கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழருவி சண்முகசுந்தரம்

Page 1
தமிழருவி
சண்முகசு i
1986 - OS - 28
 

தரம்

Page 2

தமிழரு வி சண்முகசுந்தரம்
அருள் வெளியீட்டகம், மாவை, கந்தசுவாமி கோயிலடி, கெல்விப்பழை 1986-08-28

Page 3
தமிழரு வி
சண்மு க சுந் தரம்
-மகாஜனக் கல்லூரி முன்னுள் அதிபர், ஆய்வாளர், பத்திரிகையாளர்,
நாவலாசிரியர் , சிறுகதையாசிரியர், நாடகா சிரியர்,
மாவை. திரு. தம்பு சண்முகசுந்தரம் வாழ்வும் பணியும்
நாட்டாரியல் அறிஞர் ,
Thamizharu vi
Shan mugas unith caram
-Life & Times
of Late T. Shanugas untharam B. A, Dip, Ed.
Principal Eiteritus, Mahaja na Collego, Tellipalai, Scholar, Journalist, Novelist, Short Story Writer, Play Wirght, Folklorist, Essayist & Authore
Arul Veliyeedahann, Mavai Katha Swamy Köy ilady, Telippalai
986-08-28

சிவகாம வித்யாபூஷணம் மகாராஜழி சு. து. ஷண்முகநாதக் குருக்கள்
மாவை ஆதீனகர்த்தா
பல்துறை விற்பன்னர்
பழந் தமிழ் மக்களின் அறிவு, அன்பு, அறம், பண்பு, தியா கம் ஆதியன தெய்வீக வாழ்வோடு கலந்ததாகக் காணப்பட்ட தென்பதற்குச் சான்றுகள் பலவுள. நல்ல குறிக்கோள்களை உன் ளடக்கிய வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்தியதாற்ருன் சற்
இயல்பை மழையால் அறிவது போலவும், உழைப்பின் சிறப்பை விளைவால் அறிவது போலவும், நெஞ்சத்து உள்ளதை முகத் தால் அறிவது போலவும், தந்தையின் தன்மையை மகனும் அறியலாம். இதனை நான்மணிக்கடி கைப் பாமூலம் விளம்பி நாகனர் கூறுகிருர்,
* மகனுரைக்குந் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும் உண்ணின்ற வேட்கை - அகனிர்ப் புலத்தியல்பு புக்கா னுரைக்கும் நிலத்தியல்பு வான முரைத்து விடும், "
மாவிட்டபுரம் தம்புச் சட்டம்பியாரைத் தெரியாதவர் இலர். சிவந்த மேனி; திருநீறு அணிந்த நெற்றி கழுத்திலே உருத் திரக்ஷமணிமாலை, சிவசிந்தனையோடுதான் எப்போதும் இருப் பார் தம்புச் சட்டம்பியார்; மேற்கூறிய பண்புகளோடு உயர்ந்த நிலையில் வாழ்ந்த தம்புச் சட்டம்பியாரது சற்புத்திரன் தான் சண்முகசுந்தரம் அவர்கள். சண்முகசுந்தரம் மூலம் தந்தை யின் சீரான வாழ்வை அறிய முடியும். அருமையான குடும்பம்: தம்புச் சட்டம்பியாரது தவத்தினல் அவரது சந்ததி மூலம் உலகம் நற்பேறு கொள்கிறது; இவ்வுலக வாழ்வின் துன்பங்களையும், யாக்கை நிலையாமையையும் உணர்ந்து மறுமையில் இன்பமடை வதற்காக நல்ல அறச் செயல்களைச் செய்து பேரறிஞராய் வாழ்ந்த சண்முகசுந்தரம் அவர்கள், இல்வாழ்க்கைச் சார்புகள், உலக நலங்கள் ஆகியவை நிலையாதன என அறிந்து மெய்யு ணர்வு புகட்டும் ஞான நூல்களையும் கற்றறிந்த அறிஞர்களைத்

Page 4
- 2 -
துணைவர்களாகவும் அணைத்து உலகிற்கு உதவும் மார்க்கங்களை ஆக்கபூர்வமாக நிலைத்திருக்கத்தக்கதான செயல்களைச் செய்தி ருந்தார்;
நாடகாசிரியனுகவும், நல்லிசையாளனுகவும், இலக்கிய கர்த் தாவாகவும், ஆராய்ச்சியாளனுகவும், விமர்சகனகவும் இன்னும் பல்துறைவிற்பன்னராக வாழ்ந்த சண்முகசுந்தரம் உண்மையில் ஓர் பேராசிரியனுகவே வாழ்ந்து வந்ததை உலகு நன்கு அறியும். துணைவேந்தர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள்மேல் அளவு கடந்த குருவிஸ்வாசம், குருபக்தி கொண்டிருந்ததுமல்லாது, அவர்தான் " எனது தெய்வம் " என்றும் ஒருகால், எனக்குக் கூறியதை என்னல் மறக்கவும் முடியாதிருக்கிறது,
எமது மகோற்சவகால ஆயத்தங்களைச் செய்து கொண்டி ருந்தவேளை ஒருநாள் நண்பகல் " எட்டுக்குடியேசல் " விழா வைச் சிறப்பாக நடத்தவேண்டும் அதற்கு எட்டுக் குடியேசல் பிரதியொன்றைத் தந்துதவுமாறு என்னிடம் வேண்டினுர். மறு தினம் தமது அருமையான மகளை அப்பிரதியைப் பெற்றுக் கொண்டுவருமாறு என்னிடம் அனுப்பினர் அப்பிரதி அப்போது என் கைவசமில்லை; பிரதியைத் தேடியெடுத்து அவரிடம் சேர்ப் பிக்குமுன் அப்பெருமகன் இறைவனடி சேர்ந்துவிட்டார். மாவை முருகன்மேல் அபார நம்பிக்கையையும், முருகப்பெருமானின் கீர்த்திக்கு உடல்பொருள் ஆவி அத்தனையையும் அர்ப்பணித்த இப்பெருமகனர் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஆத்ம சாந்திக்கு நாமனைவரும் பிரார்த்திப்போமாக

R சிவமயம்
சிவபூநீ கு. நகுலேஸ்வரக் குருக்கள் ஆதீனகர்த்தர் கீரிமலை யூனி நகுலேஸ்வர ஆலயம்
நன்கு மதிக்கப்படும் சான்றேன்
இறை, உயிர், தளை மூன்றும் அநாதியானவை. அநாதி யென்பது தொடக்கம் முடிவு இல்லாதது; இறை. உயிர். சித் து: தளைசடம். உயிர் சார்ந்ததன் வண்ணம் சாரும் இயல்புடைய தா கலின் சித் தசித் தெனப்படும் , உயிருக்குக் கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூல அவத்தைகள் மூன்றுள கேவல நில் தொடங்கி சுத்தநிலை கைகூடி முத்திநிலை அடையும் வரையும் உயிருக்கு குக்கும உடம்பு உள்ளது. சூக்கும உடம்பு என்பது சூக்கும பூதங்களாகிய சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்தும், அந்தக் கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றும் சேர்ந்த புரியட்ட ரூபமாகும்.
உயிர்கள் பிறப்புகள் தோறும் புரியும் ஆகாமிய வினைகள் புத்தி தத்துவத்தில் சஞ்சித வினையாக அடங்கியிருக்கும். உயிர் களின் மூல இச்சைக்கேற்பப் புண்ணிய பாவங்கட்கு இயைய சஞ் சித வினையின் ஒருபகுதி பிராரத்த வினையாக முன் கூறப்பட்ட காரண பூதங்களாகிய சூக்கும பூ த ங் கள் ஐந்தின் காரியப் பாடாகப் பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்று சொல் லப்படும் ஐந்து தூல பூதங்களினலும் ஆய பூதவுடம்பு, பூத சார உடம்பு, யாதன உடம்புகளுள் ஒன்றை இறை ஆணையால் உயிர் எடுக்கும். இதுவே உயிர் பிறத்தல் எனப்படும்.
பூதசார உடம்பு ஸ்வர்க்கத்தில் அநுபவித்தற்குரிய உடம் பு: யாதன உடம்பு நரகத்தில் அநுபவித் தற்குரிய உடம்பு. தூல உடம்புடன் கூடிய உயிர் சாதி. ஆயுள். பேரீகம் என்னும் மூன் றையுமுடையதாய், காலம் நிய தியோ டு கூடியதாயிருக்கும்;
நீங்கும்; இதுவே மரணம் அல்லது இறப்பு என்று கூறப்படும்:

Page 5
است. ا ست.
ஆகவே உயிர் தூல உடல் விட்டுச் சூ க் கும உடம்புடன் சென்று பிறிதோர் உடல் எடுப்பதற்காகப் போக்குவரவு புரிவ தையே இறத்தல், பிறத்தல் என்பர். உயிர் முத்தி அடையும்
தல், பிறத்தல் இல்லை. உடல் மாறுவதே ஆகும்.
இவ்வாறு உயிர் போக்குவரவு புரியுங் காலத்து, இருவினை யொப்பு அதாவது நல்வினை தீவினை இரண்டிலும் சமபுத்தி பண் ணும் முறைமை உயிருக்குக் கைகூட இறை ஞானகுருவாய்த் தலைப்பட அது இதுவாக இது அதுவாக மாறெனும் படி அத்து விதமுற்று இறை வியாபகத்துள் உயிர் வியாப்பியமாய் அடங்கிச் சிவாநுபவமொன்றிற்கே உரித்துடையதாய்ப் பேரின்பமுற்றிருக் கும் இதுவே முத்திநிலை.
மேற்போந்தவாறு ஒர் உயிர் தன் பிராரத்த வினைக்கீடாக இறை ஆணையால் மாவையம்பதியிலே ஆசிரியர் தம்பு அவர் கட்கு மகளுக 1925 இல் பூதவுடலுடன் தோன்றி சண்முகசுந்த ரம் என்கிற நாமத்தைத் தரித்தது; அவரே நம்மிடையே பிரகா சித்த சண்முகசுந்தரம் அவர்கள்,
சண்முகசுந்தரம் அவர்கள் சிறுபராயம் தொடக்கம் அறி வொழுக்க குணசீலராய், நல் ஆசிரியராய், அறிவுச் சுடராய், கல்லூரி நல் அதிபராய், எவராலும் நன்கு மதிக்கப்படும் சால் முேனய், இறைபணி நிற்போஞய் விளங்கினர். அதனுல் சான் ருேர் இனத்தவரானர்.
உலகத்து மக்கள் செய்யும் நல்வினைகள் ஐவகையின. அவை யாவன: (1) உலகவினை (2) வைதிகவினை (3) அறியான்மிகவினை (4) அறிமார்க்கவினை (5) மந்திரவினை என்பன.
திரு. சண்முகசுந்தரம் அவர்களிடத்து உலகவினையும் அதி மார்க்க வினையும் மிக்குக் காணக்கூடியதாயிருந்தன. மேலும் அவர் எமது ஆலயத்தின்மேல் இயற்றிய நகுலேஸ்வரர் போற்றி போன்ற பல நூல்கள், நூல் வெளியீடுகள், பத்திரிகை விடயங் களும் மற்றும் அவர் செயல்களும் அவர் வினைகளுக்குச் சான்று Lustifaou Go7 .
எமது ஆலயத்தின் மேல் மிகுந்த பற்றும் பக்தியும் கொண்ட இவரது அமரத்துவம் தமிழ், சைவ உலகிற்கு ஒர் பேரிழப்பா கும் இவரது பிரிவு குறித்து வாடும் அவரது குடும்பத்தினருக் கும் சுற்றத்திற்கும் எனது அநுதாபத்தையும் ஆசியையும் தெரி விக்கிறேன்; அவரது உயிர் சாந்தியடைவதாக,
" தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் ருேன்ரு மை நன்று (பொதுமறை)

A. துர்க்காதுரந்தரி
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, தலைவர், பூg துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
முத்தமிழைப் போற்றிய பேரறிஞன்
சிறிஞர் சண்முகசுந்தரத்தை இலக்கிய உலகமும் எழுத் தாளர் உலகமும், இசை வேளாளர் உலகமும், மாணவ உலக மும் நன்கு அறியும். அறுபது ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து வீர சைவ வாழ்வை மேற்கொண்டு கற்பன கற்று, கடிவன கடிந்து, நிற்பனநின்று நெறிபிறழாது வாழ்ந்தவர் அமரர் அவர் கள், கல்வியுலகில் அவருக்கு ஒரு தனியிடம் உண்டு. பத்திரி கைத் தொழிலிலும் பாடசாலைத் தொழிலிலும் சிறந்த தேர்ச் ெ யுடைய இப்பெரியார் வன்னிநாட்டிலும் மகாஜனக் as do 27 fu லும் அளப்பரும் சேவை புரிந்து அநேக இளமுள்ளங்களில் இடம் பெற்றவர்
அறிஞர்களாலும் கவிஞர்களாலும் கலை ஞ ர் க ளா லும் பெருமைபெற்ற இடம் மாவிட்டபுரம். இவ்வூரை அணிசெய்த வர்கள் வரிசையில் அமரர் சண்முகசுந்தரம் சிறப்பிடம் வர்ை கின்றர் என்ருல் அதில் மிகையொன்றுமில்லை. ஆகவே yQu nifes ளின் மறைவையொட்டி நாம் அஞ்சலி செலுத்துவதோடு piešir ag விடாது அவர்களின் பணிகளைப் பரப்பவேண்டும்; ஏனென்முல் அறிஞரிகளையும், உபகாரிகளையும், வீரர்களையும் கொண்டாடாத நாட்டில் அறிவும் பரோபகாரமும் வீரமும் அற்றுப்போகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூற்றிலே இப் பண்புகளனைத்தும் மிகமிகப் போற்றப்படுகிறது; மனி த ரி க ள் பணத்தினுல் மட்டும் உயிர்வாழ்வதில்லை; அதிலும் எழுத்தா ளர்களும், கலைஞர்களும் பணத்தினல் மட்டும் திருப்தியடைவது மில்லை யார் யார் அவர்களுடைய பணியைப் tarprmr (66) ருர்களோ அந்த உண்மையான பாராட்டுதல்தான் இவர்களைத் திருப்தி செய்கிறது. அத்தகைய திருப்தியை வாழ்நாளில் நன்கு பெற்றுக்கொண்டவர் அமரர் அவர்கள் தந்தையின் விசேடம், குருவின் விசேடம், வாழ்ந்த இடத்தின் விசேடம், பெற்றுக் கொண்ட பத்தினியின் விசேடம், சிற்புத்திர புத்திரிகளின் விசே

Page 6
--سہ 6 سے
டம் பழகிக்கொண்ட அறிஞர்களின் விசேடம் அனைத்தும் ஒன் ருக வாய்க்கப்பெற்ற பெருடிை இவர்களுக்கு உண்டு. தகுதி வாய்ந்தும் மூலையில் முடங்கிக் கிடந்த எத்தனையோ அறிஞர்க ளைத் தமது எழுத்தாலும் பேச்சாலும் முதன்மை கொடுத்து முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்தியமை என்றென்றும் பாராட் டு தற்குரியது
பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் இலக் கியத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் அரிய கருத்துகளை எழுத்து வடிவில் அள்ளிச் சொரிந்தார். "" அழகாகச் சொல்வது கற்பனை அழுத்தமாகச் சொல்வது சிந்தனை " என்று ஒரு பெரி யார் கூறியதுபோல் இரண்டு வகையிலும் இவர் படைப்புகள் அமைந்தன; '' வாழ்வு பெற்ற வல்லி " இற்றைக்கு இருபத் தைந்து ஆண்டுகளுக்குமுன் வெளியீடு செய்யப்பட்ட அருமை யான நூலாகும்; தாம் பெற்ற பக்தி அனுபவத்தையும் வர லாற்று அறிவையும் ஒருங்கிணைத்து இந்நூலை ஆக்கியுள்ளமை பெரும் பாராட்டுக்குரியது5
எனவே, நன் மாணுக்களுய், நல்லாசிரியணுய், நல்ல எழுத் தாளனய், சிறந்த சமூகத் தொண்டனய், உயர்ந்த சைவாசார கீலனுய், பேரறிஞஞய், தனித்தமிழ் அபிமானியாய் விளங்கிய அறிஞர் சண்முகசுந்தரம் இன்று அமரத்துவம் எய்திவிட்டார். ஆனல் அவர் படைப்புகளும் பணிகளும் என்றென்றும் அவர்
" தன்னலங் கருதாச் சேவை
தனித்தமிழ் இயம்பும் வாய்ச் சொல் சொன்னலம் காட்டும் பேச்சு தூய்மையைக் காட்டும் வாழ்வு பன்னலம் பெற்ற சால்பு பாவலர் போற்றும் மேதை மன்னிய நாமம் என்றும் மன்னுக உலகில் என்றும் "

பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அன்பின் பிணைப்பு
வாரப்பாட்டுடன் நெருங்கிப் பழகியவர் ஒருவர், வாழ்க் கையின் பலதுறைகளிலும் அன்போடு இணைந்து நடந்தவரொ ருவர் பிரிந்து சென்றுவிட்டார் என்ற திடீர்ச் செய்தி உள் ளத்தை உறுத்துகின்றது. கடந்த நாற்பதாண்டு காலமாக நெருங்கிய உறவுடன், அமோக குருபக்தியுடன், என் மாணவ ஞக. என் தோழனுக, என் தொண்டனுக, என் ஆலோசகனகப் பிணைந்திருந்தவரின் பிரிவு கொடுமையானது. ஒவ்வொறு ஞாயி றும் காலையில் என் இல்லத்திற்கு வந்து என் சுகம் விசாரித்து, மனம் விட்டுப் பேசியவற்றை இனிக் காணமுடியாதென்பது நம்பவே முடியவில்லை ஒயாது எழுதிக்கொண்டிருந்த அவரது கரங்கள் ஒய்ந்துவிட்டன என்ற உண்மையை எனது உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது; நாற்பதாண்டு காலமாக எமது மக்களின் பண்பாடுகளையும், கலைவளங்களையும் துருவித்துருவி ஆராய்ந்து வந்த அவரது சிந்தனை செயலற்றுவிட்டது என்ப தைக் கலையுலகம் கேட்டு ஏங்கி நிற்கின்றது.
சில நாட்களுக்கு முன் தாம் எழுதிய " யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி " என்ற நூலைக் கையிலே தந்தவர். சென்றவர், அதன் பின் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கிருர் என்பதை அறிந்து, பலதடவை பார்த்தேன்; எப் படியும் பிழைத்துக் கொள்வார் என நம்பியிருந்தேன். ஆனல் இறைவன் தன் திருவடிகளோடு அவரை அணைத்துக்கொண்டார்.
எனது பணிந்துரையின் பெயரிலே தஞ்சாவூர்த் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று " யாழ்ப்பாணத்து மக்கள் கலைகள் " என்ற ஆய் வினை எனது மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாய்வினை முழுமையாகப் படித் துத் திருத்திக் கொடுத்தேன் இன்னெரு மாதத்திற்குள் அங்கு

Page 7
- 8 -
சென்று அதனை ஒப் படை க் க இருந்தார். அவர் இல்லாத இடத்து அவ்வாய்வினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் பொறுப்பு எனதாகிவிட்டது.
திரு சண்முகசுந்தரம் அவர்கள் எமது கிராமத்தவர். அவ ரது தகப்பன் தம்பு உபாத்தியாயர் எனது தகப்பஞரால் நடத் தப்பட்ட வீமன்காமம் தமிழ்ப் பாடசாலையில் சில காலம் ஆசி ரியராகக் கடமையாற்றியவர். ஒரே கிராமத்தவர் என்ற முறை யில் இளமை தொட்டே அவரை அறியவும் பழகவும் வாய்ப்பு இருந்தது; ஆயினும், பல்கலைக்கழகத்தில் அவர் பட்டப்படிப்புப் பயிலவந்த காலத்தில் (நாற்பது ஆண்டுகளுக்கு முன்) இப்பழக் கம் மிக நெருக்கமாகியது. என்னிலும் ஓரிரு ஆண்டுகள் இளை ஞராக இருந்த அவர், பல்கலைக்கழகத்தில் நான் விரிவுரை ஆற் றத் தொடங்கியபோது, என்னிடம் கற்ற முதல் மாணவர்க ளுள் ஒருவராக அங்கு வந்து சேர்ந்தார். நான் முதன் முதலா கப் பேராசிரியர் கணபதிப்பிள்ளையிஞல் எழுதப்பட்ட " நாட் டவன் நகர வாழ்க்கை "" என்ற சமூக நாடகத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தயாரித்தளித்த போது, என்னுடன் அவருக்கு ஏற்பட்ட கலைத்தொடர்பு அதன் பின் வளர்ச்சிபெற்று, விரிவடைந்தது. மேலும் தமிழ்ச்சங்க ஏடாகிய " இளங்கதிரின் " முதலாசிரியராக இருந்து, பல எழுத்தாளர்களைத் த மி ழு ல கி ற்கு அளித்த சஞ்சிகையைத் தொடக்கி வைத்தார். நாம் இருவரும் சேர்ந்தே இச்சஞ்சி கைக்கு ' இளங்கதிர் " என்று பெயரிட்டோம் . இச்சஞ்சிகை இன்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது:
நான் கலாநிதிப் பட்டத்திற்கு இலண்டனுக்குச் சென்ற காலத்தில் அங்கிருந்து என்னிடம் பல பயணக் கட்டுரைகளைப் பெற்றுத் தினகரனில் வெளிவரச் செய்தார்; அவ ற் றை ச் சேர்த்து நூலுருவில் வெளியிடவேண்டும் என்ற ஆசை அவருக் கிருந்தது; ஆனல் அது கைகூடமுன் காலமாகிவிட்டார்.
பல்கலைக்கழகத்தில் எழுத்துத்துறையின் மீது ஏற்பட்டிருந்த மிகுந்த சடுபாடு பின்னர் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு முடிந் ததும் " தினகரன் " பத்திரிகையில் ஆசிரியர் குழாத்தில் பணி யாற்றத் தொடங்கியபோது வளர்ச்சியடைய வாய்ப்பாக இருந் தது; அப்போது தினகரன் ஆசிரியராக இருந்தவர் திரு. வி. கே5 பி; நாதன் அவர்கள். எனது கட்டுரைகளும், பேராசிரியர் க: கணபதிப்பிள்ளை கட்டுரைகளும் அசி காலத் தி லி ரு ந் து

