் விரும்பினர் எனக் காட்டியுள்ளனர். தலைவன் தலைவிக்குக் கையுறையாகக் கொடுப்பது மலரே யாம். தலைவி தன் தோழியருடன் மலர் கொய்யும் தொழி லில் பொழுது போக்குவாள் ; தன் இல்லத்தில் அயலைச் செடியை வளர்ப்பாள் ; அதற்கு நாடோறும் நீர் வார்த்து மிகவும் பேணி வருவாள். இவ்வாறு தலைவர் தலைவியர் ஈடுபாடு மக்களின் ஈடுபாடாய் இருந்தது.
தமிழ்ச் சிறுவர் தாம் பிறந்த நாள் தொடங்கி மலர் களை விரும்பி வந்தனர். போர் வீரன் மனைவி ஆண் மகவைப் பெற்றதும், அவள் கணவன் போர்க்குரிய மாலை களைச் சூடித் தன் குழந்தைக்கு முதற்காட்சி அளிப்பான். இக்காலம் போல அக்காலமும், அன்னையர் தம் சிறுவர்க் குச் சிறு மலர்களை முடியில் மிலைச்சுவது வழக்கமாயிருந் தது. சிறுவர் பூக்களையும், பழங்களையும், விதைகளையும் வைத்து விளையாடினர் ; ஆடைகளுடன் மாலைகளும் அணிந்தனர். தலையில் அணியும் மாலை கண்ணி எனப் பெயர் பெற்றது. காதிலும் சிறு மாலைகளைத் தொங்க விட்டனர். கழுத்தில் ஆடவர் அணியும் மாலை தார் என் றும், பெண்டிர் அணிவது கோதையென்றும் பெயர் பெற் றன. மகளிர் தழைகளால் தொடுத்த தழையுடைகளை அணிந்தனர். இம்மாலைகளும் தழையுடைகளும், ஒரே வகைப் பூவினுலும், ஒரே வகைத் தழையினுலும் செய்யப் பெற்றன. சில வேளைகளில், பல வகைப் பூக்களையும், தழைகளையும், உரிய முறையே விரவி, மாலைகளும் உடை களும் செய்தனர்.

Page 39
64 தமிழ்த்துரது
தமிழர் தம் இல்லங்களை இயற்கை வணப்பு மிக்க இடங்களில் நிறுவினர் ; தம் நகரங்களில் பூம்பொழில் களையும், தோட்டங்களையும், இளமரக் காக்களையும், இனிய சோலைகளையும் நிறுவினர் ; இல்லங்களின் முன்னே அழகிய பந்தர்கள் அமைத்து வைத்தனர். இறையனூர் அகப்பொருளுரையில் அழகுறக் கூறப் பெற்றுள்ள இல் லமும் பொழிலும், அக்காலத்து வனப்பினை ஒருவாறு காட்டுகின்றன. களவொழுக்கம் நிகழும் இடங்கள் எல் லாம் இயற்கை வனப்பு வாய்ந்த இடங்களாகவே தோன்று கின்றன. சங்கச் செய்யுட்களில், தலைவி தன் தோழியருடன் வேங்கை மலர் கொய்து விளையாடுமிடத்துத் தலைவன் எதிர்ப்படும் வழக்கம் கூறப்பட்டுள்ளது. வேங்கை மலர் கள் புலியின் நிறத்தை ஒப்பன. எனவே, ' புலி, புலி 7 எனப் பூசலிடின், வேங்கை தன் கிளைகளைத் தாழ்த்தி, மலர்களைக் கொடுக்கும் என்பது சிறுவர் நம்பிக்கை, வேங்கை மலர்கள், குறிஞ்சி நிலத்திற்குரிய அழகிய மலர் கள். வேங்கை பூக்கும் பருவம் திருமணம் நிகழ்த்துதற் குரிய பருவம் எனக் கருதப் பெற்றது. இயற்கையுடன் அளவளாவிய தமிழ் மக்கள் வேங்கை மரத்தின் நறுநிழ லில் திருமணங்களை நிகழ்த்தி வந்தார்கள் என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. வேங்கை பூப்பின், வரை விடை வைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைவர் தம் நாடு மீண்டு, தம்மை மணந்துகொள்வர் எனத் தலைவியர் எதிர் நோக்கியிருப்பர். குறுந்தொகைப் பாட்டு ஒன்றில், தலைவி ஒருத்தி வேங்கை பூத்தது கண்டதும், தன்னை அறியாமலே கண்ணிர் சொரிந்தனள் எனப் புலவர் கூறுகின்றர். வேங்கை பூத்தும், தலைவன் வாராமையூேத அதற்குக் காரணம்.

மலரும் மாலையும் 65
வேங்கை மலர்களைத் தலைவர் கையுறையாகத் தம் தலைவியர்க்கு நல்கினர். காதலர் தமக்குள்ளே அம்மலர் மாலைகளை மாற்றிக்கொண்டனர். காதலன் தன் காதலிக் குத் தழையுடையைக் கையுறையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. காதலி தன் தலைவன் நாட்டு மலைகளையும், அம்மலைகள்மீது தவழும் முகில்களையும், மலையிலிருந்து இழியும் அருவியையும், அருவி நீரில் மிதந்து வரும் செடி கொடி மலர்களையும் காதலிப்பாள். தலைவி ஒருத்தி, தன் தலைவன் மலையில், மாலைப்பொழுதே மழை பொழிவதைக் கண்ணுற்ருள். அடுத்த நாட்காலையில், அருவி வெள்ளத் தில், காந்தட்செடி ஒன்று கிழங்குடன் மிதந்து வருதல் கண்டாள். அச்செடியை மிக்க ஆர்வத்துடன் எடுத்து வைத்து முயங்கினுள். அவ்வெப்பத்தினுல் இலைகள் வாடின. ஆயினும், அச்செடியிலுள்ள கிழங்கைத் தன் முற்றத்தில் நட்டு, மிக்க கருத்துடன் நீர் வார்த்து வளர்த்து வந்தாள். (குறுந்தொகை : உசுக).
திருமணம் நிகழும் பொழுது, தமிழ் மக்கள், மணப் பெண்மீது மலர்களைத் தூவி வாழ்த்தினுர்கள். தங்கள் ஊர்க்குப் புதியராய் வந்த விருந்தினர்க்கு, அவ்வூர் மக்கள் மலர் கொய்து கொடுத்து வரவேற்பார்கள். புலவரும், கூத்தரும், பாணரும், அரசர்பால் செல்லும் பொழுது, அரசர் அவர்கட்குப் பரிசிலாக நாடும், ஊரும், களிறும் நல்குவதுடன், பொன்னுல் செய்த தாமரைப் பூவினை அளிப்பதும் வழக்கம்; சில வேளைகளில், வெள்ளி நாரினுல் கட்டிய பொற்பூங்கொத்து நல்குவர். இசை வாணர் யாழ் முதலாய இசைக் கருவிகளுக்கு மலர் மாலை சூட்டி அணி செய்தனர்.
5

Page 40
T
அகவொழுக்கத்திற்கு மாலைகளைப் பயன்படுத்திய வாறே, தமிழ் மக்கள் புறவொழுக்கத்திற்கும் அவற்றினைப் பயன்படுத்தினர். போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பூ அடையாளம் ஆகும். ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு வருதற்குச் செல்லும் வீரர், கொத்துக் கொத்தான வெட்சி மலர் மாலைகளை அணிந்து சென்றனர். பகைவர் நாட்டின்மீது படையெடுத்துச் செல்வோர் வஞ்சி மாலை அணிந்தனர். கோட்டைகளை முற்றுகை யிடுவோர் உழிஞை மாலை சூடினர். கடும்போர் நிகழ்த்து மிடத்துத் தும்பை மாலை அணிவர். வெற்றி பெற்றேர் வாகை மாலை புனைந்து, அவ்வெற்றியைக் கொண்டாடுவர். ஆனிரை மீட்டற்குச் செல்வோர் கரந்தை மாலை சூடுதலும், கோட்டையைப் பகைவர்க்கு எதிராக நின்று காக்கும் வீரர் நொச்சி மாலை அணிதலும், நிலையில்லாத உடம்பினை நீத்து, நிலையான புகழை நாட்ட விரும்பியோர் காஞ்சி மாலை பூண்டு போர் புரிதலும், பெருவழக்காய் இருந்தன.
தமிழ் மக்கள், அகவொழுக்கத்திற்கு மலர்களையும், மாலைகளையும், பயன்படுத்தினர் என்பது அத் துணை வியப்பன்று ; அவற்றைப் புறவொழுக்கத்திற்கு எவ்வாறு பயன்படுத்தினர் என்பதுதான் வியப்பு. இது ' Untform ” போன்றதென்பது போப்பையர் கருத்து. மலர் களாலும் மாலைகளாலும், வீரர் மகிழ்ச்சியும் ஊக்கமும் அடைந்திருப்பர் எனக் கருத இடமுளது. எனினும், போரிலும் அவற்றை வழங்கி வந்த செய்கை, தமிழ் மக்கள் பண்பாட்டின் உயர்ந்த சிறப்பிற்கு என்றும் குன் ருச் சான்ருய் விளங்குகின்றது. வீரர் மலர் மாலை அணிந்து செல்லும் காட்சியின் அழகைப் புலவர் பலவாறு

மலரும் மாலையும் 67
புனைந்து புகழ்வர். வெட்சி மாலை புனைந்து செல்லும் வீரர், 6 செவ்வாணம் செல்வது போற் செல்கின்றர்” என்ருர், புலவர் ஒருவர். மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத் திற்குத் திருச் செலவாகச் செல்லும் மக்கள், மலர்களையும் மாலைகளையும் சூடிக்கொண்டு சென்றமையால், தெரு அனைத்தும் ஒரே மாலை இட்டது போலத் தோன்றியது என ஒருவர் குறிப்பிடுகின்றர்.
மேல் நாடுகளில், உரோசா மலர், இலிலி மலர், எருக் கிலை மலர், அரசர்க்கும் அரசர் மரபினர்க்கும் அடையாளப் பூக்களாய் வழங்கியுள்ளன. தமிழ் மக்கட்கும், தமிழ் அரசர்க்கும், அடையாளப் பூக்கள் இருந்தன. சேர மன்னர்க்குப் பனம்பூவும், சோழ மன்னர்க்கு ஆத்திப் பூவும், பாண்டிய மன்னர்க்கு வேப்பம்பூவும் அடையாளம். போருக்குச் செல்லும் வீரர் போர்க்குரிய மாலைகளை அணிந்தனர். போர் நடத்தும் மன்னர் தம் அடையாளப் பூமாலைகளுடன் போர் மாலைகளும் பூண்டனர். நெடுநல் வாடையில், பாண்டியன் நெடுஞ்செழியன் போரிற் புண் பட்டுப் பாசறையில் தங்கியிருக்கும் தன் படை வீரர்களைப் பார்க்கச் சென்றனன் எனக் கூறுமிடத்தே, அவனது படைத்தலைவன், வேப்பமாலை சூட்டியுள்ள மன்னன் வேலினைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவன் முன்னர்ச் சென்றன் என நக்கீரர் குறிக்கின்ருர்,
பண்டைத் தமிழர் எத்துணையாக ஒலைகளைக் கை யாண்டு வந்தனர் என்பதற்கு, இன்றும் தமிழர் அணியும் அணிகலன்களின் பெயர்கள் சான்ருகின்றன. தோடு, அரசிலை, குழை, ஒலை, கொந்திளவோலை, தாலிக்கொடி என்று அவ்வணிகலன்களுக்குப் பெயர் சொல்லும்

Page 41
68 தமிழ்த்துளது
பொழுது, அவை முதலில் ஒலையும் குழையுமாகவே இருந். திருத்தல் வேண்டும் எனக் கருத இடம் உண்டு. அக். காலத்தில் இயற்கையுடன் இசைந்து வாழ்ந்த, தமிழ் மக்கள், ஆம்பல் கொடியையும், பனையோலையையும், இன் னும் பல் வகை இலைகளையும் கொண்டே தங்களை அணி செய்திருந்தார்கள். அவர்தம் கட்டில், நாற்காலி முதலிய" பொருள்களும், செடி கொடி இலைகளின் வடிவங்களைக் காட்டின.
சங்க இலக்கியத்தில், அகத்துறை புறத்துறைகளில் உவமிக்கப்படும் மலர்களை இதுகாறும் நன்கு ஆராய்ந் தார் அல்லர் தமிழ் அறிஞர். அவற்றைத் தக்கவாறு ஆராய்ந்துணர்ந்து, பண்டைத் தமிழ்ச்செய்யுட்களை இன் னும் பலர் பன்மடங்கு சுவை நுகரச் செய்வதே, தமிழ் மொழியும் செடி நூலும் கற்ற அறிஞர் பெருங்கடமை ஆகும்.

ச. காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
s
வீரமாமுனிவர், இத்தாலி நாட்டில், மாந்துவா மாவட்டத்தில், காஸ்திகிலியோனே எனும் சிற்றுாரில் 1680-ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள், எட்டாம் நாளிலே பிறந்தார். பெரும்புகழ் பெற்ற இலத்தீன் கவிஞர் வெர்ஜில் என்பவர் பிறப்பிடமும் மாந்துவா மாவட்டமே. ஆதலால், மாந்துவா மாவட்டம் இரு பெருங்காப்பியக் கவிஞரை உலகிற்கு ஈந்துள்ளது. வெர்ஜில் எழுதிய qಔTiog (Aeneid) என்னும் காப்பியம் வீரமாமுனிவரின் தமிழ்க் காப்பியத்திற்கு எடுத்துக்காட்டாய் நின்றது என் பது திண்ணம். நம் முனிவரின் தந்தையார் உயர்குடிப் பிறப்பினர். அவர் பெயர் கண்டோல்போ பெஸ்கி (Count Don Gandolfo Baschi) Tsirugs. 95) if 5LD5. அரும் பெறல் மைந்தர் பிறந்த ஐந்தாம் நாளில், சமய குரவரால் அவர்க்கு ஞானநீராட்டுச் செய்வித்து, ஜோசப்பு கொன்ஸ்டான்ஸ் எனும் திருப்பெயரும் சூட்டினுர், கொன்ஸ்டான்ஸ் எனும் அவரது இயற்பெயர் வடமொழி யில் தைரியம் என்று பொருள்படும்.அவர் தமிழ் நாட்டிற்கு வந்த பொழுது, தம்மைத் "தைரியநாத சுவாமி” என வழங்கினர். அவரது இயேசு பணியின் ஆர்வமும், தமிழ்ப் புலமையும் கண்ட மதுரைச் சங்கத்தார், "வீரமாமுனிவர்" என அவரை வழங்கினர். சந்தாசாகிபு எனும் அவர் நண்பர் அவரது துறவின் மாண்பினை உணர்ந்து, இஸ்மதி சன்னியாசி என அவர்க்குப் பட்டம் தரித்தார்.

Page 42
70 தமிழ்த்துTது
வீரமாமுனிவரின் இளமைப் பருவத்தைப் பற்றிய செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை. அவர் தம் 18-ஆம் ஆண்டில் (1698) கத்தோலிக்குத் 'திருச்சபையின் துறவோர் குழுக்களுள் உலகப் புகழ் பெற்ற இயேசு சபை யைச் சேர்ந்தார்; பன்னிராண்டுகள் குருப் பணிக்கு இன்றியமையாத கல்விப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ; இடையிடையே இயேசு சபைக் கல்லூரிகளில் கல்வி பயிற் றுவதிலும் சிறப்புற்று விளங்கினர். 1709-ஆம் ஆண்டு அவருக்குக் குருப் பட்டம் அளித்தனர். 1710-ஆம் ஆண்டு இலிஸ்பன் துறைமுகத்திலிருந்து இந்தியா விற்குப் புறப்பட்டு வந்து, 1711-ஆம் ஆண்டு தென் பாண்டி நாட்டில் தொண்டாற்றிய இயேசு சபைக் குருக்க ளுடன் சேர்ந்தார்.
N
இயேசு சபைக் குருக்கள் இந்தியாவில் பற்பல திருப் பணிகள் ஆற்றி வந்தார்கள். மதுரை மிஷன் என்பது அவர் தொண்டாற்றுதற்கெனப் போப்பு ஆண்டவரால் வகுக்கப் பெற்ற ஒரு மாவட்டம். ஆங்குத் தே நோபிலி எனும் தத்துவ போதகர் காலந்தொடங்கி, அக்குருக்கள் காவியாடை அணிந்து ஊனுணவு கடிந்து, ஐரோப்பிய ரின் தொடர்பு துறந்து, தமிழ்ப் பழக்க வழக்கங்களை மேற். கொண்டு வந்தனர். அதனுல், கத்தோலிக்குச் சமயம், அக்காலத் தமிழ் மக்கள் எண்ணியவாறு, பறங்கியர் சமயம் அன்று எனவும், அது மக்கள் அனைவர்க்கும் பொதுச் சமயம் எனவும் காட்டினர். அவர் அரிய தொண்டின் பயணுக, சோழ பாண்டி நாடுகளில் உயர் குலத்தோரும் பலர் கத்தோலிக்குச் சமயத்தை மேற்கொண்டனர்.

காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 7.
2.
வீரமாமுனிவர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில், மதுரை மிஷன் மாவட்டம் பாண்டி நாட்டுக் காமநாயக்கன் பட்டியைத் தென்னெல்லையாகவும், தொண்டை நாட்டுக் கோனுன் குப்பத்தை வடவெல்லையாகவும் கொண்டு விளங்கியது. முனிவர், முதல் ஐந்து ஆறு ஆண்டுகள், காமநாயக்கன்பட்டி, கயத்தாறு, மதுரை, தஞ்சாவூர், அரியலூர் முதலான இடங்களில் திருத்தொண்டாற்றினுர். தமிழ் நாட்டின் தட்பவெப்ப நிலைகளால் அவர் சில காலம் உடல் நலிவுற்ருராயினும், மனம் தளர்வுற்ருர் அல்லர். அக்காலம் அரசியற்புரட்சிகளும் நாட்டைத் துன்புறுத்தின. அத்துன்பங்களில் முனிவர்க்கும் பங்கு கிடைத்தது. எனினும்,
** சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு."
(குறள். உசுஎ)
என்பது போல, அவர் அவற்றினைத் தம் அரிய துற வொழுக்கத்தினுல் மேற்கொண்டு, தாம் தனி மறை எனக் கொண்ட சமயத்தினைத் தமிழ் நாட்டில் தமிழருக்குத் தமிழ ராய் இருந்து போதிக்க உறுதி பூண்டு, தமிழ் மொழியை வழுவறப் பேசவும் எழுதவும் கற்று, இலக்கிய இலக்கண நூல்களை ஐயந்திரிபற ஆராய்ந்து, தாமும் அத்தகைய பெருநூல்கள் இயற்றும் ஆற்றல் பெற்று விளங்கினுர்,
முனிவர் தமிழ் நாட்டிற்கு வருமுன்னரே இத்தாலியம், கிரேக்கம், ஈபுரு, இலத்தீன், போர்த்துக்கீஸ் முதலாய மொழிகளையும், அவற்றின் இலக்கியங்களையும் கற்றுணர்ந் திருந்தார்; இங்கு வந்ததும் தமிழ் மொழியை இணையற்ற

Page 43
72 தமிழ்த்தாது
முறையிற் பயின்றறிந்தார்; சம்ஸ்கிருதம், தெலுங்கு, உருது நன்கு கற்றர். அவர் சமயத் தொண்டு தமிழ்த் தொண்டிற்கு உதவியது போல, அவர் தமிழ்த் தொண்டு சமயத் தொண்டிற்கு உதவியாயிற்று. வீரமாமுனிவர் தம் முப்பதாம் ஆண்டின் பின் தமிழ் மொழியைக் கற்றுப் பெரும்புலமை எய்தினுர், இத்துணை ஆண்டின் பின் இத்துணைப் பெருமொழியைக் கற்று, இத்துணைப் பெரும் புலமை பெற்று விளங்கியதற்கு, உலக வரலாற்றில் இது காறும் இவருக்கு ஒப்பாயவர் எவரும் தோன்றிலர். சூசை கொன்ருடு (Joseph Conrad) என்னும் போலந்து நாட்டுப் பெரியார், தம் பதினேழாம் ஆண்டில் ஆங்கிலம் கற்கத் தொடங்கி, சிறந்த ஆங்கில நூலாசிரியர் ஆயினர். வீரமாமுனிவரின் திறம் கொன்ருடின் திறத்தினும் பன் மடங்கு உயர்ந்தது.
fb
முனிவர் நம் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டு ஈடும் எடுப்பும் அற்றது. தமிழ் உரைநடைக்குத் தத்துவ போதகரே (De Nobili) தந்தையார் என்ப. அது உண்மை யெனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது. வேத விளக்கம், பேதகமறுத்தல், லுத்தேரினத்தார் இயல்பு, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குரு கதை என்பன, அவற்றுள் தலை சிறந்தவை. தமிழ் உரைநடைக்கு வளர்ப்புத் தந்தையாராய் விளங்கிய முனிவர், தமிழ் அகராதிக்குத் தனித் தந்தையாரே ஆகிவிட்டார். அவர் செய்துள்ள சதுர் அகராதி தமிழ் அகராதிகட் கெல்லாம் முற்பட்டு விளங்குகின்றது. தொல்காப்பியம், நன்னூல், சின்னூல் எனும் பழைய இலக்கண நூல்கள் பல இருப்ப,

காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 73
அவர் தொன்னூல் என்னும் இலக்கண நூல் செய்தனர். அதுவும் இலக்கண நூல்களில் தனிச் சிறப்புடையதாகும். எழுத்துக்களில் ஏ, ஓ வடிவம் முதலியவற்றில் அவர் அமைத்துள்ள சில மாற்றங்களைப் பின்னையோர் அனை வரும் போற்றி வழங்குவா ராயினர். பொருளியல் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கும் அழகும், பண்டை அணியியல் இருப்ப, மேலை நாட்டு மொழிகளில் வழங்கும் சொல் வன்மை இலக்கணத்தை (Rhetoic) நயம்பட விளக்கியுரைத்துள்ள திறமும், பன்மொழிப் புலவர் பாராட்டிற்குரியன. தமிழ் மொழியில் வழங்கும் தொண்ணுரற்றறு வகைப் பனுவல்களில் கலம்பகம் என்பது ஒன்று. அவற்றுள் அழகர் கலம்பகம், மதுரைக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம் முதலான ஒரு சில கலம்பகங்களே புகழ் பெற்றவை. முனிவர் இயற்றிய திருக்காவலூர்க் கலம்பகம் முற்கூறிய மூன்றனுள் எதற்கும் எட்டுணையும் தாழ்ந்ததன்று. அதனை ஆராய்வோர் அதன் தனிச் சிறப்பினைக் காண்பர். பத்தியை வளர்க்கும் கித்தேரி அம்மாள் அம்மானை முதலிய பல்வகைச் சிறு நூல்களும், மக்கள் வாழ்க்கை ஆகிய " உருள் பெருந் தேர்க்கு அச்சாணி அன்ன ” இன்றியமையாப் பெரும் பயன் விளைப்பன. இவை நிற்க.
gP
தேம்பாவணி என்னும் பெருங்காப்பியம் இயற்றிய பேராற்றலாலும், பெரும்புகழாலும், முனிவர் திருத்தக்க தேவர், இளங்கோவடிகள், கம்பநாடர் முதலாய புலவர் வரிசையில் இடம் பெற்று விட்டனர். தேம்பாவணியில் அடங்கிய காண்டங்கள் மூன்று, படலங்கள் முப்பத்தாறு:

Page 44
4. தமிழ்த்தூது
செய்யுட்கள் மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து. வீரமாமுனிவரின் இயற்பெயர் சூசை (Joseph). எனவே, தாம் தாங்கிய பெயருடைத் தலைவரை இக்காப்பியத்தில் போற்றினர் போலும் 1 இஸ்பானிய தேயத்தில் ஆகிர் என்பது ஒரு நகர். அங்கு இயேசு பற்று மிக்குடைய கன்னியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவனின் திரு அருளால் இயேசுநாதரின் காவல் தந்தையாராகிய சூசையெனும் திருத்தொண்டரின் வரலாற்றை எழுத லானுர். அந்நூலே நம் புலவருக்கு முதல் நூலாகும். இனி, விவிலிய நூலில் வரும் பல வரலாறுகளையும், தம்முடைய சொந்தக் கருத்துக்களையும் சேர்த்துக் காப்பியத்தை இயற்றினுர்,
காப்பிய ஆசிரியர் அனைவரும் அவ்வாறே செய்வர். தமிழில் கம்பரும், ஆரியத்தில் வான்மீகியும், கிரேக்கில் ஹோமரும், இலத்தீனில் வெர்ஜிலும், இத்தாலியத்தில் தாந்தேயும், பேர்த்துக்கீதத்தில் காமோஈவும், ஆங்கிலத் தில் மில்டனும், தம் காப்பியங்களில், நிகழ்ந்த வரலாற்றை மட்டும் கூறவில்லை ; அடிப்படையான வரலாற்றை வைத் துக்கொண்டு, தங்கள் நோக்கத்தோடொப்ப, காப்பி யத்தை விரிப்பார்கள். பல சிற்றறுகள் வந்து விழும் பேராற்றைப் போல, பல சிறு கதைகளும், வரலாறுகளும், செய்திகளும் திரண்டு, சிறப்புறுப்போடு இயைந்து, தொடர்நிலைச் செய்யுள் உருவாகும்.
பாலத்தீன் (Palestine) நாட்டில் யூதர் குலத்தில் பாட்டுடைத் தலைவராகிய சூசை பிறக்கின்றர். அவர் மக்களுள் ஒப்பாரும் மிக்காருமின்றி வளர்ந்து, இளைஞ ராகவே துறவறம் புக எண்ணி, வனத்தை நோக்கிச்

காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 75>
செல்கின்றர். வானுறையும் தேவதூதர் ஒருவர் அவரைக் கண்டு, அவர் இல்லறத்திலே துறவறம் காண்பது இறை வன் ஆணையெனக் கூறுகின்றர். அந்நாட்டில் தேவாலயத் தில், கன்னித்தவம் பூண்டு, மங்கையர்க்கரசியாயும், மாசறு நங்கையாயும் விளங்கும் மரியாய்க்கும், தேவதூதர் சென்று சூசையைத் திருமணம் செய்யும்படி கூறுகின்றர். இருவரும் தாம் முன் கொண்டுள்ள நோன்பிற்குச் சிறிதும் சிதைவில்லாமல் இல்லறத்தை இனிது நடத்தும் பொழுது, இறைவனின் திருவருளால் கன்னி மரியம்மை யார் " கருவில்லாத கருத்தாங்கிக் கன்னித்தாயாகி’. * உருவில்லானை மனித உருவாக ' உலகிற்கு ஈந்தார். ஆயரும் அரசரும் இயேசுவை வணங்குகின்றனர். ஆயினும், அவ்வூரின் அரசன் இயேசுவைக் கொல்ல எண்ணுவதால், திருக்குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் எகிப்துத் தேயம் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஊர்களும் இடங்களும் விவிலிய வரலாறுகளோடு தொடர்புடையன. எனவே, அவ்வர லாறுகள் அனைத்தையும் காப்பிய ஆசிரியர் இணைத்துக் கூறுகின்றர். யேசு நாதரும், அவர் பெற்றேரும் நாசரேத்து எனும் ஊருக்குத் திரும்பி, அங்குச் சில ஆண்டுகளாக ஒப்பற்ற இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு: வருகின்றனர். பாட்டுடைத் தலைவராகிய சூசையப்பரைப் பிணி சேர்வதும், அவர் அதனைப் பொறுமையுடன் தாங்கு. வதும், அவர் உயிர் துறப்பதும், மண்ணுலகும் விண் ணுலகும் அவருக்கு முடி சூட்டி அவரைப் போற்றுவதும், இறுதிப் படலங்களின் பொருளாவன.
சூசையப்பரின் வரலாற்றுடன் வேறு செய்திகள்
இணைக்கப் பெறும் முறை குறிக்கற்பாலது. எடுத்துக்

Page 45
76 தமிழ்த்துனது
காட்டாக, வளன் எனும் சூசை யூதேயாவின் அரச குலத் தில் பிறந்தவர். அவ்வரச குலம்தாவீது அரசரை முதல்வ ராகக் கொண்டது. எனவே, சூசையின் குலத்தைப் பற்றிக் கூறும் புலவர் தாவீதின் அருஞ்செயல்களையும் வரை கின்றர். இவ்வாறு, விவிலியநூலிலிருந்து நூற்றைம்பது பகுதிகள் இக்காப்பியத்தில் இடம் பெறலாயின.
மேலும், கத்தோலிக்குத் திருச்சபையின் வரலாற்றுக் குறிப்புக்களை எதிர்கால முற்கூற்றுப்போல நூலாசிரியர் கூறலானுர். இயேசு நாதர் தம் தாய் தந்தையரோடு வாழும்பொழுது, தம் இல்லத்தைப் பிற்காலத்தில் வானுேர் இத்தாலி நாட்டுக்கு எடுத்துச் செல்வரென்றும், ஆங்கு லொறெத்தோ நகரில் எந்நாளும் அடியாரால் பெருஞ் செல்வமாய்க் காப்பாற்றப்படுமென்றும் கூறும் இடம் இத் தகையது. அப்படலத்தில் அவ்வில்லத்தைப் பற்றி ஒரு செய்யுள் :
ஓங்கியதோர் உடல்முகமோ முகக்கண்ணுே கண்மணியோ ஒளிசெய் மார்பிற் தூங்கியதோர் பூண்கலணுே சுடர்முடியோ
முடிமணியோ சொல்லுந் தன்மை நீங்கியதோர் வனப்பிவ்வில் நிலத்தெல்லை
நிகரில்லா நேமி தன்னில் வீங்கியதோர் பேரின்ப வீடதுவே
மேல்வீட்டு வாயி லஃதே.
தேம்பாவணி கிறிஸ்து நீதி நூலாகவும் விளங்கு கின்றது. இயற்கை வனப்பில் இறைவனின் தோற்றம், இல்லறம் துறவறங்களின் முதன்மை, தொழிலின் மாண்பு, வறுமையின் சிறப்பு, கற்பின் தலைமை, கடவுளின் இலக் கணம், வானுேரின் உயர்வு, நரகரின் தாழ்வு, பாவத்தின்

காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 7 ፲ ̆
கொடுமை, அறத்தின் அருமை, காமத்தின் தீமை, காத லின் பெருமை, இவையாவும் பெரும் புலமையுடன் உரு வாக்கிக் காட்டப்பெற்றுள்ளன. மேலும், கத்தோலிக்கர் சிறப்பாகப் போற்றும் உண்மைகள் யாவையும் காப்பியத் தில் விளக்குகின்றர். ஞான நீராட்டு முதலிய அருள் அளிக்கும் வாயில்கள் எனும் தேவ திரவிய அனுமானங் களைப் பற்றியும், கத்தோலிக்கு மறைக்கு மனம் மாற்றுவ தற்கு ஒருவன் கூறக் கூடியவற்றையும், கதை மயமாகவும், தத்துவ மயமாகவும் கூறியுள்ளார். சுருங்கச் சொல்லின், இக்காப்பியம் அவர் போதித்து வந்த திருமறையின் கோட்பாடுகளும், வரலாறுகளும், தத்துவங்களும், நீதி களும், வழிபாட்டு முறைகளும் அடங்கிய பெருங் களஞ்சியம் என்னலாம்.
உவமை முதலிய அணி நயங்களிலும், சொல் வளம் பொருள் வளங்களிலும், வீரமாமுனிவர் ஏனைய காப்பிய ஆசிரியருக்குக் குறைந்தவர் அல்லர். பிற காப்பிய ஆசிரியர் செய்யுள் இயற்றினர். வீரமாமுனிவரோ, இலக்கண நூல் கள்,மொழிநூல்கள், அகரவரிசைகள், உரைநடைநூல்கள், ஆகிய பல்வேறு நூல்களையும் இயற்றியும், காப்பிய ஆசிரி
யராய் விளங்கும் தன்மையை எங்ங்ணம் போற்றுவோம்?
இவை யாவற்றையும், வீரமாமுனிவர் தமிழ் மரபு வழுவாமல் கூறுவர். காப்பியத்தின் தோற்றுவாயில், நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகிய படலங்களைக் காணலாம். கம்பரின் அயோத்தி தமிழ் நாட்டைப் போன்றது ; கங்கையென ஆற்றுக்குப் பெயரிட்டாலும், அவர் புனைந்துரைக்கும் ஆறு காவேரி, வீரமாமுனிவர் காட்டும் பாலத்தீன் நாடும் தமிழ்நாடு. ஆங்குள்ள எரு சலேம் நகரும் ஒருவாறு தமிழ் நகர். காலத்தால்

Page 46
ግ8 தமிழ்த்துளது
பின்னே வந்தவராதலால், வீரமாமுனிவர் முன்னேரின் மொழியைப் பொன்னே போலப் போற்றினர். திருவள்ளு வர், திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் முதலி யோரின் நடையும், முறையும், உவமையும், சொல்லும், இக்காப்பியத்தில் உள. தமிழ்க்காப்பியம், பரணி, உலா முதலிய இலக்கியங்கள் நன்கு பயன்படுத்தப்பட்டிருக் கின்றன. மரியாயின் முகத்திலிருந்து கபிரியேல் தேவ தூதர் அவ்வம்மையாரின் எண்ணங்களை அறிந்தார் எனும் இடத்தில், 'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்,” எனும் குறட்பா அமைவதைக் காண்க. எருசலேம் நகரை வருணிக்கப் போந்த புலவர் இவ்வாறு கூறுகின்றர் : மக்களின் ம்னங்கள் நீதியி லிருந்து அசைவன அல்ல ; அங்கு அசைவன நீரின் அலை களே. களங்கமற்ற மக்களும் ஊருமாதலால், மேகந் தான் கறுப்பாயிருக்கும் ; வேறெங்கும் தூய்மை. ஒரு வகைப் போர்தான் அங்குண்டு : இரப்போர்க்கு ஈவதில் நிகழும் புகழ்ச்சிக்குரிய போட்டியே.
"நீரல்லது மலையில்லது; நிறைவான்பொருளிடுவார் போரல்லது பகையில்லது; புரிவான்மழை பொழியுங் காரல்லது கறையில்லது கடிகாவலு மறனுற் சீரல்லது சிறையில்லது திருமாநகரிடையே.* (படலம், 2:68) திருநாவுக்கரசு நாயனர் புராணத்தில், சேக்கிழார் திரு வாமூரைப் பற்றிக் கூறுவதுடன் ஒப்பிட்டு, இன்புறத் தக்க செய்யுள் இது.t
*நீரல்லதும் அலையில்லது" என்க. அறனுல் சீர் கடிகாவல் அல்லது சிறை (காவல்) இல்லது என்க: +1 ஓங்குவன மாடகிரை யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குகுெறி நெருங்குவன பெருங்குடிகள்.
புலர்நீல மிருள்காட்டும்.'

காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 79
ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்பர். இனி இலத்தீன் சட்டத்தின் மொழியென்றும், கிரேக்கு இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரஞ்சு தூதின் (Diplomacy) மொழி என்றும், இத் தாலியம் காதலின் மொழி என்றும் கூறுவது வழக்கம். இவ்வாறே தமிழும் இரக்கத்தின் மொழி ; பத்தியின் மொழி. தமிழில் இரங்குவது போல வேறெம்மொழி யிலும் இரங்குவது அரிது. தமிழில் இரப்பதுபோல வேறெம்மொழியில் இரப்பதுாஉம் அரிது. தமிழின் அவலச் சுவையை நன்கறிந்த வீரமாமுனிவர் இயேசு இளவல் மறைந்த வரலாற்றைக் கூறும் பகுதி மிகச் சிறந்தது. தண்காவையும், பூம்பொழிலையும், இன் னிசைக் குயில்களையும், சூசையெனும் வளன் விளித்து, இயேசுவைக் கண்டீரோ !” எனப் புலம்புகின்ருர். *பறவைகளே! என் உயிரும், மரியாயின் அரசருமாகி யவர், பகைவரின் மனம்போல் இருண்ட காட்டில் சென்ற வழியைக் கூறுங்கள். அவரை யான் அடைய வேண்டும்."
* பொன்னுரி சிறகாற் புட்சரஞ்சேர் புட்குலமே யென்னு ருயிரே யென்னெஞ்சத் தாளரசே யொன்னர் மனநேர் வணஞ்சேர வுற்றவழி
யன்னு னுட வறையிரோ யெனக்கென்றன்.1
(படலம், 31)
இப்பகுதியினைத் திருக்கோவையாரின் சில பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க.
1. அன்னன் காட-அவனைத் தேட ; புட்கரம்= ஆகாயம். ஒன்னர்=பகைவர்-ஒன்னர் மனம் வனத்திற்கு
2 GEN BØDLID

Page 47
80 தமிழ்த்துTது
இசைப் பயிற்சி மிக்குடையவர் வீரமாமுனிவர். அவர் ரியற்றிய செய்யுட்கள் சிலப்பதிகார வரிப்பாட்டைப் போல ஒலிக்கின்றன. 'பாற்கடலில் மலரும் தாமரை மிகவும் அழகாக மலரும் : என் உள்ளமும் அவ்வாறு மலர்ந்தது. வேதநூற்கடலாகிய நீ, நாங்கள் பாவம்' செய்ததால் துன்பக் கண்ணிர் சொரிகின்ருய், நாணுே, இறைவனுன நீ மனிதனுய் உதித்ததால் ஈடேற்றம் அடைந்தேன் என்று ஆனந்தக் கண்ணிர் சொரிகின்றேன்.?
* பாற்கடல்என் உள்ளப் பதும மலர் அரும்ப
நூற்கடலே நீஉதித்தாய் நும்மலர்க்கண் முத்தரும்ப நும்மலர்க்கண் முத்தரும்ப நோய்செய் வினைசெய்தோம் எம்மலர்க்கண் முத்தரும்ப இன்று வினைதீர்த்தாய்."
(படலம், 12) இனிக் கடவுளைப் பற்றிய செய்யுளொன்று :
* அறக்கடல் நீயே: அருட்கடல் நீயே; அருங்கரு ணுகரன் நீயே: திறக்கடல்நீயே; திருக்கடல் நீயே:
திருந்துளம் ஒளிபட ஞான நிறக்கடல் நீயே; நிகர்கடந் துலகில்
நிலையும்நீ; உயிரும்நீ; நிலைநான் பெறக்கடல் நீயே, தாயும்நீ எனக்குப்
பிதாவும்நீ; அனைத்தும்நீ யன்றே? (படலம், 6:34} இச்செய்யுளினது பொருள் யாவர்க்கும் புலணுகும். இங்குத் திருவாசக மணம் கமழ்கின்றது.
டு
மேலும் வீரமாமுனிவர் தனி முறையில் தமிழை வளர்த்ததை ஆராய்ச்சியாளர் இதுகாறும் கூறினர்

காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 8.
அல்லர். தமிழ்ப் புலவரைப் பயன்படுத்தியது போல, வீரமாமுனிவர் தாந்தே, தாசோ, வெர்ஜில் முதலிய மேல் நாட்டுப் புலவர் நூல்களையும் பயன்படுத்தியுள்ளார். இருபதாவது படலத்தில் தாசோவின் காப்பியம் எருச Gsolfisir 6G952) o (Gerusalemme Liberata) 5ibLso6) ருக்குத் துணை நூலாவதைக் காண்க. தமிழ் அன்னைக்கு அவரை அறிமுகப்படுத்திய பெருமை புலவருடையது. மேல் நாட்டுக் கலையாறும், தமிழ்நாட்டுக் கலையாறும், கலக் கும் ஏரியாம் தேம்பாவணி.
வீரமாமுனிவர், தமிழறிவு உள்ள ஐரோப்பியர் பலர் போல, தமிழ்த் தூதராய் விளங்கினுர். தமிழின் பெருமை யைப் பிற் மொழிகளில் பிற நாட்டவருக்குக் கூறினுர் ; பிற இலக்கியங்களின் கருத்துக்களையும், சுவையையும் தமிழ் நாட்டாருக்குக் கொடுத்தார். அவர் இலத்தீன் மொழி யிலும், போர்த்துகீசிய மொழியிலும் யாத்த தமிழ் இலக் கணங்களும், அகரவரிசை நூல்களும் பிற்காலத்தில் தமிழ் மொழி பயின்ற ஐரோப்பியர் அனைவர்க்கும் பயன் பட்டன. அவர் இலத்தீன் மொழியில் எழுதிய கொடுந் தமிழ் செந்தமிழ் இலக்கண நூல்களில், தமிழ் எடுத்துக் காட்டுக்களுடன் இலத்தீன் இலக்கியத்தின் எடுத்துக் காட்டுக்களையும் புகுத்தியுள்ளார். இவ்வாறே, தொன்னூல் விளக்கம் எனும் ஐந்திலக்கண நூலில், அணி இலக்கணத் தில் கிரேக்கர் உரோமர் யாத்த அணி முறையைப் பயன் படுத்தியுள்ளார் என முன்னர்க் கூறியுள்ளோம்.
தாந்தே என்னும் இத்தாலியக் கவிஞர் இயற்றிய Divina Commedia என்னும் பெருங்காப்பியத்தில் வீரமாமுனிவர் பெரிதும் ஈடுபட்டு, அதில் நன்கு
6

Page 48
82 தமிழ்த் தூது
பயின்றிருந்தார் என முன்னர்க் குறித்தோம். தாந்தே கடவுளன்னையை நோக்கிக் கூறும் வழிபாட்டுரை மிகவும்
சிறப்புடையது. அது வருமாறு :- 驾
o Vergine madre, figlia del tuo figlio,
umile e alta piu che creatura, termine fisso d'etterno consiglio, tu se' colei che l'umana natura nobilitasti si, che 'l suo fattore non disdegno di farsi sua fattura.''
(Par., 33 : 1-6) இவ்வடிகளின் கருத்துக்களை முனிவர் பின் வருமாறு தமது திருக்காவலூர்க் கலம்பகத்தில் அமைத்திருத்தல் காண்க :
* உருவில்லான் உருவாகி உலகில்ஒரு மகன் உதிப்பக்
கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாய் ஆயினையே." " உந்தையை ஈன்றுநீ ஒருவற் கீங்கரும்
வந்தையோ டன்னையும் மகளும் ஆயினை : * கனியரும் பயனுெடு கலந்த பூவினைத்
தனியருள் கன்னியும் தாயும் ஆயினை."
இவற்றின் பொருள்: "அன்னையீர், அருவடிவமுள்ள கடவுள் உருவடிவமுள்ள மனுடன் ஆகி, உலகத்தில் உமக்கு மகனுக வந்து பிறக்க, நீர் இயற்கையின்படி கொள்ளும் கருவின்றிக் கருப்பம் கொண்டு, கன்னிமை குன்ருத அன்னையர் ஆயினிர். உமது தந்தையார் ஆகிய கடவுளை நீர் மகனுக ஈன்று, அந்த ஒப்பற்ற கடவுளுக்கு இந்த உலகத்தில் அருமை பெருமையோடு அன்னையும் புதல்வியும் ஆயினிர். கனி தன் அரிய பயன்கள் பலவற்றி னுேடும் மலரில் கலந்துள்ளது; ஆதலின், அம்மலரினை

காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 83
உய்த்துணர்ந்து நோக்குங்கால், அது பூவாகவும் கனியாகவும் ஒருங்கு விளங்குகின்றது. அவ்வாறே, நீர் ஒப்பற்ற அருள் நிறைந்த கன்னியும் அன்னையுமாய் ஒருங்கே விளங்கலாயினிர்."
இவ்வாறு, வீரமாமுனிவர் செய்யுட்களில் பிறமொழிப் புலவர் பலரின் அரிய கருத்துக்கள் ஆங்காங்குப் பொதிந்துள்ளன. அவற்றை நன்கு ஆராய்ந்து தமிழுல கிற்குக் கூற வல்லுநர் இணையற்ற தமிழ்த்தொண்டு செய் தவர் ஆவர்.
1948

Page 49
டு. தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளே
எழுத்தாளருள் பல திறத்தாருளர். அவருள் சிலர் தம் வாழ்நாளில் புகழ் பெறினும், அவர் மறைந்த பின் அவர் நூல்களைப் படிப்பவர் இலர். வேறு சிலர் பருவுடல் மறைந்த பின்னரே பெரும்புகழ் எய்துகின்றனர். இன் னும் ஒரு சிலர், தம் வாழ்நாளில் பெரிதும் போற்றப்படு வதுடன், இறந்த பின் இன்னும் போற்றப்பட்டு வருகின் றனர். சான்றேரின் நூலெனின், அதனைப் படிக்கப் படிக்கச் சுவையூறும் ; காலம் செல்லச் செல்ல, அதன் பெருமை தோன்றிக்கொண்டே போகும். இத்தகைய இறுதிப் பிரிவினருள் சார்ந்தவரே மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை.
ஆம் ; நீவிர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று இவரை அறிந்திருப்பது உண்மையே. இவர் காலத்திற் கூட, அவ்வூரை மாயூரம் என்றே வழங்கினர். ஆயினும், தமிழ்நாட்டு ஊர்களுக்கு வடமொழிப் பெயர்கள் கொடுத் துத் தமிழ்ப் பெயர்களைச் சிதைக்குமுன், இவ்வூருக்குரிய அழகிய பெயர் மயிலாடுதுறை என்பது. எத்துணை வனப் புடைய தமிழ் நாட்டுக் காட்சிகள் இவ்வூரின் பெயரில் அடங்கியிருக்கின்றன ! இதன் இடத்தில், " மாயூரம் ” என்று பெயரிட்டனர். " மாயூரம் ’ என்னும் வடமொழிச் சொல் " மயில் ' எனப் பொருள்படும் என்பதை எத்துணைத் தமிழர் அறிவர் ? அம்மாயூரத்தின் பொருள் புரியாமல் அன்ருே " மாயவரம்” என வழங்கத் தொடங்

தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 85
கினர் ? பழந்தமிழ்ப் பெயரே பண்புடைய பெயராகும் என அறிக.
மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை என்று இவரை வழங்கினுலும், இவர் முன்னுேர் தோன்றிய ஊரும், இவர் பிறந்து வளர்ந்த ஊரும், குளத்தூர். இவர் மாயூரம் வருமுன், இவரைக் குளத்தூர் வேதநாயகம் பிள்ளை என்றே வழங்கினர். இதனைத் * தடாகபுரம் " அல்லது * சராபுரி” என மாற்ருதது பெருநலமே 1 இக்குளத்தூர் திருச்சிராப்பள்ளியை அடுத்த ஒரு சிற்றுார். இச்சிற்றுாரே இப்பெருஞ்சான்றேரை உலகிற்கு நல்கியது என்றல், மக்கள் வியப்பினை அடைவார்கள். ஆயினும், உலகில் எத்துணைச் சிறந்த புலவர் சிற்றுார்களில் பிறந்திருக் கின்றனர் 1
வேதநாயகம் பிள்ளை தோன்றிய குலம் குறிக்கற் பாலது. இவர் வேளாளர் குலத்தில் கொங்கு ராயர் மரபினைச் சார்ந்தவர் என்றும், கொங்கு ராயர் தமிழ் மன்னர்க்கு முடி சூட்டும் பெருமை பெற்றவர் என்றும், கூறுவர். மேலும், இவர் பெற்றேர், ஒருவாறு செல்வம் படைத்த கத்தோலிக்கர். ஆவூரில் உள்ள இயேசு சபைக் குருக்களிடம், இவர் பாட்டனர் ஞான நீராட்டுப் பெற்ற தால், ஐரோப்பியருடனும், அவர் மொழிகளுடனும், தொடர்பு பெற்றவர். வேதநாயகம் பிள்ளை இளைஞராகவே, தமிழ், ஆங்கிலம், இலத்தீன், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், ஆகிய மொழிகளைப் பயின்றவர். இவ்வேற்று மொழிப் பயிற்சியும், கத்தோலிக்குச் சமய நூல்களும், இவர் இயற்றிய இலக்கியம் சிறக்கத் துணையாய் இருந்தன என்பது ஒருதலை.

Page 50
86 தமிழ்த்தாது
9.
இவர் உழைத்து வந்த துறை நீதித் துறை. இவர் நீதி மன்றங்களில், முறையே, மொழி பெயர்ப்பாளரும், ஆவணப் பாதுகாவலரும், ஆணுர்; அதன் பின், மாவட்ட முறை மன்றத் தலைவரானர். இவ்வுயர்ந்த வேலைக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் இவரே. எனவே, இவருக்கு நூல் அறிவுடன், பயிற்சி அறிவும் இனிது பொருந்தியது. இவர் உலகியலில் நல்ல தேர்ச்சி பெற் முர் ; உயர்ந்தோரோடும் தாழ்ந்தோரோடும் பழகியதால், மக்கள் இயல்புகளிலும், உளநூல் துறையிலும், மிக்க பயிற்சி உடையர் ஆனர். இவர் நீதிமன்றம் நீதிக் கல்லூ ரியாய் விளங்கியது. இவர் அங்கிருக்கும் அனைவர்க்கும் பயனுறுமாறு, நீதி வழங்குங்கால், அறிவுரைகளையும் அற வுரைகளையும் நிகழ்த்துவார் ; சட்டத் துறையையொட்டி, 'சித்தாந்த சங்கிரகம்’ என்னும் சட்டத் தீர்ப்புக்களும் நுட் பங்களும் அடங்கிய சட்ட நூலை வெளியிட்டார் ; தமிழ் நாட்டில், நீதி வழங்குவதுடன், நீதி புகட்டவும் வன்மை பெற்றர். எனவே,நீதிமன்றத் தலைவர், 1859-ஆம் ஆண்டு "நீதி நூலை' வெளியிட்டு, தமிழ் நாட்டிற்கு ஆசிரியராய்த் திகழ்ந்தார். இந்நூல், திருக்குறள் நாலடியார் முதலிய நூல்களின் மரபில் தோன்றியது. ஆயினும், முற்கூறிய நூல்களுள் இல்லாத கருத்துக்கள் சில, இதனில் உள. இக்கருத்துக்களை, வேதநாயகம், தாம் தழுவிய கத்தோலிக் குத் திருமறையின் நூல்களிலும், தாம் அறிந்த வேற்று மொழி இலக்கியங்களிலுமிருந்தே அறிந்தார். இவர், * வேதம் ', " வேதாந்தம் ' என்பது, பத்துக் கற்பனை களும், இயேசு பெருமானின் அருங்கூற்றென்றும் ஆம் :

தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 87
* ஈசனையே துதித்தல் அவன் திருநாமத்
தொடுதிருநாளினைக்கொண் டாடல் நேசமார் அனைதந்தை வணங்கல்கொலை
* சேய்யாமை நிதங்கா மத்தை நாசமாக் குதல்களவு பொய்நீக்கல்
பிறர்மனைபொன் நயந்தி டாமை மாசறும்இவ் விதிபத்தும் வேதாந்தம்
எனக்கடவுள் வகுத்திட் டானுல்" * முந்தஇறைக் கன்புபின்பு தன்னுயிர்போல்
மன்னுயிரை முறையின் ஓம்பல் இந்தஇரு விதிகளினுள் வேதம்எலாம் அடங்கும்." மக்களின் வாழ்க்கை கடவுள் வணக்கத்தை அடிப் படையாகக் கொள்ள வேண்டும் என்று, வேதநாயம் பிள்ளை, தம் நூல்கள் அனைத்திலும் வலியுறுத்தியுள்ளார். * தெய்வத் தன்மையும், வாழ்த்தும் " பற்றிய பாக்களில், ஒளியைத் தன் நிழலாகக் கொண்டவன் இறைவன் என் கின்ருர் : “ சோதிதன் நிழலாக் கொண்ட சோதியைத் துதியாய் நெஞ்சே!” மேலும், அவன் திரு அருட்கடலில் ஆடாமை வல்வினை என்பார், இங்ங்ணம் கூறுவர் :
* அருவமாய் உருவ மாய்நம்
ஆருயிர்க் குயிராய் அண்டம் பெருநிலம் எங்கும் இன்பம்
பெருக்கெடுத் தோங்கி நிற்கும் கருணைஅம் கடலா டாது
கழித்தனை வாழ்நாள் நெஞ்சே !" இயற்கை, எவ்வாறு தன் தலைவனைப போற்றுகின்றது எனக் கூறும் அடிகள், நன்கு அறியப்பட்டவை:
கதிரவன் கிரணக் கையாற்
கடவுளைத் தொழுவான்; புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்
துதிசெயும்; தருக்கள் எல்லாம்

