கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூத்து மீளுருவாக்கம் கோட்பாடும் செயற்பாடும்

Page 1
{
후 = 활 환 €.
கிர்வு
னுபவப்ப
 

நேருவாக்கம்
செயற்பாடும்

Page 2

கூத்து மீளுருவாக்கம் கோட்பாரும் செயற்பாரும்
-து. கெளரீஸ்வரலர்
மூன்றாவதுகண் பதிப்பு >حلگ

Page 3
விடயம்
ஆசிரியர்
முகவரி
முதற் பதிப்பு
பக்கங்கள்
அளவு
பிரதிகள்
வெளியீட்டாளர்
அட்டை வடிவமைப்பு:
அட்டை புகைப்படம்:
கணினி வடிவமைப்பு:
அச்சகம்
விலை
கூத்து மீளுருவாக்கம் கோட்பாடும் செயற்பாடும்
கூத்து
து. கெளரீஸ்வரன்
273, முகத்துவார வீதி, சீலாமுனை மட்டக்களப்பு,
இலங்கை.
செப்டம்பர் 2007
52
A5
500
மூன்றாவதுகணி
உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு.
சுசிமன் நிர்மலவாசன்
சீதையின் துயரம், வடமோடிக் கூத்து - 2007
छनाकोleफी . ि
வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி, மட்டக்களப்பு.
65T6060Gué): O6O 2650361
1OO/ =

மட்டுநகரின் பெயர் பெற்ற அண்ணாவிமார்களுள் ஒருவராக விளங்கிய மறைந்த எனது பாட்டனார் வே. கந்தையா
(அருச்சுனன் கந்தையா)
அவர்களுக்கும்,
மறைந்த எனது தந்தையார்
க. துரைராசா
அவர்களுக்கும்
இந்நூல் சமர்ப்பணம்

Page 4

முன்னுரை
கூத்து மீளுருவாக்கம் என்ற கோட்பாட்டினதும் நடை முறையினதும் விளைவுகளாகவும் சாட்சிகளாகவும் இருப்பவர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமாக உள்ளவர் து. கெளரீஸ்வரன்.
கூத்து மீளுருவாக்கம் பற்றிய எனது எண்ணக்கருவையும், அணுகுமுறைகளையும் முதன் முதலாக விபரித்தது கெளரீஸ் வரனிடந்தான்.
கூத்து மீளுருவாக்கம் பற்றிய எண்ணக்கருவை முதன் முதலாகவும், முழுமையாகவும் உள்வாங்கிக் கொண்டவரும் கெளரீசன்தான்.
கூத்து மீளுருவாக்கம் என்ற எண்ணக்கருவை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு, கூத்து மீளுருவாக்கத்தை செயற்பாட்டு ஆய்வாகவும், பண்பாட்டுச் செயற்பாடாகவும் முன்னெடுக்கப்படுவதன் தீர்க்கமான குரலாகவும் இருப்பவர்.
கலைஞரும், புலமையாளரும், செயற்பாட்டாளருமான ஒரு தக்க ஆளுமையின் உருவமாக இருப்பவர் து. கெளரீஸ்வரன்.
-1-

Page 5
கூத்து மீளுருவாக்கம் பற்றிய கெளரீஸ்வரனது இந்நூலுக்கு நான் முன்னுரை எழுதுவதில் பெருமையும்; பெருமகிழ்வும் அடைகிறேன். ஏனெனில் கூத்து மீளுருவாக்கம் பற்றிய கோட்பாட்டு ரீதியானதும்; நடைமுறை ரீதியானதுமான அவரது அறிவின் சாறாக அமைகிறது இந்நூல்.
கூத்து மீளுருவாக்கம் என்பது திறந்த நிலையிலான வித்தியாசமான கற்கைச் சூழல். இது மனிதர்களுக்கே இயல்பான கற்பனை, சிந்தனை, விமர்சனநோக்கு, படைப்பாற்றல் என்பன பொருந்திய தனித்த ஆளுமைகளாகவும்; குழு நிலையிலான சமூகமாகவும் தமது காலத்தை தாங்களே ஆக்கவும், காக்கவுமான சமூகங்களின் உருவாக்கங்களுக்கான செயலினுாடாக கற்பதான சமுதாய அரங்க வெளி ஆகும்.
நாடகம், அரங்கு என்பதன் அர்த்தம். செய்தலும் பார்த்தலும், பார்த்தலும் - செய்தலும் என்பதாகும்.
பாரம்பரிய கூத்தில் “வாய் பார்த்தல்” என்பதன் அர்த்தம் கூர்மையான அவதானம் என்பதாக இருக்கிறது, அதுவும் ‘வாய் பார்த்தல்’ என்பது சிறுவர்களுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது.
இன்றைய சூழலில் “வாய்பார்த்தல்’ சிறுவர்களுக்கு ஆகாததாக ஆக்கப்பட்டிருக்கின்றது. “என்ன வாய் பார்க்கிறாய்?! போயிருந்து படி!” என்பது பெரியவர்களின் கண்டிப்பான உத்தரவாகவும் ; ஒழுங்கின் குரலாகவும் நம்பப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பெரியவர்களுக்கான சூழல் ஏன் சிறுவர்களுக்கு உகந்ததல்லாத “வயது வந்தவர்களுக்கு மட்டும்” உரியதாக
س-22سه

இருக்கிறது என்பது சிந்தனைக்குரியது. “முத்தல்”, “பிஞ்சில் பழுத்த”, “வெம்பல்”, “வெம்பிப் பழுத்த” என்ற முத்திரை குத்தல்களில் கிள்ளியெறிப்படும் முளைகள் பற்றி எந்தளவிற்குச் சிந்திக்கப்படுகிறது?
கூத்துப் பழகும் சூழலில் சிறுவர்களது திரிதல் என்பது கவனத்திற்குரியதாகிறது. கூத்துப் பழகும் காலங்களில் நடைபெறும் விடயங்களை வீட்டில் இருப்பவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு விலாவாரியாக விபரிப்பவர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர்.
விலாவாரியாக விபரிப்பதற்காக கூர்மையாக அவதானிக்க வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். விபரிப்பின் போது விடுக்கப்படும் கேள்விகள் மேலும் மேலும் சிறுவர்களை கூர்மையாகக் கவனிக்க தூண்டுகிறது.
வீட்டில் இருப்பவர்களுக்கு விபரிப்பதற்காக அவர்கள் செலுத்தும் கவனம், வீட்டிலும் வெளியிலும் ஏனைய சிறுவர்களு டனும் கூத்தரங்கின் ஆட்டங்கள் பாட்டுக்கள் பழக்கங்களை விளையாடி மகிழ்தலென இது விரியும்.
இந்த வாய் பார்த்தலும், விளையாடுதலும் கூத்தரங்கில் சிறுவர்களது அரிச்சுவடி ஆகிவிடுகின்றன. இவ்வாறாக பல்வேறு வகையில் இளைஞர்கள், பெரியோர்கள், முதியோர்களுக்கான அம்சங்கள் சமுதாய அரங்கான கூத்தரங்கை சமுதாயப்பல்கலைக் கழகமாகவே ஆக்கி விடுகின்றது.
கூத்து அரங்கின் சமுதாய அரங்கப் பண்பையும், சமுதாய பல்கலைக்கழக அம்சங்களையும், சமகாலத்திற்குரிய வகையில் கருத்தியல் ரீதியாகவும், செயற்பாட்டு முறையாகவும் முன்னெடுக்கப் படும் சமுதாய அரங்கச் செயற்பாடே கூத்து மீளுருவாக்கம் ஆகும்.
ബ

Page 6
கூத்து மீளுருவாக்கம் பற்றிய தமிழில் அமையும் அறிக்கையாக கெளரீஸ்வரனின் இந்நூல் அமைகின்றது.
கூத்து மீளுருவாக்கம் என்பது மகிழ்ச்சிகரமானதும் சவால்கள் நிறைந்ததுமானதொரு கூத்துக் கலையாக்க ஆய்வுச் செயற்பாடாகும்.
இது பங்குகொள் அரங்க ஆய்வுச் செயற்பாடு என்று அழைக்கப்படுகின்றது
சீலாமுனையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தப் பங்கு கொள் அரங்க ஆய்வுச் செயற்பாடு பல்வேறு தளங்களில் பல்வேறு தரப்பினரின் பங்கு பற்றல்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2002ம் ஆண்டில் எனது முதுதத்துவமானி பட்டத்திற்காக தொடங்கப்பட்ட இந்தச் செயற்பாடு 2003ம் ஆண்டில் “சிம்மாசனப் போர்’ கூத்து மீளுருவாக்கத்துடனும், அரங்கேற்றத்துடனும் உத்தியோக பூர்வமாக நிறைவு பெறுகிறது.
ஆனாலும் சீலாமுனை கூத்துச் சமூகத்தினரதும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டுக் குழு நண்பர்களதும் செயற்பாட்டு இணைப்பிலும், மற்றும் பல்வேறு தரப்பினரதும் பங்கு பற்றலில் கூத்து மீளுருவாக்கம், பங்குகொள் அரங்க ஆய்வுச் செயற்பாடாக தொடர்கிறது, வளர்கிறது, விரிவடைகிறது.
கூத்து மீளுருவாக்கம் தொடர்பாக கையேடுகள், செய்தி மடல்கள், பிரசுரங்கள், கட்டுரைகள், செய்திகள், நூல்கள் என்பனவும் உரையாடல்களுக்காக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவது மேற்படி செயற்பாட்டின் அம்சமாகவும் இருக்கிறது.
۔س4ے

இந்த வகையில் கூத்து மீளுருவாக்கம் பற்றிய விஞ்ஞா பனமாக அறிக்கையாகத் தமிழில் அமையும் கெளரீஸ்வரனது இந்நூல் மேலும் ஆழமான உரையாடல்களுக்கான முக்கியமான ஆதாரமாக அமைகிறது.
எவ்வாறு கலை கலைக்காக என்பதாக இருக்க முடியாதோ அவ்வாறே ஆய்வும், ஆய்வுக்கானதாக மட்டும் சுருங்கி, பட்டங்களை மட்டும் பறக்க விட்டு தூசிகளுள் புதையுண்டு போய்க் கிடக்க முடியாது.
கலை மனிதர்களை தனியன்களாகவும் சமூகங்களாகவும் உணர்வூட்டவும் சிந்திக்கவும் புத்தெழுச்சி கொள்ளவும் வைப்பது போல், ஆய்வும் மனிதர்களை தனியன்களாகவும், சமூகங்களாகவும் சிந்திக்கவும் உணர்வூட்டவும், புத்தெழுச்சி கொள்ளவும் வைப்பதன் இன்னுமொரு வழி முறையாகும்.
கூத்து மீளுருவாக்கம் கலையாக்கமாகவும், ஆய்வுச் செயற்பாடாகவும் இதனை முன்மொழிகின்றது, முன்னெடுக்கின்றது.
- சி. ஜெயசங்கர்
re

Page 7
என்னுரை
2000ம் ஆண்டு பல்கலைக்கழகம் சென்ற நான் நாடக அரங்கத்துறையில் நாட்டங்கொண்டு இத்துறையில் சிறப்புக் கற்கை யினைத் தொடர்ந்த சூழலில், விரிவுரையாளர் திரு. சி. ஜெயசங்கருடன் ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் எனக்கான உலக நோக்கினைத் தெரிவுசெய்து கொண்டு அதுசார்ந்த கருத்தியல் தெளிவுடன் செயல் மைய அரங்கக் கல்வியினைப் பெற்றுக்கொள்ளும் மாணவனாக என்னை வளர்த்துக்கொள்ள வழிபுரிந்தது.
இந்தச் சிந்தனைத்தெளிவு 2002இல் சீலாமுனையில் ஆரம்பித்த கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டில் என்னை முழுவதுமாக இணைத்துக் கொள்வதற்கான உத்வேகத்தினை உண்டுபண்ணியது.
இக்கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டிலிடுபட்டதன் மூலம் மக்கள்மைய சமுதாய அரங்கச் செயற்பாடுகளிலிடுபடுவதற் கான அனுபவங்களையும் பயிற்சிகளையும் நிறையவே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
காலனித்துவ, நவகாலனித்துவ, பின்காலனித்துவ, பின்
நவீனத்துவ சிந்தனைகள், கருத்தியல்கள் குறித்தும், பெண்ணி
லைவாத, தலித்திய சிந்தனைகள், கருத்தியல்கள் குறித்தும்
செயல்மைய நோக்கில் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைத்தன.
۔-63 سے

ஓர் அரங்கியல் மாணவனாக அரங்கச் செயல்வாதங்களில் ஈடுபடுவதற்கான தகுதிப்பாடுகளை வளர்த்துக்கொள்ளவும் வழியேற் பட்டுள்ளது.
இத்தகைய வாய்ப்புக்களை வழங்கிய சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்தில் ஆய்வாளரின் உதவி இணைப்பாளர்களுள் ஒருவராகப் பங்குகொண்ட நான் இச்செயற்பாட்டினுாடாக பெற்றுக் கொண்ட அனுபவங்களையும், கற்றுக் கொண்ட அறிவினையும் அடிப்படையாகக் கொண்டு “கூத்து மீளுருவாக்கம் - கோட்பாடும் செயற்பாடும்” எனும் இந்நூலை எழுதியுள்ளேன்.
இந்நூலினுடாக கூத்துமீளுருவாக்கத்தின் கோட்பாட்டையும் அதன் செயற்பாட்டையும் பற்றிக் கூற முனைந்துள்ளேன்.
சீலாமுனையில் இடம்பெற்ற கூத்துமீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச்செயற்பாட்டில் சீலாமுனையைச் சேர்ந்த வர்களும் சீலாமுனைக்கு வெளியே வாழுகின்றவர்களும் எனப் பல்வேறு மனிதர்கள் பல்வேறு நிலைகளில் தங்களது ஒத்துழைப்புக் களையும், ஆதரவுகளையும் வழங்கியுள்ளார்கள்.
இவ்விதம் பல்வேறு மனிதர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற ஆக்கபூர்வமான செயற்பாட்டின் அறிக்கையாக வெளிவரும் இந்நூலினுாடாக இச்செயற்பாட்டில் பங்கெடுத்த அனைவரும் கெளரவத்திற்கும், மதிப்பிற்குமுரியவர்களாகின்றார்கள்.
நன்றி.
து. கெளரீஸ்வரன்
இல, 273 முகத்துவார வீதி, சீலாமுனை, மட்டக்களப்பு.
-7-

Page 8
ణ X 3- , *
in
. . . . . * ※ ※3 :: ۔۔۔۔ சிம்மாசனப்போர் - மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து சதங்கையணிவிழா - 2003 சீலாமுனை
=8-
 
 
 
 

கூத்து மீளுருவாக்கம் கோட்பாடும் செயற்பாரும்
அறிமுகம்
ஈழத்துத்தமிழர்களின் பாரம்பரிய அரங்க வரலாற்றில் குறிப்பாக பல்கலைக்கழக அரங்க அறிவியல் பரப்பில், பாரம்பரிய அரங்குகள் பற்றி பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் காலத்திலிருந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பேசப்பட்டு வருவதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
இருந்த போதிலும் 1960களில் பேராதனைப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் தமிழர்களின் கூத்துக்களைச் செம்மையாக்குதல் என்ற கருத்தியலுடன் மேற்கொண்ட இராவணேசன், கர்ணன்போர், நொண்டிநாடகம், வாலிவதை என்கின்ற நான்கு அரங்க அளிக்கைகளை மையப்படுத்தியே ஈழத்தில் தமிழர்க ளுடைய பாரம்பரிய அரங்குகள் சார்ந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டதாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.
இதன் பிற்பாடு பேராசிரியர் சு.வித்தியானந்தன் செய்த நான்கு அரங்க அளிக்கைகளைச் செயற்பாடாக அல்லாமல் எழுத்துக்களின் விபரிப்பாக மட்டும் வைத்துக் கொண்டு பாரம்பரிய அரங்குகளைச் செம்மையாக்குதல் பற்றிய அரங்கியல் சிந்தனை ஒற்றை வழிப் பாதையிலான விபரிப்பாக இலங்கைத்தமிழ் அரங்க அறிவியல் பரப்பில் பரவலாக்கப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். ஈழத்துத் தமிழர் களினுடைய பாரம்பரிய அரங்க வரலாறு பற்றிய கடந்த காலத்த பல்கலைக்கழக ஆய்வுகளின் எழுத்துக்களினுடாக இதை தெளிவாகக் காணமுடியும்.