-س- 9 --س-
தொடர்ந்து தினகரனில் வெளிவந்தன. சில ஆண்டுகள் அப் பணியைத் திறம்பட நிர்வகித்த பின், கற்பித்தல் தொழிலிலே நாட்டம் கொண்டு கல்லூரி ஆசிரியரானுர். பின்னர் வாழ்நாள் முழுவதும் அப்பணியிலே ஈடுபட்டு மகாஜனக் கல்லூரி அதிப ராக இளைப்பாறிஞர். y
சண்முகசுந்தரம் அவர்கள் குருபக்தி நிரம்பியவர்: தமது ஆசிரியர்களைத் தெய்வம்போல மதித்து நடந்தவர் பேராசிகி யர் கணபதிப்பிள்ளையோடு மிகநெருங்கிப் பழகியவர்: பேராசி ரியர் கணபதிப்பிள்ளை பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகித்த போது அவரின் உயிர் அடிமட்டத்தில் இருந்தபோது மக்களோடு ஒட்டி உறவாடிக் கலந்திருந்தது. இந்தப் பண்பு சண்முகசுந்த ரத்தைப் பெரிதும் கவர்ந்தது. அவரின் எளிமையான வாழ்க் கையும், மாணவரோடு அன்பாகப் பழகும் பண்பும் சண்முகசுந் தரத்தை அவரிடம் மதிப்புக்கொள்ள வைத்தது. சாகித்திய மண் டலப் பரிசில் பெற்ற, அவர் எழுதிய "கலையருவி கணபதிப்பிள்ளை சில நினைவுகள்" என்ற நூலின் மூலம் அவர் தமது குருவிற்குத் தமது நன்றியைச் செலுத்தியிருக்கின்ருர் அவரை முன்மாதிரி யாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தவும், எழுதவும், கலைத் தொண்டில் ஈடுபடவும் முயற்சித்திருக்கின்றர் அவரின் வாழ்க் கையின் பல துறைப் பணிகள் இக்கூற்றுக்குச் சான்ருக அமை கின்றன.
1956ஆம் ஆண்டு நான் இலங்கைக் கலைக்கழகத் தமிழ்நாடகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டபோது, திரு. த. சண்முகசுந் தரம் அவர்களை அக்குழுவின் ஒர் அங்கத்தவராக நியமிக்கச் செய்தேன். அன்றிலிருந்து நான் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுத் தலைமைப் பதவியிலிருந்து நீங்கும் வரை பல ஆண்டுகளாக என்னுடன் சேர்ந்து நாடகக் குழு நடத்திய நாடகப் போட்டிகள், கூத்துப் போட்டிகள், நாடக எழுத்துப் போட்டிகள், கருத்த ரங்குகள் முதலியவற்றில் முழுமனதுடன் ஈடுபட்டு உழைத் தார். பல கருத்தரங்குகளிற் பங்குபற்றினுர், நாடகப் போட் டித் தெரிவுகளை நடத்தினர். தாடகக் கலைஞர் பலரை அறிமுகப் படுத்தினர்; இவ்வகையில் நடிகமணி வி. வி. வைரமுத்து, கர கக் கலைஞர் சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் கலையுலக வளர்ச்சி யில் அவருக்குப் பெரும் பங்குண்டு
நாம் பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு அரங்கேற்றிய கூத்து நாடகங்களுக்கும் பலவகைகளில் உதவி செய்தார். இத்

Page 8
سس- l10 --
தகைய அவரின் தொண்டுகளினுல் அவருக்கும், எனக்கும் இருந்த நெருக்கமானது. இருவரும் தமிழ் மக்களது பண் பாடுகளையும், கலை வளங்களையும் ஆராய்ந்து வெளிக்கொன ரவும் அவற்றை வாழ வைக்கவும் ஆர்வங்கொண்டு செயற்பட்டு வந்தோம். நான் நாட்டுக் கூத்துக் கலைக்குப் புதிய வாழ்வளிக்க வும், கூத்து நூல்கள், நாட்டார் பாடல்கள் என்பவற்றைப் பதிப்பிக்கவும் முனைந்து ஈடுபட்டபோது, சண்முகசுந்தரம் நாட் டார் பாடல்கள், மக்கள் கலைகள் என்பவற்றைத் தொகுப்பதி லும், பதிப்பதிலும் ஈடுபாடு காட்டினர். இதனுல் இருவரும் அடிக்கடி தொடர்பு கொள்ளவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது தொகுப்பு, பதிப்பு முயற்சிகளில் எனது ஆலோசனைகளை ஏற்றுப் போற்றிக் கையாண்டுள்ளார். மாவை முருகன் காவடிப் பாட்டு, மாருதப்புரவல்லி கப்பற் பாட்டு, குருநாதர் மான்மீ பம், காகப் பிள்ளையார் மான்மியம், நாட்டார் இலக்கியத்தில் மழை இரங்கிப் பாடல் தொகுப்பு முயற்சிகளாகும்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளையை முன்மாதிரியாக வைத்து அவரைப்போலச் சில பணிகளைச் செய்த சண்முகசுந்தரம் எழுத் துத் துறையிலும் பெருமளவு ஈடுபட்டார். நாடகம், நாவல், சிறு கதை, வாழ்க்கை வரலாறு, கலை வரலாறு ஆகிய பல்துறைக ளிலும் ஈடுபட்டு பன்முகப்பட்ட பணி செய்துள்ளார். அவர் எழுதிய வாழ்வு பெற்ற வல்லி என்ற நாடகம் இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்ற தரமானதொரு ஆக்க மாகும்? பூதத்தம்பி, இறுதி மூச்சு ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார். இந்நாடங்கள் யாவும் ஈழத்தின் - சிறப்பாக யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் அமைந்த கதைப்பொருள் கொண்டவையாகும் ஈழத்தமிழரின் வரலாற்றில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு இவை சான்று. இவர் மீனுட்சி என்ற நாவலையும், பல சிறுகதைகளையும் எழுதி யுள்ளார்; சிறுகதைகள் தொகுப்பாக நூல்வடிவம் பெறவில்லை,
வாழ்க்கை வரலாறு என்ற வகையிலே பேராசிரியர் கண பதிப்பிள்ளை அவர்களுடையதும் என்னுடையதும், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடையதுமான வர லாறுகளை முறையே கலையருவி கணபதிப்பிள்ளை, கலைமகிழ்நன், சிவத்தமிழ்ச் செல்வம் ஆகிய தலைப்புக்களில் இவர் எழுதியுள் ளார். இவற்றுள் முதலாவது நூல் சாகித்திய மண்டலப் பரிசில் பெற்றது இவ்வாழ்க்கை வரலாறுகளை எழுதும்போது வரலாற்று

- 11 -
நாயகர்களின் பண்புகள் உருவான சூழ்நிலைகளையும் அவர்களிடம் ஒளிவிடும் உயரிய உணர்வோட்டங்களையும் இனங்கண்டு காட்டு வதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்:
கலை வரலாறு என்ற வகையில் குறிப்பிடத்தக்க இவரது நூல்கள் கலையும் மரபும், இசையும் மரபும், யாழ்ப்பாண இசை வேளாளர் என்பனவாகும். இவை யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கடந்த சில தலைமுறைகளில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர், தவிற் கலைஞர், காவடிக் கலைஞர், உடுக்குக் கலைஞர், பல்வேறு இசைக் கலைஞர், சிற்பக் கலைஞர், முதலியோரது வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தளிக்கும் முயற்சிகளாகும். வாய்மொழி யாக நிலவி மறைந்து போய்க்கொண்டிருந்த இத்தகைய செய்தி களுக்கு எழுத்திலே நிலையான வாழ்வளித்தமை திரு சண்முக சுந்தரம் அவர்களது பணியாகும்.
இது ஈழத்துக் கலைஞர்களால் என்றும் பாராட்டு தற்குரிய தாகும். சண்முகசுந்தரம் அவர்கள் நிறைந்த சைவப்பற்று உடையவராகவும் திகழ்ந்தார். ஈழத்துச் சித்தர் சிந்தனை விருந்து, யாழ்ப்பாண வீர சைவர், முருகனைப் பூசிக்க அருமறைக்கல்வி, சிவனே போற்றி குகனே போற்றி ஆகியன அவரது சமயப் பற்றின் வெளிப்பாடுகளாகும் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் பற்றியும், கீரிமலை பற்றியும் ஆராய்ச்சி வல்லுநர் உதவியுடன் நூல் ஒன்று வெளியிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். இது பற்றி என்னிடம் பல ஆலோசனைகளைக் கேட்டார். ஆணுல் அதைச் செய்து முடிக்க முன்னர் அவர் இறைவன் புகழ்பாடச் சென்று cal" entriřo.
இவ்வாருக, எழுத்துத் துறையின் பல்வகைகளிலும் ஈடுபாடு செலுத்தி வந்தபோதும், அவரது உள்ளத்தில் அடிநாதமாக அமைந்த நோக்கு யாழ்ப்பாணத்து மக்கள் கலைகளை வாழவைக்க வேண்டும் என்ற பேரவாவாகும். இதனை அவர் எழுதிய பல் வேறு நூல்களிலும் உற்றுநோக்கி உணரலாம். சுருங்கக்கூறின், திரு: த. சண்முகசுந்தரம் அவர்களே ஒரு "மக்கள் கலை ஆய்வாளன்" என்று கூறலாம்
தமிழாராய்ச்சி மகாநாடுகளில் அவர் எமக்கு அளித்த ஒத் தாசையையும் உதவியையும் குறிப்பிடாது விட்டால் அது பெருங் குறையாகும் உலகப் பிரசித்திபெற்ற நான்காவது தமிழா ராய்ச்சி மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவது என நாம்

Page 9
- 2 -
முடிவு செய்தபோது அரசு அதனைத் தடை செய்தது. பல பெரிய "தமிழ் மேதைகள்" எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் மகாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்கு எமக்கு உறுதுணையாக இருந்த தோடு, மகாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படித்து, பல கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதிலும், பொருட்காட்சி நடத்துவ திலும் பேராதரவு வழங்கியதை நான் நன்றியுடன் நினைவுகூரு கின்றேன். மட்டக்களப்பிலும், வன்னியிலும் நாம் நடத்திய பிராந்திய தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளுக்கும் தம்மாலியன்ற உதவிகள் செய்து, சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப் பித்தார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது தமிழாராய்ச்சி மகாநாட்டில் பங்கு பற்றினர் அங்கு அவர் படித்த ஆராய்ச்சிக் கட்டுரை பலரது பாராட்டையும் பெற்றது.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை எ ன் பது ஆன்ருேர் வாக்கு. சண்முகசுந்தரம் அவர்களும் சாகவில்லை. அவர் செய்த தமிழ்த் தொண்டு எழுத்து வடிவிலே புகழுடம் பாக எம்மத்தியில் வாழ்கிறது. அவர் செய்த எழுத்துப் பணிகள் எமது இளம் தலைமுறையின் எதிர்கால ஆய்வு முயற்சிகளுக்கு ஆதாரங்களாக அமையும்
தமது வாழ்நாள் முழுவதும் தமது செலவில் எழுதிக்கொண் டிருந்தவர் மறைந்துவிட்டார். என்னைப் பொறுத்த வரையில் அன்பின் பிணைப்பாக எமக்கிடையே இருந்த ஒருமைப்பாடு குலைந்து விட்டதே என்பது நம்பமுடியவில்லை. பண்பான ஒரு நண்பனை, குழந்தை உள்ளம் படைத்த ஒரு பெருமகனை, குரு பக்தியிலே உருவான மாணவனை நான் இழந்துவிட்டேன். தமிழ் எழுத்துலகமும், கலையுலகமும் இறக்கும் வரை எழுதிக்கொண்டே இருந்த படைப்பாளியை இழந்துவிட்டன; அன்ஞரின் பிரிவாலே துயருறும் குடும்பத்தினருடன் நாமும் சேர்ந்து கண்ணிர் வடிக் கின்ருேம்

6. திரு. க. அருணுசலம் பீ. ஏ. டிப்: எட்3 தலைவர், வடமாகாண அதிபர் சங்கம், விக்டோறியாக் கல்லூரி,
களிபுரம்,
6Fulf):bsu III 6Flfb 6Liflu IIÍ
அமரர் திருவாளர் சண்முகசுந்தரம் அவர்களை நான், மகாழும்புப் பல்கலைக் கழகத்தில் படித்த நாள் தொடக்கம் நன்ருக அறிவேன். இடைக்காலத்தில் நமக்குள் தொடர்பு குறைந்திருந்தாலும் சென்ற மூன்று. நான்கு வருடங்களாக நாம் மீண்டும் நெருங்கிப் பழகவேண்டிய அவசியம் ஏற்பட்டது: அன்னர் பல்வேறு அரிய குணங்கள் உடையவராகக் காணப் Lull-rris
பல்கலைக் கழகத்தில் இருக்கும் காலத்திலேயே அவரது தமிழ் ஆர்வத்தை நாம் நன்ருக அறிவோம். பேராசிரியர் கணபதிப் பிள்ளையைத் தமது குருவாகக் கொண்டு பேராசிரியரிடம் உள்ள அறிவுப் பொக்கிஷங்களைப் பெற்றுக்கொண்டார். திருவாளர் சண்முகசுந்தரம் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் நடவடிக்கை களில் மிகுந்த அக்கறை காட்டினுர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, \பேராசிரியர் வித்தியானந்தன் ஆகியோருடன் தாமும் ஒருவராய் நின்று வருடாவருடம் தமிழ்ச்சங்கம் மேடை ஏற்றும் நாடகங் களின் நெறியாளராகக் கடமையாற்றுவார் 5 அப்பொழுது எல் லாச் சிறிய விடயங்களிலும் அதிக கவனம் செலுத்துரவர் பொருளோ பொருள் என்னும் நா ட க ம் ஒன்றில் பதிவாளர் ( Registrar ) என்னும் பாத்திரமேற்று நடித்த எனக்குக் காதில் அணியும் "கடுக்கன்" செய்வதற்கு எடுத்த பெருமுயற்சி இன் றும் எனக்கு ஞாபகமாக இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு மாவிட்டபுரம் அரிமாக் (லயன்ஸ்) கழகம் அமைக்கும்பொழுது அதனை அமைத்த வட்டுக்கோட்டை "லயன்ஸ்" கழக உத்தியோகத்தர் என்ற முறையில் அக்கழகத் தில் அங்கத்தவராக வருமாறு திரு சண்முகசுந்தரம் அவர்களை அவர்களது வீட்டிற்சென்று அழைத்தேன் மானுட சேவை

Page 10
- 4 -
அவரது வாழ்வின் இலட்சியங்களுள் ஒன்று, இந்த இலட்சியமே "லயன்ஸ்" கழக இலட்சியமும் ஆதலால், அவர் "லயன்ஸ்" கழகத்திற் சேருவதற்குத் தயங்கவில்லை. ஆனல், எப்பொழுதும் பின்பு நடந்த ஆரம்பக் கூட்டங்களிலும் அந்த இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாட்டுநிலையிலும் சர்வதேச ரீதி யிலும் முற்றுமுழுதாக அறிந்துகொண்டார். தாம் எடுத்துக் கொள்ளும் எவ்விடயத்திலும் பூரண அறிவைப் பெறுவது அவரது வழக்கமாகும்
மகாஜனக் கல்லூரியின் அதிபராக நி ய ம ன ம் பெற்ற பொழுது அவர்கள் தமது நீண்டகால ஆசிரிய சேவையிற் பெற்ற அறிவும் அநுபவமும் பெருந்துணை புரிந்தன. இதனுல் காலத்துக்குக்காலம் கல்லூரியில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர் கஷ்டமுற வில்லை. அத்துடன் அப்பகுதி மக்க ளின் பெரும் ஆதரவும் அவருக்கு இருந்தது;
எப்பொழுதும் ஏனைய கல்லூரி அதிபர்களைச் சந்தித்தால் கல்லூரிப்பரிபாலனம், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியே பேசுவார்g அதிபர்கள் கூட்டங்களில் அன்ஞர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆக்கபூர்வம் உள்ளவைகளாகவே இருக்கும்; ஆகவே, மகாஜனக் கல்லூரியில் அவர் தலைமை தாங்கிய காலம் சிறந்த காலமாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை.
அன்ஞரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் உற்ருர் உறவினர்க்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் ஈடுசெய்ய முடியாத தொன் ரு கும். எனினும் " பிறந்தவர் மண் மேல் இறப்பது திண்னம் " என்னும் உறுதிமொழியை நினைவுகூர்ந்து எனது ஆழ்ந்த அனுதாபங்களை அனைவர்க்கும் தெரிவிப்பதோடு அமர சின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்;

su 6öT ı?). Gu. ay söı J6öîûlî sit 2ı,
தலைவர், மாவை லயன்ஸ் கழகம்
லயன் கழகத்தில் அமரர் சண்முகசுந்தரம்
அமரர் லயன் த. சண்முகசுந்தரம் அவர்கள் மாவிட்டபுரம் லயன்ஸ் கழகத்தின் சாசன (Charter) உறுப்பினர் ஆவர். தெல்லிப்பழை மகாஜனக் கல்லுர ரியின் இளைப்பாறிய அதிபராகிய இவர் சமூகத்திற்குப் பெருந்தொண்டுகள் ஆற்றி மக்களின் பெருமதிப்பிற் குரியவராக விளங்கினர். எனவே, இவரது சேவையை மேலும் மெருகூட்டி மாவை லயன்ஸ் கழகம் தனது சாசன உறுப்பினராக ஏற்றுக்கொண்டது.
இவர் தனது சேவையை ஆரம்பித்த காலத்தில் லயன்ஸ் கழகத் தையல் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம் பிப்பதற்குத் தமது வீட்டைக் கொடுத்ததுடன் அதற் கான முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்தி வந்தார். எதுவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் " மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதற்கு இலக்கண மாகச் செயற்பட்டு இப்பயிற்சி நிலையம் சிறந்த முறை யில் இயங்கி வருவதற்கு உறுதுணையாக MOUspös nrtf. அதன் பின்னர் வெளிநாட்டிலிருந்த அவரது மகன் வருகையால் வீ ட் டி ன் இடநெருக்கடி காரணமாகத் தையற் பயிற்சி நிலையம் காங்கேசன்துறை வீதிக்கு மாற்றப்பட்டது. இப்பயிற்சி நிலையம் இன்றும் நமது இளம் யுவதிகளுக்குச் சிறந்த பலனை வழங்கிக் கொண் டிருக்கின்றது. s
1986/87 ஆம் வருடித்திற்கான நிறைவேற்று உத்தி யோகத்தர் தெரி வில் முதலாவது உபதலைவராகத்

Page 11
حس۔ 16 سے
தெரிவு செய்யப்பட்டார். அடுத்த வருடம் தலைவராக விளங்கியிருப்பார். ஆணுல், அதற்குமுன் காலன் அவரை அழைத்துக்கொண்டு விட்டான்.
சிவபதமடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன் ஒருநாள் நானும் நமது கழகச் செயலாளரும் இரண் டாவது உபதலைவரும் அ ன் ஞ ர து இல்லத்திற்குச் சென்று கலந்துரையாடினுேம். அவ்வேளையில் தாம் இக் கழகத்திற்கு முழுநேரத்தையும் அர்ப்பணிக்கப் போவதாகவும் அத்துடன் இ ன் னும் சிறந்த பல சேவைகளை ஆற்றப் போவதாகவும் கூறினர். மேலும் ஆங்கில வகுப்புகளை நடாத்துவதற்கும் அத்துடன் புதிய புதிய செயற்றிட்டங்களை உருவாக்குவதற்கும் உதவி செய்வதாகக் கூறியிருந்தார். லயன் த. சண் முகசுந்தரம் அவர்களின் மறைவு அவரது குடும்பத் திற்கு மட்டுமல்ல தமது லயன்ஸ் கழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்றே கூறவேண்டும்.
அவரது ஆன்மா சாந்தியடிையப் பிரார்த்திப்போ

திரு. க. நாகராசா B. Com, M. A. ay 8 uri,
மகாஜனக் கல்லூரி,
தெல்லிப்பழை5
அறிவாற்றல் நிரம்பிய அதிபர்
எமது கல்லூரியோடு கால் நூற்ருண்டுக்கு மேலாக நெருங்கிய தொடர்பு பூண்டிருந்தார் அமரர் திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள். நவ மகாஜனுவின் சிற்பி எனப் போற்றப்படும் அமரர் தெ. து. ஜயரத்தினம் அவர்களால் தெரிந்தெடுக்கப்பெற்ற ஆசிரியர்களில் இவரும் ஒருவர் ஆவர். நல்லாசிரியராகவும் பின்னர் உப அதிபராகவும், அதிபராகவும் பணிபூண்டு இளைப் பாறிஞர்.
இவர் உயர்தர வகுப்புகளில் தமிழ், அரசியல், வரலாறு ஆகிய பாடங்களைத் திறமையுடன் கற்பித்து வந்தார். அதனல் மாணவர்கள் பொதுப்பரீட்சையில் உயர்ந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர் இவர் பல்துறை களில் அறிவாற்றல் மிக்க அறிஞராகத் திகழ்ந்து மாண வர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
கல்லூரியின் உயர்தர மாணவர் தமிழ் மன்றத்தின் பொறுப்பாசிரியராக இவர் இருந்த காலத்தில் மாணவ ரிடையே சிறுகதைப் போட்டியை நடத்தி அக்கதை களின் தொகுதியை ** இளமுல்லை " என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். கல்லூரிப் புற முயற்சிகளிலும் போட்டிகளிலும் மாணவர்களைப் பங்கு கொள்ளச் செய்து பரிசுகள் பெறவைத்த பெருமையும் இவருக் குண்டு. தாம் கற்பிக்கும் பாடங்களில் மாத்திரமன்றி

Page 12
ܚܚ- 18 ܚ
விளையாட்டு, விஞ்ஞானம், இசை, நாடகம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கிய மையால் இவரை நடமாடும் பல்கலைக் கழகம் என்று கூறினும் மிகையாகாது.
கல்லூரி நிர்வாகத் துறையில் அவ்வப்போது அதிபர் களாக இருந்தவர்களுக்கு உதவி புரிந்து கல்லூரி வளர்ச் சிக்கு அரும்பாடு பட்டுள்ளார். கல்லூரியின் பொன் விழாவில் இவரின் பங்கு அதிகம் எனலாம். "மகாஜனன்" இதழின் ஆசிரியராகச் சில ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார். மாணவர்களுக்கு எழுத்துத் துறையி லும் ஊக்கம் கொடுத்துச் சிறந்த எழுத்தாளராக விளங் கவைத்த பெருமையும் இவருக்குண்டு.
நுண்மாண் நுழைபுலமும் நினைவாற்றலும் மிகுதி யாகப் பெற்ற இவர் போன்றவரைக் காண்பது மிக அரிது. இவரை இழந்து வருந்துகின்ற அன்பு மனைவி, அருமை மக்கள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதா பங்கள் உரியன. அ வ ரி ன் ஆ ன் மா சாந்தியடைய வேண்டுமெனக் கல் லூ ரி யில் எழுந்தருளியிருக்கும் சிவகாமி சமேத ஆநந்த நடராசரை வேண்டுகின்றேன்.
சிந்தனைத் துளிகள் : ஒரு மொழியில் உள்ள சொற்களையோ அல்லது சொற் ருெடர்களையோ அப்படிச் சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்க்கின்ற மொழிக்குக் கொண்டுவர முடியாது. அப்படிக் கொண்டு வருபவர்கள் செங்கட்டிகளை எடுத்து அடுக்கிச் சுவர் கட்டுகின்ற கொத்தனரின் நிலைக்கு வந்து விடுவார். மொழிபெயர்ப்பாசிரியர் நாடகாசிரியனுடைய எழில்மிகு படைப்புடன் ஐக்கியப்பட்டு, அந்த ஐக்கியத்தினுல் தான் பெறுகின்ற உன்னதமான இன்பத்தைத் தன் மொழிமூலம் பிறருக்கு உணர்த்தும் குறிக்கோள் ஒன்றை வைத்துக் கொண்டு தான் தன் பணியை தொடரவேண்டும்,