Page 51
88 தமிழ்த்தூது
பொதிஅலர் தூவிப் போற்றும் ;
பூதம்தம் தொழில்செய் தேத்தும் : அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும் ;
அகமே நீ வாழ்த்தா தென்னே?"
பிள்ளையவர்களின் பரந்த அறிவிற்கும், மனப்பான் மைக்கும், இவருடைய நூல்கள் சான்ருவன. இவர் தாம் பின்பற்றிய சமயத்தினை உயிரினும் அருமையாகப் போற்றி ஞர் ; எனவே, உலகெலாம் வாழவேண்டும் எனும் உள நெகிழ்ச்சியுடன், தம் சமயத்தவர்க்கு மட்டுமே அன்றி அனைவர்க்கும் நல்வாழ்வு கிட்டுமாறு, பண்பு நலத்துடன் உழைத்தும், நூல்கள் யாத்தும் வந்தனர். இம்மனப் பான்மையால், இவர்க்குக் கிடைத்த நண்பர் பலர் ; பல வகுப்பினர்; பல கொள்கையினர். இவர்களுள், பெரும் புலவர் மீனுட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை மடத் தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள், ஈழத்துச் சி. வை. தாமோதரம் பிள்ளை, நல்லூர் ஆறுமுகநாவலர் குறிப்பிடத் தக்கவர்.
நீதி நூல் வெளியாகி இருபது ஆண்டுகட்குப் பின், இந்நீதிகளை இசைத்தமிழிலும் இயற்றினுல், படிப்பறியாத வரும் பாட்டாகப் பாடி, தம் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவர் என உணர்ந்து, சர்வ சமய சமரசக் கீர்த் தனை ’ எனும் இசைத்தமிழ் நீதி நூலை இயற்றினர். இந் நூலில் அடங்கியுள்ள அரும்பொருள்களைக் கூற யார் வல்லர் ? இக்காலத்திற்கு ஏற்ற தன்மையிலும், எளிதாகப் படிக்கக் கூடிய முறையிலும், ஓசையுடைமையுடனும், இவ் விசைப் பாட்டுக்களைப் புனைந்தார் நம் பேரறிஞர். அக் காலத்தில், கருநாடக இசையில், பெரும்பாலும் தெலுங் குச் சொற்களே அமைக்கப் பெற்று வந்தன. புரியாத

தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 89
இச்சொற்களைத் தமிழர் கேட்டு, தாம் இன்புறுவதாய் எண்ணினர். தமிழ்ச் சொற்களை அமைத்துப் பாடியது வேதநாயகம் பிள்ளை ஆற்றிய சிறந்ததோர் தொண்டு. அத்தொண்டின் பயனேத் தமிழ் இசை இயக்கம் இன்றும் நுகர்ந்து வருகின்றது.
மேலும், இவர் தாம் வேண்டிய சில சீர்திருத்தங்கள் பற்றிப் பெண் கல்வி’ எனும் நூலை யாத்தார். இக் காலப் பெண் கல்வி இயக்கத்திற்கு, அக்காலமே வழி காட்டி ஆணுர் வேதநாயகம் பிள்ளை.
f
நீதி மொழிகளை எத்துணை எளிதாகப் பாட்டில் இயற் றினுலும், படிப்பறியாதார்க்கும், இளைஞர்க்கும் எளிதில் விளங்க வல்லன, உரைநடையும் கதையுமே ஆகும். ஆத லின், இவர் "பெண் கல்வி உரைநடையில் வரைந்த துடன், இரு கதை நூல்களையும் இயற்றினுர். அவற்றின் பெயர், ! பிரதாப முதலியார் சரித்திரம் , சுகுண சுந்தரி" என்பன. பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தமிழில் தோன்றிய முதல் நாவல் (Novel) என்பர். இதுவோ உரை நடையில் புனைந்த பெருங்காப்பியம் போல, பல கதைகளையும், நீதிகளையும், முதுமொழிகளையும் கொண்ட 55T(5fulb. (2530r 9(56).JT pl (Didactic Novel) 9li) வுரைக் கதை நூல் எனக் கூறலாம். இவர் மகளிர்க்குப் பொருந்தும் இலக்கணங்கள் அனைத்தையும் திரட்டி, சுகுண சுந்தரியை இலக்கியமாக வரைந்தார். இக்கதை களில், தாம் செய்யுளில் அமைத்த நீதிகள் வாழ்க்கையில் எவ்வாறு அமைவன என்றும், பயன் படுவன என்றும்,

Page 52
90 தமிழ்த்தூது
காட்டினர்; ஜோன்சன் (Johnson) கோல்டுசிமித்து (Goldsmith) போன்றேரின் உரை நடை நூல்கள் தமக்குப் பயந்த நன்மையையுணர்ந்து, அவ்வாறே, தாமும் தமிழ் நாட்டிற்குத் தொண்டாற்ற வேண்டுமென விருப்புடையவரானுர், " வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமே அல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா ?” என்று கேட்கின் ருர் : “ நம்முடைய சுய பாஷைக்ளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில், இந்தத் தேசம் சரியான சீர் திருத்தம் அடையாதென்பது நிச்சயம்,” எனத் துணிந் துரைக்கின்றர். தம் உரைநடை நூல்களில், உளப் பயிற்சி நன்கு படைத்த ஆசிரியர் போல, மூடப் பழக்க வழக்கங்களை நகைச்சுவை ததும்பப் பழித்துக் கடிந்: துரைக்கின்ருர்,
பிள்ளையவர்கள் அக்காலத்தே பல சீர்திருத்தங்களைத் தமிழ் நாட்டில் நிகழ்த்த வேண்டுமென்று உழைத்த பெருந்தகைமை, இவரது எதிர்கால நுண்ணறிவினைத் தெளிவாக்குகின்றது. இவர், மக்கள் வகுப்புச் செருக்குப் பாராட்டி வந்த அக்காலத்திலே, வகுப்பு வேற்றுமை எல்லாம் ஒழிப்பதற்கும், அனைவரும் உடன் பிறந்தார் போல ஒற்றுமையாய் அன்புடன் வாழ்வதற்கும் வழி கோலுதல் வேண்டும் என வற்புறுத்தினுர். இவர் பிற மொழிப் புலமை வாய்ந்தவராயினும், நம் தாய் மொழி யைத் தனி மொழியாகப் போற்றினுர், ஆங்கிலத்தைபும், பிரெஞ்சையும், இலத்தினையும், சம்ஸ்கிருதத்தையும் மிகுதி யாகப் போற்றித் தமிழைக் குறைவாக நினைத்து இகழ்ந்தோரைக் குறித்து, இவர் கூறும் கட்டுரை ஈண்டுக் குறிக்கற்பாற்று :

தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 9.ே
* சம்ஸ்கிருதமும், இலத்தீனும் அதிகச் சிறப்பும், அழகும், அலங்காரமும் பொருந்திய பாஷைகள் என்ப தற்குச் சந்தேகம் இல்லை. அவகாசமுள்ளவர்கள், சொந் தப் பாஷைகளோடுகூட அந்தப் பாஷைகளையும் படிப்பது, அதிக விசேஷந்தான். என்ருலும், சொந்தப் பாஷைகளை நன்ருகப் படிக்காமல், அந்த அன்னிய பாஷைகளிலே காலமெல்லாம் போக்குவது அகாரியம் என்றுதான் நாம் ஆட்சேபிக்கின்ருேம்.
* இங்கிலீஷ், பிரெஞ்சு முதலிய இராஜபாஷைகளைப் படிக்க வேண்டா என்றும், நாம் விலக்கவில்லை. ஆணுல், மாதா வயிறெரிய மகேசுர பூசை செய்வது போல, சொந் தப் பாஷைகளைச் சுத்தமாக விட்டுவிட்டு, இராஜ பாஷை களை மட்டும் படிப்பது அனுசிதம் அல்லவா ? அவர்கள் தமிழ்ப் பாஷையைப் பேசினுலும், முக்காற்பங்கு இங்கி லீசும், காற்பங்கு தமிழுமாகக் கலந்து பேசுவார்கள். அவர்களுக்குத் தேசாபிமானமுமில்லை, பாஷாபிமானமு. மில்லை.
* இங்கிலீஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள், தங்கள் தங்களுடைய சொந்தப் பாஷைகளை எவ்வளவோ கெளரவ மாகப் போற்றி வருகிறர்கள் என்பதை, இந்த வித்தி யார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும், தங்கள் ஜென்ம பாஷை ஆகிய தமிழையும், தமிழ் வித்துவான்களை யும் அவமதிக்கலாமா? தமிழ் நூல்களையே பாராத இவர் கள், அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திரு வள்ளுவருடைய குறளை இவர்கள் ஜென்மாந்திரத்திலும் பார்த்திருப்பார்களா ? கம்பனுடைய கற்பனையைக் கன விலும் கேட்டிருப்பார்களா ? நாலடியார் செய்தவர்களு டைய காலடியையாவது கண்டிருப்பார்களா ? ஒளவை யாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா ?

Page 53
92 தமிழ்த்தாது
அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா ? இன்னும் எண்ணிக்கை இல்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்!"
நீதிகளைக் கூறுவது எளிது; அவற்றை வாழ்க்கை யில் நிகழ்த்துவது அரிது. தம்வாழ்க்கையில், வேதநாயகம் பிள்ளை, தாம் கற்பித்தவற்றைக் கடைப்பிடித்து ஒழுகி னர். நீதிகளைப் போதிப்பவர் அல்லர் பேரின்ப வீட்டிற் குச் செல்பவர் ; நீதிகளைச் செய்து காட்டுபவரே அப் பேரின்ப வீட்டை அடைவர். மயிலாடுதுறை வேதநாய கம் பிள்ளை இறைப் பற்று மிகுந்த இல்லறத்தார் ; தம் மனையை மாட்சியுடன் நடத்தி வந்த தலைவர் ; தம் மக் களை மாண்புடன் வளர்த்த தந்தையார் ; யாவர்க்கும் நன் மையே செய்யவேண்டுமெனுங் கருத்துடன் வாழ்ந்தவர். இவர் வாழ்க்கையில் பல இன்னல்களுக்குட்பட்டார்; ஆயி னும், நெஞ்சு கலங்காமல், வைரத் தூணைப்போல நின்றர். இவருக்கு நோய் வந்தது. இவரது வேலைக்கு இடையூறு நேர்ந்தது. இவ்வேளைகளில், இவர் தாம் பாடியவாறு, அஞ்சா நெஞ்சத்துடன் துன்பங்களைப் புறங்கண் டார்; மூன்று ஆண்டு சோழவளநாடு சோறின்மை உற்ற காலை, அப்பஞ்சத்தைத் தீர்ப்பதற்காகப் பல முயற்சிகள் செய்து, உயிர்களைக் காப்பாற்றினுர். இச்செயல் கண்ட வர்-இசைவாணர்-கோபால கிருஷ்ண பாரதியார்மக்கள் எவரையும் பாடாத மாண்புலவர், இவரைப் 'புருஷ மேரு ? என்று பாடினுர்.
‹ዎ”
பிள்ளையவர்கள் இறுதியில் பாடிய நூல் தேவ "தோத்திரமாலை" கடவுள் மீதும், இவர் அன்னையார் மீதும்

தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 93
பாடிய திருவருள் மாலை ', ' தேவமாதா அந்தாதி " முதலிய நூல்கள், இவர் பத்திக்குச் சான்றவன. இவர் இறுதியில், இறைவர்க்கு நன்றி மலர்கள் அமைந்த பாமாலைகள் சாத்தி, அவர் திருவடி மலர் சேர்ந்தார்.
வீரமாமுனிவர் காலம் தொடங்கி, தமிழில் கன்னி" மரியம்மையார்மீது மிகவும் உருக்கமான இலக்கியப் பாடல்கள் பாடப்பெற்று வந்திருக்கின்றன. தமிழிற்குச் சிறப்பான இப்பத்திப் பாடல்கள் கத்தோலிக்குத் தமிழ் இலக்கியத்திலும், அதன் இளமையிலேயே நன்கு பொருந்தியுள்ளன. * மரியன்னை இலக்கியம் ” (Marian Poetry) எனக் கத்தோலிக்கு நாடுகளில், கடவுளன்னை மீது உள்ள இலக்கியத்தைத் தொகையிடுவர். இத்தாலி யத்திலும், ஆங்கிலத்திலும், அவ்விலக்கியம் பெருந் தொகையாய் உள்ளது. ஆயினும், தமிழ் மொழியில், கடவு ளன்னையைப் பற்றிய பாடல்கள், சென்ற மூன்று நான்கு நூற்றண்டுகளிலேதான் இயற்றப் பெற்றவையாயினும், ஐரோப்பிய மரியன்னை இலக்கியத்திற்கு அளவிலோ, சுவையிலோ, வேறு எவ்வகையிலுமோ குறைந்தில. வீர மாமுனிவர் அன்னையை விளித்துக் கூறும் சில அடிகளைப் பார்க்க :
* துன்பநோய்க் குயிர்மருந்தே !
துயர்க்கடலின் நிலைக்கரையே! இன்பவீட் டுயர்வழியே!
இருள்மயல்கொள் உயிர்க்கொளியே!
" வழுவார்க்கு நீநிலையே மருள்வார்க்கு நீதெளிவே அழுவார்க்கு நீகளியே அயர்வார்க்கு நீதிதியே,
* கல்லார்க்குக் கலைக்கடல்நீ கடவார்க்கு நிலைத்திறன்நீ இல்லார்க்கும் இரணியம்நீ எல்லார்க்கும் எல்லாம்நீ.

Page 54
94 தமிழ்த்துது
* நன்னையே ஆதரவே! நண்பொழியாத் தயைக்கடலே!
அன்னையே அடைக்கலமே! அடிமைஎனை ஆள் அரசே!
*ஆடினும்நான் துறைத்துணை நீ
அருந்தினும்நான் உயிர்சுவைநீ பாடினும்நான் உரைபொருள்நீ
படுக்கினும்நான் உயிர்ச்சுகம்நீ.
அவர் மரபில் தோன்றிய வேதநாயகம் பிள்ளை தேவ தாயின் பல இலக்கணங்களைப் பற்றி வெண்பாக்கள் இயற்றியுள்ளார். இவர் அடைக்கல மாதா மீதே பாடிய வெண்பா எத்துணை ஒசையுடைமையும், பொருட்செறிவும் அமைந்துள்ளது !
"ஆரடா பேயேநீ அஞ்சாமல் என்னுடனே
போரடா செய்யப் புறப்பட்டாய்-வீரப் படைக்கலமாக் கொண்டேன்நான் பண்டுன்னைத் தேய்த்த அடைக்கலமா தாசீர் அடி.'
பொறுமை மாதாவை நோக்கி இங்ங்ணம் வேண்டுகின்றர்:
"தானமிலேன் சாந்தமிலேன் சற்குணங்கள் ஏதுமிலேன்
ஞானமிலே னேனுமுனை நம்பினேன்-ஈனச் சிறுமைமா தாவாநான் செய்பிழைகள் எல்லாம் பொறுமைமா தாவே பொறு."
கோனுன் குப்பத்தில் வீரமாமுனிவர் எடுத்த திருக்கோயி லில் எழுந்தருளியிருக்கும் தேவமாதா மீதும் இவர்
உருக்கமாகப் பாடியுள்ளார்.
வேதநாயகம் பிள்ளை, உண்மையில், தமிழ் நாட்டின் ஆசிரியராய் இருந்தார் ; இன்னும் இருந்து வருகின்றர் என்பதற்கு, இவர் இறந்த காலை, “ இந்து ’ (Hindu) எனும் ஆங்கில நாளிதழ் எழுதியது சான்றகும் :

தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 95
"இவரது இலக்கியத் தொண்டிற்கும், தம் நாட்டவ ரின் சமூக நிலையையும் சமய நிலையையும் உயர்த்த முயன்ற பேராண்மைக்கும், நம் நன்றி என்றும் உரித்தா கும். இக்கால இளைஞர் போற்றுதற்கும், பின் பற்றுதற் புகும், இவரது வாழ்க்கையில் பல பண்பு நலங்களைக் காண்பர்." -
இது, 1889-ஆம் ஆண்டு, ஆடித் திங்கள், 24-ஆம் நாள் வெளியாகியது. எனவே, இவர் காலத்தவரும், இவ ருடைய அரிய பண்பு நலங்களை நன்குணர்ந்து போற்றினர் என்பது பெறப்படும்.
1952