Page 9
இவ்விதம் 1960களிலிருந்து ஈழத்தமிழர்களின் பாரம்பரிய அரங்குகள் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள எழுத்துக்களினாலான அரங்க அறிவியல், கருத்தியல் தற்போது மக்கள்மைய அரங்கச் செயல்வாதக்காரர்களால் மிகுந்த விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.
அதாவது 1960களின் ஆரம்பத்தில் செயலாகவும் பின்னர் நான்கு தசாப்தங்களாக செயலற்ற காகித எழுத்துக்களாகவும் இருந்து வந்துள்ள பாரம்பரிய அரங்குகள் சார்ந்த நவீன கருத்தியல் என்பது முழுக்க முழுக்கக் காலனித்துவ நலன் சார்ந்த வகையில் மேற் கொள்ளப்பட்ட செயல்களாகவே அமைந்துவந்துள்ளன என்று விமர்சிக்கப் பட்டு வருகின்றன. இவ்விதமான விமர்சனங்களில் பல்வேறு ஆதாரங்கள் வரலாற்று ரீதியாக எடுத்துக்காட்டப்பட்டு விமர்சிக்கப்படுவதனைக் காணலாம்.
இதில் ஒன்று, மேற்படி நவீன கூத்துச் செம்மையாக்கல் கொள்கையின் விளைவாக இன்றைய பாடசாலைக் கூத்துக்களைக் காண்பதாகும்.
அதாவது 1960களில் சு. வித்தியானந்தன் மேற்கொண்ட கூத்துச் செம்மையாக்கல் கொள்கையினைத் தொடர்ந்து இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை மட்டத்தில் படச்சட்ட அரங்கில் கூத்துக்களை ஆடும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
1960களின் பின்னர் பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்து மீட்டெடுப்புப் பணிக்குப்பின்னர் பாடசாலைகளிலும் பரிசளிப்பு விழாக்களிலும், ஏனைய வைபவங்களிலும் மரபுவழி நாடகங்களையும் நடத்தும் மரபு தோன்றியது. கல்வி அமைச்சு மட்டத்திலே நடைபெறும் தமிழ்த்தின விழாக்களில் இவை நடத்தப்பட்டன. கல்வி அமைச்சால் கூத்துப்போட்டிகள் நடத்தப்பட்டன. "
“நாட்டுக் கூத்தைப் பேணவும், காலமாற்றங்களுக்கேற்ப வளர்க்கவும் 1956இல் இலங்கைக் கலைக்கழகத்தின் தலைவராயிருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களாலும் அவரைச் சார்ந்தவர்க ளாலும் பாடசாலைகளிடையேயும், தனிப்பட்ட மன்றங்களிடையேயும் வைக்கப்பட்ட நாட்டுக்கூத்துப் போட்டிகள்’
என்ற கோசத்துடன் அறிமுகமாகிய பாடசாலைக் கூத்துப் போட்டிகள், இன்று நான்கு தசாப்த காலங்களுக்குப் பின்னர் உருவா
-10

கியுள்ள நவீன கல்வியறிவு பெற்ற மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் கூத்து என்றால் அது பாடசாலைகளில் படச்சட்ட மேடைகளில் ஆடப்பட்டு வரும் ‘கூத்துக்களையே பொருள் கொள்ளும் தவறான நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது. இதில் வேடிக்கையான விடயம் என்ன வென்றால் இக்கூத்துப் போட்டிகளுக்கு நடுவர்களாக வருபவர்கள் மிகப்பெரும்பாலும் கூத்தே தெரியாதவர்களாய் இருப்பதுதான்.
இவ்வாறு கூத்து என்பது தவறான பொருள் கொள்ளலுக் குட்பட்டுச் சீரழியும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டதன் முழுப் பெருமையும் 1960களில் கூத்துச் செம்மையாக்கலைச் செய்தவர்க ளையே சாரும்.
இத்துடன் நவீன கல்வியறிவு பெறுபவர்கள் மத்தியில் கூத்து என்றால் அது ‘நாட்டுக்கூத்து’ என்று பொருள் கொள்ளும் தன்மையை யும் ஏற்படுத்தி விட்டுள்ளதுடன், “இக்கூத்துக்கள் படித்த மக்களால் ஆடப் படாது பாமரமக்களாலேயே ஆடப்படுகின்றன”,“இக்கூத்திற்பங்குகொள்ளும் நடிகர், அண்ணாவிமார், பார்வையாளர் ஆகியோரில் மிகப்பெரும்பாலானோர்
LumLDJ LDë பிருப்பது',"பாமரமக்கள்பங்குகொள்கின் பினால்அக்கூத்துக் களின் பாடல், ஆடல், உடை, நடிப்பு, அவைக் காற்றுகை (Performance) ஆகியவற்றில் செம்மை இல்லாமல் இருப்பது” என்றவாறான காலனித்துவச் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்ட கருத்துக்களை கூறும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகப் பாரம்பரியக்கூத்துக்களின் ஆடல், பாடல் வடிவங்கள், மத்தியதரப் பார்வையாளர்களின் ரசனைகளைக் கருத்தில் கொண்டு கூத்தின் இயங்குதளங்களிலிருந்து காலங்காலமாகக் கூத்துக்களை முன்னெடுத்துவரும் சமூகத்தவரின் குறிப்பாக அண்ணாவிமாரின் கருத்துக்களுக்கு இடங்கொடாது அவர்களின் சம்மதங்களின்றி பலவந்தமாக அறிவின் அதிகாரப்பலத்துடன் கூத்தின் சில கூறுகள் பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய கலைவடிவங்களாக மாற்றமுறச் செய்யப்பட்டு வர்த்தக நோக்கிலான சிலருடைய வீட்டு உடமைகளாக ஆகிவந்துள்ள வரலாற்றை நாங்கள் தெளிவாகக் காணலாம்.
......111

Page 10
தமிழர் வாழ் பிரதேசங்களில் ஆடப்பட்ட கூத்துக்களை இனம் கண்டு முக்கியமாக மட்டக்களப்புக் கூத்தின் தனித்துவமான பண்புகளினால் கவரப்பட்டு விடிய விடியக் கிராமப்புறத்தில் ஆடப்பட்டதும், சுற்றிவரப் பார்வையாளரைக் கொண்டதுமான அக்கூத்துக்களை ஒருபக்கப் பார்வையாளரை மனதிற்கொண்டு மத்திய தரவர்க்கத்தினர் பார்க்கும் வகையில் சுருக்கிச் செம்மைப்படுத்தி மேடையிட்டார் பேராசிரியர் வித்தியானந்தன்.
இதன்மூலம் இராவணேசன், வாலிவதை, கர்ணன்போர், நொண்டி நாடகம், என்பன பேராசிரியர் சு.வியின் சொத்துடமை களாயின. இவ்வாறே சிங்களப் பாரம்பரிய நடனங்கள் பல இன்று நட்சத்திர விடுதிகளில் உல்லாசப்பயணிகளுக்காக நிகழ்த்தப்படும் கலை வடிவங்களாக மாறியுள்ளதனையும், சிங்களப்பாரம்பரிய அரங்க வடிவங்களை மையமாக வைத்துச் செய்யப்பட்ட நவீனமயமாக்க செயற்பாடு இறுதியில் “மனமே"யையும் ‘சிங்கபாகுவையும் பேராசிரியர் சரத்சந்திராவின் உடமையாக்கியுள்ள நிலையையும், “லயம் ஆற்று கையை மெளனகுருவின் லயம் ஆகவும் ஆக்கிவிட்டுள்ளதனையும் காண்கின்றோம்.
ஏட்டளவில் மட்டும் கூத்துக்கள் பற்றிப் படித்துவிட்டு பக்கம் பக்கமாக கூத்துப்பற்றி பாரம்பரிய அரங்குகள் பற்றிக் கட்டுரைகள் எழுதுகின்ற, கூத்துச் செயற்பாட்டில் எவ்வித அனுபவமுமற்ற கூத்துத் துறை சார்ந்த மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் கடந்த நான்கு தசாப்த காலத்து ஈழத்து தமிழ் அரங்க அறிவியல் உருவாக்கி யுள்ளது.
இதேவேளை காலங்காலமாகக் கூத்துக்களை முன்னெடுத்து வரும் கூத்துச் சமூகங்களில் வாழ்ந்துவரும் கூத்துச் செயற்பாடுகளில் நிறைந்த அனுபவமும் அறிவும், திறனும், ஆளுமையும் கொண்டுள்ள அண்ணாவிமார்கள், கூத்துக்கலைஞர்கள் பற்றி எதுவும் வெளித் தெரியாத நிலையையுமே உருவாக்கிவிட்டுள்ளது.
ஜனாதிபதி விருது பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை
செல்லையைா அண்ணாவியார் கூட மட்டக்களப்பிலே கிராமங்கள்
தோறும் கூத்துக்களைப் பழக்கியமைக்காக விருது கொடுத்துக்
கெளரவிக்கப்படவில்லை. மாறாக தனது சமகாலத்தைய மட்டக்களப்பு
அண்ணாவிமார்களது விருப்பத்திற்கு முரணாக, பல்கலைக்கழக
-12

அறிவின் அதிகாரத்திற்குத் தன்னை அடிமையாக்கிச் செய்த, அவரே அந்திம காலத்தில் கூறி வருத்தப்பட்ட “அண்ணாவியெண்டா காசுக்கு மத்தளம் அடிக்கிறவன் எண்டு நினைச்சிட்டாங்க” என்றவாறான பணத்திற்குச் சேவகம் செய்தமைக்காகவே, அதாவது பேராசிரியர் சு. வித்தியானந்தனின் கூத்துச் செம்மையாக்கலுக்கு ஏற்ப மத்தளம் அடித்ததாலேயே அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.
இன்றும் கூட மட்டக்களப்பிலே கூத்துச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மிகுந்த புலமையும் ஆளுமையும் கொண்ட அண்ணாவிமார்கள் பலர் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மோடி வடமோடிக் கூத்துக்களில் வழங்கும் தாளக் கட்டுக்கள், ஆட்டக்கோலங்கள் என்பன அடிப்படையில் ஒன்றாயினும் இடத்துக்கிடம் அளிக்கும்தன்மையில் வேறுபடுவன. இம்மரபுவழிநாடகக் கலையில் ஆடல் இலக்கணங்கள் எழுத்தில் இல்லாதிருப்பதனாலும் பரதநாட்டியம் போல குரு-சிஷ்ய முறையில் நீண்ட காலம் வரன்முறைப்படி பயிலப்படும் மரபின்மையாலும் எல்லா அண்ணாவிமார்களுக்கும் எல்லா ஆட்டங்களும், தாளக்கட்டுக்களும் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை என்பதை ஆய்வின்போது அறிய முடிந்தது. *
எனக்கடந்த காலத்துத் தமிழ் கூத்து ஆய்வு எழுத்துக்கள் நவீனத்துவ பார்வையில் கூத்துக்களில் ஆழ்ந்த புலமையும், ஆளுமையும் உள்ள அண்ணாவிமார்களை, கூத்துக்கலைஞர்களை ஒட்டுமொத்தமாக “கூத்துக்கள் பற்றி எதுவுமே முழுமையாகத் தெரியாதவர்கள்”, “அரைகுறையான அறிவுடையவர்கள்’ என்று புறந்தள்ளியுள்ளதனையும் காண முடிகின்றது.
இவ்விதம் பல்வேறு தன்மைகளில் 1960களிலிருந்து இலங்கைத் தமிழர்களது பாரம்பரிய அரங்குகள் சார்ந்து பல்கலைக்கழக அரங்க அறிவியல் பரப்பில் கட்டமைக்கப்பட்டு வந்துள்ள கூத்துச் செம்மை யாக்கல் கொள்கையும்; அதுசார்ந்த ஆய்வுகளும் பலத்த விமர்சனத் திற்குள்ளாகிவரும் இக்காலகட்டத்தில், இன்னொரு தளத்தில் கூத்துக் களை மீளுருவாக்கும் ஆய்வுச் செயற்பாடு இடம்பெற்று புதிய நிலையில் “கூத்துமீளுருவாக்கல் கோட்பாடாக” வெளிக்கிளம்பியுள்ளமை கவனித்தற்குரியதாகின்றது.
a 35

Page 11
இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையினைச் சேர்ந்த விரிவுரையாளர் சி.ஜெயசங்கர் அவர்கள் தன்னுடைய முதுதத்துவமானி பட்டத்திற்கான ஆய்வுச் செயற்பாடாக, மட்டக்களப்பில் உள்ள நீண்ட வடமோடிக் கூத்துப் பாரம்பரியங்களைக் கொண்ட கிராமங்களுள் ஒன்றாகவுள்ள சீலாமுனைக் கிராமத்துக் கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து மேற்கொண்ட கூத்துமீளுரு வாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு புதிய பார்வையில் எமது பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கம் குறித்த அறிவியலைச் செயலாகவும் கொள்கையாகவும் முன்வைக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
இவ்வாறு சீலாமுனைக்கூத்து மீளுருவாக்கம் முன்வைக்கும் அரங்கியல் கோட்பாடுகளை அறிந்து கொள்வது இன்றைய உலகில் அரங்கியல் துறையில் ஈடுபடும் அனைவருக்கும் இன்றியமையாத தேவையாக உள்ளது எனலாம்.
இந்தவகையில் சீலாமுனைக் கூத்துமீளுருவாக்கம் முன் வைக்கும் விடயங்களுள் முக்கியமானவையாக பின்வரும் விடயங் கள் உள்ளன.
சிம்மாசனப்போர் - மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து சதங்கையணிவிழா - 2003 சீலாமுனை
-14
 