FIG. (p. Fu TJ T, B. sc., Dip-Ed,
அதிபர், வீமன்காமம் மகாவித்தியாலயம்
ஓய்ந்தது அம்மணிக்கை
பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்ச் சங்கத்திற்கென் ருேர் சஞ்சிகை வேண்டுமென்று கருதி " இளங்கதிர் " என்ற சஞ்சிகையை உருவாக்கி, அதன் முதலாசிரியராகக் கடமையாற் றித் தமது எழுத்துப் பணிக்கு மேலும் உரமிட்டுக் கொண்ட சண்முகசுந்தரஞர் (தசம்) இறக்கும்வரை எழுதிக்கொண்டேயி ருந்தார். எழுதிய அம்மணிக்கை இன்று ஓய்ந்துபோய்விட்டது,
மக்கள் கலைகள் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் ஓடோடிச் சென்று அவற்றைப்பற்றி நுணுகி ஆராய்ந்து சின் எஞ்சிறு நூல்களாகத் தொகுத்துத் தம் ஆய்வுகளை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருந்த சண்முகசுந்தரஞர் இன்று நம் மிடையே இல்லை.
" தசம்" என்பது சிறிய புள்ளியையே குறிக்கும் ஒரு சொல் ஆஞல், எமது 'தச"மோ எழுத்துலகில், ஆய்வுலகில் ஒரு பெரிய புள்ளியாகத் திகழ்ந்து இன்று காலன் கைப்பட்டுவிட்டார். ஆனல் அவருடைய படைப்புக்களை மட்டும் அந்தக் கொடிய காலஞல் கவர்ந்து கொள்ள முடியாது.
தாம் மட்டும் ஆக்க இலக்கியங்களையும் ஆப் வுகளை யும் படைத்ததுடன் நிற்காது தமது மாணவர்களையும் இத்துறை களில் ஈடுபட ஊக்குவித்தார். இத்தகைய ஊக்குவிப்பால் உந்தப் பெற்று முன்னேறிய " மகாஜனன்கள் " ஏராளமாஞேர் இன்று எழுத்துத் துறையிலும் ஆய்வுத் துறையிலும் ஒளிர்விட்டுப் பிர காசித்துக் கொண்டிருக்கிருர்கள்:
மாவிட்டபுரத்தில் இயங்கிவந்த திண்ணைப்பள்ளிப் பாரம் பரியம் பற்றியும், கீரிமலையின் வரலாற்று மகிமை பற்றியும் எழுதிக் காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்தின் வெளியீடாக

Page 13
ܚܣܚ- 20 ܚ
மலரவிருக்கும் இரண்டாவது மலருக்கு அளிப்பதாக உறுதிய ளித் திருந்தார்; இவை பற்றி எமக்கு எழுதி உதவுவதற்கு இனி யார் இருக்கிருர்கள்?
அறுபதாவது வயதில் இறப்பினை எதிர்பார்த்திருந்தவர் சண் முகசுந்தரம் தமது இறப்பின் பின் செய்யவேண்டிய பணிகளை யெல்லாம் பட்டியலிட்டுத் தம் மனைவியிடமும் செல்வ மகள் செல்வியிடமும் கூறிவைத்திருந்தார். சு கயீனமுறுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே வெளிநாட்டில் தொழில்புரிந்து கொண்டி ருந்த மகன் ராசாவுக்கு எழுதிய இறுதி அஞ்சலில் தமது வாழ் நாள் நீண்டதாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
எப்படியும் வாழலாமென்றிராது இப் படித் தா ன் வாழ வேண்டுமென்று திட்டம் வகுத்து வாழ்வாங்கு வாழ்ந்த "தசம்" அவர்கள் இறந்த பின்னர் கூட அந்த இலட்சிய உடலுக்கு என் னென்ன செய்யப்பட வேண்டுமென்று வைத்தியசாலையில் இரு வாரங்களுக்கு மேலாகப் படுக்கையருகே இரவு பகலாக விழித் திருந்து சேவைசெய்த மனையாளிடம் கூறிவைத்திருந்தார் எழு திய அம்மணிக்கை ஓய்ந்ததுடன் அம்மணியின் கைகளும் ஓய்ந் தினது அன்னுருக்கு ஆறுதல் கூறுவார் யார்?
அன்ஞருக்கு எழுத்தறிவித்த எமது வீமன்காமம் மகா வித் தியாலயம் இன்று தான் வடித்துக் கொடுத்த ஒரு கல்விமான, ஒரு நல்ல பழைய மாணவனை இழந்து கண்ணிர் உதிர்க்கின்றது .
சிந்தனைத் துளிகள் : சோறும் கறியும் சாப்பிட்டவர் வேறு நாட்டுக்குச் சென்ற தும் அதே உணவை வேண்டி அலைவது வழக்கம். பிற நாட்டு உணவைச் சாப்பிடாமலே "அது கூடாது" என்ற முடிவிற்கு அவர் வருவது இயல்புதான். அதேபோன்று நம் நாட்டவர் பிற நாட்டு நாடகத் தமிழ் வடிவங்களைப் பார்க்காது, முடி விற்கு வருவது பிழை. புதுமுயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வருவது நல்லது. தேவை இல்லாதவற்றை நாளடைவில் தமிழ்கூறு நல்லுலகம் கழித்து விடும்.

திரு க. கிருஷ்ணபிள்ளை, B. A. முன்னைநாள் அதிபர்,
யூனியன் கல்லூரி,
தெல்லிப்பளை,
இருமொழி வல்ல சேவையாளன்
அமரர் அவர்களின் தந்தையார் அக்காலத்தில் பிரபலமான தலைமை ஆசிரியர் தம்பு உபாத்தியார். அவர் இற்றைக்கு எழு பது எண்பது ஆண்டுகளுக்கு முன், தெல்லிப்பளையிலுள்ள ஆசி ரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வி கற்றுத் தராதரப் பத்திரம் பெற்றவர். பின்னர் அநேக ஆண்டுகளாக மூளாய் சைவப் பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியர் பதவி வகித்து வந்தார். தமது இலக்கண இலக்கிய அறிவாலும், நற்குணங்க, ளாலும் சைவ ஆசார முறைகளாலும் மூளாய், தொல்புரம், சுழிபுரம், வட்டுக்கோட்டை ஆகிய கிராமங்களிலுள்ள மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். புலோலி சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரஞரின் இனிய நண்பராகவும் விளங்கினர்.
இத்தகைய பெருமை வாய்ந்த தந்தையின் மகன் அமரர் சண்முகசுந்தரம். பட்டம் பெற்ருேர் எல்லோரும் சிறந்த அறி வாளிகளாகத் திகழ்வது அரிது. பட்டம் பெற்ற பின் சிலகாலம் கொழும்பிலுள்ள ஏரிக்கரைப் பத்திரிகையில் கடமை புரிந்த பின்னர், மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இக் காலகட்டத்தில் அமரருடன் நெருங்கிப் பழகக் கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. சர்வகலாசாலைப் புகுமுக வகுப்புகளில் தமிழ், சரித்திரம், அரசியல் முதலிய பாடங்களை மிகத் திறமையாகவும், மாணவர் எளிதில் கிரகிக்கக்கூடிய முறையாகவும் போதித்து அவர்களைச் சித்தியடையச் செய்தார்:
கல்லூரியின் வருடாந்த இதழ் களை த் தயாரிப்பதிலும், கட்டுரைகளைச் சரி பிழை பார்த்துப் பிரசுரிப்பதிலும், அச்சு வாகனமேறும்போது அங்கு பணி புரிவோர்க்கு வழிகாட்டுவதிலும் மிகச் சாதுரியம் வாய்ந்தவர் 1954ஆம் ஆண்டுவரை மகாஜனக் கல்லூரியில் ஒரு கூட்ட மண்டபம் (Assembly Hall) இல்லாதது

Page 14
- 22 -
ஒரு பெருங்குறையாக நிலவியது: ஒரு மண்டபம் கட்டுவதற்குப் பொருள் சேகரிக்கும் நோக்குடன் ஒரு அதிட்டலாபச் சீட்டி ழுப்பும், களியாட்ட விழாவும் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்தப்பட்டன. அந்த விழாவில் அமரர் அவர்கள் செய்த சேவை மிக அளப்பரியது: " மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது. கண் துஞ்சாது, காரியமே கண்ணுக ** அயராது உழைத்தார். அவரது சேவைகளையும் அச்சேவைகளின் பலா பலன்களையும் இன்று மகாஜனக் கல்லூரியிலுள்ள அதிபரோ, ஆசிரியர்களோ, பிள் ளை க ளே ாே அறியமாட்டார்கள். அர சாங்கமே கல்லூரிகளைப் பொறுப்பேற்று நடத்துகிற இக்காலத் தில், இக்கல்லூரியில் சில காலமேனும் அதிபராகக் கடமை யாற்ற அமரர் அவர்கட்குக் கிடைத்த சந்தரிப்பத்தையிட்டு தாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அமரரின் அறிவில் ஒரு சிறப்பம்சம், தமிழ் ஆங்கிலமாகிய இரு மொழிகளிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றிருந்தமை தமிழ் இலக்கிய இலக்கணம் தந்தையாரிடம் கற்றறிந்திருக்க லாம். கூடியளவு வடமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுவது அவரின் நோக்கம் சில அறிக்கைகள், இலக்கிய விமர்சனங்கள் தயாரிப்பதில் நாங்கள் இருவரும் ஈடுபட்டிருக்கும்போது, ஆங் இலத்திலும் பார்க்கத் தமிழ் சொல் வ ள ம் கூடிய மொழி என்பதை வற்புறுத் துவார்.
சைவ சித்தாந்த மரபுகளைப் பேணிவந்த தந்தையால் வளர்க்கப்பட்டும், அபரக்கிரியைகள் பற்றிய அமரரது அபிப் பிராயங்கள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை அமர ரைப்போல் சமீபத்தில் சிவபதமடைந்த எனது ஆசிரியர் ஒருவரும் அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது அமரரின் பலதிறப்பட்ட ஆக்கங்கள் பற்றியும் அவரது இருபத்து நாலு படைப்புகள் பற்றியும் அவரது அன்பர்கள் தெளிவாக விளக்குகிருர்கள்.
அமரர் தமிழ்த் தாய்க்குச் செய்த சேவைகள் அவரை என் றும் எங்கும் முன்வைக்குமென்பது திண்ணம்.

திரு. க. பாலசுந்தரம், B. A.
அதிபர் யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை
ஆறுதலடைமின் அவர்தம் புகழில்
யூனியன் கல்லூரியின் புகழ்பூத்த பழைய மாணவராகவும், உப அதிபராகவுமிருந்த அமரர் தி சண்முகசுந்தரம் அவர்களது பூவுலக மறைவு கல்வி உலகிற்கும் இலக்கியப் பரப்பிற்கும் நிறைவு செய்ய முடியாதி பேரிழப்பாகும்.
ஒட்டி வந்தோர்க்கு மட்டுமன்றி ஒட்டாது எட்ட நின்ற வர்களுக்கும் பரிந்து நற்பணி பல புரிந்த பெருந்தகையவர். அன்னரின் வாழ்க்கையின் இலட்சியப் பாதையேயது. ஆசிரியர், மானவர் என்ற பேதமின்றி, உயர்வு தாழ்வு என்ற வேறுபா Lற்று உற்றவேளை உள்ளம் உருகி வலிந்து சென்றே பரிந்து உதவும் ஆசிரியனுய், அமைச்சராய், நண்பனுய் அருமைச் சோதரனுய் யூனியன் கல்லூரியில் திகழ்ந்து வாழ்க்கை நெறி யின் நன்னுேக்கை வாழ்பவர்களுக்கு எடுத்துக்காட்டினுர்,
அமரர் சண்முகசுந்தரம் அவர்கள் மகாஜனக் கல்லூரியின் அதிபரான காலை யூனி ய ன் கல்லூரியே பெருமிதமடைந்தது. அமரரின் ஆற்றலும் அளப்பரிய நற்பண்புகளுமே அதிபர் பதவி வலிந்தே அவரைச் சென்றடையக் காரணம்.
ஆக்க இலக்கியத் துறையில் அன்னரின் கைவண்ணம் மினி ராத துறைகள் எதுவுமேயில்லை. வாழ்க்கையைப் போன்றே இலக்கியச் சோலையிலும் அ ைஞரது தனித்துவமான நறுமலர்கள் நறுமணம் பரப்பின. ஏனைய எழுத்தாளர்கள் நுழைய முனையாத துறைகளிலெல்லாம் தமது இலச்சினையைப் பொறித்தார். அம ரர் சண்முகசுந்தரஞர் காலனேடு கூடவே பயணமாகிவிட்டார் ஆனல், அவரது இலக்கிய ஆக்கங்கள் காலனை வென்ற பயணத் தைக் காலாகாலமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்,
இவ்வேளை கணவனை இழந்து தவித்து வதங்கும் அவர்தம் அருமைப் பாரியார் ஞானசக்தி அம்மையாருக்கும், அவர்தம் குலக்கொடிகளுக்கும் யூனியன் கல்லூரி சமர்ப்பணஞ் செய்யும் தாலிரு மொழிகள்
புகழொடு வாழ்ந்தார் புகழொடு வாழ்வர். ஆறுதி ல டைமின் அவர் தம் புகழில்

Page 15
திரு. கனகசபாபதி நாகேஸ்வரன், பி. ஏ. (சிறப்பு) உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
கல்விக்குத் துணைநின்ற கனவான்
பல்கலைக்கழகக் கல்விப் பாரம்பரியமும், பாரம்பரியக் கல் விப் பின்னணியும் ஒருசேர வாய்க்கப்பெற்ற ஈழத்தறிஞர்களில் * தசம் " என அழைக்கப்படும் த. சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக் கவர்: ஈழத்துக் கலை இலக்கிய விமர் சகர்களுள் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர் ஆசிரியராயும் (பத்திரிகையாசிரியர், போதனசிரியர், நூலாசிரியர், பதிப்பா சிரியர்), கல்லூரி அதிபராயும் , ஆ ய் வு ப் பேரறிஞராயும் விளங்கிய என் அன்புக்குரிய ஆசான் அவர்களது மறைவு தனிப்பட்டமுறையில் எனக்கு இழப்பெனினும் , அ த னை விட ஈழத் தமிழறிஞர் உலகிற்குப் பேரிழப்பாகும். எனக்கும் என் ஆசிரியருக்குமிடையில் கடிதப் போக்குவரத்து நிகழ்ந்தமையும் அவரைப் பல கோணங்களிலும் மதிப்பிட வாய்ப்பாயிற்று.
* தோளுக்கு மேலே வளர்ந்தால் தோழன் " என்று அடிக் கடி கூறித் தன் மாணுக்கர்களையும், மற்றவர்களையும் அரவ ணைக்கும் அறிவாழம் நிரம்பிய பெரியார், சண்முகசுந்தரம் அவர்களெனின் அது மிகையாகாது.
மகாஜனக் கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிலே வகுப்பாசிரியராயிருந்து நல்வித்தை புகட்டியவர் "தசம்" அவர் கள். இலக்கிய வேட்கையை எமக்கு ஏற்படுத்திய பேராசான். பல்கலைக்கழகப் பேராசிரியர் குழாத்தினரையும், விரிவுரையா ளர்களையும் அவ்வப்போது தகுந்த முறையில் அறிமுகப்படுத்தி எம்மையும் பல்கலைக்கழக வாசலை மிதிக்கச் செய்த வழிகாட்டி. பேராதனைப் பல்கலைக்கழகப் பாரம்பரியத்தினை நன்கு அறிந்தி ருந்த " தசம் " அவர்கள் ஆய்வறிவூக்கங்கொண்ட மாளுக்கர் களை நெறிப்படுத்தி வாழ்வளிப்பதில் பேரின் பங்கண்டவர்.
பாவலர் தெ; அது துரையப்பாபிள்ளையின் இலக்கியமரபை நன்கு புரிந்து வைத் திருந்த இவர் மகாஜனவின் சிற்பி தெ. துடு ஜெயரத்தினம் அவர்களது கல்லூரி நிர்மாணப் பணியிலும்,

س۔ 25 سے
கல்விமேம்பாட்டு முயற்சிகளிலும் கைகொடுத்து ஒரு புதிய சகாப்தத்தினை உருவாக்க உதவிஞர் பாவலர் துரையப்பா பிள்ளை நூற்ருண்டு விழாவில் பல்கலைக்கழக ஆய்வாளர்களை யெல்லாம் சேர்ப்பித்துப் பெருவிழாவெடுக்க ஆலோசனைகளை வழங்கினர்:
வரலாறும், அரசறிவியலும் இவருக்குக் கைவந்த பாடகி கள் " வின்ஸ்ரன் சேர்ச்சில் ", "சேர். ஜவர்டு ஜென்னிங்ஸ்", * கிளமென்ட் அட்லி ", " மக்மிலன் ", " டொனமூர் பிரபு ", * சோல் பரிப் பிரபு ", " ஹிட்லர் ", நெப்போலியன் " போன் ருேருடைய அரசியல் வாழ்வினை இவர் எடுத்து விளக்கும்போது மிகுந்த சுவையாயமையும்
கலே இலக்கியத் துறையில் பேராசியர்கள் க. கணபதிப் பிள்ளை, சு: வித்தியானந்தன் போன்றேரது வழியில், பொது மக்களிலக்கியத்துறையின் வளர்ச்சியில் உறுதிமிக்க ஈடுபாடு கொண்ட சண்முகசுந்தரம் அவர்கள் எழுதிய "கலையும் மரபும்", "இசையும் மரபும்". "கலையருவி க. கணபதிப்பிள்ளை, ' கலை மகிழ்நன் சு. வித்தியானந்தன் ", "சிவத் தமிழ்ச் செல்வம் தங் கம்மா அப்பாக்குட்டி " என்ற நூல்கள் அவரது பொதுமக்க வீடுபாட்டினை விளக்கி நிற்பனவாகும். இந்நூல்கள் அவரது ஆழமான கல்விச் சிந்தனையின் பிரதிபலிப்புக்களாயுமமைவன; இவரெழுதிய நூல்கள் பற்றிய ஆய்வினைத் (மதிப்பீடு) தனித்த வொரு ஆய்வாக மேற்கொள்ளலாம். இவருக்குரிய தனித்துவ மான எழுத்துப் பண்புகளிலொன்று பேட்டி நடையிலான உத்தி முறைமை,
எழுத்தாளர் சண்முகசுந்தரம் அவர்களது பேட்டிகள் இலக் கியச் சுவையுடன், மரபுகாக்கும் பண்பினையும் கொண்டிலங்கு வன எழுத்திலும் அவ்வாறே பேச்சிலும் அஃதே. ஒருமுறை வானெலியிலே ' கலைக்கோலம் " நிகழ்ச்சிக்கென ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேட்டியில் கலைப்பேரரசு ஏ. ரி: பொன்னுத் துரையுடன், " தசம் " அவர்கள் உரையாடிய கலந்துரையாடல் " பேட்டி " நிகழ்ச்சி என் மனதைத் தொட்ட நல்ல நிகழ்ச்சி யாகும். இப்படியான வெளிக்கள ஒலிப்பதிவு நிகழ்ச்சிகளில் நிரம்பிய ஒத்துழைப்பினை நல்கியவர் சண்முகசுந்தரம் அவர்கள் நாடகவியலிலே தோய்ந்த ஈடுபாடு கொண்ட இவர் யாழ்
இலக்கிய வட்டத்தினர் சார்பில் “ ஈழத்து மரபுவழி நாடகங் கள் " பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்றினைப் படித்தார் கிரா

Page 16
حسس۔ 26 سس۔
மியப் பண்பாட்டுக்கலை வளர்ச்சியில் வாழ் நா ட் பூராவும் தம்மை இரண்டறப் பிணைத்து வரழ்ந்த "தசம்" அவர்கள் " தாம் இறக்கும் பொழுதும் எழுத்தாளஞகவே இறக்கவேண்டும் " என்ற விருப்பங் கொண்டிருந்தார்:
அவரது நெஞ்சத் துணிவுடஞன எழுத்துத் துறையீடுபாடு கள் இளைஞர்களுக்கெல்லாம் உந்து சக்தியாயமைந்தமையின லேயே அவரிடங்கற்ற மாணவ பரம்பரையினர் இன்று பல்கலைக் கழகங்களில் பல்வேறு பீடங்களிலேயும் விரிவுரையாளர்களாய்ப் பணிபுரிந்து வருகின்றனர். கல்வி கற்றலில் மாணவர்களுக்குத் தூண்டுகோலாயிருந்து, சோம் பல கற்றி உயர்வுக்கு வழிகாட் டிய வித் தகர் அவர் ஒய்வொழிச்சலின்றிப் படிப்பதையே நோக்காகக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வமேலிட்டை எமக்கு ஊட்டிய மூதறிஞர் - நல்வழிகாட்டி - அவர். ஒரு சந்தர்ப்பத் தில் அவரே கூறினர், " நான் இப்போது வாசிப் பதில்லை. ஆனல் சிந்திக்கிறேன் நாகேசு " என்று.
" சேர் நீங்கள் இப்போது மட்டும் சிந்திக்கவில்லை. பேரா தனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வெளியீடான "இளங்கதிர்" என்ற சஞ்சிகையின் முதலாவது இதழின் ஆசிரியராயிருந்த போதே " சிந்தனை ? யாளராய் விட்டீர்களே" என்றேன் நான் :
நவீன இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட இவர் நாவலாசிரி யர் சிறுகதையாசிரியர்; க ற் பனை நன்கு வாய்க்கப்பெற்ற தனித்துவமான படைப்பாளி. தமிழ்மொழியின் சொல்லாக்க வியல் துறையில் தமது கவனத்தைச் செலுத்திநின்று அவ்வப் போது பல அறிவுரைகளை வழங்கி வந்த தமிழ்மொழிப் பற்ருர் வலர். தமது கொள்கைப் பிடிப்பினைத் தாம் எழுதிய கட்டு ரைகள் வாயிலாகவும் நிறுவினர், “ ஈழநாடு ", "ஈழமுரசு", வீரகேசரி ", " தினகரன் " " தினபதி " பத்திரிகைகளில் அரு மையான பல கட்டுரைகளை எழுதினர். " அலுவல் ", "பாரம் பரியம் ", " வழமைகள் " " மரபு ", " தொன்மைசால் மாண் புடைத் தேசாதிபதி ", " மாண்புமிகு " ஆகிய சொற்களிலே அலாதிப்பிரியம் அவருக்குண்டு. இத்தொடர்கள் அவர் நாவில் நின்று நடம்புரிவன. அவரது எழுத்தில் " ஆடல் வல்லான் • என்ற சோழர் காலத்துச் சாசன வழக்கு " அடிக்கடி இடம் பெறும்; பேச்சு மேடைகளிலும் பயன்படுத்துவார்; இப்பண்பு களையெல்லாம் அவரது கட்டுரைகளைப் பிரதிசெய்து கொடுத்த வாய்ப்பினுலேயே தான் அறிந்து கொண்டேன்.