Page 55
சு. தமிழரும் அவர்தம் கவின் கலைகளும்
தமிழின் தனி நூல்களைப் பெருங்கடல்கள் என்று. கூறுவர். தொல்காப்பியப் பெருங்கடல், சங்க இலக்கியப் பெருங்கடல் என்றெல்லாம் கூறுவது தமிழ் மரபு. இந் நூல்களே பெருங்கடல்களாயிருப்பின், தமிழ் இலக்கியக் கடல் எத்துணைப் பெரிதாக இருத்தல் வேண்டும் ! நாம் இலக்கியப் பெருங்கடலைப்பற்றியே அடிக்கடி பேசி வருகின்ருேம். ஆயினும், தமிழ் மக்கள் வாழும் ஞாலத் தைச் சூழ்ந்த ஒலிகடல்கள், ஆழிகள், இன்னும் பல உள. தமிழ் ஓவியம் இன்னுமொரு கடல் , தமிழ்ச் சிற்பம் வேறு ஒரு கடல் : தமிழ் இசையோ, மாபேராழி.
கவின் கலேகளும் வாழ்க்கையும் :
வாழ்க்கை எதுவாயிருந்தாலும், அஃது ஒரு பட்டறிவு, அனுபவம், நுகர்ச்சி என்பதில் ஐயமில்லை. இந்நுகர்ச்சி அழகுடன் கலக்குங்கால் கலையாகின்றது. கலையின் அரசு மக்களின் அனுபவ வாழ்க்கையைப் போலப் பரவியிருக் கின்றது. எங்கு அனுபவம் உள்ளதோ, அங்குக் கலையும் இருத்தல் கூடும். அழகுடன் சேர்ந்த அனுபவமே கலையாக மாறுகின்றது. செய்யுள் இயற்றுவதும் ஒரு கலை : செப்பமாய் நெய்யிட்டு முடி சீவுவதும் ஒரு கலை. கல்லினைச் செதுக்கி உருவாக்குவதும் ஒரு கலை : பென்சிலைச் சீவுவதும் ஒரு கலை. ஒவியம் எழுதுவதும் ஒரு கலை : ஒப்பாரி பாடுவதும் ஒரு கலை. இசை பாடு வதும் ஒரு கலை வசை பேசுவதும் ஒரு கலை. யாழினை மீட்டுவதும் ஒரு கலை; யாழ்ப்பாணக் கறிகள் சமைப்பதும்

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 97
ஒரு கலை நடனம் ஆடுவதும் ஒரு கலை நகைச் சுவை வளர்ப்பதும் ஒரு கலை ; கோயில் அமைப்பதும் ஒரு கலை; கோனுர் பால் கறப்பதும் ஒரு கலை. இவ்வாறு மக்கள் வாழ்க்கையில் நேரிடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் "form ? எனப்படும் அழகின் மகுடம் உளவாயின், அவை வெறுஞ்செயல்களாக நில்லாது கலைகளாய் மாறு கின்றன.
இதனை நம் முன்னுேர் உணர்ந்திருந்தனர்; எனவே, வாழ்க்கையின் சில துறை நிகழ்ச்சிகளை அறுபத்து நான்கு கலைகளாக வகுத்தும் வைத்தனர்.
* எண்ணெண் கலையும் இசைந்துடன் போக." (சிலம்பு)
நூல்களில் இவ்வறுபத்துநான்குகலைகளையும் வெவ்வேறு முற்ையில் பெயரிட்டுக் கூறுகின்றனர். இவற்றுள் மல் யுத்தம், பல் வகை அரிசிப் பூக்களால் கோலம் வைத்தல், பள்ளி அறையிலும் பானை அறையிலும் மணி பதிக்கை, படுக்கை அமைக்கை, மாலை தொடுக்கை, தையல் வேலை, தோட்டவேலை, சூதாட்டம், சொக்கட்டான் ஆகிய இவை யாவும் கலைகளெனக் கூறப்பெற்றுள்ளன. ஆடவர்க்கும், குலமகளிர்க்கும், பொது மகளிர்க்கும் சிறப்பான கலைகளைச் சீவக சிந்தாமணி, மணிமேகலை, பெருங்கதை போன்ற காப்பியங்கள் கூறுவதை ஆங்காங்குக் காண்க.
இக்கலைகளில் சிலவற்றைக் கவின் கலைகள் என வழங் குவது மரபு. ஆங்கிலத்தில் Fine Arts " என்று இவற்றை வழங்குவதால் சிலர் இவற்றை "நுண்கலைகள்" என எழுதி வந்திருக்கின்றனர். * Fine எனப்படும் ஆங்கிலச் சொல் இந்நிலையில் நுட்பத்தைக் குறியாது, அழகையும் தூய்மையையுமே முதலில் குறிக்கின்றது.

Page 56
98 தமிழ்த்தூது
பிரெஞ்சு மொழியில் * less beaux arts" என்றும், இத்தா லிய மொழியில் ' 1?arti belle" என்றும், கூறப்பெறும் இப்பொருளைத் தமிழ் மொழியில் “ கவின் கலைகள்' என்று வழங்குதல் சாலவும் பொருந்தும். பாட்டிலும், இசையி லும், சிற்பத்திலும், ஒவியத்திலும், கூத்திலும், ஏனைய துறைகளிலும் எளிதில் அழகு தோன்றுதற்குத் துணைக் காரணங்கள் துணையாகின்றன. பகுத்தறிவும் இன்பத் துடன் இவற்றில் ஈடுபடுகின்றது. இவற்றின்கண் நுகர்ச்சியின் தூய அனுபவத்திற்கோ எல்லையில்லை. எனவே, இவற்றைச் சிறப்பாகக் கவின் கலைகள் எனப் பெயரிட்டுப் போற்றிப் பயனெய்தி வருகின்ருேம்.
சில ஆண்டுகளுக்குமுன் இயற்கையழகு பொதிந்து கிடக்கும் திருக்குற்றலத்தில் தமிழிசை வல்லவர் ஒருவர் பாட, கூத்திற்சிறந்த வேருெருவர் ஆட, நலனுய்வு வல்ல வர் பொருள் விளக்கத் தமிழ்க் கலைகளின் உயர்ந்த நிலையை நான் உணரும் வாய்ப்பினைப் பெற்றேன். அன்று தொட்டு இன்று மட்டும் ஆடலும் பாடலும் பற்றி என் உள்ளத்தில் ஓர் எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றது. தமிழர் எங்ங்ணம் தம் உயர்ந்த கலை களைத் தோற்றுவித்து, இன்று இத்தாழ்ந்த நிலையை அடைந்துள்ளனர்?’ என்பதே அவ்வெண்ணம்.
பிற நாடுகளின் கலைகள் தாழ்ந்த நிலையை அடைவ தற்குப் பற்பல காரணங்கள் உள்ளன. பொறித் தொழில் இயக்கங்கள் பெரிதும் பரவியுள்ள நாடுகளே அழகைக் கருதாது தொகையைக் க்ருதி, பொருள்களை நாள்தோறும் செய்து வருகின்றன : மக்களின் திறமையை விரும்பாது பொறிகளின் திறத்தையே விரும்புகின்றன. இந்நோக் கத்தின் விளைவாக ஆக்கப் பொருளின் அழகைப் பாராமல்

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 99
அதன் பயனையே பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நம் தமிழ் நாட்டில் இத்தகைய பொறித்தொழில் இயக்கம் இது காறும் தோன்றவில்லை. ஆயினும், நம் பேரூர்களையும், சிற்றுார்களையும் பார்க்கும்பொழுது, அவை பொலிவின்றி உருவின்றி, தோற்றமின்றி (Personality), திட்டமின்றி வளர்ந்துகொண்டே வருகின்றன. நம் இல்லங்களின் கட்டட அமைப்பு, அழகின் அமைதி வாய்ந்ததாய் இல்லை. நல்வாழ்வுக்கு ஏற்ற முறையிலும் நம் இல்லங்கள் கட்டப் படுவதில்லை. நம் தெருக்களின் தூய்மையின்மையைக் காணும் பிற நாட்டார் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்பிற் சிறந்து வாழும் மக்கள் என்பதை எளிதில் நம்பார். நாம் பண்புடைய மக்கள் என்ருல், நம் பண் பாடு நூல்களில் மட்டுமன்றி, ஊரிலும் இல்லத்திலும் ஆடையிலும் தூய்மையிலும் நடையிலும் ஒழுக்கத்திலும் உண்ணும் முறையிலும் நன்கு துலங்கவேண்டுமல்லவா?
நம் கவின் கலைகளின் இற்றைய நிலையை ஆராய்ந்து பார்ப்பின், தமிழருக்கு நேர்ந்த துன்பந்தான் யாதோ ? என்று தலையிலடித்து ஒலமிடும் நிலை ஏற்படுகின்றது. செய்யுள் துறையை நோக்கும்பொழுது கவிப்புலமையாறு வற்றி வறண்டு போவதைக் காண்கின்ருேம். ஒரு சிலர் ஒரு சில பாடல்களை யாத்தால் அவர்களுக்குப் புலவர் பட்டம் சூட்டி, கம்பர், ஷேக்ஸ்பியர், தொல்காப்பியர் என்று ஆர்ப்பரித்து, நம்மையே தேற்றிக்கொள்கின்ருேம். ஒவியத்துறையில் வங்காளமும், மலையாள நாடும் ஒவிய மறு மலர்ச்சியைத் தோற்றுவித்துப் புத்துணர்ச்சியை மக்களுக்குப் பரப்புங்கால், தமிழ் நாட்டில் சுவர்களில் நம் இளைஞர் எழுதும் எழுத்தையன்றி வேறு ஒவியங்களை நாம் காண்பது அரிது. (சுவர்மேல் எழுதி நகரின் அழகைக்

Page 57
100 தமிழ்த்தூது
கெடுக்கும் வழக்கம், தென்னிந்தியாவிலேதான் உண்டு என்று நினைத்து வந்தேன். இளைஞர் தம் உணர்ச்சிகளைச் சுவர்மேல் எழுதிக் காட்டுவதை ஈழத்திலும் கண்டு வருகின் றேன்.) இசையை நோக்கினலோ, ஒரு சிலர் இசைக் கலை யில் அழகுற வளர்ந்து வருகின்ருராயினும், பலர் தம் இசை ஞானத்தை நிலை நாட்டுதற்கேயன்றி, கேட்போரின் அனுபவத்தைக் கருதாது பாடுகின்றனர் ; கருவிகளை மீட்டுகின்றனர். கட்டடக் கலையும் சிற்பக் கலையும் எந்த மூலையில் மறைந்துவிட்டனவோ, நாம் அறியோம் 1 அக் கலைகளைப் புரக்கும் மரபினர் தம்மைப் புரப்பவரின்றித் தவிக்கின்றனர். அக்கலைகளும் வாடி வருந்துகின்றன.
பண்டைக் கலை வாழ்க்கை :
தமிழ் நூல்களில் துறை போகிய டாக்டர் சாமிநா தையர் நம் பண்டைக்காலப் பொறிகளைப் பற்றிக் குறிப் பிடும்பொழுது கூறுகின்றர் : “மதுரை மதிலில் அமைக் கப்பட்டிருந்தனவாகக் கூறும் பொறிகளையும் அவற்றின் இயல்புகளையும் நோக்கும்பொழுது இத்தமிழ் நாடு முன்பு அடைந்திருந்த ஏற்றத்தை நினைந்து வியப்பையும் வருத் தத்தையும் யாருடைய உள்ளமும் அடையாதிராது.” பண்டைத் தமிழ் நூல்களைப் படித்து வரும் தமிழரும், பண்டைக் காலத்துத் தமிழ்க் கலைகளின் செழுமையைக் குறிப்போரும், இவ்வாறு வியப்பையும் வருத்தத்தையுமே எய்துவர். ஏனெனில், அவர்களுக்கே தோன்றும் நம் வீழ்ச்சியின் தன்மை. இவ்வீழ்ச்சியின் தன்மையை உணர் வதால் மீண்டும் அந்நூல்களுக்குச் சென்று அக்கால வனப்பில் ஈடுபட்டு இக்காலத் தாழ்ந்த நிலையை மறக்க முயல்வர்.

தமிழரும் அவர்கம் கவின் கலைகளும் 10.
நான் மொகஞ்சதரோவுக்கு ஒருகால் சென்றிருந் தேன். அங்குப் பழந்திராவிடர், முதல் திராவிடர் (ProDravidians), படைத்த பண்பாட்டின் சின்னங்களைக் கண் டேன். இந்தியா இரண்டுபட்டதன் விளைவால் தமிழர்கள் இழந்த வரலாற்றுச் செல்வங்கள் குறைந்த தொகையான வல்ல. பாகிஸ்தானிலிருக்கும் பொருளியல் நிலையில் அவ் வரசினர் சிந்து வெளி நாகரிகத்தின் புதைபொருள்களின் மீது தம் சிந்தனையைச் செலுத்த வல்லவரல்லராய் இருக் கின்றனர். சிந்து மாகாணத்தில் திராவிட மொழித் தொடர் புடைய பிராகுயி மொழியைப் பேசும் மக்களைக் கண்டேன். இவர்கள் இன்னும் தங்கள் குழந்தைகள் பிறந்தவுடன் அக் குழந்தைகளின் தலைகளைத் துணியினுற்கட்டித் திராவிடர் முகங்களைப்போலத் தட்டையும் வட்டமும் ஆக்குகின்றனர். இங்குக் கிணறு தோண்டுதற்கென்றே சிறப்பு வகுப்பினர் உளர். இவர்கள் " ஒட்டர்’ என்று வழங்கப்படுகின்றர்கள். இவர்கள் பிறருடன் சிந்து மொழியை அல்லது உருது வைப் பேசினும், தங்கள் வகுப்பினருடன் பேசும் பொழுது ஒட்டர் மொழியையே பேசுகின்றர்கள். இம்மொழி தமிழுடன் தொடர்புடையது என்பர். ஆயினும், இவ் வொட்டர் மொழியைப் பற்றி இதுகாறும் ஆராய்ச்சி நடை பெறவில்லை. பண்டைத் திராவிடர் வாழ்ந்து வந்த நெடு நகரைக் கண்டேன். இத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் எவ்வளவு அழகாய் அந்நகர் விளங்குகின்றது ! மிக நேரான தெருக்கள், அழகும் தூய்மையும் படைத்த இல்லங்கள், செம்மையான செங்கற்கள், அவற்றை மிருது வாக்கும் பசைகள் காணத்தக்கவை. அந்நகரின் கால் வாய்கள் என்னை 1 கிணறுகள் என்னை கால் கழுவும் தனி அறைகள் என்னை நீர் பாயும் குழாய்கள் என்னை ! அந்நகரில் வாழ்ந்த திராவிடர்களின் வாழ்க்கைக்கும்

Page 58
02 தமிழ்த்தாது இன்று முன்னேற்றத்திற் சிறந்தவர் எனப்படும் ஆங்கிலஅமெரிக்கர் வாழ்க்கைக்கும் ஒற்றுமை மிகுதியும் உண்டு. பாபிலோன் போன்ற நகர்களிலும் பண்டைப் பண்பாட்டு நிலையைச் சிந்து வெளிப் பண்பாடு காட்டுகின்றது.
மொகஞ்சதரோவிலிருக்கும் பொருட்காட்சி நிலையத் துக்குச் சென்றேன். அங்கு அந்நகரில் கண்டெடுத்த அணிகலன்கள், சிலைகள், மண்டபங்கள், உருவங்கள், முத்திரைகள் இவை யாவும் இருந்தன. இவற்றைப் பார்த் ததும், இம்மாந்தர் தம் வாழ்க்கையை எத்துணைச் gofuu முறையிற் பேணி வந்தனர் என்பது புலணுயிற்று. இவர் தம்மை அழகுபடுத்தற்கும், தாம் உண்பதற்கும், வெப்பம் அடைதற்கும் வேண்டிய கருவிகளைக் கவினுறச் செய்த னர். மாய்ந்த பண்பாட்டின் உணர்ச்சி மொகஞ்சதரோ வைப் பார்க்கும் பொழுது தெளிவாகின்றது, மொகஞ்ச தரோவை நம் நகர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது சில துறைகளில் நாம் பின்னடைந்திருப்பது நன்கு புலணு கும். எகிப்து நாட்டிலும், பாரசீகத்திலும், கிரேக்க நாட்டி லும் உள்ள பொருட்காட்சி நிலையங்களைப் பார்க்கும் பொழுதும் மக்கள் சில துறைகளிற் பின்னடைந்ததாகவே தோன்றும்.
மேலும், நம் தமிழ் நாட்டுப் பழைய நகர்களின் வர லாற்றையும் நிலையையும் ஆராயும்பொழுது அவை பெரி தும் வனப்பு வாய்ந்தவையாயும், வாழ்க்கை நலன்கள் அமையப் பெற்றவையாயும் இருந்தன என்பது நம் இலக்கி யங்களால் தெரிய வருகின்றது. காவிரிப்பூம்பட்டினம் காஞ்சி, வஞ்சி, கூடல் முதலிய நகர்களைப் பற்றிப் பண்டை இலக்கியங்களிற் காணப்படும் புகழுரைகளுக்கு இக்காலத் தில், சிறப்புற்று விளங்கும் நம் தலைநகர்களும் தகுதியுடை

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 103
யனவல்ல. அங்குப் புலவர்க்கும், ஒவியர்க்கும்,மாலைதொடுப் போர்க்தம், வெள்ளியிலும் தங்கத்திலும் வேலை செய்பவர்க் கும் சிறப்பான தெருக்களும் இல்லங்களும் இருந்தன என் பதை மணிமேகலை எத்துணை அழகாகக் கூறுகின்றது ! மாளிகைகளும், அரண்மனைகளும், பெருநிலக் கிழவரின் இல்லங்களும் இங்ங்ணம் கவின் கலைகள் யாவும் உடைய அழகின் கோயில்களாய் எங்ங்ணம் விளங்கின என்பதற் கும் நம் தமிழ்க் காப்பியங்களே சான்ருவன. இறையனுர் அகப்பொருள் ஒர் இல்லத்தின் பகுதிகளை இவ்வாறு கூறும் :
“அவை அட்டில் (சமையல் அறை), கொட்ட காரம் (நெல் முதலிய பண்டம் வைக்கும் அறை), பண்டகசாலை (அணிகலன் முதலிய வைக்கும் மனையகத்துறுப்பு), கூடகாரம் (மேன்மாடம்), பள்ளியம்பலம் (துயிலிடம்), உரிமையிடம் (அந்தப்புரம்), கூத்தப் பள்ளி (அரண்மனையைச் சார்ந்த நாடகவரங்கு) எனும் மனையகங்களும், செய்குன்றும், இளமரக்காவும், பூம்பந்தரும், விளையாடுமிடமும் எனும் இல் வரையகங் களுமாம்.”
இங்குக் குறிக்கப்படும் மாளிகையின் பிரிவுகள் உயர்வு நவிற்சியன்று ; அக்காலத்துச் செல்வந்தரின் கட்டட அமைப்பின் சிறப்பே இங்குத் துலங்குகின்றது.
இவ்வில்லங்களின் அறைகளும் கூடங்களும் கவின் பெற அணி செய்யப் பெற்றிருந்தன என்பதையும் நம் நூல்களில் தெளிவாகக் காணலாம். இங்குள்ள கட்டில் கள், படுக்கைகள், பலகணிகள் வேலைப்பாடுடையனவாய்,