எமது பாரம்பரிய அரங்குகளின் முக்கியத்துவம் குறித்த பார்வை:-
எமது தமிழ் சூழலில் குறிப்பாகத் தமிழ்ப் பாரம்பரிய அரங்க அறிவியல் பரப்பில் கடந்த காலங்களில் கூத்துக்கலையின் முக்கியத்துவம் குறித்த பார்வையானது மண்ணின் கலைகள், பண்பாட்டின் அடையாளங்கள், தேசியத்தின் குறியீடுகள் என்ற கருத்தியலுடனேயே பார்க்கப்பட்டு வந்துள்ளன. இத்தகைய பார்வையின் பிரதிபலிப்பே தேசிய அரங்க வடிவத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாக கூத்துக்களைக் கனவு காணவும் வைத்துள்ளது.
இத்தகைய பார்வையுடன் பாரம்பரிய அரங்குகளைச் சம்பந்தப் படுத்திச் செய்யப்படும் செயற்பாடுகள் அனைத்தும் காலனித்துவம் அடைய முயற்சிக்கும் இலக்கினை நோக்கி வழிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இதில் காணக்கூடிய முரண்நகை எதுவென்றால் “அடையாள மீட்பு” என்ற பெயருடனேயே “அடையாளங்களைத் தடம் தெரியாது அழிக்கும்” செயற்பாடுகள் இடம்பெறுவதாகும்.
இதனை சிங்களப்பாரம்பரிய அரங்க அறிவியல் உலகிலும் தமிழ் பாரம்பரிய அரங்க அறிவியல் உலகிலும் 1960களிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள நவீனமயமாக்கம் செம்மையாக்கம் என்ற வரலாற்றுச் செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது தெளிவாகக் கண்டு கொள்ளமுடியும்.
இவ்வாறு அரும்பொருள்காட்சியகத்திற்கான பொருட்களாக எமது பாரம்பரிய அரங்குகளினைத் திரிபுபடுத்தும் காலனித்துவக் கருத்தியல்களிலிருந்து விடுபட்டு எமது வாழ்தலுக்கான கலைவடிவங் களாக கூத்துக்கள் உள்ள தன்மையை மையப்படுத்திப் பாரம்பரிய அரங்குகளின் முக்கியத்துவத்தினைப் பேசுவதாக சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் அமைகின்றது.
உலகமயமாக்கம் என்ற பெயரில் உலக முதலாளித்துவ
ஏகாதிபத்திய சக்திகளின் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பானது பல்வேறு
முனைகளில் பல்வேறு தந்திரோபாயங்களினுடாக, உலகின்
பல்வகைப்பட்ட வித்தியாசங்கள் கொண்ட சுயசார்பான பொருளியல்
பண்பாட்டம் சங்களைக் கொண்டுள்ள மக்கள் சமூகங்களின் -15

Page 12
சுயாதீனமான வாழ்வியலை இல்லாமலாக்கி, சுயசார்பற்ற ஒற்றை நுகர்வுப் பண்பாட்டை உருவாக்கும் பகிரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இத்தகைய ஆபத்தான ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் இத்தகைய ஆக்கிரமிப்பினை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றில் வாழும் நாம் மேற்படி நவகாலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து எமது சுயாதீனமான வாழ்வியலைத் தக்கவைப்பதற்கான உபாயங்க ளுள் ஒன்றாக எமது கூத்தரங்குகளை முன்னெடுத்து மேற்கொள்வது மிகப்பொருத்தமான செயற்பாடாக அமையும் என்று கூத்தரங்குகளின் சமகால முக்கியத்துவத்தினை சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் வலியுறுத்துகின்றது.
கூத்து ஒத்திகை வேலைகள் எவ்வாறு ஒரு சமூக ஒருங்கு கூடும் இடமாகப் பரிணமிக்கிறது. பயிலிடமாக, உரையாடல் இடமாக, ஓய்விடமாக, நினைவு கூருமிடமாக, விளையாட்டிடமாக அது பரிமாணங் கொள்கிறது. எங்களுக்கேயான சுயாதீனமான சமுதாய அரங்காக இந்த ஒத்திகை வேலை அமைந்திருப்பதை அவதானிக்கவும், உணரவும் முடிந்தது. *
கூத்துக்களை முன்னெடுத்து வரும் சமூகங்கள் மத்தியில் வருடாந்தம் ஒருதடவை குறைந்தது மூன்று மாதகாலமாக நடை பெற்றுவரும் சட்டங்கொடுத்தல் தொடங்கி அரங்கேற்றம் வரையான கூத்தரங்கச் செயற்பாடுகள் அச்சமூகத்தின் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களையும் பல்வேறு நிலைகளில் ஒன்று சேரவும், செயற்படவும் வைக்கும் சமூதாயச் செயற்பாடாக இடம்பெற்று வருகின்றன எனவும் குறித்த சமூகத்தின் சகலமனிதர்களும் தங்களது ஆற்றல்களை, அறிவைத், திறனை, ஆளுமைகளை பகிர்ந்து கொள்ளும் களங்களாக இயங்கி வருகின்றன என்றும் இன்றைய நவீன ஏகாதிபத்திய தொடர்பூடக ஆக்கிரமிப்பாலும், நவீனகல்வி முறைமைகளாலும் ஏற்படுத்தப்பட்டு வரும் மனிதத் தனிமைப்படுத்தல்களை இல்லாமலாக்கி ஒரு சமூகத்தின் சகலமனிதர்களும் கூட்டாக சமூகங்களாக இயங்குவதற்கான வழிவகைகளைப் புரிந்துவரும் கலைச் செயற்பாடு என்ற வகையில் கூத்தரங்குகளின் முக்கியத்துவத்தினைச் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாடு முன்மொழிகின்றது.

சுருங்கக் கூறின், இன்றைய உலகில் மூன்றாம் உலக நாட்டின் பிரசைகளுள் ஒரு வகையினராக வாழும் நாம், எம்மை நோக்கி வரும் உலகமயமாக்கம் எனும் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு சுயாதீனமாக வாழ்வதற்கான செயற்பாடுகளுள் ஒன்றாக பாரம்பரியக் கூத்தரங்குகளைப் பயன்படுத்த முடியும் என்று கூத்துக்களை முக்கியத்துவப்படுத்துகின்றது.
கூத்து மீளுருவாக்கத்திற்கான அவசியம் குறித்த
UT IT TOOO) --
இன்றைய உலகில் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர் கொள்வதற்கான சாதனங்களுள் ஒன்றாகக் கூத்தரங்குகளின் முக்கியத் துவத்தினை முன்மொழியும் சீலா முனைக் கூத்து மீளுருவாக்கம், இக்கூத்துக்களை உள்ளபடியே முன்னெடுத்தல் ஆக்கபூர்வமானதாக அமையமாட்டது. எனவே சமகாலத்திற்கேற்ப காலனித்துவ சிந்தனை முறைமைகளிலிருந்து விடுபட்ட தன்மைகளுடன் மீளுருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
இன்று நம்மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும். கூத்துக்கள் கூறும் கதைகளான புராண, இதிகாச மற்றும் அரச குலத்தவர்களது கதைகள் அனைத்தும் சமஸ்கிருதமயப்பட்ட ஆணாதிக்கக் கருத்தியல்களால் கட்டமைக்கப்பட்டவைகளாக உள்ளன என்பதை இவ்வாய்வு சுட்டுகின்றது.
சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற சமூகங்களை மென்மேலும் இழித்து ஒடுக்கும் தன்மை கொண்டதாக, குறித்த சமூகங்களைச் சேர்ந்த மனிதப் பாத்திரங்களின் படைப்பாக்கம் கூத்துக்களில் இடம்பெற்றுள்ளதனைக் காணலாம்.
உதாரணமாக மட்டக்களப்பு வடமோடி தென்மோடிக் கூத்துக்களில் வரும் “பறையன்' பாத்திரச் சித்தரிப்பைப் பார்க்கும் போது இப்பாத்திரம் சாதாரண மனித நிலையிலிருந்து மாறி மது அருந்திவிட்டு நிலைதடுமாறிய குடிகாரனாக, கூத்தரங்கின் சபையோரும் பார்வையாளர்களும் நையாண்டி பண்ணி ரசிக்கும்
-7-

Page 13
ஏளனத்திற்குரிய மனிதனாக, சூரியன் உதித்து மறையும் திசைகளை முரண்படக் கூறும் முட்டாள் மனிதனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இவ்விதம் உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட, அவர்களின் பார்வைக்கேற்ற மனிதராக "பறையன்’ கூத்துக்களில் படைக்கப்பட்டுள்ளமை இன்றைய சூழலில் பொருத்தமற்ற, மானுட நேயத்திற்கு முரணான படைப்பாக்கமாகவே உள்ளது.
இவ்விதமே கூத்துக்களில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றிய படைப்பாக்கமும் ஆண்களின் நோக்கங்களுக்கேற்ப, ஆண்களின் சிற்றின்பத் திற்கான கருவிகளாகப் பெண்களைப் பார்க்கும் தன்மையி லேயே அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது. உதாரணமாக தருமபுத்திரன் கூத்தில் வரும் துரோபதையாக இருந்தாலென்ன, இராம நாடகத்தில் வரும் சீதையாக, சூர்ப்பனகையாக, மண்டோதரியாக இருந்தாலென்ன அனைத்து பெண் பாத்திரங்களும் ஆணாதிக்க நோக்கில் படைக்கப்பட்டுள்ளதனைக் காண முடியும்.
எனவே மேற்படி, சமூகங்களைச் சாதி அடிப்படையில் உயர்வு, தாழ்வாகவும், பெண்களை ஆண்களின் அதிகாரத்துவ நோக்கிலும் பார்க்கின்ற கூத்தரங்குகளை இத்தகைய பிற்போக்குத் தன்மைகளுடன் முன்னெடுத்துச் செல்வது ஆக்கபூர்வமானதாக அமையமாட்டாது எனவே இக்கதைக் கட்டமைப்புக்களை கட்டவிழ்த்து சமகாலத்துப் பெண்ணிலை வாதக் கருத்தியல்களுடனும் சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான தலித்தியக் கருத்தியல்களுடனும் விசேடமாகத் தொடர்புபடுத்தி சமகாலத்திற்குரிய வகையில் முழுக்க முழுக்க மனித மையப்பட்ட அரங்காக மீளுருவாக்கம் செய்தல் வேண்டும் எனவும் இத்தகைய மீளுருவாக்கமே இன்றைய நிலையில் அவசியம் செய்தாக வேண்டி யதாக உள்ளது என்றும் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் வலியுறுத் துகின்றது.
-18

மீளுருவாக்கம் யாரால் செய்யப்படுதல் வேண்டும்:
இவ்வாறு கூத்துக்களின் சமகால முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொண்டு கூத்துக்களை முன்னெடுத்தலின் பொருட்டு அவை மீளுருவாக்கப்படுவதின் அவசியம் உணர்த்தப்படும் அதேவேளை இந்த மீளுருவாக்கம் என்பது கூத்தரங்குகளுடன் காலங்காலமாக ஈடுபட்டு வரும் சமூகத்தவருடைய பங்குபற்றல்களுடன் நடை பெறுவதாக அமைதல் வேண்டும் என்றும், கூத்தில் நிலைத்து நிற்கக் கூடிய மாற்றம் என்பது அதனை ஆடும் சமூகத்தில் எற்படும் மாற்றத்துடனேயே சாத்தியமாகும். என்பதனையும் மிக முக்கியமாக வலியுறுத்துகின்றது.
கூத்துக்களின் கருத்துக்களிலே உள்ள பிற்போக்கான அம்சங்களை இல்லாமலாக்கி மீள் உருவாக்கம் செய்வது என்பது நவீனத்துவச்சிந்தனைகள் கூறும் ஆய்வுகூடச் செயற்பாடாக, ஒரிருவர் அல்லது குறித்த சிலர் பங்கு கொள்ளும் செயற்பாடாக, அல்லாமல் காலங் காலமாக கூத்துக்களை முன்னெடுத்து வருகின்ற சமூகங்களின் உறுப்பினர்கள் பங்கு கொண்டு மீளுருவாக்குவதாக அமைதல் வேண்டும் என்பதைக் கூறுகின்றது. இவ்விதம் மீளுருவாக்கப்படும் போதுதான் அது நிலைத்துநிற்கும் தன்மை கொண்டதாக வளர்ந்து செல்வதாக அமையும் என்பதை யதார்த்த பூர்வமாக வெளிப்படுத்துவதாகச் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் அமைந்து நிற்கின்றது.
சிம்மாசனப்போர் - மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து பயிற்சி - 2003 சீலாமுனை
-19s

Page 14
பங்குகொள் ஆய்வுமுறைமையின் அவசியம்:-
இந்த இடத்திலேயே காலன்த்துவச் சிந்தனைகளுக்கமைவா னதாக உள்ள நவீன ஆய்வு முறைமைக்கு மாறாக புதிய “பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டை சீலாமுனைக் கூத்து மீளுருவாக்க ஆய்வு ஈழத்து அரங்க அறிவியல் ஆய்வு வரலாற்றில் அறிமுகம் செய்கின்றது.
காலங்காலமாக கூத்துக்களை ஆடிவரும் சமூகத்தவரின் பங்குபற்றல்களுடன் மீளுருவாக்கம இடம் பெறுவதற்கான ஆய்வுச் செயற்பாடு எனும் போது, எமது பல்கலைக்கழகங்களிலே இருந்துவரும் நவீன ஆய்வு முறைமைகள் பயன்பாட்டிற்கு உகந்ததாக அமையாது என்பது கண்டறியப்பட்டது. ஆய்வாளர் மையப்பட்ட, எதையும் காரண காரிய பூர்வமாக மட்டும் பார்க்கின்ற, முற்றிலும் புறவயமான பார்வையை வலியுறுத்தும், மக்களைத் தகவல் வழங்கிகளாக, அறிவுட்டப்பட வேண்டியவர்களாக கருதுகின்ற காலனித்துவ நலன்சார் ஆய்வு முறைமையானது ஆக்கபூர்வமான மக்கள் மையச் செயற்பாட்டிற்கு வழிபுரியமாட்டாது என்பது நன்கு உணர்ந்து கொள்ளப்பட்டு காலனித்துவ நீக்கம்பெற்ற, யதார்த்தத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய, செயலை மையப்படுத்திய புதிய பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்திற்கான ஆய்வு முறைமையாக கைக்கொள்ளப்பட்டது.
இந்தப் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் பயன்படுத்துகை, குறித்த காலத்தில் யதார்த்த பூர்வமாக ஆய்வின் இலக்கினை அடைய வைத்துள்ளது. இதனை இன்னும் விளக்குவதாக இருந்தால் கடந்த காலங்களில் ஈழத்துப் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக அரங்கத் துறைகள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட, வழமையான ஆய்வு முறைமை களைப் பின்பற்றிய ஆய்வுகள் அனைத்தும் எந்தளவிற்கு ஆய்வின் இலக்கினை யதார்த்தத்தில் சென்றடைந்துள்ளன? என்ற கேள்வியைக் கேட்பதனூடாகப் புரிந்து கொள்ளலாம்.
கடந்த காலங்களில் கூத்துக்களைப் பாதுகாத்து வளர்ப்பதற் கான நோக்குடன் பல ஆய்வுகள் ஈழத்துப் பல்கலைக் கழகங்களில் நடந்துள்ளன, இவை பலநூறு பக்கங்கள் கொண்ட புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன, ஆய்வு செய்தவர்களுக்கு பட்டங்களும், பதவிகளும் கிடைத்தும் விட்டன ஆனால் ஆய்வு செய்யப்பட்டதுறையின் தன்மையோ
ص220سم