سسہ 27 - سیسہ
வானெலியில் " சைவ நற் சிந்தனை "களை வழங்கிய குரல் அடங்கிவிட்டது என்பது பிறிதொரு கவலை பத்திரிகைக்கலை, ஒலிபரப்புக்கலை என்பனவற்றின் செயற்பாட்டு நுட்பங்களை அறிவுறுத் தி அத்துறைகளிலும் எனக்கு ஆர்வத்தை - ஈடுபாட் டினை - ஏற்படுத்தியவர் சண்முகசுந்தரம் அவர்களே. ஒலிபரப் பிற்குப் பொருத்தமான கணிர் " என்ற குரல்வளம் கொண் டவர் அவர்.
நாட்டுக்கூத்து, கரகம், காவடி கோலாட்டம், கும்மி, வசந்தன் பாட்டு ஆகிய பொதுமிக்கள் கலைகளை ஒலிப் பதிவு நாடாவில் ஒலிப்பதிவு செய்யும் பணியில் துணைவேந்தர் பேரர சிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்கு உறுதுணையாயிருந்து கலைப்பாதுகாவலரானுர்,
பன்முகப்பட்ட ஆளுமைகளும் குடிகொண்டிருந்த ஒருவர் ஆவர். தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் அவரது ஆய்வுப்பணிகள் தொடர்பான கட்டுரையாக்கத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரின் மறைவு நிகழ்ந்து விட்டமை அறிவுலகத்தினை வருத்து படியாக்கிவிட்டது: ஈழத்துப் பாரம்பரியத்தினைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தும் அவரது அடிமன ஆசை நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அன்னரது எழுத்துத் துறை முன்மாதிரிகள். ஈடுபாடுகள் - எமக்கெல்லாம் மேலும் வழிகாட்டுவதாக,
* மலையைக் காண்பதற்குத் தூரம் வேண்டும் சம்பவங்களை மதிப்பிடக் காலம் வேண்டும்
என்ற புகழ்பெற்ற கூற்றினை அடிக்கடி சொல்பவர் "தசம்" அவர்கள் எழுத்துலகிலும் கல்வியுலகிலும் அவரேற்றிய அறி வொளி காலத்தை வென்று நினைக்கப்படும் என்பது உறுதி, அன்னரது மாணவர்களனைவரினதும் சார்பாக அவரது ' குரு வடிகளில் வணக்கத்தைச் செலுத்தி அஞ்சலித்து நிற்கின்றேன்.
சிந்தனைத் துளிகள் :
பண் அன்றைய மக்கள் வாழ்விலே பொலிந்து கலந்திருந் தது. கூத்திலே பண் ; காவடி கரகம் ஆட்டத்திலே பண்; வசந்தன் ஆட்டத்திலே பண்; பண்ணுேடு இயைந்த அமைதி யான கிராம வாழ்வு அன்று நிலவியது:

Page 17
வித்துவான் அ. சந்தியாப்பிள்ளை இளவாலை,
ஈழத் தமிழகத்தின் 'ஒளி'
ஒளி உலகிற்கு அவசியம் சிறப்பாக எவரும் இருளில் தட வாதபடி ஒளி மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியம். நாற்பது வருடங்களுக்கு மேலாக அமரர் சண்முகசுந்தரஞரின் நட்புக் கிடைக்கப் பாக்கியம் பெற்றேன். " மனிதருள் தேவராவர் " என்ற திருவள்ளுவரின் வாக்குக்குப் பொருத்தமானவர். ஆம் , தெய்வம் தந்த "ஒளி" அவர் எனலாம் .
ஒருவருக்கு ஒளியானது " உள்ள வெறுக்கை ". அதாவது பிறராற் செயற்கரிய செய்வோம் என்று கருதும் ஊக்கம் மிகுதியாகும். இவரது உயர்வுள்ளம் - தனக்கென வாழ 1ா ப் பிறர்க்குரியராம். வாழ்க்கை - கசடறக் கற்றுத் தேறவேண்டும் என்ற பேரூக்கம் - கற்ற பின் அதற்குத் தக வாழ்ந்தமையால் மக்கட் சமூகத்தின் மங்கா " ஒளி"யாகத் திகழ்ந்தார். தொன்று தொட்டே ஒழுக்கத்தாற் சிறந்து வரும் இயல்புடையார் குல வரிசையினர். சமயத்துக்கும் மொழிக்கும் நந்தாவிளக்கு. "சிவாய நம என்று சிந்தித் திருப்பதே அபாயம் அகற்றும் உபாயம்" என்னும் சித்தாந்தத்தைக் கடைப்பிடித்த ஒரு "வீர சைவர்": தன்னையே அழித்து " ஒளி " கொடுத்த தியாகி; தலைமேல் விழப் போகும் பாரத்தைத் தடுக்க, உடல் முழுதுக்குமாகத் தானே முந்திச் சென்று தடுக்கும் கை போன்று சமூகத்தின் " அறங் காவலர் , திண்ணியன், புண்ணியன், கண்ணியன், (ஈழ) வன்னி யன் என நான்கு சொற்களால் இவரை அளந்து கூறிஞலும் மிகையாகாது. இவரது அபாரத் திறமையும் தைரியமும் அன்று இவரது தாயார் முலைப்பாலைக் குறைவற ஊட்டி வளர்த்திருப் பதஞற்ருன் என்று துணிந்து "பீரம் பேணிற் பாரம் தாங்கும்" என்னும் முதுமொழிக்கு இலக்கண புருடராக வளர்த்துவிட்ட அருமைத்தாய்க்கு எமது வீர வணக்கம் உரித்தாகட்டும்

۔ 29 -سے
இலம்கைப் பல்கலைக்கழகத்திலும், தொண்டாற்றிய கல்லூரி களிலும், பல்துறைச் சமூக மன்றங்களிலும் ஒளியாய் நின்ற தோடு பிற்சந்ததிக்கும் வரிவடிவிலும் பல நூல்களை ஆக்கித் தரக் கொண்ட வேணவாவிற் பிறந்த கடின உழைப்பால் அமரர் குடுவயதில் நித்திய நித் திரையான மை எமது தூரதிட்டமே;
"அத்து விதத்துவ வாழ்வில் நின்று ஒளிர்வாராக"
" சண்முக சுந்தரஞர் சேவை நலமதை
மண்முக மெண்டிசையு மேற்றுவம் - விண்மீதும் சுந்தரஞய் நீடூழி சோபித்து வாழ்ந்திடவே கந்தனே யுன்னருள் கூர்.”
ானக்கேட்டு அமைதி பெறுவோம்:
சிந்தனைத் துளிகள் :
சோறும் கூத்தும் இருவகைத் தானங்கள்: முன்னது உட லுக்கும் பின்னது உயிருக்கும் உரியவை. நோய் வாய்ப்பட்ட ஒருவர் தப்பும்போது நேர்த்திக்கடன் வைப்பார். அதன்படி குறிப்பிட்ட நல்ல நாளிலே அன்னதானம் நண்பகல் நடக் கும், அறிவுத் தானமாகிய கூத்து அன்று இரவு நடக்கும்.
கூத்து முடிந்த பின்னர் துலாவிலே, கிணற்று மிதியிலே, தலை மடையிலே, மந்தைக்குரிய புல் வெளியிலே, புலத் திலே, களனியிலே, பனங்காய் காவல் கொட்டிலிலே எல் லாம் பல நாட்களாக அன்றைய பார்வையாளர்கள் ஒலிப் பரி அப்போது அண்ணுவியார் உள்ளம் குளிரும்

Page 18
S, THURAISINGHAM Retired Master Burner Instructor (Cement)
Kankesanturai.
(l 9ontleman 31Dar ěxcellence
The sudden demise of Mr. Shanmugasunderam came as a rude shock to me. His passing away has created a void which cannot be easily filled. He was a man noted for his sincerty, integrity and strength of character.
He became internationally known as a Teacher, Principal, a great writer and a Tamil Research Scholar. He won many Scholarships to India to do his research even after his retirement.
He was a Juror with me for nearly 10 long years at the Supreme Court of Jaffna, He used to advise me, never to send an innocent man to Jail or gallows. He always held the balance of Justice evenly.
It is a pity that God Almighty had thought it fit to take him away from our midst. He had always endeared himself by his never failing kindness, hospita lity and consideration, as well as by his constant cheerfulness, great fellowship and sympathy - qualities which made him friends every where he worked, those who had the privilege of knowing him while he lived cannot forget his many acts of kindness to all sorts

سے 3l حس۔
of people. His unfailing charms, his cheerful disposition and above all his unflinching support of every moveinheit was well known.
His life was a splendid example for others for kindness, complicity. patience and devotion.
He was happily married and was a devoted husband and loving father.
His untimely death is a reparable loss not only to his family but to the entire Tamil Community.
On behalf of the large circle of friends and
(lnirers, l extend my deep sympathy to his sorrowing widow and children,
“Aye, rest constant for thou hast won,
A tomb that kings might wish in vain, About thee shines the all seeing sun, And roars the many sounding man"

Page 19
புலவர் ம. பார்வதி நாதசிவம்
நின்புகழ் நிலைக்கும்
வாழிய நின்புகழ் வாழிய நின் புகழ் வண்டமிழ்ப் பற்றும் வளர்கலைப் பற்றும் கொண்ட மேலோய் வாழிய நின் புகழ் தனித்தமிழ் வளரவும் தமிழ் இசை வளரவும் அல்லும் பகலும் அயரா துழைத்தன நாவல் சிறுகதை நாடகம் ஆய பல்துறை இலக்கியப் பணியினுல் உயர்ந்தனை சாகித்திய மண்ட லத்தின் Lifa) af இருமுறை பெற்றன யாவரும் உவப்புற ஆசிரியத் தொழில் தன்னிலே நீதான் ஆண்டுகள் பலவாய்ச் சிறப்புற உழைத்தனை நின்னிடம் கற்ருேர் வைத்தியர் ஆயினர் பொறிஇய லாளர் ஆசிரியர் என இன்னும் பல்துறை தம்மிலும் உள்ளனர் சுற்றத் தவர்பாற் பற்றுநீ கொண்டனை வேண்டும் உதவிகள் யாண்டும் புரிந்தனை நண்பர் தம்மையும் பண்புடன் பேணினை எல்லோர்க் கும்மே இனியனுய் வாழ்ந்தனை ஆங்கிலப் புலமையும் அருந்தமிழ்ப் புலமையும் மொழிபெயர்ப் பாற்றலும் சொந்தமாய்க்
கொண்டனை எப்பணி தன்னை மேற்கொண் டிடினும் அப்பணி தன்னைச் சிறப்புடன் ஆற்றுவை இன்றுநீ விண்ணகம் எய்தினும் நின் புகழ் என்றுமே நிலைக்கும் என அறிந்தனமே!

திரு. ச, விநாயகரத்தினம் செயலர், சிவநெறிக் கழகம்
தமிழுணர்வு ஊட்டிய தகுதியாளன்
*" தசம் " என்ற புன்ைபெயரில் மறைந்தும் தமது சொந்தப் பெயரிலும் ஈழத்தில் நல்ல இலக்கிய சேவை செய்த திரு. த சண்முகசுந்தரம் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. அவரு டைய புதிய எண்ணக் கருத்துக்களைக் கொண்ட இலக்கியப் படைப்புகளை நாம் இனிமேல் காணுதல் இயலாது. அவர் சென்ற 1986-07-29 ஆம் நாள் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை உணர்ந்த ஈழத்து இலக்கிய உலகம் மிகுந்த துன் பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றவர். ஆங்கு பேராசி ரியர் கலாநிதி கணபதிப் பிள்ளை அவர்களிடமும் பேராசிரியர் கலாநிதி சு வித்தியானந்தன் அவர்களிடமும் மு  ைற ய ர ன தமிழ்ப் போதனை பெற்றவர். அவர்களுடைய சிந்தனைகளைத் தாம் சுமந்துவந்து வெளியுலகிற் பரப்பியவர்: பட்டம் பெற்று வெளியேறியவுடனே இலங்கைத் தமிழ்த் தினசரியாகிய திண் கரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியேற்ருர்: தமது புதிய எண்ணங்களை அப்பத்திரிகையின் வாயிலாக உலகறியக் கொடுத்தார். "
இதன்மேல் தெல்லிப்பழை, மகாஜனக் கல்லூரியில் ஆசிரி யராகப் பணியேற்றர் அக்காலத்தில் அதிபராகவிருந்த அமரர் திரு. தெ து: ஜயரத்தினம் அவர்களுக்குப் பெருந்துணையாகிக் கல்வித்துறை ஆக்கப்பணிகள் புரிந்தார். க. பொ. த உயர் தர வகுப்புகளில் அரசியல், வரலாறு, தமிழ் முதலாம் பாடங் களைத் திறமையாகக் கற்பித்து மாணவர் சிறந்த தேர்ச்சிபெற உதவினர்; ஆங்கிலத்தைத் தமிழிலும், தமிழை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுவதில் வல்லவராக விளங்கினர்.

Page 20
-س- 34 س
தமது கருத்துக்களை மேடையில் எடுத்துக் கூறுவதற்குக் கூசாத பேச்சாளர். தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த காரணத்தால் பல்வேறு விதமான அரசியற் கொள்கைகளையும் அலசி ஆராய்ந்து தமிழருக்குத் தனியாட்சி வேண்டுமென்ற முடிவைக் கொண்டவராய்த் திகழ்ந்தார் தமிழ் அரசியல் தலை வர்களிடம் அபிமானமும் மதிப்பும் உடையவராய் வாழ்ந்த இவர் மாணவரிடையே நன்மதிப்பையும் பெற்ருர்,
" தசம் " அவர்கள், அழிந்து போய்க்கொண்டிருந்த தமிழ்க் கலேகளுக்குப் புத்துயிர் ஊட்டவேண்டும் என்ற கொள்கையில் உறுதி உடையவராய் இருந்தார். இந்த உறுதிப்பாட்டினல் கிரகம், காவடி, நாட்டுக் கூத்து, கீர்த்தனங்கள் போன்ற பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்தவற்றைப் படித்து அவற்றைப் பதிப் பித்துத் தமது கருத்துக்களை உணர்த்தும் கட்டுரைகளை எழுதித் தமிழ் உலகிற்குப் பரப்பினர். பழைய கல்ைகளை ஆராய்வதற் காக அவற்றில் வல்லவரைத் தேடிக் காண்பதற்கு ஊர்கள் தோறும் சென் ருர்,
சிவநெறிக் கழகப் புரவலராய் இவர் அரும்பணி புரிந்துள் ளார். கழகம் "நடத்தும் ஆக்கப் பணிகளில் ஊக்கம் காட்டி உத வினர். கடந்த ஆண்டு கழகம் நடத்திய இராஜராஜசோழன் முடிசூடிய ஆயிரம் ஆண்டு விழாவில் மிக ஊக்கம் கொண்டு தொடக்கவுரை கூறி விழாவிற்கு வந்த பேச்சாளரை நெறிப் படுத்தி அவ்விழாவைத் திறமையுடன் நிருவகித்தார். அவ்விழா விற் கலந்து கொண்ட பொரியோர்களின் உரைகளை நூல்வடி வாக்கவேண்டும் என்று எம்மைத் தூண்டி நின்ருர் .
எமது தமிழும் தமிழ்க் கலைகளும் புத்துணர்வோடு திகழ வேண்டும் என்ற ஆர்வத்துடன் இறுதிவரை பணிபுரிந்து நின்ற திரு. த. சண்முகசுந்தரம் அவர்களை இழந்து தவிக்கும் அன்புத் துணைவியாருக்கும் ஆழ்ந்த க வ லை யோ டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரியன. அன்ஞரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்ருேம்:
assa
திரு. த. சண்முகசுந்தரம் அவர்களின் புனைபெயர்கள்
சண், சண்முகம், நையாண்டி, தசம், நிறை

திரு. வி. எஸ். கணேசலிங்கம் சட்டத்தரணி
மாவை தந்த தமிழறிஞர்
பத்திரிகை ஆசிரியராகவும், கல்லூரி ஆசிரியராக வும், அதிபராகவும், நூலாசிரியராகவும், ஆய்வாளரா கவும் திகழ்ந்து, பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த பெருமகனை நாம் இழந்துவிட்டோம்.
தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பாடிய சின்னக் குட்டிப்புலவர், மாவை யமக அந்தாதி பாடிய பொன் னம்பலபிள்ளை, சுபத்திரை விலாசம் பாடிய வேலுப் பிள்ளை உபாத்தியார், திருவாசகத்துக்குப் பேருரை தந்த நவநீத கிருஷ்ணபாரதியார் போன்ற பல தமிழ் அறிஞர்களைத் தந்த மாவிட்டபுரத்தில் தமிழ்ப்புலமை அற்றுவிடவில்லை என்பதற்குப் பெரும் சான் ருக விளங்கி யவர் திரு. சண்முகசுந்தரஞர்.
மாவிட்டபுர வரலாற்றுப் பெருமையை மட்டும் அறிந்தவர்களுக்கு அது கலை வளர்த்த வரலாற்றையும் மாவை ஆதீனம் கலை வளர்ச்சிக்கு மையமாக இருந்து கலைஞர்களுக்கு, குறிப் பா க இசை வேளாளர்களுக்கு அளித்த ஆதரவும் கெளரவமும் பற்றித் தமது நூல்கள் மூலமாக அறியவைத்தார். கீரிமலை பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆதாரபூர்வமான நூல்கள் வெளி வரவில்லையே என்று கவலை கொண்டு அதற்கான ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டிருக்கையில் இறைவன் அவரை அழைத்துக்கொண்டான்.
இந்த உத்தமரின் உயிர் கந்தன் திருவடி நீழலில் அமைதி பெறுக,

Page 21
திரு. பொ. கண்ணப்பர் தெல்லிப்பழை
நிறைகுடமாக வாழ்ந்த உத்தம நண்பர்
அண்மையில் அமரத்துவம் அடைந்த திரு. த. சண் முகசுந்தரம் அவர்கள் எனது மீண்டகால நண்பர். மகா ஜனக் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றிய எனது தமை யணுருக்கும் அதே நேரத்தில் மகாஜனக் கல்லூரியில் ஆசிரி யராகப் பணிபுரிந்த திரு. த. சண்முகசுந்தரம் அவர்களுக்கும் ஏற்பட்ட உத்தம நட்பு, பின்பு குடும்ப நட்பாக மாறியது அவர் எங்கள் சுகதுக்க வைவபங்களில் பங்குகொண்டார். அதேபோல நானும் அவரது சுகதுக்க வைபவங்களில் பங்கு கொண்டேன்.
எனது கடையின் மீண்டகால வாடிக்கையாளரான இவர் எனது வர்த்தக முன்னேற்றத்திலும் பெரும் அக்கறை கொண்டிருந்தார். கடைக்கு வரும் நேரங்களில் எல்லாம் கடையின் முன்னேற்றம்பற்றி ஆலோசனை கூறுவார்.
சிறந்த ஆசிரியராக விளங்கிய இவர் காவல், சிறுகதை, நாடகம் முதலிய பலதுறைகளிலும் முயன்று பல நூல்களே வெளியிட்டார். இவருடைய நூல்கள் அறிஞர் மத்தியிற் பெரும் பாராட்டைப் பெற்றன. இலக்கிய உலகிலும் ஆசி ரிய உலகிலும் பெருமதிப்புப் பெற்ற இவர் பழகுவதற்கு மிகவும் இனியவர். " நிறைகுடம் ” என்று சொல்லத்தகுந்த இவர் மிகவும் அடக்கமான சுபாவம் கொண்டவர்.
நீண்டகாலம் வாழ்ந்து தமிழுக்குப் பணிபுரிய வேண் டிய இவர் தமது அறுபதாவது வயதில் விண்ணகம் எய் தியது தமிழ் உலகிற்குப் பெரும் இழப்பு. இவரது நண்ப ணுகிய நான் ஒரு உத்தம கண்பனே இழந்துவிட்டேன்.