Page 59
104. தமிழ்த்தாது
காண்போர் மனத்தை ஈர்க்கும் பெற்றியவாய் இருந்தன என்று வருணிக்கப்பட்டிருக்கின்றன.
அழகை விரும்பும் மக்கள் அவ்வழகை எங்குக் காணினும் அதனை விரும்புவது இயல்பு. எனவே, இன்று மட்டுமன்றி, அன்றுதொட்டுப் பண்டைத் தமிழர் மேல் நாடுகளிலிருந்தும், கீழ் நாடுகளிலிருந்தும் அழகுப் பொருள்களைத் தொகுத்துத் தம் இல்லங்களில் வைத்துப் பேணி வந்தனர். தமிழ் நாட்டுக்கு உரோமை நாட்டு மக்களும், கிரேக்க நாட்டு மக்களும், அரசரின் மெய்காப் பாளர்களாகவும், ஊர்காப்பாளர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும், போர் வீரர்களாகவும், வணிகர்களா கவும் வந்து குடியேறியதோடு தங்கள் வினை மாண் பொருள்களையும் கொண்டு வந்தார்கள். இயந்திரப் பொறிகளோடு பாவை விளக்குகளும், பொற்கலங்களும் யவனப் பேழைகளும், யவனர் கைவினைச் செப்புகளும், சீனப் பாவைகளும் பண்டைத் தமிழர் இல்லங்களில் இருந்தன.
* யவனர் நன்கலம் தந்த தண்கமகழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி. (புறம். 56)
என்னும் இப்பாட்டு உணர்த்தும் காட்சி * யவன அழகுடைய ' காட்சி என்பதை கிரேக்கப் பண்பாட்டைப் பற்றிப் படித்தவர்கள் நன்கு உணர்வார்கள்.
அழகில் ஈடுபடுதல் செல்வர்க்கே தனி உணர்ச்சியாய் இருந்ததென்று நினைப்பது தவறகும். நம் இலக்கியங்

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 105
களில், எளிய மக்களும் அழகுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்ததைக் காண்கின்ருேம். முல்லை நிலத்தில் நாள் முழுதும் தன் மந்தையுடன் வாழ்ந்து வந்த வறுமை யுற்ற இடையன், மழையிலிருந்து தன்னைக் காப்பதற்குப் பாய் ஒன்றல் தன்னைப் போர்த்துக்கொள்கின்றன். ஆயினும், அவன் கழுத்திலும் காதிலும் தலையிலும் மலர் களும் மாலைகளும் இருக்கின்றன. ஆயர் குலச் சிறுமி மோர் விற்கச் செல்லுகிருள். அவள் தலைமேல் மோர்க்குடம் இருக்கின்றது. அதனைத் தாங்கத் தலைமேல் வைத்திருக் கும் துணி மிக்க வனப்பு அமைந்த வேலைப்பாட்டை உடையது. அவர்கள் இல்லங்களும் மிகவும் அழகுடைய இடங்களில் இருந்தன என்பதை,
" ஒவத் தன்ன இடனுடை வரப்பில் ' (புறம், 251)
என்று புலவர் ஒருவர் குறிப்பிடுகின்றர்.
குறிஞ்சி நில மக்கள் கவின் பெற்ற மலை மல்லிகை கமழும் முற்றத்தில் அகன்ற இலையில் பலருடன் பகுத்து உண்ணுகின்றர்கள் என்பதைச் சுவைபடக் கூறுகின்றது வேருெரு பாட்டு.
* கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகலிலைப் பகுக்கும்" (புறம். 168)
கவின் கலைகள் :
இயல் : செய்யுள் என்பது கவின் கலை வகுப்பில் முதற்கலை. கொலம்பியாப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் இர்விங் எட்மன் (Irwing Edman) என்பவர்,பொதுவாகச்
செய்யுட்கலையைப்பற்றிக் கூறும் பொழுது மொழிகளின்

Page 60
06 தமிழ்த்துளது
இயல்புகளை நன்கு ஆய்ந்து, இத்தாலிய மொழியில் உயிரெழுத்து ஒலிகள் அடிக்கடி வருதலால் இத்தாலிய மொழி பேசுபவன் இயற்கையாகவே புலவன் ஆவன் 6T60T is 35(5g5dsir psori. One thinks indeed at times that it is almost a special concession to a poet, for example, to be born to the Italian language. It is, one almost imagines, impossible not to be as poet, in a language where one can hardly ask the time or order a meal, save in a liquid cascade of vowels." இப்பண்பு இத்தாலிய மொழிக்கு இயல்: பாகவே உண்டு. இஸ்பானிய மொழியை நன்கு அறிந்தவர், அதற்கும் இப்பண்பு உண்டு என்று கூறுவர். ஆணுல், தமிழிற்கும், இப்பண்பு இல்லாமலில்லை. ‘பூவார் சோலை மயிலாடப் புரிந்து குயில்கள் இசை பாட" என்ற அடியை அடிக்கடி சொல்லிப் பாருங்கள். " காலையரும்பி மலரும் கதிரவனும்' எனும் பொழுது தேன் துளி நாவின் கண் மறைவது போலச் சொற்கள் மறைகின்றன.
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே."
என்பது போலத் தமிழ் மொழியிலேயே பாடுதல் கூடும். எங்கள் ஈழநாட்டுப் புலவர் விபுலானந்தரின் 'ஈசனுவக்கும் இன்மலர் மூன்று” எனும் பாக்களும் எத்துணை இனிமை
வாய்ந்தவை !
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ள லடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 10
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனுர் வேண்டுவது."
இசை :
தமிழ் மக்கள் பண்டு இசைத் துறையில் அடைந்த முன்னேற்றத்தைப் பற்றி இதுகாறும் போதிய ஆராய்ச்சி நடைபெறவில்லை. சிலப்பதிகாரமும் அதன் உரை நூல் களும் பெரிய இசைக் களஞ்சியம் போலப் பல உண்மை களைத் தம்மகத்தே அடக்கிக்கொண்டுள்ளன. எடுத்துக் 5T LITs, “ Equal Temperament ' 6T6irg), Ji, pil Glis இசை நிலையை ஐரோப்பியர் ஏறக்குறைய நூற்றிருபத் தைந்து ஆண்டுகட்கு முன்னரே கண்டு பிடித்தனர். ஆணுல், தமிழர் இதனை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே அறிந்திருந்தனர் என்பதற்குச் சிலம்பே சான்று.
ஒர்பீயஸ் (Orpheus) எனும் கிரேக்கர் தம் யாழை வாசித்த பொழுது கொடிய விலங்குகளும் அவ்விசையில் ஈடுபட்டன என்றும், பாறைகளும் நெகிழ்ந்தன என்றும் மேல் நாட்டில் பல கதைகள் வழங்கி வருகின்றன. அங்குக் கூறும் ஒரு கதைக்கு ஈடாக நம் இலக்கியத்தில் பல கதைகளைக் காட்டலாம். செருக்கு மிகுந்த இராவணன்" கைலை மலையைத் தூக்கிக் கைந்நைந்து சாமகானம் பாடி இரக்கம் பெற்ற கதை, அகத்தியர் யாழை மீட்ட அரக்கன் உள்ளம் உருகிய கதை, கண்ணனின் கானம், இவை யாவும் தமிழ் இசையின் மாண்பை உணர்த்துவன. ஷேக்ஸ்பியர் இசையைப் பற்றிக் கூறும் அடிகளை மெல்லி சையின் வல்லமைக்கு உலக மாந்தர் மேற்கோளாகக் sir G6 g. 6) typics b. 'Music hath charms to soother the Savage beast......

Page 61
女L08 தமிழ்த்தூது
யானை இசைக்கு வணங்கும் என்பதை,
* காழ்வரை நில்லாக் கடுங்களிற் ருெருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்கு." என்று கலித்தொகையும், மதங்கொண்ட யானை ஊரை அழித்துத் திரிந்தக்கால் உதயணன் யாழ் வாசித்து அதனை அடக்கித் தனக்கு ஏவல் செய்யுமாறு செய்தான் என்று பெருங்கதையும் கூறுகின்றன. பிரெளனிங் எனும் ஆங்கிலப் புலவர், Pippa Passes எனும் செய்யுளில் மங்கையொருத்தியின் பாடலைக் கேட்டு, மறம் செய்வோர், தம் தீத்தொழிலைத் துறந்தனர் எனக் கூறுகின்றர். பாலை யாழின் இசையைக் கேட்ட கொடிய கள்வர், தம் கையி லுள்ள கொலைக் கருவிகளை எறிந்துவிட்டுத் தம் தீய செயலை மறந்து இன்புற்றனர் என்பதைப் பொருநராற்றுப் படையிற் காண்கின்ருேம்.
" ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை' (பொரு5, 21-22)
என்பது காண்க.
தினைக் கொல்லையைக் காக்கும் ஒரு பெண் பரண் மேல் நின்று குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டிருந்த பொழுது தினைக் கதிரை உண்பதற்காக அங்கு வந்த யானையொன்று அப்பெண்ணின் இசையில் மயங்கி, பசியை மறந்து உறங்கி நின்றதாக அகநானூறு கூறு கின்றது. கொடிய புலியால் தாக்குண்ட தம் கணவரின் புண்களை ஆற்றுவிக்கும் கொடிச்சியர் பாட்டுப்பாடி அவர் தம் துன்பத்தைக் குறைப்பாராம். தமிழிசையின் வல்ல மைக்கும் தமிழரின் இசையீடுபாட்டிற்கும் இதனினும் வேறு சான்றும் வேண்டுமோ ?

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 109
தமிழ் நாட்டில் தமிழ் மாணவர் அனைவர்க்கும் ஒரு சிறிதளவேனும் கல்விக் கழகங்களில் தமிழிசை பயிற்று? விக்கும் நாள் விரைவில் வரவேண்டும்.
ஒவியம் :
இதுகாறும் செவிக்கினிய கலைகளைப்பற்றி ஆராய்ந். தோம். இப்பொழுது கண்ணுக்கினிய கலைகளைப்பற்றிப் பார்ப்போம். செவிக்குணவு' என்று கூறினுர் திருவள்ளு வர். ஆயினும், செவியோடு கண்ணையும் குறிப்பாகக் கருதித்தான் இருத்தல் வேண்டும். "கட்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்,' என்று கூறுவர் தும் முறையே.
மக்களையும் நிலவெளிகளையும் பற்றிப்பாடும் பொழுது அவற்றை ஒவியத்துடன் ஒப்பிடுவதும், ஒவியத்தைப் பற்றிப் பாடும் பொழுது உயிருள்ள பொருள்களுடன்" ஒப்பிடுவதும் தமிழ்ப்புலவரின் மரபு.
திருப்பரங்குன்றத்துள்ள குமரவேள் கோயிலின் பக்கத்தில் ஒவியக்கூடம் ஒன்று இருந்தது என்றும், அங் குத் தீட்டப்பெற்றிருந்த ஒவியங்கள் மக்களுக்கு நீதியைப் புகட்டி வந்தன என்றும் பரிபாடல் தெரிவிக்கின்றது. சித் தன்ன வாசலிலும், காஞ்சிக் கைலாசநாதர் கோயிலிலும், தஞ்சாவூர்ப் பிரகதீஸ்வரர் கோயிலிலும் உள்ள பண்டைக் கால ஒவியங்கள் தமிழ் நாட்டில் ஓவியக்கலை எவ்வாறு சிறப்புற்றிருந்தது என்பதைக் காட்டுகின்றன. இன்ருே, தமிழ் நாட்டின் ஓவியக்கலை ஒரு மறுமலர்ச்சியை எதிர் பார்த்து நிற்கின்றது. புறநானூறு, திருக்குறள் முதலிய நூல்கள் வெளிப்படுத்தும் காட்சிகளை ஒவியங்களாகத் தீட்டுவதற்கு இன்று தமிழ் நாட்டில் ஓர் இயக்கம் தோன்றி

Page 62
10 தமிழ்த்துளது
*யுளது. ஒவியக்கலை காட்டும் கற்பனையுலகை நம்முடைய ஓவியர் இன்று முற்றிலும் உணரவில்லை. வண்ணத்தா லும், கோடுகளாலும், ஒவியக் கட்டுக்கோப்புகளாலும் புதியதோர் உலகைக் காட்டும் வன்மை துகிலிகைக்கு உண்டு. இலக்கியத்தில் ஈடுபடுவது போல மக்கள் ஒவி யத்திலும் ஈடுபடுதல் கூடும். மைசூரிலும், திருவனந்த புரத்திலும் உள்ள ஓவியக்கூடங்கள் போலத் தமிழ் ஓவியர் தீட்டிய ஓவியக்கூடங்கள் இருத்தல் வேண்டும். இரவி வர்மாவும், வங்காள ஒவியக் கலைஞரும் போன்றவர் நம் தமிழ் நாட்டில் தோன்ருதது நம் தவக்குறையேயாகும். மைசூர், திருவனந்தபுரம் போன்ற எழில் வாய்ந்த நகர்கள் நம் தமிழ் நாட்டில் அமையாததும் நம் கலையுணர்ச்சியின் நிலையைக் காட்டும்.
கட்டடக் கலையும் உருவக் கலையும் :
சங்ககாலத் தமிழர் எழுப்பிய மாடங்களும், கோயில் களும் பெரும்பாலும் மரத்தால் ஆக்கப்பெற்றிருந்தன. ஆதலின், அவற்றின் எஞ்சிய சிறு துண்டுகளேனும் இன்று கிடைத்தற்கில்லை. மரத்தைச் சார்ந்து வளர்ந்த தமிழனுடைய சிற்பக்கலை மாமல்லபுரத்தில் கல்லைச் சார்ந்து நின்று கவின் பெற்று விளங்கியது. தமிழ னுடைய சிற்பங்கள் உலகிற் பெயர் பெற்றவை. தஞ்சைப் பெருங்கோயிலின் கோபுரத்தைக் காணுந்தொறும் வியப்பு உண்டாகின்றது. கடல்மல்லை, தஞ்சை, காஞ்சி, மதுரைஇவ்விடங்களில் கோயில்களைப் பார்ப்பவர், கல்லைச் செதுக்கியும், அடுக்கியும் தம் திறமையைக் காட்டிய தம ழரைப் போற்றதிரார். தமிழ்ச் சிற்பிகள் பிற நாட்டவர்க்கு உழைத்துத் தம் சிற்பப் பண்பாட்டைப் பரப்பிய வரலாறு

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 11
ஒரு தனி நூலாக விரியும். கண்டியிற் காணப்படும் புத்த மாளிகையையும் பல்கலைக் கழகத்தின் கற்றெழிலையும் காண்பேரர், இவற்றுக்குக் காரணகருத்தர்களாய் இருந்த வர்கள் தென்னுட்டுத் தமிழ்ச் சிற்பிகள் என்பதை அறியார்.
ஒருவன் தன் நாட்டை விட்டுப் பிற நாட்டுச் சூழ்நிலை யில் வாழும் பொழுது பெரும்பாலும் அவன் கலை கள் தன் நாட்டில் பெருத வளர்ச்சியை வேற்று நாட்டில் பெறுகின்றன. தென்னுட்டிலிருந்து ஈழத்துக்கு வரும் தமிழர், ஈழத்திலிருந்து இந்தியா செல்லும் தமிழர், இந்தி யாவிலிருந்து மலேயா செல்லும் தமிழர் இவர்கள் செல்லு மிடத்திற் புதியதொரு செல்வாக்கைத்தான் பெறுகின்ற னர். எனவே, தமிழ்ச் சிற்பத்தின் பெருமையை முற்றிலும் உணர வேண்டுமாயின், சாவகத்துக்கும் கம்போடியாவிற் கும் சென்று அங்குள்ள சிற்பத்தை ஆராய்வது நலம். அங்குக்கலங்கள் இயங்கும் கடல் மல்லையிலிருந்து சென்ற தமிழரின் சிற்பப் பண்பாட்டின் சிறப்பைக் காணலாம்.
நான் மேல் நாட்டு உருவக் கலையை ஐரோப்பியர் பெருநகர்களில் ஐந்தாண்டுகளாக அனுபவித்துவிட்டுச் சென்னைப் பொருட்காட்சி நிலையத்திலிருந்த தமிழ்க் கலையின் உருவங்களைப் பார்த்த பொழுது தமிழ னது உருவக்கலைச் சிறப்பின் உயர்வை ஒரு சிறிது உணர்ந்தேன். பிறருடைய கலைகளை அனுபவித்தால் தான் தமிழ்க் கலைகளின் சிற்ப்பைப் பெரிதும் உணர முடியும். பிற மொழிகளைக் கற்ருல்தான் தமிழ் மொழியின் பெருமை தோன்றும். பிற நாட்டுக் கோயில்களைப் பார்த்தால்தான் தமிழ் நாட்டுக் கோயில்களின் உயர் வனப்புத் தோன்றும். பிற நாட்டு நடனத்தைக் கண்டவரே தமிழ் நாட்டு நாட்டியக் கலையின் சிறப்பை நன்கு

Page 63
112 தமிழ்த்தூது
உணர்வர். மிக்கேல் ஆஞ்சலோ, ரோடின் போன்ற வர்கள் தங்கள் உள்ள உணர்ச்சிகளைத் தாங்கள் செய்த சிலைகளில் உளியால் உருவாக்கிக் காட்டியதை உலகம் போற்றுகின்றது. வெண்சலவைக் கல்லில் ஐரோப்பியர் காட்டாத உணர்ச்சிகளையும் வேலைப்பாடுகளையும் நம் தமிழ் மக்கள் கருங்கல்லில் தோற்றுவித்துள்ளார்கள். இன்று இக்கலைகள் புரப்பவரின்றி இரந்து திரிகின்றன. அரசினர் பெயராலும் பெருமக்கள் பெயராலும் தமிழ் நாட்டில் தோன்றும் கட்டடங்கள் அனைத்தும் தமிழ்க் கலையை ஆதரித்தல் பொருத்தமாகும்
நாட்டியக்கலை :
நாட்டியக்கலையில் தமிழனுக்குச் சிறந்த ஈடுபாடு இருந்து வந்தது. தமிழனது வாழ்க்கை ஆடலிலும் பாடலிலும் அமையும். எனவே, அவன் அன்ருடச் செயல்களாவன : விளையாடல், நீராடல், போராடல், உரையாடல், கொண்டாடல் எனும் ஆடல்கள். * அடி களார்க்கு ஆடலில் ஈடுபாடு என்னை ? என்று கேட் பீராயின், ஆடல் வழியாக இறைவன் படைத்தும் அருளி யும் அழித்தும் வருவானுயின், அடிகளார்க்கு ஆடலில் ஈடுபாடு இல்லாதிருத்தல் எங்ங்ணம் ? இந்திய மறைத் துறைகளில் சித்தாந்தம் சிறந்தது என்று ஆராய்ச்சி வல்லுநர் கூறுவர். அது போல, ஆடவல்லாரின் அருந்தத்துவம் மறை வரலாற்றில் மிகவும் சிறந்தது. அதனைக் காட்டும் நாட்டியக் கலையும் அவ்வாறே சிறந்தது. தமிழ் மக்கள் அடைந்த உயர்ந்த பண்பாட்டிற்கு நம் நாட்டியக் கலையே ஒப்பற்ற சான்று. அக்கலையை நாம் சிலருக்கென்று ஒதுக்கி வையாது பலருக்கும் பயிற்று வித்தல் வேண்டும்.