மெல்ல மெல்ல அழிவை நோக்கியே சென்று கொண்டிருந்தது இது மறுக்க முடியாத யதார்த்தம்.
ஆய்வு என்ன நோக்குடன் நடந்து முடிந்துள்ளதோ?! அந்த நோக்கத்திற்கு எதிர்மாறான விளைவுகளே யதார்த்தத்தில் நிகழ்ந்துள்ளன. சில ஊர்களின் கூத்துப் பாரம்பரியம் அவ்வூர்களின் அண்ணாவிமார்களது மறைவினோடு நின்றுவிட்ட தன்மைகளைக் காணமுடிகின்றது. இவ்விதம் எமது பல்கலைக்கழகங்களில் நடை முறையில் உள்ள நவீன ஆய்வுமுறைமையானது யதார்த்தத்தில் எவ்வித ஆக்கபூர்வமான மாறுதல்களையும் உண்டு பண்ணாமல், இருப்பவற்றையும் இல்லாமல் அழிக்கும் செயலையே புரிந்து வருகின்ற வரலாற்றின் புரிந்து கொள்ளலுடனான பின்புலத்திலேயே சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்திற்கான ஆய்வுச் செயற்பாட்டு முறைமையாக பங்குகொள் ஆய்வுமுறைமை ஆய்வாளர் சி. ஜெயசங்கரால் பயன் படுத்தப்பட்டது. இதுபற்றி ஆய்வாளர் பின்வருமாறு விபரித்துள்ளார்.
பாடசாலை அரங்கச் செயற்பாட்டு, சமுதாய அரங்கச் செயற்பாட்டு அனுபவங்கள், குறித்த சமூகத்தில் எற்படுத்தும் மாற்றத்தினூடாக கூத்தின் நிலைத்து நிற்கும் மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற எனது கருத்து மேலும் உறுதிபெற்றது.
எனது முதுதத்துவமாணி ஆய்வுக்கும் இதனையே எடுத்துக் கொண்டேன். ஆனால் மரபு ரீதியான ஆய்வு முறைகள் எனது செயற்பாடுகளுக்கு பொருத்தமானவையாக இல்லாதிருப்பதை ஆழமாக உணர்ந்தேன். இது வரையில் கூத்து, ஆய்வுக்கான ஆவணமாகவும், கூத்தர்கள் ஆய்வுக்கான தகவல் வழங்கிகளாகவுமே பயன்படுத்தப் பட்டிருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் இந்த ஆய்வுகளின் அறிவு கூத்தர்களைச் சென்றடைந்ததாகவும் இல்லை என்பது நன்கறியப்பட்டது.
இந்நிலையில் கூத்தர்களையும் பங்காளர்களாக ஆக்கும் ஆய்வு முறை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். பாடசாலை அரங்க, சமுதாய அரங்க செயற்பாடுகளில் கூட்டுச் செயற்பாடு, கூட்டுழைப்பு, இணைப்பாக்கம் (Facilitation) ஆகிய அனுபவங்களும், பேற்றோல் பிறெஃக்ற், போலே பிரேயறி, ஒகஸ்ரோ போலினது நூல்களின், கட்டுரைகளின் வாசிப்பும்,
a 21

Page 15
அரங்கச் செயற்பாடுகள் அவற்றின் பிரயோகங்களும் காரணமாக வந்த அறிவும் அனுபவமும், கூத்தர் சமூகங்களுடன் இருந்த நெருங்கிய பரிச்சயமும் கூத்தர்களை இணைத்து ப்ங்குகொள் அரங்கச் செயற்பாட்டை முன்னெடுக்கக் கூடிய நிலையை என்னில் ஏற்படுத்தயிருந்தது. இதேவேளை இணையத் தேடலில் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகள் பற்றிய பலவிடயங்களைத் தேடிக் கொண்டேன்.
Igấ6ð gögólů umts Linda Tuhiwai Smith 6T6Iorp LDCBuumf 6oT 9565floor Indigenous Research Methodologies 6T6orp 5656,or eig5kypass கோட்பாட்டு ரீதியாக எனது ஆய்வுமுறையை முன்னெடுக்க முடிந்தது. இந்த வேலைத்திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜேம்ஸ் தொம்சன் கொண்டிருந்த பரிச்சயமும், இச்செயற்பாடு பற்றிய அவருடைய கருத்துகளும் புதியதொரு முறையை அறிமுகப் படுத்தி முன்னெடுப்பதில் உள்ள சங்கடங்களைத் தவிர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.
Indigenous Research Methodologies cup6oreo655 sqtississ6 எனது கருத்துக்களை உறுதிபெறச் செய்தன. அச்சில் அடிக்குறிப்புகளுடன் வந்தால்தான் ஆய்வு என்று ஊறிப்போயுள்ள காலனித்துவ நிலைப்பாட்டை கோள்விக்குள்ளாக்கி அறிவின் அதிகாரத்தை தகர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்தியது.
இந்தப் பின்னணியில்தான் தர்மபுத்திரன் கூத்து என்ற பாரம்பரியக் கூத்து சீலாமுனைக் கூத்தர்களின் பங்குபற்றலுடன் சிம்மாசனப் போராக மீளுருவாக்கம் பெற்றிருக்கிறது. "
இந்த வகையில் இலங்கைத்தமிழ் அரங்க ஆய்வுச்சூழலில் ஆய்வின் நோக்கத்தை யதார்த்தத்தில் காண்பதற்கான ஆய்வு முறைமையாக புதிதான பங்குகொள் ஆய்வு முறைமையை முதன் முதலில் அறிமுகம் செய்ததாகவும், யதார்த்தத்தில் ஆய்வின் இலக்கினை அடைந்துள்ள ஓர் ஆய்வுச் செயற்பாடாகவும் கவனிப்பிற் குள்ளாகும். சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் ஒரே நேரத்தில் செயற்பாடகவும் கோட்பாடாகவும் அல்லது செயற்பாட்டினுாடாக கோட்பாட்டை நிறுவும் ஆய்வாகவும் அமைந்துள்ளது எனலாம்.
--2222ے

இதன்படி எவ்விதம் யதார்த்தத்தில் ஆய்வின் இலக்கினை அடைந்துள்ளது என்பதனைப் பார்க்கின் சுருக்கமாக, கூத்தரங்குகளின் சமகால முக்கியத்துவத்தினை வலியுறுத்தி, இவ்வரங்குகளினூடாக கட்டமைக்கப்பட்டுள்ள ஆதிக்க கருத்தியல்களை இவ்வரங்குகளை முன்னெடுத்துவரும் சமூகத்தினரின் பங்கு பற்றல்களுடன் கட்டவிழ்ப்புச் செய்து, சமகாலத்திற்கேற்ற பொருத்தமான ஆக்கபூர்வமான முறைகளில் மீளுருவாக்கம் செய்து முன்னெடுத்தல். என்ற ஆய்வின் நோக்கினை யதார்த்தத்தில் இடம் பெறச் செய்ததாக இவ்வாய்வுச் செயற்பாடு அமைந்துள்ளது.
பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் ஆரம்பம்:-
இந்த ஆய்வுச் செயற்பாடு 2002ம் ஆண்டின் ஆனிமாதம் முதலாம் திகதி சீலாமுனையில் ஆரம்பித்தது. காலங்காலமாக எவ்விதம் கூத்துக்கள் ஊரில் ஆடப்படுகிறதோ! அவ்விதமே ஆடுவதி லிருந்து ஆரம்பித்து ஆய்வுச் செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதாகத்தனது ஆய்விற்கான ஒழுங்கினை ஆய்வாளர் திட்ட மிட்டிருந்தார்.
இதன்படி முதலில் சீலாமுனைக் கிராமத்தில் பாரம்பரியமாக ஆடப்பட்டுவந்துள்ள மரபிற்கமைவாக 1990ம் ஆண்டு அரங்கேற்றிய தருமபுத்திரன் வடமோடிக்கூத்தின் ஓர் பகுதியான அருச்சுனன் பாசுபதம் பெறுவதை மையப்படுத்திய ‘அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ என்ற வட மோடிக்கூத்துக்கான சட்டம் கொடுக்கப்பட்டு கூத்துப்பழக்கப்பட்டது. ஏறத்தாழ ஒருமாத முடிவில் சீலாமுனைச் சமூகத்தவருக்குச் சொந்தமான மட்டக்களப்பு எல்லைவீதி நரசிங்க வயிரவ சுவாமி ஆலய வருடாந்தச்சடங்கு விழாவில் ஆறாம் சடங்கு தினத்தன்று இரவு (26/06/2002) இக்கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இவ்விதம் சீலாமுனையில் பத்துவருட இடைவெளியின் பின்னர் மீண்டும் தொடங்கிய கூத்துச் செயற்பாட்டின் ஆரம்பம் தொடங்கி இறுதிவரைக்குமான அதாவது சட்டங்கொடுத்தல் தொடங்கி அரங் கேற்றம் வரையான காலம் வரைக்கும் ஆய்வாளர் அவதானிப் பாளராகவும், இடைக்கிடையே கூத்தர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்பவராகவும் இருந்தார்.
= 2235۔

Page 16
கூத்து மீளுருவாக்க செயற்பாடு பல கட்டங்களாக வகுக்கப்பட்டது. முதலாவது கட்டம் :- கூத்தர்கள் வழமையாக ஆடும் முறையிலேயே ஆடவைத்தது. இக்கட்டத்தில், அவ்ர்களது தொழிற்பாட்டில் தொடர் அவதானியாகவும், ஆதரவளராகவும் இருந்தது. இக்கட்டத்தி லேயே ஒத்திகைவேலையின் சமூக முக்கியத்துவம் உணரப்பட்டது. எந்தெந்த விடயங்களில் எப்படியெப்படி வேலை செய்யப்பட வேண்டு மென்று திட்டமிடப்பட்டது. முதலாம் கட்டம் “அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ கூத்து அரங்கேற்றத்துடனும் கலைஞர் கெளரவப் படுத்தலுடனும் நிறைவு பெற்றது. கிடைத்த மக்கள் ஆதரவு முழு இரவுக்கூத்தை ஆடும் விருப்பத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இது இரண்டாவது கட்டத்தைத் தொடங்குவதற்கு வழிதிறந்தது. *
இக்காலத்தில் தன்னுடைய நோக்கத்தை கூத்தர்களிடம் தெரிவித்த ஆய்வாளர் கூத்தர்களின், கூத்துச்சமூகத்தவரின் முழுச் சம்மதத்துடன் தனது ஆய்வுச்செயற்பாட்டின் இரண்டாம் கட்டத்திற்கான நகர்வுகளில் ஈடுபட்டார்.
முதலாவது கட்டத்தில் அதாவது ‘அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ என்ற வடமோடிக்கூத்தினைப் பழகிய காலங்களில், கூத்துச் சமூகத்தவர் களுடன் இடைக்கிடையே ஆய்வாளர் மேற்கொண்ட கலந்துரை யாடல்களின் ஊடாக சமகால உலகில் கூத்துக்களை முன்னெடுத் தலின் முக்கியத்துவம் குறித்த பார்வை உரையாடலுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனூடாக முதல் கட்டத்தில் சீலாமுனைக் கூத்தர்கள் தாம் ஆடுகின்ற கூத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் நிலைமை உருவானது.
குறிப்பாக சீலாமுனையைச் சேர்ந்த இளந்தலைமுறையினர் பலர் இந்தக் கணணியுகத்தில், இலத்திரனியல் யுகத்தில் கூத்தாடுவதன் முக்கியத்துவத்தை கருத்தியல் அடிப்படையில் தெளிவாக உணர்ந்து கொண்டு செயற்பாடுகளில் தொடர்ந்து முன்செல்வதற்கான உந்துதல் கிடைக்கப்பெற்றது என்றால் அது மிகையாகாது.
பத்து வருட இடைவெளியின் பின்னர் சீலாமுனையின் சமூக உறவுகள் கூத்துக்காக ஒன்றுகூடி செயற்பட்ட அனுபவம் இக்கால இடைவெளியில் வளர்ந்த இளந் தலைமுறையினர் மத்தியில்
-24

பங்குகொள் ஆய்வுகூறும் கூத்தின் சமகால முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக அறிந்து விளங்கிட வைத்தன.
அதாவது நாங்கள் கூத்தாடுவதால் தமிழரின் அடையாளம் பாதுகாக்கப்படுகிறது. தனித்துவம் அழியாது உள்ளது என்ற வழமை யான கருத்துக்கும் மேலாக நாம் கூத்தாடுவதால் சமூகமாக ஒன்றுசேர முடிகின்றது. சுயாதீனமான மனிதர்களாக வாழமுடிகின்றது, சிறுவர்கள் பாடசாலை வகுப்பறைகளில் பெறமுடியாதுள்ள அனுபவம் சார்ந்த கல்வியினை கூத்தரங்குகளில் பெற முடிகின்றது. வளர்ந்தவர்களும், முதியவர்களும் கல்வி கற்கும் திறந்தவெளிக் கல்விக்கூடமாக கூத்தரங்குகள் உள்ளன என்பதையும், உழைத்துக்களைத்த மனிதர்கள் இனிமையான கலை இரசனையுடன் பொழுதைக் களிக்கும் பொழுது போக்கிடங்களாக கூத்தரங்குகள் திகழ்கின்றன என்பதையும், ஒட்டுமொத்த மாக மனிதர்கள் சமூகமாக ஒன்றுசேர்ந்து சுயாதீனமாக வாழ்வதற்கான செயற்பாடாக கூத்தரங்குகள் உள்ளன என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது.
இன்னும் அதனைத் தெளிவாகச் சொல்வதென்றால் 1990களுக்குப் பின்னர் வளர்ந்த சீலா முனை இளந் தலைமுறையினருக்குத் தெரியவராத பல விடயங்கள் கூத்தரங்குகள் ஊடாகத் தெரியவந்தன. உதாரணமாகச் சாதாரணமான மனிதர்களாக பத்தோடு பதினொன்றாக இளந்தலைமுறையினர் மனதில் பதிவாகியிருந்த பலர் சிறந்த கூத்துக் கலைஞர்களாகவும், சிறந்த முகாமைத்துவமுள்ளவர்களாகவும் அடையாளம் காணப்பட்டார்கள். கூத்தின் முன்னிடுகாராகச் செயற்பட்ட திரு. செ. செல்வராசா அவர்களின் ஆற்றல்கள் எம்மை வியக்க வைத்தன. பல மனிதர்களின் ஆளுமைகள் எமது புருவங்களை உயர்த்திட வைத்தன.
இவ்விதம் கூத்தாடாதமையால் பத்து வருடங்களாக ஆற்றல் களை, அறிவை, திறன்களை ஆளுமைகளை வெளிப்படுத்த, புதிய இளந்தலைமுறையினருடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப் பமற்றிருந்த இளைய தலை முறையினர் பல்வேறு மனிதர்களை சரியாக இனங்கண்டு கொள்ள சீலாமுனையின் 2002 கூத்தரங்கின் ஆரம்பம் உதவியது.