திரு. அ. பஞ்சாட்சரம் செயலாளர்,
பண்டிதமணி நூல் வெளியீட்டுச்சபை,
fħġb?ol u JIGIT
ʻ af QImtf? ğ; g5 முதல் நாள் எல்லாம், மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவி விடுவார்கள். சவாரி முடிந் ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து ஒத்தடம் பிடிப்பார்கள் பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவாரி."
* யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி " என்ற நூலில் நூலாசிரியர் திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் மேற்கண்ட வாறு குறிப்பிட்டிருக்கின்றர்கள். இந்தப் பகுதியை 'வாசிக்க வாசிக்கச் சவாரி இரசிகர்களுக்குப் பெரும் இரசனை ஏற்படும் என்பது நிச்சயம் இன்னும் எத்தனையோ இரசமான சம்பவங் கள் இந்நூலில் உள்ளன. யாழ்ப்பாணத்து மாட்டு வண்டிச் சவாரி என்ற நூல் அவர் காலத்தில் வெளிவந்த அவரது இறுதிப் படைப்பு வள்ளி திருமண வேட்டைத் திருவிழாப் பாடல் இதற்கு ஒன்று முந்தியது எனலாம்,
விஷயத்தைப் பூரண அம்சங்களோடு எடுத்துச் சொல்லு வதில், எழுதுவதில் வெகு சாமர்த்தியம் உடையவர் திரு, சண் முகசுந்தரம் அவர்கள்
பூதத் தம்பி நாடகமாயிருக்கலாம், யாழ்ப்பாணத்து இசை வேளாளர், மாவை முருகன் காவடிப்பாட்டு, ஈழத்துச் சித்தர் சிந்தனை விருந்து, கலையருவி கணபதிப்பிள்ளை முதலான நூல் களாயிருக்கலாம் எந்த நூலிலும் திரு சண்முகசுந்தரம் அவர் களது சிந்தனை வளம் நிரம்பியிருப்பதை வாசக நேயர்கள் இனிது காண் பார்கள். எடுத்துக்கொண்ட விஷயத்தை விரிவு படுத்தும் நோக்கில், வீணுக அலட்டும் தன்மை இவருக்கு என்ரு வது இருந்ததில்லை. இரத்தினச் சுருக்கமாய் எழுதுவார்கள்; கருத்துக்களோ மிக ஆழமாக இருக்கும்
எவராவது ஒருவர் தாம் எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பாக எழுதுவதில் - பேசுவதில் குறைவிடுவாரேயானல், அவரை அழைத்து " இப்படி எழுதினல் நல்லது; இவ்வாறு

Page 22
- 35 --
பேசினுல் இன்னும் நல்லது " என்று அறிவுரை கூறிப் பொருள் முட்டுப்பாடு உடையவர்களைக் கைதூக்கி விடுவதிலும் தமக்குத் தாமே இணையானவர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள்.
இலக்கிய வழி :
1964இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை வெகு அழகாகக்கூேறு கின்ருர்கள் திரு. சண்முகசுந்தரம் அவர்கள்:
*" பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களைக் கொழும் பிற் சந்தித்தேன். "நல்லது நீ வந்துவிட்டாய், பண்டிதமணி சுகமாக இருக்கிருரோ? என்ருர்,"
1 யார் " என்று நான் கேட்டுவிட்டேன்.
" நாவலர் என்ருல் ஒரே ஒரு நாவலர். பண்டிதமணி என்ருல் ஒரே ஒரு பண்டிதமணி தான். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை எழுதிய இலக்கிய வழி என்ற நூலைப் பல்கலைக்கழகப் புதுமுக வகுப்புத் தேர்விற்குப் பாட நூலாக்கக் கருதியுள்ளோம்" என் முர் Gprfuri:
இவ்வாறு "கலையருவி கணபதிப்பிள்ளை" என்ற நூலிற் குறிப் பிட்டிருக்கின் ருர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள். இலக்கிய வழி விஷயமாகப் பேராசிரியரின் தூதுவராகப் பண்டிதர் ஐயா அவர்களிடம் வந்த திரு. சண்முகசுந்தரம் அவர்கள், அவ்விஷ யத்திற் பெருவெற்றியும் அடைந்தார்கள்.
திரு.சண்முகசுந்தரம் அவர்கள் அடிக்கடி திருநெல்வேலிக்குப் பண்டிதர் ஐயா அவர்களைச் சந்திக்க வருவதுண்டு பல விஷ யங்கள் பற்றியும் பேசுவார்கள் புலமையுலகைப் பற்றி ய தாகவே பேச்சுக்கள் இருக்கும். இவர்களது உரையாடலில் இருந்து புதிய பல விஷயங்களை அறிந்து அநுபவிக்கக் கூடிய தாகவும் இருக்கும்.
திரு சண்முகசுந்தரம் அவர்கள் மிகச் சமீபத்தில் பண்டிதர் ஐயாவைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிருர்கள்: ' பண்டிதமணியிடம் சென்ற நான், ஒருநாள் பேராசிரியர் கணபதிப்பிள்ளை பற்றிய பேச்  ைச க் கிளப்பினேன். இப்படிப் பண்டிதமணியை "நோண்டி"விட்டால் போதும், மணிமணியான கருத்து வெள்ளம் பெருகும். பேரா சிரியர் கணபதிப் பிள்ளையின் " காதலி ஆற்றுப்படை " என்னும்

س- 39 -س-
செய்யுள் நூல் பற்றிப் பண்டிதமணி பேசினர்; பழைய இலக்கிய வடிவை வைத்துப் புதிய பொருளைக் கையாளலாம் என்பதைப் பண்டிதமணி விளக்கினர். இதன் மறுபதிப்பை உரையுடன் வெளியிடும் படி கேட்டார். பண்டிதமணி தானும் உதவி செய்வ தாகக் கூறினர். இது கைகூடவில்லை. கலையருவியும், பண்டித மணியும் இன்று மறைந்து விட்டனர். பண்டிதமணியின் தூய எண்ணம் இன்று கைகூடவில்லை " என்கின்ருர்,
கட்டுரையின் இறுதியில், தமது ஆசையை வெளிப்படுத்து கின் ருர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள், " ஈழத்துப் புலவர் பலரின் ஆக்கங்களுக்குப் பண்டிதமணி முன்னுரை வழங்கியுள் ளார்; பாராட்டு வழங்கியுள்ளார்; சுவைக் குறிப்பு எழுதியுள் ளார். இவற்றைத் திரட்டி ஆராய இளம் தலைமுறையினர் முன் வரவேண்டும். இதை வழி நடத் த வல்லவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களே. அந்த நல்ல நாளை எதிர்பார்ப்போமாக."
நல்லநாளை எதிர்பார்த்து நின்ற திரு சண்முகசுந்தரம் அவர்கள், தாம் கொண்ட ஆசை நிறைவு பெருத நிலையில், எதிர்பாராத விதமாக இயற்கை எய்தியமை, கலையருவி கண பதிப்பிள்ளை அவர்களையும், பண்டிதர் ஐயா அவர்களையும் காணும் விருப்பினுலோ என்று எண்ணத் தோன்றுகின்றது:
அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை மரபு பிறழாமல் சுவை படத் தருபவர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் பேரா சிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் வ ர ல |ா ற் றை க&லயருவி கணபதிப்பிள்ளை என்ற தலையங்கத்தில் எழுதிஞர்கள். இந்நூல் ஒலங்கைச் சாகித்திய மண்டலத்தின் பரிசைப் பெற்ற து. துர்க்கா துரந்தரி, சிவத் தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு " சிவத்தமிழ்ச் செல்வம் " ஆக வெளிவந்தது: உபவேந்தர் பேராசிரியர் சுப்பிர பணியம் வித்தியானந்தன் அவர்கள் வாழ் க்  ைக வளத்தை கலைமகிழ்நன் " மூலம் தெரிவித் திருக்கின்றர்கள்: அறிஞர்கள் பலரதும் பாராட்டுக்களை இந்நூல்கள் பெற்றன என்பது குறிப் பிடத்தக்கது:

Page 23
- 40
பண்டிதமணி அவர்களின் பாராட்டு :
" கலைமகிழ்நன் " எ ன் னு ம் நூலை இயற்றியவர் உபவேந்தர் அவர்களின் மாணவரும், பிரபல எழுத் தாளரும். பிரசித் திபெற்ற ம க ர ஜனக் கல்லூரியின் அதிபருமான திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள்: கலே மகிழ்நனில் உள்ள அருமையும் பெருமையும் "வாய்ந்த கருத்துக்கள் கல்விமான்களுக்கு நல்விருந்து. கிடைத்தற் கரியதொரு பொக்கிஷசாலை கலைமகிழ்நன். உபவேந்தர் அவர்களையும் நூலேயும் நூலாசிரியரையும் பெரிதும் Lumpur nr. *G) Gaunt o nrs.””
என்று பண்டிதர் ஐயா அவர்கள் திரு. த சண்முகசுந்தரம் அவர்களைப் பெரிதும் பாராட்டி இருக்கின் ருர்கள்.
பேரறிஞர்கள் பலரும் வாழ்த்த வாழ்ந்தவரான பல்கலை வல்லுநர் திரு. த சண்முகசுந்தரம் அவர்கள் இவ்வளவு விரை வில் மறைந்தமை எமது தவக் குறைவையே காட்டுகின்றது:
வாழ்வு பெற்ற வல்லி
யாழ்ப்பாணத்து மாவிட்ட புரத்தைக் களமாகக் கொண்டு அங்கு கந்தசுவாமிக்குச் சோழ இளவரசி கோயில் கட்டுவதை விளக்க எழுந்த நாடகமாகும் . சோழர் காலப் பிரிவிலே தமிழகத்தில் ஆலயங்களின் வர லாறுகளை நாடகங்களாய் யாத்து ஆடும் வழக்கம் (பூம் புலியூர் நாடகம்) இருந்தது. அந்த மரபினைப் பேணு வார் போல வாழ்வு பெற்ற வல்லியைத் தல நாடக மாக ஆசிரியர் எழுதியுள்ளார்.
நாடகம் முழுவதும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவி லின் புனித மனம் கமழ்வது போன்ற மயக்க நிலையை உண்டாக்கி அதன் மூல ம் பக்தியுணர்வினை ஆசிரியர் நிறைவு செய்கிருர்,
க. சொக்கலிங்கம், எம். ஏ. ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம் 1977 usis. 167-68

கலாநிதி சி. மெளனகுரு விரிவுரையாளர், துண்கலைத்துறை, வாழ் பல்கலைக் கழகம்
இறப்பும் இழப்பும்
- தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாது கலை, இலக்கியத் துறைக்குப் பணிபுரிந்த ஒரு ஜீவன் அது -
எப்பொழுதும் தமிழ்க்கலை, தமிழ்ப் பாரம்பரியம் என்று சிந்தித்த உள்ளம் அது -
உத்தியோகத்தினின்று ஓய்வு பெற்ற பின்னரும் தினது விட்டின் ஓர் அறைக்குள் உட்கார்ந்துகொண்டு எழுதி எழுதிக் குவித்த உடல் அது -
இந்த ஜீவன் உள்ளம்; உடலின் உரிமையாளர் aytog ri த; சண்முகசுந்தரம் அவர்கள். இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனல் அவர் எழுதிய நூல்களும், அவர் விட்டுச் சென்ற சிந்தனைகளும் நம்மோடு உள்ளன.
தக்கார் தகவிலரி என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்;
திரு சண்முகசுந்தரம் விட்டுச் சென்ற எச்சங்கள் அவரது நூல்களும் எழுத்துக்களுமே, இலக்கியம், நாடகம், மக்கள் கலை, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி என்ற பல துறைகளில் அவர் நூல்களை வெளியிட்டார். நூல் வெளியீட்டில் அவருக் கென்ருெரு பாணி இருந்தது; பத்துப் பக்கங்களுக்குக் குறை யாததாய் எழுபத்தொரு பக்கங்களுக்குக் கூடாததாய் அவரது நூல்கள் இருந்தன: சிறிய நூல்களாயினும் பல தகவல் ககள அவை எமக்குத் தருபவை,
நூல் வெளியீட்டில் அவருக்கென்று ஒரு தனித்துவமான பாணி இருந்தது போலவே, அவருக்கென்று ஒரு தனித்துவ மான எழுத்து நடையும் இருந்தது:

Page 24
- 42 -
அவர் சிறப்பாகவும், விரும்பியும் ஈடுபட்ட துறை க ள் இரண்டு. ஒன்று நாடகத் துறை, மற்றது மக்கள் (கலைத் துறை அவரது நாடகங்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர் வரலாறு பற்றியவை. அவ்வகையில் அவர் ஓர் ஈழத் தமிழ் வரலாற்று நாடக ஆசிரியராகின்றர். பின்னளில் அவர் மக்கள் கலையிலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தினர்.
மக்கள் கலே பற்றியும், ஈழத்துக் கலைமரபு, இசைமரபு பற்றியும் அவர் எழுதிய நூல்கள் இத்துறையில் மேன்மேலும் ஆய்வு மேற்கொள்ள முயல்வோருக்கு வழிகாட்டிகளாகும். இன்றைய எமது தலைமுறையினருக்கு நமது பண்பாட்டின் வேர் களை அவர் நூல்கள் காட்டுகின்றன: காகப் பிள்ளையார் மான் மியம், குருவிச் சிநாய்ச்சி சலிப்பு, கண்ணகி அம்மன் கஞ்சி வார்ப் புத் தண்டற்பாட்டு, வன்னிவள நாட்டுக் கூத்து மரபு எனப் பழைய திசைகளை நோக்கி இளம் தலைமுறையினரைத் திருப்பு வன அவரது நூல்கள். யாழ்ப்பாணம் என்ற குறுகிய தமிழ் வட்டத் தினுள் நிற்காது, மன்னர், வன்னி, மலைநாடு, மட்டக்களப்பு என்று தமது தமிழ்ப் பாரம்பரியத்தை விரித்து நோக்கிய உண்மை மகன் அவர். அவர் பார்த்த தமிழ்ப் பாரம்பரியத்தி னுள் தமிழ் பேசும் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களும் அடங்கினர்
1960 ஆம் ஆண்டு தொடக்கம் அவரோடு எனக்கு உறவுண்டு. பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்த கர்ணன் போர் நாடகத்தை மகாஜனக் கல்லூரியில் 1961இல் மேடையேற்ற நாம் வந்தபோது அவரோடு அறிமுகமாகும் வாப்ப்புக் கிட்டி யது. அன்றிலிருந்து அவரோடு நெருக்கமான உறவு ஏற்பட லாயிற்று. அது தந்தை - மகன் உறவாக விரிந்தது;
இலங்கைக் கலைக்கழகத் தமிழ்நாடகப் பிரிவில் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் கீழும், பேராசிரியர் கா. சிவத்தம்பி யின் கீழும் திரு. சண்முகசுந்தரத்துடன் ஆறு, ஏழு வருடங்கள் தொடர்ந்து பணியாற்றிய காலத்தில் அவரோடு கொண்ட தொடர்பு மேலும் இறுகியது. நாடகத் தெரிவுக்காகவும், கிரா மியக் கலை நிகழ்வு ஒழுங்குகளுக்காகவும் கலைக்கழகம் சார்பில் அவரோடு, வவுனியா, மன்னர், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகட்கும் யாழ்ப்பாணத்தின் கிராமப் புறங்களுக்கும் செல்லும் வாய்ப்புக் கிட்டியது, இத் தனிவழிப் பயணங்கள் மேலும் எமது உறவைப் பெருக்கின, அவரிடமிருந்து நான் கற்றவை எவ்வளவோ,

-- 43 سس--
மிகச் சாதாரண கிராமியக் கலைஞர்களுடன் திரு. சண்முக சுந்தரம் உரையாடுவது மிகச் சுவாரஸ்யமாயிருக்கும். அவர்கள் நிலேக்கு இறங்கி அவர்களோடு உரையாடுவார். பழைய விடயங் களையும், தகவல்களையும் எமக்குரைக்கும் அவரது பாணி இன் னெரு சுவையைத் தரும். நிறையப் புதுத் தகவல்களை எப்போ தும் அவரது உரையாடல் தரும், புதுச் சிந்தனைகளையும் தூண்டும்
கூத்துக் கலையில் அவருக்கு மிகவும் விருப்பம். மக்கள் கலை யில் தீவிர ஈடுபாடு. நேரில் என்னைக் காணும் போதெல்லாம் இத் துறையிற் செய்யவேண்டிய வேலை பற்றி எடுத்துக் கூறுவார். வேலை செய்யுப் படி உரிமையோடு வேண் டுவார். கட்டுரைகள் எழுதும் படி கண்டித்துக் கடிதம் எழுதுவார்; எனது சில கட் டுரைகளுக்கு அவரது கண்டிப்புமிக்க, உரிமையோடு கூடிய வற் புறுத்தல்கள் காரணமாக இருந்திருக்கின்றன.
மனிதன் இயல்பாகவே இயங்கும் ஓர் உயிரி. எனினும் பிறரின் உற்சாகமும், ஊக்குவிப்பும் அவனை மேன்மேலும் தீவிர மாக இயங்க வைக்கின்றன. எப்போதும் நான் சில காரியங் களை யாவது செய்வதற்கு என் னை உற்சாகப்படுத் தி ஊக்குவிக்கும் சிலருள் ஒருவர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள்.
அவர் இறப்பு, எனக் கோர் இழப்பு.
வெளியிட்டுத் திட்டம் :
முல்லைப் பூங்கொத்து - 1 (த. சண்முகசுந்தரம் சிறு கதைகள்) 1. வீட்டுக்கணக்கு (தினகரன் , 24-2-80) 2. காட்டுக்கோழி (ஈழநாடு, 3-2-80) 3. உறவுகள் தொடர்கதை (சிந்தாமணி, 11-5-80) 4. இவர்களுக்காக நான் வாழ்வேன் (சிந்தாமணி, 50-l-80) Lrs: 2 võT e. av, L RE Ruaas (Fn (B. 26-10-80) 6. இறுதி ஓட்டம் (சிந்தாமணி, 12-3-85) 7. தனிப்பிறவி (கலைக்கண் , 23-3-73) 8. நடாத்துநர் வாழ்க்கை நடாத்து சின்றர் (ஈழநாடு) 9. புகையும் புகைச்சலும் (தினகரன், 28-11-82) 10. தட்பியது விந்தை (இலங்கை வாஞெலி)

Page 25
திரு. சு. சிவசுப்பிரமணி பம், B. SC, Dip. Ed.
கல்வி அதிகாரி
மாணவர்களின் முன்மாதிரி
மெது கல்லூரியில் ஏறத்தாழக் கால் நூற்ருண்டு கலைத் துறை ஆசிரியராகவும், பின் உப அதிபராகவும் கடமையாற்றிய திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் (1975) வேறுபாடசாலைக்கு மாற்றப்பட்டார். கல்லூரியின் ஆக்கப்பணிகள் அனைத்தி லும் அயராது உழைத்த அவர்கள் சமூகவியற் கழகம், தமிழ்மன்றம் முதலிய மன்றங்களின் பொறுப்பாசிரிய ராகவும் பணியாற்றினர்.
இவரது முயற்சியால் மாணவரது சிறுகதைகளைக் கொண்ட இளம் முல்லை என்ற சிறுகதைத் தொகுதி வெளியீடும் தொல்பொருளியற் கண்காட்சியும் நடை பெற்றன. இவர் சில காலம் மகாஜனன் இதழின் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
சாகித்திய மண்டலம், கலைக் கழகம் ஆகியவற்றின் பரிசுகளைப் பெற்ற இவர் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவர் இலக்கியத் துறையில் மாண வர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
ஓராண்டு உப அதிபராகப் பணியாற்றிக் கல்லூரி யின் வளர்ச்சிப் பணிகளில் எமக்குத் துணையாக இருந்து உழைத்தாசி. கல்லூரியின் மரபுகளைத் தழுவி நிகழ்ச் சிகளை நடத்துவதில் இவர் காட்டிய ஆர்வம் குறிப் பிடத்தக்கது. இவர் பழைய மாணவர் சங்க இணைச் செயலாளர்களுள் ஒருவராகவும் இருந்தார்.
அதிபர் அறிக்கை, மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை 975-06 - 2 A

முதல் முழக்கம் திரு. த. சண்முகசுந்தரம்
ஆரியமும் தமிழும்
தமிழிலே ஆரிய நாகரிகக் கலப்பினுல் ஏற்பட்ட ஆரியச் சொற்களைப் பேசும்பொழுதும் எழுதும் பொழுதும் தமிழ் மக்கள் ஒதுக்குதல் வேண்டுமோ என்ற ஐயப்பாடு தமிழ்நாட்டில் எழுந்து உலவுகின்றது. பிறமொழிச் சொற்கள் இல்லாத தூய தமிழில் எழுதவேண்டும் என்பர் ஒரு சாரார். பிற மொழிக் கலப்பு சொல்வளம் பெருக்கும். அதனல் தமிழ்மொழி ஆங்கில மொழியைப் போலச் சொல்வளம் பெருகி நிற்கின்றது. ஆகை யால் பிறமொழியை அகற்றுவது தமிழ்மொழிக்கு மெலிவைக் கொடுக்கும் என்பர் மறுசாரார். இருவர் கூற்றும் ஒவ்வோர் அளவுக்கு உண்மையுடைத்து. இ க் கூ ற் றை ஆராயுமிடத் து ஆங்கில மொழியின் நிலையைச் சிறிது எடுத்துக் கொள்ளலாம்; ஆங்கில மொழி அங்குளோ - சாக்குசன் (Anglo-Saxan) என் னும் மொழியை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது. காலத் துக்குக் காலம் அவர் நாகரிகத்தோடு கிரேக்க, உரோம மொழிகளும் கலைகளும் போய்ச் சேர்ந்ததன் காரணத்தால் இவ்விரு மொழிச் சொற்களையும் பெரும்பாலும் கையேற்றது. இம்மொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் ஆங்கிலத் தின் பண்டை உருத்தெரியாது மூடிவிட்டன. இன்று ஆங்கிலத் தின் நிலை இரங்கற்பாலது. ஏன் எனில், ஆங்கிலம் எள்ளள வேனும் தனித்து நிற்கமுடியாது. நிற்க, ஆங்கிலமொழிக்கு நடந்தது தமிழ் மொழிக்கு நடந்தது:
பண்டைக் காலத்தில் ஆரியமும் தனது பண்பாட்டையும் கலைவளனையும் தமிழ் மொழிக்குள் செலுத்த முயன்றது அமை யாது தமிழ் மொழியையும் உருக்குலைக்கப் பெரிதும் முயன்றது. தமிழ் மக்களுடைய பண்பாடுகளும் கலைகளும் மிகவும் ஓங்கி யிருந்தமையாலும் பழையனவற்றை இலேசிலே கழித்துவிடும் தன்மை தமிழ் மக்கள் இயல்புக்கு மாருனதாகையாலும் இவ் வாறு அடித்த ஆரியப்புயலில் தப்பித் தலைநிமிர்ந்தது தமிழ். ஏனெனின், இவ்வாறு வந்த சொற்களும் கலைப் பண்புகளும் தமிழ்மொழிக்கே இன்றியமையாதனவாக முடியவில்லை. ஆரியம் தமிழுக்குப் பக்கத் துணையாகவே நின்றுவந்தது. ஒரு பக்கத்

Page 26
துணையை யாம் வேண்டிய நேரத்தில் தீயன் எனக் கண்டால் அகற்றிவிடலாமல்லவா? அதே போலத் தமிழ் மொழியும் ஆரியக் கலைப் பண்பையும் அதன் சொற்களையும் வேண்டிய நேரத்தில் அகற்றிவிடலாம். கிரேக்க, உரோம மொழிகள் ஆங்கில மொழியை உருக்குலைத்தது போல ஆரியம் தமிழை உருக்குலைக்க வில்லை. இஃது தமிழ்மொழியைப் பேசினுேரின் ஆற்றலுக்குச் சான்ரு கும்,
ஆரியர் தமிழ் மொழியை உருக்குலைப்பதற்கு எ டு த் து க் கொண்ட முயற்சியை இன்னும் கைவிட்ட பாடில்லை. பண் டைக்காலம் தொட்டு தமிழ் மக்களுக்குள் வழங்கிவந்த எத்த னையோ தூய தமிழ்ச் சொற்கள் எடுத்தாளுவாரற்று ஒரு மூலை யிற் கிடக்க அவைக்குப் பதிலாக ஆரியச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையும் எடுத்து ஆளுவது என்பது எங்கனம் பொருந்தும்? எமது மொழியில் அவை அவைக்கு வேண்டிய சொற்கள் இல்லாத காலத்து ஆரியத்திற்கோ பிறமொழிக்கோ அச்சொற்களைக் கடன் கேட்டுப் போவதே முறை. அவை மொழி யில் கிடக்க அவற்றிற்குப் பதிலாக வேறு மொழிகளுக்குப் போவது முறையாகுமா? இவ்வாறு பிறசொற்களைப் பாவித் தால் சிரிப்புக்கு இடமாகமாட்டோமா?
-இளங்கதிர், இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க மலர் மலர் 1, இதழ் 1, 1948 - 1949
(திரு த. சண்முகசுந்தரம் நிறுவக ஆசிரியராக இருந்து வெளியிட்ட இளங்கதிர் இதழில் இதழ் ஆசிரியன் குறிப்புரை என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி.)
திரு. சண்முகசுந்தரம் அவர்கள் எழுதிய நாவல்கள் 1. மீனுட்சி (நூல்), சுதந்திரன், 10-5-53 முதல் 2. ஆசை ஏணி, சுதந்திரன் 20-6-54 முதல் 3. நாகமணி, தினகரன் க. நடுங்கியது) விதியின் கை, சிலம் பொலி 5. அணையாத அகல்விளக்கு, கையெழுத்துப் பிரதி