தமிழரும் அவர்தம் கவின் கலைகளும் 113
சிறப்பு இயல்புகள் :
நம் கவின் கலைகள் நம் பண்பாட்டின் சிறப்பியல்பு களைப் பளிங்கு போல எடுத்துக் காட்டுகின்றன. நம் இலக்கியம் பெரும்பாலும் நம் சமயங்களுடன் தொடர் புடையது. எனவே, நம் கலைகளின் வளர்ச்சிக்கும் தமிழ் நாட்டில் பண்டு தொட்டு வரும் சமயங்களே காரணம். நம் இலக்கியத்துக்கும் மொழிக்கும் பத்திச்சுவை எவ்வாறு இயல்பாயுள்ளதோ, அவ்வாறே நம் கலைகள் பத்தியின் விளைவால் தம் அருங்கனிகளைக் கொடுத்திருக்கின்றன. தமிழ் மொழி பத்தியின் மொழியாயின், தமிழ்க் கலைகளும் பத்தியின் கலைகளே.
நம் கலைகள் உலக வரலாற்றிலேயே மிகவும் சிறந்தவை. பாரெங்கும் தேடிப்பார்த்தாலும் நம் சிற்பத் திற்கும், படிவ உருவக் கலைக்கும், நாட்டியத்திற்கும் இணையான கலைகளைக் காண்பது அரிது. இத்தகைய உயர்ந்த கலைகளைத் தோற்றுவித்திருக்கின்றேமே என்பு தன்று வியப்பு ; இக்கலைகளைத் தோற்றுவித்த மக்கள் தாழ்நிலையுற்றதே வியப்பு.
நம் இலக்கியத்தைப்போலவே நம் கலைகளும் வரம்பு கடந்த கற்பனையில்லாது இயல் வாய்மையை (Realism) ஒட்டியே வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழர் பண் பாட்டிற்கும் பிறர் பண்பாட்டிற்கும் இஃதோர் அடிப் படையான வேற்றுமை. தமிழ்க் கலைகள் இயல் வாய் மையைத் தழுவி வளர்ந்தவை; இயற்கையுடன் நெருங்கிய ஒற்றுமையுள்ளவை. இவ்வுண்மை நம் கட்டடக் கலையில் மிகத் தெளிவாகின்றது : நாட்டியத்திலோ, பெரிதும் புலனுகின்றது. ஏன்? தமிழ்ப் பெண்கள் அணியும்
8

Page 64
li 4 தமிழ்க்அாது
அணிகலன்களின் பெயர்களையே பாருங்கள்-தோடு, இலை, அரசிலை, குழை, ஒலை, கொந்தளவோலை, கொடி, தாலக்கொடிஇவை யாவும் இயற்கையுடன் ஒற்றுன்மப்பட்ட பெயர்கள். நம்மவர் செம்பினுற்செய்த ஆடவல்லார் உருவங்களின் தத்துவம் எத்துணை இயல் வாய்மை யுடையது !
தமிழ்ச் சொற்கள் தமிழரது அழகின் ஈடுபாட்டுக்குப் பிறிதொரு சான்று. தமிழ் மக்கள் உலகத்தையே ஒரு சோலையாகக் கருதி, அதனைப் பொழில் ' என்று வழங்கி ணுர்கள். கலைகளைத் தம் கண்களாகக் கொண்டவர் அமைச்சராதலின், அவரைக் * கலைக் கண்ணுளர் ” என வழங்கினர். நம் காப்பியத் தலைவர் அனைவரும் கலை வல்லார். கோவலன், மாதவி, மணிமேகலை, சீவகன், உதயணன், இராவணன்-இவர் யாவரும் கலையிற் சிறந்தவர். (கலைகளை மக்கள் துறக்க வேண்டும் என்பது பிறிதொரு மனப்பான்மை, அதனை இங்கு உரைப்பின் மிக விரியும் என அஞ்சி விட்டுவிடுகின்றேன்).
அழகு எனும் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள்தாம் எத்துணை அம், அணி, எழில், ஏர், கவின், சீர், காமர், முருகு, வனப்பு, பொலிவு, கோலம், மஞ்சு, மஞ்சுளம், ஒயில் இன்னும் பல. கவின் கலைகளில் நமக்குள்ள ஈடு பாட்டுக்குச் சான்று வேண்டுமெனின், பழங்கதைகளையே நாம் வளர்த்தல் வேண்டும். இக்கால நிலையை நோக்கும் பொழுது கலைகள் அனைத்தும் மிக்க தாழ்நிலையுற்றிருப் பதைக் காண்கின்ருேம். எனவே, அவற்றின் மறுமலர்ச்சி இன்றியமையாது வேண்டப்படுவதாகும். இன்று தமிழ் நாட்டில் இலக்கியத் துறையில் விழிப்பொன்று ஏற்பட் டுளது. பதின்மூன்றம் நூற்றண்டில் ஐரோப்பிய மறு

தமிழரும் அவர்கம் கவின் கலைகளும் 115
மலர்ச்சிக்குக் கிரேக்க் இலத்தீன் இலக்கியங்கள் எவ்வாறு காரணமாய் இருந்தனவோ, அவ்வாறே நம் மறுமலர்ச் சிக்கு நம் பண்டைய இலக்கியங்கள் காரணமாய் இருக் கின்றன. இவ்விலக்கிய மறுமலர்ச்சி கலைகளின் மறு மலர்ச்சிக்கும் காரணமாய் இருத்தல் வேண்டும்.
கலை வளர வேண்டுமாயின், கலைக்கென வாழும் புலவர் வேண்டும் ; கலைகளைப் புரக்கும் புரவலர் வேண் டும்; கலைகளைச் சுவைக்கும் மக்கள் வேண்டும். கலை சுவைக்கும் மக்களின் வாழ்க்கையே ஒரு கலையாகும்.
* வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்."

Page 65
எ. தமிழ் கூறும் நல்லுலகம்
தமிழ் ஆராய்ச்சித் துறையில் ஈடுபடுவதற்கு வெளி நாடுகளில் தமிழறிஞர்களுக்குக் கணக்கற்ற வாய்ப்புக்கள் உள. கீழ்த்திசை நாடுகளில் தமிழ்ப் பண்பாடு மிகவும் பழமையான காலத்திலேயே பரவியது. சாவகம், சுமத்தி ராப் போன்ற இடங்களில், இரண்டாம் நூற்றண்டுக்கு முன்னரே தமிழ் மக்கள் குடியேறி இருக்கவேண்டுமென் பது கெல்டோன் போன்ற அறிஞர்களின் கருத்து. தமிழ் நாட்டிலிருந்து மரக்கலங்கள் அந்நாடுகளுக்குப் பண்டு சென்று வாணிகம் நடத்தின என்றும் ; வாணிகம் நிலை பெற்று நீண்ட நாள் நடந்தது என்றும் ஆராய்ச்சியாளர் கள் கருதுகிருர்கள். இன்றும், சுமத்திராவில் வாழ்ந்து வரும் "காரோ பட்டாக் வகுப்பினரின் உட்பிரிவினராயிருக் கும் சிம்பிரிங் என்போர், தம்மைச் சோளியர் ’, சேரர்", "பாண்டியர்', 'கலிங்கர்’ என்று வகுத்திருக்கின்றனர்.
சாவகத்தில் எழுப்பப் பெற்றிருக்கும் " பிரம்பானுன்", எனும் கோயில், சைவ சித்தாந்தத் தத்துவங்களை அடிப் படையாகக் கொண்ட கோயில் என்பர். அதே போன்று, *தியங்’ சமவெளியில் உள்ள கோயில்கள் பலவும், "பணத் தரான் கோயிலும், கணபதி அகத்தியருடைய கணக்கற்ற சிலைகளும் திராவிடத் தென்னிந்திய மக்களின் கட்டடச் சிற்பக்கலைகளை ஒட்டியே அமைக்கப் பெற்றவை.
இந்தோனேஷியா மொழியில் வழங்கும் சொற்கள் பல, அம்மக்கள் தமிழ் நாட்டுடன் கொண்ட வாணிகத் தொடர்பைக் குறிப்பன. எடுத்துக்காட்டாக, ' கப்பல்” என்பதைக் கபல்' என்கின்றனர். அவர் வழங்கும்

தமிழ் கூறும் நல்லுலகம் 17
வேறு சில தமிழ்ச் சொற்கள், வாடை ", " சுக்கு 7, "இந்சி', ' கஞ்சி', கொத்துமல்லி', ' குதிரை ', * கடை , * பெட்டி , பிட்டு’ப் போன்றவை. "தாவி " என்ற சொல்லைக் கொடி’ என்ற பொருளிலும் பயன்படுத்திக்கொள்கின்றனர். அம்மா , 1 அக்கா ', * மாமா ”, “ தம்பி போன்ற உறவுச் சொற்களும் அங்குப் பேச்சு வழக்கில் உள.
பாலித் தீவின் பண்பிற்கும் சமூக வாழ்விற்கும் இந்து சமயமே அடிப்படை அங்கிருக்கும் ஓரிடத்திற்குக் கப்பல் என்பது பெயர். அவ்விடத்தில் தமிழ் நாட்டுக் கப்பல் ஒன்று கரையில் மோதுண்டு உடைந்ததாகக் கூறுவர். பொதுவாகத் தென்கிழக்குத்திசை நாடுகளின் இசையும், நாட்டியமும், நிழற்கூத்தும் இந்தியக் கலைகளுடன் தொடர் புடையனவென்று கருதுவதற்கு இடமுண்டு. ஆயினும், இத்துறையில் ஆய்வு நிகழ்த்துவதற்கு நம்மவர் தென்கிழக் குத்திசை மொழிகளை அறிவதுடன், நன்முகப் பிரெஞ்சு மொழியையும் டச்சு மொழியையும் பயின்றிருத்தல் வேண்டும். சேடிசு, கிருேம் (Coedes, Krom) போன்ற வர்கள் எழுதிய நூல்களிலிருந்து நம்மவரும் பல வர லாற்றுண்மைகளை அறிதல் கூடும்.
இதுகாறும் நம் அறிஞர் இவ்வாராய்ச்சிகளை நிகழ்த்துவதற்குத் தென்கீழ்த்திசை நாடுகளுக்குச் சென்றி லர். அவர்கள் செல்லாது இருக்கும் தறுவாயில் ஒரு சில தொடர்புக் குறிப்புக்களையே நாம் பொதுவாகக் கூறிக் கொண்டு வருதல் கூடும். மலேயாப் போன்ற இடங்களில் தமிழர் வழிபடுந் தெய்வங்களின் சிலைகளும், பண்டு தமிழ் பேசும் மக்கள் அமைத்த கோவில்களும் உள. ஆயினும், மலேயாவைக் கடந்து கம்போதியா வியட்னும் போன்ற

Page 66
118 தமிழ்த்து து
இடங்களுக்குச் சென்றல், அங்கு நாம் காணும் தமிழரின் சின்னங்கள் இன்னும் பெருவியப்பைத் தருகின்றன.
வியட்னுமின் துரானில் இருக்கும் பழம்பொருட்சாலை யில் உள்ள நந்திகளைப் போல் அழகு வாய்ந்த நந்தி களைத் தமிழ் நாட்டில் நான் கண்டிலேன். மேலும், வியட் ணுமின் பல மாவட்டங்களில் சிவலிங்கம் அமைத்த கோயில் கள் பல உள்ளன. மரங்களும் செடிகளும் அக்கோயிற் சுவர்களின்மேல் இன்று வளர்ந்தும் படர்ந்தும் வருகின் றன. அந்நாட்டின் ஒரு பகுதி சம்பா என்றே வழங்கப் பெற்றது. சம்பாவில் வாழ்ந்துவரும் சாம்பரின் (Chams) வரலாற்றைத் தமிழறிஞர்கள் படித்தல் வேண்டும். கம் போதியாவிலிருக்கும் அம்கோர்வாட், அம்கொர்தொம் எனும் பெருநகரும், கட்டடமும், கிமேர் (Khemrs) எனும் இனத்தவரால் பத்தாவது பதினுேராவது நூற்ருண்டு களில் சிறப்புறனழுப்பப் பெற்ற வான் வருடும் கட்டடங்கள். அங்குச் சுவர்கள்மீது செதுக்கப் பெற்றிருக்கும் மகா பாரதம், இராமாயணம் முதலிய வரலாற்றுச் செய்திகள், இவை யாவையும் இதுகாறும் தமிழ் அறிஞர் பார்வையிட்ட னர் அல்லர். அங்குள்ள கட்டடங்கள் பல, சிலைகள் பல, யானை உருவங்கள் பல பல்லவருடைய கட்டடச் சிற்ப முறை களைக் காட்டுவன. கிமேர் இனத்தாரின் அரசரின் பெயர் களும் வர்மன் என்னும் விகுதியைக் கொண்டவை. * அம்கோர் ” என்னும் சொல்லும் " நகர்” என்னுந், திராவிடச் சொல்லின் திரிபாகும்.
கம்போதியாவின் அரண்மனையில் நடைபெற்று வந்த நாட்டியக்கலை பரத நாட்டியக் கலையுடன் ஒப்பிட்டுப் பார்க் கத்தக்கது. தைலாந்தில் சிறப்பாகத் தமிழ்ப் பாக்களைத் தை மன்னரின் முடி சூட்டு விழாவில் பாடி வருகின்றனர்

தமிழ் கூறும் கல்லுலகம் 19
என்பதை இன்று தமிழருள் சிலரேனும் அறிவர். நான் பாங்கொக்கு மாநகருக்குச் சென்றிருந்த பொழுது இந்து சமய பிராமணர் எனப்படுபவர் இருக்கும் கோவில்களைப் பார்க்கச் சென்றேன். அங்கு அவர்களுடைய ஏடுகளி லிருந்து தம் மன்னரின் முடி சூட்டு விழாவில் பாடிவரும் செய்யுட்களை அவர்கள் பாடிய பொழுது தமிழ் என்று அறியாது அவர் பாடும் " ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை ” என்னும் திருவெம்பாவைப் பாட்டைக் கேட்டுப் பெருவியப்பு எய்தினேன் !
திருப்பாவை, திருவெம்பாவைத் திருநாட்களைப் பண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வந்தார்கள் தைநாட்டு மக்கள். அக்கொண்டாட்டம் பொது மக்களின் கொண் டாட்டமாயும் அமைந்தது என்பதற்கு அங்குள்ள மாபெருங்கோயிலுக்கு அண்மையில் உள்ள உயர்ந்த ஊஞ்சல் நிலைகளே சான்ருவன. இன்றும் திருப்பாவை திருவெம்பாவைத் திருநாள்களை அப்பிராமணர்கள் கொண்டாடி வருகின்றர்கள். அங்குள்ள அவர்களது கோவில் அமைப்பும் வழிபாடும் தென்னிந்தியக் கோவில் அமைப்புக்களையும், வழிபாட்டு முறையினையும் தழுவி அமைந்ததாக அவர்களின் அரசகுரு எனக்குக் கூறினர்.
தை மொழியில் இருக்கும் இராமாயணம் வான்மீகி யின் இராமாயணத்தைத் தழுவியது அன்றென்றும், பெரும் பாலும் கம்பரின் இராமாயணத்தையே தழுவி இருத்தல் கூடுமென்றும் பியானுமன் எனும் தை அறிஞர் எனக்குத் தெரிவித்தார். மேலும், தம் மொழியில் 'ஐ' விகுதிகளும் * அன் ? விகுதிகளும் கொண்ட சொற்கள் பலவென்றும், தம் இராமாயணத்தின் காவியச் செல்வரின் பெயர்கள் பெரும்பாலும், இராமன், சுக்கிரீவன் என்ற தமிழ்ப் பெயர்