Page 17
“அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ என்ற வடமோடிக் கூத்து முதலாவது அரங்கேற்றத்தினை முடித்து இரண்டாவது அரங்கேற்றத்தை ஏறாவூர் பத்திரகாளி அம்மாள் ஆலயச்சடங்கு விழாவிலும் நிகழ்த்தி யதைத் தொடர்ந்து இக்கூத்தினை மையமாக வைத்து மீளுருவாக் கலைச் செய்வதற்கான செயற்பாடுகள் சீலாமுனைப் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் போது பல்வேறு தளங்களில், பல்வேறு வகையில் மேற் கொள்ளப்பட்டன.
இரண்டாவது கட்டம்- தர்மபுத்திரன் முழு இரவுக் கூத்துக்கான சட்டங்கொடுத்தலுடன் ஆரம்பமாகியது. இதேவேளை அருச்சுனன் பெற்ற பாசுபதம் (தருமபுத்திரன் கூத்தின் பகுதி) பல்வேறு ஊரவர்களின் அழைப்பின் பெயரிலும் அரங்கேற்றப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சந்தர்ப்ப வசமாக படச்சட்ட மேடையில் கூத்தை ஆடவேண்டி வந்தது. இதன் பொழுது எழுந்த விமர்சனங்கள் கூத்தை களரியில் ஆடுவதா படச்சட்ட மேடையில் ஆடுவதா என்ற விவாதத்தைக் கிளப்பியது. இது தனித்த கட்டுரைக்குரியது) கூத்து என்றால் வட்டக்களரியில் ஆடப்பட வேண்டு மென்ற முடிவுக்குக் கூத்தர்கள் வந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில், கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு இரண்டு விடயங்களை கவனத்தில் கொண்டது. 1. விடயம் சார்ந்தது. 2. ஆடல், பாடல், உடை, ஒப்பனை சார்ந்தது (வடிவம் சார்ந்தது)
క్టీ °°° 5ሯ ళ్ల
சிம்மாசனப்போர் - மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து அரங்கேற்றம் - 2003 சீலாமுனை
-26
 
 

சிலாமுனையில் நிகழ்ந்த கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு இரண்டு பகுதிகளாக இடம் பெற்றது.
1. கூத்தின் விடயம் சார்ந்த மீளுருவாக்கம்
2. கூத்தின் ஆற்றுகை சார்ந்த மீளுருவாக்கம்
கூத்தின் விடயம் சார்ந்த மீளுருவாக்கம்:-
காலங்காலமாக ஆடப்பட்டுவரும் கூத்துக்களின் கருப் பொருளாக உள்ள புராண, இதிகாச மற்றும் அரச குலத்தவர்களது கதைகளினூடாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பிற்போக்கான, ஆதிக்க கருத்தியல்களை அடையாளங்கண்டு, அவற்றைக் கட்டவிழ்த்து ஆக்க பூர்வமான வகையில் ஆதிக்க நீக்கமடையச்செய்து மீளுருவாக்கி ஆற்றுகை செய்வதாக இச்செயற்பாடு இடம்பெற்றது.
கூத்தின் எழுத்துருவை மையமாகக் கொண்ட இம்மீளுரு வாக்கச் செயற்பாடுகள் பின்வரும் வழிமுறைகளினூடாக மேற் கொள்ளப்பட்டன.
01. கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், களப்பயிற்சிகள் என்ப வற்றை கூத்துப் பழகும் இடத்தில் ஒழுங்கமைத்து நடாத்தியமை.
02. உள்நாட்டு, வெளிநாட்டு அரங்கச் செயற்பாட்டாளர்கள்,
கலைஞர்கள், ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் போன்றவர்களு டனான சந்திப்பும், கலந்துரையாடல்களும் இடம்பெற்றமை.
03. பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்ச்சியான
சந்திப்பும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றமை.
04. உரையாடல் அரங்கச் செயற்பாடுகளை நடாத்தியமை.
05. தொலைக்காட்சியூடாக இதிகாசங்களான மகாபாரதம் இராமா
யாணம் குறித்த புதிய கோணங்களினாலான நாடகங்கள், சினிமாக்களைப் பார்வைக்கு விட்டமையும் உரையாடலும்.
06. மகாபாரதம், இராமாயாணம் தொடர்பான இலக்கியங்கள், எழுத் தாக்கங்கள் என்பனவற்றை வாசிப்பிற்கு விட்டமையும் உரையாடலும்.
-27

Page 18
என்று பல்வேறு வகைகளில் கூத்து எழுத்துருவைக் கால மாற்றங்களுக்கேற்ப கட்டவிழ்த்து புதிதாக மீளுவாக்கம் செய்வ தற்கு ஏற்ற செயற்பாடுகள் 2002ம் ஆண்டில் ஆனி மாதத்தையடுத்து வருடத்தின் இறுதிவரை சென்று 2003ம் ஆண்டின் ஆரம்பத்திலும் தொடர்ந்து கொண்டிருந்தது.
மேற்படி செயற்பாடுகள் ஊடாக காலங்காலமாகச் சீலாமுனை யில் ஆடப்பட்டு வந்த தருமபுத்திரன் வடமோடிக் கூத்து எழுத்துருவில் உள்ள பொருத்தமற்ற பல சம்பவங்கள் கூத்துக்கலைஞர்களால் சுட்டிக் காட்டப்பட்டன. இவற்றுக்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன இவற் றையே ஒரு தொகுப்பாகக் கூறமுடியும். குறித்த ஒரு சிலவற்றை விபரிப்பது இதனை விளங்கிக் கொள்ள பொருத்தமாயிருக்கும் என்பதால் சில சம்பவங்களை மட்டும் இங்கு கூறுகின்றேன்.
கூத்து மீளுருவாக்கத்திற்கான ஆய்வுச் செயற்பாட்டின் தொடக்கத்தில் சாதி ரீதியாக உள்ள ஏற்றத்தாழ்வான பார்வை குறித்த உரையாடல்களே பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலில் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்தில் பங்கு கொண்ட மூத்த கூத்துக் கலைஞரான சின்னையா விஜேந்திரன் அவர்கள் மகாபாரதக் கதையில் துரோபதியை அரச சபையில் வைத்து பந்தயத்தில் தோற்ற பொருளாகப் பார்த்தபோது கர்ணனே துயிலை உரிவதற்கு காரணமாக இருந்தான் என்று கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இங்கு கர்ணன் தேரோட்டியின் மகன் தாழ்த்தப்பட்டவன் என்பதனாலேயே இவ்வாறு கூறினான் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டிருப்பதாக விளங்கப் படுத்தினார்.
உண்மையில் மகாபாரதக் கதையின் படி கெளரவர்களின் அழிவிற்குக் காரணமான முக்கிய இடமாக துரோபதையின் துயிலுரிதல் சம்பவம் இடம்பெறுகின்ற நிலையில் இந்தச் செயலுக்குக் காரண மானவன் தாழ்த்தப்பட்ட குலத்தவனான கர்ணனேதான் என்கின்ற செய்தி மகாபாரத மூலக்கதையில் மிகவும் நாசுக்காக புகுத்தப்பட் டுள்ளதை, அதாவது எம்மிடையே உயர்சாதிக்காரர்கள் என்போர் கூறிவரும் “கீழ்சாதிக்காரன் தன்னுடைய கீழ்ச்சாதிக் குணத்தைக் காட்டி விட்டான்” என்ற கதையாடலை இன்னும் இன்னும் நிலை நிறுத்தும் வகையில் மகாபாரதக்கதையில் உள்ள கர்ணன் பற்றிய படைப்பு அமைந்துள்ளது எனலாம். இத்தகைய புரிதலை சீலாமுனைக்
-28

கூத்து மீளுருவாக்கத்திற்கான ஆய்வுச் செயற்பாட்டின் போது, காலங்கால மாகக் கூத்தினை ஆடிவரும் சமூகத்தின் உறுப்பினரே உய்த்துணர்ந்து ஏனையவருக்கும் அதனை விளங்கச் செய்தமை குறிப்பிடத்தக்க சம்பவமாக இருந்துள்ளது.
இன்னொரு சம்பவம், இது பெண் ஒடுக்கு முறைமை சார்ந்தது. சீலாமுனைக்கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் முதல் பகுதியில் சாதியடிப்படையிலான ஏற்றத்தாழ்வு களைக் கட்டமைக்கின்ற ஆதிக்கக் கருத்தியல்கள் பற்றிய உரை யாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவ்விடயம் ஆக்க பூர்வமான வகையில் முன்னேற்றத்தை அடைந்ததைத் தொடர்ந்து, கூத்து மீளுருவாக்கத்திற்கான செயற்பாட்டில் பெண்ணிலைவாதச் சிந்தனைகள் பல்வேறு வகைகளில் உரையாடலுக்கு கொண்டு வரப்பட்டன.
956) s 60 yujm L65 systig556ir (Forum Theatre) DGILITs பெண்ணிலைவாதக் கருத்தியல்களை உரையாடலுக்கு கொண்டு வருவதற்கான உத்தியை ஆய்வாளர் கையாண்டார். அதாவது ஏற்கெனவே 1990 ஆண்டு சீலாமுனையில் ஆடப்பட்ட தருமபுத்திரன் வடமோடிக்கூத்தில் துச்சாதனன் துரோபதியைத் துயில் உரிவதற்காக அழைத்துவரும் சந்தர்ப்பத்தை கூத்தாக நிகழ்த்தி அதிலிருந்து உரை யாடல் அரங்கச் செயற்பாட்டை நடாத்துவதாக இது அமைந்திருந்தது.
சீலாமுனையில் கூத்துப்பழகும் வாவிக்கரைத் தென்னந்தோப்பு வளாகத்திற்குள் வழமைபோல் இரவு எட்டுமணியளவில் கூத்துப்பழக ஆரம்பிக்கும் நேரத்தில் 1990ம் ஆண்டு நிகழ்ந்த தருமபுத்திரன் கூத்தில் துரோபதையாக ஆடிய திரு. சி. ஞானசேகரம் அவர்களும், துச்சா தனனாக ஆடிய திரு.க. இராமலிங்கம் அவர்களும் உதவி அண்ணாவியார் திரு. த. கிருபாகரன் அவர்களின் மத்தள இசையில் துரோபதையைத் துயிலுரிய முற்படும் காட்சியை சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.
காட்சி திடீரென ஓர் கட்டத்தில் நிறுத்தப்படுகின்றது. இப்போது
இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி இதில்
யாராவது ஒருவர் துரோபதையாக இருந்தால் என்ன செய்வீர்கள்
செய்து காட்ட முடியுமா? என்று ஆய்வாளர் சி. ஜெயசங்கர்
கேட்கின்றார். இதைத் தொடர்ந்து ஆண்கள் பெண்கள் எனப்பலர்
229سے

Page 19
அரங்கச் செயற்பாடு ஊடாகவும் உரையாடலுாடாகவும் தங்களது கருத்துக்களை கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் சீலாமுனையைச் சேர்ந்த பா. அகிலன் என்ற இளைஞன் கூறிய கருத்து சீலாமுனைக் கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டில் பெண்ணியச் சிந்தனைகளை ஆர்வத்துடன் உரையாடுவதற்கான வழியினைத் திறந்து விட்டது என்பேன்.
அகிலன் கேட்டது இதுதான். “துரோபதியைத் தொடுவதற்கு துச்சாதனனுக்கு என்ன உரிமை உண்டு? இக்கேள்வி இச்செயற் பாட்டில் பங்கு கொண்ட ஏட்டண்ணாவியார், மூத்த கூத்துக் கலைஞர்கள், இளைய கூத்துக்கலைஞர்கள் எனப் பலருக்கும் கூத்துக்களில் படைக்கப் பட்டுள்ள பெண்பாத்திரங்கள் பற்றிய படைப்பாக்கத்தை கட்டவிழ்த்துப் புதிய வகையில் மீளுருவாக்கிப் படைக்க வேண்டும் என்ற சிந்தனையை எழச்செய்தது.
இதனைத் தொடர்ந்து தருமபுத்திரன் கூத்தில் உள்ள பெண் பாத்திரங்கள் பற்றிய படைப்பாக்கம் எவ்விதம் உள்ளது என்பது தொடர்ச்சியான உரையாடலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த உரையாடலின் போது ஏற்கெனவே மகாபாரதக் கதையினை முழுமையாக வாசித்துக் கொண்டிருந்த ஏட்டண்ணாவியார் திரு. செ.சிவநாயகம் அவர்கள் மகாபாரத மூலக்கதையில் துரோபதியை அந்தப்புரத்திலிருந்து அரச சபைக்கு அழைத்து வருவதற்குத் துரியோத னன் தனது தேர்ப்பாகனான பிரதிகாமியினை அனுப்பியபோது, பிரதிகாமி, மன்னனின் கட்டளையை திரோபதியிடம் கூறுகின்றான். அப்போது துரோபதி கோபத்துடன் பிரதிகாமியிடம், “தருமன் தன்னைத் தோற்ற பின்னர் என்னைத் தோற்றானா? இல்லை என்னைத்தோற்ற பின்னால் தன்னைத் தோற்றானா?” என்று கேட்டு வருமாறு கூறுகின்ற சம்பவம் உள்ளதாகவும் ஆனால் இச்சம்பவம் தருமபுத்திரன் கூத்தின் எழுத்து ருவில் எழுதப்படவில்லை. என்பதைச் சுட்டிக்காட்டி இச்சம்பவம் இனி மீளுருவாக்கி எழுதப்படவுள்ள கூத்தில் சேர்க்கப்பட வேண்டியது அவசிய மானது என்பதை ஏனைய கூத்துக்கலைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இத்தகைய உரையாடல் எமது பாரம்பரிய கூத்து எழுத்துருக்க ளில் முழுக்க முழுக்க ஆண்களின் நோக்கிலேயே பெண்பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன என்ற உண்மையை விளங்கிடவும், இதனைக் களைந்து மனிதநேயத்துடன் பெண்களைப் பெண்களாக மனிதர்களாகப்
a 350

படைக்கவேண்டும் என்ற மீளுருவாக்கத்தின் அவசியத்தையும் சிலாமுனைக் கூத்தர்களிடையே உண்டுபண்ண வைத்தன.
இந்த வகையான விளக்கத்தின் தொடர்ச்சியாக சீலாமுனையில் முதன் முதலாக மீளுருவாக்கப்பட்ட கூத்தான ‘சிம்மாசனப்போர்’ என்ற வடமோடிக் கூத்தின் உருவாக்கத்தில் ஏற்கனவே இருந்துள்ள தரும புத்திரன் கூத்தில் இல்லாத புதிய பகுதி இணைக்கப்படுகின்றது.
பிரதிகாமி எனும் பாத்திரம் அறிமுகமாகின்றது. பிரதிகாமி தேர்த்தாளத்துடன் தேரில் வருகின்றான், அரசனைச் சந்திக்கின்றான் அரசன் அந்தப்புரத்திலிருக்கும் துரோபதியை அழைத்துவரும்படி பணிப்புரை வழங்குகின்றான் பிரதிகாமி துரோபதியைச் சந்திக்கின்றான். துரோபதியிடம்
"துரோபதி கேளாய் சூது எனும் மயக்கத்தால் உன்னை
தோற்றிட்டார் தருமரும் ஜெயித்திட்டார் துரியரும் அன்னையே உன்னையும் அழைத்திட வந்தேனே.” “
என்கின்றான். இதைக்கேட்ட துரோபதி,
“என்னைத் தோற்ற பின்பு தன்னைத்தோற்றாரோதான் தன்னைத்தோற்ற பின்பு என்னைத் தோற்றாரோதான் கேளாய் கேட்டு வாராய்” '
என்று கோபத்துடன் பிரதிகாமியிடம் கூறுகின்றாள். ஏற்கெனவே தருமபுத்திரன் கூத்தில் வந்த ஏதுமறியாத கணவனே கண்கண்ட தெய்வம், என்று கணவன் வழி செல்லும், குரலற்ற பெண்ணாக இருந்த துரோபதி தனதுகணவன் என்றாலும் செய்தது நியாயமானதா? என்பதைத் துணிவுடன் தட்டிக்கேட்கின்ற ஆளுமை நிறைந்த பெண்ணாகப் படைக்கப்படுகின்றாள். இவ்வாறு பற்பல ஆக்கபூர்வமான மாற்றங்கள் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்தில், முதன்முதலாக மீளுருவாக்கம் செய்யப்பட்ட “சிம்மாசனப்போர்’ எனும் வடமோடிக் கூத்தில் சீலாமுனைக் கூத்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டில் கூத்தின் விடயம்
சார்ந்து மீளுருவாக்கத்தில் பெண்ணிலைவாதச் சிந்தனைகள் உள்
வாங்கப்பட்டு மீளுருவாக்கப்பட்டதுடன் இணைந்ததாக பெண்பாத்திரங்
-35