திரு. த. சண்முகசுந்தரம்
பாவலரும் பாரதியும்
பாரதியாருக்கும் பாவலருக்கும் தலைப்பாகை உண்டு ஒளி மிக்க கண்கள் உண்டு மீசையுண்டு. பாரதியாரின் குரல் தமிழ் அணங்கின் அருளாற் கிடைத்த உணர்ச்சிக் குரல். பாவலரின் குரல் முன்செய்த புண்ணியம் திரண்டு நாவுக்கரசர் பாதை யிற் செல்ல வைத்தது. அதன் எதிரொலிதான் பாவலரின் செய்யுள். பாரதியாரின் துடிப்பை உணர்ச்சிக் குமுறலை, ஆவே சத்தை, சொல் முறுக் கைப் பாவலரிடம் காணவில்லை எனலாம்: பாவலர் அடக்கமாக ஆழ்ந்த கருத்தைப் பழகு தமிழில் அள்ளி அழகாகச் சொரிந்தார்.
பாரதியாரைப் போலப் பாவலரும் இலகு தமிழ், பழகு தமிழ், இனிய தமிழை விரும்பினர். இருவருக்கும் இசைத் தமி ழிற் பெருவிருப்பம் இருந்தது. இதனைப் பாவலரின் கீதரசமஞ்சரி முன்னுரையிலே காணலாம் இசைத் தமிழின் மேன்மையை நன்குணர்ந்த பாவலர் சங்கீத மகத்துவம் பற்றிப் பாடியுள்ளார்
மலையைக் காணத் தூரம் வேண்டும் பெரிய நிகழ்ச்சிகளை மதிப்பிடக் காலம் வேண்டும் " என்பர் ஆன்றேர். பாரதியா ரைச் சிறியதொரு வேதாந்தச் சிமிழிலோ அல்லது புலமைச் சிமிழிலோ அடக்கிவைக்க முயற்சி செய்தனர் செய்யுள் நலம் ஆய்வோர். பாரதியார் அதற்கு அப்பாற்பட்டவர். அதே போன்ற விதி பாவலருக்கும் ஏற்படக்கூடாது பாவலர் பிறந்து நூறு ஆண்டுகளாகின்றன. அவரின் பன்முனைத் தொண்டிஆன மதிப்பிட ஏற்றகாலம் இதுவேயாம்.
* புலமைக் குரல்கள் ” பாவலர் துரையப்பாபிள்ளை நூற்ருண்டு விழாமலர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1972

Page 27
இறுதி மூச்சு
திரு. த. சண்முகசுந்தரம்
வள்ளி திருமண வேட்டைத் திருவிழாப் பாடல்
“ தமிழ் மக்களைப் பொதுவாசவும் யாழ்ப்பாணத்து மக்க ளேச் சிறப்பாகவும் கவர்ந்த கதை இரண்டு. ஒன்று கண்ணகி கதை இரண்டு வள்ளி திருமணக் கதை. இந்த இரண்டு கதை களும் தமிழன் கண்ட அன்பு நெறியில் அடங்கும். இவை இரண்டும் பேரிலக்கிய வடிவில் சிலப்பதிகாரத்திலும், கந்த புராணத்திலும் இடம்பெறும். அதே நேரம் இக்கதைகள் மக்கள் இலக்கியத்தில் மாறுபட்டு வேறுபட்டு இடம்பெறும். இக் கதைகள் யாழ்ப்பாணத்தில் கூத்தாகவும், நாடகமாகவும், உடுக்குப் பாட்டாகவும், வில்லுப் பாட்டாகவும், இசைச்சொற் பொழிவாகவும் இடம்பெறும்.
வள்ளி திருமண வேட்டைத் திருவிழாப் பாடல் நாட்டார் இலக்கியத்தில் அ ட ங் கும். யாழ்ப்பாணத்து கோயில் களில் " வேட்டைத் திருவிழா " மிகவும் முக்கியமானது; முருகக் கடவுள் வேட்டைக்குச் சென்று வள்ளியைத் தினைப்புனத்தில் கண்டு அன்பு கொண்டு திருமணம் புரிவதையே இத்திருவிழா உணர்த்தும், "
திருமணம் புரிந்த இவர் இளைப்பாறி இருந்த பின்னர் இளைப்பாறுவார். எழுந்தருளி வந்து கோயில் பிரதான வாயிலை அடைவர். தெய்வானை அம்மையார் கதவை அடைத்துப் போடு வார். அப்போது கோயில் உட்பகுதியில் ஒருவரும் வெளிப் பகுதியில் ஒருவருமாக நின்று பாடலைப் படிப்பர். வெளியே நிற்பவர் முருகன் கூற்றையும், உள்ளே நிற்பவர் தெய்வான கூற்றையும் படிப்பர் ஈற்றில் தெய்வானை கதவைத் திறந்து விடுவார். மீண்டும் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக இருந்து அன்பருக்கு அருள் சுரப்பர். இதுவே வேட்டைத் திரு விழாவின் பொருள்:

T, SHANMUGASUNT HARAM
Free Education & Mohajano
Eaactly fifty two years ago Visions of Mahajana sprang up in the mind of the illustrious Founder. His was a vision of service to the community. In many urays the founde" teras the fore - runner of new ideas. His life was dedicated to the service of the community - a com munity which teras subject to humiliation by the colonial government. He wanted to Stir the imagination of the community. Though the Founder may not have given big sounding phrases and cliches to his dreams yet he fully realised the needs of society. He had a clear grasp of things. His ideas after the lapse of half a century, remain fresh even today. He wanted Mahajana to reflect the aspirations, and ideals of the community. He has his own system of Free Education in the age of the 'fee leving system.' The needy children teere alta'ays given free tuition, He made Saivaism the bed-rock of his educational system.
........... Service to the community is nothing new to Mahajana. In fact she is steeped in that 'tradition. She can proudly boast of traditions and standards which are exclusively her own. Mahajana is doing her best to keep the torch of learning alive,
-Editorial, Mahajanan - 1962

Page 28
பொருள்நூல் அறிஞர் புலவர் நா. சிவபாதசுந்தரஞர் தமிழ்நிலை, தொல்புரம்
தமிழ் மணம் கமழச் செய்தவர்
திரு. த. சண்முகசுந்தரம் மகாஜனுவுக்கு வந்த பிறகு அவர் யார்? முதலான செய்திகளை நன்குணர்ந்து கொண்டேன். அவரின் தந்தையாரும் எனது தந்தை வழிக்குடும்பத்தினரும் திரு. சு. சிவபாதசுந்தரம் பீ. ஏ. அவர்கள் மூலம் நெருங்கிய நட்பினராவர். அதற்கேற்ப அவர் மகன் த. ச. வும் என்னேடு நெருங்கிய நட்பின ராய் இருந்தார். எனது உலகியல் விடயங்களில் இருக் கும் அசட்டைத்தனத்தை அடிக்கடி அறிவுறுத்தி வழிப் படுத்துவார். அவர் மகாஜனுவுக்கு வந்த பிறகு தனித்து மலர்ந்த ஆங்கில மணத்திலே நறுந்தமிழ் மணத்தை ஏற்றி ஆங்கில மனத்தை மடிய வைத்ததற்கு அவர் ஆற்றிய அருமைப்பாடு'தனித்தமிழ் நெஞ்சஞகிய எனக் குத்தாள் நன்கு தெரியும் அவர் என் தமிழ் வாழ்வுக்கு ஆற்றிய வழிகாட்டல் எண்ணினுல் மனம் கலங்காது இருக்கமுடியாது. தனது நன்றும் தீதும் நவின்று தனக் கென்ற தனிநடை போடும் விவேகி எம்மை விட்டு நீங்கியது கவலையாளுஅலும் இந்த இயற்கை நிகழ்வை நாம் அமைதியாய் ஏற்பதே அறிவுடைமை. ஆகவே நீங் கள் எல்லோரும் ஆறுதல் அடையுங்கள். நல்ல கமூக விஞ்ஞான அறிஞனை ஈழத்தமிழகம் இழந்துவிட்டது. என்பதில் ஐயமில்லை. அவர் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவன வணங்குவோமாக,
சாத்தி சாந்தி!! சாந்தி!!!

திரு. சி. சிவமகாராசா தலைவர், யாழ். தேசிய கூட்டுறவுச் சபை, தெல்லி ப. நோ. கூ. சங்கம்.
ஆற்றல் மிகு அறிஞராய் அரிய பணிகளாற்றிய பெருந்தகை
மனிதப் பிறவி மாண்புமிக்கது. அரிதாகக் கிடைப்பது அப்பிறவி தன்னலவுணர்வோ டினேந்திடுமானல் அதஞல் எப் பயனுமிருக்க முடியாது. அது பொதுநலவுணர்வுடன் பொருந்தி நிற்கும்போது பெருமையுறுகிறது. இப்பெருமைக்குரியவர்களாக வெகு சில ரையே நாம் காணமுடிகிறது. அமரர் சண்முகசுந்த ரமும் அத்தகையோர் வரிசையிலே வைத்தெண்ணப்படவேண் டிய அறிஞரே8
ஒரு தேசிய இனத்தின் எழுச்சியை, உணர்ச்சியை, பண்டைப் பெருமையை உணர்த்திடப் பேணு முனையே உயர்ந்த கருவியாக அமைகிறது. இந்த அற்புத ஆயுதத்தைத் தக்க வகையிற் பயன் படுத் தி யாழ்ப்பாணப் பகுதியின் கலைப் பாரம்பரியத்தை அனை வர் கவனத்துக்கும் கொண்டு வருவதில் அயராது உழைத்தார் அந்த அறிஞர். மரபுவழித் தமிழ் நாடகங்களின் சிறப்பையும், அதனைக் கட்டிக்காத்த கலைஞர்தம் பெருமையையும், அக்கலே சிறந்து வளர்ந்த சமூகப் பின்னணியையும் எதிர்காலச் சந்ததி அறிந்திடும் வகையிலே தன் எழுத்தாற்றலால் வெளிப்படுத்தி ஏற்ற மிகு பணி புரிந்தார் திரு. சண்முகசுந்தரம் அவர்கள்: அகில இலங்கைக் கலைக் கழகத்தின் தமிழ் நாடகக் குழு உறுப் பினராக விளங்கிப் பயன்மிகு பணிகள் பலவற்றை 'ஆற்றிஞர்,
பொதுப்பணித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாதவாறு அவரை நினைவுறுத்திக்கொண்டே யிருக்கும். குறிப்பாக சமூக பொருளாதார மறுமலர்ச்சிக்கு அத்திவாரமாக விளங்கும் கூட்டுறவுத் துறையில் அவர் அதிக ஈடுபாடு காட்டிஞர்g தெல்லிப்பளைக் கூட்டுறவு மருத்துவ மண் யின் வளர்ச்சிக்கு, அதன் செயற்படு உறுப்பினர்களில் ஒருவராக

Page 29
- 52
இருந்து பெரும் பணியாற்றிஞர். அந்நிறுவனம் நலிவடைந்து கொண்டிருந்த காலகட்டங்களில், அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவையாகவன்றி அக் குளத்தின் மலர்த் தாவாரங்களைப்போல் ஒட்டியிருந்து அதனைக் காக்க அருந்தொண்டாற்றிய பெருந்தகை egy 6l T.
சிறந்த ஆசிரியனக ஆற்றல்மிகு மாணவ சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிய அந்த உத்தமர் அரசியலில் தெளிவான, உறுதியான கொள்கைப்பற்றுக் கொண்டவராக விளங்கினர். இயல்பாகவே தழிழுணர்வால் உந்தப்பட்ட அவர், தந்தை செல்வாவின் அரசியற் பாதையை ஏற்று அவ்வழியிற் பிறழாது சென்றவர்: நுண்மாண் நுழைபுலம் மிக்க அந்தப் பேரறிஞரின் மறைவு தமிழ்க் கலைத் துறைக்கு, கூட்டுறவுத் துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னரின் குடும்பத் தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அந்த அறிஞர் ெேபருமகனின் ஆன்மா அமைதி பெற அஞ்சலித்து
கலேயருவி கணபதிப்பிள்ளை
கலையருவி கணபதிப்பிள்ளை நூலாசிரியர் த; சண்முகசுந்த ரம் தாம் அறிந்த பேராசிரியரை வாசகருக்குச் சிறப்பாகச் சித்திரித்துக் காட்டுகிருர் ஆயினும் தன் கூற்ருக மட்டும் செய்திகளை அவர் விவரிக்கவில்லை; பேராசிரியரது எழுத் துக்களைச் சான்ருகக் கொண்டும், இடையிடையே அவ ரையே பேசவைத்தும் அவரது இயல்பையும் பெருமை யையும் வாசகர்களுக்கு ஆசிரியர் உணர்த்துகிருர், தற் சார்பும் புறநிலை நோக்கும் அளவோடு அமைந்து நூலுக்கு நலஞ் செய்கின்றன: பேராசிரியரின் ஆளுமையும் அவரது பங்களிப்பின் மகத்துவமும் எதுவித மயக்கமுமின்றித் தெளிவாக நூலிலே துலங்குகின்றன.
-பேராசிரியர் க. கைலாசபதி, 'அணிந்துரை', கல்யருவி கணபதிப்பிள்ளை, கலைப்பெருமன்றம், தெல்லிப்பழை. 1974

திரு. வேல் அமுதன் அதிபர், மதி அக்கடமி, ஊரெழு, தலைவர்-மகவம்
தசம் சய நான்
நான் "நானுக" உருவாக்கப்பட்டேன். இவ்வுருவாக்கலின் நிர்மாணிகள் சிற்பிகள் யார் ? பாவலர் தெ. அ. துரையப்பா பிள்ளை முதற்கொண்டு திரு வ: இராசையா ஈருக ஒருசிலர் இப்பட்டியலில் உள்ளடங்குவர், இவர்களுள் மேலா ன ஒரு இடத்தை வகிப்பவர் எனது ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. த. சண்முகசுந்தரம் ("தசம்" 1 அவர்கள்
மகாஜனவில் Prep. S. S. C. வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த வேளை, ஒருநாள் குடியியற் பாடம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, என்ன நான் முற்று முழுதாக மறந்து, "சூழ்ச்சி வலை" என்ற நாவலை எழுதிக்கொண்டிருந்தேன்; பாடத்தைக் கவனிக்காத காரணத்தால் ஆத்திரம் அடைந்தார் ஆசிரியர். எனது கையெழுத்துப் பிரதிகளை பிடுங்கி எடுத்தார்: ஆணுல், ஆசிரியர் என் குற்றத்திற்கு என்னைத் தண்டிக்கவில்லை; மாரு க. நேசித்தார். ஆதரித்தார். வழிகாட்டினர். நான் அவர் வழிகாட்டலில் வளர்ந்து "நான"னேன். இந்த அதிசய ஆசிரியர் வேறு யாருமல்ல; திரு, த. சண்முகசுந்தரமேதான்
திரு தசத்தின் உதவி - ஊக்குவிப்போடு இலங்கை சாகித் திய மண்டலப் பரிசு பெற்ற "மாரீசம்' உட்பட தான் எழுதிய நூல்கள் நான்கு எனது முதல் நூலான "அறுவடை"க்கு அணிந் துரை வழங்கி என்னை எழுத்துலகில் அறிமுகம் செய்தவரும் இவரே.
1970ஆம் ஆண்டு பரவலான அறிவுப்பணிகளுக்காக "இலங் கை அறிவு இயக்கம்" உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலக்கிய ஊக்குவிப்புக்கெனத் "தமிழ்க் கதைஞர் வட்டமும், நூற் பிரசுரப் பணிக்கு "வேல் வெளியீட்டகமும், வள்ளுவப் பிரசாரத்திற்கு ‘வள்ளுவர் மாமன்றமும் உருவாக்கப்பட்டன.

Page 30
جسے 54 --
இப் பொதுப்பணி மன்றங்களைக் கட்டியெழுப்பி, பயனுள்ள அமைப்புக்களாக்க உழைத்தவர்களுள் தசம் அவர்களும் முக்கி யமான ஒருவர்.
பொதுப் பணி மன்றங்களின் உத்தியோக பூர்வமானதும், உத்தியோக பூர்வமற்றதுமான அலுவலகம் எமது தலைநகர் இல்லமே எமது இல்லத்திற்கு முழுக்க முழுக்க மன்றப் பணி களுக்கென மர்விட்டபுரத்திலிருந்து கொழும்புக்கு சிரமத்தி னையோ, செலவினையோ சிந்தித்தும் பாராது அடிக்கடி வந்து பணிபுரிந்தவர் தசம் அவர்கள்.
தசம் அவர்கள் உடல் உழைப்புப் பற்ருக்குறையாகும் வேளை உடல் உழைப்புத் தருவார்; சிக்கலில் சிக்கித் தவிக்கும் வேளை வழிகாட்டி அழைத்துச்செல்வார்; நிதி நெருக்கடி வேளையும் கைகொடுப்பார்.
தாம் 1983ஆம் ஆண்டும், 1985ஆம் ஆண்டும் அகதியாக் கப்பட்டோம். பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை. இல்லான இல்லாளும் வேண்டாள். ஈறெடுத்த தாயும் வேண்டாள். ஆணுல், தசம் இதற்கு விதி விலக்கு உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைந்து, எமக்குத் துணை நின்ற தெய்வம். இன்று தசம் இல்லை. தசம் சய நான் சமன் கேள்விக்குறியே ..?
வெளியீட்டுத்திட்டம் :
முல்லைப் பூங்கொத்து - I (த. சண்முகசுந்தரம் சிறுகதைகள்)
1. சுமை இறங்கிய சுகம் (சிந்தாமணி, 16.8-86 ) 2. ஒரு பிடிமண் (தினகரன்) 3. தாய்மை வெள்ளம் (சங்கமம் 74) 4. கடவுளே (இளங் சதிர் , 1949) 5. நாயும் தத்துவ ஞான g t (gen ti, 1949) 6. 6 ynaga di s yg g ib (Soz. 26-8-51) 7. வறுமையின் வேதனை (சுதந்திரன்) 8. தங்கப்பதக்கம் (தின சரன் , 19-11-50) 9. சந்தையுள் கனிந்த காதல் 10. எங்க ளுக்கு இடமில்லையடா.

,ർമ ീiഗ്ഗരiർd مریم،
SSSAS MLL S Aq qq MMM M SSMMM M MMM LLL SSq qMMM LL LLL LLL LLLL SSSSSSiSS qeSTqT LLLSLL00LLL S SSLS LLLLL S LLLL S0LLSLLLSLq qLL LL LLL LLL LLLL LLL LLLLLL L0LSLSLSLSLS S
SSS AqAM LLLL MMM MqMqM LLL M MAAM LLLL MMSAq SY LLLLSL LMLML LL LM LLLL0A MMqM SLMS MAAA 0LLLLLLL LLL 0LLL LL0L 0LL
Yours Sincerely, ތޅތތތބީ/ކިޓީތޤތތ4/އއާޔަ% ކޯ ހްރި ހޯ،
Letters from Thanthai Selva )
18th January 1953 :
If you have the time to spare will you consider writing something either on the form of a contributed articlet, or an editorial in the Suthan thiran in reply to the Daily News Political correspondent's attack on Chari's statement about the Ceylon Government's policy in squeezing out people of Indian descent...
21st May 1953
I thank you for many of your suggestions. I agree tha I donot give much time to the editing. It is due to unfortur nate limitations on my time. I shall endeavour to remedy this before long. I am sending Jour letter and a copy of this reply to the Editor.
15th Sept. 1953
I read through the articles. It was written in simple attractive Tamil prose and the contents were commendable. That indicates the line in which the Tamil world of the future should develop. However, I am informed that the ideas were taken from Annathurai's book "The People's Poet." It does not matter even if that be so.
I have no objection to your seeing N. (Navaneetha) Krishna Parathy. I know him well over 30 years. Having heard of his Tamil Scholarship I sought a meeting with him. After the meeting I was disappointed. He was devoid of modern knowledge

Page 31
س- 56 --
altogether. We cannot build a 21st century Tamilakam with 18th Century Pundits. My aim is to utilize the attitude, ability and knowledge of English educated men who are competent in Tamil. Dr. S. Withiananthan appears to be one such judging from his article.
23rd Sept. 1953
I enclose for your perusal and return, one Sundararojan's letter to me with the cutting and a copy of my reply. I am not writing this to find fault with J'ou. I fully appreciote your goodwill and support. I only wish you to understand the difficulties and troubles of a person who is responsible for running a paper.
I also enclose Uwise's book for your considered and balanced review',
Темисиial
S, J. V. Chelvanayakam 29th, June 1971.
I know Mr. Sharmugasuntharam for over ten to fifteen years. I know him very well.
He is a fine type of a gentleman. He is a teacher and does that work very well. During his spare time, he does honorary work for a Co-operatiye Hospital. At that hospital he does administrative work and does that very efficiently.
Mr. Shanmugasuntharam is a man of high principle He is a person of high integrity and howesty. He bears an excellen moral character.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தலைவர்,
நுண்கலைத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நினைவின் நிழல்கள்
“ஷ்ண் காலமாகிவிட்டார்" என்ற குண்டை நடுமத்தியா னத்தில், இரண்டொருவரேயிருந்து தனித்துப் போய்க் கிடந்த *சிரேஷ்ட பொது அறையில் எடுத்து வீசிவிட்டு அந்த மாணவி சென்றுவிட்டாள், காகத்தின் கரைதலையே உற்றுக் கேட்கவைக் கும் வெப்ப மத்தியான வேளை
அதிர்ச்சியிலிருந்து விடுபட வேறு ஏதோ ஒரு அத்தியாவசிய அலுவல் வந்தது.
சண்முகசுந்தரம் " இறந்து போயிருக்க முடியுமா?" என்ற எண்ணம்தான் மீண்டும் மீண்டும் மனமூடியைக் கீழிருந்து தள்ளிக்கொண்டிருக்கிறது; m
நான்கு நாட்களுக்குப் பிறகுதான் மாவிட்டபுரத்திற்கு அவர் வீட்டிற்குச் செல்லக்கூடிய "வாய்ப்பு" ஏற்படுகிறது; வாய்ப்பு என்ன "பயனச் சூழல் ஏற்படுகின்றது;
திருமதி சண்முகசுந்தரம் சொன்னது அந்த மாணவி எறிந்து விட்டுச் சென்ற செய்தித்தாக்கத்தினையும் மீறிச் சென்று உயி ரைக் கவ்விப்பிடிக்கின்றது. "ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் தனக்குப்பிடிச்ச ஆக்களையெல்லாம் பாக்கவேணுமெண்டு சொன் ஞர். உங்களை எங்கே யெண்டபொழுது, வித்தியர் தான் சொன் ஞர் சிவத்தம்பியும் ஆஸ்பத்திரியில எண்டு.”
மரணம் அணைக்கிறது என்ற வேளையிலே எனக்குத் தனது காட்சி மாட்சியைத் தரவிரும்பினுரோ?
ான்மீது எனக்குள்ள வெறுப்பு மேலும் கூடுகிறது. இத்தகைய நட்புக்களை இனியும் காணமுடியுமா..? நண்பர்களாக நடித்தவர்களிஞல் ஏற்பட்ட சில தீக்குளிப் புக்களின் பின்னர் இந்தச் செய்தி என்னைக் கூனிக் குறுகவைக் கின்றது.