Page 67
20 தமிழ்த்தூது
களைப் போலவே அமைந்திருக்கின்றனவென்றும் குறிப் பிட்டார்.
மேலும், தை நாட்டின் வெண்கலப் படிவங்கள் பல்ல வர் சோழர் காலத்துத் தமிழ் நாட்டுப் படிவங்களைப் போன்றவையென்று தைநாட்டில் சிற்பம் கற்பிக்கும் இத் தாலிய சிற்பியார் ஒருவரும் எனக்குச் சொன்னர். அந்த அறிஞரே தங்கம் ' என்னும் சொல் தமிழிற்குச் சீனத்திலி ருந்து தை நாடு வழியாக வந்த ஒரு சொல் என்றும் கருதினர்.
* தமிழ் ? என்ற சொல்லைத் தமின் ? என்று ழகரத்தின் இடத்தில் ன 'கர ஒலி கொடுத்துப் பயன் படுத்துகின்றர்கள் தை மக்கள். ஆணுல், தை மொழியில் * தமின் " என்ற சொல் கொடுமையான மகன் " எனப் பொருள்படும். பல்லவர் சோழர் காலத்தில் செல்வாக் குப் படைத்த பல்லவ சோழ மன்னர்களின் அரண்மனை முறைகளையும் சடங்குகளையும் கடைப்பிடித்த தை மக்கள், பிற்காலத்தில் தமிழ்" என்னும் சொல்லுக்கு இத்தகைய பொருளைக் கொடுப்பதற்குக் காரணம் யாது ? பிற்காலச் சோழரின் படைகள் ஈழம் முதலிய வெளி நாடுகளின் மீது படையெடுத்தது காரணமாக, அந்நாடுகளில் பெருந் துன்பம் நிகழ்ந்தது. அதனுல், ஈழத்தில் வாழ்ந்த புத்த பிக்குகள் தங்கள் நாட்டை விட்டு, புத்தமதக் கோட்பாடு களைப் பேணி வரும் தை நாட்டின் கண் சென்று அடைக் கலம் புகுந்தார்கள். அங்ங்ணம் சென்ற பெளத்தர்கள், தென்னுட்டுத் தமிழ் மன்னர்களால் தங்கள் நாட்டிற்கு ஏற் பட்ட அழிவினை அறிவித்தார்கள். அதனுல், பண்டு உயர் சொல்லாய் வழங்கிய "தமிழ்" எனும் சொல் இப்பொழுது இழிவுச்சொல்லாய் வழக்கில் திரிந்து வழங்குகின்றது.

தமிழ் கூறும் நல்லுலகம் 2.
நான் இப்பொருள் மாற்றத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, வானூர்தி நிலையத்தில் பணியாற்றும் பாமரன் ஒருவனை"அணுகி, "அப்பா, தமின்’ என்ற சொல்லுக்குப் பொருள் யாது?’ என்று வினவினேன். அதற்கு அவன் f55th 5uilds rigs, “By Tamin I mean a black Indian who is cruel and hard,' 6T6örg), 660Lயிறுத்தான்.
தமிழ் நாட்டிற்கு வடமேற்குத் திசையிலிருக்கும் நாடு − களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கு எல்லையற்ற இடமுண்டு. இன்று வரையிலும் நாம் அறிந்த பண்புள்ள பண்பற்ற திராவிடமொழிகள் ஏறக்குறைய இருபது என்று கூறுவர். மொகஞ்சதரோவை நான் பார்க்கப் போயிருந்த பொழுது அங்கே பிராகுவி மொழி பேசும் மாந்தர் சிலருடன் உரை யாடினேன். பாகிஸ்தானத்தில் கிணறு தொடும் குலத்தி னர் ஒரு சிலர், 'ஒட்டர்' எனப் பெயரிடப்பெறுவர் என் றும், அன்னுர் திராவிடமொழி போன்ற ஒரு மொழியைப் பேசி வருகின்றனர் என்றும் என்னிடம் கூறினர். நான் * ஒட்டர் ' எனும் மக்களை நேரில் கண்டு அவர்களுடன் பேசுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றிலேன். அண்மையில் மாஸ்கோ மாநகரில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த ஆங்கில அறிஞர் ஒருவருடன் உரையாடிய பொழுது, அவர் ஆப்கானிஸ்தானத்தில் ஒரு வகுப்பினர் (ஏறக் குறைய 200 குடும்பங்கள்) திராவிடமொழி போன்ற மொழி ஒன்றினைப் பேசி வருகின்றனர் என்றும், இது காறும் அம்மொழியினை அறிஞர் எவரும் ஆராய்ந்திலர் என்றும் செப்பினர். எனவே, நம் அறிஞர்கள் இந்நாடு களுக்குச் சென்று இம்மொழிகளைப் பேசும் மக்களைப் பற்றிய செய்திகளை ஆய்ந்து வருவார்களாயின் இன்னும் சில திரா

Page 68
122 தமிழ்த்தூது
விட மொழிகள் இயங்கி வருவதாக நாம் அறிய நேர்ந்தா லும் நேரலாம்.
பின்னிஷ் (Finnish) மொழி திராவிட`மொழிகளுடன் தொடர்புடையது எனக் கால்டுவெல் முன் கூறியுள்ளதை மீண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அறிஞர் பரோ (Burrow) என்பவர் இக்காலத்திலும் வற்புறுத்தி வரு கின்றர்.
மொழி இயலில் தமிழராய்ப் பிறந்த தமிழ் அறிஞர் ஈடு படும் பொழுது பிற நாட்டுத் தமிழறிஞர் தமிழ் மொழியை யும் பண்டைய இலக்கியங்களையும் நன்கு அறியாது ஆராயும் வழக்கின் சில வழுக்களை நீக்குதல் கூடும். மேல் நாட்டு அறிஞர் ஒருவரும் நானும் தொதவர் சிலரை உதகமண்டலத்தில் கண்டு சில பொருள்களுக்குத் தம் மொழியின் பெயரைக் கூறுமாறு கேட்டோம்'; அஃதாவது, பறவை ஒன்றினைச் சுட்டிக்காட்டி அதற்கு அவர் மொழியில் பெயர் யாது என்று கேட்டோம். பறவையைப் பார்த்துத் தொதவர் 'பிள்' என்று கூறினுர். மேல் நாட்டறிஞரோ, தமிழ்ச் சொல்லின் திரிபுதான் "பிள்" என்பதனை உணர்ந் திலர். எனவே, தமிழ் ஆய்வுகளைத் தமிழின் வெவ்வேறு கால இலக்கியங்களை நன்கு பயின்ற அறிஞர்கள் உயர்ந்த முறையில் நடத்தும் பொழுது ஏனையோர்க்கில்லாத வாய்ப் புக்களைப் பெறுகின்றர்கள் ; வழி வகைகளையும் காண்கின் ருர்கள். ஆயினும், அவர்களுக்குப் பன்மொழிப் புலமை யும் இவ்வாராய்ச்சிக்கு இன்றியமையாத அடிப்படையாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணுேம்,” என்ற அடி உண்மை கூறுவது என் பதை அறிவது தமிழ்மொழி ஒன்றனையே அறிந்த புலவர்க்கு இயலாது. பாரதியார் ஆங்கிலத்தையும், பிரெஞ்சு மொழி

தமிழ் கூறும் நல்லுலகம் J. Z. :)
யையும், இந்தியையும், வடமொழியையும், வங்கமொழியை யும் அறிந்ததாலேதான் அவ்வாறு கூற உரிமையுடையவ ரானுர். இன்றிருக்கும் புதுப் பேச்சுக் கருவிகளைக் கொண்டு பிற மொழிகளைப் பயில்வது பண்டினும் எளிது. இப் புது முறைகளைக் கொண்டே மேல் நாட்டறிஞர் இன்று பன்மொழிப் புலவர் ஆகின்றனர்.
பண்டைக் காலத்தில் கிரேக்க நாடு, ரோம் நாடு போன்ற மேல் நாடுகளுடன் தமிழ் மக்கள் கொண்ட வாணிகத் தொடர்பு மிகவும் சிறந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரமும் நல்ல உறுதி படைத்த ஆதாரங்களாய் அமைகின்றன. அரிசி, இஞ்சி வேர், கருவாய் போன்ற தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் 2) sit 6T60T. gu?g)7th, Paleography, Paleontology போன்ற சொற்களில் வரும் பழைய என்னும் பகுதியும், இக்காலக் கிரேக்க மொழியில் நீருக்கு, "நேரோ ? என்னும் சொல்லும், இன்னும் நாம் கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளில் ஆய்வு செய்வதற்கு இடமுண்டு என்பதைக் காட்டுகின்றன. கிரீட்டுத் தீவின் பண்பாட்டில் காளை மாட்டின் வழிபாடும், ஏறு தழுவுதல் போன்ற விளை யாட்டுக்களும் கி. மு. இரண்டாயிரத்திற்கு முன் நிலவிய மீனுேஸ் காலத்தின் பண்பாட்டில் இடம் பெற்றுள்ளன. இன்றும் செட்டி நாட்டில் இடம் பெறும் விளையாட்டும் முல்லைக்கலி கூறும் ஏறு தழுவுதலும் தமிழர் கிரீட்டரின் பண்டைத் தொடர்பினைக் காட்டுகின்றது என்பது அறிஞர் சிலரது முடிபு.
தமிழ் நூல்கள் பதினேழு பதினெட்டாம் நூற்ருண்டு களிலேதான் அச்சேறின என்று பலர் நம்பி வருகின்றனர். ஆயினும், தமிழ் மொழிதான் இந்திய மொழியில் முதன்"

Page 69
S24 தமிழ்க்தாது
முதல் அச்சினைக் கண்ட மொழி. 1554-இல் இலிஸ்பன் மாநகரில் இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு தமிழ்ச் செபங்களை ஒலி பெயர்த்த நூல் ஒன்றனை அச்சிட்டனர். அதில் ஒரு வரி தமிழ் ஒலி வடிவைக் காட்ட, மற்ருெரு வரி போர்த்துகீசிய மொழியின் பொருளைக் குறிக்க, மூன்ருவது வரி தமிழ்ச் சொல்லிற்கு நேராகிய போர்த்துகீசியச் சொல்லைத் தருகின்றது. இவ்வாறு மும்மூன்று வரிகளாக வும் இரு நிறங்களிலும் அச்சிடப் பெற்ற அழகிய அந் நூல் ஐரோப்பிய அச்சுக்கலைக்கே அணியாய் விளங்கு கின்றது. மேலும், 16-ஆம் நூற்றண்டில் தமிழ் நாட்டில் போர்த்துகீசிய மொழியில் எழுதப் பெற்ற தமிழ் இலக்கண நூல்களையும் இலிஸ்பன் நூற்கூடங்களிற் கண்டேன். வத்திக்கான் நூற்கூடத்தில் இருந்த கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றையும், பழைய நூல்கள் சிலவற்றையும் ஒரு முறை ஆராய்ந்த பொழுது, அங்குப் பதினேழாம் நூற்றண்டில் அம்பலக் காட்டில் அச்சிடப் பெற்ற போர்த்துகீசு தமிழ்-தமிழ் போர்த்துகீசு அகரவரிசை யைக் கண்டெடுத்தேன். 664 பக்கங்கள் கொண்டதும், பெரும்பாலும் புன்னைக்காயல் என்னுமிடத்தில் 1586-ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றதுமான கத்தோலிக்கத் திருத் G35T6ðITLi 6JT6NDTT m (Flos Sanctorum) 6T 6ðrgo).Judd நூலினையும் கண்டெடுத்தேன். இன்னும் பல பயனுள்ள கையெழுத்துப் பிரதிகளையும், பண்டு அச்சிடப் பெற்ற தமிழ் நூல்களையும், ஜகார்த்தா, இலிஸ்பன், பாரிஸ், வத்திக்கான், கொப்பென்கெய்கன், இலண்டன் இன் னுேரன்ன நகர்களிலுள்ள நூற்கூடங்களில் கண்டிருக் கின்றேன். எதிர் காலத்தில் இந்நகர்களுக்குச் செல்லும் தமிழறிஞர்கள் நம் வரலாற்றிற்குப் பயன்படும் இத்தகைய

தமிழ் கூறும் நல்லுலகம் 125,
நூல்களையும், கையெழுத்துப் பிரதிகளையும், கடிதங்கள் முதலியவற்றையும் ஆய்தல் வேண்டும்.
மேல்ை நாட்டு அறிஞர் பலர் இன்றும் தமிழ் ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வருகின்றனர். கலிபோர்னியாவிலிருக்கும் ஏமெனுே என்பவர் கோத்தர் மொழியினை நன்கு கற்றவர். அவர் திராவிட மொழியியலில் ஈடுபட்டு வருகின்றர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பரோ என்பவர் வட மொழிக்கும் தென்மொழிக்கும் இருக்கும் தொடர்பினை யும் திராவிட மொழிகளின் ஒப்பியற்பான்மையையும்: ஆராய்ந்து வருகின்றர். பாரிஸ் நகரில் மெல் என்பவரும், பீலியோசா என்பவரும் தமிழ் இலக்கியத்தையும் இலக் கணத்தையும் ஆய்ந்து எழுதி வருகின்றனர். ஜெர்மனியில் இருக்கும் லேமன் என்பவர், தாயுமானவர் பாடல்களை ஜெர்மன் மொழியில் பெயர்த்தவர்; தஞ்சை மாவட்டத்தின் சீர்காழியில் ஏழாண்டுகள் வாழ்ந்தவர் : இன்று கிழக்கு. ஜெர்மனியின் பல்கலைக் கழகமொன்றில் தமிழ் கற்பித்து வருகின்றர். செக்கஸ்லோவாக்கியாவில் இருக்கும் சுவலே பில் என்பவரும் லெனின்கிராடில் இருக்கும் ருடின் என்ப வரும் இளைஞர் , தமிழ்ப் பற்றுடையவர் ; செந்தமிழைச் செம்மையாகப் பேசுகின்றவர்,எழுதுகின்றவர். இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பாடங்களை நடத்தும் மார் என்பவரும், ஆசர் என்பவரும், மாஸ்கோப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி செய்யும் ஆந்திரேனுேவ்" என்பவரும், பியர்த்கோஸ்கீ என்பவரும் தமிழில் பெரிதும் ஈடுபாடு உள்ள மேனுட்டு இளைஞர். இவர்களுடைய தமிழ்ப் பற்றும், தமிழறிவும், இக்காலப் பன்மொழிப் புலமையும், இக்கால ஆராய்ச்சி முறைகளும் நம் இளைஞர்க் கும் இருக்குமாயின், தமிழ் ஆராய்ச்சி காணவிருக்கும்

Page 70
了26 தமிழ்த்தாது
எதிர்கால வெற்றிகள் கணக்கற்றவையும் எல்லையற்றவையு
ÖsTLD
தமிழ் மக்களும், தமிழ்ச் சின்னங்களும், தமிழ்ப் பண் பாட்டை நினைவூட்டும் பழக்க வழக்கங்களும் பாரெங்கும் பரவியிருக்கக் காணலாம். பிரெஞ்சு மொழியில் 1863-இல் தமிழ் இலக்கண நூலொன்றை எழுதியவர் அத்லாந்திக் குப் பெருங்கடலில் மார்டினிக் பூர்போன் தீவுகளில் தமிழ் மக்கள் வாழ்வதாகவும், ஆதலால் அங்கு ஆட்சி செலுத்தும் பிரெஞ்சு மக்களுக்குத் தமிழ் இலக்கண நூல் பயன்படுவதாகவும் முகவுரையில் கூறியிருக்கின்றர். இவ் வண்ணம் இடையமெரிக்கா, அத்லாந்திக்குத் தீவுகள், தென்னுப்பிரிக்கா, மரீசியஸ் தீவு, மலேயா, பியூஜித் தீவுகள், வியட்நாம் ஆகிய எங்கும் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றர்கள்; தமிழ் மொழியையும் பயின்று வருகின்றர் கள். இந்தியத் தமிழ் நாடு தமிழகமெனச் சிறப்பாகக் கூறப்படுமெனின், ஈழ நாட்டிலும் தமிழகம் உண்டு ; மலேயாவிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையாய் உள்ளார் கள். சென்னை, திருச்சி, புது டில்லி, கொழும்பு, சிங்கப்பூர், குவலாலம்பூர், இலண்டன் மாநகர், மாஸ்கோ நகர் போன்ற நகர்களிலிருந்தெல்லாம் தமிழ் ஓசை ஒலி பரப்பக் கேட்டல் கூடும். தமிழ்ப் பேசும் படங்களைக் கீழ்த்திசைச் சைக்கோனிலிருந்து மேற்றிசைக் கெய்ரோ வரையும் காட்டப் பார்த்திருக்கின்றேன். இத்தகைய தமிழ்ப் பரப்பின் பான்மையையும், செறிவையும், இயல்பையும், வகையையும் தமிழ் அறிஞர் வருங்காலத்தில் வரை அறுத்துக் கூறுமாறு தமிழ்ப் பகுதிகளைக் கொண்ட பல்கலைக் கழகங்கள் மேலான வாய்ப்புக்களை அளித்
தருள்க ! assadass -ر


Page 71


Page 72