Page 20
களுக்கு பெண்களையே பங்கு கொள்ளச் செய்யும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
பாரம்பரியமாக பயில் நிலையிலிருந்துவரும் கூத்தரங்கச் செயற்பாடுகளின் ஆற்றுகைகளில் மிகப்பெரும்பாலும் ஆண்களே பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விடிய விடியக் கூத்துக்களை ஆடுவதற்கான வலு பெண்களிடம் இல்லை என்று வலியுறுத்தப்பட்டு பெண் கூத்துக்களுக்கு ஆண்களே வேடமிட்டு ஆடும் மரபு பேணப்பட்டு வருகின்றது.
இப்பின்புலத்தில் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கச் செயற் பாட்டில் கூத்தாடுவதற்கு ஆர்வமும், விருப்பமுமுடைய பெண்களை இணைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெண்ணிலைவாதச் சிந்தனைகள் பற்றிய உரையாடல் களினூடாக கூத்துக்களில் பெண்களை பங்கு கொள்ளச் செய்வதில் அண்ணாவியார் உள்ளிட்ட மூத்த கூத்துக்கலைஞர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இச்சூழலில் ஆய்வாளரும் அவருடைய மாணவர்களும், நண்பர்களும் குழுவாக மேற்கொண்டுவந்த அரங்கச் செயற்பாடுகள், கூத்தாட்ட பயிற்சிகள், களப்பயிற்சிகள் முதலியவற்றில் சீலாமுனையின் சிறுவர்களையும், இளங்கூத்தர்களையும் இணைத்துக்கொண்டு வழமை யாகக் கூத்துப்பழகும் இடத்தில் நடாத்தி வந்ததன் மூலம் இச் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றியவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள் பலர் கூத்தாட விருப்பம் தெரிவித்தார்கள்.
இத்துடன், ஆய்வாளருடன் இணைந்து அரங்கச் செயற் பாடுகளிலிடுபட்டு வந்த ரஜீவனி பிரான்சிஸ், லளினி திசவீரசிங்கி எனும் இரு பெண் கலைஞர்கள் ஆர்வத்துடன் சீலாமுனையில் மீளுரு வாக்கப்படவுள்ள கூத்தில் ஆற்றுகை செய்வதற்கான பயிற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இதனால் கவரப்பட்ட சீலாமுனையைச் சேர்ந்த கூத்தாட ஆர்வமாயிருந்த பெண்பிள்ளைகள் பெற்றார், உறவினரின் ஆதரவுடன் கூத்தாட முன்வந்தார்கள்.

இந்தவகையில் “சிம்மாசனப்போர்’ கூத்தில் பி. ரஜீவனி, தி. லளினி, ச. ஸ்ரெலா, நா. மிதிலா, வ. ரஜிதா, வ. வஜிதா ஆகிய பெண் கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி அனைவரதும் பாராட்டு தல்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
இதன்மூலம் தொடர்ந்து பாரம்பரியக் கூத்துக்களில் பெண் பாத்திரங்களுக்கு பெண் கலைஞர்கள் பங்குபற்றுவதற்கான சாத்தியப் பாடுகள் அதிகரித்துக் கொண்டன.
சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்தில் பங்கு பற்றிய பெண் கூத்துக் கலைஞர்களில் பலர் அரங்கக் கலையாக்க களப் பயிற்சிகளை நடாத்தும் வளவாளர்களாக உருவாக்கம் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீலாமுனையில் மேற்கொள்ளப்பட்ட கூத்து மீளுருவாக்கத்தில், குறிப்பாக கூத்தின் விடயம் சார்ந்த மீளுருவாக்கச் செயற்பாட்டினூடாக, காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் தருமத்தின் புத்திரர்களான பாண்டவர்களுக்கும், அதர்மத்தின் புத்திரர்களான கெளரவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் தருமத்தின் புத்திரர்களான பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள் என்ற தருமபுத்திரன்’ கூத்தின் சாராம்சம் கேள்விக்குட்படுத்தப்பட்டு, இக்கதைக் கட்டமைப்பு கட்டவிழ்ப்புச் செய்யப்பட்டது.
பின்னர் தருமத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடந்த சண்டையல்ல மாறாக இரு அரசவம்சத்தினர் தமது அரச அதிகாரத்திற்காக மக்களைப் பகடையாக வைத்து நடாத்திய சண்டை என்றும், இச்சண்டையில் தனது நலன்களுக்காக செயற்பட்ட கிருஷ்ணரின் தந்திரங்களும், முரண்பாடுகளைத் தீர்க்க முடியாதிருந்த அறிஞர்களின் (பீஸ்மர், துரோணர்) இயலாமையும் வெளிக்காட்டப் பட்டதுடன், இச்சண்டையில் பெண்கள் எவ்விதம் பாதிக்கப்பட்டார்கள் என்றும் விபரிக்கப்பட்டது.
இவ்விதம் மீளுருவாக்கப்பட்டதன் காரணத்தால் இக்கூத்து "சிம்மாசனப்போர்’ எனப்பெயர்மாற்றம் பெற்றுக்கொண்டது.
-33〜

Page 21
பின்வரும், “தருமபுத்திரன்’ கூத்தின் நாடக நோக்க விருத்தமும், மீளுருவாக்கப்பட்ட சிம்மாசனப்போர்’ கூத்தின் நாடக நோக்க விருத்தமும் இதனை விளங்கிக்கொள்ள உதவுகின்றன.
ஆய்வுச் செயற்பாட்டிற்கு முன் கூத்துப்பிரதியில் இருந்த நாடக உச்சரிப்பின் வரலாறு விருத்தம்
வஞ்சகச் சகுனிசெய்த வாதுசேர் குதினாலே வரும்படி ஐவரைத்தான் அழைத்துச் சொக்கட்டான் ஆடி
ஐவரைத் தோற்கடித்து ஆயிளை துயில் உரிந்தே ஆறிரு வருடங்கானில் அனுப்பவே துரியராசன்
ஆரண்யம் தனிலிருந்து ஆறிரு வருடம் போக்கி ஐவரும் நகரம் சேர்ந்து அஞ்ஞாதவாசம் நீக்கி
அரிமாலின் கிருபையாலே பரிவுடன் பொருதிவென்ற பாரதக் கதையைப்பாட கரிமுகன் மீது காப்பு. *
ஆய்வுச் செயற்பாட்டிற்கு பின் கூத்துப்பிரதியில் வரும் நாடக உச்சரிப்பின் வரலாறு விருத்தம்
தர்மத்தின் புத்திரராய் பாண்டவரைப் படைத்த கதை அதர்மத்தின் புத்திரராய் கெளரவரைச் சிதைத்த கதை
தர்மம் என்றும் அதர்மம் என்றும் நெடுநாளாய் சொன்ன கதை ஆண்டிடவே இருதரப்பும் அநியாய யுத்தம் செய்த கதை
பாண்டவர் வீரம் காட்டி கெளரவர் வெறுப்பும் மூட்டி பாலகர் பகையைப் போக்கா பெரியோர் தான் தோற்றுப் போனார்
நியாயத்தைக் கேட்டு மாது துரோபதி நின்ற போதில் வாய் மூடி மெளனம் காத்து பெரியோர்கள் சிறுத்தேன் போனார்
அழிப்பவரை அழிக்கவென்றே அவதரித்த கண்ணனுந்தான் தருமத்தின் பேரால் செய்த தந்திரங்கள் அனேகம் அனேகம்
-34

தர்மத்தின் பேரால் அங்கே நடத்திய யுத்தமதில்
மக்களே பகடையானார் மக்களே பலியுமானார்
என்று பல கேள்விகள் எழுப்பியே புத்தாக்கம் செய்து நாங்கள் பாரதக் கதையைப்பாட சபை முன்னே வந்து உள்ளோம்
மானிடரும் மற்றெல்லா உயிர்கள் யாவும் மாண்புடனே புவியின் மிதில் மாட்சிமை கொண்டு நாளும் மகிழ்வுடன் வாழக்காப்பு ?
கூத்தின் ஆற்றுகை சார்ந்த மீளுருவாக்கம்:-
கூத்தின் ஆடல், பாடல், நடிப்பு என்பவற்றினை மையப்படுத்திய மீளுருவாக்கத்திற்கான இச்செயற்பாடு, கிராமத்தில் கூத்தாடிப் பெயர் பெற்ற சிறந்த கூத்துக்கலைஞர்களின் ஆடல், பாடல், நடிப்பு என்பவற் றினைப் போல் புதிய இளம் கூத்தர்களும் கூத்துக்களை ஆற்றுகை செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான செயற்பாடுகள் பின்வரும் வழிமுறைகளில் இடம்பெற்றன.
1. கூத்துக்களப் பயிற்சிகளை நடாத்துதல் - மூத்த கூத்துக் கலைஞர்களும், அண்ணாவியாரும் கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கட்கு கூத்து நடனம், கூத்து நடிப்பு, கூத்துப்பாடல்கள் போன்ற வற்றை இதனுடாகப் பயிற்றுவித்தனர்.
2. ஆய்வாளரும், உதவி இணைப்பாளர்களும் குழுவாகச் செய்து வந்த கூத்துப்பயிற்சிகளை, அளிக்கைகளை கிராமத்திலே மேற்கொண்டமை. இதில் கூத்துக்கலைஞர்களும் இணைந்து கொண்டது டன் ஊரிலிருந்து விடுபட்டுப்போன பல ஆட்ட முறைமைகளை மீளவும் பெற்றுக்கொள்ள இது வாய்ப்பாக அமைந்தமை.
3. நாடகக் களப்பயிற்சிகளில் பங்குபற்றல் - James Thomsan, MacIntyre முதலியவர்களுடைய நாடகப் பயிற்சிகளில் பங்கு கொண்டனர்.
4. ஒலி நாடக்களைப் பார்த்தல் - பீற்றாபுறுக்கின் மகாபாரதம்,
கர்ணன் திரைப்படம், மகாபாரதத் தொலைக்காட்சித் தொடர்கள், இந்தியப் பாரம்பரியக் கூத்துக்கள் என்பன பார்க்கப்பட்டன.
--!$3۔

Page 22
5. வெளி ஊர்களில் ஆடப்படும் கூத்துக்களைப் பார்க்கச் செல்லுதல் உதாரணம் கன்னங்குடா, மகிழடித்தீவு ஆகிய கிராமங் களுக்குச் சென்றமை.
6. வேறுபட்ட சமூக மட்டங்களில் கூத்தினை ஆடியமை. இது பல்வேறு மட்டங்களிலும் கூத்து தொடர்பாக உள்ள எதிர்வினைகளை விளங்கிக்கொள்ள முடிந்தது. உதாரணம் யாழ்ப்பாணத்தில் அருச்சுனன் பெற்ற பாசுபதத்தை ஆடிய பின்வந்த விமர்சனங்கள்.
7. பல்வேறு சமுக, கலைச் செயற்பாடுகளில் அறிமுகமும் பங்கு பற்றலும் உதாரணம்: ஒவியக்காட்சிகள், நாடகங்கள் பார்த்தல்.
இவற்றினூடாக தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த ஆற்றுகையாக (ஆடல், பாடல், நடிப்பு) மீளுருவாக்கப்பட்ட "சிம்மாசனப்போர்’ வடமோடிக்கூத்தை அரங்கேற்றிக்கொள்ள வழியேற் பட்டது.
2003இல் மட்டக்களப்பில் நடந்த சர்வதேச சமுதாய அரங்க மாநாட்டில் "சிம்மாசனப்போர்’ மீளுருவாக்கப்பட்ட கூத்து அரங் கேற்றப்பட்டபோது, இக்கூத்தினைப் பார்வையிட்டவர்கள் (மாநாட்டின் பேராளர்கள்) கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள கூத்தின் விடயம் சார்ந்த மீளுருவாக்கம் குறித்தும், கூத்தின் ஆற்றுகை சார்ந்த மீளுருவாக்கம் குறித்தும் கூறியுள்ள கருத்துக்கள் கவனத்திற்குரியவை.
கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புலமையாளரும் தேர்ந்த கூத்தருமான சி. ஜெயசங்கர் மட்டக்களப்பினை அண்மிய சீலாமுனை எனும் கிராமத்தில் ஆய்வினை மையமாகக் கொண்டதொரு பயில்வினை மேற்கொண்டு வருகின்றார். அவரது வாதத்தின்படி பாரம்பரிய ஆய்வு முறைகள், அறிவினை பல்கலைக்கழகங்களுக்குள் மட்டுமே முடக்கி விடுகின்றன. அவை கிராமங்களில் உள்ள கூத்தர்களை சம்பந்தப்படுத்த முனைவதில்லை என்கிறார். இதற்கு மாற்றீடாக இவரால் அறியமுகப் படுத்தப்படுகின்ற ஆய்வு முறைமையானது இவ்வகை அதிகாரம் சார் அணுகு முறையினைக் களைந்து ஆய்வின் கருப்பொருளான மக்களை அதாவது இங்கு கூத்தர்களை இவ்வகை விவாதங்களில் ஈடுபடுத்துவதாக
-356

அமைகிறது. இவ்வகை புதுமையான ஆய்வு முறையின் வெற்றியானது அக்கிராமத்தில் கூத்து வடிவத்தின் முழுமை பற்றி அக்கிராமத்தவர்களால் மிக விரும்பி ஈடுபடும் விவாதங்க ளில் இருந்தே புலனாகின்றது. இவ்வாறு கூத்தில் ஈடுபடும் ஒருவர் கூத்தின் முக்கியத்துவத்தினை பற்றிக் குறிப்பிடுகையில் அது வெகுசன தொடர்பு ஊடகங்களுக்கு எதிரானதொரு சக்தி மிக்க ஆயுதம் என்கிறார்.
மாநாட்டின் இரண்டாம் நாள், நாங்கள் குழுக்களாகப் பிரிந்து மாநாட்டு மணிடபத்தினை விட்டு அகன்று சீலாமுனை நோக்கி பயணமானோம். அக்கிராமமே ஜெயசங்கர் உள்ளுர் வாசிகளுடன் சேர்ந்து கூத்து மீளுருவாக்கம் செய்யும் பிரதேசமாகும். அங்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது மட்டுமன்றிப் பல்வேறு உள்ளுர் அளிக்கைகளும், அரங்கப் பயிற்சிப்பட்டறைகளும் தென்னை மரங்கள் சூழ்ந்த கிராமத்தின் சதுக்கமொன்றில் இடம் பெற்றன. அக் கிராமத்த வர்கள் இந் நிகழ்வுகளுக்கான இடத்தினையும் சுவை மிகு உணவு வகைகளையும் வழங்கியதோடு மட்டுமன்றி அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், பயிற்சிப் பட்டறைகள் என்பவற்றில் பங்குபற்றி ஆறுமணி நேரம் வரை நீடித்த சிறந்த கூத்து இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்ட மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அந்நாள் ஒரு மறக்க முடியாததும் சிறப்பானதுமான நாளாக அமைந்தது. விரிவுரை மண்டபங்களில் இருந்து தம்மை விடுவித்து இவ்வகைப் பணிகளின் முக்கியத்துவத்தினையும் தாற்பரியத்தினையும் விளங்கிக்கொள்வது இதன் மூலம் சாத்தியமாக அமைகின்றது. *
The strength offeeling demonstrated by the speakers at the conference was matched by practitioners in the villages. S. Jeyasankar, an academic at the Eastern University of Sri Lanka and skilled Kooththu performer, is conducting a practice as research project in Seelamonai, a village near Batticaloa. Jeyasankar argued that conventional research methods confine knowledge to the academy, and fail to involve the local performers
in the village. As a response, he has developed research methods which
-357