Page 32
-س- 58 --س-
சிலரைப்பற்றி எழுதும்பொழுது அவர்களைப்பற்றி எழுத லாம். விரிவாக, காய்தல் உவத்தலின்றி, விமர்சன ரீதியாக எழுதலாம்.
ஆனல் வேறுசிலரைப்பற்றி எழுதும்பொழுது எழுதுபவன் தன்னைப்பற்றியே எழுதுபவனுகும் ஒருநிலைமை ஏற்பட்டு விடு கிறது;
எழுதப்படுபவன் எழுதப்படும் சந்தர்ப்பம் எழுதப்படுபவனுக்கும் எழுதுவோனுக்கு
முள்ள உறவு எழுத்தின் )3 מןff 60) Lמ இவை நான்கும் முக்கியமானவை:
திரு. சண்முகசுந்தரத்தைப் பற்றி இன்று நான் எழுதும் பொழுது அந்த ஒரு நிலைதான் சித்திக்கிறது; வேறுவகையாக எழுதமுடியாத ஒரு நிலை;
நமது பண்பாட்டில் மரணம் பிரதானமாகக் குடும்ப இழப்பே.
ஆனல் குடும்பம் என்பது தனியே வம்சவழிபற்றியது மாத்திர மல்ல; அது உற்றவழியையும் (உற்ருf வழியையும்) உள்ள டக்கியது. அந்த வழியிலும் குடும்பங்கள், இனசனங்கள் தோன் றலாம் .
"ஷண்", கைலாசன், சிவகுருநாதன், கதிர் காமநாதன், அருணுசலம், வித்தியர், தங்கராசன், நான் இப்படிச் சிலர்நாங்கள் - கணபதிப்பிள்ளையர் ( பேராசிரியர் க. கg ) குடும்பம் அந்தக் குடும்பத்தின் தமையன், தம்பிமார் கணபதிப்பிள்ளை யரின் "டேப்" உரிமையின் வாரிசுகள்:
இவர்களில் எவராவது ஒருவர் மற்ற வரைப்பற்றி எழுத நேர்ந்தால் அவர் தன்னைப்பற்றியே எழுதநேரிடும் அல்லாவிட் டால் நிச்சயம் அந்த எழுத்து உண்மை உணர்வுகளை வெளிப் படையாகக் கூறமுடியாத ஒரு நிர்ப்பந்தத்தில் எழுதப்படுபவை யாகவே இருக்கும். அப்படித்தான் நான் நினைக்கிறேன்;
*ஷண்"ணைப்பற்றி எழுதும்பொழுது அதுவும் இந்த நினைவஞ் சலியில் எழுதும்பொழுது வேறு எந்த வகையிலும் எழுத முடிய வில்லை.
இவ்வாறு சொல்லும் பொழுது திரு சண்முகசுந்தரம் அவர் களின் சாதனைகளை மறந்து தன்வயப்பட்டு நிற்கின்ருேமென் பு தல்ல நிறையவே நினைக்கின்ருேம்.

-- 59، ----
ஈழத்து தமிழ்க்கலை, இலக்கிய உலகில் சண்முகசுந்தரத்தின் பிரதான சாதனைகள் என எதிர்ப்பு மறுப்புக்கிடமின்றி முன் வைக்கப்பட வேண்டியன நான்கு உள்ளன.
முதலாவது, பாவலர் துரையப்பாபிள்ளையின் மீள் கண்டு பிடிப்பாகும் சண்முகசுந்தரம் இல்லையேல் பாவலர் துரையப்பா பிள்ளையின் எழுத்துக்கள் அச்சேறியிருப்பது சிரமமே. மேலும் துரையப்பாபிள்ளை பற்றிய ஆய்வுகளை எவ்விதம் ஊக்கி னுர் என் பது எமக்குத் தெரிந்த உண்மையாகும். இந்த ஆய்வுகள் கார ணமாக நாவலருக்குப் பின்வந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத் தில் ஏற்பட்ட மத, கல்வி, சமூக நிகழ்வுகள் பற்றிய தெளி வான விளக்கமும் வரலாற்று முக்கியத்துவமும் கிடைத்தன.
இரண்டாவது, சண்முகசுந்தரம் அவர்களின் எழுத்து ஈடு பாடாகும். இந்த எழுத்து ஈடுபாடு, யாழ்ப்பாணத்துப் பண் பாட்டு வரலாற்றை எழுதுவதற்கான மூலங்களாக, பிரச்சினை மையங்களாக அமைந்துள்ளவை "நாவலர் தரும் மேலாண்மை காரணமாக அழுத்தம் பெருது போன சில பெரும் பாரம்பரிய அம்சங்களும் ( வீர சைவமரபு. இசைப் பாரம்பரியம் முதலா னவை ) இந்தப் பெரும் பாரம்பரிய அமிசங்களின் தளமாக அமைந்த சில சிறுபாரம்பரிய விடயங்களும் (குளுத்திப்பாட்டு முதலியன) திரு. சண்முகசுந்தரத் தாற் சிறுச் சிறு நூல்களாக எடுத்து வற்புறுத்தப்பட்டன. இவை இனி வரன்முறையாக ஆராயப்பட வேண்டும்.
மூன்ருவது வன்னிப்பிரதேசத்தின் முக்கியமாக, முல்லைத்திவுப்
பிரதேசத்தின் பண்பாட்டு மீள் கண்டுபிடிப்புக்கு அவர் ஆற்றிய நிமித்த காரணப் பணிகளாகும். இதுபற்றி முன்னரும் வற்புறுத் தப்பட்டுள்ளது. அவர் ஒழுங்கு செய்து இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ்க் கலைக் குழு 1975இல் நடத்திய வன்னிவள நாட்டுக் கலைவிழாவும், அவ்விழா பற்றிய விமர்சனங்களும் வன் னிப்பிரதேசத்துக் கலைகளின் செம்மை, வன்மை பற்றிய ஆய் வுக்குக் காரணமாக அமைந்தன.
நான்காவது, அவர் தகவத்தின் சின்னமாய் அமைந்தமை. இது நவீன தமிழிலக்கியத்தில் அவருக்குள்ள ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுவதாகும்.
ஆனல் இந்தச் சாதனைகளின் முக்கியத்துவத்தை உ ை7 ம் அறிவுத் தொழிற்பாட்டையும் மிஞ்சி நிற்கின்றது, உணர்ச்சி பிதி யாக அவரின் மறைவு ஏற்படுத்தியுள்ள தாக்கம்.

Page 33
ܚ- 60 ܗܗܗܗ
தம்பியைத் தமையன் அதுவும் கட்டுக்கடங்காத தம்பியை அவன் எதிர்காலத்தில் திடநம்பிக்கை கொண்டிருந்த தமையன் வழிநடத்தியது போன்று தனது புத்திமதிகளால் ஆம் நூறுப்படுத் தியவர் " ஷண் :
இந்தப் புத் திமதிகளினல் ஒருமுறை எமக்கிடையே உறவின் மெளனமும் ஏற்பட்டதுண்டு:
நான் எப்பொழுது இலக்கிய ஆராய்ச்சியிலிருந்து வழி தவ றினேனே அப்பொழுதெல்லாம் என்னை, மனம் நிறைந்த ஆதங் கத்துடன் அவ்வழி போகாதே என்று கூறியவர் "ஷண்?
அண்ணன் தான்:
நான் அவரை அண்ணனுக நினைத்துப் பழகி வந்தேன்g
அவரைக் கடைசியாகச் சந்தித்த பொழுதுதான், அப்போது அவரிருந்த உடல் நிலையைப் பார்த்தபின், தான் வழக்கமான "ஷண்" பிரயோகத்தை மறந்து "அண்ணை. ஏன் ஆஸ்பத்திரிக்கு இதுவரை செல்லவில்லை?" என்றேன்:
அந்தச் சம்பவத்தைக் கூட அவர் வீட்டிற் சொன்னதாக அறிந்தேன்;
நினைவுகளின் பாரம் அமிழ்த்துகின்றது.
அவர் நினைவின் நிழலில் ஒதுங்குவதைத் தவிர இனி வேறு வழியில்லை.
திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் ஈடுபட்ட கலை, இலக்கியத் துறைகள்
சிறுகதை கட்டுரை குறுநாவல் சித்திரம்
நாவல் நூல் ஆய்வு fsnt L-as thè குறிப்பு மொழி பெயர்ப்பு மக்கள் இலக்கியம்
வாழ்க்கை வரலாறு கலைக் கட்டுரை

அஞ்சலி உரை
தலைவர்
இன்று எம்மையெல்லாம் ஆருத்துயரில் ஆழ்த்தி விட்டு ஒரு சைவத் தமிழ் மகன் உறங்கிக் கொண்டிருக் கின்றன். இப்பெருந்தகையை யான் சிறுவனக இருந்த காலத்திருந்தே நன்கறிவேன். இவரின் தந்தையார் எமது கிராமத்தில் எனது வீட்டினருகே உள்ள பாடசாலையொன் றிற் கற்பித்தார். அப்பொழுதே தமது தந்தையாருடன் வந்து அப்பாடசாலையிற் கல்வி பயின்றர். சின்னஞ்சிறு வயதிலேயே கழுத்தில் உருத்திராட்சத்துடனும் திருநீறு துலங்கும் நெற்றியுடனும் சைவ ஆசாரம் நிரம்பியவராக விளங்கினர் என எனது பெற்றேர் கூறி அறிமுகம் செய் தமை இன்றும் எனது மனதிற் பசுமையாக இருக்கின்றது.
படிக்கும் காலத்திலேயே தொடர்ச்சியாக இருதடவை அரசினரின் புலமைப் பரிசில் பெற்று ஊதியம் பெற்றுப் பயின்ற இவர் கருவில் “ திரு ' உடையவராகக் காணப் பட்டார். இவரின் பெருமை, புகழ் என்றும் நிலைத்திருக் கும். மழலைப் பருவம் முதல் மாவை முருகன் திருவடி க3ள மறவாச் சிந்தையுடன் வாழ்ந்த இப்பெரியாரின் ஆன்மா மாவை முருகன் திருவடிகளைச் சேர்ந்து அமைதி காணும் என்பதிற் சந்தேகமில்லை.
நடிகமணி வி. வி. வைரமுத்து
வசந்த கானசபா, காங்கேயன் துறை
காங்கேயன் துறை நடேஸ்வரக் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் காமிருவரும் ஒரே வகுப்பிற் படித்துவந்தோம் அந்த நாளிலிருந்து இருவரும் உடலால் வேறுபட்டாலும் உள்ளத் தால் ஒருவராக இருக்தோம். பரீட்சையில் இருவரும் சம புள்ளிகள் பெறுவோம். வகுப்பின் முதல் மாணவன் பார்

Page 34
- 62 -
என்பது கேள்வி. நண்பன் சண்முகசுந்தரம் சொல்வார். என்னையும் சேர்த்து “நாமிருவருமே” என்று. அந்தப் பண்பு அக்காலத்தில் யாரிடமும் தோன் ருத ஒன்று. அதை நினைத்து இன்றும் நினைவு கூர்ந்து கலங்குகின்றேன்.
இறுதிக்காலம்வரை அவர் முத்தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியது. நான் அதை விரித்துக் கூறவேண்டியதில்லை. ஈழத்து முத் தமிழ் வல்லுநர்கள் அனைவருக்கும் அவர் பெருமை-சிறப்பு-அனைத்தும் தெரியும்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு, எனது கலே, வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவர் செய்த உதவியை என்றுமே மறக்க முடியாது. எனது கலைநிகழ்ச்சிகளே ஒழுங்கு செம்யும்படி பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் இவர் மூலமாக அறிவிப்பார்கள், அதை ஏற்று தாம் ஒரு பட்டதாரியாக இருந்தும் எனது குடிசைக்கு வந்து அதை நிறைவேற்ற ஆலோசனை கூறும் பண்பும், உதவியும் என்றுமே மறக்க முடியாதவை.
திரு. இ. இளையதம்பி இளைப்பாறிய மரக் கூட்டுத்தாபன அதிகாரி.
ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், கலைஞர், விமர்சகர் ஜாலாசிரியர், தமிழறிஞர், ஆய்வாளர் என்ற வகையிற் பலரின் கவனத்திற்கும் மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியவராக விளங் கியவர் அமரர் த. சண்முகசுந்தரம் அவர்கள். தன்னுடைய ஆய்வு முயற்சிகளையும் எழுத்தாற்றலையும் மக்கள் கலைகளிலும் பொழுது போக்கு அம்சங்களிலும் ஈடுபடுத்தி அவற்றின் மேம் பாட்டிற்காக உழைத்த பெருமகனுகவும் அவர் திகழ்ந்தார்;
யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பா ர ம் பரிய பொழுது போக்கு அம்சங்களில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியும் ஒன்று. திட்டவட்டமான விதி முறைகளுடன் கூடிய ஒழுங்கான கலையாக இதை வளரிக்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவராக இவர் விளங்கினர் "யாழ்ப்பாணத்து மாட்டு வண்டிச் சவாரி" என்ற இவருடைய நூல், வண்டிச் சவாரியில்

حس- 3 -ست.
இவருக்கிருந்த ஆர்வத்தையும் அதை வளர்க்க வேண்டுமென்ப தில் இருந்த இலட்சிய வேகத்தையும் காட்டுகின்றது; பல்வேறு துறைகளில் 24 நூல்களை எழுதிய அமரர் சண்முகசுந்தரம் அவர்களின் இறுதி நூல்தான் "" யாழ்ப்பாணத்து மாட்டு வண்டிச் சவாரி ". ஆகவே அவருடைய இறுதி ஆசையும் வண்டிற் சவாரியின் வளர்ச்சியும் முன்னேற்றமுமே எனக் கொள்வதிலே தவறில்லை;
'தினகரன்" விழா வண்டிற் சவாரிப் போட்டி நிறைவேறு வதற்கு அமரர் அவர்கள் எனக்கு வழங்கிய ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் இன்றும் என் நினைவில் நிற்கின்றன:
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிற்கு வந்த சர்வ தேசத் தமிழறிஞர்கள் பார்த்துச் சுவைப்பதற்காக வண்டிற் சவாரிப் போட்டி நடைபெற வலக்கரமாக நின்று எல்லா உதவி களையும் அவர் செய்தார்;
ஆண்டு தோறும் இப்போட்டியை ஒழுங்காக நடத்துவ தற்குத் தேசிய கழகம் ஒன்றும், விளையாட்டுத் திடல் ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும் என்பது அமரரின் விருப்பமாக இருந்தது:
கலாநிதி நா. சுப்பிரமணியன்
கடந்த பதினைந்தாண்டுக் காலப்பகுதியில் என் ஆய் வுச் சிக்தனையை வளம்படுத்திய கல்லாலோசகர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த பெருமகன் அமரர் திரு. த. சண்முகசுந்த ரம் அவர்கள். கடந்த முன்ருண்டுகட்கு மேலாக மாதம் ஒருமுறையாவது எனது இல்லத்துக்குவந்து என்னை ஆய் வுத்துறையில் ஊக்கப்படுத்திய அந்த அன்புள்ளம் இவ்வ ளவு விரைவில் விடைபெற்றுவிடுமென்று நான் எதிர்பார்க்க வேயில்லை.
அமரர் சண்முகசுந்தரம் அவர்கள் ஈழத்தின் கலை இலக் கிய வரலாற்றில் கிரந்தரமாக இடம்பெறத்தக்க சாதனைகள் புரிந்தவர்; படைப்பிலக்கியத்துறையில் புனைகதை, நாடகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்.

Page 35
- 64 -
அவர் வாழ்வு பெற்ற வல்லி நாடகத்திற்காக இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர்; ஆய் வாளர் என்ற வகையில் மக்கள் கலே மரபுகளே வெளிக் கொணர்வதிலும் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பணிபுரிந்த பெருமக்களது வரலாறுகளே எழுதுவதிலும் கவனம் செலுத் தினர். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளே தொடர்பாக அவர் எழுதிய கலையருவி கணபதிப்பிள்ளை - சில நினைவுகள நூலும் அவருக்குச் சாகித்திய மண்டலப் பரிசைத் தந்தது.
தனது வாழ்நாளின் பெரும்பாகத்தைக் கல்விக்கும், கலை இலக்கியத் துறைக்கும் செலவிட்ட அமரர் சண்முக சுந்தரம் அவர்களின் உணர்வில் முனைப்பாக நின்ற அம்சம் ஈழத்தின்-சிறப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தின் - பண் பாட்டம்சங்களே உலகறியச் செய்யவேண்டுமென்ற ஆர்வ மேயாகும். அவர் எழுதிய இருபதுக்கு மேற்பட்ட நூல்களி லும் இதனே அவதானிக்கலாம். இறுதி நாளில் அவர் தஞ் சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆய்வாளராகக் கெளரவம் பெற்று நிகழ்த்திவந்த ஆய்வும் (யாழ்ப்பாணத்து மக்கள் கலைகள்) இதனையே புலப்படுத்தி நிற்கிறது. அமர சின் இவ்வுணர்வும் பணிகளும் எதிர்காலத் தமிழியல் ஆய் வில் உரிய கவனத்தைப் பெறும் என்பதற்கு ஐயமில்லை.
ஊனுடம்பு மறையலாம். ஆனல் புகழுடம்பு மறைவ தில்லை. அமரர் திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் தமது எழுத்துக்கள் மூலம் எம்மோடு வாழ்ந்துகொண்டே இருக் கிருர்,
சிந்தனைத் துளிகள் :
ஒருவர் தன் பசுவின் கன்றை ஏர் வைத்து வயலில் உழவு பழக்குவித்தார். அவ்வழியால் வழிப்போக்கர் ஒருவர் வந்தார். கடம்பூருக்கு வழி எது? என்ருர் . மாட் டிலே கவனம் செலுத்தியவர் இடம் பூணி என்னுவின் எருது என்ருர், அதாவது இடது பக்கத்தில் பூட்டப் பட்ட நல்ல எருது என்மாட்டின் கன்று என்பது பொருள். தன் மாட்டின் பெருமையில் மயங்கி இருந்தவர் காதி னிலே " கடம்பூருக்கு வழி எது? " என்ற வி ை"இடம் பூனி யார் எருது" என்பது போன்று ஒலித்தது போலும்.

திரு. வே. தியாகராசா
LD nr 6ńLI L-LHuruh
ஆழ்ந்த சிந்தனையாளனும் அந்தரங்கக் காட்சியாளனும்
மாவையம் பதியிலே சைவ ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிக் திரு. தம்பு ஆசிரியர் அவர்கட்கும் அவர் மனைவியார் அன்னப் பிள்ளை அம்மையாருக்கும் த வ ப் ப ய ஞ) ய் க் கிடைத்த குலக் கொழுந்து திரு. சண்முகசுந்தரனர் அவர்கள். அவரைத் "தசம்" என அன்பர்கள் அழைப்பர். அவர்கள் இளமைக் கல்வியை இனிது முடித்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் B. A. பட்டமும் பெற்றுப் பேராசிரியர்கள் பலரின் பெருமதிப்பையும் பெற்றுப் புகழுடன் விளங்கினர். தமிழ் மொழிப்பற்று அவரைப் பெரிதும் பற்றிக்கொண்டது. இளமையிலே எழுத்தாற்றல் மிக்கவராய்த் திகழ்ந்தார். தினகரன் பத்திரிகை நிறுவனம் அவரைப் பெரிதும் ஈர்த்தது; சில ஆண்டுகள் அங்கு நற்பணி புரிந்தார். பத்திரிகா தர்மத்தைப் பேணி வளர்த்தார். நிறுவனத்தாரின் நன்மதிப்பை யும் பெற்ருர், அவர் அங்கு பெற்ற பலதிறப்பட்ட அநுபவம் அன்னூரின் பிற்கால எழுத் து லக வாழ்க்கைக்குப் பேருதவி புரிந்தது:
அவரின் எழுத்தாற்றலையும், அறிவுத்திறனையும், செந்தமிழ்ச் சிறப்பு நடையையும் கண்டு ஆசிரிய உலகம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. அவரே சிறப்புமிக்க நல்லாசிரியர் குடும் பத்தில் விளங்குபவர், 1950ஆம் ஆண்டு தொடங்கித் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி திரு. தெ. து. ஜயரத்தினம் அவர்களின் தலைமையில் எழுச்சி நடைபோடத் தொடங்கியது, இலங்கை யின் பல்வேறு பாகங்களிலுமிருந்து மாணவர்களின் வரு கை பெருகிக்கொண்டேயிருந்தது. இடவசதிகளை ஒருவாறு ஏற்படுத் கொண்டாலும் ஆசிரியர்களின் பற்ருக்குறை இருந்துகொண்டே வந்தது. பல்வேறு பணிகளில் ஈடுபட்டுப் புகழுடன் திகழ்ந்த இளம் பட்டதாரிகளைத் தீவிர முயற்சி,செய்து பெற்றுக்கொண் டோம். அவ்வாறு பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் திரு. தசம் அவர்கள். உதவி ஆசிரியணுய், உப அதிபராய் ஈற்றில் அதிபராய் அமர்ந்து உயர்தர மாணவர்களுக்குத் தமிழ், சரித் திரம், ஆங்கிலம் முதலிய பாடங்களைக் கற்பித்ததோடமையாது

Page 36
به حسه 70 --
மகாஜனவின் பல்துறை வளர்ச்சிகளிலும் பெரும் பங்கு கொண் டார். மாணவர்களின் திறமை களையும், நாட்டங்களையும் நன் கறிந்து அவர்களை அவ்வவ் வழிகளில் ஈடுபடச் செய்தும் ஊக்கு வித்தும் பெருவெற்றி கண்டார். அவரின் மாணவர்கள் பலர் பிரபல எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், பேச்சாளர் களாகவும், நடிகர்களாகவும் விளங்குகின்ருர்கள்.
திரு. த சத்தின் தனிச் சிறப்பு நல்லாசிரியனுகவும், சிறந்த இலக்கியப் பல்துறை எழுத்தாளனுகவும் விளங்கியதே. அவ்வாறு விளங்குவதற்கு மூலகாரணர்களாய் இருந்தவர்களுள் இருவரைச் சிறப்பாகக் கூறலாம். பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேரா சிரியர் கணபதிப்பிள்ளை அவர்களும், யாழ்ப்பாணத்துப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தனுமாவர். இவர்களின் வழிகாட்டல் அவர்களின் வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறு. இதுவரையில் 26 நூல்களைத் தந்துள்ளார்கள் : * வாழ்வு பெற்ற வல்லியும்" "கலையருவி கணபதிப்பிள்ளையும்" இலங்கைச் சாகித் திய மண்டலப் பரிசு பெற்ற நூல்கள். மக்கள் கலை பற்றி விரிவான ஆய்வு நடத்தியுள்ளார். அவரின் சிறந்த ஆய்வுக்காகத் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகமும் புலமைப் பரிசில் வழங்கிக் கெளரவித்துள்ளது சமயப் பற்றும் அவரை விட்டுவிடவில்லை. ஆடல்வல்லான் திருக்குமரன்மேல் பாடல்க ளும், நூல்களும் தந்துள்ளார்கள். இறுதி மூச்சில் எழுந்த நூல் "வள்ளிதிருமண வேட்டைத் திருவிழாப் பாடல்". வள்ளிதிருமண மென்பது உயிர் இறையோடு அத்துவிதமாதலைக் குறிக்கின்றது:
தன் அன்புக்குரிய ஆசிரியை ஞானசக்தியின் கரம் பற்றி அரியபிள்ளைகள் ஐவாைப் பெற்று மகிழ்ந்தார்கள். குலம்விளங்க பெற்றெடுத்த முதற்பிள்ளை ஆண் பிள்ளை. நல்வேளை பார்த்து நாமகரணம் சூட்டத் தன் அன்புக்குரிய பேராசிரியர் சு வித்தியா னந்தன் அவர்களை நாடினர். பிள்ளைக்கு அருள்முருகனர் என்று நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் கல்விகற்றுத்தேறி வெளிநாடு சென்று தன் குடும்பத்தாரைக் குறைவின்றி வாழ வைக்க பல ஆண்டுகள் அயராது உழைத்து வந்தார். தன் உடன் பிறந்தார் களின் கல்வி விருத்திக்கும் பங்கம் ஏற்படாதிருக்க உறுதுணை புரிந்தார்: குடும் பக்கஷ்ட நிலை நீங்கத் தொடங்கியது. சிறிது மன ஆறுதலுடன் ஊருக்குத் திரும் பினர். அவருக்குத் திரும ணம் செய்து வைக்கப் பெற்ருேர் விரும் பினர். மானிப்பாயில் வசிக்கும் சின்னத்துரை அவர்களின் அன்புமகள் செல்வி ராதி காவைத் திருமணப் பதிவு செய்து கொண்டார். திரும்பவும் மூத்த மகஞர் வெளிநாடு செல்வதைத் தந்தையார் விரும்பவில்லை