Page 23
aim to dismantle this authoritarian approach to knowledge and actively to engage the subjects of the research - in this case the Kooththu performers - in the debates. The success of this innovative methodology was demonstrated most clearly in the village itself, where performers argued passionately about the integrity of the form. One performer summed up the significance of Kooththu as a powerful weapon against
mass media'.
“On the second day of the conference we broke out of the auditorium and traveled to Seelamunai, the village where Jeyasankar was working with locals to develop kooththu. Aside from papers, there were local performances and theatre workshops presented underneath palm trees in the village square. Not only did the village sponsor the event by providing the venue (their square) and sumptuous meals, but they got involved with the discussions and workshops, and presented a stunning six hour Kooththu performance that went on early into the morning. For many delegates, the day was one of the most distinctive and memorable highlights of the conference Freed from the constraints of the lecture hall, it was possible to see the significance of the work in
its context.”
-58

கூத்தின் வடிவம் சார்ந்த மீளுருவாக்கத்தில் முக்கியம்சமாக கூத்தின் உடை, ஒப்பனை என்பவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
சினிமாவின் தாக்கத்தினால் உள்வாங்கப்பட்டுள்ள உடை ஒப்பனைகளை கேள்விகளுக்குட்படுத்தி அவற்றை விடுவித்து கூத்திற்கேயான உடை ஒப்பனைகளை வடிவமைத்துக் கொள்வதே இச் செயற்பாட்டின் அடிப்படையாக உள்ளது.
இச்செயற்பாடு சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கட்டமாக சினிமாப் பாணியிலான உடை, ஒப்பனைகளிலிருந்து விடுபட்டு கூத்திற்கேயான உடை, ஒப்பனைகளை உருவாக்கிக் கொள்வதற்குரிய ஆரம்பச் செயற்பாடுகள் சீலாமுனையில் மீளுருவாக்கப்பட்ட கூத்துக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் $58ნ8ნ$5].
சமுதாய அரங்காகிய கூத்துச் செயற்பாட்டின் கடந்த கால நிதித்திட்டமிடல்கள் சார்ந்த பல்வேறு குறைபாடுகளை இனங்கண்டு அதற்குரிய ஆக்கபூர்வமான தீர்வுகளைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகள் சீலா முனைக் கூத்து மீளுருவாக்கத்திலி மேற்கொள்ளப்பட்டன.
கூத்தரங்க நடைமுறைகள் சமூகம் சார்ந்த வகையில் இடம்பெற்று வருகின்ற போதிலும் இக்கூத்தரங்க வேலைகளில் குறித்த சிலர் நிதிச்சுமைகளைத் தாங்க வேண்டி ஏற்படுவது வழமையானதாக இருந்து வந்துள்ளன.
கூத்திற்கான சட்டங்கொடுக்கும் போது அக்கூத்தின் முன்னிடு காரர்களாக பொறுப்பேற்றுக் கொள்ளும் நபர்கள் தமது சொந்தப்பணத்தை பெருமளவில் செலவு செய்யவேண்டிய நிலமைக்குள் தள்ளப்பட்டுவந்துள்ளமை யதார்த்தம்
இதனாலேயே கிராமிய கூத்தரங்க நடவடிக்கைகளில் மூன்னிடு காரர்களாக போடிமார், தனவந்தர்கள் முதலியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தகைய கூத்தரங்க அனுபவங்களின் பின்புலத்தில் கூத்தரங் கிற்காக நிதிவசதிகளை ஒழுங்கு செய்தல் என்பது குறித்த சிலரைப்
--359 ۔

Page 24
பாதிக்காத வகையிலும் அதே நேரம் எவரிடமும் தங்கிநிற்காத வகையிலும் மேற்கொள்ளப்படுவது அவசியமானது என்பதை சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் கவனத்தில் கொண்டது.
இதன்படி கூத்துச் செயற்பாடுகளில் ஈடுபடும் கூத்துக் கலைஞர்கள், கூத்தின் ஆர்வலர்கள் மற்றும் கூத்தரங்கு முன்னெடுக்கப்படும் சமூகத்தின் உறுப்பினர்கள் என்போர் கூட்டாக வழங்கும் சிறு உதவிகளின் சேகரிப்பில் கூத்தரங்கச் செயற்பாடுகளை மேற்கொள்வது சுயாதீனமான கூத்தரங்க முன்னெடுப்பிற்கு அவசியமானது என்பதை சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் சுட்டி நிற்கின்றது.
இந்த மீளுருவாக்கச் செயற்பாடு முதன் முதலாக இடம்பெற்ற நிலையில், முதலாவதாக மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்தில் ஆய்வாளரது பங்களிப்பு கணிசமானதாக இருந்தது. எழுத்துரு மீளுருவாக்கத்தின் தொடர் செயற்பாட்டில் ஆய்வாளர் முழுமையாகப் பங்கு கொண்டார்.
ஏற்கெனவேயிருந்த தருமபுத்திரன் கூத்து எழுத்துருவினை கட்ட விழ்த்து மீளுருவாக்கிய முதலாவது மீளுருவாக்கத்தில் ஏட்டண்ணா வியார் செ. சிவநாயகம். அண்ணாவியார் சி.ஞானசேகரம் மற்றும் வடமோடிக் கூத்தில் நீண்ட அனுபவம் பெற்ற அமிர்தகழி காசிமா பஞ்சாட்சரக் குருக்கள் முறக்கொட்டான் சேனையைச் சேர்ந்த அண்ணா வியார் திரு. வே.தம்பிமுத்து மற்றும் சீலாமுனையைச் சேர்ந்த மூத்த கூத்துக் கலைஞர்கள், இளம் கூத்துக்கலைஞர்கள் என்பவர்களுடன் ஆய்வாளர் முக்கிய பங்காற்றினார்.
இக்கட்டத்தில் ஆய்வாளர் சி. ஜெயசங்கர் அவர்கள், சீலா முனைக் கூத்துச் சமூகத்தவருடன் ஏனைய ஊர்களின் கூத்துப் புலமையாளர்களையும் இணைத்துக் கொண்டு தனது தனித்துவமான சிறந்த பண்புகளுடன் செயற்பட்டதன்மை சிலாமுனையில் எதிர் காலத்தில் (இன்று) கூத்து எழுத்துருக்களை மீளுருவாக்கி எழுதுவதற்கும் மற்றும் புதிய கூத்துக்களை எழுது வதற்குமான அனுபவத்தையும, பயிற்சியையும் கொடுத்தது என்பது குறிப்பிடத் தக்கது. இதனைத் தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு, சீலாமுனை யில் கூத்துக்களை மீளுருவாக்கி எழுதிவரும் ஏட்டண்ணாவியார்
-40

திரு.செ. சிவநாயகம் மற்றும் அண்ணாவியார் சி. ஞானசேகரம் அவர்களதும் மூத்தகூத்துக்கலைஞரான சி. விஜேந்திரன் மற்றும் இளைய கூத்தர்கள் அனைவரதும் கூத்துமீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டின் அனுபவங்களை அவர்களுக்கூடாகத் தெரிந்து கொள்வது மிகுந்த பயனைத்தரும்.
ஆய்வு முறையியல்கள் சார்ந்து இக்கட்டத்தில் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு குறித்த எனது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமாயிருக்கும்.
ஏற்கெனவே எமது பல்கலைக்கழகங்களில் உள்ள ஆய்வு முறைமையானது ஆய்விற்குட்படும் விடய தானத்துடன் சம்பந்தப்பட்ட மக்களைத் தகவல் வழங்கிகளாகவும், புத்திகம்மியானவர்களாகவும் (இவ்வசனம் கிழக்குப்பல்கலைக்கழக வருடாந்த ஆய்வு மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த ஓர் விரிவுரையாளர் கூறியது), மக்கள் என் போர் அறிவுட்டப்பட வேண்டியவர்களாகவும் பார்த்தே ஆய்வாளர்களை வழிப்படுத்துகின்றது. இத்தகைய ஆய்வு முறையியல் காரணமாகவே ஆய்வுகள் முடிந்த பின்னர் ஆய்வுடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் எவ்வித ஆக்கபூர்வமான விளைவுகளும் ஏற்படவில்லை எனலாம்.
ஆனால் சீலாமுனையில் நடந்துள்ள கூத்து மீளுருவாக்கத் திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடானது ஆய்வுடன் சம்பந்தப்பட்ட சீலாமுனையின் கூத்துக் கலைஞர்களை அங்கு வாழும் சமூகத்தினரை தகவல் வழங்கிகளாகவோ, படிப்பறிவற்றவர்களாகவோ, பாமரர்களா கவோ, இந்தவகையில் அறிவுபூட்டப்பட்ட வேண்டியவர்காளகவோ கருதவில்லை. மாறாக ஆய்வுடன் சம்பந்தப்பட்ட கூத்துக் கலையில் அறிவும், ஆற்றலும், ஆளுமையும் கொண்ட சமூகமாகவே பார்த்தது. ஆய்வாளர் மேலான உயர்ந்தவர், கூத்தர்கள் கீழான அறிவற்றவர்கள் என்று நோக்கவில்லை. மாறாக ஆய்வாளர் தான்சார்ந்த நிலையிலும் கூத்தர்கள் அவர்கள் சார்ந்த நிலையிலும் சமதையான அறிவும், ஆற்றலும் தகுதிப்பாடும் உடையவர்கள் என்ற உயர்வுதாழ்வற்ற வித்தியாசமான பன்முக ஆற்றல்களை மதிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.
இத்தகைய பங்குகொள் ஆய்வின் பார்வையே இரண்டு வருட
முடிவில் யதார்த்தத்தில் ஆய்வின் நோக்கத்தை நிறைவேற்ற
உதவியது. ஆய்வாளர் மேற்படி நோக்கோடு கூத்தர்களுடன் உறவினை
-41

Page 25
ஏற்படுத்திக் கொண்டு உரையாடல்களுக்கூடாகவும் மேலும் பல்வேறு வழிமுறைகளுக்கூடாகவும், கூத்துக்கள் சார்ந்த தனது நோக்கிலான சந்தேகங் களையும், கேள்விகளையும், அபிப்பிராயங்களையும் சீலாமுனைக் கூத்தர்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்துடன் தான் கற்கவேண்டிய விடயங்களை சீலாமுனைக் கூத்துக்கலைஞர்களிடம் கற்றுக் கொண்டார்.
இவ்விதம் ஓர் நிலையில் மீளுருவாக்கத்திற்கான வழிகாட்டி ஆசிரியராகவும், இன்னோர் நிலையில் மீளுருவாக்கத்தில் பங்கு கொண்ட மாணவனாகவும் ஆய்வாளர் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டில் பங்குகொண்டார். இங்கு ஆய்வாளரு டைய நிலை என்பது பொருத்தமான, மீளுருவாக்கத்திற்கான இணைப்பாளராகப் பங்கு கொண்டமையே ஆகும்.
2002ம் அண்டின் பிற்பகுதியில் கூத்துமீளுருவாக்கச் செயற் பாடு ஆரம்பித்தபோது, ஏற்பாடு செய்யப்பட்ட கூத்தர் கருத்தரங்கில் சீலாமுனையைச் சேர்ந்த அண்ணாவியார் சி. ஞானசேகரம் அவர்கள் கூறிய கருத்து பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் பொருத்தமான ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஆய்வாளர்கள் எவ்விதம் இருக்க வேண்டும் என்பதைக் கூறுவதாக உள்ளது.
“ஆய்வாளர்கள் என்பவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கருதக்கூடாது மாறாக எங்களுக்குத் தெரிந்ததை அவர்கள் மதித்து, ஜெயசங்கர் விரிவுரையாளரைப் போல எமக்குத் தெரியாத, நாங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களைச் சொல்லி எங்களுடன் இணைந்து செயற்படுவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய ஆலோச னைகள், வழிகாட்டல்களைச் செய்யக்கூடியவர்களுடனேயே நாம் இணைந்து செயற்பட முடியும். அதைவிடுத்து எமக்கு எதுவும் தெரியாது என்று கருதுபவர்களுடன் எப்படி நாம் இணைந்து செயற்பட முடியும்?” என்றார். இன்னொரு சந்தர்ப்பத்தில் அண்ணாவியார் “ஒருநேரத்தில் ஜெயசங்கர் சேர் எனக்கு குரு, இன்னொருநேரத்தில் கூத்துப்பழக்கும் போது நான் ஜெயசங்கர் சேருக்கு குரு” என்று கூறினார்.
மேற்படி சி. ஞானசேகரம் அண்ணாவியார் அவர்கள் கூறிய கருத்துக்கள் இரண்டும், ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கான பங்குகொள் ஆய்வின்போது அந்த ஆய்வுச் செயற்பாட்டில் ஈடுபடும் ஆய்வாளர் ஒருவர் எவ்விதம் இயங்கவேண்டும் என்பதை அனுபவம் ஊடாகக் கூறிய கருத்துக்களாக அமைகின்றன எனலாம்.
-42

கூத்துமீளுருவாக்கமும் அதுபற்றிய திரிபுபடுத்தல்களும்
தமிழ் அரங்க வரலாற்றில் குறிப்பாகப் பாரம்பரிய அரங்க வரலாற்றில் முதல்தடவையாக காலனிய நீக்க கருத்தியலுடன் கோட்பாடாகவும் செயற்பாடாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கூத்து மீளுருவாக்கம் குறித்து அண்மைக்காலங்களில் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதாவது 1960களில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் கூத்து மீளுருவாக்கத்தை ஆரம்பித்ததாகவும், பின்னாளில் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் அச்செயற்பாட்டை முன்னெடுத்ததாகவும் இதன் தொடர்ச்சியாகவே சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் பரிணமித்திருப் பதாகவும் இக்கதையாடல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையான வரலாற்றுத் திரிவுபடுத்தலை விளங்கிக் கொள்வதற்கு இக்கட்டுரையினை எழுதும் எனது அரங்கியற் கல்வி அனுபவங்களைக் கூறவேண்டியது இவ்விடத்தில் பொருத்தமாக அமையும் என்பதை உணர்கின்றேன்.
2000ம் ஆண்டில் பல்கலைக் கழகத்தில் நுண்கலையினை ஒர் பாடமாக எடுத்த போதிலும் பின்னர் 2001ம் ஆண்டு அத்துறையில் சிறப்புக்கற்கையினை ஆரம்பித்த சூழலிலும் ஈழத்துக் கூத்தரங்கு கள் சம்பந்தமான ஆய்வு எழுத்துக்களையும், கூத்தரங்கு சம்பந்தமான நவீன கோட்பாடுகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.
இதன்படி எமது கிராமங்களில் ஆடப்பட்டு வரும் கூத்துக்கள் படிப்பறிவற்ற பாமர மக்களின் கலைவடிவங்களாக உள்ளன. இக்கூத்துக்கள் ஒழுங்கின்றி, செம்மைநுட்பங்களின்றி அரைகுறையான அறிவு கொண்ட அண்ணாவிமார்களால் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன, கூத்துக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறை வடைந்துள்ளன, கூத்துக்கள் ஆடும் காலம் கடந்து விட்டது, இன்றைய கணணியுகத்தில் கூத்தாடுவது எப்படி சாத்தியமானது, கூத்துக்களில் கதைகூறும் தன்மையே மேலோங்கியுள்ளது அதில் நடிப்பிற்கு இடமில்லை என்றவாறான கருத்துக்கள் ஆய்வு எழுத்துக்கள் ஊடாகவும், விரிவுரைகள் மூலமாகவும் எமக்குக்கற்பிக்கப்பட்டன.
كژ443

Page 26
இத்தோடு கூத்துக்களை இளந்தலை முறையினருக்கு பரிச்சயப்படுத்துவதென்றால் அவற்றைச் செம்மைப்படுத்தி, நேரஞ் சுருக்கி, படச்சட்ட அரங்கில் நவீன அரங்க நுட்பங்களுடன் தயாரித்து வழங்குவதே இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்று வலியுறுத் தப்பட்டது.
இதனையே 1960களில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தார், இவருக்கு உறுதுணையாக பேராசிரியர்களான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி என்போருடன் அன்றைய மாணவனும் இன்றைய பேராசிரியருமான சி. மெளனகுரு அவர்களும் செயற்பட்டார்கள் என்றும் கற்பிக்கப் பட்டதுடன் 1960களில் ஆரம்பித்த இச்செயற்பாட்டிற்கு ‘கூத்தின் மீள் கண்டு பிடிப்பு’, ‘கூத்துச் செம்மையாக்கம்’, ‘கூத்தின் நவீனமய மாக்கம்’ என்று கோட்பாட்டு விளக்கமும் கூறப்பட்டுள்ளதாக கற்பிக்கப்பட்டது.
இத்தகைய கூத்துச் செம்மையாக்கலைச் செய்வதே நமது அவசியப்பணி, இதுவே எதிர்காலத்தில் கூத்தினை முன்கொண்டு செல்வதற்கான ஒரே வழி என்று வலியுறுத்தப்பட்டு, சுமார் நான்கு தசாப்தங்களின் பின் மீண்டும் 'இராவணேசன்’ ஆற்றுகை தயாரிக்கப்
IL-L-35.
கூத்தில் ஆர்வம் கொண்ட அரங்கியல் மாணவன் என்ற கோதாவில் மேற்படி கூத்துப்பற்றிய நவீனநோக்கிலான எண்ணக் கருக்களை உள்வாங்கிய நான் இராவணேசன் ஆற்றுகையிலும் ஆர்வத்துடன் பங்குபற்றினேன். இத்துடன் கூத்தினை நேரஞ்சுருக்கி படச்சட்ட அரங்கில் செம்மைப்படுத்தி ஆடுவதே கூத்தின் எதிர்காலத் திற்காகச் செய்ய வேண்டிய பணி என்பதை வலியுறுத்தும் அரங்கியல் மாணவனாகச் செயற்பட்டேன்.
இவ்விதமான ஆரம்பச்சூழலில் சிறப்புக்கற்கையின் இரண்டாம் வருடத்திற்குள் நுழைந்த போது பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் சி. ஜெயசங்கரின் வகுப்புக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரது அரங்கியல் வகுப்புக்களில் ஈடுபட்ட காலத்தில் ஏற்கெனவே கூத்தரங்கின் முன்னெடுப்புக் குறித்த நவீன சிந்தனைகளுக்கு வித்தியா சமாக இன்னொரு தளத்தில் கூத்தரங்க முன்னெடுப்புச் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
س444سے

சுருக்கமாகக் கூறின் பின்நவீனச் சிந்தனைகளின் பார்வைகளுடு காலனித்துவச் சிந்தனைகளின் பிடிகளிலிருந்து விடுதலை பெற்று மக்கள் மைய நோக்கில் கூத்தரங்கின் முன்னெடுப்பை ஓர் செயற்பாடாக மேற்கொள்வதன் சாத்தியப்பாடுகள் குறித்து விளங்கிக் கொள்ள முடிந்தது.
கூத்தரங்கு பற்றிய உரையாடல்களின் போது விரிவுரையாளர் சி. ஜெயசங்கர் என்னை நோக்கி கூத்துக்கள் பற்றிக் கதைப்பதற்கு முன் கூத்தினை ஆடப்பழக வேண்டியதும், கூத்துக்கள் ஆடப்படும். இடங்களுக்குச் சென்று அவற்றைப் பார்த்து அனுபவித்துவருவதும் அவசியம் என்பதை கண்டிப்பாக வலியுறுத்தியதுடன் கூத்துக்கள் ஆடப்படும் மட்டக்களப்பின் ஊர்களுக்கும் அழைத்துச் சென்றார்.
2002ம் ஆண்டு கன்னங்குடா கண்ணகி அம்மன் சடங்குக் காலத்தில் நிகழ்ந்த ‘இராமநாடகம்' எனும் வடமோடிக் கூத்தினைப் பார்ப்பதற்காக என்னை விரிவுரையாளர் அழைத்துச் சென்றார். அங்கு சென்று புலமைமிக்க அண்ணாவிமார்கள், கூத்துக்கலைஞர்கள் கூத்தின் மீது ஆர்வம் கொண்ட பொதுமக்கள் என்பவர்களுடன் உரையாடிய பின்னர் விடிய விடிய இராமநாடகத்தைப் பார்வையிட் (3LTlib.
கூத்து நிகழ்ந்த போது கூத்தில் வரும் நடிப்பு முறைமைகளைச் சுட்டிக்காட்டி விளக்கிய விரிவுரையாளர், கூத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்பாடுகளிலும் காலங்காலமாக அக்கூத்துக்களை ஆடிவருகின்ற சமூகங்களின் கருத்துக்கள், பங்குபற்றல்கள் இருக்கவேண்டியது அவசியமானது என்ற கருத் தினையும் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு சி. ஜெயசங்கருடன் கூத்தரங்க நிகழ்களங்களுக்குச் சென்று வந்ததன் பின்னர் ஏற்கெனவே என்னில் பதிந்திருந்த கூத்துச் செம்மையாக்கம் என்ற கோட்பாடு, யதார்த்தத்தைப் பார்க்காது கட்ட மைக்கப்பட்டது என்பதையும் இக்கொள்கை எதிர்காலத்தில் உண்மையான கூத்தரங்கை இல்லாமல் அழித்துவிடும் ஆபத்தான கருத்தியல் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொண்டேன்.

Page 27
உதாரணமாக ஊர்க் கூத்துக்கள் செம்மையற்றவை, கூத்தி னைப் பார்ப்பவர்கள் குறைவு, அண்ணாவிமார்கள் அரை குறையான அறிவு கொண்டவர்கள் என்ற நவீன கூத்துச்செம்மையாக்க கதையாடல் களை எல்லாம் காலனித்துவ எண்ண்க்கருக்களால் ஆக்கப்பட்ட கருத்தியல் என்பதையும்
இத்தோடு நவீன நோக்கிலான கூத்துச்செம்மையாக்கலைக் கற்பது, அதனை ஏற்று நடப்பது என்பது உண்மையில் எம்மை காகிதத்தில் கூத்தாடுபவர்களாக வைத் திருக்குமே தவிர யதார்த்தத்தில் கூத்தாடுவதற்கு ஒரு காலமும் வழிவிடாது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இத்தகைய கருத்தியல் அனுபவ அறிவாக என்னுள் பதிந்த வேளைகளில் கூத்தினைப் பார்ப்பது மட்டும் போதாது ஓர் அரங்கியல் மாணாக்கர் கட்டாயம் கூத்தாடத் தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய விரிவுரையாளர் வடமோடிக் கூத்தாட்டங்களை எனக்கும் எனது நண்பர்களுக்கும் பயிற்றுவித்தார்.
கூத்தை காகிதத்தில் அல்லாது யதார்த்தத்தில் முன்னெடுப்ப தற்கு ஆடத்தெரிவது அவசியமானது என்ற ஓர்மத்துடன் வடமோடிக் கூத்தாட்டங்களை ஜெயசங்கர் விரிவுரையாளரூடாக பயின்று கொண்டேன்.
இத்தகைய சூழலிலேயே கூத்தரங்கினை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் கொண்ட ஆக்கபூர்வமான செயற்பாடாக கூத்துக்களை மீளுருவாக்கம் செய்யும் ஆய்வுச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான இடமாகச் சீலாமுனைக் கிராமம் தெரிவு செய்யப்பட்டு 2002இல் இச்செயற்பாடு ஆரம்பமாகிறது.
ஏற்கெனவே விரிவுரையாளர் கூறியுள்ள “பாரம்பரிய அரங் கினைப் புத்துருவாக்கம் செய்வதென்பது அதனைத்தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றத் தினூடேயே முழுமையானதாகிறது, கூத்தரங்கின் புத்துருவாக்கம் பற்றிய சிந்தனை அதனைப் பேணி வரும் சமூகக்குழுமத்தின் சிந்தனை மாற்றம் சமூகமாற்றம் பற்றியதாகவே இருக்க முடியுமென நம்புகின்றேன்”*
46

என்ற கருத்திற்கு அமைய சீலாமுனையில் சிலாமுனைக் கூத்தர்களின் முழுமையான பங்குபற்றலுடன் ஈழத்து பாரம்பரிய அரங்க வரலாற்றில் முதல் தடவையாக கூத்து மீளுருவாக்கம் கோட்பாடாகவும், செயற்பாடாகவும் இடம் பெற்றுள்ளது.
இம்மீளுருவாக்கம் கூத்தின் ஆற்றுகை சார்ந்தும், அதன் உள்ளடக்கம் சார்ந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆற்றுகை சார்ந்து எனும்போது பேர்பெற்ற கூத்துக்கலைஞர்களின் பங்குபற்றல்களுடன் முழுமையான கூத்தரங்க ஆற்றுகையினை இளந்தலை முறையினர் பயின்று கொள்ளும் வகையிலும், உள்ளடக்கம் சார்ந்து எனும் போது கூத்து எழுத்துருக்களில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற
ஆதிக்க கருத்தியல்களை கட்டவிழ்த்து பெண்ணிய நோக்கில், தலித்திய நோக்கில் ஆராய்ந்து மீள கட்டமைக்கும் செயற்பாடாக இம்மீளுருவாக்கம் சீலாமுனையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விதம் இடம்பெற்றுள்ள கூத்துமீளுருவாக்கம் பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் சி. மெளனகுரு என்போர் மேற் கொண்ட, கட்டமைத்த அரங்கியல் கோட்பாட்டுடன் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்கப்பட முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தொடங்கிய கூத்துச் செம்மை யாக்கம் என்பது கூத்துச் சமூகங்களை படிப்பறிவற்றவர், பாமரர் எனப்புறந்தள்ளி அவர்களது கூத்து வடிவங்களை எடுத்து நகர்ப்புற மத்தியதரப் பார்வையாளர்களுக்குரிய கலைவடிவங்களாக மாற்றும் சிலரது வீட்டு உடைமைகளாக ஆக்கும் வணிகநோக்கிலான நவீன சிந்தனை என்பதும்.
சீலாமுனையில் தொடங்கப்பட்ட கூத்து மீளுருவாக்கம் என்பது கூத்துச் சமூகங்களை கூத்தின் புலமைமிக்க மனிதர்களாக மதித்து, கூத்தின் ஆற்றுகை, அதன் அழகியல் தனித்துவமானது என்பதை வலியுறுத்தி, கூத்து என்பது அதை முன்னெடுக்கும் சமூகத்தின் உடைமை, கூத்துச் சமூகங்களின் வளர்ச்சிக்கான ஊடகங்களில் ஒன்றாகவும் உள்ளது என்பதை வலியுறுத்தும் பின்நவீன நோக்கிலான கொள்கை என்பதும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது அவசிய மாகின்றது.
۔-47سہ

Page 28
11.
12.
13.
14.
15.
16.
சான்றாதாரங்கள் சி. மெளனகுரு, ஈழத்துதமிழ்நாடக அரங்கு கொழும்பு 2004, பக் - 198 சி. மெளனகுருநாடகம் அரங்கியல் பழையதும் புதியதும், கொழும்பு 2005 பக் - 03.04 சி. மெளனகுருநாடகம் அரங்கியல் பழையதும் புதியதும், கொழும்பு 2005 பக்-159 சிமெளனகுரு,மட்டக்களப்புமரபுவழிநாடகங்கள் மட்டக்களப்பு:1998 பக்-15 சி. ஜெயசங்கர், சீலாமுனைக்கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு பற்றிய கையேடு, 2003 ஆய்வுச்செயற்பாட்டாளரின் குறிப்பு. பக்-04 மேலது, பக் - 03 மேலது. பக் - 03.04 மேலது. பக் - 05 மேலது. பக் - 05 "சிம்மாசனப்போர் - மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து எழுத்துப்பிரதிசீலாமுனை2003 சிம்மாசனப்போர் - மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து எழுத்துப்பிரதி - சீலாமுனை2003 “தருமபுத்திரன்’ வடமோடிக்கூத்துப்பிரதி- 1990 சீலாமுனை
சிம்மாசனப்போர் - மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து எழுத்துப்பிரதிசிலாமுனை2003 புதியநிரந்தரவட்டக்களரிதிறப்பு விழா - சிறப்பு வெளியீடு பிரசுரம் -2004 Research in Drama Education, Volume: 09 Number 1, 2004 Carfax publishing, UK.P. III 7 சி. ஜெயசங்கர், களம் சஞ்சிகை,1996
நன்றிகள் விரிவுரையாளர் சி. ஜெயசங்கர், முன்றாவதுகண் நண்பர்கள் சிலாமுனை கலைக்கழக கலைஞர்கள் அம்மாது. இருதயமலர் தம்பி. து. சோதிஸ்வரன் வணசிங்கா அச்சகத்தினர்
-48


Page 29
ܒ
pgī (G
 

கலைஞரோஅல்லது புலமை ஈரோதாள் வாழும் சமூகம் நிய அறிதலும் புரிதலும் டயவராக இருப்பது அவசி ானது ஒவ்வொருவரும்தாம் மும் சமூகம் பற்றிய அறித கும் புரிதலுக்குமான அடிப் டயான கனங்களாக உள் ட்டுச் சமயலறை நிலவரங் னயும், உள்ளூர்ச் சந்தை வரங்களையும் இவை பற்றிய ஞர்ச்சந்திப்புக்களில் நிகழும் ரயாடல்களையும் புரிந்து ாண்டராகவும் இருக்க ண்டும். அப்பொழுதுதான் டிலும் எழுத்திலும் உள்ள விடயங்களையும், உலக
நல் சார்ந்து புரிந்து கொள்ள டயும், செயற்பட முடியும். ஸ்பாட்டுச் செயற்பாட்டா ான து. கெளரீஸ்வரனின் பங்குநிலை இதற்குச் சிறந்த ாரணமாகும்.
-சி. ஜெயசங்கர்