--سے 71 سے
இரண்டாவதாகவும் ஆண்மகனைப்பெற்று மகிழ்ந்தார்கள்: இவருக்குத் தந்தைவழிக் குலப் பெயர் சிவ தம்பு என நாமம் சூட் டினர்; இளமைக் கல்வி கற்றுத் தேறி, கட்டுப்பெத்தை தொழில் நுட்ப கல்லூரியில் பட்டமும் பெற்றுத் தொழில் நுட் பவல்லு நராக ஒமானில் பணிபுரிந்து வருகின் ருர் . இளைய சகோதர, சகோதரிகளின் கல்வி விருத்திக்கும் உறுதுணையாயிருந்து வரு கின் ருர் குடும்பநிலை விருத்தியடைந்து வருவது மகிழ்ச்சிக்குரிய தொன்று
குடும் பத்தின் சிறப்புக்குப் பெண்பிள்ளைகள் அருமைப்பா டுடையவர்கள். அ வ ர் க ஞ க் கு மூன்ருவதாகப் பிறந்த பிள்ளை பெண் பிள்ளை. அருள் மங்கை என மங்களப் பெயர் குட்டி மகிழ்ந் தார்கள். கல்வி கற்றுத் தேறித் தொழிற் கல்வியும் கற்றுச் சிறந்து விளங்கினர். மணப்பருவம் எய்தியது கண்டு திருமண மும் செய்து வைத்தார்கள். மணமகனர் பருத்தித் துறையைப் பதியாகக் கொண்ட மாணிக்கத் தியாகராசா அவர்களின் புதல் வன் மதனசேனராசா அவர்கள் ஆவர். குடும்பத்துக்கு வாய்த்த சிறந்த மருமகனுர், இலங்கை அரசினர் தொலைபேசிக் கந்தோ ரிற் பல ஆண்டுகள் பணிபுரிந்து பின் தென் அராபியா சென்று அங்கும் அரசினர் தொலைபேசிக் கந்தோரில் நற்பணி புரிந்து வருகின்ருர்கள். திருமணமும் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. சில தாட்களின் பின் இருவரும் தென் அராபியாவுக்குச் சென்ருர் கள் : மகப்பேறு காரணமாக அருள் மங்கையார் நாடு திரும்பி னர். சுபவேளையில் மகப்பேறும் நிகழ்ந்தது. பூரண சந்திரனைப் போல அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். துரதிஷ்டவசமாகப் பிள்ளை நீண்டகாலம் சிவிக்கவில்லை. பேரப் பிள்ளை பிறந்ததும் திரு, தசம் அவாகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார், திடீர் இழப்பின் காரணமாகத் துக்கசாகரத துள் மூழ்கினர். இத் திடீர் மாற்றம் உடம் பின் நிலையைப் பெரிதும் பாதித்துவிட்டது. கணவனுருடன், அருள் மங்கையார் மனமுடைந்த நிலையில் திரும்பவும் தென் அராபியாவுக்குச் சென்றுவிட்டார். சில நாட்களின் பின் தந்தையாரின் பேரிழப் புச் செய்தியும் அவர்களைச் சென்றடைந்தது. பனையால் விழுந் தவனை மாடு ஏறி மிதித்ததுபோல அடுக் கடுக்காகத் துன்ப நிவே கள் தொடர்கின்றன. தேறிவாழ ஆண்டவன் அருள்புரிவானுக.
அடுத்த பிள்ளை ஆண்பிள்ளை. இவருக்குத் தாய்வழிப் பெயர் கதிர்காமசேகரென நாமகரணம் சூட்டி மகிழ்ந்தார்கள். கல்வி பிற் சிறந்து தேறி, சர்வகலாசாலை சென்று, தந்தையைப்போல்

Page 37
- 72 -
கலைகள் கற்று மருத்துவத் துறையில் பட்டமும் பெற்று அநு ராதபுரி அரசினர் வைத்தியசாலையில் அரும்பணி புரிந்தார். நாட்டுநிலை அவரைச் சம்பியா செல்ல வைத்தது. அங்கும் அர சினர் வைத்தியசாலையில் அரும் பணி புரிந்து வருகிருர் வைத் தியத்துறையில் நிபுணத்துவம் பெற்று விளங்க ஆண்டவன் அருள்புரிவான க;
அடுத்த பிள்ளை பெண்பிள்ளை, ஐந்தாவது பிள்ளை பெண் பிள்ளையாகப் பெற்றெடுப்பது கெஞ்சினலும் கிடையாதென்று கூறுவர் , குடும் பத்தில் ஐந்தாவது பெண்பிள்ளையாகப் பிறக்கும் பிள்ளை அதிஷ்டப் பிள்ளை தான். அவருக்கு அருட்செல்வி என்று திருநாமமும் சூட்டி மகிழ்ந்தார்கள். பெண் பிள்ளைகள் இருவ ருக்கும் வாழ்க்கைக் குத் தேவையான கல்வியைப் பெறும் பொருட்டு அவர்களை ஊக்குவித்து வந்தார்கள். அருட்செல்வி யும் மனையியல், தையற் கலைகளில் சிறந்து , விளங்குகின் ருர்: மூத்த மகனுர் அருள்முருகனரும், இளைய மகளார் அருட்செல் வியுமே தந்தையார் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அவர் அருகிருந்து அரும் பணிகள் ஆற்றியவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் எவ்வளவு முயன் றும் தொடர்புகொள்ள முடியவில்லை. பத்து நாட்களின் பின் தந்தையாரின் மரணச் செய்திகேட்டுப் பறந்தோடி வந்தார்கள். அப்பா, அப்பா எங்கே யென்று எவர் மனத்தையும் கலங்க வைக்கும் முறையில் அலறித் துடித்தார்கள். அப்பா இருந் தெழுதும் கதிரையையும், சாய்மனைக் கட்டிலேயும் கட்டிப்பிடித் துக் கதறிஞர்கள். அழுது புலம்பும் அம்மாவையும், அண்ணுவை யும், தங்கையையும் சாந்திப்படுத்த அவர்கள் வருகை அரும ருந்தா கட்டும் .
தெல்லிப்பளை மருத்துவ மனையில் திரு. தசம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் வைத்தியர்களும், வைத்திய நிபுணர்களும் மிகுந்த சிரத்தையோடு சிகிச்சை செய்து வந் தார்கள். வைத்திய நிபுணர் திருமதி நாகேந்திரா அவர்களின் அயராத சேவை குறிப்பிடத்தக்கது. அவர் திரு. தசம் அவர்களின் சிறந்த மாணவி. ஒரு நாள் அவர் உடல் நிலையையும், நோயை யும் தெளிவாக அறிந்து கொள்ளப் பரிசோதனைகள் செய்தார் கள். சத்திர சிகிச்சை பற்றியும் கலந்துரையாடல் நிகழ்ந்தது: ஈற்றில் திரு. தசம் அவர்கள் மருத்துவத் துறையிலும் வல்ல வர் என்று கூறிச் சென்ருர்கள் பல கலைகளையும் பயின்றமை புலனுகிறது; மருத்துவமனையில் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த

حس- 73 -سست
காலத்திலும் அன்னரின் பொறிபுலன் செயல்களைச் சிறிதும் இழக்கவில்லை. கூர்த்தமதியும் பிரகாசித்துக் கொண்டிருந்தது; தெளிந்த சிந்தனையில் மாறுதல் சிறிதும் தென்படவில்லை. இது ஓர் அபூர் வநிலை. பல விஷயங்கள் பற்றி என்னுடன் மனம் திறந்து பேசுவார். மருத்துவமனையில் இருந்தபோது தவருது செய்யும் படி என்னிடம் சொல்லிவைத்தவற்றைக் கூறவிரும்புகிறேன்
** V. T. "இன்று என்னை என் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். மருத்துவ நிபுனர்கள் என் நோயைக் குணப் படுத்துவார்கள் என்று ஏமாரு தீர்கள். அவர்கள் சிரத்தையோடு சிகிச்சை செய்தாலும் நோய் நீங்காது. என் வீட்டு மண்மேல் என் உயிர் நீங்கட்டும். அதையே நான் விரும்புவது உயிர் நீங்கியதும் உடல நீராட்டிப் புத் தாடை உடுத்தி விளக்கேற்றி வையுங்கள். பிள்ளைகளின் வரவை எண்ணி என் உடலுக்குப் பாதுகாப்புச் செய்விக்கவேண்டாம். மரணக் கிரியைகளும் செய் விக்க வேண்டாம். ஒமக்கிரியைகள் பழந்தமிழர் கிரியைகள் அல்ல. இருந்தாலும் இக் காலத்தில் கிரியைகள் செய்பவர்களிடம் எனக்கு நம்பிக்கையில்லை. உயிரின் போக்கை அவர்களால் நிர்ண யிக்க முடியாது. உயிரின் போக்கை நிர்ணயிப்பவன் ஒருவனே ஒருவன் வினைப் பயனைத் தருபவன் அவனே தான். பறைமுழக்கம் செய்தாலும் சரி விட்டாலும் சரி தமிழ்மறை பன்னிரண்டு திருமுறைகளையும் அருணகிரிநாதர் அருட்பாக்களையும் தவருது
அலங்காரத்துடன் மலர் தூவி இறுதி யாத்திரைக்கு எடுத்துச் செல்லுங்கள். ‘வாழ்வாவது மாயம் மண்ணுவது திண்ணம்' என்று பாடி வைத்திருக்கிருர்கள். ஆதலால் என் உடல் மண்ணுேடு மண்ணுய்ச் சேரும் பொருட்டு ஆழப் புதைத்து வையுங்கள். நெருப்பில் உடலை இடவேண்டாம். கல்வெட்டும் வேண்டிய தில்லை." எனக்குக் கூறியவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்றவர்களை நிமிர்ந்து பார்த்தேன். என்ன நடந்துவிட்டது? ஏன் இப்படியெல்லாம் கூறுகின் ருர்? என்று. அருகில் நின்ற அவ ரின் அன்பு மனைவியும் , அருமை மகளும் கதறியழுதார்கள். அவை ஆழ்ந்த சிந்தனையில் கண்ட அந்தரங்கக் காட்சிபோலும்! கூறியபடி தொழிற்பட முயற்சித்தோம்.
வேலைப்பழு காரணமாக அதிபர் பதவியில் நின்றும் ஒய் வெடுத்தவர், ஓய்ந்திருக்கவில்லை. எழுதுவதிலே இன்பம் கண்ட வர் எழுதாதிருக்க அவரால் முடியவில்லை. எழுது கதிரையுண்டு. சாய்ந்து சிந்திக்கச் சாய்மணைக் கதிரையுமுண்டு. அவர் வீட்டுக்குச்

Page 38
- 74 -
செல்பவர்கள் இவ்விரண்டிலொன்றில் , செயற்பட்டுக் கொண் டிருப்பதைக் காணலாம். உடலின் களை ட்பு நீங்க, பகல் நேரமா யினும் சிறுபொழுது துயில் கொள்வார் கற்க, உரையாட , ஆய்வு செய்ய வருபவர்கள் அவரின் சிறு துயிலையும் கலைத்து விடுவார்கள். நாள் தோறும் இவர் செய்யும் செயல்களில் ஒழுங் குண்டு. பிற்பகல் ஐந்து மணியானுல் அவரை அவர் வீட்டில் காணமுடியாது. ஒரு சிற்றுலாப் போட்டு முருகன் ஆலய வீதி வலம் வந்து, V. T. யின் வீட்டில் அவருக்கெனப் போடப்பட் டிருக்கும் பிரம்புக் கதிரையில் அமர்ந்து விடுவார்; சிறுபிள்ளே கள் வருத்தம் தொட்டு சைவ சித் தாந்தம் இறுதியாகப் 1. ல துறைகளில் கலந்துரையாடுவோம். கலந்துரையாடலில் இன் . ம்ே கண்ட எங்களுக்கு நேரம் போவது தெரிவதில்லை. இராப்போச னத்துக்கு நேரமாகிவிட்டால் அவரின் அன்புக்குரிய ‘போன் பிள்ளை' நாற்காற் பாய்ச்சலில் பாய்ந்துவந்து அவர்மேல் தள்ளி விளை யாடும். அவர் அதன் தலையைத் தடவிக் கொடுத்து " போடா விட்டுக்கு நான் வருகிறேன் "" என் பார். அவரை அழைத்துச் செல்லும் வரையும் அது துள்ளிக் கொண்டே நிற்கும். அது கண்டு "சரி வா போவோம்" என்று எழுந்து செல்ல அது அவரைப் பின் தொடரும். மிருகங்கள், பறவைகள், மரம், செடி, கொடி கள் மேல் பற்றுள்ளவர். பல்லி சொல், காகம் கரைதல், ஆந்தை உறுமல் முதலியவற்றின் தொனிகள் கேட்டுப் பல ன் க ஞ ம் சொல்வார். சிறு பிள்ளைகளைப் பறறிப் பேசுமபோது எங்கள் பேரப்பிள்ளை ஐயனியை ஒருபொழுதும் மறவார் பிள்ளைகள் மேல் அன்பு பூண்டவர். அவர்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டால் அதைத் தாங்க மாட்டாதவர்; அசய்யவேண்டிய சிகிச்சைகளும் உடன் கூறுவார். சிறு பிள்ளைகளுக்கு ஒரு பொழுதும் தகரங்களில் அடைக்கப்பட்ட உணவுகள் கொடுக்கக்கூடாது என் பார். "என் அன்புக்குப் பாத்திரமான என் பேரப்பிளளையைத் தூக்கி மகிழ எண்ணினேன். நான் கொடுதது வைக்கவில்லை. அது மின்னல் போல் மறைந்துவிட்டது" என்று கண்கள் நீர் ததும் பக் கூறு வார். தந்த பிள்ளையை ஆண்டவன் பறித்து விட்டாரே என்று சிறு பிள்ளையைப்போல் தேம்பித் தேம்பி அழுவார். பசுவின் மேல் மிகுந்த் பற்றுடையவர். இளமை தொட்டு அவரால் வளர்க்கப் பட்ட பசுவொன்றுண்டு. தீனி போடத தாமதித்துவிட்டால் 3தறும் அவர் அதன் அருகில சென்று தடவிக் கொடுப் பார். அதன் பால் கறக்க அவர் சென்றுவிட்டால் அது பாலை நிரம் 4ச் சொரிந்து கொடுக்கும். இப்படி அவர் எல்லா உயிர்கள் மேலும் அன்பு பூண்டவர்.

- 75 -
அரசியல் பேசுவோம் கருத்து வேற்றுமை எழும் விளக்கங் கன் கூறித்தொடர்வோம். முன்பு நான் கூறியதுபோல் மருத்து வத்துறையிலும் அறிவு அநுபவம் மிக்கவர் அவர் மகனர் கதிர்காமசேகரும் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவர் அவர் அறிவை அறியக் கேள்விகள் பல கேட்பார். நோய்கள் அதன் குணம் குறி அறிந்து சிகிச்சைக்குரிய மருந்து வகைகளும் கூறுவர். மூலிகைகள், வேர்கள், இலைகள் முதலியனவற்றின் சிறப்புத் தன்மைகளும் கூறுவர்.
சாதக ஏட்டுச் சுவடிகள் பார்த்துப் பலன்களும் கூறுவார். கை ரேகைகளைப் பார்த்து நிகழ இருப்பதையும் கூறுவார் இசை, இசைக்கருவிகளிற் சஞ்சாரம் அபாரம், இலக்கிய அறிவு சமய அறிவு நிரம்பப் பெற்றவர். வலங்கை மான், தண்டபாணிதேசிகர் பத்மநாதன் முதலியவர்களில் பேரபிமானம் கொண்டவர்.
ஒரு நாள் ஐந்து மணியளவில் வழமையான சுற்றுலா மூடித் துக் கொண்டு கையில் ஒரு பார்சலுடன் எங்கள் வீட்டுக்கு வந் தார். அன்று திருமூலர் திருமந்திரம் பற்றிப் பேச்சு எழுந்தது. திருமூலர் வரலாறு, நவயோகிகள் , திருமந்திர நூற் சிறப்பு, அட்டசித் திகள், சிறப்பாகக் கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றல் முதலியவற்றைப்பற்றிப் பேசினுேம் . உங்களிடம் திருமந்திரநூல், மூலநூல் மாத்திரம் இருப்பதாகக் கூறினீர்கள். இந்தாருங்கள் என்று கையில் வைத் திருந்த பார்சலை என்னிடம் தந்தார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட உரையுடன் கூடிய திருமந்திர நூலின் இரண்டு பாகங்களும் அதில் இருந்தன; உரையிருந்தாலும் எப்படியும் அதனைச் சிறந்த ஆசானிடம் ஐயம் திரிபு அறக்கற்க வேண்டும் என்று சொல்லி அடுத்த முறை தஞ்சா ஆர் சென்று திரும்பும்போது உரையுடன் கூடிய திருக்கோவை யாரும் பெற்று வருகிறேன் என்ருர் .
பலவற்றைச் சிந்தித்துச் செயற்படவும் முயற்சித்தோம். எல் லாம் ஒரு நொடிப்பொழுதில் காற்ருய்ப் பறந்துவிட்டன. என் உடன் பிறந்தானை இழந்த நிலையாயிற்று. நேற்றிருந்தான் இன் றில்லை. என் செய்வோம்.
எங்களிடம் கூறியபடி 30-7-86 அன்று அவரை அவர் வீட்
டுக்குக் கொண்டு சென்ருேம். பெருமகிழ்ச்சி பொங்க வீட்டைத் திரும்பத்திரும்பப் பார்த்துச் சாந்தமடைந்த வர்போல் மூத்த மகஞரை அன்பு ததும்ப அழைத்து அவரின் முகத்தை இருகரங் களாலும் தடவி, மகனே என்சிரசைத் தூக்கி உன்மடி மீது

Page 39
سس۔ 76 حس۔
அமர்த்திக்கொள் என்ற தும் இருவர் உள்ளங்களும் மாறி மாறிக் கரைந்துருகிநின்றன. அருகில் நின்ற அன்புமனையாஃாயும் செல்வமகளையும் இருகரங்களாலும் பற்றிக் கொண்டார். என்னே கணவன், மனைவி, பிள்ளைகள் பாசபந்தம், கூர்த்தமதியுடன் பிர காசித்தார்
வெகுநேரம் சென்றபின் மகனரைப் பார்த்து "அப்பு என்னை இதுவரை சுமந்தது போதும் என்னைப் படுக்கையில் அமர்த்திவிடு என்ருர். பின் மூவரையும் அருகணைத்துக் கண்களில் நீர்ததும்ப "இனி உங்களுக்கு ஆய்க்கினை தரமாட்டேன். சாப்பிட்டு விட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள்" என்று கூறித் துயில்கொண்டார் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நானும் அருகில் தான் தின்றேன்; ஏதும் அன்றிரவு நடைபெறும் என்று ஒருவரும் எண் னவில்லை; அருகில் இருந்தவர்களும் அயர்ந்துவிட்டார்கள் பிராரத்த வினையும் அநுபவித்து கழிந்துவிட்டது. அமைதியாக மீளாத்துயில் கொண்டார். அருங்கலைக் கலைஞனையும், ஆழ்ந்க சிந்தனையாளனையும் அந்தரங்கக் காட்சியாளனையும் இழந்துவிட் டோம் இனிக்காண்போமோ ?
நீண்ட நாற்பது ஆண்டுகள் இலக்கிய உலகில் சஞ்சரித்து நாடகங்களையும், நாவல்களையும், கதைகளையும், கட்டுரைகளை யும், ஆய்வுக் கட்டுரைகளையும், ச ம ய க் கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதி, எழுதி வாசகர்களை மகிழ்வித்த கையும், வானெலியில் நற்சிந்தனையில் ஒலித்த இனிய ஓசையும் ஒய்வெடுத்துக்கொண்டன. இரு ந் தும் அவரின் நன்மாணவ எழுத்தாளர்களுக்கூடாக அவர்களின் எழுத்தலங்காரங்களைக் கண்டு மகிழ்வோமாக.
"தசம்" அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த் 3úGuntuoras:
சாந்தி எாந்தி சாந்திய

நன்றி
விமரர் திரு. த சண்முகசுந்தரம் அவர்கள் நோய் வாய்ப்பட்டுத் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனை யில் இருந்த காலத்தில் சிறப்புத்துறை மருத்துவர்கள் முதல் அவர்கள் உதவியாளர்வரை அனைவரும் மிகுந்த சிரத்தையோடு சிகிச்சை செய்தனர். அவர்களுக்கு எமது நன்றி. மருத்துவமனையில் அவருக்கு வேண்டிய வற்றையெல்லாம் இரவு பகலாகச் செய்து உதவியவர் கவி பலர் கண்ணன், ஜனந்தரன், தனம், மனுே, கிச்சி, தர்மராசா, துரைசிங்க மாமா, விஜயா, நாதன். என்று அன்புக்குரியோர் செய்த பணிகள் மறத் தற் கரியன உற்ருர், உறவினர், பெரியோர், நண்பர்கள் பல வழிகளிலும் உதவி புரிந்தனர். அவர்களுக்கு எம் பணிவான நன்றி. பத்திரிகையாளர்கள், க ட் டு  ைர யாளர்கள், அஞ்சலி உரையும் செய்தியும் வழங்கியோர் மலர் வெளியீட்டில் உதவியோர் அனேவர்க்கும் எமது மனமார்ந்த நன்றி
திரு. தசம் அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் வெளியிட்டுதவிய குகன் அச்சக முதல்வர் திரு. தவ ரத் தினம் அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் இம் மல ரையும் வெளிட்டு உ த விஞர்; அவர்களுக்கு எமது இதயங்கலந்த நன்றி.
இன்னும் பல வகையிலும் உதவிய அனைவர்க்கும் எமது நன்றி உரியது:

Page 40
குகன் அச்சகம், தெல்லிப்பழை
 


Page 41